p o e tr y
க வி தை க ள்
அ ற் ற ம் 1 3
அ வ ரி ன் ம க ள் இ வ ரி ன் ம னை வி உ ங் க ளி ன் தா ய் எ ன் ப தை வி ட நா ன் எ ன் ப தா க வி ட் டு ச் செ ல் ல வி ரு ம் பு கி றே ன் எ ன க் கா ன எ ன் சு வ டு க ளை . . .
1
எ திர்த்திசையில் நின்றபடியே
கடந்துபோகும் காலங்களை வெறித்துப் பார்க்கிறேன் ஒவ்வோர் ஆண்டின் முதுகிலும் சாதித்த மனிதரின் சுவடுகள் கழிக்கப்படும் வயதுகளும் கூடிக் கொள்ளும் அனுபவங்களும்... மனம் போடும் இன்னோர் ஐந்தாண்டுத் திட்டம் பொறுப்புகள் சொல்லியே பறிக்கப் படுகிறது சாதிக்க வேண்டும் ஆனால் சுற்றிலும் சுட்டு விரல்கள் மகள், மனைவி, தாய் என்பதற்குள் பொதிந்து போக அவசரமாய்க் கடந்து கொள்ளும் காலங்கள் என் சுவடுகள் இன்றியே 0
2000
2
நிற நரைகளோடு
மீண்டும் ஒரு முதுமைக்கு தயாராகும் மேபிள் மரங்கள் என் வசந்தங்கள்மீது இன்னுமோர் இலையுதிர்வு வெறித்துக்கிடக்கும் தெருக்களில் நினைவுகளோடு நடக்கிறேன் சிரிந்து நடந்த பொழுதுகள் இந்த மரநிழல்களில் ஓய்ந்திருந்த ஞாபகங்கள் காலங்கள் கதையெழுதிப்போக இங்கே திசைகள் மாறி நீயும் நானுமாக வாழ்வின் சுமைகளால் கனக்கின்ற மனது இந்த வசந்தங்களில் அருகில் என்னை வருட உன் நட்பு அன்றுபோல வேண்டும் 0
3
துப்பாக்கிகளுக்கு நடுவே
சிறைப்பட்டுக் கிடக்கும் என் வசந்தகாலச் சுவடுகள் எடுத்து வந்த நினைவுகளில் வாழ்ந்தும் இன்னும் ஏங்கியும் கொள்ள கடன்சொல்லிக் கடக்கிறது காலம் நாளைய தூரம் தெரியாமலே நாட்கள் நகர்ந்துகொள்ள நடந்து சென்ற தெருக்களிலும் சைக்கிள் பழகி விழுந்த வேலிகளிலும் இன்னும் எம் இளமை எஞ்சியிருப்பதாக மனம் பரபரக்கிறது மாற்றங்களை ஏற்காதபோதிலும் மாறுதல்கள் நடந்துகொண்டேயிருக்கிறது புழுதி கிளம்ப நாம் நடந்த ஒற்றையடிப் பாதைகள் பெருந் தெருக்களாகியிருக்கலாம் என் வீட்டின்முன் நிழல் தந்த பலா தறிக்கப் பட்டிருக்கலாம் என்னை வேண்டுமென்றே அழவைக்கும் நீ இளமை மறைந்து உருவம் மாறியிருக்கலாம் மேலும் கடைகள் கோயில்கள் வயல்கள்... ஆனாலும் மனம் பிடிவாதமாகத் தேடுகிறது என் வசந்தங்களை 0
4
வார்த்தைகள் கீறும்போதுதான்
வாழ்க்கை இடைவெளி விட்டு நிற்பது புரிகிறது சிரிப்புகள் உதிர்ந்து சத்தங்கள் நின்றுபோக பக்கங்கள் மாறி நிற்கும் நேசங்கள் தனிமைக்குள் என் இருப்பு வாழ்ந்துகொள்ள சுயநலங்கள் பல இனங்காணப்படும் என் அழுகைகளும் விசும்பல்களாக ஒலி இழந்துபோக சுவாலைவிட்டு எரியும் தனிமைக்குள் எரிந்து கொள்ளட்டும் வாழ்க்கை உமிழும் எண்ணைப் படிமங்களில் பற்றிக்கொள்ள 0
5
ராட்சதச் சக்கரங்களுக்குள் குறுகி
நாழிகையாகும் நாட்கள் மாறுதல்களோடு மனிதர்கள் பெருவட்டங்களை விலக்கி தன்னைச் சுற்றியே சுழல்கிற சிறுவட்டத்தைச் சுற்றி சுயநலச் சுவர்கள் உலகம் உறவுகள் அவனை விலகி தூரத்தே நிற்க சுருங்கிய மனதிற்குள் எரியும் மெழுகுவர்த்தி நம்பிக்கைகள் முறிந்துபோக வாழ்க்கை போராட்டங்கள் மனதிற்குள் போர்தொடுக்க தனிமை இருள் ஒடுங்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி 0
6 க ரும்பாறைகளின் உச்சங்களை
தொட்டு அழுகின்ற மோக அலைகளும் அலறுகின்றன கரைகளின் கன்னங்களை முத்தமிட்டுத் திரும்பும் ஏமாற்ற அலைகளும் புரிந்துகொள்கின்றன நாதம் அறுந்து அபஸ்வரம் பேசுகின்ற தென்றலும் பாடுகிறது இதோ! என் கண்ணீரை வாங்கி கறுத்து நிக்கும் மேகங்களும் மீண்டும் சொல்லிக் கொள்ளும் அந்த மரணம் பற்றி... அப்போ நீ புரிந்துகொள்வாய் பிடுங்கி எறிந்துபோன நரம்புகளை 0
7 மே ஜைமீது உட்கார்ந்திருந்தாள்
நீண்டு விரிந்த விரல்களும் கனவுகள் நிறைந்த விழிகளும் அவிழ்ந்து நெழிந்த கூந்தலில் உயிர்த்திருந்தாள் அவன் கைகள் உரசிக்கொள்ள உயிர்த்தது தீக்குச்சித்தலை நெருடல்கள் இல்லாமலே நெருங்கினான் பரவசத்தோடு அவள் தலையில் பற்றிக்கொண்டது ஆயுள் தேய்ந்த தீக்குச்சி அங்குலங்கள் அகலமாகி வெளிச்சம் நிறைய மௌனமான அலறல்களைமீறி மிருகங்களின் சிரிப்பொலிகள் கலையறியா கசங்கியவர்களிடம் சிதைவதற்காக சிருஷ்டிக்கப்பட்டவள் எரிந்து கொண்டிருந்தாள் 0
8 வெ ளுப்புகள் இல்லாமல் எங்குமே
கருமை நெருக்கங்கள் அற்று சிதறிக் கிடந்தன வெள்ளித் தகடுகள் அசைவுகள் அற்றுக் கிடந்த மேகங்களுக்குள் விழித்துக்கொண்டிருந்தது நிலவு நினைவுகள் எதுவுமின்றி இயல்புகள் மறந்து எல்லாமே ஆசைகள் ஆவேசங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் எதுவுமின்றி மனமும் தனிமையின் கதறல்களையும் காதலின் கண்ணீரையும் தேக்கி இறுகியிருந்த மேகங்களின் நடுவே பூமியை நோக்கி விழுந்துகொண்டிருந்தது ஒற்றைச் சிறகொடிந்த குருவி ஒன்று அவன் காதல் சொல்லிக்கொண்டிருந்தான் இன்னொரு இதயத்திடம் 0
9 வெ ளிறிய வார்த்தைகள்
கீறிப்போக வேதனை முட்டி விழுந்து கொள்கிறது அதில் ஒரு துளி உன் யன்னல் அருகே காயப்பட்டு இயல்பிழந்து கலைந்து நீராகும் ஆனாலும் உன் பார்வை வானத்தை நோக்கி, பூக்களாக இறங்கும் புதுத் துளிகள் மீது 0
10 பொ ய் மயக்கங்களில் புதைந்துபோய் நானும் இங்கே
மனது உடைந்து கண்கள் காயமாக மறுபக்கங்களின் வேதனைக் கிளர்ச்சிகள் மீளவும் சந்தோஷங்கள் தேடுகையில் பூவாகும் மனம் இனியெப்போ உடையும், இன்பக் கணத்தின் கடைசித் துணிக்கையிலும் தவித்துக் கொள்ளும் 0
11 ந கரும் நாட்களோடு கழிந்துபோகும்
இன்னொரு ஆண்டு வயதின் வரைபடங்கள் உண்மை சொல்லும் கண்ணாடி கக்கூன் பருவம் நோக்கி பின்நகரும் வண்ணத்துப் பூச்சிகள் அழகுகள் களைந்து பொட்டுக்கள் தேய்ந்து ஒடிந்துபோகும் சிறகுகள் மறுபடி எச்சில் கூட்டுக்குள் அர்த்தப்படுத்த முயலும் வாழ்க்கையோடு பெருமூச்சில் கரைந்திருக்கும் பட்டாம்பூச்சி பருவ நினைவுகள் சின்ன வட்டத்துள் அர்த்தம் தேடும் நாங்கள் 0
8 சனவரி 2001
12 க விழ்ந்திருந்த மல்லிகை சென்ற்றின்
இறுதித் துளிகளை அள்ளி எடுத்த நிலவுக் காற்று மெழுகுவர்த்தியின் உயிரை அணுக்களாய் அனுபவிக்கும் சுவாலை மெல்லிய இசையில் ஆக்கிரமித்திருந்தது உன் நினைவு கோடுகள் தேய்ந்து பழுத்திருந்த பக்கங்களில் உனக்கான என் மனது இப்போ நீ தூங்கி இருப்பாய் என் கனவுகள் இல்லாமலே யன்னலுக்கு வெளியே தூரத்தில் சத்தமிட்டு அலறின அலைகள் 0
சனவரி 25 2001
13 உலகம் துண்டிக்கப்பட
துயரின் துருப்பிடிப்பில் மௌனப் போராட்டங்கள் உறவுகள் தூரமாகி வீழ்ச்சிகளும் தோல்விகளும் துரத்த, பயங்களின் விரிப்பில் குமிழுடைக்கும் நம்பிக்கைகள் மனக்கோடுகளின் வாசிப்புக்களை சில ஆத்மாக்கள் அலட்சியப்படுத்த, கறுப்புக் கூட்டுக்குள் விழித்தபடி அவள் பல்க்கனி கம்பிகள் மீறி ஒரு உயிர் கூட்டின் சிதைவு புலம்பெயர்வில் அவள் கறைபடிந்த இன்னுமோர் குருதித் துளி 0
பெப்ரவரி 21 2001
14 ஒரு நாளின் ஒரு பொழுதேனும்
அந்தச் சத்தங்களுக்குள் பிரவேசித்து, சடப்பொருட்களோடு மோதித் தெறிக்கும் என் ஆற்றாமைப் பொழுதுகளில் அந்தப் பூமியில் அமிழ்ந்து மோதி வெடிக்கும் அலைகளின் நடுவே அந்தி முடிக்கும் வானத்தின் அடியில் நிமிர்ந்து நிற்கும் கரும்பாறையின் உச்சியில் என் முகம் தடவும் கடற் காற்றில் வெண்புடவையில் மோகம் தீர்க்கும் மல்லிகை சுகந்தத்தில் மூச்சிரைத்துப் போகவேண்டும் இதுகூடத் தூரம்தான் நானாக நான் இல்லாமல் இருக்கும் இந்தப் பொழுதுகளில். 0
15 ப னிபடிந்த அந்த நாளை
விரல்களால் அழுத்தித் துடைக்கின்றேன் மெல்லிய திரைகள் விலக பிரகாசமாய் உனது முகம் சின்னக் கனவுகளின் நெசவுகளாய் நீயும் வார்த்தைகள் முட்டி மௌனமாய் உன் எதிரிலே நானும் ஏறி இறங்கி விழுந்து வழியும் உன் பார்வையில் அர்த்தங்கள் அற்று ஏதேதோ பேச நெருக்கமாய் உன் நேசம் சொல்ல தவித்துக்கொண்ட அந்நாள் இன்னும் ஞாபகத்தில். 0
பெப்ரவரி 28, 2001
16 வெ துமையும் வேகமும் சுழலும்
காட்டுக்குள் மெல்லிய சுருதியின் விளிம்புகள் தடவும் ஓசை அலையின் விரல்களில் மேவிவிழும் பூக்கள் போல எரியும் மனப்பரப்பில் தூவும் பனித் துளிகள் பொட்டுக்களோடு சில பட்டாம்பூச்சிகள் இமை அருகே கரும்பாறைகள் மோதி மோகிக்கும் அலைகள் நடுவே மல்லிகை உடைத்த வெண்புடவையில் முகம்மோதி அணைக்கும் கடற்காற்றில் அந்த ராகம் கனவுப்பை நுரைத்து தனிமை நனைக்க மின்னலை ஸ்பரிசித்த வார்த்தைகளில் இறக்கைகள் உறைந்து கொள்ளும் 0
மார்ச் 20, 2001
17 மின்னல் கிழித்த கருமேகங்கள் மோதி வெடிக்க புழுதியில் புரளும் சரத்துளிகளாய் நினைவுகள்
கடதாசிக் கப்பல் கட்டியும் போர்வைக்குள் சூடு தேடியும் கழிந்த மழை நாட்கள் நகர ஓசையோடு மனதைக் கலைத்துப்போன முதல் துளி இன்னும் அதிர்வுகளோடு பார்வைகளில் அவிழ்ந்தும் வார்த்தைகளில் முட்டியும் நின்றுபோன நாட்கள் குறும்பான உன் பேச்சில் அழுது அந்நியமாகிப் போயினும் நீ காத்திருந்த தெருக்கள் மனதருகே வெறுமையாக சத்தங்கள் எழுப்பும் உன் வருகை காதருகே நீ முணுமுணுத்த பாடல் உற்சாகமான உனது பார்வை பாடசாலைச் சுவரில் நீ கிறுக்கிய எனது பெயர் ஒரு பருவம் தூவானமாய் நிறையும். 0 ஏப்ரல் 2001
18 நி லவைத் தொலைத்த
இன்னுமோர் இரவின் ஆழத்தில் ஒளி நனைத்த பூமியின் வெளிச்சக் கீற்றொன்றில் தெளியும் வானம் பாசிபடிந்த முகில் மடிப்புகளில் தேங்கியிருக்கும் ஞாபகங்களாய் தனிமை உறிஞ்சிய மனம் தொண்டைக்குழி முட்டி நிசப்தம் கலைக்க முனையும் விசும்பல்களின் வலி உன் விரல்களின் இடுக்குகளில் இருந்து வீழ்ந்து போனதாய் தளர்ந்து போயிற்று உன் மூர்க்கமான அணைப்பு முறிந்த முத்தத்தின் நடுவே முகம் மோதும் நியங்களின் காயங்களில் கதவுகள் உடைத்து கைகள் நீளாத உன் கதவருகே மௌனம் நிறைந்திருக்க உன் கைகளில் கனவுகளில் புரியாது வெறித்து நிற்கும் உன் வார்த்தைகளில் இருந்து சொல்லாது விலகுகின்றேன் 0
2002
19 ஓசைகளை அவிழ்த்தபடி என் யன்னல் தொட்டு சிதறி விழும் துளிகள்
தூறல்களில் சரியும் தூவானத் திவலைகளின் சின்ன ஸ்பரிசங்களில் உயிர்த்திருக்கும் சில நிமிடங்கள் கண்கள் பூரித்து அண்ணாந்து இமை வாங்கியதும் மின்னல் வெட்டும் ஓரிரவில் போர்வைக்குள் ஒளிந்ததுமாய் பருவங்களோடு வயது கழிந்து மழையும் இன்றும் மண்ணைத் தொட்டும் பாதியில் உடைந்தும் மரணம்போல் மழை, மனதில். 0
20 குரூரமான சுவடுகளுக்குள்
நிறங்கள் மறைந்த வாழ்க்கை பரிவுக்கோ பரிதாபத்திற்கோ இதயங்கள் இன்றி ஏக்கம் நிறைந்த அநாதையாய் மனம் தகர்க்க முடியாது நெருக்கமாய் உயர்ந்து காற்றைப் பறிக்கும் சுவர்கள் வெறுமையாய் வேட்கையில்லாது எதிர்ப்படும் காலங்கள் நேசிப்பதற்கும் நேசிக்கவும் வெறித்தபடி மரணம் மட்டும் 0
2001
21 எனக்காக சிருஷ்டிக்கப்பட்ட
இந்தத் தீவு இதற்குள் ஆடை அகற்றும் சுமைகள் கிரீடம் அணியும் என் சுயங்கள் குரல்வளை நெரிக்கும் உறவுகளும் கன்றிப்போன வார்த்தைகளும் தழும்புகள் பதிக்கும் விரல்களும் தாழிட்ட கதவுகளுக்குள் எனக்குள் உரசி இரத்த நாளங்களுக்குள் உப்புக் கரித்து உயிர்ப்போடு துடிதுடித்துப் பிரசவிக்கும் வார்த்தைகளில் அகன்றிருக்கும் நாடித் துடிப்பு என்னைப் புரிவதாய் நெருங்கியும் விலகியும் கண்ணாமூச்சி ஆடும் மனம் உயிர் தெறிப்பின் சுருதியில் கவி பாடும் ஒரு குயில் கிளைகளின் மறைவில் 0
2002
22 சமுத்திரத்துள் புதைந்துபோவது புரியாமல் சுகித்துப்போய் மனது.
ஒவ்வொரு குமிழ்களாக உடைத்து நீர்மட்டம் நோக்கி விரைகையில் எதிரில் நிறங்களாய் விழித்து மறையும் நினைவுகள் பாசிப்படலங்களில் வீழ்ந்து வலித்துப்போக சமுத்திரத்துள் சில துளிகள் காட்சிகள் காணாது மூடும் விழிகளுக்குள் மீண்டும் மீண்டும் உறுத்தும் கனவுகள் அர்த்தமற்றதாய் இமைகளை மிதித்துக் கடக்கும் உன் கால்கள் மூச்சை நனைக்க காற்றைத் தேடி கைகள் அலைகளை விலத்தி நீர்மட்டம் தேடிக்கொண்டு 0
சித்தாரின் ஒளி நிறைத்து
ஒரு யுக நெருப்பின் சுவாலை. உடல் பிளந்து பறக்கும் மனது. முகில் நுரைகள் தள்ளி நட்சத்திரங்களோடு மிதந்துகொண்டு நின்றுபோகும் சுருதி. நரம்புகள் விலக்கி என் உதடுகளில் விழும் விரல்கள். மழைத்துளிகள் கோர்த்து முகிற் பிரவாகம். மிதக்கும் உடலில் மென்அணைப்பு. 0
23 கர்ச்சனைகள் நின்றுபோன இரவு
மிதக்கும் அலைகளில் ஏதோ ஒரு ஸ்வர ஸ்தானம் சித்தாரின் நரம்புகள் இசைக்கும் நிலாக் காற்று மெட்டுப் போட்டுக் கொண்டு கண்ணெதிரே குறுக்கிட்ட ஒரு ஜோடி இராக் குருவிகள் நகரும் விழிகளுக்குள் பரபரப்போடு உனதையும் எதிர்பார்த்தபடி எனக்குள் சிதறிய ஸ்வரங்களுள் இருந்து எந்த இராகங்களும் பிரசவிக்கவில்லை தொலைவில் தொடுவானத்துக்குள் மறைந்து போயிற்று அந்தப் பாய்மரக் கப்பல் 0
2002
24 வெறித்துக் கிடக்கும் என் நாட்கள்
வேலைகள் என்னை விழுங்கி ஜீரணிக்கையிலும் தொலைத்த என் தேடல்களில் எருக்களித்தபடி ஞாபகங்கள் எனக்கான ஒரு உலகம் சபிக்கப்பட்டுப்போனதில் திரும்ப மறந்துபோன நாட்காட்டியில் சமநிலை தவறிப்போய் நானும். நினைவுகளை உதைக்கையில் மடியில் சரிகின்ற விநாடிகளில் மனதை எடைபோடத் தெரியாது, நெருப்பு விநாடிகளை அள்ளிப்போக, ஒரு தென்றலை எதிர்பார்த்தபடி. 0
ஒக்டோபர் 11, 2001
0
யா ரு மி ல் லா த தீ வு ய ன் ன ல் ஓ ர ம் ஆ ர் ப் ப ரி க் கு ம் க ட ல் ம ழை வ டி ந் த தெ ரு நி ல வை ஒ ளி த் து வை த் தி ரு க் கு ம் ந ட் ச த் தி ர க் கா டு கா து க் கு ள் இ டை க் கா ல S P B ம ன து க் கு ள் சி த் தா ரி ன் சு ரு தி ஆ ட் க ளி ல் லா த ஆ ல ய ச ந் நி தி தீ ர் க் க மா ய் ப் ப டு ம் ஞா னி யி ன் பா ர் வை க ண் ணீ ரு க் கா ய் இ த மா ன நி னை வு க ள் ஆ த் மா வை நு ரை க் க அ ம் மா ஞா ப க ம் பு ரி ந் து ப டி க் க ஒ ரு க வி தை பு ரி யா து ர சி க் க ஒ ரு க ஸ ல் கு ழ ந் தை யா ய் போ க உ ன் ம டி 0
0
25 மெல்லிய நீலத்தின் ஊடே
அந்த வீட்டின் பழைய நிறம். ஒரு உயிரி இருந்ததற்கான அடையாளங்கள் அகற்றி எல்லாமே புதிதாய் வீட்டை நிறைத்ததில் புது மனைவியின் சென்ற் வாசனை. அசௌகரியமாய் சகலவும் இடம்மாறி. இயல்பாய் மாறிக்கொண்டும் சற்றுத் தூரத்தே உண்மையைக் கண்டு மிரளுவதாய் அந்த வீட்டின் விழிகளும். சுரபேதமாய் மனங்களுக்குள் ஓர் அந்நிய சுருதி. மௌனத்தை உடைத்து அவன் வீசும் முதல் வார்த்தை குற்ற மனதின் குளறலாய்... என் புறவெளிச்சங்களில் அந்த பல்க்கனியும். அவளின் பொறுமைக் கூட்டின் நெரிசல்க் கம்பிகள் உடைத்து சிதைந்த ஒரு பறவையாய் அவள் ஆத்மா. அவன் விழிகளிலும் பல்க்கனிக் கம்பிகளின் ரேகைகள் சற்றுப் பருமனாகவே. 0 ஒக்டோபர் 2003
26 வி ம்பங்கள்
விழுகின்ற பொழுதுகளில் உடைகின்றது கண்ணாடி மறுபரிசீலனையின்றியே மரணங்களால் அங்கீகரிக்கப்படும் என் சுயங்கள் என் உயிரின் முனகல்களில் பயத்தின் பரிணமிப்பு இனி நீ என்மீது திணிக்கும் தோல்விகளுக்காய் முறித்தெறியப்போகும் உணர்வுகளுக்காய் வடுக்கள் சுமக்கும் நாட்களுக்காய் அழப் போவதில்லை சவக்காளையில் ஓர் வசந்தத்தை எதிர்பார்த்து நான் இங்கு இல்லை என் சாளரங்கள் வழியே விழுகின்ற மழையின் சாரல்கள் பூக்காடுகளை உருவாக்கி மறையும் என் விழிகளுக்கான காட்சிகளை எந்த விரல்களால் பிடுங்கி எறிவாய் 0
சனவரி 26 – 2004
27 குளத்துக்கட்டு
பாடசாலை அம்மா அவன் பார்வை கடந்து அவர்கள் சுமக்கும் நினைவுப் பொடுகுகளின் நிழற் தொடர்ச்சி பறவைகளின் எச்சமாய் எனக்குள் ஒரு அரவத்தின் நெழிவு துரத்தும் காமவிரல்களை சபித்து நினைவுகள் விழுங்கி இரணமாகும் வடுக்கள் மீதான உன் ஈர முத்தத்தில் விழித்துக் கொள்ளும் என் ஆத்மா சணப்பொழுதுக்கான தாபஉச்சங்கள் கலைத்து ஓர் கனவின் முறிவு தலைதூக்கிச் சீறும் அரவம் மனக் குமிழிக்குள் நெழிந்து மறையும் 0
சனவரி 2004
28 ப சுமை விரிந்திருந்த
பாசிச் சுவர்கள் இறந்துகொண்டிருக்கும் நீர்மட்டத்தில் நாரைகளின் மீன்தாகத்திற்கான அழுகுரல்கள் இறுக்கமான மனவிரல்களுக்குள் இன்னும் காப்பாற்றப்பட்டிருக்கும் சில துருப்பிடித்த நாட்கள் அர்த்தமற்ற அந்தரங்க இரவுகள் கனத்த அவள் குரலில் ஒரு மனைவியின் அடர்த்தியான கண்ணீர் ஏமாற்றத்துடன் இன்னுமோர் உயிர்த்துளி இறந்துகொண்டிருந்தது நீர்மட்டம். 0
ஏப்ரல் 02, 2003
29 பூமியின் எல்லைக்கோடுகள் தாண்ட
எஞ்சிய நட்சத்திரங்களோடு விரிந்து கிடக்கும் வானம் தேடல்களின் அர்த்தம் இழந்துபோனதாய் சுவடுகளை மூடிய மணல்கும்பிகளும் இடைமறித்து நிற்கும் சமுத்திரமும் என் தடங்களின் பின்னே எதுவுமே காணாமல் ஒரு ஒற்றையடிப் பாதை தேடும் மனதில் அலைகளின் ஆக்கிரோசங்கள் என் கண்ணுக்கு இன்னுமோர் கிரகணமாய் போன பூமி விட்டு இன்னோர் பூமி நோக்கி சமுத்திரம் கடந்து காடுகளும் மறைபுதர்களும் அற்ற மனம் தேடி 0
ஏப்ரல் 03, 2003
30 எனக்குள் ஏதோ சில
அணுக்கள் அசைக்கப்பட்டதுபோல் அந்த இசையின் ஆக்கிரமிப்பு எல்லா நாட்களையும்விட இன்றைய என் கண்கள் மிக அழகாக அதற்குள் காதல் நட்பு பாசம் தாய்மை என பல பரிணாமங்கள் வார்க்கப்பட்டு அவற்றில் ஏதோ ஓர் ஒளியின் பரிணமிப்பு. எதிரில் வடிந்துபோன கண்கள் காண்கையில் அந்த விழிகளையும் ஒளிகொண்டு பற்றிவிட்டாற் போல் அக்கினிக் குஞ்சுகள் எனக்குள்ளும். அதன்மீது தேவாமிர்தம் படிந்துபோய் காமம் கொன்று பொறாமை கொன்று பல மிருக அவதாரங்கள் கொன்று ஒரு தேவதையின் சதிராட்டம் இதுதான் இளமையா? தேடுதலின் கடைசிப் புள்ளியா முதுமையில் முனகித் தேடும் பேரின்பமா?
இது பிரமையாயினும் உலகம் அமைதியாய் இந்த இரவில் பரவியிருக்கும் நட்சத்திர சமுத்திரம் மனதுக்குள் மென் மிதப்புகளின் பிரவாகங்கள் இந்த சணப்பொழுதுகளின் நீளுதல்களாய். 0
பெப்ரவரி 27 2004
கவிதைகளும் கவிஞரும் - சிறு குறிப்பு தரப்பட்டிருக்கும் பெரிதும் “தேர்வுகளற்ற” தம் வாழ்வை அழகுபடுத்தி – அதூடாக தம் வாழ்வுக்கு உயிரூட்ட “குடும்பங்களுள்” பெண்கள் முயலுகிறார்கள். பூத்தையல் வேலைகள் போல, பூக்கன்றுகளை வளர்ப்பதும், ஒரே சமையலை வகையான அலங்கரிப்புகளால் மெருகூட்ட முயல்வதுமென அவை வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரேவிதமான வாழ்வில் கவிதை/எழுத்து வெளிப்பாடும் ஒத்த முக்கியத்துவத்தையே கொண்டிருக்கிறது. தம் வாழ்வுக்கு, சொற்கள் ஊடாக அழகூட்ட முயல்வதும், அர்த்தங்களைத் தேடுவதும், அடைவதும் அடையாது போவதுமே வாழ்க்கை ஆகிறது. அந்த வகையில் இத்தகைய தொகுதியும் கற்பனைகளுக்கு இடந்தராத “கலையறியா கசங்கியவர்களிடம் சிதைவதற்காக” வாழ நிர்ப்பந்திக்கப்படும் குடும்ப சூழல்களுள் மரணத்தை தாமதப்படுத்தும் ஒரு முயற்சி போன்றதே. இங்கே மரணம் என்பது தனியே ஒருவரது உயிர்பிரிதலன்றி, சுயஅடையாளங்களை இழத்தல், தனக்கான தனி அடையாளம் தொடர்பான தொடர் ஏக்கம் இவற்றின்வழி நிகழ்கிற ஒன்று. இக் கவிதைகளில் வீடுகளின் மட்டுப்படுத்தப்பட்ட சுவர்களுக்குள் தனக்கான வெளியை காண விழையும் ஒரு பெண்ணின் ஏக்கமே நிறைந்திருக்கிறது. மனம் போடும் "இன்னோர் ஐந்தாண்டுத் திட்டங்கள்" சாத்தியப்படாமல் குடும்பப்பொறுப்புகளால் இட்டுநிரப்பப்படுவதும், தட்டிக்கழிக்கப்படுவதும் - அவரைக் களைப்படையச் செய்கின்றன. தன் பங்களிப்புகள் ஏதுமற்று இப்படியே போய்விடுமோ காலங்கள் என்கிற அச்சத்தினைக் கவிதை எதிரொலிக்கின்றது. சிறுவட்டங்களையே சுற்றும் உறவுகளிலிருந்து விலகும் கவிஞரது மனத்துக்கு ஆறுதல் தருவதாக இருப்பது - துப்பாக்கிகளுக்கு நடுவே சிறைப்பட்டு கிடப்பினும் விட்டுவந்த நாட்டின் நினைவுகள்/வசந்தங்கள்தாம். தனது வாழ்வு ஓரிடத்திலையே தரித்துவிட்டதுபோல உணருகிற ஒருவருக்கு தன்னிலன்றி வெளியே நிகழும் மாற்றங்களை ஏற்க முடிவதில்லை. முன்னகர்தலுக்கு வழியில்லை என்கிறபோதில் கடந்த காலத்தில் படிந்த, புலம்பெயர்கையில் எடுத்து வந்த தனது வசந்தகாலத்தின் சுவடுகளை - வாழ்வின் ஒரேயொரு ஆறுதலை - தேடிக்கொண்டே இருக்கிறது மனம்.
துர்க்கா ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த கவிஞர், ஈழப்போரின் ஆரம்பகட்டத்தில் இந்திய இராணுவ துப்பாக்கிசூடு சம்பவமொன்றில் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர். இசையார்வம் இவரது பால்ய காலத்தின் பிரதானகூறாக இருந்திருக்கிறது (இவரது கவிதைகளினதும்). முறைப்படி இசைக்கருவி ஒன்றில் பயிற்சி பெற்றவரும்கூட. புத்தாயிரத்தில் உயிர்நிழல், கணையாழி, பெண்கள் சந்திப்பு மலர் போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் இவர் கவிதைகள் பிரசுரமாகின; பல்வேறு இணைய இதழ்களில் மறுபிரசுரமாகியும் உள்ளன. 1980களில் புலம்பெயர்ந்த இவர், ஒரு குடும்பத்தை நிர்வகித்தவாறும் முதியோர் சமூகநலம்சார் துறையில் பணிபுரிந்தவாறும் தொடர்ந்தும் இயங்கிவருகிறார்.
ச வ க் கா ளை யி ல் ஓ ர் வ ச ந் த த் தை எ தி ர் பா ர் த் து நா ன் இ ங் கு இ ல் லை எ ன் சா ள ர ங் க ள் வ ழி யே வி ழு கி ன் ற ம ழை யி ன் சா ர ல் க ள் பூ க் கா டு க ளை உ ரு வா க் கி ம றை யு ம் எ ன் வி ழி க ளு க் கா ன கா ட் சி க ளை எ ந் த வி ர ல் க ளா ல் பி டு ங் கி எ றி வா ய் ?