கண்ணீரில் நனைகிறேன் கார்த்திகைப்பூ நான் மண்ணின் விடுதலைக்காய் மடிவேன் மீண்டும் மலர்வேன் நான்!
கார்த்திகை 2020
செங்காந்தள் முத்தங்கள்
நிம்மி சிவா
யேர்மன்
தேசத்தின் விடியல்கள் ஒன்றான ப�ோதிலும் சிவப்பு விடியல்களே மண்ணில் அதிகம்
கார்த்திகை மழைதரும் குமுழிகள் உடைந்து உதிரத்தைக் க�ொட்டுகையில் குருதி த�ோய்ந்த காகிதங்கள் கப்பல்களாக மிதக்கின்றன செந்நீர் நனைந்த மண்ணின் விடுதலைக்காய் தற்கொடை தந்த செம்மல்களின் நினைவேந்தலில் கார்த்திகையின் விடியல்கள் தீப்பிழம்புகளைக் கக்குகின்றன ஆளும் வர்க்க ஆல�ோசனகள் இனத்தைச் சுத்திகரிக்க சாம்பல் மேடுகளை முத்தமிட்டுக் க�ொண்டன செங்காந்தள்கள்
02 | வளரி கார்த்திகை 2020
முதன்மை ஆசிரியர்:
ஆசிரியர்:
ப�ொறுப்பாசிரியர்:
இணை ஆசிரியர் மா. சாந்தாதேவி தமிழ்நாடு
துணை ஆசிரியர்கள்
பிரசன்ன சாந்தி தமிழ்நாடு
பாத்திமா நளீரா இலங்கை
ச�ௌந்தரி கணேசன் அவுஸ்ரேலியா
பாமினி செல்லத்துரை இலங்கை
தேவி ரவி
ஆசிரியர் குழு:
குவைத்
முதன்மை ஆல�ோசகர்: ஆல�ோசகர்கள்:
முகவரி:
32, கீழரத வீதி, மானாமதுரை 630606 மின்னஞ்சல் : valaripoems09@gmail.com த�ொடர்புக்கு : +91 78715 48146 இலங்கையில்: செருக்கற்புலம், சுழிபுரம் 40000, இலங்கை
கருவி: 12
கார்த்திகை 2020
வீச்சு: 07
இந்த இதழில்... நிம்மி சிவா 02 | அருணாசுந்தரராசன் 05 சீதா ஆறுமுகம் 06 | ஜே. ஜே. சுகன்யா 07 | ஜமுனா தமிழச்சி 08 அனுமா 09 | தீனா நாச்சியார் 10 | கனிம�ொழி 11 நிர்மலா சிவராசசிங்கம் 12 | கவிமகி 13 | ரயிலி முனியாண்டி 14 சந்தியா ரவி 15 | ப்ரியா காசிநாதன் 16 குழந்தை நிலா ஹேமா 18 | சர்மிளா 20 நிர்மலா சென்னியப்பன் 20 |சரவிபி ர�ோசி சந்திரா 21 அனு ம�ோகன்தாஸ் 22 | த�ோழி கவிதாயினி 23
அதிகாரத் தேள் ஏந்தி வரும் க�ொடுக்கு! இந்திஎனும் வெறிநாயை
ஏவிவிட்டது வடக்கு ச�ொந்தநாட்டில் ச�ொந்தம�ொழி த�ொல்லைப் படா தடக்கு கந்தகத்தில் தீயை வைத்தார் கனன்றெழுந்து மடக்கு! இந்திம�ொழி அதிகாரத் தேள் ஏந்திவரும் க�ொடுக்கு வந்தேறிகள் சூழ்ச்சி கெட வாகைப்போரைத் த�ொடக்கு முந்து வட ஆட்சிஎலும்பு முறிந்தொடிய அடக்கு! (01.05.1948)
பாரதிதாசன்
04 | வளரி கார்த்திகை 2020
மீரா காற்றின் முழக்கம் !
அருணாசுந்தரராசன்
இரண்டெழுத்துப் பெயர்காரர் நிறுவிவைத்தார் நான்கெழுத்தில் நற்றமிழ் ஏர் இரண்டு பதிப்பக வயலில் ஆழ உழுதார் அதிர்வுகள் தந்தார் அறுவடை குவித்தார் பயணம் சென்ற பாதைகள்தோறும் புதுப்புது விதைகள் தேடி விதைத்தார் நூல் விளைச்சலில் நூதனம் கண்டார் படைப்பின் அழகில் புதுமைகள் செய்தார் அன்னம் அகரம் அவரது அடையாளம் எண்ணமும் செயலும் அதுவென்றே இயங்கினார்
படைப்பாளர் எழுத்து நாவில் த�ொகுப்பு சேனை த�ொட்டு வைத்தார் ஏக்கம் தீர்த்தார் தமிழரின் ச�ோவியத் தமிழீழம் என்றார் பிரபாகரன் பேரெழுச்சியில் பூரிப்பு க�ொண்டார் திசையறியா இளைய�ோருக்குத் தென்திசை காட்டினார் வசைகள் புறம்தள்ளி நம்பிக்கையூட்டினார் பாவேந்தர் வழிநின்று பைந்தமிழை நேசித்தார் அவர் ஆசான் பாரதியை தெய்வமென பூசித்தார் இறுதி மூச்சிலும் இறைவனை மறுதலித்தார் பெரியாரின் க�ொள்கையிலே பகுத்தறிவு க�ொண்டிருந்தார்
மீரா! எங்கள் கலங்கரை விளக்கம் ம�ொழி உரிமை காலத்தின் குரலாய் இன உரிமை முதன்மையெனக் க�ொண்டார் காற்றின் முழக்கமாய் கனவுகள் விதைத்த தமிழியத்தின் ந�ோக்கினிலே கவிதைப் ப�ோராளி1 ப�ொதுவுடைமை கண்டார்
வளரி கார்த்திகை 2020
| 05
இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் சீதா ஆறுமுகசாமி பிரான்சு
அவளுக்குள்ளே தேடுகிறேன்
அவனுக்குள் தேடுகிறேன் உண்மையைத் தேடுகிறேன் உணர்வுகளைத் தேடுகிறேன் ப�ொய்யாமையைத் தேடுகிறேன் கலாச்சாரப் ப�ோர்வையைப் ப�ோர்க்காத சமூகத்தைத் தேடுகிறேன் சுதந்திர மனிதர்களைத் தேடுகிறேன் என்னை மட்டும் நேசிக்கும் காதலன் ஒருவனைத் தேடுகிறேன் கடந்துப�ோன நினைவுகளைத் தேடுகிறேன் எப்படிக் கவர்ந்தாய் நீ எனையென்றே தொடரும் யோசிப்பிலேயே சத்தமின்றி இழந்துப�ோனேன் உன்னால் இதுவா இதுவாவென கேட்கும் மனத்தை இதுவும்கூடத்தான் என அடக்கிவிட்டு இன்னும் தேடுகின்றேன்
06 | வளரி கார்த்திகை 2020
ம�ௌனத்தின் ம�ொழி!
ஜே.ஜே. சுகன்யா
உடுப்பிட்டி/ இலங்கை
கற்பனைமேவிய
நியக்கவிதை ஒன்றைத் தூக்கி வரைகிறேன் விதை புவி மேல் விழுந்து உரமானது விதை வளர்ந்து சுமைகள் ததும்பும் வாழ்க்கையில் தவழ இயலாது தள்ளாடியது இமைகள் வரம்புடைத்து ஈரக்கசிவில் ஆறாய் நீர் விழிவழியே ஓடியது அவள் அனுபவித்த பகட்டுப் பேச்சுகளைய�ோ பரிதாபப் பார்வைகளைய�ோ சம்பிரதாய ஆறுதல்களைய�ோ விதண்டாவாதப் ப�ோட்டிகளைய�ோ திரட்டிய அன்பின் பிரிவாலும், எதிர்பார்ப்பினாலும் சமய�ோசித கண்ணீரை ஒன்றாகக் கூட்டுகிறத�ோ இந்தப் பெண் பிறவியில் அவள�ோ ப�ொறுமையிழந்தவளாய் ர�ௌத்திரங்கள் வெளிப்படும் தருணங்களில் மட்டும் தயங்காமல் நிர்ப்பந்திக்கும் தனிமையிடத்தே தேடிப்போய் தஞ்சம் புகுகின்றாள் அகம்படும் வேதனை யாருக்குப் புரியும் அவள் வாழ்வை யாரும் ஆக்கிரமிக்காமல் மகிழ்வு தெளிக்கிற புன்னகையுடன் மீள வாழ்வின் உச்சத்தில் அவள் காணும் ஒருசில நிம்மதி பெருமூச்சிற்காய் அவள் தனிமையில் இருக்கின்றாள் பெண்ணே உன் உயிர்த் துடிப்பிற்காக வார்த்தைகள் வேண்டாமடி நாளும் ம�ௌனத்தில் உன் விழிகளால் ம�ொழி பேசு
வளரி கார்த்திகை 2020
| 07
அடங்காதவள்! ஜமுனா தமிழச்சி சென்னை
மரபுக் கவிதைக்குள் அடங்காதவள் புதுக்கவிதை கற்பனைக்கு அப்பாற்பட்டவள்
நம்பிக்கையைச் சார்ந்து வாழ்பவள் மூடநம்பிக்கைக்கு எதிரானவள் முற்போக்குச் சிந்தனையின் முனை மழுங்கிய பக்கங்களைத் திருத்தி எழுதுபவள் நானே தென்றல் நானே புயல் வாழ்க்கைப் பயணத்திற்கு வழிகாட்டி நான் தூண்டிலில் சிக்கும் மீனல்ல நான்... துவண்டுவிடும் க�ொடியும் அல்ல வேர்களின் வலிமை க�ொண்டவள் வேரறுக்கும் வித்தையும் அறிந்தவள் விழுந்தால் எழமுடியாத யானை அல்ல துள்ளி ஓடும் குதிரை நான் அனலைக் கக்குவதில் சூரியன் நான் அன்பைப் ப�ொழியும் முழுமதியும் நான் காதலால் என்னைக் கரைக்குள் அடக்க நினைத்தால் கரை உடைத்துச் சீறிப் பாயும் நதியாவேன் நான் முள்படுக்கையில் உறங்கும் முடிவுறா கவிதை நான்...!
08 | வளரி கார்த்திகை 2020
என்றறிந்தவள்... அனுமா சென்னை
கிசுகிசுவென
பேசும் ஒலிகள் பேரிரைச்சலாக ம�ோதும் பெருங்காது வேண்டி தவமிருக்கிறாள் அவள் ப�ொறாமை க�ொண்டு இவளைப் பற்றி யாரேனும் பேசும் மறை பேச்சிற்காக ஒரு காலத்தில் உயர்ந்து நின்று திரும்பிப் பார்க்காது திமிரால் நடந்து சென்றதைப் பேசுவதைக் கேட்க வழிந்தபடி காத்திருந்து முண்டியடித்து முன்சென்று ஒப்பம் வாங்கிய நாளின் கதைகளைக் கேட்க இரவுகளற்ற பெரும்பகல் ப�ொழுதுகளின் வெளிச்சத்தில் நடமாடிய மின்னலைப் பற்றிக் கேட்க இறுக்கிய உடைகளில் வழிந்த இளமையில் வயிறெரிந்த மனங்களின் வசவுகளைக் கேட்க ஆவலாக பெருங்காது கேட்கிறாள் கடவுளின் தூதுவனென்று ச�ொல்லிக்கொண்டவனிடம் த�ொலைவில் பேசும் எல்லோர் தாலிலும் ஆடிக்கொண்டிருப்பது தன்மீதான ச�ொல்லாக இருக்கவே மையல் க�ொள்கிறாள் அவள் நீட்டித்த ப�ொழுதுகள் கனக்க இருளில் தேடுகிறாள் புறங்கூறிய பேச்சுகளை அவ்விதமாக அலையும் ப�ொய்யுரைகளில் நிம்மதி தேடுபவள் தன் காதுகளைப் பெரிதாக்கும் வரத்திற்காக தவமிருக்கிறாள் எவ்விதமேனும் பேசுப�ொருளாக இருக்கின்ற வரையே நினைக்கப்படுபவள் என்றறிந்தவள் இப்போதும் பிறர் பேச்சுக்கு வெகுத�ொலைவில் நின்றபடி காதணியற்ற செவிகளில் கவனம் வைத்தவள் காத்திருக்கிறாள்
வளரி கார்த்திகை 2020
| 09
அகம் நிறைந்த அன்பு... தீனா நாச்சியார் வலங்கைமான்
திட்டித் தாலாட்டும்
தாய்மையின் நேசத்தையும் க�ொஞ்சிப் பிழை திருத்தும் தந்தையின் பாசத்தையும் வழி தவற நேர்கையில் தட்டிக் க�ொடுத்து நல்வழிப்படுத்தும் த�ோழமை மனத்தையும் ச�ோர்ந்து நிற்கையில் என் சுவாசமென நின்று எனைத் தாங்கும் உன்னை நானும் அன்பெனும் அகமென்பதா இல்லை அன்பெனும் உயிரென்பதா...?
10 | வளரி கார்த்திகை 2020
இதமாய் இறுகும் ஞாபகங்கள்! நீண்ட கடற்கரைத் தணல் மணலில் நெடிதாய் ஒரு நடை; நா வறண்டு உள்ளிழுத்தாலும் தளர்வு உடல் சூழ்ந்தாலும் தயக்கம் துறந்து, பிரியா ப�ொழுதுகளின் தீமூட்டும் நினைவுகள�ோடு தண்ணிழல் தேடி நீள்கிறது பயணம்; நீளும் இரவின் அமைதி, உணர்வுடன் ஊறிப்போயிருக்கும் படிமங்களை மாமிசத் துண்டங்களாய்த் தெவிட்டத் தெவிட்ட எடுத்துவைக்கிறது; உயிர் நடுக்கத்தோடு முதுகுத் தண்டின் உள்வலியாய் வயிற்றின் அடிப்பகுதி உள்ளிழுக்கும் மாதவிடாய் வலியைவிட, மனத்தின் ஓரத்திலிருந்து எழும் மெல்லிய அழுகுரல் நடுநிசிப் ப�ொழுதைக் கிழித்தெறிந்து காற்றில் கரைகிறது; வைகறையில் கண்கள் ச�ொருக, ஏதேனும் ஒரு மனத்தின் நிழல் தேடி அலையும் உளத்திடம், உரக்கக் கதறுகிறேன் மர நிழலைத் தேடிப்போ அதுவே பகலவன் உதித்ததும் உனைப் பீடிக்காமல் விலகுமென; நிழலின் தேவை தகிக்கும் ந�ொடிகளில் மட்டுமே; தளர்ந்த கால்கள் தஞ்சம் க�ொண்டன மணலில்; க�ொண்கன் வீசும் வலையில் சிக்குண்ட மீனாய்,
கனிம�ொழி
அமெரிக்கா
ஓரிடத்தில் நில்லாது அலைய�ோடும் படகாய், அலைம�ோதிற்று மனது; காலைப்பொழுது புன்னை மரத்துக் குயிலின் ஓசைய�ோடு உணர்வெழுப்ப ஓங்கிய பெருங்கடல் ஓயாமல் திரையாட, கடற்பறவை உரையாட அமர்ந்தது, அதன் சிறக�ொன்று மேனி தீண்ட, மஞ்ஞையின் இறகாய் விரிந்தாடியது நெஞ்சம்; ஆர்கலித் துளிகள் கால் நனைக்க உயிர் ஒளிர்ந்தது; ஒளிரும் உயிர் பகன்றது இயற்கையின் ஓர் உயிர், ஒரு ப�ொருள், ஊன் தழுவிச்சென்றால், ஊசலாடும் உணர்வுகளும் ஊன்றிப் பெருகும்; மனம் மிதக்கும்; பார்வையில் பனி படரும்; எண்ணங்களில் கற்பனை ஊற்றெடுக்கும்; க�ொண்மூ கீழிறங்கி க�ொள்ளை முத்தம் தந்து மேற்செல்லும்; கனலாகும் கானகத்தை மாரி ப�ொழிந்து தணிப்பதுப�ோலே; தழலாடும் மனதின் உள்ளடுக்கு ஞாபகங்களை இதமாய் இறுக்க அணைக்கும் இயற்கையின் அசைவுகள், பேரழகு!
வளரி கார்த்திகை 2020
| 11
குறமகளிர் பாட்டிசைத்து... நிர்மலா சிவராசசிங்கம் சுவிட்சர்லாந்து
தேனில் விதவிதமாய் மேட்டு நிலத்தில் தலையசைக்கும்எடுத்த இன்ப மதுவும் வடித்திடுவர் வேங்கை மூங்கில் மரங்களெல்லாம் காட்டில் குரங்கு கரடியெல்லாம் கலக்கமின்றித் திரியுமன்றோ ஆட்டம்போட மயிலெல்லாம் அசைந்து களிக்கும் பைங்கிளிகள் கூட்டிலிருக்கும் தேனீக்கள் குறிஞ்சி மலரில் ம�ொய்த்திடுமே
த�ொடுக்கும் நாணில் அம்பேற்றித் துரத்தி விலங்கை வீழ்த்திடுவார் அடுப்பில் வைத்துச் சுட்டதனை ஆசை தீரப் புசித்திடுவார் படுகலருகில் குடிசைகளைப் பாங்காய் அமைத்து வாழ்வாரே வாழ்தல் வேண்டி வேளாண்மை வகையாய்ச் செய்வர் குறவர்கள் சூழ்ந்து நிற்கும் குறமகளிர் சுழன்று சுழன்றோடித்திரிவர் மாழ்தலின்றித் தினைப்புனத்தை மகிழ்வு ப�ொங்கப் பாட்டிசைத்துக் கேழ்பு பயக்கும் நெல்வகையைக் கெடுதலின்றிக் காத்து நிற்பர்
மேவிச் செல்லும் மேகங்கள் மெல்லத் தூவும் மழைத்துளிகள் காவிச் செல்லும் தேனீக்கள் காத்து நிற்கும் தேன்கூட்டை நாவிலூறும் தேன்துளியை நாடிச் செல்வர் மக்களெல்லாம் வ�ௌவிச் செல்ல முனைவதற்கு வளைத்துக் கலைத்தே எடுப்பாரே வாழ்க்கை என்றால் குறைநிறைகள் வந்து மறையும் உலகினிலே தாழ்தல் என்பது குறையல்ல சகிப்பு வேண்டும் உள்ளத்தில் ஏழ்மை என்று கலங்காமல் எதிலும் நிறைவு கண்டதனால் ப�ோழ்தலின்றிக் குறிஞ்சியில் புதுமை வாழ்வு வாழ்ந்தாரே
12 | வளரி கார்த்திகை 2020
பெண்ணே...
யாதும் நீயே!
அழகி என்பார்கள் மதி மயங்கி விடாதே அடங்கு என்பார்கள் அனல் குறைந்துவிடாதே அழுத்தம் என்பார்கள் சிந்தை சிதைந்து விடாதே ஆணவம் என்பார்கள் தலைகுனிந்துவிடாதே ஆதிக்கம் என்பார்கள் அடிபணிந்துவிடாதே
கவிமகி சென்னை
விந்தை உலகின் ஆதி அந்தம் நீ விடியல் ப�ொழுதின் சூரியக் கதிர் நீ இரவு நிலவின் ஒளிக்கீற்று நீ பீறிட்டெழும் எரிமலையின் தீப்பிழம்பு நீ சீறும் ஆழிப்பேரலையின் சினங்கொண்ட சீற்றம் நீ வேட்டையாடும் சூறைக்காற்றின் சுழல் நீ சிங்கப் பாய்ச்சலில் உயிர்கொல்லும் பார்வை நீ வீரவாளின் குருதி சுவைக்கும் கூர்முனை நீ காவியம் படைக்கும் காதல் தலைவி நீ உள்ளத்தை உருக்கும் அன்பின் அருவி நீ யாவும் நீயே யாதும் நீயே உளியும் நீயே சிலையும் நீயே செதுக்கும் சிற்பியும் நீயே உருவாக்கு உன் இலக்கணத்தை பழிபேசும் உலகத்தை மறந்து இச்சை வெறியர்களை எரித்து பரிதாபம் காட்டும் சமூகத்தைப் புறக்கணித்து பெண்ணே எழுந்து வா! முயன்று வா! துணிந்து வா! நீயே உன் உலகமென்ற திமிர�ோடு
வளரி கார்த்திகை 2020
| 13
அடுத்தது...!
ரய்லி முனியாண்டி மலேசியா
அதிகாலை பனியில் குளித்து வெயில் விழும் இடத்தில் ர�ோஜாப்பூ
அழுத்தமான பார்வை மெல்லிய குரலில் விசமத்தை மென்று கனவாய்ப் ப�ோக
பூக்களின் அழைப்புகள் புறாக்களின் சிணுங்கல்கள்
ஆளுகின்ற சிலர் சுரண்டும் கூட்டத்திற்கு கைகட்டி நின்று தருகின்ற அதிரடி அறிவிப்பு
சின்னதாய்ச் ச�ோகங்கள் வாய்விட்டு அழுதன ஈரக்காற்றுகூட புழுக்கமாய்
இரண்டு மின்னல்கள் மீண்டும் அந்தரத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல்
சிரமப்பட்டு வெளிப்பட்டது அந்தச் சிரிப்பு ம�ௌனத்தை அடைகாத்து செத்துப்போய் நின்றது மனது
கலகலப்பு காணமற்போக உற்சாகம் ஒளிந்துப�ோக யாருடைய தயவுமில்லாமல் த�ோளில் ஏறி உட்கார்ந்து தீபாவளிய�ோ தைப்பூச திருவிழாவ�ோ ஆளைக் க�ொல்லப்போகும் அடுத்த க�ொர�ொன�ோவாம்
14 | வளரி கார்த்திகை 2020
இராமானுஜர்களின் கதை முடிக்க...! சந்தியா ரவி கள்ளக்குறிச்சி
யாருமில்லா
வெள்ளைக்காடு அது நான் மட்டும் நடக்கிறேன் தனியாக ஒற்றைக் காலுடன்! ஆசையாய் இவள் தீட்டிய சித்திரக் க�ோடுகள் சுவரின் மீது பதறிப்போய் அழிக்கிறாள் அம்மா புரிந்திட ஒருவருமில்லை அழுதது குழந்தை மட்டுமல்ல வண்ணமும் வடிவமும் ஒன்றுதானே எண்ணங்கள் பெருக்கெடுத்த எழுத்தறிவாளனுக்கு எழுதியே தீர்க்கிறான் உயிர்”மை” தீரும்வரை வெற்றுடல் தூக்கி எறியப்படுகிறது குப்பைத்தொட்டியில்
வழிபாட்டு அறைக்குள் நுழைகிறேன் பிள்ளையார் சுழி இட்டு ஸ்ரீராமஜெயம் எழுத மட்டுமல்ல, சில இராமானுஜர்களின் கதையையும் முடிக்க! மரண தண்டனை என்னவ�ோ அவனுக்குத்தான் முதலில் மரணித்ததென்னவ�ோ நான்தான் சாசனம் இயற்றி கையெழுத்திட்ட முதல் ந�ொடியிலேயே! தப்பித்திருப்பேன�ோ அவன் மட்டும் மனந�ோயாளியாக இருந்திருந்தால்...
வளரி கார்த்திகை 2020
| 15
கடலும் நீயும் காதலாய்...
ப்ரியா காசிநாதன் யாழ்ப்பாணம்
அமைதியின்றி ஆர்ப்பரிக்கும் கடலினுள் தேங்கிக் கிடக்கும் அலைகளாய் ச�ோகங்கள் தரித்து ச�ோதிக்கிறாய் என்னை அது விரிந்து கிடக்கும் ப�ொழுதுகளைப் ப�ோல பரந்து கிடக்கிறாய் என் பார்வையின் நிழலில் கரைகளைத் த�ொட்டுச் செல்லும் அழகிய நுரைகளைப் ப�ோல வந்தும் வராமல் எங்கோ விரைந்து செல்கிறாய் எனை விட்டு
அதன்மேல் படரும் பச்சைப் பாசியாய் உனதன்பு என்னில் ஒட்டிக் கிடக்கின்றது யாசித்த ப�ொழுதில் தூரத்துக் கலங்கரை விளக்கத்தின் ஒளியாய் உன் நினைவுகள் செல்லமாக மெல்ல என்னைத் தட்டிச் செல்கின்றன காத�ோரமாய்க் குளிர் தென்றலாய் பாசமாய்ப் பேசி சுவாசமாய்க் கலக்கிறாய் என்னுள்ளே கடல்மேல் நான் க�ொண்ட காதலென உன் மீதான என் காதலும் ஒரு காவியக் கவிதையென உயிர் க�ொள்ளட்டும உனை வெல்லட்டும்!
16 | வளரி கார்த்திகை 2020
கவிப்பேரரசான் மீரா விருதாளருக்கு
பத்தாயிரம் பணப்பரிசு! சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸ் வழங்குகிறார்!! 1960 முதல் மரபுக் கவிதையிலும் 1970 முதல் புதுக்கவிதையிலும் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய கவிஞர் மீரா அவர்களின் பெயரால் வளரி கவிதை இதழ் ஆண்டுத�ோறும் விருது வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையில் இருந்து அன்னம் அகரம் மூலம் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் மீரா. அவர் பெயரால் வழங்கப்படும் விருதுக்குப் பணப்பரிசு என்பது அதற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்ற காரணத்தால் 2021 ஆம் ஆண்டு முதல் மீரா விருது பெறும் படைப்பாளருக்கு என் சார்பில் இந்திய மதிப்பில் ரூபாய் பத்தாயிரம் வழங்க விரும்புகிறேன். இது தமிழுக்கும் கவிதைக்கும் மீராவுக்கும் செய்கின்ற கடமையாகக் கருதுகிறேன்! என்னுடைய இந்தச் சிறிய பங்களிப்பை வளரி ஏற்றுக் க�ொள்ள வேண்டும் நட்புடன், ஷாநவாஸ் முதன்மை ஆசிரியர் சிராங்கூன் டைம்ஸ் சிங்கப்பூர்
வளரி கார்த்திகை 2020
| 17
மாவீரர் நாள்:
கடவுள்கள�ோடு வாழ்ந்தோம் வாழ்கிற�ோம்...! குழந்தைநிலா ஹேமா சுவிஸ்
பூக்களைப்
பூக்களே க�ொன்றதாய் பூக்களே குற்றம்சாட்ட இடைநிறுத்தி முடிவடையா வாசனைகளை அடைத்துக்கொண்டது காற்று துவக்கைத் தூக்கினாலும் ப�ொத்திப் ப�ொத்திப் பக்குவமாய் தன் கதிருக்குள் அடைகாக்கும் நம் சூரியன் பூக்களை சூரியகாந்திகளாய் கார்த்திகைப் பூக்களாய் வாடா மல்லிகைகளாய் மண் மணக்கும் வான்காவின் காவியமாய் கடவுள்கள் நம்மோடு வாழ்தல் வரம் வாழ்ந்தோம் வாழ்கிற�ோம் துவக்கில் பூத்த இப்பூக்கள் வானிலும் வரப்பிலும் தரையிலும் தண்ணீரிலும்
18 | வளரி கார்த்திகை 2020
அக்காக்களாய் அண்ணாக்களாய் தம்பிகளாய் தமிழச்சிகளாய் கண்ணம்மாக்களாய் இசைப்பிரியாக்களாய் பிரசாந்திகளாய் விபூசிகாக்களாய் இப் பூசணிப்பூக்கள் நம் வீட்டுக் க�ோலங்களில் எப்படி... எப்படி... எப்படி அழைக்கலாம் இப்பூக்களை... தீயாய்ப் பூ கக்கும் துவக்குகளைக் கூட்டுப் பூக்களைக் களை க�ொல்லும் புழுக்களை எப்படி அழைக்கலாம்? நீந்தலறியாதவன் வெளியில் நின்று மீனை அழகென்பான் தரையில் நீந்துவான் நாம�ோ... நீந்தும் கடல் வேங்கைகளென்போம் மிதக்கும் பூக்களைத் தாங்கியே தேங்கியிருக்கிறது நந்திக்குளம் நம் தாமரைகளை அள்ளிக்கொள்வோம் சுதந்திரப் பூக்களென ஒருநாள்.... ஒருநாள் அதுவரை இரசிக்கப்போவதில்லை மகரந்தம் தின்னும் பட்டாம்பூச்சிகளையும் பிரய�ோசனமில்லா எந்தக் காட்டுப் பூக்களையும்!
வளரி கார்த்திகை 2020
| 19
தேடல்
சர்மிளா
க�ோவை
கற்பனைக்கு அப்பால் காதல் க�ொண்டு த�ொலைந்து விடும�ோ என்று மனத்தில் ரணத்தைச் சுமந்து உன் நினைவுகள�ோடு காத்திருக்கிறேன் உன்னைத் தேடி
வாய்ப்பின் சிறகு விரிதல் நிர்மலா சென்னியப்பன் க�ோவை
ஆழமான பேச்சு
நீளமாக இருப்பதில்லை ‘தூக்கி எறியப்படும் தருணங்களில்தான் சிறகை விரிக்கும்’ வாய்ப்பு கிடைக்கிறது இயல்போடு நமக்கான வாழ்வை வாழ்ந்தாலே யாருக்கும் முன்னுதாரணமாக இருந்திடவேண்டிய அவசியமும் இல்லை எங்கு இருக்கிற�ோம் என்பதல்ல முக்கியம் யார�ோடு இருக்கிற�ோம் என்பதை ப�ொறுத்தே அமைகிறது மகிழ்ச்சி
20 | வளரி கார்த்திகை 2020
ஊடலின் மெளனம் சரவிபி ர�ோசி சந்திரா
சென்னை
நெருங்கி வந்தால் நேசம் நெருப்பை அள்ளி வீசும் விலகி நீயும் சென்றால் விரும்பி வந்து பேசும்
ஊமை ம�ொழிகளாகும் ஊடல் ம�ௌனமாகும் காதல் செய்யும் மாயம் கண்ணீரில் தீரும் காயம் விலக வைத்தது வெறுப்பு விடைபெறுமா நம்மில் சலிப்பு விலகிடுமா அன்பு விடைபெறுமா நம் உறவு சேற்றில் பிறந்த தாமரை சேறின்றிப் பூக்கலாம் அன்பில் மலர்ந்த நினைவு அன்பின்றி தவிக்கலாமா? உண்மை அன்பு உறவு உயிரில் கலந்த உணர்வு பிரிவு என்பது தனித்தீவு நீயின்றி எனக்கேது நல்வாழ்வு
வளரி கார்த்திகை 2020
| 21
விட்டுச்சென்ற காதல்
அனு ம�ோகன்தாஸ் இலங்கை
த�ொலைதூரம் நீயும்
த�ொடர்பில்லாமல் நானும் மனதுக்குள் வாழும் நம் காதலை மறந்துவிட்டாயா? அல்லது என்னைப்போலவே நீயும் மரணித்துக்கொண்டிருக்கின்றாயா? ஒவ்வொரு நாளும் விடிகின்றன உன் நினைவுகள் விடியலாகி தட்டியெழுப்பும் என்னை உன்னை மட்டுமே நினைத்திருக்கும் இதயத்துள் இன்னும�ொரு எண்ணம் உணரமுடிவதில்லை என்னால் என் நாட்களெல்லாம் உனக்காகமட்டுமே நகர்கின்றன...! காலையும் வந்து அந்தி மாலையுமாகின்றது என் மனமென்ற ஒன்று உன்னையே சுற்றிக்கொண்டிருப்பதால் விடிந்தும் விடியாமல் நீ விட்டுச்சென்ற அதே இடத்தில்தான் இன்னமும் இருந்து க�ொண்டிருக்கின்றது இரவினை மட்டும் இதயம் விரும்புகின்றது இமைக்காமல் உன் நிலற்படந்தனை இரசித்துக்கொண்டுருக்க இன்னமும் வாழ்ந்து க�ொண்டிருக்கின்றேன் நீ விட்டுச்சென்ற காதலை வாழவைக்க!
22 | வளரி கார்த்திகை 2020
மீண்டும் எழுந்திடுவ�ோம்! த�ோழி கவிதாயினி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
வவுனியா
தானாய் வந்த தாரக மந்திரம்! விடுதலைப் ப�ோர் வீரகாவியக் காலம்! எமக்காக எம் சந்ததியினருக்காக விதைக்கப்பட்ட வித்துகள் நீங்கள்! உங்கள் வாழ்வு ஈக வாழ்வு சரித்திரம் மாற்றிட சமர்களம் புகுந்து சரிந்து வீழ்ந்து இன்று கல்லறைகளில் காவியமாய் ! மாவீரர்கள் துயிலிடமெல்லாம் விளக்கொளி சிந்த கார்த்திகை மாதம் கண்ணீரில் நனையும் ! தர்மத்தின் வழி கடந்தவர்கள் தலைவனின்றி தடுமாறும் நிலை! நெறி பிறழ்ந்த கூட்டம் நீதி ம�ொழி பேசும் அவலம்! த�ோள�ோடு த�ோள் கொடுத்த த�ோழரெல்லாம் துர�ோகத்தின் பிடியில் தமிழின விடுதலைக்காய் தன்னலமற்று தியாக வேள்வி பூண்டவர் தன்னுயிர் மாய்ந்து! ஒழிந்துவிட்டதாக ஓலமிடுபவரிடம் விழித்திருபதையும் வீழ்ந்துவிடவில்லை என்பதையும்! தடைகளைத் தகர்த்து மீண்டும் எழுந்திடுவ�ோம் என்பதையும் உணர்த்துங்கள்!
வளரி கார்த்திகை 2020
| 23
அழ. பகீரதன்
வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்ற மாகாண ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்! நியமனம்! இலங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் அழ. பகீரதன் அறிவிப்பு!
வளரி கவிதை இதழின் சார்பு அமைப்பான வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்றம் 17 நாடுகளில் தேசிய த�ோழி கவிதாயினி ஒருங்கிணைப்பாளர்களைக் க�ொண்டிருக்கிறது. அவற்றுள் முதற்கட்டமாக இலங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அழ. பகீரதன் மூன்று மாகாணங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மலையக மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளரையும், அந்த மாகாணங்களுக்குட்பட்ட மாவட்டங்களின் அமைப்பாளர்களையும் அறிவித்திருக்கிறார். சுபாஷினி
ஒருங்கிணைப்பாளர்கள்: வடக்கு மாகாணம் கவிஞர் த�ோழி கவிதாயினி
சாருலதா
மேல் மாகாணம்: கவிஞர் சுபாஷினி கிழக்கு மாகாணம்: கவிஞர் சம்பூர் சச்சிதானந்தம் மலையக மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சாருலதா பாலகிருஷ்ணன் மாவட்ட அமைப்பாளர்கள்:
சச்சிதானந்தம்
எழில்வண்ணன்
யாழ்ப்பாணம் கவிஞர் ஜே.ஜே. சுகன்யா வவுனியா தாயுமானவன் நிஷா மன்னார் இரமா பிரியா முல்லைத்தீவு வட்டக்கச்சி வின�ோத் அம்பாறை கவிஞர் வானம்பாடி முஜா திருக�ோணமலை கவிஞர் க.ய�ோகானந்தன்
மட்டக்களப்பு கவிஞர் எழில்வண்ணன் க.ய�ோகானந்தன்
வின�ோத்
ஜே.ஜே. சுகன்யா நிஷா
24 | வளரி கார்த்திகை 2020
இரமா பிரியா
முஜா