அக்டோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
தேஙகாய சமையல 30 சமையல் கலைஞர் ராஜகுமாரி
117
மணக்கும்
தேங்காய் சமையல்... ‘‘இளவயதில் இருந்தே புத்தகம் படிப்பதிலும்,
சமைப்பதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. படித்து முடித்து திருமணம் ஆனதும் நடுவில் சிறிது பிரேக். குடும்பப் ப�ொறுப்புகள் ஓரளவு முடிந்ததும் முன்னணி மாத, வார இதழ்களுக்கு நிறைய சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித் தேன். பல குக்கரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல முன்னணி சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமைத்து பரிசுகள் பெற்றுள்ளேன்’’ எனும் ராஜகுமாரி நமக்காக இங்கே 30 வகையான தேங்காய் சமையலை செய்து காட்டியுள்ளார். கேரள மக்க ளி ன் அ ழ கி ற் கு ம் , மு டி வளர்ச்சிக்கும் தேங்காயை அவர்கள் உணவில் அதிகம் சேர்ப்பதும் ஒரு காரணம். அதே சமயம் தேங்காய் சமையலை அளவுடன் சாப்பிட வேண்டும் என்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி. த�ொகுப்பு :தேவி ம�ோகன் எழுத்து வடிவம் :கே.கலையரசி படங்கள் :ஆர். க�ோபால் சமையல் கலைஞர்
118
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
ராஜகுமாரி
தேங்காய் திரட்டுப்பால்
என்னென்ன தேவை?
முற்றிய முழு தேங்காய் - 2, வெல்லம் - 1/2 கில�ோ, பால் - 400 மி.லி., ஏலப்பொடி - 1 டீஸ்பூன், உடைத்த முந்திரி - 5 டீஸ்பூன், நெய் - 5 டேபிள்ஸ்பூன், வறுத்த பாசிப் பருப்பு - 6 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தேங்காயை துருவி, வறுத்த ப ா சி ப ்ப ரு ப ்பை யு ம் சேர்த் து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால்,
அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து தேங்காய்நிறம்மாறிவரும்ப�ொழுது, வெல்லத்தைப் ப�ொடியாக சீவிச் சேர்த்து, இடையிடையே நெய் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கை க ள ா ல் உ ரு ட் டு ம் ப த ம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். துண்டுகள் ப�ோட்டு பரிமாறவும். ஒரு வாரம் வரை கெடாது. அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
என்னென்ன தேவை?
ச�ொதி
முழு தேங்காய் - 1, பாசிப்பருப்பு - 100 கிராம், பூண்டு - 6 பல், சாம்பார் வெங்காயம் - 10, எலுமிச்சம் பழம் 1, ப�ொடியாக நறுக்கிய இஞ்சி - சிறு துண்டு, கீறிய பச்சைமிளகாய் - 4, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
குக்கரில் பாசிப்பருப்பை கு ழை ய வே க வைக்க வு ம் . தேங்காயைத் துருவி திக்கான மு த ல் ப ா ல் , இ ரண்டா ம் ,
120
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
மூன்றாம் பால் எடுத்து தனியே வைக்க வு ம் . க ாய்க றி க ளை எண்ணெயில் வதக்கி க�ொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் மூன்றாம் தேங்காய்ப்பால், உப்பு, வதக்கிய காய்கறிகளை ப�ோட்டு வே க வி ட வு ம் . இ த் து ட ன் ப ச்சை மி ள க ா ய் , வெ ந ்த பாசிப்பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் பாலை ஊற்றவும். ஒரு க�ொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி மீண்டும் ஒரு க�ொதி விட்டு இறக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.
வெஜிடபிள் சால்னா
என்னென்ன தேவை?
நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் - அனைத்தும் சேர்த்து 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம் - 6 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு - தேவைக்கு, பட்டை, கிராம்பு - தலா 1, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க... தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சைமிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு.
எப்படிச் செய்வது?
அ ரைக்க க� ொ டு த ்த வ ற்றை அ ரைத் து க் க� ொ ள்ள வு ம் . காய்கறிகளைஉப்பு,தண்ணீர் சேர்த்து வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு வதக்கி, அரைத்த விழுது, வெந்த காய்கறிகள், 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அனைத்தும் சேர்ந்து வெந்து க�ொதித்ததும் இறக்கி, சப்பாத்தி, நாண், த�ோசையுடன் சூடாக பரிமாறவும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
பிரிஞ்சி சாதம்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், தக்காளி - 3, ப�ொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், பூண்டு - 10 பல், பச்சைமிளகாய் - 2, பிரிஞ்சி இலைகள் - 3, ச�ோம்பு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் - 1½ கப், உப்பு தேவைக்கு. 122
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
கு க்க ரி ல் எ ண்ணெயை காயவைத்து பிரிஞ்சி இலைகள், ச�ோ ம் பு தா ளி த் து , இ ஞ் சி , ப ச்சை மி ள க ா ய் , பூ ண் டு , வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, 1½ கப் தேங்காய்ப்பால், 1½ கப் தண்ணீர், அரிசியைசேர்த்துஒருவிசில்விட்டு இறக்கவும். சத்தம் அடங்கியதும் எடுத்து க�ொத்தமல்லித்தழையால் அ ல ங ்க ரி த் து , ஆ னி ய ன் ரய்த்தாவுடன் பரிமாறவும்.
தக்காளி பாயசம்
என்னென்ன தேவை?
பழுத்த தக்காளி - 4, துருவிய வெல்லம் - 1/4 கப், நெய் 2 டே பி ள் ஸ் பூ ன் , தி க்கா ன தேங்காய்ப்பால் - 1 கப், நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முந்திரி, கீறிய தேங்காயை நெ ய் யி ல் வ று த் து வைத் து க் க�ொள்ளவும். ஒரு அடிகனமான
பாத்திரத்தில் ப�ொடியாக நறுக்கிய தக்காளி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து க�ொதிக்க விட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும், வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய், ஏலப்பொடி தூவி பரிமாறவும். கு றி ப் பு : இ த ே மு ற ை யி ல் வ ா ழ ை ப ்ப ழ ம் ம ற் று ம் ம ா ம ்ப ழ த ்தை யு ம் ச ே ர் த் து செய்யலாம்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
தேங்காய்ப்பால் ஆப்பம்
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 2 கப், பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 6 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு, ஜவ்வரிசி - தலா 1 டேபிள்ஸ்பூன், துருவிய வெல்லம் - 2 கப், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் - 2 கப்.
எப்படிச் செய்வது?
பு ழு ங ்க ல ரி சி , ப ச்ச ரி சி , துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 124
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
2 ம ணி நேர ம் ஊ றவைத் து அ ரைத் து , 6 ம ணி நேர ம் புளிக்க விடவும். புளித்ததும் வெல்லத்தை சேர்த்து கலக்கவும். மாவும், வெல்லமும் நன்றாகக் கலந்ததும், தவாவில் ஒரு கரண்டி மாவினை ஊற்றி, ஓரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும். (இதனை திருப்பிப் ப�ோடக் கூ ட ா து ) வெ ந ்த து ம் ஒ ரு க ர ண் டி தே ங ்காய்ப்பாலை அந்த ஆப்பத்தின் மேல் ஊற்றி பரிமாறவும்.
மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு என்னென்ன தேவை?
ந று க் கி ய ம ண த் தக்காளிக்கீரை - 3 கப், தே ங ்காய்ப்பா ல் - 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அ டி க ன மா ன ப ாத் தி ரத் தி ல் மணத்தக்காளிக் கீரை, 1 கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
எ ன ்னெ ன ்ன தேவை?
மேல் மாவிற்கு... மைதாஅல்லது க�ோதுமை மாவு - 2 கப், வெண்ணெய், எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன். பூரணத்திற்கு... து ரு வி ய தேங்காய் - 2 கப், சர்க்கரை - 1½ கப், ப�ொட்டுக்கடலை - 3/4 கப், உடைத்த மு ந் தி ரி - 3 டே பி ள் ஸ் பூ ன் , சர்க்கரை இல்லாத பால்கோவா - 3/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், ப�ொரிக்க எ ண்ணெ ய் தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மைதா மாவில் வெண்ணெ ய் , எ ண்ணெ ய் , தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு ப தத் தி ற் கு ப் பி சைந் து , பூரிகளாக இட்டு வைக்கவும். 126
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
சூரத்காரி
வெறும் கடாயில் ப�ொட்டுக்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் ப�ொடித்து தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய்த்துருவலை வ று த் து வைக்க வு ம் . ப � ொ ட் டு க்க ட லை , தேங்காய்த்துருவல், ஏலப்பொடி, பால்கோவா, 1/2 கப் சர்க்கரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பூரணம் ரெடி. திரட்டிய பூரியில் 3 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, மூடிய பகுதிகளை லேசாக முள் கரண்டியால் குத்தி விடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சூரத்காரியை ப�ோட்டு ப�ொன்னிறமாகப் ப�ொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயில் மீதியுள்ள 1 கப் சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு கம்பிப் பதம் பாகு காய்ச்சி, ப�ொரித்த சூரத்காரிகளை அதில் ப�ோட்டு நனைத்து உடனே எடுத்து பரிமாறவும். ஊற வைக்க கூடாது.
தேங்காய் இடியாப்பம்
என்னென்ன தேவை?
இடியாப்ப மாவு - 2 கப், தே ங ்கா ய் எ ண்ணெ ய் - 1 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் - 1 கப், கடுகு - 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி க� ொ தி க்க வி ட் டு அ டு ப ்பை
நிறுத்தவும். இடியாப்ப மாவினை அ தி ல் க� ொ ட் டி க் கி ள றி இடியாப்ப நாழியில் ப�ோட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து க�ொள்ளவும். க ட ா யி ல் எ ண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உ ளு த ்தம்ப ரு ப் பு , மு ந் தி ரி , க றி வேப் பி லை தா ளி த் து , பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் ப�ோ ட் டு வ று த் து , உ தி ர ்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை புரட்டி சூடாக பரிமாறவும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
தேங்காய் க�ொழுக்கட்டை
என்னென்ன தேவை?
அரிசி மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 3/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊ ற் றி க� ொ தி க்க வைத் து , க�ொதித்ததும் அரிசி மாவை தூவி, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி மாவு வெந்ததும் இறக்கவும். மற்ற ொ ரு அ டி க ன மா ன
128
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், வெல்லத்துருவல் ப�ோட்டு ஒரு க�ொதி வந்ததும் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி ப�ோட்டுக் கிளறி கையில் உருட்டும் பதம் வந்ததும் இ றக்க வு ம் . பூ ர ண ம் த ய ார் . வெந்த அரிசி மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து ச�ொப்பு மாதிரி செய்து, 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
தேங்காய்ப்பால் மகிழம்பூ
என்னென்ன தேவை?
பச்சரிசி - 4 கப், பயத்தம்பருப்பு - 1 கப், உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பட்டன் கற்கண்டு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 கப், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பயத்தம் ப ரு ப் பு , உ ளு த ்தம்ப ரு ப் பு இரண்டையும் லேசாக வறுத்து ஆறவைக்கவும். அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து மிஷினில் க�ொடுத்து நைசாக அரைத்து
க�ொள்ளவும்.கற்கண்டைசிறிதுநீரில் கரைத்து க�ொள்ளவும். பாத்திரத்தில் மாவு, உப்பு, கற்கண்டு தண்ணீர், தேங்காய்ப்பால் அனைத்தையும் சேர்த்துபிசையவும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு பிசையலாம். முறுக்கு அச்சில் மகிழம்பூ அச்சினை ப�ோ ட் டு , மாவை வைத் து சூடான எண்ணெயில் பிழிந்து ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும். கு றி ப் பு : தே ங ்காய்ப்பா ல் சேர்ப்பதால் மகிழம்பூ சற்று சிவந்த நிறத்துடன் இருக்கும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
தேங்காய்ப்பால் கைமுறுக்கு
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 3 கப், உளுந்து - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், ப�ொட்டுக்கடலை - 1/4 கப், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு, ஓமம் அல்லது சீரகம் அல்லது எள் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புழுங்கல் அரிசியை 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெறும் கடாயில் ப�ொட்டுக்கடலையையும், உ ளு ந ்தை யு ம் த னி த ்த னி ய ா க 130
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
வ று த் து , ஆ றி ய து ம் மா வ ா க அ ரைத் து க� ொ ள்ள வு ம் . கிரைண்டரில் ஊறிய அரிசி, உப்பு, தேங்காய்த்துருவல், தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து க�ொள்ளவும். அரைத்த அரிசி மாவு, ப�ொட்டுக்கடலை மாவு, உளுத்தம் மாவு, ஓமம் சேர்த்து பிசைந்து கைமுறுக்காக சுற்றி, சூடான எண்ணெயில் ப�ொன்னிறமாக ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
தேங்காய்ப்பொடி
என்னென்ன தேவை?
தேங்காய்த்துருவல் - 2 கப், உப்பு - தேவைக்கு, காய்ந்தமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் ப�ோக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய்விட்டுகாய்ந்தமிளகாய்,
பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்சியில் க�ொரக�ொரப்பாக அரைத்துக் க� ொ ள்ள வு ம் . இ த் து ட ன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் ப�ொடித்த தேங்காய் ப�ொடியைப் ப�ோட்டு ஒரு முறை புரட்டி எடுத்து, இட்லி, த�ோசையுடன் பரிமாறவும். 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
தேங்காய் சாதம்
என்னென்ன தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் 2 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், வேகவைத்த பச்சைப்பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கடுகு - தலா 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவைக்கு. 132
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
க ட ா யி ல் எ ண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் ப ரு ப் பு , க றி வேப் பி லை தா ளி த் து ப ச்சை மி ள க ா ய் , தேங ்காய் த்துரு வல், உப் பு, பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி, சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.
தேங்காய்ப்பால் த�ோசை
என்னென்ன தேவை?
அ ரி சி மா வு - 1 ½ க ப் , சில்லிஃப்ளேக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப், துருவிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய க�ோஸ் - 4 டேபிள்ஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சீரகம்,
பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், க�ோஸ், கேரட் துருவல், இஞ்சி, பூண்டு விழுது வதக்கி, சில்லி ஃ ப ்ளே க் ஸ் , உ ப் பு சேர்த் து இறக்கவும். பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, தேங்காய்ப்பால், தேவையானால் தண்ணீர் சேர்த்து த�ோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். த�ோசைக்கல்லை க ா ய வைத் து ஒ ரு க ர ண் டி மாவை ஊற்றி, மேலே 3 டீஸ்பூன் மசாலாவை வைத்து மூடி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் ப�ோட்டு எடுத்து பரிமாறவும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
உருளைக்கிழங்கு தேங்காய் மசாலா கிரேவி
என்னென்ன தேவை?
உ ரு ளை க் கி ழ ங் கு - 3 , தேங்காய்த்துருவல் - 1 கப், கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கப், உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன். வறுத்து அரைக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, தனியா - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க... எண்ணெய், கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 1, கறிவேப்பிலை - 1 க�ொத்து.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு,
134
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து வே க வைக்க வு ம் . க ட ா யி ல் எ ண்ணெ ய் வி ட் டு வ று க்க க�ொடுத்த ப�ொருட்களை வறுத்து மிக்சியில் அரைத்து, அத்துடன் தேங்காய்த்துருவல், புளிக்கரைசல் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊ ற் றி தா ளி க்க க� ொ டு த ்த ப � ொ ரு ட்களை தா ளி த் து , அரைத்த விழுது சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு, 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மசாலா சேர்ந்து வந்ததும் சப்பாத்தி, பூரி, இட்லி, த�ோசையுடன் பரிமாறவும்.
ப�ோளி
என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு... மைதா மாவு - 1 கப், வெள்ளை ரவை - 3 டே பி ள் ஸ் பூ ன் , வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், லெமன் ஃபுட் கலர் - 1 டீஸ்பூன், நெய் - தேவைக்கு. பூரணத்திற்கு... தேங்காய்த்துருவல் - 1 கப், துருவிய வெல்லம் - 1½ கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மேல் மாவிற்கு க�ொடுத்ததை தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விட சற்று தளர்த்தியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்துருவல், தண்ணீர் 1/4 கப் ஊற்றி க�ொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத் து தே ங ்கா ய் த் து ரு வ ல் , ஏலப்பொடி சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும். பூரணம் ெரடி. மா வி ல் இ ரு ந் து சி று உருண்டையளவு எடுத்து வாழை இலையில் தட்டி நடுவில் ஒரு உருண்டை பூரணம் வைத்து மூடி, கைகளால் தட்டி சூடான தவாவில் ப�ோட்டு நெய் விட்டு ஒரு புறம் வெந்ததும், திருப்பி ப�ோட்டு எடுத்து சூடாக பரிமாறவும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
அரைத்து விட்ட சாம்பார்
என்னென்ன தேவை?
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப், மஞ்சள்தூள்-1 டீஸ்பூன்,நீளதுண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - 1, கேரட் - 1, பீன்ஸ் - 4, சாம்பார் வெங்காயம் - 10, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, அலங்கரிக்க க�ொத்தமல்லி - தேவைக்கு. வறுத்து அரைக்க... காய்ந்தமிளகாய் - 4, கடலைப் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தனியா 4 டே பி ள் ஸ் பூ ன் , ப ெ ரு ங ்கா ய ம் , எண்ணெய் - தலா 1 டீஸ்பூன். அரைக்க... தேங்காய்த்துருவல் - 1/2 கப், பெரிய தக்காளி - 2. தாளிப்பதற்கு... கடுகு - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 க�ொத்து, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வ று த் து அ ரைக்க க� ொ டு த ்த
136
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
ப � ொ ரு ட்களை வ று த் து அரைத்து,அத்துடன்அரைக்க க�ொடுத்த ப�ொருட்களையும் சேர்த் து அ ரைக்க வு ம் . க ட ா யி ல் எ ண்ணெயை ஊ ற் றி வெ ங ்கா ய த ்தை வதக்கி தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெயை ஊற்றி தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து த னி யே வைக்க வு ம் . அடிகனமான பாத்திரத்தில் த ண் ணீ ர் 1 க ப் , உ ப் பு , மஞ்சள் தூள், முருங்கைக் க ா ய் , கேர ட் , பீ ன் ஸ் ப�ோட்டு வேகவிடவும். பாதி வெ ந ்த து ம் வ த க் கி ய வெங்காயம், வேகவைத்த து வ ரம்ப ரு ப ்பை தண்ணீர�ோடு ஊற்றவும். ஒ ரு க� ொ தி வ ந ்த து ம் அரைத்த விழுது சேர்த்து, 2 க�ொதி வந்ததும் தாளித்த ப�ொருட்களை க�ொட்டி இறக்கி, மல்லித்தழையை தூவி அலங்கரித்து, சாதம், இ ட் லி , த�ோசை யு ட ன் பரிமாறவும். குறிப்பு: புளி, சாம்பார் ப�ொடி இரண்டும் அரைத்து விட்ட சாம்பாரில் சேர்க்கக் கூடாது.
அரைத்து விட்ட காரக்குழம்பு
என்னென்ன தேவை?
பூண்டு - 1/4 கப், சாம்பார் வெங்காயம் - 10, மணத்தக்காளி வற்றல் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள் - தலா 1 டீ ஸ் பூ ன் , மி ள க ா ய் த் தூ ள் - 3 டேபிள்ஸ்பூன், திக்கான புளிக்கரைசல்-1கப்,காய்ந்தமிளகாய் - 1, குழம்பு வடகம் சிறியது - 1, வெல்லத்துருவல்,எண்ணெய்-தலா 1 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன், அரைக்க தேங்காய்த்துருவல் - 1/2 கப், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அ டி க ன மா ன
க ட ா யி ல்
நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கு ழ ம் பு வ ட க ம் தா ளி த் து , பூண்டு, வெங்காயத்தை வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து மூடி வைக்கவும். பாதி சுண்டி வந்ததும், மற்றொரு கடாயில் எண்ணெயை ஊற்றி மணத்தக்காளி வற்றலை வறுத்து குழம்பில் க�ொட்டவும். அனைத்தும்சேர்ந்துவரும்பொழுது தேங்காய்த்துருவலை அரைத்து க�ொட்டி கலந்து, 2 க�ொதி வந்ததும் இறக்கி, சாதத்துடன் சூடாக பரிமாறவும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
என்னென்ன தேவை?
தக்காளி சூப்
வேகவைத்த துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, தாளிக்க எண்ணெய், கடுகு தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, உப்பு - தேவைக்கு, அலங்கரிக்க க�ொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க... ச�ோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு, பச்சைமிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 1/2 கப்.
138
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
அரைக்க க�ொடுத்த ப�ொருட் க ளை சி றி து த ண் ணீ ர் வி ட் டு கெட்டியாக அரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, 1 கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து க�ொதிக்க விடவும். க�ொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பு சேர்த்து ஒரு க�ொதி வந்ததும், அரைத்த விழுது சேர்த்து மீண்டும் க�ொதிக்க விட்டு, தாளிக்க க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி, மல்லித்தழையை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
இளநீர் பிரியாணி
என்னென்ன தேவை?
பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி - 1 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உடைத்தமுந்திரி,காய்ந்ததிராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன், இளநீர் - 1 கப், ஒன்றிரண்டாக அரைத்த இளநீர் வழுக்கை - 1 கப், மில்க்மெய்ட் - 1/4 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பாஸ்மதி அ ரி சி யை வ று த் து த னி யே
வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு, முந்திரி திராட்சையை வறுத்துதனியேவைக்கவும்.குக்கரில் அரிசி, இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட், உப்பு ப�ோட்டு வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும். கு றி ப் பு : தேவை ப ்பட்டா ல் சூடாக இருக்கும்போது ப�ொடித்த சர்க்கரையை சேர்த்து பரிமாறலாம். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
இளநீர் பாயசம்
என்னென்ன தேவை?
நசுக்கிய இளநீர் வழுக்கை 2 கப், இளநீர் - 1 கப், சர்க்கரை - 1/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப்.
140
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் நசுக்கிய வழுக்கை, இளநீரை ஊற்றி ஒரு ெகாதிவிடவும். சர்க்கரை, தேங்காய்ப்பால் ஊற்றி நுரைத்து வந்ததும் ஏலப்பொடி தூவி பரிமாறவும்.
தேங்காய் வடை
என்னென்ன தேவை?
தேங்காய்த்துருவல் - 1½ கப், கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய், உப்பு தேவைக்கு, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா, மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன், இ ஞ் சி பூ ண் டு வி ழு து - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய புதினா,
க�ொத்தமல்லித்தழை - தலா 1/4 கப், சீரகம் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தே ங ்கா ய் த் து ரு வ லை விழுதாக அரைக்கவும். பாத்திரத் தில் அரைத்த விழுது, மற்ற ப�ொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்துசட்னி,சாஸுடன் பரிமாறவும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
தேங்காய் க�ோப்தா கறி உ ப் பு - தேவை க் கு , தேங்காய்த்துருவல் - 1/4 கப் (அலங்கரிக்க) நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
என்னென்ன தேவை?
க�ோப்தாவிற்கு... அரைத்த தேங்காய் விழுது - 1 கப், நறுக்கியபச்சைமிளகாய்-2டேபிள்ஸ்பூன், கரம்மசாலா - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கடலைமாவு - 6 டேபிள்ஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு. கிரேவிற்கு... நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், தக்காளி - 1, இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன், 142
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
க�ோ ப ்தா வி ற் கு க�ொடுத்த ப�ொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூ ட ா ன எ ண்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன்எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சிபூண்டுவிழுதுசேர்த்து பச்சைவாசனை ப�ோக வதக்கிஉப்பு,மிளகாய்த்தூள், தனி ய ாத்தூ ள் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க விடவும். தே ங ்கா ய் த் து ரு வ லை அ ரைத் து கி ர ே வி யி ல் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந் து க� ொ தி த ்த து ம் இறக்கி, ப�ொரித்த க�ோப் தாக்களை ப�ோ ட் டு க�ொத்தமல்லித்தழையை தூ வி அ ல ங ்க ரி த் து ச ப ்பாத் தி , ந ா ண் , த�ோசையுடன் பரிமாறவும்.
மிக்ஸ்டு வெஜிடபிள் ஸ்டூ
என்னென்ன தேவை?
நறுக்கிய நூல்கோல், கேரட், குடைமிளகாய்,உருளைக்கிழங்கு - தலா 1, நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் 2, தக்காளி - 3, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், திக்கான தேங்காய்ப்பால் 1/2 கப். அரைக்க... தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்தமிளகாய் - 6, தனியா - 1 டேபிள்ஸ்பூன், சீரகம், மஞ்சள் தூள், கசகசா - தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரைக்க க�ொடுத்த ப�ொருட்களை அரைத்து க�ொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் ப�ோட்டுஎடுத்துத�ோலுரித்துஅரைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை க ா ய வைத் து வெ ங ்கா ய ம் , உருளைக்கிழங்கு, பீன்ஸ், நூல்கோல், கேரட், குடைமிளகாயை வதக்கி, உப்பு, தக்காளி விழுது, 1/4 கப் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து, ஒரு க�ொதி வந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி நுரை தட்டியதும் இறக்கவும். சப்பாத்தி, நாண், த�ோசையுடன் சூடாக பரிமாறவும். அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
தேங்காய்ப்பால் ரசம்
என்னென்ன தேவை?
முதல் தேங்காய்ப்பால் - 1 கப், இரண்டாம் தேங்காய்ப்பால் - 1/2 கப்,உப்பு-தேவைக்கு,புளிக்கரைசல் - 1/2 கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய்-1டீஸ்பூன்,அலங்கரிக்க நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன். தாளிக்க... எண்ணெய்,கடுகு,பெருங்காயம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் 3, கறிவேப்பிலை - 1 க�ொத்து.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு
144
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு இ வ ற்றை வ று த் து , நை ச ா க கெட்டியாக அரைத்து க�ொள்ளவும். அ டி க ன மா ன ப ாத் தி ரத் தி ல் இரண்டாம் பால், அரைத்த விழுது சேர்த்துக் க�ொதிக்க விட்டு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு க�ொதி விடவும். இப்பொழுது முதல் தேங்காய்ப்பால் ஊற்றி, நுரை தட்டியதும் கடாயில் தாளிக்க க� ொ டு த ்த ப � ொ ரு ட்களைத் தாளித்து க�ொட்டி இறக்கவும். க�ொத்தமல்லித்தழையை தூவி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
தேங்காய் தயிர் பச்சடி
என்னென்ன தேவை?
கெட்டித் தயிர் - 1 கப், உப்பு தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், கெட்டி அவல் - 4 டேபிள்ஸ்பூன், அலங்கரிக்க க�ொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க... தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சைமிளகாய் - 2. தாளிக்க... கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 க�ொத்து, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அ வ லை சு த ்த ம் செ ய் து தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி க�ொள்ளவும். அரைக்க க�ொடுத்தவற்றை கெட்டியாக அரைத்துக�ொள்ளவும்.பாத்திரத்தில் தயிர், அவல், உப்பு, சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து, தாளிக்கக் க�ொடுத்த ப�ொருட்களை தாளித்து க�ொட்டி க�ொத்தமல்லித்தழையை தூவி வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
தேங்காய் பூரி
என்னென்ன தேவை?
மேல் மாவிற்கு... க�ோதுமைமாவு-1கப்,வெள்ளை ரவை - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன். பூரணத்திற்கு... வேர்க்கடலை - 1/4 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், ப�ொடித்த சர்க்கரை - 1/2 கப், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மேல்மா வி ற் கு க� ொ டு த ்த ப�ொருட்களை பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். வெறும் கடாயில் 146
°ƒ°ñ‹
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
வே ர ்க்க ட லையை வ று த் து , த�ோலை நீக்கி ரவை பதத்திற்கு உ டைக்க வு ம் . வே ர ்க்க ட லை ரவை , தே ங ்கா ய் த் து ரு வ ல் , சர்க்கரை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். ஊறிய மாவினை உருண்டை க ள ா க உ ரு ட் டி பூ ரி ய ா க த் தேய்த்து, அதன் மேல் பூரண உருண்டையை வைத்து மூடி, பூரணம் பிரிந்துவிடாமல், மீண்டும் மெதுவாக பூரியை திரட்டி, சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து பரிமாறவும்.
தேங்காய் கேக்
என்னென்ன தேவை?
துருவிய தேங்காய் - 1½ கப், கடலை மாவு - 1/4 கப், சர்க்கரை - 2 கப், பால் - 1 கப், நெய் - 1/2 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் கடலை மாவினை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் 1/4 கப் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்து, பால், கடலை மாவை சேர்த் து , க ட் டி யி ல்லாம ல் கைவிடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும்.
தே ங ்கா ய் , மா வு இ ர ண் டு ம் வெந்ததும் சர்க்கரை, ஏலப்பொடி, ம�ொத்த ெநய்யையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், தட்டில் நெய்யை லேசாக தடவி க�ொட்டி, ஆறியதும் துண்டுகள் ப�ோட்டு பரிமாறவும். குறிப்பு: தேங்காய் கேக்கை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத் து எ டு த் து து ண் டு க ள் ப�ோட்டால் நன்றாக துண்டுகள் ப�ோட வரும்.
அக்ட�ோ 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi October 1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
மூவர்ணப் ப�ொரியல்
என்னென்ன தேவை?
தேங்காய்த்துருவல் - 1 கப், நறுக்கிய அவரைக்காய், கேரட் தலா 1/4 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? க ட ா யி ல்
148
°ƒ°ñ‹
எ ண்ணெயை
அக்ட�ோ 1-15, 2017 இதழுடன் இணைப்பு
காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, க ாய்ந்த மி ள க ா ய் தா ளி த் து , அவரைக்காய், கேரட் இரண் டையும் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் வெந்ததும் தேங்காய்த்துருவல் தூவி, மேலும் ஒருமுறை புரட்டி இறக்கவும். கலர்ஃபுல் ப�ொரியலை சாம்பார், ரசம் சாதத்துடன் பரிமாறவும்.