KADHAMBAM - June 2021 ü¨¡ & 2021
îI›„ êƒè‹ I„CèQ¡ è£ô£‡´ Þî›
மரங்களே இப்புவியகத்தின் நுரையீரல்கள்!
1 - ஜூன் 2021
பசுமையை ப�ோற்றிடுவ�ோம்...
- ஜூன் 2021
2
செயற்குழு மற்றும் இளைய�ோர் செயற்குழு உறுப்பினர்கள் எழுத்துப் பட்டறையின் தீரா எழுத்து முகமில்லா இலக்கியங்கள் அயலகத் தமிழ்க் கல்வி
03
05 07 தமிழ் கூறும் 11 நல்லுலகத்திற்கொரு நற்செய்தி!!! 12 ஆசையில் 14 ஒரு கடிதம் 16 தமிழும் நானும் 18 கவிதைப் ப�ோட்டி 22
சிறுகதை: கஷாயம்
30
சிறுகதை: வேதமடி நீ எனக்கு
36
கதம்பம் எக்ஸ்பிரஸ் கதைகள்
41
சிறுகதை: செத்துணவு சீர்திருத்தம்
46
பேசும் ப�ொற்சித்திரமே!
54
ஆசிரியர் தலையங்கம்
26
சித்திரைத் திருவிழா
32
சர்க்கரையில் அக்கறை!
38
சிறுகதை: அஞ்சறைப் பெட்டி
42
சிறுகதை: அனுபூதி
50
சிறுகதை: கதையின் தலைப்பு கடைசி வரியில் 3 - ஜூன் 2021
செயற்குழு தலைவரிடமிருந்து
ªêòŸ°¿
î¬ôõKìI¼‰¶...
அ
னைவருக்கும் வணக்கம்!
காலத்தின் வேகம் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு வெகு சில வாரங்களுக்கு முன்னர்தான் த�ொடங்கியது ப�ோல் த�ோன்றியது. பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள், ப�ொழுதுப�ோக்கு நிகழ்ச்சிகள், மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள், பேச்சு மேடைகள், எழுத்துக் களங்கள், சிறுவர் மற்றும் இளைய�ோர் நிகழ்ச்சிகள், த�ொற்று கால நிதி திரட்டல் என எத்தனைய�ோ சிறப்பான பணிகளை மிச்சிகன் தமிழ் மக்களுக்காக எங்கள் செயற்குழு கடந்த ஓர் ஆண்டில் வழங்கியது. இந்த அத்தனை முயற்சிகளுக்கும் என்னுடன் இணைந்து மனமுவந்து செயல்பட்ட அனைத்து செயற்குழு சக�ோதர சக�ோதரிகளுக்கும் என் நன்றிகள் பற்பல! குறிப்பாக, ஒரு துணைத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகச் செயல்பட்ட திரு. காசிப்பாண்டியன் அவர்கள் செயற்குழுக் கூட்டங்களில் சிறப்பான கருத்துக்களையும் கேள்விகளையும் முன் வைத்து செயற்குழு திறம்பட நடக்க இணைத் தலைவராகவும் இனிய த�ோழராகவும் இருந்து உதவியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
- ஜூன் 2021
4
ப�ொருளாளராக மதிநுட்பத்துடன் சிறப்பாகச் செயல்பட்ட திரு. கார்த்திக் லிங்கநாதன் அவர்கள் செறிவான மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளையும், கருத்துக்களையும் க�ொடுத்து உதவி, ப�ொருள் மேலாண்மையில் சங்கம் முன்னேற்றப் பாதையில் செல்ல பெரும் உதவி புரிந்தார். த�ோழனுக்கு என் இனிய நன்றிகள்! சங்கத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் வித்திடுவது செயற்குழுக் கூட்டங்கள் தான். அத்தகைய கூட்டங்களைத் திறம்பட நடத்தவும், அலுவல் ரீதியான அஞ்சல் பரிமாற்றங்களைச் செம்மையாக இயக்கவும் உதவிய செயலாளர், என் த�ோழர் திரு. பிரசாந்த்
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். எங்கள் அனைவரையும் விடச்சிறப்பாகவும் துடிப்பாகவும், வேகமாகவும், விவேகமாகவும், நேர்த்தியாகவும், நிறைவாகவும் திண்ணமாகவும் தீரா வாஞ்சையுடனும் ஒவ்வொரு செயலையும் இனிமையாய் செய்த “இணையற்ற இணைச் செயலாளர்” திருமிகு. ரேகா சிவராமகிருஷ்ணன் சக�ோதரி அவர்களுக்கு நன்றி! தமிழ்ச் சங்கத்தை மக்களுடன் இணைப்பதில் ஒவ்வொரு நிகழ்வும் பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அழகாக ஒருங்கிணைத்து, ஒப்பில்லா நிகழ்வுகளாக்கி, ஓய்வறியா உழைப்பைச் செலுத்திய எங்கள் “ஒற்றைச் சூரியன்” திருமிகு. ராதா வேங்கடரமணி சக�ோதரி அவர்களுக்கு நன்றி! த�ொலைபேசியில் அழைத்த அடுத்த வினாடியிலேயே த�ொலைபேசியை எடுக்கும் தன்னிகரில்லா தன்னார்வலர், மெய்நிகர் நிகழ்ச்சிகளின் முன் நின்று முகம் காட்டாது பின் நின்று உயிர் க�ொடுத்த உயர் பண்பாளர், சங்கத்தின் இணையதளத்தை இணையற்ற தளமாக உயிரூட்டி, உணர்வூட்டி உன்னதமாய் வைத்திருக்கும் திரு. அருண் நிஷ�ோர் பாஸ்கரன் சக�ோதரருக்கு என் அன்பும் நன்றிகளும்! த�ொற்று காலத்தில் தமிழ்ச் சங்கத்திற்காக நிதி திரட்டுவத�ோர் எளிய செயலன்று. நிறுவனங்களே நிதிப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் நேரத்தில், சங்க செயல்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான த�ொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள், பல்வேறு நேரடி சந்திப்புகள் என எண்ணற்ற வழிகளில் நிறுவனங்களை அணுகி சங்கத்திற்கு நிதி திரட்டி, சங்கத்திற்குச் ச�ொத்து சேர்த்த எமது சங்கத்தின் ச�ொத்து “சாதனைப் பெண்மணி” திருமிகு. மைத்ரேயி வெங்கடேசன் சக�ோதரி அவர்களுக்கு நன்றி!
எடுத்த செயலை சபதமெனக் கருதி தன் விருப்புவெறுப்புகளை விடுத்து உயிரைத் தந்து ஊக்கமாய் செயல்பட்டு ஓய்வென்றால் கில�ோ என்ன விலை என்று கேட்கும், இலக்கியக் கழகத்தின் உயிர்நாடியான சக�ோதரிகள் திருமிகு.மீனா கண்ணன் அவர்களுக்கும் திருமிகு. ஐஸ்வர்யா ஜெகதீசன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழ்ச் சங்கத்தின் நீண்ட நாள் கனவான நவீன இலக்கியப் பயணத்தை இனிதே துவக்கி வெற்றி நடைப�ோட்டு பன்னெடுங்காலம் மேலும் த�ொடர வழி வகுத்த சக�ோதரர்கள் திரு. லக்ஷ்மன் தசரதன் அவர்களுக்கும் திரு. சின்னையா பாண்டியன் அவர்களுக்கும் நன்றிகள் பல! எங்கள் செயற்குழுவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பின்னணியிலிருந்து உதவிக்கரம் நீட்டி உடன் பயணித்த தூதுவர்கள் மற்றும் தூண்கள் திருமிகு ராஜி அவர்களுக்கும், திரு பிரஷாந்த் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், திருமிகு. ய�ோகசுந்தரி அருண்குமார், திருமிகு. அகிலா பிரபு அவர்களுக்கும் நன்றிகள் பல! சங்கத்தின் அடுத்த தலைமுறை, இளைய�ோர் குழுவில் பல ஆண்டுகள் உழைத்துக் கடந்த ஆண்டு தலைமை ஏற்று, திண்ணிய நெஞ்சத்துடனும் தெளிந்த நல்லறிவுடனும் சிறப்பாகச் செயல்பட்ட செல்வி. மிருதுளா அவர்களுக்கும், இளைய�ோர்குழு உறுப்பினர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! இவர்கள் மட்டுமன்றி எங்களுக்கு இணையற்ற உதவிகளைச் செய்த பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்ச் சங்க முன்னோர்களுக்கும் மேனாள் செயற்குழு மற்றும் ப�ொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் ஆணிவேராக இருந்தமைக்கு நன்றி என்ற ஒற்றைச் ச�ொல் ப�ோதாது! நீங்கள்தான் தமிழ்ச் சங்கம்! இத்தனை உழைப்பையும் இரவு பகலாகக் க�ொட்டி தீர்த்து இன்முகத்துடன் நாங்கள் இயங்கியது தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், அந்த மக்களின் நலனுக்காகவும் மட்டுமே! இந்தச் சிறப்பான பயணத்தில் எங்கள�ோடு இணைந்து பயணித்த தமிழ்
மக்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! எங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் இன்முகத்துடன் இசைவு க�ொடுத்து இடர்பாடுகளில் இரு கைகளையும் க�ொடுத்து இணையற்ற முன்னவர்களாய் இணைந்து பயணித்த அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வின�ோத் புருஷ�ோத்தமன் உள்ளிட்ட அறங்காவலர் குழுவில் உள்ள அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் தலைவர்களின் பங்கு மிக மிக முக்கியம் என்று ஆணித்தனமாக நம்புபவன் நான். என் நம்பிக்கைக்குச் சற்றும் தளராமல் உற்ற அறிவுரையாளராகவும் உரிய நேரத்தில் உதவி செய்பவராகவும் திகழ்ந்த சக�ோதரி திருமிகு. அபர்ணா ராம் அவர்களுக்குச் சிறப்பான நன்றி! மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் 45 ஆண்டுக்கால பயணத்தில் முதன்முறையாக மிச்சிகன் மாகாணம் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை “தமிழ் ம�ொழி மற்றும் பண்பாட்டு மாதம்” என்று அறிவித்து பெருமைக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதற்காக மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலர்களாக நாம் அனைவரும் பெருமை க�ொள்வோம்! செல்வத்துப் பயனே ஈதல் என்ற புறநானூற்று வரிகளுக்கேற்ப த�ொற்றுந�ோய் காலத்தில் தமிழ்நாட்டில் கடினமான சூழ்நிலையைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் மக்களுடன் இணைந்து ஏறத்தாழ $20,000 வெள்ளிகளை நன்கொடையாக அளித்துள்ளது. இந்தப் பெரும் உதவி த�ொடக்கக் காலத்தில் இன்னலிலுள்ள நம் தமிழ்நாட்டுச் ச�ொந்தங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை! 2020-2021 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவின் பணிகள் அனைத்தும் இனிதே நடைபெற்றன, உங்கள் பேராதரவுடன்! வரும் காலங்களில் குறைகளைக் குறைத்து நிறைகளை நிறைத்து சங்கத்தில் நீங்களும் தன்னார்வத் த�ொண்டு செய்யும் ஒரு தங்கமாக மிளிர, எனதுமனமார்ந்த அழைப்பைவிடுத்து மனநிறைவுடன் விடைபெறுகின்றேன் நன்றி, வணக்கம்! ம�ொழிக்காகவும் மக்களுக்காகவும் உழைப்பதன் சுவையே தனி! வாருங்கள்! சுவையுங்கள்!
நீங்கள்தான் தமிழ்ச் சங்கம்! நீங்களே தமிழ்ச் சங்கம்! â¡Á‹ Ü¡¹ì¡,
AƒvL ꣺«õ™ ºî¡¬ñ ðEò£÷¡, I„Cè¡ îI›„ êƒè‹
5 - ஜூன் 2021
மிச்சிகனில் உள்ள பல்வேறு மக்களின் வீட்டிலிருக்கும் வெற்றுக் காகிதங்களை எல்லாம் தனது விடாமுயற்சியினால் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், கதைகளாகவும் உருமாற்றி, பற்பல கலைஞர்களை உருவாக்கிய பெருமை எங்களின் “கதம்ப வித்தகி” திருமிகு. செல்லம்மாள் நரசிம்மன் சக�ோதரியைச் சாரும். கதம்பத்தின் நிறம், சுவை மற்றும் திடம் என்று அனைத்து குணங்களுக்காகவும் இரவு பகலாக உழைத்து உப்பரிகையில் ஏற்றி ஊர் ப�ோற்ற வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
- ஜூன் 2021
6
அ
ÝCKò˜ î¬ôòƒè‹
னைவருக்கும் வணக்கம்!
உலகுடன் பெறினும் க�ொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா ந�ோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே" என்ற இப்புறநானூற்றுப் பாடலின் ப�ொருள் இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டார்கள். யாரையும் வெறுக்கமாட்டார்கள். ச�ோம்பலின்றிச் செயல்படுவார்கள். பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள். புகழ் வருமென்றால் தம் உயிரையும் க�ொடுப்பர்கள். பழி வருமென்றால் உலகமே கிடைப்பதானாலும் ஏற்றுக் க�ொள்ள மாட்டார்கள். மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காது பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக் க�ொண்டிருக்கிறது. இந்த வரிகளை வாசித்த ப�ொழுதில் இக்கால கட்டத்தில் ப�ொதுஜனங்களின் அன்றாடத் தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே சென்று தமது உயிரைப் பணயம் வைத்துப் ப�ோராடும் மக்கள் சேவை செய்பவர்களுக்கும், பாதுகாப்பாளர்களுக்கும், உயிர் மீட்கும் பணிகள் செய்யும் முதல் நிலைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்காகவும் எழுதப்பட்டடு இருக்கிறத�ோ என்று ப�ொருத்திப் பார்க்கத் த�ோன்றுகிறது என் மனம். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் க�ொள்கிறேன். இந்தச் சவாலான நெடுந்தருணத்திலும் மக்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும்
ந�ோக்கில் நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் "கதம்பம்" வாயிலாக பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை அனைத்திலும் திரளாகப் பங்குக�ொண்டு கதை, கவிதை, கையெழுத்து, கடிதம், கட்டுரை, ஆர�ோக்கியம், ஓவியம், ப�ொழுதுப�ோக்குகள், சிறார் பகுதி, மறக்க முடியாத அனுபவங்கள், சமையல், துணுக்கு, பயணம், புதிர், ப�ோட்டி, புத்தக விமர்சனம், புகைப்படம், திரைப் பக்கங்கள், எக்ஸ்பிரஸ் கதைகள், சாதனைப் பக்கம், ப�ோன்று பல்வேறு விதமான படைப்புகளையும் வாரி வழங்கி என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் மற்றும் நமது கதம்பம் இதழை அழகுடன் வடிவமைப்பு செய்து தரும் ‘எழிலன் கலையகம்’ வடிவமைப்பாளருக்கும் எனது உளமார்ந்த நனி நன்றிகளையும் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் க�ொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். புதுப்புது படைப்பாளிகளை உருவாக்கி, அவர்களது படைப்புகளை அச்சிலேற்றி அழகு பார்க்கும் நமது சங்கத்தின் காலாண்டு இதழான கதம்பம் பெரும் ப�ோற்றுதலுக்குரியது!! பின்வரும் kadhambam@mitamilsangam.org
மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது மேலான கருத்துகள் மற்றும் வற்றாத ஜீவநதிப் படைப்புகளையும் த�ொடர்ந்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டு உங்கள் அனைவரின் பேரன்பையும் எழுத்துப்பயண வாசிப்பானுபவத்தையும் பெற்றுக் க�ொண்ட மகிழ்ச்சியில் உங்களிடமிருந்து மிகுந்த மனநிறைவுடன் விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!
7
â¡Á‹ Ü¡¹ì¡,
ªê™ô‹ñ£œ ïóC‹ñ¡ ÝCKò˜, èî‹ð‹. I„Cè¡ îI›„ êƒè‹.
- ஜூன் 2021
"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிருங் க�ொடுக்குவர்; பழியெனின்
Smarter solutions, Realized
Detroit Engineered Products (DEP) is an Engineering Solutions and Product Development company. Since its inception in 1998 in Troy, Michigan, USA, DEP is now a global company with footprints in Europe, China, Korea, Japan and India.
POWER TO ACCELERATE PRODUCT DEVOLOPMENT DEP MeshWorks is a CAE driven platform for rapid concept CAE and CAD model generation, parametrization of CAE models, enabling optimization, advanced meshing and CAD morphing.
8
கதம்பம்
- ஜூன் 2021
- ஜனவரி 2016
2
Rapid time to market of new products across several industry sectors such as automotive, defense, aerospace, biomed, energy, oil & gas, consumer products and heavy equipment is a unique value proposition delivered to clients via DEPs world class engineers and the DEP MeshWorks platform.
USA (HEADQUARTERS) Detroit Engineered Products 850, East Long Lake Road, Troy, Michigan - 48085
Ph: (248) 269 7130 www.depusa.com
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்
செயற்குழு 2020-2021
காசிப்பாண்டியன் ராஜவெளியப்பன் துணைத் தலைவர்
பிரஷாந்த் இராதாகிருஷ்ணன் செயலாளர்
அருண் நிஷ�ோர் பாஸ்கரன் வலைத்தளம் ஒருங்கிணைப்பாளர்
ரேகா சிவராமகிருஷ்ணன் இணைச் செயலாளர்
மைத்ரேயி வெங்கடேஷ் சந்தைப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர்
Þ¬÷«ò£˜ ªêòŸ°¿ àÁŠHù˜èœ தலைவர் மிருதுலா முதலியார்
நிர்வாகத் துணைத் தலைவர் சாய்பிரஷாந்த் ராஜேஷ் துணைத் தலைவர் ஷைலி அண்ணாதுரை செயலாளர் தக் ஷ்னிய் சிவகுமரன் ப�ொருளாளர் அபிநவ் நாராயண்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் ஆஷிகா ஏகாம்பரேஸ்வரன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி கண்ணன் மக்கள் த�ொடர்பு ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் நிர்மல் குமார் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர் நிரஞ்ஜனா மகேஷ் சந்தைப்படுத்தல் ஒருங்கிணைப்பாளர்
துணைச் செயலாளர் கார்த்திக் ராம் இணை ப�ொருளாளர் நிதா பால்ராஜ்
ரிஷிகா சந்தோஷ் குமார் வலைத்தளம் ஒருங்கிணைப்பாளர் அபிநிவேஷ் ஹேமகுமார்
2020-21 உறுப்பினர்கள் பரதேஷ்வர் மகேந்திரன் ஷிவாணி ஆனந்தசெந்தில் சக்தி கண்ணா ராஜாகண்ணா ஷாலினி சுந்தர் ரக் ஷித் ராஜா கனிதேஷ்னா சியாம்சுந்தர் வர்ஷா சந்திரசேகர் நியத்தி மணிவண்ணன் தருணிகா இராமநாதன் மதுனிகா இராமநாதன் விசாலாட்சி மெய்யப்பன் சம்யுக்தா ஜீவானந்தன் வேத் முத்துசாமி நிலா முத்துசாமி அகிலா விவேக் சிவசக்தி முத்துகுமார் மிதுன் சுந்தர்
கார்த்திக் லிங்கநாதன் ப�ொருளாளர்
இராதா வெங்கடரமணி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
செல்லம்மாள் நரசிம்மன் ஆசிரியர், கதம்பம்.
êÍè Éî˜èœ «ò£è²‰îK ܼ‡°ñ£˜ Hó꣉ˆ ð¡m˜ªê™õ‹ ÜAô£ Hó¹ ó£ü°ñ£K ó£ü¡
Þô‚Aò‚ èöè 弃A¬íŠð£÷˜èœ ô†²ñ‡ îêóî¡ C¡¬ùò£ 𣇮ò¡ eù£ º¼è¡ ävõ˜ò£ ªüèbê¡
9 - ஜூன் 2021
கிங்ஸ்லி சாமுவேல் தலைவர்
- ஜூன் 2021
10
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கொரு
்செய்தி!!! நறம�ொழி மற்றும் பண்பாடு மாதம் தமிழ்
அ
மெரிக்காவில்
பெருமளவில் தமிழர்கள் வசித்து வரும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான நமது மிச்சிகனில்
2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைத் தமிழ் ம�ொழி மற்றும் பண்பாடு மாதம் என்று அறிவிப்பு செய்து மிச்சிகன் மாகாண ஆளுநர் திருமிகு. கிரட்சென் விட்மர் அவர்கள் பிரகடனம் வெளியிட்டார். இந்தப் பெருமைமிகு நன்னாள் மிச்சிகன் வரலாற்றில் ப�ொன் எழுத்துக்களால் ப�ொறிக்கப்பட வேண்டிய ஒரு ப�ொன்னாள் என்றே ச�ொல்ல வேண்டும்!
11 - ஜூன் 2021
தமிழ்ச் சங்க
நிகழ்வுகள்... நினைவுகள்...
காசிப்பாண்டியன்
மிச்சிகன்
எழுத்துப் பட்டறையின்
தீரா எழுத்து
மி
ச்சிகன் தமிழ்ச் சங்க இலக்கியக் கழகத்தின் மற்றும�ொரு சிறந்த முன்னெடுப்பு எழுத்துப் பட்டறை. இது கடந்த எட்டு மாத காலமாக திரு. லக்ஷ்மண் முன்னிலையில் இயங்கி வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதி உள்ளார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுத்துலகின் பிரபல எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதாவுடன் ஒரு பயிற்சிப் பட்டறை கடந்த மே 8 ஆம் தேதி ஜூம் காண�ொளி வழியாக நடத்தப்பட்டது.
- ஜூன் 2021
12
அதில் அவர் சிறுகதைகள் எவ்வாறு எழுதுவது என்று சாரு பல விதமான மேற்கோள்களைக் காட்டி எடுத்துரைத்தார். சிறுகதை எழுதுவதை, டெக்னாலஜி கற்றுக் க�ொள்வது ப�ோல் கற்றுக் க�ொள்ள வேண்டும் என்கிறார். இந்த டெக்னாலஜி கற்றுக்கொள்ள நிறைய வாசிக்க வேண்டும் என்கிறார். அதற்காக அவர் யாரை எல்லாம் படிக்க வேண்டும் என்று புதுமைப் பித்தனில் த�ொடங்கி, தீஜா, குபா ராஜக�ோபாலன், அச�ோகமித்திரன் என்று பட்டியல் நீண்ட ப�ோதிலும், குறிப்பாக அச�ோகமித்திரனின் புலிக் கலைஞனையும், காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற இரண்டு கதைகளும் கண்டிப்பாகப் படிக்க
நம் மனது மரணம் மற்றும் புணர்ச்சியில் மட்டும் தான் ஒருமுகமாக வேறு எதையும் நினைக்காது இயங்கும். ஆனால் அதையும் தாண்டி உங்கள் மனது ஒருமுகம் ஆவது, நாம் உண்மையாக எழுதும் ப�ொழுதுதான்
வேண்டிய ஒன்றும் என்கிறார். எழுதுவதற்கு முதலில் நிறையப் படிக்க வேண்டும், அதுவும் தேடித் தேடி, பல வகையான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்கிறார். நம் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்கள், காட்சிகள் எவ்வாறு, எந்த இடத்தில், அது கதையாக மாறும், அதை எவ்வாறு அணுக வேண்டும் என்றெல்லாம் தெளிவாக விளக்கிக் கூறினார். அதன் பிறகு நடந்த கேள்வி பதில்தான் இந்த நிகழ்வின் வெற்றி என்று கூறலாம். கதைக்கான தலைப்பு, கதையில் வரும் பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது, என்ற கேள்விகளுக்கு, தலைப்பு என்பது கதைக்கு நாம் க�ொடுக்கும் அளவிற்கான சமமான முக்கியத்துவம் க�ொடுக்க வேண்டும், பாத்திரங்கள் பெயர் வைப்பதற்கும் எவ்வளவு மெனக்கெடல்
வேண்டும் என்றும் முக்கியமாகப் பதிவு செய்தார். நகுலன், ஆத்மாநாம் ப�ோன்றவர்களை மேற்கோள் காட்டி நம் பட்டறை எழுத்தாளர்கள் கேட்ட கேள்விக்கு, சாருவே வியந்து, இது ப�ோன்ற கேள்விகளை தானே எதிர்பார்க்கவில்லை என்றும், நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தையும், நம் எழுத்துப் பட்டறையையும் வெகுவாகப் பாராட்டினார்.
எழுத்துப் பட்டறையில் சேர விரும்புவ�ோர் vicepresident@ mitamilsangam.org அல்லது literature@mitamilsangam.org என்ற மின்னஞ்சலில் த�ொடர்பு க�ொள்ளவும். youtu.be/i62AsXLENsI
13 - ஜூன் 2021
நிகழ்வின் சிறப்பு, சாருவின் நண்பரும், அவரின் எழுத்துலக வாரிசு என்று அவராலே அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் திரு. அராத்து அவர்களும் இணைந்திருந்தார். இங்கே படிப்பவர் வாசகர் வட்டம் குறைவாக இருக்கும் காலத்தில், நான் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு, அராத்து அவர்களின் பதில். பிறருக்காக எழுத வேண்டும் என்று இல்லை, அதை மன உடற் பயிற்சியாகக் கூட கருதி எழுதலாம். நம் மனது மரணம் மற்றும் புணர்ச்சியில் மட்டும் தான் ஒருமுகமாக வேறு எதையும் நினைக்காது இயங்கும். ஆனால் அதையும் தாண்டி உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்படுவது, நாம் உண்மையாக எழுதும் ப�ொழுதுதான் என்று அவருக்கே உண்டான பாணியில் பதிலளித்தார்.
நான் அனுப்புவது கடிதம் அல்ல!
ஆசையில்
å¼
è®îŠ «ð£†®
- ஜூன் 2021
14
- ஜூன் 2021
15
தமிழ் ஆழி முத்துக்கள்
அ
- ஜூன் 2021
16
பிரவீணா இராமரத்தினம்
மிச்சிகன்
லா ் ல மி க மு ள் ்க ங ய கி இலக்
கரம் ஆதியென்றால், இகரம் இலக்கியம் ஈந்து; உவகை ஊட்டி; எட்டாத ஏற்றம் தந்து;ஐந்து முதல் ஐம்பது வரை; ஒயிலாக ஓஹ�ோ ப�ோடவைத்து; ஒளவித்து அஃகம் முழுதும் அறம் பெருக்கும் ஆனந்த அனுபவம்.
புராண யுகம் த�ொட்டு புதுயுகம் வரைக்கும் உலகில் இலக்கியங்கள் வானில் உடுக்கள�ோடு ஒக்கும். அவற்றுள் சில, இராசிக் கட்டத்தில் இடம்பெறும்; பல, பேசாத ப�ொருளாகும். கம்பன் முதல் கந்தர்வன் வரை பலரை இலக்கியவியலாளர்களாக ஏற்றுக் க�ொண்டு இந்த உலகம் மாலை சூட்டுகிறது. க�ொட்டக் க�ொட்ட பல படைப்புகள் ப�ொழிந்தும், அகிலம் ப�ோற்ற இலக்கியவியலாளர் என்னும் பெயர் பெறாத பலர் இருக்கிறார்கள்.
அலையாடும் தமிழ் ஆழியில் அழியாத முத்துக்கள் இலக்கியங்கள். அசையாத ஆகாயத்தில் அலையும் மேக ஊஞ்சல்கள் இலக்கியங்கள். வயிறு நிறைந்தால், மனம் நிறைய அறம் ச�ொல்லும்; வயிறு பசித்தால் துன்பம் த�ொலைக்கக் கனவு தரும்.
இளமையில் கல் என்பார்கள். இந்த கல் என்னும் ச�ொல் ஒரு மந்திரச் ச�ொல் என்பதை நீங்கள் அறிவீர்களா? கல் என்றால் அகழ்தல் என்று ப�ொருள். மலையின் பாறைகள் இயற்கையால் அரிக்கப்பட்டு மண்ணாகி விடுமாம். மலை மண்ணாக ஆன பின்னும், அதே இயற்கை, மண்ணை இறுக வைத்து பாறை களாக்குமாம். அந்த பாறைகள் மீண்டும் உயர்ந்தால் அவைதாம் மலைகள்.இந்த சுழற்சியைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.
இலக்கியம் என்றால் என்னவெல்லாம் நினைவு வரும்? பலருக்குச் சங்க கால இலக்கியங்கள் நினைவு வரும். சிலருக்குக் குறளடியும் நாலடியும். பிறருக்கு பாரதியும் பாவலரும். மீதம் இருப்போர்க்கு முத்தையாவும்,கவிஞர்களும்...
அப்படிப்பட்ட மண்ணைத் த�ோண்டுவதால், அதாவது கல்லுவதால் கிடைப்பது கல். அதுப�ோலவே, அறிவைத் த�ோண்டினால், பெறுவது கல்வி. நிலத்தைத் த�ோண்டப் பல கருவிகள் இருக்கின்றன. அறிவைத் த�ோ(தூ)ண்ட உதவும் கருவிதான் இலக்கியம். இப்படி அரிச்சுவடிக் கல்வியைத் துவங்கிய ஒரு குழந்தை, அம்புலி மாமா படித்திருந்தால் மட்டுமே வாழ்வில் பெரும் இலக்கியங்களைப் படிக்க முடியும். கவிமணியைக் க�ொண்டாடிய குழந்தைதான் காப்பியங்களை கற்கமுடியும். வள்ளியப்பாவை
ரசித்த சிறுவன்தான் வண்ணதாசனை ரசிக்கமுடியும். இன்று வளர்ந்துவிட்ட பலரும் ஒருகாலத்தில் மிகச் சிறியவர்களாகவே தங்கள் வாழ்க்கையைத் துவங்கியிருப்பார்கள். காவியங்கள் படைத்தவர்களும் கரும்பலகையில்தான் எழுத்து கற்றிருப்பார்கள்.கம்பனையும் கந்தர்வனையும் க�ொண்டாடும் அனைவரும்,குழந்தை இலக்கியம் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கடனட்டையால் வரும் துன்பங்கள் ஏராளம் என்று நாம் ஒதுக்கலாம். ஆனால் நாளைய நவீன உலகில் கடனட்டை இல்லாமல் செல்வந்தராக இருந்தாலும் வாங்கும் சக்தி இல்லாதவராகவே இருப்போம். இதனை நாம் எந்த அளவு புரிந்து க�ொள்கிற�ோம�ோ, அதே அளவு இலக்கியத்தையும் புரிந்து க�ொள்ளவேண்டும். நமக்கே இப்படி என்றால், நமது அடுத்த தலைமுறை, இதனை இன்னும் நன்றாகப் புரிந்து வைத்துக் க�ொள்ள வேண்டியது அவசியம் அல்லவா? இன்றைய உலகில் நவீனம் எந்த அளவு வளர்கிறத�ோ, அதை விடப் பல மடங்கு வேகமாக வன்முறைகள் வளர்ந்து வருகின்றன. அவை அனைத்தையும் பற்றி நம் குழந்தைகளிடம் நாம் பேசிவிட முடியுமா? பேசாமல் தவிர்த்து விடத்தான் முடியுமா? எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று ச�ொல்லிக் க�ொடுத்து இளந்தலைமுறையை வளர்க்க முடியுமா? உண்மைத்தவிர வேற�ொன்றும் எப்போதும் ச�ொல்லக் கூடாது என்று பாடம் நடத்ததான் முடியுமா? பெற்றோரும் ஆசிரியரும், இவை பற்றி எப்போதும் ஒரு உறுதியான படிப்பினையைத் தனித்துத் தந்துவிடவே முடியாது. ஆனால்,
"பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் க�ொள்ளலாகாது பாப்பா ம�ோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்று பாரதியின் ஒற்றைப் பாடல�ோடு எப்படி எளிமையாகச் ச�ொல்லித்தர முடிந்தத�ோ அதே ப�ோலச் சிறுவர் இலக்கியத்தினால் மிக எளிமையாக வாழ்க்கையைச் ச�ொல்லி விட முடியும். ஒரு தந்தையாகவும், ஆசிரியராகவும் இருக்கும் ஆயிஷா.இரா. நடராசன் அவர்கள் ச�ொல்கிறார்,"
பெற்றோரும் ஆசிரியரும் எதைச் ச�ொல்ல மறுக்கிறார்கள�ோ, அதைத்தான் சிறுவர் இலக்கியம் பேசவேண்டும் என்று. இதற்கான தெளிவை அவருக்குத் தந்தது சிறுவர் இலக்கிய படைப்பாளி என்னும் ப�ொறுப்பு அல்லவா? பெற்றோரும், சமுதாயமும் ச�ொல்ல முடியாததை ஒரு இலக்கியம் மனதில் பதிய வைத்து விடும் என்பதற்கு இதை விட ஒரு சான்று தேவையா? கீழே விழுந்தால் வலிக்கும் எச்சரிக்கையா இரு என்று ச�ொல்லித் தருபவர் பெற்றோர். வலிக்காமல் எப்படி கீழே விழ வேண்டும் என்று ச�ொல்லித் தருவது இலக்கியம். இன்னும் எத்தனைய�ோ சிறப்புகளும் பெருமைகளும் க�ொண்ட சிறுவர் இலக்கியத்தை எழுதுகின்ற ஒருவருக்கும், எழுத்தாளர் என்றோ இலக்கியவியலாளர் என்றோ எந்த அடைம�ொழியும், மரியாதையும் சமுதாயத்தில் கிடையாது. இலக்கியம் வாசிப்பவர்களுக்கு இடையில் கூட இவர்களுக்கு மாண்பு குறைவுதான் பல நேரங்களில் ஏற்படுகின்றது. ஆனால் அவை பற்றி எல்லாம் கவலை ஏதும் க�ொள்ளாமல், சத்தமின்றி ஒரு இலக்கிய புரட்சி உருவாகிக் க�ொண்டுதான் இருக்கிறது. இந்த புரட்சியை முன்னெடுக்கும் ஒவ்வொரு சிறுவர் இலக்கியவியலாளரும் தன் முகம் எவருக்கும் தெரியவில்லையே என்றோ, புகழ் கிடைக்கவில்லையே என்றோ, படைப்பை நிறுத்திவிடவில்லை. இவர்கள் அனைவரும் முகமில்லாத இலக்கியங்களாக இருந்தாலும், நாளைய தலைமுறைக்கு முகவரியை எழுதுபவர்களாக இருக்கத்தான் ப�ோகிறார்கள்.
17 - ஜூன் 2021
எல்லாம் சரிதான். இலக்கியம் ஏன் படி(டை)க்க வேண்டும் என்கிறீர்களா? எவரின் காத�ோடும் பேசமுடியாத செய்தியை அவர் மனத�ோடு பேச, இலக்கியம் படி(டை) க்க வேண்டும். ஒரு பழங்கதை உண்டு. ஒருவர் செய்த பாவம் சில்லறைக்காசு மூடை ப�ோலக் கனக்குமாம். அந்த மூடையை பணத்தாளாக மாற்றி வைத்துக் க�ொண்டால், பாவம் குறையாத ப�ோதும் கனம் பெருமளவு குறையுமாம். ஆனால் இன்றைய உலகில் பணத்தாள்கள் ப�ோல இருந்தாலும், கனம் ப�ொறுக்க முடியாத அளவுக்கு வண்டி வண்டியாய் துன்பங்கள் இருக்கின்றன. அவற்றைக் கடனட்டை ப�ோல எளிதாக மாற்றிக் க�ொள்ள இலக்கியம் என்னும் பரிகாரம் தேவை.
கவிதைப் ப�ோட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதைகள்
தமிழும்நானும்
இன்னிசை வெண்பாக்கள்
அடையாளம் தாய்மொழி அப்பா உணர்த்தி கிடைத்த தமிழ்வழிக் கல்வியில் மூழ்கி நடையில் பழம�ொழி நேர்த்தியாய் - பேச்சில் தடையில தந்ததென் தாய்
தமிழுாம்னும் ந
கம்பர் சுவையும் கனிவாய் இலக்கணம் கும்பிடும் ஆசான் குறையின்றி - தந்திட நம்பிய நல்லவர் நற்கதைத் தீப்பொறி செம்மைப் படுத்திய நெஞ்சு
அன்னைத் தமிழே ஆதார ஊற்றே
இன்பம் அளிக்கும் தீந்தமிழ்ச் சுவையே சங்கம் வளர்த்த சிறப்பிற்கு உரியவளே சகலமும் தன்னுள் அடக்கிய சரித்திரமே
வாழ்நெறி தன்னை வழங்கிய கீழ்க்கணக்கு சூழ்ந்த வழக்கை சுவைகூற கல்வெட்டு ஏழ்நிலை தாழ்நிலை எக்கணமும் - சித்தரின் வாழ்க்கை மருத்துவ முண்டு
வெல்லும் ம�ொழியாய் எங்கும் நிறைந்த வெற்றி மகளே தத்தை அழகே தித்திக்கும் தீந்தமிழின் திகட்டாத பேரின்பமே தளர் நடை ப�ோட்டு வரும் இளந்தளிரே
அரசியலைப் ப�ோர்ப்பரணி பாடிட - சமயக் குரவர் ம�ொழிகள் குவலயத்தி ல�ோம்ப தரமான நாடகம் தேனா மிசையும் வரமெனத் தந்த தமிழ்
வளர்மதியின் குளுமையே வானவில்லின் எழிலே பழகு தமிழே பாந்தமே எழிலே வழங்கு எமக்கு என்றென்றும் உயிர்த்துடிப்பு வாழ்வில் பெருகட்டும் வெற்றிக்களிப்பு
- ஜூன் 2021
18
வழக்கில் வளைந்தும் வளைம�ொழி சேர்த்தும் குழவியென் பாக்களைக் கற்காலப் பாக்கள் பழமை புதுமைசேர் பாலமாய் - சேர்த்தும் அழகு தமிழ்தரும் பேறு
உணர்வுகளின் குவியலாய் உள்ளம் நிறைபவளே கற்கண்டுச் சுவையே கனியமுதே தமிழே காலம் கடந்தும் நிற்கும் காரிகையே காதல் க�ொண்டேன் உன் மேல் களிப்புற்று இலக்கிய இலக்கணங்களில் இனிதே வாழ்பவளே இவ்வுலகில் என்றும் அழியா இறைவியே எனக்குள் உயிராய் என்றும் இருப்பவளே உவகைப் பெருக்கே தமிழே தாயே..!!!
- அன்புடன் ஆனந்தி
மிச்சிகன்
- முனைவர் பாலநேத்திரம் மிச்சிகன்
தமிழும் நானும்
த
மிழ் அவள் என் தாய் தமிழ் அவள் என் இயல்பு இலக்கியங்கள் பலவிதம் அத்தனையும் அவளில் உள்ளடக்கம் மகள் தாய் பெருமை பறை சாற்றுவாள் தன்னை தாயாய் உணருகையில் தமிழை நான் பறைசாற்றுவேன்
எட்டுத்திக்கும் புகழ்பெறத் திருக்குறளை அள்ளிக் க�ொடுக்கிறாள் எட்டாக் கனியெனும் அறத்தைப் ப�ோதிக்கிறாள் த�ொலை தூரத்தில் தாயைப் பிரிந்தேன் த�ொய்வே த�ோன்றவில்லை திருவள்ளுவர் பாட்டனையும் ஔவை பாட்டியையும் தினம் தினம் துணையாய் வைக்கிறாள் ச�ொல்லிச் ச�ொல்லி கேட்காவிடில் எளிமையாய் ஜெயம�ோகனையும் ஜெயகாந்தனையும் இன்னும் பலரையும் கண்மணியாய் என் கருவிழிக்குள் அனுப்புகிறாள்
தமிழிலக்கியத்தை என்னுள் உணர்ந்ததால் தடுமாறும் இடங்களில் தட்டிக் க�ொடுக்கிறாள் தவழ்கையில் தாங்கி பிடிக்கிறாள்
- மேனகப்புன்னகை,
நவீன இலக்கியமாய் மறு உரு க�ொள்கிறாள் மாசற்று இருக்க வைக்கிறாள் மாபெரும் சபைதனில் நடக்க வைக்கிறாள்
மிச்சிகன்
மடிசாயும் நான்!
மதுரமாய் என் செவிகளில் நுழைகிறாய் நீ! பள்ளிவிழாவில் உனது உறுதுணையுடன் மேடையில் நான்! பதக்கங்களாய் எனது வீட்டை அலங்கரிக்கிறாய் நீ! எல்லை தாண்டிய பயணத்திலும் பதாகைகளில் உனைத்தேடும் நான்! எப்படியும் புன்சிரிப்புடன் கண்ணாமூச்சி காட்டிவிடுகிறாய் நீ!
இடையினில் க�ொஞ்சம் இடைவேளைவிட்ட நான்! இருப்பினும் (மாத) இதழ்களில் வடிவினில் என் விரல் த�ொடுகிறாய் நீ!
நாற்பது வயதிலும் நாற்பகல் இரவு படித்துப் படித்து ச�ொல் செயல் ஒன்றென எனை வாழ வைக்கிறாள் சான்றோராய் தமிழ்ச் ச�ொந்தங்களை அள்ளித்தருகிறாள் இன்னும் என்ன என்ன வேணுமடி அட்சயப் பாத்திரமாய் அள்ளித் தருவாள் உன் ஆசைப்படி தாய் அவள் இருந்தாள் என் இளமையில் தமிழ்த்தாய் இருப்பாள் என் முதுமையில் என்றும் எப்போதும் இளமை துள்ளலுடன் என் வாழ்வை முழுமை செய்வதே அவள் ந�ோக்கமென
தமிழும் நானும்
பல்லாயிரம் மைல் கடந்தும் ‘நீங்க தமிழா?’ ஒற்றை வரியில் உச்சி குளிரும் நான்!
19 - ஜூன் 2021
மழலையாய் அன்னையின்
எம்மொழி தேடிய�ோடினும் அவள் தாய்மடி எனக்குத் தூளியாய் தாலாட்டச் செய்கிறாள்
புலம் பெயர்ந்த உன் மக்களை இணைப்பதில் முனைகிறாய் நீ!
- ராதிகா, மிச்சிகன்
தமிழும் நானும்
அ
“எ
- ஜூன் 2021
20
தமிழும் நானும்
ன் நீ” ஆனத் தமிழுக்கு…. என் சித்திரை பூக்கும் ம�ொழிச்சுடர் நீ! என் வூலம் நிறைக்கும் வைகாசி நீ! என் உளம் வளமாக்கிடும் ஆனியும் நீ! என் பக்கமது ஆடிடும் நாதமும் நீ! என்வீரம் வரையும் தேம்பாவணி நீ! என் ஆழி புரட்டாசிடும் பேரலை நீ! என்னைப்பசியம் கட்டிக்கொண்டவள் நீ! என்னாத்திகம் அளித்த கார்த்திகை நீ! என் மார்கழி வானின் மழைமுகில் நீ! என் தூரிகைத் தரிக்கும் த�ொடர்கதை நீ! என் நாசினுள் நுழையும் மாசிலள் நீ! என் உயிர் மெய்யாவிலும் சரி பங்குநீ! என் திங்கள் பன்னிரண்டும் நகர்த்திட நீ! நீயின்றி ந�ொடி ஒன்றும் நகராதினி! என்நீ!!
தமிழன்னை என்முன் த�ோன்றி
படைத்திடுக பாட்டொன்று என்றுரைத்து தான் மறைந்தாள்! க�ோலெடுத்து அமர்ந்திட்டேன் சமுத்திரம் பால் சிறுதுளி நான் பாவெழுத! வானளவு விருட்சம் நீ சிறுபுல் நானுனக்கு சாமரமா?
ஆதிக்கவியெல்லாம் ச�ொல்லாத ப�ொருளெடுத்து தேன்சுவை சிதறும் சிங்கார ச�ொல்லெடுத்து பாட்டொன்று படைத்திட்டேன்! மீண்டும் த�ோன்றினாள். தீஞ்சுவை ச�ொறியும் பாட்டுனக்கு படைத்துவிட்டு பெருங்கர்வத்தில் நான். நடைப்பழகும் மழலை நான் என்றாலும் என்பாட்டை அமிர்தம் என்றாள் ஆரத்தழுவிக் க�ொண்டாள் தாய்க்குணம் அதுவன்றோ! திடுக்கிட்டு கண்விழித்தேன் கனவு தானென் றுதைத்தப்பின் என் சிறுமதிக்கு எட்டியதெல்லாம் இது தான். செந்தமிழ் கேளா ஒருநாளில் செந்தழலில் எரிவேன் நான்!
- பிரசாந்த்
மிச்சிகன்
- பிரபு முத்தையன்
மிச்சிகன்
தமிழும் நானும்
அன்பை அள்ளித் தந்த என் தமிழ்
- தேவி ராஜாராமன்
மிச்சிகன்
ம் ழு மி த ானும் ந
"அ"
"ஆ" வென ஆரம்ப பாட சாலையில் ஐவிரல் பிடித்து ஆசிரியர் கற்றுத்தரச் சங்கத்தமிழே உன்னால் தரணியில் மீண்டும் உயிர் பெற்றேன் உடல் சிலிர்க்க... தடித்த க�ோனார் உரையில் க�ோடிட்டுப் படித்த பாடங்கள் தேர்விற்காய் என்றிருக்க... அறியவில்லை பின்னாளில் அருந்தமிழே எந்தன் வாழ்வின் பெரும் தேடுதலாய் ஆவாயென... கல்வெட்டு காலந்தொட்டு கணினித் தட்டச்சு காலம்வரையில் திக்கட்டும் பரவித் தீராது பேசியெழுதியும் அசர வைப்பது - இளந்தமிழே முதுமை காணாத உனது அதிசய முகவெட்டு...
கதையாய் கவிதையாய் காதிற்கினிய இசையாய் காதலாய் வாழ்வியலாய் கருணையாய் - நறுந்தமிழே உன்னை எதிலேனும் நுகராமல் நாள�ொன்றும் நகர்வதே இல்லை நீயின்றி வாழ்வுதான் இல்லை...
21
ஆயிரம் ஊர்கள் அதிலே ஆயிரம் ம�ொழிகள் அகிலத்தில் இருந்தாலும் அன்னைத் தமிழ்நாட்டில் என்னைப் பிறக்கச் செய்தது - செந்தமிழே உன்னை எந்நாளும் உயர்த்திப் பிடித்திடவே...
- ஜூன் 2021
ஆதரவு அளித்த என் தமிழ் இன்பத்தைக் க�ொடுத்த என் தமிழ் ஈதலைக் கற்றுத் தந்த என் தமிழ் உதவச் ச�ொல்லிக் க�ொடுத்த என் தமிழ் ஊக்கத்தை ஊட்டிய என் தமிழ் எது வந்த ப�ோதும் துணிந்து நில் என்ற என் தமிழ் ஏற்றத்தைத் தந்த என் தமிழ் ஐயமின்றிக் கல் என்று புகட்டிய என் தமிழ் ஒன்று கூடி வாழ் எனச் ச�ொல்லிக் க�ொடுத்த என் தமிழ் ஓயாமல் உழைக்கக் கற்றுக் க�ொடுத்த என் தமிழ் ஔவியம் பேசாதே என்றுரைத்த என் தமிழ் கசடறக் கல் என்ற என் தமிழ் காப்பியங்கள் பல க�ொண்ட என் தமிழ் சிகரம் த�ொட்ட என் தமிழ் சீர்மிக்க வாழ்வைப் ப�ோற்றும் என் தமிழ் தன்னம்பிக்கையை ஊட்டும் என் தமிழ் என்னையும் கவிஞராக்கிய என் தமிழ் என்றும் வாழும் என் தமிழ் தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!!!
- செந்தில்குமார் பழனிசாமி
மிச்சிகன்
கற்றனைத் தூறும் அறிவு
முனைவர் சு.சுவாமிநாதன்
மிச்சிகன்
முன்னுரை:
ம�ொ
ழியை கற்பதைப் பற்றிய சமீபத்திய நரம்பியல் மற்றும் மூளை த�ொடர்பான ஆராய்ச்சிகள் பல்வேறு நுட்பமான விஷயங்களை நமக்குத் தெரிய வைத்து இருக்கிறது. ம�ொழி கற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட ம�ொழியை விவரிக்கும் வடிவங்களை, ஓசைகளை மூளையின் நரம்பியல் மண்டலம் சில இடங்களில் தன் வசதிக்கேற்ப ஒரு தடத்தினை பதிவேற்றம் செய்கிறது. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் த�ொடர்புப்படுத்தப்படும் ப�ோது அவை நிரந்தர அல்லது எளிதில் அழிக்க முடியாத தடத்தினை ஏற்படுத்துகிறது.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
- ஜூன் 2021
22
“த�ொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்று நமக்குச் ச�ொல்லியிருக்கிறார் என்பதை புரிந்து க�ொள்ளும் ப�ோது ஆச்சரியங்கள் விண்ணைத்தொடுகின்றன. புலம் பெயர்ந்தோர் அல்லது அயலகத்தில் வாழ்பவர்கள் இந்த அடிப்படையான விஷயத்தைக் கவனமாகப் புரிந்துக�ொண்டால் அயலகத் தமிழ் கல்வி என்பது ஒரு எளிய மற்றும் இனிய செயலாகி விடும்.
ஆனால் இதற்கு நாம் இன்றைய த�ொழில்நுட்ப சாதனங்களை எவ்வகையில் பயன்படுத்துகிற�ோம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்க் கல்வி: கற்பித்தல் கற்றல் என்ற இந்த இரு செயல்களும் பல்லாயிரம் வருடங்களாக பல்வேறு பரிணாமங்களை எடுத்து வந்துள்ளது. குறிப்பாக நம் தாய்மொழியாம் தமிழ் ம�ொழி புலவர் பெருமக்களால், முனிவர்களால், ய�ோகிகளால், குருகுலக் கல்வி தந்த குருக்களால், பக்தி இலக்கியங்கள் பல அருளிய பெருமகான்களால் மற்றும் நவீன பள்ளிக் கல்வி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதில் கற்பித்தல் முறை ஒரு முக்கிய காரணியை மையப்படுத்தி இருந்தது. தமிழ் ம�ொழியின் வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் த�ொடர்புப்படுத்தப்பட்டு கற்றுக்கொள்வோரின், (குழந்தைகளின் மாணவ மாணவியர்களின்) சிந்தையில் அவை நிரந்தர தடத்தினை ஏற்படுத்த வழி வகை செய்யப்பட்டது. இது மிகச் சுலபமாக நடந்ததற்குக் காரணம் சுற்றம் தமிழ் தேசமாய் இருந்தது என்ற பதில்தான் உண்மை.
மலர்ந்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் என்பது ப�ோல நாம் நம் செம்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத்தவறினால் நாம் எத்துணை சிறப்பு மிக்க பேரறிஞர்களைக் க�ொண்டிருந்தாலும் அது வாசமில்லாத மலரைப் ப�ோன்றதாகி விடும்.
அயலகத் தமிழ்க் கல்வி:
1. ம�ொழியின் வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் த�ொடர்புப்படுத்தப்படும் நிலை கிடைக்காத ப�ொழுது குழந்தைகள் மிகப்பெரிய அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் சுற்றம் வேறு ஒரு ம�ொழியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. 2. தமிழ் ம�ொழியானது அவர்களுக்கு இரண்டாம் ம�ொழியாக இருக்கப்போகிறது என்பது தான் நிதர்சனம். அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ் ம�ொழியை திறமையாகப் பிழை இல்லாமல் உச்சரிக்க எழுதப் படிக்க, வெளிநாடுகளில் வாழும் ஆசிரியர்களும்பெ ற்றோர்களும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப்பின்பற்றலாம். 1. உடல் அசைவுகள் மற்றும் உணர்வோடு கற்பித்தல் 2. இனிமையான ப�ொழுதுப�ோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் கற்பித்தல் 3. இயல் இசை நாடகத்தின் மூலம் கற்பித்தல்
பெற்றோரின் கடமை: “One Child, Two Languages” [1] இந்த புத்தகத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பேசுவது ஒரு குழந்தையை அந்த இரண்டாவது ம�ொழியை வசப்படுத்த உதவக்கூடிய மிகச் சிறந்த வழியாகும் என்று பாட்டன் டேப�ோர்ஸ் (Patton Tabors) தெரிவிக்கிறார். தினசரி நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளை நீங்கள் செய்வது ப�ோல, இரண்டாவது
ம�ொழியில் பேசுங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் இரவு உணவைச் செய்யும்போது, “நான் ஒரு வெங்காயத்தை வெட்டுகிறேன்” “நேற்று கடைக்குச் சென்றேன்” ப�ோன்ற உங்கள் எல்லா செயல்களுக்கும் ஒரு வர்ணனை செய்யுங்கள். அந்தச் செயல்பாட்டைச் ச�ொற்களஞ்சியத்துடன் இணைப்பதிலிருந்து உங்கள் குழந்தை இந்த ம�ொழி குறிப்புகளைக் கவனத்தில் க�ொள்ளும். இது ப�ோன்று வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் த�ொடர்புப்படுத்தப்படும் ப�ோது அவை நிரந்தர அல்லது எளிதில் அழிக்க முடியாத தடத்தினை ஏற்படுத்துகிறது. இதைப் படிக்கும் நாம் மனதிற்குள் சிரிப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் உரையாடுவது குறைந்து விட்டது. இன்னும் தெளிவாகச் ச�ொல்லுவதென்றால் பெற்றோர்கள் குழந்தைகளுடன் தமிழில் கதைகள் ச�ொல்லி அவர்களின் உலகத்தில் தமிழை எடுத்துச் செல்வது இலகுவாகத் தமிழ் கற்க உதவும். ஆகையால்
23 - ஜூன் 2021
தாய் ம�ொழி வழிக்கல்வி குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் எழும் பிரச்சனைகளைத் திறமையாகக் கையாளும் தன்மையை மேம்படுத்துகிறது என்று படித்துவிட்டு அயலகத்தில் நம் குழந்தைகளைத் தமிழ் ம�ொழியை கற்றுக் க�ொள்ள உந்தும் நாம் கவனத்தில் க�ொள்ள வேண்டிய விஷயங்கள் இரண்டு
தமிழ்ப் பள்ளிகள் இதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
இன்றைய த�ொழில் நுட்பத்தின் பங்கு:
குழந்தைகளுடன் நம் தாய்மொழியாம் தமிழ் ம�ொழியில் தினமும் உரையாடுங்கள். பாட்ரிசியா குஹ்ல் (Patricia Kuhl), என்ற ஆராய்ச்சியாளர் “குழந்தை பருவத்தில் வெளிநாட்டு ம�ொழி அனுபவம் [2] என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில் ஒன்பது மாத குழந்தைகள் வெவ்வேறு வடிவங்களில் மாண்டரின் ம�ொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். ஒலி மற்றும் ஒளி (ஆடிய�ோ கிளிப்புகள், வீடிய�ோக்கள்) வடிவில் மாண்டரின் ம�ொழியை உள்வாங்கிய குழந்தைகளை விட மண்டரினைத் தாய் ம�ொழியாய் க�ொண்ட மனிதர்களுடன் இணைக்கப்பட்ட குழந்தைகளின் ம�ொழி வெளிப்பாடு செம்மையாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஏனென்றால் ஒரு நேரடி நபருடனான த�ொடர்புகள் குழந்தைகளுக்கு சமூக குறிப்புகளை, கவனத்தை ஈர்த்துள்ளன. இதைப் படிக்கும் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளுடன் தமிழ் ம�ொழியில் நேரத்தைச் செலவிடுங்கள். அது ஒரு ஆழமான கற்பித்தலை தருகிறது.
ஒன்றாகக்கூடி குழுவாகக் கற்றுக் க�ொள்ளுங்கள்:
- ஜூன் 2021
24
குழுவாகக் கற்றுக்கொள்ளும் இந்த உத்தியின் கீழ் அமைக்கப்பட்டதுதான் நமது நவீன கற்பித்தல் வழிமுறைகள். அதே நேரத்தில் இவ்வாறு கற்றுக் க�ொள்பவர்கள் இயற்கையான ம�ொழி உள்ளீட்டைப் பிரதிபலிக்கும் வடிவங்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த நிலையில் இருக்கும் தமிழ்க் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உவப்ப தலைகூடி நிகழும் தமிழ் கற்றல், கற்றுக் க�ொள்வதை மேலும் ஊக்குவிக்கிறது. அயலகத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்களின்
ஆரம்பகால கற்றல் எவ்வளவ�ோ மிக முக்கியம�ோ அதைப்போல ம�ொழியின் வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் இடைவிடாது த�ொடர்புக்கு உட்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே அது எதிர்கால கற்றலை ஆதரிக்கும். இதற்கு த�ொழில்நுட்பம் மிகப்பெரிய திருப்புமுனையாய் அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அமைந்துள்ள “youtube” “podcast” ப�ோன்ற த�ொழில்நுட்ப திரட்டுகள் மாணவ மாணவியரைத் தமிழ் ம�ொழியில் சிறக்க உதவி செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் பங்கு: அடுத்த தலைமுறைக்கான புதிய கல்விமுறைகளை தாய் தமிழகத்தின் வல்லுநர்களைக் க�ொண்டு வடிவமைக்க வழிவகை செய்ய வேண்டும். இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் விதத்தில் பன்னாட்டு த�ொடர்பு பாலங்கள் உருவாக்கப்பட அரசு இயந்திரங்கள் திட்டங்களை அயலகத் தமிழ்ச் சங்கங்கள�ோடு இணைந்து உருவாக்கிட வேண்டும். தமிழ் ஊடகங்கள், அரசு இயந்திரங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் இணைந்து முத்தமிழை வளர்த்திட மிகச் சிறப்பானத�ொரு த�ொடக்கத்தை உருவாக்கிட வேண்டும்.
முடிவுரை: மலர்ந்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் என்பது ப�ோல நாம் நம் செம்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத்தவறினால் நாம் எத்துணை சிறப்பு மிக்க பேரறிஞர்களைக் க�ொண்டிருந்தாலும் அது வாசமில்லாத மலரைப் ப�ோன்றதாகி விடும். தமிழ் ம�ொழியின் வடிவங்களும் ஓசைகளும் மீண்டும் மீண்டும் த�ொடர்புப்படுத்தப்படும் வகையில் அயலக வாழ் பெற்றோர்களும், அயலக தமிழ் ஆசிரியர்களும், தமிழ் நாட்டின் ஊடகங்களும் தமிழக அரசு இயந்திரங்களும், தமிழ் அறிஞர்களும் இணைந்து தமிழ்ச் செறிந்த அடுத்த தலைமுறையை உருவாக்கப் பாடுபடவேண்டும். [1] https://www.hepg.org/her-home/issues/harvardeducational-review-volume-67-issue4-/ herbooknote/one-child,-two-languages_194 [2] https://www.pnas.org/content/9096/15/100.full
முதன்மை விளம்பரதாரர்கள்
Sriram Srinivasan, Realtor Cell: (248) 550-7949
Email: ram.s@kw.com
சிறப்பு விளம்பரதாரர்கள்
25 - ஜூன் 2021
Website: www.ram-s.kw.com
ஆதரவு நல்கிவரும் அனைத்து விளம்பரதாரர்களுக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்!
நிகழ்வுகள்... நினைவுகள்...
இராதா வெங்கடரமணி
மிச்சிகன்
மி
ச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 24 -ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கும்
இனிய துவக்கமும்... மழலையர் நிகழ்ச்சியும்...
திருவிழா
அட்லாண்டாவிலிருந்து சிறப்பு விருந்தினராக... திருமதி. யாழினி
- ஜூன் 2021
26
இசை மழை தந்த மிச்சிகன் குயில்கள்...
திரு. வின�ோத் புருச�ோத்தமன் மற்றும் திருமதி. கல்பனா ஹரிஹரன் சிறப்புரையாற்றி விழாவைத் த�ொடங்கி வைத்தனர். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் ம�ொழி மற்றும் பண்பாடு மாதம் என்று பிரகடனம் செய்து மிச்சிகன் மாகாண ஆளுநர் திருமகு. கிரட்சன் விட்மர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டது குறித்து செயற்குழு தலைவர் திரு. கிங்ஸ்லி சாமுவேல் தலைமையுரை ஆற்றினார். இந்த சிறப்பான நிகழ்வின் த�ொடக்கமாக அமைந்தது கர�ோக்கே நிகழ்ச்சி. பாடகர்கள் தங்கள் இனிமையான குரலால் இசை மழையில் நனையச் செய்தனர். அட்லாண்டாவிலிருந்து திருமதி. யாழினி இணைந்து பாடி அசத்தினார். ம்... வாசிப்பும்... நேசிப்பு
நவீனின் பல குரல் நிகழ்ச்சி... பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி..! த�ொடர்ந்து, நமது நாளைய நட்சத்திரங்களின் குறு நாடகங்கள் கண்கவர் வண்ணமாக அமைந்தது. அதிலும்அஸ்வின் ராமதுரையின் கட்டப�ொம்மன் ஜாக்சன் துரை வசனம் மெய் சிலிர்க்க வைத்தது. இதனைத் த�ொடர்ந்து பல குரல் இளவரசர் விஜய் டிவி புகழ் திரு. நவீன் தன்னுடைய பல குரல் திறமைகளால் பார்க்கும் வளர்கிறதா? தேய்கிறதா? தமிழாய்ந்த பட்டிமன்றம்! பார்வையாளர்களைக் கட்டிப் ப�ோட்டார். நிறைவாக இவற்றிற்கெல்லாம் மகுடம் சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்தது பட்டிமன்றம். இசையமைப்பாளர் திருமிகு. ஜேம்ஸ் வசந்தன் பட்டிமன்ற நடுவராகப் ப�ொறுப்பேற்று விழாவைச் சிறப்பித்தார். மேலும் அழகு சேர்க்கச் சிறப்புப் பேச்சாளர்களாகத் திருமதி.சுமதி மற்றும் திரு. முகுந்தன் தங்கள் பேச்சுத் திறமையால் மக்களை உற்சாகப்படுத்தினர். ஆர்வத்துடன் பங்குபெற்ற அனைவருக்கும் மற்றும் யூடியூப் மூலம் வீட்டிலிருந்தபடியே கண்டுகளித்து பின்னூட்டங்கள் செய்து உற்சாகப்படுத்தினர். Event Link For photos and screenshots: youtu.be/-dc2wVGS7uU
27 - ஜூன் 2021
நூல் பரிந்துரை
ஜூலை 10, 2020
மடை திறந்து
ஆகஸ்ட் 01, 2020
பேச்சாளர்கள் குழு - தமிழ�ோசைப் பரவட்டும்
ஆகஸ்ட் 14. 2020
500 ச�ொற்கள் - பகுதி 1
ஆகஸ்ட் 29, 2020
மரப்பாவைக் கூத்து
ஆகஸ்ட் 30, 2020
Compete
2020
செப்டம்பர் 01, 2020 நாளைய நட்சத்திரங்கள்: மேடைப்பேச்சு பயிற்சி பட்டறை (English) பகுதி 1 மற்றும் 2 – Grade 1-3 செப்டம்பர் 01, 2020 நாளைய நட்சத்திரங்கள்: மேடைப்பேச்சு பயிற்சி பட்டறை (English) பகுதி 3 மற்றும் 4 – Grade 4-5 செப்டம்பர் 01, 2020 நாளைய நட்சத்திரங்கள் மேடைப்பேச்சு பயிற்சி பட்டறை (English) பகுதி 5 – Grade 6-10 செப்டம்பர் 03, 2020 பேச்சாளர்கள் குழு - நவீன இலக்கியம் செப்டம்பர் 13, 2020 சிங்கப்பெண்களுக்கான விவாத மேடை செப்டம்பர் 17, 2020 என் பார்வையில் தந்தை பெரியார் - பேச்சுப் ப�ோட்டி செப்டம்பர் 19, 2020 செப்டம்பர் 20, 2020
பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பட்டறை
செப்டம்பர் 26, 2020 மிச்சிகன் தமிழ்ச் சங்க 45-வது ஆண்டு விழா அக்டோபர் 08, 2020 பேச்சாளர்கள் குழு - சமூகப் பிரச்சனைகள் அக்டோபர் 10, 2020 இலக்கியக் கழகம் - ம�ொட்டும் மலரும் – இலக்கிய வினாடி வினா அக்டோபர் 18, 2020 இயற்கை மருத்துவர். கு. சிவராமன் அவர்களுடன் ஒரு நேரடி நிகழ்ச்சி அக்டோபர் 10, 2020 நாளைய நட்சத்திரங்கள் – விவாத மேடை பகுதி 1, 2 அக்டோபர் 21, 2020 நாளைய நட்சத்திரங்கள் – விவாத மேடை பகுதி 3, 4 அக்டோபர் 22, 2020 நாளைய நட்சத்திரங்கள் – விவாத மேடை பகுதி 5 அக்டோபர் 25, 2020 குழந்தை நல மருத்துவர். ஷ�ோபனா சுந்தரம் அவர்களுடன் ஒரு நேரடி நிகழ்ச்சி
- ஜூன் 2021
28
நவம்பர் 06, 2020
500 ச�ொற்கள் - பகுதி 2
நவம்பர் 11, 2020
எழுத்துப் பட்டறை துவக்கம்
நவம்பர் 21, 2020
தாம் தூம் ZOOM தீபாவளி க�ொண்டாட்டம்
நவம்பர் 25, 2020
பேச்சாளர்கள் குழு - சிறப்புப் பட்டிமன்றம் - பகுதி 1
டிசம்பர் 02, 2020
முதல் பயிற்சிப் பட்டறை மற்றும் கதைக் களனில் விழைந்த 10 கதைகள்
டிசம்பர் 03, 2020
பேச்சாளர்கள் குழு - சிறப்புப் பட்டிமன்றம் - பகுதி 2
டிசம்பர் 12, 2020
பாட்டு பாட வா! - ஒரு புத்தம் புதிய திரையிசை விளையாட்டு.
டிசம்பர் 16, 2020
பேச்சாளர்கள் குழு - பேச்சு வழக்குத் தமிழ்
சங்கமித்த நிகழ்வுகள்...
டிசம்பர் 16, 2020
புதிய கதைக் களன் மற்றும் கதைகள் பற்றிய கலந்துரையாடல்
டிசம்பர் 20, 2020
கிறிஸ்துமஸ் க�ொண்டாட்டம்
டிசம்பர் 22, 2020
கதைக் களன் கதைகள் கலந்துரையாடல்
ஜனவரி 07, 2021
பேச்சாளர்கள் குழு – 2020 எனது பார்வையில்
ஜனவரி 13, 2021
கலந்துரையாடல்
ஜனவரி 17, 2021
புதிய கதைக் களன் கதைகள்
ஜனவரி 21, 2020
பேச்சாளர்கள் குழு – உத்வேகப் பேச்சு
ஜனவரி 23, 2021
மெய்நிகர் ப�ொங்கல் க�ொண்டாட்டம்
பிப்ரவரி 04, 2021
பேச்சாளர்கள் குழு - நகைச்சுவைப் பேச்சு
பிப்ரவரி 13, 2021
பேலிய�ோ உணவு முறை - ஓர் அறிமுகம் - திரு. நியாண்டர் செல்வன்
பிப்ரவரி 17, 2021
கதைக் கள கலந்துரையாடல்
பிப்ரவரி 18, 2021
பேச்சாளர்கள் குழு - தமிழ் உச்சரிப்பு
பிப்ரவரி 24, 2021
கதைக் களன் கதைகள் கலந்துரையாடல்
பிப்ரவரி 21, 2021
Geography Bee –
பிப்ரவரி 27, 2021
நாளைய நட்சத்திரங்கள்: சிறுவர் பட்டிமன்றம் - பகுதி 1
பிப்ரவரி 28, 2021
நாளைய நட்சத்திரங்கள்: இளைய�ோர் பட்டிமன்றம் - பகுதி 2
மார்ச் 06, 2021
சிறகை விரி! சிகரம் த�ொடு!
மார்ச் 10, 2021
கதை கலந்துரையாடல்
மார்ச் 18, 2021
பேச்சாளர்கள் குழு: சிறப்புச் ச�ொற்பொழிவு - பகுதி 1
மார்ச் 28, 2021
சிறார்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி - திருமதி. நீரஜா
ஏப்ரல் 01, 2021
பேச்சாளர்கள் குழு: சிறப்புச் ச�ொற்பொழிவு - பகுதி 2
ஏப்ரல் 09, 2021
இலக்கியக் கழகம்: குறள் விளையாட்டு - திருக்குறள் வினாடி வினா
ஏப்ரல் 11, 2021
விளம்பரதாரர் நிகழ்ச்சி
ஏப்ரல் 13, 2021
புதிய கதைக் களன் கதைகள் கலந்துரையாடல்
ஏப்ரல் 24, 2021
சித்திரைத் திருவிழா - தமிழ் ம�ொழி மற்றும்
விநாடி வினா – திரு. வேத் முத்துசாமி
பண்பாடு மாதக் க�ொண்டாட்டம் கதை கலந்துரையாடல்
மே 05, 2021
எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதாவின் பயிற்சிப் பட்டறை ஏற்பாடுகள்
மே 08, 2021
எழுத்துப்பட்டறை - தீரா எழுத்து - எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதாவின் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல்
மே 15, 2021
மருத்துவர். பழனியப்பன் மாணிக்கம் அவர்களுடன் ஒரு நேரடி நிகழ்ச்சி
ஜூன் 9, 2021
படைப்புகள் ‘கின்டெல்’ வெளியீடு
*மக்களுடன் ஒரு மாலை ப�ொழுது நிகழ்ச்சி ஒவ்வொரு மாத இறுதியில் நடைபெறும்*
க�ொண்டாட்ட நினைவுகள்..!
29 - ஜூன் 2021
ஏப்ரல் 28, 2021
சிறுகதை
மெ
அபர்ணா ராம்
ட்ராய், மிச்சிகன்
ய்யோ ப�ொய்யோ என்று இருந்தது. இப்போதுதான் ப�ோலவும் இருக்கிறது. இத�ோ இன்று வளைகாப்பு சீமந்தம் முடிந்து சுந்தரியை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாயிற்று. அந்தக் காலம் ப�ோல் இல்லாமல் இப்போது பிரசவம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது, எங்கள் கிராமத்து வீட்டுக்கு நாங்கள் செல்லும்போது எல்லாம் அப்பா கூறுவார் "இத�ோ இந்த இடத்துல நான், உங்க அத்தைங்க ரெண்டு பெரும் ப�ொறந்தோம்" அப்போதெல்லாம் வீட்டில் பிரசவம் நடக்கும்.
சுந்தரி காலம் வரும்போது குழந்தைகள் மற்றும் தாய்மாரின் நன்மைக்காக அது மருத்துவமனைக்கு மாறியது. இப்போ மறுபடியும் வெத்தலை பாக்கு வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அதற்குப் பெயர் ஏத�ோ "Home birth" ஆம். அதற்கான வகுப்புகளில் சுந்தரி பங்கேற்று க�ொண்டு இருக்கிறாள். பிரசவம் பார்க்கும் மருத்துவர் கிடையாது, அவர்களுக்குப் பெயர் "Midwife" ஆம். இதில் பல வகைகள் உண்டு, தண்ணீர் மற்றும் நிலத்தில். நல்லவேளை திரிசங்கு ச�ொர்க்கம் மாதிரி நடுவில் ஏதும் இல்லை.
- ஜூன் 2021
30
ஆச்சு.. இன்னும் க�ொஞ்ச மாசம�ோ நாள�ோ சுந்தரிக்குக் குழந்தை பிறந்துவிடும். குழந்தை பிறக்கும் நேரம் படைக்கும் கடவுளான அந்த ஈசனுக்கே தெரியாதாம். எப்போ நடக்கிறத�ோ பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் வரும். அன்று ஒரு செவ்வாய் கிழமை, சுந்தரிக்குக் குறித்த தேதியில் பிரசவத்திற்கு முன் கடைசி மருத்துவர் விசிட். இன்றாவது என்னுடன் வாங்களேன் என்று சுந்தரியின் கேள்விக்கு என்ன த�ோன்றியத�ோ சரவணன் நானும் வருகிறேன் என்று கிளம்பி விட்டான் அவளுடன். அங்கு சென்றவர்களுக்கு செய்தி காத்துக் க�ொண்டு இருந்தது. குழந்தை பிறந்து விடும் என்ற அறிகுறி இருக்கிறது, எதற்கும் நான் ஒரு ப்ரொசிஜர் செய்து விடுகிறேன் மற்றது எல்லாம் கடவுள் விட்ட வழி என்று கூறினார் மருத்துவர். இந்தச் செய்தியை வீட்டுக்குக் க�ொண்டு வந்தனர் ரெண்டு பேரும், இதைக் கேட்டுவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை, எதற்கும் இருக்கட்டும் என்று என்னாலான கைமருந்து செய்துவிட்டுச் சுந்தரியை
நன்றாக எண்ணெய் தேய்த்து குளிக்கச் ச�ொன்னேன், குளித்து முடித்து வந்தவளுக்கு நான் செய்த கைமருந்து க�ொடுத்து சிறிது ஓய்வு எடுக்கக் கூறினேன். அன்று ஏன�ோ வானிலை கூட சற்று வித்தியாசமாக இருந்தது, எப்போது மழை வரும் என்று ச�ொல்லி க�ொண்டே இருந்தது இடியும் அதன் முழக்கங்களும். இருங்க இருங்க சுந்தரி கூப்பிடுற ப�ோல இருக்கு, கூப்பிட்டது சுந்தரியே தான், இடுப்பைப் பிடித்துக்கொண்டு இருந்தாள், மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த எனக்குத்
கஷாயம்
இத�ோ சுந்தரி குழந்தை பிறப்பதற்கு தயார் ஆகி விட்டாள், கிர�ௌனிங் என்று கூறுவார்கள், அந்தப் பிஞ்சு இந்தப் பூவுலகைச் சந்திக்க தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து க�ொண்டு இருந்தது. இத�ோ அந்தத் தருணம், அந்தக் கடைசி அலறல் சுந்தரியிடம் இருந்து, "வீல்" என்று கூறி க�ொண்டு மிகவும் அழகான நிறைய தலை முடியுடன் பெண் குழந்தை பிறந்து விட்டது. ச�ொல்ல மறந்து விட்டேன். எங்கள் வீட்டு மஹாலக்ஷ்மி பிறந்த நேரம்: மாலை நேரம்: 5.30 pm, கிழமை: செவ்வாய், பெயர்: சந்தியா, நட்சத்திரம்: புனர்பூசம், பிறந்த இடம்: எங்கள் வீட்டின் சமையல் அறை, அன்று என் அப்பா நினைவு கூறிய இடமும் அது தான், நான் க�ொடுத்த கைமருந்து: கஷாயம். இவ்வளவு நேரம் உங்களிடம் கதையைக் கூறிக் க�ொண்டிருந்த நான் க�ோசலை என்ற க�ௌசல்யா, தலைமைச் செவிலியர், அரசு மருத்துவமனை, மதுரை.
31 - ஜூன் 2021
பிரசவத்திற்கு முன் கடைசி மருத்துவர் விசிட். இன்றாவது என்னுடன் வாங்களேன் என்று சுந்தரியின் கேள்விக்கு என்ன த�ோன்றியத�ோ சரவணன் நானும் வருகிறேன் என்று கிளம்பி விட்டான் அவளுடன்.
தெரிந்தது இது பிரசவ வலி தான் என்று. இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று சரவணனும், சுந்தரியும் டேபிள் ப�ோட்டு வைத்து இருந்தனர். முதல் படி மிட்ஒய்ஃபைக் கூப்பிடுவது, இரண்டாவது வெந்நீர், துவாலை, பெட்ஷீட், கத்தரிக்கோல் எடுத்து வைப்பது, எந்த இடம் அதைத் தயார் செய்வது. எல்லாம் செய்தாகி விட்டது, அவள் வருவது மட்டும் தான் பாக்கி. இங்கு சுந்தரிக்கோ நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவள் வருகை இருக்க மட்டும் ப�ொறுக்காதது ப�ோல், வாசலின் மணிச் சத்தம், அவள் தான�ோ? வந்தது சரவணன், எதற்கும் இருக்கட்டும் என்று அவனுக்கும் ப�ோன் செய்து வைத்தேன்.
உடல் நலம் பேணுவ�ோம்!
முனைவர். சுரேஷ் பழனியாண்டி
மிச்சிகன்
நீரிழிவு ந�ோய் - அறிமுகம்
நீ
ரிழிவு ந�ோய் (Diabetes mellitus) என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பை ஏற்படுத்தக் கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் த�ொகுப்பாகும். நடைமுறையில் சர்க்கரை ந�ோய் என்று அழைக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானத்திற்கு பிறகு மூன்று முக்கிய சத்துகளாக பிரிக்கப்படுகிறது: சர்க்கரைத்தன்மை அல்லது மாவுச்சத்து` குளுக்கோஸ் என்ற சத்தாகவும், புரதம் அமின�ோ அமிலங்களாகவும், க�ொழுப்பு க�ொழுப்பு அமிலங்களாகவும் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன. இதில் குளுக்கோஸ் நாம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இயங்கத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இந்த குளுக்கோஸை எல்லா உறுப்புகளும் பயன்படுத்த இன்சுலின்தான் உதவி செய்கிறது. எனவே, நம் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோனின் பணி இன்றியமையாதது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாததால் வருவது முதல்வகை நீரிழிவு ந�ோய் (Type 1 diabetes mellitus-Insulin Dependent Diabetes Mellitus). உடல் உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத வகையில் உள்ள நிலைமையே ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிற�ோம், இது இரண்டாவது வகை நீரிழிவு ந�ோய்க்கு (Type 2 diabetes- Non-insulin Dependent Diabetes Mellitus) அடிப்படையாக அமைகின்றது. உணவு செரித்து மாவுச்சத்திலிருந்து வரும் குளுக்கோஸை உடல் பயன்படுத்த முடியாமல் ப�ோவதால் சர்க்கரை ந�ோய் உள்ளவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடுகிறது.
நீரிழிவு ந�ோயின் அறிகுறிகள் நீரிழிவு ந�ோயால் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia), அதீத களைப்பு (Fatigue), மனதில் ஏற்படும் துரித மாற்றங்கள் (mood swings) மற்றும் எரிச்சல் (irritation) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரிழிவு ந�ோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறிப்பாக, பல வருடக் கணக்கில் இரத்தத்தின் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லையெனில் அன்றாட நடைமுறை வாழ்க்கையை கூட வாழ முடியாத (poor quality of life) அளவிற்கு மிகச் சிக்கலான நிலைமைகளும் உருவாகலாம். கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய
- ஜூன் 2021
32
சர்க்கரையில் அக்கறை!
நீரிழிவு ந�ோய்க்கான காரணிகள் பரம்பரைத் தன்மை: நீரிழிவு ந�ோயை
ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம் (genetic predisposition). பெற்றோருக்கு நீரிழிவு ந�ோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு ந�ோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் ப�ோகிறது. உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், க�ொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் த�ொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் ப�ோகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு ந�ோய் வந்துவிடுகிறது.
நீரிழிவு ந�ோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு ந�ோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு ந�ோய் கடத்தப்படுகிறது. பெற்றோருக்கு இன்சுலின் இல்லையெனினும் தாத்தா மற்றும் பாட்டி, தாய்மாமன்கள் ப�ோன்ற மாவுச்சத்துள்ள நெருங்கிய இரத்த சம்பந்த உணவு வகைகளையும் உறவுகளுக்கு இருந்தாலும் க�ொழுப்புச் சத்துள்ள நீரிழிவு ந�ோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பெற்றோருக்கோ, உணவு வகைகளையும் நெருங்கிய உறவுகளுக்கோ இனிப்புப் இந்நோய் இருந்தால் கவனமாக பண்டங்களையும் இருக்க வேண்டும்.
உடல் பருமன் (Obesity):
மாவுப் பண்டங்களையும் க�ொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ச�ோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற வாழ்வியல் மாற்றங்கள் க�ொண்ட வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடல் பருமனாகி அது நீரிழிவு ப�ோன்ற சில ந�ோய்கள் வரக் காரணமாக அமைகிறது.
குறைத்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் ப�ொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
எதிர்ப்பு உணர்வு: உடல்
பருமனாகி இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலின் ஆற்றலாக மாற்றும் இன்சுலினின் செயல்பாட்டு வழிமுறைகளும், மூலக்கூறு த�ொடர்பு சமிங்கைகளும் செயலற்று ப�ோய்விடுகின்றன. இதுவே 'இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' என்று ச�ொல்லப்படுகிறது. இது பாரம்பரியம் மற்றும் உடல் பருமனாக காரணமான பிறழ்ந்த வாழ்க்கை வாழ்வதால் வருகிறது.
மன அழுத்தம்: கவலை, க�ோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி ந�ோய்வாய்ப்படுதல் ப�ோன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.
33 - ஜூன் 2021
ந�ோய் (coronary artery diseases), பக்கவாதம் (stroke), நெடுநாள் சிறுநீரகக் க�ோளாறு (kidney damage), நீரிழிவு ந�ோயினால் ஏற்படும் கால் புண் (foot ulcer), நீரிழிவு ந�ோயினால் ஏற்படும் கண் புரை (cataract), கண் உள்ளுறுப்புக் க�ோளாறு ந�ோய் (retinopathy), நரம்புக்கோளாறு (neuropathy) மற்றும் வயிற்று உபாதைகள் (gastropathy). உயர் இரத்த அழுத்தம் (hypertension), இரத்த நாளங்களின் சுவர்களில் க�ொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (atherosclerosis), இதயத் தசைகளுக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் ந�ோய் (coronary artery diseases) மற்றும் பாரிசவாதம் (paralysis) ஆகியவை ஏற்படத்தக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.
மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு ந�ோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு ந�ோய் இருந்தால் அது அதிகப்படலாம்.
இரத்த மிகைக் க�ொழுப்பு: உடல்
பருமன் உள்ளவர்களில் பெரும்பால�ோருக்கு ரத்தத்தில் க�ொழுப்பின் அளவு அதிகமாகவே தமிழகத்தில் 80 லட்சம் பேர் நீரிழிவு ந�ோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ருக்கிறது. ஒருவருக்குத் திசுக் க�ொழுப்பும் ரத்தக் க�ொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் க�ொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் க�ொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு ந�ோய் வரும்.
- ஜூன் 2021
34
சினைப்பை நீர்க்கட்டிகள்: பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic Ovary Syndrome - PCOS) என்று பெயர். இந்த ந�ோய் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இந்த ந�ோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு ந�ோய் வருகிறது.
நீரிழிவும் இந்தியர்களும் நீரிழிவு ந�ோயாளிகள் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா முதலிடத்திலும், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் 7 க�ோடி மக்கள் நீரிழிவு ந�ோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் 80 லட்சம் பேர் நீரிழிவு ந�ோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களுக்கு அதிகமாக நீரிழிவு ந�ோய் வருவதற்கு மேற்சொன்ன பல காரணிகளில் மிக முக்கியமாக பாரம்பரியம், மாவுச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளல், உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை காரணமாக உள்ளன.
தவிர்க்க வேண்டியவை... மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் க�ொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் ப�ொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். இனிப்பான குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கடைபிடிக்க வேண்டியவை... நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். மனதை மகிழ்ச்சியாகவும், தேவையற்று மனச்சலனங்களற்றும் வாழ வேண்டும். நன்றாக ஓய்வெடுக்கும் வகையில் நல்ல தூக்கம் இருக்க வேண்டும்.
- ஜூன் 2021
35
சிறுகதை
மதுநிகா சுரேஷ்
- ஜூன் 2021
வேதமடி நீ எனக்கு
“அ
வச்சு வேற கூப்புடுறது செவல கருப்பினு.. ஏன் வேற பேரே கிடக்கலையா? இன்னிக்கி பால் கறக்குறப்ப இருக்கு ஒரு கச்சேரி உனக்கு என்று கருப்பிய�ோட அம்மாவை கடிந்து க�ொண்டது செவல.
“என்னது கருப்பிய�ோட த�ோஸ்து வேம்பு மட்டும் ஒத்தையா நடந்து வீட்டுக்குப் ப�ோவுது.. எப்பயும் கருப்பிய�ோடதான சேர்ந்து வருவா... பசி வேற தாங்கல ஒரு சத்தம் க�ொடுத்துப் பார்ப்போமா?” என்று செவல ய�ோசித்தது.
அன்றைக்கு முதல் நாள் இரவு கருப்பியின் அப்பத்தா வேணியம்மாள் வழக்கம் ப�ோல் மளிகைக் கடைக்குக் கருப்பியையும் மகனையும் பார்கக வந்திருந்தாள். வேணியம்மாள் அதே ஊரில் தெற்குத் தெருவில் தனியாக வசிக்கிறாள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைப்பதைக் க�ொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறாள். மருமகளிடம் பேச்சு வார்த்தை இல்லை. மதிக்காதவள் வீட்டு வாசற்படியை மிதிக்காத அவளின் வைராக்கியம் எந்த அளவ�ோ அதே அளவு பேத்தி மீது பாசமும். மளிகைக் கடை வாசலிலே பேத்திய கூப்பிட்டு தான் வாங்கி வரும் நெல்லிக்காய், இலந்தப் பழம் என்று எதையாவது தன்னால் முடிந்ததை க�ொடுத்து உச்சி முகர்ந்து வெற்றிலை மென்ற ப�ொக்கை வாயில் ச்ச்ச் என்று முத்தமிடுவாள்.
ய்யோ வயிறு கடிக்கிறதே.. எங்க இன்னும் இந்த கருப்பியக் காண�ோம். இந்நேரமெல்லாம் வந்திருக்கனுமே” என்று செவல மாடு காலையில் சாப்பிட்டதையே அசை ப�ோட்டுக் க�ொண்டு கருப்பி வருகைக்காக வாசலையே பார்த்துக் க�ொண்டிருந்தது.
36
ஃப்ளோரிடா
“என்ன அவசரம்? கருப்பி வருவா ப�ொறு" என்று அலட்சியமாகக் கருப்பிய�ோட அம்மா குரல் க�ொடுத்தாள். பாலை மட்டும் மிச்சம் வைக்காமல் கறந்து க�ொள்வாள் ஆனால் தீனி வைக்க உடம்பு வளையாது இவளுக்கு. பாவம் அந்த ஏழாவது படிக்கிற பிள்ள எவ்வளவு வேலையைச் செய்யும்? என்னயும் அந்த பிள்ளயயும் த�ோல் நெறத்த
மாலை ஆறு மணி ஆனது. கடிகாரத்தைப் பார்த்த கருப்பியின் அம்மா பதைபதைத்தாள். வீட்டை ஒட்டியே இருக்கும் தங்களது மளிகைக் கடையில் அரசி மூட்டையைப் பிரித்துக் க�ொண்டிருந்த கணவனிடம் ஓடிச் சென்று பள்ளிக் கூடத்திற்குப் ப�ோய் பார்க்கச் ச�ொன்னாள். எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சரி என்று ப�ொறுமையாக கிளம்பினார் பழநி.
வேணியம்மாள் மகனிடம் “வீட்டுல மண்ணெண்ணெய் இல்ல பழநி. இந்த வாரம் மீசக்காரனும் கூலியத் தராம இழுத்தடிக்கிறான் சாமி”என்று புலம்பி க�ொண்டிருந்தாள். அடுப்பங்கரையில் இருந்து காளியின் அவதாரமாகவே மாறியிருந்த கருப்பியின் அம்மா “எங்க வந்த? மாசமான சுருட்டிட்டுப் ப�ோக வந்திர வேண்டியது. ஏன் ரெண்டாவது மகன் வீட்டுக்கு ப�ோக வேண்டியது தானே” என்று கத்தினாள். வேணியம்மாவிற்கு மருமக வாயை யாராலும் அடைக்க முடியாது என்று தெரியும். அந்த இடத்தை விட்டு தான் செல்வதுதான் மகனுக்கு நல்லது என்று முந்தானையால் கண்ணை துடைத்துக் க�ொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பிவிட்டு காலில் செருப்பைக் கூட ப�ோடாமல் ஓட்டமும் நடையுமாக பழநி வேணியம்மாவை தெருவின் முனையில் பிடித்தான்” அவள பத்தி தெருஞ்சதுதானே நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத” என்று ச�ொல்லிக் க�ொண்டே சட்டைப் பையிலிருந்து சில சில்லரை ந�ோட்டுகளை எடுத்து வேணியம்மாவின் கையில் திணித்தார். “இருட்டா இருக்கு பாத்துப் ப�ோம்மா” என்றார். அன்று இரவு கருப்பிக்குத் தூக்கமே வரவில்லை. அப்பத்தா அழுது அவள் பார்த்ததில்லை. விடிந்ததும் வழக்கம் ப�ோல் பள்ளிக்குக் கிளம்பி புத்தகப் பையை எடுத்துக் க�ொண்டு கடைக்கு வந்து அமர்ந்துக்கொண்டாள். பழநி கருப்பியைப் பத்து நிமிடங்கள் கடையைப் பார்த்துக் க�ொள்ளச் ச�ொல்லிவிட்டு சாப்பிடச் செல்வது வழக்கம். கருப்பி தன் புத்தகப் பையில் கையில் கிடைக்கும் காய்கறி, திண்பண்டங்கள் மற்றும் வெற்றிலை பாக்கு என அனைத்தையும் ப�ோட்டு நிரப்பினாள். பழநி வந்ததும் அவரை நேராகப் பார்க்காமலயே டாட்டா ச�ொல்லிவிட்டு வேம்புடன் பள்ளிக்கு நடந்தாள். நடந்து செல்லும் ப�ோதே வேம்பிடம்“ சாயங்காலம் எனக்கு க�ொஞ்சம் வேலை இருக்கு அதுனால நீ எனக்காக காத்திருக்க வேண்டா வேம்பு” என்று கூறினாள். பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக கருப்பி அப்பத்தா வீட்டிற்கு விரைந்தாள். கருப்பியை சற்றும் எதிர்பார்க்காத வேணியம்மா “ஏன் தாயி இப்டி வேகமா ஓடியாற? இந்தா தண்ணியக் குடி எப்டி எரக்கிது பாரு.. “இங்க பாரு அப்பத்தா உனக்கு என்ன க�ொண்டாந்திருக்கேனு” என்று பையிலிருந்து ஒவ்வொரு ப�ொருளாக எடுத்து கடைப் பரப்பினாள் கருப்பி
“எனக்கு நீ அழுத�ோன்னே சங்கடமா இருந்துச்சா அதனாலதான்..” "நான் பெத்த மகராசி எனக்கு என் மவன பத்தி கவலையேயில்ல. நான் படுற பாட்ட அவன் படமாட்டான் நீ அவன மவராசனாட்டம் பாத்துக்குவ” “உங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல?” “உடனே ப�ோனாதான் அடி நிறைய விழும் நான் ரெண்டு நாள் கழிச்சி ப�ோட்டா?”என்று கெஞ்சினாள் கருப்பி. “நீ வந்தது உங்கப்பனுக்கு தெரியுமா?” என கேட்டுக் க�ொண்டிருக்கும் ப�ோதே “யம்மா கருப்பி இங்கயா வந்தாளா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த பழநி கருப்பியையும் தரையிலிருந்த
“அப்பா அப்பா நான் அப்பத்தா வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு வரேம்பா. இங்க இருந்தே பள்ளிக் கூடத்துக்குப் ப�ோய்க்கிறேன் பா”என்று கெஞ்சினாள். பழநிக்கு பாவமாக இருந்தது வேணியம்மாவும் “பாவம்டா பிள்ள இங்க ரெண்டு நாள் இருக்கட்டும் விடு சாமி” சரியென்று தலையசைத்தாலும் வீட்டம்மாவை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தலையைச் ச�ொரிந்தார். “பழநி க�ொஞ்சம் கஞ்சியும் பிறண்ட துவயலும் தரட்டுமா?” என்றார் வேணியம்மா. வீட்டில் எப்படியும் இன்று ச�ோறு கிடைக்காது என்று தெரியும் அதனால் மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு பயந்தபடியே சென்றார். அன்று இரவு பழைய கதைகளை எல்லாம் கேட்டுக் க�ொண்டு அப்பத்தா மீது காலை ப�ோட்டுக்கொண்டே பழைய பாயில் நிம்மதியாக யாருக்கும் கிடைப்பதற்கரிய ஒரு தூக்கத்தை தூங்கினாள் கருப்பி. மறுநாள் காலையில்பெரிய பாத்திரத்திள் தண்ணீரை க�ொதிக்க வைத்து பேத்திக்குச் சீயக்காய்த்தூள் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டி, சாம்பிராணி புகையில் தலை காயவைத்து அருகிலிருந்த இட்லி கடையில் இட்லியும் வடையும் வாங்கி வந்து க�ொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றாள்.
வீட்டுக்கு திரும்பும் நேரமும் வந்தது. பள்ளியில் கடைசி வகுப்பு நடக்கும்போதே மனதை பயம் கவ்வி க�ொண்டது. நெஞ்சு படபடக்க வீட்டிற்குள் நுழைந்தாள் கருப்பி. அம்மா துரத்தித் துரத்தி அடிப்பாள் என்று எதிர்பார்த்த உள்ளே நுழைந்த கருப்பிக்கு அம்மா படுத்திருந்தது பழநி கருப்பியையும் ஆச்சிரியமாக இருந்தது.
தரையிலிருந்த ப�ொருளையும் பார்த்தார். மனதிற்குள் தான் செய்ய முடியாததை தன் மகள் செய்ததை எண்ணி ஆனந்தம் இருந்தாலும் வெளியே காட்டிக் க�ொள்ளாமல் “உங்கம்மா ஒன்ன ப�ொளக்கப் ப�ோறா பாரு” என்றார்.
கருப்பியைக் கண்டதும் அம்மா க�ொஞ்சம் விளக்கெண்ணெய் சூடு செய்து இடுப்பில் தடவி விடும்படி கூறினாள். சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் கருப்பிக்குப் புரிந்தது இது செவலையின் வேலை என்று. பால் கரக்கும் ப�ோது செவல கருப்பியின் அம்மாவ�ோடு இருந்த க�ோபத்தை தீர்த்துக் க�ொண்டது. எண்ணெய் தேய்த்துவிட்டப் பின் செவலைக்குத் தீனி வைக்க ஓடினாள் கருப்பி. “ஏத�ோ என்னால் முடிந்த உதவி” என்பதைப் ப�ோல் கருப்பியை பார்த்தது செவலை.
37 - ஜூன் 2021
“ஏன் சாமி உங்கப்பன்னா க�ொடுத் தனுப்பினான்?”என்ற கேள்விக்கு அமைதியாக இருந்தாள் கருப்பி
ப�ொருளையும் பார்த்தார். மனதிற்குள் தான் செய்ய முடியாததை தன் மகள் செய்ததை எண்ணி ஆனந்தம் இருந்தாலும் வெளியே காட்டிக் க�ொள்ளாமல் “உங்கம்மா ஒன்ன ப�ொளக்கப் ப�ோறா பாரு” என்றார்
சிறுகதை
ரே
மகேந்திரன்
ட்ராய், மிச்சிகன்
வதி பால் எடுக்க ஃப்ரிட்ஜைத் திறந்தாள். இன்று சனிக்கிழமை. மகன் கார்த்திக் மற்றும் மகள் மீரா தங்கள் அறைகளில் தூங்கிக் க�ொண்டிருந்த ப�ோது கணவர் சரவணன் இன்னும் மாஸ்டர் பெட்ரூமில் தூங்கிக் க�ொண்டிருந்தார். அவள் ஒன் பெர்ஸன்ட் மில்க்கை அடுப்புக்கு அருகில் வைத்து கீழிருந்த ஷெல்ஃபைத் திறந்து பால் பாத்திரத்தை எடுத்தாள். பாத்திரத்தில் பாலை ஊற்றியதும் வெள்ளையான தண்ணீரை ஊற்றியது ப�ோலத் தெரிந்தது. அடுப்பைப் பற்ற வைத்து மணி பார்த்த ப�ோது 7:15 என்று காட்டியது. கடந்த வாரம் அந்த 1500W மைக்ரோவேவ் அடுப்பிலிருந்து விடுபட்ட பிறகு, சமையல் அறையில் அந்த மூலை இப்போது பெரிதாகத் தெரிந்தது.
உணவைச் சூடாக்க மைக்ரோவேவ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்து சரவணனிடம் பல மாதங்கள் ச�ொன்ன பிறகு, இறுதியாக அதைத் தூக்கி எறியலாம் என்றார். என்னவ�ோ மேரேஜ்க்கு எங்க வீட்டுல க�ொடுத்த சீதனச் சாமான் ப�ோல அத விட மாட்டேன் பேர்வழின்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டுருந்தார் மனுஷன். உள் முற்றக் கதவை லேசாகத் திறந்து வெளிக் காற்றை வரச் செய்தாள். சரவணன் வேலை காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாக�ோ அருகில் இருக்கும் நேபர்வில் பகுதிக்குக் குடிபுகுந்தார். 6 மாதங்களுக்குப் பிறகு, ரேவதியும் குழந்தைகளும் சேர்ந்து க�ொண்டனர். ஒரு வருடத்திற்குள் பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த சுற்றுப்புறச் சூழலில் இந்த அழகிய புதிய வீட்டைக் கட்டும் முன்பே வாங்கித் தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொண்டனர். ரேவதி இந்த வீட்டை மிகவும் விரும்பினாள். க�ொல்லைப்புறத்தில் உயரமான மரங்கள் மற்றும் தாவரங்கள் இருந்தது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் வீட்டிற்குள்ளே த�ொட்டியில் கருவேப்பிலை, துளசி, கற்பூரவல்லி, மல்லி ப�ோன்ற பல வகையான இந்திய வகை செடி க�ொடிகளை வளர்த்து வந்தாள். வசந்த காலம் இப்போதுதான் துளிர்த்து வேலையில் காலை கதிரவன் எட்டி ரேவதியைப் பார்த்து ஒளிர்ந்து க�ொண்டிருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் கதவை மூடிவிட்டு அருகிலிருந்த முக்காலியில் உட்கார்ந்தாள். வெளியே அணில் ஜ�ோடியாகத் துரத்தி ஓடிக் க�ொண்டிருந்தது, பறவைகள் சிறகுகளை ஒய்யாரமாகச் சிறகடிக்க, வெயிலில் பளபளக்கும் புல் மீது பனி வாரயிறுதி த�ொடங்குவதற்குச் சரியானத�ொரு சூழலை உருவாக்கிக் க�ொண்டிருந்தது.
- ஜூன் 2021
38
அஞ்சறைப் ªð†®
க�ோயம்புத்தூரில் உள்ள த�ொண்டாமுத்தூரில் குழந்தையாக வளர்ந்த நாட்கள் அவள் நினைவை வருடியது. ஹ்ம்ம்! எவ்வளவு சிறந்த நாட்கள் அவை. அம்மா அவளை எழுப்பும்போது குளித்து நெற்றியில் பெரிய ப�ொட்டை வைத்து அழகாகக் காட்சி தரும்போது அதை ரசிப்பதா இல்லை ஓர் அம்மாவுக்கே உரித்தான அந்த அழகிய நறுமணத்தை ரசிப்பதா என்றே தெரியாது. "என்னடி, இப்போதான் எழுந்திருப்பியா? க�ோழி கூவி ரெண்டு மணி நேரம் ஆகுது. மகாராணி தெனமும் இப்படி எழுந்திருச்சா ப�ோற வீட்டுல என்னப் பாத்து என்ன ச�ொல்லுவாங்க. ஒரே ப�ொண்ணு, அத ஒழுங்கா வளக்கத் தெரியல. பாரு நல்லா பாசம் க�ொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க." "உனக்கு வேற வேலையா இல்லையே, ப�ொண்ணு வார
ரேவதியின் ஆதரவுக்கு அப்பா வந்தார். அப்பா சேதுமஹாலிங்கம். சுகர்கேன் பிரீடிங் இன்ஸ்டிட்யூடில் வேலை பார்த்துட்டு இருந்தார். வந்த சம்பளத்த சேமிச்சு வெச்சி இந்த வீட்டை மாடெர்னா கட்டுன அதே சமயம் நட்ட நடு வீட்டுக்குள் வெளிச்சம் வரும் முற்றமும் சமையல் அறையைப் பாரம்பரியமான முறையில் வெக்கணும்னு பாத்து பாத்து கட்டியிருந்தார். மிக்சி, எரிவாயு அடுப்பு மெதுவாக ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து க�ொண்டிருந்த வேளையில் அவர் அந்த வாழ்க்கை முறைக்குள் செல்வதற்குப் பிடிவாதமாக இருந்தார். அம்மா ச�ொல்லவே வேணாம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதுல ப�ொருத்தம் இருக்கோ இல்லைய�ோ சாப்பாடுன்னு வந்தா ரெண்டு பேருக்கும் பத்து ப�ொருத்தம். "காலங் காத்தால நல்ல பில்டர் காஃபி குடிச்சுட்டு இந்த மனுஷன் இதையும் பேசுவார், இன்னமும் பேசுவார். இவளுக்குப் ப�ோற வீட்டுல நல்ல தூங்கிட்டுருந்தா புருஷன் ஒதச்சுதான் காபி கேட்பார். வீட்டுக்காரர் கைல காத்தால முதல் வேலையா ஒரு மணமான காபி க�ொடுத்தா அந்த நாள்ல பாதி நல்லா இருந்த மாதிரிதான். என்ன நான் ச�ொல்றது!" எங்கள் சமையலறை அப்போது மிகப் பெரியதாக இருந்தது, மரக் குச்சிகள் மற்றும் கரியுடன் ஒரு பெரிய அடுப்பு இருக்கும். அவளுடைய அம்மா அதாவது என் அம்மம்மா க�ொடுத்த செம்பு அஞ்சறைப் பெட்டி மூலையில் ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் இத�ோ நாங்க ரெடி, நீங்க ரெடியான்னு கேட்டுட்டு இருக்குற மாதிரி இருக்கும். இந்த இடமே அம்மாவின் தர்பார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! பாத்திரத்திலிருந்து பால் ப�ொங்கிய சத்தத்தில் மீண்டும் நினைவுக்கு வந்தாள் ரேவதி. அடுப்பை அணைக்கச் சமையலறைக்கு ஓடினாள். பால் இவ்வளவு நேரம் சுட்டு கீழே க�ொட்டுகிறது ஆனா ஒரு ஸ்மெல்லும் வராம ஏத�ோ தண்ணிய சுட வெச்ச வாசனை மட்டும் தான் வருது. பரவாயில்லை. வாசனை உணர முடியது. எங்க க�ொர�ோனா வந்துச்சோன்னு பார்க்கறீங்களா. நம்ம பாரம்பரியமான சத்து உணவை சாப்பிட்ட உடம்புங்க. சும்மா தெறிக்க விடமாட்டோம் க�ொர�ோனவ! இதே நம்ம ஊரு பால்கார முருகேச தாத்தா தலைல டவல கட்டிட்டு விடியக் காலையில் சைக்கிளை உருட்டிக்கிட்டு வந்து “அம்மா பால்னு” கூப்பிட்டு சும்மா நுரை தளும்ப பசும் பால் எடுத்து பாத்திரத்துல ஊத்தி அத அம்மா கட்ட அடுப்புல வச்சி க�ொதிச்சதும் பக்கத்துல இருக்குற சின்ன ஸ்டீல் டப்பாவில் இருந்து புரூக் பாண்ட் பில்டர் காபி ப�ோட்டு, வெள்ளை
வெளேருன்னு இருக்குற சீனியை ப�ோட்டு காபி க�ொடுப்பாளே! அப்பப்பா! அப்பா முகத்தப் பாக்கணுமே, இந்த உலகத்துல இதுக்கு மேல வேற என்ன வேணும்? அது சரி, இங்க இந்த வெள்ள தண்ணியத்தான் பாலுன்னு ச�ொல்லிட்டு இங்க எல்லாம் குடிக்கிற�ோம். ஏத�ோ காலைக் கடனுக்கு. ஷெல்ப் திறந்து காபி ஜார் எடுக்கும் ப�ோதுதான் ஃப்ரூ காபி தீர்ந்து விட்டது தெரிந்தது. "ஐய�ோ! இதுவும் நமக்கு குடுத்து வைக்கலையே. நாடி நரம்புக்குள்ள இருக்குற புத்துணர்ச்சியெல்லாம் இந்த காப்பிய நம்பி தான் இருக்கே!" வால்மார்ட்டில் சில நாட்களுக்கு முன் வாங்கிய ஃப�ோல்ஜர் காபியின் சிறிய ஜாடியைக் கண்டுபிடித்து அதைப் பாலில் கலந்தாள். முதலில் கடைக்குச் சென்று ஃப்ரூ காபியை வாங்க வேண்டும், இல்லைனா சரவணன் என்னைப் பிழுஞ்சு எடுத்திடுவார். எனக்கே பைத்தியம் பிடிச்சாலும் ஆச்சர்யப்பட மாட்டேன். பிரவுன் சுகர எடுத்து காபியில் கலந்து, அடுப்பு அணைக்கப் பட்டிருக்கிறதா என்று பார்த்து மீண்டும் ச�ோபாவில் வந்து உட்கார்ந்தாள். டிவியை மாற்ற ரிம�ோட்டை எடுத்தாள். அடுத்த 5 நாட்களுக்கு உள்ளூர் வானிலைச் செய்தி, சில விபத்துக்கள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய செய்திகள் வந்தன. முக்கியமானது எதுவுமில்லை, ரேவதி டிவியை அணைத்துவிட்டு ரெக்லைனர் ச�ோபாவில் காலை நீட்டி கண்களை மூடிக் க�ொண்டாள். பழைய நினைவுகளை தீண்ட தூண்டியது மனது. அடுப்புல ஆவி பறக்க இட்லி பாத்திரம் இருக்க, அம்மா அத திறந்தவுடன் வருமே ஒரு வாசனை, அட! அட! இந்த மல்லிப்பூ இட்லிக்கு ஒரு வாசனை இருக்குதுனு அமெரிக்கா வந்த பிறகுதான் அத�ோட அருமை தெரியுது. இங்க கிடைக்குற அரிசி உளுந்துல மாவு அரைச்சா இட்லி வெள்ளைய உருண்டையா கல்லு மாதிரி இருக்குது, ஆனா ஏத�ோ ஒண்ணு குறையிற மாதிரி இருக்கு. அம்மிக் கல்லுல பச்சை ம�ொளகாவ�ோட தேங்கா, க�ொஞ்சம் ப�ொட்டு கடலை, கல்லு உப்பு, புளி சேர்த்து சிறுவாணி தண்ணிய க�ொஞ்சம் தெளிச்சி சட்னி அரைச்சு அதுல நெய் ஊத்தி இட்லிய�ோட சாப்பிட்டா…. இருங்க இருங்க, அதுக்குள்ள வாய் ஊறுதுன்னு ஜ�ொள்ள த�ொடைக்கிற மாதிரி இருக்கு, பரவாயில்ல விடுங்க, இதெல்லாம் அனுபவிக்கனும்! மறுபடியும் பாக் டு நம்ம ஊரு கதைக்கு வருவ�ோம். பாட்டி வடை சுட்ட கதையை மட்டும் தான் கேட்டுருக்கேன், ஆனா எங்க அம்மா அந்த இட்லி இல்லாத நாளுல மணக்க மணக்க நெய்
39 - ஜூன் 2021
கடைசிலயும் நல்ல தூங்க விடமாட்டே!"
â‚vHóv
மிதக்கப் ப�ொங்கல், வடை, சட்னி சாம்பார் செஞ்சாங்கன்னா பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் பக்கத்திலேயே வராது. அப்படி ஒரு ஆனந்தம். அதைச் சாப்பிட பிறகு அப்பாவ�ோட சேந்து எனக்கு கண்ணு காட்டும் பாருங்க!
è¬îè÷
அய்யோ!அய்யோ! வடைன்னு ச�ொன்னதான் பருப்பு வாங்கணும்னு நினைப்பு வருது. நாளை கார்த்திக்கின் பிறந்த நாள், எனவே வீட்டில் ஒரு சிறிய பர்த்டே பார்ட்டிக்குத் திட்டமிட்டுள்ளோம். நண்பர்கள் அவர்களின் குட்டீஸுடன் வருவார் கள். மீராவின் சென்ற பிறந்தநாள் விழாவில் பீட்சா மற்றும் சாலட் மட்டுமே இருந்ததால் இம்முறை தென்னிந்திய உணவு மட்டுமே. ஒரு கை பார்க்கனும்னு ப�ோல இருந்தது. சிறு வயதில் கல்லை க�ொடுத்தாக்கூட கவலையே இல்லாம கடித்து ந�ொறுக்குற நாம அப்பா அம்மா என்ன க�ொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அவங்க க�ொடுத்தது எல்லாமே நம்ம ஊரு பாரம்பரியமான உணவே. பல்வேறு வகையான எண்ணெய், மைதா, இனிப்பு, அரிசி, GMO/non-GMO, இயற்கை உணவு, ஃசீஸ் எதை பற்றியும் நினைத்து கூடப் பார்த்ததில்லை. நம்ம ஃபில்டர் காபி, இட்லி, ப�ொங்கல் வடை பத்தி ச�ொல்லவே இவ்வளவு நேரம் ஆகுதுன்னா மதிய ஃபுல் மீல்ஸ், சாய்ங்கால ந�ொறுக்கு தீனி சுடச் சுட இஞ்சி மசாலா டீய�ோட இரவு சிற்றுண்டி வரைக்கும் ச�ொல்லனும்னா இந்த கதை பத்தாதுங்கோ. அம்மா! அம்மா.....ஆ!
- ஜூன் 2021
40
ரேவதி நினைவுக்கு வந்தாள். நேற்று இரவு ஃப்ரைடே வீகென்ட் மூவி பார்த்து நீண்ட தூக்கத்திற்குப் பிறகு மீரா கண்களைத் துடைத்துக்கொண்டே ரேவதி அருகில் வந்தாள். கார்த்திக்கும் சரவணனுக்கு இன்னும் அமெரிக்கக் க�ோழி கூவ சிறிது நேரம் ஆகும். அம்மா, மார்னிங் என்ன பிரேக்பாஸ்ட்? தயவு செய்து இட்லி, த�ோசை, உப்புமா, சப்பாத்தி, பூரி, ப�ொங்கல்னு ச�ொல்லாதே… பட்டியல் த�ொடர்ந்து க�ொண்டே இருந்தது.
மலர்களைக் காதலிக்குக் க�ொடுப்பதற்காகக் கால் ந�ோக நின்று க�ொண்டிருந்தான் மகன்.
பராமரிப்பு கால்நடை பராமரிப்புத் துறை
அமைச்சர் வருகிறார் என்ற அறிவிப்பு சுவர�ொட்டியைத் தின்று க�ொண்டிருந்தது ஒரு மாடு.
- சந்தோஷ் குமார் கண்ணன்
அழகு அணிலாடும் முன்றில் என்ன
அழகு?! திரும்பிப் பார்த்தால் தக்காளியைக் காண�ோம்..
சான்றிதழ் சாதிகள் இல்லையடி பாப்பா என்று
கற்பித்த ஆசிரியர் இறுதித் தேர்வு நுழைவுச்சீட்டிற்கு சாதிச் சான்றிதழ் கேட்டார் சங்கடத்துடன்.
- பிரசாந்த் பன்னீர் செல்வம்
வய�ோதிகம் கால்களைச் செருப்புக்குள் மாற்றி
நுழைக்க முற்படும் அப்பாவிடம் அவரது நாற்பது வருடக் காலணிக் கடையின் புகைப்படத்தை எடுத்து நான் காட்டிட, ‘விளம்பரங்களை நம்பாதே’ என்றார்.
ரேவதி, “ஏண்டி இதுக்கு மேல நான் என்ன தான் செய்யறது. நீயே அதையும் ச�ொல்லிடு. மாம், ஜஸ்ட் மேக் பாஸ்தா!
ந�ோக ந�ோக கை ந�ோகத் தாய் த�ொடுத்த
- ஜானகிராமன் பாலவெங்கடசுப்பு
- ஜூன் 2021
41
சிறுகதை
நா
சங்கர நாராயணன்
ட்ராய், மிச்சிகன்
ன்காவது முறையாக எனது கையை சானிடைசர் க�ொண்டு சுத்தப்படுத்திக் க�ொண்டேன். வரவேற்பறை முழுவதும் ஆட்கள். வெவ்வேறு தினுசாக. ஒரு வயதான பாட்டி முகக்கவசம் அணிந்து உள் நுழைந்திருந்தாள். மிகக் குறுகலான தளர்ந்த உருவம். இல்லாத தலைமுடிக்கு பாப் வெட்டியிருந்தாள். க�ொத்துக் க�ொத்தான முடிகளுக்கிடையில் பளீரென்று தெரிந்த வெள்ளை மண்டை கணிசமாக எழுபதைத் தாண்டிய வயது என்று ச�ொல்லியது. வந்தவள் முனகியவாறே அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் வரவேற்பாளினியிடம் சென்று பேச ஆரம்பித்தாள். மூடிய கண்ணாடி அறைக்கு அப்பால் கண்ணை விரித்துக் காட்டி க�ொஞ்சம் பெருத்த குரலில் அவளது மருத்துவ காப்பீட்டையும், இன்ன பிற விவரங்களையும் கேட்டறிந்து க�ொண்டாள். சம்பிரதாயத்திற்கு என்ன ஆயிற்று என்று கேட்டு, வாங்கிய ஆவணங்களை நகல் எடுத்துவிட்டுத் திருப்பித் தந்து க�ொண்டிருந்தாள். நான் அவளது வயதையும் தள்ளாட்டத்தையும் பார்த்து உடனடியாக உள்ளே அனுப்பப்படுவாள் என்று நினைத்திருந்த வேளையில் எங்களுடன் அவளும் வந்து வரவேற்பறையில் இணைந்தாள். அவளுடன் ஒரு சிறிய பெண் துணைக்கு வந்திருந்தாள். இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குள் இருக்கும். முகத்தை மூடி கண்கள் மட்டும் தெரிய அழகாக வசீகரித்தாள். கைதாங்கல் என்பது தேவைப்படாமல் அவளாகவே சென்று ஒரு மூலையில் தன்னைக் குறுக்கி அமர்ந்தாள். அந்த பெண்ணும் அருகில் சென்றமர்ந்தாள். அப்படிய�ோர் உருவம் உள் நுழைந்ததையும் ஒரு மூலையில் சென்றமர்ந்ததையும் யாரும் கவனிக்காத ஒரு நேரத்தில் தனது ஒட்டும�ொத்த பலத்தையும் க�ொண்டு தன் அனுமதியின்றி வாசம் செய்து க�ொண்டிருக்கும் பெயர் தெரியாத ஏத�ோ ஒன்றை வெளியே இழுத்துக் க�ொண்டு வரும் பெரும் முனைப்பில் ஒரு பெரும் இருமலை ஆரம்பித்தாள். அது வரையிலும் ஏதேத�ோ ய�ோசனையில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது அந்த இருமல். கண் மூடி அமர்ந்திருந்த எனது அப்பா அந்த இருமலில் தூக்கம் கலைந்து எழுந்தார். பதற்றமாக என்னைப் பார்த்தார்.
எதாவது வாங்கித் தர லாம் என்று ய�ோசித்தேன். திரும்பி வருவதற்குள் கூப் பிட்டுவிட்டால் என்ன செய்வது என்று ய�ோசித்து, "இன்னும் க�ொஞ்ச நேரத்துல கூப்பிட்டுரு வாங்க.. இப்ப சாப்பிடப் ப�ோன சரியா வராது.. க�ொஞ்சம் ப�ொறுத்துக்கோங்கப்பா..." என்று ச�ொல்லி முடிக்க, ஒரு மிடறு எச்சிலை முழுங்கி, கண்ணை மூடி ஒரு புறம் தலையைச் சாய்த்தார். ஒரு மிடறு எச்சில் ஆற்றப்:ப�ோகும் ரணத்தையும், வினாடிக்கும் குறைவான நேரமே அது தரும் ஆறுதலையும் அந்த முழுங்கல் எனக்கு உணர்த்தி அது பதற்றமாக என் மனதில் குடி புகுந்தது.
"ஏன்பா ர�ொம்ப வலிக்குதா?" என்றேன்.
- ஜூன் 2021
42
"வலி இல்ல, க�ொஞ்சம் க�ொலையக் கவ்வுற மாறி வலிக்குது, பசிக்குதுன்னு நினைக்குறேன்... காலைல இருந்து வலிச்சதுல ஒண்ணுமே சரியா சாப்பிடல .. அதான்"..
பூ அ னு தி
அவரை என் மீது கிடத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது என் மனக்கிடக்கை. ஆனால் அதைச் செயல்படுத்த ஏத�ோ ஒன்று தடுக்கிறது. அது தயக்கமா? வெட்கமா ? வார்த்தைகளைக் க�ொண்டு அந்த உணர்வை என்னால் வகைப்படுத்த முடியவில்லை. ஏத�ோ ஒன்று ஒரு தடுப்பு. கண் மூடி வலியைக் கடந்து க�ொண்டிருக்கும் என் அப்பா உணர்வுகளை அதீதமாக வெளிப்படுத்தக் கூடியவர். க�ோபம் , பாசம், வலி என்று என்னென்ன உணர்வுகள் இருப்பினும் அவை எப்பொழுதுமே அவரிடம் மிகுதியாக வெளிப்பட்டுத்தான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அப்படியில்லை தீராத வயிற்று வலியைத் தாங்கிக் க�ொண்டிருக்கிறார். என்னிடம் அவ்வளவாக வெளிப்படுத்திக் க�ொள்ளவில்லை. எனக்கு அது மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. முதல் முறை கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்து வாசம் செய்து க�ொண் டிருக்கிறார். பெரும் பாடுபட்டு பாஸ்போர்ட் வாங்கி பல கனவுகளுடனும் ஆசைகளுடனும் அமெரிக்கா வந்தார். வந்தவரைச் சிரிக்க வைத்து வரவேற்ற இந்த பனியும் குளிரும் ஒரே வாரத்தில் சிரிப்பைப் பறித்துவிட்டது. அனைத்துமே ஒவ்வாமல் ப�ோனது. க�ொர�ோனா பெருந் த�ொற்றின் காரணமாக விசாவை மேலும் ஆறுமாத காலத்திற்கு நீட்டித்தேன். எல்லாமும் சேர்த்து அவ ருக்குத் துளக்கத்தை ஏற்படுத்தியது. ப�ோதாக்குறைக்கு இப்பொழுது வயிற்றுப்புண். இவையனைத்தையும் என் மனமும், வயிற்று வலியை என் அப்பாவும் தாங்கிக் க�ொண்டிருந்த வேளை முழுவதையும் அந்த பாட்டியின் இருமல் நிறைத்திருந்தது. உடன் வந்த பெண் பாட்டியின் இருமலைச் சமாதானப்படுத்த மிகவும் பிரயத்தனப் பட்டாள். அருகிலிருந்தவர்களின் மூக்கு வாய் மற்றும் கண்கள் இம்மூன்றும் சேர்ந்து வெளிப்படுத்தும் முகச் சுளிப்பை, அவர்களது கண்கள் மட்டும் காட்டியது. சிறிது நேரத்தில் எல்லாம் முழுவதும் மூடி ஆணா பெண்ணா என்று உணர முடியாத ஒரு உருவம், ஒரு பிளாஸ்டிக் கண்ணாடி அணிந்து சாய்வு நாற்காலி ஒன்றைத் தள்ளிக்கொண்டு வெளிவந்து பாட்டியை உள்ளே கூட்டிச் சென்றது. வரவேற்பறையில் இருந்தவர் களுக்குச் சற்று ஆறுதல். ப�ொதுவாக க�ொர�ோனா ந�ோயாளிகளுக்கு என்று வேறு இடம் உள்ளதல்லவா? ஏன் இந்தப் பாட்டியை ப�ொது ந�ோயாளிகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்கள் என்று நான் ய�ோசித்ததைப் ப�ோல மற்றவர்களும் ய�ோசித்திருக் கக்கூடும். அப்பா இந்த எந்த களேபரங்களையும் காணாது கண்ணயர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் எல்லாம் எங்களை உள்ளே அழைத்துவிட்டனர். வரவேற்பாளினி எனது அப்பாவைப் பார்த்து.. "ஹவ் ஆர் யூ" என்று ச�ொல்ல... அனிச்சையாக அப்பா.." பைன் பைன்"
என்று இருமுறை வயிற்று வலியுடன் ச�ொன்னார். அந்தக் கேள்வியைத் தவிர வேறு எந்த ஆங்கிலக் கேள்விக்கும் அவர் அவ்வளவு தீர்க்கமாகப் பதிலைச் ச�ொல்லத் தெரிவதில்லை.. ஏனென்றால் அந்த ஒரு பதில் மட்டும்தான் அவருக்கும் தெரியும். சிரித்துக் க�ொண்டே இன்னொரு பெண்மணி அப்பாவின் வலது கையை இழுத்து ரத்த அழுத்தத்தையும், ஆக்ஸிஜன் அளவையும் ச�ோதித்தாள். வெள்ளைக்காரப் பெண் மணியின் த�ொடுகையில் அப்பாவின் சங்கோஜம் சிறிது குறைந்திருந்தது. ஒவ்வொரு மாதமும் முடித் திருத்தம் செய்யும் பெண்மணி அவரின் சங்கோஜத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்திருந்தாள். முதல் முறை சென்ற ப�ொழுது முடி வெட்டும் ஒரு பெண்மகளைப் பார்த்து வியந்தது மட்டுமல்லாமல், அன்று முழுவதும் அதைப் பற்றியே பேசிக் க�ொண்டிருந்தார். த�ொலைப்பேசியில் உறவினர்களிடமும் "இந்த ஊருல ப�ொம்பளதான் முடி வெட்டுறா பாத்துக்கோ.. அவ்ளோ ஷார்ப்பா வெட்டுறா.." என்று அதையே ச�ொல்லிச் ச�ொல்லி வியந்து க�ொண்டே இருந்தார். அவள் எங்களைக் கூட்டிக்கொண்டு ஒரு சிறிய நடைபயணத்தை மருத்துவ மனையின் உள்ளேயே ஆரம்பித்தாள். இடது வலது என்று திருப்பங்கள், எந்த அறைகளும் இல்லாமல் நீண்ட மவுனமான அமானுஷ்யமான பாதை. அப்பா இதில் எதிலுமே லயிக்காமல் வலியில் அரை மயக்கத்திலிருந்தார். சற்று நேரத்திலெல்லாம் வரிசையாகத் தனித் தனி அறைகள் க�ொண்ட பகுதிக்கு வந்தாகிவிட்டது. வராண்டா முழுவதும் பலவித ந�ோயாளிகள் உயர்ரகப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள். எங்களுக்கு மட்டும் ஒரு தனியறை கிடைத்ததில் ஒரு சிறு மகிழ்ச்சி. அதுவரையிலும் நான் நாற்பத்தி ஏழாவது முறையாக சானிடைசரைப் ப�ோட்டு கையை ம�ொழுகியிருந்தேன். அப்பாவிற்கும் அதையே செய்தேன். வேண்டா வெறுப்பாகக் கையில் வாங்கி முன்னும் பின்னும் கடனுக்கே என்று தேய்த்தார்... "நல்ல தேய்ங்கப்பா" என்று அழுத்தி நான் ச�ொன்ன வுடன், மூஞ்சியைப் பிலுக்கி கையை உதறி அழுத்தித் தேய்த்தார். கைகள் பிசுபிசுப்பாக உணர்ந்ததைச் சகித்துக் க�ொண்டிருக்கும் ப�ொழுதே குதிரை வால் ஜடையுடன் குதிரையை விடவும் உயரமாகவும் மீண்டும் ரத்த அழுத்தப் பரிச�ோதனை சாமானைத் தள்ளிக் க�ொண்டு உள்ளே நுழைத்தாள். ந�ோய்த்தொற்று இல்லாத நேரமாக இருந்திருந்தால் அவளின் அழகான சிரிப்பைப் பார்த்திருக்கலாம். இப்பொழுது அவளது கண் மட்டுமே சிரித்தது. வந்தவள் எல்லாவற்றையும் பரிச�ோதித்துவிட்டு, அப்பாவிற்கு வேறு ஒரு உடையைக் க�ொடுத்து உடுத்திக் க�ொள்ளச் ச�ொன்னாள். வேறு உடைக்கு மாறிய அப்பாவிற்குப் பின்புறம் முழுவதும் எந்தத் தடையும் இல்லாமல் காற்றுபட்டு உடலில் நெளிவைத் தந்தது... "இது என்ன தம்பி
43 - ஜூன் 2021
எனக்குப் பதிலாக அருகிலிருந்த ஜிப்சம் ப�ோர்டு சுவர் அவரைத் தாங்கியது.
இப்படி இருக்கு" என்று வலியிலும் புன்முறுவலுடன் ச�ொன்னார். ஒன்னும் இல்லப்பா பின்னாடி நாடா இருக்கு என்று ச�ொல்லிக் கட்டி விட்டேன். குதிரைக்காரி வரிசைக் கிரமமாகத் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்தாள். கையில் ஓட்டை ப�ோடப்பட்டு சலைன் ஏற்றப் பட்டு, கணினியைத் தட்டி எல்லா வற்றையும் குறித்துக் க�ொண்டு எங்களைத் தனித்து விட்டு நகர்ந் தாள். எனது அப்பா முழுமையான ந�ோயாளி ஆக்கப்பட்டிருந்தார்.
ஆகட்டும் பா... இன்னும் க�ொஞ்ச நாள். இந்த க�ொர�ோனா ப�ோய்விடும். நாம அமெரிக்காவ சுத்திப் பாத்துடலாம்" என்றேன். "இதுக்கு மேல என்னத்த இருக்கு அமெரிக்கால பாக்க... க�ொர�ோனாவ காட்டிலும் அமெரிக்கா சிருசுன்னு காட்டிருச்சு பார்த்தல்ல.." என்று சலித்துக் க�ொண்டார்.
சிறிது நேரத்தில் ஒரு மருத்துவர் வந்தார். அப்பா இரண்டு நாட்களாக அனுபவித்துக் க�ொண்டிருந்த வலியை எனக்கு வலித்தது ப�ோல ஒன்று விடாமல் ஆங்கிலத்தில் ச�ொல்லி முடித்தேன். எல்லாவற்றை யும் அமைதியாகக் கேட்டுவிட்டு அப்பாவின் வயிற்றைத் தனது இரண்டு கையையும் வைத்து நன்கு குழி விழும் படி ஆங்காங்கே அழுத்தினான். அப்பா சிறிது முனகி தனது அவஸ்தையை வெளிப்படுத்தினார். அவரின் மேல் வயிற்றில் அழுத்தும் ப�ொழுது இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார். சிறிது ய�ோசித்துவிட்டு ரத்தப் பரிச�ோதனைக்கு ரத்தம் எடுக்கவும் , வயிற்றில் அல்ட்ரா ஸ்கேன் செய்யவும் உத்தரவுகளைத் தந்துவிட்டு மறைந்துவிட்டார். ரத்தம் எடுக்கப்பட்டது, ஸ்கேனிற்கு நான் தேவையில்லை என்று அப்பாவைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டனர்.
- ஜூன் 2021
44
யாருமில்லா அறையில் வெற்று சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தேன். ஏன�ோ இந்த பிரம்மாண்ட மருத்துவமனைகளும் அல்லது பிரம்மாண்டமான யாவும் மனதில் படிந்திருக்கும் சுமைகளையும் சுகங்களையும் ந�ொடியில் அழித்துவிட்டுப் பெயர் ச�ொல்லமுடியாத இன்னொன்றை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறது. அவை என்னவென்று என்னால் இன்று வரையிலும் வகைப்படுத்த முடியவில்லை. சிறிது நேரத்திலெல்லாம் அப்பா வந்துவிட்டார். ஸ்கேன் முடிந்தாகிவிட்டது. இப்பொழுது எங்களை அறையை விட்டு வெளித் தள்ளிவராண்டாவில் இருத்தி விட்டனர். வராண்டாவில் மற்ற ந�ோயாளிகளுடன் நாங்களும் இருந்தோம். எங்கள் படுக்கையில் இருந்து ஒரு எட்டடி தூரத்தில் இன்னொரு படுக்கை பிரம்மாண்டமான படுக்கை முழுவதையும் ஆக்கிரமித்துப் படுத்திருந்தார் ஒரு மத்திய வயது ஆண். அதைத் தாண்டி இரு படுக்கைகள் அதில்
ஒரு பெண்ணும் இன்னும�ோர் ஆணும். இவர்கள் க�ொர�ோனா ந�ோயாளிகள் இல்லை என்றாலும் இனம் புரியாத ஒரு பயம். இவ்வளவு பெரிய மருத்துவமனை யின் ஒரு பகுதியை க�ொர�ோனா வார்டாக மாற்றியதால் ஏற்பட்ட இடப் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்படி ஓர் ஏற்பாடு. வெளியில் படுக்க ஆரம்பித்த ந�ொடியில் தான் அருகாமையிலிருந்த அறையி லிருந்து மீண்டும் அதே வானத்தைப் பிளக்கும் இருமல் சத்தம் கேட்டது. இம்முறை இன்னும் அதிகமாக இன்னும் வேகமாக, அப்பாவிற்குப் பதட்டம் அதிகமாகிவிட்டது கண்களில் தெரிந்தது.
முழுவதும் மூடி முற்றிலும் காற்று புகாத ஆடை அணிந்த ஒரு பெண், தான் பேசுவது வெளியே கேட்குமாறு ஒலிவாங்கியை ஆடைக் குள் வைத்து மூடி வெளியே ஒரு சிறு ஒலிபெருக்கி ப�ொருத்தியிருந்தாள். பார்ப்பதற்கு நீல் ஆம்ஸ்ட்ராங் ப�ோல இருந்தாள். இருமலறைக்குள் சென்றாள் வெகுநேரம் கழித்து வெளியே வந்தாள். இவைகளைப் பார்த்தவாறு பயந்தவாறு ப�ோர்வையால் முழுவதையும் மூடிக்கொண்டு அப்பா படுத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை இரும்பும் ப�ோதும் என்னைத் தற்காத்துக் க�ொள்ள அனிச்சையாக நான் சனிடைஸர் க�ொண்டு கையை ம�ொழுகிக்கொண்டே இருந்தேன், எத்தனாவது முறை என்று கேட்காதீர்கள், அதற்கான தர்க்கத்தையும் ய�ோசிக்காதீர்கள். மனித மனம் குரங்கு ப�ோல, அது எதை எண்ண வேண்டும் என்று எண்ணுகிறத�ோ அதைக் கண்டிப்பாக எண்ணிவிடும். இருந்தாலும் ப�ொறுப்புத் துறப்பு ப�ோலச் ச�ொல்வது எனது கடமை.
இதற்கிடையில் அப்பாவின் ரத்தப் பரிச�ோதனை முடிவுகள் வந்துவிட்டது, ஸ்கேன் ரிப்போட்டும் வந்துவிட்டது. இரண்டிலும் வருத்தப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. அடுத்து CT ஸ்கேன் செய்யவேண்டும் என்று ச�ொன்னார்கள். அதிலும் வருத்தப்படும் அளவிற்கோ, வலிக்கான காரணம�ோ கிடைக்கப் ப�ோவதில்லை என்று தெரிந்தாலும் செய்ய வேண்டிய கடமைக்காகச் செய்யச் ச�ொல்லிவிட்டோம். ச�ொன்னதைப்போலவே அதிலும் ஒரு தாக்கலும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. வயிற்றுப் புண்ணாக இருக்கலாம் என்று சந்தேகித்து சில மருந்துகளை எழுதித் தருவதாகச்
முன்பு ஆம்ஸ்ட்ராங்காய் சென்றவள் இப்பொழுது ஆர்ம்ஸ் காட்டி வெறும் முகக்கவசம் மட்டுமே அணிந்து பாட்டியின் அறைக்குள் சிரித்தபடி நுழைந்தாள். நுழைந்து சிறிது நேரத்தில் எல்லாம் கை தட்டி மகிழ்வை க�ொண்டாடும் சத்தம் இருமலினூடே கேட்டது. க�ொர�ோனா எதிர்மறை என்று வந்துவிட்டதற்கான க�ொண்டாட்டம். தற்சமயத்திற்கு உயிருக்கு ஆபத்தில்லை என்பதைக் க�ொண்டாடும் விதமான மகிழ்ச்சியின் வெளிப்பாடு. க�ொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது, அப்பாவிற்கும் வயிற்று வலி முழுவதுமாக குறைந்துவிட்டிருந்தது. முகம் மிகத்தெளிச்சியாக இருந்தது. என்னிடம் சாவகாசமாக உரையாட ஆரம்பித்தார். பசியும் இல்லை என்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு, "இங்கே இந்த மருத்துவமனைக்குள் திக்குத் தெரியாமல் ப�ோய் விடலாம் இல்ல தம்பி" என்றார்..
"ஆமாம்பா" என்றேன்... ம�ோவாயில் கை வைத்து பிரம்மாண்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்... எல்லாமும் முடிந்து வெளியேற இரவு நடுநிசியாகி இருந்தது. மிகச் சன்னமான பேய்க் காற்று. நல்ல குளிர். காரின் உட்புறம் இன்னும் சூடேறாததால். கையை பிசைந்தவாறே அப்பா வெளிரிய முகத்துடன் அமர்ந்திருந்தார். காரை இயக்க ஆரம்பித்தேன். காரின் பக்கவாட்டு கண்ணாடியில் பிரம்மாண்ட மருத்துவமனை சிறிதாகி புள்ளியாகி மறைந்தது. "என்னா பெரிசு.. அப்பப்பா இந்த ஆசுபத்திரிய பார்த்ததிலேயே அமெரிக்கா ம�ொத்தமும் பார்த்த மாறி ஆயிடுச்சு..." என்றார் "ஆகட்டும் பா... இன்னும் க�ொஞ்ச நாள். இந்த க�ொர�ோனா ப�ோய்விடும். நாம அமெரிக்காவ சுத்திப் பாத்துடலாம்" என்றேன். "இதுக்கு மேல என்னத்த இருக்கு அமெரிக்கால பாக்க... க�ொர�ோனாவ காட்டிலும் அமெரிக்கா சிருசுன்னு காட்டிருச்சு பார்த்தல்ல.." என்று சலித்துக் க�ொண்டார்.
45 - ஜூன் 2021
ச�ொல்லிவிட்டுச் சென்றவர்கள்தான். சென்றவர்கள் எந்த புறம் சென்றார்கள் என்பதைக் கண்டுக�ொள்ள முடியவில்லை. எங்களைக் கவனித்துக்கொண்டிருந்த குதிரைக்காரி பணி நேரம் முடிந்து கிளம்பிவிட்டாள் ப�ோல இருக்கின்றது. இவற்றினூடே அந்தப் பாட்டியின் இருமல் சத்தமும் பின்னணி இசை ப�ோல, நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் பலமிக்க ஒலி ப�ோலக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
சிறுகதை
"வா
- ஜூன் 2021
46
நெல்லியான் ராமநாதன்
மிச்சிகன்
ங்க ஐயா! இங்க பாருங்க, எப்டி இருக்குதுன்னு? உழுத்துப் ப�ோன வெங்காயம், அழுகிப் ப�ோன தக்காளி, இந்தா, பீன்ஸ்குள்ள புழு. இத எப்டிய்யா சமைச்சு ப�ோடுவேன் நான்? சாப்பிடுறது பூரா பச்சப் புள்ளைங்க"
"இது மட்டும் இல்லைங்க ஐயா! இங்க வாங்க. இந்த ஸ்டோர் ரூம்குள்ள பாருங்க. அரிசி, பருப்புலாம் ஈரம் புடிச்சி ப�ோய் கெடக்கு. எந்த பையத் த�ொறந்தாலும் வண்டோ, எறும்போ ஓடுது. ப�ொழுது சாஞ்சா எலி திரியுது. அலமாரிங்க மூலை முடுக்கெல்லாம் கரையான் புத்து வெச்சிருக்கு."
அந்த வாரச் சமையலுக்காக வந்திருந்த காய்கறிப் பெட்டிகளை, பெரும் பதற்றத்துடன் பள்ளி முதல்வருக்குத் திறந்து காண்பித்துக் க�ொண்டிருந்தார் அம்மா. மாவட்ட ஆட்சியர், கவுன்சிலர் என்று த�ொடங்கி, சத்துணவு விநிய�ோகஸ்தர், அமைப்பாளர், கண்காணிப்பாளர், தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்கள், துப்புறவுத் த�ொழிலாளர்கள், வார்டன், வாட்சமேன் வரை நீண்ட, அம்மாவின் விடாத த�ொடர் புகாரினால், எங்கள் பள்ளி சமையல் அறைக்கே வந்து பார்வையிட்டார் பள்ளி முதல்வர்.
"எதிர்லயே வேற பாத்ரூம் இருக்குங்க ஐயா. கக்கூசெல்லாம் சரியா சுத்தம் செய்யுறதே இல்ல, ஈ, க�ொசு..."
ஒவ்வொன்றாகத் திறந்து, அறையின் அவல நிலையை, உள்ளிருந்து அம்மா காண்பிக்க, மூக்கை மூடியபடி, வெளியே நின்று, அறையினுள் எட்டிப் பார்த்துக் க�ொண்டிருந்தார் முதல்வர்.
"சரி, சரி. என்ன பண்லாம்ன்னு பாப்போம்" "நெறைய தடவ கம்பளைண்ட் பண்ணியும் காண்ட்ராக்டர் கண்டுக்க மாட்றாருங்கையா" "அவன் கட்சி ஆளு, என்னத்தக் கண்டுப்பான்?"
வு ண து த் செ ம் ்த த ரு தி சீர்
"ச�ொதந்திர தெனத்துக்காக மினிஸ்டர் நம்ம ஸ்கூலுக்கு நாளைக்கு வாராரு. விடிகாலே பாத்ரூம் சுத்தம் பண்ணிருவாங்க. அப்படியே இந்த ஸ்டோர் ரூம்க்கு பூச்சி மருந்தும், எலி மருந்தும் அடிக்கச் ச�ொல்றேன். ரூம் குள்ள இருக்குற ஜாமான், அலமாரி எல்லாம் மூடி வெச்சிடு." "மருந்து பட்டா ஜாமான்லாம் கெட்டுடுங்க ஐயா?" "இப்ப மட்டும் என்ன நல்லாவாருக்கு?" "இல்லங்கைய்யா! ஜாமான்லாம் க�ொட்டிட்டு, ரூமை காலி பண்ணி, சுத்தம் செஞ்சு, ப�ொறகு மருந்தடிச்சி, காய வெச்சி, புது ஜாமான் அடுக்கணும்."
ரெண்டு தட்டுல சாப்பாடு வெப்பாரு. ரெண்டு புள்ளயளுக்கு நடுவே உக்காந்து ஒரு வா உம்பாரு. ப�ோட்டோல்லாம் புடிச்ச உடனே கெளம்பிடுவாரு. தெனம் ப�ோல நீ ஸ்கூலுக்கு சமைச்சிடு, மினிஸ்டர் ப்ரோக்ராம் முடிஞ்சவுடனே இதுகளுக்குப் ப�ொறத்தால வெச்சு ச�ோறு ப�ோடு...
"மினிஸ்டரே வேணா ரெண்டு வாரம் கழிச்சு வரச் ச�ொல்லி, சாவகாசமா ச�ொதந்திர தெனத்தக் க�ொண்டாடுவ�ோமா?" "நல்லதுங்க ஐயா" "ஆமா, ர�ொம்ப நல்லது தான். அப்பறம்... க�ோழி கறி, முட்டை, க�ொஞ்சம் மளிகை சாமான்லாம் வரும். விடியுங் காட்டியும் பிரியாணி, அவிச்ச முட்டை, சாம்பார் சாதம், கலர் வத்தல் எல்லாம் செஞ்சுடு" "ஏற்கனவே வந்துடுச்சிங்க. தனி வெள்ளப் பெட்டில சீல் ப�ோட்டு" "அதெல்லாம் பிரிட்ஜ்ல பத்தரமா வெச்சிடு. நாளைக்கு நேரத்துக்கு சமைச்சு ஆடிட்டோரியத்துக்கு அனுப்பிடு" "இது எல்லாருக்கும் பத்தாதுங்களே?" "ஒரு அஞ்சு, பத்து தட்டுல வெக்கிற அளவுக்கு இருந்தாப் ப�ோதும். ரெண்டு தட்டுல சாப்பாடு வெப்பாரு. ரெண்டு புள்ளயளுக்கு நடுவே உக்காந்து ஒரு வா உம்பாரு. ப�ோட்டோல்லாம் புடிச்ச உடனே கெளம்பிடுவாரு. தெனம் ப�ோல நீ ஸ்கூலுக்கு சமைச்சிடு, மினிஸ்டர் ப்ரோக்ராம் முடிஞ்சவுடனே இதுகளுக்குப் ப�ொறத்தால வெச்சு ச�ோறு ப�ோடு" "இந்த பிரச்னையை மினிஸ்டர் ஐயாட்ட வேணா...?"
"ச�ொல்லி என்னத்த கேக்கப் ப�ோற? இங்கெல்லாம் இப்படி தான் இருக்கும். இதென்ன பிரைவேட் ஸ்கூலா, பெத்தவுங்க கிட்ட பீஸ் வாங்கி பிரெஷ்ஷா சாப்பாடு ப�ோடவும், க்ரானைட்ல கக்கூஸ் கட்டவும்? காலங் காலமா இந்த ஸ்கூல்ல இப்டித்தான் நடக்குது. புள்ளையளும் சாப்பிட்டு பழகிடுச்சு. இருக்குறத சுத்தம் பண்ணிப் ப�ொங்கிப் ப�ோடு. பெரிய ப�ொரட்சி எல்லாம் பண்ணாத!" "ஐயா, நீங்களே இப்டிச் ச�ொன்னா எப்படி?"
"வேறெப்படி ச�ொல்ல? இங்க படிக்கிறது, சாப்பிடுறதெல்லாம் யாரு? சேரில இருக்குறதுக. ச�ோத்துக்கு இல்லாததுக. அதுங்களுக்கு இது கெடைக்கிறதே பெரிசு. இவ்ளோ ஏன், இத்தன வருஷத்துல உம்ம புருஷரு இங்க சாப்ட்டாரா? இல்லையே! மணக்க மணக்க, உன் கைப் பக்குவத்தை வீட்ல இருந்து க�ொண்டாந்துல உண்டாறு. நீயும், இங்க இருக்குறதப் ப�ொங்கிப் ப�ோட்டு, வெளிய ப�ோய் நல்ல சாப்பாடு சாப்பிடு. அத விட்டுப்புட்டு, சீர்திருத்தம்ன்னுலாம் பேசிட்டு இருந்தே, சதா வருத்தமாயிடும் பாத்துக்கோ" "இதெல்லாம் நாமதானேயா சரி செய்யணும்?..." "எவ்ளோ ச�ொன்னாலும் உனக்குப் புரியலயே! நம்ம கணக்கு வாத்தி ஒண்ணுமே கண்டுக்கமாட்டான், நீ என்னம�ோ கட்டப�ொம்மி மாறிக் கெடந்து கர்ஜிக்கிற? அவன் நல்ல க�ொணத்துக்காவத் தான் ஒனக்கு இந்த வேலயை வாங்கிக் க�ொடுத்தோம். நீ வேற தள தளன்னு இருக்க. சிட்டாட்டம் ரெண்டு அழகான ப�ொண்டுகள வெச்சிருக்க. ஆம்பளத் த�ொண வேற இல்ல. ப�ொறுக்கிப் பய ஊர்ல, கெடச்ச ப�ொழப்பப் ப�ொத்துனாப்ல ப�ொழங்குறது தானே புத்திசாலித்தனம்?" கண்களில் நீர் நிறைந்து நின்ற அம்மாவைக் கண்டு க�ொள்ளாமல், வந்த வேலை முடித்துக் கிளம்பிச் சென்றார் முதல்வர். என் அப்பா இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிதம் கற்பித்த கனவான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தால், வாழ்க்கை என்னும் பெருங்கணக்கிற்கு, என்னையும், தங்கையையும்
47 - ஜூன் 2021
"என்னங்கய்யா பண்றது?"
கேள்வி ஆக்கி, அம்மாவைத் தனியே விடை காணச் ச�ொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். விரக்தி விடாது விரட்டிக் க�ொண்டிருக்கையில், அஸ்தமித்த அப்பாவின் அரசாங்க உத்திய�ோகம், அம்மாவுக்கு வழங்கப் பட்டது. இவர்கள் எதிர்பார்த்த ஏட்டுப் படிப்பில்லாத காரணத்தால், அம்மாவுக்கு ஆசிரியர் வேலைக்குப் பதில், சத்துணவு ஆயா வேலை வழங்கப்பட்டது. பெற்றெடுத்த பெண்களைப் பேணிக் காக்க, இழிவு, அவமானம் என்றெல்லாம் நினைக்காமல், "வீட்ல சமைச்சுகிட்டு இருந்தேன், இனிமே ஸ்கூல்ல சமைக்கப் ப�ோறேன்" என பெருந்தன்மையுடன் இந்த வேலையை ஏற்றார் அம்மா. அதுவரை கான்வென்ட் கல்வி கற்று வந்த நாங்களும், த�ொடர்ந்து கட்டணம் கட்ட முடியாமல், இங்கே பள்ளி கடத்தப்பட்டோம். பள்ளியின் சத்துணவும், சுகாதாரமும் எவ்வளவு சன்னமாக இருந்தத�ோ, அதைவிடத் தரம் குன்றி இருந்தது வகுப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி. இது நாள் வரை அம்மா ப�ோல் அதை எல்லாம் தட்டிக் கேட்காமல், அப்பா ப�ோல் கடந்து சென்று, இவர்கள் கற்பிக்கவில்லை என்றால் என்ன, எனக்கான கல்வியையும், அறிவையும் நானே தேடித் க�ொள்வேன் என முடிவு செய்து இந்தப் பள்ளியின் நூலகம் சென்று என் விருப்பம் ப�ோல், அங்கே கிடந்ததை, கிடைத்ததை எல்லாம் எடுத்துப் படித்தேன். எவ்வளவு முட்டாள்தனம்? பள்ளி நிர்வாகம் மட்டுமின்றி மாணவர்களாலும் புறக்கணிக்கப்பட்டிருந்த இந்த நூலகம், தரவுகளுடன் சேர்த்து இங்கே எனக்கு தேவைப் பட்ட தனிமையையும் தந்து க�ொண்டிருந்தது.
- ஜூன் 2021
48
மறுநாள் விடியும் முன்பே த�ொடங்கி, விரைந்து முடிக்க வேண்டிய வேலைகள் பல அம்மாவுக்கு இருந்ததாலும், விடியலுக்கு முந்தைய இருளில் வீட்டிலிருந்து நாங்கள் மூவரும் பள்ளி வருவது ஆபத்து என அம்மா பயந்ததாலும், பள்ளி சமையல் கூடத்திலேயே அன்றிரவு தங்கின�ோம். படுத்துப் பழக்கமில்லாத புதிய இடமும், குறைவின்றிக் க�ொத்தி குருதி குடித்த க�ொசுக்களும், எங்களைப் பெரிதாக உறங்க விடவில்லை. அன்றிரவு முழுவதும் அம்மா அயர்ந்ததை விட அழுததே அதிகம். அம்மா எங்களிடம் தன் உணர்வுகளைப் பெரிதும் பகிர்ந்து க�ொள்கிறவர் கிடையாது. எங்கள் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களை விட சாமர்த்தியமான சமாளிப்புகளே வெளிப்படும். என்ன நடந்தது? அம்மா ஏன் அழுகிறார்? முதல்வர் என்ன ச�ொல்லி இருப்பார்? இந்தப் பள்ளி விவகாரங்களை அம்மா சரி செய்ய முயற்சிப்பது
பிடிக்காமல் ப�ோய் அதை நிறுத்தச் ச�ொல்லி மிரட்டுகிறார�ோ? அப்பா இறந்த அன்று இருந்தது ப�ோலவே, பெரும் வேதனையில் கரைகிறாளே இன்று? பூப்படைந்து நான் பெரிய மனுஷி ஆகி விட்டேன் என்றெல்லாம் ச�ொல்லும் அம்மா, இது ப�ோன்ற விவகாரங்களில் என்னையும், ஏன் தங்கை ப�ோலவே குழந்தை மாதிரி நடத்துகிறாள்? எவ்வளவு நாள் இதையெல்லாம் பார்த்துக் க�ொண்டு நான் சும்மா இருக்கப் ப�ோகிறேன்? அன்றிரவு என்னைச் சுற்றி, என் த�ோலைத் துளைத்த க�ொசுக்களை விட, என் மூளையைத் த�ொடர்ந்து துளைத்த, விடைக்கு வழியில்லா வினாக்களே அதிகம். விடிந்து விழித்துப் பார்க்கும்போது அம்மா பரபரப்பாக இயங்கிக் க�ொண்டிருந்தாள். "எந்திரிடி கண்ணு. எல்லா வேலையையும் முடிச்சிட்டேன். வத்தல் ப�ொறிக்க அந்தப் பெரிய கடாயில எண்ணெய் சுட வெச்சிருக்கேன். அடுப்பு கிட்டே ப�ோவாதீங்க. தங்கையைக் கூட்டி பாத்ரூம் ப�ோ. நான் இதெல்லாம் ப�ோய் ஆடிட்டோரியத்தில குடுத்திட்டு வந்துர்றேன்." "நேரமாகுதுனா நான் வேண்ணா வத்தல் ப�ொறிக்கவாம்மா?" "வேணாம்மா, காலைல அடுப்பு ஒயர்ல கேஸ் ஒழுவுற மாறி நாறிச்சு. டேப்பை ப�ோட்டு கட்டி வெச்சிருக்கேன். நீ வத்தல் எல்லாம் பிரிச்சி ஒரு தட்டுல க�ொட்டிவை தாயி ப�ோதும். நான் வந்து பாத்துக்குறேன்." பிடிக்காத பதில் தான் என்றாலும், இது ப�ோல நிறைய அம்மாவிடம் கேட்டுப் பழகி விட்டது. அம்மா என்னை செய்யச் ச�ொல்லி இருந்தால்தான் ஆச்சரியம். தங்கையை அழைத்துக் க�ொண்டு, எதிரே இருந்த கழிவறைக்குச் சென்றேன். கறையின்றிக் கழுவித் துடைத்து வைத்த பளிங்குக் கல் ப�ோல பளீரென இருந்தது. என்றுமில்லாமல் கதவுக்குத் தாள் ப�ோட முடிந்தது கண்டு களிப்படைந்தாள் தங்கை. வெளியே நின்றபடி வேறு என்னென்ன அரிய மாற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன என்று அலசிக் க�ொண்டிருந்த என் கண்களில் பட்டது ஓரமாக வைக்கப் பட்டிருந்த ஒரு அலுமினிய வாளி. அதற்குள் பல விதமான ரசாயனப் புட்டிகள், பையில் அடைத்த ப�ொடிகள், துடைப்பம் மற்றும் பிற துப்புரவுப் ப�ொருட்கள் இருந்தன. கழிப்பறையைச் சுத்தம் செய்தவர்கள் இவற்றை இங்கே விட்டுச் சென்றிருக்க வேண்டும். ரசாயனங்களில் சிலவற்றை எடுத்து படித்துப் பார்த்தபடி நின்றேன். அம்மோனியம் நைட்ரேட் என்கிற குவளை,
"என்னக்கா இதெல்லாம்?" "ஏய், த�ொடாத. வா ப�ோலாம்"
என்ன நடந்தது? அம்மா ஏன் அழுகிறார்? முதல்வர் என்ன ச�ொல்லி இருப்பார்? இந்தப் பள்ளி விவகாரங்களை அம்மா சரி செய்ய முயற்சிப்பது பிடிக்காமல் ப�ோய் அதை நிறுத்தச் ச�ொல்லி மிரட்டுகிறார�ோ? அப்பா இறந்த அன்று இருந்தது ப�ோலவே, பெரும் வேதனையில் கரைகிறாளே இன்று?
சற்றும் ய�ோசிக்காமல் அவசர கதியில், அம்மோனியம் நைட்ரைட் குவளையை எடுத்துக் க�ொண்டு சமையலறைக்குச் சென்றேன். அங்கே, என் எண்ண ஓட்டம் ப�ோல், அடுப்பிலிருந்த எண்ணையும் காய்ந்து க�ொதித்துக் க�ொண்டிருந்தது. வந்த வேகத்தில் அடுப்பில் ச�ொருகப்பட்டிருந்த எரிப�ொருள் இணைப்பைத் துண்டித்தேன். வேகமாக குவளையைத் திறந்து ரசாயனத்தை எண்ணெய்க்குள் ஊற்றினேன். வேண்டிய அளவு ஊற்றிய பின், குவளையின் தலையில் மூடியைத் திருகி மூடினேன். அது வரை சலனமின்றி காய்ந்து க�ொண்டிருந்த எண்ணெய் க�ொப்பளிக்கத் த�ொடங்கியது. க�ொப்பளித்துக் க�ொண்டிருந்த என் மனம் பயத்தில் உறைந்து நடுங்கத் த�ொடங்கியது. தங்கையை இழுத்துக் க�ொண்டு அங்கிருந்து விரைந்து வெளியேறினேன். மூடிய குவளையை வாளிக்குள் வீசி விட்டு, அம்மா இருக்கும் ஆடிட்டோரியம் ந�ோக்கி ஓடத் த�ொடங்கின�ோம். அமைச்சர் வரும் நேரம் நெருங்கியதால், பள்ளி வளாகம் முழுவதும் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது ஆள் நடமாட்டம். பாதி தூரத்தில், அம்மா எதிர் வருவது கண்ட எங்கள் ஓட்டம் மெது நடையாக மாறியது. "என்ன ஆச்சு கண்ணுகளா? ஏன் இப்படி ஓடி வாறீங்க" எதற்கு ஓடி வந்தோம் என்று தெரியாத தங்கையும், என்ன ச�ொல்வதென்று புரியாத நானும் திகைப்பில் விழித்து நின்றோம். "சரி வாங்க ப�ோலாம், நேரமாவுது..." "வேணாம்மா. அங்கப் ப�ோக்கூடாது..." நான் மூச்சிரைக்கப் பேசி முடிக்கும் முன், நான் தீட்டிய திடீர் திரவியத் திட்டம் திறம்பட முடிந்து, பெரும் வெடிச் சத்தத்துடன் வெடித்தது. பள்ளி சமையல்
மண்டபம், ஸ்டோர் ரூம் உட்பட பெரும் தீப்பிடித்து எரியத் த�ொடங்கியது. அதிர்ச்சியில், எங்கள் இருவரின் கைகளையும் பற்றிக் க�ொண்டு அருகே இருந்த சுவர�ோரம் ஒதுங்கினார் அம்மா. சிதறி ஓடினர் பலர். துணிந்து தீயை அணைக்கச் சென்றனர் சிலர். அமைச்சரைப் படம் பிடிக்க வந்த உள்ளூர் ஊடகங்கள், எரிந்து க�ொண்டிருந்த உலையைப் படம் பிடிக்கப் பாய்ந்தன. "என்னடி நடந்துச்சு அங்க? எப்படி இதெல்லாம்?" நான் ஏதும் பேசாதது கண்டு, "க�ொதிச்ச எண்ணைல பால்டாயில் ஊத்திட்டாமா அக்கா" "ஏன்டீ?"
"இங்க நடக்குறது, நைட்டெல்லாம் நீ அழுதது, கஷ்டமா இருந்துச்சி மா. இதுக்கெல்லாம் ஏதாவது பண்ணனும் ப�ோல இருந்துச்சி மா..." "அதுக்கு? யாருடீ உனக்கு இப்படிலாம் செய்ய ச�ொல்லி க�ொடுத்தது?" "இந்த ஸ்கூல் தான்மா" "என்ன?" "ராணி வேலுநாச்சியார் வெள்ளக் காரங்களுக்கு எதிரா சிவகங்கைல ப�ோர் செஞ்சப்போ, குயிலின்ற பெண் ப�ோராளி, தன் மேலயே தீ வெச்சிகிட்டு, மனித வெடிகுண்டா மாறி, பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை எரிச்சு, அவுங்க ஆயுதங்களை எல்லாம் அழிச்சா. அம்மோனியம் நைட்ரேட்ங்கிறது தனியா இருந்தா வெடிக்காது. அது க�ொதிக்கிற எண்ணெய்யோட சேரும் ப�ோது வெடிப் ப�ொருளா மாறும். இந்த வெடிப்பப் பல மடங்கு பெரிசாக்கி பெரிய தீ விபத்தா ஆக்கும், கேஸ் சிலிண்டர்ல இருந்து கசிஞ்சு, ரூம் பூரா நிரம்பி இருக்குற எல். பி.ஜி கேஸ். 1947 ல அமெரிக்க டெக்சாசுங்கிற ஊர்ல இப்படி ஒரு பேரழிவு நடந்துச்சு." ஒன்றும் புரியாமல் விழித்தாள் தங்கை. ஓங்கி என் கன்னத்தில் அறைந்த அம்மா, நான் அறை வாங்கி நிமிர்வதற்குள், எங்கள் இருவரையும் கட்டி அணைத்து அழத் த�ொடங்கினாள்.
49 - ஜூன் 2021
எனக்குள் ஒரு திடீர் திட்டதைத் தெளித்தது. இந்தத் திட்டம் இரவெல்லாம் தணல் ப�ோல் என்னை வாட்டி வதைத்த என் கேள்விகளின் மீது தண்ணீர் ப�ோல் விடைகளைத் தெளித்து என்னைக் குளிரூட்டியது.
சிறுகதை
சந்தோஷ் குமார் கண்ணன்
மிச்சிகன்
ச
மையலறையின் விளக்கை அணைத்து, கதவை அடைத்துவிட்டு கடைசியாக அந்த உருவம் சென்றது.
சுவரில் இருந்த கவுளி சத்தமிட்டது. "இந்த லாக்கடவுன்லே, டி.நகர் ரங்கநாதன் தெருவை விட பிஸியா இருக்கிற ஒரே இடம் இந்த சமையலறைதான்..." "ஷூஊ... யாருப்பா அது... இவ்வளவு சத்தமா? ப�ோனவங்க திரும்பி வந்திடப் ப�ோறாங்க... ஏத�ோ இன்னிக்கு என்னை விட்டு வெச்சாங்களேனு நான் சந்தோஷப்பட்டா..." பயத்துடன் பழுத்த வாழைப்பழம் ஒன்று கூறியது. "வேற யாரு, எல்லாம் நம்ம அண்ணன் முந்திரிக் க�ொட்டை தான்... விசேஷ நாளுக்கு மட்டும் வீட்டுக்காரங்க, கடைக்காரங்க எல்லாம் பார்த்துப் பார்த்து மரியாதைய�ோட நடத்துறதால இந்த அதுப்பு" சிகப்பு மிளகாய் தீர்க்கமா உ(ரை)(றை)த்தது. "தக்காளி நைட் ஆச்சுன்னா இவனுங்க த�ொல்லை தாங்க முடியல..." சிறுத்தாலும் சற்றும் காரம் குறையாத கடுகு சீறியது. "ஹல�ோ மிஸ்டர், சீறுவது எல்லாம் எங்ககிட்ட விட்ருங்க"- சீரகம் இந்த தாளிப்பில் கலக்க... "எல்லாரும் க�ொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?" -ஆளுமை நிறைந்த த�ொனியில் கடலைப்
- ஜூன் 2021
50
கதையின் தலைப்பு
கடைசி வரியில்...
"பெரிய பருப்பு இவிரு, வந்துட்டாரு தீர்ப்பு கசப்புடன் அங்கலாய்த்துக் க�ொண்டது வெந்தயம்.
ச�ொல்ல"
"ய�ோவ் யார் ச�ொன்னாலும் ச�ொல்லல்லனாலும் இங்க இருக்கறதுலயே நான் தான்யா பெரிய பருப்பு" மீண்டும் கர்ஜித்தது கடலை பருப்பு. "ஏன்யா உளுத்துப் ப�ோன மரம் மாதிரி வெட்டியா பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்கே, எதுவும் பேச மாட்டியா?" உளுத்தம் பருப்பைப் பார்த்து 'ப�ொங்கியது' பாசி பருப்பு. "நீ தனியா வெளியே இருக்க அதுதான் இந்த இறுமாப்பு உனக்கு..." உளுத்தம் பருப்பு உண்மையை 'உடைத்துச்' ச�ொன்னது "கரெக்டா ச�ொன்ன, 'தனியா'னு எனக்கு பேர் மட்டும் வச்சிட்டு, இந்தச் சின்ன டப்பால நிறைய பேருக்கு நடுவுல இடுக்கமாக உட்கார வெச்சுட்டாங்க, இந்த வீட்டு ஆளுங்க", சலித்துக் க�ொண்டது தனியா. "நீ அழகாகவும், மணமாகவும் இருக்கிறதால நடுவுல உட்கார வச்சிட்டாங்க, அங்க ப�ோரு அடிச்சா ச�ொல்லு, நான் கம்பெனி குடுக்கிறேன்..." மாவாக இருந்தாலும், கடலை தன் வேலையை காட்டியது ஜெமினி கணேசனைப் ப�ோல. "கவலை படாதேம்மா அண்ணன் நான் இருக்கேன். நாங்க பத்து பேரு இருந்தாப் ப�ோதும், பகைவன் வீட்டிலேயே சாப்பிடலாமென்று இந்த வீட்டு முதலாளி ச�ொல்லுவார்..." பெருமை பீற்றிக் க�ொண்டது கருமிளகு. "அந்த டப்பாவை மூடுங்கப்பா, எல்லாம் இந்த கரு மிளகால் வந்த வினை.. இவனைத் தேடி அந்த வெள்ளைக்காரன் வந்தான், கூடவே வந்த டீ, காப்பி, பூஸ்ட், காம்ப்ளான் அப்பிடின்னு எல்லா வந்தேறிகளும் இங்கயே தங்கிடிச்சு..." புளி ச�ொன்னதின் வீரியத்தில் அனைவரது முகமும் க�ோணியது. "ஆமாம், இடிச்ச பிறகு ஒரே இடத்தில நீ உட்கார்ந்தால், எல்லாரும் ஓவர்டேக் பண்ணித்தான் ப�ோவாங்க. எல்லார�ோடும் இணைந்து வாழறது எப்பிடின்னு கத்துக்கங்க..." த�ோன்றியதைச் ச�ொல்லியது அச்சு வெல்லம். "எவ்வளவு பெரிய கருத்து? ஆஹா ஓஹ�ோ,...அதுக்குத்தான் பெரிய மண்டை வேணுங்கறது..." அதுவரை வெறும் வாயை மென்று க�ொண்டு இருந்த அவலுக்கு புதிய டாபிக் கிடைத்தது. "ய�ோவ், உன்னை நசுக்குனதிலுருந்து கண்ணு இடுங்கிப் ப�ோயிருக்கா? இல்ல சுத்தமா ப�ோயிடுச்சா? மண்டையெல்லாம் அவங்க தாத்தா காலத்தோடு சரி, இப்ப எல்லாம் அவங்களை உருக்கி அச்சுல ப�ோட்டு எடுத்திடறாங்க. சில நேரத்துல, இதுக்கு நடுவில ம�ொலஸஸ்னு ஒரு முக்கியமான உள்ளடக்கப் ப�ொருளை சுட்டுகிட்டு ப�ோய்டுறாங்க மனுசங்க. அதுல சாராயம் தயாரிப்பாங்களாம்..." இழுத்துக் க�ொண்டே ப�ோனது ஜவ்வரிசி. கான்வர்ஷேசன் க�ொதிநிலைக்கு வந்து விட்டதால், ஏலக்காய் முந்திரிக்கு முன்னால் முந்திக் க�ொண்டு "ஏல... நம்ம கூட பாயசத்துல க�ொதிக்கிற பயதானே அந்த வெல்லம்... என்ன இம்புட்டு எளச்சு ப�ோயி சின்ன டப்பால அடைச்சிருக்கானுவ�ோ? எப்போதிலிருந்து?
"எல்லாம் சுகரு வந்ததிலிருந்து...இது எப்பிடி இருக்கு ?!" ரஜினி ஸ்டைலில் முந்திரிக் க�ொட்டை பளீர் பற்களைக் காட்டிக்கொண்டு கிராம்பு "நீ பட்டய கிளப்பு மாமு..." "ஏன்டா ஈத்தரைகளா, நானே காஞ்சு ப�ோய் தட்டையா முடியாம படுத்துகிட்டு இருக்கேன். முடிஞ்சா உங்க ஓனர் கிட்ட ச�ொல்லி என்னை பிரியாணிய�ோட நிறுத்திக்க ச�ொல்லுங்கப்பா, இந்த நார்த்இந்தியன் ஐட்டம்ல எல்லாம் நம்மளப் ப�ோட்டுச் சாவடிக்கிறாங்க. அன்னிக்கு அன்பா கூப்பிட்டாங்களேன்னு, ஒரு பஞ்சாபி சைடு டிஷுக்கு ஒத்திகிட்டுப் ப�ோனா, என்னையும் நம்ம த�ோழர் "கருப்பு பயரையும்" பார்த்து "டால் மக்கு-நீ, கிண்டல் பண்றான்ப்பா அந்த 'க�ொழுப்பு' புடிச்ச பன்னீரு..." அனைவரும் "க�ொள்" என்று சிரித்துவிட்டு எல்லோரும் ஒரே பக்கமாகத் திரும்பினர். "நெனச்சேன், கன்டினியூட்டிக்காக என்னைத்தான் பாப்பிங்கன்னு, ஏத�ோ என்றைக்கோ ஒரு ரசம் வெச்சாத்தான் எனக்கு வாழ்வு, அப்படியே, கன்டினியூ பண்ணி குதிரைவாலி, சீரக சம்பான்னு பாரம்பரிய உணவுகளை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துங்க, இல்லின்னா, பாம்பேயிலிருந்து வந்த சேட்டு இருக்கானே..." என்று ரவையை வம்பிற்கு இழுத்தது க�ொள்ளு. ரவை உடனே "என்னை ஏன்பா கிண்டுறீங்க, அப்புறம் நான் க�ோவிச்சிகிட்டு ப�ோயிடுவேன்..." அதான் தெரியுமே "உன்னை கிண்டுனா ஊரே ஓடுதே..." தேங்காய் எண்ணெய் கடைசியாக ரவையைப் பிரட்டி எடுத்தது. "வெரி நைஸ், நான் தப்பிச்சேன்...", இட்லி ரவையின் அந்த நக்கல் பேச்சு புரியாமல் பக்கத்திலிருந்த பச்சைப் பட்டாணி முழித்தது. "டூ மச்சா பேசாதே தம்பி", ம�ொச்சைக் க�ொட்டை த�ொடர்ந்தது "எல்லாருக்கும் ஒரு நாள் வர காத்திருக்க வேண்டி இருக்க வேண்டும், சில பேர் நிறைய நாள் காத்திருக்க வேண்டி இருக்கும். நம்ம பார்லி, பனங்கற்கண்டு மாதிரி... சீக்கு வந்தாதான் மக்கள் சீந்துவாங்க". "ஆமான்யா, கேட்கிறவன் இருந்தா கேப்பையில் நெய்
கேனையா வழியுதுனு
51 - ஜூன் 2021
பருப்பு அங்கே நடுவில் நெருடியது.
ச�ொல்லுவியே?" புளிப்பு பேச்சில் ஊறியிருந்த ம�ோர்மிளகாய் கவுன்ட்டர் ப�ோட்டது. "நான் பாட்டுக்கு தேமேனு, சமத்தா, விஸ்ராந்தியா இந்த சம்படத்தில் ஒக்காந்துண்டு இருக்கேன், என்ன எதுக்கு உங்கள�ோட வம்புல இழுக்குறேள்?" நெய் வழுக்கிக் க�ொண்டு ப�ோகப் பார்த்தது. "ப�ோய்யா வெண்ணை!!!" செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வலி தாங்காமல் அலுப்பை கக்கியது. "அது என்னை உருக்கறதுக்கு முன்னாடியாக்கம்..." தன்னை ஓட்டுகிறார்கள் என்று தெரியாமல் நெய் வெகுளியாகத் த�ொடர்ந்தது . "அவன் வெண்ணெய் இல்லை, வெறும் விளக்கெண்ணெய்" ரீபைண்டு ஆயில் எக்களித்தது. உடனே சீரியஸ் ஆகி விளக்கெண்ணெய் "உனக்கு ர�ொம்ப க�ொழுப்புதான், வாடி மாப்புள உனக்கு சீக்கிரமே டண்டண்ணாக்காதான், இந்த வீட்டில் யாருக்காவது ஹார்ட் அட்டாக் வரட்டும் ... நீ தான் ம�ொதல்ல காலி ஆகப் ப�ோற" சற்றும் தளராத நல்லெண்ணெய் "எல்லாருக்கும் டைம் முடியும் தம்பி, வாழ்க்கையே ஒரு சுழற்சி தான். இன்னிக்கி செத்தா நாளைக்கு பால்", சின்னக் கலைவாணர் விவேக் ச�ொல்லி இருக்காரு. "அது நான் வெண்ணெயா இருக்கறதுக்கு முன்னாடியாக்கும்..." தேவையில்லாமல் நெய் வழிந்தது. "உனக்காக உருகியது அந்த வெண்ணெய் மட்டும் இல்லை, நானும் தான்...." முழுவதுமாக உருக்குலைந்திருந்தாலும், கடலை எண்ணெய், தன் சபல புத்தியைக் காட்டியது. "இவன் ஒருத்தன் ந�ொய் ந�ொய்னுக்கிட்டு....." இறுக்கத்துடன் அங்கு வீற்றிருந்த மலை-தேன் "பழகப் பழகப் பாலும் புளிக்கும், எங்களுக்குள்ள நாங்க ஏத�ோ பேசிக்கிற�ோம், உனக்கு என்ன? நீதான் எங்க யார�ோடையும் சேர மாட்டங்கிற, உன்னை இனிமே தனி(த்)தேன்-னு தான் கூப்பிடணும்ன்னு", என்று ச�ொல்லிவிட்டு ஹாஹாஹா என்று சிரிக்க ஆரம்பித்தது, கடலை எண்ணெய்.
- ஜூன் 2021
52
வரைக்கும் இது ஒரு மார்ச்சுவரி, ஒரே நாத்தம். தாங்க முடியல. அங்க பார் புளிச்சுப் ப�ோன ம�ோர், முந்தாநாள் செத்துப் ப�ோன சாம்பார், திட்டம் தெரியாமல் க�ொழுப்பு எடுத்து ப�ோயி அதிகமா வெச்ச கருவாட்டுக் க�ொழம்பு. விஷமா இல்ல ரசமான்னு தெரியாத ஒரு திரவம். அந்த கிளாஸ் பாட்டிலில் பூஞ்சை பிடிச்சு ஆறு மாசமா கிடக்குது, அது என்ன நெல்லிக்காயா இல்ல எலுமிச்சங்காய் ஊறுகாயான்னே யாருமே இப்ப கண்டுபிடிக்க முடியாது. நானே எப்ப விடியும் நம்மள எப்போ வெளியே எடுப்பாங்கன்னு காத்துகிட்டு இருக்கிறேன், நீ வேற...." பால் அளந்து எடுத்தார் ப�ோல் பேசியது. அதற்குள் ட�ொக், ட�ொக், ட�ொக் ஒரு சத்தம். "அய்யய�ோ நடுராத்திரி ரெய்டா? ப�ோச்சு இன்னிக்கு செஞ்ச பூசணிக்கா அல்வா காலி" பீதியைக் கிளப்பியது பிரட் பாக்கெட். "இவனை யாருப்பா உள்ள விட்டது?", நீட்டிக்கொண்டு கேட்டது முருங்கைக்காய். "என்ன பண்றது, ஒரு சில வீட்டில் இவனை பிரிட்ஜுக்குள்ள வைக்கிறாங்க, சில வீட்டில் வெளிய வைக்கிறாங்க, லூசுப் பசங்க. பிரிட்ஜங்கிறதை எப்பிடி உபய�ோகிக்கணும்னு தெரியாத மடையர்கள்" தனது எஜமானர்களைப் பச்சை பச்சையாகத் திட்டியது வாழைக்காய். இதைக் கண்டுக�ொள்ளாத கேரட் முருங்கை மேல் ப�ொறாமை ப�ொங்க "நானும் தான் தமிழ்நாட்டில் பல வருஷமா இருக்கேன், என்ன பண்றது? முருங்கைக் காயை மட்டும் ஒரு சினிமா டைரக்டர் படத்தில் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் க�ொடுத்து பாப்புலராக்கி விட்டார்". "அவன் பச்சைத் தமிழன், அதனால தமிழ்நாட்டில் பாப்புலராகவிட்டான், உன் நிறம் தான் உனக்குப் பிரச்சனை தமிழ்நாட்டில்" மூளை நிறைந்த வெண்டைக்காய் அறிவைச் சிந்தியது. "இது என்ன அரசியல் ஜ�ோக்கா?!" முருங்கை மீண்டும் முறுக்கேற்றிக்கொண்டு கேட்டது
தேன் அதற்குக் கூலாக "எனக்கே ‘நக்கலா'?" இந்த ஜ�ோக்கை புரிந்த இட்லி ரவை மட்டும் சிரித்தது.
"ஆமாம், ஆமாம்" என்று சுதி பிசகாமல் க�ோரஸ் ப�ோட்டது க�ொத்துமல்லியும் கருவேப்பிலையும்.
"யார�ோ நம்பளப் பற்றி தூரத்திலிருந்து பேசுற மாதிரி கேட்கல? இந்தக் கதவு அடைச்சு ஏசி ப�ோட்டு இருக்கிறதால சுத்தமா எனக்கு ஒண்ணும் கேட்கல, உனக்கு?!" பிரிட்ஜில் இருந்து வெண்ணெய் பாலிடம் வினவியது.
மீண்டும் ட�ொக் ட�ொக் ட�ொக், அனைவரும் பயந்த அந்த ஒரு நிமிடத்தில், பிரிட்ஜின் வ�ோல்ட்டேஜ் தடங்கலாகி ஸ்டேபிலைஸர், மிகுந்த சப்தத்துடன் ஓட ஆரம்பித்தது.
"நீ வேணும்னா இதை பிரிட்ஜ்ன்னு க�ொண்டாடு, என்னைப் ப�ொறுத்த
"வாட் இஸ் ஹேப்பெனிங் ஹியர்?" பாரின் மச்சான் விப்புடு கிரீம் ஆங்கிலத்தில்.
"உனக்கு எப்படித் தெரியும்? நாளை காலையில், எறியும் நெருப்பில், சூடான கல்லில் ஏறப் ப�ோகும் எனக்குச் ச�ொல்லக் கூடாதா?" பாவமாக முகத்தை வைத்துக் க�ொண்டு கேட்டது த�ோசை மாவு. "எங்க அம்மாகிட்டேர்ந்து தான், நான் என்னதான் ஒடுக்குள்ள இருந்தாலும், என்னைப் பத்திரமா பாரத்துப்பாங்க, தினமும் காலையிலுருந்து என்கிட்ட பேசுவாங்க, அவங்க குரல் எனக்கு நல்லா கேட்கும். கதகதப்பா கூடவே இருப்பாங்க, ஒருநாள் வெளியே வந்து அம்மா மாதிரிய�ோ இல்ல அப்பா மாதிரிய�ோ ஆகலாம்னு நெனச்சேன். ஆனால் அந்தப் பாழாப் ப�ோன பண்ணையார், நைட்டோட நைட்டா என்னை லாரில ஏத்தி சென்னைக்கு அனுப்பிச்சிட்டாங்க". அனைவரும் ச�ோகத்தில் ஆழ, ட�ொக் ட�ொக் ட�ொக் மீண்டும் த�ொடர்ந்தது "யாரு"?! மிடுக்காகக் கவுளி கேட்டுவிட்டு பேச்சு வார்த்தையைத் த�ொடர்ந்தது. "நான் தான் வந்திருக்கிறேன்"
கதைக்களன்
"அடப்பாவி, நீ இங்கேயும் வந்திட்டியா? உன்ன அனுப்புகிற ஆளுங்களுக்கு விவஸ்தையே இல்லையா?" "சரி சரி, நீ மட்டும் தனியா வந்தியா? இல்ல கூட இரண்டு மூன்று கண்டிஷனைக் கூட கூட்டிக்கிட்டு வந்தியா?" "ஹை அப்ப, நம்ம எல்லாரும் கதையில் இருக்கப் ப�ோற�ோமா?" அனைவரும் மனதிற்குள் குதூகலித்துக் க�ொண்டு இருந்தனர். கவுளி கதவைத் திறக்காமல் "சரி யார் எழுதறாங்க? "சந்தோஷ் கண்ணன்" யாரு? ட்யூப்லைட்க்கும் சுவற்றுக்கும் நடுவில் த�ொங்கிக் க�ொண்டு இருந்த சிலந்தி "அதான்பா, உணர்வுப் பூர்வமா, நேர்கோட்டுல சிம்பிளா கதை எழுதச் ச�ொன்னா, திரைக்கதை, கதாபாத்திரம், பிளாட், லாஜிக்னு ஒரேயடியா ஆராய்ச்சியில் இறங்கி, ஸ்டோரி ப�ோர்டு ப�ோட்டு எழுதுவாரே, அவரு தான்...." சரி அதெல்லாம் இருக்கட்டும், முதலில் கண்டிஷன் என்னன்னு ச�ொல்லுப்பா? கதைக்களனை
ந�ோண்டியது கவுளி. "வம்புப் பேச்சு இருக்கக் கூடாது. குடும்ப விவகாரங்கள் த�ொடர்பாக இருக்கக் கூடாது. சண்டைகள் இருக்கக் கூடாது." "கிழிஞ்சது, அதுவும் இந்த கிச்சன்லயா?, நம்ம ஆளு இதுவரைக்கும் ஆல்ரெடி எழுத்திட்டு இருப்பாரே", சிலந்தி வலையை மும்மரமாகப் பின்னிக்கொண்டு மர்மமாகச் சிரித்தது. "அதை விடு அப்பிடியே ஏற்கனவே எழுதி இருந்தா லும், அதுக்கும் தமிழ் சினிமா ரேஞ்சுக்கு ஒரு விளக்கம் வச்சிருப்பாரு. படம் முழுக்கக் கத்தி கபடாவ�ோட க�ொலை க�ொள்ளைனு சுத்திட்டு, படம் முடியும்போது வன்முறை கூடாதுன்னும், புள்ளகுட்டியைப் படிக்க வைகன்னும்னு ஏதாவது கருத்துச் ச�ொல்லி தமிழ்ப் படம் முடிப்பாங்களே, அதே மாதிரித்தான் என் கதையும்னு ச�ொல்லி சமாளிச்சுக்குவாரு, உஷாரான ஆளு." உறுதிப்படுத்தியது கவுளி. மீண்டும் உரத்த குரலில் "டேய் கேட்டுச்சா? எல்லாரும் வாய மூடுங்க..."
பசங்களா
"எல்லோரும் வாய மூடுற�ோம், சரி, யார் எங்க எல்லாருடைய மூக்கையும் யார் மூடறது? ஒரேயடியா நாத்தம் தாங்க முடியல இங்க? வெளியில் இருந்த காய்கறி கூடையில் இருந்து சேப்பங்கிழங்கு கம்பளைண்ட் செய்தது. ஏன்? எல்லோரும் கை கால் முளைத்த கிழங்கைச் சந்தேகமாகப் பார்த்தனர்.
உருளைக்
"ஹல�ோ பிரதர்ஸ், என்ன பாக்கறீங்க?, அழுகாத வரைக்கும் எனக்கு இயற்கையிலேயே நாத்தம் கிடையாது?! என்ன சாப்பிடுறவங்க வாயு த�ொல்லையில் ஏதாச்சும் விட்டிருப்பாங்க....." உருளைக் கிழங்கு தன்னிலை விளக்கம் அளித்தது. "எனக்கு என்னம�ோ உன் மேலதான் இன்னும் சந்தேகம் குறையலை." "அதை நீ ச�ொல்ற பார் அதான் வேடிக்கை..." உருளை பூண்டைப் பார்த்து பர்ர்ர்ர்ர் என்று சிரித்தது "உனக்கேத்த ச�ௌண்ட்தான்"...பூண்டு "நீ பேசினால் அந்த நாத்தம் வருது, வாயை மூடு", உருளை தன் வெயிட்டைக் காட்டியது. "சட் அப் எவ்ரிபடி" சிலந்தியும், கவுளியும் ஒருமித்த குரலில், "இப்போ நாங்க கதவைத் திறக்க ப�ோகிற�ோம்." "ஐ அம் ச�ொன்னது.
சாரி
கைஸ்"
என்று
அமுக்கமாகச்
---- ஈர வெங்காயம் ---
●
53 - ஜூன் 2021
"அது மின்தடையைச் சரி செய்யும் கருவி, அது இல்லாம பிரிட்ஜ் கதவை திறப்பவர்கள் பூனை மாதிரி மெதுவா சத்தமில்லாமல் திறப்பாங்க, அந்த ட�ொக் ட�ொக் சமையலறை வெளியிலிருந்து கேட்குது." முட்டை சிந்தாமல் சிதறாமல் எடுத்துரைத்தது.
CÁõ˜ ð°F
பேசும் ப�ொற்சித்திரமே!
¬èõ‡í‹ âƒèœ
அஹானா அருண்குமார், மிச்சிகன்
- ஜூன் 2021
54
சாய்சரன் சிவபிரகாஷ், மிச்சிகன்
இளமாறன், மிச்சிகன்
மஹாஷினி காசி பாண்டியன், I„Cè¡.
தரண், I„Cè¡.
கிருத்தின் செந்தில்ராஜா, மிச்சிகன்
மிச்சிகன்
55 - ஜூன் 2021
சித்தார்த் க�ௌதம்,
- ஜூன் 2021
56
- ஜூன் 2021
57
From
PRSRT STD US POSTAGE PAID WARREN, MI PERMIT NO.118
Chellammal Narasimhan, 22690, Braeside Circle, Farmington Hills, Michigan - 48335.
To
BUY or SELL
Sriram Srinivasan, Realtor
58 - ஜூன் 2021
Website: www.ram-s.kw.com
64
Email: ram.s@kw.com
Cell: (248) 550-7949 Office: (586) 979-4200 Fax: (586) 979-4209
செப்டம்பர் - 2020
www.mitamilsangam.org