ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)
ப�ொது அறிவுப் பெட்டகம்
18-05-2018
வெறுப்பு அர–சி–யல்!
பேசும்
சுவர்!
1
2
ஆத–ரவு மறி–யல்! அர்–மே–னிய – ா–வின் யெர–வன் நக–ரில் விமா–னநி – ல – ை–யம் செல்–லும் சாலையில் அரசியல் தலைவர் நிக�ோல் பாஸி–னி–யன் ஆத–ர–வா–ளர்–கள் ப�ோக்–கு–வ–ரத்தைத் தடுத்து மறி–யல் செய்த காட்சி. குடி–ய–ர–சுக்–கட்–சிக்–குழு, அதி–பர் வேட்–பா–ள–ராக விரும்–பிய நிக�ோ–லுக்கு எதி–ராக வாக்–க–ளித்–த–தால் ஏற்–பட்ட எதிர்–வினை இது.
“இன–வெ–றுப்பு ரத்–த–நாளங்–க–ளில் விஷம்– ப�ோல ஏற்–றப்–ப–டு–கி–ற–து” மு ன்–னாள்
அரசு அதி– க ா– ரி – யு ம், சமூக செயல்– ப ாட்– ட ா– ள – ரு – ம ான ஹர்ஷ் மந்–தர், வெறுப்பு அர–சி–யல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுபான்–மை–யி–னரைப் பாது–காக்க கர்வான் -இ- ம�ொக–பத் அமைப்பைத் – ர்–களு – க்கு த�ொடங்கி பாதிக்–கப்–பட்–டவ உதவி வரு–கி–றார்.
கர்– வ ான் இ ம�ொக– ப த்– தி ன் ந�ோக்–க–மென்ன? முஸ்லீம் தாய்கள் தங்கள் மகனிடம் ‘சலாம் அலைக்கும்’ எ ன் று ப � ொ து இ ட ங ்க ளி ல் கூறாதே என்று எச்சரிக்கும் அ ள – வு க் கு இ ன் று மு ஸ் – லீ ம் – கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி– யுள்– ள னர். தலித்– து – க ள், கிறிஸ்– த–வர்–கள், முஸ்–லீம்–கள் தனி–யாக இல்லை. அவர்– க – ளு க்கு உதவ நாங்கள் இருக்கிற�ோம் என்று கூறும் ஒற்– று மை– ய ான முயற்சி மற்–றும் செயல்–பா–டு–தான் இந்த இயக்–கம்.
04
முத்தாரம் 18.05.2018
அநீ–திக்கு எதி–ரான மக்–க–ளின் ம�ௌனம் பற்றி...? ந ா ன் த லி த் து ம ல்ல , முஸ்லீமுமல்ல எனும்– ப �ோது எதற்கு கவ–லைப்–ப–ட–வேண்–டும் என்ற எண்– ண – மு ம், பய– மு ம், கூடு–த–லாக பிற இனத்–த–வ–ருக்கு எதி–ரான இன–வெறு – ப்–பும் இதற்கு முக்– கி – ய க்– க ா– ர – ண ம். கத்– து வா நிகழ்–விற்–கான நீதி முயற்சி சிறிது நம்பிக்கை தரு– கி – ற து. ஆனால் இ ந் நி கழ்வை வி ச ா ரி க் கு ம் விஷயத்தில் ப�ொதுமக்களின் ம�ௌனம் கேள்–விக்–கு–ரிய ஒன்று. சமூ–கம் ந�ோய்த்–தன்–மை–யுள்–ள– தாக மாறி–விட்–டதா? ஆம். மக்–க–ளின் ரத்–த–நாளங்– க ளி ல் ஹ ெ ர ா யி ன் – ப � ோ ல சி று ப ா ன்மை யி ன ர் மீ த ா ன வெறுப்பு செலுத்தப்பட்டு– வரு– கி ற து . வெ று ப்பைத் த டு த் து அன்பை விதைப்பது பெரும்–
நேர்–கா–ணல்–: ஹர்ஷ் மந்–தர், கர்–வான்இ -ம�ொக–பத் இயக்கத் தலை–வர்– தமி–ழில்:
ச.அன்–ப–ர–சு
ப�ோ–ராட்–ட–மாக மாறி–வ–ரு–கி–றது. மத– வெ – று ப்பு சூழ– லி ல் அன்பு என்பது புரட்– சி – க – ர – ம ான சிந்– த – னை–யா–கி–விட்–டது.
வெறுப்பை பரப்–பு–வ–தற்கு யார் ப�ொறுப்பு? 2010 ஆம் ஆண்டு நடந்த தாக்கு–தலி – ல் 86 சத–விகி – த – ம் பாதிக்– கப்– ப ட்– ட – வ ர்– க ள் முஸ்லீம்– க ள்– தான். ம�ோடி, ட்ரம்ப் ஆகிய�ோ–ரின் அர–சிய – லே பிரித்தா–ளுவ – து – த – ான். மேலும் அந்த எண்–ணத்தை ஏற்று மக்– க – ளு ம் ம�ௌனம் காப்– ப – து – தான் அச்–சு–றுத்–த–லாக உள்–ளது. ஸ்வ– ய ம்– சே – வ க் மற்– று ம் அதன்
துணை அமைப்–பு–கள் இதனை நம் தலை–மு–றை–யின் வேர்–க–ளுக்– கும் பரப்பி வரு–வதை தடுக்க நாம் ஒன்–றிணைந் – து ப�ோரா–டியே ஆக– வேண்–டும்.
இச்– ச ம்– ப – வ ங்– க ள், விளை– வு – க–ளில் நீதித்–துற – ை–யின் பங்–கென்ன? கீழ்– ம ட்– ட ங்– க – ளி ல் காவல்– துறை, நீதித்– து – றை – யி ன் பணி பரவா– யி ல்லை ரகத்– தி ல் உள்– ள து . ப சு வ ன் – மு – றை – ய ா ல் பாதிக்– க ப்– பட்ட நூற்– று க்– கு ம் மேலான குடும்–பங்களை – சந்–தித்–து– வ–ரு–கி–ற�ோம். பேலு–கான் குடும்– பத் – தி – ன ர் வ ா ழ்வே பி ணை
18.05.2018 முத்தாரம் 05
வாங்கு–வதில்–தான் ஓடு–கிற – து. அவர்– களை பசு கடத்– த ல்– க ா ர ர ்க ள் எ ன ம ா வ ட்ட எஸ்பி முன்முடிவ�ோடு பேசு– கிறார். பசு கடத்–தல் என்ற பெய–ரில் க�ொல்லப்–பட்–டவ – ர்– களை என்–கவுன்–டர் வழக்–கு– க– ளை ப் ப�ோலவே காவல்– துறை கையா–ளு–கிறது.
எதிர்த்துப் ப�ோராடுவது அவ–சி–ய–மா–வது ஏன்? ‘ ‘ எ லி – யைத் த ா க் – கு ம் பூனையை எலி மன்–னிப்–பது என்–பது அதற்–கான தீர்–வல்ல; வேறு–வ–ழி–யில்லை’’ என்–பார் காந்தி. தலித்– து – க ள் தங்– க ள் மீதான அடக்– கு – மு – றையை எ தி ர் த் து ஒ ன் றி ணைந் து ப�ோரா–டுகி – றார்–கள். ஆனால் ப�ோலீசில் புகார் க�ொடுக்– கவே முஸ்– லீ ம்– க ள் தயங்– கு – கின்றனர். பல்– வே று அர– சி – யல் கட்சி– க – ளு ம் வெறுப்பு அர– சி – ய – லு க்கு சாட்– சி – ய ாக ம�ௌனம் சாதிக்–கும் நிலை– யில் ப�ோரா– ட ாவிட்– ட ால் எப்படி? நம் கல்விமுறை கேள்விக்கு பதில் அளிக்க தயார்படுத்துகிறதே தவிர சக மனி– த ர்– க – ளி ன் துன்– பங் – க – ளு க் கு க வ ல ை ப் – ப ட் டு உத– வி – பு– ரி – யு ம்– ப டி மாற்– ற – வில்லை.
06
முத்தாரம் 18.05.2018
வெறுப்–பின் அலை முன் எப்–ப�ோதை – – யும் விட அதி–க–ரித்–தி–ருக்–கி–றதா? அமெ– ரி க்க அதி– ப – ர ாக ட்ரம்ப் தேர்–வான ஒரு வாரத்–திற்–குள்–ளா– கவே முஸ்லீம் மக்–கள் அமெ–ரிக்–கா– வில் நுழை–வ–தற்–கான தடை விதிக்– கப்–பட்டு–விட்–டது. ஓரம்–கட்டப்–பட்ட முஸ்–லீம் மக்–க–ளுக்கு ஆத–ர–வாக நடி– கர்–கள், த�ொழி–லா–ளர்–கள், வழக்–குரை – – ஞர்–கள் என அனை–வரும் திரண்டு அர–சுக்கு நெருக்–கடி க�ொடுத்து பேசிய நிகழ்வு நடை–பெற்–றது. ஆனால் அது இந்–திய – ா–வில் நடை–பெ–றவி – ல்–லையே ஏன்? என்–ப–து–தான் எனக்கு அதிர்ச்– சி–யாக உள்–ளது. நன்றி: பிரக்–யா–சிங், அவுட்–லுக்.
A Feast of Science: Intriguing Morsels from the Science of Everyday Life by Joe Schwarcz 240 pages ECW Press சர்க்–கரை உட–லுக்கு நல்–லதா, புற்–று– ந�ோயை தீர்க்க நுண்–ணு–யி–ரி–கள் உத–வுமா, தக்–கா–ளி–யில் மீனின் மர–ப–ணுக்–கள் பயன்– ப–டுத்–தப்–ப–டு–கி–றதா என எக்–கச்–சக்க கேள்– வி–க–ளுக்கு மருத்–து–வர் ஜ�ோ விடை–ய–ளித்து வாச–கர்–களி – ன் பதற்றம் தணிக்–கிற – ார். தின–சரி வாழ்–வில் வேதிப்–ப�ொ–ருட்–கள் ஏற்–ப–டுத்–தும் விளை–வுக – ள் பற்–றியு – ம் விளக்–கம் தரு–வது சிறப்பு.
புத்–த–கம் புதுசு! Not That Bad: Dispatches from Rape Culture by Roxane Gay 368 pages Harper இன்–றைய உல–கில் முன்–னெப்–ப�ோ–தை– யும் விட பெண்–க–ளுக்கு எதி–ராகப் பெருகி வரும் சம்–பளப் பாகு–பாடு, வல்–லு–றவு, வன்– முறை ஆகிய ந�ோய்க்–கூ–று–கள் பற்றி ஏமி ஜ�ோ பர்ன்ஸ், லிஸ் லென்ஸ், கிளாரே ஸ்வார்ட்ஸ், நடி–கர்–கள் ஆலி ஷீடி, கேப்– ரி–யல் யூனி–யன் ஆகி–ய�ோர் தம் கருத்–துக்– களை கட்–டு–ரை–யாக எழு–தி–யுள்–ள–னர். பாலின பாகுபாட்டால், வல்லுறவு விஷ–யங்–கள – ால் பாதிக்–கப்–பட்ட பெண்– க– ளு க்கு சமூ– க த்– தி ல் வாழ தைரி– ய ம் தரும் படைப்பு இது.
18.05.2018 முத்தாரம் 07
ஓவி–யத்–தில்
டூப்பு எது? லண்–ட–னில் பிறந்த எரிக் ஹெப்–
பர்ன், சிறு–வய – தி – ல – ேயே படு சுட்டி. எதில்? குறும்பு செய்–வ–தில்–தான். ஹ�ோம்–வ�ொர்க் க�ொடுத்த பள்ளி மீது வெறுப்பு ஏற்–பட பள்–ளிக்– கட்– டி – ட த்– தி ற்கு தீவைத்– து – வி ட, சிறு–வர் காப்–பகத் – தி – ற்கு அனுப்பப்– பட்–டார். எத்–தனை குறும்–பு–கள் செய்– தா–லும் ஓவி–யம் வரை–வில் ஈடு– இணையவற்றவனாக இருந்த– தால் ஆசி–ரி–யர்–க–ளும் எரிக்கை மன்–னித்–த–னர். ராயல் அகா–டமி பள்–ளியி – ல் இடம்கிடைக்க, அங்கே வெள்–ளிப்–பதக்க – ம் பெற்று படித்த எரிக் பின் இத்தா–லிக்கு இடம்– பெ–யர்ந்–தார். ஜார்ஜ் ஏக்ஜெல் என்– ப – வ ரின் உத– வி – ய ா– ள – ர ாக பணி–பு–ரிந்–த–ப�ோது ஓவிய நுணுக்–
08
முத்தாரம் 18.05.2018
16 கங்–க–ளைக் கற்றுக்–க�ொண்டு 1997 ஆம் ஆண்டு ‘கலைத்– தி – ரு – ட ர்– க–ளின் கையே–டு’ என்ற நூலை எழு–தி–னார். இதில் ஓவி–யத்தை திருட்–டுத்–த–ன–மாக நகலெ–டுத்து – து என எப்–படி உலகை ஏமாற்–றுவ விவ–ரித்–தி–ருந்தார். சர். அந்– த�ோ ணி பிளண்ட் எ ன்ற மே ட் – டு க் – கு டி எ ன் – ப – வர் எரிக்– கி ன் ப�ோலி ஓவி– ய ங்– களுக்கு நற்–சான்–றித – ழ் க�ொடுத்து பின்–னா–ளில் உள–வாளி என்று கண்டு– பி – டி க்– க ப்– ப ட இவ– ரி ன் நல்ல –பெ–ய–ரும் ப�ோய் எரிக்–கின் ஓவியங்–களி – ன் தர–மும் கெட்–டது. பின்–னர் இத்–தா–லிக்குச் சென்ற எரிக், ப�ோலி ஓவி–யங்–க–ள�ோடு வெ ண் – கல ச் – சி லை – க – ளை – யு ம் – ார். ப�ோல்– வடிக்கத்– த�ொடங்–கின
டினி, டேவிட் ஹாக்–கனி ஆகிய பிர– ப லங்– க – ளி ன் ஓவி– ய ங்– களை ப�ோலி– ய ாக்கி விற்– ப – ன ைக்கு வைக்க பல்–வேறு அருங்–காட்–சி யகங்களுக்கும் எரிக்கின் ஓவி– யங்–கள் சென்–றன. ஏரா–ள–மாக கிடைத்த பணத்–தால் க�ோடீ–சுவ – ர – – ரா–னார் எரிக். கால்னகி என்ற விமர்– ச – க ர் 1978 ஆம் ஆண்டு எரிக்– கி ன் ஓவி– ய ங்– க ள் ப�ோலி என்று பத்– தி – ரி – கை – யி ல் எழுத, இதற்கு பதி–ல–டி–யாக தன் சுய–ச–ரி– தையை எரிக் 1991 ஆம் ஆண்டு எழு–தின – ார். இதில் ஓவி–யங்–களி – ல் ப�ோலி கிடை–யாது என்ற ப�ொன்–
ம�ொ–ழி–ய�ோடு விமர்–ச–கர்களை வசை–பா–டின – ார். 1996 ஆம் ஆண்டு ர�ோம்–நகர வீதி–க–ளில் திடீ–ரென மண்டை பிளக்–கப்–பட்டு இறந்து கிடந்–தார் ஓவி–யர் எரிக்.
ப�ொக்–கிஷத் திரு–டன்!
ஹாலந்–திலு – ள்ள டேவென்–டர் நக–ரில் 1889 ஆம் ஆண்டு பிறந்த ஹான்– வ ான் மீக்– ரெ ன் சிறு– வ – யதி–லி–ருந்தே ஓவி–யத்–தில் பாயும் புலி. முப்–பது வய–திற்–குள்–ளா–கவே இரண்டு கண்–காட்–சி–கள் நடத்–தி– விட்ட மீக்–ரெனை விமர்–சகர்–கள் வறுத்து எடுத்–தத – ால் பதி–னேழ – ாம்
வர–லாற்று சுவா–ர–சி–யங்–கள் 15
ரா.வேங்–க–ட–சாமி
18.05.2018 முத்தாரம் 09
நூற்–றாண்டு ஓவி–யங்–களை ப�ோலி செய்–யத்–த�ொ–டங்–கி–னார். வண்– ணங்–கள் த�ொடர்–பான பல்–வேறு பயிற்– சி – க – ளு க்– கு ப் பிறகு டெர்– ப�ோர்ச், ஹால்ஸ், வெர்–மீர் ஆகிய ஓவி– ய ர்– க – ளி ன் படைப்– பு – களை விற்று பணம் சம்பா–தித்–தார் மீக்– ரென். ஹாலந்து ஜெர்– ம – னி – யி – ட – மிருந்து விடு–தலை பெற்–றவுடன் ப�ொ க் – கி – ஷ ங் – களை வெ ளி – நாட்டுக்கு விற்– ற – த ாக குற்– ற ம் ச ா ட் டி மீ க் – ரென ை அ ர சு வ ழ க் கு , வி ச ா – ரண ை எ ன இழுத்தடிக்க, இதன் விளை– வாக மன உளைச்சலுக்–குள்–ளாகி இறந்–தார் மீக்ரென்.
கவிதை குண்–டர் தாமஸ்!
பதி– ன ைந்– த ாம் நூற்றாண்டு
10
முத்தாரம் 18.05.2018
கையே–டு–களைப் பார்த்து கவிதை எ ழு தி க வி – ஞ – ர ா க நி ரூ – ப – ண – மா–ன–வர் தாமஸ் ச ெ ஸ் – ட ர்ட ன் . பள்ளி ஆசி– ரி – ய – ரி ன் ம க – ன ா ன இவர் பத்து வய– தி– ல ேயே ஃபீல்– டுக்கு வந்–து–விட்– டார். சர்ச்– சி ல் பாதி– ரி – ய ா– ர ாக இ ரு ந ்த ம ா ம ா மூலம் பல்–வேறு பழைய ஆவ–ணங்– கள் கிடைக்க அப்–ப–டியே எழுதி தன் பெயரை கீழே ப�ோட்–டுக்– – ட்–டிய – ா–னார் க�ொண்டு செலி–பிரி தாமஸ். தாமஸ் ர�ௌலி– யி ன் கவிதை மற்–றும் கட்–டு–ரை–களை தன் பெய–ரில் பத்–தி–ரி–கை–க–ளில் எழு–திய – வ – ர், லண்–டனு – க்கு சென்–ற– ப�ோது மாட்– டி க்– க �ொண்– ட ார். மு ன்ன ணி எ ழு த் – த ா – ள ர் – க ள் தாமஸை ப�ோலி எழுத்–தா–ளர், கவி– ஞ ர் என திவிர பிர– ச ா– ர ம் செய்ய, விஷம் குடித்து பதி–னேழு வய– தி ல் தற்– க �ொலை செய்– து – க�ொண்–டார் தாமஸ். வில்–லி–யம் வேர்ட்ஸ்–வ�ொர்த், ஜான் கீட்ஸ் ஆகி–ய�ோர் தாமஸைப் புகழ்ந்து பேசி–யது பின்னர் நடந்–தது.
(அறி–வ�ோம்)
உங்–கள் அறை–யின் சுவர் காலை–
யில் உங்–க–ளுக்கு ஹல�ோ ச�ொன்– னால் எப்–படி – யி – ரு – க்–கும்? கார்–னகி மெலன் பல்– க – ல ைக்– க – ழ – க – மு ம் டிஸ்னி ஆராய்ச்–சி–ய–க–மும் உரு– வாக்– கி – யி – ரு க்– கு ம் கான்– ச ெப்ட் இது–தான். எலக்ட்–ர�ோட்-லேடன் க�ோட்– டிங் மூலம் சுவரை உயி–ருள்–ளத – ாக மாற்–றும் ஆராய்ச்சி இது. சுவரில் ம னி – த ர் – க – ளி ன் த�ொ டு – த ல ை உணர்ந்து க�ொள்–ள–வும், கருவி– களை இயக்–கச் –செய்–ய–வு–மான ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க – ளி ன் நெடு– நாளைய கனவு இது. டைமண்ட் வடி– வி ல் எலக்ட்– ர�ோ டு– க ளை
வைத்து சுவ– ரில் இரண்டு க�ோ ட் – டி ங் ல ே ட க் ஸ் பெயிண்டை பூ சி – ன ா ல் ப�ோதும். ஐப�ோ– னின் டச் ஸ்க்– ரீ ன்– ப�ோல சுவர் மாறு–வ–தால், இதி– லி– ரு ந்து லைட்– டு – க ளை ஆன் செய்து ஆஃப் செய்– ய – ல ாம். ‘‘அறை– யி – லு ள்ள பெரும்– ப ான்– மை பரப்–பிலான சுவரை பயன்–ப– டுத்து– வ தற்– க ான முயற்சி இது. எதிர்– க ாலத்– தி ல் இது முக்– கி – ய – மான கண்டு–பி–டிப்–பாக மாறும்” என்–கிற – ார் ஆராய்ச்–சிய – ா–ளர – ான கிறிஸ் ஹாரி–சன்.
ம் சு ே ப வர்! சு 18.05.2018 முத்தாரம் 11
இந்தியாவின் கனவு!
இ ன்– ற ைய ஜென் இசட் இள சுகளின் சுயத�ொழில் மந்திரம் எ ன ்ன ? சி ம் – பி ள் ஸ ் டா ர் ட் த � ொ ழி ல் மு ய ற் சி க ள்தா ன் . முதலில் சிறுத�ொழிலாக கைக்– க ாசை ப � ோ ட் டு த � ொ ழி ல் த�ொடங்–கி–ய–வர்–களை பார்த்–தி– ருப்–ப�ோம். இன்று ஸ்டார்ட்– அப்– களுக்கு அரசு மானி–யம் அளித்து உத–வி –வ–ரு–கி–றது. இப்–ப–கு–தி–யில்
12
முத்தாரம் 18.05.2018
1
த�ொழில் முயற்– சி – க ள், அதன் பிளஸ், மைனஸ், த�ோல்–வி–கள், கற்– று க்– க� ொண்ட பாடங்– க ள் என அனைத்–தை–யும் பார்க்–கப் ப�ோகிற�ோம். 2016 ஆம்– ஆண்டு ஜன– வ ரி 16 அன்று விக்–ஞான் பவ–னில், பிர– த – ம ர் ம�ோடி த�ொடங்கி வைத்த த � ொ ழி ல் – மு – னை வு திட்டம் ஸ்டார்ட்– அ ப் இ ந் – தி ய ா . இ ன் று – வ ரை ஸ ் டா ர் ட் – அ ப் பயிற்சிக்கு பதிவு செய்– து ள்– ள – வ ர்– க – ளி ன் அ ள வு 1 லட்–சத்து 97 ஆயி– ரத்து 469. இன்று– வ ரை ( ம ா ர் ச் 5,2018) த�ொடங்– கப்– ப ட்டு அங்– கீ – கரிக்–கப்–பட்டுள்ள
ஸ்டார்ட் அப்– கள் 7ஆயி–ரத்து 7 7 5 . அ தி ல் அர– சி ன் நிதி– – உதவி பெற்ற ஸ்டார்ட்– அ ப்– கள் 97. 2 0 1 5 ஆ ம் ஆ ண் டு பி ர – த ம ர் செ ங் – க�ோ ட் – டை – யில் அறி–வித்த திட்– ட ம் இது. த�ொடங்– கி யது அடுத்த ஆண்டு. எ த ற் கு இ ந்த புதிய திட்டம்? இ ளை – ஞ ர் – களின் த�ொழில் கன–வுகளுக்கு சிறகு க�ொடுக்–கத்– தான். லைசென்ஸ் தாம– த ம், சூழல் அனு–மதி, அந்–நிய முத–லீடு, நிலக் குத்–தகை ஆகிய பிரச்–னைக – – ளி–லிருந்து விடு–விக்க அர–சின் DIPP (The Department of Industrial Policy and Promotion) துறை உத–வு–கிற – து.
என்ன விதி–முறை?
25 க�ோடிக்–கும் குறை–வான ல ாப ம் இ ரு க் – க – வேண் – டு ம் . ஸ்டார்ட் அப்பு–கள் த�ொடங்க த�ொழி– லி ல் ஏழு ஆண்– டு – க ள் அனு– ப – வ ம் தேவை. குறைந்த வட்–டி–யில் கடன் தர முத–லீ–டாக 200 பில்–லி–யன் டாலர்–கள் அரசு
கா.சி.வின்–சென்ட்
க�ொண்–டுள்–ளது. மேலும் அர–சின் ஐமேட் நிகழ்–வும், முத்ரா வங்–கி– யின் நிதி–யு–த–வி–யும் திட்–டத்–தின் ஸ்பெ–ஷல். ஸ ் டா ர் ட் – அ ப் எ ன் – றா ல் எ ன ்ன ? பு தி ய ப � ொ ரு ளை , சேவையை வழங்–கும் நிறுவனத்– தின் த�ொடக்க நிலை. கூட்–டா– கவ�ோ, தனி–யா–கவ�ோ த�ொடங்கிய நிறு– வ – ன ம் தன் ப�ொருளை, சேவையை மேம்படுத்–தும் ஸ்டே– ஜில் இருக்–கும். இதில் முத–லீ–டும் உடனே வந்து குவிந்–து–வி–டாது. ஐடி– ய ாவை பல்வேறு கார்ப்ப ரேட் நிறு–வனங்–களை அசத்தும்– படி அமைத்–தால் ஸ்டார்ட்–அப் மார்க்–கெட்–டில் பிழைக்க ஆக்சி–ஜ– னாக நிதி கிடைக்–கும். இவ்–வாரம் வாசிக்க வேண்– டி ய நூல்: The Power of Habit –by Charles Duhigg. Entrepreneurial Skill Habit Forming.
(உச்–ச–ரிப்–ப�ோம்)
18.05.2018 முத்தாரம் 13
பசி, பட்–டினி: வெனி–சுலா! ல
த்–தீன் அமெ–ரிக்–கா–வைச் ச ே ர ்ந ்த ல ா ர ன்ஸ ோ மெண்– ட �ோஸா எம்– பி – ர – செ ஸ் ப�ோலார் எனும் உணவு நிறு– – ன் வனத்–தின் அதி–பர். 1.5 பில்–லிய டாலர்–கள் ச�ொத்–துக்கு அதி–பதி. வெனி–சுலா அதி–பர் நிக்–க�ோ–லஸ் – க்கு மதுர�ோ செய்–யா–ததை மக்–களு செய்–கிற – ார் மெண்–ட�ோஸா. ஆம், வயிற்–றுக்கு ச�ோறி–டு–கி–றார். 2016 ஆம் ஆண்–டிலேயே – 73 சத–வி–கித
14
மக்–க–ளின் எடை சரா–ச–ரி–யாக 19 பவுண்–டு–கள் குறைந்–தி–ருக்–கி–றது என அறிக்கை வெளி– ய ா– ன து. வெனி–சு–லா–வின் ப�ொரு–ளா–தா– ரம் கச்சா எண்–ணெய் சார்ந்–தது. மு ன்னா ள் அ தி ப ர ா ன ஹியூக�ோ சாவேஸின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கச்சா எண்ணெய் லாபத்திலேயே உருவானது. மதுர�ோ அதிபரான ஓராண்டிலேயே எண்ணெய் வி லை வீ ழ் ச் சி ய டை ய , ப � ொ ரு ள ா த ா ர ம் ச ரி ந ்த து . க�ொலைகளின் அளவு 25-91% (1991-2016) உயர்ந்தது. க டு ம் உ ண வு த ்த ட் டு ப் பாட்டிலும் arepas (ஸ்லைஸ் பிரட்) எனும் உணவை கடையில் கிடைக்–கச்–செய்–தது மெண்–ட�ோ– ஸா– வி ன் சாது– ரி – ய ம். அரசின் நெ ரு க்க டி க ளை யு ம் க டந் து உணவுக்கான மூலப்பொருட்– களை இறக்குமதி செய்தார். 1941 ஆம் ஆண்டு மெண்டோ– ஸாவின் தாத்தா மதுபானக் கம்பெனியைத் த�ொடங்கினார். 1962 ஆம் ஆண்டு, சமைத்த ச�ோள உணவுக்கு(arepas) பேடன்ட் வாங்கினார். வணிக–மேலாண்மை படித்து கம்–பெ–னி–யின் இயக்–கு– நராக மெண்டோஸா பதவி– யேற்ற ஆண்டுதான் சாவேஸ் வெனிசுலா அதிபராக, பிரச்னை– யும் த�ொடங்கியது.
கீம அவ �ோ–த –சி–ய ெ–ரபி மா ?
ஐந்து பில்லியன் கீம�ோதெரபி சந்தையை
அசைத்துப் பார்த்த கேள்வி இதுதான். க ே ட ்ட வ ர் இ ந் தி ய ா வி ல் பி ற ந்த மருத்துவர் அர்ஜுன் ஜ�ோஷி. கல்லூரி நாட்களில் எழுத்தாளராக இருந்தவர் தாயின் வற்புறுத்தலால் மருத்துவம் படிக்கத்– த�ொடங்கி இன்று கழுத்து, தலை ஆகியவற்றில் ஏற்படும் புற்று– ந�ோய்– வல்லுநராக ஜார்ஜ் வாஷிங்–டன் பல்–க – லைக் – க– ழக மருத்– து–வ–ம –னை–யில் பணி–பு–ரி–கி–றார். “புற்–று–ந�ோய் என்–ற–தும் இது–வ ரை சேமித்த குண்–டு–மணி தங்–கம் உட்–பட சுரண்டி சிகிச்சை தேடி ஓட அவ–சி–ய– மில்லை. புற்–றுந� – ோய்–களு – க்கு ஏற்ப சிகிச்– சை–யும் மாறும்” என்று அதிர வைக்–கிற – ார் அர்–ஜுன் ஜ�ோஷி. பால்–வினை–யால் ஏற்– ப – டு ம் புற்– று – ந� ோய்– க – ளு க்கு கீம�ோ– தெ–ரபி தரா–மல் சிகிச்–சை–ய–ளிக்–கிறார் அ ர் – ஜு ன் . கட ந் – தா ண் டு ஜ� ோ ஷி பத்தொன்–பது ந�ோயா–ளிக – ளி – டம் செய்த ஆய்–வுப்–படி, கீம�ோ–தெரபி செய்–த–தில் ஒரு–வர் இறந்–துப� – ோக, மூவ–ருக்கு குண– மா–னது. த�ொடர்ந்த ஆய்வில் இரு–பதி – ல் பதி–னேழு பேருக்கு கீம�ோ இன்–றியே புற்று– ந� ோய் கட்– டு ப்– ப ாட்டில் முன்– னேற்றம் தெரிந்–தது. ஸ்டீவ் ஹெண்ட்– ரிக்ஸ் என்ற திசு புற்–று–ந�ோய் ந�ோயா– ளியை ஆபரேஷன் மற்றும் கீம�ோ மூலம் காப்பாற்றியுள்ளார் அர்ஜுன். அ ன ை த் து பு ற் று ந� ோ ய்க ளு க் கு ம் கீம�ோ–தெரபி அவசியமா? என்ற கேள்– வியை தன் ஆய்வுகள் மூலம் எழுப்பி– யுள்ளார் அர்ஜுன்.
18.05.2018 முத்தாரம் 15
பீஜா–தே–வி–
இ ம ா ல ய த் தி லு ள ்ள
டேரா டூனைச் சேர்ந்த பீஜா–தேவி, ஏழு வய–தி–லிருந்து விவ–சா–யம் செய்–து– வ–ருகி – றார். ஆர்–வத்–திற்–காக அல்ல; வாழ்–வா–தா–ரமே அது–தான். தங்–க– ளின் வாழ்–வுரீ – தி–யாக இவர் சேர்த்–த விதை–களின் எண்–ணிக்கை 1,342. பருப்–பு–கள், பழங்–கள், காய்–க–றி–கள் என சேகரித்– து ள்– ள ார். சூழலி– ய – லாளர் வந்–தன – ா– சிவா த�ொடங்கிய ந வ த ா ன்யா அ மை ப் பி ல் இணைந்து விதை– க ளை பாது– காப்பது, விவசாயக்– குழுக்– க ளி– டையே பகிர்–வது, விழிப்–புணர்வு பிர–சா–ரம் ஆகிய பணி–க–ளில் ஈடு– பட்டு வருகிறார்.
ஆ ண் டி ன் த�ொடக் – கத்தில் ஒன்– ப து விதை– க ளை பானை– யி – லு ள்ள மண்– ணி ல் ஊன்– றி – வை த்து வளர்க்– கு ம் இந்தியர்–களின் கலா–சாரத்தின் பாதிப்–பில் உரு–வா–னதே நவ– தான்யா இயக்– க ம். “உரங்– களால் மலட்டுத்–தன்மைய – ான நிலங்– க ளில் இயற்கை– ய ான விதை–களை ஊன்றி விதைப்பது மு த லி ல் ச வ ா ல ா க வே இருந்தது” எனும் பீஜாதே–வி–யி– டம் மர–பான தானி–யங்–களை விதைக்க வாங்–கும் விவ–சா–யி–க– ளின் கூட்–டம் அதி–க–ரித்து வரு– கி–றது. அரி–சி–யில் மட்–டும் 380 இனங்–களை பாது–காத்து வரும் பீஜாதேவியின் உதவியால் விதைவங்கிகள் பதிமூன்று ம ா நி ல ங்க ளி ல் 2 ல ட்ச ம் பேர்களுக்கு மேல் பயன்தந்து வரு–கி–றது. “ஆண்–கள் நிலத்தை சீர்திருத்துவதும், பெண்கள் விதைகளை விதைப்பதும், அறு– வ டை செய்– வ – து – ம ான
52 16
முத்தாரம் 18.05.2018
பணிகளைச் செய்கிறார்– கள். மண் மலட்டுத்தன்மை அடையச்செய்யும் உரங் களை பயன்–ப–டுத்–தா–ம–லும், கு றை வ ா ன நீ ர ்தேவை க�ொண்ட ப யி ர ்களை பயன்படுத்துவதற்– க ாகவும் மு ய ற் சி க ளை எ டு த் து ள் – ள�ோம்.” என்– கி – ற ார் பீஜா– தேவி.
பான் யூ
சுற்– று ச்– சூ – ழ ல் க ட் – டு ப் – ப ா ட் டு இ ய க் – கு – நராகப் பணியாற்றிய பான் யூ, இரும்பு, கட்டுமானத்– துறை சார்ந்த பல்– வே று எ தி – ரி – க ளை ச ம ா – ளி த் து சுற்– று ச்– சூ – ழ – லைக் காக்க மெனக்–கெட்–டார். ப�ொரு– ளாதாரத்தில் முன்னேறி–ய– த ா க ப ல ரு ம் பே ட் டி க�ொடுத்– த – ப�ோதே சீனா– வில் உள்ள ஆறு– க – ளி ல் 26 சத–வி–கித நீர் மட்–டுமே மிச்–ச– முள்–ளது என எச்–ச–ரித்–தார் பான்யூ. முத–லில் சூழல் திட்–டங்– களைக் கண்டுக�ொள்ளாத சீ ன அ ர சு பி ன்னா ளி ல் ஐந்தாண்டிற்கான சூழல் திட்டங்களை அமுல்படுத்– தும் நிர்ப்பந்–தத்–திற்–குள்–ளா– னது. சுற்– று ச்– சூ – ழ ல்– து றை அமைச்சகத்தில் துணை
அமைச்சராகப் பணி–யாற்–றிய பான்யூ, சீன அர–சின் துறை–க–ளில் ‘சூறா–வளி பான்’ என அழைக்–கப்–பட்–டார். மாசு– படுத்–தும் துறை–களு – க்கு பான்யூ விதித்த அப–ரா–தக்க – ட்–டண – ங்–கள்–தான் இதற்கு கார– ண ம். தேசிய அள– வி ல் சுற்– று ச்– சூ–ழ–லுக்கு செல–வா–கும் த�ொகையை கணக்கிட்டு பசுமை ஜிடிபி என்ற திட்–டத்தை க�ொண்டு வந்து கவ–னம் ஈர்த்தார் பான்யூ. “தனிநபர் வரு– மானம், மக்கள்–த�ொகை இரண்டிலும் வேறு–பட்ட மேற்–குந – ா–டுக – ளை – ப் ப�ோல ப�ொரு– ள ா– த ா– ர த்தை உயர்த்தி பின் இயற்–கை–யைக் காப்–பது சீனா–வுக்கு ப�ொருந்–தா–து” என்–கி–றார் பான்யூ.
18.05.2018 முத்தாரம் 17
ச.அன்–ப–ரசு
சீ னா– வி ன்
மி
யான்மரின் யாங்கோன் நகரில் ஜவுளித்துறை மற்றும் காலணி தயா–ரிப்பு த�ொழி–லா–ளர்–கள் மே தினத்தன்று தினசரி சம்பளத்தை 267 ரூபாயாக உயர்த்தி வழங்கக் க�ோ ஷ ங ்களை எ ழு ப் பி ய ப டி ஊர்வலமாகச் சென்ற–னர்.
18
வியர்–வைக்கு விலை–யுண்டு!
19
விக்டர் காமெஸி
ஒ
ரே கம்ப்– யூ ட்– ட ர் – ப �ோ– து ம். ப ஜ ா – ரி ல் அ ல ை ந் து தி ரி – யாமல் சல்– லீ சு காசில் அமே– ஸா–னில் பர்ச்– சேஸை வீட்–டில் உட்–கார்ந்த–படி–யே மு – டி – த்–துவி – ட்டு அடுத்த வேலை– யை ப் பார்க்– க – லாம். சான்–பிர – ான்–சிஸ்–க�ோவைச் சேர்ந்த ரெய்ன்–டி–சைன் எனும் கம்பெனி–யின் புகழ்–பெற்ற தயா– ரிப்பு லேப்–டாப் ஸ்டேண்ட் (19 டாலர்). இன்று அந்த டிசைன் அமே– ஸ ான் தளத்– தி ல் ரெய்ன் டிசைனை–வி–ட– பாதி விலையில் கி டை க் – கி – ற து . “ மி க ச் – சி றந ்த ப�ொருட்–களை காப்–பி– அடிப்–பது
20
முத்தாரம் 18.05.2018
அமேஸானின் வழக்கம்” என்– கிறார் முன்னாள் அமே–ஸான் – ப ணியாளரான ரேச்சர் க்ரீர். இன்று அமேஸானின் மதிப்பு– 740 பில்லியன் டாலர்கள். கூகுள், ஃபேஸ்புக் குறிப்பிட்ட டெக் மு ய ற் சி க ள� ோ டு நி ன் று – வி ட அமேஸான் காய்கறிகள், டிவி, ர�ோப�ோக்–கள், மேக கணியம், எலக்ட்ரானிக்ஸ், திரைப்–ப–டங்– கள், த�ொலைக்–காட்சி, உணவு டெ லி – வ ரி , இ ணை ய – இ சை என வணி–கம் நீள்–கி–றது. இன்று அமேஸான் ரியல் எஸ்டேட் தவிர அனைத்–திலு – ம் சு – றா ப�ோல
உலகை விழுங்–கும்
அமே–ஸான்!
உள்– நு ழைந்து ஆக்– ர� ோ– ஷ – மாக ப�ோட்–டியி – ட்டு சக நிறு– வனங்–களு – க்கு பீதி–யூட்டி–வரு– கி–றது.”இணை–யத்–தில் நீங்கள் கிளிக் செய்ய ய�ோசிக்கும் இ ட த்தை அ மே ஸ ா ன் கணித்து– தன் த�ொழிலை மேம்ப டு த் து கி ற து ” எ ன அ தி ர் ச் சி – யூ ட் டு கி றா ர் ரேச்–ச ல். அமேஸான் ஆப் மூலம் ஒரு–வர் எங்கு வசிக்– கிறார், என்ன விஷயங்களை இணையத்தில் மேய்கிறார் எ ன்ப து வரை அ மே ஸ ா ன் அனைத்து தரவுகளை– சேமிக்– கிறது. “அனைத்து த�ொழில்– களிலும் அமேஸான் சாதிக்கும் – ர கசியம் இதுதான். வாடிக்– கை ய ா ள ரி ன் தேவை க ளை அறிந்துக�ொண்டாலே வியா–பாரி – – ஜெயித்–து– விடு–கிறார் அல்–லவா?” என்கிறார் வணிக பேராசிரி– யர்– விஜய் க�ோவிந்த்ராஜன். அமேஸான் பிற ப�ோட்டியா– ளர்களை– மட்–டு–மல்ல, நியூக்–ளி யஸ் எனும் தான் நிதி–ய–ளித்த 5.6 மி ல் லி ய ன் – ம தி ப் பி லான அலெக்ஸா இயங்கும் டேப்
லட்–டை–யும் கூட தன் எக்கோ ஷ�ோ கருவி மூலம் ப�ோட்–டி–யிட்– டு– மு–டக்கி வரு–கிற – து. அமே–ஸான் எங்–களை நகல் எடுத்து மார்க்– கெட்டில்ஜெயிக்க நினைக்கிறது” எ ன் கி றா ர் நி யூ க் ளி ய ஸ் நி று வ–னத்–தின்– துணை நிறு–வ–ன–ரான ஜ�ோனா–தன் ஃபிராங்–கல். வ�ோல் ஃபுட்ஸ் நிறு–வ–னத்–தை– வாங்–கிய ப�ொருட்– க – ளி ன் விலையைக் கு றைத து . பெ ர் க் ஷை ய ர் ஹ ாத்வே நி று வன த் து ட ன் இணைந்து மருத்துவ சேவை களை த�ொண்டு நிறுவனமாக செய்யத் த�ொடங்கியவுடன் மருத்துவசேவை நிறுவனங்களில் – ப ங்– கு – க ள் கீழிறங்க த�ொடங்– கி – விட்– ட ன. அமேஸானின் Go கடை– க ள் மு– ழு க்க ஆட்– க ளே இன்றி தானி–யங்கியாக இயங்கத் த�ொடங்கி யுள்ளது சந்தையை ம ாற் று ம் அ டு த் – த – மு ய ற் சி . விற்பனை–யாளர்களை ஒழிப்–பது மட்– டு – ம ல்ல, அனைத்து வியா– பாரங்– களையும்– கையகப்படுத்தும் மு ய ற் சி ய ா க அ மே ஸ ா னி ன் வியாபாரக் கணக்குகள் மாறி வரு–கின்றன.
18.05.2018 முத்தாரம் 21
சு யான்-
தூ குயென் எட்டு ஆண்– டு – க – ளு க்கு மு ன் பு வி ய ட் – ந ா – மி ல் ஹ � ோ சி மி ன் ந க – ரி ல் நடை– ப ெற்ற ஃபேஷன்– ஷ�ோ–வில் பங்–கேற்–றார். வி ய ட்நாம ை பூ ர் வி க – மாகக் க�ொண்ட சுயான் இன்று பார்க்–கும் வியட்– நாம் ஃபேஷன் உலகு ம ா று பட்ட ஒ ன் று . “ வி ய ட்நா மி ய டி ச ை – னர் தேவ�ோன் குயென் த ன் வெ ள ்ளை நி ற உடையில் 3டி வடிவில் உரு–வாக்–கி–யி–ருந்த நுட்ப– மான வேலைப்– ப ா– டு – கள் அருமை–யா–ன–வை” என்–கி–றார் சுயான். தற்– ப�ோது ஃபேஷன்– து றை மீது வியட்–நா–மிய இள–சு– களின் கவ–னம் திரும்பி– யுள்–ளது. த ற ்போ து வி ய ட் நாமில் ஃபேஷன் –து–றை– யா–னது பல லட்–சம் பேர்– களுக்கு வேலைவாய்ப்புத்– த ரு கி ற து . ஆ சி ய ா , ஐர�ோப்பா ஆகிய இடங்– க– ளி – லு ள்ள பழங்– கு – டி – க – ளின் அலங்–கார வடி–வங்– கள், வியட்–நாமிய நெசவு முறை–களை இணைத்து ஆடை–களை உரு–வாக்கு–
22
முத்தாரம் 18.05.2018
ம் ா ந – ட் விய ! ன் பேஷ
ஃ
கி– ற ார்– க ள். இத்தாலி, பிரான்ஸ் என பல்வேறு நாடு–களில் முன்–னணி ஃபேஷன் கம்–பெ–னி–களில் வேலை செய்–யும் பூர்–வீக வியட்– ந ாமி– ய ர்– க – ள ால் ஃபேஷன்– து றை புத்துணர்ச்சி பெற்–றுள்–ளது. இதில் வியட்– நாம் டிசை– ன ரான குயென் காங் ட்ரி வடி–வம – ைத்த ஆடை–களை கடந்–தாண்டு பாப் ஸ்டார்–களான ரிகானா, கேட்–டிப – ெரி ஆகி–ய�ோர் அணிந்–துள்–ள–னர். தற்–ப�ோது ஃபேஷ–னில் முன்–னணி வகிக்–கும் சீனா, ஜப்–பான், தாய்–லாந்து நாடுகள் வரி–சை– யில் வியட்–நா–மும் முத்–திரை பதிப்–ப–தற்கு அதிக கால–மில்லை.
த�ொழி–லா–ளர்–களு – க்–கான
உரி–மைக்–கு–ரல்! க�ோ
ல்– ட ன் குள�ோப் விருது அரங்–கில் சாரு ஜெய–ராமனுக்கு சிவப்புக் கம்– ப ள வர– வே ற்பு. அ மெ ரி க் – க ா – வி – லு ள ்ள 1 4 மில்லியன் த�ொழி–லா–ளர்–களு – க்கு குறைந்த–பட்ச சம்–பள – த்தை முடிவு செய்ய ப�ோரா– டி ய சாரு– வி ன் செய–லூக்–கத்–திற்–குத்–தான் மேலே ச�ொன்ன மரி– ய ாதை. இவர் த�ொடங்–கிய One Fair Wage என்ற விழிப்–புண – ர்வு பிர–சாரம் உண–வ– கங்– க– ளி ல் பணிபுரியும் த � ொ ழி – ல ாளர்க ளி ன் பி ர ச் சி னை க ளை மக்களின் கவ– னத் – திற்குக் க�ொண்டு வந்–தது. “ எ ன து ந ண்பர்க ளி ன் குடும்பங்–கள் பல– வும் உண– வ – க ம், க ட் – டி – ட ம் உ ள் – ளிட்ட த�ொழில்– களில் ஈடு–பட்–டுள்– ள–னர். உழைப்–புக்கு மிகக் குறைந்த ஊதி– ய த ்தைத் த ரு ம் நி று –
– ட – ம் இரக்–க– வ–னங்–கள் ஊழி–யர்–களி மின்றி நடத்–து–கின்–ற–ன” என்–னும் சாரு ஜெய–ரா–மன் அர–சிய – ல் அறி– வி–யல் பட்–டம் பெற்று பின்–னர் ஹார்–வர்ட் கென்–னடி பள்–ளியி – ல் ஒரு பட்–டம் மற்–றும் யேல் பல்– கலைக்–கழ – க – த்–தில் சட்டப்–படி – ப்பு படித்–துள்–ளார். உண–வுத்–த�ொ–ழி– லா–ளர் ஆராய்ச்சி மையத்–தின் இ ய க் – கு – ந – ர ா க செ ய ல் – ப ட் டு த�ொழி– ல ா– ள ர்– க – ளி ன் உரி– மை க்– காக ப�ோராடி வரு– கி றார். 500 உணவகங்கள், 25 ஆயிரம் த�ொழி–லா–ளர்– கள், பத்து மாநிலங்– களில் 23 ஆயி– ர ம் உ று ப் பி – ன ர் – க ள் என செயல்–பட்டு வ ரு கி ற து இ வ – ரின் தன்னார்வ நிறு–வ–னம். 19382018 வரை உண–வ– கத்–த�ொ–ழி–லா–ளர்– க– ளி ன் சம்– ப – ள ம் 0-2.3 டாலர்– க ள் வ ரை அ தி க ரி த் – துள்–ளது.
18.05.2018 முத்தாரம் 23
மார்க்–கெட்–டுக்கு புதுசு!
Energy Tablet 10 Pro 4 இசை, படங்–களி – ன் விசிறியா?
உங்களுக்காகத்தான் இந்த டேப்– ல ட். 10.1 இன்ச் துல்லிய திரை, முன்–பு–றம் 2 எம்பி பின்–பு– றம் 5 எம்பி, நூகட் ஓஎஸ் என உருவா–கியு – ள்–ளது. குறைந்த பேட்– டரி நுகர்– வ ால் 8 மணி– ந ே– ர ங்– களுக்கு ஆடிய�ோ, வீடிய�ோ பார்த்து மகி–ழ–லாம்.
Audeara A-01 headphones டெ ய்– ல ர் தைத்த சட்டை
ப�ோல எங்–க–ளது ஹெட்–ப�ோன் ஸ் பீ க ்க ர் இ ரு க் கு ம் எ ன்ப து ஆடி–யரா நிறு–வ–னத்–தின் வாக்கு. இடது காதுக்–கும், வலது காதிற்– கும் கேட்– கு ம் முறை– யி – லு ள்ள வேறு–பாட்–டிற்–கேற்ப இசையை அ ள் ளி வ ழ ங் – கு – கி – ற து இ ந ்த ஹெட்–ப�ோன்.
iPhone 8 and iPhone 8 Plus ப ல– ரு ம் ஆவல�ோடு எதிர்–
பார்த்த ஆப்பிள் ஐப�ோனின் சிவப்பு நிற சிறப்பு வெளியீடு. ரெட்–டினா திரை, 3டி டச், வயர்– லெஸ் சார்ஜ் என இதி–லுள்ள டெக்–னிக்–கல் சமாச்–சா–ரங்–கள் கடந்து இப்–ப�ோனி – ன் விற்பனை வ ரு ம ா ன த் தி ல் ஒ ரு ப கு தி எய்ட்ஸ் ந�ோயா–ளி–க–ளுக்–கான மானி– ய த்– தி ற்கு செல்– ல – வி – ரு க்– கிறது.
24
முத்தாரம் 18.05.2018
தெளி–வ�ோம்! அறி–வ�ோம் வி ப த் தி ன ா ல் அ ல ்ல து ந�ோயால் உறுப்பு செயலிழந்து ஒரு–வரு – க்கு தேவை–யான உறுப்–பு– களை அறுவை சிகிச்சை செய்து – ாம். இதற்கு பல்–வேறு ப�ொருத்–தல உடல், உறுப்பு தான இயக்–கங்–கள் உத–வு–கின்–றன. பதி–னெட்டு வய–துக்கு மேற்– பட்ட யாரும் உடல் உறுப்– பு – – ாம். ஒரு–வ– களை தானம் செய்–யல ரின் உடல் உறுப்புகளின் மூலம் த�ோராயமாக எட்டு நபர்–களை வாழ வைக்–க–லாம்.
சிறு–நீ–ர–கம், கல்–லீ–ரல், நுரை– யீரல், குடல், இத– ய ம் ஆகி– ய – வற்றை–யும் கண்–ணின் கார்–னியா, த�ோல், எலும்பு, குருத்–தெ–லும்–பு– கள் ஆகி–யவ – ற்–றின் திசுக்–கள – ை–யும் தானம் தர–லாம். சிறு–நீ–ர–கம், கல்–லீ–ரல், எலும்பு– களை எழு–பது வய–துக்கு மேற்– பட்–டவ – ர்–களு – ம், இத–யத்–தசை – க – ள், இத–யம், நுரை–யீர – ல் ஆகி–யவ – ற்றை ஐம்–பது வய–திற்கு மேற்–பட்–டவ – ர்–க– ளும், கார்–னியா, த�ோல் ஆ கி ய வ ற்றை நூ று வயதுக்கு மேற்–பட்–டவ – ர்– க–ளும், குடல், கணையம் (60 வய–துக்கு மேற்–பட்–ட– வர்–க–ளும்) என தானம் தர வயது வரம்– பு – க ள் உண்டு. உறுப்–புக – ளை தானம் தர Mohanfoundation.org என்ற தளத்தை க்ளிக் செய்–யுங்–கள்.
18.05.2018 முத்தாரம் 25
ஆண்–களு – க்–கான
குடும்–பக்– கட்–டுப்–பாடு!
ஆ
ணுறை, குடும்பக்கட்டுப்– பாடு ஆகிய பழையமுறை– க ள் உ ங ்க ளு க் கு ப் பி டி க ்க வி ல ்லை ய ா ? இ த ற ்காக வ ே ஆ ர ா ய் ச் சி ய ா ள ர ்க ள் பு தி ய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இம்மருந்து ஆண்களின் ஹார்– ம�ோனை பாதிக்காமல் கரு–வு–று– தலைத் தடுக்–கிற – து என்–ப–து–தான் இதன் ஸ்பெ–ஷல். அ ல ்ட்ரா ஒ லி – ய – லை – க ள் , ஜெல் மூலம் விந்தணுக்களை அழிப்பது ஆகியவற்றைக் கடந்து EP055 எனும் மருந்தை யுஎன்சி சாப்பல் ஹில் மற்றும் ஓரேகான் அறிவியல் மற்–றும் உடல்–நல பல்– க–லைக்க – ழக – ஆராய்ச்–சிய – ாளர்கள் க ண் டு பி டி த் து ள்ள ன ர் . இ ம் – ம–ருந்து விந்தணுக்–க–ளின் வேகத் தை மட்டும் மட்டுப்படுத்து–
26
முத்தாரம் 18.05.2018
கி–றது. “விந்த–ணுக்–கள் மிதக்–கும் வ ே கத்தை ம ட் டு ப் ப டு த் தி கருத்–த–ரித்–தலைத் தவிர்க்க இம்– ம–ருந்து உத–வு–கி–ற–து” என்–கி–றார் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஓ ராண்ட். விலங்குகளுக்கு செய்த ச�ோதனையில் மருந்து முப்பது மணி– நேரங்களுக்கு வீரி– ய – ம ாக இருந்– த து. மூன்று வாரங்– க ளுக்– கு ள்– ள ா– க வே விந் – த – ணு க்– க ளின் தன்மை இயல்பு நிலைக்கு மீண்டு–விட்–டது. “ஆண்– களின் உடலில் பதினெட்டு நாட்களுக்குப் பிறகு உடலிலுள்ள விந்தணுக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்” என்கி–றார் ஆராய்ச்–சி– யா–ள–ரான மேரி ஜெல்–லின்ஸ்கி. வி ரை வி ல் , ஆ ர ா ய் ச் சி க் கு ப் பிறகு சந்தைக்கு இம்மருந்து விற்–ப–னைக்கு வரும்.
ஐர�ோப்–பா–வின் நாச–வேலை! க
ம்ப்–யூட்–டர்–கள்,டேப்–லட்–கள், ஸ்மார்ட்–ப�ோன்–கள் என பழைய ப�ொருட்– க ள் அனைத்– த ை– யு ம் ஐர�ோப்பா (ரஷ்யா உட்– ப ட) நைஜீ– ரி யா நாட்– டி ல் க�ொட்டி வ ரு கி ற து . த�ோரா ய மா க ஓ ரா ண் டு க் கு 1 2 . 3 ட ன்க ள் எ ல க்ட்ரா னி க் கு ப்பை க ள் ஐர�ோப்–பிய நாடு– க–ளில் உரு–வா– கின்–றன. இதில் 60 ஆயி–ரம் டன் இ-குப்– பை – க ள் நைஜீரி– ய ா– வி ல் க�ொட்–டப்–பட்டுள்–ளன என்–பதை அமெ–ரிக்–கா–வின் சுற்–றுச்–சூ–ழல் ஏஜன்சி மற்–றும் ஜெர்–ம–னி–யின் வளர்ச்சி மற்–றும் ப�ொரு–ளா–தார ஒருங்– கி – ண ைப்பு அமைச்– ச – க ம் இணைந்து செய்த ஆராய்ச்சி கூறி–யுள்–ளது. இக்–கழிவு–க–ளில் 77 சதவிகிதம் ஐர�ோப்பாவிலிருந்– தும் மீதி அமெ– ரி க்கா, சீனா– வி–லி–ருந்–தும் வரு–கி–றது. அமெ–ரிக்கா ஒரு ட்ரில்லியன்
டாலர்கள் மதிப்புக்கு எலக்ட்– ரா னி க் ப � ொ ரு ட்களை அதிநுகர்வு செய்யும் தேசமாக மு த லி ட த் தி லு ம் அ டு த்த இ ட த் தி ல் ஐ ர � ோப்பா வு ம் உள்ளன. இ-குப்பை–களி – ல் மெர்க்– குரி, காட்– மி – ய ம், லெட் ஆகிய நச்–சு–கள் சூழ–லுக்கு கேடு விளை– விப்–பன. ஏழை நாடு–கள் பல–வற்–றி– லும் பிளாஸ்–டிக் கழி–வுக – ள் இறக்–கு– ம தி க் கு எ தி ரா ன கி டு க் கு ப் – பிடி சட்டங்கள் கிடையாது. இ க்க ழி வு க ளை இ ற க் கு ம தி செய்யும் சாக்கில் புதிய எலக்ட்– ரா னி க் ப � ொ ரு ட்களை யு ம் சட்டவிர�ோதமாக நாட்டிற்– குள் கடத்–து–கி–றார்–கள். எலக்ட்– ரிக் ப�ொருட்–க–ளின் ஆயுள் குறை– வா–கவு – ம், எளி–தில் பழு–துபார்க்க – மு டி ய ாததா க வு ம் இ ரு ப்ப து இ - கு ப்பை க ளி ன் அ ள வை அதி–க–ரித்து வரு–கி–றது.
18.05.2018 முத்தாரம் 27
பிட்ஸ்! ர ஷ்யாவில்
கைவிடப்பட்ட கிரா–மங்–க–ளின் எண்–ணிக்கை 22 ஆயி–ரம். ஜப்–பா–னில் மனச்–ச�ோர்–வைக் குறிக்க KoKoro no kaze என்ற வார்த்– த ை– யைப் பயன்– ப – டு த்– து – கி–றார்–கள். பி ற பறவ ை க ளி ட மி ரு ந் து உணவைப் பிடுங்கித் தின்ன அதன் வாலைப்–பிடி – த்து கவ–னத்தை திசை– தி–ருப்பி வம்பு செய்–வது காகத்–தின் பழக்–கம். ஜாலிக்–காக – வு – ம் இதனை காகங்–கள் செய்–கின்–றன. ilunga என்ற வார்த்–தைக்கு மூன்– றா–வது முறை தவறை ப�ொறுத்–துக் க�ொள்–ளா–த–வர் என்று அர்த்–தம். த ன் வாழ்வில் ஒவ்வொரு நாளை–யும் துல்லியமான அடை– யாளங்களுடன் நினைவுகூ– ரு ம் ஒரு–வ–ரின் அரிய நிலைக்கு Highly Superior Autobiographical Memory (HSAM) என்று பெயர். இத்–தன்–மை– யில் உல– கி ல் அறு– ப து நபர்– க ள் வாழ்ந்து வரு–கின்–ற–னர்.
28
முத்தாரம் 18.05.2018
பு ப் று ெ வ அர–சிய – ல் பேச்சு! இ ந் தி ய ா வி ல்
ஆ ட் சி , அதிகாரத்– த ைப் பெற இன– வெறுப்– பை த் தூண்– டு ம் வகை– யில் பல்– வ ேறு எம்பி, எம்– எ ல்– ஏக்–கள் பேசி–வரு – கி – ன்–றன – ர். இதில் பாஜக, 47% சத–வி–கி–தம் பெற்று முன்னிலை வகிக்– கி – ற து என தேசிய தேர்–தல் கண்–கா–ணிப்பு மற்– று ம் ஜன– ந ா– ய க சீர்– தி – ரு த்த அமைப்பு தன் அறிக்– கை – யி ல் கூறி–யுள்–ளது. பாஜ–க–வைத் த�ொடர்ந்து அனைத்– தி ந்– தி ய மஜ்– லி ஸ் இட்– டெ–ஹ–டுல் முஸ்–லி–மீன்(AIMIM), தெலுங்–கானா ராஷ்–டிர சமிதி உட்–பட ஆறு– கட்–சி–கள் வெறுப்பு ச�ொற்–ப�ொ–ழிவு – க – ளி – ல் முன்–னிலை வகிக்– கி ன்– ற ன. இதில் உத்– த – ர ப்– பி–ர–தே–சம், தெலுங்–கானா, மகா– ராஷ்டிரா ஆகிய மாநி–லங்–க–ளில் வெறுப்பு பேச்சுகள் அதிகம்
பேசப்–பட்–டுள்–ளன. பாஜக, சிவ– சேனா, பாமக, ஏஐ– யு – டி – எ ஃப், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பதினைந்து உறுப்பினர்– க ள் மீ து இ து – த�ொ ட ர்பா க வழக்குகள் பதிவு செய்–யப் ப – ட்–டுள்–ளன. இதில் பத்து பேர் பாஜ– க– வை ச் சேர்ந்– த – வர்– க ள். மேலும் பல்– வ ேறு கட்சி– க – ளை ச் சேர்ந்த 4 3 எ ம் – எ ல் – ஏ க் – க ள் மீது வழக்குப் பதிவு செய்யப்ப ட் டு ள்ள து . கடந்த ஐந்து ஆண்டு– களில் வெறுப்பு பேச்சுக்– களைப் பேசியதாக 198 அரசியல்வாதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்– பட்டுள்–ளது.
18.05.2018 முத்தாரம் 29
‘பெரு’ ப�ோராட்–டம்!
க
டந்–தாண்–டில் மட்–டும் பெரு நாட்– டி ல் 2,100 பெண்– க ள் கற்– பழிக்–கப்–பட்–டுள்–ள–னர். பெண்– கள் மீதான வன்–முறை என 28 ஆயிரம் வழக்–குக – ள் காவல்–துற – ை– யில் பதிந்–துள்–ளத – �ோடு 94 பெண்– கள் க�ொடூ–ரம – ாக க�ொல்–லப்–பட்–டு ள்–ள–னர். அண்–மை–யில் பெரு தலை– ந– க – ர ான லிமா– வி ல் சென்– ச ஸ் பணிக்–காக சென்ற பெண்ணை ஒரு– வ ர் வல்– லு – ற வு செய்– த து நாடெங்–கும் க�ோபத்–தைக் கிளற, பெண்–கள் கிளர்ந்–தெ–ழுந்–துள்–ள– னர். கடந்தாண்டு நவ. 25 அன்று பாலின வன்முறை, கடத்தல் ஆகியவற்–றுக்–காக சமூ–க–வ–லை–த் தளங்களில் ஆதரவு திரட்டி பே ர ணி ந ட த் தி யு ள்ள ன ர் .
30
லத்–தீன் அமெ–ரிக்–கா–வில் பெண்– கள் இயக்–கங்–கள் பர–வி–யுள்–ளது பெரு–வில் மட்–டும்–தான். இங்கு கருக்–க–லைப்–புக்கு தடை–யுண்டு. பல்– வே று கலை– ஞ ர்– க ள் ஒன் றி–ணைந்து Ni Una Menos என்ற தி ட் – ட த்தை மு ன் – னெ – டு த் து பெண்–கள் மீதான ்வன்–முற – ைக்கு எதிரான பிரசாரத்தை செய் த–னர். லத்–தீன் அமெ–ரிக்காவில் வல்லுறவு மூலம் கருவுறுதல் உல–கி–லேயே அதி–கம். “பெரு–வில் 15-19 வயது இளம்பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 60 சதவிகிதம். கவனக்குறைவான அல்லது வல்லுறவு கருக்களை அழிப்பது குற்றம் என்பதுதான் சிக்கல்” என்கிறார் ஆம்னஸ்டி அமைப்–பைச் சேர்ந்த வேகா.
பிகே
சாந்ே–தா–மில் ப�ோர்த்–துக்–
கீ– சி – ய ர்– க ள் இரட்– ட ைக்– கு– ழ ல் துப்– ப ாக்– கி – ய ாக வணி–கத்–தையு – ம் மதத்–தை– யும் பரப்–பிக் க�ொண்–டி– ருந்– த னர். டச்சுக்– க ா– ர ர்– களுடன் இருந்த வணி–கப் – ா–லும், அவர்களை ஆங்–கி– ப�ோட்–டிய லே–யர்–களு – ம் எதிர்த்து நின்–றத – ாலும் சாந்தோமி– லி – ரு ந்த ப�ோர்த்– து க்– கீசியர்கள் ஆங்கிலேயர்களுக்கு ரெட் கார்–ப்பெட் வர–வேற்பு க�ொடுத்– த–னர். அப்–ப�ோது துபாஷி (இரு– ம�ொழி வல்லுநர்) ஆக இருந்த பெரி திம்மப்பா பிரான்சிஸ் டேக்கு உத–வி–னார். அன்று இந்–தப் பகுதி முழு–வது – ம் விஜ–யந – க – ர மன்–னரி – ன் பிரதிநிதியான த ர்மல வெங்காட ா த் ரி யி ன் கீழ் செயல்பட்டு வந்தது. தலை– ந–க–ரம் வந்–த–வாசி. அன்று, பூவி–ருந்–த– வல்–லி–யின் நாயக்–க–ரான இவரது சக�ோதரர் ஐயப்பா கரைய�ோரப் பாதுகாப்புக்கு ப�ொறுப்பாளர். மத–ரா–ச–பட்–டி–ணம் வடக்கே ஆங்– கி–லே–யர் க�ோட்டை கட்–டிக் க�ொள்– ள–லாம் என அனு–ம–தித்–தது இவர் – த ான். ஆக, மதராசபட்டிணம் என்ற ஒரு கிராமம் ஏற்கனவே அ ங்கே இ ரு ந்த து ம் அ ங்கே க�ோட்–டை கட்டிக் க�ொள்ளலாம் என்பதும் தெளிவாகிறது. சென்னப்– பட்–டி–ணம் எப்–படி வந்–தது?
ன் ரி ேய டை ல ங்கி ோட் ஆ க�
18.05.2018 முத்தாரம் 31
லிஜி
மூஷிய�ோ இப்–ரா–ஹிம் (பிரெஞ்சு) பிரான்–ஸில் பாலியல்
த�ொ– ழி ல் நடை– பெ – று – மி–டத்–தில் தந்–தை–யு–டன் வ சி த் து வ ரு – கி – ற ா ன் ம �ோ ச ஸ் . த ா ய ற் – ற – வ – னுக்கு தந்– தை – யு ம் வழி– காட்–டா–த–தால் ப�ொய், களவு, சூது, மாது என ம�ோசஸ் அலைபாய்– கி ற ா ன் . அ ப ்ப ோ து மளிகைக் கடைக்–கா–ரர் இப்–ராஹிம் அறி–மு–க–மா– கி– ற ார். இப்ராஹிமின் க டை யி ல் பு கு ந் து ப�ொ ரு ட்களை த் திருடுவது ம�ோசஸின் வழக்– க ம். ம�ோச– ஸி ன் திருட்டை அறிந்–தா–லும் அவனை மகன் ப�ோல
32
முத்தாரம் 18.05.2018
கருதி கண்டும் காணா–மல் இருக்–கி–றார். இச்சூழலில் திடீரென ம �ோ ச ஸி ன் த ந ்தை தற்கொலை செய்துக�ொள்ள, அ ன ா தை ய ா கு ம் ம �ோ ச ஸிடம் அளவற்ற அன்பு காட்டுகிறார் இப்ராஹிம். புதிய கார் வாங்கி ம�ோச– ஸு– ட ன் அதில் பய– ணி க்– கி – ற ா ர் . வ ழி – யி ல் ந ே ரு ம்
விபத்– தி ல் இப்– ர ா– ஹி ம் மர– ணி க்– கி – ற ார். உயிர்–பிழைத்த – ம�ோசஸ் அவ–ரின் மளி–கைக்– க–டையை நடத்–து–வ–த�ோடு படம் முடி–கி– றது. ஒரு சிறு–வனு – க்கும் முதியவருக்குமான ஆழ–மான நட்பை அழ–கா–க செல்லு–லாய்– டில் ச�ொன்ன இப்–ப–டத்–தின் இயக்–கு–நர் பிராங்–காய்ஸ் டுபெய்–ரான்.
சலீமா பேகம் (Salima Begum)
முத்தாரம்
ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL
Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:
subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120
18-05-2018 ஆரம்: 38 முத்து : 21
ப ள்– ளி ப்– ப – ரு – வ த்தைக் கடந்து வந்த அனைத்து மாண–வர்–க–ளின் வாழ்–வி–லும் ர�ோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்–கள் இருப்–பார்–கள். அத்–த–கைய ஆசிரியர்களில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்–களு – க்கு ‘குள�ோ–பல் டீச்–சர் பரி–சு’ வழங்– கப்–ப–டு–கி–றது. சான்–றி–த–ழு–டன் பத்து லட்–ச– ரூ–பாய் ஊக்–கத்–த�ொ–கை–யாக அளிக்கப்– ப– டு – கி – ற து. 2017-ம் ஆண்டு இப்பரிசைப் பெற்–ற–வர்–க–ளில் சலீமா பேகமும் ஒரு–வர். பாகிஸ்– த ா– னி – லு ள்ள குக்– கி – ர ா– ம த்– தி ல் பிறந்த சலீமா பேகம், பள்–ளிப் படிப்–பைக் கடக்–கவே சிர–மப்–பட்–டார். அக்–கிர – ாமத்தில் 10 வயது நிரம்பியவுடனே குழந்தைத் திருமணம் முடிவாகிவிடும். இச்சூ–ழ–லில்– தான் சலீமா பட்–டப்–ப–டிப்பை முடித்–தார். தான் படித்த படிப்பு தன்–னைப்– ப�ோன்ற பெண்–க–ளுக்கு பயன்–ப–ட–வேண்–டும் என்று ஆசி–ரி–ய–ரா–னார் சலீமா. லட்–சிய ஆசி–ரி–ய– ராகப் பணி–யாற்றி தன்–னைப் ப�ோலவே 8 0 0 0 ஆ சி ரி ய ர்களை ப ா கி ஸ்தா னி ல் உரு–வாக்கி சாதித்–தார். பரி–சுத்–த�ொ–கையை பெ ண் கு ழ ந ்தை க ளி ன் க ல் வி க்கா க செலவிடப் ப�ோவதாகக் கூறியுள்ளார் சலீமா. 18.05.2018 முத்தாரம் 33
வி ல ங் கு க ளி ன் க � ோ ண த் – தி ல் படம்– பி – டி ப்– ப து எ ன ்ன ப ய ன் – க– ள ைத் தரும் என நி னை க் – கிறீர்–கள்? நாம் இது– வரை துருக்கி கரடி, மரங்–க– ளி–லுள்ள சிம்– பன்ஸி பற்றி அ றி ந் – த வை அ ன ை த் – து ம் அ வை ப ற் றி ம ட் – டு ம ே . ஆ ன ா ல் உலகைப் பற்– றி ய அவற்– றி ன் பார்வை நமக்குத் தெரி– ய ாது. இன்–றைய டெக்–னா–ல–ஜி–யைப் பயன்– ப – டு த்தி அவற்றை பின்– த�ொ– டர் ந்– த ால் எப்– ப – டி – யி – ரு க்– கும் என்–ப–து–தான் Animals With Cameras நிகழ்ச்சி கான்–செப்ட். இதன்– மூ – ல ம் அழி– யு ம் நிலை– யிலுள்ள உயி–ரிக – ளை பாது–காக்க முடி–யும். உங்–க–ளது தேடு–த–லின் சுவா–ர– சியங்–க–ளைக் கூறுங்–களே – ன்? அட்–லாண்–டிக் கட–லில் பெண் மீன் ஒன்– ற ைத் – து ரத்தியபடி கேமராக்–க–ள�ோடு சென்ற அனு– ப–வம் மறக்கமுடி–யாது. அந்–தப் பெண்–மீனின் வயிற்றில் பிறக்–க–
முத்–தா–ரம்
34
முத்தாரம் 18.05.2018
Mini
வி–ருக்–கும் மீன்கள் வெளி–வ–ரத்– து–டித்–ததை எங்கள் கண்–ணால் பார்த்–த�ோம். உண–வுதே – டி ஆண் மீன்– க – ளு ம், பெண் மீன்– க ளும் சென்– றதை ப் பின்– த �ொடர்ந்– த – ப�ோது நடந்த நிகழ்வு இது. எந்த விலங்கு சிறந்த ஒளிப்– ப–தி–வா–ளர் என்–பீர்–கள்? சீட்டா. பிற விலங்–கு–கள் எப்– ப–டிய�ோ சீட்–டாவை நிலை–யாக இருக்– கை – யி ல் படம்– பி – டி ப்– ப து இரையை தாக்–கிப்–பி–டிக்க காத்– தி–ருக்–கும்–ப�ோது – த – ான் சாத்–திய – ம். இதனை கிரா–பிக்–ஸில் சரி–செய்ய முடி–யாது.
-கார்–டன் புச்–னன், பிபிசி த�ொகுப்–பா–ளர்.
அதி–ப–ருக்கு மரி–யாதை! க�ொலம்–பிய – ா–வின் ப�ோக�ோடா நக–ரில் நடை–பெற்ற உழைப்–பாள – ர்–கள் பேர–ணியி – ல் அமெ–ரிக்க அதி–பர் ட்ரம்பை நாஜிக் கட்சித் தலை–வர் ஹிட்–லர் ப�ோல வடி–வ–மைத்–தி–ருந்–த–னர். இறு–தி–யில் ட்ரம்ப் உரு–வ–ப�ொம்–மையை நெருப்–புக்கு இரை–யாக்–கி–னர்.
அட்–டை–யில் சீனா–வின் தலை–ந–க–ரான பெய்–ஜிங்–கில் நடை–பெற்ற உலக ம�ொபைல் மற்–றும் இன்–டர்–நெட் மாநாட்–டில் இங்–கி–லாந்–தின் புகழ்–பெற்ற கார்–ட்டூன் கதா–பாத்–தி–ர–மான பெப்பா பிக் உரு–வத்தை ஆச்–ச–ரி–யத்–து–டன் பார்க்–கி–றார் பார்–வை–யா–ளர் ஒரு–வர். சீனா–வின் இணை–யக்–கட்–டுப்–பாட்டை விமர்–சிக்க பெப்பா பிக் கார்ட்–டூன் கதா–பாத்–தி–ரத்தை பல–ரும் பயன்–ப–டுத்–து–கி–றார்–கள் என்–பது குறிப்–பி–டத்–தக்–கது.
35
Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.
TET மாதிரி வினா-விடை
இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI› மம 16-31, 2018
ம ா த ம் இ ரு மு ற ை
குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்
மாதம் இருமுடை இதழ்
எஞ்சினியரிங்
பட்டம் படிக்க
விண்ணப்பித்துவிடடீர்களா?
குற்றம் மறறும் தடயவியல் முதுநிலைப் படடப்படிப்புகள்! விணணப்பிக்்க வவணடிய வேரமிது!
36