காற்றுவெளி
புரட்டாதி 2018 கலை இலக்கிய இதழ்
காற்றுவெளி புரட்டாதி 2018 ஆசிரியர் வடிவமைப்பு
: ச�ோபா : நெகிழன், 7904748374
படைப்புக்கள் & ஆல�ோசனைகளுக்கு: R.Mahendran, 34.Redriffe Road, Plaistow,London, E0 13JX
மின்னஞ்சல்
: Mullaiamuthan16@gmail.com
நன்றி : இணையம்
படைப்புக்களின் கருத்துக்களுக்கு படைப்பாளர்களே ப�ொறுப்பு.
காற்றுவெளி
வணக்கம். காற்றுவெளியின் புரட்டாதி இதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது. படைப்புக்களை அனுப்பிவைத்த படைப்பாளர்களுக்கு நன்றிகள் பல. அவர்களின்றி காற்றுவெளியின் த�ொடர் வருகை சாத்தியமில்லை. அன்பளிப்பு,விளம்பரம் & சந்தா எதுவுமின்றி வந்துக�ொண்டிருக்கிறது.பலதடவை நேரடியாகவும் ச�ொல்லித்தான் வந்துள்ளோம். அச்சுப்பிரதி வரும்போதெல்லாம் பலருக்கு அனுப்பியும் வந்துள்ளோம்.கிடைத்தமைக்கான பதிலும் வந்ததாகத் தெரியவில்லை. சிற்றிதழ்களுக்கிடையேயான பரஸ்பர நட்புடனான இதழ்கள் பற்றிய இலவசத் தகவகளைப் பரிமாறலாமே என்றுகூட நினைத்து மடல்கள் ஊடாக த�ொடர்புக�ொண்டோம். அதற்கான சாத்தியமான வாசல் இதுவரை திறக்கவேயில்லை. நூல்களுக்கான அறிமுகப்பகுதி இல்லையே என ஆதங்கப்படுபவர்கள் அதற்கான த�ொடர்புகளைத் தருவதில்லை. மீண்டும் ஈழத்து நூல் கண்காட்சியினை நடத்த (காட்சிப்படுத்த மட்டுமே) விரும்புகிற�ோம்.நூலின் ஒரு பிரதியை அனுப்பலாம். இன்னும் நிறைய படைப்புக்களை & படைப்பாளர்களை இணைக்க முயல்கிற�ோம் அல்லது விரும்புகிற�ோம். எதிர்காலத்தில் இன்னும் சாத்தியமாகலாம் என்கிற நம்பிக்கையுடன்,
- ச�ோபா
சிந்தியல் சிந்தும் சிந்தனைகள்… கவிதையின் பலவீனம்
பள்ளம் பறித்து படுகுழியில் தள்ளிட உள்ளம் துடிக்கும் உறவின் வழித்தடம் செல்வோர் உடலடையும் சேறு!
எத்தனை முறைதான் லவ் யூ ச�ொல்வது உனக்காகவே பதுக்கப்படுகின்றன இவ்வெழுத்துகள்
z க�ொடுப்போர் கரங்களை க�ொட்டித் தடுக்க நடுக்கம் வராத நயவஞ்சம் க�ொள்வோர் நகைப்பு விசமாகும் நட்பு
உனக்காகவே பதப்படுத்தப்படுகின்றன இவ்வெழுத்துகள்
z தவறும் நினைவுகள் தத்தளிக்கும் உள்ளம் எவரும் விரும்பிடா ஏரி மயானப் படுக்கை வழிசேரும் பாய்!
உனக்காகவே பலப்படுத்தப்படுகின்றன இவ்வெழுத்துகள்
z
உனக்கென பகிரப்படுவதற்காகவே பாதுகாக்கவும்படுகின்றன இவ்வெழுத்துகள்
உண்மை மறைத்தே உலகை வசமாக்கும் எண்ணம் பலரின் எடுப்பென எள்ளலாய்க் காட்டும் ஒழுங்கீனக் காப்பு
நான் எழுதும் கவிதைகளில் இவ்வெழுத்துகள் பற்றாக்குறையாகி என் கவிதைகள் பலவீனப்படுவது தெரியாமல்.....
z ச�ொல்லறம் ஏற்காமல் ச�ொகுசாய்த் திரிபவர் சல்லடை தள்ளிடும் சக்கைப�ொருளென பாரில�ோர் துப்பும் பழி!
N
- நாகினி
N - க�ௌந்தி மு 4
காற்றுவெளி
காற்றுவெளி
5
முதுமைப் பட்டயம் முள் மேல் விறித்த பாயும் பெண்கள் மேல் விழுந்த பார்வையும் ஒன்று தான் ...... கடைசியில் கிளிஞ்சல்கள் தான் மிச்சம் .......!!!!
z
சுயகாலில் நிற்கும் நிறைகுடம் சுயமாய் மானிடரிதை உணர்ந்தும் அயர்ச்சியின்றி வாழ்ந்தால் இளமையிலும் வயதேறினும் ஒரே நிலையாம். வளைந்த முதுகு வலிமை. வளையாத மனம் பெருமை களைப்பின்றி வாரத்திற்கொரு முறை காவுகிறாய் விறகை திறமை. தையலுன் குளிராடை பலத்தில் கைகூடும் காரியங்கள் தனிமையிலும் கைத்தடி உன் நம்பிக்கையாய் கைக்கெட்டும் திறமையுன் வெற்றி. தனியே பிறந்தோம் மறைவ�ோம் மனிதமென்று துணையை பிள்ளைகளை இனியும் பேசிப் பலனென்ன! குனிவின்றி வாழ இறையருளட்டும்.
காணி நிலமாய் என்னிதயம் இருந்தது காதல் என்னும் விதை ப�ோட்டாய் விருச்சமாகிறேன் உன்னாள் ..........!!!!!
ப�ொதுமைத் தனிமை த�ொலைத்து அட்டகாசமிட்ட அருமைக் கட்டுடலின் எட்டு அவதானங்கள் அடங்கும் கட்டமே முதுமை இராச்சியம். மனுகுலப் ப�ொதுமைப் பட்டயம்.
N - ச.இராஜ்குமார்
N - வேதா. இலங்காதிலகம். 6
காற்றுவெளி
காற்றுவெளி
7
வெற்றியை ந�ோக்கி … 12 மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் மூன்றெழுத்து. இந்த எழுத்துகளை உச்சரித்தாலே உற்சாகம் த�ொற்றிக் க�ொள்ளும். உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். தமிழிலும், தமிழர் வாழ்விலும் மாற்றத்தையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவது மூன்றெழுத்து. மூன்றெழுத்துக்காக எதையும் செய்ய பெரும்பாலான�ோர் தயாராக இருக்கின்றனர். இப்படி, மூன்றெழுத்தின் பெருமைகளை அடுக்கிக் க�ொண்டே ப�ோகலாம். ஹல�ோ. வெயிட் வெயிட் வெயிட். ஏதேத�ோ கற்பனையில் மிதக்க வேண்டாம். வெற்றி, சாதனை, பணம், பதவி என்பது ப�ோன்ற மூன்றெழுத்துகள் தான் அவை. அந்த மூன்றெழுத்துகளை எப்படியாவது அடைய வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு வித வேகம் இருப்பது உண்மை. இதில் அனைவருடைய மூச்சு காற்றும் அடங்கி இருக்கிறது. அட. வேகம், மூச்சு, காற்று மூன்றெழுத்து த�ொடருகிறதே. சரி. விஷயத்துக்கு வருவ�ோம். அனைவருடைய உள்ளத்திலும் ஏதாவது ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதை அடைய உழைப்பது வழக்கம். அந்த இலக்கை அடைவதே வெற்றி கனியை பறிப்பது அல்லது வெற்றி க�ோட்டையை எட்டுவது என கருதுகின்றனர். ஆனால், எந்தவ�ொரு இலக்கும் கைக்கெட்டும் த�ொலைவில் எளிதாக அமைந்து விடுவது இல்லை. அந்த இலக்கை ந�ோக்கி நாம் தான் படிப்படியாக முன்னேறி செல்ல வேண்டும். நாம் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் கடவுளும் நம்மை ந�ோக்கி இரண்டடி எடுத்து வருவார், என்கிறது ஆன்மிகம். அது வெற்றியை ந�ோக்கிய பயணத்துக்கும் ப�ொருந்தும் எந்தவ�ொரு வேலையாக இருந்தாலும் கடமை என்ற மூன்றெழுத்து இருந்தால் மட்டுமே வெற்றி என்ற மூன்றெழுத்து நம் வசப்படும். திரைப்படம், அரசியல், கல்வி, அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சி என ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து நிற்கும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை உற்று ந�ோக்கினால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஓய்வறியாத உழைப்பும் கடமை உணர்வும் இருப்பதை அறிய முடியும். இதையே, ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என பகவத் கீதை கூறுகிறது. அதாவது, எந்தவித எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாத கடமை உணர்வே வெற்றி க�ோபுரத்தை அலங்கரிக்கும். ஏத�ோ ஒன்றை எதிர்பார்த்து செய்யும் வேலையை கடமை என கூற முடியாது. கடன் என்று தான் கூற முடியும். பழங்காலத்தில் வேலை செய்தால் கூலியாக பணத்துக்கு பதில் நெல் அளந்து க�ொடுப்பது வழக்கம். அந்த கால கட்டத்திலும் 8
காற்றுவெளி
கடனுக்கு வேலை பார்த்தவர்கள் இருந்துள்ளனர். இதனாலேயே, கட்டிட வேலையை முடித்து விட்டு கூலிக்காக புறப்பட்டுச் செல்லும் ஒரு த�ொழிலாளி, ‘நெல் க�ொண்டு ப�ோகும் வரை நில்லாய�ோ நெடுஞ்சுவரே’ என கூறியதாக பழம�ொழி உண்டு. அதாவது, நான் கூலியாக நெல் பெற்று செல்லும் வரையாவது நில் என தான் கட்டிய சுவரை பார்த்து அந்த த�ொழிலாளி கூறினானாம். இது எப்படி இருக்கிறது? அவனுடைய வழித் த�ோன்றல்கள் இன்றும் கூட இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால், அவர்களால் வெற்றி என்னும் க�ோட்டையை அடைய முடியாது. கடமை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு ஒரு புராணகதையை உதாரணமாக கூறலாம். சிவபெருமான் தலையில் தும்பை மலர் சூடி இருப்பதை நாம் அனைவரும் அறிவ�ோம். ‘தும்பை மலர் சூடும் ஈசன் திருப்பாதமே...’ என்ற பாடலையும் கேட்டிருப்போம். இந்த தும்பை விஷயத்தில் கடமை உணர்வை வலியுறுத்தும் சுவாரஸ்ய பின்னணி உண்டு. அந்த காலத்தில் தேவதாசி முறை இருந்தது. ஊர் த�ோறும் ஆடல் மகளிர் எனப்படும் விலைமாதர்கள் வசித்து வந்தனர். அதுப�ோன்ற ஒரு விலைமாது குலத்தில் பிறந்த ஒரு பெண், தனது பிறப்பு குறித்து தினந்தோறும் கவலையில் ஆழ்ந்திருந்தாள். ஆனாலும், தனது விலைமாது த�ொழிலில் மிகுந்த கடமை உணர்வுடன் செயல்பட்டாள். ஒவ்வொரு நாளும் யார் முதலில் தன்னிடம் வந்து பணம் தருகிறார�ோ அவரையே அன்றைய தினத்தில் மகிழ்விப்பது அவளது வழக்கம். அதன்பிறகு, அரசரே வந்தாலும் ப�ொன்னை க�ொட்டி க�ொடுத்தாலும் ஏற்பதில்லை என்பது அவளுடைய க�ொள்கை. ஒருநாள் ஏராளமான காணிக்கையுடன் அந்த நாட்டு அரசர் அவளை நாடி வந்தார். ஆனால், அவர் வரும் முன்பே மிக வயதான கிழவர் ஒருவர், அந்த பெண்ணை நாடி வந்து ப�ொருளை அள்ளி க�ொடுத்திருந்தார். எனவே, கிழவரை விட்டு விட்டு அரசரை அழைக்க அந்த பெண் விரும்பவில்லை. விலைமகளாக இருந்தாலும் கடமை மற்றும் க�ொள்கையில் இருந்து தவறாமல் கிழவரை வீட்டுக்குள் அழைத்தாள். அரசனின் ப�ொன், ப�ொருளை திருப்பி அனுப்பினாள். அதே நேரத்தில், மிகவும் வயதான அந்த கிழவரால் ஒரு அடி கூட நகர முடியாமல் தேவதாசி வீட்டு படுக்கையிலேயே விழுந்து விட்டார். முதுமை மற்றும் ந�ோய் காரணமாக படுக்கையிலேயே அசைவற்று கிடந்த அந்த கிழவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதே தனது கடமை என அந்த பெண் கருதினாள். ஒருநாள் முடிந்து இரவு கடந்து மறுநாள் ப�ொழுது புலர்ந்தது. அப்போது தான் காற்றுவெளி
9
தமிழினி கதைச்சொல்லியின் ‘ஒரு நா… ஒரு ஊர்ல…’
தெரிந்தது. வந்தவர் கிழவர் அல்ல. வய�ோதிக உருவத்தில் வந்த சிவபெருமான். ‘பெண்ணே, நான் க�ொடுத்த சிரமங்களை இந்த அளவுக்கு ப�ொறுத்துக் க�ொண்டாயே உனக்கு என் மீது வருத்தம் இல்லையா?’ என சிவபெருமான் கேட்டார். ‘இல்லை. ஒவ்வொரு நாளும் ஒருவரை கணவனாக ஏற்றுக் க�ொள்ளும் விலைமாது நான். இன்றைய தினம் கணவராக வந்த உங்களுக்கு கடமை தவறாமல் பணிவிடை செய்து விட்டேன். அவ்வளவுதான். விலைமகளான எனக்கு இதில் என்ன வருத்தம்? இது எனது கடமை’ என்றாள். அதைக் கேட்ட சிவபெருமான் அகம் மகிழ்ந்து, ‘பெண்ணே. மானுடப் பிறவி உனக்கு இன்றோடு முடிந்தது. அடுத்த பிறவியில் நீ தும்பை மலராக பிறப்பாய். என்னை பூஜிக்க தும்பை மலரை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்’ என வரமளித்தார். தும்பை பூவை சிவபெருமான் சூடுவதற்கு பின்னால் கடமை உணர்வுடன் த�ொடர்புடைய இந்த புராண கதை இருக்கிறது. அலுவலகங்களில் பணியாற்றுவ�ோரும் சரி. வேறு எந்த த�ொழில் புரிபவராக இருந்தாலும் சரி. நமக்கு கிடைக்கும் ஊதியம் அல்லது வருமானத்துக்கு இந்த அளவுக்கு வேலை செய்தால் ப�ோதும் என கருதக் கூடாது. அதற்கு பெயர் கடன். அதையும் தாண்டி நம்முடைய கடமை என ஒன்று உள்ளது. அதுதான், பிற்காலத்தில் நம்மை பாதுகாக்கும் கவசமாக இருக்கும். கடமையை கண்ணும் கருத்துமாக செய்யும் மனிதருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேரும். வெற்றியும் குவியும். கடமை என்ற மூன்றெழுத்தே வெற்றி என்னும் மூன்றெழுத்தின் உயிர் மூச்சு.
க�ோவையில் வாழ்ந்துவரும் நி.ச.தமிழினி, ச�ோமையம்பாளையம், சாவார வித்யா பவன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ப�ொழுதே, 24 குறுங்கதைகள் க�ொண்ட புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ஆறு வயதில் ஒரு புத்தகமா, இது எப்படிச் சாத்தியமானது என்ற வியப்புடன் தமிழினியின் அம்மா நித்யாவிடம் பேசின�ோம். தமிழினிய�ோட அப்பா தமிழ்ப் பேராசிரியர், எங்க வீடு முழுக்கப் புத்தகங்களால் நிரம்பி இருக்கும். தமிழினி கசக்கி, கிழிச்சு, வரஞ்சு, எழுதி, படிச்சது எல்லாமே புத்தகங்கள்தான். அவங்க அப்பாவும் நானும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு கதையாச்சு ச�ொல்லணும்னு முடிவு செஞ்சிருந்தோம். அதுமட்டுமல்லாமல் க�ோவை வடவள்ளி, கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை த�ோறும் காலை பதின�ோரு மணிக்குக் கதை ச�ொல்லும் நிகழ்வு நடக்கும் அதுலயும் தமிழினி தவறாமல் கலந்துக்குவாங்க.
(வெற்றி பயணம் த�ொடரும்…)
N - வை.ரவீந்திரன்
10
க
தைகள் என்றாலே மகிழ்ச்சிதான், அதுவும் குழந்தைகள் கதை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்தக் கதையைச் ச�ொல்வதும் ஒரு குழந்தை என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படி நம்மை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ஆறு வயதாகும் தமிழினியின் ‘ஒரு நா… ஒரு ஊர்ல…’ கதைத் த�ொகுப்பு.
காற்றுவெளி
ஒருநாள் நான் கதைச�ொல்லி முடிச்சோன அம்மா நானும் ச�ொல்றேன், ஒரு குட்டி கதனு தமிழினி ச�ொன்னப்ப ஆச்சரியமா இருந்துச்சு. நான் அவங்களுக்குச் ச�ொன்ன கதைகளை மாத்தி, அவங்களுக்குப் புடிச்ச கதாபாத்திரங்களச் சேர்த்து, அவங்களா ஒரு கத ச�ொன்னாங்க. இது தினமும் த�ொடர்ந்ததால ம�ொபைல்ல ரெக்கார்ட் பண்ணி வெச்சிகிட்டோம் என அவர் ச�ொல்லிக் க�ொண்டிருக்கையில், தன் இரண்டு வயது தம்பி பாவாணருக்கு’ நகை ப�ோட்ட காக்கா’ கதையைக் கைகளை விரித்துச் ச�ொல்லிக் க�ொண்டிருந்தார் தமிழினி. காற்றுவெளி
11
அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே த�ொடர்ந்தார் தமிழினியின் அப்பா சத்தியராஜ் குழந்தைகளுக்கு, கதைகள் மூலமாதான் உலகத்த அறிமுகப்படுத்தனும், அது அவங்கள அன்பான மனிதர்களா உருவாக்கும், தமிழினி ச�ொன்ன கதைகள வார்த்தைக்கு வார்த்தை, அப்படியே எழுதுன�ோம், அதுல குழந்தைகள் உலகத்துல இருக்க அன்பும் கற்பனையும் வண்ணங்களும் இருந்துச்சு. அத நெறிப்படுத்தி, குழந்தைய�ோட பார்வையைச் சிதைக்க நாங்க விரும்பல. தமிழினி எப்படிச் ச�ொன்னாங்கள�ோ அப்படியே உருவானதுதான்’ ஒரு நா... ஒரு ஊர்ல’ கதைத்தொகுப்பு. புத்தகத்தோட அட்டப் படமும் தமிழினி வரஞ்சதுதான் என அவர் ச�ொல்லி முடிக்கையில், தமிழினியின் கதைகளால் நிரம்பி இருந்தது அந்த இடம். ‘ஒரு நா... ஒரு ஊர்ல’ புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு கதையும் வாசகரை ஒவ்வொரு புதிய உலகிற்குக் கடத்திச் செல்கிறது. அந்த உலகத்தில் மனிதர்களும் விலங்குகளும் நண்பர்களாக இருக்கிறார்கள், நாய் புத்தகம் படிக்கிறது, பூனைக்கு எலி உதவி செய்கிறது, கரும்புமரம் இருக்கிறது, இப்படிக் குழந்தைகளுக்கு உரித்தான கற்பனையில் நாமும் க�ொஞ்சம் திழைக்க முடிகிறது. தமிழினியின் சில கதைகள் தற்கால குழந்தைகளின் வாழ்க்கை மாற்றத்தைப் பதிவு செய்கிறது. எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும், “அதுக்குள்ள வெளிச்சம் இருந்தாதான தரும், அதுக்கே வெளிச்சம் இல்லையாமா ப�ோன்ற வரிகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. தமிழனியின் எல்லா கதைகளும் ஒரு நா... ஒரு ஊர்ல எனத் த�ொடங்கி அவ்ளோதான்பா... முடிஞ்சிருச்சு என நிறைவுபெறுகிறது. துரிதமாய் மாறிப்போன உலகில் நாம் த�ொலைத்த குழந்தைகளையும் கதைகளையும் மீட்டெடுக்கும் தமிழினி ப�ோன்ற கதைச�ொல்லிகள் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த மின்மினிப் பூச்சிகள்.
N - தி.ஆதிரை நன்றிக்குரிய�ோர் புகைப்படம்: ல.அகிலன் 12
காற்றுவெளி
அயலகத் தமிழ்ப் படைப்புகள் (ஈழம்) – திறனாய்வு (ஈழத் தமிழ்ப் படைப்பு) இளையவன் சிறுகதைகளில் ஈழத்துச் சிக்கல்கள்
முன்னுரை
‘கா
ணி உறுதி’ பன்னிரு சிறுகதைகளை உள்ளடக்கியது. அவையாவும் ஈழ எழுத்தாளர் இளையவனின் படைப்புகளாகும். இலங்கைத் தீவின் யாழ்குடா நாட்டின் நடுப்பகுதியில், பனை மரங்கள் சூழ்ந்திருந்த ‘ஊரெழு’ அவரது பிறந்தமண். தந்தை பள்ளி ஆசிரியர் என்பதால் சிறுவயதிலேயே அனைத்துப் பகுதி மக்களிடையேயும் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். 1979 முதல் 1987 முடியவுள்ள காலகட்டத்தில் எழுதப்பெற்ற இச்சிறுகதைகளில் ஈழத் தமிழ் மக்களின் அவலங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ‘முயற்சி’, ‘பாசம்’, ‘அந்தஸ்து’, ‘பெருமைகள்’, ‘பிரலாபம்’, ‘இன்றைய நாளிலும்’, ‘இதுவும் ஒரு காதல் கதை’, ‘வாழத்தான் ப�ோகிறாள்’, ‘நவீன சுயம்வரம்’, ‘தியாகம்’, ‘சிவப்புக்கோடு’, ‘காணி உறுதி’ ஆகியன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பன்னிரு சிறுகதைகளாகும். (நூற்குறிப்பு - இளையவன், ‘காணி உறுதி’, ப�ொன்னி, சென்னை, 1989, முதற்பதிப்பு.
படைப்புகளின் பின்னணி பேரினவாதக் க�ொள்கையுடைய சிறீலங்கா அரசு, உரிமை க�ோரும் தமிழ்த் தேசிய இனத்தின் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கைபார்த்தது. 1979இல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிறப்பித்தது. அன்று முதல் தமிழ் பேசும் மக்களது ப�ோராட்டம் பல்வேறு பரிணாமங்களையும் பரிமானங்களையும் பெற்றுப் பன்முகப்படத் த�ொடங்கியது. இச்சூழலில் ஈழ மக்கள் மீது அரசுப் படைகளின் கெடுபிடிகளும், அதற்குப் பதிலடியாக அமைந்த தமிழீழ விடுதலை இயக்கங்களின் மாற்று நடவடிக்கைகளும் எற்படுத்திய காற்றுவெளி
13
உணர்வலைகளே இப்படைப்புகளின் மாந்தர்கள்.
மூதாட்டியின் உள்ளத் துடிப்பையும் ‘பாசம்’ சிறுகதையில் பதிவு செய்யப் பெற்றுள்ளது.
உலக அரங்கிற்கு உணர்த்துதல் ‘முயற்சி’ ‘த�ொகுப்பின் முதல் சிறுகதையாகும். பட்டிமாடு மேய்க்கும் ‘வெசர்த் தவத்தான்’ இக்கதையின் உணர்வு பூர்வமான பாத்திரமாக வெளிப்படுகிறான். வெகுளித் தனமான அவனைக் ‘க�ோம்மை’ என்றும் அழைப்பர், மெலிந்தவன், மேய்ச்சல் தளத்தில் சிங்களர்கள் அவனுடைய மாடுகளைக் கட்டிவைத்துக் க�ொள்வதும், கடத்திவிடுவதும் இயல்பான – அவனால் தடுக்கமுடியாத பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட தவத்தான்’ சுற்றுலா வந்திருந்த வெள்ளைத் தம்பதிகளிடம், “யூ ந�ோ தமிழ் – சிங்கள ப்ராப்ளம் திஸ் லாண்ட்? ” (ப. 8) என்று ஆங்கிலத்தில் பேசி, வெளி உலகுக்கு ஈழமக்கள் சிறீலங்கா அரசாலும், இராணுவத்தாலும், சிங்களர்களாலும் தமக்கு ஏற்பட்ட க�ொடுமைகளைத் தடுக்க முடியாது உலக நாடுகளின் உதவியை நாடுவதைக் குறிப்பாக இக்கதை உணர்த்துகின்றது. “மூதூர் நகரத்திலிருந்து சுமார் இரண்டரை மைல் கடந்து குறுக்காக வரும் ஆற்றுக்கும் …… உப்பாற்றுக்கும் இடைப்பட்டுக் குட்டித்தீவு மாதிரித் த�ோற்றம் தரும் கட்டைப்பறிச்சான் கிராமம் இயற்கையின் க�ொடை. தென்னை மரச்சோலைகள் ஒருபுறமும், கண்ணாக் காடுகள் மறுபுறமுமாகத் திகழும் இந்தக் கிராமம் பாலுமகேந்தராவின் காமிராக் கண்களுக்குத் தென்பட்டுவிட்டால் ப�ோதும் ஒரு பத்துப்படமாவது இந்த ‘ல�ொகேஷனில் ’ சூட்டிங் நடக்கும்” (ப. 2) எனக் கட்டைபறிச்சான் கிராமத்தின் இயற்கை அழகையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் வருணிப்பது கதையாசிரியரின் அழகுணர்ச்சியை வெளிப் படுத்துகிறது.
மூதாட்டியின் பாசம் “என்ர ராசா, நீ நில்லடா ம�ோனை எனக்கென்டொரு ஆம்பிளைப் பிள்ளையை ஆண்டவன் தரேல்லை. வந்த உன்னைக் காப்பாத்துறது என்ற ப�ொறுப்பு. அவனை விட்டுட்டு உதுகளையும் தூக்கிக்கொண்டு நீங்கள் ஓடிப்போய்ச் சேருங்கோ. துலைவார் வரப்போறான்கள்” (ப. 9) என்ற தமிழ் மூதாட்டியின் குரலில், யாழ் குடாநாட்டில் நிலவிய சிறீலங்கா இராணுவத்தின் கெடுபிடிகளையும், தமிழ்ப் ப�ோராளிகளைக் காப்பாற்றத் துடிக்கும் 14
காற்றுவெளி
“‘சென்றுவா மகனே! வென்றுவா!’, ‘நேருக்கு நேர் நின்று எதிர்த்து, நெஞ்சிலே வேல்பட்டு மடிவதே வீர மரணம்’ என்பதெல்லாம் இன்றில்லை, ஒளிந்து ஒளிந்து முன்னேறி எதிரியைத் தாக்கிவா என்பதே கொரில்லாப் ப�ோர் முறையின் அரிச்சுவடி. ‘எதிரியைத் தூங்கும்போது தாக்குவதும், எதிரி தாக்கும்போது பின்வாங்குவதும், உன்னைப் பாதுகாப்பதும், எதிரியை அழிப்பதும் தான் தியாகம். உன்னை அழித்துக் க�ொள்வது தற்கொலையாகும்’” (பக். 12-11) என ஈழ விடுவிப்புப் ப�ோராளிகளின் ப�ோர் உத்திகளை ஆசிரியர் வெளிப்படுத்தி யுள்ளமை கால மாற்றத்தையும் கள மாற்றத்தையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இராணுவத்திடம் வாங்கிய அடி, உதை, மிதி – கதறல், கெஞ்சல், சித்திரவதை – வேதனையை விடவும் அந்தக் குடும்பத்தினர் காட்டிய பாச உணர்ச்சியே அவனை (சாந்தன்) அலைக்கழித்தது. மூதாட்டியின் முகத்தையே உற்றுப் பார்த்த சாந்தன், “எனக்காக ஏனம்மா இவ்வளவு கஷ்டப்படுறியள்?” என்றான். அதற்கு, “ஏத�ோ தம்பி எங்களால் முடிஞ்சதை என்டாலும் செய்ய வேண்டாம�ோ? ஆர் பெத்த பிள்ளைய�ோ எங்கடை விடிவுக்காகத்தானே கஷ்டப்படுறியள். வீடு வாசல் எல்லாத்தையும் விட்டிட்டு தினசரி வேதனைப்படுகிற உங்களைப் ப�ோல பிள்ளையள் எத்தனைபேர் தம்பி. ஏத�ோ நாங்களும் எங்களாலை ஏலக்கூடியதை என்டாலும் செய்யத்தானேவேணும். எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமலா ப�ோயிடும்?” (ப. 15) என மூதாட்டி கூறிய பதில், ஈழ மக்களின் நீண்ட நாளைய இடர்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வெளிப்பட்டுள்ளது. சாந்தனின் உடல் வலிக்கு அந்த வீட்டார் காட்டிய பாச உணர்வு மருந்தாக அமைந்தது.
‘அந்தஸ்து’, ‘பெருமைகள்’, ‘பிரலாபம்’ சமூகத்தில் மதிப்புடன் உயர்ந்து விளங்கிய பெரியவர்களும் இராணுவத்தின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி அவமானப் பட்டதை அந்தஸ்து சிறுகதை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. ஆறு மக்களைப் பெற்றெடுத்துப் பெருமைகளுடன் வாழ்ந்தவர் சிவலிங்கம். அவரது மனைவி பார்வதி மாமி. மூத்த மகன் டாக்டர் காற்றுவெளி
15
நந்தகுமார், மருத்துவர், லண்டனில் குடியுரிமைபெற்றுக் குடும்பத்துடன் வாழ்பவர். இரண்டாவது மகள் மஞ்சுளா. மூன்றாம் மகன் விஜயன் – ஜெர்மனியில் அடைக்கலம். நாலாவது மகள் தர்ஷினி – கண்டியில் வாழ்கிறார். கடைசி பெடியன் வரதன் – காணாமல் ப�ோனவன், ஏத�ோ இயக்கத்தில் இருப்பதாக அறிந்திருந்தார். நந்த குமாரிடம் டாக்டர் படிப்புப் படித்தவர்கள் எவ்வளவ�ோ முயன்றும் சிவலிங்கத்தைக் காப்பற்ற முடியவில்லை. பல்வேறு காரணங்களால் சிதைந்து வாழும் பெருமைமிக்க குடும்பத்தில் சிவலிங்கத்திற்கு இறுதிச் சடங்கில் க�ொல்லிவைக்க மகன்கள் யாருமில்லை. சில இளைஞர்கள், ப�ோராளிகள் - குறுக்கும் நெடுக்குமாக சுறுசுறுப்புடன் காணப்பட்டனர். பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “நீங்கள் யார்?” என்று வாஞ்சையுடன் கேட்ட ச�ொர்ணத்திடம், “நாங்கள�ோ…. எப்படிச் ச�ொன்னால் உங்களுக்குத் தெரியும்… நாங்கள் – பெடியள் ….. வரதன்ரை பிறென்சோ” (ப. 25) என்றனர். “திசைக்கொன்றும் பிரிக்கப்பட்டு குடும்ப உறவுகள், இரத்த பாசங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுவிட்ட இந்தச் சமூகத்தில் சுயநலமிகளாய்… தம் ச�ொந்த மண்ணை மட்டுமன்றி பெற்றவரையும் அனாதையாகத் தவிக்கவிட்டுச் சென்ற அறிவு ஜீவிகளைப் பற்றி எண்ணியதால் க�ோப மூச்சுகள்கனன்றுக�ொண்டிருந்தன. சிவலிங்கத்தின் சடலத்தை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் ப�ோலிப் பெருமைகளையும் கூடவே தூக்கிப்போய்க் க�ொள்ளிவைக்க, இந்த இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.” (ப. 26) எனக் கதையை முடிக்கிறார். ‘பிரலாபம்’ சிறுகதை, முறிகண்டியின் த�ோற்றத்தையும், அங்கு பிள்ளையார் க�ோயில் கட்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியையும் சுவைபட எடுத்தியம்புகின்றது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் யானைகள் நடமாட்டம் மிகுந்த இடம், யாழையும் கண்டியையும் இணைக்குமிடம். இனப் ப�ோரின் விளைவால் இன்று இராணுவ நடமாட்டம் மிகுந்து மக்கள் நடமாட்டம் அற்றுப்போன நிலையைக் கூறுகிறது.
இதுவும் ஒரு காதல் கதை மேலைநாடுகளில் களம் அமைத்துத் தனித் தமிழீழத்திற்குப் ப�ோராடுதைக் காட்டிலும், தாய்த் தமிழகத்தில் களம் அமைத்துப் ப�ோராட்டத்தைக் கூர்மைப்படுத்த நினைத்த விடுதலைப் ப�ோராளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நின்றனர். அவ்வாறு சென்னை, க�ோடம்பாக்கம், கங்கையம்மன் க�ோயில் தெருவில் ஒரு குடும்பம். அங்கிருந்த நளினியுடன் ப�ோராளி தங்கராசன் க�ொண்ட காதலைப் புலப் படுத்துவதாக ‘இதுவும் ஒரு காதல் கதை’ அமைந்துள்ளது. இருவரும் தம் காதலை வெளிப்படுத்தி நின்றப�ோது அவனை தமிழீழக் கடமை அழைத்தது. “எங்கெங்கோ பிறந்து – எப்படியெப்படிய�ோ திரிந்து, பறந்து வளர்ந்து அன்னிய மண்ணில் முளைத்த எனது காதல் எமது மண்ணில் செழித்து விளையாது ப�ோலும்” (ப.51) என்ற தங்கராசனின் எண்ணம் ஈழ இளைஞர்களின் ம�ொத்த வெளிப்பாடாகும். “இப்போது அவர்களைப் பிரித்து வைத்திருப்பது ஆழம் காண முடியாத இந்துப்பெருங்கடல் மட்டுமல்ல!” (ப.51) ஈழப் பெருங்கடமையும் கூட என உய்ந்துணரச் செய்வது தமிழரின் உள்ளதை உருக்குவதாகும்.
வாழத்தான் ப�ோகிறாள் “திருமண வீட்டில் ஷெல் விழுந்ததால் மாப்பிள்ளை ஸ்தலத்திலேயே பலி…” (ப. 52) “ஐய�ோ பாவம்….. கல்யாணம் கட்டி வீட்டுக்கு வரும்போதே வெள்ளைச் சீலை கட்டவேண்டியதாய்ப் ப�ோச்சு” (ப. 52)
பழைமை வாதம் ‘இன்றைய நாளிலும்’ சிறுகதை, சற்று மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பிறந்துள்ளது. சிங்களப் பேரினவாத அடக்குமுறைகளுக்கிடையேயும் தமிழர்கள் தம் சாதிக்குள் சாதி பார்க்கும் தன்மையை விடவில்லை என்பதை 16
வெளிப்படுத்துகின்றது. ‘சிங்கப்பூரான் கபே’யில் பணியாற்றும் மகேந்திரன், “கண்டது கடியதுகளைக் க�ொண்டுவந்து ப�ோட்டால் நல்லவை நறியவை இங்கை சாப்பிட வருவினைய�ோ?” (ப.39) +என்ற கூற்றின் மூலம் ஆசிரியர் புலப்படுத்துகின்றார்.
காற்றுவெளி
“உனக்குத் தெரியுமே சாதகம் ப�ொருத்தமில்லையாமடி. அவளுக்கு ஏழில் செவ்வாயாம். அதுதானடி இப்படி நடந்ததாம்” (ப. 52)
காற்றுவெளி
17
“இஞ்சை அந்தப் பிள்ளை தீவுப் பக்கம் இருக்கிறதாம். இது காதல் கல்யாணமாம். இரு வீட்டிலையும் பலத்த எதிர்ப்பு இருந்தபடியால் ஆர�ோ சிநேகிதர் வீட்லைதான் கல்யாண வீடு நடந்ததாம். காலைமை முகூர்த்தத்திற்கு துர்க்கை அம்மன் க�ோயிலில் தாலிகட்டிவிட்டு வீட்டுக்கு வரும் வழியிலை நாச்சிமார் க�ோயிலடியில் கும்பிடும் ப�ோதுதான் ஷெல் வந்து விழுந்ததாம்” (ப. 52) “ஏழில் செவ்வாய் இப்படித்தான் செய்யும்” (ப. 53) “கலியாணம் என்டால் தலையெழுத்தென்டு” (ப. 53)
சும்மாவே.
தாரமும்
குருவும்
இவை நடந்த சம்பவத்தின் ஊரார் விமர்சனங்கள். இன எழுச்சி கண்ட ஈழ மண்ணில், சாத்திர சம்பிரதாயங்களின் ஆளுமையை இதன்வழி அறியமுடிகின்றது. பெரிதாகச் சத்தம்போட்டு விழுந்து குமுறி அழுதுக�ொண்டிருக்கவில்லை அவள். ச�ோகமயமான அவளது த�ோற்றத்திலும் ஒரு கம்பீரம் இருந்தது. மிரண்டு வெறித்த அவளது பார்வையில் சமூகத்தைச் சுட்டெரிக்கும் ஒரு க�ோபம் இருந்தது. நேற்றுவரையில் தங்கள் காதலை அங்கீகரிக்க மறுத்த அவரது பெற்றோர், சக�ோதர சக�ோதரிகள் அனைவரையும் அவள் கேலி செய்வதுப�ோல் இருந்தது. “என் வாழ்வில் குறுக்கிட்ட இயமன்கள் என் நாட்டிலிருந்து துரத்தப்படும் வரை தன்னந்தனி மரம் என்றாலும் நான் வாழ்வேன் என்று அவள் முரசறைந்து ச�ொல்வதுப�ோல இருந்தது….. நீ வாழ்வை இழக்கவில்லை. ஏனெனில் நீ அதைப் பெறவேயில்லையே” (ப.58) எனச் செல்லத்துரையின் கூற்றாகக் கதையை முடிக்கிறார்.
கண்ணை மட்டும் எடுக்காமல் எதிர்காலக் கணவரின் குணநலன்கள் ஏதும் இ்ந்த முக விலாசத்தில் புதைந்து கிடக்கும�ோ?” (ப.62) எனத் தேடுவதிலிருந்து க�ௌரியின் நிலையை உணரமுடிகிறது. “அரைப்போட்டோ ஒன்றை மாத்திரம் துணையாய்க் க�ொண்டு பெர்லின் தெருக்களில் தனது துணையைத் தேடும் ஈழத்தின் தாயை உன்னிடம் காண்கிறேன்.”(ப.65) என அவளுடைய தம்பி நிரஞ்சன் கிண்டலாகப் பேசிவிட்டுச் சென்றான். புதிய உறவுகளுடன் – வருங்கால மாப்பிள்ளை வீட்டாருடன் – சுகமான கற்பனைகள�ோடும், எதிர்கால ஏக்கத்தோடும் க�ௌரி பயணிக்கத் த�ொடங்கினாள். பெண்பார்க்க மாப்பிள்ளை வரவேண்டும், ஆனால், மாப்பிள்ளையைப் பார்க்கப் பெண் செல்வது – அதுவும் ஜெர்மனி செல்வது காலத்தின் க�ோலம்! க�ௌரிக்கு மட்டுமல்ல இது ஈழம் அனுபவிக்கும் இக்கால நிலையாகும். தன் கண்முன்னாலேயே தானும் தன் பரம்பரையும் கட்டிக்காத்த பண்பாட்டு மரபுகள் – பாரம்பரியங்கள் சிதைவதைக் கண்டு கனகம்மா பாட்டி கண்ணீர் வடிக்கிறாள்.
‘தியாகம்’ இராணுவத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராகப் ப�ொங்கி எழுந்த ப�ோராளிகள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கையைச் சித்திரிப்பதாகத் தியாகம் சிறுகதை அமைந்துள்ளது. படிக்கத் த�ொடங்கியதும் முடித்துவிட்டுத்தான் பிறவேலை என எண்ணும்படியான கதை இது.
நவீன சுயம்வரம்
“அடி பரவாயில்லை. வந்த டெலிக்கா வானும் ஜீப்பும் தூளாய்ப்போச்சு, எப்படியென்டாலும் ஒரு இருபது பேராவது செத்திருப்பாங்கள், எனிமேல் இப்படி வரானுகள்” (ப. 68)
‘நவீன சுயம்வரம்’ எண்பதுகளில் ஈழத்தில் நடந்த திருமண முயற்சியைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது தன் எதிர்காலக் கணவனைத் தேடி மாப்பிள்ளை வீட்டாருடன் மாப்பிள்ளை பற்றிய பல்வேறு மதிப்பீடுகளுடன் ஜெர்மனி செல்லும் ஒரு பெண்மணியின் கதை,
“உங்களுக்குத்தான் காயம், மற்றப்படி ஒண்டுமில்லை. க�ொஞ்சம் சாமானும் எடு்த்தனாங்கள். எம். 16 ரவுண்ஸ் எல்லாம் கிடைச்சிருக்கு. வந்தாக்கள�ோடை ஒரு முகமூடிக்காரனும் செத்துப்போனான்” (ப. 68)
“யார் இவர்? எந்த ஊர்? என்ன த�ொழில் செய்கிறார்? எப்படிப்பட்டவர்? இவரது குடும்பம் எத்தகையது? என்றெல்லாம் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று த�ோன்றினாலும் சிரமப்பட்டு அடக்கிக் க�ொண்டாள். படத்தில் வைத்த
இவை ப�ோராளிகள் இருவரின் உரையாடல். செங்கலடி – பதுளை பாதை வழிச் சென்று ஆயுதப்படையினர் ஊர்ப்புற மக்களை இம்சைக்கு ஆளாக்கினர். இதைத் தடுக்கப் ப�ோராளிகள் இராணுவத்தின் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் காயமுற்ற ப�ோராளி ஒருவனிடம் ரமேஷ் என்னும் ப�ோராளி உரையாடும்
18
காற்றுவெளி
காற்றுவெளி
19
பாங்கில் இக்கதை புனையப்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு உதவியாக இருந்த தேனீர் கடைக்காரரும் இறந்துவிட்டார். “சாதாரண மனிதராய், அப்பாவி ப�ோல எம்மத்தியில் வாழ்ந்த கடைக்காரரின் அசாதாரணமான துணிகரமான முடிவைப் பாராட்டினாலும், இழப்பின் வேதனை நெஞ்சைக் குடைய கண்ணீராய் ச�ொரிந்து க�ொண்டிருக்கிறது.” (ப.75) எனப் ப�ோராளிகள் அவரின் தியாகத்தைப் ப�ோற்றினர்.
சிவப்புக்கோடு த�ொழிற்சாலைக்குத் தாமதமாக வரும் பணியாளர்களின் பெயருக்கு நேராக வருகைப் பதிவேட்டில் இடப்படும் சிவப்புக்கோடே இக்கதையின் தலைப்பாக அமைந்துள்ளது. கைலாசம் இரு குழந்தைகளையுடைய குடும்பத்தலைவன். வாலிபக் காலத்தில் நல்ல த�ொண்டனாகச் செயலாற்றி நாட்டில் ஒரு ச�ோசலிச அரசைத் த�ோற்றுவிக்க ஆசைப்பட்டவன்தான். ஆனால் இளமை அர்த்தமற்றதாகி விடக் கூடாதே என்ற ஒருவித அவசரத்தில் திருமணவாழ்வை மேற்கொண்டு அரசியல் வாழ்வைக் க�ொஞ்சம் அப்புறப்படுத்தி வைத்தான். குடும்ப வாழ்வை நடத்த ஒரு அலுமினியத் த�ொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுக�ொண்டிருந்தான். இதற்குமுன் எத்தனைய�ோ இடங்களில் வேலை செய்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒருவருடம் அல்லது ஆறு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. “இங்கையாவது நிரந்தரமாக வேலைசெய்யவேணும் நீங்கள்” (ப. 78) என மனைவி க�ௌரியும் உறவினரும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதற்கினங்க இங்கும் நல்ல பெயர�ோடு பணியாற்ற முயன்றான். இருப்பினும் அவன் சிவப்புக்கோட்டுக்குக் கீழேயே கைய�ொப்பமிடுகிறான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காரணங்களால் அவன் பிந்தியே பணிக்குச் சென்றான் – எவ்வளவ�ோ முயன்றும் ஏதாவது ஒரு காரணத்தால் முடியாதுப�ோயிற்று. “அரைமணித் தியாலம் பிந்தி வேலையை விடச்சொன்னால் ஓவர் டைம் கேட்கிறியள். ஆனா நேரத்துக்கு வரமாட்டியள்” (ப.83) எனக் கண்டித்த சுந்தரம்பிள்ளையிடம், “நான் என்ன பிந்திவர வேண்டுமென்றே நினைக்கிறன். ஒவ்வொரு நாளும் வெள்ளென நாலு நாலரைக்கே எழும்பி வெளிக்கிட்டு நேரத்துக்கு வரவேண்டுமென்றுதான் கஷ்டப்படுறன். ஆனா முடியேல்லை. இது என்ரை பிரச்சனை இல்லை. ஒரு வர்கத்தின்ரை பிரச்சனை. உமக்கென்ன கார் இருக்கு
20
காற்றுவெளி
வீட்டில, எடுபிடி ஆட்கள் இருக்கு. நேரத்துக்கு வந்து குந்தியிருப்பியல். எங்களுக்கு அப்படியே. அதுதான் எனக்கும் உமக்கு முள்ள வித்தியாசம் ஆனபடியால் பிழையில்லை. நான் நேரத்துக்கு வரத்தான் தெண்டிக்கிறேன். என்ன செய்ய? ஒவ்வொரு நாளும் ஏத�ோவ�ொரு பிரச்சனை. இண்டைக்கும் அப்படித்தான். வேலைக்கு வர வெளிக்கிட்டா சமைக்கக் காசில்லை என்னுது. நான் கூட ஒரு சாப்பாடும் கட்டியரேல்லை. காலமையும் சாப்பிடேல்லை. இத�ோடு நின்று வேலை செய்யத்தானே வந்தனான். இது எனக்கு மட்டுமுள்ள பிரச்சனை இல்ல. இதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேணும்” (பக். 84-83) என அவன் பதில் கூறி முடிக்கும் ப�ோது சுந்தரம்பிள்ளையை எதிரில் காண முடியவில்லை.
காணிஉறுதி ச�ொத்துரிமைப் பத்திரங்களையே ‘காணி உறுதி’ என்ற ஈழ வழக்கு சுட்டுகிறது. ஈழ மண்ணில் இனியும் வாழ இயலாது என்ற சூழலில் காணி உறுதிகளைக் கட்டிச் சுருட்டிக் கக்கத்தில் இருக்கிக்கொண்டு கள்ளத்தோனியில் தாய்த்தமிழகம் செல்லும் கந்தப்ப வாத்தியாரையும், ஈழத் தமிழக் குடும்பங்களையும் பற்றியதாக இச்சிறுகதை அமைந்துள்ளது. “க�ோட்டை இராணுவ முகாமிலும் மண்டைத் தீவு இராணுவ முகாமிலும் பாரிய வெளிச்சங்களை உமிழும் மின் விளக்குகள், பண்ணைப் பாலத்தில் அடிக்கடி உறுமும் இராணுவ வாகனங்கள், இருந்தாற்போல் கேட்கின்ற பாரிய வெடிச் சத்தங்களால் ஈரல் குலை நடுங்கியபடி மனிதர்கள்” (ப.85) “ஓம் பாருங்கோ! இனியும் என்னண்டு சீவிக்கிறது. செல்லடி ஒரு பக்கத்தாலை. ப�ொம்பர் ஒரு பக்கம். இதுக்குள்ளை துவக்குச் சூடு. அதுவும் எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை பெடியன�ோட இருக்கி. நாங்களும் இடைக்கிடை சாப்பாடேலாம் குடுக்கிற நாங்கள். இனி ஆமிக்காரன் வந்தா எங்களை இருக்க விடுவான�ோ? சீச்சி! பெடியள் நிண்டு அடிபடுகிறாங்கள் தான், ஆனால், அவங்களாலைதான் என்ன செய்ய ஏலும். எத்தனை நாளைக்குத்தான் அடிபட ஏலும். வடமராட்சியை ஆமி (Army) பிடிச்சுப் ப�ோட்டானாம். இனி யாழ்ப்பாணந்தான் அடுத்ததாம். அதுதான் நாங்களும் வெளிக்கிட்டம்!” என வரும் பகுதிகள் ஈழமக்களின் அவலநிலையையும், அவர்களின் எண்ணப் பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
காற்றுவெளி
21
ப�ொங்கி எழும் கடல் அலைகளுக்கிடையே த�ொலைவில் தெரியும் ‘ஸ்பீட் ப�ோட்’, ‘நேவி ப�ோட்’டாக இருக்கும�ோ….. என்னென்ன க�ொடுமைகளுக்கு ஆளாகப் ப�ோகிற�ோம் என்று எண்ணிப் பயந்து நடுங்கி, ‘பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவையும்’, ‘மரியாளையும்’, ‘சிவபிரானையும்’ வேண்டிக்கொண்ட பரிதவிப்பும், அந்த ப�ோட் ‘பெடியளின்ர ப�ோட்’ (ப�ோராளிகளின் விசைப் படகு) என அறிந்தபின் ‘ப�ோன உயிர் திரும்பிய மாதிரி’ அவர்கள் உணர்ந்த நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். இடையில் இஞ்சின் பழுதுபட்ட நிலையில் ஒருவாறாக வலைப்பாட்டுக் கரைக்கு வந்து சேர்ந்தது தெய்வச்செயலாய் முடிந்தது. சூரியக் கதிர்கள் பரவத்தொடங்கிய வேலையில் கண்ணுக்குத் தென்பட்ட கரை இராமேஸ்வரமா? வேதாரணியமா? க�ோடிக்கரையா? தூத்துக்குடியா? என ஒவ்வொருவரும் தம் கண்களை அகலத் திறந்தனர். ஆனால், அது இரனைத் தீவுக் கடலில் – கச்சத்தீவுக்கும் முன்னதாகவுள்ள வலைப்பாட்டுக் கரையாகும். கடலலையின் வேகத்தில் நனைந்துவிட்ட காணி உறுதிகளைக் கையிலெடுத்த கந்தப்பு வாத்தியார் வேதனைப்பட்டார். “எத்தனை வருடங்கள் எங்கள் பரம்பரைகள் எல்லாம் உழைத்துச் சேர்த்த ச�ொத்தின் அடையாளமாக விளங்கும் காணி உறுதி இப்படி த�ொப்பலாக நனைந்து கிடக்கிறது. காணியின் எல்லைகளை நிலைநாட்டுவதற்காக அயலவர்களுடன் பட்ட வாக்குவாதங்கள் சக�ோதரச் சண்டைகள் எல்லாம் அவரது மனக்கண்ணில்நிறைய அவரது கண்ணிலிருந்து நீர்வடிந்தது.” (ப.93) ஈழத்தில் நனைந்த காணி உறுதிகளைக் காயவைக்க மேற்பாரத்திற்குக் கற்களைத் தேடிய கந்தப்பு வாத்தியார், படகுத் துறையில் தவறிவிட்ட தன் கடைக்கட்டி கண்ணனை மறந்தேவிட்டார். அதுமட்டுமல்ல அவர்தம் காணிகளுள்ள ஈழ மண்ணையும் மறந்தேவிட்டனர் என எண்ணத் த�ோன்றுகிறது. இதுதான் இன்றைய ஈழத்தமிழரின் அவலநிலை.
பந்தம்
அ
ன்று தாத்தாவுக்கு திதி. திதி க�ொடுக்கையில் அப்பாவின் கண்கள்கலங்கின, எனக்கும்தான்.
“ அவரில்லாம அஞ்சு வருஷம் ஓடிப்போச்சு.” அப்பா பெருமூச்சு விட்டார். நான் நகர்ந்துப�ோய் நாற்காலி அமர்ந்தப�ோது தாத்தாவின் நினைவு மனதை அழுத்திற்று.
நுனியில்
தாத்தா அற்புதமானவர். மனதுக்குள் அன்பை அடக்கி வைக்க தெரியாமல் பிரவாகமாக க�ொட்டிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார். அதற்கு ஈரேழு உலகத்தையும் ஈடாக க�ொடுக்கலாம். தடித்த பிரேமிட்ட கண்ணாடியை அணிந்துக�ொண்டு ஈஸிசேரில் அமர்ந்து அவர் பேப்பர் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்க குறைந்தது ஒருமணி நேரமாவது ஆகும். நுனிப்புல் மேய்ச்சல் அவருக்கு பிடிக்காது. ஆரம்பத்திலிருந்து கடைசிப்பக்கம் வரை படித்துவிட்டுதான் கீழே வைப்பார். சிலசமயம், “ அந்த காலம் ப�ோல இல்ல. என்னென்னம�ோ நடக்குது” என்று வாய் முணுமுணுக்கும்.
முடிவுரை
தாத்தாவுடன் கைக�ோர்த்து நடப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். அப்படி ப�ோகையில் அவர் எனக்கு ஆயிரமாயிரம் கதைகள் ச�ொல்லியிருக்கிறார். தேசிங்கு ராஜாவிலிருந்து, தெனாலிராமன் வரை அத்தனை பேரும் எனக்கு அறிமுகமானது அப்படித்தான்.
காணி உறுதி சிறுகதைகள் 1979 முதல் 1987 வரையிலான காலத்தின் ஈழ மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக விளங்குகிறது. ஈழ மக்களுற்ற இன்னல்களை அளந்தறியும் காலக் கண்ணாடியாக காணி உறுதி விளங்குகிறது.
தாத்தாவின் கதைகள் என்னை சிலாகிக்க வைத்திருக்கின்றன. கதையை அவர் ச�ொல்லும் விதம், தன்னுடைய கற்பனையையும் அதில் சேர்த்து வர்ணிக்கும் அழகு அப்பப்பா.....அருமை.
N - முனைவர் த. மலையரசி, அ.மா.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை. 22
காற்றுவெளி
தாத்தா அடிக்கடி என்னை இழுத்து அவர் மடியில் இருத்தி க�ொள்வார். அவருடைய பிடிக்குள் நான் மழைக்கு ஒதுங்கும் பறவைப்போல அடைபட்டுவிடுவேன். மனசு பனிக்கட்டியாய் கரையும்.
காற்றுவெளி
23
வீட்டின் வரவு, செலவு கணக்குகளெல்லாம் தாத்தாதான் பார்ப்பார். மஞ்சள் அட்டைப�ோட்ட ந�ோட்டில் தேதிவாரியாக கணக்குகள் எழுதி வைத்திருப்பார். ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கியதுகூட அதில் இருக்கும். அப்பாவுக்கு தாத்தா என்றால் பயம். சம்பளம் வாங்கியதும் அவரிடம் க�ொடுத்துவிடுவார். வீட்டின் செலவுகளெல்லாம் அவரின் மேற்பார்வையில் தான் நடக்கும். “ ப�ோனவாரந்தானே காபித்தூள் வாங்கினே. அதுக்குள்ள தீந்துடுத்தா....?” தாத்தா சாதாரணமாகத்தான் கேட்பார். அம்மா பயந்து நழுவி விடுவாள். “ ஒருபிடி ச�ோறு பசிச்சவனுக்கு ப�ோட்டா வயிறு வாழ்த்தும். அதுதான் நமக்கு கெடைக்குற புண்ணியம்” என்று தாத்தா அடிக்கடி கூறுவார். அவருடைய பேரனாகும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கிறேன். கூடவே மனதுக்குள் நூலிழையாய் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த எண்ணத்தை என்னால் ஜீரணிக்க முடிந்ததில்லை. தாத்தா ஆதுரமாய் என் முதுகை வருடும்போது அந்த நினைப்பு வந்து இம்சிக்கும். “ டேய் பயலே, நீ என்ன நெனக்கிறேன்னு எனக்கு புரியுது” என்று தாத்தா ஒருநாள் சிரித்தபடி ச�ொன்னப�ோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ‘ தாத்தாவுக்கு அதானே...?”
வயசாயிடுச்சு, ப�ோயி
சேந்துடுவார�ோன்னு
பயப்படுற.
அந்த ந�ோட்டை தந்தார். “ வீட்டோட கணக்கு, வழக்கெல்லாம் இனிமே நீதான் பாத்துக்கணும். பாத்து செலவு பண்ணு. பண்ணின செலவை கைய�ோட இந்த ந�ோட்டுல எழுதி வை. அப்பதான் அது அவசியமா, அனாவசியமான்னு தெரியும்” என்று சிரமப்பட்டு ச�ொன்னார். என்னுடைய முக்கால்வாசி ப�ொழுதுகள் தாத்தாவின் அருகிலேயே கழிந்திருக்கின்றன. தாத்தா என் கையை அவர் கைகளுக்குள் ப�ொதிந்து க�ொள்வார். பஞ்சு ப�ோன்றிருக்கும் அவர் கைகள் நடுங்குவதை உணரும்போது என் கண்கள் கலங்கும். “ பயப்படாதேடா. பிறப்புன்னு இருந்தா இறப்பும் இருக்கும். அதை நெனச்சு கலங்கக்கூடாது” என்று முதல்நாள் இரவு கூறிய தாத்தா மறுநாள் விடிகாலை இறந்துப�ோனார். நான் கண்கள் தளும்ப அமர்ந்திருந்தேன். தாத்தாவின் நினைவுகள் என் மனவெளியில் ஊடுருவி ஆழ் மனதுக்குள் புதைந்து கிடந்த ச�ோகத்தை தட்டியெழுப்பிவிட்டது. அப்பாவும் என்னைப்போலவே அமர்ந்திருந்தார். அப்பா, தாத்தாவின் நேரடித்தொடர்பு. அடுத்த தலைமுறையான நானே தவிக்கும்போது அவருக்கு எப்படியிருக்கும். நான் பெருமூச்சுடன் தாத்தாவின் ப�ோட்டோவை கூர்ந்தேன். தாத்தா அமைதியாக புன்னகைத்து க�ொண்டிருந்தார். நான் டேபிள் மேலிருந்த மஞ்சள் அட்டை ப�ோட்ட அந்த ந�ோட்டை எடுத்து பிரித்தேன். உள்ளே குண்டு, குண்டாய் தாத்தாவின் எழுத்துக்கள் ஓடியிருந்தன. நிறைய பக்கங்களுக்கு பிறகு அப்பாவின் கையெழுத்து தெரிய ஆரம்பித்தது. தாத்தாவின் அதே நேர்த்தி.
“ இ...இல்ல தாத்தா....” நான் மழுப்பினேன். அவர் என் தலையை தடவினார். “ எழுப்பத்தஞ்சு ஆச்சுடா. ர�ொம்ப நாள் இருக்கமாட்டேன்.” அவர் மெதுவாக கூறியப�ோது எனக்கு அழுகை வந்தது. அவர் மடியில் முகம் சாய்த்து விம்மினேன்.
அடுத்தது நான�ோ...........தாத்தாவின் ஒழுங்கும், அதையே கடைபிடிக்கிற அப்பாவின் பண்பும் எனக்கு வருமா......’ தெரியவில்லை. நான் நான் பெருமூச்சு விட்டேன்.
தாத்தா படுக்கையில் விழுந்தபிறகு வீடு அமைதியாகிப்போனது. அவரை இழந்துவிடுவ�ோம�ோ என்ற அப்பாவின் பயம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஒருநாள் தாத்தா அப்பாவை கூப்பிட்டு மஞ்சள் அட்டை ப�ோட்ட
N - ஐ. கிருத்திகா,
24
காற்றுவெளி
காற்றுவெளி
25
சப்தமற்ற இரவுகளின் நிசப்தத்தை சில ஓநாய்களின் உளறல்கள் களங்கமாக்கின பனி மூடிய பின்னிரவு அவள் உயிர்ப்பினை அழச்செய்கிறது எப்பாடுபட்டாவது இருத்தலின் விதி உயிர் நூலை நெய்ய முயல்கிறது காலியான பக்கங்கள் வெறுமை ப�ொங்கிய பார்வைகள் கடந்து செல்ல செல்ல வேண்டலின் இன்னொரு பறத்தல் இலகுவாக ஆக்கிடவே வாழ்க்கையினை த�ொடர்கிறாள் அந்த கனத்த மழைப்பொழுதில் தனித்த ப�ொழுதாய் அவளின் பிளவான இதயம் குளிர்ந்த படிமமாக இறுகி கிடக்கிறது உருகுமென இருப்பின் உருகும் .....
N - கலா புவன்
26
நான் விடிந்துவிட்டேன் நான் விடிந்துவிட்டேன் என்னை இருள்ச் சேலை ப�ோர்த்தியிருந்தது மின்மினிப் பூச்சியின் அரிக்கன் வெளிசமூட்டிச் சென்றது சில்லூரிகள் செவிகளை வதைத்தன இரவுக் காற்று க�ொய்யாவை முறித்து க�ொள்ளிகள் அடுக்கின புணரப் பதறிய நாய்கள் ஊளைய�ோடு அலைந்தன எப்பவும் சந்தியின் பக்கமாய் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கும் பிரம்மை.
z
நாளை பற்றிய எதிர்பார்வை என்னை எழுப்பவில்லை நாளை பற்றிய உழைப்பு என்னை எழுப்பவில்லை நாளை பற்றிய அன்பு என்னை எழுப்பவில்லை
- லண்டன்
காற்றுவெளி
காற்றுவெளி
நாளை பற்றிய உறவு என்னை எழுப்பவில்ல எனது அயர்வில் நிசப்தம் கிடைத்தது ஓய்வின் மூச்சு பெரும் சப்தமாக எழுந்து ஓய்ந்தது ஒருக்களித்து இன்னும் தூங்கப் பழக வேண்டியிருக்கிறது பகல் முழுதுமான எண்ணங்கள் இரவை நசுக்குகின்றன எனது இரவு கறுப்பு வெள்ளை ஓவியங்களை வரைகின்றன. நான் விடிந்துவிட்டேன் ஒரு சூரியக்கதிர் என்னில் த�ொங்கிக்கொண்டிருக்கிறது.
N -டீன்கபூர் 27
காதல் சிறை
மி
இப்ப ச�ொல்லுங்க வசந்த் அங்கே என்ன தெரியுது ? பறவைகள் கூண்டில் இருக்கின்றன டாக்டர்
ஸ்டர் வசந்த் இங்க ஏன் வந்து இருக்கீங்கன்னு புரியுதா ??
நல்லாவே புரியுது டாக்டர் ,ஆனா அந்த மாதிரியான நேரங்களில் எ ன்னாலே எ ன் க�ோ ப த்தை க ண ்ட்ரோ ல் ப ண ்ண முடியலை டாக்டர் ,என் ப�ொ ண ் டாட் டி ய ா நான் உசுருக்கு உசுரா ர�ொம்ப பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணுறேன் அவளை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன் நான் கருப்பா இருந்தாலும் என்னை பிடிச்சு ப�ோய் தான் கல்யாணம் பண்ணா ,அவ ர�ொம்ப நல்லவ, இருந்தாலும் அவ அக்கம், பக்கம் பேசுறப்ப , அ லு வல க த் து ல கூட ஒர்க் பண்ணுற ஸ்டாப்கிட்ட அவ பேசுறப்ப என்னையும் அ றி ய ா மச ந ்தே க ம் எட்டி பார்க்குது , வேலைக் கு ப�ோ க ா து ன் னு ச�ொன்னாலும் படிச்சது எதுக்கு அடுப்படியில மட்டும் கிடக்கவான்னு பிடிவாதம் பிடிச்சிட்டு வேலைக்கு ப�ோறா அவ ச�ொல்லுறது நியாயம்னு புத்தி ச�ொன்னாலும் மனசு கேட்க மறுக்கிது,அவ எங்கே என்னை விட்டிட்டு வேறு யாருடனாவது ப�ோயிடுவாள�ோ என்கிற குறுக்கு புத்தியாலும் ,தாழ்வு மனப்பான்மையாலும் அவளை ர�ொம்ப வார்த்தையால டார்ச்சர் பண்ணுறேன்னு எனக்கு புரியுது டாக்டர் ,நான் செய்யுறது எல்லாம் தப்புன்னு தெரிஞ்சாலும் என்னையும் அறியாம , அவ என்னை விட்டிட்டு ப�ோயிட கூடாதுன்னு என்கிற பைத்தியக்காரத்தனமான காதலாலே தான் இப்படி செய்யுறேன் டாக்டர் ... என்னுடைய இந்த க�ொடூர குணமே அவ என்னை வெறுக்க வச்சிடும் ,அவளை என்கிட்டே இருந்து பிரிச்சிடும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் என் கூட இருக்கிற நண்பர்கள் ச�ொல்லி மன�ோதத்துவ மருத்துவரான உங்களை பார்க்க வந்து இருக்கேன் என்றான் வசந்த் .
எந்த பறவைகள் கூண்டுக்காவது கதவுகள் இருக்கா ? இல்லை டாக்டர் எந்த பறவைகளுக்காவது இறக்கைகள் வெட்ட பட்டு இருக்கிறதா ?? இல்லை டாக்டர் அப்படி இருந்தும் அந்த பறவைகள் ஏன் கூண்டை விட்டு ப�ோக மறுக்கின்றன,இந்த உலகம் விசாலமானது ,இந்த வீட்டில் நான் க�ொடுக்கும் பழங்கள் ,உணவு ப�ொருள்களை விட வெளியில் ,இயற்கையாய் நிறைய கிடைக்கும் இருந்தாலும் அந்த பறவைகள் இந்த இடத்தை விட்டு ப�ோகாது ஏனெனில் நான் அந்த பறவைகளை கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாய் வைத்திருக்கிறேன் அதுமட்டுமல்லாது என்னுடைய அன்பும் உண்மையானது ..உன்னுடைய அன்பு உண்மையெனில் எந்த உறவும் உன்னை ப�ோகாது என்றார் டாக்டர் ம�ோகன் ... சில பேர் பட்டு தான் திருந்துவாங்க ஆனா என்னை மாதிரியான ஆட்கள் எல்லாம் புத்தியில உரைக்கிற மாதிரி ச�ொன்னாலே ப�ோதும் டாக்டர் என்று ச�ொல்லி விட்டு அவர் கையை பிடித்து நன்றி கூறி விட்டு சென்றான் வசந்த் ... முதல் வேலையாய் வீட்டிற்கு சென்று இதுவரை நடந்ததுக்கு எல்லாம் தன் மனைவியிடம் உண்மையாய் மன்னிப்பு கேட்டான் அவனையும் அறியாமல் அவன் கண்கள் கலங்கியிருந்ததை அறிந்து ஆறுதலாய் த�ோள�ோடு த�ோள் சாய்த்தாள் மாதவி உண்மையான அன்பு ப�ொத்தி ப�ொத்தி வைத்து சிறைப் பிடிப்பது அல்ல சுதந்திரமாய் பறவையை ப�ோல் பறக்க விடுவது ...!! உன் அன்பு உண்மையெனில் எந்த உறவும் உன்னை விட்டு விலகாது !!
N - கும்பக�ோணம். ந�ௌஷாத் கான் .லி
டாக்டர் ம�ோகன் ,வசந்த்தை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார் ...அங்கே அவர் வளர்க்கும் பறவைகளை பார்க்கச் ச�ொன்னார்
28
காற்றுவெளி
அபுதாபி
காற்றுவெளி
29
கடல் முகம் நீல நினைவுறும் ரயிலில் கண்களைச் சாத்தி நகரும் நாள�ொன்றில் நிகழ்ந்து க�ொண்டிருக்கும் இளவேனிலின் புழுதி வாசம், தழைக்கும் நுனிகளிடை நடுங்கும் புலர�ொளி, மெல்ல ஊர்ந்தெழும் ஈரம் க�ோர்த்த தூவான மிச்சம், புதைத்து நுழைவதற்கு தகுந்த கேசரக் கணம், துயிலைக் களவாடும் பனிகவிழ் நெஞ்சு, விரிந்தகன்ற நதியின் குரலில் த�ொலை கூர்ந்திழுக்கும் பைத்தியப் புல்வெளி, தீண்டும் நாவுடை உதிரா இதழ்கள், அணுப்பாறையின் உணர் புலன், இந்த நீல அல்லிகள் எப்போது மலர்கின்றன? நீங்கள் அறிவீர்கள். அதன் வாசத்தை மட்டும் நான் நன்கறிவேன்.
30
z காற்றுவெளி
ஒரு பறவை கடக்க முயல்கிறது, இரு தரை பீதியுற்று கரைகிறது, சில மீன்கள் துடிக்கின்றன, ஒவ்வொரு முறையும் அகமுணர அமைதியைக் கிழித்து ததும்பும் அவனுக்கு ஓயாது ஊடாடும் பிரத்தியேகமான ஓர் இசை இருக்கிறது. ஒலியுறும் அவனது செவிகளுக்குள் குரலூன்றும் அரவ நுனி இமைப்பொழுதின் தற்செயல் கணமாயிருக்கலாம். சில சமயங்களில் பேசும் நாவாகவும் சில இடங்களில் ம�ௌன சமாதியாகவும் உயிர்ப்பின் இயங்கு பாறைகளுக்கிடையே ஆழ் அலை சூலென உரையாடி நெளிந்தோடுகிறது. ஏனெனில் அகழ்சுழியில் நீந்தும் அவனுக்கு கடல் என்றும் ஒரு பெயர். அந்த அவன் முகம் உங்களுடையது என்னுடையது ஏன் அவனுடையது என்றும்.
z காற்றுவெளி
மெலிதான விழி ச�ொருகி நெரிந்திருந்த விலாக்கூட்டின் வழி இதயம் துடிப்புறும் கணம் வலியுற்று உட்கசிவை வேகப்படுத்துகிறது அதன் ஈர லயத்தில் வீணடையாதவாறு துரிதமாக அதிர்கிறேன் என்னுள் அகப்படுத்தி துயிலுற அனுமதிக்கிறேன் வனைகிறதும் மையப்பகுதியில் வேவுறுவதுமாய் கடல் நிறைந்த ப�ொழுதின் ஓசையுறும் பனிமூட்டம் ஒன்றுள் ஒன்றாய் அமைதியுறுகிறது மென்மையாய் ஊர்ந்த நதியின் கிளையேறி என்னுள் தஞ்சமடைகிறாய் க�ொணர்ந்த மஞ்சள் ஒளியில் செழிப்புற்ற வனம் தன்னுள் பருகித் தீர்க்கிறது மையக்கீற்றின் எரிவில் உடல் நடுங்கி மேற்கிலிருந்து கிழக்காக துஞ்சாத விழிகளுடன் மெதுமெதுவாக அசைகிறேன் நறுமணத்தில் நீட்சியுற்றிருக்கும் திசையறியாத நீ புலனற்ற உலகில் ஏதாயிருக்கிறாய் இங்கென்றும் அங்கென்றும் ஒவ்வாதவாறு அன்பூறிய வார்த்தைகள் என் கைகளில் வீழ்கின்றன மலையின் கீழ் ஊர்ந்து கடக்கிறது செந்நிறத்தில் ஒரு பறவையின் பாடல் ஆக. ..... ஆழ்தலும் உறைதலும் அன்றி நீங்குதல் வேறில்லை.
31
குரல்வளையை துளைக்கும்
நாடும் வீடும்!
வனவேடனின் நறும் வனைவில் கேச இழைகளால் என் புறாக்கூட்டை வாசனைய�ோடு புனைகிறாய் கழுத்தில் வளைந்த க�ொவ்வைப்பழ வானவில்லின் இரு நிலங்களின் பசுஞ்சிறகுக் கதகதப்பாய் காற்றில் முன்னோக்கி மிதக்கிறாய் கேசரமாயிருக்கும் என்னுள் விடிவின் கருவுறுதல் செந்நிற விண்மீன்களாய் ஆழி மணல் திட்டில் திரண்டு புரள்கிறது வாதையுற்ற வன மரத்தின் அடியில் நேசம் பீடித்திருக்கிறது கனவுகள் மறுவிழிப்புச் செய்கின்றன தணிக்கவ�ொணா வெம்மையின் பேருணர்வை பள்ளத்தாக்கில் ஒலியுறும் ஆற்றின் உள்மூச்சென்கிறேன் புகலிடம் கனலுறச் செய்கிறது பூர்த்தியாகும் இந்நாள் நள்ளிரவில் உன்னுள் கருவுறுகிறது ஆழ்கிறேன் வியப்பதற்கேதுமில்லை என் நேரம் இந்நேரம் விடிந்திருந்தது.
திருநங்கை நான்! நகைப்புக்குரியவனல்ல! ஆணாக பெண்ணாக சக மனிதனாக மதிக்காத ப�ோதும் மனிதா… மதித்திருக்கலாம் ஓர் உயிராக!
z
கேவல வார்த்தைகள் வெட்டுகிறது கத்தியாய்! உன் பார்வையில் அறிகிறேன் நான்… உலகம் உண்மையில் குருடு என்று! தனிமனிதனாய் வாழ்கிறேன்… மிருகங்களுக்கு மத்தியில்!
N - தமிழ் உதயா லண்டன்
32
என்னை மனிதனாய் பார்க்க ஆறறிவு க�ொண்ட மனிதா! உன் நகைப்பு சூழ்கிறது தீயாய்!
காற்றுவெளி
ஆணில் பெண் சரிபாதி இடம் அமர்ந்தால் கடவுளாய்த் த�ொழுகிறாய்! உன்முன் நான் சரிபாதி! மனிதனாக மதித்தாலே ப�ோதும்! ஒன்பது என பெயரிடும் மனிதா… பூஜ்ஜியம் நீயென எப்போது உணர்வாய்? ஆண்களே! கிண்டல்களில் வழிவது உங்கள் புன்னகையல்ல! எங்களது கண்ணீர்த்துளிகள்!
என் சமையலை ருசிக்க உன் நா கூட சுருட்டிக் க�ொள்கிறது க�ொடிய தீண்டாமையால்!
பெண்களே! சிணுங்கல்களில் சுருக்கம் க�ொள்வது உங்கள் முகமல்ல! எங்களது நெஞ்சம்!
தீட்டாய் ஒதுக்கியது
மனிதா! நான் குறையல்ல…
காற்றுவெளி
33
உன்னைவிட மிகை! இதுநாள்வரை கையேந்திய என் உள்ளங்கையில் இப்போது காண்கிறேன் முடிவிலா வானம்! கையேந்திய விரல்களை மடித்தேன்! நிமிர்த்தி வைத்தேன்! தெரிந்தது தன்னம்பிக்கை! இனி நீ மதித்தே ஆக வேண்டும் உன்முன் நானும் அரசு ஊழியனாய்! காவல் அதிகாரியாய்! வழக்குரைஞராய்! சுயகாலில் நிற்பவராய்!
z
உன்முன் கம்பீரமாய் அமர்கிறேன் சகமனிதனாய்!
N
உமர்கய்யாம் கவிதைகள் தமிழில் The Moving Finger writes; and, having writ, Moves on : nor all thy Piety nor Wit Shall lure it back to cancel half a Line, Nor all thy Tears wash out a Word of i
எழுதிச் செல்லும் விதியின் கைகள் எதனைக் க�ொண்டு நிறுத்த இயலும்? விழிநீர் க�ொண்டு கழுவ நினைத்தால் சற்றே நகர்ந்து அழித்து விடுமா?
- சா. கா. பாரதி ராஜா செங்கற்பட்டு
But helpless pieces in the game He plays Upon this chequer-board of Nights and Days He hither and thither moves, and checks … and slays Then one by one, back in the Closet lays
34
காற்றுவெளி
காற்றுவெளி
z காலையும் மாலையும் கலந்த சதுரங்கப்பலகையில் களைத்துக் கிடக்கும் உதவாப் பதுமைகள�ோ அங்குமிங்கும் ஆட்டங்காட்டி நகர்த்தியும் வீழ்த்தியும் ஒவ்வொன்றாய் அடைபடும் காலக் குடுவையில்.... விதியின் எழுத்துக்களை விவரிக்கும் காகிதமாய் வாழ்க்கை சதிராடும் நூலிழை மேல்... படைப்பிலக்கணம் புரியும் வரை பயனற்றது எதுவென அறியாமை மாந்தருக்குள்.. அத்தனையும் தனக்கே என்று எண்ணியதால் தாயக் கட்டங்களில் தடுமாறிக் கழிகிறது ப�ொழுதுகள்...
N ம�ொழிபெயர்ப்பு - மதுரா 35
இன்னும் எந்த மழையிலும் நனையாமல் என் நினைவுக்கொடியில் அதனை பத்திரமாய் உலர வைத்திருக்கிறேன்... எனக்குள் இருக்கும் முதல் பெண்ணுரிமையின் வடிவம், நீ பதினான்கு வயதில் முதன்முதல் பள்ளிக்கு வந்த சைக்கிள் தான்.. உன்னை ர�ோஜாவின் ஒவ்வொரு இதழாய் ரசித்த நல்ல கவிஞன் நான்.. அது உனக்கும் தெரியும். ஆனால், தெரியாதது ப�ோல் நடித்தது உன் பதினைந்தாம் அகவையில்..
பதின்மமே புனிதம்!!!
கா
மம் அறியாத வயது அது, ஆனால் பத்து வயது தேவதையாக உன்னை மட்டும் மீண்டும் மீண்டும் பார்க்க பிடிக்கும்...
பதினாறில் உன்னை நனைத்து அழகு சிற்பம�ோ இவளென எண்ண வைத்த மழைநாள் ஒன்றிற்கு பின்பே மழைக்காதலன் ஆனேன் நான்.. அதெல்லாம் இருக்கட்டும், நீ இப்போது எப்படி இருப்பாய் என்பது பற்றி உள்ளூர கேள்வியுண்டு.ஆனால், கவலைகள் இல்லை. காரணம், உன் நல்ல மனதிற்கு எங்கோ ராணி ப�ோல் தான் வாழ்விருக்கும் உனக்கு!! எனக்கு பிடித்த உன் நினைவுகளை அப்படியே ப�ொத்தி வைத்திருக்கும் அவசியங்கள் எனக்குண்டு... அது என்னை அப்படியே இளமையாய்வை த்திருக்க உதவி செய்யும் என்பதனால்!!! இதுவும் சுயநலமே..
ஆறாம் வகுப்பின் உடற்பயிற்சி வகுப்பில், நீ தும்பி பிடித்த தினத்திலிருந்துதான் துவங்குகிறது என் உயிரியல் பாடம்... பன்னிரண்டாம் வயதில் மிக அழகானவள் தான் நீ.. ஆனால், உன்னை இன்னும் அலங்கரிக்க கவிதைகள் தேடி அலைந்த நாட்கள் என் உலகில் மட்டும் வசந்தத்தை பூக்கச்செய்தன...
N - ச.இளங்குமரன் தருமபரி
நீ பதிமூன்றாம் பிறந்தநாளில் உடுத்திய சாம்பல் நிற ஆடை பெயர் சுடிதார் என்றே பல காலத்திற்கு பின் தான் அறிந்தேன் எனினும்,
36
காற்றுவெளி
காற்றுவெளி
37
பூத்துச் சிரித்துப் புன்னகை தான்பொலிந்து பூதலத்து பவனிவரும் பல்லோரின் கதைகள்தாம் ச�ொத்து இழந்து ச�ோபை இழந்து சாப்போலிங்கு ச�ொந்தங்கள் பேரளவில் பேராளர்மாநாடாய் இங்கு தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும் தண்ணளிய�ொடு சேர்ந்தே ச�ொந்தங்கள் தாமிணைய! கல்விப்பாலருந்தி காசினியில் கற்றுயர்ந்து வாழவுள சிறுவர்பலர் வஞ்சகத்தார் வலையினிற்சிக்கி மானாய் ச�ொல்லொணாத் துன்பந்தான் பெறுகின்றார் ஐயைய�ோ ச�ொல்லற்றான் ச�ோகந்தான் ச�ொல்வதுதான் எங்ஙனம�ோ? தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும் 38
தம்பிள்ளையாய் எண்ணி உளத்து வேசங்கற்றானீங்க... நற்கருமம் நயந்திங்கு நல்மங்கையார் ஆற்றிடத்தான் நன்னாமம் க�ொண்டோரும் நயமாகப் பிழிகின்றாரவரை ப�ொற்பாதம் பணிகவென்றே பண்ணவ னருளினன் ப�ொற்பாதத்துச் சுவனமென்றே அருமறையின் கூறினன் தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும் தங்கமென வைரமென ஏத்திடுவம் மங்கையரைநாம்! தண்டமிழின் தரமின்று தகைபற்றி யேதுச�ொல்வன்? தரமான நற்றிமிழின் வாசந்தான் அருகியதே முண்டாசுக் கவிப�ோலக் கவிபாட வல்லோர்சிலரே முணியாது நற்றமிழை நானிலத்து நீட்டிடுவ�ோர் சிலரே கண்ணாகத் தண்டமிழை ஏத்தியே கற்றிடப்பலரும் கனமாகத்தான் உழைக்க வேண்டும் - காசினிசிறக்க. பாதையில் பாங்காகப் பவனிவரும் நல்நங்கைதானுற்று பாதைமாறி உளம்மாறிப் ப�ோவதுதான் நம்மாடவர்செயல் கதைபல ச�ொல்லிடுவான் காவியங்களியற்றிடுவான் கண்ணூரிலாமலே முகநூலில் மேய்ந்திடுவான் - பூவையரை காற்றுவெளி
கசக்கியே நாற்றமெடுக்க பலவும்செய்து நழுவிடுவான் இந்நிலைமாற்றிடவே வேண்டும் ஆற்றுப்படுத்தல் வேண்டும் தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறிதான் பறக்கட்டும்...! நாளும் பெண்டிரைப் பார்த்து நலிவடையும் அவன்பணந்தான் நாளும் பெண்டிர்க்குத்தான் அவன்பை முழுதும் காலியாகும் நாளும் துன்புற்றுதான்வளர்த்த நற்றாய் எந்தை அகம்குளிர ஏதும்செய்வான�ோ மனந்தான்விடும�ோ பேதையர்க்கு அப்பாடா நாதியிலாதேஉள நம்மவர்தான் விழிப்படைய நாமிங்கேனும் தட்டிடுவ�ோமவர்க்காக தீப்பொறியாய் நெஞ்சத்திற்பாய... நற்கதிதந்திடு மறத்திற்காய் நாளும் நல்லனசெய்திடவே நாடிவருவா ரெத்தனைபேர் நம்மவரிட்டான்... நலமாக நாதியற்று ஓர்மூலையில் முடங்கியிருந்தே மறையிறையை நாளும்ஏத்துவார்க் கேதுசெய்தோம் இனியுந்தான் இந்நிலைய�ோ நாடிபிடித்தவர் அவலங்கள்நீங்கிடவே தேசத்தினின் அலைந்து நலமாக நல்லனதான் ஆற்றிடுவ�ோம் அதற்காய்நாம் தட்டிடுவ�ோம் மனங்களிற்றான் தீப்பொறியாய் பணிசெயவே.... புண்டரீகத்தினுமினிதாம் புவியிற்றான் காற்றுவெளி
நற்றமிழேதான் - சான்று படையாகவந்துள்ள பாவலர்கள்தான் இதற்குச்சான்று சண்டையிலை அழுக்காறவா வெகுளியிலை எம்மிற்றான் சந்தத்தமிழில் ஒன்றிணைந்து தமிழ்க்கு பணியாற்றத்தான் சந்தித்தோம் சந்தியேப�ோற்றும் இந்நாளெம்மில் நிலையேதான் சான்றோரைப் ப�ோற்றியே சகத்து நற்றமிழை ஏத்துவ�ோம்நாம்! புதுக்கவிதைய�ொடு மரபையென்றும் ஏத்துவம் - நம்மூலத்தை பக்குவமாய்ப் பிறர்க்கு எடுத்துச்சொல்வம்... நல்லனவாற்றும் பேதையரைப் ப�ோற்றுவம்.. அவர்பணிநின்றுமின்ன ஏத்திடுவம் விதிவழிபற்பல வழங்கிடினும் வலிமைமிகு மரபேத்துவோம் வாழும்தமிழ் வாழுந்தமிழ் மரபினிலுயர்ந்தே வாழுமுண்மை வீழாதிருக்க நாம்பணிசெய்வம் நம்மரபுக்கவி அவனிவாழும்!
N - கலைமகன் பைரூஸ் (மதுராப்புர)
39
உண்மை வெகு நாள் உறங்காது
யாருமற்றவன் என்பதனால்... அடிபட்டுக் கிடக்கின்றான் ந�ோவுற்றுக் கிடக்கின்றான் காயமுற்றுக் கிடக்கின்றான் அடித்தவனுக்கே அணி சேர்கின்றது அழுதவனுக்காய் கேட்டவனுக்கு ஆறுதலாய் சண்டித்தனம் கூடதாது தம்பி எனச் சளாப்பிடும் வார்த்தையில்ச மாதானப் பேச்சில் தலைவன் நின்றிட மைதானம் மேலும் மலர்ந்திட அடிபட்டவன் அவனது தம்பியில்லை அவனது உறவில்லை அவனது நண்பரின் உறவுமில்லை அடிபட்டவனுக்கு தகப்பனில்லை மாமன் இல்லை அணிசேர யாருமில்லை பிணைப்பில்லை அணைப்புமில்லை ஏனென்று கேட்க ஆளில்லை என்பதனால் அது பெரிதெனப்படவில்லை அவன் தந்தைய�ோ உழைத்து உழைத்தே உருக்குலைந்து முற்றிய உற்றறியா ந�ோய்க்குப் பலியாகிப்போனதால் பெற்ற பிள்ளையும் இன்றோ பேரற்றுக் கிடக்கின்றான் அடித்தவன் மைதானத்துள் மீண்டும் துளிர்க்க அடிபட்டவன் உற்ற கணவன் பிரிவில் தேறாள் ஆகி நின்று பெற்ற பிள்ளைகள் வளர்க்க ஓடாய்ப் ப�ோன தாயின் மடியில்...
பறிபோன உயிர்களை உயிர்ப்பித்து தருவாயா சிங்கள நரிகளே சிங்கங்கள் கர்ஜித்தால் ஓடி ஒளியும் கோழைகளே தமிழீழப் பருந்தின் ஒரு சிறகு விழுந்ததற்கே கும்மாளமிடும் கோமாளிகளே உதிரநதியில் நீந்திவிளையாடும் சாத்தானின் சந்ததிகளே கதிரவனைக் கைகளால் மறைத்து விடலாமென்று கனவு காண்பவர்களே வரலாறு ஈழத்தமிழனை போற்றும் சிங்களவன் முகத்தில் கரியைப் பூசும் நீங்கள் வீசிய வலையில் நீங்களே சிக்கிக் கொண்டீர்களே மனிதாபிமானத்தை மறந்துவிட்டு மிருகமாய் சடலத்தைப் புணர்ந்தவர்களே மரணக்காற்றின் திசை ஒரு நாள் மாறும் உங்களை கூண்டோடு அள்ளிப்போட்டு மண்ணில் மூடும் புனிதராக வலம் வரும் நீங்கள் உள்ளுக்குள் தீனியிட்டு விலங்கை வளர்க்கின்றீர்கள் தந்திரம் எப்போதும் வெற்றி தராது ஈழத்தமிழர்களின் ஆன்மா உங்களைச் சும்மா விடாது.
N - ப.மதியழகன்
N - அழ.பகீரதன் 40
காற்றுவெளி
காற்றுவெளி
41
திருமணத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்தவர்களில் யார் அழகானவர்கள் என்கிற ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கியிருப்பது அவர்களுடைய பேச்சிலிருந்து புலப் பட்டது. “அத�ோ, பாருடி... அந்த ரெண்டாவது வரிசையில் பச்சை வண்ணப் பட்டுப் புடவைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்காளே, அவதான் இன்னைக்கு நம்பர் ஒன் அழகி!” என்று மதிப்பெண் ப�ோட்டாள் ஒருத்தி. கழிவறை பக்கம் ப�ோய்விட்டு அப்போதுதான் திரும்பிக்கொண்டிருந்த ஆதிமூலத் தின் செவிகளில் அப்பெண்ணின் உரையாடல் நன்றாகவே விழுந்தது. அவள் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த திசையில் பார்வையைத் திருப்பினான். அங்கே... அவன் மனைவி வெண்ணிலா அமர்ந்திருந்தாள். அதிர்ந்து நின்றான் ஆதிமூலம். அன்று முதல் வெண்ணிலாவைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்வும், தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்க ஆரம்பித்தது ஆதிமூலத்துக்கு. அவனைக் கவ்வியி ருந்த கர்வம் காணாமல்போனது. ஒரு பேரழகியின் கணவனாக தான் இருப்பதை எண்ணி பெருமிதம் அடையலானான்.
N
பேரழகி
- மலர்மதி
வெண்ணிலா ப�ோன்ற அழகான மனைவி கிடைத்தும் தான்தான் பேரழகன் என்கிற கர்வத்தில் மிதந்துக்கொண்டிருந்தான் ஆதிமூலம். ‘இந்த நிமிஷத்துல நான் உன்னை விவாகரத்து செஞ்சா என்னைக் கட்டிக்க அழகிங்க கூட்டமா வரிசையில நிப்பாங்க தெரியுமா?’ என்று வேறு அவளை அச்சுறுத்தி வைத்திருந்தான். இத்தனைக்கும் அவன் ஒன்றும் அவ்வளவு அழகன் இல்லை. தான் பார்க்கும் அரசு உத்திய�ோகம்தான் அவனை அவ்வாறு கர்வம் க�ொள்ளவைத்திருந்தது. வெண்ணிலாவும் இதுவரை அவனுடன் எதிர்த்து பேசியது கிடையாது. அன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள வெண்ணிலாவுடன் சென்றி ருந்தான் ஆதிமூலம். திருமண மண்டபத்தில் சில இளம் பெண்கள் கும்பலாய் கூடி நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். 42
காற்றுவெளி
காற்றுவெளி
43
வேலைகள் யாருக்கும் வேண்டும் அதன் ஊதியம் வாழ்வுக்கு அவசியம் ஆயின் அளவுக்குமீறி உழைத்துப்பின் களைத்தே மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டுச் சிலர் வீட்டில் க�ொடுமையராகி காதலைக் க�ொன்று மடமையராகி மனைவியை மக்களை உறவுகள் யாவையும் நடத்துதல்கண்டு இங்கே நாணிக்கொதிப்பவரில் நானும் ஒருத்தனாய் தினமும் வருந்துகின்றேன். பெற்றுக் குறைவின்றி தம் பிள்ளைகளை வளர்ப்போரின் காலைத்தொட்டுக் கும்பிடவே கருதுகின்றேன் அவர்களை நான்காணாக் கடவுளராய்க் காண்கின்றேன்.
இதயங்கசங்க வடியும் வார்த்தை எம்மவர் சிலரிடையே இங்கங்கும் நடக்கும் இங்கிதமற்ற ப�ோக்கைக் கண்டதினால் இதயங்கசங்க என்னுள் வடியும் வார்த்தைத் துளிகளால் துணிவ�ோடு எழுதுகின்றேன். சிலர் தங்கள் குழந்தைகளைத் தினமும்திட்டுகின்றார்கள் வெட்டுவேன் முறிப்பேன் என்றெல்வாம் மிரட்டுகின்றார்கள் கண்டபடி அடிக்கின்றார்கள் இதைத் தடுப்பவர�ோடு சண்டைக்குப் ப�ோகின்றார்கள். பழைகாலச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இவர்களின் உளம்விட்டுப் ப�ோவதெப்போ ஒருதுளியேனும் இவைபற்றி உணர்ந்தாரா பத்துத்திங்கள் தன்வயிற்றில் வளர்த்ததாயே தான் சித்திரம்போல் பெற்றெடுத்த பிள்ளைகளை நாயேபேயே எனநாளும் பேசலாமா கூசாமற் கெட்டவார்த்தைகள்கூறித் தாக்கலாமா தாறுமாறய்த் தண்டிக்கலாமா. காக்கை குருவிகள்;கூடத் தங்கள் குஞ்களை ப�ொத்திவளர்த்துக் க�ொஞ்சுவதையும் யாக்கையில்சிறிய யெந்துக்கள்முதல் யானைகள்வரை தம்குட்டிகளிடம் காட்டும் கனிவை பக்குவத்தைப் பாற்பதுதான் இல்லையா 44
N - ந. கிருஷ்ணசிங்கம்
காற்றுவெளி
காற்றுவெளி
45
வாஸ்து-கட்டடிடக் கலையா? ஆறிவியலா?
கட்டிடக்கலை அறிஞர்கள் கருத்து
வாஸ்து-ஆறிவியலா?
ச�ோ
திடக் கலையில் வாஸ்து ச�ோதிடம் என்பது கி.பி 5ஆம் நூற்றாண்டு காலத்தில் த�ோன்றியதாகத் தெரிகிறது. இது அறிவு பூர்வமானதா? மாந்தர் அனைவருக்கும் ப�ொதுவானதா? என்ற வினாக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவது இயற்கையே. ஆனால் இந்த வாஸ்து சாத்திரம் என்பது என்ன? என்ற வினாவிற்கு விடைகாண முயன்றப�ோது ஓரளவிற்கு பதிலுரைத்தது பேராசிரியர் வெற்றியழகன் அவர்களின் வெளியீடு. அவரது கருத்தினை ஒட்டி இந்த கட்டுரை எழுதப் படுகிறது.
வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டை காலத்தில் கட்டிடம் கட்டிட ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. இதனை இன்றைக்கும் ஒரு அறிவியலாக ஏற்றுக்கொண்டு இருக்கின்ற கட்டிடத்தினை இடித்து தரைமட்டமாக்குவதும், ஒன்றை மாற்றி இன்னொன்றை கட்டி ப�ொருள் விரயமாக்குவதும் அறிவுடமையாகாது என்கிறார் ஹைதராபாத் ஜே.என் பல்கலைக்கழக கட்டிடக்கலை பேராசிரியர் திரு ஆர் வி க�ோல்ஹ்தாட்தார் அவர்கள்.
அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் தேர்தலில் த�ோற்று மக்களால் பின்தள்ளப்பட்ட அரசியல்வாதிகள் தனது த�ோல்விக்கு காரணங்களை தேடி அங்கம் இங்கும் அலைவது வாடிக்கை. வாஸ்து ஜ�ோதிடம் என்ற பெயரில் அவர்களை மூளை சலவை செய்து வீட்டை இடித்து கட்டினால் தாங்கள் இழந்த இடத்தினை மீண்டும் பெறலாம் என நம்ப வைத்து விடுவர். இதன் விளைவு பல செல்வாக்கிழந்த அரசியல் வாதிகளின் குடியிருப்புகள் இடித்து கட்டப்பட்டுள்ளன. ஆனால்; இடித்த அதே வீட்டில்தான் அவர்களுக்கு சென்ற தேர்தலில் பெரும் வெற்றி கிட்டியது, அதன் பலனாய் பதவிகளும், பட்டங்களும், செல்வமும,; அதே வீட்டினைத் தேடி வந்து குவிந்தன என்பதை ஏன�ோ அவர்கள் மறந்து ப�ோனார்கள். தேவைகளுக்கேற்ப அழகாய் வடிவமைக்கப்பட்ட வீடு
என்.டி.இராமாராவ்-
அந்தகாலக் கட்டிடக்கலை நூல்வாஸ்து சாஸ்திரம் என்பது 5ம் நூற்றாண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது. மயன் என்பவர் இதனை எழுதியதாக அறியமுடிகின்றது. இன்றைக்கு ப�ொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு கலையாகவே இந்த வாஸ்து சாஸ்திரம் செயல்படுகின்றது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இன்றைய கட்டிடக் கலை வல்லுனர்கள். பண்டை காலத்து சூழலுக்கு ஏற்பவும் அன்று நிலவிய வருணாசிரமத்தினை காப்பாற்றவும் ஏற்படுத்தப் பட்டது, எழுதப்பட்டது இந்த வாஸ்து சாஸ்திரம் எனப்படும் கட்டடிடம் சார்ந்த நூல். வாஸ்து என்பது பண்டைகாலத்தில் கட்டிடம் கட்டிட ஒரு வழிகாட்டியாய் விளங்கியது என்ற அளவில் வேண்டுமானல் நாம் பெருமை க�ொள்ளலாம். ஆனால் வாஸ்து ச�ோதிடம் என்பது மடமையின் வெளிப்பாடு. இது அறிவியல் ப�ோல் த�ோன்றி ஏமாற்றம் தரும் ஒரு நூல். அடித்தட்டு மக்களின் மனப்பதட்டத்தினை அகழ்ந்து எடுத்து காசு பறிக்கும் ஒரு திட்டமிட்ட க�ொள்ளை. 46
காற்றுவெளி
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் திருமிகு என்.டி.இராமாராவ் அவர்கள், வாஸ்து சாஸ்திரத்தினை, ச�ோதிடர்களை, நம்பி தனது ஹைதராபாத் குடியிருப்பினை பெரும் ப�ொருட் செலவில் இடித்து மாற்றி அமைத்தார். இதற்கு பின்னால்தான் ஆந்திர மக்களது கடவுளாக வாழந்து வந்த அவரது வாழ்வில் புயல் வீசத்துவங்கியது. தனது மருமகனிடமே ஆட்சியினைப் பறிக�ொடுத்தார். அந்த நிகழ்வுகள் அவரை ந�ோய்வாய்பட வைத்தது. ஐந்தே மாதங்களில் அவர் உயிரிழந்தார். வாஸ்து ஜ�ோதிடரை நம்பி செலவழித்த அரசியல்வாதிகள் பலருக்கு என்.டி.இராமாராவ் அவர்களின் இறப்பு சிறந்த பாடமாக அமைந்து. ஆனாலும் வாஸ்து எனும் ச�ோதிடத்தினால் ப�ொருளை செலவழிக்கும்; அரசியல்வாதிகளும், த�ொழிலதிபர்களும், திரைத்துறை கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுடன்; பல நடுத்தர, ஏழை குடும்பத்தினர் வாஸ்து ச�ோதிடம் என்ற பெயரில் ஏற்கனவே பல இன்னல்களை எதிர் க�ொண்டு கட்டிய, கட்டுமானங்களை இடித்து மாற்றி அமைத்து பெரும் ப�ொருள் இழப்பிற்கு காற்றுவெளி
47
ஆளாகின்றனர்.
அதிகமாக செலவழிக்கப்பட்டன. இதற்கு பதில் க�ொதிகலன், மின் உற்பத்தித்துறை வடிவமைப்பாளர்கள் அல்லவா அழைத்துவரப் பட்டு ஆல�ோசனை கேட்கப் பட்டிருக்க வேண்டும்.
பணம் பறிக்கும் காந்தக்கருவி அலுவலகத்தில் குறிப்பிட்ட ந�ோக்கி அமர்ந்திருந்த அதிகாரிகள் வரிசையாய், குறுகிய காலத்திலேயே பணிஇடமாற்றம் பெறப்பட்டதை காரணம் காட்டி தமது இருக்கைகள், அறையின் கட்டுமானம் ஆகியவற்றை அரசு செலவில் மாற்றிக் க�ொண்டவர்கள் பலர். அவ்வப்போது ஊடகங்கள் இவர்களில் செயலுக்கு கண்டனக் குரல் எழுப்பிதும் உண்டு. படித்தவர்களையும் ச�ோர்வுற்றிருக்கும் காலத்தில் தன்பால் இழுக்க வல்லதாகத் திகழ்கிறது வாஸ்து ச�ோதிடம் என்பதே உண்மை. வாஸ்து என்பது கட்டிடக்கலை பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றது.
ஆளுக்கொரு நீதியா? வர்ணாசிரம அடிப்படையில் நான்கு வர்ணத்திற்கு தக்கவாறு மூங்கில், வேங்கை, தேக்கு, என சாதிக்கேற்றவாறு மரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது இன்றைய நடைமுறைக்குப் ப�ொருந்தி வருமா?. வாஸ்த்து என்பதனை அறிவியல் என முன்னிருத்த முயலும் எத்தனை பேருக்கு இந்த பாகுபாடுகள் பற்றித் தெரியும். அது ப�ோலவே முழக்கோல் எனப்படும் அளவுக�ோல், மூலமட்டம் ப�ோன்றவை அன்றைக்கு புழக்கத்திலிருந்த ஜாதிக்கேற்றவாறு புளியமரம், ஆச்சாமரம், தேக்குமரம், வேங்கைமரம், என சாதிக்கேற்றவாறு இந்த நூலில் ச�ொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தால் பலர் வாஸ்து என்ற மந்திர ச�ொல்லுக்கு கட்டுப்பட்டு தமது செல்வத்தை இழக்க மாட்டார்கள். 1500 ஆண்டுகளுக்கு முந்தைய வாஸ்து என்பது இன்றைய நடைமுறைக்கு சாத்தியம் தானா? ஆய்ந்தறிய வேண்டிய நேரமது.
வீட்டின் உள்ளே கழிவறையா? பணம் பறிக்கும் காந்தக்கருவி வாஸ்த்து
ஆனாலும் இன்றைய வணிக வளாகங்கள், த�ொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ப�ோன்றவற்றை கட்டுபவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவே, இந்த வாஸ்து மன்னர்கள் ப�ோட்டி ப�ோட்டுக் க�ொண்டு செயல்படுவது கண்கூடு. இதனால் ப�ொருளீட்டுவது இத்தகைய ச�ோதிட வணிகர்கள் என்றால் மிகையில்லை.
வாஸ்துவா? வடிவமைப்பா? சில வருடங்களுக்கு முன கர்நாடக மாநிலம் ரெய்சூர் அனல் மின்நிலையத்தின் ஒரு பிரிவில் அடிக்கடி பழுது ஏற்பட்டதை காரணம் காட்டி வாஸ்து ஜ�ோதிடர்கள் அழைத்து வரப்பட்டு ஆல�ோசனை கேட்கப் பட்டதாய் செய்தி வந்தது. ச�ோதிடர்களின் ஆல�ோசனைப்படி அந்த அனல் மின்பிரிவின் இயந்திரம் வாஸ்து முறைப்படி திருத்தி அமைக்கப்பட, அரசின் சார்பாக அதற்கென சில க�ோடி ரூபாய்கள் 48
காற்றுவெளி
வாஸ்து சாஸ்திரம் என்பது அறிவியலாகாது. அனைத்து மதத்தினருக்கும்; ப�ொதுவானது எழுதப்படவில்லை. பண்டைகாலத்தில் இருந்த நடைமுறைகள், எப்படி இன்றைய காலச் சூழலுக்கு ப�ொறுந்தும். கழிப்பறை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் ச�ொல்லப்படவில்லை. ஏ னெ னி ல் அந்த காலத்தில் கழிவறை என்பது கு டி யி ரு க் கு ம் வீட்டின் உள்ளே ஒரு தேவை ய ா க க் க ரு த ப்பட வி ல்லை . து வ க ்க த் தி ல் இன்று வழக்கத்தில் உ ள்ள வ ெ ளி ந ா ட் டு க் கழிப்பறையினை த மி ழ க த் தி ல் க ட் டி ய வர்க ள் வீட்டிற்கு 100 முதல் 150 மீட்டர் அளவிற்கு வீட்டின் பி ன் பு ற ம் வ டி வ ம ை த் து க் க ட் டி ன ர் . இ ன்றை ய நடை மு றைக் கு இந்த அளவீடு இடைவெளி ஒத்து குளியலறையும் வீட்டின் ஒரு அறையே! காற்றுவெளி
49
வருமா? இன்றைய மனையின் அளவே 60 அடி அளவிற்குள் குறுகி விட்டது.
கட்டப்படும் மன்னரது க�ொடியும் தடையின்றி செல்லுமாறு கணக்க்டப்பட்டு, மிகப்பெரியதாக அமைக்கப்பட்டன.
தற்காலத்து வீடுகளில் இன்றைக்கு தேவைக் கேற்ப அறைகளும் அதற்குள்ளே கழிவறைகளும் அழகுற கலை நயத்துடன் அமைக்கப் பட்டுள்ளன. கழிவறையும் வீட்டிற்கு தேவையான ஒரு அறை (Bath room is a Room too) என்பதை நாம் அனைவரும் ஒப்புக் க�ொள்வோம். கிட்;டதட்ட நாம் கடந்து க�ொண்டிருக்கும் தற்போதைய காலத்திலேயே கட்டடிக்கலை நமது தேவைகளுக்குத் தகுந்தாற்போல கலைநயத்துடன் மாறி உள்ளது.
கங்கை க�ொண்ட ச�ோழபுரம்-தஞ்சாவூர் க�ோயில் நுழைவாயில்கள்
வாஸ்து அனைவருக்கும் ப�ொதுவானதா? கருப்பு, சிவப்பு, வெள்ளை ப�ோன்ற மண்ணின் நிறங்கள்; பற்றியும், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம் ப�ோன்ற மண்ணின் சுவைகள் பற்றியும் ச�ொல்லப்பட்டிருக்கிறது. அந்தந்த மண்ணிற்கேற்ப பிறந்த சாதிக்கேற்றவாறு மக்கள் தங்கள் வீடுகளை கட்டினால் நலமுடன் வாழலாம் என்கிறது இந்த நூல். கட்டிடத்தின் நீள அகல உயரங்களிலும், ஏனைய பலவகை வடிவமைப்புகளிலும் இத்தகைய பாகுபாடுகள் காணப்படுகின்றன. இந்த நூலில் தெரிவிக்கபட்டுள்ள கருத்துக்களுக்கு மாற்றாக கட்டிடம் இருக்குமேயாயின் பலவிதமான தீங்குகள், எதிர்விளைவுகள் உண்டாகும். இது ப�ோல உழைக்கும் அடித்தட்டு, நடுத்தட்டு, மக்களை மிரட்டி வைக்கவே பயன் படுத்தப் பட்டிருக்கிறது இந்த கட்டிடக்கலையினை விளக்கும் ச�ோதிட நூல். சுடுகாடு, ஆலயம், காற்றில் விழுந்த மரம் ஆகியவை வீட்டிற்கு ஆகாது என்கிறது இந்த நூல். ஆனால் கடையில் வாங்குபவர்கள் நன்கு விளைந்த, பலமான மரமாய் உள்ளதா? வைரம் பாய்ந்த திறன்வாய்ந்த மறமாய் சேதமின்றி பார்க்க இயலும். மேற்கூறிய மரங்கள் கடைக்கு வருவதை யாரால் தடுக்க முடியும்? அப்படி வரும் மரங்கள் தரம் குறைந்தா ப�ோய்விடும்?.
மாமன்னர் காலத்து க�ோவில்கள் மன்னர் காலக் க�ோவில்கள் இன்றளவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளையும் தாண்டி வின்முட்டி நிற்கின்றன. அவற்றின் சிறப்புகளைக் காண்போம். எடுத்துக் காட்டாக தஞ்சை, திருவாரூர், சிதம்பரம், மதுரை ப�ோன்ற பெரிய க�ோவில்களின் வாசல்கள் மிகப் பெரியதாய் அமைந்து இருக்கும். இந்த பெரிய க�ோவில்கள் அனைத்தும் அவ்வப்போது அரசர்கள் சென்று வழிபடும் க�ோவில்களாகும். இந்த க�ோவில்களின் வாயில்கள் யானையில் அரசனும், அதன்மேல் அம்பாரிஎனப்படும் அமரும் இருக்கையும், அதன் மேல் 50
காற்றுவெளி
அதுப�ோலவே பயன்பாடுகளுக்கு தகுந்தவாறே அனைத்து வடிவமைப்புகளும் அமைய வேண்டும். குளிர் அதிகமுள்ள பகுதிகளில் வீட்டின் உட்பகுதிகள் இரும்பு, சுண்ணாம்பு ப�ோன்றவை தவிர்த்து மரம் பயன்படுத்தப் பட்டிருக்கும். அதுப�ோலவே அந்தந்த பகுதிகளில் மலிவாகக் கிடைக்கும் ப�ொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுதிதினால் கட்டிடத்திற்கு ஆகும் செலவும் பெருமளவு குறையும்.
கிடைக்கும் இடத்தில், அழகாய் வீடு-அறிவியலின் துணையுடன் தெற்கு பார்த்து வீடு கட்டினால் லெக்கு (இலக்கு) பார்த்து காற்றடிக்கும் என்பது நமது தமிழக கிராமத்து பழம�ொழி. கிழக்கு, மேற்கு பக்கம் நிலை வைத்து வீடு கட்டினால் தமிழகத்து நில அமைப்பிற்கு ப�ொருத்தமானதாய் அமையாது. ஏனெனில் காலை மாலை என இருவேளையும் கதிரவனின் தாக்கம் இருக்கும் என்பது வீடு கட்ட துவங்கு முன்னரே பலர் அறிந்திருப்பர். அதுப�ோல இன்றைய கட்டிட அறிவியலில்; காணப்படும் மண்ணின் தாங்கு திறன் (Soil Bearing Capacity) கடினமான மண், பூகம்பம் தாங்குதிறன் (Hard Datum, Seismic Load) ப�ோன்ற கட்டிடம் நிலைத்து நிற்பதற்குத் தேவையான அடிப்படை குறிப்புகள் இந்த வாஸ்து சாஸ்திரத்தில் எங்கும் ச�ொல்லப் படவில்லை. கதவு, ஜன்னல்கள் ப�ோன்றவை எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதைவிட, காற்றோட்டத்தினை ஏற்படுத்துவதாகவும், அன்னியரின், திருடர்களின் பார்வையில் படாதவாறு அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.
காற்றுவெளி
51
வெண்சுருட்டு
சிறுகக் கட்டி பெருக வாழ்வோம் கனவு இல்லங்களைப�ொய்யான, தவறான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, புதிய பயன்தரும் த�ொழில் நுட்பங்களை பின்பற்றி நலமுடன் வளமுடன், வியர்வை சிந்த பாடுபட்டு சேர்த்த பணத்தில் அழகாய் வீடு கட்டி வாழவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் ந�ோக்கமாகும். பெருநகரங்களின் நெருக்கத்திலும் இருக்கும் மிகச் சிறிய இடத்தில்கூட அழகாய் வடிவமைப்பில் பார்ப்பவர் ப�ோற்றிப் பாராட்டும் சிறந்த குடியிருப்புகளைக் கட்ட முடியும். அத்தகைய நல்ல கட்டிட வடிவமைப்பாளரை (building designer) துணைக்கு அழையுங்கள். புதிய த�ொழில்நுட்பங்கள் க�ொட்டிக் கிடக்கின்றன. அதன் துணையுடன், உங்கள் வீடு கட்டும் கனவு, அறிவியல் துணையுடன் அழகுற நிறைவேறும். அறிவியல் துணை க�ொண்டு சிறுகக் கட்டுவ�ோம், எல்லா வளமும் பெருக வாழ்வோம்.
N (நன்றி - பேராசிரியர் ந.வெற்றியழகன் )
புளிய மரத்தடியில் நின்று புகை பிடித்தான் அவன் தூரத்தில் அவன் அப்பா வருகை கண்டு மறைவாகப் பிடித்தான். அவனருகில் வந்த அப்பா எனக்கு பயந்து புகை பிடிக்காதே, புகைக்கும் வெண் சுருட்டுக்கு பயப் படு என்றார்
N - மல்லை. மு.இராமநாதன்
இலைய. மணி., (இலையமுதுகூடம் ச.மணிவண்ணன்)
52
காற்றுவெளி
காற்றுவெளி
53
நவீனப் பெண்ணடிமை தத்தித்தத்தி நடைபழகுகிறாள்.. ஆ.. பேதைகள்.. பெரும் ஆபத்து விளையாட்டு எதற்கு ? பூட்டிடுங்கள் புழக்கடையிலே ! அடுப்பூதத் தெரியவில்லை.. பெதும்பையாம்..மங்கையாம்.. பள்ளிக்கூடம் எதற்கு ? பூட்டிடுங்கள் புழக்கடையிலே ! திருமண வயதில்.. மடந்தைய�ோ.. அரிவைய�ோ.. கல்லூரி எதற்கு ? பூட்டிடுங்கள் புழக்கடையிலே ! உத்திய�ோகம் புருஷ லட்சணம் தெரிவையா.. பேரிளம்பெண்ணா.. சம்பாத்தியம் எதற்கு ? பூட்டிடுங்கள் புழக்கடையிலே ! சதாபிஷேகம் தான் ஆயிற்றே.. யாரையும் நம்புவதற்கில்லை.. நாட்டு நடப்பு அறியாய�ோ ? பூட்டிடுங்கள் புழக்கடையிலே !
கண்ணியமிக்க ஆண்களே.. அனைவரையும் பூட்டிவிட்டு.. புழக்கடைத் திறவுக�ோலையாவது.. பத்திரப் படுத்துங்கள் சட்டைப்பையிலே ! மறவ�ோன்..திறவ�ோன்..விடலை. காளை.. முதுமகன்களே.. ஒன்று.. வளருமுன்னே கண்டறிந்து.. கலைத்திடுங்கள் கருவிலே ! அல்லது வளர்ந்தவற்றை ஒன்றாய் அடைத்து.. பூட்டிடுங்கள் புழக்கடையிலே - ரெ.அபிராமி