சித்தம் அறிக.. சிந்தை தெளிக..! மழைக்கால நினைவூட்டல்
மழைக்காலத்தில் உடலுக்கு வரும் பிரச்னைகள்:
19
மழைக்கலங்களில் அனைவருக்கும் வேண்டியவை
சிறியவர் பெரியவர் என ப�ொதுவாக சுரம், சளி , இருமல், தலை பாரம், குறிப்பாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு ந�ோய் தீவிரமாக காணப்படுதல், அசீரணம், மற்றும் த�ொற்று ந�ோய்களும், அதைத் த�ொடர்ந்த விளைவுகளும் வரும். வயதானவர்களுக்கு மூட்டு வலி அதிகமாகலாம். ந�ோயெதிர்பாற்றல் மழைக்காலங்களில் எல்லோருக்குமே சற்று குறைந்து காணப்படும். சிலருக்கு மழை காலம் மட்டுமல்ல, எந்த பருவ மாற்றம் வந்தாலும், அப்பருவ மாற்றத்தால் வரக் கூடிய உடல் சார்ந்த த�ொந்தரவுகளை அவர்களே வரவேற்று ந�ோயாக உடலில் குடி வைத்துக் க�ொள்ளக் கூடிய உடல் தன்மை க�ொண்டிருப்பர். அதற்கு முக்கிய காரணம் ந�ோயெதிர்பாற்றல் குறைந்திருப்பதே.
ந�ோய் எதிர்ப்பாற்றலை கூட்ட என்ன செய்யலாம்?
நல்ல சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்ணலாம். எது சத்தான உணவு? நம் நாட்டில் விளையக் கூடிய காய்கறிகள், விதைகள் உள்ள பழ வகைகள், இயற்கையாக விளைந்த சிறு தானியங்கள், பதப்படுத்தப்படாத உணவு வகைகள், அதிகமாக தீட்டப்படாத அரிசி வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், செரிவூட்டப்பட்ட உப்பைக் காட்டிலும் அப்படியே காய்ச்சி எடுத்த அனைத்து கணிமங்கள் நிறைந்த உப்பினை அளவாக உபய�ோகப்படுத்துதல், வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நல்ல சிகப்பு நிறமுள்ள வெல்லம் [ அதிக சிகப்பு = அதிக இரும்புச் சத்து உள்ளது எனப் ப�ொருள்] ப�ோன்றவை சத்தான உணவு வகைகளில் அடங்கும். Thisaigal Digital Magazine 59
13-09-2020
மரு.திருவருட்செல்வன் கூடாதவை
மற்றும்
சேர்க்க
இளஞ்சூடான வெந்நீரில் குளிக்கவும். இது சளித் த�ொந்தரவு அடிக்கடி பிடிப்பவர் மட்டுமல்லாமல் வய�ோதிகர்க்கு வரும் மூட்டு வலிக்கும் உபசாந்தியாக இருக்கும். இன்னும் கூடுதலாக, மூட்டு வலி குறைக்க வல்ல சிகப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம் ப�ோன்றவற்றை தடவி அரை மணி நேரம் கழித்து வெந்நீர் ஒற்றடம�ோ அல்லது வெந்நீரில் குளிக்கவ�ோ செய்தால் இன்னும் நன்மை பயக்கும். க�ொதித்து ஆறின நீர் அருந்தலாம். முடிந்தால் துளசி, ந�ொச்சி இலை ப�ோன்றவற்றில் கிடைத்ததை இரண்டு கைப்பிடி கசக்கி ப�ோட்டு க�ொதிக்க வைத்த நீரை பருகினால், ஆஸ்துமா ந�ோயினர்க்கும், சளி த�ொடர்பான பிரச்சினகளுக்கு மட்டுமல்லாது, சளி தீவிரம் அடையாமலும் நன்மை தரும் குணம் இவற்றிற்கு உண்டு. ஏனெனில் இம்மூலிகைகளுக்கு bronchodilator மற்றும் க�ோழையகற்றி செய்கை உண்டு. குளிர்சாதன பெட்டி உபய�ோகத்தை மறத்தல் மிக நன்று. ஈரமான துணியை அணியாதீர், மழையில் நனைந்தாலும் உடனே நன்கு துவட்டி உடையை மாற்றி விடுங்கள் இல்லையேல் நீர் க�ோர்த்து சீதளம் த�ொடர்பான பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கலாம். தலைக்கு குளித்தால் , நன்கு காய வைத்து , ந�ொச்சியிலை ஒரு பிடி, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து ஆவி எழும்பும் வரை க�ொதிக்க வைத்து ஆவி பிடித்தல் நல்லது. குறைந்தது 10 முதல் 15 நிமிடமாவது ப�ோர்வையால் மூடி ஆவி பிடிக்க வேண்டும். மூச்சு விட சிரமமிருப்பின் அரை நிமிடம் ஆசுவாச படுத்தி பின் மீண்டும் த�ொடரலாம். இதனால், 6