கருகிப்போன அன்பும் அக்கறையும்.!
ப�ொது மக்கள் முன்னிலையில் ஒருவர் தீக்குளித்து துடிப்பதை வேடிக்கை பார்த்து வீடிய�ோ பதிவு செய்யும் நிலை என்பது மனித சமூகத்தின் இருண்ட காலமாக கருத வேண்டும். இது ப�ோன்ற நிகழ்வுகளுக்கு நமது தவறான வாழ்க்கை முறையின் பரிணாம மாற்றமே காரணமாகும். அதாவது மனித இனம் சமூகமாக,கூட்டமாக வாழ்ந்த நிலை க�ொஞ்சம் க�ொஞ்சமாக சுருங்கி கூட்டுக்குடும்ப நிலை பிறகு தனி குடுத்தனமாக மாறியத�ோடு இன்று தனி மனித சுயநல உணர்வு மட்டுமே மீதமிருப்பதை உணர்த்தும் ஒரு உதாரணமாகும்.
ஒரு நபரின் இயல்பு அல்லது குணம் திடீரென நிர்ணயிக்கப்படுவதில்லை, குழந்தை பருவம் முதற்கொண்டே பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், கல்விமுறை மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் இவை அனைத்தும் இணைந்தே முடிவு செய்கிறது, சமீப காலமாக இவை அனைத்தும் குறுக்கு வழியில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ப�ொருட்படுத்தாமல் சுயநல உணர்வோடு வாழ்வதையே திறமையான வாழ்வியல் தத்துவமாக ப�ோதித்து வருகிறது என்பதை நாம் உணர்வதற்கு இந்த கசப்பான நிகழ்வே எடுத்துக்காட்டு. இது ப�ோன்ற வாழ்க்கை முறை காரணமாக மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும் சுருங்கி விட்டதால் வாழ்க்கை சுவையற்றதாகவும், சுகமற்றதாகவும் உணர்வதால் தற்கொலை உணர்வும் அதனை வேடிக்கை பார்க்கும் மனநிலையும் வாழ்க்கையின் இயல்பான நிலை ஆகிவிட்டது. இந்நிலை மாற வேண்டும் என அக்கறை க�ொண்டு வலியுறுத்தும் நம் திசைகள் ப�ோன்ற அமைப்புகள் இந்த அனைத்து மட்டத்திலும் சரியான புரிதலையும் , உணர்தலையும் ஏற்படுத்துதலே முழுமையான தீர்வாக அமையும் 23
www.aranthai.com