செப்டம்பர் 1-15, 2015 இதழுடன் இணைப்பு
பஞ்சாபி 30 ஸ்பெஷல்
பல்லே பல்லே பஞ்சாபி!
வி
ருந்–த�ோம்–ப–லுக்கு பெயர் பெற்–ற–வர்–கள் தமி–ழர்–கள் மட்டு–மல்ல... பஞ்–சா–பி–யர்– களும்–தான். பழங்–கள், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்– று ம் இனிப்– பு – க ள் க�ொடுத்து உப–சரி – ப்–பது – ம், வர–வேற்–பது – ம் பஞ்–சாபி மக்–களின் தலை–முறை – –கள் தாண்–டிய பழக்–கம். எருமை வளர்ப்பு அதி–கம் என்–ப–தால், பாலும் பால் ப�ொருட்–க– ளான தயிர், வெண்–ணெய், நெய், – ல் பனீ–ரும் இவர்–கள – து சமை–யலி பிர– தா – ன – ம ாக இடம்– ப ெ– று ம். க�ோது– மை – யை ப் ப�ோலவே ச�ோளம், கம்பு, மக்–காச்சோள வகை–ய–றாக்–களும் பஞ்–சா–பில் பிர–ப–லம். நமக்–கெல்–லாம் கறி–வேப்–பிலை, க�ொத்–த– மல்லி மாதிரி பஞ்–சாப் மக்– க ளுக்கு கடு– கு க் கீரை–யும் கசூரி மேத்– தி – யு ம் இ ல் – லா – ம ல் சமை–யல் மணக்–காது.
ரெசிபி ராணி சந்–தி–ர–லேகா ராம–மூர்த்தி °ƒ°ñ‹
2
ப ய – ண ம் செ ய் – கி ற ப� ோ து பஞ்–சாபி தாபாக்–களை தேடிப் பிடித்து பராத்– தா க்– க – ளை – யு ம் வெண்– ண ெய் மணக்–கும் கிரே–வி–க–ளை–யும், கடை–சி– யாக நுரைக்க நுரைக்க லஸ்–ஸி–யை– யும், நெய் ஒழு–கும் ஜிலே–பி–க–ளை– யும் ருசித்த அனு–ப–வம் பல–ருக்–கும் இருக்–கும். அடுத்த முறை எப்–ப�ோது அவற்றை ருசிப்– ப து என ஏங்– கி த் தவிக்–கி–ற–வர்–களுக்கு மாதம் முழுக்க பஞ்– ச ாப் உண– வு – க ளை ருசிக்– க க் கற்– று த் தரு– கி – ற ார் ரெசிபி ராணி ச ந் – தி – ர – லே க ா ரா ம – மூ ர் த் தி . பஞ்–சா–பில் பல வரு–டங்–கள் வாழ்ந்த அனு– ப – வ த்– தி ல், தான் கற்– று த் தேர்ந்த பஞ்சாபி உண–வு–களை உங்– க ளுக்– கு ம் ச�ொல்– லி த் தரு–கி–றார் அவர். பிற–கென்ன.... பல்லே பல்லே பாடிக் க�ொண்டே பஞ்–சாப் உண–வு–களை சுவை–யுங்–கள்.... எழுத்து வடி–வம்:
ஆர்.வைதேகி படங்–கள்: ஆர்.க�ோபால்
லாப்சி அல்வா
(ப�ொற்–க�ோ–யி–லில் செய்–யக்–கூ–டிய அல்வா... பிர–சா–த–மாக தரு–வார்–கள்.)
என்–னென்ன தேவை? க�ோதுமை ரவை/–பாம்பே ரவை/– சம்பா ரவை ஏதே– னு ம் ஒன்று - 1 கப், சர்க்–கரை - 2 முதல் 2 1/2 கப், நெய் - 1 கப், ஏலக்–காய்த்–தூள் - ஒரு சிட்டிகை, தண்–ணீர் - 5-6 கப் அல்–லது தேவைக்கு, அலங்–க–ரிக்க முந்–திரி, உலர்– தி – ராட ்சை, பாதாம், பிஸ்தா (விருப்–பத்–திற்கு). எப்–ப–டிச் செய்–வ–து? சிறிது நெய்–யில் முந்–திரி, உலர் திராட்சை, பாதாம்/ பிஸ்தா ஆகி–ய– வற்றை வறுத்து எடுத்–துக் க�ொள்–ள– வும். பின் மீண்– டு ம் சிறிது நெய் சேர்த்து ரவையை நல்ல சிவக்க வாசனை வரும் வரை வறுக்–க–வும்.
பின் இறக்கி வைக்–க–வும். வேறு ஒரு வாய் அகன்ற பாத்– தி – ர த்– தி ல் பாதி அளவு தண்–ணீர் சேர்த்து ரவையை க�ொட்டி கைவி–டா–மல் நன்–றாக கிளறி வேக விட–வும். இது நன்கு வெந்–த– தும் சர்க்–கரை சேர்த்–துக் கிள–ற–வும். அவ்– வ ப்– ப� ோது மீதி இருக்– கி ன்ற நெய்– யை – யு ம் சேர்க்– க – வு ம். இந்தக் கலவை நல்ல அல்வா பதம் வரும் ப�ோது வறுத்த முந்–திரி, நட்ஸை பாதி பாகத்தை சேர்த்துக் கிள–ற–வும். ஏலக்– காய்த்–தூள் சேர்க்–க–வும். இது நல்ல அல்வா பதம் வந்– த – து ம் தேவைப்– பட்டால் நெய், மீதி உள்ள நட்ஸ் சேர்த்து தூவி கிளறி இறக்–க–வும். சப்– புக் க�ொட்ட வைக்–கும் அல்வா தயார். °ƒ°ñ‹
3
டெல்லி பாலக் இலை பஜ்ஜி
என்–னென்ன தேவை? அதி–கம் பெரி–யதா – க – வு – ம், அதி–கம் சிறி–யதா – க – வு – ம் இல்–லா–மல் நடுத்–தர இலை–கள் (டெல்லி பாலக்) - 1/4 கில�ோ, கடலை மாவு - 1 1/2 கப், அரிசி மாவு - 1/2 கப், மைதா - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, மிள–காய்–தூள் - 1 டீஸ்–பூன், ஓமம் (விருப்–பப்–பட்டால்) - ஒரு சிட்டிகை, சமை–யல் ச�ோடா - ஒரு சிட்டிகை, ெபருங்–கா–யத்–தூள் - ஒரு சிட்டிகை, ப�ொரிப்–பத – ற்கு எண்–ணெய் - தேவைக்கு. °ƒ°ñ‹
4
எப்–ப–டிச் செய்–வ–து? மாவு வகை– க – ளைச் சலித்து உப்பு, ஓமம், பெருங்–கா–யத்–தூள், மிள– காய்த்–தூள், ச�ோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவை– ய ான தண்– ணீ ர் விட்டு நன்கு தேய்க்– க – வும். இதை இட்லி மாவு பக்– கு – வ த்– தி ற்கு கரைத்– துக் க�ொள்–ள–வும். சிறிது சூடான எண்– ண ெயை ஒரு டேபிள்ஸ்–பூன் இந்த மாவில் சேர்க்–க–வும். பின் நன்–றாக கலந்து வைத்– துக் க�ொண்டு அதில் டெல்லி பாலக் இலை– களை காம்பை கிள்ளி முழு–தாக மாவில் முக்கி எடுத்து ஒவ்–வ�ொன்–றாக சூடான எண்– ண ெ– யி ல் ப�ோட்டு ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்து எடுத்து வடி– தட்டில் ப�ோட்டு எண்– ணெயை வடிய விட்டு சூடாக சாஸு–டன் பரி–மா–ற– வும். இது வாழைக்–காய் பஜ்ஜி மாதிரி நீள– ம ாக இருக்–கும். பஞ்–சா–பிக – ளின் குளிர்–கால ஸ்பெ–ஷல்.
கட்டா மீட்டா லஸ்ஸி அல்–லது பஞ்–சாபி லஸ்ஸி
என்–னென்ன தேவை? கெட்டித் தயிர் - 2 கப், சர்க்–கரை - 6-8 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, கிரீ–மு–டன் சேர்ந்த பால் - 1/2 கப், ஐஸ் க்யூப்ஸ்–கள் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? கெட்டித் தயிரை உப்பு, சர்க்–கரை சேர்த்து மிக்– ஸி–யில் நுரை ப�ொங்க அடிக்–கவு – ம். இப்–ப�ோது (கிரீம்)
ப ால் ஆ டை – யு – ட ன் பாலை– யு ம் சேர்த்து மேலும் ஒரு முறை அடித்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரி–மா–ற–வும். இது மலாய் லஸ்ஸி எ ன் று ம் கூ று வ ர் . இப்– ப� ோது மாடர்ன் முறை– யி ல் பல– வி த ல ஸ் – ஸி – க ளை ப ரி – – ார்–கள். இஞ்சி மாறு–கிற சேர்த்த ல ஸ் ஸி , ஸ்ட்–ரா–பெர்ரி லஸ்ஸி, மேங்க ோ ல ஸ் ஸி , ர�ோஸ் மில்க் சிரப் லஸ்ஸி, நாகப்– ப ழ லஸ்ஸி, ஒரு துண்டு ப ச ்சை ஆ ப் – பி ள் பழம் சீவிய லஸ்–ஸி– யும் பரி– ம ா– று – கி – ற ார்– கள். வெள்–ள–ரிக்–காய் சீவி ேசர்த்த லஸ்ஸி, நெல்–லிக்– காய் சாறு அல்–லது நெல்–லிக்–காய் துருவி சேர்த்த லஸ்ஸி அருந்–துகி – ற – ார்–கள். இது உடம்– பு க்கு மிக– வு ம் நன்மை தரக்–கூடி – –யது. °ƒ°ñ‹
5
தாமரை காய் விதை கறி/– பஞ்–சாபி மக்னா கிரேவி என்–னென்ன தேவை? தாமரை காய் விதை காய வைத்து பதப்–ப–டுத்–தி–யது - 250 கிராம், வெங்– கா–யம் - 2, தக்–காளி - 2 (விழு–தாக அரைத்– த து), மிள– க ாய் தூள் - 1 டீஸ்–பூன், காஷ்–மீர் மிள–காய்–தூள் 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - சிறிது, (பட்டை - ஒரு துண்டு, ஏலக்–காய் - 1, லவங்–கம் - 2) அனைத்–தை–யும் வறுத்து ப�ொடிக்– க – வு ம். ப�ொடித்த கஸ்–தூரி மேத்தி - 1 டீஸ்–பூன், மல்– லித்–தழை - சிறிது, ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்–பூன், இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், முந்–திரி (விழு–தாக அரைத்–தது) - 6, பச்சை மிள–காய் கீரி–யது - 1-2, வெண்– ணெய் அல்–லது எண்–ணெய், உப்பு - தேவைக்கு, உலர்ந்த வெந்–த–யக்– கீரை, கரம் மசாலா-1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? கடை–களில் இந்த தாம–ரை –காய் விதை பதப்– ப – டு த்தி விற்– க ப் – ப – டு ம். எண்– ண ெய் அல்– ல து வெண்–ணெய் காய வைத்து, பட்டை, ஏலக்– க ாய், லவங்– கம் வதக்கி இதில் அரைத்த தக்– க ாளி, பச்– சை – மி– ள – க ாய், வெங்–கா–யம் சேர்த்து வதக்–க– வும். பச்சை வாசனை ப�ோன– °ƒ°ñ‹
6
தும் தூள்–கள் சேர்க்–கவு – ம். இது நன்கு ப�ொரிந்து வரும் போது இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து கைவி–டா–மல் வதக்–க– வும். சர்க்–கரை, முந்–திரி விழுது, உப்பு, கரம் மசாலா, உலர்ந்த வெந்–த–யக் கீரை, கஸ்–தூரி மேத்தி யாவற்–றையு – ம் சேர்க்–க–வும். வதக்–கும் போது எண்– ணெய் பிரிந்து மேல் வரும் ப�ோது அடுப்பை ஆஃப் செய்– ய – வு ம். பின் வேறு ஒரு கடா–யில் எண்ெ–ணய் விட்டு தாமரை விதையை வறுத்து எடுத்து சூடான தண்– ணீ – ரி ல் ப�ோட்டு பின் வடித்து கிரே–வியி – ல் ப�ோட்டு மீண்–டும் ஒரு க�ொதி வரும் வரை மூடி வேக விட–வும். பின் அடுப்–பி–லி–ருந்து கீழே இறக்கி விட்டு மல்–லித்–தழை, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரி–மா–ற–வும். இது நாண், ர�ொட்டி, குல்ச்சா ப�ோன்–ற– வற்–றுக்கு ஏற்ற சைட் டிஷ். பஞ்–சா–பிய – ர்– கள் இதை சப்–புக் க�ொட்டிக் க�ொண்டு சாப்–பி–டு–வார்–கள்.
மாம்–பழ கலா–கண்ட் என்–னென்ன தேவை? பால் - 1 லிட்டர், சர்க்– க ரை - 1 கப், எலு–மிச்–சைச்–சாறு - 2 டீஸ்–பூன், நெய் - 2 டீஸ்– பூன், கெட்டி–யான மாம்– பழ விழுது - 2 கப், ISI முத்–தி–ரை–யுள்ள ஃபுட் கலர் மஞ்–சள் (விருப்– பப்–பட்டால்). எப்–படி – ச் செய்–வது – ?– – அ–டி–க–ன–மான பாத்– தி–ரத்–தில் பாதி அளவு ப ாலை ச ர் க் – க ரை சேர்த்து க�ொதிக்க விட– வும். தீயைக் குறைத்து விட்டு க�ொதிக்– கு ம் பாலில் எலு–மி ச்–சைச் – சாறை விட–வும். பால் திரிந்து விடும். அதை மஸ்– லி ன் துணி– யி ல் வடி– க ட்டி ஆற விட– வு ம் . மீ த – மு ள்ள ப ாலை ம ற் – ற�ொ ரு பாத்–தி–ரத்–தில் ப�ோட்டு மித–மான தீயில் பாதி– யாக சுண்– டு ம் வரை கிள– ற – வு ம். மஸ்லின் துணி–யில் ஆற வைத்–
துள்ள பால் கட்டி–யை–யும் இந்தப் பாலில் சேர்த்து கட்டி இல்–லா–மல் கிளறிக் க�ொண்டே இந்த மாம்– பழ விழு–தை–யும், கல–ரை–யும் சேர்த்து கைவி–டா– மல் கிளறி, இறுகி வந்– த – து ம் இறக்கி நெய் தட– விய தட்டில் க�ொட்டி சமப்–ப–டுத்தி ஆற வைத்து விருப்–ப–மான வடி–வில் துண்–டு–கள் ப�ோட–வும். குறிப்பு: பாதாம் சீவல், மேங்கோ சாஸ், வெ ள் ளி ஜ ரி கை , மு ந் – தி ரி ப� ோ ன் – ற – வ ற ்றை ப�ோட்டு விருப்–பத்–திற்கு அலங்–க–ரிக்–க–லாம். இந்த கலாகண்ட் டிஷ்ஷை எரு–மைப் பாலில் செய்–தால் நன்–றாக இருக்–கும். °ƒ°ñ‹
7
தால் தட்கா
(தட்கா என்–பது தால் செய்து விட்டு கடை–சி–யில் தாளிப்–ப–தற்குதான் தட்கா என்று பெயர்.)
என்–னென்ன தேவை? துவ– ர ம் பருப்பு -1 கப் - 1 1/4 கப், இஞ்சி - 1 அங்–குல – த்–துண்டு, பூண்டு - 4 பல், பச்–சைமி – ள – க – ாய் - 4, தக்–காளி - 2 (ப�ொடி–யாக நறுக்–கி–யது), க�ொத்–த–மல்–லித்–தழை, உப்பு - தேவைக்கு, மஞ்–சள் தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், (விருப்பப்– பட்டால்) எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பருப்பை வெறும் கடா–யில் வறுத்து சிறிது °ƒ°ñ‹
8
சிவந்–த–தும் இறக்கி பருப்–பு–டன் உப்பு, மஞ்–சள் தூள் சேர்த்து ப�ோது–மான தண்–ணீர் விட்டு குக்– க – ரி ல் வேக வைக்– க – வு ம். இந்த பருப்பு அதி–கம் குழை– யா–மல் பார்த்–துக் க�ொள்–ளவு – ம். இறக்கி ஒரு கடை கடைந்து வைத்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா– யி ல் 1 டேபிள்ஸ்– பூ ன் நெய்யை காய விட்டு, 1/2 டீஸ்– பூன் சீர–கத்தை ப�ொரிக்–க–வும். இத்–து–டன் பூண்டு ப�ொடித்து ப�ோட–வும். பச்–சை –மி–ள–காய், தக்–காளி சேர்த்து வதக்–க–வும். தக்– க ாளி குழை– ய க் கூடாது. பாதி வெந்–தால் ப�ோதும். இத–னு– டன் பருப்பை சேர்க்–கவு – ம். மிள– காய்த்–தூள் சேர்த்து க�ொதிக்க விட்டு இறக்கி வைத்து உடனே (தட்–கா–விற்கு) வேறு ஒரு சின்ன குழிக்–கர– ண்–டியை காய வைத்து மீதி உள்ள நெய்யை விட்டு சீர–கத்தை ப�ொடித்து பருப்–பில் ப�ோட்டு உடனே மூடி விட–வும். மல்லி, இஞ்சி தூவி சூடாக பரி–மா–ற–வும். விருப்–பப்–பட்டால் மேலாக எலு–மிச்–சைச் சாறை பிழிந்து க�ொள்–ள–லாம்.
பஞ்–சாபி தஹி பிந்–தி–/–த–யிர் வெண்–டைக்–காய் என்–னென்ன தேவை? வெண்–டைக்–காய் - 1/2 கில�ோ (வெண்– டை க்– க ாய் இல– ச ாக சிறி– ய – தாக இருக்க வேண்–டும்.), சீர–கத்–தூள் வறுத்து ப�ொடித்–தது - 1 டேபிள்ஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 1/2 டேபிள்ஸ்– பூன், தேவை–யா–னால் இடித்து தட்டிய தனியா - 1 டேபிள்ஸ்–பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, கெட்டி–யாக அடித்த தயிர் - 2 கப் அல்–லது தேவைக்கு, அலங்–கரி – க்க நீட்டு வாக்–கில் வெட்டிய
இஞ்சி, பச்சை மிள–காய் - 4-6 காரத்– திற்கு ஏற்ப, சீல் செய்–வத – ற்கு தனி–யாக கட–லை–மாவு - 1/2 கப். எப்–ப–டிச் செய்–வ–து? வெண்–டைக்–காயை கழுவி சுத்–தம் செய்து துடைத்து நீள–வாக்–கில் கீறி வைக்–க–வும். பூர–ணத்–திற்கு... வெண்–டைக்–காய், தயிர் தவிர மீதி எல்–லா–வற்–றை–யும் ஒன்–றாக கலக்–க– வும். மேல் க�ொடுத்–துள்ள தூள்–கள் அனைத்–தை–யும் சிறிது உப்பு கலந்து கீரிய வெண்–டைக்–காய் உள்ளே ஒரு டீஸ்– பூ ன் வைத்து சம– ம ாக பரப்பி நிரப்பி வைக்–க–வும். கடலை மாவை கெட்டி–யாக கரைத்து அதை பூர–ணம் வைத்–தப்–பின் சீல் செய்து வைத்–துக் க�ொள்–ளவு – ம். பின் எண்–ணெயை காய வைத்து க�ொஞ்ச க�ொஞ்–சம – ாக வெண்– டைக்–காய்–களை – ப் ப�ொரித்து வடித்து ஒரு தட்டில் வைக்–க–வும். பரி–மா–றும் ப�ோது தயி–ரில் சிறிது உப்பு சேர்த்து அடித்து தட்டில் இருக்– கு ம் வெண்– டைக்– க ா– யி ன் மேல் ஊற்றி சிறிது சீர– க த்– தூ ள், மிள– க ாய்த்– தூ ள் தூவி அலங்–க–ரித்து அதன் மேல் வதக்–கிய பச்–சை– மி–ள–காய், இஞ்சி சேர்த்து பரி– மா–றவு – ம். சூப்–பரா – ன தஹி பிந்தி ரெடி. °ƒ°ñ‹
9
ச�ோள தயிர் வடை /– கார்ன் தஹி வடா என்–னென்ன தேவை? ஃப்ரெஷ் ச�ோள முத்–துக்–கள் - 2 கப், ரவை - 2 டேபிள்ஸ்–பூன், தயிர் - 1 டேபிள்ஸ்–பூன், பச்–சை– மி–ளக – ாய் ப�ொடித்–தது - 6, இஞ்சி (ப�ொடி–யாக நறுக்கியது) சிறிது, சீர–கம் - சிறிது, உப்பு, எண்– ணெய் - தேவைக்கு, மிள–காய் தூள் - சிறி–து வட ை க் கு மே ல் அலங்–க–ரிக்–க–... த–யிர் - 2 கப், சீர–கத்–தூள் வறுத்து ப�ொடித்–தது, ப�ொடி–யாக நறுக்–கிய மல்–லித் தழை - தேவைக்கு, மிள–காய்த்– தூள், இனிப்பு புளிப்பு சட்னி, பச்சை மல்லி சட்னி, கருப்பு உப்பு-சிறிது, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ச�ோள– முத்–து–களை மிக்–ஸி– யில் ரவை மாதிரி கெட்டி–யாக அரைக்–க–வும். இத்–து–டன் எண்– ணெ– யை த் தவிர வடைக்கு உள்–ளதை வடை மாவு பதத்– திற்கு பிசைந்து வைத்– து க் க�ொள்–ள–வும். கல–வையை 10 நிமி–டம் வைக்–க–வும். கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–த–தும் வடைக் கல–வை–யில் இருந்து °ƒ°ñ‹
10
சிறு சிறு உருண்–டைக – ள – ாக செய்து க�ொண்டு வடை–யாக வட்ட–மாக தட்டி மித–மான தீயில் ப�ொன்–னிற – ம – ாக ப�ொரித்து எடுத்து ஒரு குழி– யான தட்டில் அடுக்–க–வும். பின் 2 கப் புளிக்– காத கெட்டி–யான தயிரை லேசாக கடைந்து சிறிது உப்பு, சர்க்–கரை கலந்து வைக்–கவு – ம். பரி–மா–றுவ – த – ற்கு முன், இந்த தயிரை அடுக்கி வைத்–துள்ள வடை–களின் மேலே ஊற்–றவு – ம். அதன் மேல் கருப்பு உப்பு, சீர–கத்–தூள், மிள–காய்த்–தூள், மல்லி, இனிப்பு புளிப்பு சட்னி ஊற்றி பரி–மா–ற–வும்.
பாஜா மூங் தால் ஆரஞ்சு சாஸ்
என்–னென்ன தேவை? சிறு பருப்பு - 1 கப், ஆரஞ்சு (சாறு எடுத்–தது) - 2, ப�ொடித்த ஆரஞ்சு த�ோல் - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - 1 டீஸ்–பூன், ப�ொடித்த இஞ்சி - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பச்சை ஏலக்–காய் - 1, பட்டை - 1 துண்டு, பிரிஞ்சி இலை - 1, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், நெய் - 1 டீஸ்–பூன், பச்–சை– மி–ள–காய் கீறி–யது - 2. எப்–ப–டிச் செய்–வ–து? பருப்பை சுத்–தப்–ப–டுத்தி ப�ொன்–னி–ற–மாக வறுத்து – ம். ஆரஞ்சை த�ோல் உரித்து அதன் தனியே வைக்–கவு உள்ளே இருக்–கும் வெள்ளை த�ோலை சுரண்டி எடுத்து விட்டு மேல் த�ோலை ப�ொடிக்–கவு – ம். இப்–ப�ோது பருப்பை
தேவை– ய ான தண்– ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்– து க் க�ொள்– ள – வு ம். ஒரு கடாயை சூடு செய்து அதில் எண்– ண ெய் வி ட் டு ச ர் க் – க ரை சேர்க்– க – வு ம். அது ப�ொரிந்து லைட் பிர– வுன் கல–ராக வரும் ப�ோது இஞ்சி, ஏலக்– காய், பட்டை, பிரிஞ்சி இலை, மஞ்–சள், மிள– காய்த்–தூள் சேர்க்–க– வும். சிறிது வதங்–கி–ய– தும் வெந்த பருப்பை சேர்க்– க – வு ம். இத்– து – டன் பச்–சை– மி–ளக – ாய், ப�ொடித்த ஆரஞ்சு த�ோல் சேர்க்– க – வு ம். அது வெந்து வரும் ே–பாது உப்பு, கெட்டி– யான ஆரஞ்சு சாறு சேர்த்து அடுப்பை அ னை த் து வி ட் டு நெய் விட்டு இறக்கி சாதம், ர�ொட்டி–யு–டன் பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
11
மார்–வாரி மிர்–சிகா ஆச்–சார்
என்–னென்ன தேவை? ஃப்ரெஷ்–ஷான பெரிய பஜ்ஜி பச்சை மிள–காய் - 1/2 கில�ோ, மஞ்–சள் ப�ொடி - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு ப�ொடி - 1/2 கப், காய்ந்த மாங்–காய் ப�ொடி - 1/4 கப், எலு–மிச்–சைச்–சாறு - 3/4 கப் (அ) 1 கப், மிள–காய்த்–தூள் - 1/2 கப், வெந்–த–யம் - 1 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, ச�ோம்–பு–/–க–ருப்பு சீர–கம் - 1 டீஸ்–பூன், இடித்த தனியா - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு எண்–ணெய் - 1 கப். °ƒ°ñ‹
12
எப்–ப–டிச் செய்–வ–து? பெரிய பஜ்ஜி மிள– காயை கழுவி சுத்–தம் செ ய் து து டை த் து ஃபேனில் காய விட–வும். பின் கீறி அதன் உள்ளே இருக்– கு ம் விதையை நீக்கி பூரண மசா–லாவை சேர்க்–க–வும். பூர–ணத்–திற்கு... – ாக கடுகை பச்–சைய ப�ொடிக்–க–வும். வெந்–த– யத்– தை – யு ம் ப�ொடிக்– க – வும். இத்–துட – ன் மிள–காய் தூள், உப்பு, மாங்–காய் தூள், ச�ோம்பு முழு– தாக, இடித்த தனியா, மஞ்–சள் தூள், கருப்பு சீர– க ம் யாவற்– றை – யு ம் சிறிது கடுகு எண்ெண– யில் கலந்து, கீறி வைத்– து ள்ள மி ள – க ா – யி ல் நிரப்–ப–வும். அப்–ப–டியே ஜாடி–யில் அடுக்–க–வும். அதன் மேல் எலு– மி ச்– சைச்– ச ாறு ஊற்– ற – வு ம். க டு கு எ ண் – ண ெ ய் ஊற்றி ஒரு வாரத்–தில் வெ யி – லி ல் வை த் து வைத்து எடுக்–க–வும்.
வின்–டர் மசாலா டீ
என்–னென்ன தேவை? ஒரு பெரிய டம்–ளர் தண்–ணீர், குங்– கு–மப்பூ - ஒரு சிட்டிகை, (மிளகு - 1/4 டீஸ்–பூன், ஏலக்–காய் பெரி–யது - 2, லவங்–கம் - 2) யாவற்–றை–யும் இடிக்–க– வும், டீத்–தூள் - 2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், இஞ்சி - ஒரு துண்டு அல்–லது சுக்–குப் ப�ொடி - ஒரு சிட்டிகை எப்–ப–டிச் செய்–வ–து? இவை அனைத்–தை–யும் தண்–ணீ– ரு–டன் சேர்த்து நன்–றாக க�ொதிக்க விட்டு மித–மான தீயில் பின் வடி–கட்டி சூடாக குளிர்–கா–லத்–தில் அருந்–து–வார்–
கள். இந்த டீ உடம்பை சூடாக்–கும். தெம்–பா–க–வும் இருக்–கும். குறிப்பு: பெரிய டம்–ளர் என்–பது நம் டம்–ள–ருக்கு 4 மடங்கு அதி–கம் உள்–ளது. அவர்–கள் ம�ோர், லஸ்ஸி, தண்–ணீர், பால், டீ ப�ோன்ற எதை–யும் பெரிய பெரிய கிளா–ஸில் அருந்–து– வார்–கள். வட இந்–திய – ா–வில் குளிர் மிக அதி–கம் இருக்–கும். பெரிய ஓட்டல் கடை–களில் இந்த டீ ஒரு கப் 100 ரூபாய் என்–றால் நம் வீட்டில் செய்து குடும்–பமே அருந்–த–லாம். °ƒ°ñ‹
13
கட்டா மீட்டா தஹி ர�ொட்டி (தயிர் ர�ொட்டி)
என்–னென்ன தேவை? மேல் மாவுக்கு: மைதா மாவு - 1 கப், தயிர் - 1 கப், நெய் - 1 கப், ஈஸ்ட் - ஒரு சிட்டிகை, சர்க்–கரை 2 கப், ர�ோஸ் வாட்டர் - 1 டீஸ்–பூன், பால் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? ஈஸ்ட் பெரிய கடை–களில் கிடைக்–கும். இதை ஒரு பாத்–தி–ரத்–தில் ப�ோட்டு சிறிது சூடான பால் சேர்த்து வைத்–தால் அது நுரைத்து விடும். 10 நிமி–டத்–திற்கு °ƒ°ñ‹
14
பின் இதை நன்– ற ாக சலித்த மைதா மாவு– டன் சேர்க்–க–வும். இத்–து– டன் நெய், தயிர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்–ணீர் விடா–மல் சப்– பாத்தி மாவு ப�ோல் பிசைந்து க�ொள்–ளவு – ம். சிறிது ஊற விட– வு ம். ஊறிய மாவில் இருந்து சிறிது மாவு எடுத்து உருட்டி ர�ொட்டி ப�ோல் இட்டு ேதாசைக்–கல்–லில் ப�ோட்டு எடுக்– க – வு ம். பின் சர்க்–க–ரை–யில் 3/4 கப் தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க விட்டு கம்–பிப் பாகு பதம் வந்– த – து ம் இறக்கி ர�ோஸ் வாட்டர் விட்டு ர�ொட்டி–க–ளைத் து ண் டு து ண் – ட ா க வெட்டி பாகில் ப�ோட்டு சி றி து ஊ றி – ய – து ம் எடுத்து வடித்து பரி–மா–ற– வும். ஜாம், சாஸு–டன் சேர்த்தால் சுவை–யாக இருக்– கு ம். குறிப்– ப ாக கு ழ ந் – தை – க ளு க் கு மிக–வும் பிடிக்–கும்.
ராஜ்மா காலா தால் மக்–னி– / –ராஜ்மா கறி என்–னென்ன தேவை? முழு கருப்பு உளுந்து - 1/4 கப், ராஜ்மா - 1 கப், வெங்–கா–யம் 2, தக்–காளி - 3, பட்டை - ஒரு சிறு துண்டு, கிராம்பு - 2, ஏலக்–காய் - 2, பிரிஞ்சி இலை - 2, மிள–காய் தூள், –த–னியா தூள் - தலா 1 1/2 டீஸ்–பூன், இஞ்–சி–-பூண்டு விழுது - 1 1/2 டீஸ்–பூன், வெண்–ணெய்–/ ஃப்–ரெஷ் கிரீம் - தலா 1 டேபிள்ஸ்– பூன், காய்ந்த கஸ்–தூரி மேத்தி - சிறிது, எண்–ணெய், உப்பு தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? ராஜ்– ம ாவை சுத்– த ப்– ப – டு த்தி 8 மணி நேர–மும், முழு கருப்பு உளுந்தை 4 மணி நேர– மு ம் தனித்– த – னி – ய ாக ஊற வைக்– க – வும். 8 மணி நேரத்–திற்கு பின் இரண்–டை–யும் ஒன்–றாக கலக்–க– வும். பின் குக்–க–ரில் எண்–ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்– காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்–க–வும். இத்–து–டன் வெங்– கா– ய ம், தக்– க ாளி விழு– தா க அரைத்து சேர்த்து வதக்–க–வும். இஞ்–சி-–பூண்டு விழு–தை–யும் நன்– றாக வதக்–க–வும். பின் மிள–காய், தனியா தூள்–கள் சேர்க்–க–வும்.
பச்சை வாசனை ப�ோன–தும், ஊறிய பருப்பு– களை சேர்க்–கவு – ம். தண்–ணீரு – ட – ன் பய–றுக – ள் அதி–கம் குழை–யா–மல் வேக விட–வும். 6-7 விசில் வரும் வரை வைத்து வெந்–த–தும் திறந்து உப்பு சேர்த்து ஒரு க�ொதி விட்டு கிரே–வி–யாக வந்–த–பி–றகு இறக்–க–வும். இறக்– கும் முன் வெந்–தய இலையை கையில் நசுக்கி சேர்க்– க – வு ம். சூடாக கிள– ற – வு ம். அதன் மேல் வெண்–ணெய், கிரீம் சேர்த்து இறக்– க – வு ம். சூடான தந்– தூ ரி, நாண், சப்–பாத்தி, ர�ொட்டிக்கு சூப்–பர் சைடிஷ். °ƒ°ñ‹
15
பஞ்–சாபி ரிச் சாவல் கீர் வித் நட்ஸ் அண்டு ட்ரை ஃப்ரூட்ஸ்
என்–னென்ன தேவை? பாசு–மதி அரிசி - 1/2 கப், பால் - 1 லிட்டர், கன்– டென்ஸ்டு மில்க் - 1/2 டின், பிஸ்தா, வால்–நட்ஸ், உலர்ந்த திராட்சை, பாதாம், முந்–திரி அனைத்– தும் தேவைக்கு, ஏலக்–காய்த்–தூள், குங்–கு–மப்பூ தேவைக்கு, சர்க்–கரை - 1/2 கப் அல்–லது தேவைக்கு, நெய் - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து–?– வெ–றும் கடா–யில் நட்ஸை வறுத்து, பின் உடைத்– துக் க�ொள்–ளவு – ம். அரி–சியை கழு–விக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் பாதி பாலு–டன் சிறிது தண்–ணீர் சேர்த்து மித–மான தீயில் வேக விட–வும். 1 முதல் 2 விசில் வந்–தால் ப�ோதும். பின் ஆறி–ய– °ƒ°ñ‹
16
தும் திறந்து மீதி உள்ள பால் சேர்த்து மேலும் காய்ச்–ச–வும். இது பாய– சம் பதம் வந்–தது – ம் சர்க்– – ம். ஏலக்– கரை சேர்க்–கவு காய்த் தூள், குங்–கும – ப்பூ சேர்த்து இத்–துட – ன் கன்– டென்ஸ்டு மில்க் சேர்த்து இது கெட்டி–யாக பாய–சம் பதம் வந்–தது – ம் இறக்கி, வறுத்து உடைத்த நட்– ஸை–யும், டிரை ஃப்ரூட்– ஸை– யு ம் சேர்த்து பரி– மா–றவு – ம். இதனை குளிர வைத்–துப் பரி–மா–ற–வும். மேலும் மேலும் வாங்கி சாப்–பிட வைக்–கும் இந்த கீர் மிக ருசி–யா–க–வும், ரிச்–சா–க–வும் இருக்–கும். சிறிது நட்ஸை நெய்–யில் வறுத்து அலங்– க – ரி க்– க – லாம். குறிப்பு: சிலர் அரி– சியை குக்–க–ரில் வைக்– கா–மல் ஒரு வாய–கன்ற பாத்– தி – ர த்– தி ல் பாலில் வேக– வி ட்டு செய்– வ ார்– கள்.
ஆப்–ரி–காட் அல்வா என்–னென்ன தேவை? ஆப்–ரி–காட் - 1/4 கில�ோ (2 கப் பழம் வரும்), சர்க்–கரை 1 1/2 கப் அல்–லது சிறிது கம்– மி – ய ாக, வறுத்து ப�ொடித்த முந்–திரி - 20, ஏலக்– காய்த் தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள் ஸ்பூன். எப்–ப–டிச் செய்–வ–து? ஆப்– ரி – க ாட்டை இ ர – வி ல் 8 ம ணி நேரம் ஊற வைத்து பின் கீறி விதையை நீக்கி விட்டு பழத்தை விழு–தாக அரைக்க வே ண் – டு ம் . ஒ ரு கடா–யில், விழு–தை– யும் சர்க்– க – ரை – யு ம் சேர்த்து கிள–ற–வும். அ வ் – வ ப் – ப� ோ து ந ெ ய் சே ர் த் – து க் க�ொண்டே கிள– ற – வும். இது கெட்டி– யாக அல்வா பதம் வரும் ப�ோது 10 முந்– தி– ரி யை உடைத்து
ப�ோட–வும். ஏலக்–காய்த்–தூள் ப�ோட–வும். மீதி உள்ள முந்– தி – ரி யை நெய் சேர்த்து இறக்கி அலங்– க – ரி த்து பரி–மா–ற–வும். குறிப்பு: காய்ச்–சலு – க்கு நல்–லது. இந்த பழம் பத்–திய குணம் வாய்ந்–தது. பஞ்–சா–பில் வய–தா–ன–வர்–களுக்–கும், குழந்–தைக – ளுக்–கும் இர–வில் ஊற வைத்து தேன் கலந்து க�ொடுப்–பார்–கள். °ƒ°ñ‹
17
காலா சன்னா மசாலா
என்–னென்ன தேவை? கருப்பு க�ொண்–டைக்–க–டலை - 250 கிராம், வெங்– க ா– ய ம் - 4, உரு– ளை க் கி – ழ – ங்கு பெரி–யது - 1, தக்–காளி - 4, இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்–பூன், தனி– யாத்–தூள் - 2 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், சுக்கு தூள் - 1/4 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய இஞ்சி, நீள–வாக்– கில் கீறிய பச்சை மிள– க ாய், உப்பு, எண்–ணெய், மல்–லித்–தழை - தேவைக்கு, நெய் - 2 டேபிள் ஸ்பூன், சீர–கம் - சிறிது, கரம் மசாலா - ஒரு சிட்டிகை, காய்ந்த °ƒ°ñ‹
18
மாங்–காய் தூள் - ஒரு சிட்டிகை எப்–ப–டிச் செய்–வ–து? கருப்பு க�ொண்–டைக்–கட – லை 8 மணி நேரம் ஊற வைத்து குக்–க– ரில் ப�ோட்டு 20 நிமி–டம் அல்–லது 6 விசில் வரை வேக வைக்–க–வும். வெங்–கா–யம், பூண்டு, இஞ்–சியை அரைத்–துக் க�ொள்–ள–வும். தக்–கா– ளியை தனி–யாக அரைக்–கவு – ம். ஒரு கடா–யில் நெய் விட்டு சூடாக்கி, சீர– கம் அரைத்த வெங்–கா–யம் சேர்த்து நன்கு சிவக்–கும் வரை வதக்–கவு – ம். பின் தக்–காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை ப�ோகும் வரை வதக்கி இத்– து – ட ன் உப்பு மற்ற தூள்–கள் சேர்த்து வதக்கி நெய் ( எ ண் – ண ெ ய் ) பி ரி ந் து வ ரு ம் ப�ோது மீண்– டு ம் வேக வைத்த மூக்–க–ட–லையை சேர்த்து மேலும் குக்–க–ரில் 1 முதல் 2 விசில் வந்–த– தும் இறக்கி இரண்–டா–வது முறை க�ொண்– டை க்– க – ட – லையை வேக வைக்–கும் ப�ோது கரம் மசாலா சேர்த்து வேக வைத்து மசித்த உரு– ளை க்– கி – ழ ங்கை சேர்த்து வேக விட்டு இறக்கி அதன் மேல் மல்லித்தழை தூவி பரி–மா–ற–வும். பச்சை மிள–காய், நறுக்–கிய இஞ்சி ப�ோட்டு அலங்–க–ரிக்–க–வும்.
பைனாப்–பிள் + ஆப்–பிள் ரப்டி ஜிலேபி என்–னென்ன தேவை? பால் - 1 லிட்டர் (சுண்– ட க் காய்ச்– சி – யது), ரப்டி - கெட்டி– யாக 1/2 கப் (கன்– டெ ன் ஸ் டு மி ல் க் ேசர்த்– த து), ஆப்– பிள் (அ) அன்–னாசி ஸ்லைஸ் - 12, குங்– கு–மப்பூ - 1 சிட்டிகை. ஜிலே–பிக்கு: மைதா மாவு - 200 கிராம், கடலை மாவு - 1 டே பி ள் ஸ் – பூ ன் , ச�ோடா உப்பு - ஒரு சிட்டிகை, ச�ோள மாவு - 2 டேபிள்ஸ்– பூன், தயிர் பால்
சேர்த்து - 1 கப், பால் சிறிது சூடாக இருக்க வேண்– டும். இவை–யா–வும் இட்லி மாவு பதத்–திற்கு கரைத்து 12 மணி நேரம் அப்–ப–டியே வைக்–க–வும். எண்–ணெய் / நெய் - ப�ொரிப்–பத – ற்கு. சர்க்–கரை பாகிற்கு: சர்க்–கரை - 250 கிராம். எப்–ப–டிச் செய்–வ–து? சர்க்–கரை 250 கிராமை 1/2 கப் தண்–ணீர் சேர்த்து சிறிது குங்–கும – ப்–பூைவ சேர்த்து கம்பி பத–மாக க�ொதிக்க விட்டு இறக்கி வைக்–கவு – ம். ரப்டி செய்–வதா – ன – ால் பாலை சுண்டக் காய்ச்சி கெட்டி– ய ாக எடுத்து வைக்–க–வு ம். இத்–து–டன் 1/2 கப் மில்க்–மெய்டு கலந்து வைக்–க–வும். இப்–ப�ோது பைனாப்–பிள்–/–ஆப்–பிள் அனைத்–தை–யும் மெல்–லிய – தா – க வெட்டி ஒவ்–வ�ொன்–றாக ஜிலேபி மாவில் முக்கி சூடான எண்ெ–ணய் அல்–லது நெய்–யில் ப�ொரித்து எடுத்து கர–க–ரப்–பாக வந்–த–தும், செய்து வைத்–துள்ள சூடான பாகில் 10 நிமி–டம் ப�ோட்டு வைத்து எடுத்து தட்டில் அடுக்கி அதன் மேல் ரப்–டியை ஊற்றி டிரைஃப்– ரூட்ஸ் நட்ஸ் க�ொண்டு அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். ரிச்–சான, சூப்–பரா – ன இந்த ரப்டி ஜிலேபி பார்ட்டி–களி– லு ம் , வி ரு ந் – தி – ன ர் வரு–கையி – ன் ப�ோதும் செய்து அசத்–த–லாம். பஞ்–சா–பி–கள் அதி–கம் நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் கிடைப்–ப–தால் அடிக்– கடி செய்–யும் ஸ்வீட் டிஷ். மேலும் அலங்–க– ரிக்க வெள்ளி ஜரிகை ஒட்ட–லாம். °ƒ°ñ‹
19
முழு தம் காலிஃ–ப்ள–வர் என்–னென்ன தேவை? நடுத்–தர காலிஃப்–ள–வர் - 1, பெரிய வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1 விழு–தாக அரைக்– க – வு ம், இஞ்– சி – - பூண்டு விழுது - தலா 1 டீஸ்–பூன், மிள–காய்த் தூள் - 1 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1/2 டீஸ்– பூன், மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், கரம் –ம–சாலா தூள் - ஒரு சிட்டிகை, முந்–திரி வறுத்–தது - 10, விழு–தாக அரைத்–தது 10, எண்–ணெய், உப்பு - தேவைக்கு, பிரிஞ்சி இலை - 1, சீர–கத்–தூள் - 1 டீஸ்– பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், அலங்–க–ரிக்க - பச்–சை–மி–ள–காய், விருப்–பப்–பட்டால் பச்–சைப்–பட்டாணி, சீஸ் - 1/4 கப், மல்– லித்–தழை - சிறிது, துரு–விய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன். எப்–ப–டிச் செய்–வ–து? காலிஃப்–ளவ – ரை சுத்–தப்–படு – த்தி சிறிது நேரம் முழு–தாக உப்பு, மஞ்–சள் தூள் தண்–ணீ–ரில் ப�ோட்டு வைக்–க–வும். ஒரு பெரிய பாத்–தி–ரத்–தில் தண்–ணீர் விட்டு க�ொதிக்க விட–வும். இந்த முழு பூவை அதில் ப�ோட்டு 2 நிமி–டம் மூடி ப�ோட்டு வேக விட–வும். பூ பாதி வெந்து இருக்க வேண்– டு ம். பின் மெது– வ ாக வடித்து பூவை மட்டும் எடுத்து வைக்–க–வும். கடா– யில் எண்–ணெய் விட்டு சிறிது சீர–கம் சேர்த்து தாளித்து அதில் வெங்– க ாய விழுதை சேர்த்து நன்கு வதக்–கவு – ம். பின் தக்–காளி விழுது, இஞ்சி, பூண்டு விழுது, °ƒ°ñ‹
20
உப்பு, மிள– க ாய்த்– தூ ள், மற்ற எல்லா தூள்–க–ளை–யும் ஒவ்–வ�ொன்– றாக ேசர்த்து வதக்கி, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, முந்–திரி விழு–தை–யும் சேர்த்து எண்–ணெய் பிரி–யும் வரை கிரே–விய – ாக வந்–தது – ம், வடித்து வைத்த க�ோபியை ஒரு குழி–யான கிளாஸ் ப�ோல் வைத்து இந்த கிரே–வியை மேலே ஊற்–ற– வும். அதன் மேல் பச்–சைப – ட்டாணி, துரு–விய சீஸ் சேர்த்து அவ–னில் 10 நிமி–டம் பேக் செய்–ய–வும் அல்–லது மைக்–ர�ோவேவ் –அ–வ–னில் கீர், சீஸ் கரை–யும் வரை வைத்து எடுத்து முந்–திரி பச்–சை– மி–ள–காய், மல்்லித் தழை க�ொண்டு அலங்–க–ரித்துப் பரி–மா–ற–வும்.
க�ோவா பீஸ் மசாலா
என்–னென்ன தேவை? ஃப்ரெஷ் பச்– சை ப் – ப ட்டாணி 1/2 கில�ோ, சர்க்–கரை ப�ோடாத பால்– க�ோவா - 200 கிராம், ஏலக்–காய் - 2, பட்டை - 1 துண்டு, லவங்–கம் - 4, வெங்–கா–யம் (பெரி–யது) - 2, தக்–காளி (பெரி–யது) - 1, தனி–யாத்–தூள் - 2 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1 டீஸ்–பூன், மிள–குத்–தூள் - 1/4 டீஸ்–பூன், கரம்– ம–சா– லாத் தூள் - ஒரு சிட்டிகை, மிள–காய்த் தூள் - 1 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள், உப்பு - தேவைக்கு, அலங்–க–ரிக்க முந்–திரி - 10, மல்–லித்–தழை, நெய் அல்–லது வெண்–ணெய், தயிர் - 1/4 கப், சர்க்–கரை - ஒரு சிட்டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து? ப ச் – சை ப் – ப ட்டா – ணியை த�ோலு– ரி த்து வேக வைத்–துக் க�ொள்– ள– வு ம். பால்– க� ோ– வ ா– வை– யு ம் தயி– ரை – யு ம் கடை– ய – வு ம். கடா– யி ல் ந ெ ய் / – வெ ண் – ண ெ ய் விட்டு சூடாக்கி சீர–கம், பட்டை, லவங்–கம், ஏலக்– காய் சேர்த்து ப�ொரித்து இத்–து–டன் வெங்–கா–யம், தக்–கா–ளியை அரைத்து சேர்க்–க–வும். அது நன்கு வதங்–கிய – து – ம் நெய் தனி– யாக பிரி–யும் ப�ோது, க�ோவா தயிர் விழுதை சேர்த்து மித–மான தீயில் வதக்–கவு – ம். தூள்–கள் அனைத்–தையு – ம் சேர்க்–க–வும். அவை பொரிந்–த–தும் பச்– சைப்–பட்டாணி தேவை–யான அளவு தண்–ணீர், உப்பு சேர்த்து க�ொதிக்க விட–வும். இது நெய்/–வெண்–ணெய் பிரிந்து கிரே– வி – ய ாக வரும்– ப� ோது சர்க்– க ரை, மல்லித்தழை, முந்– தி ரி வறுத்–தது. மேல் தூவி அலங்–கரி – த்துப் பரி–மா–ற–வும். குறிப்பு: இது மிக ரிச்–சான டிஷ். இதை ர�ொட்டி, ஸ்டீம்டு பாஸ்–மதி சாதம், நாண், புர�ோட்டா, புல்–கா–வுட – ன் சாப்–பி–டு–வார்–கள். °ƒ°ñ‹
21
கடுகுக் கீரை மசி–யல் (சர்–ச�ோன் கா சாக்) என்–னென்ன தேவை? ( ப ெ ரி ய க டை – களில் கிடைக்– கு ம்) கடுகுக் கீரை - ஒரு கட்டு, பாலக் கீரை ஒரு கட்டு , பச்–சை– மி–ள– காய் - 4-6, இஞ்சி - 1 துண்டு, வெங்–கா–யம் - 1 (ப�ொடிக்– க – வு ம்), ந ெ ய் - 2 டே பி ள் ஸ்பூன், தக்–காளி பெரி– யது - 1, மிள–காய்த்– தூள் - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–ச ாலா தூள் 1/4 டீஸ்–பூன், இஞ்–சி– பூண்டு விழுது - தலா 1 டீஸ்–பூன், உப்–பில்–லாத வெண்–ணெய் - சிறிது, உப்பு - தேவைக்கு, எலு–மிச்–சைச்– சாறு - 1 டீஸ்– பூ ன், சர்க்– க ரை-1/2 டீஸ்பூன்– இந்தக் கீரையை ச�ோள ர�ொட்டி–யுட – ன்–தான் பரி–மாற வேண்–டும். எப்–ப–டிச் செய்–வ–து? கீ ரை – க ளை சு த் – த ம் செ ய் து ப�ொடித்து க�ொதிக்–கும் தண்–ணீ–ரில் – வு – ம். சிறிது சர்க்–கரை ப�ோட்டு வேக–விட கீரை சீக்–கிர– ம் வெந்து விடும். உடனே எடுத்து ஐஸ் தண்– ணீ – ரி ல் ப�ோட்டு வைத்–தால் கீரை–யின் நிறம் மாறா–மல் °ƒ°ñ‹
22
பச்–சைய – ாக இருக்–கும். பின் இத்–துட – ன் பச்சை மிள–காயை சேர்த்து மிக்–ஸியி – ல் அடித்து வைத்–துக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் நெய் விட்டு, வெங்–கா–யம் வதக்கி அது கண்–ணாடி ப�ோல் வதங்– கி–யது – ம் இஞ்–சி-–பூண்டு விழுது சேர்த்து அது ப�ொரிந்–த–தும் மிள–காய்த்–தூள், கரம்– ம–சாலா தூள், உப்பு சேர்த்து வதக்கி அத்–துட – ன் ப�ொடித்த தக்–காளி கடை–சி–யாக கீரையை சேர்த்து ஒரு க�ொதி வந்–த–தும் இறக்கி வெண்–ணெ– யு–டன், எலு–மிச்–சைச்–சாறு சேர்த்துப் பரி–மா–ற–வும்.
பச்–சைப் பட்டாணி கேக் என்–னென்ன தேவை? ஃப்ரெஷ் பச்–சைப் பட்டாணி - 1 கப், கடலை மாவு - 1 கப், ரவை - 4 டேபிள்ஸ்–பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிள–காய் - 4, எலு–மிச்–சைச்ச – ாறு - 2 டேபிள்ஸ்–பூன், ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்– பூன், எண்–ணெய் - 4 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு. தாளிப்–ப–தற்கு... எள்ளு, சீர–கம், பெருங்–கா–யம் - தேவைக்கு, வெது– வெ–துப்–பான பால் - 1/2 கப்.
எப்–ப–டிச் செய்–வ–து? பதப்–படு – த்–திய பச்–சைப்– பட்டாணி, பச்– சை – மி– ள – க ாய், இஞ்சி சேர்த்து மிக்–ஸியி – ல் அரைத்–துக் க�ொள்–ளவு – ம். கடலை மாவு, உப்பு, ரவை, எலு–மிச்– சைச்–சாறு சேர்த்து கலக்–க–வும். இத்– து–டன் முத–லில் அரைத்த பட்டாணி விழுதை சேர்க்–க–வும். ஈஸ்டை சிறிது வெது– வெ – து ப்– ப ான தண்– ணீ ர் அல்– லது பாலில் ஊற வைத்து இது ப�ொங்– கி–ய–தும் இந்த கல–வை–யில் சேர்த்து நன்கு கலக்–க–வும். 2 டேபிள் ஸ்பூன் எண்– ண ெ– யை – யு ம் சேர்த்து கலக்–கவு – ம். ஒரு குக்–கர் தட்டில் எண்– ண ெய் தடவி (மீதி உள்ள எண்– ண ெ ய் ) வெ யி ட் ப�ோடா– ம ல் ஆவி– யில் வேக விட்டு எடுக்–கவு – ம். வெந்து ஆறி–யது – ம் தாளித்து க�ொ ட் டி பி ன் துண்டு–கள் ப�ோட்டு விருப்–பம – ான சட்னி சாஸு–டன் பரி–மா–ற– வும். காலை, மாலை நேர டிபன். °ƒ°ñ‹
23
ஸ்பைசி கார்ன் புர�ோட்டா என்–னென்ன தேவை? பு ர� ோ ட்டா வி ற் கு த ேவை – ய ா ன க�ோதுமை மாவு - 2 கப், மிள–காய்த் தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய்–/–நெய்–/–வெண்–ணெய் - 1 டீஸ்–பூன் ஃப்–ரெஷ் ச�ோள முத்–து–கள் - 1 கப், மைதா - 2 டீஸ்–பூன், பால் - 1/2 கப், வெண்–ணெய் - 2 ேமஜைக்–க–ரண்டி, (பச்–சை–மி–ள–காய் - 1, பூண்டு - சிறிது) ப�ொடித்–தது, சீஸ் - 1/4 கப் துரு–வி–யது, கஸ்–தூரி மேத்தி - சிறிது, கரம் மசாலா - ஒரு சிட்டிகை, மிள–குத்–தூள் - சிறிது, விருப்–பப்–பட்டால் எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டீஸ்–பூன், மல்–லித்–தழை - ப�ொடித்–தது. எப்–ப–டிச் செய்–வ–து? புர�ோட்டா–விற்கு க�ொடுத்–ததை உப்பு ப�ோட்டு பிசைந்து 10 நிமி–டங்கள் மூடி வைக்– க–வும். ச�ோள– முத்–துகளை சுத்–தம் செய்து நன்–றாக வேக வைத்து பின் வடித்–துக் க�ொள்–ள–வும். ஒரு பாத்–தி–ரத்–தில் மைதா, பால், சீர–கம் கலந்து வைக்–க–வும். ஒரு கடா–யில் வெண்–ணெய் சேர்த்து சூடாக்கி, ப�ொடித்த பச்–சைமி – ள – க – ாய், கஸ்–தூரி மேத்தி, சீர–கம், பூண்டு, மிளகுத் தூள், கரம்– ம–சாலா தூள், மிள–காய்த்–தூள், தேவை–யான உப்பு சேர்த்து வதக்க வேண்–டும். இத்–து–டன் வேக வைத்த மக்–காச்–ச�ோ–ளத்தை சேர்த்து கலக்– க – வு ம். இத– னு – ட ன் மைதா, பால் கல– வை – யை – யு ம் சேர்த்துக் கிள– ற – வு ம். °ƒ°ñ‹
24
இது கெட்டி பதம் வந்– த – து ம் இறக்கி வைக்–க–வும். இப்–ப�ோது பிசைந்து வைத்த புர�ோட்டா மாவில் இருந்து உருண்–டை–கள் செய்து தேய்த்து வெண்–ணெய் தடவி இரண்டு பக்–க–மும் நல்ல ெமாறுெ–மா–றுப்–பான புர�ோட்டா– வாக சுட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்்–துக் க�ொள்–ள–வும். அதன் மேல் ச�ோள கல–வையை பரப்பி வைத்து மல்லி, சீஸ் க�ொண்டு அலங்–க–ரித்து விருப்–பப்–பட்டால் எ லு – மி ச ்சை ச ்சா று சே ர் த் து சூடாகப் பரி–மா–ற–வும்.
ல�ோபியா (காரா–மணி கறி) என்–னென்ன தேவை? வெள்ளை காரா–மணி - 1 கப், சீர– கம் - 1/2 டீஸ்–பூன், (வெங்–கா–யம் - 1, தக்–காளி - 1, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு பல் - 4, மல்–லித்–தழை - சிறிது அனைத்– தை – யு ம் ப�ொடி– ய ாக நறுக்– கவும்), மஞ்–சள் தூள் - ஒரு சிட்டிகை, தனியா தூள் - 1 1/2 டீஸ்–பூன், கரம்– ம–சாலா தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், நெய் அல்–லது எண்–ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? காரா–ம–ணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து சுத்–தப்–
ப–டுத்தி வைக்–க–வும். பின் குக்–கரை காய வைத்து நெய் அல்–லது வெண்– ணெய் சேர்த்து சீர– க ம் தாளித்து, இத்–து–டன் ப�ொடித்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்–கவு – ம். பின் வெங்–கா–யம் வதக்கி அது வதங்–கிய – து – ம் ப�ொடி–யாக நறுக்–கிய தக்–காளி, உப்பு, தூள்–கள் அனைத்–தை–யும் சேர்த்து வதக்–கி–ய– பின் ஊறிய காராமணி சேர்த்து தேவை–யான தண்–ணீர் விட்டு 2 முதல் 3 விசில் வந்–த–தும் இறக்க வேண்–டும். அதன்–மேல் 1 டீஸ்–பூன் நெய், மல்– லித்– தழை தூவி அலங்– க – ரி க்– க – வு ம். இந்த கிரே– வி யை ர�ொட்டி, நாண், புல்–கா–வு–டன் பரி–மா–ற–லாம்.
°ƒ°ñ‹
25
கரேலா புர�ோட்டா
என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 200 கிராம் அல்–லது 2 பெரிய கப், பாகற்–காய் (ெமல்–லி–ய–தாக சீவி–ய–து/ பெரி–ய–தாக துரு–வி–ய–து / ப�ொடித்– தது) - 1 கப், உப்பு, எண்– ண ெய் - தேவைக்கு. மிள–காய்த்–தூ ள் - 1 1/4 டீஸ்– பூ ன், சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், எலு–மிச்–சைச் சாறு - 1 டீஸ்–பூன் அல்–லது மாங்–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், கரம்– ம–சா–லா– தூள் - ஒரு சிட்டிகை எப்–ப–டிச் செய்–வ–து? பூர– ண ம்: பாகற்– க ாயை கழுவி சுத்–தப்–ப–டுத்–தி–ய–பின் மெல்–லி–ய–தாக சீவி ஒரு காய்ந்த சுத்– த – ம ான துணி– யில் சிறிது நேரம் காயப் ப�ோட– வும். அது சிறிது காய்ந்– த – பி ன் அத்– °ƒ°ñ‹
26
து– ட ன் தூள்– க ள், உப்பு, சர்க்– க ரை, எலு– மி ச்– சைச் – ச ாறு அல்– ல து மாங்– காய்த்– தூ ள் சேர்த்து நன்கு கலந்து ஸ்டஃப் செய்– வ – த ற்கு வைக்– க – வு ம். இப்– ப� ோது க�ோதுமை மாவில் 1 டீஸ்– பூ ன் எண்– ண ெய், தேவை– ய ான உப்பு சேர்த்து சிறிது தண்– ணீ – ரு – டன் சப்– ப ாத்தி பதம் பிசைந்து மூடி வைக்கவும். பின் உருண்–டை–க–ளாக எடுத்து சிறிது செப்பு ப�ோல் செய்து சிறிது பாகற்–காய் பூர–ணத்தை நடுவே வைத்து மூடி உருட்டி தேய்த்து சூ ட ா ன எ ண் – ணெ– யி ல் ப�ொரித் – –டுக்–க–வும். தெ குறிப்பு: ப�ொரிக்க விரும்– ப ா– த – வர்–கள் பாகற்–காயை சிறிது வதக்கி பூர–ணத்–தில் சேர்த்து புர�ோட்டா–வாக சுட–லாம்.
ஸ்டஃப்டு மேத்தி க�ோவா புர�ோட்டா என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 2 கப், சர்க்– க ரை இல்– லாத க�ோவா - 1/2 கப், வெந்–த– யக்– கீ ரை ஆய்ந்து சுத்– த ம் செய்து ப�ொடித்–தது - 1 கப், சீர–கம் - 1 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், புளிப்பு இல்–லாத தயிர் - 1/2 கப், பச்– சை – மி – ள – க ாய் மிக மிக ப�ொடி–யாக நறுக்–கி–யது - 2, சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, நெய் அ ல் – ல து எ ண் – ண ெ ய் தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? மே ல் ம ா வி ற் கு . . . க�ோதுமை மாவு, உப்பு, சிறிது நெய் சேர்த்து சப்– ப ா த் தி ப த ம் பி சை ந் து 1 5 நி மி – ட ங்க ள் மூ டி வைக்–க–வும். பூர–ணத்–திற்கு... வெந்–த– யக் கீரையை சுத்–தம் செய்து ப�ொடித்து சிறிது நெய்–யில் வதக்கி இறக்கி இத்–து–டன் உ ப் பு , ம ஞ் – ச ள் தூ ள் , சர்க்–கரை, மிள–காய் தூள்,
சீர– க ம், கெட்டித் தயிர், நெய் 1 டீஸ்– பூ ன், பச்சை மிள–காய் இத்–து–டன் க�ோவா–வை–யும் சேர்த்து கெட்டி–யாக கலந்து வைக்–கவு – ம்.மேல் மாவில் இருந்து ஒரு புர�ோட்டா–வுக்கு வேண்–டிய மாவை எடுத்து உருட்டி மத்–தி–யில் செப்பு மாதிரி செய்து பூர–ணத்தை ஒரு டேபிள்ஸ்–பூன் எடுத்து அதன் உள் வைத்து இழுத்து மூடி, உருட்டி புர�ோட்டா–வாக அழ–காக வட்ட–மாக அல்–லது சது–ரம – ாக தேய்த்து தவாவை சூடாக்கி இரண்டு பக்–க–மும் நெய் தடவி சுட்டு எடுத்து சூடாக தயிர், ஊறு–கா–யு–டன் பரி–மா–ற–வும். இது பஞ்–சா–பிய – ர்–களின் ஸ்பெ–ஷல் மற்–றும் சர்க்–கரை உள்–ள–வர்–களும் சாப்–பி–டலா – ம். °ƒ°ñ‹
27
ஆலு பாதாம் டிக்கி
என்–னென்ன தேவை? வேக வைத்து த�ோலு–ரிக்–கப்–பட்ட உரு– ளை க்– கி – ழ ங்கு - 250 கிராம், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், சாட் மசாலா - 2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, பெருஞ்– சீ–ரக – ம் - 1/2 டீஸ்–பூன், சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், (க�ொத்–த–மல்லி - 1 டேபிள் ஸ்பூன், பச்–சை–மி–ள–காய் - 2)ப�ொடி– யாக நறுக்–கவு – ம், சீவப்–பட்ட பாதாம் - 4 டேபிள்ஸ்பூன், நெய் - தேவைக்கு, அலங்–க–ரிக்க... முழு–தாக 10 பாதாம் பாதி–யாக வெட்டப்–பட்டது. °ƒ°ñ‹
28
எப்–ப–டிச் செய்–வ–து? வெந்த உரு–ளைக்– கி–ழங்கை மைய மசித்– துக் க�ொள்–ள–வும். ஒரு கடா–யில் நெய் விட்டு தேவை– ய ான அளவு பெருஞ்–சீ–ர–கம், பச்சை மி ள க ா ய் ப� ோ ட் டு வ த க் – க – வு ம் . இ த் – து – டன் மஞ்– ச ள் தூள், மிள–காய்–தூள், சீர–கத்– தூள், உப்பு ப�ோட– வும். பாதாம் சீவல் பாதி அளவு ப�ோட– வும். இத்–து–டன் மசித்த உரு– ளை க்– கி – ழ ங்கை சேர்த்து நன்கு கலந்து ப �ொ டி த்த ம ல் லி சேர்த்து மித–மான தீயில் கிளறி இறக்– குங்–கள். ஆறி–யது – ம் சிறு சிறு வட்டங்–க– ளா–கத் தட்டி பாதாம் சீவல் அதன் மேல் தூவி அழுத்தி, அதன் மேல் பாதி–யாக வெட்ட– ப்பட்ட பாதாமை பதித்து சிறிது நெய் விட்டு தவா–வின் மேல் வைத்து டிக்–கி–க–ளாக இரண்டு பக்–க–மும் சிறிது சிவக்–கும் வரை மித– மான தீயில் ப�ொரித்து எடுத்து சாட் மசாலா தூவி பரி–மா–ற–வும். பாதாமை பதித்து ப�ொரிக்க பிடிக்–கா–த–வர்–கள் அலங்–க–ரிப்–பத – ற்கு பதிக்–க–லாம்.
ஹரி–யாலி பனீர் என்–னென்ன தேவை? பனீர் க்யூப்ஸ் (சதுர துண்–டுக – ள்) 500 கிராம், கெட்டி–யான தக்–காளி - 1, பெரிய வெங்–கா–யம் - 1, (பாடி–யாக நறுக்–கி–யது), பெரிய குடைமி–ள–காய் - 1 சதுர துண்–டங்–க–ளாக வெட்ட–வும், இஞ்–சி–-பூண்டு விழுது - தலா 1 டீஸ்– பூன், கரம்–ம–சாலா - 1/2 டீஸ்–பூன், ரீபைண்டு ஆயில் - தேவைக்கு, தயிர் (துணி–யில் த�ொங்–க–விட்ட கெட்டித் தயிர்) - 2 டேபிள்ஸ்–பூன், கிரீம் - 1 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - 1 டீஸ்–
பூன், வறுத்து ப�ொடித்த சீர–கத்–தூள் - 2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்லி, புதினா தழை விழுது, மாங்–காய்–தூள் - 1/2 டீஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்– ணெய், வெண்–ணெய் - தேவைக்கு, பாலக்–கீரை விழுது - 1/2 கப், பச்–சை– மி–ள–காய் விழுது - 2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வ–து? பனீ– ரு – ட ன் எல்– லா – வ ற்– றை – யு ம் சேர்த்து கலந்து ஒரு வெண்–ணெய் தட–விய பேக்–கிங் டிரே–யில் வைத்து 1/2 மணி நேரம் அப்–ப–டியே வைத்து அது மசா–லா–வு–டன் ஊறி–ய–தும் பேக் செய்–ய–வும் அல்– ல து மைக்– ர� ோவேவ் –அ–வ–னில் பச்சை வாசனை ப�ோகும்–வரை வேக வைக்– க– வு ம் அல்– ல து தவா– வி ல் வெ ண் – ண ெ ய் ப� ோ ட் டு கலந்து வைத்த ஹரியாலி பனீரை மித– ம ான தீயில் இரண்டு பக்–க–மும் பச்சை வாசனை ப�ோகும் வரை வேக விட்டு மீண்–டும் திருப்பி ப�ோட்டு ஒவ்– வ�ொ ன்– ற ாக எடுக்– க – வு ம். இதை அப்– ப – டியே சாப்–பிடு – வ – ார்–கள். கலர் பவு–ட–ருக்கு பதில் மஞ்–சள் தூள் சேர்க்–க–லாம். °ƒ°ñ‹
29
பாதாம் லஸ்ஸி
என்–னென்ன தேவை? கெட்டித் தயிர் - 2 கப், தண்–ணீர் - 1 கப், சர்க்–கரை - 2 டேபிள் ஸ்பூன் அல்–லது தேவைக்கு, அலங்–க–ரிப்– ப–தற்கு பாதாம் சீவல், ஏலக்–காய்த்–தூள் - ஒரு சிட்டிகை, இனிப்பு இல்–லாத க�ோவா - 50 கிராம், ஊற வைத்த பாதாம் - 10, காய்ச்–சிய பால் - 1 டம்–ளர், உப்பு தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? சிறிது பாலில் பாதாமை ஊற வைத்து த�ோலு–ரித்து °ƒ°ñ‹
30
விழு– தா க அரைத்– துக் க�ொள்–ளுங்–கள். காய்ச்சி ஆற வைத்த பால், கெட்டித் தயிர், தண்–ணீர், சர்க்–கரை, ஏ ல க் – க ா ய் த் – தூ ள் ம சி த் து ப ா லி ல் கரைத்த க�ோவா ய ா வ ற் – றை – யு ம் பானை–யில் ப�ோட்டு தேவை–யான உப்பு சேர்த்து மத்– தால் – ம் அல்–லது கடை–யவு மிக்–ஸி–யில் அடிக்–க– வும். நுரைத்து வந்–த– தும் பெரிய டம்–ளரி – ல் நுரை–யு–டன் ஊற்றி, ப ாதா ம் சீ வ ல் க�ொண்டு அலங்–க– ரித்து குளிர வைத்து பரி–மா–றுங்–கள். மிக மி க சு வை – ய ா க இ ரு க் – கு ம் இ ந்த ப ாதா ம் ல ஸ் ஸி . ே ஹ ா லி யி ன் – ர்– ப�ோதும் விருந்–தின களுக்–கும் பரி–மா–று– வார்–கள். எப்–ப�ோ–தா– வது நாமும் இதைச் – ம். செய்–யலா
ஜர்தா புலாவ் என்–னென்ன தேவை? பாஸ்–மதி அரிசி முதல் ரகம் - 2 கப், பாதாம் - 20, முந்–திரி - 20, நெய் - 4 டேபிள்ஸ்–பூன், குங்–கு–மப்பூ - ஒரு சிட்டிகை, சர்க்–கரை - 1/2 கப், ஜாதிக்–காய் தூள் - 1/4 டீஸ்–பூன், ஃப்ரெஷ் பச்சை ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், பால் - 1/2 கப், உலர்ந்த திராட்சை - 20-30, உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வ–து? பாதாம், முந்–திரியை உடைத்–துக் க�ொள்–ளவு – ம். பின் நெய்–யில் வறுத்துக் க�ொள்–ளவு – ம். பாதி புலா– விற்கு, பாதி அலங்–க–ரிப்–ப–தற்கு. குங்–கு–மப்–பூவை பாலில் கரைத்து வைக்–கவு – ம். இப்–ப�ோது பாஸ்–மதி
அரி– சி யை சிறிது நேரம் ஊற வைத்து வடித்து பின் உதிரி உதி– ரி – ய ாக வடித்– து க் க�ொள்– ள – வு ம். இப்–ப�ோது ஒரு வாய–கன்ற கன– ம ான பாத்– தி – ரத ்தை அடுப்–பில் வைத்து அதில் நெய் விட்டு சாதத்தை சேர்த்து மித–மான தீயில் – ப்பூ பாலு– வைத்து குங்–கும டன் சேர்த்து சர்க்–கரை, உப்பு, வறுத்த பாதி முந்– திரி, பாதாம், திராட்சை, ஏலக்–காய்த்–தூள், ஜாதிக்– க ா ய் த் – தூ ள் சே ர் த் து மெது–வாக கிளறி அரிசி உடை– ய ா– ம ல் கலந்து சிறிது நேரம் அடுப்– பி ல் வைக்–க–வும். குறிப்பு: அடிப்– பி – டி க்– கும் என்ற பயம் இருந்– தால் ஒரு தவாவை அடுப்– பின் மேல் வைத்து பின் இந்த புலாவ் பாத்–திரத – ்தை அதன் மேல் வைத்து மூடி 2 நிமி–டங்கள் தம் விட–வும். சர்க்– க – ரை – யு – ட ன் சாதம் கரைந்து பள– ப – ள ப்– ப ாக இருக்– கு ம். நட்ஸ் தூவி பரி–மா–ற–வும். °ƒ°ñ‹
31
Supplement to Kungumam Thozhi September 1-15, 2015. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363.
ட�ோஃபு கட்–ெலட் என்–னென்ன தேவை? ச�ோயா பனீர் (Tofu) - 250 கிராம், உரு–ளைக்– கி–ழங்கு வேக வைத்து மசித்–தது, சில்லி சாஸ், மிளகுத் தூள், உப்பு - தேவைக்கு, பிரெட் துண்–டு–கள் - 6, மேலே தூவு–வ–தற்கு கருப்பு உப்பு அல்–லது சாட் மசாலா, ப�ொரிப்–ப–தற்கு எண்–ணெய். எப்–ப–டிச் செய்–வ–து? ட� ோ ஃ பு வை ப ெ ரி ய நீ ள த் – தி ற் கு ( வி ரல் வ டி – வி ல் ) வெ ட் டி வை த் – து க் க�ொ ள் – ள – வு ம் . அதன் மத்– தி – யி ல் கத்தி க�ொண்டு கீறி சில்லி சாஸை பைப் செய்–ய–வும். அனைத்து ட�ோஃபு–வை–
யு ம் அ ப் – ப – டி யே செய்– ய – வு ம். வேக வைத்த உரு–ளைக்– கி– ழ ங்கை மசித்து அத்– து – ட ன் தேவை– யான உப்பு, மிள–குத்– தூள் சேர்த்து பிசை– ய– வு ம். இத்– து – ட ன் பிரெட் துண்–டு–களை தண்– ணீ – ரி ல் முக்கி எடுத்து கெட்டி–யாக பிழிந்து கிழங்–கு–டன் சேர்த்து பிசைந்து வைத்–துக் ெகாள்–ள– வும். இந்தக் கல– வையை கைக–ளால் உ ரு ண் – டை – க ள் செய்து விருப்–பம – ான வடி–வில் தட்டி அதன் உள் ட�ோஃபு துண்– டு – க ளை வை த் து மூடி, சூடான எண்– ணெ–யில் ப�ொரித்து எ டு த் து வெ ட் டி த ட் டி ல் ப ர ப் பி வைத்–துக் க�ொள்–ள– வும். அதன் மேல் சாட் மசாலா தூவி சூடா–கப் பரி–மா–றவு – ம்.