Vellimalar

Page 1

16-6-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

ற ே வ தி ரி மா

பிரபுதேவா! ‘குலேபகாவலி’குதூகலம்!


2

வெள்ளி மலர் 16.6.2017


16.6.2017 வெள்ளி மலர்

3


வேறமாதிரி பிரபுதேவா! ‘குலேபகாவலி’ குதூகலம்

“எ

ந ்த ஸ் பீ ட ்ல ஆரம்–பிச்–ச�ோம�ோ அதே ஸ்பீட்ல 80 சத– வீ – த ம் ஷூட்– டி ங்கை முடிச்– சிட்– ட �ோம். அதுக்கு முழு கார– ண– மு ம் பிரபு– தே வா சார்– தா ன். பாலி– வு ட் ஸ்டார்– ஸ ையே ஆறு மாசத்–துல இயக்கி முடிக்–கி–ற–வர் அவர். தானே ஹீர�ோவா நடிக்– கிற படம்னா சும்மாவா இருப்– பாரு. ஜெட் வேகத்–துல முடிச்சு க�ொடுத்– தி – ரு க்– கா – ரு ” என புது ‘குலே– ப காவலி– ’ யை இயக்– கு ம் கல்–யாண் குதூ–க–லிக்–கி–றார்.

4

வெள்ளி மலர் 16.6.2017


“எம்–ஜி–ஆர் படம் குலே–ப–கா–வலி. இந்த தலைப்பை வைக்க என்ன கார–ணம்?” “கார–ணம் இல்–லாம இல்லை. இப்போ கூட இந்த தலைப்பை கேட்–கும்–ப�ோது ஒரு–வித கவர்ச்சி தெரி–யும். மாய–தந்தி – ர பெயர் ப�ோல ஃபீலிங் தரும். அதற்–காக மட்–டுமே இதை தேர்வு பண்–ணல. படத்– து ல ஒரு முக்– கி ய ப�ோர்– ஷ ன் இருக்கு. அதுக்கு ர�ொம்–பவே ப�ொருந்–துற மாதிரி இந்த தலைப்பு இருந்–துச்சு. முறைப்–படி அனு–மதி வாங்கி வச்–சிட்–ட�ோம். தலைப்பு வச்–சிட்டு கதை பண்ற மெத்– த ட் எனக்கு வராது. முழு கதை– யு ம் பண்–ணிட்டு இதுக்கு என்ன தலைப்பு வைக்–க– லாம்னு ய�ோசிக்–கி–றப்போ, நிறைய தலைப்–பு–கள் த�ோணுச்சு. அதுக்கு நடுவே ‘குலே–ப–கா–வ–லி–’–யும் மன–சுல பட்டது. பட டீம் எல்–ல�ோ–ருமே ‘குலே–ப– கா–வலி – ’– த – ான் பெஸ்ட்–டுன்னு ச�ொன்–னாங்க. அந்த அள–வுக்கு இது கதைக்–கான அடை–யா–ளமா இருந்– துச்சு. அத–னா–ல–தான் வச்–ச�ோம்.” “இந்த ‘குலே–ப–கா–வ–லி’ என்ன கதை?” “பிளாக் காமெடி படம். தமிழ் சினி–மால பிளாக் காமெடி ஜானர்ல படங்–கள் ர�ொம்ப குறை–வாத்– தான் வருது. அந்த குறையை ப�ோக்–குற வித–மாக இந்த படம் இருக்–கும். இந்த வகை–யறா படங்–க– ளுக்–குன்னு இளம் ரசி–கர்–கள் நிறைய பெரு–கிட்டு வர்–றாங்க. வெளி–நாட்–டுல வர்ற பிளாக் காமெடி படங்–களை ரசிக்–கிற நம் நாட்டு இளம் ரசி–கர்–களும் பெரு–கிட்டு வர்–றாங்க. ஆனா நம் நாட்–டுல அந்த அள–வுக்கு இந்த வகை படங்–களை எடுக்க மாட்– டேங்–கி–றாங்க. அது ஏன்னு தெரி–யல. பாலி–வுட்ல கூட இடை–யில சில படங்–கள் பிளாக் காமெடி ஜானர்ல வந்–துச்சு. ஆனா த�ொடர்ந்து அவங்–களு – ம் ஆக்‌ ஷ – ன், ரீமேக் படங்–களு – ன்னு வேற மாதிரி பிசி ஆயிட்–டாங்க. ஒரு மாதிரி த்ரில் மூடை க�ொடுத்– துக்–கிட்டே, சிரிக்–கவும் வைக்–கிற வித்தை இந்த ஜான–ருக்கு மட்–டும்–தான் இருக்கு. அத–னா–லத – ான் இதை கதைக் களமா எடுத்–தேன். 1947ல் நடக்–கிற கதை, பிறகு 2017ல் இப்போ நடக்–கிற கதைன்னு ரெண்டு கால–கட்–டத்தை ச�ொல்ற படமா இது இருக்– கும். 1947ன்ன–தும் சுதந்–திர ப�ோராட்–டமு – ம் ஆகஸ்ட் 15ம்தான் நினை–வுக்கு வரும். அதை–ய�ொட்–டித – ான்

அந்த பீரி–யட் காட்–சி–கள் வரும். அதுல ரசி–கர்–கள் பாக்–கப்–ப�ோற பிர–பு–தேவா வேற மாதி–ரியா இருப்– பார். அந்த பீரி–யட்ல ஹன்–சிகா இருக்க மாட்–டார். அதுல பிர–புதே – வ – ா–வுக்கு ஜ�ோடி வேற�ொரு நடிகை. அது யாருங்–கிற – து சஸ்–பென்ஸ். 2017ல் ஹைடெக் இளை–ஞனா வர்ற பிர–புதே – வ – ா–வ�ோடு ஹன்–சிக – ாவை பார்க்–கல – ாம். ரெண்டு கால–கட்–டத்–துக்–கும் முடிச்சி ப�ோடுற விதமா திரைக்–கதை இருக்–கும்.” “பிர–பு–தே–வா–வுக்கு டபுள் ர�ோலா?” “அது எல்–லாமே இப்–ப�ோதை – க்கு சஸ்–பென்ஸ். அப்பா, பையன் கதையா, மறு ஜென்ம கதை– யான்னு எல்–லாம் சந்–தே–கம் வரும். ஆனா, அந்த மாதிரி எது–வுமே கிடை–யாது. படத்–துல ரசி–கர்–க– ளி– ட ம் ஹீட்டை உண்– ட ாக்– கு ற ஆக்‌–ஷ – ன�ோ டு எம�ோ–ஷன் கலந்த ஏரி–யாவா 1947 கதைக்–க–ளம் இருக்–கும். பக்கா காமெடி பிளஸ் மசாலா கலந்த ஏரி–யாவா 2017 கால–கட்–டம் இருக்–கும். இந்த ரெண்– டை–யும் இணைக்–கிற விஷ–யம் படத்–துல இருக்கு. அது எல்–லாமே சர்ப்–பி–ரைஸ் சமாச்–சா–ரங்–களா இருக்–கும். பிளாக் காமெ–டின்னு ச�ொன்–னா–லும் ஃபீல் குட் மூவிங்–கிற உணர்–வையு – ம் படம் தரும்.” “இந்த மாதிரி கதையை பிர–பு–தேவா செலக்ட் பண்ண ஏதா–வது கார–ணம்?” “குறும்–ப–டங்–களை இயக்–கிட்டு இருந்த நான், சினி–மா–வுக்கு வர கடு–மையா ப�ோரா–டிட்டு இருந்– தேன். அந்த நேரத்–து–ல–தான் ‘கதை ச�ொல்–லப் ப�ோற�ோம்’ படம் பண்ற வாய்ப்பு அமைஞ்–சது. முழுக்க சிறு–வர்–களை மையமா வச்சு பண்–ணி– னேன். விமர்–சக – ர்–கள – ால் க�ொண்–டா–டப்–பட்ட படம். பிறகு அடுத்த படம் வேற�ொரு ஜானர்ல பண்ண ய�ோசிச்சு இந்த கதையை எழு–தினே – ன். நயன்–தாரா நடிப்–புல ‘அறம்’ படத்தை எடுத்–துட்டு இருக்–கிற தயா–ரிப்–பா–ளர் ராஜேஷ்–கிட்ட கதை ச�ொன்–னேன். அவர்–தான் பிர–புதே – வ – ா–விட – ம் ச�ொல்–லும்–படி நேரம் வாங்கி க�ொடுத்–தாரு. எந்த இமேஜ்–லேயு – ம் சிக்–காத பிர–பு–தேவா இந்த வகை படத்–துக்கு ஃபிரெஷ்ஷா இருப்–பா–ருன்னு நம்–பி–னேன். அவ–ரும் அதைத்– தான் ஃபீல் பண்– ணி – ன ார். படம் டேக்– ஆ ஃப் ஆயிடுச்–சி.”

16.6.2017 வெள்ளி மலர்

5


“அவ–ரும் பிர–பல டைரக்–டர். உங்க வேலை–யில அவ–ர�ோட தலை–யீடு ஏதா–வது?” “அவர் அந்த மாதி–ரி–யான கேரக்–டர் கிடை–யாது. அவர் ஒரு படத்–துக்கு டான்ஸ் மாஸ்–டர்னா அந்த வேலையை மட்–டும்–தானே பார்ப்–பார். அந்த மாதி–ரி– தான். அவர் நடி–கர்னா அந்த வேலையை மட்–டுமே சின்–சி–யரா பார்ப்–பார். அதுக்–காக ஆல�ோ–ச–னை– யெல்–லாம் ச�ொல்–லாம இருக்க மாட்–டார். ஆனா, இறுதி முடிவு டைரக்–டர்–கிட்–ட–தான் க�ொடுப்–பார். அந்த மாதிரி சூழ–லும் அதி–கம் வரல. ஏன்னா, டைரக்–டர் என்ன விரும்–பு–றார�ோ அதை பிர–சென்ட் பண்ண நினைக்– கு ற ஹீர�ோ அவர். டைரக்– ட ர் மட்–டுமே கிடை–யாது, புர�ொ–டி–யூ–ச–ரும் கூட. அத– னால இன்–ன�ொரு தயா–ரிப்–பா–ள–ர�ோட வலியை நல்லா உணர்ந்து இருக்–காரு. ஒரே நேரத்–துல பல படங்–கள் பண்–ணி–னா–லும் கால்–ஷீட் பிரச்னை வராம பார்த்–துக்–கு–வார். அவ–ர�ோட ஒத்–து–ழைப்பு இல்–லேன்னா, படு வேகமா இந்த படத்தை முடிக்– கிற ஸ்டே–ஜுக்கு க�ொண்டு வந்–தி–ருக்க முடி–யா–து. “காமெடி கதைங்–கிற – த – ால பெரிய காமெடி கேங் படத்–துல இருக்–குமே?” “கண்–டிப்பா இருக்கு. ம�ொட்டை ராஜேந்–திர– ன், முனிஸ்–காந்த், ஆனந்–த–ராஜ், மன்–சூர் அலி–கான், சத்–யன்னு காமெடி சர–வெ–டியை வெடித்து ப�ோட இவங்–க–ளும் இன்–னும் பல முகங்–க–ளும் படத்–துல இருக்கு. சீரி–ய–ஸான ர�ோல்ல ரேவதி நடிச்–சி–ருக்– காங்க. ர�ொம்ப பவர்ஃ–புல் கேரக்–டர் அவங்–களு – க்கு. வில்–லன் மது–சூ–த–ன–னுக்–கும் முக்–கிய கேரக்–டர். ரவி– வ ர்– ம – ன�ோ ட அச�ோ– சி – யே ட் ஆனந்த்– கு – ம ார் ஒளிப்–ப–திவு பண்–ணி–யி–ருக்–கார். விவேக் மெர்–வின் இசை. சுரேஷ் அர்–ஸ�ோட அச�ோ–சி–யேட் விஜய் வேல்–குட்டி எடிட்–டிங். “ஹன்–சி–கா–வ�ோட கேரக்–டர் என்ன?” “இந்த கால–கட்–டத்–துக்–கான மாடர்ன் ப�ொண்ணு. காமெடி, ர�ொமான்ஸ்ன்னு ரெண்டு விதத்–துக்–கும் ரெண்டு வித– ம ான பாடி– ல ாங்– கு – வேஜை அவர் படத்–துல யூஸ் பண்–ணியி – ரு – க்–கார். அது ரசி–கர்–களை

6

வெள்ளி மலர் 16.6.2017

அப்–படி – யே இழுத்–துப்–ப�ோடு – ம். ர�ொம்–பவே சின்–சிய – ர் நடிகை. மே மாசம் சென்னை வெயில் எப்–படி இருந்– துச்–சுன்னு ச�ொல்–லத் தேவை–யில்லை. சென்னை ர�ோடுல்ல ஒரு நாள் முழுக்க அந்த வெயில்ல ஷூட்–டிங் நடத்–தி–னப்போ, ஹன்–சிகா க�ொடுத்த ஒத்– து – ழை ப்பை மறக்க முடி– ய ாது. வேற�ொரு நடி– கை யா இருந்– த ாங்கனா, இந்த அள– வு க்கு க�ொளுத்– து ற வெயில்ல த�ொடர்ச்– சி யா நடிச்சு க�ொடுத்–தி–ருப்–பாங்–க–ளான்னு தெரி–யல. படத்–துல பிர–புதே – வா-ஹன்–சிக – ா–வ�ோட காம்–பினே – ஷ – ன் ர�ொம்ப கலர்ஃ–புல்லா வந்–தி–ருக்கு. பெஸ்ட் ர�ொமான்ட்–டிக் ஜ�ோடின்னு கூட இவங்–களை ச�ொல்–ல–லாம். “படத்–துல ஹெவி–யான மெசேஜ் ஏதா–வது?” “சுதந்–திர ப�ோராட்ட கால–கட்–டம்னு ச�ொன்–னது – ம் கண்–டிப்பா தேச–பக்தி பற்றி கருத்து ச�ொல்ற படமா இருக்–கும்னு நினைக்–க–லாம். ஆனா, இது அந்த மாதிரி படம் இல்ல. சினி–மால நல்ல மெசேஜ் ச�ொல்– றது நல்ல விஷ–யம்–தான். ஆனா, ஒரு படம் என்ன பேச–ணும்–கிற – தை அந்த படத்–த�ோட கதை–தான் தீர்– மா–னிக்–குது. கதையை எழு–திட்டு, திரைக்–கதையை – உரு–வாக்–கும்–ப�ோது, ஒவ்–வ�ொரு விஷ–யத்–தை–யும் முடிவு பண்–ற–தும் கதை–தான். கதையை மீறி சில விஷ–யங்–களை திரைக்–க–தை–யில புகுத்–தும்–ப�ோது அது திணிப்பா மாறி–டும். இல்–லேன்னா நாட–கத்– த–னமா தெரி–யும். அந்த மாதிரி தவ–றுக – ள் நடக்–காம பாத்–துக்–கி–றது ஸ்கி–ரிப்ட் ரைட்–ட–ர�ோட வேலை. அந்த விதத்–துல நான் கவ–னமா இருக்–கேன். இந்த படத்–த�ோட கதை, எந்த மெசே–ஜை–யும் கேட்–கல. இது பக்கா என்–டர்–டெ–யின்–மென்ட்–தான். அதுல சினி–மா–வுக்–கான எல்லா கல–வை–யும் இருக்–கும். படம் முடிஞ்சு வெளி–யில வரும்–ப�ோது, இந்த படம் இந்த விஷ– ய த்தை பேசி– யி – ரு க்– கு ன்னு மன– சு ல த�ோணும்–ப�ோது அது–கூட ஒரு மெசேஜ்–தான். ஆனா அது எந்–தவி – த – த்–திலு – ம் திணிப்பா இருக்–கக்–கூட – ா–து.

- ஜியா

அட்டை மற்றும் படங்கள்:

‘குலேபகாவலி’


மிழ் சினி–மா–வில் எப்–ப�ோ–தா–வது அத்தி பூக்–கும். சமீ–பத்–தில் பூத்–தது ‘ஒரு கிடா– யின் கருணை மனு’. எளி– மை – ய ான கதையை மிக அழுத்–த–மான வடி–வில் ச�ொல்லி அத்–தனை பேரை–யும் திரும்–பப் பார்க்க வைத்–தி–ருக்–கி–றார் இயக்–கு–நர் சுரேஷ் சங்–கையா. விரு–து–ந–கர் மாவட்–டத்–துக்–கா–ர–ரான இவ–ருக்கு 33 வய–தா–கி–றது. “வர–லாற்–றின் மிக நெடிய நம் கலா–சா–ரத்தை பிர–தி–ப–லிக்–கும் படங்–கள் தமி–ழில் அவ்–வ–ளவா வர–வில்–லையே என்–பது எனக்கு இருக்–கும் குறை. இந்த ஜான–ரில் நாமளே படம் செய்–யணு – ம்–னுத – ான் இந்–தப் படத்தை செஞ்–சி–ருக்–கேன். எழுத்–தா–ளர் கி.ராஜ–நா–ரா–ய–ணின் ‘க�ோபல்–ல–பு–ரத்து மக்–கள்’ நாவல்–தான் இந்த கதைக்கு இன்ஸ்–பி–ரே–ஷன். ப்ளாக் ஹ்யூ–மர் உத்–தியை பயன்–ப–டுத்–தி–னேன். ராஜ–பா–ளைய – ம் பக்–கத்–துலே டி.கரி–சல்–குளம்னு ஒரு கிரா–மத்தை சேர்ந்–தவ – ன். அப்பா சங்–கையா, ஆலங்–கு–ளத்–தில் உள்ள தமிழ்–நாடு சிமென்ட் ஃபேக்–டரி – யி – ல் பணி–புரி – கி – ற – ார். அம்மா சுப்–புல – ட்–சுமி. தங்கை சுமதி. பி.எஸ்.சி கம்ப்–யூட்–டர் சயின்ஸ் படித்த நான், பிரை–வேட் பேங்க் ஒன்–றில் டைப்– பிஸ்ட்– ட ா– க ச் சேர்ந்– தே ன். மாதம் நாலா– யி – ரம் ரூபாய் சம்–பள – ம் கிடைத்–தது. பிறகு மேனே–ஜர– ா–க

பதவி உயர்வு பெற்று, பதி–னைஞ்–சா–யிர– ம் சம்–பள – ம் வாங்–கினே – ன். ஆனா, சினிமா ஆர்–வம் விஸ்–வரூ – ப – ம் எடுக்–கத் த�ொடங்–கிய – த – ால், வேலையை ராஜி–னாமா செய்–து–விட்–டேன். செல்–வம்னு எங்க ஊர்க்–கா–ரரு உல–கப்–ப–டங்– களை திரை–யிட்டு காட்–டு–வார். அப்போ சசி–ய�ோட ‘பூ’ படத்–தில் அச�ோ–சி–யேட் கேம–ரா–மே–னாக ஒர்க் பண்–ணிக்–கிட்–டிரு – ந்த மணி–கண்–டன், செல்–வத்–தின் நெருங்–கிய நண்–பர். அவர் மூல–மா–தான் மணி–கண்– ட–னி–டம் வந்–தேன். ஒரு நாலு வரு–ஷம் அவ–ர�ோட இருந்–த–துக்கு பிறகு, ‘காக்கா முட்–டை’ படத்–துலே உதவி இயக்–கு–ந–ரா–கப் பணி–யாற்–றி–னேன். நாமளே டைரக்ட் பண்–ண–லாம்னு தன்–னம்– பிக்கை வந்–த–தும் ச�ொல்–லிட்டு வெளியே வந்து இந்த கதையை எழு–தி–னேன். இதைப் படிச்–சிட்டு மணி–கண்–டன், அவரே இந்–தப் படத்தை தயா–ரிக்க விரும்–பி–னாரு. சில கார–ணங்–க–ளாலே அவராலே முடி– ய ா– த – த ாலே, ஈராஸ் இன்– ட ர்– நே – ஷ – ன ல் கம்பெனிக்கு என்னை அறி–மு–கம் செஞ்சு வெச்– சாரு. அவங்–க–ளுக்–கும் என் கதை பிடிச்சிருந்–த– தாலே, இப்போ உங்க முன்–னாடி டைரக்–டரா நிக்–கு–றேன். திற–மை–யான கலை–ஞர்–களை கண்–டு–பி–டித்து சினி–மா–வில் அறி–மு–கப்–ப–டுத்–த–ணும் என்–ப–து–தான் என் ஆசை. என் கிட்டே நிறைய காசு சேர்ந்–த– துன்னா, மற்ற இயக்–கு–நர்–களை வெச்சு படம் தயா–ரிப்–பேன். அடுத்து ‘கட–வுள் ஏன் கல்–லா–னான்’ என்–கிற படத்தை இயக்–கு–கி–றேன்” என்–றார். “கல்–யா–ணம்?” “காத–லில் மூழ்கி முத்–தெ–டுத்–துக்–கிட்–டி–ருக்– கேன் பாஸ். சினிமா த�ொடர்–பில்–லாத ப�ொண்ணு. சீக்–கி–ரமா உங்–க–ளை–யெல்–லாம் கூப்–பிட்டு கல்– யாண சாப்–பாடு ப�ோடு–றேன்.”

ஓர்

- தேவ–ராஜ்

இயக்குநரின்

காதல மனு! 16.6.2017 வெள்ளி மலர்

7


‘வளை–யல்’ ஆடி–ய�ோ– வி–ழா–வுக்கு வந்த வனப்–பான பவ்–யா.

நடி–கர் சங்–கம், தயா–ரிப்– பா–ளர் சங்–கம், அடுத்–தது அரசி–யலா?: ‘சுவாதி க�ொலை வழக்–கு’ நிகழ்– வில் விஷால், அஜ்–மல் ஹேப்பி டாக்.

‘குரங்கு ப�ொம்–மை’ ஆடிய�ோ ரிலீ–ஸில் அழகு ப�ொம்–மை–யாக த�ோன்–றிய டெல்னா டேவிஸ்.

8

வெள்ளி மலர் 16.6.2017


‘குரங்கு ப�ொம்–மை’ சிடியை வெளி–யிடு – ம் சிபி–ராஜ், விதார்த், டைரக்–டர் தரணி மற்–றும் படக்–குழு.

‘ஒண்–டிக்–கட்–ட’ பட–விழ – ா– வுக்கு ஒண்–டியா – க வந்த நேகா.

செல்ஃபீ எடுக்–கி–றார் டைரக்–டர் விஜய்–ய�ோடு ஜாலி பிர–காஷ்–ராஜ்.

16.6.2017 வெள்ளி மலர்

9


ரம்யாகிருஷ்ணன்

?

அரசியலுக்கு வருவாரா

கலை–ஞ–ரின் வச–னத்தை சிவா–ஜிக்கு பிறகு மிகச்–ச–ரி–யாக உச்–ச–ரித்து நடித்–த–வர் யார்? - எஸ்.ஏ.பி.தஸ்–கீன், மவ்–ஸன்–பேட்டை. கலை–ஞர் வச–னம் எழு–து–கி–றார் என்–றாலே, மிகச்–ச–ரி–யாக தமிழை உச்–ச–ரிக்–கக்– கூ–டிய நடி–கர்–கள – ை–தான் இயக்–குந – ர்–கள் தேர்ந்–தெ–டுப்–பார்–கள். எனவே கலை–ஞரி – ன் வச–னத்–தில் நடித்–த–வர்–கள் கிட்–டத்–தட்ட அனை–வ–ருமே திற–மை–யா–ன–வர்–கள்–தான். சிவா–ஜிக்கு பிறகு குறிப்–பிட்டு ஒரு–வரை ச�ொல்ல வேண்–டு–மென்–றால், இப்போது இருப்பவர்களில் ராதி–காவை ச�ொல்–லல – ாம் என்று கரு–துகி – றே – ன். ‘நீதிக்கு தண்–டனை – ’ படத்–தின் க�ோர்ட் காட்–சி–க–ளில் அவ–ரது நடிப்–பும், வசன உச்–ச–ரிப்–பும் அவ்–வ–ளவு துல்–லி–யம். என–வே–தான�ோ என்–னவ�ோ ‘பாடாத தேனீக்–கள்’, ‘பாசப் பற–வை–கள்’, ‘தென்–றல் சுடும்’ என்று அடுத்–த–டுத்து கலை–ஞ–ரின் வச–னத்–தில் நடிக்–கக்–கூ–டிய வாய்ப்பு அவ–ருக்கு கிடைத்–தத�ோ என்–னவ�ோ?

ரம்–யா–கி–ருஷ்–ணன் அர–சி–ய–லுக்கு வரு–வாரா? - கே.கே.பால–சுப்–பி–ர–ம–ணி–யன், பெங்–க–ளூர். ஒரு–வேளை ‘படை–யப்–பா’ வந்–தால், ‘நீலாம்–ப–ரி–’–யும் ஆஜர் ஆக–லாம். நயன்–தா–ரா–வின் சம்–ப–ளம் நாலு க�ோடி–யாமே? - லட்–சு–மி–தாரா, வேலூர் (நாமக்–கல்.) ‘ந’வுக்கு ‘நா’ ப�ோட்டு யார�ோ ரைமிங்–காக ச�ொல்–லி–யி–ருக்–கி–றார்–கள். ஒரு நட்–சத்–தி–ரத்–தின் நிஜ–மான சம்–ப–ளம் எவ்–வ–ளவு என்–பது தயா–ரிப்– பா–ளரு – க்–கும், சம்–பந்–தப்–பட்ட நட்–சத்–திர– த்–துக்–கும், அந்த நட்–சத்–தி–ரத்–தின் ஆடிட்–ட–ருக்–கும்–தான் தெரி–யும். நாம் கேள்–விப்–ப–டும் சினி–மாக்–கா–ரர்–க– ளின் சம்–ப–ளம் பெரும்–பா–லும் இரு–ம–டங்–காக வேண்–டுமென்றே – கூட்டி ச�ொல்–லப்–படு – ப – வையே – .

10

வெள்ளி மலர் 16.6.2017


பழம்–பெ–ரும் இயக்–குந – ர் பீம்–சிங் இயக்–கிய படங்–கள் அத்–தனை – க்–குமே டைட்–டில் ‘பா’வில்–தான் த�ொடங்–கி–யி–ருக்–கி–றதா? - ரமேஷ், நங்–க–நல்–லூர். இல்–லையே? அவர் இயக்–கிய முதல் படமே ‘அ’வில்–தான் த�ொடங்–கி–னார். ‘அம்–மை–யப்–பன்’ (1954). சென்னை க�ொடுங்–கை–யூ–ரைச் சேர்ந்த பீம்–சிங்–கின் ரசி–கர் கே.எம்.ராஜி அவர்–கள் ‘ப’ வரி–சை–யில் பீம்–சிங் பெயர் வைத்த வர– லாற்றை ச�ொல்–கி–றார். “முதல் பட–மான ‘அம்–மை–யப்–பன்’, அடுத்–த–டுத்து ‘ராஜா ராணி’, ‘நானே ராஜா’, ‘திரு–ம–ணம்’ என்று நான்கு படங்–களை எடுத்–தி–ருந்–தும் பீம்–சிங்–குக்கு சரி–யான கேரி–யர் பிரேக் கிடைக்–க–வில்லை. 1958ல் வெளி–வந்த ‘பதி–பக்–தி’ படத்–தில்–தான் அவர் பெரி–தும் கவ–னிக்–கப்–பட்–டார். ஒரு வார இதழ் தன் விமர்–ச–னத்–தில் ‘இந்த படத்–தின் மூலம்–தான் இயக்–கு–நர் எழுந்து நிற்–கி–றார்’ என்று வர்–ணித்–தது. அதில் த�ொடங்–கி–தான் அவர் சென்–டி–மென்டாக தன்–னு–டைய படங்–க–ளுக்கு ‘பா’ வரி–சை–யில் பெயர் வைக்–கத் த�ொடங்–கி–னார்.” ‘பதி–பக்–தி’, ‘பாக பிரி–வி–னை’, ‘படிக்–காத மேதை’, ‘பாச–ம–லர்’, ‘பாலும் பழ–மும்’, ‘பாவ மன்–னிப்–பு’, ‘பந்த பாசம்’, ‘பார்த்–தால் பசி தீரும்’, ‘படித்–தால் மட்–டும் ப�ோதுமா?’, ‘பார் மகளே பார்’, ‘பச்சை விளக்–கு’, ‘பழ–னி’, ‘பாலா–டை’, ‘பாது–காப்–பு’ என்று பல ‘ப’ படங்–களை எடுத்–தி–ருக்–கி–றார் பீம்–சிங். இவை அனைத்–தி–லுமே சிவாஜி கணே–சன் நடித்–தி–ருக்–கி–றார் என்–ப–து–தான் சிறப்பு. 1958ல் த�ொடங்கி அடுத்த 12 வரு–டங்–க–ளில் அவர் இயக்–கிய ‘ப’ படங்–கள் இவை. இடை–யி–டையே ‘ப’ அல்–லாத ‘சக�ோ–த–ரி’, ‘களத்– தூர் கண்–ணம்–மா’, ‘செந்–தா–ம–ரை’, ‘சாந்–தி’, ‘சாது மிரண்–டால்’, ‘ஆல–யம்’ என்–றெல்–லாம் டைட்–டில் வைத்–தி–ருக்–கி–றார். சிவா–ஜி–யு–டன் பீம்–சிங் இணைந்த படங்–களே ‘பா’ வரிசை படங்–கள் என்று ச�ொல்–லப்–ப–டு–கின்–றன. 1970க்கு பிறகு தெலுங்கு, இந்தி ம�ொழி–க–ளி–லேயே பீம்–சிங் தான் அதி–க படங்–களை இயக்–கி–னார். இடை–யில் சிவ–கு–மாரை வைத்து அவர் இயக்–கிய ‘பாத–பூ–ஜை’ (1974) படத்–துக்கு ஏன�ோ ‘பா’ வரிசை அந்–தஸ்து கிடைக்–க–வில்லை. அதன் பின்–னர்–தான் ‘சில நேரங்–க–ளில் சில மனி–தர்–கள்’, ‘ஒரு நடிகை நாட–கம் பார்க்–கிற – ாள்’ மாதிரி ஜெய–காந்–தனி – ன் நாவல்–களை இயக்கி தன்னை கலைப்–பட இயக்–குந – ர– ா–க– வும் அழுத்–த–மாக முத்–திரை பதித்–தார் பீம்–சிங். 1954ல் த�ொடங்கி 1978 வரை சுமார் எழு–பது படங்–களை தமிழ், தெலுங்கு, இந்தி, மலை–யா–ளம், கன்–ன–டம் ஆகிய ம�ொழி–க–ளில் இயக்கி சாதனை புரிந்–தார். வாரா– வ ா– ர ம் வண்ணை கணே– ச ன் கேள்–வி–க–ளுக்–கு–தான் டைரக்–டர் பதில் அளிப்–பாரா. நாங்–க–ளெல்–லாம் என்ன பாவம் செய்–த�ோம்? - டி.வேல்–மு–ரு–கன், திரு–நெல்–வேலி. வாரா–வா–ரம் பதி–ல–ளிக்–கத் தூண்–டும் கேள்–வி–களை அவர் த�ொடர்ந்து கேட்– டுக்–க�ொண்டே இருக்–கிற – ாரே? நீங்–களு – ம் முயற்–சி–யுங்–கள் வேலு. விடா–மு–யற்சி, விஸ்–வ–ரூப வெற்றி.

‘காலா’–வும் ‘கபா–லி–’யை ப�ோலவே கேங்ஸ்–டர் கதை–தான் ப�ோலி–ருக்–கி–றதே? - ஜி.இனியா, கிருஷ்–ண–கிரி-1. ரஜி–னியி – ன் வய–துக்–கேற்ற கதா–பாத்–திர– ங்–களி – ல் அவரை ப�ொருத்த வேண்–டு–மென்று இயக்–கு–நர் பா.ரஞ்–சித் மெனக்–கெடு – கி – ற – ார். ரசி– க ர்– க ள�ோ இன்– ன – மு ம் ர ஜி – னி யை ப ழ ை ய ‘பாட்– ஷ ா’ பாணி– யி – லேயே மாஸாக எதிர்ப்– பார்க்–கி–றார்–கள்.

இன்–றைய நடி–கை–க–ளில் யாரும் கண்–ணீர்–விட்டு அழு–வது ப�ோன்ற காட்–சி–க–ளில் நடிப்–ப–தில்–லையே? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு. அவர்–களை குறை–கூறி என்ன பிர–ய�ோ–ச–னம்? அது–ப�ோன்ற கதை– கள�ோ, காட்–சி–ய–மைப்–பு–கள�ோ உரு–வாக்–கப்–ப–டு–வ–தில்லை. பெண் கதா–பாத்–திர– ங்–களு – க்கு முக்–கிய – த்–துவ – ம் க�ொடுக்–கக்–கூடி – ய படங்–கள் மிக–வும் குறைந்–து–விட்–டது. விசு, வி.சேகர், டி.பி.கஜேந்–தி–ரன் ப�ோன்ற இயக்–கு–நர்–கள் யாரும் இப்–ப�ோது இல்–லையே? ரஜினி அர–சிய – லு – க்கு வரு–வதை இன்–றைய அர–சிய – ல்–வா–திக – ள் ஏன் எதிர்க்–கின்–ற–னர்? - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கி–ருஷ்–ணன்–பு–தூர். ஒரு–வேளை அவரை எதிர்ப்–ப–வர்–க–ளும் ரஜினி ரசி–கர்–க– ளாக இருக்–கக்–கூ–டும். அர–சி–ய–லுக்கு வந்–து–விட்–டால் சினி– மா–வில் நடிக்க மாட்–டாரே என்–கிற ஆதங்–கத்–தில்–கூட எதிர்க்–க–லாம் இல்–லையா?

16.6.2017 வெள்ளி மலர்

11


சு

ரேஷ் சங்–கையா இயக்–கத்–தில், விதார்த் ஜ�ோடி–யாக ‘ஒரு கிடா–யின் கருணை மனு’ படத்–தில் ஹீர�ோ–யி–னாக அறி–மு–க–மா–ன– வர், பிர–பல டப்–பிங் ஆர்ட்–டிஸ்ட் ரவீணா. குடும்–பப் பாங்–கான முகம். தெளி–வான தமிழ் உச்–ச–ரிப்பு. பிரெண்ட்–லிய – ான அப்–ர�ோச். ஒரு–வித பயத்–துட – னு – ம், முன்–னெச்–சரி – க்கை உணர்–வுட – னு – ம் பேசும் தன்மை என, பல்–வேறு கல–வை–யாக இருக்–கி–றார்.

“டப்–பிங் ஆர்ட்–டிஸ்ட்டா இருந்த நீங்க, இப்ப தமிழ்–நாடே தெரிஞ்ச ஹீர�ோ–யி–னா–யிட்–டீங்க. இதை எப்–படி ஃபீல் பண்–றீங்க?” “டப்–பிங் ஆர்ட்–டிஸ்ட்டா இருந்–த–வ–ரைக்–கும் எந்த பய–மும் தெரி–ய–லை. ஆனா, இப்ப ஹீர�ோ– யினா மாறின பிற–கு–தான் எல்லா பய–மும் வந்து சேர்ந்–திரு – க்கு. சினி–மா–வுல ஜெயிக்–கிற – து முக்–கிய – ம் இல்ல. அந்த வெற்–றியை கடை–சிவ – ரை காப்–பாத்–த– ணும். அது–தான் முக்–கி–யம். ஹீர�ோ–யி–னா–யிட்ட பிறகு எல்–லா–ர�ோட பார்–வை–யும் என் பக்–கமா திரும்–பியி – ரு – க்கு. அது சந்–த�ோஷ – மா இருந்–தா–லும், அடுத்–த–டுத்த படங்–கள்ல ஜெயிக்–க–ணு–மேங்–கிற பய–மும், கவ–லை–யும் சேர்ந்–தி–ருக்–கு.” “நீங்க ஹீர�ோ–யினா நடிச்–சதை வீட்ல எப்–படி எடுத்–துக்– கிட்–டாங்க?” “எனக்கு மிகப் பெரிய பலமே அம்மா, அப்– பா–தான். ஏன்னா, நான் அவங்–க–ளுக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு. அத–னால, செல்–லம் ஜாஸ்தி. இந்த நேரத்–துல என் அம்மா, அப்–பாவை பற்றி ச�ொல்–லி–யா–க–ணும். கிட்–டத்–தட்ட ஜாவை எல்–லா–ருக்–கும் தெரிஞ்–சிரு – க்–கும். தமிழ்ல ஷாலினி, தேவ– ய ானி, ரம்பா, ர�ோஜா, லைலா உள்– ப ட நிறைய ஹீர�ோ–யின்–க–ளுக்கு டப்–பிங் பேசி–யி–ருக்– காங்க. மலை–யா–ளத்–துல கத்–ரினா கைஃப், ஜூஹி சாவ்லா, அனுஷ்கா, வர–லட்–சுமி, காவ்யா மாத–வன், ர�ோமா உள்–பட முக்–கிய – ம – ான ஹீர�ோ–யின்–களு – க்கு பேசி–யிரு – க்–காங்க. தமிழ், தெலுங்கு, மலை–யா–ளம், கன்–ன–டத்–துல ஆயி–ரக்–க–ணக்–கான படங்–க–ளுக்கு டப்–பிங் பேசிய, சீனி–யர் டப்–பிங் ஆர்ட்–டிஸ்ட் அவர். இப்ப கூட எல்லா ம�ொழி–யிலு – ம் பிசியா இருக்–கார். ‘தில்’ படத்–துல லைலா–வுக்கு சிறப்பா பேசி–னார். அதுக்–காக தமிழ்–நாடு அரசு விருது வாங்–கி–னார். அப்பா ரவி, நல்ல பாட–கர். நிறைய ஸ்டேஜ் புர�ோ–கி– ராம்ஸ் பண்–ணியி – ரு – க்–கார். ஒரு–நாள் ஸ்டு–டிய�ோ – வு – ல சந்–திச்–சப்ப அவ–ருக்–கும், ஜாவுக்–கும் லவ் வந்–து– டுச்சு. உடனே கல்–யா–ணம் பண்–ணிக்–கிட்–டாங்க. அப்பா நிறைய டி.வி சீரி–யல்–க–ளுக்–கும், டப்–பிங் படங்–க–ளுக்–கும் பேசி–யி–ருக்–கார். சமீ–பத்–துல ஒரு படத்–துல தலையை காட்–டிட்–டுப் ப�ோனார்.” “டப்–பிங் பேச–ற–துக்–குன்னு ஏதா–வது சிறப்–புப் பயிற்சி க�ொடுத்–தாங்–களா?” “அப்–படி குறிப்–பிட்டு ச�ொல்ற மாதிரி எந்–தப் பயிற்–சி–யும் அவங்க எனக்கு க�ொடுக்–கல. நல்லா படிச்சு, ஏதா– வ து ஒரு டிகிரி வாங்– க – ணு ம்னு ச�ொன்–னாங்க. அவங்க ஆசைக்–காக பி.பி.எம் படிச்–சேன். ஆனா, மன–சுக்–குள்ள ஒரு ஆசை இருந்–தது. அதா–வது, எப்–ப–டி–யா–வது நாமும் ஒரு–

12

வெள்ளி மலர் 16.6.2017

நாள் சினி–மா–வுக்கு வர–ணும்னு. அந்த ஆசை, என் நாலு வய–சுல நிைற–வே–றிச்சு. அந்த வய–சுல நான் வுட்–வர்ட்ஸ் கிரைப் வாட்–டர், ஹார்–லிக்ஸ், ஹமாம் ச�ோப், பியர்ஸ் ச�ோப் விளம்–பர– ங்–களு – க்கு டப்–பிங் பேசி–னேன். அப்–ப–டியே தமிழ், தெலுங்கு, மலை–யா–ளம், கன்–ன–டம், இந்தி, பெங்–கா–லின்னு ஒரு பெரிய ரவுண்டு வந்–தேன்.” “ஹீர�ோ–யின்–க–ளுக்கு எப்ப பேச ஆரம்–பிச்–சீங்க?” “பெரி–யவ – ள – ான பிறகு டப்–பிங் பேச–றது – ல முழு– மூச்சா ஈடு–பட்–டேன். முதல்–மு–றையா ‘சாட்டை’ ஹீர�ோ– யி ன் மகி– ம ா– வு க்கு பேசி– னே ன். ‘555’ல மிர்த்–தி–கா–வுக்–கும், எரிகா பெர்–னாண்–ட–ஸுக்–கும் பேசி–னேன். ஒரே படத்–துல ரெண்டு ஹீர�ோ–யின்– களுக்கு குரல் மாற்றி பேசிய அனு–பவ – த்தை மறக்க முடி–யாது. இந்த விஷ–யத்தை நான் ச�ொன்ன பிற–குத – ான் மற்–றவ – ங்–களு – க்கு தெரிஞ்–சது. ‘நிமிர்ந்து நில்’–லுல அமலா பாலுக்–கும், ‘ஐ’ மற்–றும் ‘தெறி’, ‘2.ஓ’ல எமி ஜாக்–சனு – க்–கும், ‘பாயும் புலி’–யில காஜல்


பிரபல ஹீர�ோயின்களுக்கு குரல் க�ொடுத்தவரே இப்போது

ஹீர�ோயின்

ஆகியிருக்கிறார்!

16.6.2017 வெள்ளி மலர்

13


அகர்–வா–லுக்–கும், ‘ஜீவா’ மற்–றும் ‘ஈட்–டி–’–யில திவ்– யா–வுக்–கும், ‘கணி–தன்’ மற்–றும் ‘கதா–நா–ய–கன்–’ல கேத்–ரின் தெர–சா–வுக்–கும், மலை–யாள ‘பாஸ்–கர் த ராஸ்–கல்’, ‘லைப் ஆஃப் ஜ�ோசூட்–டி’ படங்–கள்ல நயன்–தா–ரா–வுக்–கும், ‘பிச்–சைக்–கா–ரன்’ மற்–றும் ‘திட்–டம் ப�ோட்டு திரு–டுற கூட்–டம்–’ல சாத்னா டைட்–ட–ஸுக்– கும், ‘காத–லும் கடந்து ப�ோகும்’ மற்–றும் ‘பவர் பாண்–டி’, தெலுங்கு ‘பிரே–மம்’ படங்–கள்ல மட�ோனா செபாஸ்–டி–ய–னுக்–கும் டப்–பிங் பேசி–னேன்.” “நீங்–க–ளும், அம்–மா–வும் ஒரே படத்–துக்கு பேசி–யி–ருக்– கீங்–களா?” “தெலுங்கு ‘மஜ்–னு’– ல அனு இம்–மா–னுவே – லு – க்கு நான் பேசி–னேன். இன்–ன�ொரு நடி–கைக்கு அம்மா ஜா பேசி–னாங்க. ஒரே படத்–துக்கு அம்–மா–வும், ப�ொண்–ணும் பேசி–யது சுவா–ரஸ்–ய–மான விஷ–யம்– தான். படங்–கள்னு எடுத்–துக்–கிட்டா தமிழ், தெலுங்கு, மலை–யா–ளம் மொழி–கள்ல மட்–டும் பேசி–யிரு – க்–கேன். விளம்–ப–ரங்–கள்னு எடுத்–துக்–கிட்டா இந்தி, கன்–ன– டம், பெங்–காலி ம�ொழி–க–ளுக்கு பேசி–யி–ருக்–கேன். ஒவ்–வ�ொரு கேட்–ட–கி–ரியா பிரிச்–சுக்–கிட்டு பேசி–யது ர�ொம்ப ஈசியா இருந்–தது. இது–வரை 60 படங்–களு – க்கு மேல பேசி–யிரு – ப்–பேன். விளம்–பர– ங்–களு – க்கு கணக்கு வழக்கே இல்–லை.” “ஹீர�ோ–யின் வாய்ப்பு எப்–படி கிடைச்–சது?” “நான் காலேஜ்ல படிக்–கி–றப்ப, என் அழ–கைப் பார்த்து ரசிச்ச சிலர், சினி–மா–வுல நடிக்–கச் ச�ொல்லி வீட்–டுக் கதவை தட்–டி–னாங்க. டப்–பிங் பேச–றது சுலபம். நடிக்–கிற – து ரொம்ப கஷ்–டம்னு பயந்த நான், எல்லா வாய்ப்–பையு – ம் வேணாம்னு ச�ொல்லி மறுத்– துட்–டேன். டப்–பிங் தியேட்–டர்ல லைட்டை ஆஃப் பண்–ணிட்டு, ஸ்கி–ரீன்ல நடிச்ச ஆர்ட்–டிஸ்ட்டை பார்த்து கட–கட – ன்னு பேசி–டுவே – ன். ஆனா, ஷூட்–டிங் ஸ்பாட்–டுக்கு வந்தா, கண்–டிப்பா நாம் கஷ்–டப்–பட்டு நடிச்–சா–கணு – ம். சுத்தி நின்னு எல்–லா–ரும் நம்–மையே வேடிக்கை பார்ப்–பாங்க. ஆளா–ளுக்கு வாய்க்கு வந்–த–படி கமெண்ட் அடிப்–பாங்க. நடிக்க ர�ொம்ப கூச்–சமா இருக்–கும்னு நினைச்சு பயந்–தேன். ஆனா–லும், சினி–மா–வுல நான் நடிச்சே ஆக– ணும்னு ச�ொல்லி, நிறைய டைரக்–டர்–கள் வற்–பு– றுத்–தி–னாங்க. சரி, வீட்டை தேடி வர்ற தேவியை ஏன் வேணாம்னு சொல்–ல–ணும்னு, வேற–வ–ழி–யில்– லாம மும்–பைக்கு ப�ோனேன். அங்கே பாலி–வுட் நடி–கர் அனு–பம்–கெர் நடத்–துற ஆக்–டிங் ஸ்கூல்ல

சேர்ந்தேன். மூணு மாசம் ஆக்– டி ங், ய�ோகா, டான்ஸ், மார்–ஷி–யல் ஆர்ட்ஸ் கத்–துக்–கிட்–டேன். அனு–பம்–கெர், ஜாக்–கி–ஷெ–ராஃப் அடிக்–கடி வந்து ஆக்–டிங் ச�ொல்–லிக் க�ொடுத்–தாங்க. ஒரு–நாள் நான் ‘யட்–சன்’ டப்–பிங்–கில, ஹீர�ோ–யின் தீபா சன்–ன–திக்கு பேசிக்–கிட்–டி–ருந்–தேன். அப்ப ரெண்டு அசிஸ்–டெண்ட் டைரக்–டர்–கள் வந்–தாங்க. என்–கிட்ட பெர்–மி–ஷன் கேட்டு என்னை ப�ோட்டோ எடுத்–தாங்க. அவங்க ரெண்–டு–பே–ரும் சுரேஷ் சங்– கை–யா–வ�ோட அசிஸ்–டெண்–டு–கள் என்–பது ‘ஒரு கிடா–யின் கருைண மனு’ படத்–து ல நடிக்–கி –ற ப்– ப�ோ–தான் தெரிஞ்–சுக்–கிட்–டேன். திடீர்னு ஒரு–நாள் ஈராஸ் இன்–டர்–நே–ஷ–னல் ஆபீஸ்ல இருந்து ப�ோன் வந்–தது. உடனே ஆடி–ஷனு – க்கு வரச் ெசான்–னாங்க. ப�ோனேன். ‘காக்கா முட்–டை’ மணி–கண்–ட–ன�ோட அச�ோ–சியே – ட் சுரேஷ் சங்–கை–யான்னு எங்க டைரக்– டரை அறி–முக – ப்–படு – த்–தின – ாங்க. அவ–ருத – ான் எனக்கு டெஸ்ட் வெச்– ச ார். ஏற்– க – ன வே நூறு பேருக்கு மேல ஆடி–ஷன் நடந்–தி–ருக்கு. ஒருத்–த–ரும் தேறல. கடைசியா நான் ஹீர�ோ–யினா செலக்ட் ஆனேன்.” “மாடர்ன் ப�ொண்– ண ான நீங்க, எப்– ப டி வில்– லே ஜ் கேரக்–ட–ருக்கு செட்–டா–னீங்க?” “அதை நினைச்சு இப்–ப–வும் எனக்கு ஆச்–ச–ரி– யமா இருக்கு ‘ஒரு கிடா–யின் கருணை மனு’ ஷூட்– டிங் ராஜ–பா–ளைய – ம், அருப்–புக்–க�ோட்ைட பகு–திக – ள்ல நடந்–தது. ர�ொம்ப சிர–மப்–பட்டு நடிச்–சேன். காலில் செருப்பு ப�ோட்– டி – ரு ந்– த ா– லு ம், க�ொடு– மை – ய ான வெயில் என்னை ர�ொம்–பவே படுத்–தி–யது. ஆனா, அந்த கஷ்–டமெ – ல்–லாம் படம் ரிலீ–சான பிறகு பஞ்சா பறந்து ப�ோயி–டுச்சு. எல்லா மீடி–யா–வும் என் நடிப்பை ஆஹா... ஓஹ�ோன்னு புகழ்ந்து எழு–திய – தை படிச்சு, வானத்–துல பறக்க ஆரம்–பிச்–சிட்–டேன். ஆடி–யன்–சும் என்னை நல்லா அடை–யா–ளம் தெரிஞ்–சுக்–கிட்டு பேச–றாங்க. அது எனக்கு உற்–சாக டானிக் மாதிரி இருக்–கு.” “உங்–க–ளுக்கு நீங்க டப்–பிங் பேச முடி–யாம சிர–மப்–பட்–டீங்– கன்னு ச�ொல்–றாங்–களே?” “உண்– மை – த ான். இது– ந ாள்– வ ரை அழ– க ான ஹீர�ோ–யின்–க–ளுக்கு மட்–டுமே டப்–பிங் பேசிக்–கிட்–டி– ருந்த நான், முதல்–மு–றையா என்னை ஸ்கி–ரீன்ல பார்க்–க–றப்ப, சத்–தி–யமா எனக்கு பேச்சு வரல. இந்த மூஞ்–சிக்கா டப்–பிங் பேச–ணும்னு எளக்–கா– ரமா பார்த்–தேன். டைரக்–டர் சுரேஷ் சங்–கையா என்–னென்–னவ�ோ சொல்லி பார்த்–தார். ஊகூம், எது–வுமே என் மண்–டை–யில ஏறல. மறு–ப–டி–யும், மறு–ப–டி–யும் முயற்சி பண்ணி பார்த்–தேன். ஊகூம், அப்–ப–வும் ஒரு வார்த்தை கூட தெளிவா பேச முடி– யாம திக்–கித் திண–றி–னேன். உடனே அன்–னைக்கு டப்–பிங்கை கேன்–சல் பண்–ணிட்–டாங்க. மறு–நாள் மனசை தேத்–திக்–கிட்டு வந்து, பெரிய ஸ்கி–ரீன்ல என் முகத்தை நானே தைரி–யமா பார்த்து டப்–பிங் பேச ஆரம்–பிச்–சேன். அதைத்–தான் இப்ப படத்–துல கேட்–க–றீங்–க.” “இனிமே த�ொடர்ந்து டப்–பிங் பேசு–வீங்–களா? இல்ல, நடிப்–புக்கு மட்–டுமே முக்–கி–யத்–து–வம் தரு–வீங்–களா?”

14

வெள்ளி மலர் 16.6.2017


“என்–கிட்ட வந்து, டப்–பிங் பிடிக்–குமா? நடிப்பு பிடிக்–கு–மான்னு கேட்டா, முதல்ல எனக்கு டப்–பிங்– தான் பிடிக்–கும்னு ச�ொல்–வேன். டப்–பிங் பேச–ற–துல எனக்கு இன்ஸ்–பி–ரே–ஷன், என் அம்மா ஜா ரவி. மற்ற ஹீர�ோ–யின்–க–ளுக்கு டப்–பிங் பேசற யாரை– யுமே நான் ப�ோட்–டியா நினைச்–ச–தில்ல. யாருக்கு என்ன கிடைக்–கணு – ம்னு விதி இருக்கோ, அது–தான் கிடைக்–கும். அள–வுக்கு மீறி, என் தகு–திக்கு மீறி எந்த விஷ–யத்–துக்–கும் நான் ஆசைப்–பட மாட்–டேன். எது–வுமே கட–வுள் விருப்–பப்–ப–டி–தான் நடக்–கும். நடிப்பு விஷ–யத்–துல எனக்கு நயன்–தாரா, ஜ�ோதிகா, ‘மரி–யான்’ பார்–வ–தியை ர�ொம்ப பிடிக்–கும். ஆனா, எமி ஜாக்–ச–னுக்கு டப்–பிங் பேச–ற–துன்னா மட்–டும் ர�ொம்ப, ர�ொம்ப பிடிக்–கும். ஏன்னா, அவர் ஒரு ஃபாரின் ரிட்–டர்ன் கேர்ள். அவ–ருக்கு என் குரல் சூட் ஆகு–துன்னா, அது எவ்–வள – வு பெரிய விஷ–யம். ‘ஐ’ படத்–துல எமி–ய�ோட அட்–ட–கா–ச–மான ஸ்டைல் எனக்கு ர�ொம்ப பிடிக்–கும்.” “அடுத்து என்ன படம் பண்–றீங்க? கிளா–ம–ருக்கு கிரீன் சிக்–னல் தரு–வீங்–களா?” “தமிழ், மலை–யா–ளம் மற்–றும் ெதலுங்கு ம�ொழி படங்–களி – ல் நடிக்க கேட்–டிரு – க்–காங்க. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ரிலீ–சா–க–ற வ–ரைக்–கும் வேற புதுப்– படம் ஒத்–துக்–கக்–கூ–டா–துன்னு அக்–ரி–மெண்ட் இருந்– தது. இப்ப படம் ரிலீ–சாகி நல்லா ஓடிக்–கிட்–டி–ருக்கு. ஸ�ோ, த�ொடர்ந்து நடிக்க முடிவு பண்–ணி–யி–ருக்– கேன். ர�ொம்ப, ர�ொம்ப செலக்ட்–டிவ்வா புதுப்–ப– டம் கமிட் பண்ணி நடிப்–பேன். என் கம்பர்ட்–ட–பிள்

ðFŠðè‹

ரூ.300

லெவல் தெரிஞ்சு டிரெஸ் ப�ோடு–வேன். வல்–கரா நடிக்–கப் பிடிக்–காது. மாடர்ன் டிரெஸ் ஓ.கே. பேமிலி ர�ோல், மாடர்ன் ர�ோல், எது கிடைச்–சா–லும் பண்– ணு– வே ன். ஆனா, ஒவ்– வ�ொ ரு கேரக்– ட – ரை – யு ம் என் தனித்–திறமை வெளிப்–ப–டுற விதமா செலக்ட் பண்ணி நடிப்–பேன்.” “அழகா, இள–மையா இருக்–கீங்க. யாரும் லவ் லெட்–டர் க�ொடுத்–த–தில்–லையா?” “சில– பே ர் புர– ப�ோ ஸ் பண்– ண ாங்க. ஆனா, அவங்க காதலை ஏத்–துக்க மறுத்–துட்–டேன். லவ் பண்–றது – க்கு இன்–னும் நிறைய டைம் இருக்கு. இப்ப என் வயசு 24. இதெல்–லாம் காத–லிக்–கிற வயசா?”

- தேவ–ராஜ்

தினகரன் இணைப்பிதழில் வெளியான வதாடரகள் இப்​்பாது சூப்பரஹிட் புததகஙகளாக...

ரூ.200

ரூ.150

ரூ.150

ரூ.120

பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902

புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இபவ்பாது ஆனனலைனிலும் வாஙகலைாம் www.suriyanpathipagam.com 16.6.2017 வெள்ளி மலர்

15


வாரிசு டைரக்டர்கள்!

யக்–கு–நர் ராஜா–சந்–தி–ர–சே–க–ரு–டைய தம்–பி– யும் ‘ராஜா தேசிங்–கு’, ‘கண–வனே கண்– கண்ட தெய்–வம்’ ப�ோன்ற படங்–களை இயக்–கிய பழம்–பெ–ரும் இயக்–கு–ந–ரு–மான டி.ஆர். ரகு–நாத்–தின் மைந்–தர் கார்த்–திக் ரகு–நாத். இயக்–கு– நர் ‘பில்–லா’ கிருஷ்–ண–மூர்த்–தி–யி–டம் உதவி இயக்– கு–நர– ாக பணி–புரி – ந்–தவ – ர் இவர். தந்தை, பெரி–யப்பா வழி–யில் தன் பங்–குக்கு இவர்–க–ளும் படங்–கள் இயக்–கி–யி–ருக்–கி–றார். ம�ோகன், ஜெய்–சங்–கர், சரிதா, தீபா ஆகி–ய�ோர் நடித்த ‘அண்–ணி’ (1985), சத்–யர– ாஜ், ஜெய்–சங்–கர், சரிதா, காந்–திம – தி ஆகி–ய�ோர் நடித்த ‘சாவி’ (1985), சிவாஜி, ஜெய்–சங்–கர், சுரேஷ், ரேவதி ஆகி–ய�ோர் நடித்த ‘மரு–ம –கள்’ (1986) ஆகிய படங்– க ளை இவர் இயக்–கி–னார். சத்–ய–ராஜ், அம்–பிகா நடித்து ஹிட்–டான ‘மக்–கள் என் பக்–கம்’ (1987) பட–மும் இவ–ரது கைவண்–ணமே. தயா–ரிப்–பா–ளர், இயக்–கு–நர், நடி–கர் என்று பன்– மு– க ம் காட்– டி ய பி.ஆர்.பந்– து – லு – வி ன் மனைவி எம்.வி.ராஜம்– ம ா– வு ம் ஒரு நடிகை. இவர்–க–ளு–டைய மகள் பி.ஆர். விஜ– ய – ல ட்– சு மி, ஆசி– ய ா– வி ன் முதல் பெண் ஒளிப்–ப–தி–வா–ள–ராக உயர்ந்–தார். பந்–துலு - ராஜம்மா தம்–ப–தி–யின் மகன் பி.ஆர்.பி.ரவி–சங்–க–ரும் ஒரு படத்தை இயக்–கி–யி–ருக்–கி–றார். சரத்–பாபு, விஜய்– மேனன், செந்– தி ல், கும– ரி – மு த்து, வித்யா, சாந்– தி – கி – ரு ஷ்ணா, பேபி அஞ்சு, கமலா காமேஷ், மன�ோ–ரமா ஆகி–ய�ோர் நடித்த ‘அன்–புள்ள மல–ரே’ (1984) தான்

அந்த திரைப்–பட – ம். இப்–பட – த்–துக்கு வச–னம் எழு–திய இயக்–கு–நர் மகேந்–தி–ரன், படத்–தி–லும் டாக்–ட–ராக நடித்–தி–ருக்–கி–றார். ‘பாதை தெரி–யு–து பார்’ படத்–தில் நாய–க–னாக நடித்த கே.விஜ–யன், சிவாஜி நடித்த பல படங்–களை இயக்–கிய பிர–ப–ல–மான இயக்–கு–நர். இவ–ரது மூத்த மகன் சுந்–தர் கே.விஜ–ய–னும் தன் பங்–குக்கு சில படங்–களை இயக்–கி–னார். சுரேஷ், ஆனந்–த்பாபு, ஜெய்–சங்–கர், சுஜாதா, ரேவதி, மன�ோ–ரமா ஆகி– ய�ோர் நடித்த ‘ரேவ–தி’ (1986), கார்த்–திக், நிழல்–கள் ரவி, செந்–தில், செந்–தா–மரை, ரஞ்–சனி, க�ோகிலா, சுமித்ரா – ஆகி–ய�ோர் நடித்த ‘வெளிச்–சம்’ (1987) ஆகிய படங்–களை இயக்–கி–னார். சினிமா சரி–யாக கை க�ொடுக்–கா–விட்–டா–லும் சின்–னத்–தி–ரை–யில் முன்–னணி இயக்–கு–ந–ராக இப்–ப�ோது இவர் வலம் வரு–கி–றார். முக்தா ஃப்லிம்ஸ் தமிழ் சினி–மா–வின் பெரிய நிறு–வ–னங்–க–ளில் ஒன்று. இந்–நி–று–வ–னம் சார்–பாக முக்தா ராம–சாமி தயா–ரிக்க, அவ–ரது தம்பி முக்தா சீனி–வா–சன் படங்–களை இயக்–கி–ய–வர். முக்தா சீனி–வா–ச–னின் மகன் முக்தா வி.எஸ்.சுந்–தர் ஒளிப்–பதி – – வா–ள–ராக சினி–மா–வில் காலடி எடுத்து வைத்–தார். இவ–ரும் இரண்டு படங்– களை இயக்–கி–யி–ருக்–கி–றார். தங்–கள் குடும்ப நிறு–வன – ம் தயா–ரித்த ‘க�ோடை மழை’ (1986) படத்தை இயக்கி ஒளிப்–ப– திவு செய்–தார். ரஜி–னி–யும், பாக்–கி–ய– ரா–ஜும் இந்–தப் படத்–தில் நட்–புக்–காக த�ோன்–றி–னார்–கள். பின்–னர் தங்–கள் நிறு–வ–னத்–

தமிழ் திரைச் ச�ோைலயில் பூத்த 18

அத்திப் பூக்கள்

16

வெள்ளி மலர் 16.6.2017


துக்–கா–கவே கார்த்–திக், வி.கே.ராம–சாமி, கனகா, மன�ோ–ரமா – ஆகி–ய�ோர் நடித்த ‘எதிர்–காற்–று’ (1990) படத்தை இயக்கி ஒளிப்–ப–திவு செய்–தார். பிர–பல இயக்–கு–நர் டி.ஆர்.ராமண்–ணா–வின் மகன் கணேஷ் ராமண்–ணா–வும் ஒரு படத்தை இயக்–கியி – ரு – க்–கிற – ார். ஆனந்த், செந்–தில், ராதா–ரவி, வடி–வேலு, ஸ்வர்ணா, விஜ–ய–கு–மாரி ஆகி–ய�ோர் நடித்த ‘கிழக்கு மலை’ (1995) என்ற படத்தை கணேஷ் ராமண்ணா இயக்–கி–னார். இசை–ய–மைப்–பா–ளர் குன்–னக்–குடி வைத்–தி–ய– நா–த–னின் மாப்–பிள்–ளை–யின் பெயர் ராம்கி. மாப்– பிள்ளை இயக்க மாம–னார் இசை–ய–மைத்த படம் ‘த�ோடி ராகம்’ (1983). டி.என்.சேஷ–க�ோப – ா–லன், எம். ஆர்.கிருஷ்–ண–சாமி, நாக–ராஜ், நளினி, நாஞ்–சில் நளினி, அருந்–ததி – ஆகி–ய�ோர் நடித்–துள்–ள–னர். இப்–ப–டத்–தில் ஹீர�ோ–வாக நடித்த கர்–நா–டக பாட– கர் சேஷ–க�ோ–பா–லன், நான்கு பாடல்–க–ளை–யும் பாடி–னார். குன்–னக்–கு–டிய – ா–ரும் தன் பங்–குக்கு ஒரு பாட்டு பாடி அசத்–தின – ார். அவர் சினி–மா–வில் பாடிய ஒரே பாடல் இது–தான். இன்–று–வரை ரேடி–ய�ோ–வில் ஹிட்–டாக ஒலிக்–கும் அந்–தப் பாட–லின் வரி–கள் வேடிக்–கை–யாக இருக்–கும். ‘க�ொட்–டாம் பட்டி ர�ோட்–டிலே குட்–டிப – �ோற ஜ�ோரிலே, ர�ொட்–டிய – த்–தான் திம்–பனா, குட்–டி–யத்–தான் பார்ப்–பேனா?’. ‘ஊமை ஜனங்– க ள்’, ‘உச்சி வெயில்’, ‘ரெண்–டும் ரெண்–டும் அஞ்– சு’ ஆகிய படங்–க–ளுக்கு ஒளிப்–ப–திவு செய்–த–வர் ரமேஷ் வியாஸ் (என்ற) ஆர்.எம்.ரமேஷ். இவ–ரும், இவ–ரு– டைய தம்பி ரகு–வி–யாஸ் என்–ப–வ–ரும் சென்னை ஆழ்– வ ார்– பே ட்– ட ை– யி ல் ப�ோட்டோ ஸ்டு–டிய�ோ வைத்–தி–ருந்– தார்–கள். பார–தி–ரா–ஜா–வி–டம் உதவி இயக்–கு–ந–ராக பயிற்சி பெற்–றுள்–ளார் ரகு–விய – ாஸ். பி.ஆர்.ஜன–கர– ாஜ் தயா– ரித்த ‘மின்–மி–னிப் பூச்–சி–கள்’ (1993) படத்–தின் வச–னத்தை எழுதி இயக்–கி–னார் ரகு– வி–யாஸ். இப்–ப–டத்–தில் நெப்–ப�ோ–லி–யன், பாரத், யுவ–ராணி ஆகி–ய�ோர் நடித்–தி–ருக்–கி–றார்–கள். மெல்–லிசை மன்–னர் எம்.எஸ்.விஸ்–வந – ா–தனி – ன் மகன் க�ோபி–கிரு – ஷ்ணா மூன்று படங்–களி – ன் இயக்– கு–நர். விஸ்–வ–நா–தனே தயா–ரித்து இசை–ய–மைத்த ‘ப�ோலீஸ் ப�ோலீஸ்’ (1983) படத்தை அவ–ரது க�ோபி–கி–ருஷ்ணா இயக்–கி–யுள்–ளார். இப்–ப–டத்–தில் சில்க் ஸ்மிதா, சுலக்–சனா (க�ோபி கிருஷ்–ணா– வின் மனைவி) ஆகி–ய�ோர் நடித்–த–னர். பானு–சந்– தர், சில்க் ஸ்மிதா நடித்த ‘சில்க் சில்க் சில்க்’ (1983) படத்தை அப்பா விஸ்–வ–நா–தன் தயா–ரித்து இசை–ய–மைக்க, க�ோபி–கி–ருஷ்ணா இயக்–கி–னார். அதன் பிறகு தியா–க–ரா–ஜன் மூன்று வேடங்–க–ளில் நடித்த எரி– ம லை (1985) படத்– தை – யு ம் க�ோபி– கிருஷ்ணா இயக்–கின – ார். வழக்–கம்–ப�ோல இதை–யும் இசை–ய–மைத்து தயா–ரித்–தார் விஸ்–வ–நா–தன்.

கவிஞர் ப�ொன்.செல்லமுத்து

எடிட்–ட–ரும் இயக்–கு–ந–ரு–மான ‘ஜம்–பு’ என்ற சி.பி.ஜம்–புலி – ங்–கத்–திற்கு இரு மனை–விக – ள் உண்டு. ஒரு மனை–விக்கு ராமு (இயக்–கு–நர்), இளங்கோ (உதவி எடிட்–டர்), ரவி (உதவி ஒளிப்–ப–தி–வா– ளர்), பாஸ்–கர் (த�ொலைக்–காட்சி கலை–ஞர்) – என்று நான்கு மகன்–கள். மற்–ற�ொரு மனை–விக்கு செந்–தில்–நா–தன் என்ற மகன் உள்–ளார். இவர்– களில் ராமு, செந்தில்–நா–தன் ஆகிய இரு–வ–ரும் இயக்குநர்–க–ளாகி படம் இயக்–கி–யுள்–ளார்–கள். பார– தி – ர ா– ஜ ா– வ ால் அறி– மு – க – ம ான சுதா– க ர் த�ொடக்– க த்– தி ல் சில படங்– க – ளி ல் கிரா– ம த்து இளை–ஞ–னா–கவே நடித்–துள்–ளார். பட்–ட–ணத்து படா–ட�ோப இளை–ஞ–னாக நடிக்க ஆ சை க�ொண் – ட ா ர் சு த ா – க ர். இவர் ஆசையை யாரும் கண்டு க�ொள்–வத – ாக இல்லை. காத்–திரு – ந்து பாத்த சுதா–கர் தானே தயா–ரிப்–பில் இறங்கி, நாக– ரீ க இளை– ஞ – ன ாக நடித்து, ‘சந்–தன மலர்–கள்’ படத்தை தயா–ரித்–தார். இப்–ப–டத்தை இயக்– கி–ய–வர் ஜே.ராமு–தான். இப்–ப–டம் திரைக்கு வர–வே–யில்லை. ஏ.அப்– பா–சா–மியு – ம் ஏ.சம்–பத்–கும – ா–ரும் தயா– ரித்த ‘ஒருத்தி மட்–டும் கரை–யினி – லே – ’ (1981) படத்தை இயக்கி, திரைக் கதை–யை–யும் எழு–தி–யுள்–ளார் ஜே.ராமு. இப்–ப–டத்–தில் சுதா–கர், ராஜேஷ், வினு சக்–க–ர–வர்த்தி, எஸ்.எஸ்.சந்–தி– ரன், (அறி–மு–கம்) வைஜெ–யந்–தி–மாலா, சரிதா, எஸ்.என்.பார்–வதி – ஆகி–ய�ோர் நடித்–துள்–ள–னர். அடுத்து ஜே.செந்–தில்–நா–தன் இயக்–கிய படம் பற்றி பார்ப்–ப�ோம். கே.பிர–பா–க–ரும் க�ோவை மணி–யும் தயா–ரித்த ‘பட்–டிக்–காட்டு தம்–பி’ (1988) படத்தை ஜே.செந்–தில்–நா–தன் இயக்–கி–யுள்–ளார். இப்–ப–டத்– தில் அர்–ஜுன், ராஜேஷ், சந்–தி–ர–சே–கர், செந்–தில், நிர�ோஷா, சுபா, சபீதா ஆனந்த் – ஆகிய�ோர் நடித்–துள்–ள–னர். தெலுங்–குப் பட–வு–ல–கில் மந்–திர தந்–திர மாயா– ஜால படங்–க–ளைத் தந்–தார் பிர–பல இயக்–கு–நர் பி.விட்–ட–லாச்–சார்யா. இவ–ரு–டைய மைந்–த–ரான பி.வி.னி–வாஸ். சிவக்–கு–மார், ச�ோ, தங்–க–வேலு, எம்.ஆர்.ஆர்.வாசு, பிர–மிளா, விஜ–ய–சந்–தி–ரிகா, வி.ஆர்.தில–கம் ஆகி–ய�ோர் நடித்த ‘தாய்ப் பாசம் (1974) படத்தை தயா–ரித்து இயக்–கி–யுள்–ளார்.

(அத்தி பூக்–கும்)

16.6.2017 வெள்ளி மலர்

17


க் பே ்

ளாஷ

் ப ஃ

நான் பிறந்திருக்காவிட்டால்?

டத்–தின் தலைப்பே ச�ொல்–லிவி – டு – கி – ற – து, இது எந்த மாதி–ரி–யான படம் என்று. ‘இட்ஸ் எ வ�ொண்–டர்ஃ–புல் லைஃப்’. தந்–தையி – ன் மர–ணத்–துக்–குப் பிறகு அவ–ரது நிறு– வ–னத்தை நிர்–வ–கிக்–கத் த�ொடங்–கு–கி–றான் ஜார்ஜ் பெய்லி. அவ–னு–டைய த�ொழில் எதிரி பார்ட்–டர். எப்–ப–டி–யா–வது ஜார்ஜை வீழ்த்த கங்–க–ணம் கட்–டிக் க�ொண்டு திரி–கி–றான். பார்ட்–ட–ரின் சூழ்ச்–சி–யில் ஒரு–முறை சிக்–கிக் க�ொள்–கிற – ான் ஜார்ஜ். மக்–களி – ன் பணத்–துக்கு பதில் ச�ொல்ல வேண்–டிய நிலைக்கு ஆளா–கி–றான். ஒரு–வேளை தான் தற்–க�ொலை செய்–து க�ொண்–டால் இன்–சூ–ரன்ஸ் பணம் வரும். அந்– த ப் பணத்தை க�ொடுக்க வேண்– டி – ய – வ ர்– க – ளுக்கு க�ொடுத்து செட்–டில் செய்–துவி – ட – லா – ம் என்று தவ–றான முடிவு எடுக்–கி–றான். ஓர் ஆற்–றுப்–பா–லத்–தின் மேலே ஏறி தற்–க�ொ– லைக்கு தயா–ரா–கி–றான். ஆனால், இவன் குதிப்–ப– தற்கு முன்–பாக வேற�ொ–ருவ – ர் குதித்து விடு–கிற – ார். பத–றிப்–ப�ோய் இவ–னும் குதித்து அந்த மனி–தரை காப்–பாற்–று–கிறார். “நீ தற்–க�ொலை முடி–வெ–டுத்– தி–ருப்–பது எனக்கு முன்பே தெரி–யும். உன்னை காப்–பாற்–றவே நான் ஆற்–றில் குதித்–தேன். நான் ஒரு தேவ–தூ–தன்” என்–கி–றார் அவர்.

18

வெள்ளி மலர் 16.6.2017

தேவ – தூ – த ர் – க ள் ம னி – த ர் – க ள் வ டி – வி ல் வரு–வார்–களா என்று ஜார்–ஜுக்கு சந்–தேக – ம். “நான் உயி–ர�ோடு இருப்–பதி – ல் எந்த அர்த்–தமு – ம் இல்லை. என்–னால் யாருக்–கும் பய–னில்லை. நான் பிறக்– கா–மலே இருந்–தி–ருக்–க–லாம்” என்று அவ–ரி–டம் புலம்–பு–கி–றான். இதை கேட்ட தேவ–தூ–தன், ‘‘ஜார்ஜ் நீ பிறக்– கவே இல்லை. நீ பிறக்–கா–மல் இருந்–தி–ருந்–தால் உன் வீடு, மனைவி, தம்பி, மக்–கள் எல்–ல�ோ–ரும் என்– ன – வா – கி – யி – ரு ப்– பா ர்– க ள் என்– பதை காட்– டு – கி – றேன்–’’ என்று ஜார்ஜை ஊருக்–குள் அழைத்–துச் செல்–கி–றார். ஜார்ஜ் பிறக்–கவே இல்லை என்–ப–தால் யாரா– லும் அவனை அடை–யா–ளம் கண்–டுக� – ொள்ள முடி–வ– தில்லை. ஆனால், ஜார்–ஜால் எல்–லா–வற்–றை–யும் அடை–யா–ளம் கண்–டு–க�ொள்ள முடி–கி–றது. தேவ– தூ–தன் மீது அவ–னுக்கு நம்–பிக்கை பிறக்–கி–றது. தான் பிறக்–கவே இல்–லை–யென்–றால் தம்பி குளத்–தில் மூழ்கி இறந்–தி–ருப்–பான். தான் வேலை செய்த கடை முத–லாளி, மாமா பைத்–தி–ய–மா–கி–யி– ருப்–பார்–கள். மனை–வியை யாருமே திரு–ம–ணம் செய்–தி–ருக்–க–மாட்–டார்–கள். ஊரே அய�ோக்–கி–யன் பார்ட்–டர் கையில் மாட்–டியி – ரு – க்–கும் என்–பதை தான் காண்–கின்ற காட்–சி–க–ளில் உணர்–கி–றான். தன்–னு–டைய வாழ்க்கை எவ்–வ–ளவு பேருக்கு தன்–னைய – றி – ய – ா–மலே பயன்–பட்–டிரு – க்–கிற – து. இதைப்– ப�ோய் புரிந்–து–க�ொள்–ளா–மல் தற்–க�ொலை செய்ய நினைத்–தேனே என்று வருந்–து–கி–றான். தேவ–தூ–த– னால் வாழ்க்–கை–யைப் புரிந்து புதிய மனி–த–னாக மாறிய ஜார்ஜ் வீட்–டுக்–குத் திரும்–பு–கி–றான். அவ–னுக்–காக அவ–னுடை – ய குடும்–பமு – ம், நண்– பர்–க–ளும் பதை–ப–தைப்–ப�ோடு காத்–தி–ருக்–கி–றார்– கள். உற–வி–னர்–க–ளும், நண்–பர்–க–ளும் இணைந்து ஜார்– ஜி ன் கடனை அடைக்– கி – ற ார்– க ள். படம், மகிழ்ச்–சி–ய�ோடு முடி–கி–றது. நாம் பல–ரும் ஜார்ஜை ப�ோலத்–தான். இந்த நிமி– டத்–தில் என்–னவா – க இருக்–கிற�ோ – ம் என்று ய�ோசித்து நம்மை நாமே ந�ொந்–துக் க�ொள்–கிற�ோ – ம். ஆனால், நாம் இல்–லா–விட்–டால் என்–னா–கி–யி–ருக்–கும் என்– பதை ய�ோசிக்க வேண்–டும். ஒவ்–வ�ொ–ரு–வ–ரின் பிறப்–புக்–கும் ஏத�ோ ஓர் அர்த்–தம் இருக்–கிற – து. இன்– பம�ோ, துன்–பம�ோ அந்–தந்த சம–யத்–துக்–கு–தான். அதை–யெல்–லாம் தாண்டி பய–ணிப்–பதே வாழ்க்கை என்–பதை எடுத்–துச் ச�ொல்–கி–றார் இப்–ப–டத்–தின் இயக்–கு–நர் ஃப்ராங்க் காப்ரா. படம்: It’s a Wonderful Life ம�ொழி: ஆங்–கி–லம் வெளி–யான ஆண்டு: 1946.

- த.சக்–தி–வேல்


ம�ொட்டத்தல மச்சானுக்கு முடி முளைச்சா அழகு...

தங்க ரதம் ப�ோல ஸ்டீல் பாடி உடம்பு!

சினி–மா–வின் கதைக் களங்–கள் சென்னை, தமிழ் மதுரை, க�ோவை, நெல்லை என பெரு நக–

ரங்–க–ளி–லி–ருந்து இப்–ப�ோது சிறு நக–ரங்–க–ளுக்–கும் சென்று க�ொண்–டி–ருக்–கி–றது. அந்த வரி–சை–யில் பிர– ப – ல – ம ான ஒட்– ட ன் சத்– தி – ர ம் மார்– க்கெட்டை கதைக் கள–மாக க�ொண்டு உரு–வாகி இருக்–கி– றது ‘தங்–க–ரதம்’ . விஜய் நடித்த ‘புதிய கீதை’ உள்–ளிட்ட பல படங்–க–ளில் இணை இயக்–கு–ந–ராக பணி–யாற்–றிய பால–மு–ரு–கன் இயக்கி உள்–ளார். அவ–ரு–டன் ஒரு மினி பேட்டி: “ஒட்– ட ன் சத்– தி – ரத்தை கதை கள– ம ாக தேர்ந்–தெ–டுத்–தது ஏன்?” நான் பிறந்த வளர்ந்த பூமி என்–தற்–காக மட்–டு– மல்ல. ஒட்–டன் சத்–திர– ம் பகுதி மக்–களி – ன் வாழ்–வில் க�ொஞ்–சம் வித்–திய – ா–சம – ா–னது. மதுரை கடு–மையு – ம், பழனி குழு–மையு – ம் கலந்த ஒரு கலாச்–சா–ரம் அது. தனிப்–பட்ட உள்–ளூர் பேச்சு வழக்கு இல்–லா–மல் தூய ம�ொழி பேசு– கி – ற – வ ர்– க ள். விவ– ச ா– ய – மு ம், வியா–பா–ர–மும்–தான் தொழில். ஒட்–டன் சத்–தி–ரம் மார்க்–கெட்–டிற்கு கிரா–மங்–க–ளி–லி–ருந்து காய்–கறி ஏற்றி வரு–கிற இரண்டு ெடம்போ டிரை–வர்–க–ளின் கதை. ஹீர�ோ வெற்–றி–யின் டெம்போ பெயர் தங்க ரதம், இவ–ருக்கு ப�ோட்–டிய – ா–ளர– ாக உள்ள சவுந்–தர்– ரா–ஜா–வின் டெம்போ பெயர் பர–மன். இவர்–களு – க்கு இடையே கடும் த�ொழில்–ப�ோட்டி இருக்–கும்–ப�ோது சவுந்– த ர்– ர ாஜா தங்கை அதிதி கிருஷ்– ண ாவை வெற்றி காத–லிக்க... அப்–பு–றம் நடக்–கும் விஷ–யங்– களை சுவா–ரஸ்–யம் குன்–றா–மல் ச�ொல்–கி–ற�ோம்” “நான் கட– வு ள் ராஜேந்– தி – ர – னு க்கு பெரிய

முக்–கி–யத்–தும் இருக்–கும்–ப�ோல இருக்கே.” “மற்ற படங்–களை விட இதில் கூடு–தல். ஒட்– டன்–சத்–திர– ம், பழனி பக்–கம் அவ–ரைப்–ப�ோல ம�ொட்– டைத் தலை, சிக்ஸ் பேக் உடம்–பு–டன் நிறைய பேரை பார்க்–க–லாம். அத–னால்–தான் அவ–ருக்கு முக்–கி–யத்–துவம். அவர் பெரும் குடி–கா–ர–ராக வரு– கி–றார். ஊர்–மக்–கள் சேர்ந்து அவ–ருக்கு மிஸ்–டர் குடி–கா–ரன் என்ற பட்–ட–மெல்–லாம் தரு–வார்–கள். அவரை புகழ்ந்து ஒரு பாட–லும் இருக்–கிற – து. ‘ம�ொட்– டத்–தல மச்–சா–னுக்கு முடி முளைச்சா அழகு... தங்–க–ர–தம்–ப�ோல ஸ்டீல் பாடி உடம்பு...’ என்று த�ொடங்–கு–கிற பாட–லில் அவ–ரு–டன் இணைந்து டிஸ்கோ சாந்தி தங்கை சுசித்ரா ஆடி–யிரு – க்–கிற – ார்.” “படம் ச�ொல்–லும் செய்தி என்ன?” “செய்தி, கருத்து இப்–படி எது–வும் இல்லை. தமிழ் மக்–களி – ன் கலாச்–சா–ரம், காதல், ம�ோதல், விட்– டுக் க�ொடுத்–தல், அன்பு இவற்றை ச�ொல்–கிற�ோ – ம். சினிமா கண்–டு–க�ொள்–ளாத எங்–கள் பகுதி வாழ்– வி–யலை ச�ொல்–கி–ற�ோம். ‘காத–லுக்கு மரி–யா–தை’, ‘தூறல் நின்னு ப�ோச்–சு’ மாதி–ரிய – ான சென்டி–மென்ட் படம். தணிக்கை குழு எந்த கட்–டும் இல்–லா–மல் ‘யூ’ சான்–றி–தழ் க�ொடுத்–துள்–ளது. தமி–ழக அரசு வரி–வில – க்கு க�ொடுத்–துள்–ளது. இயக்–குன – ர் ஷங்–கர், லிங்–கு–சாமி ஆகி–ய�ோர் இந்த கதையை பட–மாக்க ஒப்–புக் க�ொண்–ட–னர். சில தவிர்க்க முடி–யாத கார– ணங்–கள – ால் அது நடக்–கா–மல் ப�ோய்–விட்–டது. எவ்–வ– ளவ�ோ கஷ்–டப்–பட்டு இந்–தப் படத்தை திரைக்கு க�ொண்–டு–வ–ரு–கி–றேன்.”

- மீரான்

16.6.2017 வெள்ளி மலர்

19


ஷகிலாவுக்கு லஞ்ச் க�ொடுத்த

சிலுக்கு! “ர�ொ

ம்ப ஓவ–ரா–தான் சீன் ப�ோடு–றாங்–க” குழந்தை ஷகிலா அலுத்– து க் க�ொண்–டாள். க�ோடம்–பாக்–கத்–தில் அவள் படித்த பள்–ளி–யில் சினி–மாத்–துறை – யி – ன – ரி – ன் குழந்–தைக – ள்–தான் கணி–ச– மாக இருந்–த–னர். ‘மை டி–யர் குட்–டிச்–சாத்–தான்’ படத்–தில் நடித்து ஃ பேமஸ் ஆகி–யிரு – ந்த குழந்தை நட்–சத்–தி–ரங்–கள் ச�ோனி–யா–வும், டிங்–கு–வும் அந்த பள்–ளி–யில்–தான் அப்–ப�ோது படித்–துக் க�ொண்–டி– ருந்–தார்–கள். எப்–ப�ோ–தும் அவர்–களை சுற்றி ஒரே கூட்–ட–மாக இருக்–கும். “என்னை ரஜினி அங்–கிள் கூப்–பிட்டு மடி–யில் உட்–கார வெச்சு க�ொஞ்–சி–னா–ரு” என்று ச�ோனியா ச�ொன்–னால், அதை கேட்–ப–தற்–காக ஒரு கூட்–டம் ஆவென்று வாயைப் பிளந்–து க�ொண்டு சுற்றி நிற்–கும். ச�ோனியா இப்–படி பிட்டு ப�ோட்–டால் டிங்கு தன்–னு–டைய ஜப்–பா–னிய பயண அனு–ப–வங்–களை ச�ொல்ல ஆரம்–பித்து விடு–வான். “ஜப்–பான்லே கமல் அங்–கி–ளும், ராதா ஆன்ட்–டி–யும்...” என்று அவன் கதை ச�ொல்ல ஆரம்–பித்–தால், கதை முடிய மூன்று மணி நேரம் ஆகும். “அடப்–பாவி. ‘ஜப்–பா–னில் கல்–யா–ண–ரா–மன்’ படமே ரெண்–டரை மணி நேரம்–தா–னேடா?” என்று ஷகிலா நினைத்–துக் க�ொள்–வாள். சினிமா நட்–சத்–திர– ங்–கள் என்–பத – ால் டிங்–குவ�ோ, ச�ோனி–யாவ�ோ எந்த குறும்பு செய்–தா–லும் ஆசி–ரிய – ர்– கள் கண்–டுக் க�ொள்–வ–தில்லை. மாறாக க�ொஞ்–சு– வார்–கள். இஷ்–டத்–துக்–கும் அவர்–கள் லீவ் எடுத்–துக் க�ொள்–வார்–கள். அவர்–க–ளுக்கு கிடைத்த இந்த சலு–கை–யும், பிர–ப–ல–மும்–தான் ஷகி–லா–வுக்–குள் சினிமா ஆசையை விதைத்–தது. “நானும் ஒரு நாள் ஸ்டார் ஆவேன். சிடு–மூஞ்சி

20

வெள்ளி மலர் 16.6.2017

23 கணக்கு டீச்–ச–ர�ோட மூக்–க–றுப்–பேன்” மன–சுக்–குள் சப–தம் செய்–து க�ொண்–டாள். படிப்–பென்–றாலே ஷகி–லா–வுக்கு க�ொஞ்–சம் வேப்–பங்–காய்–தான். உங்–கள் யூகம் சரி–தான். அதே ஷகி–லா–தான். யாரை திரை– யி ல் பார்த்– த ால் ரசி– க ர்– க ள் வாய் வீங்–கும – ள – வு – க்கு இன்று விசில் அடிக்–கிற – ார்–கள�ோ, தங்–கள் படம் ரிலீஸ் ஆகும்–ப�ோ–தெல்–லாம் ஷகிலா படம் ஏதா–வது ரிலீஸ் ஆகி–வி–டும�ோ என்று தென்– னிந்–தி–யா–வின் பெரிய பெரிய நடி–கர்–க–ளெல்–லாம் ஒரு காலத்–தில் பயந்–தார்–களே, அதே ஷகி–லா–தான். ஷகிலா, பிறந்து வளர்ந்–ததெ – ல்–லாம் சென்–னை– யில்–தான். அப்–பா–வுக்கு ரெக்–ரியே – ஷ – ன் துறை–யில் வேலை. அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்–பா–வுக்–கும் சரி. அம்–மா–வுக்–கும் சரி. இவர்–கள் செய்–து க�ொண்– டது பரஸ்–ப–ரம் மறு–ம–ணம். அப்–பா–வின் முதல் மனை–விக்கு பிறந்த குழந்–தைக – ளை தன்–னுடை – ய ச�ொந்த சக�ோ–தர சக�ோ–த–ரி–கள் என்–று–தான் சிறு– வ–ய–தில் ஷகிலா நினைத்–துக் க�ொண்–டி–ருந்–தார். ஷகி–லா–வின் அம்–மா–வுக்–கும் மூன்று பிள்–ளை–கள். க�ொஞ்–சம – ல்ல, நிறை–யவே பெரிய குடும்–பம்த – ான். டீனேஜ் ஷகிலா டெர்–ர–ராக இருப்–பார். பாப் கட்–டிங் வெட்–டி–யி–ருப்–பார். அப்–பா–வின் டிவி–எஸ் சேம்பை எடுத்–துக் க�ொண்டு க�ோடம்–பாக்–கம் முழுக்க சுற்–று–வ ார். துறு–து –று–வென்று இருந்த இவ–ருக்கு நடிப்பு வாய்ப்பு தேடி வந்–தது. இவ–ரது அக்–கம் பக்–கத்து வீடு–கள் எல்–லாம் சினி–மாக்– கா–ரர்–க–ளா–கவே நிறைந்–தி–ருந்–தார்–கள். “சரத்–கு–மார் சாரு ஹீர�ோவா நடிக்–கி–றாரு. அந்– த ப் படத்– து லே ஒரு சின்ன கேரக்– ட ர் இருக்கு. நீ பண்–ணு–றி–யாம்மா?” ஷகி–லா–வி–டம்

யுவ–கி–ருஷ்ணா


கேட்–ட–ப�ோது அவ–ருக்கு என்ன ச�ொல்–வ–தென்றே தெரி–ய–வில்லை. சினி–மா–வில் நடிக்க அவ–ருக்கு ஆசை–தான். ஆனால், அப்பா என்ன ச�ொல்–வார�ோ தெரி–ய–வில்லை. “அப்பா கிட்டே கேட்– டு ட்டு ச�ொல்– றே ன் அங்–கிள்.” அப்–பா–விட – ம் கேட்–டப – �ோது மறுப்பு ச�ொல்–வார் என்–று–தான் நினைத்–தார். அவர�ோ சுல–பத்–தில் ஒப்–புக் க�ொண்–டார். “படிப்–புத – ான் உனக்கு சரியா வரலை. நடிப்–பா–வது ஒழுங்கா வந்தா சரி.” ஆனந்–தத்–தில் ஷகிலா எகி–றிக் குதித்–தார். வானம் இடித்–தது. ஷகி–லா–வின் அப்பா ஒப்–புக் க�ொண்–ட–தற்கு வேற�ொரு கார–ணமு – ம் இருந்–தது. வறுமை. நிறைய குழந்–தை–களை வைத்–துக் க�ொண்டு அவர்–க–ளது உண–வுக்–கும், உடைக்–கும், படிப்–புக்–கும் பணம் செல–வ–ழிக்க முடி–யா–மல் திண–றிக்–க�ொண்–டி–ருந்– தார். ஷகிலா சினி–மா–வில் நடித்து சம்–பா–தித்–தால் தன்–னு–டைய சுமை ஓர–ள–வுக்–கா–வது குறை–யும் என்றே நினைத்–தார். சரத்–கு–மார் நடித்த ‘நட்–சத்–திர நாய–கன்’ படத்– தில் ஷகி–லா–வுக்கு சிறு–வேட – ம் கிடைத்–தது. அதைத் த�ொடர்ந்து நிறைய படங்–க–ளில் துணை பாத்–தி– ரங்–க–ளுக்கு இவரை அழைத்–தார்–கள். க�ொஞ்–சம் கருப்–பாக இருந்–தா–லும் களை–யான முகம். இயக்– கு–நர் என்ன ச�ொல்–கி–றார�ோ, அதை கச்–சி–த–மாக பிடித்–துக் க�ொண்டு ஒரே டேக்–கில் ஷாட் ஓக்கே செய்–வார். ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்– கி ற திரைப்– ப – ட த்– தி ல் இவ–ருக்கு சிலுக்கு ஸ்மி–தா–வுக்கு தங்–கச்சி வேடம். முதன்–முறை – ய – ாக தம்–மாத்–தூண்டு காஸ்ட்–யூமி – ல் நடிக்–கி–றார் ஷகிலா. “அய்– ய ய்யோ அண்ணா. இந்த டிரெஸ் வேணாம். ர�ொம்ப சின்–னதா இருக்–கு” காஸ்ட்– யூ–ம–ரி–டம் ச�ொன்–னார். “தங்– க ச்சி. ஹீர�ோ– யி ன் இப்போ வரு– வாங்க பாரு. அவங்–க–ளுக்கு இதை–விட சின்ன டிரெஸ்.” சில்க் மாடி–யில் இருந்து இறங்–கிவ – ந்–தார். கர்ச்–சீப்பை கட்டி தன்–னுட – லை மறைத்–திரு – க்– கி–றார�ோ என்று எண்–ணு–ம–ள–வுக்கு சிக்–க–ன–மான காஸ்ட்–யூம். உள்–ளா–டை–யெல்–லாம் வெளியே அப்–பட்–ட–மாக தெரிந்–தது. சில்க், இவர் அரு–கில் வரும்–ப�ோது மெது–வாக அவர் காதில் மட்–டும் விழும்–படி ச�ொன்–னார். “அக்கா, பிரா–வ�ோட பட்டை வெளியே தெரி–யுது – ”. இவர் ச�ொன்–னதை சில்க் கண்–டு–க�ொள்–ளவே இல்லை. இதை கவ–னித்–துக் க�ொண்–டி–ருந்த டைரக்– டர் ஆர்.டி.சேகர், “ஷகிலா, அவங்க ர�ொம்ப பெரிய ஸ்டார். அவங்க கிட்டே இப்–ப–டி–யெல்– லாம் பேசக்–கூ–டாது. எல்–லாம் அவங்–க–ளுக்கு தெரி–யும்” என்–றார். அன்று எடுக்க வேண்–டிய காட்–சியி – ன் படி அக்கா சிலுக்–குக்கு தங்கை ஷகிலா காபி க�ொடுக்க வேண்– டு ம். சிலுக்கு அவரை

16.6.2017 வெள்ளி மலர்

21

அறைய வேண்–டும். இவர் காபி க�ோப்–பை–ய�ோடு சிலுக்கை நெருங்கி, “அக்கா, காபி” என்–கி–றார். சிலுக்கு அறை–கிற – ார். ‘பளார்’ என்று சப்– த ம். நிஜ– ம ா– க வே அறைந்–திரு – க்–கிற – ார். ப�ொறி கலங்கி மண்– டை க்– கு ள் பூச்சி பறக்–கி–றது ஷகி– ல ா – வு க் கு . க ண் – க – ளில் குபுக்– க ென்று க ண் – ணீ ர் எ ட் – டி ப் பார்க்–கி–றது. “ க ட் . சூ ப் – ப ர் . ஷாட் ஓக்கே. ஷகிலா கலக்– கி ட்– டே ” என்று பாராட்– டு – கி – ற ார் டைரக்– டர். காதில் விழுந்–தால்– தானே?


சிலுக்–கிட – ம் தாமாக முன்–வந்து பேசி–யதை அவர் விரும்–ப–வில்லை. அந்த க�ோபத்–தில் நிஜ–மா–கவே அறைந்–துவி – ட்–டார் என்–றுத – ான் ஷகிலா நினைத்–தார். “சிலுக்–குன்னா பெரிய இதுவா?” என்று டைரக்– டரை ந�ோக்கி க�ோப–மாக கேட்–டப – டி – யே ஃப்ளோ–ரில் இருந்து விருட்–டென்று கிளம்–பி–னார். டைரக்–டர் பின்–னா–லேயே ஓடி–வந்–தார். “அட என்–னம்மா நீ. ஒரு நடி– கையா ஆயிட்டு இதுக்–கெல்–லாம் க�ோபப்–படு – றே? உனக்–குத – ான் ஏற்– க–னவே சீன் எக்ஸ்ப்–ளெயி – ன் பண்– ணி– யி – ரு ந்– தே – னி ல்லே? அவங்க அடிக்–கப் ப�ோறாங்–கன்னு தெரி– யும். பர்ஃ–பெக்–டான டைமிங்–கில் நீ விலகி இருக்–க–ணும். சிலுக்கு ர�ொம்ப தங்–கம – ா–னவ – ங்க. அவங்க ஏன் உன்னை வேணும்னே அடிக்– கப் ப�ோறாங்க. உன்னை அவங்–க– ளுக்கு ர�ொம்ப பிடிக்–கும்” இயக்– கு–நரி – ன் சமா–தா–னத்–துக்கு ஷகிலா இணங்–க–வில்லை. சி லு க் – கி – ட ம் வி ஷ – ய த ்தை ச�ொன்–னார்–கள். அவரே ஷகி–லா–வி– டம் வந்து பேசி–னார். தன்–னு–டைய கைப்–பையை திறந்து கைநி–றைய சாக்–லேட்–டு–களை அள்–ளிக் க�ொடுத்–தார். “சாரிடா. அக்கா ர�ொம்ப வேகமா அடிச்–சிட்– டேனா?” செல்–லம் க�ொஞ்–சி–னார். லஞ்–சுக்கு வீட்– டுக்கு ப�ோகும்–ப�ோது ஷகி–லா–வை–யும் அழைத்–துச் சென்–றார். ஷகிலா, சாப்–பிட்–ட–தி–லேயே ஆடம்–ப–ர– மான லஞ்ச் அது–தான். சிலுக்கே கூட இருந்து ஸ்பெ–ஷ–லாக கவ–னித்–துக் க�ொண்–டார். ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்–துக்–குப் பிறகு ஷகி–லா– வுக்கு திரும்–பிப் பார்க்–கவே நேர–மில்லை. கவுண்–ட– மணி, விவேக்–குக்கு ஜ�ோடி–யா–கவெ – ல்–லாம் காமெடி ர�ோல்–க–ளில் நடித்–தார். அவை தவிர்த்து ‘அந்–த’ மாதி–ரி–யான படங்–கள் ஏரா–ளம். அது–குறி – த்து ஷகி–லா–வுக்கு எந்த குறை–யும் இப்–ப�ோ–து–மில்லை. ஒரு பேட்–டி–யில் ச�ொல்–கி–றார். “நான் நடித்த படங்–கள் கமர்–ஷி–ய–லும் அல்ல. ஆர்ட் ஃபிலி–மும் அல்ல. ஏத�ோ ஒரு வகை–யில் மக்–க–ளின் உணர்–வு–க–ளுக்கு வடி–கா–லாக அமைந்– தவை. பதி–னைந்து லட்–சத்–தில் படம் எடுப்–பார்–கள். முப்–பது லட்–சத்–துக்கு பிசி–னஸ் ஆகும். பிசி–னஸ் ஆன த�ொகை–யை–விட பன்–ம–டங்கு வசூல் ஆகும். அந்த படம் த�ொடர்–பான அத்–தனை பேருக்–குமே நிச்–சய லாபம். இன்–று–வரை அம்–மா–திரி படங்–க– ளில் நடித்–தது த�ொடர்–பாக எனக்கு எந்–த–வி–த–மான குற்–ற–வு–ணர்ச்–சிய�ோ, வருத்–தம�ோ சிறி–து–மில்–லை.” அப்–ப�ோது ஷகி–லா–வின் மார்க்–கெட் வேல்யூ என்–ன–வென்–பது அவ–ருக்கே தெரி–யாது. ஒரு–முறை கேர–ளா–வில் படப்–பி–டிப்பு முடிந்து சென்–னைக்கு கிளம்–புவ – த – ற்கு தயா–ராக இருக்–கிற – ார். ஒரு தயா–ரிப்–பா–ளர் ஷூட்–டிங் ஸ்பாட்–டுக்கே வந்து அவ–ரி–டம் கால்–ஷீட் கேட்–கி–றார். “அஞ்சே அஞ்சு நாள் நடிச்– சி க் க�ொடுங்க

22

வெள்ளி மலர் 16.6.2017

மேடம். ப�ோதும்.” மிக–வும் ச�ோர்–வாக இருந்த ஷகிலா, அவரை நிரா–க–ரிக்க ஒரு கண்–டி–ஷன் ப�ோடு–கி–றார். “ரெஸ்ட் எடுக்–க–லாம்னு மெட்–ரா–ஸுக்கு கிளம்– பிக்–கிட்–டிரு – க்–கேன். இப்போ வந்து கேட்–குறீ – ங்–களே? அப்–படி நான் நடிச்சே ஆக–ணும்னா மூணு நாள்– தான் நடிப்–பேன். சம்–ப–ளம் ஒரு லட்–சம்.” “இவ்–வ–ள–வு–தானே மேடம்?” ச�ொல்–லி–ய–வாறே மஞ்–சப்–பை–யில் இருந்து ஒரு லட்–சத்தை எடுத்து கையி–லேயே க�ொடுத்–து–விட்–டார். மூன்–று–நாள் ஷூட்–டிங் முடிந்– தது. தனக்–காக ஷகிலா வந்து நடித்– துக் க�ொடுத்–த–தில் தயா–ரிப்–பா–ள– ருக்கு மிக–வும் மகிழ்ச்சி. மேலும் இரண்டு லட்ச ரூபாய் க�ொடுத்– தார். அதா–வது ஒரு நாளைக்கு ஒரு லட்– ச ம் என்று கணக்கு ப�ோட்டு தந்–தி–ருக்–கி–றார். இரு–பது ஆண்– டு – க – ளு க்கு முன்பு, பாலி– வுட்–டின் முன்–னணி நட்–சத்–தி–ரங்–க– ளுக்கே கூட இவ்–வ–ளவு சம்–ப–ளம் இருந்–தி–ருக்–காது. அவ்– வ – ள வு சம்– ப ா– தி த்– த – வ – ருக்கு சேர்த்து வைக்–கத் தெரி–ய–வில்லை. உயி– ராக நினைத்த உற– வு – க ள் இவ– ரு – டை ய பணம் அத்–த–னை–யை–யும் பிடுங்–கிக் க�ொண்–டார்–கள். “உற– வு – க – ள ை– யு ம், நட்– பு – க – ள ை– யு ம் பேணி வளர்க்க கணக்கு வழக்–கில்–லா–மல் செலவு செய்– தேன். ஆனால், அவர்–கள் என்னை ‘பி’ கிரேடு நடி– கை–யா–கத – ான் பார்த்–திரு – க்–கிற – ார்–கள். அவர்–கள – ைப் ப�ொறுத்–த–வரை நான் வெறும் ‘ஏடி–எம் மெஷின்’. என் குடும்ப நிகழ்–வு–க–ளில் நான் கலந்–து க�ொள்–வ– தை–கூட அவர்–கள் அவ–மா–ன–மாக கரு–தி–னார்–கள். எனக்கு ஆத–ர–வாக இருந்த அப்–பா–வும் கால– மான பிறகு மிக–வும் தனி–மையை உணர்ந்–தேன். நண்–பர்–கள், உற–வு–கள்... என அத்–தனை பேரும் த�ொடர்ச்–சிய – ாக ச�ொல்லி வைத்–தது ப�ோல முது–கில் குத்–திக்–க�ொண்டே இருந்–தார்–கள். துர�ோ–கங்–கள் பழ–கி–விட்–டது. எப்–ப–டி–யி–ருந்–தா–லும் நான் வாழ்ந்–து– தானே ஆக–வேண்–டும். என்–னு–டைய உல–கத்தை நானே உரு–வாக்க தீர்–மா–னித்–தேன். இப்–ப�ோது நான் வசித்து வரு–வது ஒரு காடு. இந்த காட்–டின் ஒவ்–வ�ொரு மரத்–தை–யும் நானே நட்–டி–ருக்–கி–றேன். எல்–லாமே என்–னு–டைய தேர்–வு– தான் என்–ப–தால் காசு பணம் இருக்–கி–றத�ோ இல்– லைய�ோ மகிழ்ச்– சி – ய ாக வாழ்ந்து வரு– கி – றே ன். என்னை ஒரு திரு–நங்கை அவ–ரது மக–ளாக தத்– தெ–டுத்–தி–ருக்–கி–றார். நான் ஒரு திரு–நங்–கையை என்–னு–டைய மக–ளாக தத்–தெ–டுத்–தி–ருக்–கி–றேன். ரத்த உற–வில்–லாத இந்த உற–வுக – ளி – ன் பாசத்–திலு – ம், அன்–பி–லும் முன்பு எப்–ப�ோ–துமே உணர்ந்–த–றி–யாத பாது–காப்–பினை – யு – ம், மகிழ்ச்–சியை – யு – ம் பெறு–கிறே – ன்” என்–கி–றார் ஷகிலா.

(புரட்–டு–வ�ோம்)


அதாகப்பட்டது

மகாஜனங்களே...

ராமைய்– ய ா– வி ன் மகன் உமா– ப – தி – யு ம் தம்பி ஹீர�ோ–வாகி விட்–டார். அறி–முக இயக்–கு–நர்

ர.இன்–ப–சே–கர் இயக்–கும் ‘அதா–கப்–பட்–டது மகா– ஜ–னங்–க–ளே–’–தான் அவர் அறி–மு–க–மா–கும் படம். யாரி–ட–மும் உத–வி–யா–ள–ராக பணி–யாற்–றா–மல் நேர– டி–யாக படம் இயக்க வந்–தி–ருக்–கி–றார் இவர். படம் பற்றி அவ–ரி–டம் பேசி–ன�ோம். “அர–சி–யல் படமா?” “டைட்–டில் பார்த்–துட்டு எல்–ல�ோ–ரும் அப்–ப–டித்– தான் நினைப்–பார்–கள். இது அர–சி–யல் பட–மல்ல. எனது சினி–மாவை பார்க்க தியேட்–டர்–க–ளுக்கு வரு–கி–ற–வர்–களை நான் அப்–படி அழைப்–ப–தாக வைத்–துக் க�ொள்–ளல – ாம். ஒரு விஷ–யத்தை ச�ொல்– லும் முன் மக்–களை கவர்ந்–தி–ழுக்–க–வும் இப்–படி ச�ொல்–ல–லாம். ஆனால் கதைக்கு 100 சத–வி–கி–தம் ப�ொருத்–த–மான தலைப்பு இது.” “கதை...?” “இசைக் கச்–சேரி மேடை–யின் ஓரத்–தில் நின்று க�ொண்டு கிடார் வாசிக்–கும் கலை–ஞனை கவ–னித்– தி–ருப்–பீர்–கள். அப்–படி ஒரு கலை–ஞ–னின் கதை இது. மகிழ்ச்–சிய – ான, எளி–மை–யான அவன் வாழ்க்– கை–யில் ஒரு சம்–ப–வம் நடக்–கி–றது. அதி–லி–ருந்து அவன் எப்–படி வெளி–யில் வரு–கிற – ான் என்–பது – த – ான் கதை. த்ரில்–லர் காமெடி பட–மாக உரு–வாகி இருக்– கி–றது. கரு–ணா–க–ரன் படம் முழுக்க வந்து சிரிக்க வைக்–கி–றார். மயில்–சாமியும், பாண்–டி–ய–ரா–ஜ–னும் இருக்–கி–றார்–கள். படம் முடிந்து வெளி–யில் வரும்– ப�ோது இப்–படி ஒரு சம்–பவ – ம் நம் வாழ்க்–கையி – லு – ம் நடந்ததே அப்போ அதை இப்–படி பண்–ணியி – ரு – க்–க– லாமே என்று நினைக்க வைக்–கும் திரைக்–கதை – .” “ஹீர�ோ?” “இந்–தப் படத்–திற்கு அடுத்து வீட்டு பையன் மாதிரி ஒரு–வர் வேண்–டும். த�ோற்–றம் எளி–மை– யாக இருக்க வேண்–டும். இசை–ஞா–னம் முகத்–தில்

ஹீர�ோவாகிறார் தம்பி ராமைய்யா மகன்!

இருக்க வேண்–டும். இதை மன–தில் வைத்து பலரை ஆடி–சன் பண்–ணிக் க�ொண்–டிரு – ந்–த�ோம். அப்–ப�ோது பாட–லா–சிரி – ய – ர் யுக–பா–ரதி அனுப்பி வைத்த பையன்– தான் உமா–பதி. நாங்–கள் எதிர்–பார்த்–தது ப�ோலவே அவர் இருந்–தத – ால் தேர்வு செய்–த�ோம். பல நாட்–கள் ரிகர்–சல் நடத்–தி–விட்டு ஷூட்–டிங் கிளம்–பி–ன–ப�ோ–து– தான் தம்பி ராமைய்யா மகன் என்–பதே தெரி–யும்.” “இசையை மைய–மாக க�ொண்ட படம். இமான் கலக்–கி–யி–ருப்–பாரே?” “யூட்–யூப்–பில் ‘ஏனடி நீ என்னை இப்–படி...’ பாடலை 33 லட்–சம் பேர் பார்த்–தி–ருக்–கி–றார்–கள். இது மட்–டு–மின்றி மற்ற மூன்று பாடல்–க–ளும் ஹிட்– டா–கி–யி–ருக்–கின்–றன. ரிலீ–சுக்கு பிறகு பாடல்–கள் பெரி–தாக பேசப்–ப–டும். ஒரு உண்–மை–யை–யும் கூறு–கி–றேன். தம்பி ராமய்யா மகன் அறி–மு–க–மா– கும் படம் என்–ப–தால் இமான் க�ொஞ்–சம் கூடும் இன்ட்–ரஸ்ட் காட்–டி–னார்.” “ஹீர�ோ–யின் எப்–படி?” “ரேஷ்மா ரத்– த�ோ ர். தெலுங்– கி ல் இரண்டு படங்–க–ளில் நடித்–தி–ருக்–கி–றார். இவ–ரும் ஆடி–ச– னுக்கு வந்து தேர்–வா–ன–வர். ஹீர�ோ–வின் வாழ்க்– கை– யி ல் குறுக்– கி – டு ம் வலு– வ ான கேரக்– ட ர். ஆரம்– ப த்– தி ல் ம�ொழி தெரி– ய ா– ம ல் க�ொஞ்– ச ம் தடு–மா–றி–னார். கடைசி நாள் சார் நானே டப்–பிங் பேசி–டட்–டுமா என்–றார். அந்த அள–வுக்கு எதை– யும் கற்– று க் க�ொள்– கி ற சுறு– சு – று ப்பு மிக்– க – வ ர். நாங்–க–தான் ரிஸ்க் எடுக்க விரும்–பா–மல் டப்–பிங் வாய்ஸ் க�ொடுத்–த�ோம்.”

- மீரான்

16.6.2017 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 16-6-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

ÍL¬è CA„¬êò£™

ªê£Kò£Cv Gó‰îñ£è °íñ£è «õ‡´ñ£ ? ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶.

õ£ó‹«î£Á‹

è¬ôë˜ T.V.J™

¹î¡Aö¬ñ 裬ô 9.30 ñE ºî™ 10.00 ñE õ¬ó

ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ T.V.J™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ Fƒè†Aö¬ñ 裬ô 10.00 «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ ñE ºî™ 10.30 ñE õ¬ó àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø CøŠ¹ ñ¼ˆ¶õ˜èœ ªê£Kò£Cv «ï£Œ ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹ ðŸPò º¿ M÷‚è‹ ÜO‚Aø£˜. ÝAò¬õ ªê£Kò£Cv «ï£Œ ÜP°Pè÷£°‹. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£íô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. ⽋¹ «îŒñ£ù‹, ͆´èœ «è£íô£A M´‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ îóŠð´‹ ÝJ‡†ªñ¡´èœ, ñ£ˆF¬óè¬÷ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ùJ™ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£°‹. â‰îMî ð‚èM¬÷¾ Þ™ô£ñ™ Gó‰îóñ£è °íñ£°‹. H¡ù£™ õ£›ï£O™ «ï£Œ F¼Šð õó«õ õó£¶. Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv «ï£Œ °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹ Dr.RMR ªý˜Šv. ñ¼ˆ¶õ è™ÖKJ™ BSMS, BAMS, BNYS ñŸÁ‹ MD «ð£¡ø ñ¼ˆ¶õ ð†ì‹ ªðŸø I辋 ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜èœ ªè£‡´ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ªõOñ£Gô‹, ªõO®™ Þ¼Šðõ˜èœ 죂ì¬ó ªî£ì˜¹ ªè£‡´ îƒè÷¶ «ï£J¡ ñ °Pˆ¶ ‘õ£†vÜŠ’ Íô‹ «ð£†«ì£ ñŸÁ‹ i®«ò£¬õ ÜŠH 죂ìK™ «è†ìP‰¶, Ý«ô£ê¬ù ªðŸÁ western union money transfer Íô‹ ñ¼‰¶ ªî£¬è¬ò ªê½ˆF ÃKò˜ Íô‹ ñ¼‰¶è¬÷ ªðŸÁ‚ ªè£œ÷ô£‹.

«èŠì¡

Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹

Dr.RMR ªý˜Šv

ªê£Kò£Cv CA„¬ê‚° CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 26, bùîò£À ªî¼, î¬ô¬ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17

PH: 044- 4350 4350, 4266 4593, Cell: 97100 57777, 97109 07777 á˜

«îF

«õÖ˜ ªðƒèÀ˜ «êô‹ «è£òºˆÉ˜ ñ¶¬ó ï£è˜«è£M™ ªï™¬ô F¼„C °‹ð«è£í‹ 𣇮„«êK

7&‰ «îF 8&‰ «îF 9&‰ «îF 10&‰ «îF 11&‰ «îF 12&‰ «îF 12&‰ «îF 13&‰ «îF 13&‰ «îF 14&‰ «îF

24

«ïó‹ 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô ñ£¬ô 裬ô ñ£¬ô 裬ô

9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 2& 5 9 & 12 2& 5 9 & 12

嚪õ£¼ ñ£îº‹ ºè£‹ ï¬ìªðÁ‹ Þìƒèœ æ†ì™ ñ¾‡† ð£ó¬ìv, èªô‚ì˜ ÝHv ܼA™. «ïûù™ ªóCªì¡C, 372, «êû£ˆFK «ó£´, ªñüv®‚ «è£«ì ꘂAœ. ü¨è£ ªóCªì¡C, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ H«óñ£ôò£, èMî£ F«ò†ì˜ ܼA™, 裉F¹ó‹. æ†ì™ H«ó‹Gõ£v, üƒû¡ ܼA™, «ñôªð¼ñ£œ «ñvFK iF. æ†ì™ ð«ò£Qò˜ ð£ó¬ìv, ñE‚Ç´ ܼA™. æ†ì™ ܼíAK, 53, ñ¶¬ó «ó£´, ð¬öò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ ÝvH, F¼õœÙ˜ ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ MIM 𣘂, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ êŠîAK, ðvG¬ôò‹ ܼA™.

வெள்ளி மலர் 16.6.2017


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.