காற்றுவெளி இலக்கிய இதழ்
1
காற்றுவெளி இலக்கிய இதழ் ஐப்பசி 2018 ஆசிரியர் : ச�ோபா வடிவமைப்பு : நெகிழன், 7904748374 ஆல�ோசனைகளுக்கும், & படைப்புக்களுக்கும் : R.Mahendran. 34, Redriffe Road, Plaistow, London E13 0JX, Uk மின்னஞ்சல்: mullaiamuthan16@gmail.com நன்றி: இணையம் படைப்புக்களின் கருத்துக்களுக்கு படைப்பாளர்களே ப�ொறுப்பு.
2
காற்றுவெளி இலக்கிய இதழ்
வணக்கம், காற்றுவெளி
இதழின் ஐப்பசி இதழ் தங்களின் பார்வைக்கு
வருகிறது. சிற்றிதழ் வெளியீட்டின் அனுபவம் பலருக்கும் தெரிந்ததே. இன்று அனைத்துத் தமிழ்ப்பிரதேசங்களிலிருந்தும் சிற்றிதழ்கள் வெளிவந்துக�ொண்டேயிருக்கின்றன.ஒவ்வொன்றுக்கும் நிறையக் கனவுகள் இருந்திருக்கும்.அவற்றுள் சில வெற்றியடைகின்றன. பல ஒரு இதழுடன் நின்றுவிடுகின்றன.சில ஆழமாக வரலாற்றிலும் இடம்பிடித்துவிடுகின்றன.இலங்கையில் சிரித்திரன்,மல்லிகை,மலர், மறுமலர்ச்சி ப�ோன்றன தடங்களை ஆழமாக பதித்துள்ளது.இன்னும் பல இருக்கலாம்.இலங்கையில் வெளிவந்த சஞ்சிகைகளைத் த�ொகுத்து கண்காட்சிப்படுத்த முனைந்து முடியாமல் ப�ோய்விட்டது. இன்னும் முயல்கிற�ோம். பரஸ்பரம் அவரவர் க�ொள்கையுடன் சிற்றிதழ்கள் இணைந்து செயல்பட்டால் சாதிக்கலாம். நூல் & சஞ்சிகை அறிமுகப்பகுதியை அறிமுகப்படுத்த ஆவண செய்துவருகிற�ோம். இ த ழ்க ளி ன் & நூ ல்க ளி ன் ஒருபிரதியை அனுப்புங்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். நம்பிக்கைகளுடன்,
- ச�ோபா
காற்றுவெளி இலக்கிய இதழ்
3
ஜமீல்
மரத்தின் அழைப்பு க�ோடை வெயிலின் வெம்மையில் ஒதுங்க சிறு நிழலின்றி பத்திப் பதறி அலைந்து திரிகிறேன் என் கால்களில் நசிபட்டுக் கிடக்கும் சருகி்ன் நிழலில் ஒரு சிற்ரெறும்பு ஒதுங்கி தனதுயிரை நீட்டுகிறது எனது தவிப்பு நிலை கண்டு ஒதுக்குப் புறமாக தனி்த்து நிற்கும் மரம�ொன்று கிளைகளை அசைத்தென்னை வாஞ்சையுடன் அழைக்கிறது விரைந்து சென்றதன் நிழலில் சாய்கிறேன் அது தவித்த வாய்க்கு மிரடு தண்ணீர் கிடைத்தது ப�ோலிருந்தது எனது மூச்சிரைப்பின் சப்தம் கேட்டு தனது குஞ்சுகளை பரிதவிக்க விட்டு உயிரை ப�ொத்திப் பிடித்தபடி கிழிந்து பறந்தன கூடுகளில் தங்கியிருந்த பறவைகள் அதன் கூடுகளை கலைத்த குற்ற உணர்வில் நிழலிலிருந்து வெளியேறிச் செல்கிறேன் வழி நெடுகிலும் எனக்கான பெரு நிழலை வரைகிறது பரிதியை தனது சிறகுகளுக்குள் மறைத்து வைத்திருந்த மேகம்
4
காற்றுவெளி இலக்கிய இதழ்
பார்த்திபன்
பார்த்திபன் கவிதைகள் ஒரு தவளைக்கூட்டத்தோடு நடக்கத்தொடங்கிய சூரிய வெளிச்சம் நிழல்களுக்குள் நசிபட்டு நசிபட்டு தன் கதையை எழுதத்தொடங்கியது அது சரித்திரத்தின் கதை சாவின் கதை ஒரு வாழ்வின்கதை விடுதலையின்கதை ஒளியிடம் கூடிவந்த ச�ொற்களை ப�ொறிப்பதற்குள் தவளைகள் விழுங்கின தன்னிச்சைக்கு கக்கின அதையே ஒளியின் வரலாறு என்றன. விலகக் காத்திருக்கிறது நேற்றைய�ொத்த இன்னொரு நாள் விழுங்கிய அரைக்குவளை நீர் இனிப் பீடிக்கவிருக்கும் இரவினை ஈரப்படுத்தித் தணிக்கஅடுக்ககடுக்காய் துயிலலைகள் ஊற்றெடுத்துப் பாய்கின்றது காற்றுவெளி இலக்கிய இதழ்
குளிர் °12 நெளிந்து வளைந்து ப�ோவேனென்றா விழுகிறது அருவி விழுந்ததும் நெளிவதையும் வளைவதையும் வெறுக்கிறதா அருவி அருவிக்கு அகமுண்டு அருவிக்கு புறமுண்டு அருவி சிரிப்பதை அருவி அழுவதை யார் அறிவார் அருவியே அதற்கு நீதிசெய்யும் அருவியே அதற்கு அநீதிசெய்யும் அருவியே அகம் அகமே அருவி அருவியே விழுவதும் எழுவதுமாய் ஓடும்
5
எஸ்.சண்முகம்
இரண்டுமிலா தருணத்து ஓருமையில் விழிக்க- மேனியெங்கும் யார�ோ உலவிய தடயங்கள் குவிந்திருக்கும் இலைகளுக்குள் இறக�ொன்று பறத்தலின் வெளியை இழந்து கிடக்கிறது சுற்றிலும் பனியுறைவாய் ம�ோனம் நம்மிருவரின் தூரத்தை நகர்த்த மறுக்கிறது மடிகணினியின் திரைக்குள் ஒற்றைச் ச�ொடுக்கில் மின்னல்வெட்டாகி மறையும் ப�ொய்த்தலின் நீங்கா வசீகரம் பெருங்கருணையின் கரம் தன் மறுகரத்தைத் தேடிப் பதிகிறது என்னில். (இரண்டாம் பருவம்:89)
6
காற்றுவெளி இலக்கிய இதழ்
எஸ். கருணானந்தராஜா
ஒரு பால் உறவும் பிள்ளைப் பேறும்
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறது ப�ோல “ஒருவன் ஆண�ோடே சம்யோகம் பண்ணினால்
அருவருப்பான காரியம்செய்த அவ்விருவரும் க�ொலைசெய்யப் படக்கடவர்கள். அவர்கள் இரத்தப்பழி அவர்கள் மேல் இருப்பதாக…” பைபிள்-லேவியர் - 20:13.
பெண்களை விட்டு விட்டு “நீங்கள் ம�ோகங் க�ொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா?
நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்). - குர் ஆன் 27:55
காற்றுவெளி இலக்கிய இதழ்
7
பை
பிளும் குர் ஆனும் மிகத் தெளிவாகவும் மூர்க்கமாகவும் ஒரு பால் உறவை எதிர்க்கின்றன என்பதற்கு மேற்கண்ட வசனங்கள் எடுத்தக்காட்டு. இவற்றைப் ப�ோலப் பல உள்ளன. ஆனால் இந்து சமயத்தில் இது பற்றிய வார்த்தைகளில்லை. அது ஒருபாலுறவை ஒருவகையில் ஏற்றுக் க�ொண்டதாகவே காணப்படுகின்றது. அது த�ொடர்பான நியாயப்பாடுகள் அதிகமுள்ளன. அவற்றுள் ஒன்று பின்வருமாறு: பஸ்மாசுரன் என்பவன் சிவபெருமானிடம் தான் தலையில் கைவைக்கும் எவரும் எரிந்து சாம்பாராகி விடவேண்டுமென்று க�ோரி அந்த வரத்தைப் பெற்றுக் க�ொண்டான். அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. தேவர்கள் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டப�ோது அவர் ஓர் அழகிய ம�ோகினி வடிவம் க�ொண்டு அந்த அசுரனின் முன்பாக நின்று நடனமாடி இறுதியில் தனது கையைத் தன் தலையில் வைத்து அபினயம் பிடிக்க அசுரனும் அவ்வாறே செய்து சாம்பரானானன். இதையறிந்த சிவபிரான் விஷ்ணுவை வாழ்த்த வந்தப�ோது விஷ்ணுவின் ம�ோகினி வடிவத்தைக் கண்டு மயங்கி உறவுக�ொள்ள சிறீ சாஸ்தா ஐயப்பன் குழந்தையாய் அவதாரித்தார் என்கிறது ஐயப்ப புராணம். ம�ொத்தத்தில் ஒரு பாலுறவில் இந்துக்கள் வணங்கும் தெய்வங்களே ஈடுபட்டுள்ளன என்னும் நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதால் அதற்குப் பெரிய எதிர்ப்பு புராணகாலத்திலேயே இருக்கவில்லையென்பது புலனாகின்றது. தற்காலத்தில் ஒரு பாலுறவை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள பல நாடுகள் முன்வந்து விட்டன. அதைவிட அதிசயமென்னவென்றால் தற்போது ஒருபால் திருமணங்கள் சாதாரண திருமணங்களைப் ப�ோலவே சமய முறைப்படி நடப்பதுதான். யுரியூப்பில் இத்தகைய பல திருமணங்களை தரவேற்றியிருக்கிறார்கள். உதாரணம்: https://www.youtube.com/ watch?v=TuSrgW744qg. இந்த வின�ோதமான நடவடிக்கையில் பெரியவர்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியது மட்டுமல்லாமல் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமானுக்கு மாலையணிவித்து அவரது ஆசீர்வாதத்தோடேயே திருமணச் சடங்கும் நடைபெற்றதைக் காணக்கூடியதாயிருந்தது. ஒரேபால் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரித்த நாடுகளும் ஆண்டும் கீழே தரப்பட்டுள்ளன. ஆர்ஜண்டீனா (2010), கிரீன்லாந்து (2015), தென்னாபிரிக்கா (2006), அவுஸ்திரேலியா (2017), ஐஸ்லாந்து (2010), ஸ்பெயின் (2005), பெல்ஜியம் (2003), அயர்லாந்து (2015),
8
காற்றுவெளி இலக்கிய இதழ்
ஐக்கிய அமெரிக்கா (2015) பிரேசில் (2013), லக்ஸம்பேர்க் (2014) சுவீடன் (2009), கனடா (2005), மால்ட்டா (2017), க�ொலம்பியா (2016), உருகுவே (2013), டென்மார்க் (2012), நெதர்லாந்து (2000), இங்கிலாந்து/வேல்ஸ் (2013), நியூசிலாந்து (2013), பின்லாந்து(2015), ந�ோர்வே (2008), பிரான்சு (2013), ப�ோத்துக்கல் (2010), ஜெர்மனி (2017), ஸ்கொட்லாந்து (2014). ஒரு பாலுறவைப் பற்றி உனது கருத்தையும் கூறு என்று மனைவியிடம் கேட்டப�ோது அதை அவள் முற்றாக மறுத்துவிட்டாள். வழக்கமாகத் தனது கருத்துகளையும் கூறுபவள் இதனைப் பற்றிக் கூற எனக்கு அசூயையாக இருக்கிறது என்ன ச�ொல்வதென்று தெரியவில்லையென்றாள். உண்மையில் ஒரு பாலுறவுகள் பெரிய விடயமேயில்லை. மிகச் சாதாரணமானதே. ஒழுங்கான, எதிர்ப்பால் இல்லறத்தில் ஈடுபடும் சில ஆண்பெண் பாலரிடமும் இது காணப்படுகின்றது என்கிறார்கள். இத்தகைய�ோரை பைசெக்சுவல்ஸ் - அதாவது இருபால் சேர்க்கையாளர்களென்கிறார்கள். இந்த விடயம் பற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தபடி இருந்தப�ோது அதிஸ்ட வசமாக சில நாட்களுக்குள் இது த�ொடர்பானவ�ோர் வழக்கிற்கு ம�ொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றும் வாய்ப்புக் கிட்டியது.
த�ொழில் நேர்மை கருதி யாரையும் குறிப்பிட்டுக் கூறாமல் மேற்செல்கிறேன்: அவன் ஓர் திருமணமான இலங்கையின் தென்பகுதி முஸ்லீம். தன் மனைவியுடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராகச் சட்ட ஆல�ோசனை பெற சட்டத்தரணியிடம் வந்திருந்தான். நான் அவனுக்கு ம�ொழிபெயர்ப்பாளர்.
நடந்தது இதுதான்: காற்றுவெளி இலக்கிய இதழ்
9
ஓர் இரவு பத்து மணியளவில் தெருவில் சைக்கிளில் ப�ோனப�ோது எதிர்ப்பட்ட, அவன�ோடு கூட வேலை பார்க்கும் இரு பதின்ம வயதினரை (ரீன் ஏஜர்ஸ்) ஓரிடத்தில் சந்தித்தான். அவர்கள�ோடு சாவகாசமாக உரையாடியபடி ஒருவனது கழுத்தைச் சுற்றிக் கையைப் ப�ோட்டு அவனது பின்புறத்தில் காற்சட்டைக்குள் கையை நுழைத்ததாகவும், அவன் உடனே துள்ளியெழுந்ததாகவும் இது ஒரு வகை சைல்ட் ம�ொலஸ்ரிங் என்று கூறப்படக்கூடிய சிறுவர்மீதான பாலியல் துஸ்பிரய�ோகம் என்பதுவுமே குற்றச்சாட்டு. அந்த முஸ்லீம் இளைஞன�ோ தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறான். பாதிக்கப்பட்டவனுடன் கூட இருந்த மற்றவன் சம்பவம் இவ்வாறாக நடைபெற்றதற்குச் சாட்சி. ப�ொலீஸாரிடம் முறையிட்டு விட்டார்கள். சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடக்கூடாதென்று சட்டத்தரணிகள் முஸ்லீம் இளைஞனிடம் பணம் கறக்க முனைகிறார்கள். நான் அவர்களால் நியமிக்கப்பட்ட ம�ொழிபெயர்ப்பாளர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஸ்லீம் இளைஞன்மீது சிறுவர் பாலியல் குற்றவாளியென்று பெயர் குத்தப்பட்டுவிடும். தடுப்புக்காவலில் வைப்பார்கள். நிரந்தரமாக பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டால் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்றெல்லாம் சட்டத்தரணி ச�ொல்ல நான் ம�ொழிபெயர்த்தேன். பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவிப் பெண்ணான அவனது மனைவி ஓ வென்று அழத்தொடங்கிவிட்டாள். மனைவியையும் சாட்சிக்கு அழைத்து அவளது கணவன் ஓர் இருபாற் சேர்க்கையாளனல்லவென்று சாட்சிகூற வைக்கப்படவேண்டுமென்று சட்டத்தரணி கூற ஏற்கனவே கணவனுக்குக் கிடைக்கப் ப�ோகும் தண்டனையையெண்ணி அழுது க�ொண்டிருந்த பெண் மேலும் குழம்பிப் ப�ோனாள். சாடசி ச�ொல்லும்போது கேட்கப்படக்கூடிய கேள்விகளைச் சட்டத்தரணி கேட்டு அவளைப் பதிலளிக்கத் தயார்படுத்த முனைந்தப�ோது அவளால் அழுவதைத்தவிர வேற�ொன்றும் செய்ய முடியவில்லை. வழக்கோ மறுநாள் நடக்க விருந்தது. சட்டத்தரணிய�ோ பெண். அவள் இறுதியில் பாரிஸ்டரான தன் கணவனை நியமிக்கிறேன் £2500.00 உடனே கட்ட வேண்டுமென்றாள். சட்ட உதவித் த�ொகை ஆக £400.00 மட்டுமே கிடைத்திருந்த நிலையில் அதை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது, தனிப்பட்ட பாரிஸ்டர் மூலம் வழக்கை ஒத்திப்போட்டு வாதாடலாமென்றாள். இறுதியில் அப்பாவி இளைஞன் £1100.00 ஐ அன்றே கட்டிவிட்டு ஒரு மாதத்தினுள் மிகுதி £1400.00 கட்டுகிறேனென்று ஒப்புக்கொண்டு வெளியேறினான். அதில் ஒரு சிறு பகுதியே எனக்கும் கிடைக்கவிருந்தது. என்னசெய்வது நமது பிழைப்பு அப்படியாகிவிட்டது. பாதிக்கப்பட்டவன் பதின்ம வயதினனாயில்லாமல், வயது வந்தவனாயும் அதேவேளை அவனது சம்மதத்துடனேயே அந்த முஸ்லீம் இளைஞன் அவனைத் த�ொட்டுமிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. இவன் பதின்ம வயதினனாயிருந்தது வாய்ப்பாகப் ப�ோய்விட்டது. அதனால் குற்றத்தைப் பெரிது படுத்தி அவனிடம் காசுகறக்கப் பார்க்கிறார்கள். இத்தனைக்கும் அவன் சுத்தவாளியாக விடுதலையடைவானா இல்லையா என்பதையும் சட்டத்தரணி ஊர்ஜிதம் செய்யவில்லை. ஐம்பதுக்கு ஐம்பதுதான் வெற்றிக்கான வாய்ப்பு என்று கூறிவிட்டா. இதுவும் ஒருபால் உறவு த�ொடர்பாக, அதாவது அதன் சட்ட திட்டங்கள் த�ொடர்பாக அந்த இளைஞனுக்கேற்பட்ட அவலநிலையைக் காட்டுவதால் இங்கு
10
காற்றுவெளி இலக்கிய இதழ்
குறிப்பிடப்பட வேண்டியதாயுள்ளது. இது இவ்வாறிருக்க விடயத்திற்கு வருவ�ோம். கலியாணம் செய்து க�ொண்ட இரண்டு ஆண்களும் தத்தமக்குரிய பிள்ளைகளைப் பரிச�ோதனைக் குழாய் முறையில் பெற்றுக்கொள்ள வசதியுண்டென்றாலும், இக்காலத்தில் இரு ஆண்களும் சேர்ந்து தமக்கெனப் ப�ொதுவில் ஓர் குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் நவீன விஞ்ஞானம் வழிக�ோலியிருக்கிறது. வழமை ப�ோல ஒரு செவிலித்தாயின் (சற�ோகேற் மதர்) மூலமாக இதைச் சாதிக்க முடியும். ஜெனற்றிக் எஞ்ஜினியரிங் எனப்படும் உயிரியல் விஞ்ஞானத் துறையின் வளர்ச்சியால் குள�ோனிங் முறையில் ஒருவரின் க�ொப்பியை அதாவது பிரதியை உருவாக்க முடியும். அதே ப�ோன்று ஒரு மடியமான (ஓ+லு) இரண்டு ஆண்களினதும் விந்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் இருமடியமான (2ஓ;+2லு) முளையம�ொன்றைப் பெற்று ஒரு பெண்ணின் வெறுமையான் கருமுட்டையிலிட்டு அதனைச் சிலநாட்கள் பரிச�ோதனைக் குழாயில் வளர்த்தெடுத்துப் பின்னர் செவிலித்தாயின் கருப்பைக்குள் செலுத்தி அதனை முழுவளர்ச்சியடையச் செய்யலாம். இங்குவரக்கூடிய பிரச்சனை இரு ஆண்களினதும் விந்தணுக்களில் உள்ள வை (Y) குற�ோமச�ோம் ஆகும். இரு வை குர�ோமச�ோம்கள் முளையத்தின் திசுக்களில் இருந்தால் அதனால் ஆண் குழந்தைகளே உருவாகும். பெண் குழந்தைகளைப் பெறமுடியாது. அதற்கு வை குர�ோம ச�ோம்கள் அகற்றப்பட்ட வேண்டும். அதற்கும் நவீன விஞ்ஞானம் வை குர�ோம ச�ோம்களை அகற்றிவிடக்கூடிய வழிவகைகளைக் கண்டறிந்திருக்கின்றது. அதேப�ோல பெண் தம்பதிகளும் தங்கள் முட்டைகளிலிருந்து ஆண்துணையின்றி இருமடிய முளையங்களையுருவாக்கிப் பின் அவற்றைத்; தங்கள் வயிற்றிற் சுமந்து குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். ஆனால் Y குர�ோம ச�ோம்களே பெண்களின் கரு முட்டைகளிலிருக்குமாதலால் இரு பெண்களின் கரு முட்டைகளைச் சேர்த்து ஆண்துணையின்றி பெண் குழந்தைகளையே உருவாக்க முடியும். உலகில் மனிதர்களின்; ஆண்பெண் சமநிலைக்கு இருபாலரினதும் அவசியம் இதனால் தெளிவாகிறதல்லவா? ஆராய்சிகளின் மூலம் வெற்றிபெற்றுள்ள குள�ோனிங் முறைகளும் மேற்சொன்ன கருக்கட்டல் முறைகளும் விலங்குகளில் ச�ோதனை பார்க்கப்பட்டு வெற்றியடைந்திருந்தாலும் சட்டரீதியாக இன்னும் மனிதர்களில் செய்யப்படலாமென அனுமதி வழங்கப்படவில்லை. சில நாடுகள் பதியமுறைக்கு(குள�ோனிங்) சில வரையறைகளுக்குள் பரம்பரையியற் ப�ொறிமுறை (ஜெனற்றிக் எஞ்ஜினீயரிங்) ஆய்வுகளுக்கு சட்டரீதியான அனுமதியைக் க�ொடுத்திருந்தாலும், மனிதப் பிரதிகளைய�ோ, ஆண் அல்லது பெண் தம்பதிகளின் குழந்தைகளைய�ோ உருவாக்க இன்னும் அனுமதியளிக்கவில்லை. தற்போது ஒருபாற் திருமணங்களுக்கு சட்ட பூர்வ அனுமதியைப் பெற்றுக் க�ொண்டுள்ள மனித இனம் இன்னும் ப�ோராடி எதிர்காலத்தில் ஆண்தம்பதிகள் அல்லது பெண்தம்பதிகள் தமக்கெனப் தமது குழந்தைகளையும் பெற்றுக் க�ொள்ளும் அனுமதியைப் பெறுவார்கள் அல்லது பெறவேண்டுமென வாழ்த்துவ�ோம்
காற்றுவெளி இலக்கிய இதழ்
11
தாரா கவிவர்தன்
தாரா கவிவர்தன் படைப்புகள் பித்தனாய் என் சித்தம் முழுதாய் நிறைந்தவளை எண்ணியே தினம் பித்தனைப் ப�ோலேத் திரிகிறேன்..! தேறீயாக அவள் இதழெனும் மலர் தின்னும் தேறீயாக வேண்டும் சிரிப்பு அந்தக் கள்ளச் சிரிப்பினில் எனை மெல்லச் சிறைச் செய்வதேன்....! கார் குழல் சுழன்று வரும் காற்றினிலே மயிலிறகாய் அசைந்தாடி மெல்ல வருடி என்னிதயம் திருடிச் செல்லும் உன் கார்குழல் இதத்திற்கு நானென்றும் அடிமையே.....!
12
காற்றுவெளி இலக்கிய இதழ்
க�ௌரி சுந்தரம்
எங்கள் குழந்தையடி அவள்
தமி
ழ்
விரலுள் ச�ொரிந்தவள்தான் - என் விஞ்சும் ம�ொழிக்குழந்தை நெஞ்சின் மகிழ்வையெல்லாம் - அவள் என் ச�ொல்லால் குழைந்தளித்தாள் எழுத்தால் இழைந்து வந்து - எனை சுந்தர தமிழாய் ரசிக்க வைத்தாள் அதிசயக் குழந்தையிவள் - ஆதி ஒளவையும் இவள் ரசிகை ப�ொன்னும் வைரமுமாய் - இவள் ப�ொங்கிடும் தமிழ் புதையல் - என் முந்தையர் கைகளுக்குள் - நிறை இலக்கிய ப�ொக்கிஷம் - காண் உலகப் பந்தினுள்ளே உலவி வரும் இவள�ோ - எம் சந்ததித் த�ொடர் ஊஞ்சல் - நம் குழவியர் நாவினில் குழைந்து இவள் எழுந்தால் நாளைய சரித்திரமும் நலமுற மலர்ந்தெழுவாள்
காற்றுவெளி இலக்கிய இதழ்
13
ஏகத்துவன் அறையின் சுவர் ஆணியில். த�ொங்கும் மணிக்கூடு. கண் இமை நிசப்தத்தை. ஓசையின் கதறலால் உடைத்து உசுப்பிக் க�ொள்கிறது. மேசையின் மேல் ம�ௌனமாய். ஒளியில் அழுதுக�ொள்ளும் மெழுகுவர்த்தி. இரவை கண்ணீரில் கரைகிறது. திறந்திருக்கும் சாளரத்தின் வழியே. மெல்லிய காற்று. சிறிய பறவையாய் உள்ளே வந்து வந்து ப�ோகிறது. கடைசியாக வாசித்து மூடாமல் கிடக்கும் புத்தகத்தின் மேல். “ஒரு கடல் வாழ்வு” துன்பத்தில்விரவிக் கிடக்கிறது. குடிசையின் உள்ளே எரிந்து க�ொண்டிருக்கும் விளக்கு வெளிச்சத்தை அடிக்கடி முகர்ந்து விட்டு விலகும் நாய். அதுவும் பசி ப�ோக்கும் உணவென்று நினைத்திருக்க கூடும் அதன் அருகே பசியில் அழும் வயிற்றோடு உறங்கும் பலவுடல்கள். நாளை எதற்கும் விடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது.?
14
காற்றுவெளி இலக்கிய இதழ்
தேவராணி சிவராஜா
அருகில் வந்தாள் உருகி நின்றேன் மேகத் தூறல்களில் மின்னல் கீற்றாய் ஒளிர்கிறாய் தாபத்தை தணிக்க தென்றலாய் மிதக்கிறாய்
புன்னகையில் என் கன்னங் களை புல்லரிக்க வைக்கிறாய் வாழைத் தண்டாய் வாலிபத்தை வளைக்கிறாய்
சுவாசத்தில் பாசத்தை நெருப்பாய் ஊற்றுகிறாய் ரீங்கார இசையில் மீட்டும் வீணையாக உருகிறாய்
பின் னின்று கட்டியணைத்து கைகளால் இறுக்குகிறாய் செல்லச் சிணுங்களுடன் மார்பில் இதழ் பதிக்கிறாய்
இதழ் பிரித்து முல்லைப் பற்களால் ஒளி பரப்புகிறாய் விழிக்குள் கருவண் டைப் புதைத்து செட்டை அடிக்கிறாய்
இறுக்கிய கைகளை பிடிக்க வந்தால் பறித்துக் க�ொண்டு ஓடுகிறாய் கண் விழித்துப் பார்த்தால் தான் தெரிந்தது அது பகல் கனவு என்று
காற்றுவெளி இலக்கிய இதழ்
15
இளங்குமரன்
ரகசியமாய் சில ப�ொக்கிஷங்கள் ஒவ்வொரு மனதின் அடியாழத்திலும் சில ப�ொக்கிஷங்கள்.. அவை பற்றி நினைத்தால்... சிலது புன்னகை ஊட்டும், சிலது புண்நகை ஊட்டும்.. மனப்பூக்களாய், மத்தாப்பாய், மதுரமான மணம் வீசும் நினைவுகளுமிருக்கலாம்!! ரணப்பூக்களாய், மரணவாசல் மாலைகளாக, நாறும் மணம் க�ொண்ட செண்டுகளின் க�ோர்வையாவும் இருக்கலாம்... நினைத்தாலே இதழ�ோரம் நகையுதிக்கும் உவப்பானத�ோர் நினைவாயிருக்கலாம்.. நினைக்கவே அஞ்சி நடுங்கும் கசப்பானத�ோர் கணமாயுமிருக்கலாம்.. பதின்மத்தில் தளும்பிய அதே மகிழ்தருணம்.. நான்பத்தில் கரைதட்டிய கலமாகலாம்.. ஒருவேளை அறுபத்தில் மீண்டும் கிளர்வூட்டலாம், யார் கண்டார்??
16
நினைவுகள் யாவர்க்கும் நிரந்தரம்.. அவை மணம�ோ, ரணம�ோ.. புன்னகைய�ோ, புண்நகைய�ோ... உவப்போ, கசப்போ... சூழலை, வாழ்க்கைச்சுழலை ப�ொறுத்து ஆளாளுக்கு மாறும்!!! மீண்டும் ச�ொல்வேன்... சில நினைவுகள் ப�ொக்கிஷமாய் அடியாழத்தில் நிறைந்து நிரந்தரமாக அனைவர்க்குமிருக்கும்.. எனக்குமிருக்கும், ஏன் உனக்குமிருக்கும்... அவை செந்தாமரையாய், முழுநிலவாய், சாரல் மழையாய், பூங்காற்றாய், பூமாலையாய்... கிளர்ந்தெழுந்து க�ொண்டே இருக்கும்!!! இனிதாய் அதில் நினைவாய் நனைவாய் த�ோழா!!! காற்றுவெளி இலக்கிய இதழ்
பலிகடா..
அகிலா..
நீள்சதுர முகங்களும் செவ்வக உடல்களும் தலைவிட்டிருந்தன கிணற்றின் வட்டம் சுற்றி நீர் அதிகமில்லா அதற்குள்ளிருந்து நீண்ட முடி க�ொண்டவள் வெளியே இழுத்துப் ப�ோடப்பட்டாள் சிவப்பு த�ொப்பி காற்சிராய்காரர்கள் பூட்ஸ் கால்களுடன் ஊர் எங்கும் துண்டு கட்டியவன் வண்டி ஏற்றப்பட்டான் பெரிய வீட்டிலிருந்து நிஜார் பிடித்து தூக்கிய சின்னவன் முழித்தான், இவனில்லையே நேற்று பார்த்தவன் விரலை சூப்பத் த�ொடங்கினான் மழை வேண்டாமென பாழும்கிணறு, வானம் பார்த்து சிரித்தது.. காற்றுவெளி இலக்கிய இதழ்
17
ஒற்றைப் பனை
தமிழ்நிலா
எம் இராச்சியத்தின் க�ோட்டைக் கற்கள் துர�ோகங்கள் க�ொண்டு பெயர்க்கப்பட்டுக்கொண்டிருந்தன.. எங்களின் காலத்தில் தான் அந்த ஊழிநடந்தது.. பேய் மழையில் அடித்த வெள்ளம் மனிதர்களை எரித்துக்கொண்டன.. எல்லைகளை த�ொலைத்த எம் நாடு சிறுத்து சிவந்திருந்தது.. நிராதரவு ம�ௌனக்கற்களை வீசியது. கலவிகளின் சத்தம் எங்கள் குரல்களை அடக்கிக்கொண்டது நாங்கள் கடவுள் ஆகிக்கொண்டிருந்தோம். அந்த ஒற்றைப்பனை எரிந்து எழும் புகை எல்லை வரையும் மறைத்தது.. அந்தநாள் எம் கனவுகளை அந்தக் குழிகளில் புதைத்துவிட்டுத் தான் கடந்தோம்... இதே கடலினை நிர்வாணமாய்...
18
காற்றுவெளி இலக்கிய இதழ்
விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார்.
( 1918 - 1966 )
பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த ஈடு இணையற்ற தமிழ்ப் பணியாளர், தமிழுணர்வாளர், பல்துறை மேதை, வித்துவான் க. வேந்தனார். தலைசிறந்த தமிழ் இலக்கிய அறிஞர், தண்டமிழ் நாவலர், தமிழாசான், சைவ சித்தாந்தச் செம்மல், தனித் தமிழ்க் க�ொள்கையாளர், தமிழுலகு ப�ோற்றும் அற்புதக் குழந்தைக் கவிஞர், காவியக் கவிஞர், சமூக சீர் திருத்தவாதி என்றெல்லாம் அக்காலத்தில் மட்டுமன்றி இக்காலத்திலும் ஈழத் தமிழறிஞர்களால் மட்டுமன்றித் தமிழகத்தின் பேரறிஞர்களாலும் பாராட்டப்பெறுகின்றவர் அமரர் வித்துவான் க. வேந்தனார்
வி
த்துவான் வேந்தனார் காலத்தால் உருவாக்கப் பட்டவர் அல்லர். காலத்தை உருவாக்குவதில் தம் கணிசமான பங்களிப்பை வழங்கியவர் எனத் தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் என்ற வரலாற்று நூலில் வித்துவான் கலாநிதி ச�ொக்கலிங்கம் குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவில் க�ொள்ளப்படத்தக்கதாகும். இலங்கைத் தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த 20 ஆம் நூற்றாண்டில், 1918 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி தந்தை கனகசபைக்கும், தாய் தையல்முத்துவுக்கும் மகனாக, ஒரே பிள்ளையாகச் சரவணை, வேலணையில் பிறந்தவர். பெற்றோரால் நாகேந்திரம் பிள்ளையென்று அன்று பெயர் சூட்டப் பெற்றிருந்த வேந்தனார், தனித்தமிழியக்கம் தீவிரப் பட்டிருந்த அற்றை நாள்களில், பண்டிதர் இளமுருகனாரின் த�ொடர்பாலும், தூண்டுதலாலும் , தமது 16 ஆவது வயதில், வடம�ொழியிலமைந்த நாகேந்திரம் பிள்ளை என்னும் தமது பெயரைத் தூய தனித் தமிழில் வேந்தனார் என மாற்றியமைத்துக் க�ொண்டார். அந்தக் காலத்தில் இலங்கையில் அரச கரும ம�ொழியாகவும் அதனால் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு வந்த ம�ொழியாகவும் விளங்கி வந்தது ஆங்கிலமே. இப்பாடசாலைகளில் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. இக்கல்லாரிகளில் மதம் மாறிய�ோ, பணம் கட்டிய�ோதான் தமிழ்ப் பிள்ளைகள் கல்வி பெற வேண்டியிருந்தது. இதனால் தமிழ், சைவக் கல்லாரிகள் அழிந்துவந்தமை கண்டு ஆறுமுகநாவலர் பெருமான் வீறுக�ொண்டெழுந்து, தமிழூர்களில் தாம் நேரடியாகவும் தமிழுணர்வு மிக்க செல்வந்தர்கள் மூலமும் நிறுவிய சைவத் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், வேலணை சரசுவதி வித்தியாசாலையிலும் வேந்தனார் தமிழ் ம�ொழி மூலம் இந்து சமயம் முதலான சகல பாடங்களையும் கற்றுத் தேறினார்.
காற்றுவெளி இலக்கிய இதழ்
19
தாம் பிறந்த அன்றே தம் அன்னையை இழந்து, தம் தந்தை வழிப் பாட்டன் தளையசிங்கத்தாரின் பராமரிப்பில் வளர்ந்த வேந்தனார், இளஞ் சைவப் புலவர், சைவப் புலவர் தேர்வுகளுக்கும், பால பண்டிதர், பண்டிதர் தேர்வுகளுக்கும் எந்தப் பாடசாலையிலும் படிக்காமல், சுயமாகத் தனித்து ஆராய்வோடு படித்துத் தேர்வுகளில் முதன்மையாக வெற்றி பெற்றார். கந்தபுராண கலாசாரம் நிலவிய யாழ்ப்பாணப் பகுதியில், சைவ ஒழுக்கம் ஓம்பி வாழ்ந்த ஊர்களில் ஒன்றான வேலணையில், க�ோவில்களில் புராணங்களுக்குப் பயன்சொல்லும் துணிகரமான செயலில் தம் மூதாதையரைப் பின்பற்றி, மிக இளம் வயதிலேயே ஈடுபட்டு வந்த வேந்தனார், சரியான கடவுள் நம்பிக்கைத் தளத்தில் ஆன்மீகம் தழுவிய ஆளுமையாக உருவாக்கம் பெற்றார். கற்பனைவளம், படைப்பாற்றல் இயல்பாக அமைந்த கலைஞர்கள் பண்டிதர்களாக, வித்துவான்களாக, பல்கலைக் கழகக் கலாநிதிகளாகக் கற்று மேம்பட்டு, உன்னதமான கலைப் படைப்புக்களை வழங்குவதுமுண்டு. நுண்ணுணர்வு, கற்பனை, படைப்பாற்றல் அற்ற வெறும் விவேகிகள் படித்துப் பண்டிதர்கள், கலாநிதிகளாகப் பட்டம் பெற்றுக்கொண்டு, தாங்களும் இலக்கியங்களைய�ோ, கலைப் படைப்புக்களைய�ோ ஆக்க முயன்றுக�ொண்டு, விமர்சனம் என்ற ப�ோர்வையில் வித்துவக் காய்ச்சல் காட்டுவதுமுண்டு. இவர்களில் முதல் வகையைச் சேர்ந்தவராகக் க�ொள்ளப்பட வேண்டியவர் வித்துவான் க. வேந்தனார். காரணம், அவர் மிக இளமையிலேயே கல்விப் பட்டங்கள் தேடிக் க�ொள்ள முன்னமே சைவ சமயக் கட்டுரைகளையும், தமிழ் இலக்கியக் கட்டுரைகளையும் இந்துசாதனம், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் சரமாரியாக எழுதத் த�ொடங்கி விட்டார். அழகிய கவிதைகளும் பாடத் த�ொடங்கி விட்டார். மேலும், பண்டித வித்துவானாகப் பட்டம் பெற்ற நிலையிலும் இவர் ப�ோன்ற படிப்பாளிகளின் பழமைவாத, மலட்டுத்தன்மை மரபுவாத ந�ோய் இவருக்கு இருக்கவில்லை. அர்த்தமற்ற வெள்ளைக் கவிகளென்று, அவை இலகுவில் விளங்குந் தன்மை பெற்றிருந்த ஒரே காரணத்துக்காகச் சுப்பிரமணிய பாரதியாரின் நவீன கவிதைகளை இகழ்ந்து ஒதுக்கிய அந்த மரபு வாதிகளின் கூச்சல்களுக்கு எதிராகத் துணிச்சல�ோடு பாரதியாரின் கவிதைகளைப் பாராட்டிப் பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வந்தார் வேந்தனார். அத்தோடு பாடுகின்றோர் எல்லோரும் கவிஞர் அல்லர், பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமையல்ல என்றும் பாடினார். பழம் பெருமை பேசிக்கொண்டு ச�ோம்பிக் கிடந்து, தாழ்ந்து ப�ோவதை விடுத்துப் புதிய சிந்தனைகளும் புதிய முயற்சிகளும் ஆக்கங்களும் மேற்கொள்வதன் மூலம் ஆண்ட பரம்பரைத் தமிழன் மீண்டும் தன்னை ஆளும் நிலை தேட வேண்டும் என்ற இவரது தலையாய இலட்சிய வேட்கையை இவரது கவிதைகள், கட்டுரைகள், மேடைப் பேச்சுக்களில் நிறையத் தரிசிக்கக் கூடியதாயுள்ளது. கருவிலே அமைந்த திருவாகப் படைப்பாற்றலைக் (creativity) க�ொண்டு விளங்கிய கல்விமானாகிய வேந்தனாரைக் குறுகிய காலத்தில் அதிக தமிழ் மக்கள் அறிந்து க�ொள்ள உதவியது அவரது மடைதிறந்த வெள்ளம்போல் முழங்கும் பேச்சாற்றல் என்றால், பல நூற்றாண்டுகளுக்கு, அதாவது தமிழ் உள்ள மட்டும் அவரின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளவை அவரது குழந்தைப் பாடல்கள் எனலாம்.
20
காற்றுவெளி இலக்கிய இதழ்
அவரியற்றி இன்றுவரை ஈழத் தமிழ் மனங்களிலெல்லாம் அவரவர் குழந்தை வயதில் புகுந்து , நிரந்தரமாய் மீட்டப்பட்டு வருவன , காலைத் தூக்கிக் கண்ணில�ொற்றி, மழை முகிலும் கூடுது வண்ண மயிலும் ஆடுது, சின்னச் சின்னப் பூனை, கரும்பு தின்போம் கரும்பு தின்போம் எனத் த�ொடங்கும் குழந்தைப் பாடல்களாகும். குழந்தைகளின் விருப்பங்களை, இரசனைகளை மையமாகக் க�ொண்டு, குழந்தைகளின் மனநிலைக்கு மாறி நின்று, எளிய ச�ொற்களில் பாடப் படுவன குழந்தைப் பாடல்கள் என்ற ப�ொதுவான வரைவிலக்கணத்துக்கு அமையக் கவிஞர் வேந்தனார் பாடியுள்ள 37 குழந்தைப் பாடல்கள்தாம் அவரது உச்சமான (master piece) படைப்புக்கள் என்பது எனது கருத்தாகும். இவற்றைவிட்டு, கவிதைப் பூம்பொழில் என்னும் இவர்தம் கவிதைத் த�ொகுதியில் மேலும் இடம் பெற்றுள்ள தெய்வம், தமிழ், சான்றோர், நாடு, வாழ்வு என்ற பிரிவுகளில் அடங்கும் 43 கவிதைகளும், கற்பனைக் காதல், அவளும் அவனும், நன்றியுள்ளம், உற்றதுணை, காதற் கலை வாழ்வில் என்னும் அவரது கதைப் பாடல்களும் அவரைப் பெரும்பாலும் பெருங்கவிஞர் என்ற வகைக்குள்ளேயே அடக்கியுள்ளன. 1940
களிலும் அடுத்தும் பாடப்பட்ட இக் கதைப் பாடல்களே, ஈழத்தின் சமகாலச் சம்பவங்களிலிருந்து கதைக் கருக்களை எடுத்து முதன் முதலாகப் பாடப்பட்ட கதைப்பாடல்கள் என்ற உண்மையும் வேந்தனாரை ஈழத்தின் முன்னோடி நவீன காவியப் புலவனாக விதந்தோதி நிற்கிறது. மேலும் இவற்றுள் அவளும் அவனும் என்ற கதைப் பாடலில், இமயத்தில் க�ொடியை நாட்டி இவ்வலகாண்டோம் என்று சுமையினைத் தூக்கும் கூலி ச�ொல்வதிற் பெருமை உண்டோ? என்றும் சாதியால் , சமய வாழ்வால் தனித்தனியே பிரிந்துவாழும் பேதமை ஒழிந்து, நாங்கள் பிறப்பினால் தமிழர் என்றே ஓதிய�ோர் கணத்தில் சேர்ந்தால் உலகத்தை ஆளவல்லோம்! என்றும் மற்றவர் நாட்டை நாள மறப்படை திரட்டும் இந்நாள் பெற்ற நம் நாட்டை ஆளாப்பேடிகள் தமிழர் தான�ோ? என்றும் தீர்க்கதரிசனத்தோடு அறுபது ஆண்டுகளுக்குமுன்பே, அதாவது 1976 இல் தமிழீழத் தனி அரசுக்கு ஈழத் தமிழ் மக்கள் ஆணை வழங்கியதற்கு (ஏறக்குறைய) முப்பதாண்டுகள் முன்பே, இலங்கை சுதந்திரம் பெற முன்பே தமிழீழத் தனியரசு இலட்சியத்தை ஈழத் தமிழர் நெஞ்சுகளில் விதைத்த தமிழ் நெஞ்சர், வித்துவான் வேந்தனார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். யாழ்.திருநெல்வேலியில் , இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமாக விளங்கும் பரமேசுவராக் கல்லூரியில் இயங்கி வந்த பண்டித ஆசிரியப் பயிற்சி நெறியில் 1942 ஆம் ஆண்டு இணைந்து ஈராண்டுக் கால ஆசிரியப் பயிற்சியை பூர்த்தியாக்கியதை அடுத்து , சென்னை சென்ற வேந்தனார், மறைமலை அடிகளாருடன் தங்கி, வித்துவான் தேர்விலும் 1944 இல் த�ோன்றிச் சித்தியெய்தினார். காற்றுவெளி இலக்கிய இதழ்
21
தமிழறிஞர் சு.நடேசபிள்ளையால் 1946 இல் பரமேசுவராக் கல்லூரியில் தமிழாசானாக நியமனம் வழங்கப் பெற்று, 20 ஆண்டுகள் தமது ஆசிரியப்பணி மூலம், பல நூற்றுக்கணக்கான தமிழார்வமிக்க மாணவ இளந் தலைமுறையினரை ஈழத் தமிழ் சமூகத்துக்கு வித்துவான் வேந்தனார் உருவாக்கி வழங்கியுள்ளார். இப்பணியில், அக்காலத்தில், அரசாங்கத் தமிழ் பாடநூற் சபையில் பணியாற்றியத�ோடு, கா.ப�ொ.த .சாதாரண இறுதிப் பரீட்சைக்கான பாடவிதானத்துக்கமையக் கமபராமாயணம் மந்தரை சூழ்ச்சிப் படலம் , கைகேயி சூழ்வினைப்படலம், கும்பகர்ணன் வதைப்படலம் ப�ோன்றவற்றிற்கு விளக்க நூல்களும், இந்துசமய பாட விதானத்திற்கமையத் திருவருட்பயன், திருக்குறள், தேவார திருவாசகங்களுக்கு விளக்கவுரை நூல்களும் யாழ் சிறீலங்கா புத்தக சாலையின் வேண்டுதலுக்கிணங்க எழுதி வெளிவரச் செய்ததனூடு பாடசாலைத் தமிழ்க் கல்வியை இனிய அனுபவமாக மாற்றி த் தமிழ்க் கல்வியைத் தழைப்பித்தார் அவர். மேலும், இளமையிலிருந்து இந்து சாதனம், ஈழகேசரி ஏடுகளைத் த�ொடர்ந்து தினகரன், வீரகேசரி, இலங்கை வான�ொலி முதலிய ஊடகங்களின் மூலம் சங்க கால இலக்கியங்கள், பிற்பட்ட காவியங்கள், சைவ சித்தாந்த நூல்கள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளையும் ச�ொற்பொழிவுகளையும் தமிழார்வலர்களுக்குப் பெருவிருந்தாக வழக்கி வந்தார் வேந்தனார். இவ்வாறு பழமையில் பக்தி க�ொண்டிருந்த அதே வேளை, காலம் வேண்டும் தமிழின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்பட்ட நியாயமான புதுமைகளையும் அப் புதியன படைக்கும் இலக்கிய, கலைப் படைப்பாளிகளையும் இனங்கண்டு ஆரத்தழுவி, ஆதரித்து ஊக்குவிக்கும் உண்மையான இன, ம�ொழிப் பற்று அவரிடம் நிறைந்திருந்தது அதனால் தான் வித்துவான் ச�ொக்கன், குறமகள், புஸ்பா செல்வநாயகம் ப�ோன்று பலர் அவரால் ஊக்கி வளர்க்கப்பட்டனர். தமது வகுப்பில் படித்த மாணவர்களை எழுதத் தூண்டி, கவிதைகள் எழுதுவித்து, திருத்தித் தட்டிக் க�ொடுத்து , அவர் ஊக்கப் படுத்தியதைக் கண்டு, அவரது இந்துசமய வகுப்பு மாணவனாகிய நானும் என்னாலும் கவிதை பாட முடியுமா எனப் பரீட்சித்துப் பார்க்க முற்பட்டு, எடுத்த எடுப்பிலேயே இனிய கவிதை ஒன்றைப் பாடிமுடித்து, அவராலும், எல்லோராலும் பாராட்டப்பட்டு, துணிச்சல் பெற்றுத் த�ொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள், காவியங்கள், நாடகங்களென்று இன்றுவரை எழுதிக் க�ொண்டிருப்பதற்கு முழுமுதற் காரணமாக என்னை எனக்குக் காட்டிக் தந்தவர் என் ஆசிரியர் வேந்தனாரே. அத்துடன் எனது காவியம் எழிலிக்கு 1965 இல் இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பெற்ற ப�ோது, மேடையில் என் மாணவன் பஞ்சாட்சரத்திற்குக் கிடைத்த பரிசு எனக்குக் கிடைத்தது ப�ோன்ற மகிழ்ச்சியை, பெருமிதத்தைத் தருகிறது என்று பகிரங்கமாகப் பாராட்டிய அவரது தாய் நெஞ்சு அவரது தமிழ்ப் பற்றின் ஆழத்தைப் புலப் படுத்துவதாகும். தமிழ் ம�ொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலைகள், இலக்கியம், தமிழர் தன்மான வாழ்வுக்கான தன்னாட்சி என்பவற்றை உயிரினும் மேலாக மதித்து, அவற்றிற்காகவே ஒல்லும் வழியெல்லாம் ஓடியுழைத்த வேந்தனார், சமயத் சீர்திருத்தமாகக் க�ோவில்களில் உயிரினங்களைப் பலியிடுங் க�ொடுமையையும், சமூகச் சீர் திருத்தமாகத் தமிழர்களுள் சாதிப் பிரிவினைகளையும் தீவிரமாக எதிர்த்து எழுதியும் பேசியும் வந்திருந்தார். இதே துணிச்சல�ோடு இந்து மத குருமார்களுக்குப் ப�ோதிய வாழ்க்கை வசதிகள், மரியாதை, மதிப்பு
22
காற்றுவெளி இலக்கிய இதழ்
வழங்காமல் நாம் அவர்களை ஒடுக்குவதன் காரணமாக எங்கள் சமயநெறி தளர்ச்சியடைகிறது என்ற யதார்த்தத்தையும் எங்கெங்கும் எடுத்தியம்பியவர். ஆறுமுக நாவலரின் அடிய�ொற்றித் தமிழ் சைவத் த�ொண்டனாக வாழ்ந்தவர் வித்துவான் க.வேந்தனார். இக்காரணங்களால் ஈழத் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியத் தமிழகத்திலும் அவரை அறிஞர்கள் வியந்தும், நயந்தும், மதித்தும், விருதுகள் பட்டங்கள் வழங்கியும் கெளரவித்தனர். வித்துவான் வேந்தனாரின் பல்துறைப்பட்ட தமிழ்ப் பணிகளையும் தமிழ்ப் பற்றையும் நயந்து தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு தமிழ்ப் பேரன்பர் என்ற பட்டத்தை 1947 ஆம் ஆண்டு வழங்கிக் கெளரவித்தது. அவரது சைவ சித்தாந்தப் பேரறிவைப் பாராட்டி சிறீலங்கா சைவ சித்தாந்த சமாசம் சித்தாந்த சிர�ோமணி என்னும் விருதை 1964 ஆம் ஆண்டு வழங்கியது. இவ்வாறு, பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை, வித்துவான் சி ஆறுமுகம் முதலான ஈழத் தமிழறிஞர்களும், வித்துவான் தெ.ப�ொ.மீனாட்சிசுந்தரனார், வச்சிரவேலு முதலியார், அ.ச.ஞானசம்பந்தன், வெள்ளைவாரணனார் ப�ோன்ற தமிழக அறிஞர்களும் நயந்து பாராட்டும்படி இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்தின் தலைசிறந்த தமிழறிஞர் வேந்தனார் என்பது மிகையன்று. ஈழத் தமிழினத்தின் தவப்பேறான வேந்தனார் நம் தவற் குறைவாற் ப�ோலும் தமது 48 ஆவது வயதிலே, இடை வயதில் இட்டு நிரப்ப முடியாத இழப்பாக, நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ஆங்கிலக் கவிகளான கீற்ஸ், பைரன், தமிழ்க் கவிஞர்களான சுப்பிரமணிய பாரதியார், கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் ப�ோன்ற மக�ோன்னதங்கள் மண்ணுலகில் அதிக காலம் வாழ அனுமதிக்கப்படாததுப�ோல், நமக்கு அரிதில் கிடைத்த ஒரு யுகத் தந்தை இறந்துவிட்ட ப�ோதும், அவரது மக்கட் செல்வங்கள் அவர்தம் ஆக்கங்களைத் தேடித் திரட்டித் தமிழுலகுக்கு நிரந்தர விருந்தாக்கியுள்ளமை பராட்டப்பட வேண்டியதாகும். தக்கார், தகவிலர் என்பதவரவர் எச்சத்தாற் காணப்படும்.
(ஈழத் தமிழ்ப் பேரறிஞர் வித்துவான் வேந்தனார் அவர்களின் நூறாவது பிறந்ததினம் வரும் 5. 11. 2018 ஆகும். இதனைய�ொட்டி எமது காற்றுவெளி ஐப்பசி மாத இதழில் , வேந்தனாரின் மாணவரும், கனடாவில் வசித்து வரும் தமிழ் அறிஞருமான பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள், இலக்கியப்பூக்கள் 2 (மாசி 2015) நூலிற்குத் தந்த விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார் என்ற கட்டுரையை இங்கு மீள் பிரசுரம் செய்கின்றோம். நன்றி : - இளஞ்சேய்
காற்றுவெளி இலக்கிய இதழ்
23
சா. கா. பாரதி ராஜா செங்கற்பட்டு
துளிப்பாக்கள் க�ொட்டிய மழையில் அங்கங்கே குட்டை குட்டையாய் மேகங்கள் காற்றின் அலையில் துடுப்புகளை வீசுகின்றன தென்னை மரங்கள் பேச இயலாதவன் கற்றுத் தருகிறான் உலகின் முதல் பாஷை கிணற்றிலிருந்து தண்ணீர் வாளியில் அள்ளுகிறேன் மேலெழும்பும் குட்டிக்கிணறு
சாரல் மழை குளத்தின் முகமெங்கும் ஆயிரம் பருக்கள் தலைகீழாகத் தெரிகின்றன வானில் மரங்கள் மேகக்கூட்டங்கள் உடலை வழித்துக்கொண்டு வரும் கடைசி நீர்த்திவலைகளில் இலையின் கண்கள்
24
காற்றுவெளி இலக்கிய இதழ்
சிதை வளர்ப்போம்
நிலாந்தி சசிகுமார்
நரிக்கும் சிங்கத்திற்கும் கல்யாணம் விளக்கின் ஒளி கண்டு விழும் விட்டில்களின் சிதைகள் அங்கங்கே எரிய க�ோலாகலமான கல்யாணம் எரிந்த விட்டில்களை எண்ணி எரியப் ப�ோகும் விட்டில்களின் ஒப்பாரி இசையில் களை கட்டும் சுடுகாடு தங்கள் திறமைக்கு பரிசு பெற்ற நரிகளின் எகத்தாள ஊளையில் சிங்கங்களின் நமுட்டுச் சிரிப்புகள் மறைந்து கிடக்க கல்யாணம் நடக்கிறது
அவன் விழான் விழா மரம் ஒன்று விழுந்து விட்டது அன்று அதன் கிளைகளை எல்லாம் வெட்டி விட்டு மறைந்த வேர்களைத் தேடி ஓடுது வாள்கள் பெரிய வேர்கள் தனைத் தந்து சிறிய வேர்களை மறைக்க மறைந்த வேர்கள் மறைந்தே வாழுது பிறித�ொரு மரங்களின் வேர்களின் அடியினில்...... காற்றுவெளி இலக்கிய இதழ்
25
இல.கருப்பண்ணன், சேலம்.
மழையில் நனைந்த கவிதை.... பள்ளிவிட்டு திரும்பும்போது பிடித்திருந்த மழைக்கு புத்தகப்பையை தலையில் வைத்தபடி ஓலைக்குடிசையை நெருங்கும் ப�ோதே... வாடா எஞ்சாமி எம்புள்ள எப்புடி நனைஞ்சிருக்கான்பாரு என்றபடி தன் மாராப்பு கச்சையில் தலைதுவட்டி காக்கி டவுசரயும் வெள்ளை சட்டையையும் கழட்டச்சொல்லி... எறவானத்து க�ொடியில ஒதரிப�ோட்டுட்டு ஒரும�ொழம் காடாத்துணிய குடுத்து அன்னாகவுருல ச�ொருகிக்கன்னு ச�ொல்லி மழையில் நனைந்து ஊறியிருந்த ந�ோட்டு புத்தகங்களை... சற்றுமுன் அணைத்திருந்த அடுப்பங்கரையில் ஒவ்வொன்றாய் பரப்பி உலர வைத்தவாறு காதல் அக�ோரனே
26
இப்படி உக்காரு ராசான்னு வறுத்த கல்லக்கொட்டையை கைநிறைய திணித்து தின்னுராசான்னு ச�ொல்லிக்கிட்டே... சாணித்தரையில் குத்தவச்சி உக்காந்து நான் கல்லக்கொட்டை தின்னும் அழகை ரசித்த என் கருவாச்சி அப்பத்தா வந்து ப�ோனாள், நேற்றைய அலுவலகம் முடித்து மழையில் நனைந்தவாறே புல்லட்வண்டியில் ப�ோர்டிக�ோவை அடைந்து தலைதுவட்ட ஒரு டவல் எடும்மான்னு ச�ொன்னப�ோது, “என்ன அவசரம் மழை நின்றபிறகு வரவேண்டியதுதானே? “ நான் கிட்சன்ல இருக்கேன் வந்து எடுத்துக்கோங்க என்று உள்ளிருந்து வந்த இல்லாளின் உச்சகுரளை உள்வாங்கிய தருணத்தில்... காற்றுவெளி இலக்கிய இதழ்
க�ௌந்தி மு சென்னை. என் அட்டவணை தூசியேறிக் கிடக்கிறது .. நாள்காட்டிய�ோ நானிருக்கிறேன் நினைவிருக்கிறதா என்கிறது .. நேரம�ோ இனி நான் உனக்கெதற்கு என்கிறது .. என்செய்வேன் என்னை சுற்றிய உலகம் தலைகீழாக உருள்கிறதே உனைக்கண்ட நாள் முதல்....
காற்றுவெளி இலக்கிய இதழ்
27
நெல்லை வை.ரவீந்திரன்
வெற்றியை ந�ோக்கி ... 13 புறங்கூறுதல் அழகல்ல...
எ
ந்தவ�ொரு பயணமாக இருந்தாலும் செல்லும் வழியை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வெற்றி பயணத்துக்கும் அது ப�ொருந்தும். பயணத்தை ஊக்குவிப்பவை எவை? பயணத்துக்கு தடைக் கற்களாக இருப்பவை எவை? என்பதை அறிந்து க�ொள்ள வேண்டும். அந்த வரிசையில் வெற்றிக்கான பயணத்தின் தடைக் கற்களில் முதன்மையானது, குறை காணும் வழக்கம். மனித மனத்தை குழப்பத்தில் ஆழ்த்தி கலங்கிய குட்டையாக மாற்றுவதில் இதற்கு முக்கிய இடம் உண்டு. குறை காணும் குணத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நேரடியாகவே ஒருவரை அடுத்தடுத்து குறை கூறிக் க�ொண்டு இருப்பது. மற்றொன்று, மூன்றாவது நபரிடம் குறை கூறுவது. அதாவது, க�ோள் மூட்டுதல். இதை, புறங்கூறுதல் என திருவள்ளுவர் கூறுகிறார். மேலும், புறங்கூறாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே எழுதி வைத்துள்ளார். ஒரு குறளில், ‘புறம் கூறி ப�ொய்யாக நடித்து உயிர் வாழ்வதை விட செத்து விடுவது மேலானது’ என மிகக் கடுமையாக கூறுகிறார். மற்றொரு குறளில், ‘பிறருடைய குறையை தேடிக் கண்டுபிடித்து மற்றவரிடம் க�ோள் மூட்டுபவனின் குறையை மற்றவர்கள் கவனிக்காமல் விட்டு விடுவார்கள�ோ?’ என கேட்கிறார். அந்த அளவுக்கு புறங்கூறுதல் என்பது மிகவும் ம�ோசமான
28
காற்றுவெளி இலக்கிய இதழ்
குணம். இந்த உலகில் உள்ள உயிரினம் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான மன நிலை உண்டு. இதுவரை யாருமே பார்த்திராத ஒரு ப�ொருளை விவரித்து கூறுவதாக வைத்துக் க�ொள்வோம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வித வகையிலான கற்பனையிலேயே அந்த ப�ொருளை காண்பார்கள். இதுப�ோலவே, ஒரே விதமான வேலையை இரண்டு வெவ்வேறு நபர்களிடம் அளித்தால் இருவரும் வெவ்வேறு வழிமுறைகளில் அந்த வேலையை செய்து முடிப்பதை காணலாம். உலகில் உள்ள எந்த ஒரு பாதையும் நேர் க�ோட்டில் இல்லை என்பதே உண்மை. மனிதர்களின் இந்த முரண்பாடான செயல்களே குறை காணும் வழக்கத்துக்கும் அடிக�ோலுகிறது. ஒருவருக்கு ஒருவர் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து க�ொள்ளாமை, புரிந்து க�ொள்ளுதல் இல்லாமை, கருத்து வேற்றுமை ப�ோன்றவற்றின் விளைவே அடுத்தவருடைய குணம் மற்றும் செயல்களில் குறை காண்பதில் முடிகிறது. ‘மற்றவரின் குணங்களை நீ கணிக்க துவங்கினால், அவர் மீது அன்பு செலுத்த உனக்கு நேரம் இருக்காது’ என்கிறார், அன்னை தெரசா. ப�ொதுவாகவே, தன்னை பற்றி குறை கூறுபவரை ஒரு ப�ொருட்டாகவே மற்றவர் எடுத்துக் க�ொள்வதில்லை. அதே நேரத்தில், ஒருவரை குறை கூறும்போது யாருடனும் ஒப்பிட்டு பேசுவது சரியான செயல் அல்ல. அதுப�ோன்ற வார்த்தைகள் கூறுபவருக்கு வேண்டுமானால் எளிதான வெறும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், அதை கேட்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் வேதனை அளிக்கும் ச�ொற்களாக அவை அமையும். தீயினால் சுட்ட வடுவை விட நாவினால் சுட்ட வடு மிகவும் ரணம் மிகுந்தது அல்லவா? ஒருவரை மதிப்பீடு செய்து அவரை குறை காணும் உரிமை யாருக்குமே அளிக்கப்படவில்லை. மற்றவரை மாற்ற நினைத்து அவரை குறை காண்பதை விட்டு விட்டு அவரை அவருடைய இயல்பிலேயே ஏற்றுக் க�ொள்ள முயற்சிப்பது நன்மை விளைவிக்கும். அதன் மூலமாக, அவர் நம் வசமாகக் கூடும். இதனால் தான், பிறருடைய நல்ல குணங்களை மட்டுமே நினைத்துப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் இனிமையாக அமையும் என்கிறார், ரமண மகரிஷி. குறை காணும் குணம் யாரிடம் இருக்கும் தெரியுமா? ம�ோசமானவர்களிடம் மட்டுமே அது நிரம்பி வழிந்து கிடக்கும். இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத கதையின் கிளைக் கதை ஒன்று உண்டு. குருகுல பயிற்சியின்போது சமூக நிலைமையை கண்டறிந்து வருமாறு கவுரவர்களில் மூத்தவரான துரிய�ோதனனையும், பாண்டவர்களில் மூத்தவரான தருமரையும் குரு அனுப்பி வைக்கிறார். இருவரும் தனித்தனியாக வெளியுலகை சுற்றிப் பார்க்க கிளம்பினர். சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தனர். ஓரிரு நாட்கள் இந்த பயிற்சி த�ொடர்ந்தது. குரு நிர்ணயித்த நாட்கள் முடிந்ததும் இருவருமே குருகுலம் திரும்பினர். அவர்களை குரு அழைத்தார். முதலில் தருமரை அழைத்து, ‘உலகை சுற்றிப் பார்த்தாயே? உனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? எனக்கு விளக்கமாக கூறு’ என்றார். ‘அய்யா, இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சியானது. உலகில் உள்ள மக்கள் அனைவருமே மிகவும் நல்லவர்களாக உள்ளனர். மாதம் தவறாது மழை ப�ொழிகிறது என்றால் அந்த நல்லவர்களால் தான். மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்’ என தருமர் பதிலளித்தார். காற்றுவெளி இலக்கிய இதழ்
29
அடுத்து துரிய�ோதனனிடமும் அதே கேள்வியை எழுப்பினார், குரு. அதற்கு துரிய�ோதனன், ‘அய்யா. இந்த உலகம் மிகவும் ப�ொல்லாதது. எங்கு பார்த்தாலும் சூது, நயவஞ்சகம், ப�ொறாமை. அப்பப்பா. மக்கள் அனைவருமே ஏத�ோ ஒரு வகையில் ம�ோசமானவர்களாகவே திரிகின்றனர். அதனால், மகிழ்ச்சி என்பதையே அறியாமல் இருக்கின்றனர்’ என்று பதிலளித்தான். இதில் இருந்து என்ன தெரிகிறது? இருவருமே ஒரே ஊரின் பகுதியை தான் சுற்றி பார்த்தார்கள். ஆனால், இருவரின் கண்களும் வெவ்வேறு விதமாக அந்த ஊரை பார்த்துள்ளது. ஒருவருடைய மனம் எப்படி இருக்கிறத�ோ? அதன்படியே வெளி உலகும் அவருடைய கண்களுக்கு புலப்படும் என்பதே இந்த கிளைக்கதை மூலமாக மகாபாரதம் நமக்கு கூறும் செய்தி. குறை காணும் வழக்கத்தை ஒருவன் ஏற்படுத்திக் க�ொண்டான் என்றால், அவனிடம் திறமை இல்லை அல்லது திறமை குறைந்து க�ொண்டு வருகிறது என்பதே அர்த்தம். நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் க�ொள்ள முடியாத ஒருவன் தான், தனது எதிராளியை ம�ோசமான வகையில் மிகவும் அசிங்கப்படுத்துவதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் க�ொள்ளலாம் என நம்புவான். எனவே, அடுத்தவர் மீது குறை காணும் ப�ோக்கை விட்டொழிப்பது என்பது வெற்றிக்கான ஏணியின் ஒரு படிக்கட்டு. அதே நேரத்தில், ஒருவன் தன் மீது குறைகளை கூறிக் க�ொண்டு இருந்தால் அதை ப�ொருட்படுத்தாமல் இருப்பதும் வெற்றிக்கான சூட்சும மந்திரமே. குறைகளை விட்டொழிப்போம். வெற்றிப் பாதையில் முன்னேறுவ�ோம். (வெற்றி பயணம் த�ொடரும்…)
30
காற்றுவெளி இலக்கிய இதழ்
சின்னச் சின்ன சிறகுகள்.
கனகசபாபதி செல்வநேசன்
சம்பந்தன் ப�ொற்கிண்ணம் பெண்ணுக்கு பாலியல் த�ொல்லை. அர்த்தநாரீஸ்வரர். e
பாதசாரிகளுக்குக் குந்தகம் மலிவு விலை வியாபாரம் நடை பாதை. e
மின் விளக்கு கர்வம் முட்டி ம�ோதும் விட்டில்கள் க�ோபத்தில் நிலவு. e
ஓய்ந்தது சமாதானத்துக்கான யுத்தம் உலக அனுசரணை உயிர்கொல்லி ஆயுதம் இழப்புகளையும் இழந்தது ஈழம். e
விலைக்கு வாங்கிய பதவிகள் மாலையும் கழுத்துமாய் ஆரவாரம் கரப்பத்தான் பூச்சிகள். சூரியன் வணங்கும் முல்லை நிலம் நந்திக் கடல் கடற் புலிகள் காந்தள் பூக்கும். காற்றுவெளி இலக்கிய இதழ்
இடி - மின்னல் என்னுள் என்ன நினைவுகள் தற்கொலைத் தாக்குதல். e
நவராத்திரி த�ோத்திரம் சுதந்திரமாய் நெளிகிறது புழு நாவற் பழம். e
கார்த்திகைப் பூக்கள் தணியாத தாகம் மாவீரர் கனவுகள்..... e
நீண்ட பயணங்கள் பிஞ்சுப் பாதங்கள் சுவடுகள் தேடும் தலைமுறை வழியாக.
31
ப�ொன் குலேந்திரன் (கனடா)
ரலி மிதி வண்டி (சைக்கிள்)
யா
ழ்ப்பாணத்தில் இருந்து நல்லூரூடாக பருத்திதுறைக்கு ப�ோகும் வீதியில் 8கி மீ தூரத்தில் கல்வியங்காடு.கிராமம் உள்ளது ஒரு காலத்தில் கள்ளிக்காடாக் இருந்த 700 ஏக்கர் க�ொண்டதாக ஒருந்த இக கிராமத்தின் பெயர் , காலப் ப�ோக்கில் மருவி கல்வியன்காடு ஆயிற்று . இக்கிராமத்தின் ப�ொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். கால்நடைச் செல்வங்களாக கறவைப் பசுக்களும், ஆடுகளும் இகிரமத்தில் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் பரராஜசேகர மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த ப�ோது கல்வியங்காடு அம்மன்னனின் அவைப் பிரதிநிதியான சூரியமூர்த்தி தம்பிரானின் ஆட்சிப் ப�ொறுப்பின் கீழ் அமைந்தது எனக் கல்வியங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது.. கல்வியங்காடு சந்தைக்கு அருகே பல வருடங்களாக பலசரக்கு கடை நடத்துபவர் இராசையா அவரின் மகன் சிவகாந்தன் (காந்தன்) 8 கி மீ தூரம் நடந்து சென்று வண்ணார்பன்னையில் உள்ள யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றான். அவ்வளவு தூரம் நடந்து சென்று கல்வி பயில அந்தக் கல்லூரியை தெரிந்து எடுக்க வேண்டிய காரணம், . காந்தனின் தாய் மாமன் சிவலிங்கம் (சிவா) அந்த கல்லூரியில் படித்து,. அதன் பின் க�ொழும்பு பல்கலைக் கழகம் சென்று படித்து பொறியாளரானவர் க�ொழும்பில் உள்ள வ�ோக்கர்ஸ்(Walkers) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்தார் . தன்னைப் ப�ோல் தன். மருமகனும் அக்கல்லூரியில் படித்து பொறியாளராக வரவேண்டும் என்பது அவர் விருப்பம் அதன் விளைவே காந்தன் என்ற சிவகாந்தன் மூன்று கில�ோ நிறை உள்ள புத்கங்களை சுமந்து க�ொண்டு, வியர்வை சிந்த கல்லூரிக்கு படிக்கச்
32
காற்றுவெளி இலக்கிய இதழ்
செல்வது அவனுக்கு கிடைத்த தண்டனை . க�ோப்பாயில் இருந்து வரும் அவன�ோடு படிக்கும் அவனின் இரு நண்பர்கள் ச�ொந்தத்தில் சைக்கில் வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு ப�ோதும் காந்தனை தங்கள�ோடு சைக்கிளில் கல்லூரிக்கு வரும்படி கேட்டதில்லை. **** யாழ்ப்பாணம், ஒரு விவசாய மாவட்டம். மற்றும் ஒரு பெரிய நடுத்தர மக்கள் த�ொகை ஆகியவை, பாரம்பரிய சைக்கில் கலாச்சாரத்தி லிருந்து ஒரு ம�ோட்டார் சைக்கில் கலாச்சாரத்துக்கு , மாறியுள்ளது . யாழ்ப்பாண மக்களை ச�ோம்பேறியாக்குவதற்கு புலம்பெயர்ந்தோரரே காரணம் என ஊடகங்கள் குற்றம் சாட்டின. சில பல்கலைக்கழக மாணவர்கள் தமது வீட்டிலிருந்து 500 மீட்டர் த�ொலைவில், ம�ோட்டார்-பைக் மூலம் தனது வளாகத்திற்கு செல்கிறார். 1983 இல் உள்நாட்டுப் ப�ோரில் வெற்றிபெறுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக ராலே பிராண்ட் சைக்கிள் பின்னுக்கு கரியரும், முன்னுக்கு ஒரு பாஸ்கட்டும் இரவில் வெலிங்டன் தியேட்டரில் இரண்டாம் ஷ�ோ ப�ோக்குவரத்துக்கு தேவையான வடிவமாக இருந்தது , ஒரு கிராமத்திற்கு சராசரியாக ஒரு ம�ோட்டார்-பைக்கைக் க�ொண்டது. வடக்கில் ம�ோதல் கணிசமான பகுதியில் சிறிய அல்லது எரிப�ொருள் இல்லாமல், குடியிருப்பாளர்கள் எல்லா இடங்களிலும் பயணம் செய்ய சைக்கிள்களைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கில�ோ மீற்றர் தூரத்தில் உள்ள கிளிந�ோச்சிகு பலர் சைக்கிளில் பயணித்தனர். அதே நேரத்தில் அரசாங்க உத்திய�ோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தமது தினசரி ப�ோக்குவரத்துக்காக சைக்கிள்களையும் பயன்படுத்தினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் . பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தில் 32 கி மீ தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சைக்கிளில் சென்றார். . உள்நாட்டு ம�ோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், ஒவ்வொரு வீட்டிலும் யாழ்ப்பாணத்தில் சராசரியாக இரண்டு ம�ோட்டார் சைக்கிள்களும் இன்று வரை யாழ்ப்பாணத்தில் சுமார் 70000 ம�ோட்டார் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 20% க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு ம�ோட்டார் பைக்கை வைத்திருக்கிறார்கள்.. முன்னதாக ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் ஒப்பிடும்போது எரிப�ொருள் நுகர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக சில�ோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மக்கள் அன்றாடம் ப�ொருளாதார ரீதியாகவும் பணக்காரர்களாகவும் பணியாற்றியுள்ளனர், அத்தியாவசியமான விடயங்களில் தமது பணத்தை செலவழித்துள்ளனர். இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் கனடா . அவுஸ்த்ரேலியா, இங்கிலாந்து ப�ோன்ற நாடுகளில் வாழும் ஈழத்து புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சும்மா வரும் பணத்தில் வாழ்கின்றனர், மற்றும் ச�ோம்பேறியாகி ப�ொதை மருந்துக்கு அடிமையாகி பாலியல் வன்முறை செய்து வருகின்றனர். குற்ற செயலைப் புரிந்து விட்டு சில மாபியா குழுக்கள் விரைவில் தப்பி ஓட பெரும் உதவியாக ம�ோட்டார் சைக்கில் இருக்கிறது என்பது பலரின் கருத்து 1965 ஆம் ஆண்டில் 500 ரூபாயுக்கு வாங்கிய பாவித்த ரலி சைக்கில் இராசையா குடும்பத்து சக்குப் ப�ோடு ப�ோட்டது . இராசையா அசைகடி மகன் பாவிகாதப�ோது சனி ஞாயிறுகளிலும் விடுதலை தினங்களிலும் யாழ்ப்பாணம், சுன்னாகம், சாவகச்சேரி சந்தைகளுக்கு ப�ொய் வர அதை பாவித்தார். த�ோடு மாணவி செல்லம்மாவை பின் வியை கரியரில் ஏற்றிக�ோடு அடிக்கடி நல்லூருகு ப�ோய் வருவார். இராசையா குடும்பத்திற்றகு ரலி சைக்கில் செய்த சேவைக்கு பிரதி உபகாரமாக அதை துடைத்து செயினுக்கு எண்ணை பஊசி புது சைக்கில் ப�ோன்ற காற்றுவெளி இலக்கிய இதழ்
33
த�ொற்றத்தோடு வைத்திருப்பதில் திருப்தி அடைந்தான் காந்தன். எவரும் இரவலுக்கு சைக்கிளை பாவிக்க கேட்டால் அவன் க�ொடுக்க மறுத்து விடுவான் டயரில் காற்று ப�ோய் விட்டால் காற்றடிக்கும் பம்பும் சைக்கிளில் இருந்தது. அல்லாவிட்டால் காற்றடிக் முருகேசு கடையில் 50 சதம் க�ொடுக்க வேண்டி வரும் சைகிலுக்கு எதாவது பெரிய பிரச்சனை வந்தால் க�ோப்பாய் - இருபாலை சந்தியில் உள்ள முருகேசுவின் சைக்கில் திருத்துவதும் வாடகைக்கு விடும் கடைக்குப் ப�ோவான் .முருகேசு சைக்கில் ரிப்பேர். பஞ்சர் ஓட்டுவது ப�ோன்றவற்றில் இருந்து வரும் வருமானத்தோடு ஒரு மணித்தியாலதுக்கு ஒரு ரூபாய் வீதம் சைக்கில் வாடகைக்கு விட்டு வருமானம அவருக்கு வந்தது . பாவித்த சைக்கில்கள் விற்கும் தரகு வேலையும் முருகேசு பார்த்தார் நல்லூர் திருவிழா காலத்தில் வாகனம் ப�ொய் வர தடை(Barrier) ப�ோட்ட இடத்துக்கு அப்பால் சைக்கிள்கள் எடுத்து செல்ல முடியாது . அந்த இடத்துக்கு அருகே சைக்கில்கள். செருப்புகள் பாதுகாத்து க�ொடுக்கும் கடை ஒன்றை தன மகனின் ப�ொறுப்பில் வைத்திருந்தார். நல்ல பிரையாசைக்காரன் காந்தன், ரெலி தம்பிக்கு ஏதும் பரச்சனை என்றால் முருகேசுவின் கடைக்கு தம்பியை கூட்டிச் செல்வான். ரலி சைக்கிலை இரபிசையா குடும்பத்தில் ஒருவராக கருதி “ரலி தம்பி” என்று அழைத்தனர் ஓரு நாள் காந்தன் முருகேசுவின் கடைக்கு சைக்கிளில் சென்ற ப�ொது: “என்ன காந்தன் சைக்கிலை புது சைக்கில் ப�ோல வைத்திருகிறீர். கவனமாக பார்க்கிறீர் ப�ோல இருக்கு எவ்வளவுக்கு வாங்கினனீர் “? “ஓம் அண்ணை மூன்று வருசத்துக்கு பாவித்த சைக்கிலாக அப்பா 1965 இல் வாங்கித் தந்தவர் . எத�ோ 500 ரூபாய் என்று அப்ப ச�ொன்னது எனக்கு நினைவு இருக்கு.” “இப்ப சைக்கிளை விற்கிறது என்றல் ச�ொல்லும் இரண்டு மடங்கு காசு வாங்கித் தான் . இப்ப எல்லோரும் சைக்கில் பாவிக்கிறது குறைவு” “நான் என் ரலி தம்பியை விற்க மாட்டேன் அதைப் பற்றி கேளாதையும்”, பதில் ச�ொல்லி விட்டு அங்கு நிற்காமல் காந்தன் ப�ோய் விட்டான். காந்தனின் மாமா சிவா கனடாவுக்கு புலம பெயர்ந்து ப�ொய் சில வருடங்களுக்குப் பின் ஒரு தடவை 1990 இல் ஊருக்கு வந்த ப�ொது காந்தன் சைக்கிலில் யாழ்ப்பாணம் பல்கலை கழகம் ப�ோய் வருவதை கண்டார் . தன் ச�ொந்த செலவில் யமஹா அல்பா (Yamaha Alpha) ம�ோட்டார் சைக்கில�ொன்று இரண்டு இலட்சத்துக்கு இராசையா குடும்பத்துக்கு வாங்கிக் க�ொடுத்தார். அவர் தன மருமகன் காந்தன் தன மகள் மைதிலியை திருமணம் செய்யப் ப�ோவதுக்கு க�ொடுக்கும் சீதனத்தின் அட்சரமாக அந்த ம�ோட்டார் சைக்கிலை வாங்கிக் க�ொடுத்தார், விலை மதிப்பு கூடிய ம�ோட்டார் சைக்கில், இராசையா குடும்பத்தில் குடி புகுந்து ரலி தம்பியை புறகணிக்க வைத்தது ரலி சைக்கில் ஸ்டோர் ரூமில் கவனிப்பார் அற்று கதூசி படிந்து கிடந்தது. சிறு வருடங்களுக்கு பின் இராசையாவும் காந்தனும் தங்களின் தேகநலத்தில் மாற்றம் ஏற்றப்ட்டதை கண்டனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதிகமாக தாகமெடுத்தல் , அளப்பரிய பசி. ச�ோம்பல் . பார்வை குன்றியதைக் கண்டு தம் குடும்ப் வைத்தியரிடம் இருவரும் ப�ோனார்கள்
34
காற்றுவெளி இலக்கிய இதழ்
. பல பரிச�ோதனைகளுக்குப் பின் ஒரு நாள் டாக்டர் அவரகள் இருவரையும் அழைத்துப் பேசினார்: இராசையா. “ இராசையா உமக்கும் உம் மகனுக்கு நீரழிவு நிலை 2 வியாதி (Diabetes Type 2) இருக்கிராதை பரிச�ொதனை காட்டுகிறது “டாக்டர் இந்த வியாதி எங்கள் பர்மபரையில் இல்லையே:: “இருக்கலாம். உங்கள் இருவருக்கும் ம�ோட்டார் சைக்கில் வான்கிய பின் தேகப்பியாசம் முந்திப�ோல் இல்லை. எடுக்கும் உணவும் மாறு பட்டிருக்கு. ச�ோறு, மா சத்து உள்ள உணவு அதிகம் சாபிடுகிறீர்கள் ப�ோல் இருக்கு. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீர் சந்தைக்கும் மகன் படிப்புக்கும் எப்படி .ப�ோகிறீர்கள் ? நடந்தா அல்லது சைக்கிலிலா: “இல்லை கனடாவில் இருக்கும் என் மச்சான் வாங்கி தந்த இரு லட்கசம் பரறுமதியான் ம�ோட்டார் சைக்கிளில் டாக்டர்”. “அப்போ நீங்கள் முந்தி வைத்திருந் ரலி சைக்கிலுக்கு என்ன நடந்தது “ அதை நாங்கள் இப்போ பாவிப்பதில்லை . எங்கள் வீட்டு ஸ்டாரில் ரூயல் ஒரு மூலையில் கிடக்குது பாவிக்கிற�ோம்: “அங்கு தான் உங்களுக்கு பிரச்சனை . யங்கள் இருவருக்கும் ப�ோதுமான தேகப்பியாசம் இல்லை “ “டாக்டர் ம�ோட்டார் சைக்கிளில் ச�ொகுசாக, விரைவில் பயணம் செய்யலாம்” “ச�ொகுசு வாழ்கையை வருத்தம் தேடி வரும். நீரழிவு வியாதியை பணக்காரர்களின் வியாதி என்றும் ச�ொலவாரகள. இது காலப் ப�ோக்கில் நீரகத்தை பாதிக்கும் விவசாயிகளுக்கு இந்த வியாதி குறைவு. காரணம் அவர்கள் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள்; இப்போ வீட்டில் சைக்கில் வைத்து க�ொண்டு ச�ொகுசாக ம�ோட்டார் சைக்கில் ஓடுகிறீர்கள். அதுவும் ஒரு காரணம் உங்களுக்கு நீரழிவு வருவதுக்கு. இனி ம�ோட்டோர் சைக்கில் பாவிக்காமல் உங்களுடலைய ரெலி சைக்கிளை பாவியுங்கள். ஒரு நாலு மைல்கள் தினமும் அந்த சைக்கிளில் ஓடுங்கள். உங்கள் வேலைக்கு சைக்கிளில் ப�ோங்கள் .தூரப் பயணத்துக்கு ம�ோட்டார் சைக்கிலைப் பாவியுங்கள் இதை செய்து ஆறு மாதத்துக்கு பின் பின் என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர் டாக்டரிடம் இருந்து வீடு திரும்பிய இராசையாவும் காந்தனும் முதலில் செய்த காரியும் ஸ்டார் ரூமுக்குள் கவனிப்பாறற்று கிடந்த ரலி தம்பியை தூசி தட்டி பாவிப்புக்கு ஆயித்தம் செய்தார்கள். இராசையாவின் மனைவி செல்லம்மவுக்கு அவர்கள் செய்வதின் அர்த்தம் புரியவில்லை (யாவும் புனைவு)
காற்றுவெளி இலக்கிய இதழ்
35
கயல்விழி
நாகு அன்பழகன்
மா
லை மணி ஐந்தாயிற்று. மண்டபத்தில் அவ்வளவாக கூட்டமில்லை. வீடிய�ோ கிராபர் ஒயர் ப�ோட்டு லைட்களை செட் செய்துக�ொண்டிருக்கிறார். மதி மண்டபத்தின் வாயிலில் நின்று வரவேற்புப் பிளக்ஸை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய உதவியாளன் மூர்த்தி ப�ோட்டோவுக்கான குடை லைட்களை நிறுத்தியும் விரித்தும் வைத்துக்கொண்டிருந்தான். இனிமேல் தான் உறவினர்கள், நண்பர்கள் என திருமண மண்டபம் களை கட்டவேண்டும். மதி இன்றைய திருமணத்தை எப்படி நல்லபடியாக ப�ோட்டோவிலும், வீடிய�ோவிலும் பதிவு செய்வது என ய�ோசித்துக்கொண்டிருந்தான். அந்தியூர் செல்லும் சாலையில் பக்கமிருந்து ஒரு கார் வேகமாக வந்து மண்டபத்தில் நுழைந்தது. தூரத்தில் தெரியும் பாலமலையின் கம்பீரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரையான வயல்வெளி ஒரு ரம்மியத்தை க�ொடுத்தது. கழுத்தில் த�ொங்கிய கேமராவில் தள்ளிப்போய் முழு மண்பத்தையும் படம்பிடித்தான். அம்மாப்பேட்டையில் இதுதான் பெரிய மண்டபம். சமீபத்தில் அடித்த புளு கலர் பெய்ண்ட், தூக்கலாக தெரிந்தாலும் அழகாகத்தான் இருந்தது. வெட்டவெளித் த�ோட்டம் வயல் சூழ்ந்த பகுதியின் இம்மண்டபம் தனித்து எழுந்து நின்றது. அப்படியே அந்த மலைகள் – வயல் என தனியே க்ளிக் செய்தான் – தூங்கும் நாயையும் சேர்த்து. இப்படி தனக்குப் பிடித்த மாதிரி படம்பிடிக்க அவ்வப்போது கேமராவைத் தூக்கிக்கொண்டு பைக்கில் கிளம்பிவிடுவான். தனக்கான கலெக்ஷன் என பறவைகள் – விலங்குகள் – கட்டடங்கள் – மலர்கள் என அழகும் விந�ோதமும் கலந்த படங்களை தனியே சேகரித்துக்கொண்டிருக்கிறான். அது ஒவ்வொன்றும் ஒரு கதை ச�ொல்லும் அழகும் கவித்துவமும் கைகூடியதாக மாறி நிற்கும்.
36
காற்றுவெளி இலக்கிய இதழ்
பெண்வீட்டாரின் இரண்டு கார்கள் வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்தன. மணப்பெண், உறவு சூழ இறங்கி வருவதை முன்னாடி நகர்ந்துக�ொண்டே க்ளிக் செய்து க�ோணங்களை மாற்றிக்கொண்டிருந்தான். வாயிலில் ஆரத்தி எடுத்தனர். அப்போது சாகவாசமாக பிரேம் செய்யும்போது தான் கவனித்தான் – மணப்பெண்ணுக்கு பின்னால் கயல்விழி. கேமராவை நகர்த்திவிட்டு முழுதும் பார்த்தான் – ஆம் கயல் தான். மதியின் இயல்பு அப்படியே மாறத் த�ொடங்கியது. இதயத் துடிப்பு வேகமாய் – ஒருவகையான படபடப்பு – உடலில் ஒரு அதிர்வும், கண்களில் இலேசாக கண்ணீரும் ஒருசேர – அவர்கள் நடந்தார்கள். ப�ோவதையே பார்த்து சமைந்து நின்றான். சற்று ப�ொறுத்து கயல்விழி, இவனைத் திரும்பிப் பார்த்து சென்றாள். சரியாக இருபது ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பார்க்கிறான். எப்போது பார்ப்போம் என ஏங்கியது இன்றுவரை த�ொடர்ந்தது. மனசின் ஓரத்தில் இருபது வயது கயல்விழி அச்சுப் பிசகாமல் உறைந்துப�ோயிருந்தாள். இருபது வருடங்களை கடந்தது தெரியவில்லை – அந்த கயலின் அக்கா ப�ோலிருந்தாள். அதே இளமை க�ொப்பளிக்கும் மலர்ச்சியான முகம் – இதழ்களில் நிரந்தரமாய் இருக்கும் புன்னகை. க�ொஞ்சம் கூடுதலான சதைப் பிடிப்பு – கூடுதலான முதிர்ச்சி – தனக்கு ஏற்பட்ட அதிர்வும் – அடிய�ோடு மாற்றிப்போட்ட கலக்கமும் கயலுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரு சின்ன குழப்பம் – பிறகு தெளிவு அவ்வளவுதான். தன்னை அவள் யாரென தெரிந்துக�ொண்டாள் என ஊறுதியாய் நம்பினான். மண்டபம் முழுவதும் தேடினான் – சுற்றிச்சுற்றி ந�ோட்டம் விட்டான் – மணப்பெண் அலங்காரம் நடந்துக�ொண்டிருந்தது. மணமகள் அறையிலிருந்து எங்கோ கயல்விழி நடந்து செல்வது தெரிந்தது. மணமக்கள் மேடைக்கு வந்தாயிற்று – குரூப் ப�ோட்டோ ஆரம்பமாகிவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரத்திற்கு நகர முடியாது. வீடிய�ோகாரன் எடுத்த பிறகு, தனியே ப�ோட்டோவை க்ளிக் செய்யவேண்டும். இவனின் கவனம் தடுமாறியது. அடிக்கடி வீடிய�ோகாரனும் உதவியாளனும் இவனை சமநிலைக்குக் க�ொண்டுவரவேண்டியிருந்தது. தேடினான் – கயலைக் காணவில்லை. வேலையில் கவனம் செலுத்தினான். திரும்பியவன் அதிர்ந்தான் – கயல்விழி இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். எதிர்கொள்ள முடியாமல் கேமராவை குரூப் பக்கம் திருப்பினான். மீண்டும் அவள் பக்கம் திரும்பினான். எந்த ஈடுபாடுமில்லாமல் இயந்திரமாய் பிரேம்களை நகர்த்திக்கொண்டிருந்தான். ஒருவழியாய் குரூப் வேலை முடிந்தது. மணமக்கள் சாப்பிட்டப் பின் ஒரு இடைவெளி. வேகமாக வெளியே வந்தவன் – சற்று தள்ளியிருந்த கடையில் ஒரு சிகரெட் பற்ற வைத்தான். கல்லூரி பேச்சுப் ப�ோட்டி – மதிக்கு இறுதியாண்டு. உள்ளூர் மகளிர் கல்லூரி முதலாமாண்டு மாணவியாய் கயல்விழி. மைக் முன்னால் ஆர்ப்பரித்தாள் – அமைதியானாள் – கவிதை ச�ொன்னாள் – வள்ளுவன், பாரதி என இடையிடையே துணைக்கழைத்து மழையாய் பெய்து ஓய்ந்தாள். அன்றிலிருந்து கயல்விழி மதியின் மனசின் ஓரத்தில் இருந்தாலும் உள்ளூரில் சில சமயம் அவளை எதிர்கொண்ட ப�ோது முழு மனசையும் ஆக்கிரமித்தாள். அடுத்த கவிதைப் ப�ோட்டியில் ம�ொழி அவளிடம் விளையாடியது. அவளின் ரசிகனானான். சில வரிகளை மனதில் குறித்துக்கொண்டான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. அவள் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்தான். அவளும் இவனைப் பார்த்தால். அவள் நூலகத்திற்கு வருவதை தற்செயலாய் கண்டுக�ொண்டு நூலகமே பலியாய் கிடந்தான். அவள் பார்வையில் படும்படி அமர்ந்தான் – நூல்களைத் தேடினான் – படிப்பதுப�ோல் படித்தான். கயல்விழி இதை இரசிப்பதாய்ப் பட்டதும் பரவசமானான். மெல்ல மெல்ல அவள் விழிகளும் காற்றுவெளி இலக்கிய இதழ்
37
இவனைத் தேடுவதை உணர்ந்தான். தூக்கம் ப�ோயிற்று – எதையெதைய�ோ எழுதினான் – அவை கவிதைகள் ப�ோல் தெரிந்தன. பல வெளிகளில் வெறித்தபடி உட்கார்ந்திருந்தான். ஒருவழியாய் முடிவுக்கு வந்து தனது விருப்பத்தைக் கடிதமாக்கிக் க�ொடுக்கக் காத்திருந்தான். நூலத்திற்கு வெளியே சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான். உள்ளே சென்ற கயல்விழி வந்தாகணும். பயமும், குழப்பமும் படபடக்க வைத்தன. கைக்குட்டையை அடிக்கடி முகத்தில் ப�ொத்தினாலும் வியர்வை வழிந்தபடி இருந்தது. காலம் ஏறக் குறைய நின்றுப�ோயிருந்தது. தன்னைக் கடந்து செல்பவர்கள் விந�ோதமாய் பார்ப்பதாய் உணர்ந்தான். கடிதத்தை கயல்விழி எப்படி எதிர்கொள்வாள் என திகிலாய் இருந்தது. த�ோழிய�ோடு சிரித்தபடி வெளியே வந்தவள், இவனைப் பார்த்ததும் தடுமாறினாள். மதி எதிரில் நின்றான் – கயல் நின்றாள் – த�ோழி தயங்கி செல்லத் துவங்கினாள். இருவரும் பார்த்துக்கொண்டனர். ஒருகணம் பார்வையை விலக்க முடியவில்லை. இதயம் நின்றுவிட, மதி, கடிதத்தை நீட்டினான். கை, லேசாக நடுங்கியது. கயல் வாங்கிக்கொண்டு விலகி நடந்தாள். மதி திரும்பிக்கூடப் பார்க்காமல், இடத்தை காலி செய்து வேகவேகமாய் நடந்துக�ொண்டிருந்தான் – அவனின் நடை, இந்த உலகில் எல்லாப் பாதைகளும் முடியும் வரை இருக்கும்போலிருந்தது. மதியின் கைபேசி மண்டபத்திற்கு அழைத்தது. கூட்டத்தின் பரபரப்பு அடங்கியிருந்தது. சில சடங்குகளை படம்பிடித்தான். மணமக்களை தனிப்படங்களாக எடுக்கவேண்டும். மணமகளின் அறையில் லைட்களை பவுன்ஸ் செய்து ஆரம்பித்தான். மணப்பெண் அழைத்துவரப்பட்டாள் – த�ோழி உதவியாய் உடன்வந்தாள் – சற்று தள்ளி கயல்விழி. அவ்வப்போது உள்ளே வந்து உதவினாள். இருவரும் பார்த்துக்கொண்டனர். மதி தடுமாறினான் – ப�ோகஸ் அவுட்டானது. திரும்பத் திரும்ப எடுத்தான். உதவிளானும் வீடிய�ோகாரனும் இவனின் பதற்றத்தை புரிந்துக�ொள்ள முடியாமல் விழித்தனர். கேமரா வழியே ஜூ ம் செய்து க்ளோசில் கயல்விழியைப் பார்த்தான். மணமக்களை ஜ�ோடி சேர்த்து எடுத்துத் தள்ளினான். உடன் கயல் உதவிக்கொண்டிருந்தாள். இப்போது க�ொஞ்சம் இயல்புநிலைக்கு மதி வந்திருந்தான். அவ்வப்போது கைகட்டி தீர்க்கமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். வயதை மீறிய நிதானம் – லாவகம் – அடிக்கடி கூந்தலை சரிசெய்தபடி இருந்தாள். அனைவரும் பட்டுப்புடவையில் இருந்தாலும் கயல் மட்டும் காட்டன் புடவையில் இருந்தாள். இன்னும் இளமையாயிருந்தாள். கேமரா வழியே இழுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் நாசுக்கான மிடுக்கு – அடுத்தவரிடம் வேலை வாங்கும் லாவகம் – உறவினர்களை தேடித் தேடிப் பேசிக்கொண்டிருப்பது என உற்சாகமாய் வலம் வந்தாள். இவனின் லென்ஸ் அவளை நெருக்கமாகவே வைத்திருந்தது. அவளை தனியே க்ளிக் செய்தான். ஒருவழியாய் வேலை முடிந்து, கேமராவை பேக் செய்து, அறையில் வைத்துவிட்டு, பேட்டரிகளுக்கு சார்ஜ் ப�ோட்டுவிட்டு நீண்ட வராந்தாவில், நாற்காலியைப் ப�ோட்டு அமர்ந்தான். ஆங்காங்கே சிலர் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு இளைஞன் அனைவருக்கும் தேநீர் வழங்கிக்கொண்டிருந்தான். நடுநிசியின் லேசான குளிர்க் காற்றுக்கு வெதுவெதுப்பான தேநீர் இதமாக இருந்தது. நூலக வாசலில் தினம் தினம் நின்றுபார்த்தான் – கயல்விழி காணவில்லை – கலவரமடைந்தான். ஒரு வாரத்திற்குப் பின் மதி வெளியே வரும்போது, கயல் வந்தாள். திரும்பி வந்து அவளை அவ்வப்போது கவனித்தான். அவளிடம் சலனமில்லை. கடிதம் எந்த
38
காற்றுவெளி இலக்கிய இதழ்
பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா – கிளம்பினாள் – பின்னாலேயே வந்தான் – பதிலில்லை நின்றுவிட்டான். இரண்டு நாள் கழித்து வாய்க்கால் கரையில் வந்துக�ொண்டிருந்தாள் – தற்செயலாய் பார்த்தவன் வண்டியில் பின்தொடர்ந்து முன்னால் சென்று நின்றுக�ொண்டான். கயல் நிறுத்தினாள் – மதி, தயங்கித் தயங்கி அருகில் சென்றான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ம�ௌனம். பறவைகள் படபடத்து மரத்திலிருந்து பறந்தன. வாய்க்காலின் தண்ணீர் ஓட்டம் வெளியே தெரியாமல் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. எங்கும் யாருமில்லை – அவர்களின் தனிமை அவர்களைப் பேச விடாமல் கடத்திக்கொண்டிருந்தது. கயல் அவனைப் பார்த்தாள் – அவனும் – குனிந்துக�ொண்டாள் – மீண்டும் பார்த்தாள். தனிமையும் அந்த அருகாமையும் தடுமாற வைத்தது. மதி அங்குமிங்கும் பார்த்தான். “என்னோட மனசை நான் எழுதிட்டேன் – என் மனசு முழுசும் நீ நிறைஞ்சு இருக்கறதை ச�ொல்லிட்டேன்” ஒருவழியாய் ச�ொல்லி முடித்தான். அவள் குனிந்தபடி ம�ௌனமாய் இருந்தாள். “என்னால உங்க லெட்டருக்கு இப்ப பதில் ச�ொல்ல முடியாது” குனிந்தபடி தெளிவாய் ச�ொல்லி முடித்தாள். கிளம்பினாள். “நில்லு, எப்ப ச�ொல்வே” “தெரியலே” ச�ொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தபடி சென்றுவிட்டாள். அதிலிருந்து, அடிக்கடி பார்த்துக்கொள்வதும் நண்பர்களைப் ப�ோல் பேசிக்கொள்வதுமாய் ஒருவருடம் ஓடிவிட்டது. ஒருநாள் திடீரென கயல்விழி மதியைத் தேடிவந்தாள். “எங்கப்பாவுக்கு, டிரேன்ஸ்பர் க�ொடுத்துட்டாங்க – திருநெல்வேலிக்கு – நாங்க இனிமே ஈர�ோட்டுக்கு வரமுடியாது...” அமைதி. “உங்க லெட்டருக்கு நான் இன்னக்கி பதில் ச�ொல்லனும். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. எங்க வீட்ல காதல் கல்யாணத்தை ஏத்துக்க மாட்டாங்க. என்ன மறந்துருங்க. நான் வர்றேன்” மதி நம்ப முடியாமல் விக்கித்து நின்றான். சென்றவள் திரும்பி வந்து, “நானும் உங்கள விரும்புறேன். என்னால வேற எதுவும் செய்ய முடியல. நான் ப�ோய்தான் ஆகனும்”. மதியைப் பார்த்தாள் – கயலின் விழிகள் கண்ணீரில் மிதந்துக�ொண்டிருந்தன. தலையை குனிந்தபடி நடக்கத் த�ொடங்கிவிட்டாள். மதியின் கலங்கிய கண்கள் வழியே கயல் மங்கலாக நடந்து சென்றுக�ொண்டிருந்தாள். மனசுக்குள் கதறி அழுதான். மண்டபத்திற்குள் நிறைய பேர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். வாராந்தாவில் பேசிக்கொண்டிருப்பவர்கள் குறைந்துப�ோனாலும் இருந்தனர். சில உறவினர்கள் இப்படி திருமணங்களில் சந்தித்துக்கொள்வதும், வருசக் கணக்கில் பேசவேண்டியவற்றை விடிய விடிய பேசிக்கொள்வதும் தான் அவர்களுக்கான வாய்ப்பு. மதிக்கு அயர்ச்சியாக இருந்தது. மறந்துவிடு என அன்றைக்கு ச�ொல்லிவிட்டு சென்றப�ோது ஏற்பட்ட வேதனை – துக்கம் – இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் நெஞ்சை அடைத்தது. இருபது வயது பையனின் காதல் த�ோல்வியின் ரணம், தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. காற்றுவெளி இலக்கிய இதழ்
39
கயல்விழியின் மேல் அப்போது ஏற்பட்ட காதல் மீண்டும் இப்போது மனசெங்கும். இருபது ஆண்டுகள் சட்டென பின்னோக்கி ஓடிவிட்டன. குறுகுறுப்பும் இனம்புரியாத சிலிர்ப்பும் உடலில் ஒவ்வொரு நரம்பிலும் ஒவ்வொரு செல்லிலும் ஓடி புதிதாய் பிறந்ததைப் ப�ோல் உணர்ந்தான். பறப்பது ப�ோன்ற இந்த உணர்வை இந்த வயதில் நம்பமுடியவில்லை. பின்னிரவின் குளிர் எல்லா இடங்களிலும் சில்லிட்டது கூட இதமாய் இருந்தது. வேறு நடுத்தர வயது மனிதன் தேநீர் க�ொடுத்துக்கொண்டிருந்தான். எழுந்து காலாற நடந்தான். நின்று திரும்பிப் பார்த்தான் – சீரியல் லைட் வெளிச்சத்தில் தேவல�ோகத்தில் மிதப்பது ப�ோல் மண்டபம் ஒளிர்ந்தது. கையில் கேமரா இல்லை. இவனை கடந்து சென்ற லாரியின் இரைச்சலும், அத�ோடு வந்த குளிர் காற்றும், நிகழ்காலத்தில் அடித்து நிறுத்தி சென்றது. சிகரெட் பற்ற வைத்தான். இந்த இரவு மனசில் எப்போதும் இருக்கும். கயல்விழி துங்கியிருப்பாள் – மண்பத்தில் எத்தனைய�ோ பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் – கயலுக்கும் எனக்கும் பேச எத்தனைய�ோ இருக்கின்றன. இருபது ஆண்டுகளை பேசித் தீர்க்க முடியுமா.? ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லா வயதிலும் சுவர்கள் இருந்துக�ொண்டுதான் இருக்குமா.? வாசனைப் பாக்கை மென்றுக�ொண்டு மண்பத்திற்கு வந்தான். வராந்தாவில் கயல்விழி ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள். மதி நின்று பார்த்துவிட்டு, இயல்பாய் அமர்வதுப�ோல் சற்று தள்ளி அமர்ந்துக�ொண்டான். கயல் பக்கம் திரும்பினான். இவனையே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது பார்த்தான். கயல் மட்டும் தனியே தேவதையாய் ஜ�ொலித்தாள். மனசின் படபடப்பு அதிகரித்தது – இந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. யாருமற்ற அந்த பாதையில், கைக�ோர்த்தபடி கயல�ோடு மதி பேசியபடி சென்றான். அவர்களைத் தவிர யாரையும் தெரிந்துக�ொள்ள முடியாத அளாவிற்கு மூடுபனி நீக்கமற எங்கும் ஊடுருவி நழுவிக்கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்துவிட்டு இருவரும் இறுக அணைத்துக்கொண்டனர். யுகங்களைத் தாண்டிய அந்த தழுவலில் இழைந்தும், குலைந்தும் ச�ொக்கிக் கிறங்கினர். மதி தனது காதலைத் தெரிவித்த அந்த கணத்தில் எப்படி இருந்தார்கள�ோ அப்படி – என்ன உடையிலிருந்தார்கள�ோ அதிலேயே – எப்போதும் ப�ோல் இந்த காட்சியில் இன்றும் மதி தன்னை இழந்திருந்தான். கயலை நினைத்து கண்களை மூடினால், இக்காட்சி உள்ளே ஓடத் துவங்கிவிடும் – அதில் ஒரு லயிப்பு. பல்லாண்டுகள் த�ொடரும் அனுபவம். சாலையில் வேகமாக சென்ற லாரியின் டயர் ஓசை திடுக்கிட வைத்தது. கைக்குட்டையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு கயலைப் பார்த்தான். புன்னகைத்தைபடி த�ோழிய�ோடு மதியின் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள். குனிந்தபடி இருந்தவன், “டீ குடிக்கிறீங்ளா, நான் க�ொண்டு வறேன்” எனத் தடுமாறி எழுந்தான். “இல்லயில்ல, குடிச்சிட்டோம். உக்காருங்க” கையைப் பிடித்து உட்கார வைத்தாள். “உடம்புக்கு சரியில்லயா? கை சுடுது” சுடுகின்ற நெருப்பாய் அனலாய் இருந்தாள். “ச�ொல்லுங்க, எப்போ ப�ோட்டோ கிராப்பர் ஆனீங்க?” “அப்ப தான் நீ ஊர உட்டு ப�ோன அதே வருசம்” மதியின் படபடப்பு சமநிலைக்கு வரவில்லை – சுற்றிலும் பார்த்தான். ஆங்காங்கே குறைவாகத்தான் இருந்தார்கள். “குழந்தைங்க”
40
காற்றுவெளி இலக்கிய இதழ்
“பையன் ஒன்னு. ப�ொண்ணு ஒன்னு. பையன் பிளஸ் ஒன், ப�ொண்ணு டென்த்” இருவருமே வேறு ஏத�ோ ய�ோசனையிலிருந்தது ப�ோலிருந்தது. “உன் குழந்தைங்க” “ஒரே பையன். தூத்துக்குடியில மெடிக்கல் படிக்கிறான். அவங்கப்பா குவைத்ல இருக்கார். நான் சென்னையில – கூட அம்மா இருக்காங்க. யுனிவர்சிடில புர�ொபசரா இருக்கன்.” சற்று ப�ொறுத்து, “உங்க வாழ்க்கை எப்படி ப�ோயிட்டிருக்கு. பராவாயில்லையா?” “ஊம், ஸ்டுடிய�ோ வெச்சிருக்கேன். வீடு கட்டிட்டேன். மனநிம்மதிங்கிறது வருமானத்துல இல்லயே” எங்கோ வெறித்துப் பார்த்தான். “நிஜந்தான்” ம�ௌனம். “மனநிம்மதி அவ்வளவு சுலபமில்ல. வாழ்க்கையில திருப்தி கெடச்சடுறதில்ல. நாம எப்பவுமே யாராலய�ோ வஞ்சிக்கப்பட்ட நினைப்போடயே இருக்கோம்.” கயலும் வேறு எங்கோ பார்த்தபடி இருந்தாள். இருவரும் சம்பந்தமில்லாமல் பேசுவதுப�ோல் பட்டது. கயலின் த�ோழி, செல்போனை ஆராய்ந்துக�ொண்டிருந்தாள். மண்டபத்தின் நிசப்தம், சில்வண்டின் சீரான தாளத்தை துள்ளியப்படுத்திக்கொண்டிருந்தது. “குழந்தைங்களுக்கு என்ன பேரு” “பையன் கபிலன். ப�ொண்ணு கயல்விழி” மதி தடுமாறினான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.கயலும் கண்கலங்கினாள்.கடந்த காலத்தில் சந்தித்ததும் – மயங்கிக் கிடந்ததும் – விலகி பழகியதும் ஒன்றுவிடாமல் கணப்பொழுது ஓங்கி அடித்துச் சென்றது. இருவரும் அதில் லயித்து நனைந்து நின்றனர். கயல் சுதாரித்துக்கொண்டு முந்தாணையில் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சிரித்தாள் – அதில் விரக்தியும் வேதனையும் கலந்து பரிதாபமாக இருந்தது. “படிப்படியா மறந்து முழுசையும் மனசுலேருந்து த�ொடச்சி எறிஞ்சிடுறத விட்டு இப்படி புள்ளக்கிப் பேரு வெச்சி தினந் தினம் நெனச்சிட்டிருப்பிங்ளா... என்ன ச�ொல்றதுன்னே தெரியல.” தேநீரைப் பெற்றுக்கொண்டு இயல்புநிலைக்கு வர முயற்சித்தாள். “என்னோட கயல்விழி, எப்பவுமே என்னோட இருப்பா.” “யாரும் எப்பவும் கூட இருக்கமாட்டாங்க” தனக்குள் ச�ொல்லிக்கொண்டதைப் ப�ோல் மெதுவாகக் கூறி எங்கோ பார்த்திருந்தவள், “என்னோட வாழ்க்கையில அவரு, வருஷம் ஒருவாட்டிதான் வருவாரு. அதனால என்ன – எப்பவும் தனிமை தான் – ஆனா எனக்கு அப்படித் தெரியல.” சாதாரணமாக ச�ொல்லிவிட்டாள். மதி, அதை நம்பவில்லை. அவள் தன்னை வேறு மாதிரி காட்டிக்கொள்கிறாளா? ஈக�ோவில் பேசுகிறாளா? இல்லை இதுதான் அவளின் நிஜமா – அவள் சமாளிக்கிறாள் என நினைத்தான். “எதையும் நாம தீர்மானிக்கிறதில்ல – அந்தந்த தருணங்கள்ல எடுக்குற முடிவுகள். நாம எடுக்குறதில்ல – சூழல் – அத ஏத்துக்கணும் – காலம் எத குடுக்குத�ோ அத – எப்படி காற்றுவெளி இலக்கிய இதழ்
41
குடுக்குத�ோ அப்படி – யாரும் எதையும் பறிக�ொடுத்தற்ல – கடந்த காலத்துல வாழவும் தேவையில்ல – என்ன ப�ொறுத்தவரைக்கும் நான் படிக்கவேண்டியது எழுதவேண்டியது பயணம் செய்யவேண்டியதுன்னு நிறைய இருக்குது.” கயல்விழி இயல்பாய் ச�ொல்லிவிட்டாள். அவளின் இத்தனை வருட வாழ்க்கை இத்தனை வருட வாசிப்பு அவளை இப்படி பக்குவப்படுத்தியிருக்கிறது. இழந்துப�ோன காதலை கடந்துவந்துவிட்டாள். காலம் வெவ்வேறு இடங்களில் க�ொண்டுப�ோய் அதன�ோடு ப�ொருத்திவிடுகிறது. கயலும் அப்படி தன்னை ப�ொருத்திக்கொண்டுவிட்டாள். ஆனாலும் கலங்கிய அவளின் கண்கள் – மறைத்துக்கொண்டாள். மதி, சலனமில்லாமல் இருந்தான். என்ன ச�ொல்கிறாள் இவள் – இவ்வளவு தானா – காதலின் ஆழத்தில் பயணப்படவில்லையா? வலியும் வேதனையும் மனசைக் கவ்விப் பிடித்து ஆக்கிரமிக்கவில்லையா? இரவின் சலமில்லாத அமைதி கனவுலகில் சஞ்சரிப்பதுப�ோல் நகர்ந்துக�ொண்டிருந்தது. “இது என்னோட ரெண்டு கவிதைத் த�ொகுப்பு.. படிங்க” மதி வாங்கிக்கொண்டான். ‘கயல் கவிஞியா’. பிரமிப்போடு பார்த்தான். “கயலுங்குற பேர்ல எழுதுறது நீன்னு எனக்கு தெரியாம ப�ோச்சு... அப்பப்போ பத்திரிக்கைகள்ல வாசிச்சிருக்கேன்.” புரட்டிப்பார்த்தான். “சரி, நான் ப�ோய் தூங்கணும். பாப்போம்” கிளம்ப எழுந்தாள். “கயல் க�ொஞ்சம் உக்காரேன். ப்ளீஸ்” உட்கார்ந்துக�ொண்டாள். “ச�ொல்லுங்க” “என்ன ச�ொல்றது – ச�ொல்றதுக்கு ஒன்னுமில்ல... க�ொஞ்சம் நேரம் இப்படியே இருப்போம்.. மறுபடியும் எப்ப பாப்போம்” ஒருவரைய�ொருவர் பார்த்தபடியிருந்தனர். கயலின் பார்வை தகித்தது. மதி, தாங்க முடியாமல் குனிந்துக�ொண்டான். “அடிக்கடி பாப்போம். நிறைய பேசுவ�ோம்” அமைதியாக இரவு நகர்ந்துக�ொண்டிருந்தது. இருவருக்கும் இந்த ம�ௌனம் – இந்த அருகாமை, இதமாக இருந்தது. விடியும் வரை இருந்தாலும் தித்திக்காதுப�ோல் பார்த்துக்கொண்டனர். மதி கிட்டத்தட்ட உருகிவிட்டிருந்தான். தாங்காது ப�ோல் எண்ணி கயல் ம�ௌனமாக எழுந்து சென்றுக�ொண்டிருந்தாள். மதி பித்தநிலையில் நீடித்தான். சற்று ப�ொறுத்து தனித்துவிடப்பட்டதை உணர்ந்தான். திருமணம் முடிவுக்கு வந்திருந்தது. கயல்விழி மணப்பெண்ணோடு உதவியாய் இருந்தாள். மதியை சாப்பிட வைத்தாள். இப்போது ஓரளவுக்கு சகஜமாகியிருந்தான். கிளம்புவதற்கு பேக் செய்தாகிவிட்டது. மண்டபத்திற்குள் சென்று பார்த்தான் - கயலைக் காணவில்லை – கிளம்ப எழுந்தான். ஒரு பைய�ோடு வந்த கயல் அதை அவனிடம் க�ொடுத்தாள். “க�ொஞ்சம் சுவீட் பழங்கள். சென்னை வந்தா அவசியம் வாங்க. ப�ோன் பண்ணுங்க. என்னோட கார்டு” பெற்றுக்கொண்டான். கிளம்புவதை பார்த்திருந்தவள் வேகமாக வந்து, “உங்கள�ோட கயல்வியை நான் பாக்கனும். குடும்பத்தோட வாங்க. இல்லேன்னா, நான் வர்றேன்.” புன்னகைத்துவிட்டு கிளம்பினான் மதி. கயல்விழி பார்த்திருந்து உள்ளே சென்றாள்.
42
காற்றுவெளி இலக்கிய இதழ்
அந்தகாரம்
மல்லை.மு.இராமநாதன்
நட்சத்திர ஒளியில் வானப் ப�ோர்வை இருட்டு சிறையில் ஏழைகள் தெரு மின் கம்பத்தின் உல�ோகக் க�ோடுகள் மீது உட்கார்ந்தது குருவிகள் . காற்று வந்து கம்பி அறுத்தது. குருவிகள் எரிந்து தரையில் விழுந்தது
தெரு நாய்கள் ஊளையிடல் மனு தந்தும் கேளாத செவி யினர். ப�ொழுதே ப�ோ, காசேவா “. க�ொள்கையில் சத்தியம் புரிந்த மின் ஊழியர்கள் மின் குருதியற்ற கரங்களாய் கம்பிகள் த�ொங்கிக் க�ொண்டிருந்தன. சிரமிழந்த இலைகளாய் விளக்கற்ற கம்பம் தன் இருப்பை காட்டக் கூட கம்பத்திடம் ஒளியில்லை. தீப்பெட்டி தேவைப்படாத மின் சாரம் நம்பிய வாழ்வு மாற்று ஒளி தேட எதிர்மனை ஏகும் ப�ோது கம்பத்தில் ம�ோத காயம் அவனுக்கு.. வீட்டு மின் விசிறிக்கு விடுமுறை காற்று கைது செய்யாத வெப்பம் த�ொட்டில் குழந்தை மேனியில் வியர்வை தெப்பம் . பசியும் வெப்பமும் பச்சிளம் மழலையை கிள்ள, அதன் அழுகை ஒலி காற்றில் பயணித்து காற்றுவெளி இலக்கிய இதழ்
கடைக்கோடி வீட்டின் கதவை தட்டியது. பாலுத்குத்தான் அழுமென்று பால் பாக்கெட் டுடன் பாட்டி வருகிறாள். அந்த வர்த்தியின் திரவ சுடர் விரல்கள் இருளை மெது மெதுவாய் நகர்த்துகிறது திரவ கண்ணீரை குழந்தைக்காக வடிக்கிறது. அந்த நிசப்த நிமிடங்களை கலைத்துக் க�ொண்டு வான�ொலி செய்தி வருகிறது. மக்களின் அடிப்படை மற்றும் அவசியத் தேவைகளை அலட்சியப்படுத்தும் அரசை அகற்றுவ�ோம் என்று எதிர்கட்சி தலைவர் முழங்கினார்.
43
பட்டாசு உன் ஆடையைக் கிழித்து காற்றின் நிறமற்ற ஆடையை கிழிக்கிறாய்! ஒவ்வொரு வீட்டின் வாசலும் உனக்கு மயானம்! வெடிக்கும் சத்தம் உன் கதறல் ஒலியா? காற்றின் அலறல் ஒலியா? பூமித்தாயின் வாயில் மனிதன் பற்ற வைக்கும் சுருட்டு பட்டாசு! உன்னோடு விளையாடும் சிறுவர்களின் உயிர�ோடும் விளையாடி விட்டே செல்கிறாய்! கடவுளையே கிழித்து க�ொண்டாடுகிறார்கள் இலட்சுமி பட்டாசு என!
சா. கா. பாரதி ராஜா ஓர் உண்மை எப்போது புலப்படும�ோ? நரகாசுர வதத்தை உன்னுயிர் குடித்து க�ொண்டாடுகிறார்கள் இயற்கையின் நரகாசுரர்கள்! தெருவெங்கும் தேவையன்றி சிதறிக் கிடக்கிறது இயற்கையின் த�ோல்! புகைந்து க�ொண்டிருக்கிறது பலரது உழைப்பும் உடல்களும் மூச்சுகளும்! அரக்கனின் நா பட்டாசின் நா! அன்பின் நா தீபத்தின் நா! தீபத்தை ஏற்றுவ�ோம்! தீயதை தவிர்ப்போம்!