colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
1
colour
2
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
3
colour
4
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புதிய
புத்தகம் பேசுது 2016 ஆகஸ்ட், மலர்: 14 இதழ்: 6
வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்:
க.நாகராஜன்
முதன்மை ஆசிரியர் : இரா. நடராசன்
உதவி ஆசிரியர்: எஸ். செந்தில்குமார்
ஆசிரியர் குழு: ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா.வாசுகி, ப.கு.ராஜன், இரா.தெ. முத்து, அமிதா, மதுசுதன் எஸ்.வி. வேணுக�ோபாலன் நிர்வாகப் பிரிவு: சிராஜூதீன் (மேலாளர்) உத்திரகுமார் (விளம்பர மேலாளர்)
இதழ் வடிவமைப்பு:வி. தங்கராஜ், கா. குணசேகரன் அட்டை வடிவமைப்பு: ஆர். காளத்தி
ஆண்டு சந்தா வெளிநாடு மாணவர்களுக்கு தனி இதழ்
: : : :
ரூ. 240 25 US$ ரூ. 200 ரூ. 20
முகவரி: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 ப�ோன்: 044 - 243 324 24, 243 329 24
whatsapp: 9498002424 email:thamizhbooks@gmail.com
கிளைகள்
www.thamizhbooks.com
திருவல்லிக்கேணி: 48, தேரடி தெரு வடபழனி: பேருந்து நிலையம் எதிரில் அடையார் ஆனந்தபவன் மாடியில் பெரம்பூர்: 52, கூக்ஸ் ர�ோடு ஈர�ோடு: 39, ஸ்டேட் பாங்க் சாலை திண்டுக்கல்: பேருந்து நிலையம் நாகை: 1, ஆரியபத்திரபிள்ளை தெரு திருப்பூர்: 447, அவினாசி சாலை திருவாரூர்: 35, நேதாஜி சாலை சேலம்: பாலம் 35, அத்வைத ஆஸ்ரமம் சாலை, சேலம்: 15, வித்யாலயா சாலை மயிலாடுதுறை: ரசாக் டவர், 1யி, கச்சேரி சாலை அருப்புக்கோட்டை: 31, அகமுடையார் மகால் மதுரை: 37A, பெரியார் பேருந்து நிலையம் மதுரை: சர்வோதயா மெயின்ரோடு, குன்னூர்: N.K.N வணிகவளாகம் பெட்போர்ட் செங்கற்பட்டு: 1 டி., ஜி.எஸ்.டி சாலை விழுப்புரம்: 26/1, பவானி தெரு திருநெல்வேலி: 25A, ராஜேந்திரநகர் விருதுநகர்: 131, கச்சேரி சாலை கும்பக�ோணம்: ரயில் நிலையம் அருகில் வேலூர்: S.P. Plaza 264, பேஸ் II , சத்துவாச்சாரி நெய்வேலி: சி.ஐ.டி.யூ அலுவலகம், பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்: காந்திஜி வணிக வளாகம் காந்திஜி சாலை தேனி: 12,பி, மீனாட்சி அம்மாள் சந்து, இடமால் தெரு க�ோவை: 77, மசக்காளிபாளையம் ர�ோடு, பீளமேடு திருச்சி: வெண்மணி இல்லம், கரூர் புறவழிச்சாலை திருவண்ணாமலை: முத்தம்மாள் நகர், விருதாசலம்: 511கி, ஆலடி ர�ோடு நாகர்கோவில்: கேவ் தெரு, ட�ோத்தி பள்ளி ஜங்ஷன் பழனி: பேருந்து நிலையம் சிதம்பரம்: 22A/ 188 தேரடி கடைத் தெரு, கீழவீதி அருகில் மன்னார்குடி: 12, மாரியம்மன் க�ோவில் நடுத்தெரு
தலையங்கம்
மக்கள் வாசிப்பு - புதிய நம்பிக்கை
நமது சமூகத்தின் நெருக்கடிகள் புரைய�ோடி ஆழமாய் பதிந்து மக்கள் க�ொந்தளிப்புகளாய் வெடிக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை எப்படியாவது நெரித்து ஜனநாயகப் படுக�ொலைகளைத் த�ொடர்ந்திட ஆளும் இந்துத்துவ சங்க பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்தின் துணைய�ோடு நாட்டையே பிளவுபடுத்தி ரத்தம் குடிக்க துடிக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் முதல் பூனே திரைபடக் கல்லூரிவரை எங்கெங்கும் மாணவர் ப�ோராட்டங்கள் மற்றும் புகழ்பெற்ற மாபெரும் அறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, தகுதியற்ற இந்து வெறியர்கள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் பட்டப் பகலில் கூட பெண்கள் பத்திரமாக வேலைக்குப் ப�ோகும் பாதுகாப்பு தர வக்கற்ற காவல்துறை, சுவாதி க�ொலையை அரசியல் ஆக்கி சாதிக்கான நீதியாய் பரிகசிக்க வைத்திருக்கிறது. எந்த நெருக்கடி வந்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு இதுவே உதாரணம். சாராய விற்பனை, தேர்தலுக்குப் பிறகு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு கஜானா அறிவித்துள்ளது. எங்கோ மது ஆலை முதலாளிகள் கைக�ொட்டிச் சிரிப்பது நமது ரத்த நாளங்களை சூடேற்றுகிறது. வெறும் அபினுக்கு சீனதேசம் ஆயிரம் ஆண்டு அடிமையாய் கிடந்ததுப�ோல நம் தமிழ்நாடு ப�ோதையிலிருந்து மீளத் திராணியற்று மெல்ல மடிந்து வரும் அவலம் ஓலமாக வீதியெங்கும் இப்போது கேட்கிறது. குடிகாரர்கள் (குடிமக்களல்ல) ஓட்டில் ஜெயித்தோம் என ஆளும் கட்சி வெட்கமின்றி ச�ொல்லித் திரியும் இந்த நாட்களில், நமது நம்பிக்கையாய் தமிழகத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் காட்சிகளை நடத்தி, நமது த�ோழமை நெஞ்சங்கள் பெரிய எழுச்சியை ந�ோக்கி நடைப�ோட சமூகத்திற்கு வழி வகுத்துள்ளார்கள். எந்த சமூகம் புத்தகங்களை ந�ோக்கி தனது கவனத்தைத் திருப்புகிறத�ோ அங்கே அறிவுப் புரட்சி துளிர்விடும் எனும் சேகுவாராவின் வீர வாசகத்தை இந்த புத்தகக் காட்சிகள் நிரூபித்துள்ளன. கூட்டம் கூட்டமாய் ஜனங்கள் ஓசையின்றி படையெடுக்கிறார்கள். ந�ோய் பிடித்து உடல் நைந்து புலம்பிக்கொணடிருக்கும் சமூகத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் இந்த புத்தகக் கண்காட்சிகள் த�ொடர வேண்டும். சத்தமின்றி நடக்கும் மக்கள் மனவள, அரசியல்ஞான பயிற்சி பட்டறைகளாய் நாம் இவற்றைக் காணலாம். உடுமலை பின்னல் புக் டிரஸ்ட், க�ோவை க�ொடீசியா, மேட்டுப் பாளையம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈர�ோடு த�ோழர் ஸ்டாலின் குணசேகரன் குழு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எஸ்.கே. முருகன் மற்றும் த�ோழமை உள்ளங்கள், ஓசூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அரியலூர் த�ோழர் பேரா. ராமசாமி என இந்த ஆத்மார்த்த பட்டியல் நீள்கிறது. தனது கடும் உழைப்பை வாசிப்பு இயக்கமாக மாற்றிய ஏனைய ஊர்களின் புத்தகக் காட்சி அமைப்பாளர்களையும் சேர்த்து த�ோழமைய�ோடு பாராட்டிக் க�ொண்டாட வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்குழு உணர்ந்துள்ளது. அந்த உண்மையான எழுச்சித் தளபதிகளுக்கு ஒரு சல்யூட். மக்கள் வாசிப்பு த�ொடரட்டும் புதிய நம்பிக்கை பிறக்கட்டும். - ஆசிரியர் குழு
ஈர�ோடு புத்தகக் காட்சி அரங்கு எண்: 205, 206 புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
127
5
è£ô„²õ´ ðFŠðè‹ 669, «è.H. «ó£´, ï£è˜«è£M™ 629 001 ªî£¬ô«ðC: 04652&278525, 99777 78863 I¡ù…ê™: nagercoil@kalachuvadu.com facebook.com/Kalachuvadu Publications
ºœ÷£™ â¿Fò æ¬ô
235
GôM™ ñô˜‰î º™¬ô
325
à.«õ. ê£Iîò˜ ð¬ìŠ¹èœ...
î¬ôº¬ø‚°‹ «ð£¶‹
230
6
‘äò˜ ðFŠ¹’ â¡Á ªè£‡ì£ìˆî‚è Ü÷M™ Ýè„ Cø‰î ðFŠð£CKòó£èˆ ù G¬ôGÁˆF‚ ªè£‡ì à.«õ. ê£Iîò˜ ⿈î£÷ó£è¾‹ Ý󣌄Cò£÷ó£è¾‹ M÷ƒAù£˜ â¡ð„ ꣡ø£õù Üõ˜î‹ 膴¬óèœ. ñQî ñùˆF¡ Ü®J™ 𮉶 Aì‚°‹ Þò™¹èO™ å¡Pˆ F¬÷ˆ¶ ªõOŠð´ˆ¶‹ ÜõK¡ ²¬õò£ù à¬óò£ì™èœ âõ˜ å¼õ¼‹ ªè£‡ì£ì‚ îò¬õ. à현CŠ «ð£‚°‹ à¬óò£ì™ «ð£‚°‹ èô‰î ï£ìèˆ î¡¬ñ»ì¡ îò MõKŠ¹ ï¬ì¬ò Üõó¶ ⿈¶‚èO™ è£íô£‹. «ïK¬ìò£èˆ ªîOõ£ù ªñ£NJ™ âšMî Üôƒè£óºI¡P ނ膴¬óèœ â¿îŠð†´œ÷ù. Üõ˜ è£ô„Åö¬ô»‹ õóô£ŸÁŠ H¡¹ôˆ¬î»‹ ÜPò º®õ«î£´ Þ¡Á‹ õ£CŠ¹ˆî¡¬ñ ªè£‡´ õYèKŠðù ނ膴¬óèœ. 1901Þ™ ‘²«îêIˆFó’Q™ ªî£ìƒAŠ H¡¹ ªî¡Q‰Fò ‘õ˜ˆîñ£Q’, ‘è¬ôñ蜒, ‘Ýù‰î Mèì¡’, ‘FùñE’, ‘™ Þvô£‹’ âùŠ ð™«õÁ ðˆFK¬èèO™ A¬÷ ðóŠHò¶ Üõó¶ ⿈ø™. ªõ°êù áìè‹ ê£˜‰¶‹ ªõŸP ªðŸø 膴¬óèœ Þ¬õ.
àJ˜e†C
®ƒAù£«ù!
425
490
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
5 è£ô„²õ´
Ýèv† 2016
நூல் அறிமுகம்
காலபைரவன்
அடங்காத தாகங்களைப் பற்றி உரையாடும் கதைகள்
உத்திகளையும் ம�ொழிச்சிடுக்குகளையும் உதறித் தள்ளிவிட்டு இயல்பான நுண்ணிய விவரணைகளுடன் இன்றைய புனைவெழுத்து நிலை க�ொண்டிருப்பதை உணரமுடிகிறது. உலக இலக்கியங்களில் இந்தத் தன்மையையே பார்க்க முடிகிறது. முதிர்ச்சி கூடக்கூட எழுத்தாளன் உத்திசார்ந்த த�ொழில்நுட்பங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொள்ளவே விரும்புகிறான். கதையெழுத்து சார்ந்த உத்திகளின் பரபரப்புகள் அடங்கி சூழல் இயல்புத் தன்மையிலான இயல்பும் எளிமையும் கூடிய படைப்புகளுக்காக காத்திருக்கின்ற இத்தருணத்தில், புவனாநடராஜன் ம�ொழிபெயர்த்து வெளிவந்திருக்கும் மஹாஸ்வேதாதேவி கதைகளைப் புரிந்துக�ொள்ளமுடியும் எனத்தோன்றுகிறது. அறிவியல் த�ொழில்நுட்பம் மற்றும் அதிகாரத்தின் பெயரால் அழித்தொழிக்கப்படும் விளிம்புநிலை, ஆதிவாசி, பழங்குடியினர்களுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காகவும் த�ொடர்ந்து பேசிவரும் ம ஹ ா ஸ்வே த ா தே வி யி ன் ச ெ ய ற்பா டு க ள�ோ டு இணைத்துப் புரிந்துக�ொள்ளவேண்டிய கதைகளைக் க�ொ ண் டி ரு க் கி ன்ற ன . பெ ரு நி று வ ன ங ்க ளு க் கு ம் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் ஆதிவாசி பூர்வகுடிநிலங்களைப் பிடுங்கித் தாரைவார்த்துவிட்டு அ வர்களை வ ேர்க ள ற்றவர்க ள ா க வு ம் உள்ளீடற்றவர்களாகவும் மாற்றி அதிகாரத்திமிருடன் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அ தி க ா ர ங ்க ளு க்கெ தி ர ா ன ச ெ ய ற்பாட ா க வ ே ம ஹ ா ஸ்வே த ா தே வி யி ன் பு னை வி ன் எ ல்லை க ள் விரிவுக�ொள்கின்றன. பூ ர ்வ கு டி க ள் மீ து ஆ தி க்கச ா தி க ள் ச ெ லு த் து ம் அதிகாரம், அரசாங்கம் அவர்கள்மீதும் ஏவும் அதிகாரம் ஆண்கள் பெண்களிடத்தில் த�ொடுக்கும் அதிகாரம் என அனைத்துமட்டங்களிலும் விரவிக் கிடக்கின்ற சகல அதிகாரங்களுக்குக்கெதிராகவும் தன் படைப்பின் வழியாக பரிவு கூடிய உரையாடலை மேற்கொள்கிறார். த�ொ கு ப் பி ன் மு த ல் க தை ய ா ன ‘ ஸ ம ்ரஷ ன் ’ ( ப ா து க ா ப் பு ) க தை யி ல் வ ரு ம் நீ ர் நி லை க ளை ந�ோக்கிய யானைகளின் நடமாட்டம் நமக்கு எதை உணர்த்துகிறது? யானைத்தலைவன் திகைத்தான். இ ந்தக்காட் டு க் கு ள் ஏ ரி க்க ரு கி லு ம் ம னி த ன ா ? ச ர த்கா ல த் தி ன் வி டி ய ற்காலை இ னி ம ை ய ா ன காற்றில் யூக்லிப்டசின் மணம் கஜராஜனின் மனதில் ஆக்ரோஷத்தையும் வெறியையும் தூண்டிவிட்டது
வெளியீடு: பாரதி புத்தகாலயம் | ரூ. 280
என்று கதையில் ஒருஇடத்தில் ச�ொல்லப்படுகிறது. மேற்கண்ட வரிகள் கட்டமைக்கும் பிம்பம் நமக்குள் ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. வனத்தின் மத்தியில் இருக்கும் ஏரிக்கருகில் மனிதனைக் கண்டு ஏன் அவை திகைக்கவேண்டும்; யூக்லிப்டிஸ் மரங்கள் எ வ ற் றி ன் கு றி யீ டு ; வ ன ங ்களை அ ழி த் து வி ட் டு எதன்பொருட்டு யூக்லிப்டிஸ் மரங்கள் நடப்பட்டன? அதன்பின் செயல்படும் அரசியலை யார் நிகழ்த்துவது என்பன ப�ோன்ற பலகேள்விகளை மகாஸ்வேதாதேவியின் எழுத்துக்கள் நம்முள் கடத்துகின்றன அவற்றுக்கான பதில்களை நம்மை தேடச்சொல்லி யாசித்து நிற்கின்றன. நாம் கண்டடைய முடியாததாக அவைஇருப்பதுதான் சூழலின் நிதர்சனம். கதையின் இறுதியில் யானைத்தலைவன் யூக்லிப்டிஸ் மரங்களை முறித்து தள்ளுகிறான். அரசாங்கமும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தங்களது பிடியை மேலும் இறுக்குகின்றன. யானைத்தலைவன் சினம்கொண்டு மனித சமூகத்திற்குள் நுழைகிறான். காட்டிலாக அதிகாரியைக் க�ொல்கிறான். அதிகார வர்க்கம் சகலவிதங்களிலும்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
7
வ ன த்தை த ங ்கள் உ ள ்ள ங ்கை க் கு ள் க�ொ ண் டு வந்துவிடுகிறது. யானைத்தலைவன் க�ொல்லப்படுகிறான். ஆனால் செய்தித்தாளில் ஆஷாடா பகுதியில் உள்ள வனப்பகுதியில் மதம் பிடித்தநிலையில் ஒரு யானை இறந்துகிடப்பதாக செய்திவருகிறது’. தங்களின் வாழ்வாதாரமான வனத்தின் பரப்பு சுருக்கப்படும்போது யானைகள் என்னசெய்யும்? சுயலாபத்திற்காக நாம் வனத்தை சூறையாடிவிட்டு, யானை ஊருக்குள் நுழைந்துவிட்டது என ஆதங்கப்படுவதில் உள்ள அபத்தத்தை இக்கதை த�ொட்டுச்செல்கிறது. த�ொகுப்பில் கவணப்படுத்த வேண்டிய கதைகள் நிறைய இருந்தாலும், குறிப்பாக தண்ணீர் த�ொடர்பான இரண்டு கதைகள் அதிகமும் பேசப்படவேண்டிய கதைகளாக இருக்கின்றன. அவை 'பீஷ்மனின் தாகம்' மற்றும் 'தண்ணீர்' எனும் கதைகளாகும். பீஷ்மனின் தாகம் எனும் கதை பீஷ்மன் மற்றும் அர்ஜுன் எனும் இரு சக�ோதரர்களுக்கு ஊடே நிகழ்கிறது. தண்ணீர் தேவை பிரதான முடிச்சாகத் த�ோன்றினாலும், ஒட்டும�ொத்தமான கதையை வாசித்து முடிக்கையில் மானுடகுலத்தின் மீதான பரிவின் மீதும் அதுசார்ந்த நம்பிக்கையின் மீதும் கவனத்தைக் குவிக்கிறது. பீஷ்மன், அர்ஜுன் எனும் பெயர்கள் கதைக்கு கூடுதலான பு ர ா ண த்தன்மையை க�ொ டு க் கி ன்ற ன . மே லு ம் புராண காலகட்டத்து பீஷ்மரையும் அர்ஜுனையும் புரிந்துக�ொள்ளாமல் நம்மால் இக்கதை ஏற்படுத்தும் தரிசனத்தை விளங்கிக்கொள்ள முடியாது. பீ ஷ ்ம ன் / அ ர் ஜு ன் / க ங ்கை / மீ ன்வாசனை எ ன் று வெவ்வேறு இடங்களில் வெளிப்படும் பிம்பங்களைக் க�ொண்டு நம்மால் பாரதக்கதையின் ஒரு மெல்லிய சரடை உருத்திரட்டிக் க�ொள்ளமுடிகிறது. ஒருகட்டத்தில் பீஷ்மன் கங்கையைக் க�ொண்டுவா என்கிறான். ஆழ்துளைக்கிணறுகள் நீரை உறிஞ்சித்தள்ளுவதால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து விளைச்சல் நிலங்கள் வறண்டு ப�ோகின்றன. மழையும் இல்லாமலாகிறது. முளைக்க இயலாதபடி விதைகள் காய்ந்துப�ோன ஒருநாளில் மாமழை பெய்கிறது. நெற்கதிர்கள�ோடு புல்லும் செழித்து வளர்கிறது. ஆனாலும் பீஷ்மனின் த ா க ம் ம ட் டு ம் பெ ரு கி க் க ொண்டேப�ோ கி ற து . எல்லோருமே அர்ஜுன்களாக த�ோன்றும் சித்திரம் பீ ஷ ்ம னி ன் ம ன தி ல் த�ோ ன் று கி ற து . க தை யி ல் இப்படி ஒரு இடம் வருகிறது: இந்த பூமியைவிட பழையகாலத்தைச் சார்ந்தவனாக அடிக்கடி நினைத்துப் பார்த்தானே ஏன்? இந்த மண்ணைவிட அவனுக்கு வயது அதிகமா? இவ்விவரனைகள் நிகழ்காலத்தில் காலூன்றி பேருருக்கொண்டு நிற்கும் பீஷ்மனை நம்முன் நிறுத்துவதன் ஊடாக ம�ொத்தக்கதையையுமே இந்தப் புள்ளியில் வைத்து அதன் உள்ளார்ந்த சரடுகளை கூர்ந்த வாசகன் அடைந்து விடமுடியும். தண்ணீர் எனும் கதையும் தண்ணீரைப் பற்றியே பேசுகிறது. ஆனால் இக்கதையில் மழைபெய்து
8
அனைத்து இடங்களும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மூ ன் று ந ா ன் கு ந ா ட ்க ள ா க உ யி ரை க் கை ய ா ல் பி டி த் து க் க ொ ண் டு ப சி பி சை யு ம் வ யி ற் று ட ன் மரக்கிளைகளில் த�ொற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் பாம்புக்குப் பயந்து கரைபுரண்டோடும் வெள்ளத்தில் குதிக்கின்றனர். அரசாங்கம் வந்து உணவுக�ொடுக்கும் எனக் காத்திருக்க்கும் மக்கள்; வெள்ளத்தில் சிக்கித் தப்பித்துக்கொள்ள இடம்தேடி அலைபவர்களை, க�ொல்லைக்காரர்கள் என்று நினைத்து துடிக்கும் ம னி த ர்கள் ; ப�ோன்ற ம னி த ர்களை ப் ப ற் றி ய வேறுபட்டசித்திரங்கள் மனதைப் பிசைகின்றன. தண்ணீர் சம்பந்தமாக இரண்டு கதைகள். ஆனால் இ ர ண் டு ம் த ண் ணீ ரி ன் இ ர ண் டு வெவ்வே று முனைகளைத் த�ொட்டுச்செல்கின்றன. பீஷ்மனின் தாகம் எனும் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது: பீஷ்மனின் இந்த தாகம் மட்டும் தீரவில்லை எல்லாவிதமான தாகமும் தீராது ப�ோலிருக்கிறது. உண்மையில் இக்கதை எந்த தாகத்தை சுட்டிநிற்கிறது? ஆ தி வ ா சி பூ ர ்வ கு டி ம க்க ளி ன் வ ா ழ ்க்கை முறையை சிதைத்து, அவர்களின் எதிர்ப்புகளை தனது அசுரபலத்தினால் ஒடுக்கி, தங்களது தாகத்தை தணித்துக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் தாகமும் தீரவே தீராதுதானே? நிஷாத்மாஜியின் பூடான் யாத்திரை கதையிலும் ய ா னை க ள் ப ற் றி ய வி வ ர னை க ள் வ ரு கி ன்ற ன . முற்றிய நெற்கதிர்கள் வாசனையை ம�ோப்பம்பிடித்து ஊருக்குள் வந்துவிடுகின்றன யானைக்கூட்டங்கள். இந்த விவரணைகளின் ஊடாக நான்கைந்து உரையாடல்கள் வருகின்றன. மனுஷங்களை அடிச்சிடுமா?/ இல்லை அடிக்காது/ இரு, துப்பாக்கியை எடுத்துக்கிட்டு…../ து ப்பா க் கி யை கீ ழேப�ோ டு ட ா . ப ன் னி ர ண் டு பதினாறு யானைகளுக்கு முன்னால் துப்பாக்கியைக் காட்டப்போறியா? மேற்கண்ட உரையாடல்களின் வழியாக மனதில் யானைகளைப் பற்றிய துல்லியமான சித்திரம் ஒன்று முகிழ்கிறது. அச்சித்திரம் நம்முடைய மனதில் ஒருவித குற்றவுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. அடர்ந்த வனத்தை நிர்மூலமாக்கி, யானை மற்றும் இ ன்ன பி ற வி ல ங் கு க ளு க்கா ன நீ ர ா த ா ர ங ்களை அழித்தொழிக்கும்போது அவை என்ன செய்யும்? இதே கதையில் யானை துரத்திக்கொண்டுவரும்போது ஒரு வசனம் வருகிறது. நிற்க முடியாது ஸனா உன்னால ஓடமுடியுமா? எங்கேப�ோவது? பூடானுக்குப�ோய்விடலாம் பூடானுக்கா? ஆம் ஸனா. ஒரு பேச்சுக்காக ச�ொல்வது உண்டு. பூ ட ா னு க் கு ப�ோறே ன் னு . இ ப் ப ோ இ ன் னி க் கு
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
நெசமாவே பூடானுக்கு ப�ோய்விடலாம்-எனும் உரையாடல்கள் வழி பெருகும் நிஷாத்தைப் பற்றிய சித்திரம், இவ்வாறு முடிவடைகிறது. நி ஷ ா த்தை ப் ப�ோன்றவர்கள் பூ ட ா னு க் கு ப் ப�ோகிறார்கள் என்பதாலா? அவர்களுக்குத்தான் ப�ோக வேண்டியிருக்கிறது என்பதாலா? இந்த வரிகள் பேசும் அரசியலைப் புரிந்துக�ொள்ள நாம் வடகிழக்குமாநில ஆதிவாசிப் பழங்குடிமக்களின் சமூக அரசியல் ப�ொருளாதார அலகுகளையும் முதலில் புரிந்துக�ொள்ள வேண்டியிருக்கிறது.. த�ொகுப்பு முழுக்க காடுகளும், காடுகளுக்கு அழைத்துச் செல்லும் கரடுமுரடான பாதைகளும் அதன்மீது அதிகாரவர்க்கம் நிகழ்த்திக் க�ொண்டிருக்கும் அத்துமீறல்களையும், அந்த வனங்களின் பூர்வகுடி ஆ தி வ ா சி க ளி ன் க ண் ண ோ ட ்ட த் தி ல் இ ரு ந் து ம று வ ா சி ப் பு ச ெ ய்ய ம ஹ ா ஸ்வே த ா தே வி யி ன் புனைவெழுத்துக்கள் நம்மைக் க�ோருகின்றன. அப்படி வாசிக்கப்படும்போது இக்கதைகள் வேற�ொரு பரிமாணம் க�ொள்வதைக் காணமுடியும். கதைக்நேரடியாக, அ தி க சி டு க் கு க ள் இ ன் றி ச �ொல்லப்ப ட ்ட விதத்தினாலும் வாசகனுக்கு ஒரு நெருக்கத்தை அளித்துவிடுகின்றன. மேலும் மஹாஸ்வேதாதேவியின் கதைமாந்தர்களும், கதை நிகழும் பரப்பும் நம்முடைய அ ன்றாட த் தி ல் க ா ண க் கி டைப்பவர்க ள ா க வு ம் நாம் புழங்கக்கூடியவெளியை ஒத்திருப்பதனாலும் இக்கதைகள் ஏற்படுத்தும் மனவெழுச்சிகளை நம்மால் பிசிறில்லாமல் ஒன்று திரட்டிக்கொள்ள முடிகிறது.
யானைகள்
100
காடுகளின் ஆதார உயிரினமான யானைகள் பற்றி அறிய 100 செய்திகள்
ச.முகமது அலி, க.ய�ோகானந்த்
வெளியீடு - பாரதி புத்தகாலயம்; ரூ. 30
யானைகளின் பரிணாம வளர்ச்சியில் த�ொடங்கி அதன் அன்றாட வாழ்வியல் வரை அறிய செய்திகளை இப்புத்தகம் த�ொகுத்து வழங்குகிறது
அஞ்சலி
விடுதலைக்குப் பிந்தைய இலக்கிய உலகில் தனி ஏர் பிடித்துப் பயணித்து வந்த மாபெரும் வங்க இலக்கிய ஆளுமையான மகாஸ்வேதா தேவி 28.07.2016 வியாழன் அன்று மதியம் 3 ம ணி க் கு இ ய ற்கை எ ய் தி ன ா ர் . அ வ ர து எழுத்துக்கள் அனைத்துமே, நாவல�ோ சிறுகதைய�ோ அல்லது கட்டுரைய�ோ வங்காளம், ஒடிசா, பீகார், மாநிலங்களில் உள்ள வனங்களில் வசிக்கும் ஆதிவாசிகளின் இருண்ட வாழ்க்கையை உலகிற்கு எடுத்துக்கூறுவதாக அமைந்திருந்தன. அவரது தந்தை மனீஷ் கட்டாக், தாய் தரித்ரிதேவி இருவருமே வங்க ம�ொழியில் கவிஞர்களாக சிறப்பு பெற்றிருந்தனர். அவரது சித்தப்பா ரித்விக் கட்டாக் இந்திய திரைப்பட வானின் "மேகம் மறைத்த தாரகை". கணவர் பீஜ�ோன் பட்டாச்சார்யா வங்க நாடக உலகின் முன்னோடிகளில் ஒருவர். மகனும் அவரைப் ப�ோலவே நாவலாசிரியர். ஆங்கில இலக்கிய பேராசிரியராக பணியாற்றிய ப�ோது ம் வ ங்கா ள ம�ொழி யி ல் மி க ச்சி ற ந்த , உயிர�ோட்டமான எழுத்தை வெளிக்கொண்டு வந்த மகாஸ்வேதா தேவி ஞானபீடம், சாகித்ய அகாதெமி, மக்சாசே, பத்மவிபூஷன் ப�ோன்ற பல பரிசுகளை அடைந்தவர். வ ங ்கம�ொ ழி ம ட் டு மி ன் றி இ ந் தி ய ா வி ல் வ ே று ப ல ம�ொ ழி க ளி லு ம் க ா ண ப்பட ா த வகை யி ல் ஆ தி வ ா சி க ளி ன் வ ா ழ ்க்கையை மகாஸ்வேதாதேவியைப் ப�ோல எழுதியவர், வேறு எவருமில்லை என்பதே அவரது எழுத்தின் சிறப்பாகும். மேலும் ஆதிவாசிகளின் மேன்மைக்காக களத்தில் இறங்கிப் பணியாற்றிய எழுத்தாளரும் அவர் ஒருவரே. ஒடுக்கப்பட்டவர்களின் குரலை இடையறாது எதிர�ொலித்த குரல் இன்று ஓய்ந்து ப�ோனது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
9
ஒரு புத்தகம் பத்து கேள்விகள்
அப்பாவின் பாஸ்வேர்ட்
ஆத்மார்த்தி
கேள்விகள்: விநாயகமுருகன்
1 9 7 7 ம் ஆ ண் டு ம து ர ை யி ல் பி ற ந ்த ர வி , ஆத்மார்த்தி என்கிற பெயரில் 2009ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கினார். 2011ம் ஆண்டில் தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் என்கிற கவிதைத்தொகுப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து மனக்குகை சித்திரம், அதனினும் இனிது, பூர்வ நிலப்பறவை ஆகிய கட்டுரைத்தொகுப்புகளும் சேராக்காதலை சேர வந்தவன், ஆடாத நடனம், அப்பாவின் பாஸ்வேர்டு ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும் 108 காதல் கவிதைகள், நட்பாட்டம், கனவின் உபநடிகன், விளையாடற்காலம் ஆகிய கவிதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. த�ொடர்ந்து பத்திரிகையில் எழுதி வரும் இவர், சினிமாவுக்கான திரைக்கதை, வசனம் எழுதுதல் என முயற்சித்து வருகிறார். உங்கள் சிறுகதைகளின் ம�ொழிநடையில் பெரும்பாலும் சுஜாதாவின் பாணி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது எதேச்சையாகஅமைந்துவிட்டதா? அல்லது சுஜாதாவின் தாக்கம் உங்களுக்குள் இருக்கிறதா? ஏ ழு வ ய தி லி ரு ந்தே பு த்த க வ ா சி ப்பைச் செய்து வருகிறேன். என்னை மிகவும் வசீகரித்த எழுத்தாளர்களில் சுஜாதா முதன்மையானவர்.எனது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளில் சுஜாதாவின் தாக்கம் இருப்பதாகப் பலரும் குறிப்பிடுவது உண்டு. சுஜாதாவின் கச்சிதத்தையும் கதை முடிவில�ொரு துல்லிய அதிர்ச்சியையும் நானும் முயல்கிறேன் என்பதை ஒத்துக் க�ொள்கிறேன். இதைக் குறையாகக் கருதவில்லை. எழுதுகிற எல்லாருக்குமே முன்பிருந்த யாராவது எழுத்தின் உயிர்த்திரவத்தை அளித்தாக வேண்டும் என்பதை நியதி என்கிறேன். உங்கள் சிறுகதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்கள�ோ அல்லது அவர்கள் சமூகம் சார்ந்த புறச்சிக்கல்கள�ோ ஆழமாக சித்தரிக்கப்படுவதில்லை. அதனாலேயே அந்த கதைகள் வெகுஜனத் தளத்தை ந�ோக்கி நகர்வதாக விமர்சனங்கள் உண்டு. வெகுஜன எழுத்துக்கும், இலக்கிய எழுத்துக்குமான வித்தியாசத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்? புறச்சிக்கல்கள் ஆழமாக சித்தரிக்கப்படுவதில்லை என்பதை முழுவதுமாக ஏற்பதற்கில்லை.ஆழமும் நீட்சியும் அந்தந்தக் கதைக்கான தேவையைப் ப�ொறுத்தே அமைகின்றன. உளவியல் சிக்கல்களை, தனிமையை, உலகமயமாக்கலுக்கு முன்னும் பின்னுமாக தமிழ்ச்சமூகம் அடைந்து க�ொண்டிருக்கக் கூடிய சிதைவுகளை, வாழ்வில் சட்டென்று நிகழ்ந்து விடக் கூடிய அபத்தங்களை, முன்பில்லாத நிலையாமையை
10
எல்லாமும் உளவியல் பூர்வமாக என் பல கதைகளில் கையாண்டிருக்கிறேன்.தேவதை மகன், நீலயானி ஈரக்காற்று, இரண்டு கனவு மூன்று காதல், ஒயிலா எனப் பல கதைகள் உண்டு. வெகுஜனங்களின் வாசிப்பு என்பது இலக்கிய எ ழு த் து க் கு எ தி ர ா ன வகைப்பா டு எ ன்பதை முற்றிலுமாகத் தகர்க்க விரும்புகிறேன். ப�ோர்ஹேயும் டால்ஸ்டாயும் இலக்கியத்தை எழுதவில்லையா அல்லது அதிகப் பேர் வாசித்ததால் அவர்களது எ ழு த் து க ள் அ ந்த அ ந்தஸ்தை இ ழ ந்த ன வ ா . . ? பிரபஞ்சனுடைய எழுத்துகளை நான் தினமணிக் கதிர் த�ொடங்கி குங்குமம் வரை வாசித்திருக்கிறேன். அ வ ர் ப டைக்கா த இ ல க் கி ய ம ா . . ? இ ல க் கி ய ம் என்றாலே குறைந்த பிரதிகள் விற்பனையாகவேண்டும் என்பதென்ன ஆகமமா..?இன்றைக்கு எழுதப்படுவதன் காலம் எத்தனை ஆண்டுகள் என்பதை யாரால் தீர்மானிக்க முடியும்..?எது இலக்கியம் என்பது மிகவும் பழசாகிப் ப�ோன கேள்வி.அதனை வாசகர்களிடமும் காலத்திடமும் விட்டுவிடுவதே நல்லது. உங்கள் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மத்தியவர்க்கம் அல்லது உயர்மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை, அவர்களின் சமூகத்தை எப்படி பார்க்கின்றீர்கள்? வெ று ம் வி ளி ம் பு நி லை எ ன் று ஒ ன் று இருக்கிறதா என்ன.?மாயச்சுவர்களுக்கு வெளியே நி று த்தப்ப டு கி ற வர்க ள ா க த்தா ன் வி ளி ம் பு நி லை ம னி த ர்களை க் க ரு த மு டி யு ம் . எ ன து சி ல சி று க தை க ளி ல் வி ளி ம் பு நி லை ம னி த ர்களை க் கதைப்படுத்தி இருக்கிறேன். உண்மையில் எந்த வர்க்கத்தில் இருக்கிற�ோம�ோ அதனையே ஒரு வாதையாகக் கருதுவதே மனித மன�ோபாவமாகிறது. பெரும் பணக்காரர்களுக்குக் கவலை இல்லாமல்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
இருக்குமா என்ன..? த�ொடர்ந்து அப்படி ஒரு விளிம்பு நிலையும் அதனுள் மனிதர்களும் இருந்தாக வேண்டும் என்பது ஆட்சியாளர்கள் மற்றும் பெருந்தனவந்தர்கள் ஆகிய�ோரின் விருப்பம�ோ என்கிற ஐயம் எனக்கு உண்டு. ஊழல் என்னும் ச�ொல் தராத அதிர்ச்சியைத் தான் நாளும் திருட்டு என்னும் ச�ொல் தந்து க�ொண்டிருக்கிறது. திருட்டை நியாயப் படுத்தவில்லை. ஆனால் ஊழல் எனும் ச�ொல் ஏற்படுத்தக் கூடிய அதிர்ச்சி பெரிதாக அல்லவா இருக்க வேண்டும்.? அப்படியா இருக்கிறது? உங்கள் பெரும்பாலான கதைகளின் ஆரம்பம் புதுமையாக இருந்தாலும் அதன் மையத்தை தாண்டிச்செல்லும்போது அந்தக் கதைகளை சாதாரணமாகவ�ோ அல்லது வெகுஜனரசனைக்கு தீனிப�ோடுவது ப�ோலவ�ோ சட்டென்று முடித்துவிடுகின்றீர்கள். உதாரணம் க�ோமதிராசன் கதை ஒரு மர்மநாவலின் முடிவுப�ோல முடிந்துவிடுகிறது. கதையின் ப�ோக்கை மீறி இப்படி சட்டென்று துண்டித்துவிடுவதை நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்? எனது சிறுகதைகள் பெரும்பாலும் இரண்டு வகைமையானவை என்று ச�ொல்லவிரும்புகிறேன். ஒன்று உறைந்த ஒரு காட்சியை ந�ோக்கிச் செல்லும் கதைகள். உதாரணமாக ஆடாத நடனம், ஒயிலா, நீ ல ய ா னி . அ ல்ல து ஒ ரு நி க ழ் வி ல் ச ட ்டெ ன் று பூர்த்தியாகும் தாட்டியம், அப்பாவின் பாஸ்வேர்ட், ஈரக்காற்று ப�ோன்ற கதைகள். கதையின் ப�ோக்கைச் சட்டென்று துண்டிப்பதாகக் கருதவில்லை. ஒரு சிறந்த சிறுகதை முடிவைக் கண்டவுடன் முடிந்து ப�ோகவேண்டும் என்கிறேன். மேலும் மர்மக் கதைகள் தீண்டத் தகாதவைகள் அல்ல.அவற்றை சிறுகதை வடிவில் எழுதிப் பார்ப்பதன் உள்ளே இருக்கக் கூடிய சவால் எனக்குப் பிடிக்கும். வெறும் உரையாடல்களில் கதையை நகர்த்திப் ப�ோகும் மழை மேன்ஷன், காயத்ரி மற்றும் இரண்டு மைதிலிகள் ஆகிய கதைகளாகட்டும்; தென் அமெரிக்கக் கதையாடலில் விரிந்து முடியும் வியாழன் கதையாகட்டும் என் பெருவாரிக் கதைகளில் மையக் கதையைத் தாண்டி அதனுடனேயே இயைந்து வரக் கூடிய சிறுசிறு உ ப மு ய ல் வு க ளை யு ம் ச ெ ய் து பார்க்கிறேன். பலவிதமான கதைகளை எழுதிப் பார்க்கிறேன். எல்லோருக்கும் படிக்கத் தருகிறேன். அவ்வளவுதான். உ ங ்க ள் க த ை க ளி ல் வ ரு ம் அரசியல், சமூகப் பிரச்சினைகள் மேல�ோட்டமாகவே இருக்கின்றன. அ த ை ஆ ழ ம ா க த�ொட் டு ச் செல்வ தி ல்லை எ ன் று ஒ ரு கு ற ்ற ச ்சாட் டு இ ரு க் கி ற து .
உதாரணமாக "அப்பாவின் பாஸ்வேர்ட்" கதையில் வரும் அந்தப் பெண்ணின் கணவர் ஜாதிச்சண்டையில் சாகாமல் வேறு பிரச்சினையில் இறந்து ப�ோயிருந்தாலும் கதை அதன் அளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சென்றிருக்கும். தென்மாவட்டங்களில் நடக்கும் ஜாதிச்சண்டை கதையில் வலிய திணிக்கப்பட்ட தகவலாகவே துருத்திக்கொண்டு நிற்கிறதே? நாம் காதலிக்க நேரமில்லை படத்தைக் கூட ஒரு டைரக்டர் முதற் படமெடுக்க முடியாமற் ப�ோன ச�ோகக் கதையாகக் கருத முடியும். ஆனால் அதுவா நிஜம்? என் சிறுகதைகளில் 'அரசியல் பேசாதீர்' என்னும் நெடுங்கதை சமகாலத்தில் அரசியல் நாகத்தின் இருமுனைகளிலும் இரக்கமற்ற தலைகள் இருப்பதை வெளிக்கொணர்ந்த படைப்பு. தவிரவும், அப்பாவின் பாஸ்வேர்ட் கதை சாதிக் கலவரத்தில் ஒரு பிரிவின் கையில் சிக்கிக் க�ொள்ளும் இருவர். அதில் அதே பிரிவைச் சார்ந்த அந்தப் பெண் க�ொல்லப்படாமல் இன்னொரு வகுப்பைச் சார்ந்த அவளது கணவர் க�ொல்லப்படுகிறார் என்பது மைய இழை. இங்கே ஊடுபாவாய் இந்த இழையைப் புரிந்துக�ொள்ளவேண்டும். தங்கள் மகனை சாதி என்ற விஷத்துக்கு அப்பால் வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்று படிக்க வைக்கிறாள். அந்தப் புதிய நிலம் அவனுக்கு வேறெதைக் கற்பித்து விடும் அபாயம் உண்டெனினும் கூட சாதி என்கிற நாகத்தின் நிழலிடமிருந்து தப்பிச் செல்ல விழைகிறாள் என்பது அந்தக் கதையின் சாராம்சம். இது த�ொட்டுச் செல்லும் விலகல் அல்ல என்பதே என் கருத்து. மேலும் நான் எழுதுகிற கட்டுரைகளில் வேண்டுமானால் ஒரு பிரச்சினையை விவரித்து விட்டு, அதற்கு என்னவெலாம் தீர்வாக அமையக் கூடும் என இணைத்தெழுத இயலும். சிறுகதை வடிவத்தில் அது ஆகாது.என் வேலை ஒரு பிரச்சினையைக் கதைப்படுத்துவது. ஆ ழ ப் பு தை ந் தி ரு க் கு ம் மனமுட்களை நிரடுவதற்கான ம�ொழி முள்ளாய் என் கதைகள் இருக்க முயல்கின்றன.அவ்வளவே. கவிஞர், சிறுகதை எழுத்தாளர் இரண்டில் எந்த அடையாளம் உங்கள் மனதுக்கு நெருக்கமாக இ ரு க் கி ற து ? இ ர ண் டி ல் எ து சவாலாக இருக்கிறது? ப�ொதுச்சொல்லான எழுத்தாளர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.கவிஞர் என்று அழைக்கப்படுவதில் சின்னதான ஒரு செயற்கைத் தன்மை விஞ்சுவதாக நம்புகிறேன். இது உரைநடையின் காலம். எழுத்தாளர் என்பதில் சின்னத�ொரு அமைதி கிட்டுகிறது. சிறுகதைகள் எழுதுவதென்பது வடிவம் சார்ந்த வெளிப்படையான
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
11
இயங்குதளம் சார்ந்தது.அதன் வரவேற்பும் நிராகரிப்பும் புரிந்துக�ொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. சிறுகதைகள் ஒருப�ோதும் ம�ௌனத்தின் அயர்ச்சியை உருவாக்குவதில்லை. கவிதை இருளில் ம�ௌனமாய் இயங்கவல்லது. அது சவால் என்பதை விடவும் கடினமானது என்பதே என் கருத்து. சிறுகதை, கவிதை, கட்டுரைத்தொகுப்பு என்று பன்முகத்தளத்தில் இயங்குகின்றீர்கள். ஒரு சிறுகதைத் த�ொகுப்பு வெளிவந்ததும் அடுத்து கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. ஆத்மார்த்தி யாரென்று தீர்மானிக்க இது சிரமமாக இருக்கிறதே. நான் கதை ச�ொல்லி. இதுவே ஆழ்மனதின் ச�ொற்கள். ஆனால் கவிதைமீதான ப்ரியம் என்பது வேறாக இருக்கிறது. முதல் கவிதைத் த�ொகுப்பு அவசரப் பிரசவமாக வெளிவந்தது. சுதீர் செந்திலின் ப்ரியம் மட்டுமே அதற்குக் காரணம். அதிலிருந்த கவிதைகள் அல்ல. அடுத்ததாக காதல் கவிதைகளைத் த�ொகுத்து 108 காதல் கவிதைகள் வெளியானது. அது என் காதல் காலத்தின் ஞாபகம். பிறகு விகடனில் நட்பாட்டம் வந்தது. உண்மையில் சீரிய இலக்கியத்தின் முகாந்திரங்களுக்கு உட்பட்டு என் சமீபத்திய இரண்டு கவிதைத் த�ொகுதிகளைத் தான் கணக்கில் க�ொள்ள முடியும். கனவின் உப நடிகன் மற்றும் விளையாடற்காலம் ஆகியவை. இவ்விரண்டும் உண்மையிலேயே எனக்கு ஆத்ம திருப்தியையும் குறிப்பிட்ட வாசக நண்பர்களுக்கு ப்ரியத்தையும் ஏற்படுத்தியவை. எழுதாமல் இருக்க முடியாமற் ப�ோகையில் என் கவிதைகள் எழுதப்படுகின்றன. மற்ற படி கதைகள் கட்டுரைகள் என்றே என் விருப்பம் இருக்கின்றது. உ ங ்கள�ோ டு எ ழு தி க் க ொ ண் டி ரு க் கு ம் சமகாலபடைப்பாளிகளை, அவர்களது படைப்புகளை எப்படி பார்க்கின்றீர்கள்? உங்களுக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்கள் அல்லது நீங்கள் ப�ொறாமைப்படும் படைப்பாளிகளைப் பற்றிச் ச�ொல்லுங்கள். ப ா ர தி யி லி ரு ந் து த�ொடங் கி ப் ப ழை ய த�ோ ர் பெ ரு ங ்கா ல மு ம் நி றை ய ப் ப டைப்பா ளி க ளு ம் ப் ரி ய த் து க் கு ரி ய வர்கள் . எ ன க் கு மு ன் பி ன் எழுத வந்தவர்கள் என்றெடுத்துக் க�ொண்டால் யுவன்சந்திரசேகர், கே.என்.செந்தில், ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார், சுகிர்தராணி, விநாயகமுருகன், நேசமித்ரன், லக்ஷ்மி சரவணக்குமார், ஈழவாணி, கணேசகுமாரன், கதிர்பாரதி எனப் பலரையும் பிடிக்கும். சமீபத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் சரவணன் சந்திரனின் எழுத்துக்களும் இதில் அடங்கும்.ப�ொறாமைப்படுகிற எழுத்தாளர் ஒருவரல்ல. இரண்டு பேர். குட்டிரேவதியின் கவிதைகளையும் சாருநிவேதிதாவின் கட்டுரைகளையும் ப�ொறாமைய�ோடு சிலாகிக்கிறேன். அபாரமான எழுத்துகள் என்று இவர்களது எழுத்துக்களைச் ச�ொல்வேன்.
12
இப்போது புதிதாக எழுதவருபவர்கள் முதல் படைப்பிலேயே நாவல் வடிவத்தை தேர்வு செய்கிறார்கள். பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள். நாவல்கள் எழுதும் திட்டம் இருக்கிறதா? எடுத்த எடுப்பிலேயே நாவலைத் த�ொடுவது ஒன்றும் குற்றமல்ல. நாவல் என்பதன் வடிவம் சார்ந்த க�ோட்பாடுகள் மாறிக்கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். தன்பெருக்கி நாவல்கள், நாவலற்ற நாவல்கள் மேலும் மேலும் உடைந்து வடிவம் சார்ந்த பல மாற்றங்கள் வந்துக�ொண்டே தான் இருக்கப் ப�ோகிறது என்பது என் கணிப்பு.எனது முதல் நாவல் சதுரம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி இப்போது அதன் நிறைவை அடைந்திருக்கிறது.விரைவில் வெளியாக உள்ளது. எம்ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற 1984-ல் துவங்கி 1987-ல் அவர் இயற்கை எய்தும் வரையிலான காலகட்டத்தை மையத்திரையாக்கி ம து ரையைக்க ள ன ா க் கி இ ந்த ந ா வலை எ ழு தி இருக்கிறேன். இரண்டாவது நாவல் ம�ோகினி. குறிப்புக்களிலிருந்து அத்தியாயங்களாக மெல்ல உருமாறிக் க�ொண்டிருக்கிறது.அடுத்தடுத்து நாவல்கள் எழுதும் விருப்பம் உண்டு. உங்களின் அடுத்த படைப்புகள், அடுத்த இலக்குகள் குறித்து.... பாக்யாவின் வரலாற்றின் வின�ோதங்கள் எனும் த�ொட ரி ல் ச ரி த் தி ர த் தி ன் அ ப ா ர ங ்களை யு ம் அபத்தங்களையும் கையாண்டு வருகிறேன்.புலன் மயக்கம் என்ற பேரில் அந்திமழை.காம் இணைய இதழில் விரைவில் திரை இசை குறித்த எனது நினைவேந்தல் த�ொடர் துவங்க உள்ளேன்.இதைத் தவிர பாவையர் மலர் இதழில் கதைகளின் கதை என்ற த�ொடரில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய எனது அவதானத்தைப் பகிர்ந்து வருகிறேன். இவற்றைத் தவிர திரைப்படத் துறையிலும் ஒரு திரைப்படத்துக்கான எழுத்துக்காரனாய் பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.எழுதுவது பிடிக்கிறது.எனவே எழுதுகிறேன். எழுத்து சார்ந்த இலக்குகளும் கனவுகளும் நிரம்ப வாழ்தல் இனிது.
5வது உடுமலை புத்தகத் திருவிழா
செப்டம்பர் 17 முதல் 26 வரை
இடம்: நாடார் உறவின்முறை திருமண மண்டபம் குட்டைத் திட்டல் அருகில், உடுமலை. ஒருங்கிணைப்பு
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
13
ஒரு புத்தகம் பத்து கேள்விகள்
ம�ொழிதான் ஒரு சமூகத்தின் ஆழ்மனம்
கேள்விகள்: கு.தமிழ்ப்பாண்டி
ப�ோகன் சங்கர் க�ோ ம தி சங்க ர் எ னு ம் இ ய ற ்பெ ய ரு டை ய ப�ோகன் சங்கர் 1972ம் ஆண்டு பிறந்தவர். 2000ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கிய இவருக்கு கவிதைக்காக ராஜமார்த்தாண்டன் விருது மற்றும் சுஜாதாவிருதும் கிடைத்துள்ளன. எரிவதும் அணைவதும் ஒன்றே, தடித்த கண்ணாடி ப�ோட்ட பூனை, நெடுஞ்சாலையில் மேயும் புல் ஆகிய கவிதைத்தொகுப்பும் கிருஷ்ணனின் ஆயிரம் ந ா ம ங்க ள் எ ன் கி ற சி று க தை த ்தொ கு ப் பு ம் இதுவரை வெளிவந்துள்ளன. இவர் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார். கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் சிறுகதை எழுத எந்த சூழல் அமைந்தது?. கவிதை ம�ொழியிலிருந்து உரைநடைக்கு வரும்போது உ ங ்க ள து க வி த ை க்கா ன ம � ொ ழி யி லி ரு ந் து விலகுவதை உணர்கீறீர்களா?. நான் கவிதை, கதை என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாம் நான்தான்.எனக்கு புனைவுக்குச் செல்ல வேண்டுமென்கிற விழைவு முன்பே உண்டு. பெரும்பாலும் என் கவிதை ம�ொழியும் கதை ம�ொழியும் வேறு. ஏனெனில் இரண்டும் வேறு வேறு ஆட்கள் செய்கிற விஷயங்கள். கவிதையில் என் பேனா மேசையை விட்டு இறங்கிவிடுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைக் க�ோட்டுப் பகுதியிலிருப்பதால் உங்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான ம�ொழிகள் எழுதுவதற்கு கிடைக்கிறது. தமிழின் புராதனமான ம�ொழி கிடங்கும், அதேசமயம் மலையாளத்தின் பழந்தமிழ் கலந்த ச�ொல்லாடல்களும் உங்களது உரைநடைக்கு எவ்வாறு உதவுகிறது?. ஒவ்வொருவருக்கும் ஒரு திணை உண்டு என்று நான் நம்புகிறேன். என் திணை குறிஞ்சி என்று இங்கு வந்ததும் நான் கண்டுக�ொண்டேன். இந்த நிலம் என்னைக் கிளர்த்துவது ப�ோல வேறெதுவும் என்னைக் கிளர்த்தியதில்லை. இந்த நிலத்தின் ம�ொழியை தான் நமது பழந்தமிழகத்தின் த�ொல்மனதுக்கு உரிய சாவியாக நான் நினைக்கிறேன். அல்தூசர் தானே கூறியத�ோ அல்லது வேறு எவர�ோ கூறியதாக ச�ொன்னத�ோ "ம�ொழிதான் ஒரு சமூகத்தின் ஆழ்மனம்". நான் தமிழின் ஆழ்மனது கேரளத்தில் உயிர�ோடு இருப்பதாக நினைக்கிறேன். "கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்" சிறுகதைத் த�ொ கு ப் பி லு ள்ள க த ை க ள் ஜெ ய ம � ோ க ன் பாணியிலேயே இருக்கின்றன, குறிப்பாக பூ, பாஸிங் ஷ�ோ, ஆடியில் கரைந்த மனிதன் ஆகிய கதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் ச�ொல்லலாம். இதைப் பற்றிய விமர்சனங்களை பலரும் எழுதுகிறார்கள். இந்த விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?.
14
பூ கதை ஜெயம�ோகன் பாணி என்று முன்பே என்னால் ச�ொல்லப்பட்டு, அவரது தளத்திலேயே வெளியானது. பாசிங் ஷ�ோ கதை அவர் ம�ொழி அல்ல. ஆடியில் கரைந்த மனிதன் யார் ம�ொழிக்காவது நெருக்கமாக இருக்கிறதெனில், க�ோபி கிருஷ்ணனுக்கும் எம். வி. வெங்கட்ராமுக்கும்தான். ஜெயம�ோகன் முதலில் எழுத வந்தப�ோது அவர் ம�ொழியில் சுந்தரராமசாமியின் நடையின் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆற்றூர் ரவிவர்மா ச�ொன்னார். ஐசக் பாசேவிஸ் சிங்கர் தனது ம�ொழியில் அவரது அண்ணனின் ம�ொழிப்பாதிப்பு உள்ளதாகச் ச�ொல்வார். அவர் அண்ணனும் ஒரு எழுத்தாளர். இப்படி எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அண்ணன் எழுத்தாளர் இருப்பார். கவிதை, சிறுகதை தவிர்த்து முகநூலில் அதிகமான பதிவுகளை செய்கிறீர்கள். முகநூல் பதிவை சமூகப் ப�ொறுப்பிற்காகவும், ப�ொழுதுப் ப�ோக்கிற்கும் பயன்படுத்தும் சூழலில் உங்களது பதிவுக்கான எதிர்வினை எவ்வாறு இருக்கிறது?. ஊடகங்கள், இணையம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ப�ோன்றவை தீவிர வாசகத் தரப்பைக் குறைக்கின்றது என்று நினைக்கின்றீர்களா? ஒன்றைப் புரிந்துக�ொள்ள வேண்டும். இந்த நவீன ஊடகங்கள் இனி நம்முடன்தான் இருக்கப்போகின்றன. நமது ம�ொழியை, இசையை, எல்லாவற்றையும் இவை பாதிக்கும். ஆதிக்கம் செலுத்தும். இவற்றோடுதான் நாம் வாழவேண்டும். படிக்கவேண்டும். எழுதவேண்டும். சமீபகாலமாகவே சிறுகதைகள் என்பவை ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, பத்து செகண்ட் கதை என்று சுருங்கியும், சுவாரஸ்யம் இல்லாமல் ப�ோவதற்கான க ா ர ண ம் சி று க த ை க ளி ன் த ேக்க நி லை எ ன் று கருதுகிறீர்களா? சிறுகதைகளுக்கென்று ஏதாவது அளவுக�ோல்கள் இருக்கின்றதா?
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
இல்லை. சிறுகதைகள் நூறு பக்கங்களுக்கு இருக்கலாம். ஒரு பக்கத்தில் முடித்துவிடலாம். எழுதுகிறவனின் அக விரிவுதான் முக்கியம் தீவிர வாசிப்புத் தளத்திலிருப்பவர்கள் நீங்கள். தாங்களும் எழுதிப்பார்க்கலாம் என்ற எண்ணம் வரக் காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் எழுதிக் பார்க்கலாம். எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அந்த எண்ணத்தைத் தவறென்று ச�ொல்லமுடியாது. சமீபகாலமாகவே எழுத்தாளர்கள்மீது த�ொடுக்கப்படும் விமர்சனங்கள், தாக்குதல்கள் எழுத்தைப் புரிந்துக�ொள்ள முடியாத க�ோபமா? சுயநலமா? அரசியலா?. எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாத�ொரு பாகன்' நாவலுக்கு வரவேற்கத்தக்க தீர்ப்பைப் பற்றி உங்களது கருத்து? முன்பே இந்த விவாதத்தில் ஓரிடத்தில் நான் ச�ொன்னதே .நம்முடைய ப�ொதுத்தளமும் அறிவுத்தளமும் இ த்தனை க ா ல ம ா க ச ந் தி க்கா ம லே இ ரு ந் து வந்தன. ஊடகப் பெருக்கத்தால் அவை சந்திக்கும் ப�ொழுதெல்லாம் இதுப�ோன்ற அதிர்ச்சிகளை அவர்கள் அடைந்து மிகையாக வினையாற்றுவார்கள். நாம் இரண்டு வெவ்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் இருப்பது
ப�ோன்ற நிலை. சற்று காலம் பிடிக்கும் அறிவுலகைப் பற்றிய ஒவ்வாமை நீங்க. அதுவரை நமது பிரதிநிதியாக நீதிமன்றங்களைத்தான் நாடவேண்டியிருக்கும். உங்களைப்பற்றி?. முதல் சிறுகதை த�ொகுப்பு வந்திருக்கின்றது, பிரசுரமான உங்களது முதல் சிறுகதை அனுபவம் பற்றி பகிர்ந்து க�ொள்ளமுடியுமா? முதல் கதையை வம்சி பிரசுர சிறுகதைப் ப�ோட்டி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக வந்தது. அப்போது அவர்கள் ஆயிரம் ரூபாய் க�ொடுத்ததுதான் அதிக மகிழ்வாக இருந்தது. தற்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் உங்களைப் பாதித்தவர்களையும், மூத்த படைப்பாளிகளில் உங்களைப் பாதித்தவர்களையும் ச�ொல்லமுடியுமா?. க�ோபி கிருஷ்ணன், ஆ. மாதவன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, அச�ோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் ப�ோன்றவர்கள் எனக்குப் பிடித்தவர்கள். தற்போதைய எழுத்தாளர்களில் என்.ஸ்ரீராமும், சபரிநாதனும் எனக்குப் பிடித்தவர்கள். கவிதை, சிறுகதை.... அடுத்து நாவலா? என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? ஒரு குறுநாவல்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
15
நூல்அறிமுகம்
வல்லிசை (நாவல்) | அழகிய பெரியவன் நற்றிணை பதிப்பகம் | 044 - 28482818 ரூ. 240
மானுட வன்மங்களால் இயற்றப்படும் இசை கிருஷ்ணமூர்த்தி
இ ந் தி ய ா வி ல் த லி த் து க ளி ன் அ ர சி ய லை இ ரு க�ோ ண ங ்க ளி லேயே எ ல் ல ோ ர ா லு ம் அ ணு க முடியும். ஒன்று காந்தியினுடையது. மற்றொன்று அம்பேத்கருடையது. இவ்விரு க�ோணங்களும் கூட முற்றிலும் எதிரெதிர் திசையில் பயணம் செய்பவை. தீண்டாமை எனும் க�ொடிய ந�ோயினால் துவண்டிருந்த மக்களிடையே அரசியல் எழுச்சியாக சாதிப் பிரிவினை உருக்கொண்டது. அப்போது காந்தி அஹிம்சையின் வழியே மேட்டுக்குடியிலிருந்து கீழ்ச்சாதிக்காரர்களுக்கு அல்லது ஹரிஜனம் என ச�ொல்லப்படுபவர்களுக்கு விடுதலையை வங்கித் தர முனைந்தார். அம்பேத்கர�ோ தன்னை மேல்ஜாதிக்காரர்களிடம் அர்ப்பணித்துக் க�ொண்டு மக்களுக்கான உரிமையைப் பெறுவதற்கு மறுப்பைத் தெரிவித்தார். மாறாக, சாதி அமைப்பு எனும் விஷயமே முழுமுற்றாக தகரும் தருணத்தில் மேட்டுக்குடி எனும் அதிகாரமும், கீழ்ச்சாதிக்காரன் எனும் அடிமை நிலையும் முற்றாக ஒழிந்துவிடும். அதுவே மானுட விடுதலை என்றார். இ ந்த இ ரு க�ோ ண ங ்களை அ றி ந் து க�ொ ள ்ள டி.ஆர்.நாகராஜ் எழுதி ராமாநுஜம் ம�ொழிபெயர்த்த 'தீப்பற்றிய பாதங்கள்' எனும் நூல் பெரிதாக உதவியது. அதிலிருக்கும் தத்துவங்களை நாவலாக்குவது சற்றே சவாலான விஷயம். க�ொஞ்சம் தீவிரமாக பேசினாலும் கட்டுரை த�ொகுப்பாக மாறிவிடும். இருந்தும் சமூகத்தின் ப�ொதுத் தேவையை, அதன் அவல நிலையை, காலமாற்றத்தோடு ஊடாடியிருக்கும் சாதி அரசியலை, அது சார்ந்த மக்களின் ப�ோக்கை 'வல்லிசை' எனும் நாவலின் வழியே மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் அழகிய பெரியவன். முழவு, துடி, தண்ணுமை என மூன்று பாகங்களாக நாவலைப் பிரித்திருக்கிறார். இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. முழவு பகுதி திருவேங்கடம் எனும் தனி மனிதனின் வளர்ச்சியை கணக்கில் க�ொள்கிறது. துடி பகுதிய�ோ அத்தனிமனிதன் எ ப்ப டி ச மூ க த் தி ன் ப ங ்கா க த ன்னை ம ா ற் றி க் க�ொள்கிறான் என்பதைக் கூறுகிறது. மூன்றாவத�ோ மானுட வீழ்ச்சியை எதிர�ொலிக்கும் அத்தியாயமாக இருக்கிறது. தான் உழைத்த சமூகத்தினாலேயே துரத்தப்பட்டு எப்படி மீண்டும் தனி மனிதனாகிறான் அல்லது வழமைக்குள் சிக்கிவிடுகிறான் என்பதை அற்புதமான சித்திரமாக்குகிறது மூன்றாவது பகுதி. இரண்டாம் உலகப் ப�ோருக்கு முந்தைய காலத்தில் பூங்குளம் எனும் கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. இராவணேசன் த�ோல் பதனிடும் த�ொழிற்சாலையில் பணிபுரியும் நேர்மையான ஊழியர். அவருடைய மகன் திருவேங்கடம். அப்பாவின் மூலமாகவும் அவருடைய
16
த�ோழராக வரும் சிவமலை ப�ோன்றவர்களின் மூலமாகவும் கிராமத்தில் கூறப்படும் சாதி எதிர்ப்பொலிகளைக் கேட்டு வளர்கிறான். கல்வி ஒன்றே சாதியமைப்பை உடைக்க பெரிதும் வழிக�ோலும் என பெரிதாக நம்பும் இராவணேசன், மகனை மெட்ராஸில் இண்டர்மீடியேட் படிக்க அனுப்புகிறார். விடுதியில் கிடைக்கும் நண்பர்கள் மூலமாக தனிமனித சுதந்திரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த தனி மனித சுதந்திரம் கூட எப்படி மேல்சாதிக்காரர்களின் ச�ொத்தாக மாறுகிறது என்பதையும் கேள்விஞானத்தால் உணரத் துவங்குகிறான். ந ா வ லி ன் மு த ல்ப கு தி ய ா ன மு ழ வு மு ழு க்க தி ரு வ ே ங ்கட த் தி ன் அ றி த லி லேயே க ழி கி ற து . இரண்டாவது பகுதியில் அவனது வாழ்க்கை எப்படி ப�ோராட்டம் பக்கம் திரும்புகிறது என்பதாக மாற்றம் க�ொள்கிறது. இங்குதான் படைப்பு அதன் ஆழம் ந�ோக்கி நகரத் துவங்குகிறது. திருவேங்கடத்தின் நண்பன் சிவலிங்கம். பறையடிக்கும் வம்சத்தில் பிறந்தவன் என்பதால் அவனுக்கும் அந்தத் த�ொழிலே அமைகிறது. பறையடித்தல் குறிப்பிட்ட சாதியின் குறியீடாக மாறியிருக்கிறது என்பதை கிராமத்தால் உணர முடியவில்லை. மேல்சாதிக்காரர்களின் வீட்டில் மரணம் நிகழ்ந்தால�ோ, மாடுகள் மடிந்தால�ோ பறை அடிப்பவர்களுக்கு வேலை வருகிறது. இதைத் தவிர சாக்கடையை சுத்தம் செய்தல், மலம் அள்ளுதல் என மனிதநேயத்திற்குப் புறம்பான விஷயங்களை த�ொழிலாக செய்கிறார்கள். இவை எல்லாவற்றையும் திருவேங்கடம் ஒற்றைப் பரிமாணத்தில் முன்வைக்கிறார். அஃ த ா வ து , மேட் டு க் கு டி ம க்க ளி ன் அ வ சி ய மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு தலித்துகளின் த�ொழில் முக்கியமானதாகிறது. அந்நிலையில் ஏன் அவர்களுடனான சமூகத்தில் சம உரிமையை ஏற்க மறுக்கிறார்கள் ? த�ொழில் முறையில் உருவாக்கப்பட்ட சாதீய அமைப்புகள் எல்லாம் த�ொழில் சார்ந்து முடங்கிவிட்டன என்பதை எப்படியேனும் மக்களுக்குப் புரிய வைக்க திருவேங்கடம் ப�ோராடுகிறான். சாதீய த�ொழில் எனும் விஷயம் ஒழியும் தருணத்தில் மேட்டுக்குடி எனும் அதிகாரம் ஒடிந்துவிடும் எனும் ந ம் பி க்கை அ வ னு ள் வ ே ர் வி டு கி ற து . ப றையை
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
கிராமத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் எனும் முனைப்பில் ப�ோராட்டங்களில் ஈடுபடுகிறான். இந்நிலையில் வேறு ஒரு விஷயம் மக்கள் பக்கத்தினின்று மேலெழுகிறது. பறையடித்தலை தன் ச�ொந்த இச்சைக்காக ஒருவன் செய்கிறான் எனில் அவன் ஏன் பறையைக் கைவிட வேண்டும்? பறை சாதீய அறிகுறி என்பதெல்லாம் அவனுக்குத் தேவையில்லையே? அவனுக்கான இசையாக மட்டுமே பறைய�ொலி அமைகிறது. இதன் விளைவுகள் என்ன? பறையினின்று ஒரு சமூகம் விடுதலையடைகிறதா? சி த்தாந்த ங ்க ள ா ல் ந டை மு றை க ளை ம ா ற்ற இயலுமா ப�ோன்ற பல கேள்விகளுக்கு கதையின் ப�ோ க் கி ல் க தை யி ன் வ ழி ய ா க வ ே அ ழ கி ய பெரியவன் பதிலை முன்வைக்கிறார். சுதந்திரத்தின் முன்னிருந்து பலரின் வாயிலாக ஒவ்வொரு மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மானுட விடுதலை வார்த்தையினூடே உயிர்ப் பெற்று நடைமுறையில் காலாவதியாவதை நவீன சித்திரமாக்கியிருக்கிறார். இந்தக் கேள்விகளின் நீட்சியாய் நாவலின் மூன்றாம் பகுதியும் நீள்கிறது. இது வெறும் பறையைப் பற்றிய நாவல் அல்ல. ப றை கு றி ப் பி ட ்ட ச மூ க த் தி ன் அ டை ய ா ள ம் . இ து ப�ோன்ற எ த்தனைய�ோ கு றி யீ டு க ள ா ல் ப ல ச மு த ா ய ங ்கள் ஒ டு க்கப்பட் டி ரு க் கி ன்ற ன . அவையெல்லாவற்றையும் எதிர்த்து எத்தனைய�ோ சித்தாந்தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் நடைமுறை நிலை என்ன என்பதை இந்நாவல் ஆராய்கிறது. மேலும் இந்நாவல் தாழ்த்தப்பட்ட சாதிகளை மட்டுமே மையப்படுத்தியும் பேசுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்கான உரிமையை யார�ோ ஒருவரின் ப�ோராட்டமாய் அனுபவித்துக் க�ொண்டே இருக்கிறான். அதற்கு பதிலியாய் உரிமையற்று இருக்கும் யார�ோ ஒருவனுக்காக தன் குரல் ஒலிக்க வேண்டும் எனும் சுயநினைவு ஏன் இல்லாமல் ப�ோனது?. தன்னுடன் இருக்கும் சக மனிதர்களும் தனக்கொப்ப சுதந்திரத்தை அனுபவிக்கிறார்களா என்பதை ஏன் அறிய மறுக்கிறான் என்பது ப�ோன்ற கேள்விகள் நவீன யுகத்தின் முன்னே வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாய் நாவலில் எழுகின்றன. குறைந்த கதாபாத்திரங்களை வைத்தே நாவல் நகர்கிறது. திருவேங்கடம் சமூக நிலையை அறிதல், பின் சமூகத்தில் ஒன்றாக மாறுதல், பின் மீண்டும் தன் த�ோல்வியை அறிதல் என முப்பரிமாண வாழ்க்கையை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். அடுத்து முக்கிய ப ா த் தி ர ம் சி வ லி ங ்கம் . தி ரு வ ே ங ்கடம் எ ப்ப டி சித்தாந்தங்களின் ஒற்றை உருவகமாக நாவலில் உ ரு க் க ொள் கி ற ா ர�ோ அ தேப�ோ ல சி வ லி ங ்கம் மக்களுடைய மன�ோபாவங்களின் ஒற்றை உருவகமாக உருவெடுக்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனில் அதற்கு த�ொலைந�ோக்குப் ப ா ர்வை தேவை ய ா க இ ரு க் கி ற து . ம க்கள�ோ அன்றைய/அன்றாட தேவைகள் தீர்ந்தால் ப�ோதும் என்றிருக்கிறார்கள். இவ்விரு விஷயங்களும் ம�ோதும் தருணத்தில் சமூகத்தின் யதார்த்த நிலையும், ஏன்
ஒரு சித்தாந்தம் மக்களிடைய த�ோல்வியுறுகிறது என்பதையும் இவ்விரு கதாபாத்திரங்களின் வழியே வாசகனால் அறிந்துக�ொள்ளமுடிகிறது. திருவேங்கடத்தின் பாத்திரத்தில் அம்பேத்கரின் வாழ்க்கைச்சாயல் தெரிவது கதையின் தன்மையை தீவிரமாக்குகிறது. இ வர்களை த் தவி ர ந ா வ லில் சி ன்ன சி ன்னச் கதாபாத்திரங்களாக நிறைய பேர் வருகிறார்கள். திருவேங்கடம் மற்றும் சிவலிங்கத்தின் மனைவியராக வ ரு ம் கு ப் பி ம ற் று ம் ம ங ்காவி ன் ப ா த் தி ர ங ்கள் அழுத்தமாகப் பதியப்படவில்லை. மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கான இடம் நாவலில் வெறுமையையே தழுவுகிறது. மூன்று தலைமுறைகளுக்கிடையே இருக்கும் அரசியல் பிரக்ஞையை வெவ்வேறு கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் நுட்பமாக பதிவு செய்கிறார். பழைய சென்னையையும், பூங்குளம் கிராமத்தையும் வி வ ரி த் தி ரு க் கு ம் வி த ம் ந ா வலை உ யி ர் ப் பு ட ன் வைக்கிறது. பூங்குளம் கிராமத்தின் பல செடி மற்றும் மரங்களின் பெயர்களும், அவர்தம் த�ொழில்களும் அது சார்ந்த வர்ணனைகளும் பிரம்மாண்ட உருவத்தை க�ொடுக்கிறது. மேலும் அங்கு நிகழும் கூத்துகள் சார்ந்தும், சுடுகாட்டில் பிணம் எரிக்கும்போது ச�ொல்லப்படும் நடுகாட்டுக் கதையும் கிராமத்தை வாசகன் முன் துயிலுரித்துக் காட்டுகிறது. கிராமம் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் ஆசிரியர் விவரிக்கும் அதே தருணத்தில் அவையெல்லாம் எப்படி சாதியமைப்போடு த�ொடர்பு க�ொண்டிருக்கின்றன என்பதையும் நுண்மையாக விவரிப்பது நாவலின் மையத்தை ந�ோக்கியே வாசகனைப் பயணிக்க வைக்கிறது. சமகாலத்தில் இந்நாவலின் தேவை என்ன எனும் கேள்வி நாவலை வாசித்து முடிக்கையில் எழுகிறது. தலித்தாக இருக்கும் ஒருவன் அறிவுசார் வளர்ச்சியை அடைந்திருந்தாலும் அவனைப் பார்க்கும் சமூகம் ச ா தி த்தட் டி ல் வைத்தே அ ள வி டு கி ற து எ ன் று நாவலுள்ளேயே வருகிறது. இதனைத் தீர்க்க எத்தனைய�ோ க�ோ ட ்பா டு க ள் இ ய ற்றப்ப ட ்டா லு ம் , நி லையை மாற்ற இயலவில்லை. காரணம் ப�ொதுவுடைமை, சமநீதி, மனிதநேயம் ப�ோன்றவை அரசியலுக்கான வி ஷ ய ங ்கள் அ ன் று . த னி ம னி த னி ன் ஒ ழு க்கம் சார்ந்த விஷயம். பழமையில் த�ோய்ந்த சமூகம் அவற்றை அரசியலாக்கியிருக்கின்றன. அந்த பழமையின் குறுக்குவெட்டு த�ோற்றமாக, பறையின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் இழிகுரலாக ஓங்கி ஒலிக்கிறது அழகிய பெரியவனின் 'வல்லிசை'. புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016 17
நவீன வாழ்வின் வீழ்ச்சியின் பாடல்
18
தமிழில்: கே.வி. ஷைலஜா | வம்சி புக்ஸ் 9445870995 | ரூ. 140
ஆர். அபிலாஷ்சந்திரன் 'இறுதி யாத்திரை' எம்.டி வாசுதேவன் நாயரின் அதிகம் பேசப்படாத ஒரு நாவல்.தமிழில் சமீபத்தில் கே.வி ஷைலஜாவின் ம�ொழியாக்கத்தில் வம்சி பதிப்பக பிரசுரமாய் வெளியாகி உள்ளது. இந்நாவல் குறித்து பேசும் முன் எம்.டி என்ன மாதிரியான எழுத்தாளர், அவரது இடம் என்ன என காண்போம். எம்.டி வாசுதேவன் நாயர் மலையாள நவீன இ ல க் கி ய த் தி ன் ஒ ரு சி ற ந்த ஸ் டை லி ஸ் ட் . சுருக்கமான விவரணைகள், நுணுக்கமான பார்வை, மி க மென்மை ய ா ன உ ண ர் வு க ள் ( ம ர ண த் தி ன் இழப்பைக் கூட அடங்கின த�ொனியில் ஒரு கசப்பாக வெளிப்படுத்தும் பாங்கு), கவித்துவம், சம்பவங்கள் மற்றும் மனிதர்களுடன் ஒரு விலகின அணுகுமுறை க�ொண்ட மையப் பாத்திரம், நகைமுரண், நிறைவின்மை, அதிருப்தி ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றினால் அதுதான் எம்.டியின் ம�ொழி. எம்.டி எதைக் குறித்து பேசினார்? அவரது நாலுகெட்டு, மஞ்ஞு, காலம், ரெண்டாம் மூழம் ஆகிய படைப்புகள் மிக நளினமான ஆங்கில ம�ொ ழி ய ா க்க த் தி ல் வ ா சி க்க க் கி டை க் கி ன்ற ன . அவற்றைப் படிக்கையில் அவர் திரும்பத் திரும்ப சிதைவுற்ற ஒரு மரபான சமூக வாழ்வைப் பற்றி பேசுகிறார் என உடனே புரிந்துவிடும். நாலுகெட்டு எனும் பாரம்பரியமான நாயர் குடும்ப வீடுதான் எம். டியின் மையப் படிமம். இந்த வீடு கவனிப்பாரற்று அழிந்து வருகிறது. 'இறுதி யாத்திரை' நாவலில் ஒரு பிராமணக் குடும்பத்தின் தலைவர் தனது க�ோவிலகத்தில் உள்ள சிற்பங்களை உடைத்து ரகசியமாய் க�ொண்டு சென்று விற்கக் கூடியவராய் இருக்கிறார். அப்படித் தான் அவரது வீட்டில் அடுப்பெரிகிறது. தமிழிலும் இவ்வகையான கருப்பொருளை மையமாய் க�ொண்டு செயல்பட்டவர்கள் உண்டு. விக்கிரமாதித்யனைக் குறிப்பிடலாம். அவரது 'இற்று விழப் பார்க்கிறது உத்திரம்' எனும் வரி பிரபலம். தன் வீட்டின் சிதிலமுற்ற நிலை விக்கிரமாதித்யனுக்கு ஒரு மரபின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. அந்த மரபு ப�ொலிவிழந்த வெள்ளாள சமூக வாழ்வு என்றும், தமிழின் பாரம்பரிய விழுமியங்கள் என்றும் இருவிதமாய் பார்க்கலாம். ஜெயம�ோகனின் 'ரப்பர்', 'காடு' ஆகிய நாவல்களும் 'பல்லக்கு' எனும் பிரபல சிறுகதையும் எம்.டியின் மேற்சொன்ன மையப்படிமத்தின் வேறு வகையான ஒரு கவித்துவ மீளுருவாக்கம்தான். என்ன வகை? இதை புரிந்துக�ொள்ள நாம் சுந்தர ராமசாமியின் 'புளிய மரத்தின் கதை' நாவலுக்குச் செல்ல வேண்டும். சு.ரா ச�ோஷலிஸ எதார்த்தவாதத்தில் இருந்தும், ம ா ர் க் ஸி ய பு ரி த லி ல் இ ரு ந் து ம் வ ா ழ ்க்கை ப் பிரச்சனைகளை வரலாற்று நகர்வின் விளைவாக
இறுதி யாத்திரை | எம்.டி. வாசுதேவன் நாயர்
நூல் அறிமுகம்
பார்க்கக் கற்றார். மனிதன் துயரத்தில் உழல்கிறான் என்றால் அது அவனது செயலின் விளைவல்ல, (சமூக ப�ொருளாதார) வரலாற்றின் ப�ோக்குக்கு அவன் ஆட்படுவதன் காரணமாகவே அவன் தனிப்பட்ட நெருக்கடிகள் த�ோன்றுகின்றன என்கிறது மார்க்ஸியம். அதனால் அது ப�ொருளாதார மறுசீரமைப்பின் மூலம் சமூக மாற்றம் க�ொண்டு வர முடியும் என நம்புகிறது. சமூக மாற்றம் தனிமனிதனுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் தரும். ஆக மனிதன் வரலாற்று எந்திரத்தின் ஒரு திருகாணி மட்டுமே. இந்தப் பார்வையுடன் சு.ரா நவீன இலக்கியத்தில் இருந்து தான் பெற்ற அந்நியமாதல், தனிமனித அழற்சி, அவநம்பிக்கை, தனிமை ஆகியவற்றையும் இணைக்கிறார். சு.ராவிடம் இருந்து இந்தப் பார்வையை வரித்துக் க�ொள்ளும் ஜெயம�ோகனுக்கும் இயல்பில் மார்க்ஸிய ஈடுபாடு உ ண் டு ( அ வ ர் பி ன்னா ளி ல் த�ோ ழ ர்க ளு ட ன் கடுமையாய் முரண்பட்டாலும்) சு.ரா என்றுமே ஒரு குடும்பத்தின் அல்லது சாதியின் சீரழிவை சித்தரிக்க விரும்பியதில்லை. ஆனால் ஜெயம�ோகன் (விக்கிரமாதித்தியனைப் ப�ோல) ஒரு மேல்சாதி அல்லது மத்திய சாதி தனிமனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து அவன் சார்ந்த குடும்ப / சமூக அமைப்பின் வரலாற்று மாற்றங்களினால் அடையும் சிதைவுகளை சித்தரிக்கிறார். தமிழ் மனதுக்கே உரிய உக்கிரத்துடன், மன எழுச்சியுடன், கண்ணீர் தளும்பல்களுடன், நாடகீயத்துடன் ஜெயம�ோகன் 'நாலுகெட்டின்' கதையை குமரி மாவட்ட வட்டார வழக்கில் எழுதிப் ப�ோகிறார். எ ம் . டி யி ன் ந ா வல்கள் த மி ழி ல் எ ப்ப டி ப் பார்க்கப்படுகின்றன என்ற கேள்வி முக்கியமானது. பஷீர் அளவுக்கு அவர் இங்கு ஒரு அலையை
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
கிளப்பவில்லை. இங்கு அவர் பெயரை சிலாக்கியமாய் குறிப்பிடுகிறவர்கள் குறைவு. என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி ச�ொல்வார் 'எம்.டி மலையாள இலக்கியத்தின் சுஜாதா'. அவர் அ.முத்துலிங்கம் குறித்தும் இதையே ச�ொல்லுவார். எனக்கு எம்.டியும் முத்துலிங்கமும் அருகருகே வைத்துப் படிக்கப்பட வேண்டியவர்கள் எனத் த�ோன்றும். இருவரின் ப டை ப் பு க ளு ம் அ வை எ ழு ப் பு ம் தீ வி ர ம ா ன கேள்விகளை விட ம�ொழியின் நுணுக்கங்களுக்காய் க�ொண்டாடப்பட்டவை. ஏன் தமிழர்களை எம்.டியின் எழுத்து உலுக்கவில்லை? ம லை ய ா ள ப் ப ண்பாட் டி ன் ஒ ரு ஆ த ா ர பிரச்சனையைப் பேசின, மலையாள வெளிக்கே உரித்தான ஆளுமை எம்.டி. சிரியன் கிறித்துவர்களும், பிற சமூகத்தினரும் அடைந்த ப�ொருளாதார அரசியல் வெற்றிகள் முன்பு சிறுத்துப் ப�ோய் உணர்ந்த, நாகரிக மாற்றங்களின் இடுக்கில் மாட்டிக் க�ொண்ட, முன்னாள் நிலப்பிரபுக்களுக்களான நாயர்களின் குழப்பமும் அவலமும் சிக்கல்களும் பெரும்பாலான தமிழ் சமூகங்களுக்கு நெருக்கமானவை அல்ல. ஓரளவு வேளாளர்களின் சமூக வாழ்க்கைச் சிதைவுகளை நாயர்களின் சரிவுடன் ஒப்பிடலாம். அதனாலே விக்கிரமாதித்யன், கலாப்பிரியா ஆகிய�ோரை எம். டியின் அழகியலுக்குப் பக்கத்தில் வைக்க முடிகிறது. ஆனால் இந்த ஒப்பீடு கூட சிறிய அளவிலானது தான். எம்.டியிடம் சு.ரா, ஜெயம�ோகன் ஆகிய�ோர் படைப்புகளில் உள்ள தத்துவ சாரம், தீவிரமான கேள்விகள், வரலாற்றுப் பார்வை இல்லை. வீழ்ச்சியையும் அந்நியமாதலையும் தனிமனிதப் பார்வையில் மெல்லிய கவித்துவ எழுச்சியுடன் பேசியவர் எம்.டி. தமிழ் நவீனத்துவ புனைவின் ஜாம்பவான்களைப் படித்தபின் நமக்கு எம்.டியை அணுகும் ப�ோது விருந்துக்குப் பின் பீடா சாப்பிடுவதுப�ோலத் தான் இருக்கும். இங்கு நான் எம்.டியை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.இலக்கிய வரலாற்றில் அவர் இடத்தை தமிழ் நவீன மரபின் சாதனைகளுடன் ஒ ப் பி ட் டு ப் ப ா ர் த் து ம தி ப் பி டு கி றே ன் . ஆ ன ா ல் தனிப்பட்ட முறையில் நான் எம்.டியின் தீவிர ரசிகன். எங்கு எப்போது அவரது படைப்புகள் கிடைத்தாலும் இரவுபகலாய் வாசித்து சிலாகிப்பவன். அவரது மஞ்ஞு நாவலை அலசியும் க�ொண்டாடியும் ஒரு கட்டுரை பிரசுரித்திருக்கிறேன். அவரை என்றாவது நேரில் சந்தித்து அதிலுள்ள கருத்துக்களைக் குறித்து பேச வேண்டும் எனும் கனவு எனக்குண்டு. என்னளவில் அவரது படைப்புகளின் முக்கியமான அம்சம் ஒரு எதார்த்த கதைச�ொல்லியாக அவர் ம�ொழியை கையாளும் விதம்தான். ஒ ரு சூ ழ லை எ த ா ர்த்த ம ா ய் வி வ ரி த் து ச் செல்லும்போது சட்டென எதிர்பாராத ஒரு தருணத்தில் அதை ஒரு குறியீடாய் மாற்ற அவரால் முடியும். இந்த மாயம்தான் அவரது முக்கிய சிறப்பு. ஒரு நாவலுக்குள்
பலவித கண்ணோட்டங்களில் ஒரு பிரச்சனையை அணுகுவது, பேசாத ஒரு பாத்திரத்தையும் கூட ஒரு வலுவான தரப்பாக மாற்றுவது, வாசித்து முடித்த பின் வாசகனுக்குள் தன் வரிகளை முளைத்தெழுந்து க ா ன க ம ா ய் வி ரி ய ச் ச ெ ய ்வ து அ வ ர து வ ே று தனிச்சிறப்புகள். மனித மனத்தை குறைவாகச் ச�ொல்லி பிரம்மாண்டமாய் சித்தரிப்பதில் அவர் வித்தகர். "இறுதி யாத்திரை"யின் களம் நமக்கு பழக்கமானது. மிக நெருக்கமான ஒருவரின் மரணம் நிகழ்கிறது.அதற்கு உணர்ச்சிகரமாய் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் கதையின் மையப் பாத்திரங்கள் இருக்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை பகடியாக சித்தரிக்கவ�ோ அல்லது ஏன் நிகழ்கிறது என்பதை தீவிரமாய் அலசவ�ோ இவ்வகை கதைகள் செய்யும். நான் இதை ச�ொன்னதுமே உங்களுக்கு காம்யுவின் "அந்நியன்" நினைவு வரும். அதே ப�ோல் காப்காவின் "உருமாற்றமும்".இரண்டுமே சிதைவை, அழிவைப் பற்றி உடலை மையமாக்கிப் பேசுகின்றன. பிறகு இந்த சிதைவின் உளவியல் என்னவென கேட்கின்றன. யு.ஆர் அனந்தமூர்த்தின் புகழ்பெற்ற "சம்ஸ்காரா" நாவலிலும் ஒரு மரணம் இது ப�ோல் நிகழ்கிறது. ஒரு கலகக்கார பிராமணன் இறக்கிறான்.அவனுக்கு ஈமச்சடங்கு செய்யவ�ோ அவன் பிணத்தைத் தீண்டவ�ோ அக்கிரகாரத்து பிற பிராமணர்கள் மறுக்கிறார்கள். விளைவாக அவன் உடல் அழுகி அதில் இருந்து ஊரில் பிளேக் ந�ோய் பரவுகிறது. சம்ஸ்காராவிலும் எம்.டியின் "இறுதி யாத்திரையிலும்" ஒரு மரணித்த உடலை சகமனிதர் இயல்பாய் எதிர்கொள்ள முடியாததும் அது உருவாக்கும் சிக்கல்களும் தான் கரு. இதுப�ோன்ற நாவல்களில் பிணம் என்பது சமூக நிலையை பகடி செய்யவும் விசாரணை செய்யவுமான ஒரு சாக்கு மட்டுமே. எம்.டியின் "இறுதி யாத்திரையில்"
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
19
அப்பாவின் மரணத்தை ஒட்டி ஈமச்சடங்கு செய்ய ஊரில் உள்ள பாரம்பரிய வீட்டுக்கு வரும் மகன்களின் கண்ணோட்டத்தில் இருந்து நவீன காலத்தில் நாயர் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பேசப்படுகின்றன. நாவல் முழுக்க பல்வேறு விதமான பயணங்கள் நிகழ்கின்றன.வேலைக்கான, லட்சியத்தைத் தேடிய, கலை வெற்றிக்கான, அப்பாவைக் காண்பதற்கான பலவித பயணங்கள். மரணத்துக்குப் பின்பான அப்பாவின் இறுதிப் "பயணமும்" இவற்றில் ஒன்று மட்டுமே.நாவலில் எல்லா பயணங்களும் ஒரு தனி மனிதன் தன் அடையாளத்தை உருவாக்கவ�ோ தேடி அடையவ�ோ செய்பவை, ஆனால் அவை வியர்த்தமாய் முடிகின்றன. நகைமுரண் இந்நாவலின் ஒரு முக்கிய அம்சம். அப்பாவின் பிரேதத்தைக் காண வரும் மகன்களால�ோ உறவினர்களால�ோ மனம் உடைந்து அழ முடிவதில்லை. ஒரு உறவுக்கார பெண் சட்டென ஒரு கணம் பிணத்தின் முன் ஒப்பாரி வைத்து நிறுத்தி சுற்றுமுற்றும் பார்த்த பின் கூட்டத்தில் இருந்து கழன்று க�ொள்கிறாள். ஒரு நாடகத்தில் ஒற்றை வசனம் மட்டும் பேசும் சிறிய பாத்திரம்போல் இருக்கிறாள் அவள். மகன்களால் அதுகூட முடிவதில்லை. பிணத்தைப் பார்த்தபின் எ ரி க் கு ம ்வ ரை உ ண வ ரு ந்த க் கூ ட ா து எ ன்ப து சம்பிரதாயம். ஆனால் இந்த ஈமச் சடங்குகளின் ஊடே த�ொடர்ந்து உணவு, அன்றாட ச�ௌகரியங்கள் குறித்த உரையாடல்களும் தயாரிப்புகளும் மகன்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடக்கின்றன. ஒரு அறையில் சிற்றுண்டியும் தேநீரும் தயாரித்து வைத்து ரகசியமாய் ஒவ்வொருவராய் சென்று அருந்தி வருகிறார்கள்.பிணம் என்பது ஒரு அச�ௌகரியம் மட்டுமே. பிணம் இங்கு ஒரு குறியீடு.அது பெயரளவில் மட்டுமே நிலைக்கும் நாயர் சமூக விழுமியங்கள், மரபு, கட்டமைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. அதன் மரணத்துக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். மரணித்ததும் அனைவரும் அதன் ஈமச்சடங்குக்காய் காத்திருக்கிறார்கள். அவர்களால் அதன் மரணத்துக்காய் கதறி அழ முடியாது. அதன்மீதான புகார்களை மட்டுமே வாசிக்க முடியும். அப்பா குறித்த மகன்களின் நினைவுமீட்டல்களும் அவர் மீதான புகார்கள் மற்றும் அதிருப்திகளால் நிரம்பி இருக்கின்றன.அவரால் தன் பிள்ளைகளுக்கு நல்ல ப�ொருளாதார வாழ்வை ஏற்படுத்தித் தர இயலவில்லை. இளமையில் சம்பாதித்த செல்வத்தை குடியிலும் காமக்களியாட்டங்களிலும் அழிக்கிறார். இறுதிக் காலத்தில் ஏழ்மையில் தவிக்கிறார்.இலங்கையில் வணிகம் செய்கையில் அங்கு மற்றொரு குடும்பத்தை உருவாக்குகிறார்.அது அவரது ஊரில் தவிக்கும் குடும்பத்துக்கு கடும் ஏமாற்றத்தையும் க�ோபத்தையும் அளிக்கிறது. இலங்கைக்கு அப்பாவைத் தேடிச் செல்லும் மகன் ஒருவனின் பயணம் நாவலின் இறுதிக் கட்டத்தில் வருகிறது. அவன் இலங்கையில் பார்க்கும்
20
அப்பா தன் மகன்மீது எந்தப் பாசமும் இல்லாதவர். அவரது வணிகக் கணக்குப் புத்தகத்தில் உள்ள ஒரு எண்ணாக மட்டுமே ஊரில் உள்ள குடும்பம் எஞ்சி இருக்கிறது. அங்கு அப்பா மீது மகனுக்கு உள்ள க�ோபம், அவரது இரண்டாம் மனைவி மீது திரும்புகிறது. அக்குடும்பம் அளிக்கும் உணவை ஏற்க மறுக்கிறான். சமூக மாற்றமும், குடும்ப சீரழிவும் அவனை அன்புக்கு அந்நியமானவனாக மாற்றுகின்றன. அவனால் மனம் திறந்து மன்னிக்கவும் நேசிக்கவும் முடிவதில்லை. இந்நாவலின் பாத்திரங்களின் மைய நெருக்கடி இது தான். இலங்கையில் அவன் அடிக்கடி ஒரு க�ோயில் குளத்திற்குச் சென்று அங்குள்ள ஆமைகளுக்கு ப�ொரி வாங்கிப் ப�ோடுகிறான். இவன் அளிக்கும் உணவுக்காய் அவன் சட்டென நீரின் மேற்பரப்பில் த�ோன்றி வாயைத் திறந்து கவ்வி மறைவது, நாவலில் ஒரு அபாரமான சித்திரமாக உள்ளது. அற்ப ப�ொரிக்காக எதிர்பார்த்து வாழும் அந்த ஆமைகள் ஒருவிதத்தில் இந்நாவலின் மனிதர்கள்தாம். மிக அழகான ச�ொற்பிரய�ோகங்கள் இந்நாவலில் வருகின்றன. புற்றுந�ோய் மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்துக் காத்திருக்கும் மகன் ஒருவன் விடுதி அறையின் துருப் பிடித்த கதவைக் கவனிக்கிறான். அதன் துருக் கறை அவனுக்கு குழந்தைகள் வரையும் சூ ரி ய�ோ த ய ஓ வி ய த்தை நி னை வு ப டு த் து கி ற து . எவ்வளவு பிரமாதமான நகைமுரண் இந்த ஒப்பீட்டில் த�ோன்றுகிறது! மனிதன் தன் இறுதி யாத்திரைக்காய் காத்திருக்கும் புற்றுந�ோய் கேந்திரத்தில் குழந்தைகள் பிரியமாய் வரையும் விடியலின் சித்திரம் நினைவுக்கு வருகிறது. விடியல், அஸ்தமனம் என இரண்டு தரப்புமே ஒரே சமயம் இணையும் அபத்தம்தானே வாழ்க்கை! கே.வி ஷைலஜாவின் தடையற்ற, சரளமான ம�ொழியாக்கம் பாராட்டத்தக்கது. அவர் சுகுமாரனைப் ப�ோன்று கவித்துவமான ம�ொழிபெயர்ப்பாளர் அல்ல. ஷைலஜாவினுடையது அறுவை சிகிச்சை கத்தி கிழிக்கும் க�ோடு ப�ோன்ற துல்லியமான ம�ொழியாக்கம். நம்மை எம்.டியின் ம�ொழியருகே முடிந்தளவு அணுக்கமாய் க�ொண்டு செல்கிறார்.
பாண்டிச்சேரி புத்தகத் திருவிழா
ஆகஸ்ட் 16 முதல் 25வரை வெல்.ச�ொக்கநாதன் திருமண மண்டபம் வள்ளலார் சாலை... பாண்டிச்சேரி - 605011 த�ொலைபேசி - 0413.2211748
தர்மபுரி புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 4 முதல் 6 வரை இடம்: ராஜக�ோபால் பூங்கா அருகில்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
21
colour
22
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
23
colour
24
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
அறிவியலைப் புரட்டிய புத்தகங்கள் - 1
புதிய த�ொடர்
நீராவிக் கப்பலை நிலாவுக்கு அனுப்பியவர்.. - ஆயிஷா இரா. நடராசன்
நீல் ஆம்ஸ்ட்ராங், 1969ல் ஜூலை 20ஆம் தேதி உலக ப�ொது நேரப்படி 20:14 மணிக்கு நிலவில் கால் பதித்தார். ஆனால் புவியிலிருந்து நிலாவுக்கு செல்வதை "From Earth to Moon" எனும் புத்தகம் 1865லேயே அய்யந்திரிபட விவரித்துவிட்டது. விஞ்ஞான வித்தகரான அந்த அற்புத எழுத்தாளர் அப்போது எழுதியதை இப்போதும் பல க�ோடி பேர் வாசிக்கிறார்கள். இவர் ப�ோவதை அவர் எழுதவில்லை. அவர் எழுதியதால் இவர் ப�ோனவரானார். இப்போது நாம் பயன்படுத்தும் தண்ணீரில் நனையாத கைக் கடிகாரம் (Water Proof) பால் பாய்ண்ட் பேனா, மழைக்கோட்டு தலைக்கவசம், வீடிய�ோ கேம்ஸ் என பலவற்றை அறிவியல் கண்டு பிடித்துத் தருவதற்கு பல ஆண்டுகள் முன்பே தனது அறிவியல் புனைகதைகளில் அவற்றை வரவழைத்து அ றி வி ய லு க்கே வ ழி க ா ட் டி ய வ ர் அ வ ர் . ஏ ழு நெடுங்கதைகள், ஆறு அற்புத பயண நூல்கள், கவிதை, கட்டுரைகள்... அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரை விட அதிக ம�ொழிகளில் ம�ொ.பெ. செய்யப்பட்டவர். பிரெஞ்சு எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்ன். அறிவியல் புனைகதை (Science Fiction) என்றால் என்ன என்பதிலிருந்து த�ொட ங ்க வ ே ண் டி ய து இ ல்லை . இன்று அத்துறையில் எத்தனைய�ோ நடந்துவிட்டது. அறிவியலை கதையின் பிரதான அங்கமாக்குவதை ஆரம்பித்து வைத்தவர்க ளி ல் ஜ ு ல் ஸ் வெ ர் ன் முதன்மையானவர் என்று ச�ொல்லலாம். எ ழு த் து உ ல கி ற் கு ள் ஷே க் ஸ் பி ய ர் மாதிரியே வசன கவிதை வடிவத்தில் குறைந்த பட்சம் நான்கு மாதமாக ம ன ப்பாடம் ச ெ ய் து ஆ று ம ா த ம் ஒத்திகைப் பார்த்து மேடை ஏற்றப்பட்ட ந ா ட க ங ்களையே இ ல க் கி ய ம் எ ன உலாவந்தவர்கள் மத்தியில் சிறுகதை
எனும் வடிவத்தைப் புகுத்துவது சிரமமாக இருந்த க ா ல க ட ்ட த் தி ல் வ ா ழ ்ந்தவ ர் ஜ ூ ல்ஸ்வெ ர் ன் . நாடகங்களுக்குத் தேவை பார்வையாளர்கள். கதை மாதிரி வடிவத்திற்கு வாசகர்களாக (வாசிப்பவர்களாக) அவர்களை மாற்ற வேண்டியதை நினைத்துப் பாருங்கள். ஆனால் அந்த மாற்றத்தை முதலில் சாதித்தது இங்கிலாந்தோ அமெரிக்காவ�ோ அல்ல. அதை ச ா தி த்த து பி ர ா ன் சு . வி க்டர்ஹுக�ோ , ரூ ச�ோ , அலெக்சாந்தர் டூமாஸ் என்று உருவான எழுத்துச் சிற்பிகளின் வரிசையில் இடம் பெற்றவர்தான் நம் அறிவியல் எழுத்துக்களின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். அவரது எழுத்துக்களில், கேப்டன் ஹாட்டராஸ் சாக சங்கன் ( The Adventure of Captain Hatteras) 1862ல் வெளிவந்தது; பறக்கும் பலூனில் ஐந்து வாரங்கள் (Five Weeks in a Flying Balloon) 1863ல் வெளிவந்தது. இந்த இரு நூல்கள் இல்லையேல் இன்று அறிவியல் புனைவுலகம் இல்லை என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து. மிகவும் பிரபலமடைந்த- இன்றும் பெரிய அளவில் பேசப்படும்- புவியின் மையத்தை ந�ோக்கி ஒரு பயணம் (Journey Thousand Leagues Under the Sea) எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (Around the World in Eighty Days) என அடுத்தடுத்து அறிவியல் கற்பனாவாத பேருலகைச் படைத்தவர் ஜுல்ஸ் வெர்ன். 1800களின் உலக இலக்கியத்தைப் பார்த்தால் எல்லாரும் நீண்ட காதல் நட்புக் கவிதைகளை (சத்தமாக அரங்கில் வாசிப்பதை) இலக்கியம் என அறிவித்துக் க�ொண்டிருப்பதைக் காண்கிற�ோம். இந்த நிலை மாற்றம் காண ஜுல்ஸ் வெர்ன் கண்டடைந்த பாதை விசித்திரமானது. 1851ல் வெ ர் ன் த ன து ந ண்ப ர் பீ ட ்ரே மைக்கல் செவாலியருடன் இணைந்து மியூசி டெஸ் ஃபேமிலிஸ் Musee des Families எனும் குடும்பப் பத்திரிகையை த�ொடங்குகிறார். கு டு ம ்ப அ ரு ங ்காட் சி ய க ம் எ ன இதழின் பெயரை தமிழ்ப்படுத்தலாம். அறிவியல், புவியியல், வரலாறு என அது குடும்பத்தினரின் கல்வி ந வீ ன ம ய ம் ந�ோ க் கி ய ஒ ற்றை சாளரமாய் செயல்பட்டது. வெர்னின் பெ ரு ம ்பா ல ா ன எ ழு த் து க்கள் இந்த மாத இதழில் த�ொடராக வெளிவந்ததுதான். உலகிலேயே மதம் குறித்து அல்லாத முதல் அறிவு இதழ்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
25
என இன்று அந்த இதழ் ப�ோற்றப்படுகிறது. இ த்தனை க் கு ம் , வெ ர் னி ன் த ந்தை ஒ ரு வழக்குரைஞராகவும் பெரிய செல்வந்தராகவும் இருந்ததால் முதல் மகன் எனும் முறையில் அவரை தனது த�ொழில் ந�ோக்கி வர கடும் நிர்பந்தங்கள் க�ொடுத்தார். இலக்கியம் அறிவியல் பிரயாணம் தவிர வேறு எந்த வாழ்வும் தனக்குத் தேவைஅல்ல என பிடிவாதமாக வெர்ன் தந்தைக்கு எழுதிய 56 பக்க கடிதம் இன்றும் பாரீசின் பிரெஞ்சு மியூசியத்தில் ஒரு ஆவணமாக பேணப்படுகிறது. இணையத்தில் நீங்கள் எடுத்து வாசிக்கலாம். உங்கள் ச�ொத்தில் எதுவுமே வேண்டாம்‘ என்று எழுதி அடிக்கோடு இட்டுள்ளார் வெர்ன். 'வெர்னின் கதைகளில் கடவுள் எனும் பாத்திரம் எங்குமே இல்லை' என பிரெஞ்சு மன்னர் லூயி அவற்றைத் தடை செய்தார். தேவாலயங்கள் வெர்னின் எழுத்துக்களுக்கு எதிராக அவரை சாத்தானின் தூதுவர் என அறிவித்து அவரது எழுத்துக்களை வாசிப்பவர் யாராக இருந்தாலும் தேவாலய கூட்டிணைவிலிருந்து விலக்கிவைக்கப்படுவார் என அறிவித்தன. கடுமையான இத்தகைய எதிர்ப்புகளை 'Musee des Families' இதழ் மனம் தளராது எதிர்கொண்டது. 1858ன் பிரெஞ்சுப் புரட்சியில் தன்னை ஒரு அங்கமாக அறிவித்துக் க�ொண்டார். ஜூல்ஸ்வெர்ன். அ றி வி ய லை எ ழு து த ல் எ ன்பதை ந�ோ க் கி அவர் ஈர்க்கப்பட்டதற்கு பிரதான காரணத்தை வரலாற்றாளர்கள் முன்வைக்கிறார்கள். அவர் ஆறு வயதாக இருக்கும்போது 1834ல் நான்டஸ் நகரின் மே ற் கு க�ோ டி யி ல் ஆ சி ரி யை மெம் . ச ா பி ன் என்பவரின் வகுப்பில் அவரும் சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிரியை மெம். சாபின் ஒரு இளம் விதவை. தனது மாணவர்களுக்கு தனது கணவரின் கப்பல் பிரயாண சாகசங்களை உண்மை நிலைப�ோல அற்புதமாக எ டு த் து இ ய ம் பு வ ா ர் . பாலைவன பனிப்பிரதேசத்தில் க ப்ப ல் மூ ழ் கி ன ா லு ம் ப ல இன்னல்களை சாகசங்களாக்கி அ வ ர் க ண வ ர் , ர ா பி ன்ச ன் குருச�ோவைப் ப�ோல மீண்டு வ ரு வ ா ர் எ ன்றே க தை க ள் மு டி யு ம் . அ ந்தக் கதைக ள் ஜுல்ஸ் வெர்னின் வாழ்க்கை மு ழு து ம் அ வ ர து எ ண்ண அ லை க ளி ல் பி ர ம ா ண்ட வ டி வமெ டு த் து வ ள ர் ந் து க�ொண்டே இருந்தன. அவரது இ ர ண்டாவ து த ந்தை ய ர் நாடு (Second Fatherland) மர்மத்தீவு (The Mistories Island) ராபின்சன்களுக்கான பள்ளி (The School of Robinson) ப�ோன்ற எண்ணற்ற கதைகளில் கப்பலே பிரதான
26
கதாநாயகன். எண்பது நாட்களில் உலகை சுற்றியது கூட கப்பலில்தான். முதலில் தனது வரவுக்காக கர�ோலின், பிறகு நண்பனின் ஒற்றைச் சக�ோதரி ர�ோஸ் ஹெர்மின் என இளம் பிராயத்தில் மனதைப் பறிக�ொடுத்த ஜுல்ஸ்வெர்ன், தனது விருப்பங்களுக்கு மாறாக அவர்கள் செல்வந்த முதிய�ோர்க்கு பெற்றோர்களால் மணமுடிக்கப்படும் அவலத்தை பல அறிவியல் புனைவுகளில் சமூக எதார்த்தவாத பின்னணியில் வெளிப்படுத்துகிறார். இயற்கையின் பேரிடர்களில் சிக்கும் மனிதர்கள் அவரது நாவல்களில் அறிவியல் சிந்தனைகளின் அடிப்படையில் மனித இனத்தை இடர்பாடுகளில் இருந்து மீட்கிறார்கள். இன்றும் கூ ட அ றி வி ய ல் பு னை க தை உ ல க ம் மு ழு து ம் பிரபஞ்ச மூலை முடுக்குகளில் மனிதனின் அறிவியல் ஆளுகையால் வென்றெடுக்கும் பெருமுனைப்பில் இயங்குவதை த�ொடங்கிவைத்தவர் ஜுல்ஸ் வெர்ன். கப்பல்தான் யாவற்றுக்கும் பிரதானம். தனது ஆரம்பப்பள்ளி ஆசிரியை தந்த கதையாடல்களின் அற்புதங்கள் அவரை வாழ்நாள் முழுதும் அதே திசையில் இயங்குபவராக ஆக்கியதைப் பார்க்கிற�ோம். பதின�ோராவது வயதில் 1839ல் க�ோராலி எனும் சரக்குக் கப்பல், தான் வசித்த நான்டிஸ் வழியாக இ ந் து ம க ா ச மு த் தி ர ம் அ டை ய இ ரு ப்பதை அறிந்து வீட்டிற்கே தெரியாமல் கேபின் பாய் (cabin boy) யாக இணைந்தார். வானூர்தி என்பது ரயில் அல்லது சைக்கிள் மாதிரி இன்றி கப்பல் ப�ோலவே செயல்பட முடியும் என்பது அவரது ஊகமாக இருந்தது. கடலடியில் 20,000 லீக் நாவலில் கேப்டன் நெம�ோவும் நாட்டிலஸும் உரையாடி கண்டுபிடிக்கும் கடலடியிலிருந்து விண் ந�ோக்கிப் பாய்ந்தோடும் விண்கப்பல் என அழைக்கப்படும் ஊர்தியை யாருமே மறக்கமுடியாது. புவியிலிருந்து நிலாவுக்கு எனும் நெடுங்கதையில் தன்னோடு ஒரு நாயையும் அழைத்துச் செல்லும் கேப்ட ன் , அ த னை ப டு த்த நிலையில் அதற்கு சீட் பெல்ட் முதற்கொண்டு அணிவிப்பதும், வான் ஊர்தியின் பின்னே பல ல ட ்சம் ட ன் வெ டி ப�ொ ரு ள் ப ய ன்ப டு த்தப்ப ட ்ட து ம் அ து உண்மையில் நடந்தேறுவதற்கு நூறு வருடங்கள் முன் கற்பனை ச ெ ய்யப்பட் டு ள ்ள து பெ ரி ய ஆச்சரியம் தான். விஞ்ஞான எழுத்துச் சித்தர்களில் ஒருவரான ர�ோய் பிராட்பரி ‘விண்வெளி இயலில் ஜுல்ஸ் வெர்ன் என்பது வெறும் பெயரல்ல எரிப�ொருள் என வர்ணிக்கிறார். நாசா (Nasa) வின் அனைத்து விண் ஆராய்ச்சிகளுமே ஏத�ோ
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
ஒரு வகையில் ஜுல்ஸ் வெர்ன் வர்ணித்த அறிவியல் வெகு கற்பனாவாத சட்டங்களை உள்வாங்கியே இன்றுவரை செயல்பட முடிகிறது. இப்போதும் ராக்கெட்டை (ஸ்பேஸ் ஷிப்) விண் கப்பல் என்றுதான் அழைக்கிறார்கள். எஃப். பி. வால்டர் (F.P.Walter) என்பவரது ம�ொழி பெயர்ப்பில்தான் நான் பெரும்பாலான வெர்ன் நாவல்களை வாசித்திருக்கிறேன். வால்டரே ஒரு தேர்ந்த அறிவியல் கதை வித்தகர்தான். அவர் வெர்னின் பங்களிப்பு குறித்து தனியே புத்தகம் எழுதியிருக்கிறார். கடல் பிரயாண ஜாம்பவான்களான வில்லியம் பீபி, சைமன்லேக் ப�ோன்றவர்கள் கப்பலில் தாங்கள் வாசித்த பைபிள் என ஜுல்ஸ் வெர்ன் நாவல்களை விவரிக்கின்றனர். வடதுருவத்தை அடைந்து காட்டிய சர்எர்னஸ்ட் ஷாக்கல் டன், வெர்ன் நாவலை நேரில் வாழ்ந்த அனுபவம் என தன் சாதனையை வ ர் ணி க் கி ற ா ர் . இ ப்ப டி ய ா க வெ ர் ன் இ ன் று ம் வாழ்கிறார். அவரது நாவல்களில் இடம் பெற்றும் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வராத அறிவியல் கருவிகள் பற்றி பேச வருடத்திற்கு ஒரு முறை ஆங்கிலக் கால்வாய் மேல் கப்பலில் ஒரு கூட்டம் வெர்ன் கூட்டாளிகள் என பிப்ரவரி மாதம் கூடுகிறார்களாம். 2025ல் வெர்ன் கூட்டாளிகள் தங்கள் பிப்ரவரி (வருடாந்திர) கூட்டத்தை சந்திரனில் நடத்தப்போவதாய் மிரட்டலாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். விரும்புகிறவர்கள் பதிவு ச ெ ய் து க�ொ ள ்ள ல ா ம் . w . w . w . l e j u l e s v e r m e . paris.com
வரப்பெற்றோம்
கலைந்த க�ோடுகள் (நாவல்) பாஸ்கரன் | ரூ.120. | லார்க் வெளியீடு 9884693550 சாதிய ப்பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் ப�ோதாது; அம்பேத்கரும் ப�ோதாது; மார்க்ஸ் அவசியத்தேவை; ம�ொழிபெயர்ப்புக் கட்டுரை | க�ொற்றவை | விலை ரூ 80 | ஸ்வீட் ஹ�ோம் பப்ளிக்கேஷன்ஸ், ஹைதரபாத் | குறளி பதிப்பகம் | 9500150047 க�ோயபல்ஸ் சிரிக்கும் குஜராத் மலையாளமூலம் ஏ.வி. அனில்குமார். தமிழில் மா.உத்திரகுமாரன் | வம்சி | ரூ. 200 04175 235806 நிலம் பூத்து மலர்ந்த நாள் மலையாள மூலம் மன�ோஜ்குரூபர் | தமிழில்: கே.வி ஜெயஸ்ரீ | வம்சி | ரூ.250 சுற்றுச்சுழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திரா குஹா | தமிழில்: ப�ொன். சின்னத்தம்பி முருகேசன் | ரூ. 250 | எதிர்வெளியீடு | 9942511302
கண்ணாடி
த�ொகுப்பும், ம�ொழிபெயர்ப்பும்: யூமா. வாசுகி. எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம், விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம். சென்னை-18. விலை ரூ. 170 நீ தி க்கதை க ள் சி ற ா ர்க ளு க் கு நே ரி டை ய ா க அ ற த்தை யு ம் வ ா ழ ்க்கைக்கா ன க ல் வி யை யு ம் ப�ோதிக்காமல் அதே சமயம் கதையின் வாயிலாக எதார்த்தத்தை விளக்கிச் ச�ொல்லும் பட்சத்தில் அக்கதைகள் சிறப்பான கவனத்தைப் பெறுகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இப்புத்தகம். கண்ணாடி என்கிற கதையின் மூலம் பிறரிடம் எவ்வாறு நடந்து க�ொள்ளவேண்டுமென ச�ொல்லும் ப�ோது சிறார்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்குமான மனநிலையும் மாறி விடுவதற்கான சந்தர்ப்பம் இக்கதை அமைத்துத் தருகிறது என்பது உண்மையே. கண்ணாடி கதைப�ோல 13 கதைகளும் படிப்பதற்கு புதுவித அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
உயிர்களிடத்து அன்பு வேணும்
த�ொகுப்பும், ம�ொழிபெயர்ப்பும்: யூமா. வாசுகி எஸ்.ஆர்.வி. தமிழ் பதிப்பகம், விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், சென்னை-18. விலை ரூ. 170 உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற இச்சிறார் கதைத் த�ொகுப்பில் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. த லை ப் பி ல் உ ள ்ள வ ா ச க ப்ப டி யே ஒ வ்வொ ரு கதையும் அன்பைக் கற்றுத்தர முயலும் கதைகளாக அமைந்துள்ளது இதன் சிறப்பு. இடம் என்கிற கதை காலத்தால் பிறருக்கு செய்யும் உதவி, பின்னாளில் அதுவே பெருமதிப்பைப் பெற்றுத் தருகிற செயலாக மாறுகிறது என்பதை அழகிய கதையின் வழியாகச் ச�ொல்கிறது. இவ்விரு சிறார் கதைகளும் தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதைத் த�ொகுப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவ்விரண்டு புத்தகங்களின் கதைகளைத் தேர்வு செய்து ம�ொழிபெயர்த்தத�ோடு எளிய ம�ொழியில் தந்திருக்கும் யூமா.வாசுகியின் பணி பாராட்டுக்குரியது. கல்விநிலையங்களுக்கான கதைப் புத்தகங்களை பாரதி புத்தகாலயம் பள்ளிகளுக்கு ஏற்றவகையில் தயாரித்துத் தருகிறது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
27
கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள்
நூல் அறிமுகம்
28
கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் நாவல்
அபிலாஷின் 'கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள்' என்ற நாவல், துப்பறியும் நாவல் என அடைப்புக்குறி இடப்பட்டாலும், சமகாலச் சிக்கலைப் பேசும் முக்கியமான கதைப் பிரதி. சிறுமிகள் கடத்தல், சிறுமிகள் பாலியல் பலாத்காரம், குரூரமான முறையில் அவர்கள் க�ொல்லப்படுதல், அக்கொலையைச் செய்த குற்றவாளி யார் எனத் துப்பறிதல் - இதுதான் நாவலின் மையம். மு த ல்வா சி ப் பி ல் த�ொ ற் றி க் க ொண்ட பதற்றம், இரண்டாம்முறை வாசிக்கும்போதும் த�ொற்றிக்கொள்வதைத் தவிர்க்கமுடியவில்லை. மனஅமைதியைக் குலைத்து, யாரையும் சந்தேகிக்கத் தூண்டுகிறது. கனவுகளாகப் பல்கிப்பெருகி இரவுகளை வதைக்கிறது. அவ்வளவு காத்திரமான கதைக்களத்தை இ ப் பி ர தி பே சு கி ற து . பெ ண் கு ழ ந்தை க ளை வைத்திருக்கும் யார் ஒருவரும் இந்த நாவலை வாசிக்கையில் கலவரமடையக்கூடும். பெண் வாசகர்கள் எனில் தனது பால்யகாலத்தில் நேர்ந்த அல்லது கேள்விப்பட்ட சம்பவங்களின் நினைவுத்துணுக்குகள் க ண் மு ன் வி ரி ய , க ல வ ர ம டை ய க் கூ டு ம் . இன்னும்இன்னும் பாதுகாப்போடு பெண்குழந்தைகள் இந்தச் சமூகத்தில் வளர்க்கப்படவேண்டும் எனும் எச்சரிக்கையைக் க�ொடுக்கிறது இப்பிரதி. பெண்குழந்தைகளின் உடல்மீதான வன்முறைகள், பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை நிலவும் சமூகத்தில் இந்த நாவல் கூடுதல் கவனத்தை ஈர்த்து நிற்கிறது.நாவலின் ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கவாசிக்க ஒருவிதமான பதற்றத்தை வாசகம் அடைய நேரிடுகிறது. அடுத்தடுத்த கதைநகர்த்தல்களில் அது ஒரு பேரச்சமாக உருக்கொள்கிறது. ஒருகுற்றச்செயலுக்குப் பின்னால் பேய் எனும் அ ம ா னு ஷ ்யத்தை ந�ோ க் கி க் கை நீ ட் டு வ து ம் , நீ ல நி ற ம னி த ன் எ னு ம் ம ர்ம ம னி த னை அக்குற்றச்செயல்களுக்குக் காரணமாகக்கொண்டு வ ந் து நி று த் து வ து ம் ந ா ம் கேள் வி ப்ப டு கி ற ஒ ன் று த ா ன் . ஊ ட க ங ்க ளி ல் இ து ப�ோன்ற செய்திகள் நம்காதுகளிலும் கண்களிலும் வந்து வி ழு ந் தி ரு க் கி ன்ற ன . அ தை ஒ ரு ச ெ ய் தி ய ா க மட்டுமே நாம்கடந்து சென்றுவிடுகிற�ோம். ஆனால், ஊடகங்கள் நமது வீடுகளுக்குள் க�ொண்டுவந்து சேர்க்கும் செய்திகளுக்குப் பின்னால், அதிகாரிகளின் விசாரணைகளுக்கும் விசாரணை அறிக்கைகளுக்கும் பி ன்னா ல் ஒ ளி ந் தி ரு க் கு ம் உ ண்மை யி னை ,
ஆர். அபிலாஷ் | உயிர்மை வெளியீடு | ரூ. 250
- மனுஷி
இதற்குப்பின்னால் இருந்துசெயல்படும் அரசியலை அபிலாஷின் இப்பிரதி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நாவல் முழுக்கப் பற்றிப்படரும் நீலம் என்பது குற்றமனத்தின் குறியீடே ஆகும். பெண்உடல் மீதான வன்முறை எண்ணங்களைச் சுமந்துதிரியும் ஆண்மனம், நீலநிற க�ொடிய விஷமாக இருக்கிறது. அது, பெண்குழந்தைகளைத் தேடிச்சிதைக்கும் ஒருஆலகால விஷம். இந்நாவலில் வரும் தமிழ்ச்செல்வன் பற்றிப் பேசியேஆகவேண்டும். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கயல்விழி எனும் பள்ளிமாணவியுடன் மூன்று முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவன். அந்தவழக்கு இழுத்து இழுத்து ஒருகட்டத்தில் ஒ ன் று மி ல்லா ம ல் ஆ க்கப்பட் டு வி டு கி ற து . தமிழ்ச்செல்வன் அவ்வழக்கில் இருந்து விடுதலையும் ஆகிவிடுகிறான். இந்தச்சம்பவம் நடந்த பலஆண்டுகள் கழித்து, கயல்விழியைச் சந்தித்துப்பேசும்போது அவள் ச�ொல்கிறவாதம், இதேசம்பவம் குறித்து தமிழ்ச்செல்வன் பேசுகிறவாதம் இரண்டையும் வாசிக்கையில் எனக்கு அகிரா குர�ோஷ�ோவாவின் ர�ொஷ�ோமான் திரைப்படம் நினைவுக்கு வந்தது. உண்மைக்கு ஒருபக்கம் மட்டுமில்லை என்பதை மிகநுட்பமாக விவாதித்த படம் அது. ஒரு சம்பவத்திற்குப் பலக�ோணங்கள் இருக்கின்றன. இந்த நாவலிலும் கயல்விழி, எனது ஆசிரியர் பற்றிச் ச�ொல்லும் ப�ோது அவரால் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டதைத் தனது நினைவிலிருந்து பேசுகிறாள். அவள்சொல்கிற
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
அதேசம்பவங்கள், அதேகாட்சிகள் - அவற்றை ஆ சி ரி ய ர் த மி ழ ்ச ்செல ்வ ன் வ ே று வி த ம ா க ச் ச �ொல்வா ர் . அ வ ர து வ ா த த் தி ல் க ய ல் வி ழி யி ன் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும். மேலும், அவள்தான் அப்படிய�ொரு சம்பவம் நிகழ்ந்ததற்கு முழுக்காரணமும்.தான் அங்கே பலியாக்கப்பட்டேன் எ ன் று மு ன்வைப்பா ர் . பெ ண் எ ன்ப த ா லு ம் , ஒடுக்கப்பட்ட இனம் என்பதாலும் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாக வழக்கு ஜ�ோடிக்கப்பட்டது எ ன்பா ர் . ந டந்த து ஒ ரு ச ம ்பவம் . இ ரு வ ே று க�ோணங்கள். இங்கேயாரைக் குற்றவாளி எனமுடிவு செய்வது என்கிற கேள்விஎழும். ஆனால் வாசகன்தான் முடிவு செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச்செல்வன் மகள் க�ோகிலாவின் க�ொலையை ஒட்டி நகரும் கதை, வேறு சில சமூக அவலங்களை வெளிக்கொணர்ந்ததன் மூலம்தான் அபிலாஷின் படைப்பு மனதைச் சிலாகிக்கத் த�ோன்றுகிறது. பெ ண் கு ழ ந்தை க ள் க ா ண ா ம ல் ப ோவ து ம் , அவர்கள் உடல் சிதைக்கப்பட்டு, பிணமாகக் க ண்டெ டு க்கப்ப டு வ து ம் பேசப்ப டு கி ற து . அந்தச்சிறுமிகள் எல்லாம் ஏன் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் எனும் கேள்வியை எழுப்புகிறார். இந்தமரணங்கள் குறித்து பெரிதாய் யாரும் கண்டுக�ொள்ளவில்லை. விசாரணையை முன்னெடுக்க ஆர்வம். காட்டவில்லை.வெறும் தகவல்களாய் எஞ்சிவிட்ட மரணங்கள் அவை என்று ச�ொல்லும்போது அவ்வளவு வலியாய் இருக்கிறது. வாழும்போது மட்டுமல்ல. மரணத்திற்கும் கூட வர்க்கம் இருக்கிறது என்பதைச் ச�ொல்லாமல் ச�ொல்லும் வரி இது. க�ோகிலா, மட்டும் இதில் விதிவிலக்கு. அ வள் மேல்தட் டு வர்க்க த் தி ன் கு ழ ந்தை . அ த ன ா ல் எ ன்ன ? . அ வள் பெ ண் . அ த ன ா ல் வர்க்கம் எ ன்பதையெல்லாம் த ா ண் டி அ வள் இ ந்த உ ல க த் தி ல் வ ா ழ ம று க்கப்ப ட ்டவ ள ா க , உ ட ல் சி தைக்கப்ப ட ்டவ ள ா க ம ர ண த்தை த் தழுவிக்கொள்கிறாள். கயல்விழியின் பாத்திரம் வேறுவகையில் கூடுதல் மு க் கி ய த் து வம் வ ா ய்ந்த து . ப ள் ளி ஆ சி ரி ய ர் மட்டுமின்றி, தனது சித்தப்பாவாலும் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள். குடும்ப அமைப்பும் கூட பலநேரங்களில் பெண்குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதற்கான குறியீடுதான் கயல்விழி. நாவல்தான் என்றப�ோதும் அபிலாஷுக்குள் இ ரு க் கி ற க வி ஞ ன் ஆ ங ்கா ங ்கே வி ழி த் து க் க�ொண்டுவிடுகிறான். 'சின்னச் சின்ன குழந்தைகள் எட்டிப்பார்ப்பதைப் ப�ோல' நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன என்று வாசித்தப�ோது குட்டி நட்சத்திரங்கள் சிறுகுழந்தைகளாகவே எனக்குத் தெரிந்தன. தேநீர்
டம்ளரில் மழைத்துளிப் பட்டு துள்ளிக்குதித்தன எ ன் று வ ா சி த்தப�ோ து அ ந்த ம ழை த் து ளி க ள் மீன்குஞ்சுகளாகவே மாறிப்போயின. ஒ ரு நெ டு ஞ ்சாலை வளைவைப்ப ற் றி ச் ச �ொ ல் லு ம ் ப ோ து த ண் ணீ ர் சு ம ந் து ப�ோ கு ம் ஒருபெண்ணின் இடுப்பைப்போல இருந்தது என எழுதியிருப்பார். அதைவிடவும், மாடியில் இருக்கும் நீர்த்தொட்டியில் காயத்தின் உடல்கிடந்ததைப் பற்றிச் ச�ொல்லும்போது கால்கள் மேலாகவும் உடல் நீர்த்தொட்டிக்குள்ளும் இருந்ததைப் பார்க்க ஜாடிக்குள் ச�ொருகப்பட்ட பூங்கொத்தைப்போல இருந்தது என எழுதியிருப்பார். என்னவ�ொரு குரூர அழகியல் இது. அதை வாசித்த கணத்தில் என் வீட்டு ஹாலில் இருக்கும் ஃப்ளவர்வாஷைப் பார்க்க அவ்வளவு பயம். நாவல் முழுக்க இப்படியான குட்டிகுட்டி அழகியல் ததும்பும் வரிகள் வாசகனை எங்கெங்கோ அழைத்துச்சென்று விடுகிறது. அதேப�ோல, நாவலினூடாக சமகால அரசியலையும் கிண்டலடித்திருப்பார். நமது பிரதமர் ஏத�ோவ�ொரு நாட்டிலிருந்து செல்ஃபி எடுத்து வெளியிட்டார், இந்தியக் கிரிக்கெட் வாரியம் குறித்து ஏத�ோவ�ொரு சர்ச்சை என்று இருக்கும். நாவல் எந்தக்காலத்தில் நிகழ்கிறது என்பதை யூகிக்க இடமளிக்கும் வரிகள் இவை. எல்லாவற்றிற்கும் மேலாக நாவலின் 19ம்பகுதியில் தமிழ்ச்செல்வன் மாணவர்கள�ோடு பேசுகிற இடம் மிக முக்கியமானது. தர்க்க நியாயங்களை/தத்துவங்களை இவ்வளவு எதார்த்தமாக விவாதித்திருப்பதற்காக அபிலாஷின் எழுத்துகள்மீதான மதிப்பை மேலும் கூட்டுகிறது. இதுவரை ம�ொழியின் வாயிலாக
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
29
நமக்குக் கற்பிக்கப்பட்டவற்றின் அடிப்படையிலேயே இந்த வாழ்க்கையை, இந்த உலகத்தை நாம் அணுகுகின்றோம். அதனால் அதுவே உண்மை ஆ கி வி ட ா து . த ர்க்கம் எ ன் று க ரு து வ து ம் கூ ட ஒருவகையில் கற்பனைதான் என்கிறார். நீட்சேவின் கருத்து இது. இதைக் க�ொண்டு குற்றங்களை அணுகுகிறார். ப�ொதுப்புத்திசார் கருத்தியல்களை அ ணு கு கி ற ா ர் . ஒ ரு க ட ்ட த் தி ல் த ன து ம க ளி ன் மரணத்திற்குத் தான் காரணம்தானே குற்றவாளி என உணர்ச்சி ப�ொங்க பேசும்போது அங்கே வாசகன் மனத்தில் பெருத்த ம�ௌனம் நிலவுகிறது. சமூகக் குற்றம் நடக்கும் ப�ோது எதிர்வினை ஆற்றாத யார் ஒருவரும் அங்கே குற்றவாளிதான் என்று தனது படைப்பின் மூலம் உணர்த்திய ஸீக்ஃப்ரிட்லென்ஸின் (நிரபராதிகளின் காலம்) குரலை அங்கே கேட்க முடிந்தது. இந்நாவலின் மனதை அதிரச் செய்த பகுதியில் ஒன்று அதுவா முண்டாவின் வாக்குமூலம். சிறு குழந்தைகளைத் தேடித்தேடி, அவர்களை வதைத்துக் க�ொன்றதை எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் க ா வ ல் நி லை ய த் தி ல் ப கி ர் ந் து க�ொள் ளு ம ் ப ோ து ம னி த த் தி ன் மீ து பெ ரு ம் அ வ ந ம் பி க்கை கவிகிறது. மனித மனத்தில் புதைந்துகிடக்கும்
30
ஒருவித சைக்கோத்தனத்தின் உச்சமாகத்தான் அ து வ ா மு ண்டா வி ன் வ ா க் கு மூ ல த்தை ப் பார்க்கவேண்டியிருக்கிறது. அபிலாஷின் மற்ற எழுத்துகளில் இருந்து இந்த நாவல் வேறுபட்ட தளத்தில் நின்று பேசுகிறது. விறுவிறுப்பை மட்டும் ஏற்படுத்தாமல், மனிதமனத்தின் உளக்கூறுகளை அலசுகிறது.இந்நாவலில் நடந்த குற்றச்செயல்களுக்கு யார் காரணம் என ய�ோசித்துப் ப ா ர்த்தா ல் , க தை யி ல் வ ரு கி ற எ ல் ல ோ ரு மே ஒருவகையில் குற்றவாளிகளாக ஆகியிருக்கிறார்கள். ஆனால், அதிகார பலமும், பணமும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் குற்றவாளியாகாமல் தப்பிச்செல்ல வழிசெய்து க�ொடுக்கின்றன. கு ற்றத்தை த் து ப்ப றி யு ம் ஜ ா ர் ஜு ம் ஒ ரு குற்றவாளியாக ஆகியிருக்கிறான். நாவல் அங்கே முடிகிறது. ஆனால், அங்கிருந்து கதை இன்னும் வேற�ொன்றாகத் த�ொடரத்தான் செய்கிறது. கதை முடிவுக்கு வரமுடியாமல் வாசகன் துப்பறிவதைத் த�ொடங்கிவிடுகிறான். துப்பறியத் த�ொடங்கும் வாசகனுக்குள்ளும் ஒரு ஜார்ஜ், ஒருதமிழ்ச்செல்வன், ஒரு ம�ோகனா, ஒரு ம�ோகன் ஒரு அரசு, அதுவா முண்டா என யாரேனும் ஒளிந்திருக்கக்கூடும்.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
31
நூல் அறிமுகம்
ஓ ர் இ ல க் கி ய ப் ப டை ப் பு ம க த்தா ன த ா க க் க ரு த ப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை? நாம் தினந்தினம் நேரில் காணும் மனிதர்களைக் காட்டிலும், ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பின் வழியாக சுட்டிக்காட்டும் மனிதன் மீது நம் அக்கறை அதீதமாகக் குவிவதன் காரணம் என்ன? அவர்கள் நம்மை அதிகம் பாதிப்பது எதனால்? இதுநாள்வரையில் நாம் உதாசீனம் செய்துவந்த மதிப்பீடுகளும் நபர்களும் ஒரு படைப்பில் வெளிப்படும்போது, அவை/அவர்கள் நம்மை அதிக குற்றவுணர்வில் ஆழ்த்துவது ஏன்? இப்படியே இன்னும் இன்னுமென இலக்கியம் சார்ந்தும் ஒரு படைப்பு சார்ந்தும் அடுக்கப்படும் கேள்விகளுக்கு நம்மால் திட்டவட்டமான பதில்களைத் த�ொகுத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, ஒருவாறாக அவரவர் தன்னளவில் தனக்கான பதில்களை வரையறுத்துக்கொள்ளலாம். ஒரு மகத்தான படைப்பு என்பது வாசகனின் பார்வைகளையும் சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் மாற்றி அவனை வேற�ொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் திறப்பைக் காட்டக்கூடியதாக இருக்கும். தேவிபாரதியின் ‘நட்ராஜ் மகராஜ்’ எனும் நாவல், வரலாறு குறித்த கற்பிதங்கள் தம் அர்த்தத்தை இழந்துக் க�ொண்டிருக்கும் காலத்தில் மீட்டெடுக்கப்படும் ஒரு வரலாற்று நாயகனின் – மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் - உயிருள்ள நேரடி வாரிசான ‘ந’ எனும் சத்துணவு அமைப்பாளனின் கதையாகவும் மீட்டெடுக்கப்படும் வரலாற்றின் மீதான கிண்டலாகவும் விரிந்து, வாசகனின் மனதினில் பல்வேறு கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது. அந்த வகையில் இந்நாவல் சமீபத்தில் வந்த ஆக்கங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ‘ஓ’ என்னும் சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் பாழடைந்த அரண்மையின் காவற்கூண்டில் ‘ந’என்பவன் தன் மனைவி ‘வ’மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறான். பாதுகாப்பற்ற முறையிலும் வசதிகள் ஏதுமற்றும் அந்தக் காவற்கூண்டில் அவர்கள் வசித்து வருகிறார்கள். இப்படியான சூழலில் ஒருவர் அவனுக்கு அரசு கட்டிக்கொடுக்கும் த�ொகுப்பு வீடு குறித்த அரசாணையைச் சுட்டிக்காட்டிவதிலிருந்து அந்தத் த�ொகுப்பு வீட்டைக் கட்டுவது குறித்த எண்ணங்களும் ஆசைகளும் அவனுள் பெருகி, அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளும் பிரயத்தனங்களுமாக நாவல் நகர்கிறது. த�ொகுப்புவீடு கட்டுவதற்கான அனுமதி பெற அவன் சந்திக்கும் நபர்களும், அவர்கள் அவனை நடத்துகின்ற விதமும் அவனை பெரும் சிரமங்களுக்குள் ஆழ்த்துகிறது. அவன் எல்லா சிரமங்களையும் நெருக்கடிகளையும் கடந்து வந்து த�ொகுப்பு வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது அவனது வாழ்க்கையையே மாற்றிப்போடும் விதமாக ஒரு தகவல் பேராசிரியர் ‘பூ’ என்பவரின் மூலமாக வந்தடைகிறது. ‘ஓ’ என்னும் சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் பாழடைந்த அரண்மையின் காவற்கூண்டில் வசித்து வரும் ‘ந’ என்பவன் வெறும் நவ�ோ ந எனும் பெயருடைய சத்துணவு அமைப்பாளன�ோ அல்ல; நாட்டின் முதல் சுதந்திர ப�ோராட்ட வீரன் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள ஒரே நேரடி வாரிசு என தெரிவிக்கப்படும் சூழலிலிருந்து அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பயணமாகி முடிகிறது என்பதே நாவலின் களம். சத்துணவு அமைப்பாளனாகப் பணிபுரிவதற்கு அரசாணை கிடைத்ததும் ‘ந’ என்பவனுக்கு அரசு உத்யோகம் குறித்து அவனுள்
32
மனித அடையாள மனப்போர
நடராஜ் மகரா
பெரும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் ஏற்படுகின்ற பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே தவிடுப�ொ அதிகாரத்தை ருசிக்க முடியுமென நம்பியிருந்த அதிகாரங்களுக்கு ஆட்படுகிறான் என்பது அவல பைனான்ஸ் கம்பெனியில�ொன்றில் பணிபுரி சத்துணவு அமைப்பாளனாக பணியைத் த�ொடங்கி வீடு கட்டுவதற்காக அலைந்து திரியும்போது அதிகாரமென அதிகாரத்தின் வேட்கை, நாவலி செய்யப்பட்டுள்ளன. ந என்பவன் வெறும் நவ�ோ முதல் சுதந்திரப் ப�ோராட்ட வீரன், காளிங்க ஒரே வாரிசான பிரின்ஸ் – நட்ராஜ் மகராஜ் அதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கை எழுகிற அவனால் அடையவே முடிவதில்லை. சாதாரண சத்துணவு அமைப்பாளனான ‘ந த�ொகுப்பு வீட்டுக்காகவும் அலைந்து திரிந்த சாதாரணன் இல்லை; மாவீரன் காளிங்க நடரா நிரூபிக்கப்பட்ட பிறகு தன் அடையாளத்தையும் நிறுத்திக்கொள்ள அதிகம் ப�ோராடுகிறான். அ
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
ளத்தை மீட்டெடுக்கும் ராட்டத்தின் கதை வின�ோத்ராஜ்
ாஜ் நாவல் / தேவிபாரதி / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.300
ன்றன. ஆனால் அவனது எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும் ப�ொடியாகின்றன. அரசு உத்யோகத்தின் மூலம் தனக்கான ந்த ந, அந்த நம்பிக்கை ப�ொய்த்தவனாக மற்றவர்களின் லமாக நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரியும்போது அவன்மீது பிரய�ோகிக்கபடும் அதிகாரம், கிய பிறகும் அவனுக்கு கைக்கூடாத அதிகாரம், த�ொகுப்பு அவன் மீது எல்லாத் தரப்பிலும் பிரய�ோகிக்கப்படும் லின் பல்வேறு பக்கங்களில் மிகவும் யதார்த்தமாக பதிவு �ோ ந என்னும் சத்துணவு அமைப்பளன�ோ அல்ல, நாட்டின் நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடி வாரிசான, என்பதை அறிந்துக�ொண்ட பிறகு அவனுள்ளும் அந்த றது. ஆனாலும் கடைசி வரை அதிகாரத்தின் ருசியை
ந’, அரசுப் பணிக்காகவும் அரசு கட்டிக்கொடுக்கும் ந்த ‘ந’, தகுந்த ஆதாரங்களின் மூலம் தான் ஒரு ாஜ மகாராஜாவின் நேரடி உயிருள்ள ஒரே வாரிசு என ம், மீட்டெடுக்கப்பட்ட தனது பெருமைகளையும் நிலை அதனாலேயே நாவல் முழுக்க, "ந என்பவன் வெறும்
நவ�ோ ந என்னும் சத்துணவு அமைப்பளன�ோ அல்ல, நாட்டின் முதல் சுதந்திரப் ப�ோராட்ட வீரன், காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடி வாரிசான, ஒரே வாரிசான பிரின்ஸ் - நட்ராஜ் மகராஜ்" என்ற வாசகம் அடிக்கடி பிரய�ோகிக்கப்படுகிறது என்று கருதுகிறேன். தான் காளிங்க நடராஜ மகாராஜாவின் வாரிசு என்பதைத் தெரிந்துக்கொண்ட பிறகு, தன் பரம்பரை குறித்த தேடலில் ஆழும் ந, நூலகத்துக்குச் சென்று ஆங்கிலப் பத்திரிக்கைய�ொன்றில் தன் பரம்பரை குறித்து பேராசிரியர் பூ எழுதியிருக்கும் கட்டுரையைத் தேடிக்கண்டெடுத்துப் படிக்கும்போது இடையூறு செய்யும் சுண்டெலிகளைப் புத்தகங்களை வீசிக் க�ொல்வதும், வீசப்படும் புத்தகங்கள் இரண்டாக உடைவதுமாக சித்திரிக்கப்படும் காட்சிகளும் நாவலின் கடைசி தருணத்தில் ‘ந’ தன்னையறியாமலேயே க�ோமாளி ப�ோல அலைந்து திரியும் காட்சியும் நாவலில் மிக நுண்மையாக அணுகப்பட்டுள்ளன. இ ந்நாவ லி ன் க தைக்க ள மு ம் க தை ய ா ட லு ம் மிகவும் புதுமையானதாக இருக்கின்றன. நாவலில் இடம்பெறும் எந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும் ஊரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. மாறாக பெயர்களின் முதலெழுத்துக்கள் மட்டும் நாவலில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியான கதைக் கூறல் முறை தமிழில் கையாளப்படுவது இதுவே முதல் முறையெனக் கருதுகிறேன். தேவிபாரதி கையாளும் ம�ொழி மிகவும் வசீகரமானது; மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவது. தமிழில் கதைக்களத்துக்குப் ப�ொருத்தமான ம�ொழியை கையாண்டு நாவலை அணுகுபவர்கள் வெகுசிலரே! அவர்களுள் தேவிபாரதி மிக முக்கியனாமவர் என்று த�ோன்றுகிறது. அதேசமயம் அவர் கையாளும் ம�ொழியும் நடையுமே நாவலின் பக்கங்களை அதிகரிக்க செய்திருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. இன்னும் இறுக்கமாக ம�ொழியைக் கையாண்டிருந்தால் நாவல் இன்னும் சிறப்பான ஒன்றாகப் பரிணமித்திருக்க வாய்ப்பிருக்கிறது. தேவிபாரதியின் பெரும்பாலான எல்லா ஆக்கங்களின் கதைக்களங்களும் ஒரு புனைவெழுத்தாளன் எளிதாக எடுத்துக் கையாளக்கூடியவை அல்ல. அவரது ஆக்கங்களைத் த�ொட ர் ந் து வ ா சி க் கு ம் ஒ ரு வ ன் இ தை எ ளி த ா க கண்டுக�ொள்ளலாம், அவரது பெரும்பான்மையான கதைகள் எல்லாமும் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்பவையாகவும் அல்லது வரலாற்றை நினைவுகூர்ந்து அவை நிகழ்காலத்தில் ஏற்படுத்திருக்கும் விளைவுகள் குறித்துமே பேசுகின்றன. அந்த வகையில் தேவிபாரதி கையாளும் கதைக்களங்கள் வாசிப்பில் தீவிர கவனத்தை க�ோரச் செய்பவையாகவே இருந்து வருகின்றன. இன்னும் ச�ொல்லப்போனால் அ வ ர து க தை க ள் ஒ ரே வ ா சி ப் பி ல் மு ழு ம ை ய ா க உள்வாங்கிக்கொள்ள முடியாதவை, மீண்டும�ொரு முறை வாசிக்கத் தூண்டும்படி இருப்பவை. ‘நட்ராஜ் மகராஜ்’ எனும் இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘'நட்ராஜ் மகராஜ்'’ மிக அரிதான வாசிப்பனுவத்தை வழங்கும் நாவல்.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
33
எழுத்தாளர் சுகுமாரன் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலத் த�ொடக்கப் பள்ளி ஆசிரியர் வாழ்க்கையை மேற்கொண்டவர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டியவர். அவரிடமிருந்து ‘‘வீழ்ச்சி’’ என்ற பெயரில் 288 பக்கங்கள் க�ொண்ட ஒரு நாவல் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிறது. தன் முதல் நாவலை 65_வது வயதில் எழுதி வெளியி ட்டி ரு க்கு ம் சுகு மார ன் பாராட்டுக்குரியவர். இ ந்த ந ா வ ல் ப ல வ ர ல ா று க ளி ன் , ப ல பிரச்சனைகளின் பின்னலாக வளர்ந்திருக்கிறது. தங்கதுரை என்னும் இளைஞர் சென்னையின் ஒரு பகுதியில் உள்ள திருமுழுக்கு சபைக்குச் ச�ொந்தமான பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியர்களுக்குப் பின் மூன்றாவது ஆசிரியராகச் சேர்கிறார். இந்தப் பெண் ஆசிரியர்கள் கல்விப் பணியை ஒரு த�ொண்டாகக் கருதாமல் வயிற்றுப்பாட்டுக்கான வாய்ப்பாகக் கருதிச் செயல்படுபவர்கள். சமூக உணர்வு குறைந்தவர்கள். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்காக வேறு எதையும் செய்ய விரும்பாதவர்கள். தங்கதுரை நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்புகிறார். அவர் ச�ொல்லிக் க�ொடுக்கும் பள்ளியில் இருந்து ஆறாவது வகுப்புக்குப் ப�ோகும் மாணவர்கள் தரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற புகார் பக்கத்து உயர்நிலைப் பள்ளியில் இருந்து வரும்போது, அவரால் எதுவும் ச ெ ய்ய மு டி ய வி ல்லை . ப ள் ளி க் க ட் டி டத்தை மேம்படுத்த வேண்டும். கழிப்பறை கட்ட வேண்டும். சத்துணவுக்காக ஒரு காய்கறித் த�ோட்டம் அமைக்க வ ே ண் டு ம் எ ன்றெல்லாம் த�ொடங் கு ம் அ வ ர் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. தங்கதுரை பணியாற்றிய காலம் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எழுச்சிமிக்க காலம். ஆசிரியர் இயக்கத்தின் தந்தை என்று ப�ோற்றப்படும் மாஸ்டர் இராமுண்ணி, அவர் கால ஆசிரியர்களை ஒரு ச மூ க ம ா க இ ணை த் து , இ ய க்க உ ண ர்வை யு ம் அரசியல் உணர்வையும், ஊட்டி ஆசிரியர்களுக்குப் பல சலுகைகள் பெற்றுக் க�ொடுத்தப் பெருஞ் சாதனையாளர். ஆனாலும் அறுபதுகளில் ஆசிரியர்களின் நிலை விரும்பத்தக்க அளவில் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் பள்ளிகளில் வந்து, தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, வகுப்பு வகுப்பாகச் சென்று பாடல்கள் பாடியும், வேடிக்கை செய்தும் காசு சேகரித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. நாவலில் ஒரு இடம் வரும். ஒரு
34
ப�ொன்னீலன்
வீழ்ச்சி நாவல் | சுகுமாறன் பாதி புத்தகாலயம் | ரூ. 210
ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல்
ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு அறிவுரை ச�ொல்லுவார். ‘‘பேசாம பென்சன் வாங்கிட்டுப் ப�ோங்க சார். முப்பது வருசம் ஆனா அரைச் சம்பளம். இப்ப அந்தப் பிடித்தம் இந்தப் பிடித்தம் எல்லாம் ப�ோக வாங்குறதைவிடப் பென்சன்ல அதிகம் வாங்குவீங்க.’’ இப்படி ஒரு குரல் ஆசிரியர் சமூகத்தினுள் எழுவதற்காக ஆசிரியர் இயக்கம், ஆசிரியர் கூட்டு இயக்கம் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கம், ஆகியன எத்தனை விரிவான ப�ோராட்டங்களை நடத்தின. எத்தனைத் தியாகங்களைச் செய்தன. எத்தனை பேரை உயிர்ப் பலி க�ொடுத்தன. ஆண்களை மீறிப் பெண்கள் எழுச்சி க�ொள்ள, எப்படி அவர்களுக்கு இயக்க ஆற்றல் ஊட்டப்பட்டது இவையெல்லாம் மிக பெரிய சாதனை வரலாறுகள். இந்த எழுச்சிகளை, இவற்றுக்கான முயற்சிகளை இயக்க உணர்வு க�ொண்ட ஆசிரியர்கள் செய்துகாட்டினார்கள். தலைவர்களின் அ ந்த அ லைச்சல்களை , ப�ோ ர ா ட ்ட ங ்களை , நாவலாசிரியர் சுகுமாரன் நாவலில் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் த�ொடக்கக் கல்வித்துறை தனியாக உருவானது, த�ொடக்கக் கல்வி அலுவலர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் உருவானது. அடுத்த கட்டமாக அவர்கள் மூத்த த�ொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் க�ொண்டே நிரப்பப்பட்டனர். இவற்றின் லாப நட்டங்கள் என்ன? தங்கதுரை ய�ோசிக்கிறார். மனதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கு இணையாக இன்னொரு புறத்தில், இந்த இயக்கங்களின் வீச்சுக்களால் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாயின. இதுவும் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் ஒரு பெருஞ்சாதனை. ஊராட்சித் தலைவர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் தங்கள்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
35
விருப்பத்துக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்திக் க�ொள்ளுவது, அடங்காதவர்களைப் பந்தாடுவது, ஆகிய நிலைகள் மாறி, ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக உயர்ந்தனர். த�ொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் பெருஞ்சாதனைகள், நாவலாசிரியர் ச�ொல்லுவதுப�ோல பள்ளி நிர்வாகிகள் க�ொடுக்கு இல்லாத தேளாக ஆக்கப்பட்டது ஆசிரியர்களைப் பெருமகிழ்ச்சி க�ொள்ளச் செய்தது. இன்னொரு புறம் சத்துணவுப் பிரச்சனை. காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், எல்லாருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற ந�ோக்கத்தோடு பள்ளியினுள்ளே நுழைந்தது மதிய உணவு அடுப்பு, அந்த அடுப்பை ஊதும் பணியை மட்டுமல்ல, அதற்காக மக்களிடம் தேவைப்படும் பணத்தை வசூல் செய்யும் பணியையும் அரசாங்கம் தலைமையாசிரியர்கள் தலையிலேயே சுமத்தியது. எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அந்த மதிய உணவு சத்துணவாக மேம்படுத்தப்பட்டது. அரசின் கைகள் இன்னும் க�ொஞ்சம் தாராளமாயின. ஆனாலும் அந்த உணவுக்கான ப�ொருள்கள் மாணவர்களுக்கு ஒழுங்காகப் ப�ோய் சேரவில்லை. அடிக்கு ஒரு தரம் பல அதிகாரிகள் பள்ளிக்கு வந்து உணவு இருப்பை பார்வையிட்டு த�ொந்தரவு க�ொடுத்தார்கள். இதில் வெறுப்படைந்த ஆசிரியர் இயக்கம் ப�ோராட்டத்தோடு ப�ோராட்டமாக இதையும் ஒரு க�ோரிக்கையாக வைத்துச் சத்துணவு அமைப்பாளர்களை நியமிக்க வைத்தது. இவைகளுக்கெல்லாம் மேலாண ப�ோராட்டம் ஆ சி ரி ய ர்க ளு க் கு ம் ப�ோ ன ஸ் வ ே ண் டு ம் . முப்பதாண்டுகள் வேலை பார்த்ததும் முழு ஓய்வூதியம் வ ழ ங ்கப்பட வ ே ண் டு ம் . க ரு ணை த் த�ொகை முழுமையாக வேண்டும். ப�ொங்கல் பணம் வேண்டும் ப�ோன்ற பல க�ோரிக்கைகளை அரசின் பார்வைக்கு முன்வைத்தது. இம்மாதிரிக் க�ோரிக்கைகளுக்காகத் த�ொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் தலைமைச் செயலகப் பணியாளர்கள், எல்லாரும் இணைந்து நாட்டையே நடுங்க வைத்த பெரும் ப�ோராட்டத்தை நடத்தினார்கள். அரசு இயந்திரமே செயலிழந்து நின்றது. கைது, சஸ்பென்ட், டிஸ்மிஸ் அது இது எனப் பல பாணங்களை விட்டும், இந்தக் கூட்டு இயக்கம் ஒடுங்கவில்லை. முடிவு? கூட்டு இயக்கத்தினரின் க�ோரிக்கைகள் பெரும்பான்மை ஏ ற் று க் க�ொ ள ்ளப்ப ட ்ட ன . அ வை ஏ ற் று க் க�ொள்ளப்பட்டனவா. ஏற்றுக் க�ொள்ளப்படவில்லையா என்பதல்ல பிரச்சினை. இந்தக் கூட்டு இயக்கம் அரசின் இரும்புக்கரத்தைப் பணிய வைத்தது என்பது சாதனை. இதன் வீச்சு அடுத்த தேர்தலிலும் எதிர�ொலித்தது.
36
தங்கதுரை வேலை பார்த்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கலந்து க�ொள்ளவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சிறு குறையால் வெறுப்படைந்த தங்கதுரை ப�ோராட்டத்தில் இருந்த பின்வாங்கினார். அவரைப் ப�ொறுத்தவரையில் இது ஒரு வீழ்ச்சி. அன்றைய முதலமைச்சர் இந்தப் ப�ோராட்டத்தை இ ரு ம் பு க்க ர ம் க�ொ ண் டு அ ட க் கி ன ா ர் . வ ே று வ ழி யி ல்லா ம ல் வீ தி ம ன்ற த் தி ல் இ ரு ந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குப் ப�ோனது. நீதிபதி ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கூறினார். வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு ப�ோனது. உயர்நீதிமன்றக் கனம் நீதிபதிகள் நீதிபதி தினகரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். த�ொழில் சங்க தலைவர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்திற்குப் ப�ோனார். அது இயக்கத்தை முடமாக்கும் தீர்ப்பை அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கத்திற்கு இது பேரிடி. நேர்மையாக நடந்து க�ொள்ள வேண்டிய நீதிமன்றமே அதிகாரத்துக்கு ஆதரவாக நடந்து க�ொண்டது இயக்க வரலாற்றின் ஒரு த�ொடக்கம். படிப்படியாக இந்தப் பார்வை விரிவாகப் பட்டது மட்டுமல்ல. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே ப�ோராடும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அணுக்குண்டைத் தூக்கிப் ப�ோட்டது. தங்கதுரை மேலும் இடிந்து ப�ோகிறார். எழுச்சிகளுக்குப் பின்னான இம்மாதிரியான வீ ழ்ச் சி க ளி ன் க தை த ா ன் ந ா வ ல் . அ க்கா ல த் து முதல்வர்கள், ஆசிரியர் இயக்கத்தலைவர். அரசு ஊழியர் இயக்கத் தலைவர்கள் அரசியல் கட்சிகள், தங்கதுரையின் நண்பர்களான மார்டின், மாரடைப்பில் இறந்துப�ோன தியாகராஜன், குமரன், சாரதி துரைராஜ், அவர் பள்ளி ஆசிரியர்களான பங்கஜம், ஸ்டெல்லா டீச்சர் அவர் மனைவி ஜான்சி, இப்படிப் பல பண்புகள் க�ொண்ட ஆசிரியர்களை, அவர்களுடைய பலங்களை, பலவீனங்களை நுட்பமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன். நாவலின் சிறப்பு அதன் ஓட்டம், வாசிக்க அலுப்புத் தராத விறுவிறுப்பான ஓட்டத்துக்கு நூலாசிரியரின் இயக்க சம்பந்தமான செய்திகள் துணை நிற்கின்றன. எளிய ம�ொழியை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் வி த ம் இ ந்த வி று வி று ப் பு க் கு மே லு ம் து ணை செய்கிறது. மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும் நுட்பமான இடங்களையெல்லாம் கவனமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர். ஆசிரியர் இயக்க வாழ்வின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால எழுச்சியையும், வீழ்ச்சி என்று ச�ொல்லி முடியாத ஒரு பின்வாங்குதலையும் வரலாற்றுப் ப�ோக்கில் பதிவு செய்வதில் இந்த நாவல் வெற்றி பெற்றிருக்கிறது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
த�ொடரும் புத்தகத் திருவிழா
ஆகஸ்ட் ஈர�ோடு ஆகஸ்ட் 1 முதல் 16 வரை பாண்டிச்சேரி ஆகஸ்ட் 16 முதல் 25 வரை மே.பாளையம் ஆகஸ்ட் 5 முதல் 15 வரை க�ோவை ஆகஸ்ட் 19 முதல் 28 வரை தர்மபுரி ஆகஸ்ட் 4,5,6 வரை செப்டம்பர்
மதுரை செப்டம்பர் 2 முதல் 13 வரை உடுமலை செப்டம்பர் 17 முதல் 26 வரை கரூர் அக்டோபர்
ராமநாதபுரம் 28 முதல் நவம்பர் 6 வரை டிசம்பர்
திண்டுக்கல் 1 முதல் 11 வரை சென்னை 2017 ஜனவரி
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
37
நூல் அறிமுகம்:
சாம்பல்களின் விசும்பல்கள்
மாயன்
உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளுக்கு மு க் கி ய த் து வம் வ ா ய்ந்த இ ட மு ண் டு . த மி ழி ல் பேசும், எழுதும் எத்தனைய�ோ ஊடகங்களில் வராத பல உண்மைகளைத் தாங்கி வருபவை அத்தகைய அறிக்கைகள். அந்த அறிக்கைகளில் பொதுவாகக் காணப்படும் இரண்டு அம்சங்கள் கவனிக்கத்தக்கவை: ஒன்று, களத்திலிருந்து நேரடியாகப் பெறப்பட்டு பதிவு செய்யப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், மற்றொன்று நேரடி அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் குழுவினரின் முடிவுகள், பரிந்துரைகள் அல்லது கண்டனங்கள். கவின் மலரின் இந்த நூலிலும் என்னைக் கவர்ந்தவை உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளில் காணப்படும் இந்த அம்சங்கள்தான். இந்த நூலை வாங்கிப் படிப்பவர்கள் நேரடியாக செல்ல வேண்டிய முக்கியமான கட்டுரைகளுள் ஒன்று, பரமக்குடி படுகொலை "பற்றிய சீறிப் பாய்ந்து கொல்லும் சாதியும் அதிகாரமும்" என்ற கட்டுரை. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குரு பூஜையை ஒட்டி நடந்த கொடூரமான கொலைகளின் துயரத்திற்குள் நேரடியாகச் செல்கிறது கட்டுரை. நேரடி சாட்சியங்கள், சொந்தங்களை இழந்தவர்களின் உணர்வுகளின் வழியாக இந்த அரசாங்க இயந்திரத்தின் அத்துமீறலை விவரிக்கிறது கட்டுரை. உண்மையைவிட கூர்மையான விமர்சனம் வேறெதுவும் கிடையாது என்பதற்கு இந்தக் குரல்களே சாட்சியம். வெவ்வேறு காலக் கட்டங்களில், அந்தந்த கால சூழலுக்கு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பில் ஒரு பிரச்சனை உள்ளது. தொகுப்பாகப் படிக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் காலாவதியாகிவிட்டிருக்கும். இந்தத் தொகுப்பில் அத்தகைய உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில் கவின் மலர் கையாண்டுள்ள சாதி ஆணவக் கொலைகள், அதிகார இயந்திரத்தின் அத்துமீறல்கள், ஆ தி க்க ச ா தி வெ றி வெவ்வே று ரூ ப ங ்க ளி ல் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இரண்டு தனி நபர்களின் காதலுக்கு எதிராக சாதி வெறி ஆடும் க�ோரத் தாண்டவத்தை த�ோலுரிக்கும் கட்டுரைகள் இந்த நூலில் அதிகம். இந்த நூல் அச்சேறிய பிறகும் அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் மறைந்த இளவரசனின் பேட்டி ஒ ரு ச ெ வ் வி ய ல் த ன்மையை ப் பெ ற் று வி ட ்ட து . காதலிக்கக்கூட உரிமை இல்லாத ஒரு கொடிய சமூகத்தில் நாம் வாழ்கிற�ோம். காதலித்து மணமுடித்த குற்றத்திற்காக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைக் கொல்லுதல், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆணைக் கொல்லுதல், கலப்பு மணம் புரிந்த இருவரையுமே கொல்லுதல் அல்லது சாதியை மீறி மணம் புரிந்தவர்களுக்கு நெருக்கமானவர்களைக்
38
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் கவின் மலர், எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் சாலை, பொள்ளாச்சி-642002. ரூ.150. கொல்லுதல் என்று நீள்கிறது இந்தக் கொலைக் கரங்கள். எனினும் சில இடங்களில் நூலாசிரியர் தனது உ ண ர் வி ன் வெ ளி ப்பா ட ் டை க் க ா ட் டி யி ரு ப்ப து பத்திரிகை/புத்தக எழுத்திற்கு அவசியமற்றது என்று த�ோன்றுகிறது. "...என்று அவர் அழுதுகொண்டே தேம்பலுக்கிடையே சொல்வதைக் கேட்க முடியாமல் தொண்டையை அடைக்கிறது" என்று கண்ணகிமுருகேசன் சாதி ஆணவக் கொலை பற்றிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். இத்தகைய துயரம் தொண்டையை அடைக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அது அவ்வாறு எழுத்தாளரையும் துன்புறுத்துவதால்தான் அதை எழுத்தில் காத்திரமாக பதிவு செய்கிறார். அந்தத் துயரத்தைப் பதிவு செய்வதே அவரும் அந்தத் துயரத்தைப் ப கிர் கிற ா ர் எ ன்பதைக் க ா ட்டி வி டு கிற து . ப த் தி எழுத்துக்குள் பத்திரிகையாளரும் தனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க வேண்டியதில்லை என்பது எனது அபிப்ராயம். இந்தக் கட்டுரைகளில் ஒரு தரப்பு வாதம் மட்டுமே சத்தமாகக் கேட்பதாக சிலர் குறைகூறலாம். ஆனால் "ஒடுக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே ஊடக அறம்" என முன்னுரையிலேயே தனது பார்வையை கவின்மலர் தெளிவாக்கிவிடுகிறார். இது அரசியல் எழுத்து. இதில் வழக்கமான பத்திரிகையாளர்களின் நடுநிலை வேஷங்களை எதிர்பார்க்காதீர்கள். நடுநிலை என்பதே பாதிக்கப்பட்டவருக்கு எதிரான நிலைபாடு என்பதால், பாதிக்கப்பட்டவர் தரப்பில் நிற்பதே நாம் எடுக்க வேண்டிய நிலைபாடு என்ற கண்ணாடியின் வழியாக இந்தக் கட்டுரைகளைப் படிக்க வேண்டும். ச ா தி வெ றி , ம த வ ா த ம் , வர்த்த க ந�ோக்கம் , சந்தர்ப்பவ ா த ம் உ ள் ளி ட ்ட ஏ ர ா ள ம ா ன வாயிற்காவலர்களால் எடிட் செய்யப்பட்டுவிட்ட ச ெ ய் தி க ளை யு ம் உ ண்மை க ளை யு ம் ச ெ ா ல் லு ம் கட்டுரைகள் இவை. தமிழ் ஊடகச் சூழலில் இத்தகைய பதிவுகள் சொற்பமானவை என்ற அடிப்படையிலும் இவற்றின் பெரும்பாலானவை களத்திலிருந்து பதிவு செய்யப்பட்டவை என்பதும் இந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவத்தை இன்னும் அதிகமாக்குகிறது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
39
40
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
41
colour
42
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
43
colour
44
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
ஒரு புத்தகம் பத்து கேள்விகள்
கதைச�ொல்லி வாசகன�ோடு உரையாடவே விரும்புகிறான்.
லஷ்மிசரவணக்குமார்.
கேள்விகள் - கார்த்திகைபாண்டியன்.
1985ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். த�ொடர்ந்து சி னி ம ா , இ ல க் கி ய ம் எ ன இ ரு த ள ங ்க ளி லு ம் இயங்கிவரும் இவர் பத்துக்கும் மேற்ப்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கிறார். அங்காடித்தெரு, அரவான் காவியத்தலைவன் ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இவர், பல குறும்படங்களையும் இயக்கியுள்ளார். நீலநதி, யாக்கை, வசுந்தரா எனும் நீலவர்ணபறவை, மச்சம், மயானகாண்டம், யானை(தேர்வு செய்யப்பட்ட கதை) உப்புநாய்கள், கானகன், நீலப்படம் ஆகிய நாவல்களும் வெளியாகியுள்ளன. யுவபுரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். உங்களுடைய சிறுகதைகள் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்களை, அவர்களின் இருண்ட பக்கங்களை விரிவாகப் பேசுகின்றன. இதற்கான உந்துதலை நீங்கள் எங்கிருந்து பெறுகிறீர்கள்? நன்றி. ஒரு கதையை எழுதுவதற்கு முன் எந்தவிதமான திட்டமிடல்களும் எனக்குள் இருப்பதில்லை. முன் முடிவுகள�ோடும் எழுத அமர்வதில்லை. ஆனால் ஒ வ்வொ ரு க தை எ ழு து வ த ற் கு ம் அ டி ப்படை கடந்தகால அல்லது நிகழ்காலத்தின் வாழ்வின் ஏத�ோ சம்பவம�ோ மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். என் உலகம் அவர்களால் ஆனது, என்னால் எனக்குத் த�ொடர்பில்லாத மேட்டுக்குடி மனிதர்களின் கதையை எழுத முடியாது. நீங்கள் ஒரு கதை எழுதத் த�ொடங்கும்போதே அக்கதை எந்தப் பாதையில் பயணிக்கும் என்பதை அறிவீர்களா? அதாவது கதைக்களத்தையும் அதன் மாந்தர்களையும் முன்னரே வரையறுத்துக் க�ொள்வீர்களா? அல்லது சம்பந்தமற்ற சூழல்களை உருவாக்கி அவற்றை ஒன்றிணைப்பீர்களா? ஒரு கதை எழுதுவதற்கு முன்னால் தனிநபர் அல்லது ஒரு சம்பவம் இது மாதிரியான சில துண்டு சீட்டுகள் மட்டுமே என் முன்னால் விழுந்துகிடக்கும். அதன் பிறகு எழுதும்போதுதான் கதைக்குள்ளாக ஒரு கதையை உருவாக்க விழைவேன். முழுக்கதையை குறித்த திட்டமிடல்கள் ஒரு வகையில் கதைச�ொல்லியின் விசாலத்தன்மையை பாதிக்கக் கூடும். ஒவ்வொரு கதையின் வழியாகவும் ஒரு கதை ச�ொல்லி ஏத�ோ சில சமாச்சாரங்களை வாசகன�ோடு உரையாடவே விரும்புகிறான், ஆக, அங்கு முன்முடிவுகள் இருக்கும் பட்சத்தில் அந்த உரையாடல் திறந்த மனதுடன் நிகழ்ந்ததாக இருக்காது.
உங்களுடைய ஆரம்ப கால கதைகளில் காணக்கிடைத்த மாய யதார்த்தக்கூறுகள் சமீபத்தைய கதைகளில் காணத் கிடைக்கவில்லை. அவை பெரும்பாலும் யதார்த்தத் தளத்திலேயே பயணிக்கின்றன. இந்த மாற்றத்தை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? இது தற்செயலாக நிகழ்ந்த மாற்றமா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா? இது நான் திட்டமிட்டு உருவாக்கிக் க�ொண்டதுதான். ஒரு கதையை புதிய ந�ோக்கில் அணுகவும் ச�ொல்லவும் முற்றிலும் வேற�ொரு மனநிலை தேவைப்படுகிறது. மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் கதைகளின் அரசியல் தன்மையும் முக்கியமானது. அந்தக் கதைதான் அதன் வடிவத்தையும் எடுத்துக் க�ொள்கிறது. நான் சமீபகாலங்களில் எழுதிய கதைகள் பெரும்பாலும் யதார்த்தவகைதான் என்றாலும், தமிழில் புளித்துப் ப�ோன ர�ொமாண்டிசத்திற்குள் அவை சேர்வதில்லை. யதார்த்தத் தளத்தில் கதை ச�ொல்வதற்குமே க�ொஞ்சம் பயிற்சி தேவைப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் ஒரு எழுத்தாளன் அனேக வாசகர்களால் வாசிக்கப்படத் துவங்கும்போது அவன் அவர்களுக்காக ம�ொழி ரீதியாக சில சமரசங்களை செய்து க�ொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. நான் இறுக்கமாகத்தான் எழுதுவேன் என்றிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாய யதார்த்தவாதம் சார்ந்த எழுத்துகளுக்கு தமிழில் தேவை உள்ளதா? தமிழ் சமூகத்தின் அரசியல் நெருக்கடிகளை அப்படியே எழுதி அது பெருமளவிலான வாசகர்களால் வாசிக்கப்பட்டால் ஏற்படும் பின் விளைவுகளை ய�ோசித்துப் பாருங்கள். மாய யதார்த்த வகையில் சூசகமாகவும் அழுத்தமாகவும் ச�ொல்ல ஏராளமான சாத்தியங்களுண்டு. தமிழில் எழுதப்பட்ட, எழுதப்படும்
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
45
அனேக மாய யதார்த்த வகைக் கதைகள் அவை த�ொடர்கின்றன. என்னை அதிகமான நெடில் வார்த்தைகளைக் வெறுக்கிற பலருக்கு என்னையும் க�ொண்டு நீண்ட வாக்கியங்களால் தெ ரி ய ா து எ ன் எ ழு த்தை யு ம் எழுதிவிட்டதாலேயே அப்படி ஏற்றுக் தெரியாது. அவர்கள் ச�ோஷியல் க�ொள்ளப்பட்டவையாக இருக்கின்றன. நெ ட ்வொ ர் க் கி ல் உ ல வு ம் அழுத்தமான விளைவுகளை உருவாக்கிய வ த ந் தி க ளி ன் வ ழி அ றி ந்த கதைகள் குறைவானவையே. லஷ்மி சரவணகுமாரை க�ொலை செய்யும் அளவிற்கு வன்மத்தோடு நீங்கள் எழுதியவற்றுள் உங்களுக்கு அ லைவ தி ன் ம ன நி லையை மிகப்பிடித்த ஆனால் மற்றவர்களால் எ ன்னா லு ம் பு ரி ந் து க�ொ ள ்ள அத்தனை கவனத்துக்குட்படுத்தப்பாத மு டி ய வி ல்லை . த னி ப்ப ட ்ட கதைகள் என்று ஏதேனும் உள்ளனவா? வ ா ழ் வி ல் வைக்கப்ப டு ம் ப ல நிறைய உண்டு. வசுந்தரா என்னும் தாக்குதல்களால் நிறைய முறை நீலவர்ணப் பறவை, கல் மண்டபம், உ டை ந் து ப�ோ யி ரு க் கி றே ன் . சுப்பு, மயான காண்டம், த்தூ என சில பு த்த க ங ்க ளி ன் மீ து எ த்தனை கதைகள் வெவ்வேறு காரணங்களால் க டு ம ை ய ா ன வி ம ர்ச ன ம் எனக்கு விருப்பமான கதைகள். ஆனால் வைத்தா லு ம் அ தை ஏ ற் று க் பெருமளவில் அவை வாசிக்கப்படவ�ோ க�ொள்ளும் பக்குவம் இருக்கிறது. விவாதிக்கப்படவ�ோ இல்லை. ட�ோனி மாரிசன் ஒரு பேட்டியில் உங்கள் கதைகளுக்குள் த�ொடர்ச்சியாக தான் எழுதுவதற்குமுன் சில சடங்குகளை பாவிப்பதாகக் கடவுளும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார்... குறிப்பிடுகிறார். அதிகாலை நாலு மணிக்கு முன்பாக க ட வு ளை எ ன் ஆ ல்ட்ட ர் ஈ க�ோவ ா க எழுவது, குறிப்பிட்ட ஒரு பாடலைப் பாடுவது.. வைத்தே அந்தக் கதைகளையும் கவிதைகளையும் இது ப�ோன்ற வழமையான எளிய சடங்குகள். எழுதுகிறேன். கடவுள் என்பவரை அதிகாரத்தின் எழுதுவதற்கான மனநிலையை உருவாக்க இதுப�ோன்ற தூய்மைப்படுத்தப்பட்ட வடிவமாய் பாதுகாப்பதில் சடங்குகள் உதவுவதாகவும் அவர் ச�ொல்கிறார். நீங்கள் எனக்கு உடன்பாடில்லை. அதனால்தான் கடவுள் அதுப�ோன்ற காரியங்களில் ஈடுபடுவது உண்டா? குறித்து நம்பப்படும் எல்லாவற்றிலிருந்தும் அவரைப் இதெல்லாமே சுத்த ஹம்பக். தனியாக இருந்தால் விடுவித்துவிட்டு இழிவுகளுக்கும் அருவருப்புகளுக்கு தான் கதை வரும். இப்படி இருக்க வேண்டும் அப்படி அவரை பழக்கப்படுத்துகிறேன். இப்படி எழுதுவதால் இருக்க வேண்டுமென எதுவும் எனக்கு இல்லை. நான் நான் ஆன்மீக நாட்டம் க�ொண்டவனென ஆகிவிடாது. எனது முதல் கதையை நாற்பது விசைத்தறிகள் இயங்கும் நான் முட்டாள் தனமான வழிபாடுகளின்மீதான எனது கம்பெனியில் நைட் ஷிஃப்டில் தறி ஓட்டியபடிதான் எதிர்வினைகளை நிகழ்த்துகிறேன் அவ்வளவுதான். எழுதினேன். சென்னையில் தங்க இடமில்லாத மற்றபடி யாருடைய நம்பிக்கைகளையும் நான் எத்தனைய�ோ நாட்களில் சாலைய�ோரங்கள் இரவு கேள்விக்குட்படுத்துவதில்லை. நேர பிளாட்ஃபார்ம்களென ஒதுங்கக் கிடைத்த எல்லா விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? இடங்களிலும் எழுதியிருக்கிறேன். சமீப நாட்களாய் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருப்பதாக ஃப�ோரம் மாலில் இருக்கும் ஃபுட் க�ோர்ட்டில் மனித நம்புகிறீர்களா? இரைச்சல்களுக்கு மத்தியில் எழுதப் பிடித்திருக்கிறது. சரியான விமர்சனங்கள் ஒரு எழுத்தாளனுக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறுகதைகள் எழுதி அத்யாவசியமானவை. விமர்சகன், வாசகன் என்கிற வருகிறீர்கள். தமிழ்ச்சூழல் எப்போதாவது உங்களை பேதங்களைத் தாண்டி நமது படைப்பு குறித்த சலிப்பாக உணரச் செய்திருக்கிறதா? ஒருவரின் ச�ொற்களைக் கவனிக்க வேண்டியது நமது இ ல்லை . இ ன் னு ம் பு தி ய வி ச ய ங ்களை கடமையும் கூட. நாம் பார்த்த அதே உலகின் எழுதுவதற்கான உற்சாகமே துளிர்த்தபடி இருக்கிறது. பார்க்கத் தவறிய அனேக க�ோணங்களை விமர்சகர்கள் ஒப்பீட்டளவில் இந்தியச் சிறுகதைகளில் தமிழ் தான் அடையாளப்படுத்த முடியும். ஆக நல்ல சிறுகதைகள் தனித்துவமான இடத்திலிருக்கின்றன. விமர்சனங்களிலிருந்து கற்றுக் க�ொள்ள நிறையவே உ ல க அ ள வி ல் எ டு த் து ச் ச �ொல்ல க் கூ டி ய இருக்கிறது. நூறுகதைகளையாவது நம்மிடம் ச�ொல்ல முடியும். உங்களைக் காயப்படுத்திய விமர்சனங்கள் ஏதேனும் ஆக இங்கு முன்னோடிகளைக் கடந்து சில உக்கிரமான உண்டா? கதைகளையாவது எழுதிவிட வேண்டுமென்கிற தவிப்பு த மி ழி ல் பெ ரு ம ்பா ல ா ன வி ம ர்ச ன ங ்கள் த�ொடர்ந்து இயங்கச் செய்தபடியே இருக்கிறது. க ா ய ப்ப டு த் து வ த ற்கா க வ ே எ ழு த ப்ப டு கி ன்ற ன . எழுத இன்னும் ஒரு நூறு கதைகள் இருக்கின்றன, பிரதியின் மீதல்லாது தனிநபர் மீதான தாக்குதலாகவே இப்போதைக்கு அவகாசம் தான் குறைவாயுள்ளது.
46
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
அன்று வேறு கிழமையாய் இருந்திருக்கலாம்...
மனிதர்க்குத் த�ோழனடி
(உயிரினங்கள் உலகில் ஓர் உலா) ஆதி.வள்ளியப்பன்/ பாரதி புத்தகாலயம்/சென்னை/ விலை ரூ.50. இயற்கையுடன் நாம் க�ொண்டிருந்த நெருக்கம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது ப�ோலாகிவிட்டது. காக்கை குருவிகள் த�ொடங்கி மண்புழுக்கள் வரை அனைத்துமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பி உயிரினங்களின் உலகைப் புரிந்து க�ொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல். இன்றைய நவீன நாகரீக மனிதன் வீட்டுப் பெட்டிகளில் அடைபட்டு வாழ்வதால் அவன் சமூகத்துடன் இணைந்து வாழ இயலாத சூழல் உருவாகிவிட்டது. சின்னஞ்சிறிய பறவை இனம் புழுக்கள் முதலியவை மனிதனால் அழிந்துவிட்டது என்று ச�ொல்லும் ஆசிரியர், இந்த உலகைப் புரிந்து க�ொள்ள, நாம் வாழத் தவறிய மற்றொரு உலகின் பகுதியின் ஆச்சரியங்களை அப்பகுதியின் உயிரினங்களைப் பற்றி இப்புத்தகத்தில் பேசுகிறார்.
நாராய் நாராய்
(பறவை சரணாலயங்கள் வழிகாட்டி) ஆதி. வள்ளியப்பன்/பாரதி புத்தகாலயம்/ விலை ரூ. 50. ப ற வை க ள் எ ன்றாலே இ ந் தி ய ா வி ன் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வ ரு ம் . ம க்க ளு ம் ப ற வை க ளு ம் நெ ரு க்க ம ா ன உறவைக் க�ொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுப�ோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில். பறவைகளை ந�ோக்குவதற்கு எளிதாக வழிகாட்டுகிறது இந்நூல். சூழலியல் உயிரினப் பன்மை காட்டுயிர்களைப் புரிந்து க�ொள்ள பறவைகள் மிகச் சிறந்த கருவிகள் என்பதை இப் புத்தகம் உணர்த்துகிறது. பறவைகளின் உயிர்ப்பிலிருந்தே மனித உயிரினம் வளத்துடன் நிகழ்கிறதா மாசுபட்டிருகிறதா என்பதை அடையாளப்படுத்திவிடமுடியும் என்பதை எச்சரிக்கையாக இப்புத்தகம் பேசுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கவிதைப் பரப்பில் தனக்கென்று தனித்துவமான இடம், ம�ொழி, த�ொனி, கருத்துகள�ோடு வலம் வந்தவர் ரங்கராஜன் என்ற இயற்பெயர் க�ொண்ட ஞானக் கூத்தன். ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் என பாரதி, பாரதிதாசன் பரம்பரையிலிருந்து விடுபட்டு நவீன தமிழ்கவிதையை எழுத ஆரம்பித்த பாரம்பரியத்தில், அதிலிருந்தும் ஒரு உடைப்போடு வெளிவந்த கவிஞர்களின் முதன்மையானவர் ஞானக்கூத்தன். ‘நீருக்கு மேலே நின்றாலும் எம் வேருக்கு அடைக்கலம் பூமியின் மேனியே’ என்ற இன்குலாபின் வரிகளுக்கு ஒப்ப தனது முந்தைய தலைமுறையிலிருந்து தனித்தெழுந்தாலும் 2000ஆண்டு தமிழ்க் கவிதைப் பாரம்பரத்தில் ஆழக் காலூன்றியவராக இருந்தார். க சட த ப ற ஆ சி ரி ய ர் கு ழு வி ல் மு க் கி ய ம ா ன பங்காற்றியவர், அதுதவிர நடை, கணையாழி, தீபம், அஃக், சதங்கை ஆகிய சிற்றிதழ்களிலும் த�ொடர்ந்து அவரது கவிதைகள் வந்தன. ‘அம்மாவின் ப�ொய்கள், த�ோழர் ம�ோசிகீரனார்’, பரிசல் வாழ்க்கை ப�ோன்ற பல கவிதைகள் இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் அவர் பெயர் ச�ொல்லும். அவரது உலக ந�ோக்கு, கருத்துகள் அவரது கவிதைகளிலுள்ள வெளிப்படையான மற்றும் நுண்ணரசியல் ஆகியவற்றை ஏற்றுக் க�ொள்ளாதவர்களும் அவரது கவிதைகளின் கவித்துவம் மற்றும் த�ொனிக்கு மயங்காது இருப்பது இயலாது. மாற்றுக் கருத்துள்ளவர்கள�ோடும் அவர் மிகவும் மென்மையாக உரையாடுபவராகவே த�ொடர்ந்து இருந்து வந்தார். தமிழ்க் கவிதையின் இன்றைய விரிவு, ஆழம், அழகு, த�ொனி, தனித்துவம் முதலியவற்றுக்கு பாதை சமைத்தவர்களில் முக்கியமானவர். புத்தகம் பேசுது அந்த பெருங்கவிஞருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செய்கின்றது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
47
ஸ்டாலின்குறித்த குருஷ்சேவின் ப�ொய்கள்குறித்த அரை உண்மைகள் - ப.கு. ராஜன்
ஸ்டா லி ன் ! வி ட ா து க ரு ப் பு எ ன சர ்வ தேச ப�ொதுவுடமை இயக்கத்தின் மீது எளிதில் நீங்காத நிழலாய் படிந்துள்ள பெயர். உலகின் பெரும்பகுதி இடது சாரிகளால் ஸ்டா லி னி ய ம் ம று த லி த் து ஒ து க்கப்பட் டு வி ட ்ட து எ ன்ப து த ா ன் எ த ா ர்த்தம் . ஆ ன ா லு ம் ப�ொ து வு ட ம ை , ச�ோச லி சம் , ம ா ர் க் சி ய ம் ஆ கி ய வ ற் றி ன் க ரு த் து நி லை எதிர் முகாமும் செயல்பாட்டு எ தி ர் மு க ா ம ்க ளு ம் ச த ா சர்வகாலமும் மார்க்சியத்தை ஸ்டா லி னி ய த் த ோ டு அடையாளப்படுத்தி அவதூறு ச ெ ய ்வ து த�ொட ர் கி ன்ற து . அதில் பெரும்பகுதியானவருக்கு இ து த வ று எ ன் று ந ன் கு தெரியும். ஆனாலும் நெஞ்சறிய ப�ொ ய் யு ம் வ ஞ ்ச க மு ம ா ய் இதனைத் த�ொடர்கின்றனர். ஒரு சிறு பகுதி உண்மையிலேயே விவரம் புரியாதவர்கள் அல்லது ஸ்டாலினியம் புறம�ொதுக்கப்பட்ட மார்க்சியம் சாத்தியம் என்பதை ஏற்க மறுப்பவர்கள். ‘காலமும் மண்ணும் மூட முடியாத மார்க்ஸை, அவர் குறித்த தவறான விளக்கங்கள் மூடி மறைத்துள்ளன. இந்தத் தவறான விளக்கங்களைத் தந்தவர்களில் மார்க்சின் எதிரிகள் மட்டுமல்ல, மார்க்சின் நண்பர்களும் அடங்குவர் என்பதை விளக்குவார் எனர்ஸ்ட் ஃபிஷர் (காண்க. மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? தமிழில்: மிலிட்டரி ப�ொன்னுசாமி - _ எர்னஸ்ட் ஃபிஷர் _ பாரதி புத்தகாலயம்.) அது ப�ோல மார்க்சியத்தை ஸ்டாலினியத்தோடு முடிச்சுப் ப�ோடும் இந்தப் ப�ோக்கிற்கு ப�ொதுவுடமை, ச�ோசலிசம் ஆகியவற்றுக்குப் ப�ோராடக்கூடிய, தம்மை மார்க்சிஸ்ட் என அடையாளப்படுத்திக் க�ொள்பவர்களும் காரணமாய் இருக்கின்றனர் என்பது உண்மையே. உலகின் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடது சாரிகளும் ஸ்டாலினையும், ஸ்டாலினியத்தையும் பு ற ம�ொ து க் கி வி ட ்ட ன ர் . அ ல்ல து அ வ்வா று கூறுகின்றனர். ஏனென்றால், ஸ்டாலினியம் ஜாதியம் ப�ோன்றது. உணர்ந்தவர்கள் எல்லாம் கடந்தவர்கள்
48
அல்ல. ஆனாலும் ஸ்டாலினுக்குச் செவ்வணக்கம் ச�ொல்வதற்கு உலகெங்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். மேற்கு உலகில் கே ட ்க வ ே வ ேண்டாம் . அ ங் கு நி னை த் து ம் ப ா ர்க்க முடியாத எண்ணிக்கைகளில் வகை வகையாய் இடது சாரிக் குழுக்கள் இருந்து வருகின்றன. மூ ன் று பே ர் இ ரு ந்தா ல் 4 க ட் சி க ள் , 5 சஞ் சி கை க ள் , அ தி ல் ஒ ரு வரைய�ொ ரு வ ர் குதறியெடுத்துக் க�ொண்டிருப்பர். மார்க்ஸை ‘இடதுசாரி’ என ஏற்றுக் க�ொள்ளாத பாகூன், பு ரூ த�ோ ன் வ ழி சந்த தி க ள் , லெ னி ன் , ‘ ' இ ட து ச ா ரி அதிதீவிரவாதி'’ எனக் கூறும் தூய மார்க்சிஸ்டுகள், இல்லை இல்லை லெனின் 'ஒரு ‘வலதுசாரி'’ எனக் கூறும் ‘'இடது கம்யூனிஸ்டுகள்'’ எ ன வ ா ன வி ல் வெட் கி த் த லை கு னி யு ம் அ ள வி ற் கு வண்ணங்களின் பரப்பு. இதில் டிராஸ்கியர்கள்! இவர்கள் மற்றவர்கள் அ னைவரை யு ம் ப ள் ளி ச் சி று ப ா ல க ர்கள் எ ன ஆக்கிவிடுவார்கள். ஒவ்வொரு கவுண்டியிலும் (பஞ்சாயத்து வார்டு?) இருக்கும் டிராஸ்கிய குழு ஒரு உலகம் தழுவிய டிராட்கிய அகிலத்தின் தலைமைக் குழுதான். அவர்கள் செயல்பாட்டின் பெ ரு ம ்ப கு தி ஏ னை ய டி ர ா ட் சி ய கு ழு க்க ளி ன் புட்டத்தை புரட்சிகரமாய் கடித்துக் குதறுவதுதான். இவர்கள் எல்லோரையும் ஒரு கால்பந்து மைதானத்தில் அடைத்துச் சாத்தினால் இரண்டு டீம் அமைப்பதற்கு இன்னும் 1 1/2 ஆள் வேண்டும் என்பதுதான் நிலையாக இருக்கும். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என எம் த�ொப்புள் க�ொடி உறவுகளான ஈழத் தமிழ் டிராட்ஸ்கிய த�ோழர்கள் கதைப்பது கேட்கிறது. உண்மைதான், பழம் பெருமை வாய்ந்த பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கட்சி க�ொண்டுள்ள ம�ொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500க்கும் குறைவு எனக் கூறப்படுகின்றது. இத்தகைய குறுங்குழுக்களில் ஓரிரண்டு ஸ்டாலினியக் குழுக்களும் உள்ளன. நூறு ஸ்டாலின் எதிர்ப்பு டிராட்ஸ்கிய குழுக்கள் இருந்தால் ஒரு ஸ்டாலினிய
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
குழு இருக்கும். ஸ்டாலினின் பெயரும் இது ப�ோன்ற இருந்த டிராட்ஸ்கி, ஜின�ோவிவ், கமனேவ், புகாரின் குழுக்களும் இடது புறம் திரும்பும் அறிவு ஜீவிகளையும் ஆகிய�ோரின் பங்களிப்புகள் மூன்று பதிப்பிலும் ஜனநாயக ஆர்வலர்களையும் அச்சுறுத்தும் உபத்திரவம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ஒரு சமநிலையில், இல்லாத ச�ோளக் க�ொல்லைப் ப�ொம்மைகளாகப் அ க வி ய ல் ச ா ர் பி ன் றி , பு ற வ ய எ த ா ர்த்த ம ா ன பயன்படுகின்றன என்பதால், இவர்கள் மீது சிறிது அணுகுமுறையில் எழுதப்பட்ட வரலாற்று நூல் முதலாளித்துவ ஊடக வெளிச்சம் அவ்வப்போது வ ே ண் டு வ �ோ ர் மே ற் கு ல கி ன் ப ல்கலை க் க ழ க விழுவதும் நடக்கும். பதிப்புகளையே நாட வேண்டியுள்ளது. அங்கும் இது தவிர ச�ோவியத் சாதனைகள் அனைத்தையும் முழுமையான ஒத்த கருத்தில்லை. என்றாலும் மேற்குலக ஸ்டாலின் பூதத்தால் மறைக்கும் முயற்சியை எதிர்த்து பல்கலைக் கழகங்களின் ஜனநாயகம் கருத்துகளின் பேசும்போது ஓரளவு செல்வாக்குடன் இருக்கும் ரசிய ம�ோதலுக்கும், விவாதத்திற்கும் வெளி க�ொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியும் கூட ஸ்டாலின் மீது சற்றே பனிப்போர் காலத்திலிருந்த ச�ோவியத் ‘முற்றதிகாரம்‘ பாசத்தோடு இருப்பது ப�ோல த�ோற்றம் வந்துவிடுவதும் (Soviet Totalitarianism) எனும் கருத்தே இன்றைக்கு நடக்கின்றது. இன்று வரை ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருசாரர் எழுத்துகளில் பின்னே ப�ோயுள்ளது. ஸ்டாலின் நிகிதா குருஷேவ், 20 ஆவது கட்சிக் காங்கிரஸில் காலத்திய வரலாற்றை ஏத�ோ ஒரு சர்வாதிகாரியின் ஸ்டாலின் குறித்து ஆற்றிய உரையைய�ோ இல்லை காலத்திய வரலாறு என்று பார்க்கும் நிலை மாறி அதனைச் சுற்றி வளைத்து அங்கீகரித்த க�ோர்ப்பசேவின் அந்த கால கட்டத்தின் சமூக ப�ொருளாதார நிலைகள், முடிவைய�ோ, மறுதலிக்கவில்லை. அட அதெல்லாம் சர்வதேச அரசியல் ராணுவ நிலை ஆகியவற்றின் எப்போத�ோ முடிந்த கதை என்கின்றீர்களா? அப்படி பின்னணிய�ோடு வைத்து ஆய்வு செய்வது வழக்கிற்கு ஆட்களா? 1935 ஆம் ஆண்டு தேசத் துர�ோகக் குற்றம் வ ந் து ள ்ள து . இ வர்கள் ‘ தி ரி பு வ ா தி க ள் ’ எ ன சாட்டப்பட்டு ஒரு ப�ோலி வழக்கு நடத்தப்பட்டு, மற்றவர்களால் அழைக்கப்படுகின்றனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு, இருட்டறையில் 1 9 9 1 ஆ ம் ஆ ண் டு ச�ோ வி ய த் யூ னி ய னி ன் முழங்காலில் பணிக்கப்பட்டு, பின் மண்டையில் சீர்குலைவிற்குப் பின் ச�ோவியத் அரசு மற்றும் ச�ோவியத் சுடப்பட்டு மூளையின் வெண்சாந்து சிதறி ஈரம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பகங்கள் திறந்து கசியும் கரும்பச்சைச் சுவர்களில் அப்பி வழிய விடப்படுவதும் பின் மூடப்படுவதும் மாறி மாறி படுக�ொலையானவர் நிக்கோலாய் புக்காரின். அவர் நடந்துள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் ‘குற்றமற்றவர்’ என இறந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பல பல்கலைக் கழக அரசியல், ப�ொருளாதார, சமூக, அன்றைய ச�ோவியத் யூனியனின் உச்ச நீதிமன்றம் வரலாற்றுப் பேராசிரியர்கள் பல ஆய்வு விளக்க தீர்ப்பு வழங்கியது. அதன்பின் இறந்து 50 வயது ஆன நூல்களை எழுதியுள்ளனர். அவர் கட்சி உறுப்பினர் எனப் புதுப்பிக்கப்பட்டார். ஜான் ஆர்க். கெட்டி (J. Arch Getty), ஷீலா இத்தகைய பாரம்பரியம் உள்ள கட்சி, குருஷேவ், ஃபிட்ஜ்பாட்ரிக் (Shiela Fritzpatrich) ராபர்ட்டா க�ோர்ப்பசேவ் கருத்துகளை மறுதலிக்கவில்லை என்பது மானிங் (Roberta Maning) ப�ோன்றோர் இந்த கவனத்தில் க�ொள்ள வேண்டிய செய்தி தான். வகையைச் சேர்ந்தவர்கள் எனலாம். ஆவணங்கள் ‘யாரைத்தான் நம்புவத�ோ பேதை நெஞ்சம்’ என அ டி ப்படை யி ல ா ன அ வர்க ள து வி வ ர ணை க ள் , ஒரு சினிமாப் பாடல் உண்டு. ச�ோவியத் மற்றும் கிழக்கு விளக்கங்கள், ஆய்வு முடிவுகள் விவாதத்திற்கு உரிய ஐர�ோப்பிய, சீன நிலைமைகள் குறித்து யார் கூறுவதை த கு தி ப டைத்தவை , மு ழு ம ை ய ா க நி ர ா க ரி ப்ப து நம்புவது? யார் கூறுவதை நம்பாது இருப்பது? என்பது அறிவுடமை ஆகாது என்றே படுகின்றது. இவர்களைத் ஒரு பிரச்சனைதான். ச�ோவியத் சீர்குலைவிற்குப் பின் தாண்டி ஏத�ோ ஒரு வகையில் ச�ோசலிசம் எனும் சென்னையில் அதுகுறித்துப் பேசிய த�ோழர் ஈ.எம். கருத்துரு மீது மதிப்புடன் எழுதிய இ.ஹெச். கார், எஸ். அவர்களே ‘நாம் நம்பவைக்கப்பட்டோம், (we ஸ்டீஃபன் க�ோஹன், ராய் மெத்வதேவ், ம�ோஷே are made to believe) என வருந்திச் ச�ொல்லும் லெவின், அலக் ந�ோவே ஆகிய�ோரும் உள்ளனர். நிலையில் இருந்தப�ோது, மற்றவர்கள் நிலை குறித்துக் இவர்கள், ஸ்டாலினிசத்திற்கும் ஸ்டாலின் கடைப் கூற வேண்டியதில்லை. பிடித்த வழிமுறைகளுக்கும் அன்றைக்கே மாற்று ‘ப�ோல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான இருந்ததாகக் கூறுபவர்கள். டாய்ட்சர் டிராட்ஸ்கி வரலாறு’ என்ற புகழ் பெற்ற நூலை பலரும் அறிந்திருப்பர். சார்பானவர்; க�ோஹன் புக்காரின் சார்பானவர்; அதனையும் சேர்த்து ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றவர்களை அப்படி கூறிவிட முடியாது. வரலாறு குறித்து மூன்று அதிகாரபூர்வ நூல்கள் இவர்களிலும் யாரை நம்புவது என்பது சற்று சிந்திக்க உள்ளன. முதலாவது ஸ்டாலின் காலத்தில் வந்தது. வேண்டிய வினாதான். ஸ்பிக்னு பிரெஜெஜின்ஸ்க்கி இரண்டாவது குருஷ்சேவின் காலத்திலும், மூன்றாவது (Zbigniew Brzezinski) வியட்நாம் ப�ோரின்போது பிரஸ்னேவ் காலத்திலும் வந்தன. ஒவ்வொன்றும் அந்தந்த அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு ஆல�ோசகர். காலகட்டத்தில் இருந்த கட்சித் தலைமையின் கருத்தை நிக்ஸன், கிஸ்ஸின்ஜர் ஜ�ோடியின் ‘சமாதானப் ப�ோக்கை’ பிரதிபலிப்பதாகவே உள்ளது. மூன்று கட்டத்திலும் கடுமையாய் விமர்சிக்கும் அளவிற்குக் கடைந்தெடுத்த இந்த தலைமைகளுக்கு வேண்டப்படாதவர்களாக
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
49
கம்யூனிசத் துவேஷி. இவரும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம், க�ொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பேராசிரியர் என்ற ஹ�ோதாவில் ஓர் ஆய்வறிஞராக ச�ோவியத் யூனியன் குறித்து எழுதுவார். இவர் எழுதுவதை ‘விருப்பு வெறுப்பற்ற’ புறநிலை ஆய்வு முடிவு என கருதினால் அதைக் காட்டிலும் அறிவின்மை இருக்க முடியாது. அவர்தான் க�ொலம்பியாப் பல்கலைக் கழகத்தின் கம்யூனிஸ்ட் ஆய்வுக் கழகத்தில் (Institute on Communist Affiars) 30 ஆண்டுகாலம் (1960 _ 1989) தலைவர். அவர் தலைமையிலான ஆய்வின் சார்பின்மை குறித்து நாம் சந்தேகப்படவே வேண்டியதில்லை. அதைப் ப�ோலவே ரிச்சர்ட் பைப்ஸ் -_ ஹார்வர்டு பேராசிரியர், சி.ஐ.ஏ.யின் ஆய்வாளர், ஆல�ோசகர்; ராபர்ட் கன்குவெஸ்ட் பிரிட்டீஷ் உளவு அமைப்பின் எதிர்பிரச்சாரத் துறைத் தலைவர், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர். இவர்கள்தாம், 20 மில்லியன் படுக�ொலை, பெரும் பயங்கரம் (The Great Terror) முற்றதிகாரம் (Totallitarian Regime) கிரிமினல் சர்வாதிகாரி, மன�ோவியாதி க�ொலைகாரன் ப�ோன்ற கருத்துகள் காலூன்றக் காரணமானவர்கள். இவர்கள் எழுதியவற்றை நம்புவதும், தன்னைத் தானே புகழ்ந்து ஸ்டாலினது தலைமையில் அவரது துதிபாடிகள் எழுதிக் க�ொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு நூல்களை விருப்பு வெறுப்பு இன்றி வரலாற்றைப் புறநிலை எதார்த்தமாய்ப் பார்த்து எழுதியது என நம்புவதும் ம�ௌடீக நாணயத்தின் இரு பக்கங்கள்தாம். நி லை ம ை இ ப்ப டி சி க்க ல ா க இ ரு க்க , அமெரிக்காவின் மாண்ட்கிளேய்ர் அரசுப் பல்கலைக் கழகத்தின் (Montclair State University)ஆங்கிலப் பேராசிரியர் குர�ோவர் ஃபர் (Khurushev Lied)ஒரு நூல் எழுதியுள்ளார். ‘குருஷேவ் ப�ொய் கூறினார்’ (Khurushev Lied) எனும் தலைப்பில் அந்த நூல் வந்துள்ளது. இந்தியாவில் ஸ்டாலின் மீது மதிப்பும் மரியாதையும் க�ொண்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது தமிழில் ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் ப�ொய்கள்’ என்ற பெயரில் த�ோழர். நடசேன் ம�ொழி பெயர்ப்பில் ப�ொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியில் தீவிர ரசிய வலதுசாரி ஏடான ‘ரஷ்கிய வெஸ்ட்நிக்’ அதனைப் புகழ்ந்து வரவேற்றுள்ளது. ரசியாவில�ோ ஐர�ோப்பியாவில�ோ உள்ள ஸ்டாலினிய குறுங்குழுக்கள் எதுவும்கூட அந்த நூலைப் ப�ொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதற்கு காரணம் உள்ளது. அது கடைசியில்; நூல் என்ன ச�ொல்கிறது என்பதைப் பார்ப்போம். ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது கட்சிக் காங்கிரஸ் 1956ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 14 _ 25 தேதிகளில் நடந்தது. காங்கிரஸின் கடைசி நாளன்று கட்சியின் ப�ொதுச் செயலாளரான நிகிதா குருஷ்சேவ், ஸ்டாலின் குறித்த ஒரு ரகசிய உரையை நிகழ்த்தினார். சுமார் 4 மணி நேரத்திற்கு நடந்த அந்த உரை.
50
காங்கிரஸ் ஆவணங்களில் இடம்பெறவில்லை. ‘ ' த னி ந ப ர் வ ழி ப ா டு ம் அ த ன் வி ளை வு க ளு ம் ' ’ (On the cutt of personality and its consequences’) என்ற பெயரிலான அந்த அறிக்கை பின்னர் ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளுக்கெல்லாம் அளிக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடந்துள்ளன. அறிக்கை 1956ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ். ஃபிரான்சின் ‘லெ மாண்டே’, பிரிட்டனின் ‘அப்சர்வேர்’ ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், ச�ோவியத் அரசும் அந்த அறிக்கையை உண்மை என்று ச�ொல்லி அங்கீகரிக்கவும் இல்லை. ப�ொய் என்று ச�ொல்லி நிராகரிக்கவும் இல்லை. பின்னர் க�ோர்பசேவ் பதவிக்கு வந்தபிறகு 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் அதாவது 33 ஆண்டுகள் கழித்து ‘'இஸ்வெஸ்தியா சிகே கேபிஎஸ்எஸ்' ‘ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு அறிக்கைகள்’ எனும் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் அதிகாரபூர்வமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டாலின்மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அறிக்கை ச�ோவியத் யூனியனிலும் உலக ச�ோசலிச முகாமிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக இருந்தது என்று ச�ொன்னால் மிகையாகாது. இந்த அறிக்கையைத் தான் குர�ோவர் ஃபர் தனது அடிப்படையாகக் க�ொண்டுள்ளார். குருஷேவின் அறிக்கையில் ஸ்டாலின் மீது 61 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்று கணக்கு கூறும் குரேவர் ஃபர் அதில் ஒன்றுகூட உண்மை இல்லை. இதில் எந்த ஒரு குற்றத்தையும் ஸ்டாலின் செய்யவில்லை. எல்லாக் குற்றச் சாட்டுகளிலும் குருஷேவ் ப�ொய் கூறியுள்ளார். ஸ்டாலின் எந்தவித குற்றமும் இழைக்காத பத்தரை மாற்றுத் தங்கம் என்று வாதிடுகின்றார். சரி அப்படியென்றால் ஸ்டாலின் சகாப்தத்தில் அங்கு எந்தவிதத் குற்றம் நடைபெறவில்லையா என்றால் அவற்றை குர�ோவர் மறுக்கவில்லை. ‘'வெற்றியாளர்களின் காங்கிரஸ்'’ என்று அழைக்கப்பட்ட ச�ோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது கட்சிக் காங்கிரஸின் 1966 பிரதிநிதிகளில் 1108 பேர் சுட்டுக் க�ொல்லப்பட்டனர். அந்தக் கட்சிக் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட 139 மத்திய குழு உறுப்பினர்களில் 98 பேர் சுட்டுக் க�ொல்லப்பட்டனர். வாவில�ோவ் ப�ோன்ற எண்ணற்ற அறிவியல் வல்லுனர்கள் ஓசிப் மெண்டில்ஸ்தாம் ப�ோன்ற கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், துக்காச் சாவ்ஸ்க்கி ப�ோன்ற செம்படையின் முன்னணித் தளபதிகள் என ச�ோவியத் நாட்டின் உன்னதமான பு த ல ்வ ர்கள் , பு ர ட் சி யை ந ட த் தி ய வீ ர ர்கள் , தேசத்துர�ோகக் குற்றம் சாட்டப்பட்டு ப�ோலி வழக்குகள் நடத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு இருட்டறையில் முழங்காலில் பணிக்கப்பட்டு, பின் மண்டையில் சுடப்பட்டு மூளையின் வெண்சாந்து சிதறி ஈரம் கசியும் கரும்பச்சைச் சுவர்களில் அப்பி வழிய
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
படுக�ொலை செய்யப்பட்டனர். இதனையெல்லாம் குர�ோவர் ஃபர் மறுக்கவில்லை. இது ப�ோன்று அன்றைய ச�ோவியத் சமூகத்தின் மிகச் சிறந்த பகுதியினர், நம்ப முடியாத எண்ணிக்கையில் க�ொல்லப்பட்டதை மறுக்காதது ம ட் டு ம ல்ல , அ வர்கள் கு ற்றவ ா ளி க ள ்தாம் எ ன் று வாதிடவும் குர�ோவர் ஃபர்ரால் இ ய ல வி ல்லை . அ வ ர் கூ ற முடிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் குற்றத்தை விசாரணையின் ப�ோது ஒத்துக் க�ொண்டனர் என்பதே. விசாரணையின்போது சித்திரவதை தாங்காமல் ஒத்துக் க�ொள்வதை ப�ோதுமான நிரூபணம் என்பதை எந்தவ�ொரு நாகரிக சமூகமும் ஏ ற் று க் க�ொ ள ்ளா து எ ன்ப து அமெரிக்காவில், பல்கலைக் கழக பேராசிரியராக இருக்கும் அவருக்குத் தெரியாதா? சரி, சித்தரவதை நடைபெற்றது என்பதையாவது மறுத்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. சித்திரவதை செய்யப்பட்டதாலேயே அவர்கள் நிரபராதி ஆகிவிட மாட்டார்கள் என்ற விந�ோதமான தர்க்கத்தைதான் தந்துள்ளார். ஆனால் இதனைக் காட்டிலும் ம�ோசமான தர்க்கமும், நியாயப்படுத்துதலும் அன்றைய ச�ோவியத் யூனியனின் தேசிய இனக் குழுக்களைக் கையாண்டது குறித்து எழுதும்போது வருகின்றது. ப�ோர் மேகங்கள் சூழ்ந்து வந்தப�ோது கரச்சாய், கல்மைக்ஸ், செச்சன் _ இங்குஷ், பால்கர் ப�ோன்ற இனக்குழுக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்தியதை குருஷேவ் வருத்தத்துடன் எடுத்துரைக்கின்றார். தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், ச ம உ ரி ம ை க் கு ம் ஒ ரு எ டு த் து க்கா ட ்டா ன ச�ோவியத் யூனியனில் இப்படி நடக்கலாமா என அங்கலாய்க்கின்றார். 1991ஆம் ஆண்டு ச�ோவியத் யூனியன் உடைந்தபின் ரசியனல்லாத ஒவ்வொரு தேசிய இனமும் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடியதற்கான அகக் காரணங்கள் (ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட புறக் காரணங்களை மறுப்பதற்கில்லை) குறித்த ஆய்வுகளை இங்கிருந்து நாம் துவக்க வேண்டியுள்ளது, நமக்கு புரிகின்றது. ஆனால் குர�ோவர் ஃபர், கிரீமியன் தார்தார், வ�ோல்கா ஜெர்மன் இனக்குழுக்களை விட்டுவிட்டாரே என கேலியான த�ொனியில் குறிப்பிடுகின்றார். 2,18,000 கிரீமியன் தார்தார்கள் 4,93,000 செச்சன் _ இ ங் கு ஷ் இ ன த்தவர்கள் இ டம் பெ ய ர ச் செய்யப்பட்டார்கள். அவர்கள் 180 ரயில் வண்டிகளில் இடம் பெயர்க்கப்பட்டனர் என்றெல்லாம் புள்ளி வி வ ர ங ்கள் கூ று கி ன்ற ன . இ த னையெல்லாம் குர�ோவர் ஃபர் மறுக்கவில்லை. உளவாளிகளாகவும்,
சீ ர் கு லைவ ா ள ர்க ள ா க வு ம் இ ரு க் கு ம் த னி ந ப ர்களை ம ட் டு ம ்தானே த ண் டி க்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, அதன் நியாயத்தை ஏற்றுக் க�ொள்கின்றார். ஆனால் அ ப்ப டி ச் ச ெ ய்தா ல் அ ந்த இனத்தின் இளம் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமம் (எச்சரிக்கை: நகைச்சுவை அல்ல, அவரே எழுதியிருப்பதுதான்) என்றெல்லாம் காரணம் ச�ொல்லி இ ந்த இ ன ச் சு த் தி க ரி ப்பை நியாயப்படுத்துகின்றார். இ ப்ப டி ச் ச �ொ ல் லி க் க�ொண்டே ப�ோகலாம். அவரது மி க மு க் கி ய ம ா ன வ ா த ம் குருஷேவ் ஒன்றும் ஒழுங்கில்லை, அ வ ரு ம் சே ர் ந் து த ா ன் இதனையெல்லாம் செய்தார், ஸ்டாலின் இது தெரிய வந்தப�ோது இதனைத் தடுக்க முயற்சித்தார் என்பதாகும். கட்சியின் 17ஆவது காங்கிரஸின் பிரதிநிதிகளில் 56 சதவிகிதத்தினரும் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழு உறுப்பினர்களில் 70 சதவீதத்தினரும் ‘தேசத்துர�ோகிகள்’ எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சுட்டுக் க�ொல்லப்படுவது, ஸ்டாலினுக்கு தெரியாமலே, அவரை மீறியே நடந்தது எனச் ச�ொல்வதைக் காட்டிலும் ஸ்டாலினை அவமரியாதை செய்யும் செயல் வேறு இல்லை என்பதை குர�ோவர் ஃபர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. குருஷேவ் ப�ொய்களும் ச�ொல்கின்றார் என்பதில�ோ, அவரும் ஏனைய தலைவர்களும் முழுப் ப�ொறுப்பையும் ஸ்டாலின் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதில�ோ சந்தேகம் ஏதுமில்லை. எடுத்துக்காட்டாக 2 ஆம் உலகப் ப�ோரில் ஸ்டாலினின் தலைமையையும் அவரது தனித்துவமான பாத்திரத்தையும் யாரும் மறுத்துவிட இயலாது. 2 ஆம் உலகப் ப�ோரில் முன்னணி பாத்திரம் வகித்தவரும், பின்னாளில் ஸ்டாலினால் அற்ப காரணங்களுக்காக பதவி இறக்கம் செய்யப்பட்டவருமான மார்ஷல் ஜூக்கோ, ஸ்டாலின் மறைந்தபிறகு அவருக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள் இருக்கின்றன. ஆனால் குருஷேவ் ஸ்டாலின் மீது அபத்தமானதும் அவதூறானதுமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். குருஷேவ் குற்றச்சாட்டுகளில் உண்மையும் ப�ொய்யும் கலந்துள்ளன என்பதே தெரிகின்றது. ஆனால் குருஷேவ் தலைமைப் ப�ொறுப்பில் இருந்த சுமார் 10 ஆண்டு காலத்திய வரலாறும் உள்ளது. அவர் மீது வேறு ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம். ஆனால் ‘ஒடுக்குமுறையாளர்’ ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒட்டாது. அவரது காலமே ‘சகிப்புத் தன்மைக் காலம்’ (Perid of Thaw) என்றுதான் அறியப்படுகின்றது.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
51
சரி, இவ்வளவு எழுதும் குர�ோவர் ஃபர், ஸ்டாலின் ச�ோசலிசத்திற்கு உன்னதமான சேவையைச் செய்தவர், மார்க்ஸ் ஏங்கல்ஸ், லெனின் எனும் உன்னதமான பாரம்பரியத்தில் அடுத்து வைக்கப்பட வேண்டியவர் என்று ச�ொல்கின்றாரா என்றால், இல்லை அங்குதான் நூலின் உயிர் முடிச்சு உள்ளது. அவருக்கு ச�ோசலிசத்தின் மீத�ோ, மார்க்சியத்தின் மீத�ோ எந்தவிதமான மதிப்பும் பிடிப்பும் இருப்பதற்கு புறச்சான்று ஏதும் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்? ஸ்டாலின் மீதே எந்தவித மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. குருஷேவ் மீதான வெறுப்பு மட்டுமே தெளிவாய்த் தெரிகின்றது. ஏனென்றால் ஸ்டாலினுக்குப் பின் வந்தவர்கள் செய்த ஒரே உருப்படியான காரியம் ஸ்டாலினைச் சுற்றி அவர்களே கட்டி அமைத்த ‘தனிநபர் வழிபாட்டை’ அரைகுறையாகவாவது தகர்த்தார்கள்’ என்பதே என்று கூறுகின்றார். இதிலும் குருஷேவ் மற்றவர்கள் அளவிற்கு பெருமை க�ோர முடியாது என்பதே அவரது குற்றச்சாட்டாய் உள்ளது. எல்லாம் ச�ொல்லி, இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணத்தை ஸ்டாலினிடம், குருஷேவிடம் மட்டும் தேட மு டி ய ா து எ ன் று ம் ச �ொ ல் லி , ‘ லெ னி ன் எழுத்துகளிலும், அவரது மகத்தான ஆசிரியர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய�ோரின் எழுத்துகளிலும்தான் அவர்களது நேர்மையான மாணவரான ஸ்டாலின் தவறுகளுக்கு _ தன்னுடைய துர�ோகத்தை மறைக்க கு ரு ஷே வ் ப ய ன்ப டு த் தி க் க�ொண்ட ஸ்டா லி ன் தவறுகளுக்கு வழிக�ோலியவை எவை என்பதை தேட வேண்டும். ஆனால் அது வேறு ஒரு ஆய்வுக்கும், நூலுக்குமான பரப்பு,’ என்று முத்தாய்ப்பு வைக்கின்றார். சஞ்சய் காந்தியின் தவறுகளுக்கு மஹாத்மா காந்தியைப் ப�ொறுப்பாக்குவதுப�ோல உள்ளது. செ. நடேசனின் ம�ொழி பெயர்ப்பும் சற்று தடுமாறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழுவின் 70 சதவீதத்தினரை கட்சிக் காங்கிரசின் பிரதிநிதிகளில் 60 சதவீதத்தினரை க�ொன்றதற்கான காரணத்தையும் பல லட்சம் பேர் க�ொண்ட தேசிய இனங்களை ‘இனச் சுத்திகரிப்பு’ செய்ததற்கான காரணத்தையும் மார்சின் எந்த நூலில் தேடுவது என்பதை அவர்தாம் ச�ொல்லவேண்டும். குர�ோவர் ஃபர், இந்த நூலை எழுதிய ந�ோக்கம் என்னவென்று தெரியவில்லை. பல்கலைக் கழக கல்விப் புல வளாகத்தில் அவர் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்தான். வரலாற�ோ, அரசியல�ோ அவரது கல்விப் புலம் அல்ல. தமிழ்ப் பதிப்பிற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை, தமிழ்ப் பதிப்புரையில் ப�ொன்னுலகம் பதிப்பகத்தார் அவருக்கு அளித்துள்ள ‘நற்சான்றிதழ்’ ஆகியவை தவிர்த்து, அரசியல் ரீதியாக அவரது நிலைப்பாடு என்னவென்று தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தெரியவில்லை. தமிழில் பதிப்பித்த ப�ொ ன் னு ல க ம் ப தி ப்ப க மு ம் , ம�ொ ழி பெ ய ர்த்த த�ோழர். சே. நடேசன் அவர்களும், ஸ்டாலின்மீது
52
பற்றுள்ளவர்கள். ஸ்டாலின் மீதான ‘அவப்பெயரை’ நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ந�ோக்கமாக இருந்திருக்கும். திறந்த மனதுடன், முன் முடிவின்றி நூலை அணுகுபவர்களிடம் அந்த ந�ோக்கம் நிறைவேறுமா எனத் தெரியவில்லை. ஆனால், இதுவரை தமிழில் வராத குருஷேவின் ‘ரகசிய உரை’யும் புதிதாய் வெளி உலகிற்கு வந்துள்ள ச�ோவியத் ஆவணங்கள் குறித்த குறிப்புகளும் நூல் மூலம் கிடைத்துள்ளது. ஏற்பு ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டு ச�ோவியத் வரலாறு குறித்து அக்கறை க�ொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்தான். இந்த இடத்தில் ஒன்று ச�ொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய ப�ொதுச் செயலாளரும், இன்றைக்கு அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான த�ோழர். பிரகாஷ் கராத் கூறியது ப�ோல (newsclick.in/india/ prakash-karat-20-years-after குறிப்பாக: 29: 29 நிமிடம் முதல் கடைசி வரை) ‘நாம் இன்று ச�ோசலிசம் குறித்து பேசும்போது ஒரு அம்சம் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். அது நாம் ப�ோராடும் 21ஆம் நூற்றாண்டிற்கான ச�ோசலிசம். 20ஆம் நூற்றாண்டின் ச�ோசலிசம் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் ச�ோசலிசத்திற்கு மீண்டும் செல்வது எனும் பேச்சிற்கே இடமில்லை... உங்களில் பலர் இளைய வயதினர். உங்களது தலைகளில் எங்களது தலைகளில் உள்ளது ப�ோல பழமையின் சுமை இல்லை. (நீங்கள் சுதந்திரமாக சிந்திக்கலாம்)... ந ம் மு டை ய ப ா ர ம ்ப ரி ய ம் , அ னு ப வ ங ்கள் ஆகியவற்றில் நாம் எவற்றைத் த�ொடர வேண்டும், எவற்றைக் களைய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்...,’’ ஸ்டாலின் குறித்தும், அந்த காலகட்டம் குறித்தும் அந்த அணுகுமுறையில் புதிதாய் வந்துள்ள ஏனைய நூல்கள�ோடு இந்த நூலையும் இணைத்து வாசிக்க வேண்டும்.
நூல் அறிமுகத்திற்கு இரண்டு பிரதிகள் அணுப்பும்படி கேட்டுக்கொள்கிற�ோம்.
'புத்தகம் பேசுது' இதழுக்கு படைப்புகள் அணுப்புவ�ோர் தங்கள் வசம் ஒரு பிரதி வைத்துக்கொள்ளவேண்டும். email: ppmonthly@gmail.com
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
புரட்சி இலக்கியங்கள் ஒரு மீள்வாசிப்பு-10
வரலாற்றில் பரிச�ோதனை செய்தவரின் வரலாறு - என்.குணசேகரன்
"லெனின் மறுகட்டமைத்தல்:அறிவாற்றல் சார்ந்த ஒரு வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பைக் க�ொண்ட நூலினை .ஹங்கேரியைச் சார்ந்த லெனினிய ஆய்வாளர் தாமஸ் கிராஷ் எழுதியுள்ளார்.("Reconstructing Lenin:an Intellectual biography" -Tamas Krausz) "மறு கட்டமைத்தல்" என்கிற ச�ொற்பிரய�ோகம் லெனினது மூல சிந்தனையை திரிக்கும் முயற்சியாக இருக்கும�ோ என்று முதலில் ஐயப்பட வைக்கிறது. ஆனால் நூலை வாசிக்கும் ப�ோது, நூலாசிரியர் லெனினியத்தை உருக்குலைத்திடாமல் விளக்கிட எடுத்துள்ள பெருமுயற்சியை உணர முடிகின்றது. நூலாசிரியர் புரட்சிகர தத்துவ வரலாற்றை விளக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒ ரு நூ ற்றா ண் டு க் கு மு ன் ந டைபெற்ற த த் து வ விவாதங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்திடவும் இன்றைய நிலைமைகளுக்குப் ப�ொருத்திப் பார்க்கவும் இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. எனவே, இது வழக்கமான தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல.லெனினிய கருத்தாக்கங்களின் வரலாறு என்று கூறலாம். "யார் லெனின்?" என்ற முதல் அத்த்தியாயத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மாபெரும் தலைவராக லெனின் உயர்ந்த வரலாறு மிக நுண்ணிய அம்சங்களுடன் விளக்கப்படுகிறது. ஏற்கெனவே வெளிவந்த விவரங்களைத் தாண்டி பரந்த ஆராய்ச்சி விவரங்களுடன் ஆசிரியர் உரையாடுகிறார். இத�ோடு வாழ்க்கை வரலாறு முடிவடைந்துவிடுகிறது. அ டு த் து வ ரு கி ற ந ா னூ று க் கு ம் மேற்ப ட ்ட பக்கங்கள் லெனினிய கருத்தாக்கங்களின் வரலாற்றை விளக்குகின்றன. அரசு பற்றிய லெனினின் விவாதம் ர ஷி ய அ ர சை வீ ழ் த் தி பு ர ட் சி மு ன்னே றி ட , ர ஷி ய அ ர சு ப ற் றி ய து ல் லி ய ம ா ன நிர்ண யி ப் பு தேவைப்பட்டது. ரஷிய அரசின் தன்மை பற்றிய விவாதம் தீவிரமாக நடந்தது,இந்த விவாதத்தை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.லெனின் இந்த விவாதத்தில் முக்கிய பங்காற்றியதையும்,பிளக்கனவ் ப�ோன்ற மார்க்சியர்கள�ோடு வாதப் ப�ோரில் ஈடுபட்டதையும் அவர் விளக்குகிறார். நூலாசிரியர் முக்கிய கருத்து வேறுபாடுகளை இவ்வாறு த�ொகுக்கிறார். " ர ஷி ய ம ா ர் க் சி ய ர்க ளு க் கு ம் , த ா ர ா ள வ ா த அணுகுமுறைகளுக்கும் இடையே இரண்டு முக்கிய வ ே று ப ா டு க ள் இ ரு ந்த ன . ர ஷி ய அ ர சு ப ற் றி ய வரலாற்று ஆய்வில் வர்க்கப் ப�ோராட்டம் என்ற
க�ோட்பாட்டை மார்க்சியர்கள் ப�ொருத்தி ஆய்வு செய்தனர். இவ்வாறு ஆராய்கிற ப�ோது, ப�ொதுவாக, ரஷிய அரசு என்று எடுத்துக் க�ொள்ளாமல், அது கடந்த காலங்களில் எந்த வடிவங்களில் எத்தகைய வர்க்கத் தன்மையுடன் இருந்தது என்பதையும் சேர்த்து ஆராய்ந்தனர். இரண்டாவதாக, மார்க்சியர்கள் ரஷிய அரசு பற்றிய ஆய்வினை ,ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் தனித்தன்மைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட ப�ொருளாதார அம்சங்கள�ோடு இணைத்து ஆராய்ந்தனர். ப�ோல்ஷ்விக்களும் மென்ஷ்விக்களும் அவரவர் அரசியல் திட்டங்களைய�ொட்டி ரஷிய வரலாற்று நிகழ்ச்சிப் ப�ோக்குகளை ஆராய்ந்து விளக்கிட முயற்சித்தனர்." ஒவ்வொரு நாட்டின் அரசு பற்றிய வரையறை, புரட்சி இலட்சியத்திற்கு அவசியம்.அரசு பற்றிய விவாதம் இதற்கு வழிகாட்டுகிறது. முன்வைக்கப்பட்ட வாதங்களை நூலாசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ளார். முதலாளித்துவ அமைப்பு பற்றிய விவாதமும் முக்கியமானது.ஜெர்மானிய மார்க்சியரான ர�ோசா லக்சம்பர்க் எழுதிய "மூலதனக் குவியல்" கடும் சர்ச்சைக்கு உள்ளானது.அந்நூல் குறித்த தனது கருத்துக்களை 1913ஆம் ஆண்டு லெனின் வெளியிட்டார். பல்வேறு உள்நெருக்கடிகளால் முதலாளித்துவம் சிதைந்துப�ோகும் என்ற ர�ோசா லக்சம்பர்கின் கருத்தை லெனின் ஏற்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள்,பல்வேறு வளர்ச்சி வடிவங்கள் பிரத்தியேகமான நிலைமைகள் உள்ளன என்பதையும்,அவற்றை ஆராய வேண்டுமெனவும் லெ னி ன் வ லி யு று த் தி ன ா ர் . ர ஷி ய வி ற்கெ ன் று பிரத்தியேகமான முதலாளித்துவ வளர்ச்சி இருப்பதை ஆழமாக கண்டறிந்தார் லெனின்.இதனை "ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சி" என்ற தனது நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார். இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலக ஏகாதிபத்தியத்தின் பலகீனமான கண்ணியாக ரஷியா விளங்குவதையும், புரட்சிக்கு ரஷியா சாதகமாக இருப்பதையும்,த�ொழிலாளிவிவசாய வர்க்கக் கூட்டணி அமைத்து அதிகார மாற்றத்தை சாதிக்க வேண்டுமென்ற கருத்துக்கு லெனின் வந்தார். புரட்சி அரசியல் கலை "மாற்று" "மாற்று அரசியல்" "முதலாளித்துவதிற்கு மாற்று" என்றெல்லாம் பேசப்படும் இன்றைய சூழலில், லெனினது அணுகுமுறை பற்றி நூலாசிரியர் தரும் விளக்கம் முக்கியமானது. எதிர்படும் பல்வேறு மாற்றுக்களில் ஒரு வழியைக் கண்டறிந்து அங்கீகரிப்பது என்பதுதான், புரட்சி அரசியல் கலையில் அடங்கியுள்ள முக்கிய அம்சமாக
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
53
க�ோவை புத்தகத் திருவிழா
ஆகஸ்ட் 19 முதல் 28 வரை இடம்: க�ொடிசியா த�ொழிற்சாலை க�ோயமுத்தூர்
54
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் | சென்னை | பக்.152 | ரூ. 115 | 72000500073
நூல் அறிமுகம்
கே. பாலசந்தர் | ச�ோம வள்ளியப்பன்
ஆசிரியர் கூறுகிறார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வழி, பாட்டாளி வர்க்க வி டு த லை ந�ோ க் கி ல ா ன தீ வி ர , பு ர ட் சி நடவடிக்கையாக இல்லாமல் ப�ோகலாம்;துவக்க நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் எது ச ா த் தி ய ம ா ன வ ழி எ ன்ப தி லி ரு ந் து கூ ட நிச்சயிக்கப்படலாம். ஆனால். லெனினிய சிந்தனையில் மாற்று எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறது? • முதலில் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதனை தீர்மானிக்க,அடிப்படை என்ன? குறிப்பிட்ட சூழல்தான் என்பது லெனினியம். • குறிப்பிட்ட சூழல் எனும் ப�ோது வரலாற்று சூழல் முக்கியமானது. • அன்று நிலவும் அரசியல் சக்திகளுக்கிடையிலான உறவுகள், • ஒவ்வொரு வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கு, • மாற்றத்திற்கான இலக்கு மற்றும் திசைவழி, • த�ொழிலாளி வர்க்கத்தின் நீடிக்கக்கூடிய கூ ட ்டா ளி க ளை அ ணி தி ர ட் டு வ த ற்கா ன த�ொலைந�ோக்கு உத்தி இந்த அம்சங்கள் அனைத்தையும் ஆராய்ந்து, செயலுக்கான வியூகம் அமைக்க லெனினியம் கற்றுத் தருகிறது.அதுவே உண்மையான மாற்றத்தை நிகழ்த்தும். இன்றைய உலகில் செயல்படும் பல புரட்சிகர இயக்கங்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கேற்ப புரட்சிகர உத்திகளையும்,நடைமுறைத் திட்டங்களையும் உருவாக்குவதில் தடுமாறுகின்றன. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து, உரிய உத்திகளை உருவாக்க முடியவில்லை என்றால் த�ோல்வியே த�ொடர்கதையாகிடும். புரட்சிகர உத்திகளே லெனினது வாழ்க்கையாக இருந்தது.ரஷியப் புரட்சி,ச�ோஷலிச நிர்மாணம் ,புரட்சிக் கட்சி அமைப்பு,உலக ஏகாதிபத்தியத்தின் இயங்கு தன்மை என பல பரப்புக்களில் அவரது சிந்தனையும் அவர் நடத்திய கருத்துப்போர்களும் அ ம ைந்த ன . இ வை அ னை த் து ம் நூ லி ல் விளக்கப்படுவதால்,புரட்சிகர உத்திகள் பற்றிய அறிவை செழுமையாக்கிக் க�ொள்ள இந்நூல் உதவிடும். ரஷியப் புரட்சி என்ற வரலாற்றுப் பரிச�ோதனை மேற்கொண்ட ஒரு தலைவனைப் பற்றிய நூலை உயர்ந்த தரத்துடன் ஆக்கியுள்ளார்,தாமஸ் கிராஷ். இன்றும் லெனின் தேவைப்படுகிறார் என்ற உண்மையை மேலும் அழுத்தமாக பதிந்துள்ளார்.
இயக்குநர் கே. பாலசந்தரின் 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் ச�ோம வள்ளியப்பன் எழுதியுள்ள புத்தகம் இது. நன்னிலம் அருகே நல்லமாங்குடி என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்ததிலிருந்து த�ொடங்குகிறது இந்த வாழ்க்கை வரலாறு. கே.பியின் முதல் எழுத்து பாடல் என்கிற அரிய செய்தியும், கூடவே அவர் நடிகனாகவே வரவேண்டுமென விரும்பியுள்ளார் என்பதும் இந்தப் புத்தகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. அவர் எழுதிய பாடல் கல்லூரி டிராமாவுக்காக ஏ பிளாக்கில் விளக்கணைத்தால். . . பி பிளாக்கில் படிப்பில்லை. இது அப்போது வெற்றிகரமாக ஓடிய மிஸ்.மாலினி என்கிற திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடலின் மெட்டு. அப்பாடல் குத்தாலத்துல இடியிடுடிச்சா க�ோயமுத்தூரிலே விளக்கணையும் பாடல் என்று வள்ளியப்பன் குறிப்பிடுகிறார். ப ா ல சந்த ர் தி ரு ம ண ம ா கி ச ெ ன்னை யி ல் க�ோபாலபுரத்தில் குடியிருந்து, தேனாம்பேட்டை ஏஜிஎஸ் அலுவலகத்தில் மாதம் ரூபாய் 125 க்கு வீட்டு வாடகை 50 ரூபாய். கிளார்க் வேலை பார்த்திருக்கிறார். கிளார்க் பதவி உயர்வின் மூலம் சம்பளம் கூடுமென பரீட்சை எழுதித் தேர்வாகிறார். க லை ஞ ர் . மு . க ரு ண ா நி தி சர ்வ ர் சு ந்த ர் நாடகத்தைப் பார்த்துவிட்டு, முரச�ொலி மாறனிடம் ச�ொல்லிய கருத்தை பாலசந்தர் பெருமையாகக் கருதுவாக குறிப்பிடுகிறார். இப்படி ஏராளமான அரிய செய்திகள�ோடும், அதேநேரம் கே.பியின் வாழ்வில் நடந்த பல ச�ோகமான துயரார்ந்த நிகழ்ச்சிகளையும் வரலாற்றையும் பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
கடந்துசென்ற காற்று - 19
இடையில் முடிந்த கதை
இரண்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுச் ச�ொல்ல வேண்டும். மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே த�ொகுப்பாக த�ோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். பரிசல் வெளியீடாக அது வந்துள்ளது. அந்நூலின் வெளியீட்டுவிழா இராஜபாளையம் நகரில் ஜூலை 17 அன்று நடைபெற்றது.வீர.வேலுச்சாமி அவர்களின் மகன் பிரகாஷுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து இந்த விழா ஏற்பாட்டைச் செய்திருந்தனர். த ன து 2 4 ஆ வ து வ ய தி ல் ப ற் றி க் க ொண்ட க ா சந�ோ ய் க ா ர ண ம ா க மு ழு வ ா ழ ்க்கையை யு ம் வாழ்ந்துமுடிக்காமல் இடையில் முடிவுற்ற கதை வீர. வேலுச்சாமியினுடையது. இத்தொகுப்பு அவருடைய நி ன வு க ளு க் கு ச் ச ெ ய்யப்ப ட ்ட உ ண்மை ய ா ன அஞ்சலியாக அமைந்துள்ளது. அவருடைய ஒரே சிறுகதைத்தொகுப்பான ‘நிறங்கள்’ பற்றி புத்தகம் பேசுது இதழில் வெளியான ‘என் சக பயணிகள்’ த�ொடரில் குறிப்பிட்டு யாரேனும் இத்தொகுப்பின் மறு பதிப்பைக் க�ொண்டுவரவேண்டும் என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தேன். எழுத்தாளர் பூமணி முடியாத உடல்நிலையிலும் வந்திருந்து நூலை வெளியிட்டார். அவருடைய உரையை கனகராஜ் வாசித்தார். பா.செயப்பிரகாசம் இத்தொகுப்பைக் க�ொண்டுவந்தது தன் வாழ்நாள் ச ா த னை ய ா க் க் க ரு து வ த ா க் க் கு றி ப் பி ட ்டா ர் . ம�ொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர்கள் ம ணி ம ா ற ன் , இ ல ட் சு ம ண ப் பெ ரு ம ா ள் , லட்சுமிகாந்தன் எனப் பலரும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்ற அந்நிகழ்வில் க�ோணங்கியின் உரை சில விவாதப்புள்ளிகளை உள்ளடக்கியதாக இருந்தது. " ப ட் டி னி கி ட க் கு ம் க தை வி ந்தை க ளு க் கு க் கிளியாஞ்சட்டியில் வரகு படைத்த நல்லதங்காளின் அறுபதடிக் கூந்தல் இழைய�ொன்று அச்சம் தவிர்த்தான், ஆயிரங்குடி மேட்டில் அலைந்து க�ொண்டிருந்ததைக் கண்டெடுத்த பாக்கியவான் வீர வேலுச்சாமி. அனைத்து மெய்ஞானத்தோடும் கூட்டில் ந�ோய் சுமந்த சிறுகதை மருத்துவர் ஆண்டன் செகாவின் நீலநுரையீரல் வரைபடத்தைத் தன் சிறுகதைகளின் உருவகத்துக்குள் தைத்து, சதா குழப்பமுற்று அவகதியடைந்த கரிசல் பெண்களின் தாபத்தையும் அர்ச்சுனா நதியின் கு று ந ா க ரி க த் தி ல் நீ ர ்ச ்ச ர த்தைச் ச ல ன ம டை ய வைத்து, எளிய�ோர் உளந்தொட்ட சிறுகதை வாழ்வி இவர்" என்று த�ொடங்கிய க�ோணங்கியின் உரை
ச.தமிழ்ச்செல்வன்
வீ ர வ ே லு ச்சா மி யி ன் "க�ொடும்பாவி" கதைக்குள் உலவும் பேச்சி, கார்க்கியின் சிறுகதையில் வரும் கிழவி இஸர்க்கீல்தான் என்று ருஷ்ய மற்றும் லத்தீன் அமெரிக்கச் சி று க தை க ளை யு ம் வீ ர . வ ே லு ச்சா மி ம ற் று ம் தமிழ்ச் சிறுகதையாளர்கள் ப ல ரி ன் க தை க ளை யு ம் ஒ ரே நூ லி ல் க�ோ ர் த் து உரையைப் பின்னிக்கொண்டே சென்றார்." ‘கூனல் முதுகில் கூழாங்கல் எறிந்தாற்போல் மழைத்துளி விழுந்த்து’ என்கிற வீர வேலுச்சாமியின் வரிகளை பாலகாண்டத்தில் கூனி மந்தாரையின் முதுகில் அ ம் பு வி ட ்ட ர ா ம னி ன் க தை யு ட ன் க�ோ ர் த் து அவ்வரங்கைப் புதிய பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றார். ‘'மண்ணின் குரல்கள்'’ த�ொகுப்பில் அவரது 16 சிறுகதைகளும் குழந்தைகளுக்கான மந்திரக்கதைகள் 2 6 ம் , ஒ ரு க வி தை யு ம் , 8 நி னை வ ேந்த ல் கட்டுரைகளும் உள்ளன. அதுபற்றிக் குறிப்பிடும் க�ோ ண ங் கி " வீ ர வ ே லு ச்சா மி வ ன ம ந் தி ர தேவதைக் கதைகளையும் ‘நிறங்கள்’ த�ொகுப்பின் சிறுகதைகளையும் பக்கம்பக்கமாய்க் குறுக்குவெட்டாய் படைத்திருந்தால் நவீன புனைகதை த�ோன்றியிருக்கும். மாயத்தையும் யதார்த்த்த்தையும் பிரித்துவிடுகிறார். எதார்த்தம் சிறுகதைகளாகவும் தேவதைக்கதைகள் த�ொகுக்கப்படும் கதைகளாகவும் கி.ராஜநாராயணன் சிறந்த நாட்டுப்புறக்கதைகள், கரிசல் வட்டார வழக்கு அகராதி எனப் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தின் வருகை தரு பேராசிரியராக பாண்டிச்சேரி ப�ோனவர் இன்னும் ஊர் திரும்பவில்லை. கல்வி அல்ல. அகல்வி தேவை. இங்கே வீர.வேலுச்சாமி அவர்களுக்கும் கல்விநிறுவன மனம் இருந்திருக்கிறது" என்கிற விமர்சனத்தைத் தன் உரையில் வைத்தார் க�ோணங்கி. ‘மந்திரக்கதை உலகில் வாழ்வதால் க�ோணங்கி இப்படியான ஒரு பார்வை க�ொண்டிருக்கிறார்’ என்று தட்டையாகப் பார்த்து இவ்விமர்சனத்தை என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை. வீடு திரும்பிய பின்னும் பின்னொரு நாளிலும் என க�ோணங்கியுடனான உரையாடல் த�ொடர்ந்தது. ‘தமிழ்ச் சிறுகதையின் வனப்பும் வரலாறும்’ என்கிற தலைப்பில் பேச வேண்டிய கடமை எனக்கு சென்ற வாரத்தில் இருந்தது. தமுஎகச க�ோவையில் ஜூலை
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
55
22,23,24 தேதிகளில் நடத்திய இளம்படைப்பாளிகள் பயிலரங்கில் இத்தலைப்பில் படக்காட்சியுடன் பேசினேன். அதற்காக சிலநூறு சிறுகதைகளினூடாகச் சில நாள் பயணிக்கும் பேறு பெற்றேன். க�ோணங்கியின் வாதத்துக்கு வலுச்சேர்க்கும் பல அற்புதமான மாயமும் யதார்த்தமும் கலந்த கதைகளை வாசிக்க நேர்ந்தது. முதல் சிறுகதை எனப்படும் வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரச மரம் இப்படித் துவங்குகிறது, "பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் ச�ொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் ச�ொன்னாலும் தீராது.இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். க ா த ா லே எ த்தனை கேட் டி ரு க் கி றே ன் . உ ங ்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் ச�ொல்லுகிறதிலே எள்ளளவேனும் ப�ொய்யில்லை". எடுத்த எடுப்பிலேயே தமிழ்ச்சிறுகதையை ஒரு மரம்தான் கதை ச�ொல்லி ஆரம்பித்திருக்கிறது. பு து ம ை ப் பி த்த னி ன் க ா ஞ ்சனை யு ம் , க ட் டி லை விட்டிறங்காக் கதையும், கடைவீதியில் வந்து இரண்டு கப்கள் காப்பி அருந்திய கடவுளும், கு.அழகிரிசாமியின் கதைகளில் மனிதனைப்போல அல்லாமல் தன் பிறவிக்குணத்தை மறக்காத வெறும்நாயும், பத்தாம் நம்பர் வீட்டு நாயும் இந்த வரிசைக்கதைகளில் வந்து நின்றன. கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு கதையில் கிளிக்கு ஓட்டுப்போடப்போன மருமகளின் கையைப்பிடித்து மாயமாக இழுத்துப் பூனைக்கு ஓட்டுப்போட வைத்ததும் சென்னை மாநகரத்திலே வருமானத்துக்கு உட்பட்ட வாடகையில் வீடு பார்த்து ஊருக்கு வெளியே வெளியே என்று ப�ோயும் முடியாமல் கடைசியில் தன் உடம்பையே சிறுசாக்கிக் க�ொண்டு தனது பூட்ஸுக்குள்ளேயே குடும்பம் நட்த்தும் ப�ோலீஸ்காரனின் கதையும் எனக் கிருஷ்ணன்நம்பியும் தன் பங்கைச் செலுத்துகிறார். புளிய மரத்தின் கதை ச�ொன்ன சுந்தரராமசாமி ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலில் யதார்த்தத்தையே புனைவாக்கியதைக் கண்டோம். இம்மரபின் த�ொடர்ச்சியாக இன்று உலகமயத்தின் நாய்ப்பாய்ச்சலையும் குதறல்களையும் எடுத்தியம்ப ஆதவன் தீட்சண்யா ‘லிபரல் பாளையம்’ என்கிற கற்பனை நாட்டையே சிருஷ்டித்ததும் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலில் அவர் நாகஜ�ோதி பீம்தாஸ் என்கிற மனிதரையும் கற்பனையான தீவையும் படைத்ததும் உண்டுதான். ஆனாலும் இயல்புவாதக் கதைகளை மேற்சொன்ன படைப்பாளிகள் யாரும் நிராகரிக்கவில்லை என்பதும் பேருண்மைதான். "பஞ்சம் வந்து விட்டது". "பஞ்சம் வந்துவிட்டால் என்ன?" மக்கள் பட்டினிகிடப்பத�ோடு மட்டுமில்லாமல்
56
ம ற் ற ொ ரு ப ரி த ா ப க ர ம ா ன க ா ரி ய த்தை யு ம் செய்வார்கள். அதாவது, ஒருபஞ்சப்பிரதேசத்தை விட்டு அதைவிடக் க�ொடுமையான மற்றொரு பஞ்சப்பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏத�ோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் க�ோரமான அலைக்கழிவுகளில் ஒன்று. கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையின் இத்துவக்க வரிகள் நேரடியான யதார்த்த்ததை எளிய ம�ொழியில் ச�ொன்னாலும், இது ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை பெரியதாக இப்போதும் இருக்கிறது. ஆனந்த விகடனில் வெளியாகி, தமிழ் வாசக உலகை உலுக்கிய ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதையில் வரும் "நீ சுத்தமாயிட்டே..ஆமா..தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடற�ோம்...அதுக்காகக் காலையா வெட்டிப் ப�ோட்டுடற�ோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப்போற�ோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும்..ஒனக்கு அகலிகை கதை தெரியும�ோ?ராமர�ோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு ச�ொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனாலேதான் ராமர�ோட பாதத்துளி அவமேலே பட்டுது. எதுக்குச் ச�ொல்றேன்னா.. வீணா உன் மனசும் கெட்டுப் ப�ோயிடக்கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே.." என்பது ப�ோன்ற நேர் யதார்த்தக் கதைகள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. ஆகவே க�ோணங்கியின் நியாயமான வருத்தத்தைப் பகிர்ந்துக�ொள்ளும் அதே வேளையில் யதார்த்தக் கதைகளின் யதார்த்தம் சமகால சமூகவாழ்வின் சாரத்தைச் ச�ொல்ல முற்படும்போது "ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப்போல அலம்பிஅலம்பி அவள் முகம் நிற்க, மற்றவை எல்லாம் நீர�ோட்ட்த்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்சி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்து விட, விரலை முட்டிமுட்டி விலகிக்கொண்டிருக்கிறாள்." ( வண்ணதாசனின் தனுமை) என்பதுப�ோல தேவையான மந்திரங்களை ஈர்த்துக்கொண்டு கலையாகிவிடுவதையும் நிராகரிக்க முடியாது. ஆனால் தமிழ்ப் புனைவிலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளில் கல்விப்புலத்தின் தாக்கம் என்று பேராசிரியல்லாத யாரேனும் ஆய்வு செய்யத்தக்க ஒரு கேள்வியை க�ோணங்கி முன் வைத்திருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. "அவுங்கதானே நம்மளத்தேடி வரணும். படைப்பாளி எதுக்குண்ணே பல்கலைக்கழகத்துக்குப் ப�ோகணும். நாம நம்ம இடத்திலேதானே இருக்கணும்" (த�ொடரும்)
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
இளம் படைப்பாளர்களுக்கான படைப்பூக்க முகாம் இரா.தெ.முத்து
இளம் படைப்பாளிகளுக்கான மாநில அளவிலான படைப்பூக்க முகாம் க�ோவையில் ஜுலை 22,23,24 தேதிகளில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக , முப்பது வயது வரையிலான 78 படைப்பாளிகளுக்கான பயிற்சி முகாமாக நடந்திருக்கிறது. பயிற்சி அளித்தவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் ஒரு புதிய திறப்பை முகாம் திறந்திருக்கிறது. ந வீ ன த மி ழ் இ ல க் கி ய வ ர ல ா று , த மி ழ்ச் சிறுகதைகளின் வரலாறு, இன்றைய வாழ்வின் பாடுப�ொருள், அழகியல், கவிதை அமர்வு, சிறுகதை அமர்வு, கதைச்சுற்று, நாவல் அமர்வு என எட்டு அமர்வுகள�ோடு த�ொடக்க நிகழ்வு, நிறைவு நிகழ்வு என்பதாக நிகழ்வுகள் இருந்தன. அருணன், ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், கா.வேலாயுதம், டி.டி.ராமகிருஷ்ணன் (மலையாள எழுத்தாளர்) புவியரசு த�ொடக்க, நிறைவு நிகழ்வில் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து க�ொண்டனர். அமர்வுகளில் இரா.தெ.முத்து, ப்ரஞ்ச் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர் கண்ணன், நந்தலாலா, ச.தமிழ்ச்செல்வன், சு.ராமச்சந்திரன், பிரளயன், நா.முத்துநிலவன், ஹெச். ஜி.ரசூல், ஜீவி, சுகிர்தராணி, ஆதவன் தீட்சண்யா, மா.காமுத்துரை, கீரனூர் ஜாகீர்ராஜா, அழகிய பெரியவன், பிரபஞ்சன், சுப்பாராவ், தேனி சீருடையான், இரா.முருகவேள் மற்றும் நீலா, கருணா, ஆனந்தன் என பங்கேற்பாளர்களுக்கு பயிற்சிகள் அளித்தனர். டி.டி.ராமகிருஷ்ணன் தன் த�ொடக்க உரையில், "எழுதுவது ஓர் அரசியற்செயற்பாடு" என்றும் "தம்மைச்சுற்றி நிகழும் சமுக நடப்புகள் மீது அக்கறையும் ப�ொறுப்புணர்வும் படைப்பாளர்களுக்கு தேவை" என்று பேசினார். மதம், சாதி, சினிமா, வணிகம் சாராமல் அவரவர் அசலான வாழ்வனுபவங்களை எழுதுவது எவ்வாறு என பங்கேற்பாளர்களுடன் நடந்த தீவிர உரையாடல் வழி தற்கால தமிழிலக்கிய வரலாற்றை கண்ணன் பகிர்ந்து க�ொண்டார். நழுவுப் படக் காட்சிகளின் வழி தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் ப�ோக்குகளை அதனை முன்னெடுத்தப் படைப்பாளிகளை அவரவரின் பங்களிப்புகளை த�ொட்டுப் பேசினார் ச.தமிழ்ச்செல்வன். "அவரவர் தன் ச�ொந்த வாழ்வை எழுதும் ப�ொழுதே அதில் சமுகம் குறித்தான பார்வைகளும் பதிவாகும்" என்று பிரளயன் வாழ்வின் பாடு ப�ொருளைப் பகிர்ந்து க�ொண்டார்.
எழுத்து, ச�ொல் சார்ந்த வெளியை அர்த்தப்பாடு மிக்கதாக மாற்றும் வல்லமை அழகியல் தன்மைக்கு உண்டு என்று ரசூல் உதாரணங்கள�ோடு தன் அமர்வை வழி நடத்தினார். எ ழு த்தா ள ர்கள் க வி தை , சி று க தை , ந ா வ ல் அமர்வுகளில் தங்கள் படைப்பு அனுபவங்களின் வழி படைப்பு மிளிர்ந்த இடத்தை, படைப்பிற்கு சவாலான இடத்தை அடையாளம் கண்டும் தத்தமது பிரதிகளின் வழி அமர்வை வசமாக்கிக் க�ொண்டார்கள். பங்கேற்பாளர்களின் ம�ொத்தப் பங்கேற்பில் ஒரு சிறுகதையை உரையாடல் வழி உருவாக்கி அனைவரையும் தன்னோடு தக்க வைத்துக் க�ொண்டார் பிரபஞ்சன். நெறியற்ற முதலாளித்துவத்தின் க�ோர முகத்தை சாதியை ஊழலை கலை அமைதிய�ோடு படைப்பாக ம ாற்று வதன் வழி படை ப் பிற்கான நி த்யத்தை அளிக்கலாம் என்றார் அருணன். படைப்பின் வாசல், ம�ொழி என்பதால் சமகாலத்தின் ம�ொழியை, ம�ொழி கடந்து வந்த பாதையை உள்வாங்கி, படைப்பின் கணத்தை ஜீவனை படைப்பில் கடத்துங்கள் என்று, வெற்றி பெற்றப் படைப்புகளை முன் வைத்து உற்சாகமூட்டினார் சு.வெங்கடேசன். ப ங ்கேற்பா ள ர்களை த�ொட ர் ந் து க வ னி த் து வளர்ப்பதற்கான செயற்திட்டம் ஒன்றை அனைவரின் உதவிய�ோடு த.மு.எ.க.ச உருவாக்க இருப்பதையும், விரைவில் சிறந்த படைப்பாளிகளாய் பங்கேற்பாளர்கள் மலர இருப்பதையும் முகாமில் இருந்து அவதானித்த ப�ொழுது, இது சாத்தியம் என்றே உறுதிப்பட ச�ொல்லத் த�ோன்றுகிறது..
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
57
வாசிக்கலாம் நேசிக்கலாம் மருதன்
ஒருவருக்குத் தன்னைப் பெற்றெடுத்த அம்மாவையே அடையாளம் தெரியவில்லை. உங்களை இதற்கு முன்னால் பார்த்ததேயில்லை என்று சாதிக்கிறார். அதே அம்மா பக்கத்து அறைக்குச் சென்று ஃப�ோன் மூலம் பேசினால் ‘அம்மா, எப்படி இருக்கீங்க?’ என்று பூரித்துப் ப�ோகிறார். நேரில் பார்த்தால் தெரியவில்லை ஆனால் குரல் மட்டும் பரிச்சயம் என்பது எப்படிச் சாத்தியம்?. இன்னொருவருக்கு எண்களைப் பார்த்தால் எழுத்துகளும் எழுத்துகளைப் பார்த்தால் எண்களும் த ட் டு ப்ப டு கி ன்ற ன . சி ல ர ா ல் வண்ண ங ்களை ப் புரிந்துக�ொள்ளவே முடியவில்லை. வண்ணங்கள் மட்டுமா, எண்ணங்களைக்கூட புரிந்துக�ொள்ளவே முடிவதில்லை. விளங்கிக்கொள்ளமுடியாத புதிர்கள் என்பவை நமக்கு வெளியில்தான் நிறைந்து கிடக்கின்றன என்று நாம் நினைத்துக் க�ொண்டிருக்கிற�ோம். தவறு, மனித மூளையைக் காட்டிலும் நுணுக்கமான, சிக்கலான ஒரு பெரும்புதிர் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. வி.எஸ். ராமச்சந்திரனின் ‘உருவாகும்
58
உள்ளம்’ புத்தகம், இந்தச் சிக்கலின் மையத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், சிக்கலே இ ல்லா த ம�ொ ழி யி ல் எ ழு த ப்பட் டி ரு ப்ப த ா ல் நரம்பியல் மருத்துவம் பற்றி முன், பின் அறிமுகம் இல்லாதவர்களாலும்கூட, இதனை வேகமாகப் படித்து உள்வாங்கிக்கொள்ளமுடியும். 1948ம் ஆண்டுத் த�ொடங்கி ஒவ்வோராண்டும் பிபிசி ரீத் லெக்சர்ஸ் என்னும் பெயரில் புகழ்பெற்ற சாதனையாளர்களின் ச�ொற்பொழிவுகளை ஏற்பாடு செய்துவருகிறது. பெர்ட்ரண்ட் ரசல், எட்வர்ட் செய்ட், அர்னால்ட் டாய்ன்பீ என்று த�ொடங்கி அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம் என்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் ச�ொற்பொழிவாற்றியிருக்கிறார்கள். இந்தப் புத்தகம் 2003ம் ஆண்டு வி.எஸ். ராமச்சந்திரன் ஆற்றிய ரீத் ச�ொற்பொழிவுகளின் த�ொகுப்பு. ம னி த மூ ளை எ ப்ப டி ஒ ரு ஓ வி ய த்தை யு ம் சி ற்பத்தை யு ம் ர சி க் கி ற து ? எ ப்ப டி இ சையை உள்வாங்கிக்கொள்கிறது? எப்படி அறிவியலை,
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
இ ல க் கி ய த்தை , ம த த்தை , வ ர ல ா ற்றை ப் புரிந்துக�ொள்கிறது? நபருக்கு நபர் ஏன் ரசனை மாறுபடுகிறது? மூளையில் ஏன் பிசகுகள் நேர்கின்றன? ஏன் சிலருக்கு முகங்கள் மறந்துப�ோகின்றன? ஏன் பெயர்கள் நினைவில் தங்குவதில்லை? மூளையின் ஒரு குறிப்பிட்டப் பகுதி, பாதிப்படையும்போது அது நடத்தையில் எப்படிப் பிரதிபலிக்கிறது? உண்மையில் மறதி என்பது சாத்தியம்தானா அல்லது ஏதேனும் ஓரிடத்தில் நம் நினைவுகள் அனைத்தும் மறைந்தும் தேங்கியும் கிடக்கின்றனவா?. இவற்றுக்கு மேலும் பல கேள்விகளுக்கும் வி.எஸ். ராமச்சந்திரன் இந்நூலில் பதிலளித்திருக்கிறார். எனக்கு இடது கால் விரல்களில் கடுமையான வலி என்று ஒருவர் டாக்டரிடம் புகார் செய்கிறார். அவரைப் பார்த்த டாக்டர் அதிர்ந்து ப�ோகிறார். க ா ர ண ம் அ வ ரு க் கு இ ட து க ா லே இ ல்லை . அறுவை சிகிச்சை மூலம் அதனை ஏற்கெனவே அகற்றிவிட்டார்கள். இல்லாத உறுப்பில் வலி எப்படி ஏற்படும்? அதை எப்படிப் பரிச�ோதிக்கமுடியும்? எப்படிக் குணப்படுத்தமுடியும்? பிரச்சினை காலில் இல்லை, மூளையின் ஒரு பகுதியில்தான் என்று புரியவைக்கிறார் ராமச்சந்திரன். உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட உறுப்பு அகற்றப்பட்டுவிட்டது என்பதை மூளை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இல்லாத உறுப்பை இருப்பதாக அது நம்புகிறது. எனில், இந்தத் தவறான நம்பிக்கையை மூளை விட்டொழிக்கும்படிச் செய்யமுடியுமா?. நம்மைக் குழப்பிக்கொண்டிருக்கும் வேறு சில கேள்விகளுக்கும் மூளைக்கும்கூட த�ொடர்பிருக்கிறது என்பதை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்துக்கு பல சிலைகளில், ஓவியங்களில் க ா ண ப்ப டு ம் பெண்க ளி ன் உ ட ல ம ை ப் பு ஏ ன் மி கைப்ப டு த்தப்பட் டி ரு க் கி ற து ? ஒ டி ந் து வி டு ம் இடையுடன் ஏன் பெண்கள் காட்சியளிக்கிறார்கள்? விடை, இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஒ ரு க ட ்டம் மு ழு க்க 2 எ ன் னு ம் எ ண் அடுத்தடுத்து நெருக்கமாக இடம்பெற்றுள்ளது. இடையில் ஓரிடத்தில் மட்டும் 5 என்னும் எண் நுழைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடியுங்கள் என்று ச�ொல்லி சிலரிடம் க�ொடுத்தப�ோது அவர்கள் குழம்பி, திண்டாடியிருக்கிறார்கள். ஆனால் மூளையின் செயல்பாட்டில் சில பிழைகளைக் க�ொண்டிருக்கும் சிலரிடன் க�ொடுத்தப�ோது அவர்களால் கண் இமைக்கும் நேரத்துக்குள் கண்டுபிடித்துவிடமுடிந்தது. விடை, அவர்கள் 5 என்பதை எண்ணாகப் பார்க்கவில்லை, ஊதா நிறப் புள்ளியாகப் பார்த்திருக்கிறார்கள். இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாசித்தபிறகு கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், அழகியல் அனைத்தும் புதிதாகக் காட்சியளிக்கும். ஆங்கிலத்தில் வெளிவந்த ராமச்சந்திரனின் புத்தகத்தை அழகிய, சரளமான நடையில் ம�ொழிபெயர்த்திருக்கிறார்
...
பக்கத்துக்குப் பக்கம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாசித்தபிறகு கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், அழகியல் அனைத்தும் புதிதாகக் காட்சியளிக்கும்.
...
இரா. நடராசன். வளமான கருத்துகள் அழகிய தமிழில் ம�ொழிபெயர்க்கப்படுவது அபூர்வம். இந்தப் புத்தகத்தில் இரண்டும் சாத்தியப்பட்டிருக்கிறது. அறிவியலை நேசிக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை நேசிப்பார்கள் என்பது உறுதி.
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
59
60
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
61
colour
62
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016
63
colour
64
புதிய புத்தகம் பேசுது I ஆகஸ்ட் 2016