01
2018 2018
01
வாழ்த்துகின்றோம்! திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சிண்டிகேட் (ஆட்சி மன்றக் குழு) உறுப்பினராகப் ப�ொறுப்பேற்கும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னியல்) முதல்வர் அருட்பணியாளர் டி. மரிய அந்தோனிராஜ், ச.ச. அவர்களுக்கு அரும்பு இதழின் அன்பு வாழ்த்துகள்! • • • • • • • • • •
வணிகத்துறை வரலாற்றில் வளம் சேர்த்து, விடுதிக்காப்பாளராய் இளைய�ோர் இதயத் தாழ்ப்பாளைத் திறந்து சீரமைத்து, துணைமுதல்வர் ப�ொறுப்பில் இணையற்ற முத்திரை பதித்து, தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையத்து நாணயத்தின் தூணாகி, தூய நெஞ்சக் கல்லூரி முதல்வராய், ஆய கலை பயிற்றும் ஆசான்கள், அலுவலர், பணியாளர் அனைவர்க்கும் பாசமடை திறக்கும் பரிவான தலைவராய், அன்பில் பெண்பாலாய், அறிவில் முப்பாலாய், கனிவில் பிரான்சிஸ்கு சலேசியராய், துணிவில் கீரனாய் துறவில் புத்தராய், உறவில் ப�ோஸ்கோவாய், முக்தியில் மரியாவாய், பக்தியில் பதுவை அந்தோனியாய், ஆளுமையில் அரசனாய், த�ோழமையில் இயேசுவாய்த் திகழும் மரிய அந்தோனிராஜ் அடிகளே!
வாழ்க நீ எம் கண்ணில்! வளர்க நின் பணிகள் இம்மண்ணில்!
02
2018
இதழ் 02
மலர் 61
பிப்ரவரி 2018
ப�ொறுப்பாசிரியர்கள் முதன்மை ஆசிரியர்
அருள்திரு. முனைவர். ஆசிரியர்
ஆ. சிலுவை முத்து, ச.ச.
ஜான் கென்னடி.
05
இணை ஆசிரியர்
பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு
அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு
அருள் ர�ோசா, அன்பின் அமலன், சுடர்மணி, சூ.ம. ஜெயசீலன், பால்ராஜ் அமல், பிரியசகி, ஜவஹர். பிழைத்திருத்தம்
குடந்தை சீ. இராசரத்தினம்.
21 39
வடிவமைப்பு
சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை
சு. ஸ்டீபன் ராஜ். அஞ்சல்
வெ. ஆர�ோக்கிய செல்வி.
35
விற்பனை மேலாளர்
10
ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம்
தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்
ரூ. 15 ரூ. 150 ரூ. 300
முழுப்பக்கம் அரைப்பக்கம் கால்பக்கம் பின்அட்டை உள்அட்டை நடுப்பக்கம்
ரூ. ரூ. ரூ. ரூ. ரூ. ரூ.
விளம்பரக் கட்டணம்
6000 3000 1500 12,000 10,000 10,000
அரும்பு இதழில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி:
26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 2661 2138/40 94447 99942 arumbu4young@gmail.com www.arumbupublications.in
2018
04 05 10 13 17 21 26 28 31 35 37 39
காதலும் கடவுளும் அறிவியல் அழுகை!! நிர்வாகத் தயாரிப்பாளர் உள்ளங்கையில் உலகம் குரங்குகளும் குல்லாய்களும் மானிடக் காதலுக்கு மனசாட்சி உண்டா? மது உள்ளே ப�ோனால் உண்மை வெளியே வரும் நட்சத்திரங்களும் நன்னடத்தையும்! நவீனமான காதல்...இலக்கு?! தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் காதல் ந�ோயும் மருந்தும் தருதலும்... பெறுதலும்...
Printed and Published by Rev. Fr. JOHN KENNEDY, on behalf of Salesian Publishing Society, 45. Landons Road, Kilpauk, Chennai 600 010. Printed at VELLANKANNI PRINTERS, No. 53, Dr. Besant Road, Royapettah, Chennai - 600 014. Editor: Rev. Fr. JOHN KENNEDY.
03 வழிகாட்டும் ஏவுகணைகளையும் வழிதவறும் மனிதர்களையும் படைக்கின்றது அறிவியல். (மார்ட்டின் லூதர் கிங்)
காதலும் கடவுளும் த�ொல்காப்பியர் உயிர்களை அறிவின் அடிப்படையில் ஆறாகப் பிரித்தார். மனிதரை ‘மனம்’ என்ற ஆறாம் அறிவினர் என்றார். உயிர்கள் உடலைச் சார்ந்தவை என்றும், உடல்கள் இன்பத்தைச் சார்ந்து வாழ்கின்றன என்றும் அவர் கருதினார். “எல்லாம் உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பது அவரது நூற்பா. ‘காதலிக்கத் தகுதியுள்ள, ஒத்த வயதுடைய ஆணும் பெண்ணும் இறைவனின் ஆணைப்படி ஒருவரை ஒருவர் பார்ப்பது காதல்’ என்றார் அவர். ‘தாம் திட்டமிட்டபடி, ஓர் ஆண் மகனும், ஒரு பெண் மகளும் சந்திக்கின்ற சூழலைக் கடவுள்தாம் முதலில் அமைத்துத் தருகின்றார்’ என்பது தமிழர் நம்பிக்கை. காதலரிடையே இருக்க வேண்டிய பத்துப் ப�ொருத்தங்களுள், ‘சாதி’ என்ற ப�ொருத்தம் த�ொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் சாதி அப்போது தமிழரிடையே இல்லை. “ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்பது, த�ொல்காப்பியர் காதல் விளைவுக்குத் தரும் விளக்கம். ‘காதலில் நண்பர்கள�ோ, த�ோழியர�ோ, பெற்றோர் பெரிய�ோர�ோ துணை ப�ோவதில்லை. ஒன்றி உயர்ந்த பாலான கடவுள் மட்டுமே துணை ப�ோகின்றார்’ என்றார் த�ொல்காப்பியர்.
ப�ோல், காதலில் கடவுள் சித்தம் திட்டவட்டமாக முன்குறித்துச் செயல்படுகின்றது. திருமணம் பற்றிய ஆரியக் க�ோட்பாடு வேறாக இருந்தது. திருமணத்தில் ஆண் ஆதிக்கமே க�ோல�ோச்சியது. ஆரியரின் எண்வகைத் திருமணங்களுள் ஏழு திருமணங்களில் க�ொஞ்சமும் வயது ப�ொருத்தமற்ற ஆணுக்கு, அழகான இளம் பெண் தாரைவார்த்துத் தரப்படும் ப�ோகப் ப�ொருளாகவே இருக்கின்றாள். தேவரும், மேல்சாதியினரும் காமவயப்பட்டு, மணந்து, காமம் தணிந்தபின் பிரிந்துப�ோவதை அவர்கள் ‘கந்தர்வ மணம்’ என்று பெரிதாகப் பேசினர். ஆரியர் தங்களின் சாதி, திருமணக் கலப்பால் கெடக்கூடாது என்பதற்காகக் காதலைப் பழித்தனர். காதலித்து ஓடிப்போகின்றவர்களை ‘ஓடுகாலிகள்’ என்று இழித்துரைத்துக் காதலைக் க�ொச்சைப்படுத்தினர். ஆனால் தமிழர�ோ, காதலர் ஓடிப்போவது, தமிழரின் ‘பண்பாட்டு மரபு’ என்று ப�ோற்றினர். காதல் காவியங்களான சங்க காலத்து 2000க்கும் மேற்பட்ட பாடல்கள், ஓடிப்போவது முதல் காதலரின் எல்லாச் செயல்பாடுகளையும் ப�ோற்றிப் பதிவு செய்கின்றன. தன் பாரம்பரிய உயர்ந்த பண்பாட்டை மறந்த இன்றைய தமிழன், ஆரிய அநாகரிகத்தைக் காப்பியடித்துக் காதலைப் பழிக்கின்றான். அதனால் அவன் கடவுளைப் பழிக்கின்றவன் ஆகின்றான். காதல் என்பது கடவுளின் ஆணை என்றார் த�ொல்காப்பியர். ஆரியத்தால் பித்தனான தமிழன், காதலரை ஆணவக் க�ொலை புரிகின்றான். இவனைக் கடவுள் எப்படி மன்னிப்பார்?
மாணிக்கவாசகர், காதலில் கடவுளின் செயலை ‘விளைவு’ என்றார். ‘வங்கக்கடலில் ப�ோடப்பட்ட முளைக்குச்சி (நேர்கழி) அரபிக்கடலில் ப�ோடப்பட்ட நுகத்தடியின் துளையில் சென்று ப�ொருந்திக் க�ொண்டது ப�ோல, ‘அந்த விளைவு’ என்னை அவள�ோடு சேர்த்து வைத்தது’ என்பது மணிவாசகரின் திருக்கோவையார் செய்தி.
அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச.
காதலில் கடவுளின் சித்தமானது படிப்பு, பணம், சாதி, ஆதிக்கம் ப�ோன்ற காரணிகளைப் பார்ப்பதில்லை. ‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என்று பாடப்படுவது
04 அவள் பார்வையை எதிர்கொள்வது தாக்கவரும் தேவதைகளின் சேனையை எதிர்கொள்வது ப�ோன்றது. (குறள்: 1082)
2018
ப�ொறிகளும் துளிகளும் – 6
என் இனிய தமிழக அறிவிலிகளே!
அன்பின் அமலன் அன்பு வாசகரே… வணக்கம்! இந்த மாதிரி ஓர் ஆற்றுப்படுத்தும் மையத்தை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…! ஆன்மீக அரசியல், கலை, ஊடகம், த�ொழில், கல்வி, சட்டம், விளையாட்டு...
2018
அப்பாவியின் ஆற்றுப்படுத்தும் அறையே அட்டகாசமாக இருந்தது! அறை முழுவதும் வித்தியாசமான பல அறிவியல் உபகரணங்கள். அறிவியல் ஆய்வுக்கூடம் மாதிரி இருந்தது. இதெல்லாம் எதுக்கு? (ப�ோக… ப�ோக… மன்னிக்கவும் படிக்க… படிக்க… தெரிஞ்சுக்குவீங்க) காலை மணி பத்து; அழைப்பு மணி ஒலிக்கிறது. அப்பாவியே கதவைத் திறக்கிறார். கையில் மணிப்பர்சோடு ஒருவர் நிற்கிறார்.
05 என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் செய்வதே ஆய்வு. (வேர்னர் வ�ோன்)
ஒருவர்: டாக்டரப் பார்க்கணும்.
அப்பாவி: காசு தர்ரேன்னு ஏமாத்திட்டாங்களா?
அப்பாவி: இங்க இருக்கிற டாக்டர் கடவுள் மாதிரி. உள்ளேயும் இருப்பார். வெளியேயும் இருப்பார். மேஜைக்கு அருகிலும் இருப்பார். கதவுக்குப் பக்கத்திலும் இருப்பார்.
ஒருவர்: ஆமாங்க... டாக்டர். இங்க பாருங்க... (பர்சை திறக்கிறார்) இருபது ரூபா தாளுங்க. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பணம் தர்ரேன்னு ச�ொன்னாங்க. இப்ப இழுத்தடிக்கிறாங்க.
ஒருவர்: எனக்குப் புரியல. த�ொகுதியில் இருந்து வர்ரேன்.
அப்பாவி: சரி… பிரச்சனையின் முகத்தை ச�ொல்லுங்க.
நான்
ஆர்.கே.
இன்னொரு
அப்பாவி: (நமட்டுப் புன்னகையுடன்) ஆகா... எனக்குப் புரிஞ்சு ப�ோச்சே... வாங்க உள்ளே.
ஒருவர்: இப்பவெல்லாம்… எந்த ரூபா ந�ோட்டைப் பாத்தாலும் 20 ரூபா ந�ோட்டா தெரியுதுங்க...
(ஆற்றுப்படுத்துநர் அமர்கிறார்)
அப்பாவி: (ரூபாய் வடிவில் வெட்டப்பட்ட வெள்ளைத் தாளை நீட்டுகிறார்) இதப் பாருங்க... எப்படி தெரியுது…?
இருக்கையில்
அப்பாவி
அப்பாவி: உட்காருங்க… ஒருவர்: இல்லிங்க... நான் டாக்டரைப் பார்க்க வந்தேன். (உள் அறைக்குள் இருந்து அம்மாயியின் கிண்டல் சிரிப்பொலி கேட்கிறது)
த�ொகுதியில் உண்மையான பேயே ப�ோட்டியிட்டாலும் ‘பணப் பரிவர்த்தனம்’ இருந்தா மட்டுந்தான் ஜெயிக்க முடியும். யாருங்க அது? ப�ோகலாமாங்க?
டாக்டர்
அம்மாவா?
உள்ள
அப்பாவி: உள்ளே ப�ோகணும்... பணத்துக்கு ஓட்டுப் ப�ோட்ட உன் த�ொகுதியே உள்ள ப�ோகணும். ஒருவர்: (உணர்ச்சிவசப்பட்டு) டாக்டர்… எப்படிங்க என் மனப் பிரச்சனையைக் கண்டுபிடிச்சீங்க… அப்பாவி: இஃது உன் பிரச்சனை மட்டும் இல்ல. இந்த ஜனநாயகத்தின் பிரச்சனை. சரி... நம்ம சிகிச்சையை ஆரம்பிக்கலாம். முதல்ல… உங்க பிரச்சனையின் ஒரு முகத்தை விளக்கிச் ச�ொல்லுங்க… ஒருவர்: முகத்துல கரி பூசிட்டாங்க.
ஒருவர்: டாக்டர்… இருபது ரூபா… நீங்களுமா ஏமாந்திட்டிங்க…. அப்பாவி: அடப்பாவிகளா… உனக்கு இரு(ப்)பது மனந�ோய் இல்ல பணந�ோய். இதுக்குப் பேரு ‘ரூபா மேனியா.’ ஒருவர்: ரூபா மேனியாண்ட கிடைக்குங்களாங்க…
ப�ோனா
பணம்
அப்பாவி: உன் பண ந�ோய்க்கு இப்ப சிகிச்சை தர்ரேன். (ஒரு பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் அமர வைக்கிறார், மின்விசை பட்டனை அழுத்த… குடுவை சுழல்கிறது) ஒருவர்: டாக்டர்… ஒரே சப்தமா இருக்கு. அப்பாவி: வெரி குட். இஃது ஒரு நவீன அறிவியல் யுக்தி. ஏமாற்ற உணர்வை சப்தங்கள் சரி செய்யும் என்பது ஒரு சிறப்புத் தெரபி. (டக்... டக்… சப்தம் கேட்கிறது) ஒருவர்: (குடுவைக்குள் இருந்தவர் வெளியில் வருகிறார்) டாக்டர்… ர�ொம்ப நன்றிங்க. அப்பாவி: இப்ப உங்க மனநிலை எப்படி இருக்கு? எது மாதிரி சப்தத்தைக் கேட்டிங்க…? ஒருவர்: டாக்டர்... ரூபா ந�ோட்டை அச்சடிக்கிற சப்தம் மாதிரியே கேட்டுச்சு. (மீண்டும் உள்அறையில் சிரிப்பொலி) அப்பாவி: ம�ொத்தம் மூணு சிட்டிங். முதல் சிட்டிங் முடிஞ்சுப் ப�ோச்சு.
06 எமன�ோ? கண்ணோ? பெண்மான�ோ? அவள் பார்வையில் மூன்றும் தெரிகின்றதே. (குறள்: 1085)
2018
ஒருவர்: நன்றிங்க. அடுத்த மாதம் வர்ரேன். இந்தாங்க பீஸ். (அதே… ஆர்.கே. நகர் இருபது ரூபா ட�ோக்கனைத் தருகிறார், அடுத்து சினிமா நடிகர் கலைவேந்தன் அப்பாவியிடம் வருகிறார். கலை: என் உயிரினும் மேலான மருத்துவர் அவர்களே… கண்ணுக்குத் தெரியாத நர்ஸ் அவர்களே… இந்த மையத்திற்கு வருகை தர இருக்கின்ற எண்ணற்ற ரசிகர்களே! வாக்காளர்களே! அப்பாவி: ப�ோதும். யாரு நீங்க? கலை: சினிமா நடிகன். ‘பேய் வீடு’ படத்துல ஹீர�ோ நான்தான். அப்பாவி: என்ன வேடம்? கலை: பேய்தான்! (பேய் வேடப் ப�ோட்டோவைக் காட்டுகிறார்) அப்பாவி: பயமா இருக்கு. உங்க பிரச்சனை என்ன? கலை: நான் பிறந்ததே பிரச்சனைத்தான். எங்க அப்பா பேய், அம்மா பேய் இருவருக்கும் பிறந்த ஒரே மகன் பேய் நான்தான்.
அப்பாவி: ய�ோவ்… சினிமா கதையை நான் கேட்கல. உங்க வாழ்க்கைப் பிரச்சனையைக் கேட்கிறேன்.
நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் முதலமைச்சர் ஆக முடியல… ஒரு விவசாயி முதலமைச்சர் ஆக முடியல... ஒரு சட்ட வல்லுநர் முதலமைச்சர் ஆக முடியல... எத்தனைய�ோ ‘நல்லவர்கள்’ முதலமைச்சர் பதவிக்கு வர முடியல... கலை: பிரச்சனை இல்லை. என் இலக்கு, ஆசை, விருப்பம், குறிக்கோள், இலட்சியம் ஒன்றுதான். அப்பாவி: (மனசுக்குள்) 100 ஏக்கர் நிலத்துல ச�ொந்தமா... சுடுகாடு வேண்டுமா? கலை: நான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரா வரணும். கட்சி ஆரம்பிக்கணும், வருகின்ற தேர்தலில், தமிழகத்தின் எல்லா சுடுகாட்டிலும்... சாரி... த�ொகுதிகளிலும் ப�ோட்டியிடணும். அப்பாவி: உங்களுக்கு வந்திருப்பது ‘ஆசன மேனியா.’ அதாவது பதவி நாற்காலி ந�ோய். கலை: நான் நடிச்ச ‘பேய் வீடு’ நூறு நாள் ஓடிச்சு. அடுத்த படம் ‘சாத்தானின் சபதம்’ நல்லா ஓடும். அப்புறம் பாருங்க. எனக்கு ரசிகர்கள்... மன்றங்கள்... பத்திரிகைகள்... மீடியா… அரசியலுக்கு வான்னு என்னை அழைக்கும் சில வேகாத பருப்பு அரசியல்வாதிகள்..! ஹா... ஹா… (பேய் சிரிப்பு) அப்பாவி: ர�ொம்ப ஸ்டைலா சிரிக்கிறீங்க. ஒரே படத்துல நடிச்சிட்டு இவ்வளவு பெரிய ஆசையை வச்சிருக்கீங்க… கலை: நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் முதலமைச்சர் ஆக முடியல… ஒரு விவசாயி முதலமைச்சர் ஆக முடியல... ஒரு சட்ட வல்லுநர் முதலமைச்சர் ஆக முடியல... எத்தனைய�ோ ‘நல்லவர்கள்’ முதலமைச்சர் பதவிக்கு வர முடியல... சினிமாக்காரன் மட்டுந்தான் வர முடியும். சரி டாக்டர்… என் ஆசை நிறைவேற ஏதாவது ஆல�ோசனை…
2018
07 முறைப்படுத்தப்பட்ட அறிவே அறிவியல்; நெறிப்படுத்தப்பட்ட வாழ்வே ஞானம். (இம்மானுவேல் கான்ட்)
அப்பாவி: நடைமுறைத் தீர்வை உமக்குச் ச�ொல்கிறேன். என்ன செய்விய�ோ, ஏது செய்விய�ோ… முதல்ல க�ோடிக்கணக்கான பணத்தைச் சேர்க்கப் பாரு. நேரிடையாவே தேர்தல் வியாபாரம் பண்ணலாம். த�ொகுதியில் உண்மையான பேயே ப�ோட்டியிட்டாலும் ‘பணப் பரிவர்த்தனம்’ இருந்தா மட்டுந்தான் ஜெயிக்க முடியும். கலை: அப்ப… வருங்காலத்துல பணம்தான் பதவியைத் தீர்மானிக்குமா? ர�ொம்ப நன்றி… இனி... பணமே தேர்தல், பணமே வெற்றி, பணமே பதவி… இந்தாங்க டாக்டர் பீஸ். (‘பேய் வீடு’ திரைப்படத்தின் 5 முன்பதிவு டிக்கெட்டுகளைத் தந்துவிட்டு கலை எஸ்கேப்) அப்பாவியின் கற்பனையில் கேட்கிறது... “வருங்கால முதலமைச்சர் ‘பேய் வேந்தன்’ வாழ்க! ஓர் ஓட்டுக்கு 30 ஆயிரம் வழங்கிய க�ொடை வள்ளல் வாழ்க! தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் ட�ோக்கன் ரூபாய் 15 ஆயிரம் தந்த அரசியல் தீர்க்கத்தரிசியே வாழ்க…” “கேளுங்கள் க�ொடுக்கப்படும்” இது கண்ணுக்குத் தெரியாத தெய்வம். “கேட்காமலே க�ொடுக்கப்படும்” இது கண்ணுக்குத் தெரியும் அரசியல் தெய்வம். (அம்மாயி உள்ளிருந்து வர, அப்பாவியின் பார்வை நேரம் முடிகிறது) (மல்லிகைப் பூ மணமணக்க… மிஸ். கனகா வருகிறார்.) கனகா: வணக்கம் மேடம். க�ோடம்பாக்கத்தில் இருந்து வர்றேன். அம்மாயி: ர�ொம்ப சந்தோசம்… மகிழ்ச்சி. கனகா: மேடம் டாக்டர்! நீங்க மகிழ்ச்சியா இருங்கீங்க, நான் இருக்கேனா? அம்மாயி: கவலப்படாதம்மா கனகா. உன் பிரச்சனை என்ன? கனகா: என் உடம்புதாங்க! அம்மாயி: உடம்புக்கு என்ன பிரச்சனை? கனகா: உடம்பே பிரச்சனை.
’ உண்மைகளை ‘மட்டுமே ல், தேடும் ஆன்மீக அறிவிய தது! தமிழனைப் பார்த்து அழு
அம்மாயி: சரி… என்ன வேலை செய்றம்மா? கனகா: விபச்சாரம். அம்மாயி: (அதிர்ச்சியைக் காட்டிக் க�ொள்ளாமல்) இவ்வளவு தைரியமா பேசுற உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா? கனகா: என்னுடைய அப்பா, அம்மா யாரு? எப்படி இந்த விபச்சாரத் த�ொழிலுக்கு வந்தேன்…? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் ச�ொல்லி… ச�ொல்லி ப�ோரடிக்குது. அம்மாயி: எதுக்கு நீங்க இந்த மையத்திற்கு வந்தீங்க? கனகா: பெண்களை வெறும் ‘தசை’யாகவே சினிமா உலகம் பார்க்கிறது. பெண்களின் தசை, உடம்பு மட்டுமே மூலப் ப�ொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களை வைத்து விளம்பர வியாபாரம்! சினிமா வியாபாரம்! பாடல், ஆடல் வியாபாரம். அம்மாயி: பரவாயில்லையே... இன்றைய தமிழக வாழ்வு, தட்பவெப்ப நிலையை அறிஞ்சு வைத்திருக்கீங்க. உங்க தனிப்பட்ட மனநிலையில் ஏதும் பாதிப்புகளா? 08 பெருங்கண்ணுடைய பெண்ணே எமன் என்று கண்டு க�ொண்டேன். (குறள்: 1083)
2018
கனகா: விபச்சாரக் கூட்டுத் த�ொழிலில் செய்யப்படுவதில்லை. எனக்கோர் ஆசை.
‘விபச்சாரன்கள்’
கைது
அம்மாயி: ச�ொல்லும்மா. உதவத் தயார்…. முடியும்னா, அதுவும் கனகா: ஆன்மீக அரசியலை ஒருத்தர் படைக்க முடியும்னா, நானும் பெண்களை மூலதனமாக்கிய நடிகர்கள் படைக்க . படைக்கப் ப�ோறேன் ஓர் ஆன்மீக விபச்சாரத்தை அற்ற, அறம் நிறைந்த அம்மாயி: (திடுக்கிட்டு) நேர்மையான, ஊழல் ச�ொல்லல… நடிகர்கள் அரசியல்தான் ஆன்மீக அரசியல். இத நான் ச�ொல்றாங்க... அரசியலை வெறும் கனகா: அதைத்தான் நானும் ச�ொல்கிறேன். வெற்றியை வெறும் த�ொகுதி தேர்தலாக மட்டும் பார்த்து, ்சார வலிமையாகப் பணவிலையாகப் பார்த்து, புகழை வெறும் பிரச முடியும் என்றால், பார்த்து, ஒருவர் முதலமைச்சர் ஆக ஆசைப்பட அரசியலை ஒரு நடிகர் இந்தக் கலாச்சாரத்தை முறியடித்து, ஆன்மீக ்சாரத்தை நான் ஏன் படைக்க முடியும் என்றால், ஓர் ஆன்மீக விபச படைக்க முடியாது? றீங்க. அம்மாயி: நீங்க ர�ொம்ப குழம்பிப் ப�ோயி பேசு வில் அடிப்பட்ட நான் கனகா: ஆமா. க�ோடம்பாக்கத்து கலாச்சார சீரழி சினிமா உலகத்துல எப்படிங்க தெளிவாப் பேச முடியும்? பெண்கள், ணும், உறவுகளை தசையை விக்கணும், மான, மரியாதையை விக்க ன்.’ கருப்பு பணத்தின் விக்கணும். பகல்ல ‘அண்ணா,’ இரவில் ‘அத்தா அமைப்புகள் காட்சி மூலதனம் - அற மதிப்பீடுகளை தகர்க்கும் - ம�ோக நடனங்கள் பாடல் வரிகள் - இளமை துள்ளும் அசைவுகள் ற்ற சினிமா உலகில் - பெண்களின் தசை மேயும் கேமிராக்கள்… அறம சினிமா உலகத்தைப் இருந்து வந்த நடிகர்கள் முதலில் ஆன்மீக படைக்கட்டும். அப்புறம் அரசியலுக்கு வரலாம். து ஒரு சப்தம்) அம்மாயி: எனக்குப் புரியல… (வெளியில் இருந் ்கையிலிருந்து எழ, “எனக்குத் தெளிவா புரியுது” அம்மாயி இருக தள்ளாடியபடி உள்ளே அப்பாவி ஓடி வந்து பார்க்க, ஒரு குடி ந�ோயாளி . நுழைந்தார். வார்த்தைகள் மட்டும் தள்ளாடவில்லை மாத்து! ஆன்மீக “ஏ... டாக்டர் அப்பாவி... மையத்தின் ப�ோர்டை என்றால், அப்ப... அரசியல்னு ச�ொல்ற. அரசியல் ஒரு சாக்கடை மீக விபச்சாரமா? ஆன் ஆன்மீகச் சாக்கடையா? ஆன்மீகச் சினிமாவா? ஆன்மீகத் ஊழலா? ஆன்மீக வெறியா? ஜாதி ஆன்மீக தீவிரவாதமா…?” குவான் என்று நீ “ஆன்மீக அரசியலை ஒரு நடிகன் உருவாக் ப்பேன், “ஆன்மீகக் நம்பினால், என்னையும் நம்பு. நானும் படை குடிந�ோய்.” ளை ‘மட்டுமே’ தேடும் அடுத்த ந�ொடி, அழுகை சப்தம். உண்மைக தது! ஆன்மீக அறிவியல், தமிழனைப் பார்த்து அழு
2018
09 வினாக்களே விஞ்ஞானத்தின் வித்து. (தாமஸ் பேர்ஜர்)
திரைதரும் வேலை 11
ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்றால், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத் த�ொகுப்பாளர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர், வடிவமைப்பாளர், நடிகர்கள் ஆகிய�ோரைப் ப�ோல, இன்னொரு மிக முக்கியமான ப�ொறுப்பு உண்டு. ஒரு திரைப்படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டு முடிக்கப்படுவதற்கு இந்தப் ப�ொறுப்பு மிக அவசியம். இந்தப் ப�ொறுப்பால்தான் படத்தின் படப்பிடிப்பில் நேரும் பலவிதமான சிக்கல்கள் நல்ல முறையில் கையாளப்பட்டு, தீர்த்துவைக்கப்பட்டு, குறித்த நேரத்தில் எடுத்து முடிக்கப்படுவது சாத்தியப்படுகிறது. அந்தப் ப�ொறுப்பைப் பற்றிதான் இந்த மாதம் கவனிக்கப் ப�ோகிற�ோம்.
நிர்வாகத் தயாரிப்பாளர் (எக்ஸிகியூடிவ் புர�ொடியூசர்)
ஒரு படத்தின் கதையை இயக்குநர் தயாரிப்பாளரிடம் ச�ொல்கிறார். தயாரிப்பாளருக்குக் கதை பிடித்திருக்கிறது. படத்தைத் தயாரிக்க முடிவு செய்கிறார். ஒப்பந்தம் ப�ோடப்படுகிறது. நடிகர்கள், படப்பிடிப்பு நிபுணர்கள் ஆகிய�ோர் முடிவு
நிர்வாகத் தயாரிப்பாளருக்கான படிப்பைப் படிக்காமலேயே வெற்றிகரமான நிர்வாகத் தயாரிப்பாளர் ஆகவும் முடியும். செய்யப்படுகிறார்கள். பின்னர் படப்பிடிப்புத் துவங்குகிறது; முடிகிறது. இந்த முழுமையான நடைமுறையில், தயாரிப்பாளர் எல்லா இடங்களிலும் இருக்க இயலாது. பணம் ப�ோடுபவர் என்ற முறையில், ஒரு தயாரிப்பாளருக்கு, திரைப்படத்தின் உருவாக்கத்தில் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது
கருந்தேள் இராஜேஷ். தெரிந்திருக்க வேண்டும். ஆனால் எப்போதுமே இயக்குநரின் இருந்துக�ொண்டிருக்கவும் முடியாது.
அவரால் கூடவே
அப்படியென்றால் என்ன செய்வது? இங்கேதான் நிர்வாகத் தயாரிப்பாளரின் உதவி தேவைப்படுகிறது. திரைப்பட உருவாக்கம் பற்றி நன்கு தெரிந்த ஒரு நபரை, தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்கிறார். அந்த நபர், தயாரிப்பாளரின் பிரதிநிதியாக இருந்துக�ொண்டு, முன்தயாரிப்பு, படப்பிடிப்பு, பின் தயாரிப்பு ஆகியவற்றை மேற்பார்வை செய்கிறார். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே பாலமாக இருந்துக�ொண்டு, படம் எடுத்து முடிக்கப்படுவதற்கு உறுதுணையாக நிர்வாகத் தயாரிப்பாளர் இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் நேரும் பிரச்சனைகளைத் தயாரிப்பாளரின் கவனத்துக்குக் க�ொண்டு செல்கிறார். இயக்குநருக்குப் படப்பிடிப்பில் தேவைப்படும் அத்தியாவசியமான விஷயங்களைத் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்றுத் தருகிறார். ஒரு படத்தை எல்லா வகைகளிலும் சிக்கல் இல்லாமல் எடுத்து முடிக்க, ஒரு தயாரிப்பாளரின் பிரதிநிதி என்ற முறையில் பேருதவியாக இருக்கிறார். இதுதான் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரின் வேலை.
நிர்வாகத் தயாரிப்பாளருக்குரிய தகுதிகள்
ஒரு நிர்வாகத் தயாரிப்பாளருக்கான தகுதிகள் என்னென்ன? எப்படியெல்லாம் நம்மை நாமே தயார்படுத்திக்கொண்டால் ஒரு நிர்வாகத் தயாரிப்பாளர் ஆக முடியும்? முதலாவதாக, ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பது பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அதற்கு, ஏதேனும் ஒரு தயாரிப்பாளரிடம் சிறிது காலமாவது வேலை செய்திருக்க வேண்டும். படப்பிடிப்பின்போது மட்டுமல்லாமல், ஒட்டும�ொத்தமாக ஒரு படம்
10 என் வலிமை உன் நெற்றிய�ொளியில் த�ோற்றுப் ப�ோகின்றது. (குறள்: 1088)
2018
தயாரிக்கப்படும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், ‘மென்திறன்’ என்று ச�ொல்லப்படும் விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, எப்படிப் பேசுவது, எப்படித் தன் மனதில் இருக்கும் கருத்துகளை இன்னொருவரிடம் தெளிவாகச் ச�ொல்வது, அவர்கள் ச�ொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது, தேவையான இடங்களில் எப்படி முடிவு எடுப்பது – இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இவைகூட அனுபவத்தில் மெல்ல மெல்ல வந்துவிடும். சிறப்பாக, யார் மனமும் புண்படாத வகையில், திரைப்படம் எடுக்கப்படும்போது யார் கருத்தையும் நேரடியாக நிராகரிக்காமல், தெளிவாக, இன்முகத்துடன் வேலைகளைச் செய்து முடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது ஏன் என்றால், திரைத்துறையில் இருக்கும் பலரும் ஒவ்வொருவிதமான குணாதிசயத்துடன் இருப்பார்கள். பல இயக்குநர்கள், ‘இல்லை’ என்ற ச�ொல்லே தெரியாமல்கூட இருக்கலாம். அவர்களிடம் நேரடியாக அப்படிப் பேச இயலாது. எனவே, யாராக இருந்தாலும் க�ோபமாகப் பேசாமல் தணிந்த த�ொனியிலேயே நம் கருத்தைச் ச�ொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். கூடவே, அன்றாட வரவு செலவுகள், படப்பிடிப்பின்போது இயக்குநர் க�ோரும் வசதிகள், சாதனங்கள், பிற த�ொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் வசதிகள் – இப்படி எல்லாவற்றையும் இயல்பாகக் கையாளும் திறமை வேண்டும். அப்போதுதான் படப்பிடிப்பு பாதிக்காமல் தேவையான விஷயங்களைச் செய்து முடிக்க முடியும்.
2018
உலகம் முழுக்க நிர்வாகத் தயாரிப்பாளரின் வேலை என்பது மிகவும் முக்கியமானது. ஹாலிவுட்டில் இந்த வேலைக்குப் படிப்புகளே உண்டு. திரைப்படக் கல்லூரிகளில் இவற்றைப் படித்தால்தான் இந்த வேலை கிடைக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவின் திரைத்துறை, இன்னும் ஒழுங்கு படுத்தப்படவில்லை. எனவே, திரைப்படக் கல்லூரியில் படிக்காமலேயே நாம் திரைப்படத்தை எடுக்க முடியும். நடிக்க முடியும். திரைக்கதை எழுத முடியும். படத் த�ொகுப்புச் செய்யவும் முடியும். இது எல்லாமே சாத்தியம். அதேப�ோல்தான், இங்கும் நிர்வாகத் தயாரிப்பாளருக்கான படிப்பைப் படிக்காமலேயே வெற்றிகரமான நிர்வாகத் தயாரிப்பாளர் ஆகவும் முடியும்.
தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே பாலமாக இருந்துக�ொண்டு, படம் எடுத்து முடிக்கப்படுவதற்கு உறுதுணையாக நிர்வாகத் தயாரிப்பாளர் இருக்கிறார். ஹாலிவுட்டில் நிர்வாகத் தயாரிப்பாளருக்கான அடிப்படை விஷயம் என்ன தெரியுமா? ஒரு திரைப்படத்துக்கான பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு பணத்தைத் திரட்டியிருக்க வேண்டும் என்பதே. அதேப�ோல், திரைக்கதை எதைக் குறித்து எழுதப்படுகிறத�ோ, அந்த மூலக்கதைக்கான அத்தனை உரிமைகளையும் 11
அண்டமும் அறியாமையுமே எல்லையற்றவை; முந்தையதைப் பற்றி எனக்குத் தெரியாது. (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
வாங்க, அதனுடன் சேர்ந்து வேலை செய்திருக்கவும் வேண்டும். ஆனால் இதுவெல்லாம் இங்கே சாத்தியம் இல்லை. இதெல்லாம் இந்தியாவில் ஒரு தயாரிப்பாளரின் வேலைகளில் வந்துவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழில், ஒரு நிர்வாகத் தயாரிப்பாளருக்கான இடம் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே நாம் கவனித்ததுப�ோல, ஒரு படத்தின் நிழல் தயாரிப்பாளராகவே நிர்வாகத் தயாரிப்பாளர் இருக்கிறார். க�ொடுக்கப்பட்ட வரவு செலவு மற்றும் நேர வரையறைக்குள், படத்தை முடிக்க வேண்டியது இங்கே ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரின் முக்கியமான வேலை. ஆனால், என் அனுபவத்தில், தமிழ்த் திரையுலகில் இதில் பல குழப்பங்களைப் பார்க்கிறேன். பல இடங்களில், நிர்வாகத் தயாரிப்பாளர் என்பவர் எப்படி வேலை செய்கிறார் என்றால், தயாரிப்பாளருக்குப் பணத்தை மிச்சப்படுத்திக் க�ொடுக்க வேண்டும் என்பதே அவரின் ந�ோக்கமாக இருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்றால், ஒரு இயக்குநருக்கு ஒருசில அத்தியாவசியமான ப�ொருள்கள�ோ, ஒரு சில படப்பிடிப்புக்கான இடம�ோ, சில நடிகர்கள�ோ அல்லது வேறு சில காரணங்களுக்காக இயக்குநரிடம் பரிந்துப் பேசி, தயாரிப்பாளருக்குப் பணத்தை மிச்சப்படுத்திக் க�ொடுத்து நல்ல பெயர் வாங்கவே பலரும் முயல்கிறார்கள். இதனால் படத்தின் ஒட்டும�ொத்தத் தரமுமே கடுமையாகவே பாதிக்கப்படவும் கூடும். இஃது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்களின் முக்கிய ந�ோக்கமே தயாரிப்பாளரிடம் பாராட்டும் பணமும் வாங்குவதாகவே இருக்கிறது. திரைப்படம் என்பது முழுமையாகவே ஓர் ஆக்கப்பூர்வமான விஷயம். இங்கே ஒவ்வொரு விஷயத்துக்கும் மாற்றுச் ச�ொல்லிக்கொண்டு, வெளிப்புறப் படப்பிடிப்பில் மட்டுமே எடுக்கக்கூடிய ஒரு காட்சியை ஏன் உட்புறப் படப்பிடிப்பில் எடுத்து முடிக்கக் கூடாது, முக்கியமான கதாபாத்திரத்துக்குத் தேவைப்படும் நடிகருக்குப் பதில் சம்பளம் குறைவாக இருக்கும், யாருக்குமே தெரியாத நடிகரை ஏன் ப�ோடக்கூடாது, படப்பிடிப்புக்குத் தேவையான முக்கியமான சாதனங்கள் ப�ொருட்களுக்குப் பதில், மலிவான, தரமே இல்லாத ப�ொருட்களை ஏன் உபய�ோகப்படுத்தக் கூடாது – இப்படியெல்லாம் ஒரு இயக்குநரிடம் சண்டையிட்டு, படத்தின் செலவினத்தைக் குறைக்க முயன்றால் படமே படுத்துவிடும் என்பது பெரும்பாலான நிர்வாகத் தயாரிப்பாளர்களுக்குப் புரிவதில்லை. எனவே, என் கருத்து
என்னவெனில், ஒரு நிர்வாகத் தயாரிப்பாளர், நடுநிலையுடன் செயல்பட வேண்டும். சில சமயம் இயக்குநரின் பிரதிநிதியாகவும் தயாரிப்பாளரிடம் அவர் பேச வேண்டிய நிலை வரும். அப்போது தயங்காமல் ஆராய்ந்து, அது முக்கியமான விஷயம் என்றால் தயாரிப்பாளருக்கு அதனைப் புரியவைத்து, அதனைச் செயல்படுத்திக் க�ொடுக்க வேண்டும். இதுதான் ஒரு நல்ல நி ர்வா க த் த ய ா ரி ப ்பாள ரு க் கு அழகு. உதாரணமாக, ஷங்கர் ‘சிவாஜி’ படத்தை எடுக்கும்போது, தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம், மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனையே நிர்வாகத் தயாரிப்பாளராக அமர்த்தியது. தமிழ்த் திரைப்படங்களில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர் எஸ்.பி. முத்துராமன். எனவே, அவரும் ஒரு மிகத் திறமையான நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்து, படத்தின் உருவாக்கத்துக்குப் பேருதவி புரிந்தார். எனவே, நீங்கள் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆக விரும்பினால் ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் பற்றி முழுமையாகத் தெரிந்துக�ொள்ள வேண்டும். அதற்குத் தேவையான அனுபவமாக, ஏதேனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலாவது வேலை செய்து பழக வேண்டும். நேர்மையன மனிதனாக இருக்க வேண்டும். யார் பக்கமும் சாயாமல், படத்துக்காக வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். சிலர் இயல்பிலேயே மக்கள் நிர்வாகம் என்ற திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். இது பெரும்பாலும் அவர்களுக்கான வேலை. அப்படிப்பட்ட நபராக நீங்கள் இருந்தால் கவலையே படாமல் களத்தில் இறங்குங்கள். வெல்லுங்கள்!
12 உண்டால் மயக்கம் தரும் கள்; கண்டாலே மயக்கம் தருபவள் காதலி. (குறள்: 1090)
2018
பிப
்ரவ
ரி 1
கி. சுடர்மணி.
சிறப்பு நாள் “காசி நகர்ப்புலவன் பேசும் உரைதான் எங்கிருந்தாலும் எந்நேரத்திலும் உரையாட காஞ்சியில் கேட்டதற்கோர் கருவி செய்வோம்” முடிகிறது. அதன் பயன்பாட்டையும், அதனால் என்றார் பாரதி. “ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ‘நவீன க�ோவில்கள்’ என்று அழைக்கப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள், த�ொழில்நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் முதலியன மிகவும் அவசியம்” என்று நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். இயற்கை காட்டிய வழிமுறைகளின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவைப் பயன்படுத்தி அறிவியல் மூலம் பெற்றதே, இன்று மனித இனம் பல்வேறு வகையாகப் பயன்படுத்தும் தகவல் த�ொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாகப் பயன்படுத்திய காலம் முதல், விண்ணில் வீடமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து க�ொண்டிருக்கும் இக்காலம் வரையிலும் மட்டுமல்லாமல், நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப் ப�ோவது தகவல் த�ொடர்பு என்பதேயாகும். தேசிய அறிவியல் நாளைக் க�ொண்டாடவிருக்கும் இம்மாதத்தில், அறிவியல் கண்டுபிடிப்பின் வியக்கவைக்கும் வளர்ச்சிகளில் ஒன்றே, தகவல் த�ொடர்பிற்காக மட்டுமல்லாமல் இந்த உலகையே உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ள ஒன்றே ‘செல்போன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அலைபேசியாகும். ஏழை பணக்காரன் என்னும் வேறுபாடில்லாமல் இன்று எல்லாரும் அலைபேசி மூலம் உலகில்
2018
வரும் நன்மை தீமைகளையும் அனைவரும் அறிந்துக�ொள்ளும் ந�ோக்கத்துடன் பிப்ரவரி 1ஆம் நாள் உலக அலைபேசி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பேசுவது என்ற ஒரு செயலுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட அலைபேசி இன்று உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
பண்டைக்காலத் தகவல் த�ொடர்பு தகவல் த�ொடர்பு என்பது, அடுத்திருப்பவர�ோடு தகவல்களைப் பரிமாறிக் க�ொள்ளுதல் என்பதாம். அடுத்திருப்பவர் த�ொலைவில் இருந்தால், நமக்கும் அவருக்கும் இடையேயுள்ள இடைவெளியை அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி ஊடறுத்துச் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் தகவல் த�ொடர்பு என்ற த�ொழில்நுட்பச் ச�ொல்லைப் பயன்படுத்துகிற�ோம். இந்தத் தகவல் த�ொடர்பானது ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் த�ோன்றியது என்று உறுதியாகக் 13
மானுடத்திற்கான அழகான க�ொடை அறிவியல்; அழிக்காமல் காப்போம். (அப்துல் கலாம்)
கூற முடியாத ஒன்றாகும். மனித குலத்தில் பேச்சும் எழுத்தும் த�ொடங்குவதற்கு முன்பே தகவல் பரிமாற்றம் த�ொடங்கிவிட்டது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அச்சு மற்றும் தகவல் த�ொடர்பின் த�ொடக்கம் என்று கருதப்படுவது கற்கால மனிதர்கள் வரைந்து வைத்துள்ள குகைச் சித்திரங்களாகும். தான் அறிந்த அல்லது பார்த்த ஒன்றை, அருகில�ோ, த�ொலைவில�ோ அல்லது இனிமேல் வரப்போகும் சந்ததியினருக்கோ தெரிவிப்பதற்காக வரையப்பட்டவையே குகை ஓவியங்களாகும். அதிசயிக்கத்தக்க அளவிற்கு அறிவியல் வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் உள்ள இன்றைய சூழலிலும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்தக் குகைச் சித்திரங்கள் உள்ளன. அதனைத் த�ொடர்ந்து சைகை ம�ொழி, த�ோற்கருவிகள் மற்றும் மணிகள் ஆகியவற்றைப் ப�ொதுவிடத்தில் கட்டி ஒலி எழுப்புதல், புறாக்களின் கால்களில் கட்டிச் செய்திகள் அனுப்புதல் உள்ளிட்டவை அக்காலத்தில் முக்கியமான தகவல் த�ொடர்பு சாதனங்களாகப் பயன்பட்டு வந்தன. வாய்வழியே ஒலி எழுப்பப் பழகிய மனிதன், ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வகையான ஒலியை எழுப்பினான். இன்று வரையிலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இந்த ஒலி வழித் தகவல் பரிமாற்றத்தையே கடைப்பிடிக்கின்றன.
வளர்ச்சி நிலை ச�ொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துகள் உருவாகியதும் தகவல் த�ொடர்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டன. கடிதப் ப�ோக்குவரத்தில் முற்கால அரசர்கள் ப ய ன ்ப டு த் தி ய சிறப்பான
தகவல் த�ொடர்புக் கருவிகள் புறாக்களாகும். நாட்கள் செல்லச் செல்ல நவீன த�ொழில்நுட்பங்கள் உருவாக்கிக் க�ொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்களை எழுதியவரிடமிருந்து பெற்று உரிய நபரிடம் க�ொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது. அதனைத் த�ொடர்ந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தந்தி, வான�ொலி, த�ொலைக்காட்சி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுத் தகவல் த�ொடர்பை எளிமையாக்கின. இவை ஒருவழித் தகவல் த�ொடர்பாகவே இருந்தன. இதன் அடுத்தக் கட்டமாக இருவழித் தகவல் பரிமாற்றச் சாதனமாகிய கம்பிவழித் த�ொலைபேசியை அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் உருவாக்கினார். அதனைத் த�ொடர்ந்து கணினி கண்டுபிடிக்கப்பட்டு அதில் இணையம் பயன்பாட்டிற்கு வந்ததும் மின்னஞ்சல் உருவாக்கப்பட்டுத் தகவல் பரிமாற்றம் மேலும் எளிமையாக்கப்பட்டது. இவையெல்லாம் தகவல் த�ொடர்புத் துறையில் வளர்ச்சியைக் குறிப்பிட்டாலும், அனைத்திற்கும் மேலாக, ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பதற்கேற்ப, வளர்ந்த நாடுகளின் மக்கள் த�ொகையில் 100 விழுக்காட்டிற்கும் வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டிற்கு அதிகமாகவும் பயன்படுத்தப்படும் தகவல் த�ொடர்புக் கருவியாகத் திகழ்வது அலைபேசி எ ன் னு ம் சி ன்ன ஞ் சி று கருவியாகும். அ றி மு க ம்
14 மலரின் காம்புக்கூட மங்கையின் இடையை ஒடிக்கின்றதே! (குறள்: 1115)
2018
செய்யப்பட்டப�ோது பேசுவது என்ற ஒரு செயலுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட அலைபேசி இன்று உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
அலைபேசியின் நன்மை தீமைகள் காலம் செல்லச் செல்ல புதிய புதிய த�ொழில்நுட்பங்கள் அலைபேசிகளுக்காக உருவாக்கப்பட்டுக் க�ொண்டே வருகின்றன. தேடுதலில் ஆர்வம் க�ொண்ட மனித அறிவே இவற்றை உருவாக்குகிறது. குறுஞ்செய்திகள் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இணைய வசதியுடன் கூடிய த�ொடுதிரை அலைபேசிகள் மூலம் வலைதளப் பக்கங்களைப் பார்த்து நமக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் அறிந்துக�ொள்ள முடிகிறது. மூன்றாம் தலைமுறை அலைவரிசையைக் கடந்து தற்போது நான்காம் தலைமுறை அலைவரிசையின் உதவியுடன் உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் நேரடியாக முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்ளவும் முடிகிறது. த�ொலைதூரத்தில் இருந்த த�ொலைத் த�ொடர்பு வசதி என்பது இன்று மனிதனின் சட்டைப்பைக்குள் வந்துவிட்டது. “இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்” என்று 1930களில் தந்தை பெரியார் கூறிய வார்த்தை இன்று அப்படியே நிறைவேறியுள்ளதையே இந்த அலைபேசிக் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன. இது அலைபேசிகளின் யுகம் என்று ச�ொன்னால் அது மிகை அன்று. த�ொடக்கக் காலத்தில் ஊருக்கு ஒரு த�ொலைபேசி, அதனைத் த�ொடர்ந்து வீட்டுக்கு ஒரு த�ொலைபேசி என்றிருந்த காலம் மாறி, ஒவ்வொருவருக்கும் ஓர் அலைபேசி என்பது நாம் வாழும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாருடைய கைகளிலும் தவழக்கூடிய ஒன்றாக உள்ளது. அலைபேசியினால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் ஐயமில்லை. சிறந்த, விரைவான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய த�ொலைத் த�ொடர்புக் கருவியாக இது திகழ்கிறது. இந்திய மக்கள் த�ொகையைவிட அதிக அளவிலான அலைபேசிகள் இன்று இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் த�ொடக்கத்தில், முதல் 15
2018
ஆண்டுகளில், அலைபேசிகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், இனி இந்த நூற்றாண்டு எத்தகைய புரட்சிகளைக் காணவுள்ளது என்பதை எடுத்துக் கூறுவதாக உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்துவதால் உரையாடுதல், இணையப் பயன்பாட்டின் மூலம் தேவையான செய்திகளை உடனுக்குடன் சேகரித்தல், தவறான வழியில் செல்லும் குற்றவாளிகளை அவர்களின் அலைபேசிக் குறியீடு, அலைக்கற்றை ஆகியவற்றை வைத்துக் கண்டுபிடித்தல் ப�ோன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்திய மக்கள் த�ொகையைவிட அதிக அளவிலான அலைபேசிகள் இன்று இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப் பல நன்மைகள் இருப்பினும், அதனால் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனைப் பற்றிய விழிப்புணர்வும் பயன்படுத்துவ�ோருக்கு வேண்டும். அலைபேசிகளில் இருந்து வரும் மின்காந்த அலைகள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ‘லூக்மேனியா’ என்னும் இரத்தப் புற்றுந�ோய், த�ோல் புற்றுந�ோய்கள், வலிப்பு ந�ோய் மற்றும் மூளைப் பாதிப்பு ப�ோன்ற ந�ோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலைபேசிக் க�ோபுரங்களில் இருந்து பரவும் மின்காந்த அலைகள் சுற்றுச்சூழலுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பறவை இனங்கள், சிறு பூச்சிகள், வண்டுகள் ப�ோன்றவை இந்த மின்காந்த அலைகளால் தாக்கப்படுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்றைய வாழ்க்கைக்கு அலைபேசி மிகவும் இன்றியமையாத ஒன்றேயாகும். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்னும் பழம�ொழிக்கேற்ப அதிகளவில் அதனைப் பயன்படுத்துவதால் பல தீய விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். 15
புரிந்துக�ொள்ள முடியாததை மனப்பாடமாக்க முயலாதே. (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
செய்ய வேண்டியவை அலைபேசியின் வரவுக்குப் பிறகு ஏராளமான நேரம் விரயமாக்கப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிற�ோம். குறிப்பாக இளைஞர்கள் தங்களின் ப�ொன்னான நேரத்தை அலைபேசியில் உரையாடியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் வீணாக்குகின்றார்கள். அவசியமான பணிகளுக்குப் பயன்படுத்துவதைவிட, ப�ொழுதுப�ோக்கிற்கும், உறவுத் த�ொடர்புகளுக்குமே
இன்று மிகுதியான நேரம் அலைபேசியில் செலவாகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பெரும்பாலான இதர நாடுகளிலும் மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்னும் க�ோரிக்கை வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் தங்களின் நேரத்தையும் கவனத்தையும் அலைபேசி மூலம் இழந்து வருகின்றனர். மது, ப�ோதைப் ப�ொருள் முதலியவற்றைப் ப�ோலவே அலைபேசிப் பயன்பாடும் ஓர் அடிமை பழக்கமாக மாறி வருகிறது. அத்தோடு மட்டுமல்லாது, அலைபேசியைப் பயன்படுத்திக் க�ொண்டே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகளவில் நிகழ்ந்துக்கொண்டே வருகின்றன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமானால் அதனைப் பயன்படுத்துவ�ோரிடம் இது குறித்த விழிப்புணர்வு வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
த�ொழில் நுட்பம் வளர வளர நம் தேவைகளும் நாளுக்கு நாள் மிகுந்து க�ொண்டே வருகின்றன. அலைபேசியின் சிறப்பு என்னவெனில் அஃது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தகவல்களை எளிமையாகவும், உடனுக்குடனும் க�ொண்டு சேர்க்க மிகவும் அருமையான நவீன த�ொழில்நுட்பக் கருவியாக இருக்கிறது என்பதே. சிறிய அளவில் த�ொடங்கி, மிக விரைவாக வளர்ந்து, பரவி வரும் அலைபேசித் த�ொழில்நுட்பத்தில் மாற்றங்களும் ஏராளமாகப் பெருகி வருகின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்திப் பயன் பெறுவதே நமது கடமையாகும். இன்றைக்கும் எத்தனைய�ோ இடங்களில் எவ்வளவ�ோ அசம்பாவிதங்களைத் தடுப்பதற்குப் பயனுள்ள சேவையாக அலைபேசி உதவுகின்றது. அதை நாம் எப்படிப்பட்ட ந�ோக்கத்திற்காகப் பயன்படுத்துகிற�ோம் என்பது பயன்படுத்துவ�ோரின் மனநிலையைப் ப�ொறுத்ததாகும். இன்றைய நவீன அறிவியல் த�ொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்குக் கிடைத்துள்ள அலைபேசி என்னும் அற்புதமான கருவியை ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் ந�ோக்கத்தைச் சரியாக நாம் புரிந்துக�ொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும்.
16 பாவையின் பார்வையே என்னை ந�ோயாக்கி, நலமாக்குகின்றது. (குறள்: 1091)
2018
“அப்பா தன் பேரனைக் க�ோடை விடுமுறைக்கு ஊருக்கு அனுப்ப ச�ொல்லியிருக்கார். என்ன செய்யறதுனு மட்டும் ச�ொல்லு” என்றேன் என் மனைவி ஜானுவிடம். “என்ன செய்யறதா? கண்டுக்காம விட வேண்டியதுதான். இவனை அனுப்பி வச்சா நம்ம மானத்தை வாங்கிடுவான். உடம்பு சாயில்லைனு மூணு மாசங்களுக்கு முன்பு மருத்துவப் பரிச�ோதனைக்கு, அப்பா இங்கே வந்தார்ல, அப்ப, தினம் காலையிலே நடக்கிற கூத்தை, குஸ்தி சண்டையைப் பார்த்திருப்பார். இவன் காலைல நேரத்துக்கு எழுந்திருக்காமலும், சரியாய் படிக்காமலும் கண்ட கண்ட நேரத்தில் எண்ணையில் ப�ொரித்தவற்றைத் தின்னுகிட்டும், பழங்கள், காய் கறிகளை உணவில சேர்த்துக்காம அடிக்கடி காய்ச்சல், சளி, வயிற்று வலினும், அதனால பள்ளிக்கு மட்டம் ப�ோட்டுக்கிட்டு மருத்துவராண்டயும் ப�ோய் வரதையும், த�ொலைக்காட்சியில தேவையற்ற நிகழ்ச்சிகளை அதுவும் சாமத்துல உட்கார்ந்து பார்க்கிறது... மாலைப் ப�ொழுதில் பள்ளி விட்டு வந்ததும் பால் குடிச்சிட்டு நண்பர்களுடன் ஓடி ஆடி காத்தாட விளையாடப் ப�ோகாமல் இணையத்துல மேயறதுமாய்... ஊம்... அவமானமாய் இருக்கு. இவன் அங்கே ப�ோனால் ஒரு நாள் கூட, தாக்குப் பிடிக்க மாட்டாங்க. அப்புறம் அங்கே கிராமத்தில மருத்துவரே கிடையாதுங்க. அதனாலதான் வேணாம்னு ச�ொல்றேன்” என்றாள் என் மனைவி. ஆனால் என் அப்பாவே ஒரு நாள் திடுதிப்பென வந்து, “என்னடா ரவி, இந்த க�ோடை விடுமுறைக்கு எங்கூட நம்ம கிராமத்துக்கு வரியா” என்று பேரனை அழைத்திட அவனும்
2018
க�ௌசல்யா ரங்கநாதன்.
“ஒ வரேனே கிராண்பா” என்றான். “அது என்னடா கிராண்பா? ஏன் அழகு தமிழ்ல தாத்தானு என்னைக் கூப்பிடக்கூடாது. சரி வா வா” என்றார்.
குழந்தைகளை குழந்தைகளா வளர்க்கணும். எந்திரமா வளர்க்கக் கூடாது. அவங்க கிட்ட அன்பைப் பாசத்தை விதைக்கணும்.
17 காலம் ஒரு ப�ோதைப் ப�ொருள்; மிகுதியாக இருந்தால் அழித்துவிடும். (டெர்ரி பிரட்செட்)
எண்ணி நாலே நாட்களில் இவன் த�ொந்திரவு தாங்காமல் அப்பாவே இவனைத்திரும்ப இங்கே க�ொண்டு வந்து விடலாம். இல்லையெனில் என்னை அங்கு வரவழைத்து “என்ன பிள்ளைடா வளர்த்திருக்கே நீ” எனச் சாடலாம் என்று நான் எண்ணி மருகிக் க�ொண்டிருக்கையில், ஜானகி ச�ொன்னாள், “த பாருங்க… எதையாவது ச�ொல்லி சமாளிக்கப் பாருங்க. தயவு செய்து… அங்கேயும் நம்ம மானம் ப�ோக வேணாம். இங்கேயே இவன் பாட்டுக்குத் த�ொலைக்காட்சி பார்த்துக்கிட்டு, இணையம் மேஞ்சுக்கிட்டு, முகநூல் பார்த்துக்கிட்டு, திரையரங்கு, கடற்கரைன்னு ப�ோய் எப்படிய�ோ இந்த க�ோடை விடுமுறையை அனுபவிக்கட்டும். பாவங்க இவன்… ரெண்டாங்கட்டான் குழந்தை” என்றாள். அப்பா அவனை அழைத்துப் ப�ோவதில் பிடிவாதமாய் இருந்தார். அவனும் தான் அவருடன் ப�ோவதில் பிடிவாதம் காட்டினான். அப்பா அவனைப் பார்த்து, விதித்த ஒரு நிபந்தனை எங்களுக்குப் பிடித்துப் ப�ோயிற்று. “த பாருடா ரவிக் கண்ணா, ஊருக்கு வந்ததும் எனக்கு இந்த ஊர் பிடிக்கலை தாத்தா. என்னை உடனே எங்க ஊருக்கு க�ொண்டுகிட்டு ப�ோய் விடுனு அடம் பிடிக்கக் கூடாது. அங்கே த�ொலைக்காட்சி மட்டும்தான் உண்டு. இணையமெல்லாம் கிடையாது. ஓர் உணவகம் கிடையாது. குளிர்சாதனம் கிடையாது. வேப்பங்காற்று குளு குளுனு வீசும். குளத்தில் ஆற்றில் முங்கி தினம் இரண்டு வேளை குளிக்கலாம். நீச்சல் அடிக்கலாம். தினமும் நுங்கு வெட்டி தரச் ச�ொல்வேன். எவ்வளவு இளநீர் வேணுமானாலும் வெட்டி தரச்சொல்வேன். மாம்பழம், வாழைப்பழம் தினுசு தினுசா கிடைக்கும்… எப்படி நெற்பயிர்கள் உற்பத்தி பண்றாங்க. அதுக்கு எவ்வளவு மெனக்கெடல்கள்னு எல்லாம் நீ தெரிஞ்சுக்கலாம். பல வகை மரங்கள்… மன்னிக்க, ‘மரம் என்று ச�ொல்லாதீர் அன்னியமாய் ஒலிக்கிறது’னு ஒரு அரசியல் தலைவர் ச�ொன்னார். ஊர் பூரா எவ்வளவு தருக்கள் நெடிதுயர்ந்து நிற்குதுனு பார்க்கலாம். பலவித பூச்செடிகள், காய்கறிகள் விளையற செடிகள்… இப்படி எல்லாம் பார்த்து ரசிக்கலாம். உனக்கொண்ணு தெரியும�ோ? ‘கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழுகிறது’ன்னு நம்ம காந்தி தாத்தா அன்னைக்கே ச�ொன்னாரு. இதையெல்லாம் பார்த்து ரசிக்க தெரிஞ்சுகிட்டா அப்புறம் இந்த சந்தடி மிகுந்த நகர வாழ்க்கையே யாருக்கும் பிடிக்காது. இந்த விடுமுறை முச்சூடும் நீ நம்ம கிராமத்திலய இருக்கிறதாயிருந்தா எங்கூட வா. இல்லையா அப்புறம் உன் இஷ்டம்” என்றப�ோது “தாத்தா நீங்க ச�ொல்றதை எல்லாம் வச்சு பார்த்தா எனக்கு இப்பவே கிராமத்துக்கு ப�ோகணும்போல இருக்கு. எப்ப கிளம்பலாம்” என்றான் ரவி.
பச்சைக் களிமண்ணை வெட்டி எடுத்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து நமக்கு வேண்டியதை உருவாக்கிக்கிறதில்லையா? அப்படித்தான் குழந்தைகளும். ஆனால் எங்களுக்குத்தான் திக் திக்கென்றிருந்தது. ‘அவன் சின்ன குழந்தை, அவனுக்கு என்ன தெரியும்? ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் இங்கே ஏகப்பட்ட மருத்துவர்கள். கிராமத்தில் இது எப்படி சாத்தியமாகும்?’
18 கள்ளத்தனக் கடைக்கண் பார்வை, காமத்தின் பாதியிலும் மிகுதி. (குறள்: 1092)
2018
நாம் எல்லாம் இங்கு நகரத்துக்கு வந்து தங்குவதற்கு முன் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தானே? அப்போதெல்லாம் நமக்கு உடலில் வியாதிகள் வரவில்லையா? நம் முன்னோர்கள் நமக்கெல்லாம் வியாதிகள் வந்தப்ப வைத்தியம் பண்ணலையா! இல்லை, இப்ப கிராமத்தில் வசிக்கிறவங்கள்ளாம் வியாதி வரப்ப வைத்தியம் பார்த்துக்கலையா…? எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் க�ொண்டோம். இப்படி, ஒரு நாள், இரண்டு நாட்கள். ஒரு வாரம், பத்து நாட்கள், 15 நாட்கள், 45 நாட்கள் ஓடின. சரியாய் 46வது நாள் எங்களைத் த�ொடர்பு க�ொண்டு அப்பா பேசினார். “ஏண்டா எப்படி இருக்கே… பேரனைப்பத்தி கவலையா? இருக்கும்தான். அதை தப்புனு நான் ச�ொல்லலை. அவன் என் பேரன்னு பெருமையா ச�ொல்வேன். ஒண்ணு தெரிஞ்சுக்க. பச்சைக் களிமண்ணை வெட்டி எடுத்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து நமக்கு வேண்டியதை உருவாக்கிக்கிறதில்லையா? அப்படித்தான் குழந்தைகளும். இப்ப பேசுடா உன் குழந்தைகிட்ட” என்றார். அவன் படு உற்சாகமாய் பேசினான். “எப்படிடா இருக்கே” என்றப�ோது, “ஐயாம் பைன் டாடி” என்றான். பிறகு அப்பாவே ரவியைக் க�ொண்டு வந்து விட்டார். எங்களுடன் ஓரிரு நாட்கள் இருந்தார். ரவியிடம், “ஹவ் அப�ௌட் யுவர் லைப் இன் கிராண்ட்பாஸ் ஹவுஸ்?” என்றேன். “தாத்தா வீட்டில் படு குஷியாய் இருந்தேன்பா! பன்டாஸ்டிக் லைஃப். அங்கே இருக்கிறவங்கள்ளாம் எப்படி எங்கிட்ட அன்பாயிருந்தாங்கனு தெரியுமா? அப்படி ஏன்ப்பா இங்கே இருக்கிறவங்கள்ளாம் நடந்துக்கலை? ‘குட்மார்னிங் அங்கிள்’னு ச�ொன்னால் கூட மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டு, வேற பக்கமாய் பார்த்துக்கிட்டு ப�ோயிடறாங்க” என்றப�ோது அப்பா குறுக்கிட்டுச் ச�ொன்னார், “அதாண்டா கிராம வாழ்க்கைன்றது. வெள்ளந்தியான, பிறருக்கு ஒரு துன்பம்னா தன்
உசிரைக் கூட க�ொ டு க் கி ற ஜ ன ங ்க . அ த ன ா ல்தா ன் இவனை நம்ம கி ர ா ம த் து க் கு அ ழ ை ச் சு க் கி ட் டு ப�ோனேன். அவங்களை பார்த்து, அன்புனா என்ன, ம னி த ா பி ம ா ன ம்னா எ ன்னன்றெல்லா ம் தெரிஞ்சுக்கிட்டும்னு. அது மட்டுமில்லைடா? குழந்தைகளை குழந்தைகளா வளர்க்கணும். எந்திரமா வளர்க்கக் கூடாது. அவங்க கிட்ட அன்பைப் பாசத்தை விதைக்கணும். அதே சமயம் மக்கள் திலகப் படப் பாடல் வரிகளில் வராப்பல, “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பினு” புரிய வைக்கணும். பிறகு அவன் ப�ோக்கே மாறி விட்டது. டாடி மம்மி, ஹாய் ஹவ்வார்யூ? என்றெல்லாம் பேசுபவன், சுத்தத் தமிழில், அப்பா அம்மா எப்படி இருக்கீங்க? நான் ஏதாவது உதவி பண்ணனுமானுல்லாம் கேட்கிறான். கடைப்பண்டங்களைத் தின்னுறதை விட்டுட்டான். எல்லாம் நேரப்படி செய்யறான். தினம் காலையில உடற்பயிற்சியெல்லாம் செய்யறான். எது ச�ொன்னாலும் சரி அப்பா, சரி அம்மானு ச�ொல்றான். காலையில் 8 மணி ஸ்கூலுக்கு 7 மணி வரையில் தூங்கினவன், இப்பல்லாம் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, பல் துலக்கி, படிச்சு, உடற்பயிற்சி செய்து, பால் குடித்து, வீட்டில் கீழே குப்பைக் கூளம் கிடந்தா துடைப்பம் க�ொண்டு கூட்டி, அவன் துணிகளை அவனே துவைச்சு, காயப்போட்டு, தட்டு, டம்ளர் இவற்றைக் கழுவி அதன் இடத்தில் வச்சு, அவன் பேச்சிலாகட்டும் நடத்தையிலாகட்டும் ஒரு மாற்றம் தெரியுது.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.
2018
19 மனிதராகும் முன்பே நம்மை கடவுளாக்க முயல்கின்றது அறிவியல். (ஜீன் ர�ோஸ்டேன்ட்)
இதுக்கெல்லாம் காரணம் அப்பாவ�ோட அன்பான, அணுகுமுறை மட்டுமேனு புரியுது… நாங்கள் நாங்கள் மட்டும் இல்லை… நகரத்துல எங்க இப்படி இருக்கிறார்கள்? பாசமென்றும் நேசமென்றும்… ஊம்… ஏன் ஒரு குழந்தைக்கு முன்மாதிரியாக இல்லை? ஒரு குழந்தை தன் பெற்றோர் பக்கத்திலேயே இருந்து, அவங்களை பார்த்துத்தான் எல்லாமே கத்துக்குது, பேசற பேச்சு உட்பட. “இனிய உளவாக இன்னாத கூறல்” என்ற குறள் வாசகத்தை நாம் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் கடைப்பிடிக்கணும். நாம் கத்திப் பேசி ஒரு குழந்தையை அடக்க நினைச்சா, அவனும் கத்தி அடம் பண்ணி, கலாட்டா பண்ணுவான். அன்பா புரியறாப்பல எடுத்துச் ச�ொன்னா, நிச்சயமாய் எந்த குழந்தையும் கேட்டுக்கும். “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்…” அன்னை மட்டுமில்லை, தந்தை, பள்ளியில் ஆசான் கடமையும் கூட. அவன் தப்புப் பண்றப்ப, பதமா எடுத்துச் ச�ொல்லணும். எல்லாத்துக்கும் நாம் முன்னுதாரணமாய் இருக்கணும். குடிகாரன் ஒருத்தன் கிட்ட ப�ோய், மகன�ோட குடிப் பழக்கத்தை நிறுத்த புத்திமதி ச�ொல்லுன்னா நல்லாயிருக்குமா? உங்களுக்கு ஒரு கதை ச�ொல்லட்டுமா? பாட்டிமார்கள் ச�ொன்ன கதைதான். அதாவது, ஒரு குல்லாய் வியாபாரி தன் தலைச்சுமையாய் வியாபாரத்துக்குனு சுமந்துகிட்டுப் ப�ோன குல்லாய் மூட்டையை ஒரு மரத்தடி கீழே இறக்கி வச்சுட்டு உட்கார்ந்து ஓய்வு எடுத்துக்கிட்டிருந்தவன் அப்படியே அசந்து தூங்கிடவே, அப்ப அவன் உட்கார்ந்திருந்த மரத்துக்கு மேல
இருந்த சில குரங்குகள் மளமளனு கீழே இறங்கி வந்து அந்த வியாபாரி குல்லாய் ப�ோட்டுகிட்டுத் தூங்கிக்கிட்டிருந்ததைப் பார்த்து, கூடையிலிருந்த எல்லா குல்லாய்களையும் எடுத்து தங்கள் தலைகளில் ப�ோட்டுகிச்சாம். அவன் திடுக்கிட்டு எழுந்ததும் அதுங்க எல்லாமே மரத்துக்கு மேலே தாவி ஓடிருச்சாம். பாவம்… குல்லாய் வியாபாரி… என்ன செய்யறதுனு தெரியாமல் தவிச்சானாம். குரங்குகளைப் பார்த்து, ‘ஏ குரங்குகளா குல்லாய்களை எல்லாம் கீழே ப�ோடுங்க’ன்னு அதட்டலா ச�ொன்னானாம். அவை அவன் கூச்சலை சட்டை பண்ணலையாம். கெஞ்சி பார்த்தானாம், கேட்கலையாம். அவனைப் பார்த்து, அவன் என்னென்ன சேட்டைகள் செய்தான�ோ அதையே அதுங்களும் திருப்பி செஞ்சுதாம். வெறுத்துப் ப�ோன அந்த வியாபாரி கடைசில சே… என் ப�ொழப்பு அநியாயமாய் ப�ோச்சேனு அழுதுகிட்டே தன் தலையில ப�ோட்டுக்கிட்டிருந்த குல்லாயை க�ோபமா தலையிலிருந்து கழட்டி தூர எரிஞ்சானாம். அதைப் பார்த்த குரங்குகளும் அததுக தலையிலிருந்த குல்லாய்களைக் கழட்டி தூர எரிஞ்சுதாம். ஐய�ோ இந்த சிம்பிள் லாஜிக் நமக்குத் தெரியாம ப�ோச்சேனு நினைச்சுக்கிட்டு எல்லா குல்லாய்களையும் ப�ொறுக்கி எடுத்துக்கிட்டு சந்தோஷமா ப�ோயிட்டானாம். மனம் ஒரு குரங்கும்பாங்க. அப்படித்தான் மனிதர்களும். நம்ம வீட்டிலேயே எடுத்துக்கங்க. பக்கத்து வீட்டில் இரண்டு டி.வி. அதுவும் எல்.சி.டி. டி.வி வாங்கினாங்கனு தெரிஞ்சுதுனா தேவை இருக்கோ இல்லைய�ோ நாமும் க�ௌரவத்தைக் காப்பத்திக்கணும்னு வாங்கிக்கிற�ோம். தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரம்மா ரூ. 15000 க�ொடுத்து புடவை வாங்கினதா தெரிஞ்சா, நாமும் அதைவிட ரூ. 1000 கூட க�ொடுத்தாவது பட்டுப் புடவை வாங்கற�ோம். பெரியவங்களான நமக்கே இப்படினா சின்ன குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்?
நாம் கத்திப் பேசி ஒரு குழந்தையை அடக்க நினைச்சா, அவனும் கத்தி அடம் பண்ணி, கலாட்டா பண்ணுவான். அன்பா புரியறாப்பல எடுத்துச் ச�ொன்னா, நிச்சயமாய் எந்த குழந்தையும் கேட்டுக்கும். ஒரு குழந்தை நல்லத�ொரு மனிதனாக உருவாகணும்னா பெரியவங்களான நாம்தான் உதாரண புருஷர்களா இருக்கணும். சில தியாகங்களைச் செய்துதான் ஆகணும். இப்ப பார், 45 நாட்கள் கிராமத்தில் என் கூட இருந்து, அவன் கத்துக்கிட்டு வந்ததை, இனி வாழ்நாட்கள் பூரா த�ொடரணும்னா, அது உங்க கையிலதாம்பா இருக்கு” என்றார் அப்பா ப�ொட்டில் அடித்தாற்போல.
20 விழிகளின் ம�ொழிக்குச் ச�ொற்கள் தேவைய�ோ? (குறள்: 1100)
2018
அருள் ர�ோசா.
காதல் கலவரம்
இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களையும் கிளுகிளுப்பாக்கும் காதலைக் க�ொண்டாடும் நாளாகப் பெப்ருவரி 14ஐத் தேடிப் பிடித்திருக்கிறார்கள். இதையே ஒரு தத்துவக் கிண்டலாகப் பாடி மகிழ்வதையும் சலித்துக் க�ொள்வதையும் கண்டு, கேட்டிருக்கிற�ோம். “ஆம்பளைக்கும் ப�ொம்பளைக்கும் அவசரம் - இதை காதலுன்னு ச�ொல்லுறாங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாமூச்சிக் கலவரம் - அது எப்போதுமே ப�ோதையான நிலவரம்” க�ொஞ்சம் ப�ோல கசப்பான நையாண்டியாக இப்படியும் பாடி ஆடி வேதனையை வடித்துக் க�ொள்வதும் உண்டு.
நெஞ்சுக்கு நீதியான தெய்வீகக் காதலின் அறிவார்ந்த மன சாட்சியின் துடிப்பு இருந்தால், யாருக்கும் அஞ்சவும் தேவையில்லை. அச்சுறுத்தவும் தேவையில்லை. “லிப்ட் கேட்டு வந்த காதல் ஷிப்ட் மாறிப்போனது சேலை வாங்கிக் குடுத்த காதல் காலை வாரிவிட்டது ஆபிசில வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறுமணிக்குத் த�ொடர்ந்தது”
கனிகளையும் பற்றிய அறிவியல் பூர்வமான பகுப்பாய்வினை எல்லாருமே மேற்கொண்டே தீர வேண்டும். இல்லையெனில் காதல் சக்திகளைக் கையாளத் தெரியாமல் பச்சைக் குழந்தையும் பச்சைப் பச்சையாகப் பேசும். இளசுகள் புல்லரிப்போடு திரிவார்கள். இடைநிலை வயதுடைய�ோர் மறைத்தும் மறைந்தும் ந ா ட க ம ா டு வ ா ர்க ள் . மூத்தோரெல்லாம் முனகிக்கொண்டு இருப்பார்கள். காதலர்கள் ஓடிப்போவார்கள். தேடிப்பிடித்து அவர்களை நடுவீதியில் வெட்டிச் சாய்ப்பார்கள் காட்டுமிராண்டிக் கழிசடைக் கும்பல்கள். எனவேதான் காதலைப் பற்றிய ஆக்கப்பூர்வமான அறிவியல் தேடலுடன் வாழ்வைக் க�ொண்டாட வேண்டிய ப�ொறுப்பு, இளமை முதல் இறப்பு வரை அனைவருக்கும் உண்டு.
இவ்வாறு காதலை வெட்டிப் பேசினாலும் ஒட்டிப் பேசினாலும் அதன் வேர்களையும், விழுதுகளையும், கிளைகளையும்,
2018
21 ஐம்பொறி உணர்வுகளே அறிவியல். (பிளேட்டோ)
காதலின் மூன்று அம்சங்கள்
ப�ொதுவாக, காதல் அனுபவத்தின் பிடிக்குள் இருக்கும்போது விழிகள் விரியும்; கன்னம் சிவக்கும்; இதயம் இன்னிசை வாசிக்கும்; நாக்குக் குழறித் திக்கித்திக்கி ஒட்டிக் க�ொள்ளும்; மேனி எங்கும் மின்சாரம் பாயும்; உள்ளங்கை வியர்க்கும். இவையெல்லாம் கனவு நிலையிலும் நிகழலாம், நனவு நிலையிலும் ந ட க ்கல ா ம் . இ ம்மா தி ரி ய ா ன பரவசத்தை ந�ோக்கி எல்லா உயிர்களும் ஈ ர்க்க ப ்ப டு வ து உ ண ்மைத ா ன் . இ தை ப ்ப ற் றி யே க வி தை க ளு ம் , திரைப்பட இருபால் (டூயட்) பாடல்களும் பி ர ம ா ண ்ட ம ா க க் கட்டமைக்கப்படுகின்றன. காதலை காமம், ஈர்ப்பு, பிணைப்பு எனப் பகுத்துப் பார்த்தல் நலம். காமத்தினால் கையகப்படுத்தப்பட்ட மனித மூளையில், டெஸ்டோஸ்டெர�ோன் என்னும் சுரப்பி ஆணுக்குச் சுரக்கிறது. இது சுரப்பதனால் காமம் கமழ்கிறதா? காமம் வெடிப்பதால் இது சுரக்கின்றதா? இது தெரியாமலேயே இனப்பெருக்கத்திற்கான ஏக்கத்திற்கு வடிகால் தேடி உயிரினங்கள் மூளையின் ஹைப�ோதாலாமஸ் தளத்திலும், தசை நரம்பு த�ோலின் தளங்களிலும் திருப்தி அடைகின்றன. அந்தத் திருப்தியை மீண்டும் மீண்டும் தேடி அலைகின்றன.
காதல் ஈர்ப்பு: ஆண்-பெண் ஈர்ப்பின்போது மூளைக்குள் மூன்று முக்கியமான வேதியியல் சுரப்பிகள் ஊற்றெடுக்கின்றன. ட�ோப�ோமைன், ந�ோர�ோபைன்பிரைன், செர�ோட�ோனின் ஆகிய மூன்றும் விளிம்புநிலை ச�ொர்க்கத்தின் ப�ோதைச் சிகரத்துக்கு இட்டுச் செல்கின்றன. இதனால்தான் காதலின் ஈர்ப்புக்குள்ளாவ�ோர் மயங்கிக் கிறங்கிச் சரிகிறார்கள். பசி ந�ோக்காமல், கண் துஞ்சாமல், காதல் துணையைத் தேடத் தாகம் க�ொள்கிறார்கள். காதலை எதிர்ப்பவர்களையும் தடுப்பவர்களையும் அழிக்கவும் தலைப்படுகிறார்கள். காதலி ஒத்துவரவில்லையெனில் அமிலத்தை ஊற்றி அவளழகைச் சிதைக்கவும் செய்கிறார்கள். 22 ஐம்புலனின்பமும் அவளிடமே உள்ளன. (குறள்: 1101)
காதலின் கிறக்கமான கிளுகிளுப்புக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால், தற்கொலை செய்யவும் துணிகின்றார்கள். ‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என வசன மழை ப�ொழிகிறார்கள். காதல் ப�ோட்டியில் கட்டுக்கடங்காமல் தாண்டவமாடி, ப�ோட்டியாளர்களைக் க�ொடூரமாகத் தாக்கவும் முற்படுகிறார்கள். சக்களத்திச் சண்டைகளும் சரளமாக அரங்கேறுகின்றன. இடம், ப�ொருள், ஏவல் எனப் பாராமல், நேரம் காலம் தெரியாமல், வெட்கத்தை விட்டுப் பகிரங்கத் தளத்தில் கூட அந்தரங்க விளையாட்டுகளை அரங்கேற்றிப் பிடிபட்டு விடுகிறார்கள். அவமானப்படுத்தப்படுகிறார்கள். அந்தஸ்தையும், க�ௌரவத்தையும் இழந்துவிடுகிறார்கள். இத்தனை ‘குண்டக்க மண்டக்க’ நாடகத்தையும் குரூரமாக அரங்கேற்றுவது அந்த முப்பெரும் வேதியியல் சுரப்புக்களே.
2018
காதல் பிணைப்பு
காதல் உணர்வின் இன்னொரு கூறுதான் பிணைப்பு என்கிற ஆத்மார்த்தமான நெருக்கம். இதில் ஆசை, பாசம், கருணை, உரிமை, இலயிப்பு, அரவணைப்பு ப�ோன்ற கதிர்வீச்சுக்கள் உண்டு. அச்சமில்லாமல், அறநெறித் துணிவ�ோடு, நியாயமான உரிமைய�ோடு, தம்பதியர் அதிகாரப்பூர்மாகக் கலந்துறவாடும்போத�ோ, தாய் தன் பிள்ளைக்குப் பால் க�ொடுக்கும்போத�ோ மூளையில் ஏற்படுவது ஆக்சிட�ோசின் மற்றும் ச�ோபிரெசின் சுரப்புக்கள். இங்குக் க�ொஞ்சுவதும் கெஞ்சுவதும் முகமூடி இல்லாமல் நிகழும். ஆத்மார்த்தமான அந்தரங்கத் தளத்தின் நெகிழ்வாக இருக்கும்போது, பந்தம்பாசம், ச�ொந்தம்-நெருக்கம் என இது பரிணமிக்கும். பகிரங்கத் தளத்தின் நெருக்கத்தைக் குடும்பப் பந்தமாகவும், நட்பு வட்டத்தின் அரவணைப்பாகவும் இது செயல்படும். இந்த உறவு நெருக்கத்தின் பிணைப்புக் க�ொஞ்சம் அடர்த்தியாகிப்போனால் ‘நம்மாளு’ என்கிற குறுகிய வட்டத்தை அமைத்துக் க�ொள்ளும். ‘வேத்தாளு’ என்கிற வேற�ொரு இலக்கை உருவாக்கிக் க�ொண்டு அவர்களைத் தள்ளி வைக்கவும், வெறுத்து ஒதுக்கவும், கேவலமானவர்களாகச் சித்தரிக்கவும் இதற்கு ஆற்றல் உண்டு. இவ்வாறு உருவாவதே தன் சாதி அரவணைப்பும் பிறர் சாதி வெறுப்பும்.
ச�ொந்த ஊர்க்காரன் தப்புத்தண்டா செய்தாலும் அதைப் புண்ணியமாகக் க�ொண்டாடும். வேற்று ஊர்க்காரன் நல்லதே செய்தாலும் அதைத் தாறுமாறு எனக் கட்டமைத்துக் க�ொண்டு சண்டையிடத் தூண்டும். இவ்வாறு குறுகிய வட்டத்துக்குள் உடைக்க முடியாத இரும்பு வேலியை அமைத்துக் க�ொண்டுக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதையே பெருமையாகச் சித்தரித்துக் க�ொள்ளும். ‘மாற்றான் த�ோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும்’ என்பதை மறந்தும் கூட, மருந்துக்கும் கூட ச�ொல்ல முடியாதபடி வாயைக் கட்டிப் ப�ோட்டு வைக்கும்.
2018
காதல்: ஆசையா? அகங்காரமா? தியாகமா? சுகத்தையும் ச�ொகுசையும் இன்பக் குவிப்பு வெறிய�ோடுத் துய்த்துணரத் துடிப்பது ஆசைக் காதல். இது கனவுலகில் சஞ்சரித்துக் க�ொண்டு ஆகாயத்து மேகங்களின் மத்தியில் ஆயிரமாயிரம் வண்ணத்துணிகட்டி வசீகரமாக ‘ராஜா-ராணி’ ஊர்வலம் ப�ோகும். அகங்காரக் காதல் ஆதிக்கத் திமிர�ோடு ‘அவளை அல்லது அவனை மடக்கிக் காட்டுகிறேன் பார்’ எனச் சவால் விட்டுக் க�ொஞ்சம் க�ொஞ்சமாகக் க�ொஞ்சத் த�ொடங்கும். க�ொஞ்சுவதற்கு மறுத்தால் குதறத் த�ொடங்கும். குரூரமாகக் க�ொலை செய்யவும் த�ொடங்கும். தமிழர்களின் வாழ்வியல் மதிப்பீடுகளாகக் காதல் - மானம் - வீரம் என்று மேடை ப�ோட்டு நரம்பு புடைக்க ஒலி பெருக்கியில்
காதலைப் பற்றிய ஆக்கப்பூர்வமான அறிவியல் தேடலுடன் வாழ்வைக் க�ொண்டாட வேண்டிய ப�ொறுப்பு, இளமை முதல் இறப்பு வரை அனைவருக்கும் உண்டு.
23 அன்றாடச் சிந்தனைகளின் அறிவுக் கூர்மையே அறிவியல். (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
ஓலமிட்டு உரத்துக் கூவுவார்கள். ஆனால் நடைமுறையில் ஆண் மகனின் மானத்தை எப்படி அளவிடுவார்கள்? ஒரு பெண்ணின் மானத்தைச் சீரழித்து அவளது தலைக்கனத்தை அழிப்பதற்கான கருவியாக ஆணின் வன்முறையை நியாயப்படுத்துவார்கள். ஓர் ஆண்மகனின் வீரத்தை எப்படிக் கணிக்கிறார்கள்? வரம்பற்ற விதத்தில் ஆண் ஆளப்பிறந்தவன் எனவும், அவன் பெண்ணை அடக்க வேண்டியவன் எனவும் ச�ொல்லாமல் ச�ொல்லுவார்கள். ‘ஆம்பளன்னா அப்பிடி இப்பிடித்தாம்மா இருப்பான். நாமதான் அனுசரிச்சுப் ப�ோகணும்?’ ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’, ‘அவள் அடக்க ஒடுக்கமா ப�ொண்ணாட்டம் ப�ோயிருந்தா இந்த வெக்கக் கேடு நடந்து இருக்குமா, இத்தகைய மகா வாக்கியங்கள் ஆணாதிக்கக் காதலை அல்லது காமத்தைச் சமுதாயம் ஏற்றுக்கொள்வதைக் காட்டும். தியாகக் காதலில், கட்டழகின் வசீகரத்தை முன்வைக்க மாட்டார்கள். கருப்பு – மாநிறம் சிவந்த மேனி எனப் பேசமாட்டார்கள். பேய்ப் பிடிச்ச ப�ொண்ணு – ந�ோய் பிடிச்ச மாப்பிள்ளை என ஏசிப் பேச மாட்டார்கள். உடனிருத்தல், ப�ொருளுதவி, வருணிப்பு, அன்பளிப்பு என எதிர்பார்க்க மாட்டார்கள். சாதி பார்த்துச் சம்பந்தம் பேச மாட்டார்கள். சம்பளம் பார்த்துச் சம்சாரி ஆக மாட்டார்கள். ‘உனக்காக என் உயிரையும் க�ொடுக்கிறேன்’ என மலட்டுக் கவிதைகளை மளமளவென ஒப்பிக்க மாட்டார்கள். தன் காதலியின் மாண்பினைக் காக்க அந்தக் காதலனும், அவனது மானிட உரிமையைக் காக்க அந்தக் காதலியும் உயிர்த்தியாகம் என்று ச�ொல்லாமலேயே உயிரையும் உடலையும் கற்பூரமாகக் கரைத்திட முன் வருவார்கள். இந்தத் தியாகக் காதலுக்கு வேஷம் ப�ோடத் தெரியாது. க�ோஷம் ப�ோடவும் தெரியாது.
ஆணவக் க�ொலைப் பண்பாடு ஒழியட்டும் அண்மைக்காலத் தமிழக வரலாற்றில் சுவாதி-ராம்குமார்(?), திவ்யா-இளவரசன், கவுசல்யா–சங்கர், இணையரின் கதைகள் அதிர்ச்சியில் உறைய வைத்தன. ஆடவன் கீழ்ச்சாதியாம், அணங்கவள் (பெண்) மேல்சாதியாம். திருமண வயதுக்கு வந்து இவர்கள் காதலித்துக் கரம் பிடித்தப�ோது சாதிவெறியாட்டத்தின் ஆணவ வெறி இந்தக் காதல் ஜ�ோடிகளைத் துரத்தித் துரத்திக் க�ொலை செய்யத் துடித்தது. ‘மேல் சாதிக்கு மட்டுமே உடமையான மேல்சாதிப் பெண்ணின் கருப்பையைக் கீழ்ச்சாதிப் பசங்க அபகரிக்கலாமா?’ இந்த மனுவாத அதர்மத்தைத் தூக்கிப் பிடித்த
24 ந�ோய்க்குக் காரணமும், அதற்கு மருந்தும் அவளே! (குறள்: 1102)
2018
சாதி வெறி இந்த இளைய ஆடவர்களைப் பிணமாக்கியது. இந்த இளம் பெண்களைத் தண்டித்து விதவையாக்கியது. உயிர்ச்சேதம் செய்தது. சாதிய வன்முறையால் நேரிய காதலைத் தண்டித்து விடலாம் என நினைத்தது தமிழ்நாட்டின் சாதிய வெறியாட்டம். இதில் கவுசல்யா என்னும் இளம்பெண், நீதியின் அக்கினிப்பிழம்பாகக் கிளம்பிச் சாதிவெறியாட்டம் ஆடிய தன் ச�ொந்தத் தாய், தந்தை, உற்றார், உறவினரின் சாதியக் க�ொடுக்கை நீதிமன்றத் துணையுடன் ப�ோராடிப் பிடுங்கி எறிந்து விட்டார். தன் காதல் கணவரின் குடும்பத்தாரும் இனத்தாரும் தாழ்ந்தவர்கள் அல்லர் என நீரூபிக்கத் தன் கல்வியறிவால் அவர்களின் மானிட மாண்பை வென்றெடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதுதான் உண்மையான தமிழச்சியின் உருப்படியான காதல்.
காதலுக்கு மனசாட்சி களவாணித்தனமான இன்ப நுகர்வு வேட்டையை மையப்படுத்துவது காதலாகாது. பெண்ணின் உடல் சுகத்தை மட்டுமே நுகர்ந்து சப்பிப்போட்ட மாங்கொட்டையாக அவளைத் தூக்கி எறிவது காம ந�ோய். ஓர் ஆணின் காசு பணத்தை, நுகர்வுப் ப�ொருட்களை வாங்கிக் குவிப்பதற்கான விலையாகக் காதலை முன்வைப்பதற்குப் பெயர் வியாபாரக் காதல். காற்றுள்ளப�ோதே தூற்றிக்கொள்வதும், காற்றில்லாதப�ோது காலால் எட்டி உதைப்பதும் சந்தர்ப்பவாதக் காதல். நெஞ்சுக்கு நீதியான உண்மைக் காதல், தனது காதல் துணையையும் அவளைச் சார்ந்த ஏழை எளிய�ோரையும் அரவணைக்கும். மனசாட்சியுள்ள காதல் தன் காதல் துணையையும் வலிமையற்ற உயிர்களையும் ஆற்றுப்படுத்தும். தெய்வீகக் காதல் தன்னுணர்வு க�ொண்டதாகவும், சுய விமர்சனப் பண்பாடு க�ொண்டதாகச் செயல்பட்டு, ப�ோலித்தனங்கள் எந்தெந்த வடிவில் எவரிடத்தில் செயல்பட்டாலும் தலைநிமிர்ந்து இடித்துரைக்கும். அறிவார்ந்த காதல், தன் காதல் துணையையும் கண்ணீர் விட்டுக் கதறுவ�ோரையும் ஈரம் நிறைந்த நெஞ்சோடும் வீரம் நிறைந்த தெம்போடும் வாழ்வித்துக் க�ொண்டே இருக்கும். நெஞ்சுக்கு நீதியான தெய்வீகக் காதலின் அறிவார்ந்த மனசாட்சியின் துடிப்பு இருந்தால், யாருக்கும் அஞ்சவும் தேவையில்லை. அச்சுறுத்தவும் தேவையில்லை.
காற்றுள்ளப�ோதே தூற்றிக் க�ொள்வதும், காற்றில்லாதப�ோது காலால் எட்டி உதைப்பதும் சந்தர்ப்பவாதக் காதல்.
2018
25 முறிந்த இறக்கைகள் க�ொண்ட மெய்ம்மையே அறிவியல். (அகஸ்டின் ஓம் லே)
மது உள்ளே ப�ோனால் உண்மை வெளியே வரும்
மது ப�ொய்யும் மெய்யும் ப�ொய் - 08
முனைவர் பிரான்சிஸ் நெல்சன்
மதுவின் மயக்கத்தில் இருப்பவர் உண்மை பேச மாட்டார்; மாறாகத் தம் மனதில் புதைத்து வைத்திருக்கும் வெறுப்பு, எரிச்சல், ஆத்திரம், காழ்ப்பு, பகைமை, வன்மம், வைராக்கியம், வெறித்தனம் ப�ோன்ற உணர்வுகளைக் க�ொட்டித் தீர்ப்பார். இவை பெரும்பாலும் பிறரைப் பற்றியதாக இருக்கும். ச�ொல்லப்படும் செய்திகள் அவர்களுக்கு இழிவு உண்டாக்குவதாகவும், பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் இருக்கும். சுயகட்டுப்பாடிழந்து அவலட்சணமான வார்த்தைகளையும், ச�ொல்லத்தகாத செய்திகளையும், பிறர் அறியக்கூடாத இரகசியங்களையும் வெளிப்படுத்துவார். தன் மனைவி, பிள்ளைகள் பெற்றோர், உறவினர், நண்பர்கள், உடன் த�ொழில் செய்பவர்கள் மீதும் ப�ொய் வதந்திகள், மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், வீண்பழிகள் சுமத்துவார். பிறரைக் குற்றவாளியாக்கி தம்மை நீதிமானாகக் காட்டுவார். மதுவின் பிடியில் இருப்போர் ச�ொல்வதை நம்பினால் ஆபத்தும் விபரீதமும்தான் விளையும். ப�ோதையில் பேசும் வார்த்தைகள் அநேகமாக அசிங்கமானதாக, அநாகரீகமாக, அவமானத்துக்குரியதாக, தலைகுனிவு ஏற்படுத்துவதாக அமையும். ப�ோதையில் சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பேச்சுக்களையும், கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ச�ொற்களையும் பட்டென்று ஒருந�ொடிப் ப�ொழுதில் பேசிவிடுவார், செய்தும் காட்டுவார். ப�ோதை தெளிந்ததும் ‘நானா இப்படிப் பேசினேன்’ ‘நானா இப்படிச் செய்தேன்’ என்று நம்ப மறுப்பார். நிச்சயமாகப் ப�ோதையில் இல்லாமலிருந்தால் அப்படிப் பேசவ�ோ, செய்யவ�ோ வாய்ப்பேயில்லை. பேச வாய் வராது, செய்யப் பகுத்தறிவு சம்மதம் தராது. மதுவானது மூளையின் சிந்தனை பகுதியை மந்தமடையச் செய்வதால் உணரும் பகுதியும் மந்தமடைகிறது. இதனால் இதைப் பேசலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கிற ‘எச்சரிக்கும் சைகை’ (alarm signal) ஆற்றல் மந்தமடைகிறது. மந்தமடைந்த 26 அகன்றால் சுடும்; அணுகினால் குளிரும். - காதல் தீ. (குறள்: 1104)
என்பது ப�ொய்
மூளையினின்று மந்தமான செயல்கள்தான் வெளிப்படும். இந்த மந்தமான செயல்களில் மூளையின் வழக்கமான கவனமும், கண்காணிப்பும் இருப்பதில்லை. ஒரு செயல் நடக்கும் தருணத்தில், இச்செயல் எப்படிப் பிறரைய�ோ அல்லது தம்மைய�ோ காயப்படுத்தப் ப�ோகிறது, புண்படுத்தப் ப�ோகிறது என்பது பற்றிய சிந்தனை இருக்கவே இருக்காது.
ப�ோதையில் பேசும் வார்த்தைகள் அநேகமாக அசிங்கமானதாக, அநாகரீகமாக, அவமானத்துக்குரியதாக, தலைகுனிவு ஏற்படுத்துவதாக அமையும்.
மதுக்குடித்துக் க�ொண்டு உளறுவது, ஒருவர் தம்மையும் பிறரையும் அழித்துக் க�ொள்வதற்கான முயற்சியாகும். இதை யாராவது உண்மையை வெளிப்படுத்துதல் என்று ச�ொல்ல முடியுமா? சீன் காரன் (Sean Horan) என்பவர் 433 கல்லூரி மாணவர்கள் மதுக்குடித்த பின்பு அலைப்பேசியில் பேசும் பாணியை உற்றுக் கவனித்ததன் விளைவாக: 1) எதை வேண்டுமானாலும், விளைவைப் பற்றிக் கவலைப்படாமல் பேசும் மனத்திடம், மன உறுதி, உடனடி மனத் தைரியம், 2) உற்சாகத்திற்காக, உல்லாசத்திற்காக வரம்பு மீறி பேசுகின்ற மனப்பாங்கு, 3) வீண் வம்புகளில் மாட்டுதல், பாலுணர்வால் உந்தப்பட்டுத்
2018
தடம் புரளுதல் ப�ோன்ற செயல்பாடுகள் மிக எளிதாக நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறார். மதுவானது தவறான முடிவுகளை எடுக்கக் காரணமாகிறது. பல நேரங்களில், தான் எடுத்த தவறான முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி நினைவுகூர முடியாத நிலை (black out stage) ஏற்படலாம்.
அவ்வளவு ப�ோதையிலும் ‘நீ ர�ொம்ப அதிகமா குடிச்சிட்ட’ என்று ச�ொன்னால் ‘ஆமா, நான் கூடுதலாகத்தான் குடிச்சிட்டேன்’ என்று உண்மையை ஏற்றுக்கொள்பவர்கள் ப�ொதுவாக இல்லை. அவர்கள் வாதத்திற்காக, ‘குடியை நான் எப்ப வேண்டுமானாலும் நிறுத்திக் காட்ட முடியும்’ என்று ச�ொல்லிக் க�ொண்டே குடித்துக் க�ொண்டிருப்பார்கள்.
மதுவானது ஒரு மனிதன் தனது மனதுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் மன வருத்தத்தைய�ோ, மன வேதனையைய�ோ பல மடங்கு மிகைப்படுத்தி, எதிர்மறையாகப் பேசச் செய்கிறது.
மதுவானது மூளையின் சிந்தனை பகுதியை மந்தமடையச் செய்வதால் உணரும் பகுதியும் மந்தமடைகிறது.
மதுவானது நல்ல நேரத்தை (good time) உருவாக்குவது ப�ோல ஆரம்பத்தில் த�ோன்றினாலும், முடிவில் அஃது உருவாக்கிக் க�ொடுப்பது ‘ம�ோசமான நேரம்’ (bad time) தான் என்று எளிதாகச் ச�ொல்லிவிட முடியும்.
குடித்தவர் ச�ொல்லும் கதைகளில் அவருக்கு இருக்கும் வெறுப்பின் அளவைப் ப�ொறுத்து மிகைப்படுத்தப்படலாம் அல்லது சுருக்கப்படலாம். உண்மை மட்டும் அப்படியே வெளிப்படுவதில்லை.
.....................................................................................................................
“டே! செல்லம், அடிக்கடி நீ எனக்கு எஸ்.எம்.எஸ் செய்யறத எங்க அப்பா பார்த்துத் த�ொலைச்சுட்டார்..!” “அய்யைய�ோ! என்ன ச�ொன்னார்?” “உன்னோட இங்கிலிஷ்ல தப்பு இருக்காம், நல்ல டீச்சரைப் பார்த்து உன்ன டியூஷன் ப�ோகச் ச�ொன்னார்!”
சிரிக்க மட்டும்
2018
27 நெறிப்படுத்தப்பட்ட அறிவே அறிவியல். (ஜார்ஜ் ஹென்றி)
ஜ�ோசப் ஜெயராஜ், பிரியசகி, சந்தர் குமார் நடராஜன்.
நட்சத்திரங்க ளு நன்னடத் ம் தையும்!
ஆசிரியராகப் பணிபுரியும் மாலாவுக்குப் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதென்றாலே, தமது வீடு இருக்கும் க�ோலத்தை நினைத்து எரிச்சல் வரும். முத்துவும் முகிலனும் அவரது இரு பிள்ளைகள். இருவரும் முறையே ஏழாம் வகுப்பும், ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் படிப்பதால் மாலா வரும் முன்பே அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவர். கழற்றிய உடை, ஷூ, சாக்ஸ், புத்தகப் பை என ஒவ்வொன்றும் ஒவ்வோரிடத்தில் கிடக்கும். டப்பாவிலிருந்து தின்பண்டங்களை எடுத்தால் மூடுவது கிடையாது. த�ொலைக்காட்சி ரிம�ோட்டுக்காகவ�ோ அல்லது வேறு எதற்காகவ�ோ அவர்கள் சண்டைப�ோட்டு எதையாவது கீழே தள்ளி உடைத்து வைப்பத�ோ, காயம்பட்டுக்கொள்வத�ோ வாடிக்கையான செயல். அவர்கள் விளையாடச் சென்றால், மாலா ப�ோய் வீடு வீடாகத் தேடி அழைத்து வர இரவு ஏழு மணியாகிவிடும். ஞாயிற்றுக் கிழமைகளில் விளையாட்டு மைதானத்தில் ப�ோய்க் கிரிக்கெட் விளையாடப் ப�ோகிற�ோம் என்று காலையில் செல்பவர்கள், திரும்பி வர மாலை நான்கு மணியாகிவிடும். மாலா ஏதாவது திட்டினால் எதிர்த்துப் பேசுவது, முறைப்பது, சாப்பிடாமல் ப�ோய்ப் படுத்துக்கொள்வது என அவர்களின் செயல்களால் நாளுக்கு நாள் மாலாவின் இரத்த அழுத்தம் அதிகரித்து வந்தது. அவளது கணவர் சக்தி, த�ொழில் நிமித்தமாகக் காலை எட்டு மணிக்குக் கிளம்பி, இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். என்றாவது வீட்டில் இருக்கும்படி நேர்ந்தால் பிள்ளைகளை உணவகம், பூங்கா, கடற்கரை என்றோ
இளைய �ோரின் உளவிய சிக்கல்க ல் ளும் த ர் ீ வுகளு ம் - 13
விளையாடவ�ோ ப�ோகலாம் என அழைத்துச் செல்வதால் பிள்ளைகள் மனதில் ‘அப்பா நல்லவர், அம்மாதான் எப்போதும் திட்டிக்கொண்டிருக்கிறார்’ எனப் பதிந்துவிட்டது.
ஒரு நாள் மாலா சக்தியிடம் “நீங்க பாட்டுக்கு வேலைக்குப் ப�ோயிடறீங்க. வீட்டில இருக்கும்போது பிள்ளைகளையாவது க�ொஞ்சம் கவனிக்கலாம் இல்ல? வகுப்புல ஐம்பது பிள்ளைகளைச் சமாளிக்கிற என்னால இவனுங்களைச் சமாளிக்க முடியலை. வேலைக்குப் ப�ோய்ட்டு வீட்டுக்கு வந்து எல்லா வேலையும் பார்த்து, உங்க பசங்களைப் படிக்க
28 மென்மைக்குச் சான்றாகும் அனிச்சம், அவள் பாதத்தினும் மென்மையானத�ோ? (குறள்: 1111 )
2018
குழந்தைகளை அடிப்பத�ோ திட்டுவத�ோ எதிர்மறை விளைவுகளையே பெரும்பாலும் ஏற்படுத்தும். பெரியவர்களின் அமைதியான கண்டனங்கள் உரத்த குரலில் செய்யப்படும் கண்டனங்களைவிடப் பயன்மிக்கவையாக உள்ளன
வைச்சு…. அப்பாடா! எனக்குச் சீக்கிரம் பி.பி, சுகர் எல்லாம் வந்துடும்,” என மாலா புலம்பித் தீர்க்க, உடனே அவர், “உன்னை யாரு வேலைக்குப் ப�ோகச் ச�ொன்னா? குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு வீட்ல இருன்னு ச�ொன்னா கேக்க மாட்டேங்குற, நீ சம்பாதிச்சு ஒண்ணும் ஆகப் ப�ோறதில்லை,” என ஆணாதிக்கத் த�ொனியில் பேசத் த�ொடங்க, பிறகு பேச்சு வளர்ந்து சண்டையில் முடியும். அடிக்கடி இதுப�ோல் சண்டை ப�ோடுவது குடும்பத்திற்கு நல்லதல்ல என உணர்ந்து, ஒருமித்த முடிவாக ஒரு குடும்ப மனநலக் கருத்துரையாளரைச் சந்தித்தனர். அவர் இருவரிடமும் பேசி அடிப்படை சிக்கலைத் தெரிந்து க�ொண்டார். பிறகு, “கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் ப�ோகும் வீடுகளில் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியாதப�ோது, இப்படிப் பிள்ளைகளின் நடத்தை மாறிப் ப�ோவதுண்டு. நாம் தான் கவனமாக இருந்து அவர்களைச் சரியாக வழிநடத்த வேண்டும். ட�ோக்கன் எக்கானமி சிஸ்டம் (Token Economy System) உங்க பிள்ளைகளிடம் சரியா வேலை செய்யும்னு நினைக்கிறேன்” என்றார். இருவரும் புரியாமல் விழிக்கவே, “இது பிஹேவியர் தெரப்பியில் நாங்க பயன்படுத்தும் ஒருமுறைமை; உங்களுக்குப் புரியும்படி ச�ொல்றேன். பட்டியல்
2018
ஒ ண் ணு தயார் செய்து உங்க பிள்ளைகளிடம் நீங்க எதிர்பார்க்கும் நடத்தை மாற்றங்களை அதில் எழுதுங்க. அவர்களிடம் காணப்படும் ஒவ்வொரு நன்னடத்தைக்கும் ஒரு ஸ்டார் க�ொடுங்க, சண்டை ப�ோடாமல் இருப்பது, ப�ொருட்களை அதனதன் இடத்தில் வைப்பது, விடியலில் சீக்கிரம் எழுந்து படிப்பது, அம்மாவுக்கு உதவுவது... என ஒரு வாரத்தில் ஐம்பது ஸ்டார்களுக்கு மேல் வாங்கியவர்களுக்கு ஏதாவது ஓர் ஊக்கப் பரிசு க�ொடுங்க. இருபது ஸ்டார்களுக்கும் குறைவாக வாங்கியவர்களுக்கு அன்றாடக் கைச்செலவுப் பணத்தைக் குறைச்சிடுங்க. இரண்டு பேரும் ஐம்பது ஸ்டார்களுக்கு மேல் வாங்கினா மட்டும் வார இறுதியில் எங்காவது வெளியே கூட்டிச் செல்லவ�ோ, விளையாடச் செல்லவ�ோ அனுமதிங்க. க�ோபிச்சிக்கிட்டுச் சாப்பிடாம இருந்தா, நீங்க கூப்பிடாதீங்க. பசியெடுத்தா தானே வருவாங்க. இதிலெல்லாம் கண்டிப்பா இருந்தா நடத்தை மாற்றங்கள் தானே நடக்கும்” என்றார். அவர் ச�ொன்னது ப�ோலவே அட்டையில் (Chart) எழுதி ஒட்டி, விதிகளையும் விளக்கி நடைமுறைப்படுத்தத் த�ொடங்கினர். முதல் வாரம் சிறியவன் மட்டும் ஐம்பது ஸ்டார்களுக்கு மேல் வாங்கி, அவன் விரும்பிய வெளிநாட்டுச் சாக்லேட்டைப் பெற்றான். இருபதுக்குக் குறைவான ஸ்டார் வாங்கிய பெரியவனின் பாக்கெட் மணி குறைக்கப்பட்டது. வார இறுதியில் 29
புதைக்கப்பட்ட எண்ணங்களைத் த�ோண்டுவதே அறிவியல். (மைக்கேல் உனமுன�ோ)
விளையாடச் செல்லவ�ோ, வெளியில் சென்று ப�ொழுது ப�ோக்கவ�ோ பெற்றோர் அனுமதி தராத நிலையில் இருவரும், “அடுத்த வாரம் ரெண்டு பேரும் கண்டிப்பா ஐம்பது ஸ்டாருக்கு மேல் வாங்கிடுற�ோம். ர�ொம்பப் ப�ோரடிக்குது, ப்ளீஸ் எங்காவது கூட்டிட்டுப் ப�ோங்க” என்று கெஞ்சிப் பார்த்தனர். பெற்றோர் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் அமைதியானார்கள். அடுத்த வாரம் இருவரும் ப�ோட்டி ப�ோட்டுக்கொண்டு தம் நன்னடத்தைக்கான ஸ்டார்களை வாங்கிக் குவித்தனர். அதுவே பழகிப்போக மாலாவின் குடும்பம் அமைதியாக, மகிழ்ச்சி நிறைந்ததாக மாறியது. உளவியலில் இதை வில்லைப் ப�ொருளாதாரம் (Token Economy) என்பர். 1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் அண்ணா அரசு மருத்துவமனையில் (Anna State Hospital) நீண்ட காலம் மனநிலை சரியில்லாமலிருந்த ந�ோயாளிகளின் மீது முதன்முறையாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள் எதிர்பார்த்தபடி ப�ொருத்தமான வகையில் நடந்து க�ொண்ட ந�ோயாளிகளுக்கு மதிப்புமிக்க அடையாள வில்லைகள் (Token) வழங்கப்பட்டன. அவற்றைக் க�ொண்டு அவர்கள்
அதிக
உணவு,
சிகரெட்டு,
ப�ொழுதுப�ோக்கு
ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ள முடியுமென்பதால்
எதிர்பார்த்த நன்னடத்தையை உருவாக்குவதில் இவ்வில்லைகள் பெரும் பங்காற்றின. 1970 முதல் இந்த வில்லைப் ப�ொருளாதாரம், பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் விரும்பத்தகாத நடத்தையை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்பட்டு வெற்றியடைந்தது. “குழந்தைகளை அடிப்பத�ோ திட்டுவத�ோ எதிர்மறை விளைவுகளையே பெரும்பாலும் ஏற்படுத்தும். பெரியவர்களின் அமைதியான கண்டனங்கள் உரத்தக் குரலில் செய்யப்படும் கண்டனங்களைவிடப் பயன்மிக்கவையாக உள்ளன” என்கிறார் டிராப்மேன் என்னும் உளவியலாளர். “குழந்தைகள் நன்னடத்தையை வெளிப்படுத்தும்போது
பாராட்டி ஊக்கப்படுத்துவதும், ப�ொருத்தமற்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதைக் கவனியாது புறக்கணிப்பதும் பெரிதும் வெற்றி தருகின்ற வழிமுறைகள்” என்கின்றனர் மாட்ஸென், பெக்கர், தாமஸ் ஆகிய உளவியல் ஆராய்ச்சியாளர்கள். நாமும் முயன்று பார்க்கலாமே!
குழந்தைகள் நன்னடத்தையை வெளிப்படுத்தும்போது பாராட்டி ஊக்கப்படுத்துவதும், ப�ொருத்தமற்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதைக் கவனியாது புறக்கணிப்பதும் பெரிதும் வெற்றி தருகின்ற வழிமுறைகள்
30 மலர் கண்டு மயங்கும் மனமே, பலர் கண்டு வியக்கும் மலராக அவள் கண் உளதே! (குறள்: 1112)
2018
ஆசிரியர் : அ. ஜேசுதாஸ் பக்கங்கள் : 174 விலை : ரூ. 160
ஆசிரியர்: வில்லியம் பால்ராஜ் பக்கங்கள்: 100 விலை: ரூ. 100
ஆசிரியர்: ஆண்டோ சகாயராஜ் பக்கங்கள்: 174 விலை: ரூ. 160
அரும்பின் புதிய வெளியீடுகள்
மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க!
பரபரப்பு, அறைகூவல்கள், ப�ோராட்டங்கள் இவைகளுக்கிடையில் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, ப�ொறுமையாய் சிந்திக்கத் தூண்டும் சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க! வாழ்க்கையின் தேக்க நிலையில் தவிக்கும் பலருக்கு இந்நூல் புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் உத்வேகமும் தரும் மருந்து. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்! உண்மையும் ப�ோலித் த�ோற்றமும், தீமையைக் கண்டு திகிலடையாதே!... ப�ோன்ற 36 தலைப்புகளில் இந்நூல் கூறும் பாடங்களைக் கவனத்துடன் வாசித்தால் வாழ்வில் நிம்மதியும் நிறைவும் எய்தலாம்.
..............................................................................................................................
இயற்கையின் சிரிப்பினிலே... (இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவனைப் பற்றிய ஓர் ஆன்மீகத் தேடல்)
இறையியல் மற்றும் இலக்கியக் கண்ணோட்டத்தில், இன்றைய நடப்புகளை அலசி ஆராயும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...
இயற்கையைத் தன்னலக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனிதருக்கு, அதைப் பராமரிக்கும் சவால் நிறைந்த அழைப்பை இறைவன் விடுக்கின்றார் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். இயற்கையில் இறைவனின் த�ோற்றத்தை, இருப்பை உணர்ந்து, அவரில் சங்கமிக்கும்போது வாழ்க்கை நிறைவெய்துகின்றது என்கின்றது இந்நூல். சித்தர் பாடல்களையும் பாரதியாரின் கவிதைகளையும் தமது கருத்துக்கு அரண்களாக ஆங்காங்கே ஆசிரியர் சேர்த்துள்ளார். இறையியல் துறையில் புதுமைப் படைக்கும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...
.............................................................................................................................. மீண்டும் எழுவ�ோம்! குருதி பூசிய கத்தியை நக்கி நாக்கறுபட்டுச் சாகும் ஓநாய்கள் ப�ோல் இலவசங்களை நக்கி நலிவுற்றுக் கிடக்கும் மக்களுக்காக இரங்குகிறார் ஆசிரியர் ஆண்டோ சகாயராஜ்.
‘முதிர்ச்சியுள்ளோரின் காதல் முனை மழுங்குவதில்லை,’ ‘வாழ்க்கையில் வெறிய�ோடு ப�ோராடுபவர்களே வரலாறு படைக்கிறார்கள்,’ ‘எந்தவழி ஏற்றம் தரும் வழி,’ ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’… ப�ோன்ற 25 தலைப்புகளில், எளிய வார்த்தைகளில், ஆழமான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நல்ல பல செய்திகளால் வீழ்ந்துகிடக்கும் இளைஞர்களை மீண்டும் எழுந்து நிற்க அறைகூவல் விடுக்கும் நூல் மீண்டும் எழுவ�ோம்!
2018
31 அறிவியல் அறிஞன் அரைகுறை தத்துவ ஞானி. (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
நவீனமான
காதல் ... இலக்கு
?!
ச�ோபியா கே.கே. நேரடியாக விஷயத்துக்குப் ப�ோய்விடலாம். காதலுக்கு எதற்கு முன்னுரை? 5 வயது குழந்தைக்கும் ‘காதல்’ என்ற வார்த்தை தெரிந்திருக்கிறது. பள்ளிக்கூட வேனில் இருந்து 4 குழந்தைகள் இறங்கி வந்துக�ொண்டிருந்தன. அதில் ஒரு ப�ொடியன் எனக்குத் தெரிந்தவன் என்பதால், “மற்ற 3 பேரும் யாருடா?” என்று கேட்டேன். “இது என் ஆளு... அது அவன் ஆளு...” என்று ச�ொல்லி அதிர்ச்சி தந்தான். உள்ளூர்ப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை முன்பு 7 வயதுச் சிறுவன் ஒருவன் முழங்கால் ப�ோட்டு நின்றுக�ொண்டிருந்தான். என்னவென்று விசாரித்தால், “ஏ... டெடி பியரா நான் இருந்தா, என்னைக் கட்டிப்பிடிச்சித் தூங்கியிருப்ப. எங்க வீட்டுக் குத்துவிளக்கு, நீ கெடைச்சா என் வாழ்க்கை கெத்து...” என்று கடிதம் எழுதி மாட்டிக்கொண்டானாம்.
மூக்கருகே அவள் கன்னத்தைக் க�ொண்டு வந்தாள். எனக்கு என்னவ�ோ செய்தது. ஒரு கணம் செய்வதறியாது முடங்கிப்போய்விட்டேன். அதைக் காதல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி 20 வயது வரையில் வெவ்வேறு நிகழ்வுகளைக் காதலெனப் புரிந்துக�ொண்டேன். முழுக்க எழுதினால், அதுவே ஒரு கட்டுரையாகிவிடும் என்பதால் விஷயத்துக்கு வருகிறேன்.
இந்தக் ‘க�ொசுத் த�ொல்லை’ படிக்கும் சிறுவரின் உந்து வண்டிகளில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. இதைக் ‘க�ொசுத் த�ொல்லை’ என்று எழுதுவதில் இருந்தே எனக்கு வயதாகிவிட்டது என்பதைப் புரிந்துக�ொண்டிருப்பீர்கள். பெண்களைப் பார்ப்பது, அவர்கள�ோடு ஒரு வார்த்தையாவது பேசிவிடுவதே இலட்சியம் என்று வாழ்ந்தவர்கள், அந்த வயதைக் கடந்ததும் அதே வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்த்து எரிச்சல்படுவது என்ன நியாயம�ோ தெரியவில்லை. நான் 4ஆம் வகுப்புப் படித்தப�ோது, பள்ளி ஆண்டு விழா. ஒண்ணாம் வகுப்பு படித்த சித்ரா, கமகமவெனப் புனுகு பூசி, உதட்டுக்கு சாயமிட்டு ஓடிவந்தாள். ‘மணக்குதா?’ என்று கேட்டு எந்தக் சில்மிஷமும் இல்லாமல் என்
32 நிலவுக்கும் உன் முகத்துக்கும் வேறுபாடறியாமல் மயங்கின விண்மீன்கள். (குறள்: 1116 )
2018
காதல் இல்லாவிட்டால், இந்த உலகம் எப்போத�ோ பாலைவனமாகியிருக்கும். எல்லா இதழ்களும் காதலர் தினச் சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன. பெரும்பாலான திரைப்படங்கள் காதல் காட்சிகளாலும், பாடல்களாலுமே ஓடுகின்றன. காதல் இல்லை என்றால் கவிதை இல்லை, காவியம் இல்லை, அழகுணர்ச்சி இல்லை, ப�ொய் ச�ொல்லத் தேவை இல்லை. பள்ளி, கல்லூரி வகுப்புகளைப் புறக்கணிக்கும் அவசியம் இல்லை. சந்ததி விருத்தியும் இல்லை. பிறகு ஏன் காதல் திருமணம் என்றால் பெரிய பிரச்சினையாகிறது. சாதி மாறிக் காதலித்தால் க�ொலையில் ப�ோய் முடிகிறது? ஓர் ஆண், பெண்ணைக் காதலிப்பதுதானே இயற்கை? க�ொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்துக�ொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மணமகன், மணமகளின் வாழ்க்கைத்தரம் சமச்சீராகவ�ோ, மணமகளைவிட மணமகனின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்தோ இருந்தால் சாதியால் பெரிய சிக்கல் வருவதில்லை. உயர்ந்த(?) சாதியில் பிறந்த பணக்காரப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை வாலிபன் காதலிக்கிறப�ோதுதான் பெரும் பிரச்சினையாகிறது. ஆண், பெண்ணுக்குள் நடக்கும் தனிப்பட்ட விவகாரத்திற்குள் குடும்பமும், சமூகமும் நுழைந்து வன்முறையை நிகழ்த்துகின்றன. மனிதர்களை விடுங்கள். விலங்கைய�ோ பறவையைய�ோ எடுத்துக்கொள்வோம். எல்லா ஆணும், பெண்ணோடு இணை சேரத் துடியாய்த் துடிக்கின்றன. ஆனால், அதில் எந்த ஆணால் தன்னைப் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறத�ோ அந்த ஆணுக்கு மட்டுமே இடம் க�ொடுக்கிறது பெண்ணினம். எங்கள் வீட்டில் க�ோழி வளர்த்தோம். ஒரு பெட்டை முட்டையிடும் பருவம் வந்ததும், சேவல் அதை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தது. புத்தக அலமாரி, அரிசி மூட்டை என்று வெவ்வேறு இடங்களில் முட்டையிடுவதைப் ப�ோலவே உட்கார்ந்து உட்கார்ந்து காட்டியது சேவல். “ஆனால்?.. இதெல்லாம் எனக்குத் திருப்தியில்லை” என்பது ப�ோலக் காட்டிக்கொண்டு ப�ோனது க�ோழி. கடைசியில் மாடிப்படிக்கு அடியில், மணல் சாக்கு ஒன்றைக் காட்டியது. க�ோழி ஒப்புக்கொண்டது. அதன் பிறகுதான் இரண்டும் குடித்தனம் நடத்தின. ஆண் குருவி கூடு கட்ட
2018
உதவும்போதுதான், அத�ோடு சேர்ந்து வாழத் த�ொடங்குகிறது பெண் குருவி. மனித இனத்திலும் அப்படித்தான். ஆணுக்குப் பருவம் வந்த பெண்ணைப் பார்த்தாலே காதல் வந்துவிடுகிறது. ‘சந்ததியைப் பெருக்கு’ என்று அவனின் பாலினச் சுரப்பிக்கள் கட்டளையிடுவதே காரணம். ஆனால், பெண்ணோ இவனால் நம்மையும், பிள்ளையையும் வைத்துக் காப்பாற்ற முடியுமா? என்று ய�ோசித்துதான் முடிவெடுக்கிறாள். ஒரு சில பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சிறப்பாக இருப்பதில்லை. காதலை என் பார்வையில் இப்படிச் ச�ொல்லிவிட்டேன். அறிவியல் பார்வையில் ச�ொல்ல வேண்டும் என்றால், சுஜாதாவை துணைக்கழைக்க வேண்டியதிருக்கிறது. “கன்னம் கன்னம் த�ொடும்போது, கையும் கையும் படும்போது ஒரு நறுமணம். ஒரு மெல்லிய மிக மெல்லிய ஸ்பரிசத்தின்போதும் மூளையில் இருந்து இரத்தத்தில் இந்தச் சில இரசாயனப் ப�ொருட்கள் பாய்கின்றன... அம்ப்தோ மின்கள், ட�ோப்பாமின், ந�ோரெபின்ஃப்ரைன் குறிப்பாக, ஃபினைல் எத்தில் அமின் ப�ோன்ற வஸ்துகள்தான் அத்தனை ‘கிக்’குக்கும் காரணம். காதல் என்பது இயற்கை தரும் ப�ோதை. ப�ோகப்போக இந்த எத்தில் அமின்கள் பழகிப்போக...
ஆண், பெண்ணுக்குள் நடக்கும் தனிப்பட்ட விவகாரத்திற்குள் குடும்பமும், சமூகமும் நுழைந்து வன்முறையை நிகழ்த்துகின்றன. 33
அறிவியல் இல்லையேல் அனைத்தும் அற்புதமே. (லாரன்ஸ் க்ராவுஸ்)
ஒரு வாரத்துக்குப் பின் காதலியைத் த�ொட்டால் மட்டும் ப�ோதாது, க�ொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. ஆக்ஸிட�ோஸின் என்னும் ப�ொருள்கூடக் காதலுக்குக் காரணம் என்கிறார்கள். நரம்பை நிரடி, தசைகளைச் சுருக்குகிறது. விளைவு - காதல்! பெண்களிடம் இதே ‘ட�ோஸின்’ யூட்டிரஸ் சுருங்கவும், பால் சுரக்கவும் பயன்படுமாம். குழந்தையைக் க�ொஞ்சவும் இதுதான் காரணமாம். இதே கெமிக்கல்தான் காதலனைக் க�ொஞ்சவும் பயன்படுகிறது” என்கின்றார் சுஜாதா. காலத்திற்கேற்ப காதல் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. காளையை அடக்கி காதலை வெளிப்படுத்தியது ஒரு காலம். திருவிழாவில் பின்தொடர்ந்தே காதலை வெளிப்படுத்தியது ஒரு காலம். பிறகு கடிதம் க�ொடுத்தோம். இப்போது, மின்னணுக் கருவிகள் என்று அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துவிட்டார்கள். வழக்கம்போலச் சிலர் துடிப்பாகச் செயல்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் காதலிக்கிறார்கள். பெண்கள் அதைத் திறமையாகக் கண்டுபிடித்து, இவன் நமக்குச் சரிவர மாட்டான் என்று கை கழுவி விடுகிறார்கள். இன்னும் 100 ஆண்டுக் காலம் ஆனாலும், காதல் அழியப்போவதில்லை. அதன் உச்சக்கட்ட இலட்சியம் சந்ததிப் பெருக்கம். உலகைப் படைத்த இறைவன், “வானத்து நட்சத்திரங்களைப் ப�ோன்று உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்வேன்” என்றுதானே ச�ொன்னார். அப்படியானால், காதல் தேவை தானே? ஆதலால், காதல் செய்வீர்!
கணவர் : யாராவது ஓடி வாங்க! என் மனைவி இந்த எட்டாவது மாடியில இருந்து குதிக்கப் ப�ோறாளாம்! ஒருவர் : நீ அங்கதானே இருக்க! காப்பாற்ற வேண்டியதுதானே? கணவர் : ஜன்னல் வழியா குதிக்குராளாம். என்னால ஜன்னல திறக்க முடியல.
சிரிக்க மட்டும்
34 நிலவே, அவள் முகம் ப�ோன்றிருக்க விரும்பினால் பலர் காண வராதே! (குறள்: 1119)
2018
த�ொடர்ச்சி) (டிசம்பர் இதழின்
ஜ�ோல்னா ஜவஹர் தமிழ் இயல், இசை, நாடகம் எனும் முப்பிரிவுகளை உடையது. கல்லாத ஒருவனைப் பெற்றதற்கும், அத்தகு முப்பிரிவுகள் ஒன்றிலேனும் அவனை ஈடுபடுத்த முடியாமற் ப�ோனதற்கும் அத்தகு மூன்று பிரிவினராலும் அவன் நகைக்கப்படுகிறானே என்பதால் அவ்வாறு கூறியிருக்கலாம�ோ? ஒரு வங்கியில் அதிகாரியாய் இருப்பவர் வேற�ொரு வங்கியில் சென்று தம் திறமையை, அதிகாரத்தைச் செலுத்த முடியாது. தமிழகத்தில் அமைச்சராய் இருப்பவர் கேரளாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? ஆனால் கற்றறிந்த ஒருவன் எந்த இடத்திலும் தன் புலமையைக் காட்டலாம். எனவே நாடாளும் மன்னனை விட நூல்கள் பல கற்றவனே உயர்ந்தவன் என்பதை ‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னரில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்தேசமல்லாற் சிறப்பில்லை; கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற பாடல் வழியே உணர்த்தியுள்ளார். ‘ஒருவனது உயர்வை, வளர்ச்சியை அளவிடக் கருவிகள் ஏதும் உண்டா?’ என வள்ளுவரிடம் கேட்டால், ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு’ என்பார். அதற்கு இணையாக ஒளவையும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அப்பாடலைக் கூறும் முன் கற்பனையாக ஒரு கதை. ஒரு பாட்டியும் இரண்டு
2018
பேரன்களும் ஒரு குளக்கரை வழியே நடந்து சென்று க�ொண்டிருந்தார்கள். அக்குளத்தில் ஆம்பல் மலர்கள் பூத்துள்ளன. அதனைப் பார்த்த ஒரு பேரன் “பாட்டி! அந்த மலர�ோட உயரம் எவ்வளவு?” என்று கேட்டான். பாட்டி, “நீயே இறங்கிச் சென்று அளந்துப் பார்” என்றாள். இறங்கிச் சென்று அளந்துப் பார்த்த சிறுவன் “இரண்டு அடி உள்ளது. அதனால் எல்லா பூக்களுமே இரண்டடி உயரம்தாம் உள்ளன” என்றான். உடனே பாட்டி “அவசரப் படாதே. சற்று ஆழத்தில் இறங்கி அங்குள்ள மலர்களை அளந்து பார்” என்றார். “பாட்டி! ஆழமாகச் செல்லச் செல்ல அங்குள்ள மலர்களின் உயரம் அதிகரிக்கிறது” என்றான். அதற்குள் மற்றொரு பேரன் “பாட்டி… நான் குமுதம், விகடன், ராணி என்று 500 நூல்கள் வைத்துள்ளேன். ஆனால் அவனிடம் திருக்குறள், நாலடியார், ப�ோன்று ஐந்து நூல்கள் மட்டுமே உள்ளன. நான்தானே அறிவாளி” என்றான். இருவருக்குமே சேர்த்து ஒற்றை வரியில் ச�ொன்னாள் பாட்டி, “நீரளவே ஆகுமாம் நீராம்பல் - தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று. ‘நல்ல நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவுலகம் ஏற்கும்’ என்று அறிவுரை ச�ொன்னாள் ஒளவைப் பிராட்டி. ஒருநாள், ச�ோழ மன்னன் புலவர்களை ந�ோக்கி, “இன்று இரவுக்குள் நான்கு க�ோடிப் பாடல்களை இயற்றிவர வேண்டும். இல்லாவிட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்” என்று அறிவித்தான். செய்வதறியாது கலங்கி நாட்டை விட்டே கிளம்பிச் செல்ல நினைத்த அவர்களைக் கண்டு…. விபரமறிந்து… “கவலையை விடுங்கள் நான்கு க�ோடிப் பாடல்களை நானே தருகிறேன்” என்று ஔவை பாடினாள். 35
அறிய விரும்புவ�ோர்க்கு அறிவியல்; உணர விரும்புவ�ோர்க்குக் கவிதை. (ஜ�ோசப் ர�ோக்ஸ்)
‘மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை க�ோடி பெறும் உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை க�ோடிபெறும் க�ோடி க�ொடுத்தும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுவதே க�ோடி பெறும் க�ோடானு க�ோடி க�ொடுப்பினும் தன்னுடை நாக் க�ோடாமை க�ோடி பெறும்” என்பது அப்பாடல். வள்ளுவர் ஈரடியில் ச�ொன்ன பல கருத்துக்களை ஒளவை ஓரடியில் பகர்ந்துள்ளார். “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்பதை “எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்றும், “க�ொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதுவும், உடுப்பதூஉம் இன்றிக் கெடும்” என்பதை “ஈவதுவிலக்கேல்” என்றும், “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது ப�ொன்றுங்கால் ப�ொன்றாத் துணை” என்பதை “அறஞ்செய விரும்பு” என்றும் பல உதாரணங்கள். மழையை வள்ளுவரும், தமிழைப் பாரதிதாசனும் ‘அமிழ்தம்’ எனச் ச�ொன்ன வேளையில், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றே “தமிழ்மகள் ச�ொல்லிய ச�ொல் அமிழ்த மென்போம்” என்று ஒளவை ம�ொழியை அமுதமெனச் ச�ொன்னான் பாரதி.
கற்றறிந்த ஒருவன் எந்த
இடத்திலும் தன் புலமையைக்
காட்டலாம். எனவே நாடாளும் மன்னனை விட நூல்கள் பல கற்றவனே உயர்ந்தவன் கற்றவனே உயர்ந்தவன்.
...............................................
மெகா சீரியல் பார்த்து அழும் பெண்களை விட, கல்யாண சீடி பார்த்து அழும் ஆண்களே அதிகம்! 36 அனிச்ச மலரும், அன்னத்தின் தூவியும் மங்கையின் பாதங்களைக் குத்தும் நெருஞ்சிகளாம். (குறள்: 1120 )
சிரிக்க மட்டும்
2018
மருத்துவர் சி. அச�ோக்
“கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன், காதல் ந�ோயைக் கண்டுபிடிச்சேன்…” அப்படீன்னு கவிஞர்கள் பாடலாம். ந�ோயைக் கண்டுபிடித்தவர்கள், அந்நோய்க்கு மருந்தைக் கண்டுபிடிச்சிருக்காங்களா? மனநல மருத்துவர்கள்கூட காதல் ந�ோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
வரலாறு இதற்கான விடைகளைத் தடம்பதித்துக் கடந்து சென்று க�ொண்டுத்தான் இருக்கிறது. எதிர்பார்த்தவள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இல்லையென்றால்
காதல் எந்தப் புள்ளியில் த�ொடங்குகிறது? எந்தப் புள்ளி அதன் மையப் புள்ளி? எந்த வயதில், எந்த நேரத்தில், யாருக்கு, எப்படி, எதனால் காதல் அரும்புகிறது...? அரும்பிய காதல், கரும்பின் அடிப்பாகமாய் இனிக்கிறதா இல்லை நுனிப்பாகமாய் நாளடைவில் கரிக்கின்றதா? கட்டிப்பாகாய் சுவைக்கின்றதா அல்லது காலப்போக்கில் எட்டிக்காயாய் கசக்கிறதா? அரும்பிய காதலின் ம�ொட்டு மலர்கிறதா? அல்லது ம�ொட்டிலே கருகி விடுகிறதா? இல்லை கருக்கப்படுகிறதா? காதல் கனிந்து செம்புலப் பெயல் நீர்போல இரண்டறக் கலக்கிறார்களா? அல்லது ஒருதலைக் காதலால் உடலும், மனமும் ச�ோர்வுற்று ந�ோயாக மாறுகிறதா? காதலிப்போர் அமிலம், ஆயுதம்… க�ொண்டு அழிக்கப்படுகிறார்களா? அல்லது ‘அழித்தாலும் உயிர்த்தெழுவ�ோம்’ என்று ஃபீனிக்ஸ் பறவையாய் காலம் கடந்தும் உயிர்த்தெழுகிறார்களா..?
2018
அந்தப் ‘பூ’ யார்க்கும் கிடைக்காமல் கருகிவிட வேண்டும்… ப�ோன்ற ஆணாதிக்கம் (Male Chauvinism) காலங்கள் கடந்து ஏன் இன்னும் அணையாமல் கனன்று க�ொண்டு இருக்கு? படித்த சமூகமும் கூட இந்த மடமையிலேதான் மையம் க�ொண்டிருப்பதற்கான தடயங்கள் தங்கு தடையில்லாமல் செய்தியாக வந்து க�ொண்டேதான் இருக்கு. 37
அறிவியல் ப�ொய்யானது; ஐயங்களை அதிகமாக்காமல் அது விடாது. (பெர்னார்ட் ஷா)
காய், இயற்கையாய் பழுத்து, கனியாய் மாறும் சுவைப் ப�ோல, காதலும் இயற்கையாய் கனிந்து காமத்துப்பாலில் நிலைக�ொள்வதால் வெளிப்படும் மாண்பு ப�ோல, காமத்தினால் உந்தப்பட்டு வெளிப்படுத்தப்படும் காதலில் த�ோன்றாது. அது நசிவுற்ற, ந�ோயுற்ற காதலாகத்தான் இருக்கும் என்பதைத்தான் இன்னைக்கி மருத்துவமனைகளில் காதல் த�ோல்வியால் தற்கொலை முயற்சிய�ோடு அடிக்கடி வரும் காதலர்கள் மூலம் நான் அறிந்துக் க�ொள்வது. காமக் கண்கள் கலப்புக் க�ொண்டு பார்க்காமல், அறிவியல் கண்கள் க�ொண்டு அறிந்து, உளவியல் கண்கொண்டு புரிந்து, வாழ்வியல் கண்கொண்டு தெளிந்து, பக்குவப்பட்டு வருகிற காதல், ந�ோயுற்ற காதலாக இருக்காது. அது காலங்கள் கடந்தும், நலமான காதலாக ஆயுள்வரை இருக்கும்.
ம ன து க் கு பிடித்தவனுடன் மையல் க�ொள்ள மங்கைக்கு மட்டும் மறுப்புத் தெரிவிப்பது ஏன்? நாடு முழுவதும், இல்லை இல்லை உலகம் முழுவதும், இதற்காக இத்தனை க�ௌரவக் க�ொலைகள் ஏன்? வயதினைக் கடந்து, மதங்களைக் கடந்து, சாதியினைக் கடந்து, சமூகப் ப�ொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, கண்களின் கலப்பில், மனங்கள் இணைந்து, சுயம்புவாய் எழுவதுதானே காதல்? அப்படி எழும்பிய காதலும், கால ஓட்டத்தில் ந�ோயுற்ற காதலாக மாறுவது ஏன்? அப்படி என்றால், நாகரிகமாக வாழ்வதாக நாம நினைக்கிற இந்தப் ப�ோலிக் கலாச்சார வாழ்க்கையில், காதலும் கணிதமாகப் பார்க்கப்படுகிறதா? ஜாதகப் ப�ொருத்தம், சமூக அந்தஸ்த்து இவற்றை மட்டுமே திருமணத்திற்கு அளவுக�ோலாய் சமுதாயம் பார்க்கின்றதா? 38 உயிரும் உடலும் ப�ோன்றன எங்களின் உறவு. (குறள்: 1122)
விடலைப்பருவத்து காதலைவிட, விவரமான வயதில், தெளிவான மனதில் அரும்பும் காதலின் மனம், மணம் முடிந்த பிறகும், கூடுதல் மணம்வீசிக் க�ொண்டு இருக்கும்.
காதல் எந்தப் புள்ளியில் த�ொடங்குகிறது? எந்தப்புள்ளி அதன் மையப்புள்ளி? எந்த வயதில். எந்த நேரத்தில் யாருக்கு எப்படி காதல் அரும்புகிறது? “காதல் வருவதே ஹார்மோன்கள் செய்யும் கலகம்தானே”ன்னு உலகநாயகன் ஒற்றை வார்த்தையில பாடிட்டுப் ப�ோயிட்டாலும், ஹார்மோன்களின் கலகத்தையும் தாண்டி, காதல் ஏற்படுத்தும் பிரிவும், த�ோல்வியும், ஏன் பலரை வாழ்நாள் ந�ோயாளியாக ஆக்கிக்கிட்டிருக்கு? விவரமாய் வாழ்வதற்கு விடைகாண வேண்டும்தானே…? த�ொடர்ந்து சிந்திப்போம்…
2018
ஐ லவ் யூ… 6
பவுல் ராஜ் அமல், ச.ச.
பல நாட்களாகவே நித்யா வகுப்பில் கவனமின்றி இருந்தாள். முகத்தில் ஏத�ோ ஒரு துயரம் வாட்டியது. எல்லாருடனும் சிரித்துப் பேசுவதை அவள் தவிர்த்திருந்தாள். தனிமையில் நிறைய நேரம் செலவழித்தாள். அன்று அறிவியல் பாடம் மட்டும் அவளுக்கு ஏத�ோ ச�ொல்லுவது ப�ோல இருந்தது. ஆசிரியர் ஒட்டுண்ணி பற்றிய பாடம் நடத்திக் க�ொண்டிருந்தார். ‘ஒட்டுண்ணி என்பது ஒரு தாவரத்தின் மீத�ோ, விலங்கின் மீத�ோ
ஒட்டுண்ணிக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கேட்டார் ஆசிரியர்.
ச�ொல்லு’
திடீரென எழுப்பிய கேள்வியால் சற்றுத் திணறிப் ப�ோன நித்யா, ‘எடுத்துக்காட்டு வந்து… ராஜேஷ்… சார்.’ என்றாள். சற்றும் ப�ொருத்தமில்லாத விடையால் ஆசிரியரும் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களும் குழம்பிப் ப�ோயினர். சிந்திக்காமல் ச�ொல்லியிருந்தாலும் நித்யாவுக்கு மட்டும் அது சரியான எடுத்துக்காட்டுதான் என்று பட்டது.
ஒருவர் மீது ஆசை வந்தப�ோது வந்த உணர்வுகள் என்றுமே நிலைத்திருக்கும் என்று எண்ணுவது தவறு. ஒற்றிக்கொண்டு அதனிடமிருந்து உணவை உறிஞ்சி, தன் தேவைகளை நிறைவு செய்து வாழும் உயிரினம்’ என்று பாடம் நடத்தியபடியே, ஏத�ோ சிந்தனையில் இருந்த நித்யாவை, ஆசிரியர் பார்த்து விட்டார். ‘நித்யா, நான் பாடம் நடத்திக் க�ொண்டிருக்கிறப�ோது கவனிக்காம, ஏத�ோ சிந்தனையில் இருக்க? வகுப்பில் இருக்கிறியா… இல்லையா?
2018
மனித உறவுகளில், அதுவும் குறிப்பாக, பதின்பருவத்தில் ஏற்படும் நட்பு, எதிர்பாலின ஈர்ப்பு மற்றும் காதல் உறவுகளில் ஒட்டுண்ணிகள் உண்டு என்பதை அன்று நித்யா உணர்ந்தாள். இளைய�ோரே, இதையே நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒட்டுண்ணி எப்போது தன்மீது ஒட்டியது என்பதை அந்த விலங்கு அறியாது. ஆனால் அந்த 39
புரிந்தால் அறிவியல்; புரியாவிட்டால் தத்துவம். (பெர்ட்டன்ட் ருசல்)
ஒட்டுண்ணி தன் இரத்தத்தை உறிஞ்சும்போதுதான் அது தனக்கு ஏற்படுத்தும் தீங்கை அறியும். அந்தோ பரிதாபம்! அதற்குள் தீங்கும் ஏற்பட்டுவிடும். அந்த ஒட்டுண்ணியை உதறி அப்புறப்படுத்துவது எளிதல்ல. அது ப�ோல, அன்பு என்ற உயரிய ந�ோக்கத்தைக் கைவிட்டு, ‘ஆசைக்காகவ�ோ’ ‘தேவைகளுக்காகவ�ோ’ ஏற்படுத்திக்கொண்டு, தக்க வைத்துக் க�ொள்ளும் உறவை ஒட்டுண்ணி உறவு என்று ச�ொல்லலாம். பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் உங்களுக்கு ஒருவரை மிகுதியாகப் பிடித்திருக்கிறது என்பதற்காக உங்கள் புத்தகத்தைத் தருவீர்கள்; வீட்டுப் பாடங்கள் செய்து க�ொடுப்பீர்கள்; அவர் மீது மிதமிஞ்சிய அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். இஃது இயல்புதான். ஆனால் வரிந்து கட்டிக் க�ொண்டு நீங்கள் செய்யும் உதவிகளை மட்டும் பெற்றுக் க�ொள்வதற்காக நட்பாகப் பேசி, பழகி உறவைத் தக்கவைத்துக் க�ொள்பவர் ஓர் ஒட்டுண்ணி. அந்த ஒட்டுண்ணி நபர் நட்பிற்கு முக்கியத்துவம் தராமல், படிப்பிலும், தான் ஆற்ற
நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்தித் தனது ப�ொழுதுப�ோக்கு தேவைகளை நிறைவு செய்து க�ொள்ளும். கைப்பேசி கட்டணம் முதல் கல்லூரி கட்டணம் வரை அனைத்திற்கும் உங்களைச் செலவு செய்ய வைத்திடும். அதன் கவனம் முழுவதும் நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்காகவ�ோ, உங்களிடம் உள்ள வேறு ஏத�ோ ஒன்றிற்காகவ�ோ மட்டுமே இருக்கும். அந்த ஒட்டுண்ணியின் அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும் இருக்கும். இந்த உறவில் நீங்கள் தருகின்ற அளவுக்குப் பெறுவது இல்லை என்று உணர்ந்து சமாளிப்பதற்குள் உங்களின் நேரம், மகிழ்ச்சி, உழைப்பு, உறவுகள் என அனைத்தையும் இந்த ஒட்டுண்ணி கட்டுப்படுத்திவிடும். ‘நீ என்னை நம்பவில்லையா? இவ்வளவு தானா உன் அன்பு? நீ என்னை இப்படி நினைப்பாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றெல்லாம் உங்கள் உணர்வுகளைக் குழப்பி, அதைத் தன் வயப்படுத்தி, ஒருவகையான குற்ற உணர்வையும்
வேண்டிய கடமைகளிலும் கவனம் செலுத்தாமல், தனக்குத் தேவையான பிறவற்றில் ஈடுபாடுகாட்டித் தன்னலமாகச் செயல்படுவார்.
ஏற்படுத்தி, உங்களை மற்ற நண்பர்களின் அன்பில் இருந்து பிரித்து, தன்னை மட்டுமே சார்ந்து இருக்கச் செய்துவிடும் இந்த ஒட்டுண்ணி.
உங்கள் ஒட்டுண்ணி ‘எனக்கு இது வாங்கிக் க�ொடு, அது வாங்கிக் க�ொடு’ என்றும், ‘திரைப்படத்துக்குப் ப�ோகலாம், கடற்கரைக்குப் ப�ோகலாம்’ எனவும், உங்கள் பணத்தையும்,
தருவதும் பெறுவதும், அன்பு என்னும் காசின் இரு பக்கங்கள். உறவுத் துலாக்கோலின் இரு தட்டுகள். இரண்டு உள்ளங்களுக்கிடையே நடைபெறும் உறவு பரிமாற்றத்தில் ஒருவர் தந்து
40 கண்ணின் கருமணியே என் காதலருக்கு உன் இடத்தைத் தருவாய�ோ? (குறள்: 1123)
2018
க�ொண்டே இருக்க, மற்றவர் பெற்றுக் க�ொண்டு வாழ்தல் என்பது ஈகை. அஃது உயரிய அன்பு ஆகாது. என்னதான் உயரிய அன்பு தருவதில் சளைக்காது என்று சில காவியங்கள் ஆண் பெண் அன்பை வானளாவப் புகழ்ந்தாலும், அன்பு செய்பவர்கள் குறையுள்ள மனிதர்களே. அவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. தருபவரின் அன்பு தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும். எந்த அளவிற்கு ஒருவர் அன்பைத் தருகிறார�ோ அதே அளவிற்கு அன்பைக் கைம்மாறாகப் பெறும்போதுதான் உறவில் வளர்ச்சி ஏற்படுகிறது. பின்வரும் ஐந்திணை ஐம்பது (38) பாடலை அதற்குச் சான்றாகக் கூறலாம். “சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி, பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமான் தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி.” “நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண் மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இஃது இருவரும் பருகப் ப�ோதாது என எண்ணி, பெண் மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, ப�ொய்யாகக் குடிப்பது ப�ோல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் ச�ொல்லுவர்” என்று த�ோழி தலைவியை ஆற்றுவித்தாள் என்பது இதன் ப�ொருள். உங்கள�ோடு ஒருவர் அன்பாகப் பழகுகிறாரா? அவருக்கு நீங்கள் மூன்று கேள்விகள் அடங்கிய தேர்வைக் கட்டாயம் வைக்க வேண்டும். முதல் கேள்வி: எதை எதிர்பார்த்து இந்த உறவு? உண்மையான அன்பு, உள்ள பரிமாற்றத்தை எதிர்பார்க்கும். ஆசையால் உந்தப்பட்ட ஈர்ப்பு உள்ளார்ந்த உரையாடலை விட, உடலுறவையே முன்னிலைப்படுத்தும். அன்பு, பெறுவதைவிடத் தர முயற்சிக்கும். அன்பு, செய்யப்படுபவரின் நலனை முன்னிலைப்படுத்தும். ஆசைதான் பெறுவதையே முன்னிலைப்படுத்தும். இரண்டாம் கேள்வி: அவர் உங்கள�ோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்? உண்மையான அன்பு ‘தரமான நேரத்தை’ (Quality Time) தனது அன்பருக்குத் தரும். இருவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடி, பேசி மகிழ்வதில், நேரத்தைத் தருவது
2018
உங்களுக்குத் தம் தரமான நேரத்தைத் தராதவர் எவரும் உங்களை அன்று, மாறாக, உங்களிடம் அவருக்கு என்ன தேவைய�ோ அதைத்தான் அன்பு செய்கிறார். காதல், அன்பு. ஒருவர் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து க�ொள்வதற்கு இஃது தேவையாகும். அன்பு, மெல்ல வளர்வது. அதற்குப் ப�ோதிய காலம் தேவை. ஆசை, உண்மை வாழ்வின் எதிர்பார்ப்பை எதிர்கொள்ளாமல், கனவு உலகிலேயே க�ோட்டைக் கட்டி வைத்திருக்கும். உங்களுக்குத் தம் தரமான நேரத்தைத் தராதவர் எவரும் உங்களை அன்று, மாறாக, உங்களிடம் அவருக்கு என்ன தேவைய�ோ அதைத்தான் அன்பு செய்கிறார். மூன்றாம் கேள்வி: அவர் உங்களை எப்படி நடத்துகிறார்? ஆசை, மற்றவரைத் தம் தேவைகளை நிறைவேற்றும் ஒரு ப�ொருளாகப் பார்க்கிறது. உண்மையான அன்பு, தனது அன்பரை ‘தனித்துவம் மிக்க ஒரு ஆளாக’ பார்க்கிறது. அந்த ஆளுக்குத் தேவையான அன்பையும், பராமரிப்பையும் தர முயற்சிக்கிறது. ஒருவரிடமிருந்து எடுப்பதை விட, பறிப்பதை விட மிகுதியாகக் க�ொடுப்பதுதான் உண்மையான அன்பு. உங்களின் உணர்வுகளைப் புரிந்து க�ொள்ளாமல் உங்களுக்குத் தன் நேரத்தைத் தராமல், தன் தேவைகளை மட்டுமே நிறைவு செய்வதில் குறியாய் உள்ள எந்த உறவும் ஒட்டுண்ணி உறவுதான். 41
அறிவு என்பது தகவலன்று; அனுபவம். (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)
பதின்பருவத்தில் ஆசையால் உறவுகள் உருவாகலாம். ஆனால் அன்புதான் அந்த உறவைத் தக்க வைக்கும். மாரத்தான் ஓட்டம் ஓடுபவன் த�ொடக்கத்தில் மட்டுமே நன்றாக ஓடினால் ப�ோதாது; இறுதி வரை ஓட வேண்டும். ஆசை ஒரு நூறு மீட்டர் ஓட்டம். அதில் வேகம் இருக்கும், ஆனால் தூரம் ஓட முடியாது. ஒருவர் மீது ஆசை வந்தப�ோது வந்த உணர்வுகள் என்றுமே நிலைத்திருக்கும் என்று எண்ணுவது தவறு. எல்லா ஆசைகளும் அன்பாக மலர்வதில்லை. தேவைகள் நிறைவானதும் தேவையற்ற உறவாக நம்மை ஒதுக்கிவிடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை இளைய�ோரே நீங்கள் கட்டாயம் உணர்ந்து க�ொள்ள வேண்டும்.
சிந்தனைக்கு:
1. நீங்கள் அன்பு செய்பவர் உங்களிடம் உடல் சார்ந்த உறவை மட்டும் எதிர்பார்க்கின்றாரா? ஆம்/இல்லை.
2. நீங்கள், நட்பில் தருவதைவிடப் பெறுவதைத்தான் மிகுதியாக விரும்புகிறீர்களா? ஆம்/இல்லை. 3. உங்கள் நண்பருக்கு நீங்கள் தரமான நேரத்தைத் தராமல் உறவைத் தக்க வைக்கப் பேசிப் பழகுகிறீர்களா? ஆம்/இல்லை
4. உங்கள் நண்பர் உங்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்திக் க�ொள்ளும் ப�ொருளாக நடத்துகிறாரா? ஆம்/இல்லை. 5. மனத்தைப் பார்க்காமல் பணத்தைப் பார்த்துப் பழகுபவரா நீங்கள்? ஆம்/இல்லை. பெரும்பாலான வினாக்களுக்கு உங்கள் பதில், ‘ஆம்’ என்றிருப்பின் உங்கள் உறவை நீங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
ப�ோட்டி வினாக்கள் / பகுதி
02/18
கீழ்க்காணும் வினாக்களுக்கான விடைகளையும் அவற்றின் ஆசிரியர், பக்க எண் ஆகியவற்றையும் எழுதுக. (குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.)
01) ‘உலக அலைபேசி நாள்’ எது? 02) ‘பேய்வீடு’ படத்தின் ஹீர�ோ பெயர் என்ன? 03) ரவி எத்தனை நாட்கள் கிராமத்தில் தங்கியிருந்தான்? 04) இடமதிப்புச் சிந்தனையை வழங்கியவர் யார்? 05) மாலாவின் குழந்தைகள் யாவர்? 06) ஒட்டுண்ணியை அப்புறப்படுத்துவது எளிது. சரியா? 07) காதலுக்குக் காரணமாகும் சுரப்பிகள் யாவை? 0808 சித்ரா எந்த வகுப்பு மாணவி? 09) உயிர்கள் உடலைச் சார்ந்தவை. உடல்கள்… (நிரப்புக) 10) ‘அறம் செய்ய விரும்பு’ – கூறியவர் யார்?
படம் பார்த்து கருத்தெழுதுக
விடைகளைத் தங்களின் முழு முகவரி, த�ொடர்பு எண் ஆகியவற்றுடன் கடிதம், மின்னஞ்சல், (arumbu4young@ gmail.com) கட்செவி அஞ்சல், (வாட்ஸ் அப் - 94447 99942) அல்லது குறுஞ்செய்தி வாயிலாக, பெப்ரவரி மாதம் 20ஆம் தேதிக்குள் அரும்பு அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பவும்.
காணப்படும் படத்திற்குப் ப�ொருத்தமான கதை / கவிதை / கருத்துகளை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தங்களின் ஒளிப்படத்துடன் (ஃப�ோட்டோ) அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பு அடுத்த இதழில் வெளியிடப்படும்.
வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.02.2018 42 ஒளிவிழியாளை மறந்தால்தானே நினைப்பதற்கு? (குறள்: 1125)
2018
NEW RELEASE
கல்வி நிறுவனங்கள், ஆலய அமைப்புகள், ப�ொதுப்பணித்துறை மையங்கள் ப�ோன்ற அமைப்புகளில்… அறிவுரை வழங்க அச்சமா? காலை உரையாற்ற கலக்கமா? மாலையுரை வழங்க மயக்கமா? ஆலய நிகழ்வா? ஆண்டு விழாவா? ஆசிரியர்-பெற்றோர்-பணியாளர்பயனாளர் கூட்டங்களா? உடனடி உதவிக்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய அருமையான நூல்
கனிவும் அன்பும்.
தங்களின் மேற்பார்வையில் உள்ளவர்களைச் சூழலுக்கும் பருவத்திற்கும் பணிக்கும் ஏற்றவாறு த�ொன் ப�ோஸ்கோவின் கனிவான, அன்பான வழியில் கையாள்வது எப்படி என்பதை உலகியல் நடப்புகள�ோடு விளக்கும் அருமையான நூல்
கனிவும் அன்பும். 3 பெரும் பிரிவுகளில், 12 தலைப்புகளின்கீழ், த�ொன் ப�ோஸ்கோவின் 200 மேற்கோள்களை 40 விரிவுரையாளர்கள், 400க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் க�ொண்டு விளக்கியுள்ள 274 பக்கங்கள் க�ொண்ட நூல்
கனிவும் அன்பும்.
In English – With Gentleness and Kindness - Pages 224. Rs. 180/10% discount (Rs.162) த�ொடர்புக்கு: அரும்பு பதிப்பகம்,
2018 2018
26/17.
பெப்ரவரி இறுதிக்குள் வாங்குவ�ோருக்கு 30% சிறப்புக் கழிவு உண்டு. (ரூ. 175 மட்டும்)
ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை
10.
43 அறிவியல் ஆராய்கின்றது; ஆன்மீகம் ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/477/2018-2020 TN/PMG(CCR)/WPP-400/2018-2020. Registrar of Newspapers for India. 11807/66. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 02.02.2018
44
If undelivered, kindly return to ARUMBU, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010.
2018