இந்த சமூகத்தில் தீதும் நன்றும் ஒவ்வொரு நொடியிலும் அரங்கேறுவது இயல்புதான்.அவை எதுவும் பிறர் தருவதுமில்லை. பிறர் பெருவதுமில்லை. நமக்குநாமே போட்டுக்கொள்கிற மாலைகளும் நமக்கு நாமே வெட்டிக்கொள்கிற குழிகளும்தான்.கலை இலக்கியம் அரசியல் சார்ந்த தளங்களில் நிகழ்கின்ற தீதையும் நன்றையும் உரசிப்பார்க்கின்ற பதிவுளை இந்த தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்.இணையதளங்களில் இந்த பதிவுகள் வெளியானபோதே ஏராளமான நண்பர்களை எட்டியிருந்தன. அப்போதே எழும்பியபாராட்டுதல்களுக்கும் எதிர்வினைகளுக்கும் பதிலளித்திருக்கிறேன்.இருந்தபோதும் என் பார்வைகள் சரியான பாதையில் பயணிப்பதாக உரக்கப் பேசுபவனல்ல .இந்த தொகுப்பை படிக்க நேருகிறவர்கள் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தினால் மகிழ்வேன்
மீண்டும் பார்க்கலாம் !
என்றும் இனிய.. பாண்டியன் ஜி ( வில்லவன் கோதை ).
சென்னை 603 209 கைபேசி + 91988412732