Thozhi supp

Page 1

ஆகஸ்ட் 1-15, 2015 இதழுடன் இணைப்பு

கிழங்கு ஸ்பெஷல் 30


கிழங்–குக்கு

தடை ப�ோட வேண்–டாம்!

சா ப்–பிட அடம்–பி–டிக்– கிற எப்–பேர்–பட்ட குழந்–தை– க–ளை–யும் ஏதே–னும் ஒரு கிழங்கு வறு– வ – லை – யு ம் ப�ொரி–ய–லை–யும் வைத்து, சாப்–பிட – ச் செய்து விட–லாம். `தினம் தினம் கிழங்கு கேட்டா என்ன பண்–ற–து?

அத்–தன – ை–யும் உடம்–புக்–குக் கேடு...’ என அதைத் தவிர்க்–கிற அம்–மாக்–களும், `கிழங்கு சாப்–பிட்டா வாயு சேர்ந்–து–டுது...’ என அலுத்–துக் க�ொள்–கிற மற்–றவ – ர்–களும் எல்லா வீடு–களி–லும் இருப்–பார்–கள். பல–ரும் நினைத்–துக் க�ொண்–டி–ருக்–கிற மாதிரி கிழங்கு வகை– ய – ற ாக்– க ள் அப்– ப – டி – ய�ொ ன்– று ம் பிரச்–னை–க–ளைக் க�ொடுப்–ப–தில்லை. இன்–னும் ச�ொல்–லப் ப�ோனால் பல–வ–கை–யான கிழங்–கு–கள் மருத்–து–வக் குணங்–கள் க�ொண்–டவை. உரு– ள ைக்– கி – ழ ங்கு சாப்– பி – டு – வ – த ன் மூலம் செரி–மா–னம் சீரா–கி–றது. குடல் மற்–றும் இரைப்– பைப் பிரச்–னை–கள் சீரா–கின்–றன. சேப்–பங்–கிழ – ங்கு சாப்–பி–டு–கிற குழந்–தை–களுக்கு நினை–வாற்–றல் அதி–க–ரிக்–கு–மாம். கரு–ணைக்–கி–ழங்கு சாப்–பி–டு– கி–ற–வர்–களுக்கு மூல–ந�ோய் நிர்–மூ–ல–மா–கு–மாம். ேசனைக்–கி–ழங்–குக்கு எலும்–பு–க–ளைப் பலப்–ப–டுத்– தும் தன்–மை–யும், ரத்த செல்–களின் வீரி–யத்தை அதி– க – ரி க்– கு ம் குண– மு ம் உண்– ட ாம். ந�ோய் எதிர்ப்பு சக்–தி–யைக் கூட்டி, பல–வீ–ன–மான குழந்– தை–களுக்கு ஊட்ட–ம–ளிக்–கக் கூடி–யது சர்க்–க–ரை– வள்–ளிக்கிழங்கு. இன்–னும் இப்–படி – க் கிழங்–குக – ளின் சிறப்–பு–க–ளைப் பேசிக் க�ொண்டே ப�ோக–லாம். நமக்கு சுல–ப–மா–கக் கிடைக்–கிற அத்–தனை கிழங்– கு – க ளி– லு ம் அறு– சு வை விருந்து செய்து அசத்– தி – யி – ரு க்– கி – ற ார் சமை– ய ல் கலை– ஞ ர் ஹேம–லதா. உங்–கள் வீட்டு கிச்–ச–னில் இனி–மேல் கிழங்–குக்கு தடை ப�ோட வேண்–டாம்!

சமை–யல் கலை–ஞர்

ஹேம–லதா

எழுத்து வடி–வம்:

ஆர்.வைதேகி

படங்–கள்: ஆர்.க�ோபால்


கருணைக்கிழங்கு கதம்ப ப�ொரியல்

என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 150 கிராம், பச்சை வேர்க்கடலை - 2 கைப்பிடி, ப�ொடியாக நறுக்கிய பீன்ஸ் அல்லது அவரைக்காய் - 1 கப், வெங்காயம் 1, தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கடுகு - தேவைக்கு, எண்ணெய் தேவைக்கேற்ப, கறிவேப்பிலை சிறிது. எப்படிச் செய்வது? க ரு ணை க் கி ழ ங் கு , பீ ன் ஸ்

அல்லது அவரைக்காய், வெங்காயம் ஆகியவற்றைப் ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்க்கவும். பிறகு கருணைக்கிழங்கு, பீன்ஸ், வேர்க்கடலை சேர்க்கவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கருணைக்கிழங்கில் சேர்க்கவும். தேவையான தண்ணீர் லேசாக சேர்த்து உப்பு ப�ோட்டு வேக விடவும். இ ற க் கு ம் மு ன் க றி வே ப் பி லை சேர்க்கவும். °ƒ°ñ‹

3


பேபி உருளைக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

என்னென்ன தேவை? வெங்காயம் (பெரியது) - 1, பேபி உருளைக்கிழங்கு - 15, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், உப்பு - ேதவைக்கேற்ப, கடுகு - தாளிக்க தேவையான அளவு, இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - தேவைக்கேற்ப. °ƒ°ñ‹

4

எப்படிச் செய்வது? கடாயில் கடுகு தாளித்து இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும். பின் வெங்காயத்தைப் ப�ோட்டு வதக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அதனுடன் உருளைக்கிழங்கை த�ோல் உரித்துச் சேர்க்கவும். மிளகுத் தூள் தூவி விடவும். பிறகு தயிர் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.


என்னென்ன தேவை? உ ரு ள ை க் கி ழ ங் கு - 2 , மிளகாய் தூள் - தேவைக்கு, உப்பு - தேவைக்கேற்ப, ச�ோள மாவு - 3 டீஸ்பூன், பிரெட் தூள் - தேவைக்கேற்ப, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, ம ஞ்ச ள் தூ ள் - 1 / 4 டீ ஸ் பூ ன் , க�ொத்தமல்லி - சிறிது. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். அதில் மிளகாய் தூள்,

உருளைக்கிழங்கு பேட்டீஸ் உப்பு, மஞ்சள் தூள், க�ொத்தமல்லி சேர்த்துப் பிசையவும். ச�ோள மாவை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து வைத்துக் க�ொள்ளவும். பிசைந்த மாவை ச�ோள மாவில் த�ோய்த்து, பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் ப�ொரித்து எடுக்கவும். பன் அல்லது பி ரெட் டி ன் ந டு வி ல் வை த் து ப் பரிமாறவும்.

°ƒ°ñ‹

5


உருளைக்கிழங்கு பான்கேக்

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 2, ச�ோள மாவு - 2 டீஸ்பூன், முட்டை - 1, மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எ ண்ணெ ய் - ப�ொ ரி ப்ப த ற் கு த் தேவையான அளவு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை நன்கு அலசி °ƒ°ñ‹

6

துருவிக் க�ொள்ளவும். அத்துடன் முட்டை, மிளகுத் தூள், மிளகாய் தூ ள் , உ ப் பு சே ர் த் து ந ன் கு கலக்கவும். அதில் ச�ோள மாவைப் ப�ோட்டுக் கலந்து த�ோசைக்கல்லில் அல்லது எண்ணெயில் ப�ொரித்து எடுத்துப் பரிமாறவும்.


ஸ்டஃப்டு ப�ொட்டெட்டோ

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 4, கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பட்டை - 1, லவங்கம் 2, மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, த�ோல் உரித்து, பாதியாக அல்லது மேலே க�ொஞ்சமாகவ�ோ வெட் டி க் க �ொள்ள வு ம் . பி ற கு உருளைக் கிழங்கின் நடுவில் துளை ப�ோல் த�ோண்டி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு துருவிய கேரட்,

பீன்ஸ் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி இறக்கவும். உருளைக்கிழங்கின் துளைக்குள் இக்கலவையை வைத்து மூடி ஒரு குச்சியால் குத்தி விடவும். மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, பட்டை, லவங்கம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், ச�ோம்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து மிக்ஸியில் அடித்த கலவையை சே ர் த் து க �ொஞ்ச ம் த ண் ணீ ர் விட்டு க�ொதிக்க விடவும். நன்கு கெட்டியானதும் உருளைக்கிழங்கைப் ப�ோட்டு இறக்கவும்.  குச்சி குத்தின உருளைக்கிழங்கை எண்ணெயில் ப�ொரித்து எடுக்கவும். அல்லது த�ோசைக்கல்லில் வேக வைத்து பின் கிரேவியில் சேர்க்கவும். °ƒ°ñ‹

7


மரவள்ளிக்கிழங்கு வடை

என்னென்ன தேவை? மரவள்ளிக்கிழங்கு - 1, கடலைப் பருப்பு - 1 கைப்பிடி, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, ச�ோம்பு, இஞ்சி, பூண்டு - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கு, எண்ணெய் ப�ொரிப்பதற்குத் தேவையான அளவு. எப்படிச் செய்வது? கி ழ ங்கை த�ோல் உ ரி த் து °ƒ°ñ‹

8

அ தை மி க் ஸி யி ல் அ ரை த் து க் க�ொள்ளவும். கடலைப் பருப்பை ஊ ற வை த் து கி ழ ங் கு ம ா வி ல் சேர்க்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் ப�ொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும். அத்துடன் இஞ்சி, ச�ோம்பு, பூண்டை நசுக்கிச் சேர்க்கவும். கடைசியாக மாவில் உப்புச் சேர்த்து வடை ப�ோல் தட்டி எண்ணெயில் ெபாரித்து எடுக்கவும்.


சேனைக்கிழங்கு ச�ோயா புலாவ் என்னென்ன தேவை? சேனைக்கிழங்கு - 1/4 கில�ோ, வெங்காயம் - 2, பூண்டு - 2 பல், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் 2, க�ொத்தமல்லி - 1 கைப்பிடி, புதினா - 1 கைப்பிடி, பாஸ்மதி அரிசி 1 1/2 கப், ச�ோயா சங்க்ஸ் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவைக்கு, கிராம்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1, முந்திரி - 8. எப்படிச் செய்வது? ச�ோ ய ா ச ங்ஸ்ஸை சு டு தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து க�ொள்ளவும். வெங்காயம், பூண்டு,

இஞ்சி, பச்சை மிளகாய், க�ொத்த மல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை தாளிக்கவும். பின் அரைத்த வி ழு தை ப�ோட் டு வ த க்க வு ம் . பிறகு நறுக்கிய சேனைக்கிழங்கு து ண் டு க ள் சே ர் த் து லே ச ா க வதக்கவும். பின் அரிசி கழுவிப் ப�ோட்டு வதக்கவும். ச�ோயாவை சேர்க்கவும். 1க்கு 2 தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். பிறகு முந்திரி வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.

°ƒ°ñ‹

9


கருணைக்கிழங்கு க�ோஃப்தா

என்னென்ன தேவை? மைதா - 1 கப், வெங்காயம் - 2, ச�ோள மாவு - 1/4 கப் + 1 டீஸ்பூன், கருணைக்கிழங்கு - 200 கிராம், மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, க�ொத்தமல்லி - சிறிது, குடை மிளகாய் - 1, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு - 4 பல், ச�ோயா சாஸ் - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கருணைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். அத்துடன் மைதா, ச�ோள °ƒ°ñ‹

10

மாவு, மிளகுத் தூள், பச்சை மிளகாய், க �ொத்த ம ல் லி , உ ப் பு சே ர் த் து உருண்டைகளாக எண்ணெயில் ப�ொ ரி த்தெ டு க்க வு ம் . ம ற்ற ொ ரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றைப் ப�ொடியாக நறுக்கி ப�ோட்டு வதக்கவும். மறுபடியும் 1 டீஸ்பூன் ச�ோள மாவுடன், ச�ோயா சாஸ் கலந்து கரைத்து க�ொள்ளவும். இ தை வ த க் கி ய வெங்கா ய க் கலவையுடன் சேர்க்கவும். லேசாக கெட்டியான பின் இத்துடன் ப�ொரித்த உருண்டைகளைச் சேர்க்கவும்.


என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 3 (மசித்தது), மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, சீரகம் - 1 ஸ்பூன், மக்காச்சோள மாவு - 1 டீஸ்பூன், பிரெட் தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் க�ொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் க�ொள்ளவும். இத்துடன் பச்சை

உருளைக்கிழங்கு லாலிபாப் மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்க்கவும். இந்தக் கலவையை சி று சி று உ ரு ண்டை க ள ா க உ ரு ட் டி க் க �ொள்ள வு ம் . அ தை மக்காச்சோள மாவில் (தண்ணீர் ஊற்றிக் கலக்கியது) த�ோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் ப�ொன்னிறமாக பொரித்து எடுக்கவும். உருண்டைகளை ஒரு குச்சியில் ச�ொருகிப் பரிமாறவும்.

°ƒ°ñ‹

11


பாலக் - மரவள்ளிக்கிழங்கு புர�ோட்டா

என்னென்ன தேவை? மசித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப், பாலக் கீரை - 1 கப், வெங்காயம் - 1, தயிர் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (அரைத்தது) - 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு (ப�ொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன், க�ோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒ ரு க ட ா யி ல் எ ண்ணெ ய் ஊற்றி இஞ்சி, பூண்டு, அரைத்த °ƒ°ñ‹

12

மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம், தயிர் மற்றும் கீரையை சே ர் த் து வ த க்க வு ம் . த ண் ணீ ர் வற்றியவுடன் உப்பு, கிழங்கு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இதை தனியாக வைக்கவும். க�ோதுமை மாவைப் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி, இட்டு அதற்குள் மேலே கூறியவற்றை வைத்து ஸ்டஃப் செய்து பராத்தா ப�ோல் திரட்டி த�ோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.


என்னென்ன தேவை? பனங்கிழங்கு - 2, வெங்காயம் 4, உப்பு - தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - 1/2 கப். எப்படிச் செய்வது? பனங்கிழங்கை வேக வைத்துக் க �ொள்ள வு ம் . வெங்கா ய ம் , மிளகாயை எண்ணெயில் வதக்கிக் க�ொள்ளவும்.

பனங்கிழங்கு துவையல் கி ழ ங்கை த் த வி ர ம ற்ற அனைத்தையும் சேர்த்து அரைத்து, க டை சி யி ல் கி ழ ங்கை த் த�ோல் உரித்து சிறு துண்டுகளாக்கி அந்தக் கலவையுடன் சேர்த்து அரைத்துக் க�ொள்ளவும்.

°ƒ°ñ‹

13


கருணைக்கிழங்கு மிக்ஸர்

என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 1/4 கில�ோ, அவல் - 100 கிராம், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, வேர்க்கடலை 50 கிராம். எப்படிச் செய்வது? கி ழ ங்கை த�ோல் உ ரி த் து , °ƒ°ñ‹

14

சீ வி த ண் ணீ ரி ல் ந ன் கு அ ல சி க்க ொள்ள வு ம் . கி ழ ங் கு , அ வ ல் ம ற் று ம் வேர்க்க ட லை , கறிவேப்பிலையை எண்ணெயில் பெ ா ரி த் து க் க �ொள்ள வு ம் . அக்கலவையில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.


என்னென்ன தேவை? கிழங்கு மசித்தது - 1/4 கில�ோ, புளி - 1 எலுமிச்சை அளவு, கடுகு - 1 டீஸ்பூன் (தாளிப்பதற்கு), வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, எண்ணெய், மஞ்சள் தூள், உப்பு - தேவைக்கேற்ப, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை. எப்படிச் செய்வது? மசித்த கிழங்குடன் புளி, உப்பு, பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள்

பிடிகருணை மசியல் சேர்த்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வெங்கா ய ம் , இ ஞ் சி - பூ ண் டு விழுது, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். கடைசியாக அத்துடன் கிழங்கைச் சேர்த்து வதக்கினால் மசியல் தயார்.

°ƒ°ñ‹

15


பிடிகருணைக் குழம்பு

என்னென்ன தேவை? கிழங்கு - 1/4 கில�ோ (வேக வைத்த து ) , வெங்கா ய ம் - 3 , த க்கா ளி - 2 , உ ப் பு , மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப, புளி - 1 எலுமிச்சை அளவு, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - 1 டீஸ்பூன் (தாளிப்பதற்கு), க�ொத்தமல்லி சிறிது (அலங்கரிக்க), எண்ணெய் - தேவைக்கு. °ƒ°ñ‹

16

எப்படிச் செய்வது? ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் புளியைக் கரைத்து ஊற்றவும். க�ொதி வந்ததும் அதில் வேகவைத்த கி ழ ங்கை சி று து ண் டு க ள ா க் கி ச் சேர்க்கவும். க�ொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.


என்னென்ன தேவை? ச ர்க்கரை வ ள் ளி க் கிழங்கு - 2, பால் - 1 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - தேவைக்கேற்ப, நறுக்கிய முந்திரி, பாதாம் - 2 டீஸ்பூன். நெய் - 1 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? ச ர்க்கரை வ ள் ளி க் கி ழ ங்கை நன்கு துருவிக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாமை ப�ொன்னிறமாக வறுத்து

சர்க்கரைவள்ளிக்கிழங்கு கீர் எடுத்துக்கவும். அதே கடாயில், து ரு வி ய கி ழ ங்கை ச் சே ர் த் து வதக்கவும். அத்துடன் பாலைச் சேர்த்து க�ொதிக்க விடவும். கிழங்கு வெந்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, பாதாமை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

°ƒ°ñ‹

17


மரவள்ளிக்கிழங்கு உருண்டை

என்னென்ன தேவை? மசித்த கிழங்கு - 1 கப், ப�ொடித்த வெல்லம் - 3/4 கப், ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1/4 கப், எண்ணெய் - தேவைக்கேற்ப. °ƒ°ñ‹

18

எப்படிச் செய்வது? கி ழ ங் கி லி ரு ந் து தேங்கா ய் த் துருவல் வரை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ப�ோட்டுப் பிசைந்து சி று சி று உ ரு ண்டை க ள ா க் கி எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும்.


சர்க்கரைவள்ளிக்கிழங்கு பேன்கேக் என்னென்ன தேவை? மைதா - 2 கப், முட்டையின் வெள்ளை கரு - 2, கிழங்கு (வேக வைத்தது) - 2, வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், பால் - 1 கப், எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? கிழங்கை பாலுடன் சேர்த்து

அ ரை த் து க் க �ொள்ள வு ம் . ஒ ரு பாத்திரத்தில் மைதா, முட்டைக்கரு, எசென்ஸ், சர்க்கரை மற்றும் அரைத்த கிழங்கை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு த�ோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பேன்கேக் ப�ோல் சுட்டு எடுக்கவும்.

°ƒ°ñ‹

19


மரவள்ளிக்கிழங்கு க�ொழுக்கட்டை

என்னென்ன தேவை? மரவள்ளிக்கிழங்கு - 2, சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், துருவிய தேங்காய் - 1/4 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? பூரணம்... கிழங்கை வேக வைத்து மசித்துக் க�ொள்ளவும். அத்துடன் சர்க்கரை, °ƒ°ñ‹

20

ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் க�ொள்ளவும். மேல் மாவுக்கு... அரிசி மாவில் சிறிது உப்பு, த ண் ணீ ர் சே ர் த் து ப் பி சை ந் து க �ொள்ள வு ம் . அ தை சி று உ ரு ண்டை க ள ா க் கி ந டு வி ல் பூரணத்தை வைத்து மூடி இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் க�ொழுக்கட்டை தயார்.


என்னென்ன தேவை? சேப்​் ப ங்கிழங்கு - 1/4 கில�ோ, மிளகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 4 பல், வெங்காயம் 2, தக்காளி - 1, கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? கி ழ ங்கை வே க வை த் து , த�ோல் உ ரி த் து , நீ ள வ ா க் கி ல் வெட் டி க்க ொள்ள வு ம் . வெட் டி ய துண்டுகளை எண்ணெயில் ப�ொரித்து எடுத்துக் க�ொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மிளகாய், மிளகு மற்றும் பூண்டை தனியாக அரைத்து அ ந்த க் க லவையை க ட ா யி ல் சேர்க்கவும். கடைசியாக அத்துடன் வறுத்த கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சேப்பங்கிழங்கு சாப்ஸ் அரைப்பதற்கு... அரிசி - 2 கப், துருவிய கிழங்கு - ½ கப், து.பருப்பு - 4 தேக்கரண்டி, க.கருப்பு - 4, உ.பருப்பு - 3, சி.பருப்பு - 3, காய்ந்த மிளகாய் -2, பெருங்காயம் - ½ தேக்கரண்டி. தாளிப்பதற்கு - மிளகு, சீரகம், கடலை பருப்பு, துருவிய தேங்காய். மேலே கூறிய அனைத்து பருப்பு மற்றும் அரிசி, கிழங்கை அடை மாவு பதத்திற்கு அரைத்துக் க�ொள்ளவும். பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும். பின்பு அதில் மிளகு, சீரகம், கடலை பருப்பை தாளித்துக் க�ொட்டி, த�ோசைக்கல்லில் அடையை சுட்டு எடுக்கவும்.

°ƒ°ñ‹

21


பிடிகருணை சூப்

என்னென்ன தேவை? வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகு - ஒரு டீஸ்பூன், க�ொத்தமல்லி - சிறிது, இஞ்சி - சிறிய துண்டு, பூ ண் டு - 2 ப ல் , பி டி க ரு ணை (மசித்தது) - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? க ட ா யி ல் எ ண்ணெ ய் ஊ ற் றி வெங்கா ய த்தை ச் சே ர் த் து வதக்கவும். பிறகு மிளகு சேர்க்கவும். °ƒ°ñ‹

22

இ ஞ் சி , பூ ண் டு சேர்க்க வு ம் . இத்துடன் தக்காளியைப் ப�ோட்டு நன்கு வதங்கியபின் ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றவும். தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி க�ொதிக்க விடவும். க�ொதி வந்தவுடன் மசித்த கிழங்கு, உப்பு சேர்த்து க�ொதிக்க விடவும். பின் க�ொத்தமல்லி நறுக்கிச் சேர்த்துப் பரிமாறவும்.


என்னென்ன தேவை? பிடிகருணை (வேக வைத்து மசித்தது) - 1 கப். பனங்கற்கண்டு - 100 கிராம், சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன், நெய் - தேவைக்கேற்ப, தேன் - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 1. எப்படிச் செய்வது? ஒ ரு ப ா த் தி ர த் தி ல் ப ன ங் க ற்கண்டை ப் ப�ோட் டு 4 க் கு 1 த ண் ணீ ர் எ ன் கி ற அ ள வி ல்

பிடிகருணை லேகியம் ஊற்றி, பாகு பதம் வரும் வரை வைத்திருக்கவும். பின் ஏலக்காய், சுக்குத் தூள் சேர்க்கவும். பிறகு மசித்த கிழங்கைச் சேர்த்து கிளறவும். கி ள று ம் ப�ோ து அ வ ்வப்ப ோ து நெய் ஊற்றிக் க�ொண்டே இருக்க வேண்டும். இறக்கியபின் தேன் சேர்த்துக் கலக்கவும்.

°ƒ°ñ‹

23


சேப்பங்கிழங்கு கறி மசாலா

என்னென்ன தேவை? சேப்பங்கிழங்கு - 1/4 கில�ோ, சின்ன வெங்காயம் - 5, தக்காளி 2, தேங்காய்த் துருவல் - 1/2 கப், பச்சை மிளகாய் - 4, இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? சேப்பங்கிழங்கை வேக வைத்து த�ோலை உரித்து, நீளவாக்கில் வெட்டிக் க�ொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு °ƒ°ñ‹

24

வி ழு து சே ர் த் து மி க் ஸி யி ல் அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து சேப்பங் கிழங்கு துண்டுகளை ப�ொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் வெங்கா ய த்தை ச் சே ர் த் து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து, வதங்கிய பின் அரைத்த மசாலாவை சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். க�ொதித்த பின் சேப்பங்கிழங்கு சேர்க்கவும். க�ொத்தமல்லி தூவி இறக்கிப் பின் பரிமாறவும்.


என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 200 கிராம், புளி - 1 நெல்லிக்காய் அளவு, கடுகு - 1 டீஸ்பூன், வெங்காயம் - பெரியது 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2, க�ொத்தமல்லி, உப்பு - தேவைக்கேற்ப, மைதா - 1 கப், எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? கருணைக்கிழங்கில் க�ொஞ்சம் புளி சேர்த்து வேக வைக்கவும். புளியை எடுத்துவிட்டு கிழங்கின் த�ோலை உ ரி த் து ப் பி சை ந் து க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி,

கருணைக்கிழங்கு ர�ோல் பச்சை மிளகாய் ப�ோட்டு நன்கு சுருள வதக்கவும். வதங்கியதும் மசித்த கிழங்கை சேர்த்து உப்பு, க�ொத்தமல்லி ப�ோட்டு சிவக்க விட்டு இறக்கவும். லேசாக ஆறியதும் அதை நீளவாக்கில் உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். மைதாவை சப்பாத்தி மாவுக்குப் பிசைவது ப�ோல் பிசைந்து, வட்ட வடிவமாகத் திரட்டி அதில் மசாலாவை வைத்து சுற்றி எண்ணெயில் ப�ொரிக்கவும். அதை துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

°ƒ°ñ‹

25


பிடிகருணை த�ோசை

என்னென்ன தேவை? த�ோசை மாவு - 2 கப், பிடிகருணை (வேக வைத்து மசித்தது) - 1/2 கப். °ƒ°ñ‹

26

எப்படிச் செய்வது? வே க வை த் து ம சி த்த பி டி க ரு ணையை த�ோசை ம ா வி ல் சேர்த்து த�ோசை செய்து பரிமாறவும்.


என்னென்ன தேவை? சேனைக்கிழங்கு - 1/4 கில�ோ, பட்டை - 1, லவங்கம் - 2, தக்காளி - 2, (விழுதாக அரைக்கவும்), வெங்காயம் - 2 (பெரியது), காய்ந்த மிளகாய் - 2, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சீரகத் தூள் - 1/2 ஸ்பூன், கறி மசாலா - 1/2 டீஸ்பூன், தனியா - 1/2 டீஸ்பூன், தேங்காய்ப் பால் (கெட்டியானது) - 1/4 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, இஞ்சிபூண்டு விழுது - 1/2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கி ழ ங்கை த�ோல் சீ வி , துண்டுகளாக நறுக்கி, வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில்

சேனைக்கிழங்கு பிரட்டல் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம் ப�ோடவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா, தனியா சேர்க்கவும். நன்கு கிளறி விடவும். பின் தக்காளி விழுது சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த கிழங்கை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு க�ொதிக்க விட்டு பின் இறக்கி பரிமாறவும்.

°ƒ°ñ‹

27


சேனைக்கிழங்கு சுக்கா

என்னென்ன தேவை? சேனைக்கிழங்கு - 1/4 கில�ோ, பூண்டு - 1 (பெரியது - உரித்து, இடித்துக் க�ொள்ளவும்), காய்ந்த மிளகாய் - 4, மிளகாய் தூள் - 1 டீ ஸ் பூ ன் , ம ஞ்ச ள் தூ ள் - 1 / 4 டீஸ்பூன், கறி மசாலா - 1/2 ஸ்பூன், உடைத்த கடலை (ப�ொடித்தது) - 2 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்), ச�ோம்பு 1/4 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு. எப்படிச் செய்வது? சேனைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் ப�ொரித்து °ƒ°ñ‹

28

எடுத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு ச�ோம்பு, பூண்டு ப�ோடவும். அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, சின்ன வெங்காயத்தின் த�ோலை மட்டும் உரித்து அப்படியே சேர்க்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும். கலக்கவும். தக்காளி விழுது சேர்த்து உப்பு ப�ோடவும். லேசாக தண்ணீர்விட்டு க �ொ தி த்த பி ன் கி ழ ங்கை ச் சேர்க்கவும். அதில் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். இறக்கும்போது உடைத்த கடலை தூள் தூவவும்.


என்னென்ன தேவை? பிடிகருணை - 2, புளி - 1 நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 2, தக்காளி - 1, கடுகு - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, க�ொத்தமல்லி, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பிடிகருணையை புளி ப�ோட்டு வேக வைத்து மசித்துக் க�ொள்ளவும். (புளி சேர்த்தால்தான் நாக்கு அரிப்பு எடுக்காது). கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்

பிடிகருணை சட்னி பச்சை மிளகாயை நறுக்கிச் சேர்க்க வு ம் . அ த் து ட ன் பெருங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் வி ட் டு க �ொ தி க்க வை த் து மசித்த கிழங்கைச் சேர்க்கவும். இறக்கும் ப�ோது க�ொத்தமல்லி தூ வ வு ம் . இ தை இ ட் லி , த�ோசையுடன் பரிமாறலாம்.

°ƒ°ñ‹

29


ஸ்டஃப்டு குடை மிளகாய்

என்னென்ன தேவை? கு டை மி ள க ா ய் - 2 , உ ரு ள ை க் கி ழ ங் கு ( ம சி த்த து ) - 3, வெங்காயம் - 3, தக்காளி 2, க�ொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் - தேவைக்கு, எண்ணெய் தேவையான அளவு. எப்படிச் செய்வது? குடை மிளகாயை விதை நீக்கி எ ண்ணெ யி ல் வ த க் கி த னி ய ா க எடுத்து வைத்துக் க�ொள்ளவும். அதே °ƒ°ñ‹

30

கடாயில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அதில் தக்காளி, வேக வைத்து மசித்த உ ரு ள ை க் கி ழ ங்கை சே ர் த் து வதக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இந்தக் கலவையை வதக்கிய குடை மிளகாய்க்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும். கடைசியில் க�ொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.


என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 1/4 கில�ோ, வெங்காயம், தக்காளி - தலா 2, குடை மிளகாய் - 1 (அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் க�ொள்ளவும்). உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், எண்ணெய் - தேவைக்கேற்ப, க�ொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து

கருணைக்கிழங்கு கறி வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி, கிழங்கை சேர்த்து வதக்கவும். பின்பு குடை மிளகாய் சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துக் க �ொ தி க்க வி ட வு ம் . த ண் ணீ ர் வற்றியவுடன் க�ொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

°ƒ°ñ‹

31


Supplement to Kungumam Thozhi August 1-15, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11

சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வா

என்னென்ன தேவை? வேக வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2, சர்க்கரை - 1 கப், ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், பால் - 3/4 கப், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1/4 கப். எப்படிச் செய்வது? ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் வேகவைத்த கிழங்கையும் பாலையும் சேர்த்து வதக்கவும். கடாயில் கிழங்கு சுருண்டு வரும் நேரத்தில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, உலர் திராட்சையால் அலங்கரிக்கவும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.