ஜூன் 1-15, 2015 இதழுடன் இணைப்பு
30
கூல் ெரசிபி
க�ோடையைக் க�ொண்டாடுங்கள்!
ஐ
ஸ் ட்ரே–யில் தண்–ணீ–ரைப் பிடித்து வைத்து தண்–ணீ–ரில் ப�ோட்டுக் குடிப்–பது... சாக்–லெட் முதல் பிஸ்ெ–கட் வரை எல்லா தின்–பண்–டங்–க–ளை–யும் குளி–ரச் செய்து உண்–பது... காலை எழுந்–தது முதல் இரவு தூங்–கச் செல்–கிற வரை ஐஸ்க்–ரீ–மை–யும் ஜூஸை–யுமே உண–வா–கக் க�ொள்–வது... அக்–னி– நட்–சத்–தி–ரத்–தின் ஆட்டம் தாளா–மல் அனைத்து வீட்டுக் குட்டீ–ஸும் இப்–ப–டிச் செய்–வது இயல்பு. அவர்–க–ளைப் ப�ொறுத்–த–வரை க�ொளுத்–தும் க�ோடைக்கு கடிக்–க–வும் குடிக்–க–வும் குளு–கு–ளு–வென ஏத�ோ ஒன்று வேண்–டும். அப்–படி அவர்–கள் உண்–கிற எல்–லாமே ஆர�ோக்–கி–ய–மா–ன–வையா என்–பது அம்–மாக்–களின் கவலை. குழந்–தைக– ளின் கூல் ஆசை–யையு – ம் நிறை– வேற்ற வேண்–டும்... அதே நேரம் அவர்–கள – து ஆர�ோக்–கி–யத்–தை–யும் பார்க்க வேண்–டும் என்– கிற அம்–மாக்–களுக்கு வீட்டி–லேயே செய்–யக்–கூடி– ய குளு–குளு ரெசி–பி–களை அறி–மு–கப்–ப–டுத்–து–கி–றார் சமை– ய ல் கலை– ஞ ர் ஜனனி கிருஷ்– ண – கு–மார். பால், பழம், பிஸ்ெ–கட், சாக்ெ–லட் என குழந்–தை–களுக்–குப் பிடித்–த–வற்றை வைத்தே தாகம் தணிக்–கும் ஆர�ோக்–கிய கூல் ரெசி–பி– சமை–யல் கலை–ஞர் களை செய்து காட்டி, அவற்றை அழ–குற பட–மும் எடுத்–திரு – க்–கிற– ார் அவர். (redchillycurry.com) ஜனனி கிருஷ்–ண–கு–மார் க�ோடை–யைக் க�ொண்–டா–டுங்–கள்! எழுத்து வடி–வம்: ஆர்.வைதேகி
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் என்னென்ன தேவை? ஸ்ட்ராபெர்ரி பழம் - 1/2 கப், பால் - 1 1/2 கப், வெனிலா ஐஸ்க்ரீம் 1/2 கப், ஏலக்காய் தூள் - சிறிதளவு, சர்க்கரை - 1/4 கப், ஐஸ் கட்டிகள் - தேவைக்கு. எப்படிச் செய்வது? எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, பின் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து அடித்து ஜில்லென்று பரிமாறவும்.
°ƒ°ñ‹
3
3
ஓட்ஸ் - வாழைப்பழ மில்க்ஷேக் என்னென்ன தேவை? ஓட்ஸ் - 1/4 கப், வாழைப்பழம் - 1, பேரீச்சம்பழம் - 5, பால் - 1 1/2 கப், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ஓட்ஸை லைட் பிரவுன் கலரில் வறுக்கவும். வறுத்ததை நன்றாக ஆறவிடவும். பிறகு ஓட்ஸுடன் மற்ற ப�ொருட்களைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
4
பப்பாளிப்பழ மில்க் ஷேக்
என்னென்ன தேவை? பழுத்த பப்பாளிப்பழம் - 1/2, தேங்காய்ப் பால் - 1 கப், வெல்லம் - 1/4 கப், ஏலக்காய் தூள் - சிறிதளவு. எப்படிச் செய்வது? பப்பாளிப்பழத்துடன் வெல்லம், தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும். °ƒ°ñ‹
5
கேரட் மில்க்ஷேக்
என்னென்ன தேவை? கேரட் - 3, ச�ோயா பால் - 1/2 கப், வெல்லம் - 4 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - சிறிதளவு. எப்படிச் செய்வது? கேரட்டை துருவிக் க�ொள்ளவும். இதனுடன் ச�ோயா பால், ப�ொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்டவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து, நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.
°ƒ°ñ‹
6
மாம்பழம் - வெனிலா மில்க் ஷேக்
என்னென்ன தேவை? மாம்பழம் - 1, பால் - 1 1/2 கப், வெனிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப், சர்க்கரை - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - சிறிது. எப்படிச் செய்வது? எல்லாவற்றையும் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை நன்றாக அடித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும். °ƒ°ñ‹
7
நியூட்ரெலா க�ோக�ோ க�ோலா - ஃப்ளோட் மில்க்ஷேக் என்னென்ன தேவை? நியூட்ரெலா (Nutrella) சாக்ெலட் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப், க�ோக�ோ க�ோலா - 1 கப். எப்படிச் செய்வது? நீளமான கண்ணாடி கிளாஸில் முதலில் நியூட்ரெலா சாக்ெலட்டைப் ப�ோடவும். அதனுடன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, அதன் மேல் க�ோக்கோ க�ோலாவை நுரையுடன் ஊற்றி உடனே பரிமாறவும்.
°ƒ°ñ‹
8
நியூட்ரெலா - காபி மில்க் ஷேக்
என்னென்ன தேவை? ஃபில்டர் காபி - 1/4 கப், பால் - 1 கப், நியூட்ரெலா சாக்ெலட் - 3 டீஸ்பூன், சாக்லெட் ஐஸ்க்ரீம் - 1/2 கப், ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸியில் ப�ோட்டு, நுரை வரும் வரை நன்றாக அடித்து, கண்ணாடி டம்ளரில் விட்டு பரிமாறவும். °ƒ°ñ‹
9
க்ரீம் பிஸ்கெட் மில்க்ஷேக்
என்னென்ன தேவை? க்ரீம் பிஸ்கெட் (ஆரஞ்ச், வெனிலா, சாக்லெட்) - 1/4 கப், பால் - 1/2 கப், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் - 1 கப், சர்க்கரை - 3 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ஆரஞ்ச் க்ரீம் பிஸ்ெகட், வெனிலா க்ரீம் பிஸ்ெகட், சாக்லெட் க்ரீம் பிஸ்ெகட் ஆகியவற்றுடன் பால் ஊற்றி சேர்த்து, ஐஸ்க்ரீமும் ப�ோட்டு, சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
10
ஆளிவிதை மில்க் ஷேக்
என்னென்ன தேவை? ஆளிவிதைகள் (Flaxseeds) - 2 டீஸ்பூன், பால் - 1 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன், பேரிக்காய் - 1. எப்படிச் செய்வது? மிக்ஸியில் அனைத்துப் ப�ொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அடித்து, ஜில் என்று பரிமாறவும். °ƒ°ñ‹
11
அவகட�ோ மில்க்ஷேக் என்னென்ன தேவை? அவகட�ோ - 1, பால் - 2 கப், சர்க்கரை - 1/4 கப், ஐஸ் கட்டிகள் - தேவைக்கு. எப்படிச் செய்வது? மிக்ஸியில் அனைத்துப் ப�ொருட்களையும் ஐஸுடன் சேர்த்து ஒன்றாக அடித்து ஜில் என்று பரிமாறவும். கண்ணாடி டம்ளரில் சாக்லெட் சிரப்பை சுற்றிலும் ஊற்றி, பிறகு மில்க் ஷேக்கை ஊற்றியும் பரிமாறலாம்.
°ƒ°ñ‹
12
ஏபிசிடி (Apple, Banana, Chickoo, Dates) மில்க் ஷேக்
என்னென்ன தேவை? ஆப்பிள் - 1/2 பழம், வாழைப்பழம் - 1, சப்போட்டா - 1, பேரீச்சம்பழம் - 4, தேன் - 2 டீஸ்பூன், பால் - 1 1/2 கப், ஐஸ் கட்டிகள் - சிறிது. எப்படிச் செய்வது? அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறவும். உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் குடித்தால் உடல் உற்சாகமாக இருக்கும். °ƒ°ñ‹
13
டிரை ஃப்ரூட்ஸ் மில்க்ஷேக் என்னென்ன தேவை? பேரீச்சம் பழங்கள் - 2, அத்திப்பழம் - 3, திராட்சை - 3, பிஸ்தா - 3, பாதாம் - 2, முந்திரி - 2, பால் - 1 கப், தேன் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் தேவைக்கு. எப்படிச் செய்வது? அனைத்தையும் ஐஸுடன் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அடித்து ஜில் என்று பரிமாறவும். இது ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது.
°ƒ°ñ‹
14
ஜாம் மில்க் ஷேக்
என்னென்ன தேவை? ஜாம் - 2 டீஸ்பூன், ஸ்ட்ராபெர்ரி பழம் - 4, சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1 கப். எப்படிச் செய்வது? மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து, நன்றாக ஐஸ் உடன் அடித்துப் பரிமாறவும். °ƒ°ñ‹
15
கஸ் (Khus) சிரப் - ஆப்பிள் மில்க் ஷேக் என்னென்ன தேவை? ஆப்பிள் - 1, கஸ் சிரப் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - 3 டீஸ்பூன், பால் - 1 கப், பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் - 1/2 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - தேவைக்கு. எப்படிச் செய்வது? எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அடித்து ஜில் என்று பரிமாறவும்.
°ƒ°ñ‹
16
க�ோல்ட் (Cold) காபி
என்னென்ன தேவை? பால் - 1 கப், ஃபில்டர் காபி - 1/4 கப், வெனிலா ஐஸ்க்ரீம் - 3/4 கப், சாக்லெட் சிரப் - 3 டீஸ்பூன், சாக்லெட் ஐஸ்க்ரீம் - 1/2 கப், ஐஸ் கட்டிகள் தேவைக்கு, சர்க்கரை - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கிளாஸில் சாக்லெட் சிரப்பை நன்றாகப் பரப்பவும். மிக்ஸியில் ஃபில்டர் காபி, சர்க்கரை, பால், வெனிலா எசென்ஸ், ஐஸ் கட்டிகள், வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லெட் ஐஸ்க்ரீம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நுரை ப�ொங்க அடிக்கவும். அதை கிளாஸில் இட்டுப் பரிமாறவும். °ƒ°ñ‹
17
லிச்சி பழ மில்க் ஷேக் என்னென்ன தேவை? லிச்சி பழம் - 1/2 கப், பால் - 2 கப், சர்க்கரை - 3 டீஸ்பூன். எப்படிச் செய்வது? மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து அடித்து, குளிர வைத்துப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
18
17.
பலாப்பழ மில்க்ஷேக்
என்னென்ன தேவை? பலாப்பழம் - 1/4 கப், ச�ோயா பால் - 1 கப், ஐஸ் கட்டிகள் - சிறிது, வெல்லம் - 4 டீஸ்பூன். எப்படிச் செய்வது? மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து ஜில் என்று பரிமாறவும். °ƒ°ñ‹
19
மேங்கோ - 7 அப் மில்க்ஷேக்
என்னென்ன தேவை? மாம்பழ ஐஸ்க்ரீம் - 1/2 கப், பால் - 1 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், 7 அப் - 1 டம்ளர், ஐஸ் கட்டிகள் - தேவைக்கு. எப்படிச் செய்வது? அனைத்தையும் சேர்த்து, நன்றாக மிக்ஸியில் அடித்து நுரை ப�ொங்கப் பரிமாறவும்.
°ƒ°ñ‹
20
லெமன்-லைம் ஷாட் பாப்சிகிள்
என்னென்ன தேவை? எலுமிச்சைச்சாறு - 1/2 கப், தண்ணீர் - 1 கப், சர்க்கரை - 3/4 கப், புதினா சாறு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு க�ொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்கவும். பின்பு ஆற விடவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதை பாப்சிகிள் ம�ோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். °ƒ°ñ‹
21
மேங்கோ ஐஸ்க்ரீம் என்னென்ன தேவை? ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப், மாம்பழச்சாறு - 1 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், பால் - 1 கப், சர்க்கரை - 1/4 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் முதலில் சர்க்கரையையும் ஃப்ரெஷ் க்ரீமையும் சேர்க்கவும். இதை whipper வைத்து சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும். அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலந்ததும் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் இருந்து ஐஸ்க்ரீமை எடுத்து நன்கு கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ரெடி.
°ƒ°ñ‹
22
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்
என்னென்ன தேவை? ஸ்ட்ராபெர்ரி - 1 கப், பால் - 1/4 கப், கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப், லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1/4 கப், உப்பு - ஒரு சிட்டிகை. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும். மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் ப�ோட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். அதை ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் மறுபடியும் வைக்கவும். பின் பரிமாறவும். °ƒ°ñ‹
23
நியூட்ரெலா ஐஸ்க்ரீம்
என்னென்ன தேவை? நியூட்ரெலா சாக்லெட் - 1 கப், ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப், பால் - 1 கப், க�ோக�ோ பவுடர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - 1/4 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், க�ோக�ோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.
°ƒ°ñ‹
24
வெனிலா ஐஸ்க்ரீம்
என்னென்ன தேவை? ஃப்ரெஷ் க்ரீம் - 1 கப், பால் - 1 கப், சர்க்கரை - 3/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் எசென்ஸ், பால் சேர்த்து நன்கு வைப்பரால் கலக்கவும். ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். °ƒ°ñ‹
25
ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் என்னென்ன தேவை? ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 1/4 கப், திராட்சை - 2 டீஸ்பூன், ஆப்பிள் துண்டுகள் - 1/4 கப், அன்னாசி பழம் - 2 டீஸ்பூன், ஆரஞ்சு துண்டுகள் - 3 டீஸ்பூன், வேஃபர் பிஸ்கெட் - 4, செர்ரி - 2, வெனிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து க�ொள்ளவும். அதை ஒரு அகலமான கிண்ணத்தில் ப�ோடவும். அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் இரண்டையும் வைத்து வேஃபர் பிஸ்கெட்டுகளுடன் பரிமாறவும்.
°ƒ°ñ‹
26
பிஸ்தா குல்பி
என்னென்ன தேவை? எவாபரேட்டட் மில்க் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - 1 டின், கன்டென்ஸ்டு மில்க் - 1 டின், பால் - 1 கப், பிஸ்தா (ப�ொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன், பாதாம் (ப�ொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், குல்பி ம�ோல்டு - 10. எப்படிச் செய்வது? பாலை ஒரு பாத்திரத்தில் காய்ச்சி 5 நிமிடம் கலக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், எவாபரேட்டட் மில்க், ஏலக்காய் தூள் சேர்க்கவும். அதை 5 நிமிடங்கள் கலக்கி விடவும். பால் க�ொஞ்சம் கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறியதும் இதில் பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள் சேர்க்கவும். அதை குல்பி ம�ோல்டில் ஊற்றி, ஃப்ரீசரில் 4-5 மணி நேரங்கள் வைத்து எடுக்கவும். °ƒ°ñ‹
27
ஆரஞ்சு - ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள் என்னென்ன தேவை? ஆரஞ்சு ஜூஸ் - 1 கப், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் - 1 கப், சர்க்கரை - தேவைக்கு, ஐஸ்க்ரீம் ம�ோல்டு - 8. எப்படிச் செய்வது? ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் இருந்து தலா ஒரு கப் ஜூஸ் எடுத்து வடிகட்டிக் க�ொள்ளவும். அதில் ப�ோதுமான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். ஐஸ்க்ரீம் ம�ோல்டில் முதலில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி, பாதி நிரப்பவும். ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு மீதி பாதியில் அடுத்த பாதியான ஸ்ட்ராபெர்ரி ஜூஸை நிரப்பவும். 3 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்துப் பரிமாறவும். இப்படி எந்தப் பழசாற்றையும் பாப்சிகிள் செய்யப் பயன்படுத்தலாம்.
°ƒ°ñ‹
28
ஆரஞ்சு - பைனாப்பிள் ஐஸ்க்ரீம் என்னென்ன தேவை? சர்க்கரை - 1/4 கப், கன்ட்டென்ஸ்டு மில்க் 1/4 கப், ஆரஞ்சு ச�ோடா 3/4 கப், அன்னாசிப் பழம் சிறிய துண்டுகள் - 1/4 கப், அன்னாசி பழச்சாறு - 1/2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கப், பால் - 1 கப். எப்படிச் செய்வது? ஒ ரு பா த் தி ர த் தி ல் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து w h i s k e r க�ொண் டு ச ா ஃ ப் ட் க் ரீ ம் ப�ோ ல வரும் வரை அடிக்கவும். அ த் து ட ன் ஆ ர ஞ் சு ச�ோடா, கன்ட்டென்ஸ்டு மி ல் க் , அ ன ்னா சி ப் பழத்துண்டுகள், அன்னாசிப் பழச்சாறு சேர்த்து நன்கு க ல க்க வு ம் . ச ர்க்க ர ை சே ர் த் து க ல க்க வு ம் . பால் சேர்க்கவும். 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எ டு க்க வு ம் . ஸ் பூ ன ா ல் கலந்து, நன்கு இன்னொரு முறை அடிக்கவும். 7-8 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து பரிமாறவும். °ƒ°ñ‹
29
ஃபலுடா மில்க்ஷேக்
என்னென்ன தேவை? பேசில் (Basil) விதைகள் - 1/2 கப், ஃபலுடா நூடுல்ஸ் - 1/2 கப், குங்குமப்பூ - சிறிதளவு, ர�ோஸ் சிரப் - 3 டீஸ்பூன், குளிர வைத்த பால் - 2 கப், வெனிலா ஐஸ்க்ரீம் - 1 கப், பாதாம் பருப்பு (துருவியது) - 2 டீஸ்பூன், பிஸ்தா (ப�ொடித்தது) - 3 டீஸ்பூன், பழங்கள் (வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள் - இதில் ஏதாவது °ƒ°ñ‹
30
ஒன்று) - 1/2 கப், ஜெல்லி க்யூப்ஸ் (விருப்பப்பட்டால்) - 1/4 கப், சர்க்கரை - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? க�ொ தி த்த நீ ரி ல் ஃ ப லு ட ா நூடுல்ஸை சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரில் ப�ோட்டு, வடிகட்டவும். தனியாக எடுத்து வைக்கவும். பேசில் விதைகளை 1 கப் தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். குளிர்ந்த பாலில் ர�ோஸ் சிரப்பை ஊ ற்றி ஃப்ரிட் ஜி ல் வைக்க வு ம் . தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கலாம். பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். த�ோலை நீக்கிவிடவும். பருகும் முன் அலங்கரிக்கும் முறை நீண்ட கண்ணாடி டம்ளரில் பாதி நூடுல்ஸை ப�ோட்டு, அதன் மேல் பேசில் விதையில் 1/4 கப்பை ப�ோட்டு, பாதிப் பழங்களையும் அதன் மேல் அலங்கரித்து ர�ோஸ் மில்க் பாதியை ஊற்றவும். பின்பு பாதி ஐஸ்க்ரீம் சேர்த்து, இப்படி மறுபடியும் ஒன்றன் பின் ஒன்றாக மறுபடியும் ஃபலுடா நூடுல்ஸை ப�ோட்டு பின்பு பேசில் விதை மீதமுள்ள பழங்கள், ர�ோஸ் மில்க், ஐஸ்க்ரீம் கடைசியில் பிஸ்தா, பாதாம் பருப்புகளை ப�ோட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
பினா க�ோலாடா மில்க்ஷேக்
என்னென்ன தேவை? அன்னாசி பழச்சாறு - 2 கப், தேங்காய்ப் பால் - 1/2 கப், வெனிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப், ஐஸ் கியூப்ஸ் - தேவைக்கு, அன்னாசி பழ சிரப் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? அன்னாசி பழச்சாறு, தேங்காய்ப் பால், ஐஸ் கியூப்ஸ், சிரப் மற்றும் வெனிலா ஐஸ்க்ரீமை ஒன்றாக மிக்ஸியில் அடிக்கவும். நுரை ப�ொங்க மில்க் ஷேக் ரெடி, பார்ட்டிக்கு ஏற்றது. °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi June1-15, 2015. Registrar of newspapers for India R.Dis. No.1547/11
செர்ரி - கிரேப் பாப்சிகிள்
என்னென்ன தேவை? செர்ரி பழம் - 1 கப், திராட்சைப் பழம் - 1 கப், சர்க்கரை - 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், பாப்சிகிள் ம�ோல்டு - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு க�ொதிக்க விடவும். இதனுடன் செர்ரி பழத்தைச் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் க�ொதித்தவுடன் இறக்கவும். ஆற விடவும். திராட்சை பழச்சாறை எடுக்கவும். இரண்டையும் தனித்தனியே வடிகட்டி விட்டு பாப்சிகிள் ம�ோல்டில் முதலில் செர்ரி சாறை ஊற்றி 45 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். (1/2 கப் அளவுக்கு ஊற்றவும்). பிறகு பாப்சிகிளை வெளியே எடுத்து திராட்சை பழச்சாறை ஊற்றவும். இப்போது குச்சியை வைக்கவும். இரண்டையும் 4-5 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைக்கவும்.
°ƒ°ñ‹
32