(Pain by Shridhar Sadasivan - A story about a kid that doesn't confirm to the gender expectations and the bullying it goes through in high school)
வலி ஸ்ரீத சதாசிவன்
ெவள்ளிக்கிழைம என்றால் கிளாஸில் எல்ேலாருக்கும் ெகாண்டாட்டம் தான். பீ. டி பீrயட்! மூணு மணியிலிருந்து நாலு மணி வைர...முழுசாக ஒரு மணி ேநரம் ப்ேளகிரவுண்டு கிளாசின் ைகயில். அடிக்கடி மட்டம் ேபாடும் ஆறுமுகம் கூட ெவள்ளிக்கிழைமகளில் தவறாமல் ஸ்கூல் வந்துவிடுவான். மதியத்திலிருந்ேத பசங்களிடம் பரபரப்பு துவங்கிவிடும். " ேடய்.. நான் உன் டீம்டா...", " இந்த வாரம் நான் ேகாலி கிைடயாது...ேபான வாரம் கூட நான் தான் நின்ேனன்", " இன்னிக்கு எப்படியாவது சா=கிட்ட ேகட்டு அந்த புது பால வாங்கணும்டா.. 7Dக்கு மட்டும் குடுத்தாரு" பீ. டி பீrயடிற்கு முன்பு தமிழ் கிளாஸ். தமிழ் அம்மா, சீதா பாட்டி சrயான வில்லி. ேஹாம் ெவா=க் ெசய்யவில்ைல என்றால் இம்ேபாசிஷன் குடுப்பது அதன் வழக்கம். ஆனால் ெவள்ளிக்கிழைம மட்டும் விவரமாக கிளாசிற்கு ெவளிேய நிறுத்திவிடும். கிளாஸ் முடிந்தவுடன் எல்ேலாரும் ப்ேளகிரவுண்டிற்கு ஓட,ேஹாம் ெவா=க் ெசய்யாதவ=கள் சீதா பாட்டியின் பின்னால் ஸ்டாப் ரூமிற்கு ஓட ேவண்டும். "அம்மா ...சாrம்மா ........ நாைளக்கு சப்மிட் பண்ணிடேறன்" . அவசரம் புrந்தும் ேவண்டுெமன்ேற இழுத்தடிப்பது சீதா பாட்டியின் வழக்கம், "அப்படி என்னடா அவசரம்... பீ. டி பீrயடா? ஒழுங்கா ேஹாம் ெவா=க் பண்ணியிருக்கலாம்ல?" அதற்குள் கிரவுண்டில் டீம் பிrத்துவிடுவா=கள், ேலட்டாக ேபானால் உப்புக்குசப்பாணிதான் என்ற பதட்டம் பசங்களுக்கு."ேநாட்டு
ெதாைலஞ்சுேபாச்சுமா" , " எனக்கு ைநட்டு வயிறு வலிமா" என்று ஆளாளுக்கு சாக்குேபாக்கு ெசான்னா=கள். "சr சr.. ேபாங்க.. நாைளக்கு சப்மிட் பண்ணனும்" ெசால்லி முடிப்பதற்குள் ஒடதுடங்கினா=கள் பசங்கள். நான் மட்டும் ெமதுவாக நக=ந்ேதன். "ேடய்.. குமா= நில்லு.... என்ன ஆச்சு உனக்கு? நJ எப்பவும் ஒழுங்கா ேஹாம்ெவா=க் ெசஞ்சிவடுேய.. என்னாச்சு இன்னிக்கு? " என்று என்ைன நிறுத்தியது சீதா பாட்டி . " இல்லமா.... ேநாட் ெகாண்டுவரைல....மறந்துட்ேடன்.." என்று தயங்கிேனன் நான். " சாப்பிட மறக்குமா? ...நானும் பாத்துகிட்ேட இருக்ேகன் ....கெரக்ட்ஆ ெவள்ளிக்கிழைம ஆனா ேஹாம் ெவா=க் ெசய்யறதில்ைல... 'ஒலியும் ஒளியும்' பாக்கறயா? நாைளக்கு உங்க அம்மாவ கூட்டிகிட்டுவா" " சr மா" என்று தைலயாட்டிேனன். " சr .. இப்ேபா ேபா" நான் ெமதுவாக ஊ=ந்து,ஊ=ந்து ப்ேளகிரவுண்டிற்கு ேபாேனன். அதற்குள் டீம் பிrத்து முடித்திருந்தா=கள்.'அப்பாடா' என்று இருந்தது எனக்கு. வழக்கம் ேபால 'ேலட்'டானதற்கு தண்டைனயாக கிரவுண்ைட சுத்தி மூணு தடைவ ஓடிேய பிறேக விைளயாடலாம் என்றா= ஆல்வின் சா=. "சr சா=" என்று தைலயாட்டிேனன் நான். மூணு முைற ஓடிவிட்டு, மரத்தடிக்கு ெசன்று அம=ந்துெகாண்ேடன், முடிந்தவைர யா= கண்ணிலும் படாமல் பா=த்துக்ெகாண்ேடன்.சில சமயம் ஆல்வின் சா=. ரூமிலிருந்து பா=த்துவிட்டால் கூப்பிட்டு அனுப்புவா=. ேபான வாரம் கூட இப்படித்தான். " என்னடா.... மரத்தடில என்ன பண்ற ? எந்த டீம் நJ? விைளயாடல?" " இல்ைல சா=" " ஏன்டா... பின்ன எதுக்கு பீ.டி பீrயட்? , சும்மா உக்காரகூடாது" என்று ெசால்லிவிட்டு விசில் அடித்து இரண்டு டீம் காப்டைனயும் கூப்பிட்டா=. " ேடய் ..... குமார ஒரு டீம்ல ேசத்துேகா"
" ஐேயா...... ெபாட்ைட ைபயன்.......எனக்கு ேவண்டாம் சா=" - ஒருவன் " ஆமாம் சா=! சrயான ஒம்ேபாது இவன்.... விைளயாட லாயக்கு இல்ைல" - இன்ெனாருவன் " டாய்.......உத படுவ... உன் டீம்ல ேசத்துக்ேகா " என்று ஒரு டீமில் தள்ளிவிட்டா= ஆல்வின் சா=. ேவண்டாெவறுப்பாக என்ைன அந்த டீமில் ேச=த்துெகாண்டா=கள். கிரவுண்டுக்கு ேபானவுடன் பசங்களின் ேகலி துடங்கிவிட்டது. " ஏன்டா... குமாr...... ெபாண்ணுங்கேளாட ேபாய் ெகாக்ேகா விைளயாடுடா......இங்க என்ன பண்ணற?" " ெபாண்டுக" " அஜக்கு" சுட்ெடறிக்கும் ெசாற்கள்! ேவறு யாைரேயா ேகலி ெசய்கிறா=கள் என்பது ேபால காதில் வாங்காமல் நடந்ேதன். " நைடயா......இது நைடயா" என்று ஒருவன் கல்ைல எடுத்து என் இடுப்பில் குறிைவத்தான். சுள Jெரன்று வலி சுண்டி இழுத்தது. " அம்மா..." என்று கத்திக்ெகாண்ேட கிரவுண்டில் நான் சறிய, சுற்றி பத்து ேப=. " பாருடா... ஒரு கல்லடி தாங்கல " " நJெயல்லாம் ஆம்பைள.. " என்று ஒருவன் காலால் உைதத்தான், கத்திேனன் நான். " பாருடா.. ெபாட்ைட கத்துது" உைத ெதாட=ந்தது. " பாத்துடா....ெகாட்ைடல படப்ேபாவுது" இன்ெனாருவன் சிrத்தான். " ெபாட்ைடக்கு ஏதுடா ெகாட்ைட..... பாத்துருேவாமா....." என்று ஒருவன் ேகட்க, இரண்டு ேப= ேச=ந்து என் டவுசைர இழுத்தா=கள். " விடுடா... ... விடுடா...அம்மா" என்று கத்திக்ெகாண்ேட எழுந்ேதன் நான். விடாமல் இரண்டுேபரும் டவுசைர இழுக்க, சமாளித்து எழுந்து, அவ=கைள தள்ளிவிட்டு, ேவகமாய் ஓட ஆரம்பித்ேதன்
" ஓடு.. ெபாட்ைட.....உனக்ெகல்லாம் புட்பால் ேகக்குதா?" பத்து ேபரும் ெகால்ெலன்று சிrத்தா=கள். ஓட்டம் பிடித்து, மரத்தடியில் வந்து அம=ந்த ெபாழுது.... மூச்சிைரத்தது. ைக கால்கள் நடுங்கின. ஓடிய ேவகத்தில் ெதாண்ைட வறண்டது, ெதாண்ைடயில் எேதா அைடத்துக்ெகாண்ட மாதிr ஒரு வலி. கண்ண J= கண்களில் முட்டியது. அவமானத்தால் உடல் கூசியது. "அம்மா....... அம்மா......" என்று கத்தியவாேற உைடந்து அழ ெதாடங்கிேனன். கண்கள் இருண்டது.......தைலயில் ெபrய சுைமைய ஏற்றி ைவத்தாற்ேபால வலி. புல்ெவளியில் சrந்ேதன். கண் விழித்த ெபாழுது வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. அவசரமாய் எழுந்து 'ேபக்'ைக மாட்டி ெகாண்டு ேவகேவகமாய் நடந்ேதன். வட்டிற்கு J வந்த ெபாழுது, வாசலில் அப்பா. " நில்லுடா" என்று என்ைன நிறுத்தினா= " அப்பா" " ஏன்டா ேலட்?" " பீ. டி பீrயட்பா " " அது ெதrயும்.. நான் இப்ேபா தான் ேசக= வட்டிேல=ந்து J வேரன்". ேசகrன் அப்பாவும், என் அப்பாவும் நண்ப=கள். "................" " ஏன்டா..... ஒரு ....புட்பால் விைளயாட ெதrயாதா? " " ஹ்ம்ம் ........" என்று சுவேராரம் ெநளிந்ேதன் நான். "என்ன ெநளியற .. இங்க வா " என்று ைகைய பிடித்து இழுத்தா= அப்பா " ஒழுங்காதேன உன்ன ெபத்ேதன்...... ஏன் மானத்த வாங்கற..... அது என்ன நைட... ெபாட்ைட மாதிr?" என்று தைலைய கட்டாயமாக அமுக்கி முதுகில் ஓங்கி ஒரு அைற. இடிவிழுந்தா= ேபால இருந்தது, " அம்மா" அலறிேனன், "அப்பா ேவண்டாம்பா...அடிக்காதJங்கபா" " அடுத்ததரம்...... அப்படி நட, காைல உைடக்கேறன் " இன்ெனாரு அடி பலமாய். " இனிேம அந்த பக்கத்துக்கு வட்டு J பூங்குழலிேயாட
விைளயாடறத பாத்ேதன், ெதாைலச்ேசன்" காைத பிடித்து திருகினா= அப்பா. " ேவண்டாம்பா....இனிேம விைளயாட மாட்ேடன்பா.. அடிக்காதJங்கபா... " வலி ெபாறுக்காமல் ெகஞ்சிேனன். அதற்குள் அம்மா அடுக்கைளயிலிருந்து ஓடி வந்தாள். "ேவண்டாங்க, விடுங்க.. பாவம் ைபயன்" என்று என்ைன இழுத்து அைணத்து ெகாண்டாள். " நJ ெசல்லம் குடுத்து குடுத்து தான் ெகட்டுேபாறான் " என்று என்ைன முைறத்துவிட்டு ெவளிேய நடந்தா= அப்பா. நான் ேதம்பி ேதம்பி அழுேதன். அம்மா என் கண்ைண துைடத்து, ேபக்ைக இறக்கினாள். "சr வா......டிபன் தேரன்" சுட சுட ேதாைச , ேதங்காய் சட்டினி. பசி தாங்காமல் விண்டு விண்டு விழுங்கிேனன். " ஏன்பா.....உனக்கு பூங்குழலிய விட்டா பசங்க யாரும் பிெரண்ட்ஸ் இல்ைலயா?" அம்மா ேகட்டாள். " இல்லம்மா" " நல்ல பசங்களா பாத்து பிெரண்ட்ஸ் புடிச்சிக்ேகா .. இனிேம பூங்குழலி கூட விைளயாடேத..... ஆம்பைள ைபயன் நJ அப்படி நடக்க ேவண்டாமா?" "சrம்மா" என்ேறன் நான். அம்மா என்ன ெசால்கிறாள்? எப்படி நடக்க ேவண்டும்? நான் என்ன தப்பாக ெசய்கிேறன்? எதற்காக எல்ேலாரும் என்ைன ேகலி ெசய்கிறா=கள் என்பேத முதலில் புrயவில்ைல. மற்ற பசங்கைள ேபால தாேன நானும்? என் நைடயில் என்ன பிைழ? ஏன் என்ைன "ெபாட்ைட" என்று ஏசுகிறா=கள்? ஏன் பசங்களில் யாருக்கும் என்ைன பிடிக்கமாட்ேடங்கிறது? ஏன் என் கூட யாரும் பிெரண்ட்ஸ்ஆக இருப்பதில்ைல? ஒன்றும் விளங்கவில்ைல.
ெடய்லி ஸ்கூலில் நரக ேவதைனதான். நின்னால் கிண்டல், நடந்தால் கிண்டல், ேபசினால் கிண்டல்! இதற்காகேவ காைலயில் எல்ேலாருக்கும் முன்னாடி ஸ்கூலிற்கு ேபாய், என் சீட்டில் அம=ந்துெகாள்ேவன். தண்ணி , பாத்ரூமிற்கு கூட அவ்வளவாக நகர மாட்ேடன். பயம் .... ெவட்கம் ...கலக்கம்! அப்பாவிடம் ெசால்லுவது நடக்காத காrயம். அம்மாவிடம் ஒரு முைற ஸ்கூலில் பசங்களின் கிண்டல் தாங்க முடியவில்ைல என்று அழுததற்கு, " பாரு... ெபாட்ைடபிள்ைள மாதிr அழக்கூடாது..... பசங்கன்னா கிண்டல் பண்ணத்தான் ெசய்வாங்க, இதுக்ெகல்லாம் அழலாமா? " என்று என் வாைய மூடிவிட்டாள். கண்ணாடி முன் நின்று என்ைனேய திரும்ப திரும்ப பா=த்ேதன். என்ன ெசய்வெதன்று ெதrயவில்ைல. ேயாசித்து ேயாசித்து, தைல வலி அதிகமாகியது.ெமதுவாக படுக்ைகயில் படுத்து கண்கைள மூடிேனன். ஸ்கூலுக்கு ேபாகேவ இஷ்டம் இல்ைல. நாைள எதாவது சாக்கு ெசால்லிவிட்டால் சனி ஞாயிறு lவு... திங்ககிழைம வைர நிம்மதி. ---------அப்பா சீக்கிரேம ஆபிசுக்கு ேபாய் விட்டா=. அம்மாவிடம் தாஜா பண்ணி, ஸ்கூலுக்கு மட்டம் ேபாட்ேடன். " பக்கத்து வட்டுக்கு J ேநத்திதான் புதுசா குடி வந்திருக்காங்க... அவங்க வட்டு J ைபயன் கேணஷ் கூட உங்க ஸ்கூலுக்கு தான் வரப்ேபாறான்" என்றாள் அம்மா " அப்படியா?" " ஆமாம் .. இன்னிக்கு வட்டுலதான் J இருக்கான், ேபா.. ேபாய் ேபசு... பிெரண்டு பிடிச்சிக்ேகா" என்றாள் அம்மா. நான் குளித்து, இட்லி சாப்பிட்டு பக்கத்துக்கு வட்டுக்கு J ேபாேனன். " ேடய் குமாரு" என்று சிrத்தாள் பூங்குழலி. இவள் இங்ேக என்ன ெசய்கிறாள்? " இவன்தான்டா கேணஷ் ......., கேணஷ் இவன் தான் குமா=, பக்கத்து வடு" J என்று இரண்டு ேபைரயும் அறிமுகம் ெசய்து ைவத்தாள். " நJ இன்ைனக்கு ஸ்கூலுக்கு ேபால?" என்ேறன் நான் குழலியிடம்.
" ேபாலடா... எங்க அப்பா கைடல பூைஜ " என்றவள் " கேணஷ் கூட உங்க ஸ்கூல்தான் வரப்ேபாறான்" என்று அவைன பா=த்து ெசான்னாள். கேணஷ் என்ைன பா=த்து நட்ேபாடு சிrத்தான். சராசr உயரம் , சிவப்பு ேதால்.பாக்க நல்ல ைபயனாக ெதrந்தான். " 7C" என்றான் " நானும் 7C தான்" எனக்கு ஒேர குஷி. " ஹய்......ஒேர கிளாஸ் ...." என்று குதித்தாள் குழலி. " ஆமாம்" என்று இளித்ேதன் நான். மூவரும் ஒன்றாக வட்டிற்கு J ெவளிேய ஓடிேனாம். "விைளயாடலாம் டா" என்றாள். "சr வா" - நான். " நானும் குமாரும் ஒரு ெசட்டு" என்று என் பக்கத்தில் வந்து நின்றான் கேணஷ். என்னால் என் காதுகைளேய நம்ப முடியவில்ைல.மனதிற்குள் ஒேர பூrப்பு. இதுவைர எந்த ைபயனும் என்ைன ெசட்டு ேச=துெகாண்டதில்ைல.பரம சந்ேதாசம் எனக்கு. மூவரும் கிட்டத்தட்ட ஒரு மணிேநரம் ஓயாது விைளயாடிேனாம். குழலி அம்மா வந்து அவைள கைடக்கு ேபாகேவண்டும் என்று கூட்டிக்ெகாண்டு ேபானாள். கேணஷ் அவன் வட்டுக்குள் J என்ைன அைழத்து ெசன்றான். அவன் அப்பா புதுசாக வாங்கி குடுத்த ேரஸ் கா= ெபாம்ைமைய காட்டினான். அவன் பைழய ஸ்கூல் பத்தி பல கைதகள் ெசான்னான். பின்பு அவன் ைசக்கிைள காட்டினான். " நல்ல இருக்குடா" " உன்கிட்ட இருக்கா?" " இல்ைலேய" என்ேறன் நான். " ஸ்கூலுக்கு நடந்தா ேபாற?" " ஆமாம்"
" ஏன் உனக்கு ைசகிள் ஓட்ட ெதrயாத?" " ெதrயாது" " வா நான் ெசால்லித்தேரன் " என்று என் ைககைள பிடித்து அதில் உட்கார ைவத்தான். " ேவண்டாம்டா " எனக்கு சற்று பயம். " ேடய் ... நJ என் பிெரண்டா இல்ைலயா" " பிெரண்டுதான்டா" என்று சிrத்ேதன் நான். " அப்ேபா உக்காரு" என்று என்ைன அம=த்தி, ைசக்கிைள பின்னால் பிடித்துெகாண்டான். " ெபடல் ேபாடு". நான் ெமதுவாக அமுக்கிேனன்.. ைசக்கிள் ஒரு அடி முன்ேன ேபாக, 'ெதாபக்கடி' என்று கீ ேழ விழுந்ேதன், ைசக்கிள் என்ேமல்! " பரவாயில்ைல ... முதல அடிதான் படும்" என்றவன் ைசக்கிள்ைள பிடித்து தூக்கினான். நான் சமாளித்து எழுந்ேதன். " உக்காரு" என்றாள் ைசக்கிைள காட்டி " ேபாதும்டா.. " எனக்கு கீ ேழ விழுந்த அசிங்கம். " ேடய்... ஒன்னும் ஆகாதுடா" என்று என்ைன பிடித்து மீ ண்டும் அமர ைவத்தான். இந்த முைற மூன்றடி ...... திரும்பி 'ெதாபக்கடீ='! இப்படிேய பல முைறகள்.. ெபrதாக எதுவும் முன்ேனற்றம் இல்ைல. "நாைளக்கு வா..... ெசால்லித்தேரன்" என்றான் " தாங்க்ஸ் டா" என்ேறன் நான் " சr டா நாைளக்கு பாக்கலாம்டா..." என்று ைசக்கிைள உள்ேள தள்ளி ெகாண்டு ேபானான். அவைன நிறுத்தி "ேடய் கேணஷ்.... கிளாஸ்ல என் பக்கத்துக்கு சீட்டு காலிதான்.. நJ என்கூட உக்காரலாம்" என்ேறன் நான், எனக்கும் ஒரு நண்பன் கிைடத்த குஷியில். " சr டா.. டாடா"
அவனுக்கு டாடா ெசால்லிவிட்டு வட்ைட J ேநாக்கி நடந்ேதன். " என்னடா , கேணஷ் என்ன ெசான்னான்?" அம்மா ேகட்டாள். " நல்ல ைபயன்மா ... எனக்கு பிெரண்ட் ஆயிட்டான்" என்ேறன் நான் ெபருமிதத்ேதாடு. " நல்லது ேபா! " அம்மாவுக்கும் சந்ேதாசம். எனக்கு திங்கள்கிழைம எப்ெபாழுது வரும், ஸ்கூலிற்கு எப்ெபாழுது ேபாேவாம் என்றிருந்தது. ---------இரண்டாவது பீrயட் ஆரம்பத்தில் கேணஷ் அப்பா அவைன கிளாஸில் ெகாண்டுவந்துவிட்டா=. மிஸ் அவன் அப்பாவிடம் ேபசிெகாண்டிருக்க, நான் என் ெபஞ்சிலிருந்து எழுந்து கேணைஷ ேநாக்கி ைகயாட்டிேனன். அவனும் என்ைன பா=த்து ைகயாட்டி சிrத்தான். நான், என் ைகைய காலியாயிருந்த என் பக்கத்துக்கு சீட்ைட ேநாக்கி காட்டி, "இங்ேக வா" என்று ஜாைட காட்டிேனன். சிறிது ேநரத்தில் அவன் என் பக்கத்தில் வந்து அம=ந்துெகாண்டான்.... எனக்கு ஒேர ஜாலி. மிஸ் கிளாஸ் நடத்த ஆரம்பிக்க, கேணஷிடம் புத்தகம் இல்ைல, " இந்தடா... என் புக்க பாரு" என்று பகி=ந்து ெகாண்ேடன். கிளாஸ் முடிந்ததும், மத்த பசங்கள் கேணைஷ சுத்தி ெகாண்டா=கள். " உன் ெபய= என்னடா" என்றான் ரகு " கேணஷ்" " எந்த ஸ்கூல்?" " ஆ=.வ"J என்றான் கேணஷ். " என்ன இந்த ெபாட்ைட பயல உனக்கு முன்னாடிேய ெதrயுமா?" என்று சிrத்தான் ரகு " என்ன?" கேணஷ்க்கு ஒன்றும் புrயவில்ைல " இவன்தான்டா...குமாr... அவன் பக்கத்துல உக்காந்திருக்க........நJயும் ெபாட்ைடயா?" சீண்டினான் ரகு.
கேணஷ்க்கு ேகாபம் ெபாத்துக்ெகாண்டு வந்துவிட்டது. " யார பாத்து ெபாட்ைடனு கூப்பிடற.." என்று எழுந்தவன் ரகுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். ரகு வலி தாங்காமல் “ஆ ஆ" என்று அலறினான். பின்பு சுதாrத்து கேணஷின் ைககைள பிடித்து முறுக்கினான். இரண்டு ேபரும் கட்டிபிரண்டு உருள ஆரம்பித்தா=கள். பசங்கள் எல்ேலாரும் அவ=கள் இருவைரயும் சுற்றி வட்டமடித்து, கத்த ஆரம்பித்தா=கள்."அடிடா", "நல்லா குத்து", "விடாேத" என்று ஒேர கூச்சல்.நான் பயந்து,ெசய்வது அறியாமல் திைகத்து ேபாயிருந்ேதன் அதற்குள் அடுத்த பீrயட் மிஸ் வந்துவிட, இரண்டு ேபரும் விலகினா=கள், ஒேர அைமதி. மிஸ் இரண்டு ேப= கன்னத்திலும் "பளா=", "பளா=" என்று அைற விட்டு, ெவளிேய நிறுத்தினாள்.அன்னிக்கு நாள் முழுவதும் ெவளிேய நிற்கேவண்டும் என்று தண்டைன. கேணஷ் எrச்சலில் முைறத்து ெகாண்டிருந்தான். எனக்கு அவைன பா=க்க பாவமாய் இருந்தது. திமிெரடுத்த ரகு! அவன் ைசக்கிள் காத்ைத பிடுங்கி விட ேவண்டும் என்று கறுவிேனன். ---------சாயங்காலம் ஸ்கூல் முடிய, கேணைஷ காணவில்ைல. சீக்கிரம் கிளம்பியிருப்பான். நான் வட்டுக்கு J ேபாய் உைட மாற்றி , அம்மாவிடம் மிட்டாய் வாங்க காசு ேகட்ேடன். " எதுக்குடா எட்டணா? ெரண்டு மிட்டாய்யா? பல்லு ெகட்டுேபாகும்" " அம்மா.. கேணஷ்க்குமா , குடுமா" என்று ெகஞ்சிேனன். " சr இந்தா" ேவகமாய் தாதா கைடக்கு ேபாய் இரண்டு ேதன் மிட்டாய் வாங்கிெகாண்டு, கேணஷின் வட்டிற்கு J விைரந்ேதன். " கேணஷ்" என்று கத்திவிட்டு, அவன் ைசக்கிளில் ஏறி அம=ந்ேதன். இரண்டு நிமிடத்தில் அவன் ெவளிேய வந்தான். " இந்தாடா மிட்டாய்" என்று இளித்துக்ெகாண்ேட அவனிடம் நJட்டிேனன். " என் ைசக்கிள விட்டு இறங்குடா" என்றான் கேணஷ் ேகாபமாய். " ேடய்.. ஏன்டா?" ஒன்னும் புrயவில்ைல எனக்கு.
" ெபாட்ைட ைபயேனாட எல்லாம் எனக்கு பிெரண்ட்ஷிப் ேவண்டாம்.. இறங்கு" தூக்கிவாr ேபாட்டது எனக்கு. " ேடய்.. கேணஷு.. பசங்க சும்மா கிண்டல் பண்றாங்கடா.. " என்று குரைல தாழ்த்தி ெகஞ்சிேனன். " இறங்குடான... ஒம்ேபாது" என்றவன் என்ைன பிடித்து கீ ேழ தள்ளினான். நான் நிைலகுைலந்து விழ, மிட்டாய் இரண்டும் மண்ணில் சிதறி ஓடியது " அம்மா! " கத்திேனன். " ேபாடா... இனிேம இங்க வராத" என்று ஒரு உைதவிட்டான். " அம்மா..." நான் வலி ெபாறுக்காமல் கத்திேனன், அழுைக அழுைகயாய் வந்தது. அவன் ைசக்கிைள சr ெசய்துவிட்டு உள்ேள ேபானான். நான் கீ ேழ விழுந்து கிடந்ேதன். ைகமுட்டி சிராய்த்து, ரத்தம் கசிந்தது. எழுந்துெகாள்ள முடியவில்ைல...எழுந்துெகாள்ள மனம் வரவில்ைல. வலி.... அப்படி ஒரு வலி.....என் மனதில்!