Kadambam September 2021

Page 1

- செப்டம்பர் 2021

1


- செப்டம்பர் 2021

2


- செப்டம்பர் 2021

3


à œ «÷... க�ோடை விழா 2021

10

க�ோடை விழா பாராட்டு மடல்

12

துள்ளலாக சென்ற ‘கேம்பிங்’... வில்லனாக வந்த க�ொசுக்கள்!

14

வந்தே மாதரம் (INDIA DAY)

17

எழுத்துப்பட்டறையின் சிறுகதை நேரம் 18 குறுக்கெழுத்துப் புதிர்

19

அட்லி! ஒரு கதாநாயகன்

20

க�ோவிட்-19 லாக் ட�ௌன் திருமணம் 22 ஒலிம்பிக்ஸ்-2021: ஆடுகளத்தில் அசத்திய வீரர்கள்

28

த�ொடர்கதை: த�ொலைவில் நிதர்சனம் 30 கவிதைப் பூக்கள்

33

சிறுகதை: வாழ்க்கைத் துணை

34

சிறுகதை: பரிபூரணம்

36

சிறுகதை: இன்றைக்கு ஏனிந்த ஆதங்கமே?

38

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

40

ப�ோட்டியில் வென்ற தமிழ்த்தேனீக்கள் 41 வழிகாட்டிய தமிழ்ப் பெருமக்கள்!

42

சிறுகதை: ஐய�ோ என்னை விட்டுடுங்க ப்ளீஸ்1 44 ஞாபகம் வருதே..!

46

சமையல் மேடை: தீபாவளி பலகாரம்... 48 சிறுவர் சிறுகதை: வெந்நீர் மழை

- செப்டம்பர் 2021

4

49

சிறுவர் சிறுகதை: அரசரின் விருப்பமும் அன்பு மகளும் 51 பேசும் ப�ொற்சித்திரமே!

52

செயற்குழு î¬ôõKìI¼‰¶...

ங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மீண்டும் கதம்பம் இதழின் வாயிலாக உங்களுடன் உரையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை! மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் த�ொன்மை மற்றும் த�ொடர்ச்சியை முதன்மையாகக் க�ொண்டு, சில தவிர்க்க முடியாத சூழல்களால், தமிழ்ச் சங்க அறங்காவலர் குழுவின் வழிகாட்டுதலின்படி 2020-21-ஆம் ஆண்டு பணிபுரிந்த செயற்குழு த�ொடர்ந்து 2021-22-ஆம் ஆண்டிலும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கத்திற்காக த�ொடர்ந்து ஆதரவளிக்கும் என் அன்பு செயற்குழு உறுப்பினர்களுக்கும் அறங்காவலர் குழுவினருக்கும் என் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்! கடந்த ஆண்டு த�ொடங்கப்பட்டு செம்மையாக இயங்கும், பேச்சாளர்கள் குழு, எழுத்தாளர்கள் குழு, நாளைய நட்சத்திரங்கள் ப�ோன்ற முன்னெடுப்புகள் த�ொடர்ந்து செயல்படும். இந்த ஆண்டு கூடுதலாக இசைக்குழு, விளையாட்டுக் குழு மற்றும் மகளிர் அணி புதிதாக செயல்படும். இந்தக் குழுக்கள் இசை ஆர்வலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மகளிர் ஆகிய�ோருக்கு ஒரு சிறந்த களமாக அமையும். இந்தக் குழுக்கள் மூலம் இசை, விளையாட்டு மற்றும் மகளிர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும். மக்கள் அனைவரும் இந்தக் குழுக்களில் பங்கேற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆண்டு செயற்குழுவில் ஒரு சிறிய மாற்றம். கதம்பம் ஆசிரியராக பணிபுரிந்த திருமிகு. செல்லம்மாள் நரசிம்மன் அவர்கள் த�ொடர்ந்து பணிபுரிய இயலாததால், இந்த ஆண்டு கதம்பம் ஆசிரியராக திருமிகு.ரேகா சிவராமகிருஷ்ணன் அவர்கள் பணியாற்றுவார்கள். பல்லாண்டு பாரம்பரியமிக்க கதம்பத்தின் ஆசிரியராக ப�ொறுப்பேற்கும் திருமிகு ரேகா அவர்களுக்கு, என்


மனமார்ந்த வாழ்த்துக்கள்! இவரது தலைமையில், கதம்பம் மேலும் பல வண்ணங்களைக் கூட்டி, மணக்கும் என்பதில் ஐயமில்லை.

2. நியமனக் குழு (Nomination Committee) அமைத்து, அறங்காவலர் குழுவில் (Board of Trustees) உள்ள வெற்றிடங்களை நிரப்புதல்

மிச்சிகன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டு இருப்பது க�ோடை காலத்திற்கான தான். இந்த ஆண்டு க�ோடை காலத்தை நமது சங்கத்தின் க�ோடைவிழா வாயிலாக மக்கள் அனைவரும் மகிழ்வுடன் க�ொண்டாடினார்கள். ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு மக்களை நேரில் சந்தித்தது மிகுந்த மன மகிழ்ச்சி அளித்தது. எதிர்வரும் காலங்களிலும் இயன்ற அளவு நேரடி நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லாம் கைகூடி வருமாயின், உங்கள் அனைவரையும் தீபாவளி க�ொண்டாட்டத்தில் நேரில் சந்திக்கிற�ோம்.

3. நியமனக் குழு அமைத்து 2022 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படவிருக்கும் புதிய செயற்குழு (Executive Committee) அமைத்தல்

1. சட்ட விதிகள் குழு (By Laws Committee) அமைத்து, 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய சட்ட விதிகளுக்கு ப�ொதுக்குழுவில் ஒப்புதல் பெறுதல்

பல்வேறு விதமான பின்னணியிலிருந்து, பல்வேறு பார்வைகளையும், கருத்துக்களையும் க�ொண்ட பல தன்னார்வலர்கள் இணைந்து பயணிக்கும் ப�ொழுது, கருத்து வேற்றுமைகள் இருத்தல் இயல்பு. கருத்து வேற்றுமைகள் ஓர் அமைப்பை வலுப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் நடத்தி செல்ல வழிவகுக்கும். எனவே கருத்து வேற்றுமைகள் இருப்பது நலம். இது ப�ோன்ற சூழல்களில் சங்க நலன் மற்றும் ந�ோக்கத்தைக் கருத்தில் க�ொண்டு, குறைகளை குறைத்து, நிறைகளை நிறைத்து பயணிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு, ஒவ்வொருவரும் நம் கைகளை இறுகப் பற்றிக் க�ொண்டு நடந்து செல்லும் நேரம் இது. எனவே, தனிமனித விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு, 45 ஆண்டுகால பெருமை பெற்ற நமது தமிழ்ச்சங்கத்தின் கண்ணியத்திற்கு எந்தக் களங்கமும் நேரிடாத வண்ணம், அன்பையும் மனிதத்தையும் முன்னிலைப்படுத்தி வெற்றி நடை ப�ோடுவ�ோம்! â¡Á‹ Ü¡¹ì¡,

AƒvL ꣺«õ™ ºî¡¬ñ ðEò£÷¡, I„Cè¡ îI›„ êƒè‹

5 - செப்டம்பர் 2021

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சங்கத்திற்கும், சங்கத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் சட்டவிதிகள் (By Laws) சார்ந்த கருத்து வேற்றுமைகள் உலவி வந்தது. மேலும், கடந்த சில மாதங்களில் அது வெகுவாக அதிகரித்தது. இந்தச் சூழலில், அறங்காவலர் குழு, செயற்குழு, மற்றும் தமிழ்ப் பள்ளி அலுவலர்கள் என அனைத்து தன்னார்வலர்களும் அதிக நேரம் செலவிட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தி தீர்வு காண முயற்சி செய்தோம். இருப்பினும், தீர்வை ந�ோக்கி த�ொடர்ந்து பயணித்துக் க�ொண்டிருக்கிற�ோம். இதன் த�ொடர்ச்சியாக, சங்க நிறுவனர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் இணைந்து விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது:

இந்த திட்டத்தின் முதல்படியாக, ஐந்து நபர்கள் அடங்கிய தமிழ்ச் சங்கத்தின் சட்ட விதிகள் குழு அமைக்கப்பட்டு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


- செப்டம்பர் 2021

6


ஆசிரியர் î¬ôòƒè‹ ச்சிகன் வாழ் தமிழ் ச�ொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம்! உங்கள் அனைவரையும் பல நல்ல தருணங்களில் சந்தித்திருந்தாலும், கதம்பம் ஆசிரியராக, இந்த ஆண்டிற்கான முதல் கதம்பம் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி! அனைவரும் க�ோடையைக் க�ோலாகலமாகக் க�ொண்டாடி விட்டு தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பீர்கள். இந்த இயல்பு நிலை த�ொடர நாம் இறைவனிடம் மனதார பிரார்த்திப்போம். இயன்றவரை பாதுகாப்பு முயற்சிகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்பாக இருப்போம். ஆர்வத்துடன் தங்களது படைப்புகளை கதம்பம் இதழுக்கு அனுப்பிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். த�ொடர்கதை எழுதுவதில், ஒரு புது முயற்சியை முன்னெடுத்துள்ளோம். இவ்விதழில் நம் வாசகர் ஒருவர் எழுதி ஆரம்பித்து வைத்துள்ள த�ொடர்கதையை அடுத்தடுத்த இதழ்களில், வெவ்வேறு நபர்கள் அந்தத் த�ொடரைக் க�ோர்வையாக எழுதி (வரும் நான்காவது இதழில்) முடிக்க வேண்டும். கதம்பம் இதழாசிரியரின் பணி ஒரு பூக்கடைக்காரரின் பணியைப் ப�ோன்றது. எல்லா நாளும் எல்லா விதமான பூக்களும், எளிதில் கிடைத்துவிடாது... அதேப�ோல், நம் கதம்பம் இதழுக்கும் தேடித் திரிந்து தான் படைப்புகளைச்

சேகரிக்கிற�ோம். இப்பணியிலும் சில சுவாரஸ்யங்கள் இருக்கத்தான் செய்கிறது. சிலரிடம் கதம்பதிற்கு எழுதிக்கொடுங்கள் என்று கேட்டால் “இன்று ப�ோய் நாளை வா” என்பர். சிலர் நாம் ஒன்றைக் கேட்டால், நம்மை அசர வைக்கும் விதத்தில் வேற�ொன்றைத் தருவர். புத்தகத்தில் ப�ோட உங்கள் புகைப்படத்தை க�ொடுங்கள் என்றால், பெண் பார்ப்பதற்கு கேட்டது ப�ோல் பல படங்களைத் தருவர். இப்படி, “வரும் ஆனா வராது” என்பதுப�ோல் ஒவ்வொன்றாய்ச் சேகரித்து,

“பூவ எடுத்து ஒரு மாலை த�ொடுத்து வெச்சோமே” உன் பார்வைக்காகத்தான் இந்த (கதம்பம்) மாலை ஏங்குது, என்ற பாடல் வரிகள் ப�ோல், எங்களால் முடிந்தவரை முயற்சித்து இந்தக் கதம்பத்தை உங்கள் முன் வைக்கிற�ோம். உங்களது நிறை(நிறைய), குறை(குறைவாக)கள், மற்றும் மேலான படைப்புகளை, kadhambam@mitamilsangam.org என்ற

மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். எப்பொழுதும் ப�ோல் த�ொடர்ந்து உங்களது ஆதரவைத் தாரீர்! இங்கனம், உங்கள் அன்புச் சக�ோதரி,

ரேகா சிவராமகிருஷ்ணன் ஆசிரியர், கதம்பம். மிச்சிகன் தமிழ்ச் சங்கம்.

7 - செப்டம்பர் 2021

மி


மிச்சிகன் தமிழ்ச் சங்கம் செயற்குழு 2020-2021

கிங்ஸ்லி சாமுவேல் தலைவர்

காசிப்பாண்டியன் ராஜவெளியப்பன் துணைத் தலைவர்

கார்த்திக் லிங்கநாதன் ப�ொருளாளர்

பிரஷாந்த் இராதாகிருஷ்ணன் செயலாளர்

ரேகா சிவராமகிருஷ்ணன் இணைச் செயலாளர் மற்றும் ‘கதம்பம்’ இதழ் ஆசிரியர்

இராதா வெங்கடரமணி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

அருண் நிஷ�ோர் பாஸ்கரன் வலைத்தளம் ஒருங்கிணைப்பாளர்

மைத்ரேயி வெங்கடேஷ் சந்தைப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர்

«ò£è²‰îK ܼ‡°ñ£˜

Hó꣉ˆ ð¡m˜ªê™õ‹

ó£ü°ñ£K ó£ü¡

தர் சின்னச்சாமி

இலக்கிய கழக ஒருங்கிணைப்பாளர்கள்

- செப்டம்பர் 2021

8

சமூக தூதர்கள்

ô†²ñ‡ îêóî¡

C¡¬ùò£ 𣇮ò¡

eù£ º¼è¡

ävõ˜ò£ ªüèbê¡


இளைய�ோர் செயற்குழு 2021-22

வணக்கம்.

என்னுடைய ந�ோக்கம் தன்னார்வலராக இருந்து சேவை செய்வதுடன் நண்பர்கள் அனைவருடனும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் வேலை கஷ்டமாக இருக்காது. இதை என்னுடைய டீம் நண்பர்களுக்கு நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த வாலன்டீயர் வாய்ப்பின் மூலம் கிடைக்கும் அனுபவம் எங்களது எதிர்காலத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிற�ோம். அதனால், செயற்குழுவுக்கு உதவுவத�ோடு நாங்களும் ச�ொந்தமாக சில நிகழ்ச்சிகள் செய்ய ஆசைப்படுகிறேன். அது, நிச்சயம் அடுத்து வரும் இளைய�ோர் செயற்குழு நண்பர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறேன்.

சாய்பிரஷாந்த் ராஜேஷ் தலைவர்

வேத் முத்துசாமி நிர்வாகத் துணைத் தலைவர்

நிதா பால்ராஜ் துணைத் தலைவர்

அபிஷேக் நிர்மல் குமார் செயலாளர்

விசாலாட்சி மெய்யப்பன் துணைச் செயலாளர்

அகிலா விவேக் ப�ொருளாளர்

பரதேஷ்வர் மகேந்திரன் இணை ப�ொருளாளர்

நியத்தி மணிவண்ணன் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பு

தருணிகா இராமநாதன் கனிதேஷ்னா சியாம்சுந்தர் கதம்பம் இதழ் ஒருங்கிணைப்பு சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பு

சுகேஷ்குமார் சரவணன் வலைத்தளம் ஒருங்கிணைப்பு

உறுப்பினர்கள்

நன்றி! வணக்கம்..!

சாய்பிரஷாந்த் ராஜேஷ் தலைவர் - இளைய�ோர் செயற்குழு மிச்சிகன் தமிழ்ச் சங்கம்

நிலா முத்துசாமி நிகழ்வு ஒருங்கிணைப்பு

சக்தி கண்ணா ராஜாகண்ணா நிகழ்வு ஒருங்கிணைப்பு

ராமு கண்ணன் நிகழ்வு ஒருங்கிணைப்பு

யஷ்வந்த் அரவிந்த் பால அபிநயா பரிவாக்கம் அத்விகா ப்ரகாஷ் ஸ்வப்னா காந்தன் சாதனா ராவ் அக்‌ஷயா பழனிச்சாமி அக்‌ஷரா பழனிச்சாமி மகாலட்சுமி தரன் நவீன் நடராஜன் ஸ்ருதி சேவுகன் மதுனிகா இராமநாதன் மதுமிதா ஆனந்த் ஆதித்தன் ஏகாம்பரேஸ்வரன்

9 - செப்டம்பர் 2021

என் பெயர் சாய்ப்ரஷாந்த் ராஜேஷ். நான் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன். நான் நமது சங்கத்தின் 2021-22-ஆம் ஆண்டிற்கான இளைய�ோர் செயற்குழு தலைவராக பணி புரிய உள்ளேன். எனக்கு இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் இளைய�ோர் செயற்குழுவில் பணியாற்ற எனது புதிய மற்றும் பழைய நண்பர்கள் மிகவும் ஆவல�ோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நல்ல முறையில் இணைத்து, செயற்குழுவின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் சிறப்பாக பணியாற்ற பாடுபடுவேன்.


நிகழ்வுகள்...

செல்லா,

ஃபார்மிங்டன் ஹில்ஸ்

ை ட ோ � க விழா 

வா

2021

னவில் வண்ணத் த�ோரணங்கள் சலசலக்க..

பட்டுப் பதாகையில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் மினுமினுக்க.. சிறார்களின் குதூகலக் கும்மாளத்துடனும்..

- செப்டம்பர் 2021

10

இளைய�ோர் குழுவின் விருந்தோம்பலிலும்.. வழிகாட்டிகள் முதல் வளரும் சந்ததியினர் வரையில் பங்குக�ொண்ட வான் த�ொடு விளையாட்டுகள்.. தாகத்தைத் தீர்க்க நீர் ம�ோர், எலுமிச்சை சாறென, சுவையான சிற்றுண்டி மற்றும் சில அங்காடி ப�ொழுதுப�ோக்குகளுடன்.. கத்திரி வெயிலிலும் ப�ொய்க்காது பெய்த இரு மழைகளாக இசை மழை


மேனாள் மற்றும் இந்நாள் செயற்குழுத் தன்னார்வலர்களின் பெரும் பங்களிப்புடன் இனிதே நடந்தேறிய க�ோடைக் க�ொண்டாட்டம் நினைவில் தங்கும�ொரு நற்திருநாளாம்! சுளீர் வெயிலையும் ப�ொருட்படுத்தாது வருகை புரிந்த நமது தமிழ்ச் ச�ொந்தங்களுக்கு எங்களின் நனி நன்றிகள்! - மிச்சிகன் தமிழ்ச் சங்கம்

11 - செப்டம்பர் 2021

மற்றும் பரிசு மழை நம் உறவுகளின் உள்ளத்தை நனைத்தன!


ை ட ோ � க விழா 

பாராட்டு மடல்...

நமது காதம்பம் வாசகி திருமதி. ஷர்மிளா அவர்களின் தந்தையார் திரு மா.பாலேந்திரன் அவர்கள் நாமக்கல்லில் இருந்து நமது

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் க�ோடை விழாவை பற்றி பாராட்டி எழுதிய அன்பு மடல் இத�ோ...

- செப்டம்பர் 2021

12


Smarter solutions, Realized

Detroit Engineered Products (DEP) is an Engineering Solutions and Product Development company. Since its inception in 1998 in Troy, Michigan, USA, DEP is now a global company with footprints in Europe, China, Korea, Japan and India.

POWER TO ACCELERATE PRODUCT DEVOLOPMENT DEP MeshWorks is a CAE driven platform for rapid concept CAE and CAD model generation, parametrization of CAE models, enabling optimization, advanced meshing and CAD morphing. Rapid time to market of new products across several industry sectors such as automotive, defense, aerospace, biomed, energy, oil & gas, consumer products and heavy equipment is a unique value proposition delivered to clients via DEPs world class engineers and the DEP 13 MeshWorks platform.

கதம்பம்

- ஜனவரி 2016

- செப்டம்பர் 2021

2

USA (HEADQUARTERS) Detroit Engineered Products 850, East Long Lake Road, Troy, Michigan - 48085

Ph: (248) 269 7130 www.depusa.com


அல்கோனாக் ‘அட்டாக்’!

ரேகா சிவராமகிருஷ்ணன், ட்ராய்

துள்ளலாக சென்ற

‘கேம்பிங்’... வில்லனாக வந்த க�ொசுக்கள்..!

ருத்தப்படாத வாலிபர் சங்க சிவகார்த்திகேயன் ச�ொன்ன "எங்களுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இருந்தே ஆகணும்" என்பது ப�ோல், இந்தக் க�ோடையில் சென்றே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு.... எங்களது கன்னி முயற்சியான கேம்பிங் பயணத்திற்கு தயாரான�ோம்.

முதற்கட்டமாக எல்லாக் குடும்ப நண்பர்களும் இருக்கும் ஒரு ப�ொது கேம்பிங் வாட்ஸ் அப் குழு, பிறகு என்னென்ன எடுத்து ப�ோக வேண்டுமென்று இன்று கூடி பேச பெண்களுக்கென ஒரு தனி வாட்ஸ்அப் குழு என்று ஆரம்பமே ஒரே அமர்க்களம் தான். பிறகு, அல்கோனாக் கேம்பிங் இடத்தில் முன்பதிவு செய்து, பட்டா இல்லாத புறம்போக்கு நிலத்தை வளைத்துப் ப�ோடுவதுப�ோல், பல இடங்களை எங்களுக்கென தேர்வு செய்து ஒதுங்கின�ோம்.

- செப்டம்பர் 2021

14

அமேசானில் விற்கும் கேம்பிங் சம்பந்தப்பட்ட ப�ொருட்கள் அனைத்தும் எங்கள் குழு நண்பர்களால் மாறிமாறி ஆர்டர் செய்து வாங்கப்பட்டது (எங்களால் அந்த மாதம் அமேசானிற்கு அம�ோக வருமானம் தான்)...

அவர்கள் பங்கிற்கு மெய்ஜர் (Meijer), வால்மார்ட் (Walmart) & க்ரோஜெர் (Kroger) என்று பல கடைகளில் இருந்து பல சரக்குகளை வாங்கி வீட்டின் கார் கேராஜை ர�ொப்பி வைத்தனர். நாங்கள் கேம்பிங் கிளம்பும் நாளும் வந்தது.... எங்களது கார்கள் வாயிருந்தால் கதறி இருக்கும். அத்தனை ப�ொருட்களையும் அதில் ஏற்றின�ோம். ஒன்றா இரண்டா ..... எல்லாம் எடுத்துச் செல்லவே ஒரு நாள் ப�ோதுமா...? canopy, கூடாரம், மைக்ரோவேவ் அவன், மளிகை சாமான், அடுப்பு, காத்தாடி, துடப்பம், கூடாரத்திற்குள் வைக்கும் விளக்கு, இன்ஸ்டன்ட் பாட், கடாய், பாத்திரம் கழுவ ஒரு பக்கெட், மேஜை, நாற்காலி,... அப்பப்பா! ஒரு மினி வீட்டையே கூடாரத்துக்குள் செட் செய்து விட்டோம். இப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எடுத்துச்சென்ற நாங்கள் ஒரு விஷயத்தில் சற்று அசட்டையாக இருந்து விட்டோம்....

இது பத்தாது என்று அக்கம் பக்கத்தில் இருக்கும் வால்மார்ட், டன்ஹேம்’ஸ் ஸ்போர்ட்ஸ் என்று பார்த்த கடைகளில் எல்லாம் என்னென்ன கேம்பிங் ப�ொருட்கள் இருந்தத�ோ அதையெல்லாம் வாங்கியாகிவிட்டது.

அமெரிக்காவில் க�ொசு எல்லாம் கிடையாது என்ற எங்களது நினைப்பில் மண் அள்ளிக் க�ொட்ட அத்தனை பெரிய க�ொசு பட்டாளம் எங்கிருந்துதான் கிளம்பி வந்தத�ோ தெரியவில்லை (சமீபத்திய க�ோடை மழையின் உபயம் ப�ோல)....

இத்தனை ப�ொருட்களையும் எடுத்துப்போக எங்களது வண்டிகள் (2 மினிவேன்கள் உட்பட) பத்தாது, யூ-ஹவ்ல் (U-haul) பிடிக்கலாமா, என்ற அளவுக்கு ய�ோசித்தோம்...

நாங்கள் அனைவரும் கிரில் செய்த உணவுகளை ஒரு கை பார்த்துக் க�ொண்டிருக்கையில், எங்களைச்சுற்றி ஒரு தேனீக் கூட்டம் ப�ோல் கடிக்க ஆரம்பித்தது....

இது ப�ோதாது என்று பெண்கள் குழுவினர்,


வரும் இதழுக்கான

ப�ோட்டிகள் நாங்கள் க�ொண்டு சென்ற க�ொசு மருந்துகளை அடித்தாலும், அவை அடங்காமல் ஆடிக் க�ொண்டுதான் இருந்தது. சரி, இந்தியாவில் நாம பார்க்காத க�ொசுவா? சமாளித்துவிடலாம் என்ற எங்களது நம்பிக்கையில் (அசட்டுத் தைரியத்தில்) தீ வைத்தது இந்த க�ொசுக் கூட்டம். இதைக் கண்டு பயந்த எங்களது சில நண்பர்கள் குடும்பத்துடன் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு, அடுத்த நாளே அபேஸ் ஆகிவிட்டனர். ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குவ�ோம் டா!’ என்று வடிவேலு ஸ்டைலில், நாங்கள் தைரியமாக எங்களது இரண்டாம் இரவை ந�ோக்கி காத்திருந்தோம்.... இன்று அனுபவம் கூடிப் ப�ோனதால், முன்னெச்சரிக்கையாக, மாலையே புகை ப�ோட்டு அலர்டாக க�ொசுவை அட்டாக் செய்யக் காத்திருந்தோம்.

1

உங்கள் வீட்டுப் ப(பெட்)ட்டுக் குட்டியின் புகைப்படத்துடன், செல்ல பிராணி செய்யும் செல்லக் குறும்புகளை எழுதி அனுப்பிடுங்கள். பனியில் பட்டபாடு - அமெரிக்காவின் 2 பனிக்காலத்தில் தாங்கள் சந்தித்த ஏடாகூடமான, நகைச்சுவையான தருணங்களை எங்களுடன் பகிரலாம்.

இரண்டாம் நாள் க�ொசுக்கடி க�ொஞ்சம் மட்டுப்பட்டது... அப்பாடா எப்படிய�ோ சமாளித்து விட்டோம், நாளை காலை கிளம்பி விடலாம் என்று ப�ொழுதைக் கழித்து, வீடு வந்து சேர்ந்தோம்.

தெனாலிராமனிடம் சூடு கண்ட பூனைப�ோல், ஆல்கோனாக் க�ொசுவிடம் கடி வாங்கி, இனிமேல் கேம்பிங் என்றாலே ஒரு கலக்கம் தான். 

தங்களது படைப்புகளை தங்களது முழு பெயர் மற்றும் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

kadhambam@mitamilsangam.org அனுப்பவேண்டிய கடைசித் தேதி:

25 நவம்பர், 2021

நீங்கள் அனுப்பும் கட்டுரைகள் word document படிவத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் வரும் இதழில் இடம்பெறும்.

15 - செப்டம்பர் 2021

க�ொசுக்கடி தான் க�ொஞ்சம் தடையா இருந்துச்சு, மத்தபடி நம்ம கேம்பிங் டிரிப் சக்சஸ் என்று நினைத்தோம். வீட்டிற்கு வந்த பிறகு, கை கால்களில் அரிப்பு அடங்கவே இல்லை, பாட்டி வைத்தியம் முதல் பார்மசியில் கிடைக்கும் அனைத்தையும் ப�ோட்டு, சமாளித்தோம். ஒருவாறாக, 3-2 நாட்களுக்குப்பின், சகஜ நிலைக்குத் திரும்பின�ோம்.


- செப்டம்பர் 2021

16


நிகழ்வு...

வந்தே

(INDIA DAY)

ன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் - மகாகவி பாரதியார் இந்த கீதத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதி மிச்சிகனில் நமது இந்திய மக்கள் இப்படித்தான் ஒற்றுமையாக இருந்து நமது தாய் நாட்டின் பெருமையை புகழ்வதற்காகவும், இந்திய கலாச்சாரத்தை தமது சந்ததியினர�ோடு கடைபிடிப்பார்கள் எனவும் சிறுகணமும் ய�ோசிக்காமல் நம்பிக்கைய�ோடு எழுதிய வரிகள் என்று த�ோன்றும் அளவிற்கு, நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகச்சிறப்பாக நமது இந்திய சுதந்திர தினத்தை ந�ோவி, மிச்சிகனில் க�ொண்டாடினார்கள்.

வழக்கமாக India Day நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அன்பர்களையும் நண்பர்களையும் ஒன்றிணைத்து மிகக் க�ோலாகலமாக

க�ொண்டாடும் சுதந்திர தின நிகழ்ச்சியாகும். க�ொர�ோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையினால் இந்த வருடம் மிகவும் பாதுகாப்பாக எளிய முறையில் நடத்தப்பட்டது நூற்றுக்கு அதிகமான வணிகக் கடைகள் இருக்க வேண்டிய இடத்தில் முப்பத்தி ஐந்து கடைகள�ோடும், ஆயிரத்துக்கு மேலான நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள�ோடு நடக்கும் நிகழ்ச்சிகள் 300 பேர்களுடனும் இனிதே நடைபெற்றது. இதர வணிக கடைகளுடன், மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் ப�ோட்டி ப�ோட்டு (வியாபாரமற்ற முறையில்!) நமது தமிழ்க் கலாசாரத்தை எந்த அளவிற்கு நேசிக்கிற�ோம், தமிழை எப்படி நமது சந்ததியினருக்கு எடுத்துரைக்கிற�ோம், தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகி எப்படி மற்றவர்களுக்கு உதவுவ�ோம் என பல தன்னார்வல உத்திகளை பார்வையாளர்களுக்கு தெரிவித்தது. சுதந்திர தின நிகழ்ச்சியை க�ொண்டாட பல இலாப ந�ோக்கற்ற அமைப்புகள் (Non-Profit Organization) ஒன்று திரண்டு தங்களது அமைப்பின் க�ொடிகள�ோடு, மாபெரும் அணிவகுப்பினை நடத்தினார்கள். இதில் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் திரு. கிங்ஸ்லியின் தலைமையில் செயற்குழு மற்றும் சங்க உறுப்பினர்கள் சிலர�ோடு சிறப்பாக அணிவகுத்து Parking lot-ல் ஆரம்பித்து, விழா மேடை வரை மற்ற அமைப்புகள�ோடு இணைந்து சென்று நமது தமிழ்ச்சங்கத்தின் ஆதரவை தெரிவித்தத�ோடல்லாமல் இந்திய சுதந்திர தினத்தை அயல் நாட்டில் க�ொண்டாடிய பெருமைய�ோடு வீர நடைப�ோட்டு வந்தே மாதரம் பாடியது. வாழ்க பாரதம்... வளர்க நமது இந்திய கலாச்சாரம்!

- அண்ணாதுரை முருகேசன் Board of Director, Indian League of America, Michigan Past President, Michigan Tamil Sangam

17 - செப்டம்பர் 2021

மாதரம்


வாசிப்பும்... நேசிப்பும்..!

எழுத்துப்பட்டறையின்

சிறுகதை

நேரம திரு

மி

ச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் எழுத்துப்பட்டறை கிளப் ஹவுஸ் செயலியின் வழியாக சிறுகதை நேரம் என்ற நிகழ்ச்சியை வாரம் ஒரு முறை நடத்தி வருகிறது.

- செப்டம்பர் 2021

18

வளன்

இந்த நிகழ்ச்சியில் சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அது வாசிக்கப்படும். பின் அக்கதைப் பற்றிய கலந்துரையாடல் நிகழும்.

என்பதைப் ப�ோல பிரியா இணைஞர்கள் தான் வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும். வாசிப்பு தன் வழியே ஒரு பாதையை உருவாக்கும். ஆனால் அந்தப் பாதை இருள் ப�ொதிந்தும், காதடைக்கும் அமைதிக்குள்ளும் சில சமயம் மாறக்கூடும். அதை மாற்றும் உத்திகளில் ஒன்று, வாசிப்புடன் சேர்ந்த உரையாடல்.

இலக்கியத்தில் வாசிப்பு எவ்வளவு முக்கியம�ோ அதே அளவு கலந்துரையாடலும் முக்கியம். ஒரே படைப்பை பலர் பலதரப்பட்ட பார்வையில் பார்ப்பார்கள். இன்னும் ச�ொல்லப்போனால் ஒரு படைப்பானது எழுத்தாளரும் வாசகனும் சேர்ந்து உருவாக்குகிறார்கள்.

ஒரு மலரை ஒருவர் பார்ப்பதுடன் நிற்பதில்லை, பலர் பார்ப்பதுடன், அதன் அழகை வியப்பதும் ஆராய்வதும் ஒரு இயல்புநிலை. அதுவே இங்கு நிகழ்த்தப்படுகிறது. எழுத்துப்பட்டறையில் வாசிப்பும், அதைத்தொடர்ந்த உரையாடலும் மிக முக்கிய அங்கமாக இருந்து க�ொண்டே இருக்கிறது.

இலக்கியம் என்றாலே அது ஒரு தனிப்பட்ட குழுவினுருடையதாகவும், அதில் உள் நுழைவது மிகச்சிலரால் மட்டும் தான் ஆகக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு. இலக்கியம் மேலிருப்பது அல்ல, அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கப்படுவதும் அல்ல. மாறாக நம் அருகாமையில், நம் த�ோள் உரசும், சக மனிதர்களின் உள் உணர்வுகள் தான். அவை இப்போதிருக்கும் மிதமிஞ்சிய வேகவாழ்க்கையில், கேளிக்கைகளுக்கு மத்தியில், ப�ொலிவாய் பூத்திருக்கும் ர�ோஜா மலர் ப�ோல மெலிதாய் மலர்ந்து, வாசம் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு அழகிய ஊடகம். உணர நேரமில்லாதவர்களுக்கும், அல்லது உணர்தலில் சிக்கல் இருக்கும�ோ என எண்ணுபவர்களுக்கும், சிறு பயிற்சிகளின் மூலம் உணர்த்தும் கூடுகை தான் எழுத்துப்பட்டறை.

எழுத்தாளறையும் வாசகனையும் சந்திக்க வைக்கும் முயற்சி இந்த நிகழ்ச்சியின் ஒரு திட்டம். பட்டறை எழுத்தாளர்கள் தங்கள் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும் எழுத்தாளர்களிடம் கேட்டுத்தெளிவுப்பெறும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி க�ொடுக்கிறது. இதுவரை எழுத்தாளர் திரு.வளன் மற்றும் எழுத்தாளர் திரு.பா.திருச்செந்தாழை அவர்கள் பங்குப்பெற்று சிறப்பித்தார்கள். எதார்த்த கதைகள் எழுதுவதில் உள்ள சவால்கள், மண் சார்ந்த கதை எழுதுவதற்கு வரலாறு நமக்கு தரும் கரு மற்றும் கதையின் தலைப்பு குறித்து கலந்துரையாடல் நடைப்பெற்றது.

எந்த இயற்கையின் வெளிப்பாடுகளிலும் இரு கருதுக�ோள்கள் மிக முக்கியமானதாக இருக்கும். ஆண் - பெண், இரவு - பகல், அகம் - புறம்...

அனைத்து எழுத்தாளர்களின் ஒரே கருத்து வாசித்தல் மட்டுமே எழுத்தை மேம்படுத்தும். இன்னும் வரும் வாரங்களில் பல எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் த�ொடரும்.

- மதுனிகா & லஷ்மண் எழுத்துப்பட்டறை, மிச்சிகன் தமிழ்ச்சங்கம்.


மூளைக்கு வேலை

குறுக்கெழுத்துப் பு

தி ர்

இடமிருந்து வலம்:

3

1. சண்டையிட்டதும் ஒத்துப் ப�ோவது. 3. ப�ொருள் என்பதன் வேறு ச�ொல். 5. ..........க்கொரு நீதியா? 7. அரசன் - ஆங்கிலத்தில், 10. சிவபெருமானின் வேற�ொரு பெயர் பசு....... 11. .......... காரியம் சிதறும். 16. ..........யை, சாதனையாக மாற்ற வேண்டும். 17. கூட்டத்தில் தலைவர் .......... பலர் கலந்து க�ொண்டனர். 19. ஏழு நாட்கள் சேர்ந்தது, ஒரு ..........ம். 20. .......... பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை. தானே வளரும். 22. கம்பரின் மகன். 23. காய்ந்து உதிர்ந்த மரத்தின் த�ோல்.

1

2

4 5

6

7

8 10 13

9 11

12

14 15

16

17 19 22

18 20

21 23

24

வலமிருந்து இடம்:

மேலிருந்து கீழ்: 1. பிரம்மச்சாரி என்பதற்கு எதிர்ச்சொல். 2. வெண்ணெய் திரண்டு வரும் ப�ோது, .......... உடைந்தாற் ப�ோல. 3. விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தும் அறிவு.

7. ..........த்ததை க�ொண்டு திருப்திபட வேண்டும். 11. தீவட்டி - வேறு ச�ொல். தீப்....... 13. நெல்லிலிருந்து, அரிசி நீக்கியவுடன் கிடைப்பது. 15. அரசர்களுக்கு வீசப்படும் விசிறி. 16. ஒரு பானை ச�ோற்றுக்கு ஒரு, .......... பதம். 20. சிலர், சிறிய விஷயத்தை .......... பெரிதாக்குவர்.

கீழிருந்து மேல்: 4. பாட்டு என்றும் ச�ொல்லலாம். 8. சமயத்துக்கு ஏற்றவாறு. வார்த்தைகளை, இட்டுகட்டி பாடும் பாட்டை, இப்படி குறிப்பிடுவர். 10. ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட வாக்கியத்தின் த�ொகுப்பு. 12. கிராம்பு என்பதை இப்படியும் ச�ொல்லலாம். 14. பழையன கழிதலும் ..........ன புகுதலும். 21. காந்தி கடைசியாக ச�ொன்ன வார்த்தை. ஹே .......... 22. ஆவல். 23. பேக்கரியில் கிடைக்கும் ஒருவகை சிற்றுண்டி .......... 24. கடிகாரம் - ப�ொருத்தப்பட்ட வெடிகுண்டு; ஆங்கிலத்தில்.

விடை: 43ம் பக்கம்

19 - செப்டம்பர் 2021

4. .......... நேர வேலை செய்து, கிடைத்த வருமானத்தில், படிப்பு செலவை, பார்த்துக் க�ொண்டான். 6. கனவு. 8. விசுவாமித்திரர் அருளிய, .......... மந்திரம் விசேஷமானது. 9. காகம் திருடி சென்ற தின்பண்டம். 15. இறைவன் - பேச்சு வழக்கு. 18. நெய்தல் நிலத்து சார்.


மிச்சிகன்

! அட்லி கதாநாயகன் “அ வரலாறு...

இராம்துரை பாலசுப்ரமணியன்,

ஒரு

ட்லி” இந்த பெயரை கேட்டதும் உங்களின் நினைவுக்கு வருபவர் யார்? இதற்கான விடை நிச்சயம் நீங்கள் யூகித்தது அல்ல! அதற்கு முன் இன்னொரு கேள்வி! இந்தியாவுக்கு சுதந்திரம் க�ொடுத்தது யார்? சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அல்லவா? ஆம்! சுதந்திரம் யாரால் கிடைத்தது, யார் வாங்கித் தந்தார்கள் என்று கேட்டால் நாம் எல்லோரும் நம் நாட்டு விடுதலைக்காக ப�ோராடிய சுதந்திர ப�ோராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் பெயரை கடகடவெனச் ச�ொல்லிவிடுவ�ோம். ஆனால்! சுதந்திரம் க�ொடுத்தது யார்...?

இப்படி ஒரு கேள்வி வந்தால் நமக்கு ஒரு குழப்பம் வருமல்லவா? இந்த கேள்விக்கான பதில் என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ‘ஐரோப்பியரான ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷார்) மட்டும்தான் இந்தியாவை (ஏன் இந்த உலகத்தையே) ஆள தகுதி உடையவர்கள்; இந்தியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சுதந்திரம் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாது' என்ற கருத்துடையவர், அப்போது இங்கிலாந்து நாட்டு பிரதமராக (194045-ல்) இருந்த திரு. வின்ஸ்டன் சர்ச்சில்.

- செப்டம்பர் 2021

20

ஆனால், அவருக்கு எதிராக அவருடைய க�ொள்கைக்கும் சிந்தனைக்கும் நேர்மாறான எண்ணம் கொண்டவர் அப்போது இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சி தலைவராக இருந்த திரு. கிளமெண்ட் அட்லி (Clement Attlee) அவர்கள். அவர் இந்தியர்கள் மீதும், இந்தியா மீதும் நல்லெண்ணம் க�ொண்டிருந்தார். ஆம்! அவர்தான் அட்லி! நம் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் அதாவது தன்னாட்சி வழங்க மிகவும் உறுதுணையாக இருந்தவர். இங்கிலாந்து அரசு, இந்தியாவுக்குத்


தன்னாட்சி வழங்குவது பற்றி ஆராய, சைமன் குழுவை (Simon Commission) அமைத்தப�ோது, திரு. ஜான் சைமன் தலைமையில், ஏழு உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா வந்தார் திரு. கிளமெண்ட் அட்லி. நமது இந்திய நாட்டில் நடந்த ஆங்கிலேயரின் அடக்கு முறையையும், நமது சுதந்திரத்துக்கான கொந்தளிப்பையும், போராட்டங்களையும் கவனித்தார், புரிந்து கொண்டார்; நமது தேவையைத் தெரிந்து க�ொண்டார். இந்தியர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். அவர்கள் காட்டுமிராண்டிகள். நமது ஆட்சியின் கீழ் இருப்பதுதான் அவர்களுக்கு நன்மை தரும், அதுமட்டுமன்றி, பிரிட்டன்தான் வலிமையான நாடு; இந்தியா வலுவற்றது; எனவே, இந்தியா பிரிட்டனுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று இறுமாப்புடன் ச�ொன்னவர் சர்ச்சில். இதை கடுமையாக எதிர்த்த அட்லி, அவரிடம் இந்தியாவை, இந்தியர்களே ஆளட்டும், நாம் நமது இங்கிலாந்து ஆட்சியையும் அதன் வளர்ச்சியையும் மேம்படுத்தும் திட்டங்களுக்கும் நமது நேரத்தை செலவிடுவ�ோம். மேலும், இந்தியர்கள் சிறந்த ஆளுமைத்திறன் உள்ளவர்கள், அவர்கள் நாட்டை அவர்களிடமே ஒப்படைத்து விடுவ�ோம் என்று ஆணித்தரமாக எதிர்த்தார், அப்போது தொழிலாளர் கட்சித்தலைவராக இருந்தார் அட்லி. இந்த சமயத்தில் (1945-ல்) இங்கிலாந்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் த�ோல்வி அடைந்தார் சர்ச்சில். அவரை எதிர்த்த அட்லி வெற்றி வாகை சூடி அந்நாட்டு பிரதமரானார். அதை நல்வாய்ப்பாகக் கருதி, என்ன நடந்தாலும் சரி என்று, 1947-ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கினார். அவர் சர்ச்சில் அவர்களிடமும் ஒப்புதல் பெற்று நமக்கு நம் தாய்நாட்டை திருப்பி தந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த 75-வது சுதந்திர தினத்தில் நமக்கு சுதந்திரம் கிடைக்க உறுதுணையாக இருந்த திரு. அட்லி் ஒரு கதாநாயகன் என்பதை நினைவு கூறுவ�ோம். ஜெய்ஹிந்த்!

21 - செப்டம்பர் 2021

இந்தியாவின் சுதந்திர தாகமும், இந்தியர்களின் சுதந்திர ப�ோராட்டமும் தான் இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்று தந்தது, என்னுடைய பங்களிப்பு இதில் ஒன்றும் இல்லை என்று இந்தியர் பக்கம் நின்று, நம் இந்திய மக்களின் சுதந்திரக்கனவை நிறைவேற்றிய அட்லி அவர்களை இந்த தருணத்தில் மனதில் கொள்வோம்.


அனுபவம் புதுமை...

அங்குசெல்வி

னைவருக்கும் வணக்கம்! என் பெயர் அங்குசெல்வி ராஜா. நான் மிச்சிகன் தமிழ் சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர். மேலும் சங்கத்தின் தலைவராகவும் 2013-ஆம் ஆண்டு பணியாற்றி இருக்கிறேன். சமீபத்தில் என் மகளின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கடுமையான க�ோவிட்-19 லாக் ட�ௌன்-ல் இந்த திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றோம். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து க�ொள்ள விரும்புகிறேன்.

‘வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!’ என்று நம் முன்னோர்கள் நமக்கு கற்று க�ொடுத்த பாடம் 100% சதவிகிதம் உண்மையே. பெரும்பாலான மணப்பெண்களைப் ப�ோலவே, எனது அன்பு மகள் லதிகா ர�ோஷினி தன் மனதிற்குப் பிடித்த மணாளன் ஷரன் சிவகுமாரின் கைக�ோர்த்து திருமண மேடையில் நடக்கையில், தனது அன்புக்குரிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் புடைசூழ அந்த மகிழ்ச்சியான தருணத்தை க�ொண்டாட ஆசைப்பட்டாள். மத்தளம் க�ொட்ட, வரி சங்கம் நின்றூத என்று எல்லா கன்னியரும் காணும் கனவு தானே அது! 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், எங்கள் இரு குடும்பங்களும் இணைந்து ஆரம்ப கட்ட திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்தின�ோம். பின்னர் 2020-ஆம் ஆண்டின் இறுதியில்

- செப்டம்பர் 2021

22


23 - செப்டம்பர் 2021

க�ோவிட்-19 லாக் ட�ௌன்


நாளில், இந்தியா பயணம் மேற்கொள்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. என்னதான் நாம பயப்படாத மாதிரியே நடிச்சாலும் சுத்தி இருக்கிறவங்க நமக்கு பீதியை கிளப்பி விட்டுருவாங்க. நான் சென்னையில் இறங்கிய நாளிலிருந்து, எதிர்மறை செய்திகள் இல்லாமல் ஒரு நாள் கூட கடந்து செல்லவில்லை. மணமகன் மற்றும் மணமகள் தரப்பிலிருந்து, அனைத்து முக்கிய நபர்களுக்கும் க�ோவிட் வந்து தனிமைப்படுத்தப்பட்டனர். மணமகனும் மணமகளும் இதில் அடக்கம். சில ஒன்று விட்ட ச�ொந்தங்கள் க�ோவிட்க்கு பலியாயினர். எங்கேயும் ப�ோகாமல், எதிலும் கலந்து க�ொள்ள முடியாத க�ொடுமையான நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, என் அம்மாவுக்கு க�ோவிட் வந்து ஐசியுவில் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தப�ோது நான் ஆடிப்போய்விட்டேன்.

திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் மார்ச் 2020 முதல், க�ோவிட் 19 த�ொற்றுந�ோயால் உலகமே தலைகீழானது. ‘க�ொர�ோனா’-வை தவிர வேறு பேச்சு வார்த்தைகளே வழக்கில் இல்லாமல் ப�ோயிற்று. டிசம்பர் 2020 இறுதி வரைக்கும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில்,, குறைந்தபட்சம் ஒரு நிச்சயதார்த்த விழாவை எங்களால் செய்ய முடிந்தது. பிறித�ொரு நாளில் திருமணத்தை பெரிய அளவில் செய்யலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

- செப்டம்பர் 2021

24

டிசம்பர் 2020 இல் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, ஜூன் 2021 இல் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தோம். ஆனால் க�ோவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவை மிக ம�ோசமாக தாக்கும் என்று நாங்கள் அப்போது க�ொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் அனைத்து திருமண ஏற்பாடுகளையும் செய்வதற்காக நான் வேலையில் இருந்து மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, இந்தியா செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். எனது பயணத்திற்கான நாட்கள் நெருங்கி வர வர, இந்தியாவில் நிலைமை மிகவும் ம�ோசமாக இருந்தது. நான் விமானத்திலிருந்து சென்னையில் இறங்கிய

தமிழ்நாட்டில் காலவரையற்ற லாக் ட�ௌன் அமலுக்கு வந்தது. இது திருமணத்துடன் த�ொடர்புடைய எந்த வேலையும் செய்ய விடாமல் எங்கள் கைகளை முழுமையாகக் கட்டிப்போட்டது. நாம என்னதான் வருஷக்கணக்கில் பிளான் பண்ணாலும் கலர்கலரா ‘எக்ஸெல் ஷீட்’ ப�ோட்டாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதுங்கிற ஸ்டேஜ்ன்னு ஒண்ணு வரும்னு எனக்கு நெத்தியில அடிச்ச மாதிரி புரிய வைத்த தருணம் அது. இனிமே எதுக்கும் பிளான் பண்ண ப�ோறது கிடையாது. நம்ம மனசு ச�ொல்லறதை கேட்டு ப�ோகுற ப�ோக்கிலே ப�ோகணும்! அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தப�ோது, வீட்டிற்குள் பணியாளர்கள் யாரும் நுழைய மறுத்தனர். அதனால் நான் குடும்ப உறுப்பினர்களுக்கு முழுநேர சமையல்காரி ஆனேன். ஒரு நாளைக்கு மூன்று வேளை சமைக்க வேண்டியிருந்தது. டேய், நான் USA ல எங்க வீட்டிலேயே வாரம் ஒரு வாட்டி தாண்டா சமைப்பேன். என்னை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே டா! ஸ்விக்கியும் ஸ�ோமட�ோவும் (Swiggy and Zomato apps) சமயத்தில் கை க�ொடுக்கவில்லை என்றால் நான் என்ன கதிக்கு ஆளாகி இருப்பேன�ோ தெரியவில்லை! நான் என் அம்மாவை கவனித்துக் க�ொள்வதா, வீட்டை கவனித்துக் க�ொள்வதா,


அல்லது திருமணம் நடக்குமா இல்லை நடக்காதா என்ற மன அழுத்தத்தில் ப�ோராடும் என் மகளை கவனித்துக் க�ொள்வதா? எந்தப் பக்கம் பார்ப்பது என்று தெரியாமல் இந்த பதினைந்து வருடத்தில் நான் உடைந்து அழுத தருணம் அது. ஊரில் எல்லாத் திருமணங்களுக்கும் உழைத்து விட்டு என் ச�ொந்த பேத்தியின் திருமணத்திற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று என் அம்மா மனம் வெதும்பி அழுகையில், என் அம்மாவிற்கு நான் தாயாக நின்று என்ன நடந்தாலும் ஏற்றுக் க�ொள்ள வேண்டும் என்று அவர்களை சமாதானப்படுத்தினேன். நாள் பூராவும் எல்லா வேலைகளையும் செய்து விட்டு உடலும் மனமும் ச�ோர்ந்து, என் மன அழுத்தத்தை யாருக்கும் காட்டிக் க�ொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் ம�ொட்டை மாடியில் தனிமையில் நான் ம�ௌனமாக அழுகின்ற நேரத்தில், என் மகள் எனக்கு தாயாகி என்னைத் தேற்றுவாள். என் வாழ்நாளில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மறக்க முடியாத தருணங்கள் அவை.

நாட்கள் செல்லச் செல்ல, திருமணத்தை எப்படி நடத்துவது என்று தெரியாமல் குழம்பி ப�ோயிருந்தோம். திருமண மண்டபங்கள் மூடப்பட்டிருப்பதாலும், ஹ�ோட்டல்கள் முன்பதிவுகளை ரத்து செய்வதாலும், க�ோவில்கள் மூடப்பட்டதாலும் திருமணத்திற்கு நாங்கள் என்ன திட்டமிட்டுள்ளோம் என்று கேட்டு உறவினர்களிடமிருந்து மாறி மாறி த�ொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தெரிஞ்சா ச�ொல்லமாட்டோமாடா!!! இறுதியாக ஜூன் 15 அன்று, நாங்கள் முன்பதிவு செய்திருந்த வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபம், எங்கள் முன்பதிவை கவுரவித்து திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டது. திருமணத்தின் முதல் நிகழ்ச்சி ஜூன் 25 ஆம் தேதி

மூன்றாவது நாள் மாப்பிள்ளை வீட்டில் மஞ்சள் நீர் விளையாட்டு உற்சாகமாக நடந்தது. கல்யாணமே நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்து மாறி, ஐந்து நாள் கல்யாணமாக க�ோலாகலமாக நடந்தது...

25 - செப்டம்பர் 2021

தினமும் ஒன்பது மணி செய்திகளுக்காக குடும்பமே காத்திருப்போம். அப்போது தான் தினசரி க�ோவிட் எண்ணிக்கையை வெளியிடுவர். ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்கள் குறையும் மற்றும் அரசாங்கம் லாக் ட�ௌன்-ஐ தளர்த்தும் என்ற நம்பிக்கையில் கடந்து சென்றது. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக ஒவ்வொரு வாரமும் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. க�ோவிட் மிகவும் ம�ோசமாக இருந்த ஒரு கட்டத்தில், என் தந்தை என்னிடம் திருமணத் தேதியை ஒத்திவைக்குமாறு கேட்டார. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடக்க வேண்டும் என்று நான் மிகவும் உறுதியாக இருந்தேன். அரசாங்க விதிகளின் படி 50 பேர் வந்தாலும் சரி, 500 பேர் வந்தாலும் சரி, எப்படிய�ோ திருமணம் நாம் விரும்பியபடி நடக்கும் என்று என் உள்ளுணர்வு ச�ொன்னது. முடியும் என்று நம்பு, முடித்துக் காட்டு!


த�ொடங்கவிருந்தது. எல்லா வேலையும் செய்வதற்கு எங்களுக்கு பத்தே நாட்கள் தான் இருந்தன. என் ரத்த அழுத்த எண் க�ோவிட் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. கடைகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்குவதே எங்களுக்கு இருந்த ஒரே வழி. ஊருல எல்லா வெங்காய கடையும் திறந்துட்டான் கல்யாணத்துக்கு தேவையான துணிக்கடையையும் நகை கடையும் மட்டும் திறக்கலை என்ன க�ொடுமை சரவணன் இது!!! திருமண அழைப்புகளை வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் அனுப்பின�ோம். தேவையான அனைத்து துணிமணிகளையும் நகைகளையும் இன்ஸ்டாகிராம் (Instagram), அமேசான் (Amazon), பேஸ்புக் (Facebook) மூலமாக வாங்கின�ோம். வாங்கின ப�ொருட்களுக்கு கூகிள் பே (GooglePay) மூலம் பணம் செலுத்தின�ோம். வாங்கின துணிகளை தைப்பதற்கு டான்ஸோ (Dunzo) மூலம் தையற் கடைக்கு அனுப்பின�ோம். இத்தனையும் செய்யும் ப�ோது சமைக்க எது நேரம்? ஸ்விக்கி (Swiggy) மூலம் உணவை ஆர்டர் செய்தோம். இந்த எல்லா செயலிகளும் (Apps) இல்லாமல், இந்த திருமணத்தை நாங்கள் நடத்தியிருக்க முடியாது. சமூக ஊடகங்களுக்கு நன்றி. இதை ஒரு நாள் ச�ொல்வேன் என்று நான் ஒருப�ோதும் கனவிலும் நினைத்ததில்லை. முதல் முறை ஆன்லைனில்ல பட்டுப் புடவை வாங்கி அது வந்து சேர்வதற்குள் நான் பட்ட டென்ஷன் இருக்கே! எப்பா... எப்பா... எப்பப்பா..!

- செப்டம்பர் 2021

26

நாங்கள் திருமண சேலைக்கு ரவிக்கை தைக்க க�ொடுத்திருந்த Designer Studio பெண்ணின் தந்தை க�ோவிட்-ல் இறந்து விட்டதால், அவள் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டாள். கல்யாணத்திற்கு இன்னும் ஏழே நாட்கள் தான் இருந்தன. இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணை த�ொந்தரவு செய்யவும் மனம் வரவில்லை, அதே சமயம் எங்கள் பாடும் திண்டாட்டம். பைத்தியம் பிடிக்காத குறை. அந்த ஒரு துக்கத்திலும் அந்த பெண் என்னை த�ொலைபேசியில் அழைத்து எங்களின் சிக்கல் புரிந்து அவள் Studio ஆட்களை வைத்து ரவிக்கைகளை தைத்து கல்யாணத்திற்கு முதல் நாள் க�ொடுத்தாள். அவள் சின்ன பெண்ணாயினும் என் மனதில் உயர்ந்து நின்றாள்! ஆன்லைனில் வாங்க முடியாத சில ப�ொருட்களுக்கு, கடைகளிலிருந்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், கெஞ்சிக்

கூத்தாடியும், செல்வாக்கை பயன்படுத்தியும் கடைகளை திறக்க வைத்தோம். பெரிய கடைகள் கூட அவற்றின் பின்புற வாயில்களைத் திறந்தன (பெயர்களைக் குறிப்பிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை). நம்ம தலைவர் ச�ொல்ற மாதிரி, என் வழி தனி வழி! அதப்பத்தி கேட்காதே... யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தனித்து ஷாப்பிங் செய்தது ஒரு செலிபிரிட்டி பீலிங் க�ொடுத்தது! பத்தே நாளில் ஒரு திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயமா என்ன? அனைத்து ச�ொந்தங்களும் கை க�ொடுத்து ஆளாளுக்கு வேலையை பகிர்ந்து க�ொண்டனர். இந்த திருமணம் நல்லபடியாக நடக்க பெரிதும் உறுதுணையாக இருந்தார் என் தந்தை சந்திரம�ோகன் அவர்கள். நானும் திருமணம் எளிமையாகத்தானே செய்ய ப�ோகிற�ோம், இதற்கு எதற்கு முப்பது நாற்பதாயிரத்துக்கு பட்டு புடவை எடுப்பது, நாமும் எளிமையாக புடவை கட்டுவ�ோம் என்று வருத்தத்துடன் இருந்தேன். (நான் ஒரு புடவை பைத்தியம் என்று இங்கு புரிந்து க�ொள்ளுங்கள்). மற்றவற்றிலும் செலவை குறைத்து செய்யலாம் என்று நினைத்தேன் (வருத்தத்துடன் தான்). ஆனால், என் தந்தை விடாப்பிடியாக அனைவரும், நாம் முன்னர் திட்டமிட்டபடி தான் ஆடை அணிமணிகள் அணிய வேண்டும், எதிலும் குறைத்து செய்ய கூடாது என்று பிடிவாதமாக நின்று விட்டார். எப்படி இருந்தாலும் இது நம் வீட்டு திருமணம். பத்து பேர் வந்தாலும் ஆயிரம் பேர் வந்தாலும் நமக்கு ஒன்று தான். என் மகளின் ஆசைகளை ஒன்று விடாமல் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். எங்களின் சம்பந்திகள் திரு. சிவகுமார், திருமதி. சாந்தி சிவகுமார் குடும்பமும் எல்லாவற்றிலும் முன் நின்று சிறப்பாக செய்து க�ொடுத்தனர். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியம். எங்கள் குடும்பமே சேர்ந்து இந்த கல்யாண தேரை இழுத்து மண்டபம் வரை க�ொண்டு வந்தது. சென்னையில் பணமும் த�ொடர்புகளும் இருந்தால் ப�ோதும். மலையையே புரட்டி விடலாம். திருமணத்திற்காக நாங்கள் ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு Airbnb வீடு எடுத்திருந்தோம். அங்கேயே எங்களுக்கு தேவையான எல்லாம் சுற்றுவட்டாரத்திலே கிடைத்தது. இதற்கிடையில் எங்கேயும் வாகனங்களில் ப�ோக வர முடியாதபடி ப�ோலீஸ்காரர்களின் கெடுபிடி வேறு. ஒரு சமயம் நானும் என் மகளும் இரு சக்கர வாகனத்தில்


ஜூன் 25 ஆம் தேதி திருமணத்தின் முதல் விசேஷமாக, பந்தக்கால் நடும் விழா மற்றும் உப்பு வாங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதைத் த�ொடர்ந்து லதிகாவிற்கு நலங்கு மற்றும் ஹல்தி (மஞ்சள் பூசும் வைபவம்) என்னும் சடங்குகளும் செய்யப்பட்டன.

....நாங்கள் விரும்பியவாறு அனைத்து ச�ொந்தங்களும், நண்பர்களும் உடன் இருந்த ப�ோது, இத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என்னை அழுத்திய வேதனை என்னை விட்டு விலகுவதை என்னால் உணர முடிந்தது.

அடுத்த நாள் சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் திறந்தவெளி மாடியில் நடந்த சங்கீத் மற்றும் மெஹந்தி விழா பெரும் வரவேற்பைப் பெற்றது. மூன்றாவது நாள் மாப்பிள்ளை வீட்டில் மஞ்சள் நீர் விளையாட்டு உற்சாகமாக நடந்தது. கல்யாணமே நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்து மாறி, ஐந்து நாள் கல்யாணமாக க�ோலாகலமாக நடந்தது. நான்காம் நாள் காலையில் மணப்பெண் தாய் வீட்டை விட்டு புறப்படும் சடங்கு. என் மனது கனத்தது, என் உடலை விட்டு என் ஆவி பிரிவது ப�ோல் ஒரு உணர்ச்சி, கண்கள் கட்டுப்பாடு இன்றி நீரை வார்த்தது. எல்லா மகளைப் பெற்ற அம்மாக்களுக்கும் வரும் நிலைமை தானே இது என்று என்னை கூடி இருந்த ச�ொந்தங்கள் தேற்றின. அன்று மாலை வாரு வெங்கடாசலபதி அரண்மனையில் வரவேற்பு. ச�ொந்தங்களும் நண்பர்களும்

எதிர்பாத்ததை விட அதிகமாய் ஆசையாய் குவிந்தனர். அனைவரையும் அன்பாய் வரவேற்று அருமையாய் கவனித்தோம். க�ோவிட் Mask கட்டுப்பாடுகளுக்காக ஒரு Task force நியமித்தோம். வரவேற்பில் நூற்றுக்கும் மேலான உண்டி வகைகள் பரிமாறப்பட்டன. உள்ளூர் மதுரை பன் பர�ோட்டா முதல் இத்தாலிய, மெக்சிகன், தாய், சீன மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச உணவுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது. சும்மாவா! நமக்கு ச�ோறு தான் முக்கியம்!!! இதுல highlight என்னன்னா, திருமண நாளன்று, லாக் ட�ௌன் விலக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அட ப�ோங்கடா, இனி காமாட்சி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன!!!

ஜூன் 28 ஆம் தேதி காலை 10:15 மணிக்கு, மணமகன் ஷரத் என் மகள் கழுத்தில் திருமண நாணை கட்டிய ப�ோது, நாங்கள் விரும்பியவாறு அனைத்து ச�ொந்தங்களும், நண்பர்களும் உடன் இருந்த ப�ோது, இத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என்னை அழுத்திய வேதனை என்னை விட்டு விலகுவதை என்னால் உணர முடிந்தது. என் பதினைந்து வருட கனவு, ஏன் தவம் என்று கூட ச�ொல்லலாம், இனிதாய் நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அங்குசெல்வி! இந்த கல்யாணம் எப்படி நடக்கும�ோ என்ற கவலை நீங்கி கல்யாணம்னா இப்படித்தான் நடக்கணும் என்கிற மாதிரி வழிநடத்திய எம்பெருமான் வெங்கடாசலபதிக்கு க�ோடான க�ோடி நமஸ்காரங்கள்! மனம் இருந்தால் மார்க்கமுண்டு!!! நீங்கள் ஏதாவது செய்ய உறுதியாக இருந்தால் உங்களை எதுவும் தடுக்க முடியாது. எனக்கு நானே ச�ொல்லிக் க�ொண்டேன்!!! 

27 - செப்டம்பர் 2021

தையல்கடைக்கு ப�ோகையில், ப�ோலீஸ்காரர்கள் எங்களை வழிமறித்து வீட்டுக்கு ப�ோக ச�ொல்லி அதட்டினார்கள். நான் எப்பொழுதும் ஒரு திருமண பத்திரிகையை என் கைப்பையில் வைத்திருப்பேன். அதனை காட்டி சூழ்நிலையை விளக்கி, அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி எங்கள் வேலைகளை முடித்து க�ொண்டோம். கடைசியில இந்த கல்யாணத்துக்காக ப�ோலீஸ் கிட்ட கூட மாட்டியாச்சு, நானும் எவ்வளவு நாள் தான் நல்லவளா நடிக்கறது!!!


ஆடுகளத்தில் அசத்திய

ஒலிம்பிக்ஸ்-2021

வீரர்கள் வ

ரலாற்றிலேயே, இரண்டு முறை நடந்த உலகப் ப�ோருக்காக மட்டுமே நிறுத்தப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் ப�ோட்டிகள், கடந்த வருடம் (2020) ஆரம்பித்த க�ோவிட் பெருந்தொற்றின் காரணமாக, ஜப்பான் தலைநகர் ட�ோக்கிய�ோவில் நடக்கவிருந்த ப�ோட்டிகள் இந்த ஆண்டிற்கு (2021) ஒத்திவைக்கப்பட்டது.

க�ோவிட் இரண்டாம் அலை த�ொடக்கம்‌ப�ோன்ற இடர்பாடுகள் இருந்தாலும், நம் நாட்டிலிருந்து வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து க�ொண்டு நம் தாய் நாட்டிற்கு மிகப்பெரும் பெருமையை சேர்த்துக் க�ொடுத்துள்ளனர். தடகளப் பிரிவில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல்முறையாக பதக்கம் வென்று, தங்கமகனாக வெற்றி வாகை சூடினார் நீரஜ் ச�ோப்ரா.

- செப்டம்பர் 2021

28

அவரைப் பின் த�ொடர்ந்து...  ரவிக்குமார் தாஹியா - வெள்ளி (ஆண்கள் குத்துச்சண்டை)  மிராபாய் சானு - வெள்ளி (பெண்கள் பளு தூக்குதல்)  பி.வி. சிந்து - வெண்கலம் (பெண்கள் பூப்பந்து)  லவ்லினா - வெண்கலம் (பெண்கள் குத்துச்சண்டை)  பஜ்ரங் புனியா - வெண்கலம் (ஆண்கள் குத்துச்சண்டை)


இந்திய ஹாக்கி அணி - முப்பத்திய�ோரு ஆண்டுகளுக்குப்பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அதுமட்டுமல்ல கடந்த 2016 ரிய�ோ ஒலிம்பிக்கில் 67வது இடத்தில் இருந்த நாம், முன்னேறி... 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என ம�ொத்தம் 7 பதக்கங்களுடன் இம்முறை 48வது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிற�ோம்.

“நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கைப�ொம்மைகளே... என்றால் கூட ப�ோராடு நண்பா என்றைக்கும் த�ோற்காது உண்மைகளே... ‘Usain bolt’ஐ ப�ோல் நில்லாமல் ஓடு ‘Gold’ தேடி வரும்... உந்தன் வாழ்வும் ஓர் ‘Olympic’ஐ ப�ோலே வியர்வை வெற்றி தரும்”... மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் ப�ோட்டிகளும் இந்தக் க�ோடையில் நடைபெற்றது. மற்றவர்களுக்குத் தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் விதத்தில் அருமையாக விளையாடி உலகளவில் 24 -வது இடத்தைப்பிடித்த வெற்றி வீரர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள். விடாமுயற்சிய�ோடு ப�ோராடி, சிறப்பாக விளையாடி, நம் வீரர்கள் மேன்மேலும் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புவ�ோம். 

- செப்டம்பர் 2021

29


த�ொடர்கதை

தூ

சங்கர் க�ோவிந்தராஜ்,

ரத்தில் மிகப்பெரிய கப்பல் ஒன்று மிதந்து க�ொண்டு இருந்தது பல நாட்களாக அங்கே தான் அது இருந்தது. கப்பலில் நீளமும் அகலமும் தூரத்திலிருந்து பார்க்கும் ப�ொழுதே மிகப்பெரியதாக இருந்தது. அருகில் சென்று பார்த்தல் எப்படி இருக்கும், என்றாவது ஒரு நாள் அதை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும். ய�ோசித்துக்கொண்டே நடக்கையில் துரத்தி கட்டுமரங்களை வைத்துக்கொண்டு, இருபதைத் தாண்டாத சில இளம் மீனவர்கள் கண்ணில் தென்பட்டனர். அவர்களை ந�ோக்கிப் ப�ோகலாமா வேண்டாமா என்று ய�ோசித்து, மனிதர்கள் தானே அவர்களும், சென்று பேசுவ�ோம் என்று அருகில் சென்றேன். நான் சென்றிருக்கும் த�ோரணையைப் பார்த்தவுடனே அவர்கள் யூகித்து விட்டார்கள்.

- செப்டம்பர் 2021

30

மிச்சிகன்

“இன்ன சார் கடலுக்குள்ள ப�ோணுமா?” என்று ஒருவன் கேட்டான். பார்ப்பதற்கும் கரிய கட்டுமரத்தைப் ப�ோன்ற வயிற்றுடன் இருந்தான். என் வயிற்றைத் த�ொட்டுப் பார்த்துக்கொண்டேன். அதற்கு நேர்மாறாக அருகிலிருந்தவன் வயிற்றைத் தள்ளிக்கொண்டு இருந்தான். நான் “ஆமாம்” என்றேன். “ஐநூறு ரூவா” “ஐநூறு ரூவா தரியா சார், கூட்டிக்கின்னு ப�ோறேன்.” “சரி” “ரெண்டு கில�ோமீட்டர் வரைக்கும் தான் அல�ோவ்ட், அதுக்கு மேல முடியாது சார்.” என்றான். “எங்கிட்ட கேமரா எல்லா இருக்குது, ப�ோட்டோ எடுக்கணும் இந்த கட்டுமரத்துல ப�ோறது சேஃப்பா இருக்குமா..?” “பைய அவராண்ட குடுத்துட்டு உன் காமெராவை மட்டும் எடுத்துட்டு வா சார், பிரச்சின இல்ல பாத்துக்கலாம்.” பதட்டத்துடன் பையை அங்கிருந்த இன்னொருவனிடம் க�ொடுத்தேன். என்னிடம் காமெராவையும் வாலட்டையும் வைத்துக் க�ொண்டேன். பிறகு புறப்பட ஆயத்தமான�ோம். ஒருவன் கட்டுமரத்தின் ஒரு புறத்தை வடக்கு ந�ோக்கி சென்று தண்ணீரைத் த�ொடுமாறு வைத்தான். இன்னொருவன் மெதுவாக நகர்த்தி அலைகளை ந�ோக்கி இழுத்துச்சென்றான். கட்டுமர வயிறான் என்னைப் பார்த்துக் கையசைத்து வா என்றான். கழுத்தில் காமெராவை மாட்டிக்கொண்டு கட்டுமரத்தில் தடுமாறி ஏறினேன். “சார் அலைய தாண்டிட்டா கட்டுமரம் குலுங்காது. அதுவரைக்கும் நல்ல புடுச்சிக்கோ சார்.”

த�ொலைவில்

நிதர்சனம்


“டீசல் நாத்தம் கஷ்டமா இருக்கும், மூக்கை ப�ொத்திக்கோ சார்.” “இல்லை எனக்கு இந்த நாற்றம் பிடிக்கும்.” “அப்ப சரி சார்.”

விமானப் பயணம் மனதைக் க�ொண்டாட்டத்தின் உச்சத்தை மனதில் கட்டிப்போட்டு வைத்திருக்கும். அப்பொழுதும் மனதில் வெறுமை த�ோன்றும். அதுப�ோல ஒரு நிலை. இல்லை! அதை விட உயரிய நிலை இது.

குதித்து குதித்து கட்டுமரம் முடிவில்லா கடலை ந�ோக்கிக் கிளம்பியது.

“இன்னும் ஐநூறுபா தரியா”

சிறிது நேரத்தில் அந்த குதித்தல் அடங்கி மெதுவான தவிப்புடன் கட்டுமரம் இயங்க ஆரம்பித்தது. பயணத்தை ஆரம்பிக்கும் ப�ொழுது இருந்த பயம் மெல்ல விலகி அவர்களிடத்தில் ஒரு அன்யோன்யம் பிறக்க ஆரம்பித்தது.

மாலை மங்கி.. இருள் பரவ ஆரம்பித்தது...

ஒரு பத்து நிமிடத்தில் என்னிடம், “சார் ரெண்டு கில�ோமீட்டர் ஆச்சு சார்” என்று ச�ொல்லி கட்டுமரத்தை மிதக்க விட்டனர். நான் நடுவில் இருபுறமும் மரத்தைப் பிடித்தவாறு இருக்க, மற்ற இருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து பீடி பிடிக்க ஆரம்பித்தனர். “சார் ப�ோட்டோ பிடிச்சிக்க சார்!” என்றான். அந்திசாயும் மாலை வெளிச்சங்களும், சத்தங்களும் இரண்டு கில�ோமீட்டர் த�ொலைவில். நிசப்தம் இல்லை. எனக்குத் திருப்தியுமில்லை. “இன்னும் க�ொஞ்ச தூரம் ப�ோலாமா?” “இல்ல சார்.. இதுக்கு மேல ப�ோலாம், வெளியாளுங்கள பார்த்தா ர�ோந்து ப�ோலீஸ் கேள்வி கேட்கும்.” “இவ்ளோ தூரம் வந்துட்டோம் க�ொஞ்சம் கூட்டிட்டு ப�ோயேன்பா...”

“சரி” ம�ோட்டார் இயக்கப்பட்டு கட்டுமரம் நகர ஆரம்பித்தது. “ஏன்டா நாம வலைப�ோட்ட இடத்தை பாத்துட்டு வந்துடலாமா?” என்று ஒருவன் கேட்க, “ஆமா” என்றான் மற்றொருவன். மேலும் ஒரு ஐந்து கில�ோமீட்டர்கள் கட்டுமரம் பயணப்பட்டது. சத்தங்களில் இருந்தும் முற்றிலும் விலகி வந்தாகிவிட்டது. சுற்றிலும் கடல். தூரத்தில் விளக்கொளிகளின் புகைமூட்டம். மனதில் வெறுமை குடிக�ொண்டது. சிந்தனைகளற்ற நிலை. இதற்குமுன் எனக்கு இந்த வெறுமை கிடைத்துள்ளது. அது பறக்கும் ப�ொழுது. ஒவ்வொருமுறையும் விமான பயணத்தின் ப�ொழுதும் மனதில் பரவசம் குடிக�ொள்ளும். ஆகப்பெரிய ச�ோகங்களும் மனதை ஒன்று செய்துவிடாது பார்த்துக்கொள்ளும். விமானப் பயணம் மனதைக் க�ொண்டாட்டத்தின் உச்சத்தை மனதில் கட்டிப்போட்டு வைத்திருக்கும்.

31 - செப்டம்பர் 2021

கட்டுமரத்தில் விளிம்பில் இருந்த ம�ோட்டாரில் த�ொங்கிக்கொண்டிருந்த கயிற்றை அவன் வேகமாக இழுத்துவிட்டவுடன். டீசல் புகையின் நெடியுடன் ம�ோட்டார் சப்தமாக இயங்கத் துவங்கியது.


அப்பொழுதும் மனதில் வெறுமை த�ோன்றும். அதுப�ோல ஒரு நிலை. இல்லை! அதை விட உயரிய நிலை இது. அருகில் கடல். ஆம் நான் வங்காள விரிகுடாவில் மிதக்கிறேன், அதுவும் ஒரு கட்டுமரத்தில்.

“இல்ல.. பீடி குடுச்சதில்ல..!” “இந்த சார். பிடிச்சு பாரு.” “சரி க�ொடுங்க.” பீடியைப் பற்றவைத்து இழுத்தேன், நன்றாகத்தான் இருந்தது. நாற்றம் மட்டும் தான் பிடிக்கவில்லை.

நிலவ�ொளி முழுவதும் நிறைந்து ரம்மியமாக இருந்தது.

“மற்றொருமுறை பகல்ல என்ன கூட்டிட்டு வரமுடியுமா?”

வலையின் ஒரு பகுதியை இழுத்துத் தூக்கினான் கட்டுமர வயிற்றான்.

“நம்பர் வாங்கிட்டு ப�ோ சார், இன்னொரு நாள் வா கூட்டினுப�ோற�ோம்”

நிலவ�ொளியில் வெள்ளித் துண்டுகளைப�ோல வலைகளில் பலவகையான மீன்கள் துள்ளியது.

“அங்க தூரத்தில் ஒரு கப்பல் நிக்குதே அதுக்கு பக்கத்துல ப�ோய் ப�ோட்டோ எடுக்கணும்”

மனது இதுவரை கண்டிராத காட்சியை எண்ணி வியந்துக�ொண்டிருக்க...

“அது கஷ்டம் சார்... பக்கத்தில் ப�ோகவே, ர�ோந்து ப�ோலீஸ் வந்துரும், ஆனா பாக்கலாம் நீ வா சார்.”

“சரி எத�ோ ஒண்ணுக்கு ஆகட்டும், மரத்த திருப்பு.” நான், “க�ொஞ்ச நேரம் இங்கயே இருக்கலாமா?” ‘சரி’ என்று பீடி குடிக்க ஆரம்பித்தனர்.

- செப்டம்பர் 2021

“சார்! பீடி குடிக்கிறியா?”

கட்டுமரத்தில் இருந்தவன் தான் வைத்துவிட்டு வந்த அடையாளத்தை ந�ோக்கிப் பயணப்பட்டான். அடையாளத்தைக் கண்டு அருகில் சென்று ம�ோட்டாரை நிறுத்தினான்.

“ச்சை எல்லாம் ப�ொடுசுக, கருவாட்டுக்குத் தான் லாயக்கு...” என்று ந�ொந்துக�ொண்டான்.

32

நான் ம�ௌனமாக இருக்க...

வரும் வருமானத்தை விட விருப்பமில்லாமல் சரி என்று ச�ொன்னது ப�ோல எனக்குப் பட்டது. திரும்பி கரையை அடைய, அவர்களிடம் ஆயிரம் ரூபாயைத் தந்துவிட்டு பையை வாங்கி நடக்கலானேன். (த�ொடர்வோம்...)


கவிதைப் பூக்கள்

‘பியான�ோ’வின்

கண்ணீர் கடிதம்! என்னிடம் அதீத அன்பு க�ொண்டவள்! ஆம்!

என்னிடம் அதீத அன்பு க�ொண்டவள்! அவளை அதிகம் உணர்ந்தாள் நான்! எங்களின் ம�ொழித் த�ொடர்பு இசையே! க�ோபத்திலும் என்னை கை விடாதவள்! அழுகையிலும் என்னை அன்னையாய் அரவணைப்பவள்! அவள் ஆனந்தமாய் என்னை ஸ்பரிசிக்கும் ப�ோது ஏன�ோ Minor scales உம் major scales ஆய் மாறுகிறது! நீ த�ொடாத அனைத்து நிமிடங்களும் முகாரி ராகம் வாசிக்கின்றது

ம�ொழி

பிள்ளைகள்

பேச விரும்புவத�ோ “ஆங்கிலம்”; பெற்றோர்கள் பேசச் வற்புறுத்துவத�ோ “தமிழ்”; ஆதலால், தமிழும் ஆங்கிலமும் கலந்த “தமிங்கிலம்” என்ற புது ம�ொழி திமிங்கிலமாய் உருவாகிக் க�ொண்டிருக்கிறத�ோ?

piano விசைகள்!

- செப்டம்பர் 2021

என்னை தினமும் தழுவிய கைகள், இன்று பள்ளிக்கூடத்தில்! மீட்ட ஆள் இன்றி நான்! தனிமையில்! அவளின் வருகைக்காக!

- சரண்யா இராமகிருஷ்ணன்

33

- சுபா பாஸ்கரன்


சிறுகதை

ராதிகா,

‘கெ

ட்டி மேளம்! கெட்டி மேளம்!’ என்ற ஐயரின் உச்சஸ்தாதி குரலில் - கெட்டி மேளம் க�ொட்ட மங்கல நாண் தன் கழுத்தில் ஏறியதை குனிந்து உறுதி செய்கிறாள் பட்டுச் சேலையில் மின்னும் மணமகள் வித்யா.

டிராய்

தன் கல்யாண ‘சி.டி'யை பார்த்துக் க�ொண்டே பிழிய பிழிய அழும் மகளை பார்த்தபடி வீட்டினுள் நுழைந்தார் சிவராமன். “இப்படி அடிக்கடி க�ோபித்துக்கொண்டு வித்யா நம் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?” என்றார் மனைவியிடம். “என்ன நினைத்தால் என்ன? வித்யாவையும் அவர் க�ொஞ்சம் புரிஞ்சுக்க வேண்டாமா? நீங்க க�ொஞ்சம் சும்மா இருங்க! வேதாளம் முருங்கை மரம் ஏற வில்லை என்றாலும் நீங்க விக்ரமாதித்ய மகாராஜா மாதிரி அவரை தூக்கிட்டு ப�ோய் ஏத்திடாதீங்க.” “வேதாளம் மாப்பிள்ளையா? இல்லை! நம் பெண்ணா? சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட வித்யா த�ொண த�ொணக்கிறதை பார்க்கும்போது மாப்பிள்ளையைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது.” “சரிதான்!” என ந�ொடித்தாள் அவர் மனைவி. விஷயம் இதுதான் வித்யாவின் கணவன் சங்கர் டீம் அவுட்டிங்கிற்காக கிளம்பிக் க�ொண்டிருந்தான்.அப்பொழுது தான் ஆபீஸ் முடிந்து வந்த வித்யா வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாள்.

சிறுகதைப் ப�ோட்டி தேர்வு பெற்ற சிறுகதை

- செப்டம்பர் 2021

34

வாழ்க்கைத்

துணை


திருதிருவென விழித்து க�ொண்டிருந்த சங்கர் “இல்லை! இரண்டு நாள் முன்னாடி...” என்றவனை இடைமறித்து,

கவலைப்படுவது க�ோழைத்தனம் அம்மா! எந்த ஒரு உறவின் பலமுமே அன்பு எனும் ப�ோது அது உனக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாக உன்னை மாற்றக்கூடாது.

“ஓ மை காட்! இரண்டு நாள் முன்னாடி? நேத்து கூட நாம் பேசும்போது என்னிடம் எதுவும் ச�ொல்ல வில்லையே” என்று கைப்பையுடன் அம்மா வீட்டிற்கு வந்து விட்டு தான் கண்ணீரும் கம்பலையுமாக உட்கார்ந்து இருக்கிறாள்.

அவருக்கு என் நினைவே இல்லையே அப்பா!” என்றவளின் கண்கள் நீர் க�ோர்த்தது.

திருமணம் முடிந்து இந்த ஆறு மாதங்களில் வித்யா க�ோபித்து க�ொண்டு வருவது மூன்றாவது முறை. அதீத அன்புதான், ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பதை சிவராமனால் புரிந்து க�ொள்ள முடிந்தது. இருப்பினும் மாப்பிளைக்கு மகள் மீது வெறுப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயம் அவருக்கு இல்லாமல் இல்லை.

சற்றே மலங்க மலங்க விழித்தவளிடம் ‘ச�ொல்லுமா!’ என அதட்டினார். “அப்பா! ரெண்டு பேரையும்” என தயங்கியவளிடம், “இரும்மா!” என கையமர்த்தினார்.

“என்னப்பா! கூப்பிடீங்களா?” என்றபடி ம�ொட்டை மாடிக்கு வந்த மகளை பார்த்தவர், “உட்கார் அம்மா! உன்னிடம் க�ொஞ்சம் பேச வேண்டும். முதல் முறை ஏன் அம்மா அவரிடம் சண்டை ப�ோட்டு விட்டு வந்தாய்?” என்றார். “அதுவா அப்பா? ‘முதல் நாள் முதல் காட்சி! ஈவினிங் 6 மணிக்கு எல்லாம் தியேட்டர் வந்து விடு’னு ச�ொன்னார். இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணி ப�ோன் பண்ணினால் கடைசியாக ச�ொல்கிறார், ‘சாரி மா! கடைசி நிமிஷம் ஒரு முக்கியமான மீட்டிங்’. எனக்கு ர�ொம்ப க�ோபம். அதான் நம்ம வீட்டுக்கு வந்து விட்டேன்.” என்றாள் மகள். “சரி!அடுத்த முறை?” என்று மகளை ஏறிட்டார். “உங்களுக்கு யாரை இந்த உலகத்திலே ர�ொம்ப பிடிக்கும்? என்று கேட்டால் ‘என்னோட அக்கா’ என்று என்னிடமே ச�ொல்கிறார் அப்பா. என்னால் அதை தாங்கவே முடியவில்லை. நான் அவர் மேல் உயிரையே வைத்து இருக்கும்போது

“சரி! உனக்கு என்னைப் பிடிக்குமா? இல்லை மாப்பிளையைப் பிடிக்குமா? ச�ொல்லுமா?” என்றார் சிவராமன்.

“திருமணம் என்பது இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி அம்மா! இரண்டு மாடுகளும் ஒரே திசையில் சென்றால் மட்டுமே பயணம். வேறு வேறு திசையில் சென்றால்? உன் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர் உன்னிடம் உண்மையை மட்டுமே பேசி இருக்கிறார் என்பதை நீ ய�ோசித்து பார்! ‘அடுத்து என்ன?’ என்ற குறிக்கோளுடன் ஓடும் என் மகள் வித்யா திருமதி. சங்கர் ஆனவுடன் ஒவ்வொரு நிகழ்விற்கும் அவரை எதிர்பார்த்து நிற்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. கவலைப்படுவது க�ோழைத்தனம் அம்மா! எந்த ஒரு உறவின் பலமுமே அன்பு எனும் ப�ோது அது உனக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாக உன்னை மாற்றக்கூடாது. ஒரு இரயில் பயணத்தில் நாம் கூட பயணிக்கும் ஒருவரிடம் எவ்வளவு நாசுக்குடன் பழகுகிற�ோம். இதுவே நம்முடன் கடைசி வரை கூட வரும் வழித்துணை. சங்கரின் மனைவியாக அவரிடம் உரிமை செலுத்த வேண்டும் என்று நினைக்காமல் ஒரு துணையாக எதிர்பார்ப்புகளை குறைத்து க�ொண்டு அவருடன் பழகிப்பார் அவரை உன்னால் புரிந்து க�ொள்ள முடியும். அவர் குறையை உணர்ந்து நிறையாக்க முயற்சி செய்! எண்ணம் ப�ோல் வாழ்க்கை அம்மா!” என முடித்தார். ஏத�ோ புரிந்தது ப�ோல் இருந்தது வித்யாவிற்கு. “முயற்சி செய்கிறேன் அப்பா!” என்றவளிடம் புன்னகை அரும்பியது. 

35 - செப்டம்பர் 2021

“நிச்சயம் முடிந்து திருமணம் வரை ஒவ்வொரு நாளும் விவரமாய் ச�ொல்லும் உங்களுக்கு இப்போ நான் வேண்டாதவள் ஆகி விட்டேன்! என்கிட்டே ஒரு வார்த்தை ச�ொல்லாமல் நீங்க எப்படி கிளம்பலாம்?”


சிறுகதை

மிருணாளினி,

ண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த திருமணமண்டபத்தில், உறவினர்கள் ஆங்காங்கே அமர்ந்து, பேசிச் சிரித்து க�ொண்டிருந்தார்கள். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் கூச்சலிட்டுக�ொண்டும் விளையாடி க�ொண்டிருந்தனர். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் ஒரு பக்கம் பாட்டுப் ப�ோட்டி வேறு. மண்டபமே ஒரே விழாக்கோலம்தான்!

மிச்சிகன்

பரிபூரணம் மணமகள் அறையில் மணமகள் மஞ்சுவை உறவு பெண்கள் சூழ்ந்தபடி கேலி செய்துக�ொண்டே அலங்காரம் செய்து க�ொண்டிருந்தனர். “பரவால்ல மஞ்சு.. பிடிவாதக்காரிதான் நீ. எப்படிய�ோ எல்லாரையும் சம்மதிக்க வச்சி உன் விருப்பப்படியே கல்யாணம் பண்ணிக்க ப�ோற... சந்தோஷம் தானே உனக்கு” என்றாள் மஞ்சுவின் அண்ணி லமி. “ர�ொம்ப ர�ொம்ப சந்தோசம் அண்ணி...” “எங்க நீங்கல்லாம் இல்லாம இந்த கல்யாணம் நடந்துடும�ோன்னு ர�ொம்ப கவலைப்பட்டேன்... கடவுள் என் கவலையைப் பார்த்து, உங்க எல்லாத்தையும் வரவச்சிட்டார்” என்றாள் மஞ்சு. மணமகன் அறையிலும் இதேப�ோல மணமகன் ரகுவை சூழ்ந்தபடி அவரது நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியாய் அலங்காரத்திற்கு உதவிக் க�ொண்டிருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க... மஞ்சு, ‘இந்த கல்யாணம் யாருக்கும் எந்த மனவருத்தத்தையும் தரக்கூடாது’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே இருந்தாள். ‘நல்லநேரம் வந்துடுத்து... ப�ொண்ணு, மாப்பிளையை அழைச்சிட்டு வாங்கோ!’ என்று ஐயர் ச�ொன்னதும் இருவரும் அவரவர் அறையிலிருந்து உடன் சூழ்ந்திருந்த உறவினர்களால் அழைத்து வரப்பட்டனர்.

- செப்டம்பர் 2021

36

சிறுகதைப் ப�ோட்டி தேர்வு பெற்ற சிறுகதை

அறையை விட்டு வெளியே வரும்போது மஞ்சுவும், ரகுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களாலேயே பேசிக்கொண்டனர். “ப�ோதும்... ப�ோதும்... நீங்க ஜாடைலயே பேசிக்கிட்டது. நாங்கல்லாம் இங்கதான் இருக்கோங்கறத மறந்துடாதீங்க...” என்று யார�ோ ஒருவர் ச�ொல்ல க�ொல்லென்று அனைவரும் சிரித்தனர். பின்னர் இருவரும் மேடையில் அமர்ந்து செய்ய வேண்டிய சடங்குகள் செய்ததும் கெட்டி மேளம் முழங்க... பெரியவர்கள் அட்சதை தூவ... ரகு,


“நான் உங்களுக்கு...” என்று மஞ்சு ச�ொல்ல த�ொடங்கும் முன்... “இன்னுமா நீங்க சாப்பிட்டு முடிக்கல... பேசினது ப�ோதும்... அப்புறம் பேசிக்கிட்டே இருங்க... கல்யாணத்துக்கு வந்த சில பேர் கிளம்பறாங்களாம். உங்க ரெண்டு பேரையும் லமி சீக்கிரமா வர ச�ொன்னாங்க.” என்றாள் உறவுக்கார பெண்ணொருத்தி. மஞ்சு, ரகுவை பார்த்தவாறு பரிதாபமாய் சாப்பிட ஆரம்பித்தாள். இருவரும் சாப்பிட்டு வந்ததும் விடைபெற காத்திருந்தவர்களை வழியனுப்பி விட்டு ச�ோர்ந்து ப�ோய் கண் மூடி அமர்ந்திருந்த மஞ்சுவின் அருகில் வந்தமர்ந்த ரகு, “என்னம்மா... ர�ொம்ப டையர்டா இருக்கா?” என்று பரிவாக கேட்டார். கண்களை திறந்து பார்த்தவள் கண்கள்

“எங்க நீங்கல்லாம் இல்லாம இந்த கல்யாணம் நடந்துடும�ோன்னு ர�ொம்ப கவலைப்பட்டேன்... கடவுள் என் கவலையைப் பார்த்து, உங்க எல்லாத்தையும் வரவச்சிட்டார்” என்றாள் மஞ்சு. லேசாகக் கலங்கியவாறே மஞ்சு இருக்க... “என்ன மஞ்சு... அதான் நீ விருப்பப்பட்ட மாதிரியே ச�ொந்த பந்தம் சூழ நம்ம கல்யாணம் நடந்திடுச்சில்ல... எதுக்கு கண் கலங்குற?” என்றார் ராகு. “இல்லைங்க இது சந்தோஷத்துல வந்த கண்ணீர். வந்து... ர�ொம்ப தேங்ஸ்!” என்று மஞ்சு ச�ொல்லிக்கிட்டே இதுக்கும்போது... “தாத்தா... பாட்டி..! நீங்க இங்க இருக்கீங்களா? உங்கள அம்மா ப�ோட்டோ எடுக்க கூட்டிட்டு வரச் ச�ொன்னாங்க.” என்று ஓடி வந்தாள் அவர்களின் பேத்தி . “இத�ோ நாங்களே வர்றோம்” என்றபடி மேடையை ந�ோக்கி சென்றனர் அறுபது வயதான ரகுவும், மஞ்சுவும்..! 

37 - செப்டம்பர் 2021

மஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் அனைத்து சம்பிரதாயமும் முடிந்தபின் இருவரும் சாப்பிட அருகருகே அமர்ந்தப�ோதுதான் பேசும் வாய்ப்பு கிடைத்தது. “என்ன மஞ்சு ர�ொம்ப நேரமா ஏன் கிட்ட ஏத�ோ ச�ொல்ல நினைக்கிற... ஆனா, நம்பள சுத்தி எப்பவும் யாராவது இருந்துக்கிட்டே இருந்ததுனால ச�ொல்ல முடியாம தவிக்கிற... என்ன விஷயம்... இப்போ ச�ொல்லு...”


சிறுகதை

செல்லா,

ஃபார்மிங்டன் ஹில்ஸ்

ட, என்ன ஆகிற்று உனக்கு? ஆறு மணி தாண்டியும் படுக்கையிலிருந்து எழவே த�ோன்றவில்லை” என்று என்னை நானே கேட்டுக் க�ொண்டேன். அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து எப்பொழுதும் பம்பரமாகச் சுற்றிக் க�ொண்டேதான் இருப்பேன். இவர் எழும்பும் முன்பே எழுந்து வீட்டு வேலைகளை பரபரவென்று முடித்துவிட்டு, எங்களின் அப்பார்ட்மெண்ட் செக்ரெட்டரியாதலால் கீழே வாக்கிங் என்ற பெயரில் அனைத்தையும் ஒருமுறை ப�ோய் சரி பார்த்துவிட்டு வருவேன்.

ஆனால், இன்று என் மனம் வெதும்பிச் சங்கடப்பட்டு ஏங்கிக் க�ொண்டிருந்தது. இன்றொரு நாளைக்காவது இந்த மனிதர் எனக்காக ஒரு காபி ப�ோட்டுத் தரக் கூடாதா என்று ஆதங்கத்தைச் சுமந்து க�ொண்டே படுக்கையில் தத்தளித்தேன். இதை அவரிடம் வெளிப்படையாகக் கேட்டால�ோ அல்லது ச�ொன்னால�ோ கூடக் காதில் வாங்கிக் க�ொள்ளாமல் ஜகா வாங்குவதை எதில் க�ொண்டு ப�ோய்ச் சேர்ப்பது நான்? பல கேள்விகள் என்னுள் கேட்டபடியே புரண்டேன்.

ஆதங்கமே?

கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக என் ஆசாபாசங்களை மூட்டை கட்டி வைத்து விட்ட நிலையில் அவர் கண்ணசைவில் கச்சிதமாக ஒரு குறையும் இல்லாதவாறு குடும்பம் நடத்தி வருகிறேன். அவர்கள் வீட்டிலுள்ள அனைவரையும் முக்கியமாக அனைத்துப் பத்ததிகளையும் ஏற்றுப் புரிந்தபடி நடந்து க�ொள்கிறேன்‌ .

இன்றைக்கு ஏனிந்த

- செப்டம்பர் 2021

38

பாதங்கள் தேயத் தேய அனைத்தையும் கையில் க�ொண்டு க�ொடுத்தபடியே அவரை ஒரு குழந்தை ப�ோல் பார்த்துக் க�ொள்கிறேன். த�ோசை ஊற்றினால் கூட, கல்லில் ஒன்று தட்டில் ஒன்றுமாகச் சுடச் சுட ஊற்றித் தருகிறேன். ஒரு நாளைக்காவது அந்த மனிதர் என்னிடம் முகம் க�ொடுத்துச் சிரித்து.. வேண்டாம் வேண்டாம்.. முகம் பார்த்துப் பேசக் கூடாதா? முத்துப் பற்கள் வெளியில் சிதறி விடுமா என்ன? கல்யாணமான புதிதில் என் அம்மா என்னிடம் அவ்வப்போது, “காசு க�ொடுத்தாலாவது மாப்பிள்ளை ஓரிரு வார்த்தைகள் பேசுவாராடி?” என்று கேட்டதுதான் இப்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. அப்படியென்ன அழுத்தம் ஒரு மனிதருக்கு? மீறி ஏதாவது கேட்டால் ப�ொசுக்கென்று புருவம் புடைத்து, முன்னெற்றி நெறித்தபடி க�ோபம் மட்டும் ப�ொத்துக்கொண்டு வந்துவிடும். அதுவும் மிஞ்சிப் ப�ோனால் ஐந்து பத்து நிமிடங்கள்தான். பின்பு ஒன்றுமே நடக்காதபடி இயல்பாக வந்து நிற்பார். காலையானால் ஃபில்டர் காபி மாலையானால் இஞ்சித் தட்டித் தேநீரும் சிறிது ந�ொறுக்குத் தீனியும் கிண்ணத்தில் வைத்துத் தர வேண்டும். முன்பெல்லாம் சமாதானம் செய்யாத சண்டைகள் முடிவுக்கு வருவது எரிச்சலைத் தந்தது. இப்போது அதுவே எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிது நேரம் சலித்துக் க�ொண்டவாறு கடந்து ப�ோய் விடுவேன். ஆனால், இப்போது என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. என்னவென்றே தெரியாமல் சின்னஞ் சிறியவற்றிற்கெல்லாம் மனமானது ஏங்குகிறது.


உறவினர்கள�ோ அல்லது தெரிந்தவர்கள�ோ அவர்தாம் மனைவியைப் பாராட்டும்போது கூட என்னால் தாங்கிக் க�ொள்ள முடியாமல் திணறுகிறேன். வெளிப்படையான அன்பைத் தராமல் கல்லாக இருக்கிறாரே என்றெண்ணி ஒட்டு ம�ொத்தமாக அவரின் மேல் எரிச்சல் க�ொள்கிறேன் இந்நாள்களில். மகளைக் கல்யாணம் செய்து க�ொடுத்து அவளை மாப்பிள்ளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து ஏந்துவதைப் பார்க்கும்போது மனம் மகிழ்ந்து நிறைகிறது. அவர்களிருவரும் எட்டு மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து தலை தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் வந்தப�ோது நான் செய்த அதிரசம், லட்டு, முறுக்கு, சீடை, மிக்சர், அல்வா, மைசூர்பாகென ஒவ்வொன்றையும் ருசிக்கையில் ஆகா ஓஹ�ோவென்று புகழ்ந்து தள்ளியது மிகவும் இனிமையாக இருந்தது.

கல்யாணமான புதிதில் என் அம்மா என்னிடம் அவ்வப்போது, “காசு க�ொடுத்தாலாவது மாப்பிள்ளை ஓரிரு வார்த்தைகள் பேசுவாராடி?” என்று கேட்டதுதான் இப்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

சிறுகதைப் ப�ோட்டி தேர்வு பெற்ற சிறுகதை

அவர் அப்போதும் அவர்களிருவரையும் நன்கு கவனித்து உபசரித்தாரேய�ொழிய பண்டங்கள் எப்படி இருந்ததென ஒற்றைச் ச�ொல்லை என்னிடம் உதிர்க்காமலேயே தான் இருந்தார். அடக்க முடியாமல் அவரிடமே பலகாரங்கள் எப்படியிருந்ததெனக் கேட்டேவிட்டேன். அப்போதும் சுரத்தே இல்லாமல் அவர் ச�ொன்ன நன்றாகத்தான் இருந்தது என்ற ச�ொல் மேலும் என்னைக் க�ோபம்‌க�ொள்ளச் செய்தது.

மகளும் மாப்பிள்ளையும் இருந்ததால் எதையும் காட்டிக் க�ொள்ளாது நகர்ந்து விட்டேன். அவர்களுடன் கடைவீதிக்கும், க�ோவிலுக்கும், ஓட்டலுக்கும் சென்றதில் நான்கைந்து நாள்கள் ப�ோனதே தெரியவில்லை. அவர்களிருவரும் தங்களுக்கு எடுத்துக் க�ொண்டபடியே ஒரே கலரில் அவருக்கு நீல நிற குர்தாவும் எனக்கு மயில் கழுத்து நிறத்தில் பட்டுப் புடவையும் வாங்கித் தந்து ப�ோட்டோ எடுத்து அதை ஃப்ரேமும் ப�ோட்டுத் தந்துவிட்டுச் சென்றனர். அதை வீட்டுக் கூடத்தில் மாட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் எண்ணிக் க�ொண்டிருந்த வேளையில் சட்டென்று பெட்ரூமில் ஆணியடித்து அதைக் க�ொண்டு ப�ோய் மாட்டிவிட்டார். கேட்டதற்கு, கண்பட்டுவிடும் என்று கூறிச் சென்றார். அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றதிலிருந்தே இனம் புரியாத ஏக்கமும், மனச்சோர்வும் வெகுவாக என்னைச் சூழ்ந்துவிட்டது. நானும் அவள் கிளம்பிப்

ப�ோனதால்தான் அப்படியுள்ளதென்று நினைத்துக் க�ொண்டேன். உண்மை அதுவல்ல. மாப்பிள்ளை அவளிடம் நடந்து க�ொண்ட அணுகுமுறைதான் அதற்கு முக்கியமான காரணம். எதற்கெடுத்தாலும் அவளைப் புகழ்ந்து தட்டிக் க�ொடுத்துக் கைதட்டிப் பாராட்டும் மனப்பாங்கைப் பார்த்து லேசாகப் ப�ொறாமை ஏற்பட்டது என்னுள்ளே. அதையே பற்பல ஆண்டுகளாக என்னிடம் மட்டும் ஒரே மாதிரியான முகபாவனை க�ொண்டு வெளிக்காட்டாது காட்டிடும் மனிதருடன் ஒப்பிடும்போது மேலும் அதிகப்படியான இறுக்கமான சூழ்நிலையைத்தான் அது ஏற்படுத்தியது.

‘என்னவாகிவிட்டது இந்த பாழாய்ப் ப�ோன மனசுக்கு? இவர் குணம்தான் தெரியுமே! ஏன் இப்படியெல்லாம் புத்தி பேதலிக்கிறது?’ என்று பல மின்னல் கேள்விகளைக் கேட்டுக் க�ொண்டே மறுபடியும் மன அசதியால் தூங்கிவிட்டேன். ஏத�ோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தேன். மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஹாலுக்கு வந்து பார்த்தால். டி.வியில் நியூஸ் ஓடிக் க�ொண்டிருந்தது. அதைப் பார்த்துக் க�ொண்டிருந்த மனிதர் பக்கத்தில் இரண்டு காலிச் ச�ொம்புக்கள் இருந்தன. புரிந்துவிட்டது. என்னை எழுப்ப மனமில்லாது, ஆறு மணியிலிருந்து வெறும் வயிற்றில் தண்ணீரை நிரப்பியபடி நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த என் ஊமையனை நினைத்து டிகாஷனுக்காகக் கெட்டிலில் நீர் நிரப்பிவிட்டு, ஓர் அடுப்பில் பாலையும் மறு அடுப்பில் த�ோசைக் கல்லையும் ஏற்றிவிட்டு பல் துலக்கச் சென்ற இடத்தில் என் ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு விரிசலான மனம் ஸ்டிக்கானது. 

39 - செப்டம்பர் 2021

எதைய�ோ த�ொலைத்தது ப�ோன்றத�ோர் உணர்வு.


ஆத்தா நான் ! ன் டே ் ட யி ா பாஸ

மது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினரும், தன்னார்வலருமான நமது சக�ோதரி திருமதி. சுகன்யா வெங்கடேசன் மற்றும் திரு.சிவகுமரன்அவர்களின் செல்ல இளவரசி தணியின் பட்டமளிப்பு க�ொண்டாட்ட விழா கடந்த க�ோடையில் அவர்களது குடும்பத்தினரால் அட்டகாசமாகக் க�ொண்டாடப்பட்டது.

இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? விசேஷம் இருக்கத்தான் செய்கிறது..!

- செப்டம்பர் 2021

40

அன்புத் தங்கையின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் புது முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று அக்கா அமிர்தா சிவகுமரன் கூகுளில் தேடித்தேடி கண்டுபிடித்த கடைதான் இது! இவ்விழாவில், நம்மூர் டீக்கடை ப�ோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். கூரை(டீக்)கடையில் த�ொங்கும் விதவிதமான புத்தகங்கள்... குமுதம், குங்குமம், நக்கீரன், இண்டியா டுடே இதெல்லாம் ஓகே... அட நம்ம கதம்பத்தையும் இந்த லிஸ்ட்ல சேத்துட்டாங்கய்யா... சேத்துட்டாய்ங்க..! கண்ணாடி ஜாடிக்குள் முறுக்கு, ரஸ்க்,


வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ்த்தேனீ ப�ோட்டி

ப�ோட்டியில் வென்ற

தமிழ்த்தேனீக்கள் பார்லே ஜீ பிஸ்கட், கடலை உருண்டை மற்றும் இலந்த வடை-ன்னு... நம்மூர் தின்பண்டங்களை எல்லாம் அடுக்கி வெச்சு, நாக்குல எச்சில் ஊற வச்சுட்டாங்க....

Dhanya Harikrishnan Nithila Ramalingam

இப்படி, 80-90களில் நாம் அன்றாடம் செல்லும் நமது அண்ணாச்சி பெட்டிக் கடையை நம் கண்முன்னே க�ொண்டுவந்து நிறுத்தி விட்டனர்.

Zonal Runner Level-2 Canton Tamil School

Zonal Runner Level-2 Canton Tamil School

குமாரி. தணி சிவகுமரன் அவர்கள் பார்மிங்டன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பட்டம் பெற்று, இவ்வாண்டு கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறார்.

Saikrish Balaji

Zonal Runner Level-3 Canton Tamil School

வ (ஆஹா, அருமையான ஐடியாவா இருக்கே! அடுத்த வருடம் நம்ம வீட்டுப் பிள்ளையின் பட்டமளிப்பு விழாக் க�ொண்டாட்டத்தில் நாமும் இது மாதிரி ஏதாவது பண்ணனும்னு எனத் த�ோணுதுதானே?)

Yuktha Anand

Zonal Runner Level-3 Canton Tamil School

ட அமெரிக்க அளவில் நடைபெற்ற தமிழ்த்தேனீ- மண்டல அளவிலான ப�ோட்டிகளில் நமது சங்கத்தின் கேண்டன் தமிழ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல பரிசுகளை வென்று நமது மிச்சிகன் மாகாணத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ப�ோட்டியில் வெற்றி பெற்ற, பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும், ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் க�ொள்கிறது. 

41 - செப்டம்பர் 2021

வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகளில் ஏறி வெற்றி நடை ப�ோட, நம் கதம்பம் இதழின் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் க�ொள்கிற�ோம்.


நிகழ்வுகள்...

வா

ழ்க்கையின் லட்சியமே சமுதாயத்திற்கு த�ொண்டாற்றுவது! - தந்தை பெரியார்

ஊருக்கு உழைத்திடல் ய�ோகம்!

- மகாகவி பாரதியார்

நாற்பத்தி ஆறு ஆண்டுகால பாரம்பரியமிக்க மிச்சிகன் தமிழ்ச்சங்கம் சமுதாயத்தொண்டை, சமத்துவத்தை மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை உலகிற்கு உணர்த்திய மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் மற்றும் மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சியை சிறப்பாக கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் நடத்தியது.

வழிகாட்டிய பெருமக்கள்!

மிச்சிகன் தமிழ் சங்கத்தின் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் திருமிகு இராதா வெங்கட்ரமணி அவர்கள் நிகழ்ச்சியை த�ொகுத்து வழங்கினார்கள். தமிழ்ச்சங்கத்தின் சமூகத் தூதுவர் திருமிகு இராஜி அவர்கள் வளமான வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பணியாளர் திரு கிங்ஸ்லி சாமுவேல் அவர்கள் தலைமை உரை ஆற்றி சங்க செயல்பாடுகள் குறித்தும் தந்தை பெரியார் மற்றும் மகாகவி பாரதியார் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்தார். பின்னர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு காசிப் பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த உரையில் இன்றைய காலகட்டத்தில் பெரியாரை பற்றி சிறுவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களின் சிறப்பான கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் குழந்தைகளுக்கான பேச்சுப் ப�ோட்டி நடத்தப்பட்டது. பேச்சுப் ப�ோட்டிக்காக 3 தலைப்புகள் க�ொடுக்கப்பட்டிருந்தது. 1. பெரியாரும் பெண்ணியமும் 2. பெரியார் விதைத்த விதைகள் 3. பெரியாரும் தீண்டாமை ஒழிப்பு

- செப்டம்பர் 2021

42

இனியத�ொரு

நினைவு கூறல்...


இளம் சிறுவர்கள் தங்களது மழலை குரலில் நல்ல சிறப்பாக எடுத்துரைத்தார்கள். 6 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் பங்குபெற்று சிறப்பாக உரையாற்றினார்கள். தேர்ந்த பேச்சாளர்களை விட சிறப்பாக தங்குதடையின்றி மடை திறந்த வெள்ளம் ப�ோல் பேசியது அருமை! பின்னர் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை நினைவு கூரும் வகையில் பாரதியாரின் சிறப்பான பாடல்களை பல்வேறு குழந்தைகளும் பாடினார்கள். எத்தனை க�ோடி இன்பம் வைத்தாய், எண்ணிய முடிதல் வேண்டும், ஓம் சக்தி ஓம், செந்தமிழ் நாடெனும் ப�ோதினிலே, நெஞ்சுக்கு நீதியும் ப�ோன்ற மனதில் இருந்து நீங்காத பல்வேறு பாடல்களை செம்மையாக பாடி, காண்போரை வியக்க வைத்தனர். க�ொஞ்சும் மழலைக் குரலில் பெரியாரின் கருத்துக்களையும் பாரதியாரின் கவிதைகளையும் ஒரே இடத்தில் கேட்டது ஒரு புதிய புத்துணர்வு அளிக்கும் அனுபவமாக வாய்த்தது. இறுதியாக, தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவி திருமிகு அபர்ணா ஸ்ரீராம் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. தந்தை பெரியார் அவர்களின் சரிவான கருத்துக்களையும் உட்கொண்டு, பாரதியார் அவர்களின் திடமான கருத்துக்களை மனதில் க�ொண்டு, இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் க�ொடுத்த மிச்சிகன் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து மக்களும் குழந்தைகளும் பிரியாவிடை பெற்றனர்! இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்! நன்றி, - மிச்சிகன் தமிழ்ச்சங்கம்.

19-‹ ð‚è °Á‚ªè¿ˆ¶Š ¹F˜ M¬ì ச மா தா ன

ம்

2

ம்

சா தி

ளி

5

ரி

த்

10

13

னா க

ய கா 8

தி பு

15

17

வா ர

11

ந்

அ ம்

ச�ோ த னை

ப ண் ட

கு த்

றி

வு

16

ற்

று

ம்

19 22

தி

6

14

மி சா

3

ஊ ரா

20

பி கா ப

ம்

தி

21

பி

ம் க

4

7

கி

ங்

டை வ 9

ய ர்

12

ம்

க் பா

ட் டை

ர்

23

18

ம்

24

43 - செப்டம்பர் 2021

1


சிறுகதை

- செப்டம்பர் 2021

44

நா

மீனா

ன் சண்முகப்பிரியா. “நான் என்னடா தப்பு செய்தேன்? ஏண்டா இப்படி மாத்தி மாத்தி என்னையே குறி வைக்கிறீங்க? என்னை விட்டுடு” என்றது என் தலைமுடி.

என்னது தலைமுடி பேசுச்சா? இல்லை! என்னுடைய கற்பனை. அதற்கு பேசத் தெரிந்திருந்தால் அதைத்தான் ச�ொல்லி அழுதிருக்கும். சின்ன வயசிலிருந்து என்னை அழகுபடுத்திக்கணும், விதவிதமாக ஹேர் ஸ்டைல் பண்ண வேண்டும் என்ற ஆசை. ஆனா எனக்கு பயங்கர அடர்த்தியான சுருட்டை முடி. எந்த ஹேர் ஸ்டைல் பண்ணினாலும் எடுப்பாகத் தெரியாது. எங்க அம்மாகிட்ட ப�ோராடிச் சிக்கு எடுத்து தலை சீவுவதே யுத்த

ஐய�ோ என்னை

விட்டுடுங்க

ப்ளீஸ்1


ஒரு முறை க�ோடை விடுமுறைக்கு சிவகாசியில் இருக்கும் எங்க மாமா வீட்டுக்குப் ப�ோயிருந்தோம். என் மாமா பெண் சங்கரிக்கும் எனக்கும் அதே 12 வயது தான். ரெண்டு பேரும் இப்பவும் உயிர்த் த�ோழிகள். ஒருநாள் மதியம் அத்தையும் அம்மாவும் வீட்டில் இல்லாத ப�ோது ஹேர் ஸ்டைல் செய்யும் ஆசை மீண்டும் த�ொற்றிக் க�ொண்டது. அப்போது தலைமுடியை அலசி விட்டு தான் முடி கட் பண்ணணும் என்றெல்லாம் தெரியாது. எண்ணெய் வழியும் தலைய�ோடு, ஒரு கப் தண்ணீர் ,ஒரு கத்திரிக்கோல், ஒரு கைக் கண்ணாடி எடுத்துக்கொண்டு நானும் சங்கரியும் மாடியிலுள்ள ரூமுக்குள் அமர்ந்து க�ொண்டோம். சங்கரி என் எண்ணெய் தலையில் லாவகமாகத் தண்ணீர் தெளித்து விட்டு, முதலில் முன்பக்கம் சின்னதாக Bangs கட் பண்ணிவிட்டாள். என்னோட கற்பனை "நீதானே என் ப�ொன்வசந்தம்” படத்தில் பள்ளிப் படிக்கும் சமந்தா மாதிரி இருக்க வேண்டும் என்று.... ஆனால் அது என் சுருட்டை முடிக்கு, ய�ோகி பாபு ஹேர் ஸ்டைல் மாதிரி இருந்தது. சங்கரி எனக்கு சரி செய்கிறேன் என்று கூறி, இன்னும் ஒரு கப் தண்ணீர் தெளித்து, முடியை இரண்டு பக்கமாக வைத்துவிட்டு சரிசெய்ய முயற்சித்தாள். முதலில் சிறியது, அடுத்து க�ொஞ்சம் நீளம், அடுத்து அதை விட நீளம் என்று சின்னா பின்னமானது. இப்படி மும்மரமாக எங்கள் முடி ஆராய்ச்சி ப�ோய்க்கொண்டிருக்கும் ப�ோது, “பிரியா, சங்கரி, மேலே என்ன பண்றீங்க?... கீழே வாங்க” என்று அம்மாவின் குரல் கேட்டது. வெளியே ப�ோயிருந்த அத்தையும் அம்மாவும் வீட்டுக்கு வந்துட்டாங்க ப�ோல... கட கட என கையில் இருந்த கண்ணாடியில் பார்த்தால் முடி சீராக இல்லை. அப்போ கூட அம்மா வந்தா, இதைப் பார்த்துட்டு திட்டுவாங்க என்ற பயத்தை விட, இந்தக் கூந்தல�ோடு எப்படி வெளியே சுற்றுவது?! என்பது தான்! சிவகாசியில் வந்து நம் மானம் இப்படியா ப�ோக வேண்டும், என்று மனதிற்குள் புலம்பித் தீர்த்தேன். அப்போது சங்கரி ஒரு ஐடியா க�ொடுத்தாள். ஓடிப்போய் எங்க மாமாவ�ோட ஹேர் ஜெல் எடுத்துட்டு வந்தாள். இதைப் ப�ோட்டுக்க பிரியா, எங்க அப்பாவும் ஹேர் கட் பண்ணிட்டு இதைத்தான் ப�ோடுவார். எல்லாம் கரெக்டா செட் ஆகிடும் என்றாள். அதை அப்படியே நம்பி, எண்ணெய் வழியும் மண்டையில், எடுத்து அப்பிக் க�ொண்டேன்.

என்னோட கற்பனை "நீதானே என் ப�ொன்வசந்தம்” படத்தில் பள்ளிப் படிக்கும் சமந்தா மாதிரி இருக்க வேண்டும் என்று.... ஆனால் அது என் சுருட்டை முடிக்கு, ய�ோகி பாபு ஹேர் ஸ்டைல் மாதிரி இருந்தது. அப்போது எனக்கே என்னைக் கண்ணாடியில் பார்க்க சகிக்கவில்லை. முடி மிகவும் பிசுபிசுப்பாக இருந்தது, அதற்குள் அம்மாவும் உள்ளே நுழைந்துவிட்டார். ச�ோலி முடிந்தது என்று நினைத்தேன். என்னைப் பார்த்தவுடன் "என்ன தலைமுடி எல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்று ச�ொல்லிக்கொண்டே என் முடியை த�ொட்டுப் பார்த்து விட்டார். அங்கிருந்து எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம்... என் அம்மாவும் விடல.. ரன்னிங்கில் ஒரு குச்சியை எடுத்துக் க�ொண்டு துரத்த, நான் எங்க மாமா வீட்டு முன் வாசல், பின் வாசல், ம�ொட்டை மாடி, கீழே என விடாது ஓட, அம்மாவும் விடாப்பிடியாத் துரத்துனாங்க... எவ்வளவு நேரம் தான் ஓடுவது, அடியை வாங்கிக்கொண்டு, ச�ோகமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு ரூமுக்குள் ப�ோய்விட்டேன். இத�ோடு முடியவில்லை என் முடி ஆசை.... இன்னும் ஹேர் ஸ்பா, ஹேர் ஸ்டைரய்ட்டெனிங், ஹேர் கலரிங்.... என்று த�ொடர்ந்துகிட்டே தான் இருக்கு. இப்போதும் ஊருக்குப் ப�ோகும் ஒவ்வொரு முறையும் என் முடியைப் பார்த்து என் அம்மா புலம்புவது வழக்கமாகிவிட்டது. என்னவானலும், சீயக்காய், வெந்தயம், பூந்திக்கொட்டை, செம்பருத்தி ப�ோட்டு அவங்க வளர்த்து க�ொடுத்த முடி தானே..... அதே முடி தான் என்னைப் பார்த்து, "ஐய�ோ! என்னை விட்டுடுங்க ப்ளீஸ்" என்று கதறுகிறது. 

45 - செப்டம்பர் 2021

களமாக இருக்கும். எனக்கு வெளியே செல்லும் ப�ோது பிறரை பார்த்தவுடன் ஆசை த�ொற்றிக்கொள்ளும், ஆனால் முடிவெட்டவ�ோ, பியூட்டி பார்லர் ப�ோகவ�ோ அனுமதிக்க மாட்டாங்க.


அந்த நாள்...

ஞா

- செப்டம்பர் 2021

46

ரேகா சிவராமகிருஷ்ணன்,

ட்ராய்

ம் க ப ா ஞவருதே..!

பகம் வருதே ஞாபகம் வருதே ப�ொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே....

அடுத்த மாதம் தீபாவளி வரப்போகுதே...

நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த காலத்தில் தீபாவளி என்றாலே நம் அம்மா, பாட்டி, சித்தி & அத்தை என்று வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி பலசரக்கு லிஸ்ட் ப�ோட்டு, ஒருவாரம் முன்னரே பெரிய வாணலியை பரணில் இருந்து எடுத்து கழுவி, காயவைத்து, பக்குவமாய் பச்சரிசி இடித்து, பதமாய் பாகு எடுத்து பலகாரம் சுட ஆரம்பித்துவிடுவார்கள். ர�ொம்ப நேரம் நின்று பலகாரம் செய்தால் கால் வலிக்கும் என்று எனது பாட்டி கேஸ் அடுப்பை மேடையில் இருந்து எடுத்து கீழே வைத்து விடுவார். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து அவர் அதிரசமும் முறுக்கும் சுடும் அழகே அழகு.

மீனாட்சி அம்மாள்


இன்று நமக்கு பல YouTube cooking channelகள் இருந்தாலும், பலர் மெனக்கெட விரும்பவில்லை. கடையில் வாங்கி மனையில் வைக்கும் பழக்கமே, பெருகிவருகிறது...

பட்சணம் செய்முறை பார்க்க அந்த காலத்தில் எந்த blog-ஒ vlog-ஒ இல்லை. என் பாட்டிக்கு தெரிந்த ஒரே சமையல் database, Google, Alexa எல்லாம் மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ புத்தகம்தான். 1950களில் வெளியாகி, அரை நூற்றாண்டு காலம், அனைவர் வீட்டு சமையலறையின் அஞ்சறைப்பெட்டிக்கு பக்கத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் க�ொண்டு சக்கை ப�ோடு ப�ோட்ட சமையற்குறிப்பேடு தான் அது. இன்று நமக்கு பல YouTube cooking channelகள் இருந்தாலும், பலர் மெனக்கெட விரும்பவில்லை. கடையில் வாங்கி மனையில் வைக்கும் பழக்கமே, பெருகிவருகிறது. அப்படியே ஏதாவது வீட்டில் செய்தாலும், அது தேசிய பலகாரமான Gulab jamoon மட்டுமே. அதிகாலையில் எழுந்து, நல்லெண்ணெய் வைத்து, சீயக்காய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து, புத்(பட்டாடை)தாடை சரசரக்க, சரவெடி வைத்த காலங்கள் ஞாபகம் வருதே! நாள் முழுதும் பலகாரம் சுவைத்து, பல வீடுகளுக்குச் சென்று பலகாரம் க�ொடுத்து, புதுப்படம் பார்த்து, மாலையில் மீண்டும் புஸ்வானம் க�ொளுத்தி, சங்கு சக்கரத்தை சுத்த விட்டு, ராக்கெட்டை ஏவி, என் வீட்டு வாசலின் முன் தான் பட்டாசுக் குப்பை அதிகமென த�ோழிகளிடம் தம்பட்டம் அடித்து... ஆஹா எத்தனை இனிமையான அனுபவங்கள்... இத்தனையும் செய்ய முடியாவிட்டாலும், இதில் முடிந்ததைச் செய்து, மகிழ்வாய், நிறைவாய்க் க�ொண்டாடுவ�ோம் வரும் தீபாவளியை... 

Save the Date November 13 Saturday 2021

தீபாவளி க�ொண்டாட்டம்!!!

47

வரங்கள்

மேலும் வி

.

விரைவில்..

- செப்டம்பர் 2021

மிச்சிகன் தமிழ்ச்சங்கம்

ஆரவாரமான


சமையல் மேடை

அபர்ணா ராம்

தீபாவளி பலகாரம்... மன�ோகரம்

தேவையான ப�ொருட்கள்:  அரிசி மாவு -1 கப்  வெல்லம் - 1 கப்  வெண்ணைய் - 2 டீஸ்பூன்  சுக்குப் ப�ொடி - 1/2 டீஸ்பூன்  உளுந்து மாவு - 1 டேபிள் ஸ்பூன்  தண்ணீர் - 1/2 கப்  உப்பு -1/2 டீஸ்பூன்  ஏலக்காய்ப் ப�ொடி - 1/4 டீஸ்பூன்  எண்ணெய் - ப�ொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக நீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, மாவை தேன்குழல் அச்சில் இட்டு முறுக்குகளாக பிழிந்து எடுக்கவும். தீயை மிதமான சூட்டிலேயே வைக்கவும். முறுக்கு தயாரானவுடன், அவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, வெல்லத்தைப் ப�ொடித்து ப�ோட்டு பாகு காய்ச்சவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி திரும்ப சூடு செய்யவும்.

- செப்டம்பர் 2021

48

சுக்கு மற்றும் ஏலப்பொடியைக் கலக்கவும். உருட்டு பதம்(கிண்ணத்தில் கைவிட்டால், உருட்டி எடுக்க வரும்) வரும் வரை க�ொதிக்க விடவும். இந்நிலை வந்தவுடன் பாகை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, தேன்குழல் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு 3-4 நிமிடங்கள் ஆறவிட்டு, கைகளில் சிறிது அரிசி மாவை எடுத்துக்கொண்டு, மன�ோகரத்தை சிறு சிறு லட்டுருண்டைகளாக பிடிக்கவும். இளம் சூட்டிலேயே உருண்டைகளைப் பிடிக்கவும், ஆறினால் கெட்டியாகிவிடும்.

சீப்பு சீடை

தேவையான ப�ொருட்கள்:  அரிசி மாவு / இடியாப்ப மாவு - 2 கப்  வறுத்த உளுந்து மாவு - 1/4 கப்  வறுத்த பாசிப் பருப்பு மாவு - 1/4 கப்  தேங்காய் பால் - 1/4 கப்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - ப�ொரிப்பதற்கு  ப�ொடித்த சக்கரை - சிறிது விருப்பப்பட்டால் செய்முறை: அனைத்து விதமான மாவுகளையும் சலித்துக் கலந்து வைக்கவும். தேங்காயைத் துருவி அரைத்துப் பிழிந்து தேங்காய்பால் எடுக்கவும். மாவுடன் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய், 1/4 கப் தேங்காய்ப் பால் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். மாவு காயாமல் இருக்க ஒரு ஈரத்துணி க�ொண்டு மூடி வைக்கவும். ரிப்பன் முறுக்கு அச்சைக் க�ொண்டு மாவை பிழியவும். பிழிந்த ரிப்பன்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, ஓரங்களை ஒட்டவும். இதே ப�ோல் எல்லாவற்றையும் செய்து, எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தவும். இன்னும் இனிப்பு வேண்டியவர்களுக்கு, ப�ொரித்து எடுத்தவுடன், சூட்டோடு சூடாக, ப�ொடித்த சர்க்கரையை மேலாகத் தூவவும். இனிப்பு சீப்பு சீடையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.


சிறுவர் சிறுகதை

தருணிகா இராமநாதன்

மழை வெந்நீர்

ண்ணன் என்ற ஒரு சிறுவன் தன் வீட்டுப் பாடத்தை செய்து க�ொண்டிருந்தான். அவன் வீட்டுப்பாடத்தை செய்த ப�ோது நிறைய கேள்விகள் தன் அம்மாவிடம் கேட்டு க�ொண்டே இருந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவன் அம்மா பதில் கூறிக்கொண்டே இருந்தார். திடீரென்று கண்ணன், “மழை எப்போவது சுடுமா?” என்று கேட்டான். அம்மா மிகவும் எரிச்சலாகி அவன் கேள்வி கேட்பதை நிறுத்தச், ச�ொல்லிக் கத்தினார். பிறகு அவன் மிகவும் ச�ோகமாக அழுது க�ொண்டே தூங்கச் சென்றான்.

கண்ணன் ச�ோகமாக இருந்தாலும், அவன் கேள்வியை பற்றி ய�ோசித்து க�ொண்டே தூங்கினான். அப்போது “கண்ணன்! கண்ணன்!” என்று ஒரு சத்தம் கேட்டது. அவன் எழும்பி பார்க்கும் ப�ோது, ஒரு பஞ்சுமிட்டாய் ப�ோல் ஒரு குட்டி மேகம் இருந்தது. அது “கண்ணா வா! நாம் உன் கேள்விக்கு விடை கண்டு பிடிக்கலாம். அதற்கு நாம் மேலே ஏறி வானத்தைப் பார்த்துச் செல்லப் ப�ோகிற�ோம், அதற்கு நீ ரெடியா?” என்று கேட்டது. சில நிமிடங்களில் அவர்கள் ஒரு பெரிய மேகத்தின் மேல் உட்கார்ந்து பறந்து க�ொண்டு இருந்தார்கள். திடீர் என்று கண்ணனுக்கு மிகவும் குளிராக இருந்தது, அப்போது குட்டி மேகம், “இப்போது நாம் ஒரு காட்டின் மேல் இருக்கிற�ோம். இங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. நாங்கள் இங்கே வந்தவுடன் குளிர்ந்து விடுவ�ோம்” என்று கூறியது. இதை கேட்டு கண்ணன் ய�ோசிக்க ஆரம்பித்தான். ய�ோசிப்பதை பார்த்து குட்டி மேகம், “என்ன ய�ோசிக்கிறாய்?”என்று கேட்டது.

அதற்கு கண்ணன் ச�ொன்னான், “காட்டில் குளிர்கிறது ஆனால் பாலைவனத்தில் சூடாக இருக்குமா?” குட்டி மேகம் இந்த கேள்விக்கு பதில் கூறியது, “ஆம், நீ கேட்கும் கேள்வி சரிதான். அதனால் நாம் ஒரு பாலைவனத்திற்கே சென்று பார்ப்போம்!” சில நிமிடங்களில் அவர்கள் பாலைவனத்தின் மேல் இருந்தார்கள். ஆனால் கண்ணனுக்கு புழுக்கமாக இல்லை. இதற்கு அவன், “இங்கேயும் சூடாக இல்லை. அப்படியானால் எங்கேயும் சுடாதா உங்களுக்கு?” இதை கேட்டு குட்டிமேகம், “இல்லை இல்லை… இந்த உலகத்தில், உலகத்தை அழிக்கும் ஒரு இடத்தில் மட்டும் வெந்நீர் மழை பெய்யும், அந்த இடத்திற்குத்தான் நாம் செல்லப் ப�ோகிற�ோம்.” “ஐய�ோ எனக்கு சுவாசிக்க முடியவில்லை!!” என்று கண்ணன் ச�ொன்னான். “இது எவ்வளவு ம�ோசமாக இருக்கிறது பார்த்தியா? எங்களுக்கும் இங்கே இருக்க முடியாது. இதை நீங்கள் எல்லாம் நிறுத்த வேண்டும்” என்று அழுது க�ொண்டே கூறியது குட்டி மேகம். இதை கேட்டு கண்ணன், “எங்களை மன்னித்து விடு, நாங்கள் இதை செய்யமாட்டோம்!” என்று அழுதுக�ொண்டே ச�ொன்னான். இதைக் கேட்ட அம்மா, கண்ணனை எழுப்பினார். கண்ணன் எழும்பி, “நாம் உலகத்தைத் துன்புறுத்த கூடாது!” என்று தன் அம்மாவிடம் கூறினான். அம்மாவ�ோ ஒன்றும் புரியாமல் கண்ணனைப் பார்த்தார். 

49

‘ஃபெட்னா’-வின்

தமிழ்கூறும் தலைமுறை!

ட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய "தமிழ்கூறும் தலைமுறை" எனும் வட அமெரிக்கா அளவிலான பேச்சுப் ப�ோட்டியில் பங்கேற்று, நூற்றுக்கணக்கான ப�ோட்டியாளர்களுக்கு மத்தியில், முதல் இருபது (Top 20) இடங்களுக்குள் தடம் பதித்த குமாரி. பிரியா மூர்த்தி மற்றும் முதல் பத்து (Top 10) இடங்களுக்குள் முத்திரை பதித்த குமாரி. காவ்யா கண்ணன் அவர்களுக்கும் மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் க�ொள்கிறது!

- செப்டம்பர் 2021

பிரியா மூர்த்தி

காவ்யா கண்ணன்


- செப்டம்பர் 2021

50


சிறுவர் சிறுகதை

மதுனிகா இராமநாதன் முனிவர�ோ ராஜாவிடம் தன் விருப்பத்தைப் பற்றி ய�ோசிக்கச் ச�ொன்னார், ஆனால் அரசர�ோ இதைத் தான் உண்மையில் விரும்புவதாக கூறினார். துறவிய�ோ சில மந்திரங்களைச் ச�ொல்லி உனது ஆசை நிறைவேறும் என்று அரசனிடம் ச�ொன்னார்.

விருப்பமும் அன்பு

மகளும் ஒ

ரு காலத்தில் மிகவும் கனிவான ராஜா இருந்தார். அவர் ஒரு பெரிய அரண்மனையில் இனிமையான இளம் மகளுடன் வாழ்ந்தார். அந்தச் சிறுமியின் பெயர் நினா. நினா உண்மையில் பறவைகளை நேசித்தாள். அவைகளுக்கு உணவளிக்க அவள் விரும்பினாள். அவள் விரும்பியது அவைகள் இட்ட முட்டைகளையுந்தான். ஆனால், அவளுடைய பறவை தங்க முட்டைகளை இடுவதை அவள் உண்மையில் விரும்பினாள். அவளுடைய விருப்பத்தை அவளுடைய தந்தையிடம் ச�ொன்னாள். ராஜா அவளுடைய ஆசையை நிறைவேற்ற விரும்பினார், எனவே, அவர் ஒரு முனிவரிடம் சென்றார். முனிவர் என்ன வேண்டும் என்று கேட்டார். அரசர் ச�ொன்னார், நான் த�ொடும் அனைத்தும் தங்கமாக மாற வேண்டும்.

அவரது மகள் அறைக்குள் ஓடி வந்து, அப்பா, பறவைகள் தங்க முட்டைகளை இடுகின்றன என்று ச�ொன்னாள், பிறகு அவள் தன் அப்பாவைச் கட்டி அணைத்தாள். உடனடியாக இளம் மகள் தங்கமாக மாறினாள். இல்லை, நான் என்ன செய்தேன்? எனது பேராசையின் காரணமாக நான் என் அன்பு மகளை தங்கமாக மாற்றினேன்” என்று அவர் கூறினார். அவர் முடிந்தவரை வேகமாக அரண்மனையை விட்டு வெளியேறினார். முனிவரை பார்த்து “தயவுசெய்து எனக்கு உதவுங்கள்!’’ தயவுசெய்து தன் விருப்பத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்டினார். “நீ உன் விருப்பத்தை திரும்பப் பெற விரும்பினால் உன் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை இழக்க வேண்டும் என்றார். பிறகு ராஜாவை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கச் ச�ொன்னார். அவர் நடந்து சென்றப�ோது, அவரது அழகான அரண்மனை, மறைந்து ப�ோனதை அவர் கவனித்தார். அவளுடைய மகள் வெளியே ஓடி வந்து தன் தந்தையைக் கட்டிப்பிடித்தாள். ராஜா தனது மகளைத் திரும்பப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஒன்றாக அவர்கள் வசதியான சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

51 - செப்டம்பர் 2021

அரசரின்

ராஜா சென்று எல்லா வகையான பூக்களையும் த�ொட்டார். பூக்கள் அனைத்தும் உடனடியாக தங்கமாக மாறியது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்று அனைத்து முட்டைகளையும் த�ொட்டு தங்கமாக மாற்றினார். பின்னர் அவர் இரவு உணவு சாப்பிட சென்றார். அவர் கரண்டியை எடுத்தார், அது உடனடியாக தங்கமாக மாறியது. அவர் வாயில் சிறிது உணவை வைக்க முயன்றார்... ஆனால், அது அவர் த�ொட்டவுடன் தங்கமாக மாறியது. அவர் எதையாவது குடிக்க முயன்றார், ஆனால், தண்ணீரும் திடமான தங்கமாக மாறியது. ராஜா மிகவும் பயந்தார். அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.


CÁõ˜ ð°F

பேசும் ப�ொற்சித்திரமே!

மஹாசினி காசிப்பாண்டியன், மிச்சிகன்

- செப்டம்பர் 2021

52

ஜித்தேஷ் அருண், மிச்சிகன்

ரிஷிகா பிரதீப், மிச்சிகன்


ஷர்விகா, மிச்சிகன்

ஹம்ஷிகா திலிப், மிச்சிகன்

இலக்கியா முத்துமணி,

மிச்சிகன்

- செப்டம்பர் 2021

53


Sriram Srinivasan, Realtor

BUY or SELL

- செப்டம்பர் 2021

- மார்ச் 2021

54 Website: www.ram-s.kw.com 6

Email: ram.s@kw.com

Cell: (248) 550-7949 Office: (586) 979-4200 Fax: (586) 979-4209


- செப்டம்பர் 2021

55


From

PRSRT STD US POSTAGE PAID WARREN, MI PERMIT NO.118

Rekha Sivaramakrishnan, 2863, Continental Dr, Troy, Michigan - 48083.

To

- செப்டம்பர் 2021

56


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.