அற்றம்: Attem Journal 14 (March 2022)

Page 1

அ ற் ற ம்

ISSN 2564-0399



Checkout: issue.com/misfitsforchange Attem.net Inquiries: attemm@gmail.com


Photography Kanmanikana (Thanya) |Front cover|Experimenting with flowers in winter| pgs. 3, 25, 33 Yousif [Front Inside Cover |pgs. 1-2 Kavusala | pgs. 5, 8 - 11 Photographs of Saadawi (from various sources).

Art

Gemma Starlight of the Dark Star Keyblade Graveyard | pg. 28 Sathiyan Thillai K @h3avenainthard2find Tribute Saadawi |pg. 36


Poems சரண்யா விதவை,வருத்தமில்லை, அதுவரை | pgs. 5 - 7, 12. Articles Pratheepathi Drive my Car: சில குறிப்புகள் | pgs. 13 - 24. Gemma Starlight of the Dark Star Transition Stories: The Politics of Coming Out/Coming In | pgs. 25 - 34. தமிழ் அறிமுகம் 35 Tribute நவால் எல் சாடாவி: பொய்களைப் பரப்புகின்ற உலகத்தில் உண்மைகளை எழுதுதல் | pgs. 36 - 48. Editorial | pg 49.


ள் க தை வி க சரண்யா


விதவை

எழுத்து இலக்கம் தெரிந்து ஆசையாய் வைத்த பெயரை விதவையாய் கைம்பெண்ணாய் மாற்றியது யார்? எட்டுப் பொருத்தம், சுப நேரம், மந்திரங்கள் எல்லாம் அதன் விளக்கங்கள் போல் இல்லாமலே போயிற்று எப்போதோ வரும் முதுமையை ஒளவையார் போல் இப்பவே இருபத்தெட்டு வயசிலையே வலிந்து வரமாய்க் கேட்கிறேன். ஆண் நட்பு, உடுத்தும் உடை, இயல்பான சிரிப்பு எல்லாமே வேசைத்தனமாம்... தாரமிழந்தவள் - தரமிழந்தவள் அகராதிப் பொருளும் திரிபடைந்ததே(ன்) வக்கிரங்களையும் விரசங்களையும் நெற்றிப் பொட்டிலும் கட்டும் சீலையிலும் ஒளித்து வைக்கும் கலாச்சாரப் போர்வைகள். திருமணம், கொண்டாட்டம், முன்னின்று நடத்தியவள் முழுவியழம் கெட்டுவிடும் முன்னுக்கு வந்தாலே.

எந்த மாற்றமும் இல்லாமலே எனக்கு எத்தனை கேலிகள், கேள்விகள் வசைகள், திணிப்புக்கள், ஆணென்றால் மறுமணம் கணமும் சாவது பெண்களா? முஸ்லிம் பெண்ணானால் மதமே வழிவிடும், மறுமணத்திற்கு. மனித தேவையை மறுக்கும் எனது மதம் எதற்கு? இளமை உணர்வை தனிமைத் தகிப்பை உடலின் வேதனையை யார் கேட்பார், எவர் தணிப்பார்? ஒரே நாளில் ஒரு பெண் மரத்துப் போவாளா? எல்லாம் மறந்து போவாளா... -2003-

6


வருத்தமில்லை

உறவுக்கான நம்பிக்கைகள் அனைத்துமே சாகடிக்கப்பட்டு விட்டன. பொய்கள் ஊற்றி வளர்க்கப்பட்ட உறவு மரம் வெந்து கருகிவிட்டது மீண்டும் நீண்டு மலர்ந்த கனவுகள் நொடிப் பொழுதில் மறக்கடிக்கப்பட்டது. மனிதநேயம் உயர் சிந்தனை நுண்ணிய உணர்வு எல்லாமே வெறும் வார்த்தைகளாகி உண்மை அர்த்தங்களை இழந்து வேறு வடிவத்தில் நட(ன)மாடுகிறது உறவுக்கான அகராதி உனக்கும் எனக்கும் வேறு வேறு அர்த்தங்களையே காட்டுகிறது, புரிகிறது. யாரை நோவது?

-2002-


8



10



அதுவரை

தேவையற்ற காகிதமாய் சுருட்டி எறிந்து விட்டாய் குறி தவறியதால் குப்பைக் கூடைக்குள் போகவில்லை, தவறிய குறிக்கு நன்றி அல்லது உனது நிதானமின்மைக்கு. இயந்திரத்துக்குள் போய் உருக்குலைந்து உருவிழந்து வராதது உன்னால் தான். இன்று பெருவெளியில் நான் எவன் காலுக்குள்ளும் மிதிபடவில்லை, அழியவில்லை. வெளிக்காற்றின் அதிவேகத்தில் அடிபட்டுச் சுழல்கிறேன், பறக்கிறேன். வேகக் குறைவில் காற்றின் அமைதியில் காலத்தின் மாற்றத்தில் மீண்டும் தரைக்கு வர தனிமையிலோ எவரின் பிடிக்குள்ளோ. அதுவரை சுதந்திர வெளியில் சிட்டுக் குருவியாய்.

-2002-

12


DRIVE MY CAR:

சி ல கு றி ப் பு க ள் - திரைப்படம் -


ஒரு

திரைப்படம் ஒரு நாவலைப்போல பல்வேறு கருப்பொருள்களை அலசக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. படைப்பாளிகள் ஏதொன்றை எடுத்து அதை மையப்படுத்தி கதையாக்கி சில மணிநேர திரைப்படங்களாக உலவ விடுகிறார்கள். இதில் அவர்கள் கையாளும் கருப்பொருளின் தொடக்கம் – சிக்கல் – முடிவு என ஒரு கட்டமைப்புக்குள் கதை இயங்க முடியும், ஆனால் வாழ்வு ஒரு கருப்பொருளையே சுற்றித் திரிவதில்லை. வாழ்வின் நுண்ணிய கூறுகள் – அறிந்தும் அறியாதும் பாதிக்கின்ற சம்பவங்கள் – நாம் எதிர்கொள்ள விரும்பாதவை – முடியும் எனக் காட்டிக்கொள்பவை – இவற்றை திரைமொழியில் காட்டுதல் கடினம். அல்லது “ஏதும் நடக்காத” உப்புச்சப்பற்ற ஒரே விடயங்களையே திருப்பி திருப்பி செய்யும் இந்த வாழ்வை பெரிதாய் சினிமாவில் காணவோ அலசவோ விரும்புவது பெரும்பான்மை இரசனைக்குள் கிடையாது. கலைப்படங்கள் தொடர்பில் நீண்ட பாரம்பரியத்தை உடைய யப்பானிய பின்புலத்திலிருந்து வந்த ஜப்பானிய இயக்குநர் Ryusuke Hamaguchiஇன் முந்தைய படமான “Happy Hour (2015) ஐந்து மணி 17 நிமிடங்கள் நீளம் என்றால், சமீபத்தைய Drive My Car உம் சராசரியான யப்பானிய மற்றும் மேற்கத்தைய படங்களது நீளத்தை மீறியதே. திரையில் இரண்டு மணி 59 நிமிடங்கள் ஓடுகிறது. தனது திரைப்படங்களில் நீட்சியை வேண்டுமென்றே வாழ்வின் இயல்புக்கு சற்றேனும் பக்கத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குநர் தெரிவுசெய்வதாக குறிப்பிடுவது பொதுவாகவே அவரது படங்கள் தொடர்பாக பிரத்தியேக சுவாரசியத்தினை ஏற்படுத்துகிறது. 50களில் இருக்கிற தம்பதிகள். கணவர் – ஒரு மேடைஇயக்குநர், துணைவி – ஒரு தொ.காட்சி திரைக்கதையாசிரியர், துணைவரின் பிற ஆண் தொடர்புகள், வருடங்களின் முன் இறந்த அவர்களது சிறுவயது மகள் – இப் பின்னணியில் இயங்கும் கதை ஒரு திடீர் மரணத்தால் கதை மாந்தருடன் சேர்த்துஎம்மையும் நடுவில் விட்டுவிடுகிறது. 14


எந்தவொரு மனித நடத்தைகளும் காரணமற்று நிகழ்பவை அல்ல. தமது மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணைத் தேடுபவர்கள், அது தொடர்பில் குற்றஉணர்வற்று – manipulation ஊடான சுரண்டலை இலகுவாக செய்து – திரிபவர்கள் இந்த ஆண்மையசமூகத்தில் தமக்கிருக்கிற வழிகளை வாய்ப்பாக பயன்படுத்த முடியும். வீட்டில் வேலை செய்யவும் வாரிசுகளைத்தரவும் ஒருவரை உருவாக்கிவிட்டு தமது விருப்பங்களை இன்னொருபுறம் செய்வது தொடர்பில் குற்றவுணர்வற்றுத் திரியவும் அவர்களால் முடியும். ஏற்கனவே இருக்கிற சமூக கட்டமைப்பு அவர்களைப் பிழை கூறுவதில்லை; அது வாழ்வின் ஒரு பகுதி, வழமை நியதியென கடந்துசெல்லப்படும். ஆண்களுடைய திருமணத்துக்கு வெளியிலான உறவுகள் ஆணாதிக்க கட்டமைப்பில் கண்டுகொள்ளப்படாதவையே தவிர, இத்தகைய உறவுகள் ஆண்-பெண் சகல பாலாராலும் காலங்காலமாக பேணப்படுகின்றவையே. இவை எக்காலத்துக்கும் புதியதல்ல. மாறாக இன்னொருவரை வருத்தவேண்டுமென்றோ வேட்டைமனநிலையோ கொண்டிராத, எண்ணமற்றவர்கள் அதை செய்ய நேர்வதும், அவற்றுக்கான உளவியலும், அதை எதிர்கொள்கிற துணையின் எதிர்கொள்ள விரும்பாமையும் திரையில் காட்டப்படுகிறது. ‘உன்னோடு ஒன்று கதைக்க வேண்டும்’ என்றாலே அவர் ஓடி ஒளிய விரும்புகிறவராக, அதை அறிந்தும் அறியாதவராக துணை ஏன் இருக்க வேண்டியிருந்தது. விருப்பமில்லை என்றால் ஏன் பிரிய முடியவில்லை? துணை இன்னொருவருடன் பாலியல் உறவு கொள்வதால் இவர் பேரிலான நேசம் இல்லையென்பதா? தனது துணை விபத்துக்குள்ளாகிவிட்டார் என்றதும் பதட்டத்துடன் ஓடி வருகிற துணையைப் பார்க்கையில் அவர் தனது கணவரிடத்தில் நேசமோ விருப்பமோ இல்லாதவராகவும் இல்லை. உண்மையில் பாலுறவு மனிதர்களுடைய இதர பிரச்சினைகளிலிருந்து விடுபட்ட -எதனுடனும் சம்பந்தப்படாத – தனி செயற்பாடாக இருக்கிற ஒன்று அல்ல. அன்றாடத்தின் சலசலப்புகள்/சலசலப்பின்மைகள் குறித்த அலைபாய்தல்கள் பாலியல் உறவுகளிலும் பாதிப்பை செலுத்துகின்றன. ஆறாத்துயரத்தின் மனத்தாக்கத்தின் எதிரொலிகள் எங்கும்போலவே பாலியல் உறவுகளிலும் இரண்டற கலந்தேயுள்ளன.


துயரத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? ஒரு சில காட்சிகளிலையே காட்டப்பட்ட சிறு மகளின் மரணம் அவர்களது வாழ்வின் திசையை தீர்மானித்த இன்னொரு புள்ளியாக ஒரு புறத்தில் நிற்கிறது. மறுபுறம், படத்தில் வருகிற முன்பு நடனக்கலைஞராகவிருந்த ஒரு பெண் பாத்திரம், வாய்பேசவியலாதவரான அப் பெண் நடிகைக்கு நிகழ்ந்த கருச்சிதைவு, அவர் நடனமாடுவதையே நிறுத்திவிடுகிறது. யுகந்த் (Yugant, 1995) என்கிற பெங்காலித் திரைப்படத்தில் அவரது விருப்பமின்றி மனைவி கருக்கலைப்பு செய்துகொண்டார் என அறிந்த பிறகு ஒருபோது காதல் பறவைகளான அவர்களால், அவர்களிடையே பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு இழப்பானது வெறுமையை ஏதோ ஒரு வழியில் கடத்தி விடுகிறது. அவ்வெறுமையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்கிறார்கள், அதை நிரப்ப முனைகிறார்கள். அது பாலியல் உறவுகளில் மாத்திரம் எதிரொலிக்காது என்பதற்கு காரணங்கள் கிடையாது. கணவரைப் பொறுத்தவரையில் தனது துணைவியின் நடத்தை அவரைப் பாதித்தாலும் அதை அவருடன் கதைத்தால் தமது உறவில் அது விரிசலை ஏற்படுத்தும் – அல்லது தமக்குள் இப்போது பகிர்கிற உறவில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தும் – இன்னும் விபரீதமாக அவர்கள் பிரியவேண்டிய நிலைகூட வந்துவிடும், என்பதால் பயந்து அவர் அதைத் தவிர்க்கிற ஒருவராக இருக்கிறார். இதைப்பேசுவதால் – இப்போது இருக்கிற வடிவத்திலையே அதை வைத்திருக்க விரும்புகிற மனம் – அதை இழந்துவிடலாம் என அஞ்சுகிறது. துணை ஒரு இளம் நடிகனை அறிமுகப்படுத்துகிறபோது சம்பிரதாயமாக ஒப்புக்குத் தலையசைத்துவிட்டு ‘சரி சரி நான் உடுப்பு மாற்றவேணும்’ என்றுவிட்டு கதவு மூடியதும் துணியைக் கதிரையில் சற்று கோபமாக எறிவதும், (மனைவிக்கும் அந்த இளம்நடிகனுக்குமான உறவு காட்டப்படுவதற்கு முன்னமே) அவர் ஏற்கனவே அதனை அறிந்துள்ளார் என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது. 16


செக்கோவின் நாடகத்தின் மையக்கருவே இந்த வீணாய்ப்போன வாழ்வு தான். அதன் கதாபாத்திரங்களின் மைய சிக்கலே சலிப்புமிக்க, புத்துணர்ச்சியைத் தாராத, திருப்தியற்ற அவர்களது வாழ்வுதான். அது படத்தின் மையக்கருவுக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருந்துகின்ற ஒன்றே. இப்படியான கதாபாத்திரங்கள் எங்கும் புதியதல்லர். தம் திருப்தியற்ற வாழ்வு தொடர்பான விசனங்களுடன் திரியாத மனிதர்கள் யார்?


= நாடகம் = நாடக இயக்குநரான கணவர், செக்கோவின் ‘அங்கிள் வன்யா’ நாடகத்தையே தொடர்ந்து மேடையேற்றியும், அதன் மையப்பாத்திரமான அங்கிள் வன்யாவாய் நடித்தும் வருகிறார். அந் நாடகத்தில், அங்கிள் வன்யாவினது இறந்த மூத்த சகோதரியின் கணவர், ஒரு பேராசிரியர், இப்போது ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஊருக்கு திரும்பியிருப்பார். அவரது சொத்துக்களை ஊரில் பராமரித்துக்கொண்டிருக்கிற 47 வயதான அங்கிள் வன்யா, அவரது அக்காவின் மகள் சொன்யா அங்கிருக்கிற நடுத்தரவயது வைத்தியர் இப்பாத்திரங்கள் திரைப்படத்தில் வருகிற hero himself, driver girl, இளநடிகன் இவர்களை ஒத்தே இருக்கிறார்கள். ஒருவகையில் பழிவாங்குமுகமாகவே 40களில் இருக்கின்ற ஒருவரது பாத்திரத்தை 20களில் இருக்கிற இளநடிகனிடம் அவர் கொடுக்கிறார். அத்தாரின் சொத்துக்களைப் பராமரித்துவருகிற வன்யாவும் வைத்தியரும் அவரின் புதிய மனைவியில் காதல்வசப்படுகிறார்கள். நாடகத்தில் அக்காவின் மகள் கேட்கும் “அவரில் நீ பொறாமையுறுகிறாயா” போன்ற வசனங்கள் எப்போதும் பலருடன் உறவுகளை வைத்திருக்கிறவர் மீதான பொதுவான உணர்வாகவும் (திரைப்படத்தில் மையப்பாத்திரமான கணவருக்கு மனைவியின் இளம்நடிகன் தொடர்பான உணர்வா எனவும் கேள்வி) எழுகிறது. இங்கே மையப்பாத்திரம் “இந்த நாடகம் சிக்கலானது. அதன் சொற்கள் (text) உண்மையான உன்னை எப்படியாவது வெளியில் கொண்டுவந்துவிடும், ஆபத்தானது. அதனால் இப்போது என்னால் அதை நடிப்பது சிரமமாகிறது” என்று இளம்நடிகனுக்கு கூறுவார். அவர் உண்மையில் பொறாமையுற்றாரா என்பதைவிட அவர் அடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மனைவியின் இழப்புத் தொடர்பான துயரம், ஏக்கம், துரோகங்கள் தொடர்பான (இல்லாதவரிடம் காட்டமுடியாத) கோபம் இவையே அவரை உறுத்துகின்றன. எல்லாவற்றையும்விட திடுப்பென நடந்துவிட்ட நிகழ்ச்சிகளுள் எதை முதன்மைப்படுத்தித் தன்னை ஆற்றவதென அறியாத இறுக்கத்தில் உழல்கிறார். அவர் தனது இயல்புகள் வெடித்து ஒருநாள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் தனது ‘உண்மையான’ உணர்ச்சிகள் மேடையில் வெளிப்பட்டு விடுமோ என அஞ்சுகிறார். அதனாலும்தான் தனது பாத்திரத்தை இளநடிகனிடம் தருகிறார். 18


நாடகத்தில் அக்காவின் கணவர் ஊரிலுள்ள சொத்துக்களை விற்றுவிட முடிவுசெய்கிறபோது முரண்பாடு வெடிக்கிறது. அவரது முழு இளமையையும் அங்கிள் வன்யா இருந்து, அக்காவின் (மகளுக்கு போகவேண்டிய) சொத்துக்களைப் பராமரிப்பவராக தனது காலத்தைச் செலவளித்திருந்திருக்கிறார். அக்காவிற்கு சீதனமாய் கொடுத்த அவ்வீட்டின்பேரில் எஞ்சியிருந்த கடனை அடைக்கவும் ஒரு மாட்டைப் போல உழைத்திருக்கிறார். இவற்றை விடுத்து, அவர், தன்னில் கவனம் செலுத்தியிருந்தால் அவர் சேபன்ஹவர் (Schopenhauer) போன்ற இன்னொரு தத்துவவியலாளராகவோ தாஸ்தாவாஸ்க்கிஆகவோ கூட ஆகியிருக்கலாம். இப்படி தன் ‘இளமையை இழந்தேனே காலத்தை போக்கினேனே’ என அவர் தனது தாயிடம் கூறி அழுகிறார். செக்கோவின் நாடகத்தின் மையக்கருவே இந்த வீணாய்ப்போன வாழ்வு தான் (wasted life). அதன் கதாபாத்திரங்களின் மைய சிக்கலே சலிப்புமிக்க, புத்துணர்ச்சியைத் தாராத, திருப்தியற்ற அவர்களது வாழ்வுதான். அது படத்தின் மையக்கருவுக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருந்துகின்ற ஒன்றே. இப்படியான கதாபாத்திரங்கள் எங்கும் புதியதல்லர். தம் திருப்தியற்ற வாழ்வு தொடர்பான விசனங்களுடன் திரியாத மனிதர்கள் யார்? போரில் தம் இளமையை இழந்தவர்கள், குடிபோதையில், மத்திய வயதுகளில் துணைகளிடமிருந்து பிரிந்துவிட்டு பிள்ளைகளிடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டவர்கள், நாட்டுக்காக போரிட்டு கைவிடப்பட்டவர்கள்… இப்படியான மனிதர்கள் எந்நிலப்பரப்புக்கும் பண்பாட்டுக்கும் புதியவர்கள் அல்லர். “இதுதான் வாழ்க்கை” என கட்டமைக்கப்பட்ட அமைப்புள்ளிருந்து வெளியில் விழுந்தவர்களை உள்வாங்க ‘மாற்று’ வேறொன்றும் இல்லாதபோது தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்கிறபோது அவர்களது வாழ்வு ஒரு பெரும் தோல்வியாக முன்நிற்கின்றது; இல்லாவிடிலும் மற்றவர்களால் குறிப்புணர்த்தப்படுகிறது. பற்ற ஒன்றுமில்லாதபோது நம்பிக்கை இழப்பும் வாழ்தல் தொடர்பான விருப்பங்கள் வீழ்ச்சியடைதலும் இயல்பே. அத்துடன் இங்கு இந்த நாடகத்தின் தலைப்பே “அங்கிள் வன்யா” – அதாவது, திரைப்படத்தினது மையப்பாத்திரத்தின் தற்சமய நிலமை போலவே, அவர் யாரதும் நண்பனோ கணவனோ தகப்பனோ கிடையாது. அவரது வாழ்வின் மையப்புள்ளியாக இருப்பதும் – அவர் காலம் செலவளித்ததும் – அங்கிள் என்கிற பாத்திரமே. அவருக்கு வேறொரு ‘சொல்லப்படுகிற’ முக்கியத்துவம் வாழ்வில் இல்லை.


ஒருவகையில் எல்லோருக்குள்ளும் இருக்கும் இந்த வாழ்வு விழுங்கிவிட்ட அவர்களது இயலுமைகளின் துயரத்தையும் ஏதோன்றாய் ஆகியிருக்கவேண்டியவர் வேறொன்றாய் ஆகிமுடிதலின் துயரத்தையும் அது உள்ளடக்கியிருக்கிறது. செக்கோவ் இந்நாடகத்துக்கு சில வருடங்களுக்கு முன் எழுதிய இதே நாடகத்தில் (The Wood Demon) அங்கிள் வன்யா அத்தாரை கொலை செய்ய முயன்று தோற்று இறுதியில் தற்கொலை செய்துகொண்டுவிடுவார். இந் நாடகத்திலும் அவர் சுட முயலுவார் ஆனால் குறி தவறிவிடும். “என்னால் இதைக்கூட சரியாய் செய்ய முடியவில்லையே” என ஆற்றாமையிலும் சுயபச்சாதாபத்திலும் தற்கொலை செய்ய வன்யாவும் முயல்வார் ஆனால் அவருடன் அக்காவின் மகளும் வைத்திய நண்பரும் கெஞ்சி அதனைக் கைவிடுவதாக – அவர்களின் ஆறுதல் வார்த்தைகளால் அவர் ஆற்றப்படுவதாக – மாற்றப்பட்டிருக்கும். நாடகத்தில், அத்தாரும் சமாதானமாகி, சொத்தை விற்பது இல்லை என்று முடிவாகி விடைபெற்றுச் சென்றபின்னம் தனது விசனங்களால் பாரமாகிவிட்ட மனத்தினைப் பெறாமகளுடன் பகிர்கையில் அவள் சொல்வதாக வருகின்ற பகுதி இறப்பிற்குப்பிறகான மனஅமைதி குறித்த வாக்குறுதிகளைக் கொண்டது. நம்பிக்கைகள் முறிந்து உடைந்திருக்கும் ஒருவருக்கு அது -அக்காலத்தைய மத நம்பிக்கைகளாற்பட்ட- ஒரு பெரும் ஆற்றுப்படுத்தலே. அந்தவகையில், அக்காவின் மகளுடனான இறுதிக் காட்சியும் நாடகத்தில் அக்காலத்தைய மதநம்பிக்கைகளை பிரதிபலித்திருந்தாலும், மையமாக கூறுவது நாம் இந்த வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என்பதையே. ‘எனது கஸ்ரம் உனதை விட மேலானதாக இருக்கலாம். உனது என்னால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம் ஆனால் நாம் இந்த வாழ்க்கையை வாழ்ந்தே ஆக வேண்டும்.’ (“What can we do? We must live our lives”) அது ஒரு நம்பிக்கையைத் தருவதான நோக்கிலையே சமகாலத் திரையில் வந்திருக்கிறது. அதிலும் வாய்பேச முடியாத ஒரு பெண் அக்காவின் மகள் பாத்திரமாக அதைச் சைகைமொழியில் சொல்கிறபோது நாடகம் அதன் நோக்கத்தின் உச்சத்தை அடைகிறது. 20


= உத்திகள் =

இத் திரைப்படத்தின் திரைக்கதையாக முரகாமியின் “Men Without Women” என்கிற தொகுப்பில் வருகிற “Drive my car” – “Scheherazade” – “Kino” ஆகிய கதைகள் முழுமையாகவோ பகுதியாகவோ எடுத்தாளப்பட்டிருக்கின்றன. திரைக்கதையாக்கப்படுவது முரகாமிக்கு இது முதற் தடவையல்ல. பெண்களை அவர்தம் செயல்களை விபரிப்பதில் அவரது எழுத்தில் விமர்சிக்கப்படுகிற ஆணாதிக்ககூறுகள் திரையில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதே முக்கியமானது. பல minor details உடன் நகர்கிற படம், நாடக இயக்குநரின் மனைவி உறவின்போது கூறுகிற பாலியல் கதைகள் ஊடாக ஒருவகையில் இன்னொருவரின் கதை என்கிற பாவனையில் எமது பாலியல் வேட்கைகள் திறக்கப்படுவதையும் ஆராய்கிறது. “உண்மையா இது உன்னுடைய முதற் காதல் பற்றிய கதை இல்லைத்தானே?” என கணவரது கேலிக்கு “இல்லயில்ல” என மனைவி சிரித்தவாறே பதிலளிக்கிறார். பின்பகுதி திரைப்படத்தில் காட்டப்பட்டதுபோல அவரது மனைவி அவரது திரைக்கதைகளை தம் உடலுறவின்போது சொல்வதாகவும் பிறகு அவர் அதை மறந்துவிடுவதாகவும் தான் அதை காலையில் நினைவூட்டுவதாகவும் அதையே அவர் திரைக்கதையில் எழுதுவதாகவும் கணவர் குறிப்பிடுகிற காட்சி வருகிறது. தனக்கும் அவருக்குமிடையேயான சங்கேதமாக, தம்மை இணைக்கிற இடமாக கணவர் உணருகிற இடம் பின்னர் துணைவியின் இளம் காதலனிடமும் அவர் அதே கதைகளைக் சொல்லியிருக்கிறார் என்பது அம்பலமாகுகையில் உடைவதும் காட்டப்படுகிறது.


சவுத் கொரியாவில் எடுக்கப்படவிருந்த இத்திரைப்படம் கொரோனா காரணமாக ஹிரோசீமா நிலப்பரப்பை தேர்வுசெய்ததும் சுவாரசியமானதே. ஹிரோசிமா எமக்குள் மௌனமாகவும் கொந்தளிப்பாகவும் ஒரு குறியீடாய் நகர்வதுடன், நாடகம் பன்மொழி (multilingual production) தயாரிப்பாய் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் -English, Chinese, Tagalog, Japanese, Korean Sign Language- என ஒவ்வொரு மொழிகளைப் பேசினர் என்பதும் அற்புதமான அரங்க அனுபவத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக மனிதர்களாய் எமதெல்லோரதும் இருத்தல் தொடர்பான பிரச்சினை இதுவே, வாழ்வின் பாடுகள் இவையே, என்பதாக அது ஒலித்தது.

- முடிவு ஒரு பார்வையாளராக இத் திரைப்படம் பல இடங்களில் அதற்குரிய உச்சக்காட்சியை ஒரு ‘perfect ending’ ஐ கொண்டிருந்தும் அவற்றை தவறவிட்டதான உணர்விருந்தது. உதாரணமாக அங்கிள் வன்யாவிடம் பெறாமகள் சோன்யா ஆற்றுப்படுத்தும் வார்த்தைகளை சொல்கிற – அரங்கத்தில் – அந்நாடகத்தின் இறுதிக்காட்சி. அல்லது கார்சாரதியான மகள் வயதான பெண்ணுடன் அவர்கள் வந்தடைகிற அவளது பால்யகால வீடிருந்த வெளி. படத்தின் தொய்வான பகுதியாக அவர்கள் இருவரும் அவளது வீடிருந்த என நம்புகின்ற ஓர் இடத்தில் பூக்களை ஒவ்வொவ்வொன்றாய் போடுகின்ற காட்சியே ஒரு பார்வையாளராய் தோன்றியது (எல்லோருக்கும் அதே அனுபவம் ஏற்படும் என்பதல்ல). அக்காட்சி சற்றே நாடகீயத் தன்மை மிகுந்ததெனிலும் – அதன் பிறகான அவர்களது உரையாடலும் வாஞ்சையான அணைப்புடனும் கூட படம் முடிந்திருக்கலாம். ஆனால் அவற்றில் முடிக்காமல் “an imperfect ending’ ஒரு முழுமையற்ற முடிவை விரும்பிக் காட்சிப்படுத்தியதாக இயக்குநர் கூறிவதும் படத்தின் தொனிக்கு பொருந்துகிறது. A perfect ending என்பதில் ஒரு யதார்த்தத்துக்கு எதிரான செயற்கையான ஏற்பாடு இருக்கிறது. எனினும் இத்திரைப்படம் இதனையொத்த திரைக்கதை உத்தியைக் கொண்டிருந்த Salesman (2016/Persian) திரைப்படத்தை நினைவூட்டியதால், அதனைப் போல இறுதிக்காட்சி ஒரு முழுமையான சினிமா அனுபவத்தைத் ஏற்படுத்தும் என்ற எண்ணமிருந்தது. மாறாக இது திடுப்பென இடையில் நின்றுவிட்ட உணர்வையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முழுமையென்பது என்ன? அப்படி ஒன்று இருக்கின்றது தானா?

22


VOITSKI: [To SONIA] Oh, my child, I am miserable; if you only knew how miserable I am! SONIA: What can we do? We must live our lives. [A pause] Yes, we shall live, Uncle Vanya. We shall live through the long procession of days before us, and through the long evenings; we shall patiently bear the trials that fate imposes on us; we shall work for others without rest, both now and when we are old; and when our last hour comes we shall meet it humbly, and there, beyond the grave, we shall say that we have suffered and wept, that our life was bitter, and God will have pity on us. Ah, then dear, dear Uncle, we shall see that bright and beautiful life; we shall rejoice and look back upon our sorrow here; a tender smile—and—we shall rest. I have faith, Uncle, fervent, passionate faith. [SONIA kneels down before her uncle and lays her head on his hands. She speaks in a weary voice] We shall rest. [TELEGIN plays softly on the guitar] We shall rest. We shall hear the angels. We shall see heaven shining like a jewel. We shall see all evil and all our pain sink away in the great compassion that shall enfold the world. Our life will be as peaceful and tender and sweet as caress. I have faith; I have faith. [She wipes away her tears] My poor, poor Uncle Vanya, you are crying! [Weeping] You have never known what happiness was, but wait, Uncle Vanya, wait! We shall rest. [She embraces him] We shall rest. [The WATCHMAN'S rattle is heard in the garden; TELEGIN plays softly; MME. VOITSKAYA writes something on the margin of her pamphlet; MARINA knits her stocking] We shall rest.

. . . The curtain slowly falls.


இந்தக் காலத்திலும் இந்த திரைஅனுவம் மையப்படுத்துவது விசனங்கள் மிகுந்த வாழ்வில் எங்கோ நாம் (மையப்பாத்திரம் கார்சாரதி பெண்ணுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலை வழங்கியதுபோல) எம்மை சிதைக்கிற அனுபவங்களிடமிருந்து closureஐ பெற்று கடக்கவேண்டும் என்பதும், பெண் சாரதி புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியை பெற்றுக்கொண்டதுபோல மனிதர்களிமிருந்து விலகி தனித்திருக்காதிருப்பது என்பதும், தொடர்ந்தும் நகர்ந்துகொண்டிருப்பதும் என்பனவே. அத்துடன் இவற்றைவிட எதுவும் இல்லை இந்த வாழ்வுக்கு என்பதே. “உனது மனைவி உன்னையும் நேசித்தாள். பிறருடனும் உறவுகொண்டாள். இது ரெண்டும் உண்மை. இதை நீ இப்படியே ஏற்றுக்கொள்” என்று ஒரு சிறுபெண் சொல்வதை எமது திரைமொழியில் நாம் எதிர்பார்க்கவே முடியாது. இதற்காக யப்பானிய பண்பாட்டில் பெண்வெறுப்பு, பால்நிலை சார் மதிப்பிடல்கள் இல்லை என்பதல்ல. அவர்களது திரை மற்றும் இலக்கிய பண்பாடு ஒழுக்க மதிப்பிடல்களில் சிக்காது மனித நடத்தைகளை ஆராயக்கூடிய நிலையில் உள்ளதென்பதையே அது காட்டுகிறது. அதனால்தான் பாலியல் அரசியல் உட்பட நுட்பமான மனித சிக்கல்களை அலசும் கதையில் 50 வயதில் இருக்கிற ஒரு பெண் நடிகர் – அவரது desirability மட்டுப்படுத்தப்படாமல் – மைய பாத்திரமாக இருக்கவும் முடியும். தமக்குத் தாயாய் நடிக்கிற பெண்களையேகூட அவர்களிலும் மிகச் சிறுமிகளாக இருப்பதை தேருகிற முதிய கதாநாயகர்களைக் கொண்ட எமது சினிமாவின் போக்குகளோடு இவற்றை ஒப்பிடவே முடியாது. வேண்டுமென்றே படத்தின் நீளத்தையும் இயக்குநர் தெரிவுசெய்வதால் அனேக artsy/art house திரைப்படங்கள் அல்லது கலைப்படங்களைப்போல மிக மெதுவான தனது கதைக்குத் தேவையான நகர்வை திரைப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை எடுத்துக்கொள்கிறது. ஓர் துரிதகதியான கிழமை நாளில் நகரத்தின் தெருக்களில் பின்னால் வேகமான வாகனம் வருகிறபோது முன்னால் போகிற வாகனச்சாரதிக்கு வருகிற பதட்டம்போன்ற ஒன்று இத்தகைய திரைப்படங்களுக்கு கிடையாது. பின்னால் அவசரமாக வருகிற சாரதியைப்போல வருகிற, அவசரமாக செல்லவோ சொல்லவோ விரும்புகிற கதைகள் போலவன்றி அன்றாடத்தை எடுக்கையில் – அவற்றை எடுக்கிற படங்கள் – ஒரு வேகத்தடையைத் தமக்கும் போட்டு பார்வையாளரையும் தமக்குள் நிலைநிறுத்திக்கொள்கின்றன அல்லது கொள்ள முயல்கின்றன. இதை ஒரு றோட் திரைப்படம் (road film) ஆகவும் வகைப்படுத்தியிருந்தாலும் வாழ்வின் முடிவற்ற பயணங்களில் அதன் அர்த்தங்கள் குறித்த -தத்துவார்த்த தேடல்களில் ஈடுபடும் இன்னொரு அனுபவமாகவே எம்முன் விரிகிறது. - பிரதீபாதி

24


TRANSITION STORIES:

== GEMMA STARLIGHT OF THE DARK STAR ==


Coming home to yourself for the first time after many years of living in a false identity is overwhelming. It breaks down everything you once held about yourself and what you thought you understood about the world around you. It is radical self-love that resists a history of cishetero-patriarchal concepts of how we are expected to be. This is also a daunting and overwhelming time, having to relearn who you are and stay confident and safe during much selfdiscovery. The big question is, do you Come Out or Come In? Coming Out is extremely difficult and so is Coming In. Firstly, it is a very western colonial concept to "come out". Specifically, the idea of Coming Out is meant for one to widely and openly announce who they are and the components of their identity, whether that be sexual orientation, gender, or lifestyle. This places the individual in a major spotlight of vulnerability and danger, and due to pressure from cisgender heterosexual folx to obsessively question what our sexual orientation or gender is, it's been normalized to Come Out and be cast out for ridicule. While some folx do have a positive environment to uplift them from the start, the vast majority of trans and queer folx are left without family, friends, community, and support services when Coming Out.

In this way, Coming Out is an unsafe practice that often leads to excessive trauma. Pointing out how impractical Coming Out makes one wonder, how did this get normalized? This way of feeling forced to announce who and how one is comes from a history of white cis-hetero policing. We've normalized that if you don't fit the cisgender heterosexual mold, you need to announce and appeal to the acceptance of cis-het peoples, marking them as our sole validators. This queerphobic system actually intends for cis-het folx to reject and exile us from mainstream society due to how normalized homophobia and transphobia are. In other words, Coming Out is meant to purposefully ostracize trans and queer folx as a method of disempowerment and anti-organizing. This means for folx who do Come Out AND are supported throughout their transition mark a huge "Fuck You" to this kind of indexing and brings an optimism towards more communityoriented ways of Coming Out. For the rest of us, I want to acknowledge the power and underappreciated method of Coming In. Specifically, information about who you are is no one else's business but your own. You may find others to confide in, but what matters is what you know and how you embrace yourself. 26


To feel emancipated in your own body and mind without feeling the need to appeal to other people's concept of what is an acceptable trans and queer person. Where Coming Out involves you specifying the categorical terms of who you are with haste, Coming In is more nuanced and allows one to think about what boundaries they may or may not feel to identify with. Thus, the major difference with Coming In is that you rarely announce openly, often subtlety to others, but usually keep to yourself in what you feel is safety and comfort. You simply acknowledge who you are to yourself slowly and evolve from a quiet but extremely powerful evolution! Coming In is often shamed upon as we have normalized Coming Out as a hazing process, that you are only truly trans and queer if you've been openly shit on by cis-het folx. Thus, folx who Come In are wrongfully dubbed as being cowardly and weak. Coming In is its own safety method, but it also comes with its own forms of trauma and fear as well. Folx who do try to keep to themselves often live in extreme isolation where they have to toggle heavy questions about who they are and what they should do while being unable to openly ask others for guidance and/or seek help from the broader community. Whereas people who Come Out gain the benefit of being more direct with their needs and may gain some support in turn, folx who Come In are left with a massive cloud of doubt and often have even fewer resources and a smaller social circle to survive with. The internet is thankfully a very valid source of guidance. Pockets of trans and queer online communities are an important presence for so many who are questioning who they are.


28


Furthermore, folx who Come Out and are displaced by family and friends is an experience of great loss. However, they are able to come to terms with who is actually willing to support them more easily. When Coming In, things are much more blurred and it becomes more difficult to leave toxic situations. Too often do folx on this path have to endure abusive family and friends. Sometimes, Coming In is the only option as there may be too much fear and violence, and it is an immensely high risk to even try and be open. It is totally valid to stay hidden and possibly never come out in any way as well. So many folx never step outside of themselves with who they really are due to an environment of constant danger. They, too, need to be acknowledged when we think about folx who have transitioned before, are currently transitioning, and those who are "in the closet" or still in the process of questioning in our own communities. I discuss this as a way of giving further forethought into how we each evolve into ourselves. Truthfully, there is a diverse range of how we acknowledge ourselves as trans and queer folx. These are the two most prominent branches, but they only hint at the many ways we gather and feel empowered. Coming Out/In is different for all of us, there is no single right way to express who you are, and one way or another, these paths intersect! Putting this together, coming home to myself as a brown lesbian queer woman of colour was terrible. I came out to my white adoptive family because momma bear said I had to. She would say words of great comfort and acceptance to lure me out, but it was a trick. They were never prepared for my greatness, and too abruptly, I Iost my family and my hometown of Stittsville. My Mexican side of the family was even worse, going on about how foolish this "phase" was, about how I could never have friends or find love "being like this", and how I embarrass Mexicans everywhere. There was this intersection of nationalism burdened upon me when it came to Los Zarates, so I said to myself, "fuck this shit", and moved on.


My university friends stayed at first, but at the very obvious condition that I become a more hidden, "out-ofthe-way" closet queer. As I became more unapologetic with my style and sexuality, I lost more friends because "I'm too embarrassing to be around". Other friends feared me for being lesbian and polyamorous, calling it an excuse to rape and collect women. Brown women were the hardest on me, telling me I'm too improper and slutty, too bold and loud to be a woman while also stripping me of my brownness. This is due to the dominant concept of a brown woman being intertwined with nationhood, duty, and ideal womanhood in the form of being family property and an embodiment of cisgender heterosexual men's desires. Since they can easily tell that I had no family (trans and queer folx rarely do), no visible social capital, that I'm into queer women only (I was very open on this), and display my brownness through unconventional and unique forms of my self-expression, I didn't fit their cis-het brown woman mold. Until the day I die, my brown womanhood will always be denied. Feminist friends were no different nor were other advocates. It's vital, my dear readers, to know that just because one knows or studies empathy, that they may very ironically dispense that conditionally and punitively. The people who did help me in my early transition were not family or feminist friends, academics, or community workers. It was impoverished queer parents and janitors, it was sex workers and displaced queer black and brown youth who helped me. I will never forget Kara, the young black trans woman who got me out of a brutal beating from strangers. She saved my fucking life and I couldn't come back to thank her. It's too often that the people we least expect are the unsung heroes of our lives. How fuck'n true. 30


In whatever pathways you chose, listen to the depths of your being, and when there is safety and comfort, flourish endlessly.

"I believe in you!"


I was homeless for a long stretch of time after the passing of my first real love. Feeling the impending doom of violence at each corner, I turned to hard chemical drugs to cope. A few beloved people, who would eventually be my future partners, did try to intervene, but because of the heavy trauma and serious drug habit, I refused to go with them. I was constantly raped and kicked around. I was an inhuman punching bag for other people to vent out their own sense of displacement. I couldn't escape it even if I had tried. I couldn't explain it even if I needed to. Looking into the eyes of my loved ones and telling them that I'm rape meat for the streets is too much. I wanted to fuck'n die. Many trans folx when facing violence have difficulty reaching out and accepting help. It's sadly very normal to feel like we are a burden since there's very little we can do and go where transphobia isn't lurking. Taking leaps of faith feels like falling into a death trap, so for better or worse, we often stay in our situations. For me, I still constantly feel like I'm a burden to others. Even when there is constant love and validation, I cast shadows of doubt and run away. I get scared so easily, even though to many, I come off as confident. I eventually got so used to being homeless through drug use, that time flew by and things could be more easily forgotten. At some point, I got beaten so terribly that I got sent to the hospital. My face was so fucked up by the punches that I couldn't see out of either of my eyes due to how blackened and swollen they've become. It was all such a blur. Then, I was in rehab for a while, to be sent to a psych ward after. I was heavily medicated because I was constantly breaking down and trying to kill myself. Eventually, I found a home in the mental health facility that I currently live at. I will for the rest of my life suffer from high forms of mental illness. I need to really emphasize that for most trans and queer folx, much of my own story is theirs as well. Trans and queer folx face disproportionately high rates of suicide, addiction, and homelessness. We are loved by so very few that we turn to a dark void to fill our empty hearts. Anything seems like something when desperation is all that remains. Was that a happy story? Because that's where it ends. I wish with all my heart that I could say I'm living happily with my partners and daughter, that I'm strong enough to confidently stand with my Tamil friends, and that I'm living independently to reach out to my dreams. No, my dear readers... For trans and queer folx, a legacy of trauma that stalks our every chance for happiness is all there is. Some do make it, most don't. And it all begins the moment we decide to come home to ourselves and transition. Ya know what? It was all worth it. I am me, finally free. 32



For my closing thoughts, I apologize for not bringing to light the more emancipating nuances of transitioning and Coming Out/In. I think the worst advice to trans and queer youth as a young adult who is trans and queer is to butter up and smother the truths of being who we are with false comforts and excessive optimisms. It is a delicate balancing act, but being realistic, forward, and a source of relatability to trans and queer youth is what is life-saving. In the case of my article, I got into darker detail because it is healing for me. It is exactly why I write, to release the hurt of my heart and share my stories in the hopes of giving unfiltered guidance. Furthermore, there is still much in my own narrative to be happy about. I still struggle with knowing what friendship is, but some amazing, powerful, thought-provoking Tamil women invited me to join their community project. I never knew I could love writing so much. I also still get to see my loving partners and kid, although for brief moments of each month. Through my partners, I still embrace my sexual appetite without restraint. This is really important to me as a way of accepting the sexual violence of the past and moving on. I’ve also found a safe haven through playing musical instruments and visual art. It brings to life my big imagination, especially as a cosplayer who focuses on her own OC fashions related to JRPG video games. It’s important to still grasp your dreams, even when toggling your trauma and healing. I’m really out there with what I imagine myself as through my fashions and arts. I dream vividly about being a jester knight who wields a miraculous weapon, the Keyblade. I’m a part of an underground QTBIPOC resistance group that fights weapons manufacturers and fascist organizations. As my adventures unfold, we visit amazing destinations, I gain new abilities, meet new friends of all kinds, and battle unique entities. Silly, right? Bahahaha! And yet, it’s where I find peace to take my broken mind away from this tortured world. In whatever pathways you chose, listen to the depths of your being, and when there is safety and comfort, flourish endlessly. I believe in you!

34


ஜெமாவின் அனுபவக் குறிப்பு

- தமிழ் அறிமுகம்

பாலியல் சிறுபான்மையினராக இருப்பவர் ஒருவர் தனது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தி வெளியில் வருதல் வெளிப்படையாக வாழுதல் என்பது எதிர்ப்பையன்றி எந்தவிதமான ஆதரவையும் வழங்காத எமது சமூக கட்டமைப்பில் பெரும் வீரதீரம் மிக்க செயலாக இருக்கிறது பிறப்பால் ஆண் அல்லது பெண் என்கிற இரண்டு தேர்வுகளுக்குள் மட்டும் மனிதர்களை வாழ நிர்ப்பந்திக்கிற சமூகத்தில் அவர்கள் தமதாய் தாம் உணரும் பாலினமாய் அல்லது இன்னதென்ற பாலின அடையாளங்களைப் பேணாத ஒருவராய் வாழ விரும்புவதும் வெளிப்படையாய் அவ்வாறே வாழுவதும் பொதுப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை தேவாலாய விழுமியங்களிடமிருந்து அரசியலை விலக்கி இருக்காத மேற்கத்தைய சூழலிலும் இந்நிலமை தொடர்பில் பெரிதும் வேறுபாடில்லை இலங்கை போன்ற நாடுகளில் போல அல்லாது பல்வேறு உதவிக் குழுக்கள் அமைப்புகள் இங்கு இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் அவை யாருக்கு பயன்படுகின்றன என்பதும் முக்கியமானது ஒரு வெள்ளையரல்லாத பொருளாதாரரீதியாக கீழ்நிலையிலுள்ள ஒரு திருநர் திருநங்கையாக நீங்கள் இருப்பின் இந்த ஆதரவுக் குழுக்களது இருப்பை அறிவதும் அவர்களை நாடுவது உதவி பெறுவது என்பனவும் இலகுவானவை அல்ல குடும்பங்களது மத மற்றும் சமூக நம்பிக்கைகள் காரணமாக அவர்களது தேர்வு நிராகரிக்கப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் தற்காலிக வாழ்விடங்களிலும் தெருக்களிலும் தமது அடையாளம் பொருட்டு வன்முறைகளுக்கு உள்ளாகிறார்கள் ஜெமா இந்த தமது பாலின அடையாளங்களை வெளிப்படையாக்கும் பொருட்டு வெளியில் வருதல் குறித்த கதைகளில் ஒருவர் அவ்வாறு வெளியில் வருதலை தெரிவு செய்யாது விடிலும் அது வீரம் நிறைந்ததே பாதுகாப்பற்ற சமூகத்தில் ஒருவர் தனக்கு தனது பாதுகாப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தலும் விளங்கிக்கொள்ளவும் பாராட்டவும் பட வேண்டியதே என்பதையே அழுத்தமாக பகிர்கிறார் அதற்கு உதாரணமாக தான் அப்படி வெளியில் வந்தபோது தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டதையும் தெருவில் வாழ நேர்ந்ததையும் வழித்தடங்கள் மாறி தன்னை அழிக்கும் பழக்கங்களுக்கு அடிமையானதையும் பகிர்கிறார் அனேகமாக ஒருவர் தனதடையாளங்களை வெளிப்படுத்தி தான் தானாக வாழ முற்படும் அனுபவங்களே கொண்டாடப்படுகையில் இது கோழைத்தனமானதாகப் படலாம் ஆனால் உயிர் பிழைத்திருத்தல் எதைவிடவும் மேலானது ஜெமாவின் கட்டுரையின் பிரதான அம்சமே ஒடுக்கப்படுகிற ஒருவர் தனக்குத் தோதான எத்தகைய முடிவை எடுத்தாலும் அது துணிகரமானது என்பதை அது கூறுவதுதான் இந்த பாகுபாடுகள் நிறைந்த உலகில் நாங்கள் அனைவரும் பாகுபாடுகளை நீக்கி அனைவரும் பாதுகாப்பாய் உணர்வதற்கே போராட வேண்டும் எமது சமகாலம் இன்னும் அவ்வாறு அமையாதபோது வெளியில் வருதல் குறித்த அனுபவங்கள் அப்படியொரு முடிவை எடுக்க முடியாதவர்களுக்கு அழுத்தம்தருவதாக இருக்கக்கூடாது தேர்வுகள் இருக்க வேண்டும் அதே சமயம் இன்னொருவருக்கு அத் தேர்வுகள் இல்லாதிருக்கிறது என்கிற விழிப்புணர்வும் தேவை மனிதர்கள் வெளிப்படையாய் வாழ முடியாதிருக்கிற இச் சமூகம் குறித்தே வருந்த வேண்டியிருக்கிறதே தவிர தமது வாழ்க்கை தொடர்பான பாலியல் சிறுபான்மையினரில் சகல முடிவுகளையும் நாம் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்

-

(Coming

Out)

-

.

(gender fluid)

.

.

,

,

.

,

-

,

.

, (shelter)

-

.

(

)“

” -

,

.

.

.

.

.

.

.

.

.

,


Nawal El Saadawi 27 October 1931 – 21 March 2021

36


நவால் எல் சாதாவி:

பொ ய் க ளை ப் ப ர ப் பு கி ன் ற உ ல க த் தி ல் உ ண் மை க ளை எ ழு து த ல்

ஓராண்டு நினைவு

Writing about Truths in the World that Lies


இலட்சியப்

போராட்டங்களில் ஈடுபட்ட பெருவாரியானவர்களது மரணக் குறிப்புகள் கட்டாயம் அவர்தம் இளமைக்காலத்தின் சமூக பங்களிப்புகளையே மைய்யங் கொண்டிருக்கும். மூத்த தலைமுறையினர் ‘எங்கட காலத்தில’ என தாம் இளைஞர்களாய் இருந்த ஒரு காலத்தின் கதைகளையே கூறிக் கேட்கலாம். இதன்படிக்கு, இன்று அவர்களுடயதாய் அல்லாது போயிற்றா அல்லது அவர்களே தங்களை இன்றைக்கான வேலைத்திட்டங்களிலிருந்து விலக்கி தமக்குத் தாமே பதிவிஓய்வு பெற்றுக்கொண்டனரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் வேறொரு காலத்தின் நாயகர்களாய் வலம் வருவார்கள். சர்வதேச கவனிப்பைப் பெற்ற எகிப்தின் பன்முக ஆளுமையான நவால் எல் சாதாவியைப்பொறுத்தவரை அவர் வாழ்ந்த காலம் முழுவதும் அவரதாகவே இருந்தது. அவர் தனது 20களில் எவ்வாறு சமூக மாற்றத்திற்காக உழைத்தாரோ அதேபோல 80களிலும் தனதுழைப்பை சமூக மாற்றத்திற்காகக் கொடுத்துச் சென்றவர். 1931இல் எகிப்தில் Kafr Tahla எனும் சிறுகிராமத்தில் 9 பிள்ளைகளில் இரண்டாவதாக பிறந்த சாதாவி ஓர் எழுத்தாளர்; பெண்ணிய செயற்பாட்டாளர்; சமூகநீதிக்கான போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளர். நாவல்கள், சுயசரிதங்கள், நாடகங்கள், அபுனைவுகள், சிறுகதைகள் என அறுபதுக்கும் மேற்பட்ட இவரது நூல்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. உலகின் பல்வேறு பல்கலைக்கழங்களில் கௌரவ கலாநிதிப்பட்டங்கள், North-South Prize (2004, Council of Europe) Inana International Prize (2005, Belgium), Sean MacBride Peace Prize (2010, International Peace Bureau) போன்ற சர்வதேச விருதுகள், பிரதமபேச்சாளராக பல நாடுகளிலிருந்தும் அழைப்புகள் - இவை அவரது இறுதிவருடங்கள் வரை தொடர்ந்தவை. அரபு உலகில் நவீன பெண்ணிய இயக்கத்தை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்; ஐரோப்பிய மைய சிந்தனையில் இருந்து “எகிப்தின் சிமோன் த பொவ்வார்” எனவும் அழைக்கப்பட்டார். ஒரு மருத்துவரும் மனநலநிபுணருமான இவர், தொடர்ந்தும் பல பேசாப்பொருள்களை தனது புனைவுகளில் உரையாடல்களில் உரைகளில் பேசியவர். கொலைக்குற்றத்தின்பேரில் மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் பாலியல் தொழிலாளி ஒருவரது கதையைக் கூறுகிற “சூனியப்புள்ளியில் பெண்” என்கிற பிரபலமான நாவல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (தமிழில்: லதா ராமகிருஷ்ணன், உன்னதம் வெளியீடு, 2008). இந் நாவலில் ஒரு பாலியல் தொழிலாளியின் கதையைக் கூறுகிற அவர் அதூடாக எகிப்தில் (எங்குமே) எளிதில் பேசப்படாத பாலியல் தொழில் தொடர்பான விவாதங்களையும் எழுப்பினார். அவரது சக்திவாய்ந்த எழுத்து நசீர் காலத்துக்குப் பின் வந்த இரண்டு சர்வாதிகாரிகளையும் பயமின்றி விமர்சித்தது. சடாற்றினால் (Muhamed anwar el sadat (1970 1981)) ஆரம்பித்து வைக்கப்பட்ட நியோ லிபரல் கொள்கைகள், எகிப்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு தளங்களில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தின என்பதை அவர் தொடர்ந்தும் விமர்சித்தும் எதிர்த்தும் எழுதினார். அடுத்து வந்த நீண்ட சர்வாதிகார ஆட்சியான முபாரக்கின் (Honi mubarak (1981 - 2011) காலத்திலும் அவர் தீவிர விமர்சகராகவும் எதிர்ப்பாளராகவும் தனது வாழ்வை சமரமற்று வாழ்ந்தார். அத்துடன், பெருவாரியான ஆபிரிக்க மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நடைமுறையிலுள்ள சிறுவயது பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு (Female genital mutilation (FGM)), பாகுபாடான குடும்பச் சட்டங்கள் போன்றவை பிரதானமாக அவரால் பேசப்பட்டன. மூன்றாம் உலகத்தைச்சேர்ந்த பெண்கள் FGM உள்ளிட்ட தாம் எதிர்கொள் ஒடுக்குமுறைகளைப் பேசுகிறபோது அல்லது ஒரு கறுப்பின பெண் தமது சமூகத்திலுள்ள பெண் ஒடுக்குமுறையைப் பேசுகிறபோது மேற்குலகால் அது உள்வாங்கப்பட்டு “உங்களை பீடித்திருக்கிற காட்டுமிராண்டு கலாச்சாரத்திலிருந்து உங்களை நாம் விடுவிக்க வருகிறோம்” என திருவாய் மலர்வதற்கும் - குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கிறவர்களுக்கு - வாகாகப் போய்விடும் வாய்ப்பு எப்போதும் இருந்துகொண்டேயிருப்பதால் அதற்கான பதிலையும் சதாவி பல சந்தர்ப்பங்களில் தந்திருக்கிறார். மற்றவர்கள் பாவித்துவிடுவார்கள் என்றபடியால் எங்களுடைய தவறுகளை பொதுவெளியில் பேசக் கூடாது போன்ற வாதம், ஈழ அரசியலிலும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறபோது தொடர்ந்தும் சொல்லப்பட்டுவந்த ஒன்றே. மற்றவர்களுக்குப் பயந்து விமர்சனங்களை வைக்காதுபோனால் நாம் ஒடுக்குமுறைகளை, குற்றங்களை, தவறுகளை இழைப்பவர்களுக்கு பலம் கொடுத்தவர்களாய் ஆவோம் என்பதை வசதியாக மறந்துவிடுவதும் இப்போக்கினை வரிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அதற்கான பதிலாக சதாவி “(இவற்றை பேசாதிருத்தல் முடியாது). ஒடுக்குமுறைகளின் பாதிப்புகளை உணர்ந்த பெண்ணியர்கள் அதன் ஆபத்துகனைப் பொறுத்தவரை (கிழக்கோ மேற்கோ) நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதையும், பெண்கள் மீதான ஒடுக்குமுறை உலகளாவியது என்பதையும் உணர்வார்கள்” என்று கூறினார். 38


சதாவியை ஒத்த பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்ட முக்காடு அணிதல் போன்ற விடயங்களை இன்று - எங்கும் பரவும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்புக்கு அது துணை போகாமல் இருக்க வேண்டுமானால் ஒற்றைப்படையாக அன்றி அவற்றின் பின்னணியோடுதான் பார்க்கவும் விவாதிக்கவும் முடியும். இன்று முஸ்லிம் சனத்தொகையினர் குடிபெயர்ந்தள்ள நாடுகளில் முக்காடு அணிதல் என்பது எதிர்ப்பு சின்னமாகவும் வேறொரு வடிவம் எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவில் கியுபெக் மாநிலத்தில் போடப்பட்ட அதற்கான தடை போன்ற நிகழ்வுகளின்மீதான கவனக்குவிப்பின்றி அவற்றுக்கு வெளியில் இருந்து அது தொடர்பாக நாம் பேச முடியாது. முஸ்லிம் மக்கள் குடிபெயர்ந்துள்ள இடங்களிலே அரசின் இத்தடைச்செயற்பாடுகள் எதிர்ப்புக்குள்ளாகிறபோது, அவர்கள் தலைமுறைகளாய் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவருகிற அவர்களதுமான இந்தியா போன்ற நாடுகளிலோ தீவிரமாக முஸ்லிம்களின் மத கலாச்சார அடையாளங்கள் தாக்கப்படுவதை தடைசெய்யப்படுவதை காண்கிறோம். ஒரு நாட்டில் காலம்காலமாக நிலைகொண்டுள்ள இனங்களில் ஒன்றை அவ்வாறு தனிமைப்படுத்துவதும் அந்த நிலத்தைச் சேர்ந்தவரல்லர் என ‘அந்நியராக்குவதும்’ அத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட (ஒடுக்குமுறைகளின் எந்த வடிவத்தையும் எதிர்க்கிற) எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத/கூடாத ஒன்றே. சதாவியின் தலைமுறையினரைப் பொறுத்தவரையில், தனது இனத்தில் ஏனைய இனங்களைப் போலவே - குறிப்பிட்ட ஆடைக் கலாச்சாரத்தை பெண்ணிடம் மட்டும் எதிர்பார்க்கப்பட்டபோது அதை தொடர்ச்சியாக அவர் எதிர்த்து வந்தார். மேற்கத்தைய பெண்ணியத்துக்கோ கீழைத்தேயங்களை விடுதலை செய்ய வருகிற ஏகாதிபத்திய சிந்தனைகளுக்கோ அவர் தனது உண்மையை வளைத்துப் பேச விரும்பவில்லை. அத்துடன் மத அடிப்படைவாதமானது இஸ்லாத்தில் மாத்திரமன்றி சகல மதங்களிலும் பரவலாக உள்ளதுடன் பூதாகரமாய் வளர்ந்துவருகிறது என்பதை அவர் திடமாக நம்பினார். பெண் உடலை மூடச் சொல்வதையும் (மேற்கில்) உற்பத்தியாகும் உடைகளில் பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் ஆடைக்குறைப்பையும் ஒரே நாணயத்தின் (ஒரே மனநிலையின்) இரு பக்கங்களாகவே அவர் கண்டார். ஒரு பெண் கவர்ச்சிகரமான ஆடைகளைப் போடுவதோ முக்காடு போடுவதோ அவரவர் சுதந்திரம். இங்கு பிரச்சினை சுதந்திரம் குறித்த எமது கருத்தாக்கம்தான். ஆண்கள் முக்காடு போடவோ ஆடைக்குறைப்புக்கோ எவராலும் ஊக்குவிக்கப்படுவதில்லை; உடையை வைத்து அவர்களது குணநலன்கள் மதிப்பிடப்படுவதில்லை. இதனால்தான் எங்கு அது ஒடுக்குமுறையாக இருக்கிறதோ அதைப் பேசுவது முக்கியமானதாக இருக்கிறது. “என்னை விடுதலை செய்யமுன் உங்களை முதலில் விடுதலை செய்துகொள்ளுங்கள்! பிரச்சினையே இதுதான், எனக்கு பல – Gloria Steinem, Robin Morgan போன்ற –அமெரிக்க பெண்ணியவாதிகளுடன் இது குறித்து சண்டை வந்திருக்கிறது. நான் அவர்களுடன் இருந்தபோது பலரும் அவர்களது துணைவர்களால் ஒடுக்கப்படுவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அவர்கள் தாங்கள் அவ்வாறு ஒடுக்கப்பட்டவாறு, எங்களை விடுதலை செய்ய வந்தார்கள்!” மேற்கத்தைய ரட்சகர்களை நோக்கி சதாவியோ திடமாக அவர்களது இரட்டை நிலைப்பாட்டின் முரணையே பேசினார். மேலும் அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச ஒருங்கிணைவிற்கே (global and local solidarity—she coined the term “glocal”) அழுத்தம் கொடுத்தார். அவர் குறிப்பிட்டது, மேற்கத்தைய பெண்ணிய செயற்பாட்டாளர்கள் தமது அரசாங்கங்களை எதிர்ப்பதூடாக ஏனைய நாட்டுப் பெண்களின் போராட்டத்தில் இணைய முடியும் என்பது. ஏனெனில் ‘தமது நலன்சார் நிகழ்ச்சிநிரல்களுடன் பிற நாடுகளை ஆக்கிரமிப்பதும் காலானியாக்குவதும் ஊடாக உங்களுடைய அரசாங்கங்கள்தான் எங்கள் வாழ்க்கையில்- தலையிடுகின்றன.’ அத்துடன் அவர் விடுதலை பெற்றுத் தருவது அல்லது ‘உதவுவது’ என்கிற சொற்களை விரும்பவில்லை. “யாரும் யாருக்கும் உதவ முடியாது. எகிப்தில் எங்களுக்கு யாரும் உதவி இருக்க முடியாது - நாங்கள் தனித்தே எமது புரட்சியைச் செய்தோம், நாங்களே எங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தோம். தொண்டு (charity) அடிப்படையிலான உதவிகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் சரிசமமான கருத்து மற்றும் தகவல் பரிமாற்றம் என்பவற்றையே நம்புகிறேன்.”


.

புரட்சியை நான் எதிர்பார்த்தேன் ஆனால் இருபது மில்லியன் மக்கள் தெருவுக்கு வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை எனது சிறுவயது முதலே இது பெருங் கனவாக இருந்தது ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் எகிப்து மக்கள் விழிப்படைந்து காலனித்துவத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழுவார்கள் அதை நான் பார்க்கவேண்டும் சிறுவயது முதற்கொண்டு நான் பல எதிர்ப்பூர்வலங்களில் பங்குபற்றியவள் மருத்துவ கல்லூரியில் படிக்கிறபோது கிங் பாரூக்குக்கு எதிராக பின்னர் பிரிட்டிஷ் காலனியாக்கத்துக்கு எதிராக நசீருக்கு பின்னர் என்னை சிறைக்கு தள்ளிய சடாற்றுக்கும் எதிராக பின்னர் என்னை புகலிடத்துக்குத் தள்ளிய முபாராக்குக்கு எதிராகவும் நின்றிருக்கிறேன் நான் நிறுத்தவே இல்லை அது ஒரு கனவு போல இருந்தது யனவரி எழுச்சி அது கடந்த காலங்களின் சிறு சிறு புரட்சிகள் திரண்டு உருவானதாகும்

.

,

.

,

.

(

2011

.

)

.

:

,

,

.

,

.

.

40


அறிமுகம் சதாவியை உருவாக்கிய பின்னணியைப் பார்த்தோமானால் அவரின் தந்தைவழி பாட்டி வாசிப்பறிவற்றவர், ஆனால் அவர்களது கிராமத்தில் பிரச்சினைகளை மற்றவர்கள் அவரிடத்தில் கொண்டுவருகிற அளவுக்குத் தலைமைத்துவப் பண்புகளை அவர் கொண்டிருந்தார். அவரது தாயார் 16 வயதில் திருமணமானபோதும் தனது அபிலாசைகளை இழக்காதவராக, தனது குறுகிய வட்டத்துக்குள்ளும் தான் நினைப்பதை செய்துகொண்டே இருந்தவராக இருந்திருக்கிறார். அவரது தகப்பனார் தனது நாட்டின் சர்வாதிகாரிகளை எதிர்த்ததோடு, பிரித்தானிய காலனியாக்கத்துக்கெதிராக போராடியவராகவும் இருந்திருக்கிறார். தகப்பனார் அவருக்கு சுயமரியாதையையும் கல்வி கற்றலையும் அனுமதித்தபோதும், சதாவி சிறுவயதிலிருந்தே தனைச் சூழவும் இருந்த ஆண்பெண் பாகுபாடுகளை உணர்ந்ததோடு, அதையிட்டு கோபங்கொண்டவராகவும் இருந்தார். வளர வளர அதற்கெதிரான எதிர்ப்புணர்ச்சியும் அதிகரித்தது. எனினும் பல வகைகளில் தனது துணிச்சலும் எதிர்ப்புக்குணமும் தனது பாட்டி, தகப்பன், தாய் போன்றவர்களிடமிருந்தே வந்தது என்கிறார். பெண்களது பாலியல் உணர்வுகள், தெரிவுகள் தொடர்பில் இன்றுமே உலக சனத்தொகையில் தம்முடன் சரிபாதிக்கு இருக்கிற உயிரியாக அன்றி ‘வியித்திர ஜந்து’வாகவே கணிக்கப்படுகிற (இவை குறித்துப் பேசப்படுகிறபோது பாராட்டியோ தூற்றியோ திரிகின்ற)/ விமர்சிக்கப்படுகிற சூழலில், 1931இல் பிறந்த நவால் மிக எளிதாக 1950களில், அவரது இருபதுகளில் அவை பற்றி துணிச்சலாக எழுதியவராக இருக்கிறார். சுயவரலாற்றுத்தன்மைகள் நிறைந்த “பெண்வைத்தியரின் ஞாபகங்கள்” [1958, Memoirs of a Woman Doctor] என்கிற அவரது முதல் நாவலிலேயே தௌிவாக கல்வியில், திருமணத்தில், தமக்கான துணைத் தேர்வில் பெண்களது உரிமைகள், தேர்வு, மணமுறிவு, மறுமணம் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ஆச்சரியத்துக்கு இடமின்றி அவர் அதன் அசல்பிரதியைப் பிரசுரத்துக்கு அனுப்பியபோது அந்நாவலின் பக்கங்களில் ஓர் இளம்பெண்ணினது பாலுணர்வு குறித்து பேசப்படுகிற பக்கங்கள் தணிக்கைக்குள்ளாகி காணாமல் பொய்விட்டன். தணிக்கைக்குப் பின் எஞ்சிய பகுதிகளுடன் பிரதி பிரசுரமானது. எமக்குக் வாசிக்கக்கிடைக்கிற ஜோய்ஸின் A Portrait of the Artist ஒத்த எண்ணற்ற ஆண்களது வயது வருதல் புனைவுகள் போலன்றி, பெண்களது அனுபவங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. சதாவியினது இப்பிரதியும் ஒரு பெண்ணினுடைய வயதுக்கு வருதல் (coming of age) அனுபவத்தினைக் கொண்ட பிரதி எனலாம். இன்றும் அவரது அந்த நாவலை வாசிக்கிற ஒருவர் அவரது அசாதாரண பயணத்தையும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தனக்கு எவ்வளவு தூரம் உண்மையாக இருந்திருக்கிறார் என்பதையும் கண்டுணர முடியும். தன்வரலாற்று வடிவத்தில் அமைந்திருந்திருக்கிற போதும் அவர்முன் அன்றிருந்த (இன்றுமிருக்கின்ற) அதி சக்திவாய்ந்த விடயங்களான வர்க்கம், பாலினம் சார் சிக்கல்களை நூல் நுட்பமாகத் தொட்டுச் சென்றிருந்தது. எகிப்தில் மட்டுமல்லாது இன்றும் உலகளாவிய பிரச்சினைகளாக இருக்கிற பாலின பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சுருக்கமான சித்தரிப்பை அந்நாவல் கொண்டிருக்கிறது. ஒரு வைத்தியரான கதைசொல்லியின் குறுகியகால திருமணம், அதன் முறிவு, மன ஓட்டங்கள், ஆத்மார்த்தமான துணைக்கான ஏக்கம், தேடல், கண்டடைதல் என கதை பயணிக்கிறது. இறுதியில் விருந்தொன்றில் தற்செயலாகக் கண்டடைந்த துணையுடன் ஒரு வீட்டிற்கு நோயாளியைப் பார்க்க அவர் ஒரு வருகைவைத்தியராக போகிறார். அங்கு நோயால் பீடிக்கப்பட்ட ஒரு வறிய குடும்பத்தவரிடம் நோய் குறித்த நிலவரங்களைக்கூறிய பிற்பாடு, அவர் விடைபெறும்போது நோயால்பீடிக்கப்பட்ட மெலிந்த வறிய கரங்கள் அவரிடம் கட்டணமாய் ஒரு நாணயத்தை நீட்டுகின்றன. அந்தக் கணத்தில் அவர் முதன்முதலாக தன் வாழ்நாளில் தான் எதிர்கொண்ட பாரபட்சங்களை எல்லாம் மீறி அதிர்ந்து வெட்கித்துப்போய் நிற்கிறார். இவ்வளவு நாளும் பணம் வசூலிக்கிறபோது உறுத்தாது, அதுவே யதார்த்தம் என பின்தொடர்ந்துகொண்டிருந்த மனம், அக்கணத்தில் மருத்துவத்தின் பாகுபாட்டை அவரது முகத்தில் அறைகிறது. இன்னொருவரின் பிரசன்னத்தில் அது நிகழ்ந்ததாலோ என்னவோ அவரது நிர்வாணத்தை அவர் தரிசித்தவராய் அக்கணத்தில் ஸ்தம்பித்துபோய் நின்று விடுகிறார்.


இத்தனைகாலமும் இந்த வறிய மனிதர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் ஏன் ஒன்றும் தோன்றாதிருந்தது? ஒரு பெண்ணாகக் கண்ட பாகுபாடுகள் தொடர்பில் விசனமுற்றிருந்த நான் பொதுச்சேவையாக அனைவருக்கும் இலவசமாக இருக்கவேண்டிய மருத்துவம் விற்கப்படுவது தொடர்பில் கேள்வியற்றவளாய், இதோ இவர்கள் வறுமையில் தோய்ந்த ஒளியற்ற கண்களுடன் என்னிடம் இந்த நாணயத்தை நீட்டுகிறபோது இதுகாலும் அதை வேண்டிக்கொண்டு நகர்ந்தவளாய் எப்படி இருந்தேன்? இவ்வாறு அவர் ஞானம்பெறுவதே கதையின் உச்சமாக இருக்கும். பல வகைகளில் சாதாவியின் முதல் குறுநாவலே அவர் வாழப்போகின்ற வாழ்வின் மையப்புள்ளிகளை சுட்டி விட்டது என்றே தோன்றுகிறது. குறுநாவலில் நாயகி எவ்வாறு தனிப்பட்ட ஆத்மார்த்தமான உறவைத் தேடுவதையும் தான் தேடியது அப்படியானதாக அமையாதபோது விலகுவதையும் தனது உரிமை என உணர்ந்தாரோ அதேயளவு ஓர்மம் பொதுவாழ்க்கையிலும் அவருக்கிருந்தது. சடாற் போன்ற அவரது காலத்தின் சர்வாதிகாரிகளுக்கு முன்னால் தைரியமாக பேசக்கூடியவராகவும் பல புரட்சிகர போராட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான அவர், அவரது வாழ்நாளில் எகிப்தின் ஏனைய சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து அதற்காய் சிறை சென்றவராகவும் இருந்தார். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கையில் 80களிலும் தனது திருமணத்தை ரத்துச் செய்ய தயங்காதவராகவும் இருந்தார். ‘அவர் உண்மையற்றவராக இருந்தார். அதனால் அவரை விவாகரத்து செய்கிறேன்’ என 80 வயதுக்குப் பிறகு தமிழில் யாரும் சொன்னால் சிரிப்பார்கள். ‘எங்கட பண்பாடு அப்படியல்ல’ என அடிக்கடி தங்களை சொறிந்துகொள்கிற எமது சமூகத்தின் உயர் புரிதலே ‘சாகப்போகிற வயதில இதெல்லாம் தேவையா” “இவ்வளவு காலம் வாழ்ந்தாச்சு. இனியென்ன இருக்கப்போறது கொஞ்சக் காலம்தானே.. இப்பிடியே இருந்து சாவம்” என்பதாகவே இருக்கும். காதலித்து ஒரு துணையைத் தேருவது என்பது மறுக்கப்பட்டிருக்கிற காலத்தில் வாழ்ந்த ஒருவருக்கு காதலித்தவரை திருமணம் செய்வதற்கும் அவருடன் வாழ்வதற்கும் அக்காலத்தில் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. சதாவியை ஒத்த புரட்சிகர இயக்கங்களில் இருந்தவர்கள் அல்லது புரட்சிகர சிந்தனை முறைமையை வரித்துக்கொண்டவர்களுக்கும் தமக்கான காதல் துணையைத் தாமே தேடிக்கொள்வதும் அவர்களை மணமுடிப்பதும் என்பது பெரிய புரட்சிகர செயற்பாடாக இருந்தது. ஏனெனில் காதலோ சுயாதீனமான துணைத் தேர்வோ குறிப்பாகப் பெண்களுக்கு அன்று அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை (இதொன்றும் நூற்றாண்டுக்கு முந்தைய யதார்த்தமன்று, இன்றும் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களது நிலையும் இதுவே என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.)

காதல் மற்றும் திருமணங்கள் சதாவி மூன்றுமுறை விவாகரத்து செய்துகொண்டவர். சதாவியின் காலத்தில் மட்டுமல்ல இன்றும் இது ஒரு பெண்குறித்து - சமயத்தில் ஆண்கள் குறித்தும் கூடஎங்கும் அசாதாரணமாகவே பார்க்கப்படக்கூடியது. திருமணத்துக்கு வெளியிலான உறவுகள் எக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அவற்றை அவ்வாறே வைத்தவண்ணம், நேர்மையற்று திருமணத்துள் இருப்பது சாதாரண விடயமாகப் பார்க்கப்படும். மாறாக, மறைத்து, இன்னொருவரை ஏமாற்றி வாழ்வதை விரும்பாமல், தமக்கு நேர்மையாக வாழ விரும்புகிறவர்கள் எப்போதும் சமூகத்தின் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவது மிகச் சாதாரணம். சதாவி தனது திருமண உறவுகளைப் பற்றி இவ்வாறு பகிர்கிறார்: “எனது முதல் கணவர் ஒரு சிறந்த மனிதர், மருத்துவக் கல்லூரியில் எனது சக ஊழியர். அவர் அற்புதமான மனிதர், என் மகளின் தந்தை. அவர் ஆங்கிலேயர்களுடன் போரிட சூயஸ் நகருக்குச் சென்றதால், நான் அவரைத் திருமணம் செய்து கொள்வதை என் தந்தை விரும்பவில்லை. ஆனால் பின்னர் [சூயஸுக்குப் பிறகு] கொரில்லா போராளிகள் காட்டிக் கொடுக்கப்பட்டனர், அவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலமைகள் அவரை மனம் உடையச் செய்தன. அவர் போதைக்கு அடிமையானார். நான் அவரை திருமணம் செய்து கொண்டால், அவர் தனது போதைப் பழக்கத்தை நிறுத்தலாம் என்று என்னிடம் கூறப்பட்டது, ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவர் என்னை கொல்ல முயன்றார், அதனால் நான் திருமணத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.” 42


அதற்கடுத்த திருமண முறிவு ஒரு கட்டிறுக்கமான ஆணாதிக்க சிந்தனைகளை உடைய ஒருவருடனும், அதன் பிறகு “எனது மூன்றாவது கணவர் [Sherif Hetata], எனது மகனின் தந்தை, மிகவும் சுதந்திரமான மனிதர், முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மார்க்சிஸ்ட். நான் அவருடன் 43 ஆண்டு காலம் வாழ்ந்தேன். அப்போதெல்லாம் நான் எல்லோரிடமும் சொன்னேன்: பூமியில் உள்ள ஒரே ஒரு ஆண் பெண்ணியவாதி இவர்தான் என்று. பின்னர் நான் அவரையும் விவாகரத்து செய்ய வேண்டி வந்தது. அவர் ஒரு பொய்யர். வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஓ! இந்த ஆணாதிக்க சமூகத்தில் மனிதர்கள் அனைவரும் சிக்கலானவர்கள்தான். அவர் பாலின சமத்துவம் பற்றி புத்தகங்கள் எழுதினார், பின்னர் தனது மனைவிக்கு நேர்மையற்றவராக இருந்தார்.” ஷெரிப் ஹடாடா, A Daughter of Isis (1999), Walking Through Fire (2002), My Life, Part III (2001) போன்ற சதாவியின் தன் வரலாற்று நூல்களின் மொழிபெயர்ப்பாளர், மற்றும் யனவரி 2011 எகிப்து புரட்சி உட்பட பல புரட்சிகர முன்னெடுப்புகளில் சதாவியுடன் ஒன்றாக வலம்வந்தவர். அவர்கள் ‘இலட்சிய தம்பதிகள்’ எனும் பிம்பத்துடன் உறவுநீர்த்துப்போனபின்னும் அத்தகு பாவனைகளுடன் வாழும் பலரைப் போலும் தொடர்ந்தும் வாழ்ந்திருக்கலாம். சதாவி, தனது இளவயதில் எப்படி தனது பிள்ளைகளுக்காக என்று யாருடனும் வாழ - பொருந்தா உறவுகளில் நிலைக்க - நிர்ப்பந்திக்கப்படவில்லையோ, அல்லது அந்த நிர்ப்பந்தங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதுபோலவே தனது இறுதி காலங்களிலும் அவர் தனக்கு உண்மையுள்ளவராக நேர்மையீனத்தில் உடைந்தவற்றை திரும்பிப் பார்க்க விரும்பாதவராகவே இருந்திருக்கிறார். இதனால்தான் மேற்கத்தைய நேர்காணலொன்றில் “ஒரு விவாகரத்தான பெண்ணாக எகிப்தில் இருப்பது சிரமமானதா” என்கிற கேள்விக்கு அவரால் சிரித்தவாறு பதில்கூற முடிந்தது “நீங்கள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் சிரமம் தான். நானோ அசாதாரணமானவள். மக்கள் என்னிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள்!” (“If you are an ordinary woman, it is. But I’m very extraordinary. People expect everything of me”).

,

,

கல்வி சமூகநீதிக்கான பயணம் மற்றும் அதற்கான விலைகளும்

மேலே குறிப்பிட்டது போல, சொந்த வாழ்வில் அவரது நிலைப்பாட்டைப்போலவே அவரது பொதுவாழ்வின் கொள்கைளும் இறுதிவரையான நம்பிக்கைகளும் சமூகத்தின் அனைத்து பாகுபாடுகளுக்கும் எதிரானதாவே இருந்தன. எப்படி அவரது முதல் நாவலில் ஒரு இளம் பெண் வைத்தியர் வறுமையின் முன் தன் தொழிலின் பாகுபாடுகள் தொடர்பில் வெட்கித்து நின்றாரோ சமத்துவமின்மைக்கு எதிரான பொறிகளும் அவரிடத்தில் அங்கே தோன்றிவிட்டன. சமூகநீதி இயக்கங்களுடனான இறுதிவரையான அவரது பயணம் அதையே நிரூபித்தது. ‘பள்ளியில் கற்கும் கல்வி மட்டும் ஆட்களுக்கு அறிவைத் தருவதில்லை. பகுதி பகுதியான அறிவை வேண்டுமானால் அது தரலாம். ஒரு முழுமையான, உண்மையான அறிவை அல்ல. என்னை எடுத்துக்கொண்டால் நான் மருத்துவ கல்லூரி பட்டதாரி. அரசியல் பொருளாதாரம் தொடர்பாக அறியாமை உடைய பல மாணவர்கள் அங்கிருக்கிறார்கள். அது ஒரு இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக இருக்கலாம், உளவியல் நிபுணராக இருக்கலாம். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனி நிபுணத்துவங்களாக பிரித்து யாருமே எல்லாவற்றிலும் சிறந்தவர்களாய் இல்லாமல் ஆக்கிவிட்டது (So one is only good at one thing). ENT நிபுணர் ஒருவருக்கு இதயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது இருக்கலாம். இந்தக் கல்வி அமைப்பில் நீங்கள் நல்ல வைத்தியராக வரலாம் ஆனால் கூடவே பெண்கள்மீதான ஒடுக்குமுறை பற்றியோ, ஏழ்மை குறித்தோ அறியாதவராக, ஒரு தன்முனைப்பான நபராகவும் இருப்பீர்கள்’ இவ்வாறாகக் கல்வி அமைப்புத் தொடர்பான விமர்சனங்களைப் பதிவு செய்திருக்கிறார்.


மருத்துவ கல்லூரியில் அவரது ஆரம்ப காலங்களில் ஆண் சடலங்களை பரிசோதனை செய்கிற ஆய்வு கூடங்களில் ஒரு பெண்ணாக (ஆண் உடலைப்) பார்ப்பது தொடர்பான சங்கடங்கள் சக மாணவர்களால் அவரிடம் எதிர்பார்க்கப்பட்டன. அவ்வாறான சூழலிருந்து 1955இல் வைத்தியராக (பிரத்தியேகமாக மனநலமருத்துவத்தில் நிபுணத்துவத்துடன்) அவர் பணியைத் தொடங்கினார். 1963இல் அவர் director general for public health education ஆக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் அப்போதே அவருக்கெதிராக வேலை செய்யத் தொடங்கிவிட்டன. அவர் பதிப்பித்த Women and Sex (1972) என்கிற தொடர் நூல்கள் பெண் உடல்களுக்கெதிரான நடந்துகொண்டிருந்த - ஒரு வைத்தியராய் அவர் எதிர்கொண்ட - வன்முறைகளைப் பகிரங்கப்படுத்தின. அதில் பெண் உறுப்பு சிதைப்பு ( female circumcision - கிளிற்றோறிஸ் ஐ அகற்றும் சடங்கு) பற்றியதாக மட்டுமன்றி பெண்ணின் ‘கன்னித்தன்மையில்’ மையங்கொண்டுள்ள சமூகத்தின் கொடிய சடங்குகளை பற்றியும் அவற்றில் பேசப்பட்டிருந்தது. குழந்தைகளது உறுப்பினை circumcision செய்கிற அதே மருத்துவச்சிகளே (midwives) திருமண இரவில் பெண்ணின் கன்னித்திரையின் (hymen) இருத்தலை உறுதிசெய்கிறவர்களாகவும் இருந்தார்கள்.சதாவி பணியாற்றிய கிராமத்தில் அவர்களது கன்னித்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு, திருமணத்துக்குமுன் அதை இழந்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு, “ஆணவக் கொலைகளுக்கு” ஆளாகவிருந்த பெண்களை அவரிடம் பரிசோதனைக்கு அழைத்து வந்தார்கள். அவர்களைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் இன்னமும் கன்னிகள்தான் என்பதை சதாவி உணர்ந்ததுடன், அவர்கள் ஆண்மைகுறைவுகள்ள மற்றும் வேறு பெண்ணைப் பார்க்க விரும்பிய ஆண்களால் பலிஆடுகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கண்டார். இதுபோன்ற அனுபவங்களே சீற்றத்துடன் அவரது நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதனூடு பொதுமக்களை இந்தச் சடங்குகள் தொடர்பில் அறிவூட்டவும், அதற்கெதிராக விழிப்புணர்வு பெற்று அதை அடியோடு இல்லாமல் செய்யவும் அவரெடுத்த முயற்சி அது. பதிலாக, சதாவியின் நடவடிக்கைகள் மூர்க்கமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நூல் உடனடியாக தடை செய்யப்பட்டது. சுகாதார அமைச்சில் அவரது பதவியும் பறிக்கப்பட்டது. மூன்று வருடங்கள் முன்னர் அவர் நிறுவிய சுகாதார (al-Sihha / Health) சஞ்சிகையும் மூடப்பட்டது. இதற்கெல்லாம் பணியாத அவர், அரசுசாரா அமைப்புகளை தொடர்ந்தும் தனித்தோ தோழர்களுடன் இணைந்தோ நிறுவிக்கொண்டே இருந்தார். மிக முக்கியமானவை “மனதிலுள்ள திரையை அகற்றுதல்” (“lifting the veil from the mind”) என்கிற கோசத்துடன் அறியப்படுகிற அவர் நிறுவிய Arab Women’s Solidarity Association மற்றும் Arab Association for Human Rights ஆகிய அமைப்புகள் ஆகும். சதாவியைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக (intersecting) இருந்தன. அவர் தனது பெண்ணிய முன்னெடுப்புகளையும் ஏனைய சமூக பாகுபாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை. அவரைப் பொறுத்தவரையில் வீட்டு வன்முறைகள் என்பன தனியே அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையுடன் மட்டுமல்லாமல், வரலாறு மற்றும் மதத்தின் திரித்தல், இணங்க வைத்தல், மோசடிகள் ஆகியவற்றுடனும் தொடர்புடையது என்பதை அவர் அறிந்திருந்தார். வர்க்கம், ஆணாதிக்க சமூக அமைப்பு, காலனித்துவம் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒடுக்குமுறைகள் என்பதையே அவரது பெரும்பான்மையான செயற்பாடுகள் வெளிப்படுத்தின. (ஆக்கிரமித்து/கையகப்படுத்தி வைத்திருக்கும்) அதிகாரங்களையோ வளங்களையோ அவற்றை வைத்திருக்கிற யாரும் விட்டுத்தர விரும்பர். “குடும்பங்களிலுள்ள ஆண்களுடனோ முதலாளித்துவத்துடனோ இதுதான் எல்லோரதும் போராட்டம். இது அதிகாரம் தருகிற சக்தி சம்மந்தப்பட்டது. அதிகாரசக்திகளை நீங்கள் கட்டுரைகளாலோ சொற்களாலோ மாற்ற முடியாது. அவர்கள் தமது சொந்த தேர்வாக அதிகாரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அது வீட்டிலிருக்கிற கணவனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, அதிகாரத்தை அதிகாரத்தால் தான் அகற்ற முடியும். மக்கள் ஒருங்கிணைந்து வீதிக்கு வந்து தமது அதிகாரத்தை - சக்தியை - காட்டியதால் மட்டும்தான் முபாராக் ராஜினாமா செய்தார். வீதிக்கு வந்தவர்கள் சில நூறு பேர்தான் எனில் அவர் ஒருகாலும் போயிருக்க மாட்டார். ஆனால் 20 மில்லியன் மக்கள், முழு தேசமும், வீதிக்கு வந்தது. அவருக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. அதிகாரசக்திகளை நீங்கள் குறைந்த வலுவைக் கொண்டு அழிக்க முடியாது. அறிவும் ஐக்கியமும் (Knowledge and unity) மக்களின் கைகளில் பெரும் அதிகார சக்தியாகும்.” 44


சதாவி தனது விமர்சனத் தாக்குதல்களிலிருந்து யாரையும் விட்டு வைக்கவில்லை. அத்துடன் அதற்கு விலை கொடுக்கவும் தயாராக இருந்தார். அவரது நூல்கள் பலவும் தடை செய்யப்பட்டன, அவர் சிறைப்பிடிக்கப்பட்டார், வெளிநாடுகளில் புகலிடம் கோரினார் . பற்பல கொலை அச்சுறுத்தல்கள் அவருக்கிருந்தன இஷ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலல்லப்படவேண்டியோர் பட்டியலிலும் இருந்தார். மதவிரோத குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒன்றுமாற்றி இன்னொன்று என ஏறி இறங்கினார். விசாரணைகள்அவரது கணவரையோ குடும்பத்தினரையோ கூட விட்டுவைக்கவில்லை. இவை எதனாலும் அவரது எதிர்ப்புக் குரலை நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரது பெயர் ‘மரண பட்டியல்’ ஒன்றில் சவுதி பத்திரிகை ஒன்றில் பிரசுரமானபோதும், ‘நவால் எல் சதாவி கொல்லப்பட வேண்டும்’ என்பது தொழுகை அழைப்பில் கூறப்பட்டபோதும், அவரது கணவரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மேற்கத்தைய நாடுகளில் புகலிடம் கோரினார். அதன் பின் பல வருடங்கள் அனேகமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் பல்கலைக்கழகங்களில் கற்பித்தவாறு, வாழ்ந்தார். மூன்று பகுதிகளாக வெளிவந்த அவரது சுயசரிதத்திலும் கற்பித்தல் மற்றும் விருந்தினர் உரைகளிலும் அவரெதிர்கொண்ட போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

SOLIDARITY BETWEEN WOMEN CAN BE A POWERFUL FORCE OF CHANGE AND CAN INFLUENCE FUTURE DEVELOPMENT IN WAYS FAVOURABLE NOT ONLY TO WOMEN BUT ALSO TO MEN.

நாடு திரும்புதல்

அந்நிய நாடுகளில் தொடர்ந்து அவரால் தஞ்சமடைந்து வாழ முடியவில்லை. சதாவி 1996இல் நாடு திரும்பினார். அங்கு முபாரக் இன்னமும் எகிப்து ஒரு சர்வாதிகார ஆட்சி அல்ல என்று சொல்லிக்கொண்டிருந்தார். அத்துடன், “முபாரக், இது ஜனநாயக நாடு, தன்னை எதிர்க்கலாம் என்று காட்ட சிலபேருக்கு காசுகொடுத்து எதிர்க்க வைத்தார். அது வெறும் கண்துடைப்பு . ஆகவே 2004 வாக்கில்நான் அவரை எதிர்த்து நிக்க முடிவெடுத்தேன். நான் அறியப்பட்ட நபராக இருந்ததால் அரசாங்கம் அச்சமடைந்தது. நான் பொதுசந்திப்புகள் நடத்தி வந்த எனது கிராமத்துக்குப் பொலிஸை அனுப்பி ஒவ்வொரு வீடு வீடாகப் போய் அவர்களை அச்சுறுத்தினார்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு ஆசிரியர் எனில் உங்கள் வேலை போகும், சிறையில் போடுபோம், என்றெல்லாம் அச்சுறுத்தலாகக் கூறப்பட்டது. அப்போதுதான் நான் தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக அறிவித்தேன்.” “2009இல் நான் நினைத்ததைவிட வெகுசீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என்கிற எண்ணம் எனக்கு வரத் தொடங்கியது. அப்போது வீடு எனது நூல்களை வாசிக்கிற இளைய தலைமுறையினரால் நிரம்பியது. தத்துவம், இலக்கியம், அரசியல் தொடர்பில் விவாதிக்க அவர்கள் தினமும் எனது வீட்டுக்கு வந்தார்கள். சிறு சிறு எதிர்ப்பு ஊர்வலங்கள் தொடங்கின. முதலில் முபாரக்கின் மகனிற்கு எதிராக - ஜனாதிபதி பதவியும் மன்னர் காலத்தில் போல முபாரக்குக்குப் பிறகு மகனுக்குப் போகலாம் என்பதால்- அது தொடங்கியது. சிறிது சிறிதாக புரட்சி குறித்த கருத்தாக்கம் முளைவிடத் தொடங்கியது. நாங்கள் Tahrir சதுக்கத்துக்கு நகர்ந்தோம்!”


2011 Egyptian revolution சடாற்றின் காலம் தொட்டு எகிப்து முற்போக்கான மாற்றங்களற்றுப் பின்தங்கியிருந்தது. இதையே சதாவி ஒருமுறை “நாங்கள் நூற்றாண்டுகள் பின்தங்கி இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார். சடாற்றின் அரசு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பிரத்தானிய அணிகளுடன் கைகோர்த்து, அவர்களது நிகழ்ச்சிநிரல்களுக்கமைய இயங்குவதையே செய்துவந்தது. சொல்லப்போனால் விடுதலை அடைந்த பின்னும் பல வகைகளில் காலனித்துவத்தின் எச்சசொச்சங்களால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நாடாகவே எகிப்து இருந்திருக்கிறது. ஊழல் மற்றும் பொருளாதார தேக்கத்திற்கு எதிராக ருனீசியாவில் தொடங்கி அரபு உலகை பாதித்த Arab Spring வந்தபோது - எகிப்தில் சதாவி இளைய தலைமுறையினருடன் எழுச்சியில் இணைந்தார். அவரை ஆதர்சமாக பார்த்த, அவரை வழிகாட்டும் சக்தியாக மதித்த பெண்கள் ஆண்கள் மாணவர்கள் அங்கு அவரைச் சூழ்ந்தார்கள். Tahrir சதுக்கத்தில் ஒரு மூத்தோளாக அவர் அவர்களுடன் முகாமிட்டு இருந்தார். புரட்சியின் திட்டமிடல்களில் அல்லது முன்ஆயத்தங்களில் அவரது பிரசன்னம் இன்றியமையாததாக இருந்தது. அந்த அனுபவங்கள் அவரது பிந்தைய நேர்காணல்களில் இவ்வாறு பதிவாகின: “புரட்சியை நான் எதிர்பார்த்தேன். ஆனால் 20 மில்லியன் மக்கள் தெருவுக்கு வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. எனது சிறுவயது முதலே இது பெருங் கனவாக இருந்தது. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் எகிப்து மக்கள் விழிப்படைந்து காலனித்துவத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழுவார்கள், அதை நான் பார்க்கவேண்டும். சிறுவயது முதற்கொண்டு நான் பல எதிர்ப்பூர்வலங்களில் பங்குபற்றியவள். மருத்துவ கல்லூரியில் படிக்கிறபோது King Farouk இற்கு எதிராக பின்னர் பிரிட்டிஷ் காலனியாக்கத்துக்கு எதிராக, நசீருக்கு, பின்னர் (என்னை சிறைக்கு தள்ளிய) சடாற்றுக்கும் எதிராக, பின்னர் என்னை புகலிடத்துக்குத் தள்ளிய முபாராக்குக்கு எதிராகவும் நின்றிருக்கிறேன். நான் நிறுத்தவே இல்லை. அது ஒரு கனவு போல இருந்தது. 2011 யனவரி: அது (கடந்த காலத்தின்) சிறு சிறு புரட்சிகள் திரண்டு உருவானதாகும்.” ஆனால் வழக்கம்போல புரட்சிக்குப் பின் பெண்கள் ஓரங்கட்டப்பட்டனர். “நாங்கள் கடும்கோபத்தில் இருந்தோம். புரட்சியின் ஒவ்வொரு படியிலும் நாங்கள் பங்கெடுத்திருந்தோம். ஆனால் அது முடிந்தபின் நாங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டோம். அரசியலமைப்பு குழுக்கள் அனைத்தும் முதிய ஆண்களையே கொண்டிருந்தது, எனவே இளையோரும் கோபத்திலிருந்தனர். ஆனால் நாங்கள் எகிப்திய பெண்கள் யூனியனை ( Egyptian Women’s Union) மீண்டும் நிறுவி இரவு பகலாக ஒருங்கிணைத்து வருகிறோம். அரசியலமைப்பை மாற்றவென உருவாக்கப்பட்ட அனைத்துக் குழுக்களிலும் ஒவ்வொரு மட்டத்திலும் 35 சதவீத பெண்கள் பங்கேற்பைக் கோருகிறோம். அத்துடன் மதச்சார்பற்ற அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடும்பக் குறியீடு மற்றும் சட்டத்தின் முன் முழு சமத்துவம் ஆகியவற்றையும் வேண்டுகிறோம். “ இப் புதிய அரசியல் ஒழுங்கு பாலினம் தொடர்பான விடயங்களில் எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முதலாவதாக உங்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை. பொருளாதார சுதந்திரம் இருக்கிறபோது உங்களது துணைவர் உங்களைத் தவறாக நடத்தினால் நீங்கள் அவரை விவாகரத்து செய்யலாம். பிறகு இது ஒரு வைரஸ் போல மற்றப் பெண்களையும் தாக்கும். பின்னர் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒருங்கிணையவும் பேசவும் தொடங்குவார்கள். உங்களுக்கு ஒரு கூட்டு சக்தி தேவை. அதனால்தான் நாங்கள் எப்பொதும் ஒருங்கிணைத்தல்கள் செய்வதோடு, தொடர்ந்தும் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறோம்.ஆனால் இதனால்தான் [[எகிப்தின் முன்னாள் முதற்பெண்மணிகள்] Suzanne Mubarak and Jehane Sadat போன்றவர்கள் எகிப்திய பெண்கள் யூனியனை முன்பு தடை செய்தார்கள். ஒருங்கிணைதலுக்கு என்றொரு பெரும் பலம் இருக்கிறது.” 46



புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியவையாக “நான் எதிர்பார்க்கின்றவை, யனவரி 2011 புரட்சியைத் தொடர்ந்து ரூனீசியா எவ்வாறு பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை கொடுக்கும் சட்டமாற்றங்களை முன்னெடுத்ததோ அதேபோல பிற அரபு நாடுகளாலும் அது உள்வாங்கப்படவேண்டியது என்பதுடன், சமத்துவம் சொத்துரிமையில் மாத்திரமன்று அது வம்சாவழி (lineage), திருமணம், விவாகரத்து என்வற்றிலும் எதிரொலிக்க வேண்டும். மதம், பாலினம், வர்க்கம் அல்லது எதன் பேரிலும் - இருக்கவேண்டிய பாரபட்சமற்ற போக்கு விவாதங்களுக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்படவேண்டும்” என்பனவே. இவை நடக்கும் என்பது தொடர்பில், “எனக்கு இளையோரிடத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. நான் அவர்களுடன்தானே இருந்தேன் Tahrir சதுக்கத்தில்? இன்றும் எனது வீட்டில் அவர்களுடன் எப்போதும் தொடர்ச்சியாக விவாதங்கள் செய்து வருகிறேன், அவர்களிடமிருந்து எப்போதும் கற்றுக்கொள்ள இருக்கிறது. வயதானவர்களான நாம் எப்போதும் இளையவர்களுக்கு ஒரே அறிவுரை கூறுபவர்களாக இல்லாமல், சமமான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும்” அதில்தான் வளர்ச்சி இருக்கிறது.

உமக்கு மரணமில்லை

!

எல்லா மொழிகளிலும் தம் காலத்தை முந்திப் பேசியவர்களே இன்றும் பலவித புது சிந்தனைகளை விதைத்தவர்களாக நினைவுகொள்ளப்படுகிறார்கள். புலமைச்சூழலிலோ வெவ்வேறு துறைகளிலோ எங்கும் அவர்களை நாம் அடையாளங் காணலாம். அவர்களிடமிருந்து சாதாவி மாறுபடுகிற இடம் அவர் தனியே எழுத்தாளராக மட்டும் இருக்கவில்லை என்கிற ஒன்றுதான். அவர் வாழ்ந்த தனது 89 ஆவது வயதுவரை புரட்சிரமான இயக்கங்களுடன் தொடர்புகளிலிருந்தவர். அவரது வீடு மாணவர்கள் வந்து கலந்து பேசிக் கலையும் இடமாக இறுதிவரை இருந்திருக்கிறது. இத்தகைய செழுமையான வாழ்வை துணிகரமாய் வாழ்ந்து மடிந்ததாலேயே மத்திய கிழக்கு மற்றும் அதற்கும் அப்பால், நாவல் எல் சாதாவி என்ற பெயர் அலட்சியம் செய்யமுடியாத ஒன்றாக ஒலிக்கிறது. அவரது வாழ்நாளிலும் அவர் இறந்த பிறகும் அவர் பல்வேறு வேறுபட்ட உணர்வுகளை ஒவ்வொருவரிடத்திலும் உருவாக்குகிற ஆளுமையாகவே இருக்கிறார். பலர் அவரை நேசிக்கிறார்கள், அவரால் ஆகர்சிக்கப்படுகிறார்கள், மரியாதை கொள்கிறார்கள், போற்றுகிறார்கள் (அவரது ஆதரவாளர்களால் எகிப்தில் Nawal El Saadawi forum என்கிற ஒரு விவாதத்தளமே அமைக்கப்பட்டிருக்கிறது. அதனூடாக கைரோ நகரிலும் பிற நகர்களிலும் தொடர்ச்சியாக அவரது நூல்கள் விரிவான விவாதத்துக்குள்ளாகின்றன.) அவரது கருத்துக்கள் தொடர்பிலும் அதிகாரத்தை வணங்காத அவரது எதிர்ப்புமனநிலையிலும் ஆத்திரமும் வெறுப்பும்கொள்ளத்தக்கோரும் எங்கும் உள்ளனர். சனாதனமான மத, வர்க்க நலன்களை கட்டிக்காப்பவராக அவர் ஒருபோதும் இல்லாததால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சதாவியை ஒத்த முற்பொக்கு ஆளுமைகளை வாசிக்கையில் - சமகாலத்தின் பிற்போக்குநிலைகளை கடக்கவியலாது அல்லது கடக்கத் தத்தளிக்கும் தலைமுறைகளுக்கு அது மலைப்பையே ஏற்படுத்த முடியும். அவர்களைப் பொறுத்தவரையில், 1930களில் பிறந்த ஒரு பெண் 1950களில் தனது சனாதனமாக சூழலில் இவ்வளவு எதிர்ப்புணர்வுடன் போர்மனதுடன் எவ்வாறு இருந்திருக்க முடியும் தொடர்ந்து இயங்கியிருக்க முடியும் என்பதே பெரும் ஆச்சரியம்தான். குறிப்பாக ஆண்-பெண் வேற்றுமைகளை அவரவர் சமூக பாத்திரங்களை தெளிவாக எழுதிவைத்திருக்கிற கடைப்பிடிக்கிற மத, சமூக கட்டுக்களைக் கொண்டிருந்த சூழலில் அவர் எவ்வாறு அதற்கெதிராய் நிற்கின்ற தனது மனதைரியத்தைப் பெற்றிருக்க முடியும், அதற்கு ஓய்வு தராது கடைசிவரை அதை கைக்கொண்டிருக்க முடியும்? ஆச்சரியமான வகையில் சதாவியின் பல கதைகளில் பெண் பாத்திரங்கள் இலட்சியப்பாத்திரங்களாக எல்லாம் இல்லை. அவர் ‘நினைக்கிற’ ‘கனவு காணுகிற’ ஒரு ‘இலட்சிய’ உலகத்தைப் பிரதிபலிக்கின்ற பாத்திரங்களாக இல்லை. அவர்கள் அக் காலத்திலையே வாழ்பவர்களாக அதற்கெதிராக அதன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடப்பவர்களாக அவர்களும் அக் காலத்தின் யதார்த்தமாகவே அவரது கதைகளில் இருக்கிறார்கள். அவற்றை எழுதியவர் மத, அரசியல், சமூக அதிகாரங்களால் போடப்பட்ட சகல எல்லைகளையும் தினாவெட்டுடன் தயக்கமற்றுக் கடந்தவராகவும், அவர் தனது உரிமைகளை வேண்டுவதில் எவ்வித மன்னிப்புக்கோரலுமின்றி எடுத்துக்கொண்டவராகவும் இருந்தார், அந்த உண்மையே அவரது பிரதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது. ஒரு தசாப்தங்களுக்கு முன்னம் ராகூர் சதுக்கத்தில் நிகழ்ந்த பெரும் எழுச்சியைப்போல எகிப்து இனியும் மாற்றங்களுக்காய் கிளர்ந்தெழுகிற ஒவ்வொரு தருணங்களிலும் சதாவியை ஒத்தவர்களது வழிகாட்டலின் எதிரொலிகள் நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும்.

- பிரதீபாதி

48


2022 MARCH LATE WINTER ISSUE

மார்ச் மாதத்தில் வருகிற இந்த இதழுக்குப் பொருத்தமாக எகிப்தின் மார்க்சிய பெண்ணிய எழுத்தாளரும் சமூக போராளியும் ஒருங்கிணைப்பாளருமான நவால் எல் சாதாவியின் ஓராண்டு நினைவஞ்சலியாக அவரது பன்முக அனுபவங்களை வெளிக்கொணரும் நேர்காணல்கள் குறிப்புகள் கொண்ட தொகுப்பொன்றை வெளியிடுவதில் மகிழ்கிறோம். உலகின் பல்வேறு புலங்களில் வாழ்ந்த அவரொத்த ஆளுமைகளை அவர்தம் பங்களிப்புகளை அறிகிறபோது வாசிப்பவர்கள் நிச்சயம் அவர்தம் படைப்புகளைத் தேடிச் செல்வதோடு, அவர்களது செழிப்பான வாழ்க்கையிலிருந்து பலதையும் பெற்றும் கற்றும் கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதேபோல ஜெமா ஸ்டார்லைற் ஒஃப் த டார்க் ஸ்டாரின் Transition Stories மேற்கின் பால் சிறுபான்மையினர் பகிரும் பெரும்பான்மையான அனுபவங்களுக்கு மாறான ஒரு விடயத்தை பேசுகிறது. பாலியல் சிறுபான்மையினர் தொடர்பாக ஆரோக்கியமான சிந்தனையை கொண்டிராத சமூகத்தில் தன்னை ஒருவர் முற்றாய் வெளிப்படுத்திக்கொள்வது அவருக்கு பெருதும் ஆபத்தான செயலாகவே இருக்கிறது. பொதுவில் தம்மடையாளத்தை முன்வைப்பவர்கள் அதையும் மீறியே அவ்வாறு செய்கிறார்கள். ஜெமா புறஉலகால் வரக்கூடிய ஆதரவின்மை, தனிமைப்படுத்தப்படுதல் காரணமாக ஒருவர் தன்னடையாளத்தை மறைத்துக்கொள்ளுதல் ஒன்றும் தவறில்லை என்பதையும் அது கோளைத்தனம் அல்ல என்பதையும் தன்னனுபவத்தை முன்வைத்து அழுத்தமாக பேசியிருக்கிறார். ஓர் ஒடுக்கப்பட்ட நபருக்கு மட்டுமே அவர்களது கடுமையான பாதையின் போராட்டங்களது பிரத்தியேக சவால்கள் தெரியும். அவர்களது நலனில் அக்கறை உள்ளவர்கள், யாரும் தங்கள் வாழ்க்கையை தாம் வாழ விரும்பும் விதத்தில் வாழ்வதைத் தடுக்காத ஒரு உலகத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கவும் போராடவும் வேண்டுமே தவிர அவர்களை மதிப்பிடுவதற்கு அல்ல. இத்தகைய பகிர்வுகள் உலகளாவியரீதியில், ஏற்றத்தாழ்வுகள் எப்படி இருக்கின்றன, எவ்வாறு இயங்குகின்றன, காலப்போக்கில் எத்தகைய வடிவங்களை எடுத்துள்ளன, எங்கு மாறுபடுகின்றன என்பன குறிந்த சிந்தனைகளுக்குத் தூண்டுகின்றன. பாகுபாடுகளுக்கு எல்லைகளோ மொழிகளோ ​ இல்லை. உலகெங்கிலும் உள்ள போராட்டங்களைப் பற்றிய பகிர்வுகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவர்கள் எங்கிருந்தாலும் - ஒற்றுமையைக் கட்டியெழுப்ப உதவும். படித்து பகிருங்கள்! தொகுப்பாளர்கள்

For this late winter issue in March, we are excited to bring -along with poetry, film review, and visuals - two important writeups based on two different experiences. First, we are honoured to publish the rich experiences of Egyptian iconic Marxist feminist writer and activist Nawal El Saadawi. This March marks one year of her passing and it was a delightful experience to translate her numerous interviews (available online in writings and videos) for the write-up on her, celebrating the person she is and her contributions to Arab Spring and the literary world. Like Kimberlé Crenshaw, the black scholar and activist who coined the term ‘intersectionality’ (1989) and further developed it as the intersectional theory), Saadawi too believed in the interconnections between oppressions. She firmly believed that no one oppression affects the people, it is often intertwined with intersections of multiple oppressions i.e.race, caste, class, and gender. Throughout her public speeches, interviews, and writings she explored issues that are still taboo in many cultures. We hope our readers will go find her works and enjoy reading books from her prolific career. Secondly, our contributing editor Gemma Starlight of the Dark Star’s transition stories highlights the importance of valuing different experiences/choices when it comes to LGBTQI2SA+ ‘coming out’ stories in our spaces. Most often ‘coming out’ stories are celebrated (rightfully) for their bravery, with praises. Contrarily, Gemma draws attention to people who decide not to ‘come out’ when the world outside is - as we all know or pretend not to acknowledge out of our ignorance - not at all accommodating or safe for sexual minorities, especially trans people of colour. Gemma’s Story expresses the importance of respecting choices, and only the person who is oppressed would know the struggles of their path, and thus, people need to respect and support them. And also contribute to building a world that should not stop people from coming out and living the way they want to live their life. We all need to build a world that accommodates everyone's needs and identities. Sharing Saadawi’s and Gemma’s thoughts in Tamil allows us to see how universal inequalities are, they have no borders nor languages. Reading about the struggles around the world would help build solidarity among the oppressed people of this universe, no matter where they are. Attem’s contribution is a small path towards it. Enjoy Reading!



ISSN 2564-0399

“When I was young lies were visible. But the post-modern lies are not visible. They are subtle. The technology of deception. Capitalist imperialists cannot survive without lies. You cannot exploit anybody - a woman, a man, a tribe - unless lie to them and deceive them. Because without deception you cannot exploit them. And you deceive women by what? You say ‘you go to hell if you disobey god. You will be burned in hell in the fire.' They told me that when I was a child.”

Nawal el Saadawi [1931 - 2021]


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.