117
நவம்பர் 1-15, 2017 இதழுடன் இணைப்பு
சமையல் கலைஞர்
பிரியா பாஸ்கர்
ஸ்வீட்ஸ்
பெங்கா லி வகை
117
எளிய முறையில் விதவிதமான ஸ்வீட்ஸ்…
பெ
ங ் கா லி ஸ் வீ ட் ஸ் எ ன ் றா ல ே வ ய து வித்தியாசமின்றி நம் வாயில் எச்சில் ஊ று ம் . வ ங ் கா ள த ே ச த ்தை ப் பூ ர் வீ க ம ாக க் க�ொண்ட பெங்காலி ஸ்வீட்ஸ், மீதமாகி திரிந்த பா லி ல் இ ரு ந் து பா ல் வி ய ாபா ரி ய ா ல் இனிப்பு சேர்த்து சன்தேஷ் செய்யப்பட்டது. ச ர்க்க ர ை யை யு ம் பாலை யு ம் மு க் கி ய ப�ொருட்களாகக் க�ொண்டு பெங்காலி ஸ்வீட்ஸ் தயாராகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப வெவ்வேறு சமையல் கலைஞர் விதங்களில் பெங்காலி ஸ்வீட்ஸ் உருவாக்கப்பட்டு பிரியா பாஸ்கர் வருகிறது. நம் தமிழர்களும் பெங்காலி ஸ்வீட்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகளை க�ொள்ளை க�ொள்ளும் வண்ணங்களில், அழகிய வேலைப்பாடுகளுடன் பெங்காலி ஸ்வீட்ஸ் தற்போது தயாராகத் துவங்கியுள்ளன. மிக எளிய முறையில் 30 பெங்காலி ஸ்வீட்ஸை எப்படி செய்யலாம் என்பதை த�ோழி வாசகர்களுக்காக செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர். த�ொகுப்பு: ருக்மணிதேவி நாகராஜன் எழுத்து வடிவம்: கே.கலையரசி
118
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
மில்க் அல்வா
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்–டர், சர்க்–கரை 200 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டேபிள்ஸ்–பூன், குங்–கு–மப்பூ - 1 சிட்– டிகை, மைதா மாவு - 30 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பாலை நன்கு க�ொதித்த வைத்து இறக்–க–வும். அதி–லி–ருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலு–மிச்– சைச்–சாற்–றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்– த – ம ான வெள்– ளை த் துணி– யி ல் திரிந்த பாலை ஊற்றி நன்– றாக வடிக்– க – வும். தண்–ணீர் முற்–றி–லும் வடிந்த பின்பு, லேசா–கத் தண்–ணீர் சேர்த்து பனீரை வீணாக்–காம – ல் துணி–யிலே எலு–மிச்சை வாடை ப�ோகும் வரை
அல–சவு – ம். பின்பு இறுக்–கப் பிழிந்து தனியே எடுத்து வைக்–க–வும். அடி– க–ன–மான பாத்–தி–ரத்–தில் மீதி–யுள்ள பால், மைதா சேர்த்து கட்–டியி – ல்–லா– மல் கரைத்து அடுப்–பில் வைத்து அடிப்–பி–டிக்–கா–மல் கிள–ற–வும். இத்– து–டன் சர்க்–கரை சேர்த்து கிளறி, சர்க்–கரை கரைந்–தது – ம் அதில் நெய், பனீ–ரை சேர்த்து மித–மா–ன சூட்–டில் கிள–ற–வும். கல–வைத் திரண்டு வந்–த– தும் ஏலக்–காய்த்–தூள், குங்–கு–மப்பூ சேர்த்து கலந்து இறக்–க–வும். அக–ல– மா–னத் தட்–டில் நெய்–யைத் தடவி, கிள– றி ய கல– வையை க�ொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறி– ய – து ம் விருப்– ப – ம ான வடி– வி ல் வெட்டி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: 1 டேபிள்ஸ்–பூன் சூடா–னப் பாலில் குங்–கும – ப்–பூவை – ச் சேர்த்து கரைத்து பயன்–படு – த்–தலா – ம். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
119
பாஸந்தி
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்–டர், சர்க்–கரை 200 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1 சிட்–டிகை, குங்–கும – ப்பூ - 1 சிட்–டிகை, ப்ளெ– யி ன் க�ோவா - 50 கிராம், முந்–திரி, பாதாம் - தலா 5.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒரு அக– ல – ம ான கடா– யி ல் பாலைக் க�ொதிக்க விட்டு, 1 லிட்– டர் பால் 1/2 லிட்–ட–ராக சுண்–டும் வரை சிம்–மில் வைத்து பாலைக் க�ொதிக்க விட–வும். பால் சுண்–டச் சுண்ட திரண்டு வரும் ஆடையை எடுத்து தனியே வைத்து க�ொண்டு, பாலில் சர்க்–க–ரை–யைச் சேர்த்து அடிப்– பி – டி க்– கா – ம ல் கிள– ற – வு ம். பாதி அள– வி ற்கு சுண்– டி – ய – து ம் ஏலக்– காய் த்– தூ ள், குங்– கு – ம ப்பூ, 120
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
க�ோவா–வைச் சேர்த்து கிள–ற–வும். இத்–து–டன் ப�ொடி–யாக நறுக்–கிய பாதாம், முந்– தி – ரி – யை ச் சேர்த்து கலந்து, தனியே எடுத்து வைத்த பால் ஆடை–யைச் சேர்த்து, ஆடை உடை– ய ா– ம ல் கிளறி இறக்– க – வு ம். சூடு ஆறி–யது – ம் ஃப்ரிட்–ஜில் வைத்து எடுத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு: க�ோவா கட்டியில்லா–மல் கரைக்க, சிறிது பாலில் க�ோவாவை சேர்த்து மிக்–சி–யில் ஒரு சுற்று சுற்றி சேர்க்– க – லா ம். க�ோவாவை வீட்– டி– ல ேயே செய்ய 1 லிட்– ட ர் எரு– மைப்–பால் அல்–லது பசும்–பாலை நான்ஸ்–டிக் பேனில் சேர்த்து, மித– மா–ன சூட்–டில் அடி–பி–டிக்–கா–மல் கிள– றி க் க�ொண்டே இருந்– தா ல், பால் நன்–கு சுண்டி வரும் கட்–டியே க�ோவா–வா–கும்.
மில்க் பேடா
என்–னென்ன தேவை?
க�ோவா - 2 கப், சர்க்–கரை 200 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், கன்–டென்ஸ்டு மில்க் - 50 கிராம், நெய் - 3 டேபிள்ஸ்–பூன், முந்–திரி, பாதாம் - தலா 5.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் தவா–வில் நெய்யை சேர்த்து, உரு–கிய – து – ம் கன்–டென்ஸ்டு மில்க், சர்க்– கர ை, க�ோவாவை சேர்த்து நன்கு கலந்து மித–மான
சூட்–டில் கட்–டி–யில்–லா–மல் கிளறி, ஏலக்– காய் த்– தூ ள் சேர்க்– க – வு ம். நெய் தனியே பிரிந்து கலவை ஸ்மூத் பேஸ்ட்– டாக திரண்டு வந்–த–தும் இறக்கி, ப�ொடித்த முந்– திரி, பாதாம் சேர்த்து கலந்து, ஒரு அக–லம – ான தட்–டில் நெய் தடவி கல– வையை க�ொட்டி சம–மாக பரப்பி விடவும். ஆறி–ய–தும் விருப்–ப–மான வடி–வத்–தில் துண்–டு–கள் ப�ோட்டு அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
சாஹி துக்ரா
என்–னென்ன தேவை?
பிரெட் துண்–டு–கள் - 6, சர்க்– கரை - 100 கிராம், பால் - 100 மி.லி., ஏலக்– காய் த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், நெய் - 50 கிராம், முந்–திரி, பாதாம் - தலா 12, குங்–கும – ப்பூ - 2 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
பிரெட்–டின் ஓரங்–களை நறுக்கி – ம் அல்–லது சதுர விட்டு முக்–க�ோண வடி–வத்–தில் வெட்டி க�ொள்–ளவு – ம். நான்ஸ்– டி க் தவா– வி ல் நெய்யை ஊ ற் றி சூ டா க் கி பி ரெட ்டை ப�ொரித்–தெ–டுத்து தனியே வைத்து க�ொள்–ள–வும். கடா–யில் பாலைச் சேர்த்து நன்கு காய்ச்சி, மித–மான தீயில் வைத்து பாதி அளவு சுண்டி
122
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
வரும்–வரை கைவி–டா–மல் கிளறி, ஓரங்–க–ளில் ஒட்–டும் ஆடை–களை சேர்த்து கிள–றவு – ம். பின் ஏலக்–காய்த்– தூள், சர்க்–கரை, குங்–கு–மப்–பூவை சேர்த்து கிள–றவு – ம். கிரீம் பதத்–திற்கு வந்–தது – ம் ப�ொடித்த பாதாம், முந்–தி– ரியை கலந்து இறக்–க–வும். தட்–டில் நெய்– யி ல் ப�ொரித்த பிரெட்டை அடுக்கி அதன் மீது பால் கல– வையை ஊற்றி 5 நிமி–டம் கழித்து பரி–மா–ற–வும். குறிப்பு: ப்ளெ– யி ன் க�ோவாவைச் சேர்த்–தும் சாஹி துக்ரா செய்– ய – லாம். க�ோவாவை சேர்க்– கு ம் ப�ொழுது பாலின் அளவை குறைத்– துக் க�ொள்–ள–வும்.
பெங்–காலி லட்டு
என்–னென்ன தேவை?
கடலை மாவு - 200 கிராம், சர்க்– கரை - 200 கிராம், எண்– ணெய் - தேவைக்கு, ஏலக்–காய்த்–தூள் 1/2 டீஸ்–பூன், பிஸ்தா - 3, முந்–திரி, பாதாம் - தலா 5, குங்–கு–மப்பூ - 2 சிட்–டிகை, துரு–விய க�ோவா - 50 கிராம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
அடி– க – ன – ம ான பாத்– தி – ர த்– தி ல் சர்க்–கரை, 1/4 கப் தண்–ணீர் சேர்த்து க�ொதிக்க வைத்து ஒரு கம்பி பாகு பதத்–திற்கு வந்–த–தும் ஏலக்–காய்த்– தூள் கலந்து இறக்–க–வும். கடலை மாவில் தண்– ணீ ர் சேர்த்து த�ோசை மாவு பதத்–திற்கு கட்–டி–யில்–லா–மல் கரைத்து குங்–கு– மப்பூ சேர்த்து கலந்து க�ொள்–ளவு – ம்.
கடா–யில் எண்–ணெயை காய– வைத்து சிறிய ஓட்– டை – யு ள்ள அரிக்–க–ரண்–டியை வைத்து அதன் மீது கரைத்த மாவை தேய்க்–க–வும். எண்–ணெ–யில் விழும் பூந்–தி–களை ப�ொரித்– தெ – டு த்து சர்க்– க – ர ைப்– பா–கில் ப�ோட்டு, துரு–விய க�ோவா, ப�ொடி–யாக நறுக்–கிய பாதாம், முந்– திரி, பிஸ்தா ஆகி–யவ – ற்றை ஒன்–றாக கலந்து அழுத்தி பிசை– ய ா– ம ல், சிறு சிறு உருண்–டை–க–ளாக லட்டு பிடித்து பரி–மா–ற–வும். குறிப்பு: அரிக்–க–ரண்–டி–யைக் கடா– யின் அருகே வைத்து மாவைத் – ாக தேய்த்–தால், பூந்தி உருண்–டைய விழும். மேலே தூக்கி வைத்து தேய்த்–தால் நீள–மாக விழும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
ஃப்ரூட் மிக்ஸ் ரஃப்டி
என்–னென்ன தேவை?
பால் - 1½ லிட்–டர், சர்க்–கரை - 150 கிராம், த�ோல் நீக்கி சீவிய பாதாம், பிஸ்தா - தலா 7, ஏலக்– காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், ப�ொடி– யாக நறுக்– கி ய உலர்ந்த அத்– தி ப்– ப–ழம் - 3, த�ோல் சீவி ப�ொடி–யாக நறுக்–கிய ஆப்–பிள் - 2 டேபிள்ஸ்–பூன், டூட்டி ஃப்ரூட்டி - 1 டேபிள்ஸ்–பூன், மாதுளை முத்–துக்–கள் - 2 டேபிள்ஸ்– பூன், த�ோல் விதை நீக்கி நறுக்–கிய ஆரஞ்சு சுளை–கள் - 3.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒரு அக– ல – ம ா– ன ப் பாத்– தி – ர த்– தில் பாலைச் சேர்த்து காய்ச்சி 5 0 0 மி . லி . ஆ கு ம் வ ர ை மி த – மான தீயில் வைத்து க�ொதிக்க விடா– ம ல் சுண்ட காய்ச்– ச – வு ம். 124
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
ஓரத்– தி ல் படி– யு ம் ஆடை– களை கரண்–டி–யால் பாலில் கலந்து விட– வும். பால் பாதி அளவு சுண்–டி–ய– தும் சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூள், பாதாம், பிஸ்தா கலந்து இறக்–கவு – ம். ரஃப்டி ரெடி. ஒரு கண்–ணாடி பவு–லில் ரஃப்– டியை ஊற்றி அத்–திப்–ப–ழம், டூட்டி ஃப்ரூட்–டியை கலந்து வைக்–க–வும். சூடு ஆறி–யது – ம் ஆப்–பிள், மாதுளை முத்–துக்–கள், ஆரஞ்சு சுளை–களை கலந் து ஃ ப் ரி ட் – ஜி ல் வை த் து ஜில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு : ரஃப்– டி யை பரி– ம ா– று ம் முன்பு பழங்– களை சேர்க்– க – வு ம். முன்–னால் சேர்த்–தால் தண்–ணீர் விட்டு ரஃப்– டி – யி ன் பதம் மாறி விடும்.
மலாய் பர்ஃபி
என்–னென்ன தேவை?
பால் - 1½ லிட்–டர், சர்க்–கரை 200 கிராம், பாதாம், பிஸ்தா - தலா 3, முந்–திரி - 2, ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், எலு–மிச்–சைச்–சாறு - 1/2 டேபிள்ஸ்–பூன், நெய் - 50 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
300 மி.லி. பாலைத் தனியே எடுத்து வைத்து, மீதி–யுள்ள பாலை ந ன் கு காய் ச் சி எ லு – மி ச் – சை ச் – ச ா று ஊ ற் றி பாலை தி ரி ய வைக்–க–வும். சுத்–த–மான மஸ்–லின் அல்– ல து வெள்– ளை த் துணி– யி ல் திரிந்த பாலைச் சேர்த்து பிழிந்து, மீ ண் – டு ம் சி றி து தண் – ணீ – ரி ல்
2, 3 முறை புளிப்பு வாடை ப�ோக பனீரை வீணாக்– கா – ம ல் அலசி எடுக்–க–வும். அக–ல–மான பாத்–திர – த்–தில் 300 மி.லி. பாலை க�ொதிக்க வைத்து பனீர், சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூள், நெய் சேர்த்து மித– ம ான தீயில் வைத்து நன்–றாக கிள–றவு – ம். கலவை பாத்–தி–ரத்–தில் ஒட்–டாத பதத்–திற்கு வந்–தது – ம் இறக்கி நெய் தட–விய தட்– டில் க�ொட்டி பரப்பி, பாதாம், முந்– திரி, பிஸ்–தாவை கேரட் துரு–வியி – ல் துருவி அலங்–கரி – க்–கவு – ம். ஆறி–யது – ம் விருப்–பம – ான வடி–வத்–தில் வெட்டி பரி–மா–ற–வும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
லப்ஸி
என்–னென்ன தேவை?
உடைத்த சம்பா க�ோதுமை 200 கிராம், ப�ொடித்த பாதாம், பிஸ்தா - தலா 5, பால் - 750 மி.லி., சர்க்–கரை - 300 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ந ான் ஸ் டி க் த வ ா வி ல் நெய் சேர்த்து சுத்– த ம் செய்த உடைத்த சம்பா க�ோது– மையை
126
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
ப�ொன் னி ற ம ாக வ று த் து க�ொள்– ள – வு ம். அதில் தண்– ணீ ர் சேர்க ் கா ம ல் , பா ல் சே ர் த் து மித– ம ான தீயில் வைத்து நன்கு வேக வைக்– க – வு ம். கல– வையை அடி–பி–டிக்–கா–மல் கிளறி சர்க்–கரை, ஏலக்– காய் த்– தூ ள், பாதாம், பிஸ்– தாவை சேர்த்து கிள–ற–வும். தவா– வில் ஒட்–டாம – ல் அல்வா பதத்–திற்கு வந்– த – து ம் இறக்கி அலங்– க – ரி த்து பரி–மா–ற–வும்.
பெங்–காலி பிர்னி
என்–னென்ன தேவை?
அரிசி மாவு - 100 கிராம், பால் - 750 மி.லி., பிஸ்தா - 3, பாதாம் - 5, சர்க்–கரை - 100 கிராம், நெய் 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்– டி க் தவா– வி ல் அரிசி மாவை ப�ோட்டு மித–மான தீயில் மாவின் நிறம் மாறா–மல் வறுக்–க– வும். அதில் பாலை ஊற்றி கட்–டி– யில்–லா–மல் 5 நிமி–டங்–கள் கிளறி, சர்க்– கர ை சேர்த்து கிள– ற – வு ம்.
அதி–கம் கெட்–டி–யாக இல்–லா–மல் குடிக்– கு ம் பதத்– தி ற்கு வந்– த – து ம் இறக்– க – வு ம். கடா– யி ல் நெய்யை ஊ ற் றி சூ டா க் கி ப�ொ டி த்த பாதாம், பிஸ்–தாவை வறுத்து, பிர்– னி–யில் க�ொட்டி கலந்து சூடா–கவ�ோ அல்– ல து ஃப்ரிட்– ஜி ல் வைத்து ஜில்–லென்றோ பரி–மா–ற–வும். குறிப்பு : தேவை– யெ – னி ல் ர�ோஸ் அல்– ல து வெனிலா எஸென்ஸ் சேர்க்–க–லாம். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
நட்ஸ் கத்லீ
என்–னென்ன தேவை?
வால்–நட் - 2, பிஸ்தா, பாதாம் - தலா 50 கிராம், சர்க்–கரை - 150 கிராம், ஏலக்– காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், முந்–திரி - 100 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 100 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் தவா–வில் முத–லில் முந்–திரி, பாதாம், பிஸ்–தாவை ஒன்–றன் பின் ஒன்– றாக மித–மான சூட்–டில் லேசாக வறுத்– துக் க�ொள்–ள–வும். இத்–துடன் – வால்–நட்ஸ் சேர்த்து கலந்து இறக்–கவு – ம். சூடு ஆறி–யது – ம் மிக்சி அல்–லது ப்ளெண்–ட–ரில் ப�ோட்டு 128
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
அரைத்– துக் க�ொள்– ள – வும். அதே தவா–வில் சர்க்–கரை, 100 மி.லி. தண்–ணீர் சேர்த்து மித–மான சூட்–டில் வைத்து கிள–ற–வும். சிறிது க�ொதித்–த– து ம் ஏ ல க் – காய் த் – தூ ள் கலந்து, அரைத்த நட்ஸ் பவு–டரை ஒன்–றாக கலந்து கட்–டியி – ல்–லாம – ல், கைவி–டா– – ம். தவா–வில் ஒட்– மல் கிள–றவு டாத பதம் வந்–தது – ம் இறக்–க– வும். கையில் நெய் தடவி க�ொண்டு நட்ஸ் கல–வையை பிசை– ய – வு ம். அதி– க – ம ாக இறுக்–கம – ாக பிசைய வேண்– டாம். ஒரு தட்– டி ன் பின் பு – ற – ம் நெய் தடவி க�ொண்டு, அதன் மீது கல– வையை ப�ோட்டு, சப்–பாத்தி தேய்க்– கும் உருட்–டுக்–கட்–டை–யால் 5 மி.மி. தடி–மன் அள–விற்கு தேய்க்– க – வு ம். டைமண்ட் வடி–வம் அல்–லது விருப்–ப– மான வடி–வத்–தில் வெட்டி பரி–மா–ற–வும். குறிப்பு: நட்ஸ் கலவை மிக– வும் கெட்–டிய – ாக இருந்–தால் சிறிது பாலைச் சேர்த்–துப் பிசை–ய–வும். மிக–வும் சாஃப்– டாக இருந்– தா ல் சிறிது பால் பவு–ட–ரைச் சேர்த்து பிசை–ய–வும்.
ஸ்வீட் ரவா ப�ோஹ்
என்–னென்ன தேவை?
ரவை - 200 கிராம், பாதாம், முந்–திரி - தலா 30 கிராம், சர்க்–கரை - 200 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1½ டீஸ்–பூன், உலர்ந்த திராட்சை - 15 கிராம், பால் - 200 மி.லி., தண்– ணீர் - 200 மி.லி., நெய் - 200 மி.லி., உப்பு - 1 சிட்–டிகை, குங்–கு–மப்பூ - 2 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
கடா–யில் 100 மி.லி. நெய்யை ஊற்றி சூடா– ன – து ம் ரவையை க�ொட்டி ப�ொன்–னி–ற–மாக வறுத்– துக் க�ொள்– ள – வு ம். இத்– து – டன்
பால், தண்– ணீ ர், குங்– கு – ம ப்பூ, ஏலக்– காய் த்– தூ ள், உப்பு சேர்த்து மித–மான தீயில் கட்–டி–யில்–லா–மல், அடி–பி–டிக்–கா–மல் கிள–ற–வும். ரவை வெந்து கெட்–டிய – ா–னது – ம் மீதி–யுள்ள நெய்–யில் பாதாம், முந்–திரி, காய்ந்–த– தி–ராட்–சையை வறுத்து க�ொட்டி கலந்து இறக்கி பரி–மா–ற–வும். குறிப்பு: குங்–கு–மப்–பூவை 1 டீஸ்–பூன் வெ து – வெ – து ப் – பா ன தண் – ணீ ர் அ ல் – ல து பா லி ல் கர ை த் து கலந்–தால் ரவை கல–வை–யில் நிறம் எளி–தில் மாறும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
ச�ோட்டா பூந்தி
என்–னென்ன தேவை?
கடலை மாவு - 200 கிராம், சர்க்–கரை - 200 கிராம், அரிசி மாவு - 30 கிராம், முந்–திரி, பாதாம் - தலா 5, ஏலக்–காய்த்– தூள் - 1/2 டீஸ்–பூன், தண்–ணீர் - 100 மி.லி., குங்–கும – ப்பூ - 2 சிட்–டிகை, பால் - 50 மி.லி., உப்பு - 1 சிட்–டிகை, நெய் - 200 மி.லி., உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்– டி க் தவா– வி ல் சர்க்– கர ை, தண்– ணீ ர் சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்– தி ற்கு காய்ச்– சி க் க�ொள்– ள – வு ம். 130
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
சிறிது சூடான பாலில் குங்– கு–மப்–பூவை கரைத்து வைத்– துக் க�ொள்– ள – வு ம். கடலை மாவு, அரிசி மாவை ஒன்– றாக கலந்து, பால் ஊற்றி கட்– டி – யி ல்– லா – ம ல் த�ோசை மாவுப் பதத்– தி ற்கு கரைத்– துக் க�ொள்– ள – வு ம். அதில் குங்– கு – ம ப்பூ கரை– ச – லை – யு ம் சேர்த்து கலந்து வைக்–க–வும். கடா–யில் நெய்யை சூடாக்கி சிறிய ஓட்–டை–யுள்ள அரிக்– க–ரண்–டி–யில் மாவை ஊற்றி அதன் மீது கரண்டி அல்–லது – ம். ஸ்பூன் க�ொண்டு தேய்க்–கவு நெய்– யி ல் விழும் பூந்– தி யை ப�ொரித்–தெ–டுத்து சர்க்–கரை பாகில் ப�ோட–வும். மீதி–யுள்ள நெய்–யில் பொடித்த பாதாம், மு ந் – தி ரி , தி ரா ட் – சையை ப�ொன்– னி – ற – ம ாக வறுத்து, சர்க்– க – ர ைப்– பா கு பூந்– தி – யி ல் க�ொட்டி கலந்து அலங்– க – ரித்து 20 நிமி–டங்–கள் கழித்து பரி–மா–ற–வும். கு றி ப் பு: கடலை ம ா வி ல் பாலை ஊற்– றி க் கரைப்– ப – தால் பூந்தி ப�ொரிக்–கும்–ப�ோது உ டனே சி வ ந் து வி டு ம் . ஆகவே சிவக்– கு ம் முன்பு ப�ொரித்–தெ–டுக்–க–வும்.
ஒயிட் அல்வா
என்–னென்ன தேவை?
துரு–விய நீர்ப்–பூச – ணி – க்–காய் - 200 கிராம், சர்க்– கர ை - 200 கிராம், பால் - 500 மி.லி., முந்– தி ரி - 12, ஏலக்– காய் த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், நெய் - 50 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
துரு– வி ய நீர்ப்– பூ – ச – ணி க்– காயை சுத்– த – ம ான மெல்– லி ய துணி– யி ல் ப�ோட்டு சாறை பிழித்– தெ – டு த்– துக் க�ொள்– ள – வு ம். நான்ஸ்– டி க்
தவா– வி ல் பிழிந்த நீர்ப்– பூ – ச – ணி க்– காயை ப�ோட்டு மித–மான சூட்–டில் வதக்–க–வும். பின் பால், சர்க்–கரை சேர்த்து நன்கு வதக்–கவு – ம். பூச–ணிக்– காய் வெந்து சுருண்டு வரும்–ப�ோது நெய், ஏலக்–காய்த்–தூள், ப�ொடி–யாக நறுக்–கிய முந்–தி–ரியை சேர்த்து கிள– ற–வும். நெய் பிரிந்து வரும்–ப�ோது இறக்கி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: கேரட், பீட்–ரூட், புட–லங்–கா– யி–லும் அல்வா செய்–ய–லாம். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
குங்–கு–மப்பூ ரைஸ்
என்–னென்ன தேவை?
பாஸ்–மதி அரிசி - 1 கப், சர்க்– கரை - 2 டேபிள்ஸ்–பூன், நெய் - 1½ டேபிள்ஸ்–பூ ன், ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், பால் - 100 மி.லி., குங்– கு – ம ப்பூ - 1 கிராம், உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்– பூ ன், உலர்ந்த அத்–திப்–ப–ழம் - 5, முந்–திரி - 7, பாதாம் - 5.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் தவா–வில் நெய்யை ஊ ற் றி சூ டா – ன – து ம் உ லர்ந்த திராட்சை, ப�ொடி–யாக நறுக்–கிய – த்தை முந்–திரி, பாதாம், அத்–திப்–பழ வறுத்–தெ–டுத்து தனியே வைத்–துக் க�ொள்–ள–வும். அரி–சியை தண்–ணீ– ரில் 15 நிமி– டங் – க ள் ஊற– வை க்– க – வும். 1 டீஸ்–பூன் வெது–வெது – ப்–பான 132
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
தண்–ணீரி – ல் குங்–கும – ப்–பூவை சேர்த்து கரைத்து வைத்–துக் க�ொள்–ள–வும். பாத்– தி – ர த்– தி ல் நெய் சேர்த்து சூடா–ன–தும் அரி–சியை ப�ோட்டு 2 நிமி–டங்க – ள் உடை–யா–மல் வறுத்து, கரைத்த குங்– கு – ம ப்பூ, பால், 3/4 கப் தண்–ணீர் சேர்த்து அரி–சியை வேக–வைக்–க–வும். பாதி வெந்–த–தும் சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூள் கலந்து வேக–வி–ட–வும். ஒன்–ற�ோடு ஒன்று கலந்து அரிசி ஒட்–டாம – ல் வந்–தது – ம் இறக்–கவு – ம். வறுத்த நட்ஸ், டிரைஃப்– ரூட்ஸ் கல–வையை க�ொட்டி கலந்து பரி–மா–ற–வும். குறிப்பு: கு ங் – கு – ம ப் பூ இ ல் – லை – யென்– றா ல் ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்க்–கலா – ம். வாச–னைக்கு ர�ோஸ் வாட்டர் சேர்க்கலாம்.
மில்க் மிக்ஸ் பேன் கேக்
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்– ட ர், சர்க்– கர ை - 400 கிராம், மைதா - 50 கிராம், குங்–கு–மப்பூ - 2 சிட்–டிகை, நெய் 300 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
வெது–வெ–துப்–பா–னத் தண்–ணீ– ரில் குங்–கும – ப்–பூவை கரைத்து வைத்– துக் க�ொள்–ள–வும். பாத்–தி–ரத்–தில் 300 கிராம் சர்க்– கர ை, 100 மி.லி. தண்– ணீ ரை சேர்த்து ஒரு கம்பி பாகு– ப – த த்– தி ற்கு காய்ச்சி அதில் குங்–கு–மப்பூ கரை–சலை சேர்த்–துக் க�ொள்– ள – வு ம். நான்ஸ்– டி க் தவா– வில் பாலை சுண்ட காய்ச்சி ஆற வைத்– து க் க�ொள்– ள – வு ம். இத– னு – டன் மைதா, மீதி–யுள்ள சர்க்–கரை சேர்த்து எடுத்து ஊற்–றும் பதத்–திற்கு
மாவைக் கரைக்–க–வும். மாவு கெட்– டி–யாக இருந்–தால் சிறிது பாலைச் சேர்த்து கரைத்–துக் க�ொள்–ள–வும். பின்பு 3 மணி நேரத்–திற்கு அப்–ப– டியே வைத்து, சூடான நான்ஸ்– டிக் தவா–வில் நெய் விட்டு 1 ஸ்பூன் மாவை ஊற்றி பேன் கேக் ப�ோல் – –மும் நெய் பரப்பி விட–வும். இரு–புற சேர்த்து ப�ொன்–னி–ற–மாக வெந்–த– தும் எடுத்து நெய்யை வடித்து சர்க்–க– ரைப்–பா–கில் முக்கி 20 நிமி–டங்–கள் கழித்து பரி–மா–ற–வும். குறிப்பு: பாலுக்– கு ப் பதில் கன்– டென்ஸ்டு மில்க் சேர்க்– க – லா ம். மைதா–விற்–குப் பதில் க�ோதுமை மாவைச் சேர்த்– து ம் பேன் கேக் செய்–ய–லாம். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
காளா ஜாமூன்
என்–னென்ன தேவை?
மைதா - 100 கிராம், சர்க்–கரை - 250 கிராம், தண்–ணீர் - 200 மி.லி., இனிப்பு இல்லாத க�ோவா - 250 கிராம், ஏலக்– காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன், பால் பவு–டர் - 3 டேபிள்ஸ்– பூ ன், ப�ொரிக்க நெய் தேவைக்கு, பால் - 30 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
பாத்– தி – ர த்– தி ல் 50 கிராம் ப�ொடித்த சர்க்– கர ை, க�ோவா, மைதா, பால் பவு– டரை ஒன்–றாக கலந்து, இத்–துடன் – பால் சேர்த்து அழுத்–தா–மல் நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்– டை – க – ள ாக பிடித்து தனியே வைக்– க – வு ம். ஒரு அக– ல – ம ா– ன 134
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
பாத்– தி – ர த்– தி ல் மீதி– யு ள்ள ச ர் க் – கர ை , தண் – ணீ ர் சேர்த்து க�ொதிக்க விட்டு பாகு காய்ச்சி, ஏலக்–காய்த்– தூ ள் சே ர் த் து கலந் து வைக்–கவு – ம். கடா–யில் நெய் சேர்த்து உரு– கி – ய – து ம் மித– மா– ன ச் சூட்– டி ல் உருண்– டை–களை நன்கு ப�ொரித்– தெ– டு த்– து க் க�ொள்– ள – வு ம். உ ரு ண் – டை – க ள் கா யு ம் முன்பு அனைத்– தை – யு ம் நெய்– யி ல் ப�ொரிக்– க – வு ம். சூடு ஆறி–யது – ம் சர்க்–கர – ைப்– பா– கி ல் ப�ோட்டு சிறிது நேரம் ஊற–விட்டு எடுத்து பரி–மா–ற–வும். குறிப்பு: மாவில் சர்க்–க–ரை– யைச் சேர்ப்–பதா – ல் ஜாமூன் நெய் – யி ல் ப�ொ ரி க் – கு ம் – ப�ோது கருப்–பாக ப�ொரிந்து விடும். ப�ொது– வ ா– கவே காளா ஜாமூனை நெய்– யி ல் ப�ொ ரி க்க வேண் – டும். சூடான உருண்–டை– களை பாகில் சேர்த்–தால், இனிப்பு சுவை ஜாமூ–னில் ஏறாது. அதே ப�ோல் பாகு அதிக சூட்–டில் இருக்–கும் ப�ோது உருண்– டை – களை சேர்த்–தால் உருண்–டைக – ள் உடைந்து விடும்.
சாக்–லெட் வெனிலா மில்க் ஸ்வீட்
என்–னென்ன தேவை?
பால் - 1½ லிட்–டர், சர்க்–கரை - 100 கிராம், எலு–மிச்–சைச்–சாறு - 1 டேபிள்ஸ்–பூன், க�ோக�ோ பவு– ட ர் - 1 டேபிள் ஸ்–பூன், துரு–விய பாதாம் - 1 டே பி ள் ஸ் – பூ ன் , வெனிலா எசென்ஸ் 2-3 ச�ொட்டு, துரு–விய பிஸ்தா - 1/2 டேபிள் ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒ ரு அ க – ல – ம ா ன பாத்–திர – த்–தில் பாலைச் சே ர் த் து க �ொ தி க்க விடா– ம ல் மித– ம ா– ன ச் சூட்–டில் சூடு செய்–ய– வும். சூடு ஆறி– ய – து ம் எ லு மி ச ்சைச்சா று சே ர் த் – து ப் பாலை த் திரிய வைக்–க–வும். மஸ்– லின் துணி அல்– ல து வெ ள் – ளை த் து ணி – யில் திரிந்த பாலைச் சேர்த்து, அதன் தண்– ணீரை வடித்து பிழி ந்–து க�ொள்–ள–வும். மிக– வும் அழுத்– தி ப் பிழிய வேண் – டா ம் . இ ந ்த பனீ– ரி ல் எலு– மி ச்சை வாடை ப�ோகும்–வரை
ப�ோது–மா–ன தண்–ணீ–ரில் துணி–யு–டன் அல–ச– வும். பனீரை மட்–டும் தனியே எடுத்து, அத்–து– டன் சர்க்–கரை, வெனிலா எசென்ஸ், க�ோக�ோ பவு–டர் சேர்த்து மிக்–சி–யில் ஒரு சுற்று சுற்றி, நான்ஸ்–டிக் பேனில் சேர்த்து சிறுத் தீயில் கட்–டி– – ல், நன்கு திரண்டு வரும்–வரை 5-7 நிமி– யில்–லாம டங்–கள் அடிப்–பி–டிக்–கா–மல் கிளறி இறக்–க–வும். சூடு ஆறி–யது – ம் தட்–டில் க�ொட்டி மிரு–துவ – ா–கப் பிசைந்து சிறு சிறு உருண்–டைக – ள – ா–கப் பிடிக்–க– வும். துரு–விய பாதாம், பிஸ்–தாவை ஒன்–றாக கலந்து உருண்–டை–யின் மேல் அலங்–க–ரித்து, சிறிது நேரம் ஃப்ரிட்– ஜி ல் வைத்து எடுத்து பரி–மா–ற–வும். குறிப்பு: க�ோக�ோ பவு–டர் இல்–லை–யென்–றால் டார்க் சாக்– லெட ்டை பயன்– ப – டு த்– த – லா ம். பால் திரிந்–த–தும் அந்த தண்–ணீரை வீண் செய்– யா–மல், பாட்–டி–லில் சேர்த்து வைத்து எலு– மிச்–சைக்–கு பதில் பால் திரி–யப் பயன்–ப–டுத்–த– லாம். உருண்–டைப் பிடிக்–கும்–ப�ோது கையில் பிசு–பிசு – –வென்று ஒட்–டின – ால் சிறிது நெய்–யைச் சேர்த்–தால் கையில் பனீர் கலவை ஒட்–டாது. நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
ஈஸி காலா–கன்ட்
என்–னென்ன தேவை?
துரு– வி ய பனீர் - 300 கிராம், ஏலக்– காய் த்– தூ ள் - 1/2 டீஸ்– பூ ன், கன்–டென்ஸ்டு மில்க் - 300 கிராம், ப�ொடி– ய ாக நறுக்– கி ய பாதாம், பிஸ்தா - தலா 1 டேபிள்ஸ்–பூன், நெய் - 1 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - 2 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் தவா–வில் துரு–விய பனீர், கன்–டென்ஸ்டு மில்க், ஏலக்– காய்த்– தூ ள் கலந்து, சிறு தீயில் வைத்து அடிப்– பி – டி க்– கா – ம – லு ம், கரு–கா–ம–லும் கிள–ற–வும். 7-8 நிமி– டங்–க–ளில் கெட்–டி–யாகி திரண்டு 136
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
வரும்–ப�ொ–ழுது அடுப்பை நிறுத்–த– வும். ஒரு தட்–டில் நெய் தடவி இந்த கல–வையை க�ொட்டி சம–மா–கப் பரப்பி விட–வும். சூடு ஆறி–ய–தும் சிறு சிறு துண்– டு – க – ள ாக நறுக்கி, பிஸ்தா, பாதாம் கல– வை – ய ால் அலங்–க–ரித்து ஃப்ரிட்–ஜில் வைத்து எடுத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு: பாலை திரிய வைத்து பனீர் எடுத்து காலா–கன்ட் செய்–ய–லாம். த ே வை – ய ா – ன ா ல் கு ங் – கு – ம ப் பூ சேர்த்து லைட் ஆரஞ்சு நிறத்– தில் காலா– கன் ட் செய்– ய – லா ம். அலங்–கரி – க்க உலர்ந்த அத்–திப்–பழ – ம், உலர்ந்த திராட்சை, வால்–நட்ஸ் சேர்க்–க–லாம்.
இள–நீர் ஜவ்–வ–ரிசி கீர்
என்–னென்ன தேவை?
ப�ொடி–யாக நறுக்–கிய இள–நீர் வழுக்கை தேங்–காய் - 100 கிராம், ஜவ்–வரி – சி - 50 கிராம், துரு–விய வெல்– லம் - 150 கிராம், பால் - 100 மி.லி., தேங்–காய்ப்–பால் - 200 மி.லி., ப�ொடி– யாக நறுக்– கி ய பிஸ்தா, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்–பூன், தண்–ணீர் - 300 மி.லி., நெய் - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
பாத்–தி–ரத்–தில் ஜவ்–வ–ரிசி, தண்– ணீர் சேர்த்து வேக– வை க்– க – வு ம். நான்ஸ்–டிக் பேனில் நெய் சேர்த்து வெந்த ஜவ்– வ – ரி – சி – யை ச் சேர்த்து வதக்–க–வும். அத–னு–டன் வெல்–லத்– து–ரு–வல், ஏலக்–காய்த்–தூள் சேர்த்து
பிரட்–ட–வும். பின்பு அதில் பால் சேர்த்து சிறிது நேரம் மித–மா–னச் சூட்– டி ல் க�ொதிக்க விட– வு ம். ப�ொடி– ய ாக நறுக்– கி ய வழுக்கை இள–நீர் தேங்–காய், பிஸ்தா, பாதாம் கலந்து 5 நிமி–டங்–கள் மித–மா–னச் சூட்–டில் க�ொதிக்க விட–வும். ஓர– ளவு ஜவ்–வ–ரிசி கலவை தயா–ரா–ன– தும், தேங்–காய்ப்–பா–லைச் சேர்த்து சிம்–மில் வைத்து லேசாக க�ொதிக்க விட்டு இறக்– க – வு ம். கண்– ணா டி பவு–லில் ஊற்றி சூடா–கவ�ோ அல்– லது ஜில்–லென்றோ பரி–மா–ற–வும். குறிப்பு: கீர் மிக– வு ம் கடி– ன – ம ாக இல்–லா–மல், குடிக்–கும் பதத்–திற்கு இருக்க வேண்–டும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
க�ோதுமை சூர்மா
என்–னென்ன தேவை?
க�ோதுமை மாவு - 200 கிராம், ப�ொடித்த சர்க்–கரை - 150 கிராம், ரவை - 50 கிராம், நறுக்–கிய முந்–திரி - 12, ஏலக்–காய்த்–தூள் - 20 மி.லி., பால் - 100 மி.லி., நறுக்–கிய பாதாம் - 7, உலர்ந்த திராட்சை - சிறிது.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒரு அக– ல – ம ா– ன பாத்– தி – ர த்– தில் க�ோதுமை மாவு, ரவையை சேர்த்து ஒன்–றாக கலந்து வைக்–க– வும். 50 மி.லி. நெய், பால் சேர்த்து மிரு–து–வா–கப் பிசைந்–து க�ொள்–ள– வும். பிசைந்த மாவைச் சிறு சிறு 138
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
உ ரு ண் – டை – க – ள ாக செய் – து க�ொள்–ளவு – ம். மீத–முள்ள நெய்–யைக் கடா– யி ல் சேர்த்து மித– ம ா– ன ச் சூட்–டில் சூடு செய்து, உருண்–டை– களை ஒவ்–வ�ொன்–றாக ப�ோட்டு ப�ொன்–னிற – ம – ா–கச் சுட்டு எடுக்–கவு – ம். இதனை மிக்–சி–யில் சேர்த்–துப் பிறு– பி–று–வென அரைத்து, அத்–து–டன் ப�ொடித்த சர்க்–கரை, ஏலக்–காய்த்– தூள், நெய்–யில் வறுத்த பாதாம், முந்–திரி, திராட்–சையை கலக்–கவு – ம். சூர்மா தயார். பழுத்த வாழைப்– ப–ழத்–துடன் – க�ோதுமை சூர்–மாவை பரி–மா–ற–வும்.
கேசரி கன்ட்
என்–னென்ன தேவை?
ஆடை–யு–டன் கூடிய தயிர் - 500 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்– பூன், வெது–வெ–துப்–பான பால் - 2 டேபிள்ஸ்–பூன், பாதாம், பிஸ்தா - தலா 7, ப�ொடித்த சர்க்–கரை 100 கிராம், ஜாதிக்–காய் ப�ொடி - 1 சிட்–டிகை, குங்–கும – ப்பூ - 1 சிட்–டிகை.
எப்–ப–டிச் செய்–வ–து?
தயிரை ஒரு துணி அல்– ல து மஸ்–லின் துணி–யில் ப�ோட்டு கட்டி த�ொங்க விட–வும். தயி–ரில் உள்ள
தண்–ணீர் வடிந்–த–தும், ஃப்ரிட்–ஜில் வைத்து 6-7 மணி நேரம் கழித்து எடுக்–க–வும். ஒரு அக–ல–மா–ன பாத்– தி–ரத்–தில் பிழிந்த தயிர், ப�ொடித்த சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூள், பாலில் கரைத்த குங்–கு–மப்பூ, ஜாதிக்–காய் ப�ொடி சேர்த்து நன்–றாக கலந்து, சிறிது நேரம் ஃப்ரிட்–ஜில் வைத்து எடுக்–கவு – ம். லேசாக சீவிய பாதாம், பி ஸ் – தா – வ ா ல் அ லங் – க – ரி த் து ஜில்–லென்று பரி–மா–ற–வும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
நட்ஸ் நிகுத்தி
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்–டர், சர்க்–கரை - 200 கிராம், மைதா - 50 கிராம், ஏலக்– காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், முந்–திரி, பிஸ்தா - தலா 5, பாதாம் - 7, கன்– டென்ஸ்டு மில்க் - 300 கிராம், வினி–கர் - 1 டேபிள்ஸ்–பூன், நெய் - தேவை–யான அளவு.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒரு அக– ல – ம ா– ன பாத்– தி – ர த்– தி ல் ச ர் க் – கர ை , 1 5 0 மி . லி . தண் – ணீ ர் சேர்த்து கிளறி கம்–பிப் பதம் வரும் மு ன் பு இ ற க் – கி க் க �ொ ள் – ள – வு ம் . ஒ ரு அ க – ல – ம ா ன பா த் – தி – ர த் – தி ல் 140
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
பாலை சூடு செய்து ஆறி– ய – தும் வினி–கர் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு துணி– யில் கட்டி திரிந்த பாலை வடி–கட்–டித் தனியே எடுத்து வைக்– க – வு ம். இதை தண்– ணீ – ரில் அலசி வடித்து எடுத்துக் க�ொள்–ளவு – ம். பனீரை தட்–டில் ப�ோட்டு மைதா மாவு சேர்த்து சப்– பா த்தி மாவு பதத்– தி ற்கு மிரு– து – வ ா– க ப் பிசைந்து, மிக்– சி– யி ல் ப�ொடித்த பாதாம், முந்– தி ரி, பிஸ்தா சேர்த்– து ப் பிசை– ய – வு ம். ஓவல் அல்– ல து உருண்டை வடி–வத்–தில் உருண்– டை–யாக பிடிக்–கவு – ம். கடா–யில் நெய் சேர்த்து சூடா– ன – து ம் உருட்– டி ய உருண்– டை – களை ஒவ்– வ�ொன் – றா – க ச் சேர்த்து ப�ொரித்– தெ – டு த்து தனியே வைக்– க – வு ம். சூடு ஆறி– ய – து ம் ப�ொரித்த உருண்– டை – க – ளை – ைப்–பாகி – ல் சேர்த்து 2-3 சர்க்–கர மணி நேரம் ப�ோட்டு வைத்து, அதன் பின் கன்– டென் ஸ்டு மி ல் க் – கி ல் ப�ோ ட் டு ஊ ற – வைத்து ஃப்ரிட்–ஜில் வைத்து எடுத்து ஜில்–லென்று பரி–மா–ற– வும். கு றி ப் பு : ந ட் ஸ் சே ர் க் – கா – மல் ப்ளெ– யி ன் நிகுத்– தி – யை செய்–ய–லாம்.
ஈஸி மலாய் ர�ோல்
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்– ட ர், சர்க்– கரை - 300 கிராம், மைதா - 30 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்–பூன், ஏலக்– காய் த்– தூ ள் - 1/4 டீஸ்– பூ ன், வினி–கர் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடி– யாக சீவிய பாதாம், பிஸ்தா - தலா 5, கன்–டென்ஸ்டு மில்க் - 100 கிராம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
250 மி.லி. பாலில் ஃப்ரெஷ் கிரீம், கன்–டென்ஸ்டு மில்க், ஏலக்– காய்த்–தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்–பில் வைத்து சூடு செய்து, பாதி அள–விற்கு வந்–தது – ம் அடுப்பை நிறுத்தி நன்கு ஆற–வி–ட–வும். மீதி–யுள்ள பாலைச் சூடாக்கி, வினி–கர் சேர்த்து பாலைத் திரிய வை த் து ம ஸ் – லி ன் து ணி – யி ல்
வடி– க ட்டி, தண்– ணீ – ரி ல் அல– சி க் க�ொள்–ள–வும். சர்க்– க – ர ைக்– கு ச் சம– அ– ள – வு த் தண்–ணீர் ஊற்றி சர்க்–க–ரைப்–பாகு காய்ச்சி க�ொள்–ள–வும். பாத்–தி–ரத்– தில் பனீர், மைதா–வைச் சேர்த்து சப்– பா த்தி மாவு பதத்– தி ற்– கு ப் பிசைந்து சிறு சிறு உருண்– டை –க– ளாக நீள–மாக உருட்–டிக் க�ொள்–ள– வும். இத–னை சர்க்–க–ரைப்–பா–கில் ப�ோட்டு மித–மா–னச் சூட்–டில் சூடு செய்–ய–வும். 15 நிமி–டங்–கள் கழித்து அடுப்பை நிறுத்–த–வும். தயா–ரான உருண்– டை – களை பால் கல– வை – யில் கலந்து ஊற–வைத்து பாதாம், பி ஸ் – தா – வ ா ல் அ லங் – க – ரி த் து பரி–மா–ற–வும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
ஒயிட் கேக் (சந்–திர புளி)
என்–னென்ன தேவை?
தேங்–காய்த்–துரு – வ – ல் - 200 கிராம், சர்க்–கரை - 100 கிராம், ஏலக்–காய்த்– தூள் - 1 டீஸ்–பூன், நெய் - 2 டீஸ்–பூன், க�ோவா - 500 கிராம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
துரு– வி ய தேங்– காயை மிக்– சி – யில் ப�ோட்டு தண்– ணீ ர் சேர்க்– காது அரைத்– து க் க�ொள்– ள – வு ம். க�ோவா–வை–யும் துரு–விக் க�ொள்– ள – வு ம் . ந ான் ஸ் – டி க் பே னி ல் துரு– வி ய க�ோவா– வை ச் சேர்த்து மித–மா–னச் சூட்–டில் வதக்–க–வும். 3 - 4 நி மி – டங் – க – ளி ல் க�ோ வ ா முற்றிலும் உருகி விடும். அடிப்– 142
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
பி– டி க்– கா – ம ல் கிளறி, இத– னு – டன் சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூள், துரு– விய தேங்–கா–யைச் சேர்த்து 5 நிமி– டங்– க ள் த�ொடர்ந்து கிள– ற – வு ம். கெட்–டிய – ாக திரண்டு வரும்–ப�ோது அடுப்பை அணைத்து தட்– டி ல் ப�ோட–வும். சந்–தி–ர–பு–ளிச் செய்–யும் அச்சில் நெய்–யை தடவி ஆறிய கல–வையை (2 டேபிள்ஸ்–பூன்) அதில் வைத்து வி ர ல் – க – ள ா ல் ஒ ரு அ ழு த் து அழுத்தி உடை– ய ா– ம ல் அச்– சி லிருந்து வெளியே எடுக்– க – வு ம். இதன் வடி–வம் அரை நிலா–வைப் ப�ோல் இருக்–கும்.
மிஸ்தி தஹி
என்–னென்ன தேவை?
பால் - 1 லிட்–டர், சர்க்–கரை 200 கிராம், தயிர் - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய பிஸ்தா - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
அக–லம – ான நான்ஸ்–டிக் பேனில் பாலை மித–மா–னச் சூட்–டில் பாதி அள– வி ற்கு வரும்– வ ரை சுண்– ட க் காய்ச்சி இறக்– க – வு ம். ஆறி– ய – து ம் பாலில், பாதி அளவு சர்க்– க – ர ை– யை ச் சே ர் த் து கர ை க் – க – வு ம் . நான்ஸ்– டி க் பேனில் மீத– மு ள்ள
100 கிராம் சர்க்–க–ரை–யை சேர்த்து மி த – ம ா – ன சூ ட் டி ல் கர ை ய விட்டு கேர–ம–லைஸ் செய்–ய–வும். இதை பாலில் சேர்த்து நன்– றா – கக் கலக்– க – வு ம். பால் ஆறி– ய – து ம் தயி–ரை–யும் சேர்த்து நன்கு கலந்து, ஓ ர் இ ர வு மு ழு – வ – து ம் ம ண் – பா–னையில் பாலை ஊற்றி வைக்–க– வும். ஃப்ரிட்–ஜில் சிறிது நேரம் வைத்– தெ– டு த்து பிஸ்– தா – வ ால் அலங்– க–ரித்து ஜில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு: தேவை–யா–னால் ஃப்ரெஷ் கிரீமை சேர்த்து செய்–ய–லாம். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
அன்–னாசி ஸ்வீட் பாயேஷ்
என்–னென்ன தேவை?
அன்–னாசி பழத்–துண்–டு–கள் 100 கிராம், சர்க்–கரை - 200 கிராம், குங்– கு – ம ப்பூ - 1 சிட்– டி கை, பால் - 750 மி.லி. பாதாம், பிஸ்தா - தலா 7, ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், கன்–டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் பேனில் பாலைச் சேர்த்து, பாதி அள–விற்கு சுண்–டும் வரை மித–மா–னச் சூட்–டில் சூடு செய்– ய – வு ம். வெது வெதுப்– பா ன 1 டேபிள்ஸ்– பூ ன் பாலில் குங்– கு – மப்–பூ–வைக் கரைத்து, சுண்–டி–யப் பாலில் சேர்க்–க–வும். இத–னு–டன் சர்க்–கரை, ஏலக்–காய்த்–தூ–ளைச் சேர்த்து கலக்–க–வும். த�ோல் சீவி நறுக்–கிய அன்–னா– 144
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
சிப் பழத்–துண்–டு–களை மிக்–சி–யில் ப�ோட்டு நன்கு மைய அரைத்–துக் க�ொள்– ள – வு ம். நான்ஸ்– டி க் தவா– வில் நெய் சேர்த்து ப�ொடி– ய ாக நறுக்– கி ய பாதாம், பிஸ்– தா – வை ச் சேர்த்து வதக்கி, அரைத்த அன்– னாசி விழு–தைச் சேர்த்து சிம்–மில் சிறிது நேரம் க�ொதிக்– க – வைத்து இறக்–க–வும். பாலின் சூடும், அன்– னாசி விழு–தின் சூடும் ஆறி–ய–தும் இரண்– டை – யு ம் ஒன்– றாக கலந்து ஃப்ரிட்–ஜில் வைத்து ஜில்–லென்று பரி–மா–ற–வும். குறிப்பு: சூடா– ன ப் பாலில் அன்– னாசி விழு–தைச் சேர்த்–தால், அன்– னா–சி–யி–லுள்ள அமி–லம் பாலைத் திரி–யச் செய்து விடும். ஆகவே பால் ஆறி–ய–தும் அன்–னாசி விழு–தைச் சேர்க்–க–வும்.
நட்ஸ் தேங்–காய் லட்டு
என்–னென்ன தேவை?
தேங்–காய்த்–துரு – வ – ல் - 200 கிராம், ப�ொடித்த சர்க்–கரை - 50 கிராம், பேரீச்சை - 100 கிராம், பாதாம், முந்–திரி - தலா 7, நெய் - 3 டேபிள் ஸ்–பூன், ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்– பூன், கன்–டென்ஸ்டு மில்க் - 100 கிராம்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஒரு அக–ல–மான பாத்–தி–ரத்–தில் ப�ொடி–யாக நறுக்–கிய பேரீச்சை, பாதாம், முந்–திரி, கன்–டென்ஸ்டு மில்க், ப�ொடித்த சர்க்–கரை சேர்த்து கலந்து க�ொள்–ளவு – ம். கடா–யில் நெய் சேர்த்து உரு–கி–ய–தும் தேங்–காய்த்–
து– ரு – வ – லை சேர்த்து வதக்– க – வு ம். தேங்–காய்த்–து–ரு–வல் நிறம் மாறும்– ப�ோது கலந்த நட்ஸ் கல–வையை கல க் – க – வு ம் . ச ர் க் – கர ை உ ரு கி பாகுப்–ப–தம் வந்து கலவை கெட்– டி–யா–ன–தும், ஏலக்–காய்த்–தூ–ளைச் சேர்த்து கலந்து இறக்–கவு – ம். ஓர–ளவு சூடு ஆறி–ய–தும் கையில் நெய் தட– விக் க�ொண்டு வதக்–கிய கல–வை– யைச் சிறு சிறு உருண்–டை–க–ளாக உருட்டி பரி–மா–ற–வும். குறிப்பு: க�ொப்– பர ை தேங்– கா – யி ல் பர்பி செய்– ய – லா ம். இளந்– த ேங்– கா– யி ல் பர்பி செய்– தா ல் சுவை குறை–வாக இருக்–கும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
ஆப்–பிள் ஜீரா
என்–னென்ன தேவை?
அரைத்து வைத்த ஆப்– பி ள் விழுது - 150 கிராம், சர்க்– கர ை - 200 கிராம், நெய் - 2 டேபிள் ஸ்–பூன், பால் - 400 மி.லி. + 50 மி.லி., ப�ொடி–யாக நறுக்–கிய பாதாம் - 2 டேபிள்ஸ்–பூன், ரவை - 100 கிராம், ப�ொடி– ய ாக சீவிய முந்– தி ரி - 1 டேபிள்ஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
ஆப்– பி – ளி ன் த�ோல் சீவி, சிறு துண்– டு – க – ள ாக நறுக்கி, 50 மி.லி. பாலை ச் சே ர் த் து மி க் – சி – யி ல் விழு– தாக அரைத்– து க் க�ொள்– ள – வும். நான்ஸ்– டி க் பேனில் நெய்– யைச் சேர்த்து பாதாம், முந்– தி – ரியை வறுத்து தனியே எடுத்து 146
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
வைக்–கவு – ம். மீதி–யுள்ள நெய்–யில், மித– மா–னச் சூட்–டில் ரவை–யைப் ப�ொன்– னி–றம – ாக வறுத்–துக் க�ொண்டு, 1 கப் தண்–ணீர் சேர்த்து ரவையை வேக– வைத்–துக் க�ொள்–ள–வும். அத–னுள் பாலைச் சேர்த்து மித–மா–னச் சூட்– டில் ரவை கல–வையை கிள–ற–வும். இத்–துடன் – சர்க்–கர – ை–யைச் சேர்த்து அடிப்–பிடி – க்–காம – ல் கிள–றவு – ம். பால், வேக–வைத்த ரவை–யு–டன் சேர்ந்து சுண்– டி – ய – து ம், ஆப்– பி ள் விழுதை சேர்த்து 5-10 நிமி–டங்–கள் கல–வை– யைச் சூடு செய்து இறக்–கவு – ம். நெய்– யில் வறுத்த பாதாம், முந்–தி–ரியை அலங்–கரி – த்து சூடாக பரி–மா–றவு – ம். கு றி ப் பு : ப ழு த்த ம ா ம் – ப – ழ ம் , சப்– ப�ோ ட்– டா – வி – லு ம் ஜீரா– வை ச் செய்–ய–லாம்.
மாவா ம�ோத–கம்
என்–னென்ன தேவை?
சர்க்–கரை இல்–லாத க�ோவா 300 கிராம், ப�ொடித்த சர்க்–கரை - 200 கிராம், ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
நான்ஸ்–டிக் தவா–வில் க�ோவா, சர்க்–கர – ையை கலந்து குறை–வா–னச் சூட்– டி ல் 15 நிமி– டங் – க ள் அடிப்– பி–டிக்–கா–மல் கிள–ற–வும். சர்க்–கரை உரு–கி–ய–தும், க�ோவா–வும் கரை–யும்.
கடா– யி ல் ஒட்– டா – ம ல் கல– வை க் கெட்– டி – ய ா– க த் திரண்டு வரும்– ப�ோது ஏலக்–காய்த்–தூளை கலந்து அடுப்பை நிறுத்–த–வும். சூடு ஆறி–ய– தும் ம�ோத–கம் செய்–யும் அச்–சில் கல– வை – யை ச் சேர்த்து அழுத்தி எடுக்–கவு – ம். அச்சு இல்–லையெ – னி – ல் கையி–னால் ம�ோதக வடி–வத்–தில் மாவா ம�ோத– க த்– தை ச் செய்து பரி–மா–ற–வும். நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi November 1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
நட்ஸ் பர்பி என்–னென்ன தேவை?
முந்–திரி - 100 கிராம், சர்க்–கரை - 150 கிராம், பாதாம் - 100 கிராம், பால் - 50 மி.லி., வால்– ந ட் - 5, இனிப்பு இல்–லாத க�ோவா - 50 கிராம், பிஸ்தா - 50 கிராம், துரு– விய தேங்–காய் - 50 கிராம், நெய் - 100 மி.லி., ஏலக்–காய்த்–தூள் - 1/4 டீஸ்–பூன்.
எப்–ப–டிச் செய்–வ–து?
முந்–திரி, பாதாம், வால்–நட், பிஸ்– தாவை 1 மணி நேரம் தண்–ணீ–ரில் ஊற–வைத்து, தண்–ணீரை வடித்து பால், தேங்–காய்த்–துரு – வ – ல், இனிப்பு 148
°ƒ°ñ‹
நவம்பர் 1-15, 2017
இதழுடன் இணைப்பு
இல்–லாத க�ோவா–வைச் சேர்த்து நைசாக அரைத்– து க் க�ொள்– ள – வும். கடா–யில் நெய்–யைச் சேர்த்து அரைத்த விழு–தைச் சேர்த்து கிளறி, அத–னுடன் – சர்க்–கர – ை–யைச் சேர்த்து நட்ஸ் கல–வையை நன்கு கிள–றவு – ம். ஏலக்– காய் த்– தூ ள் கலந்து, நெய் உருகி நட்ஸ் விழு–தின் மேல் மிதக்– கும் பதத்–துக்கு வந்–தது – ம் அடுப்பை நிறுத்தி, நெய் தட– வி ய தட்– டி ல் க�ொட்டி சரி–சம – ம – ா–கப் பரப்பி விட– வும். சூடு ஆறி–ய–தும் அலங்–க–ரித்து விருப்–பம – ான வடி–வத்–தில் வெட்டி பரி–மா–ற–வும்.