Thozhi supplement

Page 1

தீபா பாலச்சந்தர்

சமையல் கலைஞர்

117

கடலை ரெசிபீஸ் 30

மே 1-15, 2018 இதழுடன் இணைப்பு


விதவிதமான கடலை உணவுகள் செ

சமையல் கலைஞர்

தீபா பாலச்சந்தர்

ன்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தீபா பாலச்சந்தர். எம்சிஏ படித் திருந்தாலும் சமையலில் உள்ள ஆர்வத்தால் கடந்த 10 ஆண்டுகளாக 65 க்கும் மேற்பட்ட சமை ய ல் இ ண ை ப் பு ப் பு த ்தக ங ்க ளை எழுதியுள்ளார். மேலும் பிரபல வார, நாள், மாத இதழ்களிலும் சமையல் குறிப்புகளை த�ொடர்ந்து எழுதி வருகிறார். இவர் நமது ‘குங்குமம் த�ோழி’ இதழுக்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பி டி த ்த ம ான எ ல்லா கா ல ங ்க ளி லு ம் கிடைக்கும், இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, மெக்னீசியம், விட்டமின்ஸ், ப�ொட்டாசியம் ப�ோன்ற சத்துக்களின் புதையலான கடலை வகைகளை பயன்படுத்தி சத்தான ரெசிபிகளை செய்து காட்டியுள்ளார். வீட்டில் அனைவராலும் செய்யக்கூடிய இந்த புதுமையான ரெசிபிகளை செய்து உங்களது வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்! த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆ – ர்.க�ோபால்

°ƒ°ñ‹

118

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


புடலை ப�ொட்டுக்கடலை ரிங்ஸ் என்னென்ன தேவை?

புடலங்காய் - 1/4 கில�ோ (வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கவும்), ப�ொட்டுக்கடலை - 5 டீஸ்பூன், ச�ோம்பு - 1 டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பெரிய வெங்காயம் - 1 (வட்டமாக நறுக்கவும்), காய்ந்தமிளகாய் - 5, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ப�ொட்டுக்கடலையுடன் ச�ோம்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் பவுடராக ப�ொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கறிவேப்பிலை, பட்டை தாளித்து, வெங்காயம், புடலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி மூடி ப�ோட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்த ப�ொட்டுக்கடலை ப�ொடியை தூவி இறக்கவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


வேர்க்கடலை ப�ொடி

என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை - 1 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/4 கப், கறிவேப்பிலை - சிறிது, காய்ந்தமிளகாய் - 20, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக ப�ோட்டு வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த ப�ொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து, அதனுடன் வேர்க்கடலையை சேர்த்து நன்கு பவுடராக அரைத்து க�ொள்ளவும். இட்லி, த�ோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு:

ப�ொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக இந்த ப�ொடியை தூவி இறக்கலாம். ஸ்டப்பிங் செய்யவும், த�ோசை மேல் தூவவும் பயன்படுத்தலாம். °ƒ°ñ‹

120

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


சேனை கடலை மிக்சர் என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு - 100 கிராம், ப�ொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சேனைக்கிழங்கை த�ோல் சீவி கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு க�ொதி விட்டு இறக்கி வடிகட்டவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சேனைத்துண்டுகளை ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் ப�ொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலையை தனித்தனியாக சேர்த்து ப�ொரித்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் ப�ொரித்த ப�ொருட்கள், உப்பு, மிளகுத்தூள் ப�ோட்டு கலந்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


ப�ொட்டுக்கடலை வடை என்னென்ன தேவை?

ப�ொட்டுக்கடலை - 1 கப், கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், ச�ோம்பு - 1 டீஸ்பூன், முந்திரி - 5, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாயை ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். ப�ொட்டுக்கடலையுடன் முந்திரி, ச�ோம்பு ப�ோட்டு பவுடராக ப�ொடிக்கவும். அதனுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், க�ொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை எலுமிச்சை அளவு எடுத்து வடைகளாக தட்டி ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும். °ƒ°ñ‹

122

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


க�ோக்கோ பீநட் பட்டர் என்னென்ன தேவை?

வறுத்து த�ோல் நீக்கிய வேர்க்கடலை - 1 கப், சர்க்கரை - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், க�ோக்கோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 2.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையுடன் உப்பு, சர்க்கரை, ஏலக்காய், க�ோக்கோ பவுடர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் அரைத்து எடுத்து பிரெட்டின் மீது தடவி பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


கறுப்பு கடலை மசாலா புளிக்குழம்பு என்னென்ன தேவை?

கறுப்பு க�ொண்டைக்கடலை - 1 கப், கத்தரிக்காய் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), முருங்கைக்காய் - 1 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, புளி நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கடுகு, கறிவேப்பிலை - சிறிது, சாம்பார் ப�ொடி - 3 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/4 கப், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 1, ஏலக்காய் - 1, க�ொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கறுப்பு க�ொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, சின்ன வெங்காயத்தை முழுதாக ப�ோட்டு வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, ப�ொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அரைத்த விழுது, உப்பு, புளிக்கரைசல், சாம்பார் ப�ொடி சேர்த்து க�ொதிக்க விடவும். இறுதியாக வெந்த கடலை சேர்த்து ஒரு க�ொதி விட்டு இறக்கி, க�ொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாக சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹

124

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


பீநட் பட்டர் ஸ்மூதி என்னென்ன தேவை?

வாழைப்பழம் - 1, பீநட் பட்டர் - 2 டீஸ்பூன், தேன் - தேவையான அளவு, காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

வாழைப்பழத்தை த�ோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி, அதனுடன் பால், பீநட் பட்டர் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து தேன் கலந்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


ஆந்திரா பூண்டு ப�ொடி என்னென்ன தேவை?

ப�ொட்டுக்கடலை - 1 கப், காய்ந்தமிளகாய், பூண்டு பல் - தலா 10, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ப�ொட்டுக்கடலையுடன் காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் ப�ொடித்து, அதனுடன் பூண்டு சேர்த்து மீண்டும் நைசாக அரைத்தெடுத்து காற்று புகாத டப்பாவில் ப�ோட்டு வைக்கவும். ஒரு மாதம் வரை கெடாது. சூடான சாதத்தில் நெய், ஆந்திரா பூண்டு ப�ொடி கலந்து பரிமாறவும். °ƒ°ñ‹

126

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


பீநட் கடி என்னென்ன தேவை?

கெட்டி தயிர் - 1 கப், வறுத்து த�ோல் நீக்கிய வேர்க்கடலை - 1/4 கப், சர்க்கரை - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, த�ோல் சீவி துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு - தலா 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தயிருடன் வேர்க்கடலை, இஞ்சி, சர்க்கரை, உப்பு சேர்த்து அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் தாளித்து, தயிர் கலவையில் க�ொட்டி கலந்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


முருங்கைக் கீரை கடலை உசிலி என்னென்ன தேவை?

ஆய்ந்த முருங்கைக்கீரை - 1 கப், வறுத்த வேர்க்கடலை - 1/4 கப், காய்ந்தமிளகாய் - 10, கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கீரையை அலசவும். வேர்க்கடலையுடன் காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக ப�ொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கீரையை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி ப�ோட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் அரைத்த ப�ொடியை ப�ோட்டு கிளறி இறக்கவும். °ƒ°ñ‹

128

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


சென்னா சாலட் என்னென்ன தேவை?

வெள்ளை க�ொண்டைக்கடலை - 1 கப், வெங்காயம் - 1, தக்காளி 1, மாதுளை முத்துக்கள், கேரட் துருவல் - சிறிது, க�ொத்தமல்லித்தழை, புதினா - சிறிது, மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடிய விடவும். வெந்த கடலையுடன் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், க�ொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து கலந்து, மேலே மாதுளை முத்துக்கள், கேரட் துருவல் தூவி பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


கருப்பு கடலை சூப் என்னென்ன தேவை?

கருப்பு க�ொண்டைக்கடலை - 1 கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து, சிறிது க�ொண்டைக்கடலையை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு க�ொதி விட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த க�ொண்டைக்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும். °ƒ°ñ‹

130

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


பாதாம் முந்திரி மாலாடு என்னென்ன தேவை?

ப�ொட்டுக்கடலை, சர்க்கரை - தலா 1 கப், பாதாம் துருவல், முந்திரி துருவல் - சிறிது, ஏலக்காய் - 3, நெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் ப�ொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து பாதாம் துருவல், முந்திரி துருவல் சேர்த்து கலந்து க�ொள்ளவும். சூடான நெய்யை ஊற்றி கலந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


கடலை கத்தரி ஃப்ரை என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - 1/4 கில�ோ, வேர்க்கடலை - கைப்பிடியளவு, பூண்டு - 5 பல், கடுகு - 1/4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிது, இட்லி ப�ொடி - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் ப�ோடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், வேர்க்கடலை, பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு கத்தரிக்காய் ப�ோட்டு சிறிது நேரம் வதக்கி உப்பு, இட்லி ப�ொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறி நன்கு வறுவலாக வந்ததும் இறக்கவும். °ƒ°ñ‹

132

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


புதினா கடலை ரைத்தா என்னென்ன தேவை?

கெட்டித்தயிர் - 2 கப், வறுத்த வேர்க்கடலை - 1/4 கப், புதினா இலைகள் - 20, மிளகு - 10, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையின் த�ோலை நீக்கி நைசாக அரைக்காமல் ஒன்றிரண்டாக ப�ொடிக்கவும். புதினா இலைகளுடன் மிளகு, உப்பு ப�ோட்டு விழுதாக அரைத்து க�ொள்ளவும். தயிரை நன்கு அடித்து அதனுடன் அரைத்த புதினா விழுது, ப�ொடித்த வேர்க்கடலை ப�ொடி சேர்த்து கலந்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


வேர்க்கடலை வெல்ல லாடு என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை - 1 கப், வெல்லத்தூள் - 1 கப், ஏலக்காய் - 2, நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையுடன் ஏலக்காய், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து க�ொள்ளவும். அதனுடன் நெய் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். °ƒ°ñ‹

134

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


ஹ�ோட்டல் சட்னி என்னென்ன தேவை?

ப�ொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், பச்சைமிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 1, பூண்டு - 1, புளி - சிறிது, கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, காய்ந்தமிளகாய் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ப�ொட்டுக்கடலையுடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், உப்பு, வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து மிக்சியில் சட்னியாக அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சட்னியில் க�ொட்டி கலந்து இட்லி, த�ோசையுடன் பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


ப�ொட்டுக்கடலை முறுக்கு என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப், ப�ொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு - தலா 1 டீஸ்பூன், எள், சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் ப�ொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள் ப�ோட்டு கலந்து க�ொள்ளவும். அதனுடன் சூடான எண்ணெய் சிறிது சேர்த்து பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை முறுக்கு அச்சில் ப�ோட்டு முறுக்குகளாக பிழிந்து வேகவிட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். °ƒ°ñ‹

136

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


கடலை அரைத்த குருமா என்னென்ன தேவை?

சிறு துண்டுகளாக நறுக்கிய விருப்பமான காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர்) - அனைத்தும் சேர்த்து 1 கப், வெங்காயம், தக்காளி - தலா 1, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை - சிறிது.

அரைக்க...

தேங்காய்த்துருவல், ப�ொட்டுக்கடலை - தலா 1/4 கப், பூண்டு 4 பல், முந்திரி - 4, பச்சைமிளகாய் - 3.

தாளிக்க...

ப ட ்டை - சி றி ய து ண் டு , கி ர ா ம் பு , ஏ ல க ்கா ய் - த ல ா 1 , கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

அரைக்க க�ொடுத்த ப�ொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறி கலவை, உப்பு ப�ோட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி ப�ோட்டு வேகவிடவும். பின் அரைத்த விழுது சேர்த்து க�ொதி விட்டு இறக்கவும். மேலே க�ொத்தமல்லி தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


கார்ன்ஃபிளேக்ஸ் கடலை மிக்சர் என்னென்ன தேவை?

கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப், ப�ொட்டுக்கடலை, வேர்க்கடலை, அவல் - தலா 1/4 கப், கறிவேப்பிலை - சிறிது, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து அவல், கார்ன்ஃபிளேக்ஸ், ப�ொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலையை தனித்தனியாக சேர்த்து ப�ொரித்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் ப�ொரித்த ப�ொருட்களுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து காற்று புகாத டப்பாவில் ப�ோட்டு வைக்கவும். °ƒ°ñ‹

138

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


வேர்க்கடலை கறிவேப்பிலை சட்னி என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - தலா 1 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, புளி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் வேர்க்கடலையுடன் பூண்டு, காய்ந்தமிளகாய், சிறிது தண்ணீர் ஊற்றி வேக விட்டு இறக்கவும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஆறியதும் அதனுடன் வேர்க்கடலை கலவை, புளி, உப்பு ப�ோட்டு மிக்சியில் சட்னியாக அரைத்து எடுத்து இட்லி, த�ோசையுடன் பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


யாம் டிக்கி என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 கப், ப�ொட்டுக்கடலை மாவு - 1/4 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், க�ொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சேனைக்கிழங்கை த�ோல் சீவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து க�ொள்ளவும். ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு நன்கு மசித்து, அதனுடன் ப�ொட்டுக்கடலை மாவு, உப்பு, க�ொத்தமல்லி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கெட்டியாக பிசைந்து விருப்பமான வடிவில் செய்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து யாம் டிக்கிகளை ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து சூடாக பரிமாறவும். °ƒ°ñ‹

140

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


ஆலு கடப்பா என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1 கப், உருளைக்கிழங்கு - 2, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, வெங்காயம், தக்காளி - தலா 1, க�ொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/4 கப், ப�ொட்டுக்கடலை - 5 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 1, பூண்டு - 4 பல்.

தாளிக்க...

பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 1, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு சேர்த்து வேகவைத்து க�ொள்ளவும். அரைக்க க�ொடுத்துள்ள ப�ொருட்களை மிக்சியில் ப�ோட்டு விழுதாக அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு கலவை, உப்பு ப�ோட்டு நன்றாக க�ொதிக்க விட்டு இறக்கவும். மேலே க�ொத்தமல்லி தூவி இட்லியுடன் பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


பீநட் கேண்டி என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை, சர்க்கரை - தலா 1 கப்.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் வேர்க்கடலையுடன் சர்க்கரை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறு தீயில் வைத்து கிளறவும். சர்க்கரை கரைந்து கடலையுடன் ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கவும். ஆறியதும் பரிமாறவும். °ƒ°ñ‹

142

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


கடலை சட்னி த�ோசை என்னென்ன தேவை?

த�ோசை மாவு - 1 கப், ப�ொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி, நெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

த�ோசைக்கல்லை காயவைத்து மாவை மெல்லிய த�ோசைகளாக ஊற்றவும். சிறிது வெந்ததும் அதன் மீது ப�ொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னியை தடவவும். பிறகு சுற்றிலும் நெய் விட்டு மூடி வேகவைத்து எடுத்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


அவல் கடலை உப்புமா என்னென்ன தேவை?

சிவப்பு அவல் - 1 கப், வெங்காயம் - 1, த�ோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்தமிளகாய் - 1, க�ொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க...

கடுகு - 1/4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், வேர்க்கடலை - 5 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அவலை சுத்தம் செய்து 2 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அவல், உப்பு சேர்த்து கிளறி க�ொத்தமல்லி தூவி இறக்கவும். பிறகு எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும். °ƒ°ñ‹

144

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


மசாலா பீநட் என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை - 1 கப், கடலை மாவு - 4 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். அதனுடன் வேர்க்கடலையை கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் ப�ொரிக்க எண்ணெயை ஊற்றி நன்கு சூடானதும் முதலில் கறிவேப்பிலையை ப�ோட்டு ம�ொறும�ொறுப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு வேர்க்கடலை கலவையை உதிர்த்து ப�ோட்டு ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து கறிவேப்பிலையுடன் கலந்து பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


மினி கடலைப்பொடி ஊத்தப்பம் என்னென்ன தேவை?

த�ோசை மாவு - 1 கப், வேர்க்கடலைப் ப�ொடி - தேவையான அளவு, வெங்காயம், தக்காளி - தலா 1, க�ொத்தமல்லி - சிறிது, த�ோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், கேரட் துருவல் - 5 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

த�ோசை மாவுடன் ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, க�ொத்தமல்லியை சேர்த்து கலந்து க�ொள்ளவும். த�ோசைக் கல்லை காயவைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் ப�ொடியை தூவவும். பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி ப�ோட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். °ƒ°ñ‹

146

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


கடலை சத்து மாவு கஞ்சி என்னென்ன தேவை?

ராகி - 1/4 கில�ோ, இட்லி அரிசி, ப�ொட்டுக்கடலை, கறுப்பு க�ொண்டைக்கடலை, ச�ோயா பீன்ஸ், கம்பு, வெள்ளை ச�ோளம், மஞ்சள் ச�ோளம் - தலா 100 கிராம், பாதாம், முந்திரி, ஜவ்வரிசி - தலா 50 கிராம், ஏலக்காய் - 5.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் க�ொடுத்துள்ள ப�ொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக ப�ோட்டு வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிஷினில் க�ொடுத்து நைசாக மாவாக அரைத்து க�ொள்ளவும்.

கஞ்சி தயாரிக்கும் முறை...

1 டீஸ்பூன் கஞ்சி மாவுடன், 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அதனுடன் 1 கப் பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு க�ொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும். மே 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi May 1-15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

என்னென்ன தேவை?

வடித்த சாதம் - 1 கப், புளி - எலுமிச்சை அளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு, கறுப்பு க�ொண்டைக்கடலை - 1/4 கப்.

வறுத்து ப�ொடிக்க...

தனியா - 2 டீஸ்பூன், கறுப்பு எள் - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், வறுத்த வேர்கடலை - ஒரு கைப்பிடியளவு.

எப்படிச் செய்வது?

க�ொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிய விடவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில் வறுக்க க�ொடுத்த ப�ொருட்களை வறுத்து ஆறியதும் ப�ொடிக்கவும். அதே கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு க�ொதிக்க விடவும். கலவை நன்கு கெட்டியாக வரும்போது, அரைத்த ப�ொடி தூவி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். புளிக்காய்ச்சல் ரெடி. வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சல், வெந்த கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

கடலை புளிய�ோதரை

°ƒ°ñ‹

148

மே 1-15,2018

இதழுடன் இணைப்பு


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.