Thozhi Suppliment

Page 1

மே 16-31, 2018 இதழுடன் இணைப்பு

சமையல் கலைஞர்

சரவதி

வடகம் - வற்றல்

30 வகைகள்

117


சம்மர் ஸ்பெஷல் வற்றல் - வடகம் வெ

யில் சீசன் வந்தாலே ஊறுகாய், வடகம், வற்றல் ப�ோன்றவற்றை வீடுகளில் ப�ோடுவது வழக்கம். இப்போது ப�ோட்டு வைத்தால் வருடம் முழுவதும் உதவியாக இருக்கும். சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி வடகம் ப�ோடுவதில் ஸ்பெஷலிஸ்ட். “நான் ப�ோடுகிற வடகம் வித்தியாசமாக இருக்கும். ஆர�ோக்கியமான வற்றல் வகைகளாக இருக்கும். ஏத�ோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்று இல்லாமல் உடலுக்கு ஆர�ோக்கியமாக சமைத்து சாப்பிட்டால் எந்த ந�ோயும் வராமல் பாதுகாக்கலாம். வகை வகையாக வற்றல் வகைகளை செய்து நல்லா சாப்பிடுங்க” என்று நமக்காக இங்கே வற்றல், வடகம் வகைகள் முப்பதை செய்து காட்டி இருக்கிறார்.

சமையல் கலைஞர்

°ƒ°ñ‹

118

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

சரஸ்வதி

த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால்


பூசணிக்காய் வடகம்

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி, பூசணிக்காய் விழுது - தலா 1 கப், பச்சைமிளகாய் விழுது - 4 டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து க�ொள்ளவும். அதனுடன் பச்சைமிளகாய் விழுது, உப்பு, ஜவ்வரிசி, பெருங்காயத்தூள், பூசணி விழுது சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் அரிசிக்கு 3 கப் வீதம் தண்ணீர் ஊற்றி கூழ் ப�ோல் கிண்டி சீரகம் சேர்த்து வடகம் ப�ோட்டு வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


வாழைத்தண்டு வடகம்

என்னென்ன தேவை?

வாழைத்தண்டு அரைத்த விழுது - 1 கப், உப்பு - தேவைக்கு, ஜவ்வரிசி விழுது - 1/2 கப், புழுங்கல் அரிசி மாவு - 1 கப், தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி க�ொதிக்க வைத்து அரைத்த ஜவ்வரிசி விழுது, வாழைத்தண்டு விழுது, புழுங்கல் அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறவும். நன்கு வெந்ததும் இறக்கி கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். °ƒ°ñ‹

120

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


பீட்ரூட் வடகம்

என்னென்ன தேவை?

அரிசி மாவு, பீட்ரூட் விழுது - தலா 1 கப், ஜவ்வரிசி விழுது 1/2 கப், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் விழுது - 4 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, பீட்ரூட் விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


கறிவேப்பிலை வடகம்

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை விழுது, ஜவ்வரிசி விழுது - தலா 1/2 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு - தேவைக்கு, பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு ப�ோட்டு க�ொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, கறிவேப்பிலை விழுது, அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் 4 அல்லது 5 நாட்கள் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

122

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


க�ொத்தமல்லி வடகம்

என்னென்ன தேவை?

க�ொத்தமல்லி விழுது, ஜவ்வரிசி விழுது - தலா 1/2 கப், உப்பு - 1 டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் - 4 கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு ப�ோட்டு க�ொதிக்க வைத்து, அரிசி மாவு, க�ொத்தமல்லி விழுது, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


சுரைக்காய் வடகம்

என்னென்ன தேவை?

சுரைக்காய் விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 3 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர், உப்பு ப�ோட்டு க�ொதிக்க வைத்து, அரிசி மாவு, பச்சைமிளகாய் விழுது, சுரைக்காய் விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

124

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


பரங்கி வடகம்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 3 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பரங்கிக்காய் விழுது, உப்பு, பச்சைமிளகாய் விழுது, தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


பிரண்டை வடகம்

என்னென்ன தேவை?

பிரண்டை விழுது - 1 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி விழுது - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயை சூடு செய்து நறுக்கிய பிரண்டையை ப�ோட்டு நன்கு வதக்கி ஆறியதும் அரைக்கவும். இல்லையென்றால் பிரண்டை அரிக்கும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து அரிசி மாவு, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, பிரண்டை விழுது, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

126

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


மூலிகை வடகம்

என்னென்ன தேவை?

கற்பூரவல்லி இலை, வெற்றிலை, துளசி விழுது - 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், ஜவ்வரிசி விழுது - 1/2 கப், தண்ணீர் - 4 கப்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூலிகை விழுது, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


நவதானிய வடகம்

என்னென்ன தேவை?

நவதானிய விழுது - 1 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன், ஜவ்வரிசி விழுது - 1/2 கப், தண்ணீர் - 4 கப், அரிசி மாவு - 1 கப்.

எப்படிச் செய்வது?

நவதானியங்களை ஊறவைத்து அரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, நவதானிய விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். °ƒ°ñ‹

128

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


அறுசுவை வடகம்

என்னென்ன தேவை?

அறுசுவை விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி - 1/2 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அறுசுவை (பாகற்காய், சுண்டைக்காய், வாழைப்பூ, புளி, வேப்பம் பூ, மாங்காய்) அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, அறுசுவை விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


தக்காளி வடகம்

என்னென்ன தேவை?

தக்காளி விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி விழுது - 1/2 கப், உப்பு - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, தக்காளி விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு நன்கு கிளறி இறக்கவும். இந்த கலவையை கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். °ƒ°ñ‹

130

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


புதினா வடகம்

என்னென்ன தேவை?

புதினா விழுது, அரிசி மாவு - தலா 1 கப், தண்ணீர் - 4 கப், உப்பு - 1 டீஸ்பூன், ஜவ்வரிசி விழுது - 1/2 கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, புதினா விழுது, அரிசி மாவு, உப்பு ப�ோட்டு கைவிடாமல் நன்கு கிளறி இறக்கவும். இந்த கலவையை கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் கவரில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


ஜவ்வரிசி வடகம்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 2 கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 6 கப்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைத்து க�ொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஊறிய ஜவ்வரிசி, உப்பு, சுடு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கைவிடாமல் கிளறி இறக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

132

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


நெல்லிக்காய் வடகம்

என்னென்ன தேவை?

நெல்லிக்காய் - 1 கப், பச்சைமிளகாய் விழுது, உப்பு - தலா 1 டீஸ்பூன், தண்ணீர் - 4 கப், ஜவ்வரிசி விழுது - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயை வேகவைத்து அரைத்துக் க�ொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, நெல்லிக்காய் விழுது, உப்பு ப�ோட்டு கைவிடாமல் கிளறி இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து ப�ொரித்தெடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ரங்கோலி முத்து வடகம்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி - 250 கிராம், பச்சரிசி மாவு - 1/4 கப், பச்சைமிளகாய், சீரகம் விழுது - 2 டீஸ்பூன், ஃபுட் கலர் - சிறிது.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை ஊறவைக்கவும். பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து பச்சைமிளகாய், சீரக விழுது, பச்சரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். கலவையை தனித்தனியாக பிரித்து விருப்பமான ஃபுட் கலரை சேர்த்து கலந்து கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

134

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


ஆனியன் ரிங் வடகம்

என்னென்ன தேவை?

வெங்காயம் - 1/2 கில�ோ, அரிசி மாவு - 1 கப், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயத்தின் த�ோலை நீக்கி சிறு சிறு வட்டங்களாக நறுக்கவும். அரிசி மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வெங்காய வில்லைகளை முக்கியெடுத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


மணத்தக்காளி வற்றல்

என்னென்ன தேவை?

மணத்தக்காளி - 1/4 கில�ோ, தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மணத்தக்காளியை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து க�ொள்ளவும். தயிரில் உப்பு, மணத்தக்காளி ப�ோட்டு 1 வாரம் ஊற விடவும். பின்பு வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். °ƒ°ñ‹

136

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


வெங்காய வடகம்

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 1/2 கில�ோ, பூண்டு - 100 கிராம், கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா 50 கிராம், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, ப�ொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து பிசைந்து உருண்டைகளாக செய்து நன்றாக காய வைக்கவும். வேண்டிய ப�ொழுது தாளிக்க பயன்படுத்தவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


நெல்லி வற்றல்

என்னென்ன தேவை?

நெல்லிக்காய் - 1 கில�ோ, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி க�ொதிக்க வைத்து உப்பு, நெல்லிக்காய் ப�ோட்டு 10 நிமிடம் கழித்து நீரை வடித்து வெயிலில் நன்றாக காயவைத்து எடுக்கவும்.

°ƒ°ñ‹

138

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


சுண்டைக்காய் வற்றல்

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் - 1 கில�ோ, தயிர் - 2 கப், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சுண்டைக்காயை சுத்தம் செய்து நசுக்கி க�ொள்ளவும். தயிரில் உப்பு, சுண்டைக்காய் ப�ோட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் எடுத்து வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


கத்திரிக்காய் வற்றல்

என்னென்ன தேவை?

கத்திரிக்காய் - 1 கில�ோ, உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

கத்திரிக்காயை கழுவி துடைத்து துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் ப�ோட்டு பிசறி வெயிலில் நன்கு காயவைத்து ப த் தி ர ப்ப டு த்த வு ம் . தேவை ய ா ன ப�ோ து எ ண்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து சாம்பார், குழம்பில் ப�ோட்டு செய்யலாம். °ƒ°ñ‹

140

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


பாகற்காய் வற்றல்

என்னென்ன தேவை?

பாகற்காய் - 1 கில�ோ, உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு, எலுமிச்சம் பழம் - 2.

எப்படிச் செய்வது?

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு, எலுமிச்சைச்சாறு விட்டு பிசறி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து பிழிந்து நீரை வடித்து மிளகாய்த்தூள் பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். எண்ணெயில் வறுத்து அப்படியே சாப்பிடலாம். குழம்பிலும் ப�ோடலாம். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


வெண்டை வற்றல்

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - 1 கில�ோ, உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை கழுவி துடைத்து வட்ட வட்டமாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள் பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். எண்ணெயில் ப�ொரித்தெடுத்து குழம்பில் ப�ோடலாம். °ƒ°ñ‹

142

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


சுக்காங்காய் வற்றல்

என்னென்ன தேவை?

சுக்காங்காய் - 1/4 கில�ோ, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சுக்காங்காயை நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடித்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ப�ோட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான ப�ோது எண்ணெயில் ப�ொரித்து சாப்பிடவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


நார்த்தங்காய் வற்றல்

என்னென்ன தேவை?

நார்த்தங்காய் - 4, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நார்த்தங்காயை துண்டுகளாக நறுக்கி, உப்பு ப�ோட்டு ஊறவைத்து பின்பு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான ப�ொழுது குழம்பில் ப�ோடலாம். ஊறுகாய் தாளித்து பயன்படுத்தலாம். °ƒ°ñ‹

144

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


மரவள்ளிக்கிழங்கு வற்றல்

என்னென்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு - 1 கில�ோ, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ம ர வ ள் ளி க் கி ழ ங ்கை த�ோ ல் சீ வி து ரு வி ஆ வி யி ல் வேகவைத்து எடுத்து உப்பு ப�ோட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையானப�ொழுது ப�ொரித்து சாப்பிடவும். மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


க�ொத்தவரங்காய் வற்றல்

என்னென்ன தேவை?

க�ொத்தவரங்காய் - 1 கில�ோ, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - 50 கிராம், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

க�ொத்தவரங்காயின் காம்பை நீக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து, உப்பு, அனைத்து தூள்களையும் ப�ோட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான ப�ொழுது வறுத்து சாப்பிடவும். °ƒ°ñ‹

146

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


மாங்காய் வற்றல்

என்னென்ன தேவை?

மாங்காய் - 4, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மாங்காயின் த�ோல் சீவி துருவி உப்பு ப�ோட்டு கலந்து வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும்.

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi May 16-31, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

மிளகாய் வற்றல்

என்னென்ன தேவை?

பச்சைமிளகாய் - 1/2 கில�ோ, தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைமிளகாயை கழுவி சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து க�ொள்ளவும். தயிரில் உப்பு, பச்சைமிளகாயை கலந்து இரண்டு நாட்கள் ஊறவைத்து, பின்பு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். °ƒ°ñ‹

148

மே 16-31,2018

இதழுடன் இணைப்பு


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.