அற்றம்: Attem Journal 11 (Fall 2021)

Page 1

FALL 2021

அ ற் ற ம் ISSUE

11

ISSN 2564-0399


Fall Issue editor: Pratheepa Thi

Attem Editorial Team: Gemma Starlight of the Dark Star (Contributing Editor) Kavusala Thanya Pratheepa Thi

Checkout: issue.com/misfitsforchange Attem.net

Submissions/Inquiries: attemm@gmail.com


Books குன்னிமுத்துநாவல்: மாதவிடாய் இன்மை சில குறிப்புகள் - pgs 29 - 33. notes on Amenorrhea in the Tamil novel "Kunnimuththu" Portable Homes: வீடுசார் வன்முறையிலிருந்து வெளியேறியவர்கள் தம் உடல் உறுப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் - pgs 35 - 42. #domestic violence survivors #writing to body parts #lexiebean

Short Stories Orphan's Cradle - pgs 7 - 13. Gemma Starlight of the Dark Star பெனி (மொழிபெயர்ப்பு சிறுகதை) - pgs 19 - 27. "Benny, the War in Europe, and Myerson's Daughter Bella” (1956) Mordecai Richler (translation) Poetry தான்யா கவிதைகள் - pgs 15 - 17.

Art/Photography Snaps from Museum of Contemporary Art (MOCA BANGKOK) Gallery: Thongchai Srisukprasert - "Kama," "Great Hornbill Lady." - pgs 4 - 6, 32. Prayad Pongdam - Loi Krathong (river goddess worship ceremony Thailand) pg 18. Unknown Artist - Self Portrait of Salvador Dali (installation) - pg. 16. Other Unknown artists - pgs 7, 14. Gemma Starlight of the Dark Star - Guiltfeeder - pg 11. Vachara Prayulkam - Body-Mind-Peace Puppets - pgs 19, 21, 23, 25. Attem Cover Art Chariat Saengthong (Front Cover) Pradit Tungprarwartwong (Back Cover, Inside Front Cover)


editorial 2021 Fall issue

In this issue, we have contributions on mental health issues such as schizophrenia and PTSD of war. We also have discussions on books that are exploring forms of violence, survival, and healing. A discussion in Tamil on the book “Portable Homes” highlights the similar need in Tamil to address the survivors of violence from all social groups (amid age sexual economical differences). We felt it is especially important that we discuss the importance of such an anthology in the Eelam Tamil context. As survivors of 30-years of war (and its direct and indirect experiences), PTSD and other mental health issues associated with the impact of war are something that we rarely discuss. They are haunting our community in the form of domestic violence and violent tragedies. Violence is a cycle that we all have to work hard to break away from. Especially as one of the minority communities, we are determined to steps towards dismantling misogynistic/sexist domestic and public spaces by constantly fighting against toxic ideologies and actions we come across in every corner of our experiences. There should be continued action and discussions that have to contribute to a community that doesn't stay complicit in any form of violence. It is not an easy path or a path that will bring victory asap, after all like Angela David said, “Freedom is a constant struggle.” Let us be gentle towards our journeys and take one step at a time. Join us with our discussions! pass it on! With warm greetings, editors Tkaronto

நாம் 30 ஆண்டுகால போரில் இருந்து தப்பியவர்கள் (மற்றும் அதன் நேரடி மற்றும் மறைமுக உளநல தாக்கங்களை உடையவர்கள்). என்கிறபோதும் எம்மிடையே போரின் தாக்கத்துடன் தொடர்புடைய பல உடல், உள நலப் பிரச்சினைகள் குறித்த அரிதான உரையாடல்களே இடம்பெறுகின்றன. உத்தியோகபூர்வமாக யுத்தம் முடிந்து 12 வருடங்கள்தான் ஆகின்றது என்றாலும், இன்னமும் பாதிக்கப்பட்டவர்கள் தம் யுத்தகால அனுபவங்களைப் பற்றிய கதைகளை எழுதுவதே ஆட்சேபம் மிகுந்த செயலாக இலக்கிய முகாம் வாயில் காவலாளிகளாலும் (literary gatekeepers) குறிப்பிடப்படுகிறது. சமூக, இலக்கிய, அரசியல் எச்சூழலிலும் வன்முறைகள் குறித்த சரி, பிழை, விமர்சனம், விவாதம், அதனுடனான அவர்களது நேரடி அனுபவம் இவை பேசப்படாது கடந்திடல் அவற்றின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. அதுபோல ஒரு சமூகமாக நச்சுத்தன்மையான உண்மைக்கு புறம்பான வன்முறை தொடர்பான நியாப்படுத்தல்களை பொதுவெளியிலும் குடும்பங்களிலும் நாம் செய்யாதிருப்பதூடாகவே வன்முறையற்ற ஆரோக்கியமான சமூக மனிதர்களது இருத்தலுக்கு உதவவும் முடியும். இதன் காரணமாகவே எமது வரலாற்றுடன் தொடர்புடைய தனிநபர் அனுபவங்களை, கலை இலக்கிய பங்களிப்புகளை நாம் தொடர்ந்தும் எமது இதழ்களில் உள்ளடக்கி வருகின்றோம். இந்த இதழிலும் போர், குடும்ப வன்முறைகள் மற்றும் அவற்றின் உடல் உளவியல் தாக்கங்கள் குறித்த கதைகள், உரையாடல்கள் இடம்பெறுகின்றன. போருக்குப் பிந்தைய PTSD ஒத்த மனத்தாக்கங்கள், குடும்ப மற்றும் ஏனைய வன்முறைகள் ஏற்படுத்துகிற முடிவடையாத வன்முறைச் சுழற்சி, அதிலிருந்து தப்பிவாழ்தல் மற்றும் முழுமையான நலமடைதல் இவை ஒரு நீண்ட காலத்தை எடுக்கவல்ல பயணம். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் அதிலிருந்து கடந்துவருவதற்கான பக்கபலத்தையும்; முழுச்சமூகமாக எமது சமூக கலை இலக்கிய அரசயில் பங்களிப்புகளூடாக எமது சமூகம் ஆரோக்கியம் பெறுதலுக்கான வேலைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம்! தோழமையுடன் ஆசிரியர்கள்

freedom is a constant struggle




KAMA (2014)

Thongchai Srisukprasert

6


Orphan's Cradle


an abyss created by my own shadow, as Mymymindbodydriftslaysintodormant. There is only stillness, where nothing is or can be. It all waits for me to heed its form. Out of vast darkness, a landscape of iron rods and washed-out slabs takes shape, with an oscillating horizon of derelict buildings and rusted-out girders. The air is dominated by gusts littered by the debris of impossible shapes and chunks of charred concrete. I am standing naked, with my body adorned with cuts, scrapes, and gashes that mark my beloved sanguine artistry. There is a thick metal sheet enveloping my head with rivets embedded in my skull with no clear pattern. My eyes glimpse through jagged horizontal slits while my mouth is completely set behind bloodied metal without any openings. I am not cold, but rather, feeling the comforting warmth of fluids leaving my body and flayed flesh meeting the polluted air. A smile happily grips me beneath my encaged face and I take my first steps within The World That Never Was. A callous voice beckons behind me and I don't turn my head, "Look at how you've been undone... An empty vessel you've become." A mournful weeping bellows in front of me as I quickly shut my eyes, "A heart quartered and denied... So you beg to run and hide." Just a few steps forward and I'm reminded of how I've enjoyed the hurt of others through the hurt induced by myself. I crave anguish, no matter the source. I'm a monster without remorse. After a long pause, I open my eyes to see before me, an old 1950's television with a rapidly flickering screen of gray and black speckled lines. "Gemma... Are you all there?" I focus on the retro TV's playful pitch covered in a blanket of white noise and static filters. “Who is this?” I desperately search for an answer within me to only find a rotting cavity of hurt. "Murmur awaits your presence and you are late. Yes, yes! Late to meet an unfortunate fate!" I listen with a hungering curiosity as the mesmeric screen moans for a short bit longer before abruptly shutting off. Soon after, I move past the retro TV a few meters ahead and drown in a thought. "I'm coming home." I state this mildly aloud as I feel the reverberations of my words rattle the metal around my head, causing a ringing pain.

8


I realize now that the air and its strange debris are moving in a cyclonic dance, drawing me into its center. The dust around my feet follows suit in unpredictable swirls across the ground while the wreckage of street signs and blasted cars also feel the pull of the wind, their metals bending and screeching. “Murmur... A friend?" I hush to myself, surprised that I even know that infernal word. "Why yes, and they wait for you, wait for you in the Chamber of Repose!" Another television suddenly appears in front of me. I quickly glance behind me, doing a short swivel of my torn body. The retro TV has moved in front of me again... Or did I ever move in the first place? "The Chamber of Repose, where the Black Rose awaits and Murmur plays, hoping with each passing moment that this time, you stay!" The TV shuts off again. It felt ominous this time around as its archetypical commercial voice became almost mocking. I walked backwards this time in what I was sure was me still moving forward, keeping my eyes on the maddening box. A few meters and I turned around to walk straight into the cyclone. Half of me was expecting some sort of jumpscare when turning my body forward again. Nope, just the continuous howl of the wind, a tortured aria for the Heartless. Without further interruption and no anomalous voices, I am finally in the middle of the immense wind. To my surprise, there is no major tug on my body from the circling gusts. Instead, it's just dead quiet. The movements of debris, wind, metal, all of it. Not a sound or pull. Just a small little door in the ground that was like a medieval trap door in a castle. It looked very withered and the wood was already heavily splintered.


10



However, the porcelain surface surrounding it was oddly immaculate and without signs of deterioration. "Whatcha waiting for, champ?" I turn my head and the retro TV is to my left, its voice now hoarse and crude. The volume seems much louder, maybe because the cacophony of the cyclone's exterior isn't here. I say nothing, not even a thought flickers when turning my attention back to the trap door. I stare and dilly dally, feeling a rising sense of anxiety and hesitation. "Gemma! Gemma!" I turn back to the retro TV but the voices aren't coming from it, just static. "Gemma, how did this happen! Are you okay?" Why do some voices ask that I wonder, pausing in frustration. Suddenly, the ground beneath me shakes and is violently torn into pieces. It happens so fast that I can't grasp my surroundings. My head just hurts and... "Gemma! We've been worried sick about you!" This voice is familiar, but who is it? "You're bleeding! What happened!?" I look up to see my social worker. She has tears in her eyes and strain spelled out across her face. Her dark brown skin is painted with sweat, droplets spilling from the tip of her nose. I am beginning to grasp the world around me again. Beneath me is pavement and a pool of my own blood in which I'm sprawled on top of, my face throbbing as it tries to make sense of the night sky. I hear sirens in the distance and a parade of flashing lights. "It hurts. Everything hurts." I say this with no emotion while looking into her eyes. "You ran away from us again. Don't move. Help is almost here!" My social worker explains how I tend to wander in the same areas when running off and hallucinating. This time, I had brought scissors that I'd stolen from the kitchen, digging and slicing their blades across my torso repeatedly. I had no idea these events were happening, gleefully focused on finding Murmur, my mystery friend. She is holding my head up and propping it with something soft. My head hurts again and my mind phases out into my own darkness.

12


No landscape takes shape and no voices beckon for me. I don't dream or tangle with any thoughts. I let the void of my mind just sit, bathing in its own hollowness. It's nothing but silence once more. After what felt like centuries, I'm engulfed in a flash of brilliant colours. Pinks, yellows, purples, and reds. I also feel softness all around me and many eyes of comfort surrounding me: my plushie palz. A surge of unexpected happiness takes hold and I let myself feel the comfort of my toy friends, reaching out to the closest ones to snuggle with. It's only then that I realize that I'm back in my room, my Sky Circus. I press the red button beside my bed to call the staff, my head filled with my questions. I finally notice the bandages across my stomach and chest along with their soreness. I feel shame for I've done it again. In my heart, I flail and fail, scry and cry, never understanding why I'm like this. Why I seek out my own end. In a sudden chorus, the voices in my head call out to me. "We are - I am - We have... No memory. Of what came to be, what might have been, or what never was. I wish to be whole... Of heart, mind, and body. For nothing else is a lingering darkness that tugs on the tendrils of our empty shell.” Where there was once comfort, it's been quickly overtaken by an inexplicable impulse of anger and sorrow. I then hear the doorknob rattle as it's unlocked by the staff. My personal support worker comes in with a smile. "Gemma! You're finally awake, dear! How are you feeling? Are you hungry?" I look up at her briefly before breaking down into tears and curling into a ball. Sobbing intensely, I wish my last attempt at killing myself had worked. My only escape from a life of blurred realities and horrifying truths.


14


தான்யா கவிதைகள்

1 முன்னொரு போதின் மிக நெருக்கமான வரிகள் வீரியமிழந்து வெறும் வார்த்தைகளாய் ஆன பொழுதொன்றில் அதை உன்னதமான வரியென அவர்கள் வியந்துரைக்கையில் அச்சிறுமி கடந்திருந்தாள் சகாப்தங்களை. அச் சொற்களை உணராத செவிகள் அழைத்தன புதிதாய் எழுத. சிறுவத்தின் மயிலிறகு எட்டாத பதின்மத்தின் புத்தகங்களுள் வலிந்து திணிக்கும் இறகும் உணர்த்தும் காலாவதியான இருப்பை. பேசி இரைமீட்டு மீள்கையில் பொருந்தாமல் துருத்திக் கொண்டிருக்கிறது அவளென நினைவிருக்கும் காலம். சுவாரசியமான நினைவொன்றுள் இருக்கின்ற அந்நியத்தைப் போல திருப்பி எழுத முடியாது அக் காலம் தேங்கி நிக்கும் அவ்வாண்டில், அசைக்கவே முடியாது, பேரூந்தில் கடந்த முதல் தண்டவாளத்தின் நினைவைப் போல.

2 கூட்டத்தில் ஒருத்தியாயில்லாது கண்சிமிட்டில் மறைந்த முகத்தை கண்டாயா எனக் கேட்பாள் தோழி. எப்போது திருப்பினாலும் அவ்விடத்தில் அவளைப் பிடிக்க முடிந்ததேயில்லை. பெரும் ஆச்சர்யங்களில் ஒன்றாய் எப்போதும் இருக்கின்றது எப்படிக் கண்டுபிடிக்கின்றாள் அம்முகத்தை அவ்விடத்தில் என்பது. அவளின் விழிவழி தொடர்ந்தாலும் கண்டடையா முகத்தை சிலவேளை துரத்தியும் பலவேளை மனம் வருந்தியும் தேடினாலும் சாகசமேதுமன்றி மறையும் அம்முகம் நினைவுறுத்தும் மூன்று தசாப்தங்களின் முடிவை.


16


3 நடக்கையில் கவனமின்றி வாகனம் அடித்துப் போன தேங்கிய நீர் நிக்கவைத்துவிடுகின்றது கடந்த காலத்தில் மறந்துபோன நினைவாென்றில். காருண்யமேதுமின்றி கதவுள் உடலே அம்பிட்டதான வலியைத் தந்து வெடவெடக்க இருத்திய அக்கணத்தில் வெளிசார்ந்த உணர்வேதுமின்றி அதுவரை அழுதிராத அழுகையின் ஓலத்தை வேறு யாருடையதோ போல கேட்டுக் கொண்டிருக்க உதவி தேவையா என்று நின்ற குரலும் ஆழ் மனதுள் நுழையாது அன்னியமாய். கிரகிக்காது நின்ற அக்கணம் வாழ்தலுக்கான பேரவாவை உறிஞ்சிக் குடித்துவிட்டு உடலை மட்டுமே விட்டுப் போனதான வெறுமை சூழ திரும்ப முடியாத இடத்துக்குச் சென்றது போலும் கனவிலிருந்து முழித்து மூச்செடுக்க தத்தளித்த உணர்வது. யாரும் நினைப்பதில்லை அசட்டையாய் நெருங்கிக் கடப்பதும் பொதுவெளியில் மௌனத்தை நிரப்புகின்ற கதைகளும் யாரையோ விழுத்தும் வன்முறை கொண்டதென.


Loi Krathong (river goddess worship ceremony Thailand), 1995 Prayad Pongdam (1934 - 2014)

18


தமிழில்: பிரதீபாதி


1941: கூதிர் காலம். பெனி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டபோது இராணுவத்திற்கு தனதொரு மகனைத் தரவேண்டியிருந்தால் அது பெனியாகவே இருந்திரட்டும் என்று அவனது அப்பா கார்பர் முடிவெடுத்திருந்திருந்தார். அவன் அவ்வளவு விபரமில்லாத ஆள் என்பதால் தேவையில்லாத அலுவல்களில் தன்னை நுழைத்துக்கொள்ள மாட்டான். அதனால் தன்னைக் பாத்துக்கொள்வான், தன்ர பெடியன் பெனி தன்னைக் கவனித்துக்கொள்வான் என்று நினைத்தார். பெனியின் அண்ணன் அபே “இவன் திரும்பி வரேக்க எனக்கெண்டு மெக்கானிக் கடை போட்டிருப்பன், சத்தியமா அப்ப நான் அவனுக்கு வேலை தரக்கூடிய ஒரு இடத்தில இருப்பன்” என்று அறிவித்தான். பெனியிடம் இருந்து ஒவ்வொரு கிழமையும் காயிதம் வரும். ஒவ்வொரு கிழமையும் கார்பர் தம்பதிகள் செயின்ற் ஏர்பேயின் வீதியில் வளர்ந்த ஒரு பெடியனுக்குக் கட்டாயம் தேவையானவையான சலாமி, ஊறின கெண்டை மீன், ஸ்ரூடல் ஆகிய நல்ல சாமான்களை ஒரு பார்சலாய் அவனுக்கு அனுப்பி வைப்பார்கள். எப்படி இந்த சாப்பாட்டுப் பார்சல் எப்போதும் எப்போதும் மாறாதோ அப்படியே பெனியின் காயிதமும் எப்போதும் மாறாது. போர்டன் முகாமோ அல்டர்சொற் முகாமோ நோர்மான்டியோ ஹொலந்தோ எங்கிருந்து வந்தாலும் அவனது காயிதம் “நீங்கள் எல்லோரும் நலமாகவும் சுகமாகவும் இருப்பிங்க எண்டு நம்புறன்” என்று தொடங்கி, “கவலைப்படாமல் இருங்கள். எல்லாருக்கும் என்ர வந்தனங்கள். பார்சலுக்கு நன்றி” என்று முடிந்திருக்கும். ஐரோப்பிய யுத்தத்திலிருந்து பெனி வீடு திரும்பியபோது தம் மூத்தபிள்ளை திரும்பியபோது கோலாகலப்படுத்திய சாப்பிரோ தம்பதிகள் போலெல்லாம் கார்பர் தம்பதிகள் வழமைக்கு மீறிய ஆரவாரப்படவில்லை. அவனை இரயில் நிலையத்தில் சந்தித்தனர். அத்தோடு இரவு சின்ன விருந்தோம்பல் ஏற்பாடு செய்திருந்தனர். திரும்பவும் பெனியைக் கண்டதில் அபேக்கு நல்ல சந்தோசம். “பெனி பிறகென்ன! நீ அந்தமாதிரி!” இதேயேதான் அந்த மாலையில் முழு நேரமும் ஒரே சொல்லிக்கொண்டிருந்தான். அப்பா கார்பர் “நீ திருப்பி தொழிற்சாலைக்கெல்லாம் போகத் தேவையில்ல.. உனக்கு உன்ர பழைய வேலை தேவையில்லை. அபேக்கு நீ அவன்ர கராச்சில உதவியா இருக்கலாம்” என்றார்.

“ஓம், சரி” என்றான் பெனி. ‘இருக்கட்டும், இருக்கட்டும். அவன் ஓய்வெடுக்கட்டும்.” என்றார் தாயார் திருமதி கார்பர். ‘ஒரு இரண்டு கிழம அவன் வேலை செய்யாட்டி இப்ப என்ன நடந்திரப்போகுது?” இதற்குள் “டேய் இவன் ஆர்த் சேகல் இராணுவத்தில இருந்து வந்தோண்ண எனக்கு சொன்னவன் இத்தாலியில நாலைஞ்சு சுவீட் காப் சீகரட் வைத்திருந்தா காணும், என்னவும் வேண்டலாமாமே, இது உண்மையாடா அல்லது அவன் எனக்கு புலுடா விட்டவனா?” அபே அங்கலாய்ப்பாய் கேட்டான். பெனி டிஸ்சார்ஜ் பண்ணப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டது அவனது காலுள் இருக்கிற வெடிதுண்டினால் தானேயன்றி ஐரோப்பாவில் யுத்தம் முடிவடைந்து விட்டதால் ஒன்றும் அல்ல. நடக்கையில் அவனொன்றும் அவ்வளவாய் நொண்டவில்லை என்பதோடு அவன் தான் காயப்பட்டதைப் பற்றியோ யுத்தத்தைப் பற்றியோ யாருடனும் பேசவில்லை என்பதால் யாரும் அவனில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை முதலில் கவனித்திருக்கவில்லை. யாருமே கவனிக்கவில்லை என்பதை மயேர்சனின் மகள் பெல்லாவைத் தவிர யாரும் கவனிக்கவில்லை என்றே கொள்ள வேண்டும். 20


மயேர்சன் செயின்ற் ஏர்பெயினிலுள்ள போப்ஸ் சீகரட் அன்ட் சோடாக் கடையின் உரிமையாளர். அங்கு கிழியல்களாலான ஒரு பழைய குசினிக் கதிரையிலிருந்துகொண்டு அச் சுற்றப்புறத்தின் ஆண்களுடன் சீட்டு விளையாடியபடி வாரத்தின் எந்த நாட்களிலும் நீங்கள் அவரைக் காண முடியும். அவருடைய கண்கள் கண்ணாடியை ஒத்தவை. கூட விளையாடுபவர்கள் யாரும் பந்தயம் கட்டத் தயங்கின், அக்கண்ணாடிக் கண்களை எடுத்துக் கூர்தீட்டி ஒரு பார்வை பார்ப்பார், அது யாரையும் அச்சுறுத்த மறந்ததில்லை. அவரது மகள் பெல்லா கல்லாவில் இருப்பாள். அவளுக்கு பிறவியிலேயே வளைந்த பாதமும், தலைமுடியென மண்ணிறத்தில் ஒரு எலிவாலும் கூடவே இன்னும் கொஞ்சம் கூட முடி அவளது முகத்திலும் இருந்தது. அவளுக்கு வயது ஆக 26தான் என்கிற போதும் காலத்துக்கும் அவள் ஒரு திருமணமாகாத குமராகத்தான் இருப்பாள் என்பதே எல்லோரதும் ஏகோபித்த எண்ணம். அதை விடுத்தால், அவள்தான் – அவள் மட்டும்தான் – போரிலிருந்து திரும்பியபிறகு பெனி மாறிவிட்டதை கவனித்த ஒரே ஒருத்தி. அவன் பொப்ஸ் சீகரட் அன்ட் சோடா கடைக்கு வந்த முதல் முதல் நாளே அவள் அவனிடம் கேட்டுவிட்டாள் “என்ன பிரச்சினை பெனி?” பதிலாக அவன், ‘எனக்கொண்டுமில்ல” என்றான். பெனி, ஒரு குள்ளமான, மெல்லிய சின்ன ஆள். நீண்ட ஒடுங்கிய முகம் அவனது. சதா எச்சிலூறுகிற வாய் மற்றும் ஏதோ வகையில் கோணலான மென்கரும் விழிகள். கவனத்தை உறுத்துகிற பென்னாம் பெரிய கைகள். அவற்றை பிற பார்வைபடாது தனது பொக்கற்றுகளுக்குள் ஒளித்து வைத்திருக்கவே அவன் விரும்பினான். அதுமட்டுமன்று முழுமையாகவே எங்கும் யாரதும் பார்வைபடாது இருப்பதையே முடியுமானவரை அவன் வேண்டியது போலிருந்தது. கதிரைகளுக்குப் பின்னாலோ, ஒளி குறைந்த மின்விளக்குகளுக்குக் கீழவோ யாரும் அவனை கவனித்துவிடாத இடங்களிலுமே பிற கண்காணாதபடிக்கு அவன் நின்றான். உயர் பள்ளியில் இவன் 9ஆம் வகுப்பு சித்தியடையாதபோது மதிப்புக்குரிய அவனது வகுப்பாசிரியர் – திருவாளர் பேர்க்கின்ஸ் அவர்கள் – அவனிடம் வீட்டுக்கு ஒரு குறிப்பு கொடுத்து அனுப்பினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: “பெஞ்சமன் ஒரு நல்ல மாணவன் கிடையாது. ஆனால் நாட்டின் ஒரு நல்ல பிரஜைக்குரிய சகல குணாம்சங்களும் அவனிடமிருக்கிறது. மிகவும் நாணயமானவன், வகுப்பில் அதிகவனம் செலுத்துபவன், ஒரு கடின உழைப்பாளி. அவனுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்க நான் பரிந்துரை செய்கிறேன்.’ தனது மகனின் ஆசிரியர் எழுதியதைப் படித்ததும் கார்பர் தன் தலையை ஆட்டியவாறு அந்த கடிதத்தை கசக்கிக்கொண்டு கூறினார் ‘தொழிலோ?’ – தொடர்ந்தும் தனது பெடியனை நோக்கி தலையை அதிருப்தியுடன் ஆட்டியவாறு “தொழிலோ?” என்றார். தனது தடித்த குரலில் “உனக்கொரு தொழிலும் வருமோ” என்றவர், “சாப்பிரோட பெடியன் டாக்குத்தரா வருவான்” என்றார் தொடர்ந்து. சாப்பிரோட பெடியன் என்றார் திருமதி கார்பர். அந்த குறிப்பை பின்னம் பெனி மீட்டெடுத்து, மடிப்புக்களை சமன்படுத்தி அவனது பொக்கற்றுக்குள் வைத்திருந்தான். பக்குவமாக அங்குதான் அது பிறகிருந்தது. மொன்றியலுக்கு திரும்பிய மறுநாளே பெனி தனக்கு இரண்டு கிழமை எல்லாம் விடுமுறை தேவையில்லை என முடிவெடுத்துவிட்டு உடனேயே அபேயின் கராச்சுக்கு வந்துவிட்டான். இது அபேக்கு பெரிதும் திருப்தியூட்டியது.

22


22


நீ முந்தியைவிட நிறைய முதிர்ச்சியானவனாகிவிட்டாய்” “இது நல்லது. உலகத்தில உனக்கொரு பெறுமதியை இது குடுக்கும்” என்றெல்லாம் அபே பாராட்டி சொன்னான். இரவும் பகலும் அபே மிகக் கடினமாக உழைத்தான். பெனி இருப்பது தனது தொழிலுக்கு ஒரு மேலதிக வளர்ச்சியை வழங்குமென நம்பினான். ராக்ஸி ஓட்டுநர்களுக்கு அவன் கூறிவதுண்டு “அது என்ர குட்டித் தம்பி பெனி” “நாலு வருசம் தரைப்படையில இருந்தான். அதிலும் இரண்டு வருசம் களத்தில நிண்டவன். உங்களிட்ட சொல்றதுக்கு என்ன, இவன் ஆள் ஒரு வலிய போராளி!” முதல் இரண்டு கிழமை அபே பேனியோடு நல்ல திருப்தியாய் இருந்தான். தகப்பனுக்கும் நிலவரத்தை ஒப்புவித்தான் “ஆள் கொஞ்சம் மெதுமெதுவாத்தான் வேலை செய்யிது. மெக்கானிக்கில பெரிய கெட்டித்தனம் இருக்கிறதாவும் தெரியேல்ல. ஆனா வாறஆக்களுக்கு அவன நல்லாப் பிடிச்சிருக்கு. மெதுமெதுவா தொழில் பிடிபட்டிரும் அவனுக்கு.” பிறகுதான் அபே ஒவ்வொன்றையும் கவனிக்கவாரம்பித்தான். யாவாரம் மந்தமாகிறபோது அதைப் பாவித்து கடையைத் துப்பரவு செய்வதையோ நிலுவையில் இருக்கிற பிற அலுவல்களைப் பார்ப்பதையோ விடுத்து, கடையின் ஒளிகுறைந்த மூலையொன்றில் பெனி தன் கைகளை மடியில் இறுக்கிக்கட்டிக்கொண்டு நடுங்கியவாறு குந்திக்கொண்டிருப்பான். தனது சகோதரன் அப்படி நடந்துகொள்வதை முதன்முதல் கண்ட அபே, “என்னடா பிரச்சினை உனக்கு, காய்ச்சல் குணமா இருக்குதா” எனறுதான் கேட்டான். “இல்ல. எனக்கொண்டுமில்ல” “வீட்டை ஏதும் போப்போறியோ?” “இல்ல.” அதன் பிறகு, எப்போது மழை பெய்தாலும் – அந்த வேனிற்காலம் நிறையவே மழை பெய்தது – பெனியை கடையில் எங்குமே காண முடியாது. இது அபேயைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியது. இதுவே தொடர்ந்தது, கடுமையாக இடிமழை பெய்த நாளொன்றில் அபே மலசலகூடத்தை திறக்க முடியன்றபோது அது பூட்டப்பட்டிருந்ததை காணும்வரை. “பெனி’ அவன் கத்தினான். “நீ உள்ள இருக்கிறது எனக்குத் தெரியும். உடனடியா வெளிய வா.” பெனி பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனவே அபே கடையின் பொதுத் திறப்பை எடுத்துக் கொணந்து திறந்தான். அவன் அங்கே தன் முழங்காலில் முகம் புதைய ஒரு மூலையுள் ஒட்டியவாறு அந்தக் குளிரிலும் நடுங்கியவாறு வியர்வை முகத்தில் வடிந்தவாறிருக்கும் பெனியை கண்டான். “மழை பெய்யுது” என்றான் பெனி. “பெனி, ஒழும்பு. என்னடா பிரச்சினை” “அங்கால போ. மழை பெய்யுது” “நான் டாக்குத்தர போய் கூட்டியண்டு வாறன் பெனி” “இல்ல வேண்டாம். அபே தயவுசெய்து அங்கால போ” “ஆனா பெனி..” உள்ளே ஏதோ உடைந்துவிட்டதுபோல, பெனி வேகமாக குலுங்க ஆரம்பித்தான். பிறகு, அது நின்ற பிற்பாடு, வாய் திறந்து தொங்க ஒன்றும் புரியாதவனைப்போல அபேயைப் பார்த்தான். “மழை பெய்யுது” என்றான். அடுத்த நாள் காலையில் கார்பரைக் காணப் போனான் அபே. “இவனோட என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியேல்ல” என்றான். “யுத்தம் அவனை கெட்ட நிலமையில கொணந்து விட்டுட்டுது” என்றார் திருமதி கார்பர். “மற்றப் பெடியங்களும்தான் போருக்குப் போனவங்கள்” என்றான் அபே. “சாப்பிரோட பெடியன்” திருவாளர் கார்பர் தொடங்கினார் “அவன் ஒரு இராணுவ உயரதிகாரி” பெருமூச்சுடன் “சாப்பிரோட பெடியன்” என்ற திருமதி கார்பர் சொன்னார்: “இவனுக்கு ஒரு விடுப்புக் குடு அபே. அவன் மாட்டன் எண்டாலும் பிடிவாதமா சொல்லிக் குடு. அவன் நல்ல பெடியன்தான். நல்ல இடத்தில இருந்து வந்தவன்.


பெனிக்கோ தனது விடுப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே வெகு தாமதமாய் எழுந்து பொப்ஸின் சீகரட் அன்ட் சோடா கடைக்குப் போவான். அங்கு திரிவதையே வழக்கமாக்கிக் கொண்டான். “எனக்கிது சுத்தமா பிடிக்கேல்ல பெல்லா” மயேர்சன் சொன்னார், “இவன் இங்க திரியிறது எனக்கு நானே கான்சர் வேணும் எண்டிறது போல.” “நிட்சயமா அவனுக்கு ஏதோ மனப்பிரச்சினை இருக்கு” பிரஸ்தாபித்தான் மயேர்சனது சீட்டாடிகளில் ஒருத்தன். பெல்லாவுக்கு பெனி இருப்பது பிடித்திருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மயேர்சனும் முறையிடுவதை நிறுத்திவிட்டார். “பெடியனுக்கு சீரியஸா சிலவேளை அவளோட (விருப்பம்) இருக்கலாம்” அவர் கூறினார். “அவளிட கால்பிரச்சினைக்கும் முகத்தில இருக்கிற எல்லாத்துக்கும் நான் தேர்ந்தெடுக்கிற நிலமையில எல்லாம் இல்ல. அத்தோட அந்த கூபர்மானிட பெடியனப்போல இவனொண்டும் கிரிமினல் எண்டு இல்லத்தானே” பதிலுக்கு, “சொன்னதை திருப்பி எடு, கூபர்மானிட பெடியன் சந்தர்ப்பங்கால பாதிக்கப்பட்டவன். அவன் யாரோ – தெரியவே தெரியாத அந்நியனிட சூட்கேசப் வலும் பத்திரமா பாத்துக்கொண்டிருந்தவன், பொலிஸ் வரேக்க” என்றான் இன்னொரு சீட்டாடி. ஒன்றாயிருக்கும்போது பெல்லாவும் பெனியும் அவ்வளவாய் ஒன்றும் பேசவில்லை. அவள் ஆடை பின்னிக்கொண்டிருப்பாள் – இவன் சீகரட் பத்திக்கொண்டிருப்பான். பெனி அவள் நொண்டிக்கொண்டு கடையில் நகர்வதை உள்ளூர ஏக்கத்துடனும், கிளர்ச்சியுடனும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பான். வகுப்பாசிரியர் திருவாளர் பேர்க்கின்சினது குறிப்பு இன்னமும் அவனது பொக்கற்றுக்குள் இருந்தது. அவ்வப்போது அவள் பின்னுவதை நிறுத்தி நிமிர்ந்து அவனைப் பார்ப்பாள். “கோப்பி குடிக்கோணும் போல இருக்குதோ?” என்று கேட்பாள். “இல்லை எண்டு சொல்ல மாட்டன்” அவன் சொல்லுவான். மாலையில் ஒரு ஐந்து மணிபோல அவன் எழும்புவான், பெல்லா சுத்திக்கொண்டு கல்லாவுக்கு வந்து ஒரு கட்டு சஞ்சிகைகளை அவன் வீடு கொண்டு செல்லக் கொடுப்பாள். அவன் இரவிரவாய் அவற்றை வாசித்துவிட்டு மறுநாள் காலை புத்தம் புதுசுபோல கொண்டு வருவான். பிறகு தனது கைகளையோ கீழ்த்தரையையோ பார்த்தவாறு அவளுடன் கடையில் இருந்துகொண்டிருப்பான். ஒருநாள் மாலை ஐந்துமணிபோல் வழமைபோல் வீடு செல்லாது அவன் பெல்லாவுடன் மேல்மாடிக்கு சென்றான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த மயேர்சன் புன்னகை பூத்தார். தன் கூட்டாளிகளில் ஒருவனிடம் திரும்பி “எனக்கொரு பெடியன் இருக்குமெண்டா, பெனிய விட திறமான ஆளா இருக்குமா என்ன” எனவும், அவன் “நடக்கமுன்னமே இவன் கட்டிற கோட்டையைப் பார்” என்றான் நக்கலாய். பெனியின் விடுமுறை மேலும் வாரக்கணக்காய் இழுவுண்டது. ஒவ்வொரு காலையும் பொப்ஸ் சீகரட் அன்ட் சோடாவில் உட்காருவதும் ஒவ்வொரு மாலையும் பெல்லாவுடன் மாடிக்குச் செல்வதும், சீட்டாடுபவர்களை கடக்கின்றபோது அவர்களுக்கு பின்னால் அவர்கள் அடிக்கும் சிலேடைக் கதைகளை கேட்காததுபோல நகர்வதும் வழக்கமானது. ஒருநாள் மாலை பெல்லா மயேர்சனை சீட்டாட்டத்தின் இடையே மாடிக்கு அழைத்ததுடன் இது முடிவுக்கு வந்தது. “நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்” அவள் அறிவித்தாள். “அப்படியானால் உனக்கு எனது முழு சம்மதமுண்டு” என்றார் மயேர்சன். “வாழ்த்துக்கள் அப்படி ஏதும் சொல்ல மாட்டிங்களா?” பெல்லா கேட்கவும், “உன்ர வாழ்க்கை இது” என்று மயேர்சன் சொன்னார்.

24


அதிகாலை மூன்று மணிக்கு பெல்லா முழித்தபோது தலையை முழங்காலில் புதைத்தவாறு தரையில் நடுங்கிய நிலையில் பெனியைக் கண்டாள். “மழை பெய்யுது... இடி முழக்கமா இருக்கு” என்றான். “யுத்தத்தில சண்டை பிடிச்ச ஒரு ஆம்பிள ஒரு சின்ன மழைக்கெல்லாம் பயப்பிடேலாது” அவள் சொன்னாள்.


எந்த உரைகளும் இன்றி அவர்களது திருமணம் மிக எளிமையாக யூதர்களின் கோயிலில் நடந்தது. விழா முடிந்த பிறகு அபே தனது இளைய சகோதரனின் முதுகில் விளையாட்டாக ஒரு தட்டுத் தட்டி “பெனி, அந்த மாதிரி… பெனி டோய் நீ அந்த மாதிரி” என்றான். “நான் வேலைக்குத் திரும்பி வரவா” என பெனி கேட்கவும் “ஓ.. வா வா.. நீ பழையபடி பெனி ஆகிட்டாய், எனக்கு நல்லாத் தெரியுது.” ஆனால் இந்த சம்மந்தத்தில் தனது தகப்பனுக்கு திருப்தி இல்லை என்பதை பெனி அவதானித்தான். கார்பரின் கூட்டாளிகள் வாழ்த்துத் தெரிவித்த ஒவ்வொரு தடவையும் தோள்களைக் குலுக்கியவாறு அவர் சொன்னார் “சாப்பிரோட பெடியன் சேகல் குடும்பத்தில கட்டியிருக்கிறான.;” “சாப்பிரோட பெடியன்” சொன்னார் திருமதி கார்பர். பெனி பழையபடி கராச்சுக்குத் திரும்பிப் போனான். ஆனால் இம்முறை அவன் மிகக் கடினமாக உழைக்கத் தயார்நிலையில் போனதால் அபே திருப்தியானான். “அதுதான் என்ர சின்னத்தம்பி பெனி” மெனக்கெட்டு ராக்சி ஓட்டுநர்களிடம் சொன்னான். “கலியாணங் கட்டி ஆறு கிழம கூட இல்ல, அவன்ர மனுசிக்கு வயித்தில ஒண்டு வளருது.. சொல்றன் கேளுங்க, ஆள் வேகமான ஆள்” தான் கடினமாக உழைக்கவேண்டுமென்கிற மனஉறுதி மாத்திரமல்ல அவ்வப்போதில் பெனி கொஞ்சம் சிரிக்கவும் செய்தான். பெல்லாவின் உதவியுடன் எதிர்காலத்தை திட்டமிடலானான். ஆனால் எப்போதும் ஒருகால் – கடையில் கொஞ்சம் யாவாரம் மந்தமாகிற போதுகளில் – கடையின் இருள்நிறைந்த மூலையில் தன்னை இறுக்கியவாறு ஒரு கதிரையில் பெனி உட்கார்ந்திருப்பான். அவன் வேலைக்குத் திரும்பி ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் இருக்கும். பெல்லா அபேயுடன் கதைக்கப் போனாள். அவள் செயின்ற் ஏர்பெயின் இல் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பியபோது அவளது முகம் வெற்றிக்களிப்பிலும் பூரிப்பிலும் பொங்கியிருந்தது. “உனக்கொரு நல்ல சேதி கொணந்திருக்கிறன்” – அவள் பெனியிடம் சொன்னாள். “மவுன்ற் லோயலில அபே இன்னொரு கடை போடப்போறானாம். நீதான் அத நடத்தப் போறாய்” “ஆனா எனக்கது விருப்பமில்ல. எனக்கு எப்படி கராச்ச நடத்திறதெண்டெல்லாம் தெரியாது” “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடத்துவம்” “அதவிட நான் அபேயோட இருக்கிறததான் விரும்புவன்” தமது குழந்தையின் எதிர்காலத்தை தாம் திட்டமிட வேண்டுமென்று பெல்லா விளங்கப்படுத்தினாள். தனது மகன் எக்காரணம் கொண்டும், இந்த சீகரட் அன்ட் சோடாக் கடையின் மேல்மாடியில் ஒரு நல்ல சவர் குளியலறைகூட இல்லாத வீட்டில் வளரக்கூடாது. அவளுக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டியும் வேண்டியிருந்தது. தாம் காசு சேமித்தால் அவர்கள் கார் வாங்கவும் முடியும். கூடவே, அடுத்த வருடம் பிள்ளை பிறந்த பிறகு தேவையானளவு காசு சேமித்தால் தான் தன் காலை சரிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவிலுள்ள கிளினிக்குக்கு போக முடியும் என்றும் சொன்னாள். “நான் டொக்ரர் சாப்பிரோட்ட நேற்று போனனான். பொஸ்ரனில் இருக்கிற கிளினிக் ஒண்டில தினமும் தினமும் அதிசயங்கள நடத்திக்கொண்டிருக்கினம் எண்டு அவர் எனக்கு நம்பிக்கை தந்தவர்”

26


“அவன் உன்ன பரிசோதிச்சவனா” பெனி கேட்டான். “அவர் சரியான நல்ல மனுசன். சில ஆக்களப் போல லெவல் காட்டிற ஆள் இல்ல தெரியுமா” “என்னோட படிச்சவன் எண்டிறது அவனுக்கு ஞாபகமிருக்கா?” “இல்ல” அதிகாலை மூன்று மணிக்கு பெல்லா முழித்தபோது தலையை முழங்காலில் புதைத்தவாறு தரையில் நடுங்கிய நிலையில் பெனியைக் கண்டாள். “மழை பெய்யுது” “இடி முழக்கமா இருக்கு” என்றான். “யுத்தத்தில சண்டை பிடிச்ச ஒரு ஆம்பிள ஒரு சின்ன மழைக்கெல்லாம் பயப்பிடேலாது” அவள் சொன்னாள். “ஓ பெல்லா…பெல்லா…பெல்லா” இவள் அவனது தலையைக் கோத முயன்றாள். ஆனால் அவன் வேகமாய் அவளிலிருந்து தூர விலகினான். “டாக்குத்தர கூப்பிட ஆள் அனுப்பட்டா?” அவன் கிலுங்கிச்சிரித்தவாறு கேட்டான்: “சாப்பிரோட பெடியனையா?” “ஏன் வேணாம்” அவள் கேட்டாள். “பெல்லா” “பெல்லா.. பெல்லா” அவன் சொன்னான். “நான் பக்கத்தில யாரையும் டாக்குத்தர கூப்பிடச் சொல்லப் போறன்… அப்பிடியே இருங்க. அசையாதிங்க, இந்தா இப்ப வாறன்” என்றுவிட்டுப் போனாள். ஆனால் அவள் வந்தபோது, அவன் போய்விட்டான். காலயில் ஒரு எட்டுமணி போல மயேர்சன் வந்தார். அவருடன் கார்பர் தம்பதியும் இருந்தார்கள். ‘செத்திட்டானா?” பெல்லா கேட்டாள். “சாப்பிரோட டாக்குத்தர் பெடியன், வலு கெதியா உயிர் போயிட்டுது எண்டான்” “சாப்பிரோட பெடியன்” திருமதி கார்பர் சொன்னா. “கார் சாரதியில பிழையில்ல’ என்றார் மயேர்சன். “அது தெரியும்” என்றாள் பெல்லா.


28


1.

குன்னிமுத்து நாவல்: மாதவிடாய் இன்மை (Amenorrhea) சில குறிப்புகள்

தமிழக கேரள எல்லையில் அமைந்ததான நிலப்பரப்பில் நிகழ்ந்தவற்றை ஒரு காலகட்டத்தின் பதிவாக மனித மனங்களின் உள்ளேயும் அவர்களது பொது அரசியல் வெளியிலும் என அகமும் புறமுமாக பரந்து விரிந்து நகர்கிறது குமாரசெல்வாவின் 'குன்னிமுத்து” நாவல் (2012, காலச்சுவடு). அந் நிலப்பரப்பில் இந்துத்துவாவின் எழுச்சி, பொதுவுடமை அரசியல், பெந்தகோஸ்து/மத அரசியல் என கதை நிலைகொண்டிருக்கிற பன்முக சூழலை உள்வாங்கி சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக கதைப்புலத்தின் நிலப்பரப்புக்குரிய பல்லாயிரம் வழக்குகள், ரசிக்கத்தக்க உவமைகளுடன் நாவலில் தமிழ் முழுமையாக மலையாளம் போலவே தொனிப்பதும், நாவலில் பல இடங்களில் (ஓர் உதாரணமாக (இருமாமலிருப்பதற்கு) ) சீக்கரட் புகையிழுப்பதை 'பூனை பாலைக் குடிப்பதுபோல” குடிக்கணும் என சொல்வது போன்ற தருணங்களில்) அவ்விபரணங்கள், எழுதுகிற விடயங்களை ரசித்து அவதானித்த கதைசொல்லியிடமிருந்து வருகின்றவை என்பதைக் வெளிப்படுத்தியதுடன் அவரது இலாவகமான மொழியின் சொற்செறிவை வெளிப்படுத்துவாக அமைந்திருந்தன. எனினும் பிரதியில் பேசப்படுகிற புற அரசியலைப் பற்றியன்றி, அது பிரதானமாக கொண்டு சுழலும் பெண்ணின் பாத்திரப்படைப்பை அதன் அரசியலை முன்வைத்து சிலவற்றை இந்நூல் பேச உந்துகிறது. மானுட இயக்கத்துக்கான மையமாம் உயிரை உற்பத்தி செய்யும் பெரும் சக்தியைப் பெண்ணுடல் கொண்டிருப்பதனால் அவர்தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளாக முதல் குருதி, மகப்பேறு, தாய்மை கொண்டாடப்படுகிறது. இதனால் அனேகமான சமூகங்களில் இவை கொண்டாட்டத்துக்குரியதாகுவது இயல்பே என்றாலும் உயிரியல்ரீதியாகக் கருவறையைக் கொண்டிருக்காதவர்கள் இந்த இனப்பெருக்கத்தை மையமாகக் கொண்ட உலகிற்கு உகந்தவர்கள் அல்லாதவர்களாகப் பார்க்கப்படும் வன்முறையும் இதன்கூடவே நிகழ்கிறது. இங்குதான் கருவறை இருந்தும் கர்ப்பமடையவியலாதவர்கள், கர்ப்பமடைவதைத் தம் தேர்வாய் கொண்டிராதவர்களை பொதுச்சமூகத்தல் இருந்து விலக்கி வைக்கும்/பார்க்கும் அவர்கள் வெளிஆள்கள் ஆகும் - போக்கும் தொடங்குகிறது. அல்லது கருவறையைக் கொண்டவராக இருந்தும் அவளது உடலில் மாதாந்தம் குருதி வெளியேற்றம் நிகழாவிட்டால் அவள் என்னவாக ஆகிறாள்?


GREAT HORNBILL LADY (2013) Thongchai Srisukprasert (1963-)

30


மாதவிடாய் இன்மை தொடர்புடையதாய் குழந்தை நட்சத்திரங்களாய் பிரபலமாயிருருந்த திரைநட்சத்திரங்களது மாதவிடாயைத் தள்ளிப்போட அவர்தம் பெற்றோரால் மருந்துகள் கொடுக்கப்படுவது பற்றியும் குடும்பங்களுள் 'சாமத்தியப்பட' பிந்தும் சிறுமிகள் குறித்தும் கிசுகிசுக்கள்வழி பெரிதும் கதைகள் உலாவிக் கேட்டதுண்டு. பாலகுமாரனின் நாவலொன்றிலும் கனவுநாயகியாகப் பிரபலமாகிவிட்ட நடிகை இன்னும் முதல் குருதி காணாதவளாக படைக்கப்பட்டிருந்தது ஞாபகம். குன்னிமுத்து நாவலில் முக்கிய கதாபாத்திரம் (நாவலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல, சுந்தரியென்றோ வேறு பெயர்களோ இருந்தாலும், 'வளமை இல்லாதவளுக்கு பெண் என்ற அந்தஸ்து இருக்கட்டும், மனித உயிர் என்ற அடையாளத்தை தரவே உலகம் மறுக்கிறது' - இதனால்)- 'இருளி' என்பதே இறுதியில் பேராய் நிலைத்துவிட்ட - அப்படியாகப்பட்ட பெண்தான். எமக்கு குன்னிமுத்து என்றாலே எமது சிறுவங்களில் ஒருவித அச்சவுணர்வுடனும் ஈர்ப்புடனும் நாம் பின்கோடிகளில் பத்தைகளில் கண்டெடுத்த குண்டுமணிகள்தான் மனதில் நிற்கின்றன. கருஞ்சிவப்பில் கண்போல கறுப்பாய் ஒரு புள்ளியுடன்- காதுக்குள் போய்விடும் என அம்மா பயமுறுத்திய ஆனால் அதனழகில் நாம் தவிர்க்கவியலாது கவரப்பட்டு, பொறுக்க சொல்லும் அக் குண்டுமணிகள் இங்கு இருளிக்கு தகப்பனை இழந்தபோது அவர் கொல்லப்பட்டபோது தெறித்த குருதியைப் போலவும் ருதுவாகும் பெண்ணின் குருதியை – வளமையை – நினைவூட்டுகிறதாகவும் நாவலில் எழுதப்படுகிறது. அவள் அனுபவிக்கும் ஒடுக்குமுறை என்பது - அவளது உடலை வைத்து நிகழும் அவள் குறித்த முன்கற்பிதங்களும் அதன் பயனாக தவறாக நடத்தப்படுதலுமாகிறது. இங்கே என்றும் கருத்தரிக்க முடியாத பெண் கட்டிப்போட(?!) முடியாத அச்சத்தைக் கணவனுக்குத் தருகின்றவள் ஆகிறாள். தனதான அவளதுடல் தனக்கு விசுவாசமாய் உள்ளதென்பதைக் நிரூபிக்கும் முகமாக உறவு கருவடைதலில் முடியாதபோது, தானில்லாதபோது அல்லது தனக்கு தெரியாமல் அவள் வேறு ஆண்களுடன் உறவு வைத்துக்கொண்டால் அதை எப்படியறிவது? இக்குழப்பம் கிடந்து குழப்புகிறது. எத்திப் பிழைக்கும் படுகள்ளனான கணவன், வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு உறவுகளில் திளைத்து திரிகின்றபோதும் அவனது மனைவியான இருளி அவனால் தனது தகப்பனை இழந்து, சுகதுக்கங்களை இழந்து தேய்கிறாள். அவளை அண்டி அவனே பிழைக்கிறபோதும் அவள்தான் பிழைப்பதாகவும் வசைசொல் கேட்டே வாழ்கிறாள். அவனுக்குப் பிறகும் இலகுவில் அவளை எதுக்கும் தட்டிப் பார்க்கலாம் என்றுதான் ஆண்கள் யோசிக்கிறார்கள். அவள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பில்லை என்பதால் கூடுதல் வசதி என்பதாலும். தன்னில் எந்தத் தவறுகளும் அற்ற ஒரு வெகுளியுமான அவள் வசதியாய் அவ்வையைப் போல சீக்கிரம் கிழவியும் ஆகிவிடுகிறார் (ஆக்கப்படுகிறார்?). ஈற்றில் ஏமாற்றியும் பிற பெண் நாடியுமே வாழ்ந்த அவரது கணவரின் மகளைவேறு தனதென வளர்க்கிறார். அவர் மட்டுமல்ல அவரது மகளும்கூட பாலியல் இன்பத்தை தாமே விரும்பி அடைவதுக்குப் பதிலாக, அது ஆண்களது காமத்துக்குப் பலியாகிற, அவர்கள் அத்துமீறப்படுகிற செயலாக மட்டுமே அமைந்துவிடுகிறது. அதை அப் பெண்கள் முன்னெடுத்துப் பெறுகின்றதாகச் சமூகம் அமைந்தில்லை.


32


2. மாதவிடாய் இன்மையைப் (Amenorrhea) பொறுத்தவரையில் - 15 வயதிற்குள் பூப்படையாத பெண் என்கிற அடிப்படையில் - எனில் பிறகு அடையலாம், அதனால் அவர்களுடன் அல்லது அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் அவர்கள் கரு உருவாக முடியாதவர்கள் என்பதல்ல என்பதை ஒட்டிய கர்ப்பம், கர்ப்பமடைதல் என்பதைச் சுற்றியே தகவல் களஞ்சியங்களில் தகவல்கள் இன்னும் பகிரப்படுகின்றன. அல்லது மாதவிடாய் நிற்கின்ற காலத்தைச் சேர்ந்த பெண் எதிர்கொள்ளும் மாதவிடாம் இன்மை (மாதவிடாய் நிறுத்தம்/menopause) குறித்தது, கர்ப்பமடைந்த பிறகான மாதவிடாய் இன்மை குறித்ததாய் இருக்கின்றன. வேறு தகவல்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கே வாழ்நாளில் காணாத ஒருவரின் பாலுணர்வு (உள்ளதா) என்பது தொடர்பில் எதுவுமில்லை. அதனால்தான் இருளியின் மீது வன்முறையைச் சொற்களால், உடலால் ஏற்படுத்த முயன்றவர்களுக்கு வாய்த்திருந்த காமத்தின் தெரிவுகள்கூட இருளிக்கு இந்நாவலில் இல்லை. மாதவிடாய் இன்மை காமம் இன்மைக்குச் சமமென எங்கும் தரவுகளில்லை. ஆதலால் இது 60 வயதுக்குப் பின்னும் இருக்கக்கூடிய (ஆண் புனைவுகளில் இல்லாத) பெண்ணின் காமத்தை போலவே இல்லாத ஒன்றாக (இருந்தும் இல்லாத ஒன்றாக) இருக்கிறது. சமூகத்தில் பேணப்படும் அசமத்துவங்கள் பிற்போக்கு அரசியல்கள் ஏற்படுத்தும் சமநிலையற்ற சமூகங்கள் எமது புறச்சூழலில் எவ்வாறு அனர்த்தங்களை நிகழ்த்துகின்றனவோ அவ்வாறே மனித உடலும் இயங்குகின்றது. இயற்கையைப்போலவே உடலியக்கத்துக்கு ஹோர்மோன்களது சமநிலை மிக முக்கியம். பல்வேறு சுரப்பிகள் இச் சமநிலையப் பேண இயங்குகின்றன. சுரப்பிகளது சமநிலை குலைகிறபோது அது உடலைப் பாதிக்கின்றது. ஆண்களைப் போலல்லாது ருதுவடைதல், மாதாந்தக் குருதி, கர்ப்பம் ததரித்தல், பிள்ளைப்பேறு என பெண்ணுடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுவதால் சமநிலையை பேணுகிற சுரப்பிகள் சரியாய் இயங்கமறுக்கிறபோது உடல், உளபாதிப்புகளை அடைகிறவர்களாக இருக்கிறார்கள். இனப்பெருக்க உறுப்புகளிலுள்ள சிக்கல்களோ ஹோர்மோன் சமநிலையைப் பேணும் சுரப்பிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களோ கூட இந்நிலைமக்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை வளர்ச்சிக் குறைபாடும் அதுசார்ந்த காரணங்களினாலும் நடக்கலாம். இவற்றில் ஏதேனுமொன்று காரணத்தால் நிகழக்கூடிய மாதவிடாய் இன்மை இருளிக்கு வாய்த்திருக்கலாம்.. உரிய மருத்துவ உதவிகள் கிடைக்கிறபோது சரியாகக் கூடியதாகவும் இருந்திருக்கலாம். என்றாலும் பெண் உடல்சார் அறிவு இன்னமும் மருத்துவ உலகில் பால்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதால் அவர்களது உடலின் பிரச்சினைகள் அசட்டை செய்யப்படுவதும் வாழ்நாள் பூராவும் அப்பிரச்சினைகளுடனே இருந்து மடிவதும் யதார்த்தமாகின்றது. இருளியைப் பொறுத்தவரை அவளது யதார்த்தம் எவ்வித கவித்துவ நீதியையும் கொண்டிராததாகவே நாவலில் அமைந்திருக்கின்றது.


34


Portable homes: வீடுசார் வன்முறையிலிருந்து வெளியேறியவர்கள் தம் உடல் உறுப்புகளுக்கு எழுதிய கடிதங்கள்

அன்புக்குரிய எனது புன்னகையே.... எங்கு போய் விட்டாய்? உன்னைக் கண்டு நாளாகிவிட்டது. முன்பு நீ நாளாந்த நிகழ்வு. காலையும் மாலையும் உன்னைக் காணலாம். நாளைத் தொடங்குகிறபோது கண்ணாடியில், பின்னர் நண்பர்களுடன் உனது சிரிப்பு தொற்றாய் பரவுகின்றபோதும் இரவில் குட்டித்தம்பிக்கு பள்ளிவேலையில் உதவுகிறபோதம் என உன்னைக் காணலாம். ஒரு மோசமான நாளை எதிர்கொண்டவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள். நீயற்று அவர்களை ஒருபோதும் காண விரும்பியதில்லை நான். இப்போது நிறையப்பேர் அது எங்கு போனதென என்னைக் கேட்கிறார்கள். காணாமற்போன புன்னகைக்குப் பதிலாய் என் உதடு பிரிவதை 'உண்மையானதென” அவர்கள் ஏற்கவில்லை. சும்மா காட்டத்தான் ஒரு பாவனை என தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீ திரும்பி வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன். நீ போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. சில நாட்கள் கடினமானவை. சில மிக நீண்டன. சில நாட்களில் எமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சில நாட்களில் அது முடியும். எங்களால் முடிகிற அந்த நாட்களில்தான் நீ மிக மிக வலிமையானவள். இப்போது மிகக் கவனமாக மீளவும் உன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாய். உனது தோழர்களும் குடும்பத்தினரும் உனது பக்கம் நிற்கிறார்கள். எல்லோரும் உன்னைத் தேடுகிறார்கள். நீ திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது. நாளை காலையில் உன்னை காண்பேன் என்று நம்புகிறேன் நேசத்துடன் உன்னுடைய நான் (பக்.30 Portable Homes


1. பாதுகாப்பு என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தத்தைத் தரக்கூடியது. திகிலூட்டுகிற இரவு வெளிச்சத்தில் ஆளரவமற்ற சந்துபொந்துகளினூடு மெதுவாய்...மிக மெதுவாய்... அடியெடுத்து வைக்கும் காலடிச்சுவடுகளைத் தொடருகின்ற கமராவை நாம் தொடர்வோம். இறுதியில் பருந்தாய் புது வேகமெடுத்து ஒரு அனர்த்தத்தை குறிப்பறிவிக்கிற கதறலோடு முடிவடைகிறதான திரைக்காட்சிகளில், பெண்களது படைப்புகளில் என பாதுகாப்பின்மையானது வேலையிலிருந்து தாமதமாய் இரவில் வீடு திரும்புதல்களின் பாடுகள், எதிர்கொள் தொல்லைகள் பல தளங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பகலொன்றும் எல்லோருக்கும் பாதுகாப்பை வழங்குவதில்லை என்கிறபோதும், இரவே பாதுகாப்பற்றது என்பதாக நம்பப்படுவதால் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்கள் குறித்த உரையாடல்கள் வீடுகளில் எழுகின்ற போதெல்லாம் எழும் “ஏன் அந்த நேரத்தில போனவை” “இரவில வீட்டில இருக்க வேண்டியதுதானே” என்பதான கேள்விகள் இன்றுமே உலகமெங்கும் நடைமுறையில் இருக்கிறது. இதனால் திரைக்காட்சிகளில் முகமற்ற அந்நியனின் பின்தொடர்தலால் வேகமெடுக்கும் அபலைப் பெண்ணிற்காகப் பதைபதைப்புறுகிற பார்வையாளர் மனம் அவர்கள் பத்திரமாய் வீடு திரும்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தையே தொடருகின்றது. இவையனைத்தும் திரும்புவதற்கான ஒரு இடம் - பாதுகாப்பான இடம் - “வீடு” என்கிற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றவை - அவ் எண்ணத்தை தொடருகின்றவை. இதன்படிக்கு, அவர்கள் வெளியில் வராது இருத்தல் எவ்வளவுக்கெவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வீட்டில் பாதுகாப்பாய் இருப்பார்கள். பேசாமல் வீட்டினை ஒரு பங்கர் போல கிண்டி பாதுகாப்பாய் இப் பெண்களை குழந்தைகளை நாளை பாதிக்கப்படப் போகிறவர்களை ஆபத்திலிருந்து மறைத்து வைத்திருக்கும் இடமாய் ஆக்கிவிட்டால் என்ன? இப்படியான தீர்வுகள்தான் இருக்கும். இதற்கு முரணாக வருடாவருடம் மனிதர்கள் வீட்டை விட்டு ஓடுகின்றனர். சர்வ பாதுகாப்பு நிறைந்ததாக சொல்லப்படுகிற குடும்பங்களிலிருந்து தெருக்களில் வாழ்வதை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், தேர்ந்தெடுக்க தள்ளப்படுகிறார்கள். பொருளாதாரம், சமூகநலன்புரி திட்டங்களின் போதாமை வீடற்ற நிலைக்கான புறக் காரணங்கள் எனில், குடும்ப வன்முறை பாதுகாப்பற்று வீட்டினுள் வாழ முடியாமைக்கான முதன்மைக் காரணமாக இருக்கிறது. கனடாவில் ஒரு அறிக்கையின்படி 235,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வருடாவருடம் வீடற்றநிலையை அடைகிறார்கள். இதில் சிறுவர்களும் அடக்கம் (The state of homelessness in Canada, 2016).

36


இதை மனங்கொண்டால், பாதுகாப்பானது என நம்பப்படுகின்ற அந்த வீடுகள் பாதுகாப்பற்றவை எனில் தனதந்த வீட்டிலிருந்து ஒருவர் எங்கு தப்பிச் செல்வது என்கிற கேள்வி பாதுகாப்பு குறித்த அனர்த்தத்தை தவிர்க்க வீட்டில் இருந்திருக்கலாம் என்கிற கதைகளின் - அபத்தத்தை அவரவர் முகங்களில் அறையக்கூடும். லிவ்விங்ஸ்மைல் வித்தியாவின் ஒரு கவிதையொன்று. முழுமையாக அக் கவிதை சாலையோர வீடுகள் குறித்து வியக்கும் ஒருவரது மனநிலையை ஏக்கத்தை பேசுகின்ற கவிதை. ஆனால் அதில் திடீரென்று இப்படியொரு வரியை அவர் எழுதியிருப்பார்: அவ்வீடுகளில் “துறுதுறு குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கின்றனரா?” பயணத்தில் இலகுவாய் செல்வதற்கு, வாகனத்திலிருந்து இறங்கி நேரே நுழைவதற்கு, இனிமையுடன் தன்னை அழைக்க சாலையோர வீடொன்று தனது நண்பர்கள் யாரதாவும் இருக்கக்கூடாதா எனக் கவிஞர் ஏங்குகிற அத்தகைய வீடுகளில் அவற்றின் பாதுகாப்புக்கு என்ன குறைந்து விடக் கூடும்? திரைப்படங்களில், வீட்டு விளம்பரங்களில் அம்மாஅப்பா-இரு குழந்தைகள் எனக் காட்டப்படுகிற அழகிய குடும்பங்களில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன வந்தது? ஆனால் வியந்தவண்ணம் சாலையோர வீடுகளைப் பற்றிப் பேசுகிறபோதும் அது கவிதைசொல்லிக்கு சிறிது உறுத்துகிறது. அவ் வரியை அவ்விடத்தே செருகிவிடத் தோன்றுகிறது. ஏன்? இதை எழுத்தாளரின் உள்ளுணர்வு எனலாமா? 'மழை ஏன் வந்தது” (நிரூபா, “சுணைக்குது” (2005) என்கிற கதையில் ஒரு சிறுமி உறங்கப் போகிறாள். ஒரு மழைநாளில் தனது வீட்டு விறாந்தையில் அவள் தனது அம்மாவின் அருகில் துரே அப்பா அண்ணா மாமா என உறவுகள் படுத்திருக்க உறங்குகிறாள். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. இடையில் அவளது உடலை அத்துமீறத் துணிகிற நபர் அங்கு படுத்திருக்கிற ஆண்களில் யாராகவும் இருக்கலாம் என்பது பேரச்சமூட்டும் யதார்த்தமாக அச் சிறுமிக்கு இருக்கிறது. இந்தக் கதை குடும்பம் என கட்டப்படுகிற ஜனரஞ்சகக் கதைகளில் நாம் தினமும் வாசிக்கின்ற ஒன்று கிடையாது. அனேகமான கதைகளில் குடும்பம் வன்முறையாளர்களை பாதுகாக்கின்ற பங்காளியாகவே (complicit) அங்கு நிற்கும். எப்படி பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற இராணுவத்தினன் ஒருவன் இராணுவ கட்டமைப்பால் காப்பாற்றப்படுவானோ அதேபோல குடும்பங்களில் சிறுவர்கள், பெண்கள் மீதான வன்முறைகளை இழைப்பவர்கள் குடும்பங்களுள் இன்றியமையாதவர்களாக இருப்பதால் அவற்றை பேசாதிருக்குமாறு பாதிக்கப்பட்டவர்களே வேண்டப்படுவார்கள். இதனால் “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” மற்றும் குடும்பப் பாடல் தமிழ்சினிமா போற்றுதல்களை மீறியும் வெளிப்படையாகவோ அன்றில் நாசுக்காக.. மிக மிக நாசுக்காக... குடும்பங்களது வன்முறை சிறுபான்மையினரின் பிரதிகளில் பேசப்பட்டே வந்திருக்கிறது. பாலினய் சிறுபான்மைகளைப் பொறுத்தவரை புனைவுகளாகவல்ல மிக நெருக்கமாக வன்முறைகளை கண்டறிந்ததால் வந்த கவனத்திலிருந்து அவை பிறக்கின்றன. குடும்பம் என்கிற அலகு உலகின் எந்த பண்பாட்டிலும் உடைக்க முடியாத அரண்களுடன் தாக்கம் செலுத்தும் பெரு நிறுவனமாய் நீண்டநெடுங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. பிற்போக்குவாத குரல்கள் எழுகிற ஒவ்வொரு காலங்களிலும் ஒரு தேவாலயத்தைப் போலவும் ஒரு அரசாங்கத்தைப் போலவும் தனது பாத்திரத்தின் இடத்தை குடும்பமும் - புதிய சட்டங்களூடே சிறிதளவில் அவ்வவ்போது தன்னைத் தளர்த்திக்கொள்கிறபோதும் - அசைக்கமுடியாத ஆதிக்கத்தை எமது சமூகங்களின் சிந்தனைகளில் அது செலுத்துகிறது. தேசங்களை போர்களை கொண்டுசெல்ல ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இனஉற்பத்தி நிறுவனம் தேவை ஆகையால் அக்கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பாக குடும்பம் செயற்படுகிறது. புதிய மாற்றங்கள் எனில் இன்றைய நவீன குடும்பம் தனியே ஆண்-பெண் மாத்திரம் கொண்டதல்ல என்பதே. பால்புதுமையினரைக் கொண்ட குடும்பங்கள், பல்கலாச்சார கலப்பினைக் கொண்ட குடும்பங்கள். ஆகையால் வன்முறை தனியே பாதிக்கப்பட்டவராய் பெண்களை மட்டும் கொண்டதுமல்ல. இங்கே இந்தக் ஒற்றைத்தன்மையற்ற குடும்பங்களுள் யாராலும் வன்முறை இயற்றப்படலாம், ஏனெனில் வன்முறை அதிகாரம் சார்ந்தது, அது யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதால் தீர்மானிக்கப்படுவது. உறவுப் படிநிலையில் எவர் உயர் நிலையில் இருக்கின்றார் என்பதைப் பொறுத்ததும், இன்னொருவரை தனது அதிகாரத்தின்கீழ் ஒடுக்க விழையும் மனநிலையிலிருந்து வருவதும்.


LEXIE BEAN

38


2. லெக்ஸி பீன் (LEXIE BEAN) இனால் தொகுக்கப்பட்ட __portable homes__ நூலின் தொகுப்பாளர் “நாம் பாதுகாப்பானதும் நெருக்கமானதும் என நினைக்கின்ற இடத்தினுள் நிகழ்கின்றவையே குடும்ப வன்முறை” என வரையறுக்கிறார். குடும்ப வன்முறைகளைக் கடந்து வந்தவர்களது படைப்புகளைத் தாங்கும் நூல், சுவாரசியமான வகையில் இது குடும்ப வன்முறைகளிலிருந்து தப்பியவர்கள் உளரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிக்கப்பட்ட அல்லது தமக்கு உதவிய – தமது உடல் உறுப்புகளுள் ஒன்றைத் தேர்வு செய்து அதற்கு எழுதிய கடிதங்களைக் கொண்டதாய் அமைந்திருக்கிறது. இந்த நீண்ட வாழ்வில், உடல் ஒவ்வொருவருக்கும் என்னென்னவாக எல்லாம் இரு(ந்திரு)க்கிறது? கால்கள் இருக்கின்றன எனில், அவை வன்முறையிலிருந்து ஓடுவதற்கான வலுவை தந்திருக்கின்றன. பொருளாதாரரீதியாக வன்சூழலுள்ளேயே தங்கியிருக்க செய்யும் வறுமை அவ் வன்முறைக்குள்ளேயே வாழச் சொல்லுமானால், தாங்கிய வன்முறையால் உயிர் போகாதிருக்குமெனில், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மூளையானால் எமது நோவை மரக்க (numb) செய்துவிடுகிறது. உண்மையில் சக மனிதர்களைவிட உடல்தான் முதலில் வன்முறையை எதிர்த்து நிக்கிறது. எமது சமூகங்களில் வீடுகளுள் “சகித்துப் போ” “நெடுக அடிக்கிறதில்லைத்தானே' இப்படியாய் சப்பைக் கட்டும், நிகழும் வன்முறைகள்மீதான இடையீட்டை செய்யாதவர்களைவிட உடல் உயிரைத் தாங்குகிறது, தக்கவைக்க போராடுகிறது. வீட்டு/குடும்ப வன்முறை தமது வட்டங்களுள் நிகழ்ந்தாலும் அது குறித்த அனேகமானவர்களது நிலைப்பாடு “அது தனிப்ட்ட அவர்களது குடும்ப விசயம்” என்பதே ஆகும். உடல்ரீதியானவை மட்டுமன்றி உளவியல்ரீதியாகவும் நிகழும் குடும்ப வன்முறைகள் தனியே பாதிப்பது வன்முறைக்குள்ளாகிற ஒருவரை அல்ல. அது அதை எதிர்கொள்கிற அனைவரையும் பாதிக்கிறது. அதனால்தான் 'குழந்தைகளுக்காக குடும்பத்துள் இருத்தல்” 'பிள்ளைகளுக்கு அப்பா/அம்மா வேணும்” என்கின்ற வாதங்கள் இன்று அடிபட்டுப் போயிருக்கின்றன. பிள்ளைகளுக்குத் தெரியாமல் என நினைத்து இரவில் தலையணையுள் தம் முகத்தை அமத்தி அழுத பெற்றவரின் விம்மல்களை கேட்ட பிள்ளைகள் வழித்தடங்களை அழிவை நோக்கிச் செலுத்தியிருக்கிறார்கள். உடலின் காயங்கள் மாத்திரமல்ல சந்தோசமற்ற இரு மனிதர்களின் சேர்ந்திருத்தல், அதன் சிறு சிறு சமிக்ஞைகளை எந்த பெரிய மனிதர்களையும் விட பிள்ளைகள் அறிவார்கள். சிலவேளை ஒத்துப்போகாத இரு பெற்றோருக்குள் அவர்களுக்குள் மாறி மாறி கதைகாவி தந்திரங்கள் செய்து தமது தேவைகளை பூர்த்திசெய்பவர்களாகவும் (அப்படிச் செய்ய பெற்றோரால் பழக்கப்படுத்தப்பட்டவராகவும்) அதன் உளவியல் பாதிப்புகளாக பின்னாளில் அதையொத்த உறவுகளில் தேர்கிறவர்கள் தங்கிப் போகிறவர்களாகவும் அவர்களை ஆக்கவும் செய்யும், வேறெந்த நன்மையையும் அல்ல. இந்த நூலின் பிரத்தியேக அம்ச்களில் ஒன்று பாலின சிறுபான்மையினர்/பால்புதுமையினரும் இதில் பங்களித்திருப்பதே. இது மிக முக்கியமானது. ஏனெனில் வன்முறை தனியே குறிப்பிட்ட குழுவின் இயல்பு அல்ல. அளவுகள் மாறுபடுமே தவிர ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் சகலரும் ஏதோ ஒரு வகையில் இதை எதிர்கொண்டே இருப்பர். (Abuse is about power). அதேபோல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் குறைந்த வருமானத்தினுள் வாழும் சமூகங்களிலிருந்து வரும் குரலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாகவும் உடல்சார் எல்லைகள்/இயலுமைகள் மட்டுப்படுத்தப்பட்டநிலை காரணமாகவும் வன்முறைச்சூழலிருந்து ஒரு பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பது அந்த சமூகங்களே. இந்த நூலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் தமதொரு உடலுறுப்புக்கு எழுதியவை, “இந்த நூலினை பாதியில் வைக்கவோ மீண்டும் அதை எடுத்துப் படிக்கவோ யோசிக்காதீர்கள். இது கனதியான நூலல்ல, மாறாக வன்முறையிலிருந்து தப்பியவர்கள் மனதை இறக்கி வைக்க ஒரு இடம்” (““Do not be afraid to put this book down. Do not be afraid to pick this book up. This book is not heavy, but a release for those who have survived.”) என்கிற முற்குறிப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.


அருமையான எனது பாதங்களே... உங்களுக்குத் தெரியாததா? நான் ஆண்டுக்கணக்காக அடிகளும் உதைகளும் வாங்கியவாறு பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டும் கடும் சுடுசொற்களை எனது சொந்த குடும்பத்தினரிடமிருந்து கேட்டபடியும் வளர்ந்தேன். “உன்னை யார் நம்புவார்கள்? கசப்பாய் திரிவதை நிறுத்த மாட்டாயா? கவர்ச்சியானவள் என நினைப்போ? உனது உடம்பு அசிங்கமானது. எனது பாதுகாப்பு உனக்குத் தேவை. நீ ஒரு அடி முட்டாள். உனது பிழைதான் எல்லாம். உனக்கு தன்னம்பிக்கையே கிடையாது. எம் உதவியைக்கொண்டும் ஒன்றும் சாதிக்க முடியேல்ல உன்னால். நீ ஒன்றுக்கும் உதவாதவள்” இவ்வாறு அவர்களது குரல்கள் என்னைத் தூற்றின. இவற்றைக் கேட்பது பழகிப் போய்விட்டதால் பின்னம் ஒரு பல்கலைக்கழக மாணவியாக இருக்கையிலும் எனது காதலனிடமிருந்து இதையொத்த வார்த்தைகளையே கேட்டேன். வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவர்களை, அவர்களந்தக் குரல்களைக் கடந்து நான் நடக்கவில்லை. பாதங்களே, அன்றெல்லாம் நாம் சுதந்திரத்தை கனவு கண்டபோதும் அவர்கள் சொன்னவற்றை அப்படியே நம்பிக்கொண்டிருந்தோம். பிறகு நிறைய அனுபவங்களின் வழிதான் நாம் உணர்ந்துகொண்டோம், அவர்களது குரல்கள் சொன்னதொன்றும் உண்மையல்ல, உண்மையறல், உண்மையல்ல. மறுபடி மறுபடி எம்மை தூற்றக் கேட்டால் நாமும் அதை நம்பத்தலைப்பட்டு விடுகிறோம். இதையுணர்ந்து கொண்டோம். துணிகரமாய் அவர்களிடமிருந்து வெகுதூரம் ஓடினோம். அவர்தந்த மனத்தாக்கத்தை கையொடு தூக்கிக்கொண்டு. விரிந்த உலகத்தைக் கண்டபோது பலவற்றைக் கற்றோம், துணிகரமான பல்தரப்பட்ட மனிதரை வழிப்பயணிகளாய் கண்டோம். கூடவே பாலியல்ரீதியாக மற்றவரை வேட்டையாடத் திரியும் சமூகத்தில் பெரியமனிதர் முகமூடி அணிந்த பச்சோத்திகளையும் கண்டோம். அவர்கள் ஏலவே நாம் எம்முடன் இழுத்துவரும் மனத்தாக்கத்தினுள் இன்னும் பளுவை ஏற்றினார்கள்தான். என்றாலும் இப்படியான வேடதாரிகளை அடையாளங் காண்பதும் விலகி தூரே நடப்பதும் படிப்படியாக பழகிப்போய் இலகுவாய் ஆனது. எனது இனிய பாதங்களே, இன்று நாம் பல்கலைக்கழகத்தில் ஓர் புலமையாளராகவும் அநீதிக்கெதிரான போராளிகளாகவும் ஓடித் திரிகிறோம் - பயணங்களால் உலகை அறிந்த வண்ணம். அவர்கள் இல்லாமல் நாம் வேறு எங்கும் செல்ல முடியாது என்கிறவரிடமிருந்து என்னை வெகுதூரம் கூட்டிவந்தமைக்கு என்றென்றும் நன்றிகள், எனதரும் பாதங்களே!

(பக்.40 Portable Homes

40


காணாமல்போன புன்னகைக்கு எழுதுகிறபோது, “எனது புன்னகைகளே எங்கே போனீர்கள். மறுபடி எப்போது வருவீர்கள்” என்றும்; விருப்பமற்ற, அத்துமீறும் தொடுகைகளை குறிப்பிட்டு, “என் பெண் உறுப்புகளே – நீங்கள் வன்முறையை எதிர்கொண்டபோது இன்பத்தைத் துய்க்கும் என் வேட்கையும் ஆமையென சுருங்கிப் போயிற்று, அச்சத்தில்” எனவும்; எழுதும் குரல்களூடே கருமுட்டைக் குழாய்களை – அதன் பரிசுகளுக்குப் பயந்து அகற்றிய பெண்ணையும் இக்கடிதங்கள்வழி அறிகிறோம். மேலும், குழந்தைகளுக்காக உறவில் இருந்தவர்கள். இருந்த உறவில் விருப்பமற்று பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்... திரும்பிப் பார்த்து தமது பிழைத்திருத்தலை உறுதிசெய்தவற்றை நினைவுகூர்கிறார்கள்...

நெருக்கமான உறவுகளுக்கிடையில் வற்புறுத்தப்படுதல் ஊடாக நிதமும் நிகழும் வல்லுறவுகள் உட்பட அவற்றின் நுண்அரசியல்களுடன் பேசப்பட்டிருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மீதான வன்முறையானது தமது தவறு, தாம் தமது தவறுக்கான தண்டனையாக அதைப் பெறுவதாக அதன் சூத்திரதாரிகளால் நம்ப வைக்கப்படுதலே அதன் குரூரமான இருப்பு ஆகும். அந்த நம்பவைப்பிலிருந்து மீண்டவர்கள் தமது இடது முழங்காலிடம், முலைகளிடம், முன்-கைகளிடம், தம்மை தாங்கும் அதிவிசேட பாதங்களிடம் பேசிக்கொள்கிறார்கள். அவை ஏனைய எவற்றையும் விடவும் அவர்களுக்கு வன்முறையைத் தாங்க இன்றியமையாதவையாக இருந்திருக்கின்றன. இக்கடிதங்களை ஒருசேரப் படிக்கிற வாசகர்களிடத்தில் இவை எந்த அலைகளையும் ஏற்படுத்தாதும் போகலாம். இந்நூலின் நோக்கமே எழுதியவர்களது பாரத்தை இறக்கிவைத்தலை பிரதானப்படுத்தியதாக இருக்கிறது. போர்ச்சூழல் உட்பட வன்முறையின் பலதளங்களைக் கடந்தவர்களுக்கு வடிகாலாக வலிகளை எழுதித் தீர்த்தல் என்பதற்காக ஒரு இடமும் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வன்முறை மிகுந்த காலத்தை கடந்தவர் எனில் நீங்கள் உங்களின் எந்த உறுப்புக்கு எழுதுவீர்கள்? என்ன கூறுவீர்கள்? நன்றி?!

கடந்த




Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.