சமை–யல் கலை–ஞர்
பிரியா பாஸ்–கர்
30
தக்காளி ரெசிபீஸ்
ூைல 1-15, 2017 | இதழுடன் இணைப்பு
117
புளிப்பும் இனிப்புமாய்... ந
மது அன்–றாட சமை–ய–லில் பயன்–ப–டும் முக்–கி–ய–மான காய்–க–ளில் ஒன்று தக்–காளி. ஆனால் தக்–கா–ளி–யின் பயன்–பாடு பல–ருக்–கும் என்–ன–வெ–னத் தெரி–யாது. புளிப்– பும், இனிப்–பும் க�ொண்ட தக்–கா–ளி–யினை சமை–ய–லில் பயன்–ப–டுத்–து–வ–தால் பல நன்–மை–கள் உள்–ளன. ஆரஞ்சு சாறை–விட குழந்–தை–க–ளுக்கு ஆறு மடங்கு சக்தி தரக்–கூ–டி–யது தக்–கா–ளிச் சாறு. தக்–காளி பசியை உண்டு பண்ணி, மலச்– சி க்– க லை அகற்– று ம். ரத்– த ச்– ச�ோகையை நீக்–குவ – –து–டன் இரு–மல், தலைச் சுற்–ற–லைப் சமையல் கலைஞர் ப�ோக்– கு ம். நீரிழிவு ந�ோயா– ளி – க – ளு ம், உடல் பரு– ம ன் பிரியா பாஸ்–கர் உள்– ள – வ ர்– க – ளு ம் தங்– க ள் உடல் எடை– யை குறைக்க தக்–கா–ளிச் சாறு உத–வு–கி–றது. சுமார் 7,500 வகை–யான தக்–கா–ளி–கள் உல–க–ள–வில் பயி–ரி–டப்–ப–டு–கி–றது. தக்–கா–ளி–யில் உள்ள லைக�ோ– பென் என்–னும் வேதிப்–ப�ொ–ருள் காதல் உணர்வை தூண்–டும் சக்தி உடை–யது. ஐர�ோப்–பி–யர்–கள் தக்–கா–ளிப் பழத்–தை ‘காதல் பழம்’ என்–பார்–கள். தக்–கா–ளியை பயன்–ப–டுத்தி சுவை–யான 30 வகை ரெசி–பி–களை ‘த�ோழி’ வாச–கர்–க–ளுக்–காக பிரியா பாஸ்–கர் செய்து காட்–டு–கி–றார். த�ொகுப்பு:
ருக்–ம–ணி–தேவி நாக–ரா–ஜன் எழுத்து வடி–வம்: கே.கலை–ய–ரசி
118
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
ஈஸி தக்–காளி சட்னி
என்–னென்ன தேவை?
பெங்–களூ – ர்–/ந – ாட்–டுத்–தக்–காளி 3, பெரிய வெங்–கா–யம் - 2, காய்ந்–த– மி–ள–காய் - 2, கட–லைப்–ப–ருப்பு 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் 3 டீஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
கடா– யி ல் 2 டீஸ்– பூ ன் எண்– ணெயை ஊற்றி நறுக்–கிய வெங்– கா– ய ம், தக்– க ா– ளி – யை ச் சேர்த்து வதக்கி, காய்ந்– த – மி – ள – க ாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்–க–வும். சூடு
ஆறி– ய – து ம் நைசாக அரைக்– க – வும். மற்–ற�ொரு கடா–யில் 1 டீஸ்– பூன் எண்–ணெயை ஊற்றி கடுகு, கட– ல ைப்– ப – ரு ப்பு, நறுக்– கி ய கறி– வேப்– பி லை தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து கலந்து இட்லி, த�ோசை–யு–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: எண்–ணெ–யில் முத–லில் வெங்–கா–யத்தை வதக்–கிய பின் தக்– கா–ளியை வதக்–க–வும். தக்–கா–ளிச்– சாறு வெங்–கா–யத்தை நன்கு வதங்க விடா–மல் செய்–யும். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
தக்–காளி புலாவ்
என்–னென்ன தேவை?
பழுத்த பெங்–க–ளூர் தக்–காளி 5, பெரிய வெங்–கா–யம் - 1, பச்சை மி– ள காய் - 2-3, அரிசி - 250 கிராம், குடை– மி – ள – க ாய் - 50 கிராம், காலிஃப்–ளவ – ர் - 100 கிராம், ஃப்ரெஷ் பட்–டாணி - 50 கிராம், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் 2 டேபிள்ஸ்– பூ ன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், முழு பட்டை, கிராம்பு - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
வெங்–கா–யம், தக்–காளி, குடை– மி–ள–காய், காலிஃப்–ள–வரை நறுக்– கிக் க�ொள்–ள–வும். கழுவி சுத்–தம் செய்த அரி–சியை 20 நிமி–டங்–கள் தண்–ணீரி – ல் ஊற வைக்–கவு – ம். கடா– யில் எண்– ண ெயை காய– வை த்து பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி 120
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
பூண்டு விழுது சேர்த்து பச்– சை – வாசனை ப�ோக வதக்–கவு – ம். பின்பு வெங்–கா–யத்தை வதக்கி, குடை–மிள – – காய், காலிஃப்–ள–வர், பட்–டா–ணி– யைச் சேர்த்து வதக்–கவு – ம். பிறகு தக்– காளி, பச்–சைமி – ள – க – ா–யைச் சேர்த்து வதக்கி, ஊற–வைத்த அரி–சி–யைச் சேர்த்து வதக்–க–வும். உப்பு சேர்த்து அதில் 50 மி.லி. தண்–ணீர் ஊற்றி நன்கு கலந்து குக்–க–ருக்கு மாற்றி 2 விசில் விட்டு அரிசி வெந்–த–தும் இறக்–க–வும். தயிர் பச்–சடி, வெஜ் குரு–மா–வு–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: புலாவ் செய்–யும் ப�ோது அரிசி குழை–யா–மல் வேக–வைக்க த ண் – ணீ ர் ( அ ரி சி : த ண் – ணீ ர் ) 1:1½ அளவு, ஊறிய அரி–சிக்கு 1:1 ஆக–வும், காய்–கள் சேர்த்–தால் 1:2 இருக்க வேண்–டும்.
காளான் தக்–காளி பெப்–பர் ஃப்ரை என்–னென்ன தேவை?
பெங்– க – ளூ ர் தக்– க ாளி - 2, பெரிய வெங்–கா–யம் - 1, நறுக்–கிய காளான் - 200 கிராம், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், கரம்–மச – ா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, மிள–குத்–தூள், உப்பு - தேவைக்கு, எண்– ண ெய் - 2 டேபிள்ஸ்– பூ ன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
கடா–யில் எண்–ணெயை காய– வைத்து சீர– க ம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்–சை–வா–சனை ப�ோ க வ த க் கி , ப �ொ டி – ய ா க நறுக்–கிய வெங்–கா–யத்–தைச் சேர்த்து
வதக்–க–வும். பின்பு அரைத்த தக்– காளி, நறுக்– கி ய காளா– ன ைச் சேர்த்து வதக்கி, மிள– கு த்– தூ ள், கரம்–மச – ா–லாத்–தூள் சேர்த்து நன்கு வதக்–க–வும். பின் 100-150 மி.லி. தண்– ணீர் சேர்த்து காளானை வேக விட்டு, உப்பு சேர்க்–கவு – ம். தண்–ணீர் வற்–றும்– வரை நன்கு வதக்கி இறக்–க– வும். நறுக்–கிய க�ொத்–தம – ல்–லித்–தழை, கறி–வேப்–பி–லை–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். கு றி ப் பு : க ா ள ா னு ட ன் உருளைக்–கி–ழங்கு, காலிஃப்–ள–வர் சேர்க்–க–லாம். புளிப்–பாக வேண்–டு– மென்–றால் நாட்–டுத்–தக்–கா–ளி–யை பயன்–ப–டுத்–த–லாம்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
கிரா–மத்து தக்–காளி ரசம் என்–னென்ன தேவை?
நாட்–டுத்–தக்–காளி - 3, பூண்டு - 3 பல், தனியா - 1 டீஸ்–பூன், சீர–கம் - 1/2 டீஸ்–பூன், காய்ந்–த–மி–ள–காய் - 2, கடுகு - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்– பிலை - சிறிது, புளி - 1/2 எலு–மிச்சை அளவு, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்–ணெய் 2 டீஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - 1 சிட்–டிகை, க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
சீர–கம், தனியா, காய்ந்–த–மி–ள– காய், மிளகு, பூண்டு சேர்த்து க�ொர– க�ொ – ர ப்– ப ாக அரைத்துக்
122
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
க�ொ ள் – ள வு ம் . ப ா த் – தி – ர த் – தி ல் தக்–கா–ளியை தண்–ணீர் சேர்க்–கா–மல் நன்கு கரைத்து க�ொள்–ளவு – ம். கடா– யில் எண்– ண ெயை காய– வை த்து கடுகு தாளித்து, கரைத்த தக்–காளி, புளித்–தண்–ணீர் சேர்த்து மிள–குத்– தூள், உப்பு, பெருங்– க ா– ய த்– தூ ள், ரசத்– து க்– கு த் தேவை– ய ான தண்– ணீ–ரைச் சேர்க்–க–வும். ரசம் நுரை கட்டும் வரை சூடு செய்– ய – வு ம். ஆனால் ரசத்–தை க�ொதிக்க விடக்–கூ– டாது. நுரை ப�ொங்கி வரும்–ப�ோது நறுக்–கிய கறி–வேப்–பிலை, க�ொத்–த– மல்– லி த்– த – ழ ையை தூவி, சூடாக சாதத்–து–டன் பரி–மா–ற–வும்.
தக்–காளி பச்–சடி
என்–னென்ன தேவை?
பழுத்த பெங்–களூ – ர் தக்–காளி - 2, பெரிய வெங்–கா–யம் - பாதி, புளிக்– காத கெட்–டித்–த–யிர் - 200 மி.லி., – ல்–லித்– உப்பு - தேவைக்கு, க�ொத்–தம தழை - சிறிது, பச்–சை–மி–ள–காய் - 2.
எப்–ப–டிச் செய்–வது?
தயிரை கட்–டியி – ல்–லா–மல் நன்கு அடித்–துக் க�ொள்–ளவு – ம். இத்–துட – ன்
ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம், பச்–சை–மி–ள–காய், தக்–காளி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, க�ொத்– த – மல்–லித்–த–ழை–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: பச்– சை – மி – ள – க ாய்க்கு ப தி ல் மி ள – கு த் – தூ ள் அ ல் – ல து மிளகாய்த்–தூள் சேர்க்–கல – ாம். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
பருப்பு தக்–காளி அடை
என்–னென்ன தேவை?
தக்–காளி - 3, பாசிப்–ப–யறு - 100 கிராம், பச்–சரி – சி - 200 கிராம், புழுங்– க–ல–ரிசி - 200 கிராம், உளுந்து - 2 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை சிறிது, ச�ோம்பு - 1 டீஸ்–பூன், இஞ்சி - 1/2 இன்ச் அளவு, பெரிய வெங்– கா– ய ம் - 1, உப்பு, எண்– ண ெய் தேவைக்கு, கட–லைப்–ப–ருப்பு - 100 கிராம், துவ–ரம்–பரு – ப்பு - 100 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 3, தேங்–காய்த்– துரு– வ ல் - 100 கிராம், பட்டை, கிராம்–புத்–தூள் - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
பச்–சரி – சி, புழுங்–கல – ரி – சி, உளுந்து, கட–லைப்–ப–ருப்பு, துவ–ரம்–ப–ருப்பு, பாசிப்– ப – ய று அனைத்– தை – யு ம் 3 மணி நேரம் ஊற–வைத்து, க�ொர– 124
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
க�ொ–ரப்–பாக அரைத்–துக் க�ொள்–ள– வும். இத்–துட – ன் தேங்–காய்த்–துரு – வ – ல், தக்–காளி, காய்ந்–தமி – ள – க – ாய், இஞ்சி, பட்டை, கிராம்–புத்–தூள் சேர்த்து அரைத்து, உப்பு, ப�ொடி– ய ாக நறுக்– கி ய வெங்– க ா– ய ம், கறி– வ ேப்– பிலை–யைச் சேர்த்து நன்கு கலந்து க�ொள்– ள – வு ம். த�ோசைக்– க ல்லை காய–வைத்து அடை மாவை ஊற்றி, சுற்– றி – லு ம் எண்– ண ெயை ஊற்றி, இரு–பு–ற–மும் நன்கு வெந்து ம�ொறு ம�ொறு–வென்று வந்–த–தும் எடுக்–க– வும். தக்–கா–ளிச்– சட்னி, தேங்–காய் சட்–னி–யு–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: தேங்–காய்த்–து–ரு–வலை அரைக்–கா–மல் அப்–படி – யே துருவிய தேங்–காயை அடை–மா–வில் கலந்தும் அடை சுட–லாம்.
தக்–காளி க�ோதுமை த�ோசை
என்–னென்ன தேவை?
தக்–காளி - 3, க�ோதுமை மாவு 250 கிராம், பெரிய வெங்–கா–யம் - 1, இட்லி மாவு - 100 கிராம், கறி–வேப்– பிலை - சிறிது, காய்ந்–தமி – ள – க – ாய் - 2, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, சீர–கம் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
தக்–கா–ளியை க�ோதுமை மாவு– டன் சேர்த்து மிக்–சி–யில் அரைத்து, காய்ந்–த–மி–ள–காய், சீர–கம், கறி–வேப்– பிலை சேர்த்து அரைக்– க – வு ம்.
இட்லி மாவு–டன் அரைத்த தக்–காளி கலவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேவை– ய ான தண்– ணீ ர் சேர்த்து மாவை கரைத்–துக் க�ொள்–ள–வும். பின்பு நறுக்– கி ய வெங்– க ா– ய த்தை கலந்து, சூடான த�ோசைக்–கல்–லில் க�ோதுமை மாவை ஊற்றி, சுற்–றி– லும் எண்– ண ெய் விட்டு ம�ொறு– ம�ொ–று–வென்று வந்–த–தும் எடுத்து பரி–மா–ற–வும். குறிப்பு: க�ோதுமை மாவிற்கு பதில் அரி– சி – ம ாவை சேர்த்– து ம் தக்காளி த�ோசை செய்–ய–லாம்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
தக்–காளி காரக்–கு–ழம்பு
என்–னென்ன தேவை?
பழுத்த தக்–காளி - 3, சின்ன வெங்– க ா– ய ம் 100 கிராம், தேங்–காய்த்– துண்–டு–கள் - 50 கிராம், ச�ோம்பு - 1/2 டீஸ்–பூன், சீர– க ம் - 1/2 டீஸ்– பூ ன், கறி–வேப்–பிலை - சிறிது, சாம்–பார் ப�ொடி - 1 டீஸ்– பூன், இஞ்சி - சிறிது, கடுகு - 1/2 டீஸ்–பூன், கரம்–ம–சா– லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், பெரிய வெங்– க ா– ய ம் 1/2, உப்பு, எண்–ணெய் தேவைக்கு, பூண்டு - 5 பல், தனியா - 2 டீஸ்–பூன், காய்ந்– த – மி – ள – க ாய் - 2, க�ொத்–த–மல்–லித்–த ழை சிறிது, பட்டை, கிராம்பு - சிறிது, கட–லைப்–பரு – ப்பு - 1 டீஸ்–பூன், புளி - 1/2 எலு–மிச்–சைப்–பழ அளவு.
எப்–ப–டிச் செய்–வது?
இஞ்சி, வெங்–கா–யம், தக்–காளி, க�ொத்–த–மல்லி, கறி–வேப்–பி–லையை நறுக்– கிக் க�ொள்–ள–வும். கடா– யில் 1/2 டேபிள்ஸ்– பூ ன் எ ண்ணெயை க ா ய – வைத்து இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, தனி– யாவை வதக்கி, சீர–கம், 126
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
ச�ோம்பு, சின்ன வெங்– க ா– ய ம், தேங்– க ாய் – து ண்– டு – க – ளை ச் சேர்த்து வதக்– க – வு ம். பின் தக்–காளி, காய்ந்–தமி – ள – க – ாய், சாம்–பார் ப�ொடி– யைச் சேர்த்து வதக்–கவு – ம். நன்கு வதக்–கின – ால் குழம்–பின் சுவை நன்–றாக இருக்–கும். சூடு ஆறி–ய–தும் நைசாக அரைக்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெயை காய– வைத்து கடுகு, கட–லைப்–ப–ருப்பு, கறி–வேப்– பிலை, க�ொத்–த–மல்–லியை தாளித்து, வெங்– கா–யத்தை வதக்கி, அரைத்–தக் கலவை, உப்பு, தண்–ணீர் சேர்த்து நன்கு க�ொதிக்க விட்டு, புளிக்–கர – ை–சலை சேர்த்து க�ொதிக்க விட–வும். நன்கு க�ொதித்–தது – ம் இறக்கி, இட்லி, த�ோசை, சாதத்–து–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: உரு–ளைக்–கி–ழங்கு, மீல்–மேக்–கர், காலிஃப்–ளவ – ர், பீர்க்–கங்–காய், சுரைக்–கா–யிலு – ம் காரக்–கு–ழம்பு செய்–ய–லாம்.
தக்–காளி தேங்–காய் குருமா என்–னென்ன தேவை?
பழுத்த தக்–காளி - 3, பெரிய வெங்– க ா– ய ம் - 2, தேங்– க ாய்த் துரு–வல் - 200 கிராம், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், ஏலக்–காய் - 2, கறி–வேப்– பிலை - சிறிது, சாம்–பார் ப�ொடி - 1 டீஸ்–பூன், பச்–சை–மி–ள–காய் - 2, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் 2 டேபிள்ஸ்–பூன், பூண்டு - 6 பல், இஞ்சி - 1/2 இன்ச் அளவு, ஊற– வைத்த முந்–திரி - 6, மஞ்–சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், பட்டை, கிராம்பு - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
மிக்– சி – யி ல் தேங்– க ாய்த்– து – ரு – வல், பச்– சை – மி – ள – க ாய், முந்– தி ரி, இஞ்சி, பூண்டு சேர்த்து நைசாக
அரைத்–துக் க�ொள்–ளவு – ம். கடா–யில் 2 டேபிள்ஸ்– பூ ன் எண்– ண ெயை காய– வை த்து நறுக்– கி ய வெங்– க ா– யம், பட்டை, ச�ோம்பு, மஞ்– ச ள்– தூள், சாம்–பார் ப�ொடி, ஏலக்–காய், கிராம்பு சேர்த்து நன்கு வதக்– க – வும். வெங்– க ா– ய ம் ப�ொன்– னி – ற – மாக வதங்–கி–ய–தும், தக்–கா–ளியை வதக்கி, அரைத்த கலவை, தண்–ணீர் ஊற்றி நன்கு கலந்து குரு–மாவை க�ொதிக்க விட்டு இறக்– க – வு ம். கறி– வ ேப்– பி லை தூவி சப்பாத்தி, பூ ரி , இ ட் லி , த�ோசை யு ட ன் பரி–மா–ற–வும். குறிப்பு: முந்– தி – ரி க்– கு ப் பதில் ப�ொட்–டுக்–க–ட–லை–யும், காய்–களை – – யும் சேர்த்து குருமா செய்–ய–லாம்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
வெங்–காய தக்–காளி த�ொக்கு
என்–னென்ன தேவை?
பழுத்த நாட்–டுத் தக்–காளி - 5, பெரிய வெங்–கா–யம் - 2, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்– பூ ன், சீர– க ம் - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், இடித்த பூண்டு - 5 பல், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன்.
தாளிக்க...
கடுகு, கட–லைப்–ப–ருப்பு, உளுத்– தம்– ப – ரு ப்பு - தலா 1 டீஸ்– பூ ன், பெருங்–கா–யத்–தூள் - 1 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வது?
மிக்– சி – யி ல் தக்– க ாளி, வெங்– கா– ய த்தை சேர்த்து க�ொர– க�ொ – ரப்–பாக அரைக்–க–வும். கடா–யில் 128
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
எண்–ணெயை காய–வைத்து கடுகு, உளுத்–தம்–பரு – ப்பு, கட–லைப்–பரு – ப்பு, சீர–கம் தாளித்து, தனி–யாத்–தூள், மஞ்– ச ள்– தூ ள், பூண்டு சேர்த்து வதக்–கவு – ம். பின் அரைத்த விழுதை ப�ோட்டு நன்கு வதக்கி, பெருங்–கா– யத்–தூள், உப்பு, மிள–காய்த்–தூளை சேர்த்து, மித–மான தீயில் வைத்து எண்–ணெய் பிரிந்து சுண்டி வரும்– வரை வதக்கி, கறி–வேப்–பி–லையை தூ வி இ ற க் – க – வு ம் . ச ப் – ப ா த் தி , த�ோசை, இட்லி, தயிர் சாதத்–துட – ன் பரி–மா–ற–வும். குறிப்பு: ஃப்ரிட்–ஜில் வைத்–தால் ஒரு வாரம் வரை கெடா–மல் இருக்– கும். தண்–ணீர் சேர்த்து த�ொக்கு செய்–தால் கெட்டு விடும்.
கேரட் தக்–காளி சூப்
என்–னென்ன தேவை?
கேரட் - 1, பழுத்த பெங்–க–ளூர் தக்–காளி - 3, பெரிய வெங்–கா–யம் - 1/2 அளவு, க�ொத்–தம – ல்–லித்–தழை சிறிது, தண்–ணீர் - 400 மி.லி., உப்பு, மிள–குத்–தூள் - தேவைக்கு, கிராம்பு - 2, பூண்டு - 2 பல், பட்டை - 1/2 இன்ச் அளவு.
எப்–ப–டிச் செய்–வது?
குக்– க – ரி ல் நறுக்– கி ய தக்– க ாளி, வெங்– க ா– ய ம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிள–குத்–தூள், தண்–ணீர் சேர்த்து மித–மான தீயில்
2 விசில் விட்டு தக்–கா–ளியை வேக– வி– ட – வு ம். சூடு ஆறி– ய – து ம் நன்கு மசித்து வடித்– து க் க�ொள்– ள – வு ம். குறை– வ ான சூட்– டி ல் 300 மி.லி. வரும்–வரை சூப்–பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, நறுக்– கி ய க�ொத்–த–மல்–லி–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: சூப்– பை க�ொதிக்க வைத்–தால் அதி–லுள்ள சத்–துக்–கள் வீணாகி விடும். ஆகவே பாத்– தி – ரத்தை மூடிய�ோ அல்–லது குக்–கரி – ல் வைத்தோ சூப் செய்–ய–வும்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
வெள்–ள–ரிக்–காய் தக்–காளி சாலட் என்–னென்ன தேவை?
பழுத்த பெங்–களூ – ர் தக்–காளி - 3, பெரிய வெங்–கா–யம் - 1, க�ொத்–தம – ல்– லித்–தழை, கறி–வேப்–பிலை - சிறிது, மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், உப்பு தேவைக்கு, வெள்–ள–ரிக்–காய் - 1/2 துண்டு, கேரட் - 1.
எப்–ப–டிச் செய்–வது?
ஒ ரு அ க – ல – ம ா – ன த ட் – டி ல் தக்– க ாளி, வெங்– க ா– ய ம், கேரட், வெள்– ள – ரி க்– க ாயை ப�ொடி– ய ா–
130
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
கவ�ோ அல்–லது வட்–ட–மா–கவ�ோ நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். அத–னுட – ன் மிள–குத்–தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, நறுக்–கிய கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்–லி–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். கு றி ப் பு : ச ா ல ட் செய்ய நாட்டுத்– த க்– க ாளி, ஹெப்– பி – ரி ட் தக்கா–ளி–யைப் பயன்–ப–டுத்–தா–மல், பெங்– க – ளூ ர் தக்– க ா– ளி யை பயன்– படுத்–தி–னால் சாலட் புளிக்–காது.
தக்–காளி கூட்டு
என்–னென்ன தேவை?
தக்–காளி - 3, பெரிய வெங்–கா– யம் - 2, தேங்–காய்த்–து–ரு–வல் - 50 கிராம், ச�ோம்பு - 1/2 டீஸ்– பூ ன், சுரைக்–காய் - 1 கப், கறி–வேப்–பிலை - சிறிது, கட– ல ைப்– ப – ரு ப்பு - 3 டேபிள்ஸ்–பூன், பச்சை–மிள – க – ாய் - 3, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், இஞ்சி விழுது - 1/2 டீஸ்–பூன், கரம்–ம– சா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்– சள்–தூள் - 1/4 டீஸ்–பூன், ப�ொடித்த பட்டை, கிராம்பு - 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
சுரைக்–காய், வெங்–கா–யம், தக்– காளி, பச்–சை–மி–ள–காய், கறி–வேப்– பி– ல ையை ப�ொடி– ய ாக நறுக்– கி க் க�ொள்–ள–வும். கட–லைப்–ப–ருப்பை 3 மணி நேரம் ஊற–வைத்து க�ொர–
க�ொ–ரப்–பாக அரைத்து, தேங்–காய்த்– து– ரு – வ ல் சேர்த்து அரைக்– க – வு ம். கடா– யி ல் எண்– ண ெயை ஊற்றி கடுகு, ச�ோம்பு தாளித்து, பச்–சை– மி–ள–காயை வதக்கி, இஞ்சி விழுது, மஞ்–சள் தூள், கரம்–மச – ா–லாத்–தூள், வெங்– க ா– ய ம், சுரைக்– க ா– யை ச் சேர்த்து வதக்– க – வு ம். அரைத்த கலவை, தக்– க ாளி, உப்பு, தண்– ணீர் சேர்த்து க�ொதிக்க விட–வும். கூட்டு பதத்–திற்கு வந்–தது – ம் இறக்கி, கறி–வேப்–பி–லை–யால் அலங்–க–ரித்து சாதத்–து–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: பாசிப்–ப–யறு, துவ–ரம்– ப ரு ப் பு , த ட்டைப்ப ய று , பு ட லங்கா ய் , பீ ர் க் – க ங் – க ா ய் , வ ா ழ ை த்த ண் டு , ச� ௌ ச� ௌ , நீர்ப்– பூ – ச – ணி க்– க ா– யி – லு ம் கூட்டு செய்யலாம். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
கத்–த–ரிக்–காய் தக்–காளி கடை–சல்
என்–னென்ன தேவை?
பழுத்த நாட்–டுத் தக்–காளி - 5, பெரிய வெங்–கா–யம் - 1, முற்–றாத கத்–த–ரிக்–காய் - 200 கிராம், சீர–கத்– தூள் - 1 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, க�ொத்– த – ம ல்– லி த்– த ழை - சிறிது, காய்ந்– த – மி – ள – க ாய் - 3, உப்பு தேவை க் கு , எ ண் – ண ெ ய் - 1 டேபிள்ஸ்–பூன், கரம்–மச – ா–லாத்–தூள் - 1/2 டீஸ்– பூ ன், கடுகு, கட– ல ைப்– பருப்பு - தலா 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
கத்–த–ரிக்–காய், கறி–வேப்–பிலை, க�ொ த் – த – ம ல் – லி யை ந று க் கி க் க�ொ ள் – ள – வு ம் . வ ெ ங் – க ா – ய ம் , தக்–கா–ளியை ப�ொடி–யாக நறுக்கி 132
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
க�ொள்– ள – வு ம். கடாயில் எண்– ணெயை காய வைத்து கடுகு, கட–லைப்–ப–ருப்பு தாளித்து, சீர–கத்– தூள், தனி–யாத்–தூள், வெங்–கா–யம் சேர்த்து வதக்கி, கத்–த–ரிக்–காய், தக்– கா–ளியை ப�ோட்டு நன்கு வதக்–க– வும். பின்பு நறுக்–கிய காய்ந்–த–மி–ள– காய், கரம்–மசா–லாத்–தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, கறி–வேப்– பிலை, க�ொத்–த–மல்–லித்–த–ழையை சேர்த்து இறக்– க – வு ம். பிளெண்– டர் அல்– ல து மத்– த ால் நன்கு மசிய கடைந்து இட்லி, த�ோசை, சப்–பாத்–தி–யு–டன் பரிமாறவும். குறிப்பு: பீர்க்– க ங்– க ாய், செள– செள, சுரைக்–கா–யி–லும் தக்–காளி கடை–சல் செய்–ய–லாம்.
தக்–காளி மிக்ஸ் பனீர் மசாலா
என்–னென்ன தேவை?
பழுத்த பெங்–களூ – ர் தக்–காளி - 4, பெரிய வெங்–கா–யம் - 1, ஏலக்–காய் - 2, நறுக்–கிய பனீர் - 1 கப், தனி–யாத்– தூள் - 2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்– பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், இஞ்சி பூண்டு - 2 டீஸ்–பூன், கரம்–மச – ா–லாத்–தூள் 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
வெங்–கா–யம், தக்–காளி, இஞ்சி, பூ ண் டு , க�ொ த் – த – ம ல் – லி யை ப�ொடி–யாக நறுக்கி க�ொள்–ள–வும். பனீரை சுடு தண்–ணீ–ரில் ப�ோட்டு சிறிது நேரம் க�ொதிக்க விட்டு
இறக்– கி – ன ால் பனீர் மிரு– து – வ ாகி விடும். கடா– யி ல் எண்– ண ெயை க ா ய – வை த் து வ ெ ங் – க ா – ய த்தை ப�ோட்டு ப�ொன்–னி–ற–மாக வதக்கி இஞ்சி, பூண்டு, பச்–சைமி – ள – க – ா–யைச் சேர்த்து வதக்–கவு – ம். பின்பு மஞ்–சள் தூள், தனி–யாத்–தூள், மிள–காய்த்– தூள், ஏலக்–காய், கரம்–ம–சா–லாத்– தூள், லேசாக தண்–ணீர் சேர்த்து, தக்– க ா– ளி யை ப�ோட்டு வதக்கி, பனீர், உப்பு ப�ோட–வும். மசாலா நன்கு க�ொதித்து கெட்– டி – ய ாக வந்– த – து ம் இறக்கி க�ொத்– த – ம ல்– லி த் – த ழ ை – ய ா ல் அ ல ங் – க – ரி த் து பரி–மா–ற–வும். குறிப்பு : பனீரை எண்–ணெ–யில் ப�ொரித்–தும் செய்–ய–லாம்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
பெங்–க–ளூர் தக்–காளி மின்ட்
என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி - 2, மிள– குத்–தூள் - 1 டீஸ்–பூன், தண்–ணீர் 250 மி.லி., புதினா - ஒரு கைய–ளவு, உப்பு - 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை தேவைக்கு.
134
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
எப்–ப–டிச் செய்–வது?
மிக்–சியி – ல் தக்–காளி, புதி–னாவை சேர்த்து அரைத்து, மிள–குத்–தூள், சர்க்–கரை, உப்பு, தண்–ணீர் ஊற்றி கலந்து அப்–ப–டியே பரி–மா–ற–வும். அல்–லது வடித்–தும் பரி–மா–ற–லாம்.
உருளை ட�ொமேட்டோ ஃப்ரை
என்–னென்ன தேவை?
பெங்–களூ – ர் தக்–காளி - 3, பெரிய வெங்–கா–யம் - 1, சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், உரு–ளைக்–கி–ழங்கு - 200 கிராம், க�ொத்–த–மல்–லித்–தழை, கறி– வேப்–பிலை - சிறிது, பச்–சை–மி–ள– காய் - 3, மிள–குத்–தூள் - 1/2 டீஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்– ண ெய் - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
ெவங்–கா–யம், தக்–காளி, பச்சை– மிளகாய், கறி– வ ேப்– பி – ல ையை ப�ொடி–யாக நறுக்கி க�ொள்–ள–வும். உரு–ளைக்–கி–ழங்கை வேக–வைத்து த�ோலு–ரித்து ப�ொடி–யாக நறுக்கிக்
க�ொள்ளவும். கடா– யி ல் எண்– ணெயை காய– வை த்து வெங்– க ா– யம், பச்–சைமி – ள – க – ாய், இஞ்சி பூண்டு விழு– தை ச் சேர்த்து வதக்– க – வு ம். வெங்–கா–யம் நன்கு வதங்–கி–ய–தும், சீர–கத்–தூள், மிள–குத்–தூள், உப்பு, உரு–ளைக்–கி–ழங்கு சேர்த்து வதக்கி, தக்–கா–ளியை – ச் சேர்த்து வதக்–கவு – ம். தண்– ணீ ர் சேர்க்க வேண்– ட ாம். நன்கு வதக்கி வற–வ–ற–வென ஆன– தும் இறக்கி, கறி– வ ேப்– பி – ல ையை ப�ோட்டு பிரட்டி பரி–மா–ற–வும். குறிப்பு: காலிஃப்–ளவ – ர், புர�ோக்– க�ோலி, குடை–மிள – க – ா–யிலு – ம் செய்–ய– லாம். தேவை–யா–னால் கஸ்–தூ–ரி– மேத்–தியை சேர்க்–கல – ாம். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
ட�ொமேட்டோ ஜெல்லி என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி - 3, சர்க்– கரை - 200 கிராம், ஜெலட்–டீன் - 2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
தக்– க ா– ளி யை த�ோலு– ரி த்து, விதை–களை நீக்கி பிளெண்–டர் அல்– லது மிக்–சி–யில் நைசாக அரைத்து, ப�ொடித்த சர்க்–கர – ை–யைச் சேர்த்து கலந்து வைக்–க–வும். லேசான சுடு த ண் – ணீ – ரி ல் ஜ ெ ல ட் – டீ – ன ை க் கரைத்து, தக்– க ாளி கல– வை – யி ல்
136
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
கலந்து, தவா– வி ல் ஊற்றி வேக– வி–ட–வும். 1-2 நிமி–டங்–கள் வதங்கி, ஒட்–டா–மல் வந்–த–தும் இறக்கி ஆற விட– வு ம். விருப்– ப – ம ான வடிவ ம�ோல்–டில் ஊற்றி 2 மணி நேரம் ஃப்ரிட்– ஜி ல் வைத்து துண்– டு – க ள் ப�ோட்டு பரி–மா–ற–வும். கு றி ப் பு : ஜ ெ ல ட் – டீ ன் ஒ ரு அ சைவ ப் ப �ொ ரு ள் . அ தை பயன்–படு – த்த விரும்–பா–த�ோர் அகர்– அகரை பயன்–ப–டுத்தி ஜெல்–லி–யை செய்–ய–லாம்.
காஸ்–பச�ோ (Gazpacho)
என்–னென்ன தேவை?
பெங்– க – ளூ ர் தக்– க ாளி - 5, வெங்–கா–யம் - 100 கிராம், குடை– மி–ள–காய் - 100 கிராம், வெள்–ள–ரிக்– காய் - 50 கிராம், க�ொத்–த–மல்–லித்– தழை - சிறிது, உப்பு, மிள–குத்–தூள் - தேவைக்கு, ஆலிவ் ஆயில் - 1/2 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்– கிய பூண்டு - 3 பல், செலரி - 50 கிராம், பிரெட் துண்–டு–கள் - 5.
எப்–ப–டிச் செய்–வது?
காய்–கறி – க – ளை சிறு சிறு துண்–டுக – – ளாக நறுக்கி க�ொள்–ள–வும். பிரெட்– டின் ஓரத்தை நறுக்கி சிறு சிறு துண்– டு–க–ளாக வெட்–டிக் க�ொள்–ள–வும். தவா–வில் ஆலிவ் ஆயி–லைச் சேர்த்து
பூண்டு, பிரெட் துண்– டு – க – ளை ச் சேர்த்து வதக்–க–வும். தக்–கா–ளியை த�ோலு–ரித்து விதையை நீக்கி, சிறு சிறு துண்–டு–க–ளாக நறுக்கி, குடை– மி–ள–காய், வெள்–ள–ரிக்–காய், வெங்– கா–யம், உப்பு, மிள–குத்–தூள், செலரி சேர்த்து கலக்–க–வும். பாத்–தி–ரத்–தில் பிரெட் பூண்டு கலவை, காய் கல– வை – யி ன் பாதியை ப�ோட்டு பிளெண்– ட – ர ால் அரைக்– க – வு ம். மீத– மு ள்ள காய்– க ளை ப�ோட்டு ஒன்–றாக கலந்து க�ொத்–த–மல்–லித்– த– ழ ை– ய ால் அலங்– க – ரி த்து சிறிது நேர ம் ஃ ப் ரி ட் – ஜி ல் வை த் து ஜில்லென்று ஆன– து ம் எடுத்து பரிமா–ற–வும். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
தக்–காளி கார சால்னா
என்–னென்ன தேவை?
தக்–காளி - 3, பெரிய வெங்–கா– யம் - 1, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த– மல்–லித்–தழை - சிறிது, மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், தனியா - 1 டீஸ்–பூன், கிராம்பு - 2, கடுகு - 1/2 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், தேங்– காய்த்–து–ருவ – ல் - 3 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, எண்– ண ெய் - 3 டீஸ்–பூன், இஞ்சி - 1/4 இன்ச், பூண்டு - 5 பல், பட்டை - சிறிது, ச�ோம்பு - 1 டீஸ்–பூன், ஏலக்–காய் 2, சின்ன வெங்–கா–யம் - 50 கிராம், கச–கசா - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
கடா–யில் 2 டீஸ்–பூன் எண்–ணெய்
138
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
ஊற்றி சீர–கம், தனியா, பட்டை, கிராம்பு, ச�ோம்பு, கச–கசா, ஏலக்– காய் சேர்த்து வறுத்து, நறுக்–கிய தக்–காளி, வெங்–கா–யம், தேங்–காய்த் – து ரு வ ல் ப�ோ ட் டு வ த க் கி இறக்– க – வு ம். ஆறி– ய – து ம் நைசாக அரைக்–க–வும். கடா–யில் மீதி–யுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்– கி ய சி ன்ன வ ெ ங்கா ய ம் , ம ஞ் – ச ள் தூள், மிள– க ாய்த்– தூ ள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவை– யான தண்– ணீ ர் சேர்த்து குழம்– பைக் க�ொதிக்க விட–வும். நன்கு க�ொதித்–த–தும் க�ொத்–த–மல்லியை தூவி இட்லி, பர�ோட்டா–வு–டன் பரி–மா–ற–வும்.
தக்–காளி அவல் பிரட்–டல்
என்–னென்ன தேவை?
பெங்–களூ – ர் தக்–காளி - 2, பெரிய வெங்–கா–யம் - 1/2, சீர–கம் - 1/2 டீஸ்– பூன், மட்ட அவல் - 1 கப், பச்–சை– மி–ள–காய் - 2, உப்பு - தேவைக்கு, க�ொத்– த – ம ல்– லி த்– த ழை - சிறிது, வெள்–ள–ரிக்–காய் - 50 கிராம்.
எப்–ப–டிச் செய்–வது?
அ வ ல ை த ண் ணீ ரி ல் 1 / 2
மணி நேரம் ஊற–வைத்து பிழிந்து வைத்துக் க�ொள்–ள–வும். தக்–கா–ளி– யின் விதையை நீக்கி ப�ொடி–யாக – ம். வெங்–கா–யம், நறுக்கிக் க�ொள்–ளவு பச்–சை–மி–ள–காய், வெள்–ள–ரிக்–காய், க�ொத்–த–மல்–லித்–த–ழையை ப�ொடி– யாக நறுக்கிக் க�ொள்–ளவு – ம். பாத்–தி– ரத்–தில் அனைத்து ப�ொருட்–க–ளை– யும் கலந்து பரி–மா–ற–வும். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ட�ொமேட்டோ கெட்–சப்
என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி அரைத்த விழுது - 2 கப், வினி–கர் - 50 மி.லி., மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், சர்க்– கரை - 1½ டேபிள்ஸ்–பூன், உப்பு தேவைக்கு, பூண்டு - 5 பல், இஞ்சி சாறு - 1/2 டீஸ்–பூன், கருப்பு உப்பு - 1 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வது?
ஒரு அக–ல–மான பாத்–திர – த்–தில்
140
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
தக்–காளி விழுது, பூண்டு சேர்த்து மித– ம ான சூட்– டி ல் 5 நிமி– ட ம் க�ொதிக்க விட்டு இறக்கி, வடித்–துக் க�ொள்– ள – வு ம். இத்– து – ட ன் இஞ்சி சாறு, உப்பு, மிள–காய்த்–தூள், சர்க்– கரை, வினி–கர், கருப்பு உப்பு கலந்து, தவா–வில் ஊற்றி நன்கு க�ொதிக்க வைத்து சாஸ் பதத்–திற்கு வந்–த–தும் இறக்–கவு – ம். பிரைடு ரைஸ், பிரெட், சப்–பாத்–தி–யு–டன் பரி–மா–ற–வும்.
தக்–காளி பீர்க்–கங்–காய் கூரா
என்–னென்ன தேவை?
பெங்–களூ – ர் தக்–காளி - 500 கிராம், பெரிய வெங்–கா–யம் - 2, சீர–கம் - 1/2 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்–ணெய் 1 டேபிள்ஸ்– பூ ன், முற்– ற ாத பீர்க்–கங்–காய் - 250 கிராம், மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
தக்– க ாளி, வெங்– க ா– ய ம், பீர்க்– க ங்– காயை சிறு துண்–டு–க–ளாக நறுக்–க–வும். கடா–யில் எண்–ணெயை ஊற்றி வெங்–கா– யம், பீர்க்–கங்–காய், தக்–கா–ளியை சேர்த்து வதக்கி, சீர–கம், மஞ்–சள் தூள், தனி–யாத்– தூள், மிள–காய்த்–தூள், உப்பு ப�ோட்டு தண்– ணீ ர் சேர்க்– க ா– ம ல் வதக்– க – வு ம். நன்கு வதங்–கி–ய–தும் கறி–வேப்–பி–லையை தூவி இறக்–கவு – ம். இட்லி, த�ோசை–யுட – ன் பரி–மா–ற–வும். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
தக்–காளி மக்னி கிரேவி
என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி - 6, வெங்– கா–யம் - 1, சீர–கத்–தூள் - 1 டீஸ்–பூன், கஸ்–தூ–ரி–மேத்தி - 1 டீஸ்–பூன், தேன் - 1 டேபிள்ஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்– தழை - சிறிது, ஃப்ரெஷ் கிரீம் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, வெண்– ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்–பூன், மிள– க ாய்த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், கரம்–மச – ா–லாத்–தூள் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
தக்–காளி, வெங்–கா–யம், க�ொத்த– மல்– லி யை ப�ொடி– ய ாக நறுக்கி க�ொள்–ள–வும். குக்–க–ரில் தக்–காளி, 200 மி.லி. தண்–ணீர் சேர்த்து 2 விசில் 142
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
விட்டு வேக– வி ட்டு இறக்– க – வு ம். ஆறி–ய–தும் பிளெண்–ட–ரால் நன்கு அரைத்து க�ொள்–ள–வும். தவா–வில் வெண்–ணெயை ப�ோட்டு உரு–கி–ய– தும் வெங்–கா–யம், இஞ்சி பூண்டு – ா–சனை விழுதை ப�ோட்டு பச்–சைவ ப�ோக வதக்கி, சீர–கத்–தூள், கரம்– மசா– ல ாத்– தூ ள், மிள– க ாய்த்– தூ ள், கஸ்–தூ–ரி–மேத்தி, தக்–காளி விழுது சேர்த்து வதக்–க–வும். பிறகு உப்பு, தேன் கலந்து அடுப்–பை சிம்–மில் வைத்து கிரே– வி – யை க் க�ொதிக்க விட்டு இறக்–க–வும். க�ொத்–த–மல்–லித்– தழை, ஃப்ரெஷ் கிரீம் க�ொண்டு அலங்–கரி – த்து ர�ொட்டி, நாணு–டன் பரி–மா–ற–வும்.
ரூட்ஸ் வெஜ் தக்–காளி சட்னி
என்–னென்ன தேவை?
நறுக்– கி ய கேரட், பீட்– ரூ ட், முள்– ள ங்கி - தலா 50 கிராம், காய்ந்–த–மி–ள–காய் - 3, கறி–வேப்– பிலை - சிறிது, பூண்டு - 2 பல், பெரிய வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, பெங்– க – ளூ ர் தக்– காளி - 3, தேங்–காய்த்–து–ரு–வல் - 50 கிராம், எண்– ண ெய் - 1 டேபிள்ஸ்–பூன்.
தாளிக்க...
எண்– ண ெய் - 1 டீஸ்– பூ ன், கடுகு, கட–லைப்–பரு – ப்பு - தலா 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது, உளுத்–தம்–ப–ருப்பு - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
கடா– யி ல் எண்– ண ெயை காய– வைத்து வெங்–கா–யம், கேரட், பீட்– ரூட், முள்–ளங்–கியை வதக்கி, நறுக்–கிய காய்ந்–த–மி–ள–காய், பூண்டு, கறி–வேப்– பிலை, உப்பு, தக்–கா–ளியை ப�ோட்டு நன்கு வதக்கி இறக்–கவு – ம். சூடு ஆறி–ய– தும் தேங்–காய்த்–து–ரு–வல் ப�ோட்டு நைசாக அரைத்து க�ொள்– ள – வு ம். தவா–வில் எண்–ணெயை ஊற்றி கடுகு, உளுத்–தம்–ப–ருப்பு, கட–லைப்–ப–ருப்பு, கறி–வேப்–பிலை தாளித்து, அரைத்த கல–வையை க�ொட்டி கலந்து இட்லி, த�ோசை–யு–டன் பரி–மா–ற–வும்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
தக்–காளி வெல்ல மிக்ஸ் குழம்பு
என்–னென்ன தேவை?
நாட்–டுத்–தக்–காளி - 500 கிராம், எண்–ணெய் - 1½ டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், பெருங்–கா–யத்– தூள் - ஒரு சிட்–டிகை, சீர–கத்–தூள் - 1/2 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், கரம்–மச – ா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 2, உப்பு - தேவைக்கு, காய்ந்–தமி – ள – க – ாய் - 3-4, ப�ொடித்த வெல்–லம் - 1/2 டேபிள்ஸ்–பூன், கறி–வேப்–பிலை சிறிது, பருப்–புப்–ப�ொடி - 1 டேபிள் ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது? பருப்புப் ப�ொடி...
க ட ா யி ல் க ட ல ை ப் – ப– ரு ப்பு - 2 டீஸ்– பூ ன், உளுத்– த ம்– ப– ரு ப்பு - 1 டீஸ்– பூ ன் சேர்த்து எண்–ணெய் இல்–லா–மல் வறுத்து 144
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
அரைத்–துக் க�ொள்–ள–வும். காய்ந்–த–மி–ள–காய், வெங்–காயம், தக்–கா–ளியை ப�ொடி–யாக நறுக்கி க�ொள்– ள – வு ம். பருப்புப் ப�ொடி, தனி–யாத்–தூள், சீர–கத்–தூள் கலந்து தனியே வைக்– க – வு ம். கடா– யி ல் எண்–ணெயை காய–வைத்து கடுகு த ா ளி த் து , க ா ய் ந் – த – மி – ள – க ா ய் , வெங்–கா–யத்தை ப�ோட்டு வதக்கி, ப�ொடித்த ப�ொடி, தக்–கா–ளியை சேர்த்து நன்கு வதக்–க–வும். பின்பு கரம்– ம – ச ா– ல ாத்– தூ ள், பெருங்– க ா– யத்–தூள், உப்பு, வெல்–லத்–து–ரு–வல், 250 மி.லி. தண்–ணீர் ஊற்றி கலந்து, நன்கு வேக–விட்டு மசித்து இறக்–க– வும். புளிப்பு, காரம், இனிப்பு கலந்த குழம்பை இட்லி, த�ோசை, சாதத்–து–டன் பரி–மா–ற–வும்.
தக்–காளி சேமியா
என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி - 3, எண்– ணெய் - 1½ டேபிள்ஸ்–பூன், சேமியா - 200 கிராம், கரம்–ம–சா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, மிள–காய்த்–தூள் - தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
வெங்–கா–யம், தக்–காளி, கறி–வேப்– பி– ல ையை ப�ொடி– ய ாக நறுக்கி க�ொள்– ள – வு ம். கடா– யி ல் 2 லிட்– டர் தண்–ணீர், 1/2 டேபிள்ஸ்–பூன் எண்– ண ெய், சிறிது உப்பு, சேமி– யா– வை ச் சேர்த்து வேக– வை த்து
இறக்– க – வு ம். தண்– ணீ ரை வடித்து சேமி– ய ாவை தட்– டி ல் பரப்பி வைக்–க–வும். மற்–ற�ொரு கடா–யில் மீதி– யு ள்ள எண்– ண ெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை ப�ோட்டு பச்– சை – வ ாசனை ப�ோக வதக்கி, வெங்–கா–யம், கரம்–ம–சா–லாத்–தூள், மஞ்–சள் தூள், மிள–காய்த்–தூள், தக்– கா–ளியை சேர்த்து நன்கு வதக்–க– வும். பின்பு சேமி–யாவை ப�ோட்டு குழை–யா–மல் பிரட்டி இறக்–க–வும். கறிே–வப்–பி–லை–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: மக்– ர�ோ னி, கேனீ– ல�ோ னி , ஸ்பெ க டி யி லு ம் செய்–ய–லாம்.
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
தக்–காளி கீரை மிக்ஸ் மசி–யல் என்–னென்ன தேவை?
பெங்–க–ளூர் தக்–காளி - 2, எண்– ணெய் - 1/2 டேபிள்ஸ்–பூன், சிறு– கீரை - 1/2 கட்டு, சீர–கம் - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூள் - 1/4 டீஸ்–பூன், பூண்டு - 3 பல், பெரிய வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, காய்ந்–த–மி–ள– காய் - 3, பாசிப்–ப–யறு - 50 கிராம், கறி–வேப்–பிலை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
சிறு–கீ–ரை–யைச் சுத்–தம் செய்து ப�ொடி–யாக நறுக்–கிக் க�ொள்–ளவு – ம். கடா– யி ல் எண்– ண ெயை ஊற்றி
146
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
சீர–கம், இடித்த பூண்டு, வெங்–கா– யத்தை ப�ோட்டு வதக்கி, மஞ்–சள் தூள், நறுக்–கிய காய்ந்–த–மி–ள–காயை சேர்க்–க–வும். பின்பு கீரை, பாசிப்– பயறு, கறி–வேப்–பிலை, தக்–காளி, உப்பு ப�ோட்டு வதக்கி, தேவை– யான தண்–ணீர் ஊற்றி வேக–விட்டு இறக்–கவு – ம். பிளெண்–டர – ால் மசித்து சாதத்–து–டன் பரி–மா–ற–வும். குறிப்பு: செங்–கீரை, முருங்–கைக்– கீரை, தண்– டு க்– கீ ரை, பச– ல ைக்– கீரை, பாலக்–கீ–ரை–யி–லும் மசி–யல் செய்–ய–லாம்.
தக்–காளி டபுள் பீன்ஸ் ஃப்ரை
என்–னென்ன தேவை?
பெங்– க – ளூ ர் தக்– க ாளி - 3, எண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், டபுள் பீன்ஸ் - 200 கிராம், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது, கறி–வேப்–பிலை - சிறிது, மிள–குத்– தூள் - 1/2 டீஸ்–பூன், சீர–கம் - 1 டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, உப்பு - தேவைக்கு, மிள–காய்த்– தூள் - 1 டீஸ்–பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்–பூன், பட்டை, கிராம்–புத்–தூள் - சிறிது, ச�ோம்பு 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வது?
க ழு – வி சு த் – த ம் செய்த டபுள் பீன்ஸை உப்பு ப�ோட்டு
தண்–ணீ–ரில் நன்கு வேக–வைக்–க–வும். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து வெங்–கா–யம், மிள–காய்த்–தூள், மிளகுத்– தூள், சீர–கம், ச�ோம்பு, பட்டை, கிராம்– புத்–தூள், கறி–வேப்–பிலை, க�ொத்–தம – ல்– லித்– த ழை, தக்– க ா– ளி யை ப�ோட்டு வதக்–க–வும். தக்–காளி நன்கு வதங்–கி–ய– தும், வெந்த டபுள் பீன்ஸை ப�ோட்டு பிரட்டி வற– வ – ற – வ ென வந்– த – து ம் இறக்கி பரி–மா–ற–வும். குறிப்பு: ச�ோயா பீன்ஸ், காரா– மணி, பச்–சைப்–பய – று, தட்–டைப்–பய – று, ஸ்வீட்–கார்ன், பட்–டாணி சுண்–ட–லி– லும் ஃப்ரை அல்–லது கிரே–விய – ா–கவு – ம் செய்–ய–லாம். ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi July 1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
சாமை தக்–காளி சாதம்
என்–னென்ன தேவை?
தக்– க ாளி - 3, சாமை - 250 கிராம், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், எண்– ணெய் - 2 டேபிள்ஸ்–பூன், கிராம்பு - 2, பட்டை - சிறிது, ஏலக்–காய் - 2, பெரிய வெங்–கா–யம் - 2, உப்பு - தேவைக்கு, பச்–சை–மி–ள–காய் - 3, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், கரம்–மச – ா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், புதினா - சிறிது.
எப்–ப–டிச் செய்–வது?
கழு–வி சுத்–தம் செய்த சாமையை தண்– ணீ – ரி ல் சிறிது நேரம் ஊற– வைத்து, குழை–யா–மல் வேக–வைத்து 148
°ƒ°ñ‹
ூ லை 1-15, 2017
இதழுடன் இணைப்பு
வடித்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெயை காய–வைத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்– சை – வா–சனை ப�ோக வதக்கி, ச�ோம்பு, ப�ொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்– காய், புதினா, உப்பு, வெங்–கா–யம், பச்– சை – மி – ள – க ாய், கரம்– ம – ச ா– ல ாத்– தூள், தக்–கா–ளியை ப�ோட்டு நன்கு வதக்–க–வும். தக்–காளி வதங்–கி–ய–தும் இறக்கி, வெந்த சாமையை கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: சாமைக்– கு ப் பதில் க ம் பு , தி ன ை , கு தி – ர ை – வ ா லி , வர–கி–லும் செய்–ய–லாம்.