2-12-2016 ரூ.5.00
ப�ொது அறிவுப் பெட்டகம்
கையிலே
வள–ரும்
காது
உல–கின் த�ொழில்
நாய–கர்–கள் 1
2
விழிப்–பு–ணர்வு ஓவி–யம்! பிரே–சி–லில் உள்ள அமே–ஸான் காடு–க–ளில் வைரம், தங்–கம், மரம் ஆகி–ய–வற்–றுக்–கான வரை–மு–றை– யற்ற தேடு–த–லில் காடு–கள் த�ொடர்ந்து அழிக்–கப்–பட்டு வரு–கின்–றன. பெய்–டர் சுருய் பழங்–கு–டி–க–ள�ோடு இணைந்து செயல்–பட்டு வரும் புகைப்–ப–டக்–க–லை–ஞ–ரான பிலிப்பெ எக்–கா–ரக்ஸ் அது குறித்த விழிப்–பு– ணர்–வுக்–காக உரு–வாக்–கிய ஒளி ஓவி–யம் இது.
அட்டைப்படம் அண்–மை–யில் அமெ–ரிக்–கா–வின் லாஸ் ஏஞ்– சல்ஸ் நக– ரி ல் 8 ஆவது கவர்– ன ர்ஸ் விருது வழங்–கும் விழா நடை–பெற்–றது. அதில் ஹாங்– காங்–கைச் சேர்ந்த பிர–பல திரைப்–பட நடி–கர– ான ஜாக்–கி–சா–னுக்கு(62) அவ–ரது திரைப்–பட சாத– னை–களை – ப் பாராட்டி, க�ௌரவ ஆஸ்–கர் விருது வழங்–கப்–பட்ட காட்சி இது.
மீன்!
தேசி–யக்–க�ொடி
தாய்–லாந்து நாட்–டின் தேசி–யக்–க�ொ–டி–யின் நிறத்–தில் மீன் இருந்–த–தால்–தான் இந்த அச–காய விலை. லட்– சத்–தில் ஒரு மீன்–தான் இந்த வண்–ணத்–தில் பிறக்–கும் என்–கிற – ார் இதன் விற்–பனை – ய – ா–ளர் கசென் வ�ொர–சாய்.
மை–யில் சயாம் வகை மீன் ஒன்று இணை–ய– அண்– த–ளத்–தில் 1,01,293 ரூபாய்க்கு விலை ப�ோனது.
மரம்!
உல–கின் அதி–உ–யர
உ
ய– ர – ம ாக வள– ரு – வ– து – த ான் மரத்– தின் இயல்பு என்–றா–லும் அதிக உய–ரம் என்ற நெம்– பர் 1 கிரீ–டம் சில மரங்– க–ளுக்–குத்–தானே கிடைக்– கி–றது! அண்–மையி – ல் அந்த இடத்–தைப் பெற்ற மரத்– தைப் பற்–றி–ய–து–தான் இக்– கட்–டுரை.
உ ல – கி ன் உ ய – ர – ம ா ன வெப்–ப– மண்–டல மரம் மலே–சியா அரு–கிலு – ள்ள ப�ோர்–னிய�ோ தீவில் இருப்– ப து ஸ்டான்ஃ– ப�ோ ர்டு பல்– க – லை க்– க – ழ க ஆராய்ச்– சி – ய ா – ள ர் – க – ள ா ல் க ண் – ட – றி – ய ப் பட்–டுள்–ளது. 94.1 மீட்–டர் அச–காய உ ய – ர த் – தி – லு ள ்ள இ ம் – ம – ர ம் , ம ர ங் – க ள் சூ ழ ்ந்த கூ ட் – ட த் – தில் இருந்– த து. இதற்கு முன்பு மலே–சிய – ா–வில் அதிக உய–ரம – ான மரம் என்று ஆய்– வ ா– ள ர்– க ள் கண்– ட – றி ந்த மஞ்– ச ள் மெரந்தி மரத்–தின் உய–ரம் 90 மீட்–டர – ா–கும். ஸ்டா ன் ஃ – ப�ோ ர் டு ப ல் – க – லை க் – க – ழ – க த் – தி ன் க ா ர் – ன கி மை ய த் – தை ச் சேர்ந்த ஆராய்ச்– சி – ய ா– ள ர் கிரி– க�ோ ரி ஆ ஸ் – னெ ர் , 2 0 ஆ ண் – டு – க ள் தம் குழு– வி – ன – ர�ோ டு செய்த ந ெ டி ய ஆ ர ா ய் ச் – சி – யி ல் , 7 லட்–சத்து 43 ஆயி–ரத்து 330 கி.மீ பரப்– ப–ளவு க�ொண்ட ப�ோர்–னிய�ோ தீவி–லுள்ள ச�ோரியா பேரி–னத்– தைச் சேர்ந்த இம்–மர – த்தை கண்–டு– பி– டி த்– து ள்– ள ார். இந்த மரத்– தைச் சுற்– றி – யு ள்ள மரங்– க – ளு ம் 90 மீட்–டர் உய–ரம் க�ொண்–டவை என்–பது வியப்–புக்–கு–ரிய ஒன்று. கார்–னகி வான்–வெளி ஆய்–வ–கத்– தின் உத– வி – யு – ட ன் இந்த தீவின் காடு–களை ஆராய்ந்த ஆஸ்–னெர், மரம், விலங்கு உள்–ளிட்ட உயிர் பன்–மைத்–தன்–மை–களை லிடார்
(லேசர் ஒளி மூலம் ப�ொருளை அள– வி – டு ம் முறை) த�ொழில்– நுட்– ப த்– தி ன் மூலம் மரத்– தி ன் உய–ரத்தை அள–விட்டு கண்–டறி – ந்– தார். ஹெலி–காப்–ட–ரில் ப�ொருத்–தி– யுள்ள லேசர் ஒளி கரு–வியி – ன – ால், வனத்தை 1 ந�ொடிக்கு 50 ஆயி– ரம் ஷாட்– டு – க ள் எடுத்து இம்– ம–ரத்–தின் உய–ரத்தை துல்–லிய – ம – ாகக் கண்–டு–பி–டித்–த�ோம் என பர–வ–ச– மாக பேசு–கிற – ார் ஆஸ்–னெர். இவ– ரின் ஆராய்ச்சி மூலம், இங்–கிரு – ந்த 130 தாவர இனங்– க ள் அழிந்து ப�ோயி– ரு ப்– ப து தற்– ப�ோ – து – த ான் உல–கிற்கே தெரிய வந்–துள்–ளது. வெப்–பம – ண்–டலக் காடு–களி – ல் இது உய– ர – ம ான மரம் என்– ற ா– லும் கலிஃ–ப�ோர்–னியா தேசி–யப் பூங்–கா–விலு – ள்ள செம்–மர – மே அதி உயர மர– ம ாக-115.5 மீட்– ட ர் உ ய – ர – ம ா க ப தி வு செ ய் – ய ப் – பட்–டுள்–ளது. உ ய – ர – ம ா ன ம ர த்தை க் கண்–டு–பி–டித்–த–தன் மூலம் மரங்– களைப் பாது– க ாக்– கு ம் அவ– சி – யத்தை உல– கி – ன – ரு ம், இத்– தீ வு மக்–களு – ம் ஆழ–மாக உணர்ந்–திரு – ப்– பார்–கள் என நம்–பிக்கை பெருக பேசு– கி – ற ார் ஆராய்ச்– சி – ய ா– ள ர் கிரி– க�ோ ரி ஆஸ்– னெ ர். பசுமை முயற்சி வெல்–லட்–டும்.
-ஜே.வேணு கேசவ்
02.12.2016 முத்தாரம் 05
ப
ல்–வேறு பிசி–னஸ்–களி – ல் மில்–லிய – ன – ர்– கள் உல–கம் முழு–வ–தும் உண்டு. ஆனால் கம்ப்–யூட்–டர், இணைய சேவை வணி–கம் என காலத்–திற்–கேற்ப புதிய டிசை–னில் ய�ோசித்து அதனை செயல்– ப– டு த்தி காசு பார்த்து க�ோடீஸ்– வ – ர ர்– கள் ஆன–வர்–கள் தனித்–து–வ–மா–ன–வர்– கள்–தானே! அவர்–க–ளைப் பற்–றிய சிறு அறி–மு–கமே இக்–கட்–டுரை.
உல–கின் த�ொழில்–நுட்ப நாய–கர்–கள்
1975 ஆம் ஆண்டு த�ொடங்–கப்– பட்ட மைக்– ர �ோ– ச ாஃப்ட் நிறு– வ – னத்–தின் இணை நிறு–வ–னரா – ன பில்– கேட்ஸ், மைக்–ர�ோ–சாஃப்ட் ப�ொது நிறு– வ – ன – மா க வளர்ச்– சி – ய – டை ந்த ப�ோது 30 வய–தில் உல–கமே வியக்– கும் க�ோடீஸ்– வ – ர – ரா கி இருந்– தா ர். கல்–லூரிப் படிப்–பி–லி–ருந்து பாதி–யில் வெளி–யே–றிய பில்–கேட்ஸ், நண்–ப–ரு– டன் இணைந்து மைக்–ர�ோ–சாஃப்டை த�ொடங்கி, வர–லாற்று வெற்றி கண்– டார். 2000 ஆம் ஆண்–டில் இதன் தலைமைப் பத–வியி – லி – ரு – ந்து ஒதுங்–கிக் க�ொண்– ட ார். தற்– ப�ோ து மனைவி மெலிண்– ட ா– வ�ோ டு இணைந்து தனது கேட்ஸ் அறக்–கட்–ட–ளை–யின் சமூ–க–சே–வைப் பணி–களைச் செய்து வரு–கிற – ார். 1 லட்–சத்து 14 ஆயி–ரம் பேர் பணி– ய ாற்– று ம் மைக்– ர �ோ– ச ாஃப்ட் நிறு–வன – த்–தின் தற்–ப�ோதை – ய ச�ொத்து மதிப்பு 85.32 பில்–லிய – ன் டாலர்–கள – ா– கும். பில்–கேட்–ஸின் ச�ொத்து மதிப்பு 89.4 பில்–லி–யன் டாலர்–கள்.
06
முத்தாரம் 02.12.2016
பில்–கேட்ஸ்
பில்–கேட்ஸ், மைக்–ர�ோ–சாஃப்ட்–
ஜெப் பெஸ�ோஸ்
ஜெப் பெஸ�ோஸ், அமே–ஸான்–
கார் கேரே–ஜில் வாழ்க்–கையைத் த�ொடங்கி ஆன்– லை – னி ல் எலக்ட்– ரா–னிக் ப�ொருட்–கள், புத்–த–கங்–களை விற்–கும் நம்–பர் 1 நிறு–வன – மா – ன அமே– ஸான் நிறு–வ–னத்தை 1994 ஜூலை 5ல் த�ொடங்–கின – ார் ஜெப் பெஸ�ோஸ். பர–பர பிஸி–னஸ் டெக்–னிக்–கு–க–ளால் சக்–சஸ் வேகம் கூட்டி பணக்–கா–ரர் ஆன–வர் இவர். இன்று ஆன்–லைன் வணி– க ம் கடந்து வாஷிங்– ட ன் ப�ோஸ்ட் நாளி–தழ், ராக்–கெட் மூலம் பய–ணிக – ளை விண்–வெளி – க்கு அனுப்– பும் ப்ளூ ஒரி–ஜின் நிறு–வ–னம் என பல்–வேறு நிறு–வ–னங்–க–ளின் இயக்–கு–ந– ராக தீவி–ர–மாக பணி–பு–ரிந்து வரு–கி– றார். 2 லட்–சத்து 68 ஆயி–ரத்து 900 பணி–யா–ளர்–க–ளைக் க�ொண்–டுள்ள அமே–ஸான் நிறு–வன ச�ொத்து மதிப்பு 107 பில்–லிய – ன் டாலர்–கள – ா–கும். ஜெப் பெஸ�ோ–ஸின் ச�ொத்து மதிப்பு 51.2 பில்–லி–யன் டாலர்–கள்.
மார்க் ஸுக்–கர்பெர்க்
மார்க் ஸுக்–கர்பெர்க், ஃபேஸ்–புக்–
மார்க், ஹார்–வர்ட் பல்–கலை – க்–கழ – – கத்–தில் படிக்–கும்–ப�ோதே மாண–வர்– கள் உரை–யா–டுவ – த – ற்–கான ஜாலி–யான ப்ரா– ஜெ க்– ட ாக பேஸ்– பு க்கை(2004 பிப்–ரவ – ரி 4) உரு–வாக்–கின – ார். ஆனால் கேம்– ப ஸ் தாண்டி உல– க – ள – வி ல் ஃபேஸ்– பு க் சூப்– ப ர் ஹிட்– ட – டி த்– த – வு–டனே அவர் செய்த முதல் வேலை, படிப்பை உத–றி–விட்டு த�ொழி–லில் உற்–சா–கமா – க ஈடு–பட்–டது – தா – ன். தனது சம்– ப ாத்– தி – ய த்– தி ல் 99 சத– வி – கி – த ம்
02.12.2016 முத்தாரம் 07
லாரி பேஜ், ஆல்–ப–பெட்–
1973 ஆம் ஆண்டு பிறந்த லாரன்ஸ் பேஜ் கூகுள் நிறு–வ–னத்தை த�ொடங்–கிய நிறு–வன – ர்–களி – ல் ஒரு–வர். ஸ்மார்ட்–ப�ோன் வணி–கத்–திற்–காக, தீர்க்–கத – ரி – சி – ய – ாக ஆண்ட்– ராய்ட் நிறு–வன – த்தை வாங்–கிய – வ – ர் இவர். கிட்– ட த்– த ட்ட 10 வரு– ட ம் கூகுள் நிறு–
08
முத்தாரம் 02.12.2016
லாரி எலி–சன்
லாரி எலி–சன், ஆரக்–கிள்–
ஆரக்–கிள் கார்ப்–பர – ே–ஷனை(ஜூன் 16, 1977) அமைப்–பத – ற்கு முன் கல்–லூரி. படிப்– பி–லிரு – ந்து 2 முறை எஸ்–கேப்–பா–னவ – ர் லாரி எலி–சன். இஷ்–டப்–பட்டு லட்–சிய – த்–திற்–காக கஷ்–டப்–பட்–டதா – ல் மைக்–ர�ோ–சாஃப்–டுக்கு அடுத்த பெரிய கம்ப்–யூட்–டர் நிறு–வன – மா – க ஆரக்–கிளை செதுக்–கி–யெ–டுத்த உழைப்– பாளி. உல– கி ன் மிக அதிக சம்– ப – ள ம் வாங்–கும் நிர்–வாகி என்–பத – �ோடு, ஆப்–பிள் நிறு–வ–னர் ஸ்டீவ் ஜாப்–ஸின் நெருங்–கிய நண்–பரு – ம் கூட. ஹவாய் தீவு–களி – ல் உள்ள ‘லனாய் தீவு’ சாரு–டை–ய–து–தான். 1 லட்– சத்து 36 ஆயி–ரத்து 262 பேர் பணி–பு–ரி–யும் ஆரக்–கிள் நிறு–வ–னத்–தின் மதிப்பு 37.04 பில்–லி–யன் டாலர்–க–ளா–கும். 46.1 மில்–லி– யன் டாலர் மதிப்–பி–லான ச�ொத்து லாரி எலி–ச–னுக்கு மட்–டுமே ச�ொந்–தம்.
லாரி பேஜ், செர்ஜி பிரின்
ஸ்டீவ் பால்–மர்
சமூ–கத்–திற்–குத்–தான் என தில்–லாக அறி– வித்–துள்–ளார் மார்க். அது–மட்–டு–மல்ல, பல்–வேறு நல–அ–மைப்–பு–க–ளுக்கு பண–உத – – வி–களு – ம், நிறு–வன – த்–தின் பங்–குக – ளை – – வாரி வழங்குவதும் இவ–ரின் வழக்–கம். 14 ஆயி– ரத்து 495 பேர் பணி–பு–ரி–யும் ஃபேஸ்–புக் நிறு–வ–னத்–தின் மதிப்பு 17.928 பில்–லி–யன் டாலர்– க – ள ா– கு ம். மார்க்– கி ன் ச�ொத்து மதிப்பு 46.2 பில்–லி–யன் டாலர்–கள்.
ஜாக்மா மைக்–கேல் எஸ் டெல் மா ஹூவா–டெங்
வன பத–வி–யி–லி–ருந்து ஒதுங்–கி–யி–ருந்–த–வர், தற்–ப�ோது 2015 ஆம் ஆண்டு த�ொடங்– கப்–பட்ட கூகு–ளின் தாய் நிறு–வ–ன–மான ஆல்–ப–பெட்–டின் நிர்–வாகி. 69 ஆயி–ரத்து 953 பணி–யா–ளர்–களை – க் க�ொண்ட இந்–நிறு – – வ–னத்–தின் ச�ொத்–து–ம–திப்பு 74.98 பில்– லி–யன் டாலர்–க–ளா–கும். லாரி பேஜின் ச� ொ த் து ம தி ப் பு 3 7 . 8 பி ல் – லி – ய ன் டாலர்–கள்.
செர்ஜி பிரின், கூகுள்–
செ ர்ஜி பிரி– னு ம், லாரி பேஜும் இணைந்– து – தா ன் 1998 ஆம் ஆண்டு கூகுளை த�ொடங்– கி – ன ர். அது– மட் – டு – மல்ல, கிரா–மப்–புற மக்–க–ளுக்கு எளி–தில் `WIFI’ கிடைக்–கும்–படி செய்ய(ப்ரா–ஜெக்ட் லூன்), விண்–ணில் பலூன்–களை பறக்–கச் செய்–யும் முயற்சி, மக்–களை சந்–திர – னு – க்கு கூட்–டிச் செல்–லும் மூன்–ஷாட் என சார் செம பிஸி. கூகுள் நிறு–வன – த்–தின் ச�ொத்து மதிப்பு 200 பில்–லி–யன் டாலர்–க–ளா–கும். செர்ஜி பிரி–னின் ச�ொத்து மதிப்பு 36.2 பில்–லி–யன் டாலர்–கள். ஜாக்மா, அலி–பா–பா– 1999 ஆம் ஆண்டு உரு–வான இவ–ரு– டைய அலி–பாபா, சீனப்–ப�ொ–ருட்–களை உல–கள – வி – ல் விற்–கும் இணைய நிறு–வன – மா – – கும். 2014 ஆம் ஆண்டு அலி–பாபா ப�ொது நிறு–வன அந்–தஸ்தை பெற்–றப�ோ – து, உல– கின் மிகப்–பெ–ரிய பங்–குத்–த�ொகை விற்– ப–னை–யாக 25 பில்–லி–யன் டாலர்–கள் கிடைத்–தது. இன்று ஜாக்மா ஆசி–யா–வின் மிகப்–பெ–ரிய பணக்–கா–ரர் என்–ப–த�ோடு, வியா–பார நிறு–வ–னங்–களை இணைத்து புதிய த�ொழில் நுட்–பங்–களை செயல்–படு – த்–
02.12.2016 முத்தாரம் 09
து–வ–தி–லும் தீராத ஆர்–வ–முள்–ள–வ– ரா–வார். 40 ஆயி–ரத்து 228 பணி–யா– க் க�ொண்ட அலி–பாபா ளர்–களை – நிறு–வ–னத்–தின் ச�ொத்து மதிப்பு 101.148 பில்–லிய – ன் டாலர்–கள – ா–கும். – ன் ச�ொத்து மதிப்பு 26.3 ஜாக்–மாவி பில்–லி–யன் டாலர்–கள்.
ஸ்டீவ் பால்–மர், மைக்–ர�ோ– சாஃப்ட்–
1980-ல் மைக்–ர�ோ–சாஃப்ட் அதி– – ு–டன் இணைந்து, பர் பில்–கேட்ஸ மைக்–ர�ோ–சாஃப்ட்டை த�ொடங்– கி– ய – ப�ோ து அதன் முதல் பிசி– னஸ் மேனே– ஜ ர் இவர்– தா ன். அப்–ப�ோதே அவ–ருக்கு 50 ஆயி– ரம் டாலர்–கள் சம்–ப–ளத்–த�ோடு, கூடு–த–லாக நிறு–வன பங்–கு–க–ளும் வழங்–கப்–பட்–டன. தனது கடின உழைப்–பால் 2000-2014 ஆண்–டு– கள் வரை மைக்–ர�ோ–சாஃப்–டின் தலைமை நிர்– வ ா– கி – ய ாக பணி– யாற்–றி–னார். மைக்–ர�ோ–சாஃப்ட் பங்–கு–க–ளின் மூலம் பணக்–கா–ர– ரும் ஆனார். ஸ்டீவ் பால்–ம–ரின் ச�ொத்து மதிப்பு 28.6 பில்–லி–யன் டாலர்–கள்.
மைக்–கேல் எஸ் டெல், டெல்
1984 -ல் மைக்– கே ல் டெல் ஆஸ்–டி–னில் படித்–த–ப�ோது, ‘PC Ltd’ என்ற பெய–ரில் ஒரு கணினி நிறு–வ–னத்தை த�ொடங்–கி–னார். ஒரு கட்–டத்–தில் கல்–லூரிப் படிப்– பி–லி–ரு ந்து விலகி, ச�ொந்– த– மாக கம்ப்–யூட்–டர்–களைத் தயா–ரிக்–கத்
10
முத்தாரம் 02.12.2016
த�ொடங்– கி – ய – ப�ோ து அவ– ரு க்கு வயது 23. கம்ப்–யூட்–டர் தயா–ரிப்– பில் உல–கி–லேயே 3 வது பெரிய நிறு–வ–னமா – ன டெல் நிறு–வ–னம், ப�ொது நிறு–வ–ன–மா–ன–ப�ோது, 30 மில்– லி – ய ன் டாலர்– க ள் லாபம் கிடைத்– த து. மைக்– கே ல் டெல் பங்கு 18 மில்–லி–யன் டாலர்–க–ளா– கும். 13 ஆயி–ரம் பணி–யா–ளர்–கள் பங்–க–ளிப்பு செய்–யும் டெல் நிறு– வ–னத்–தின் ச�ொத்து மதிப்பு 19.1 பில்–லிய – ன் டாலர்–கள – ா–கும். மைக்– கேல் டெல்–லுக்கு 18.9 பில்–லி–யன் டாலர்–கள் ச�ொந்–தம்.
மா ஹூவா–டெங், டென்–சென்ட்
ப�ோ னிமா என்– ற – ழை க்– க ப்– ப–டும் இவர், பங்–குச்–சந்–தை–யில் கிடைத்த லாபத்தை வைத்து நண்– ப ர்– க – ள�ோ டு இணைந்து `Tencent’ இணை– ய – த ள சேவை நிறு–வ–னத்தை த�ொடங்–கி–னார். டென்–சென்ட் மூலம் த�ொடங்– கிய த�ொழி– ல ான `QQ’ தக– வ ல் அ னு ப் – பு ம் சேவை – யி ல் ச க் – சஸ் ஆக, இன்று இவர் வசம் பல த�ொழில்– க ள் உள்– ள ன. 31 ஆயி– ர த்து 557 பணி– ய ா– ள ர்– க ள் பணி–பு–ரி–யும் டென்–சென்ட் நிறு– வன மதிப்பு 102.9 பில்– லி – ய ன் டாலர்–கள – ா–கும். ப�ோனி–மாவி – ன் ச�ொத்து மதிப்பு 18.2 பில்–லி–யன் டாலர்–கள்.
- ராஜி–ராதா, பெங்–க–ளூ–ரு
வ�ௌ
வ ா ல் ஒரு நாள் இர–வுக்கு மட்–டுமே 3000 பூச்– சி – க ளை டிப– ன ாக தின்று தீர்க்–கி–றது.
கா
ளையை சிவப்பு நிறம் க�ோபப்– ப– டு த்– த ாது. ஏனெ– னி ல் அ வை நி ற க் – கு – ரு – ட ா – னவை.
த
வேடிக்கை
செய்–தி–கள்!
ற்– ப�ோ து வாழ்ந்து வரும் விலங்– கு – க – ளி – லேயே மெகா சைஸ் க�ொண்–டது நீலத்–தி–மிங்– க–லம்–தான்.
ப
க டை க் க ா ய் – க – ளி – லுள்ள புள்–ளிக – ளு – க்கு பைப்ஸ் என்று பெயர்.
ஆ
ண் – க ள ை வி ட பெண்–க–ளுக்கு நாக்– கில் சுவை–ம�ொட்–டுகள் அதி–கம்.
ந
கங்–கள் அதன் அடி– மு – னை – யி – லி – ரு ந் து முழு–மை–யாக வளர்ச்சி– ய– டைய 6 மாதங்– க ள் தேவை.
- ஆர். ஷான்
02.12.2016 முத்தாரம் 11
த�ொப்–பிக – ள்!
பிர–ப–லங்–க–ளின்
ல�ோ சினி– ம ாவ�ோ அதர– சின– ய்னை சி ற ப் – ப ா க
வெளிப்– ப – டு த்– து – கி – ற – வ ர்– க ளே ஜெயிக்–கி–றார்–கள் என்–பது ஹிஸ்– டரி ச�ொல்–லும் உண்மை. காந்–தி– யின் கண்–ணாடி, எம்.ஜி.ஆரின் ரஷ்ய குல்லா மற்–றும் கண்–ணாடி, பார– தி – யி ன் தலைப்– ப ாகை என இவை–யின்றி இவர்–களை உங்–க– ளால் கற்–பனை செய்ய முடி–யுமா? இந்த புகழ்– பெற்ற மனி– தர்–க ள் அணிந்த த�ொப்–பி–க–ளைப் பற்றி பார்ப்–ப�ோமா?
சர்ச்– சி – லி ன் ஹாம்– பர்க் த�ொப்–பி–
உ ல – க ப் – ப � ோ – ரி ன் – ப�ோது பிரிட்–டிஷ் பிர–த–ம– ராக இருந்த வின்ஸ்–டன் சர்ச்– சி ல் தனது சுருட்– டு– க – ளு க்கு மட்– டு – ம ல்ல, த ல ை – யி ல் அ ணி ந ்த த�ொப்– பி – க – ளு க்– க ா– க – வு ம் புகழ்– பெ ற்– ற – வ – ர ா– வ ார்.. நடு–வில் அழ–கிய ரிப்–பன் வை த் து க ம் – ப – ளி – யி ல் தைக்–கப்–பட்ட இத்–த�ொப்– பி– யி ன் மேற்– ப – கு – தி – யி ல் இதனை தனித்–து–வ–மாக க ா ட் – டு ம் ப ள் – ள ம் ஒன்– று ண்டு. முதன்– மு – த – லில் தயா– ரி க்– க ப்– பட்ட ஹாம்–பர்க் த�ொப்–பி–கள் இன்–றைய த�ொப்–பிக – ளை – – விட பெரி–யவை. 1880 ஆம் ஆண்டு இங்– கி–லாந்து இள–வ–ர–ச–ரான 7 ஆம் எட்– வ ர்ட் ஜெர்– மனியின் ஹாம்–பர்க் நக– ருக்கு சென்–றார். அங்கு வழங்–கப்–பட்ட ஹாம்–பர்க் த�ொப்– பி – யி ன் அழ– கி ல் மயங்கி, அதனை எங்–கும்
– த்தத் த�ொடங்க உல–கமே அவரை பயன்–படு லைக் செய்து ஹாம்–பர்க் த�ொப்–பிக்கு ஆர்–டர் குவிந்–தது. காட்–பா–தர் படத்–தில் நடி–கர் அல்–ப–சீன�ோ ஸ்டை–லாக அணிந்– தி–ருப்–பது – ம்–கூட ஹாம்–பர்க் த�ொப்–பித – ான். ஹாம்–பர்க் த�ொப்–பி–யில் சர்ச்–சில் பல்– வேறு வெரைட்–டி–களை ட்ரை செய்–தா– லும் அவ–ருக்கு நச்–சென ஃபிட்–டா–னது, கருப்பு ரிப்– ப ன் வைத்த சாம்– ப ல் நிற ஹாம்–பர்க் த�ொப்–பித – ான். இது ஏலத்–தில் 7 லட்–சத்து 84 ஆயி–ரத்து 958 ரூபாய்க்கு விலை–ப�ோ–னது தெரி–யுமா? சர்ச்–சில்னா சும்–மாவா!
நெப்–ப�ோ–லி–யனின் இரு–மு–னைத்– த�ொப்–பி–
மக்–க–ளி–டம் தன்னை பிர–சன்ட் செய்– வ–தில் படு–கில்–லா–டி–யான நெப்–ப�ோ–லி– யன் தனது ஆற்–றலை வெளிக்–காட்–டும் வித–மா–கவே வாழ்–விறு – தி – வ – ரை தன் த�ோற்– றத்தை அமைத்–துக் க�ொண்–டார். 1807
02.12.2016 முத்தாரம் 13
ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்– யா–வுக்கு எதி–ராக நெப்–ப�ோ–லி– – ல் கம்–பீர யன் குதி–ரையி – ம – ாக இரு– மு–னைத் த�ொப்–பிய� – ோடு(Bicorne) ப�ோர்க்– க – ள ம் புகுந்– த ார். இந்த புது–மை–யான த�ொப்–பி–யி–னால் நெப் – ப� ோ – லி– ய – னுக்கு க ம் – பீ ர அடை– ய ா– ள த்– த� ோடு, படை– யி–ன–ரும் அவரை அடை–யா–ளம் காண முடிந்–தது. ஆண்–டுக்கு 4 த �ொ ப் – பி – க – ளு க் கு ஆ ர் – ட ர் ச�ொன்ன நெப்–ப�ோ–லி–ய–னி–டம் ம�ொத்– த ம் 120 த�ொப்– பி – க ள் – ல் இருந்–தன. ஆனால் கலெக்–ஷ – னி இன்று நெப்–ப�ோ–லிய – னி – ன் த�ொப்– பி– க – ள ாக நம்– மி – ட ம் இருப்– ப து வெறும் 19 மட்–டுமே. இரு–முனை த் – த�ொப்–பிக – ள் பல்–வேறு அருங்–காட்– சி–ய–கங்–க–ளில் மக்–கள் பார்–வை– யிட வைக்–கப்–பட்–டுள்–ளன. இந்த த�ொப்–பி–யின் விலை 2.4 மில்–லி– யன் டாலர்–க–ளா–கும். புரட்–சித் த�ொப்பி!
ஆப்– ர – ஹ ாம் லிங்– க – னி ன் த�ொப்–பி–
18 - 20 ஆம் நூற்– ற ாண்டு மத்– தி – யி ல் அரசு விழாக்– க – ளி ல் பாரம்–ப–ரி–ய–மாக பயன்–ப–டுத்–தப்– பட்ட டாம்–ஹேட் த�ொப்பி உலக வணி–கம், மேல்–தட்டு வர்க்–கத்தை, முத–லா–ளித்–து–வத்தை, அமெ–ரிக்– காவை குறிப்–பது என சிம்–பிள – ாக கூற–லாம். அமெ–ரிக்–கா–வின் 16 வது அதி–பர – ாக பத–வியே – ற்று அடி–மை–
14
முத்தாரம் 02.12.2016
மு–றைக்கு சீல் வைத்த கருப்–பின – த் தலை–வர் ஆப்–ர–ஹாம் லிங்–கன் அணிந்– த து 20 செ.மீ. பட்– டி ல் செய்த டாப் ஹேட் த�ொப்– பி – தான். மேஜிக் செய்–ப–வர்–க–ளின் சாய்–ஸும் கூட இதே–தான். 6 அடி 4 அங்–குல உயர லிங்– கன், தனது அடை– ய ா– ள – ம ாக மாற்–றிக்–க�ொண்ட டாப் ஹேட் த�ொப்– பி யை, இறு– தி – ய ாக படு– க�ொலை செய்–யப்–பட்–டப – �ோ–தும் அணிந்து வர–லாற்–றி–லும் பதிவு செய்–துவி – ட்–டார்.இந்தடாப்ஹேட் த�ொப்– பி – யி ல் பல்– வே று ச�ொற்– ப�ொ– ழி – வு க்– க ான குறிப்– பு – க ளை எ ழு தி த ன து த �ொ ப் – பி – யி ல் வைத்து த�ொலை– ந� ோக்– க ாக
பயன்– ப – டு த்– தி – ன ார் லிங்– க ன் என்–றும் செய்தி உள்–ளது. 1865 ஏப்– ர ல் 14 அன்று ஃப�ோர்டு தியேட்–ட–ரில் ஜான் வில்க்கிஸ் பூத் என்–பவ – ர – ால் லிங்–கன் க�ொல்– லப்–பட்–ட–பின் லிங்–கன் நினை–வ– க த் – தி ல் பா து – க ா க் – க ப் – பட்ட த�ொப்பி, தற்–ப�ோது வாஷிங்–ட– னில் ஸ்மித்–ச�ோ–னிய – ன் நிறு–வன – த்– திற்கு அன்–ப–ளிப்–பாக அளிக்–கப்– பட்–டுவி – ட்–டது. தற்–ப�ோது மிக–வும் அரி– த ா– க வே தயா– ரி க்– க ப்– ப – டு ம் இத்–த�ொப்–பிக்கு மவுசு குறை–ய– வே–யில்லை. விடி–யல் நாய–கனி – ன் த�ொப்பி!
ஜ ா க் கி கெ ன் – ன – டி – யி ன் பில்–பாக்ஸ் த�ொப்–பி–
1930 ஆம் ஆண்டு அறி–மு–க– மான இந்த த�ொப்பி சிம்– பி ள் அழ– கி – ன ா– லேயே அனை– வ – ர து மனங்–களை – –யும் திரு–டி–யது. சிறிய உருளை வடிவ மாத்– தி – ரை – க ள் ப�ோல இருந்–த–தால் பில்–பாக்ஸ் என அழைக்–கப்–பட்–டது. முதன்– மு– த – லி ல் ர�ோம– வீ – ர ர்– க – ள ால் தலை–யில் அணி–யப்–பட்ட பன�ோ– னி–யன் கேப், பில்–பாக்ஸ் த�ொப்– பிக்கு ஆதா–ரம். கம்–பளி, பட்டு, சிறுத்தை த�ோல் ஆகி–ய–வற்–றால் பில்–பாக்ஸ் த�ொப்பி தயா–ரிக்–கப்– ப–டு–கி–றது. அமெ–ரிக்க அதி–பர – ான ஜான் கென்– ன – டி – யி ன் மனைவி ஜாக்– கி– யி ன் உடை– க – ளி ன் நேர்த்தி
உலகப் பிர–சித்–தம். விளிம்–புக – ள் இல்– லாத, பெண்–கள் அணி–யும் இந்த த�ொப்– பி யை தனது பிங்க் நிற உடைக்கு மேட்ச்–சாக அணிந்து தன் கண–வர� – ோடு டெக்–ஸா–ஸின் டல்–லாஸ் நக–ருக்கு வந்–தார். துர–தி– ருஷ்–டவ – ச – ம – ாக, கென்–னடி அங்கு படு–க�ொலை செய்–யப்–பட்–டார். கடும் துக்– க த்– தி ல் ரத்– த த்– தி ல் நனைந்த தனது உடையை மாற்– றா–மல் பிடி–வா–தம – ாக கண–வரி – ன் உடலை மடி– யி ல் தாங்– கி – ய – ப டி விமா–னத்–தில் பய–ணித்–தார். பின், அவ்– வு – டை – க ளை மேரி– லே ண்– டில் உள்ள தேசிய ஆவ– ண க் காப்–பக – த்–திற்கு வழங்–கிவி – ட்–டார். ஆனால் அவ–ரது செய–லா–ளரி – ட – ம் க�ொடுத்த பில்–பாக்ஸ் த�ொப்பி என்ன ஆனது என்–பது இன்–று– வரை யாரும் அறி–யாத மிஸ்டரி. த்ரில்–லர் ஸ்டோரி!
-கயல்–விழி பாமா
02.12.2016 முத்தாரம் 15
பூமியின்
ப
சூரியக்குழந்தைகள்
க–லில் வேலை இர–வில் தூக்– கம் என்–பது இன்–டர்–நேஷ– னல் நடை–முறை. பாகிஸ்–தா–னில் உள்ள அப்–துல் ரசீத், ச�ோயப் அக– மது என இரு சக�ோ–த–ரர்–க–ளும் சூரிய ஒளி உள்–ள–வரை உற்–சா–க– மாக விளை–யா–டு–ப–வர்–கள், மேற்–
கில் சூரி–யன் ஆப்–சென்ட் ஆன– வு–டன் சக்தி வற்றி ப�ொத்–தென கீழே விழுந்–துவி – டு – கி – ற – ார்–கள். இந்த குழந்–தை–க–ளுக்கு அப்–படி என்–ன– தான் ஆச்சு? 9, 13 வய–தான இரு–வரு – ம் சூரிய ஒளி–யில் த�ோனி எனர்ஜி காட்–டு
– ப – வ ர்– க ள், சூரி– ய ன் மறைந்– த – வு – அனுப்–பி–யுள்–ள�ோம் என நம்–பிக்– டன் ரஹானே ப�ோல தள்–ளாடி கை–ய�ோடு பேசு–கி–றார் இஸ்–லா மா– ப ாத்– தி – லு ள்ள பாகிஸ்– த ான் பேசக்–கூட முடி–ய–வில்லை என்– றால் பெற்ற உள்–ளம் தாங்–குமா? மருத்–து–வக்–க–ழ–கத்–தின் பேரா–சி–ரி ஆனால் குழந்–தைக – ளி – ன் ந�ோயை –ய–ரான ஜாவேத் அக்–ரம். இங்கு ஆன்–மி–கத்–து–டன் மிக்ஸ் செய்து, இரு– வ – ரு க்– கு ம் இல– வச சிகிச்– சூரி–ய–னி–ட–மி–ருந்து சக்தி பெறும் சை–ய�ோடு 300க்கும் மேற்பட்ட சூரி–யக்–கு–ழந்–தை–கள் சார் இவர்– டெ ஸ் ட் – க – ளு ம் எ டு க் – க ப் – கள்! என பய– ப க்தி கற்– பூ – ர ம் பட்–டுள்–ளன. பலுச்– சி ஸ்– த ா– னி ன் கிரா– ம ப்– காட்– டு – கி – ற ார் இச்– ச – க�ோ – த – ர ர்– பு–றத்–தைச்–சேர்ந்த அப்– க–ளின் தந்தை முக–மது ஹசீம். துல், ச�ோயப் இரு–வரி – ன் பெற்–ற�ோரு சூரிய ஒளி இல்–லாத – ம் நெருங்–கிய மழைக்–கா–லத்–தில் அறை– உற–வி–னர்–கள – ா–வர். இச்– யி–ருளி – ல் இவ்–விரு – வ – ரு – ம் ச–க�ோத – ர – ர்–களு – க்கு முன் எ ந்த சி க் – க – லு – மி ன் றி பிறந்த 6 குழந்–தைக – ளை – – யும் பல்– வ ேறு ந�ோய்– நட–மா–டி–ய–தால் தந்–தை– யின் வாதத்தை மருத்–து– க–ளுக்குப் பறி–க�ொ–டுத்– வர்– கள் ஏற்–க –வி ல்லை. தி– ரு க்– கி ன்– ற – ன ர் என்– ஆனா–லும் மருத்–து–வர்– பது மருத்– து – வ ர்– க – ளை – க–ளின் ச�ோத–னை–க–ளி– மரு.ஜாவேத் அக்–ரம் மர– ப ணு குறை– ப ாடு லும் விடை தெரி–யா–த–தால் திரு– க�ோணத்– தி ல் சிந்– தி க்க வைத்– தி– ரு க்– கி – ற து. இக்– கு – டு ம்– ப த்– தி ல் தி–ரு–வென விழிக்–கி–றார்–கள். பக– லி ல் விராட் க�ோஹ்லி இ வ ர் – க – ளு க் கு மு ன் இ ற ந் – து – –யா–கும் அப்–துல், ச�ோயப் என ப�ோன இரு– வ – ரு ம், அப்– து ல் இரு–வ–ரும் இர–வில் பேச, சாப்– ச�ோயப் என இரு– வ – ரி ன் அறி– பிட முடி–யா–மல் படுத்த படுக்– கு– றி – க ளை உட– லி ல் க�ொண்– டி – கை–யா–வது ஏன் என்று பல்–வேறு ருந்–த–ன–ராம். ஆனால் ச�ோயப், ச�ோத–னை–க–ளின் மூலம் கண்–ட– அப்– து ல் இரு– வ – ரு க்– கு ம் பிறகு றிய முயல்–கிற�ோ – ம். இவர்–க–ளின் பிறந்த தங்கை எந்த ந�ோயு–மின்றி குறை– ப ாடு எங்– க – ளு க்கு சவா– நல– ம ாக இருக்– கி– றாள் என்–பது லா– ன – து – த ான். இக்குழந்– தை – மருத்–து–வர்–க–ளுக்கு புதி–ரா–கவே க–ளின் ரத்த மாதி–ரிக – ளை எடுத்து உள்–ளது. துறை–சார்ந்த மருத்–துவ – ர்–க–ளுக்கு -விக்–டர் காமெஸி
02.12.2016 முத்தாரம் 17
1792
ஆம் ஆண்டு ப�ோலந்–தின் வார்சா நக–ரி–லுள்ள தேவா–ல–ய–ம அண்–மை–யில் இத்–தே–வா–ல–ய–மா–னது, 53 மில்–லி–யன் டாலர் தனி குப் பிறகு, ப�ோலந்–தின் 98ஆவது சுதந்–திர தினத்–தில் புதி–தாகக் கட்–டப்–பட்ட
சுதந்திரதின
பிரார்த்தனை!
மா–னது, ரஷ்ய ஊடு–ரு–வல் மற்–றும் பல ப�ோர்–க–ளால் சிதி–ல–ம–டைந்–தது. னி–யா–ரின் நிதி–யு–த–வி–யி–னால் புத்–து–யிர் பெற்–றது. ஏறத்–தாழ 224 ஆண்–டு–க–ளுக்– பட்ட தேவா–ல–யத்–தில் நடை–பெற்ற பிரார்த்–தனைக் காட்சி இது.
ர
ஷ்– ய ப்– பு – ர ட்சி என்– ற – து ம் அனை–வரி – ன் நினை–வுக்கு வரு–வது ஜார் ஆட்சி தூக்–கிய – ெ– றி–யப்–பட்–டது – ம், ப�ோல்ஸ்–விக் கட்–சியி – ன் லெனின் ச�ோவி–யத் ரஷ்–யா–வின் அதி–ப–ரா–ன–தும்– தான். நவம்–ப–ர் 7, 1917 இல் மக்–க–ளின் ப�ொது–வு–டைமை பு ர ட் சி ம ல ர , 1 9 0 5 ஆ ம் ஆண்– டி ல் நடந்த த�ோல்– வி – யுற்ற புரட்–சியே கார–ணம் என்– பது பல–ரும் அறி–யாத ஒன்று. 1905 ஆம் ஆண்டு ரஷ்யா ஜப்– ப ா– னு – ட – ன ான ப�ோரில் படு– த�ோ ல்– வி யை சந்– தி க்க, பல்–வேறு த�ொழி–லா–ளர்–கள் தமது க�ோரிக்– கையை வலி– யு–றுத்தி அமை–திய – ான பேரணி ஒன்றை நடத்–தி–னர். சர்–வா–தி– கா–ரி–யான ஜார் மன்–ன–ரின் ஒரே ஆணை–யால் பேரணி சென்ற எளிய மனி– த ர்– க ள் அனை– வ – ரு ம் இரக்– க – மி ன்றி படு–க�ொலை செய்–யப்–பட்–ட– னர். ரத்–தம் த�ோய்ந்த ஞாயிறு என்று அந்–நிக – ழ்வு வர–லாற்–றில் குறிப்–பி–டப்–ப–டு–கி–றது. அன்று மண்–ணில் சிந்–திய மக்–க–ளின் ரத்– த ம்– த ான் ப�ொது– வு – டை – மைப் புரட்–சிக்கு த�ொடக்–கப்– புள்–ளியு – ம் கூட. அதன் பின்பு, ஜன–வரி 9, 1917 ஆம் ஆண்டு ப�ோல்ஸ்–விக் கட்–சியி – ன – ர், மக்– க–ளின் ஆத–ர–வு–டன் பெரும்
20
முத்தாரம் 02.12.2016
ரஷ்–யப் புரட்–சி–யின் நூற்–றாண்டு (1917 - 2016)
வேலை– நி – று த்– த த்தை ரத்– த ம் த�ோய்ந்த ஞாயிறு தினத்தை பிர–சா–ரம் செய்து உறு–திய�ோ – டு த�ொடங்–கி–னர். 1917 ஆம் ஆண்–டில் பிப்–ர– வரி, அக்–ட�ோப – ரி – ல் இரு புரட்– சி–கள் நிகழ்ந்–தன என்றே கூற வேண்–டும். ஜன–வரி மாதத்–தில் த�ொடங்– கி ய வேலை நிறுத்– தம் மெல்ல நாட்– டி ன் பல்– வேறு நக–ரங்–க–ளுக்–கும் தீயாய் பர–வி–யது. ரஷ்ய நக–ர–மான செயின்ட் பீட்–டர்ஸ்–பர்–கில் (பெட்– ர�ோ – கி – ர ாட்) மிகப்– பெ–ரிய மக்–கள் பேரணி நடத்– தப்–பட்–டது. எளிய மக்–களை விரும்–பாத மன்–னர் ப�ோராட்– டத்தை ஒடுக்க தள–ப–திக்கு உத்–தர – வி – ட்–டார். ஆனால் கடு– மை–யான ப�ோர்–கள், வறுமை, ம ன் – ன ர் மீ த ா ன வி ர க் தி ஆ கி – ய – வ ற் – றி – ன ா ல் ம ன ம் வெதும்–பி–யி–ருந்த வீரர்–க–ளின் நெஞ்– சி ல் தேச– ப க்தி புத்– து – ணர்– வ�ோ டு ப�ொங்க, தள– ப–திக்குபணி–யா–மல்ப�ோரா–டும் ம க் – க – ள�ோ டு இ ணைந் – து – க�ொண்ட–னர். மெல்ல காவல்– துறை முழு–வ–தும் அர–ச–ருக்கு எதி– ர ாகக் கிளர்ந்– தெ – ழு ந்து மக்–கள�ோ – டு இணைய, இரண்– டாம் நிக்– க�ொ – ல ாய் ஆட்சி கலைக்–கப்–பட்டு சிறை–வைக்– கப்– ப ட்– ட ார். இதன் பின்
02.12.2016 முத்தாரம் 21
அமைந்த இடைக்– க ா ல அ ர – சு க் கு அ ல ெ க் – ஸ ா ண் – ட ர் கெரெ ன் ஸ் கி தலை–மை–யேற்றார். இடைக்–கால அரசு இட– து – ச ா– ரி – க – ளி ன் எண்– ண த்– தி ற்– கே ற்ப செயல்–ப–ட–வில்லை. ஜார் மன்–ன–ரின் க�ொடூ–ரத்–திற்கு தன் சக�ோ–த–ரனை காவு க�ொ டு த் – தி – ரு ந ்த லெனின் (1870-1924) சைபீ–ரிய – ா–வுக்கு நாடு கடத்–தப்–பட்டு தலை– ம– றை வு வாழ்க்கை வாழ வேண்–டி–யி–ருந்– தது. 1898 ஆம் ஆண்– டில் தம் இயக்கத் த�ோழி– ய ான குரூப்– கா– ய ாவை துணை– வி – ய ா க ஏ ற ்ற லெனின், ரஷ்–யாவை மீட்க ரக– சி – ய – ம ாக ப ல நூ ல் – க ளை , துண்–ட–றிக்–கை–களை எழு– தி – யு ம் ரக– சி – ய க் கூட்–டங்–களை நடத்– தி–யும் மக்–களி – ன் சுதந்– திர தாகம் நீர்த்–துப்– ப�ோ– க ா– ம ல் பார்த்– துக்–க�ொண்–டார். லெனி–னின் வழி–
22
முத்தாரம் 02.12.2016
காட்–டலி – ல் தேசப்–பற்–றுமி – க்க த�ொழி–லா–ளர்–க– ளின் முன்–னெடு – ப்–பில் பல்–வேறு நக–ரங்–களை ப�ோல்ஸ்– வி க் ராணு– வ ம் வெற்– றி – க – ர – ம ாகக் கைப்–பற்–றி–யது. எளிய மனி–தர்–க–ளின் வர்க்– கப் ப�ோராட்–டத்–தில் இழப்–புக – ளு – ம் ஏரா–ளம். அக்–ட�ோ–பர் மாதம் 25, 1917 ஆம் ஆண்டு விளா–தி–மிர் லெனின் தலை–மை–யில் நடந்த ‘உல–கத்–த�ொ–ழி–லா–ளர்–களே ஒன்–று–ப–டுங்–கள்’ என்ற விண்–பி–ளக்–கும் முழக்–கத்–து–டன் நடந்த புரட்சிப் பேர–ணி–யில், இடைக்–கால அரசு தூக்– கி – ய ெ– றி – ய ப்– ப ட்டு ச�ோச– லி ச ஆட்சி அம–லுக்கு வந்–தது. சிறை–வைக்–கப்–பட்–டி–ருந்த இரண்–டாம் நிக்–க�ொ–லாய் 1918 ஆம் ஆண்டு குடும்– ப த்– த�ோ டு க�ொல்– ல ப்– ப ட்– ட ார். பின் நடந்த உள்–நாட்டுப் ப�ோர்–க–ளுக்குப் பிறகு 1922 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் க�ொள்–
கை–க–ளின் அடிப்–ப–டை–யில் உல–கி–லேயே முதல் ச�ோச–லிச குடி–யர – சு ஆட்சி மலர்ந்–தது. ரஷ்– ய ா– வி ல் பின்பற்– ற ப்– ப ட்டு வந்த ஜூலி–யன் காலண்–டர்–படி அக்–ட�ோ–பர் 25 இல் புரட்சி நடந்–தது. ஆனால் உல–கெங்–கும் பின்–பற்–றப்–பட்ட கிரி–க�ோ–ரிய முறைப்–படி புரட்– சி – ந ாள் நவம்– ப ர் 7 என்– ப – த ால் இது நவம்–பர் புரட்சி என்–ற–ழைக்–கப்–ப–டு–கி–றது. 1917 த�ொடங்கி 1990 வரை நீடித்த ச�ோவி–யத் யூனி–யன்(15 நாடு–கள்), 1991 ஆம் ஆண்டு பிரி– வி – ன ை– க – ள ால் அதி– க ா– ர – பூ ர்– வ – ம ாக மறைந்து ரஷ்யா பிறந்–தது. முதல் அதி–ப– ரான லெனி–னின் ப�ொரு–ளா–தா–ரக் க�ொள்–
கை–களை விட அர–சி– யல் க�ொள்– கை – க ளே முக்– கி – ய த்– து – வ – ம ா– கி ன. இதன் விளை–வாக தனி– ந–பர் சுதந்–திர – ம் ஒழிந்–தா– லும், வீடு, கல்வி, மருத்– து–வம் இல–வச – ம், நிலம் உழு–ப–வ–ருக்கே ச�ொந்– தம், சிறு–பான்–மை–யி–ன– ருக்– கு ப் பாது– க ாப்பு, கூ ட் – டு ப் – ப ண்ணை , கூ ட் டு வி வ – ச ா – ய ம் , உற்– ப த்– தி – க ள் ப�ொது– வு– டைமை , த�ொழில்– நு ட்ப த ன் – னி – றை வு என புரட்– சி – க – ர – ம ான ப ல ம க் – க ள் ந ல திட்–டங்–களை லெனின் வெற் – றி – க – ர – ம ா க ச் செ ய ல் – ப – டு த் – தி க் காட்–டி–னார். இ ன் று உ ல – க ம் முழு–வ–தும் பின்–பற்–றப்– ப–டும் பல்–வேறு நலத்– தி ட் – ட ங் – க – ளு க் கு இ வையே அ டி ப் – ப டை . ப ல த லை – மு–றை–க–ளும் நினை–வி– லி – ரு த் – தி ப் ப ே சு ம் ம க் – க ள் பு ர ட் – சி – யி ன் சி வ ப் பு நூற்–றாண்டு இது.
-கார்க்கி எக்ஸ்
02.12.2016 முத்தாரம் 23
கையிலே வளரும்
காது!
இ
ரண்டு காது–களி – ல் கேட்–கும் பல விஷ–யங்–க–ளையே நம்– மால் ஜீர–ணிக்க முடி–வ–தில்லை. ஆனால் அது ப�ோதாது தனக்கு என அச–காய முயற்–சிக – ள் செய்து கையி–லும் காது வளர்க்–கும் மனி– தரை அறி–வீர்–களா? ஆஸ்–தி–ரே– லிய பேரா–சிரி – ய – ர் ஒரு–வர், காதை கையில்–தான் வளர்ப்–பேன் என அடம் பிடித்து 12 ஆண்–டு–க–ளில் அதனை சாத்– தி – ய ப்– ப – டு த்– தி – யு ம் விட்– ட ார் என்– ப து அக்– ம ார்க் புது–மை–தானே?
24
முத்தாரம் 02.12.2016
கர்–டின் பல்–கலைக் – க – ழ – க – த்–தின் ஆல்– ட ர்– நே ட்– டி வ் அனா– ட மி துறை–யின் தலைவ–ரான பேரா– சி–ரி–ய–ர் ஸ்டெல்–ஆர்க், 1996 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து சிந்– தி த்து உட– லில் முயற்–சித்து அண்–மை–யில் வெற்–றி–கண்ட எக்ஸ்–ப–ரி–மென்ட் இது. மக்–க–ளின் வாழ்–வில் இத–ய– மாக இணை–யம் இயங்கி வரும் நிலை–யில், நியூ–யார்க்–கில் உள்ள ஒரு–வ–ர் கலந்–து–க�ொண்ட கான்– செர்ட்டை கேட்–டுக்–க�ொண்டே லண்–டனி – ல் இன்–ன�ொரு நிகழ்வை
ரசிக்க முடிந்– த ால் எப்– ப– டி – யி – ரு க்– கு ம்? என்று உற்–சா–க–மாக பேசி–ய–படி நம் முகத்– தை ப் பார்க்– கி– ற ார் ஸ்டெல்– ஆ ர்க். ஆனால் மக்–கள் இதனை குழப்– ப மா– க – வு ம், குறு– கு– று ப்– ப ா– க – வு ம் பார்க்– கி– ற ார்– க ள். கலையை அவ்–வள – வுஎளி–தாகஅனை–வ– ரா–லும் புரிந்–து– க�ொள்ள முடி– ய ாது – த ான் என தானா–கவே ஒரு பதி–லை– யும் கூறும் ஸ்டெல்–ஆர்க், உடலை கேன்– வ ா– ஸ ாக மாற்– று ம் புது– மை – ய ான கலை–ஞ–ரும் கூடத்–தான். ஸ்டெம்–செல் மூலம் வளர்க்– க ப்– ப ட்ட இந்த பு தி ய க ா தி ல் ர த் – த ஓ ட் – ட ம் மே ம் – ப ட் – டி – ரு ப் – ப – த�ோ டு , த சை – க – ளு ம் வ ள ர் ந் – தி – ரு ப் – பதை கையை உயர்த்திக் காட்டி புன்– ன – கைக் – கி – றார். ஸ்டெல்– ஆ ர்க்– கி – டம் இரு– கா–து–கள் சிறப்– பாக செயல்–ப–டும்–ப�ோது எதற்கு புதிய காது? என்று கேட்–டால், இந்த காதில் மைக் – ர�ோ – ப�ோனை ப�ொ ரு த் – தி – யு ள் – ளே ன் . இ த ன் மூ ல ம் ந ா ன் எங்கு இருந்–தா–லும் என்
02.12.2016 முத்தாரம் 25
கையி–லுள்ள காது உல–கத்–த�ோடு இணைந்–தே– யி–ருக்–கும். நான் ரசிப்–பதை உல–கமே கேட்டு ரசிக்–க–லாம். மேலும் ஜிபி–எஸ் மூலம் என் காது எங்–கிரு – க்–கிற – து என யாரும் அறி–யல – ாம் என க�ோக்–கு–மாக்கு விளக்–கம் வரு–கி–றது ஸ்டெல்–ஆர்க்–கி–ட–மி–ருந்து. அப்–ப–டி–யென்–றால் உங்–கள் பிரை–வசி என்–னா–வது? என்–றால் என்–னுடை – ய காதை ஆஃப் செய்ய ஸ்விட்ச் ஏதும் கிடை–யாது. இணை–யமி – ன்றி நான் ஆஃப் லைனில் இருந்– தா–லும் என்–னு–டைய காது இணை–யத்–தி– லே–யே–தான் இருக்–கும் என்று புதி–ராகப் பேசு–கி–றார் ஸ்டெல்–ஆர்க். 2006ல் லாஸ் ஏஞ்– ச ல்– சி ல் நடந்த இரு அறுவை சிகிச்– சை–க–ளில் காது நேர்த்தி பெற்–றா–லும் திடீர் த�ொற்–றி–னால், மைக்–ர�ோ–ப�ோனை அதில் ப�ொருத்த முடி–யவி – ல்லை. பிறகு காது மடல்– க்க ஸ்பெ–யினை – ச் களை சரி–யாக வடி–வமை – சேர்ந்த ஸ்டெம்–செல் வல்–லு–நரை அணுகி காதினை நுட்–ப–மாகச் செதுக்–கி–யுள்–ளார்.
26
முத்தாரம் 02.12.2016
தானாக வள– ரு ம் காது ப�ோன்ற உறுப்–பு– களை எப்–படி உரு–வாக்– கி– ன ார்– க ள்? கையில் ச லை ன் ச �ொ ல் யூ ஷ – ன் மூ ல ம் த சை செல்–களை உரு–வாக்கி, அதில் சிறு–நீ–ரக வடிவ சிலி–கானை ப�ொருத்தி அ று வை சி கி ச் – சை – யி – ன ா ல் க ா தி னை உரு–வாக்–கி–யுள்–ள–னர். ஆனால் உடல் இதற்கு அவ்– வ – ள வு எளி– த ாக அட்– மி – ஷ ன் க�ொடுத்– து– வி – ட – வி ல்லை. ஒரு கட்– ட த்– தி ல் த�ோலில் த�ொ ற் று ஏ ற் – ப ட் டு காதின் இடமே மாறி– யுள்– ள து. நுண்– ணி ய து ள ை வ ழி – ய ா க காதின் சிறு அமைப்பு – களை வடி– வ – மை க்க உத– வு ம் பாலி எத்– தி – லீன் ப�ொருள் ஒன்று, 250 மைக்–ர�ோ–மீட்–டர்– அ ள – வி ல் ஸ்டெ ல் – ஆ ர் க் – கி ன் இ ட து கையில் ப�ொருத்– த ப்– பட்–டுள்–ளது. ஸ்டெல்– ஆர்க் இனி குள�ோ–பல் கலை–ஞன்–தான்!
-தன்–காட�ோ மபுசி
அமர்க்கள விருந்து!
மெயில் பாக்ஸ்
ப ா ல ை – ய ா ன வ ன த் – தி – லி – ரு ந் து வ ள – ம ா ன பகு–திக்கு யானை–களை மாற்–றும் காட்சி, சூழல் அழிந்–த–தற்–கான நிஜ சாட்சி. -கு.சீர்–கா–ழி–ரா–ஜன், க�ோவை. அ ழ– கி ய பேப்– ப ர் வெயிட் ப�ோல வசீ– க – ரி த்த ட�ோட்–கல் காலண்–டர் ஆசம் ட்ரெண்–டிங் செய்தி. வைட்– ட – மி ன்– க – ள ால் டிஎன்– ஏ க்– க – ளி ல் ஏற்– ப–டும் பாதிப்–பு–களை பேசிய ‘உடல்– ம�ொழி ரக–சி–யங்–கள்’ த�ொடர் விழிப்–பு–ணர்வு வாசல். KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) -எம்.ப்ரீ–தா –கு–மார், சென்னை-33 லிமிடெட்டிற்காக சென்னை-600
முத்தாரம்
படைப்–பின் லிமிட் தாண்–டும் தன்–மையை சுருக்–கெனக் கூறிய மனித எலும்–புக் குவளை செய்தி திகில் ஜுர– மே ற்– றி – ய து. வேடிக்கைச் செய்–தி–கள் சுவா–ர–சிய வைரங்–க–ளே–தான். -டி. விஜய் ட – ே–விஸ், காரைக்–குடி. ஒரு நாட்–டின் நில–வ–ளத்–தையே சிறிய புழு நாசம் செய்–யுமா என வியப்–பூட்–டி–யது ஒபாமா புழு செய்தி. அறி–யாத பல புதிய தக–வல்–களைக் – னின் கட்–டுரை அறி–வுக்கு அமர்க்– கூறிய ரவீந்–திர கள விருந்து. -கே.கண்–ண–பி–ரான், திருச்–செந்–தூர். குறை–வான விலை–யில் டிஜிட்–டல் லேசர் பேனா அட்–ட–காச அம்–சங்–க–ளால் மனதை வளைத்–துப்–ப�ோட்–டது. மீன–வர்–க–ளின் வாழ்– வினை வண்–ணத்–தில் பேசிய எகிப்–திய சுவர் ஓவி–யங்–கள் அட்–ட–கா–சப் பதிவு. -ஜி.மீனா–லட்–சுமி, நாகர்–க�ோ–வில்.
096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
02-12-2016 ஆரம்: 36 முத்து : 50
02.12.2016 முத்தாரம் 27
த
ண்–ணீர் பாட்–டிலை வைத்து என்ன செய்–வ�ோம்? நீரைப்– பி–டித்து வைத்–துக்–க�ொண்டு ஆற அமர குடிக்– க – ல ாம். ஆனால் ஜென் இசட் காலத்– தி ல் தண்– ணீர் பாட்–டில் க�ொள்–ளுப்–பாட்டி ப�ோலவே இருந்–தால் எப்–படி? தண்–ணீர் பாட்–டிலு – ம் சூப்–பர – ாக ட்யூன் ஆகி வந்–தால், வைத்–தி–ருக்– கும் நமக்கு பெரு–மை–தானே!
எக�ோம�ோ நிறு– வ – ன த்– தி ற்கு இந்த ய�ோசனை சட்– ட ெனத் த�ோன்ற டக்– கென தயா– ரி த்– த–து– தான் எக�ோம�ோ ஸ்மார்ட் பாட்–டில். இதி–லுள்ள ஸ்பெ–ஷல், தண்– ணீ – ரி ல் கலப்– ப – ட ம் இருந்– தால், அந்த கலப்– ப ட வேதிப்– ப�ொ– ரு ட்– க – ளை – யு ம் நீக்– கி த்– த – ரு – கி–றது. ஃபிட்–னெஸ் பிரி–யர் என்– றால், பயிற்– சி – யி ல் வியர்வை
சுத்திகரித்த நீர் தரும்
எக்–க�ோம�ோ
பாட்–டில்!
பெருகி தாகம் எடுக்–கும் நேரத்– தை–யும் இதில் பதிவு செய்–தால், பாட்– டி லே உங்– க – ளு க்கு அந்– நே–ரத்தை நினை–வு–ப–டுத்–தும். மேலும் பாட்– டி – ல�ோ டு தரும் ஆப்பை ப�ோனில் பதிவு செய்–தால், அதில் வரும் அலர்ட்டை பின்–பற்–றி– னால், சுத்–தம – ான நீரை குடித்து ஆர�ோக்– கி ய ஆசா–மிய – ாக சூப்–ப– ராக வாழ–லாமே! ஸ ்மா ர் ட் பாட்– டி ல் எப்– படி செயல்–படு – கி – – றது? இந்த பில்–ட– ரி–லுள்ள கார்–பன் பை ப – ர ா – ன து , நீரி–லுள்ள குள�ோ–ரின் உள்–ளிட்ட வேதிப்–ப�ொரு – ட்–கள், பெட்–ர�ோலி – – யப் ப�ொருட்–களை துல்–லிய – –மாக நீக்–குகி – ற – து. நான�ோ பைபர் மூலக்– கூறு மூலம் நுண்–ணு–யி–ரி–க–ளான பாக்–டீரி – யா மற்–றும் காப்–பர், காட்– மி–யம், பாத–ரச – ம், ஈயம் ஆகி–யவ – ற்– றை–யும் நீக்–கு–கி–றது. இதி–லுள்ள பில்–டரை ஈஸி–யாக சுத்–தம் செய்ய முடி–வத�ோ – டு, பில்–டரை மாற்–றுவ – – தற்–கான நேரத்–தை–யும் ஸ்மார்ட் பாட்–டிலே நமக்கு கூறி–விடு – கி – ற – து. நீரை அடித்து பிடித்து நிரப்–பிவி – ட்– டால் ப�ோதும்! நீரை எப்–ப�ோது சுத்–தப்–படு – த்த விரும்–புகி – றீ – ர்–கள�ோ அப்– ப�ோ து, பாட்– டி – லி ன் கீழ்ப்–
ப–குதி – யி – னைத் திருப்–பின – ாலே ப�ோதும்! கீழே– யுள்ள எல்– இ டி ட்ராக்– க – ரி ல் நீர் தூய்–மை–யின் அள– வைக் காட்–டும். பே ட் – ட – ரி யை ஒ ரு – முறை சார்ஜ் செய்– த ால் 1 வாரத்– தி ற்கு ஹெர்–கு–லி – ஸாய் தாக்–குப்–பி–டிக்–கி–றது. ஒரு–முறை பில்–டரை மாற்–றி– னால் 4 மாதங்–க–ளுக்கு ஜாலி– யாக ஸ்மார்ட் பாட்–டி–ல�ோடு பய–ணிக்–க–லாம். ப்ளூ–டூத் மூலம் ஆண்ட்– ர ாய்டு, ஐப�ோன் என சட்–டென இணைத்து பயன்–படு – த்– த–லாம். 25 செ.மீ நீள–மும், 8 செ.மீ சுற்–ற–ள–வும் 591 மி.லி க�ொள்–ள–ள– வும் க�ொண்ட இந்த ஸ்மார்ட் ப ா ட் – டி ல் க ரு ப் பு , சி வ ப் பு , வெள்ளை, நீல நிறங்– க – ளி ல் கிடைக்–கி–றது. 15 ஆயி–ரத்து 299 ரூபாய் க�ொடுத்–தால் எக�ோம�ோ பாட்–டி–ல�ோடு ஒரு ட்ராக்–க–ரும் கிடைக்–கும். மார்ச் 2017இல் விற்– ப– னை க்கு வரும் பாட்– டி லை முன்–ப–திவு செய்து முந்–தி–னால் த ள் – ளு – ப டி வ ா ய் ப் – பு – க – ளு ம் கைக்கெ ட் – டு ம் தூ ர ம் – த ா ன் . ஸ ்மா ர் ட் – ட ா ய் தண்–ணீர் குடிப்–ப�ோம் வாங்க!
-ச.அன்–ப–ர–சு–
02.12.2016 முத்தாரம் 29
உயி–ராற்–றல் தரும்
க�ோஎன்–சைம் வைட்–ட–மின்
14
உடல் ம�ொழி
ரக–சிய– ங்–கள்
ச.சிவ வல்–லா–ளன்
‘ப
ய�ோ–என – ர்ெ–ஜடி – க்ஸ்’ வேதிய நிகழ்–வு–க–ளுக்கு ஊட்–டச்– சத்–து–களே அடிப்–படை. ஆற்–றல் உரு– வா க்– கு – வ – த ற்– க ான அடிப்– படை எரி– ப�ொ – ரு ட்– க ள் குளு– க�ோஸ், க�ொழுப்– பு – த ான் என்– றா–லும், அவை எரிந்து ஆற்–றல் உரு–வாக, பல–வகை ஊட்–டச்–சத்– து–களு – ம் தேவை. எ.கா: ‘கிரெப்ஸ்–’–
30 முத்தாரம் 02.12.2016
சுழற்சியில் க�ோஎன்– சை ம் A மிக– முக்–கி–ய–மான பங்கு வகிக் –கி–றது. B - உயிர்ச்–சத்–தா–ன– பென்– ட�ோ–தெ–னிக் அமி–லத்–தின் ஒரு மாற்று வடி–வம் பென்–டெ–தின் க�ோஎன்–சைம் A, பென்–டெ–தின்.– மூ–லக்–கூ–றைச் சுற்றி படர்–கி–றது. இது கிரெப்ஸ் சுழற்–சிப்–ப–ணிக்கு அவ– சி – ய ம். மேலும், க�ோ என்–
டாக்–டர்– பு–ரூஸ் ஆம்ஸ்
சைம் A, மூலக்–கூறு – க – ள் ஒன்–றுட – ன் ஒன்று இணை–யப் பயன்–படு – கி – ற – து. இத்–தகைய – மூலக்–கூறு – இ – ண – ைப்பு, டிஎன்ஏ, ஆர்–என்ஏ உரு–வாக்–கச்– செய்– மு – றை க்கு, மிக– வு ம் அவ– சி–ய–மா–கும். நம் உணவு, துணை உணவு வழி, மைட்–ட�ோ–காண்–டி– ரி–யங்–க–ளுக்கு அவ–சிய ஊட்–டச்– சத்–து–களை அதி–க–ளவு உட–லில் சேரச்–செய்–தால்–‘ப – ய – �ோ–என – ர்ெ–ஜ– டிக்ஸ்’ செயல்–தி–றன் கூடும். இ த ன் ப ல ன ா க செ ல் – க–ளுக்கு கூடு–தல் ஆற்–றல் கிடைப்– ப–தால், செல்–களி – ன் செயல்–திற – ன் உயர்ந்து, தின–சரி நாம் செயல்– ப– டு – வ – த ற்கு கூடு– த ல் ஆற்– ற ல் –கி–டைக்–கி–றது. ந�ோய்–கள் உரு–வா– கும் வாய்ப்பு குறை–கி–றது. ஃபிரி– ரே–டிக – ல்–களி – ன்–தாக்–குத – ல்–க–ளால் டிஎன்ஏ சிதை– வ து குறை– கி ன்– றது. உடல் நலத்–துக்–குத் தேவை– யா–ன–ஊட்–டச்–சத்–து–களை உண்– ப–தால் ஏடிபி ஆற்–றல் உரு–வாகு – ம் அள–வும் பய–னும் உயர்–கின்–றன. டிஎன்ஏ.இயல்–பா–கவு – ம் சிறப்–பா–க– வும் செயல்–பட முடி–கி–றது.எ.கா: சில ஊட்–டச்–சத்–து–கள்: –க�ோ–என்– சைம் Q10 (CoenzymeQ10),ஆல்பா லிய�ோ–யிக் அமி–லம் (Alpha-Lipoic Acid), கார்–னிடி – ன் (Carnitine), அசி– டைல் - L -கார்–னி–டின் (Acetyl L - Carnitine), ரிப�ோஸ் (Ribose), கிரி–யாடி – ன் (Creatine), சில விட்–ட– மின் பி சத்–து–கள்.
ஊட்– ட ச்– ச த்– து – க ள் ஒவ்– வ�ொன்– று ம் எப்– ப – டி ப் பய– னா–கின்–றன என்–பதை பார்ப்– ப�ோம். க�ோஎன்–சைம் 10 ப ய � ோ – எ – ன ர் – ஜெ – டி க் ’ செ ய் – மு – றை – க – ளி ல் ஈ டு – ப–டும் எலக்ட்–ரான்–கள் ெசல்– லின் ஒரு பகு– தி – யி – லி – ரு ந்து மறு– ப – கு – தி க்கு ஆற்– ற – லை க் க�ொண்டு சேர்க்– கி ன்– ற ன. எலெக்ட்– ரா ன்– க – ளி ன் இப்– ப–ணிக்கு உத–வுவ – து ‘க�ோஎன்– சை ம் Q 1 0 ’ த ா ன் . இ தை க் கண்– டு – பி – டி த்த விஞ்– ஞ ானி டாக்– ட ர் கார்ல் ஃப�ோல்– க – ரு க் கு 1 9 7 2 ஆ ம் ஆ ண் டு ‘ந�ோபல் பரி–சு’ வழங்–கப்–பட்– டது. நமது உட–லில் இயற்–கை– யா–கவே ‘க�ோஎன்–சைம் Q10’ உரு–வா–கி–றது. இத–யம், மூளை,கல்–லீர – ல், ந�ோய் எதிர்ப்பு இயக்– க ம், கை, கால் தசை– க ள் உள்– ளிட்ட உறுப்–புக – ளி – ல் க�ோQ10’ அதி– க ம் காணப்– ப – ட – கா– ர – ணம் இவற்–றின் தசைச் செல்– கள் பெரு–ம–ளவு ஆற்–ற–லைச் ச ா ர் ந் – து செயல்ப ட க் கூ டி யவை . 1 9 6 0 ம் ஆ ண் டு ஜ ப் – ப ா ன் வி ஞ் – ஞா–னிக – ள், இத–யத்–தசை ந�ோய், இத– ய ச் செய– லி – ழ ப்பு ஆகிய இரு–ந�ோய்–க–ளுக்–கும்,க�ோQ10’
32
முத்தாரம் 02.12.2016
சிறந்த மருந்தாகப் பயன்படுவதைக் கண்டுபிடித்தனை. இந்த இரு–வகை – லு – ம், இத–யத்–தசை – ச் செல்–க– ந�ோய்–களி ளில் ஆற்–றல் ப�ோதா–மை–யால்–தான் இத–யத்–தின் ரத்–தம் பாய்ச்–சும்–தி–றன் குறை–கி–றது. 1980 - 1990களில் அமெ– ரிக்க, ஐர�ோப்–பிய நாடு–க–ளில் சில– ம– ரு த்– து – வ ர்– க ள் இந்– ந� ோய்– க – ளு க்கு ‘க�ோQ10’ மருத்–து–வ– சி–கிச்–சை–யைத் த�ொடங்–கி–னர். அரி–தாக, குறிப்–பிட்ட மர–பு–வழி ந�ோய்–களை குண–மாக்க க�ோQ10 நல்ல மருந்து. மைட்–ட�ோ–காண்ட்–
ரி–யம் தசை ந�ோய், மரபு வழி குறை– பாட்–டால்–உ–ரு–வா–கி–றது. இக்–கு–றை– பாட்–டால் ‘பயோ எனர்–ஜெ–டிக்ஸ்’ செயல்– ப ா– டு – க – ளு ம் தடை– ப – டு – கி ன்– றன.மைட்–ட�ோ–காண்ட்–ரி–யம் தசை– ய�ோடு பிறந்–த–வர்–க–ளின் மைட்டோ காண்ட்–ரிய – ம் டிஎன்–ஏவி – ன்–ஒரு பகுதி சிதைந்–திரு – க்–கும் (அ) அப்–பகு – தி – ய – ே–இ– ருக்– க ாது. அத– ன ால் டிஎன்– ஏ – வி ன் ஆற்–றல் உரு–வாக்–கச் செய்–மு–றைக் கட்– ட – ளை – க ள் தவ– ற ாக நிறை– வா – கா– ம ல்– இ – ரு க்– கு ம். இத்– த – கைய மர– பு– வ ழி ந�ோய்– க – ளு க்கு, ‘க�ோQ10’
மற்– று ம் வேறு சில மைட்– ட�ோ–காண்ட்–ரி–யம் ஊட்–டச்– சத்–து–கள்–சி–றந்த மருந்–தா–கப் பயன்– ப – டு – கி ன்– ற ன. வயது கார–ண–மாக உடல் தளர்–வ– ட ை – வ – த ா ல் – மை ட் – ட� ோ – காண்ட்–ரிய டிஎன்ஏ சிதை– வ–டை–கின்–றன. உல–கில் மிகச்–சி–றந்த விஞ்– ஞ ா – னி – க – ளா ன , பெ ர் க் லி கலி–ப�ோர்–னியா பல்–க–லைக்– க–ழக டாக்–டர்– பு–ரூஸ் ஆம்ஸ், ஆஸ்–திரே – லி – யா – வி – ன் மூலக்–கூறு உயி–ரி–யல் ஆராய்ச்–சி–நிலைய – டாக்–டர்அந்–த�ோணிலின்–னன் – ம் ‘மைட்டோ ஆகிய இரு–வரு க ா ண் ட் – ரி – ய ம் – ‘ – ப – ய � ோ – எ–னர்– ஜெ–டிக்ஸி’– ல் ஏற்–ப–டக்– கூ– டி – ய – கு– றை – ப ா– டு – க – ளு க்கு உடல் முதுமை, டி.என்.ஏ. சி தைவ ே அ டி ப் – ப – ட ை க் – கா–ரண – ங்–கள்’ என்று கூறி–யுள்– ள – ன ர் . பெ ரு ம் – ப ான்மை ஊட்–டச்–சத்–துக – ளை – ப் ப�ோல் ‘க�ோQ10’ உட– லி ல் செய்– யும் பல்– வ ேறு பணி– க – ளி ல் மு க் – கி – ய – ம ா – ன து , ‘ ப ய � ோ – எ–னர்– ஜெ–டிக்ஸ்’ செய்–முறை – – யா– கு ம். செல்– க ள்– ஆ ற்– ற ல் உரு– வா க்– க த் தேவை– யா ன வேதிய மாற்– ற ங்– க ள் நிகழ்– வ–தற்கு ‘க�ோQ10’ அவ–சி–யம்.
(ரக–சி–யம் அறி–வ�ோம்)
02.12.2016 முத்தாரம் 33
34 முத்தாரம் 02.12.2016
வ்–வ�ொரு ஆண்–டும் ரஷ்யா - செர்–பியா - பெலா–ரஸ் ஆகிய நாடுகளின் படை–கள் ஒன்–றி–ணைந்து தீவி–ர–வா–தத் தாக்–கு–தல்–க–ளுக்கு எதி–ராக ஸ்லா–விக் ப்ர–தர்–ஹுட் என்ற கூட்டு ராணு–வப் பயிற்–சியி – ல் ஈடு–பட்டு வரு–கின்–றன – ர். இவ்–வாண்டு செர்–பியா – வி – ன் பெல்–கி–ரே–டில் நடந்த பயிற்–சி–யில், IL-76 விமா–னத்–தி–லி–ருந்து குதித்து பாரா–சூட் விரித்து ராணுவ வீரர்–கள் தீர–மு–டன் கீழி–றங்–கி–ய–ப�ோது, வானில் த�ோன்–றிய வான–வில்–லின் அற்–பு–தக் காட்சி.
ஒ
பயிற்சி!
வான–வில்
35
மலை அருங்–காட்–சி–ய–கம்! அண்–மை–யில் ஜெர்–மனி தலை– ந–கர் பெர்–லினி – ல் உலக கட்–டிட – க்–கலை திரு–விழா நடை–பெற்–றது. அதில் கலா– சா–ரப்–பி–ரி–வில் இடம்–பெற்ற இத்–தாலி நாட்–டின் மெஸ்–னர் மலைத்–த�ொட – ரி – ல் அமைக்–கப்–பட்–டுள்ள அருங்–காட்–சிய – – கத்–தின் படம் இது. இது ஸகா ஹதித் என்ற லண்–டன் கட்–டிட வல்–லு–ந–ரின் கைவண்–ணத்–தில் உரு–வா–ன–தா–கும்.
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Friday. °ƒ°ñ„CI›
டிசம்பர் 1 - 15, 2016
வேலை ரெடி! ñ£î‹ Þ¼º¬ø
எஙந்க? எத்�்ன? யாருக்கு?
நவ்லைவாய்பபு்களுக்கு வழி்காட்டும் ்பகுதி
செல்்லை ்கவிநெென எழுதும் உத்நவ்கத் ச�ா்டர்
வேலை
வேண்டுமா? நிவாஸ் பிரபு எழுதும் உளவியல் ச�ா்டர்
36
உடல்... மனம்... ஈக�ோ!
2
+ வினாத்
ச�ாகுபபு சென்டம் வாங்க சூப்பர் டிபஸ்