Cardiac Implantable Electronic Devices (CIED) Remote Monitoring Programme (Tamil)

Page 1

இதயத்தில் பதிக்கப்படும் மின்கருவி (CIED) தொலைநிலை

கண்காணிப்புச் சேவை இதய நோயியல்

CIED தொலைநிலை கண்காணிப்பு என்பது என்ன?

இதயத்தில் பதிக்கப்படும்

மின்கருவி (CIED) என்பது

வழக்கத்திற்கு மாறான

இதயத் துடிப்பசைவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக

அல்லது கண்காணிப்பதற்காக

இதயத்தில் பதிக்கப்படும் ஒரு கருவியாகும்.

இந்தத் தொலைநிலை கண்காணிப்புச் சேவையைப் பயன்படுத்தி, நோயாளி மருந்தகத்திற்கு வெளியே இருக்கும் போது அவரது CIED கருவியை மருத்துவர் கண்காணிக்க முடியும்.

மருந்தக வருகைகளுக்கு இந்தக் கண்காணிப்புச்

சேவை துணை புரிகிறது.

உங்கள் கருவிலிருந்து CIED தரவுகளை அனுப்புவதற்கு ஒரு ட்ரான்ஸ்மிட்டர் (அலையனுப்பி) தேவை. மருத்துவமனையின் அனுமதிபெற்ற மருத்துவ ஊழியர்கள் மட்டுமே தரவைக் கையாள முடியும். அவர்கள் அலுவலக நேரத்தில் தரவை வாசிப்பார்கள்.

CIED தொலைநிலை கண்காணிப்புச் சேவையின் நன்மைகள் என்ன?

• மருத்துவக் கவனிப்பு

தேவைப்படும்

இதயத் துடிப்பசைவு குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே

கண்டுபிடித்துவிடலாம்

• CIED கருவியின்

செயலியக்கம்

கண்காணிக்கப்படும்

• நோயாளிக்குத்

தேவைப்படும் மருந்தக

வருகைகளின் எண்ணிக்கை குறையலாம்

இந்தச் சேவைக்கு எவ்வளவு

செலவாகும்?

இந்தச் சேவைக்கான

கட்டணம்:

6-மாதத்திற்கு:

$108 (நிதியுதவியுடன்) / $116.50 (தனியார்)

ஓர் ஆண்டுக்கு:

$216 (நிதியுதவியுடன்) /

$233 (தனியார்)

விலையும் முதல்

ஆண்டுக்கான சேவைக்

கட்டணமும் கருவியின்

விலையில்

உள்ளடங்கிவிடும்

• உங்களது

தகுதிநிலையைப்

பொறுத்து, சேவைக்

கட்டணத்தைச்

செலுத்த நீக்குப்போக்கான மெடிசேவ் திட்டத்தைப்

பயன்படுத்தலாம்

• ட்ரான்ஸ்மிட்டரின் விலை

$1000 முதல் $2000 வரை

இருக்கும்

குறிப்பு இது ஓர் அவசரச் சேவை அல்ல. நோயாளிக்கு உடல்நலம் இல்லாவிட்டால், அல்லது CIED கருவியால் மின்னதிர்ச்சி ஏற்பட்டிருந்தால், தயவுசெய்து அருகிலுள்ள மருத்துவமனையில் மருத்துவ உதவி நாடுங்கள்.

Yishun Health is a network of medical institutions and health facilities of the National Healthcare Group in the north of Singapore. It comprises Khoo Teck Puat Hospital, Yishun Community Hospital and community extensions such as Admiralty Medical Centre and Wellness Kampung.

Khoo Teck Puat Hospital • (65) 6555 8000 • www.ktph.com.sg

Yishun Community Hospital • (65) 6807 8800 • www.yishuncommunityhospital.com.sg

The information is correct at the time of printing and subject to revision without further notice.

CARDIO.PE.17T.0324

• ட்ரான்ஸ்மிட்டரின்

Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.