அ ற் ற ம் SUMMER
2021
|
ISSUE
NO.
9
|
ISSN
2564-0399
Checkout: issue.com/misfitsforchange Attem.net
Submissions/Inquiries: attemm@gmail.com
Gemma Starlight of the Dark Star | ஜெமா Motherhood (transition stories) - pg. 17 - 19 தமிழறிமுகம் - பக். 13 - 16 Deep Mutuality (poem) - pg. 21 Chained Memories (poem) - pg. 53 - 54 Art Works - pgs 12, 20, 22, 53 - 54
Thanya | தான்யா Kavusala Luxme | கௌசலா "anjali: an offering for the indigenous children" 'இப்பூமி அவர்களை ஒளித்து வைத்திருக்கிறது pgs. 37 - 52, 58
Chandra | சந்திரா நல்லையா
Caliban and the Witch: புத்தக அறிமுகம்: Women, the Body and Primitive Accumulation by Silvia Federici சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும் - பக். 23 - 28
Pratheepathi | பிரதீபாதி செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று... (மொழிபெயர்ப்புக் கவிதை) - பக். 3 - 12 "நாம் தனித்திருக்கையில்" (சிறுவரும் சமூகநீதியும்) (children's literature and social justice - essay) - பக். 29 - 36
Editorial Indigenous Genocide: Canada's Legacy - pgs. 55 - 57
மூலக்கவிதை Original Poem: Some Like Indians Endure கவிஞர் Poet: Paula Gunn Allen (1939-2008) நியூ மெக்சிகோவில் பிறந்த போலா கன் அலென் தாய்வழியில் Laguna பூர்வீகஅடியையும் தகப்பன்வழியில் ஐரோப்பிய மற்றும் அரேபிய அடியையுமென பல்லின பாரம்பரியங்களைக் கொண்டவர். புதிய பூர்வீகக்குடி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை தம்மைப் பாதிக்கிற ஆளுமைகள் பங்களிப்புகளில் ஒருவராக இன்று பெருமதிப்புடன் குறிப்பிடப்படுகிற கவிஞர், நாவலாசிரியர், புலமையாளர். நியூ மெக்சிகோவில் வளர்ந்தமையால் தாயின் Pueblo பண்பாட்டின் நேரடி அனுபவமும் தாக்கமும் அவரிடம் உண்டு. குறிப்பாக பெண்ணை மையப்படுத்திய அவர்களது பண்பாட்டின் தாக்கம் அவரது பல கவிதைகளில் உண்டு. அவரது ஆய்வுகளிலும் காலனியவாதிகள் அனேகமாக பெண் மைய கட்டமைப்பைக் கொண்டிருந்த பல அமெரிக்க பூர்வீகக்குடிகளை தமது ஆணாதிக்க சிந்தனை மரபின்படி தவறாக கணித்தார்கள் என்பதையும் குறிப்பாக பூர்வீகக் குடிப் பெண்கள் பலவித அரசியல் தலைமைப்பண்புகளுடன் பதிவிகளில் இருந்ததை கண்டுகொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கலாநிதிப்பட்டம் அமெரிக்க குறிப்பாக பூர்வீகர்கள் குறித்த கல்வி ஆய்வை மையப்படுத்தியது. 1999இல் இவர் ஓய்வுபெறும்வரை கல்வித்துறை உட்பட பல்வித தளங்களில் பங்களிப்புகளை வழங்கியவர், தான் ஈடுபட்ட துறைகளில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சொற்கள் Words: ஜிப்சி (gypsy), நீக்ரோ (negro) போன்று றெட் இந்தியன் (red indian) என்கிற சொல்லும் சமகாலத்தில் சம்மந்தப்பட்ட இன மக்கள் குறித்த (முறையே நாடோடிகள், கறுப்பினர்கள், பூர்வீகக்குடியினர்) பொதுவில் பாவிக்கும் வசைச்சொற்களாக (racial slur) மேற்கில் கணிப்பிடப்படுகிறது. கறுப்பின பாடகர்கள் நீக்ரோவை ஒத்த சொல்லான 'நிகர்' (nigga) என்கிற சொல்லை பாடல்களில் பயன்படுத்துவதும் நீண்ட காலமாக சம்மந்தப்பட்ட இனங்களின் அறிவுஜீவிகள் கலைஞர்களால் விமர்சிக்கப்படுவதோடு, குறிப்பாக அம் மக்கள் அல்லாதவர்கள் அதைப் பயன்படுத்துவது மிகவும் கவனத்துடன் அவதானிக்கப்படுகிறவும் ஒன்று. 1981இல் எழுதப்பட்ட இக்கவிதையில் பூர்வீகக்குடியினரைக் குறிக்கக் கவிஞர் பயன்படுத்தும் சொல் மூலத்தில் 'இந்தியர்” என்பதே (செவ்விந்தியரல்ல). ஆனால் இந்தியர் என்பதோ, அமெரிக்க-இந்தியர் என்பதோ ('அமெரிக்க பூர்வீக இந்தியர்' என்பதோ) தமிழில் யாரைக் குறிப்பிடப்படுகிறது என்பது தொடர்பில் மயக்கம் ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் பூர்வீகரை குறிக்கையில் காலனியவாதிகளது தேசமான அமெரிக்காவை அவர்களது பெயரின் முன்எச்சமாக எழுதுவதும் கருத்தியல்ரீதியாக உறுத்தக்கூடியது. இன்று தமிழில் மேற்குறிப்பிட்ட இத்தனை சொற்களும் பாவனையிலிருக்கிறபோதும் அவை எமது நிலங்களுக்கு அந்நியமான இனக்குடிகளைக் குறிப்பது ஆகையால் வசைச் சொற்களாக புழக்கத்தில் இல்லை. என்கிறபோதும், பொருத்தமற்ற, அந்தந்த இனங்கள் விரும்பா காலாவதியான சொற்களைக் களைதலே எவ் மொழிக்கும் சிறப்பு. இங்கே இக்கவிதையில் கவிஞர் 'இந்தியன்' என பூர்வீகர்களைக் குறிப்பதாலும் அதே சொல்லை பயன்படுத்தும் பொருட்டு (அச்சொல் இன்னும் அமெரிக்காவில் பூர்வீக இந்தியர்களால் பாவனையிலிருப்பதாலும்) பூர்வீகர் என்கிற சொல்லோடு இங்கே தமிழில் குழப்பத்தைத் தவிர்க்க 'செவ்விந்தியர்' என்பதும் பயன்படுத்தப்படுகிறது. இக்கவிதை பெண் சமபாலீர்ப்பாளர்கள் மற்றும் அமெரிக்க பூர்வீர்கள் ஆகிய இரண்டு ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களை ஒப்பிடுவதூடாக ஒடுக்கப்படுபவர்கள் தம் அனுபவங்களின் ஒத்தத் தன்மைகளை அடையாளங்கண்டு அவற்றூடாக ஓதோருவரை நன்கு புரிந்துகொண்டு நேசசக்திகளாக மாறவும் ஒருங்கிணைந்து போராடவும் முடியும் என்பதையும் உணர வைக்கிறது.
செவ்விந்தியர்கள் தாங்கிக்கொள்கின்றவை போன்று...
என் மனதினில்
பெண் தற்பாலீர்ப்பாளர்கள் செவ்விந்தியர்களைப்போல தான் நிறையவும் அவர்களைத்தான் ஒத்திருக்கிறார்கள் பூர்வீகர்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தவர்கள் அவர்களுக்கென குடி நிலங்கள் சொந்தமாயிருந்தன அது பூமியென்று அழைக்கப்பட்டது பலமுறை அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் எனினும் புற்களைப் போலவும் மேகக்கூட்டங்களைப்போலவும் எப்போதும் அவர்கள் திரும்பி வந்தார்கள் மறுபடியும் கொன்றொழிக்கப்பட்டார்கள் பூமியினிடத்திலும் ஒருவருக்கொருவரும் அக்கறைகொண்டிருப்பதும் பகிர்ந்து வாழ்வதும் ஒரு நல்ல விடயமென்றே அவர்கள் கருதியிருந்தார்கள் அவர்கள் குதிரை ஓட்டினாரக்ள் நிலவில் பாடினார்கள் ஆனால் அவை நீண்டகாலங்களின் முன்னம் நிகழ்ந்தவை அவற்றை நான் அறியேன் இன்றானால் பெண் தற்பாலீர்ப்பாளர்கள் அவர்களுடன் இருக்கையில் நான் செவ்விந்தியருடன் இருப்பதாக என்னை உணர வைக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் கசப்புமிகு சாட்சிகளாக இருக்கிறார்கள் ஏனெனில் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் அவர்கள் ஒவ்வொருநாளையும் விரக்தியுடனும் சிரித்தவண்ணமே வாழ்ந்தார்கள்.
4
ஏனெனில் இப் பூமி அவர்களை ஒளித்துவைத்திருக்கிறது ஏனெனில் அவர்களுக்கு நிலவைத் தெரியும். அதன்முன்னில் ஒன்றுகூடியிருந்துதான் மரணத்தின் கண்களில் அவர்கள் உமிழ்கிறார்கள் சொல்லப்போனால் சில பேர் தங்களைப் பற்றி கொண்டிருக்கிற ஒரு கருத்துருவம்தான் செவ்விந்தியர் என்பதும் பெண் தற்பாலீர்ப்பாளர் என்பதும் சில பெண்கள் தம்மைப்பற்றிக் கொண்டிருக்கிற கருத்துருவம்தான் நாம் இப்போது வாழுகின்ற இந்த இடமும் ஒரு கருத்துருவமே. ஏனெனில் வெள்ளை மனிதன் மீதி எல்லாவற்றையும் எம்மிடமிருந்து எடுத்துவிட்டான் எமது தகப்பன் சகலவற்றையும் எடுத்துவிட்டான் அந்த கருத்துருவமானது உங்களை தொடர்ந்தும் நகர்த்திச் செல்லும் அது உங்களது பிரியமானவர்களை பின்னால் கட்டி இழுத்தவாறும்... பிள்ளைகள் சிலவேளை கீழ்நிலைக்கோ மலையுச்சிக்கும் அப்பாலோ சென்றுவிடலாம் அனால் அது (இறவாது) இருந்துகொண்டிருக்கும் செவ்விந்தியர் தாங்கிக்கொண்டிருக்கிறவை போன்றதான அந்தக் கருத்துருவம்...
6
உங்களது முழுக் கிராமத்தையும் தன்னுடன் அது எடுத்துச் செல்லக்கூடும் ஒவ்வொரு செங்கல்லாக அல்லது கற்களை விட்டுவிட்டு இன்னொரு இடத்தில் இன்னொரு கிராமத்தைக் கட்டுவதற்கு மேலும் கற்களைக் கண்டடையலாம் செவ்விந்தியர்களைப்போல பெண் தற்பாலீர்ப்பாளர்களுக்கும் மிகச் சொற்பமான... மிகமிகச் சொற்பமான வேறு இடங்களே போவதற்கு இருக்கின்றன ஆகவேதான் இக்கருத்துருவம் பற்றி அறிவதும் அதை நினைவில் வைத்திருப்பதும் அல்லது பழசொன்றை அம்பலப்படுத்துவதும் தாம் யார் என்பது பற்றிய கருத்துருவத்தை நினைவில் சுமந்தவாறு எப்படி மனிதர்கள் பயணித்தார்கள் என்பதும் முக்கியமானதாக ஆகின்றன பெண் தற்பாலீர்ப்பாளர்கள் போல செவ்விந்தியர்களும் இதை எப்போதும் செய்வார்கள்
தற்பாலீர்ப்பாளர்களுக்கு சாவைப் பற்றியும்கூட சகலதும் தெரியும் அத்துடன் எல்லாம் காற்றுக்கு சொந்தமானது என்பதும். தமது மறதியின் காரணமாகவும் விரக்தியின் காரணமாகவும் செவ்விந்தியர்களைப்போல அவர்களும் ஒருவருக்கொருவர் மோசமாகவே நடந்துகொள்வார்கள் ஆகவே பெண் தற்பாலீர்ப்பாளர்கள் செவ்விந்தியர்கள்தாம். ஏனெனில் (தமது) காயங்களாலும் பயங்கரங்களாலும் குற்ற உணர்ச்சிகளாலும் இரத்தத்தாலும் அவமானத்தாலும் காணாமல் போவதை சரிவரச் செய்யாத காணாமல் போதல்களாலும் எல்லோரும் எல்லோருடனும் சம்மந்தப்பட்டிருப்பார்கள்
8
எப்போதும் வெளியேறுகிறவர்களாக நாம் இருக்கின்ற போதும் ஒருபோதும் நாம் தூர போய்விடுவதில்லை ஏனெனில் எம்மிடமிருக்கிற ஒரே வீடு பரஸ்பரம் ஒருவருக்கொருவராய் இருக்கிற நாம் மட்டுமே. மீதி அனைத்தையும் அவர்கள் எம்மிடமிருந்து அபகரித்து தமது காலனிகளாக்கி விட்டார்கள் நாம் யார் என்கிற கருத்துருவம் ஒன்றே இன்று நமக்கு சொந்தமானதாக இருக்கிறது
10
எனக்கு பெண் தற்பாலீர்ப்பாளர்கள் செவ்விந்தியர்களை நினைவுபடுத்துகிறார்கள் செவ்விந்தியரைப் போலவே தற்பாலீர்ப்பாளரும் அழிந்துபோய்விட வேண்டியவர்கள் அல்லது மறக்கப்படவேண்டியவர்கள் அல்லது அனுதினமும் குடிபோதையிலோ உடைந்து சிதறுண்டவோ தாம் போகாவிட்டால் தமக்கு என்னாகும் என்பதை நினைவுறுத்தி ஏதுமற்ற எங்கோவோரிடம் போய்த் துலைய வேண்டியவர்கள் என்றாலும் அவர்கள் அப்படி ஒன்றும் செய்து விடுவதில்லை மிக மோசமானது நடக்கின்றபோதும் அதை அவர்கள் நினைவில் வைத்தவாறும் தொடர்ந்தும் அங்கிருக்கவே செய்கிறார்கள் ஏனெனில் நிலவுக்கு நினைவிருக்கிறது சூரியனுக்கும்தான் நட்சத்திரங்களுக்கும்தான் நினைவிருக்கிறது அத்துடன் பிடிவாதமானதும் விடாப்பிடியானதுமான இப்பூமியின் புற்களுக்கும்தான்
*தாய்மை மற்றும் காமம்
பாலுணர்வு என்பதே குற்றமாகப் பார்க்கப்படும் சமூகங்களில் வயதானவர்களின் காமம், பெண்களின் - குறிப்பாக தாய்மார்களின் - காமம் என்பது இல்லாத ஒன்றாக கணிபடும் பேசாப்போருளே. ஜெமா தனது இக் கட்டுரைத் தொடரில் தான் ஓர் திருநராக மாறும் காலப்பகுதியின் (transition period) தன்-அனுபவங்களைத் தனது பயணத்திற்கேயுரிய பிரத்தியேக தன்மைகளுடன் பகிர இருக்கிறார். அதன் முதற்படியாக தாய்மை தொடர்பான அவரது அனுபவம் இங்கே. பல சமூகங்கள் தாம் தாய்மையைப் போற்றுவனவான ஒரு பூச்சை தம்மீது பூசிக்கொண்டிருப்பினும் எமது பஸ்களில் ரயில்களில் பிரயாணங்களில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தனித்தாய்கள் பிள்ளைகளுடன் மல்லுக்கட்டுகையிலோ, குடும்பங்களாய் வருபவர்களது குழந்தைகள் வீறிட்டு அழுகையிலோ நம் சூழலில் எழும் முகச்சுளிப்புகளும் தலையாட்டுதல்களும் சத்தத்துக்கு எதிரான புறுபுறுத்தல்களும் அறிவித்துவிடும் அதிலுள்ள போலித்தனத்தை. கருவை அழித்தல் குற்றமாக்கப்பட்டு, தாய்மை உட்பட அதுபோன்ற பல மரபான பாத்திரங்கள் கொண்டாடப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்வில் “அது உன்ர பாடு” “நீயாச்சு உன்ர பிள்ளையாச்சு” என்பதாக ஹாயாய் இன்னொருவரின் தலையில் பொறுப்பைத் துறந்துவிட்டு திரிதலே ஆதிக்கவாதிகளது இயல்பாக இருக்கிறது. அது தமக்கு சௌகரியத்தை வழங்குவதால், வசதியாய் இருப்பதால், அந்த ஏற்பாட்டை அப்படியே வைத்தவாறு பொறுப்பெடுக்காது திரிதல் இலகுவாகிறது. இத்தகையதொரு பின்புலத்தில் இப்பெண்களின் காமத்தை சகல ஜீவராசிகளையும் போலவே அதற்கான அவர்தம் உரிமையை எப்படிப் பேச முடியும்? ஆண்-பெண் என அமையும் எதிர்பாலீர்ப்பாளர்களாலான குடும்பங்களுள் (heterosexual families) படும் பாடுகளையே பேச கடினமென்கிறபோது, பெற்றோர் ஆதலில் தாய்மை அடைகையில் பாலியல் சிறுபான்மையினர் அனுபவிக்கும் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னுமதிகம். திருநர்கள் பெற்றோர் ஆகிறபோது அவர்கள் குறித்து ஏற்கனவே இருக்கிற பாரபட்ச எண்ணங்கள் (stereotypes) அவர்களது பெற்றோர் என்கிற பாத்திரத்திலும் விழுந்து தெறிக்கின்றன. பாலியல்ரீதியாகப் பேணப்படும் பொதுவிதிகளை மீறுபவர்கள், பெரிதாய் பேசுகிறவர்கள், ஆகையினால் குழந்தைகளுக்குப் பக்கத்திலிருக்கும் தகுதியற்றவர்கள், பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான முதிர்ச்சியற்றவர்கள்(?) எனவெல்லாம் பொதுப்புத்தி அவர்கள் குறித்த பாரபட்ச சிந்தனைகளை வெளிப்படுத்துகையில் பெற்றோராய் தமது அனுபவம், பிள்ளைகளாய் தமது அனுபவம் என தமது உண்மைகளை மறுபடி மறுபடி உரத்து பேச வேணடியவர்களாய் திருநர்களும் ஏனைய பாலியல் சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இல்லாவிடில் அவர்கள் குறித்து அவர்கள் என பொதுப்புத்தியில் பின்னப்படுபவையே உண்மையென நிலைத்துவிடும் அபாயமுண்டு.
14
'ஆண்-பெண் திருமணம் உருவாக்கும் குடும்பம் என்கிற ஒற்றைத்தன்மையான அமைப்பானது அறத்தை மீறாத பல காதல் உறவுகளைக் கொண்டிருக்கிற (polyamoury) ஒரு குழந்தைக்கு பல்வேறு பெற்றோர்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களை, பிற குடும்ப வடிவங்களை நிராகரிக்கிறது. சொத்து, அரசு, இராணுவம் ஆகியவற்றுக்கான ஒரு கருவியாகும் வாரிசு மற்றும் சொத்துடமையை முன்னிறுத்திய எதிர்பாலுறவு குடும்ப அமைப்பானது தனது நோக்கங்களில் தெளிவினைக் கொண்டது. அரசு இராணுவத்தை நிர்வகிக்க தமது பலத்தினை தொடர்ந்தும் கொண்டு செல்ல, உற்பத்தி தேவைக்கு என தேசங்களுக்கு திருமணத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆண்-பெண் உறவுகள் கட்டாயமானவை. அத்தகைய கட்டுப்படுத்தல் இல்லையெனில் பிள்ளைகளை பெறுவதற்குரிய ஒரு நிரந்தர அமைப்பு இல்லாதுபோய்விடும். ஆதலால் ஏனைய சிறுபான்மைகளது சந்தடி சலசல்கள்; அரசுக்கு மினக்கெட அவசியமற்றவையும். ஆண்-பெண்” திருமணம், அதன் வாயிலான வாரிசுகள் என்கிற ஏற்பாட்டையுடைய குடும்பத்துக்கு மாற்றுகள் ஏற்படாதவரை ஆண்பெண், பெண்-பெண், ஆண்-ஆண், ஒருவர்-பலர், திருநர், வளர்ப்புப் பெற்றோர்கள் என வெவ்வேறு வடிவங்களை உள்ளடக்காதபோது அக் குடும்ப மாதிரிக்கு மாற்றான வாழ்வுமுறைகளைக் கொண்டிருப்பவர்கள் புற்ககணிப்புக்குள்ளாவதும் தொடரும். அவற்றை எதிர்த்து வாழ முடிகிற திருநர்கள், தம் பிள்ளைகளது வகுப்புகளைச் சேரந்த சக குழந்தைகள் தம்மை அவர்களுடன் காண்கிறபோது தமது சராசரிகளை மீறிய தோற்றத்திற்காகவும் உரத்த இருப்பிற்காகவும் தமது பிள்ளைகளை தண்டிக்க முயல்வரோ அவர்கள்மீது வெறுப்பை உமிழ்வரோ என அச்சப்படுவதை ஜெமா தனது அனுபவத்தில் பதிவு செய்கிறார். பல தாய்களையுடைய தங்களுடைய இருப்பை, தாம் வளர்க்கும் பிள்ளையை அது பாதிப்பதை, அதை ஒழுக்கமற்ற வெறுப்புக்குரிய (மரபான) குடும்பத்தை அவமதிக்கும் சூழலின் விளைபொருளாக பார்க்கக்கூடிய யதார்த்தத்ததை பதிவு செய்கிறார். குறிப்பாக, பலவகையிலும் சிறுபான்மையினராய் இருப்பதால் சிறு குழுக்களாக இயங்குகிற திருநர்கள் போதிய வெளி ஆதரவு அற்றவர்களாக தனிமைப்படுத்தப்பட்டு(ம்) இருப்பார்கள். மிக நெருக்கமான குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருக்கமான நபர்களாலேயேகூட புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதே அவர்களது யதார்த்தமாக இருக்கிறபோது அவர்கள் பெற்றோராகுதலின்போது மற்றவர்களது ஆதரவின்றியே அதை கொண்டு செல்ல வேண்டியிருக்கும். திருநர் எதிர்கொள்ளும் சவால்களை நன்கறிந்தவர்களான பெண்களிடையேயும் திருநங்கை மற்றும் சிறுபான்மைப் பாலினங்களது தாய்மாரை எதிர்கொள்ளவும் ஆதரவு வழங்கவும் தயக்கமிருக்கிறது.
'உண்மையில் தமது உடல் தொடர்பாக சுயாதீனமாக எண்ணங்களை, வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறவர்களுக்கு இவ் எதிர்பாலுறவை மையப்படுத்தும் மற்றும் ஆண் ஆதிக்க சூழலில் இடமில்லை. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட தோழமைகளையும் தனிமைப்படுத்தப்படுதலையும் திருநர் தம் வாழ்வில் எதிர்பார்க்க முடியும். சுதந்திர வெளிப்பாடுகளுடனான தமது இருப்புத் தொடர்பில் யாருக்கும் பதில் சொல்ல விரும்பாதவர்கள் இதனால் கடும் ஆட்சேபனைக்கு உள்ளாகிறார்கள். சுதந்திரம் பெற்ற மனிதர்கள் சுதந்திரமாக தமது இருப்பைக் கொண்டாடியபடி வாழவே விரும்புவார்கள். சமகாலத்திலும் சென்ற காலங்களைப் போல பச்சோந்திகளாய் இவ் அமைப்பினுள் அதன் விதிகளுக்கமைய ஒளிந்துமறைந்து 'களவாக' தமது வாழ்வை வாழ வேண்டியிருப்பதை அவர்கள் கிஞ்சித்தும் விரும்பார்கள். திருநர்களது உரத்த இருப்பும் அத்தகையதே. குறிப்பாக திருநங்கைகள் தாம் தமது இருப்பை அடையாளங்கண்டு உரிய மாற்று சிகிச்சைகளுக்குட்பட்டு தமது அடையாளத்தை பெறுகிறபோது அதுவரைகால் தாம் ஏங்கியிருந்த அதன் வெளிப்படைத்தன்மையைச் சுதந்திரமாக அனுபவிக்கவே விரும்புகிறார்கள். இங்கே ஜெமா மிகத்தெளிவாக எழுதுகிறார் “பாலியல்ரீதியாகச் சுதந்திரமாக நான் இருப்பதென்பது என்னை என் தாய்மையுணர்ச்சியிலிருந்தோ என் பிள்ளை மீதான அன்பிலிருந்தோ விலக்கிவிடுகிற ஒன்று அல்ல. பாலுறவு என்பது தாய்மார்களுக்குமுரியதே. பிள்ளை பெற்றவர்கள் என்பதால் அவர்கள் தமக்குப் பிடித்த விடயங்களைச் செய்வதிலிருந்தோ தடையற்று தம்மிருப்பை வெளிப்படுத்துவதிலிருந்தோ விலகிப் போக வேண்டியதில்லை. எந்த வயதிலும் தாங்கள் விரும்புகிற நபராகத் தங்களை வைத்திருக்கிற உரிமை யாவருக்குமுண்டு. தனது தாய் விரும்பியதைச் செய்தவாறு தன்னம்பிக்கையுடன் இருக்கும்போதே அதை அவதானிக்கிற பிளளைகளும் தமக்கான தன்னப்பிக்கையைப் பெறுவார்கள். முக்கியமாக அவர்கள் இளம் பதின்மராக மாறுகிறபோது தமதான உறவுகளையும் ஆரோக்கியமான வகையில் அணுகுவார்கள், தேருவார்கள். மேலும், அவர்கள் வளர்ந்து வருகையில் தம்மை அவர்கள் சிலவேளை திருநராகவோ சமபாலுறவாளராகவோ அடையாளங் காணக்கூடும். அப்போது நாம் செய்ய வேண்டியதும் எவ்வித நிபந்தனையுமின்றி அவர்களை ஏற்றுக்கொள்வதே.”
*Tamil Intro to the Gemma's article "motherhood"
16
D O O H R D E O H O T H O R M E MOTH Transition Stories:
Gemma Starlight of the Dark Star
My
existence is controversial, my rights unrecognized, and my womanhood and brownness denied by bigotry… And yet, I am happy. 27 years of walking in the dark, and only recently do I see the vast greatness and immeasurable beauty of who I am. It was a journey rife with child abuse, homelessness, addiction, and emotional dissonance. I am of the very few that survive the ordeal of finding out their deepest needs, emerging out of the water from an exhausting question that was cast in the ocean of my being. Through my lived experiences, I’ve come to know much wisdom and it’s important that I contribute to the knowledge-building and meaning-making that many queer and trans folx need to read. From the bottom of my heart, I’d like to share some of my experiences and nuances that cover topics that are too often glossed over. These are the elements of my transition story that I cherish and think about the most. This is going to be a new series called, Transition Stories! Embarking on a journey of important topics, let’s start with my own experiences with motherhood! Firstly, I am a woman of many complex dimensions. I’m an unapologetic sex worker, a visual artist, musician, jester of a local performance troupe, a newly born poet, and a kick-ass lesbian queer brown mother. My passions and love continue to flourish wildly, especially with this being my first year openly coming into myself as a mother. Unfortunately, the intersections that I inhabit has made my journey, of discovering what my motherhood feels like, full of barriers and stigma when looking for validation and community care.
Mothers are allowed to love sex, embrace orgasms, take up space unapologetically, to dress and carry themselves with unrestrained attitude. We can still be who we want to be, at any age, regardless if we have children or not. Accepting and acting on our most intimate needs is healthy for a mother, but also a source of confidence that children can learn from. When a child sees how we unapologetically celebrate ourselves, it paves the way for body and sex-positivity, an avenue of thought that youth, in general, are barred from learning.
- CHARLES FOURIER
I have to endure stereotypes that label me as too sexually deviant and chaotic to share my presence with my child. Trans women in general often get unfairly infantilized, meaning that we get treated as if we have no concrete experiences or knowledge on how to take care of ourselves and others. We have little hope of being taken seriously or of being seen as smart, capable, creative, and resilient mothers. Our womanhood and motherhood become denied to us because of the cishetero ethos of what motherhood is supposed to look like. Society expects there to be a cishet man with a cishet woman who is expected to be fertile and give birth to mostly sons. This tradition leaves out a greater, vastly diverse spectrum of family and love. What complicates it further for me is the atmosphere of monogamy. I am a mother who shares and parents our amazing daughter with several other mothers and lovers. Many have known that I am polyamorous, but very few know what that looks like and how unbound our love is. From this, I definitely worry about how my daughter’s peers will react to her when they see us all together and the violence that she will inevitably have to endure. I can already picture how teachers will react with disdain to the presence of many mothers, dubbing it as immoral and an abomination of family. It doesn’t help that we have very few folx from outside our circle that can advocate for us.
18
Even among my own more aware cishet peers, there is always a hesitation to witness and visibly support trans and queer mothers. For instance, reasons that cishet women look down on my parenting would be that I’m loud, overconfident, visibly sex-positive, strong-worded and bold, and that am not afraid to display my power. Aren’t these the very things that women celebrate other women for though? Unfortunately, trans and queer mothers should expect long stretches of isolation and to only expect a few friendships along the way. Our existence really pushes us to be best friends with ourselves due to the frequent displacement and misunderstandings that haunt our every desire to give and be given care. There’s also this expectation for mothers to step aside, stay quiet, be complacent and serve, and to visibility display that they feel old, ugly, and irrelevant. This is a power structure designed by cis-hetero-patriarchal values to condemn women’s bodily autonomy and expressions to expire very quickly. This leads to a terrible condemnation of women who are unapologetic and making their existence known. I mean, yes. I am a jester slut princess, but that shouldn’t strip me of my humanity and capabilities. If anything, I think we need to give mothers much more independence to continue reaching deep within themselves, to experience new opportunities and ways of being. Just because I love sex and hunger for others, it doesn’t mean that I love my daughter any less. It doesn’t mean I won’t show up for her or her other mothers.
As a new mother, I am reflecting on all of this deeply: I want my daughter to normalize the knowledge that sex is for her to enjoy and to embrace on her own terms. I want her to discover the depths of what is pleasurable to her, to listen to her body, and to not be caged in by the ridiculous myth that is virginity and monogamy. For her to know that it is healthy to be creating boundaries and to make consent ongoing and clear, to be received by others with respect as the standard, not the exception. I want her to embrace her body, to see orgasms and exploration as healthy. I want her to know that periods, masturbation, and period sex are completely normal and safe. That her fertility is never a sign of her self-worth. On the flip side, I’d want to build up trust with her for her to feel confident enough to ask about my own life as a way of validation for us both. If she asks about my own sexual experiences and orgasms, I will strive to be clear and honest. If she is wondering about my survivalhood, I will be open and tender. As she evolves, I also want to deeply acknowledge her. If she is transgender, I will support her. If she is queer, I will stand with her. If she is non-binary, gender nonconforming, intersex, or any other way of being, I will fuck’n show up and support her. No questions asked.
Mothers are allowed to love sex, embrace orgasms, take up space unapologetically, to dress and carry themselves with unrestrained attitude. We can still be who we want to be, at any age, regardless if we have children or not. Accepting and acting on our most intimate needs is healthy for a mother, but also a source of confidence that children can learn from. When a child sees how we unapologetically celebrate ourselves, it paves the way for body and sex positivity, an avenue of thought that youth, in general, are barred from learning.
Parents, you need to really understand that your children owe you nothing. You are not entitled to own them, blackmail them, withdraw safety and shelter. Children don’t exist to be a property that’s to be punished out of petty fears. Their voices and consent matter!
As they become adolescents and teens, they also have the right to explore their sexuality in the safety of their own homes. Inevitably, they will feel their bodies awaken, whether on their own or with others and to shun them from their safe space is to force them to gather experiences in less secure, greater risk spaces where their agency and sense of self-power may not be acknowledged.
These reflections are deeply intimate to me and I hope to give you a glimpse into a much broader world of love, passion, and family. As a final note, shoutouts to the loves of my life for their partnerships and to the circle of lovers who have been labouring endlessly to ensure that our inner circle is safe from outside intrusion! That’s deep mutuality and I love it!
Title: Wombsis
20
I beg for you as my body is brought closer By the kindling of many others and the luscious smiles Of daring curiosity, dancing across our lips, Shifting and turning, desperately searching, For that taste of queerness all encompassing, Discovering the truths of our skin and sweat. I am wet, Of passion and sudden gasps, My throat is full of moans, Devoured by a chorus of Voracious hunger, taking turns to churn The flavour of how we cum together. Breathing, quivering, roaring. I need more of everyone To take me to my sweet spot Of honey and oozing nectar, Pouring out of my body, My mind explodes and yearns for The deep mutuality of our L O V E.
- Gemma Starlight of the Dark Star
சூ னி ய க் கா ரி க ளு ம்
அ வ ர் க ள து
சூ னி ய வே ட் டை யு ம்
சந்திரா பதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில் (witch-hunt) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Federici என்பவர் குறிப்பிடத்தக்கவர். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஜேர்மனி, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த பின்பும் மனிதர்கள் சூனியம், சாஸ்திரம் போன்ற அறிவிற்கு பொருந்தாத விடயங்களை இன்றும் மிகையாக நம்புவதைக் காணலாம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பு அறிவுத்துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் அமெரிக்காவில் மேலே குறிப்பிடும் பகுதிகளிலும், மற்றும் உலக நாடுகளிலும் சூனியத்தில் நம்பிக்கையானது மிகவும் வலிதானதாகவே இருந்திருக்க முடியும். “Witches“ என்பவர் சூனியக்காரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இந்தச் சூனியக்காரி அடையாளமானது வெறும் வதந்திகளுடனும், சந்தேகங்களுடனும் தொடங்கியது எனலாம். இவ்வாறு ஏன் “சூனியக்காரி“ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள் என்பதை பரிசீலனை செய்வது இன்றியமையாததாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பாரியளவில் நிகழ்ந்திருக்கவில்லை என்பதே நிஜமானது. இக்காலங்களில் மக்கள் நோய்களினால் பாதிப்பிற்கு உள்ளாகும்போது இயற்கை மருத்துவமே பயன்படுத்தப்பட்டது. Salem, Massachusetts இலும் ஏனைய இடங்களிலும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு மனநோய் (hysteria) உள்ளவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பெண்களால் நாட்டுப்புற மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவ முறையில் பெண்களால் இயற்கை மூலிகைகளுடன் paganism எனப்படும் கிறிஸ்தவத்திற்கு முந்திய புராதன மதநம்பிக்கைகளும் பயன்படுத்தப்பட்டது. இங்குதான் பெண்களது சுதந்திரமான செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழலாயிற்று. இவ்வாறு வரம்பு மீறிய, சக்தி வாய்ந்த பெண்கள் மீதே சூனியக்காரி என்ற குற்றம் சுமத்தப்பட்டது. குற்றத்திற்கான காரணங்கள் சில, பெண்களால் செய்யப்படும் இந்த மருத்துவமானது இயற்கைக்கு அப்பாற்பட்டது, தீமை நிறைந்தது என்பதாகும். சேலம் கிராமத்தில் உள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்தை நன்கு பின்பற்றியவர்கள். அதனால் ஆதாமுக்காகவே ஏவாள் படைக்கப்பட்டாள் என்பதை வலிமையாக ஏற்றுக்கொண்டவர்கள். பெண்கள் மனைவியாக இருக்கும்போதே மரியாதைக்குரியவர்கள். அதனை சூனியக்காரிகள் சீர்குலைப்பதாக கருதினார்கள். அங்கு வாழ்ந்த பெண்களை நல்லவர்கள், சூனியக்காரிகள் என வகைப்படுத்தினார்கள். நல்லவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் எனவும் சூனியக்காரிகள் சாத்தானால் கையாளப்படுபவர்கள் எனவும் நம்பப்பட்டது. இவர்கள் கடவுளுக்கு கீழ்படிவதில்லை என்றவாறே குற்றங்கள் சுமத்தப்பட்டன. சூனியக்காரி என்ற சொல்லானது கிரேக்க ஐதீகத்தில் (Greek mythology) இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. எதிரிகளைக் குறிப்பிடவே இச்சொல் பயன்பட்டது. இந்தச் சொல்லுக்கான சித்திரங்கள் மிகவும் மோசமான வரையறையற்ற இழிவுபடுத்தலைக் கொண்டிருந்தன எனலாம். இந்தப் படங்களானது monster, பேய், துஷ்ட தேவதை போன்ற வடிவங்களை ஒத்ததாகவே இருந்துள்ளன. அத்துடன் அவர்கள் நடுராத்திரியில் பேய்களுடன் பாலுறவு கொள்வதாகவும் அதனாலேயே மந்திரசக்தியைப் பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டனர். இவர்கள் 'குழந்தைகளை உண்பார்கள், நரமாமிசம் உண்பார்கள்' (cannibalism) எனவும் கூறப்பட்டார்கள்.
24
வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் (Renaissance) வரைதல் கலையும் சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. இங்கு சூனியக்காரிகளின் வரைபடங்களும் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு வரையப்பட்ட படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது பின்வரும் விளக்கத்தைப் கொண்ட படமாகும். பெண்கள் நிர்வாணமாக தும்புத்தடியில் (broomstick) இருந்துகொண்டே பறப்பதுபோல் அந்த படம் அமைந்தது. இங்கு பயன்படுத்தப்பட்ட தடியின் குறியீடு ஆண் உறுப்பு எனவும் கூறப்படுகிறது. இத்தகைய ஓவியங்களைப் பார்க்கும்போது பெண்கள் மீதான எவ்வளவு கொடூரமான வன்மங்களை வெளிப்படுத்தி உள்ளமை தெரியவருகிறது. பெண்களை கட்டுப்படுத்துவதற்கு ஆண் மைய சமூகமானது கையாளும் கண்ணியமற்ற செயற்பாடு, அவர்களை நிர்வாணமாக்குவதும் பாலியல்ரீதியில் பழி சுமத்துவதுமே என்றால் இன்றும்கூட பொருத்தமாகவே இருக்கும். ஐரோப்பாவில் பொதுவாக 15- 17ம் நூற்றாண்டுகளில் இந்த சூனியவேட்டை நடந்ததாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது 1450 - 1750 காலப்பகுதியில் ஆகும். ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 40,000 – 60,000 வரையான பெண்கள் குற்றம் சாட்டப்பட்டும், உலகலாவிய ரீதியில் 100,000 இற்கும் அதிகமாகவே கொல்லப்பட்டனர். 1486இல் கத்தோலிக்க மதகுரு ஹென்றி கிராமர் (Heinrich Kramer), ஜேக்கப் ஸ்பிறிங்கர் (Jacob Springer) ஆகியோரால் லத்தீன் மொழியில் எழுதி மல்லீயஸ் மாலெபிகாரம் (Malleus Maleficarum ) எனும் சூனியம் பற்றிய சிறப்பு கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் ஜேர்மனியில் வெளியிடப்பட்டது. இது, நவீன ஐரோப்பிய காலத்தில் துன்புறுத்தலை ஊக்குவிக்கப் பயன்பட்ட முக்கிய நூலாக நம்பப்படுகிறது. இந்நூல் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. சூனியத்திற்கும் witch craft இற்கும் பேயியல் – பேய் பற்றிய நம்பிக்கைக்கும் (demonology) இடையேயுள்ள தொடர்பை விளக்குவதாகவும் கருதப்பட்டது. ஆங்கிலத்தில் இது Hummer of Witches என அழைக்கப்பட்டது. Witches என பெண்களையே இங்கே குறிப்பிடப்படுகிறது. இப்புத்தகம் 16, 17ம் நூற்றாண்டுகளில் சூனியத்தின் மீது மிருகத்தனமான வழக்கு தொடரப் பங்களித்தது எனவும், மக்களின் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. இது மூன்று பகுதிகளாக பிரித்து பார்க்கப்படுகிறது. பகுதி ஒன்றில் சூனியம் என்பது உண்மையானதா? அல்லது கற்பனையானதா? பிசாசுகள் இருப்பது உண்மை ஆதலால் சூனியமும் உண்மையே. இங்கு தீங்கு விளைவிக்கும் மந்திர செயல்களைச் செய்வதற்கான ஆற்றலை சூனியக்காரி சாத்தானுடன் செய்யும் ஒப்பந்தம் மூலமே பெற்றுக்கொள்கிறாள் எனவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பின்வருமாறு விபரிக்கின்றது: 1.பிசாசுடன் ஒரு ஒப்பந்தம். 2.பிசாசுடன் பாலியல் உறவு. 3.வான்வழி விமானம். 4.சாத்தானின் தலைமையில் சந்திப்பு. 5.தீங்கிழைக்கும் மந்திரத்தின் நடைமுறை. 6.குழந்தைகளின் படுகொலை. பகுதி இரண்டில் மந்திரவாதிகள் எவ்வாறு மந்திரங்களை பயன்படுத்துகிறார்கள்? சூனியத்தால் ஏற்படும் தீங்குகளாக பஞ்சம், நோய், மழையின்மை, பயிர்செய்கையில் விளைச்சலின்மை, சமூகபிளவுகள், போர் போன்றவை குறிப்பிடப்படுகிறது. சூனியத்தை எவ்வாறு தடுப்பது ? பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது ? எனவும் கூறப்படுகிறது. பகுதி மூன்றில் சூனியக்காரரை எவ்வாறு கண்டறிவது? (குற்றச்சாட்டுகளைச் சேகரித்தல், சாட்சிகளை விசாரித்தல்) சூனியக்காரரை எவ்வாறு தண்டிப்பது? இங்கு தண்டனையில் கைது செய்தல், சிறையில் இடுதல், சித்திரவதை செய்தல், மரணதண்டனை அளித்தல் என பல்வகை கூறப்படுகிறது. மரணதண்டனையில் தூக்குத்தண்டனை (hanging) பிரதானமானது எனலாம்.
சூனியக்காரரை நிரூபிக்க ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் எனவும், இவ் ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதற்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட சித்திரவதைக்குப் பலவகையான துன்புறுத்தும் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் சில மாதிரி: நித்திரையின்றி வைத்திருத்தல் (Sleeping deprivation ), குற்றவாளியைக் கதிரையுடன் பிணைத்து நீருக்குள் அமிழ்த்துதல் (Dunking chair), இரும்பாலான முகமூடி (Witch’s Bridle) , Pear of Anguish, முள்ளுக்கரண்டியை ஒத்த சாதனம் (Heretic’s fork), witch cutting, தீயில் போடுதல் (Burning at the stake) போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு Hummer of Witches எனும் நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுவதுடன், 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சூனியத்தின் மீது தொகையாக வழக்குகள் தொடரக் காரணமாகவும் நீதிமன்றங்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நூல் சுதந்திரமான பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டதாகும். சேலத்தில் முதன்முதலில் குற்றம் சாட்டப்பட்டர் Sarah Good என்ற பெண் ஆவர். இவர் பெப்ரவரி 29, 1692ல் கைது செய்யப்பட்டார். அவர் அக்குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தபோது பலர் சாட்சியமளித்தனர். இவர்களில் சாரா குட் இன் கணவரும் வேறு பெண்களும் உள்ளடங்குவர். சூனியக்காரிகளின் வேட்டை என்னும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளார்கள். பலர் தூக்கில் தொங்கவிடப்பட்டும், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள். பொதுவாக witch-hunt இல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சரியாக சொல்ல முடிவதில்லை. அக்கால கட்டங்களில் மக்கள் வறுமையினால் பெரும் கஸ்டங்களை அனுபவித்தார்கள். அதேவேளை பலவித நோய்த் தொற்றுக்களும் ஏற்பட்டன. மனநிலை பாதிப்பிற்கும் உட்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு அப்பகுதியில் வாழ்ந்த பெண்களால் இயற்கை முறையில் மருத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு பெண்கள் சுதந்திரமாகவும், ஆற்றல் கொண்டவராகவும், பொருளாதார பலம் வாய்ந்தவராகவும் முன்னேற்றம் வகித்தார்கள். ஆனால் சமூக அமைப்பானது மதசார்பான கருத்துக்கும் ஆண்மைய வாதத்திற்கும் முதன்மை அளிக்கும் நிலையிலேயே இருந்தது. இதனால் ஆண்கள் இயல்பாக பெண்களைவிட உயர்ந்தவர்களாயும், பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும் வாழ்வதையே விரும்பினார்கள். இதற்கு மாறாக பெண்கள் பொதுவெளிக்கு வருவதை விரும்பவில்லை. இதனை மறைமுகமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவே சூனியக்காரிகள் என்ற பட்டத்தை மிக கேவலமாக சித்தரித்தார்கள். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பெண்களை கண்ணியமான சமூகத்திற்கு வெளியே தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள். இதற்கு தேவாலயமும் பரிந்துரை செய்தமையும் குறிப்பிடத்தக்கதே. ஆனால் இது பெண்களுக்கு எதிரான வன்முறை என்றே பெண்ணியவாதிகள் வலியுறுத்துகிறார்கள். Silvia Federici எனும் பெண்ணிலைவாதி தமது ஆய்வுகளில் பெண்களின் கைகளில் வளர்ச்சியடைந்து வந்த மருத்துவத்துறையை பறித்தெடுத்து ஆண்களிடம் கையளிப்பு செய்வதற்கும், பெண்களை கட்டுப்படுத்தி ஆண்களுக்கு கீழ்ப்பட்டவராக வீட்டுக்குள் அடிபணிய வைப்பதற்குமே இந்த சூனியக்காரி வேட்டையானது பெரும் பங்கு வகித்ததை வரலாற்றுரீதியில் பெண்களுக்கு இழைத்த பெரும் கொடுமை என்றே குறிப்பிடுகிறார். எனவே சூனியக்காரிகளின் வேட்டை என்பதனை வெறும் இறையியல் (Theology) கண்ணோட்டம் கொண்டு நோக்காது அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியுடன் ஆய்வு செய்வதே பகுத்தறிவிற்கு உகந்ததாக இருக்கும் எனலாம். இந்த வகையிலேயே அறிவுஜீவிகளாலும், பெண்ணியலாளர்களாலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. அவர்கள் அக்கால கட்டங்களில் கிறிஸ்தவ மதநம்பிக்கை (powerful Religious), சமூக நெருக்கடி (Social tension), பால்வேறுபாடு (Gender) சமூக்கட்டமைப்பு (Patriarchy system) பெண்வெறுப்பு (Misogyny) போன்ற பல பின்னணியில் ஆராய்ந்து தமது தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளமை அறிவியல் உலகில் வரவேற்கப்படுகிறது.
26
15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் சமூகத்தில் மதநம்பிக்கை மிகையாக இருந்தது எனலாம். பொதுவாக கத்தோலிக்க மதமே பின்பற்றப்பட்டு வந்துள்ளதுடன், கத்தோலிக்க ஆலயம், மதபோதகர்களின் கருத்துக்களை பின்பற்றக் கூடியதாகவும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே மதபோதகர் ஹென்றிச் கிராமரால் வெளியிடப்பட்ட Hammer of witches என்கிற நூலும். இந்நூல் பல மொழிகளிலும், பலதடவை மறுபிரசுரமும் செய்யப்பட்டுள்ளது. பைபிளையும், இந்நூலையும் தொடர்புபடுத்தி மக்களின் மதநம்பிக்கையினை மிக ஆழமாக வலுப்படுத்தியது என்றால் பொருத்தமானதே. இதனால் மக்கள் சூனியம் பற்றி கூறப்பட்ட எல்லா கட்டுக்கதைகளையும். கண்மூடித்தனமாக நம்பினார்கள். இன்றும்கூட சூனியம், சாஸ்திரங்கள் என மதம் சார்பாக மக்கள் நம்பிக்கை இருக்கவே செய்கிறது. அடுத்து அக்காலகட்டத்தில் நிலவிய சமூக நெருக்கடிகள் (Social tension) பற்றி பார்த்தால், சமூகமானது பலவித துன்பங்களுக்கு ஒரே நேரத்தில் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். மிகக் கடுமையான காலநிலை மாற்றங்கள் குறிப்பாக மழையின்மை, பயிர்செய்கையில் பாதிப்பு, பஞ்சம், வறுமை, அதிகளவு நோய்த்தொற்று, காலனிய நாடுகளாக இருந்தமையால் நடந்த போர்கள், உள்ளூர் குழுக்கள் இடையே குழுமோதல் இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களை கடக்க வேண்டிய கடினமான காலத்தையே கொண்டிருந்தார்கள் எனலாம். இதில் இந்த சூனியகார வேட்டையாடுதல் என்பது கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது என்பதை வரலாறுகளை விளக்கும் புத்தகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. சமூக்கட்டமைப்பு என பார்த்தால் அன்றைய சூழல் (patriarchy) ஆண்மைய கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டதாகவே இருந்துள்ளது. அதாவது ஆண் மேலாதிக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது எனலாம். இங்கு பெண் என்பவள் பால் ரீதியாக ஆணுக்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டவளாகவே இருப்பதே விரும்பப்பட்டது. ஆனால் அன்றய காலத்தில் விஞ்ஞானம் பெரியளவில் வளர்ச்சியின்றி இருந்தமையால் ஆங்கில மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. குழந்தைபேறு, கருத்தடை, கருக்கலைப்பு, மற்றும் இயற்கை மூலிகை மருந்துகள் என பெண்களே இயற்கை மருத்துவத்துறையில் முன்னேறியவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இப் பெண்கள் சுதந்திரமாகவும், ஆண்களின் கட்டுப்பாட்டை விரும்பாதவர்களாகவே இருந்துள்ளார்கள். பெண்ணிய ஆய்வாளர்கள் சூனிய வேட்டை (witch-hunt) என்பதனை அறிவுபூர்வமாகவே விபரித்துள்ளார்கள். இவர்களில் இன்று பெரிதும் பேசப்படும் ஆய்வாளரான Silvia Federici சூனிய காலகட்ட ஆய்வுகளை Caliban and the Witch, Witches Witch-Hunting and Woman போன்ற தமது நூல்களில் விவரித்துள்ளார். பண்ணையுடமை சமுதாயத்தில் பெண்களும், ஆண்களும் உழைப்பில் ஈடுபட்டார்கள். குடும்ப நிறுவனத்தில் சுரண்டல் இருக்கவில்லை. பெண்கள் விரும்பியே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் நிலவுடமை சமுதாயத்தில் ஆண்கள், பெண்களையும் உடமையாக்குவது நிகழ்கிறது. அக்காலகட்டத்தில் பெண்கள் குழந்தைப்பேறு, கருக்கலைப்பு, கருத்தடை, வேறு நோய்க்கான மூலிகை மருந்துகள் என மருத்துவத்துறையில் முன்னேறிய நிலையில் சுதந்திரமாக இருந்துள்ளனர். இவர்கள் ஆண்களுக்கு கீழ்ப்படியாமையும், சுதந்திரமும் கொண்டிருந்ததால் ஆண் மேலாண்மை கொண்டவர்கள் பெண்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டும், பெண்களிடம் இருந்த மருத்துவத்தை பறித்து ஆண்களிடம் கொடுப்பதற்கும் இந்த சூனியவேட்டையை நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்கள் மருத்துவதுறைக்கு வருவதற்கு மருத்துவப் பட்டதாரியாக இருத்தல் வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. அதேநேரம் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதியற்ற நிலையும் காணப்பட்டது. சமூகமானது நிலவுடமையில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தபோது, ஆண்கள் தொழிற்சாலையிற்கு செல்ல வீட்டில் இருந்து ஒருவர் கவனிக்க வேண்டிய தேவை உருவாகிறது. இத்தேவை பெண்களை வீட்டுக்குள் முடக்குவதன் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இது பெண்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்பம் என்ற நிறுவனத்தின் ஊடாக குழந்தைகளை பெறுவதும், வளர்ப்பதும் என்றானபோது, குழந்தை பெறுவது, பெண்களுக்கு அந்நியப்பட்டுப் போகிறது. எனவே, ‘சூனியக்காரி’ என்று பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டதனால் பெண்களுடைய சுதந்திரமான செயற்பாடானது, வீட்டுக்குள் முடக்கப்படும் நிலமை உருவாகிறது, இத்தகைய நிகழ்வு மறைமுகமாக முதலாளித்துவத்தின் மூலதன குவிப்பிற்கே வழிவகுத்தது.
28
நா ம்
த னி த் தி ரு க் கை யி ல் சிறுவர் கதைகளும் சமூகநீதியும்
1
சமூகநீதி குறித்து 'கனடா”வில் இருந்து பேசுகிறபோது, தவிர்க்கவே முடியாதது இந்நாடு உருவாக்கப்படுவதற்காக இங்கே நடந்த ஒடுக்குமுறைகள் குறித்தன ஆகும். இத் தேசத்தின் உருவாக்கத்திற்காக இந்நிலப்பரப்பின் பூர்வீகக்குடிகள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, தேச உருவாக்கத்தின் ஆதாரத்தைத் (Foundation) தக்கவைப்பதற்கென அமைப்பியல்ரீதியாகவும் கொள்கை (Policy) அளவிலும் ஆழ ஊன்றி இன்றுவரை தொடரும் இனவழிப்பு, குழந்தைகளின் எலும்புகளையும் கொண்டிருக்கவே செய்கிறது. கனடாவின் முதல் பிரதமர் மற்றும் தேசத்தின் தந்தை என வரலாற்றில் பதியப்பட்டவரும் சமகாலத்தில் இனப்படுகொலையின் சூத்திரதாரி என கட்டுடைக்கப்பட்டவருமான ஜோன் ஏ மக்டோனால்ட் பாராளுமன்றத்தில் கூறிய பிரபலமான மேற்கோளில் அவர் மிகவும் தெளிவாக தமது நோக்கத்தை முன்வைக்கிறார்: இக்காட்டுமிராண்டிகளது பிள்ளைகளுக்கான பாடசாலை அவர்களுக்கென ஒதுக்கப்பட்டவிடங்களில் அமைக்கப்படக்கூடாது, ஏனெனில் அப்படி அமைத்தால் அவர்கள் அவர்களது பெற்றோர்களாகிய காட்டுமிராண்டிகளுக்கு அருகில் இருப்பதுடன் அக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குரிய பயிற்சியையும் சிந்தனையோட்டத்தையும்தான் இயல்புகளாய் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்னதான் எங்களது மேற்கத்தைய கல்வியை எழுதப் படிக்கப் கற்றாலும், எழுதப்படிக்கத் தெரிந்த ஒரு காட்டுமிராண்டிகளாகவே இருப்பர். இதனால் நாம் மிகவும் கவனமாக அவர்களது பெற்றோரின் சகவாசத்திலிருந்து அவர்களை விலக்கி அவர்களை வெள்ளையர்களான நமது பழக்கவழக்கங்களை தகவமைக்கவல்ல பயிற்சிக்கூடங்களில் போடவேண்டும் (1883). இதன் காரணமாக, திட்டமிட்டு பூர்விகக்குடிகளது குடியிருப்புகளுள் கல்விசாலைகள் அமைக்கப்பட்டாமல், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்பட்டு, அவர்களை “காட்டுமிராண்டி” (Savage) தோற்றத்திலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் மேற்கின் நாகரிகவான்களாக மாற்றுகிறோம் என்கிற போர்வையில், வலுக்கட்டாயமாக கத்தோலிக்க பள்ளி விடுதிகளில் தமது (மொழி, உடை, உணவு, பழக்கவழக்கங்களை அந்நியப்படுத்துவதூடாக) பண்பாட்டின் சகல கூறுகளிலிருந்தும் அகற்றப்பட்டார்கள். “killing Indian in the child” - ஒரு பிள்ளையிடமிருந்து அதன் பூர்வக்குடி அடையாளங்களைக் கொன்றால் அது தன்னாரவாரம் ஒரு வெள்ளை மனிதனின் சிந்தனைக்கு தகவமைத்துக்கொள்ளும் என்று செயற்பட்டார்கள். இந்நாட்டை கட்டியமைத்தலின் கொள்கைவகுப்பில் இதுவே முதன்மையானதாக இருந்தது.
2 ஐரோப்பியர்களின் வருகையின்முன் - கனடா ஒரு நாடாக எழுப்பப்படுமுன் (the Inuit, Beothuk, Algonquin, Iroquois, Sioux, Pacific Coast Indians, and Cordillera Indians என்கின்ற) ஏழு பிரதான பூர்வீகக்குடிகளுக்குடையதாய் இந்நிலம் இருந்தது. அதேபோல அறுபதுக்கு மேற்பட்ட தனித்துவமான மொழிகளும் இருந்தன. இன்றானால் எண்ணிவிடக் கூடியளவிலான அவர்களுடைய மொழிகளே எஞ்சியுள்ளன. ஆக 2019ஆம் ஆண்டுதான் கனடா பூர்விகரின் மொழிகளை பாதுகாக்கவும் புத்துயிர் அளிக்கவும் Indigenous Languages Act என்கிற சட்டத்தை சமர்ப்பித்தது. ஐரோப்பியரின் வருகைக்கு முன், ஐரோப்பியரின் வருகைக்குப் பின் என ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வரலாற்றில் அழிக்கப்பட்டனதும் மக்களது அதற்கெதிரான எழுச்சியினதும் கதைகளையும் தெரிந்துகொள்ளமுடியும். இந்நிலத்தின் குடிகளை 'நாகரிமானவர்களாக்க' ஐரோப்பியர்களுக்குத் தெரிந்த வழியெல்லாம் தமது மொழியைக் கற்பித்தலும் ஒரேவிதமான சீருடை அணிவித்தலும் தலைமுடியைக் கத்தரித்தலும் கூடவே தமது மதம் சுமந்த பரிசுத்த வேதாகமமும் தான். இவையே நெறியற்ற அவர்களை நெறிப்படுத்தும் என பூர்வீகரது குழந்தைகள் திருடப்பட்டு அல்லது பலவந்தமாகவே பள்ளி விடுதிகளில் அடைக்கப்பட்டார்கள். இங்கே பல குழந்தைகள் அவற்றின் மேலாண்மையாளர்களாலும் தப்பிச் செல்ல முயல்கையில் வழியறியாத் திசைகளில் கடும்பனியிலும் கொல்லப்பட்டனர்.
. இன்றுவரையில் அவ் அனுபவங்களைப் எதிர்கொண்டவர்களிடம் உள்ள அதன் எதிர்விளைவுகள் அக்குடிகளை துரத்துகின்ற தீராத்துயரத்தின் நினைவுகளாய் உளவியல் சிக்கல்களாக நிற்கின்றன – அவ் அனுபவம் அவர்களது வாழ்வை உடைத்து என்றென்றைக்குமாய் மாற்றிப்போட்டிருக்கிறது. அந்த வரலாற்றின் நினைவு, இன்னும் அந்த நினைவின் மனத்தாக்கம் (Trauma) உயிருடனிருக்கிற அந்த நரகத்தில் வசித்த அனைவரது உளவியலையும் மட்டுமன்றி அவர்களது கருவில் வளர்ந்த பிள்ளைகளிலும், பிள்ளைகள்தம் பிள்ளைகளிடத்திலும்கூட தலைமுறை தாண்டிய பெரும் மனத்தாக்கமாகத் (Intergenerational trauma) தொடர்கிறது. இங்கே அவர்களுடைய காயங்களுக்கு மருந்தாக, அவற்றிலிருந்து தேறுவதற்கான பண்பாட்டு உற்பத்திகள் (cultural productions) தேவைப்படுகின்றன. 'எனதிந்த மனத்தாக்கம் அடக்குமுறையாளர்களால் தரப்பட்டது, நியாயமற்றது. இது என்னுடைய தவறல்ல, இது அநீதி!' இவை வாய்ப்பேச்சாக ஏனும் தரப்பட்ட ஹாப்பரின் (2008 பெப்ரவரி 13) பூர்விகர்மீதான பள்ளி விடுதி அக்கிரமங்கள் குறித்த பகிரங்க மன்னிப்பு கேட்கல் (Residential school apology) போல, அவர்களது தேறுதலுக்கான பயணத்திற்கான (Healing Journey) முதற் படிகளாகும். ஏனெனில் பாதிப்புக்குள்ளானவர்களை வன்தாக்குதல்களுக்குள்ளானவர்களை ஆற்றுப்படுத்த எதையும் கொண்டிராத சமூகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடந்தவை தமது குற்றமென குடி, போதை, அழிவுப்பாதையில் செல்லத் தலைப்படுவார்கள் குற்றமிழைத்தவர்கள் அதற்கு பொறுப்பெடுக்காதபோது குற்றமிழைக்காதோரே தம்மைத் தண்டித்துக் கொண்டிருப்பார்கள் தம்மைச் சூழ்ந்தவரைத் தண்டிக்கத் தலைப்படுவார்கள்.
“When the school is on the reserve the child lives with its parents, who are savages; he is surrounded by savages, and though he may learn to read and write his habits, and training and mode of thought are Indian. He is simply a savage who can read and write. It has been strongly pressed on myself, as the head of the Department, that Indian children should be withdrawn as much as possible from the parental influence, and the only way to do that would be to put them in central training industrial schools where they will acquire the habits and modes of thought of white men.” John A. Macdonald ( 1883)
துயரமான வகையில் பூர்வீகக்குடிப் பெண்கள் தமது ஆண்களாலும்தான் வன்முறைக்குள்ளாவதும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் சமகாலத்தின் பெரும் துயரம். வீட்டு வன்முறைகளிலிருந்து தப்பிப்போகிற மிகச் சிறிய வயது ஆண்கள், பெண்களே பின்னர் காணாமல் போகின்றார்கள். குற்றத்தின் வலிமை அதுதான் குற்றம் குற்றமற்றவர்களையும வன்முறைச் சுழற்சியில் (cycle of violence) தன்பக்கம் இழுக்கத் தலைப்படும். ஏலவே பூர்வீகக்குடிகளது ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளின் (reserve) வேலைவாய்ப்புகளின்மை, இளைஞர்களுக்கான உடல்-உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வளங்கள் இன்மை, இந் நிலைமைகள் தருகிற வெறுண்மையின் வடிகால்களாக போதை, குடிகளுக்கு அடிமையாக்கப்பட்ட மக்கள் சுயநினைவற்ற தன்நிலை இழந்த மனிதராக தாமும் வன்முறையாளர்களாகிறார்கள், இவ்வாறாகக் குற்றத்தின்பிடி இறுகுகிறது, ஓங்குகிறது.
30
3 கத்தோலிக்க பள்ளி விடுதிகளில் நிகழ்ந்தவற்றுக்கான தீர்வு ஒப்பந்தம் (Settlement Agreement) நிமித்தம் 2008 – 2015 காலவரையில் ஒருங்கமைக்கப்பட்டதே கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (The Truth and Reconciliation Commission of Canada). இக்காலப்பகுதியில் இவ்விடுதியால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தமது கதைகளின் சாட்சிகளானதோடு தொடர்ச்சியான அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்கும் பரிந்துரைகளையும் ஈற்றில் இக் குழு தந்திருந்தது. இத்தகைய அநீதிகளை இழைக்காத ஒரு எதிர்காலத்தை நோக்கி செயற்படவென அக்குழு 94 அழைப்புகளை கனடிய அரசாங்கத்திடம் வழங்கியது. அவற்றை செயற்படுத்தமுன் மிக முக்கியமானதாக அது குறிப்பிட்டது என்னவெனில் “இது எப்படித் தொடங்கியது என்பதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த இருண்ட கடந்த காலத்திலிருந்து நமது அடுத்த தலைமுறை எவ்வாறு முன்னேறும்' என்பதே. இதனாற்தான் இந்நிலத்தின் குடிகளுக்கு நிகழ்ந்தவற்றை அநீதியென ஒப்புக்கொள்வதோடு (acknowledgment) நல்லிணக்கத்திற்கான (reconciliation) முகாந்தரமாக பள்ளிகளது பாடத்திட்டங்களில் இவை குறித்து உரையாடப்படுவதும் முக்கியம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல துறைகளில் கனடாவில் ஏற்பட்ட மாற்றங்கள் - அரச பாடசாலைகளில் அது அமைந்துள்ள நகர் எந்தெந்தக் பூர்வீகக் குடிகளுக்கு சொந்தமானது, அமைவிடங்களின் காலனிய நில அபகரிப்பு அரசியல் என்பதைக் கூறல் உட்பட, காலம்தாழ்த்தியேனும் பாதிக்கப்பட்டோரிடம் ஹாப்பரின் தேசிய மன்னிப்புக் கோரல் வரை முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இந்தப் பின்னணியில்தான் இத்தகைய வரலாற்றினைக் கொண்ட மக்கள் - இன்றும் இந்நாட்டில் சென்ற காலங்களின் காயங்களோடு நெட்டி நிமிர்ந்து வாழ்கின்ற மறைமுக அடக்குமுறைகளை எதிர்கொள்கிறபோதும் அதைமீறும் எத்தனிப்புகளில் எழுச்சி பெறும் அவர்கள், தம் அழியும்/அழிந்த மொழியை மீட்டெடுத்தல் உட்பட தமது வரலாற்றினை பதிவு செய்யவும் வரும் தலைமுறைகளிடம் அவற்றின் பாதிப்புகளைப் பேசுதலின் முக்கியத்துவத்துவத்தையும் குறிப்பாக தமது சிறுவர்களை பயப்படுத்தாமல், அதே நேரம் காலனீய அடக்குமுறைகளில் தமது மனப்பாதிப்பை/தாக்கத்தை குறைக்காமல் அவற்றை எப்படி சிறுவர் நூல்களில் பதிவு செய்வது தொடர்பில் பல உரையாடல்களைச் செய்கின்றார்கள். அவ்வாறாக சிறுவர் நூல்கள் உள்ளடங்கலாக பூர்வீகரின் இலக்கியமானது தம்மக்களின் பல்வித தேவைகளை பூர்த்திசெய்வனவாக வெளிவந்தபடியிருப்பதுடன் இன்று அவை பொதுவெளியிலும் பரவல் அடைகின்றன (CBC தொலைக்காட்சியின் தயாரிப்பில் தற்சமயம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் Trickster தொடர் பூர்வீககுடியினைச்சேர்ந்த எழுத்தாளர் Eden Robinsonஇன் அதே தலைப்பில் அமைந்த நாவலின் திரைவடிவம்). அத்துடன் முன்னம்போலன்றி அவை அச் சமூகங்களிலிருந்தே எழுகின்றன. (கனடா) ரொறன்ரோ பொதுநூலகத்தில் நூலகக்கணக்கு உடையவர்கள் மின்னூல்களாகவும் மற்றும் ஒலிநூல்களாகவும் வாசிக்கத் தகுந்தனவாய் இன்று ரொறன்ரோ நூல் களஞ்சியத்துள் (https://toronto.overdrive.com/) – சிறுவர் கதைகள் உள்ளிட்டதான பல பூர்வீகர் வரலாற்றினை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்கள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து இரண்டு சிறுவர் நூல்கள், “When We were Alone” - “நாம் தனித்திருக்கையில்” மற்றும் “Will I See” - 'நான் காண்பேனா” குறித்த அறிமுகங்களுடன் இவ் உரையாடலைத் தொடங்கலாம்!
When We were Alone (5இலிருந்து 8 வயதினருக்கானது) சிறுமியொருத்தி பாட்டியுடன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறபோது அவர் தொடர்பான பலவற்றை அவதானிக்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கு அவர் குறித்து அறியும் ஆவல் பிறக்கிறது. பாட்டியின் தலைமுடியின் நீண்ட பின்னல் தோட்டத்திலுள்ளதொரு கொடியைவிடப் பெரிதாகவும் அவருடுத்தும் ஆடைகள் அதியதி வண்ணங்களிலும் இருப்பதற்கான காரணங்கள் என்ன? அவர் கிறீ மொழியைப் பேசுவது ஏன்? சகோதரன் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் பலப்பல மணி நேரங்கள் செலவளிப்பவராக அவர் இருப்பது ஏன்? சிறுமி இவை குறித்து பாட்டியிடம் கேட்கிற பொழுது அவர்களது கதை அங்கே தொடங்குகிறது. நீண்ட காலங்களுக்கு முன் தம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்ட அந்தக் கொடிய பள்ளி விடுதிகளில் தமது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பேத்தியிடம் ஒவ்வொன்றாகச் சொல்லப்படுகிறது. பள்ளிவிடுதிகளில் பூர்வீகக்குடிக் குழந்தைகள்மீது நடத்தப்பட்ட மனிதஉரிமைமீறல்களைப் பேசும், இந் நாட்டின் உருவாக்க வரலாற்றில் மிகக் கொடியதொரு காலம் குறித்த கதைதான், ஆனால் அது இடர்காலங்களை மீறி எழுந்த அம்மக்களின் வலிமை குறித்த கதையும் ஆக அமைகிறது. இவ்வாறாக 'நாம் தனித்திருக்கையில்” என்கிற மிக இளையவருக்கான நூல், மிக கடினமான காலத்தை, அவர்களுக்குப் புரிகிற விதமாய் விபரிக்கிறது. பாலர் வகுப்பிலிருந்து - மூன்றாம் வகுப்புவரை என அட்டவணைப் படுத்தியிருந்தாலும் எழுத்தாளரின் சக கீறீ இன ஒவியரின் அழுத்தமான விளக்க ஓவியங்களுடன் இது பெரியவர்களையும் அசைக்கக்கூடிய கதை. குழந்தைகளுடன் மென்மையான தொனியில் கடந்த காலங்களின் துயர் வரலாறு பற்றின ஒரு உரையாடலைத் ஏற்படுத்த உந்தும் நூல். விடுதியின் கண்காணிப்புகளை கடும் கட்டுப்பாடுகளை எவ்வாறெல்லாம் மீறுவோம் என பாட்டி விபரிக்கின்ற பகுதிகள் ஒவ்வொன்றுமே நெகிழ்ச்சியூட்டுவனவாகவும் பொருந்தும் ஓவியங்களுடன் கவித்துவமாகவும் இருந்தன.
32
பாட்டி! ஏன் நீங்க கனக்க நிறங்களில உடுப்புப் போடுறனிங்க?” இவ்வாறு சிறுமி கேட்டாள். பாட்டி சொன்னார்: “ஏனென்டா பேத்தி... எனக்கு உனது வயதிருக்கும்போது எனது வீட்டில் எனது கிறீ (Cree) சமூகத்துடன் எனது நண்பர்களுடன் நான் வண்ணவண்ண ஆடைகளை உடுத்துபவளாக இருந்தேன். ஆனால் வீட்டிலிருந்து மிகத் தொலைவிருந்த, நாங்கள் போன அந்த 'அவர்களது' பள்ளி விடுதியில் - அவர்கள் எங்களிடம் வேறு ஆடைகளைத் தந்தார்கள். அங்கே எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரித்தான் உடுத்தியிருந்தார்கள். அத்துடன் தரப்பட்ட அந்த ஆடைகளுக்கு வண்ணங்கள் இருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் புயல் மேகங்கள்போல அங்கு குழுமியிருந்தோம். சிறுமி கேட்கிறாள்: 'ஏன் நீங்க அந்த உடுப்புகளத்தான் அங்க போட வேண்டியிருந்தது?”
Book Illustration: Julie Flett
பாட்டி சொன்னார்:
“நாங்கள் அவ்வளவு அழகான வண்ண ஆடைகளை அணிவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்த அனைவரும் ஒரே மாதிரி இருப்பதுதான் அவர்களுக்கு வேண்டுமாயிருந்தது.
எனினும்,
இலையுதிர்காலங்களில் சில பொழுதுகள் நாம் மட்டும் தனித்திருக்கையில்.... அந்த இலைகளும் பல வண்ணங்கள் கொண்டிருக்கும்.. நாம் அந்த இலைகளில் கிடந்து உருளுவோம்! அவர்கள் தந்த உடைகளின்மீது வண்ண இலைகளால் மூடுவோம்! - ஆம் நாம் மீண்டும் வண்ணமயமானவர்களாய் அப்போது மாறி விடுவோம்! இது எம்மை மகிழ்ச்சியிலாழ்த்தியது! ஆதலால்தான் பேத்தி, இப்போது நான் நிறைய வண்ணங்களையே அணிகிறேன்...”
34
இவ் உரையாடல்கள் தொடர்ந்தும் பூர்வீகக் குழந்தைகள் புதிய கலாச்சாரத்தை தகவமைப்பதை (assimilation) துரிதமான நடைமுறைப்படுத்த அவர்களது தலைமுடி வெட்டப்பட்டு தாய்மொழி பேசுதல் தடைசெய்யப்பட்டு ஐரோப்பிய சிறுவர்களைப்போல் “ஆக்கப்பட்ட” வரலாற்றை எளிமையான மொழியில் சிறுமியிடம் கடத்தி நிற்கின்றன. காணும்போது, ஆண்கள் விடுதிக்குப் பிரிக்கப்பட்ட சகோதரனைக்கூட தொட முடியாத – தொட்டு அன்பைத் தெரிவிக்க விடாத - விக்டோரிய கட்டிறுக்க விழுமியங்களையும் தொட்டுச் சென்று, தொடரும் பக்கங்களில் சமகாலத்தில் பாட்டி தலைமுடிவளர்ப்பது, இளமையில் பிரிக்கப்பட்ட சகோதரனுடன்... குடும்பத்தினருடன் அவருக்கிருக்கும் பட்சம் என்பன அவை தடைவிதிக்கப்பட்ட பின்னணியின் அரசியலுடன் உரையாடப்படுகின்றன. இவ் உரையாடல்கள் ஊடாக இந்த அடக்குமுறையின் நினைவுகள் குழந்தைகளுக்கும் கடத்தப்படுகின்றன. Will I See? (16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது) 'நாம் தனித்திருக்கும்போது' ஒருவிதமான அமைதியைப் கதையெனில் “நான் காண்பேனா” திகில் மிகுந்த கதை.
பேணுகிற
சில ஆண்டுகளுக்கு முன்பு படித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போகிற மற்றும் கொலை செய்யப்படுகிற (Missing and Murdered Indigenous Women) பூர்வீகப் பெண்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ஒரு பூர்வீகக்குடிப் மாணவியொருவர் காணாமல்போன செய்தியும், அவர் கொலைசெய்யப்பட்டு பின்னம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியும் ஒரு மாணவியாய் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பெண் பெண்ணாகப் பிறப்பதில்லை பெண்ணாக ஆக்கப்படுகிறாள் என்றார் சிமோன் த பொவார் (Simone de Beauvoir). ஆனால் இங்கே ஒரு சமூகத்தில் பிறந்தவர்கள் தினமும் தமது சாவை பயந்திருத்தல் பிழைத்தலின் பெரும் பகுதியாகிற துயரமும், பெரும்பாலான சமயங்களில் அவர்களது பயமே நியமாகிவிடுவதும் கண்கூடாய் இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பராய்ப் பிறப்பதுபோல, இப்பெருநிலப்பரப்பை தம் வசம் கொண்டிருந்த இக்குடிகளது இன்றைய நிலையும் மரணத்துடன் வாழ்தலாக இருக்கிறது. அதை பிரதிபலிப்பதாய் “நான் காண்பேனா” என்கிற கதையில் வருகிற மே என்கிற பதின்மள் அவளது நகரத்தில் அவள் செல்லுகிற எத்திசையிலும் யாரினதோ நினைவுப்பொருட்களை கண்டெடுக்கிறாள். சுவடுகள் போல அவை பெருகுகின்றன. அவற்றால் ஆன மாலையொன்றை செய்து அணிகிறபோது அது புதுவித உலகை அவள்முன் திறக்கின்றது. அவை நினைவுப்பொருட்கள் அல்ல, குற்றம் நிகழ்ந்ததன் சாட்சியங்கள் என்கிற புரிதல் மெல்ல மெல்ல வாசகர்களிடமும் பரவுகிறது. இளம் வாசகர்களுக்கெனுகிறபோது கதைக்களத்தின் கனதி காரணமாக தமது பாரம்பரியமான நம்பிக்கைகளைக்கொண்டு மிகப் பூடகமாக நிகழ்-வன்முறை பேசப்படுகிறது. கறுப்பு வெள்ளை சித்திரங்களுள் இடையிடையே தெறிபட்டிருக்கிற சிவப்பு பூர்வீகக்குடிப் பெண்கள் எதிர்கொள்கிற பயங்கரங்களைக் குறிப்பதாக அமைந்திருந்தது.
நியமும் கனவும் கலந்ததுபோல தொடரும் கதையில் அப்பொருட்களை விட்டுச்சென்ற பூர்வீகக்குடிப் பெண்கள் எல்லாம் இறுதியில் எதிர்கொண்ட அந்த ஆபத்துமிகுந்த அனுபவத்தை அவளும் பெறுகிறாள். தெருவில் நடந்து செல்லும் அவளை காருக்குள் இழுக்கவரும் பேயினை அவள் தனது முழு விசையும் கொண்டு எதிர்க்கையில் தன்னிடம் அவர்களது நினைவுப்பொருட்களை கிடைக்கச்செய்த அவ்வாறான துர்அனுபவங்களில் பிழைக்காது போன பெண்களின் ஆன்மாவில் ஒரு பலமிருக்கிறதாக உணர்கிறார். அவர்களது ஆன்மா, அவளது யதார்த்தமாகவும் துர்மரணம் ஆவதிலிருந்து அவளைக் காப்பாற்றுவது போல அமைந்திருந்தது இக்கதை. அநீதியில் இறந்தவர்களுக்கு பலமிருக்குமானால் எவ்வாறு இவ்வுலகம் இன்னமும் அதில் திளைத்திருக்க முடியும்? இவ்வாறு மனம் நொந்துகொண்டாலும் அந்தப் பெண் பிழைத்துக்கொண்டாள் என்பது ஆறுதலாய். கடந்த பதிவில் குறிப்பிட்டதுபோல சிறுவர்களால் அன்பை உணர முடியுமெனில் துயரத்தையும் வெறுப்பையும்கூட நன்கு உணருதல் முடியும். அவர்களுடன் அவை பேசப்பட வேண்டும், அவர்களதான மொழியில். எம்மிடம் அவர்களுக்குரிய மொழியில்லையென்பது – தொடர் பயிற்சியூடாக நாம் கடக்க வேண்டியதான- எமது குறைபாடுகளில் போதாமைகளில் ஒன்றே தவிர வேறொன்றுமில்லை. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைக் கொண்டுள்ள சூழலில் அவற்றுக்குள் வாழ வேண்டியிருக்கின்ற அவர்கள் அதை நன்கறிந்திருக்க வேண்டியது அவர்களது உரிமை என்பதாலும் அவை சொல்லப்படவேண்டும். சொல்ல சொல்லத்தான் அநீதியை அவர்கள் இனம்காண்பார்கள். ஒருபோதும் அதனை ஏற்காதிருப்பார்களாக!!
டேவிட் ஏ.றொபேட்சன் (DAVID A. ROBERTSON): இளம் வாசகர்களுக்கான பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். நோர்வே ஹவுஸ் கிறீ நேஷனின் (Norway House Cree Nation) உறுப்பினர். இங்கு குறிப்பிடப்படுகிற When we were alone நூல் சிறுவர் இலக்கியத்துக்கான 2017 Governor General's Literary Award பெற்றது. அவரது படக்கதைகள் (Graphic books) சகல வாசகர்களுக்குமானவை சிரமமான விடயங்களை எளிமையான முறையில் சொல்லிவிடுகிற தன்மையைக்கொண்டிருக்கிற இவரது நூல்களது தொடர் பேசுபொருட்களாக காணாமல் போகும் பூர்விக்குடிப் பெண்கள், பள்ளிவிடுதி ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பூர்விகக்குடிகளது சமகாலத்தைய, மற்றும் அறியப்பட்டாத வரலாற்றின் கூறுகளே இருக்கின்றன. இவர் கனடாவில் மானிரோவா மாநிலத்தில் வினிபெக் நகரத்தில் வசிக்கிறார்.
36
"இ ப்
பூ மி
அ வ ர் க ளை
ஒ ளி த் து
வை த் தி ரு க் கி ற து"
அ ஞ் ச லி = a n j a l i = an offering
a photo exhibit Thanya Kavusala Luxme
38
40
42
44
46
48
50
52
MEMORIES OF CHAIN
A blowfly of augur
Sits upon my cracked head, Sucklers deep inside me, Shattering my mask Of plastic smiles and Numbing slumber that Are tools of corruption Left by the colonial masters. It inserts, stirs, and asks, "Do you want to remember?" My impulse is yes and At long last, I can see A forgotten sense of agency That instantly crumbles My prefabricated sanity, As I feverishly grasp The chain of memories Spilling out of my open skull, With a gushing appetite To seek healing and retaliate Against the white state. When in the corner of My splintered eye It guides me to witness The buried history of The corpses pilling high, until There is no one left to vilify, Just the particles of decay Shifting in the wind, the Legacy of white sin.
An abyssal keyblade, Of broken minds And beaten dreams, Rests upon the ancestral remains, Calling to me with wicked whispers Of a lost paradise and torn freedom, A home sundered, raped and gutted by The traitor Kingdom of Lucis. Thus, I know their stories, And I let my vision warp To embrace in rageful glee The torrents of screams That are guiding my pricked hands, With a blood-soaked mouth I hush to myself in between tears, "I hereby claim this keyblade to be mine. To every white heart, I send you The cruel hurt of their unrelenting cries." The sky grows thick with red, And the blowfly is gone, Now there is no mending Of the festering wounds That will exhume the memories Of an indomitable will to end Generational tragedies. The Dark Star is nearing.
Gemma Starlight of the Dark Star
54
2021 summer issue
Indigenous Genocide: Canada's Legacy Editorial
Although Canada may seem to be a place of peace and transparency, there is a deep history of genocide and erasure of Indigenous peoples that continues to be buried by white supremacist propaganda and imperialism. Like so many other former British colonies, Canada was once the vast territories of many Indigenous peoples, a land rich in history and culture. Once the British began to conquer the lands through chemical weaponry and advanced technological warfare, several negotiations were made in the form of treaties to end hostilities. However, this was only a strategic move by white settlers to regroup and relaunch their assaults on Indigenous peoples. Over time, Indigenous folx were encaged in concentration camps of different kinds, having completely lost all rights over their ancestral lands and traditions. Canada positions itself as non-religious and non-genocidal, yet from the 1800s, residential school systems run by religious authorities were put in place to cause further displacement. At this point, Indigenous traditions were outlawed and most Indigenous peoples lived on reservations, which were plots of land with very little resources, where the Canadian government could control them. Residential schools added to this by being made compulsory for all Indigenous children, forcing them away from their families and homes. It didn't help that these schools were purposefully placed in very distant locations away from the reservations. These children would spend their entire youth at these white institutions to be forced to learn English or French and to adopt a European way of life. These were not simple schools of European teachings, but of mass assimilation where abuse and death were rampant. These schools would enslave the Indigenous children to a life of brutal labour, forcing them to grow and farm their own food, build and repair structures, dig their own graves, work the furnace, and use their bodies as insulation for the institutions when they were deemed ready to die. Boys and girls alike also faced constant rape and sexual violence, with girls being especially targeted by teaching staff and clergy alike. They would also be sterilized while boys would be castrated. This was all intentionally planned to keep up a cycle of traumatization that would invoke mental and physical illness upon the Indigenous children. Thus, residential schools acted not just as a way of erasing Indigenous practices and languages, but to also minimize and control their future populations. This generational systemic oppression would be a success, leaving survivors and their successors to be completely removed from their cultural heritage and to be perpetually unwelcomed by mainstream Canadian society.
Attem Team
Kavusala
Gemma
Pratheepathi
Thanya
The residential school system and its lack of acknowledgment by "Canada" is major evidence of the erasure of Indigenous Culture. This false nation hides the fact that it was built upon deceit, assimilation, genocide, and white supremacy. With each call for accountability by Indigenous survivors and their allies from the Canadian government comes a plethora of weak apologies and temporary investigations with no concrete change. Now in 2021, with the appearance of mass graves at residential schools, many folx have taken up these issues of mass Indigenous death with more severity due to social media and greater accessibility to progressive knowledge sources, which didn't exist in the era of colonization. Despite the Canadian government being very conscious of the mass death of Indigenous children due to the residential school system, they waited in ignorance, hoping that society would forget. Currently, there are 3,200 bodies found at various residential school locations, with a huge potential of about 30,000 more that need to be searched for. This is not including adults and bodies that are unrecoverable due to being cremated, drowned, or otherwise hidden. This isn't about Canada "discovering" these bodies, but rather, being caught for atrocities that they have carefully buried. Reactions to these gravesites would be church burnings, destruction of Canadian monuments, and street and building renamings. Alberta Premier Jason Kenney would dub the church burnings, which had no casualties, as an act of violence and hatred, totally numb to the cause of these reactions. Thus, the state of these buildings is given more importance than to the thousands of Indigenous lives lost. Monument destruction has been very popular and needed in at least removing the ways white society honours genocidal figures such as John A. Macdonald and Henry Dundas. Unfortunately, aside from the ongoing findings of the bodies of Indigenous children, more weak apologies, and some extremely minor financial compensation, there is no direct action from the Canadian government of Justin Trudeau. It is a hope, however, that these mass graves and their history will spark new generations of social justice workers to continue pushing efforts to effectively give back independence to Indigenous communities. கனடா அமைதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட இடமாகத் தோன்றினாலும், வெள்ளை மேலாதிக்கப் பிரச்சாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் புதைக்கப்பட்டு வரும் இனப்படுகொலை எனும் பூர்வீக மக்களை அழித்த ஆழமான வரலாறு இதற்குளது. பல முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே, கனடாவும் ஒரு காலத்தில் பல பூர்வீகக் குடி மக்களின் பரந்த பிரதேசமாக இருந்தது, இது வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த நிலம். இரசாயன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பப் போர் மூலம் பிரித்தானியா நிலங்களை கைப்பற்றத் தொடங்கியவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தங்கள் வடிவில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எவ்வாறாயினும், இங்கு குடியேறிய வெள்ளையர்களின் மூலோபாய நகர்வாக மட்டுமே இது இருந்தது. காலப்போக்கில், பூர்வீக மக்கள் தங்கள் வம்சாவளி நிலங்கள் மற்றும் மரபுகள் மீதான அனைத்து உரிமைகளையும் முற்றிலுமாக இழந்தனர். கனடா தன்னை மதமற்றது மற்றும் இனப்படுகொலை செய்யவில்லை, எனக்கூறிக்கொண்டாலும், 1800களில் இருந்து, மத அதிகாரிகளால் நடத்தப்படும் பள்ளிவிடுதிகள் ஊடாக பூர்வீக மக்களது மறைமுக இடப்பெயர்வை நடைமுறைப்படுத்தியது. இக் காலகட்டத்தில், பூர்வீக மரபுகள் சட்டவிரோதமானது, பெரும்பாலான பூர்வீக மக்கள் பல்வேறு வகையான வன்முறைகளை அவர்கள்மீது நடத்திய ஒதுக்குப்புற குடியேற்றங்களில் அடைக்கப்பட்டனர். அவை மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நிலப்பகுதிகளாக இருந்தன, அங்கு கனேடிய அரசாங்கம் அவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்த முடியும். அனைத்து பூர்வீகக் குழந்தைகளையும் அவர்களது குடும்பங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறுவதை கட்டாயப்படுத்துவதன் மூலம் வீடுகளிலிருந்து தொலைவில் பள்ளிவிடுதிகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிகள் பூர்வீகருக்குரிய இட ஒதுக்கீட்டிலிருந்து தொலைதூர இடங்களில் வேண்டுமென்றே வைக்கப்பட்டன. இந்த குழந்தைகள் தங்கள் இளமைக்காலம் முழுவதையும் இந்த வெள்ளை நிறுவனங்களில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியைக் கற்கவும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
56
இவை ஐரோப்பிய போதனைகளின் எளிய பள்ளிவிடுதிகள் அல்ல, மாறாக துஷ்பிரயோகம் மற்றும் இறப்பு பரவலாக உள்ள ஒரு அரசியல் ஒருங்கிணைப்பு. இந்த பள்ளிகள் பூர்வீகக் குழந்தைகளை கொடூரமான உழைப்புக்கு உட்படுத்தி, கட்டிறுக்கமான கத்தோலிக்க நடைமுறைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்முறையை எதிர்கொண்டனர், சிறுமிகள் குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் மதகுருமாரால் குறிவைக்கப்பட்டனர். பலவகைகளில் இப்பள்ளி விடுதிகள் பூர்வீகர்குடிகளது பழக்கவழக்கங்கள் மற்றும் மொழிகளை அழிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால மக்கள்தொகையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டன என்றால் மிகையில்லை. இந்த தேசம் வஞ்சம், ஒருங்கிணைப்பு, இனப்படுகொலை மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்டது. இந்த உண்மையை மறைக்கிற கனேடிய அரசாங்கத்திடமிருந்து, பொறுப்பெடுக்குமாறு அழைக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கு பதிலாய், பலவீனமான மன்னிப்புகளும் உறுதியான மாற்றத்தை கொண்டுவராத மதற்காலிக விசாரணைகளுமே ஏராளமாக வருகின்றன. துரதிருஷ்டவசமாக இப்போது தோண்டப்படும் தேவாலயங்களில் கண்டெடுக்கப்படும் குழந்தைகளின் எலும்புகள், பலவீனமான மன்னிப்பு மற்றும் சில மிகச்சிறிய நிதி இழப்பீடுகளைத் தவிர, ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கை எதையும் தூண்டவில்லை. எவ்வாறாயினும், இந்த வெகுஜன கல்லறைகள் மற்றும் அவற்றின் வரலாறு புதிய தலைமுறை சமூகநீதிப் பணியாளர்களைத் தூண்டுகிறது, பூர்வீக மக்களின் சுயாதீனமான இருப்பை மேம்படுத்தும் முயற்சிகளை அவர்கள் மென்மேலும் முன்னெடுப்பார்கள். வேறெப்போதுமில்லாமல் அம்மக்களின் எழுச்சி பரவலாகும் காலம் இதுவே. தேவாலயங்கள் எரியும் தேசத்தின் ஸ்தாபகர்கள்களது திருஉருச் சிலைகள் விழுத்தப்படுவதுமான எமது காலத்தில், காலனியவாதிகளது பெயர்களை அகற்றித் தெருக்களுக்கு பள்ளிக்கூடங்களுக்குப் புதுப்பெயர் சூட்டக்கோரும் கோரிக்கைகள், எதிர்ப்பு நிகழ்வுகளுள் நாமும் தோழமையுடன் இணைந்து நடப்போம்.....
தோழமையுடன் In Solidarity, அற்றம் குழு Attem Team
even though the worst happens they remember and they stay because the moon remembers because so does the sun because the stars remember and the persistent stubborn grass of the earth -- Paula Gunn Allen --(1939 - 2008)