Thozhi suppliment dotcom

Page 1

மார்ச் 1-15, 2018  இதழுடன் இணைப்பு

சமையல் கலைஞர்

வெ.தாரகை

இன்சுலின்

பில்டப் உணவுகள் 30

117


சர்க்கரை ந�ோய்க்கான டயட் உணவுகள் த

> சமையல் கலைஞர்

வெ.தாரகை

ற்போது பெரும்பாலானவர்களின் தலையாய பிரச்னை சர்க்கரை ந�ோய்தான். குடும்ப பாரம்பரியம், உடல் எடை, உழைப்பின்மை, மன உளைச்சல் ஆகியன சர்க்கரை ந�ோய்க்கான காரணங்களாக இருக்கின்றன. கணையத்தில் இன்சுலினை நன்கு சுரக்கச் செய்வன இன்சுலின் பில்டப் உணவுகள். நமக்காக இன்சுலின் பில்டப் உணவுகளை செய்து காட்டி இருக்கிறார் கும்பக�ோணத்தைச் சேர்ந்த வெ.தாரகை. வருமுன், வந்த பின் என அனைத்து வயதினருமே இவ்வுணவு வகைகளை உண்ணலாம் எனச் ச�ொல்லும் தாரகை ஆசிரியர் படிப்பு படித்திருக்கிறார். ஆனாலும் சமையல் மீது க�ொண்ட ஆர்வத்தால் பத்திரிகைகளுக்கு சமையல் குறிப்பு, சமையல் ரெசிபிக்கள் எழுதி வருகிறார். பரிசுகளும் வென்றிருக்கிறார்.

த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: பி.பரணிதரன் °ƒ°ñ‹

118

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


தலியா

என்னென்ன தேவை?

க�ோதுமை ரவை, சேமியா, ரவை - தலா 100 கிராம், நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 3, நறுக்கிய பச்சைமிளகாய் - 3, நறுக்கிய தக்காளி - 2, கடுகு - 1/4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் க�ோதுமை ரவை, ரவையை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சேமியாவை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு ப�ோட்டு க�ொதிக்க விடவும். நன்கு க�ொதி வந்ததும் க�ோதுமை ரவை, சேமியா, ரவையை ப�ோட்டுக் கிளறி வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும். மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


ம�ொச்சைக் கூட்டு

என்னென்ன தேவை?

ம�ொச்சை - 100 கிராம், பீன்ஸ் - 100 கிராம், தாளிப்பு வடகம் - 3 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம், பூண்டு - தலா 4 டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு - 75 கிராம், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பீன்ஸை ப�ொடியாக வட்டமாக நறுக்கிக் க�ொள்ளவும். ம�ொச்சை, பீன்ஸை வேகவைத்துக் க�ொள்ளவும். பாசிப்பருப்பையும் வேகவைத்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, தாளிப்பு வடகத்தை தாளித்து, வெங்காயம், பூண்டு ப�ோட்டு வதக்கி, வெந்த பாசிப்பருப்பு, ம�ொச்சை, பீன்ஸ், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு க�ொதி வந்ததும் இறக்கவும். °ƒ°ñ‹

120

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


உளுத்தம் கஞ்சி என்னென்ன தேவை?

கைக்குத்தல் அரிசி - 1 டம்ளர், த�ோலுள்ள உளுந்து - 1/2 டம்ளர், பூண்டு - 5 பல், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கைக்குத்தல் அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் அரிசி, உளுந்து, பூண்டு, 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வேகவைத்து மசித்து உப்பு ப�ோட்டு கலந்து, மீண்டும் சிறிது தண்ணீரை ஊற்றி க�ொதிக்க வைத்து இறக்கவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


வாழைப்பூ ப�ொடி

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த வாழைப்பூ - 5 கைப்பிடி, த�ோலுள்ள உளுந்து - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்தமிளகாய் - தேவைக்கு, ப�ொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 2, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், புளி - பாக்கு அளவு, உப்பு - தேவைக்கு, கடலை எண்ணெய் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

வாழைப்பூவை வேகவைத்து ஆறவைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும். மிக்சியில் வறுத்த ப�ொருட்கள், புளி, உப்பு சேர்த்து பாதி ப�ொடித்துக் க�ொண்டு, வெந்த வாழைப்பூவை சேர்த்து ப�ொலப�ொலவென்று ப�ொடி செய்யவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அரைத்த ப�ொடியை ப�ோட்டு சிறு தீயில் வைத்து கிளறி மீண்டும் ப�ொலப�ொலவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும். °ƒ°ñ‹

122

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


நெல்லி முள்ளி பச்சடி என்னென்ன தேவை?

நெல்லிக்காய் வற்றல் - 10, பச்சைமிளகாய் - 3, கெட்டித்தயிர் - 1/4 லிட்டர், தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன், கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காய் வற்றலை வெந்நீரில் 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். மிக்சியில் ஊறிய நெல்லிக்காய், பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்து க�ொள்ளவும். தயிரை நன்கு அடித்து அத்துடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சடியில் க�ொட்டி கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இங்கே க�ொடுக்கப்பட்டுள்ள நெல்லி முள்ளி பச்சடி மட்டும் சாதத்தில் கலந்துதான் சாப்பிட வேண்டும். மற்ற பச்சடிகளை அப்படியே சாப்பிடலாம்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


வெள்ளைப்பூசணி பச்சடி

என்னென்ன தேவை?

ப�ொடியாக நறுக்கிய வெள்ளைப்பூசணி - 1 கப், கெட்டித்தயிர் - 1 கப், வறுத்து த�ோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கெட்டித்தயிரை நன்கு அடித்து, பூசணித் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வேர்க்கடலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும். °ƒ°ñ‹

124

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


அறுகம்புல் துவையல் என்னென்ன தேவை?

அறுகம்புல் - 1 கட்டு, தக்காளி - 2, கறுப்பு உளுந்து - 20 கிராம், பெல்லாரி வெங்காயம் - 1, பூண்டு - 7 பல், இஞ்சி - சிறு துண்டு, புளி - பாக்கு அளவு, காய்ந்தமிளகாய் - தேவைக்கு, உப்பு - தேவைக்கு, கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி க�ொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை வதக்கி எடுத்துக் க�ொள்ளவும். மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கறுப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் தக்காளி, பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும். வதக்கிய ப�ொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


ஆவாரை ட்ரிங்

என்னென்ன தேவை?

ஆவாரம்பூ - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 1 டம்ளர்.

எப்படிச் செய்வது?

காய்ச்சிய பாலில் ஆவாரம்பூவை ப�ோட்டு நன்கு க�ொதிக்க வைத்து அரை டம்ளராக சுண்டி வந்ததும் வடிகட்டி பரிமாறவும். °ƒ°ñ‹

126

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


க�ோதுமை ராகி அடை என்னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 1 கப், ராகி மாவு - 1/4 கப், இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 3, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, ப�ொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 3 ஆர்க்கு, உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் க�ோதுமை மாவு, ராகி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சூடான த�ோசைக்கல் அல்லது தவாவில் அடையாகத் தட்டி கடலை எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


ம�ொச்சை சுண்டை குழம்பு

என்னென்ன தேவை?

பச்சை ம�ொச்சை, சுண்டைக்காய் - தலா 100 கிராம், முழு பூண்டு - 1, சின்னவெங்காயம் - 10, ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2, புளிக்கரைசல், மிளகாய்த்தூள், சாம்பார் ப�ொடி, உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு, கடுகு - 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை ம�ொச்சை, சுண்டைக்காய், பூண்டு பல், சின்ன வெங்காயத்தை ப�ோட்டு நன்கு வதக்கி தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் ப�ொடி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி சிறிது நிறம் மாறியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். நன்கு க�ொதித்து வந்ததும் கறிவேப்பிலையை தூவி இறக்கி சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹

128

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


க�ொய்யாப்பழக் கூட்டு என்னென்ன தேவை?

க�ொய்யாப்பழம் - 5, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா 5 கிராம், ஏலக்காய்த்தூள், கிராம்புத்தூள், பட்டைத்தூள் - தலா 2 சிட்டிகை, ஆலிவ் எண்ணெய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடானதும் க�ொய்யாப் பழத் துண்டுகளை ப�ோட்டு லேசாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து மசாலாத்தூள்கள் அனைத்தையும் ப�ோட்டு க�ொய்யாப்பழத் துண்டுகள் உடையாமல் மசாலா நன்கு ஒட்டும் வரை கிளறி இறக்கவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


வெந்தய இட்லிப்பொடி

என்னென்ன தேவை?

வெந்தயம் - 1/4 கில�ோ, உளுத்தம்பருப்பு - 1/4 கில�ோ, சுக்குத்தூள் - 10 கிராம், மிளகு - 20 கிராம், பட்டை, கிராம்பு, சீரகம் - தலா 10 கிராம், பூண்டு - 20 கிராம், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், உளுத்தம்பருப்பு, மிளகு, பட்டை, கிராம்பு, சீரகம், பூண்டு சேர்த்து வறுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் உப்பு, சுக்குத்தூள் சேர்த்து மிக்சியில் ப�ொடித்துக் க�ொள்ளவும். இட்லி, த�ோசை, சூடான சாதத்தில் கிளறி பரிமாறவும். °ƒ°ñ‹

130

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


மில்லட் உப்புமா

என்னென்ன தேவை?

குதிரைவாலி, வரகு - தலா 150 கிராம், கடுகு - 1/4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய கல்யாண முருங்கை இலை - 2 கைப்பிடி, ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2, ப�ொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 2, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் தாளித்து வெங்காயம், தக்காளி, கல்யாண முருங்கை இலை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி க�ொதிக்க விடவும். நன்கு க�ொதித்து வந்ததும் உப்பு, குதிரைவாலி, வரகு சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


பாகற்காய் வதக்கல்

என்னென்ன தேவை?

பாகற்காய் - 1/4 கிேலா, ப�ொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10, ப�ொடியாக நறுக்கிய தக்காளி - 2, சாம்பார் ப�ொடி - 2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவைக்கு, கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் க�ொள்ளவும். மிக்சியில் சாம்பார் ப�ொடி, பூண்டு, சீரகம் ப�ோட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி ப�ோட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை ப�ோட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை ப�ோக வதக்கி, உப்பு ப�ோட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹

132

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


பாகல் ப�ொடி

என்னென்ன தேவை?

பாகல் வற்றல் - 1/4 கில�ோ, காய்ந்தமிளகாய் - 10 கிராம், மிளகு 5 கிராம், கடலைப்பருப்பு - 25 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பூண்டு - 10 பல், உப்பு - தேவைக்கு, நெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் 3 டீஸ்பூன் நெய் விட்டு பாகல் வற்றலை வறுத்தெடுக்கவும். மீதியுள்ள நெய்யில் காய்ந்தமிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பூண்டு சேர்த்து வறுத்து க�ொள்ளவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் ப�ொடிக்கவும். பாதி ப�ொடித்தவுடன் பாகல் வற்றலை சேர்த்து இட்லி மிளகாய் ப�ொடி பதத்திற்கு அரைத்து இட்லி, த�ோசையுடன் பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


முடக்கத்தான் இட்லி

என்னென்ன தேவை?

புழுங்கலரிசி - 400 கிராம், த�ோலுள்ள உளுந்து - 100 கிராம், ஆய்ந்த முடக்கத்தான் இலை - 8 கைப்பிடி, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புழுங்கலரிசி, த�ோல் உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாக கழுவி அரிசி, உளுந்து, முடக்கத்தான் இலை அனைத்தையும் சேர்த்து கிரைண்டரில் ப�ோட்டு அரைத்து உப்பு ப�ோட்டு கரைக்கவும். புளித்ததும் இட்லிகளாக வார்த்தெடுத்து சாம்பார், சட்னி, ப�ொடியுடன் சூடாக பரிமாறவும். °ƒ°ñ‹

134

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


அகத்திக்கீரை பிஸிபேளாபாத்

என்னென்ன தேவை?

வெண் புழுங்கலரிசி - 1/4 கில�ோ, அகத்திக்கீரை - 1/4 கட்டு, காய்ந்தமிளகாய் - 7, கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 1/2 டீஸ்பூன், கடலை எண்ணெய் - 6 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன், புளிக்கரைசல் - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, துவரம்பருப்பு - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா ஆகியவற்றை ப�ொன்னிறமாக வறுத்து இறக்கி தேங்காய்த்துருவலை போட்டு கலந்து சூடு ஆறியதும் கரகரப்பாக அரைக்கவும். அரிசியை கழுவி குக்கரில் ப�ோட்டு அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், கீரை, உப்பு, துவரம்பருப்பு, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 7 அல்லது 9 விசில் வைத்து நன்கு குழைவாக வேகவைக்கவும். கடாயில் மீதியுள்ள எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பிஸிபேளாபாத்தில் க�ொட்டி கலந்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறி இறக்கவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


பனங்கிழங்கு உசிலி

என்னென்ன தேவை?

வேகவைத்து உதிர்த்த பனங்கிழங்கு - 200 கிராம், துவரம்பருப்பு - 150 கிராம், காய்ந்தமிளகாய் - 6, தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்தமிளகாய் இவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து இட்லித்தட்டில் ஊற்றி இட்லிகளாக எடுத்து உதிர்த்துக் க�ொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து உதிர்த்த உசிலி, உதிர்த்த பனங்கிழங்கு, உப்பு ப�ோட்டு நன்கு கிளறி பரிமாறவும். °ƒ°ñ‹

136

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


பாதாம் பழ கூல்

என்னென்ன தேவை?

பாதாம் பருப்பு - 6, ஆப்பிள் - 1, ஏலக்காய்த்தூள் - 3 சிட்டிகை, காய்ச்சிய பால் - 2 டம்ளர்.

எப்படிச் செய்வது?

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து த�ோல் நீக்கிக் க�ொள்ளவும். ஆப்பிளை த�ோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். பாதாம், ஆப்பிள் இவற்றை மிக்சியில் ப�ோட்டு பால் ஊற்றி நன்கு அரைத்து ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


க�ோதுமை ர�ொட்டி

என்னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 300 கிராம், பச்சை ம�ொச்சை - 100 கிராம், சீரகம் 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், நறுக்கிய க�ொத்தமல்லித்தழை - சிறிய கட்டு, கடலை எண்ணெய் - 75 கிராம், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிக்சியில் பச்சை ம�ொச்சையை ப�ோட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். க�ோதுமை மாவு, அரைத்த விழுது, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு, க�ொத்தமல்லித்தழை அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் க�ொள்ளவும். தவாவை சூடு செய்து சிறு ர�ொட்டிகளாக தட்டி கடலை எண்ணெயை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். °ƒ°ñ‹

138

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


சுரைக்காய் அடை

என்னென்ன தேவை?

வரகு - 400 கிராம், ப�ொடியாக நறுக்கிய சுரைக்காய் - 1 டம்ளர், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், மிளகாய்த்தூள், உப்பு - தேவைக்கு, ச�ோம்பு - 1/2 டீஸ்பூன், கடலை எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

வரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் க�ொள்ளவும். சிறிது புளித்த பின் சூடான தவாவில் அடைகளாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


வேப்பம்பூ ரசம்

என்னென்ன தேவை?

வேப்பம்பூ - 3 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு, கடுகு - தலா 1/4 டீஸ்பூன், புளிக்கரைசல், உப்பு தேவைக்கு, கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நெய்யில் வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு இவற்றை வறுத்து மிக்சியில் ப�ோட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, புளிக்கரைசல், உப்பு ப�ோட்டு கலந்து அடுப்பை சிம்மில் வைத்து, ரசம் நுரைத்து வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து க�ொட்டவும். வறுத்த வேப்பம்பூவை மேலே தூவி பரிமாறவும். °ƒ°ñ‹

140

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


வரகு கதம்பம்

என்னென்ன தேவை?

வரகு - 300 கிராம், நறுக்கிய பூசணிக்காய், சுைரக்காய், சுண்டைக்காய், நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, வெங்காயம், பச்சைப்பட்டாணி - தலா 1/4 டம்ளர், சாம்பார் ப�ொடி - 4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், புளிக்கரைசல், உப்பு - தேவைக்கு, நெய் - 1 டீஸ்பூன், துவரம்பருப்பு - 200 கிராம், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு.

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்துக் க�ொள்ளவும். நறுக்கிய காய்கறிகளை 2 விசில் விட்டு வேகவைத்துக் க�ொள்ளவும். வெந்த துவரம்பருப்பை நன்கு கடைந்து, வெந்த காய்கறிகள், சாம்பார் ப�ொடி, பச்சைப்பட்டாணி, உப்பு, புளிக்கரைசல் ப�ோட்டு கலந்து க�ொள்ளவும். வரகை வேகவைத்து மசித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி கடுகு தாளித்து சாம்பார் கலவையை க�ொட்டி க�ொதிக்க வைத்து மசித்த வரகு, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வீட் சப்பாத்தி

என்னென்ன தேவை?

க�ோதுமை மாவு - 1/4 கில�ோ, வேகவைத்த துவரம்பருப்பு - 50 கிராம், வேகவைத்த வெந்தயக்கீரை - 1 கட்டு, சீரகம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 5 சிட்டிகை, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

க�ோதுமை மாவில் வெந்த துவரம்பருப்பு, வெந்தயக்கீரை, சீரகம், மஞ்சள் தூள், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சூடான தவாவில் ப�ோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். °ƒ°ñ‹

142

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


பப்பாயா ஷேக் என்னென்ன தேவை?

பப்பாளிப் பழத்துண்டுகள் - 15, த�ோல் சீவி எடுத்த கற்றாழை ஜெல் 1/2 டீஸ்பூன், பட்டைத்தூள் - 2 சிட்டிகை, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மிக்சியில் பப்பாளிப் பழத்துண்டுகள், கற்றாழை ஜெல், பட்டைத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


முளைக்கூட்டு

என்னென்ன தேவை?

மணத்தக்காளிக் கீரை - 1 கட்டு, துவரம்பருப்பு - 100 கிராம், சீரகம் - 1/4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 3, எண்ணெய் - 2 டீஸ்பூன், புளிக்கரைசல், உப்பு - தேவைக்கு, கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக்கீரையை நன்கு வேகவைத்துக் க�ொள்ளவும். துவரம்பருப்பையும் வேகவைத்துக் க�ொள்ளவும். மிக்சியில் கீரை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், சீரகம் தாளித்து அரைத்த விழுது, புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக க�ொதிக்க வைத்து சிறிது கெட்டியாக ஆனதும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹

144

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


குடைமிளகாய் சாலட்

என்னென்ன தேவை?

குடைமிளகாய் - 1, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

குடைமிளகாயை நீளமாக நறுக்கி அதில் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரத்திற்கு பிறகு தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


மாவு பச்சடி

என்னென்ன தேவை?

வெள்ளை உளுந்து - 100 கிராம், கெட்டித்தயிர் - 1/2 டம்ளர், கடுகு 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 1, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் உளுந்தை வாசனை வரும்வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் பவுடராக அரைத்துக் க�ொள்ளவும். கெட்டித் தயிரை நன்கு அடித்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் தாளித்து தயிரில் க�ொட்டி உப்பு, உளுத்தம்மாவு சேர்த்து நன்கு கலந்து சாம்பார் சாதம், கதம்ப சாதத்துடன் பரிமாறவும். °ƒ°ñ‹

146

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


ஸ்ப்ரவுட் என்னென்ன தேவை?

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தயிர் - 1 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் அனைத்துப் ப�ொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi March 1-15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

ராகி, கம்பு க�ொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ராகி, கம்பு - தலா 1/2 கப், கடுகு, உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய சின்னவெங்காயம் - 10, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பச்சைமிளகாய், சின்னவெங்காயத்தை நன்கு வதக்கி இறக்கவும். பாத்திரத்தில் ராகி, கம்பு மாவு, உப்பு, வதக்கிய கலவை அனைத்தையும் சேர்த்து கலந்து வெந்நீரை தெளித்து மாவை நன்கு கலந்து பிடி க�ொழுக்கட்டைகளாக பிடித்து வேகவைத்து சூடாக பரிமாறவும். °ƒ°ñ‹

148

மார்ச் 1-15,2018

இதழுடன் இணைப்பு


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.