1-9-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
சிலந்தி இல்ல சிறுத்தை!
2
வெள்ளி மலர் 1.9.2017
1.9.2017 வெள்ளி மலர்
3
நடிப்–பிச – ைப் புல–வர் கே.ஆர்.ராம–சாமி அவர்–கள் பற்–றிய சுவை–யான சம்–ப–வம் ஏதா–வது? - கே.டி.எஸ்.சுந்–த–ரம், சென்னை-17. தி.மு.கழ–கத்–தில் இணைந்த முதல் நடி–கர் என்று இவரை குறிப்– பி – டு – வ ார்– க ள். மிக அரு–மை–யாக பாடு–வார். திமுக கூட்– ட ங்– க – ளி ல் இவ– ர து பாட்– டு க்கு ஏகத்–துக்–கும் வர–வேற்பு இருக்–கும். உடு–மலை நாரா–ய–ண–கவி எழு–திய ‘சீறி– வ ந்த புலி அதனை சிங்– க ார மறத்தி ஒருத்தி முறத்–தி–னாலே துரத்– தி–னா–ளே’ என்–கிற பாடலை திரும்–பத் திரும்ப பாடச்–ச�ொல்லி திமுக த�ொண்– டர்–கள் இவரை வற்–பு–றுத்–து–வார்–கள். சென்னை மாந–க–ராட்சி தேர்–தல் ஒன்–றில் பாட்–டுப – ாடி பிரச்–சா–ரம் செய்ய இவரை அழைத்–தி–ருந்–தார்–கள். ஒவ்– வ�ொரு வார்– ட ாக வேன் ஒன்– றி ல் இவ–ரும், கலை–ஞ–ரும் இணைந்து செல்–வார்–கள். தெரு– மு க்– கி ல் வேன் நிறுத்– த ப்– பட்டு கே.ஆர்.ராம–சாமி ‘சீறி–வந்த புலி அத–னை’
என்று பெருங்–குர– ல் எடுத்து பாடு–வார். அவர் பாடி முடித்–த–துமே கலை–ஞர் பேசி வாக்கு கேட்–பார். ஒரு தெரு– மு க்– கி ல் வண்டி நின்– ற – ப�ோ து, ராம– ச ாமி பாடு– வ – த ற்– க ாக எழுந்– த ார். கலை– ஞ ர் அ வ ர ை இ டை – ம – றி த் து , “ த ய – வு – ச ெ ஞ் சு அ ந ்த பு லி யை முறத்–தாலே அடிச்ச பாட்டு மட்–டும் வேணாம். வேற ஏதா–வது பாடுங்–க” என்–றார். “ஏன், அது நல்ல பாட்–டு–தானே, நான் நல்– ல ா– த ானே பாடு– றே ன்” என்–றார் ராம–சாமி. “பாட்டு நல்ல பாட்–டுத – ான். ஆனா, இந்த வார்– டி லே நமக்கு தேர்– த ல் கமி–ஷன் ஒதுக்–கி–யி–ருக்–கிற சின்–னம் புலி. அதை துரத்–துற பாட்டை நாமளே பாடினா நல்–லாவா இருக்–கும்?” என்று கேட்–டா–ராம் கலை–ஞர். ராம– ச ாமி, இந்த சம்– ப – வ த்தை அடிக்– க டி ச�ொல்லி நண்– ப ர்– க – ளி – ட ம் சிரித்– து க் க�ொண்–டி–ருப்–பா–ராம்.
பாட–கர் மலே–சியா வாசு–தே–வன் பாடிய முதல் பாடல் எது, கடை–சிப் பாடல் எது? - எச்.பஹ–தூர், ஜமா–லியா லைன். வாசு–தே–வ–னின் பெற்–ற�ோ–ருக்கு பாலக்–காடு த – ான் ச�ொந்த ஊர். மலே–சிய – ா–வுக்கு ரப்–பர் த�ொழிற்– சா–லை–களி – ல் பணி–புரி – யு – ம் நிமித்–தம் இடம் பெயர்ந்– தார்–கள். பெற்–ற�ோ–ருக்கு எட்டு குழந்–தை–கள். இவர்–தான் கடைசி. ரப்–பர் த�ோட்–டங்–க–ளில் பணி அலுப்பு தெரி–யா–மல் இருக்க அனை–வரு – மே உரத்– தக் குர–லில் பாடு–வார்–கள – ாம். வாசு–தேவ – னி – ன் குடும்– பத்–தில் அத்–தனை பேருக்–குமே நல்ல குரல்–வள – ம். அப்பா, அண்–ணன் இரு–வர்–தான் தன்–னு–டைய இசை குரு என்று ஒரு பேட்–டி–யில் ச�ொல்–லி–யி–ருக்– கி–றார். எட்டு வய–திலேயே – மேடை–யேறி பாடத் த�ொடங்–கி–னார். மலே– சி – ய ா– வி ல் இசை மற்– று ம் நாட–கம் த�ொடர்–பான குழுக்–க–ள�ோடு அவ–ருக்கு நல்ல பரிச்–சய – ம் இருந்–தது. அவர் நடித்த நாட–கம் ஒன்றை சினி– மா–வாக்–கும் முயற்–சி–யி–லேயே தமி–ழ– கத்–துக்கு வந்–த–தாக ச�ொல்–வார்–கள். கன்–னட சினி–மாக்–க–ளில் பிர–ப–ல–மாக திகழ்ந்த இசை–ய–மைப்–பா–ளர் ஜி.கே. வெங்–க–டேஷ் (இளை–ய–ராஜா இவ–ரி– டம்–தான் பணி–பு–ரிந்–தார்) ஒரு படத்– தில் இவ–ரது குரலை பயன்–ப–டுத்–திக் க�ொண்–ட–தாக தக–வல். தமி– ழி ல் இசை– ய – ம ைப்– ப ா– ள ர் வி.குமா–ரின் இசை–யில் ஜெய்–சங்–கர் நடித்த ‘டெல்லி டூ மெட்–ராஸ்’ படத்–தில், ‘பாலு விக்–கிற பத்மா, உன் பாலு ர�ொம்ப சுத்–தமா?’ என்–கிற பெப்–பிய – ான பாடலை பாடி அறி–மு–க–மா–னார். பின்–னர் இளை–ய–
ராஜா சக�ோ–தர– ர்–களி – ன் பாவ–லர் பிர–தர்ஸ் குழு–வில் சேர்ந்து பாடிக் க�ொண்–டிரு – ந்–தார். ‘பாரத விலாஸ்’ படத்–தில் ‘இந்–திய நாடு என் நாடு’ பாட–லில் வரும் பஞ்–சா–பிக்–கு–ர–லில் இவரை பாட–வைத்–தார் எம். எஸ்.விஸ்–வ–நா–தன். ஏ.பி.நாக–ரா–ஜன் இயக்–கிய ‘குமாஸ்–தா–வின் மகள்’ படத்–தில் குன்–னக்–குடி வைத்–தி–ய–நா–தன் இசை–யில் ‘காலம் செய்–யும் விளை–யாட்–டு’ பாட்–டுத – ான் வாசு–தேவ – னு – க்கு முதல் ஹிட்டு. இந்–தப் படத்–தில் இருந்–துத – ான் டைட்–டிலி – ல் இவர் பெயர் ‘மலே– சி யா வாசு– தே – வ ன்’ என்று இடம்–பெற ஆரம்–பித்–தது. இளை–யர– ா–ஜா–வின் நண்–பர் என்–பத – ால் அவ–ரது இசை–ய–மைப்–பில் த�ொடர்ச்–சி–யாக பாட ஆரம்– பித்–தார். ‘16 வய–தி–னி–லே’ படத்–தில் ‘ஆட்–டுக்–குட்டி முட்–டை–யிட்–டு’, இவ– ரது குர–லில் சூப்–பர்–ஹிட்–டாக அமைய தமி–ழின் முன்–ன–ணிப் பாடர்–க–ளின் வரி– சை – யி ல் இடம்– பெ ற்– ற ார். எழு– பது–க–ளின் இறு–தி–யி–லும், எண்–ப–து– க–ளின் த�ொடக்–கத்–தி–லும் அடுத்த சூப்– ப ர்ஸ்– ட ா– ர ாக வளர்ந்து வந்த ரஜி– னி – க ாந்– து க்கு இவ– ர து குரல் மிக–வும் ப�ொருத்–தம – ாக அமைந்–தது. சுமார் எண்–பத்–தைந்து படங்–க– ளில் நடித்து நடி–கர– ா–கவு – ம் முத்–திரை பதித்– த ார். நான்– கைந் து திரைப்– ப– ட ங்– க – ளு க்கு இசை– யு ம் அமைத்– தி–ருக்–கி–றார். கடை–சி–யாக விஷ்–ணு வி–ஷால் நடித்த ‘பலே பாண்–டி–யா’ (2010) படத்– துக்கு பாடி–யி–ருந்–தார். கடை–சிக் காலத்–தில் திரை– யு–ல–கம் அவரை கைவிட்–டு–விட்–ட–தா–கவே கருதி துய–ரத்–தில் வாழ்ந்–தார். 2011ல் மறைந்–தார்.
4
வெள்ளி மலர் 1.9.2017
தமிழ் சினி–மா–வில் பாகம்-2, பாகம்-3 கலாச்–சா–ரம் உரு–வா–கி–யி–ருக்–கி–றதே? - லட்–சுமி செங்–குட்–டு–வன், வேலூர் (நாமக்–கல்) சிங்–கத்தை பார்த்து பூனை–கள் சூடு–ப�ோட்–டுக் க�ொள்–கின்–றன ப�ோலும்.
கூந்–தலை ய அழ–கான டை – னு – ன் த ஓவியா, –டாரே? லம். கத்–த–ரித்–து–விட் - ப.முரளி, சே க்–க– ள வி ான –ய தற்கு அரு–மை அவர்–தான் அ ாரே? கேன்–சர் ந�ோயால் க – ப் –தி–ருக் மும் க�ொடுத் சி கி ச் – சை க் கு உ ள் – ள ாக் – க . டு ம் ட் டு – ப – ட் ப் க – க�ொ ய ப ாதி க் க்கு முடி நிறை அடித்–துக் ளு – க – ண் பெ ட ம் ப–டு –டை–கூ ல–ரும் ம�ொட் – ல் அல்ல அத–னால், ப அழகு என்ப – து முடியி . ள் – க ார் – ற – ன்–னு–டைய க�ொள்கி –தவே தான் த ொல்கி ர்த் ண – ார். உ – ற தை என்–ப ஓவியா ச� ாக – த – ட ட் – வி – டி ர் ந�ோயால் முடியை வெட் ா–வும் கேன்–ச ம – ம் அ ய –கது. அவ–ரு–டை குறிப்–பி–டத்–தக் து ப – ன் எ ர் வ – ன கால–மா–
ட் ெ க – க் மார் டி? எப்–ப
சி ம் – ர – னு க் கு பி ற கு சிறப்– ப ாக இடுப்பை வெட்டி ஆட்–டும் ஒரு நடி– கை – யு ம் நமக்கு கிடைக்–கவி – ல்–லையே? - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம். நியா–யம – ான கவலை. உங்–கள் கவ–லையை ப�ோக்– கும் விதத்–தி–லான ஆக்–கப்–பூர்–வ–மான நட–வ–டிக்–கை– களை நம்–மு–டைய படைப்–பா–ளி–கள் முன்–னெ–டுப்–பார்– கள் என்று நம்–பு–வ�ோம்.
அம–லா– பா–லின் மார்க்–கெட் எப்–படி? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு. ‘வேலை–யில்லா பட்–ட–தாரி-2’வை ர�ொம்–ப–வும் நம்– பி–னார். வேலைக்கு ஆக–வில்லை. அடுத்து ‘திருட்–டுப்– ப–யலே 2’, ‘பாஸ்–கர் ஒரு ராஸ்–கல்’ என்று நம்–பிக்–கை– ய�ோடு இருக்–கிற – ார். தமி–ழைவி – ட மலை–யா–ளத்–தில்–தான் அம–லா–பா–லுக்கு மார்க்–கெட் களை கட்–டு–கி–ற–தாம். நான்–கைந்து படங்–கள் புக் ஆகி–விட்–டத – ாக ச�ொல்–கிற – ார்.
1.9.2017 வெள்ளி மலர்
5
ளா ் ப
ஃ
காதலே நிம்மதி!
பேக் ் ஷ
கா
தல் என்–கிற உணர்வே பெரும் க�ொண்– டாட்– ட ம்– த ான். அதை இசை– ய �ோடு இணைத்–துக் க�ொண்–டா–டி–னால்? மகத்– த ான க�ொண்– ட ாட்– ட த்– து க்கு தயார் என்– ற ால் மிஸ் செய்– யா – ம ல் ‘ஒன்ஸ்’ பார்த்து விடுங்–கள். அயர்–லாந்–தின் டப்–ளின் நக–ரத் தெருக்–க–ளில் காத–லியை நினைத்து பாடிக்–க�ொண்டும், கிதார் இசைத்–தும் வாழ்க்–கையை ஓட்–டிக் க�ொண்–டிரு – க்–கி– றான் ஓர் இளை–ஞன். காத–லி–யைப் பிரிந்த நிலை– யில் இசை மட்–டுமே அவ–னது வாழ்க்–கையை நிரப்– பு – கி – ற து. இசைத்– து – றை – யி ல் முன்– னே ற வேண்–டும் என்று பாடு–ப–டும் அவ–னது முயற்–சி–க– ளுக்கு ப�ோது–மான அங்–கீ–கா–ரம் கிடைக்–கா–மல் தடு–மா–று–கி–றான். இச்–சூ–ழ–லில் யதேச்–சை–யாக ஒரு வெளி–நாட்– டுப் பெண்ணை சந்–திக்–கி–றான். இரு–வ–ருக்–கும் ப�ொது–வான அம்–ச–மாக இசை இருக்–கி–றது. அப்– பு–றமென்ன – ? முதல் சந்–திப்–பிலேயே – நண்–பர்க – ளா – கி
6
வெள்ளி மலர் 1.9.2017
விடு–கிற – ார்–கள். அடிக்–கடி சந்–திக்–கிற – ார்–கள். இணைந்து இசைக்– கு – றி ப்– பு – கள ை உரு– வாக்–கு–கி–றார்–கள். பாடல் எழு–து–கி–றார்–கள். ஒருக்–கட்–டத்–தில் இளை–ஞன், அவளை தீவி–ர– மாக காத–லிக்–கத் த�ொடங்–கி–வி–டு–கி–றான். பாடல்–கள் மூல–மாக தன்–னுடைய – காதலை அவ–ளுக்கு புரி–ய–வைக்க முயற்–சிக்–கி–றான். இரு– வ – ரு ம் இணைந்து ஒரு மியூ– சி க் ஆல்–பம் உரு–வாக்–குகி – ன்–றன – ர். அந்த ஆல்– பத்தை வெளி–யிட லண்–டனி – ல் உள்ள இசை நிறு–வ–னம் ஒன்றை த�ொடர்–பு–க�ொள்ள நேர– டி–யாக செல்ல திட்–ட–மி–டு–கி–றான். உடன், அவ–ளை–யும் அழைத்–துச் செல்ல விரும்– பு– கி – ற ான். அவள் மறுக்– கி – ற ாள். இவன் வற்–பு–றுத்–து–கி–றான். இதன் த�ொடர்–பில்–தான் அவ–ளு–டைய பழைய வாழ்க்கை அவ–னுக்கு தெரி–ய–வ–ரு– கி–றது. அவ–ளுக்கு திரு–மண – ம – ாகி ஒரு குழந்– தை–யும் இருக்–கி–றது. கண–வ–னைப் பிரிந்து வாழ்–கி–றாள். அவ–ளு–டைய வாழ்க்–கை–யில் தன்–னு–டைய காத–லுக்கு இட–மில்லை என்– பதை உணர்– கி – ற ான். அவ– ளு க்கு தன் நினை–வாக ஒரு பியா–ன�ோவை பரி–ச–ளிக்– கி–றான். அவ–ளு–ட–னான அனு–ப–வங்–களை சுமந்–து க�ொண்டு அவன் லண்–ட–னுக்கு செல்–வ–த�ோடு படம் நிறை–வ–டை–கி–றது. மிக சாதா–ரண – ம – ான இந்த கதையை ஒரு காவி–யம – ாக இயக்–கியி – ரு – க்–கிற – ார் இயக்–குந – ர் ஜான் கார்னி. சிறந்த பாட–லுக்–கான ஆஸ்–கர் விருதை தட்–டிச் சென்ற இந்த திரைப்–ப–டம் மிக–வும் குறை–வான பட்–ஜெட்–டில் எடுக்–கப்– பட்–டது. படத்–தில் நடித்–த–வர்–கள் பெரும்–பா–லும் இசைக்–க–லை–ஞர்–கள்–தான். டப்–ளின் தெருக்–க–ளி– லும், இயக்–கு–ந–ரின் நண்–பர் வீடு–க–ளிலும்–தான் படப்–பி–டிப்பு. ஒரு கலை–ஞ–னின் மூளை–யில் இசை உரு–வாவ – தை ப�ோலவே, காத–லும் மனித மன–தில் இயல்–பாக உரு–வாகி – ற – து. எனி–னும், அவ–ரவ – ரு – க்கு வாழ்க்–கையா – ல் விதிக்–கப்–பட்–டதே நிக–ழும் என்–கிற யதார்த்–தத்தை ஏற்–றுக்–க�ொள்ள வேண்–டும் என்–கிற அரு–மை–யான செய்–தியை இப்–ப–டம் உணர்த்–து கி – ற – து. கலை என்–பது இத–யங்–களை பண்–படு – த்–தக்– கூ–டிய தன்மை வாய்ந்–தது என்–ப–தை–யும் இப்–ப–டம் காட்–சி–க–ளின் வாயி–லாக புலப்–ப–டுத்–து–கி–றது. காத–லைப் பிடிக்–கு–மென்–றால், இந்–தப் படம் உங்–க–ளுக்கு ர�ொம்–பவே பிடிக்–கும். படம்: Once வெளி–யான ஆண்டு: 2007 ம�ொழி: ஆங்–கி–லம்–/–செக்
- த.சக்–தி–வேல்
1.9.2017 வெள்ளி மலர்
7
“சிட்டி சப்ஜெக்டா? வில்லேஜ் பேக்டிராப்பா?”
வ–கு–மார் நடிப்–பில் ‘நான் பாடும் பாடல்’ படம் சி பெரி–ய–ள–வில் ஹிட் ஆகி–யி–ருந்–தது. டைரக்–– ஷன் ஆர்.சுந்–தர்–ரா–ஜன். அதே ஹீர�ோ - டைரக்– டர் காம்–பி–னே–ஷ–னில் படம் தயா–ரிக்க ஏவி.எம். நிறு–வ–னம் ஆசைப்–பட்–டது. ஆர்.சுந்–தர்–ரா–ஜனை அழைத்–திரு – ந்–தார்–கள். ஏவி.எம். தயா–ரிப்–பில் படம் இயக்–கு–வ–து–தான் அந்த காலத்–தில் அத்–தனை இயக்–கு–நர்–க–ளுக்–கும் கனவு. ஆனால்சுந்–தர்–ரா–ஜன�ோ ஏவி.எம். நிறு–வ–னத்–தா–ரி–டம் க�ொஞ்–சம் மெதப்–பா–கவே பேசி–னார். “இத�ோ பாருங்க. அஞ்சு படம் பண்–ணிட்–டேன். இன்–னும் ச�ொந்–தமா ஒரு வீடு கூட வாங்–கலை. அத–னாலே என் அடுத்–தப் படத்–துக்கு வீடு வாங்–குற அள–வுக்கு யாரு சம்–ப–ளம் க�ொடுக்–கு–றாங்–கள�ோ, அவங்–களு – க்–குத – ான் படம் பண்–ணுற – தா இருக்– கேன்.” “வீடு கட்ட எவ்–வ–ளவு செல–வா–கும்?” “இரண்டு லட்–சம்.” ஏவி.எம். ய�ோசித்–தார்–கள். அந்த காலத்– தில் அது க�ொஞ்–சம் பெரிய த�ொகை–தான். அப்–ப�ோது முழுப்–ப–டத்–தின் பட்–ஜெட்டே பத்து, பதி–னைந்து லட்ச ரூபா–யில் முடிந்–து–வி–டும்.
“சரி. கதையை ச�ொல்–லுங்–க.” ஆர்.சுந்–தர்–ரா–ஜன் ச�ொன்ன கதை ஏ.வி.எம். நிறு–வ–னத்–துக்கு மிக–வும் பிடித்–து–விட்–டது. உட–ன– டி–யாக அட்–வான்–ஸாக ரூ.50,000/- செக் எழு–திக் க�ொடுத்–து–விட்–டார்–கள். ஓரிரு நாட்– க ள் கழித்து பட– வே – லை – க ளை த�ொடங்–கு–வது த�ொடர்–பாக ஒரு சந்–திப்பு. “ஹீர�ோ விஜ–ய–காந்த் கிட்ட பேசி–ட–லாமா?” சுந்–தர்–ரா–ஜன் கேட்–டார். “விஜ–யக – ாந்தா? நீங்க சிவ–கும – ா–ருக்கு இல்லை கதை ச�ொல்–லுறீ – ங்–கன்னு நெனைச்–ச�ோம்” என்–றார்– கள் தயா–ரிப்–பா–ளர்–கள். ஏனெ–னில், சுந்–தர்–ரா–ஜனி – ன் முந்–தைய – ப் பட ஹீர�ோ சிவ–கும – ார் என்–பத – ால், இந்– தப் படத்–துக்–கும் அவரே ஹீர�ோ–வாக இருந்–தால்– தான் எடு–படு – ம் என்று நினைத்–தார்–கள். அத–னால், சிவ–கு–மா–ரி–ட–மும் பேசி–விட்–டி–ருந்–தார்–கள். “இல்–லைங்க. அந்த கதை சிவ–கும – ா–ருக்கு. இந்த கதை விஜ–ய–காந்–துக்கு. சிவ–கு–மார் இதுலே நடிச்–சா–ருன்னா கதையே எடு–ப–டா– துங்–க” சுந்–தர்–ரா–ஜன் மறுத்–தார். தயா–ரிப்–பா–ளர்–க–ளுக்கு சங்–க–ட–மாகி விட்– டது. “நல்லா ய�ோசிச்சி ச�ொல்–லுங்க. சிவ–கும – ாரை வெச்–சு–தான் நாம எடுக்–க–ணும்.”
34
8
வெள்ளி மலர் 1.9.2017
சுந்–தர்–ரா–ஜனு – க்–கும் சங்–கட – ம்–தான். மிகப்–பெ–ரிய தயா–ரிப்பு நிறு–வ–னம். தான் கேட்ட பெரிய சம்–ப– ளத்தை பேரம் பேசா–மல் அப்–படி – யே க�ொடுக்–கிற – ார்– கள். இருந்–தா–லும் விஜ–யக – ாந்தை மன–தில் வைத்து எழு–திவி – ட்ட கதை–யில் சிவ–கும – ாரை வைத்து எடுத்– தால் அது கதைக்கு செய்–யக்–கூ–டிய துர�ோ–க–மா–கி –வி–டுமே என்று நினைத்–தார். சிவ–கு–மா–ருக்–காக வேறு கதையை ச�ொல்–ல–லாம் என்று பார்த்–தால், அதே கதை–தான் வேண்–டு–மென்று தயா–ரிப்–புத் தரப்பு விரும்–பு–கி–றது. அப்–ப�ோது யதேச்–சை–யாக பஞ்சு அரு–ணா –ச–லத்தை சந்–தித்–தார். தன்–னு–டைய பிரச்––னையை அவ–ரி–டம் ச�ொன்–னார். “அந்த கதையை ச�ொல்லு பார்க்–க–லாம்” ம ட – ம – ட – வெ ன் று க தை ச�ொ ன் – ன ா ர் சுந்–தர்–ரா–ஜன். “நீ நெனைக்– கி – ற – து – த ான் கரெக்டு. இந்த கதைக்கு விஜ– ய – க ாந்த்– த ான் ப�ொருந்– து – வ ா– ரு ” ச�ொன்–ன–த�ோடு இல்–லா–மல், ஏ.வி.எம். க�ொடுத்த அட்–வான்ஸ் த�ொகையை திருப்–பிக் க�ொடுக்க தன்–னு–டைய ச�ொந்–தப் பணத்–தைக் க�ொடுத்து உத–வி–னார் பஞ்சு அரு–ணா–ச–லம். ஆர்.சுந்–தர்–ரா–ஜன் ஏ.வி.எம்.முக்கு ச�ொல்லி, அவர்–க–ளால் தயா–ரிக்–கப்–பட முடி– யா–மல் ப�ோன அந்த கதை–தான் தூய–வன் தயா–ரிப்–பில் விஜ–யக – ாந்த் ஹீர�ோ– வ ாக நடித்த ‘வைதேகி காத்–தி–ருந்–தாள்’. சிவ–கு–மார் சிறந்த நடி–க–ராக இருந்– த ா– லு ம் அந்த கதை– யி ல் நடித்–தி–ருந்–தால் ப�ொருந்–தி–யி–ருக்– காது. பட–மும் இவ்–வ–ளவு பெரிய வெற்– றி யை பெற்– றி – ரு க்– க ாது. இந்த விஷ–யத்–தில் சுந்–தர்–ரா–ஜன் காம்ப்–ரமை – ஸ் செய்–து க�ொள்–ளா–த– தா–லேயே அவ–ரால் மிகப்–பெ–ரிய வெற்–றிப்–பட – த்தை க�ொடுக்க முடிந்– தது. விஜ– ய – க ாந்– து க்கு கேரி– ய ர் பிரேக்–காக அமைந்த அந்த படம், கவுண்–டம – ணி-செந்–தில் இரு–வரை – – யும் காமெடி ஜ�ோடி–யா–கவு – ம் தமிழ் சினி–மா–வில் ஸ்தி–ரப்–ப–டுத்–தி–யது. சிவ–கும – ா–ருக்கோ, ஏ.வி.எம்.முக்கோ இத–னால் சுந்–தர்–ரா–ஜன் மீது க�ோபம் எது–வு–மில்லை. சுந்–தர்– ரா–ஜ–னின் அடுத்த பட–மான ‘சுக–மான ராகங்–கள்’ படத்–தின் ஹீர�ோ சிவ–கும – ார்–தான். சில ஆண்–டுக – ள் கழித்து எம்.எஸ்.விஸ்–வ–நா–த–னுக்–காக ஏ.வி.எம். தயா–ரித்த ‘மெல்ல திறந்–தது கத–வு’ படத்–தை–யும் சுந்–தர்–ரா–ஜன்–தான் இயக்–கி–னார். மேற்– க ண்ட சம்– ப – வ த்தை வாசித்– த – வ ர்– க ள் சுந்–தர்–ரா–ஜன் மிக–வும் கறா–ரான குணம் க�ொண்–ட– வர் என்று கரு–தி–விட முடி–யும். அப்–ப–டி–யில்லை. அவர் இயக்– கி க் க�ொண்– டி – ரு ந்த காலத்– தி ல்
யுவ–கி–ருஷ்ணா
அவ–ரை–விட ஜாலி–யான ஓர் இயக்–கு–நர் ஃபீல்–டி– லேயே இல்லை. ஷூட்–டிங் ஸ்பாட்–டில் ஹீர�ோ மற்–றும் டெக்–னி–ஷீ–யன்–க–ளு–டன் கிரிக்–கெட் ஆடிக்– க�ொண்–டி–ருப்–பா–ராம். “என்ன இன்–னைக்கு சீன் எது–வும் ஷூட் பண்–ண–லையா?” என்று கடுப்பை மறைத்–துக் க�ொண்டு தயா–ரிப்–பா–ளர் கேட்–டால், “என்ன சீன் எடுக்–கு–ற–துன்னு தெரி–யா–ம–தானே விளை–யா–டிக்–கிட்–டி–ருக்–க�ோம்?” என்று கலாய்ப்– பா–ராம். ப�ொது–வாக அவர் இது–தான் கதை, இது–தான் திரைக்–கதை என்–றெல்–லாம் பக்–கா–வாக திட்–டமி – ட்டு விட்டு படப்–பிடி – ப்–புக்கு ப�ோவ–தில்லை. அவ–ருட – ைய மன–சுக்–குள் கதையை ய�ோசிக்–கும்–ப�ோதே விஷூ–வ– லாக இரண்–டரை மணி நேரப் படத்தை கற்– ப – னை – யி – லேயே எடுத்து முடித்–தி–ருப்–பார். அதை அந்–தந்த நாள் படப்–பி–டிப்–பின் ப�ோது– த ான் நடிக நடி– கை – ய ர் மற்–றும் டெக்–னீ–ஷி–யன்–க–ள�ோடு பகிர்ந்–து க�ொள்–வார். ஷூட்– டி ங் சம– ய த்– தி ல் திடீ– ரென்று ல�ொகே– ஷ ன் ஸ்பாட்– டில் ஏதா– வ து ஒரு இடத்– தி ல் நிறுத்தி, “நீங்க ரெண்டு பேரும் அங்கே இருந்து இங்கே பேசிக்– கிட்டே நடந்து வாங்க. அப்–பு–றம் இங்கே இருந்து அங்கே அப்–ப– டியே பேசிக்– கி ட்டே நடங்– க ” என்–பா–ராம். “ எ ன்ன ட ய – ல ா க் ச ா ர் பேச–ணும்?” “அது தெரிஞ்சா, நான் எதுக்கு சும்மா பேசிக்– கிட்டே நடங்–கன்னு ச�ொல்–லப் ப�ோறேன். ரெண்டு பேருமே ‘ஒன் டூ த்ரீ’, ‘ஒன் டூ த்ரீ’ன்னு ச�ொல்– லிக்– கிட்டே நடங்க. அப்–பு –ற மா நான் டய–லாக் எழுதி அதை டப்–பிங்லே மேட்ச் பண்–ணிக்–கறே – ன்” என்–பார். க�ோய–முத்–தூர் மாவட்–டம் பாப்–ப–நா–யக்–கன் பாளை–யத்தை சேர்ந்–த–வர் சுந்–தர்–ரா–ஜன். பாக்–ய– ரா–ஜின் சிறு–வ–யது நண்–பர். ஊரில் அமெச்–சூர் நாட–கங்–கள் ப�ோட்–டுக் க�ொண்–டி–ருந்–த–வர் எஸ். எஸ்.எல்.சி. எழுதி முடித்த கைய�ோடு சினிமா ஆசை–யில் சென்–னைக்கு ரயி–லே–றி–னார். இங்கு எந்த இயக்–குந – ரி – ட – மு – ம் உத–விய – ா–ளர– ாக பணி–யாற்–றிய – த – ாக தெரி–யவி – ல்லை. பாக்–யர– ா–ஜு–டன் கதை விவா–தக் குழு–வில் இருந்–தார். பாக்–ய–ராஜ்,
1.9.2017 வெள்ளி மலர்
9
பார–திர– ா–ஜா–வின் உத–விய – ா–ளர– ாக இருந்–தார். எனவே பார–தி–ராஜா இயக்–கிய ‘கிழக்கே ப�ோகும் ரயில்’, ‘புதிய வார்ப்–பு–கள்’ உள்–ளிட்ட படங்–க–ளின் கதை விவா–தக் குழு–வில் சுந்–தர்–ரா–ஜனு – ம் இடம்–பெற்–றார். டிஸ்–க–ஷ–னில் பேசப்–ப–டும் காட்–சி–களை, திரை–யில் பார–தி–ராஜா எப்–படி க�ொண்–டு–வ–ரு–கி–றார் என்–பதை பார்த்தே இயக்–கத்தை கற்–றுக் க�ொண்–டத – ாக ச�ொல்– கி–றார்–கள். பார–திர– ா–ஜா–விட – ம் இருந்த மணி–வண்–ண– னும் இவ–ருக்கு நெருங்–கிய நண்–பர். ‘இளை–யர– ா–ஜா–வின் ஆறு பாடல்–கள் இருந்–தால் ப�ோதும். அந்த பாடல்–க–ளுக்–காக முன்–பின் காட்– சி–களை உரு–வாக்கி, அதை ஒரு வெற்–றி–க–ர–மான கதை– ய ாக மாற்– றி – வி – டு ம் திறமை க�ொண்– ட – வ ர் சுந்–தர்–ரா–ஜன்’ என்–பார்–கள். சிறு–முகை ரவி என்–கிற துணை இயக்–குந – ர�ோ – டு ஒரு–முறை சட்–ட–மன்ற உறுப்–பி–ன–ரான க�ோவை தம்பி எம்.எல்.ஏ. விடு–தி–யில் பார்த்–தார் சுந்–தர்– ரா–ஜன். “நாங்க நல்ல கதை வெச்–சி–ருக்–க�ோம். நீங்க சினிமா படமா எடுத்தா நல்லா ஓடும்” என்று ச�ொல்–லி–யி–ருக்–கி–றார்–கள். அர–சி–யல்–வா–தி–யாக இருந்–துக�ொண்டு படம் தயா–ரிப்–பதா என்று க�ோவை தம்பி தயங்–கி–யி–ருக்– கி–றார். அப்–ப�ோது அமைச்–ச–ராக இருந்த அரங்–க– நா–ய–கத்–தி–டம் இவர்–களை அனுப்–பி–யி–ருக்–கி–றார். அரங்–க–நா–ய–கமும் ஆர்–வத்–த�ோடு இவர்–க–ளி–டம் கதை கேட்–டி–ருக்–கி–றார். அந்த கதை அவரை ஈர்த்– தது. “சுந்–தர்–ரா–ஜன் ச�ொன்ன கதை நல்லா இருக்கு. நீங்க தாரா–ளமா படம் பண்–ணுங்க தம்–பி” என்று ச�ொல்–லி–விட்–டார். உடனே மதர்– லே ண்ட் பிக்– ச ர்ஸ் என்– கி ற தயா–ரிப்பு நிறு–வ – னத்தை த�ொடங்– கி – ன ார் செழி– யன். இயக்–கு–ந–ராக யாரை–யும் ப�ோட–வேண்–டாம், சுந்–தர்–ரா–ஜனே இயக்–கட்–டும் என்று அவ–ரே–தான் முடி–வெ–டுத்–தார். கதையை கேட்–டு–விட்டு இளை–ய– ராஜா இசை–ய–மைக்க சம்–ம–தித்–தார். நான்கு மணி நேரத்–தில் 30 டியூன்–கள் ப�ோட்–டுக் க�ொடுத்–தார். “எது வேணும�ோ, எடுத்–துக்–க�ோ” என்று அவர் சுந்–தர்–ரா–ஜ– னி–டம் ச�ொல்ல, “நீங்–களே என்–ன�ோட காட்–சிக – ளை கேட்–டுட்டு எது செட் ஆகும�ோ, அதை மட்–டும் பண்– ணி க் க�ொடுங்– க ” என்று பந்தை இளை– ய – ரா–ஜா–விட – மே தள்–ளிவி – ட்–டார் சுந்–தர்–ரா–ஜன். தன்னை நம்பி ஓர் இயக்–குந – ர் ப�ொறுப்பை ஒப்–பட – ைத்–துவி – ட்–ட– தால், எல்லா பாடல்–க–ளை–யுமே மிக மிக சிறப்–பாக அமைத்–துத் தந்–தார் ராஜா. பதி–மூன்று லட்ச ரூபாய் செல–வில் நான்கே மாதங்–க–ளில் தயா– ர ா– ன து ‘பய– ணங்– க ள் முடி– வ – தில்–லை’. தமி–ழ–கத்–தின் பல்–வேறு நக–ரங்–க–ளில் வெள்–ளி–விழா கண்ட இத்–தி–ரைப்–ப–டம், சென்–னை– யில் நானூறு நாட்–க–ளுக்–கும் மேலாக ஓடி–யது. இப்–படி – ய – ாக சுந்–தர்–ரா–ஜனி – ன் முதல் படமே அவரை முன்–னணி இயக்–குந – ர– ாக தமிழ் சினி–மா–வில் நிலை– நி–றுத்–தி–யது. சிவ–கு–மார், ரஜி–னி–காந்த், விஜ–ய–காந்த், சத்–ய– ராஜ், கார்த்–திக், ம�ோகன் என்று எண்–ப–து–க–ளின் முன்– ன ணி ஹீர�ோக்– க – ளி ல் த�ொடங்கி த�ொண்– ணூ–று–க–ளில் வளர்ந்து வந்த விஜய் வரைக்–கும்
10
வெள்ளி மலர் 1.9.2017
பெரிய நடி–கர்–கள் இவ–ரது இயக்–கத்–தில் நடிக்க ஆசைப்–பட்–டார்–கள். சுந்–தர்–ரா–ஜன் இயக்–கி–னாலே அது வெற்–றிப்–ப–டம்–தான் என்–கிற நம்–பிக்கை திரை– யு–ல–கில் நில–வி–யது. சென்–டி–மென்–டு–கள் நில–விய தமிழ் சினி–மா–வில் முற்–ப�ோக்–கான நட–வடி – க்–கைக – ள் மூலம் தன்னை நிலை–நிறு – த்–திக் க�ொண்–டார். ‘அந்த நடிகை ராசி–யில்–லா–த–வங்–க’ என்று ச�ொன்–னால், வேண்–டு–மென்றே அவரை தன்–னு–டைய படத்–தில் துணிச்–ச–லாக நடிக்க வைத்து வெற்றி காண்–பார். சுந்– த ர்– ர ா– ஜ ன் சம்– ப ந்– த ப்– ப ட்ட ஒரு நிகழ்வு, இன்– று ம் க�ோடம்– ப ாக்– க த்– தி ல் பர– ப – ர ப்– ப ாக பேசப்–ப–டு–கி–றது. கதை வச–னக – ர்த்–தா–வும், இயக்–குந – ரு – ம – ான பீட்–டர் செல்–வகு – ம – ார், சுந்–தர்–ரா–ஜன் இயக்–கத்–தில் ஒரு படம் தயா–ரிக்க ஆசைப்–பட்–டார். விஜ–ய–காந்த் ஹீர�ோ, ராதா ஹீர�ோ–யின் என்று முடி–வெடு – க்–கப்–பட்டு ஜாம்– ஜா–மென்று பூஜை ப�ோடப்–பட்–டது. வழக்–கம்–ப�ோல இளை–யர– ாஜா அரு–மைய – ாக பாட்–டெல்–லாம் ப�ோட்டு க�ொடுத்–து–விட்–டார். முதல் நாள் படப்–பி–டிப்பு. ஆர்ட்–டிஸ்–டெல்–லாம் மேக்–கப்–ப�ோடு தயா–ராக இருக்–கி–றார்–கள். கேம–ரா–வின் வியூஃ–பைண்–டர் வழி–யாக பார்த்– துக்–க�ொண்டே தயா–ரிப்–பா–ள–ரி–டம் சுந்–தர்–ரா–ஜன் கேட்–டா–ராம். “பீட்–டரு, நம்ம படத்–த�ோட கதைக்கு சிட்டி சப்–ஜெக்ட் புடிக்–க–லாமா இல்–லைன்னா வில்–லேஜ் பேக்–டி–ராப்பா?” ஷூட்–டிங்–குக்கு வந்த நிலை–யி–லும் டைரக்–ட–ரி– டம் கதையே இல்லை என்–பதை உணர்ந்த பீட்– டர் செல்–வ–கு–மா–ருக்கு கை காலெல்–லாம் வெட வெ–டத்–து–விட்–டது. “இயே–சுவே!” என்று வாய்–விட்டு அரற்–றி–ய–வ–ரி–டம், “கவ–லைப்–ப–டாதே, நாம எடுத்– தாலே அது ஹிட்–டு–தான்” என்று தைரி–யப்–ப–டுத்தி படம் எடுத்–தார். அந்த படம்–தான் மிகப்–பெ–ரிய வெற்–றி–பெற்ற ‘அம்–மன் க�ோவில் கிழக்–கா–லே.’
(புரட்–டு–வ�ோம்)
“சூ ரகுவரன் மாதிரி நடிக்கிறேனாம்... ரஜினி சார் ச�ொல்றாரு! வசந்த் ரவி–
ப்–பர்... சூப்–பர்... கலக்–கிட்–டீங்க. ஸ்கி–ரீன்ல நீங்க நடிச்ச மாதி–ரியே தெரி–யலை. அந்த கேரக்–டர– ாவே மாறிட்–டீங்க. வெல்–டன்... வெல்– டன். எப்–படி உங்–க–ளால இப்–படி நடிக்க முடிந்–தது? உண்–மை–யி–லயே ஆச்–ச–ரி–யமா இருக்கு. சில இடங்– கள்ல அப்–ப–டியே ரகு–வ–ரன் மாதிரி எக்ஸ்ட்–ரார்–டி–னரி பெர்ஃ–பா–மன்ஸ் பண்ணி அசத்–தி–யி–ருக்–கீங்க. உங்–க– ளுக்கு ஃபியூச்–சர் ர�ொம்ப நல்லா இருக்–கும். இப்ப ‘காலா’ ஷூட்–டிங் நடந்–துக்–கிட்–டி–ருக்கு. சீக்–கி–ரமா மீட் பண்–ணு–வ�ோம்.” ப�ோனில் திடீ–ரென ரஜினி ப�ொழிந்த பாராட்டு மழை–யில் நனைந்து திகைப்–புள்–ளான ‘தர–மணி – ’ ஹீர�ோ வசந்த் ரவியை மடக்கி கூல் செய்து பேசி–ன�ோம். “திரு–நெல்–வே–லிக்கு பக்–கத்–துல இருக்–கிற ம�ொளஞ்– சி–பட்–டி–யில பிறந்–தேன். பேர், வசந்–த–கு–மார். ‘தர–ம–ணி–’– யில நடிக்–கி–றப்ப டைரக்–டர் ராம் சார், ‘வசந்த் கூட, உன் அப்பா பேர் ரவி–யை–யும் சேர்த்–துக்க. ர�ொம்ப பவர்ஃ–புல்லா இருக்–கும்–’னு சொன்–னார். இப்–ப–டித்–தான் நான், வசந்த் ரவி ஆனேன். மான்–செஸ்–டர்ல ஹெல்த் கேர் மேனேஜ்–மென்ட் படிச்–சேன். பிறகு சென்–னை– யில இருக்–கிற ஒரு ஆஸ்–பிட்–டல்ல மேனே–ஜரா ஒர்க் பண்–ணேன். சின்ன வய–சுல இருந்தே எனக்கு சினிமா கனவு. ஸ�ோ, அந்த வேலை–யில நாலு மாசத்–துக்கு மேல என்–னால கவ–னம் செலுத்த முடி–யலை. ரிசைன் பண்–ணேன். பிறகு ஒவ்–வ�ொரு கம்–பெ–னியா ப�ோய் வாய்ப்பு தேடி அலைஞ்–சது – த – ான் மிச்–சம். ஒரு டைரக்–டர் கூட என்னை ஏறெ–டுத்து பார்க்–கலை. அப்ப டைரக்–டர் ராம் சார் கூப்–பிட்டு, ‘தர–ம–ணி’ கதையை ச�ொன்–னார். உடனே மும்–பைக்கு ப�ோய், அனு–பம் கெர் ஆக்–டிங் ஸ்கூல்ல சேர்ந்து, ஆறு மாசம் நடிப்–புப் பயிற்சி பெற்–றேன். பிராக்–டி–கல், தியரி கிளாஸ் ரெண்–டுல – யு – ம் ஸ்கோர் பண்–ணேன். அமீர்–கான், அனு–பம் கெர் பாடம் நடத்–தின – ாங்க. ஒரு–வழி – யா தைரி–யம் வந்–தது. கேமரா முன்–னால நின்னு நல்லா நடிப்–பேன்னு நம்–பி– னேன். பிறகு சென்–னைக்கு வந்–தேன். ‘தர–ம–ணி–’–யில நடிச்–சேன். எனக்கு அஞ்–சலி, ஆண்ட்–ரியா, அழ–கம்–பெரு – – மாள் மூணு–பேரு – ம் சீனி–யர் ஆக்–டர்ஸ். ஆனா, ஷூட்–டிங் ஸ்பாட்ல அவங்க எனக்–காக அட்–ஜஸ்ட் பண்ணி நடிச்– சாங்க. நடிப்பு சம்–பந்–தமா நிறைய டிப்ஸ் க�ொடுத்–தாங்க. நான் ர�ொம்ப கூச்ச சுபாவி. இன்ஸ்–டி–டி–யூட் படிப்பு என்னை ட�ோட்–டலா மாற்றி, சிறப்பா நடிக்க கார–ணமா இருந்–தது. இப்ப என்னை உல–கமே திரும்பி பார்த்–தி– ருக்கு. ஒரு–முறை பார–தி–ராஜா சார், ‘ஏதா–வது ஒரு சீன் நடிச்–சுக் காட்–டு–’ன்னு ச�ொன்–னார். நடிச்–சேன். அதைப் பார்த்து ஆச்–ச–ரி–யப்–பட்ட அவர், ‘உன்–கிட்ட ஒரு ஃபயர் இருக்–கு–’ன்னு ச�ொன்–னார். ‘தர–ம–ணி’ படத்தை பார்த்த அவர், ‘நீயா இவ்–வள – வு சிறப்பா நடிச்–சிரு – க்கே. என்–னால நம்–பவே முடி–யல – ை–டா–’ன்னு ச�ொன்–னார். ‘தர–மணி – ’ படத்– துக்–காக க�ோவ–ளம் கடல்ல, படகு மேல இருந்து கீழே தண்–ணி–யில குதிச்சு நடிச்ச சீனை மறக்க முடி–யாது. ஏன்னா, அந்த சீன்ல என் உயிரை பண–யம் வெச்சு நடிச்–சிரு – ந்–தேன். அதுக்–கான பலன் இப்ப கிடைச்–சிரு – க்கு. அதி–ரடி ஆக் –ஷன் ஹீர�ோவா வர–ணும். இது–தான் என் ஆசை” என்–கிற வசந்த் ரவி–யின் அப்–பா–தான் ‘வசந்–த –ப–வன்’ ஓட்–டல் குழு–மத்–தின் உரி–மை–யா–ளர்.
- தேவ–ராஜ்
1.9.2017 வெள்ளி மலர்
11
ஒரே நேரத்தில் அஜித் - விஜய் இருவருக்கும் ஹீர�ோயின்! காஜல் சாதனை
12
வெள்ளி மலர் 1.9.2017
த
மிழ் சினி–மா–வில் நடி–கர்–கள் வேண்–டும – ா–னால் நாற்–பது ஆண்–டு–க–ளாக ந�ோட்டை எடுத்–துக் க�ொண்டு காலே–ஜுக்கு ப�ோக–லாம். தனக்கு மக–ளாக நடித்–தவ – ர – ையே, தனக்கு அம்–மா–வா–ககூ – ட நடிக்க வைக்–க–லாம். ஆனால், ஹீர�ோ–யின்–க–ளின் காலம் என்–பது மிக–வும் குறைவு. குஷ்பு, திரிஷா, நயன்–தாரா ப�ோன்ற விரல்–விட்டு எண்–ணக்–கூ–டிய விதி–வி–லக்–கு–கள் மட்–டுமே உண்டு. அவர்–க–ளது வரி–சை–யில் பத்து ஆண்–டுக – ளை ஹீர�ோ–யின – ா–கவே கடந்து சாதனை புரிந்–தி–ருக்–கி–றார் காஜல் அகர்– வால். தமிழ் மட்–டு–மின்றி தெலுங்கு, இந்–தி–யி–லும் காஜல் ஏகத்–துக்–கும் பிஸி. “அஜித்–த�ோடு ‘விவே–கம்’ படத்–தில் நடித்த அனு–ப–வம்?” “இது–வ–ரைக்–கும் நான் ஸ்பை திரில்–லர் படம் பண்–ணி–னது கிடை–யாது. அது–வும் இன்–டர்–நே–ஷ– னல் ஸ்பையை சுற்றி நடக்–கிற இந்–தி–யன் படம், நம்ம இந்–திய ரசி–கர்–களு – க்கே ர�ொம்ப புதுசு. அந்த விதத்–துல இந்த படம் கிடைச்–சது ர�ொம்ப லக்– கின்னு ச�ொல்–வேன். அது–லே–யும் அஜீத் சார் கூட முதல்–மு–றையா ஒர்க் பண்ற சான்ஸ் அமைஞ்–ச– துக்கு கட–வு–ளுக்கு ஸ்பெ–ஷல் தேங்க்ஸ். அஜீத் சார�ோட மனை–வியா நடிச்–சேன். வெளி–நாட்–டுல இருக்–கிற தமிழ் ப�ொண்ணு கேரக்–டர், ரசி–கர்–க– ளுக்கு ர�ொம்–பவே பிடிச்–சுப�ோ – ய், நல்ல விமர்–ச– னங்–கள் வர்–றது ர�ொம்–பவே சந்–த�ோ–ஷமா இருக்கு. இந்–திய சினிமா இது–வர – ைக்–கும் ஷூட் பண்–ணாத பல்–கேரி – யா, செர்–பி– யான்னு பல நாடு–க–ளுக்–கெல்–லாம் நாங்க ப�ோன�ோம். மலை மேல ஏறு– கிற ரிஸ்க்–கான காட்–சி–க–ளெல்–லாம் அஜீத் சார் நடிச்–சி–ருக்–காரு. இந்த பட ஸ்டன்ட் காட்–சி–யெல்– லாம் பார்த்து மிரண்டு ப�ோயி–ருந்–தேன். 2 மாசம் நான் இந்த பட ஷூட்–டிங் பண்–ணி–யி–ருக்–கேன். எங்க டீம�ோட உழைப்–புக்கு நல்ல பலன் கிடைச்– சி–ருக்கு. ர�ொம்–பவே சந்–த�ோ–ஷமா இருக்–கு.” “அஜித் எப்– ப – டி ன்னு கேட்டா எல்– ல ா– ரு மே ஆஹா– ஓ–ஹ�ோன்–னுதா – ன் புக–ழுவா – ங்க. நீங்க என்ன ச�ொல்–லப் ப�ோறீங்க?” “நானும் புக–ழத்–தான் ப�ோறேன். ர�ொம்–பவே கூல் பெர்–சன் அவர். ஸ்டா–ருங்–கிற எந்த பந்– தா–வை–யும் பார்க்க முடி–யாது. மனம் விட்டு பேசு–வாரு. அது–தான் அவர்–கிட்ட எனக்கு ர�ொம்–பவே பிடிச்ச விஷ–யம். அவர் பேசு–ற– தெல்–லாம் வெறும் சினி–மாவை பற்–றிய விஷ– யமா இருக்–காது. அறி–வி–யல் பேசு–வாரு, இயற்கை வளங்–கள் பற்றி பேசு–வாரு. அவ– ருக்கு தெரி–யாத விஷ–யங்–கள் இருக்–காது. ர�ொம்–பவே ஜாலி–யாக சிரிச்–சிட்டே இருக்–கிற டைப் அவர். செட்–டுல கூட நடிக்–கிற ஆர்ட்– டிஸ்ட்–டுக்கு எந்த மரி–யாதை தர்–றார�ோ அதே மரி–யாதை சின்ன வேலை பார்க்–கிற பைய–னுக்கு கூட க�ொடுப்–பார். நான் சந்–திச்ச நல்–ல–வர்–கள்ல அஜீத் சாரும் ஒருத்–தர். அவர் கூட நடிச்–சதை பெரு– மையா நினைக்–கி–றேன். அதே மாதிரி டைரக்–டர் சிவா–வும் ர�ொம்–பவே டெடி–கே–ஷ–னான டைரக்–டர்.
1.9.2017 வெள்ளி மலர்
13
செட்ல ஒரு நிமி–ஷ–மும் சும்மா இருக்க மாட்–டார். அடுத்த காட்–சி–க–ளுக்–கான வேலை–யில மூழ்–கி–டு– வார். இப்–ப–டி–ய�ொரு டீம�ோட ஒர்க் பண்–ணி–னது எனக்–கும் எனர்–ஜெட்–டிக்கா இருந்–துச்–சு.” “அஜித்–து–டன் நடிச்–சிட்டே, அப்–ப–டியே விஜய்–ய�ோடு ‘மெர்சல்’ பண்–ணிட்–டீங்க. ரெண்டு பேர் கிட்–டே–யும் இருக்–கிற வித்–தி–யா–சங்–கள் என்ன?” “விஜய் சாரு–டன் ‘மெர்–சல்’ படம் மூலமா மூணா–வது முறை அவ–ருக்கு ஜ�ோடியா நடிக்–கி– றேன். அஜீத் சார் கூட இது–தான் முதல் முறை. ரெண்டு பேர்–கிட்–டே–யும் வித்–தி–யா–சங்–கள் அதி–க– மாக இருக்–கிற – தா தெரி–யல. ஆனா, ஒற்–றுமை – க – ள் நிறைய இருக்–குன்னு நினைக்–கி–றேன். அது, கடு– மை–யான உழைப்பு. நாம ஸ்டார்ஸ் ஹீர�ோக்–கள், அத–னால எப்–படி நடிச்–சா–லும் ஓகேன்னு நினைக்– கிற ஹீர�ோக்–கள் கிடை–யாது இவங்க ரெண்டு பேரும். காட்சி சரியா வர்–ற–துக்–காக நிறைய ஒர்க் அவுட் பண்–ணு–வாங்க. டைரக்–ட– ருக்கு திருப்தி வர்ற வரைக்– கும் அவங்– க – ளு ம் சலிக்க
மாட்–டாங்க. ஆக்–ஷன் காட்–சி–கள்ல ரிஸ்க் எடுக்க தயங்–கவே மாட்– டாங்க. செட்ல எல்–ல�ோர்–கிட்–டே–யும் ஒரே மாதிரி பழ–குற தன்மை. இப்–படி எல்–லாமே ரெண்டு பேருக்–குள்–ளே–யும் ஒற்–று–மை–க–ளாத்–தான் நான் பார்த்–தேன். அத–னால தைரி–யமா ச�ொல்–வேன். ரெண்டு பேருக்– கும் நிறைய வேறு–பா–டு–கள் கிடை–யாது. ஒற்–று–மை–கள்–தான் நிறைய இருக்–கு.” “உங்க கேரக்–டர் அடி–ப–டும்–கிற பயமே உங்–க–ளுக்கு இல்–லையா? ஏன்னா ‘விவே–கம்–’ல அக்–ஷரா இருந்–தாங்க. ‘மெர்–சல்–’ல நித்யா மேனன், சமந்தா இருக்–கி–றாங்க..?” “கதை கேட்–டுட்டு, என்–ன�ோட கேரக்–டர் கேட்–டுக்–கிட்டு, வேற எந்த ஹீர�ோ–யின்–கள் நடிக்–கி–றாங்–கன்னு தெரிஞ்–சிட்–டு–தான் நான் நடிக்–கி– றேன். அப்–படி இருக்–கும்–ப�ோது நான் எதுக்கு பயப்–பட – ணு – ம்? மத்–தவங்க –
பற்றி நான் ய�ோசிக்–கி–றது கிடை– யாது. அது பற்–றிய கவ–லை–யும் எனக்கு கிடை–யாது. என்–ன�ோட கேரக்–டரை மட்–டும்–தான் நான் பார்க்–கி–றேன். அது–வும் நம்–பிக்– கை– யு ள்ள டைரக்– ட ர்– க ள் கூட ஒர்க் பண்– ணு ம்– ப�ோ து, எந்த விதத்–து–லே–யும் அந்த நம்–பிக்– கையை அவங்க வீண–டிக்க மாட்– டாங்–கன்னு உறு–தியா ச�ொல்ல முடி– யு ம். எந்த மாதிரி கதை ச�ொல்–றாங்–கள�ோ அந்த மாதி– ரியே எடுப்–பாங்க. எந்த மாதிரி என்–ன�ோட கேரக்–ட–ருக்கு முக்–கி– யத்–து–வம் இருக்–குன்னு ச�ொல்– றாங்– க ள�ோ அந்த மாதி– ரி யே முக்–கி–யத்–து–வ–மும் தரு–வாங்க. இதுக்கு முன்–னா–டியு – ம் நான் பல ஹீர�ோ–யின்–க–ள�ோடு நடிச்–சி–ருக்– கேன். அப்– ப டி இல்– ல ேன்னா நான் த�ொடர்ந்து அந்த மாதிரி நடிக்– க வே மாட்– டேனே . எந்த ம�ொழி பட–மாக இருந்–தா–லும் இப்போ பெரும்–பா–லும் இரண்டு அல்–லது மூன்று ஹீர�ோ–யின்–கள் நடிக்–கிற படம்–தான் வருது. அதுக்– குன்னு கமர்– ஷி – ய ல் வேல்யூ இருக்– கு ம்– ப�ோ து அதை– யெ ல்– லாம் தவிர்க்க முடி–யாது. எனக்கு என்–னான்னு எழுதி இருக்கோ, அது எனக்கு கிடைச்–சே–தானே தீரும்.” “சினிமா துறை–யில பத்து வரு–ஷம் க�ொண்–டா–டிட்–டீங்க. எப்–படி ஃபீல் பண்–றீங்க?” “ர�ொம்–பவே ஆச்–ச–ரி–ய–மாத்– தான் இருக்கு. இப்– ப�ோ – த ான் இண்–டஸ்ட்–ரிக்–குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்கு. அதுக்–குள்ள பத்து வரு–ஷம் முடிஞ்சு ப�ோயி– ருக்கு. நல்ல நல்ல படங்–கள், நல்ல டைரக்–டர்ஸ், ஹீர�ோஸ், டெக்– னீ – ஷி – ய ன்– க ள் கூட ஒர்க் பண்– ணி – யி – ரு க்– கே ன். சினிமா எனக்கு நிறைய க�ொடுத்– தி – ருக்கு. குறிப்பா, ரசி–கர்–க–ள�ோட அன்பு. அதுக்கு இணை எது–வும் கிடை–யாது. இந்தி சினி–மா–லே– ருந்து வாழ்க்–கையை த�ொடங்– கி– ன ா– லு ம் தமிழ், தெலுங்கு சினி– ம ா– த ான் எனக்கு வாழ்க்– கையே க�ொடுத்–தி–ருக்கு. இங்– கி– ரு ந்– து – த ான் பாலி– வு ட்– டு க்கு திரும்ப ப�ோயிட்டு ஜெயிக்–கவு – ம் முடிஞ்–சி–ருக்கு. அத–னால பாலி– வுட்ல எத்–தனை உய–ரத்–துக்கு
14
வெள்ளி மலர் 1.9.2017
ப�ோனாலும் தமிழ், தெலுங்கு பட வாய்ப்பு வந்துச்– சுன்னா உடனே ஓடி–வந்து இங்கே நடிப்–பேன்” “பத்து வரு– ஷ மா நடிச்– சா – லு ம் கிசு– கி – சு ல சிக்– க ாம இருக்–கீங்க. எப்–படி?” “ர�ொம்– ப வே பல– வீ – ன – ம ான கிசு கிசுக்– க ள் வந்–தி–ருக்–க–லாம். கார–ணம், அதுல உண்–மையே இருக்–காது. என்–ன�ோட பழக்க வழக்–கம் அப்–படி. ஷூட்–டிங் முடிஞ்சா, வீட்–டுக்கு ப�ோயி–டு –வேன். பார்ட்டி, ஃபிரெண்ட்–சுன்னு எங்–கே–யும் சுத்–து–றது கிடை–யாது. நிஜ–மா–கவே நான் யாரை–யும் காத– லிக்–க–வும் இல்லை. இது–வ–ரைக்–கும் காதல்ல விழ– வும் இல்லை. அத–னால வேலை, வேலைன்னு அதை மட்–டும்–தான் காத–லிக்–கி–றேன். இத–னால என்– னை ப் பற்றி எந்த தப்– ப ான விஷ– ய – மு ம் வர்–ற–துக்கு வாய்ப்பே இல்–லை.” “உங்க மேனே–ஜரை ப�ோதைப் ப�ொருள் வழக்–குல கைது பண்–ணி–ன–தால அப்–செட் ஆகி இருந்–தீங்–களே?” “அப்–செட் ஆகல. அதை வச்சு என்–னைப் பற்றி சில பேர் கேள்–வி–கள் கேட்–ட–தால அதுக்கு பதில் ச�ொன்–னேன். ஒருத்–தர் நம்ம கூட ஒர்க் பண்–றா– ருன்னா, அது முழுக்க முழுக்க புர–ப–ஷன் சார்ந்த விஷ–யம். அவங்–க–ள�ோட பர்–ச–னல் வாழ்க்–கை–யில நான் தலை–யிட முடி–யுமா? மாலை ஆறு மணிக்கு மேல அவங்க யார�ோ, நான் யார�ோன்–னு–தான் இருப்–ப�ோம். அப்–படி இருக்–கும்–ப�ோது, அவங்க ஆறு மணிக்கு மேல எங்க ப�ோயிட்டு என்ன பண்–றாங்–கன்னு நான் கண்–கா–ணிக்க முடி–யுமா?
ðFŠðè‹
நான்-வெஜ் சாப்–பி–டு–ற–வரை பிடிச்சு, வெஜ்–தான் நீ சாப்–பிட – ணு – ம்னு வற்–புறு – த்தற மாதி–ரித – ான் இருக்கு, இது எல்–லாம்.” “உங்க தங்கை நிஷா திடீர்னு ஃபேமி–லின்னு செட்–டி– லா–யிட்–டாங்க. நீங்க எப்போ கல்–யா–ணம் காட்–சின்னு?” “அவள் காதல்ல விழுந்தா, அத–னால இது– தான் வாழ்க்–கைன்னு ஒரு முடிவு எடுத்தா, செட்– டில் ஆயிட்டா. எனக்–கும் அந்த மாதிரி யாரா–வது கிடைக்–க–ணும் இல்–லியா? கிடைச்சா நானும் செட்– டில் ஆக–லாம். ஆனால், இப்–ப�ோ–தைக்கு என்– ன�ோட உயிர், மூச்சு எல்–லாமே சினிமா, சினிமா, சினி–மா–தான். இப்போ கூட நிஷா என்–கூட சினிமா பற்றி நிறைய பேசு–வாள். என்–ன�ோட தமிழ் படங்– களை பார்த்–துட்டு கமென்ட் அடிப்–பாள், விமர்–சன – ம் செய்வா, அவள் என்–ன�ோட தங்–கச்சி, த�ோழி மட்–டும் கிடை–யாது. நல்ல விமர்–சகி கூட.” “ஒரு பாட்–டுக்கு நிறைய ஹீர�ோ–யின்ஸ் ஆடு–றாங்க. நீங்க இது–வ–ரைக்–கும் அது–ப�ோல ஆடி–னது இல்–லையே. வாய்ப்பு வந்தா அது–ப�ோல நடிப்–பீங்–களா?” “உண்–மை–தான். பெரிய ஹீர�ோ–யின்–கள் கூட அது–ப�ோல் நடிக்–கி–றாங்க. அது வர்ற வாய்ப்பை ப�ொருத்து இருக்கு. பெரிய படம், நல்ல வாய்ப்பு, நல்ல டைரக்–டர் இருக்–க–ணும். அதே ப�ோல அந்த பாடல்ல எந்த மாதிரி என்னை வெளிப்–ப–டுத்–த– ணும்–கிற விஷ–ய–மும் இருக்கு. என்–ன�ோட கவர்ச்சி லிமிட் எனக்கு தெரி–யும். அதை–யெல்–லாம் மன–சுல வச்–சு–தான் வாய்ப்பு வந்தா ஏற்க முடி–யும்.”
- ஜியா
பரபரபபபான விறபனனயில்
ரகசிய விதிகள்
குஙகுமததில் சவளிவந்்த ச்தபாடரகள் இபவபபாது நூல்வடிவில்
முகஙகளின்
u225
தேசம்
எலலா நிலங்–க–ளும் உயி–ருள்–ள–்ை–தான். தட்–ப–சைப–பம் சோர்ந்து அைற்–றின் குண– ந–லங்–கள் உரு–ைா–கின்–றன. நிலங்–கமள அங்கு ைாழும் ேனி–தர்–க–ளின் உரு–ைத்தச சசேதுக்–கு–கின்–றன. அந்த ை்க–யில இந்– தி–யா–வின் முகம் எது என்ற மதட–லுக்–கான வி்டமய இந்த ‘முகங்–க–ளின் மதசேம்’ நூல.
சஜயவமபாகன
சுபபா
u200
இந்–தத சதாடர் சைளி–ை–ரத சதாடங்–கிய சேே–யத–தில சி்ல திருட்–டுக்குப பின்–னால இருக்–கும் ேனி–தர்–கள், விஷ–யங்–கள், கார–ணங்–கள் குறித–து சபரும்–பா–லான ேக்–கள் அறி–யா–ே–மலமய இருந்–தார்–கள். ‘ரக–சிய விதி–கள்’ பதது அத–தி–யா–யங்–கள் கடந்த நி்ல–யில தமி–ழ–கம் முழுக்க ஹாட் டாப–பிக்–காக ‘சி்ல திருட்–டு’ ோறி–யது.
பிரதி வவண்டுவவபார ச்தபாடரபுசகபாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வரபாடு, மயிலைபாபபூர, செனனன-4. வபபான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனன: 7299027361 வகபானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செல்னலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ெபாகரவகபாவில்: 9840961978 சபஙகளூரு: 9945578642 மும்னப:9769219611 சடல்லி: 9818325902
புத்தக விறபனனயபாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகபபடுகின்றன. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இபவபபாது ஆனனலைனிலும் வபாஙகலைபாம் www.suriyanpathipagam.com 1.9.2017 வெள்ளி மலர்
15
SPYDER சிலந்தி இல்ல... சிறுத்தை! ம
“
னித நேயத்தை ஆக்–ஷ ன் பின்– ன – ணி– ய� ோடு ச�ொல்– ல ப்– ப �ோற படமா ‘ஸ்பை–டர்’ இருக்–கும். இந்–தப் படம் என்–ன�ோட முந்–தை–ய படங்–களை ப�ோல கன– மான மெசேஜை மக்–க–ளுக்கு ச�ொல்–லுற படம்னு ச�ொல்ல மாட்–டேன். ஆனா கதை–ய�ோடு கலந்த நல்ல விஷ–யங்–கள் தியேட்–டரை விட்டு வெளியே வந்த பிற–கும் கூட மனசை சுத்–திட்டே இருக்–கும். மகேஷ்–பாபு – ங்–கிற சூப்–பர் ஸ்டாரை முதல் முறையா தமி–ழுக்கு க�ொண்டு வர்ற பெரு–மையு – ம் இந்த படத்–துக்கு இருக்–கு” என்று பெரு– மி–த–மா–கவே ஆரம்–பித்–தார் டைரக்–டர் முரு–க–தாஸ்.
உன்னை மாதிரி கெட்– ட – வ ன் இருக்– கி ற இதே உல–கத்–து–ல–தான் அவனை மாதிரி நல்–ல–வ–னும் இருப்–பா–ன்ங்–கிற வச–னம் படத்–த�ோட டீச–ரி–லும் வரும். அந்த ஒன்–லைன்–தான் படத்தை தூக்–கிட்டு ப�ோற விஷ–யம். ஆனா, அதுக்கு நடுவே நிறைய விஷ–யங்–களை படம் த�ொட்–டுட்டு ப�ோகும். அதுல முக்–கி–ய–மா–னது மனி–த–நே–யம். மனு–ஷ–னுக்–குள்ள இருக்–கிற மனி–த–நே–யத்–தை–யும் சில மனு–ஷங்–க– கிட்ட அது இல்–லாம ப�ோன–தை–யும் காட்–சி–க–ளால உ ண ர் – வு – பூ ர் – வ – ம ா க ச � ொ ல் லி இருக்–கேன்.”
“இந்த படத்தை தமிழ் - தெலுங்–குன்னு ரெண்டு ம�ொழி–யில பண்–றது – க்கு கார–ணம்?” “மகேஷ்–பாபு கூட பல வரு–ஷத்–துக்கு “தலைப்பு ஒரு மாதிரி ஹாலி–வுட் பாணி–யில் முன்–னா–டியே சேர்ந்து படம் பண்ண இருக்கே. ‘ஸ்பை–டர்’ கதை என்ன?” பேசி இருந்–தேன். அதற்–கான நேரம் “ஒரு உள–வாளி. கெட்–டது நடக்–கும்– அமை–யல. திடீர்னு பாலி–வுட் வாய்ப்பு ப�ோது அதை தடுக்–க–ணும்–கிற வெறி– வந்–துச்சு. அவ–ரும் மத்த படங்–கள்ல ய�ோடு வேலை பார்க்–கிற உள–வாளி. பிசியா இருந்–தாரு. ஆனா, எங்–கள� – ோட கெட்–டதை மட்–டுமே செய்–கிற அதே முரு–க–தாஸ் கமிட்–மென்ட் மட்–டும் அப்–ப–டியே இருந்– நேரம் அதை தன்–ன�ோட சித்–தாந்–தம் மூலமா நியா–யம்னு பேசுற குற்–ற–வாளி. இவங்–க– துச்சு. எப்போ பண்–ணி–னா–லும் அதை தமிழ் ளுக்கு இடை–யி–லான சேஸிங்–தான் ஸ்பை–டர். தெலுங்–குன்னு ரெண்டு ம�ொழி ரசி–கர்களுக்குமான
16
வெள்ளி மலர் 1.9.2017
படமா பண்– ண – ணு ம்– கி – ற – து ல நான் உறு– தி யா இருந்–தேன். அதுக்கு, மகேஷ்–பா–புக்கு இருக்–கிற தமிழ் ரசி–கர்–கள் முக்–கிய கார–ணம். அவ–ர�ோட தெலுங்கு படங்–க–ளுக்கு தமிழ்–நாட்–டுல இருக்–கிற மவுசு தனி. அதை–யெல்–லாம் மன–சுல வச்–சு–தான் இந்த படத்தை பண்ண நினைச்–சேன். கதைக்–கள – – மும் அது–ப�ோல அமைஞ்–சது. உடனே ரெண்டு ம�ொழிக்–கான பட–ம ா–க–வு ம் இதை உரு– வாக்க ஆரம்–பிச்–சுட்–ட�ோம். இதை பிர–மாண்–டம – ான படமா உரு–வாக்–கு–ற–துல என்–ன�ோட தயா–ரிப்–பா–ளர்–கள் என்.வி.பிர–சாத், தாகூர் மது–வின் ஒத்–து–ழைப்பு முக்–கி–ய–மா–ன–து.” “மகேஷ்–பாபு கூட ஒர்க் பண்–ணின அனு–ப–வம் பற்றி?” “இயக்–கு–ந–ர�ோட நடி–கர் அவர். இந்த உய–ரத்– துக்கு வந்த பிறகு கூட, டைரக்–டர் ச�ொல்ற விஷ– யத்தை கேட்டு, டைரக்–டர� – ோட பார்–வையி – ல அந்த காட்சி எந்த மாதிரி வர–ணும�ோ அந்த மாதிரி வர்–ற– துக்–காக மெனக்–கெடு – வா – ர். நானே கூட ப�ோதும்னு ச�ொல்–லிட்–டா–லும் சீக்–கி–ரம் காம்ப்–ர–மைஸ் ஆக மாட்–டார். நீங்க நினைச்ச மாதிரி வரல ப�ோலி– ருக்–குன்னு டக்–குன்னு புடிச்–சிக்–கு–வாரு. திரும்ப பண்–ண–லாம்னு க�ொஞ்–ச–மும் முகம் சுழிக்–காம அந்த காட்சி நல்லா வர்–ற–துக்–காக அர்ப்–ப–ணிப்– ப�ோடு நடிப்–பார். இத்–தனை வரு–ஷம் இவரை மிஸ் பண்–ணி–்ட்–ட�ோ–மேன்னு படத்–த�ோட முதல் ஷெட்–யூல்–லேயே ய�ோசிக்க வச்–சிட்–டாரு. அது–தான் மகேஷ்–பா–பு.” “எஸ்.ஜே.சூர்–யாவை வில்–லன் ர�ோலுக்கு தேர்வு பண்– ணி–னது ஏன்?” “இந்த கதைக்கு உடல்–வாகு க�ொண்ட ஒரு வில்–லனை விட, உடல் ம�ொழி–யால பெர்ஃ–பெக்ட் பெர்ஃ–பார்–ம ன்ஸ் க�ொடுக்– கி ற நடி– க ர் எனக்கு தேவைப்–பட்–டார். இதுக்கு முன்–னாடி அவரை இது– ப�ோல பார்த்–தி–ருக்க கூடாது. அந்த மாதி–ரி–யான பிர–பல முக–மும் எனக்கு தேவையா இருந்–துச்சு. அப்போ சட்–டுன்னு நினை–வுக்கு வந்–தவ – ர் டைரக்–டர் எஸ்.ஜே.சூர்யா. இப்போ அவர் ஹீர�ோவா பண்– ணிட்டு இருக்–கார். இந்த படத்–துக்கு இந்த மாதிரி ஒரு ர�ோலை அவர் பண்–ணுவா – ரு – ங்–கிற சந்–தேக – ம் இருந்–துச்சு. கதையை கேட்–ட–தும் பண்–றேன்னு ச�ொன்–னார்.” “பரத்–தும் வில்–லனா?” “ஆமாம். அதே நேரம் சாதா– ர – ண மா வில்–லன்னு ச�ொல்–லிட்டு விடுற கேரக்–டர் கிடை– யாது. படத்–த�ோட சர்ப்–ரைஸ் ர�ோல் அவர்–தான். இந்த மாதிரி ஒரு ர�ோலுக்கு அவ–ரால – த – ான் நேர்மை காட்ட முடி– யு ம்னு த�ோணுச்சு. அதே மாதிரி பண்–ணி–யி–ருக்–கார்.” “ஹீர�ோ–யின் ரகுலை பற்றி ச�ொல்–ல–லியே?” “ஏற்–க–னவே ட�ோலி–வுட்ல ட்ரீம் கேர்ளா இருக்– கி– ற ாங்க. இந்த படம் மூலமா தமிழ் ரசி– க ர்– க – ள�ோட தூக்–கத்தை கெடுக்–கப்–ப�ோ–வது நிச்–ச–யம். பர–ப–ரன்னு பறக்–கிற திரைக்–க–தைக்கு நடு–வுல ஆடி– ய ன்ஸை ரிலாக்ஸ் பண்ற பகு– தி – க ள்ல
1.9.2017 வெள்ளி மலர்
17
ரகுல் பிரீத் சிங் வர்– ற ார். எனர்– ஜெ ட்– டி க்– க ான ர�ொமான்–டிக் மூடை படத்–துல அவர் க�ொண்டு வரு–வார். டான்ஸ்–லே–யும் கலக்கி இருக்–கார்.” “ட�ோலி–வுட் அனு–ப–வம் எப்–படி இருந்–துச்சு?” “எனக்கு இது ஒண்–ணும் புதுசு இல்–லியே? ஏற்– க – ன வே சிரஞ்– சீ – வி க்கு ‘ஸ்டா– லி ன்’ பண்ணி இருக்–கேன். அத–னால ட�ோலி–வுட்ல நிறைய பேர் பழக்–கம். அங்கே நில–வுற பணி சூழ–லும் எனக்கு நல்ல பரிச்–ச–யம். அத–னால ஐத–ரா–பாத்–துல ஷூட் நடக்–கும்–ப�ோ–தெல்–லாம் க�ோலி–வுட்ல ஒர்க் பண்ற மாதி–ரியே ஜாலியா எங்க டீம் ஒர்க் பண்–ணின – ாங்க. செட்ல திடீர்னு ஒரு நாள் சிரஞ்–சீவி சார் என்ட்ரி ஆனது எங்–க–ளுக்–கெல்–லாம் இன்ப அதிர்ச்–சியா இருந்–து ச்சு. அன்– னி க்கு மகேஷ்– பா பு கூட ஒரு ஸ்டை–லி–ஷான ஷாட்டை பண்–ணிட்டு இருந்–தேன். பக்–கத்து செட்ல ஷூட்–டிங்ல இருந்த சிரஞ்–சீவி சார், திடீர்னு எங்க செட்–டுக்கு வந்–தாரு. எங்–களை வாழ்த்–தி–னார். மகேஷ்–பாபு கூட ஜாலியா பேசிட்டு இருந்–தார். நாங்க எடுத்த ஷாட்–டை–யும் பார்த்து பாராட்–டி–னார்.” “ஹாரிஸ் ஜெய–ராஜ் கூட திரும்ப ஒர்க் பண்–றீங்க?” “ஆமாம். இந்த படத்–துக்கு பாடல்–கள் எவ்–வ– ளவு முக்–கி–யம�ோ அதே–ப�ோல பின்–னணி இசை ர�ொம்–பவே முக்–கிய – ம். கதைக் களம் அந்த மாதிரி. அதுக்கு தன்–ன�ோட பெஸ்ட்டை ஹாரிஸ் க�ொடுத்–தி– ருக்–கார். நேரம் எடுத்து பண்–ணின – ா–லும் அவ–ர�ோட இசை தரம் எல்–ல�ோ–ருக்–குமே தெரி–யும். இது–லேயு – ம் அது காட்–சி–க–ள�ோட வலுவை கூட்–டி–யி–ருக்கு. படம் பார்க்–கும்–ப�ோது ரசி–கர்–கள் அதை உணர்–வாங்–க.” “சந்– த�ோ ஷ் சிவ– ன�ோ – டு ம் மீண்– டு ம் இணைஞ்சு இருக்–கீங்க?” “எங்–க–ள�ோட புரி–தல் அதுக்கு முக்–கிய கார– ணம்னு நினைக்–கிறேன். ஸ்கி–ரிப்ட் எழு–தும்–ப�ோதே இந்த படத்–துக்கு ஒளிப்–பதி – வு எந்த அள–வுக்கு முக்–கி– யத்–துவ – ம் இருக்–கும்–கிற – தை உணர முடி–யும். அதுக்– கேற்ற வகை–யில இந்த மாதி–ரி–யான ஸ்கி–ரிப்ட்டை காட்– சி ப்– ப – டு த்– து ற ஹை டெக்– னீ – ஷி – ய ன் நமக்கு
18
வெள்ளி மலர் 1.9.2017
தேவைப்–ப–டு–வார். அப்–ப–டி–ய�ொரு லெஜன்ட் தான் அவர். ஆக் –ஷன் காட்–சி–க–ளுக்–கான லைட்–டிங்கை அவர் செட் பண்–ணும்–ப�ோதே அதுக்–கான தனி மூட் ஆடி–யன்ஸ் மூளை–யில ஃபிட் பண்ற அவ–ர�ோட மெத்–தட் எனக்கு பிடிக்–கும். அந்த மேஜிக் இது–லே– யும் திரும்ப ஒர்க் அவுட் ஆகி–யி–ருக்கு. தேங்க்ஸ் டு சிவன் சார்.” “உங்க தயா–ரிப்பு நிறு–வ–னத்–து ல புது படம் எது–வும் வர–லியே?” “இந்– தி – யி ல அகிரா முடிச்– ச – து ம் ஸ்பை– ட ர் ஆரம்–பிச்–சிட்–டேன். அடுத்–த–டுத்த கமிட்–மென்ட்– டால புர�ொ–டக்––ஷ ன் ஹவுஸ்ல கவ–னம் செலுத்த நேரம் இல்–லாம ப�ோயி–டுச்சி. ஆனா திரும்ப அதே வேகத்– த� ோட படங்– க ளை பண்– ண ப்– ப �ோ– ற� ோம். அதுக்–கான டிஸ்–க–ஷன் துவங்–கப்–ப�ோ–குது. நல்ல தர–மான சினி–மாவை என்–ன�ோட புர�ொ–டக்––ஷன் கம்–பெ–னி–யி–லே–ருந்து எதிர்–பார்க்–க–லாம்.” “உங்–கள – �ோட மத்த படங்–கள – �ோடு ஒப்–பிடு – ம்–ப�ோது இதுல ஹைடெக் இருக்–கும்னு தெரி–யுதே?” “கண்–டிப்பா இருக்–கும். ஒவ்–வ�ொரு வரு–ஷமு – ம் சினிமா துறை–யில ஹைடெக்–க�ோட தாக்–கம் அதி–க– ரிச்–சிட்டே வருது. அதுக்கு ஏத்த மாதிரி நாம–ளும் மாற–ணும் இல்–லியா? அதுக்–காக அவ–சி–யம் இல்– லாம படத்–துல ஹைடெக் இருக்–காது. கதை–ய�ோடு பய–ணிக்–கிற விஷ–யங்–கள்–தான் படம் முழுக்–கவே இருக்–கும். இந்த படத்–துல குட்டி மெஷின் ஸ்பை– டர் ஒண்ணு வரும். அதுக்கு தனி முக்–கி–யத்–து–வம் கதை–யில கிடை–யாது. ஆனா, இந்த மாதிரி சின்னச் சின்ன நுட்–பமான விஷ–யங்–கள் கூட ஆடி–யன்ஸை அழகா கடந்–துட்டு ப�ோகும். அது குட் ஃபீல் தரும். படத்–த�ோட ஸ்பெ–ஷல் எஃபெக்ட்ஸ் காட்–சி–க–ளும் அந்த மாதி–ரி–தான். இதுக்–காக லண்–டன்ல மூணு மாசம் பணி–கள் நடந்–துச்சு. பெரிய டீமே இதுல ஒர்க் பண்ணி இருக்–காங்–க.”
- ஜியா
அட்டை மற்றும் படங்கள்:
‘ஸ்பைடர்’
டைரக் ஷ ன் செய்த பத்திரிகை ஆசிரியர்! தமிழ் திரைச் ச�ோைலயில் பூத்த
28
அத்திப் பூக்கள்
ஆசி–ரி–யர்–கள் தயா–ரிப்–பில், ‘ஆனந்த விக–டன்’ ஆசி–ரி–யர் இயக்–கி–னார். இந்– தப் படத்–தில் இந்து மதத்தை சார்ந்த ராமு, இஸ்–லாம் மார்க்–கத்தை சார்ந்த அப்–துல் ரஹ்–மான் (இரண்–டுமே எம். ஜி.ஆர்), கிறிஸ்–தவ மதத்தை சார்ந்த வி.எஸ்.ராக–வன் என்று மும்–மத – த்–தின – – ரும் இணைந்து அநீ–தியை எதிர்த்து ப�ோராடி வெற்றி காண்–பத – ாக மத–நல்– லி–ணக்க கருத்து கதை–யாக அமைந்–
தி–ருந்–தது. முத்–து–ரா–மன், ஜெயந்தி, மஞ்–சுளா நடித்த ‘எல்–ல�ோ–ரும் நல்–லவ – ரே – ’ (1975) படத்தை எஸ்.எஸ். பாலன், தமது ஜெமினி நிறு–வ–னத்–தின் சார்–பில் தயா–ரித்து இயக்–கி–னார். ஏன�ோ அதற்கு பிறகு அவர் சினி–மாத்–துறை – யி – ல் ஆர்–வம் காட்–டவி – ல்லை.
(அத்தி பூக்–கும்)
‘ஆ
ன ந் – த – வி – க – ட ன் ’ ம ற் – று ம் ‘ ஜ ெ மி னி ஸ்டு– டி – ய �ோ’ சாம்– ர ாஜ்– ய ங்– க ளை கட்– டி – யாண்ட எஸ்.எஸ்.வாசன் அவர்–களு – டைய – மகன் எஸ்.பால–சுப்–பிர– ம – ணி – ய – ன், பத்–திரி – கை ஆசி– ரி–ய–ராக புகழ் பெற்–றது மட்–டு–மின்றி இயக்–கு–ந– ரா–க–வும் முத்–திரை பதித்–தி–ருக்–கி–றார். தங்–க–ளு– டைய ச�ொந்த நிறு–வ–னத்–துக்–காக இரண்டு படம், வெளி–நி–று–வ–னத்–துக்–காக ஒரு படம் என்று மூன்று படங்–களை இயக்–கி–யி–ருக்–கி–றார். சினி–மா–வுக்–காக அவர் வைத்–துக் க�ொண்ட பெயர் எஸ்.எஸ்.பாலன். தந்தை தயா– ரி த்த படத்– தை யே மகன் இயக்– கி – ன ார். அது– த ான் ‘ம�ோட்– ட ார் சுந்– த – ர ம் பிள்–ளை’ (1966). சிவாஜி, ரவிச்–சந்–தி–ரன், சிவ–கு– மார், நாகேஷ், செள–கார் ஜானகி, ஜெய–ல–லிதா, சச்சு, காஞ்–சனா, பண்–ட–ரி–பாய் ஆகி–ய�ோர் நடித்த படம் இது. அடுத்து எம்.ஜி.ஆர் நடித்த ‘சிரித்து வாழ வேண்–டும்’ (1974) படத்தை இயக்–கி–னார் பாலன். ‘இத–யம் பேசு–கிற – து – ’ இத–ழின் ஆசி–ரிய – ர் மணி–யன், ‘பால ஜ�ோதி–டம்’ சஞ்–சிகை – யி – ன் ஆசி–ரிய – ர் வித்–வான் வே.லட்–சு–ம–ணன் ஆகி–ய�ோர் கூட்–டாக சேர்ந்து தயா–ரித்–தார்–கள். அவ்–வகை – யி – ல் இரு இதழ்–களி – ன்
கவிஞர் ப�ொன்.செல்லமுத்து 1.9.2017 வெள்ளி மலர்
19
முகமறியா வில்லன்கள�ோடு ப�ோலீஸ் ஆடும் கபடி ஆட்டம்!
ரா
தா–ம�ோ–கன், ‘பாம்–ம–ரில்–லு’ பாஸ்– க ர் ஆகிய சீனி– ய ர் இயக்–கு–நர்–க–ளு–டன் பணி– யாற்–றி–விட்டு, தற்–ப�ோது தனி–யா–கப் படம் இயக்க வந்–திரு – க்–கிற – ார், நவீன் நஞ்–சுண்–டன். சினிமா வட்–டா–ரத்–தில் டெக்–னிக்–கல் ஏரி–யா–வில் பர–வல – ா–கப் பேசப்–படு – ம் ‘சத்–ரு’ படத்தை இயக்–கி– யுள்ள அவ–ரி–டம் பேசி–ன�ோம். “ப�ொதுவா வட– ம �ொ– ழி ச் ச�ொல்– ல ான ‘சத்–ரு–’–வுக்கு ப�ொருள் எதிரி. இதுல, யாருக்கு யார் எதிரி?” “உல–கத்–துல உள்ள எல்–லா–ருக்– குமே ஒரு எதிரி இருப்–பாங்க. எதிரி இல்–லாத மனு–ஷனே கிடை–யாது. எதிரி இல்–லாத வாழ்க்கை சுவா–ரஸ்– யமா இருக்–காது. ஹீர�ோ பாசிட்–டிவ் ஷேட் உள்–ள–வர். அவ–ருக்கு நெக– டிவ் ஷேட் உள்ள வில்–லன்–கள் எதிரி. வில்–லன்– க–ளுக்கு ஹீர�ோ எதிரி. இவங்–க–ள�ோட ஆடு புலி ஆட்–டம்–தான் படத்–த�ோட ஸ்கி–ரீன்ப்–ளே.” “24 மணி நேரத்–துல நடக்–கிற கதை–யாமே?” “கதிர் ஒரு ப�ோலீஸ் சப்-இன்ஸ்–பெக்–டர். முகம் தெரி–யாத, பேர் தெரி–யாத, எந்த ஆதா–ர–மும் இல்– லாம நான்கு வில்–லன்–களை அவர் பிடிக்–க–ணும். எது–வுமே இல்–லாத புள்–ளி–யில த�ொடங்–குற அவ– ர�ோட வேட்–டை–யில, 24 மணி நேரத்–துல அவங்– களை பிடிக்–கி–ற–து–தான் கதை. அவர் தேடற எதி–ரி– கள் அவர் கண் முன்–னா–லயே நிப்–பாங்க. அவங்க யாருன்னு ஆடி– ய ன்– சு க்கு ெதரி– வ ாங்க. ஆனா, ஹீர�ோ–வுக்கு தெரிய மாட்–டாங்க. ‘பக்–கத்–துல – த – ான் நிக்–கிற – ான். பிடி’ன்னு ஆடி– யன்–சுக்கு கத்த த�ோணும். அந்த மாதிரி ஒரு பர–ப–ரப்–பான திரைக்–க–தை.”
பேசி, பறந்து பறந்து அடிக்–கிற வேலை–யெல்–லாம் கிடை– ய ாது, ர�ொம்ப இயல்பா இருக்– கி ற ஒரு ப�ோலீஸ் கேரக்– ட ர். நினைச்– சி – ரு ந்தா அவரை அசிஸ்–டென்ட் கமிஷனர்னு காட்–டி–யி–ருக்–க–லாம். ஆனா, சாதா–ரண சப்-இன்ஸ்–பெக்–டர்–தான்.” “சப்-இன்ஸ்– ப ெக்– ட ர் ர�ொம்ப தீவி– ர மா எதுக்கு வில்–லன்–களை தேட–ணும்?” “அதுக்கு கார–ணம் இருக்கு. அது ஒரு பக்கா ஆள் கடத்–தல் கும்–பல். அந்த கும்–ப–லால தனிப்– பட்ட முறை–யில கதி–ரும் பாதிக்–கப்–ப–ட–றார். அந்த வேகம்– த ான் வேட்– டை – ய ாட வைக்– கு து. இதை ப�ோலீஸ் வேட்–டைன்னு கூட ச�ொல்–ல–லாம். தனி மனித வேட்–டைன்னு கூட எடுத்–துக்–கல – ாம்.”
“இதுலே ‘ராட்–டி–னம்’ லகு–ப–ரன் எப்–படி வில்–லன் ஆனார்?” “அவரை நாங்க தேடிப் ப�ோய் செலக்ட் பண்–ணலை. படத்–துல வர்–றது, க�ொடூர “கதிரை எப்–படி ப�ோலீஸ் கேரக்–ட–ருக்கு தேர்வு குணம் க�ொண்ட ஒரு இளம் வில்–லன். பண்–ணீங்க?” பார்க்– கி – ற – து க்கு காலே– ஜ ுக்கு ப�ோற “நிறை–ய–பேர் இந்த கேள்–வியை கேட்– பையன் மாதிரி இருக்–கணு – ம். அதே நேரத்– டி–ருக்–காங்க. கதிர் இதுக்கு முன்– ன ால துல க�ொடூ–ர–மா–ன–வ–னா–வும் இருக்–க–ணும். ‘கிரு– மி ’ என்ற படத்– து ல, ப�ோலீஸ் அதுக்–காக ஆடி–சன் நடத்–தி–ன�ோம். இன்–ஃபார்–மரா நடிச்–சி–ருந்–தார். இன்– நவீன் நஞ்–சுண்–டன் நூற்–றுக்–கும் மேற்–பட்–ட –வ ங்–க–ளுக்கு ஃபார்–மரா இருந்–தா–லும், அவ–ருக்–குள்ள ஆடி– ச ன் பண்– ண�ோ ம். அதுல கலந்– து க்– கி ட்டு தானும் ஒரு ப�ோலீஸ் என்ற நினைப்பு இருக்–கும். செலக்ட் ஆன– வ ர்– த ான் லகு– ப – ர ன். ரகு– வ – ர ன் மேன–ரிச – மு – ம் ப�ோலீஸ் மாதி–ரியே இருக்–கும். அதை ரேஞ்–சுக்கு லகு–ப–ரன் ஒரு ரவுண்டு வரு–வார்னு வெச்–சுத – ான் இந்த கேரக்–டரு – க்கு அவரை செலக்ட் நம்–பிக்கை இருக்–கு.” பண்–ணேன். அத�ோட, இது பெரிய ஹீர�ோக்–கள் பண்ற “ஆக்–ஷன் கிரைம் திரில்–லர்ல, சிருஷ்டி டாங்–கே–வுக்கு பெருசா வேலை இருக்–காதே?” ப�ோலீஸ் கேரக்–டர் கிடை–யாது. பன்ச் டய–லாக்
20
வெள்ளி மலர் 1.9.2017
“கதிர் கட்–டிக்–கப்–ப�ோற ப�ொண்ணா சிருஷ்டி நடிச்–சிரு – க்–காங்க. அத–னால, லவ் சீனுக்கு பெருசா வேலை–யில்லை. முதல் பதி–னைஞ்சு நிமி–ஷம் படத்தை ஜாலியா நகர்த்த அவர் கேரக்–டர் உத– வி–யி–ருக்கு. கதிர், சிருஷ்–டிக்கு ஒரு மான்–டேஜ் சாங் இருக்கு. அப்–பு–றம் கதை ஆக்–ஷ–னுக்–குள்ள ப�ோனா–லும், அது–ல–யும் சிருஷ்–டி–ய�ோட பங்கு இருக்–கும்” “அதி–ர–டியா ‘உறி–ய–டி’ விக்–கியை தேடிப் பிடிச்–சி–ருக்– கீங்–களே?” “உண்–மை–தான். ‘உறி–ய–டி’ படத்–துல வர்ற சண்–டைக் காட்–சி–கள் பெருசா பேசப்–பட்–டி–ருக்–க– ணும். அது எப்–படி மிஸ் ஆச்–சுன்னு தெரி–யலை. ஆனா, என்னை மாதிரி டெக்–னீ–ஷி–யன்–க–ளுக்கு அத�ோட அருமை, பெருமை தெரி–யும். நிஜமா ஒரு சண்டை நடந்தா எப்–படி இருக்–கும�ோ அப்–ப– டித்–தான் காட்–சி–யும் இருக்–கும். நிஜ–மான அடி–கள் விழும், காயம் படும். அப்–ப–டித்–தான் இந்–தப் படத்– தி–லும் சண்–டைக் காட்–சி–களை அமைச்–சி–ருக்–கார் விக்கி. ‘உறி–ய–டி–’–யில விட்ட இடத்தை, கண்–டிப்பா இந்–தப் படத்து மூலமா பிடிப்–பார்” “பின்–னணி இசைக்கு நிறைய ஸ்கோப் இருக்–குமே?” “ஆமாம் சார். ‘ம�ொட்ட சிவா கெட்ட சிவா’ படத்–துக்கு இசை–ய–மைச்ச அம்–ரீஷ்–தான் ‘சத்–ரு’ படத்–துக்கு இசை அமைச்–சி–ருக்–கார். ஒரு மான்– டேஜ், ஒரு தீம் என ெரண்டு பாட்–டு–கள்–தான். ஆனா, பின்–னணி இசை செம மிரட்–டலா இருக்–க–
ணும்னு அம்–ரீஷ் கிட்ட ச�ொன்–னேன். அப்–ப–டியே மிரட்–டலா பண்ணி க�ொடுத்–தி–ருக்–கார்” “புதி– ய –வங்க ஒர்க் பண்ற படத்–து க்–குள்ள, மகேஷ் முத்–து–சாமி எப்–படி வந்–தார்?” “ஒளிப்– ப – தி – வ ா– ள ர் மகேஷ் முத்– து – ச ா– மி யை எனக்கு ர�ொம்ப பிடிக்–கும். பவுண்–டிங் ஸ்கி–ரிப்ட்டை அவர் கையில க�ொடுத்து, சரியா இருக்கா? ஏதா– வது மாற்–றம் செய்–ய–ணும்னா ச�ொல்–லுங்–கன்னு கேட்–டேன். அப்ப நான் வேற ஒரு ஒளிப்–ப–தி–வா–ள– ரைத்–தான் மன–சுல நினைச்–சி–ருந்–தேன். ஆனா, ‘சத்–ரு’ ஸ்கி–ரிப்ட்டை படிச்–சிட்டு, இந்–தப் படத்–துக்கு நான்–தான் ஒளிப்–ப–திவு பண்–ணு–வேன்னு, அவரே விரும்பி வந்து பண்–ணிக் க�ொடுத்–தார்” “படப்–பி–டிப்பு அனு–ப–வம் எப்–படி இருந்–தது?” “பெரும்–பா–லும் நைட் எபெக்ட்–டுல – த – ான் ஷூட்– டிங். சென்–னை–யில மக்–கள் கூடும் இடங்–கள்ல, கேன்–டிட் கேம–ராவை செட் பண்ணி ஷூட் பண்– ண�ோம். ஒரு–நாள் கதிர் ர�ோட்ல ஓடற மாதிரி சீன். எவ்–வ–ளவு தூரம் வேகமா ஓட முடி–யும�ோ ஓடுங்– கன்னு ச�ொன்–ன�ோம். அவ–ரும் எங்க கண்–ணுக்– கெட்–டிய தூரத்தை தாண்டி ஓடிக்–கிட்டே இருந்–தார். ஓடிய அதே வேகத்–துல திரும்பி ஓடி வந்–தார். இந்த விஷ–யம் ஸ்கி–ரிப்ட்ல இல்–லை–யேன்னு பார்த்தா, ஏகப்–பட்ட தெரு நாய்–கள் அவரை துரத்–திக்–கிட்டு ஓடி வந்–தது. இப்–படி நிறைய அனு–ப–வங்–கள். 44 நாள்ல, 44 ல�ொக்–கேஷ – ன்–கள்ல படப்–பிடி – ப்பு நடத்– தி–யி–ருக்–க�ோம்”
- மீரான்
1.9.2017 வெள்ளி மலர்
21
வந்–துட்–ட�ோம்னு ச�ொல்லு: ‘நான் திரும்ப வரு–வேன்’ படக்–குழு – வி – ன – ரு – ட – ன் ஹீர�ோ மன�ோஜ் மஞ்சு.
அழகா இருக்– க ேனா?: வீடிய�ோ ஆல்–பம் ஷூட்– டிங்– கு க்கு தயா– ர ா– கு ம் இனியா.
படம் நல்லா வரு– மி ல்லே?: உத–யநி – தி ஸ்டா–லின் நடிக்–கும் பெய–ரிட – ப்–பட – ாத படத்தை பிரி–ய– தர்–ஷன் இயக்–குகி – ற – ார். இதில் முக்–கிய வேடத்–தில் இயக்–குந – ர் மகேந்–திர– ன் நடிக்–கிற – ார். ஒரு கூட்டு கிளி–யாக: ‘மெர்–சல்’ ஆடிய�ோ ஃபங்–ஷனி – ல் சமந்தா, காஜல் ஆகி–ய�ோ–ர�ோடு இயக்–குந – ர் அட்லீ.
22
வெள்ளி மலர் 1.9.2017
படம்: சதீஷ்
1.9.2017 வெள்ளி மலர்
23
Supplement to Dinakaran issue 1-9-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
͆´õL, ͆´«îŒñ£ù‹, Ýv¶ñ£, ¬êùv, ªê£Kò£Cv, «î£™ «ï£Œèœ, ¬î󣌴, àì™ ð¼ñ¡, ꘂè¬ó «ï£Œ ͆´õL, «îŒñ£ù‹
ªê£Kò£Cv
35 õò¶‚° «ñŸð†ì ݇, ªð‡ èO¡ Íöƒè£™ ͆´‹ °Áˆ ªî¿‹¹‹ å¡«ø£ªì£¡Á á󣌉¶ «ð£è£ñ™ Þ¼‚è ¬ê«ù£Mò™ â¡ø Fóõ‹ Yó£‚èŠð´Aø¶. ͆¬ì ²ŸP»œ÷ î¬ê ñŸÁ‹ î¬ê è¬÷ õ½Šð´ˆîŠð´Aø¶. ͆´èO™ õ¿õ¿Šð£ù F²‚è÷£ù °¼ˆ ªî½‹H¡ õöõöŠ¹ˆ ñ °¬øõ ͆´ «îŒñ£ù °Áˆ ªî½‹¬ð (裘®«ôx) õ÷ó ªêŒ¶ êK ªêŒòŠð´Aø¶. Þîù£™ ͆´õL º¿¬ñò£è, Gó‰îó °íñ£Aø¶. õ£›ï£O™ e‡´‹ ͆´õL õó£¶.
î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ 裶 ñì™, Ü‚°œ, H¡ñ‡¬ì, õJÁ, Þ´Š¹ ð°FJ™ ðóM àì™ º¿õ¶‹ ðóõ‚îò «ï£Œ ªê£Kò£Cv. ÜKŠ¹, áø™, ªêF™ àF¼‹ ÜÁõ¼‚èî‚è «ï£Œ Ý°‹. «ï£ò£™ ñùgFò£è ð£FŠ¬ð  «ï£Œ‚° Gó‰îó b˜¾  CA„¬ê.
¬î󣌴 Hyperthyroidism, Hypothyroidism âù 2 õ¬è àœ÷¶. âƒèÀ¬ìò CA„¬êJ™ ¬î󣌴 ²óŠHèœ ¬îó£‚R¡ â‹ ý£˜«ñ£¬ù «ï£ò£OJ¡ àì™ «î¬õ‚° «ð£™ ²ó‚è ¬õŠð ¬î󣌴 «ï£Œ º¿¬ñò£è °íñ¬ì»‹.
àì™ ð¼ñ¡ Þ¼ð£ô¼‚°‹ªð¼‹Hó„C¬ùò£è Þ¼Šð¶ àì™ ð¼ñ¡ Ü™ô¶ á¬÷ ê¬î à싹. àìL™ î÷˜‰¶, ªî£ƒA è£íŠð´A¡ø î¬êèœ â™ô£‹ ÞÁA 膴‚«è£Šð£ù àì™ Üö° A¬ì‚Aø¶. «ê£˜¾ cƒA ²Á²ÁŠð£è ñ£ŸÁAø¶. àì™ð¼ñù£™ ãŸð´A¡ø HøMò£FèÀ‹ cƒA M´Aø¶.
Ýv¶ñ£, ¬êùv Ýv¶ñ£, Üô˜Tò£™ ãŸð´A¡ø Ü´‚° ¶‹ñ™, Í‚A™ c˜õ®î™, î¬ôð£ó‹, î¬ôõL, º‚è¬ìŠ¹, º‚A™ ê¬î õ÷˜„C, Í„²M´õF™ Cóñ‹, Í„² Fíø™, Þ¬÷Š¹, ¬êùv꣙ ¸¬öfóL™ àœ÷ (êO) º¿õ¶‹ ªõO«òŸøŠð†´ Gó‰îóñ£è °íñ£‚èŠð´Aø¶.
ꘂè¬ó «ï£Œ ꘂè¬óJ¡ Ü÷¾ óˆîˆF™ 450 MG Ü÷¾ àœ÷õ˜èÀ‚° Ãì å¼ õ£ó CA„¬êJ™ 120 MG Ü÷¾ Ýè °¬ø‰¶M´Aø¶. ꘂè¬óJ¡ Ü÷¾ êKò£ù º¬ø‚° õ‰î Hø° å¼ õ£óˆFŸ° 强¬ø ñ¼‰¶ â´ˆ¶‚ ªè£‡ì£™ «ð£¶ñ£ù¶. ꘂè¬ó «ï£J¡ ð£FŠð£™ ãŸðì‚ Ã®ò A†Q ð£FŠ¹, è‡ð£˜¬õ ð£FŠ¹, àì™ â¬ì °¬øî™, ¹‡èœ M¬óM™ ÝÁî™, è£L™ ÜKŠ¹, ðˆFò °¬ø ð£´, à왫꣘¾, àì™õL, ÜFè ðC, ÜFè CÁc˜ èNî™, Þîò «ï£Œ «ð£¡ø Hó„C¬ùèœ ºŸP½‹ °íñ£A¡øù.
«ð£¡ø Hó„C¬ùèO™ Þ¼‰¶ Ìóí °í‹ ªðø * ISO 9001: 2008 îó„꣡Á ñ¼ˆ¶õñ¬ù. * BSMS, BAMS, BNYS, MD ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê. * ªê¡¬ù ñ¼ˆ¶õñ¬ùJ™ 죂ì¬ó Fùº‹ 裬ô 10 ñE ºî™ HŸðè™ 1 ñE õ¬ó ê‰F‚èô£‹. *ñŸø ñ¼ˆ¶õñ¬ùèO™ 죂ì¬ó 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í Fùº‹ 裬ô 10 ñE ºî™ ñ£¬ô 6 ñ‡ìð‹ ܼA™, õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17 ñE õ¬ó ê‰F‚èô£‹.
* ñ‚èœ T.V.J™ CøŠ¹ ñ¼ˆ¶õ˜ ¬ôš G蛄C ªêšõ£Œ 裬ô 11.30 & 12. 30 õ¬ó (2&õ¶ ªêšõ£Œ îMó) * 嚪õ£¼ õ£óº‹ è¬ôë˜ T.V.J™ ªêšõ£Œ 裬ô 9.30 & 10.00, êQ‚Aö¬ñ 裬ô 10.00 & 10.30, * «èŠì¡ T.V. J™ ªêšõ£Œ 裬ô 10.00 & 10.30, Fùº‹ ºó² T.V. J™ ñ£¬ô 3.30 & 4.00 CøŠ¹ 죂ì˜èœ «ð†®¬ò è£íô£‹.
044 - & 4006 4006, 4212 4454, 80568 55858
«è£òºˆÉ˜: 0422 - 4214511 : ñ¶¬ó: 0452 - 4350044 : F¼„C: 0431 - 4060004 : «êô‹: 0427 - 4556111 : åŘ: 04344 - 244006 : ¹¶„«êK: 0413 - 4201111 : F¼ŠÌ˜: 0421 - 4546006 : F‡´‚è™: 0451 - 2434006 : F¼ªï™«õL: 0462 - 2324006 : ñ£˜ˆî£‡ì‹: 04651 - 205004 : °‹ð«è£í‹: 0435 - 2412006 : «õÖ˜: 0416 - 2234006 : M¿Š¹ó‹: 04146 - 222006 : ªðƒèÙ¼: 080 - 49556506
îIöè‹ º¿õ¶‹ ºè£‹ ï¬ìªðÁAø¶. «ð£¡Íô‹ ªîK‰¶ ªè£œ÷¾‹.
24
வெள்ளி மலர் 1.9.2017