Arumbu - April, May 2018

Page 1





01 01






படம் பார்த்துக் கருத்தெழுதுக.

கீழ்க்காணும் வினாக்களுக்கான விடைகளையும் அவற்றின் ஆசிரியர், பக்க எண் ஆகியவற்றையும் எழுதுக.

ப�ோட்டி வினாக்கள் பகுதி 04, 05 /18 01) ‘பசிஃபிக் ரிம் அப்ரைசிங்’ படத்தின் இசையமைப்பாளர் யார்? 02) “மனிதர்களை ஒரு ப�ொருளாகப் பார்க்க எத்தனித்துவிட்டோம்” கூறியவர் யார்? 03) ஒரு நாட்டின் முன்னேற்றம் யார் கையில் உள்ளது? 04) “ராஜன் வெளிப்படுத்தியது வெள்ளை அன்பு’’ சரியா? 05) ஆனந்தியின் அப்பா பெயர் என்ன? 06) மெஜ�ோவின் த�ோழி பெயர் என்ன? 07) ஒரு புலவன், ஒரு வணிகன்… சரியா?

மேற்காணும் படத்திற்குப் ப�ொருத்தமான கதை/கவிதை/ கருத்துகளை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தங்களின் ஒளிப்படத்துடன் (ஃப�ோட்டோ) அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பு அடுத்த இதழில் வெளியிடப்படும். வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.05.2018

மார்ச் மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை

08) சுரேந்தரின் பெற்றோர் யாவர்? 09) “ச�ோம்பேறியின் மூளை சாத்தானின் த�ொழிற்கூடம்” யார் கூற்று? 10) பாலேஸ்வரம் கருணை இல்லம் எப்போது த�ொடங்கப்பட்டது?

குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். விடைகளைத் தங்களின் முழு முகவரி, த�ொடர்பு எண் ஆகியவற்றுடன் கடிதம், மின்னஞ்சல், (arumbu4young@gmail.com) கட்செவி அஞ்சல், (வாட்ஸ் அப் 94447 99942) அல்லது குறுஞ்செய்தி வாயிலாக, மே மாதம் 20ஆம் தேதிக்குள் அரும்பு அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பவும்.

ப�ோட்டி வினாக்கள் 03 /18 க்கான சரியான பதில்கள் 01) உலக நாடுகளில் எத்தனை விழுக்காடு மக்கள் நீரின்றி வாடுகின்றனர்? 40% சுடர்மணி, நீர் இன்று அமையாது உலகு, பக். 27. 02) அழகுவின் தாயார் பெயர் என்ன? ராதிகா. பிரியசகி, ஜ�ோசப் ஜெயராஜ் நான் யார் தெரியுமா? பக். 31. 03) “கடலில் முத்துப் பிறக்கிறது…’’ பாடலின் ஆசிரியர் யார்? கபிலர். குழந்தை இயேசு, ஆணவக் க�ொலைகள், பக். 6.

புரியா மனது

04) பில் கேட்ஸின் முழுப் பெயர் என்ன? வில்லியம் ஹென்றி கேட்ஸ், தமிழ் தீபன், பில் கேட்ஸ், பக். 8.

வாழ்வை மணமாக்குவது மனம். மனித இனத்தின் மாபெரும் க�ொடை மனம்.

05) “ஏன், எதற்கு, எனக் கேள்வி கேள்” (சாக்ரடீஸ்), சூ.மா. ஜெயசீலன், உண்மையா? அஃது என்ன? பக். 20. 06) ‘ஹெலன்’ யாருடைய காப்பியத்தில் வரும் பாத்திரப் படைப்பு. ஹ�ோமர், விவேகப் பிரியன், பெண்ணின் நிறம் இலை, பக். 23.

அந்த இனத்திற்கே கரும்புள்ளியாக அமைவதும் மனமே! உடற்குறை என்றால் ச�ொன்னால் புரிந்து க�ொள்வர். உள்ளக் குறையென்றால்? இளமையில் மன வளர்ச்சிக் குன்றிய�ோர் வளர்கையில் வரலாறு படைத்துள்ளனர். அவர்களும் வேறறிவுள்ள இல்லை, பேரறிவுள்ள மானிடர்களே என்று புரிந்து க�ொள்ளாதப�ோது நாமும் மனவளர்ச்சிக் குன்றிய�ோரே. மார்ச் மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை எழுதியவர் அறிவர்

திரு. சார்லஸ் - குன்றத்தூர்.

படம் பார்த்துக் கருத்தெழுதிய அனைவருக்கும் பாராட்டுகள். – ஆசிரியர்

02 02

 

07) சார்லி சாப்ளின் இளமையில் செய்த த�ொழில் ஒன்றை எழுதுக. பேப்பர் ப�ோடுவது. ஆன்ட்டோ சகாய ராஜ், வேகத்தடை வேண்டும், பக். 34. 08) அப்பாவியின் கற்பனை முன்னோக்கி சென்ற ஆண்டு எது? 4018, அன்பின் அமலன், வனவலிச் சீற்றம், பக். 37. 09) துர்காவின் காதலன் பெயர் என்ன? ராஜா. பால்ராஜ், காதல் கல்வெட்டுகள், பக். 11. 10) நீர் உள்ள மட்டும்…. நிரப்புக. மீன் குஞ்சு துள்ளும். பழம�ொழி, பக். 28.

சரியான விடை எழுதி குலுக்கல் முறையில் பரிசு பெறுவ�ோர்:

குயின் மேரி - மதுரை ல�ோகேஸ் - கடம்பூர் புள�ோரா மேரி - பாலக்கோடு பலர் சரியான விடை எழுதியுள்ளனர். பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்! – ஆசிரியர்.

அக்காளும் விருந்துக்கு வரணும், அரிசியும் தீரக்கூடாது?

 


இதழ் 04, 05

மலர் 61

ப�ொறுப்பாசிரியர்கள் ஆசிரியர்

அருள்திரு முனைவர் இணை ஆசிரியர்

ஏப்ரல் - மே 2018

ஆ. சிலுவை முத்து, ச.ச.

பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு

அருள்திரு முனைவர் கே.எம். ஜ�ோஸ், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு

அருள் ர�ோசா, அன்பின் அமலன், சுடர்மணி, சூ.ம. ஜெயசீலன், பால்ராஜ் அமல், பிரியசகி, ஜவஹர். பிழைத்திருத்தம்

குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு

சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை

சு. ஸ்டீபன்ராஜ். அஞ்சல்

வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர்

ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம்

தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

முழுப்பக்கம் அரைப்பக்கம் கால்பக்கம் பின்அட்டை உள்அட்டை நடுப்பக்கம்

ரூ. ரூ. ரூ. ரூ. ரூ. ரூ.

விளம்பரக் கட்டணம்

6000 3000 1500 12,000 10,000 10,000

அரும்பு இதழில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும்.

மண்ணைக் காத்து மனிதம் காப்போம்!

04

எல்லாம் நம் கையில்

08

வெளியீடு முகவரி:

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை - 600 010. 044 2661 2138/40 94447 99942 arumbu4young@gmail.com www.arumbupublications.in





அக்கா உறவு மச்சான் பகையாகுமா?

க�ோடை ஒரு க�ொடை

எனக்குக் கிடைக்காவிடில் மனச்சலவை

05

ஆணவ

10

பில் கே

14

உறவின்றி…?

வேற்

16

கருணையைக் கைது செய்யும் கல் மனசு தேவையா? 18

நயம்

காதல்

வெளி

முதல

உலகத் த�ொழிலாளர் நாள்

24

தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்

29

நீரின்

36

வேக

27

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங்

32

காதில் கிசுகிசு

நீங்கள் அன்பிற்குரியவர்கள்

40

காதலும் ந�ோயும்

Printed and Published by Rev. Fr. A. Siluvai Muthu, on behalf of Salesian Publishing Society, No. 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at Salesian Institute of Graphic Arts (SIGA), No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: Rev. Fr. A. Siluvai Muthu.



03

உண

பெண்

நான்

வனவ


தலையங்கம்

  இயற்கையின் ப�ோக்கில் மாற்றங்கள் நிகழ்வதால்தான் நாம் வாழ்ந்து க�ொண்டிருக்கின்றோம். குளிரும் வெப்பமும் மாறி மாறி வரும் இயற்கை நிகழ்வுகள்தான். ஆனால், இயற்கையைச் சீண்டுவதால் அதன் ப�ோக்கில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அம்மாற்றங்களைச் சமன் செய்ய மீண்டும் இயற்கையிடமே திரும்பாமல் செயற்கைக் கருவிகளை உருவாக்கும்போது இயற்கையின் சீற்றம் பெருகுகின்றது. 2001ஆம் ஆண்டு 16 நாள் பயணமாக நம் நாட்டிற்கு வருகைபுரிந்து, “இந்தியர்கள் கணிதம், இயற்பியலில் திறமைசாலிகள்” என்று மனந்திறந்து பாராட்டிய இங்கிலாந்தின் இயற்பியல் மற்றும் விண்வெளி துறை அறிவியலார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அவர்கள் இவ்வாண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் காலமானார். காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமாதல், அணு ஆயுதப் ப�ோர், ர�ோப�ோ த�ொழில் நுட்பம், மக்கள் த�ொகைப் பெருக்கம், வல்லரசு நாடுகளின் இயற்கைக்கு முரணான ப�ோக்கு ஆகிய ஐந்தும் உலக அழிவிற்கு அவர் கூறும் முக்கியக் காரணிகளாகும். 2,600ஆம் ஆண்டுக்குள் பூமி, பெரும் நெருப்புக் க�ோளமாக மாறி, மனித இனம் வாழ முடியாத நிலைக்குச் சென்றுவிடும் என்றும் அதனால் மனிதன் வேற்றுக் க�ோள்களுக்குக் குடியேறும் நிலை உருவாகும் என்றும் ஹாக்கிங் நம்பினார். பூமியின் அழிவிற்கு ஹாக்கிங் கூறிய அனைத்துக் காரணிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சாமானிய மனிதர்களின் கையில் இல்லையென்றாலும் முக்கியக் காரணியான புவி வெப்பமாதலைத் தனி மனிதனின் முயற்சியால் தடுத்திட இயலும். 1850ஆம் ஆண்டிற்குப் பிறகு பூமியின் சராசரி வெப்பநிலை 10 செல்சியஸ் உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் ச�ொல்கின்றன. மக்கள்தொகை பெருக்கம், காடுகளின் அழிப்பு, த�ொழிற்சாலைகளின் பெருக்கம், செயற்கை உரம் மற்றும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் ப�ொருட்களின் பயன்பாடு, மின் பயன்பாட்டின் உயர்வு, கூடிக்கொண்டே வரும் வாகனப் பயன்பாடு 04



ப�ோன்றவையால் இயற்கையில் சமநிலையற்ற தன்மை உருவாகி உயிர்வளியின் அளவு குறைந்து, கரியமில வாயுவின் அளவு உயர்கின்றது. ஆண்டுத�ோறும் கூடுதலாகிக் க�ொண்டே வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், மறைந்து வரும் பனிப்பாறைகள் ப�ோன்றவை புவி வெப்பமாதலின் சில வெளிப்பாடுகளாகும். 1961ஆம் ஆண்டு முதல், 2003ஆம் ஆண்டு வரையில் கடல் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை வெப்ப நிலை மிகவும் உயர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மனிதர்களாகிய நமது செயல்பாடுகள்தாம் புவி வெப்பமயமாதலுக்கு முழுமுதற் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்பதால் இதற்கான தீர்வையும் நம்மால் மட்டுமே தர முடியும். வெப்பத்தால் பூமி அழியாமல் இருக்க, இயற்கை வேளாண்மை, இயற்கையின் ஆற்றல்களிலிருந்து மின் உற்பத்தி செய்தல், தேவையின்போது மட்டும் மின்சாரக் கருவிகளைப் பயன்படுத்துதல், குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் மின் கருவிகளைப் பயன்படுத்துதல், (CFL ப�ோன்ற விளக்குகள், 4,5 நட்சத்திரங்கள் உள்ள தரமான மின் கருவிகள் ப�ோன்றவற்றைப் பயன்படுத்துதல்) எளிதில் மக்கும் ப�ொருட்களையும் மறுசுழற்சிக்குப் பயன்படும் ப�ொருட்களையும் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், ப�ொதுப் ப�ோக்குவரத்தைப் பயன்படுத்துதல், மின்னியல் கருவிகளின் தேவையில்லாத பயன்பாட்டைத் தவிர்த்தல், பழுதான மின்னியல் கருவிகளைச் சீர்செய்தும் மீள்சுழற்சி செய்தும் பயன்படுத்துதல் ப�ோன்றவற்றின் வாயிலாகப் புவி வெப்பமாதலை நாம் தடுக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, மரங்களை மண்ணைக் காத்து மனிதம் காப்போம்!

அக்காள�ோடு ப�ோயிற்று அத்தான் உறவு.

வளர்த்து

அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர்.




 

வழக்கமான காலை எழும்புதல், சாப்பிடுதல், படித்தல், எல்லா செயலுக்கும் விடுமுறை; பள்ளிக்கும் விடுமுறை. ஹய்! எப்படா முழு ஆண்டு விடுமுறை வரும் என்று எதிர்பார்த்த கண்மணிகளின் கண்களில் சுதந்திர மின்னல் கீற்றுத் தெரிக்க ஓட்டமும் சிரிப்புமாய் ஜாலியுடன். க�ோடையின் ஓய்வு என்பது சும்மா படுத்து உண்டு உறங்கி எழுதல் அல்ல; மாறாக நமக்குப் பிடித்த, தெரியாத செயல்களை, கற்றுக்கொள்ள, மாற்றுச் செயல்களில் நம் கவனத்தைக் குவித்து நம் திறமைகளை வளர்த்துக் க�ொள்ளும் காலம். வழக்கமான செயல்களை விடுத்து வேற�ொரு செயல்களில் இணைத்துக் க�ொள்ளுதல்.



மரிய திரேசா

நண்பர்களுடன் விளையாடுதல், க�ோவில்களுக்குச் செல்வது, பெற்றோர்களுக்கு உதவுதல், உற்றார் உறவினர்கள�ோடு கூடி மகிழுதல், அண்டை அயலாருடன் சேர்ந்து பயணம் மேற்கொள்ளுதல் என மகிழ்ச்சி ததும்பும் காலம். “ச�ோம்பேறியின் மூளை சாத்தானின் த�ொழிற்கூடம்” என்பார் புனித ஜான் ப�ோஸ்கோ. ச�ோம்பித் திரியாமல் இளமைப் பருவத்தில் சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக ஒவ்வொரு நாளும் புத்தம் புது உற்சாகம் நிறைந்த நாளாக மாற்றிக்கொள்ளும் கலையை சிறு வயதிலே கற்றுத் தரும் காலம் க�ோடைக் காலம். பாண்டி ஆடுதல், பல்லாங்குழி, ந�ொண்டியாட்டம், கயிறாட்டம், குழுவாக நடனம் புரிதல், சேர்ந்து பாடுதல்,

அநீதியின் க�ொடிய வடிவே பழிக்குப் பழி.



05


க�ோடையின் ஓய்வு என்பது சும்மா படுத்து உண்டு உறங்கி எழுதல் அல்ல; மாறாக நமக்குப் பிடித்த, தெரியாத செயல்களை, கற்றுக்கொள்ள, மாற்றுச் செயல்களில் நம் கவனத்தைக் குவித்து நம் திறமைகளை வளர்த்துக் க�ொள்ளும் காலம். கண்ணாமூச்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓவியம் வரைதல், தாங்களே வடிவமைத்து சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நாடகம் நடித்தல் என சிறு வயதிலே பல திறமை மிக்க வித்தகர்களை உருவாக்குகிறது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை கண்டறிந்து, பெற்றோரிடம் கேட்டுக் கற்றுக்கொள்ள சரியான காலம். இவ்விளையாட்டுகளை விளையாடும்போது த�ோல்விகளை, வெற்றிகளை, சமமாகப் பாவிக்க, ஏற்க, எதையும் தாங்கும் மனப்பக்குவத்தை அளிக்கின்றது. அத்தை – மாமா தாத்தா – பாட்டி ஊருக்குச் செல்ல திட்டமிட்டு அங்குப் பல புது அனுபவங்களைக் கற்றுக்கொள்வர் பலர். நீச்சல் பயிற்சி, மரம் ஏறுதல், சிலம்பம், ஒயிலாட்டம், கிராமப்புற பாடல்கள் என உற்சாகம் தரும் கலைகளைக் கற்று இயற்கை காற்றைச் சுவாசித்து ப�ொன்னான நேரத்தை பயனுள்ள ப�ொழுதாக மாற்றி வண்ணத்துப் பூச்சியாய் சிறகடிப்பர் மேலும் பலர்.

ஒருவகை மனப்பிறழ்வின் அடையாளம் என்கிறார்கள் குழந்தை உளவியலாளர்கள். இளம் தலைமுறை இத்தகைய சிக்கலில் மாட்டித் தவிக்க காரணம் சூழ்நிலை, பாதுகாப்பு. வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருப்பதாலும் அவர்கள் எவரிடமும் நெருங்கிப் பழகாததாலும் பல நேரங்களில் மனப் பிறழ்வுக்கு ஆளாகின்றனர். கணினி, த�ொலைக்காட்சி, வீடிய�ோ கேம் என வீட்டில் தனித்து விளையாடும் குழந்தைகள் சமூகத்தில் உள்ள நல்லோர் தீய�ோரை அடையாளம் கண்டுக�ொள்ள இயலாமல், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறுவதையும் கண்கூடாகப் பார்க்கிற�ோம். சேர்ந்து வீதியில் விளையாடுவதால், உடல், மனம் ஆகியவை மேம்படும். பலவகை செயல்களில் ஈடுபட்டு கற்றுக்கொள்ளும்போது தன்னம்பிக்கை கூடும். தங்கள் ஆளுமை, திறமைகளை நிறை, குறைகளை அறிந்துக�ொள்ள முடியும். படிப்புடன் பல கலைகள் கற்று சிறக்க முடியும்.

உறவுகளுடன் பேசி மகிழ்வது, பயனுள்ள விவாதங்களில் பங்கேற்றுத் தீர்வு காண்பது, நகைச்சுவையுணர்வு மிக்க நபர்களுடன் பழகுதல் என ப�ொழுதைக் கழிக்க, உறவுகளுடன் பழகும் முறை, நட்பு வட்டம் பெருக வாய்ப்பாக உறவுகளை மதிக்க, நேசிக்க, மாண்பை ச�ொல்லித் தரும் நற்காலம் க�ோடை காலம். வளர்ந்து வரும் நவநாகரீக கலாச்சார உலகில் நான்கு பேர் உள்ள இடத்தில் இயல்பாக பழகவும், ஒத்துப் ப�ோகவும் இயலுவதில்லை. இது

06



அன்பு இதயங்கள் அதிவிரைவில் அநீதிக்கு ஆட்படும்.




பிஞ்சு பாதங்களில் க�ொலுச�ொலி க�ொஞ்சு ம�ொழிகளில் சிரிப்பொலி புத்தகமும் சீருடையும் விடை பெற்றிட பரபரப்பில்லா ம�ொட்டோ சிறு அல்லிய�ோ என வியந்து ஆண்டிற்கு ஒரு முறை வரும் க�ோடை ஒரு க�ொடை. க�ோடைக்குத் தேவை குளுமையான இளநீர் மட்டுமன்று க�ோடி இனிமையான அனுபவங்களுமே! க�ோடையே வா! கூடி மகிழ உறவு மலர வா! ஓட�ோடி விளையாடி வெயில�ோடு உறவாடி க�ோடை தரும் குதூகலத்தை பட்டறிவ�ோம்!



ஆடு பகை; குட்டி உறவு.



07


கி. ஜிய�ோனா ஜெஃபி



 மாலை வேளை. “உள்ளே வரலாமா?” என்ற குரலைக் கேட்டு, செய்து க�ொண்டிருந்த வீட்டுப் பாடத்தைப் பாதியிலேயே வைத்துவிட்டு, எழுந்து வந்து கதவைத் திறந்தாள் மெஜ�ோ. “வா, நிசி” என்று வரவேற்றாள் மெஜ�ோ. இருவரும் சென்று மெஜ�ோவின் அறையில் அமர்ந்தனர். “என்ன மெஜ�ோ, இன்னும் வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லையா?” என்று கேட்டாள் நிசி. “ஆமாம் நிசி, முடிக்கவில்லை. இன்னும் க�ொஞ்சம் முடிக்க வேண்டியது உள்ளது. உதவுகிறாயா?” என்றாள் மெஜ�ோ. “சரி உதவுகிறேன்” என்று ஏற்றுக்கொண்டு, மெஜ�ோவிற்குப் புரியாததையெல்லாம் ப�ொறுமையாகக் கற்றுக்கொடுத்தாள் நிசி. சிறிது நேரத்தில் வீட்டுப் பாடத்தை முடித்தாள் மெஜ�ோ. இருவரும் வெளியே செல்லலாம் என்று கிளம்பும்போது, “பதினேழு வயதாகியும், ஒரு செடிக்குக் கூடத் தண்ணீர் விடத் தெரியாதா?” செடிகளின் அவசியத்தை அப்பா அவ்வளவு கூறியும் மறந்துவிட்டாயா?” என்று மெஜ�ோவின் தாய் திட்டுவது காதில் விழுந்தது. “மன்னித்துவிடுங்கள் அம்மா, மறந்துவிட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டுவிட்டு, இருவரும் சென்று செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபின், உள்ளே சென்று, புத்தாண்டிற்காகத் தாங்கள் வாங்கியிருந்த ஆடைகளை நிசியிடம் காட்டினாள் மெஜ�ோ. “இப்போதுதான் புதிய ஆண்டு பிறந்தது ப�ோல இருந்தது அதற்குள் மற்றோர் ஆண்டுப் பிறக்கப் ப�ோகிறது”என்று ச�ொல்லியபடி மெஜ�ோவின் புதிய ஆடைகளைப் பார்த்தாள் நிசி. “மிக அழகாக இருக்கிறது”என்றாள்.

அப்பா,”என்றதும் “மன்னித்துவிடுங்கள் அக்கா, இனி இப்படிச் செய்யமாட்டேன்”என்றான். “என்ன கூறுகிறாய் மெஜ�ோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை”என்றாள் நிசி. “நம்முடைய முன்னோர்கள் பூமியில்தான் வாழ்ந்தார்கள் என்பது தெரியுமா?” என்று கேட்டாள் மெஜ�ோ. அதற்கு “தெரியும், என் அம்மா ச�ொல்லியிருக்கிறார்” என்றாள். “அவர்கள் எதற்காகப் பூமியை இழந்து, இந்தக் கிரகத்திற்கு வந்து வாழத் த�ொடங்கினார்கள் என்பது தெரியுமா?” என்ற மெஜ�ோவிடம் “இல்லை, தெரியாது”என்று பதிலளித்தாள் நிசி. “வா, எல்லாவற்றையும் நான் உனக்குச் ச�ொல்கிறேன்”என்று கூட்டிச்சென்று, அவள் தந்தையின் அறையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்தாள்.

அப்பொழுது ஆடையில் இருந்த விலைப்பட்டியலை வீட்டின் வெளியே தூக்கி எறிந்தான் மெஜ�ோவின் தம்பி. அதைப் பார்த்த மெஜ�ோ, “தம்பி! குப்பையைக் கீழே ப�ோடக் கூடாது. இதனால்தான் நாம் பூமியை இழந்தோம் என்றார் அல்லவா 08



இருப்பவனுக்கு எல்லாரும் உறவு; இல்லாதவனுக்கு எல்லாரும் பகை.




“இந்தப் ப ட த் தி ல் இருப்பவர்தான் “ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.”இவர் ஒரு பிரபஞ்ச விஞ்ஞானி. இவர் ஜனவரி 8, 1942இல் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃப�ோர்டில் பிறந்தார். இவர் தன்னுடைய 21ஆம் வயதில் நரம்புச் செயலிழப்பு ந�ோயால் (Amyotrophic Lateral Sclerosis - ALS) பாதிக்கப்பட்டார். இருப்பினும் தன்னுடைய அறிவியல் அறிவால் இவர், “இரண்டாயிரத்து அறுநூறாம் ஆண்டிற்கு மேல் பூமியில் வாழ முடியாது, நாம் பூமியைப் பாதுகாக்க அதை நாம் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், புவி வெப்பமயமாகுதல் மூலம் பூமி ஒரு நெருப்புப் பந்தைப் ப�ோல் ஆகிவிடும், வாழ்வதற்காக வேறு கிரகத்திற்குத்தான் செல்ல வேண்டும்”என்று 2017இல் கூறினார். நமது முன்னோர்கள், அவர் கூறியது ப�ோலவே, பூமியைப் பராமரிக்காமல் விட்டதால், பூமியை இழந்து, இந்தக் கிரகத்தில் வந்து வாழ்கிற�ோம். பூமியில் இயற்கையாகக் கிடைத்தவற்றை எல்லாம் (காற்று, தண்ணீர்) இங்கு நாம் செயற்கையாக உற்பத்தி செய்கின்றோம். நான் தம்பியிடம் குப்பையைக் கீழே ப�ோடக் கூடாது என்று எதற்காகச் ச�ொன்னேன் என்று இப்போது புரிகிறதா? மற்றொரு காரணமும் உண்டு. ச�ொல்கிறேன், நன்றாகக் கேள். அதுதான் அரசியல். பூமியில் அரசியல்தான் நிறையப் பேருக்கு உயிராக இருந்ததாம். அரசியலின் முதற்படி என்னவென்று தெரியுமா? நமது கிரகத்தில் நடப்பதையே உதாரணமாகக் கூறுகிறேன். முதலில் பிளாக் ஸ்டோன் (Blackstone) எனும் பெயருடைய ஒரு குழு வந்து, “குப்பைகளை நாங்கள் ஒரு ரசாயனம் ஊற்றி அழித்து விடுவ�ோம், எங்களுக்குத் தினமும் 1000 ரூபாய் க�ொடுத்தால் ப�ோதும்”என்று கூறினர். அதற்கு அடுத்த நாள், புளூ வாட்டர் (Blue water) எனும் பெயருடைய குழு, “நாங்கள் குப்பைகளைக் காற்று அழுத்தத்தின் (Air Pressure) மூலம் அழித்து விடுவ�ோம் எங்களுக்குத் தினமும் 800 ரூபாய் க�ொடுத்தால் ப�ோதும்” என்றனர். இப்படி, ஒவ்வொரு குழுவிற்கும் எதிராக மற்றொரு குழு உருவாகி, ப�ோட்டி, ப�ொறாமை எனத் தீய எண்ணங்களும், பதவி ஆசைகளும் சேர்ந்து அரசியலாக மாறியதாம்.



உணவு மட்டுமே மனிதனை வாழ்விக்காது.

ஒரு கட்சியை நம்பி, அவர்களைத் தேர்வு செய்தால், அவர்கள் நன்றாக ஆட்சி புரியாமல், மக்களின் தேவைகளை நிறைவு செய்யாமல் இருந்ததாலும், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும், செடிகளுக்குத் தண்ணீர் விட முடியாமல் ப�ோனதாம். மரம், செடி, க�ொடிகள், அழிய அரசியலும் ஒரு காரணம்தான். அதனால், நாம் இதுப�ோன்ற அமைப்பில் சேராமலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம் எனவும் உறுதி எடுப்போம். நாளை, நம் வகுப்பில் அனைவரிடமும் இதைப் பற்றிக் கூறி, நாம் எடுத்த உறுதிம�ொழியை அவர்களையும் கடைபிடிக்குமாறு கூறுவ�ோம்”என்றாள் மெஜ�ோ.

குப்பையைக் கீழே ப�ோடக் கூடாது. இதனால்தான் நாம் பூமியை இழந்தோம்.

“நன்றி மெஜ�ோ! நாளை பள்ளியில் சந்திப்போம்”என்று கூறிக் கிளம்பினாள் நிசி. “சாப்பிடும் நேரமாகிவிட்டது, சீக்கிரம் வாருங்கள்!” என்றார் மெஜ�ோவின் அம்மா. “இத�ோ வருகிறேன் அம்மா!” என்று கூறியபடி தம்பியை அழைத்துக் க�ொண்டு சென்றாள் மெஜ�ோ. உடனே, பள்ளி வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரவ�ொலி எழுப்பினர். “பூமியைப் பாதுகாப்போம் என்னும் விழிப்புணர்வு நாடகத்தை அழகாக நடித்துக் காட்டிய தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்”என்று கூறினார் தலைமை ஆசிரியர்.



09


பிரியசகி, ஜ�ோசப் ஜெயராஜ், ச.ச.

  கையிலிருந்த த�ொலைபேசி நழுவிக் கீழே விழ, த�ொலைபேசி வாயிலாக வந்த செய்தியின் அதிர்ச்சி தாங்காமல் மயங்கிக் கீழே விழுந்தாள் அமலா. பத்து ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த ராஜன், அமலா தம்பதிக்குப் பல இலட்சக்கணக்கான ரூபாய், செலவழித்துச் செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்தவன் சுரேந்தர். அதனால் குழந்தைப் பருவம் முதலே மிகுந்த செல்லம் க�ொடுத்து அவனை வளர்த்தனர். கேட்டது கிடைக்கவில்லையெனில் அடம் பிடித்து அழுவது, அல்லது சாப்பிடாமல் முரண்டு பிடிப்பது என்று அவனது முரட்டுத்தனம் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே சென்றது. ஒருமுறை அவன் விளையாடிக் க�ொண்டிருந்த ப�ொம்மையைப் பக்கத்து வீட்டுப் பையன் கேட்டான் என்பதற்காகப் ப�ொம்மையைத் தூக்கி சுவற்றில் எறிந்து உடைத்துவிட்டு, அந்தப் பையனையும் கீழே தள்ளி காயப்படுத்தி விட்டான். அவனைச் சமாளிக்க வழி தெரியாமல், செல்ல மகன் அழுவதைப் ப�ொறுக்காமல், அவன் பட்டினிக் கிடப்பதைச் சகிக்க இயலாமல் அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் க�ொடுத்தனர் பெற்றோர். அதனால் அவனுடைய முரட்டுத்தனம் இன்னும் மிகுதியானதுதான் மிச்சம். கையில் நிறைய பணம் புழங்கவே, தீயப் பழக்கம் உடையவர்கள் தானாகவே சுரேந்தரைத் தேடிவந்து நண்பர்களானார்கள். அவர்களது தீயப் பழக்கங்கள் மெதுவாகச் சுரேந்தருக்கும் த�ொற்றிக் க�ொள்ளத் த�ொடங்கின. தனியறையில் ஸ்மார்ட் ஃப�ோன் லேப்டாப், டேப்லட், மின்னணு துணைக் கருவிகளின் துணையுடன் சமூக வலைதளங்களுக்குள் மூழ்கி ஆபாசத் திரைப்படங்கள், வன்முறையைத் தூண்டும் ப்ளே ஸ்டேஷன் விளையாட்டுகள் என நேரம் முழுவதையும் செலவழித்தான். இதனால் வீட்டுப் பாடம் செய்யவில்லை, தேர்வுகளில் மதிப்பெண் 10



பெறவில்லை எனப் பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்கவே, பள்ளிக்குப் ப�ோவதாகச் ச�ொல்லி விட்டுத் தன் வயதை விட மூத்த நண்பர்களுடன் வெளியில் சுற்றத் த�ொடங்கினான். த�ொடர்ந்து இரு வாரங்களாக அவன் பள்ளிக்குச் செல்லாததால், வகுப்பு ஆசிரியர் த�ொலைபேசியில் அமலாவைத் த�ொடர்பு க�ொண்டு அவன் பள்ளிக்கு வருவதில்லை என்றும், ப�ோதைப் ப�ொருட்கள் பயன்படுத்துவதாக அவனது சக மாணவர்கள் கூறுவதாகவும், ச�ொன்னதும் அவளுக்கு மயக்கமே வந்து விட்டது. சமாளித்துக் க�ொண்டு

உலுத்தன் (வேடன்) விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.




எழுந்து சுரேந்தரின் அறைக்குச் சென்றாள். ஓரிரு மாதங்களாகவே தன் அறைக்குள் யாரையும் அவன் வர அனுமதிக்கவில்லை. அந்த அறைக்குச் சென்று புத்தக அலமாரியையும், அவனது துணி அலமாரியையும் ச�ோதித்தவளுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ப�ோதைப் ப�ொருட்கள் சிறுசிறு ப�ொட்டலங்களாகத் துணிகளுக்கடியில் கிடந்தன. ஓர் இளம் பெண்ணின் புகைப்படமும் அதற்குப் பின்னால் ‘ஐ லவ் யூ, நீ எனக்குக் கிடைக்காவிட்டால் உன்னையும் க�ொன்று விட்டு நானும் தற்கொலை செய்து க�ொள்வேன்,” என்று எழுதிக் கீழே சுரேந்தர் என இரத்தத்தில் கையெழுத்தும் ப�ோடப்பட்டிருப்பதையும், கண்டு அவளுக்கு மீண்டும் தலைசுற்றியது.

செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. மனதில் பல கேள்விகள் எழுகின்றன.

தன் 16 வயது மகனின் நிலை பற்றி இத்தனை நாளும் எதுவுமே தெரியாமல் இருந்த தான், எவ்வளவு ம�ோசமான தாய் எனத் தன்னையே ந�ொந்து க�ொண்டு உடனே தன் கணவருக்குத் த�ொலைபேசி மூலம் நடந்தது எல்லாம் கூறினாள். முதலில் அதிர்ச்சியடைந்த ராஜன், அமலாதான் மிகுந்த செல்லம் க�ொடுத்து அவளைக் கெடுத்து விட்டதாக அவளைத் திட்டினான். பிறகு இனி ஒருவரைய�ொருவர் குறைச�ொல்லிச் சண்டை ப�ோடுவதால் பயனில்லை எனப் புரிந்துக�ொண்டு நண்பர் ஒருவரின் உதவியால், மனநல மருத்துவரை அணுகினர். கலந்தாய்வுகளுக்குப் பின்னர், சுரேந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இவை ப�ோன்ற கேள்விகளுக்கு மனித ஆளுமைகளைப் பற்றிய உளவியல் க�ோட்பாடு விடையளிக்கின்றது. இத்தகைய�ோரை நல்லுணர்வுகளுக்கு மதிப்புத் தராத இரக்கமற்றவர்கள் (Callous – Unemotional traits) என்கிறது உளவியல்.

ராஜன், அமலா இருவரும் மனநல ஆல�ோசகரும், மனநல மருத்துவரும் ச�ொன்ன கருத்துரைப்படி இனி தம் மகனுடன் மிகுதியான நேரம் செலவழிப்பது எனவும் அவனுக்கு எது தேவைய�ோ அதை மட்டும் வாங்கிக் க�ொடுப்பது, தவறு செய்யும்போது அதைச் சரியான வகையில் சுட்டிக் காட்டும் கண்டிப்பும் கலந்த அணுகுமுறையைக் கையாள்வது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

. . .

சிறுகுழந்தையென்றோ, தன்னால் நேசிக்கப்பட்ட பெண் என்றோ, தனக்குக் கற்றுக் க�ொடுத்த ஆசிரியர் என்றோ சிந்திக்காமல், மனித நேயமற்ற முறையில் மிருகத்தனமாக எப்படி ஒருவரால் குற்றச் செயலில் ஈடுபட முடிகிறது? பிறரது வலி, வருத்தம், உயிருக்கான மதிப்பு எதைப் பற்றியும் சிந்திக்காமல் தனது தன்னலம் பற்றி மட்டுமே ஒருவரால் சிந்திக்க முடியுமா?

இதற்குக் காரணம் மரபணுக்கள் அல்லது வாழும் சூழலாக இருக்கலாம். பெற்றோர் முரட்டுத்தனமான, இரக்கமற்ற க�ொடுமைக்காரராக இருந்தால் பிள்ளையும் அப்படி இருக்கலாம், அல்லது அப்பிள்ளை வளரும் இடம் வன்முறைகள் மிகுதியாகக் காணப்படக் கூடியதாகவ�ோ, குடும்பத்தில் எப்போதும் அடிதடி சண்டை நடப்பதாகவ�ோ இருந்தாலும் அதையே பார்த்துக் கற்றுக் க�ொள்ளலாம். இதைத்தான் நைஜீரிய எழுத்தாளர் ஒருவர் “சிதைந்து ப�ோன குழந்தைப் பருவத்தோடும், முதிர்ச்சியடைந்த உடல�ோடும் பெரியவர்கள்போல் பல இளைஞர்கள் வாழ்கின்றார்கள்” என்கிறார்.

இங்கு சுரேந்தரின் ஆசிரியரின் முயற்சியால் அவனது உயிருக்கோ, அவனால் பிறருக்கோ கெடுதல் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆனால் அன்றாடம் செய்தித்தாள்களில், இளைஞர்கள் தற்கொலை, க�ொலை என வன்முறைகளில் ஈடுபடுவதாகக் காணும்



முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது இத்தகைய குற்றச் செயல்கள் மிகுதியாக நிகழக் காரணம் என்ன?

உள்ளூர் உறவும் சரி, உழுத மாடும் சரி.

ஸ்மார்ட் ஃப�ோன் ப�ோன்ற கருவிகள் பிள்ளைகளுக்குத் தேவையானவையா என்று சிந்திக்க வேண்டும். 

11


ஃப்ரிக் மற்றும் ம�ோஃபிட் (Friek & Mofftt - 2013) என்ற உளவியல் வல்லுநர்களின் அரிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நல்லுணர்வுகளுக்கு இடம் தராத இரக்கமற்ற மனம் க�ொண்டிருத்​்தல் என்ற நடத்தை குறைபாடு டி.எஸ். எம். Vஇல் சேர்க்கப்பட்டுள்ளது. (DSM – V, The Diagnostic and Statistical Manual of Mental Disorder) இக்குறைபாடு உடையவர்கள் கீழ்க்காணும் குணங்களைக் க�ொண்டிருப்பார்கள்.

. . . . . . . . . .

12

தவறு செய்கிற�ோம் என்ற குற்ற உணர்வே இல்லாதிருப்பர். கையும் களவுமாக மாட்டிக் க�ொண்டால�ொழிய தவறுக்காக வருந்த மாட்டார்கள். பிறருடைய நிலைபற்றி நினைத்துப் பார்க்கவ�ோ அவர்கள் மீது பரிவிரக்கம் க�ொள்ளவ�ோ மாட்டார்கள். பள்ளியில�ோ, பணியிடத்தில�ோ அவர்களது தரம் குறைந்த நிலை பற்றிய�ோ, தாம் ஒரு சிக்கலுக்குரிய ஆளாகக் கருதப்படுவது குறித்தோ கவலைப்பட மாட்டார்கள். பெரிய காரணமின்றி மிகச் சிறிய விஷயத்திற்கும் உணர்ச்சி வயப்பட்டுச் சினத்தை வெளிப்படுத்துவர். தன்னால் பிறர் வலி, வருத்தம் அனுபவிப்பதைக் கண்கூடாகப் பார்த்தாலும் அதை உணர முடியாத மரத்துப்போன இதயம் க�ொண்டவர்களாக இருப்பர். சுயநலம் மிக்கவர்களாக, தன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே முக்கியமெனக் கருதுபவர்களாக, சுய ஆராதனை ஆளுமை (Narcissistic Personality) க�ொண்டவர்களாக இருப்பர். தனது தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் மட்டும் மேல�ோட்டமான அன்பை வெளிப்படுத்துவர். தம் உணர்வுக்கும் செயலுக்கும் த�ொடர்பற்று நடந்து க�ொள்வர். சில நேரங்களில் தன்னை நேசிப்பவர�ோ, வயதில் பெரியவர்கள�ோ தன் தவறைச் சுட்டிக் காட்டும்போது மாறி விடுவதாகச் ச�ொல்வர். ஆனால் மறுபடியும் அதே தவறையே த�ொடர்ந்து செய்வர். கண்காணிப்பற்றுப் ப�ோகும்போது அல்லது முறையாக வழிநடத்தப்படாத ப�ோது, தன் மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான எத்தகைய க�ொடூரமான செயலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.



இதனால்தான் தன்னைக் காதலிக்க மறுத்த காரணத்திற்காகத் தனக்குத் தெரிந்த பெண்ணை அருவருப்பாகச் சித்தரித்து இணையதளத்தில் அவதூறு பரப்புவது, ஆசிட் வீசுவது, க�ொலை செய்வது, வன்புணர்வில் ஈடுபடுவது ப�ோன்ற மனித நேயமற்ற க�ொ டு ஞ்செ ய ல ்க ளெல்லா ம் இவர்களுக்குக் கைக்கூடலாகிறது. தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது எனும் வக்கிர குணத்தால், க�ொலையும் செய்துவிட்டுத் தற்கொலை செய்து க�ொள்வது என்பது இதன் இன்னொரு பரிமாணம். பெற்றோரும், வளரும் சூழலும் நல்லதாகவே இருந்தாலும் சில பிள்ளைகள் இப்படிப்பட்ட குணம் க�ொண்டவர்களாக இருக்கிறார்களே! அதற்கு என்ன காரணம்? இங்குத்தான் வன்முறையும் நாணக்கேடும் நிறைந்த த�ொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் காண�ொளி விளையாட்டுகள், இணையவழி விளையாட்டுகள், ப்ளேஸ்டேஷன் விளையாட்டுகள் ப�ோன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. த�ொலைக்காட்சி, திரைப்படம் பார்க்கும்போது பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் பிள்ளைகள் வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளில் பங்கேற்பாளராக மாறி விடுகிறார்கள். இவை மெல்ல மெல்ல பிள்ளைகளை அடிமைகளாக, வன்முறையை இரசிக்கும் குணம்

உறவு ப�ோகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.




. . க�ொண்டவர்களாக, கண்ணெதிரே யாராவது அடிபட்டுக்கிடந்தாலும் அதைப்பற்றி வருத்தப்படாத கல்நெஞ்சம் க�ொண்டவர்களாக இறுதியில் வன்முறையில் ஈடுபடவும் தயங்காதவர்களாக மாற்றி விடும். ஆல்பர்ட் பந்தூரா என்ற உளவியலாளர், தான் உருவாக்கிய சமூக அறிவு க�ோட்பாட்டின்படி ‘மாடலிங்’ என்பதைப் பற்றி விளக்குகிறார். ஆராய்ச்சிக்காக, தன் மகன் பார்க்கும்படி தாயானவர் ஒரு ப�ொம்மையை அடிக்கவும் திட்டவும் செய்தார். தாய் வெளியே சென்றதும் அவரது மகன் அதே ப�ோல் ப�ொம்மையை அடிக்கிறான், தாய் ச�ொல்லாத கெட்ட வார்த்தையைச் சேர்த்துத் திட்டுகிறான். இறுதியில் பக்கத்தில் இருக்கும் ஒரு கத்தியை எடுத்துப் ப�ொம்மையைக் குத்துகிறான். ‘ஒரு க�ொலைகாரன் திரைப்படத்தைப் பார்த்துதான் நான் க�ொலை செய்தேன்’ என்று ச�ொல்வது இந்த உளவியல் அடிப்படையில்தான். எனவே பெற்றோர் பிள்ளைகளைப் பார்க்கும்படி சண்டையிடுவத�ோ, தவறான ச�ொற்களைப் பயன்படுத்துவத�ோ கூடாது. வன்முறை நிறைந்த திரைப்படங்கள். பார்க்கவ�ோ, துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் வெட்டுவது ப�ோன்ற வீடிய�ோ விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பத�ோ ப�ோன்றவை ஆபத்தை விளைவிக்கும்.

. . . . . . .

செடி வளர்ப்பதிலும், செல்லப் பிராணிகள் வளர்ப்பதிலும் பெற்றோர் முன்மாதிரியாக இருந்தால் பிள்ளைகளுக்கும் அதில் ஈடுபடுவர். அஃது உயிர்களை நேசிக்கும் குணத்தையும் ஏற்படுத்தும். முதிய�ோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல், ஆதரவற்றோருக்குப் ப�ொருட்கள் க�ொடுத்து உதவுதல் ப�ோன்றவற்றைக் குடும்பமாகச் சேர்ந்து செய்யும்போது பிறர்மீது கனிவும் அன்பும் காட்டுவதென்பது பிள்ளைகளின் இயல்பான குணமாகிவிடும். பிறரது வலி, ச�ோகத்தைத் தன் உணர்வுகள�ோடு ஒப்பிட்டு, ‘உன்னை யாராவது அடித்தால் உனக்கு வலிப்பதுப�ோல்தான், நீ அடிக்கும்போது மற்றவர்களுக்கும் வலிக்கும்’ (Empathy) என்பதைக் கற்றுக் க�ொடுக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் சிறு வயது முதலே பெண்களை சரிசமமாக மதிக்கக் கற்றுக் க�ொள்ளும்படியான குடும்பச் சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும். பிள்ளைகளின் நேரம் செலவிடப்படுகிறது என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எப்படிச் பெற்றோர்

இணையப் பயன்பாட்டைக் கண்காணித்தல் கட்டாயத் தேவையாகும். ஸ்மார்ட் ஃப�ோன் ப�ோன்ற கருவிகள் பிள்ளைகளுக்குத் தேவையானவையா என்று சிந்திக்க வேண்டும். மின்னணு சாதனங்களுக்குப் பிள்ளைகள் அடிமையாகிவிடாமல் வெளியே சென்று விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். உடலுழைப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

தீர்வு என்ன? கனிவு, வன்முறை இரண்டுமே எதிரெதிரான குணங்கள். குழந்தைகளுக்கு நல்லுணர்வுகளை வளர்க்கும், உணர்வு மேம்பாட்டுக் கல்வியைத் (Emotional Literacy) தரும் முதல் ஆசிரியர்களாகப் பெற்றோரும், இரண்டாம் பெற்றோராக ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.



எட்ட உறவு; கிட்டப் பகை.

பெற்றோர், பணத்தைத் தேடி ஓடுபவர்களாக, பிள்ளைகளை மதிப்பெண்ணை ந�ோக்கி ஓடச் செய்பவர்களாக அல்லாமல் நிலையான செல்வமான நல்மதிப்பீடுகளைக் க�ொண்டவர்களாகப் பெற்றோரும் விளங்கிப் பிள்ளைகளையும் அவ்வழியில் வழி நடத்தினால் வளமான உயரிய சமுதாயத்தை உருவாக்கலாம்.



13


 சிறுகதை

பரட்டைத்தலைய�ோடு, கிழிந்த அழுக்குத் துணியில், உடம்பெல்லாம் தூசியாய், கையில் புத்தகப் பையுடன் ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும் என் வீட்டு வாசலில் வந்து தயங்கித் தயங்கி நின்றுக�ொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்து, “என்ன வேண்டும்?” என்று கேட்டாள் என் மனைவி. உடனே அச்சிறுமி, “பசிக்கிறது க�ொஞ்சம் ச�ோறு ப�ோடுங்க” என்றாள். “ஏதாவது பாத்திரம் வச்சிக்கிணு இருக்கீங்களா?” என்று கேட்டதற்கு, ‘ஒன்றும் இல்லை’ என்று அவர்கள் ச�ொன்னவுடன், “அய்யோ பாவம் யார் வீட்டுப் பிள்ளைகள�ோ” என்ற பரிதாபத்துடன் இருவரையும் உள்ளே அழைத்துச் சாப்பாடு ப�ோட்டாள். எனக்கு அஃது அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருந்தது. ‘எங்கிருந்து வந்ததுகள�ோ, என்ன வியாதிய�ோ? என்ன குலம�ோ? இப்படி நடு வீட்டில் உட்காரவைத்து, கண்டதுகளுக்குச் சாப்பாடு ப�ோடுறாளே’ என்று என்

தங்க. ஆர�ோக்கியதாசன்

மனைவியின் மீது க�ோபமாக வந்தது. ‘இருக்கட்டும், இதுங்க ப�ோன பிறகு கேட்கலாம்’ என்று க�ோபத்தை அடக்கி வைத்து அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். ச�ோற்றை வாரி வாரி விழுங்குவதைப் பார்த்த எனக்கு எரிச்சலாக இருந்தது. இடை இடையே என் மனைவி அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் க�ொண்டிருந்தாள். “ஆன்ட்டி, நாங்கள் அத�ோ அந்தப் பக்கத்தில் இருக்கிற குடிசையில்தான் இருக்கிற�ோம். எங்க அப்பாவும், அம்மாவும் தினமும் கூலி வேலைக்குப் ப�ோவாங்க. ஒரு சின்ன பாப்பா கூட இருக்குது. அதை அம்மாசி ஆயாத்தான் பாத்துப்பாங்க. வேலைக்குப் ப�ோன அம்மாவும் அப்பாவும் ரெண்டு நாளா வீட்டுக்கே வரல. அம்மாசி ஆயாத்தான் ஒருவேள கஞ்சி ஊத்தும். இன்னிக்கு அது கூட இல்ல. எந் தம்பி இத�ோ இவன் பசியால வயித்தப் புடிச்சிகினு அழுதான். அதனாலத்தான் இங்கே வந்தோம்” என்று அந்தச் சிறுமி ச�ொன்னப�ோது ர�ொம்பவும் பரிதாபமாக இருந்தது. “சரி கையில் புஸ்தகப் பைய வெச்சிகினு இருக்கீங்களே எங்க படிக்கிறீங்க?” என்று கேட்டாள் என் மனைவி. பக்கத்தில் இருக்கிற கார்ப்பரேசன் பள்ளியில் அந்தச் சிறுமி நாலாவதும் அவள் தம்பி இரண்டாவதும் படிக்கிறார்களாம். அவர்களுக்குச் சாப்பாடு ப�ோட்ட என் மனைவி ஏத�ோ வேலையாக சமையல் அறைக்குப் ப�ோய்விட்டாள். இந்தப் பசங்க ச�ொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ‘திருடுவதற்கு இப்படி ந�ோட்டம் பார்த்து வரச் ச�ொல்லி பெரியவர்கள் அனுப்பி இருக்கலாம் இல்லையா?’ என்று என் மனம்

14



ஒரு மலர் மாலையாகாது.




‘இவ்வளவு கேவலமான மனிதனா நீ?’ என்று என் மனைவி பார்க்கும் பார்வையைத் தாங்க முடியாத நான் வெட்கத்தால் தலை குனிந்தேன்.

சந்தேகப்பட்டது. என் சந ்தேகத ்தை உ று தி ப ்ப டு த் தி க்கொ ள ்ள , பாக்கெட்டில் இருந்த பணத்தில் இரண்டு நூறு ரூபாய் ந�ோட்டுக்களை அவர்கள் பார்வையில் படுமாறு மேஜை மீது வைத்துவிட்டுப் பக்கத்து அறையில் மறைந்து க�ொண்டு ‘அந்தச் சிறுவர்கள் எடுக்கிறார்களா?’ என்று அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் க�ொண்டிருந்தேன். சமையல் அறையில் இருந்து வந்த என் மனைவி அவர்களுக்குத் தேவையானதை ப�ோட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்க்க உள்ளே ப�ோய்விட்டாள். நானும் அவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து பார்த்துக் க�ொண்டிருந்தேன். க�ொஞ்ச நேரம் கழித்துப் பார்க்கும்போது, அந்த இரண்டு நூறு ரூபாய் ந�ோட்டுக்கள் அந்த மேஜை மீது இல்லை. ‘திருட்டு நாய்களை சும்மா விடக் கூடாது. அடித்து, ப�ோலீசில் ஒப்படைக்க வேண்டும்’ என்று எனக்குள்ளே ச�ொல்லிக் க�ொண்டேன். இருவரும் சாப்பிட்டு முடிந்தவுடன் வெளியே ப�ோகும் ப�ோது என் மனைவி அவர்களுக்கு என் பிள்ளைகளின் டிரஸ்ஸைக் க�ொடுத்து, “இந்தாம்மா நீயும் உன் தம்பியும் இந்த துணிய ப�ோட்டுக்குங்க” என்று ச�ொல்லி, க�ொடுக்கும் ப�ோது, “ஆன்ட்டி இஃது எங்களுக்கு வேண்டாம்” என்று அதை வாங்க மறுத்தனர். “வாங்கிக்கோம்மா, பழைய துணியக் குடுத்தேன்னு பாக்கிறியா? அவ்வளவு ஒன்னும் பழசு இல்லே, வாங்கிக்க” என்று வற்புறுத்தியும் அதை வாங்க மறுத்த அந்தச் சிறுமி, ப�ொங்கி வரும் கண்ணீர�ோடு, “ஆன்ட்டி தயவு செய்து எங்களைத் தப்பா



கள்ளங் கபடமில்லாத ஏழைச் சிறுவர்கள் மீது சந்தேகப்பட்ட என்னை எனக்குப் பிடிக்கவே இல்லை. மனிதக் கழிவை என் மீது பூசியதைப் ப�ோன்று அருவருப்பால் என்னை நானே வெறுத்து அதற்குப் பிராயச்சித்தமாக அவர்களுக்கு, இரண்டு நூறு ரூபாய் ந�ோட்டுக்களைக் க�ொடுப்பதற்கு

நினைக்காதீங்க. உங்க வீட்ல திருட நாங்க வரல. பசியாலத்தான் வந்தோம்” என்று ச�ொன்னவுடன் பதறிய என் மனைவி, “என்ன ச�ொல்றே? உன்ன யாரும்மா திருடின்னு ச�ொன்னது?” என்று பரிவாகக் கேட்டாள். “அத�ோ அந்த அங்கிள் எங்க மேல சந்தேகப்பட்டு, நாங்க திருடத்தான் வந்திருக்கோம்னு, நெனச்சி இரண்டு நூறு ரூபாய் ந�ோட்டுக்களை அந்த மேஜை மீது வச்சிட்டு அத நாங்க எடுப்போமான்னு உள்ளே ஒளிஞ்சிகினு பார்த்துனு இருந்தாரு. அத�ோ பாருங்க அந்த ரூபாய் ந�ோட்டுக்கள் காத்துல பறந்துணு ப�ோய்ச் ச�ோபாவுக்கு அடியிலே இருக்குது. நாங்க சத்தியமா திருட வரல ஆன்ட்டி” என்று ச�ொல்லிக் கண்ணீருடன் வெளியேறினர். அந்தச் சிறுசுகள் ச�ொன்ன வார்த்தைகள் என் முதுகில் சாட்டை அடியாய் விழுந்தன. துடிதுடித்துப் ப�ோனேன்.

கருணை இல்லா அழகு பயனற்றது.

நல்ல இதயங்களைத் தன்னலத்தால் ந�ோகடிப்பவர்களும் க�ொலைகாரர்களே.

வெளியே ஓடி வந்து அவர்கள் இருவரையும் தேடிப் பார்த்தேன். ஆனால் எங்குத் தேடியும் அவர்களைக் காணவில்லை. மனச் ச�ோர்வுடன் வீடு திரும்பினேன். அன்று மட்டும் இல்லை, இத�ோ இந்த நாள் வரை அவர்களைப் பார்க்கவே இல்லை. என் மனசாட்சி அடிக்கடி என்னை வதைத்துக் க�ொண்டு இருக்கிறது. ‘நீ ஒரு க�ொலைகாரன்’ என்று, அதுவும் ‘பிஞ்சு இதயங்களைச் சந்தேகம் என்ற கத்தியால் குத்திக் கிழித்த க�ொலைகாரன்’ என்று. குற்ற உணர்ச்சியால் அரை மனிதனாக இன்று வரை வாழ்ந்து க�ொண்டிருக்கிறேன். ஆம். நல்ல இதயங்களைத் தன்னலத்தால் ந�ோகடிப்பவர்களும் க�ொலைகாரர்களே.



15


... அஸ்வின், ச.ச.

காற்றின்றி சில ந�ொடிகளும், நீரின்றி சில ஆண்டு அனுபவி என அள்ளிக் க�ொடுத்த பின்னும் நாட்களும், உணவின்றி சில மாதங்களும் ஆதாமின் தனிமையை இறைவன் உணர்ந்தார். அதன் உயிர் வாழலாம். ஆனால் உறவின்றி…?!? பலன்தான் ஏவாள் என்னும் உறவு. கடவுளுக்கே இவ்வுலகில் சக மனிதர்களே இல்லை. நீர், முக்கியத்துவமாகத் தென்பட்டது உறவுகளின் மகிமை. மரங்கள், செடி, க�ொடி, தாவரங்கள் என ஆனால் இன்று? எதுவுமே இல்லை. கற்பனை செய்து ஒரு காலத்தில் திருமணத்திற்கும் ஊர்த் பாருங்கள். இருப்பதெல்லாம் நீங்கள் திருவிழாவிற்கும் பெரிய வேறுபாடு தெரியாது. மட்டுந்தான்! அப்படிப்பட்ட வாழ்க்கையை ஊர்த் திருவிழாவில் கடவுளைச் சுற்றி எல்லாம் நினைக்கையிலே பைத்தியம் பிடிப்பதுப�ோல் நடக்கும்; திருமணத்தில் மணமக்களைச் சுற்றி இருக்கலாம்; அதைத் தவிர வேறு நரகம் இருக்க எல்லாம் நடக்கும். அவ்வளவுதான் வேறுபாடு. முடியுமா? மற்றபடி கூட்டம், விருந்தினர், ஆட்டம், பாட்டம், ஈருயிர்கள் இணைகின்றன; ஓர் உயிர் க�ொண்டாட்டம் என எல்லாம் ஒன்றுதான். உருவாகின்றது. ஓர் உயிர் வலியில் தவிக்கிறது, ஊர் முழுதும் ‘நாங்களும் உறவுதான்’ என்று நாம் வெளிவருகிற�ோம். முகம் தெரியாத ஒருவர் வந்து வாழ்த்திப் ப�ோகும். ஒலிபெருக்கியில் நம்மைக் கழுவுகிறார்; தூய்மையாகின்றோம். அம்மா, உறவே இசையாகும். பந்திகளில் உறவே அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, தாத்தா, உணவாகும். வாழ்த்துகையில் உறவே பாட்டி, மாமா, அத்தை, ஒன்று விட்ட, இரண்டு விட்ட, ஆசீர்வாதமாகும்! உறவு… உறவு… கிட்டத்து, தூரத்து என வெவ்வேறு முகங்களில் நம்முன் உறவு… என இருட்டறையில் கருமை வரிசை கட்டி நிற்கும் பல ச�ொந்தங்களுக்குச் சூழ்ந்திருப்பதைப் ப�ோல நம் அக ச�ொந்தாமாகிவிடுகின்றோம். நாம் பிறப்பதற்கு முன்பே அறையில் உறவே உறவுகள் பிறந்துவிடுகின்றன. சூழ்ந்திருக்கும். ஆஹா! எத்துணை அருமையான உறவு என்பது தற்போக்காக உருவானது அன்று; உருவாக்கப்பட்டது. க�ொடை இந்த உறவு! திட்டமிட்டு, கடவுளால் படைக்கப்பட்டது. அத்தனையும் படைத்தளித்து ஆனால் இன்று…?! 16



காலை வெய்யில் காலன், மாலை வெய்யில் மருந்து.




ஆனால் அஃது எதுவென்று யாருக்கும் தெரியவில்லை. இந்த இலக்கில்லாத மாரத்தானில் நாம் ஒன்றை மட்டும் உதறித்தள்ளி விடுகின்றோம். அதுதான் நம் உறவுகள். ஆனால், மூடர்களாகிய நமக்குத் தெரியவில்லை அதுதான் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தும் உற்சாகப் பானமென்று! சற்றே சிந்தித்துப் பாருங்கள். ‘நான்’ என்ற தனி மனிதன் மட்டும் தனியே வாழ்ந்துவிட முடியுமா? நம் கண்கள் பிறரைப் பார்க்க வேண்டும்; செவிகள் பிறர் ம�ொழி பேசக் கேட்க வேண்டும்; உதடுகள் பிறரிடம் உரையாட வேண்டும் இவ்வாறு நம் உடலுறுப்புகள் த�ொடங்கி எல்லாமே உறவு க�ொள்ளத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் குடும்பம் என்றால், வயது முதிர்ந்த பாட்டன் த�ொடங்கி, வீட்டு முற்றத்தில் நேற்று முளைத்து துளிர்விட்ட காளான் பிதிர் வரை அனைத்தையும் உள்ளடக்கியது. கதைகள் ச�ொல்ல தாத்தா, பாட்டி; கடைக்குக் கூட்டிப்போக அத்தை, மாமா; பாசம் பகிர்ந்திட அம்மா, அப்பா; ஓடி விளையாட அக்கா, தம்பி; குளிப்பாட்ட சித்தி, சித்தப்பா… என அறைக்கு அறை, மூலைக்கு மூலை, செங்கல்லுக்குச் செங்கல் உறவுகளால் பிணைக்கப்பட்ட இணைப்பில் வளர்ந்தோம்… ஆனால் இன்று…!? அம்மா தரை தளத்திலிருந்து ‘வாட்ஸ் அப் மெசேஜ்’ அனுப்புகிறார், “சாப்பாடு ரெடி… சாப்பிட வாங்க…” மகன் முதல் தளத்திலிருந்து மறும�ொழி அனுப்புகிறான், “அம்மா…நான் கேண்டி க்ரஷ் விளையாடிட்டிருக்கேன், ஐ ட�ோண்ட் வான்ட் ப்ரேக் பர்ஸ்ட்.” அடுத்தச் செய்தி கணவரிடமிருந்து, “என்ன உளர்ற? நான் ரெண்டு நாளா அலுவலகம் விஷயமா வெளியூர் வந்திருக்கிறது தெரியாதா உனக்கு? ட�ோன்ட் டிஸ்டர்ப் மீ...” இந்த நிலைமை ஒன்றும் இன்னும் வெகு தூரத்தில் இல்லை. இன்றைய தானியங்கி உலகத்தில் நாம் எல்லாரும் இயந்திரங்களாகத் தனியே எதைய�ோ ந�ோக்கி ஓ டி க்கொண் டி ரு க் கி ன ்றோ ம் .



மார்ட்டின் பூபர் என்ற மெய்யியல் வல்லுநர், “மனிதன் என்பவன் பயன்படுத்துவதற்கான ப�ொருள் அல்லன்: மாறாகப் புதையலாகக் கருதப்படவேண்டிய, அன்பு செய்யப்பட வேண்டியவன்” என்பார். ஆனால் நாம�ோ தன்னலம் வேண்டி உறவுக�ொள்கிற�ோம். நான் வாழ வேண்டும் - நான் வளர வேண்டும் - எனக்கு வேண்டும் எனக்கு மட்டுமே வேண்டும் என, நாம் க�ொள்ளும் உறவுகளெல்லாம் தன்னல ந�ோக்கிலேயே உள்ளதால், உண்மையிலேயே நாம் க�ொள்ளும் உறவுகளும் உறவுகளா எனச் சிந்திக்க வேண்டிய நேரம் இது! நாம் உறவுக�ொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றோம் - உறவைக் ‘க�ொல்ல’ அன்று!

இன்றைய தானியங்கி உலகத்தில் நாம் எல்லாரும் இயந்திரங்களாகத் தனியே எதைய�ோ ந�ோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அஃது எதுவென்று யாருக்கும் தெரியவில்லை. இன்றைய செய்தித்தாள்களைப் பாருங்கள். ஏத�ோ திங்கட்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமை த�ொடங்கிவிட்டது எனச் சாதாரணமாகச் ச�ொல்வது ப�ோல, பக்கத்துக்குப் பக்கம் அண்ணன் தம்பி தகராறு, தாயை வெட்டிக் க�ொலை, சக�ோதரி க�ௌரவக் க�ொலை, சிறுமி வல்லுறவு, மனைவி கள்ளக் காதல், ப�ோன்றவற்றால் சாதாரணமாகி விட்டது உறவுகளின் க�ொலைகள். மார்ட்டின் பூபர் சுட்டிக்காட்டியது ப�ோல நாம் மனிதர்களை ஒரு ப�ொருளாகப் பார்க்க எத்தனித்து விட்டோம். அவர்களைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தும் இந்த அவலம் மறைய வேண்டும்!! அலைபேசிகளை மட்டும் அருகில் வைத்துக் க�ொள்ளாமல் அருகில் உள்ள உறவுகளனைத்தையும் அழைத்துப் பேசிடுவ�ோம். உறவென்பதை நம் வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தடையாகப் பார்க்காமல் இறைவனின் க�ொடையாக உணர்ந்து மகிழ்வோம். இல்லையேல், அநாதை இல்லங்கள், முதிய�ோர் இல்லங்கள் ப�ோன்றவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே ப�ோக, மனிதாபிமானமுள்ள மக்களின் எண்ணிக்கை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவ�ோம்.

சந்தேகம் செயலை அழிக்கும்.



17


     அருள் ர�ோசா

வாழ்வுக்கான உரிமை: வாழ்வுக்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் தன் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது. இந்த வாழ்வுரிமையினுள் தலைநிமிர்ந்து தன்மானத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வது மட்டுமன்று, மிடுக்காகவும் அச்சமின்றியும் கூனிக் குறுகிப் ப�ோகாமல் க�ௌரவமுள்ள மனுஷியாகவும் மனிதராகவும் கண்ணை மூடித் தன்மானத்தோடு இறக்கும் உரிமையும் அடங்கியுள்ளது. இந்திய மண்ணில் சாலைய�ோரங்களிலும், த�ொடர்வண்டி நிலைய நடைமேடைகளிலும், நகர்ப்புறச் சதுக்கங்களிலும் கைவிடப்பட்டு இறப்போர் ஆயிரமாயிரம் பேர். 108 ஆம்புலன்ஸ் வசதியைக்கூடப் பெற முடியாமல், அவலமான மரணத்தைத் தழுவுவ�ோர் எத்தனைய�ோ பேர்! தம் வயிற்று வாரிசுகளாலேயே க�ொள்ளையடிக்கப்பட்டு நடுத்தெருவிலே தூக்கியெறிப்பட்டு அநாதைப் பிணங்களாகக் குறிக்கப்பட்டு

அநாதைப் பிணங்களாகத் தூக்கியெறியப்படுவதற்கு ஆண்டவன் ஒவ்வொரு மானிடப் பிறவியையும் படைக்கவில்லை. 18



ஈக்களாலும் எலிக் கூட்டங்களாலும் இழுத்துச் செல்லப்படும் மூத்தோர்கள் எத்தனைய�ோ பேர்! அரசு மருத்துவமனைகளில் அநாதைப் பிணங்களாகக் கணக்கு எடுக்கப்பட்டு, அந்தக் கணக்கை மூடுவதற்காகவே அந்தப் பிணவறைகளில் மடிந்து மறக்கடிக்கப்பட்டோர் எத்தனைய�ோ பேர்! அநாதைப் பிணங்களாகத் தூக்கியெறியப்படுவதற்கு ஆண்டவன் ஒவ்வொரு மானிடப் பிறவியையும் படைக்கவில்லை. ஒன்று இந்த மானிடச் சமூகம் க�ௌரவமுள்ள சாவுக்கான நேரங்களை ஒவ்வொரு மானிடப் பிறவிக்கும் வழங்கிட வேண்டும், அல்லது இச்சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய அரசு என்னும் கட்டமைப்பு இந்த வாழ்வுரிமைக்கான மதிப்புள்ள மரண உரிமையை வழங்குவதற்கான உத்திரவாதத்தை வழங்கிட வேண்டும்.

உரிமைக்கான உத்திரவாதம்: இந்த உரிமைக்கான உத்திரவாதம் கிடைக்காதப�ோது சில நல்ல உள்ளங்கள் தாமே முன்வந்து அரசு சாராக் கட்டமைப்புகளை அமைத்து, அநாதையாக இறப்போருக்கு முதன்

சாத்தானுடன் விருந்துண்ணச் சட்டுவம் (அகப்பை) நீண்டிருக்க வேண்டும்.




வளனார் கருணை இல்லத்தை நடத்தும் கருணை முயற்சிகளை அரசு ப�ோற்றிப் பாதுகாக்க வேண்டாமா? அதனை முன்னுதாரணமாகக் க�ொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஊழலற்ற கருணை இல்லங்களை அரசே த�ொடங்கி இயக்க வேண்டாமா? மரியாதை தரும் கருணை இல்லங்களை உருவாக்கி வருகின்றன. இப்படிப்பட்ட கருணை இல்லங்களை உருவாக்கி வளர்த்தவர் அன்னை தெரசா. அந்தத் தெய்வீகப் பெண்மணியைப் பின்பற்றி, தாமஸ் எனும் ஒரு மாமனிதர் காஞ்சி மாவட்டம் சாலவாக்கவும் அருகிலுள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் வளனார் கருணை இல்லத்தை 2012ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தார். இக்கருணை முயற்சிகள், தான் த�ோன்றித்தனமாக நடைபெறவில்லை. தமிழக அரசின் சமூக நலத்துறையின் செயல்முறை ஆணை ந.க. எண் 2588/A1/2011 (28-12-2011) உத்திரவின்படிதான் இயங்கி வந்துள்ளது. த�ொடர்ந்து 19-09-2014 உத்திரவின்படி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. 18-09-2017 அன்று முடிவடைய வேண்டிய நிலையில் 1509-2017 அன்று புதுப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுடன் மிக நேர்த்தியாக ஒப்புதலும் அரசிடம் க�ோரப்பட்டுள்ளது. ஆனால் அரசு அலுவலகத்தினுள் எத்தனை எத்தனை மனிதாபிமானமில்லாத மதவெறிப் பெருச்சாளிகள் புகுந்து மானம் கெட்ட குறுக்கீடுகளைச் செய்து க�ொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை. அரசின் ஒப்புதலை இன்றவும் வழங்க முடியாத நிலை அரசு இயந்திரங்களின் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன.

. . . . . . . .

கருணையும் மாண்பும்: இந்தக் கருணை இல்லத்தை நடத்துபவர்கள் அனைத்துலகத் தரத்தோடுதான் இதனை நடத்தி வருகின்றனர்.



.

ஒவ்வொரு மானிடரும் சுயவிருப்பத்தின் பேரில்தான் அங்கு சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு நபரின் ஒப்புதல், புகைப்படம், கைய�ொப்பம்/கைரேகை என அனைத்தும் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இவர்கள் இறக்க நேர்ந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்யப்படுகிறது. உடல்நலம் தேறிய�ோரின் பாதுகாப்பாளரிடம் மிகச் ஒப்படைக்கப்படுகின்றனர்.

விருப்பப்படி அவரவரின் சரியான பதிவுகளுடன்

7 வார்டுகளில் 8 குளியல் அறைகள், கழிப்பறைகள் என மிகமிகச் சுகாதார வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்-பெண் வார்டுகள் எனத் தனித்தனியாக இயற்கை எழில் காற்றோட்டத்துடன் மூவேளை சத்துணவுடன், தனிப்பட்ட அக்கறையுடன் இங்கு வரும் மூத்தோரும் ந�ோயாளிகளும் கவனிக்கப்படுகின்றனர். அரசினர் அதிகாரப்பூர்வமான பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 30 பேர்கள் 24X7 என்கிற அடிப்படையில் கண்காணிப்பு, சிகிச்சை ப�ோன்றவை வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் அநாதைப் பிணங்கள் என அறிவிக்கப்படுவ�ோரையும், விபத்தில் இறந்தோரையும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடுதான் இங்குக் க�ொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்படுகின்றனர். எரித்தால் எரிப�ொருளுக்கு ஆயிரமாயிரம் த�ொகை தேவைப்படுகிறது, காற்று மாசு அடைகிறது. புதைத்தால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்பதால் அறிவியல் நுணுக்கப்படி பள்ளம் த�ோண்டப்பட்டுக் கான்கிரீட் தூண்கள், கம்பிப் படுக்கை என உருவாக்கப்பட்டு ஒவ்வொரு இறந்தோருக்கும் தனித்தனி இடம் என ஒதுக்கப்பட்டுக் காற்றுப் புக முடியாத அளவில் மூடப்பட்டு மிகமிகக் க�ௌரவமான முறையில் இறந்தோரின் உடல் அடக்கம் செய்யப்படுகின்றது. தமிழக அரசின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையும் இம்முறையைத்தான் பின்பற்றி வருகின்றது.

ச�ோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.



19


மனிதாபிமற்ற வன்முறை:

அரசு மண்டியிடலாமா?

மனித மாண்போடு, மானிட உடல்களை அடக்கம் செய்து வரும் இந்த வளனார் காப்பகத்திற்கு எதிராகப் பழிமேல் பழி சுமத்தி வருகின்றன சில கல் நெஞ்சங்கள்.

இந்த நிலையில் தமிழக அரசும் சமூக வலைதளப் பயங்கரவாத மதவெறிக் கும்பலின் தப்புத் தப்பான விளம்பரத்தின் முன் மண்டியிட வேண்டிய அவசியம் என்ன? கடவுளின் முன்னிலையிலும் மனசாட்சியின் சந்நிதியிலும், நல் மனத்தோரின் நன்கொடை ஆசிகள�ோடும் கருணைப் பணியைக் கண்ணியமாக நிறைவேற்றி வரும் வளனார் கருணை இல்லத்தினை இழுத்துப் பூட்டிவிட வேண்டிய வலுக்கட்டாயம் அரசுக்குத் தேவைதானா?

மூத்தோரை மிரட்டி உருட்டிக் க�ொடுமைப்படுத்திச் சித்திரவதை செய்கிறார்களாம்!

க�ொண்டு வந்து செய்து க�ொலை

நரம்பில்லா நாக்குக்கு எங்கிருந்துதான் கற்பனை வளங்கள் பெருகுகின்றனவ�ோ! இறந்தோரின் எலும்புகளை விறகுச் சுள்ளிகளைப் ப�ோலக் கட்டிக்கட்டி வியாபாரம் செய்கிறார்களாம். அந்த எலும்புகளைச் சுரண்டி சுரண்டி எலும்புப் ப�ொடிகளை டப்பாக்களில் அடைத்துக் கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்கிறார்களாம். மனச்சாட்சியே இல்லாத மதவெறிக் கும்பல்களுக்குக் கற்பனைகளிலேயே வெடித்துச் சிதறும் க�ொலைகாரக் க�ொடூரச் சிந்தனைகள் எப்படித்தான் உருவாகுகின்றனவ�ோ? எலும்புக் கட்டுகளையும் எலும்புப் ப�ொடிகளையும் ப�ொட்டலம் செய்து க�ோடிக்கணக்கில் வணிகம் செய்யும் எந்த முயற்சியும் உள்ளூர் கிராம வாசிகள், கிராம அதிகாரி, சுகாதாரத் துறை, சுங்கத் துறை, காவல் துறை, உளவுத் துறை ப�ோன்ற அனைத்து வளையங்களைத் தாண்டி எப்படி இந்த எலும்பு ஏற்றுமதி வணிகம் நடக்க முடியும்? எலும்புகளை, யார், எதற்காக வாங்குவார்கள்?

யார் பெற்ற பிள்ளைய�ோ, அந்தக் கருணை இல்ல இயக்குநர் தாமஸ்! அவரைக் கைது செய்ய வேண்டும் என்னும் வறட்டு கூக்குரலைக் கேட்டுவிட்டு வெட்டித்தனமாகச் சும்மா இருக்க வேண்டிய கேவலமான நிர்வாகமாகச் செயல்பட வேண்டுமா? யார் யாருக்கெல்லாம் காவடி தூக்கி க�ொண்டு பம்மிப் பம்மி ஊர்ந்து செல்லும் அடிமை விலங்காக அரசு இயந்திரம் செயல்படலாமா?

வாழ்வுரிமைக்குள் மாண்புடன் சாவை எதிர்கொள்ளும் உரிமையும் அடங்கியுள்ளது. 20



தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி.




கருணை இல்லத்தின் கருணைக் கைகளை முறுக்கி, முறித்து விடத் துடிக்கும் மதவாத அரக்கர்களை எதிர்த்துக் கேட்கத் த�ொடங்கிவிட்டது மக்கள் மையச் சிவில் சமூகம். 05/03/2018 அன்று சென்னையில் திரண்ட ஆயிரம் ஆயிரம் நன்மனத�ோரின் ஆவேசக் குரல்கள் கருணை இல்லத்தின் பணிகளைத் த�ொடர வேண்டிக் குமுறி எழுந்தவை. 08/03/2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம், கருணை இல்லத்திற்குச் சீல் வைக்க முயலும் அரசின் எண்ணத்திற்குச் சீல் வைத்தது. வைக்கோல் புல்மீது படுத்துள்ள நாயின் குரைப்பு, மாட்டையும் சாப்பிட விடாது, தானும் தின்னாது. வளனார் கருணை இல்லத்தை நடத்தும் கருணை முயற்சிகளை அரசு ப�ோற்றிப் பாதுகாக்க வேண்டாமா? அதனை முன்னுதாரணமாகக் க�ொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஊழலற்ற கருணை இல்லங்களை அரசே த�ொடங்கி இயக்க வேண்டாமா? வாழ்வுரிமைக்குள் மாண்புடன் சாவை எதிர்கொள்ளும் உரிமையும் அடங்கியுள்ளது. இந்த உரிமையை அடாவடியாகப் பிடுங்கி எறியும் மனசாட்சியற்ற மனித நேயமற்ற மதவாதக் கும்பலுக்கு முன்னால், மனித நேயர்கள் மண்டியிட முடியாது. அரசு இயந்திரங்கள் மண்டியிட்டுப் பணிந்துவிட்டால் மனித நேயமுள்ளவர்கள் அதனை மன்னிக்கவும் முடியாது. கருணையைக் கைது செய்யாதே! கருணையின் கரங்களை உடைக்காதே! கருணையைக் க�ொலை செய்யாதே! அதே கருணை நாளை உனக்கும் உன் மனைவி மக்களுக்கும் தேவைப்படும். அநாதைச் சாவு எந்தவ�ொரு மானிடப் பிறவிக்கும் நிகழக் கூடாது. “டீச்சர், ரம்யா எங்க ப�ோரா?” “பாவம் சார், அந்தக் குழந்த, அவங்க அப்பா ப�ோலிஸ் ஸ்டேஷன்ல இருக்காராம். அம்மா ஆஸ்பத்திரியில இருக்காங்கலாம். ர�ொம்பா வருத்தமா ச�ொன்னா. அதனால நான்தான் அவள வீட்டுக்கு அனுப்பினேன். “ஐய�ோ… இப்படியா ஏமாறுவீங்க.. அவங்க அப்பா ப�ோலீஸ் இன்ஸ்பெக்டரு, அம்மா டாக்டரு”



தாய�ோடு அறுசுவை உணவு ப�ோம்.



21


அரும்புப் பதிப்பக நூல்கள்

22



தீயார்க்குக் கருணை, நல்லார்க்குக் கேடு.




,



நடந்தா நாடெல்லாம் உறவு; படுத்தா பாயும் பகை.



23


கி. சுடர்மணி



 

மே நாள் “உழைப்பின்றி நான் களைத்துப் ப�ோகிறேன் உழைப்பதால் நான் ஒருப�ோதும் களைப்பதில்லை” - (உழைப்பாளி)

உலகம் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு மனித உழைப்பே அடிப்படைக் காரணமாகும். மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே பகல் இரவு என்று பாராமல் அயராது உழைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. த�ொழிலாளர் வகுப்பு, பாட்டாளி வர்க்கம், உழைப்பாளி வர்க்கம் என்றெல்லாம் பலவாறு அழைக்கப்படும் உழைப்பாளர்களின் உடல் உழைப்பை, மேல்தட்டு வர்க்கம் எனப்படும் முதலாளித்துவ வர்க்கமே முழுமையாகப் பயன்படுத்திக் க�ொண்டு, மேன்மேலும் உயர்ந்து வருகிறது. அதனால் த�ொழிலாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட பலவும் மறுக்கப்பட்டு ஓர் அடிமையைப் ப�ோன்று வாழும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

நன்னாளாகவும், உழைக்கும் வர்க்கத்தினரை உயரிய நாளாகவும் இந்நாள் ப�ோற்றப்படுகிறது.

த�ொழிலாளர் நாள் வரலாறு “நான் எவ்வகை ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்” என்றார் மாவ�ோ. அப்படி உருவானதுதான் ‘மே தினம்’ எனப்படும் ‘த�ொழிலாளர் நாள்.’ 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் த�ொடக்கத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில்

ஒரு நாட்டின் முன்னேற்றம் த�ொழிலாளர்கள் கையில்தான் உள்ளது. இங்ஙனம் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் த�ொழிலாளர்களை அடிமையைப் ப�ோன்று நடத்தாது, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி அவர்களைப் ப�ோற்ற வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துக் கூறும் ந�ோக்கத்துடன் ஆண்டுத�ோறும் மே மாதம் முதல் நாள் ‘உலகத் த�ொழிலாளர் நாள்’ க�ொண்டாடப்படுகின்றது. பாரெங்கும் பரந்துபட்ட த�ொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்துப் ப�ோடும் 24



நம்பிக்கையே ஏழையின் உணவு.




முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், ‘த�ொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தி வேலை வாங்கி வந்தனர். இதன் காரணமாக பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ப�ோன்ற நாடுகளில் நெசவாளர்கள், விவசாயக் கூலிகள், கட்டிடத் த�ொழிலாளர்கள் என பல்வேறு பிரிவைச் சேர்ந்ந த�ொழிலாளர்களும் கால நேரம் பார்க்காமல் செக்கு மாடுகளைப் ப�ோன்று உழைத்தனர். இதனை எதிர்த்துப் பல நாடுகளிலும் த�ொழிற்சங்கங்கள் த�ோன்றின. பல இடங்களில் ப�ோராட்டங்களும் நடந்தன. த�ொழிலாளர் கூட்டமைப்பின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல் 20 மணி நேரம் வரையிலான உடல் உழைப்பை எதிர்த்து 10 மணி நேரம் வேலை என்று ஒலித்த குரல்கள் முதலாளி வர்க்கத்தால் ஒழித்துக்கட்டப்பட்டன. அதன்பின் 30 ஆண்டுகள் கழித்து 1837இல் மீண்டும் புது எழுச்சியுடன் ஆரம்பித்த ப�ோராட்டங்கள் முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்டம் காண வைத்தன. அதன் விளைவாக, அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் வேலை என்று பாகுபாட்டோடு சட்டம் வகுக்கப்பட்டது. மற்ற த�ொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்களாயினர். இதனால் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவுடன் சூடு பிடித்தது.

குறைந்த வேலை நேரத்திற்காக நடத்தப்பட்ட த�ொழிலாளர்களின் இந்தப் ப�ோராட்டங்களே ‘மே தினம்’ எனப்படும் ‘த�ொழிலாளர் நாள்’ உருவாவதற்கு முக்கியக் காரணம் ஆகும். 1890ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் அனைத்துலக அளவில் த�ொழிலாளர் இயக்கங்களை நடத்த விடுக்கப்பட்ட அறைகூவலே, மே முதல் நாள், சர்வதேச த�ொழிலாளர் நாளாக (மே தினமாக) அமைந்தது. த�ொழிலாளர்களின் உணர்வுகளையும், தேவைகளையும் முழுமையாய் உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பும், இந்தியாவில் 1927ஆம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

த�ொழிலாளர் நாளில் த�ொழிலாளர் நிலை “உலகத் த�ொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர; ஆனால் அடைவதற்கோர் ப�ொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ். அதே நிலைதான் இன்றும் த�ொடர்கிறது எனலாம். ஏனெனில் இன்றைய மத்திய, மாநில அரசுகள் மக்கள் நல அரசு என்ற தகுதியை இழந்துக�ொண்டே வருகின்றன. த�ொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றதே ஒழிய, எந்த உரிமையும் பெறப்படவில்லை. இன்றைக்கு யாரும் த�ொழிலாளர்களின் பக்கம் இல்லை என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, க�ொத்தடிமைத்தனமான இன்னல்களிலிருந்துத் தங்களை விடுவித்துக்கொள்ள த�ொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட ப�ோராட்டங்களும், இன்னல்களும் கணக்கற்றவை. முதலாளித்துவத்தின் கீழ் த�ொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா நாடுகளிலும் அதற்கான ப�ோராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் கட்டிடத் த�ொழிலாளர்கள், ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர ப�ொழுதுப�ோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற க�ோரிக்கைகளை முன்வைத்து 1858இல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர். அதனைத் த�ொடர்ந்து அனைத்து நாடுகளும் இதனை முன்னெடுத்தன.



நன்மதிப்பும் சுக வாழ்வும் நண்பர்கள் அல்லர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் த�ொழிலாளர்கள் கையில்தான் உள்ளது. 

25


உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமான த�ொழிலாளர்கள் உள்ளனர். இந்திய மக்கள் த�ொகையில் சுமார் 50 விழுக்காட்டினர் த�ொழிலாளர்களாகவும் 94 விழுக்காட்டினர் அமைப்பு சாராத் த�ொழிலாளர்களாகவும் எஞ்சிய 6 விழுக்காட்டினர் மட்டுமே அரசு ஊழியர்களாகவும், பிற அமைப்புச் சார்ந்த த�ொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்த அமைப்பு சார்ந்த த�ொழில்களில் இருப்போர் மட்டுமே இன்றைக்கு 8 மணி நேர வேலையை அனுபவிக்கின்றனர். மற்ற அமைப்பு சாராத் த�ொழில்களில் இருப்போருக்கு 8 மணி நேர வேலை என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் உழவு சார்ந்த பணிகளில்தான் அமைப்பு சாராத் த�ொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்த்து, வேலைக்காக இடம் பெயர்ந்து மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமல்லாமல், நாடு விட்டு நாடு செல்பவர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அனுபவிக்கும் துயரங்களை வார்த்தைகளால் கூற இயலாது. சில சமயங்களில் ஊடகங்களின் மூலம் நாம் அவற்றைப் பார்க்கிற�ோம். வெளிநாடுகளில், இங்கிருந்து செல்லும் த�ொழிலாளர்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு என்பதால் அவர்கள் அதிக அளவிலான இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களும் வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க வேலைப் பாதுகாப்பு எதுவும் இல்லாத ஒப்பந்தத் த�ொழிலாளர்கள் ஒரு பக்கம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 8 மணி நேர வேலை உள்ளிட்ட எந்த உரிமைகளையும் இவர்கள் அனுபவிப்பதில்லை. ஒப்பந்தத் த�ொழிலாளர் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள்

26



நாதியற்ற க�ோவிலுக்கு நீதியற்ற பூசாரி.

ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை த�ொடர்ந்து அதிகரித்துக் க�ொண்டுதான் வருகிறது. இவை மட்டுமல்லாமல் இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் த�ொழிலாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் க�ொண்டே வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

செய்ய வேண்டியவை 8 மணி நேரப் பணி என்பது த�ொழிலாளரை ஒரு மனிதராகக் கருதி அவர்களுக்குரிய மாண்பை அங்கீகரிப்பதாகும். பல மனித உரிமைகள் மீட்டெடுக்கப்பட்ட இந்தக் காலத்திலும் 8 மணி நேர வேலை என்ற உரிமையைப் பெற முடியாத த�ொழிலாளர்கள்தான் உலகில் அதிகம் என்ற நிலை நீடிக்கிறது. இவற்றையெல்லாம் ந�ோக்கும்போது த�ொழிலாளர்களின் வாழ்க்கை அந்தக் காலம் ப�ோன்ற அடிமைத்தனத்துடனேயே த�ொடர்வதுப�ோல் இருக்கிறது. இன்றைய நவீன உலகில் இதனை நவீன அடிமைத்துவம் எனலாம். எந்தவ�ொரு முதலாளியும் த�ொழிலாளர் இல்லாமல் சற்றும் உயர முடியாது. அதனை முதலாளிகள் புரிந்துக�ொண்டு த�ொழிலாளர்களுக்கான உரிமைகளை மறுக்காமல் வழங்க முன்வருதல் வேண்டும். த�ொழிலாளர் நாளைக் க�ொண்டாடும் இத்தருணத்தில், அவர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் வழங்கி அவர்களும் வாழ்வில் முன்னேற வழி காண்போம்.




 PACIFIC RIM: UPRISING - ஆங்கிலப் படம் குல்லேர்மோ தெல் த�ொர�ோ (Guillermo del Toro) இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு ‘பசிஃபிக் ரிம்’ (Pacific Rim) என்கிற திரைப்படம் வெளிவந்தது. ‘பசிஃபிக் ரிம் அப்ரைசிங்’ (Pacific Rim: Uprising) என்கிற இப்படம் அதன் த�ொடர்ச்சி. ஸ்டீவன் எஸ். தி நைட் (Steven S. De Knight) என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிருந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத த�ோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை நிகழ்த்தி, பேரழிவிலிருந்து தம்மைக் காத்துக் க�ொண்டன. இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும�ொருமுறை அத்தகையத�ோர் பேராபத்து மனித இனத்திற்கு எழுகின்றது. ஜான் பாயெகா (John Boyega) என்கிற ஒரு விமானியின் தந்தைதான் முன்னர், ஆபத்து ஏற்பட்ட சமயம், அனைவரையும் ஒன்று திரட்டி, எதிர் தாக்குதல் நிகழ்த்தி அபாயத்தை அகற்றியவர்.

ஆர்.என்.பிரகாஷ்

நிலைநாட்டும் வண்ணம், ப�ோராட்டக் களத்தில் குதிக்கிறார். விலகிச் சென்றுவிட்ட அவரது சக�ோதரி மாக�ோ ம�ோரியுடன் (Mako Mori) ரிங்கோ கிகுச்சின் (Rinko KiKuchi) இணைந்து செயல்பட எத்தனிக்கிறார் ஜான். மேலும் சிலரும் ஜானுடன் கைக் க�ோர்த்து நிற்க புதியத�ொரு படை உருவாகிப் புதியத�ொரு வரலாறு படைத்திடப் புயலெனப் புறப்படுகிறது. ல�ோர்ன் பால்ஃப் (Lorne Balfe) இசையமைக்க, டேன மின்டெல் (Dan Mindel) ஒளிப்பதிவு செய்துள்ளார். 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை! இன்னல்கள் எவ்வகையிலும் எவ்வடிவிலும் மனிதர்களைத் தாக்க வாய்ப்புண்டு! அம்மாதிரியான வேளைகளில் மனித இனம், உணர்வுப்பூர்வமாக உருவாகும் சிக்கல்களால் பிளவுபடாமல், ஒருங்கிணைந்து செயல்பட்டால் எத்தகைய ஆற்றல் வாய்ந்த எதிரியையும்கூட வெற்றி க�ொள்ளலாம் என்பதே இப்படம் தரும் பாடம்.

வேறு பாதையில் பயணித்துவிட்ட ஜான், மீண்டும�ொருமுறை பேரிடர் ஏற்படுவதை உணர்ந்து, தந்தையின் நற்பெயரை



நாம் எப்படிய�ோ நம் நண்பர் அப்படியே.



27


ஆசிரியர் : அ. ஜேசுதாஸ் பக்கங்கள் : 174 விலை : ரூ. 160

ஆசிரியர்: வில்லியம் பால்ராஜ் பக்கங்கள்: 100 விலை: ரூ. 100

ஆசிரியர்: ஆண்டோ சகாயராஜ் பக்கங்கள்: 174 விலை: ரூ. 160

அரும்பின் புதிய வெளியீடுகள்

மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க!

பரபரப்பு, அறைகூவல்கள், ப�ோராட்டங்கள் இவைகளுக்கிடையில் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, ப�ொறுமையாய் சிந்திக்கத் தூண்டும் சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க! வாழ்க்கையின் தேக்க நிலையில் தவிக்கும் பலருக்கு இந்நூல் புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் உத்வேகமும் தரும் மருந்து. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்! உண்மையும் ப�ோலித் த�ோற்றமும், தீமையைக் கண்டு திகிலடையாதே!... ப�ோன்ற 36 தலைப்புகளில் இந்நூல் கூறும் பாடங்களைக் கவனத்துடன் வாசித்தால் வாழ்வில் நிம்மதியும் நிறைவும் எய்தலாம்.

..............................................................................................................................

இயற்கையின் சிரிப்பினிலே... (இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவனைப் பற்றிய ஓர் ஆன்மீகத் தேடல்)

இறையியல் மற்றும் இலக்கியக் கண்ணோட்டத்தில், இன்றைய நடப்புகளை அலசி ஆராயும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...

இயற்கையைத் தன்னலக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனிதருக்கு, அதைப் பராமரிக்கும் சவால் நிறைந்த அழைப்பை இறைவன் விடுக்கின்றார் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். இயற்கையில் இறைவனின் த�ோற்றத்தை, இருப்பை உணர்ந்து, அவரில் சங்கமிக்கும்போது வாழ்க்கை நிறைவெய்துகின்றது என்கின்றது இந்நூல். சித்தர் பாடல்களையும் பாரதியாரின் கவிதைகளையும் தமது கருத்துக்கு அரண்களாக ஆங்காங்கே ஆசிரியர் சேர்த்துள்ளார். இறையியல் துறையில் புதுமைப் படைக்கும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...

.............................................................................................................................. மீண்டும் எழுவ�ோம்!

குருதி பூசிய கத்தியை நக்கி நாக்கறுபட்டுச் சாகும் ஓநாய்கள் ப�ோல் இலவசங்களை நக்கி நலிவுற்றுக் கிடக்கும் மக்களுக்காக இரங்குகிறார் ஆசிரியர் ஆன்டோ சகாயராஜ். ‘முதிர்ச்சியுள்ளோரின் காதல் முனை மழுங்குவதில்லை,’ ‘வாழ்க்கையில் வெறிய�ோடு ப�ோராடுபவர்களே வரலாறு படைக்கிறார்கள்,’ ‘எந்த வழி ஏற்றம் தரும் வழி,’ ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’… ப�ோன்ற 25 தலைப்புகளில், எளிய வார்த்தைகளில், ஆழமான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நல்ல பல செய்திகளால் வீழ்ந்துகிடக்கும் இளைஞர்களை மீண்டும் எழுந்து நிற்க அறைகூவல் விடுக்கும் நூல் மீண்டும் எழுவ�ோம்!

28



நியாயத்தினும் கருணை மேம்பட்டது.




  ஜ�ோல்னா ஜவஹர்

‘தமிழ்’ வெறும் வார்த்தை ம�ொழியல்ல, அது வர்த்தக ம�ொழியுமல்ல, இஃது அறத்தின் ம�ொழி, குணத்தின் ம�ொழி, நேர்மையின் ம�ொழி, வாழ்வியல் நெறி ச�ொன்ன ம�ொழி, வாழ்வில் கூடவே வருகின்ற ம�ொழி. அஃது உடலுக்கு உயிரூட்டும், உணர்வுக்கு உரமேற்றும் என்பதால்தான் ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே’ என நெஞ்சுயர்த்திப் பாட முடிந்தது. வீரம், மானம், கற்பு என்பதைக் கருவிலேயே வளர்க்கும் ம�ொழி. இம்மொழியைக் கற்ற எவரும் நெறிகெட்டுப் ப�ோனதில்லை. காதலைப் பாடும் ப�ோதும்கூடக் கூர்மையைச் ச�ொன்ன ம�ொழி. தத்தி வளரும் பருவத்திலேயே தத்துவம் ச�ொல்லித் தந்த ம�ொழி. மூவடியில் உலகளந்தது திருமாலின் வாமன அவதாரம். ஆனால் ஈரடியில் உலகளந்தது வள்ளுவனின் குறளதிகாரம். தமிழ் ம�ொழிப�ோல் உலகின் வேறு எம்மொழியிலும் இவ்வளவு அறநூல்கள் இல்லை. தமிழ், அனைத்திற்கும் மூத்தம�ொழி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முப்பால் கண்டது, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே இலக்கணம் க�ொண்டது, நான்காயிரம் ஆண்டுகட்கு முந்தைய நாகரிகம் க�ொண்டது. இது வெறும் ஒலியன்று, வெறும் ம�ொழி மட்டுமன்று. இதுதான் நம் பண்பாடு, நம் அடையாளம். தமிழ் அறம் ச�ொல்லி மறம் ச�ொல்லி உரம் தந்த ம�ொழி. அகம் ச�ொல்லி புறம் ச�ொல்லி நம் தரம் காத்த ம�ொழி.

– ஒரு வீடு, ஒரு நாய்… மனிதர்களையன்றி மற்ற உயிர்களையும் மதிக்கின்ற ம�ொழி தமிழன்றி வேறேது. மனிதர்கள் உயர்திணை. மனிதரல்லாதன தாழ்திணை அன்று அஃறிணை என்று மாற்றிக் கூறி உயர்த்திக் காட்டியது. ஆனால் அந்த ம�ொழி இப்போது எத்தகு பயன்பாட்டில் இருக்கிறது. மளிகைக் கடைக்காரரிடம் ஒரு பெண்மணி வந்தார். “ஏன்யா… நீ என்ன ஃபிராடு பண்றியா? உளுந்துல களிமண் உருண்டைய மிக்ஸ் பண்ணி சேல்ஸ் பண்றியே. இப்படிக் கலப்படம் செய்யிற நீ உருப்படுவியா?” எனப் ப�ொரிந்து தள்ளினார். உடனே கடைக்காரர், “அம்மா! நீங்க பண்ணின அளவுக்குக் க�ொடுமையான கலப்படம் நான் பண்ணிடல. நான் செஞ்ச கலப்படத்தால ஒரு சில குடும்பங்கள் வேணும்னா பாதிப்படையலாம். ஒத்துக்கிறேன். ஆனா நீங்க பண்ணின ம�ொழிக் கலப்படத்தால ஒரு சமுதாயமே சீரழியுமே” என்றார்.

மனிதர்களை மதிக்கும் ம�ொழி தமிழ். எப்படித் தெரியுமா? ஒரு புலவன், ஒரு வணிகன், ஒரு மாணவன் என்று எழுதக் கூடாது என நம்மைத் தடுத்து, புலவன் ஒருவன், வணிகன் ஒருவன், மாணவன் ஒருவன் என எழுதச் ச�ொன்ன ம�ொழி. அஃறிணைக்குத்தான் ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்



நீதியைக் கருணையால் பக்குவப்படுத்து.



29


திரு. சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தப�ோது அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவார். ஒருமுறை ஓர் அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் “What is your name?” எனக் கேட்டார். அனைவரும் பதிலளித்துவிட்டனர். பின்னர் “What is your father?” எனக் கேட்டார். “My father is a tailor, my father is a farmer” எனப் பலரும் பலவிதமாகப் பதில் ச�ொல்லி வந்தனர். தேவகி என்ற மாணவி மட்டும், “My father is a உரக்கடை” என்று பதில் அளித்தார். உடனே உளம் மகிழ்ந்த சகாயம், “அருமை” எனச் ச�ொல்ல, பலரும் வியந்தார்கள். அதற்குச் சகாயம், “ஏன் பாராட்டினேன் தெரியுமா? தான் ச�ொல்ல வந்த கருத்தைப் புரியும்படி ச�ொல்லி விட்டாள் அந்தச் சிறுமி. தமிழைப் பேசினால் தமிழிலேயே பேசு. ஆங்கிலத்தைப் பேசினால் ஆங்கிலத்திலேயே பேசு. இங்கு ஏன் இந்த மாணவியைப் பாராட்டினேன் என்றால் தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து தமிழ் க�ொலை செய்யப்படுவதையே கண்டு வந்த எனக்கு, ஓர் ஏழை மாணவி முதன் முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் க�ொலை செய்தாள். அதனால்தான்” என்றார். ஆங்கில ம�ோகத்தால் நாம் சுயத்தை இழந்து சூன்யமாக நிற்கின்றோமே! பாலில் கலப்படம் செய்தால் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடும�ோ என்றும் உணவில் கலப்படம் செய்தால் உயிருக்கு ஊறு நேரும�ோ என்றும் வீடுகட்டும் கலவையில் சிமெண்டுக்குப் பதில் சாம்பலைக் கலந்துவிட்டால் கட்டிடம் இடிந்துப�ோகும�ோ என்றும் பதறுகிற நாம், நம் தலைமுறையே இடிந்துக�ொண்டிருப்பதை ஏன் கண்டு க�ொள்ளாதிருக்கிற�ோம். ம�ொழி நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி, அதில் விரிசல் விழலாமா? அனைத்து 30

ம�ொழிகளையும்



நேசிப்போம்;

தாய்மொழி

பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.

தமிழைச் சுவாசிப்போம். அந்தத் தூய ம�ொழியில் நஞ்சைக் கலக்காதிருப்போம். பாமரர்கள், படித்தவர்கள் என்றில்லாமல் அனைவருமே இந்தக் கலப்பட நஞ்சைக் கலாச்சாரப் புதுமை எனும் பெயரில் புகுத்தி வருகிற�ோம். ஆனால் க�ொடுமை என்ன தெரியுமா? ம�ொழியின் பெருமையைச் சிதைவுறாமல் காத்துத் தலைமுறைகள் கடந்து செல்ல வேண்டிய ப�ொறுப்பு மிக்க ஊடகங்கள்தான் அதிகமாக நம் ம�ொழியைச் சிதைத்து வருகின்றன. எந்த அளவுக்குத் தெரியுமா? தமிழுக்கே உரிய வேற்றுமைத் த�ொகைகளை (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆங்கில வார்த்தைக்குப் பயன்படுத்துகிறார்களே அதுதானே மாபெரும் அவலம். நாள்தோறும் நாம் த�ொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்க்கலாம், கேட்கலாம். “சைக்கிளில் சென்ற வாலிபர் ர�ோட்டைக் (roadஐ) சைக்கிளில் (cycleஇல்) கடக்க முயன்றப�ோது எதிரே வந்த லாரியில் ம�ோதி இறந்தார்” என்றும், “இன்று ரயில்களின் நேரம் மாற்றம்” என்றும் ஒளிபரப்புகிறார்கள், அச்சிடுகின்றார்களே இஃது எப்படித் தமிழ்ச் சேவை ஆகும். “தமிழை வளர்க்கிறேன். தமிழை வளர்க்கிறேன்” என்று மேடைகள் த�ோறும் நரம்புப் புடைக்கப் பேசும் வெற்றுச் சவடால்களை




அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் நிறுத்திக் க�ொண்டாலே ப�ோதும். அவர்கள் வளர்த்துதான் வளர வேண்டும் என்ற அவல நிலை தமிழுக்கு இல்லை. தமிழ் என்ன நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த ம�ொழியா? வானம் அளந்த அனைத்தும் அளந்த ம�ொழி, ஏழ்கடல் வைப்பனும் தன் மணம் வீசி இசை க�ொண்டு வாழும்மொழி. நம்மை வளர்த்த ம�ொழி. நம்மைக் காக்கும் கவச ம�ொழி. தமிழுக்கு யாரேனும் த�ொண்டு செய்ய வேண்டும் என நினைத்தால் ஒன்று மட்டும் செய்யட்டும். தமிழைக் க�ொலை செய்யாதிருக்கட்டும். அது ப�ோதும். அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை வாங்குவதற்காய் பல க�ோடி செலவழிப்பதற்கு எடுக்கும் முயற்சியை விட, பள்ளிப் பருவத்தில் தமிழில் பெயர் எழுதச் ச�ொல்லி சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே சாலச் சிறந்தது. இப்போதெல்லாம் தமிழிலா பெயர் எழுதுகிறார்கள்? P. சுரேஷ், K. வசந்தி என்றவாறு எழுதுவதா தமிழ்ப் பெயர்? சற்று புரியும்படியே கேட்கிறேன். உதாரணமாக, குமாரின் மகன் சரவணனின் பெயரை கு. சரவணன் என்பதை கே. சரவணன் என்றுதான் பெரும்பாலும் எழுதுகிறார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், அதே பெயரை கே. SARAVANAN என்றோ கு. SARAVANAN என்றோ யாரேனும் எழுதி ஆங்கிலக் க�ொலை செய்ய எண்ணுகிறார்களா? அந்தப் பெயரை K. SARAVANAN அல்லது கு. சரவணன் என எழுதுவது தானே முறை. பெரும்பாலான பெயர்ப் பதிவேடுகளை (ஏன் பள்ளிகளில் கூட) பாருங்கள். ம�ொழிக் க�ொலைய�ோடுதான் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். அவ்வளவு ஏன் தமிழ் ஆட்சி செய்து வருகிற தமிழக முதல்வரின் பெயரைக்கூட. முதலில் தமிழில் ஊர் பெயர், அடுத்து அவரது முன்னெழுத்து ஆங்கிலத்தில், அடுத்து அவரது பெயர் தமிழில் என்று கலப்படமாகத்தானே எழுதுகிறார்கள். இந்த அவலத்தை வேறு ம�ொழிகளில் காண முடியுமா? தமிழில் மட்டும்தான் ம�ொழிக் க�ொலை அரங்கேறுகிறது. எழுத்தை விடுங்கள். பேசும் பேச்சிலேனும் தமிழ் இருக்கிறதா? ஒரு தானி ஓட்டுநரிடம் ஓர் அரங்கத்திற்குச் செல்ல வழி கேட்டப�ோது, “ஸ்ட்ரெய்ட்டா ப�ோயி லெப்ட்ல கட்பண்ணி திரும்ப ரைட்ல டர்ன் பண்ணி ஆப்போசிட்ல தெரியிற பெரிய பில்டிங்தான் சார் அந்த ஹால்” என்று



பகைவர் உறவு புகை எழு நெருப்பு.

தமிழில் (அவருக்கு ச�ொன்னார்.

அதுதான்

தமிழ்)

பதில்

வேடிக்கையாகச் ச�ொல்வார்கள். ஒரு தமிழ்ப் பேராசிரியர் தனது மகிழ்வுந்தில் பயணம் செய்து க�ொண்டிருந்தார். அருகில் இருந்த தன் ஓட்டுநரிடம், “ஓட்டுநரே வண்டியை இடது பக்கமாகத் திருப்பு” என்றார். அதற்கு ஓட்டுநர், “என்ன சார் ச�ொல்றீங்க?” என்றார். “வண்டியை இடப்புறமாகத் திருப்பு” என்றார் மீண்டும். “புரியலீங்களே” என்ற ஓட்டுநரிடம், “ஏப்பா டிரைவர் காரை லெப்ட்ல கட் பண்ணு” என்றார். இப்போது ச�ொன்னார் அந்த ஓட்டுநர், “முதலிலேயே இப்படிப் புரியறாப்புல தமிழ்ல ச�ொல்லியிருக்கலாம்ல” என்றார். பேருந்தில் நடத்துநரைப் பார்த்து, “நடத்துநரே! பயணச்சீட்டுத் தாருங்கள்” எனக் கேட்பவர்கள் பை த் தி ய க்காரர ்க ள ாகத்தானே பார்க்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் கேவலம் அசிங்கம் என்ற நிலை உருவாகியுள்ளது. என்ன க�ொடுமை இது? சாதாரணமாகப் பேசும்போது கூட Call பண்ணு, Walk பண்ணு Think பண்ணு, Purchase பண்ணு, என்று இரட்டைம�ொழி கலந்துதானே பேசுகிறார்கள். அதையே அழை (கூப்பிடு), நட, நினை, வாங்கு என்ற ஒற்றைச் ச�ொல்லில் அழகு தமிழில் கூறிவிடலாமே. எண்ணற்ற தேசத் தலைவர்களை, இதிகாச, இலக்கியப் பாத்திரங்களை, நேர்மையாளர்களை, வெற்றியாளர்களை, நம்முன் படம்பிடித்துக் காட்டிய திரைப்படங்களுக்காக அரசு ஓர் ஆணை வெளியிட்டதுதான் அவலங்களின் உச்சம். ஆணை பிறப்பித்ததில் பிழையில்லை. அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துப�ோன திரைப்படங்கள் செய்த ம�ொழிக் க�ொலைதான் அதற்குக் காரணம். அஃது என்ன ஆணை? “இனிமேல் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை” இஃது எப்படித் தெரியுமா உள்ளது? “உங்கள் அம்மாவை, அம்மா என்று அழைத்தால் பரிசு வழங்கப்படும்” என ஒவ்வொரு வீட்டிலும் ச�ொன்னால் எப்படி இருக்கும�ோ அப்படித்தான் உள்ளது. நம்மை இன்னல்களினின்று காக்கும் கவச ம�ொழியை நாம் கவசம்போல் காக்க வேண்டும். “விழிப�ோல எண்ணி நம் ம�ொழி காக்க வேண்டும்” என்பது படப்பாடல் வரி.



31


ஐ லவ் யூ - 09

பவுல் ராஜ் அமல், ச.ச.





“உங்க ப�ொண்ண நீங்க கண்டிச்சு வளர்க்கணும் சார்” என்று தலைமை ஆசிரியைச் ச�ொன்னதும் அதிர்ந்துப�ோனார் ஆனந்தியின் அப்பா. அப்படி, ஆனந்தி என்ன செய்தாள்? ஒரு வாரத்திற்கு முன்பு, பள்ளி முடிந்ததும் வேகமாக வெளியே வந்த ஆனந்தி, தன் த�ோழிகளுடன் ஆட்டோவில் ஏறாமல், க�ொஞ்சம் த�ொலைவில் நின்றிருந்த பைக்கில் ஏறி சென்றாள். ஆட்டோவில் இருந்த எல்லா கண்களும் அந்த நீல ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் கிளாஸ் அணிந்திருந்தவனைக் கண்டுக�ொள்ள தவறவில்லை. “இப்போ ஸ்கூல் முழுக்க இதப் பத்திதான் பேச்சு” என்று க�ோபமாக முடித்த தலைமை ஆசிரியையைப் பார்த்து புன்னகைத்தார் ஆனந்தியின் அப்பா. “அவ்வளவுதானா மேடம். நானும் ஏத�ோ தப்புப் பண்ணிட்டாள�ோனு பயந்துட்டேன் மேடம்! நான் ஒரு நாடக கலைஞன். ப�ோன வாரம் ர�ொம்ப அருகாமையில நாடகம் இருந்ததால, நானே வந்து கூட்டிட்டுப் ப�ோறேன்னு நான்தான் என் ப�ொண்ணுகிட்ட ச�ொல்லி இருந்தேன். மேக்கப் கலைக்காம அப்படியே வந்து நான்தான் அவளைக் கூட்டிக்கொண்டுப் ப�ோனேன். நீங்க ச�ொன்ன அந்த ஜீன்ஸ் பேண்ட் பைக் பையன் நான்தான்” என்றவர், “இப்ப என் ப�ொண்ண நெனச்சாதான் கவலையா இருக்கு. இந்த வதந்திய கேட்டு எவ்வளவு மனசு ந�ொந்திருப்பா?” என்ற அவரிடம், என்ன ச�ொல்வது என்று தெரியாமல் விழித்தார் தலைமை ஆசிரியை.

32



ப�ொதுவாகவே, நம் சமூகத்தில் பிறரைப் பற்றி வதந்திகள் பேசுவது பரவலாக காணப்படுகிறது. ‘ஏய்! தெரியுமாடி உனக்கு…’ என்று யாராவது கிசுகிசுத்தால், அதை கேட்டுவிட்டு, உண்மையா, ப�ொய்யா என சற்றும் ஆராயாமல் ‘எனக்கும் அவ மேல ஒரு டவுட்டு தாண்டி’ என்று ஆம�ோதித்து, கேட்டதைவிட சற்று கூட்டி, இன்னொருவருக்குச் ச�ொல்லி, தன் கடமையைச் செய்வோர் பலர். இந்தக் காலத்தில், பிரபலங்களின் அந்தரங்கங்களைப் பற்றியும், அவர்கள் பேசிப் பழகும் நபர்களைப் பற்றியும்,

காதல் வதந்திகளால், ஆண்களை விட பெண்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பலருக்குச் ச�ொந்தமான கழுதை ஓநாய்களுக்கு இரையாகும்.




விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் பேசாத பத்திரிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். வதந்திகள் என்றாலே அதை விரும்பி கேட்க எல்லாரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்கு. அதிலும் இரு நபர்களின் உறவுசார்ந்த வதந்திகள் என்றால் அதை பேசும்போதே வாயில் தேனூறும்; குழலிசை ப�ோன்று காதுகளுக்கு இன்பமூட்டும். காதல் வதந்திகளைப் பற்றி குறளுரைத்த வள்ளுவர், ‘நிலவைப் பாம்பு கவ்வியது’ ப�ோன்று, சிறிய த�ொடர்பையும் ஊரார் பெரிதாக்கி பரப்புகின்றனர்’ (குறள் 1146) என்று கூறியுள்ளார். அதனால்தான் ப�ோலும், ‘ஊரார் வாய் மூட, உலைமூடி இல்லை’ என்ற பழம�ொழி இன்றும் எதார்த்தமாய் உள்ளது. இவ்வாறு இரு நபர்களுக்கு இடையே உள்ள காதலைப் பற்றி மற்றவர்கள் வதந்தி பேசுவது, இன்னும் காதலை ஆழப்படுத்தும் என்றும், காதலரின் உள்ளங்களுக்கு ‘கள்’ ப�ோல மகிழ்ச்சியை உண்டாக்கி நன்மை பயக்கும் என்றும் அந்த ப�ொய்யா புலவர் பாடி வைத்துள்ளார். பழங்கால சூழலில் காதல் வதந்திகள் நன்மை பயத்தன என்றாலும் இந்தக் காலகட்டத்தில் அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் அவை அவ்வளவாக நன்மை பயப்பனவா என்று சிந்திப்பது நல்லது.

நாக்கு, இரத்தமில்லா க�ொலை செய்யும் கூரான கத்தி ப�ோன்றது.

வதந்திகளுக்கு என தன்னிகரற்ற ஓர் ஆற்றல் உண்டு. “நான் எந்த வதந்தியையும் நம்ப மாட்டேன்” என்று நாம் உறுதி எடுத்துக் க�ொண்டாலும், நாம் கேட்கும் வதந்திகள் நாம் மற்றவரைப் பார்க்கின்ற விதத்தையும், புரிந்துக�ொள்ளுகின்ற முறையையும் பாதிக்கின்றன. ‘தன் மகளுக்கு ஒரு பையனுடன் த�ொடர்பு’ என்ற வதந்தியை ஓர் அப்பா நம்பவில்லை என்றாலும், எதேச்சையாக அவள் ஒரு பையன�ோடு பேசுவதை அவர் பார்த்தால் அந்த வதந்திதான் அவர் எண்ண கண்ணோட்டத்தில் வந்து நிற்கும். சந்தேகம் தலைதூக்கத் துவங்கும். எதை, எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று நம் மூளையை கட்டுப்படுத்தி, சாதாரண ஒரு நிகழ்வையும் வேறு ஒரு க�ோணத்தில் சிந்திக்க வைத்துவிடும் ஆற்றல் வதந்திகளுக்கு உண்டு. வதந்திகள் சாதாரண ஒரு நிகழ்வையும் மிகைப்படுத்தி, அரைகுறை உண்மையாக, அல்லது உள்ளதை உள்ளவாறு ந�ோக்காமல், திரித்து, தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும். இவ்வாறுதான் சில நல்ல நட்புகள் கூட காதலாக சித்தரித்துப் பேசப்படுகின்றன.



பனை நிழலும் நிழல�ோ, பகைவர் உறவும் உறவ�ோ?

பள்ளி, கல்லூரி பருவத்தில் வதந்தி பேசப்படும் நபருக்கு, உணர்வு அளவிலே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உண்மைய�ோ, ப�ொய்யோ, காதல் வதந்திகள் காட்டுத் தீ ப�ோன்றது. மளமளவென பரவி, வதந்திப் பேசப்படும் நபரைச் சுட்டெரித்திடும். ஒரு சில இளைய�ோர் வதந்திகளை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு உட்பட்டுத் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பணியிடங்களில் வதந்தி பேசப்படும் ஆள் தனித்து விடப்படுகிறார்; தவறாக எண்ணப்படுகின்றார்.



33


காதல் வதந்திகள் பரவினால் அதை கட்டுக்குள் க�ொண்டு வருவது எளிதன்று. காதலை ப�ொறுத்தவரையில் ‘ஆண் செய்தால் பெருமை, பெண் செய்தால் பாவம்’ என்ற அநியாய சமூகநீதி நிலவுகையில், காதல் வதந்திகளால், ஆண்களை விட பெண்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வதந்திகள் ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவரை ‘பாத்திரப் படுக�ொலை’ (Character Assassination) செய்கிறது. அதனால்தான் புத்தர் ‘நாக்கு, இரத்தமில்லா க�ொலை செய்யும் கூரான கத்தி ப�ோன்றது’ என்று கூறினார். வதந்திகளை பரப்புவ�ோர் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் ப�ொறாமையினால் உந்தப்பட்டு இச்செயலை செய்கின்றனர். வதந்திகள் அதை பரப்புவ�ோரின் அறியாமையையும், குறுகிய மனப்பான்மையையும் வெளிப்படுத்துகின்றன. எலனார் ரூஸ்வெல்ட் என்ற அறிஞர் கூறுவது ப�ோல, ‘உயரிய சிந்தனையுடைய�ோர் கருத்துக்களைப் பற்றி உரையாடுவர்; சராசரி மனிதர்கள் நிகழ்வுகளைக் குறித்து பேசுவர்; சிறிய மனிதர்களே மற்ற மனிதர்களைப் பற்றி பேசுவர்.’ காதல் வதந்திகளை பரப்புவ�ோரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். “இதுதான் கலிகாலம் ப�ோல… எங்க அப்பா அம்மாலாம் இப்படி என்ன வளர்க்கலபா” என்று தங்களையே அறநெறி காவலர்களாக சித்தரித்துக் க�ொண்டு, மற்றவர்களை குற்றவாளிகளாக காணும் மனம் படைத்தோர், முதல் வகையினர். இவர்கள் மற்றவரில் எதைக் காண விரும்புகிறார்கள�ோ அதையே பார்க்கிறார்கள். எதைக் கேட்க விரும்புகிறார்கள�ோ அதைதான் செவிக�ொடுத்து கேட்கிறார்கள். 34



பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்.

இரண்டாவதாக, “இதை ச�ொல்லாவிட்டால் என் தலையே வெடித்து விடும்” என்பது ப�ோல தங்களின் கேளிக்கைக்காகவும், ப�ொழுதுப�ோக்காகவும் புரளி பேசும் குணம் படைத்தோர். புள்ளி வைத்தால் க�ோலம் எளிதாக வரும் என்பது ப�ோல தங்கள் படைப்பாற்றலையும் கேட்ட செய்திய�ோடு உட்புகுத்தி தரும் சிந்தனையாளர்கள். மூன்றாவதாக, “இவனுக்கு மட்டும்… இவளுக்கு மட்டும் அமைந்து விட்டதே… ஆனால் எனக்கு மட்டும்… ச்சே!” என ப�ொறாமையை அடிப்படையாகக் க�ொண்டு வதந்தியைப் பரப்பும் எண்ணம் உடைய�ோர். இல்லாததை இருப்பது ப�ோலும், இருப்பதை இன்னும் அதிகப்படுத்தியும் பேசுவது இவர்களுக்கு எளிதாக வரும். காதல் வதந்திகளைத் தக்க முறையில் எதிர்கொள்ள முதலில் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படாமல் ஒருவர் தன்னையே காத்துக்கொள்ள




வேண்டும். வதந்திகளை கேட்டு அதனால் அதீத அளவில் பாதிக்கப்படும் ப�ொழுது நம்மை அறியாமலேயே, அந்த வதந்திகளுக்கு நம் மகிழ்ச்சியை கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தையும் நாமே வழங்கி விடுகிற�ோம். நம்மை அழுத்தும் வதந்திகளுக்கு மேலாக எழுந்து, மகிழ்ச்சியாகவும், அதைப் பற்றி கவலைப்படாமலும் வாழும்போது, அதை நாம் செயல் இழக்கச் செய்ய முடியும். வதந்திகளை எதிர்கொள்வதற்கு நாம் பயன்படுத்தும் நேரத்தையும், சக்தியையும் நமது குறிக்கோள்களை அடைய பயன்படுத்திக் க�ொள்ளலாம். வதந்திகளைப் பரப்புவ�ோரின் முகத்திரைகளை கிழிக்கும் விதமாக உரிய நபர்களிடம் இதைப் பற்றி எடுத்துச் ச�ொல்லலாம். ‘என்னைப் பற்றிய வதந்தி பரவுகிறதே’ என அழுது அங்கலாய்ப்பதுதான், அதை பரப்பிய�ோரின் முதல் வெற்றி.

வதந்தி நம் காதுகளை வந்தடையும்போது சென் தத்துவம் ச�ொல்லும் மூன்று கேள்விகளை அதைக் க�ொண்டுவருவ�ோர்க்கு வைக்கலாம். ‘நீங்கள் ச�ொல்வது முற்றிலும் உண்மையான செய்தியா? நீங்கள் ச�ொல்வது அவசியமான விசயமா? நீங்கள் ச�ொல்வது நன்மை பயப்பதா?’

என்பதே அந்த மூன்று கேள்விகள். இதைதான் வள்ளுவர் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று ச�ொல்லியிருக்கிறார். ‘ஏய்….சேதி கேட்டியா’ என்று யாராவது த�ொடங்கினாலே, நாக்கைத் த�ொங்கவிட்டு கேட்கும் நபர்கள் உள்ளவரை காதல் வதந்திகள் வாழ்வாங்கு வாழும் என்பதை உணர்வோம். ஒரு செய்தி உண்மை என்று தெரிந்தால் அதைப் பற்றி உரிய நபரிடம் மட்டும் எடுத்துரைத்து விளக்கம் கேட்போம். அதை எல்லாருக்கும் ச�ொல்லி செய்தி பரப்பும் ‘அகில இந்திய வான�ொலி’யாக மாற வேண்டும் என்ற தவறான ஆவலை தவிர்ப்போம்.

‘உயரிய சிந்தனையுடைய�ோர் கருத்துக்களைப் பற்றி உரையாடுவர்; சராசரி மனிதர்கள் நிகழ்வுகளைக் குறித்து பேசுவர்; சிறிய மனிதர்களே மற்ற மனிதர்களைப் பற்றி பேசுவர்.’ சிந்தனைக்கு: 1. யாராவது என்னிடம் காதல் வதந்திகள் பேசினால் அது முற்றிலும் உண்மை என்று நம்புகின்றேனா? ஆம்/இல்லை. 2. வதந்தியால் பாதிக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேனா? ஆம்/இல்லை. 3. இதழ்கள் தரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வதந்திகளை விரும்பி படிக்கின்றேனா? அதைப் பற்றி பிறரிடம் பேசுகின்றேனா? ஆம்/இல்லை. 4. காதல் வதந்திகளைப் பரப்பி யாராவது ஒரு பெண்ணின் அல்லது ஆணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளேனா? ஆம்/இல்லை. 5. என் நண்பர்களிடம் பேசும்போது பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேட்பதிலும், பேசுவதிலும் ஆர்வம் காட்டுகின்றேனா? ஆம்/இல்லை. பெரும்பாலான வினாக்களுக்குத் தங்களின் மறும�ொழி ‘ஆம்’ என்றிருப்பின் உம் வாழ்வை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.



பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.



35


நீ இளைஞன்! அது ப�ோதும்! - 07

சூ. ம. ஜெயசீலன்

 ! என் இனிய இளைஞனே! ஆண்மையின் அழகியலை, பெண்மையின் கவிதையை உணரும் பருவம் இது. விரிந்த சிறகுடன் பறக்க நினைப்பதும், அச்சம் உடைத்து எல்லை கடப்பதும் உன்னை நீயே விரும்பி ரசிப்பதுமான காலம் இது. உறவுடன் பலர் உடன் வருவதும் உடன்படுபவரை நட்புக்குள் இணைப்பதும் தனித்துவம் சூழ்கொள்ள முத்திரைப் பதிப்பதுமான வயது இது. யார் பக்கம் நீ?! உன் பக்கம் யார்!? என்னும் வினாக்குறியும் வியப்புக்குறியும் உன்னைத் தூங்கவிடாத நாட்கள் இந்த வயதில் அதிகம் உண்டு. நம்பிக் கெடுகிறவர்களை, நம்பாமல் விலகுபவர்களை நீ சந்திக்கவும் சிந்திக்கவும் வாய்ப்புகள் உனக்கு நிறைய உண்டு. 36



பூனை வீடு தங்கும் நாய் உறவு தங்கும்.

ஒவ்வொருவரிடமும் வெளிப்படும் அன்பு ப�ோர்த்திய வார்த்தையைப் புரிந்துக�ொள்வது உனக்கு முன்னே சுவாசித்துச் சென்றவர்களுக்குக் கைவரவில்லை. நீயும் அதில் விதிவிலக்கில்லை. அருகில் சென்று அணுகினால் புல்லின் நுனியையும், புயலின் துணிவையும் துல்லியமாக அறிய இயலும் என்பது யதார்த்தம். எட்டி நின்றால் நவீன ஓவியங்களை புரிய முடியும் என்பது அனுபவம். ஹிர�ோஷிமா ஏற்படுத்திய ஆக்ஸிஜன்

நகரில் அணுகுண்டு உயரிய வெப்பம், இல்லாமை, கதிர்வீச்சு




ப�ோன்றவற்றால் இறந்தவர்களுக்கான அமைதி அரங்கு உள்ளது. வட்ட வடிவிலான அந்த அரங்கு காலச் சுவடுகளை வாசிக்க வைத்தபடி கீழ் ந�ோக்கி மைய அரங்கிற்குள் உன்னை அழைத்துச் செல்கிறது. அணுகுண்டு வீசப்பட்ட நாளின் பாதிப்புகளை மையத்தில் இருக்கும் சுற்றுச் சுவரில் நீ பார்க்கிறாய். எல்லாம் ஒரே வண்ணத்தில் இருப்பதால் உனக்கு அவை புலப்பட வாய்ப்பில்லை. சற்றுத் தள்ளி நின்று பார், கண்ணீர் திரையிடாத கண்ணில்லை. அன்பும் அப்படியே! எப்படிச் ச�ொன்னாலும் அன்பு அழகாய் இருப்பதால் நீ தள்ளி நின்று பார்க்கத் த�ொடங்கினால் ஒவ்வொருவரும் உன்னிடம் காட்டுவதும் மற்றவர்களிடம் நீ வெளிப்படுத்துவதும் வெள்ளை அன்பா (White Love) அல்லது இருண்ட அன்பா (Dark Love) என்பது தெளிவுபடும். “அது என்ன வெள்ளை அன்பு, இருண்ட அன்பு?” என் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் ராஜனின் (பெயர் மாற்றியுள்ளேன்) நெருங்கிய நட்புக் குழு பற்றி நான் க�ொஞ்சம் அறிவேன். ஐந்து பேரை உள்ளடக்கிய குழு அது. பாலினம், வயது, மதம், சாதி சார்ந்த வேறுபாடுகளைக் கடந்த அந்த நட்புக் குழு, கல்லூரியில் முகிழ்த்தது. ஐந்து பேருமே இருபத்தைந்து வயதைக் கடந்தவர்கள். இவர்களின் மகிழ்ச்சி, துயரம், சுற்றுலா என எதுவும் இந்த நண்பர்கள் இன்றி நடந்தேறியதில்லை. இந்த நட்பு பலருக்கும் தெரிந்திருந்ததால் தவறான பார்வையை சமூகம் இவர்கள் மீது ப�ோர்த்தியதில்லை.

வெள்ளை அன்பு, தான் நேசிக்கும் ஒவ்வொருவரையும் புரிந்துக�ொள்ளும்; கட்டாயப்படுத்தாது; தன் கருத்தை வலிந்து திணிக்காது; ஒருநாள் அதிகாலை வாட்சப்பில் ராஜன் என்னை அழைத்தார். மனதில் மகிழ்வில்லை என்பதை குரல் உணர்த்தியது. வடிந்த கண்ணீரின் இடைவெளியில் வார்த்தையும் வடிந்தது. இரவு முழுவதும் உறங்கவில்லை; நிலவு கடந்தும் உறக்கமில்லை என்றார். என்னதான் நிகழ்ந்தது? ஐந்து பேரில் ஒருவரான விமல் (பெயர் மாற்றியுள்ளேன்) ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்புவதாகச் ச�ொல்லியிருக்கிறார். விமலைவிட அந்தப் பெண் ஏறக்குறைய எட்டு வயது பெரியவர். இதைத் தாண்டி இன்னும் பல காரணங்கள் இந்த எண்ணம் தவறென்று உணர்த்த இருக்கிறது. இருப்பினும் த�ொழில் செய்து ப�ொறுப்புடன் வாழ்ந்து வரும் விமல்

இருண்ட அன்பை விரும்புகிறவர்களால் வெள்ளை அன்புக்குரியவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள்.



ப�ொய்யான நண்பனைவிடத் தெரிந்த பகைவன் மேல்.



37


யார் பக்கம் நீ?! உன் பக்கம் யார்!? என்னும் வினாக்குறியும் வியப்புக்குறியும் உன்னைத் தூங்கவிடாத நாட்கள் இந்த வயதில் அதிகம் உண்டு. செவிமடுப்பதாக இல்லை. “தன் நண்பனின் வாழ்வு இப்படி வீணாகப் ப�ோகிறதே” என ச�ொல்லிச் ச�ொல்லி அழுதார் ராஜன். இங்கே ராஜன் வெளிப்படுத்தியது வெள்ளை அன்பு. தன்னல எதிர்பார்ப்பு சிறிதும் இன்றி அடுத்தவர் நலன் சார்ந்த அன்பு. வெள்ளை அன்பு எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் அவர்களுக்குரிய எல்லையை மதிக்கும். யாரிடமும் வெளிப்படுத்த விரும்பாத பக்கங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் என்பதை புரிந்துக�ொள்ளும். ‘பெங்களூர் நாட்கள்’ படம் பார்த்தாயா? ஒன்றுவிட்ட சக�ோதர சக�ோதரிகள் மூவர் சிறு வயது முதல் மிகவும் பாசத்துடன், குறும்புத்தனத்துடன், சிறந்த புரிதல் உடைய நண்பர்களாக இருக்கிறார்கள். மூவரும் பேசுகிற காட்சி ஒன்றில் ஸ்ரீ திவ்யா அமைதியாக இருக்கிறார். மற்ற இருவரும் “என்னாச்சு?” என்கிற கேள்வியையும் “தெரியவில்லை” என்னும் பதிலையும் உடல் ம�ொழி வழி பகிர்ந்து க�ொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எதிர்பார்க்காது. தன்னை விரும்புகிறவர்கள் தனக்காக அனைத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்காது. ஒருவரை உனக்குப் பிடிக்கவில்லை, ஆனாலும் பிடிப்பது ப�ோல் பழகுகிறாய் என்றால் அது இருண்ட அன்பு. ஒரு நிறுவனத்தில் நீ பணி செய்கிறாய். அதன் நிர்வாகி உன்னிடம் பேசும் விதம், பழகும் முறை எதுவும் பிடிக்கவில்லை. உன் எல்லைக்குள் அவரை நுழைய விடாத அதே வேளையில் அவரை மதிக்கிறாய் என்பது இருண்ட அன்பு. நன்றாகப் படிக்கும் ஒருவனுடன் பலரும் நட்பு பாராட்டுவதுண்டு. வகுப்பில் எடுத்த குறிப்புகளைத் தேர்வு நேரத்தில் கேட்டால் தருவது; சந்தேகம் கேட்டால் தெளிவுபடுத்துவது அல்லது பேராசிரியரிடம் அவனுக்கு இருக்கும் நல்ல பெயர் என எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். தாராளமாக செலவு செய்கிறவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், ஊர் சுற்றுகிறவர்கள், கலை அல்லது விளையாட்டுத் திறமை உள்ளவர்கள், பார்க்க அழகாக இருப்பவர்கள் என எல்லாரிடமும் ஓர் நட்பு வட்டம் இருந்து க�ொண்டே இருக்கிறது. ஏதாவது ஒரு

என்ன? ஏன்? என வலிந்து விசாரிப்பத�ோ, நண்பர்கள் என்பதால் அனைத்தையும் ச�ொல்ல வேண்டும் என நினைப்பத�ோ எதிர்பார்ப்பத�ோ கூடாது என்பதை காட்சியில் கவிதையாக்கி இருக்கிறார் இயக்குநர். ஆம், வெள்ளை அன்பின் வெளிப்பாடு அது. வெள்ளை அன்பு, தான் நேசிக்கும் ஒவ்வொருவரையும் புரிந்துக�ொள்ளும்; கட்டாயப்படுத்தாது; தன் கருத்தை வலிந்து திணிக்காது; தான் நினைப்பது ப�ோலவே தான் நேசிப்பவரும் நினைக்க வேண்டும் என 38



மருந்தும் மூன்று வேளை.




வகையில் தனக்குப் பயன்படுவார்கள் என்பதற்காக அன்பு காட்டும் இவை அனைத்தும் இருண்ட அன்பின் உதாரணங்களே! வெள்ளை அன்பையே எல்லாரும் பெரும்பாலும் தேடுகின்றோம். ஆனால் பல வேளைகளில் இருண்ட அன்பினால் புதைந்து ப�ோகின்றோம். இங்குதான் இயேசுவுக்கு ஒரு யூதாஸ், கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பிரபாகரனுக்கு ஒரு கருணா வெளிப்பட்டார்கள். இருண்ட அன்பை விரும்புகிறவர்களால் வெள்ளை அன்புக்குரியவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். வேஷங்களால் நேசங்கள் கலைக்கப்படுகின்றன. குர�ோதங்களுக்கும் விர�ோதங்களுக்கும் மத்தியில் வெள்ளை அன்புடையவர்கள் ப�ோராடுகிறார்கள். கடந்த ஆண்டு நகர்ப்புற விடலைப்பருவ மாணவர்களிடம் நேர்காணல் செய்தேன். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அவர்கள் அலைபேசியில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்? என்ன காரணத்திற்காக அதிகம் பயன்படுத்துகிறார்கள்? எவ்வளவு நேரம் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரம் செலவு செய்கிறார்கள்? ப�ோன்ற பல்வேறு கேள்விகள் அதில் இருந்தன. தினமும் அதிக நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள் என்பதுவும் மற்றவர்களுடன்



மலர்கள் பூத்தால் வசந்தம் த�ொடங்கும்.

உரையாடுவதற்கும் உறவாடுவதற்கும் மிகக் குறுகிய நேரமே ஒதுக்குகிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது. ஒரு மாணவன் “அலைபேசி என்பது என்னுடைய ஆன்மா” என்று குறிப்பிட்டான். எல்லாரிடமும் கடைசியாக ஒரு கேள்வி “இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது மற்றும் மற்றவர்களுடன் நேரடி த�ொடர்பில் அதிக நேரம் செலவிடுவது என்னும் இரண்டில் அதிக பயனுள்ளது என எதை நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அலைபேசியில் தங்கள் நேரத்தை முடக்குவதைவிட சக மனிதர்களுடன் நேரடியாக உரையாடுவதே மனதிற்கு நலம் பயக்கும் செயலாகும் என எல்லா மாணவர்களும் பதில் தந்தார்கள். ஆம், வெள்ளை அன்புக்குரியவர்கள் உனக்கு முக்கியம். வெள்ளை அன்புக்குரியவனாக நீயும் மற்றவர்களுக்கு முக்கியம். வெள்ளை அன்புடன் உன்னிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் எத்தனை பேரிடம் நீயும் அதே அன்பினைக் க�ொண்டிருக்கிறாய் என்பதும்தான் உன் வாழ்வின் வெகுமதி. உன் வெகுமதியை காத்திருக்கிறேன்.

அறிந்துக�ொள்ள



39


மருத்துவர் சி. அச�ோக்

காதல் ந�ோயும் மருந்தும் - 02

  மருத்துவர். “அப்படியா?”ன்னு கேட்டுக்கிட்டு மற்ற அறைகளைச் சுத்திப் பார்த்துக்கிட்டு வருகிறார். ஒரு 10 அறைகள் தள்ளி இன்னொருத்தனும், ‘லைலா…லைலா…’ன்னு கத்திக்கிட்டு இருக்கறத பார்க்கிறார். இப்ப அமைச்சர் உயர்த்திக்கிட்டு பார்க்கிறார்.

குழப்பத்தோட புருவத்தை மனநல மருத்துவரைப்

‘ஓ இவனா சார், இவன்தான் அந்த லைலாவைக் கட்டிக்கிட்டவன்’ என்றார். ர�ொம்பப் பேர் கேள்விப்பட்ட துணுக்காக இது இருந்தாலும் நல்லா ய�ோசிச்சி பார்த்தீங்கன்னா, ‘தனக்குக் கிடைக்காதவர்கள் மேல் இருக்கும் ஆசையும், ம�ோகமும் கிட்டியவுடன் அதுவே நாளடைவில் சலிப்பாக மாறிவிடுகிறது’ என்பது புரியும். வீடுகள்தோறும். வீதிகள்தோறும் இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கத்தானே செய்யுது! சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் ஒரு மனநல மருத்துவமனைக்கு ஆய்வு செய்யப் ப�ோனாரு. மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனி அறையில அடைச்சி வைச்சிருக்காங்க. அமைச்சர் அவர்களைப் பார்த்துக் க�ொண்டே வருகிறார். அப்ப ஒரு அறையில ‘லைலா… லைலா…’ன்னு ஒருத்தன் அழுது புலம்பிக்கிட்டே இருக்கறதப் பார்க்கிறாரு. “யாரு இவன்?” என மனநல மருத்துவரிடம் கேட்கிறார் அமைச்சர். “இவன் லைலான்னு ஒரு ப�ொண்ண லவ் பண்ணினான். அவ இவனுக்குக் கிடைக்கல. அந்த விரக்தியில இவனுக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டிடுச்சி” என்றார்

40



பதின்பருவம் என்கிற 13 முதல் 19 வயது வரை உள்ள காலம், மனச்சூறாவளி மையம் க�ொள்ளும் காலம்.

மலர்களைச் சேகரி ம�ொட்டுகளை விட்டுவிடு.




சரியான புரிதலையும், மன உறுதியையும் புகட்டி வளர்ப்பதன் மூலம்தான் குழந்தைகளின் வாழ்வை நெறிப்படுத்த முடியும். பள்ளிப் படிப்பில் இதன் நீட்சியாய் நடக்கும் உள்ளக் குமுறல்கள், நாளடைவில் வெறுப்பாக உருமாறி, ந�ோயாகப் பரிணமிக்கத்தானே செய்யுது… ‘ஆதலினால் காதல் செய்வீர்கள்’ தம்பதிகளாய் இருந்தாலும் அதுதானே எதார்த்தம்… அப்படி என்றால் நாம் எங்கே சறுக்குகிற�ோம்? அந்த ஆழத்தின் முடிவை சரியாகக் கணித்திட்டால் காதலினால் சுமை இருக்காது சுமை தரும் அழுத்தத்தால் ந�ோய் வராது. காதலும் சுகமான சுமையாய்தான் இருக்கும். விடலைப் பருவத்தில் அரும்பும் மீசையுடன். துடிதுடிக்கும் கண்களுடன் இருக்கும் ஒருவன், குறுகுறு பார்வையுடன், துருதுருவெனத் திமிறி எழும் ஒய்யாரங்கள் துள்ளத்துள்ள, இதழ் சுளித்துக் கடந்து ப�ோகும் ஓராயிரம் பேரிடம் தன்னைத் த�ொலைக்கிறான், காதல் க�ொள்ளத் துடிக்கிறான். தன்னை மறந்து, தன் இலக்கை மறந்து. இது வெறும் இனக்கவர்ச்சியால், மனக்கிளர்ச்சியால், ஹார்மோன்களால் பிறக்கும் காதல் என்பதை அறியாமலிருக்கின்றனர். இந்த நேரத்தில்தான் பெற்றோர், உற்றார், ஆசிரியர்களின் அரவணைப்பும், ஆல�ோசனையும் தேவை. அது கிடைக்காமல் ப�ோனால் இவர்கள் பிஞ்சியிலேயே பழுத்து விடுகிறார்கள் (அ) பிஞ்சியிலேயே வெம்பி விடுகிறார்கள். கவனமாக அவர்களைக் கவனிக்காவிடில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்கிறது இந்திய அரசின் சமூக நலத்துறை வெளியிட்டிருக்கும் ஒரு தகவல்.



மலர்களைத் தேடினால் மலர்களைக் காண்பான்.

பதின்பருவம் என்கிற 13 முதல் 19 வயது வரை உள்ள காலம், மனச்சூறாவளி மையம் க�ொள்ளும் காலம். இந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் மனமாற்றங்களைத் துல்லியமாய்க் கணிப்பதுதான் பெற்றோர், உற்றார், ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் ப�ோகும் கட்டாயத்தில், தனிக் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், ச�ோஷியல் மீடியா, ஆக்டோபசாக மக்களை விழுங்கும் நிலையில் வேலியிட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர். சரியான புரிதலையும், மன உறுதியையும் புகட்டி வளர்ப்பதன் மூலம்தான் குழந்தைகளின் வாழ்வை நெறிப்படுத்த முடியும். பள்ளிப் படிப்பில் இந்திய வரலாற்றை, அதன் பண்பாட்டைச் ச�ொல்லிக் க�ொடுப்பதும், அன்றாட உலக நடப்பை நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துக்கொள்ள வைப்பதும் இளைய�ோர் நெறிபிறழாமல் வாழ வழி செய்யும். காதல் இனிப்பானதுமன்று, கசப்பானதுமன்று. பெரியவர்கள் ச�ொன்னது ப�ோல் பருவத்தே பயிர் செய்தால் அறுவடையில் ஏமாற்றம் இருக்காது.



41


வாசகர் குரல் முனைவர். எம். பிரபு, கீழஈரால்.

‘அரும்பு’ பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட ‘கனிவும் அன்பும்’ - த�ொன் ப�ோஸ்கோ கல்வி முறை என்ற புத்தகத்தைப் படித்தேன். இப்புத்தகம் ஆசிரியராகிய எனக்கு, மாணவர்களை எவ்வாறு புரிந்துக�ொள்ள வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பதைத் தெளிவாக்கியது. இந்தப் புத்தகம் எனக்குக் கற்பிக்கும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. உடனிருத்தல் கல்விமுறைதான் இக்கால நடைமுறைக்கு ஏற்புடையதாகும். மாணவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கிடச் சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருவதே இக்கல்வி முறையாகும். இக்கல்வி முறைக்கு அடித்தளமாகவும் தாங்குகின்ற தூண்களாகவும் இருப்பவை புரிந்துணர்வு, இறையுணர்வு மற்றும் நட்புணர்வு ஆகும் என்பதை இந்நூல் வழியாக புரிந்து க�ொண்டேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை எவ்வாறு த�ொன் ப�ோஸ்கோவே தேடிச் சென்றார், அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு நல்கி எப்படி அவர்களை நல்வழிப்படுத்தினார், அவர்களுக்கு இறையன்பையும், சமூக உணர்வையும் ஊட்ட என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டார், தனது நற்செயல்கள் மூலம் எவ்வகையில் அவர்களுக்குள் நற்பண்புகளை வளர்த்தார், எப்படி ஒரு நல்ல ஆசிரியராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் அவர்களுடன் இருந்தார் ப�ோன்ற தகவல்களை இந்நூல் வழியாக அறிந்து க�ொண்டேன். ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் க�ொடுக்கும்போது, மாணவர்களைத் தேர்வில் வெற்றிப் பெறச் செய்வதற்குரிய ந�ோக்கில் மட்டுமன்றி, அவர்களது எதிர்கால வாழ்க்கையினை அவர்களே அமைத்துக் க�ொள்ளவும், அவர்களை நற்பண்புடையவர்களாகவும், சிறந்த ஆற்றல் மிக்கவர்களாகவும் இருக்க த�ொன் ப�ோஸ்கோவின் கல்விமுறை உதவுகின்றது. ஆசிரியர்கள் கற்றுக் க�ொடுப்பதை மட்டும் தனது கடமையாக எண்ணக்கூடாது. வாய்ப்புக் கிடைக்கும் ப�ோதெல்லாம் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களது எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் தங்களைச் சந்திக்கும் வாய்ப்பினை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும். மாணவர்களும் தங்களது ஐயங்களைத் தெளிவுப்படுத்திக் க�ொள்ளவும், 42



முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து.

தங்களது எண்ணங்களுக்குத் தேவையான ஆல�ோசனைகளைப் பெற்றுக் க�ொள்ளவும் ஆசிரியர்களைச் சந்திக்கும் பழக்கத்தைக் க�ொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்களும் ஒரு திறந்த புத்தகமாய் செயல்பட வேண்டும் என்பன ப�ோன்ற பல கருத்துகள் இந்நூலில் ப�ொதிந்து கிடக்கின்றன. “ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உண்மையுடன் கூடிய இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே கல்வி கற்பித்தல் சாத்தியமாகும்” என்ற த�ொன் ப�ோஸ்கோவின் கூற்று என்னை மிகவும் த�ொட்டது. இக்கால மாணவர்களை ஓர் ஆசிரியர் என்ற முறையில் எப்படி வழிநடந்த வேண்டும் என்பதை இந்நூல் எனக்குக் கற்றுத் தந்தது.




NEW RELEASE

கல்வி நிறுவனங்கள், ஆலய அமைப்புகள், ப�ொதுப்பணித்துறை மையங்கள் ப�ோன்ற அமைப்புகளில்… அறிவுரை வழங்க அச்சமா? காலை உரையாற்ற கலக்கமா? மாலையுரை வழங்க மயக்கமா? ஆலய நிகழ்வா? ஆண்டு விழாவா? ஆசிரியர்-பெற்றோர்-பணியாளர்பயனாளர் கூட்டங்களா? உடனடி உதவிக்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய அருமையான நூல்

கனிவும் அன்பும்.

தங்களின் மேற்பார்வையில் உள்ளவர்களைச் சூழலுக்கும் பருவத்திற்கும் பணிக்கும் ஏற்றவாறு த�ொன் ப�ோஸ்கோவின் கனிவான, அன்பான வழியில் கையாள்வது எப்படி என்பதை உலகியல் நடப்புகள�ோடு விளக்கும் அருமையான நூல்

கனிவும் அன்பும். 3 பெரும் பிரிவுகளில், 12 தலைப்புகளின்கீழ், த�ொன் ப�ோஸ்கோவின் 200 மேற்கோள்களை 40 விரிவுரையாளர்கள், 400க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் க�ொண்டு விளக்கியுள்ள 274 பக்கங்கள் க�ொண்ட நூல்

கனிவும் அன்பும்.

கனிவும் அன்பும்

________________________________ ______

In English With Gentleness and Kindness (Rs.180)

த�ொடர்புக்கு: அரும்பு பதிப்பகம், 26/17, ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 10. 044 2661 2138/40 94447 99942

முட்டாள்களின்   2018

உணவு முகத்துதியே.



43


Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/477/2018-2020 TN/PMG(CCR)/WPP-400/2018-2020. Registrar of Newspapers for India. 11807/66. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 24.04.2018

www.arumbupublications.in

 . 

If undelivered, kindly return to:

44 44

 

26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010.

 


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.