7
02
2018
15/-
2018 1 01
www.arumbupublications.in
.
2018 02 2
அசுத்தங்கள், தவத்தின் வழியாக அழிக்கப்பட்டால் மட்டுமே உடல் சுத்தமாகும். (பதஞ்சலி)
மலர் 57
இதழ் 02
2018
பிப்ரவரி 2018
ப�ொறுப்பாசிரியர்கள் ஆசிரியர் அருள்திரு. முனைவர். ஆ. சிலுவை முத்து, ச.ச.
இணை ஆசிரியர் பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச.
04
ஆசிரியர் குழு மரிய லூயிஸ், தைரியம், அந்தோனிசாமி, அந்தோனி கிறிஸ்டி, பேட்ரிக் மத்தியாஸ், ஆன்ட்டோ சகாய ராஜ்.
12
பிழைத்திருத்தம் குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை சு. ஸ்டீபன் ராஜ்.
15
28
05
அஞ்சல் வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர் ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம் தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்
ரூ. 15 ரூ. 150 ரூ. 300
விளம்பரக் கட்டணம் முழுப் பக்கம் ரூ. அரைப் பக்கம் ரூ. கால் பக்கம் ரூ. பின் அட்டை ரூ. உள் அட்டை ரூ. நடுப்பக்கம் ரூ.
6000 3000 1500 12,000 10,000 10,000
செய்தி மலரில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி
26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 26612138/40, 94447 99942 sbtamilssm@gmail.com www.arumbupublications.in
04 05 07 12 15 17 20 28 31
இயேசுவ�ோடு நெருங்கும் காலம் மரியாவின் பெயர் அமல உற்பவி த�ொன் ப�ோஸ்கோ எனும் பைத்தியம் இறையருளின் காலம் யார் இந்த வாலன்ட்டைன்? உடல் நலம் ஒன்றே உயர் வளம்! உலகத் தகவல் த�ொடர்பு நாள் யாரைக் க�ொண்டாடுகிற�ோம்? ஞாயிறு மறையுரைகள்
Printed and Published by Rev. Fr. A. Siluvai Muthu, on behalf of Salesian Publishing Society, 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at Salesian Institute of Graphic Arts, No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: Rev. Fr. A. Siluvai Muthu.
அருளாளர் ஆகும் ஆற்றல் புலால் உண்பவருக்கு இல்லை. (குறள் 252)
2018 03
அன்புசால் செய்திமலர் வாசகர்களே, 2018ஆம் ஆண்டிற்கான தவக்காலம் த�ொடங்க இருக்கின்றது. “வேண்டிய வரங்களை வேண்டியவாறே அடைய விரும்பினால் இப்போதே இங்கேயே தவம் மேற்கொள்க” என்கிறார் திருவள்ளுவர் (குறள் 265). ஆம். தவம் ஒன்றே இறையருளைப் பெறுவதற்கான வழி. அதனால்தான் கத்தோலிக்கத் திருச்சபை, திருநீற்றுப் புதன் த�ொடங்கி, புனித சனி வரையுள்ள 40 (6 ஞாயிற்றுக் கிழமைகள் நீங்கலாக) நாட்களைத் தவக்கால ந�ோன்பிற்கென ஒதுக்கி, கிறித்துவ மக்கள் தவ ந�ோன்பு இருக்க உதவி வருகின்றது. இயேசுவின் சிலுவைப்பாடுகளைத் தியானித்தல் என்பது தவக்கால ந�ோன்பின் சிறப்புப் பகுதியாகவும் உள்ளது.
ஆகிய 10 நாட்களும் உண்ணா ந�ோன்பிருந்தார்கள். 1965க்குப் பிறகு (இரண்டாம் வத்திக்கான் சங்க அறிக்கையின்படி) இறுதியில் ச�ொன்ன 10 நாட்கள் மட்டுமே, உண்ணா ந�ோன்பும் மாமிசமில்லா உணவு உண்ணலும் அனுசரிக்கப்படுகின்றன.
இசுலாமியர் மிகப் பழங்கால முதலே ரமலான் மாதத்தின் 30 நாட்களும் எச்சில்கூட விழுங்காமல், பகல் பன்னிரண்டு மணியளவும் ந�ோன்பிருக்கின்றார்கள். இந்து சமயச் சக�ோதரர்கள், ஆண்டு முழுக்க அமாவாசை மற்றும் கிருத்திகை நாட்களில் ந�ோன்பிருக்குமாறு மக்களைக் கேட்டுக் க�ொள்கின்றார்கள். க�ௌதம புத்தர் ஞானம் பெற ஆறு ஆண்டுகள் காடுகளில் தங்கி ந�ோன்பிருந்தார் என்பர். இயேசு பெருமான் தமது ப�ொதுவாழ்வைத் த�ொடங்குவதற்கு ஆயத்தமாகப் பாலைவனத்தில் 40 நாட்கள் கடுமையாக ந�ோன்பிருந்தார். சமணர்கள் உண்ணா ந�ோன்பிருந்து உடலின் பளுவைக் குறைத்தால் வீடுபேறு எய்தலாம் எனப் ப�ோதிக்கின்றனர்.
ஆனால் திருச்சிலுவைப் பாதை, பல இடங்களில் சமுதாயச் சிக்கல்களைப் பேசும் புரட்சி மேடைகளாக ஆக்கப்படுகின்றது. நாடகங்கள், திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், கவிதை நூல்கள் முதலியன சமுதாயச் பிரச்சினைகளை ஆயிரக்கணக்கில் கவர்ச்சிகரமாக அரங்கேற்றியுள்ளன. ப�ொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், பெண் க�ொடுமைகளையும், சாதி வேறுபாடுகளையும், ஊழல்களையும் பற்றி முழக்கமிடுவதற்குச் சிலுவைப் பாதையைப் பயன்படுத்துவது சரியன்று! இவர்களுக்கு இயேசுவின் அன்பைப் பற்றிப் பேசத் தெரியவில்லை. இயேசுவின் பாடுகள் என்பன, மூவ�ொரு இறைவனின் ஒப்பற்ற அன்பை, மனுக்குலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள எல்லையற்ற கருணையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள்.
1965ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக் கத்தோலிக்கர், தவக்காலத்தின் 46 நாட்களும் மாமிச உணவைத் தவிர்த்தார்கள். தவக்காலத்தின் வெள்ளிக் கிழமைகளும், திருநீற்றுப் புதனும், பெரிய சனிக்கிழமையும்
தாம் பட்ட பாடுகளைத் தியானித்து, உள்ளம் உருகுவ�ோரை இயேசு ஆசீர்வதிக்கிறார். அத்தகைய�ோருக்குத் தமது ஐந்து காயங்களையும் பரிசாகத் தருகிறார். தூய பிரான்சிஸ் அசிசி, தூய பிய�ோ, கேரளத்து மரியம் சக�ோதரி ப�ோன்றோர் இயேசுவின் ஐந்து காயங்களையும் பரிசுகளாகப் பெற்றுள்ளார்கள். இந்த அடிப்படையில்தான் தவக்காலத்தில் சிலுவைப்பாதை என்ற பக்தி நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.
தூய அசிசியாரும், தூய பிய�ோவும், கேரளத்து மரியம் சக�ோதரியும் சமுதாயச் சிக்கல்களைத் தியானிக்கவில்லை. மாறாக, இயேசுவின் எல்லையில்லா அன்பையே தியானித்து உருகினார்கள். சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, இயேசுவின் அன்பைத் தியானித்து அவரை நேசித்து, அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதன்படி
வேண்டிய வரங்களை வேண்டியவாறே அடைய விரும்பினால் இப்போதே இங்கேயே தவம் மேற்கொள்க. செயல்படுவதே. வார்த்தைகள் தீர்வாகாது. இயேசுவ�ோடு நம்மை மீண்டும் ஒருமுறை நெருக்கமாக்கிட இத்தவக்காலம் பயன்படட்டும்.
அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர்.
2018 04
இதயத்தை இளக்கி, காம இச்சை மேகங்களைக் கலையச் செய்கின்றது ந�ோன்பு. (புனித அகஸ்தினார்)
த�ோன்ற விரும்பாத பெர்னா, மசபியேல் குன்றோரம் தனித்து விடப்பட்டார். அன்று 1858, பிப்ரவரி, 11ஆம் நாள். தனியே நின்ற பெர்னாவைச் சூழ்ந்துக�ொண்டு, அந்த இடத்தை அதிசயமான வெளிச்சமும் அமைதியும் திடீரென நிறைத்தன. அச்சமுற்ற பெர்னா, சுற்றுமுற்றும் ந�ோக்கினார். மசபியேல் குன்றில் தெரிந்த ஒரு பாறையின் பிளவிலிருந்து அந்த வெளிச்சம் வருவதுப�ோலிருந்தது.
வெளிச்சத்தின் நடுவே அழகிய அணங்கு ஒருவர் த�ோன்றினார். தலை முதல் பாதம் வரை அவர் வெண்ணாடை அணிந்திருந்தார். பாதங்கள் இரண்டிலும் மஞ்சள் நிற ர�ோஜா மலர்கள் இருந்தன. குவிந்திருந்த அவரது கைகளிலிருந்து உடலை ஒட்டியவாறு நீண்ட ஜெபமாலை த�ொங்கியது. அந்த அணங்கு செபமாலையை விரல்களுக்கு இடையே பிடித்தபடி, “பெர்னா, செபி” என்று கட்டளை இடுவதுப�ோல் சிறுமி உணர்ந்தாள். உடனே தன்னிடமிருந்த செபமாலையைக் கையிலெடுத்துப் பெர்னா செபிக்கத் த�ொடங்கினாள்.
இந்தியாவில் வேளை நகர், மெக்சிக�ோவில் குவாடலூப், ப�ோர்ச்சுக்கல்லில் பாத்திமா, பிரான்சு நாட்டில் லூர்து நகர் ஆகியன மரியா காட்சி தந்த சி ற ப் பி ட ங ்க ளு ள் குறிப்பிடத்தக்கவை. உலகத்தார் அனைவராலும் அறியப்பட்ட இடங்கள் இவை. இவற்றுள் மரியா தமது பெயரை அறிக்கை செய்த இடம் லூர்து நகர் ஆகும். ந�ோயுற்ற உடலும், படிப்பு ஏறாத மூளையும் லூர்து நகரில் 1845இல் பிறந்த பெர்னதெத் ச�ோபிர�ோஸ் என்ற பாமரப் பெண்ணுக்கு இறைவன் அளித்த க�ொடைகள். அவள் 10 வயதை எட்டிய ப�ோது, 1854இல், 9ஆம் பயஸ் என்ற திருத்தந்தை “ச�ொற்களைக் கடந்து நிற்கும் தூய இறை” (Ineffabilis Deus) என்ற தமது சுற்றுமடலில், இயேசுவின் தாய் மரியா, “ஜென்மப் பாவம் இன்றிக் கருவாகிப் பிறந்தவர்” என்று அறிக்கை செய்தார். திருச்சபையின் உயர்மட்ட ஆயர்களும் அறிஞர்களும் கூடி, தூய ஆவியாரின் ஏவுதலின்படி எடுத்த முடிவு இது. பிரிந்துப�ோன கிறித்துவ சபையார் இவ்வறிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் கத்தோலிக்கத் திருச்சபை மரியாவின் பிறப்புப் பற்றிய தனது க�ோட்பாட்டில் உறுதியாக நின்றது.
இந்நிலையில் 1858இல் பிரான்சு நாட்டில் காடு, மலைகளால் சூழப்பட்டு உலகின் கண்களுக்கு முற்றிலும் மறைந்திருந்த லூர்து என்ற சிறிய நகரம், வெளிச்சத்துக்கு வரலாயிற்று. அதற்குக் காரணமாக இருந்தவர் 14 வயதை எட்டியிருந்த பெர்னதெத் ச�ோபிர�ோஸ் என்ற சிறுமி. ஊரையடுத்திருந்த, மசபியேல் என்று அறியப்பட்ட குன்று சூழ்ந்த காட்டில், தனது சக�ோதரி மற்றும் ஒத்த வயது சிறுமிகள�ோடு சேர்ந்து விறகெடுத்துவரப் பெர்னாவும் புறப்பட்டுச் சென்றார். ஆறு குறுக்கிட்டது. மற்ற சிறுமியர் நீந்திக் கடந்தனர். நீச்சலுடையில்
67 புதுமைகள், மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விறகுகளைச் சுமந்து க�ொண்டு மற்ற சிறுமிகள் அங்கு வந்தப�ோது காட்சி மறைந்து ப�ோனது. தான் கண்ட காட்சியை அவள் விவரித்த ப�ோது, சிறுமிகள் சிரித்துவிட்டார்கள். ஒருவேளை பேயாக இருக்கும் என்று பேசியபடி வீடு திரும்பினார்கள். அன்று
இல்லாதவர்களுக்குக் க�ொடுத்து உதவுவதே இல்லறத்தார் செய்யும் தவம். (குறள் 263)
2018 05
பெர்னாவுக்குக் கடுமையாகக் காய்ச்சலடித்தது. பேயை ஓட்டுவதற்கான மந்திரிப்புகள் நடந்தன. சில நாட்களில் காய்ச்சல் குணமானதும் பெர்னா முதல் வேலையாக மசபியேல் குன்றுக்கு ஓடினாள். மறுபடியும் காட்சி த�ோன்றியது. இவ்வாறு அந்த ஆண்டில் அடுத்தடுத்து 18 முறை மரியா, பெர்னாவுக்குக் காட்சி தந்தார். காட்சி பற்றிய செய்தி சுற்றுவட்டாரம் எங்கும் பரவவே, பெர்னா மசபியேலுக்குப் ப�ோனப�ோதெல்லாம் பெருங்கூட்டம் கூடியது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவே, அரசு தலையிட்டுக் காவல் துறையை அனுப்பி வைத்தது. காவல் அதிகாரிகள் பெர்னாவை, கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தார்கள். ஒன்பதாவது காட்சியின்போது, “நீ காட்சி காண்பது உண்மையாயின், அந்த அணங்கிடம் புதுமை ஒன்று செய்து காட்டச் ச�ொல்” என்று பணித்தார்கள். மரியாவிடம் இதனை பெர்னா தெரிவித்தப�ோது, “நீ நிற்கும் இடத்தில் கரங்களால் த�ோண்டு” என்றார் மரியா. க�ோடையின் வறட்சியால் இறுகிப்போயிருந்த அந்த இடத்தில் பெர்னா தமது பிஞ்சு விரல்களால் த�ோண்டியப�ோது, ஈரம் உண்டாயிற்று. பிறகு தண்ணீர் ஊற்றெடுத்துக் குட்டையானது. சேறு நிறைந்த தமது கைகளையும் வேர்த்திருந்த முகத்தையும் பெர்னா அத்தண்ணீரில் கழுவினார். அந்த இடம் இன்றளவும் வற்றாத நீரூற்றாக திகழ்கின்றது.
த�ோன்றுகின்ற அந்தப் பெண்ணின் பெயரைக் கேள்” என்று கட்டளை இட்டனர். அவர்கள் கூறியபடியே பெர்னா மரியாவிடம், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர் “நாமே அமல உற்பவி” (மாசின்றிக் கருத்தரித்துப் பிறந்தவர்) என்று பதிலளித்தார். பெர்னா இதனை அப்படியே ச�ொல்ல, இதைக் கேட்ட காவல் அதிகாரிகள், “மறைக்கல்வி வகுப்பில் நீ படித்த பாடத்தில் வருகின்ற பெயர் இது. சும்மா கதை விடாதே” என்று வாதிட்டனர். மறைக் கல்வி வகுப்பில் படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் அச்சிறுமிக்கு இல்லை என்பது, மறைக்கல்வி ஆசிரியரின் சாட்சியம். மசபியேல் குகையருகே மரியா காட்சி தந்ததும், தமது பெயரை அவர் அறிக்கை இட்டதும் உண்மை என்பதற்கு, இன்றளவும் அங்கு நடைபெற்று வரும் எண்ணற்ற புதுமைகள் சாட்சியாக உள்ளன. ஆயிரக்கணக்கான புதுமைகள் நடந்துள்ளன. ஆயினும் அனைத்து மதத்தைச் சார்ந்த அறிஞர் மற்றும் மருத்துவக் குழுவினரால், 67 புதுமைகள், மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களைக் கவர்ந்து இழுத்து, மனமாற்றம் செய்து, தூயவர்களாக மாற்றுவதில் லூர்து நகர் உலகில் முதலிடத்தில் உள்ளது என்பது மற்றும�ோர் மறுக்க இயலாத உண்மை.
1858, டிசம்பர் 8ஆம் நாள், 16ஆவது காட்சியின்போது, காவல் அதிகாரிகள் “உனக்குத்
ந�ோன்பு உள்ளிட்ட தவ ஒழுக்க விதிகள் சுயக்கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகள் ஆகும். ஆனால், இதுவே எல்லாமும் ஆகாது. உடல் ஒறுத்தல், மன ஒறுத்தல�ோடு இணையாவிட்டால், அது ப�ோலித்தனமாக முடிந்து, அழிவிற்கு வழிவகுக்கும். (மகாத்மா காந்தியடிகள்)
2018 06
இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட�ோடும் அறிவுத் தெளிவ�ோடும் இருங்கள். (1பேது. 4:7)
அந்தோனி கிறிஸ்டி, ச.ச.
நாலு பேரு ச�ொன்ன கதை
புனிதர்களின் வரலாற்றை நாடக வடிவில் இந்த இதழ் த�ொடங்கி, வரும் இதழ்களில் த�ொடர்ந்து எழுத இசைவளித்திருக்கும் அருட்தந்தை அந்தோனி கிறிஸ்டி, ச.ச. அவர்களின் முயற்சி பயனளிக்க வாழ்த்துகள். – ஆசிரியர் (சாமு, ஆர�ோன், சாக்ரடீசு உள்ளே அமர்ந்திருக்க, ஆனந்து வெளியிலிருந்து உள்ளே நுழைகிறான்) சாக்ரடீசு
:
வாடா, லூசுப் பயலே.
ஆனந்து
:
ஏய், யாரப் பாத்து லூசுப் பயன்னீங்க?
சாக்ரடீசு
:
வேற யார? உன்னப் பாத்துத்தான்டா, கிறுக்கா!
ஆனந்து
:
டேய், இந்த ஊர்லயே அறிவாளி நான்தான். என்னையப் பாத்தா லூசு, கிறுக்கன்றீங்க? பாத்துடா! அப்புறம் வரலாறு உங்கள மன்னிக்காது.
சாமு
:
ஆமான்டா ஆனந்து, வரலாற்றுல பெரிய ஆட்கள எல்லாம் ஒரு காலகட்டத்துல லூசுன்னுதான்டா ச�ொல்லியிருக்கானுவ.
ஆர�ோன்
:
ஏன்டா சாமு! எவ்ளோடா தரேன்னு ச�ொன்னான் ஆனந்து? இப்படி உசுப்பிவிடுற!
சாமு
:
அடப்பாவி, அவன் என்கிட்ட இருந்து உருவிக்கிட்டுப் ப�ோகாம இருந்தா சரி (அனைவரும் சிரிக்க)
சாக்ரடீசு
:
சாமு நீ ச�ொன்னது உண்மைதான்டா! இல்ல?
ஆர�ோன்
:
என்னடா உண்மை.
ஆனந்து
:
பின்ன என்னா? இயேசுவையே அப்படித்தானே ச�ொன்னாங்க! மாதா, அப்புறம் மத்தவங்க எல்லாம் அவர புடிச்சிக்கிட்டு வரவே ப�ோயிட்டாங்களே!
செபமே உலகின் மிக வேகமான கம்பியில்லா த�ொடர்புக் கருவி. (ஜார்ஜ் ஹெர்பர்ட்)
2018 07
ஆர�ோன்
:
ஆமா பின்ன... ச�ோறு தண்ணியில்லாம, ஊர் ஊரா ப�ோயிக்கிட்டு இருந்தா என்ன நினைப்பார்களாம்? பேய் பிடிச்சவங்க, த�ொழுந�ோயாளிங்க, இவங்கள�ோடையே இருக்கிறது. விட்டா சின்னப் புள்ளைங்கள�ோட ப�ோய் சரிசமமா உக்காந்து பேசுறது, விளையாடுறது, இதெல்லாம் பாத்தா என்ன ச�ொல்லுவாங்க?
சாமு
:
ஆமாடா. அவருக்கு ஆண்டவர�ோட சித்தத்தை செய்யறதைத் தவிர வேற எதுவுமே பெரிசா தெரியலடா. ச�ோறு தண்ணி கூட...
சாக்ரடீசு
:
அவர மாதிரி பலர் இருந்திருக்காங்க தெரியுமா? நம்ம த�ொன் ப�ோஸ்கோ கூட அப்படித்தான்! கேள்விப்பட்டு இருக்கியா?
ஆனந்து
:
என்ன கேள்விப்பட்டிருக்கியா? த�ொன் ப�ோஸ்கோ லூசுன்னா?
ஆர�ோன்
:
ஆமாடா! அப்படித்தான் நெனச்சாங்க… ஏன்னா அவரு சின்னப் பசங்க கூடவேதான் கிடந்தாரு.
ஆனந்து
:
உண்மையாவாடா? செம ஜாலியான மனுசன்.
ஆர�ோன்
:
த�ொன் ப�ோஸ்கோ வாழ்ந்த காலத்துல, நின்னு பேசினாலே நேரம் வீ்ணுன்னு நினைச்சாங்க சாமியாருங்க. ஆனா இவரு அங்கிய தூக்கிக் கட்டிக்கிட்டு, ர�ோட்ல ஓடுறது என்ன, கூச்சல் ப�ோடுறது என்ன, ர�ௌடிப் பசங்கள�ோட விளையாடுறது என்ன… இப்படி இருந்தா என்ன ச�ொல்லுவாங்க? நீயே ச�ொல்லு!
ஆனந்து
:
லுங்கிய மடிச்சுக்கட்டுனா நானும் ர�ௌடிதான்னு ச�ொல்லுவாங்க. (அனைவரும் சிரிக்க)
சாக்ரடீசு
:
அங்கிய மடிச்சுக்கட்டுன்னா இவரும் குழந்தையா மாறிடுவாரு.
சாமு
:
ஆனா ஏன்டா அப்படி இருந்தாரு?
ஆர�ோன்
:
நீ ச�ொன்ன மாதிரிதான்டா. அவருக்குக் கடவுள் ஒரு அழைப்பு க�ொடுத்திருந்தாருன்னு நெனச்சாருடா. ஆதரிக்க யாரும் இல்லாத சின்னப் பிள்ளைங்க, இளம் வயசு பசங்க, ர�ௌடிகளைப்போல சுத்தரவங்க இவங்க எல்லாம் கடவுளுடைய அன்பை சுவைக்கனும்னு அவருக்கு ஓர் ஆசை.
ஆனந்து
:
சரி சரி, மேல ச�ொல்லுடா… என்ன ஆச்சு! எப்படி லூசானாரு?
சாக்ரடீசு
:
(சிரித்துக்கொண்டே) அவரு செஞ்சதையெல்லாம் பாத்துட்டு, அவரு லூசுன்னே முடிவு பண்ணிட்டாங்க. அவர மனநல மருத்துவமனைக்குக் க�ொண்டுப்போகனும்னு எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டாங்க.
ஆனந்து
:
அவரு ஒத்துக்கிட்டாரா?
ஆர�ோன்
:
அது எப்படி? அங்கதான் ட்விஸ்டே...
ஆனந்து
:
அது சரி. அவர மனநல மருத்துவமனைக்குக் க�ொண்டு ப�ோகனும்ணு முடிவு செஞ்சது யாரு?
ஆர�ோன்
:
அது அவரு மேற்றிராசனத்தில், இருந்த இரண்டு சாமியாருங்கதாம். இவரால மானம் ப�ோகுதுன்னு நெனச்சி இப்படி ஒரு முடிவெடுத்துட்டாங்க.
(காட்சி மாறுகின்றது. இரண்டு குருக்கள், அவர்கள�ோடு வேற�ொரு நபர்… பேசிக்கொண்டு இருக்கின்றனர்.) குரு 1
:
2018 08
நீங்க குதிரை வண்டியிலேயே இருங்க! நான் ச�ொன்னது எல்லாம்…
உன்னை நீ அறிய ந�ோன்பு உதவுகின்றது. (புனித அகஸ்தினார்)
குரு 2
:
ஆமாம்பா. அவரு பயங்கரமான ஆளு. க�ொஞ்சம் அசந்தாலும் தப்பிச்சிடுவாரு. முன்னப்பின்ன திரும்பி பாக்காதீங்க! அவர எப்படியாவது ஏத்திட்டு, கதவை சாத்தனதும், வண்டி பறந்திடணும். நேரா அந்த மருத்துவமனையில ப�ோயிதான் நிக்கணும். க�ொஞ்சம் கூட தயங்காதீங்க, சரியா?
நபர்
:
சரிங்க பாதர். நான் ர�ொம்ப தயாரா இருக்கேன்.
குரு 1
:
சரி நீங்க ப�ோங்க… அவரு வர்றாரு (த�ொன் ப�ோஸ்கோ வருகிறார்்)
த�ொ. ப�ோ.
:
வணக்கம் பாதர்ஸ். என்ன ஆச்சர்யமா இருக்கு? எங்க இவ்வளவு தூரம்?
குரு 2
:
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல... த�ொன் ப�ோஸ்கோ. உங்க இடத்துக்கு பக்கத்துல இருக்குறவங்க நாங்க ரெண்டு பேருதான். பல தடவ வரனும்னு நெனப்போம். ஆனா நேரம் இல்லாம ப�ோயிடும்.
த�ொ. ப�ோ.
:
அடடா! அதெல்லாம் ஒரு குறையும் இல்ல பாதர். உங்களுக்கு இருக்கிற வேலையில் இதெல்லாம் எப்படி?
குரு 1
:
அடடா! வேலையா? நாங்களா? உங்கள விடவா? நீங்கதான் எந்த நேரமும் ப�ோக்கிரி பயலுகள�ோடயே ஓடி திரியிரீங்க. உங்களுக்குக் க�ொஞ்சம் ஓய்வு தேவைப்படுது. வாங்க நாம ஆயர் இல்லம் வரைக்கும் ப�ோயிட்டு வரலாம். உங்களுக்கு ஒரு மாற்றமா இருக்கும்.
த�ொ. ப�ோ.
:
(தனக்குள்ளேயே) இது புதுசா இருக்கே! இந்த அக்கறைக்கு வாய்ப்பே இல்லையே... இதுல ஏத�ோ வில்லங்கம் இருக்குமா?
குரு 2
:
என்ன த�ொன் ப�ோஸ்கோ? ர�ொம்ப ய�ோசிக்கிறீங்க… வேலை எப்பவும் இருக்கும். நாமதான் நம்ம உடம்பையும் மனசையும் பாத்துக்கணும்… வாங்க வாங்க... (அவரை ஏறக்குறைய இழுத்துச் செல்கின்றனர்)
ஐம்பொறிகளும் தவம் வழியாகத் தூய்மையடைகின்றன. (பதஞ்சலி)
2018 09
த�ொன் ப�ோஸ்கோ வாழ்ந்த காலத்துல, நின்னு பேசினாலே நேரம் வீணுன்னு நினைச்சாங்க சாமியாருங்க. ஆனா இவரு அங்கிய தூக்கிக் கட்டிக்கிட்டு, ர�ோட்ல ஓடுறது என்ன, கூச்சல் ப�ோடுறது என்ன, ரெளடிப் பசங்கள�ோட விளையாடுறது என்ன… இப்படி இருந்தா என்ன ச�ொல்லுவாங்க?
(காட்சி மாற்றம்) ஆனந்து
:
அடப் பாவமே! அப்ப அவரு சிக்கிட்டாரா?
ஆர�ோன்
:
அவரா சிக்குவாரு?குதிரை வண்டிக்கிட்ட ப�ோனதும், நீங்க ரெண்டு பேருதான் பெரியவங்க. நீங்க முதல்ல ஏறுங்கன்னு ச�ொல்லி ஏத்திட்டு, பட்டுன்னு கதவ மூடிட்டாரு. கதவை மூடற சத்தம் கேட்டதும், வண்டிக்காரரு எடுத்தாரு வேகம்! ஆஸ்பத்திரியில ப�ோயிதான் நின்னாரு.
ஆனந்து
:
அப்புறம்!
ஆர�ோன்
:
அப்புறம் என்ன? அவங்க ரெண்டு பேரும், அவங்க விரிச்ச வலையிலேயே சிக்கிட்டாங்க.
சாமு
:
த�ொன் ப�ோஸ்கோவுக்கு அவரு மனசு முழுக்க அவர�ோட பசங்கதான் இருந்தாங்க. அவங்களுக்காகவே படிச்சாரு, குருவானாரு. தன் வாழ்க்கையையே முழுசா க�ொடுக்கவும் தயாரா இருந்தாரு.
சாக்ரடீசு
: தனக்கென எதுவுமே இல்லாத ஒரு மனுசன், எதுவுமே இல்லாத அந்தப் பசங்களுக்காகவே வாழ்க்கைய முழுசா தந்த ஒரு மனுசன், ச�ோறு தண்ணி, சுகம் துக்கம், ஓய்வு, தூக்கம் எதுவுமே இல்லாம உழச்ச ஒரு மனுசன்.
ஆனந்து
:
ம�ொத்தத்துல பைத்தியக்காரத்தனமா அன்பு செஞ்சாருன்னு ச�ொல்லு.
(அனைவரும் சிரிக்கின்றனர். காட்சிகள் முடிவடைகின்றன) (த�ொன் ப�ோஸ்கோவின் வரலாற்றைத் த�ொகுத்துச் சுருக்கமான நிறைவுரையாக வழங்கலாம்)
2018 10
கடவுள் சில நேரங்களில் புயலை அடக்கலாம் அல்லது புயலால் மனிதனை அடக்கலாம்.
ஆசிரியர் : அ. ஜேசுதாஸ் பக்கங்கள் : 174 விலை : ரூ. 160
ஆசிரியர்: வில்லியம் பால்ராஜ் பக்கங்கள்: 100 விலை: ரூ. 100
ஆசிரியர்: ஆண்டோ சகாயராஜ் பக்கங்கள்: 174 விலை: ரூ. 160
அரும்பின் புதிய வெளியீடுகள்
மன இறுக்கம் நீக்க வருக! மன இறுக்கம் நீங்கி வாழ்க!
பரபரப்பு, அறைகூவல்கள், ப�ோராட்டங்கள் இவைகளுக்கிடையில் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, ப�ொறுமையாய் சிந்திக்கத் தூண்டும் சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் ‘மன இறுக்கம் நீக்க வருக!’ மன இறுக்கம் நீங்கி வாழ்க! வாழ்க்கையின் தேக்க நிலையில் தவிக்கும் பலருக்கு இந்நூல் புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் உத்வேகமும் தரும் மருந்து. தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்! உண்மையும் ப�ோலித் த�ோற்றமும், தீமையைக் கண்டு திகிலடையாதே!... ப�ோன்ற 36 தலைப்புகளில் இந்நூல் கூறும் பாடங்களைக் கவனத்துடன் வாசித்தால் வாழ்வில் நிம்மதியும் நிறைவும் எய்தலாம்.
..............................................................................................................................
இயற்கையின் சிரிப்பினிலே... (இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவனைப் பற்றிய ஓர் ஆன்மீகத் தேடல்)
இறையியல் மற்றும் இலக்கியக் கண்ணோட்டத்தில், இன்றைய நடப்புகளை அலசி ஆராயும் நூல் ‘இயற்கையின் சிரிப்பினிலே...’
இயற்கையைத் தன்னலக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனிதருக்கு, அதைப் பராமரிக்கும் சவால் நிறைந்த அழைப்பை இறைவன் விடுக்கின்றார் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். இயற்கையில் இறைவனின் த�ோற்றத்தை, இருப்பை உணர்ந்து, அவரில் சங்கமிக்கும்போது வாழ்க்கை நிறைவெய்துகின்றது என்கின்றது இந்நூல். சித்தர் பாடல்களையும் பாரதியாரின் கவிதைகளையும் தமது கருத்துக்கு அரண்களாக ஆங்காங்கே ஆசிரியர் சேர்த்துள்ளார். இறையியல் துறையில் புதுமைப் படைக்கும் நூல் இயற்கையின் சிரிப்பினிலே...
.............................................................................................................................. மீண்டும் எழுவ�ோம்! குருதி பூசிய கத்தியை நக்கி நாக்கறுபட்டுச் சாகும் ஓநாய்கள் ப�ோல் இலவசங்களை நக்கி நலிவுற்றுக் கிடக்கும் மக்களுக்காக இரங்குகிறார் ஆசிரியர் ஆண்டோ சகாயராஜ்.
‘முதிர்ச்சியுள்ளோரின் காதல் முனை மழுங்குவதில்லை,’ ‘வாழ்க்கையில் வெறிய�ோடு ப�ோராடுபவர்களே வரலாறு படைக்கிறார்கள்,’ ‘எந்தவழி ஏற்றம் தரும் வழி,’ ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’… ப�ோன்ற 25 தலைப்புகளில், எளிய வார்த்தைகளில், ஆழமான, உணர்வுப்பூர்வமான வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நல்ல பல செய்திகளால் வீழ்ந்துகிடக்கும் இளைஞர்களை மீண்டும் எழுந்து நிற்க அறைகூவல் விடுக்கும் நூல் மீண்டும் எழுவ�ோம்! த�ொடர்புக்கு: அரும்பு பதிப்பகம், 044 26612138/40, 94447 99942 கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் (இயேசு) இரவெல்லாம் செலவிட்டார். (லூக். 6:12)
2018 11
அந்தோனிசாமி.
கடவுளுடன் ஒப்புரவாகி, அவருடைய நல்லுறவில் மீண்டும் வளரவும் இறைப் பராமரிப்பைப் பெறவும், 40 நாட்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. பழை ய ஏ ற்பா ட் டு க் க ா ல த் தி ல் வ ா ழ்ந்த இறைவாக்கினர் ய�ோனா, கடவுளின் ஆ ண ை யி ன ்ப டி யே , பாவம் நிறைந்த நினிவே நகருக்குச் சென்று, அந்நகரத்து மக்களிடம், ‘மனம் திரும்புங்கள், உங்கள் தீய வழிகளிலிருந்து விலகிச் செல்லுங்கள். கடவுளின் க�ோபம் இறங்கி வருகிறது.’ “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” எனக் கூறியதாக ய�ோனா 3:4இல் வாசிக்கிற�ோம். அது ப�ோலவே, நம் தாய்த் திருச்சபை நம்மையும், மனந்திரும்பும்படி அழைக்கிறது. ஏனெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயம், ந�ோவாவின் காலத்திலும் ச�ோத�ோம் க�ொம�ோராவிலும் நடந்ததைப் ப�ோலப் பெரும் அழிவை ந�ோக்கி நகர்ந்து வருகின்றது. இன்றும் சிலை வழிபாடுகளும் வேசித்தனமும் மக்களின் ப�ொழுதுப�ோக்குகளாக நிலைபெற்று வருகின்றன. ‘ஓரினச்சேர்க்கை’ பல துறைகளிலும் ஒப்புதல் பெறுகின்றது. மக்கள் கடவுளைத் தேடாமல், சாத்தானைத் தேடி, குறி கேட்கவும், செய்வினை, ஏவல், மாந்திரீகம் ப�ோன்ற செயல்களில் ஈடுபடவும் ஆர்வம் காட்டுகின்றனர். கள்ளச்சந்தை, கற்பழிப்பு, வழிப்பறி ஆகியவை 2018 12
பெருகிவிட்டன. ஆகையால் இறைத் தீர்ப்பு வெளிப்படும் காலம் நெருங்கிவிட்டதன் அடையாளமாகக் க�ொள்ளைந�ோய், தீவிரவாதம், ப�ோர், சுனாமி, நிலநடுக்கம், புயல், வெள்ளம் ப�ோன்றவற்றால் மக்கள் க�ொத்துக் க�ொத்தாகச் செத்துக் க�ொண்டிருக்கின்றனர். ஆகையால், நம் தாய்த் திருச்சபை நம்மை மனந்திரும்ப அழைக்கிறது. ஏனெனில் இஃது எச்சரிப்பின் காலம். இதைத்தான் தவக்காலம் என்று அழைக்கிற�ோம். கடவுளுடன் ஒப்புரவாகி, அவருடைய நல்லுறவில் மீண்டும் வளரவும் இறைப் பராமரிப்பைப் பெறவும், 40 நாட்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. ம�ோசே, சீனாய் மலைமேல் கடவுளுக்காக உண்ணாமல், உறங்காமல், காத்திருந்து, 40 நாட்களுக்குப் பின் அவரைக் கண்டு, 10 கட்டளைகளைப் பெற்றுக்கொண்டதைப் ப�ோல, (வி.ப. 34:28) வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் தகுதி பெற்ற இஸ்ராயேலர் பாலைவனத்தில் 40 ஆண்டுகள் செலவிட்டதைப் ப�ோல, 40 நாட்கள் இரவு பகலாக நடந்து, எலியா இறைவாக்கினர், ஓரேப் மலையில் கடவுளைக் கண்டதைப் ப�ோல, (1அர. 19:8) நமது ஆண்டவர் தம் மீட்புப் பணியினைத் த�ொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் பாலைநிலத்தில் ந�ோன்பு இருந்தது ப�ோல
கடவுளின் கரங்களில் நம்மைக் கையளிப்பதே செபம். (அன்னை தெரேசா)
(ய�ோவா. 3:4), நாமும் இந்தத் தவக் காலத்தில் தவமிருந்து, மனம் மாறி கடவுளைக் கண்டடைய ஆல�ோசனைகள் தரப்படுகின்றன. தவக்காலம் திருநீற்றுப் புதன் முதல், பெரிய வெள்ளி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் ந�ோன்பிருத்தல் கட்டாயமாகின்றது. இப்போதெல்லாம் நாம் இந்தத் தவ நாட்களைக் கவனத்தோடு ந�ோக்காமல், ஏத�ோ வழக்கம் ப�ோல அணுகி, க�ோவிலுக்குப் ப�ோய், வந்து விடுகிற�ோம். ஏதேன் த�ோட்டத்தில், கடவுளின் கட்டளையை மீறிய ஆதாமும் ஏவாளும் தங்கள் தவற்றிற்காக வருந்தி, மன்னிப்புக் க�ோரவில்லை. “நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்… மண்ணுக்கே திரும்புவாய்” என்று கடவுள் அவர்களை எச்சரித்து அனுப்பியதை நாமறிவ�ோம் (த�ொ.நூ. 3:19).
மக்கள் கடவுளைத் தேடாமல், சாத்தானைத் தேடி, குறி கேட்கவும், செய்வினை, ஏவல், மாந்திரீகம் ப�ோன்ற செயல்களில் ஈடுபடவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதே வார்த்தைகளைச் ச�ொ ல் லி த்தான் திருநீற்றுப் புதன் அன்று, நம் ஒ வ ்வ ொ ரு வ ர் நெ ற் றி யி லு ம் கு ரு வ ா ன வ ர் ச ா ம்பலைப் பூசுகின்றார். நம்மில் பலர் நம் ப ா வ ங ்கள ை நியாயப்படுத்துகிற�ோம் அல்லது மறைக்க முயலுகின்றோமே தவிர, அதைப் ப�ோக்க நம்மைத் தாழ்த்திக் கடவுள�ோடு ஒப்புரவாக விரும்புவதில்லை. நமது ஆண்டவரின் நாட்களில், மனம் திரும்பிய இஸ்ராயேலர் தங்கள் பாவங்களைத் திருமுழுக்கு ய�ோவான் முன்னிலையில் அறிக்கை செய்து, ய�ோர்தான் நதியில் மூழ்கி திருமுழுக்குப் பெற்றதாக மத். 3:6இல் வாசிக்கின்றோம். தாவீது அரசர் இறைவாக்கினரான நாத்தானிடம், “கடவுளுக்கு எதிராக நான் பாவம் செய்தேன்” என்று அறிக்கை செய்தார் (2சாமு. 12:13). திருத்தூதர் பவுலடியாரின் முன், எபேசு பட்டணத்து மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள் என்று தி.ப. 19:18இல் வாசிக்கிற�ோம். அதன்படியே, நாமும் ஒப்புரவு அருட்சாதனத்தைக் குருக்களின் வழியாகப் பெற்று வருகிற�ோம். மேலும், “நீங்கள் குணமாகும் ப�ொருட்டு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர்
கடவுளை மகிழ்வடையச் செய்யும் ஆற்றல் ந�ோன்பிற்கு உண்டு. (தூய பாசில்)
2018 13
அறிக்கையிட்டு ஒருவருக்கொருவர் மன்றாடுங்கள்” என்று யாக்கோபு 5:16இல் கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நாம், நம் மனமாற்றத்தின் அடையாளமாக நற்கனிகளைத் தர வேண்டும். எபேசு பட்டணத்தில் மனம் மாறிய மாயவித்தைக்காரர்களில் பலர், தங்கள் மாந்திரீக நூல்களைக் க�ொண்டு வந்து எல்லாருக்கும் முன்பாகத் தீயிட்டு எரித்தார்கள் (தி.ப. 19:19). அதுப�ோலவே, நாமும் நம்மைப் பாவத்திற்கு அடிமையாக்கும் மது, உணவு, உடை, மின்னணுச்சாதனங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட வேண்டும். குறிப்பாக, ஆபாசக் காட்சிகளடங்கிய படப் பதிவுகளையும் நண்பர்களையும் விட்டு விலகி, நம் ஆன்மாவைக் காத்துக்கொள்ள வேண்டும். ய�ோபு தம் பாவங்களுக்காகவும், தம்முடைய பிள்ளைகளின் பாவங்களுக்காகவும் அடிக்கடி
கடவுளுக்குப் பரிகாரப் பலி செலுத்தி மன்னிப்பு வேண்டியது ப�ோல, நாமும் அடிக்கடி திருப்பலியில் பங்கு க�ொண்டு மன்னிப்பு வேண்டி செபிக்கக் கடமைப்பட்டிருக்கிற�ோம். ஆபிரகாமின் ப�ொருட்டு, ல�ோத்தின் குடும்பத்தையும், ந�ோவாவின் ப�ொருட்டு, அவரது குடும்பத்தாரையும் அழிவிலிருந்து கடவுள் காத்ததுப�ோல, நம் செபத்தின் ப�ொருட்டு, நம் குடும்பத்தினரைக் கடவுள் பாதுகாத்து வழிநடத்துவார். அதற்கு இந்தத் தவக்காலத்தில் நாம் நம்மைத் தயாரிப்பது அவசியம். இறைவனின் இரக்கத்தைத் தேட இதுவே ஏற்புடைய காலம். ஏனெனில் இஃது இறையருளின் காலம். இறை இரக்கத்தை மழையாகப் ப�ொழியும் காலம். ஆகவே இதை அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திப் பயனடைவ�ோம்.
என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவ�ோர் நிலை வாழ்வைக் க�ொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் ச�ொல்கிறேன். (ய�ோவா. 5:24)
2018 14
கேட்கத் தயாராக இருப்போரிடம் கடவுள் பேசத் தயாராக உள்ளார்.
மணமக்களின் பாதுகாவலர் என்று அறியப்பட வேண்டிய தூய வாலன்ட்டைன், தவறுதலாகப் புரிந்து க�ொள்ளப்பட்டுக் காதலர்களின் பாதுகாவலராகக் க�ொண்டாடப்படுவதும், காதலர் தினத்தோடு அவர் சம்பந்தப்படுத்தப்படுவதும் வேடிக்கையாக உள்ளது. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், உண்மை வரலாற்றை அறிய விரும்பாத இந்துத்துவாக்கள், பக்குவப்படாத பசங்களின் அசிங்கம் புடிச்ச காதல் கூத்துக்குக் கிறிஸ்துவ மதமே காரணம் என்று கூறிக் காதலர் தினத்தையும் கிறிஸ்துவத்தையும். க�ொச்சைப்படுத்திக் க�ோதாவில் இறங்குவதுதான். இந்நிலையில் ‘செய்திமலர்’ வாசகர்களுக்குத் தூய வாலன்ட்டைன் பற்றிய உண்மை வரலாற்றை உணர்த்த வேண்டியும், அத்தூயவருக்கும், இந்தியாவில் க�ொண்டாடப்படும் காதலர் தினத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதை நமது இந்துத்துவாச் சக�ோதரர்களுக்கு உணர்த்த வேண்டியும் இக்கட்டுரை இங்கே பதிவு செய்யப்படுகின்றது. காராவூர்ப் பிராங்க் (Father Frank O Gara) அடிகள் என்ற குருவானவர், அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினிலிருந்து நமக்கு இச்செய்தியினை வழங்குகிறார். டப்ளின் நகரத்திலுள்ள வெண்ணாடைத் துறவிகளின் தெருக்கோயில் என்றழைக்கப்படும் ஆலயத்தில், தூய வாலன்ட்டைனின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டு, ஆண்டுத�ோறும் ஆயிரக்கணக்கான புதுமணத் தம்பதியினர் அங்குத் திருயாத்திரையாகச் சென்று வருகின்றனர். தூய வாலன்ட்டைன் என்பவர் இரண்டாம் கிளாடியஸ் என்ற உர�ோமைச் சக்கரவர்த்தியால் கி.பி. 269இல் படுக�ொலை செய்யப்பட்டவர். திருச்சபை இம்மறைச்சாட்சிக்குப் புனிதர் பட்டம் வழங்கியுள்ளது. இப்புனிதர் படுக�ொலையுண்ட வரலாறு வருமாறு: உர�ோமைப் பேரரசின் மன்னனாகக் கிளாடியஸ் முடி சூடியப�ோது, கிறிஸ்துவ மறை, அந்த நாட்டில் பரவி இருந்தது. அத�ோடு உர�ோமைக் குடிகள் பாலுணர்வுக் க�ோட்பாடுகளில், கட்டுப்பாடு ஏதும் வகுக்காமல் காமுகர்களாய், பலதார மணம் செய்பவர்களாய், ஒழுக்கமற்றுத் திரிந்தனர். ஆனால் கிளாடியசின் சிக்கல் வேறாக இருந்தது. ‘திருமணம் ஆகாத ப�ோர் வீரர்கள், தங்கள் உயிரைப் பற்றிக் கவலை க�ொள்ளாமல், துணிந்து சரியாக ந�ோன்பிருந்தால் கடவுளுக்கு நண்பனாகலாம். (தூய தெர்த்தூலியன்)
2018 15
ப�ோரிடுகிறார்கள் என்றும், திருமணமானவர்கள், தாங்கள் ப�ோரில் இறக்க நேர்ந்தால் தங்களின் மனைவி, மக்களின் கதி என்னாவது என்று கவலைப்படுபவர்களாய், தீவிரமாகப் ப�ோர்புரியத் தயங்குகிறார்கள்’ என்றும் அவன் கருதினான். விளைவு, தனது நாட்டில் இனி திருமணமே நடைபெறக் கூடாது என்று ஆணை பிறப்பித்தான். இச்சூழ்நிலையில் உர�ோமானிய இளைஞர்கள் கிறிஸ்துவின் ப�ோதனைகளால் கவரப்பட்டுக் கிறிஸ்துவ மறையைத் தழுவி க�ொண்டிருந்தார்கள். கிறிஸ்துவர்கள் உர�ோமைக் குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமையால், திருமணத் தடைச்சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்ததால், இளைஞர்கள் வெளிப்படையாக மதம் மாற முடியவில்லை. இந்நிலையில் வாலன்ட்டைன் என்ற குருவானவர், உர�ோமானிய இளைஞர்களை இரகசியமாகக் கிறிஸ்துவர்களாக்கித் திருமணம் செய்து வைத்தார். பிறகென்ன? அவர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் அவரைச் சந்தித்து விசாரணை செய்யுமாறு ஆல்ட்ரியஸ் என்ற நீதிபதி அனுப்பப்பட்டார். விசாரணை செய்ய வந்த நீதிபதி, தந்தை வாலன்ட்டைனிடம் கிறிஸ்துவைப் பற்றிய ப�ோதனைகளைக் கேட்க நேர்ந்தது. நீதிபதியின் ஒரே மகள் கண் பார்வை இல்லாமல்
இருந்தாள். அடிகளார் சிறையிலிருந்தபடியே அவளுக்காகச் செபிக்க, அவள் பார்வை பெற்றாள். நீதிபதி ஆல்ட்ரியசும் அவரது குடும்பமும் கிறிஸ்துவர்கள் ஆனார்கள் என்பது வரலாறு. தாம் க�ொல்லப்படுமுன், அருள்திரு வாலன்ட்டைன், நீதிபதியின் மகளுக்கு இறுதியாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “நீ கிறிஸ்துவை ஏற்றுக் க�ொண்டு விழிகள் பெற்றுள்ளாய். நீ விரும்புகின்ற காதலனை மணக்க இனித் தடையில்லை” என்று எழுதி, இக்கடிதம் “உனது வாலன்ட்டைனிடமிருந்து வருவதாகும்” என்று முடித்திருந்தார். இக்கடிதம் வெளியான நாளிலிருந்து, காதலன்கள், தங்களின் காதல் கடிதங்களின் இறுதியில் “உன் வாலன்ட்டைனிடமிருந்து” என்று எழுதிக் கைய�ொப்பம் இடும் பழக்கம் பிரபலமாயிற்று. இச்செய்தியினை நமக்கு வழங்கும் அருட்தந்தை க�ோராவூர்ப் பிராங்க் அடிகள் கூறும் அறிவுரை யாதெனில், தூய வாலன்ட்டைன் இயேசுவின் மீது க�ொண்ட தமது காதலால் துன்புற்றப�ோதும், தமது இறுதி மூச்சு வரை அக்காதலைக் கட்டிக் காத்ததுப�ோல், அவரைக் காதலரின் பாதுகாவலராக ஏற்றுக் க�ொண்டாடும் இளைய�ோரும் கடைசி மூச்சு வரை தங்களின் காதலைக் காத்துவர வேண்டும் என்பதாகும்.
தவக்காலத்தின் மூன்று தூண்கள் செபம் என்பது கடவுளிடம் அழைத்துச் செல்லும் செயலாகும். உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டுக் கடவுளிடம் திரும்பிட தியானிக்க நேரம் ஒதுக்குகிற�ோம். அவருக்குச் செவிமடுக்கவும் அவர�ோடு பேசவும் நேரம் இதுவாகும். அவரது வார்த்தைகளை வாசித்துத் தியானிக்கவும், அவர�ோடு ஒன்றிடவும் செபம் உதவுகிறது. தவக்கால ந�ோன்புக்குச் செபம் அர்த்தம் தருகிறது. செபத்தின் வழியே அவர�ோடு நெருக்கம் ஏற்படுகின்றது.
2018 16
ந�ோன்பு நுகர்தலைக் குறைத்து, உன்னையே நீ மையப்படுத்துவதைத் தடுக்கிறது. கடவுளின் மகிமைக்காக நற்செயல், தீயச் செயல் இரண்டையுமே தள்ளி வைக்கத் தூண்டுகிறது. ஒருவேளை நிறைவுணவும் மற்ற இரு வேளைகளிலும் மிகக் குறைவாகவும் உண்ணுதல் ந�ோன்பு. தவக்காலத்தில் திருநீற்றுப் புதனும் பெரிய வெள்ளியும் ந�ோன்புக்குரியன. திருநீற்றுப் புதன�ோடு, அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய சனியும் மாமிச உணவுக்கு விலக்கு.
தான தருமம் கிறித்துவ வாழ்வியல் கடமைகள் ஆகும். ஏழை எளிய�ோரை அன்பு செய்யவும், செவிமடுத்து ஆறுதல் கூறவும், நமது நேரத்தை, ப�ொருள் உதவிகளை, அறிவுரைகளை, உணவு, உடை, உறைவிடம் நல்குதலை, த�ோழமை க�ொள்ளுதலை, பாசத்தோடு அரவணைத்தலைத் தவக்காலம் உணர்த்துகிறது. ப�ொருளுதவியைக் காட்டிலும் நம்மையே வழங்குதல் சிறந்த ந�ோன்பு. பிறர் அன்பு இதன் அடிப்படை. இறைவனை அன்பு செய்வதும் அயலாரை அன்பு செய்வதும் கட்டளைகள்.
செபமில்லா வாழ்க்கை உயிரற்ற உடலுக்கு இணையானது. (மார்ட்டின் லூத்தர்)
அ. தைரியம், சே. ச.
! ‘ராயல் இலண்டன் ஹாஸ்பிடல்’ இலண்டனில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று. பல்வேறு அதிநவீன வசதிகளைக் க�ொண்டு, உலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) ஆம்புலன்ஸ் சேவைய�ோடு மிகவும் விரைவாக, சிறப்பான சிகிச்சை வழங்குவதில் பெயர் பெற்ற மருத்துவமனை அது. வான் ந�ோக்கி உயர்ந்த இந்த மருத்துவமனையில், உயரே செல்லச் செல்ல இலண்டன் மாநகரத்தின் நால்திசைகளும் கண்களைக் கவரும். தினமும் பல்வேறு மக்கள் வந்து மருத்துவச் சேவைதனை இலவசமாகப் பெற்றுச் செல்லும் பாங்கு குறித்து அடிக்கடி மகிழும் அதே வேளையில் நமது நாட்டின் மருத்துவ வியாபாரப் ப�ோக்கை எண்ணி வருந்துவேன்.
அங்குதான் ராயல் இலண்டன் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையில் உள்ள எம் சக�ோதரருக்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்திருந்தது. அந்தச் சக�ோதரரின் நற்குணங்களில் நனைந்தவனாய் அவரைச் சந்திக்க ஆவல�ோடு இரயிலில் பயணித்து, என் த�ோழர் ச�ொன்ன இடத்தை அடைந்தேன். என்றும் ப�ோல் அலைம�ோதிய அந்த இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், என்னை வருடிய குளிர்காற்றை உணர்கையில் என் மனம் மகிழ்விலே நனைந்தது. க�ொஞ்ச நேரம் காத்திருந்து என் த�ோழர் வந்ததும் இருவரும் சேர்ந்து மருத்துவமனை ந�ோக்கி நடந்தோம்.
நடக்கும்போதே என் கண்களைக் கவர்ந்தது அந்த மருத்துவமனையின் அழகான கண்ணாடிக் கட்டிடம். உயரமான அந்தக் கட்டிடத்தின் அழகினைப் பார்த்துப் வியப்படைந்த நான் அந்த மேல் மாடியின் கூரையிலிருந்து உலங்கு ஊர்தி வானிலே பறந்திட என் எண்ணமும் என் தாய்மண்ணை ந�ோக்கிப் பறந்தது. என் தாய் மண்ணிலே மருத்துவமனைகளில் சேவை என்பது கானல்நீராய் மாறிய நிலையையும், மருத்துவம் என்ற மகத்துவமிக்கப் பணி பணம் சம்பாதிக்கும் வியாபாரமாய் விலை ப�ோன நிலையையும், மருத்துவ வசதி கிடைக்காமல் வாழ்விலே இறப்பை எதிர்கொள்ள நேரிடும் ஏழைகளின் பரிதாப
அன்று புதன் கிழமை. கல்லூரியில் வகுப்புகள் முடிந்ததும் என் த�ோழர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. நாங்கள் இருவரும் அறிந்த எம் சக�ோதரர் ஒருவர் ம ரு த் து வ ம ன ை யி ல் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரைச் சென்று நலம் விசாரித்து வரச் செல்வதாகவும் ச�ொன்ன மறு நிமிடமே, “நானும் வருகிறேன். உங்களை ‘வ�ொயிட் சேப்பல்’ இரயில் நிலையத்தில் சந்திக்கிறேன்” என்று ச�ொல்லி முடித்தேன். செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும். (கைதவம் = கபடம், ப�ொய்)
2018 17
நிலையையும், இவை அனைத்திற்கும் காரணமான ஆளும் வர்க்கத்தையும் எண்ணிப் பார்த்து வருந்தியவண்ணம் மறைந்தது என் எண்ணம். எம் சக�ோதரர் இருந்த அறையை அடைய முற்பட்டப�ோது மிகவும் நிதானமாக மலர்ந்த முகத்தோடு எங்களை வரவேற்று, எமக்கு வேண்டிய தகவலைத் தந்து மலர்ந்த சிரிப்பையும் பரிசாய் வழங்கிய அங்கிருந்த பணிப்பெண்ணின் நல்மனம் கண்டு மகிழ்ந்து மருத்துவமனையின் உள்ளே சென்றோம்.
ஆட்சி அதிகாரம் இருந்தும் ஆள்பலம் இருந்தும், பண பலம் இருந்தும் உடல் நலம் இன்றி என்ன பயன்? செல்லும்போதே என் மனம் கவர்ந்தது அந்த மருத்துவமனையின் தூய்மைநிறை அழகும் சூழலும். “அடடா… இந்த மாதிரி ஓர் அமைதியான, அழகான சூழல் கிடைத்தாலே தீராத ந�ோயும் தீர்ந்திடுமே” என்று எனக்குள்ளே எண்ணினேன். அங்கிருந்த லிஃப்டிலே பயணித்து எம் சக�ோதரரின் அறையை அடைந்தோம். எங்களைக் கண்டதும் மகிழ்ந்தவராய் புன்னகைய�ோடு “ஸ�ோ… ஹ�ௌ ஆர் யூ சேப்ஸ்?” என்று எங்களிடம் கேட்டார். அறுவைச் சிகிச்சைக்கு ஆட்பட்ட அவரை நாங்கள் நலம் விசாரிப்பதற்குள் முந்திக்கொண்டு எங்களை அவர் விசாரித்தமைக் கண்டு திகைத்துப் ப�ோனேன். 2018 18
எங்கள�ோடு மிகவும் மகிழ்வாய் மெல்லிய குரலில் அந்த இடத்தின் அமைதிக்குக் களங்கம் விளைவிக்காமல் அவரின் சிகிச்சைப் பற்றியும் இடுப்பு இடமாற்றம் மிகவும் சிறப்பாக நடந்தது பற்றியும் ஒரு சில நாட்களில் நடை பயிற்சி பெறப்போவது பற்றியும் ச�ொல்லி மகிழ்ந்தார். அவரின் மகிழ்விலே மகிழ்கையில் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த எங்களிடம் அவரின் உடல்நலத்தைவிட அருகில் இருந்த மற்றொருவரின் இக்கட்டான சூழலை எடுத்துக் கூறி அவருக்காகச் செபிக்க வேண்டினார். தன்னுடல் நலமில்லாத ப�ோதும் அடுத்தவர் நலனில் அக்கறை க�ொள்ளும் அவரின் நல்மனம் கண்டு பெருமைப்பட்டேன். “அது ஏன�ோ தெரியல… என்னோட நிலையைவிட அவர�ோட நிலை பரிதாபமா இருக்கு…” என்று அவருக்கு எதிரே இருந்தவரைப் பார்த்து எம் சக�ோதரர் ச�ொல்ல, மன வேதனைய�ோடு அருகில் இருந்தவரைப் பார்த்திட விழைந்தேன். “யாருனே தெரியலனு ய�ோசிக்காதே. அவரும் மனிதர்தான். ஒரு ந�ோய்வாய்ப்பட்ட மனிதர். ப�ோ… ப�ோய்ப் பேசு…” என்று என் உள்மனம் எனக்குள்ளே உரையாட, விரைந்தேன் அருகிலிருந்தவர�ோடு உறவாட. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைக்கே உரிய விதத்தில் பலவிதமான மருத்துவக் கருவிகள் ப�ொருத்தப்பட்டு அவற்றில் ஒருசில கருவிகள் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் இணைக்கப்பட்டு பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில், சுவாசிக்க இயலாமல் சிரமப்பட்டுச் சுவாசித்துக் க�ொண்டிருந்தார். அவரின் உடல்நிலை மிகவும் வருந்தத்தக்கதாக இருந்தாலும் அவரின் கண்களின் ஓரங்களில் வழிந்த கண்ணீரையும் தாண்டி, அவரின் தன்னம்பிக்கையும், ‘நான் வாழ்வேன்’ என்ற வைராக்கியமும் தெரிந்தன. அருகில் இருந்த பழச்சாற்றினைக் கூடக் குடிக்க இயலாது சிரமப்பட்ட அவரை அணுகியதுமே, “சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. என்ன சாப்பிட்டாலும் வெளியே வந்து விடுகின்றது. என்ன ந�ோயென்று அறியாமல் இன்னும் சிகிச்சை த�ொடர்கின்றது” என்று மிகவும் மெல்லிய குரலில் ச�ொன்னார். அவரின் அருகிலே சென்று
தங்களைத் தாழ்த்துவ�ோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும். (சீ.ஞா. 35:17)
உடல்நிலை மிகவும் வருந்தத்தக்கதாக இருந்தாலும் அவரின் கண்களின் ஓரங்களில் வழிந்த கண்ணீரையும் தாண்டி, அவரின் தன்னம்பிக்கையும், ‘நான் வாழ்வேன்’ என்ற வைராக்கியமும் தெரிந்தன. த�ொடுவதற்குத் தயங்கியவனாய் அவரின் நிலையைக் கண்டு வருந்தினேன். மிகவும் மெதுவாக, மெல்லிய குரலிலே அவரின் வேதனையைப் பகிர்ந்திடத் துணிந்தார். தான் இலண்டன் வந்தது முதல், பல நல்ல வேலைகளில் அதிகமான பணம் சம்பாதித்ததாகவும், உறவுகள் அனைவரும் மிகவும் அன்போடு அவரிடம் பழகியதையும் எடுத்துச் ச�ொன்னார். இன்னும் அவரிடத்தில் ப�ொருள்வளம் அதிகம் இருப்பதையும், பணத்திற்கான தேவையே இல்லை என்பதையும் மன நிறைவ�ோடு ச�ொன்ன அவரிடத்தில், “எனக்குத் தேவை ப�ொருள்வளம் அன்று; உடல் நலம் ஒன்றே” என்ற ஏக்கம் தெரிந்தது. க�ொஞ்சம் வார்த்தைகளில் தடுமாறியவராய் அவரின் வாழ்க்கையைப் பகிர்ந்தார். “பணம் பணம்னு ஓடி ஓடி சம்பாதிச்சேன். அலைந்து திரிந்து, சாப்பிடாம கூடச் சம்பாதிச்சேன். வாழ்க்கையில் பணம்தான் நிம்மதினு நெனச்சேன்...” க�ொஞ்சம் ஆதங்கத்தோடு த�ொடர்ந்தார். “என் மருத்துவம் கூட இலவசம் என்பதால் என் பணம் தேவையற்ற ஒன்றாய் இருக்கு… எனக்குத் தேவையெல்லாம் நல்ல உடல்நலம்தான்…” என்று கலங்கிய கண்கள�ோடு தன் வேதனையைக் க�ொட்டியப�ோது, அவரின் விழிகளின் நீர�ோடு, கைகளில் இருந்த பழச்சாறும் க�ொஞ்சம் சிந்தியது. பழச்சாறு இருந்த குவளையை ஓரமாய் வைத்துவிட்டுப் பாரமாய் மனதில் இருந்த பலவற்றைப் பகிர்ந்தார். உடல் நலமற்ற பிறகு ஏற்பட்ட உள்மன ஏக்கங்களையும் உறவுகளிடம்
கிடைக்காத பாசத்தையும் அதனால் ஏற்பட்ட பாரத்தையும் பகிர்ந்தார். “பணம் தேவைதான். ஆனால் அதுமட்டும் உயிர் காக்காது” என்றவாறு த�ொடர்ந்தார். “உடல் நலம் இல்லாம என்ன வளம் இருந்து என்ன செய்ய. மூணு வருசமா உடல் நலம் இல்லாம கவலைப்படுறேன். வாழ்க்கை முடிஞ்சுடும�ோனு பயப்படுறேன். என் மனைவி பிள்ளைங்க என்ன ஆவாங்கனு அவதிப்படுறேன்” என்று அழக்கூடச் சக்தியின்றிக் கதறினார். “என்னையும் மதிச்சு என்ன பார்த்துப் பேசுனீங்களே தம்பி. ர�ொம்ப நன்றி” என்றார். “உடல்நலம் ஒன்றுதான் உயர்வான வளம். எத்தனை வளமிருந்தும் அதை அனுபவிக்க உடல்நலமில்லையெனில் என்ன பயன்” என்று ச�ொன்னவர் “தம்பி நல்லா உடம்பப் பார்த்துக்குங்க” என்று எனக்கு ஆறுதல் கூறினார். அன்று அந்த அறையில் இருந்து அந்தப் பிரமாண்டமான மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது என்னிலே ஏகப்பட்ட எதார்த்தங்கள் கண்முன் வந்தன. மனிதர்கள் வாழ்வில் பணத்தை மட்டும் தேடி அலைந்து நிம்மதியை இழக்கும் சூழல், பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று பணத்தை வைத்து அராஜகம் செய்யும் சூழல், பணத்தை வைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அநீதச் சூழல், பணத்தைக் க�ொடுத்து அநியாய அரசியல் செய்யும் நிலை... ப�ோன்றவற்றையெல்லாம் நினைக்கையில் இலண்டன் நகரில் இருந்து க�ொண்டு என் மனம் தமிழ்நாட்டுக்குத் தாவியது. தமிழ் மண்ணிலே உயர்வளம் பல படைத்த, மேனாள் முதல்வர், உடல்நலம் இல்லாமல் மரணித்த நிலையைக் கண்டு பரிதாபப்பட்டேன். இந்த இறப்பில் இருந்து பாடம் கற்க வேண்டியவர்கள் அதைச் செய்யாமல், மீண்டும் பணத்தை விதைத்து அறுவடை செய்ய முயலும் முட்டாள்தனமான செயல்களை எண்ணி வேதனைப்பட்டேன். “ஆட்சி அதிகாரம் இருந்தும் ஆள்பலம் இருந்தும், பண பலம் இருந்தும் உடல்நலம் இன்றி என்ன பயன்” என்று எனக்குள்ளே ஒலித்தது. முகம் அறியாத ஒரு நல்ல மனிதர், அவரின் துயரங்களின் வழியாக நான் கற்றுக் க�ொண்ட வாழ்க்கைப் பாடத்தை அசைப�ோட்டு அங்கிருந்து புறப்படும்போது எனக்குள்ளே உதித்தது, என் வாழ்வில் ‘உடல்நலம் ஒன்றே… உயர்வளம்’ என்று. மானிடர் அனைவரும் ‘உடல்நலம் ஒன்றே… உயர்வளம்’ என்று உணர்ந்து வாழும்போதும், அடுத்தவர் உடல்நலத்தில் அக்கறை க�ொண்டு வாழும்போதும் உண்மையான மனிதத்தை வளர்த்திடலாம். அப்போது ‘இதுவன்றோ மனிதம்’ என்று மானிடர் மனிதத்தின் சாட்சியாய் இம்மண்ணில் வாழ்ந்திடுவர்!
தவமெனும் நெருப்பில் உடலெனும் ப�ொன்னையிட்டுப் புடமிட்டால் உடல் ஒளிரும். (குறள் 267)
2018 19
ப�ொய்த் தகவல்களும் அமைதிக்கான இதழியல் த�ொழிலும்
2018 -
உண்மை உங்களுக்கு விடுதலையளிக்கும் (ய�ோவான் 8:32) அன்பு உடன்பிறப்புகளே, தகவல் த�ொடர்பு என்பது நமக்கான கடவுளின் திட்டம். சமுதாய இணக்கத்திற்கான வழிமுறை. உண்மையுள்ள, அழகிய, நல்லதான அனைத்தையும் பிறருக்கு எடுத்துரைக்கவும், பகிர்ந்துக�ொள்ளவும் கடவுளின் சாயலாய்ப் படைக்கப்பட்டுள்ள நம்மால் முடியும். நம்மைப் பற்றிய, நம்மைச் சூழ்ந்துள்ள உலகு பற்றிய அனுபவங்களை விளக்க முடியும். இவ்வாறாக,
வரலாறு அனைத்தையும் நினைவுகூரவும், நிகழ்வுகளைப் புரிந்துக�ொள்ளவும் முடியும். அதேசமயம், தற்பெருமைக்கும் தன்னலத்திற்கும் நாம் ஆட்படுவதன் மூலம், தகவல் பரிமாற்றத்திற்கான நமது திறமைகளைச் சீர்குலைக்கவும் முடியும். த�ொடக்கத்தில் நடந்துள்ள காயின்-ஆபேல், பாபேல் க�ோபுரக் கதைகளிலிருந்து இவ்வுண்மையை நாம் உணரலாம் (த�ொ.நூல் 4: 4-16; 11: 1-19). 2018 20
தனிப்பட்ட வகையிலும் சமூக அளவிலும், தகவல்களைத் திரிப்பது என்பது, நமது நல்லியல்பில் ஏற்பட்டுள்ள பிறழ்வுகளை உணர்த்தும். இதற்கு மாறாக, கடவுளின் திட்டத்தில் நாம் உண்மை உள்ளவர்களாய் இருப்போமானால் நல்லனவற்றை ஆய்ந்தறியவும், உண்மைகளைத் தேடி அடையவும் தகவல் த�ொடர்பு சிறந்த கருவியாக அமையும். விரைவாக மாறிவரும் இன்றைய தகவல் த�ொடர்பு மற்றும் கணினித் த�ொழில்நுட்ப உலகில், ப�ொய்த் தகவல் பற்றி நிரம்பவே பார்த்து வ ரு கி ற�ோ ம் . இச்சூழல்கள்தான், தகவல் த�ொடர்பு நாளுக்கான எனது இச்செய்தியில், உண்மை பற்றிய சிந்தனை மீது கருத்துச் செலுத்துமாறு எனது எண்ண ஓட்டங்களைத் திருப்பிவிடுகின்றேன். 1972இல், ‘உண்மைக்கான சேவையில் சமூகத் தகவல் த�ொடர்புகள்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட திருத்தந்தை 6ஆம் பவுல் த�ொடங்கி, த�ொடர்ந்து பணியாற்றிய எனது முன்னோடிகள் அனைவருமே இக்கருத்தையே திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்கள் வகுத்துச் சென்ற பாதையில் நடைப�ோடும் நாமும், தகவல் பரிமாற்ற மாண்பினை மீட்டுருவாக்கம் செய்யவும், தகவல் த�ொடர்பாளர்கள் உண்மையை வெளியிட உதவும் வகையில் நமது கடப்பாட்டை நல்கவும், நமக்குள்ள கூட்டுப் ப�ொறுப்பை இங்கே உணர்த்திட விரும்புகிறேன்.
தவம் செய்யாமல் தவக்கோலம் மேற்கொள்ளல் வீண். (குறள் 262)
ப�ொய்த் தகவல்களின் ப�ொய்ம்மை எத்தகையது? ப�ொய்த் தகவல்கள் பற்றிப் பெரிய அளவில் கருத்து ம�ோதல்களும், விவாதங்களும் நடைபெற்றுள்ளன. ப�ொதுவாக, மரபு வழிப்பட்ட தகவல் த�ொடர்பு ஊடகங்கள் மூலம், நடவாததை நடந்தது ப�ோலப் பரப்பப்படுவதைப் ‘ப�ொய்த் தகவல்கள்’ என்ற ச�ொற்றொடர் குறிக்கின்றது. வாசகர்களைக் குழப்பி, திசை திருப்பும் ந�ோக்கில், முற்றிலும் புறம்பான அல்லது திரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தவறான தகவல்களைத் தருவது பற்றியது இது. இத்தகைய ப�ொய்த் தகவல்களைப் பரப்பும் செய்கை தங்களின் தனிப்பட்ட ந�ோக்கத்திற்காக, அரசியல் ஆதாயத்திற்காக அல்லது ப�ொருளாதார லாபத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றது. ப�ொய்யான செய்திகளை, உண்மைச் செய்தியைப் ப�ோல் காட்டுவதிலும், நடக்காததை நடந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கச்
செய்வதிலும் சில ஊடகங்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப வெற்றி கண்டு பயனடைகின்றன. த�ொன்றுத�ொட்டு இருந்துவரும் மூடநம்பிக்கைகளைத் தூண்டிவிடுவது, பரபரப்பு, கண்டனம், க�ோபம், மன உளைச்சல் உள்ளிட்ட மேல்மட்ட உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதன் வாயிலாக வாசகர்களைக் கவர்ந்து, வெற்றி பெறும் ந�ோக்கத்திற்கு இப்பொய்த் தகவல்கள் பயன்படுகின்றன. சமூக வலைதளங்களின் பயன்பாட்டையும், அவை செயல்படும் முறைகளையும், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் க�ொண்டுவரும், ஆதிக்க சக்திகளின் திறமைகளை அடிப்படையாகக் க�ொண்டு, ப�ொய்த் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ப�ொய்த் தகவல்கள் எத்துணை வேகமாகப் பரவுகின்றன என்றால், அவற்றிற்கெதிரான அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் செய்தியின் வேகத்தையும் கடந்து, அவை தேவையற்ற சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மாறுபட்ட புரிதல்கள் மற்றும் கருத்துகள் பற்றிக் கவலைப்படாமல், தன்னிச்சையாகத் தகவல்களை வெளியிடும் அதே கணினி ஊடகங்களின் வாயிலாகவே எதிர்தரப்பு வாதங்களை எடுத்துவைக்க வேண்டியிருக்கும் சூழலில், ப�ொய்த் தகவல்களின் முகமூடிகளைக் கிழிப்பது அல்லது அவற்றை முற்றிலுமாக நீக்குவதென்பது கடினமான பணியாகவுள்ளது. ப�ோதிய, சரியான
மக்களிடையே செய்தியைப் பரப்புவது என்பது மக்களைக் கட்டியெழுப்புவது, மக்களின் வாழ்வோடு த�ொடர்பிலிருத்தல் என்பது ப�ொருள். தன் துன்பத்தைத் தாங்கி, பிற உயிர்க்குத் துன்பம் தராமல் இருப்பதே தவம். (குறள் 261)
2018 21
நமது ச�ொல்லும் செய்கையும் நம்பகத்தன்மை உள்ளனவாக இருக்கும்போது, ப�ொய்ம்மையிலிருந்து விடுதலைப் பெறுதல், உறவுக்கான அடித்தளம் அமைத்தல் ஆகிய இரு கூறுகளும் நம்மில் குறைவின்றி அமையும். தகவல்களின் அடிப்படையில், வலுவான வகையில், எதிர்த்துப் ப�ோராடக் கூடிய துல்லியமான, ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குரிய சூழல்கள் இல்லாத நிலைமையினைப் பயன்படுத்திக் க�ொண்டு, ப�ொய்த் தகவல்கள் தமது ஆதிக்கத்தை வலிமைய�ோடு செலுத்தி வருகின்றன. ஒருதலைப்பட்சமான, அடிப்படையே இல்லாத, ப�ொய்த் தகவல்கள் பரவுவதில் தங்களை அறியாமலேயே துணை நிற்குமாறு ஊடகங்கள் மக்களைத் திருப்பிவிடுகின்றன. ப�ொய்த் தகவல்கள் பற்றிய ச�ோகமான க�ொடுமை என்னவெனில், நல்லோரைப் ப�ொல்லாராகவும், பகைவர்களாகவும் பூதாகரமாகச் சித்தரித்து அதன் மூலம் பிரச்சினைகளை அவை உருவாக்கிவிடுகின்றன என்பதுதான். ப�ொய்த் தகவல்கள் என்பன சகிப்புத்தன்மையற்ற, அதிவேக உணர்வுநிலை மன�ோபாவத்தின் அடையாளங்களாக உள்ளன. பணிவின்மை, பகைமை ஆகிய எதிர்மறைக் குணங்களையே அவை பரப்புகின்றன. ப�ொய்ம்மையின் முற்றிய விளைவுகள் இவை.
ப�ொய்த் தகவல்களை எங்ஙனம் புரிந்துக�ொள்வது?
ப�ொய்ம்மைக்கு எதிராகப் ப�ோராட வேண்டிய கடப்பாட்டில், நம்மில் யாரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். ஆயினும் இது எளிதான செயலன்று. ஏனெனில் ப�ொய்த் தகவல்கள் மூலம் திட்டமிட்டே உண்மை புறக்கணிக்கப்படுகின்றது. இதற்காக, எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் குளறுபடியான உளவியல் நுட்பங்களும் கையாளப்படுகின்றன. 2018 22
இதில் ஆறுதலான செய்தி என்னவெனில், கல்வித் துறையானது, ஊடகங்களைச் சரியாகப் புரிந்துக�ொள்ளவும், மதிப்பீடு செய்யவும் மக்களுக்கு உதவும் வகையில் நிகழ்ச்சி நிரல்களை வழங்குகிறது என்பதுதான். அத�ோடு, மறந்தேனும் ப�ொய்த் தகவல்களுக்குத் துணை ப�ோகாமல், அவற்றின் முகத்திரையைக் கிழித்தெறிவதற்கான ஈடுபாட்டுடன் எதிர்வினை ஆற்றுதற்குரிய பயிற்சிகளை வழங்குகிறது. அதே ப�ோல் நீதித்துறையும், சில நல்ல செய்தி நிறுவனங்களும் ப�ொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்தப் ப�ோதிய விவேகத்தோடு செயல்பட்டு, ஊடக விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுதற்குரியது. ஆயிரக்கணக்கிலுள்ள கணினி ஊடகப் பதிவுகளைப் பரிசீலித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத் தன்மைகளை ஆராயும் முயற்சியில், புதிய அணுகுமுறைகள், த�ொழில்நுட்ப மற்றும் தகவல் த�ொடர்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மகிழ்ச்சி தருகின்றது. இருப்பினும் ப�ொய்த் தகவல்களை இனம் காணவும், தடுத்து நிறுத்தவும் மிகப் பெரிய அளவிலான, முன்மதியுள்ள, நடுநிலையுணர்வு தேவையாகவுள்ளது. தமக்கு வேண்டாதவர்களை எந்நேரத்திலும், எந்த இடத்திலும், ப�ொய்த் தகவல்களைக் க�ொண்டு தாக்கியழிக்க விரும்புவ�ோர் அணிந்து திரியும் நச்சரவுக்குரிய கபட நாடக முகமூடியைக் கிழித்தெறிவதற்கான ஆற்றல் நமக்குத் தேவை. மனித வரலாற்றின் த�ொடக்க நிலையில் த�ோன்றிய பாம்பும் இதே கபட நாடகத்தையே கையாண்டது. தகவல் த�ொடர்பு வரலாற்றில் முதல் ப�ொய்த்
தீமையைக் குறைக்கவும் நன்மையைக் கூட்டவும் தவத்திற்கு வலிமையுண்டு. (குறள் 264)
தகவலை அஃது உருவாக்கியது (த�ொ.நூ. 3:1–15). மனிதப் பாவம் என்ற ச�ோகக் கதையை அஃது அரங்கேற்றியது. முதற் சக�ோதரக் க�ொலை நடைபெற உதவியது (த�ொ.நூ.4). கடவுளுக்கும், அடுத்திருப்போருக்கும், சமூகத்திற்கும், ஏன், ஒட்டு ம�ொத்த படைப்புகளுக்குமே எதிரான தீய செயல்களை மனித இதயத்துள் புகுத்தியது. திறமைசாலியான, ப�ொய்க்குத் தந்தையான, (ய�ோவா. 8:44) அது, அன்று பயன்படுத்திய கருவியாகிய இப்பொய்த் தகவல், இன்று துல்லியமான மாற்றுருவில், கபடமும் ஆபத்துமான, ச�ோதனையின் கருவியாக மனித இதயத்தில் கருக்கொண்டு, முற்றிலும் பிழையான, கவர்ச்சியான, வாதப் பிரதிவாதங்களை முன்னிறுத்தி வருகின்றது. முதல் பாவ நிகழ்வின்போது, ச�ோதிப்பவன், பெண்ணை, அவளது நண்பன் ப�ோலவும், அவளது நன்மையில் மட்டுமே அக்கறையுள்ளவன் ப�ோலவும் நடித்து அணுகிச் சென்றான். அவளிடத்தில், பாதி உண்மையும், பாதி ப�ொய்யும் கலந்த தகவலாக, “கடவுள் உங்களிடம் த�ோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” (த�ொ. நூ.3:1) என்று கேட்டனன். உண்மையில் கடவுள் ஆதாமிடத்தில், எல்லா மரங்களிலிருந்தும் கனிகளை உண்ண வேண்டாமென்று கூறவில்லை. ஒரே ஒரு மரத்தின் கனியை மட்டும், “நன்மை தீமை அறிதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே” (த�ொ.நூ.2:17) என்றுதான் கூறியிருந்தார். பெண்ணானவள், பாம்பின் பேச்சிலிருந்த பிழையைத் திருத்தியத�ோடு, “த�ோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது; அதைத் த�ொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்” என்று கடவுள் தங்களுக்குக் கூறியதாக (த�ொ. நூ.3:2) அவள் பதிலளித்தாள். அவளின் இந்தப் பதில் சட்டப்பூர்வமான, எதிர்மறையான த�ொனியில் அமைவதாயிற்று. ச�ோதிப்பவனின் திசை திருப்பும் சாமர்த்தியத்தாலும், ப�ொய்த் தகவலாலும் தன்னை இழந்தவளாய் அவள் தவறான வழிக்குக் கடந்து செல்லல் ஆனாள். “நீங்கள் சாகவே மாட்டீர்கள்” (த�ொ.நூ.3:4) என்ற அவனது உறுதியான ப�ொய்யை அவள் செவிமடுத்தாள். இதனைத் த�ொடர்ந்து, அவனது திரித்து உருவாக்கும் செயல்திறனால், ப�ொய்யானது உண்மைப�ோல் த�ோற்றமெடுத்து வெளிப்படலாயிற்று. “நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் ப�ோல் நன்மை தீமை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” (த�ொ. நூ.3:5) என்று அவன் ம�ொழிந்தான். விளைவு? நிரம்பிய வயிறு காமத்தின் கட்டில். (தூய ஜெர�ோம்)
அவர்களின் நன்மைக்காக, தந்தைக்குரிய அன்போடு கடவுள் தந்த கட்டளை, பகைவனின் கவர்ச்சியான ப�ொய்த் தகவல் பரிமாற்றத்தால், தீமை தரும் கட்டளையாக அவளுக்குத் த�ோன்றியது. “அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் கனியைப் பறித்து உண்டாள்” (த�ொ.நூ.3:6). விவிலியத்தின் இக்கதைப் பகுதி, ப�ொய்த் தகவல் பற்றிய நமது சிந்தனை ஓட்டத்திற்கு வெளிச்சமாக உள்ளதெனலாம். ப�ொய்த் தகவல்களில் தீமை பயக்காதவை என்று எவையுமில்லை. மாறாக, ப�ொய்ம்மையை நம்புவதால் படுபயங்கரமான விளைவுகள் ஏற்படக்கூடும். உண்மைய�ோடு மிகச் சிறிதளவே ப�ொய்ம்மை கலந்தால் கூட, பெருமளவிலான ஆபத்துகள் ஏற்படக்கூடும். தகாத வழியில் (சூது வழியே) கிடைக்கும் ப�ொருளை விரும்புவது நமது பேராசையின் இயல்பாகவுள்ளது. ப�ொய்த் தகவல் மூலம் கிடைக்கும் சுவையையும் அங்ஙனமே நமது மனம் விரும்புகிறது. ப�ொய்த் தகவல் த�ொற்றுந�ோய் ப�ோல் வேகமாகப் பரவும் இயல்புடையது. அஃது 2018 23
எத்துணை வேகமாகப் பரவுகிறது என்றால், அதனைத் தடுப்பது என்பது இயலாமல் ப�ோகின்றது. இது, சமூக ஊடகங்களின் வழியாகப் பகிர்ந்துக�ொள்ளப்படும் ஒத்த உணர்வுகளைப் ப�ொறுத்ததன்று. மாறாக, மனித உள்ளங்களில் அஃது ஏற்படுத்தும் தணித்தற்கியலாத பேரார்வத்தின் காரணமாகவே அதன் வேகம் கூடுகிறது. ப�ொருளாதார இலாப ந�ோக்கும், மனிதர்களைத் தங்கள் விருப்பம்போல் நடத்த வேண்டும் என்ற அரசியல் ந�ோக்கும்தான் ப�ொய்த் தகவல்களுக்குத் தீனி ப�ோடுகின்றன. அதிகார ஆசை, விரும்புவதையெல்லாம் துய்க்கும் நுகர்வு கலாச்சாரம் ப�ோன்றவை இதன் துணைக் காரணிகள். இவற்றின் காரணங்களுக்காகப் பரப்பிவிடப்படும் ப�ொய்த் தகவல்கள், நம்மை மிக ம�ோசமான வகையில் பாதிப்புக்குள்ளாக்கி அடிமைப்படுத்துகின்றன. நமது உள்ளார்ந்த சுதந்திரத்தைக் க�ொள்ளையடித்து, நம்மை மூடர்களாக மாற்றும் ந�ோக்கத்தோடு பரப்பி விடப்படும் ப�ொய்த் தகவல்கள் என்ற தீய சக்தி, ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு வேகமாகத் த�ொற்றுகிறது. இதற்கு எதிர்த் திசையில் கல்வி என்ற மாற்றுச் சக்தி பணிபுரிகின்றது. சரியாகத் தீர்ப்பிடுதல், மதிப்பீடு செய்தல், புரிந்துக�ொள்ளல், ஆ ழ்மன த் தி ன் ஆ சைகள ை யு ம் , வி ரு ப ்ப ங ்கள ை யு ம் சரியான திசையில் செலுத்துதல் ஆகிய அறிவை ந�ோக்கி மக்களை அது பயிற்றுவிக்கிறது. தகுதியான இத்தகைய க ல் வி மு றை இ ல்லையெ னி ல் , சரியானது எது, நன்மையானது எது என நமக்குத் தெரியாமல் ப�ோவத�ோடு, ச�ோதனை ஒவ்வொன்றாலும் நாம் இடறல்பட நேரிடும்.
2018 24
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (ய�ோவா. 8:32) ஏமாற்றுக் கருத்துகளால் த�ொடர்ந்து நஞ்சூட்டப்படும்போது நமது உள்ளார்ந்த வாழ்வு இருண்டு ப�ோகக் கூடும். இவ்வாறான நேரங்களில் ‘த�ோஸ்த்தோ வெஸ்கி’ என்ற அறிஞரின் கருத்து நினைவுகூரத்தக்கது. அவர் இவ்வாறு கூறுகின்றார்: “தங்களுக்குத் தாங்களே ப�ொய் பேசுவ�ோர், தங்களின் ச�ொந்த ப�ொய்யையே கேட்கின்றவர்கள் ஆகின்றனர். நாளடைவில் இவர்கள் தங்களிடத்தும் தங்களைச் சுற்றி இருப்பவர்களிடத்தும் இருப்பதான உண்மையிலிருந்து, ப�ொய்யை வேறுபடுத்தி அறியும் திறனை இழந்துவிடுகின்றனர். இதன் விளைவாகத் தங்களுக்கும் தங்களின் அயலாருக்குமான கண்ணியத்தை இழக்கின்றார்கள்ன. இங்ஙனம் சுய மாண்பை இழந்த நிலையில் அன்பு செய்வதை நிறுத்திக் க�ொள்கின்றார்கள். அன்பு செய்யாமலேயே தங்களுக்குரிய இடத்தை மீட்க வேண்டிய நிலையில் தங்களைக் கலவரப்படுத்திக் க�ொண்டு, உணர்ச்சிவயப்பட்ட பாசாங்குகளுக்கும் நாக்கு
செபிக்க வார்த்தைகள் வராதப�ோது இதயத்தின் குரலுக்கு இறைவன் செவிமடுக்கின்றார்.
ருசிக்கும் அடிமையாகின்றனர். தங்களின் இழிநிலையில் விலங்குப் புணர்ச்சிக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவை யாவும் தங்களிடத்தும் அடுத்தவரிடத்தும் த�ொடர்ந்து ப�ொய் பேசுவதன் விளைவுகள் ஆகும்” (கரமாச�ோ சக�ோதரர்கள் II:2). இத்தகையச் சூழலில் ‘நம்மை நாமே காத்துக்கொள்வது எங்ஙனம்?’ என்ற கேள்வி எழுகின்றது. த�ொற்றுந�ோயைப�ோல் வேகமாகப் பரவி வரும், ப�ொய்ம்மை என்னும் ந�ோயாகிய நச்சுத்தன்மைக்கு எதிரான சரியான மாற்று மருந்து, உண்மை மட்டுமே. உண்மையினால் மட்டுமே ப�ொய்ம்மை நஞ்சிலிருந்து நாம் குணம் பெற முடியும். கிறிஸ்துவ மறையில் உண்மை என்பது ப�ொருண்மை பற்றிய க�ோட்பாட்டிலிருந்து மாறுபட்டது ஆகும். குறித்த ஒரு ப�ொருள் உண்மையா, இல்லையா எனத் தீர்மானிக்கும் தத்துவமும் உண்மை பற்றிய எதார்த்தமும் வெவ்வேறானவை.
சடப்பொருள் உண்மை என்பது, மறைந்துள்ள ஒன்று வெளிச்சத்துக்கு வருதல் ஆகும். பழைய கிரேக்கத் தத்துவம் இதனை ‘அலெத்தேயா’ (Aletheia), அஃதாவது, ‘மறைவாக உள்ளதை வெளிப்படுத்துவது’ என்று விளக்கமளிக்கின்றது. ஆனால், உண்மை என்பது நமது ஒட்டும�ொத்த வாழ்வையும் உள்ளடக்குவது. விவிலிய ம�ொழியில் இது ‘ஆமென்’ என்பதற்குச் சமமானது. நமது வழிபாட்டு மன்றாட்டுகள் எல்லாம் ‘ஆமென்’ என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இறுதியில் பெற்றிருக்கும். அவ்வகையில் உண்மை என்பது மக்களின் ஏக�ோபித்த ஆதரவைப் பெற்றதாகும். ‘ஆமென்’ என்பதுப�ோல், உண்மையும், உள்ளார்ந்த ஆதரவு, கலப்பற்ற ப�ொருண்மை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. விழாமலிருக்க ஒருவர் உண்மை என்னும் தூணின்மேல் சாய்ந்து நிற்கலாம். இங்ஙனம் த�ொடர்புபடுத்தும்போது, நம்பகமான, சாய்வதற்கு ஏற்றதான அது, எது என தேடும்போது, ‘உயிருள்ள கடவுள் அது’ என்ற விடைதான் கிடைக்கும். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (ய�ோவா. 14:6) என்று இயேசுவினால் கூற முடிகின்றதென்றால் அவர் உண்மை என்ற ஒன்றாக இருப்பதால்தான். நமக்குள் நாம் அதை அனுபவிக்கும்போது, நம்மை அன்பு செய்யும் அந்த ஒருவருக்கு நாமும் நம்பிக்கைக்கு உரியவராய்த் திகழும்போது அதை நாம் க ண் டு க�ொ ள் கி ன ்ற ோ ம் ; திரும்பவும் கண்டுபிடித்தவர் ஆகின்றோம். அது மட்டுமே நம்மை விடுவிக்கும் ஆற்றலுடையது. ‘உண்மை உ ங ்க ளு க் கு விடுதலையளிக்கும்’ என்ற இயேசுவின் கூற்றுக்குப் ப�ொருளும் இதுவே. நமது ச�ொல்லும் செய்கையும் நம்பகத்தன்மை உள்ளனவாக இ ரு க் கு ம்போ து , ப�ொய்ம்மை யி லி ரு ந் து விடுதலை பெறுதல், உறவுக்கான அடித்தளம் அமைத்தல் ஆகிய இரு கூறுகளும் நம்மில் குறைவின்றி அமையும். உண்மை எது எனத் தீர்மானிக்க வேண்டுமாயின், த னி மை ப ்ப டு த் து த ல் , பிரித்தாளுதல், எதிர்த்தல்
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் ப�ோலப் பிதற்ற வேண்டாம். (மத். 6:7)
2018 25
ஊக்குவிக்கின்ற, நன்மையில் நாட்டம் க�ொண்டுள்ள, ம�ொழியைக் கையாள்வதில் ப�ொறுப்புள்ள மக்கள்தாம், ப�ொய்ம்மைக்கான சரியான மாற்று மருந்து. ப�ொய்ம்மை ப�ொறுப்போடு பரப்பப்படுகின்றது என்ற சூழலில், செய்தித்தாள் ஆசிரியர்களின், செய்தியின் காப்பாளர்களின் த�ோள்மேல் அதிகப் ப�ொறுப்பு என்ற பளு உள்ளது எனலாம்.
முதலான எதிர்மறைகளையும், ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல், அனைத்திலும் நல்லனவற்றை உயர்த்திப் பிடித்தல் உள்ளிட்ட நேர்மறைகளையும் நாம் தீர்மானிக்க வேண்டும். நமது அனுபவத்திற்குப் புறம்பான, ஒன்றுக்குள் திணிக்கப்பட்டுள்ள, ஊகத்தின் (அனுமானத்தின்) அடிப்படையில் ஏற்க வேண்டிய எவையும் உண்மை அல்ல. மாறாக, மாந்தரிடையே உள்ள சுதந்திரமான உறவுநிலையில், ஒத்த உணர்வோடு செவிமடுக்கும் சூழலில் அது பரிணமித்து ஊற்றெடுக்கின்றது. உண்மை பற்றிய நமது தேடலில் ப�ொய்ம்மை நமது வழியில் ஊடுருவலாம். அதற்காக நாம் உண்மை பற்றிய நமது ஆய்வை நிறுத்திக் க�ொள்ள முடியாது. மேலும் ஓர் உண்மை, வாதத் திறமையால் குற்றம் குறையே இல்லாததுப�ோல் நிலைநாட்டப்படலாம். ஆயினும் அங்ஙனம் நிலைநாட்டப்படும் உண்மை, ஒருவரைப் புண்படுத்துமேயானால், ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துமேயானால், அது சரியானதாகத் த�ோன்றினாலும் அதனை உண்மை என்று ஏற்க முடியாது. ஒன்று உண்மையா, ப�ொய்யா என்பது அதனால் விளையும் தூய அல்லது தீய பலனைக் க�ொண்டே தீர்மானிக்கப்படுதல் வேண்டும். அது சண்டைச் சச்சரவுகளை ஏற்படுத்துகிறதா? கலங்கத்தை ஊக்குவித்துப் பிரிவினைக்கு வித்திடுகிறதா? அல்லது இவற்றிற்கு மாறாக, ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கும் பயன்தரும் முடிவை ந�ோக்கி எழுகின்ற, கருத்துகள் நிறைந்த, முதிர்ச்சியான சிந்தனைகளுக்கும் வழிநடத்திச் செல்கின்றதா? என்பனவற்றைப் ப�ொறுத்தே அதன் உண்மைத் தன்மை இனம் காணப்படுதல் வேண்டும்.
அமைதியளிப்பதே உண்மைச் செய்தியாகும்.
ப�ொய்ம்மைக்கான முறிவு மருந்து அதனை அழிப்பதற்கான வியூகம் அன்று. மாறாக, நன்மக்களை உருவாக்குதல் ஆகும். பேராசையற்ற, செவிமடுக்கத் தயாராக உள்ள, உண்மையை வெளிக்கொணரும் ப�ொருட்டு, ஆக்கப்பூர்வமான விவாதங்களை 2018 26
இன்றைய உலகில், செய்தித்தாள்களை நிர்வகிப்பது என்பது, எப்படிப் பார்த்தாலும், இலாபகரமான ஒரு வேலை அன்று. அஃது ஒரு மறைப்பணி. பரபரப்பான, சுடச்சுட வரும் செய்தித்தாளுக்காகப் பைத்தியமாகத் திரிபவர்களுக்குத் தீனி ப�ோடுவதை ந�ோக்கமாகக் க�ொண்டவர்களிடையே, ‘செய்திகளின் இதயம் என்பது யாது?’ என்பது உணரப்படுதல் வேண்டும். எத்துணை வேகமாக அல்லது விரைவாகச் செய்தி தரப்படுகின்றது என்பதைய�ோ, அது வாசகர்கள்மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தைய�ோ ப�ொறுத்ததன்று. மாறாக அஃது உருவாக்கும் மக்களைப் ப�ொறுத்ததே. மக்களிடையே செய்தியைப் பரப்புவது என்பது மக்களைக் கட்டியெழுப்புவது, மக்களின் வாழ்வோடு த�ொடர்பிலிருத்தல் என்பது ப�ொருள். செய்திகளின் துல்லியம், செய்திகளின் மூலம் பற்றி நம்பகத்தன்மை, தகவல் த�ொடர்பைக் காத்து நிற்றல் என்பனவெல்லாம் நல்லனவற்றை ஊக்குவித்தல், நம்பகத்தன்மையை உற்பத்தி செய்தல், மக்களிடையே ஒருமைப்பாட்டையும் அமைதியையும் ஏற்படுத்துதல் என்ற பரந்துபட்ட ந�ோக்கத்திற்காக அமைவனவாகும். எனவே, அமைதிக்கான தகவல் பரிமாற்ற ஊடகங்களை ஊக்குவிக்குமாறு நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அங்ஙனமாயின் தீவிரப் பிரச்சினைகளைத் தவிர்க்கின்ற, உணர்ச்சிப் பரிமாற்ற ஓலங்களைப் புறந்தள்ளுகின்ற, காரசாரமற்ற தகவல் பரிமாற்றங்களை மட்டுமே நான் முன்னிறுத்துவதாக யாரும் கருத வேண்டாம். மாறாக, உண்மைகளைத்
ந�ோன்பு ஆன்மாவைக் கழுவுகின்றது. (தூய அகஸ்தினார்)
தாங்கி வருகின்ற, ப�ொய்ம்மைக்கு எதிரான வெற்று ஆரவார முழக்கங்களையும், உணர்ச்சிகளைத் தூண்டும் ஆபாசமான தலைப்புகளையும் தவிர்க்கின்ற செய்திப் பரிமாற்றச் சாதனங்களையே நான் கருத்தில் க�ொள்கின்றேன் என்பதும், மக்களால் மக்களுக்காக உருவாகும் செய்திகளைத் தாங்கி வரும் ஊடகங்களையே நான் வரவேற்கின்றேன் என்பதும் உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கட்டும். குறிப்பாக, உலகின் பெரும்பான்மை மக்களாகத் திகழ்கின்றவர்கள், தங்களின் குரல்கள் எடுபடாத சாமானியர்களின் சேவைக்காக இயங்குகின்ற தகவல் பரிமாற்றச் சாதனங்களையே நான் முன்னிறுத்துகின்றேன் என்பது தெளிவாக விளங்கட்டும். பரபரப்பூட்டும் அவசரச் செய்திகள்மீது மட்டுமே கருத்துச் செலுத்துவதை முதன்மை ந�ோக்கமாகக் க�ொள்ளாமல், ஆழமான புரிதல்களைத் தூண்டுகின்ற வகையில் சிக்கல்களின் அடித்தளங்களை ஆராய்கின்ற, சிக்கல்களுக்கான தீர்வுகளை ந�ோக்கி மக்களைத் தட்டியெழுப்புகின்ற, பண்பு குலையாத செயல்முறைகளுக்கு முதன்மை இடம் தருகின்ற செய்தி பரிமாற்றச் சாதனங்களையே நான் பெரிதும் முன்மொழிகின்றேன். துரிதமாகப் பரவுகின்ற, கூச்சலிடுகின்ற, ப�ோட்டிப் பந்தயங்கள், ச�ொல்லாடலில் வன்முறைகள் ஆகியவற்றிற்கு மாறாக அமைகின்ற தகவல் பரிமாற்றத் த�ொழிற்சேவைகளுக்கு நான் முன்னுரிமை தருகின்றேன்.
உண்மையுள்ள, அழகிய, நல்லதான அனைத்தையும் பிறருக்கு எடுத்துரைக்கவும், பகிர்ந்துக�ொள்ளவும் கடவுளின் சாயலாய்ப் படைக்கப்பட்டுள்ள நம்மால் முடியும்.
இறுதியாக, தூய பிரான்சிஸ் அசிசியாரின் செபத்தைத் தியானித்துத் தூண்டுதல் பெறும் வகையில், நேரிடையாக உண்மையை ந�ோக்கி நமது சிந்தனைகளைத் திருப்புவ�ோம்.
ஆண்டவரே, எங்களை உமது அமைதியின் கருவிகளாக ஆக்கியருளும்.
தகவல் பரிமாற்றத்தில் மறைந்துள்ளதும், ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பதுமான தீமைகளை நாங்கள் இனங்காணச் செய்தருளும். எங்களின் தீர்ப்புகளிலுள்ள நஞ்சினை அகற்றிட எங்களுக்கு உதவியருளும்.
அடுத்தவரைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் எங்களின் உடன்பிறந்தார் என்பதனை நாங்கள் மறவாதிருக்கச் செய்தருளும். நீர் நம்பிக்கையுள்ளவரும், நம்புவதற்கான அடித்தளமுமாய் இருக்கின்றீர். எங்களின் ச�ொற்கள் நன்மைத்தனத்தின் வித்துகளாக விளங்கச் செய்தருளும். சத்தங்கள் மிகும் இடங்களில் கவனித்துக் கேட்க எங்களைப் பழக்கியருளும்.
குழப்பங்கள் நிறைந்த இடத்தில் இணக்கத்தைத் தூண்டிட எங்களுக்கு உதவி செய்தருளும். தெளிவில்லாத இடங்களில் நாங்கள் தெளிவினை ஏற்படுத்த எங்களுக்கு உதவியருளும்.
புறந்தள்ளுதல் மேற்கொள்ளப்படும் இடங்களில் ஒற்றுமையை ஏற்படுத்த எமக்கு உதவும். உணர்ச்சிகள் மிகுந்த இடங்களில் நாங்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் செய்தருளும். மூடநம்பிக்கைகள் உள்ள இடங்களில் நம்பகத்தன்மை விழித்தெழ நாங்கள் உதவிடச் செய்தருளும்.
வெறுப்புள்ள இடங்களில் மனித மாண்பு ப�ோற்றப்பட நாங்கள் உதவப் பணித்திடும். ப�ொய்மையுள்ள இடங்களில் உண்மை உயிர்த்தெழ நாங்கள் உதவிடச் செய்தருளும். இங்ஙனம்
ந�ோன்பு இல்லாத் தவம் பயனற்றது; வீணானது. (தூய பாசில்)
2018 27
- .
ம. மரிய லூயிஸ், ச.ச.
ஒரு மகனின் வாக்குமூலம்: “என் தந்தையை எனக்குப் பிடிக்காது; அவர் ஓர் ஏழை மனிதர். என்னுடைய நண்பர்களுடைய அப்பாக்களைவிட அவர் கடினப்பட்டு உழைத்தார் எனினும், வாழ்க்கையில் பெரிதாக வெற்றி பெறவில்லை. அவர் எனக்குப் பெரிய உந்துசக்தியாகவ�ோ எடுத்துக்காட்டாகவ�ோ த�ோன்றவில்லை. ஒருநாள் அவரிடம் கேட்டேன், ‘நாம் ஏன் பணக்காரராக இல்லை?’ என்று. அவர் திரும்ப என்னிடம் கேட்டார், ‘நாம் பணக்காரராக இல்லை என்று யார் ச�ொன்னது? பணக்காரராக இருப்பது என்பது, நாம் எவ்வளவு வைத்திருக்கிற�ோம் என்பதைப் ப�ொறுத்து அன்று; மாறாக, எவ்வளவு க�ொடுக்கிற�ோம் என்பதைக் க�ொண்டே அளவிடப்படுகிறது. உண்மையில், நீ க�ொடுக்கும்போதுதான் அதிக மகிழ்ச்சியைப் பெறுகிறாய்!’ என்று கூறினார். அவருடைய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியைக் க�ொடுக்கவில்லை. நான் வளர்ந்த பிறகு என் தந்தையைப் ப�ோல ஏழையாக இருக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். என் தந்தையைவிட வெற்றிகரமான மனிதனாக நான் மாற விரும்பினேன். நான் படித்து முடித்து வெளிநாட்டில் வேலையில் சேர்ந்தேன். ‘புத்தாண்டுக்கு வீட்டிற்கு வருகிறாயா?’ என்று என் தந்தை அலைபேசியில் அழைத்து என்னைக் கேட்டார். ‘இந்த ஆண்டு என்னால் வர முடியாது. நான் மிகவும் வேலையாக இருக்கிறேன். 2018 28
அடுத்த ஆண்டு பார்க்கலாம்’ என்று கூறிப் பேச்சைத் துண்டித்தேன். நான் வீட்டிற்கு வந்தப�ோது, என் தந்தை உயிர�ோடு இல்லை. அவருடைய பெட்டியிலிருந்த ப�ொருள்களை நான் பார்த்துக் க�ொண்டிருந்தப�ோது, என் கண்ணில் சில கடிதங்கள் புலப்பட்டன. அவற்றைப் பார்த்த எனக்குத் தூக்கிவாரிப் ப�ோட்டது. அந்தக் கடிதங்களில் இருந்த விலாசத்தைத் தேடிப் ப�ோனேன். அது மாற்றுத்திறனாளிகளுக்கான ஓர் இல்லம். அங்கே நான் சென்று சேர்ந்தப�ொழுது, முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார் நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி. ‘இந்தக் கடிதங்களில் எனக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ளீர்கள். நான் உங்களுடைய இல்லத்திற்கு நன்கொடை வழங்கியதாக தெரிவித்துள்ளீர்கள். அதில் ஏத�ோ
உண்மையான செல்வம் என்பது சேர்த்து வைப்பதில் இல்லை; க�ொடுத்து மகிழ்வதில்தான் உள்ளது
ஊனைத் தின்று, ஊனை வளர்ப்பவன் எவ்வாறு அருளாளன் ஆக இயலும்? (குறள் 251)
தவறு நிகழ்ந்திருக்க வேண்டும். உண்மையில் நான் எந்த நன்கொடையும் உமது இல்லத்திற்கு இதுவரை வழங்கவில்லை’ என்று நான் ச�ொல்லிக்கொண்டே ப�ோக, என்னை இடைமறித்த அந்தப் பெண்மணி, ‘இதில் தவறு எதுவும் நிகழவில்லை; உம்முடைய தந்தை உம்மைப் பற்றி நிறையச் ச�ொல்லியிருக்கிறார். எங்களுடைய பிரச்சினைகளை மறந்து நாங்கள் நம்பிக்கைய�ோடும் கனவுகள�ோடும் வாழ எங்களுக்கு அவர்தான் உதவினார். இங்கிருக்கும் குழந்தைகள் அவரைக் காணாமல் மிகுந்த கவலையில் உள்ளனர். ஏனெனில் அவர்களுடைய முகங்களில் புன்னகையை வரவழைத்தவர் அவர்தான். இங்குள்ள பலருடைய வாழ்க்கைக்குப் ப�ொருள் க�ொடுத்தவரும் அவர்தான். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதாலேயே அவர் த�ொடர்ந்து உழைத்தார். அவருடைய உடல்நலனில் கூட அவர் அக்கறை எடுத்துக்கொள்ளவே இல்லை. தன்னலமில்லாத தனிநிகர் மனிதர் அவர்!’ இவ்வாறு பேசிக்கொண்டே என்னிடம் ஒரு பரிசை அளித்தார் அந்தப் பெண்மணி. ‘இதில் என் பெயர் எழுதப்பட்டுள்ளது. எனக்கு நன்றி புனிதமடைய எளிய வழி ந�ோன்பு. (தூய ஜெர�ோம்)
தெரிவித்துள்ளீர்கள். ஆனால் நான் நன்கொடை எதுவும் வழங்கவில்லையே!’ என்று நான் மீண்டும் மறுப்புக் கூற, ‘உம் தந்தைதாம் உம்முடைய பெயரில் நன்கொடைகளைக் க�ொடுத்தார்’ என்று கூறினார். என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என் தந்தை மீண்டும் ஒருமுறை என் உள்ளத்தில் பேசுவதாக உணர்ந்தேன்; ‘பணக்காரராக இருப்பது என்பது, நாம் எவ்வளவு வைத்திருக்கிற�ோம் என்பதைப் ப�ொறுத்து அன்று; மாறாக, எவ்வளவு க�ொடுக்கிற�ோம் என்பதைக் க�ொண்டே அளவிடப்படுகிறது’. எவ்வளவு பெரிய உண்மையை என் தந்தை அமைதியான முறையில் எனக்குச் ச�ொல்லிக் க�ொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரைப்போய் எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் இதுநாள்வரை ச�ொல்லி வந்தேன். அவர் வெற்றிகரமான மனிதராக வாழவில்லை என்று குறைகூறி வந்தேன். நாங்கள் பணக்காரராக இல்லாமல், ஏழ்மையிலேயே வாழ்ந்து வந்ததாக நான் வருந்தியிருக்கிறேன். ஆனால், இவையெல்லாம் எவ்வளவு ப�ொய்யானவை? தவறான புரிதல்கள்? உண்மையான செல்வம் என்பது சேர்த்து வைப்பதில் இல்லை; க�ொடுத்து 2018 29
மகிழ்வதில்தான் உள்ளது என்பதை நான் முதன் முறையாக உள்ளத்தில் ஆழமாக உணரத் த�ொடங்கினேன்.”
எனக்கும் என் நண்பருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்:
“உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஐந்து பேருடைய பெயர்களைக் கூறு.” “எனக்குத் தெரியாது.” “கடந்த ஐந்து முறை உலக அழகிப் பட்டம் வென்றவர்களுடைய பெயர்களைக் கூற முடியுமா? “சரியாக நினைவிலில்லை.” “ந�ோபல் பரிசு வென்ற கடைசி பத்துப் பேருடைய பெயர்களைக் கூற முடியுமா?” “நிச்சயமாக எனக்குத் தெரியாது.” ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை வாசிக்கிறேன் என்றாலும், உண்மையில் நேற்றைய செய்தித்தாளின் தலைப்புச் செய்தியை என்னால் நினைவுக்குக் க�ொண்டுவர முடியவில்லை. மேலே கேட்கப்பட்ட வினாக்கள�ோடு த�ொடர்புள்ள மனிதர்கள் எல்லாருமே அவரவர் துறையில் சாதனையாளர்கள்தான். அவர்கள் எல்லாராலும் கைத்தட்டிக் க�ொண்டாடப்பட்டவர்கள்தான். இருப்பினும் கைத்தட்டல்கள் மறைந்து ப�ோகின்றன! விருதுகள் மறக்கப்படுகின்றன!
‘பணக்காரராக இருப்பது என்பது, நாம் எவ்வளவு வைத்திருக்கிற�ோம் என்பதைப் ப�ொறுத்து அன்று; மாறாக, எவ்வளவு க�ொடுக்கிற�ோம் என்பதைக் க�ொண்டே அளவிடப்படுகிறது.’ ‘சரி, பின்வரும் வினாக்களுக்காவது விடையளிக்க முடியுமா?’ என்று திரும்பவும் என்னிடம் கேட்டார் என் நண்பர். “பள்ளி வாழ்க்கையில் உங்களை மிகவும் கவர்ந்த ஐந்து ஆசிரியர்கள் யாவர்?” “வாழ்க்கையின் சவாலான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவி செய்த மனிதர்கள் ஐந்து பேரைக் கூற முடியுமா?” “மிக முக்கியமான விஷயங்களை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஐந்து நபர்களைக் கூறுக.” “சிறப்பானவனாக உன்னை உணரவைத்த ஐந்து பேரைக் கூறு பார்க்கலாம்”. “நீ மகிழ்வாகப் ப�ொழுதைக் கழிக்க விரும்பும் ஐந்து நபர்கள் யாவர்?” மேற்கண்ட ஐந்து வினாக்களுக்கும் பதிலளிப்பது எளிதானவைதான். நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியவர்கள் அதிக விருதுகளைப் பெற்றவர்கள�ோ அல்லது மிகுந்த பணம் உடையவர்கள�ோ அல்லர். இந்த உலகம் சாதாரண மனிதர்களால் நிரம்பியுள்ளது. அவர்கள்தான் இவ்வுலகை வாழ்வதற்கேற்ற சிறந்த இடமாக நமக்கு மாற்றித் தருகிறவர்கள். அவர்களைத்தான் நாம் க�ொண்டாட வேண்டும். அவர்களுடைய நினைவுகளைத்தான் நாம் ப�ொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும். சாதாரண மனிதர்கள்தான் அசாதாரண செயல்களைச் செய்கின்றனர். சாதாரணமாக இருப்பதே பல வேளைகளில் சிறப்பானதுதான். இப்படி ஏன் நாம் சிந்திக்கக் கூடாது? 2018 30
மனத்தாங்கல் இருப்பவரை மன்னித்துவிட்டு மன்றாடச் செல்லுங்கள். (மாற். 11:25)
பேட்ரிக் மத்தியாஸ், ச.ச.
04 பிப்ரவரி
ப�ொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு ய�ோபு. 7:1-4: 6-7: 1 க�ொரி. 9:16-19: 22-23 மாற்: 1:29-39
முதல் வாசகத்தில் ய�ோபுவின் வாழ்க்கை, ‘மண்ணில் வாழ்வது ப�ோராட்டம்’ என்று நமக்கு உணர்த்துகின்றது. கிரக�ோரி ஸ்காட் பைக் என்பவர், தமது “கரடு முரடான சாலை” என்ற நூலில், ‘வாழ்க்கை கடினமானது’ என்ற கருத்தை உணர்த்துவார். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாயினும் கடவுளின் கரம் நம்மைத் தேற்றுகின்றது. துன்பத்தில் கடவுள் நம்மோடு நெருக்கமாக இருக்கிறார். “என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். நான் சதைய�ோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன்” (ய�ோபு 19:25,26) என்று ய�ோபு உறுதி க�ொள்கின்றார். “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்” என்று திருப்பாடல் 34:18இல் கூறப்படுகின்றது.
இறைவன�ோடு சேர்ந்திருந்தாலும், அவர் மீது நம்பிக்கை க�ொள்வதுமே வாழ்க்கைப் ப�ோராட்டத்தில் வெற்றி பெறும் வழி என்பதை இன்றைய வாசகங்கள் உணர்த்துகின்றன. பகலெல்லாம் பாடுபட்டுக் குடும்பத்திற்காக உழைத்த தாய், எல்லாரும் தூங்கிய பிறகு, தனியறைக்குச் சென்று செபித்துக் க�ொண்டிருந்தார். தாயைத் தேடிச் சென்று சிறுவன் கேட்டான், “ஏன் அம்மா, தூங்கவில்லையா?” என்று. தாய் ச�ொன்னார், “இல்லை மகனே, கடவுள�ோடு பேச இப்போதுதான் எனக்கு நேரம் கிடைத்தது?” என்று.
11 பிப்ரவரி
ப�ொதுக்காலம் ஆறாம் ஞாயிறு லேவி. 13:1,2: 44-46 க�ொரி. 10:33: 11:1 மாற். 1:40-45
இன்று லூர்து அன்னை பிரான்சு நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி தந்த நாளாகும். அமல உற்பவியான அவர், பாவிகளான உலக மாந்தருக்கு உதவ எளிமையாக முன்வந்த நிகழ்வு அது. லூர்து நகரில் இன்றும் ஏராளமான ந�ோயாளிகள் குணம் பெறுகின்றனர். இன்றைய முதல் வாசகம் த�ொழுந�ோயாளரை இஸ்ராயேல் மக்கள் எவ்வளவு இழிவாக நடத்தினர் என்பதை விவரிக்கின்றது. இன்றைய எய்ட்ஸ் ந�ோய் ப�ோன்று, அன்று த�ொழுந�ோய் க�ொடியதாகக் கருதப்பட்டு அஞ்சப்பட்டது.
நற்செய்தி பணியில் எத்தனைய�ோ இன்னல்களை அனுபவித்த பவுலடியார், அவற்றால் ச�ோர்ந்து ப�ோகவில்லை. மாறாக, தாம் மன நிறைவு அடைவதாகக் கூறுகிறார். இயேசுவும் அவ்வாறே காலை முதல் மாலை வரை தமது மீட்புப் பணியினை ஓய்வின்றிச் செய்த பிறகு, தமது தந்தையிடம் ஆறுதல் பெறத் தனியே அவர�ோடு செபிக்கச் செல்கிறார். மன்னிப்பதை விடச் சிறந்த தவம் வேறில்லை.
இரண்டாம் வாசகத்தில், பவுலடியார் தமக்கென வாழாமல், ந�ோயுற்றோர், வறியவர் அனைவர்க்காகவும், அனைத்துமாக மாறித் தம்மை ஈடுபடுத்திக் க�ொண்டது பற்றித் தெரிவிக்கிறார். தாம் கிறிஸ்துவைப் ப�ோல் வாழ்வதாகத் துணிந்து கூறுகிறார். மூன்றாம் வாசகத்தில், கிறிஸ்து ந�ோயாளிகளுக்காக வாழ்ந்த அருமை பற்றி அறிகிற�ோம். இஸ்ராயேல் மக்கள் தீட்டு என்று ஒதுக்கி வைத்த த�ொழுந�ோயரைக் கண்டு ‘பரிவு’ க�ொண்டு, இயேசு தமது கரத்தை நீட்டி, அவரைத் ‘த�ொட்டு’, 2018 31
“நான் விரும்புகிறேன் உமது ந�ோய் நீங்குக” என்று கூறுகிறார். அவர் ‘விரும்புகிறேன்’ என்று, கூறுவது ‘உன்னை விரும்புகிறேன்’ என்று கூறுவதாகத்தான் நமக்குப் புரிகிறது. த�ொழுந�ோயாளியைத் தமது நண்பனாகக் கருதி விரும்புகிறார். பிறகு அவனைத் த�ொடுகிறார். நம்மைப் ப�ோலவே அழகான உடல் படைத்த நம் சக�ோதரனைத் தீண்ட மறுக்கும் நாம்தான் உண்மையில் த�ொழுந�ோயாளர். இயேசு நம்மைத் த�ொட்டு, நம்மிடமுள்ள உடல், மன ந�ோய்களை நீக்க மன்றாடுவ�ோம்!
18 பிப்ரவரி
தவக்காலம் முதல் ஞாயிறு த�ொ.நூ. 9:8-15 1 பேது. 3:18-22 மாற். 1:12-15
தவக்கால முதல் ஞாயிறு நமக்குத் தவத்தை நினைவூட்டுகின்றது. ந�ோவா 40 நாட்கள் பேழைக்குள் தவமிருந்தார். அதன் விளைவாகக் கடவுள் அவர�ோடு உடன்படிக்கை செய்து, ‘மனுக்குலத்தை இனி வெள்ளப் பெருக்கு அழிக்காது’ என்று உறுதியளித்தார். இரண்டாம் வாசகத்தில், பேதுரு தண்ணீர் பற்றிய கிறித்துவத் தத்துவத்தை முன் ம�ொழிகிறார். தண்ணீர் திருமுழுக்கின் அடையாளம் என்கிறார். ந�ோவாக் காலத்துத் தண்ணீர் மனிதர்களை அழித்தது. திருமுழுக்குத் தண்ணீர் கடவுள�ோடு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறது. பாவ அழிவிலிருந்து நம்மைக் காக்கிறது. ‘கெடுப்பதும், கெட்டவர்களைக் கைதூக்கிவிடுவதும் மழை’ என்பார் திருவள்ளுவர். இங்கே அழிப்பது மழை நீர், அதே மழை நீர் திருமுழுக்கில் நம்மைக் காக்கிறது. ந�ோவாவின் நம்பிக்கை அவரது குடும்பத்தை மீட்டது. கிறிஸ்து இயேசுவின் நம்பிக்கை இந்த
உலகையே மீட்டது. 40 நாட்கள் இயேசுவும் பாலைவனத்தில் ந�ோன்பிருந்தார். உலகம், பசாசு, உடல் என்ற மூன்று மாயைகளை வெல்ல மூன்று ச�ோதனைகள் அவருக்குத் தரப்பட்டன. மூன்றிலும் அவர் கடவுளின் வாக்கைப் பயன்படுத்தி வென்றார். கடவுளின் வாக்கு ஒன்றே நம்மைப் பேயின் ச�ோதனைகளிலிருந்து காக்க வல்லது. உடல் பசியை, உடல் தேவையைப் பெரிதுபடுத்திக் கடவுளை மறப்பது – சரீர மாயை. பேய் - ச�ோதிப்பவன். ‘உன் கால் கல்லில் ம�ோதாதபடிக் காப்பேன்’ என்று வாக்களித்துள்ள கடவுளைச் ‘ச�ோதித்துப் பார்’ என்கிறான் ச�ோதிப்பவன். இது பசாசின் மாயை. ‘சிலை வழிபாடு செய்தால், சாத்தானாகிய என்னை வணங்கினால், நீ உலகையே ஆளலாம்’ என்றது உலக மாயை ஆகிய ச�ோதனைகள் மூன்றையும் இயேசு வென்றார். இத்தவ நாட்களில் நாம் இயேசுவ�ோடும், அவரது வாக்கோடும் இணைவ�ோம். ச�ோதனைகளை வென்று சாதனைகளைப் புரிந்து, மறு உலக வாழ்வுக்குத் தகுதி ஆவ�ோம்.
25 பிப்ரவரி
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு த�ொ.நூ. 22:1-2, 9-13,15-18. உர�ோ. 8:31-34 மாற். 9:2-10
இன்றைய வாசகங்கள் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. சென்ற வாரம் சாத்தான் இயேசுவைச் ச�ோதித்தது பற்றி அறிந்தோம். இந்த வாரம் கடவுள்தாமே மனிதனைச் ச�ோதிக்கிறார். கடவுள் வைத்த ச�ோதனையில் ஆதாம் த�ோற்றார். ஆபிரகாம் வென்று விசுவாசத்தின் தந்தை எனப் புகழ் பெறுகிறார். ச�ோதனையில் வென்ற ஆபிரகாமின் சந்ததியைப் பெருக்கி, நித்திய மகிமைக்கு உரிமையாக்குகிறார் கடவுள். தம் ச�ொந்த மகன் என்றும் பாராமல் ஈசாக்கைப் பலியிடத் துணிந்த ஆபிரகாம�ோடு பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் கடவுளை ஒப்பிடுகிறார். தம் ச�ொந்த மகன் என்றும் பாராமல் அவரை நம் அனைவருக்காகவும் பலியிட்டார் கடவுள். ஈசாக்கைக் காப்பாற்றிய கடவுள், இயேசுவைக் காப்பாற்றவில்லை என்பதுப�ோல் த�ோன்றினாலும், கடவுளே அனைவரிலும் தியாகத்தில் உயர்ந்து நிற்கிறார். கடவுள் கேட்டதால் ஆபிரகாம் தமது மகனைப் பலியிடத் துணிந்தார். கடவுள�ோ யாரும் கேட்காமலேயே, தாமாக முன் வந்து தம் மகனைப் பலியிடுகிறார். ஈசாக்கு பலிப் ப�ொருளாக
2018 32
வலிமை பெருக வேண்டுமெனில் தவம் பெருக வேண்டும். (குறள் 270)
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவே கடவுளின் ஞானமும் வல்லமையுமாக இருக்கிறார் என்று பவுலடியார் கூறுகிறார். அதாவது மேசேவுக்குக் க�ொடுத்த கட்டளைகளின் ம�ொத்த உருவம் கிறிஸ்து. கிறிஸ்துவைப் பின்பற்றுவதும் கட்டளைகளைப் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்று பவுலடியார் தெளிவாக்குகிறார்.
நின்றது கடவுளுக்காக, இயேசு பலிப் ப�ொருளானது பாவிகளுக்காக. கடவுளின் தியாகம் எத்துணைப் பெரியது. மூன்றாம் வாசகம், இயேசுவின் மறுத்தோற்றம் பற்றியது. கானாவூர்த் திருமணத்தில் இயேசு சாதாரண மனிதர் அல்லர் என்பதும், அவரது உருமாற்றக் காட்சியில் அவர் கடவுள்தாம் என்பதும் சீடர்களுக்குப் புரிந்தது. இனி அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஒரே மகனை அல்ல, தங்களையே இயேசுவுக்காக, நற்செய்திக்காக, பலியாக்கத் தயங்கமாட்டார்கள். உருமாற்ற நிகழ்வில் இயேசுவின் ந�ோக்கம் இதுதான். இத்தவக்காலம் நம்மை ஓர் ஆபிரகாமாக, தப�ோர் மலையில் இயேசுவின் உருமாற்றத்தைக் கண்ட சீடர்களாக மாற்றட்டும். நமது உடலிருக்க, உள்ளம் மறு உருப் பெறட்டும். அதற்கு இயேசு மீது அளப்பரிய அன்பு நம்மில் ஊற்றெடுக்க வேண்டும். அவரது அன்பைத் தியானித்தால் நம்மில் அந்த அன்பு ஊற்றெடுக்கும். வெறும் பூசை, ஆசை, த�ோசை என்று, பூசை கண்டால் ம�ோட்சம் ப�ோகலாம் என்ற பகற்கனவு நம்மை விட்டு நீங்க வேண்டும். ஆண்டவரின் அருள்வாக்கை வாசிக்கக் கேட்டு அன்று, நாமே வாசித்து, தியானித்தால் நாமும் மறு ரூபம் ஆவ�ோம்.
03 மார்ச்
மூன்றாம் வாசகத்தில், இயேசு, கடவுளின் பெயரால் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் மக்களிடம் எப்படி வணிகம் நடைபெறுகிறது என்பதனை வெளிப்படுத்துகிறார். கடவுள் என்றும், கட்டளை என்றும், பக்தி என்றும், பலி என்றும், பலவாறு மக்களின் மனத்தில் அச்சத்தைப் புகுத்தி, ஆலயங்களுக்கு அவர்களை வரவழைத்துப் பணம் பண்ணப்படுகிறது என்பதை இயேசு ச�ொல்லாமல் ச�ொல்கிறார். மக்கள் ஆலயத்தில் கூடுவது கடவுள் விருப்பமன்று. காரணம் ஒவ்வொரு மனிதனுமே கடவுளின் ஆலயம்தான். அதனால் தான் இயேசு தமது உடலையும் ஆலயம் என்கிறார். இறைவனின் வீடு. செப வீடு. அதனால்தான் இயேசு, “நீங்கள் செபிக்கும்போது உங்கள் வீட்டின் அறையைத் தாழிட்டுக் க�ொண்டு இறைவனுக்கு மட்டும் கேட்கும்படி செபியுங்கள்” என்றார். இன்று உலகத்துப் புண்ணியத் தலங்களாகிய ஆலயங்கள் எல்லாமே அன்றைய யெருசலேம் ஆலயம் ப�ோலவே பக்தர்களை ஏமாற்றிப் பணம் பண்ணும் இடமாகவே உள்ளன. பக்திப் ப�ோர்வையில் பணம் பண்ணும் அனைவருக்கும் ப�ொதுத் தீர்வையின்போது இயேசுவின் சாட்டையடி காத்திருக்கிறது. தவக்காலத்தில், நமது உடலாகிய ஆலயம் வணிகத் தலமாக மாறாமல், உடலை விற்றுப் பணம் பண்ணும் இடமாக, தூய்மையற்ற அருவருப்பான க�ோயிலாக இல்லாமல், இயேசு விரும்பும் புனித இடமாக, தமத்திருத்துவத்தின் தங்குமிடமாக விளங்க, அதனை ந�ோன்பாலும் ஒறுத்தலாலும் அழகுபடுத்துவ�ோம்.
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வி.ப. 20:1-17. 1 க�ொரி. 1:22-25 ய�ோவா. - 2:13-25
இன்றைய முதல் வாசகத்தில், ம�ோசே, இஸ்ராயேல் மக்களுக்குக் கடவுள் சீனாய் மலையில் தமக்கு அருளிய கட்டளைகளின் சுருக்கத்தை விவரிக்கிறார். கடவுளின் ஞானம் இக்கட்டளைகளில் வெளிப்படுகின்றது.
விரும்பியதை விரும்பியவாறே அடைய விரும்பினால் விரும்பி தவம் செய்க. (குறள் 265)
2018 33
இளைய�ோர் தமிழர் திருவிழா சென்னை நகரத்துச் சலேசிய இளைஞர் மன்றங்களின் 2018ஆம் ஆண்டுக்கான பெருவிழா சென்னை சலேசிய மாநில மையத்தில் மிகவும் சிறப்பாகக் க�ொண்டாடப்பட்டது. த�ொன் ப�ோஸ்கோ இளைஞர் மன்ற இல்லமும், ரினால்டி விளையாட்டு மைதானமும் விழாக்கோலம் பூண்டன. ரினால்டி இளைஞர் மன்றத்தினர் இதற்கான ப�ொறுப்பேற்றுக் க�ொண்டனர். அதன் இயக்குநர் அருட்பணி. மணி லாசர், ச.ச. பின்னணியிலிருந்து அரும்பணியாற்றி விழா இனிதே நடைபெற உதவினார். சென்னை நகரத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த 19 இளைஞர் மன்றங்கள் கலந்து க�ொண்டன. இவற்றுள் இரண்டு மன்றங்கள் சலேசியம் சாராதவை. ம�ொத்தம் 450 இளைய�ோரும் 24 சலேசியரும் கலந்து க�ொண்டனர். சலேசிய இளைஞர் மேய்ப்புப் பணிகளின் பிரதிநிதி அருட்பணி. ஜான் ப�ோஸ்கோ, ச.ச. விழாவினைத் த�ொடங்கி வைத்தார். தமது வாழ்வின் 100ஆவது ஆண்டினில் அடியெடுத்து வைத்துள்ள முதுபெரும் சலேசியரான அருட்பணி செட்ரிக் ப�ௌட், ச.ச. அடிகள் தமது இனிய வருகையால் ஆசியளித்தார். தமிழரின் முப்பெருங் கலாச்சாரக் கூறுகளான, வீர விளையாட்டு,
2018 34 2018
விருந்து, நாட்டுப்புறக் கலை நிகழ்வு ஆகிய மூன்றிற்கும் முதன்மை இடம் தரப்பட்டது. தஞ்சை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர் குழுக்கள் கலைவிருந்து அளித்தனர். விளையாட்டுப் ப�ோட்டிகளும், சிறப்பான விருந்தும், பாராட்டுகளும் பரிசுகளும் இனிதே வழங்கப்பட்டன. ரினால்டி இளைஞர் மன்ற இயக்குநர் அருட்பணி. காசி சகாயராஜ், ச.ச. அவர்களுக்கும் இல்லத் தந்தை அருட்பணி. ஜான் கிறிஸ்டி ச.ச. அவர்களுக்கும் நன்றிமலர் சூட்டப்பட்டன. விழாவின் சிறப்பு நினைவுகூர்தலாக, ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மற்றும் கேரளத்து மீனவக் குடும்பங்களுக்காக இதயப்பூர்வமான அன்புணர்வு ஏறெடுக்கப்பட்டது. தரைத் தாவர உணவும், கடல் தாவர (மீன்) உணவும் தந்து உலகைக் காப்பாற்றும் உழவர் மற்றும் மீனவர்களுக்குப் பாதுகாப்பாக செயல்படுவது என உறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கலாச்சாரப் பண்பாட்டு விழாவின் சிறப்புச் சிந்தனையாக, ‘உன் கலாச்சாரத்தில் வேர் பதித்து இரு, மாற்றார் கலாச்சாரத்திற்கு மனம் திறந்து இரு’ என்ற செய்தி வழங்கப்பட்டது. இறைவனுக்கு நன்றிக் காணிக்கை உணர்வோடு விழா இனிது நிறைவேறிற்று.
NEW RELEASE
கல்வி நிறுவனங்கள், ஆலய அமைப்புகள், ப�ொதுப்பணித்துறை மையங்கள் ப�ோன்ற அமைப்புகளில்… அறிவுரை வழங்க அச்சமா? காலை உரையாற்ற கலக்கமா? மாலையுரை வழங்க மயக்கமா? ஆலய நிகழ்வா? ஆண்டு விழாவா? ஆசிரியர்-பெற்றோர்-பணியாளர்பயனாளர் கூட்டங்களா? உடனடி உதவிக்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய அருமையான நூல்
கனிவும் அன்பும்.
தங்களின் மேற்பார்வையில் உள்ளவர்களைச் சூழலுக்கும் பருவத்திற்கும் பணிக்கும் ஏற்றவாறு த�ொன் ப�ோஸ்கோவின் கனிவான, அன்பான வழியில் கையாள்வது எப்படி என்பதை உலகியல் நடப்புகள�ோடு விளக்கும் அருமையான நூல்
கனிவும் அன்பும். 3 பெரும் பிரிவுகளில், 12 தலைப்புகளின்கீழ், த�ொன் ப�ோஸ்கோவின் 200 மேற்கோள்களை 40 விரிவுரையாளர்கள், 400க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் க�ொண்டு விளக்கியுள்ள 274 பக்கங்கள் க�ொண்ட நூல்
In English – With Gentleness and Kindness - Pages 224. Rs. 180/10% discount (Rs.162) த�ொடர்புக்கு: அரும்பு பதிப்பகம்,
26/17.
கனிவும் அன்பும்.
பெப்ரவரி இறுதிக்குள் வாங்குவ�ோருக்கு 30% சிறப்புக் கழிவு உண்டு. (ரூ. 175 மட்டும்)
ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை
2018
10.
2018 35
Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/373/2018-2020 TN/PMG(CCR)/WPP-398/2018-2020 Registrar of Newspaper for India. 33652/78. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 06.02.2018
20182018 36 36
If undelivered, kindly return to Salesian Seithi Malar, 26/17, Ranganathan Avenue, Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010