Seithi Malar April-May 2018

Page 1

 7  04,05  .15/-

 





  101


www.arumbupublications.in

 . 

02 2

 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. (வி. ப. 20:8)

 


மலர் 57

இதழ்கள் 04,05

 2018 

ஏப்ரல் - மே 2018

ப�ொறுப்பாசிரியர்கள் ஆசிரியர் அருள்திரு முனைவர் ஆ. சிலுவை முத்து, ச.ச.



இணை ஆசிரியர் பேரா. சூ. குழந்தை இயேசு.

04

நிர்வாகக் குழு அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு மரிய லூயிஸ், தைரியம், அந்தோனிசாமி, அந்தோனி கிறிஸ்டி, பேட்ரிக் மத்தியாஸ், ஆன்ட்டோ சகாய ராஜ்.

12 15

பிழைத்திருத்தம் குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச.

09

சந்தா மேற்பார்வை சு. ஸ்டீபன் ராஜ்.

26

அஞ்சல் வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர் ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம் தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

விளம்பரக் கட்டணம் முழுப்பக்கம் ரூ. அரைப்பக்கம் ரூ. கால்பக்கம் ரூ. பின்அட்டை ரூ. உள்அட்டை ரூ. நடுப்பக்கம் ரூ.

6000 3000 1500 12,000 10,000 10,000

செய்தி மலரில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 26612138/40, 94447 99942 sbtamilssm@gmail.com www.arumbupublications.in



.. .. .. .. ..

 அன்னையும் க�ோடையும் மன்னிப்பின் மேன்மை மறவாத இறைவன் உறவென்னும் க�ொடை புனித த�ோமினிக் சாவிய�ோ ஸ்டெர்லைட் ஒரு பெண் த�ொன் ப�ோஸ்கோ உங்களுக்கு ஏன் கவலை? கிழக்கு மறுத்த ஞாயிறு ஞாயிறு மறையுரைகள்

04 05 09 12 15 கட 17 28 பய 24 28 31

Printed and Published by Rev. Fr. A. Siluvai Muthu, on behalf of Salesian Publishing Society, No. 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at SIGA: Salesian Institute of Graphic Arts, No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: Rev. Fr. A. Siluvai Muthu.

 ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்; ஏழாம் நாளில�ோ ஓய்ந்திருப்பாய். (வி. ப. 23:12)

03




 

செய்திமலர் வாசகர்கள் அனைவருக்கும் இறை இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! ஏப்ரல் – மே மாதங்களின் இணை இதழாக இவ்விதழ் மலர்கின்றது. பெற்றோர்களுடன் குழந்தைகள் நிறைய நேரம் செலவிட இறைவனால் க�ொடுக்கப்பட்ட மாபெரும் க�ொடை, க�ோடை. மே மாதம், மாதாவின் மாதமாக இருப்பதாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செபமாலை வழிபாட்டில் தவறாமல் கலந்து க�ொள்வார்கள் என நம்புகின்றேன். த�ொன் ப�ோஸ்கோவை குருமடத்திற்கு அனுப்பும்போது அவரின் தாய் மம்மா மார்கரேட், “நீ இவ்வுலகில் பிறந்தப�ோது உன்னைத் தூய கன்னி மரியாவுக்கு அர்ப்பணம் செய்தேன். உன் படிப்பை நீ த�ொடங்கியப�ோது, அவ்வன்னைமீது பற்றுக் க�ொள்ளுமாறு பரிந்துரைத்தேன். இப்பொழுது நான் ச�ொல்லுகின்றேன், நீ முழுமையாக அவருக்குரியவனாகவே இரு. த�ோழருள் மரியன்னை மீது பற்றுக் க�ொண்டவர்களையே நேசி. நீ குருவானால், எப்பொழுதும் மரியா பற்றி மறையுரையாற்றி அவரின் பக்தி முயற்சிகளை ஊக்குவித்து வா!” என்று மரியா பக்தி குறித்து அறிவுரை கூறினார்கள். தந்தை த�ொன் ப�ோஸ்கோவும் இவ்வறிவுரையைத் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்தார்கள். அந்த நல்ல தாயைப் ப�ோன்று, பெற்றோர்களும் பிள்ளைகளை மரியா பக்தியில் வளர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நெடிய ஓய்வு நாட்கள் நம் கையில் இருப்பதால், விடுமுறை நாட்களைச் செலவிட்ட பாங்கினைக் குறித்துத் தந்தை த�ொன் ப�ோஸ்கோ தமது வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளதை எடுத்தியம்ப விழைகின்றேன். “…மாணவர்களுக்கு விடுமுறை காலம் ஆபத்து நிறைந்த காலமாகும். அந்நாட்களில் எங்களுக்கு நாலரை மாதங்கள் க�ோடை விடுமுறை விடப்பட்டது. படிப்பதிலும் எழுதுவதிலும் மிகுதியான நேரத்தைச் செலவிட்டப�ோதும், சரியாகவும் ஒழுங்காகவும் திட்டமிடாததால் சிறிதளவே பயனடைந்தேன். பல்வேறு வகையான கைவினைத் திறன்களையும் பயின்றேன். கடைசல்

04

இயந்திரத்தில் அச்சாணிகள், மர ஆணிகள், தையல் எந்திர மூடிகள் மற்றும் மரப் பந்துகள் ஆகியவற்றை வடிவமைத்தேன். உடுப்புகள் மற்றும் காலணிகளையும் தயாரித்தேன். இரும்பு மற்றும் மர வேலைகளில் ஈடுபட்டேன். முரியால்டோவில் இன்றைக்கும் கட்டுக்குலையாமல் இருக்கும் சாய்வு மேசை, சாப்பாட்டு மேசை ஆகியவை எனது க�ோடை விடுப்பின் தலைசிறந்த படைப்புகளை நினைவூட்டும். க�ோதுமை, வைக்கோல் ஆகியவற்றை அறுத்தல் முதலிய த�ோட்ட வேலைகளையும் செய்தேன். திராட்சைக் க�ொடிகளைக் கத்தரித்தல், திராட்சை பழம் பறித்தல், திராட்சை இரசம் தயாரித்தல் உள்ளிட்ட பல பணிகளிலும் ஈடுபட்டுழைத்தேன். வழக்கமாகச் செய்வதுப�ோல் இளைஞர்களுக்காகவும் நிறைய நேரத்தை ஒதுக்கினேன்; ஆனால் திருவிழா நாட்களில் மட்டுமே இது கைகூடலானது. இறைநம்பிக்கையின் அடிப்படை உண்மைகளை உணராமலிருந்த பதினாறு அல்லது பதினேழு வயது நிரம்பிய என் த�ோழர்களுக்கு மறைக்கல்வி புகட்டுவது எனக்கு மனநிறைவளிப்பதாக இருந்தது. அவர்களில் சிலருக்கு எழுதப் படிக்க வெற்றிகரமாகக் கற்றுக் க�ொடுத்தேன். பல்வேறு வயதுடைய இளைஞர்கள் பலரும் என்னைச் சூழ்ந்திருந்தது மிகவும் மனநிறைவு அளிப்பதாக இருந்தது. படிப்பு ச�ொல்லிக் க�ொடுக்க நான் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. பணத்திற்குப் பதிலாக, கடின உழைப்பு, மன ஒற்றுமை மற்றும் மாதம் ஒருமுறை ஒப்புரவு அருட்சாதனம் பெறுதல் ஆகியவற்றை அவர்களிடம் கட்டாயப்படுத்தினேன். சிலர் இந்நிபந்தனைகளில் ஈடுபாடு காட்ட மறுத்துத் தங்களின் விருப்பப்படி என்னை விட்டு வெளியேறினர்….” மம்மா தமது மகனை, மரியா பக்தியில் வளர்த்தது ப�ோன்று பெற்றோர்கள் திகழ்வார்களாக. இளைஞன் ஜான் ப�ோஸ்கோ தனது க�ோடையைப் பயனுள்ள முறையில் செலவழித்தது ப�ோன்று இளைய�ோர் செயல்படுவார்களாக. அன்னையும் க�ோடையும் அனைவருக்கும் க�ொடையாக அமைய வாழ்த்துகின்றேன். அன்புடன்

ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர்.

 ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். (வி. ப. 31:14)




ம. மரிய லூயிஸ், ச.ச.

 - 4.





மார்ச் 1, 2018 அன்று கேரளாவிலுள்ள மலயாட்டூர் ஆலயத்தின் பங்குத் தந்தை அருள்பணியாளர் சேவியர் தெலகாட் அவர்கள், அவ்வாலயத்தின் முன்னாள் ஆலயப் பணியாளர் ஜானி என்பவரால் கத்தியால் குத்தப்பட்டுக் க�ொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் ஜானி அவருடைய பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜானியின் குடிப் பழக்கத்தால் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதனாலேயே அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது. மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஜானி பங்குத் தந்தையிடம் கேட்டிருக்கிறார். தவக்காலத்தின் இறுதியில் பலர் குருசுமலைக்குத் திருப்பயணமாக வருவதுண்டு. எனவே அதற்குள்ளாகப் பணியில் சேர வேண்டுமென ஜானி விரும்பியிருக்கிறார். பங்குத் தந்தைய�ோ அவரை மீண்டும் சே ர் த் து க்கொள்வ தி ல் விருப்பமில்லாமல் இருந்திருக்கிறார். இறுதியாக இந்நிகழ்வு நடந்த அன்று அவரைப் பேச அழைத்திருக்கிறார். பேச்சுவார்த்தை விவாதத்திலேயே



 ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் க�ொல்லப்பட வேண்டும். (வி. ப. 31:15)

05


முடிந்திருக்கிறது. எனவே பழிவாங்கும் உணர்வோடு, தான் திட்டமிட்டுக் க�ொண்டுவந்திருந்த கத்தியால் அவரை ஜானி குத்தியிருக்கிறார். உங்களுடைய ஈக�ோ (‘நான்’ ‘எனது’ என்னும் முனைப்பு) வலிமையுள்ளதாய் இருக்கும்போது நீங்கள் பழிவாங்கத் துடிக்கிறீர்கள். நீங்கள் பழிவாங்க எண்ணினால், உங்களுக்கே மிகப் பெரிய துன்பத்தை நீங்கள் வரவழைத்துக் க�ொள்கிறீர்கள்; ஏனென்றால் அஃது உங்களுடைய ஈக�ோவை வலிமையுடையதாக்குகிறது. உண்மையில், வலிமையற்றவர்கள்தான் பழிவாங்குகிறார்கள். வலிமையுள்ளவர்கள் மன்னிக்கிறார்கள். அறிவுடையவர்கள் புறக்கணித்துவிட்டுச் செல்கிறார்கள். அருள்பணியாளர் சேவியர் க�ொலை செய்யப்பட்ட ஓரிரு நாள்களுக்குள் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது பலரை வியப்படையச் செய்தது. அவருடைய தாய், தன் மகனைக் க�ொலை செய்த ஜானி என்பவருடைய வீட்டுக்குச் சென்று, அவருடைய மனைவியையும் குடும்பத்தினரையும் சந்தித்து, தான் ஜானியை மன்னித்துவிட்டதாகக் கூறியதுடன், அக் குடும்பத்தினருக்குத் தன் ஆறுதலையும் அளித்துவிட்டு வந்திருக்கிறார்.

06

அத்தாய் எத்தகைய மன வலிமையுடையவராக இருந்திருக்க வேண்டும்? இல்லையெனில், இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய வாய்ப்பே இல்லை. ஏனென்றால் பகைமையை உள்ளத்தில் வளர்த்துக்கொண்டிருப்பதால் ஒருவர் வலிமையுள்ளவராக முடியாது; அஃது அவரை வெறுப்புள்ளவராகவே மாற்றும். அதேவேளையில், மன்னிப்பது ஒருவரை பலவீனமுள்ளவராக மாற்றாது; மாறாக, அவருக்கு அது விடுதலையை அளிக்கும். பலவீனமுள்ளவர்களால் ஒருப�ோதும் மன்னிக்க இயலாது. ஏனெனில், மன்னிப்பது என்பது வலிமையுள்ளவர்களின் பண்பாகும்.

தை ் த ய ா ல் க தி ன ம து ்ப ய ப ை னி ட மன் நம்மு ை ர வ ய திய தி த் த் டு டு ்ப ்ப ற ஏ ஏற ர் வ க் அ து யை ்ப லி ன வ எ ்டான . ண ம் கு உ ா த ல் காயத்தா ம் க�ொடூரமான காட்டிலு

 உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு. (வி. ப. 34:21)




வலிமையற்றவர்கள்தான் பழிவாங்குகிறார்கள். வலிமையுள்ளவர்கள் மன்னிக்கிறார்கள். அறிவுடையவர்கள் புறக்கணித்துவிட்டுச் செல்கிறார்கள். பிறரை மன்னிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மன்னிப்பைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல; மாறாக, நமக்கு மன அமைதி வேண்டும் என்பதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும். மன்னிப்பது என்பது எளிதான ஒன்றன்று; அது மிக மிகக் கடினமானது. நம்முடைய மனதில் காயத்தை ஏற்படுத்தியவரை மன்னிப்பது என்பது அவர் ஏற்படுத்திய காயத்தால் உண்டான வலியைக் காட்டிலும் க�ொடூரமானதாகும். இருந்தப�ோதிலும், மன்னிப்பு இல்லாமல் மன அமைதி இல்லை. மன்னிப்பு மட்டுமே மன அமைதியைத் தர முடியும். சில நாட்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், தன் தந்தை ராஜீவ் காந்தியைக் க�ொன்றவர்களைத் தானும் தன் தங்கை பிரியங்கா காந்தியும் மன்னித்து விட்டதாகக் கூறினார்.

விவிலியத்தின் த�ொடக்க நூலிலே காயின் - ஆபேல் ஆகிய�ோரை நாம் சந்திக்கிற�ோம். காயினின் ப�ொறாமைப் பண்பும் அதனால் விளைந்த பழிவாங்கும் எண்ணமும் ஆபேலின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதில் ஆபேலின் தவறு எதுவுமே இல்லை எனினும் கூட, அவன் பழிவாங்கப்படுகிறான்; க�ொல்லப்படுகிறான். மேலும், அதே நூலிலே ய�ோசேப்பு மற்றும் அவருடைய சக�ோதரர்கள் பற்றியும் வாசிக்கிற�ோம். ய�ோசேப்பை அவருடைய தந்தை அதிகமாக அன்பு செய்தார் என்பதாலேயே அவருடைய சக�ோதரர்களின் ப�ொறாமைக்கு இலக்காகிறார். இப்பொறாமைப் பண்பு, ய�ோசேப்பைக் க�ொல்லக்கூடிய தீய எண்ணத்தையும் அவர்களுக்குள் வளர்க்கிறது. ரூபனின் நல்லெண்ணத்தால் அவன் க�ொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டாலும், கிணற்றிலே தள்ளப்பட்டுப் பிறகு வணிகர்களிடம் விற்கப்படுகிறார். இப்படியாக, சக�ோதரர்களால் வெறுக்கப்பட்டு, பழிவாங்கப்பட்ட ய�ோசேப்பு, உயர்நிலைக்குச் சென்ற பிறகு, விரும்பியிருந்தால் அவருடைய சக�ோதரர்களைப் பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், அவர் அவர்களை மன்னிக்கிறார். இதிலிருந்து அவருடைய பெருந்தன்மையும் உயர்பண்பும் வெளிப்படுகின்றன. வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே, காலையில் துயில் எழும்போதே மனவருத்தங்கள�ோடு எழக் கூடாது; நம்மைச் சரியாக நடத்துபவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும்; அப்படி நடத்தாதவர்களை நாம் மன்னிக்க வேண்டும்; அத�ோடு, நம் வாழ்க்கையில்



 ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது. (வி. ப. 35:3)

07


மன்னிப்பு என்பது பிறருக்கு நாம் செய்யக்கூடியத�ொன்று மட்டுமல்ல; மாறாக நமக்கே நாம் செய்யும் செயலாகும். நடக்கின்ற எல்லாமே ஏத�ோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும்! ய�ோசேப்பு நிச்சயம் அவ்வாறுதான் நினைத்திருக்க வேண்டும். மனிதர் எல்லாருமே தவறு செய்யும் இயல்புடையவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இருப்பினும் முதலில் மன்னிப்பு கேட்பவரே துணிச்சல் மிக்கவர்; முதலில் மன்னிப்பு அளிப்பவரே வலிமை உள்ளவர்; முதலில் மறப்பவரே மகிழ்ச்சி நிறைந்தவர் என்பது எவ்வளவு உண்மையானது. “நான் தெரிந்தோ தெரியாமல�ோ என்னுடைய குழப்பத்தின் காரணத்தினால�ோ, நான் எவருக்காவது எவ்விதத்திலாவது தீங்கிழைத்திருந்தால், நான் அவர்களுடைய மன்னிப்பை இறைஞ்சுகிறேன். மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமல�ோ, அவர்களுடைய குழப்பத்தின் காரணத்தினால�ோ, எனக்கு எவ்விதத்திலாவது தீங்கிழைத்திருந்தால், நான் அவர்களை மன்னித்துவிடுகிறேன். மன்னிக்கின்ற சூழலும் மனநிலையும் எனக்கு இல்லாமல் இருந்தால், அதற்காக நான் என்னை மன்னித்துவிடுகிறேன். என்னுடைய குழப்பத்தினால், எல்லா வழிகளிலும் நான் என்னையே துன்பத்திற்குள்ளாக்கியதாலும், எதிர்மறையான எண்ணங்களால் உள்ளத்தை நிரப்பியதாலும், ஐயம் க�ொண்டதாலும், என்னையே இகழ்ச்சிக்கு உள்ளாக்கியதாலும், தீர்ப்பிட்டதாலும், இரக்கமில்லாமல் என்னையே நடத்தியதாலும், என்னை நான் மன்னித்துவிடுறேன்” என்கிறது புத்தமதச் செபம். மன்னிப்பு என்பது பிறருக்கு நாம் செய்யக்கூடியத�ொன்று மட்டுமல்ல; மாறாக நமக்கே நாம் செய்யும் செயலாகும். மன்னியுங்கள்… ஏனெனில் நாம் யாருமே முழுமையானவர்கள் இல்லை. கடவுள் நம்மை எவ்வளவு விரைவாக, முழுமையாக மன்னிக்க வேண்டும் என விரும்புகிற�ோம�ோ, அவ்வளவு விரைவாக, முழுமையாக நாமும் பிறரை மன்னிப்போம். இப்படியும் சிந்திக்கலாமே!

08

 என் தூயகத்தைக் குறித்து அச்சம் க�ொள்ளுங்கள்; நானே ஆண்டவர்! (லேவி. 19:30)




அந்தோனிசாமி.

 

நம் நாட்டில், சமூக, அறிவியல், விளையாட்டு, மற்றும் கலாச்சாரத் துறைகளில், சிறப்புடன் பணியாற்றுபவர்களுக்கு, நம் அரசு ‘பாரத் ரத்னா’ என்ற உயரிய விருதை அளித்து க�ௌரவிப்பதை நாம் பார்த்திருக்கிற�ோம். நம் இறைவனும் தம்மை அன்பு செய்பவர்களுக்கும், தமக்கு ஊழியம் புரிபவர்களுக்கும், சிறந்த பரிசை அளிக்கத் தவறுவதில்லை என நாம் மறைநூலில் காண்கிற�ோம். த�ொழுந�ோய் குணமான சீம�ோன் என்பவரின் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த இயேசுவின் பாதத்தில், மரியா என்ற பெண், விலையேறப்பட்ட நறுமண எண்ணெயைப் பூசி, தன் தலைமுடியால் துடைத்தாள் என்று ய�ோவான் 12:3இல் வாசிக்கிற�ோமல்லவா? அப்போது யூதாஸ் என்ற சீடன், “எண்ணெயை வீணாக்கிவிட்டாள்”, என்று குறை ச�ொன்னான் என்றும், அதற்கு இயேசு “இது என் அடக்க நாளின் நினைவாக இருக்கிறது!” என்றுரைத்தார் என்றும், “நற்செய்தி உலகில் எங்கெங்கே கற்பிக்கப்படுகிறத�ோ, அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக, இவள் செய்ததும் ச�ொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் ச�ொல்லுகிறேன்!” என்றும் பதில் கூறியதாக மத். 26:13இல் வாசிக்கிற�ோம்.



நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை அவன் செய்யாமல் ப�ோனால் அது அவனுக்குப் பாவமாகும் (யாக்.4:17)

 நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் க�ொண்டாட வேண்டும். (லேவி. 25:2)

09


அந்நாட்களில் வாழ்ந்த இஸ்ரயேலர் மக்களின் கலாச்சாரத்தின்படி, ஒவ்வோர் இளம் பெண்ணும், தன் திருமணத்திற்காகத் தங்களின் ப�ொருளாதார வசதிக்கேற்ப மணம் வீசும் இந்தத் தைலத்தைத் தங்களின் கவர்ச்சிக்காகவும் மணமகனின் மகிழ்ச்சிக்காகவும் தயாரித்துக் க�ொள்வார்களாம். தன் கணவன் ஒருவேளை மரித்துப்போனால், அந்தத் தைலத்தை உடலில் பூசி அடக்கம் செய்வது வழக்கமாம்…! மரியா எப்போது இயேசுவைக் கண்டு, அவருடைய ப�ோதனைகளை ஏற்றுக்கொண்டாள�ோ, அன்றிலிருந்து, அவளுடைய பாவ வாழ்க்கையையும், திருமண எண்ணத்தையும் கைவிட்டு இயேசுவிற்குப் பணி செய்யும், சீடர்களில் தன்னையும் ஒருத்தியாக இணைத்துக்கொண்டாள். கனானியப் பெண்ணின் நம்பிக்கையைக் கண்டு, வியப்படைந்தது ப�ோல, இயேசு இப்போது மரியாவின் பேரன்பையும், அவளது மனமாற்றத்தையும் கண்டு பெரிதும் மகிழ்ந்தார் என்றே கூற வேண்டும். இப்படியாகப் பலர், இயேசு வாழ்ந்த நாட்களில், தங்கள் அன்பை, பணியாலும், வாழ்க்கையாலும் இயேசுவிற்கு மனநிறைவு தந்தவர்கள் உண்டு. அவர்களில் சீரேனே ஊரான சீம�ோன் என்பவரும் ஒருவராவார். இயேசுவின் சிலுவையின் பாரத்தைத் தன் த�ோளில் சுமந்த காரணத்தால், அவரது பணி இறை சமூகத்தில் மறக்கப்படவில்லை. உலகெங்கும் நற்செய்தி அறிவிக்கப்படும் ப�ோதெல்லாம், சீம�ோனுடைய நற்செயல் நன்றியுடன் நினைவுகூரப்பட்டதல்லாமல், ‘சீரேனே ஊரான’ அவன் குடும்பப் பெயரும், அலெக்சாண்டர், ரூபஸ் என்ற புதல்வர்களின் பெயர்களும் கூட நினைவுகூரப்படுகிறது! (மாற்: 15:21) இது பெரும் நற்பேறல்லவா? பரிசேயர்கள் எல்லாரும், இயேசுவைக் குற்றம் கண்டுபிடித்துக் க�ொலை செய்யச் சதி - செய்துக�ொண்டிருக்கும் ப�ோது,

இறைவன் தம்மை அன்பு செய்பவர்களுக்கும், தமக்கு ஊழியம் புரிபவர்களுக்கும், சிறந்த பரிசை அளிக்கத் தவறுவதில்லை அரிமத்தியாவூர் சூசை, மற்றும் நிக்கதேமு என்ற பரிசேயர்கள் இயேசுவை ‘மெசியா’வாக ஏற்று விசுவசித்து, இரகசியச் சீடர்களாக வாழ்ந்தார்கள். இயேசு சிலுவையில் மரித்தவுடன், துணிவுடன் முன்வந்து, இயேசுவை யூத முறைமையின்படி நல் அடக்கம் செய்த காரணத்தால், சீடர்களுக்கான பலனைப் பெற்றனர் மத். 10:41. ய�ோவான் எழுதிய நற்செய்தி 6ஆம் இயலில், இயேசு 5000 பேருக்குப் பாலை நிலத்தில் உணவளித்ததைப் பற்றி வாசிக்கிற�ோமல்லவா? அதற்குக் காரணமாக இருந்த ஒரு சிறுவனின் காணிக்கையைப் பற்றி மறைநூல் நமக்குக் கூறுகிறது. அந்தச் சிறுவன் முதல் இயேசுவை நல்லடக்கம் செய்த பரிசேயர்கள் வரை, இயேசுவை அன்பு செய்து, அவருக்குப் பணி செய்தவர் அனைவருக்கும் கிடைத்த நன்மைகளையும், பெருமையையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிடத் தவறவேயில்லை. இன்று நம்மில் பலர், தங்கள் உடல், ப�ொருள், ஆவியை, இயேசுவிற்காகவும், அவரது அரசு பரவவும் ஒப்படைத்து வாழ்வதையும், அவரது பெயர் மகிமையடையச் சமூக நலப் பணிகள் பல ஆற்றிவருவதையும் பார்க்கிற�ோம். இவர்களுக்கு உலக வாழ்க்கையில் 100 மடங்கு நன்மைகள் என்ன கிடைத்தது என்பதை நம்மால் உணர முடியவில்லை அல்லவா? மத். 6:33.

10

 ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். (லேவி. 25:4)




“அவரது பெயரின் மீது க�ொண்ட அன்பையும், அவருக்காக நாம் பட்ட முயற்சிகளையும், மறந்துவிடுவதற்கு இறைவன் அறமின்மையுள்ளவரல்லவே!” என்று பவுலடிகளார் எபி. 6:10 இல் குறிப்பிடுவதை நாம் மறந்துவிடக்கூடாது. இறைவாக்கினரை ஏற்றுக்கொள்ளும் ப�ோது, இறைவாக்கினருக்கான பயனையும், சீடர்கள், மற்றும் இறை ஊழியர்களுக்கு உதவும்போது, சீடன் மற்றும் ஊழியர்களுக்கான பலன்களையும், நாம் பெற்றுவிடுவதாக மறைநூல் உறுதியளிக்கிறது (மத்.10:41). நமது பெயர் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுவிடுகிறது (வெளி. 20:15). உயிர்த்தெழும் நாளில், நமக்கு முழு கைம்மாறு அருளப்படுமென்று லூக். 14:14இல் நாம் படிக்கிற�ோம். இத்தனை செய்திகளை அறிந்த பின்பும், நன்மைகளைப் பற்றித் தெரிந்து க�ொண்ட பின்பும், எந்த இறைப்பணியிலும் ஈடுபடாமல், தானுண்டு, தன் குடும்பம் உண்டென்று வாழ்வதெப்படி? இறைவனின் குழந்தைகளாக நாம், நற்செயல்கள் செய்வதற்கென்றே இயேசுவுக்குள் படைக்கப்பட்டிருக்கிற�ோம் என்று மறைநூல் கூறுகிறது (எபே. 2:10).



நம் நிலைமைக்கேற்ப, இயன்றளவு சிறுசிறு நற்செயல்கள் செய்தால்கூடப் பனையளவு நன்மைகளை நமக்குத் தந்துவிடும். நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை அவன் செய்யாமல் ப�ோனால் அது அவனுக்குப் பாவமாகும் (யாக். 4:17) என்பதையும் மறந்துவிடக் கூடாது. இறைவன் நம்மை மனமாற அழைக்கிறார். இனிக் காலம் கடத்தாமல், நம் நிலைமைக்கேற்ப, இயன்றளவு சிறுசிறு நற்செயல்கள் செய்தால்கூடப் பனையளவு நன்மைகளை நமக்குத் தந்துவிடும். “இத�ோ விரைவாய் வருகிறேன். அவரவருடைய செய்கைகளின்படியே அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னுடனே வருகிறது!” என்கிறார் நம் இறைவன் (வெளி. 22:12). ஆகவே விழித்துக்கொள்வோம்.

 ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்! (லேவி. 26:2)

11


நித்தியன், ச. ச.

 

உடை அல்லது பிற ப�ொருட்களை வாங்கும்போது, நன்கு கவனித்து ஆராய்ந்து நம் விருப்பத்திற்கேற்றார்போல் அவற்றைத் தேர்ந்தெடுக்கிற�ோம். ஆனால், ஆட்களை இவ்வாறாகத் தேர்ந்தெடுப்பது எளிதன்று. வாழ்வில் நமக்கு ஏற்படும் உறவுகள், அன்பளிப்புப் ப�ொருட்களைப் ப�ோல, உறவுகளை ஒரு க�ொடையாக, அன்பளிப்பாகக் கருதலாம். ஏனெனில், நாம் பெறும் பரிசுப் ப�ொருள், அதைக் க�ொடுப்பவரின் விருப்பம் ப�ோலத்தான் இருக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது பரிசுப் ப�ொருளாகத்தான் இருக்கும் அதுதான் பரிசுப் ப�ொருள்களின் முறைமை. எனவே, நாம் வாழும் சமூகம், நம்மோடு உறவாடும் மனிதர்கள் அனைவரும் நாமாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டவை அல்ல, மாறாகக் கடவுள் நமக்களித்த மாபெரும் க�ொடை. வாழ்வில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிற�ோம். சில ஆட்கள் நமக்கு ஒரு சுமையாகவும், இன்னும் சிலர் இனிமையாகவும் அமையலாம். ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட பண்புடையவர்களாய் இருப்பர். ஒவ்வொருவரையும் 12

ஒரு தனித்தன்மை வாய்ந்த அன்பளிப்பாக நாம் கருதினால், அனைவரையும் மதித்து வாழப் பழகிக்கொள்வோம். நம் வாழ்க்கையிலும் பல சிக்கல்கள் மிச்சமாகும். நாமும் த�ொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தவும் முயல்வோம். பல வகைகளில் அடுத்தவர் நமக்கு ஓர் அன்பளிப்பாகின்றனர். எடுத்துக்காட்டாக, நாம் தேவையில் இருக்கும்போது நம்மைக் கவனித்துக்கொள்வதும், துயர நேரங்களில் நம்மோடு சிரித்துப் பேசி நம்மைத் தேற்றுவதும், மகிழ்ச்சிப்படுத்துவதும் நல்ல உறவுகளே. மேலும், அவர்களின் அனுபவங்களிலிருந்து வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொடுத்து நல்ல பாதையில் நம்மை வழிநடத்துவதும்

 எல்லா எதிரிகளின் த�ொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். (2சாமு. 7:1)




உறவுகளே. நமக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து நம்மை உற்சாகப்படுத்தி, நமக்குப் பின் ஓர் ஆற்றலாக இருந்து நம் குறிக்கோள்களை அடையத் தூண்டுவதும் உறவுகளே. இப்படிப்பட்ட மனித உறவுகளைக் க�ொடையெனக் கருதுவது சிறப்பன்றோ! அன்பளிப்புகளைப் பயன்படுத்தும் வகை அதைப் பெற்றுக்கொள்பவரின் கையில்தான் உள்ளது. கடவுள் நமக்களித்துள்ள மிக உன்னத அன்பளிப்பாகிய உறவுகளை எப்படிக் கையாளுகிற�ோம்?

உறவுகளைத் திறந்த மனதுடன் அணுகுவ�ோம். நாம் சந்திக்கும் எந்தவ�ொரு ஆளும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலமும், வாழ்க்கை சூழலும், பட்டறிவுகளும் ஒருவகையில் மனிதர்களை மாற்றிக்கொண்டுதான் உள்ளன. எந்நேரத்திலும், எவராகிலும், எந்நிலையிலிருந்தும் மாமனிதராக உருவெடுக்கலாம். நம்மிடம் இருக்க வேண்டிய ஒரே பண்பு அடுத்தவரின் அடிப்படையான நன்மைத்தனத்தில் நம்பிக்கைக் க�ொள்வதே. (Trusting in the basic goodness of the other). இத்தகைய நம்பிக்கைய�ோடும், எதிர்நோக்குடனும் வாழப் பழகிக்கொள்வதே, உறவென்னும் க�ொடையை மதிப்பதன் ஓர் அடையாளம்.

நம் ச�ொல்லுக்கும் செயலுக்கும் அன்பே அடித்தளமாய் அமைய வேண்டும். 

உறவுகளுக்கு அன்பே அடித்தளம். முழுமையான வாழ்வுக்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்மோடு வாழும் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர். அடுத்தவர் நம் அன்பைப் பெற, அவர் ஒரு மனிதர் என்ற அடிப்படையான தகுதி மட்டும் ப�ோதுமானது. இனம், மதம், ம�ொழி, கலாச்சாரம் ப�ோன்ற வேறுபாடுகளைக் களைந்து, பிறரை அன்பு செய்வது நமக்குக் க�ொடுக்கப்பட்டுள்ள உறவென்னும் அன்பளிப்பினை மதிக்கும் அடையாளம். நம் ச�ொல்லுக்கும் செயலுக்கும் அன்பே அடித்தளமாய் அமைய வேண்டும். அன்பு என்பது ஓர் உணர்வு மட்டுமன்று; மாறாக அடுத்தவருக்காக நாம் விரும்பி ஏற்கும் ஓர் அர்ப்பணிப்பு. எனவே அன்பு என்பது மற்றவரின் தனித்தன்மையை ஏற்று எந்தவகைக் கட்டுப்பாடுமின்றி நாம் வெளிப்படுத்தும் ஓர் உன்னதப் பண்பு. உலகில் எல்லா ஆட்களையும் ஒரே வகையில் அன்பு செய்வதென்பது திண்ணமாக நிறைவேறாத செயலாகும். இருப்பினும் நம்மோடு வாழ்பவர்களையாவது உண்மையாக அன்பு செய்து, அவர்களின் வாழ்க்கையை இனிமைமிக்கதாக மாற்றுவ�ோம்.

 அனைவரின் த�ொல்லைகளினின்றும் உனக்கு நான் ஓய்வு அளிப்பேன். (2சாமு. 7:11)

13


அடுத்தவருக்காய் வாழப் பழகிக்கொள்வோம். வாழ்க்கையைப் ப�ொருள் ப�ொதிந்த வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டிய ப�ொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நான், எனது, என் குடும்பம், என் தேவை - ப�ோன்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து வாழ்நாட்களைச் செலவிடுவ�ோர் பலர். இப்படி வாழ்வதால் நாம் ஒன்றும் பெரிதாய்ச் சாதிக்கப்போவதில்லை. நம் வாழ்க்கையைப் பயன்படுத்தி இச்சமூகமும் நம்மைச் சுற்றி வாழ்பவர்களும் மகிழ்ச்சியாய் வாழ நம் பங்களிப்பைத் தர வேண்டும். ஏத�ோ ஒருவகையில் பிறருக்காய் வாழ்ந்தவர்களே பிறந்தவர்களில் சிறந்தவர்களாகியுள்ளனர். அத்தகையவர்களைத்தான் இச்சமூகம் இன்றும் நினைவுகூருகின்றது. அடுத்தவருக்காய் வாழ வேண்டும் என்பதன் ப�ொருள், நம் ச�ொத்து, உறவுகள் அனைத்தையும் விடுத்துத் துறவியாக வாழ வேண்டும் என்பதன்று; மாறாக, நம்மோடு வாழ்பவர்களை மதித்து, அவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் அறிந்து, புரிந்து, நல்லதையே எண்ணி, அவர்களின் நற்பண்புகளைச் சுட்டிக்காட்டி, நம்மோடு இருப்பதைப் பகிர்ந்து, நம்மால் முடிந்த உதவியைச் செய்து வாழ்ந்தால் மட்டும் ப�ோதும். இதற்கு நாம் தயாரா? என்னோடு வாழ்வோரைக் கடவுள் அளித்த க�ொடையாகப் பார்க்கின்றேனா? அவர்களை மதித்து, அன்பு செய்கின்றேனா?

14

நாம் வாழும் சமூகம், நம்மோடு உறவாடும் மனிதர்கள் அனைவரும் நாமாகக் கேட்டுப் பெற்றுக்கொண்டவை அல்ல, மாறாகக் கடவுள் நமக்களித்த மாபெரும் க�ொடை. என் சிந்தனைகளும், செயல்களும் அடுத்தவரின் தேவைகளை மையப்படுத்தியுள்ளதா? இக்கேள்விகளுக்கு உங்களின் மறும�ொழி “ஆம்” என்றால் நீங்கள் ஓர் உன்னதமான மனிதர். த�ொடரட்டும் உங்களின் மேன்மைமிகு உறவுக் க�ொடை.

 நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும். (2குறி. 36:21)




  1842 - 1857

புனித ஜான் ப�ோஸ்கோவின் வளரிளம் பருவ மாணவர்களில் ஒருவர். பதினான்கு வயதே நிரம்பிய த�ோமினிக் சாவிய�ோவின், வீரத்துவம் நிறைந்த அன்றாட புண்ணிய வாழ்வே இவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தியது. கத்தோலிக்கத் திருச்சபையில் மறைசாட்சியாக இறக்காத புனிதர்களில் இவரே மிகவும் இளையவர்.

இளமைப் பருவம் த�ோமினிக் சாவிய�ோ, 1842 ஏப்ரல் 2ஆம் தேதி இத்தாலியில் உள்ள ரிவா ப்ரெஸ�ோ கியரியில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருந்தே இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி க�ொண்டிருந்தார். இவரது குடும்பமும் சூழ்நிலையும் இவரைப் புனிதத்தில் வளர்த்தன. இவரது பெற்றோர் இவரைக் கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். நான்கு வயதிலேயே இவர் தனியாகச் செபிக்கும் திறமை பெற்றிருந்தார். சாவிய�ோ தான் முதல் நற்கருணை பெற்ற நாளைப் பற்றி குறிப்பிடும்போது, “என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் வியப்பானதுமான நாள் அது” என்கிறார். இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து திருப்பலியில் குருக்களுக்கு உதவி செய்தார்; விடியற்காலை 5 மணிக்கே ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் க�ொண்டிருந்தார். மழையிலும், குளிரிலும் இவர் ஆலயத்திற்குத் தவறாமல் சென்றார்.

த�ொன் ப�ோஸ்கோவுடன் 12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனித ஜான் ப�ோஸ்கோ நடத்திய ஆரட்டரியில் சாவிய�ோ சேர்ந்தார். 1854 அக்டோபர் முதல் திங்கட்கிழமை தனது தந்தையுடன் புனித ஜான் ப�ோஸ்கோவைச் சந்தித்த இவர், “நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி” என்று அவரிடம் கூறினார்.



கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களைச் சாவிய�ோ கண்டித்துத் திருத்தினார்; சண்டையிட்டுக் க�ொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார். ‘பாவம் செய்வதை விடச் சாவதே மேல்’ என்பது இவரது விருதுவாக்கு ஆகும். 14ஆம் வயதில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மிகவும் பலவீனம் அடைந்தார். 1857 மார்ச் 9ஆம் தேதி விண்ணகக் காட்சியால் பேரின்பம் அடைந்து, “ஆகா, எவ்வளவு இன்பம் நிறைந்த புதுமையான காட்சி!” என்று கூறியவாறே த�ோமினிக் சாவிய�ோ உயிர் துறந்தார்.

நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி 

நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா? (நெகே. 13:17)

15


த�ோமினிக் சாவிய�ோ இறந்ததும் புனித ஜான் ப�ோஸ்கோ இவரது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதினார். அது இவரது புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகளில் முக்கியச் சான்றாக விளங்கியது.

புனிதர் பட்டம் சாவிய�ோவின் புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகளைத் த�ொடங்கி வைத்த திருத்தந்தை 10ஆம் பயஸ், “த�ோமினிக் என்னும் இளைஞர், திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றிக் காப்பாற்றிக் க�ொண்டவர்” என்று இவரைப் புகழ்ந்தார். 1933இல் இவருக்கு வணக்கத்திற்குரியவர் பட்டம் வழங்கிய திருத்தந்தை 11ஆம் பயஸ், “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால்

சாவிய�ோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறுவார். திருத்தந்தை 12ஆம் பயஸ், த�ோமினிக் சாவிய�ோவுக்கு 1950ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அருளாளர் பட்டம் வழங்கினார். அவரே, 1954ஆம் ஆண்டு, ஜூன் 12ஆம் தேதி புனிதர் பட்டமும் வழங்கி உரை நிகழ்த்திய ப�ோது, “இளைஞர்கள் சாவிய�ோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவிய�ோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.

இளைஞர்கள் சாவிய�ோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவிய�ோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு 16

 எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது. (ய�ோபு-3:26)




ஸ்டெர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாகக் குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், வை.க�ோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், உள்ளிட்ட தரப்பிலிருந்து வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக் க�ோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பில், நூறு க�ோடி அபராதம் அளித்து நிறுவனம் த�ொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.

ப�ோராட்டம் ஏன்?

Sterlite

 ‘வேதாந்தா’ உலகின் மிகப் பெரிய உல�ோகம் மற்றும் சுரங்கத் த�ொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், 1972ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய த�ொழிலில் ஈடுபட்டார். பின் மும்பைக்குச் சென்றவர், ‘வேதாந்தா’ நிறுவனத்தைத் த�ொடங்கினார். இலண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இதுதான். வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ‘ஸ்டெர்லைட்.’

தூத்துக்குடியில் மஹாராஷ்ட்ரா த�ொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குக் கடல�ோரப் பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், உள்ளூர் மக்கள் ப�ோராட்டத்தை முன்னெடுத்ததால், மஹாராஷ்ட்ரா அரசு இதற்கான ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, 1993ஆம் ஆண்டுக் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பினார். இதற்குப் பின்தான், அந்நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது. 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் அளித்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. த�ொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. த�ொலைவிலேயே அமைக்கப்பட்டது.



இந்த ஆலையால் நிலம், நீர் ப�ோன்றவை மாசு அடைவதுடன் பலரின் உடல் நிலையும் பாதிக்கப்படுகின்றது. இதனால், நிறுவனம் த�ொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டத்துக்கு அனைத்து வழிகளிலும் ப�ோராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 இலட்சம் டன். இதுவே ம�ோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மேலும் ஆண்டிற்கு 4 இலட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கும் திட்டம் உள்ளதால் அது மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கெனவே அந்த ஆலையால், காற்று, நீர், நிலம் ப�ோன்றவை மாசடைந்து வருகின்றன என்பதை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது. பலரும் பல்வேறு வகையான ந�ோய்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், மக்கள் பெருமளவில் வாழும் பகுதியில் ஆலை விரிவாக்கப்படுவது எவ்வகையில் நியாயமாகும்? சிலருக்கு வேலை கிடைக்கின்றது என்ற காரணத்திற்காகப் பலர் பாதிப்பிற்கு உள்ளாகலாமா? இது, கத்தி ப�ோய் வாள் வந்த கதை ப�ோல் அல்லவா உள்ளது.

 நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. (ச. உ. 12:5)

17


நாலு பேரு ச�ொன்ன கதை

அந்தோனி கிறிஸ்டி, ச.ச.

 

  ஆர�ோன்: டேய் எங்கடா நம்ம ஆனந்த இன்னும் காண�ோம்.

சாக்ரடீசு: ஆமா! நமக்கு முன்னாடி அவன்தான் வருவான். பேட் (Bat) வேற அவன்கிட்ட இருக்கே! சாமு: அத�ோ வந்துட்டான் டா! சைக்கிள் ஸ்டான்ட்ல பாருங்க!

ஆனந்து: சாரி சாரி டா (வந்துக்கொண்டே) க�ொஞ்சம் லேட் ஆயிடுச்சி! ஆர�ோன்: க�ொஞ்சம் இல்ல… நிறையவே லேட் ஆயிடுச்சி! ஆனந்து: இல்லடா என் தங்கச்சி ஸ்கூல்ல ஆண்டு விழா. அதுக்குப் ப�ோயிருந்தேனா. அங்க லேட்டா முடிஞ்சது!

ஆர�ோன்: ஓ! அப்போ நீ உன் ஸ்கூலுக்கு மட்டமா?

ஆனந்து: ஆமா டா. என் தங்கச்சி முதல்முறையா 18

தனியா ஒரு பரதநாட்டியம் ஆடுனா. அதனால நாங்க எல்லாருமே அந்த ப்ரோகிராமுக்குப் ப�ோயிட்டோம் டா. சாமு: வாவ்! அனித்தாவ. நாங்க பாராட்டின�ோம்ணு ச�ொல்லு டா.

எல்லாம்

ஆனந்து: கண்டிப்பா ச�ொல்றேன். சரி நான் அங்க அனித்தாவ�ோட ஸ்கூல்ல ஒன்னு பாத்தேன்டா! உங்க கிட்ட ச�ொல்லியே ஆகணும்! ஆர�ோன்: டேய் அவ ஸ்கூல் ம�ொதல்ல கேர்ள்ஸ் ஸ்கூல், அங்க நீ ப�ோனதே தப்பு… இதுலவேற அங்க பாத்தத ச�ொல்லப் ப�ோறியா? நீ எதுவும் ச�ொல்ல வேண்டாம்!

ஆனந்து: அடப் பாவி! என்னைப் பாத்து என்ன வார்த்தை ச�ொல்லிட்ட நீ, நீயெல்லாம் ஒரு நண்பனாடா? சாமு: அதானே. ஏண்டா ஆர�ோன், அவன் ச�ொல்றதுக்கு முன்ன ஏன்டா அவன தடுக்குற?

 நீங்கள் ஒழுங்கீனமாகக் க�ொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். (எசா. 1:13)




ஆனந்து: அப்படிக் கேளுடா! நண்பேன்டா! (கட்டிப்பிடித்துக்கொள்ள) சாக்ரடீசு: சரி அப்படி என்னதான் பாத்த… ச�ொல்லு?

ஆனந்து: ஸ்கூல் உள்ள நுழைஞ்ச உடனே கண்ல பட்டது என்ன தெரியுமா? த�ொன் ப�ோஸ்கோவுடைய பெரிய சுரூபம்தான். அத பாத்த உடனேயே எனக்குப் ப�ோன வாரம் நாம பேசிக்கிட்டிருந்ததுதான் ஞாபகம் வந்தது! ஆர�ோன்: அப்போ அதுவும் த�ொன் ப�ோஸ்கோ ஸ்கூல்தானாடா?

சாமு: ஓ அதுவா? அது த�ொன் ப�ோஸ்கோ ஸ்கூல் இல்ல. ஆனா, த�ொன் ப�ோஸ்கோ த�ொடங்கின அருட்சக�ோதரிகளுடைய சபை நடத்துற ஸ்கூல். ஆனந்து: அப்போ அதுவும் அவர�ோட ஸ்கூல்தானே?

சாமு: அப்படிச் ச�ொல்ல முடியாது! ஏன்னா எப்படித் த�ொன் ப�ோஸ்கோ சிறுவர்களுக்காக உழைச்சார�ோ, அதே ப�ோலப் பெண் பிள்ளைகளுக்காக உழைச்ச ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்கள�ோட உதவிய�ோடதான் த�ொன் ப�ோஸ்கோ அந்தச் சக�ோதரிகள் சபையையே உருவாக்கினாரு ஆர�ோன்: ஓ அப்படின்னா, அவங்க ஒரு பெண் த�ொன் ப�ோஸ்கோ… அப்படித்தானே? ஆனந்து: (உரக்க சிரிக்கிறான்)

சாக்ரடீஸ்: ஏன்டா அப்படிச் சிரிக்கிற?

இயற்கைய�ோடும் கடின உழைப்போடும் கடவுள் பக்திய�ோடும் வளந்தாங்க. ஆனந்து: இல்ல த�ொன் ப�ோஸ்கோவுக்குப் பெண் வேஷம் ப�ோட்டா எப்படி இருக்கும்ணு நினைச்சேனா… சிரிப்பு வந்துடுச்சி!

சாமு: ஆனா ஆர�ோன் நீ ச�ொல்றது கூட ஒரு விதத்துல சரிதான். ஒரு வேளை ஜான் ப�ோஸ்கோ ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தா இவங்கள ப�ோலத்தான் வாழ்ந்திருப்பாரு. ஆர�ோன்: டேய் சாமு, சாக்ரடீசு நீங்க ரெண்டு பேரும் தான் த�ொன் ப�ோஸ்கோ ஸ்கூல்ல படிக்கிறீங்க, அவங்கள பத்தி ச�ொல்லுங்கடா!

சாமு: அவங்க பேரு மேரி த�ோமினிக்கா மசரெல்லோ. த�ொன் ப�ோஸ்கோவ ப�ோல அவங்களும் இத்தாலி நாட்டில்தான் பிறந்தாங்க; ஆனா அவர�ோட ஊர்ல இருந்து க�ொஞ்ச தூரத்துல. த�ொன் ப�ோஸ்கோ பிறந்து 22 வருஷங்களுக்குப் பின் அதாவது 1837 ஆம் வருஷம் மே மாதம் 9 ஆம் தேதி பிறந்ததாகத் தகவல்.



 ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் க�ொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். (எசா. 56:2)

19


சாக்ரடீஸ்: அவங்களும் த�ொன் ப�ோஸ்கோ ப�ோலவே ஒரு விவசாயக் குடும்பத்திலதான் பிறந்தாங்க. இயற்கைய�ோடும் கடின உழைப்போடும் கடவுள் பக்திய�ோடும் வளந்தாங்க.

ஆர�ோன்: நீ மேல ச�ொல்லுடா சாமு. இன்னும் அவங்களுக்கும் த�ொன் ப�ோஸ்கோவுக்கும் என்ன த�ொடர்புன்னு ச�ொல்லவே இல்லையே!

சாமு: அதுதான் இல்ல! ஏழு பேரு செய்யக்கூடிய வேலைய அவங்க தனியாளா செய்வாங்களாம் வயல்ல!

ஆனந்து: அவர்தான் கரெக்டா?

ஆர�ோன்: ஆனா அவங்க பெண்ணா இருந்ததால அவ்வளவு வேலை செஞ்சிருக்க மாட்டாங்க இல்லையா?

ஆனந்து: அடேயப்பா உமன்தான்!

அப்ப

அவங்க

சூப்பர்

சாமு: அப்படி இருந்தவங்களுக்கு ஒரு ந�ோய் வந்தது, ஆனா அதுவும் அடுத்தவங்களுக்கு உதவி செய்ததால…

சாக்ரடீஸ்: அப்போ அவங்களுக்கு என்ன வயசு இருக்கும்? சாமு: இருபத்தி மூனு

சாக்ரடீஸ்: அந்த சமயம் ஊர்ல எல்லாருக்கும் டைப்பாய்டு காய்ச்சல் பரவியது. பலர் இறந்துகூடப் ப�ோனாங்க! மரியாவுடைய மாமாவுக்கும், அத்தைக்கும் அந்தக் காய்ச்சல் வர, மரியாதான் அவங்கள பாத்துக்கிட்டாங்க. ஒரு வாரத்துல அவங்களுக்கெல்லாம் சரியாகிடுச்சி, ஆனா மரியாவுக்கும் அந்தக் காய்ச்சல் வந்து சாகக்கிடந்தாங்க. ஆனா கடவுள் அருளால நலமாயிட்டாங்க. இருந்தாலும் அவங்களுக்கு இருந்த பழைய பலம் எல்லாம் ப�ோயிடுச்சி. ஆனந்து: ஓ! எப்படி இருந்த அவங்க… ஆர�ோன்: டேய்…

ஆனந்து: சரி சரி.

சாமு: ம்ம்ம்… சரி அந்தப் பாய்ண்ட்க்கு வருவ�ோம். அவங்களுக்கு 15 வயசு இருக்கும்போதே ‘அமல அன்னைக் குழு’ அப்படின்னு ஒரு குழுவில உறுப்பினரா சேர்ந்தாங்க. அந்தக் குழுவ நடத்தினது ஒரு குருவானவர். த�ொன்

ப�ோஸ்கோ…

சாக்ரடீஸ்: இல்லையே! அது அவங்கள�ோட பங்கு குரு. பாதர் பெஸ்ட்டரீன�ோ.

சாமு: அவங்க அந்த வயசுலேயே தன்னைவிடச் சின்ன வயசு பிள்ளைகளையெல்லாம் சேர்த்து விளையாட்டு, நல்லொழுக்கம், விவிலியக் கதைகள் எல்லாம் ச�ொல்லித் தருவாங்களாம். ஆர�ோன்: அட நம்ம ஜான் ப�ோஸ்கோ மாதிரியே…

சாக்ரடீஸ்: உடல் நலம் குன்றிப்போன பிறகு, இவங்களும் இவங்க கஸின் (Cousin) பெட்ரோனிலா அப்படின்னு ஒருத்தவங்க, அவங்களும் தையல் கத்துக்கிட்டாங்க. ஆர�ோன்: அட நம்ம ஜான் ப�ோஸ்கோ மாதிரி.

சாமு: ஒரு நாளு பாதர் பெஸ்ட்டரீன�ோ த�ொன் ப�ோஸ்கோவைச் சந்திச்சப்போ, தன்னோட இருக்கிற இந்தக் குழுவைப்பத்தி பேசினாராம். அப்போ தன் வேலையை பெண்பிள்ளைகளுக்கு யாராவது செய்யனுமேன்னு நினைச்சுக்கிட்டிருந்த த�ொன் ப�ோஸ்கோவ, தன்னோடு இருக்கிற குழுவை வந்து பார்க்கும்படி கூப்பிட்டாரு பாதர் பெஸ்ட்டரீன�ோ. ஆனந்து: ஓ… இங்கதான் த�ொடங்குது டர்னிங்க் பாயிண்ட்…

சாமு: த�ொன் ப�ோஸ்கோவும் சரின்னாரு. அதாவது 1862ஆம் வருஷம்.

ஏழு பேரு செய்யக்கூடிய வேலைய அவங்க தனியாளா செய்வாங்களாம் 20

 ஓய்வு நாள் ‘மகிழ்ச்சியின் நாள்’…; ‘ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ (எசா. 58:13)




சாக்ரடீஸ்: ஆனா த�ொன் ப�ோஸ்கோ அங்க ப�ோயி அவங்கள பாத்தது 1864லதான். ஆர�ோன்: ஆனா அதுக்கு முன்னால அவங்க த�ொன் ப�ோஸ்கோவப் ப�ோல வாழ்ந்திருக்காங்க.

ஆனந்து: அவங்க உண்மையிலேயே பெண் த�ொன் ப�ோஸ்கேதான். சரி… அவங்க சந்திச்சப�ோது என்ன நடந்தது?

மரியா: உறுதிதான் அழைப்பு பாதர்.

பாதர்.

அது

எங்கள�ோட

த�ொ.ப�ோ: ர�ொம்ப சந்தோஷம். நீங்க த�ொடர்ந்து இப்போ செய்றது ப�ோலவே செய்யுங்க. நான் பாதர் பெஸ்ட்டரீன�ோவிடம் நீங்கள் அடுத்தடுத்து என்ன செய்யணும்னு ச�ொல்றேன். சரியா.

சாமு: ம்ம்ம் அதுவா…. (காட்சி மாறுகிறது) (பெஸ்ட்டரீன�ோ, த�ொன் ப�ோஸ்கோ, மசரெல்லோ, பெட்ரோனிலா)

மரிய

பெஸ்ட்டரீன�ோ: வாம்மா.

இங்க

ஏம்மா

பெட்ரோனிலா,

பெட்ரோனிலா: ச�ொல்லுங்க பாதர்.

பெஸ்ட்டரீன�ோ: மரியா எங்க? த�ொன் ப�ோஸ்கோ வர்ற நேரம் ஆயிடுச்சி. நான் மரியாவ இங்க இருக்கச் ச�ொன்னேனே? பெட்ரோனிலா: இங்கதான் இருந்தா பாதர்… அத�ோ வந்துட்டா பாருங்க.

பெஸ்ட்டரீன�ோ: வாம்மா. இங்கேயே இரு. த�ொன் ப�ோஸ்கோ வர்ற நேரம்… அட அத�ோ பாரு வந்துட்டாரு. வாங்க த�ொன் ப�ோஸ்கோ. இரண்டு வருஷமா நாங்க உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கோம். த�ொன் ப�ோஸ்கோ: மன்னிச்சிடுங்க பெஸ்ட்டரீன�ோ. நானும் முயற்சி பண்ணினேன்… சீக்கிரம் வர முடியல.

பெஸ்ட்டரீன�ோ: அட! அட! மன்னிப்பா. நீங்க எவ்வளவு வேலைகள�ோட இருக்கீங்க… எங்களுக்குத் தெரியாதா? சரி, இத�ோ இந்த இரண்டு பேருந்தான் நான் ச�ொன்ன அமல அன்னைக் குழுவ�ோட தலைவிகள்… இது மரிய த�ொமினிக்கா மசரெல்லோ, அது பெட்ரோனிலா.

மரியா, பெட்ரோனிலா: வணக்கம் பாதர்! முழங்காலிட, த�ொன் ப�ோஸ்கோ இருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைகிறார்

த�ொன் ப�ோஸ்கோ: உங்கள் குழுவைப் பத்தி, பாதர் எனக்கு நிறையச் ச�ொல்லியிருக்காரு. ர�ொம்ப மகிழ்ச்சி. நாம சேர்ந்து கடவுளுடைய சித்தத்தைச் செய்யலாமா? அதுல உங்களுக்கு விருப்பமா?



மரியா: அது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் பாதர். த�ொ.ப�ோ: குட். காட் பிளஸ் யூ.

மரியா: மரியே வாழ்க! ப�ோயிட்டு வர்றோம் ஃபாதர். (அவர்கள் சென்ற பின்)

த�ொ.ப�ோ: த�ொன் பெஸ்ட்டரீன�ோ, மரியாவை நான் முன்பே அறிந்தது ப�ோல எனக்குத் த�ோன்றுகின்றது. கடவுள் சரியான வழியைக் காட்டியிருக்கின்றார். எவ்வளவு பணிவு, எவ்வளவு ஆர்வம். உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்.

 அமாவாசைத�ோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர். (எசா. 66:23)

21


(காட்சி மாறுகின்றது)

ஆர�ோன்: உடனே சபை த�ொடங்கினாங்களா?

சாமு: ஓ… 1872இல்தான் சபை த�ொடங்கியது. ஆனா, இரண்டு புனிதர்களுக்கும் நடுவுல ஒரு உறவு த�ொடங்கிருச்சி. ஆனந்து: சரி, த�ொன் ப�ோஸ்கோவைப் பத்தி மசரெல்லோ என்ன நினைச்சாங்களாம்?

சாக்ரட்டீஸ்: அவங்க பிரண்டு பெஸ்ட்டரீன�ோக்கிட்ட, “உண்மையிலேயே அங்க நான் ஒரு புனிதரைப் பார்த்தேன்” என்ற ஒரு வரியை மட்டும் ச�ொன்னாங்களாம். ஆர�ோன்: அட்ரா சக்க! த�ொன் ப�ோஸ்கோ எப்படி உடனே உணர்ந்தார�ோ அப்படியே இவங்களும் உடனே உணர்ந்துட்டாங்க! என்ன ஒரு ப�ொருத்தம்! ஆனந்து: அதான் நான் அப்பவே ச�ொன்னேனே, “இவங்க ஒரு பெண் த�ொன் ப�ோஸ்கோன்னு.”



நன்றி

“தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவ�ோம்” என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை. உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன. (எரேமியா 5:24,25)

22

 உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம். (எரே. 17:21)




ஆசிரியர் : அ. ஜேசுதாஸ் பக்கங்கள் : 174 விலை : ரூ. 160

ஆசிரியர்: வில்லியம் பால்ராஜ் பக்கங்கள்: 100 விலை: ரூ. 100

ஆசிரியர்: ஆண்டோ சகாயராஜ் பக்கங்கள்: 174 விலை: ரூ. 160

அரும்பின் புதிய வெளியீடுகள்

மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க!

பரபரப்பு, அறைகூவல்கள், ப�ோராட்டங்கள் இவைகளுக்கிடையில் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, ப�ொறுமையாய் சிந்திக்கத் தூண்டும் சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க! வாழ்க்கையின் தேக்க நிலையில் தவிக்கும் பலருக்கு இந்நூல் புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் உத்வேகமும் தரும் மருந்து. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்! உண்மையும் ப�ோலித் த�ோற்றமும், தீமையைக் கண்டு திகிலடையாதே!... ப�ோன்ற 36 தலைப்புகளில் இந்நூல் கூறும் பாடங்களைக் கவனத்துடன் வாசித்தால் வாழ்வில் நிம்மதியும் நிறைவும் எய்தலாம்.

..............................................................................................................................

இயற்கையின் சிரிப்பினிலே... (இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவனைப் பற்றிய ஓர் ஆன்மீகத் தேடல்)

இறையியல் மற்றும் இலக்கியக் கண்ணோட்டத்தில், இன்றைய நடப்புகளை அலசி ஆராயும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...

இயற்கையைத் தன்னலக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனிதருக்கு, அதைப் பராமரிக்கும் சவால் நிறைந்த அழைப்பை இறைவன் விடுக்கின்றார் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். இயற்கையில் இறைவனின் த�ோற்றத்தை, இருப்பை உணர்ந்து, அவரில் சங்கமிக்கும்போது வாழ்க்கை நிறைவெய்துகின்றது என்கின்றது இந்நூல். சித்தர் பாடல்களையும் பாரதியாரின் கவிதைகளையும் தமது கருத்துக்கு அரண்களாக ஆங்காங்கே ஆசிரியர் சேர்த்துள்ளார். இறையியல் துறையில் புதுமைப் படைக்கும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...

.............................................................................................................................. மீண்டும் எழுவ�ோம்!

குருதி பூசிய கத்தியை நக்கி நாக்கறுபட்டுச் சாகும் ஓநாய்கள் ப�ோல் இலவசங்களை நக்கி நலிவுற்றுக் கிடக்கும் மக்களுக்காக இரங்குகிறார் ஆசிரியர் ஆன்டோ சகாயராஜ். ‘முதிர்ச்சியுள்ளோரின் காதல் முனை மழுங்குவதில்லை,’ ‘வாழ்க்கையில் வெறிய�ோடு ப�ோராடுபவர்களே வரலாறு படைக்கிறார்கள்,’ ‘எந்த வழி ஏற்றம் தரும் வழி,’ ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’… ப�ோன்ற 25 தலைப்புகளில், எளிய வார்த்தைகளில், ஆழமான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நல்ல பல செய்திகளால் வீழ்ந்துகிடக்கும் இளைஞர்களை மீண்டும் எழுந்து நிற்க அறைகூவல் விடுக்கும் நூல் மீண்டும் எழுவ�ோம்!



 சீய�ோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார். (புல. 2:6)

23


  ஜே. கு. பிரான்ஸிஸ்.

முன்னுரை: கவலை என்பது தங்களால் இயலவில்லையே எனும் ஆற்றாமையினால் வெளிப்படுகிறது என்றாலும், அஃது உங்களுக்கு மனச்சோர்வைக் க�ொடுத்துத் தளர்ச்சியடையச் செய்துவிடுகிறது. நம்மால் இயலவில்லை, எனவே, பிறர் எவரேனும் நமக்கு உதவிட இயலுமா எனும் சிந்தனையைத் த�ோன்றச் செய்கிறது. உங்கள் மனதில் உறுதியின்மையும், குழப்பமும் உண்டாகும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் உங்களுக்காகவே, உங்களுக்கு மிக அருகில், உங்கள் உதட்டசைவில், உங்களது உள்ளத்தில் குடியிருப்பவருமான ஒருவரைப் பற்றிய சிந்தனை (இ.ச. 30:11-14, தி.பா.95:7, உர�ோ. 10:8, எபி. 3:7-11) உங்களின் உள்ளத்தில் எழாததால்தான் மனக்குழப்பம், கவலை, மனச்சோர்வுக்குக் காரணம் என்பதைத் தெரிந்து க�ொள்ளுங்கள். பல கிறிஸ்தவ விசுவாசிகளும் இவ்வாறே வாழ்ந்து க�ொண்டிருக்கின்றனர். கவலையின்றி வாழும் வழி பற்றி விவிலியத்தின் துணையுடன் சிந்திப்போம் வாருங்கள்.

கவலையைப் ப�ோக்கும் வழி:

மானிடர் யாவரும் அவரவர் வேலைகளை அவரவர்களே செய்து முடிக்க வேண்டும் என்பதே ப�ொதுவான நியதி. என்றாலும், இன்று மக்களில் பலர் வேறு எவரேனும் அவர்களுக்காக அச்செயலை முடித்துத் தருவார்களாவென ஆவல�ோடு எதிர்பார்க்கின்றனர். மக்களில் சிலர் அவர்களாகவே முயற்சித்து செயல்படும்போது எதிர்பாராது அவ்வேலை முடிந்து விடலாம்; சிலருக்கோ முடியாமலும் ப�ோகலாம். முடியாமல் தவிப்போருக்கு மன உற்சாகம், தன்னம்பிக்கை, ஊக்கம் தேவை. அவர்கள், கடவுள�ோடு இணைந்து செயல்படும் ப�ொழுது, மேற்படி காரியம் நல்ல முறையில் முடிவுற்று மனநிறைவை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை (எபி 3:6, 4:15,16). கடவுளுடன் இணைந்து செயல்படுபவர்களுக்கு கவலை ஏன்? 24

 மகள் சீய�ோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் ப�ொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! (புல. 2:18)




1. இயேசு: உங்களுக்கு என்ன தேவை என விண்ணகத் தந்தைக்குத் தெரியும். எனவே, நம்பிக்கை குன்றியவர்களாக இராமல், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அரசாட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடும்பொழுது இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் க�ொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள், நாளையக் கவலையைப் ப�ோக்க நாளை வழிபிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள த�ொல்லையே ப�ோதும் என்று கூறுகிறார். (ய�ோபு 38:41, தி.பா. 55:22, 104:21, 136:25, 145:15, பிலிப். 4:6, 1 பேது. 5:7)

அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள த�ொல்லையே ப�ோதும்

2. திருவள்ளுவர்: தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு, மனதில் நிகழும் துன்பங்களைப் (கவலைகளை) ப�ோக்கிக் க�ொள்ளல் இயலாது - முடியாது என்று அறத்துப்பாலில், “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” (குறள் 7)

என்று கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

3. தவத்திரு இராமகிருட்டிணர்: உன்னால் இயலாவிடில் உனக்காக நாளைக்கு வேண்டியதைப் பற்றிய வேலைகளை கடவுள் ஏற்றுக்கொண்டு செய்வார். நாளையப் ப�ொழுதைப் பற்றி உனக்கேன் கவலை? என்கிறார். இம்மூவரின் ஊக்கமூட்டும் கருத்துக்களால், உங்களால் இயலவில்லையே என்று நீங்கள் கவலை க�ொள்ளாமல், உங்கள் கவலையைப் ப�ோக்கி உங்களை மகிழச் செய்யக்கூடிய வலிமை பெற்றவர் கடவுள். ஆகவே, உங்களுக்காக எதையும் செம்மையாய்ச் செய்து முடிப்பவரின் (கடவுள்) உதவியைப் பெற நம்பிக்கையுடன் அவரிடம் சென்று உங்களின் இயலாமை, கவலைகளைப் ப�ோக்கிக்கொள்ள வேண்டும்.

உங்கள் இதயம் கடவுள் குடிபுக அன்றி கவலை குடிபுக அன்று.

கடவுள், வானத்துப் பறவைகளுக்கே பிழைப்பூட்டுகிறாறெனில், நீங்கள் அவற்றை விட மேலானவர்கள் அல்லவா! (லூக் 12:24) என்று இயேசு, கவலையுடன் வாழும் மக்களுக்கு ஆறுதல் கூறியதைக் கவனத்தில் க�ொண்டு செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து க�ொண்டவர்களே, “மரம் வைத்தவன் நீரூற்றுவான்” எனும்

நம்பிக்கையில் கவலையின்றி மனஉறுதியுடன் வாழ்ந்து வருவதையும், உணராதவர்கள், தங்களின் இதயத்தில் கடவுளை அனுமதியாமல், கவலைகளைக் குடியேறச் செய்து, குழப்பத்திற்கு ஆளாகி மன உறுதியை இழந்து புலம்பித் தவிப்பதையும் காணலாம். ஒருவரது வாழ்க்கைப் பாதையில், இயற்கையினால�ோ, அல்லது அவரின் தவறான முடிவுகளினால�ோ இடர்களும், கவலைகளும், எந்நேரத்திலும், எவ்வுருவிலும் எதிர்கொண்டு, மன அமைதியைக் குலைத்து, அவர்களைக் கவலைக்குள்ளாக்குகிறது என்பதை உணர்ந்து க�ொள்ள வேண்டும். கவலை க�ொள்வதால் எவ்விதப் பயனுமில்லை என்பதனை உணருங்கள். கடவுளை அணுகிச் செல்ல அவரும் உங்களை அணுகி வருவார். தூய உள்ளத்துடன் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்தி, உறுதியான நம்பிக்கையுடன் கவலைகளின்றி வாழ்வதற்கு, கடவுளை மையமாகக் க�ொண்ட மகிழ்ச்சிநிறை வாழ்க்கை வாழ, நாளை பற்றிய கவலை உங்களுக்கு ஏன்?



 என் ஓய்வு நாள்களை எனக்கும் அவர்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் தந்தருளினேன். (எசே. 20:12)

25


மேலும், இவ்வுலக வாழ்வில், இடர்களும் அதனால் கவலைகளும், உங்களைத் தாக்குவதற்கு ஆயத்தமாகவே இருப்பதால், எவரும் எவ்விதக் கவலையும் இன்றி வாழ முடியாது. ஆயினும், புனிதர்களும், இறையடியார்களும் (த�ொன் ப�ோஸ்கோ, அன்னை தெரசா ப�ோன்றோர்) நம்பிக்கையுடன் அவர்களது இதயத்தைக் கடவுள் வாழும் உறைவிடமாக அர்ப்பணித்ததாலேயே அவரும் அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவிய நிகழ்ச்சிகளையெல்லாம் அவர்களின் வரலாறு காண்பிக்கிறது. ஆகவே, நீங்களும் உங்கள் இதயத்தை கடவுள் வந்து உறைவதற்கு வழி விட்டு, நம்பிக்கையெனும் கேடயம் க�ொண்டு அனைத்தின் மீதும் வெற்றிக�ொள்ளும் வலிமையைப் பெற அவரது (கடவுள்) அன்பின் அரவணைப்பிற்கும் ப�ொறுமையுடன் காத்திருங்கள் (எபே. 6:16). அவரும் தமது அன்புக் கரங்களால் ஆரத்தழுவி கவலைகளைக் களைவார்.

எவரும் எவ்விதக் கவலையும் இன்றி வாழ முடியாது.

இறுதியுரை: உங்களுக்கு இடர்கள், துயரங்கள், மற்றும் நாளைய நாள் பற்றிய கவலைகள் முதலியன எதிர்பாராத நேரத்திலே வந்து உங்களைத் தாக்கலாம். மரத்துக்கு மரம் தாய்க் குரங்கு தாவும்போது, சேய் குரங்கு தன் தாயைக் கெட்டியாகப் பற்றிக் க�ொள்வது ப�ோலவும், ஒரு படகு அக்கரை சேர துடுப்பு எவ்வாறு மிக அவசியம�ோ, அவ்வாறே நீங்களும் மன உறுதிக�ொண்டு, கடவுளின் முன்னிலையில், நேர்மையாளரான ய�ோபுவைப் ப�ோல வாழ்ந்தால், அவரும் ய�ோபுவுக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் அளித்ததுப�ோல, உங்களுக்கும் அளித்து செயல்படுவார். இதனை, வலியுறுத்தும் விதமாக திருவள்ளுவரும், ‘ஓர் ஏற்றத்தில் பெரும்பார வண்டியை இழுத்துச் செல்லும் எருது தடை நேரும் ப�ொழுதெல்லாம் முயன்று அப்பெரும் பாரவண்டியைக் கால் ஊன்றி முயன்று இழுத்துச் செல்வதுப�ோல, மனம் கலங்காது உறுதியுடையவனிடம், வந்தடையும் துன்பங்கள், துன்பப்பட்டு ஓடும்! என்பதைப் ப�ொருட்பாலில், “மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து” (குறள் 624) என்று இடுக்கண் அழியாமை பற்றி பாடியுள்ளார். ஆகவே, இன்று உங்கள் இதயத்தில் இடம் பெற வந்தவரின் (கடவுள்) குரலைக் கேட்பீர்களாகில், இதயத்தைக் கடினப்படுத்தாமல் அவருடன் இணைந்து (தி.பா. 95:8, எபி 3:7,8,15), நேர்மையான வழி நடப்பீர்களானால் நாளை பற்றிய கவலை உங்களுக்கு ஏன்? கிறிஸ்து இயேசுவ�ோடு இணைந்து வாழும் அனைவருக்கும் அமைதியை அவரே அருள்வாராக!

26

 என் நீதி நெறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு என் ஓய்வு நாள்களையும் மிகவும் இழிவுபடுத்தினார்கள். (எசே. 20:13)






 என் ஓய்வு நாள்களைப் புனிதப்படுத்துங்கள். அவை எனக்கும் உங்களுக்குமிடையே

27


விவேகப் பிரியன்.

   ஒரு வாய் அழ, பல வாய் சிரிக்க நடந்த நாடகத்தின் உச்சம், மலடி என்னும் ச�ொல் ஒழிக்க நடந்த புரட்சி, தூக்கி தூக்கிப் பழகும் காட்சி, பார்த்துப் பார்த்து நெகிழும் உறவு. தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமன், மாமி, அண்ணன், அண்ணி, தம்பி, தங்கை, அக்கா என யாவருக்கும் பாடம் க�ொடுக்கும் ஒரு பட்டமளிப்பு நிகழ்வுதான், எந்த ஒரு மகவின் பிறப்பும். பிறப்பிற்குப் பிறகே உறவினரின் ஆய்வுக் கட்டுரை விரிவாகும். இக்குழந்தை தாத்தா ப�ோல, பாட்டி ப�ோல… அப்பா சாடை, அம்மா சிரிப்பு, சித்தப்பா குரல், அத்தை நடை… என அவரவர் அணிகளுக்கு வலு சேர்ப்பர். இவை அனைத்தையும் புறந்தள்ளி, ‘நான்தான் நான்’ என்று காலூன்றி வேர் விடுவதிலிருந்தே குழந்தைப் பருவம் வளர ஆரம்பிக்கின்றது. குழந்தைப் பருவத்தின் மிக முக்கியமான ஆற்றல் ‘கற்றல்’. இக்கற்றலின் ஆற்றல், கூர்ந்து ந�ோக்குதலிலிருந்து ஆரம்பமாகிறது. வருவ�ோர் அனைவரையும் குழந்தைகள் உற்று ந�ோக்குவர். கணினியின் ம�ொழி சுழியம் மற்றும் ஒன்று என்பதை அடிப்படையாகக் க�ொண்டு இயங்குவதைப் ப�ோல, குழந்தைகளின் ம�ொழி அழுகை, சிரிப்பு மற்றும் அமைதி என்றே த�ொடங்குகிறது. ஆகவே எந்த ஒரு மனிதனின் எழுச்சி உணர்விலும் இம்மூன்று வகையில் தன்னை வெளிப்படுத்திக் க�ொள்கின்றான்.

28

 ஓர் அடையாளமாகத் திகழும். (எசே. 20:20)

ஆர�ோக்கியமான உடலியல் வாழ்வுக்கு மிகவும் தேவையானது ஆர�ோக்கியமான உளவியல் சூழ்நிலை. 


இந்த அழுகை, அமைதி மற்றும் சிரிப்பு என்று த�ொடங்கும் ஒரு குழந்தையின் உணர்வியல் வாழ்க்கை, பாறைப�ோல் உருண்டு பல இடங்களில் அடிபட்டுக் காலூன்றி நிற்பதற்குள், அவர்களைப் புறவியல் தாக்கங்கள் அவர்களின் பாதையையே அழித்து விடுகின்றன. பல மில்லியன் ஆண் அணுவ�ோடு பெண் அணு ப�ோட்டியிட்டு, கருவறையை அடைந்து, கருவறையில் பத்து மாதம் தன்னைத் தானே செதுக்கிக் க�ொண்டு அல்லது உருவாக்கிக்கொண்டு தன் வாழ்க்கையை வாழ இவ்வுலகிற்குள் வரும் ஒரு பிஞ்சு மகவிற்குள் ஏற்படும் தாக்கங்கள் ஆயிரம். அவை அனைத்துமே, அப்பிஞ்சு மகவைத் தம் பக்கம் ஈர்க்கப் ப�ோடும் ப�ோட்டிகள். தம் வாழ்க்கையையும் வாழ முடியாமல், பிறர் வாழ்வையும் வாழ விடாமல் தவிக்கும் பிஞ்சு மழலைகள் பலர் உளர்.

கருவுற்ற பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இளங்காலைப் ப�ொழுதில், சூரியன் தன் ஒளிக்கற்றைகளைப் பூமியில் படரவிடும் நேரத்தில், குழந்தைகளின் அலறல்களும், வாய் வழியே வெளியே கூட வரமுடியாப் பெற்றோரின் குமுறல்களும் எண்ணிலடங்காதவை. இதற்குக் காரணம் பணம�ோ, பசிய�ோ, க�ொடுமைய�ோ அல்ல. அதையும் தாண்டிய ஓர் உளவியல் தாக்கம். மனித மண்டைக்குள், கதகதப்பான இளஞ்சூட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் மூளை. இலட்சக்கணக்கான உடலியல் கூறையும், க�ோடிக்கணக்கான பிரபஞ்சக் கூறையும் ஆய்வளந்து இப்புவி பெருவெளியில் நம்மை, இயங்கவைக்கும் ஓர் உன்னதப் புரத நுரை. சிந்தனைப் பெரு வெள்ளத்தை, தம் திறன் க�ொண்டு சீராக்கித் தம் உடலை இயக்கிக் க�ொண்டிருக்கின்றது இம்மூளை. இம்மூளையின் கட்டுப்பாட்டைத் தாண்டியும் தம்மை வழிநடத்துவது



அனிச்சைச் செயல்கள். சாதாரண எண்ண ஓட்டத்தில் நம் அன்றாட வாழ்வை இயக்கும் இயக்குநர்கள் நம் உடலில் பலர் உள்ளனர். இந்த ஆர�ோக்கியமான உடலியல் வாழ்வுக்கு மிகவும் தேவையானது ஆர�ோக்கியமான உளவியல் சூழ்நிலை. இந்த ஆர�ோக்கியமான உளவியல் சூழ்நிலை என்பது, தம் சுய உடல் அமைப்பால�ோ, செல்வ செழிப்பால�ோ அமைத்துக்கொள்ள முடியாது. இதற்குக் குடும்பம், உறவு, நாடு, சமுதாயம், வெற்றி, த�ோல்வி, அழுகை, சிரிப்பு, தவிப்பு எனப் பல இயல்கள் உள்ளன. இந்த உளவியல் சூழல் என்பது, நம் உடலியல் சூழலுக்கு முன்பே உருவாவது. தாய், தந்தையின் மனநிலை ஒரு குழந்தையின் ஆர�ோக்கியமான உளவியல் சூழலை உருவாக்குகிறது. அப்படி ஏற்படாத வேலையில் கருவறை எந்த ஒரு கருவையும் தன்னகத்தே வைத்துக் க�ொள்வது இல்லை. இதனை உணர்ந்தவர்கள், கருவுற்ற பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பறைசாற்றுவர். அப்படி முழு விழுக்காடும் உளவியல் சூழல் ஏற்படாமல் தங்கி, தன்னை வளர்த்துக்கொள்ளும் கருக்கள்தான் பின்னாளில் உளவியல் தாக்கங்களை நெறிபடுத்த முடியாமல், தன்னைத் தானே வெளிப்படுத்திக் க�ொள்ளவும் முடியாமல் தவிக்கின்றனர். உதாரணமாக, ச�ொன்னக் கருத்துகளையே மீண்டும் மீண்டும் ச�ொல்லிக் க�ொண்டு இருப்பது, வாயில் உமிழ்நீர் வடித்துக் க�ொண்டும், அதைத் துடைத்துக் க�ொண்டும் இருப்பது, அனைத்துச் செய்திகளுக்கும் சிரிப்பு அல்லது அழுகையை மட்டுமே வெளிக்கொணர்வது, நடந்துக�ொண்டிருக்கும்போது, நடப்பதைத் த�ொடர வேண்டும் என்பதையே மறந்து விடுவது… ஒரு செயலுக்கடுத்து அடுத்த செயல் என்ன என்று தீர்மானித்து அதை அமல்படுத்த எண்ண ஓட்டங்கள் அனைத்தும் ஒரே முனையில் குவிவதால், அனைத்துச் செயல்களுமே தடைபட்டுவிடும் ஒரு சாதாரண உயிர் இயற்பியல் க�ோட்பாடு நம் உடலில் நிகழ்ந்து விடுகிறது. இந்த ஓர் உளவியல் செயல்பாட்டால், உடல் ஆர�ோக்கியமானவர்கள் கூட, ஒரு ந�ோயாளியைப் ப�ோல் நடத்தப்படுவதில்தான் நம் அறிவீனம் உச்சத்தைத் த�ொடுகின்றது. உரிய உளவியல் பயிற்சிகளால் அவர்களை மிகவும் சிறப்பாகச் செயல்படும் நபராக மாற்ற முடியும்.

 நீய�ோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய். (எசே. 22:8)

29


இப்படி உளவியல் சிந்தனை நெரிசலால் அவதிப்பட்டு, பின்பு அதிலிருந்து மீண்டு, இவ்வுலகிற்கு மிகப் பெரிய பரிசுகளைப் ப�ொழிந்தவர்கள் ஏராளம். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள், இசை உலகின் மன்னன் அமெடியஸ் ம�ொஸார்ட், அறிவியல் மாமேதை ஐன்ஸ்டைன், ஆங்கிலப் பெண்பாற் புலவர் எமிலி டிக்கின்சன், உளவியல், நரம்பியல் மற்றும் பூக�ோளவியல் பேராசான் சார்ல்ஸ் டார்வின், இன்றளவும் இவ்வுலகம் வியக்கும் ஓவியன், சிற்பி, கட்டடக்கலை நிபுணர், மிகச் சிறந்த படைப்பாளி மைக்கல் ஆஞ்சல�ோ, அறிவியல் உலகம் மறக்க முடியாக் கணிதவியல் மாமேதை, இயற்பியலின் மாமேதையுமான சர் ஐசக் நியூட்டன், த�ொழில்நுட்ப வேந்தன் ஸ்டீவ் ஜாப்ஸ், கணிப்பொறிவுலகின் தனிக் காட்டு அரசன் பில்கேட்ஸ் மற்றும் ஆஃப்ரிக்க அமெரிக்கர் பெஞ்சமின் பெனிக்கர் ப�ோன்றோர்.

கணினியின் ம�ொழி சுழியம் மற்றும் ஒன்று என்பதை அடிப்படையாகக் க�ொண்டு இயங்குவதைப் ப�ோல, குழந்தைகளின் ம�ொழி அழுகை, சிரிப்பு மற்றும் அமைதி என்றே த�ொடங்குகிறது. இவர்கள் யாவரும், தமக்கே உரித்தான பல உளவியல் ப�ோராட்டங்களைக் கடந்த பின்னரே வாழ்வியலில் சாதித்துள்ளனர். இந்த உளவியல் காரணங்களால்தான் ஒரு மனிதன் கற்றுக் க�ொள்ளும் திறன் தடைபடுகிறது. அப்படி அந்தத் தடை மட்டும் அந்நபரின் சுற்றத்தால் உடைபட்டுவிட்டால், உடலில் குறை இருந்தாலும், ஹெலன் கெல்லர், ஸ்டீபன் ஹாப்கின்ஸ், தாமஸ் ஆல்வா எடிசன், ஜான் மில்டன் ப�ோன்று அடக்க முடியா தம் காட்டாற்று திறமைகளை இவ்வுலகில் க�ொண்டுவந்து குவித்துவிடுவர். 30

தன்னைத் தானே தேற்றிக் க�ொண்டு, சவால்கள் பலவற்றைத் தாங்கிக் க�ொண்டு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் நிலைதான் இதில் மிகவும் எண்ணத்தில் நிறுத்த வே ண் டி ய வை . ம தி ப ்பெண ்க ள ை யு ம் , பெருமையையும் ஈனும் ஒரு கன் று க் கு ட் டி கள ா கப் பெற்ற ோர ்க ள ா லு ம் சமுதாயத்தாலும் பார்க்கப்படும் மாணவர்கள், மறு பக்கமும் “இதுதான் இருக்கிறதுலேயே பெரிய த�ொல்ல, இம்சை” என்று சில ஆசிரியர்களாலும் கணிக்கப்படுகிறார்கள்.

 ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர். (எசே. 22:26)

பள்ளி அரசியல் நிகழ்வுகளால் ஆசிரியர்களும், குடும்பம் மற்றும் நட்பு வட்டாரப் பெருமைக்காகப் பெற்றோரும், ப�ொறுமையாக மலரும் ம�ொட்டுகளைப் படுத்தும் பாடு ச�ொல்லும் தரமன்று. வாழவிட வேண்டிய நம் சமூகம�ோ, அவர்களைப் பைத்தியம் என்றும் அவசர குணம் என்றும் பேய் பிடித்தவர்கள் என்றும் ஒதுக்குவது தீண்டாமையையும் தாண்டி அமுல்படுத்தும் ஒரு க�ொடிய செயல். இனியாவது கிழக்கு வழிவிடட்டும்; உதிக்கட்டும் ஒரு வளமான மனித வாழ்வு.




  22 ஏப்ரல்

பேட்ரிக் மத்தியாஸ், ச.ச.

உயிர்ப்புக் காலம் நான்காம் ஞாயிறு2குறி. தி.ப. 4:8-12ஃ 1ய�ோவா. 3:1-2, ய�ோவா. 10:11-18.

உயிர்ப்புக் காலம் நான்காம் ஞாயிறான இன்று, தாய் திருச்சபை நல்ல ஆயனாக ஆண்டவர் யேசுவை, நம்முடைய சிந்தனைக்கு முன்வைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் புனிதப் பேதுரு யூதத் தலைமை சங்கத்தின் முன் நின்று, கால் ஊனமுற்றவர் நலமடைந்தது நாசரேத்து யேசுவின் பெயரால்தான் என்று சாட்சியம் அளிக்கிறார். மேலும், யூதத் தலைவர்கள் ப�ொறாமையால், அறியாமையால் இயேசுவைச் சிலுவையில் அறைந்தாலும் கடவுள் அவரை உயிருடன் எழுப்பினார் என்று சதுசேயர்கள் கூடியிருந்த யூதத் தலைமை சங்கத்தின் நடுவே துணிவாக எடுத்துரைக்கின்றார்.

உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்ததின் பயனாக, புனிதப் பேதுரு விடாப்பிடியாக மரித்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிக்கையிடுகிறார். உயிர்த்த ஆண்டவரைச் சந்திக்காமல் இருந்தால், திண்ணமாக அவரைப்பற்றி எடுத்துரைப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்து க�ொள்ள வேண்டும்.



இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித ய�ோவான் இறைவன் மானிடத்தின் மீது எவ்வளவு அன்பு க�ொண்டுள்ளார் என்பதைச் சிறப்பாக விளக்குகின்றார். நம்முடைய வாழ்க்கையின் மிகப் பெரிய ஆசிர்வாதம் என்னவென்றால், நாம் கடவுளின் மக்களாக இருப்பதுதான். இது வெறும் ஒரு கூற்று அன்று; மாறாக ஓர் அனுபவம் என்று தெளிவுபடுத்துகின்றார் புனித ய�ோவான். நாம் கடவுளின் மக்கள் என்று மட்டும் அழைக்கப்படவில்லை, மாறாக உண்மையாகவே கடவுளின் மக்களாகவே இருக்கின்றோம் என்பதில் பெருமிதம் க�ொள்வத�ோடு மட்டும் நின்றுவிடாமல், அதற்கேற்றாற்போல வாழ முற்பட வேண்டும். இந்த அன்பின் வெளிப்படையையே இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவில், நல்ல ஆயனாகப் பார்க்க முடிகின்றது. திருப்பாடல் 23இல் வாசிப்பது ப�ோல, “ஆண்டவர் எனது ஆயன்” என்பதற்கிணங்க இன்றைய நற்செய்தியில் இரண்டு முறை “நல்ல ஆயன் நானே” என்று ச�ொல்லி அதனை உறுதி செய்கின்றார். நல்ல ஆயர், தம் ஆடுகளை அறிந்திருக்க வேண்டும், தன்னுடைய உயிரையும் தாரைவார்க்கத் தயாராக இருக்க வேண்டும் (காண்க ய�ோவா. 15:13). நமது ஆயன் ஆண்டவர், இயேசுவின் ஆடுகளாய் இருந்தால் மட்டும் ப�ோதாது. அந்த ஆயனுடைய குரலைக் கேட்டு, அவரைக் கண்டுணர்ந்து அவரைப் பின்பற்றக்கூடிய ‘அறிவுத்தெளிவு’ நமக்கு இருக்க வேண்டும். நல்லாயனாக, தம் தந்தையின் விருப்பப்படி நமக்காகத் தம் இன்னுயிரைச் சிலுவையில் தந்து, அதே தந்தையின் கட்டளைப்படி உயிர்த்தெழவும் தமக்கு அதிகாரம் இருப்பதை மெய்ப்பிக்கிறார் நம் ஆண்டவர் இயேசு. நான் இயேசுவை அறிந்திருக்கின்றேனா? அவரது குரலுக்குச் செவிசாய்த்திருக்கின்றேனா? என்று நம்மையே நாம் சுயப் பரிச�ோதனைக்குட்படுத்த வேண்டும். கடவுளின் மக்களாக இருக்கின்ற நற்பேற்றால் நம்முடைய நல்லாயனை அறிந்து க�ொண்டு அவரையே நம்முடைய வாழ்வாக மாற்றிக் க�ொண்டு, அவரைத் த�ொடர்ந்து பின்பற்றிச் செல்ல உருக்கமாக மன்றாடுவ�ோம்!

 என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் க�ொள்ள வேண்டும். (எசே. 44:24)

31


29 ஏப்ரல்

உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறு தி.ப. 9: 26-31, 1ய�ோவா. 3: 18-24, ய�ோவா. 15: 1-8.

உயிர்ப்புக் காலம் ஐந்தாம் ஞாயிறான இன்று ஆண்டவர�ோடு இணைந்த ஒரு சீடத்துவ வாழ்க்கை முறையை நமக்குப் பாடமாக முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. சென்ற ஞாயிறு வழிபாட்டில் “நல்ல ஆயன் நானே” என்று முழங்கிய நம் இறைவன், இன்று நம்மையெல்லாம் பார்த்து “உண்மையான திராட்சைக்கொடி நானே” என்று கூறுகிறார். இந்தத் திராட்சைக்கொடி உருவகம், நம்முடைய கிறிஸ்தவச் சீடத்துவ வாழ்க்கையினைச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏனென்றால் ஆண்டவர் இயேசு திராட்சைக்கொடி என்றால், நாம் அனைவரும் அதன் கிளைகள். கிளைகளின் வளர்ச்சியிலே தந்தையாம் இறைவனுக்குப் பங்குண்டு. கனி க�ொடாத கிளைகளைத் தறித்து விடுகிறார் தந்தையாம் இறைவன். தந்தைய�ோடு இணைந்திருக்கும்போதுதான் இயேசுவின் சீடர் மிகுந்த கனி தர முடியும். இதைத்தான் நம் ஆண்டவர். ‘நீங்கள் என்னோடு இணைந்திருந்தால் மிகுந்த கனி தருவீர்கள்’ என்று கூறுகின்றார். இந்த ‘இணைந்திருத்தல்’ உருவகம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்று, புனித ய�ோவான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார். அதாவது கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் அவர�ோடு இணைந்திருக்கிறார் என்று கூறுகிறார். இவ்வாறு கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றப�ோது, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த முடியும். நாம் பிறர்மீது காட்டும் அன்பு இயேசுவின் மீது நாம் க�ொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும். இந்த அன்பு ச�ொல்லோடும், பேச்சோடும் நின்றுவிடாமல் நம்மையெல்லாம் உண்மையான அன்பின் செயல் வீரர்களாய் மாற்றும். இன்றைய முதல் வாசகம் இதற்குச் சிறந்தத�ொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது. புனிதப் பவுலடியார் உயிர்த்த ஆண்டவர் இயேசுவைச் சந்தித்ததிலிருந்து, புதிய மனிதனாக மாறுகின்றார். இயேசுவின் அன்பிற்குச் சாட்சியாய்ப் புனிதப் பவுலடியார் ஆண்டவர�ோடு இணைந்திருந்ததால் மிகுந்த கனி தந்தார் என்றுதான் ச�ொல்ல வேண்டும். கடவுளுடைய கட்டளைகளைப் பேச்சில் மட்டும் இல்லாமல், செயல்களிலும் கடைப்பிடித்துப் புறவின 32

மக்களுக்கு ஒளியாகத் திகழ்ந்தார். ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு சீடரும் துன்பத்திற்குள்ளாவர் என்பது புனிதப் பவுலடியார் வாழ்க்கையின் வழியாகக் கற்றுக்கொள்கிற�ோம். ஆனால் இயேசுவ�ோடு இணைந்து வாழ்ந்து, மிகுந்த கனி க�ொடுக்கின்றவர்களாக மாறுகின்றப�ோது, தந்தையாம் இறைவனுக்கு மாட்சி அளிக்கிறது என்பதை மனதில் நிறுத்துவ�ோம்!

06 மே

உயிர்ப்புக் காலம் ஆறாம் ஞாயிறு தி.பணி 10: 25-26, 34-35, 44-48, 1ய�ோவா. 4: 7-10, ய�ோவா. 15: 9-17

இன்றைய இறைவாசகங்கள் அனைத்தும் நமக்குக் கூறுகின்ற பாடம், அன்பு. இன்றைய நற்செய்தி பகுதியானது சென்ற வார நற்செய்தி பகுதியின் த�ொடக்கமாக இருக்கின்றது. இந்த நற்செய்தி பகுதியானது, ஓர் அன்பின் இலக்கணமாகத் திகழ்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு க�ொர்னேலியுவின் குடும்பத்தார்க்கு இறைவார்த்தையை எடுத்துரைத்தப�ொழுது அவர்களும் தூய ஆவியாரால் நிரப்பப்பெற்று, அவருடைய வல்லமையினால் திடப்படுத்தியதைப் பற்றிக் கேட்டோம்.

 …ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன். (ஓசே. 2:11)




கடவுளின் அன்பு சாதி, மதம், நிறம், ம�ொழி, நாடுகள் ப�ோன்றவற்றைக் கடந்து செல்கின்ற ஒன்றாக இருக்கின்றது. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவர் ஆண்டவருக்கு ஏற்புடையவரே என்பது புறவினத்தவரான க�ொர்னேலியுவின் குடும்பத்தார் தூய ஆவியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தெளிவாகிறது. இன்றைய நற்செய்தியின் முன்னோடியாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. அன்பு கடவுளிடமிருந்து வருகின்ற காரணத்தினால், நாம் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும் என்று புனித ய�ோவான் அறிவுறுத்துகிறார். கடவுளை அறிந்தவன் அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும். கடவுளை அறிந்தவன் நான் என்று ச�ொல்லிக்கொள்வத�ோடு மட்டும் நின்றுவிடாமல், அதைச் செயலிலே காட்டவேண்டும். இதைத்தான் தந்தையாம் கடவுள் உலகின் மீது அன்புகூர்ந்ததால், தம் ஒரே மகனை இவ்வுலகின் மீட்பிற்காக அனுப்பினார் என்று உணர வேண்டும். தன்னுயிர் தந்து, நம்முடைய பாவத் தளைகளிலிருந்து மீட்டருளினார். இந்த உண்மையை இயேசு தாமே வெட்டவெளிச்சமாகத் தம் ப�ோதனையின் மூலம் விளக்குகிறார். ஆண்டவர் இயேசு தம் தந்தையைப் ப�ோல நம் அனைவர்மீதும் அன்பு க�ொண்டுள்ளார். ஆகவேதான் “என் அன்பில் நிலைத்திருங்கள்” என்ற வாக்கியத் த�ொடர் மிக ஆழமாக எழுதப்பட்டுள்ளது.

ஆண்டவர் இயேசுவின் அன்பு கட்டளை அவரது அன்பில் நாம் நிலைத்திருப்பது மட்டுமே. எவ்வாறாகத் தாம் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட யாவற்றையும் நம்மிடம் பகிர்ந்து க�ொண்டார�ோ, அதேப�ோல நாமும் மற்றவர்மீது அன்பு க�ொண்டு வாழ வேண்டும் என்று பணிக்கிறார். நம்மையெல்லாம் தம் இணையற்ற அன்பின் காரணமாக, பணியாளர்களாக இல்லாமல் நண்பர்களாக வழிநடத்துகின்றார் இறைவன். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு க�ொள்ள வேண்டும் என்ற கட்டளையைக் கடைப்பிடித்து, இறை அன்பிற்கும் பிறரன்பிற்கும் சாட்சிகளாய் விளங்கிய புனிதர்களைப் பின்பற்றி நாமும் இறைவனது அன்பிற்குச் சாட்சிகளாக விளங்கத் த�ொடர்ந்து மன்றாடுவ�ோம். ஆமென்.

        

 

 வறுமையினால் பாவம் செய்வதினின்று தடுக்கப்படுவ�ோர் உண்டு; அவர்கள் மனவுறுத்தலின்றி ஓய்வு க�ொள்வார்கள். (சீ. ஞா. 20:21)

33


வாசகர் குரல் முனைவர். எம். பிரபு, கீழஈரால்.

‘அரும்பு’ பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட ‘கனிவும் அன்பும்’ - த�ொன் ப�ோஸ்கோ கல்வி முறை என்ற புத்தகத்தைப் படித்தேன். இப்புத்தகம் ஆசிரியராகிய எனக்கு, மாணவர்களை எவ்வாறு புரிந்துக�ொள்ள வேண்டும், எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பதைத் தெளிவாக்கியது. இந்தப் புத்தகம் எனக்குக் கற்பிக்கும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. உடனிருத்தல் கல்விமுறைதான் இக்கால நடைமுறைக்கு ஏற்புடையதாகும். மாணவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கிடச் சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருவதே இக்கல்வி முறையாகும். இக்கல்வி முறைக்கு அடித்தளமாகவும் தாங்குகின்ற தூண்களாகவும் இருப்பவை புரிந்துணர்வு, இறையுணர்வு மற்றும் நட்புணர்வு ஆகும் என்பதை இந்நூல் வழியாக புரிந்து க�ொண்டேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை எவ்வாறு த�ொன் ப�ோஸ்கோவே தேடிச் சென்றார், அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு நல்கி எப்படி அவர்களை நல்வழிப்படுத்தினார், அவர்களுக்கு இறையன்பையும், சமூக உணர்வையும் ஊட்ட என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டார், தனது நற்செயல்கள் மூலம் எவ்வகையில் அவர்களுக்குள் நற்பண்புகளை வளர்த்தார், எப்படி ஒரு நல்ல ஆசிரியராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் அவர்களுடன் இருந்தார் ப�ோன்ற தகவல்களை இந்நூல் வழியாக அறிந்து க�ொண்டேன். ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் க�ொடுக்கும்போது, மாணவர்களைத் தேர்வில் வெற்றிப் பெறச் செய்வதற்குரிய ந�ோக்கில் மட்டுமன்றி, அவர்களது எதிர்கால வாழ்க்கையினை அவர்களே அமைத்துக் க�ொள்ளவும், அவர்களை நற்பண்புடையவர்களாகவும், சிறந்த ஆற்றல் மிக்கவர்களாகவும் இருக்க த�ொன் ப�ோஸ்கோவின் கல்விமுறை உதவுகின்றது. ஆசிரியர்கள் கற்றுக் க�ொடுப்பதை மட்டும் தனது கடமையாக எண்ணக்கூடாது. வாய்ப்புக் கிடைக்கும் ப�ோதெல்லாம் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களது எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் தங்களைச் சந்திக்கும் வாய்ப்பினை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும். மாணவர்களும் தங்களது ஐயங்களைத் தெளிவுப்படுத்திக் க�ொள்ளவும்,

34

 அறிவிலிகள�ோடு மிகுதியாய்ப் பேசாதே; …அவர்களை விட்டு விலகிப் ப�ோ; அப்போது ஓய்வு காண்பாய்: (சீ. ஞா. 22:13)

தங்களது எண்ணங்களுக்குத் தேவையான ஆல�ோசனைகளைப் பெற்றுக் க�ொள்ளவும் ஆசிரியர்களைச் சந்திக்கும் பழக்கத்தைக் க�ொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்களும் ஒரு திறந்த புத்தகமாய் செயல்பட வேண்டும் என்பன ப�ோன்ற பல கருத்துகள் இந்நூலில் ப�ொதிந்து கிடக்கின்றன. “ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உண்மையுடன் கூடிய இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே கல்வி கற்பித்தல் சாத்தியமாகும்” என்ற த�ொன் ப�ோஸ்கோவின் கூற்று என்னை மிகவும் த�ொட்டது. இக்கால மாணவர்களை ஓர் ஆசிரியர் என்ற முறையில் எப்படி வழிநடந்த வேண்டும் என்பதை இந்நூல் எனக்குக் கற்றுத் தந்தது.




NEW RELEASE

கல்வி நிறுவனங்கள், ஆலய அமைப்புகள், ப�ொதுப்பணித்துறை மையங்கள் ப�ோன்ற அமைப்புகளில்… அறிவுரை வழங்க அச்சமா? காலை உரையாற்ற கலக்கமா? மாலையுரை வழங்க மயக்கமா? ஆலய நிகழ்வா? ஆண்டு விழாவா? ஆசிரியர்-பெற்றோர்-பணியாளர்பயனாளர் கூட்டங்களா? உடனடி உதவிக்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய அருமையான நூல்

கனிவும் அன்பும்.

தங்களின் மேற்பார்வையில் உள்ளவர்களைச் சூழலுக்கும் பருவத்திற்கும் பணிக்கும் ஏற்றவாறு த�ொன் ப�ோஸ்கோவின் கனிவான, அன்பான வழியில் கையாள்வது எப்படி என்பதை உலகியல் நடப்புகள�ோடு விளக்கும் அருமையான நூல்

கனிவும் அன்பும். 3 பெரும் பிரிவுகளில், 12 தலைப்புகளின்கீழ், த�ொன் ப�ோஸ்கோவின் 200 மேற்கோள்களை 40 விரிவுரையாளர்கள், 400க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் க�ொண்டு விளக்கியுள்ள 274 பக்கங்கள் க�ொண்ட நூல்

கனிவும் அன்பும்.

கனிவும் அன்பும்

________________________________ ______

  

In English With Gentleness and Kindness (Rs.180)

 அடிமையிடம் வேலை வாங்கு, நீ ஓய்வு காண்பாய்; அவனைச் ச�ோம்பியிருக்க விடு, அவன் தன்னுரிமையைத் தேடுவான். (சீ. ஞா. 33:26)

35


Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/373/2018-2020 TN/PMG(CCR)/WPP-398/2018-2020 Registrar of Newspaper for India. 33652/78. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 24.04.2018



If undelivered, return to Salesian Seithi Malar, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 10 36



. . 36  


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.