7 03 2018
2018
2018 01
1
www.arumbupublications.in
.
02 2
(வேண்டுதல் செய்வதில்) உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள். (எபே. 6:18)
2018
மலர் 57
இதழ் 03
2018
மார்ச் 2018
ப�ொறுப்பாசிரியர்கள் ஆசிரியர் அருள்திரு முனைவர் ஆ. சிலுவை முத்து, ச.ச.
இணை ஆசிரியர் பேரா. சூ. குழந்தை இயேசு.
08
நிர்வாகக் குழு அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு மரிய லூயிஸ், தைரியம், அந்தோனிசாமி, அந்தோனி கிறிஸ்டி, பேட்ரிக் மத்தியாஸ், ஆன்ட்டோ சகாய ராஜ்.
14
16
பிழைத்திருத்தம் குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச.
05
சந்தா மேற்பார்வை சு. ஸ்டீபன் ராஜ்.
25
அஞ்சல் வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர் ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம் தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்
ரூ. 15 ரூ. 150 ரூ. 300
விளம்பரக் கட்டணம் முழுப்பக்கம் ரூ. அரைப்பக்கம் ரூ. கால்பக்கம் ரூ. பின்அட்டை ரூ. உள்அட்டை ரூ. நடுப்பக்கம் ரூ.
6000 3000 1500 12,000 10,000 10,000
செய்தி மலரில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி
26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 26612138/40, 94447 99942 sbtamilssm@gmail.com www.arumbupublications.in
2018
.. .. .. .. .
நம்ப முடியுமா? குருத்து ஞாயிறு ஓர் அருளடையாளம் உறவில் மகிழ உரையாடுவ�ோம் - உறவை வலுப்படுத்துவ�ோம் கடவுளின் முதல் நகல் மலரட்டும் மகளிர் மகிழட்டும் மனம் இறந்தோரின் நினைவு நாள் - செப வழிபாடு பயணம் குறுகியது ஞாயிறு மறையுரைகள்
04 05 08 12 14 16 22 ப 25 29
Printed and Published by Rev. Fr. A. Siluvai Muthu, on behalf of Salesian Publishing Society, No. 45, Landons Road, Kilpauk, Chennai-600 010. Printed at SIGA: Salesian Institute of Graphic Arts, No. 49, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Editor: Rev. Fr. A. Siluvai Muthu.
அடுத்திருப்பவர்களது வறுமையில் அவர்களது நம்பிக்கையைப் பெறு. (சீ.ஞா. 22:23)
03
உயிர்த்த இயேசுவில் நம்பிக்கையுள்ள அன்பர்களே, “கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை… நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்?” என்று அக்ரிப்பாவைப் பார்த்து, பவுலடியார் கேட்கின்றார். (தி.ப. 26:8). ‘இறந்தோர் உயிர்த்தெழ முடியுமா?’ என்ற வினா நம்மிலும் எழலாம். விவிலியம் இதற்கு விடை கூறுகின்றது.
சாரிபாத்துக் கைம்பெண்ணின் மகன்: சீத�ோனில்,
சாரிபாத்து என்னும் பகுதியில் வாழ்ந்த கைம்பெண்ணின் மகன் ந�ோயுற்று இறக்கின்றான். இறைவாக்கினர் எலியாவிடம் அப்பெண் இது குறித்து முறையிட, அவர் அவளின் மகனை உயிர்ப்பித்தார் (1அர. 17:1-24).
சூனேம் பெண்ணின் மகன்: சூனேம் எனும் பகுதியில் வாழ்ந்த முதிய தம்பதியரின் குழந்தை இறந்துவிட, அக்குழந்தையின் தாய், இறைவாக்கினர் எலியாவிடம் சென்று அச்செய்தியைச் ச�ொல்ல, அவர் அவள் வீட்டிற்குச் சென்று அக்குழந்தையை உயிர்ப்பித்தார் (2அர. 04:18-37).
இஸ்ராயேலன்: இறந்த ஓர் இஸ்ராயேலனை அடக்கம்
செய்ய இஸ்ராயேலர் தூக்கிச் செல்கையில், ம�ோவாபியக் க�ொள்ளைக் கூட்டத்தினர் அவர்களைத் தாக்க வர, பிணத்தை எலிசாவின் கல்லறையில் ப�ோட்டுவிட்டு அவர்கள் தப்பிய�ோடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் விழுந்த இறந்த அந்த ஆள், உயிர் பெற்று எழுந்து நின்றான் (2அர. 13: 20-21). (இவை பழைய ஏற்பாட்டில் காணப்படும் உயிர்ப்பு நிகழ்வுகளாகும்).
நயீன் ஊரின் கைம்பெண்ணின் மகன்: இயேசு நயீன் என்னும் ஊருக்குச் செல்கையில், கைம்பெண்ணின் மகனை அடக்கம் செய்ய மக்கள் தூக்கிச் சென்றனர். அக்கைம்பெண்மீது பரிவு க�ொண்ட இயேசு, அந்த இளைஞனை உயிர்த்தெழச் செய்தார் (லூக். 7:11-17).
யாயிரின்
மகள்:
இயேசு கப்பர்நாகூமில் இருக்கும்போது, யாயிர் என்பவர் தன்னுடைய மகளின் ந�ோயை நீக்குமாறு வேண்ட, இயேசு செல்வதற்குள் அச்சிறுமி இறந்து விடுகின்றாள். இயேசு சென்று
நாட்களுக்குப் பின் அங்கே சென்ற இயேசு லாசரை உயிர்ப்பிக்கின்றார் (ய�ோவா. 11:1-44).
இஸ்ராயேல் இறைமக்கள்: இயேசு உயிர் துறக்கும்போது
இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் கல்லறைகளிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டன (மத். 27:50-54).
தபித்தா: இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகு, பேதுரு,
ய�ோப்பா நகர் சென்றப�ோது அங்கிருந்த தபித்தா என்னும் பெண் சீடர் இறந்துவிட்டதை அறிந்த அவர், தபித்தாவை உயிர்ப்பெற்றெழச் செய்தார் (தி.ப. 9: 36-42).
யூத்திகு: ஓர் இரவில் துர�ோவாவில் பவுல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தப�ோது, பலகணியில் உட்கார்ந்திருந்த யூத்திகு என்னும் இளைஞர் அயர்ந்து தூங்கி, மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட, பவுல் அவரை உயிர்த்தெழச் செய்தார். (தி.ப. 20:7-12). (இவை புதிய ஏற்பாட்டில் காணலாகும் உயிர்ப்பு நிகழ்வுகளாகும்). உயிர்ப்பு நம்ப முடியாத ஒன்று அன்று என்பதற்குக் கிறிஸ்துவின் உயிர்ப்பே மாபெரும் சான்று. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் க�ொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்” (1க�ொரி. 15:17) என்கின்றார் பவுலடியார். “ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார்” (1க�ொரி. 6:14) என்ற நம்பிக்கையில் வாழ்வோம்! அனைவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்.
யாயிரின் மகளை உயிர்த்தெழச் செய்தார் (லூக். 8:49-56).
லாசர்:
இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் பெத்தானியாவில் வாழ்ந்த மார்த்தா, மரியா, லாசரும் அடங்குவர். ந�ோயுற்றிருந்த லாசர் இறந்துவிட, நான்கு
04
அவர் முகம் க�ோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் க�ொடுப்பவர். (யாக். 1:5)
அருள்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச. ஆசிரியர்.
2018
அந்தோனிசாமி.
இயேசு பிறப்பதற்கு 520 ஆண்டுகளுக்கு முன்பே, அன்றைய இறைவாக்கினராகத் திகழ்ந்த சக்கரியா என்பவர், வரப்போகும் மெசியாவின் வெற்றி பவனி எருசலேம் நகரில் நிகழப்போவதைக் குறித்து, “மகளே சீய�ோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இத�ோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்” (செக். 9:9) என்று இறைவாக்காக உரைத்ததை நாம் வாசிக்கிற�ோம். அந்த இறைவாக்கின்படியே, இயேசு, கழுதைக்குட்டியின் மீதமர்ந்து எருசலேமின் தங்க வாயில் வழியாக, திரளான மக்கள் புடைசூழ, மகிமையாகப் பவனியாக வந்தார். மக்கள் குருத்தோலைகளைப் பிடித்தவாறு ‘தாவீது மகனுக்கு ஓசான்னா!’ என்று பாடியபடி, அவருக்குப் பின் சென்றனர் (லூக்: 19:38). ‘ஓசான்னா’ என்ற எபிரேயச் ச�ொல்லுக்குக் ‘கடவுள் உதவுவார்’ என்பது ப�ொருளாகும் (தி.பா. 118:25). அந்நாட்களில் யூதர்களின் வழக்கத்தின்படி எருசலேம் க�ோட்டையின் கிழக்குப் பகுதியிலுள்ள வாசலை ‘தங்க வாசல்’ என்று அழைத்தார்கள். இந்த வாசலின் வழியாகத்தான் ப�ோரில் வெற்றி பெற்ற மன்னர்கள் ஆரவாரத்துடன் நகருக்குள் நுழைவார்களாம். குடிமக்கள் அனைவரும் வெள்ளைநிற ஆடையணிந்து,
2018
குருத்தோலைகளைக் கையில் பிடித்தபடி ஆர்ப்பரித்து மன்னரை வரவேற்பார்களாம். இந்த வாசல் வழியாகத்தான் ஆட்சி புரியும் மன்னன் ஆலய வழிபாட்டிற்கு வந்து செல்வாராம். அரசரைத் தவிர வேறு யாரும் இந்த வாசலைப் பயன்படுத்தக்கூடாதாம் (எசே. 44:4). புதிதாக ஒருவரை அரசனாக, திருப்பொழிவு செய்ய வேண்டுமானால், அவரைக் க�ோவேறு கழுதையின் மீது அமரச் செய்து, இந்த வாசல் வழியாகத்தான் ஊர்வலமாக அழைத்து வருவார்களாம் (1அர. 13). இதன்படியே, இயேசுவும் இந்தத் தங்க வாசல் வழியாகவே பவனி வந்தார்.
இயேசு கழுதையின்மேல் அமர்ந்திருந்த நேரம் வரைதான் கழுதைக்கு மரியாதை.
ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! (தி.பா. 119:169)
05
‘உலக முடிவின்போது, இயேசு அரசர்க்கெல்லாம் அரசராக மகிமையுடன் இந்த வாசல் வழியாக வந்து, எதிரிகளான பிற இன மன்னர்களைத் துரத்திவிட்டு 1000 ஆண்டு அரசாட்சியை நிறுவுவார்’ என இறைவாக்கு உரைக்கப்பட்டது (எசே. 44:2). இதைக் கேள்விப்பட்ட துருக்கி மன்னன் சுலைமான் என்பவன், எருசலேமைக் கைப்பற்றியவுடன் முதல் வேலையாகத் தங்க வாசலை மூடிவிட்டானாம். இந்த மூடுவிழா நிகழ்ச்சியையும், இறைவாக்கினர் எசேக்கியல் முன்னுரைத்துவிட்டார் (எசே. 44:2,3) என்பதே வியப்பான செய்தியாகும். இப்படி இறைவாக்குச் செய்திகளையெல்லாம் இயேசு தம் வாழ்நாட்களில் முழுமையாக நிறைவேற்றிவிட்டு “எல்லாம் நிறைவேறிற்று!” என்று உரைத்துக் கல்வாரியில் உயிர் துறந்ததை நாம் நினைவுகூர வேண்டும்.
“நான் ச�ொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் ப�ொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் ப�ொருட்டாவது நம்புங்கள்” என்று ச�ொன்னார் (ய�ோவா. 14:11). “உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, சில�ோவாம் குளத்துக்குப் ப�ோய்க் கண்களைக் கழுவும்” என்றார் (ய�ோவா. 9: 6,7). வழிய�ோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், “இனி நீ கனி க�ொடுக்கவே மாட்டாய்” என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப்போயிற்று (மத். 21:19). எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார் (லூக். 19:41).
நம் ஆண்டவர் கழுதைக்குட்டியின் மீதமர்ந்து வந்ததற்குச் சில காரணங்களுண்டு.
ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய பாதங்களைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார் (ய�ோவா. 13:5).
அந்நாட்களில், அரசர்கள் குதிரையின் மீதமர்ந்து வந்தால் அது ப�ோருக்குச் செல்வதாகப் ப�ொருள். ஒட்டகம் வணிகத்தின் சின்னம். யானையின் மீதமர்ந்தால் அஃது ஆடம்பரம். எனவே அமைதியின் சின்னமாகிய கழுதையின்மீது அமர்ந்து இயேசு உலாவாக வந்தார் என்று ச�ொல்லப்படுகிறது. ஏனெனில், அவர் ‘அமைதியின் அரசர்’ என்ற இறைவாக்கு நிறைவேற வேண்டுமல்லவா? (எசா. 9:6).
கழுதைக்குட்டியின் மேல் அமர்ந்து பவனி வந்தார் (லூக். 9:35).
நமதாண்டவர் வாழ்ந்த நாட்களில் அவர் செய்த ஒவ்வொரு செயலும் இறைவாக்காக முன்னுரைக்கப்பட்டிருந்தாலும், அதிலே கற்பிக்கையும், படிப்பினையும் மிகுதியாக இருப்பதைக் காண முடியும். த�ொடக்கத்தில் சீடர்களே இதை அறியாதிருந்தார்கள். அவர் இறந்து உயிர்த்தெழுந்த பின்புதான், எல்லாவற்றையும் உணர்ந்து, நம்பிக்கைக் க�ொண்டனர் (ய�ோவா. 12:16). இயேசுவை இறைமகன் என்றும், மீட்புக்குப் பலியாக வந்த மெசியா என்றும் கடவுளின் பிள்ளைகளாகிய யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரணமாக அவர்,
06
குதிரையின் மீதமர்ந்து வந்தால் அது ப�ோருக்குச் செல்வதாகப் ப�ொருள். ஒட்டகம் வணிகத்தின் சின்னம். யானையின் மீதமர்ந்தால் அஃது ஆடம்பரம். எனவே அமைதியின் சின்னமாகிய கழுதையின்மீது அமர்ந்து இயேசு உலாவாக வந்தார்.
ஆண்டவரே! நான் உம்மை ந�ோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணை செய்யும். (தி.பா. 141:1)
2018
யூதர்கள் இவற்றையெல்லாம் புரிந்துக�ொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நாம் புரிந்துக�ொண்டு, நம்பிக்கைக்கொள்ளும்படியாக, இவற்றை அருளடையாளங்களாக நமக்குத் தந்திருக்கிறார். மேலும் நாம் அவரைப் பின்பற்றி நாளும் அவரைப் ப�ோல் பணியாற்ற நமக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கின்றார் (ய�ோவா 13:15). வாழ்வும் வழியும் உண்மையுமாய் இருக்கும் நம் ஆண்டவரைப் பின்பற்றாமலும், அவரது ச�ொற்களுக்குக் கீழ்ப்படியாமலும், கடின இதயத்துடனும், தன்னல எண்ணங்களுடன் வாழ்ந்து பரிசேயர்களைப் ப�ோல் நாம் வாழ்வதாக இருந்தால், அவர்களைப் ப�ோல நம்மையும், இறைவன் புறக்கணித்துவிட்டு, வேறு இனத்தவரைத் தம் மக்களாகத் தெரிந்து க�ொள்வார். ஆகையால்தான், “இவர்கள் பேசாதிருந்தால் கற்களே பேசும் என நான் உங்களுக்குச் ச�ொல்கிறேன்” என்று கூறி எச்சரிப்பதை (லூக். 19:40) நாம் மறந்துவிடக் கூடாது. அடுத்ததாக, இயேசு கழுதையின்மேல் அமர்ந்திருந்த நேரம் வரைதான் கழுதைக்கு மரியாதை. நம் வாழ்க்கையும் அப்படித்தான். நம்மிலும் புனிதமும் தூய்மையும் இருக்கும்வரைதான் தூய ஆவியார் நம் மீது தங்கிச் செயலாற்றுவார். அதனால் வல்லமை நம்மிலிருந்து வெளிப்படும். மகிமையும், மேன்மையும் நம்மிடம் வந்து சேரும். நாம் பாவம் செய்யும்போது இறை அருள் நம்மைவிட்டு எடுபட்டு விடுகிறது. நாம் பயனில்லா கழுதைகளாகி விடுவ�ோம்.
வாக்குறுதிகளையும் அருள் அடையாளங்களின் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். அதனால் அவற்றின் வழியாக இறையருளைக் கண்டுக�ொள்ள முடிகிறது. ஆதலால்தான் “நீங்கள் காணும் கண்கள் பேறு பெற்றவை!” என்று இறைவன் இயேசு கூறுகிறார் (லூக் 10:24).
ஆகையால்தான் குருத்து ஞாயிறைச் சிறப்பிக்கும்போது வெற்றியின் சின்னமாகிய குருத்தை ஏந்தி மகிழ்ச்சியுடன் “ஓசான்னா!” என்று கூறி முழங்குகின்றோம். இறைவனை நம் உள்ளத்தில் வரவேற்போம். இறைவன�ோடு இருக்கையில் கழுதைக்குக்கூட மரியாதை இருந்தது. நாமும் இறைவன�ோடு இருப்போம். இறைவனின் பிள்ளைகளாக வாழ்வோம்.
.
அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்.
இதற்கு எடுத்துக்காட்டாக நீதித்தலைவர் சிம்சோனின் வாழ்க்கையைச் ச�ொல்லலாம். ஆதலால்தான் தாவீது “உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்” என்று கெஞ்சி மன்றாடுவதைத் தி.பா. 51: 11இல் நாம் காணலாம். தந்தையாம் விண்ணக
கடவுள்,
2018
தம் மகன் வழியாக மறைப�ொருள்களையும்
இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவர�ோடு பகிர்ந்துக�ொள்ளட்டும். (லூக். 3:11)
07
-
அல்போன்ஸ் லாசர், ச.ச.
மானிட சமுதாயத்தின் தீராத தாகம் சக�ோதர உறவு. நல்லுறவு நம் வாழ்விற்கு புத்துயிர் தருகிறது. சக�ோதரன் என்பவன் ‘சக உதரத்தில் பிறந்தவன்’ (அதே தாயின் வயிற்றில் பிறந்தவன்) என்பது ப�ொருள். இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில், நம்முடைய உறவின் எல்லைகள் குறைந்து க�ொண்டு, அழிந்து க�ொண்டு, வருவதால் தனிமையின் க�ொடுமையினைக் குழந்தைகளும் முதியவர்களும் அதிகமாக அனுபவிக்கின்றனர். பணத்தையும் ப�ொருளையும் மட்டும் வாழ்வில் மையப்படுத்துவதால் அர்த்தமான உறவுகளையும், ஆழமான சமூக மதிப்பீடுகளையும் காற்றில் பறக்க விடுகின்றோம்.
த�ொடக்கத் திருச்சபையில் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் வாழ்ந்தனர் இந்நிலையில் இறைமகன் இயேசுவைப் ப�ோன்று கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உறவின் பாலமாக நாமும் திகழ முடியுமா?
08
கதை: கிரேக்க புராணம் ஒன்றில் ‘ப்ரோக்ரஸ்டஸ்’ என்ற க�ொள்ளைக்காரன், காடுகள் அடர்ந்த மலைப் பகுதியில் இருந்துக்கொண்டு அந்த வழியாகச் செல்வோரிடம் க�ொள்ளையடித்து வந்தான். ‘ப்ரோக்ரஸ்டஸ்’ சற்று மாறுபட்ட க�ொள்ளைக்காரனும் கூட. தான் க�ொள்ளையடித்த மனிதனைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்று, தனது கட்டிலில் படுக்க வைப்பானாம். க�ொள்ளையடிக்கப்பட்டவரின் உடல் அப்படுக்கையில் சரியாகப் ப�ொருந்தியதென்றால் அவருடைய ப�ொருட்களை அவரிடமே திருப்பிக்கொடுத்து அனுப்பி விடுவானாம். இதற்கு மாறாக, அவரது உடல் படுக்கையைவிடப் பெரியதாக இருந்தால் அதிகமாக நீண்டிருக்கும் கால்களைய�ோ, தலையைய�ோ வெட்டி விடுவானாம். இரத்தம் சிந்தியே அம்மனிதர் இறந்துவிடுவாராம். ஒருவேளை க�ொள்ளையடிக்கப்பட்ட நபர் தனது படுக்கையை விட குட்டையானவராக இருந்தால் படுக்கையின் நீளத்திற்குப் ப�ொருந்தும்படி தன் ஆட்களைக் க�ொண்டு கால்களையும் தலையையும் எதிரெதிர் திசையில் இழுப்பானாம். அவரும் வலி தாங்க முடியாமல் இறந்து ப�ோவாராம். நிகழ்வு: பார்வையாளர் ஒருவர் மருத்துவமனை மேலாளருடன் மனநலக் காப்பகத்தை மேற்பார்வை செய்து வந்தார். முதல் மாடியை அடைந்தப�ோது மனந�ோயாளிகள் பலரை ஒரே அறையில்
ஈகை குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் க�ொடுப்போர் குடிநீர் பெறுவர். (நீ.ம�ொ. 11:25)
2018
அடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தார். ஆனால் அந்த மனந�ோயாளிகளை இரண்டு காவலர்கள் மட்டுமே கண்காணித்துக் க�ொண்டிருந்தனர். பார்வையாளர் ஆச்சரியப்பட்டார். “ஆபத்தான இந்த ந�ோயாளிகள் ஒன்று சேர்ந்து அந்த இரண்டு காவலர்களையும் தாக்கிவிடக் கூடும் என்ற பயம் உங்களுக்கு ஏற்படவில்லையா?” என்று கேட்டார். மேலாளர் அமைதியாக, “எனக்கு பயமெல்லாம் ஒன்றுமில்லை, ஏனென்றால் மனந�ோயாளிகள் ஒருப�ோதும் ஒன்றுபடுவதில்லை” என்று பதிலளித்தார்.
சிந்திப்போமா!
இயேசு விரும்பிய புதிய சமுதாயம் எது? பணக்காரன்-பணக்காரன�ோடும் ஏழைஏழைய�ோடும் படித்தவன்-படித்தவன�ோடும் மட்டுமே உறவு க�ொள்ளும் நிலையிலிருந்து மாறி, எல்லாரும் எல்லார�ோடும் அன்புறவு க�ொள்ளும் அன்புச் சமூகமே இயேசு விரும்பிய திருச்சபை. அன்புச் சமூகத்தில்தான் எம்மனிதனும் சுதந்திரமாகச் செயல்பட முடியும். சக மனிதனின் வலியைத் தன் உடம்பில், தன் உள்ளத்தில் உணர்வதே உண்மையான சக�ோதரத்துவத்தின் இயல்பு. சக மனிதர்களின் இன்ப துன்பங்களில் பாரபட்சம் இல்லாமல் பங்குக�ொள்வதைத்தான் சக�ோதரத்துவ அன்பு என்கிற�ோம். ஒருவருக்கு துன்பம் என்றால் அவரை சக�ோதரர் என்ற உறவு முறையில் மட்டுமே அணுக வேண்டுமே தவிர அவருடைய இனம், ம�ொழி, நிறம் அடிப்படையில் அணுகக் கூடாது.
த�ொடக்கத் திருச்சபையில் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாய் வாழ்ந்தனர் (தி.ப. 4:32). அவர்களிடையே ஒற்றுமை, சக�ோதர மனப்பான்மை இருந்தது. கிறித்துவர்கள் இல்லங்களிலும், தெருக்களிலும் கூடினார்கள். அவர்கள் இல்லங்களில் கூடி, வழிபட்டு, பகிர்ந்துண்டு, இல்லத் திருச்சபையாய் ஒரு தாய் பிள்ளைகளாய் இருந்தார்கள். யெருசலேம், க�ொரிந்து, பிலிப்பி, அலெக்சாண்டிரியா,
உர�ோமை, எபேசு என எந்நகரமாக இருந்தாலும் த�ொடக்கக் காலத் திருச்சபைகள் இல்லத் திருச்சபைகளாகவே இருந்தன (தி.ப. 12:12, உர�ோமை 16:5, பிலம�ோன் 1:2).
2018
உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். நான் எழுப்பிய மன்றாட்டு உமது க�ோவிலை வந்தடைந்தது. (ய�ோனா. 2:7)
09
முதிர்ச்சியடைந்த மனிதர் என்பவர் யார்? தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ப நடப்பவர்களையும், எதிர்பார்ப்பிற்கு மாறாக நடப்பவர்களையும், பெருந்தன்மைய�ோடு ஒரே மாதிரியாகக் கருதி அவர்களை அன்பு செய்பவர்தான். பிறர் நம்மை மதிக்கும்முன் நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை அங்கீகரிக்கும்முன் நம்மை நாமே அங்கீகரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதன்மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். நல்லுறவு இல்லாத வாழ்வு அர்த்தம் அற்றது. உறவற்ற வாழ்வு ஆழமற்றது..
உண்மை உறவினை நிலைப்படுத்தும் கூறுகள்:
நல்லுறவு நல்லுறவு நல்லுறவு நல்லுறவு நல்லுறவு
–
விட்டுக்கொடுத்து வாழும். பிறரை அவர்களது கண்ணோட்டத்திலேயே புரிந்துக�ொள்ளும். மன்னித்து ஏற்றுக்கொள்ளும். தேவையில் இருப்போரை தேடிச் செல்லும். சுமூகமான வாழ்வுக்கு வழிவகுக்கும
உறவைக் கெடுக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சில வெளிப்பாடுகள்: அதிகமான நவீன ப�ொருட்கள் இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்ற மாயை. வாழ்க்கைப் ப�ோராட்டங்களை மழுங்கடித்து சிற்றின்பங்களிலும் ஊடகங்களிலும் அடைக்கலம் தேடும் சிந்தை. தகுதிக்கேற்ற உண்மையான மதிப்பைத் தேடாமல் மேல�ோட்டமான அங்கீகரிப்புகளுக்கு அலையும் எண்ணம். பணத்தின் க�ொடிய தேவையும் மதிப்பும் தான் இலஞ்சம், ஊழல், ஏமாற்றுதல் ப�ோன்ற சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கின்றன.
இவற்றின் விளைவு? ப�ொறாமையும் பகட்டும் வளரும், உறவில் விரிசல் ஏற்படும். ‘என்னுடையது’ என்ற தன்னலம் தலைக்கேறும். பிறரை அண்டவிடாமல் தடுக்கும். ஏழை எளிய�ோரை வெறுக்கும். பண மதிப்பும் பதவி மதிப்பும் உள்ளவர�ோடு மட்டும் உறவாடும். உண்மையை மறைக்கும், விளம்பரத்திற்கு அடிமையாகும்.
தியானிக்க: மத். 13:18-23, த�ோபி. 2:1-6, ய�ோவா. 11:1-6, உர�ோ. 13:8-10 கலா. 5:4-6. எபே. 3:14-19.
விவாதிக்க:
1. நம்மோடு வாழ்பவர்கள் நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே நாம் அவர்களை ஏற்றுக்கொள்கின்றோம், அப்படி இல்லையெனில் ‘ப்ரோக்ரஸ்டஸ்’ (கதை) செய்த அதே காரியத்தை நாமும் செய்கிற�ோம். நானும் இதே ப�ோன்ற ‘ப்ரோக்ரஸ்டஸ்’ படுக்கையைச் சுமந்து செல்கின்றேனா? ஆம் எனில், இந்நிலையிலிருந்து வெளிவர என்ன செய்யலாம்? 2. உறவுகளிலே விரிசல்கள், பிரிவினைச் சுவர்கள் எழக் காரணங்கள் யாவை? உறவின் பாலமாகத் திகழ என்னென்ன குணங்களை நாம் வளர்க்க வேண்டும்? 10
உம்மை ந�ோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும். (தி.பா. 141:1)
2018
எல்லாரும் எல்லார�ோடும் அன்புறவு க�ொள்ளும் அன்புச் சமூகமே இயேசு விரும்பிய திருச்சபை. தீர்மானிக்க: எண்
நம் அன்பியத்தில் காண்பவை
அணுகுமுறையும் செயல்பாடும்
01
திருமணமாகி மூன்று மாதங்கள் ஆன தம்பதியர் குடும்பங்கள் சில நம் அன்பியப் பகுதியில் உள்ளன.
அவர்களை அன்பியம் சார்பாக வரவேற்று வாழ்த்துத் தெரிவிப்போம்.
02
சிலர் ந�ோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கின்றார்கள்.
அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்வோம்.
03
அன்பிய பாதுகாவலர் திருவிழா வருகிறது.
திருப்பலி நிறைவேற்றி, பகிர்ந்துண்டு மகிழ்ந்து, த�ோழமை உணர்வை வெளிப்படுத்துவ�ோம்.
04
மாவட்ட அளவில், மாநில அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்றுள்ள மாணவ, மாணவியர் உள்ளனர்.
அவர்களைச் சந்தித்து, பாராட்டுத் தெரிவித்து, பரிசுகள் வழங்குவ�ோம்.
05
ஒரு சில குடும்பங்களில் மனவருத்தம் காரணமாக, தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர்.
அவர்களுக்காகச் செபிப்போம்.
06
கடந்த ஒரு மாதத்தில் சில குடும்பங்களில் இறப்பு நிகழ்ந்துள்ளது.
அன்பியம் சார்பாக அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்காகச் செபிப்போம்.
புனித பாதையில் பயணிக்க:
.
“பசித்த ஏழைக்கு ஒரு குவளை அரிசி க�ொடுப்பதற்கு முன் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஒருவரின் தனிமைத் துயரத்தைப் ப�ோக்குங்கள்” (புனித அன்னை தெரசா)
சக மனிதர்களின் இன்ப துன்பங்களில் பாரபட்சம் இல்லாமல் பங்குக�ொள்வதைத்தான் சக�ோதரத்துவ அன்பு என்கிற�ோம். 2018
உன் உழைப்பின் முதற்கனிகளைக் க�ொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. (சீ. ஞா. 35:7)
11
நித்தியன், ச.ச.
மனிதர்களாகிய நாம் பல்வேறு நிலைகளில் உரையாடலில் பங்கேற்கிற�ோம். குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமும், வளர்கையில் உடன்பிறப்புகளிடமும், பள்ளி, கல்லூரியில் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும், வேலை செய்யும் இடங்களில் நம்முடன் பணி செய்பவர்களிடமும், திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியிடமும், முதிர்ந்த வயதில் உறவினர்களுடனும்… என்று நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் உரையாடுகிற�ோம். பிறர�ோடு உறவாட, உறவை வலுப்படுத்த உரையாடல் ஓர் இன்றியமையா தேவை ஆகும். இத்தகைய பண்பு நாம் நன்கு வாழ வழிகாட்டுவத�ோடு, நம் வ ா ழ் வி ற் கு மெ ரு கூ ட்ட வு ம் செய்கின்றது. சக மனிதர்கள�ோடு உ ரை ய ா டு வ து ம னி த ர்க ளு க்கே உரித்தான பண்பு. நாம் வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு மனிதரையும் (நம் குடும்ப உ று ப் பி னர்கள ா ய் இ ரு ப் பி னு ம் ) , அ வ ர்கள ை மு ழு மை ய ா க அ றி ந் து க�ொள்வ து ம் , புரிந்துக�ொள்வதும் அரிதான
12
ஒன்று. உரையாடுவதன் வழியாகத்தான் மற்றவர்களை ஓரளவாவது அறிந்துக�ொள்ள முடியும். ஒருவர் மற்றவர�ோடு உரையாடாமலும், எந்தவ�ொரு த�ொடர்பும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு மாறுபட்ட ஒன்றாக இருக்கும். நாம் ஏன் உரையாட வேண்டும்? விளையும் நன்மைகள் என்ன? உரையாடலின் பயன்கள்:
அடுத்தவர�ோடு நாம் மனம் விட்டு உரையாடுவதால் விளையும் நன்மைகள் பல. அவற்றை நாம் மூன்றாகப் பிரிக்கலாம். அவை அறிதல், புரிதல், அன்பு செய்தல் (Knowing, Understanding and Loving). இவை ஒ ன ்ற ோட�ொன் று ச ா ர் பு டை ய வை . ந ம்ம ோ டு வ ா ழ்ப வ ர்கள ை அறிந்துக�ொள்ளவும், பு ரி ந் து க�ொள்ள வு ம் , அன்பு செய்யவும் உ ரை ய ா ட ல் அ டி ப ்படை ய ா க அமைகின்றது.
உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, … எவ்வளவு தேவையானாலும், கடன் க�ொடு. (இ. ச. 15:8)
அதனால்
2018
அறிந்துக�ொள்ளல்: நாம் பிறர�ோடு உரையாடும்போது ஏற்படும் கருத்துப் பரிமாற்றத்தால் நமது அறிவையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. சில நேரங்களில் அடுத்தவரின் கருத்துகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டலாம். இத்தகைய பகிர்தலின் வழியாய், மற்றவரின் பட்டறிவுகளிலிருந்து நாம் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம். சிறப்பான வகையில், உரையாடல் அடுத்தவரின் நன்மைத்தனத்தை அறிந்துக�ொள்ளவும், பட்டறியவும் தகுந்த சூழலை உருவாக்குகின்றது. ஒருவர் மற்றவர�ோடு உரையாடுவதே அடுத்தவரை அறிந்துக�ொள்ளச் சிறந்த வழியாக உள்ளது. புரிந்துக�ொள்ளல்:
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரிடையேயும், அவர்களுக்கே உரித்தான ஒரு கதை உள்ளது. (Everyone has a story to tell). அந்தக் கதைகளைக் கேட்கும்போதுதான் அந்த நபர் வாழ்க்கையில் சந்திக்கும் தனிப்பட்ட பட்டறிவுகளையும், அவரின் மனக்கவலைகளையும், சிக்கல்களையும், தேவைகளையும், மனநிலையையும் புரிந்துக�ொள்ள முடியும். இத்தகையத�ொரு புரிதலுக்கு உரையாடலே அடித்தளமாய் அமைகின்றது. ஏனெனில், நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்த வார்த்தைகளே மிகச் சிறந்த கருவி. அன்பு செய்தல்:
பகிர்தலின் வழியாய் நம்மோடு வாழ்பவர்களை அறிந்து, புரிந்துக�ொள்கிற�ோம். இந்தப் புரிதல் அத�ோடு நின்றுவிடாமல் மற்றவரை உண்மையாக அன்பு செய்யத் தூண்டுகிறது. சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், நாம் யாரையெல்லாம் மிகுதியாக அன்பு செய்கின்றோம�ோ அவர்களிடம் மிகுதியாக உரையாட விரும்புகின்றோம். அதேப�ோல் நாம் யாரிடமெல்லாம் மிகுந்த நேரம் செலவிடுகின்றோம் என்று பார்த்தால் உறுதியாக அவர்கள் நாம் மிகுந்த அன்பு செய்பவர்களாகத்தான் இருப்பர். இன்றைய சூழலில் த�ொலைபேசி, மற்றும் மற்ற சமூக வலைதளங்களில், நண்பர்களிடமும், காதலர்களிடையேயும் நிலவும் நீண்ட நேர உரையாடலும், உறவு பரிமாற்றமும் இத்தகைய அன்பிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. இவ்வாறான உறவுப் பரிமாற்றம் மனித தேவையும் ஆகும். எந்தச் சூழலிலும் அடுத்தவரின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய உரையாடல் எப்போதும் உள்ளத�ோ அங்குக் கண்டிப்பாக
2018
ஒருவர் மற்றவர�ோடு உரையாடுவதே அடுத்தவரை அறிந்துக�ொள்ளச் சிறந்த வழியாக உள்ளது. நல்ல உறவு பரிமாற்றமும், பகிர்தலும், அன்பும் நிலவும் என்பதில் ஐயமில்லை. நாம் ஒன்றாகக் கூடி வாழும் இடங்களிலும், பணித்தளங்களிலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கலந்துரையாடல் மனதிற்குள் புதைந்துள்ள கசப்பான வெறுப்புணர்வுகளைக் களைந்தெறிய உதவும். பதவியில் உள்ளவர்கள் மற்றும் பணியாளர்களிடையே மனத்தாங்கல்கள் மற்றும் ஐயங்கள் ஏற்படும்போது, மனதில் உள்ளதை ஒருவர் ஒருவர�ோடு பரிமாறிக்கொண்டால்தான் ஒருவகை மன அமைதியையும், புரிதலையும் அடைய முடியும். உள்மனதில் உள்ளதை மற்றவர�ோடு பரிமாறிக்கொள்ளும்போதுதான் சிக்கல்களுக்கு இணக்கமான தீர்வு கிடைக்கும். குடும்பங்களிலும், நாம் வாழும் குழுமங்களிலும் உரையாடலின் வழியாய் சரியான பகிர்தல் மற்றும் புரிதல் நிலவும்போது, பல சிக்கல்களைத் தவிர்த்து வாழலாம். இச்சூழல் நம்முடைய குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் நல்லத�ொரு தீர்வை க�ொண்டுவரும். மேலும் நம் கவலைகளை மற்றவர்கள�ோடு பகிர்ந்துக�ொள்ளும்போது நம்முடைய மனச்சுமை குறைகின்றது. எனவே, வாழ்வில் துவண்டு ப�ோயிருப்பவர்களை வலுப்படுத்தி ஆறுதலூட்டும் ஆற்றல் உரையாடலுக்கு உண்டு. எனவே நம்மோடு வாழ்பவர்கள�ோடு மனம் விட்டுப் பேசி, திறந்த உள்ளத்தோடு உரையாட பழகிக்கொள்வோம். நம்முடைய உரையாடல் திறந்த மனதுடனும், அடுத்தவரின் நலனில் அக்கறை க�ொண்டதாகவும், கூர்ந்து கவனிக்கும் மனப்பான்மையுடையதாகவும் அமையட்டும். உள்ளத்தில் இருப்பதை எவ்வித அச்சமுமின்றி வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்தித் தருவ�ோம். ஏனெனில் உரையாடல் நம் உறவுகளை வளர்க்கும் ஒரு கருவி. அத�ோடு மனம் திறந்து உரையாடுவதென்பது நம் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு சிறந்த வழி. உரையாடுவ�ோம் - உறவாடுவ�ோம்.
.
உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற. (இ. ச. 15:11)
13
ஆன்டோ சகாய ராஜ், ச.ச.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு தலைப்புகளில் எழுதி, நம் சிந்தனைக்கு உரமூட்டிய அருள்தந்தை ஆன்டோ சகாய ராஜ், ச.ச. அவர்கள் இவ்விதழ் முதல், விவிலியத்தில் காணலாகும் மாந்தர்கள் ச�ொல்லும் வாழ்க்கைப் பாடங்களை, ‘கடவுள் தந்த கதாபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் த�ொடராகத் தரவுள்ளார். அவரின் படைப்பின் வழி பயன் பெறுவ�ோம். – ஆசிரியர்.
இவர் பெற்றோர் இல்லாமல் பிறந்தவர். உருண்டு பிறண்டு தத்தித் தவழும் குழந்தைப் பருவத்தை அனுபவிக்காதவர். உலகிற்கு வந்தப�ோது அவருக்குப் பெற்றோர், உற்றார் உறவினர்கள் கிடையாது. கடவுளின் முதல் நகல். கடவுளின் உயிர்மூச்சை உயிராகப் பெற்றவர். முதல் அறுவை சிகிச்சை செய்து க�ொண்டவர், கடவுள�ோடு பேசியவர், த�ோட்டத்தில் அவர�ோடு கைவீசி நடந்தவர். பாவம் என்ற சாயலே இல்லாமல் பிறந்தவர். உலக உயிரினங்களுக்குப் பெயர் சூட்டியவர். த�ொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவர். இப்படி இன்னும் பல சிறப்புக் கூறுகளைக் க�ொண்ட உலகின் முதல் மனிதர் ஆதாம்.
உண்மையான அன்பும் நட்பும் துன்ப நாட்களில்தான் தெரியும்.
கடவுள் தந்த கதாபாத்திரங்களில் மிக முக்கியமான, முதன்மையான இவர், ‘பூமியில் வாழ்ந்தாரா?’ என்று கேட்பதைவிட ‘இவர் வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?’ என்று சிந்திப்பதுதான் சாலச் சிறந்தது.
பழி சுமத்தாதே
ஒருவரின் உண்மையான அன்பும் நட்பும் துன்ப நாட்களில்தான் தெரியும். கடவுள் ஆதாமிடம் வந்து “நீ உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாய�ோ?” (த�ொ.நூ. 3:11) என்று கேட்டதும், ‘ஆமாம்/இல்லை’ என்று விடையளிக்காமல், தன்னை ஒரு குற்றமற்றவன் என நிரூபிக்க முயல்கின்றார். ஆனால் உண்மையில் 14
உன் வாழ்நாளை நீ முடிக்கும்… நேரத்தில், உன் உரிமைச் ச�ொத்தைப் பகிர்ந்து க�ொடு. (சீ. ஞா. 33:24)
2018
“த�ோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் ப�ோல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” (த�ொ. நூ. 2:16,17) என்று ஆண்டவர் ஆதாமிடம் மட்டுமே ச�ொல்லியிருக்கிறார். விவிலியக் கதையின் அடிப்படையில் பார்த்தால் அதன் பிறகுதான் ஏவாள் படைக்கப்பட்டாள். முழுமையான வழிகாட்டலைத் தெரிந்திருந்தும், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் க�ொடுத்தாள்; நானும் உண்டேன்” (த�ொ.நூ. 3:12) என்று தெரியாதவனைப் ப�ோல மறுதலித்து, “இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்” (த�ொ.நூ. 2:23) என்று அன்று அழகில் மயங்கிப் பாடிய அதே வாயால் இன்று குற்றம் சுமத்துகின்றான்.
துன்பங்களில் துவளாதே ‘தன் பாவத்திற்குத் தண்டனையாக, சாபமிடப்பட்ட, முட்செடியும் முட்புதரும் உள்ள நிலம்தான் கிடைக்கிறது. இனி உழைத்துத்தான் உண்ண வேண்டும். அதுவும் நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்தால்தான் பலன் கிடைக்கும்’ என்ற நிலை வந்தப�ோது, இழந்த இன்பத்தையும் வரப்போகும் துன்பத்தையும் எண்ணி ஒப்பாரி வைக்கவில்லை. ‘ஏன் எனக்கு இந்தத் தண்டனை?’ என்று எதிர் கேள்வி கேட்டுப் புலம்பவுமில்லை. தவற்றை ஏற்றுக்கொண்டு புதிய வாழ்வைத் த�ொடங்குகின்றார். ‘கல்வி, த�ொழில், உறவுகள் என்று எதிலும் த�ோல்வியும் துன்பமும் வரலாம். எதிர்பாராத ந�ோய், விபத்துகள் மனமுடைய செய்தாலும் மீண்டும் புதிதாகத் த�ொடங்க வேண்டும்’ என்பதற்கு இந்த முதல் தம்பதியர் எடுத்துக்காட்டாய் உள்ளனர். இவ்வாறான பல்வேறு பாடங்களைக் கற்றுத் தரும் நம் முதல் பெற்றோரிடமிருந்து மேற்கண்ட சில த�ொடக்கப் பாடங்களைக் கற்றுச் செயல்படுவ�ோம்.
.
(கதாபாத்திரங்கள் த�ொடரும்…)
நானும் மனிதன்தான், என்னிடமும் ஆயிரம் குற்றம் குறைகள் உண்டு என்பதை நாம் பல நேரங்களில் மறந்து, அடுத்தவரின் குற்றத்தை மட்டும் பார்க்கையில் ஆதாமிலிருந்து நாம் எந்த வகையில் வேறுபடுகின்றோம்?
துயரிலும் துணையாயிரு
கடவுளின் தீர்ப்பின்படி, ஆதாம் ஏவாள் இருவரும் ஏதேன் த�ோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்படுகின்றனர். ‘எல்லாத்துக்கும் நீதான் காரணம், தனிமனிதனாக மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்… உன்னால் சபிக்கப்பட்ட மனிதனாக நிற்கிறேன்… ப�ோ அந்தப் பக்கம்’ என்று ஆதாம் ஏவாளைப் பார்த்து வசைப்பாடாமல், மனம் தெளிந்தவராய், தன் துணைவியை ஏற்றுக்கொள்கிறான். முதலில் குறைகூறியவர் பிறகு புரிந்துக�ொள்கிறார். குடும்பத்தில் கணவன�ோ மனைவிய�ோ சந்தர்ப்பச் சூழலில் தவறும்போது அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது, தட்டிக்கொடுத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆதாம் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார்.
2018
உன்னத இறைவன் உனக்குக் க�ொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும்… க�ொடு. (சீ. ஞா. 35:9)
15
மு. அ. எழிலன்.
‘அன்னை பூமி’ என்று இந்த மண்ணைப் ப�ோற்றுகின்ற, கண்களாகப் பெண்ணை மதிக்கின்ற, கண்ணியம் மிக்க மாந்தர்கள் நாம் என்பதை உலகறியும். மண்ணிலிருந்தே மகத்தான மனிதர்களை உருவாக்கிய இறைவன், பெண்ணிலிருந்து இன்றும் அப்பணியைத் த�ொடர்கின்றார். “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” (த�ொ.நூ. 2:18) என்றுரைத்தார் கடவுள். முதல் நாள் த�ொடங்கி இறுதி நாள் வரை, தாம் படைத்த ஒவ்வொன்றையும் பார்த்து ‘நல்லது’ என்று தமக்குள் ச�ொல்லிக் க�ொண்ட கடவுள், மனிதனைப் படைத்த பிறகு, அவனுக்குச் சரியான துணை தம் படைப்புகளில் இல்லை என்பதைக் கண்டு, அவனுக்குத் துணை ஒன்றைப் படைப்பதற்கு முன்பு, அவர் உதிர்த்த அருமையான, எதிர்மறையான ச�ொல், ‘நல்லதன்று.’ இது நமக்கு வியப்பைத் தருகிறது. ‘தனிமை இனிமையானது’ என்ற ப�ோதிலும் ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று ஒரு பெண் இருப்பது எவ்வளவு தேவை என்பதைப் புவி படைப்பின்போதே உணர்ந்து உரைத்த அறிவு செறிந்த இறைச்சொற்றொடர், “தனிமையாக இருப்பது நல்லதன்று.” இவை வார்த்தை வைரங்கள்; ஆழமான ப�ொருள் ப�ொதிந்த புதையல்கள்.
சமத்துவத் த�ோழியாக, இல்லற விளக்காக, சுடர்விடுவது நம் வாழ்க்கை இருட்டை வெளிச்சமாக்குகிறது. வன்மையான ஆண், மென்மையான பெண், பூவும் காம்பும் ப�ோல இணைந்ததே இவ்வுலகம். இவர்களின் இந்த ஈடு இணையற்ற இணைப்பைத் தவிர, பிணைப்பைத் தவிர வேறு எந்த இணைப்பும் அமைதியான குடும்பத்திற்கு ஏற்றதன்று. அப்படி அமைந்தால் உலகம் நிம்மதியை இழந்துவிடும். ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து இருப்பதே இல்லற வாழ்வில் இன்ப விண்ணகம். தவறான புரிதலும் முறையற்ற அணுகுமுறையும் துன்ப நரகம். பெண்ணிடம் அன்பாகவும் பண்பாகவும் மரியாதையாகவும், அவள் உரிமைகளை மிதிக்காமல், மதித்துப் ப�ோற்றும் பண்புள்ள உலகமே பகுத்தறிவுள்ள உலகம்.
மின்னணுவியல் உலகிலும், உயிர்களைப் பாதுகாக்கும் புதையலாக, பழமை மாறாமல், புதுமைக் குலையாமல், ‘தாய்மை’ இருப்பது பெண்மையின் சிறப்பு. பெண், உடன்பிறந்தாளாக,
16
உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் க�ொடு. (சீ. ஞா. 35:9)
பெண்மையைப் ப�ோற்றும் பூமியே இறைவனின் அருள்பெற்ற பூமி. 2018
மின்னணுவியல் உலகிலும், உயிர்களைப் பாதுகாக்கும் புதையலாக, பழமை மாறாமல், புதுமைக் குலையாமல், ‘தாய்மை’ இருப்பது பெண்மையின் சிறப்பு. மிருகங்கள்கூட தம் இணைகளுடன் மனித நேயத்தோடு நடந்து க�ொள்ளும்போது, மனிதன், மிருக நேயம்கூட இல்லாமல் நடந்து க�ொள்ளும் வகை, அறிவியல் உலகின், உளவியல் க�ோளாறுகள் எனலாம். ஊடகங்கள் பெண்களை விற்பனைப் ப�ொருளாக, சதைக் கவர்ச்சி ப�ொம்மைகளாகக் காட்சிப்படுத்தும்போது, பேதமை த�ோகை விரித்தாடுகின்றது; நெஞ்சம் வேர்க்கின்றது. பெண்மையைப் ப�ோற்றும் பூமியே இறைவனின் அருள்பெற்ற பூமி. தெய்வப் புலவர் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று வினவி விட்டு, அவள் பெருமைகளை, தெய்வீகத் திண்மைகளை உணர்ந்து, அவள் ‘பெய்யென ச�ொன்னால் பெய்யும் மழை’ என்கிறார். பெண்ணைத் தெய்வப் பிறவியாகப் பார்ப்பது சரியான பார்வையன்று; அவளைப் பெண்ணாக பார்ப்பதே சரியான பார்வையாகும். மனித உயிர்களை, உயரிய நிலைக்கு அழைத்துச் செல்லும் பெண், வரலாற்றுச் சான்றுகளில் வியப்பான படைப்பாக ஒளிர்கின்றாள். உலகின் இருட்டை வெளிச்சமாக்கிய தாமஸ் ஆல்வா எடிசனை, பள்ளிக்கூடம் வெளியே தள்ளி விட்டப�ோதும், தளராமல், தாயன்பு காட்டி, மேதை ஆக்கியது நான்சி எடிசன் (தாய்) எனும் பெண் என்பதை அறிவியல் உலகம் மறந்துவிடவில்லை. மாவீரன் சிவாஜியை உருவாக்கியவளும் ஜிஜாபாய் (தாய்) எனும் பெண்தான் என்பதை வரலாற்று
2018
உலகம் வழிம�ொழிகின்றது. தீரமிக்க கதைகளைச் ச�ொன்ன ஜிஜாபாய், தாய்மார்கள் வரலாற்றில் ஒரு துருவ விண்மீன். கணவனின் பழிப�ோக்க வீரக் கனல் கண்களில் தெறிக்க, தனி ஒரு பெண்ணாய் நீதி மன்றத்தில் ‘தேரா மன்னா’ என்று அரசனையே தூக்கி எறிந்து, அரசியல் புரட்சியைத் தீயிட்டுத் த�ொடங்கி வைத்த கண்ணகியும் ஒரு பெண்தான். மாதவி என்ற மாணிக்க முத்து ஈன்ற மணிமேகலையெனும் ச�ொத்து, உயிர்களின் பசிப் பிணி ப�ோக்கிய அறப்பெண்; மறப்பெண். அவளுடைய அறப்பணியை இலக்கியத்திலிருந்து அழிக்க முடியுமா? விண்ணில் வலம் வந்த கல்பனா சாவ்லா இன்று ஒரு நட்சத்திரமாக ஒளிர்ந்து க�ொண்டிருக்கிறார். அறிவியல் ஆய்வாளரான அந்த மகத்தான பெண்மணியும் பெண்மையின் புகழுக்குரிய அழியாத அறிவுச் சின்னம்தான். சங்கக் காலத்தில் ஔவையார்; சமகாலத்தில் அன்னை தெரேசா. முதுமையிலும் இளமையான புகழ�ோடு காலத்தை வென்று நிற்கும் மாதர் குல மாணிக்கங்கள் இவர்கள். பெண் ஒரு வினையூக்கி, (கிரியாவூக்கி), அறிவு ஆற்றல், அகிலப் பேராற்றல். மானிட பிறப்பின் மணி மகுடம், மதிநலம் மிக்க மந்திரி, உயிர் துணை ராஜ தந்திரி, துன்ப துயர இருட்டில் ஒளி விளக்கு, வாழ்வை பசுமையாக்கும் வற்றா நதி. அவளின் தூய்மைப் பண்பை, தாய்மை அன்பைக் கண்ணியத்துடன் ப�ோற்றும்போதுதான், வீர, தீர ஆண் உலகம் மலரும்; பெண்ணுலகம் மணம் வீசும்; இவ்வுலகம் ஒளி வீசும்.
.
எப்போதும் தூய ஆவியின் துணை க�ொண்டு வேண்டுதல் செய்யுங்கள். (எபே. 6:18)
17
01
02
08
18 18 2018
03
04
09
10
11
2018
05
06
12
13
07
2018 (. )
14
19 19
2018
20
எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள். (எபே. 6:18)
2018
2018
என் ஆசியால் … ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன். (தி. பா. 132:15)
21
அந்தோனி கிறிஸ்டி, ச.ச.
தலைவர்: தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே, எல்லாரும்: ஆமென். தலைவர்: வாழ்வின் ஊற்றாம் இறைவனின் ஆசீர் நம்மோடு இருப்பதாக, எல்லாரும்:
என்றென்றும் இருப்பதாக.
தலைவர்: நிறைவாழ்வு தரும் கிறிஸ்துவின் அன்பு நம்மோடு இருப்பதாக, எல்லாரும்:
என்றென்றும்; இருப்பதாக.
தலைவர்: நிலைவாழ்வுக்கு இட்டுச்செல்லும் தூய ஆவியாரின் நட்புறவு நம்மோடு இருப்பதாக, எல்லாரும்: என்றென்றும் இருப்பதாக. ஒருவர்: அன்புமிக்கச் சக�ோதர சக�ோதரிகளே, நம்மோடு வாழ்ந்து (ஓராண்டிற்கு முன்) பிரிந்த நம் சக�ோதரர்/சக�ோதரி… அவர்களின் நினைவு நாளை இறைப்பதம் சமர்ப்பிக்க நாம் கூடியுள்ளோம். அவருக்கும், அவர் வழியாய் நம் அனைவருக்கும் இறைவன் செய்த நன்மைகளுக்காகவும் இவ்வேளையில் நன்றி கூறுவ�ோம். அவரது குற்றம் குறைகளை மன்னித்து இறைவன் அவருக்கு நிலைவாழ்வு அளிக்கச் செபிக்கின்ற இவ்வேளையில் நம் குற்றங்குறைகளை இறைவன் மன்னித்தருள வேண்டுவ�ோம்.
தலைவர்: எல்லாம் வல்ல இறைவன் நம் குற்றங்களை மன்னித்து நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்வாராக. எல்லாரும்: ஆமென். ஒருவர்: இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புது வாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவர�ோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்தது ப�ோலவே நாமும் அவர�ோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது ப�ோலவே நாமும் அவர�ோடு ஒன்றித்து உயிர்த்தெழுவ�ோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவர�ோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்துப�ோகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலைப் பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவ�ோடு நாம் இறந்தோமாயின், அவர�ோடு வாழ்வோம் என்பதே நாம் க�ொண்டுள்ள நம்பிக்கை (உர�ோ. 6: 4-11) இது ஆண்டவரின் அருள்வாக்கு. எல்லாரும்: இறைவா உமக்கு நன்றி.
எல்லாரும்: ஆண்டவரே, இரக்கமுள்ள தந்தையே, எம் குற்றம் குறைகளை மன்னித்து எம் செபங்களை ஏற்றருளும்.
22
ஏழைகளுக்குத் தாராளமாய்க் க�ொடு; … இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும். (சீ. ஞா. 7:32)
2018
ஒருவர்: ஆண்டவரே, எம் குற்றங்களை நீர் மனதில் க�ொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? எல்லாரும்: ஆண்டவரே, எம் குற்றங்களை நீர் மனதில் க�ொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஒருவர்: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை ந�ோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும், என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் க�ொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும் (தி.பா. 130: 1-3). எல்லாரும்: ஆண்டவரே, எம் குற்றங்களை நீர் மனதில் க�ொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஒருவர்: நீர�ோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்; ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது ச�ொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் (தி.பா. 130:4-5). எல்லாரும்: ஆண்டவரே, எம் குற்றங்களை நீர் மனதில் க�ொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஒருவர்: விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. இஸ்ரயலே, ஆண்டவரையே நம்பியிரு, பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே (தி.பா. 130:6-8). எல்லாரும்: ஆண்டவரே, எம் குற்றங்களை நீர் மனதில் க�ொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? தலைவர்: எம் தாயும் தந்தையுமான இறைவா, குற்றங்களை மன்னிப்பவரே, இரக்கத்தின் ஊற்றாயுள்ளவரே, எம் குற்றங்களையும் எம் சக�ோதரர்/சக�ோதரி… அவர்களின் குற்றங்களையும் மன்னித்து, இரக்கம் வைத்து,
2018
உம் பேரின்ப வீட்டின் முற்றத்திலே நாங்கள் இணைந்து வாழும் வரம் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிற�ோம். எல்லாரும்: ஆமென். பாடல்: மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது மனமிரங்கி ஆண்டவரே - இன்ப சாந்தி தாரும் (2) விரித்த திருக் கை கால்கள், விலாவிலிருந்தோடும் விலையில்லா உதிரத்தால் - அவர்களை விண்சேரும் (2) மரித்த விசுவாசிகளின்... (தலைவர்: மறைந்த… அவர்களின் துணைவியார்/ கணவர் மகன், மகள் இப்போது அவரது படத்திற்கு முன்பாக விளக்கேற்றி மாலை அணிவிப்பார். நாம் அனைவரும் சக�ோதரர்/ சக�ோதரி… அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் குடும்பத்தினரின் மனத்திடத்திற்காகவும் செபிப்போம். எல்லாரும்: பரல�ோகத்தில் இருக்கின்ற... தலைவர்: சக�ோதரர் / சக�ோதரி… அவர்களின் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் முன்வந்து மெழுகுத்திரிகளை ஏற்ற, அவர்கள�ோடு இணைந்து அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நாம் செபிப்போம். எல்லாரும்: அருள்நிறைந்த மரியே... (3 முறை) தலைவர்: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மகிமை உண்டாவதாக, எல்லாரும்: ஆதியிலிருந்தது ப�ோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென். தலைவர்: ஆன்ம இளைப்பாற்றியை இவருக்குத் தந்தருளும் ஆண்டவரே! எல்லாரும்: முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக. தலைவர்: உம் அமைதியில் இவர் இளைப்பாறுவாராக! எல்லாரும்: ஆமென். பாடல்: வியாகுல மாமரியே…
கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகள�ோடு பகிர்ந்து உண்பார். (நீ. ம�ொ. 22:9)
23
தலைவர்: செபிப்போமாக உயிரும் உயிர்ப்புமான இயேசுவே, உம் சிலுவையாலும் மரணத்தினாலும் இறைத் தந்தையின் இரக்கத்தை எமக்குச் ச�ொந்தமாக்கினீர். எம்மைவிட்டுப் பிரிந்த எம் சக�ோதரர்/சக�ோதரி… அவர்களின் நினைவு நாளில் அவரது இளைப்பாற்றிக்காக மன்றாடுகின்றோம். உம் திரு இரத்தத்தினால் அவரது ஆன்மாவை தூய்மைப்படுத்தி இறை இரக்கத்தினால் முடிவில்லா அமைதியை அவருக்கு அளித்தருளும். கூடியுள்ள நாங்கள் அனைவரும் உம் ஒளியிலே நடக்க உமது ஆவியை எமக்குத் தந்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே! எல்லாரும்: ஆமென். தலைவர்: ஆண்டவர் நம்மோடு இருப்பாராக, எல்லாரும்: என்றென்றும்; இருப்பாராக. தலைவர்: வாழ்விற்கெல்லாம் ஊற்றாகிய இறைவன்… தன் வாழ்வில் புரிந்த அனைத்து நன்மைகளையும் நிறைவாக ஏற்றுக்கொள்வாராக,
தலைவர்: மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்து அவரைத் தமது இறப்பினாலும் உயிர்ப்பினாலும் மீட்டு இறைப்பதம் சேர்ப்பாராக, எல்லாரும்: ஆமென். தலைவர்: இறப்பு என்னும் உண்மையை உளமார உணர்ந்தவர்களாய் நல்வாழ்வு வாழ தூய ஆவி நமக்குத் துணைபுரிவாராக, எல்லாரும்: ஆமென். தலைவர்: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் நம் ஒவ்வொருவரையும் நம் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக, எல்லாரும்: ஆமென். தலைவர்: இயேசுவே உமக்குப் புகழ்! எல்லாரும்: இறைவா உமக்குப் புகழ்! நன்றி பாடல் - நன்றியால் துதிப் பாடு…
எல்லாரும்: ஆமென்,
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து க�ொடுப்பதும், தங்க இடமில்லா வறிய�ோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் க�ொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் க�ொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் ந�ோன்பு! (எசா. 58:7)
24
தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. (1திம�ொ. 6:18)
2018
.
ம. மரிய லூயிஸ், ச.ச.
- 3
ர் ஓ ஓர்
இளம்பெண் பேருந்தில் ஏறி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அடுத்தப் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய குண்டான பெண் ஒருத்தி அந்த இளம்பெண்ணை நெருக்கிக் க�ொண்டு அவள் அருகில் அமர்ந்தாள். அவள் தன்னோடு ஏராளமான மூட்டை முடிச்சுகளையும் க�ொண்டு வந்திருந்தாள். பேருந்தில் அந்த இளம்பெண்ணுக்குப் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணுக்குக் க�ோபம் தலைக்கேறியது. ‘சே! என்ன இந்தப் பெண்மணி க�ொஞ்சம்கூட நாகரிகம் இல்லாமல் நடந்து க�ொள்கிறாள்...!’ என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள். பிறகு சத்தமாக அந்த இளம்பெண்ணை ந�ோக்கி, “ஏன் இப்படி எதுவுமே பேசாமல் அமைதியாக அமர்ந்துக�ொண்டு இருக்கிறாய்! இந்தப் பெண்மணியைப் பார்த்து உனக்குக் க�ோபமே வரவில்லையா? தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கே க�ோபம் வரும்போது, நீ எப்படி இவ்வளவு ப�ொறுமையாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
அந்த இளம்பெண் சற்றும் சலனம் இல்லாமல், புன்னகைய�ோடு, “க�ோபப்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? இஃது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா? நம் பயணம�ோ மிகவும் குறுகியது. அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்கப் ப�ோகிறேன். அப்படியிருக்க, இதற்காக நான் ஏன் சலித்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் அவருடன் சண்டையிட்டு என் நிம்மதியைக் கெடுத்து, மன அமைதியை இழக்க வேண்டும்?” என்றாள். அவளுடைய இவ்வார்த்தைகள் ப�ொன் எழுத்துகளால் ப�ொறிக்கப்பட வேண்டும். “தேவையற்ற, வீணான, சிறிய நிகழ்வுகளுக்காக வாதிடுவது ப�ொருளற்றது. ஏனெனில் நாம் மேற்கொள்ளும் இப்பயணம் மிகவும் குறுகியது.” நம்முடைய இவ்வுலகப் பயணம் மிகவும் குறுகியது என்பதை உணர்ந்துவிட்டால், நாம் தவிர்க்க வேண்டியவை நிறையவே உள்ளன.
. . . . . . . .
சண்டைச் சச்சரவுகள் வீண் விவாதங்கள் மன்னிக்காத மனநிலை மனநிறைவின்மை குறைகாணும் மனநிலை புண்படுத்தும் வார்த்தைகள் வளர்ச்சிக்கு உதவாத ச�ொற்கள் பழிவாங்கத் துடிக்கும் மனம்
இவை ப�ோன்ற அனைத்துமே நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிப்பவையாகும்.
2018
தங்களைத் தாழ்த்துவ�ோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும். (சீ. ஞா. 35:17)
25
. உங்கள்
இதயத்தை யாராவது உடைத்து விட்டார்களா? அமைதியாக இருங்கள்; நம் பயணம் குறுகியது.
. உங்களை
யாராவது காட்டிக்கொடுத்துவிட்டார்களா? க�ோபப்படாமல் இருங்கள்; நம் பயணம் குறுகியது.
. சராசரியாக
எட்டு மணி நேரம் ஒரு நாளைக்குத் தூங்கினால், ஓராண்டுக்கு 121 நாட்கள். அதுவே வாழ்நாளில் 25 ஆண்டுகள். எனவே, மீதி இருப்பது 50 ஆண்டுகள் மட்டுமே!
. ஒரு
சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரத்தைச் செல்பேசி, த�ொலைக்காட்சி மற்றும் கணினியில் செலவு செய்தால், அதுவே வாழ்நாளில் 12 ஆண்டுகள். எனவே மீதி இருப்பது 38 ஆண்டுகள் மட்டுமே!
. உங்களை
யாராவது ஏமாற்றிவிட்டார்களா? கலக்கமடையாது இருங்கள்; நம் பயணம் குறுகியது.
. உங்களை
யாராவது இழிவுபடுத்திவிட்டார்களா? தாழ்ச்சிய�ோடு இருங்கள்; நம் பயணம் குறுகியது.
. உங்களை
யாராவது கேவலமாகப் பேசிவிட்டார்களா? மனதிற்குள் அதை எடுத்துச் செல்லாதீர்கள்; நம் பயணம் குறுகியது.
. உணவு உண்பதற்கும், உணவைத் தயாரிப்பதற்கும் ஒருவர் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகளைச் செலவழித்தால், மீதி இருப்பது 18 ஆண்டுகள் மட்டுமே!
. முன்குழந்தைப்
பருவம், பயணங்கள், வீட்டு வேலைகள், ப�ொருள்களை வாங்கக் கடைகளுக்குச் செல்லுதல், தன் சுத்தத்திற்கான நேரம் ஆகியவற்றுக்காக ஒருவர் 11 ஆண்டுகளைச் செலவழித்தால், மீதி இருப்பது ஏழு ஆண்டுகள் மட்டுமே!
. உங்களை
யாராவது வளரவிடாமல் தடுத்துவிட்டார்களா? பழிவாங்கத் துடிக்காதீர்கள்; நம் பயணம் குறுகியது.
. உங்களை
யாராவது துன்புறுத்தினார்களா? சகிப்புத்தன்மைய�ோடு இருங்கள்; நம் பயணம் குறுகியது.
. உங்களை
யாராவது எரிச்சல் அடையச் செய்தார்களா? ப�ொறுமைய�ோடு இருங்கள்; நம் பயணம் குறுகியது.
வாழ்வதை விட்டுவிட்டு ஏன் நடைப்பிணமாக வாழ்ந்து க�ொண்டிருக்கிற�ோம்?
. சிறப்பான
வாழ்க்கையை வாழ முடிகின்றப�ோது, ஏன் இயந்திரமயமான வாழ்க்கையை வாழ்ந்து க�ொண்டிருக்கிற�ோம்?
. பிறரை
அன்பு செய்து, ஏற்றுக்கொண்டு வாழ முடியும் என்கிறப�ோது, ஏன் நாம் அவர்களைத் தீர்ப்பிட்டுக் க�ொண்டிருக்கிற�ோம்?
. மகிழ்ச்சியாக
தங்களுடைய பயண நேரத்தை அறிந்தவர் எவரும் இலர். தங்களுடைய நிறுத்தம் எப்போது வரும் என்பதும் யாருக்கும் தெரியாது. நம் பயணம் குறுகியது என்பது மட்டுமே உண்மை.
26
அந்த ஏழு ஆண்டுகளிலும் நாம் உண்மையாகவே முழுமையாக வாழ்கின்றோமா?
. உயிர�ோட்டமாக
நம் பயணம் குறுகியது; அனுபவிக்க வேண்டியவை நிறைய உள்ளன; நேர்மறையானவை ஏராளமாக உள்ளன.
ஒரு மனிதனுடைய ம�ொத்த வாழ்நாள் ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம்.
எனவே, ஏழு ஆண்டுகள் மட்டுமே உங்களுடைய ம�ொத்த வாழ்நாள். அதை அறிந்த பிறகு ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு நிமிடமேனும் மகிழ்வின்றி இருக்கலாமா?
75
வாழ முடியும் என்றப�ோதும், ஏன் வெறுப்பையும் பதற்றத்தையும், கவலையையும், பயத்தையும் உள்ளத்தில் க�ொண்டு வாழ்ந்து க�ொண்டிருக்கிற�ோம்?
நாம் ஏன் இன்னும் அதிகமாக அன்பையும் பரிவையும் மகிழ்ச்சியையும் கரிசனையையும் வெளிப்படுத்தக் கூடாது?
தாராளமாக விருந்தோம்புவ�ோரை மனிதர் புகழ்வர். (சீ. ஞா. 31:23)
2018
. . . . . .
கடைசி முறையாக எப்போது நீங்கள் தூய்மையான காற்றைச் சுவாசித்து மகிழ்ந்தீர்கள்? எப்போது நீங்கள் வடித்தீர்கள்?
ஆனந்தக்
எப்போது உங்களைச் சுற்றியுள்ள கண்டு வியந்து ப�ோனீர்கள்?
கண்ணீர் உலகைக்
எப்போது நீங்கள் பறவைகளின் பாடலிலும் முகத்தில் படும் குளிர் காற்றிலும் பூக்களின் வாசனையிலும் மெய் மறந்து நின்றீர்கள்? எப்போது உங்கள் வாழ்க்கைத் துணைய�ோடு சிரித்து மகிழ்ந்தீர்கள்? எப்போது சூரிய உதயத்தைய�ோ மறைவைய�ோ கண்டு அதில் மூழ்கிப்போனீர்கள்?
நம் பயணம் குறுகியது; அனுபவிக்க வேண்டியவை நிறைய உள்ளன; நேர்மறையானவை ஏராளமாக உள்ளன; இப்படியும் சிந்திக்கலாமே!
.
தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார். (மத். 16 : 25)
2018
தாராளமாய்க் க�ொடு. …க�ொடுக்கும்போது உள்ளத்தில் ப�ொருமாதே. (இ. ச. 15:10)
27
நூல் விலைப் பட்டியல் பக்கம்
20
28
நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். (எபி. 13:16)
2018
11 மார்ச்
தவக்காலம் - நான்காம் ஞாயிறு. 2குறி. 36:14-16, எபே. 2:4-10 ய�ோவா. 3:14-21
ஒரு தந்தையும் அவரின், இளம் வயது மகனும் காட்டின் வழியே நடந்து சென்று க�ொண்டிருந்தனர். ஓரிடத்தை அவர்கள் அடைந்ததும் அவர்கள் ஒரு பாலத்தைக் கடக்க நேர்ந்தது. அப்போது தந்தை தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே இந்தப் பாலம் மிகவும் பேரிடரானது. எனது கையைப் பிடித்துக்கொள்; கவனமாக நாம் பாலத்தைக் கடந்துவிடலாம” என்றார். அதற்கு மகன், “இல்லை அப்பா, நீங்கள் என் கையைப் பிடித்துக் க�ொள்ளுங்கள்” என்றான். அதற்கு அந்தச் சிறுவனின் தந்தை, “நான் கூறியதற்கும் நீ கூறியதற்கும் வேறுபாடு என்ன? என்று கேட்டதற்கு, “வேறுபாடு உண்டு” என்றான் அந்தச் சிறுவன். “நான் உங்கள் கையைப் பிடித்தேன் என்றால், ஒருவேளை கால் தடுமாறி கீழே விழ நேரிட்டால் நான் உங்கள் கையை விட்டுவிடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தீர்களேயானால் நான் தடுமாறி விழுந்தாலும் உங்கள் கை என்னைக் கீழே விழ விட்டுவிடாமல் தாங்கிப் பிடிக்கும்” என்று பதிலளித்தான். அந்தச் சிறுவன்.
பேட்ரிக் மத்தியாஸ், ச.ச.
“இறைவனின் அளவு கடந்த இரக்கத்தினால் மீட்டு, நம்பிக்கையின் வழியாக அருள் வாழ்வில் நிலைபெற செய்கின்றார். மேலும் இறைவனின் கைவேலைப்பாடாகிய மனிதர்களாகிய நாம் அனைவரும் நற்செயல்கள் புரிந்து வாழ்வது இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் நமக்குக் க�ொடுத்த இறைதிருவுளம்” என்பதையும் கூறுகிறார். இக்கருத்தைத் தழுவியே முதல் வாசகத்தில் பாபில�ோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள், எருசலேமில் உள்ள அவருடைய திருக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்புவதும் இறைத்திருவுளம் என்று அறிகின்றோம். இன்றைய நற்செய்தி “இறைவனில் நம்பிக்கை” என்ற கருத்தை மையப்படுத்துகின்றது. கடவுள் நம்மையெல்லாம் அளவிடற்கரிய வகையிலே அன்பு செய்ததன் வழியாக, தம்முடைய ஒரே பேறான மகனை இவ்வுலகத்தின் மீட்பிற்காய் அனுப்பினார் என்று புனித ய�ோவான் நற்செய்தியாளர் எழுதியிருக்கிறார். ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கைக் க�ொள்வது நமக்கு மீட்பைப் பெற்றுத் தரும். நம்பிக்கைக் க�ொள்வதும், இறைவனில் சார்ந்து வாழ்வதும், இறை திருவுளத்தை நிறைவேற்றுவதில் அடங்கி உள்ளது. அதுவே நம்மை நிலைவாழ்விற்கும் க�ொண்டு செல்லும். இயேசுவில் நம்பிக்கைக் க�ொள்ளாத�ோர் இறைவனுடைய அன்பையும், இரக்கத்தையும் வாழ்வில் உணர்ந்து வாழ்வது அரிது.
18 மார்ச் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று, நாம் அனைவரும் இறைமகன் யேசுவில் நம்பிக்கைக் க�ொண்டு நிலைவாழ்வு பெற, இறைவனுடைய வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுலடியார் எபேசிய திருச்சபைக்கு,
2018
தவக்காலம் - ஐந்தாம் ஞாயிறு. எரே. 31:31-34, எபி. 5:7-9 ய�ோவா. 12:20-33
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று, நாம் இயேசுவ�ோடு இணைந்து அவரது துன்பத்தில் பங்குக�ொள்ள அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தி, தன்னையே உலக மீட்பிற்காகக் கையளித்த இயேசுவின் சிறந்த எடுத்துக்காட்டைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “க�ோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த
நான்தான் உங்கள் வேண்டுதல்களை… ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன். (த�ோபி. 12:12)
29
விளைச்சலை அளிக்கும்” என்ற உவமையை முன் வைக்கும் ஆண்டவர் இயேசு, ‘தன்னையே மாய்த்துக்கொள்கின்ற விதையினால் மட்டுமே நிறைய விளைச்சல் கிடைக்கும், ‘நான்’ என்ற அகந்தை ஒழிந்தால் மட்டுமே சீடத்துவம் என்ற புதிய வாழ்க்கை வெளிப்படும்’ என்கிறார். இந்தக் க�ோதுமை மணியைப் ப�ோல இயேசு இந்த உலகத்தின் மீட்புக்காக இறை அச்சத்தோடு இறைவனின் திட்டத்திற்குத் தன்னையே ஒப்புக் க�ொடுக்கிறார். இன்றைய முதல் வாசகமும் இதைத்தான் வலியுறுத்துகின்றது. யாவே இறைவன் முற்காலத்தில் இஸ்ராயேல் மக்கள�ோடு செய்துக�ொண்ட உடன்படிக்கையைப் புதுப்பித்து, தம்முடைய புதிய சட்டத்தை மக்களின் மனதிலே பதிக்கின்றார். இந்தப் புதிய உடன்படிக்கையின் வாயிலாக எல்லா மக்களும் இறைவனை அறிந்து அவருடைய மக்களாக வாழ அழைப்பு விடுக்கின்றார்.
மேலும், இயேசுவினுடைய தியாக வாழ்வானது அவரின் சீடர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைகின்றது. இயேசுவைப் பின்பற்றுகின்ற சீடர்கள் இயேசுவைப் ப�ோலத் தங்களையே இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இழந்தால்தான் வாழ்வு. அதிலும் குறிப்பாகத் தன்னலம் கருதாது, பிறர்நலம் கருதுகின்ற வாழ்க்கை மட்டும் பயனுள்ள கிறிஸ்தவச் சீடத்துவ வாழ்வாகும். இயேசுவைப் ப�ோலவே சீடர்களும் அவரவர் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிலுவைகளைச் சுமக்காமல் அவருடைய சீடர்களாக இருக்க முடியாது. தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இயேசுவினுடைய தன்னலமற்ற வாழ்வு, தியாகம், சிலுவை சாவு, நமது வாழ்வாகட்டும். இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் ஒன்றாகப் பார்ப்பவர் மட்டுமே ஒரு ப�ொருளுள்ள சீடத்துவ வாழ்க்கையை வாழ முடியும். 30
25 மார்ச்
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. எசா. 50:4-7, பிலி. 2:6-11 மாற். 14:1-15:47
ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளின் புனித வாரத்தைக் குருத்து ஞாயிற�ோடு த�ொடங்குகின்றோம். இந்தப் புனித வாரம் நம்மை புனித வாழ்வு வாழ அழைக்கும் ஓர் அறக் காலம் ஆகும். இந்நாளில் ஊர்வலங்கள் நடைபெறுவது சாதாரண நிகழ்வு. ஆனால் இயேசு மேற்கொண்ட எருசலேம் பயணம், அவர் சாவதற்காகச் சென்ற ஒரு புனிதப் பயணமாகும். சிலுவைச் சாவை விரும்பி ஏற்றுக்கொள்கின்றார். எருசலேமில் தமக்குச் சிலுவை மரணம் காத்திருக்கிறது என்று தெரிந்தும், அதை எதிர்கொள்ளக் கழுதை மீது ஏறி மிடுக்காக அமர்ந்து க�ொண்டுச் செல்கிறார். இயேசுவினுடைய எருசலேம் பயணம் ஒரு குறிக்கோள் பயணம், ஒரு புரட்சிப் பயணம் என்றுதான் ச�ொல்ல வேண்டும். புனித லூக்கா நற்செய்தியில் மட்டும் 94 முறை எருசலேமைப் பற்றிய குறிப்பினைப் பற்றிப் படிக்கின்றோம். இந்த எருசலேமில் வெற்றி வீரராய் உலா வந்த நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களுமே குறிப்பிடுகின்றார்கள். (மத். 21:1-9, மாற்.11:1-10, லூக். 19:28-38, ய�ோவா. 12:9-19). ஆம் அன்பர்களே! புகழ்பெற்ற எருசலேம் பயணம், ஆண்டவர் இயேசுவின் பயணத்தின் முடிவும் த�ொடக்கமும் ஆகும். பயணம், பட்டங்கள் பதவிகள் பெறுவதற்காக அன்று. மாறாக இது மரணத்தைத் தேடிய புரட்சிப் பயணம். மேலும் இது புகழைத் தேடிய பயணம் அன்று, மாறாகப் புதைக்கப்படும் இடத்தைத் தேடிய பயணம் ஆகும். ஆண்டவர் இயேசு கழுதையின் மீது அமர்ந்து ஊர்வலமாக எருசலேமிற்குள் நுழைந்தார் என்பதை, “இத�ோ உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர், வெற்றி வேந்தர், எளிமை உள்ளவர், கழுதையின் மேல், கழுதைக் குட்டியான, மறியின் மேல் ஏறி உலா வருகின்றார்” (சக். 9:9). ஆம் அன்பர்களே! இயேசுவைச் சுமந்து சென்ற கழுதைக் குட்டியைப்போல, நாமும் நம் ஆண்டவர் இயேசுவை, உடல் ரீதியாகச் சுமக்க வேண்டும். இல்லையென்றாலும், நம்முடைய உள்ளத்திலே, நம்முடைய வாழ்க்கையில், இயேசுவின் க�ொள்கைகளையாவது சுமக்க முன்வர வேண்டும் என்பது குருத்து ஞாயிறு தரும் முதல் பாடமாகும். இரண்டாவது, மக்களுடைய
நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு உதவி செய். (சீ. ஞா. 14:13)
ஊர்வலத்தில் செயல்கள் ப�ோல
2018
பங்கெடுத்த நம்முடைய
1. ஆண்டவர் இயேசு, நம் அனைவருக்கும் அன்பின் சின்னமாக, ஆன்ம உணவாக நற்கருணையை உருவாக்கிய நாள். 2. தம் மீட்புப் பணியைத் த�ொடர, குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்.
செயல்பாடுகளும் அமையக் கூடாது. ‘ஓசன்னா’ என்று பாடிய கூட்டம் பிறகு, “அவனைச் சிலுவையில் அறையும்” என்று முழங்கி இயேசுவுக்கு எதிராகத் திரும்பியதைப் பார்க்கிற�ோம். நாமும் கூட ‘ஓசன்னா’ பாடி இன்று ஆலயத்தின் உள்ளே செல்கின்றோம். ஆனால், புனித வெள்ளி அன்று அந்த மக்களைப் ப�ோல இயேசுவை ந�ோக்கி, ‘அவனைச் சிலுவையில் அறையும்’ என்று ச�ொல்லாமல் தவிர்ப்பது நல்லது. மூன்றாவது, நாம் பவனியின்போது, கையிலேந்திய ஒலிவ மரக் குருத்து. ஒலிவ மர குருத்துகளை விழா காலங்களில் யூதர்கள் மிகுதியாகப் பயன்படுத்தினாலும், ப�ொதுவாக அது வெற்றியின் அடையாளம் ஆகும். இயேசு சாவின் மீது க�ொண்ட வெற்றியை அது சுட்டிக் காண்பிக்கிறது. திருவெளிப்பாடு 7:9இல் “விண்ணகத்தில் பெருந்திரளான மக்கள் குருத்தோலை ஏந்தியவர்களாய் இருந்தார்கள்” என்று வாசிக்கின்றோம். ஆம் இது தீமையின்மேல் அவர்கள் க�ொள்கின்ற வெற்றியை காட்டுகிறது. எனவேதான் பாடுகளின் ஞாயிறான இன்று நாம் தீமையை எதிர்த்து நிற்க சபதம் எடுத்து, இறைவனின் பாடுகளிலும், அவருடைய துன்பங்களிலும் நம்பிக்கைய�ோடு பங்குக�ொள்ள முன்வருவ�ோம்.
29 மார்ச்
3. மேலும் இயேசுவின் உடனிருப்பைச் ச�ொல்லால் மட்டுமல்லாமல் செயலிலும் வெளிப்படுத்த அன்புக் கட்டளையைக் க�ொடுத்து, பிறரின் பாதங்களைக் கழுவி, பணி செய்ய அழைப்பு விடுக்கும் நாள். இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று த�ொடர்புடையவை. முதலாவதாக, பெரிய வியாழன் திருச்சடங்கு, யூதர்களின் பாஸ்கா விழாவையும், எவ்வாறு இஸ்ராயேல் மக்கள், மாசுமறுவற்ற செம்மறி ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறினார்கள் என்பதையும் இந்தப் பாஸ்கா நிகழ்வு, இயேசுவின் இரத்தத்தால் நாம் அனைவரும் எவ்வாறு சாவினின்று விடுதலைப் பெறுகின்றோம் என்பதை விளக்குகிறது (தி.பா. 20:28, 1க�ொரி. 6:20,7:23). இன்று நற்கருணை மற்றும் குருத்துவம் ப�ோன்ற அருளடையாளங்களை ஏற்படுத்திய நாள். இந்த நிகழ்வைப் பற்றி மூன்று நற்செய்தியாளர்கள் மட்டுமன்றி புனித பவுலடியாரும் குறிப்பிடுகின்றார். (காண்க: மத். 26:26-29, மாற். 14:22-25, லூக். 22:14-20, மற்றும் 1க�ொரி. 11:23-26) இதனை முதலிரண்டு வாசகங்கள் விளக்கின. நற்கருணை என்பது இயேசுவின் த�ொடர் உடனிருப்பு (மத். 29:20). இயேசுவை நற்கருணையிலே பெறும்போது, நம்முடைய உடலும் மனமும் தூய்மை அடைந்து, நம்முடைய பாவங்கள் களையப்பட்டு இழந்துப�ோன ஆற்றலை ஆன்மா மீண்டும் பெறுகின்றது. மேலும் இந்த நற்கருணை விருந்திலிருந்துதான் குருத்துவம் என்ற பணிவாழ்வு ஊற்றெடுக்கின்றது. ஒவ்வொரு
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி. வி.ப. 12:1-8, 1க�ொரி. 11:23-26, ய�ோவா. 13:1-15.
அன்பின் பெருவிழாவாக ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியை இன்று க�ொண்டாடுகின்றோம். மனுக்குலம் மிகுதியாக அன்பு செய்யப்பட்ட நாள் பெரிய வியாழன் எனலாம். இன்றைய திருவழிபாடு நமக்கு முப்பெரும் நிகழ்வுகளை முன் வைக்கின்றது.
2018
நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. (நீ. ம�ொ. 2:3)
31
குருவும், இயேசுவைப் ப�ோல, (வாழ்வில் நற்செய்தியை) பணிகளில் ஈடுபடத் திருநிலைப்படுத்தப்படுகின்றார்கள் (எபி. 5:2-3). ஒவ்வொரு குருவும் மனிதர் என்பதால் பலவீனமானவர்தான்; ஆனால் குருத்துவம் பலவீனமானதன்று. இறுதியாக, பாதம் கழுவும் நிகழ்ச்சியின் வழியாகத் தலைமை என்பது த�ொண்டு, தலைவன் என்பவன் த�ொண்டன் என்பதை இயேசு செயலில் காட்டுகிறார்.
ஆம் அன்பர்களே, இன்றைய நாள் ஒரு புனிதமான நாள். நம்முடைய மீட்பின் நாள். ஆண்டவர் இயேசு, நம்முடைய பாவங்களுக்காக மரித்து நம்மைத் தம்முடைய இரக்கத்தினால் நிலை வாழ்விற்கு ஈன்றெடுத்த நாள். திருத்தூதர் பணி 20:28இல் “கடவுள் தமது இரக்கத்தினால் நம்மைச் ச�ொந்தமாக்கிக் க�ொண்டார்” என்றும், “நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலை க�ொடுத்து வாங்கப்பட்டிருக்கிறீர்கள்” என்றும் பவுலடியார் கூறுகின்றார். (1க�ொரி. 6:20 மற்றும் 7:23)
இயேசு நமக்குக் கற்றுக் க�ொடுத்திருக்கும் பாடங்களில் தலையானது அன்பே. அன்பென்னும் பேருண்மையை மையமாக வைத்தே கற்பித்தார் இயேசு. “நான் உங்களை அன்பு செய்தது ப�ோல, நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்” என்ற அவரின் அன்பு கட்டளையைப் பின்பற்றி சான்று பகர முன்வருவ�ோமாக.
30 மார்ச்
திருப்பாடுகளின் வெள்ளி எசா. 52:13-53:12, எபி. 4:14-16, 5:7-9, ய�ோவா. 18:1-19:42
“கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் க�ொண்டார்” (பிலி. 2:6-11). பல வருடங்களுக்கு முன்பு ஜெர்மானிய இளவரசர் ஒருவர் இங்கிலாந்திலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அந்த அரண்மனையில் மாட்டப்பட்டிருந்த அரசர்கள், அரசிகளின் படங்களைப் பார்த்த இளவரசர், சிலுவையில் த�ொங்கிக் க�ொண்டிருந்த படத்தைப் பார்த்து, “ஏன் இந்த அரசர் முள் கிரீடத்தை அணிந்திருக்கிறார்?” என்றும் அந்தச் சிலுவையின் உச்சியில் எழுதப்பட்டிருந்த வசனமான “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்பதற்குப் ப�ொருள் என்னவென்றும் கேட்டார். அப்போது அந்த அரண்மனையைச் சுற்றிக் காண்பிக்க வந்த வழிகாட்டி, இயேசுவினுடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கிக் கூறியப�ோது, இளவரசர் உள்ளம் நெகிழ்ந்து ப�ோனாராம். மேலும் அந்தப் படத்தின் அடியில் எழுதப்பட்டிருந்த வேற�ொரு வசனத்தையும் வாசித்தாராம்: “உனக்காக நான் இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டேன். நீ எனக்காக என்ன செய்தாய்?” இந்த வசனங்களையெல்லாம் ஆழமாகச் சிந்தித்த இளவரசர் பின்பு மனம்மாறி ஒரு கிறிஸ்தவரானார். 32
உன்னால் முடிந்தவரை தாராளமாகக் க�ொடு. (சீ. ஞா. 14:13)
திருச்சிலுவை, கிறிஸ்துவின் உடனிருப்பிற்கு அடையாளமாகத் திகழ்கின்றது. ஆகவேதான், இந்தத் துன்பங்களின் வழியாக, நம் மீட்பர் சிலுவையில் த�ொங்கி நமக்கு மீட்பளித்தார். ஆகவே, இந்தத் திருச்சிலுவை நம் கழுத்தில் த�ொங்கப்படுவதைவிட, உள்ளத்தில் தாங்கப்பட வேண்டும். சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்றுந�ோக்குவது, அவரில் நம்பிக்கைக் க�ொண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்குச் சமம். இன்று நாம் செய்கின்ற சிலுவை வழிபாடு சடங்கு, நம்மையெல்லாம் இறைவன் ஆழமாக அன்பு செய்கின்றார் என்ற உண்மையை நமக்கு ஆணித்தரமாகக் காட்டுகின்றது. தம் மக்களுக்காக எத்தனைய�ோ தலைவர்கள், உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்றில் யாருடைய இரத்தமும் பாவக்கறைகளைக் கழுவியதாக நாம் அறிந்ததில்லை. கல்வாரி மலையில், பெரிய வெள்ளிக்கிழமை மனித குடும்பத்திற்காகச் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ஒப்புயர்வற்ற இரத்தம் மட்டுமே. “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத். 26:28) என அறிகிற�ோம்.
2018
ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் இயேசுவின் சிலுவைச் சாவு நம் அனைவருக்கும் வாழ்வைப் பெற்றுத் தந்திருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையில், இந்தப் பெரிய வெள்ளி, பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா?
01 ஏப்ரல்
உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு. தி.ப. 10: 34,37-43 க�ொல�ோ. 3:1-4 ய�ோவா. 20:1-9.
“கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் க�ொண்டிருக்கிற நம்பிக்கையும் ப�ொருளற்றதாயிருக்கும்” (1க�ொரி. 15:14). இன்று தாயாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் க�ொண்டாடுகிறது. இது நமது நம்பிக்கையின் விழா. க�ொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுலடியார் “கிறிஸ்தவ நம்பிக்கை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிலேதான் அடங்கி இருக்கிறது” என்று கூறுகின்றார் (1க�ொரி. 15:14). இயேசுவின் உயிர்ப்பு நமக்குச் சுட்டிக்காட்டுவது, இறப்பிற்குப் பின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இன்றைய நற்செய்தியில் முக்கிய பங்குவகிப்பவர் புனித மதலேன் மரியா. “வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மதலேன் மரியா கல்லறைக்குச் சென்றார்” என்பதன் மூலம் அவரின் அன்பு வெளிப்படுகின்றது. உயிர்ப்பின் மக்களாக வாழ்வதற்கு மதலேன் மரியா சிறந்த எடுத்துக்காட்டு. யார் இந்த மதலேன் மரியா? ‘பாவியான ஒரு பெண்’ என்று லூக்கா குறிப்பிடுகின்றார். (லூக். 7: 36-50) இவள் செய்த பல பாவங்கள், அவர் காட்டிய அன்பின் நிமித்தம்
அவருக்கு மன்னிக்கப்பட்டன (லூக். 7:47). மதலேன் மரியாவிடமிருந்து இயேசு, ஏழு பேய்களை ஓட்டினார் (மாற்கு 16:9). இயேசுவின் பாடுகளின்போது சீடரெல்லாரும் அவரை விட்டு ஓடியப�ொழுது மதலேனா மாதாவ�ோடு சேர்ந்து சிலுவையின் அடியில் நின்று க�ொண்டிருக்கின்றார். (ய�ோவா. 19:25). இந்த அன்பின் காரணமாகவே மதலேன் மரியாவை ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பின் முதல் நற்செய்தியாளராகத் தெரிந்துக�ொள்கிறார். தாம் உயிர்த்தெழுந்ததைத் தம்முடைய சீடர்களுக்குச் ச�ொல்கின்ற ப�ொறுப்பை இயேசு மதலேன் மரியாவிடம் ஒப்படைக்கின்றார். இதனாலேயே, மதலேன் மரியாவை முற்காலத்தில் திருச்சபையின் தந்தையர்கள் ‘திருத்தூதர்களுக்குத் திருத்தூதர்’ என்றும் ‘சீடருக்கு சீடர்’ என்றும் அழைத்தனர். மதலேனாவைப் ப�ோல, பாவ வாழ்வை விட்டுவிட்டு உயிர்த்த இயேசுவை நாடுவ�ோம். அவளைப் ப�ோல நம்முடைய வாழ்க்கையில் இயேசுவைக் காணும் நற்பேற்றைப் பெறுவ�ோம். உயிர்ப்பு விழாவைக் க�ொண்டாடுகின்ற நாம், சாவு என்பது முடிவல்ல, ஆனால் மரணத்திற்குப் பிறகு மறுவாழ்வு உண்டு என்பதை மனதில் இருத்தி, நம்முடைய வாழ்க்கையிலே, இயேசுவை நாடி, தேடி கண்டடைவ�ோம். சீடத்துவ வாழ்க்கையினாலேயே இயேசுவின் சாவிற்கும் உயிர்ப்பிற்கும் சான்று பகர முன்வருவ�ோம். “நாம் உயிர்ப்பின் மக்கள், அல்லேலூயா நமது கீதம்” என்ற புனித அகஸ்தினார் கூற்றையும், “வாழ்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும்” (2க�ொரி. 5:15) எனும் பவுலடியாரின் வார்த்தைகளையும் நம் வாழ்வாக்குவ�ோம்.
.
ந�ோன்பு ந�ோற்றல், விழித்திருந்து செபித்தல், ஆழ்நிலைத் தியானம், நிர்வாண நிலை மற்றும் முற்றும் துறத்தல் இவை எதுவும் தூய நிலையைக் கட்டியெழுப்புவதில்லை. இவை யாவும் தூய நிலைக்கு இட்டுச் செல்லும் வழிகளே. ஒழுக்கத்தின் இறுதி நிலை இவையல்ல. ஆனாலும் இறுதி ஒழுக்க நிலை இவைகளால்தான் எட்டப்படுகின்றது. (தூய ஜான் கான்சியான்)
2018
மனம் ஒப்பாது க�ொடுக்கும் ஈகை அதனைப் பெறுவ�ோருக்கு எரிச்சலையே க�ொடுக்கும். (சீ. ஞா. 18:18)
33
34
மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். (எசா. 55:7)
2018
•
தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆலந்தழை என்னும் கிராமத்தில், 1947ஆம் ஆண்டு, கத்தோலிக்க மறையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள பெற்றோருக்குப் பிறந்தவர்.
•
சென்னையில் குடியேறிய சில ஆண்டுகளுக்குப் பின், பண்ணூர் த�ொன் ப�ோஸ்கோ இல்லத்தில் பயில்கையில் சலேசியர்களைப் பற்றி அறிந்தவர்.
•
1968ஆம் ஆண்டு, சலேசிய சபையில், துறவற முதல் வார்த்தைப்பாட்டின் வழி சலேசிய சக�ோதரராக இறைவனுக்குத் தன்னைக் கையளித்தவர்.
•
வேலூரில் வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பயின்றவர்.
•
த�ொன் ப�ோஸ்கோவின் ஆன்மீகக் க�ோட்பாடுகளையும், இளைய�ோர் பணியையும் பற்றியப் படிப்பை அமெரிக்காவில் மேற்கொண்டவர்.
•
சென்னையில் நடந்த தெற்காசிய சலேசிய சக�ோதரர்களுக்கான ஒருங்கிணைப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.
•
சலேசிய துறவறப் பணியில் அருட்சக�ோதரர்கள் ஜூலியன் சாந்தி, ஜ�ோசப்தாஸ், எக்ஸ்படிட் ல�ோப�ோ, சிகாமணி, லூக்காஸ் க�ோம்ஸ் ப�ோன்றவர்களின் சிறப்பான பணிகளாலும் தன்னலமற்ற வாழ்வாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
•
திறமையும் பாசமும் மிக்கப் பல்வேறு இளைய�ோரைத் த�ொன் ப�ோஸ்கோவின் வழியில் உருவாக்கியவர்.
•
பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, பிராட்வே, காட்பாடி, மதுரை ஆகிய இடங்களில் ‘ஆரட்டரி’ என்றழைக்கப்படும் இளைய�ோர் மன்றங்களில் 25 ஆண்டுகளும், சேலம் மாநகரில் த�ொடங்கப்பட்ட அன்பு இல்லத்தில் 5 ஆண்டுகளும், சலேசிய சபையின் இறையழைத்தல் இயக்குநராகப் பத்து ஆண்டுகளும் பணியாற்றி, தற்போது சென்னையில் உள்ள பேசின் பிரிட்ஜ் இல்லத்தில் இளைய�ோர் மன்ற இயக்குநராக முதுமையிலும் இளமைத் துடிப்புடன் பணியாற்றி வருகின்றார்.
மாநாட்டின்
2018
35
2018 35
Date of Publication: First week of every month. Regd. No. TN/CCN/373/2018-2020 TN/PMG(CCR)/WPP-398/2018-2020 Registrar of Newspaper for India. 33652/78. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 06.03.2018
36
If undelivered, kindly return to Salesian Seithi Malar 26/17, Ranganathan Avenue Sylvan Lodge Colony, Kellys Chennai - 600 010.
2018 36
2018