ஜூலை 16-31, 2015 இதழுடன் இணைப்பு
பிரெட ஸபெஷல
30
பிரமாதமான
பிரெட் உணவுகள்
உ
டல் நலம் சரி–யில்–லா–த–வர்–களுக்–கும், அவ–ச–ர–மா–கப் பசி–யாற நினைப்–ப–வர்–களுக்–கு–மான உணவு பிரெட் என்–பது பர–வ–லான அபிப்–ரா–யம். வெண்–ணெ–யும் ஜாமும் தட–விய பிரெட்.... சாண்ட்–விச்... பிரெட் ர�ோஸ்ட்... இதை–விட்டால் பிரெட்டில் வேறு என்–ன–தான் இருக்–கி– றது என அலுத்–துக் க�ொள்–கி–ற–வர்–களுக்–குத்தான் இந்த பிரெட் விருந்து. ‘‘அல்வா முதல் பிரி–யாணி வரை... புட்டிங் முதல் பீட்சா வரை... இன்–னும் குல்ஃபி, கச்–ச�ோரி, ர�ோல் என எதை வேண்–டும – ானா–லும் பிரெட்டில் செய்து ருசிக்–கல – ாம்’’ என்–கி–றார் சமை–யல் கலை–ஞர் சுப. ‘‘பிரெட்டா... மைதா– வாச்சே...’ என ய�ோசிக்–கிற டயட் பார்ட்டி–கள், இந்த அத்–தனை ரெசி–பி–க– ளை–யும் க�ோதுமை பிரெட்டி–லும், மல்ட்டி கிரெ–யின் பிரெட்டி–லும் முயற்சி செய்–ய–லாம். உடல்–ந–லம் சரி–யில்–லாத ப�ோது மட்டு– மின்றி, உங்–கள் வீட்டு கிச்–சனி – ல் எப்–ப�ோது – ம் இடம்–பெ–றட்டும் பிரெட்! சமை–யல் கலை–ஞர் சுப எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி படங்–கள்: ஆர்.க�ோபால் °ƒ°ñ‹
2
பிரெட் அல்வா என்–னென்ன தேவை? பிரெட் - 16 ஸ்லைஸ், சர்க்–கரை - 1/2 கில�ோ, நெய் - 100 கிராம், எண்–ணெய் - தேவை–யான அளவு, பால் - 1 லிட்டர். எப்–ப–டிச் செய்–வ–து? பி ர ெ ட் ஸ ்லைஸ ை சி று சி று து ண் – டு – க – ள ா க் கி எ ண் – ண ெ – யி ல் ப�ொரித்–துக் க�ொள்–ள–வும். பாலை நன்–றா–கக் க�ொதிக்க வைத்து அதில் சர்க்–கரை சேர்க்–க–வும். அதில் பொரித்த பிரெட் துண்–டு–க–ளைச் சேர்த்து நன்–றாக கிள–ற–வும். பிறகு நெய்யை சிறிது சிறி–தா–கச் சேர்த்து, நெய் கசிந்து வரும் வரை நன்–றா–கக் கிளறி இறக்–க–வும்.
°ƒ°ñ‹
3
ஓட்ஸ் - பிரெட் ஸ்வீட் என்–னென்ன தேவை? மைதா - 1/4 கில�ோ, ஓட்ஸ் - 4 டீஸ்–பூன், அவல் - 4 டீஸ்–பூன், பிரெட் - 8 ஸ்லைஸ், பால் க�ோவா - 150 கிராம், எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? பி ர ெ ட் ஸ ்லைஸ ை சி று சி று து ண் டு க ள ா க எ ண்ணெ யி ல் ப�ொரித்– து க் க�ொள்– ள – வு ம். ப�ொரித்– ததை பால் க�ோவா– வி ல் கலந்து வைக்–க–வும். அவல், ஓட்ஸை மிக்–ஸி–யில் ஒரு அடி அடிக்–க–வும். மைதா–வில் ஓட்ஸ், அவல் சேர்த்து நன்–றாக பிசைந்து க�ொள்–ள–வும். இ ந்த மாவை சி று சி று உ ரு ண் – டை க ள ா க உ ரு ட் டி , திரட்ட–வும். அதில் க�ோவா-பிரெட்டை உள்ளே வைத்து உருண்–டை–க–ளாக உருட்டி எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
°ƒ°ñ‹
4
பிரெட் இன் ஒயிட் சாஸ் என்–னென்ன தேவை? பிரெட் - 3 ஸ்லைஸ், பட்டர் - 1 டீஸ்–பூன், கேரட் - 1 (சிறி–யது), வெங்–கா– யம் - 2 (நறுக்–கி–யது), பால் - 1 கப், மைதா - 1 டீஸ்–பூன், மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன், ஓரி–கான�ோ - 1/2 டீஸ்–பூன், க�ொத்–தம – ல்லி - 2 டீஸ்–பூன் (நறுக்–கிய – து), புதினா - 2 டீஸ்–பூன் (நறுக்–கி–யது), உப்பு, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் 1/2 டீஸ்–பூன் வெண்–ணெய் சேர்த்து உரு–கும் வரை சூடாக்–க–வும். அதில் வெங்–கா–யம் சேர்த்து ப�ொன்–னிற – மா – கு – ம் வரை வதக்–க–வும். வதங்–கி–ய–தும் கேரட் சேர்க்–க–வும். பிறகு மைதா சேர்த்து, 1/2 டீஸ்–பூன் வெண்–ணெய், பால் சேர்த்–துக் கிள–ற–வும். சாஸ் பதம் வரும் வரை சிறிது உப்பு சேர்த்–துக் கிள–றிக் க�ொண்டே இருக்–க–வும். பதம் வந்–த–தும் க�ொத்–த–மல்லி, புதினா, ஓரி–கான�ோ, மிள– கு த் தூள் சேர்த்து நன்கு கலக்கி இறக்– க – வு ம். பிரெட் ஸ்லைஸை சின்–னச் சின்ன சது– ரங்–க–ளாக வெட்டி அதை கடா– யி ல் எண்– ணெய் ஊற்–றிப் ப�ொரித்– தெ – டு க்– க – வு ம். தயார் செய்த சாஸை பிரெட் துண்– டு – க ளின் மேல் ஊற்– ற – வு ம். °ƒ°ñ‹
5
பிரெட் சுய்–யம் என்–னென்ன தேவை? மைதா - 3 கரண்டி, பிரெட் - 10 ஸ்லைஸ், வெல்–லம் - 1/4 கில�ோ, ஏலக்–காய் - 4, தேங்–காய் - 2 துண்டு, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? முத– லி ல் ம ை தாவை த� ோ சை மா வு ப த த் – து க் கு க ரை த் – து க் – க�ொள்–ள–வும். பூர–ணம்... பிரெட்டை கையால் நன்–றாக உதிர்த்–துக்–க�ொள்–ள–வும். அதில் வெல்–லத்தை இடித்–துப் ப�ோட்டு, துரு–விய தேங்–காய், ப�ொடித்த ஏலக்–கா–யைச் சேர்த்–துப் பிசை–ய–வும். அதை சிறு சிறு உருண்–டை–க–ளாக உருட்டிக்–க�ொள்–ள– வும். உருண்–டைக – ளை மாவில் த�ோய்த்து எண்–ணெ–யில் ப�ொரித்–தெடு – க்–கவு – ம்.
°ƒ°ñ‹
6
ட�ொமட்டோ பிரெட் என்–னென்ன தேவை? பிரெட் - 8 ஸ்லைஸ், பிரி–யாணி மசாலா - 2 டீஸ்–பூன், வெங்–கா–யம் - 2 (பெரி–யது, நறுக்–கி–யது), தக்–காளி - 3, எண்–ணெய் - தேவை–யான அளவு. தாளிக்க... ச�ோம்பு, மராட்டி ம�ொக்கு, பிரிஞ்சி இலை, அன்–னா–சிப்பூ, லவங்–கம் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட் ஸ்லைஸை துண்–டுக – ள – ாக்கி, கடா–யில் எண்–ணெய் ஊற்றி பொரித்–துக் – ம். மற்–ற�ொரு கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி தாளிக்க வேண்–டிய க�ொள்–ளவு ப�ொருட்–களை – ச் சேர்த்து தாளிக்–கவு – ம். அதில் வெங்–கா–யம் சேர்த்து வதக்–கவு – ம். தக்– கா–ளியை மிக்–ஸியி – ல் அரைத்து அதை–யும் வெங்–கா–யத்–துட – ன் சேர்த்து வதக்–கவு – ம். பிரி–யாணி மசாலா சேர்க்–க–வும். அதில் சிறிது தண்ணீர் தெளித்து, நன்–றாக சிவந்து எண்–ணெய் கசிந்து வந்–த–வு–டன் பொரித்த பிரெட் துண்–டுக–ளைச் சேர்த்–துக் கிளறி இறக்–க–வும். °ƒ°ñ‹
7
பிரெட் ம�ோத–கம் என்–னென்ன தேவை? ஓட்ஸ் - 1 கப், ரவை - 2 டீஸ்– பூ ன், மைதா - 1/2 கப், அரிசி மாவு - 3 டீஸ்–பூன், தேங்–காய் - 1/2 மூடி (துரு–வி–யது), சர்க்–கரை - துரு–விய தேங்–காய்க்கு சம–மான அளவு, உப்பு - தேவை–யான அளவு, பிரெட் - 6 ஸ்லைஸ் (தூளாக்–கிக் க�ொள்–ள–வும்). எப்–ப–டிச் செய்–வ–து? ஓட்ஸ், ரவை, மைதா, அரிசி மாவு, பிரெட் தூள், தண்–ணீர், உப்–புச் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–துக்கு பிசைந்து வைக்–க–வும். தேங்–காய், சர்க்–க–ரையை சம–மான அளவு சேர்த்து பூர–ண–மாக கலந்து வைக்–க–வும். மாவைத் திரட்டி, அதன் நடு–வில் பூர–ணத்தை வைத்து ம�ோத–கம் ப�ோல் செய்து, ஆவி–யில் 15 நிமி–டங்–கள் வேக வைத்து இறக்–க–வும்.
°ƒ°ñ‹
8
ஸ்வீட் பிரெட் ட�ோஸ்ட் என்–னென்ன தேவை? பிரெட் - 6 ஸ்லைஸ், மைதா - 2 டீஸ்–பூன், பால், சர்க்–கரை, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? பாலில் மைதா–வைக் கலந்து நன்–றாக கட்டி வரா–மல் அடித்–துக் க�ொள்–ள– வும். அதில் தேவை–யான அளவு சர்க்–க–ரையை சேர்த்து நன்–றாக கரை–யும் வரை அடிக்–க–வும். இதில் பிரெட்டை த�ோய்த்து, த�ோசைக்–கல்–லில் ப�ோட்டு சுற்–றி–லும் எண்–ணெய் ஊற்றி, திருப்–பிப் ப�ோட்டு, இரண்டு பக்–க–மும் சிவக்க வைத்து எடுக்–க–வும். °ƒ°ñ‹
9
ஃப்ரூட்டி பிரெட்
என்–னென்ன தேவை? கஸ்–டர்டு பவு–டர் - 3 டீஸ்–பூன், பால் - 500 மி.லி., நறுக்–கிய பழங்–கள் - 1 கப் (ஆப்–பிள், ஆரஞ்சு, பப்–பாளி, அன்–னா–சிப் பழம், கிவி, வாழைப்–ப–ழம், மாம்–ப–ழம்), சர்க்–கரை - தேவை–யான அளவு, பால் - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? பாலை 300 மி.லி.யாக ஆகும் வரை நன்–றா–கக் காய்ச்–ச–வும். காய்ச்–சிய பாலை ஆற–விட – –வும். ஒரு பாத்–திர– த்–தில் கஸ்–டர்டு பவு–டர், சிறிது பால் சேர்த்து கரைத்துக் க�ொள்–ள–வும். இதனை ஆறின பாலில் சேர்க்–க–வும். கஸ்டர்டு பவுடர் சேர்த்த பாலை மிதமான தீயில் 4 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து ஆறவிடவும். ஆறியதும் பழக் கலவை சேர்த்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
10
பிரெட் பிரி–யாணி
என்–னென்ன தேவை? பிரெட் - 6 ஸ்லைஸ், பிரிஞ்சி இலை - 1, பட்டை - சிறிய துண்டு, லவங்–கம் - 4, ஏலக்–காய் - 1, பாஸ்–மதி அரிசி - 1 ஆழாக்கு, வெங்–கா–யம் - 2, பச்சை மிள–காய் - 1, தக்–காளி - 2, இஞ்சி-பூண்டு விழுது - சிறிது, மிள–காய் தூள் 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், புதினா, க�ொத்–த–மல்லி - சிறி–த–ளவு, எண்–ணெய், நெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? குக்–கரி – ல் சிறிது எண்–ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்–காய், பிரிஞ்சி இலை, லவங்–கம் ப�ோட்டு வதக்–க–வும். பிறகு வெங்–கா–யம், தக்–காளி, பச்சை மிள–காய், இஞ்சி-பூண்டு விழு–தைச் சேர்த்து வதக்–கவு – ம். மிளகாய் தூள், தனியா தூள், புதினா சேர்க்கவும். பின்–னர் பாஸ்–மதி அரிசி சேர்த்து, தேவை–யான தண்–ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்–க–வும். வெந்–த–தும் இறக்கி வைத்து ப�ொரித்த பிரெட் துண்–டு–களை சேர்த்–துக் கிளறி, க�ொத்தமல்லி தூவி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
11
பிரெட் பனீர் பணி–யா–ரம்
என்–னென்ன தேவை? பிரெட் - 4 ஸ்லைஸ், பனீர் - 4 துண்டு, வெங்– க ா– ய ம் - 1, பச்சை மிள–காய் - 2, தேங்–காய் - 3 துண்டு, கறி–வேப்–பிலை - சிறிது, அரிசி மாவு - 1 கப், எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட், பனீ–ரைச் சேர்த்து பிசைந்து க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு, வெங்–கா–யம், பச்சை மிள–காய், கறி–வேப்–பிலை சேர்த்து வதக்கி அதை பிரெட்-பனீர் கல–வையு – –டன் சேர்க்–கவு – ம். அத்–து–டன் ப�ொடி–யாக நறுக்–கிய தேங்– காய் சேர்க்–க–வும். இவை அனைத்–தை–யும் அரிசி மாவு–டன் சேர்த்து மாவா–கக் கரைக்–க–வும். குழிப்–ப–ணி–யா–ரக் கல்–லில் எண்–ணெய் தடவி மாவை ஊற்றி சிவக்க வைத்து எடுக்–க–வும்.
°ƒ°ñ‹
12
பிரெட் பக்–க�ோடா என்–னென்ன தேவை? கடலை மாவு - 1/2 கப், உப்பு, எண்–ணெய் - தேவை–யான அளவு, மஞ்–சள் தூள், மிள–காய் தூள்- தேவைக்–கேற்ப, தனியா தூள் - 1/2 டீஸ்பூன், மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - தேவைக்–கேற்ப, சாட் மசாலா - 1/2 டீஸ்–பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்–பூன், வதக்–கிய வெங்–கா–யம் - சிறிது, பிரெட் - 4 ஸ்லைஸ். எப்–ப–டிச் செய்–வ–து? பிெரட்டை தூளாக்கி, அதில் மசித்த உரு–ளைக்–கி–ழங்கு, வதக்–கிய வெங்– கா–யம், சாட் மசாலா, கரம் மசாலா, மஞ்–சள் தூள், உப்பு, மிள–காய் தூள் சேர்த்–துக் கலந்து வைக்–க–வும். ஒரு தனிப் பாத்–திர– த்–தில் கடலை மாவு, உப்பு, தனியா தூள், தேவை–யான தண்–ணீர் ஊற்–றிக் கலக்–கவு – ம். இந்த மாவில் பிரெட் கல–வை–யைக் கலந்து எண்–ணெ–யில் உதிர்த்து ப�ோட்டு வறுத்து எடுக்–க–வும்.
°ƒ°ñ‹
13
பிரெட் ஷாஹி துக்ரா என்–னென்ன தேவை? பால் - 3 கப், பிரெட் - 5 ஸ்லைஸ், குங்–கு–மப்பூ - 4 துகள், நெய் - தேவை– யான அளவு, நட்ஸ் - தேவைக்கு, சர்க்–கரை பாகுக்கு - (1/4 கப் சர்க்–கரை, 1/2 கப் தண்–ணீர்). எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட் ஓரங்– க ளை வெட்டி முக்– க� ோ– ண – மா க்– க – வு ம். அதை நெய்– யி ல் ப�ொன்–னி–ற–மாக வறுக்–க–வும். சிறிது பாலில் குங்–கு–மப்–பூவை ப�ோட்டு ஊற வைத்து, அதை காய்ச்–சிய பாலில் சேர்க்–க–வும். அத்–து–டன் தேவை–யான நட்ஸ் – ம். க�ொதித்–தது – ம் ஃப்ரிட்–ஜில் வைக்–கவு – ம். பாகு செய்–வ– ப�ோட்டு க�ொதிக்–க– வி–டவு – –யில் 1/2 கப் தண்–ணீர் ஊற்–றிக் க�ொதிக்க விட–வும். தற்கு 1/4 கப் சர்க்–கரை வறுத்த பிரெட் துண்–டு–களை பாகில் த�ோய்த்து எடுத்து தட்டில் வைக்–க–வும். குளிர வைத்த பாலை அதன் மீது ஊற்–றிப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
14
பிரெட் கேர–மல் புட்டிங்
என்–னென்ன தேவை? பிரெட் - 8 ஸ்லைஸ், சர்க்–கரை - 6 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 1 1/2 டீஸ்–பூன், பால் - 1 1/2 கப், சர்க்–கரை (கேர–ம–லுக்கு) - 5 டீஸ்–பூன், வெண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? ஒரு பாத்–தி–ரத்–தில் பிரெட்டை தூளாக்–கிப் ப�ோட்டு, அதில் பாலை ஊற்றி, சர்க்–கரை, எசென்ஸ் சேர்த்–துக் கல–வைய – ாக்–கித் தனி–யாக வைக்–கவு – ம். கடா–யில் கேர–மல் செய்–வ–தற்–கான சர்க்–க–ரை–யைப் ப�ோட்டு மித–மான சூட்டில் வறுத்– துக்–க�ொண்டே இருக்–க–வும். சிறிது நேரத்–தில் அது உருகி கேர–ம–லா–கி–வி–டும். ஒரு பாத்–திர– த்–தில் வெண்–ணெய் தடவி அதில் பிரெட் கல–வை–யைக் க�ொட்டி, அதன் மேல் கேர–மலை ஊற்–ற–வும். இதை அலு–மி–னிய ஃபாயில் பேப்–ப–ரால் மூடி அதன் மீது சிறு சிறு ஓட்டை–க–ளைப் ப�ோட–வும். குக்–க–ரில் தண்–ணீ–ரில் ஊற்றி, பிரெட் வைத்–தி–ருக்–கும் பாத்–திரத்தை – வைத்து 15-20 நிமி–டங்–கள் மூடி வைக்–க–வும். வெயிட் ப�ோடக் கூடாது. பிறகு எடுத்து கட் செய்து பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
15
பிரெட் பீட்சா என்–னென்ன தேவை? துரு–விய கேரட் - சிறிது, குடை மிள–காய் - 1, நெய் - 1 டீஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா–யம் - 1, துரு–விய சீஸ் - தேவைக்–கேற்ப, பிரெட் - 2 ஸ்லைஸ், பீட்சா சாஸ் - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் நெய் ஊற்றி வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். அத்–து–டன் கேரட், குடை மிள–காய் சேர்த்து வதக்–கவு – ம். பிரெட் ஸ்லைஸை வட்ட வடி–வமா – க வெட்டி, அதில் 1 டீஸ்–பூன் பீட்சா சாஸை பர–வ–லாக ஊற்–ற–வும். அதன்–மீது வதக்–கிய காய்–க–றி–களை – ப் ப�ோட்டு, சீஸ் தூவ–வும். இதை மைக்–ர�ோ–வேவ் அவ–னில் 1-2 நிமி–டம் வைத்து, சீஸ் உரு–கி–ய–வு–டன் எடுக்–க–வும். பிரெட் பீட்சா ரெடி.
°ƒ°ñ‹
16
பிெரட் க்ராப்
என்–னென்ன தேவை? பிரெட் - 4 ஸ்லைஸ், மசித்த உரு–ளைக்–கி–ழங்கு - 1, பச்சைப் பட்டாணி - 1/3 கப், துரு–விய கேரட் - 1/3 கப், துரு–விய க�ோஸ் - 1/3 கப், மைதா - 3 டீஸ்–பூன், ரவை - 1 டீஸ்–பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - தேவைக்–கேற்ப, சாட் மசாலா - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்–கேற்ப, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1/3 கப், விதை இல்–லாத பச்சை மிள–காய் - 3, இஞ்சி - சிறிய துண்டு. எப்–ப–டிச் செய்–வ–து? கடா–யில் எண்–ணெய் ஊற்றி வெங்–கா–யம், பச்சை மிள–காய் சேர்த்து வதக்–க–வும். அத்–துட – ன் கேரட், க�ோஸ், இஞ்சி, பட்டாணி சேர்த்து வதக்–க–வும். அதில் கரம் மசாலா, சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்க்–க–வும். பிெரட்டை தூளாக்கி அத்–து–டன் மைதா, ரவையை சேர்த்து உருளைக்கிழங்கு, உப்பு – ம். அதை நீள–மாக திரட்டி அதன் நடு–வில் இந்–தக் சேர்த்து மாவு ப�ோல் பிசை–யவு கல–வையை வைத்து ஜடை பின்–னல் ப�ோல் மடிக்–க–வும். இதை எண்–ணெ–யில் – –கப் ப�ொரித்து எடுக்–க–வும். ப�ொன்–னி–றமா °ƒ°ñ‹
17
பிரெட் சீஸ் பைட் என்–னென்ன தேவை? மசித்த உரு–ளைக்–கிழ – ங்கு - 1, பச்சைப் பட்டாணி - 1/4 கப், துரு–விய கேரட், குடை மிள–காய் - தேவைக்–கேற்ப, பிரெட் - 4 ஸ்லைஸ், ரவை - 2 டீஸ்–பூன், மைதா - 4 டீஸ்–பூன், சீஸ் - தேவைக்–கேற்ப, பீட்சா சாஸ் - தேவைக்–கேற்ப, உப்பு, எண்–ணெய் - தேவைக்–கேற்ப, மிள–குத் தூள் - 1/4 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட்டை தூளாக்கி அத்–து–டன் மைதா, ரவை, உப்பு, தேவை–யான தண்–ணீர் சேர்த்து மாவு ப�ோல் பிசைந்து சிறு வட்டங்–க–ளா–கத் திரட்ட–வும். அதில் பீட்சா சாஸ் தட–வ–வும். மசித்த உரு–ளைக்–கி–ழங்கு, பட்டாணி, கேரட், குடை மிள–காய், உப்பு, மிள–குத் தூள் சேர்த்து கலவை ஆக்–க–வும். இந்–தக் கல–வையை பீட்சா சாஸ் வட்டங்–களின் மீது வைத்து எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். அதன் மீது சீஸ் தூவி மைக்–ர�ோ–வேவ் அவ–னில் 1-2 நிமி–டங்–கள் வைத்து சீஸ் உரு–கிய பின் எடுக்–க–வும்.
°ƒ°ñ‹
18
பிரெட் வாழைப்–பழ புட்டிங் என்–னென்ன தேவை? பிரெட் (தூள் ஆக்–கிய – து) - 4 கப், மஞ்–சள் வாழைப்–பழ – ம் - 2, வெண்–ணெய் - தேவைக்–கேற்ப, பால் - 1 கப், ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப், பட்டை தூள் - 1/2 டீஸ்–பூன், காய்ந்த திராட்சை - 1 டீஸ்–பூன், வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1 கப். எப்–ப–டிச் செய்–வ–து? மைக்–ர�ோ–வேவ் அவ–னில் 350 டிகிரி சூட்டில், பாத்–திர– த்–தில் வெண்–ணெய் தடவி அதன் உள்ளே வைக்–க–வும். பாத்–தி–ரத்–தில் பால் ஊற்றி, க்ரீம் சேர்த்து மித–மான சூட்டில் க�ொதி வரும் வரை வைக்–க–வும். பின்பு ஆற விட–வும். பெரிய பாத்–தி–ரத்–தில் பிரெட் தூளைப் ப�ோட்டு, தயா–ரித்து வைத்–தி–ருக்–கும் பாலை ஊற்றி 15 நிமி–டங்–கள் ஊற விட–வும். சர்க்–கரை, பட்டை தூள், வெனிலா எசென்ஸ், மசித்த வாழைப்–பழ – ம் எல்–லாவ – ற்–றையு – ம் ஒன்–றா–கக் கல–வைய – ாக்கி ஊற வைத்த பாலில் சேர்க்–க–வும். இந்–தக் கல–வையை அவ–னில் உள்ள பாத்– தி – ர த்– தி ல் ஊற்– ற – வு ம். காய்ந்த திராட்சை சேர்க்– க – வு ம். ஒரு பெரிய பாத்– தி – ர த்– தி ல் பாதி அளவு தண்– ணீ ர் ஊற்றி அதில் கலவை உள்ள பாத்–திரத்தை – இறக்கி வைத்து, அவ–னில் 1 மணி நேரம் வைத்–தி–ருக்–க–வும். பிறகு 15 நிமி–டங்–கள் குளிர வைத்–துப் பின்பு பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
19
ரைஸ் - பிரெட் பர்–கர் என்–னென்ன தேவை? வடித்த சாதம் - 1 கப், கேரட் (துரு–வி–யது) - 1/2 கப், முள்–ளங்கி (துரு–வி–யது) - 1/2 கப், உப்பு - தேவைக்–கேற்ப, மிள–குத் தூள் - தேவைக்– கேற்ப, சாட் மசாலா - 1/2 டீஸ்–பூன், பிரெட் - 6 ஸ்லைஸ், சாக்–லெட் சாஸ் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? வடித்த சாதத்–தில் துரு–விய கேரட், முள்–ளங்கி, உப்பு, மிள–குத் தூள், சாட் மசாலா அனைத்–தையும் கலந்து வட்ட வடி–வ–மா–கத் தட்ட–வும். அதை த�ோசைக்–கல்–லில் ப�ோட்டு, இரு–பு–ற–மும் சிவக்க விட்டு எடுக்–க–வும். பிரெட்டை வட்ட வடி–வில் வெட்டி எடுக்–க–வும். வறுத்து எடுத்த பேட்டரை பிரெட்டின் நடு– வில் வைத்து மற்–ற�ொரு பிரெட்டை அதன் மேல் வைக்–க–வும். சாக்–லெட் சாஸ் ஊற்றி அலங்–க–ரித்து, பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
20
பிரெட் ப�ோளி என்–னென்ன தேவை? பிரெட் - 6 ஸ்லைஸ், பச்–ச–ரிசி - 1 கப் (சிறிய கப்), தேங்–காய் - 4 பல், ஏலக்–காய் - 2, சர்க்–கரை - 1 கப், வெண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? பச்–சரி – சி – யை ஊற வைக்–கவு – ம். ஊறிய பின் மிக்–ஸியி – ல் தேங்–காய், ஏலக்–காய், அரிசி சேர்த்து நன்கு நைசாக அரைக்–க–வும். கடா–யில் அரைத்த விழுதை ஊற்–ற–வும். சிறிது தண்–ணீர் சேர்த்து, விழுது நன்கு சுருண்டு வரும்–ப�ோது சர்க்–கரை சேர்க்–க–வும். இறக்கி ஆற–வி–ட–வும். பிரெட்டை சப்–பாத்–திக்–கல்–லில் ப�ோட்டு திரட்ட–வும். பிறகு அதன்–மேல் ஆற வைத்த கல–வையை முழு–வ– தும் தடவி விட–வும். பின் அதன்–மேல் இன்–ன�ொரு திரட்டிய பிெரட் வைத்து நன்–றா–கத் தேய்க்–க–வும். வட்ட வடிவ மூடியை வைத்து அழுத்–தி–னால், வட்ட வடி–வில் கிடைக்–கும். அதை த�ோசைக்–கல்–லில் இரு–புற – மு – ம் வெண்–ணெய் தடவி, சிவக்க வைத்து இறக்–க–வும். °ƒ°ñ‹
21
பிரெட் கச்–ச�ோரி என்–னென்ன தேவை? பிரெட் - 4 ஸ்லைஸ், ரவை - 2 டேபிள்ஸ்–பூன், மைதா - 4 டேபிள்ஸ்–பூன், பேக்–கிங் பவு–டர் - 1/4 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, உரு–ளைக்– கி–ழங்கு (மசித்–தது) - 3, பனீர் - 3 துண்–டு–கள், பச்சை மிள–காய் - 1, இஞ்சி விழுது - சிறிது, சாட் மசாலா - 1/2 டீஸ்–பூன், சீர–கத் தூள் - 1/2 டீஸ்–பூன், லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி - சிறி–த–ளவு, வெங்–கா–யம் - 2. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட்டை உதிர்த்–துக் க�ொள்–ளவு – ம். உதிர்த்த பிரெட்டு–டன் ரவை, மைதா, பேக்–கிங் ச�ோடா, உப்பு ஆகிய அனைத்–தை–யும் சேர்த்து சப்–பாத்தி மாவு பதத்–துக்–குப் பிசைந்து க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் எண்–ணெய் ஊற்றி அதில் நறுக்–கிய வெங்–கா–யம், இஞ்சி விழுது, பச்சை மிள–காய், சாட் மசாலா, உரு– ளைக்–கி–ழங்கு, சீர–கத் தூள், துரு–விய பனீர் அனைத்–தை–யும் ப�ோட்டு வதக்– கிக்–க�ொள்–ள–வும். அடுப்பை அணைத்–து–விட்டு எலு–மிச்–சைச்–சாறை ஊற்–ற–வும். மாவை சிறு சிறு சப்–பாத்தி ப�ோல் இட்டு, அதில் செய்து வைத்–தி–ருக்–கும் மசா–லாவை வைத்து மூடி எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுக்–க–வும். க�ொத்தமல்லி தூவவும். சுவை–யான பிரெட் கச்–ச�ோரி தயார்.
°ƒ°ñ‹
22
பிரெட் - க�ோக்–க–னட் ஸ்வீட் பால்ஸ் என்–னென்ன தேவை? சர்க்–கரை - 1 கப், பிரெட் - 4, தேங்–காய் - 1/2 மூடி (துரு–விக் க�ொள்–ள–வும்), பால், எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட், சர்க்–கரை, தேங்–காய்த் துரு–வல் இவை அனைத்–தை–யும் ஒரு பாத்– தி – ர த்– தி ல் ப�ோட்டு அதில் சிறிது சிறி– தா க பாலை ஊற்றி பிசைந்து க�ொள்–ள–வும். அதை சிறு சிறு உருண்–டை–க–ளாக உருட்டி சூடான எண்–ணெ– யில் உருண்–டை–களை ப�ொன்–னி–ற–மாக வரும் வரை சிறு தீயில் வைத்து ப�ொரித்–தெ–டுக்–க–வும். சுவை–யான ஸ்வீட் பிரெட் தேங்–காய் உருண்டை ரெடி.
°ƒ°ñ‹
23
பிரெட் குல்ஃபி என்–னென்ன தேவை? பிரெட் - தேவைக்–கேற்ப, பால் - 1/2 கப், குங்–கும – ப்பூ - சிறிது, பாதாம் மில்க் பவு–டர் - 2 டீஸ்–பூன், கன்–டன்ஸ்டு மில்க் - 1/2 டின், ச�ோள மாவு - 1 டீஸ்–பூன், முந்–திரி, பிஸ்தா, பாதாம் - தேவைக்–கேற்ப. எப்–ப–டிச் செய்–வ–து? பிஸ்தா, பாதாமை ஊற வைத்து த�ோல் உரித்–துக் க�ொள்–ளவு – ம். அவற்றை சிறு துண்–டு–க–ளாக நறுக்–க–வும். முந்–தி–ரி–யை–யும் சிறு துண்–டு–க–ளாக நறுக்–கிக் க�ொள்–ள–வும். பிரெட்டின் ஓரத்தை வெட்டி–விட்டு மிக்–ஸி–யில் ப�ோட்டு தூளாக்–க– வும். கடா–யில் காய்ச்–சிய பாலை ஊற்றி, அதில் கன்–டன்ஸ்டு மில்க் பிரெட் தூள் கலந்து க�ொதிக்க விட–வும். சிறிது பாலில் ஊற வைத்த குங்–கு–மப்–பூவை அத்–து–டன் சேர்க்–க–வும். ச�ோள மாவு, பாதாம் மில்க் பவு–டரை க�ொதிக்–கும் பாலில் கலக்–க–வும். அதில் நறுக்–கிய பிஸ்தா, பாதாம், முந்–தி–ரியை சேர்த்து இறக்கி விட–வும். கலவை ஆறிய பின் குல்ஃபி ம�ோல்–டில் ஊற்றி, ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும்.
°ƒ°ñ‹
24
சேமியா - கேரட் - பிரெட் ர�ோல் என்–னென்ன தேவை? சேமியா - 1 கப், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், தனியா தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், மிள–குத் தூள் - 1/2 டீஸ்–பூன், பிரெட் - 4 ஸ்லைஸ், மைதா - 1 கப், ரவை - 1/2 டீஸ்–பூன், கேரட் துருவல் - 1/2 கப், எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட்டை தூளாக்–கிக் க�ொள்–ள–வும். சேமி–யாவை தண்–ணீ–ரில் ப�ோட்டு, அதை 3 நிமி–டங்–கள் க�ொதிக்க விட–வும். வெந்–த–வுட – ன் சேமி–யாவை வடி–கட்டி, எண்–ணெய் ஊற்றி உதிர்த்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி, கேரட்டை வதக்கி, சேமி–யாவை ப�ோட்டு அதில் மிள–காய் தூள், மஞ்– சள் தூள், தனியா தூள், மிள–குத் தூள் சேர்த்து, பிரெட்டை–யும் சேர்க்–க–வும். பின் அதை ஆற வைக்–க–வும். மைதா–வை–யும் ரவை–யை–யும் கலந்து, அதில் தண்–ணீர் ஊற்றி மாவு ப�ோல் பிசைந்து க�ொள்–ள–வும். அதைத் திரட்டி நடு– வில் சேமியா கல–வையை வைத்து மூடி ர�ோல் மாதிரி செய்து க�ொள்–ள–வும். அவற்றை எண்–ணெ–யில் ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்து எடுக்–க–வும். சுவை–யான சேமியா கேரட் பிரெட்ரோல் தயார். °ƒ°ñ‹
25
பிரெட் - அவல் சப்–பாத்தி என்–னென்ன தேவை? அவல் - 1 கப், பிரெட் - 6 ஸ்லைஸ், ரவை - 1 டீஸ்–பூன், மைதா - தேவை– யான அளவு, கேரட் - 1 (துரு–விய – து), உப்பு, எண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? அவலை மிக்–ஸி–யில் அரைத்–துக் க�ொள்–ள–வும். பிரெட்டை தூளாக்கி, அத்–துட – ன் ரவை, மைதா சேர்த்–துக் கலக்–கவு – ம். அந்–தக் கல–வையு – ட – ன் அரைத்த அவ–லைச் சேர்க்–க–வும். இதில் துரு–விய கேரட், உப்–புச் சேர்த்து மாவு ப�ோல் பிசைந்து க�ொள்–ள–வும். இதை நன்கு திரட்டி தவா–வில் ப�ோட்டு சிறி–த–ளவு எண்–ணெய் ஊற்றி சுட்டு எடுக்–க–வும். பிரெட் அவல் சப்–பாத்தி தயார்.
°ƒ°ñ‹
26
பிரெட் க்யூப் என்–னென்ன தேவை? புளி - சிறி–த–ளவு, கா.மிள–காய் - 4, பெருங்–கா–யம் - 1 துண்டு, தக்–காளி 6, வெந்–த–யத் தூள் - 1/4 டீஸ்–பூன், பிரெட் - 6 ஸ்லைஸ், ரவை - 2 டீஸ்–பூன், மைதா - தேவைக்–கேற்ப, உப்பு, நல்–லெண்–ணெய் - தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வ–து? புளி, காய்ந்த மிள–காய், பெருங்–கா–யம், தேவை–யான உப்பு சேர்த்து மிக்–ஸி–யில் நன்கு அரைக்–க–வும். தக்–கா–ளியை க�ொதிக்–கும் நீரில் சேர்த்து அதன் த�ோல் உரித்து இதை–யும் புளி–யு–டன் சேர்த்து அரைக்–க–வும். இந்த விழுதை ஒரு கடா–யில் சேர்த்து நன்கு கலக்–க–வும். இது நன்கு சுருண்டு வர வேண்–டும். இதில் நல்–லெண்ணை சேர்க்–க–வும். அத்–து–டன் வெந்–த–யத் தூள் சேர்க்–கவு – ம். பிறகு பிரெட், மைதா, ரவை, தேவை–யான அளவு உப்பு சேர்த்–துக் கலக்–க–வும். அதில் நீர் சேர்த்து மாவு ப�ோல் பிசைந்து, நன்கு திரட்டி அதில் தக்–காளி கல–வையை வைத்து மடித்து எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். பிரெட் க்யூப் ரெடி.
°ƒ°ñ‹
27
பிரெட் சர்க்–கரைப் ப�ொங்–கல் என்–னென்ன தேவை? வெல்–லம் - 100 கிராம், ஏலக்–காய் தூள் - 2 டீஸ்–பூன், பிரெட் - 6 ஸ்லைஸ், முந்–திரி - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், சிறு பருப்பு - 1 கப், நெய் - 3 டீஸ்–பூன், எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? சிறு– ப–ருப்பை மசிய வேக வைத்–துக் க�ொள்–ள–வும். (குக்கரில் 2 விசில் வரை வேக வைக்–க–வும்). பிரெட்டை சிறு துண்–டு–க–ளாக நறுக்கி எண்–ணெ–யில் – ம். ப�ொரித்த பிரெட் துண்–டுக – ளை சிறு பருப்–பில் சேர்க்–கவு – ம். ப�ொரித்து எடுக்–கவு ஒரு பாத்–தி–ரத்–தில் வெல்–லத்–தைப் ப�ோட்டு பாகாக்–கிக் க�ொள்–ள–வும். இதில் ஏலக்–காய் தூளைச் சேர்க்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் நெய் ஊற்றி அதில் முந்–திரி, உலர்ந்த திராட்–சையை ப�ொரிக்–க–வும். இப்–ப�ோது சிறு பருப்ைப வெல்–லப்–பாகு இருக்–கும் கடா–யில் ஊற்–ற–வும். அத்–து–டன் முந்–திரி, திராட்சை எல்–லா–வற்–றை–யும் சேர்த்–துக் கிள–ற–வும். பிரெட் சர்க்–கரைப் ப�ொங்–கல் ரெடி.
°ƒ°ñ‹
28
பிரெட் இன் மஷ்–ரூம் சாஸ்
என்–னென்ன தேவை? வெங்–கா–யம் - 2, இஞ்சி-பூண்டு விழுது - தேவைக்கு, மஷ்–ரூம் - 6, தக்–காளி சாஸ் - 3 டீஸ்–பூன், ச�ோயா சாஸ் - 2 டீஸ்–பூன், Tobasco Sauce - 1 டீஸ்–பூன், Oyster Sauce - 1 டீஸ்–பூன், மிள–காய் விதை தூள் - 1 டீஸ்–பூன், ஆரி–கன�ோ பவு–டர் - 1/2 டீஸ்–பூன், ச�ோள மாவு - 1 டீஸ்–பூன், பிரெட் - 5 ஸ்லைஸ், துரு–விய கேரட், குடை மிள–காய், க�ோஸ் - தேவைக்கு, ைமதா, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பிரெட் உருண்டை... பிரெட்டை தூளாக்– கி க் க�ொள்– ள – வு ம். அத்– து – ட ன் துரு– வி ய கேரட், குடை மிள–காய், க�ோஸ், உப்பு சேர்த்து மைதா–வு–டன் பிசைந்து சிறு சிறு உருண்–டை–க–ளாக்கி எண்–ணெ–யில் ப�ொரித்து எடுக்–க–வும். சாஸ்... கடா–யில் எண்–ணெய் ஊற்றி, இஞ்சி-பூண்டு விழு–தைப் ப�ோட்டு வதக்–கவு – ம். வதங்–கி–ய–தும் வெங்–கா–யம் சேர்த்து வதக்–க–வும். வெங்–கா–யம் சிவந்து வரும் ப�ோது மஷ்–ரூம் சேர்த்து வேக வைத்து இறக்–கவு – ம். மற்–ற�ொரு கடா–யில் எல்லா சாஸ் வகை–களை–யும் சேர்த்து, மிள–காய் விதை தூள், ஆரி–கன�ோ பவு–டரை – யு – ம் சேர்க்–க–வும். ச�ோள மாவில் சிறிது தண்–ணீர் ஊற்றி கரைத்–துச் சேர்க்–க–வும். – ட – ன் இறக்–கவு – ம். அதில் பிரெட் உருண்–டைக – ளை – யு – ம், வேக சாஸ் பதம் வந்–தவு வைத்த மஷ்–ரூ–மை–யும் சேர்த்–துக் கிள–றிப் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
29
க�ோதுமை பிரெட் கேக் என்–னென்ன தேவை? க�ோதுமை பிரெட் - 7 ஸ்லைஸ், சர்க்–கரை (ப�ொடித்–தது) - 1 கப், கார்ன் ஃப்ளார் (ச�ோள மாவு) - 1/2 கப், க�ோக�ோ பவு–டர் - 1/2 கப், கஸ்–டர்டு பவு–டர் - 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்–பூன், முட்டை - 1, முந்–தி–ரிப் பருப்பு, டூட்டிஃ–பு–ரூட்டி - தேவைக்–கேற்ப, பேக்–கிங் பவு–டர் - 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? க�ோதுமை பிரெட் ஸ்லைஸை தண்–ணீ–ரில் ஊற வைத்து, பின் பிழிந்து வைத்–துக் க�ொள்–ள–வும். அதில் சர்க்–கரை, ச�ோள மாவு, க�ோக�ோ பவு–டர், கஸ்–டர்டு பவு–டர், முட்டை அனைத்–தையு – ம் சேர்த்து பிளெண்–டரி – ல் அடிக்–கவு – ம். அத்–துட – ன் எசென்ஸ், முந்–திரி – ப் பருப்பு, டூட்டிஃ–புரூ – ட்டி சேர்த்து மைக்–ர�ோ–வேவ் அவ–னில் 15 நிமி–டங்–கள் வேக வைத்–துப் பரி–மா–ற–வும்.
°ƒ°ñ‹
30
க�ோதுமை பிரெட் - ரவா சாண்ட்–விச் என்–னென்ன தேவை? க�ோதுமை பிரெட் - 1 பாக்–கெட், ரவை - 1 கப், பால் - 1/4 கப், பச்சை மிள– காய் - 2, வெங்–கா–யம் - 2, குடை மிள–காய் - 1/2, க�ொத்–த–மல்லி - தேவைக்கு, தக்–காளி - 1, சீஸ் (துரு–வி–யது) - தேவைக்கு, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? வெங்–கா–யம், தக்–காளி, குடை மிள–காய், பச்சை மிள–காய் அனைத்–தையு – ம் ப�ொடி–யாக நறுக்கி, க�ொத்–த–மல்லி மற்–றும் ரவை–யு–டன் கலக்–க–வும். உப்–புச் சேர்க்–க–வும். அதை பாலில் ஊற வைத்து, பின் பிரெட்டில் தடவி அதன் மேல் சீஸ் தூவி பின் மற்–ற�ொரு பிரெட் ஸ்லைஸை அதன் மேல் வைத்து தவா–வில் இரு–பு–ற–மும் சிவக்க விட்டு பின் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi July 16-31, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11
பிரெட் வடை என்–னென்ன தேவை? பிரெட் - 6 ஸ்லைஸ், கட–லைப் பருப்பு - 1 கப், வெங்–கா–யம் - 2, பச்சை மிள–காய் - 2, இஞ்சி, பூண்டு, ச�ோம்பு - தேவைக்–கேற்ப, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - ப�ொரிக்–கத் தேவை–யான அளவு, க�ொத்–த–மல்லி - சிறிது. எப்–ப–டிச் செய்–வ–து? கட–லைப்– ப–ருப்பை ஊற வைத்து மிக்–ஸி–யில் அரைத்–துக் க�ொள்–ள–வும். அதில் பிரெட்டை தூளாக்கி ப�ோட–வும். அத்–து–டன் வெங்–கா–யம், பச்சை மிள– காயை ப�ொடி–யாக நறுக்–கிச் சேர்க்–கவு – ம். பிறகு உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு, ச�ோம்பு நசுக்–கிப் ப�ோட்டு கிளறி, வடை மாவு பதத்–துக்–குக் கலக்–கவு – ம். க�ொத்–த– மல்லி தூவ–வும். அதை வடை–யா–கத் தட்டி எண்–ணெ–யில் ப�ொரித்–தெடு – க்–கவு – ம்.
°ƒ°ñ‹
32