Thozhi suppliment

Page 1

 1-15, 2017 இதழுடன் இணைப்பு

சமை–யல் கலை–ஞர்

லஷ்மி சீனிவாசன்

117


வெயிலில் உடனடி சக்தி பெற… வெ

சமை–யல் கலை–ஞர்

லஷ்மி சீனிவாசன்

யில் காலத்தில் உடம்பில் வியர்வை மூலம் நீர் இழப்பு அதிகமாகும். இதனால் ஜூஸ் மற்றும் மில்க் ஷேக் வகைகளில் குளுக்கோஸ் சேர்த்து செய்வதினால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். உடனடி சக்தியும் கிடைக்கும். அதற்காக இங்கே 30 வகையான டெசர்ட்ஸ் அண்டு மில்க் ஷேக் வகைகளை நமக்காக செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் லஷ்மி சீனிவாசன். இருக்கும் ப�ொருளை வைத்து சிறப்புற சமைப்பது என்பது இவரது சிறப்பு. பாட்டியிடம் இவர் கற்ற சமையல் இன்று பத்திரிகைகளிலும், த�ொலைக்காட்சிகளிலும் இவரை ஒரு நல்ல சமையல் கலைஞராக அடையாளம் காட்டி இருக்கிறது. விதம் விதமாக சமைப்பது, விருந்தினர்களை அசத்துவது எனக்கு பிடித்த ஒன்று என்று கூறும் லஷ்மி பல சமையல் ப�ோட்டிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார். த�ொகுப்பு: தே–வி– ம�ோ–கன் எழுத்து வடி–வம்: கே.கலை–ய–ரசி படங்கள்: ஆர்.க�ோபால்

118

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு


சிக்கு மில்க்மெய்டு டெசர்ட்

என்னென்ன தேவை? சப்போட்டா பழத்துண்டுகள் - 1/2 கப் (த�ோல் க�ொட்டை நீக்கி ப�ொடியாக நறுக்கியது), வெனிலா கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப். எப்படிச் செய்வது? பாலை க�ொதிக்க விடவும். வெனிலா கஸ்டர்டு பவுடரை சிறிது தண்ணீரில் கர ை த் து , க� ொ தி க் கு ம் ப ா லி ல்

ஊற்றி கட்டி தட்டாது அடிபிடிக்காது கி ள ற வும். ஐ ஸ்கி ரீம் பதத் திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்பு சப்ேபாட்டா பழத்துண்டுகளை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து, மேலே மில்க்மெய்டு ஊற்றி ப ரி மா ற வு ம் . ப ழ த் தி ன் இ னி ப் பு மற்றும் மில்க்மெய்டின் இனிப்பே ப�ோதுமானது.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


அத்திப்பழ மில்க் ஷேக்

என்னென்ன தேவை? ப�ொடியாக நறுக்கிய அத்திப்பழம் 4, முழு கிரீம் உடைய பால் - 200 மி.லி. குளுக்கோஸ் - 3 டீஸ்பூன், ஐஸ்கட்டி - 1 அல்லது ஐஸ் துருவல் - சிறிது, தேன் - சில ச�ொட்டுகள். 120

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது? மிக்சியில் அத்திப்பழம், பால், குளுக்கோஸ் மற்றும் ஐஸ் துருவலை ப�ோட் டு ந ன் கு நு ர ை ப� ொ ங ்க அடிக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் மில்க் ஷேக்கை ஊற்றி மேலே தேன் விட்டு அலங்கரித்து பரிமாறவும்.


மிக்ஸடு ஃப்ரூட் டெசர்ட்

என்னென்ன தேவை? மாம்ப ழ ம் , வ ாழைப்ப ழ ம் , பலாப்பழம் நறுக்கி கலந்தது - 1 கப், பன்னீர் திராட்சை மற்றும் பச்சை திராட்சை கலந்தது - 50 கிராம், ஏலக்காய் எசென்ஸ் - சில ச�ொட்டுகள், மில்க்மெய்டு - 2 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? ஒரு கண்ணாடி பாத்திரத்தில்

அனைத்து பழங்களையும் ப�ோட்டு ச ற ்றே கை ய ா ல் ஒ ன் றி ரண்டாக பிசையவும். பின்பு அதில் ஏலக்காய் எசென்ஸ், மில்க்மெய்டு ஊற்றி கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும். மிக எளிதான க�ோடைக்காலத்திற்கான ஸ்பெஷல் டெசர்ட் இது.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


மாதுளை மில்க் ஷேக்

என்னென்ன தேவை? மாதுளை முத்துக்கள் - 1 கப், குளிர்ந்த பால் - 200 மி.லி., குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், ஐஸ் துருவல் - தேவைக்கு. எப்படிச் செய்வது? மிக்சியில் மாதுளை முத்துக்கள், 122

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

குளிர்ந்த பால், குளுக்கோஸ், ஐஸ் துருவல் அனைத்தையும் சேர்த்து நன்கு நுரை ப�ொங்க அடித்து வடிகட்டவும். உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.


பம்கின் பிர்ணி

என்னென்ன தேவை? பூ ச ணி த் து ரு வ ல் - 1 / 2 க ப் , காய்ச்சிய பால் - 200 மி.லி. ப�ொடித்த பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன், பச்சரிசி 1/4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிது. எப்படிச் செய்வது? சிவப்பு பூசணியை த�ோல் நீக்கி ப�ொடியாக துருவிக் க�ொள்ளவும். மிக்சியில் பூசணித்துருவல், பச்சரிசி,

ஏலக்காய்த்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, பனங்கற்கண்டு சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் காய்ச்சிய பால் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


செவ்வாழை ஸ்வீட் ய�ோகர்ட்

என்னென்ன தேவை? ந று க் கி ய செ வ ்வாழை - 1 , குளுக்கோஸ் - 4 டீஸ்பூன், கெட்டித் தயிர் - 1/2 கப், ஐஸ் துருவல் - சிறிது, உப்பு - ஒரு சிட்டிகை. எப்படிச் செய்வது? மிக்சியில் தயிர், செவ்வாழை, 124

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

ஐஸ் துருவல், உப்பு, குளுக்கோஸ் அ னைத ்தை யு ம் ப�ோட் டு ந ன் கு நுரைக்க அடிக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.


வெள்ளைப் பூசணி சாலட் வித் க்ரீம்

என்னென்ன தேவை? வெள்ளைப் பூசணித்துருவல் - 1 டீஸ்பூன், வெள்ளரித்துருவல் - 1 கப், தக்காளி - 1 (நறுக்கியது), சர்க்கரை ஒரு சிட்டிகை, உப்பு - ஒரு சிட்டிகை, ஃப்ரெஷ் கிரீம் - 1/4 கப்.

எப்படிச் செய்வது? கண ் ணா டி ப ா த் தி ர த் தி ல் பூசணித்துருவல், வெள்ளரித்துருவல், தக்காளி, சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பரிமாறும் முன்பு எடுத்து ஃப்ரெஷ் கிரீம் விட்டு பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


பலாப்பழ கஸ்டர்டு

என்னென்ன தேவை? நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 1 கப், தேன் - 2 டீஸ்பூன், கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், பால் - 1/2 கப், வேபர்ஸ்-1. எப்படிச் செய்வது? க ஸ ்ட ர் டு ப வு ட ர ை சி றி து தண்ணீரில் கரைத்துக் க�ொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி க�ொதிக்க விடவும். க�ொதி 126

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

வந்ததும் கரைத்த கஸ்டர்டு கரைசலை ஊற்றி கட்டித்தட்டாது கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் கண்ணாடி கிண்ணத்தில் ப�ோட்டு, பலாப்பழத் துண்டுகளை சேர்த்து ஃப்ரீசரில் வைத்து குளிர வைத்து, மேலே ேதன் ஊற்றி,


ஆப்பிள் மின்ட் கூலர்

என்னென்ன தேவை? நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 1 கப், புதினா இலை - 10, நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு சிறிது, குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், ஐஸ் துருவல் - 1 கட்டி அல்லது தேவைக்கு. எப்படிச் செய்வது? ஆப்பிள் பழத்தை த�ோல், விதை

நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். மிக்சியில் ஆப்பிள் துண்டுகள், புதினா இலை, இஞ்சி, குளுக்கோஸ், எலுமிச்சைச் சாறு, ஐஸ் துருவல் ப�ோட்டு நன்கு அடித்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இன்ஸ்டன்ட் எனர்ஜி தரும் டிரிங்க்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


மஸ்க் மெலன் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப், ப�ொடியாக நறுக்கிய முலாம் பழத் துண்டுகள் - 1 கப், உலர் பழங்களான நறுக்கிய பேரீச்சை, அத்திப்பழம் மற்றும் திராட்சை - சிறிது, சாக்லெட் சிரப் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ ்ட ோர ்க ளி ல் கி டை க் கு ம் ) , செர்ரி - 2, வேபர்ஸ்-1. 128

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது? கண்ணாடி பவுலில் ஐஸ்கிரீைம கரைய விட்டு, முலாம் பழத்துண்டுகள், பேரீச்சை, அத்திப்பழம், திராட்சை துண்டுகள் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைத்து மீண்டும் ஐஸ்கிரீம் செய்யவும். (ஃப்ரீசரை அடிக்கடி திறந்து பார்க்கக் கூ ட ா து ) . கெட் டி ய ாக ஆ ன து ம் சாக்லெட் சிரப் ஊற்றி, செர்ரி பழத்தால் அலங்கரித்து அதன் மேல் வேபர்ஸை ச�ொருகி பரிமாறவும்.


அவல் ஃப்ரூட் பவுல்

என்னென்ன தேவை? சிறிய துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி, முலாம் பழம், பலாப்பழம், மாம்பழம் மற்றும் வாழைப்பழம் யாவும் கலந்த கலவை - 1 கப், ப�ொடித்த அவல் - 1/4 கப், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், கலர் ஸ்பிரிங்லர்ஸ்/அரிசி மிட்டாய்/ சீரக மிட்டாய் - சிறிது, பால் - 1/4 கப்.

எப்படிச் செய்வது? அவலை பாலில் ஊறவைக்கவும். ஊறிய பின் உதிர்த்து க�ொள்ளவும். கண்ணாடி பவுலில் ஊறிய அவல், கலந்த பழத் துண்டுகள், மில்க்மெய்டு சேர்த்து கலந்து ஃப்ரீசரில் குளிர வைத்து எடுக்கவும். பரிமாறும் முன்பு கலர் ஸ்பிரிங்லர்ஸ்/சீரக மிட்டாய் தூவி பரிமாறவும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


வால்பேரி டெசர்ட்ஸ் வித் சாக்லெட் சாஸ்

என்னென்ன தேவை? வால்பேரி - 1, கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1/2 கப், சாக்லெட் சிப்ஸ்/சாஸ் - சிறிது, குளுக்கோஸ் 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? வால்பேரி இப்போது சீசன், சற்று விலை அதிகம். வால்பேரியை த�ோல் நீக்கி நறுக்கிக் க�ொள்ளவும். 1/2 சூடான பாலில் கஸ்டர்டு பவுடர், குளுக்கோஸ் 130

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

சேர்த்து கரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி ெகாதிக்கவிட்டு, கரைத்த கஸ்டர்டு கலவையை க�ொட்டி கட்டியின்றி கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும். வால்பேரி துண்டுகளைக் கலந்து ஃப்ரீசரில் வைத்து குளிர வைக்கவும். பரிமாறும் முன்பு சாக்லெட் சிப்ஸ்/சிரப் மேலே ஊற்றி பரிமாறவும்.


டிரை ேடட்ஸ் மில்க் ஷேக்

என்னென்ன தேவை? முழு கிரீமுடைய பால் - 200 மி.லி., குளுக்கோஸ் - 1 டீஸ்பூன், உலர்ந்த பேரீச்சை - 6. எப்படிச் செய்வது? பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி குளிர வைக்கவும். பேரீச்சையை 4 மணி நேரம் சுடுநீரில் ஊறவைத்து

க�ொட்டையை நீக்கவும். மிக்சியில் ஊ றி ய பே ரீ ச ்சை , கு ளு க ்கோஸ் சே ர் த் து வி ழு தாக அ ர ை த் து க் க�ொள்ளவும். மீண்டும் குளிர்ந்த பால் சேர்த்து நுரைக்க நுரைக்க நன்கு அடிக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


பன்னீர் ர�ோஸ் கூலர்

என்னென்ன தேவை? பன்னீர் ர�ோஜா இதழ்கள் - 10, தண்ணீர் - 200 மி.லி., எலுமிச்சைச் சாறு - 1/4 மூடி, உப்பு - ஒரு சிட்டிகை, குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், ஐஸ் துருவல் - தேவைக்கு. 132

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது? ப ா த் தி ர த் தி ல் 2 0 0 மி . லி . தண்ணீரில், பன்னீர் ர�ோஜாவை ேசர்த்து க�ொதிக்க விட்டு வடிகட்டவும். இத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, குளுக்கோஸ் மற்றும் ஐஸ் துருவல் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.


நெல்லி லஸ்ஸி

என்னென்ன தேவை? பெரிய நெல்லிக்காய் - 3, தயிர் 1 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ர�ோஸ் எசென்ஸ் - சில ச�ொட்டுகள், ஐஸ் துருவல் - தேவைக்கு. எப்படிச் செய்வது? த யி ர ை ந ன் கு கடைந் து க�ொள்ளவும். பாத்திரத்தில் பெரிய நெல்லிக்காய், தண்ணீர் சேர்த்து

வேகவைத்து, ஆறியதும் க�ொட்டையை நீ க் கி க் க� ொ ள்ள வு ம் . மி க் சி யி ல் நெல்லிக்காய், சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். இத்துடன் கடைந்த தயிர், ஐஸ் துருவல், ர�ோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு நுரை ப�ொங்க அடித்து, ஜில்லென்று கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


க�ோவா ஸ்ட்ராபெர்ரி வ�ொண்டர்

என்னென்ன தேவை? பழுத்த நறுக்கிய க�ொய்யாப்பழத் துண்டுகள் - 1 கப், ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1/4 கப், அலங்கரிக்க மாதுளை முத்துக்கள் சிறிது, சர்க்கரை - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? பாலில் சர்க்கரை, ஸ்ட்ராபெர்ரி க ஸ ்ட ர் டு ப வு ட ர ை கர ை த் து க் 134

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

க� ொ ள்ள வு ம் . ப ா த் தி ர த் தி ல் தண்ணீரை ஊற்றி க�ொதிக்க விடவும். க�ொதி வந்ததும் கஸ்டர்டு கலவை கரைசலை ஊற்றி வேகவிட்டு, அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும். இத்துடன் க�ொய்யாப்பழத் துண்டுகள் சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து, மேலே மாதுளை முத்துக்களை தூவி அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.


நேந்திரம்பழ ஸ்மூத்தி

என்னென்ன தேவை? பழுத்த நேந்திரம் பழம் - 1, பால் பவுடர் - 1 டீஸ்பூன், மில்க்மெய்டு - 2 டீஸ்பூன், வேபர்ஸ் - 1. எப்படிச் செய்வது? நேந்திரம் பழத்தைத் துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். இத்துடன்

பால் பவுடர் மற்றும் மில்க்மெய்டு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு, மென்மையாக நன்கு விழுதாக்கிக் க�ொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து வேபர்ஸை ச�ொருகி ஜில்லென்று பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


கிரென்ச்சி மற்றும் கூல் சாலட்

என்னென்ன தேவை? வேபர்ஸ் - 5, ப�ொடியாக நறுக்கிய பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் யாவும் கலந்தது - 1 கப், தேன் - சிறிது, ஃப்ரூட் எசென்ஸ் - 1. 136

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது? பவுலில் வேபர்ஸை கையால் ப�ொடித்துக் க�ொள்ளவும். இத்துடன் கலந்த பழங்கள், ஃப்ரூட் எசென்ஸ் கலந்து மேலே தேன் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.


சாக்லெட் ஸ்மூத்தி/மில்க் (டூ இன் ஒன்)

என்னென்ன தேவை? மென்மையான காபி சாக்லெட் - 10, மில்க்மெய்டு - 1/4 கப், தேவையானால் சாக்லெட் எசென்ஸ்/சிரப் - சிறிது. எப்படிச் செய்வது? ப ா த் தி ர த் தி ல் த ண் ணீ ர ை க�ொதிக்க விட்டு இறக்கவும். இதில் கா பி ச ாக்லெ ட ்டை அ ர ை ம ணி நேர த் தி ற் கு ஊ ற வி ட வு ம் . கா பி சாக்லெட் முழுவதுமாக கரைந்த பிறகு மில்க்மெய்டு, தேவையானால்

சிறிது தண்ணீர் விட்டு, மிக்சியில் நன்கு அடித்துக் க�ொள்ளவும். இத்துடன் சாக்லெட் எசென்ஸ்/சிரப் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். இத்துடன் மேலும் சிறிது பால் விட்டு நீர்க்க அடித்து, 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்க கலந்தால் சாக்லெட் மில்க் தயார்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


செர்ரி வாழைப்பழ டெசர்ட்

என்னென்ன தேவை? நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் - 1 கப், செர்ரி - 25 கிராம், பைனாப்பிள் ஃப்ளேவர் கஸ்டர்டு பவுடர் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், பால் - 1/4 கப். எப்படிச் செய்வது? பாத்திரத்தில் பால், சர்க்கரை, பைனாப்பிள் ஃப்ளேவர் கஸ்டர்டு ப வு ட ர ை சே ர் த் து கர ை த் து க் 138

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

க�ொள்ளவும். தவாவை அடுப்பில் வைத்து 1/4 கப் தண்ணீரை ஊற்றி க� ொ தி க ்க வை த் து , கர ை த்த கஸ்டர்டு கலவையை ஊற்றி கிளறி இறக்கவும். பவுலில் ப�ோட்டு நறுக்கிய வாழைப்பழம், செர்ரி கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து செர்ரியை ச�ொருகி அலங்கரித்து பரிமாறவும்.


குங்குமப்பூ மில்க் ஷேக்

என்னென்ன தேவை? முழு கிரீம் பால் - 200 மி.லி., குளுக்கோஸ் - 1 டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ 5-6 இதழ்கள். எப்படிச் செய்வது? சூடான பாலில் சிறிது கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்த்து கரைத்துக்

க�ொள்ளவும். பின்பு குளுக்கோஸ் சே ர் த் து க ல ந் து க� ொ ள்ள வு ம் . அடிகனமான பாத்திரத்தில் 200 மி.லி. பாலை ஊற்றி நன்கு க�ொதிக்க வைத்து இறக்கவும். இத்துடன் குங்குமப்பூ கலவையை ஊற்றி கலந்து ஆறியதும், ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


டிரை க�ோகனட் டெசர்ட்

என்னென்ன தேவை? கலர் க�ொப்பரைத் தூள் (டிபார்ட் மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 25 கிராம், மில்க்மெய்டு - 1/2 கப், ஏலக்காய் எசென்ஸ் அல்லது ர�ோஸ் எசென்ஸ் - சில ச�ொட்டுக்கள், வேபர்ஸ்-1. 140

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது? பவுலில் க�ொப்பரைத்தூள், மில்க் மெய்டு, ர�ோஸ் எசென்ஸ் அல்லது ஏலக்காய் எசென்ஸ் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிர்ந்ததும் எடுத்து, அதன் மேல் வேபர்ஸை ச�ொருகி பரிமாறவும்.


பப்பாயா லஸ்ஸி

என்னென்ன தேவை? பழுத்த பப்பாளி - 1/4 கப், புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப், ஃபுரூட் எசென்ஸ் - சில ச�ொட்டுக்கள், குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 2 அல்லது ஐஸ் துருவல் - சிறிது. எப்படிச் செய்வது? பப்பாளிப் பழத்தை த�ோல், விதை

நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். மிக்சியில் பப்பாளி, தயிர், குளுக்கோஸ், ஐஸ் துருவல் சேர்த்து நன்கு நுரை ப�ொங்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே ஃபுரூட் எசென்ஸ் சில ச�ொட்டுக்கள் விட்டு பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


இளநீர் கஸ்டர்டு

என்னென்ன தேவை? வழுக்கையுடன் கூடிய இளநீர் - 1 கப், வெனிலா கஸ்டர்டு பவுடர் - 1 டீஸ்பூன், பால் - 1/4 கப், ப�ொடித்த பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? இ ள நீ ரி ல் ப ன ங ்க ற ்க ண ்டை சேர்த்து கலந்து கரைய விடவும். பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து 142

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

க�ொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை க� ொ தி க ்க வை த் து , க ஸ ்ட ர் டு கலவையை ஊற்றி வேக விடவும். நன்கு வெந்து தளர இருக்கும்பொழுது இறக்கி ஆறவிடவும். பின்பு இளநீர் கலவையை கலந்து ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து குளிர்ந்ததும், ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.


லெமனேடட் தர்பூஸ்

என்னென்ன தேவை? தர்பூசணி துண்டுகள் - 1 கப், இளம் இஞ்சி - சிறு துண்டு, உப்பு - ஒரு சிட்டிகை, குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், ஐஸ் துருவல் - சிறிது, மிளகுப் ப�ொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு 1/2 மூடி. எப்படிச் செய்வது? த ர் பூ ச ணி யை வி தை நீ க் கி

துண்டுகள் ப�ோட்டுக் க�ொள்ளவும். இஞ்சியை துருவிக் க�ொள்ளவும். மிக்சியில் தர்பூசணி, இஞ்சித்துருவல், உப்பு, குளுக்கோஸ், ஐஸ் துருவல், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு அடித்து வடிகட்டவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி மிளகுப் ப�ொடி தூவி பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


இன்ஸ்டன்ட் மேங்கோ பன்னா

என்னென்ன தேவை? சற்றே புளிப்பான கிளிமூக்கு மாங்காய் துருவியது - 2 டீஸ்பூன், தண்ணீர் - 3/4 கப், ஐஸ் துருவல் சிறிது, சர்க்கரை - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? சி றி து வெந் நீ ரி ல் மா ங ்கா ய் துருவலை ப�ோட்டு வைக்கவும். சிறிது 144

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

வெந்ததும் சர்க்கரை (சர்க்கரையை வி ட ப� ொ டி த்த ச ர்க ்க ர ை யை உபய�ோகப்படுத்தவும்), 3/4 கப் தண்ணீர் மற்றும் ஐஸ் துருவல் சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு சுவை நி றை ந ்த ப ா ன ம் . கு ளி ர் ச் சி யை தரக்கூடியது.


ஸ்வீட்கார்ன் லஸ்ஸி

என்னென்ன தேவை? இ னி ப் பு ச�ோ ள மு த் து க ்க ள் - 1/4 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப். எப்படிச் செய்வது? இனிப்பு ச�ோளத்தை வேகவைத்துக் க�ொள்ளவும். தயிரை நன்கு கடைந்து

க�ொள்ளவும். மிக்சியில் முதலில் ச�ோ ள மு த் து க ்க ளை ப�ோட் டு விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். பின்பு சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


கேரட் ஆரஞ்சு மில்க் ேஷக்

என்னென்ன தேவை? கேரட் - 1 (துருவியது), ஆரஞ்சு சுளைகள் - 10-15, குளுக்கோஸ் - 2 டீஸ்பூன், குளிர்ந்த பால் - 3/4 கப். எப்படிச் செய்வது? மி க் சி யி ல் து ரு வி ய கேரட் , 146

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

ஆரஞ்சு சுளைகள், குளுக்கோஸ் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வடிகட்டவும். இத்துடன் குளிர்ந்த பால் சேர்த்து நுரை ப�ொங்க அடித்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.


குயிக் பிஸ்கெட் மில்க் ஷேக்

என்னென்ன தேவை? மாரி பிஸ்கெட் - 3, குளுக்கோஸ் 1/2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 1 கப், ஐஸ் துருவல் - சிறிது, ர�ோஸ் எசென்ஸ் - சில ச�ொட்டுகள், வேபர்ஸ் - 1. எப்படிச் செய்வது? மாரி பிஸ்கெட்டை ப�ொடித்துக் க�ொள்ளவும். மிக்சியில் பிஸ்கெட்,

குளுக்கோஸ், ஐஸ் துருவல், சிறிது ப ா ல் சே ர் த் து ந ன் கு அ டி த் து க் க�ொள்ளவும். பின்பு மீதியுள்ள பாலை சேர்த்து நன்கு நுரை வர அடித்து, ரோஸ் எசென்ஸ் கலந்து உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் வேபர்ஸை ச�ொருகி ஜில்லென்று பரிமாறவும்.  1-15, 2017

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi May1-15, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

பைனாப்பிள் டெசர்ட்

என்னென்ன தேவை? ப�ொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப், பைனாப்பிள் கஸ்டர்டு பவுடர் - 2 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன், பால் - 1/2 கப், பைனாப்பிள் எசென்ஸ் - சில ச�ொட்டுகள், ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன், அலங்கரிக்க செர்ரி - 3-4. எப்படிச் செய்வது? பாலில் சர்க்கரை, பைனாப்பிள் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கரைத்துக் 148

°ƒ°ñ‹

 1-15, 2017

இதழுடன் இணைப்பு

க�ொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து க�ொதிக்க விடவும். க�ொதி வந்ததும் கரைத்த கரைசலை க� ொ ட் டி கட் டி த ட ்டாம ல் கி ள றி வேகவிட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் பைனாப்பிள் துண்டுகள், பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து கிளறி, ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிர்ந்ததும் எடுத்து, ஃப்ரெஷ் கிரீம், செர்ரி பழத்தை ச�ொருகி அலங்கரித்து பரிமாறவும்.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.