அரும்பு - December

Page 1

கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்



01

201201 7 7   

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு 01 நல்வாழ்த்துகள்


படம் பார்த்துக் கருத்தெழுதுக

கீழ்க்காணும் வினாக்களுக்கான விடைகளையும் அவற்றின் ஆசிரியர், பக்க எண் ஆகியவற்றையும் எழுதுக.

ப�ோட்டி வினாக்கள் பகுதி 12/17

காணப்படும் படத்திற்குப் ப�ொருத்தமான கதை/கவிதை/ கருத்துகளை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, தங்களின் ஒளிப்படத்துடன் (ஃப�ோட்டோ) அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பு அடுத்த இதழில் வெளியிடப்படும். வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.12.2017

நவம்பர் மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை

01) யார் நினைவாக உழவர் நாள் க�ொண்டாடப்படுகின்றது? 02) ‘ஸ்கூபா’ விற்குப் ப�ோகர் வைத்த பெயர் என்ன? 03) கூடைப் பிண்ணிய பெண்ணிடம் பலூன் வாங்க இருந்த த�ொகை எவ்வளவு? 04) தைர�ோகேர் ஆய்வகத்தை ஆர�ோக்கியசாமி முதன்முதலில் எங்குத் த�ொடங்கினார்? 05) 2014 முதல் 2016 வரை இந்தியாவில் செல்ஃபியினால் இறந்தவர்கள் எத்தனை பேர்? 06) வில்லைப் ப�ொருளாதார முறை முதன்முதலில் எங்குப் பயன்படுத்தப்பட்டது? 07) ஷாலினிக்கு, சுரேஷ் தந்தது எத்தனையாவது ர�ோஜா? 08) எசக்கி முத்து வாங்கிய கடனும் கட்டிய த�ொகையும் எவ்வளவு? 09) மது சிந்தனையாற்றலை வளர்க்கும் என்னும் கூற்று சரியே. 10) ‘வரி வரியாக விளக்கினால்…’ கூறியவர் யார்?

குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். விடைகளைத் தங்களின் முழு முகவரி, த�ொடர்பு எண் ஆகியவற்றுடன் கடிதம், மின்னஞ்சல், (arumbu4young@gmail.com) கட்செவி அஞ்சல், (வாட்ஸ் அப் - 94447 99942) அல்லது குறுஞ்செய்தி வாயிலாக, டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் அரும்பு அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்பவும்.

ப�ோட்டி வினாக்கள் 11/17க்கான சரியான பதில்கள்

என்ன வாழ்க்கை என் வாழ்க்கை!? ஆதரவின்றி அனாதையாய்ப் பிறந்தேன். கட்டிய கணவன் நான் கருவுற்ற வேளையில் என்னைப் பிரிந்தே ஏகினார் வானுக்கு. பெண்ணாகப் பிறந்த என் கண்மணிதனை நான் வளர்த்து உயர்த்துவேன் வாழ்க்கையில் என்று நம்பிக்கை மழையில் வானை ந�ோக்குது, என்னே வாழ்க்கை இது என நானும் வானைப் பார்க்கிறேன், வருவார�ோ இறைவன்! தேனை எம் வாழ்வில் தித்திக்கத் தருவார�ோ!

01) “தேவைக்கு உகந்தவருக்கு உதவுவதும், உதவி செய்வதும் கருணை” (அரிஸ்டாட்டில் – சுடர்மணி. பக். 08) 02) மருத்துவமனையில் நாம் எதிர்மறையான அறிக்கையையே எதிர்பார்க்கின்றோம். (சரி. சூ.ம. ஜெயசீலன். பக். 06) 03) கற்பதால் வருவது ஞானம்; செயலால்… நிரப்புக. (வருவது திறமை. அன்பின் அமலன். பக். 14) 04) ‘Time pass 4 Calling’ இது யாருடைய பெயர்? (வின�ோத். கடலை உறவுகள், பவுல்ராஜ். பக். 19) 05) ஷ்யாமின் பெற்றோர் யாவர்? (குரு, சாந்தி நமக்குள் இருக்கட்டும், க�ௌசல்யா ரங்கராஜன். பக். 40) 06) மடத் தலைவரே – இரு ப�ொருள் கூறுக. (‘மடத்தின் தலைவரே, அறிவுகெட்ட தலைவரே, ஜ�ோல்னா. பக். 16) 07) ‘ஒவ்வொரு மானிடப் பிறப்பும் பெற்றோரின் வாரிசுதான்’ சரியா? (தவறு. தெய்வத்தின்… அருள் ர�ோசா. பக். 25) 08) ‘உசேன் ப�ோல்டு’ முழுப் பெயர் என்ன? (உசேன் செய்ன்ட் லிய�ோ ப�ோல்டு, ஆண்டோ. பக். 27) 09) ‘இன்று நேற்று நாளை’ இயக்கியவர் யார்? (ரவிக்குமார், கருந்தேள் ராஜேஷ். பக். 32) 10) ‘உலகக் கருணை நாள்’ என்றைக்குக் க�ொண்டாடப்படுகின்றது? (நவம்பர் 13. சுடர்மணி. பக். 08)

சரியான விடையெழுதி குலுக்கல் முறையில் பரிசு பெறுவ�ோர் நவம்பர் மாதப் படத்திற்கான சிறந்த கருத்துரை எழுதியவர் அறிவர்

ஆ விஜய், ஜ�ோலார்பேட்டை படம் பார்த்துக் கருத்தெழுதிய அனைவருக்கும் பாராட்டுகள். – ஆசிரியர்

  2017

கு. செல்வ சுதாகர் - வேலூர் ஆ. பிரான்சிஸ் அலாய்சியஸ் - சென்னை க. ஹேமாவதி - சென்னை பலர் சரியான விடையெழுதியுள்ளனர். பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்! – ஆசிரியர்.

தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்லன்.

02


இதழ் 12

மலர் 60

டிசம்பர் 2017

ப�ொறுப்பாசிரியர்கள் முதன்மை ஆசிரியர்

அருள்திரு. முனைவர். ஆசிரியர்

ஆ. சிலுவை முத்து, ச.ச.

ஜான் கென்னடி. இணை ஆசிரியர்

பேரா. சூ. குழந்தை இயேசு. நிர்வாகக் குழு

அருள்திரு முனைவர் ஜ�ோஸ் கே.எம், ச.ச. அருள்திரு முனைவர் லூர்துசாமி ப�ோஸ்கோ, ச.ச. அருள்திரு முனைவர் சேவியர் பாக்கியம், ச.ச. ஆசிரியர் குழு

அருள் ர�ோசா, அன்பின் அமலன், சுடர்மணி, சூ.ம. ஜெயசீலன், பால்ராஜ் அமல், பிரியசகி, ஜவஹர். பிழைத்திருத்தம்

குடந்தை சீ. இராசரத்தினம். வடிவமைப்பு

சக�ோ. ஜா. சதிஷ் பால், ச.ச. சந்தா மேற்பார்வை

சு. ஸ்டீபன் ராஜ். அஞ்சல்

வெ. ஆர�ோக்கிய செல்வி. விற்பனை மேலாளர்

ரா. ஜான் ப�ோஸ்கோ. சந்தா விபரம்

தனி இதழ் ஆண்டுச் சந்தா 2 ஆண்டுகள்

ரூ. 15 ரூ. 150 ரூ. 300

முழுப்பக்கம் அரைப்பக்கம் கால்பக்கம் பின்அட்டை உள்அட்டை நடுப்பக்கம்

ரூ. ரூ. ரூ. ரூ. ரூ. ரூ.

விளம்பரக் கட்டணம்



6000 3000 1500 12,000 10,000 10,000

அரும்பு இதழில் வெளியாகும் படைப்புகளை எடுத்தாளவ�ோ மறுபதிப்புச் செய்யவ�ோ ஆசிரியரின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். வெளியீடு முகவரி:

26 /17. ரங்கநாதன் அவென்யூ, சில்வான் லாட்ஜ் காலனி, கெல்லிஸ், சென்னை 600 010. 044 2661 2138/40 94447 99942 arumbu4young@gmail.com www.arumbupublications.in

  2017

05 09 10 14 17 24 28 30 33 36 39

இது சுகமா? சுமையா? பாதிப்பு வராமல் குடிக்க எனக்குத் தெரியும் தேசிய உழவர் நாள் தலைமுறை இடைவெளி செல்ஃபி ஒரு கில்ஃபி எரிபடும் ஏழைகள் பலூன்காரன் ஆர�ோக்கியசாமி வேலுமணி ப�ோகர் (2) தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் வெண்திரைக் கவசங்கள்

Printed and Published by Rev. Fr. JOHN KENNEDY, on behalf of Salesian Publishing Society, 45. Landons Road, Kilpauk, Chennai 600 010. Printed at VELLANKANNI PRINTERS, No. 53, Dr. Besant Road, Royapettah, Chennai - 600 014. Editor: Rev. Fr. JOHN KENNEDY.

ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழம�ொழிகளே அதிக அறிவைத் தரும்

03




அன்புசால் அரும்பு நெஞ்சங்களே,

இவர் ஏன் பிறந்தார்?

மரியின் கருவில் அரும்பி மாட்டுத் த�ொழுவில் மலர்ந்த பாலன் இயேசு பிறப்பின் க�ோலநல்வாழ்த்துகள்! உலக வரலாற்றை கி.மு, கி.பி. என்று ஊடறுத்த உத்தமரின் வரங்களைப் புலரும் புத்தாண்டு வழங்கட்டும் உங்கட்கு! பிறந்தநாள் க�ொண்டாட்டம் பிறந்தது இவரால்தான். இயேசு பிறக்குமுன் இதுப�ோன்ற க�ொண்டாட்டம் இருந்தது என்பதற்குச் சான்றுகள் கிடைத்தில. இவர் பிறந்த புண்ணியத்தால்தான் கடவுளர்க்கும் தலைவர்க்கும் ஜெயந்திகளும் நவமிகளும் கால் க�ொள்ளத் த�ொடங்கின. பிறந்தத�ோர் அனைவரிலும் இவர்பெயர் மட்டுமே எட்டாத உயரத்தில் ஏற்றம் பெறுகிறது. காரணம், மற்றவர்க்கு வரலாறு, பிறந்த பின்பே த�ொடங்குகிறது. இவரது வரலாற�ோ இவர் பிறக்கும் முன்பே என்றோ த�ொடங்கிவிட்டது. கி.மு. 1500 வாக்கில் த�ொகுக்கப்பட்ட விவிலியத்தின் த�ொடக்க நூலில் (மரியா என்ற) பெண்ணின் வித்தாகிப் பாவத்தோடு ப�ோர்தொடுக்க இவர் வருவார் என்று குறிக்கப்பெற்றது. இவர் பெத்லகேமில் பிறப்பார் என்று கி.மு. 600இல் மீகா எழுதினார். இவர் தாவீதின் மரபில் பிறப்பார் இம்மானுவேல் எனப்படுவார்; இருள் நிறைந்த உலகிற்கு இவர் ஒளியாக வருவார்; உலக�ோரின் பாவங்களுக்காக, வாய்திறவா ஆடுப�ோல பாடுகளால் ந�ொறுக்கப்படுவார் எனப் பல செய்திகளை இவர் பற்றி கி.மு. 700இல் எசாயப் பதிவு செய்தார். கழுதை மேல் ஏறி அமைதியின் அரசராய் இவர் யெருசேலமில் நுழைந்தது கூட செக்கரியா என்பவரால் கி.மு. 500இல் முன் குறிக்கப்பட்டது. மறுமலர்ச்சியும் புரட்சியும் மனித வரலாற்றில் தலையெடுத்தது இவரால்தான். கர்ப்பகிரகக் கற்பூர வாசனையில், பூசாரியின் பூசனைத் தீவாராதனைகளில் இவர் மயங்க வரவில்லை. க�ோயில், குளங்கள், தேர், திருவிழாக்கள், ஆட்டம், பாட்டம்,

  2017

க�ொண்டாட்டங்கள் என்று பக்தர்கள் வாழ்வைப் பரவசமாக்க இவர் வரவில்லை. மாறாக, மக்களை அவர்களின் மரபுவழிப் பாவப் பழக்கங்களிலிருந்து மீட்டெடுத்து நீதி, நேர்மை, எளிமை, தூய்மை என்ற புதிய வாழ்வை ந�ோக்கித் திருப்பிட இவர் வந்தார். கடவுள் என்பவர் கல்லாக, சிலையாக, க�ோயிலுக்குள்ளே குடியிருப்பவர் அல்லர். அவர் ஒளியாக, வழியாக, உண்மையாக, உயிராக மக்கள�ோடு வாழ்பவர் (இம்மானுவேல்) என்று மறையெழுதப் பிறந்தார் இவர். மனிதர் என்பவர் கடவுளின் முகம், த�ோள், த�ொடைகளில் பிறந்து, சாதி வரம்புகளுக்குள் சதிராடும் கூட்டம் அல்லர். அவர்கள் அனைவருமே கடவுளின் உருவிலும் சாயலிலும் பிறந்தவர்கள். கடவுளைப் ப�ோலவே செப்பமுற முயல்பவர்கள் என்று செப்பிடப் பிறந்தார். இன்றைய பணக்காரர்கள் முன்சென்பப் புண்ணியவான்கள், இன்றைய ஏழைகள் முன்சென்மப் பாவிகள் என்ற தலைவிதிக் க�ோட்பாட்டைத் தகர்க்கப் பிறந்தவர் அவர். மாடி வீட்டுச் சீமான் நரகத்திலும், நடுத்தெரு லாசர் ச�ொர்க்கத்திலும் இருப்பதை அடையாளம் காட்டப் பிறந்தார் இவர். கடன் பெற்ற ஏழைக்குடும்பத்தைக் கந்துவட்டிக் கல்வாரியில், தற்கொலைச் சிலுவையில் க�ொளுத்திய க�ொடுமையை வேடிக்கைப் பார்க்க இவர் பிறக்கவில்லை. கந்து வட்டிக் கயவர்களுக்காகவும் கல்வாரிச் சிலுவையில் கரங்களை விரித்துப் பரம தந்தையிடம் பரிந்துபேசப் பிறந்தார் இவர். த�ொட்டால் தீட்டு எனத் தூரத்தில் ஒதுக்கப்பட்டவர்களைத் த�ொட்டுத் தழுவிச் ச�ொந்தம் க�ொண்டாடப் பிறந்தார் இவர். மண்ணில் அறம் இவர் பிறந்ததால் பிறந்தது! அன்பென்ற ச�ொல்லுக்கு அர்த்தம் புரிந்தது! இவர் வாழ்வோடு வளர்த்தன உண்மையும் ஒழுக்கமும். மூட விழிகள் மூலையில் முடங்கின. அறிவியல் கண்கள் அகலத் திறந்தன. வாழ்க இவர் இந்த மண்ணில் மலர்ந்த நாள்! மாந்தர்க்கு நல்வாழ்வை நல்கட்டும் இந்த நாள்! அருட்திரு ஆ. சிலுவை முத்து, ச.ச.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

04


இது

ஐ லவ் யூ… 6

சுகமா? சுமையா?

பவுல் ராஜ் அமல், ச.ச

அன்று காதலர் தினம். பல நாட்களாக மனதிற்குள்ளேயே பூட்டி வைத்ததைப் ப�ோட்டு உடைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தான் சுரேஷ். மனதில் க�ொஞ்சம் அச்சம் கவ்விக்கொள்ள ‘அவள் என்ன ச�ொல்வாள�ோ? வேண்டாம் என்று ச�ொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என்று தனக்குள் எண்ணினான். ‘அவளைத் தவிர வேறு யாருக்கும் தன் வாழ்வில் இடம் இல்லை’ என்றும் தீர்மானித்திருந்தான். தனியே அமர்ந்திருந்த அவளிடம் தான் க�ொண்டு வந்திருந்த ர�ோஜாவை நீட்டி, ‘ஷாலினி ஐ லவ் யூ’ என்றான். அவனைச் சற்று ஏளனத்துடன் பார்த்து அவள் ச�ொன்ன மறும�ொழியை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நீயுமாடா?’ என்றவள் தனக்குப் பின்னால் இருந்த நான்கு ர�ோஜா மலர்களைக் காண்பித்தாள். ஏற்கனவே யார�ோ நால்வர் க�ொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்கள். ‘இதப் பாரு சுரேஷ் எனக்கு உன் மேல காதல் க�ொஞ்சம் கூட இல்ல. தயவு செய்து புரிஞ்சிக்கோ’ என்றாள். அதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த வான�ொலி பாடல் அவன் காதில் விழுந்தது. ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய ப�ோட்டுத் தாண்டவா… ஒரே காதல் ஊரில் இல்லையடா…..?’ உள்ளத்தில்

  2017

ச�ோகம் வருடினாலும், கண்களில் நீர் க�ோர்க்கத் துவங்கினாலும், காதில் விழுந்த அந்தப் பாடல் வரிகளில் உள்ள ப�ொருளை அவன் உணர்ந்தான். உங்கள் உள்ளத்தையும் சிந்தனையையும் யார�ோ ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளாரா? காலையிலிருந்து இரவு வரை ஏன், உங்கள் கனவில் கூட அவர் வருகிறாரா? ஒரு முறை திரும்பிப் பார்த்தாதா என்ன என்று ஏங்க வைக்கிறாரா? அவரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த பயமா? தயக்கமா? வெளிப்படுத்தியும் இடம் பெயரா மலைப�ோல் அவர் உள்ளம் இருக்கிறதா? ‘ஏழு ஜென்மம் ஆனாலும் உனக்காக ஏங்கிக் க�ொண்டிருப்பேன்’ என்று வசனம் பேசத் த�ோன்றுகிறதா? ச�ோகப் பாடல்கள் தித்திக்க ஆரம்பிக்கின்றனவா? அதன் வரிகள் இதுவரை அறிந்திருந்த உண்மையை உங்களுக்கு மட்டும் உணர்த்துகிறதா? ‘வாழ்வே மாயம்’ என்ற ச�ொல்லாடல், ஆழமான ப�ொருளைத் தருவதாக உள்ளதா? ஏன�ோ முகத்தில் ச�ோகம், விழிகளில் ஏக்கம் தேங்கத் தனிமையில் நீங்களே உங்களை ந�ொந்துக�ொள்கிறீர்களா? கவனம் தேவை, இளைய�ோரே! ‘நீங்கள் ஒருதலைக் காதல்’ என்னும் வைரஸால் தாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருப�ோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.

05


ஒருதலை ஈர்ப்பு, மென்பூக்களால் ஒப்பனை செய்யப்பட்ட கடாயுதம் ப�ோன்றது. பார்ப்பதற்குப் பூங்கருவிதான் என்றாலும், அது தாக்கினால் உள்ளம் உடைபடும். ஒருவர் மீது இனிமையாய்த் த�ொடங்கிய எண்ணங்கள் சுமையாய் மாறியதாலும், எவ்வளவுதான் மனம் காயப்பட்டாலும் நாம் நேசிக்கும் இதயத்தை மட்டும் என்றுமே நம்மால் மறக்கவ�ோ, வெறுக்கவ�ோ முடியவில்லை என்பதாலும், இந்த உணர்வைச் சுகம் என்பதா? சுமை என்பதா? நம்மை விட அழகில�ோ, அறிவில�ோ, தகுதியில�ோ உயர்ந்தவர் மேல் ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுவது இயற்கைதான். நம் வகுப்பறையில�ோ, பள்ளியில�ோ, கல்லூரியில�ோ நம்முடன் பயில்கின்ற ஒரு நபரின் மீத�ோ, பணியிடத்தில் பழகுகின்ற ஒருவரின் மீத�ோ இந்த ஈர்ப்பு ஏற்படலாம். இஃது அழகு, அறிவுத் திறன், திறமைகள், செயல்படும் முறை, பழகும் விதம் எனப் பல காரணிகள் ஒருங்கேற்றப்பட்டு வரும் ஈர்ப்பு. இவ்வாறுதான் சில இளைய�ோர் திரையில் த�ோன்றும் கதாநாயகியின் அழகில�ோ அல்லது கதாநாயகனின் சாகசங்களில�ோ மயங்கி அவர்கள் மேல் ஒருதலை ஈர்ப்பை உருவாக்கிக்கொள்கின்றனர்.

இந்த ஈர்ப்பு இயற்கைதான் என்றாலும் அறிந்து கையாளப்பட வேண்டும். இந்த ஈர்ப்பு இயற்கைதான் என்றாலும் அறிந்து கையாளப்பட வேண்டும். எப்போதும் எட்டாத கனிதான் ஏன�ோ சுவை மிகுந்ததாக உள்ளது. நம்மைவிட்டு எப்போதும் த�ொலைவில் இருந்து, நம்மிடம் ஈடுபாடு க�ொள்ளாமல், நமக்குக் கிடைக்கப் பெறாமல், நம்மால் நெருங்க முடியாமல், நம்மை விட்டுத் த�ொலைவிலேயே உள்ள அந்த நபர் நம் பார்வையில் முடிவற்ற உயரிய இலக்காக மாறுகிறார். இந்த எட்டாக் கனியின் மீது வளரும் அதீத ஈர்ப்பு நாளடைவில் ஒருதலைக் காதலாக மாறுகிறது.

  2017

காற்றின் வேகத்தை மட்டுமே நம்பி பாய்மரக் கப்பல் பயணிப்பது ப�ோல, ஒருதலைக் காதலின் உந்துதலால் நம்மை ஈர்த்தவரிடம் அவர் மேல் நமக்கு ஏற்பட்டுள்ள அன்பையும் ஈர்ப்பையும் அவருக்கு வெளிப்படுத்தி, பதிலுக்கு அன்பைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இஃது இரண்டு வெவ்வேறான முடிவுகளைத் தரலாம். ஒன்று, அந்த நபர் அந்த அன்பை அங்கீகரிக்கலாம். அப்படியென்றால் ஒருதலை ஈர்ப்பு முற்றுப்பெறுகிறது. இரண்டாவதாக, அந்த நபர் அந்த அன்பைப் புறக்கணிக்கலாம்.

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.

06


நிராகரித்தாலும் ‘நான் உன்னை அன்பு செய்வேன்’ என உறுதியுடன் முயல்வது இரண்டாம் நிலை. இதுதான் துன்பத்தின் துவக்கம். ஒருதலையாக மட்டுமே அன்பைத் தருவது சிறிது சிறிதாக வருத்தத்தை அதிகரித்துப் படிப்பில�ோ, பணியில�ோ கவனத்தை செலுத்த முடியாமல் கண்ணீரும் கம்பலையுமாக ஒருவரை மாற்றுகின்றது. இந்த ஈர்ப்பு நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளும்போது, மகிழ்ச்சி பற்றியும், உறவுகளைக் குறித்தும், நம் வாழ்க்கையைக் குறித்துமே நாம் ஏற்க வேண்டிய சரியான, நேர்மறையான புரிதலை மழுங்கடிக்கிறது. உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட நமது மூளை தெளிவாகச் சிந்திக்கும் திறனை இழக்கிறது. நம்மால் அன்பு செய்யப்படுபவர் நம்மோடு அன்பாகப் பேசுவது ப�ோலும், பழகுவது ப�ோலும் நம் மூளை நம்முள் கற்பனைகளைப் பிரசவித்து சுகம் காணச் செய்கிறது. இந்தக் கற்பனைகள்தாம் நம்மைச் செயலாக்கத்திற்குத் தூண்டுகின்றன. இரயில் தண்டவாளம் ப�ோல் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றாலும், நாம் அவரைப் பற்றி உருவாக்கிக்கொள்கின்ற கற்பனைகளால், ‘என்னால் அன்பு செய்யப்படுபவர் இறுதியாக என்னை அன்பு செய்யலாம்,’ இல்லையென்றால் அவரது அன்பைப் பெறும்வகையில் நான் ஏதாவது சாகசம் செய்யலாம்… ‘ஒரு வேளை இவர் நம்மை அன்பு செய்கிறார், ஆனால் அதை வெளிப்படுத்த தயக்கம�ோ பயம�ோ தான் காரணம்’ என்று தவறாகச் சிந்திக்கலாம். இதுதான் இந்த ஒற்றைத் தலைவலியின் உச்சம். அவர்களின் ம�ௌனம், உங்கள் அன்பை உணர்ந்தும் ஏற்றுக்கொள்ளக் காட்டும் தயக்கம் அனைத்துமே மன வருத்தத்தை அதிகரிக்கிறது. உங்கள் மனதில் உருவாகி உள்ள அன்பு சார்ந்த உணர்வுகள், பிறரால் அங்கீகரிக்கப்படவில்லை, ஏற்கப்படவும் இல்லை, பிரதிபலிக்கப்படவும் இல்லை என்று உணரும்போது மன உளைச்சல் ஏற்படுகிறது. நம் கண்ணை விட்டு விலகாப் பிம்பமாக இருக்கும் அந்த நபர் மற்றவர்களுடன் சிரித்துப் பேசிப் பழகுவது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது ப�ோல இருக்கும். பாலைவனத்தில் த�ொலைந்து ப�ோனவன், கானல் நீரைக் கண்டு மகிழ்ந்து, சற்று நேரத்தில் ஏமாந்துப�ோவது ப�ோலத்தான் அன்பு செய்தவரின் பார்வை, பேச்சு, செய்கை அனைத்தும் துன்பத்தைத் தரும் மாயை. ஒருதலைக் காதல்

  2017

சுகமன்று. சுமைதான். உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று மலையின் மீது ஏறியவன், கால் வழுக்கிப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிக்கிக் க�ொண்டது ப�ோல அடைய முடியா இலக்கு ஒருதலைக் காதல். பிறருக்குச் ச�ொல்லிப் புரிய வைப்பதற்கு அன்பு ஒன்றும் அறிவியல் பாடம் அன்று. உணர்வுகளால் ஈர்க்கப் பெறாதப�ோது அன்பு உருவாகுவதற்கு வாய்ப்பு சற்றுக் குறைவே. நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பை அவர்களுக்கே விளக்கிப் புரிய வைத்து வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. அதைப் ப�ோல் க�ொடுமையும் இல்லை. அன்பு உணர்ந்து புரிந்துக�ொள்ள வேண்டியது. அறிவால் மெய்ப்பிக்கக்கூடிய சூத்திரம் அன்று. நாம் ஒருவரை அன்பு செய்கிற�ோம் என்பதற்காக அவர் நம்மை அன்பு செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவர் உங்களை விட்டு விலகினால் விட்டுவிடுங்கள். உங்கள் அன்பு மெய்யானது என்றால், உங்கள் அன்புக்கு உரிய மரியாதையை அவர் உணர்ந்தால், மீண்டும் அஃது உங்களிடம் திரும்ப வரும். சற்றே ப�ொறுமையாக, உணர்வுகளைச் சற்று ஒதுக்கி விட்டு, அறிவு

நம்மை விட அழகில�ோ, அறிவில�ோ, தகுதியில�ோ உயர்ந்தவர் மேல் ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுவது இயற்கைதான்.

மூச்சு விட்டுக் க�ொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் அல்லன், அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து க�ொண்டிருப்பவனே மனிதன்.

07


கண்களைத் திறந்து சிந்தித்துப் பார்த்தால், ‘ஒரே காதல் ஊரில் இல்லையடா?’ என்பதன் ப�ொருள் விளங்கும். எட்டாக் கனிக்காக ஏங்கி ஏங்கி, மனதிற்குத் தேவையற்ற சுமைகள் எதற்கு?

சிந்திக்க: 1. உங்கள் வகுப்பில�ோ கல்லூரியில�ோ பணியிடத்தில�ோ உள்ள ஒரு நபர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அதை வெளிப்படுத்தத் தயங்கித் துன்பப்படுகிறீர்களா? ஆம்/இல்லை. 2. பகல், இரவு நேரச் சிந்தனைகளில் அந்த நபரைப் பற்றியே உங்கள் கற்பனை இருக்கிறதா? ஆம்/இல்லை. 3. அந்த நபரால் உங்கள் மகிழ்ச்சி குறைந்து, தனிமையை நாடுகிறீர்களா? ஆம்/இல்லை. 4. உங்களால் படிப்பில�ோ, பணியில�ோ கவனம் செலுத்த முடியவில்லையா? ஆம்/ இல்லை. 5. ஒருவர் உங்களின் அன்பை நிராகரித்தும் நீங்கள் அவருக்கு உங்கள் அன்பைப் புரியவைக்க முயன்று க�ொண்டே இருக்கிறீர்களா? ஆம்/இல்லை. பெரும்பாலான வினாக்களுக்கு உங்கள் பதில் இல்லையென்றிருந்தால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

சித்த மருந்துச் ச�ொட்டு – 12 மனசு எல்லாம் உறுதியாகத்தான் இருக்கிறது. ஆனால், மஞ்சள் பூசப்பட்ட முகம், அந்த மினுக்கல், மெட்டி, ப�ொட்டு, காது, அணிகலன், கன்னம் கண்ணில் பட்டு விட்டால், அவ்வளவுதான். மனசு எப்போது இதையெல்லாம் வெல்லப் ப�ோகிறது?

ஜூலியஸ் இதயகுமார்.

வெல்லப் ப�ோவது எப்போது?

எப்போதும் த�ோற்றுக்கொண்டே இருக்கிறதே.

முட்டற்ற மஞ்சளை எண்ணெயில் கூட்டி, முக மினுக்கி, மெட்டிட்டு, ப�ொட்டிட்டு, பித்தளை ஓலை விளக்கி இட்டு, பட்டப்பகலில் வெளி மயக்கே செய்யும் பாவையர் மேல், இட்டத்தை நீ தவிர்ப்பாய், இறைவா! கச்சியேகம்பனே!

  2017

- பட்டினத்தார்.

மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.

08


மது ப�ொய்யும் மெய்யும். ப�ொய் - 7

‘பாதிப்பு வராமல் குடிக்க எனக்குத் தெரியும்’ முனைவர் பிரான்சிஸ் நெல்சன் ‘ஒரு க�ோப்பையிலே என் குடியிருப்பு’ என்று தம்முடைய குடியை உலகிற்கு மன உறுதியுடன் வெளிப்படுத்தியவர் கண்ணதாசன். அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு ஏன் நம் தமிழ்ச் சமூகத்திற்கே ஏற்பட்ட பெரும்பாதிப்பு, அவர் 54 வயதில் இறந்துவிட நேர்ந்ததாகும். குடிப்பவர்களுக்கு வருவது ஒரு பாதிப்பு அன்று; வருவதெல்லாமே பாதிப்புகள்தாம். எவ்வகைப் பாதிப்புமின்றி எந்தவ�ொரு மனிதனும் மதுவைக் குடிக்க முடியாது. ஒரு குவார்ட்டர் குடித்தாலும், அதற்குக் குறைந்தது ரூ. 100 வேண்டும். அந்தப் பணம் விரயமாவது பாதிப்புதானே. த�ொடக்கத்தில் சிறிதாகத் தெரிகின்ற தாக்கம் நாளடைவில் வெளிப்படும். வாழ்க்கையே சிக்கலாக மாறும். மதுவினால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படும். மூளை, இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் என்று பாதிக்கப்படாத உறுப்பே இருக்காது. உணர்வுகளும், குணங்களும் பாதிக்கப்படும். பசி, தூக்கம் இல்லாமல் பதட்டம்; உடல் உள்ளத் தளர்ச்சியும் ஏற்பட்டு, அச்சமும், ஐயமும் உயர்ந்து, க�ோபம், ச�ோகம் ப�ொங்கும். உறவுகள் பாதிக்கப்படும். மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர், நண்பரிடம் என்று உறவுகளில் விரிசலும், முறிவும் ஏற்படும். ப�ொருளாதாரம் பாதிக்கப்படும். வருமானமெல்லாம் சுருங்கி அன்றாடச் சாதாரணத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாமல் கடன் வளரும். சமூகமும் பாதிக்கப்படும். தீமைகள் மலிந்து, அழிவுகள் அதிகரிக்கும். ஆன்மீகம் மழுங்கும். ‘வாழ்வே மாயம்’ என்ற நம்பிக்கையின்மை, மனச்சோர்வு, விரக்தி, சலிப்பு இவைதான் நிறைந்திருக்கும். குடிக்கும் பாதிப்புக்கும் நெருங்கிய த�ொடர்பு உண்டு என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரியும் செய்தி. மது

  2017

அருந்தியதிலிருந்து, அந்த மதுவின் கடைசித் துளி வெளியேற்றப்படும் வரை உடலின் உறுப்புகள் பெரும்பாடு படுகின்றன. மிகுதியாகக் குடித்தாலும், குறைவாகக் குடித்தாலும் தாக்கம் கண்டிப்பாக உண்டு. “ஆல்கஹால் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களைப் பசைப�ோல் ஒட்ட வைக்கின்றது. நுண்ணிய இரத்தக் குழாய்கள் வழியாக ஆக்ஸிஜன் செல்லவிடாமல் நரம்பு செல்களை அழிக்கின்றது” என்கிறார் கிரின்ஸ்லி. “முதல் க�ோப்பை மதுவே சீர்தூக்கிப் பார்க்க உதவும் (Judgement) சிந்தனையைச் சிதைக்கும்” என்று தெளிவுபடுத்துகிறார் லாடன் புரூட்டன். “மது அருந்துவது ஒரு மனிதனின் ப�ொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது.” குடிப்பவர் முதலில் வருமானத்தைக் குடித்துத் தீர்க்கிறார். வீட்டிலுள்ள ப�ொருட்களை விற்றுக் குடிக்கிறார். வீட்டையே விற்றுக் குடிக்கிறார். கடன் வாங்கிக் குடிக்கிறார். பிச்சை கேட்டுக் குடிக்கிறார். இறுதியில் திருடிக் குடிக்கிறார். மதுவைக் குடிப்பவர் தம் ப�ொருளை இழக்கிறார், உடல் நலத்தை இழக்கிறார், குடும்பத்தை இழக்கிறார், சமூகத்தை இழக்கிறார், கடைசியில் தமது உயிரையும் இழக்கிறார். ஆனால் மதுவை மட்டும் இழக்கத் தயாராக இல்லை. பாதிப்புகள் வருகின்றன என்று தெரிந்தும் குடித்துக் க�ொண்டேயிருக்கிறார்.

‘பாதிப்பு வராமல் குடிக்க எனக்குத் தெரியும்’ என்பது ப�ொய்.

பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது.

09


கி. சுடர்மணி.

தேசிய உழவர் நாள்

23 டிசம்பர்

சிறப்பு நாள்

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் த�ொழுதுண்டு பின்செல் பவர்” - குறள் 1033. உலக வாழ்வின் அடிப்படையாகத் திகழ்வது வேளாண்மை. வளர்ந்துவரும் இவ்வுலகில், நாட�ோடித்தனமாகத் தன் வாழ்க்கையைத் த�ொடங்கிய மனித குலத்திற்கு ஒரு நிலையான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளப் பெரிதும் துணை நின்றது வேளாண்மையே. அத்தகைய நிலையான வாழ்க்கைக்குப் பிறகுதான் மனித குலம் பல்வேறு நாகரிக வளர்ச்சிகளைக் கண்டது. அதன் பின்பும் மனிதன் செய்த பல்வேறு த�ொழில்களில் முதன்மையானதாகவும், மனிதக் குலத்திற்கு இன்றியமையாத ஒன்றாகவும் விளங்கியது வேளாண்மையே. இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதான் என்பதில் ஐயமில்லை. இன்றும் இந்தியாவின் மக்கள் த�ொகையில் 60 விழுக்காட்டிற்கும் மேலான�ோர் வேளாண்மை சார்ந்த த�ொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பெருமையை உணர்ந்துதான் அன்றைக்கே வள்ளுவப் பெருந்தகை. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்று, உழவுத் த�ொழிலுக்குச் சிறப்புச் செய்தத�ோடு, தாம் இயற்றிய திருக்குறளில் உழவு (104) எனும் தனி அதிகாரம் அமைத்து வேளாண்மையின் பெருமைகளையும், முக்கியத்துவத்தையும்

  2017

உணர்த்திச் சென்றுள்ளார். ஆம், “உழவுத் த�ொழில் செய்து வாழ்வோரே உயர்வான வாழ்வினை வாழ்பவராவர்; ஏனென்றால் உழவுத் த�ொழில் செய்பவரைத் தவிர மற்ற அனைவரும் அவர்களைத் த�ொழுது வாழ வேண்டியவராவர்” என்னும் கருத்தையே மேற்கண்ட குறளில் மிகவும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலில், வேளாண்மையே மனிதர்கள் உயிர் வாழ அடிப்படை ஆதாரம் என்பதை விளக்கவும், நாட்டின் எதிர்காலம் உழவர் கையில்தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், வேளாண்மை குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தவும் ஆண்டுத�ோறும் டிசம்பர் 23ஆம் நாள் தேசிய உழவர் நாளாகக் க�ொண்டாடப்படுகிறது.

உழவர் நாள் வரலாறு: வேளாண் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் தலைமையமைச்சர் இருக்கையை அலங்கரித்த திரு ச�ௌத்ரி சரண்சிங் அவர்களின் பிறந்த நாளே உழவர் நாளாகக் க�ொண்டாடப்பட்டு வருகிறது. சரண்சிங்கின் பிறந்த நாளை உழவர் நாளாகக் க�ொண்டாடுவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு. உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்திலுள்ள நூர்பூரில் நடுத்தர வேளாண்

விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று! பிரியும் வரை தெரியாது பாசம் எத்துணை ஆழம் என்று!

10


குடும்பத்தில் பிறந்தவர் ச�ௌத்ரி சரண்சிங். தம் வாழ்க்கையின் த�ொடக்கத்திலிருந்தே வேளாண்மையை நேசிக்கக்கூடிய எளிமையான மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக ப�ொறுப்பேற்று செயல்பட்டார். முதலமைச்சராக இருந்தப�ோது, நிலக் கையிருப்புச் சட்டம் க�ொண்டு வருவதற்கு முக்கியப் பங்காற்றினார். இந்தியாவில் நெடுநாளைய சிக்கலாக இருந்து வந்த உழுபவர்களுக்கே நிலம் என்பதைப் பல கட்டங்களில் முன்வைத்தார். தன் வாழ்நாளில் உழவர்களின் நில உரிமைக்காகத் த�ொடர்ந்து குரல் க�ொடுத்து வந்தார். பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் ஐந்தாவது தலைமையமைச்சராகப் பதவியேற்றார். 1980ஆம் ஆண்டுச் சனவரி 14 வரை 7 மாதங்களே ஆட்சியில் இருந்த சரண்சிங், “ஜமீன்தாரி ஒழிப்பு” எனும் சட்டத்தைக் க�ொண்டுவந்தார். தமது ஆட்சியின்போது உழவர்களின் விளைப�ொருள் விற்பனைக்காக, “வேளாண் விளைப�ொருள் சந்தை மச�ோதா”வையும் அறிமுகப்படுத்தினார். இவை மட்டுமல்லாமல், உழவர்களின் நலனுக்காகப்

பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். 1987ஆம் ஆண்டு மே 29ஆம் நாள் மறைந்தார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு “கிசான் காட்” (உழவர்களின் நுழைவாயில்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தம் வாழ்நாளில் உழவர்களின் நில உரிமைக்காகக் குரல் க�ொடுத்ததற்காக 2001ஆம் ஆண்டிலிருந்து அவரது பிறந்த நாளான டிசம்பர் 23, தேசிய உழவர்கள் நாளாகக் க�ொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வேளாண்மை த�ொடர்பான கருத்தரங்குகள், கூட்டங்கள், வகுப்புகள் நடத்தப்பட்டு அவரது பெயருக்கும், உழவர்களுக்கும் பெருமை சேர்க்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையும் உழவர்களும்: மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில், முதலாவதாக இருப்பது உணவு. எனவே அந்த உணவு உற்பத்திக்கு மூலதனமாக விளங்கும் வேளாண் த�ொழிலைப் ப�ோற்றி வணங்குவது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பதில்

உழவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் ச�ோற்றில் கை வைக்க முடியும் என்பது யாவரும் அறிந்ததே.

நாட்டின் ப�ொருளாதார வளர்ச்சிக்கு, வேளாண் த�ொழில் குறைந்தது ஐந்து விழுக்காடாவது வளர வேண்டியது கட்டாயம். திரு ச�ௌத்ரி சரண்சிங்

  2017

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான செயல் எதையும் செய்ய முடியாது.

11


மற்றத் துறைகளுக்குக் க�ொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நம் அரசாங்கம் தயாராக இல்லையென்பது வருத்தத்துக்குரியதாகும். ஐயமில்லை. நாகரிகம் மேம்பட்டு மனிதகுலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்ட காலகட்டத்திலும், “உழவுக்கும் த�ொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று, பழங்காலந்தொட்டே வணக்கத்திற்குரிய த�ொழிலாக வேளாண்மை இருந்து வந்துள்ளது என்பதைப் பல்வேறு வரலாற்று சான்றுகளும், இலக்கியங்களும் எடுத்துக்காட்டுகின்றன. “உழவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் ச�ோற்றில் கை வைக்க முடியும்” என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எத்தனை பேர் அதைப் புரிந்து செயல்படுகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நீர்ப் பற்றாக்குறை, ப�ொய்த்துப்போகும் பருவமழை அல்லது பெருமழையால் பாதிப்பு, பூச்சிகள் தாக்குதல் எனப் பல்வேறு இன்னல்களைத் தாண்டிதான் ஒவ்வொரு உழவனின் உழைப்பும் இருந்து வருகிறது. இவ்வளவு சிக்கல்களையும் சந்திக்கும்போது உழவர்கள் மனமுடைந்து விடுகின்றனர். வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள் படும்பாட்டுக்கு உரிய மதிப்பை யாரும் தருவதில்லை. இந்தச் சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், வளர்ந்துவரும் நமது நாட்டின் மக்கள் த�ொகையைக் கருத்தில் க�ொண்டு, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண்மை த�ொழிலை விரிவடையச் செய்ய அனைவரும் முற்பட வேண்டும். தற்போது விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழ்நிலையில், வேளாண்மை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. இன்றைய இளைய சமுதாயத்தினரும் உழவுத் த�ொழில் செய்ய முன்வருவதில்லை. நாட்டின் ப�ொருளாதார வளர்ச்சிக்கு, வேளாண் த�ொழில் குறைந்தது ஐந்து விழுக்காடாவது வளர வேண்டியது கட்டாயம் என்பதால் வேளாண்மையை

  2017

முற்போக்குப் பாதையில் எடுத்துச் செல்ல இளைய தலைமுறையினர் உழவுத் த�ொழிலில் ஈடுபட வேண்டும்.

உழவர்களின் இன்றைய நிலை: நாட்டுக்கே உணவளிக்கும் உழவர்களின் நிலை இன்று மிகவும் சீரழிந்துவிட்டது. வேளாண் கடன்களாலும், விளைச்சல், பருவமழை உள்ளிட்டவை ப�ொய்த்துப் ப�ோவதாலும் எத்தனைய�ோ உழவர்கள் நாடு முழுக்கத் தற்கொலை செய்துக�ொள்வதை ஊடகங்களின் வாயிலாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிற�ோம். இந்தியாவில் நாள�ொன்றுக்கு சராசரியாக 46 உழவர்கள் தற்கொலை செய்து க�ொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. க�ோடிக்கணக்கான த�ொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்கும் த�ொழிலதிபர்களையும் அரசியல்வாதிகளையும் கண்டுக�ொள்ளாத வங்கிகள், பிழைப்பிற்கு வாங்கிய கடனுக்காக உழவர்களைத் தற்கொலை செய்துக�ொள்ளளத் தூண்டுகின்றன. இத்தகைய சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் வேளாண்மையை விட்டுவிட்டு நகர்ப்புறத்திற்கு வரும் உழவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து க�ொண்டே வருகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. ஓட்டுக்காக ஒருசில இலவசத் திட்டங்களை அறிவிப்பத�ோடு அவர்களின் கடமை முடிந்துவிடுகிறது. உணவுப் பஞ்சம் என்னும் பூதம் ஊர்ப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டிக் க�ொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலிலும் மற்றத் துறைகளுக்குக் க�ொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நம் அரசாங்கம் தயாராக இல்லையென்பது வருத்தத்துக்குரியதாகும். 2015இல் வரலாறு காணாத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டன. 2016இல் பருவமழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்ததால் வேளாண்மையே செய்ய முடியாமல் நிலங்கள் பாழடைந்து கிடந்தன. இச்சமயங்களில் உழவர்கள் உழைத்த உழைப்பிற்குக்கூடப் பயன் கிடைக்காமல் என்ன செய்வதென்றே தெரியாமல்

நேரத்தைத் தள்ளிப் ப�ோடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.

12


விழிப்பிதுங்கி நின்றனர். தற்போது இந்த ஆண்டுப் பருவமழையானது இயல்பைக் காட்டிலும் மிகுதியாகப் ப�ொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் உழவர் நடுங்கிப் ப�ோயுள்ளனர். வரலாறு காணாத வெள்ளம், வறட்சி என்ற ச�ொல்லாடல்களின் வழித் தப்பித்துக்கொள்ளுதல் எளிது. நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என்ன? இன்றைக்கு உருவாகியிருக்கும் கைகூடல்கள் என்ன? இன்றும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அதே துயரத்தை மக்கள் பட்டறிய வேண்டியிருப்பது யாருடைய தவறு என்று சிந்தித்தால், இது ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கின் விளைவு என்பது புரியவரும்.

தீர்வு கிடைக்காத ப�ோராட்டங்கள்: இவை ஒருபுறமிருக்க, தற்போது மைய அரசால் அரங்கேற்றப்பட்டுள்ள மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் உழவர்கள் நடத்தும் ப�ோராட்டங்கள் யாருக்கும் தெரியாதவையல்ல. ஆனால் அரசு அவற்றைப் பற்றி எந்தக் கவலையும் க�ொள்ளாமல் இருப்பது, உழவர்கள் நலனில் அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது. மேலும், உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக நதிநீர் இணைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சித் துயர் தணிப்பு உள்ளிட்ட க�ோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நமது தமிழக உழவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறான ப�ோராட்டங்களை நடத்தி வந்தமை யாவரும் அறிந்ததே. ஆனால் இவை எவையுமே மத்திய, மாநில அரசுகளின் காதுகளில�ோ, கண்களில�ோ எட்டியதாகத் தெரியவில்லை. திரைப்பட நடிகர், நடிகைக்குத் தரும் முக்கியத்துவம்கூட நாட்டிற்கு உணவளிக்கும் உழவர்களுக்குத் தராமலிருப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது.

செய்ய வேண்டியவை: வேளாண்மையைச் சார்ந்திருக்கும் நாடுகள் வேளாண்மை வளர்ச்சிக்குத் திட்டமிட்டு, அதன் மூலம் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளம்மிக்கதாகச் செய்கின்றன.

  2017

ஆனால் இந்தியாவ�ோ, அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகம�ோ வேளாண்மையைப் புதைகுழிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. இந்நிலை மாற வேண்டும். நம் அனைவருடைய பசியையும் ப�ோக்க நாளெல்லாம் நிலத்தில் கால் பதித்து உழைக்கும் உழவர்களுக்கு மிஞ்சுவது எதுவுமில்லை. பயன் இல்லாவிட்டாலும் தம்மை நம்பியிருக்கும் மக்களுக்காகவும், பசுமையான தாய்மண் தரிசாகக் கூடாது என்பதற்காகவும் வயலில் ஏர்பிடித்துக் காலநிலை பாராமல் உழைத்துச் ச�ோறு ப�ோடும் உழவர்களின் உழைப்பு மிகவும் உன்னதமான ஒன்றாகும். வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் துன்பப்படும் உழவர்களை ஏதாவது ஒருநாள் மட்டும் நினைத்துவிட்டு அப்படியே இருந்துவிடக் கூடாது. நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவின்போதும் உழவர்களை நினைக்க வேண்டும். அவர்களுடைய துயரங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, வேளாண்மைச் சமூகத்தாருக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். வறட்சி மற்றும் கடன் சுமையால் நடக்கும் தற்கொலைகள், வேளாண்மையையும் ஊரையும் விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட துயரங்கள் எல்லாம் மறைந்து உழவர்கள் நிம்மதியாக அவர்களது த�ொழிலைச் செய்து முன்னேற ஆட்சியாளர்கள் என்றைக்கு முன்வருகிறார்கள�ோ அன்றைக்குத்தான் உழவர்களின் நாளைக் க�ொண்டாடுவதற்கான ப�ொருள் சிறக்கும்.

இந்தியாவில் நாள�ொன்றுக்கு சராசரியாக 46 உழவர்கள் தற்கொலை செய்து க�ொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், கடவுளே நேரில் வந்தாலும் உனக்குப் பயனில்லை.

13


நீ இளைஞன், அது ப�ோதும்! – 05

சூ.ம. ஜெயசீலன்.

தலைமுறை இடைவெளி

என் இனிய இளைஞனே! மாற்றங்கள் இயற்கையின் இயக்கத்தையும் சமூகத்தின் இயங்குதலையும் அழகுபடுத்துகின்றன. ‘இப்படித்தான்’ என்னும் வரையறைக்குள் அறையப்பட்டவைகள் அச்சாணி கழன்ற சக்கரங்களாக தமக்கான புதுப்புது திசைகளில் பயணிக்கின்றன. இவற்றில் நல்லவை சிலவற்றை நீ அறிந்திருக்கிறாய். பலவற்றை அறியாமலேயே பின்பற்றி வருகிறாய். ‘அப்படியா! என்னையும் அறியாமல் எதை நான் பின்பற்றுகிறேன்?’ என நீ சிந்திப்பது புரிகிறது. உன் பெற்றோர் பாடநூல் வாசம் பிடித்துப் பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் ஆண்டில் ஓரிரண்டு விழாக்கள் பள்ளியில் நடைபெற்றதுண்டு. கலைநிகழ்ச்சிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதையே மாணவர்கள் பெருமையாகப் பேசித் திரிந்தார்கள். உண்மையில் அது கத்தியில் நடக்கும் ப�ோராட்டம். நடனமும் நாடகமும் மாணவர்களின் திறமையை அறிவிப்பதற்குப் பதிலாகப் பள்ளியின் பெருமையை உரைப்பதற்காக என்னும் எண்ணம் மேல�ோங்கிய ப�ொழுதுகள் அவை. ‘எல்லாரும் ஒரே மாதிரி ஆட வேண்டும்’ என்பதே ஆசிரியர் த�ொடங்கிப் பார்வையாளர் வரை எல்லாருக்குமான விருப்பம். தவறிழைத்தவர்கள் பள்ளியில் கேலிப் ப�ொருளாகவும் வீட்டில் உதவாக்கறையாகவும் ஆனார்கள். எல்லாரும் முழுமை விரும்பிகளாகத் (Perfectionist) தங்களைக் காட்டிக்கொண்டார்கள்.

  2017

உன்னுடைய காலத்தில் இந்தப் பார்வை ஏறக்குறைய மாறிவிட்டது. ‘அனைவரும் ஒரே மாதிரி ஆட வேண்டும் என்றால் அவர்கள் என்ன இயந்திர மனிதர்களா?’ என்னும் கேள்வி எழுந்தது. மாணவர்களின் கலைத் திறனை அவர்களின் நிறை குறைகளுடன் சுவைக்க வேண்டும் என்னும் புரிதல் வளர்ந்தது. இயல்பு விரும்பிகளாக (Realistic) சமுதாயத்தில் சிலர் உருவெடுத்தனர். ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகத் த�ோன்றித் தாள், ஓவியம், மரம், நிழற்படம் எனப் பல வடிவங்களில் பரிணாமம் அடைந்த க�ொலாஜ் என்னும் கலை

ப�ொன் நாணயங்களை அடைமழையாகப் பெய்தாலும், ஆசைகள் அடங்காமல் பெருகும்.

14


வடிவம் இந்தக் காலகட்டத்தில்தான் முக்கியத்துவம் அடைந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் க�ொலாஜ் ப�ோட்டிகள் நடைபெறத் த�ொடங்கின. ‘அழகு’ என்பது முழுமையில் (Perfection) மட்டும் அன்று; எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் இயல்புடைமையிலும் அது அடங்கியிருக்கிறது’ என்பதை நீ கற்றுக்கொண்டாய். 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களை இஸட் தலைமுறையினர் (Z-Generation) என்கிற�ோம். நீயும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனே. இத்தலைமுறையில் பிறந்த உனக்கென்று சிறப்புக் குணாதிசயங்கள் சில இருக்கின்றன. அவைகளுள் ஒன்று ‘இயல்பு விருப்பம்’. ‘அனைத்தையும் முழுமையாகச் செய்கிறவர்கள் எவரும் இல்லை என்பதுவும், தவறிழைப்பதால் நான் ஒன்றும் த�ோற்றுப் ப�ோனவனில்லை, ஏனெனில் எல்லாருமே ஏதாவது ஒரு ப�ொழுதில் தவறிழைப்பவர்கள்தான்’ என்பதுவும் உனக்குத் தெரியும்.

என் வேகத்திற்கு மற்றவர்களும் ஈடு க�ொடுக்க வேண்டும் என நினைப்பது தவறு ‘என்னால் இயன்றவரை நான் முழுமையாகச் செய்கிறேன். என்னைச் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏனென்றால் எல்லாராலும் நேசிக்கப்படும் ஆள் என்று யாருமில்லை’ என்கிற தெளிவான பார்வை உனக்கு உண்டு. ‘நீங்கள் ச�ொல்வதை ஏற்றுக்கொள்கின்றேன். நானும் என் நண்பர்களும் அப்படித்தான் இருக்கின்றோம். இருப்பினும்… எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைப்பதும் அதற்காக உழைப்பதும் தவறா?’ என உனக்குள் கேள்வி எழலாம்.

  2017

தவறில்லை. இச்சிந்தனை உனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்காலம் குறித்த கனவை வளர்த்தெடுக்கும். சவால்களைச் சந்திக்கும் ப�ோராட்டக் குணம் துளிர்விடும். எப்போதும் துறுதுறுவென்று இருப்பாய். சில தவறுகள் நேர்கின்றப�ோது அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் முதிர்ச்சி பெறுவாய். தனியர் உளவியல் (Individual Psychology) பற்றி முதன் முதலில் பேசத் த�ொடங்கிய அட்லர், “மனிதனின் குறிக்கோள்களில், முழுமை பெறுவது என்பது தூய்மையான மற்றும் மிகவும் கட்டாயமான ஒன்று” என்கிறார். இது தன்மதிப்பு, தற்கட்டுப்பாடு, அருஞ்செயல் புரிவதற்கான உணர்வூக்கம் அனைத்தையும் அதிகப்படுத்தும். உன்னைப்போலவே நினைப்பதில்லை.

எல்லா

இளைஞர்களும்

‘நான் எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் எதையும் செய்ய மாட்டேன்’ எனச் சிலர் ச�ொல்வார்கள். தங்களால் இயலாத ஒன்றைக் குறித்து மிகப் பெரிய மனக்கோட்டை கட்டுவார்கள். அதைக் கண்டிப்பாகச் சாதித்தே தீருவேன் என முயற்சி செய்வார்கள். ‘விண்மீனை இலக்காக வைத்தால்தான் தவறினால் நிலவிலாவது விழ முடியும்’ என்பார்கள். இவர்கள் தற்சார்பு முழுமைத்திறன் (SelfOriented Perfectionism) உடைய�ோர் என அழைக்கப்படுகிறார்கள். கணக்கே வராத சூழலிலும் ‘கணிதப் பிரிவுதான் வேண்டும்’ என எல்லா வழிகளிலும் முயன்று இடம் பெறுகிறவர்களும், அனுபவமே இல்லாத த�ொழிலில் மூலதனத்தைப் ப�ோட்டு மிகப் பெரிய வெற்றியை உடனே எதிர்பார்க்கிறவர்களும் இந்த வகையைச் சார்ந்தவர்கள்தாம். ‘எக்காரணம் க�ொண்டும் தான் தவறே செய்யக் கூடாது’ எனவும், ‘தவறு செய்துவிட்டால், தான் த�ோற்றுப் ப�ோனவன், ம�ோசமானவன், மானக்கேட்டிற்குரியவன்’ எனவும் இத்தகைய�ோர் நினைப்பர். ‘அனைத்தையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும்’ என மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறவர்கள் பிறர் சார் முழுமைத்திறன் (Other – Oriented Perfectionism) உடைய�ோர் எனப்படுகிறார்கள்.

காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பம�ோ துன்பம�ோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது.

15


‘ஒரு வேலையைச் செய்து முடிக்கத் தமக்கு இருக்கும் திறமையும் ஈடுபாடும் அனைவருக்கும் இருக்க வேண்டும்’ என நினைப்பவர்கள் இவர்கள். நான் உதவித் தந்தையாக இருந்த நேரம். ஓர் ஆளைக் குறிப்பிட்டு “என்ன ச�ொன்னாலும் அவர் இப்படித்தான் செய்கிறார். இதுக்கு மேல் நினைக்கவே மாட்டார் ப�ோல” என நான் குறைபட்டேன். அருகில் இருந்த சேசுராஜ் என்னும் அருள்தந்தை “அவரால் இயன்றதை முழுமையாகச் செய்கிறார். இதுக்கு மேல அவர்ட்ட நாம எதிர்பார்க்க முடியாது” என்றார். நான் சிந்தித்தேன். ‘என் வேகத்திற்கு மற்றவர்களும் ஈடு க�ொடுக்க வேண்டும் என நினைப்பது தவறு’ என்று புரிந்தது. பிறர்சார் முழுமைத்திறன் உடைய�ோர் பல நேரங்களில் நடைமுறைக்கு ஒவ்வாத இலக்கினை வரையறுத்து அதை மற்றவர்கள் அடைய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவார்கள். தவறும் பட்சத்தில், கடுமையாகத் திறனாய்வு செய்வார்கள். ‘நான் ஒருத்தர்ட்ட ஒரு வேலையைக் க�ொடுக்கிறேன் என்றால் அவர் எந்தக் குறையும் இன்றிச் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பேன்’ என்பார்கள். தங்களால் சாதிக்க முடியாதவற்றைத் தங்கள் பிள்ளைகளின் வழியாக அடைந்திட நினைக்கும் பெற்றோரும், தமது நிறுவனத்திற்குப் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஊழியர்களை வாட்டும் மேலாளரும் இத்தகைய�ோரே. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நான் படித்த ப�ொழுது எங்களது உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை சார்பாக, முதல் தேசிய கருத்தரங்கை, 2015ஆம் ஆண்டு நடத்தின�ோம். எங்கள் எதிர்பார்ப்பையும் கடந்து மிகுதியான கல்லூரிகளில் இருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தார்கள். மிகச் சிறப்பாக நடைபெற்றது கருத்தரங்கு. மறுநாள் வகுப்புத் த�ொடங்கியது. முதல் நாள் நிகழ்வில் இருந்த ஒரு சில குறைகளைப் பட்டியலிட்டு மாணவர்கள் சிலர் வாக்குவாதம் செய்யத் த�ொடங்கினார்கள். செய்தி அறிந்த துறைத் தலைவர் முனைவர் ஹென்றி ர�ொசாரிய�ோ வகுப்பறைக்கு வந்தார். “கருத்தரங்கிற்கு வந்த எல்லாருமே பாராட்டிச் சென்றிருக்கிறார்கள். இரவு பகலாக உழைத்த நாம் அந்த வெற்றியை அனுபவிக்க வேண்டாமா? அந்த மகிழ்ச்சியை நீங்கள் முதலில் அனுபவிக்க

  2017

இதற்குப் பெயர்தான் தலைமுறை இடைவெளிய�ோ? (Generation Gap)

வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து உங்களது உழைப்பையும் மகிழ்ச்சியையும் வீணடிக்க வேண்டுமா? குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை அடுத்த திட்டமிடலின் ப�ோது பார்த்துக்கொள்ளலாம்” என்றார்; என்னைக் கவர்ந்தார்.

“நான் சரியாகச் செய்யாவிட்டால் அடுத்தவர் என்ன நினைப்பார்கள�ோ?” பல வேளைகளில் “நான் சரியாகச் செய்யாவிட்டால் அடுத்தவர் என்ன நினைப்பார்கள�ோ?” எனக் கவலைப்பட்டே மகிழ்ச்சியைத் த�ொலைத்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் அவர்களைக் கவனித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் தங்களையும் அறியாமல் ஓர் அழுத்தத்தைச் சுமப்பார்கள். இவர்கள் சமூகம் பரிந்துரைக்கும் முழுமைத்திறம் (Social Prescribed Perfectionism) உடையவர்கள். ‘நான் எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்வேன் என்றுதான் எல்லாரும் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற் ப�ோலத்தான் நான் நடக்க முடியும்’ என இவர்கள் ச�ொல்வார்கள். அனைத்தையும் முழுமையாகச் செய்ய வேண்டுமே என்பதற்காகச் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் நாட்களைக் கழிப்பார்கள். கடைசியில் குற்ற உணர்ச்சி மற்றும் மானக்கேட்டில் துன்பப்படுவார்கள். இனிய இளைஞனே! இப்போது ச�ொல் ‘நீ முழுமை விரும்பியா? அல்லது இயல்பு விரும்பியா?’ உனக்கு விருப்பமானதை நீ தேர்ந்தெடுத்து உடல் உள்ள நலத்துடன் வாழ்வதைப் பார்க்க ஆவலாய்க் காத்திருக்கிறேன்

துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான்; தணிப்பதும் தனிமைதான்.

16


SELFIE

செல்ஃபி ஒரு கில்ஃபி புகைக்கும் மதுவுக்கும் அடிமையாவது ப�ோலவே ஒருவர் இணையதளத்திற்கு அடிமையாகின்றார். மனிதனின் மூளைக்கு வெகு சுலபமாக நிறைவுத் தருவதாக இணையம் உள்ளது. படங்கள், சின்னத்திரை, கணினி வழியாக மனிதனை மிகவே ஈர்க்கிறது. மேலும் ஓர் இணையத்தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு விரைவாகக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதுப�ோல இது தூண்டிவிடுகிறது, நேரத்தைக் க�ொல்லுகிறது. 100க்குப் 10 பேர் இதற்கு அடிமையாகின்றனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். இதுவே 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கவலை எனலாம். இதற்குள் அகப்பட்டவர்கள் பலரும் இதற்கு அடிமைகளாகி பல இரவுகளைச் செலவு செய்கின்றனர். கடைசியாக தேவையான தகவல்களைப் பெறத் தவறுகின்றனர். இணையதளம் வழியாக மார்பிங் ப�ோன்ற

  2017

த�ோமை இராஜன்

மாயவலை, தவறான புகைப்படம் வெளிப்படுதல், படிக்காத நபரை மார்பிங் செய்து விநிய�ோகப்படுத்துவது, த�ோழி அல்லது மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுதல், பாலுணர்வைத் தூண்டும் உரையாடல்கள் எனப் பலவகைகள் பரிமாறப்படுகின்றன. இதிலும் குறிப்பாக இன்று செல்ஃபி எனப்படும் தற்படம் அல்லது தன்னைத்தானே புகைப்படமெடுத்து, தான் மனநிறைவடைந்தபின் அதனைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் என்பது ஒரு பூதாகர வடிவம் பெற்று வருகின்றது. செல்ஃபி இறப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்துக�ொண்டே ப�ோகின்றன. இவை குறித்த ஆய்வுகள், ஊடகங்களில் வெளிவரும் இறப்புகள், புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செல்ஃபி குறித்து இன்று நாம் மிகுந்த கவலைக�ொள்ள வேண்டியுள்ளது.

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தைப் பார்த்துக் கேலி செய்வதைவிட அதைப் பிடுங்கிக்கொள்வது புத்திசாலித்தனம்.

17


த�ொலைக்காட்சிப் பார்த்தேன் -அது த�ொல்லைக்காட்சியாக மாறியது எனக்கு…!!! அலைபேசியை நேசித்தேன் அலைபாயவிட்டேன் மனதை. இன்டர்நெட்டுக்குள் புகுந்தேன் த�ொலைந்தேன், நேரம் ப�ோனது. பிரசுரங்களைப் பகிர்ந்தேன் வாங்கினேன்; காசு ப�ோனது. வாட்சஃப்பில் பகிர்ந்தேன் கண்பார்வை ப�ோனது. செல்ஃபியைக் காதலித்தேன் வாழ்வே முடிந்தது…???

- இறந்தவர் எழுத முடியாத கவிதை.

வரலாறு: செல்ஃபி எடுத்தல் என்பது அண்மைக் காலத்தில் த�ோன்றி வளர்ந்துவரும் ஒரு மென்பொருள் த�ொழில்நுட்பச் செயல் என்பதனால் இதற்கு நீண்ட வரலாறு கிடையாது. 2013ஆம் ஆண்டுதான் இச்சொல் ஆங்கில அகரமுதலியிலேயே இடம் பெற்றது. (Oxford advanced learner’s dictionary) ஆயினும் 1981லேயே ஹாலிவுட் கலைஞர்கள் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். இன்று மூலைமுடுக்கெல்லாம் ஆண்ட்ராய்டு (android) எனப்படும் அதிநுட்ப கேமிரா ம�ொபைல் மற்றும் திறன்பேசி வந்த பிறகு ஏராளமான புகைப்படங்களை, இளைய�ோர் பதிவேற்றம் செய்கிறார்கள். செல்ஃபி எடுக்கும் இடங்கள் பல அபாயகரமான சூழ்நிலைகள் என்பதால், பல இறப்புகளுக்கும் இந்தச் செல்ஃபி காரணமாகின்றது. புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகே பிலதெல்பியாவிலுள்ள கிராபர்ட் க�ொர்னேலியுஸ் என்பவர் உலகிலேயே முதன்முறையாகத் தமது புகைப்படத்தைத் தாமே எடுத்து வெளியிட்டார்.

  2017

18

(இணையதளத்தில் அல்ல, புகைப்படக் காகிதத்தில்) இன்று த�ொழில்நுட்ப வளர்ச்சியில் வெளிவரும் ஐ ஃப�ோன் எனப்படும் செல்பேசிகளில் முன்னும் பின்னும் காமிராக்கள் இருப்பதால்தான் இஃது இவ்வளவுக்குப் புகழ் வாய்ந்ததாயிற்று. மேலும் அதனைச் சமூக வலைதளங்களில் தம் நண்பர்களுடன் பகிர்ந்துக�ொள்ளும் ஈடுபாடும் மிகுதியாக உண்டாயிற்று.

புள்ளி விபரங்கள்:

• அகில உலக அளவிலான செல்ஃபி இழப்புகளில் 60% இறப்புகள் மற்றும் குற்றுயிர்க் காயங்கள் இந்தியாவிலேயே நடைபெறுகின்றன. • இன்று அகில உலகளவில் 10 இலட்சம் செல்ஃபிகளை ஒரே நாளில் எடுத்துத் தள்ளுகின்றனர். இதில் பாதிக்கு மேற்பட்டவற்றை முகநூலில் பதிவேற்றம் செய்கின்றனர். இப்பொழுது அதே வேகத்தில் புலனம் ப�ோன்றவற்றிலும் மிகுதியாகப் பதிவேற்றம் செய்கின்றனர். • 2015ஆம் ஆண்டில் கூகுள் தேடலில் மட்டும் 2.4 க�ோடி செல்ஃபி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

18


மத்தவங்க முன்னாடி ப�ோஸ் பண்ணும்போது இயல்பாக நமக்கு ஒரு கூச்சம் உருவாகும். அதைத் தவிர்க்க செல்ஃபிதான் சரியான முறை. முகபாவங்களை வகைவகையாக மாற்றி நாம் ப�ோடும் படங்களுக்குத்தான் லைக்ஸ் நிறைய விழுகிறது. நம்மை நாமே விரும்பும் மகிழ்வான மனநிலையைச் செல்ஃபி தருகிறது. (ம�ோனிக்கா)

செல்ஃபி உளவியல் :

புகைப்படமெடுப்பது என்பது மற்றவர்களை நிரந்தரமாக நினைவில் நிறுத்தும் ஒரு நல்ல செயல். ஆனால் செல்ஃபி என்பது ஒருவர் மெய்யாக இவ்வுலகில் இருக்கும்போதே தமது நேர்மறை ஆளுமையைத் தன் நண்பர்கள் நடுவில் வெளிக்காட்ட தம்மையே மாற்றி மாற்றிப் புகைப்படமெடுத்து இறுதியில் பிறரது அங்கீகரிப்பை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்ற ஆர்வக்கோளாறு எனலாம். இங்கிலாந்து நாட்டில் ஒரு சராசரி இளம்பெண் ஒரு செல்ஃபி எடுக்க 12 நிமிடங்களை வீணாக்குவதாகக் கூறப்படுகிறது. அத�ோடு செல்ஃபி எடுத்தபின் அதை இன்னும் அழகுபடுத்த பல க�ோணங்களில் அதனை மாற்றி மாற்றி வைத்து, அதற்கு ஒளியூட்டி, வண்ணங்களை மாற்றி நிழல்படும் பகுதிகளை மறைத்து இறுதியாக, தான் மனநிறைவடைந்த பிறகே அதனைப் பிறருக்கு அனுப்பி வைப்பது என்பது ஓர் உளவியல் பாதக ஆளுமை (Psychopathology) வெளிப்பாடாகும். தன் த�ோற்றத்தில் தானே அளவுக்கதிகமாக ரசனை க�ொள்ளுதல் ‘நார்சிச’ப் பார்வை என்றழைக்கப்படுகிறது. தன் த�ோற்றத்தில் மிதமிஞ்சிய அக்கறைகாட்டி, முகத்தைப் பல க�ோணங்களில் வைத்துக்கொண்டு படம் பிடிப்பது மட்டுமல்லாமல், அதைப் பார்க்கச் ச�ொல்லிப் பிறரைத் தூண்டும் உளவியல், பாதக மனநிலையாகும். சமூக வலை தளங்கள் அடையாளப் பதிவு புகைப்படத்திற்கு லைக்

   2017201 719 

எதற்காக ஏங்கினார்கள�ோ அஃது அவர்கள் பலியான பின்னரே அவர்களுக்குக் கிடைக்கின்றது க�ொடுக்கவில்லை என்று கேட்டு வாங்கியவர்களும் உண்டு. விரும்பவில்லையென்று தெரிவித்ததாலே மனமுடைந்தவர்களும் உண்டு. இஃது ஒரு ‘கவன ஈர்ப்பு ந�ோய்’ ஆகும். 18 வயது முதல் 22 வயதுள்ள வாலிபர்கள்தாம், அதிலும் குறிப்பாக ஆண்கள்தாம் மற்றவர்களின் கவனத்தைத் தம்வயப்படுத்த முகநூல், கீச்சகம், புலனம் ஆகியவற்றின் பக்கங்களில் லைக்ஸ் பெற விரும்பி இதைத் துணிந்து செய்கின்றனர். இப்படி உயிரைத் துச்சமாக மதித்துச் செயல்படும் இளைஞர்கள் ஒரு சின்னப் பாராட்டுதலுக்கும், பிறரது ஊக்குவித்தலுக்கும் ஏங்குகின்றனர். இந்த ஏக்கம் கடைசியில் விபரீதங்களில் சிக்கிப் பலியாகத் தூண்டுகின்றது. எதற்காக ஏங்கினார்கள�ோ அஃது அவர்கள் பலியான பின்னரே அவர்களுக்குக் கிடைக்கின்றது எனலாம். இதனால் இன்றைய தலைமுறைகளை இடர்களிலிருந்து மீட்க முதலில் தமிழகத்தில் சில பகுதிகளை ஆபத்தான இடங்களாக அறிவித்து, பயணங்களில்,

19


மிகுதியாகச் செல்ஃபிகளை முகநூலில் பதிவேற்றம் செய்பவர்கள், தங்கள் சுயமதிப்பை நட்பு வட்டாரத்தில் குறைத்துக்கொள்கிறார்கள். சாலைகளில் செல்ஃபி படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும். முயன்று முன்னுக்கு வரும் இளைஞர்களின் ஒவ்வொரு செயலையும் பாராட்டி அங்கீகரிக்க வேண்டும். ப�ொதுவாக, எல்லா இளைஞர்களுக்கும் உளவியல் ஆல�ோசனை வழங்கி, த�ொடர்புச் சாதனங்களை, முக்கியமாக, ஆண்ட்ராய்டு ம�ொபைல்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்துப் பயிற்சி தரவேண்டும். மிகுதியாகச் செல்ஃபிகளை முகநூலில் பதிவேற்றம் செய்பவர்கள், தங்கள் சுயமதிப்பை நட்பு வட்டாரத்தில் குறைத்துக்கொள்கிறார்கள் என்று முகநூல் ஆய்வு கூறுகிறது. சமூகப் பகைவர்களின் இணையத் தாக்குதல் வேட்டைக்கு இவர்களது புகைப்படங்கள் இரையாகின்றன. சமூக வலைதளத்தில் தனிப்பட்ட பாதுகாப்புக் கிடையாது. நம்மைப் பற்றிய காட்சித் செய்தியைத் தாராளமாகப் பிறருக்குத் தந்துவிடுகிற�ோம். அவர்கள் அதனை மார்பிஃங் செய்து சம்பாதிக்கிறார்கள். ‘நான் என் நண்பர்களுக்குத்தானே அனுப்பினேன்’ என்று

  2017

கூறினால், நண்பர் உம்மிடம் சண்டையிடும்போது உம்மைக் கேட்காமல் அதனைப் பதிவேற்றம் செய்தால் என்ன நிகழும்? இன்று இத்தகைய பதிவேற்றத்தால் அந்தரங்கப் புகைப்படங்கள், உலகமயமாக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வருகின்றன. வாஷிங்டனில் “ஓவல் ஆபீஸில்” நடந்த அந்தரங்க நிகழ்வொன்று அமெரிக்கா மட்டுமின்றி, உலகளவில் பேசப்படவில்லையா? செல்ஃபி ஒரு ப�ொழுதுப�ோக்கன்று. மாறாக அஃது அகில உலக வலைத்தளத்தோடு இணைக்கப்பெற்ற ஒரு மின்னல் எனலாம்.

செல்ஃபி இறப்புகள்: • 2014ஆம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் வாகனப் பிரிவின் கணக்குப்படி 33,000 பேர் காயமுற்றுச் சிகிச்சை பெற்றனர். • 2015ஆம் ஆண்டு, எரிக் இன்சூரன்ஸ் கம்பெனியினர் ம�ொத்தமுள்ள வாகன ஓட்டுனர்களில் 4% ஓட்டுனர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டே வாகனம் ஓட்டுவதாகப் பதிவு செய்தனர். • “ஜனவரி 2016 வாஷிங்டன் ப�ோஸ்டர்” என்ற இதழ் 2014 முதல் 2016 வரையில் ம�ொத்தம் 54 இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றது. மும்பையில் இன்றும் 16 இடங்களில் செல்ஃபி பயன்பாட்டிற்குத் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக மும்பைக் காவல்துறை அறிவித்திருக்கிறது. கூட்டம் நெரிசலான இடங்களில் நெருக்கடிச் சாவுகளுக்கு இந்தச் செல்ஃபியே காரணமாகியுள்ளது. இதைவிட ம�ோசமானது என்னவென்றால் ஒரு நபர் அணு அணுவாகத் தான் செத்துக்கொண்டிருப்பதையே செல்ஃபியில் பதிவு செய்துக�ொண்டிருந்தார்.

  2017

20 20


செல்ஃபி இழப்புகள், இறப்புகள் ஒரு கண்ணோட்டம்: அண்மையில் பெங்களூரு இராமநகர் அருகே, க�ோவில் குளத்தில் விசுவாஸ் என்ற கல்லூரி மாணவர் சக மாணவர்கள�ோடு சேர்ந்து செல்ஃபி எடுத்தப�ோது இறந்தார். குளத்தில் குளித்தபடி மாணவர்கள் செல்ஃபி எடுத்தப�ோது விசுவாஸ் நீரில் மூழ்குவதும் அதே செல்ஃபியில் பதிவாகியுள்ளது கவலைக்குரிய செய்தி (தினத்தந்தி பெங்களூர் 2017, செப் 26). மத்திய பிரதேசத்தின் சாகர் என்ற த�ொகுதி எம்.எல்.ஏ. க�ோவிந்த் சிங் ராஜ்புத்தின் மகன், நிஜ துப்பாக்கியைத் தலையில் வைத்தபடி செல்ஃபி எடுக்க விரும்பி, நின்று க�ொண்டிருந்த த�ொடர்வண்டி மீது ஏறினான். மேலே ஓடிக்கொண்டிருக்கும் 2500 வாட்ஸ் மின் கம்பிகளில் கை தவறுதலாக உரச, கருகிப்போனான்

அந்த 14 வயது இளைஞன். இவ்வாறாக 2015 ஜனவரி முதல் செப்டம்பர் 2017 வரையில் 66 நிகழ்வுகள்; அதில் ம�ொத்தம் பலியான�ோர் எண்ணிக்கை 106. ப�ோட்ட மேக்கப் சரியாக இருகுதான்னு பார்க்கக்கூடச் செல்ஃபிதான். எங்க கைப்பையில் இனி முகம் பார்க்கும் கண்ணாடி தேவையில்லை என்கிறார் ஸ்வேதா எனும் பெண். செல்ஃபி எடுத்த படமும் ப�ோச்சு! செல்ஃபி கேப்ச்சர் செய்த கேமிராவும் ப�ோச்சு! கேமிரா பிடிச்ச கையும் ப�ோச்சு! “செல்ஃபி எடுத்த ப�ோட்டோவைப் பதிவேற்றம் செய்வதற்குள், அதில் பதிவான நபரைக் காண�ோம்! இஃது என்ன க�ொடுமை’’ என்கிறார் பேராசிரியர் கீரிஸ்

ஜூமான்ஜி – வெல்கம் டு த ஜங்கிள் ஜ�ோ ஜான்சனின் நேர்த்தியான இயக்கத்தில், 1995ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கியது ஜூமான்ஜி. ஜூமான்ஜி – வெல்கம் டு த ஜங்கிள் என்கிற இப்புதிய பதிப்பு, 2014ஆம் ஆண்டு இறந்துவிட்ட ராபின் வில்லியம்ஸ்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு டிசம்பர் 22 முதல் திரைக்கு வரவுள்ளது. ஸ்மொல்டர் பிரவேஸ்டோன், திவான்யா ஜான்சனாக நடித்துள்ள இப்படத்தில், ஸ்பூனர் மில்லராக அலெக்ஸ் வுல்ஃப், ஷேலி ஒபெர�ோனாக ஜேக் பிளேக், பெத்த்தானி வ�ொயிட்டாக ஐஸ்மோன் மற்றும் ஃப்ரேங்கிளின் ஃபின்பார் வேடத்தில் கெயிர�ோன் ஹார்ட் ஆகிய�ோர் நடித்துள்ளனர்.

படம் தரும் பாடம்

- ஆர்.என். பிரகாஷ்   2017

ஒரு பள்ளியில், சில மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடும்போது, ஜூமான்ஜி என்கிற ஒரு வீடிய�ோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர்! அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்கள் அடைகின்ற படிப்பினைகளுமே படத்தின் சாரம்! இப்படத்தில் குழந்தைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும்கூட சுவைக்கும் பல கூறுகள் நீக்கமற நிறைந்துள்ளன. ஓர் இலக்கை மனதில் பதித்து, அதே திசையில் பயணித்து, கற்பனை வளத்தோடு சிந்தனைச் சிறகினை உயரப் பறக்கவிடும்போது, நினைத்தவையெல்லாம் கைகூடும் என்பதே இப்படம் நல்கும் பாடமாகும்.

  2017

21 21


  2017

22

22


கடவுள் அணு அது! ஆவியின் வித்து! மரியா கருவெனும் செறுவில் மலர்ந்தது! மனித இதயமாம் மனப்பால் குடிக்க விரும்புது! அரும்பின் வாசகர்காள் நும் கரும்பிலும் இனிய மனங்களைத் தருக! பெறுக இப்பாலனின் அருள்மிகு வரங்களை இனிய புத்தாண்டின் வளங்களால் நிறைக!

கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  2017

  2017

23 23


முகப்புக் கட்டுரை

அருள் ர�ோசா

  வெந்து சாக வேண்டியது கந்துவட்டிக் செய்தும் பயனில்லை. இறுதியில் வாழ்க்கையின் கும்பலா? ந�ொந்து ப�ோன ஏழையா? விளிம்புக்கே தள்ளப்பட்டு நிம்மதி பறிக்கப்பட்ட ‘கந்துவட்டிக்காரர்களின் க�ொண்டாட்டப் பூமிதான் தமிழ்நாடா?’ இப்படிச் சிந்திக்கும் அளவுக்கு நம் நாட்டில் கந்துவட்டிக்காரர்களின் அடாவடிக் க�ொடூரம் அரங்கேறி வருகிறது. 2017, அக்டோபர் 23, திங்களன்று வழக்கம் ப�ோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரின் அலுவலகம் முன்பு குறை கேட்கும் நாளுக்கான மனுக்களைச் சமர்ப்பிக்கப் ப�ொதுமக்கள் கூடி வந்தனர். அப்போது எசக்கி முத்து (28) – சுப்புலட்சுமி (24) என்கிற ஏழை இளம் தம்பதியர் சரண்யா (5), அட்ஷய பரணிகா (2) என்கிற இரு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்துக் கரிக்கட்டையாகிப் ப�ோயினர்.

என்னதான் பிரச்சனை? தம் குடும்பச் செலவுக்காக இந்த ஏழைகள் வாங்கிய கடன் த�ொகை ரூ. 1,45,000. இவர்கள் கட்டிய வட்டி மட்டுமே ரூ. 2,34,000. இதற்கு மேலும், அசல் எங்கே என்று கடன் க�ொடுத்த கந்துவட்டிக் காரர்களும், அவர்களுக்குத் துணையாக உள்ளுர்க் காவல்துறையினரும் இக்குடும்பத்தை விரட்டினர்; மிரட்டினர். காவல் துறை மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தும் பயனில்லை. ஆட்சியாளரிடம் 6 முறை முறையீடு

  2017

24

இந்த இளம் தம்பதியர் மனதைக் கல்லாக்கிக் க�ொண்டு தாங்கள் பெற்று வளர்த்த பிஞ்சுக் குழந்தைகளைத் தீக்கு இறையாக்கினர்; தம்மைத் தாமே சாம்பலாக்கிக் க�ொண்டனர்.

கடமை தவறிய ஆட்சி: இவர்கள் முறையீடு குறித்து காவல்துறையினர் என்ன செய்திருக்க வேண்டும்? அதிக வட்டி வசூலிப்பதைத் தடுத்து, மிரட்டுவ�ோரையும் துன்புறுத்துவ�ோரையும் கூப்பிட்டு 1957ஆம் ஆண்டின் கந்துவட்டித் தடைச் சட்டப்படி தண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் கந்துவட்டித் தடுப்புச் சட்டம் 2003ஐச் சுட்டிக்காட்டி, கந்துவட்டிக் க�ொடூரன்களைக் க�ோர்ட்டில் நிறுத்தி 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதத்துடன் தண்டனையையும் வாங்கிக் க�ொடுத்திருக்க வேண்டும். ஆனால் கந்துவட்டிக் க�ொடுமையாளர்களுடன் சேர்ந்துக�ொண்டு காவல் துறை இந்த ஏழைக் குடும்பத்தாரை மிரட்டியிருக்கும் த�ொலைபேசி உரையாடல்களை ‘நக்கீரன்’ ப�ோன்ற இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. 24


கந்துவட்டிக் க�ொடுமைகளைக் கேள்விப்பட்ட சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன்வந்து 2013, செப்டம்பர் 23இல் அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. கந்துவட்டிக் குண்டர்கள் காவல்துறையை விலைக்கு வாங்கிக் க�ொண்டு ஏழை எளிய மக்களை மிரட்டி அடிபணிய வைப்பதைத் தடுக்க, மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களை ஏற்படுத்த வேண்டுமென ஆணையிட்டது. 2003இலிருந்து இன்றுவரை நடந்த கந்துவட்டிக் க�ொடுமைகளைப் பட்டியலிட்டு எடுத்த நடவடிக்கைகள், கிடப்பில் ப�ோட்ட வழக்குகள் எனக் கணக்குக் காட்டச் ச�ொல்லி ஆணையிட்டது. யாரை ந�ோக்கி இந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? தமிழக அரசின் உள்துறை செயலருக்கும், தமிழகக் காவல் துறையின் தலைமை அதிகாரிக்கும்தான்.

எங்கே ப�ோயின இந்த உயர்நீதி மன்ற ஆணைகள்? சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டும் ஆட்சித்துறை என்னதான் செய்தது? கடந்த 14 ஆண்டுகளில் கந்துவட்டிக்காக உயிர்ப்பலி க�ொடுத்தவர்கள் எத்தனை பேர்?

எத்தனை எத்தனைக் கந்துவட்டிப் பலிகள்:

நாமக்கல் - தர்மபுரி பகுதிகளில் கந்துவட்டிக் கட்ட முடியாமல் தவித்துப் ப�ோன தாய்மார்கள் கந்து வட்டி மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் க�ொல்லப்பட்டனர். மதுரை-திருப்பூர் பகுதிகளில் துரத்திப் பிடிக்கப்பட்டுக் க�ொலை செய்யப்படுவ�ோம் என அஞ்சிக் குடும்பம் குடும்பமாக விஷமருந்தித் தற்கொலை செய்து க�ொண்டனர். சீர்காழி – நாகை ப�ோன்ற பகுதிகளில் கடன் வாங்கிக் கந்துவட்டிக் கட்ட முடியாமல் தூக்குப் ப�ோட்டுச் செத்துப் ப�ோன விவசாயிகள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு

  2017

நகர - பெருநகர அங்காடிகளில் அன்றாடத் தெருவ�ோரக் கடை பரப்பிச் சிறுவணிகம் செய்துவரும் உழைப்பாளிகள் ரூ 1000க்கு உடனடியாக ரூ 200 வட்டி க�ொடுத்த பின் கடன் வாங்கிப் பிழைத்து வருகிறார்கள். மழை வந்து, காய்கறி அழுகிப்போய்த் திடீர் வேலை நிறுத்தம் வந்து, அரசியல் கலவரங்கள் த�ோன்றி அன்றைய பிழைப்பு பாதிக்கப்பட்டால் மீட்டர் வட்டி, மணிநேர வட்டி, தண்டால் வட்டி என இந்த ஏழை உழைப்பாளிகளின் ரத்தம் ஈவு இரக்கமின்றி உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இப்படியாக அங்கிங்கெனாதபடி சூறாவளிச் சுனாமியாகச் சுற்றிச் சுற்றி அடித்து ஏழை எளிய உழைப்பாளிகளின் உயிரை மரணப் பயத்துடன் நசுக்கிக் க�ொண்டிருப்பதே கந்துவட்டிப் பண்பாடு.

அங்கிங்கெனாதபடி சூறாவளிச் சுனாமியாகச் சுற்றிச் சுற்றி அடித்து ஏழை எளிய உழைப்பாளிகளின் உயிரை மரணப் பயத்துடன் நசுக்கிக் க�ொண்டிருப்பதே கந்துவட்டிப் பண்பாடு. நீதிமறந்த நிர்வாகம்: இதன் க�ொடிய பிடியினுள் மீட்கப்பட முடியாதபடி மாட்டிக்கொண்ட எசக்கி முத்துக் குடும்பத்தார் பட்டப்பகலில் யாரும் பார்க்கும்படி அக்கினிப் பிழம்பாகக் க�ொழுந்து விட்டு எரிந்து ஒட்டும�ொத்தமாகச் சாம்பலாகிப் ப�ோயினர்.

  2017

25 25


இக்காண�ொளி காட்சியை உலகமே கண்டு கண்கலங்கியது. திருநெல்வேலி மாவட்டக் கட்சித் தலைவரும், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் ஞான�ோதயம் பெற்றவராக, கந்துவட்டிக்காரர்களைக் கண்டுபிடித்து விசாரித்துத் தண்டிப்பதாக அறிவித்தார்கள். வாயில்லாப் பேதை உழைப்பாளிகளும், வக்கில்லா ஏழைத் த�ொழிலாளரும் நாதியில்லாமல் தம் ச�ொந்தத் தாய் மண்ணிலேயே கந்துவட்டித் தீயில் ப�ொசுங்கியதைக் கண்டார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். தமிழக அரசின் நிர்வாகம் ஆட்சி திறமையில்லாமல் நிர்வாணப்பட்டுப் ப�ோய் இந்த மாதிரியான அவலங்களை உருவாக்குவதாக அடையாளம் கண்டார்கள். கட்டுரை எழுதினார்கள்; கவிதை வடித்தார்கள். கேலிச் சித்திரம் தீட்டினார்கள். அப்படிக் கேலிச்சித்திரம் ஒன்றினைத் தாமே வரைந்து உருவாக்கி முகநூலில் வெளியிட்டார் பத்திரிக்கையாளர் பாலா. கரிக்கட்டையான பச்சைக் குழந்தையின் சடலத்திற்கு முன்னால் அம்மணப்பட்டுப்போன தமிழக அரசின் ஆட்சியாளர்கள் பணக் கற்றைகளால் தத்தம் மானத்தை மறைத்துக் க�ொள்வதாகச் சித்தரித்திருந்தார். இதைக் கண்ட ஆட்சியாளரும் நிர்வாகத்தினரும் என்ன செய்திருக்க வேண்டும்? தலைவிரித்துத் தாண்டவமாடிய கந்துவட்டிக் க�ொடுமையைக் கட்டவிழ்த்து விட்ட கேவலப் பிறவிகளை அடையாளம் கண்டு தண்டித்திருக்க வேண்டும். அவர்களுக்குக் காமதேனுவாக இருந்து கருப்புப் பணத்தைச் சுரந்து வழங்கிக் க�ொண்டேயிருக்கும் வெள்ளை வேட்டிச் சீமான்களையும், காக்கிச்சட்டைக் க�ோமான்களையும் அள்ளிப் ப�ோட்டு அர்ச்சனை செய்திருக்க வேண்டும்.ஏழை எளிய�ோரைக் காவு க�ொடுக்கும் கந்துவட்டிப் புழக்கத்திற்குக் கருமாதி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, அந்த எசக்கிமுத்து குடும்பத்தார், அண்டை அயலார�ோடு ஏற்பட்ட தகராறுகளை முன்னிட்டுத்தான் தீக்குளித்துக்கொண்டனர் எனத் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். சமூகப் ப�ொறுப்போடு கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ட தனிப்பட்ட பத்திரிகை ஆசிரியர் பாலாவைச் சட்ட முறைமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் வீடு புகுந்து கைது செய்து, அவரது கணினி – அலைபேசி ப�ோன்றவற்றைக் கைப்பற்றிக் க�ொண்டு ப�ோயிருக்கிறார்கள்.

  2017

26

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு நகர - பெருநகர அங்காடிகளில் அன்றாடத் தெருவ�ோரக் கடை பரப்பிச் சிறுவணிகம் செய்துவரும் உழைப்பாளிகள் ரூ 1000க்கு உடனடியாக ரூ 200 வட்டி க�ொடுத்தபின் கடன் வாங்கிப் பிழைத்து வருகிறார்கள். அந்தக் கேலிச் சித்திரத்தால் தன்மானம் கப்பலேறியதாகச் ச�ொல்லி நல்ல பிள்ளை வேஷம் ப�ோட்டார்கள். தகவல் த�ொழில்நுட்பச் சட்டம் எண் 67இன்படி அந்தப் பத்திரிக்கையாளர் நாணக்கேட்டைப் பரப்பியதாகவும், இந்திய தண்டனைச் சட்டம் எண் 501இன் படி மானப்பறிப்புச் செய்ததாகவும் வழக்குத் த�ொடுத்தார்கள்.

யார்தான் குற்றவாளி? நிர்வாகச் சீர்கேட்டினால் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த அரசின் ஆட்சியாளரையும் ஆளும் வர்க்கத்தினரையும், அலுவலர்களையும் தாம் அசிங்கப்படுத்த வில்லை என்பதை அந்தப் பத்திரிகையாளர் நீதி மன்றத்தில் எண்பித்துக் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். கந்துவட்டிக்குத் துணைப�ோனவர்கள் யார் யார்? தங்களின் அடாவடி நடவடிக்கைகளாலும், குறட்டைவிட்டுத் தூங்கியதாலும் எசக்கி முத்துக் குடும்பத்தாரைத் தீக்குளிக்கும் நிலைக்குக் க�ொண்டு சென்றவர்கள் குற்றவாளிகளா? கந்துவட்டியை எதிர்த்துப் ப�ோராடிய எசக்கி முத்துக் குடும்பத்தாரும், அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் ப�ொறுப்பாக எடுத்துச் ச�ொன்ன பத்திரிகையாளரும் குற்றவாளிகளா?

26


ஒழியட்டும் கந்துவட்டி: கல்வி, சிறுத�ொழில், குறுநில வேளாண்மை, குடும்பச் செலவு, திருமணம், வீடு கட்டுதல் ப�ோன்ற அடிப்படைத் தேவைக்காக ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் தாய்மார்களும் கடன் வாங்கித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. குறைந்த வட்டிக்கு அரசு வங்கிகளில் கடன் வாங்கிப் பிழைப்பை நடத்தலாம் எனில், அந்த வங்கிகளின் அணுகுமுறைகள் ஏழைகளை அரவணைக்கும் விதத்தில் பெரும்பாலும் இல்லை. டாஸ்மாக்கிற்கு அடிமைகளாகிப் ப�ோன கணவன்மார்களைய�ோ, ஏழைகளைத் துரத்தியடிக்கும் வங்கிகளைய�ோ, நம்பிக் குடும்பம் நடத்திப் பிழைப்பைக் கவனிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில்தான் பெரும்பாலான ஏழை எளிய குடும்பங்களின் தாய்மார்கள் கந்துவட்டி அரக்கன்களின் உடல் பசிக்கு இலக்காகி விடுகிறார்கள். ஏழை உழவர்களையும், எளிய த�ொழிலாளர்களையும் வாழவைக்கத் துடிக்கும் சமூக ஆர்வலர்களும்,

சட்டம் படித்த வழக்கறிஞர்களும், ப�ொறுப்புள்ள இதழாளர்களும், சமூக மாற்றம் வேண்டி நிற்கும் இளைய�ோரும் இங்குத்தான் கரம்கோர்த்துச் செயல்படவேண்டிய தேவை எழுகிறது. எசக்கிமுத்து குடும்பத்தார் ப�ோன்று கந்துவட்டியால் சித்திரவதைக்குள்ளாகும் ஏழை எளிய�ோரை அடையாளம் காண வேண்டும். அவர்களைத் துன்புறுத்தும் கந்துவட்டிக்காரர்களையும், அவர்களுக்குத் துணைப�ோகும் அரசுத்துறை ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஏழைகளை வெறுத்துப் புறந்தள்ளாமல் அவர்களை அரவணைத்து உதவியளிக்கும் ப�ொருளாதார மையங்களாக அரசு வங்கிகள் செயல்படத்தக்க விதத்தில் சட்டம் உருவாக்கிட வேண்டும். “உழைப்பைச் சுரண்டும் கந்துவட்டிக்குச் சமாதி, உழைப்பை நம்பும் அனைவருக்கும் அமைதி” என்ற நேரிய பண்பாட்டை உருவாக்காமல், நம் இந்தியா வல்லரசாகத் தலைநிமிர முடியாது

  

  2017

காலம் ப�ோனால் திரும்புவதில்லை; காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை!

27


சிறுகதை

தங்க. ஆர�ோக்கியதாசன் வண்ண வண்ண பலூன்களை வாயில் வைத்து ஊதி ஊதி, காற்றை அதில் நிரப்பி, அவற்றின் வாயை நூலால் கட்டி மூங்கில் கழியில் த�ொங்கவிட்டு, ம�ொத்தம் எத்தனை பலூன்கள் என எண்ணிப் பார்த்துத் திருப்தி அடைந்தவனாய், காற்றில் தலையை ஆட்டும் பலூன்களின் அழகை ரசித்தபடி, தான் பெற்ற குழந்தையை செல்லமாய்த் தூக்கி அணைத்துக் க�ொள்வதைப் ப�ோல, மூங்கில் கழியைத் த�ோளில் தூக்கிக் க�ொண்டு அன்றைய வியாபாரத்திற்கு நடந்தான் அவன். ‘ஒரு டீயைக் குடித்துப் பீடி ஒன்றைப் பற்றவைத்து இழுத்தால் க�ொஞ்சம் தெம்பாக இருக்கும்’ என நினைத்து, ‘காசு ஏதாவது தென்படுமா?’ என்று பாக்கெட்டைத் துழாவியதில், நேற்றுப் பிடித்த பீடியின் மிச்சத் துண்டுதான் கையில் அகப்பட்டது. ‘இஃதாவது இருக்கிறதே!’ என நினைத்து டீயின் ருசியை மனதில் நினைத்து, எச்சிலைக் கூட்டி விழுங்கி, துண்டுப் பீடியைப் பற்ற வைத்து ஓர் இழுப்பு இழுத்து, புகையை வாய்க்குள் வைத்துக் க�ொஞ்ச நேரம் ‘தம்’ கட்டி, புகையை வெளியேவிட்ட பின், கண்களை மூடி, அலாதியான ஒரு நிறைவை ஆனந்தமாக அனுபவித்தான். அந்த ஒரு நிமிட ஆனந்த சுகத்திற்கு இந்த உலகத்தில் ஈடு இணை ஏது? நெருப்பில் தன்னையே தாரை வார்த்துக் கரைந்து க�ொண்டிருக்கும் துண்டு பீடியை இரு விரல்களுக்கு நடுவே வைத்துத் தூக்கிப் பார்த்த அவன், ‘இன்னும் ஓர் இழுப்புக்கு வரும்’ என த�ோராயமாய்க் கணக்கிட்டு, அதை அவசர அவசரமாகத் தரையில் தேய்த்து, நெருப்பை அணைத்துத் தனக்கென

  2017

இருக்கும் ஒரே ஒரு ச�ொத்தான அத்துண்டுப் பீடியையும், ‘உழைப்பு ஒன்றே மூலதனம்’ என்ற நம்பிக்கையையும் பத்திரப்படுத்திக் க�ொண்டு அவன் நடக்கிறான். கையில் வைத்திருந்த ஒரு பலூனால், டிரிங்… டிரிங்… டிரிங்… என்ற வின�ோத சப்தம் எழுப்பி, ‘யாராவது கூப்பிடுவார்களா?’ என்ற ஆர்வத்துடன் “பலூன்… பலூன்…” என்று கூவிக்கொண்டே ஒவ்வொரு தெருவாக நடக்கிறான். ஏன�ோ தெரியவில்லை, அன்று ஒரு குழந்தைகூட பலூன் வாங்கத் தெருவுக்கு வரவில்லை.

ஒரே தெருவை இரண்டு, மூன்று முறை சுற்றிச் சுற்றி வந்ததுதான் மிச்சம். யாரும் கூப்பிட்டு வாங்குவதாக இல்லை. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நின்று தனக்குத் தெரிந்த வியாபார நுணுக்கங்கள் அத்தனையையும் பயன்படுத்தி, பலூனில் பல மாறுபட்ட ஓசைகளை எழுப்பி, குழந்தைகளைக் கவர முயற்சி செய்து பார்க்கிறான்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.

28


ஒரு குழந்தைகூட இவன் வெளியே வரவில்லை.

பலூனை

வாங்க

குழந்தைக்கு நம்ம நெலம தெரியவாப் ப�ோகுது?’ என்று மனசுக்குள் நினைத்துக் க�ொள்கிறாள்.

“ஏம்ப்பா. க�ொழந்த இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சிருக்கு… வீட்டு முன்னால வந்து இப்படி காட்டுக் கூச்சல் ப�ோடுறியே? ப�ோ… ப�ோ, அந்தப் பக்கம்” என்று விரட்டுகிறாள் ஓர் அம்மா. அடுத்தத் தெருவுக்கு வந்த அவன், ‘ஒரு குழந்தையாவது ஒரு பலூனையாவது வாங்காதா?’ என்ற ஏக்கத்துடன் கையில் வைத்திருந்த பலூனில் மறுபடியும் வித விதமான சப்தம் எழுப்பி உரத்தக் குரலில், “பலூன்... பலூன்...” என்று கத்துகிறான். த�ொண்டை வலித்ததுதான் மிச்சம். இவன் பலூனை ஒருவரும் வாங்கவில்லை. ம�ொத்த பலூன்களும் அப்படியே இருந்தன.

தாயிடம் கெஞ்சிப் பார்த்த அந்தக் குழந்தை, ‘ஓ...’ என்று அழுது அடம் பிடிக்கத் த�ொடங்கியது. குழந்தைகள் அடம் பிடித்தார்களானால் நிறுத்துவது ர�ொம்ப கஷ்டம். மூங்கிலால் செய்து வைத்திருந்த சின்ன சின்ன கிலு கிலுப்பைகளையும், ப�ொம்மைகளையும், க�ொடுத்தாலும் ‘வேண்டாம்’ என்று தூக்கித் தூர எறிந்த அந்தக் குழந்தை, ‘பலூன்தான் வேண்டும்’ என்று மிகுந்த சத்தத்துடன் அழுது அடம் பிடித்தது. “பலூன்காரரே... ஒரு பலூன் என்னா வெல?” என்று அவள் கேட்டவுடன், அழுது க�ொண்டிருந்த குழந்தை சத்தத்தைக் க�ொஞ்சமாகக் குறைத்து, ‘எந்தப் பலூனை வாங்கலாம்’ எனப் பலூன்களையே பார்த்துக் க�ொண்டிருந்தது. “ஒண்ணு அஞ்சி ரூபாமா” என்றவுடன், அவள் அங்கும் இங்குமாகத் தேடி, கையில் கிடைத்த சில்லரையைப் பார்த்தப�ோது இரண்டு ரூபாய்தான் தேறியது.

‘என்ன இது? ஒட்டும�ொத்தக் குழந்தைகளும் இனிமேல் பலூன் வாங்கப் ப�ோவதில்லை என்று சபதம் எடுத்துக் க�ொண்டனரா? இல்லை… பலூனின் மீதிருக்கும் கவர்ச்சிதான் ப�ோய்விட்டதா? ஏன் இந்த சூன்ய நிலை?... இருக்காதா என்ன… இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மணிக் கணக்காக ‘டிவி’யைப் பார்த்துக் க�ொண்டிருக்கிறார்கள். அதுவும் இல்லை என்றால் கம்ப்யூட்டரில் கேம்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்… ‘வேதனையும் விரக்தியுமாகக் க�ொளுத்தும் வெயிலில் நடந்து வந்த அவன், ர�ோட்டோரமாக இருக்கும் மரத்தின் அடியில் நிழலுக்காய் நிற்கிறான். வீசியக் காற்றில் கழியில் கட்டப்பட்டிருந்த பலூன்கள் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தன அவன் வாழக்கையைப் ப�ோல. அதே மர நிழலில், ஒரு பெண் மூங்கில் பத்தையால் கூடை பின்னிக் க�ொண்டிருந்தாள். அவள் அருகே மண்ணில் விளையாடிக் க�ொண்டிருந்த அவள் குழந்தை பலூன்களைப் பார்த்துத் தாயிடம் வாங்கித் தரும்படி கேட்டது. அவள் அதைக் கவனித்தும் கவனிக்காததைப் ப�ோலக் கூடை பின்னுவதிலே கவனமாக இருந்தாள். இருந்தாலும் அந்த இடத்திற்கு வந்த அந்தப் பலூன்காரனை மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள். ‘நல்லா விளையாடிக்கிணு இருந்த குழந்தையைப் பலூன்களைக் காட்டி அழவைத்து விட்டானே… கையில் ஒரு காசு கூட இல்லை! காலையிலிருந்து ஒரு கூடைக் கூட இன்னும் விக்கல… குழந்தை அடம் பிடிச்சா என்ன செய்வது? பாவம்

  2017

குழந்தைக்கு ஒரு பலூனைக்கூட வாங்கித் தர முடியாத தன் நிலமையை நினைத்து வேதனைப்பட்ட அந்தத் தாய், தன் இயலாமையை வெளியே காட்டாமல், கை வேலையை அப்படியே ப�ோட்டு விட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் க�ொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். “இந்தாம்மா... இந்தா… இத குழந்தைக்குக் குடு” என்று ஒரு பலூனை நூல�ோடு அவளிடம் நீட்டினான். “பலூன்காரரே வேண்டாம்… என்னிடம் காசு எதுவும் இல்லே” என்று மறுக்க, “பரவாயில்லேம்மா… ம�ொதல்ல குழந்தைக்கு இதக் குடுத்து அழுகையை நிறுத்து” என்று ச�ொல்லி முடிப்பதற்குள், அந்தக் குழந்தை இரு கைகளையும் நீட்டி பலூனை வாங்கித் தன் மார்போடு சேர்த்துக் கட்டி அணைத்து அதன் அழகில் தன்னையே இழக்கின்றது. பலூன்காரனை அந்தத் தாய் கண்ணீர�ோடு பார்த்து, கையெடுத்துக் கும்பிடுகிறாள். ஒரு டீ வாங்கிக் குடிக்கக் கூட வழியில்லாமல், ‘ஒரே ஒரு பலூன் விற்காதா?’ என்று தெருத் தெருவாக அலைந்த அவனது ஏக்கமும் களைப்பும், விரக்தியும், வேதனையும் பலூனை வாங்கித் தன்னோடு அணைத்துக் க�ொண்ட அந்தக் குழந்தையின் சந்தோஷத்தைப் பார்த்து எங்கேய�ோ பறந்துப் ப�ோயின.

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

29


கற்ற பின் - 11

  தீபன்

“நாம் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி பெறுவதைத் தடுக்கும் காரணிகள் இரண்டு. ஒன்று ‘எனக்கு நேரமில்லை’, இரண்டாவது ‘ப�ோரடிக்குது,’ இதைச் ச�ொன்னவர் ஆர�ோக்கியசாமி வேலுமணி; வயது 57. ‘இவர் அப்படியென்ன சாதித்துவிட்டார், கருத்துச் ச�ொல்கிறார்’ என உனக்குத் த�ோன்றும். நியாயம்தான். படிப்புக்கு ஏற்ற வேலை தேடி மாதச் சம்பளம் 150 ரூபாய் வாங்கியவர். சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் ச�ொந்தத் த�ொழிலில் இறங்கி, இன்று ரூ. 3,600 க�ோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர். அந்த நிறுவனம் தைர�ோ கேர் லிமிடெட், மும்பையில் உள்ளது.

“பதின�ோராம் வகுப்பில் குரூப் ப�ோட்டோ எடுத்தார்கள். என் வகுப்பில் நான் மட்டும் அதில் இருக்கமாட்டேன். ஏனென்றால், என்னால் அதற்கு 2 ரூபாய் க�ொடுக்க முடியவில்லை.” மருத்துவ முன்னறிதல் துறையில் இந்தியா முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பரிச�ோதனை மையங்களை நடத்துகிறது. ஆனால் வேலுமணி நம் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர். க�ோயம்புத்தூர் அருகில் பேருந்து வசதியே இல்லாத சிறு

  2017

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில்தான் கல்வி கற்றார்.

அரசு

வறுமையான குடும்பத்தில் பிறந்ததினால்தான் இவர், மற்றவர்களைப் ப�ோல் அல்லாமல் மாறுபட்ட த�ொழிலதிபராகச் சாதித்துள்ளார். இவரது நிறுவனத்தில் வழக்கமான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. உதாரணமாக, எல்லா நிறுவனங்களும் அனுபவம் வாய்ந்த த�ொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவே முன்னுரிமை அளிப்பார்கள். ஆனால் இவர் அனுபவமே இல்லாதவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார். இவரது நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு அதுதான் முதல் அனுபவமாக இருக்கும். ம�ொத்த பணியாளர்களில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே வேறு நிறுவன அனுபவங்கள�ோடு வந்தவர்களாக இருப்பார்கள். இதற்குக் காரணம் வேலுமணியும் முதல் தலைமுறைத் த�ொழில் முனைவ�ோர் என்பதுதான். தவிர இவர் வேலை தேடி அலைந்த காலத்தில், அனுபவமில்லை என்று புறக்கணிக்கப்பட்ட வலியை அறிந்தவர் என்பதும் முக்கிய காரணம். வேலுமணியின் அப்பாவுக்குச் ச�ொந்த நிலம்கூட இல்லை. கூலித் த�ொழிலாளிதான். உடன் பிறந்தவர்கள் நால்வர். வேலுமணிதான் மூத்தவர். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை.

குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.

30


அப்பா குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிர் செய்தார். நான்கு குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை. பள்ளி நேரம் முடிந்ததும் அனைவரும் சேர்ந்து வயல்களில் வேலை செய்வார்கள்.

ச�ௌத் இந்தியா விஸ்கோஸ் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லவே வேதியியல் படித்தார். அனுபவம் இல்லை என்பதால் அங்கு வேலை கிடைக்கவில்லை.

அவர் வேலைக்குச் சேர்ந்த, மாத்திரை நிறுவனம் “பத்து அடுக்குப் பிரமிடு என்றால், நான் அதன் நான்கு ஆண்டுகளில் மூடப்பட்டது. அடியில் இருக்கும் அடுக்கில் இருந்தேன். துரதிர்ஷ்டம்தான் அவரை விரட்டியது என்றே ஒவ்வொரு அடுக்காக ஏறிவர நான் அதிகம் ச�ொல்ல வேண்டும். 23 வயதில் மீண்டும் வேலை உழைத்தேன்’’ என அவர் தமது பழைய தேடத் த�ொடங்கினார். மும்பையில் காலத்தை நினைவு கூர்கிறார். உள்ள பாபா அணு ஆய்வு நிலையத்தில் அறிவியல் “பத்து அடுக்குப் “என் பள்ளிக்கூடப் பையில் உதவியாளர் வேலைக்கு புத்தகங்களுடன் மதிய பிரமிடு என்றால், நான் விண்ணப்பித்தார். 1982இல் உணவு சாப்பிடத் தட்டும் இந்த வேலை கிடைத்தது. அதன் அடியில் இருக்கும் எடுத்துச் செல்வேன். ஒரே அங்கு 880 ரூபாய் மாதச் அடுக்கில் இருந்தேன். சட்டையை மீண்டும் மீண்டும் சம்பளம். வறுமையில் வாழும் ஒவ்வொரு அடுக்காக துவைத்துப் பல நாட்கள் குடும்பத்தைக் காப்பாற்ற ஏறிவர நான் அதிகம் அணிந்து சென்றுள்ளேன்.” இது ப�ோதுமானது என்பதால் உழைத்தேன்.’’ மும்பை சென்றார். “பதின�ோராம் வகுப்பில் குரூப் ப�ோட்டோ எடுத்தார்கள். என் அணு ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்பில் நான் மட்டும் அதில் வேலை பார்த்துக்கொண்டே இருக்கமாட்டேன். ஏனென்றால், முதுகலைப் படிப்பும் படித்தார். தைராய்டு என்னால் அதற்கு 2 ரூபாய் க�ொடுக்க உயிர்வேதியியலில் முனைவர் படிப்பும் முடியவில்லை.” இப்படித்தான் இவரது இளமைக் முடித்துவிட்டார். காலம் இருந்தது. வேலைக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்து க�ோவையில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் 1995இல் ‘வாழ்க்கை இப்படியே ப�ோய்விடும�ோ?’ வித்யாலயாவில் அவர் வேதியியல் படிப்புப் என ய�ோசித்தார். ‘எதையாவது சவாலாகச் செய்ய படித்தார். படித்து முடித்ததும் 1978ஆம் ஆண்டில் வேண்டும்’ என்று மனசு ச�ொன்னது. உடனடியாக க�ோவையிலுள்ள ஜெமினி கேப்ஸ்யூல்ஸ் என்னும் வேலையைக் கைவிட்டார். 1995ஆம் ஆண்டுத் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தில் மாதம் 150 தமது சேமிப்புத் த�ொகையான 1 லட்சத்தைக் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் க�ொண்டு தெற்கு மும்பையில் 200 சதுர அடி

  2017

காயம்படாதவன்தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.

31


இடத்தில் தைர�ோ த�ொடங்கினார்.

கேர்

ஆய்வகத்தைத்

அப்போது தைராய்டு பரிச�ோதனைகள் செய்யும் ஆய்வகங்கள் பல லாபத்தில் இயங்கவில்லை. அங்குள்ள இயந்திரங்களுக்குத் தினசரி ஒரு மணி நேரம் மட்டுமே வேலை இருந்தது. அப்படிச் சிரமப்பட்ட ஓர் ஆய்வகத்தில் இருந்து ஓர் இயந்திரத்தை வாடகைக்குப் பெற்றார். ஐந்து ஆண்டுகள் அவர்களுக்குப் பரிச�ோதனைகளை இலவசமாகச் செய்து தருவதுதான் வாடகை ஒப்பந்தம். இலவசமாக 50 மாதிரிகளை அவர்களுக்குப் பரிச�ோதனை செய்து க�ொடுத்தார். மும்பையில் பல பகுதிகளில் அலைந்து 250 மாதிரிகளைப் ப�ொதுமக்களிடமிருந்து பெற்றார். இதிலிருந்து ஒவ்வொரு இயந்திரமாக வாங்கிச் சேர்த்துக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தினமும் 3000 மாதிரிகளைப் பரிச�ோதிக்கும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்தது. அவரே நேரடியாகச் சென்று ஆர்டர்கள் பெற்று

எல்லா நிறுவனங்களும் அனுபவம் வாய்ந்த த�ொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவே முன்னுரிமை அளிப்பார்கள். ஆனால் இவர் அனுபவமே இல்லாதவர்களுக்கே முன்னுரிமை அளிப்பார். வருவார். மருத்துவமனைகள் மாதிரிகளைச் சேகரித்ததும், வேலுமணி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அவரது மனைவி இத்தகவல்களைப் பெற்றுப் ப�ொதுப் பேசியில் இருந்து அழைத்து வேலுமணிக்குத் தெரிவிப்பார். நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மாதிரிகளைப் பெறச் சென்று வருவார். நீண்ட தூரம் செல்லப் புறநகர் ரயில் உதவியுள்ளது. ரயிலில் இருந்து, இறங்கி ஆய்வகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்வார். மாதிரிகளின் எண்ணிக்கை உயர்ந்ததும் த�ொழிலை விரிவுபடுத்தி நாடு முழுக்கக் கிளைகளை உருவாக்கினார். 1998இல் 15 பேர் வேலை செய்தார்கள். 1 க�ோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இப்போது மும்பையில் உள்ள முழுவதும் தானியங்கி வசதிகள் க�ொண்ட இவரது ஆய்வகத்துக்கு அன்றாடம் 50,000 மாதிரிகள் பரிச�ோதனைக்கு வருகின்றன. 22 ஆண்டுகளில் 3,600 க�ோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதுவரை த�ொழிலில் நஷ்டத்தையே சந்திக்காதவர் வேலுமணி. “ஒன்றுக்குப் பின்னால் சேரும் ஜீர�ோக்களைப் ப�ோல, என் இன்றைய மதிப்புக்குப் பின்னால் இன்னொரு ஜீர�ோ சேர வேண்டும். அதுதான் என் இலக்கு’’ என்கிறார். “பலருடன் ஒப்பிடுகையில் நான் எவ்வளவ�ோ பரவாயில்லை. எனக்கு ஒரு மாதத்துக்கு 60 முறை சாப்பாடு கிடைத்தது. ஆனால் ஒரு மாதத்துக்கு 30 முறைகூடச் சாப்பிட முடியாத குழந்தைகள் எவ்வளவ�ோ பேர் நாட்டில் உள்ளனர். என்னைவிட அவர்கள் ஏழைகள். இப்படித்தான் நான் வாழ்க்கையைப் பார்த்தேன்’’ என்று ச�ொல்லும் வேலுமணி, வாழ்க்கையை வெல்லும் கருத்துகளை நமக்குச் ச�ொல்ல முழுத் தகுதியானவர் என்பதில் ஐயமே இல்லை

  2017

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் ப�ோனால் ஆன்மாவை அடைய முடியாது.

32


மகத்தான இந்திய மேதைகள் 13

இரா. சிவராமன்.

 பீங்கான், கண்ணாடி, ப�ொன்னாக்கம் ப�ோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளைப் ப�ோகர் நிகழ்த்தியதை அக்டோபர் இதழில் தெளிவாகப் பார்த்தோம். இப்பொழுது, அவரது மற்ற அறிவியல் அருஞ்செயல்களை அறிவ�ோம். இன்றளவில் உலகெங்கும் பெரும்புகழ் பெற்ற வானில் மிதக்கும் வெப்பக் காற்றுப் பலூனை எவ்வாறு தயார் செய்ய முடியும் என்ற செய்தியைப் ப�ோகர் அன்றே குறிப்பிட்டுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பிற்குப் ப�ோகர் வைத்த பெயர் “கூண்டு வித்தை” என்பதாகும். மெல்லிய கம்பியால் பத்தடிக்குப் பத்தடி எனும் அளவில் கிளிக் கூண்டு ப�ோலச் செய்து, அதனை நார்ப்பட்டுத் துணியால் மேல் பகுதியிலும், பக்கவாட்டிலும் நேர்த்தியாக மூட வேண்டும். திறந்திருக்கும் அடிப்பாகத்தில் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் கற்பூரத்தைக் க�ொளுத்த வேண்டும். கூண்டுக்குள்ளே காற்றுச் சூடாகி வெளிப்புறக் குளிர் காற்றைவிட எடை குறையும். இதனால் கூண்டு வானில் மேலே பறக்கத் துவங்கும். கூண்டுக்குள்ளே காற்றின் வெப்பம் குறைந்தால் கூண்டு எழும்பாமல் கீழே இறங்கிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், ப�ோகர் அமைத்த கிளிக் கூண்டு அதிக எடை க�ொண்ட ப�ொருட்களைய�ோ, மனிதர்களைய�ோ ஏற்றிச் செல்ல இயலாது. இன்றைய புதிய அறிவியல் முறையில் மனிதர்களை மகிழ்வாக ஏந்திச் செல்லும் பலவகைப் பலூன்கள் கண்டறியப்பட்டுவிட்டன. எனினும், ப�ோகர் ஏற்படுத்திய கூண்டு பறத்தல் முறை கருத்தளவில் இன்றைய அறிவியல் முறைகள�ோடு மிகச் சரியாக

  2017

ஒத்திருக்கிறது. எனவே, வெப்பக் காற்றுப் பலூன்களின் முன்மாதிரியைப் ப�ோகர் அன்றே அறிந்திருந்தார் எனத் தெரிந்துக�ொள்ளலாம். “சூட்சுமமாய்க் கூண்டு வித்தை த�ொலைதூரம�ோடும் த�ொல்லுலகில் கருவாளிகாண்பான் மாட்சியுடன் வாயுவினால் பிறந்தவித்தை மானிலத்தில் மன்னவர்கள் மயங்கும்வித்தை” என்ற பாடல் வாயிலாக, தாம் கண்டறிந்த கூண்டு வித்தையின் பெருமையைப் ப�ோகர் உரைத்துள்ளார். ஆழ்கடலுக்கடியில் அமைந்திருக்கும் உயிரினங்கள், நீர்த் தாவரங்கள், புதையுண்ட ப�ொருட்கள் எனப் பல்வேறு கூறுகளை ஆய்வு செய்வதற்கு இன்று ஸ்கூபா (Scuba) என்ற உபகரணத்தைப் பயன்படுத்துகிற�ோம். ஆனால், இதன் முன்மாதிரியைப் ப�ோகர் அன்றே அறிவித்துவிட்டார். இதற்கு அவர் வைத்த பெயர் “கெந்தர்வ வித்தை” என்பதாகும்.

புதுமை ஸ்கூபா உபகரணம்:

இரும்பினால் செய்யப்பட்ட தலைக்கவசத்தைத் தலையில் மாட்டிக்கொள்ள வேண்டும். அதன் மூக்குத் துளை வழியே மூச்சுவிடுவதற்காக நீண்ட மெல்லிய குழாயைப் ப�ொருத்திக்கொண்டு அது கடல் நீர் மட்டத்திற்கு மேலே ப�ோய் இன்னொரு முனை மிதக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் உயிர்வளி (ஆக்ஸிஜன்) கடல் நீருக்கு அடியில் இருப்பவருக்குச் சென்றடையும். இப்படிச் செய்தால் கடல் நீருக்கு

அகந்தை முன் செல்லும், அவமானம் பின் த�ொடரும்.

33


அடியில் சென்று தேவையானவற்றை ஆய்வு செய்யலாம் எனப் ப�ோகர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மூக்கில் இடகலை, பிங்கலை என்று மூக்கு வழி காற்று மாறி, மாறி ப�ோய்கொண்டிருப்பதால், அதற்குத் தகுந்தபடி இரண்டு இழை க�ொண்ட திரிப�ோல மிகக் கவனமாக அந்தக் குழாயை வடிவமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். எவ்வளவு ஆழமான அறிவியல் சிந்தனை பாருங்கள்! ஹைட்ராலிக்ஸ் எனும் நீரியல் ஆய்வுத்துறை சார்ந்த செய்தி ஒன்றையும் ப�ோகர் குறிப்பிட்டுள்ளார். க�ோர�ோசனை, மத்தகாசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக் க�ொண்டு அரைத்து, அதை ஒரு குடத்தின் உட்புறத்தில் பூசிக் காய வைத்திட வேண்டும். பிறகு அக்குடத்தில் நீர் ஊற்றி நிரப்பி அதனைக் கவிழ்த்துப்பிடித்தால் கூட அந்தக் குடத்திலிருந்து ஒரு ச�ொட்டு நீரும் கீழே விழாது எனக் கூறுகிறார். குடத்தினுள் இருக்கும் நான்கு ப�ொருட்களின் கலவை உட்கவருதல் முறையில் நீரை ஈர்த்துப்பிடித்துக் கீழே விழாமல் செய்யும் அறிவியல் மெய்ம்மையைப் ப�ோகர் அன்றே செய்து காட்டியுள்ளார். பூமியின் புவியீர்ப்பு விசைக்கு உட்படாமல் நீரைத் தக்கவைத்துக் க�ொள்ளும் இந்த அறிவியல் வியப்பை அளிக்கிறது. கடலின் அடியில�ோ, நடுவில�ோ பெரிய பாறைகள் இருக்கும். நீராவிக் கப்பலில் பயணிக்கும் ப�ோது இப்பாறைகளில் ம�ோதிக் கப்பலுக்குப் பலத்த அழிவு ஏற்படுவதை அறிந்திருந்த ப�ோகர், கப்பலின் முனையில் கண்ணாடிக்கையை (Under Water Telescope) ஏந்தியபடி எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அறிவுரை மட்டும் கூறாமல் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற வழியையும் தெரிவித்துள்ளார். இச்செய்தியை நூறு வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான டைடானிக் கப்பலில் பயணம் செய்தவர்கள் பின்பற்றியிருந்தால் பல உயிர்களைக்

  2017

காத்திருக்கலாம். இது மட்டுமல்லாமல், நாம் இன்று பயன்படுத்தும் கலைடாஸ்கோப், பெரிஸ்கோப் ப�ோன்ற அறிவியல் உபகரணங்களை அன்றே ப�ோகர் உருவாக்கியுள்ளார். ஆனால், இது ப�ோன்ற அறிவியல் உபகரணங்களை இன்று ஐர�ோப்பிய அறிவியலாளர்கள் கண்டறிந்ததாகவே பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். உண்மையில் இவற்றின் செயல்பாடுகளையும் பயன்களையும் ப�ோகர் அன்றே அறிவித்துள்ளார். காடு, மலை வழியே ஓடும் நீரின் பண்புகளை நன்கறிந்த ப�ோகர் அதன் வெவ்வேறு தன்மைகளை விளக்கியுள்ளார். இவர் மட்டுமல்லாது மற்ற மூலச்சித்தர்களும் இதைக் கூறியுள்ளனர். “இடி, மின்னல் ப�ோன்றவற்றின் நிகழ்வுகளால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டும், மூலிகைகளைச் சுமந்து வரும் நீரில் குளித்தால் ந�ோயும், உடல் வலியும் தீர்ந்து உற்சாகமாகி விடுவ�ோம்” எனச் சித்தர்கள் கூறியுள்ளனர். இது ப�ோன்ற அரிய பண்புடைய நீரைச் சித்தர்கள் “உதக நீர்” என அழைக்கின்றனர். உதக நீரில் விழும் இலைகூடக் கல்லாய் மாறிவிடும் மகிமை பெற்றது எனக் கூறியுள்ளனர். குற்றாலம், க�ொல்லிமலை ப�ோன்ற இடங்களில் பாயும் அருவி நீர்களுக்கு இப்பண்பு பெரிதளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அங்குக் குளித்தால் நாம் மன மகிழ்வு மட்டுமல்லாமல் உடல் நலமும் பெறுவ�ோம் எனக் கூறப்படுகிறது. இன்று நாம் எழுதுவதற்குத் தாளைப் பயன்படுத்துகிற�ோம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தோர் எதில் எழுதியிருப்பர்? ப�ொதுவாக ஓலைச்சுவடிகளிலும், உறுதியான இலைகளிலும் எழுதி வைத்ததை வரலாறு மூலம் அறிகிற�ோம். கி. பி. முதல் நூற்றாண்டில் சீனா முதன் முதலில் தாள் தயாரிப்பை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. சீனாவில் காகித ஆலைகள் இருந்ததாகத் தெரிகிறது. ப�ோகரும் தாள் உற்பத்தி முறையைத் தமது பாடல்கள் மூலம் விளக்கியுள்ளார். பெரிய க�ொப்பரையில் ஊற வைத்த செம்மரத்தூளை அரைத்து, அதைப் பூநீறு கலந்த நீரில் சேர்த்து ஆவிப�ோகாத க�ொதிகலனில் சூடேற்றியபின் த�ொட்டியில் ஊற்றிக் கலக்க வேண்டும். இக்கலவையைக் குறிப்பிட்ட அளவுடைய செவ்வகச் சட்டங்களில் பூசி நிரப்ப வேண்டும். ஒவ்வொரு சட்டத்திலும் தானியங்கிச் செயல்பாடு நிகழும்படி

அறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவனை அடையாளம் காட்டுகிறது.

34


வடிவமைத்திருந்தார். வண்டல்கள் எந்த அளவில் வடிகட்டப்படுகின்றனவ�ோ அந்த அளவுக்கு மெல்லிய தாள் கிடைக்கும் எனப் ப�ோகர் கூறியுள்ளார்.

“எடுக்கலாம் ஆலைவிட்டு எடுத்தப�ோது எழிலான காற்றதனில் காயப்போடு த�ொடுக்கவே ரவியென்ற வ�ொளிபட்டால் த�ோற்றமுடன் காகிதமும் வெளுப்புமெத்த!” இதைச் சட்டத்தில் ஊற்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு பார்த்தால், வெண்மையான தாள் தயாராகியிருக்கும். நீரை வெளியேற்றிய பின் கஞ்சி தடவி வெயிலில் காய்ந்த தாளை உருளி க�ொண்டு சமன் செய்து, அந்த உருளியே தாள்களை வெளியே தள்ளிப் பாங்குடனே அடுக்கி வைத்து விடும் எனப் ப�ோகர் தெரிவித்துள்ளார். இதுப�ோல் பல வகையான தாள் உற்பத்தி முறைகளைத் தமது நூலில் குறிப்பிட்டுப் ப�ோகர் வியப்பை ஏற்படுத்தியுள்ளார். மனிதர்கள் வானில் பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து பறவை ப�ோலப் பறந்து இடரில்லாமல் தரை இறங்க உதவுவது பாராசூட் எனும் கருவியாகும். இதைப் பற்றியும் ப�ோகர் அன்றே “குடை வித்தை” என்ற பெயரில் தெரிவித்துள்ளார். ஆறடி விட்டமுடைய பாராசூட் செய்யும் முறையைப் ப�ோகர் அக்காலத்திலேயே விளக்கியுள்ளார். முப்பத்திரண்டு பிரம்புகளைக் க�ொண்டு நடுவில் ஒரு சக்கரத்தோடு இணைத்து, கம்பிகள் க�ொண்டு இறுக்கமாக முடுக்க வேண்டும். பிரம்பிற்கு மேலே துணியைப் ப�ோர்த்தி அதை நெடியத�ொரு பட்டுவடத்தோடு இணைத்திடல் வேண்டும்.

“வாட்டமுடன் தான்விரித்துக் குடையையேந்தி வாகாகத் தான்குதிக்கில் வாயுபூந்து த�ோட்டமுடன் காற்றதுவுங் கூண்டேதூக்கும் தீவிரமாய் மனிதனுந்தான் கீழ்நோக்கலாமே” என்ற பாடல் மூலம் பாராசூட் எவ்வாறு இயங்கும் என்ற செய்தியை விளக்கியுள்ளார். குடையை விரித்துக்கொண்டு மலை மீதிருந்து குதிக்கும் ப�ொழுது, குடைக்குள் காற்று புகுந்து அது மேலே எழும்ப, மேலிருந்து மேக மண்டல உயரத்திலிருந்து பார்க்கும்போது கீழே காண்பதெல்லாம்

  2017

கடுகளவாகத் தெரியும். இக்குடையைப் பிடித்தபடியே பறந்து வந்து நீரில் குதித்தாலும் உடம்பிற்குக் கேடாகாது என்கிறார் ப�ோகர். குதிக்கும் வேகமும், காற்றின் வேகமும் மிகுதியாகும்போது விரித்த குடையுடனே மேல் ந�ோக்கிக் குறிப்பிட்ட உயரத்திற்குப் ப�ோகலாம் என்ற இயற்பியல் மெய்ம்மையை இயல்பாகப் ப�ோகர் விளக்கியுள்ளது வியப்பை அளிக்கிறது. அனைத்துச் சித்தர்களிலும் ப�ோகர் ஒரு கூற்றில் தனித்து விளங்குகிறார். இவருக்கு முன் த�ோன்றிய மற்ற மூத்த சித்தர்கள் அனைவரும் சிறு சிறு அறிவியல் வித்தைகளை நிகழ்த்தியுள்ளனர். எனினும், ப�ொதுமக்களைக் கருத்தில் க�ொண்டு, அவற்றை நிகழ்த்தவில்லை. ஆனால், ப�ோகர் தம்மிடம் இருந்த அறிவை இந்த உலக மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியத�ோடு மட்டுமல்லாமல் அவற்றின் செயல் முறைகளையும் தமது பாடல்கள் மூலம் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றிலிருந்து ப�ோகர் மக்கள்மீது க�ொண்டிருந்த அக்கறையும் அன்பும் நன்கு வெளிப்படும். இப்படி மக்களுக்குத் தமது முறைகளை வெளிப்படையாகத் தெரிவித்ததால் அவர் பெரும் சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அவற்றைப் ப�ொருட்படுத்தாமல் எப்பொழுதும் மக்களுக்குப் பயன்படக்கூடிய அறிவியல் மற்றும் மெய்ஞானச் செய்திகளைத் தம் வாழ்நாள் முழுவதும் ப�ோகர் வழங்கிக் க�ொண்டே இருந்தார். இதிலிருந்து இவரை “மக்கள் சித்தர்” என அழைத்தால் மிகவும் ப�ொருத்தமாக இருக்கும் எனத் த�ோன்றுகிறது. ப�ோகர் கூறியிருக்கும் மேற்கண்ட அளப்பரிய அறிவியல் செய்திகள் இன்று பெரும்பாலும் உண்மையெனத் தற்கால ஆய்வுகள் வாயிலாக அறியப்படுகிறது. எனினும், இன்றைய நவீன உலகிற்கு இவரது செய்முறைகள் எந்த அளவு ப�ொருந்தும் எனத் தெரியவில்லை. ஆனால், பல வருடங்களுக்கு முன்பே இக்கருத்துகளை அறிவியல் ரீதியாகத் தெரிவித்த ப�ோகரை நாம் “அறிவியல் ஞானி” என்றுதான் அழைக்க வேண்டும்.

தூக்கி எறியும் குதிரையைவிடச் சுமந்து செல்லும் கழுதை மேலானது.

35


         

ஜ�ோல்னா ஜவஹர் தமிழ்... வளஞ்செறிந்த தமிழ் என்பதால் ‘வண்டமிழ்’; பெருமைமிக்க தமிழ் என்பதால் ‘மாத்தமிழ்’; பசுமையாக, செழித்து வளரும் ம�ொழி என்பதால் ‘பைந்தமிழ்’, ‘பசுந்தமிழ்’; இனிமை நிறைந்திருப்பதால் ‘தீந்தமிழ்’; குளிர்ச்சி ப�ொருந்திய ‘தண்டமிழ்’; வளம்குன்றாத ‘செழுந்தமிழ்’; அறிவின் செறிவும் நுட்பமும் க�ொண்டு ஒளிரும் ‘ஒண்டமிழ்’; அழகிய ‘அந்தமிழ்’. நம்மை நெறிப்படுத்திய செந்தமிழ். மனிதனை, நாட்டை நெறிப்படுத்த அரசியல் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பே அறநூல்கள் வந்து வழிநடத்தின. ச�ொல்லப்போனால் சட்டங்கள் இயற்றுவ�ோருக்குப் பேருதவி புரிந்திருக்கின்றன நூல்கள். தமிழின் சிறப்பு வாய்ந்த நூல்களில் முதன்மையானது திருக்குறள். ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாத சிறப்பு ஒளவையின் ஆத்திச்சூடிக்கு உண்டு. மனிதன் எழுதப் படிக்கத் த�ொடங்கும் ப�ோதே முதன் முதலில் கற்பிக்கப்படும் முதல் நூல் ஆத்திச்சூடி. தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டப்படும் தமிழ்ப்பால்தான் ஆத்திச்சூடி. பெண்களை அடக்கியே வைத்திருந்த காலகட்டத்தில் ஆணாதிக்க சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் க�ொண்டு, தன் படைப்புக்களை வெளிப்படுத்திய ஒளவை, முற்போக்கு எண்ணம் க�ொண்ட இன்றைய பெண்களுக்கு ஓர் உதாரணம். எளிமை, நேர்மை, நாணயம் ப�ோன்றவற்றை

  2017

நல்வழி, மூதுரை, க�ொன்றைவேந்தன் உள்ளிட்ட தம் படைப்புகள் வழியே ப�ோதித்த ஒளவை, தாமும் அதன்படியேதான் வாழ்ந்திருப்பார். ஏனென்றால் மன்னர்களும் மதித்துப் ப�ோற்றும் பெருமை மிக்கவராய் இருந்திருக்கிறார் ஒளவை. மன்னர்களுடனும், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனும் நட்பு க�ொண்டவர்; விவாதம் செய்தவர்; தூது சென்றவர்; ப�ோர்களைத் தடுத்து சமரசம் செய்தவர் ஒளவைப் பிராட்டியார். ஆனால் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஒளவையார்கள் இருந்துள்ளதாக வரலாறு ச�ொல்கிறது. வள்ளுவர், நக்கீரர், அதியமான், ப�ோன்றோர் வாழ்ந்த காலத்தில் அதாவது சங்க காலத்தில் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) வாழ்ந்த ஒளவையார்; சுந்தரமூர்த்தி நாயனார் ப�ோன்ற சமயப் புலவர்கள் வாழ்ந்த பக்தி இலக்கிய காலத்தில் (கி.பி.10ஆம் நூற்றாண்டு) வாழ்ந்த ஒளவையார்; கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் ப�ோன்றோர் வாழ்ந்த காலத்திலிருந்த ஒளவையார் என்று வெவ்வேறு காலங்களில் ஒருமித்த குணநலன்கள�ோடும் புலமைய�ோடும் மூன்று ஒளவையார்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று தெரிவிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஒருவேளை, இந்தக் கனியை உண்டால் நீண்டநாள் வாழலாம் என்ற சிறப்புமிகு நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தப�ோதும் தான் உண்பதைவிட ‘ஒளவை உண்டால் நீண்ட நெடுங்காலம் தமிழ் வாழுமே’ என்ற எண்ணத்தில் அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்ட அந்த ஒளவைதான் நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்த் த�ொண்டாற்றியிருந்திருப்பார�ோ? -‘சித்திரமும் நாப்பழக்கம்’

கைப்பழக்கம்;

செந்தமிழும்

-‘கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு’ - ‘பசி வந்திடப் பத்தும் பறந்து

மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவர்கள்.

36


ப�ோகும்’ ப�ோன்ற த�ொடர்கள் எல்லாம் ஒளவையார் தமிழுக்கு அளித்த க�ொடைகள். ‘ஆனைக்கும் அடிசறுக்கும்’ என்றொரு பழம�ொழி உண்டு. கம்பர் ஒருமுறை வயல்வெளியில் ஏற்றப்பாட்டு பாடியவன் பாடிய கடைசி வரிக்கு விடை தெரியாமல் விழித்தார் என்றொரு கதையுண்டு. “முப்பதியால் எட்டு, மூங்கில் இலை மேலே” என்ற வரிய�ோடு ஏற்றம் இறைத்தவன் பாட்டை நிறுத்திவிட்டு உணவருந்தப்போக, ‘மூங்கில் இலை மேலே என்ன இருக்கும்’ என்று கம்பர் ய�ோசித்து ய�ோசித்துச் ச�ோர்ந்து ப�ோய்விட்டார். உணவருந்தி முடித்த உழவன் மீண்டும் சால் பிடித்து ஏற்றப்பாட்டைத் த�ொடங்கினான். “முப்பதியால் எட்டு, மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே” என்று பாடியப�ோது தான் கம்பருக்கு விடை கிடைத்தது என்பது அந்த கதை. இதே ப�ோல் ஔவையை அசத்த எண்ணிய ஆடு மேய்க்கும் சிறுவன் நாவல் மரத்தில் ஏறினான். மரத்தடியில் இருந்த ஔவையைப் பார்த்து, “பாட்டி நாவல் பழம் வேண்டுமா?” என்று கேட்டான். “இருந்தா நல்ல பழமா பறித்துப் ப�ோடப்பா! என்றார் ஔவை. “சரி பாட்டி சுட்ட பழமா? சுடாத பழமா?” என்றான் சிறுவன். நாவல் பழத்தில் சுட்டப்பழம் கூட உண்டா? என்று ஔவைக்கு வியப்பு ஏற்பட்டது. ஒருவேளை இருக்கும�ோ என்னவ�ோ என்று குழம்பியவர், “சுட்டப்பழம் ப�ோடப்பா” என்றார்.

‘கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு’ சுடாத பழம்தான் அவருக்குத் தெரியுமே! பையன் மரக்கிளையைக் குலுக்கினான். கனிந்த பழங்கள் மண்ணில் விழுந்தன. மண்ணும் அவற்றில் ஒட்டிக்கொண்டது. ஒளவையார் ஒரு பழத்தை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண்ணை ஊதினார். சிறுவன் ஔவையிடம், “பாட்டி! பழம் ர�ொம்பச் சுடுகிறதா? அப்படித்தான் ஊதி சூடாற்றித் தின்னுங்கோ” என்றான். சூடாற்றவும் ஊதலாம், தூசு தட்டவும் ஊதலாம் என்ற செயலை வைத்துச் சிறுவன் தம்மை கேலி செய்கிறான் என்பதுணர்ந்த ஔவை, சிறுவனுக்கோ செயல் சிலேடையும் தெரிகிறதே என்று வியந்தார் என்ற கதை கம்பர்

  2017

கதைய�ோடு ஒப்பிடத்தக்ககது. இயற்கையான உயிர்களைக் கூர்ந்துந�ோக்கி, அவற்றின் செயல்திறன் மனிதரை விஞ்சுவன என்று கண்ட ஔவை, செயல்திறனில் நாம்தான் வல்லவர் என கர்வித்தல் கூடாது என்றொரு செய்தியை மனிதர்க்கு விட்டுச்சென்றுள்ளார்.

‘சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்’ வான்குருவியின் கூடு, வல் அரக்கு, த�ொல்கரையான் தேன், சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமை ச�ொல்ல வேண்டாம்காண்! எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. என்பது அந்தப் பாட்டு. வான் குருவி, வானில் த�ொங்கியபடி கூடு அமைக்கும் தூக்கணம், அரக்கு என்பது வண்டுகளின் கூடு, தேன் என்பது அறுக�ோண வடிவில் கூடு அமைக்கும் தேன்வண்டு. சிலம்பு என்பது சிலந்தி. சிலந்தி வலை நமக்குத் தெரியும். கரையான்களின் புற்று எகிப்தியரின் பிரமிடுக்குச் சமம். இந்த ஐந்து வகையான த�ொழில்நுட்பத்தை மனிதர்கள் கற்க முடியாது. ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்கள் த�ொழில்நுட்பத்தில் எளிதாகச் சிறந்து விளங்குகின்றன. கடவுள் படைப்பில் மனிதன் தன் திறமைக் குறித்துக் கர்வப்படத் தேவையில்லை என ஔவை பாடம் புகட்டுகிறார். ஒரு நாடு எப்போது சிறப்பாக இருக்கும்? அல்லது ஒருநாட்டில் எப்போது நல்லாட்சி நிலவும்? என்று ஒளவையிடம் ஒருவன் கேட்டான். அதற்கு அந்தத் தமிழ்க்கிழவி ‘வரப்புயர’ எனும் ஒற்றை வார்த்தையில் பதில் தந்தார். ‘புரியவில்லையே’ எனத் திகைத்தவனிடம் இந்தப் பாடலைப் பாடினார்.

நண்பன் இல்லாதப�ோது உன் கைத்தடியுடன் கலந்து ஆல�ோசனை செய்.

37


“வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடிஉயரும்; குடி உயரக் க�ோல் உயரும் க�ோல் உயர க�ோன் உயர்வான்” “விவசாயத்தைப் ப�ோற்றுகிற…. விவசாயிகளின் உணர்வை மதிக்கிற நாடுதான் உலகில் சிறந்து விளங்கும். விவசாயம் சிறப்பாக அமையும் ப�ோதுதான் ஆள்பவனும் ப�ோற்றப்படுவான்” – என்ற கருத்தை அப்பாடல் வழியே விளக்கினார். ஒற்றை வார்த்தைக்குள் உலகுயர்த்தும் உண்மையைப் ப�ொதிந்து வைத்த அக்கிழவியின் புலமைப் ப�ோற்றற்குரியது. ‘ஊக்கமது கைவிடேல்’ , ‘இணக்கம் அறிந்து இணங்கு’, ‘தந்தை தாய்ப் பேண்’, ‘கெடுப்பது ஒழி’, ‘செய்வன திருந்தச் செய்’, ‘துன்பத்திற்கு இடம் க�ொடேல்’ என ஆத்திச்சூடியில் ஒளவை ச�ொன்ன 109 கருத்துக்களும் ஒற்றை வரித் தத்துவங்கள். இக்கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவரும் இன்றே ஆத்திச்சூடிப் பாடலை மனனம் செய்வத�ோடு மட்டுமல்லாது அவர் பெரியவராயிருப்பின் தங்கள் குழந்தைகளையும்

கல்வி கற்பதன் அவசியத்தை மிக மிக எளிமையாகவும், மனதில் ஆழப்பதியும்படியும் ச�ொன்ன கவிஞர்களுள் தலையாய இடம் ஒளவைக்கு உண்டு. சிறியவராய் இருப்பின் தங்கள் நண்பர்களையும் படிக்கச் ச�ொல்லி ஆற்றுப்படுத்துவது சமூக நலனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடப்பாடு ஆகும். கல்வி கற்பதன் அவசியத்தை மிக மிக எளிமையாகவும், மனதில் ஆழப்பதியும்படியும் ச�ொன்ன கவிஞர்களுள் தலையாய இடம் ஒளவைக்கு உண்டு. ‘தாம் நிரம்பப் படித்துவிட்டோம்’ என்ற பெருமிதத்தில் இருப்பவரிடம், “கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு” எனக் கற்கத் தூண்டினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காங்கிரஸ் நூலகத்தில் இந்த அமுதம�ொழி இடம்

  2017

பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவன் கல்லாதிருந்தால் அவனது மூடச்செயல்கள் கண்டு அவனை ஊரார் பழிப்பது வழக்கம். ஆனால் ஒளவைய�ோ அவனை இகழ்வதைவிட அவனைப் பெற்ற தாயையே ‘பாவி’ என்று பழிக்கிறார். அத்தகைய ஒருவனைப் பெற்றாளே! பெற்றாளே! பெற்றாளே! என்று மூன்று முறையும், அவனைக் காலால் மிதியுங்கள்… மிதியுங்கள்…. மிதியுங்கள்… என்று மூன்று முறையும் வசைப்பாடுவதாக ஒரு பாடல் எழுதியுள்ளார். ‘வெண்பா இருகாவிற் கல்லானை, வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் - பெற்றாளே எற்றோ மற்றெற்றோ மற்றெற்று’ என்ற இந்தப் பாடலில் ஏன் மூன்று முறை அவ்வாறு கூறினார் தெரியுமா? (த�ொடரும்)

எதிர்காலத்தை சரியாகக் கணிக்க, அதை நாமே உருவாக்க வேண்டும்.

38


ப�ொறிகளும் துளிகளும் – 5



என் இனிய தமிழக அறிவிலிகளே!



அன்பின் அமலன்

அன்பின் அமலன்

அப்பாவி: அனைவருக்கும் வணக்கம். மழைப் பருவத்தில் மண் நனைகின்ற காலத்தில் - தமிழகம் இன்று கண் பதிக்கின்ற சில ஆளுமைகளை ஒரே மேடையில் சாதிக்க வைக்கும் இந்த மன்றத்திற்கு வருகை தந்திருக்கக் கூடிய அனைவரையும் வரவேற்கின்றேன். தலைவர்: ‘வெண்திரைக் கவசங்கள்’ என்ற அற்புதமான கலந்துரையாடலை, இங்கு வைத்திருக்கக் கூடிய நெறியாளர் அப்பாவி அவர்களைப் பாராட்டுகின்றேன். கமல்: திரை தருகின்ற வெண் கவசங்கள் என்றும் ச�ொல்லலாம் அல்லது வெண் கவசங்கள் தருகின்ற திரை என்றும் க�ொள்ளலாம். தலைவர்: கமல் இரசிகர்களுக்காவது புரிந்தால் மகிழ்ச்சிதான்.

  2017

இது

நிருபர்: தலைப்புப் ப�ொருளை நடுவர் விளக்கினால் நல்லது. விஜய்: ‘வரி’ வரியாக விளக்கினால் மட்டுந்தான் நாடு உருப்படும். அப்பாவி: (மனசுக்குள்) இவர் இன்னமும் ‘மெர்சல்’ பாதிப்பில்தான் இருக்கிறார். தலைவர்: ‘தலைப்பே’ புரியாமல் வந்திருக்கும் இந்தச் சினிமா நடிகர்கள் - அரசியலில் புகுந்து என்னத்த சாதிக்கப் ப�ோகிறார்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழக மக்கள் கேட்கிறார்கள். விஜய்காந்த்: சாதாரணமாகக் கேட்கவில்லை, முறைத்து – உதட்டைக் கடித்து – குட்டி – தட்டிக் கேட்கிறார்கள். கமல்: (மனசுக்குள்) இவரை யார் நம்ம அணிக்குக்

நாளைய மழையை அறியும் எறும்பாய் இரு. நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே!

39


கூப்பிட்டா….!? நம்ம பக்கமே க�ோல் ப�ோடுறாரு…

க�ொண்டிருக்கிறது.

ரஜினி: நான் என்ன ச�ொல்ல வர்ரேனா… (ஆழ்ந்த ம�ௌனம்)

அப்பாவி: உண்மைதான். தமிழ்நாட்டுல எத்தனைய�ோ அமைப்புகள் இருக்கு. கல்வி, ப�ொருளாதாரம், பண்பாடு, உற்பத்தி, விவசாயம், த�ொழில், மதம், ஜாதி…… சினிமா எல்லா அமைப்பையும் எதிர்மறையா பாதிக்குது.

பக்தன்: (மனசு) பாபா இன்னும் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கல ப�ோல, மக்கள்: ச�ொல்ல வேண்டிய நேரத்துலயும் ச�ொல்ல மாட்டார். வரவேண்டிய நேரத்திலும் வரமாட்டார். ரஜினி: ஆ….ஆ…. கா…. (அதே சிரிப்பு) அப்பாவி: இந்தச் சிரிப்புக்கு அர்த்தம் கமலுக்குக் கூடப் புரியாது. அப்ப – நம்ம சப்ஜெட்டுக்குப் ப�ோகலாமா? விஜய்: இன்று மக்கள் பேசிக்கிற ஒரே சப்ஜெக்ட் ஊழல் மலிந்த அரசியல்தான்! தலைவர்: அப்ப…. இந்தச் சினிமாக்காரன் பண்றதெல்லாம் ர�ொம்ப ஒழுங்கா? சினிமா என்கிற அற்புதமான கலை வடிவத்தை வியாபாரமாக்கிட்டு – பாலியல் உணர்வுகளைத் தூண்டிக் காசு பண்ற அசிங்கமான நடிகர்கள் அரசியலுக்குத் தேவையில்லை.

ரஜினி: எல்லாம் பாபா பாத்துக்குவார். விஜய்காந்த்: அரசியலுக்கு உங்களுக்கு நியாயந்தானே

பாபாவை இவர் பாத்துக்குவார். வர எனக்குத் தகுதி இருக்கு. ஆசை மட்டுந்தான் இருக்கு. என் மக்களே!

கமல்: (மனசுக்குள்) ம்…. இன்னொரு சேம் சைட் க�ோல். பக்தன்: பாலாபிஷேகம் தேனாபிஷேகம் இதெல்லாம் தெய்வத்துக்குத்தான் செய்யனும். சினிமா நடிகர்களுக்கு இதெல்லாம் செய்யும்போது மனசு துடிக்குது. இதத் தட்டிக்கேட்க ல�ோகத்துல ஒருத்தரும் இல்லையா? நிருபர்: காசு மட்டுந்தான் உலகத்துக்கு இலக்கு.

இன்றைய

சினிமா

அப்பாவி: சப்ஜெக்ட் கிடைச்சிருச்சு. சினிமா நடிகர்களால் நேர்மையான அரசியலை நடத்தி – மக்கள் சேவை செய்ய முடியுமா… முடியாதா?

விஜய்: நிருபரே! உங்க எங்களத்தானே அட்டையில் பண்றீங்க.

கமல்: முடியுமா அல்லது முடியாதா என்பதன் மிச்ச ஏக்கந்தான் நான் வைக்கிற ‘டுவிட்டர்’, மக்கள் எங்களை நம்புறாங்க.

கமல்: திரையுலகைச் சார்ந்த நம் சக�ோதரி நடிகைகளைப் ப�ோட்டுப் ப�ோட்டு வாசகர்களைக் கவர்ந்து இழுக்கிறீங்க.

பக்தன்: மக்களை நீங்க முட்டாளாக்கிட்டீங்க திருவிழா பேனர்களில் உங்க ப�ோட்டாதான் இருக்கு. மகமாயி அம்மாவுக்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் என்னாங்க சம்பந்தம்?

அப்பாவி: அட்டையில சினிமா நடிகை – உள்ளே அவுங்களப் பத்தி இரண்டு கட்டுரை – ஐந்து ஆறு ப�ோட்டோஸ்… இடையே… சில கட்டுரைகள்... பத்து ஜ�ோக்ஸ்.. ஆக ம�ொத்தம் ஒரு பத்திரிக்கையின் மூலதனம் சினிமாதான்.

விஜய்காந்த்: சம்பந்தம் இருக்கு, கடவுள் சினிமா நடிகர் மாதிரி மாற முடியாது. ஆனா – நாங்க கடவுளா மாறுவ�ோம். கடவுளா பாடுவ�ோம்…. கடவுளா ஆடுவ�ோம்… நிருபர்: அரசியல், சினிமா இரண்டுந்தான் தமிழ்நாட்டைக் கெடுக்குது, சினிமாவின் வேர்கள் நாடகங்களில் ஊன்றி… இன்று எல்லாத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திக்

  2017

பத்திரிக்கையில ப�ோட்டுக் காசு

நிருபர்: வன்மையாகக் கண்டிக்கிறேன். சினிமா செய்திகள் எங்களுக்காக அல்ல. தமிழக வாசகன் எதை விரும்புகிறான�ோ அதைத் தருவது தப்பா? ரஜினி: தப்புகளை எட்டு எட்டாப் பிரிச்சுக்கணும். மூணு எட்டு சினிமாவுக்கு இரண்டு எட்டு அரசியலுக்கு ஒரு எட்டு பத்திரிக்கைக்கு அடுத்த இரண்டு எட்டு…

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.

40


பக்தன்: கூட்டிக் கழிச்சுப் பாத்தா.. நாங்க நாங்களாக இருக்கக் கூடாது. அப்படித்தானே? அப்பாவி: இப்ப… கேள்வி என்னான்னா… சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆர�ோக்கியமான நிகழ்வா? மக்கள்: ஆர�ோக்கியமில்லா சினிமா எப்படிங்க ஆர�ோக்கிய ஆட்சியக் க�ொடுக்க முடியும்? தலைவர்: அப்படிக் கேளுங்க. அரசியல நாங்க பாத்துக்கிற�ோம். சினிமாவ வழக்கம் ப�ோல நீங்க பாத்துக்கங்க. நீங்க நீங்களாகவே இருங்க. கமல்: சினிமா உலகில் இருந்து வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி செய்யவில்லையா? நிருபர்: இன்றைய அரசியல் பார்த்துமா இந்தக் கேள்வி? அப்பாவி: சினிமாக்காரர்கள் முடியுமா?

மக்கள்: எங்களுக்குத்தான். ரசிகனா மாறிச் சினிமாவ வளர்த்து விடுற�ோம். வாசகனா மாறிப் பத்திரிகையைத் தூக்கி விடுற�ோம். பக்தனா மாறி மூடநம்பிக்கைகளை வார்த்து எடுக்கிற�ோம். தலைவர்: ஆம்… மக்களே! சினிமாவுக்கு நீங்க காசு தரணும். பத்திரிகைக்கு நீங்க காசு தரணும். ஆனா – ஓட்டுக்கு? நாங்க காசு தர்ரோம். இப்ப ச�ொல்லுங்க நாங்களா அய�ோக்கியர்கள்? நிருபர்: எல்லாம் ஊழல் பணம். கருப்புப் பணம். ஓட்டுக்குக் காசு என்ற கேவலமான பழக்கத்தை நீங்க ஏற்படுத்திட்டிங்க. விஜய்காந்த்: அதுக்குத்தான் ச�ொல்றேன். நீங்க எல்லாரும் ரமணாவாக மாறணும்.

அவலங்களைப் நல்லாட்சிய

தர

தலைவர்: புரட்சி தலைவர், புரட்சி தலைவியால் மட்டுமே முடியும். கடந்த காலம் சினிமாவைச் சார்ந்த முதலமைச்சர்களைக் க�ொண்டது. மறந்து விட வேண்டாம். மக்கள்: மறக்க முடியுமா? ஏன்தான் அவுங்களுக்கு ஓட்டுப்போட்டு வளர்த்து விட்டோம்னு இப்ப புலம்புற�ோம். பக்தன்: சினிமாக்காரன் கையில் தமிழகம் மீண்டும் வந்தால் - அந்த ஆண்டவனே வந்தாலும் நம்மைக் காப்பாத்த முடியாது. அப்பாவி: என்னங்க மிஸ்டர் சிந்தனையில் மூழ்கிட்டீங்க…?

ரஜினி

ஆழ்ந்த

நிருபர்: அடுத்தப் படம் “காலாவை” எப்படி ஓட வைக்கிறதுனு ய�ோசிப்பாரு.

கமல்: எல்லாரும் ‘இந்தியனா’ மாறி என்னைத் தலைவனா ஏத்துக்கணும்.

கமல்: தமிழகத்தையே இப்ப என்ன பத்தி பேச வைத்திருக்கேன். உலக நாயகனின் கருத்துக்காக டூவிட்டர் திரையே காத்திருக்கு. பாதிக்கப்பட்ட இடத்துக்கே நான் சென்றதால் - இன்றைய அமைச்சர்கள் ஆடிப்போய்க் கிடக்கின்றனர்.

ரஜினி: ‘லிங்காவை’ மறந்திடாதீங்க.

தலைவர்:

விஜய்: ‘மெர்சல்’ படம் பாக்கணும்.

  2017

உங்க

சினிமாவால

வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும் விற்பவனுக்கு ஒரு கண் ப�ோதும்.

பாதிக்கப்பட்ட 41


தமிழகத்துக்கு ப�ோறீங்க?

என்ன

நிவாரணம்

செய்யப்

பக்தன்: உண்மைதாங்க. கமல் அவர்களே... “நேத்து இராத்திரி… யம்மானு” நடிச்சு பாலுணர்வைத் தூண்டும் வகையில் காட்சி அமைத்து – எண்ணற்ற இளைஞர்களைக் கெடுத்தீங்க… அதுக்கு என்னா நிவாரணம்? நிருபர்: காதல் இளவரசன் என்ற பெயர்தான் உங்களுக்குக் கிடைத்தது. உங்க படங்களைப் பார்த்து யாரும் உங்கள அரசியலுக்குக் கூப்பிடல. கமல்: “இந்தியன்” பார்த்திருக்கீங்களா? அப்பாவி: இதுதான்யா “வெண்திரைக் கவசங்கள்” என்பது! ஏதாவது ஒரு கதாபாத்திரத்தைச் சமூக ந�ோக்கில் நடித்து விட்டு வேடம் ப�ோடுறீங்க. நீங்க நடிச்ச நூற்றுக்கணக்கான மற்ற கதாபாத்திரங்கள்…? விஜய்: அப்பாவி அவர்கள் நடுவர் என்பதனை நினைவூட்டுகிறேன். தலைவர்: தம்பி விஜய். சினிமா புகழை வச்சு அரசியல் பண்ண ஆசைப்படாதீங்க. வாழ்க்கையைப் ப�ொழுதுப�ோக்கும் கலாச்சாரமாக மாற்றியது உங்க சினிமா. விஜய்: அப்ப மெர்சல் நிருபர்: அப்ப…க் கட்டிப்பிடி… கட்டிப்பிடி….? விஜய்காந்த்: நான் கூடத்தான் ‘பள்ளிக்கூடம் ப�ோகலாமானு’ பாடி நடிச்சேன். அதெல்லாம் சும்மா… ஒரு நடிப்பு. இயக்குநரின் விருப்பம். மக்களின் ஆசை. படம் பாக்கிறவனின் பரவசம். மக்கள்: உங்க த�ொழில் நடிப்பு. எங்க வாழ்க்கை அரசியல். நடிப்புத் திறனை வைத்துப் பணம், புகழ் சம்பாரிச்சிங்க. அதை மட்டும் வைத்துக் க�ொண்டு உண்மையான அரசியலை உங்களால் தரவே முடியாது. கமல்: நாளை நடப்பதை யார் அறிவார். நான் த�ொடங்கிட்டேன். ஊழல், இலஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை நான் தருவேன்.

  2017

அப்பாவி: உங்க மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்க. உங்க படத்துக்குச் சிக்கலை உருவாக்கிய சில அமைச்சர்களை – நீங்க இப்ப பழிவாங்குறீங்க. அதுதானே உங்க உள்மன அற்பத் திருப்தி? ரஜினி: வாங்க… எல்லாரும் ப�ோய் இமயமலையில் தியானம் செய்வோம். வாழ்க்கைக்கு நான்கு வெள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஒதுக்கணும். ஒன்று வெள்ளை மாத்திரை, பால், சர்க்கரை, மைதா. மக்கள்: ஐந்தாவது “வெண்திரை”. விஜயகாந்த்: எவனும் ய�ோக்கியன் இல்ல, ஒத்துக்கிறேன். அந்த அய�ோக்கியன் மட்டும் ஆட்சி செஞ்சா ப�ோதுமா? நானும் க�ொஞ்ச நாளைக்கு ‘ஆட்சி’ செய்யுறேனே… ஏய்.. யாரெங்ளே… கேரவனுக்கு என்னைக் கூட்டிட்டுப்போ. கமல்: நானும் ஆட்சியப் பிடிக்கலாம். நம்பிக்கை வந்திருச்சு. (சப்தமாக) நடிகர்களைத் தவறாக எண்ண வேண்டாம். வெண்திரை வேந்தர்கள் நாங்கள் மண்தரையே சிம்மாசனமாக நினைப்பவர்கள். நாங்கள் நல்லவர்கள், வல்லவர்கள். நீதிக்காகப் ப�ோராடுபவர்கள், சமூக அக்கறை நிறைந்தவர்கள். ஏழைகளின் நண்பர்கள் என்பதனை நாங்க நடிச்ச படங்களைப் பார்த்து விட்டு நம்புங்கள்…. மக்கள்: அதாவது… கவசங்கள்… வெண்திரைக் கவசங்கள்… நீங்க நடிச்சு’ எங்கள நம்பச் ச�ொல்றீங்க. நாங்க “பார்த்து” உங்கள நம்புற�ோம். (திடீரென்று பரபரப்பு…. ஒரு காவலர் மேடையில் ஏறி… “ஆபத்து …. ஆபத்து… எல்லாரும் ஓடுங்க… இந்த மேடைக்கு அடியில் யார�ோ வெடிகுண்டு வச்சிருக்காங்களாம். ஓடுங்க….” அடுத்த ந�ொடி – சினிமா நடிகர்களின் வாகனங்கள் மட்டும் முதலில் அந்த இடத்தை விட்டு அகன்றன. மேடையில் அப்பாவி மட்டும். “வெண்திரை வெடிகுண்டுகளை விடவா இது ஆபத்து” – முணுமுணுத்தார். தூரத்தில் - மக்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்!

நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக் க�ொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை.

42


வாழ்த்துகின்றது பேராசிரியரே இரா. சிவராமனே! தீரா அறிவியல் வேட்கையின் நாயகனே! அறிவியல் சிந்தனை வளர்த்தனை! கல்லூரிக் கணித மன்றம் வழங்கினை! வித்தக, அறிவியல் விழிப்புணர்வுக்காய் மத்திய அரசு உம்மைப் பரிசுடன் ப�ோற்றிற்று!

அப்துல் கலாம் விருது

சென்னை நெற்குன்ற மெரினா ஆய்வகம் அண்ணல் அப்துல்கலாம் சிறப்புத் தகுதியை வழங்கிற்று உமக்கு! வாழ்க நின் திறமைகள்! அரும்பில் மலரும் நும் அறிவியல் கருத்துகள் கரும்பிலும் இனிய நற்கற்கண்டு கனிகள்! அரும்பும் அரும்புசார் வாசகர் நெஞ்சமும் விரும்பிடும் உமையே! வெல்க நும் பணிகள்.

அரும்பு குழுமம்

  2017

 2017 

43 43


Date of Publication: First week of every month. Regd. No. TNCCN/477/15-17 & WPP. No. TN/PMG(CCR)/WPP-400/15-17. Registrar News in India. 11807/66. Posted at Egmore R.M.S. - | Pathirikai Channel 02.12.2017

 

சூ.ம. ஜெயசீலன்

குழந்தைகள், மாணவர், ஆசிரியர், பெற்றோர் ப�ோன்ற தலைப்புகளில் அரும்பு இளைய�ோர் மாத இதழில் த�ொடர்ந்து எழுதி வருகின்றவர் சூ.ம. ஜெயசீலன். நம்பிக்கையுள்ள தலைமுறையாக மாணவர்களை உருவாக்க, ‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க!’ என்ற பெருந்தலைப்பின்கீழ் த�ொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாகப் பதினெட்டுச் சுவையான படைப்புகளை வழங்கினார். அதன் த�ொகுப்பு, தற்போது நூலாக வெளிவருவது குறித்து ‘அரும்பு’ பெருமைப்படுகின்றது. • • • • • • • •

அம்மா அம்மா இங்க பாருங்களேன்! வீரம் செறிந்த குழந்தைங்க நாங்க! நாங்கெல்லாம் அப்பவே அப்படி! ஓர�ொண்ணு ஒண்ணு ஈர�ொண்ணு ரெண்டு… எங்கே க�ொஞ்சம் சிரிங்க… வாழ வைப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாய்ப்புகளின் வார்ப்புகள் நாங்கள்… கருமமே கண்ணாக நாங்க…

ப�ோன்ற சுவையான, தெவிட்டாத தலைப்புகள் பல இந்நூலில் விரவிக்கிடக்கின்றன.

வாசித்து ய�ோசித்துப் பயன்பெறுங்கள் நூல் கிடைக்குமிடம் பாரதி புத்தகாலயம், 7. இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, த�ொடர்புக்கு: 044 - 24332323 / 24356935, 944496035

  2017

44

If undelivered, kindly return to ARUMBU, 26/17, Ranganathan Avenue, 44 Sylvan Lodge Colony, Kellys, Chennai - 600 010.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.