ஏப்ரல் 16-30, 2018 | இதழுடன் இணைப்பு
க�ோடை
ஸ்பெஷல்
30
சமையல் கலைஞர் உஷா
117
குமாரி
கூல் கூல் ரெசிபீஸ் டுமுறைக் க�ொண்டாட்டம் த�ொடங்கியாச்சு. வி வெயில் காலத்தில் குழந்தைகள் ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் எல்லாம் சாப்பிட ஆசைப்படுவாங்க.
சமையல் கலைஞர்
உஷா குமாரி
அதை வெளியில் வாங்கும் ப�ோது செலவு அதிகம் ஆகும். அதுமட்டுமில்லாமல் அது சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்டதா? சுகாதாரமானதுதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டி இருக்கும். அதற்கு பதில் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை நாமே வீட்டிலே செய்தாலே என்ன? என்கிறார் சமையல் கலைஞர் உஷா குமாரி. “சமையல் செய்வது, பரிமாறுவது, ப�ோட்டி களில் கலந்து க�ொள்வது மிகவும் பிடிக்கும். நி ற ை ய ச மை ய ல் ப �ோட் டி க ளி ல் க ல ந் து க�ொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன். சமையல் வகுப்பும் எடுக்கிறேன். என்னுடைய சமையல் குறிப்புகள் பல பத்திரிகைகளில் இடம் பெற்று உ ள்ள ன . த � ொ லைக்காட் சி க ள் ந ட த் தி ய சமையல் ப�ோட்டிகளிலும் கலந்து க�ொண்டு இருக்கிறேன். சென்னையில் உணவுத் திருவிழா நிகழ்ச்சியில் சமையல் ப�ோட்டிகளை 5 வருடமாக ஒருங்கிணைத்திருக்கிறேன்” எனும் உஷா குமாரி இங்கே பிள்ளைகளுக்குப் பிடித்தமான ஜூஸ், கீர், ஃப்ரூட் சாலட் என செய்து அசத்தி இருக்கிறார்.
த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி படங்கள்: ஆர்.க�ோபால் °ƒ°ñ‹
118
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
நெல்லி ம�ோர்
என்னென்ன தேவை?
நெல்லிக்காய் - 10, தயிர் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 1, க�ொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை க�ொட்டையை நீக்கி தயிர், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும். ப�ொடியாக நறுக்கிய க�ொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
120
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
வெள்ளரி பச்சடி
என்னென்ன தேவை?
வெள்ளரிக்காய் - 3, தயிர் - 1 கப், பச்சைமிளகாய் - 1, இஞ்சி - 1 துண்டு, உப்பு - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை - சிறிது, தாளிக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கெட்டியான தயிரை நன்கு கடைந்து உப்பு, ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, க�ொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து கலந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெள்ளரி பச்சடியில் க�ொட்டி கலந்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
121
ஃப்ரெஷ் சாலட் என்னென்ன தேவை?
வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா 1, முளைகட்டிய பயறு - 1/2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு - 1/2 கப், நாட்டுச்சர்க்கரை - 1½ டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் - 1/2 கப், பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து த�ோலுரித்து ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். காய்களையும் ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பயறு, உப்பு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்து மாதுளை முத்துக்கள், க�ொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.
°ƒ°ñ‹
122
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
பரங்கி பாயசம்
என்னென்ன தேவை?
பரங்கிக்காய் - 1 துண்டு, பால் - 1 கப், சர்க்கரை - 3/4 கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பரங்கிக்காயை த�ோல் விதை நீக்கி மிக்சியில் விழுதாக அரைத்துக் க�ொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு க�ொதித்து வந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
123
சுரைக்காய் பகாளாபாத் என்னென்ன தேவை?
சுரைக்காய் துருவல் - 1 கப், கெட்டி தயிர் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 2, க�ொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தயிரை நன்கு அடித்து ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், க�ொத்தமல்லித்தழை, சுரைக்காய் துருவல், உப்பு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
124
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
வாழைத்தண்டுச் சாறு
என்னென்ன தேவை?
வாழைத்தண்டு - 1 கப், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டை நறுக்கி, நார் நீக்கி மிக்சியில் இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
125
ராகி கூழ் என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1 கப், ம�ோர் - 1 கப், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ம�ோருடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். ராகி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிண்டி இறக்கவும். ஆறியதும் ம�ோர் கலவையை ஊற்றி வெங்காயம் சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
126
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
மூலிகை ஜூஸ்
என்னென்ன தேவை?
நறுக்கிய கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை - தலா 1/2 கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அனைத்து ப�ொருட்களையும் கலந்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
127
தக்காளி பீட்ரூட் ஜூஸ் என்னென்ன தேவை?
தக்காளி - 5, பீட்ரூட் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை த�ோல் சீவி நறுக்கிக் க�ொள்ளவும். மிக்சியில் பீட்ரூட், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி பரிமாறவும்.
°ƒ°ñ‹
128
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
நன்னாரி சர்பத்
ஆரஞ்சு ஐஸ்கிரீம்
என்னென்ன தேவை?
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின், ஆரஞ்சு சாறு - 1 கப், பால் - 1½ கப், நறுக்கிய ஆரஞ்சு பழ சுளைகள் - 1½ டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிது.
எப்படிச் செய்வது?
ப ாத் தி ரத் தி ல் கன்டெ ன் ஸ் டு மில்க், பால், ஆரஞ்சு சாறு கலந்து நன்கு பீட் செய்து எசென்ஸ் சேர்த்து கலக்கவும். பின் ஐஸ்கிரீம் டிரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு முக்கால் பதத்திற்கு செட் ஆனதும் வெளியே எடுத்து மீண்டும் நன்கு அடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் கண்ணாடி கிண்ணங்களில் ப�ோட்டு நறுக்கிய பழங்களால் அலங்கரித்து பரிமாறவும்.
என்னென்ன தேவை?
நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குளிர்ந்த நீரில் நன்னாரி சிரப், எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
129
ஃப்ரூட் சாலட் என்னென்ன தேவை?
நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், விதையில்லாத பச்சை, கருப்பு திராட்சை, தர்பூசணி துண்டுகள், முலாம் பழ துண்டுகள் - அனைத்தும் சேர்த்து 2 கப், தேன், கன்டென்ஸ்டு மில்க் - தலா 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அனைத்து பழங்களின் விதை த�ோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி தேன், கன்டென்ஸ்டு மில்க், சீரகத்தூள் கலந்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
130
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
ச�ோயா கூல் காபி
என்னென்ன தேவை?
ச�ோயா பால் - 1 கப், இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 4.
எப்படிச் செய்வது?
ச�ோயா பாலை காய்ச்சி ஆறவைத்து அதனுடன் காபி தூள், சர்க்கரை, ஐஸ் கட்டி கலந்து மிக்சியில் அரைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
131
என்னென்ன தேவை?
பானகம்
பனைவெல்லம் - 1 கப், புளி - எலுமிச்சைப்பழ அளவு, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புளியை கரைத்து வடிகட்டவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து க�ொதிக்க விடவும். அதில் அனைத்து ப�ொடிகளையும் கலந்து இறக்கவும். பின்பு புளி சாறு, எலுமிச்சைச்சாறு கலந்து ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
132
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
சைனாகிராஸ் புட்டிங்
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர், சர்க்கரை - 300 கிராம், சைனா கிராஸ் - 1 துண்டு (10 கிராம்), எசென்ஸ் - சில துளிகள், ப�ொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது?
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி க�ொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் ப�ொடித்த சைனா கிராஸை ப�ோட்டு கிளறவும். சைனா கிராஸ் கரைந்ததும் இறக்கி ஆறவைத்து, எசென்ஸ் கலந்து பாதாம், முந்திரியை சேர்த்து புட்டிங் ம�ோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பின்னர் எடுத்து பரிமாறவும். மேலே நறுக்கிய பழத்துண்டுகள் க�ொண்டு அலங்கரித்தும் பரிமாறலாம். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
133
கேரட் கீர் என்னென்ன தேவை?
கேரட் - 1 கப், சர்க்கரை - 3/4 கப், பால் - 1 கப், ஏலக்காய்த்தூள் சிறிது.
எப்படிச் செய்வது?
கேரட்டை த�ோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ப�ோட்டு விழுதாக அரைத்து க�ொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு வேகவைத்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
134
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்
என்னென்ன தேவை?
ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, திராட்சை - அனைத்தும் சேர்த்து 1 கப், புதினா இலைகள் - சிறிது, சர்க்கரை - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
அனைத்து பழங்களையும் த�ோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி சர்க்கரை, புதினா இலை சேர்த்து அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
135
பூசணி புட்டிங்
என்னென்ன தேவை?
பூசணித்துருவல் - 1 கப், சைனா கிராஸ் - 1 துண்டு, சர்க்கரை - 1 கப், பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு க�ொதிக்க விடவும். பின்பு சர்க்கரை, பூசணித்துருவல் சேர்த்து வேக விடவும். பூசணித் துருவல் வெந்ததும் சைனா கிராஸ் சேர்த்து கிளறவும். சைனா கிராஸ் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்பு சிறு சிறு கண்ணாடி கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
136
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
முலாம்பழ சாலட்
என்னென்ன தேவை?
முலாம்பழம் - 1, சர்க்கரை - 1 கப், வாழைப்பழம் - 1.
எப்படிச் செய்வது?
முலாம்பழத்தை த�ோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி க�ொள்ளவும். அதே ப�ோல் வாழைப்பழத்தையும் நறுக்கவும். பாத்திரத்தில் முலாம்பழம், வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து கலந்து அப்படியே அல்லது குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
137
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜூஸ் என்னென்ன தேவை?
ஆப்பிள், பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி - அனைத்தும் சேர்ந்து 2 கப், சர்க்கரை - 1 கப்.
எப்படிச் செய்வது?
பழங்கள் அனைத்தையும் த�ோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி க�ொள்ளவும். மிக்சியில் பழங்கள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டி குளிரவைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
°ƒ°ñ‹
138
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
தேங்காய்ப்பால் கஞ்சி
என்னென்ன தேவை?
அரிசி குருணை - 1 கப், தேங்காய்ப்பால் - 1 கப், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி குருணையை சுத்தம் செய்து கழுவி வேகவைத்துக் க�ொள்ளவும். பின்பு உப்பு, தேங்காய்ப்பால் கலந்து குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
139
ஜிகர்தண்டா என்னென்ன தேவை?
பாதாம் பிசின் - 2 டீஸ்பூன், சுண்ட காய்ச்சிய பால் - 1 கப், கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப், நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப், அலங்கரிக்க ப�ொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தேவைக்கு, குங்குமப்பூ - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய பாதாம் பிசின் ப�ோட்டு அதற்கு மேல் சுண்ட காய்ச்சிய பால், நன்னாரி சர்பத் அதன் மீது கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி மேலே ஐஸ்கிரீம் வைத்து கடைசியாக பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ தூவி பரிமாறவும்.
°ƒ°ñ‹
140
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
ஃப்ரூட் கண்ட்
என்னென்ன தேவை?
மாம்பழம் - 1, ஆப்பிள் - 1, திராட்சை - 1/4 கப், தயிர் - 1 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, அலங்கரிக்க பாதாம் துருவல், ப�ொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிது.
எப்படிச் செய்வது?
மாம்பழத்தின் த�ோல், க�ொட்டை நீக்கி மிக்சியில் அரைத்துக் க�ொள்ளவும். ஆப்பிளை த�ோல் விதை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். தயிரை மெல்லிய துணியில் கட்டி நீரை வடிகட்டவும். பாத்திரத்தில் மாம்பழ விழுது, தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஆப்பிள், விதையில்லாத திராட்சை சேர்த்து கலந்து மேலே பாதாம், மாம்பழ துண்டுகள் அலங்கரித்து ஃப்ரிட்ஜில் செட் செய்து பின் பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
141
லெமன் பார்லி வாட்டர் என்னென்ன தேவை?
எலுமிச்சைச்சாறு - 1 கப், பார்லி - 10 கிராம், நாட்டுச்சர்க்கரை - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் பார்லியை வறுத்து மிக்சியில் ப�ொடி செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி க�ொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து வைத்து க�ொள்ளவும். எலுமிச்சைச்சாறில் உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பார்லி தண்ணீரை ஊற்றி கலந்து குளிரவைத்து பரிமாறவும்.
°ƒ°ñ‹
142
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
ஜல்ஜீரா பானி
என்னென்ன தேவை?
புதினா இலைகள் - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், வறுத்து ப�ொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன், கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
புதினாவை சுத்தம் செய்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
143
என்னென்ன தேவை?
ஃபலூடா
வேகவைத்த சேமியா, வேகவைத்த ஜவ்வரிசி - தலா 1/2 கப், சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன், நறுக்கிய பழத்துண்டுகள் (விதையில்லாத பச்சை, கருப்பு திராட்சை, மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள்) - அனைத்தும் சேர்த்து 1 கப், ர�ோஸ் சிரப் - 2 டீஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின், வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப், பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?
சப்ஜா விதைகளை முதல் நாள் இரவே ஊறவைத்துக் க�ொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆறியதும் ர�ோஸ் சிரப் சேர்த்து கலந்து க�ொள்ளவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை, பிறகு ர�ோஸ் சிரப் கலந்த பால், சேமியா, ஜவ்வரிசி என ஒவ்வொரு லேயராக ப�ோட்டு மீண்டும் பால், நறுக்கிய பழத்துண்டுகள், அதன் மீது கன்டென்ஸ்டு மில்க், கடைசியாக ஐஸ்கிரீம் ப�ோட்டு பரிமாறவும்.
°ƒ°ñ‹
144
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
குல்ஃபி
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர், பிரெட் - 2, சர்க்கரை - 1/2 கப், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிது, குல்ஃபி எசென்ஸ் - சிறிது, குல்ஃபி ம�ோல்டு.
எப்படிச் செய்வது?
பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிது பாலில் ஊறவைத்து சர்க்கரைத்தூள், பாதி துருவிய நட்ஸ், மீதியுள்ள பால் கலந்து நன்கு அடிக்கவும். இக்கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு க�ொதி விட்டு ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். ஆறியதும் எசென்ஸ், மீதியுள்ள நட்ஸ் கலந்து குல்ஃபி ம�ோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் 10 மணி நேரம் செட் செய்து பிறகு பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
145
இளநீர் மின்ட் கூலர் என்னென்ன தேவை?
இளநீர் - 1, பனங்கற்கண்டு - 3 டீஸ்பூன், பு தி ன ா இ ல ை கள் சிறிது, இஞ்சி - 1 து ண் டு , ந று க் கி ய இ ள நீ ர் வழுக்கை - 1/4 கப்.
எப்படிச் செய்வது?
மி க் சி யி ல் புதினா இலை, இஞ்சி சேர்த்து அ ர ை த் து வ டி கட் டி இ ள நீ ர் , ப ன ங ்க ற் கண்டு கலந்து இ ள நீ ர் வ ழு க ்கைய ை கல ந் து கு ளி ரவைத் து பரிமாறவும்.
°ƒ°ñ‹
146
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு
ஜவ்வரிசி கூழ்
என்னென்ன தேவை?
ஜவ்வரிசி - 1 கப், தயிர் - 1 கப், துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, க�ொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து க�ொள்ளவும். அதனுடன் தயிர், இஞ்சி, பச்சைமிளகாய், க�ொத்தமல்லித்தழையை கலந்து குளிரவைத்து பரிமாறவும். ஏப்ரல் 16-30,2018 இதழுடன் இணைப்பு
°ƒ°ñ‹
147
Supplement to Kungumam Thozhi April 16-30, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month
தர்பூசணி டிலைட்
என்னென்ன தேவை?
நறுக்கிய தர்பூசணி துண்டுகள் - 1 கப், சர்க்கரை - 1/2 கப்.
எப்படிச் செய்வது?
மிக்சியில் தர்பூசணி துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே தர்பூசணி துண்டுகள் தூவி குளிரவைத்து பரிமாறவும். °ƒ°ñ‹
148
ஏப்ரல் 16-30,2018
இதழுடன் இணைப்பு