புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
1
2
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
3
புதிய
புத்தகம் பேசுது
2016 அக்டோபர், மலர்: 14 இதழ்: 8 வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்:
க.நாகராஜன்
முதன்மை ஆசிரியர் : இரா. நடராசன்
ஆசிரியர் குழு: ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா.வாசுகி, ப.கு.ராஜன், இரா.தெ. முத்து, அமிதா, மதுசுதன் எஸ்.வி. வேணுக�ோபாலன் நிர்வாகப் பிரிவு: சிராஜூதீன் (மேலாளர்) உத்திரகுமார் (விளம்பர மேலாளர்)
இதழ் வடிவமைப்பு:வி. தங்கராஜ்,
கா. குணசேகரன், தேவதாஸ் அட்டை வடிவமைப்பு: ஆர். காளத்தி
ஆண்டு சந்தா வெளிநாடு மாணவர்களுக்கு தனி இதழ்
: : : :
ரூ. 240 25 US$ ரூ. 200 ரூ. 20
முகவரி: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 ப�ோன்: 044 - 243 324 24, 243 329 24 whatsapp: 9498002424 email:thamizhbooks@gmail.com
கிளைகள்
www.thamizhbooks.com
திருவல்லிக்கேணி: 48, தேரடி தெரு வடபழனி: பேருந்து நிலையம் எதிரில் அடையார் ஆனந்தபவன் மாடியில் பெரம்பூர்: 52, கூக்ஸ் ர�ோடு ஈர�ோடு: 39, ஸ்டேட் பாங்க் சாலை திண்டுக்கல்: பேருந்து நிலையம் நாகை: 1, ஆரியபத்திரபிள்ளை தெரு திருப்பூர்: 447, அவினாசி சாலை திருவாரூர்: 35, நேதாஜி சாலை சேலம்: பாலம் 35, அத்வைத ஆஸ்ரமம் சாலை, சேலம்: 15, வித்யாலயா சாலை மயிலாடுதுறை: ரசாக் டவர், 1யி, கச்சேரி சாலை அருப்புக்கோட்டை: 31, அகமுடையார் மகால் மதுரை: 37A, பெரியார் பேருந்து நிலையம் மதுரை: சர்வோதயா மெயின்ரோடு, குன்னூர்: N.K.N வணிகவளாகம் பெட்போர்ட் செங்கற்பட்டு: 1 டி., ஜி.எஸ்.டி சாலை விழுப்புரம்: 26/1, பவானி தெரு திருநெல்வேலி: 25A, ராஜேந்திரநகர் விருதுநகர்: 131, கச்சேரி சாலை கும்பக�ோணம்: ரயில் நிலையம் அருகில் வேலூர்: S.P. Plaza 264, பேஸ் II , சத்துவாச்சாரி நெய்வேலி: சி.ஐ.டி.யூ அலுவலகம், பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்: காந்திஜி வணிக வளாகம் காந்திஜி சாலை தேனி: 12,பி, மீனாட்சி அம்மாள் சந்து, இடமால் தெரு க�ோவை: 77, மசக்காளிபாளையம் ர�ோடு, பீளமேடு திருச்சி: வெண்மணி இல்லம், கரூர் புறவழிச்சாலை திருவண்ணாமலை: முத்தம்மாள் நகர், விருதாசலம்: 511கி, ஆலடி ர�ோடு நாகர்கோவில்: கேவ் தெரு, ட�ோத்தி பள்ளி ஜங்ஷன் பழனி: பேருந்து நிலையம் சிதம்பரம்: 22A/ 188 தேரடி கடைத் தெரு, கீழவீதி அருகில் மன்னார்குடி: 12, மாரியம்மன் க�ோவில் நடுத்தெரு
தலையங்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்... உலகின் அனைத்துத் தங்க சுரங்கங்களிலும் இருந்து வெட்டி ம�ொத்தமாக எடுத்த புதையலை விட அதிக செல்வம் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. - வால்ட் டிஸ்னி மனித வரலாற்றின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான். ‘ புத்தகமே இல்லாத குழந்தைதான் உலகில் உண்மையான அனாதை குழந்தை என்பார் சிஸெர�ோ. இன்றைய சமூகத்தின் பல்வேறு அவலங்களுக்கான ஒற்றைத் தீர்வு புத்தக வாசிப்பை பரவலாக்குவதுதான் என்பது ஐ.நா. சபையின் சமீபத்திய அறிக்கையின் சாராம்சமாகும். அதிலும் குறிப்பாக நம் இளைய தலைமுறை வாசிப்பதை நாம் உறுதிசெய்யும் ஒரே செயல் மட்டுமே. ந�ோபல் பரிசு உட்பட பெறும் குழந்தைகளாக, படைப்பாக்க உறுதி மிக்கவர்களாக அவர்களை மாற்ற முடியும். மனதை கட்டுப்படுத்துதல், தீய பழக்கங்களுக்கு ஆட்படாதிருத்தல், இலக்கை, லட்சியங்களை உருவாக்குதல், அதற்காக முழு ஈடுபாட்டுடன் உழைத்தல் எனும் வட்டத்தில் வாசிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இதனை மனதில் க�ொண்டு நம் சமூகத்தை வாசிக்கும் சமூகமாக மற்றும் பெரும் பணி நம்மிடம் உள்ளதை உணர முடிகிறது. ஒரு புத்தகம் நம் குழந்தையின் மனதை மூடிய நிலையிலிருந்து விடுவித்து இருளைப் ப�ோக்கி அறிவை விசாலப்படுத்தி வெற்றியாளர்களாக மாற்றும் சக்தி க�ொண்டது ஆகும். புத்தகம் இல்லாத அறை உயிரற்ற வெற்று உடலைப் ப�ோன்றது. படிப்பு வேறு, வாசிப்பு வேறு என்பதை நம் கல்விமுறை நிரூபித்து உள்ளது. பள்ளியில் பரீட்சைக்கு தயாராவதற்காக படிப்பதும், ப�ொழுதுப�ோக்கு அம்சமாக த�ொடங்கி பிறகு இலட்சியமாக விரிவடையும் வாசிப்பும் எப்போதுமே ஒன்றாக முடியாது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமனிதர்கள் மெத்த படித்தவர்’ அல்ல.. ஆனால் மிக அற்புதமான வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் அத்தகைய மாமனிதர்கள் வரிசையில் நம் குழந்தைகளும் இடம் பெறத்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் இலட்சியக் கனவு என்பது உறங்கினால் வருவதல்ல நம்மை உறங்க விடாமல் செய்வது... ஒவ்வொரு குழந்தையையும் ஒரு குட்டி நூலகத்தின் அளவற்ற அறிவுப் புதையலின் ச�ொந்த மாக்குவது எனும் இலட்சிய கனவும் அப்படியே. இதனை ஊக்கப்படுத்த 50 சதவிகிதம் ஒவ்வொரு குழந்தைக்கும் நாமே முதலீடு செய்யலாம் என்று முன் வந்துள்ளது பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட நம் "புத்தகம் பேசுது" இதழின் பிரமாண்ட பங்களிப்பு ஆகும். நாளைய சமுதாயத்திற்கான ஒட்டும�ொத்த உயர்வுக்காக இன்றே நாம் செய்கிற ஒருவகை அஸ்திவாரமாக இந்த முயற்சி உள்ளது. படைப்பாக்கத்தைத் திறந்து விடும் திறவுக�ோல் வாசிப்பு. அத்தகைய வாசிப்புப் பழக்கத்தின் முதல் படியை எடுத்து வைக்க எங்கள் திட்டத்தில் இணையும் மாணவக் கண்மணிகளுக்கும் அதனை சாத்தியமாக்கிட முன்வந்த பெற்றோர்களுக்கும் "புத்தகம் பேசுது" தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. வாசிப்பை நேசிக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் நம் முயற்சியில் ஒன்றிணைவ�ோம். அனைவருக்கும் நன்றி. - ஆசிரியர் குழு.
தூத்துக்குடி புத்தகத்திருவிழா அரங்கு எண்:
4
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
44, 45
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
5
நூல் அறிமுகம்
ராணா அய்யூபின் 'குஜராத் க�ோப்புகள்' அ.மார்க்ஸ்
கு ஜ ர ா த் த� ொ ட ர ் பாக நடந்த க�ொடு வன்முறைகளின் குறைந்தபட்சம் இரண்டு ஸ்டிங் காலத்தில் பிறந்தவர். குஜராத்தில் ஆபரேஷன்களை (sting opஇ ந்த க் க� ொ டு வ ன் மு றைக ள் eration) டெஹல்கா செய்தது. அரங்கேறியப�ோது அவருக்கு வயது ஆசிரியர் குழுவில் இருந்த அஷிஷ் 18. அதற்கு எட்டாண்டுகளுக்குப் கேதன் இந்துத்துவச் சார்பான பின் இந்த ஸ்டிங் ஆபரேஷனைச் ஆய்வாளர் ப�ோலச் சென்று செய்துள்ளார். அந்தப் படுக�ொலைகளைச் செய்த பஜ்ரங் தள் தலைவன்கள், க�ொலை ர ா ண ா வி ன் த ந்தை யு ம் செய்த பழங்குடி அடியாட்கள் ஒருப�ோதில் பத்திரிகையாளராக எனப் பலரையும் சந்தித்துப் பின் இருந்தவர். உருது ம�ொழியில் அந்த உரையாடல்கள், அவற்றில் சில கவிதைகளையும் எழுதியவர். பல நம் இரத்தத்தை உறைய அ வ ரு டை ய அ ன்னை பாச ம் வைப்பவை, டெஹல்காவில் மிக்க எல்லா அன்னையரையும் வெளிவந்து இந்திய அளவில் ப�ோல ஒரு அன்னை. அவர்கள் கவனத்தை ஈர்த்தது. வெளிவந்த இதன் ஆபத்துகளை அறிந்தனர�ோ ஒரு வாரத்தில் அதன் முக்கியப் இ ல ்லைய�ோ த டையே து ம் பகுதிகளை ம�ொழியாக்கினேன். செய்யவில்லை. ராணா ச�ோர்ந்து "குஜராத் 2002: டெஹல்கா d e p r e s s i o n க் கு ஆ ட்பட்ட அம்பலம்" எனும் தலைப்பில் தருணங்களில் அவருக்கு ஆறுதல் 140 பக்கங்கலில் விரிவான அளித்தவர்கள். என்ன அற்புதமான மு ன் னு ரை ப் பு க ளு ட ன் மனிதர்கள். குஜராத் க�ோப்புகள் | நண்பர் விஜயானந்த் (பயணி ஆ ம் , இ து மி க வு ம் ரி ஸ் க் ரானா அய்யூப்| தமிழில்: கி.வீரமணி | வ ெ ளி யீ ட்டக ம் ) அ தை ஆ ன ச ெ ய ல ்தா ன் . ர ா ண ா வெளியீடு: பாரதி புத்தகாலயம் | ரூ. 170/வெளியிட்டார். அப்படி ஒன்றும் குஜராத்துக்கு டெஹல்கா செய்த இன்னொரு அறிமுகம் ஆகாதவரும் அல்ல.. ஆபரேஷன்தான் இது. இந்த ஆபரேஷனில் இந்தக் இந்த 'ஆபரேஷனுக்கு'ம் க�ொஞ்சம் முன்னர் அவர், க�ொலைகள் நடந்தப�ோது (2002) உயர்பதவிகளில் ஷ�ொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகிய�ோரின் இருந்த காவல் அதிகாரிகள், அரசுச் செயலர்கள், ப�ோலி என்கவுன்டர் என்பது அன்றைய குஜராத்தின் உளவுத்துறைப் பெருந்தலைகள், நரேந்திர ம�ோடியின் உள்துறை அமைச்சரும் நரேந்திர ம�ோடியின் மிக மிக அ மைச்ச ர வை யி ல் அ மைச்ச ர ாக இ ரு ந் து பி ன் மிக நெருக்கமான அந்தரங்க நண்பருமான அமித்ஷா இந்தக் க�ொலைகளில் அவருக்குரிய பாத்திரம் உத்தரவின் பேரில் எடுபிடி ஐ.பி.எஸ் அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை நடத்தப்பட்ட படுக�ொலைகள் என்பதை அமித்ஷாவின் பெற்ற டாக்டர் மாயாக�ோட்னானி முதலியவர்களை அந்த த�ொலைலைபேசி உரையாடல்களின் மூலம் ஏமாற்றி, நட்பாகி, பின் அவர்களைப் பேச வைத்து, வெளிக் க�ொணர்ந்து அமபலப்படுத்தியவர்தான் ராணா. உண்மைகளைக் கறந்து வடிக்கப்பட்டதுதான் குஜராத் இந்தியாவிலேயே காவல்துறைக்குப் ப�ொறுப்பான க�ோப்புகள். ஆனால் எல்லாம் முடிந்தபின் இறுதியில் ஒரு உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும்போதே டெஹல்கா இதை வெளியிட மறுக்க, இப்போது க�ொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு ராணாவே வெளியிட்டுள்ளார். வரலாற்றுச் சாதனைக்குக் காரணமாக இருந்தவர்தான் ராணா அய்யூப் ஒரு "முஸ்லிம் இளம் பெண்". இதில் அந்த முஸ்லிம் இளம் பெண் ராணா. ஒவ்வொரு ச�ொல்லும் முக்கியம். ஒரு பெண், அதுவும் இப்படி எல்லோருக்கும் அறிமுகமான அந்த முகம், இளம் பெண், அதுவும் முஸ்லிம் இளம்பெண் இத்தனை அந்த அழகிய முகம், அந்த அறக் க�ோபம் மிக்க துணிச்சலாய் இதைச் செய்துள்ளது நம்ப இயலாத இளம் முகம்தான் சற்றே தன்னை மாற்றிக் க�ொண்டு, ஒன்று. ராணா இதைச் செய்தப�ோது அவருக்கு வயது இல்லை முற்றிலும் மாற்றிக் க�ொண்டு, மைதிலி தியாகி சுமார் 26 தான்.. அவர் 1984ல், அதாவது டில்லியில் எனும் உயர்சாதி (காயஸ்தர்) அடையாளத்துடன் களம் இந்திரா க�ொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக புகுந்தது.
6
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
7
ராணா அய்யூப் மைதிலி தியாகி ஆன கதை காயஸ்தர் வகுப்பைச் சேந்த மைதிலி தியாகியின் தந்தை சம்ஸ்கிருதப் புலமை உள்ளவர்; இந்துப் பண்பாட்டில் பற்றுள்ளவர். மகளுக்கு சீதாப் பிராட்டியின் திருப்பெயர்களில் ஒன்றை இட்டவர். அந்தக் குடும்பம் இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளது. மைதிலி ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளர். குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக அகமதாபாத் வந்துள்ளார். மைதிலிக்கு ஒரு உதவியாளன். மைக் எனும் ஒரு ஃப்ரெஞ்சுக்காரன். அவன் ஒரு சுவையான இளைஞன். முழுமையாக மைதிலியுடன் ஒத்துழைக்கிறான். இப்படி ஒரு கதையை உருவாக்கினால் மட்டும் ப�ோதுமா? அதற்குத் தக ஓரளவு உருவத்தையும் மாற்றிக் க�ொள்ள வேண்டும். அமெரிக்க accent உடன் ஆங்கிலம் பேச வேண்டும். அவசரத்தில் நம் இந்தியன் இங்கிலீஷைப் பேசிவிடக் கூடாது. உடலெங்கும் இரகசியக் கேமராக்களைப் ப�ொருத்திக் க�ொண்டு 'மெடல் டிடெக்டர்களை' ஏமாற்றி உள்நுழைந்து வேலை த�ொடங்குகையில் கேமராவின் ப�ொத்தான்களை மறக்காமல் இயக்கி, அப்போது அது உமிழும் சிவப்பு வெளிச்சத்தை மேலங்கியால் லாவகமாக மறைத்து, அதே நேரத்தில் காமிராக்கள் சரியாக அவற்றின் பணியைச் செய்து க�ொண்டுள்ளனவா என கவனிக்க அவ்வப்போது ஏதாவது ஒரு ப�ொருளைக் கீழே தவறவிட்டுப் பின் குனிந்து அதை எடுப்பது ப�ோல காமிராவை ந�ோட்டம் விட்டு அப்பப்பா, தெரிந்தால் என்ன ஆகும்? எதுவும் ஆகலாம். அவர்களில் பலர் ஏகப்பட்ட என்கவுன்டர்களைச் செய்து புகழ் பெற்றவர்கள். சிங்கால் எனும் அந்த அதிகாரி இஷ்ரத் ஜெஹான் எனும் 19 வயதுப் பெண்ணை இதர மூன்று இளைஞர்களுடன் பிடித்துச் சென்று தீர்த்துக் கட்டிய குழுவில் இருந்தவன். இப்படியான தீர்த்துக்கட்டல்களில், தீர்த்துக் கட்டினால் மட்டும் ப�ோதாது. தீர்த்துக்கட்டப்பட்டவர்கள் மீது அவதூறுகள் ப�ொழிய வேண்டும். ஆனால் அது எளிது. அவதூறுகளைச் ச�ொன்னாலே ப�ோதும். அவற்றை நிறுவ வேண்டியதில்லை. அவை நிரூபிக்கப்பட்டவையாகவே ஏற்றுக் க�ொள்ளப்படும். நீங்கள் நம்புவீர்கள். பத்திரிகைகள் நம்பும். ஏன், நீதிமன்றங்களே நம்பும். இஷ்ரத் ஜெஹான் எனும் அந்த 19 வயதுப் பெண் லக்ஷர் ஏ த�ொய்பா எனச் ச�ொல்லி ஒரு நாயைப்போலச் சுட்டுக்கொல்லப்பட்டது ப�ோல இந்த 26 வயதுப் பெண்ணை அவர்கள் சுட்டுக் க�ொல்ல முடியாதா? அதுவும் ராணா விஷயத்தில் இது இன்னும் எளிது. பெயரை மாற்றி, அடையாளத்தை மாற்றி சிம்கார்டு வாங்கியவள், ப�ொய்ப் பெயரில் அகமதாபாத்தில் பல இடங்களில் தங்கியவள், முஸ்லிம்... இவை ப�ோதாதா கதை கட்ட... கதை முடிக்க. ராணாவின், பின் புகழ் பெற்ற டெஹல்கா இதழ் இருந்தது உண்மைதான். இப்படி அவர் க�ொல்லப்பட்டிருந்தால் அது உரத்தக் குரல் எழுப்பும் என்பது உண்மைதான். நாமெல்லோரும் கண்டித்து
8
ஸ்டேடஸ் ப�ோடுவ�ோம் என்பதும் உண்மைதான். க�ொஞ்சநாள் இது பேச்சாகும். ஆனால் ராணா எனும் அந்த இளம் பெண்ணின் கதை... முடிந்தது முடிந்ததுதானே. ஒவ்வொரு 'ரிஸ்க்கை'யும் டெஹல்காவின் ஷ�ோமா சவுத்ரியைய�ோ தருண் தாஜ்பாலைய�ோ த�ொடர்பு க�ொண்டு கேட்டு முடிவெடுக்க இயலாது. அந்தக் கணத்தில் முடிவெடுத்தாக வேண்டும். ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் விளைவைச் சுமக்க வேண்டும். எது நடந்தாலும் அதற்கு அவரே ப�ொறுப்பு. அந்தச் சிலமாதங்கள் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? இடையில் depression ஏற்பட்டு மருத்துவர்களையும் சந்திக்க நேர்கிறது. அப்படித்தான் ஒருமுறை உஷா என்றொரு உயர் ப�ோலீஸ் அதிகாரி. அவர் மைதிலியை முழுமையாக நம்பியவர்களில் ஒருவர். அவர் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு உடன் வரச் ச�ொல்லி ப�ோன் செய்கிறார். எப்படி இருக்கும். ஒரு வேளை ப�ோகாவிட்டால் அந்தத் த�ொடர்பு அற்றுப் ப�ோகலாம். க�ொண்ட பணிக்கு அது ஒவ்வாது. ப�ோய்த்தான் ஆக வேண்டும். ப�ோகிறார். அதுவும் அவர் வரச் ச�ொன்னது ஒரு மாதிரியான இடம். ஆட்டோகாரரே எரிச்சல் உறுகிறார். இறுதியில் விஷயம் சாதாரணமானதுதான். ஒரு திரைப்படத்திற்குப் ப�ோகலாம் என்கிறார். அதுவும் இதுப�ோல ஒரு அரசியல் படந்தான். இ ன்ன ொ ரு மு றை , ஒ ரு அ தி கா ரி யு ட ன் மைதிலி ப�ோகும்போது 'மெடல் டிடெக்டர்'க்கு ஆட்படவேண்டிய நிலை. இவர் உடம்பெங்கும் துடுக்குடன் கண்சிட்டிக் க�ொண்டிருக்கும் அந்த உளவுக் காமிராக்கள்... இன்றோடு கதை முடிந்தது என அவர் தடுமாறிய தருணம் ஒரு கீழ் மட்ட அதிகாரி ஓடி வந்து இவர்களுக்கு 'சல்யூட்' செய்து உள்ளே அழைத்துப் ப�ோகிறார். 2002ல் அந்தப் பெருங் க�ொடுமை நடந்தத�ோடு அங்கு எல்லாம் ஓய்ந்து விடவில்லை. இப்படியான பெருங் க�ொடுமைகளைத் த�ொடர்ந்து நியாயப்படுத்திக் க�ொண்டே இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேர்கிறது. அதற்கு இன்னும் சில க�ொலைகளைச் செய்தாக வேண்டும். இப�ோது மேற்கொள்ளப்பட்டவை நேரடியான அரச க�ொலைகள். இதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் உயர் காவல்துறை அதிகாரிகள். அவர்களுக்கான ஆணை நேரடியாக அன்றைய உள் துறை அமைச்சர் அமித் ஷா விடமிருந்து செல்கிறது. இணையாக நரேந்திரம�ோடியின் உயிருக்கு ஆபத்து; லக்ஷர் ப�ோன்ற அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன என கதைகள் கட்டப்படுகின்றன. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ஜி.சி. சிங்கால், அமின் ஆகிய உயர் அதிகாரிகள் களத்தில் இறக்கப்படுகின்றனர். இவை எதுவும் நமக்குத் தெரியாதவை அல்ல. பின் எந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது? இந்த ஸ்டிங் ஆபரேஷன் அளிக்கும் thrill நம்மை வளைத்துப் ப�ோடுகிறதா?
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
அது மட்டுமல்ல. சில நுணுக்கமான விவரங்கள் (microscopic details) இந்நூலில் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் இரண்டொன்றைப் பார்ப்போம். தலித் உயர் அதிகாரிகளின் குமுறல்... சற்று முன் நான் ச�ொன்ன இந்த உயர் காவல்துறை அதிகாரிகள் பலரும் தலித் மற்றும் மிகவும் அடிநிலையில் உள்ள சாதியினர். இவர்கள் அனைவரும் தாங்கள் ஆதிக்க சாதி உணர்வுகளால் எப்படியெல்லாம் சமுகத்தில் இழிவு படுத்தப்படுகிற�ோம் என்கிற பிரக்ஞையுடன் உள்ளனர். மைதிலியிடம் அவர்கள் இதை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. தாங்கள் தலித் என்பதாலேயே இத்தகைய என்கவுன்டர் க�ொலைகளுக்கு ஏவப்படுகிற�ோம், தாங்கள் ஓய்வு பெற்ற பின்னும் கூட ஏன் ஒரு நல்ல நகர்ப்புறத்தில் வீடுகட்ட இயல்வில்லை, இன்னும் தாங்கள் கிராமங்களுக்குப் ப�ோனால் எப்படி அலட்சியப்படுத்தப்படுகிற�ோம், மதிப்பிழந்து நிற்கிற�ோம் என்பதை ஒரு வாக்குமூலம் ப�ோல இந்த அதிகாரிகள் ச�ொல்லிக் குமுறுகின்றனர். 2002ல் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (ATS) தலைமை அதிகாரியாக இருந்த (DG) ராஜன் பிரியதர்ஷி ச�ொல்வார்: "நான் என்ன ச�ொல்கிறேன் என்றால், ஒரு தலித் அதிகாரியைப் பச்சைப் படுக�ொலையைச் செய்ய உத்தரவிட முடியும். ஏனெனில் அவருக்குச் சுயமரியாதை கிடையாது; உயர் குறிக்கோள்கள் கிடையாது (எனக் கருதப்படுகின்றனர்). குஜராத் காவல் துறையில் உள்ள உயர்சாதியினர் தான் (எல்லோரது) நன் மதிப்பையும் பெற்றவர்களாக உள்ளனர்..." மைதிலி சந்தித்த எல்லா தலித் உயர் அதிகாரிகளும் இதே த�ொனியில்தான் பேசுகின்றனர். ஆனால் இப்படி முஸ்லிம்களின் மீதான வன்முறையைப் பற்றிப் பேசும்போது இந்த அதிகாரிகளில் பலர் முஸ்லிம்கள் குறித்து இந்துத்துவம் பரப்பியுள்ள கருத்துக்களை உள்வாங்கியவர்களாகவே உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 2002 வன்முறையைப் ப�ொருத்த மட்டில் முஸ்லிம்களுக்கு இழப்புகள் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் இதற்கு முந்திய வன்முறைகள் அப்படி அல்ல என்று இவர்கள் திரும்பத் திரும்பச் ச�ொல்கின்றனர். "முஸ்லிம்களுக்கு இப்படி ஒரு பாடம் தேவைதான் என்கிற த�ொனி இவர்களிடம் வெளிபடுகிறது" 2002 வன்முறைகளுக்குப் பின் உடனடியாக இது த�ொடர்பாக வெளி வந்த EPW சிறப்பிதழ் கட்டுரைகளை ம�ொழியாக்கி எனது சில கட்டுரைகளையும் இணைத்து அப்போது வெளியிடப்பட்ட 'குஜராத் 2002 : அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்' எனும் நூல் (அடையாளம் வெளியீடு, 2002, பக் 244) மிக முக்கியமானது. குஜராத் 2002 ஐப் புரிந்து க�ொள்ள ஒரு முக்கியமான ஆவணம் அது. அதிலுள்ள அத்தனை கட்டுரைகளும் படிக்க வேண்டியவை என்ற ப�ோதிலும் டாக்டர் பாலக�ோபால், உபேந்திர பக்ஷி, தனிகா
சர்க்கார், நிவேதிதா மேனன் ஆகிய�ோரின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. அதிலுள்ள "இந்து ராஷ்டிரத்தின் குஜராத் பிரதேஷ் : சில சிந்தனைகள்" எனும் பாலக�ோபாலின் கட்டுரை முஸ்லிம்களின் மீதான இந்த வன்முறையில் அடித்தள மக்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த ஒரு ஆழமான ஆய்வுரை. இன்று ராணா அய்யூப் முன் வைக்கும் கருத்துக்கள் இத்துடன் ஒப்பு ந�ோக்கத் தக்கவை. "அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவானவர்களாகவே இருப்பர்" என்கிற political correctness த�ொடர்பான பிரச்சினையை பாலக�ோபால் இதில் விவாதப் ப�ொருளாக்கி இருப்பார். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு ஆதரவாக நிற்பர் என்பது க�ொள்கை அடிப்படையில் உண்மைதான். ஆனால் அது தானாக நிகழ்வதில்லை. அந்தச் சிந்தனைகளைச் சமூகத்தில் நிகழும், நிலவும் பல்வேறு எதிர்நம்பிக்கைகளும் ப�ொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களும் மூடித் திரையிடுகின்றன. அத்தோடு சங்கப் பரிவாரங்கள் நம்மைப் ப�ோல ச�ோம்பிக் கிடப்பதில்லை. அவர்கள் பழங்குடியினர், அடித்தள மக்கள் ஆகிய�ோர் மத்தியில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். அடித்தள மக்கள் முற்போக்குச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுவது தானாக நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பது இடதுசாரிகள் கவனத்தில் க�ொள்ள வேண்டிய ஒன்று. இன்னொரு பக்கம், தலித் அரசியல் தலைவர்களும் பல நேரங்களில் இந்துத்துவத்தை நியாயப்படுத்தி விடுகின்றனர். 2002 க்குப் பிறகு நடந்த குஜராத் மாநிலத் தேர்தலில் மாயாவதி நரேந்திரம�ோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திற்குப் ப�ோனார். ' க ர சேவகர ்க ள் ' ப�ோன்ற இ ந் து த் து வ ச் ச�ொல்லாடல்களுடன் அவரது பேச்சு அமைந்தது. 2002 க்குப் பின்னும் பா.ஜ.க வுடன் மாயாவதி உ.பி யில் கூட்டணி அமைத்ததும் குறிப்பிடத் தக்கது. இன்று உனா வில் மாட்டுக்கறிப் பிரச்சினையில் குஜராத் தலித்கள் இந்துத்துவத்திற்கு எதிராகத் திரண்டிருப்பது ஒரு அற்புதமான திருப்பம். "தலித் முஸ்லிம் ஒற்றுமை" எனும் முழக்கமும் இன்று உருவாகியுள்ளது. பி.சி. பாண்டே 2002 ல் அதிக அளவில் கலவரங்கள் நடைபெற்ற அகமதாபாத் நகர கமிஷனராக இருந்தவர். நரேந்திர ம�ோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த விசுவாசத்திற்குப் பரிசாகப் பின்னர் DGP ஆகப் பதவி உயர்த்தவும் பட்டவர். முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்துவதில் அவரும் சளைத்தவரில்லை என்பது உரையாடலில் வெளிப்படுகிறது. முதன் முதலில் மைதிலி அவரைப் பார்க்கச் செல்லும்போது அந்தச் சந்திப்பு இப்படித்தான் நடக்கிறது. அவரது விசாலமான பங்களாவில் அவர்து வயதான தாயை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிச் சென்றவாறே இவருடன் பேசிக் க�ொண்டு வருவார், ராஜன் பிரியதர்ஷி,, சிறப்புக் காவல் படைத் தலைவர் ஜி.எஸ். சிங்கால் 2002 ல் உள்துறைச் செயலராக இருந்த அச�ோக் நாராயணன், ஏன்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
9
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா க�ோட்னானி உட்பட இவர்கள் அனைவரும் மிக்க அன்புடனும் கண்ணியத்துடனும் பழகுகின்றனர். இவர்களில் சிலர் இந்த மைதிலி எனும் இந்துப்பெண்ணை மகளே ப�ோல நேசிக்கவும் வீட்டில் விருந்து பரிமாறவும் செய்கின்றனர். அன்பான குடும்பத் தலைவர்களாய் மனைவி மகக்ளை நேசிப்பவர்களாய் இருக்கின்றனர். சிங்கால் பின்னர் வழக்குகலில் சிக்கி அலைக்கழிய இருக்கும் நேரத்தில் அவரது மகன் தற்கொலை செய்து க�ொள்கிறான். இது அவரைப் பெரிதும் பாதிக்கிறது. வன்சாராவை மைதிலி சந்திக்கவில்லை. ஆனால் அவரும் கூட பிரச்சினை என வரும்போது ம�ோடி உட்பட்ட மேலே உள்ளவர்கள் இவர்களைக் கைவிடும் நிலையில் ச�ோர்ந்து ப�ோய்த் தாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்ததையும் நாம் பார்த்தோம். நரேந்திர ம�ோடியும் சங்கப் பரிவாரங்களும் அப்படி ஒன்றும் நம்பிக்கைத் துர�ோகமாக இந்த அதிகாரிகள், குறிப்பாக தலித் அதிகாரிகளிடம் நடந்து க�ொண்டனர் என்பதில்லை. கூடியவரை அவர்களைக் காப்பாற்றவே முனைகின்றனர். ஆனால் நிலைமை கைவிட்டுச் செல்லும்போது அவர்கள் இவர்களைப் பலி க�ொடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. ராஜதர்மம் என்பது அதுதானே. இந்தக் கண்ணியமிகு அ ் திகாரிகள், அமெரிக்காவிலிருந்து ஆவணப் படம் எடுக்க வந்துள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் மகளே ப�ோல அன்பு காட்டும் இவர்கள், முஸ்லிம்கள் என வரும்போது க�ொட்டும் வெறுப்புதான் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. மாயா க�ோட்னானியை முதல் முறையாக மைதிலி சந்திக்கும்போது அவரது பெயரைக் கேட்டு மாயா புளகித்துப் ப�ோகிறார். ஸ்ரீராமனின் மனைவியின் பெயரல்லவா. மைதிலியும் தன் தந்தையின் இந்துப் பண்பாட்டுப் பற்றை வெளிப்படுத்துகிறார். சில தருணங்களில் சமஸ்கிருத சுல�ோகங்களைச் ச�ொல்லி அசத்தவும் அவர் தயங்குவதில்லை. வெளி நாட�ொன்றில் 'செட்டில்' ஆகியுள்ள ஒரு இந்துப் பெண்ணிடம் வெளிப்படும் இந்த பாரம்பரியப் பற்றில் அவர்கள் மனம் நெகிழ்கின்றனர். இவை அனைத்தும் மிக மிக இயல்பான ஒன்று, மிகவும் அனுதாபத்துடன் பார்க்க வேண்டிய ஒன்றும் கூட. ஆனால் இதன் இன்னொரு பக்கம், அப்பா.. எத்தனை அச்சத்திற்குரியதாக உள்ளது.... ஒருமுறை மாயா மைதிலியிடம் ச�ொல்வார்..."பார், நமது (அதாவது இந்து) குழந்தைகளுக்கு என்ன ச�ொல்லித் தருகிற�ோம். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு செய்யக் கூடாது என்றுதானே ச�ொல்லித் தருகிற�ோம். ஆனால் பார் இந்த முஸ்லிம்களை அவர்கள் முதலில் ச�ொல்லிக் க�ொடுப்பதே 'க�ொல்' எனும் ச�ொல்லைத்தான். அவர்களின் மதரசாக்களில் இதைத்தானே ச�ொல்லித் தருகிறார்கள்.." - இப்படிச் செல்கிறது அந்த உரையாடல். இதற்கு என்ன விளக்கம் ச�ொல்வது. ஒரு படித்த, ப�ொதுவாழ்வில் உள்ள, தினந்தோறும் தன் கிளினிக்கில் புதிய புத்தகம் பேசுது 10
பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கிற ஒரு டாக்டர் மனதில் இத்தனை அறியாமை, இத்தனை வன்மம் எப்படிப் புகுந்தது. திருக்குரானை ஓதி விட்டு வெடிகுண்டு வைத்து மக ்க ள ை க் க� ொ ல ்ல ப் ப�ோ கு ம் த ா டி வைத்த முஸ்லிம்களைத் திரையில் காட்டும்போது அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி நடுக்குற்று எதிர்வினை ஆற்றும் முஸ்லிம்களை கருத்துரிமைக்கு எதிரான காட்டுமிராண்டிகளாய்ச் சித்திரிக்கும் நம் அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டிய புள்ளி இது. ஜனநாயக முறைக்குள் செயல்படும் ஒரு அரசு மக்களுக்கு எதிரான இப்படியான வன்முறை அரசாக மாறுவதன் சாத்தியங்கள், பிரச்சினைகள் ஆகியவை பற்றிய சில சிந்தனை உசுப்பல்களுக்கும் ராணா அய்யூப்பின் இந்நூல் பயன்படும். சஞ்சீவ் பட் எனும் ஒரு அய்.பி.எஸ் அதிகாரி 2011ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் த�ொடர்ந்தார். 2002 ஜன 27 அன்று அதாவது க�ோத்ரா நிகழ்ந்த அன்று நரேந்திர ம�ோடி உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி அதில் அடுத்த இரண்டு நாட்கள் குஜராத்தில் மக்கள் தங்கள் க�ோபத்தை வெளிப்படுத்தும்போது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்க வேண்டும் எனக் கூறியதாக அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 2002 ல் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்ட்யா இப்படியான ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அவர் 2003ல் க�ொல்லப்பட்டார். அவரது க�ொலையில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மும்பையின் மிகப் பெரிய என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் ஒருமுறை இதுபற்றி "இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் க�ொலை" எனவும் இதில் குற்றவாளிகள் சி.பி.ஐயால் தப்புவிக்கப்பட்டனர் என்றும் கூறியது குறிப்பிடத் தக்கது. இ து ஒ ரு பக ்க ம் . இ ன் று ர ா ண ா அ ய் யூ ப் வெளியிட்டுள்ள அவரது ஸ்டிங் ஆபரேஷனை உறுதி செய்வதற்கு ஆதாரம் (corroboratory evidence) இல்லை. முன்னதாக ஹரேன் பாண்ட்யாமுன் வைத்த குற்றச்சாட்டிலும் அந்த ஜன 27, 2002 இரவுக் கூட்டத்தில் கலந்து க�ொண்ட அதிகாரிகளின் பட்டியலில் சஞ்சீவ் பட் பெயர் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. சஞ் சீ வ் ப ட் ப�ோன் ற ோ ர் ம � ோ டி அ ர சால் த ா ம் ப ழி வா ங ்க ப்பட்ட க�ோப த் தி ல் மு ன்வை க் கு ம் கு ற்றச்சா ட் டு க ளி ல் உ ண்மைக ள் மிகைப்படுத்தப்படும்போது அவர்களின் ந�ோக்கமே பாழாகிறது. நமது முற்போக்கு நண்பர்களும் கூட தாங்கள் ஆதரவற்றவர்களின் பக்கலில் நிற்கும் உற்சாகத்தில் இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட குற்றசாட்டுகளை வைக்கும்போது பிரச்சினைகள் எழுகின்றன. முஸ்லிம்கள், தலித்கள், இன்னும் ஒடுக்கப்பட்டோர் பாதிக்கப்படும்போது உண்மைகளே நமக்குப் ப�ோதுமானவை . மிகைப்படுத்தட்ட செயல்கள்
I அக்டோபர் 2016
அ ற மற்றவை எ ன்ப து மட்டுமல்ல அவை அழிவிற்கே இட்டுச் செல்லும். அதிகாரிகளின் கூற்றுகளைக் கூர்ந்து பார்த்தோமானால் ஒன்று தெரிகிறது. நரேந்திர ம � ோ டி அ ப்ப டி ய ான ஒ ரு சைகையை த ன க் கு நெருக்கமான அதிகாரிகளுக்கு இ ட்டா ர் எ ன்ப து ம் , அவ்வாறே அது முழுமையாக அ டு த்த ந ாட ்க ளி ல் கடை பி டி க ்க ப்பட்ட து என்பதும் ஊரறிந்த உண்மை. ஆனால் சஞ்சீவ் பட் ச�ொன்னது ப�ோல அதிகாரிகள் கூட்டம் ஒ ன்றை க் கூ ட் டி அ தி ல் ஒரு முதலமைச்சர் இப்படி ஆ ணை யி டு வா ர் எ ன்ப து இன்றைய ஆட்சி முறையில் சுந்தரபுத்திரன் சாத்தியமில்லை. இன்றைய ஜனநாயகத்தில் ஏ ர ாளமாக க் கு றைக ள் உள்ளன என்பதிலும் நரேந்திர ம�ோடி ப�ோன்றவர்கள் இதை வளைத்துத் தங்களின் மத வெறுப்பைச் சாத்தியமாக்கிக் க� ொ ள்ள மு டி யு ம் எ ன்ற ப�ோதிலும் முற்றிலும் இங்கே ஜனநாயச் சட்டகம் உடைந்து ந�ொறுங்கி விடவில்லை. ஒரு 25 முக்கிய அதிகாரிகளைக் கூட்டி இப்படி ஒரு ஆணையை அழுத்தம் திருத்தமாக ஒரு முதலமைச்சர�ோ பிரதமர�ோ இ ட் டு வி ட மு டி ய ா து . ஒ ரு ஐ ந் து அ தி கா ரி க ள் நேமை ய ாகவ�ோ இ ல ்லை மா ற் று க் க ரு த் து க ்க ள ை க் க� ொ ண் டி ரு ந்தால் அ து பிரச்சினைதான். இன்றளவும் ராணா அய்யூப் பின் இநூல் ப�ோன்றவை வெளியிடப்பட்டுச் சர்ச்சைகள ை ஏ ற்ப டு த்த வா ய் ப் பு க ள் இ ரு ந் து க�ொண்டுதான் உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ந ா ம் எ ன்ன கி ழி த் த ோ ம் என்கிற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை ஆனாலும் மு ற்றாக அ ன ை த்தை யு ம் மறுத்துவிட இயலாது.
கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள். அஞ்சலி சி. தெட்சிணாமூர்த்தி (1943 - 2016) வேலூருக்கு அருகிலுள்ள குடியாத்தம் நகரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவரான தெட்சிணாமூர்த்தி, 1966 ஆம் ஆண்டில் சென்னை ஒவியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் த�ொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக க்ராய்டன் காலேஜ் ஆப் டிசைன் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் பிரிண்ட் மேக்கிங் கற்றார். சிற்பி தெட்சிணாமூர்த்தியின்மா ணவரான ஓவியர் க. நடராசன் அவரைப் பற்றி தி இந்து தமிழ் கட்டுரையில் இவ்வாறு நினைவுகூர்கிறார்: "சென்னை ஓவியக் கல்லூரிக்குள் இந்தியக் கலை மரபு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்துக�ொண்டிருந்த 1950-60களின் காலப் ப�ொழுதில்தான் த மி ழ்நா ட் டி ன் பி ற்ப டு த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். அவர்களுள் தட்சிணாமூர்த்தி முக்கியமானவர். பின் புலமற்ற சாமானியர்களின் முதலாம் தலைமுறையின் படைப்புகளைச் சமூகம் எ ந்த க் கே ள் வி யு மி ன் றி உ ள்வாங் கி க் க�ொள்ளவேண்டும் என்ற தேவையும் அதன் அடிப்படை நியாயங்களும் இவர்களுக்கு ஒரு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் நாட்டார் கலை மரபு நவீன ஓவியத்தின் மீது ஆளுமை செய்யத் த�ொடங்கியது" என்று குறிப்பிடுகிறார். மனிதர்கள், பறவைகள், செடிக�ொடிகள்தான் அவருடைய சிற்பங்களை அலங்கரித்த கருப்பொருள்களாக இருந்தன. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நேசித்த கலைஞராகவே இருந்தார் என்பதை அவரது மனித முகங்கள், உருவங்களின் சிற்ப வெளிப்பாடுகளில் இருந்து அறியலாம். அம்மனித முகங்களில் கருணையும், அன்பும், ஆசையும், காதலும் துயரமும், கவலையும் பெருக்கெடுக்கின்றன. கிராமத்து அய்யனார் சுடுமண் சிற்பங்கள், ஆப்பிரிக்க சிற்பங்களில் இருந்து தனக்கான சிற்ப உலகத்திற்கான ஊக்கம் பெற்றவர் தெட்சிணாமூர்த்தி. அதன் பாதிப்பில் கருங்கல், செராமிக்ஸ், செம்பு என கச்சாப்பொருள்களில் அவரது சிற்பங்கள் தனித்த கலைம�ொழியைப் பேசுகின்றன. தன் முதல் கண்காட்சியை லண்டன் க்ராய்டன் கல்லூரியில் படிக்கும்போது 1978ஆம் ஆண்டு நடத்தினார். சென்னை, மும்பை, டெல்லி, பியூனஸ் ஏர்ஸ் ப�ோன்ற நகரங்களில் அவருடைய கலைப்படைப்புகள் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் சிற்பத்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார். தேசிய விருது (1986), மைசூர் தசரா விருது (1972), மாநில விருதுகள் (1963,1965) என தெட்சிணாமூர்த்தின் கலைத்திறன் அனைவராலும் அடையாளம் காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு கலைஞன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுவதும் விருதளித்து கெளரவம் செய்யப்படுவதும் தமிழ்ச் சூழலில் அரிய நிகழ்வாக இருந்துவருகிறது. தெட்சிணாமூர்த்தியின் கலைவாழ்வு அந்த அரிதிலும் அரிதை சாதித்திருக்கிறது. அவருடைய சிற்பங்கள் காற்றின் திசையெங்கும் கலைச் செழுமை பேசிக்கொண்டே இருக்கும். புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016 11
திராவிட இயக்கம்: தேவையை உணர்கிறேன்... தலைமையை நிராகரிக்கிறேன்... நேர்காணல்:
ப.திருமாவேலன்
கேள்விகள்: பூ.க�ொ.சரவணன்
12
பெ ரிய�ோர்களே,
தாய்மார்களே’ நூல் சமகால அரசியலை கடந்த காலத்தின் கண்ணாடி க�ொண்டு விரிவாக அணுகுகிறது. அரசியல் சார்ந்த தீவிரமான கருத்துக்களைச் ச�ொல்ல மேடைப் பேச்சு நடையை க்கையாண்டு இருப்பதாக உணர முடிகிறது. இது திட்டமிடப்பட்டதா? ஆமாம்! எனது எழுத்துக்களில் புரியாத ச�ொற்கள், அறியாத ச�ொற்கள், குழப்பமான ச�ொற்கள் இருக்கக்கூடாது என்பதில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். பு ரி ய ா த , அ றி ய ா த , கு ழ ப்பமான ச� ொ ற ்க ள ை ப் பயன்படுத்துவது என்பது எதற்காக எழுதுகிற�ோம�ோ, யாருக்காக எழுதுகிற�ோம�ோ அந்த ந�ோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. எழுதுவதன் ந�ோக்கம், ‘நான் அறிந்தவன்’ என்று கூவுவது அல்ல. நான் அறிந்ததைக் கூவுவது. இதற்கு மேடைப்பேச்சு நடையைக் கையாண்டதற்கு இரண்டு காரணங்கள்... மேடையால் வளர்ந்ததே தமிழக அரசியல். முழக்கங்களால் வளர்க்கப்பட்டதே தமிழக அரசியல். எத்தனை நவீன ஊடகங்கள் வந்தாலும் இன்றும் மேடையைக் கலைக்காமல் தான் உள்ளது தமிழக அரசியல். அதனால் தான் மேடைத்தமிழ் இதற்கு இயல்பாகப் ப�ொருந்திப் ப�ோனது. இரண்டாவது... இந்தக் கட்டுரைகள் ஜூனியர் விகடன் இதழில் வெளியான தினமே, யு டியூப், சவுண்ட் க்ளொவ்ட் ஆகிய இணையத்தளங்களில் ஒலி வடிவிலும் வழங்கப்பட்டது. இப்போதும் அந்த தளங்களில் 88 கட்டுரைகளும் ஒலி வடிவில் இருக்கின்றன. எனது குரலில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இன்று ஊடகம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுள்ளது. அனைத்து வடிவங்களையும் பயன்படுத்தினால்தான் மக்களைச் சென்றடைய முடியும். அந்த ந�ோக்கமும் இந்த த�ொடர் மூலம் நிறைவேறியது. வெகுஜன ஊடகத்தில் ஒரு த�ொடர் அச்சிலும், ஒலிவடிவிலும் வந்தது. இந்த வசதிக்காகவும் அந்த த�ொடர் மேடைத்தமிழாக அமைந்தது. எதுவாக இருந்தாலும் மக்களை அடைதல். அந்த ந�ோக்கத்துக்கு வாய்ப்பானது மேடைத்தமிழ். உ.வே..சாவின் ‘என் சரித்திரம்’ பல்வேறு தமிழக ஊர்களின் கதைகளைத் தன்னகத்தே க�ொண்டிருக்கும். உங்களின் நூலில் சென்னையின் வரலாறு அப்படியே விரவிக் கிடக்கிறது. ‘க�ோட்டையின் கதை’ என்று சென்னையின் வரலாற்றை ஏற்கனவே பதிவு செய்தவர் நீங்கள். சென்னை இந்த நெடும் வரலாற்றில் இழந்திருக்கக் கூடாத ஒன்று என்று எதைச் ச�ொல்வீர்கள். இன்னமும் அது அரசியல் புலத்தில் தக்கவைத்துக் க�ொண்டிருப்பதாக எதைப் பார்ப்பீர்கள்? ச ெ ன்னை , சு த ந் தி ர ப்போ ர ாட்ட க் கா ல த் தி ல் தென்னிந்தியாவின் தலைவிதியைத் தீர்மானித்த ஊர். அதற்கும் முன்னால் இந்தியாவின் தலையாக இருந்த மூன்று மாநகரங்களில்( மற்ற இரண்டு கல்கத்தா, பம்பாய்! ) ஒன்று. அதற்கும் முன்னால், பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக அடித்தளம் அமைக்கப்பட்ட முதல் ஊர். அதற்கும் முன்னால், கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்துக்கான புதுக்கணக்கு த�ொடங்கப்பட்ட இடம். இந்த நானூறு
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
ஆண்டுகால வரலாற்றுக்கு முன்னாலும் இந்தப் பட்டணம் இருந்தது. பட்டணமாகவே இருந்தது. இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் இன்று அதற்கான எந்தப் புகழையும் அடையாளப்படுத்தும் புறக்குறியீடுகள் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், தமிழர்களின் வரலாற்று அக்கறை இன்மையே! 1960க்குப் பிறகு உருவான சென்னைப் பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகள், தெருக்கள், கட்டிடங்கள் அனைத்துக்குமே செறிவான வரலாறு உண்டு. ஆனால் அது நம்மவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அந்த அக்கறை இல்லை. சென்னை பழமையானது என்று ச�ொல்வதற்கான ஒரே சாட்சி... இங்கே இருக்கும் கடற்கரை மட்டும் தான். இந்தக் கடற்கரை இல்லாவிட்டால் இது பழமையான நகரம் என்ற சிந்தனையே நம்மவர்களுக்கு இருக்காது. அதனால் தான், அரசியல் நிகழ்வுகளைச் ச�ொல்ல வந்த நான், அதனூடாக அந்த நிகழ்வுகள் நடந்த இடங்களின் வரலாறுகளையும் சேர்த்துச் ச�ொல்ல நினைத்தேன். ச ெ ன்னை யி ன் இ ட வ ர ல ா று பே சு பவர ்க ள் அரசியலையும் சமூக நிலைமைகளையும் சேர்த்துச் ச�ொல்ல ஆரம்பித்தால் மட்டுமே ‘சென்னை தினத்தை’ சென்னைவாசிகள் அனைவரும் க�ொண்டாடுவார்கள். அதைச் செய்யாவிட்டால், ‘சென்னை தினம்’ கார்பரேட் பிராண்டாக மற்றும் மாறிவிடும். மாற்றப்பட்டு விடும்!" இந்த நூல் முன், பின்னாகப் பயணிக்கிறதே?" "இந்தப் புத்தகம் எழுதப்பட்டதே அரசியல் அக்கறை, வரலாற்றுப் புரிதல், சமூக ந�ோக்கம் அற்ற இளைஞர்களுக்குச் சில புரிதல்களை ஏற்படுத்தலாம் என்பதற்காகத்தான். இ ந்த ப் பு த்தக த் தி ன் மு ன் னு ரை யி லேயே ந ா ன் ச�ொல்லி இருக்கிறேன், "நான் எந்த புதிய தகவலையும் முதன்முதலாகக் கண்டுபிடித்துச் ச�ொல்லவில்லை"’ என்று. இவை ஏற்கனவே பல்வேறு ஆய்வாளர்களால், ஆளுமைகளால் எழுதப்பட்ட தரவுகள்தான். அவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் க�ொண்டுவந்து நிறுத்தி இருக்கிறேன். பல நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இருந்து திரட்டப்பட்டவை இவை. இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் அரசியல் ஆர்வம், சமூக ந�ோக்கம் க�ொண்டவராக இருந்தால் கூட படித்து முடிப்பது கடினம். எனவே சுருக்கமாக, ஆனால் ம�ொத்தமாகத் த�ொகுத்தேன். என்னைப் ப�ொருத்தவரை இது த�ொகுப்பு நூல். இது காலவரிசை நூல் அல்ல. ச�ொல்ல வேண்டியவை மட்டும் ச�ொல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஊடாக பயணிக்கும் நூல். அரசியலற்று தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இருப்பதை இடித்து உரைக்கிறீர்கள். இந்த அரசியல் பார்வை அற்றவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்? எப்படி இந்தச் சீர்கேட்டை தமிழ்ச் சமூகம் பல்வேறு தளங்களில் எப்படி எதிர்கொள்வது? "இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறுகச் சிறுக நல்ல தரவுகளைப் புகட்டித்தான் உள்ளே இழுத்து வரவேண்டும். ஜி.சுப்ரமணிய ஐயர், அய�ோத்திதாசர், வ.உ.சி., திரு.வி.க. என்று நான்கைந்து பக்கத்தில் தெரிந்துக�ொண்டால்தான் அதன்பிறகு விரிவான தகவல்களை ந�ோக்கி ஈர்க்கப்படுவார்கள். அந்த
ந�ோக ்க த் து க்காக இது எழுதப்பட்டது. அ ர சி ய ல் அ ற் று இ ள ை ஞ ர ்க ள் இ ரு ப்ப த ற் கு க் கா ர ண ம் , அ வர ்க ள் பார்க்கும் அரசியல் ம � ோசமான த ாக இ ரு ப்ப து . க ரு ண ா நி தி யை யு ம் ஜெ ய ல லி த ாவை யு ம் பார்க்கும் இளைஞன் அரசியல் தலைவர்கள் என்றால் இவர்கள்தான் என்று நினைக்கிறான். அ வ னு க் கு ஓ ம ந் தூ ர ாரை யு ம் பி . எ ஸ் . கு மா ர சா மி ராஜாவையும் தெரியப்படுத்தினால் தான் அரசியல் ஈடுபாடு வரும். அரசியல் என்பது தேர்தலில் வெற்றிபெறுவது மட்டும் அல்ல, க�ொள்கையை வென்றெடுப்பது என்று ச�ொல்ல வேண்டும். இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் க�ொள்கை பேசிய கூட்டம்தான் என்றும் ச�ொல்லவேண்டும். க�ொள்கை ம�ோதல்கள், தர்க்க விவாதங்களை ந�ோக்கி தமிழக அரசியலைத் திருப்பினால்தான் அரசியல் மேம்படும். அரசியலை ந�ோக்கி இளைஞர்களும் வருவார்கள்!" ஜி.சுப்ரமணிய ஐயர் தேசிய சமூக மாநாட்டில் ஆற்றிய மகத்தான பங்களிப்பு பிபன் சந்திராவின் ‘இந்திய விடுதலைப் ப�ோராட்ட வரலாறு’ நூலில் கூடக் காணப்படவில்லை. வின்சென்ட் ஸ்மித், ‘ இந்தியாவின் வரலாறு தென்னகத்தில் இருந்தே துவங்க வேண்டும்’ என்று ச�ொன்னதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தமிழர்கள் தங்களுடைய வரலாற்றை எழுத வேண்டிய தேவையை இவை உணர்த்துகிறதா? எப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் தமிழகத்தின் இப்போதைய தேவை? வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் தமிழகத்தின் அரசியல், சமூக மறுமலர்ச்சிப் ப�ோராட்ட நிகழ்வுகளை குறிப்பிடத்தக்க அளவுக்கு பதிவு செய்யவில்லை. பிபின் சந்திராவுக்கும் இது ப�ொருந்தும். ராமச்சந்திர குஹாவுக்கும் இது ப�ொருந்தும். இவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் என்று ச�ொல்லவில்லை. அவர்கள் கவனிக்கும் அளவுக்கு தமிழக அரசியல், சமூக வரலாறுகள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலேயே முழுமையான அரசியல் ப�ோராட்ட வரலாறுகள் இல்லை. அப்படியே இருந்தாலும் சார்பு நிலை, ப�ோதாமை அதிகம் உள்ளது. திராவிட வரலாற்று ஆசிரியர்கள் ப�ொதுவுடைமை இயக்க நிகழ்வுகளை ச�ொல்லாமல் ப�ோவதும், கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியர்கள் திராவிட இயக்க ப்பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ப�ோனதும், தேசிய இயக்கம் பற்றி எழுதுவதற்கு எவருமே இல்லாமல் ப�ோனதும் தமிழக அறிவுச்சூழலில் ஏற்பட்ட தேக்கம். இந்த தேக்கம் உடைக்கப்பட்டு, ஒப்பீட்டு வரலாறுகளை இந்த இயக்கம்சார் ஆய்வாளர்கள் விமர்சனங்கள�ோடு சேர்த்தே எழுத வேண்டும். புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016 13
ஆக்ஸ்போர்டு செய்வதைப் ப�ோல, தமிழக வரலாற்று வரிசையை எழுதுவதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டு 25 ஆண்டுகாலத் திட்டமிடுதலுடன் அந்தப் பணி த�ொடங்கப்பட்டால் மட்டுமே தமிழகக் கடந்தகாலம் மீட்டெடுக்கப்படும்!" 6. இந்த த�ொடர் வெளிவந்த காலத்தில் வந்த முக்கியமான விமர்சனங்கள் என்ன? "இரண்டு மிக முக்கியமான விமர்சனங்களை மட்டும் ச�ொல்கிறேன்.... ஹ�ோ ம் ரூ ல் இ ய க ்க த்தை வி ம ர் சி க ்க வந்த நீதிக்கட்சித்தலைவர் டி.எம்.நாயர், அன்னிபெசன்டை ஒரு பெண் என்ற ந�ோக்கத்துடன் இருப�ொருள் தரும்படி விமர்சனம் செய்ததைக் கண்டித்து இருந்தேன். அது வெளியான வாரத்தில் தான் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் க�ொச்சையான விமர்சனம் வந்து இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டதை பெரியார் திராவிடர் கழகத் த�ோழர் கடுமையாக கண்டித்து இருந்தார். டி.எம்.நாயரைக் க�ொச்சைப்படுத்திவிட்டதாகச் ச�ொல்லி இருந்தார். நாயரின் பங்களிப்பு எதையும் நான் மறைக்கவில்லை. ஆங்கில மாதுக்கள் காரியம் சாதிக்க எப்படி எல்லாம் நடந்துக�ொள்வார்கள் என்ற நாயரின் கிண்டலைத்தான் கண்டித்து இருந்தேன். திராவிட இயக்கம் (தி.மு.க., அ.தி.மு.க.) இன்று அரசியல் சீரழிவின் முற்றிய நிலையில் இருந்தாலும் த�ொடக்க காலத்தில் இருந்து திராவிட இயக்கம் நடத்திக் காட்டிய சாதனைகளைச் ச�ொல்லும் கட்டுரைக்கு த�ோழர் பெ. மணியரசன் எதிர்வினை ஆற்றி இருந்தார். மறைமலையடிகள், ம.ப�ொ.சி, தியாகி சங்கரலிங்கனார் ஆகிய�ோர் குறித்த எனது கட்டுரைகளை பெ.ம. வாசித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ம�ொழிவாரி மாகாணம், 1965 இந்தி எதிர்ப்பு ப்போராட்ட நிலைப்பாடுகளில் பெரியார் வழுக்கியும் நழுவியும் சென்றது குறித்து நான் எழுதியதையும் பெ.ம. வாசிக்கவில்லை என்றும் நினைக்கிறேன். இவை இரண்டுமே மிக முக்கியமான எதிர்வினைகள். மற்றபடி வெகுஜன பத்திரிக்கையில் வரும் கட்டுரையை விமர்சிப்பது தங்கள் தகுதிக்குக் குறைவானது என்று நினைக்கும் அறிவுஜீவிகள் இருக்கும் தமிழகத்தில் விமர்சனங்கள் வராதது ஆச்சர்யப்படக்கூடியது அல்ல!" பெண்கள்மீது பல்வேறு தளங்களில் உளவியல், உடல்ரீதியான வன்முறைகள் பெருகியிருக்கும் சூழலில் அன்னிபெசன்ட் காலத்தில் இருந்து இன்று வரை பெண்கள் மீதான நாகரீகமற்ற தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆடையில் இருக்கிறது கலாசாரம் என்கிறவர்களைத் தமிழ் இலக்கியங்கள் வழியாக எதிர்கொள்கிறீர்கள். பெண்கள்மீதான அரச வன்முறையைச் சாடுகிறீர்கள். பெண்ணுரிமையில் பெரியார் அளவுக்குப் பேசியவர் யாருமில்லை என்று வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா விதந்தோதிய சிறப்புடைய நம் தமிழகத்தின் தற்போதைய இந்த வீழ்ச்சியை எப்படி எதிர்கொள்வது? எங்கே சிக்கல்?
14
"சாதியைக் கூட ஒழித்துவிடலாம், ஆனால் சாதிப் பெருமையை ஒழிக்க முடியாது’ என்று ச�ொன்ன பெரியார், ‘ஆணாதிக்கம் ஒழிய வேண்டுமானால் ஆண்மை ஒழியவேண்டும்’ என்றார். உருவமற்ற, ஆண்மை’ என்ற கெத்தை ஒழிப்பது சிரமம் ஆனது என்று ச�ொன்னவர் அவர். ‘காதலிக்கும் முன் பெண்ணின் அடிமையாக இருக்கச் சம்மதிக்கும் ஆண், கல்யாணம் முடிந்ததும் எஜமானன் ஆகிறான்’ என்று ச�ொன்னவரும் பெரியார்தான். பெரியார் ச�ொன்னதை திராவிட இயக்கங்களும் பாரதி வழிகாட்டியதை தேசிய இயக்கமும் கவனத்தில் க�ொண்டு செயல்பட்டு இருந்தால் இத்தகைய கலாச்சாரச் சீர்கேடு நடந்திருக்காது. வெறும் தேர்தல் அரசியலை மட்டும் இந்த இயக்கங்கள் பேசியதால் தான் இந்தச் சிக்கல் வந்தது. ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கம் ஆள்கிறது தமிழ்நாட்டை. உண்மையாக அது திராவிட இயக்க சித்தாந்த ஆட்சியாக இருந்தால் இது இந்திய எல்லைக்கு உட்பட்ட திராவிட நாடாகத்தானே மலர்ந்திருக்க வேண்டும்? அப்படியும் ஆகாமல் சாதிவன்மமும், மத மாச்சர்யமும், ஆணாதிக்கமும் க�ொண்ட மேட்டுக்குடி- அடித்தட்டுக் குழிச் சமூகமாக மாறியதற்குக் காரணம் இங்கே அரசியல் எல்லாம் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியலாக மட்டும் மாறிப்போனதுதான். அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் தேர்தல் அரசியலாகவும் தேர்தல் அற்ற நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தாந்தங்களின் அரசியலாகவும் மாற வேண்டும். இன்னும் ச�ொன்னால், தேர்தலில் பங்கெடுக்காத, சட்டமன்ற நாடாளுமன்றச் சுவைபார்க்க விரும்பாத அரசியல்கட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் உருவாக வேண்டும்.அப்போதுதான் அரசியல் கட்சிகள் திருந்தும். பேசக்கூச்சப்படும் விஷயங்களைப் பேசும்." இந்த நூலை திரு. வி.க., நாகம்மாள் ஆகிய�ோருக்கு அர்ப்பணித்து உள்ளீர்கள். என்ன காரணம்? திரு,வி.க.வை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தந்தையார் புலவர் மு.படிக்கராமு. ஒரு மனிதன், ஒரு தலைவன், ஒரு பத்திரிக்கையாளன், ஒரு எழுத்தாளன், ஒரு பேச்சாளன், ஒரு த�ொழிற்சங்கத் தலைவன், ஒரு ஆன்மிகவாதி, ஒரு பெண்ணுரிமைவாதி... எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழுமுதல் உதாரணம் என்றால் அது திரு.வி.க.தான். அவரது, ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூல் ஒன்று ப�ோதும். அதை வாசிக்கவாசிக்க நம் மன அழுக்கு துடைக்கப்பட்டே வரும். தமிழகத்தில் தேசிய, திராவிட, ப�ொதுவுடைமை ஆகிய மூன்று இயக்க வரலாற்றிலும் ஒரு மனிதன் இடம் பிடிப்பார் என்றால் அது திரு.வி.க.தான். அதனால்தான் அவரை நினைத்தேன். நாகம்மாள் இல்லாமல் பெரியார் இல்லை. நாகம்மாள் இல்லாமல் சுயமரியாதை இயக்கம் இல்லை. ஒரு இயக்கம் குடும்ப பாசத்துடன் இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர். நாகம்மாள் பெரியாரின் மனைவி மட்டும் அல்ல. பெரியாரிய இயக்கங்களின் தாய். அவர் மறைவுக்கு பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை, உலக அஞ்சலிக் கட்டுரைகளின் வரிசையில் க�ொண்டுப�ோய் நிறுத்த வேண்டியது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
ஈர�ோடு சுயமரியாதை இயக்க மாநாட்டில் பேசிய திரு.வி.க., ‘சுயமரியாதை இயக்கத்தின் தந்தை ஈ.வெ.ரா. என்றால் தாய் நான்தான்’ என்று திரு.வி.க. ச�ொன்னார். நாகம்மை இறந்தப�ோது அவரது படத்தைத் திறந்து வைக்கும் தகுதியை திரு.வி.க.வுக்குத்தான் தந்தார் பெரியார். என்னைப் ப�ொறுத்தவரை திரு.வி.க. ப�ோல் ஒரு தலைவன், நாகம்மை ப�ோல் ஒரு தலைவி வேண்டும் என்பது வேண்டுதல்! தமிழகத்தின் தடை செய்யப்பட்ட நூல்கள் குறித்துக் காத்திரமான வரலாற்றுப் பதிவுகளைக் கட்டமைத்த நீங்கள் மறக்கப்பட்ட மகத்தான ஆளுமைகள் குறித்து ஒரு தனி நூலை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்புகிற�ோம். யாரெல்லாம் அதில் அவசியம் இடம்பெற வேண்டும் என்று கருதுவீர்கள்? அந்தப் பட்டியல் மிகமிக விரிவானது. பல நூறு ஆளுமைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அதில், பேராசிரியர் லட்சுமிநரசு, எஸ். முத்தைய முதலியார், மண்டையம் சீனிவாசாச்சாரியார், மதுரைபிள்ளை, எல்.சி.குருசாமி, ஏ.ராமசாமி முதலியார், சர்க்கரைச் செட்டியார், ஆர்.கே.சண்முகம், ஜான் ரத்தினம், பெருமாள் பீட்டர், க�ோவை அய்யாமுத்து, கருமுத்து தியாகராயர், பா.வெ.மாணிக்கவேலு, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம், கே.முருகேசன், முருகேச பாகவதர், அப்பு, சீராளன், தமிழரசன்... இப்படி ச�ொல்லிக் க�ொண்டே ப�ோகலாம். தமிழக வரலாறே ஆளுமைகள் நிறைந்தது. விளம்பர
வெளிச்சத்தில் வெளியில் தெரிந்தவர்கள் சிலர் மட்டும் தான்! தி ர ா வி ட இ ய க்க த் தி ன் தூ ண ்களை க் க�ொண்டாடுகிறீர்கள், தேசிய இயக்கத்தின் ஈடில்லா பணிகளை விரித்துச் ச�ொல்கிறீர்கள், இடதுசாரிகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலின் மகத்தான தலைவர்களை முன்னிறுத்துவதும் காண முடிகிறது. திராவிட இயக்கப் பின்புலம் க�ொண்ட நீங்கள் இந்தச் சவாலான பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அரசியல் சரித்தன்மை பார்ப்பது எவ்வளவு தூரம் உகந்தது? அரசியலையும் அறவியலையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் இது ஏற்படும். இரண்டும் இணைந்து பயணிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது இணைந்து இருப்பது இல்லை. யாரும் இருக்கவிடுவதும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல். இப்படித்தான் வெற்றி பெற வேண்டும் என்பது அறவியல். இந்த இரண்டையும் அளவுக�ோலாகக் க�ொண்டு தான் அனைத்தையும் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தேவையை உணர்கிறேன். அதேநேரத்தில் இன்றைய திராவிட இயக்கத் தலைமைகளை நிராகரிக்கிறேன். இரண்டுக்கும் முரண்பாடு இல்லை. அதுவே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இந்தப் புத்தகமே அரசியலையும் அறவியலையும் இணைத்துப் பேசுவதற்காகவே, செயல்படுத்துவதற்காகவே எழுதப்பட்டது. இரண்டும் இணைந்து பயணிக்கும் ப�ோதுமட்டும்தான் அது மக்கள் அரசியலாக மலரும். மலர வேண்டும். விரைவில் மலரும்! வகுப்பறையின் கடைசி நாற்காலி | ம.நவீன் | வெளியீடு: புலம் | பக்கங்கள்-96 | விலை, ரூ.70 | த�ொலைபேசி: 9442890626 தமிழில் பள்ளி மாணவர்களின் உளவியல், பள்ளியில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த நூல்கள் இல்லை. ஏன் குழந்தைகளைப்பற்றிய நூல்களே மிகவும் குறைவு. மருத்துவ நூல்களை இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த வகையில் சமீபத்தில் வாசித்த "வகுப்பறையில் கடைசி நாற்காலி" அற்புதமான புத்தகம் . மலேசிய பள்ளி அனுபவங்கள் என்றாலும் மாணவர்களின் உளவியல் கல்வி முறை குறித்த விவாதங்களைத் தூண்டுகிற புத்தகம். பிரளயனின் அழகான முன்னுரை இன்னும் வெளிச்சம் தருகிறது . நூலாசிரியர் ம.நவீனுக்கு வாழ்த்துகள்!
சந்நியாசமும் தீண்டாமையும் - சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள் பற்றிய சில குறிப்புகள் | ராமாநுஜம் | வெளியீடு: புலம் | பக் - 244 |ரூ. 200 பேட்ரிக் ஒலிவெல், வீணா தாஸ், சுந்தர் சருக்கய் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் வாசிப்பை ஒன்றிணைத்துப் பார்ப்பனர் - சாதிகள் - தீண்டப்படாதவர் உறவு குறித்து ஒரு சட்டகத்தை உருவாக்க இப் புத்தகம் முயற்சிக்கின்றது. சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனர் என்ற வகைப்பாடு சார்ந்ததா அல்லது தீண்டப்படாதவர் என்ற வகைப்பாடு சார்ந்ததா? இக் கேள்வியை இவ்வாறும் கேட்டுக் க�ொள்ளலாம்: சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனக் குழுமங்கள் சார்ந்ததா? தீண்டப்படாத குழுமங்கள் சார்ந்ததா? இவ்விரண்டு அணுகுமுறைகளை இப் புத்தகம் ஆராய முயற்சிக்கின்றது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
15
வாழ்த்துகிற�ோம்
தேனியில் செப்டம்பர் 25, 2016ல் நடைபெற்ற தமுஎகச இலக்கிய பரிசளிப்பு விழாவில் த�ோழர் எஸ்.வி.ராஜதுரை தனக்கு வழங்கப்பட்ட கு..சி.பா அறக்கட்டளை விருது த�ொகை ரூ.ஒரு லட்சத்தை தமிழ்நாடு தீ ் ண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழங்கினார். அமரர் கே.பாலசந்தர் நாவல் நினைவு பரிசு "ம�ௌனத்தின் சாட்சியங்கள்" என்கிற நாவலை எழுதிய சைதை ஜெ அவர்களுக்கும், பச்சையம்மாள் செல்லம்மாள் நினைவு கவிதை பரிசு "ஆகாய த�ொட்டில்கள்" என்கிற கவிதைத் த�ொகுப்பிற்காக கலை இலக்கியாவுக்கும், அமரர் சேதுராம் சிறுகதை விருது "புழுதிச்சுடு" என்கிற சிறுகதைத் த�ொகுப்பிற்காக மா.காமுத்துரைக்கும் வழங்கப்பட்டது. இத்துடன் மாணிக்கனார் நினைவு ம�ொழிப்பெயர்ப்பு பரிசை திப்புசுல்தான் என்ற நூலுக்காக அர்ஷியாவுக்கும் வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவருக்கும் புத்தகம் பேசுது தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து க�ொள்கிறது
16
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
17
நூல் அறிமுகம்
உயிர்ப்புள்ள கதைகளைக் கேட்க மனிதர்கள் வருவார்கள்...
நதிக்கரை மாந்தர்களின் வரலாறு
வேட்டை எஸ். கண்ணன் க�ௌதம் சன்னாவின் "குறத்தி ஆறு" நாவலில் க�ொற்றலை ஆறு என்ற வரலாற்றுககு முற்பட்ட ஆற்றின் பெயரும், உருவமும் மாறியது குறித்து அல்லி வட்டத்தில் சன்னா கூறிவிட்டு "அந்த ஆறு செல்லும் கரைய�ோரத்தின் ஓரிடத்தில் குறத்திக்கு ஒரு க�ோயில் இன்றும் உள்ளது" என்று எடுத்துக்காட்டுகிறார். அத்துடன், குறத்தி அம்மன் க�ோயில் என்று அழைக்கப்பட்ட அக்கோயில் இன்று அங்காள பரமேஸ்வரி அம்மன் க�ோயில் என அண்மையில்தான் மாற்றப்பட்டுள்ளது" என்று விளக்குகிறார். இப்படிப்பட்ட இந்நாவல் பல மடிப்புக்களைத் தனது கதைக்குள் ப�ொதிந்துள்ளது. இந்நூலின் அட்டை மடிப்பில் "ஒரு காப்பிய மரபை இப்புதினத்தில் காண முடியும். ஆயினும் காப்பியங்களின் முன்னிறுத்தப்படும் குறிப்பான தனிமனித முக்கியத்துவம் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. இக்கூற்று நூற்றுக்கு நூறு சரி, அத்துடன், இப்புதினம் தாங்கியுள்ள செய்தியை மறைக்கும் த�ோரணமாக, லயமான காவிய ம�ொழி மிக நுணுக்கமாகப் பயன்பட்டுள்ளது. ஐசன்ஸ்டைனின் ப�ொதம்கின் படத்தைப் ப�ோல அச்செய்தி வரலாற்றையும், த�ொன்மங்களையும், தட்டையான, ஒற்றை மடிப்பில் வைத்துப் பார்க்கக்கூடாது. இதைப் படிக்கும்போது நம்மை அறியாமல் கங்கை நதியின் பெயர் காரணம் குறித்த சிந்தனை உருவாவதுடன் நம் நாட்டின் பிற நதிகளின் பெயர்களுக்கும் புராணங்களுக்கும் உள்ள உறவுகள் குறித்தும் சிந்திக்கத் த�ோன்றுகிறது. அதே சமயம் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதி பற்றிய பிராமணர்களின் பிரமை குறித்து கேள்விகள் எழுகின்றன. இந்த நாவலில் இரண்டு கதைகள் கூறப்பட்டுள்ளன. அவை ஏழு கன்னிமார் கதை மற்றும் சூடு தாங்காமல் குழந்தையை காலடியில் ப�ோட்டு நின்ற குறத்தியின் கதை. மற்றொன்று ஏழு கன்னியர் கதையும் பல்வேறு சாதிகளுக்கு, பல்வேறு கதைகள் உருவாக்கியுள்ளன. அ வ ற் றி ற்கான அ ச ல ான ச மூ க க் கா ர ண ங ்க ள் மறைக ்க ப்ப ட் டு பு ன ை வு களாக வு ம் பூ ட கமான நுண் அரசியலைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் கருவியாகவும் இத்தகைய கதைகள் பணியாற்றுகின்றன. இத்தகைய புதிர்களுக்குப் பின்னால் உள்ள வழிபாட்டுச் சடங்குகளின் சமூகச் சாரத்தை ஒயிட்ஹெட் என்ற ஆங்கிலப் பாதிரியார் தன்னுடைய Deities of south India என்ற நூலில் அவிழ்ப்பதில் வெற்றி கண்டுள்ளார். ஒ ரு பி ன்கா ல னி யை ச் ச மூ க த் தி ல் , அ து வு ம் இலக்கியம் கார்ப்பரேட் கல்சராக மாறிப்போன நவீனப் பழமைவாதிகளின் மேலாதிக்கத்தில் மாட்டிக் க�ொண்ட நிலையில் இத்தகைய காவிய நடை அல்லது காலில் சலங்கை கட்டி ஆடுவதைப் ப�ோல கிங்கிணி
18
குறத்தி ஆறு | க�ௌதம சன்னா | உயிர்மை பதிப்பகம் | விலை. ரூ.270, பக்.244
ஒலிக்கும் ச�ொல்லோவியம் வானத்து நட்சத்திரங்களைப் ப�ோல ம�ௌன ஒளி சிந்தத்தான் முடியும். அதுவும் ஒரு வகையில் நியாயந்தான். இலக்கியம் எப்போதும் அதன் விட்டு இறங்கக் கூடாது. தங்கக் க�ோபுரத்தைவிட்டு இறங்கக்கூடாது. அதுவும் கார்ப்பரேட் கல்சரில். இந்த நாவல், ப�ௌத்தத்தின் சில கூறுகளை எப்படி இந்து மதம் தனதாக்கியது என்று கதைகூறும் ப�ோக்கிலேயே சுட்டிச் செல்கிறது. நம் ஆறுகள் மீட்டெடுக்கப்படும் காலம்வரை, இதுப�ோன்ற வழியே தங்கள் இருப்பைச் சுட்டிக் காட்டி, நமக்கு உறுத்தலை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும். ஆறுகள் வரலாறு வெறும் ஆறுகளின் வரலாறு அல்ல. அது நதிக்கரை உருவாக்கிய மாந்தர்களின் வரலாறு. அந்த வரலாறு கல்வித்துறை வரலாறு ஆகும்போது தட்டைத் தன்மையாகி சாரமற்றுப் ப�ோகிறது. அதே சமயம் மக்களிடம் புழங்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், புனைவுகள், வழிபாடுகள் ப�ோன்றவற்றிற்கு வரலாற்றின் பல மடிப்புக்கள் உள்ளன. அத்தகைய நுணுக்கத்தை, க�ௌதம் சன்னா, குறத்தி ஆறில் படிமப்படுத்தியுள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். அதற்கான ம�ொழியும் லயமும் அவருக்கு வசப்பட்டுள்ளது. காலமும் சமூக மாற்றமும் கவித்துவ கதையாடலை உலர்த்தி விட்டது உண்மைதான். ஆனால் அவை மட்டும் கவித்துவம் உயர்ந்து ப�ோவதற்குக் காரணமல்ல. கவித்துவத்தில் ஏற்படும் மிகைம�ொழி அல்லது ம�ொழியில் மிகைப்படுத்தப்பட்டுப் ப�ோலியாக்கப்படும் வாழ்க்கை சலிப்பு ஊட்டக் கூடியது. சாதாரண, அன்றாட மனிதர்களுக்கு நெருக்கமில்லாதது. அதனால் தான் இதழியல் ம�ொழி நடையில் புனைவுகள் வெளியாகின்றன. ஆனால் அவைகளும் மலினப்பட்டுப் ப�ோன இச்சூழலில் தமிழின் மரப�ோடு, தமிழின் லயத்தோடு, வாசிக்கத்தக்க தரத்தில் சன்னா இப்புனைவைப் படைத்துள்ளார். புனைவும், புனைவு ம�ொழியும் முயங்கச் செய்கிறது. அதுவே புனைவின் வெற்றி. புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
நேர்காணல்: பவா.செல்லத்துரை
எ
கேள்விகள்: இவள்பாரதி
ழு த்தாள ர் , பேச்சாள ர் , இ ப்போ து கதைச� ொ ல் லி யென , த ன் ப ய ண த் தி ல் பு தி ய பரிணாமங்களை ந�ோக்கிப் பயணிக்கும் பவா. செல்லதுரை, திருவண்ணாமலையின் அடையாளம். பவாவின் கதை வெளிக்காக தன் கதைகளைச் ச�ொல்லி முடித்த ஓர் இரவில் ஆடுகளத்திலேயே அப்படைப்பாளியைச் சந்தித்தோம். எழுதுவத�ோடு எழுத்தாளனின் பணி நிறைவடைந்து விடுகிறது. அதைத் தாண்டி கதைகளை ஏன் ச�ொல்ல வேண்டுமெனத் த�ோன்றியது உங்களுக்கு? இரண்டு வருடங்களுக்குமுன் என் நண்பன் ஜே.பி. என்னை அழைத்து "நீ எங்களுக்குச் ச�ொல்லும் கதைகளை ஏன் இன்னும் க�ொஞ்சம் விரிவாக்கி ஐம்பது நூறு பேருக்குச் ச�ொல்லக்கூடாது" எனக் கேட்டான். அந்த வாரமே திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஆஸ்ரமத்திற்கு எதிரிலுள்ள ‘"குவா வாடீஸ்’ பல்சமய உரையாடல்" மையத்தில் அந்நிகழ்வை நடத்துவதென அவன் முடிவெடுத்தான். அவ்வளாகத்தில் நான் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரின் மூன்று கதைகளைச் ச�ொன்னேன். அறுபது எழுபது பேர் பார்வையாளர்களாய் வந்திருந்தார்கள். அவர்களில் பலரும் என்னை இருபது வருடங்களுக்கும்மேல் பின்தொடர்பவர்கள் என்பதை அறிய சந்தோஷமாயிருந்தது. அடுத்த பதினைந்தாவது நாள் அடுத்த கதை ச�ொல்லல். இப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை நூற்றி ஐம்பதைத் தாண்டியிருந்தது. பயணம் சரியான
பாதையில்தான் என்பது நிச்சயமானப�ோது உற்சாகம் எங்கள் இருவரையுமே த�ொற்றிக் க�ொண்டது. இப்போது 10 நிகழ்வுகளை முடித்துவிட்டோம். அதிகபட்சமாக 300 பேர் வரை பங்கெடுக்கிறார்கள். கதைகளை வாசிப்பது என்பது ஒரு அனுபவம். கேட்பது அதற்கும் மேலே என நினைக்கிறேன். நாம் எல்லோருமே கதை கேட்டு வளர்ந்த மரபில் வந்தவர்கள். அது விடுபட்டுப் ப�ோன ஏக்கம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நான் அதை கதைகள் ச�ொல்லி நிரப்புகிறேன் எனத்தோன்றுகிறது. அந்நிகழ்வின் காண�ொளிக் காட்சியை வம்சி உடனேயே youtube-ல் பதிவேற்றுகிறான். உலகின் பல நாடுகளில் இருந்தெல்லாம் அதற்குப் பாராட்டுகளும், த�ொலைபேசி அழைப்புகளும் த�ொடர்ந்த வண்ணமிருக்கின்றன. கதைகளை, மனிதர்கள் த�ொப்புள்கொடியறுத்த குழந்தைகளைத் தங்கள் கைகளில் ஏற்றுவதைப் ப�ோல ஏற்றிக் க�ொள்கிறார்கள். என்னை இதுவரை நேரில் சந்தித்திராத, பத்து வருடங்களுக்கும் மேல் என் எழுத்தை மட்டுமே பின் த�ொடரும், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள் ரீகன், தன் நண்பர்கள�ோடு சேர்ந்து சென்னையில் பவாவின் கதைவெளியென ஒரு நிகழ்வைத் துவங்கியிருக்கிறார்கள். இது மாதத்திற்கு ஒருமுறை நடக்கும். நீங்கள் பார்க்கிற இம்முதல் நிகழ்வில் அறுபது பேர் இருக்கிறார்கள். அடுத்த நிகழ்விலேயே இது முன்னூறைத் தாண்டும். சென்னையின் பரபரப்பும், சலிப்பும் நிறைந்த வாழ்வு உயிர்ப்புள்ள கதைகளைக்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
19
கேட்க, மனிதர்களை உந்தும். கேளிக்கைகளை உதறிவிட்டு வாழ்வின் உயிர்த் துடிப்புகளின் சப்தமெடுத்த குழந்தைகள�ோடு அப்பாக்களும், அம்மாக்களும் வருவார்கள். நீங்கள் ஒருங்கிணைக்கும் ‘நிலம்’ இலக்கிய நிகழ்வுகள் இப்போது பெரிதும் கவனப்படுத்தப்படுகின்றன. அதில் என்ன அத்தனை சிறப்பு? மக ்க ளு க்கான அ டி ப்படை வாழ்வா த ா ர ம ே கேள்விக்குறியாகிப் ப�ோன ஒரு தேசத்தில் இங்கிருந்து அதை எழுதும் ஒரு எழுத்தாளன் அவர்கள�ோடு இருந்து மட்டுமே இயங்கவும், எழுதவும் முடியும். என்ன காரணமென மையப்படுத்த முடியவில்லை, என் வாழ்வில் எல்லாத் தருணங்களும் இலக்கியம் மட்டுமே நிரம்பியிருக்கிறது. த�ொடர்ந்து கலை இரவுகள், முற்றம் என தமுஎசவில் இருந்தப�ோது முன்னெடுத்தவை இன்னும் தமிழ் கலை இலக்கிய உலகில் நினைவு கூறப்படுகிறது. இப்போது ‘நிலம்’ செலவுகளைக் கருதி ‘வம்சிபுக்ஸ்’ மாடியிலேயே அதை நடத்துவதென முடிவெடுத்தார்கள். ஆறு நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கின்றன. அது ஒரு பெரும் அனுபவமாக மாறுகிறது. சூழலும், நாங்கள் பயன்படுத்தும் ஆரஞ்சு வண்ணக் குறைந்த ஒளியும், மலை மங்கலாகத் தெரியும் ம�ொட்டைமாடியும், படைப்பாளியின் ஆழத்திலிருந்து ச�ொற்களைக் க�ோருகிறது. கடந்த நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் காப்ரியேல் கார்சியா மார்க்விஸ் -ன் படைப்புலகம் பற்றி இரண்டு மணிநேரம் பேசினார். ஒரு சிறு அசைவில்லை. மாடியைத் தாண்டி வராண்டாவிலும், தெருவிலும் வரை மனிதர்கள் நின்று கேட்டார்கள். ராமகிருஷ்ணன் ச�ொன்னார், "இருபது வருடங்களுக்கு முன் இங்குதான் ப�ோர்ஹேவைப் பற்றிப் பேசினேன். இப்போது மார்க்விஸ். சென்னை உட்பட தமிழ்நாட்டின் எந்நகரமும் என்னை இவர்களைப் பற்றி பேச அனுமதித்ததில்லை. அதனால்தான் இந்நகரை தமிழ்நாட்டின் டப்ளின்’ எனச் ச�ொல்லுகிறேன்" என்றார். கதை ச�ொல்லுதல், கூட்டம் நடத்துதல், தினம் தினம் உங்கள் வீட்டை ந�ோக்கி வரும் இலக்கியவாதிகள், திரைப்பட ஆளுமைகள், வாசகர்கள் இவர்களை ப�ோஷித்தல் என்றிவை உங்கள் படைப்பின் கூர்மையை மழுங்கடிக்கவில்லையா? மாறாகக் கூட்டுகிறது என நினைக்கிறேன். படைப்பே ம னி த த் தி ர ளு ம் , அவர்க ளி ன் வா ழ் வு ம்தானே. மனிதர்களற்ற, அவர்களின் முரணற்ற, ஈரமிக்க, வன்மம் நிறைந்த வாழ்வைத்தானே எழுத்தாளன் எழுத முடியும்? இயல்பாகவே அது என் வாழ்வோடு இருக்கிறது. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். பிரத்யேகமான என் நிலப்பரப்பையும், அதன் ஜீவனுள்ள மனிதர்களையும், மட்டுமே எழுதி முடித்தால் அது உலகின் எந்தப் பேரிலக்கியத்துடனும் வைத்துப் பார்க்கத் தகுந்த தகுதி பெறும். எங்கள் பஸ் ஸ்டேண்டில் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை ஐந்து மணிவரை மனிதர்கள் பெட்டி, படுக்கையுடன்
20
கூட்டம் கூட்டமாக ப்ளாட்பாரத் தரையில் படுத்து கிடப்பதைப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் தங்கள் ச�ொந்தக் கிராம மண்ணை, மனிதர்கள், பங்காளிகளை, ஆசையாய் வளர்த்த ஆடு, மாடுகளை தினம்தினம் ஒரு எட்டு ப�ோய் கால் நனைத்து வந்த பம்புசெட் வாய்க்கா தண்ணியையெல்லாம் நிராகரித்துவிட்டு ஏதாவத�ொரு கட்டணம் குறைந்த பேருந்தில் ஏறி பெங்களூருக்கோ, சீம�ோகாவுக்கோ கூலிகளாய்ப் ப�ோவதற்காகப் படுத்துக் கிடக்கிறார்கள். அங்கு அவர்களுக்குக் குளிக்க, வெளிக்குப் ப�ோக, படுக்க, உறவு க�ொள்ள, முத்தம் தர எதற்கும் இடமில்லை, ஆனாலும் இந்த ச�ொந்தமண் நிராகரிப்பும், ரணத்தை ந�ோக்கிய பயணமும் எதற்கு? வயிற்றுக்குத்தான். இதையெல்லாம் எழுத முடியாத கைகள் எதற்கு? இதையெல்லாம் எழுதாமல் நான் வேறெதை எழுதிவிடப் ப�ோகிறேன். என் ‘ஏழுமலை ஜமா’ இதன் ஒரு சிறு துளிதான். விவசாய வாழ்வு உங்களுடையது. அரசுப் பணியிலும் இருக்கிறீர்கள், இதற்கெல்லாம் ஏது நேரம்? என் அப்பா அம்மாவுடையதுதான் நிலம் சார்ந்த வாழ்க்கை. அப்பா ஆசிரியராக இருந்ததெல்லாம் பெயரளவுக்குத்தான். எப்போதும் நிலம், ஆயில் இன்ஜின் கமிட்டிக்கு மல்லாட்டை ஏற்றுவது என தினங்கள் அவரைக் குஷிப்படுத்தின நாட்களை அருகிலிருந்து உள்வாங்கியிருக்கிறேன். அவர் எங்களுக்குக் க�ொடுத்துப் ப�ோன நிலத்தில் ஒரு சென்ட்டையும் எத்தனை கஷ்டத்திலும் விற்கவில்லை. மேம்படுத்தியிருக்கிற�ோம். ஆறு மாதத்திற்கு முன் சென்னையிலிருந்து வந்த நண்பர் வி.பி.ராஜ் (பெசன்ட் நகரில் ‘க’ என்ற பெயரில் ஆர்கானிக் ரெஸ்ட்ராண்ட்) இந்த நிலத்திலிருந்து ஒரு பகுதியை எங்களிடம் கேட்டார். அவர் கடந்த பதினைந்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை, சூழல் என அதற்காகவே தன்னை ஒப்புக் க�ொடுத்த மனிதர். எதுவும் பேசாமல் நாங்கள் நிலம் தந்தோம். நிலத்தில் இயற்கை வேளாண்மைக்கென ஒரு பள்ளியைக் கட்டத் துவங்கியிருக்கிறார். எங்கள் கிராமங்களில் யாரையெல்லாம் படிப்பு வராதது என வெளியேற்றப்பட்டார்கள�ோ, யாரையெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஒதுக்கினார்கள�ோ அவர்களே இப்பள்ளியின் இயற்கை விவசாய மாணவர்கள். ஒரு பைசா கட்டணமின்றி இவர்கள் விவசாயத்தில் நாம் இழந்தவைகளை மீட்டெடுக்கப் ப�ோகிறார்கள். பாமயனில் ஆரம்பித்து நம்மாழ்வாரின் பல மாணவர்கள் இதில் ஆசிரியர்களாப் பங்காற்றுவார்கள். காலை ஐந்து மணிக்கு எழுகிறேன். நடைப் பயிற்சியெல்லாம் இல்லை. நிலத்தில் வேலைகளினூடே நடத்துவிடுவேன். பத்து மணிவரை நிலத்திலிருப்பேன். அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், மாடும், கன்றும் க�ோழிகளும் வாத்துகளும் என் ஸ்பரிசம் பட்டே வளர்ந்தவை. பத்து மணிக்கு அலுவலகம். அது எனக்குள் ஒட்டவேயில்லை. ஆனாலும் என் வேலைகளைப் பிசாசு மாதிரி செய்து முடிப்பேன். மாலையில்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
மீ ண் டு ம் நி ல ம் , வி வசா ய வேலைகள் என்பது முற்றுப் பெ ற ா த து . த� ொ ட ர் ச் சி ய ாக அதில் நீங்கள் வேலை செய்து க�ொண்டேயிருந்தால் ஏத�ோ ஒருநாள் ஒரு அபூர்வ மலர் உங்களுக்காகப் பூக்கும். இ தையெ ல ்லா ம் ச� ொ ல ்ல ச�ொற்கள் இல்லை. எத்தனை மல்லுக்கட்டினாலும் விவசாய வா ழ் வு , எ த்த ன ை இ னி து என்பது வலி நிறைந்த விவசாய வாழ்விலிருந்தே உணரமுடியும். இ ர வு ப ன் னி ரெ ண் டு வரை வாசிப்பும் எழுத்தும். இதற்கு ந டு வி ல ்தா ன் தே டி வ ரு ம் ந ண்பர ்க ள ை க் கவ னி த் து க் க�ொள்கிற�ோம். ஷைலஜாவும், வ ம் சி யு ம் , மான சி யு ம் எ ன் மனநிலையிலேயே இயங்குவதால் இதெல்லாம் சாத்தியமாகிறது. இதன் விரிவாக உத்ரா, கே.வி. ஜெய ஸ்ரீ, சுகானா, அமரபாரதியென அவர்களின் ப ங ்க ளி ப் பு ம் இ ரு க் கி ற து . எ ப்போ து ம ே ந ா ன் இலக்கியத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை இ ட் டு நி ர ப் பு பவன ல ்ல . க�ோ டு க ள் இ ல ்லா க் குடும்பமாகத்தான் இதை நாங்கள் வைத்திருக்கிற�ோம். ந வீ ன ம லை ய ா ள இ ல க் கி ய உ ல க த்தோ டு உங்களுக்குள்ள த�ொடர்புகள் பற்றி? பால் சக்காரியாவின் ‘"யாருக்குத் தெரியும்?"’ கதையை ‘சதுரம்’ இதழில் படித்தவுடன் ஏற்பட்ட த�ொடர்பு அது. ஆனந்தின் ‘நான்காவது ஆணி’ படித்து "இதெல்லாம் எப்படி சாத்தியம்" என்ற வியப்பில் அவர்களைத் தேட ஆரம்பித்தோம். எம்.டி.வி, சக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, என்.எஸ். மாதவன், கே.ஆர். மீரா, சந்தோஷ் ஏச்சிக்கானம், மன�ோஜ் குரூர், ஏ.அய்யப்பன் என இருபதுக்கும் மேற்பட்ட நவீனப் படைப்பாளிகளின் படைப்புகளை என் மனைவி கே.வி. ஷைலஜாவும், அவள் சக�ோதரி கே.வி. ஜெயஸ்ரீயும் 20 புத்தகங்களாகத் தமிழுக்குக் க�ொண்டு வந்திருக்கிறார்கள். அது இன்னும் விரிவாகி ஜெய ஸ்ரீயின் கணவர் உத்திரகுமாரனும், மகள் சுகானாவும் இப்போது இரு புத்தங்களையும் ம�ொழிபெயர்த்து முடித்திருக்கிறார்கள். சுகானா ம�ொழிபெயர்ப்பில் வரப்போகும் ‘"அச�ோகன் சருவில்" கதைகள்’ தமிழைந�ோக்கிப் புதிய அலைகளைக் க�ொண்டுவரும். மலையாள வாசகர்கள் நிறைய பேருக்கு இப்போது என்னைத் தெரியும். தேசாபிமானி, சந்திரிகா, ப�ோன்ற புகழ்பெற்ற இதழ்களில் வந்த என் பத்திகளும், கதைகளும், கட்டுரைகளும் அவர்களை என்னிடம் நெ ரு க ்க மா க் கி யி ரு க் கி ற து . தி ன மு ம் ஆ றே ழு
மலையாளக் குரல்களையாவது என் த�ொலைபேசி வழியே தரிசிக்கிறேன். திருவண்ணாமலைக்கு வரும் படைப்பாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுகிறது. ச மீ ப த் தி ல் மன�ோ ஜ் கு ரூ ர் ச ங ்க இ ல க் கி ய தமிழ்வாழ்வை முன்வைத்து எழுதிய ‘நிலம் பூத்து ம ல ர்ந்த ந ா ள் ’ வ ெ ளி யீ ட் டு வி ழ ா வி ற் கு வந்த சந்தோஷ் ஏச்சிக்கானம் அப்புத்தக வெளியீட்டில், "இலக்கியம் படியாத உடல்கள் குருடர்களையும் ஆண்மையற்றவர்களையுமே பிரசவிக்கும்"’என அவர் பேசியப�ோது ஏற்பட்ட அதிர்வு என்னிலிருந்து என்றும் அகலாது. அவருடைய "ஒற்றைக் கதவு"’ தமிழில் கே.வி.ஜெய ஸ்ரீயால் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்கதைகள் முழுக்க எரியும் மனதிலிருந்து எழுந்த தீதான். இருபது வருடங்களுக்குமுன் கேரளாவின் நெ ரு ப்பென பா ல ச்ச ந் தி ர ன் சு ள் ளி க்காட்டை ச் ச�ொல்வார்கள். இப்போது சந்தோஷ் ஏச்சிக்கானம். ஐம்பது படங்களுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை பவாண்ணா, என் கதைகள் மட்டுமே எனக்கான தகுதி, அங்கீகாரம், பெருமிதம்’ எனச் ச�ொல்லும் அவரின் ம�ொத்தக் கதைகளையும் ஜெய ஸ்ரீ ம�ொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறார். திருவண்ணாமலை தமிழ், மலையாள இலக்கியங்களை இணைக்கும் மனப்பாலமாக மாறியிருக்கிறது. உ ங ்க ள் கு டு ம்ப ச் சூ ழ ல் எ ப்ப டி இ வ ற ்றை எதிர்கொள்கிறது? என் குடும்பம் என்பது ஷைலஜாவும், வம்சி, மானசியும் மட்டுமல்ல. அதன் விஸ்தீரணம் இன்னும் விரிவானது. ஜெயஸ்ரீ, உத்ரா, சுகானா, அமரபாரதியில் ஆரம்பித்து, பீனிக்ஸ், மீனா, அபிதா, காயத்ரி, கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஷபி என நண்பர்களாலானது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
21
குடும்பத்திற்கும் இலக்கியச் செயல்பாட்டிற்குமாக மெல்லிய க�ோடுகளற்ற வாழ்வுதான் இயல்பாகவே அமைந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் மன அலைவுறுதலை எப்படி ஆராதிக்க வேண்டுமென அடிப்படையிலேயே கலை மனம் உள்ள ஷைலஜாவுக்குத் தெரியும்தானே! அதனால் எந்தப் பிரச்சனைகளுமின்றி இதையெல்லாம் ஒரு குடும்பமே மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடிகிறது. நகை, பணம், வீடு, ச�ொத்து எனச் சுருங்கிப் ப�ோன ல�ௌகீகங்களின் மீதான நாட்டமுடைய ஒரு குடும்பச் சூழல், துரதிஷ்டவசமாக எனக்கு அமைந்திருந்தால் தற்கொலை செய்து செத்துப் ப�ோயிருப்பேன். விவசாயி, அரசு அலுவலர், எழுத்தாளன், கதைச�ொல்லி, இலக்கியச் செயற்பாட்டாளன். இதில் யார்தான் நீங்கள்? எல்லாமும்தான். நடுநிசிகளில் வாய்க்கால் நீர் காலில் நனைய அப்பாவ�ோடு சேர்ந்து வயலுக்குத் தண்ணிகட்டிய அனுபவமேறிய உடல் என்னுடையது. அது ஊறிப்போயிருக்கிறது. அதிலிருந்துதான் நான் உருவானேன். விவசாயத்தை மட்டுமே பிரதானத் த�ொழிலாகக் க�ொண்டு இந்தியாவில் வாழமுடியாத துயர வாழ்வை என் அரசு வேலைதான் மாற்றியமைத்தது. அலுவலகத்தின் ஒரு துரும்புகூட என் மனதில் ஏறவில்லை. அது பிழைப்பதற்கான ஒரு நேரநிரப்புதல் அவ்வளவுதான். விவசாய வாழ்வும், அலுவலகச் சூழலும் எனக்குக் கதைகள ை த் த ரு கி ற து . ந ா ன் எ ழு து வ த ற் கு ம் , ச�ொல்வதற்குமான ஜீவ ஊற்று இங்கிருந்துதான் நா நனைக்கிறது. இதுவரை படித்து முடித்த ஆயிரக்கணக்கான கதைகள் மனதிலேயே தேங்கிக் கிடக்கின்றன. அதன் மீறல் அவஸ்தையானது. அதன் வடிகால்தான் கதை ச�ொல்லல். குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, டீக்கடைக்கு, தெருவுக்கு என தனித்தனியே ச�ொன்ன கதைகள் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டு மைக் முன்னால் ச�ொல்ல வைத்திருக்கிறது. ஜீவனுள்ள கண்கள் என் கதைகளையும், சக படைப்பாளிகளின் கதைகளையும் தாகம் தீரக் குடிப்பதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்தான். சூழலியலாளனாக, இயற்கை விவசாயியாக? 10 வருடங்களுக்கு முன் நம்மாழ்வர�ோடு ப�ோன ஒரு கார்ப் பயணம்தான் என் நிலத்தை இயற்கை வேளாண்மையை ந�ோக்கித் திருப்பியது. ரசாயன உரத்தை, பூச்சி மருந்தைத் தூக்கி எறிய வைத்தது. சக விவசாயிகளின் கேலியாலும், கிண்டலாலும் எங்கள் செழிக்காத பயிர் தினம்தினம் வாடிப்போனது. பெரும் நம்பிக்கைய�ோடு வரப்பில் நானும் ஷைலஜாவும் உட்கார்ந்திருப்போம். எங்கள் வயலில் இப்போது மண்புழுக்கள் நெளிகின்றன. தூண்டில்காரர்கள் அவற்றைத் த�ோண்டியெடுக்க, க�ொட்டாங்குச்சிகள�ோடு வருகிறார்கள். இதுதான் என் கனவில் விரிந்த வயக்காடு. பெரும் நஷ்டப்பட்டு இதை மீட்டிருக்கிற�ோம்.
22
சிவப்புக்கோள் மனிதர்கள் (சிறார் நாவல்) / க.சரவணன் / பாரதி புத்தகாலயம் வெளியீடு / பக் - 64 | ரூ. 50
நூல் அறிமுகம்
அறிவியலில் புனைவும் புனைவில் அறிவியலும்
பா.ரமேஷ்
சி வ ப் பு க்கோ ள் ம னி த ர ்க ள் வ கு ப்பறை க் குழந்தைகளுக்குள், பேதங்கள் ஏதுமில்லை என்பதை, ஆணி அடித்தாற்போல் அருமையாகச் ச�ொல்லியது பாராட்டுதலுக்கு உரியது. இருளில் வசித்தல், குறித்து, பவித்ராவின் பிரயத்தனங்கள் அருமை. அருணின் ஆச்சர்யங்களில், பவித்ராவின் வீட்டைக் கண்டு வியக்கும் தருணமும். குழந்தைகளின் நட்பு வட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஒருப�ோதும் இருந்ததில்லை என்பதை எழுதியது சிறப்பு. மாலைக் காட்சிகளில், "அநியாயத்தைக் கண்டு க�ொள்ளாமல் பயந்து ஒதுங்குபவர்கள் அதிகமாகிப் ப�ோனதாலே, நியாயத்தைக் கேட்பவர்கள் ஏமாளியாகத் தெரிவார்கள்" என்ற வரியை, பவித்ராவின் அண்ணன் கேரக்டரை லெனின் என்று பெயர் வைத்துக், கூறச் செய்தது ஆசிரியரின் ப�ொதுவுடமைச் சிந்தனையைக் காட்டுகிறது. நிச்சயம் ப�ொதுவுடமை விதை குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும். வேற்றுக் கிரகம் ந�ோக்கிய பயணத்தில், எந்திரமும் தமிழ் விரும்பும் த�ொன்மை, நம் தமிழுக்கு உண்டு.அயல் கிரக மனிதனுக்கும், பாரதியின் பெயர் சூட்டி, பாரதியின் த�ொலைந�ோக்குத் தாகத்தைத் தீர்த்தமைக்குப் பாராட்டுக்கள். விண்கல் தாக்குதலை, விறுவிறுப்பாய்க் க�ொண்டு சென்றீர். 'லெனினுக்கே அறிவுரை ச�ொல்லும் பாரதி,' என்ற புனைவு உரையாடல் அற்புதம். மின்கல்லின் மின் சுமை பெறுதல், ஒத்த மின் சுமை மூலம் மின்கல்லை திசை மாற்றல், எளிய புரிதலை உருவாக்கும். கடவுளுடன் ஓர் நாளில், உணவே மருந்தில் த�ொடங்கி எதிர்கால அறிவுரைகள், குழந்தைகளுக்கு ஏராளம். அவர்கள் இதனைப் படிக்கும் ப�ோது, நிச்சயம் மனதில் நல்லத�ோர் தாக்கம் உருவாகும். சிறு குறிப்பு: இன்குபேட்டர் என்பதற்குப் பதிலாக கேப்ஸ்யூல் எனும் வார்த்தையும், நுண்ணோக்கிக்குப் பதிலாக த�ொலைந�ோக்கி என்றும் இருந்திருந்தால் அறிவியல் வாசகர்களின், புருவச் சுண்டல்களைத் தவிர்த்திருக்கலாம்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
கட்டுரை
àôè ñ‚èO¡ õóô£Á
பேரா கா. அ. மணிக்குமார்
"உன் வயதில் நான் விரும்பியதைப்போல் நீயும் வரலாற்றை விரும்புவாய் என நினைக்கிறேன். ஏனெனில் அது மனிதர்களைப் பற்றியது. எந்த அளவிற்கு மனிதர்கள் ஒன்றிணைந்து பணி செய்கிறார்கள�ோ, ப�ோ ர ா டு கி ற ார ்க ள�ோ , வாழ்வை ம ேம்ப டு த்த முயற்சிக்கிறார்கள�ோ, அந்த அளவுக்கு கூடிவரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் பற்றியது வரலாறு, அவையெல்லாம் உன்னை மற்ற எதையும்விட மிகவும் அதிகமாக மகிழ்விக்கத் தவறாது" அந்தோனிய�ோ கிராம்சி தன் இளம் வயது மகன் டெலிய�ோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை. வரலாறு இவ்வாறு புரட்சியாளர்களுக்கு ஓர் உயிர�ோட்டமளிக்கும் பாடமாக இருக்கும்போது, அது ஆளும் வர்க்கத்திற்கு அபாயமாகத் தெரிகிறது. வரலாறு ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகிறது. நெஞ்சில் நெருப்பை வார்க்கிறது. எனவேதான் தங்களுக்கு சாதகமாக ஆளும் வர்க்கத்தினர் வரலாற்றைத் திரித்து எழுத முயல்கின்றனர். தவறான வரலாறு (False History) இந்தியாவில் மக்களது ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எத்தகையத�ோர் கேடு விளைவித்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிற�ோம். எல்பின்ஸ்டன் எழுதி 1841ல் வெளியிடப்பட்ட இந்திய வரலாறு ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்றுக் க�ொடுக்கப்பட்டது மட்டுமின்றி, குடிமைப்பணியில் (Civil service) சேர்வோர் அனைவரும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய புத்தகமாகவும் இருந்தது. இஸ்லாம் மீதும் இஸ்லாமிய நிறுவனங்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இப்புத்தகம் எழுதப்பட்டிருந்தது. திரிக்கப்பட்ட வரலாறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுக் க�ொடுக்கப்படும்வரை மத நல்லிணக்கத்தை இந்தியாவில் நிரந்தரமாக உருவாக்க முடியாது என்ற மகாத்மா காந்தியின் கூற்று தீர்க்க தரிசனமாகியிருக்கிறது. 1 வரலாறு இவ்வுலகை அறிய உதவுகிறது. எப்படி மானுட உலகம் த�ோன்றி உருவெடுத்தது என்பதைப் புரிவதன்மூலம் அதை மேலும் எவ்வாறு மாற்றமுடியும் என்பதையும் அறிந்திடலாம். கடந்தகால அறிவு நிகழ்காலத்தைப் புரிந்துக�ொள்ள உதவுவது மட்டுமின்றி, அதன்மூலம் நல்லத�ோர் எதிர்காலத்தைத் திட்டமிட்டு உருவாக்கிட உதவுகிறது. ஆனால் ‘வரலாறு என்பது பெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாறே’ எனக் குறிப்பிட்ட தாமஸ் கார்லைலின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அலெக்சாண்டர்கள், நெப்போலியன்கள், பிரடெரிக்குகள், காதரீன்கள் ப�ோன்றோரை இவ்வுலக மக்கள் மகா
உலக மக்களின் வரலாறு கிறிஸ் ஹார்மன் தமிழில்: ச.சுப்பாராவ், வெளியீடு: பாரதி புத்தத்தகாலயம், 24332924
புருஷர்களாகப் பாவிக்கும் அளவிற்கு வரலாற்றை நாம் தவறாகக் கற்றுக் க�ொடுத்திருக்கின்றோம். ‘‘சார்கன் (அக்காடிய பேரரசு கி.மு.2300) முதல் ஹிட்லர் வரை ஈவிரக்கமற்ற முறையில் மக்களை இரத்தம் சிந்த வைத்ததன் மூலமே தங்களுடைய ந�ோக்கங்களை நிறைவேற்றிக் க�ொண்டவர்கள் என்றும், இந்த மனிதக் க�ொல்லிகளை (pests of humanity) மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதன் மூலம் இவ்வுலகில் வாழும் தூய உள்ளம் க�ொண்ட மக்களை தவறுதலாக வழி நடத்திச் செல்கிற�ோம்" என எழுதுகிறார் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். இந்திய வரலாறு இரத்தம் த�ோய்ந்த பக்கங்களைக் க�ொண்டது என்பதை, ப�ோரைத் துறந்து சமாதானத்தை நாடிய சாம்ராட் அச�ோகச் சக்கரவர்த்தி மூலமே நாம் அறிய முடிகிறது. தனது தாத்தா மற்றும் தந்தை வெற்றி பெற்ற பகுதிகளை விரிவாக்கிட ஐம்பதாயிரம் மக்களை புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016 23
நாட்டை விட்டு விரட்ட வேண்டியிருந்ததாகவும், ப�ோர்க்களத்தில் ஒரு இலட்சம் வீரர்களைக் க�ொல்ல வேண்டியிருந்ததாகவும் அச�ோகர் குறிப்பிடுகிறார். மேலும் இந்தியாவில் பேரரசர்களால் கட்டாயமாக வசூலிக்கப்பட்ட வரிகளால் வறுமையில் வாடிய மக்கள், பருவ மழை ப�ொய்த்து விளைச்சல் இல்லாத பஞ்ச காலங்களில், காலரா ப�ோன்ற த�ொத்து ந�ோய்களுக்கு ஆளானதால் பல இலட்சக்கணக்கான உயிர்கள் மடிந்து ப�ோனவற்றை மக்கள் வரலாற்றாளர்களே பதிவு செய்துள்ளனர். 2 "மகா மனிதர்கள் வரலாறு" என்பது வெகுசன பங்கேற்பை மறுப்பதாகும். "வெகுசனம் திரளும் இ ட த் தி ல ்தா ன் அ ர சி ய ல் ஆ ர ம்பமா கி ற து " என்கிறார் லெனின். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான�ோர் கூடும் இடத்தில் அல்ல, பல இலட்சம் மக்கள் எங்கு ஒன்று சேர்கிறார்கள�ோ, அங்கு தான் தீவிர அரசியல் உருவாகுவதாக லெனின் கருதினார். வங்கப் பிரிவினையின்போது ஏற்பட்ட எழுச்சியின்போது "இந்தியாவில் எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் தெருக்கள் எழுந்து நிற்கின்றன" என லெனின் குறிப்பிட்டார். லெனின் மற்றும் காந்தியின் அரசியல் ஆயிரக்கணக்கான கிராமங்களில் அதிருப்தியுற்றிருந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகள�ோடு ஆரம்பித்தது. இவ்விவசாயிகளும் இதர பாமர மக்களும் லெனின் மூலமாகவும் காந்தி மூலமாகவும் தங்களது விழைவுகளை வெளிப்படுத்தியப�ோது வரலாறு படைத்தார்கள். மக்கள் வரலாறு வெகுசன இயக்கங்களின் காலமாகிய பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கியது. மிட்சல், மக்கள் வரலாற்றிற்கு முதலில் தளம் அமைத்தார். பிரஞ்சுப் புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும் எழுத்துக்களும் மக்கள் வரலாறு எழுதுவதற்கான உந்துதலைக் க�ொடுத்தது. ஜார்ஜ் லெபவர், மார்க் பிளாச் ப�ோன்றவர்கள் இப்பாதையில் பயணித்தனர். பிரஞ்சு நாட்டு வரலாற்றியல் பாரம்பரியத்தில் வரலாறு பிரஞ்சு ஆளும் வர்க்கம் பற்றியதாக இல்லாமல், பாமர மக்களைப் பற்றியதாகவே இருந்துள்ளது. மக்கள் வரலாற்றிற்கான உத்வேகம் ஐர�ோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தென்பட்டது. அதற்கான பங்களிப்பை மார்க்சியம் செய்தது. இங்கிலாந்தில் தாம்சனின் இங்கிலாந்து நாட்டு வரலாறு மக்கள் பற்றியதாக இருந்தது. 1883ஆம் ஆண்டு ட�ோர்செஸ்டர் விவசாயத் த�ொழிலாளர்கள் ஜார்ஜ் லவ்லெஸ் தலைமையில் சங்கம் வைத்துப் ப�ோராடத் துணிந்தப�ோது, அவர்கள் சங்கத்துக்கு உண்மையுடன் உ று தி ய ாக இ ரு ப்ப த ாக எ டு த்த உ று தி ம � ொ ழி சட்டவிர�ோதமானது எனக் கூறி அரசு அவர்கள் அனைவரையும் ஏழாண்டுகள் நாடு கடத்தியது. 1819ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் வெளியில் சுமார் 60,000 த�ொழிலாளர்கள்
24
புரட்சிகர பேச்சாளர் ஹன்ட் உரையைக் கேட்பதற்காக கூடியிருந்தப�ோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 நபர்கள் க�ொல்லப்பட்டத�ோடு பெண்கள் உட்பட்ட 400 நபர்கள் காயமடைந்தனர். அதேப�ோன்று நியூயார்க் நகரில் மே, 1888 அன்று சம்பள உயர்வு மற்றும் எட்டுமணி நேர வேலை கேட்டு த�ொழிலாளர்கள் ஊர்வலம் சென்றப�ோது, ஆலை முதலாளிகளும், திமிரெடுத்த தனவந்தர்களும் ஏழைத் த�ொழிலாளர்கள் மீது காவலர்களை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஆயிரக்கண க்கான�ோர் து ப ் பாக்கிச் சூ ட்டு க்குப் பலியாயினர். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் தான் நாம் இன்று மேதினம் அனுஷ்டிக்கிற�ோம். அடிமைகளின் கலவரங்களால் பண்டைய கிரேக்க, ர�ோமா னி ய பே ர ர சு க ள் ஆ ட்ட ம் கண்ட து ம் , நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் விவசாயிகள் கிளர்ச்சி சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் ப�ோன்ற நாடுகளில் வெடித்ததும், இங்கிலாந்தில் வாட் டைலர் (1381), ருஷ்யாவில் டிகாச�ோவ் தலைமையில் வெடித்ததும், மாபெரும் விவசாயிகள் புரட்சி, இன்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு உத்வேகத்தைத் தரும் நிகழ்ச்சிகள். 3 சங்கிலிகளால் கட்டப்பட்டு குடும்பத்திடமிருந்தும், சா ர் ந் தி ரு ந்த ப ழ ங் கு டி ச மு த ா ய த் தி ட மி ரு ந் து ம் பிரிக்கப்பட்டு, உடல் மற்றும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டு, சவுக்கடி மூலம் கீழ்ப்படிந்து நடக்கக் கற்றுக் க�ொடுக்கப்பட்டு, த�ோல் நிற அடிப்படையில் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு தன்மானம், மனிதாபிமானம் ப�ோன்ற மாண்புகள் மறுக்கப்பட்ட கருப்பர்களுக்கு அமெரிக்கக் கனவுகள் என்பது க�ொடுமையான கெட்ட ச�ொப்பனமாக இருந்ததை நாம் மக்கள் வரலாற்றில் அறிய முடியும். மனித உரிமை பற்றி உரக்கப் பேசி, அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் ஐநூறு அடிமைகளுக்கு ச�ொந்தக்காரர். இவருக்கு மக்கள் என்ற வார்த்தை வெள்ளையர்களை மட்டுமே குறிக்கும். அமெரிக்காவின் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மானுடத்தின் மாபெரும் விம�ோசகராக வருணிக்கப்படுகிறார். அவர் மனித நேயம் க�ொண்டவர், அடிமை முறையை வெறுத்தார் என்றெல்லாம் நினைக்கிற�ோம். ஆனால் நியூயார்க் ஹெரால்ட் டிரிப்பூன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் லிங்கன் இவ்வாறு கூறியுள்ளார். ‘ஒன்றிணைந்த அமெரிக்காவைக் காப்பாற்றாமல் அடிமை முறையை மட்டும் ஒழிக்க முனைவ�ோர�ோடு எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தப் ப�ோராட்டத்தில் எனது நிரந்தர ந�ோக்கம் அமெரிக்க யூனியனைக் காப்பாற்றுவதே. மாறாக அடிமை முறையைக் காப்பாற்றுவத�ோ அல்லது ஒழிப்பத�ோ அல்ல. அடிமைகளை விடுதலை செய்யாது யூனியனைக் காப்பாற்ற முடிந்தால் நான் அதைச் செய்வேன். யூனியனைக் காப்பாற்றி சிலரை விடுவித்து, எஞ்சியவரை அப்படியே விட்டுவிடுவதானாலும், எனக்கு
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
சம்மதமே. அடிமை முறை அல்லது நிற இனத்தவர்க்கு நான் எதை செய்தாலும், அது யூனியனைக் காப்பாற்றும் என்பதால் தான்.’’ 4 ஹ�ோவர்ட்ஜின் (அமெரிக்க நாட்டு மக்கள் வரலாறு) லெஸ்லி ம�ோட்டன் (இங்கிலாந்து நாட்டு மக்கள் வரலாறு) ப�ோன்றோர் வரிசையில் கிறிஸ் ஹார்மன் இடம் பெறுகிறார். அவர் எழுதியுள்ள இந்நூல், கல்லூரி, பல்கலை ஆசிரியர் மாணவர்கட்கு மட்டுமின்றி ப�ொதுவாக கல்வியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். த�ொழிலாளர் வர்க்கத்தையும், இளைஞர்களையும் புரட்சிகர அரசியலுக்கு இழுப்பதற்கு பயன்படும் வகையிலும் இந்நூலை கிறிஸ் எழுதியுள்ளார். கிறிஸ் ஹார்மன் பாட்டாளி வர்க்கத்திலிருந்து த�ோன்றியவர். படிக்கும்போதே (லீட்ஸ் மற்றும் இலண்டன் ப�ொருளாதாரப் பள்ளி)மாணவர் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். தலை சிறந்த ஒரு கல்வியாளராக ஹார்மன் உருவாகியிருக்க முடியும். ஆனால் அவர் அரசியலில், குறிப்பாக ச�ோசலிச த�ொழிலாளர் கட்சிக்கு, (SWP - Socialist Workers Party) பணி செய்வதையே பெரும் பாக்கியமாகக் கருதினார். சென்ற முறை தீ, மார்க்சிசம் எப்படி செயல்படுகிறது, கட்சி மற்றும் வகுப்பு ப�ோன்ற நூல்கள் அவரது முக்கியமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. 2009ம் ஆண்டு நவம்பர் (ருஷ்யப்புரட்சி நாள்) எகிப்து கெய்ரோவில் உள்ள சமதர்மக் க�ோட்பாட்டு மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிக் க�ொண்டிருந்தப�ோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். கிறிஸ் ஹார்மனின் அகால மரணம் இடதுசாரி அரசியல் உலகிற்கு பேரிழப்பாகும். இருப்பினும் உலக மக்கள் வரலாறு புத்தகம் மூலம் தான் வாழ்ந்த நாட்டிற்கு அப்பால் உள்ள க�ோடிக்கணக்கான ஏகாதிபத்திய முதலாளித்துவ பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடம் பெறுவார். பாரதி புத்தகாலயம் இத்தருணத்தில் கிறிஸ் ஹார்மனின் "உலக மக்கள் வரலாறு" நூலை தமிழில் க�ொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். இந்நூலை முழுமையாகப் படித்தால்தான் அதன் பயனைப் பெற முடியும் எனக் கருதி புத்தகத்தில் உள்ள விவரங்களை த�ொகுத்து அளிக்கவில்லை. உலகை உலுக்கிய புரட்சிகளையும், ப�ோர்களையும் கிறிஸ் விவரிக்கும்போது அவரது மார்க்சிச கண்ணோட்டம் தெளிவாகத் தென்படுகிறது. ர�ோசா லக்சம்பர்க்கின் சமதர்மக் க�ோட்பாட்டுக்கு மாற்று காட்டுமிராண்டித்தனம் எப்படி எதார்த்தமானது என்பதை விளக்கும் ப�ோதும், இரண்டாம் உலகப் ப�ோர் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ப�ோர் என சுட்டிக் காட்டும்போதும் அவரது அறிவுக் கூர்மை பளிச்சிடுகிறது. பிரஞ்சுத் த�ொழிலாளர்கள் காட்டிய ப�ோர்க்குணம் மற்றும் ஒற்றுமை, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் பல்வேறு நாடுகளிலும் உழைப்பாளர்கள் காட்டிய ஈடுபாடு நூலுக்கு பெருமை சேர்ப்பதாகும். இந்நூலுக்கு எழுதிய அணிந்துரை
வரப் பெற்றோம் தேசியக் கல்விக் க�ொள்கை - 2016
மகாராஜாவின் புதிய ஆடை | த�ொகுப்பு: தேனி சுந்தர் தேசியக் கல்விக் க�ொள்கை - 2016
மூன்று முன்னோட்டங்களும்... முக்கிய கேள்விகளும்... ப�ொ. இராஜமாணிக்கம் | ரூ. 15/ பக்.24. தேசியக் கல்விக் க�ொள்கை -2016
கார்ட்டூன் வழி கல்விக் க�ொள்கை | ப�ொ. இராஜமாணிக்கம் | ரூ. 10/ பக்.16 மேற்கண்ட மூன்று நூல்கள் அறிவியல் வெளியீடு க�ோபாலபுரம், சென்னை - 86 ப�ோன்: 044 - 28113630 மகாத்மா ஜ�ோதிராவ் புலே க. ஜெயசந்திரன் | சமத்துவ கழகம் | கிரேடவுன், க�ோவை - 18 |ப�ோன்: 9487700907 |ரூ. 50/பக். 72. ஆதலால் முயற்சி செய் | ஆனந்தபாரதி இனிய நந்தவனம் பதிப்பகம் | 17, பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி | ரூ. 80/- பக்.112.
1.இருளின் குரல் 2.எனது உடலும் நான்களும் 3.வெற்றுக் கருவறையும் நிறைந்த சந்நிதியும் (கவிதைகள்) 4.நனவிலியில் ப�ொருள் விழித்து அலையும்
ரா. செயராமன் | சிற்றேடு | மேற்கண்ட நான்கு புத்தகம்மும்
SITREDU | 253,1stcross, 2nd Block,katriguppe water Tank, BSK III stage, III phase,Bangaluru-560085.
த�ொடரும் புத்தகத் திருவிழா 2016 அக்டோபர் துத்துக்குடி 30 முதல் அக்டோபர் 9 வரை செங்கம் அக். 2 முதல் 9 வரை ராமநாதபுரம் 28 முதல் நவம்பர் 6 வரை டிசம்பர் திண்டுக்கல் 1 முதல் 11 வரை பாண்டிச்சேரி முதல் வாரம் ஜனவரி - 2017 சென்னை புத்தகக்கண்காட்சி, ஜனவரி 6 செயின்ட் ஜார்ஜ் பள்ளி, அமைந்தக்கரை திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி 27 முதல் பிப் .5 வரை இடம்: கே.ஆர்.சி. சிட்டி சென்டர்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
25
பேசாப் ப�ொருளை பேசத் துணிந்தவர்கள் - சுந்தா
பாரதியார் குறித்த பல்வேறு நூல்கள் த�ொகுப்புகள் ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பா ர தி யி ன் எ ழு த் து க ்க ளி ன் வ லி மை த ா ன் இ த்தகை ய ப�ோக்கிற்கு மூலமாக அமைகிறது. நுட்பமான விடுதலை உணர்வினை, மனம் சார்ந்தும் ஊட்ட வல்லன பாரதியின் எழுத்துகள். இலக்கிய நயம் சார்ந்தும், மன எழுச்சி சார்ந்தும், பாரதியின் எழுத்துகள் சாகா நிலை பெற்றவை என்றால் எவர�ொருவரும் அதனை அதீதம் என்று குற்றம் சாட்டமுடியாது. இன்று வலதுசாரி மத அரசியல் சக்திகள் கூட, பாரதிய�ோடு துண்டிக்கப்பட்ட வரிகளில் இருந்தும், அவரது எழுத்தின் ந�ோக்கத்தினைத் துண்டிப்பதிலிருந்தும், தங்களுக்கான வெளியை உருவாக்க முயல்கிறார்கள். இதற்கு முன்னர் பாரதியின் பிறப்பு சார்ந்து அவரை ஒரு சாதியின் அடையாளமாகப் பார்க்க முயன்றவர்கள் த�ோற்றுப் ப�ோனதுப�ோல் வலதுசாரி மத அடிப்படைவாத சக்திகளும் த�ோற்றுப்போவார்கள் என்பது நிச்சயம். த�ோழர்.தே.இலட்சுமணன் அவர்கள் வெளியிட்டுள்ள நூல், இதனை இன்னொரு க�ோணத்தின் வழியாக உற்றுந�ோக்கி உறுதிப்படுத்துகிறது. கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார்-ஏன்? என்கிற நூல் மிக எளிமையாகவும் அதேப�ொழுதில் வலிமையான தரவுகள�ோடும் விரித்து நிற்கிறது. பாரதி மற்றும் பாரதிதாசன் சந்திக்கும் புள்ளிகளைக் கண்டெடுத்து ஆசிரியர் த�ொடங்கும் பயணமே இந்நூல். தேசியக் கவி தமிழ்க்கவி, மக்கள் கவிஞர், புதுமைக் கவி, புரட்சிக் கவிஞர், என்றெல்லாம் ச�ொன்னாலும் பாரதியை முழுமையாக அறிந்ததாகக் கருத முடியாது. ஏனென்றால் அவர் ஒரு பன்முகப் படைப்பாளி ( multifaceted personality ). இந்தக் கருத்தின் அடிப்படையில் இந்நூலாசிரியர் பயணிக்கிறார். 18 வயது கனகசுப்புரத்தினம் என்கிற கவிஞருக்கு, பாரதிக்கு நண்பராக ஆனது தமிழகத்திற்கு கிடைத்த பெரும் பலனாகும். 1908 முதல் 1918 வரையிலான இக்குறுகிய காலம்தான், புதுச்சேரியில் பாரதியுடன் ஏற்பட்ட நெருக்கம்தான், எதைப்பற்றி எழுதவேண்டும் என்ற இலட்சியத்தினை பின்னாளில் பாரதிதாசன் ஆன கனகசுப்புரத்தினத்திற்கு அளித்தது. அரவிந்தக�ோஷ் ப�ோன்றவர்களுக்குக் கூட தமிழ் ம�ொழி ஒன்று இருப்பதாகத் தெரிய வந்தது பாரதியின் தமிழ்ப்பற்றின் மூலம்தான். வ.ரா. முதலான�ோர் தமிழ்ப் புத்தகங்களைத் தேடித் படித்தார்கள். நான் அவருக்கு, அந்தப் புண்ணியவானுக்கு, தன் குலத்தோரின் எதிர்ப்பையும் ப�ொருட்படுத்தாத அந்த பாரதிக்கு, பாரதிதாசனாக இருப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். இப்படிச் ச�ொன்ன பாரதிதாசனின் உயர்வை நூல் முழுக்க அறிகிற�ோம். பாரதிதாசன் மூலமாக பாரதியைப் பற்றியச்
26
சித்திரத்தினை, பாத்திரத்தினை நம் முன் வரைந்து வைத்திருக்கிறது இந்நூல். ஒருவகையில் மாறுபட்ட அணுகுமுறை. பெ ரி ய ா ரி ட ம் பெ ரு ம தி ப் பு க� ொ ண் டி ரு ந்த , பி ர ாம ணி ய த்தை த ன் வாழ்நா ள் உ ள்ளள வு ம் எதிர்த்து நின்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கண்ணோட்டத்தை, துல்லியமாக நுணுகிக் காட்டுவதில் ஜனரஞ்சகமாக வெற்றியடைந்திருக்கிறார் த�ோழர். தே.இலட்சுமணன். எனக்குப் பெண்கள் விடுதலை என்ற பிரச்னை ஒன்று இருக்கும் என்று தெரியவே தெரியாது என்கிற கனக சுப்புரத்தினம்தான், பாரதியின் தாக்கத்தால் பெண்ணுரிமைகளை வீச்சாகக் க�ொண்டு செல்லும் பாரதிதாசனாக மாறுகிறார். பாரதிக்குத் தாசன் என்ற கம்பீரமான பெருமிதத்தை, பாவேந்தர் அவர்கள் தனது உயிருள்ளவரை பேணிப் பாதுகாத்து வந்தார். பாரதியார் பாட்டில் பற்றிய ப�ொதுவுடைமைத் தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்தது. க�ொழுந்துவிட்டெரிந்து த�ொழிலாளரிடத்தும் உழைப்பாளரிடத்தும், உணர்வில் உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யார�ோ? பாரதிதாசனின் இக்கேள்விப்பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இதுவரை எழவில்லை. சமூக அவலம் குறித்து சாடி எழுதுவதில், இரண்டு கவிஞர்களுக்குமுள்ள ஒற்றுமையை, தேவையான அளவிற்கும் மேல் விரித்துச் செல்லமுடிகிறது. பேசாப் ப�ொருளை பேசத் துணிந்தவர்கள் அல்லவா. தனது அரசியல் குருவான திலகரின் கருத்துக்கள�ோடும் முரண்பட்ட பாரதியின் செம்மார்ந்த சிந்தனைகளை, பாரதிதாசன் மூலம் அறியவைக்கிறது இந்நூல். ‘கவிதைக்குப் ப�ொய் அழகு’ என்று அதன் கற்பனை வளம் ந�ோக்கி கண்ணதாசன் பாடுவார். பாரதி குறித்து பாரதிதாசன் அவர்கள் பாடியது கற்பனை வளம் க�ொண்ட ப�ொய்யா? மிகையான நயம் வழிப்பட்ட கூற்றா? பைந்தமிழ்த் தேர்ப்பாகன்... அவன�ொரு செந்தமிழ்த் தேனீ... சிந்துக்குத் தந்தை... குவிக்கும் கவிதைக் குயில்... படரும் சாதிப் படைக்கு மருந்து... மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்.... இவையெல்லாம் உள்ளீடற்ற வெறும் கூண்டுதானா? மேடைக்கான வெற்று ஆரவாரச் ச�ொற்கள் தானா ? பாரதியின் குணாம்சச் சிந்தனை மட்டுமல்ல இங்கு பாவேந்தரின் குணாம்சச் சிந்தனையையும் (character) இந்நூல் கையாள்கிறது. எளிய பதங்கள், எளிய ச�ொற்கள் என்கிற பாரதியின் வழியைப் பற்றிக் க�ொண்டே இந்நூல் நம்முடன் உரையாடுகிறது. மெய்ம்மைக் க�ொண்ட நூலையே அன்போடு வேதமென்று ப�ோற்றுவாய் வா வா என அழைத்த பாரதியின் உள்ளார்ந்த வெளிப்பாடுகளை தக்க நேரத்தில் தகுந்த மதிப்பீட்டில் முன்வைத்துள்ளது இந்நூல். வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டு தெரிவிக்கலாம். புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
சர்வதிகாரம் அழிந்த கதை இரா.சாவித்திரி
ஆ
சிரியர் ஜூலியா ஆல்வரிஸ் பத்து வயதில் ட�ொமினிக்கன் குடியரசிலிருந்து அமெரிக்கா வந்தவர் பிறந்தநாடு, இனம் ம�ொழி, பண்பாடு என அனைத்தையும் இழந்து வேர�ொடு புலம் பெயர்த்தப்பட்டவர். ட�ொமினிக்கன் குடியரசின் சர்வாதிகார அதிபர் ட்ருஜில்லோவின் க�ொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் ப�ோராடி உயிரிழந்த மிராபல் சக�ோதரிகளையும், அவர்களது இயக்கத்தையும் மையப்படுத்தி I am the Time of the Butterflies என்ற வரலாற்றுப் புனைவை எழுதியுள்ளார். மிராபல் சக�ோதரிகள�ோடு இணைந்து ஜனநாயக அமைப்பின் நடத்திய அரசுக்கெதிரான விடுதலைப் ப�ோராட்டத்தில் நேரடியாகப் பங்கு பெற்று உயிரிழந்த தன் தந்தையையும், தனது ட�ொமிக்கன் வாழ்க்கையையும் நினைவுகூர்ந்து எழுதிய புனைவுதான் 'ஒரு அகதியின் கனவு' (Before we were free) க�ொடுங்கோலாட்சியின் கீழ் வாழும் மக்களின் அவல வாழ்வு இப்புதினத்தில் வெளிப்படுகிறது எப்படிப்பட்ட க�ொடுங்கோல் ஆட்சியையும் எதிர்த்து வெளிப்படும் சுதந்திர உணர்வு இப்புனைவின் அடிப்படை அம்சம். க�ொடுங்கோலாட்சியின் கீழ் மக்கள் அடையும் இன்னல்கள், குடும்பத்தில் உறவுகளைப் பிரிந்து வாழும் துயரம், அன்றாட வாழ்க்கையே அஞ்சி வாழும் அவலமாக மாறுவது ஆகியன உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்படுகின்றன. த் ரு ஜி ல ் ல ோ வி ன் , இ ள ம் வ ய தி ல் க� ொ லை , க�ொள்ளைகளில் ஈடுபட்டு அதற்காக சிறைத் தண்டனை அனுபவித்துப் பின்பு ‘42’ என்ற க�ொடூரகுணம் படைத்த க�ொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக உருவெடுத்தார். இடையில் எட்டாண்டுக் காலம் (1916_1924) அமெரிக்காவின் கீழ் ஆட்சி இருந்தப�ோது 1918 முதல் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் த�ொடங்கி தனது ஆளுமைத் திறன் மூலம் ஒன்பதே ஆண்டுகளில் இராணுவத்தின் தலைமைத் தளபதி ப�ொறுப்பினை எட்டினார். இவருடைய முப்பதாண்டு கால ஆட்சியில் தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடந்தேறின. த�ொடர்ந்து பல க�ொலைகளை அரங்கேற்றினார். இதன் எதிர�ொலியாக அரசுக்கெதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு புரட்சியை ஏற்படுத்தும் விதமாக ‘வண்ணத்துப் பூச்சிகள்’ என்ற இயக்கத்தைத் த�ொடங்கினர் மிராபல் சக�ோதரிகள் எனப்படும் நான்கு ட�ொமினிக்கன் சக�ோதரிகள். இவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த இயக்கத்தில்
ஒரு அகதியின் கணவு | ஜூலியா ஆல்வரிஸ்| தமிழில்: ச.பிரபு தமிழன்| பக்: 160 | ரூ. 150
சேர்ந்தனர். மிராபல் சக�ோதரிகள் க�ொடுங்கோலனால் வஞ்சகமாக அழிக்கப்பட்டப�ோது ப�ோராட்டம் வலுத்தது. க�ொடுங்கோலன் த்ருஜில்லோ 1961 மே 30ல் புரட்சியாளர்களால் க�ொல்லப்பட்டான். 1978 முதல் இன்றுவரை ட�ொமினிக்கன் குடியரசு முழுமையான விடுதலை பெற்ற ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. க�ொடுங்கோலன் த்ருஜில்லோவைக் க�ொன்ற அந்த அரிய செயலைச் செய்தவர் தன் அன்பிற்குரிய தந்தை என்பதை எதிர்கொள்ளும் ஒரு பதின்பருவப் பெண்ணின் எண்ண ஓட்டங்கள், உணர்வுகள் வழியாக இப்புதினம் கூறப்படுகிறது. ஆசிரியரின் ச�ொந்த அனுபவங்களின் அடிப்படையில் அனிதா என்ற இளம் பெண்ணின் பார்வையில் கதை ச�ொல்லப்படுகிறது. ப�ோராட்ட உணர்வு வெளிப்படும் இடங்கள் பல. மற்றவர்களைப் ப�ோல நாமும் நியூயார்க் செல்லாமல் ஏன் இங்கு இருக்க வேண்டும் என்ற கேட்ட அனிதாவிடம் தந்தை, ‘அது நடக்காது’ என்றவர் மேலும் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை விட்டுச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது ஆபிரகாம் லிங்கன் தனது ப�ோராட்டத்தைக் கைவிட்டிருந்தால் அடிமைகளாக இருந்த கருப்பின மக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்கிறார். (ப.63) 194 உலக நாடுகளுள் ஒன்றான ட�ொமினிக்கன் குடியரசு என்ற லத்தீன் அமெரிக்க நாட்டின் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியைச் சுவையாகச் ச�ொல்லும் புதினம் ஒரு அகதியின் கனவு. ஜூலியா ஆல்வரிஸ் இப்புதினத்தை எம்மொழியில் படைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ‘சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை. அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது’ என்ற மார்ட்டின் லூதர்கிங்கின் புகழ்பெற்ற வாசகத்தின் விளக்கமே இப்புதினம் எனலாம். உலகநாடுகள் வரலாற்றை அறிய உதவும் புதினம் இது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
27
சிறார் இலக்கியம்: எதிர்காலம் யெஸ்.பாலபாரதி
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் படைப்பாளிதான். என் கையில் இருந்த புத்தகப்பையை வாங்கிப் பார்த்தார். அதன் உள்ளே ஏழெட்டு சிறார் இலக்கிய புத்தகங்கள் இருந்தது. "இதையெல்லாம் விட்டுட்டு வந்து பலவருசம் ஆச்சு.. இன்னுமா இதையெல்லாம் படிச்சிகிட்டு இருக்க?" என்று கேட்டார். "வாசிப்புக்கு ஏதுப்பா எல்லை. எல்லாத்தையும் தான் வாசிக்கிறேன்" என்று ச�ொன்னேன். " எ ப்ப டி த்தா ன் இ ன் னு ம் இ தையெ ல ்லா ம் படிக்கிறிய�ோ?" என்று சலித்துக�ொண்டார். நல்ல வேளை சமீபத்தில் வெளிவந்த என்னுடைய சிறார் நாவல் பற்றி அவருக்கு ஏதும் தெரியாது. நகைச்சுவைக்காக இதனைச் ச�ொல்லவில்லை. நிஜமும் இப்படித்தான் இருக்கிறது. நவீன இலக்கியத்தின் பால் ஆர்வம் க�ொண்ட உங்கள் நண்பர்களைய�ோ, நீங்கள் மதிக்கும் எழுத்தாளரிடம�ோ, இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு பிடித்த ப த் து , வேண்டா ம் . ஐ ந் து சி ற ா ர் இ ல க் கி ய படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் ச�ொல்லச் ச�ொல்லுங்களேன். நிச்சயமாக கேள்விக்கான சரியான பதில் கிடைக்காது. இன்று தீவிர இலக்கிய வாசிப்பாளர்களிலும் சரி, இலக்கியவாதிகளிலும் சரி பலர், சிறார் இலக்கியம் எனும் வகையை சற்று மாற்றுக் குறைவானதாகவே ஏன் எண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை. காவியங்கள் படைப்போரும் படிப்போரும் கூட அரிச்சுவடியிலிருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். குழந்தைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் படிக்கத் தேவையில்லை என்று எண்ணும் பெற்றோர் ஒருபுறம், தீவிர வாசிப்பு க�ொண்ட சிறுகுழுவுக்குள்ளும் சிறுவர் இலக்கியம் என்பதெல்லாம் இரண்டாந்தரம் என்று எண்ணும்போக்கு ஒரு புறம் என எல்லாப் புறமும் அலட்சியமாகவே பார்க்கப்பட்டாலும், சிறார் இலக்கிய வகைமை நூல்கள் முற்றாக இல்லாது ப�ோய்விடவில்லை. தமிழில் இன்று வந்துக�ொண்டிருக்கும் வணிக/ இடை வணிக/ சிறு இலக்கிய பத்திரிக்கைகளில் சிறார் இலக்கியத்திற்கான இடமிருக்கிறதா என்று பாருங்கள். அவ்வளவு ஏன், சிறார் நூல்களுக்கு விமர்சனம�ோ, அறிமுகம�ோ கூட செய்வதில்லை. அரிச்சுவடி படிக்காமல் நேரடியாக கல்லூரிக்கு செல்லும் வழியறிந்தவர்கள்தான் இந்த நவீன வாசகர்கள்/ எழுத்தாளர்கள். தான் சிறுவயதில் படித்த புத்தகங்களையும், அ த ன் மூ ல ம் த ன் னு ள் து ளி ர்த்த வா சி ப் பி ன் சுவையையும்,படைப்பூக்கத்தையும் உணர்ந்த சிறுபான்மை மனிதர்களின் இடைவிடாத ஆர்வத்தால் சிறுவர் இலக்கியம் என்பது இன்னமும் தமிழ்ச்சூழலில் ஒருபுறமாக இயங்கியபடித்தான் உள்ளது.
28
நவீன படைப்பாளிகளில் சிலர் மட்டுமே சிறார் இலக்கியத்தில் பங்காற்றி வருவத�ோடு, இங்கே இயங்குபவர்களையும் ஊக்குவித்து வருகின்றனர். தான் சிறுவயதில் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் பெயர்களை எல்லாம் வரிசைகட்டிச்சொல்லும் பலரும் இன்று தம்பிள்ளைகளுக்கு சிறார் நூல்களை அறிமுகப்படுத்துகிறார்களா என்பது சந்தேகமே? காரணம் இன்றும் சிறார் இலக்கியத்தில் சிறப்பான நூல்கள் வந்து க�ொண்டிருக்கும் விஷயம் இவர்களுக்கு தெரிவதில்லை. நவீன படைப்பாளிகள�ோடு இவர்களின் வாசிப்பு முடிந்து ப�ோய் விடுகிறது. நவீன படைப்புக்களை படிக்கும் வாசகர்கள், தங்களின் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நூல்களை வாசிக்கக�ொடுக்கிறார்கள் என்று பார்த்தால் மிகுந்த ஆயசமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த பலர் ஆங்கில கதைகள் வாசிப்பதையே ஊக்குவிக்கிறார்கள். இதற்கு குழந்தை ஆங்கிலவழிக் கல்வி கற்று வருவதை மட்டும் காரணம் ச�ொல்லிவிடமுடியாது. இவர்கள் சிறார் இலக்கியத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்றோ அல்லது குழந்தைகளுக்காக விரிக்கப்படும் மந்திர உலகத்தினை தங்களின் இன்றைய அறிவியல் அறிவ�ோடு அணுகத்தொடங்கிவிட்டனர் என்றோதான் எடுத்துக்கொள்ள வேண்டும். த�ொன்னூறுகளின் த�ொடக்கத்தியில் இருந்தே, சிறார் இலக்கியத்தில் ஒருவித தேக்கம் ஏற்படத்தொடங்கியது என்று ச�ொல்லலாம். த�ொலைக்காட்சி, கணினியின் வருகை, பின்னர் ம�ொபைல் ப�ோனின் வருகை ப�ோன்றவை குழந்தைகளை தம் பக்கம் ஈர்க்கத் த�ொடங்கியது. இதன் விளைவாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மெல்ல மெல்லகுறையத் த�ொடங்கியது. தற்போதைய காலம் சிறார்இலக்கியத்தின் முக்கியமான காலகட்டம் என்று அறுதியிட்டு ச�ொல்ல முடியும். அரசு, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியில் சிறார் நூல்களுக்கு நல்ல சந்தையும் உருவாகிஉள்ளது. நேரடியான தமிழ் படைப்பு, பிறம�ொழியில் இருந்து நல்ல படைப்பு என தமிழிலில் சிறப்பான படைப்புக்களையும் சிறார் இலக்கிய படைப்பாளிகள் தந்துக�ொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சில, நவீன படைப்பாளிகளுக்குத்தான் சிறார் இலக்கியம் பற்றிய ஞானம் கைகூடாமல், அஞ்ஞானவாசத்தில் இருக்கின்றனர்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
29
¹ˆîè ̃ªè£ˆ¶ «ð£Œ è¬îèœ
è¬î‚ è‹ð÷‹
H…² ñùƒè¬÷ Mê£ôŠð´ˆF, Ýù‰îŠð´ˆF, ¹ˆîèƒèœ eî£ù Ü„êˆ¬îŠ «ð£‚A õ£CŠ¬ð àŸê£è ÜÂðõñ£‚°‹.
嚪õ£¡Á‹ Ï. 20/Þ‚è¬îˆ ªî£°ŠH™ àœ÷ °ö‰¬î‚ è¬îèO™ èŸð¬ù, cF, FA™, òˆî ðF¾èœ, êÍè Üõôƒèœ, ï¬è„²¬õ âù ܈î¬ù»‹ ªè£†®‚Aì‚Aø¶. °ö‰¬î Þô‚Aò‹, ÞQ °ö‰¬îèO¡ õ£Jô£è«õ
24 õ‡íŠ ¹ˆîèƒèœ âv. ó£ñA¼wíQ¡ 7 Ë™èœ 26986 â¿îˆ ªîK‰î ¹L 26987 âù‚° ã¡ èù¾ õ¼¶ 26988 裲‚èœ÷¡ 嚪õ£¡Á‹ 26989 ô£L ð£«ô Ï. 35/26990 c÷ ° 26991 ð‹ðö£ð‹ 26992 î¬ôJ™ô£ ¬ðò¡
°ö‰¬îèÀ‚è£è °ö‰¬îèœ â¿Fò è¬îèœ 27001 27002 27003 27004 27005 27006 27007
30
àîòêƒè˜ ªñ£Nªðò˜ŠH™ ªñ£ˆî‹ Ï.605
Þ‰î àôA™ ªñ£ˆî‹ âˆî¬ù è¬îèœ? މèœM‚° ò£ó£½‹ êKò£ù ðF™ ªê£™ô«õ º®ò£¶. è£óí‹, àôA™ õ£¿‹ ªñ£ˆî ñQî˜è¬÷ M쾋 è¬îèO¡ â‡E‚¬è ÜFèñ£ù¶. èìŸè¬ó ñí¬ô M쾋 è¬îèO¡ â‡E‚¬è ôî™. ðôMîñ£ù è¬îè¬÷ «è£˜ˆ¶œ÷£˜ âv.ݘ. Þˆªî£°ŠH™.
CÁõ‹ ï£îvõóº‹ ð«ô F¼ì¡ 裬÷ñ£†¬ì É‚A„ ªê¡ø è¿° è£èƒèO¡ ݬê èñ.. èñ.. ð‡®î˜ ð„¬ê GøˆF™ å¼ ò£¬ù ܼMJ™ °Oˆî äv
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
31
32
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
33
34
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
35
36
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
37
38
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
39
40
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
41
42
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
43
44
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
45
46
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
47
48
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
49
50
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
51
52
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
53
54
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
55
கேள்விகள்: எஸ். செந்தில்குமார்
நேர்காணல்: யூமா வாசுகி
நூல்களின் வழியே குழந்தைகள் மனிதத்தை உணர்வார்கள்.
தி.மாரிமுத்து (1966) யூமா வாசுகி என்ற பெயரில் கவிதைகளும் நாவல்களும் சிறார் ம�ொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். கும்பக�ோணம் அரசு ஓவியக் கலைத் த�ொழிற்கல்லூரியில் ஓவியக் கலையில் பட்டயப்படிப்பு படித்தார். உயிர்த்திருத்தல்(1999) சிறுகதைத் த�ொகுப்பு, ரத்தஉறவு(2000), மஞ்சள்வெயில்(06) ஆகிய இரு நாவல்கள், இரவுகளின் நிழற்படம்(2001) அமுதபருவம் வலம்புரியாய் அணைந்தத�ொரு சங்கு(2001) சாத்தனும் சிறுமியும்(2012) ஆகிய கவிதைத்தொகுப்புகள�ோடு பெரியவர்களுக்கான அனேக ம�ொழிபெயர்ப்பு நூல்களையும் க�ொண்டுவந்திருக்கிறார். தனக்கென தனித்த ம�ொழிக�ொண்ட கவிதைகள், எதார்த்தமான கதாபாத்திரங்களை க�ொண்ட புனைவுகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஸ்திரமான இடத்தைக் க�ொண்டிருக்கும் யூமாவின் ஓவியங்களும் நுட்பமானவை. தீவிரமான சிற்றிதழ் சூழலில் இயங்கி வருபவர் நீங்கள். கவிதையின் உச்சபட்சமான செறிவான அடர்த்தியான ம�ொழியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறிர்கள். குழந்தைகளுக்கான கதை எழுதுகிற மனநிலைக்கு எவ்வாறு மாறினீர்கள்? என் அம்மா வெகுமக்கள் பத்திரிகைகள் படிப்பதி்ல் ஆர்வமுள்ளவர். காசு க�ொடுத்து வாங்க இயலாத நிலையில், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ராணிய�ோ, குமுதம�ோ வாங்கி வரும்படி என்னைப் பணிப்பார். அப்போது நான் மிகச் சிறுவன். அவர் படித்துவிட்டு வைக்கும்போது நானும் என் அண்ணனும் எடுத்துப் படிப்போம். முக்கியமாக ராணியில் வரும் படக்கதைகளும் குரங்கு குசலா ப�ோன்ற கார்டூன்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சில காலத்துக்குப் பிறகு க�ொஞ்சம் 'சில்லறை' புழக்கம் ஏற்பட்ட பிறகு சிறார் காமிக்ஸ் நூல்களும் துப்பறியும் நாவல்களும் மாயாஜால நாவல்களும் வாங்கிப் படித்தோம். பட்டுக்கோட்டை நகரத்தின் எங்கெங்கோ மூலைகளில் என் விருப்பம் க�ொண்ட சிறுவர்கள் பலர் இருந்தார்கள். எப்படிய�ோ நண்பர்களாகி, புத்தகங்களை மிகுந்த ரகசியமாகப் பரிமாறிக்கொண்டோம். ஏனென்றால் நாங்கள் இதுப�ோன்று 'கூடா சேட்டை' களில் ஈடுபடுவது வீட்டுப் பெரியவர்களுக்குப் பிடிக்காது. படுபயங்கர தீவிரவாதக் குழுப�ோன்று நாங்கள் காலநேரம�ோ, பசி தூக்கம�ோ பாராது புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டோம். புதுப்புது நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. பலவகைப்பட்ட நிறைய சிறார் நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. நான் சில நூறு சிறார் புத்தகங்களையாவது படித்திருக்கக்கூடும். என் சிறு பிராய நினைவுகளில் உவகை தரும் நிகழ்ச்சிகள் வெகுசிலவே. ஆனால், மேற்சொன்ன காலம், இடையறாது சிறார் நூல்கள் வாசித்துக்கொண்டிருந்த காலம் என்
56
ஆளுமைக் கலவைகளில் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருக்குமென்று நினைக்கிறேன். சிறார் படைப்பில், சிறார் பத்திரிகைகளில் ஈடுபடுவதற்கான மனநிலையின் வழி அதுதான். பிறகு பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயம�ோகன் மூலமாக எனக்கு குரு நித்ய சைதன்ய யதி அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகுதான் நான் மலையாள ம�ொழியையும் அங்குள்ள சிறார் இலக்கியங்களையும் அறிமுகம் க�ொள்கிறேன். ஜெயம�ோகன் அவர்களின் நீண்ட கால நண்பர் நீங்கள். நீங்களும் அவரும் இணைந்து ச�ொல் புதிது காலாண்டிதழ் நடத்தியிருக்கிறிர்கள். அந்த அனுபவத்தை பகிர்ந்து க�ொள்ளுங்கள். கூடவே அந்த இதழில் குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகம் செய்வதில் நீங்கள் ஆர்வம் காட்டவில்லையா? ஜெயம�ோகனின் நெறியாள்கையில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ச�ொல்புதிது. ஆசிரியர் க�ோபாலகிருஷ்ணன் (சூத்திரதாரி்), நான், அருண்மொழி நங்கை (ஜெயம�ோகன் மனைவி), செந்தூரம் ஜெகதீஷ், ரிஷ்யசிருங்கர், ம�ோகனரங்கன் ஆகிய�ோர் ஆசிரியர் குழு உறுப்பினர்கள். தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சி, அகல் பஷீர்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
ஆகிய�ோர் வடிவமைத்து அச்சிட்டுத் தந்தார்கள். நான் அந்தப் பத்திரிகையில் நிறைய சித்திரங்கள் வரைந்திருக்கிறேன். அதில் நல்ல படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. வேறு எந்த வேலையுமின்றி, காலையில் பழவந்தாங்கலிலிருந்து புறப்பட்டு ராயப்பேட்டை தமிழினி அலுவலகத்துக்குச் சென்று நாள் முழுதும் அமர்ந்திருந்த காலம் சில வருடங்கள். அங்கே ச�ொல்புதிது வேலையும் நடந்துக�ொண்டிருந்தது. ஒரு சீரிய பத்திரிகையின் உருவாக்கத்தில் ஏத�ோ ஒரு வகையில் த�ொடர்புடையவனாய் இருந்தது எனக்கு நிறைவளித்தது. சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது. உங்களது ரத்த உறவு நாவல் எதார்த்தமான நாவலென பலராலும் பாராட்டுக்கு உள்ளானது. குழந்தைக் கதைகளை ம�ொழிபெயர்க்கத் தேர்வு செய்யும் ப�ோதும், நீங்கள் எழுதும் ப�ோதும் மிகுபுனைவு (fantasy) உலகத்தையும் அதற்கேயுரிய புதிய ம�ொழியை உருவாக்குகிறீர்கள். இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது? ரத்த உறவு நாவலுக்குக் க�ொஞ்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். அந்த நாவல் எழுதப்பட்டதே, அண்ணாச்சி, தமிழினி வசந்தகுமார் அவர்களின் இடையறா வற்புறுத்தலாலும் அழுத்தத்தாலும்தான். அந்த நாவல் குறித்து நல்ல அபிப்பிராயங்கள் வந்திருக்கின்றன. கடுமையான விமர்சனங்களையும் அது எதிர்கொண்டிருக்கிறது. கு ழ ந்தைக ளு க்கான கதைகள ை ம�ொழிபெயர்க்கும்போத�ோ, வேறு படைப்பு முயற்சிகளில் ஈடுபடும்போத�ோ என் உள்ளார்ந்த ஒரு பதற்றம், உணரும்படிச் ச�ொல்லிவிட வேண்டுமே எனும் தவிப்பும் அவசரமும்தான் அவற்றுக்கான ம�ொழியைத் தேர்ந்துக�ொள்கின்றன. ம�ொழி குறித்து எனக்கு முன் தி் ட்ட ம் ஏதுமில்லை. உள்வசப்பட்டதற்கும் உந்துதலுக்குமான பிணக்க இணக்கங்களில் அது பிறக்கிறது. தவிர, சமயங்களில், இடுக்கமான திருகு ம�ொழிகளில் பிரயாசையுடன் கூறப்படும் மிகுபுனைவில் உள்ள சர்வ எதார்த்தத்தையும், சாதாரண எதார்த்த வரிகளில் வெளிப்படும் அபாரமான மிகுபுனைவையையும் நாம் பார்க்கிற�ோம். எதார்த்தத்துக்கும் அல்லாததற்குமான வித்தியாசம் அரூப நூலிழையாக உள்ளது. மீனுக்குத் துடுப்புகள் உருவானதற்கு அதன் காலகால எத்தனமே காரணம் என்பதுப�ோல, வெளிப்படுவதற்காகத் திமிறும் படைப்பு, சுய எத்தனத்திலிருந்தே ம�ொழியை எடுத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கான மிகுபுனைவு கதையின் ம�ொழி அதுசார்ந்த வடிவம் இனிமையான இசை ப�ோலிருக்கிறது. அதே சமயம் தீவிர இலக்கியத்திற்குள்ளிருக்கும் கதாசிரியர்கள் எழுதும் மாய எதார்த்தவாத, மிகுபுனைவுக் கதையும் புரியாதபடியிருக்கிறது. உங்களது வாசிப்பில் இவ்வகையை இப்பிரச்சனையை எப்படி நினைக்கிறீர்கள்? ம�ொழியைப் ப�ொறுத்தவரை - பேருன்னத தத்துவங்கள், மாபெரும் உலக இலக்கியங்கள், அதி
நுட்பமான தரிசனங்கள் எல்லாம் அடிப்படையில் எ ளி மையை க் க�ொண்டிருக்கின்றன. அந்த எளிமையினூடேதான் அவை ந ம்மை எ ட்ட வி ய ல ா த உயரங்களுக்குக் க�ொண்டு செல்கின்றன.எளிமையின் வ ழி யி ல ்தா ன் , அ ப்ப டி அல்லாதவற்றை துலக்கிக் கா ட் டு கி ன்றன . ஜெ ன் கதைகளும் சூஃபி கதைகளும் யேசுவின் வாய்மொழிகளும் எளிமையின் மூலம்தான், உ ண ர்த லி ன் அ தி ச ய ங ்க ள ை யு ம் வி காச த் தி ன் ப ர வசத்தை யு ம் நமக்கு அணுக்கமாக்குகின்றன. மாயஎதார்த்த எழுத்து (மேஜிக்கல் ரியலிசம்) என்று ச�ொல்லும்போது அங்கே உடனடியாக காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விண் மு ட் டும் பிம்பம் வந் துவிடுகிறது. அவர் கதைகள் எளிமையை அடிப்படையாகக் க�ொண்டவை. அந்த அடிப்படையில்தான் அவை கற்பனையின் அற்புதங்களுக்கும் கவித்துவத்தின் உச்சங்களுக்கும் செல்கின்றன. எ ன க் கு இ ச ங ்க ளி ல் ந ம் பி் க்கை இ ல ்லை . என் விடுதலைக்காக நான் நம்புவது, கலையின் ஆன்மாவைத்தான். சமீபத்தில் சிவப்புக் கிளி என்றத�ொரு கன்னடக் கதையை மலையாளத்தில் வாசித்தேன். எளிமையான எழுத்து. யதார்த்தமான ச�ொல்முறை. ஆனால் அது, ஒரு மலையைப் பெயர்த்து நம் மனதில் ப�ோட்டுவிட்டுப் ப�ோய்விடுகிறது. அந்த கனம் நம்மைக் குன்றச் செய்துவிடுகிறது. ரியலிசத்தின் உள்ளே அப்ஸ்ட்ராக்டும் அப்ஸ்ட்ராக்டின் உள்ளே ரியலிசமும் வெளிவரத் தவித்துக் க�ொண்டிருக்கின்றன. நாம்தானே கண்டுணர வேண்டும். இரண்டையும் பிரிக்க முடியாது. யதார்த்தம் என்பது, யதார்த்தமற்றதை ந�ோக்கியான பயணத்தையும் தன்னுள் க�ொண்டிருக்கிறது. யதார்த்தமற்றதும் அப்படித்தான். இதை நீங்கள் ஓவியத்திலும் ப�ொருத்திப்பார்க்கலாம். குழந்தைகளுக்குக் கதை ச�ொல்லும்போது நாம் மிகு எளிமையின் துணைக�ொண்டே அதிபுனைவுகளை ந�ோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. குழந்தைகள் கதைகளையும் பாடல்களையும் படித்து வளரவேண்டுமென்கிற சிந்தனை அடிப்படையில் ஒரு எழுத்தாளானகிய உங்களிடம் இருப்பது வரவேற்கத்தக்கது. அறிவ�ொளி இயக்கம் ப�ோல குழந்தைகளுக்கான கதை கற்றல் இயக்கம் ஒன்றை உங்களுடன் ஒரு மனத�ோடு இயங்கும் எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து த�ொடங்கலாமே? ஐம்பதுகளில், குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராக வை. க�ோவிந்தன் இருந்தார். அதன் பிறகு அழ வள்ளியப்பா ப�ொறுப்பேற்றார். இன்று
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
57
சாத்தியப்படுமா என்று நாம் சந்தேகிக்கும்படியான பல அரிய செயல்கள் அன்று நடந்தேறியிருக்கின்றன.சிறார் இலக்கியக் களதில் அந்த சங்கம் முழு தீவிரத்துடன் இயங்கி பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் செயல்பாடுகளைப் பட்டியலிட்டால், பக்கம் நீளும். அப்போதைய இயக்கத்தின் பகுதியளவுகூட இப்போது இல்லை. நமக்கென்று ஒரு மிகப் பெரிய சிறார் கலை இலக்கிய அமைப்பு வேண்டும். அனைத்துக் கலை இலக்கியக்காரர்களும் மக்களும் ஆசிரியர்களும் ஆ ர்வ ங ்க ொ ண்ட அ ன ை வ ரு ம் ஒ ன் றி ணைந்த பேரமைப்பு அவசியம். மற்றொன்று, ச�ொல்ல வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் வலியுறுத்துவது, குழந்தைகளுக்கான ஒரு இலக்கிய வெளியீட்டு நிறுவனத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். கேரள அரசு திருவனந்தபுரத்தில் நடத்தி வரும் 'பால சாகித்ய இன்ஸ்டிட்யூட்' ப�ோல. சி.பி.எம். மின் உறுப்பு நிறுவனமான 'கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்' (கேரள அறிவியல் இலக்கியப் பேரவை) ப�ோல. சிறார்களுக்கான கதைகள் பெரும்பாலும் நீதிக்கதை வகைமைச் சார்ந்ததாக எழுதப்படுகிறது. அக்கதைகளின் வழியாக அறத்தையும் பாடத்தையும் குழந்தைகள் கற்கவேண்டுமென விரும்புகிறீர்களா? கதைகள் வாசிப்பதை குழந்தைகளுக்கு மிக நெருக்கமான
58
ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரி்ய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். ஆங்கிலத்திலே எண்ணற்ற நல்ல நூல்கள் இருக்கின்றன. தமிழில் சிறார் இலக்கியச் சிறந்த நூல்கள் மிகவும் குறைவு. நீதிக் கதைகளைக்கூட கலைப்பூர்வமாக சிறாருக்கு ச�ொல்ல இயலாத ஒரு கற்பனை வறட்சி நமக்கு இருக்கிறது. இது நமது சாபக்கேடு. இந்த நிலையில்தான் நமக்கு, நிறைய அரிய சிறார் நூல்களை ம�ொழிபெயர்த்து முன்னால் வைத்து, தரத்தையும் தளத்தையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியி்ருக்கிறது. நூல்களின் வழியே குழந்தைகள் மனிதத்தை உணர வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க்கைகளை, பிரபஞ்சத்தை, இயற்கையை உற்றறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்கள் என்றென்றும் த�ோளணைத்துப் பயணிக்கும்படி புத்தகங்கள் அவர்களுக்குக் கனிவு தரும் என்று நம்புகிறேன். எ ங ்கோ இ ன்ன லு று ம் க ரு ம் பு த் த ோட்ட த் த�ொழிலாளர்கள் பற்றி இங்கே மனம் ந�ொந்து எழுதும் பாரதியின் சித்தம், கலை இலக்கிய அனுபவங்களிலிருந்து அவர்களுக்கு ஏற்படும் என்று உறுதிக�ொள்கிறேன். பெரும் பெரும் தனிமைகளை, பேரழிவுகளை, கடக்க இயலாத தடுப்புகளை, நாசகாரக் க�ொடூரங்களை உடைத்து ந�ொறுக்குவதற்கு நல்ல நூல்களிடமிருந்து அ வர ்க ள் க ற் று க் க� ொ ள்வார ்க ள் . அ நீ தி யி ன் , சுயநலத்தின் பேரரசு ஒவ்வொரு நாளும் விரிவடைந்து க�ொண்டிருக்கிறது. அது கைப்பற்றிய இடமெல்லாம் புகையும் கனல்கள், சாம்பல்கள், ஓலங்கள்! விரைவில் நாம் குழந்தைகளிடம் நல்ல நல்ல நூல்களை க�ொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது, இதை வென்று வாழும் ஆயுதங்களாக. தீ வி ர ம ா ன இ ல க் கி ய சூ ழ லி ல் எ ழு தி வ ரு ம் படைப்பாளர்கள் பெரும்பாலும் தீடீரென குழந்தைகள் இலக்கியத்தில் ஈடுபடுகிறார்கள். அதே ப�ோல குழந்தைகள் பாடல்கள், கதைகள் ம�ொழிபெயர்ப்பு நாவல் எழுதிவரும் சிறார் எழுத்தாளர்கள் தீவிர இலக்கிய தளத்தில் ஈடுபடுவதில்லை ஏன்? சி ற ா ர் இ ல க் கி ய ப் படைப ் பா ளி க ள் பெ ரி ய வர ்க ளு க்கெ ன் று எ ழு த ல ா ம் எ ழு த ாமல் இருக்கலாம். அவர்கள் சிறார் இலக்கியப் படைப்புகளை சிறப்பாகச் செய்வார்களெனில் அதுவே நம் பேறு. ஆயினும், நண்பர் சுகுமாரன் ப�ோன்ற ஒரு சில சிறார் இலக்கியப் படைப்பாளிகள் பெரியவர்களுக்கான படைப்புகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். என் பிரச்சினை அது அல்ல. ஒரு சிலரைத் தவிர, சிறார் இலக்கியம் படைப்பதாக ச�ொல்லிக்கொள்ளும் பெரும்பாலான படைப்பாளிகள் சிறார் இலக்கிய களத்துக்கு முற்றிலும் ப�ொருத்தமற்றவர்கள் என்பது என் திடமான கருத்து. சிறார் இலக்கியத்துக்கான மனநிலைய�ோ, அதற்கான அர்ப்பணிப்போ, வாசிப்போ அவர்களிடம் சற்றும்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
இ்ல்லை. நம்மிடையே பல்லாண்டுகளாகப் புழங்கி வரும் ரஷ்ய சிறார் இலக்கியங்களைவிடச் சிறந்த ஒரு முன்மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கிறதா? எவ்வளவு பெரிய ப�ொக்கிஷங்கள் அவை! ஈடு இணையற்ற கலைச் செல்வங்கள்! சாகா வரம் பெற்றவை என்பது அந்த புத்தகங்களுக்கு மிகச் சரியாகப் ப�ொருந்தும்! அவற்றிடமிருந்து கூட இவர்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. என் முக்கியமான மன்றாடுதல் என்னவென்றால், ரஷ்ய சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையும் திரட்டி அதே வடிவில் அப்படியே மறுபதிப்புச் செய்ய வேண்டும். அற்புத அழகு வாய்ந்த பதிப்பு நேர்த்தியுடன் தயாரிக்க வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை. அவற்றில் பல நூல்கள் மறைந்துவிட்டன. ஒரு சிறார் கதாசிரியர், அவர் எழுதியிருக்கும் சிறுகதை நூலுக்கு ஒரு முன்னுரை வேண்டும் என்று கேட்டார். அவர் கதைகளைப் படித்துப்பார்த்தேன். அவை என் ஆர்வத்துக்கு நிறைவளிக்கவில்லை. நான் அவரிடம், "நீங்கள் இ்ப்போது இந்தக் கதைகளை வெளியிட வேண்டாம். பலவீனமாக இருக்கின்றன. எழுதுவதை நிறுத்துங்கள். ஒரு வருடம�ோ இரண்டு வருடம�ோ நல்ல சிறார் இலக்கிய நூல்களைப் படித்துவிட்டு அப்புறம் எழுதலாம். ரஷ்ய சிறார் இலக்கிய நூல்கள் கிடைத்தால் படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்" என்று ச�ொல்லி என்னிடமிருந்த சில நூல்களைக் க�ொடுத்தேன். சில நாட்களுக்குப் பிறகு அவர் த�ொலைபேசியில், "நீங்கள் க�ொடுத்த புத்தகங்களைப் படித்தேன். ஆயினும் பரவாயி்ல்லை. என் புத்தகத்தை வெளியிடப் ப�ோகிறேன்" என்றார். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. பெரியவர்களுக்கு எழுதுபவர்கள் குழந்தைகளுக்கும் எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதுவர்கள் மிகச் சிலரே. பெரியவர்களுக்கு எழுதும் நம் மிகப் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு சிறார் கலை இலக்கியத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஒவ்வொரு எழுத்தாளரும் சிறார் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த சிரத்தை வைக்க வேண்டும் என்பதும் அதற்கு தமது சிறந்த பங்களிப்பைச் செய்ய முயல வேண்டும் என்பதும் கட்டாயம், மீற முடியாத தார்மிகம். பெரியவர்களுக்கு எழுதும் மலையாள எழுத்தாளர்கள் மிகப்பலர் குழந்தைகளுக்கும் நல்ல படைப்புகளைக் க�ொடுத்திருக்கிறார்கள். மாதவிக்குட்டி, எம்.டி. வாசுதேவன் நாயர், உரூபு, சக்கரியா, சேது, ஜி. ஆர். இந்துக�ோபன், ரேணுகுமார் என்று ஒரு பெரிய பட்டியல் க�ொடுக்க முடியும். ரஷ்ய சிறார் இலக்கியப் புத்தகங்களை வாசித்த ப�ோது உங்களது மனநிலை என்னவாகயிருந்தது? ரஷ்ய சிறார் இலக்கியங்கள் என்னுள் பேருவகையையும் ஊக்கத்தையும் கற்பனையையும் ஒரு க�ொந்தளிப்பாக எழுப்பின. அப்போது என்.சி.பி.எச். விற்பனை நிலையங்களில் ரஷ்ய நூல்கள் கிடைக்கும்.கெட்டி அட்டை ப�ோட்ட ஒரு கனத்த புத்தகம் ஐந்து ரூபாய் விலைக்குக் கிடைக்கும். அவ்வளவு மலிவு விலையில்தான்
அந்த மகத்தான நூல்கள் கி டைத்தன.'விளையாட்டுப் பிள்ளைகள்' ப�ோன்ற பல நூட்களை நான் தலையில் வைத்துக் கூத்தாடினேன். அது, படித்துக் களிப்பதும், பார்த்து மகிழ்வதுவுமான அனுபவம். அந்த நூட்களே பின்னாட்களில் என்னை டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, து ர ்க னேவ் , க�ோகல் , அலெக்ஸி டால்ஸ்டாய், அலெக்ஸாந்தர் குப்ரீன், செகாவ், கார்க்கி, சிங்கிஸ் ஐ த்மாத்தவ் , ஷ�ோ ல கவ் ஆகிய பேராசான்களிடம் இ்ட்டுச் சென்றன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'அன்னை வயல்', 'குல்சாரி' ப�ோன்ற புத்தகங்களின் பழுப்புத் தாள்களில் ஒரு வசீகர வாசனை வரும். அடிக்கடி அதை உச்சி முகர்வது வழக்கம். அன்னை வயல் படித்த சில நாட்களுக்குப் பிறகு நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானேன். குழந்தை இலக்கியத்தில் ஓவியத்தின் பங்களிப்பு பிரதானமாது. நீங்கள் உருவாக்கும் கதைகளில் ஓவியங்களின் பக்கங்கள் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுக்கான ஓவியங்களைப் பற்றிச் ச�ொல்லுங்கள்? சிறார் இலக்கியப் படைப்புகளி்ல் ஓவியத்தின் பங்கு மிக மிகப் பெரி்து. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்கு எழுதுபவரைவிட, அதற்கு படம் வரைபவர் உயர்ந்த ஸ்தானத்திற்கு சென்றுவிடுகிறார். என் நண்பரான சிறார் இலக்கியப் படைப்பாளி ஒருவர் தன் நூலுக்கு குழந்தைக் கிறுக்கல்கள் ப�ோலவே படம் வரைந்து வெளியிட்டார். குழந்தைக் கதைக்கு, குழந்தைகள் வரைவதைப்போன்றே படம் இருந்தால்தான் ப�ொருத்தமாக இருக்கும் என்பது அவர் கருத்து. எனக்கு அது ஏற்புடையதாக இல்லை. சிறார் கதைக்குப் படம் வரைவதற்கு ஒரு ஓவியன் தன் ஆற்றலின் இறுதித் துளியையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு அதி சிறப்பாக, மனதைவிட்டு நீங்கா விதமாக, த�ொட்டுத் தடவி முத்தமிட்டுக் க�ொண்டாடக்கூடிய வகையில் படங்கள் அமைய வேண்டும். குழந்தைக் கதைகளுக்கு சிறப்பாக வரையப்படும் படங்கள் கதையைக் காட்சியாக விவரித்துப் புரிதலுக்கு ஏதுவாகின்றன, மகிழ்வூட்டுகின்றன, கற்பனையைத் தூண்டுகின்றன. அந்த ஓவியங்களை வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி, ஓவியக் கலையின்பாற்பட்டும் திசைகாட்டுகின்றன. தமிழிலில் வாய்மொழி கதை மரபும் கர்ணபரம்பரை கதையும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அவ்வகை கதை வகைமைகளை சிறார்கதைகள் எழுதும் ப�ோதும் அக்கதைகளுக்கு ஓவியம் வரையப்படம் ப�ோதும் நீங்கள்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
59
பயன்படுத்த முயன்றுள்ளீர்களா? கா ல ம் கா ல மாக வாய்ம ொ ழி க் கதைக ள் தலைமுறைகளினூடே உயிர்த்து வருவது நம் மரபின் நெடுந்தொடர்ச்சிகளில் ஒன்று. குழந்தைகளுக்குக் கதை ச�ொல்வது என்பது, குழந்தைமையின் மலர்ச்சிக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டிய பிரதான கடமைகளில் முக்கியமானது. குழந்தைகளுக்கான ஊட்ட உணவு என்பதில் எப்படி நமக்கு ஒருப�ோதும் சமரசம் இருக்க முடியாத�ோ, அதுப�ோன்றே அவர்களின் உணர்வுக்கான கதைகளை, உடல் ம�ொழி, வாய் ம�ொழி, முகம�ொழி முதலிய அனைத்துப் பரிமாணங்களுடன் வசீகரமாக வெளிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத அதிஅவசியம். கர்ணப ர ம்பரை க் கதைகளாக ட் டு ம் அ ல ்ல து மற்றவையாகட்டும், ச�ொல்லிக் க�ொடுப்பதும் ச�ொல்ல வைப்பதும், நாம் அவர்களின் எதிர்காலம் குறித்து கனவு காணும் சமூக நல் விளைவுகளை துரிதப்படுத்தும். உலகப் பெரும் கலைஞர்களும் அறிஞர்களும் தங்கள் பால்ய காலத்தைக் குறித்து நினைவுகூரும்போது, அக்காலத்தில் தாங்கள் கேட்ட கதைகளையும் அசைப�ோடுவதை நாம் படித்திருக்கிற�ோம். குழந்தைகளுக்குக் கதை ச�ொல்வது என்ற மரபு சமகாலத்தில் அருகிப்போனதற்குக் காரணம், குழந்தைகளைப் பற்றிய அலட்சியமும் அவர்களின் உளவியலையும் உயர்வையும் பற்றிய அறிவின்மையுமே. பெற்றோரின், மற்றோரின் வறட்டு விருப்பங்களை தாங்க முடியாமல் புவிமீது சுமந்தலையும் சிறகற்ற பறவைகளாகவே குழந்தைகள் நிலவுகிறார்கள். இப்போது இப்படியென்றால் எதிர்கால சமூகம் குறித்து பேரச்சம் எழுகிறது.மிக மிகவும் குறைந்தபட்சம், நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்யாத, அவர்களைக் கடவுளின் பிம்பங்களாகப் பார்க்காத சமூகம் ஒன்று உருவாகுமா என்பதுகூட சந்தேகம்தான். பின் இருக்கையில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்கிறார்கள். பேருந்துப�ோன்ற வாகனங்களில் குறைந்த தூரப் பயணத்தில்கூட பெரியவர்களே கண்ணயர்வது உண்டுதான். அந்தக் குழந்தைகள், இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் எந்தப் பிடிமானமும் இன்றி அமர்ந்து தூக்கக் கலக்கத்தில் ச�ொக்கிச் செல்வதை பெரும் பீதியுடனும் பிரார்த்தனையுடனும் அனேகம் பார்த்துவருகிறேன். சென்னையின் அசுரப் ப�ோக்குவரத்தில், ஒருப�ோதும் நினைத்திராதது ந�ொடியில் நடந்துவிடுமே. வாகனத்தைச் செலுத்துபவர்கள் ஏன் இதில் சிரத்தை க�ொள்வதில்லை. குழந்தைகளிடம் கலை இலக்கியத்தை அணுக்கமாக்காததற்கான அலட்சியம் ஒரு வகையில் இதுப�ோன்றதுதான். கவனத்துடன் க�ொண்டு செலுத்தாவிடில் காரியங்கள் சீர்கெட்டுவிடும். நீங்கள் எழுதும் சிறார் இலக்கியத்திற்கான முன் மாதிரியாக யாரை குறிப்பிட விரும்புகிறீர்கள். தமிழில் வாண்டுமாமா உள்ளிட்ட சிறார் கதை எழுத்தாளர்களைப் பற்றிய உங்களது வாசிப்பின் மதிப்பீடு என்ன? இ ன்றை க் கு எ ழு து ம் , எ ன்னை வி ட வ ய தி ல் குறைந்த ஒருவர் தம் படைப்பில் இலக்கியத்தின் புதிய சாத்தியங்களை எனக்குக் காட்டித் தரும்போது
60
அவரும் எனக்கு முன்னோடிதான். தமிழில் தேர்ந்த சிறார் இலக்கியங்கள் எண்ணற்று உருவாக வேண்டும் என்பது நம் ஏக்கம். அப்படி இல்லாதது நமக்குத் தலைகுனிவு. அந்த நல்ல கதை எந்தக் கரத்தின் வழியே வரும் என்று நான் காத்திருக்கிறேன். வாண்டுமாமா, முல்லை தங்கராசன், அழ. வள்ளியப்பா, தம்பி சீனிவாசன், லெமன், பெ. தூரன், கிருஷ்ணன் நம்பி, வை.க�ோவிந்தன், ரேவதிப�ோன்ற, அந்தக் கால சிறார் எழுத்துக் கலைஞர்களின் வாசகன் நான். அப்போது சிறார் கதைகளுக்கு சித்திரம் எழுதியவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஓவியர் செல்லம். மறக்கவியலாத பெருங்கலைஞர் அவர். நடப்புக் காலத்தில் சிறார் இலக்கியத் தளத்தில் ஆயிஷா நடராசன், சுகுமாரன், பாலபாரதி, விழியன், க�ோ. மா. க�ோ. இளங்கோ, வானவில் ரேவதி, விஷ்ணுபுரம் சரவணன், தேவிகாபுரம் சிவா, அம்பிகா நடராஜன் ஆகிய�ோரின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. மலையாளத்தில் மிகச் சிறந்த சிறார் எழுத்தாளர் சுமங்களா. அவரது கதைகளை இப்போது ம�ொழிபெயர்த்துவருகிறேன். சிறார் கதை எழுத்தில் நாம் ய�ோசிக்க வேண்டிய வகைமைகளை அவர் எழுத்தில் நாம் ரசிக்கலாம். நான் மிகவும் வலியுறுத்தும் ஒன்று, சிறார் இலக்கியத்தில் நிறைய பரிச�ோதனை முயற்சிகள் வேண்டும். பெரியவர்களுக்கு எழுதுவதற்கான கற்பனை ஆற்றலைவிட, ம�ொழித்திறனைவிட, குழந்தைகளுக்கு எழுதும்போது நமக்கு அதிகமான சேகரம் தேவைப்படுகிறது. இதற்கு அப்பாற்பட்டு, குழந்தைகளுக்கு எழுதுவதற்கான மனநிலை ஒன்று இருக்கிறது. மிகக் கவிதார்த்தமான, அதிசயமான மனநிலை அது; குழந்தைகளைப்போலவே. அதுதான் இதற்கான அடிப்படை. சிறார் கதை உலகில் காமிக்ஸ் புத்தகம் என்பது அளப்பெரிய பங்கீட்டை செய்துவரும் வடிவம். பெரியவர்கள் கூட விரும்பி படிக்கும் ஆவலைத்தூண்டும்விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவ்வடிவத்தை தீவிர இதழ்கள் ஏன் விரிவான இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. தற்போது சிறார் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்கள் அவ்வடிவத்தை ஏன் மேலும் முன்னெடுத்துச்செல்ல முன்வருதில்லை? சிறாா் இலக்கியத்தில் காமிக்ஸ் எனும் படக் கதையின் பங்கு அளவிட முடியாதது. தற்காலத்தில் பரவலாக மேற்குலகில் கிராபிக் நாவல் என்ற பெயரில் நாவல்களை சித்திரங்களாகச் சித்திரிப்பது வளர்ந்து வருகிறது. மாத்ருபூமி வார இதழில் ஒரு த�ொடர் கதையை சித்திரங்களாகவே வெளியிட்டாா்கள். சுஜாதா எழுதிய நைலான் கயிறு, ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களில் படக்கதையாக வந்தது. இத�ோடு சேர்த்து இன்னும் மூன்று நாவல்கள் படக்கதைகளாக வெளிவந்தன. சிறார் சித்திரக் கதைக் களத்தில் ஓவியர் செல்லம் அரும்பணியாற்றியிருக்கிறார். வாண்டுமாவின் கதைகளை செல்லத்தின் சி்த்திரங்கள் வாயிலாகப் படிப்பது எப்படிப்பட்ட இனிக்கும் அனுபவம்! நடிகர் ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் நாயகன் நாயகியாக வைத்து, ஓவியர் ஜெயராஜ் ஒரு துப்பறியும் படக்கதைத் த�ொடருக்குப் படம் வரைந்தார்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
மிகத் தேர்ந்த துல்லியமான அருமைச் சித்திரங்கள் அவை! நம் சூழலில், அவரது அபாரத் திறமைக்குத் தகுந்த மரியாதை ஜெயராஜுக்குக் கிடைக்கவில்லை. இப்போது ப�ொன்னியின் செல்வன் கதையை ஓவியர் செல்லம் படக்கதையாக வெளியிட்டிருக்கிறார். 'அமர்சித்ர கதா' வரிசையில் பறவை மனிதர் சலீம்அலிப�ோன்ற பேராளுமைகளின் வாழ்க்கை வரலாறு சித்திரக் கதை நூல்களாக வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் மாத்ருபூமி நிறுவனத்திலிருந்து வரும் படக்கதை பத்திரிகையில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வெளியானது. படக்கதை நூல்களைப் பற்றி, படக்கதை நாயகர்களைப் பற்றி கிங்விஷ்வா த�ொடர்ந்து எழுதிவருகிறார். நண்பர் விஜய் ஆனந்த் பெரு முயற்சி செய்து சே குவேரா பற்றிய படக்கதை நூலை ம�ொழிபெயர்ப்பு செய்து தன் பயணி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். முத்து காமிக்ஸ் மூலம் நாம் மந்திரவாதி மாண்ட்ரெக்கை டெஸ்மாண்ட்டை, இரும்புக் கை மாயாவியை, ரிப் கெர்பியை, வேதாளரை, ஜானிநீர�ோவை, டேவிட்டை எவ்வளவு உல்லாசமாகப் படித்தோம்! இப்போது முத்து காமிக்ஸ் மீண்டும் வண்ணத்தில் நிறைய படக்கதைப் புத்தகங்களை வெளியிட்டு வருகி்றது. பல ஆண்டுகளுக்கு முன்பே விடியல் பதிப்பகம் மூலம் பெரியவர்களுக்கான கிராபிக் நாவல் வெளிவந்தது. சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான ஏக�ோபித்த ஒரு கலை வழிதான் படக் கதை வடிவம். நாம் ச�ொல்ல விரும்புவதை குழந்தைகளிடம் கடத்துவதற்கு வெகு ப�ொருத்தமானது. பைக�ோ பதிப்பகம், உலக இலக்கியங்களை படக் கதைகளாக வெளியிட்டது. சிறார் பத்திரிகைகள் படக் கதைகளுக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்க வேண்டும். கவிதை நூல்கள் வெயிட்டால் விற்காது என்று ஒரு நிலை இருபதுப�ோல படக் கதை நூல்கள் விற்காது என்ற எண்ணம் இருக்கும�ோ என நினைக்கிறேன். படக்கதை படிப்பது சிறுபிள்ளைத் தனமானது என்ற ஒரு ப�ொதுவான எண்ணமும் உண்டுதானே. ப�ொதுத்தளத்தில் படக்கதைகளை பரவச் செய்வது நமது கடைமையின், அக்கறையின் ஒரு பகுதி. குழந்தைகளுக்கு புத்தகங்கள் பள்ளிக்கூடத்தைத் தவிர வேறெங்கும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு எளிதாக சிறார் கதைகள் வாசிக்கும்படியாகவும், அதேசமயத்தில் சிறார் புத்தகங்களை சேகரித்துக் க�ொள்ளும்வகையிலும் ஏதேனும் திட்டமிருக்கிறதா? மு த ற ்க ட்டமாக , பெற் ற ோ ரி ட த் தி லு ம் ஆசிரியர்களிடத்திலும் சிறார் நூல்கள் குறித்தான பிரக்ஞை ஏற்பட வேண்டும். சில பதிப்பகங்களின் உள்ளார்ந்த சமூக ந�ோக்கின் காரணமாக சிறந்த சிறார் நூல்கள் கிடைக்கின்றன என்றாலும் புத்தகங்களுக்கும் சிறாருக்குமான உறவு நலிவு க�ொண்டிருக்கிறது. பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் முதலிய பதிப்பு நிறுவனங்கள் சிறார் நூல் வெளியீட்டில் தீவிர கவனம் க�ொண்டிருக்கின்றன. 'துளிர்', 'மின்மினி', 'தும்பி' ஆகிய சிறார் இதழ்களும் குழந்தைகள்பாற்பட்ட ஆழ்ந்த சிரத்தையுடன் வந்துக�ொண்டிருக்கின்றன.
பெற் ற ோர ்க ளு ம் ஆ சி ரி ய ர ்க ளு ம் சி ற ா ர் நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஒ வ ்வ ொ ரு கு ழ ந்தை யு ம் வீ் ட் டி ல் த னக்கென்ற ஒரு ச�ொந்த நூலகத்தை, பு த்தக ங ்க ள் நி றைந்த ஒ ரு அ ல மா ரி யை ய ாவ து உருவாக்கிக்கொள்ள உதவ வே ண் டு ம் . நூ ல க ங ்க ள் இ ல ்லா த ப ள் ளி எ ன்ற நி லையே பி ர த ான ம் , கு றி ப ் பாக கி ர ாம ப் பு ற ப ள் ளி க ளி ல் . ப ள் ளி க ளி ல் சிறார் வாசகர் வட்டங்கள் அமையப்பெற்று, நூல் வாசிப்பும் அது குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துக�ொள்வதும் இடையறா நிகழ்வாவதும் குழந்தைகள் தங்களுடையதான கதைகளை, கவிதைகளை, பிற கலைகளை வெளிப்படுத்தும் முனைப்பைத் தூண்டுதலும் நடக்க வேண்டும். தவிர, நம் அரசியலாளர்களுக்கு ஆதியிலிருந்தே இது குறித்த சிந்தனை இல்லாததுதான், சிறார் இலக்கியத்தில் நம் பின்னடைவுக்கான தலையாய காரணங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் ஒரு குழந்தை என்ன நூல் வாசித்தது என்றறிந்து, அந்தக் குழந்தையின் தேர்ச்சிக்கான அம்சங்களில் அதையும் இணைப்பது நல்ல விளைவைத் தரும் என்று நம்புகிறேன். இதில், சயமபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மிகவும் பிரயாசைப்பட்டு பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு தமிழகத்திலேயே முன்மாதிரிப் பள்ளியாக விளங்குகிறது. அரசுப் பள்ளிகளும் மற்ற தனியார் பள்ளிகளும் அந்தப் பள்ளியைப் பின்பற்றினாலே நல்ல மாற்றங்கள் சித்திக்கும். தீவிர இலக்கியத்திலும் சிறார் இலக்கியத்திலும் பெரும்பங்காற்றி வருகிறீர்கள். சமகாலத்தில் இவ்விரு வகைமையிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களைப் பற்றி குறிப்பிடமுடியுமா? க�ோ. மா. க�ோதண்டம், பாவண்ணன் (இவரது 'யானை சவாரி','மீசைக்காரப் பூனை' ஆகிய இரண்டு சிறார் பாடல் த�ொகுப்புகள்) தமிழ்ச்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயம�ோகன் (பனி மனிதன் என்ற சிறார் நூல் இவருடையது), தேவதேவன் (துளிர் இதழில் சிறார் கவிதைகள் எழுதியிருக்கிறார்) பெருமாள் முருகன், சங்கரராம சுப்பிரமணியன், சுப்பிரபாரதி மணியன், த.வி.வெங்கடேஸ்வரன், சி. ராமலிங்கம், தமிழ்மகன், வள்ளியப்பன், ரமேஷ் வைத்தியா, வி.அமலன் ஸ்டேன்லி, எம்.பாண்டியராஜன், ப.கூத்தலிங்கம் உதயசங்கர் ஆகிய�ோர் சிறார் இலக்கியத் தளத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். (சில பெயர்கள் விடுபட்டிருப்பின் என் மறதிப் பிழையாகும்).marimuthu242@gmail.com
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
61
அறிவியலை புரட்டிய புத்தகங்கள் _3
புவி வெப்பமேற்றத்தை புரிய வைத்தவர் ஆயிஷா இரா. நடராசன்
ம
னி த னு க் கு ஏ ழ ாவ து அ றி வு எ ன்ற ஒ ன் று இருக்குமேயானால் அதைப் பகுத்தறிவித்தவர் ஃபிராங்க் ஹெர்பர்ட் (Frank Herbert) 1962ல் வெளிவந்து இன்று வரை மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட அறிவியல் புனைகதை எனும் தகுதியைத் தக்க வைத்து வரும் அவரது டியூன் (Dune) உலகின் முதல் சுற்றுச் சூழலியப் படைப்பாக உயர்ந்து நிற்கிறது. டியூன் ஒரே நீண்ட (1100பக்கம்) படைப்பு. ஆனால் அதுதான் முதலில் மூன்று பிரதான விஷயங்களை முன் வைத்து உலகின் ஆன்மாவை உலுக்கியது. 1. புவியின் வெப்பம் அதிகரித்துவருகிறது (Global Warning) இதனால் கடலின் மட்டம் உயரும்போது பேரழிவுகள் ஏற்படப்போகின்றன. 2. மனிதனின் வியாபாரத் தலையீடுகளால் முற்றிலும் அழிந்து ப�ோகும் உயிரினங்களை திரும்ப படைத்து புவிக்கு க�ொண்டு வருவது சாத்தியம் இல்லை. 3. மனிதனின் உயிரின தக்க வைப்பு சுற்றுச் சூழல் தகவமைப்பின் தக்க வைத்தலால் மட்டுமே சாத்தியம். இயற்கைப் பேரிடர் ப�ோல மனிதன் உருவாக்கிய செயற்கைப் பேரிடரும் உண்டு. ‘ டி யூ ன் ’ ஒ ரு பி ர ா ந் தி ய ம் . எ தி ர்கா ல த் தி ல் ப ல ஆ யி ர ம் ஆ ண் டு க ளு க் கு ப் பி ற கு (சிலர்) நூறாண்டுகள் என்றும் ச�ொல்கிறார்கள்) புவியில் உள்ள மனிதர்களால் ஆன ஒரு நிலப்பகுதி. மூன்று பிரதான ஆட்சியாளர்கள் பி ர ா ந் தி ய த்தை த் து ண்டா டி க் க� ொ ள் கி ற ார ்க ள் . ம னி த னி ன் அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் க�ொண்ட அரச விசுவாசக் கும்பல் இயற்கையின் பிற ஆற்றல்களைத் தனது பகட்டுகளுக்காக ராஜிய முறையில் சூறையாடுவதே நாவலின் பிரதான அரசியல். மனிதனின் மனநிலை ஆற்றல்கள் (கணக்கிடுதல் _ ப கு த்த றி த ல் ப�ோன்றவை ) அதீத வளர்ச்சியுற்ற அந்த கால கட்டம் கணினி உட்பட எல்லா கருவிகளுக்கும் தடை விதிக்கிறது. அறிவியல் புனைவுகள் என்றாலே
62
விதவிதமாக புதிய கருவிகளை கற்பனை செய்து இறக்குவதுதான் என்பதைத் தூக்கி எரிந்தார் ஹெர்பர்ட். நமது முழு கவனத்தையும் டியூன் பிராந்தியத்தின் வாழிடங்கள், மனித பரிணாம வளர்ச்சி, சூழலியதாக்கம், மனித தலையீட்டால் வரும் பேரிடர்கள் ஹெர்பர்ட் நமது நூற்றாண்டின் பிரதான சூழலிய அரசியலை முதலில் விதைத்தவர் என வரலாற்றில் பதிவானார். இளம் வயதில் வறுமையின் க�ோரப் பிடியை சகிக்காது தன் வீட்டை விட்டு வெளியேறி (பிறந்தது வாஷிங்டனில்) அமெரிக்க ஓரிகான் பிராந்தியத்தில் சேலம் பகுதிக்கு தன் மாமாவுடன் வாழ ஓடிப் ப�ோனார் பிராங்க் பாட்ரிக் ஹெர்பர்ட். பிறந்தது 1920 அக்டோபர் எட்டாம் நாள். அவரது பல படைப்புகளில் இந்தத் தேதி திருப்புமுறை நாளாகிறது. 1939ல் தனது வயது பற்றி ஒரு ப�ொய்த் தகவல் அளித்து அவர் கிளென்டேல் ஸ்டார் எனும் பத்திரிகையில் நிருபர் வேலையில் இணைந்தார். ஒரே வருடத்தில் குட்டு வெளுத்துவிட, சேலம் திரும்பி அங்கே ஓரிகான் ஸ்டேட்ஸ் இதழில் இணைகிறார். இந்த ஓரிகான் ஸ்டேட்ஸ்மன்தான் இன்றைய பிரபல நாளேடான ஸ்டேட்ஸ்மன் ஜெர்னல். இரண்டாம் உலக யுத்தம் ஹெர்பட்டை புரட்டிப் ப�ோட்டது. ஒரு இதழியல் புகைப்படக்காரராக அமெரிக்க கப்பல் படைய�ோடு இணைந்து ப�ோர்முனைக்கு அனுப்பப்பட்டார். த� ொ ழி ல் நு ட்ப ம் எ ன்ப து ம் அறிவியல் வளர்ச்சி என்பதும், எப்படி ஆயுதங்களாக வடிவெடுத்து மனித உயிர்களைக் க�ொன்று குவித்து ரத்த ஆறுகளை உற்பத்தி செய்கிறது என்பதை உணர்ந்த ஹெர்பர்ட் யு த்த எ தி ர் ப் பு அ ர சி ய லி ல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் க�ொள்கிறார். ர�ோமா பு ரி யி ன் அ சைக ்க வே முடியாத பேரரசை கிருத்துவம் எனும் மதவெறி அரசியல் எப்படி அழித்தொழித்தத�ோ அதேப�ோல மதவெறியைக் கையிலெடுக்கும் ச மூ க ம் பே ரி ன ங ்க ள ை அழித்தொழிக்கவல்லது என்பதே ஹெர்பர்ட் முன்வைக்கும் அரசியல் புரிதலாகும். டியூன் நாவலில் மத அடிப்படைவாதம் அதிகார பலமாகி தனக்கு எதிரான பிற அமைப்புகளை சூ ரை ய ா டு ம்போ து சா த ா ர ண மக்களிடம் மிஞ்சி உள்ளதுதான்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
உயிர�ோடு இருக்க வேண்டும் என்கிற ஒற்றை சிந்தனை மட்டுமே இதனால் பெரிய அடையாளம், புராதன புனிதம் என்றெல்லாம் தன்னை பறைசாற்றும் மதம் பேரழிவு ஆயுதமாக உருமாறுகிறது. இத்தகைய மிக சரியான அரசியல் பார்வையால் பிற அறிவியல் புனைகதையாளர்களிடமிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் க�ொண்டார் ஹெர்பர்ட்... அறிவியல் என்பது மனிதனிடமிருந்து அந்நியப்பட்ட வடிவமல்ல. வெறும் அன்றாட வாழ்வின் கருவிகளும் பெரிய த�ொழிற்கேந்திரங்களின் பிரமாண்ட விவரிப்பும் அறிவியல் அல்ல. பிறகு க�ோள்களில் வாழ்வது... நட்சத்திர யுத்தங்கள், சூரியனுக்குப் பிரயாணிப்பது என்றெல்லாம் பிற அறிவியல் புனைகதையாளர்கள் எழுதிக் குவித்தப�ோதும் ஹெர்பார்ட் 'புவியின் இயற்கை இயங்கியல்' எனும் ஒற்றை அரசியலையே அறிவியல் கதைகளின் அடித்தளமாக்கி உலகை சிந்திக்க வைத்தவர். உ ல க யு த்த த் தி ன் மு டி வால் அ வ ரு ம் அ வ ர து துணைவியார் பெர்லி ஸ்டுவார்ட்டும் (அவரும் பிரபல எழுத்தாளர்) கலிப�ோர்னியாவில் சாண்டார�ோஸா டெம�ோக் ராட் இதழில் இணைகிறார்கள். அங்கு உளவியலாளர் ரால்ப் (யுஸ்கின் மாணவர்) அயர்னி ஸ்லேட்டரி பிராய்டிய அறிஞர் ப�ோன்றவர்கள�ோடு வாசிப்புக் குழுமம் ஒன்றை உருவாக்கிக் க�ொள்கிறார்கள். புத்தக வாசிப்பிற்கான இத்தகைய குழு செயல்பாடுகளை உலக அரசியல் சிந்தனாவாத அரங்கில் அறிமுகம் செய்ததும் ஹெர்பர்ட்டின் முக்கியப் பங்களிப்பாகும். அந்த வாசிப்புக் குழுமம் பிராய்டு, யுஸ் மார்க்ஸ் முதல் ஹைடெக்கர் வரை பலவற்றை விவாதிக்கும் களமானது. விரைவில் ஹெர்பர்ட் ஸென் பவுத்த இயலால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். உலக அமைதி அரசியலில் பெரும் பங்கு வகித்த சார்லி சாப்ளின் உட்பட பலர் பங்கேற்ற யுத்தத்திற்கு எதிரான மக்கள் ப�ோராட்டத்தில் தன்னை இணைத்துக் க�ொண்டவர் ஹெர்பர்ட். அவரது அறிவியல் புனைகதைகள் அரசுகளை கடுமையான முறையில் விமர்சிக்கும் அரசியலை அடிநாதமாகக் க�ொண்டிருந்தன. புவிப் பாதுகாப்பு எனும் சுற்றுச் சூழலிய புரிதல் அறிவியலின் நுணுக்கமான பதிவுகளாக அவரது கதைகளில் இழைய�ோடுகின்றன. 1952ல் லுக்கிங் ஃபார் சம்திங் (lokking for some thing) மூலம் த�ொடங்கியது அந்தப் பயணம், 1954ல் வெளிவந்த அன்டர் பிரஷர் (under praser) எனும் தலைப்பில் முதலில் சிறுகதையாகவும் பிறகு தி டிராகன் இன் த சீ (the Dragan in the sea) என்ற தலைப்பில் நாவலாக விரிவாக்கப்பட்ட எழுத்துதான் உலகின் முதல் சூழலிய புனைகதை. டிராகன் என்பது நாம் உடனே மனதில் நினைப்பதுப�ோல கடல்வாழ் ராட்சச பல்லி அல்ல. டிராகன் இருபத்தோராம் நூற்றாண்டின் அமெரிக்க எண்ணெய் கப்பல். அது உடைந்து ஒழுகி ஓடும் கச்சா எண்ணெய் கடலின் உயிரினங்களை க�ொத்துக் க�ொத்தாக சூறையாடி அழித்தொழிக்கும் பெரு நாசமான நம் காலத்து யதார்த்தத்தை 1954ல் நாவலாக்கியவர் ஹெர்பர்ட். திருச்சி கல்லூரி நாட்களில் பாரதி தாசன் பல்கலைக் கழகம் ஆங்கிலப் பாடத்தில் வேண்டுமென்றே பாடமாக
வைத்த ச�ோ வி ய த் எதிர்ப்பு நாவல் 1984க்கு எதிராக தேசிய மாணவர் சங்கம் ப�ோராட்டத்தில் குதித்தப�ோது சரி. அதற்கு மாற்றான அறிவியல் கதை எது ச�ொல்லமுடியுமா எ ன ப ல ்க லைக ்க ழ க பேராசிரிய பெருமக்கள் கேட்டப�ோ து ப தி ல் ச�ொல்ல முடியாமல் திணறி பேச்சு, வார்த்தையிலிருந்து வ ெ ளி யே றி ய ந ா ளி ல் த�ொடங்கிய தீவிர தேடல் என்னை ஹெர்பர்ட்டிடம் க� ொ ண் டு சேர்த்த து என்பதை இங்கே பதிவு செய்ய வேண்டும். 21ம் நூற்றாண்டின் கச்சா எண்ணெய்க்கான உலக யுத்தம் மத வெறி யுத்தமாக மாறும் என்பதை முன்வைக்கும் 'டியூன்' 1962ல் வெளி வந்த நாவல். பிறகு ஆறு பின்னிணைப்பு நாவல்கள் டியூன் த�ொடரில் இணைந்தன. 'புவியை தக்க வைத்தல்' எனும் ஒற்றை இழையின் கீழ் பல ஆட்சிகளின் தீவிர விமர்சகராகி மக்களின் வாழ்வாதாரங்களை சூரையாடும் உலக அரசியல் சாணக்கிய பேரழிவை டியூன் அறிவியல் ரீதியில் வெளிப்படுத்துகிறது. கற்பனாவாத நிலப்பகுதியான டியூனின் பரந்துபட்ட ஆயிரம் ஆண்டுகால கதையின் இலக்கிய சாராம்சம் ட�ோல்களின் லார்டு ஆஃப் தி ரிஸ்ஸ் முயற்சிக்கு சற்றும் குறைந்தது இல்லை என்றாலும் ட�ோல்கின் ப�ோல முற்றிலும் கற்பனாவாதமாக அன்றி பல இடங்களில் டியூன் அறிவியலின் மக்கள் அரசியலை நேரடியாக பேசுவதை காண்கிற�ோம். பிரமாண்ட அறிவியல் நாவலான டியூன், உலகிற்கு சுற்று சூழல் விழிப்புணர்வு அரசியல் தளத்தை, அறிவியலை அறிமுகம் செய்த முதல் வெற்றியாகி பிறகு டி.வி. த�ொடராக திரைப்படமாக எல்லாம் எடுக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் உலகை அதிர்ச்சியுர வைத்தது. அறிவியல் கண்டு பிடிப்புகளை ஆண்டுத�ோறும் க�ொண்டாடும் பரிசு என ந�ோபல் பரிசை ச�ொல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கான ந�ோபலுக்காக மூன்றுமுறை முன்மொழியப்பட்டும் ஹெர்பர்ட்டிற்கு பரிசு மறுக்கப்பட்டது என்பது மட்டுமல்ல. அறிவியலை க�ொண்டாடும் ந�ோபல் இன்று வரை அறிவியல் புனை கதை எழுத்தாளருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது என்பதையும் இங்கே அடிக்கோடிட வேண்டும். சுற்றுச் சூழலிய அரசியலை உரக்கப்பேசும் அதிகார நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் மீது திணிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான க�ொடிய, கடைபிடிக்க முடியாத நிபந்தனைகளின் அரசியல் உலகின் எழுச்சியாய் வெடிக்கும் நாள் த�ொலைவில் இல்லை. அப்போது ஹெர்பர்ட்டின் அருமை கண்டிப்பாக உணரப்படும் அறிவியல் புனைவுகளின் ந�ோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்?...
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
63
கட்டுரை
ம�ொ
கதை கேட்டு உறங்கும் வண்ணாத்திப் பூச்சிகள் மணிமாறன்
ழிகள் யாவற்றிற்கும் மூத்தவை கதைகள். ம�ொழியற்ற நிலத்தில் எண்ணங்களைப் பாவனையாக்கிப் பகிர்ந்த ஆதிக்கதைச�ொல்லிகள் குழந்தைகளாகத்தான் இருக்கவேண்டும். பரமார்த்த குரு கதைகளுக்குள் இருந்தும், விக்ரமாதித்யனின் பதுமைகளுக்குள்ளிருந்தும் உருவானவையே தமிழ்ச் சிறுகதைகள். தனக்குள் தன்னையே மாற்றி மாற்றி வேறு ஒன்றாக்கித் த�ொடரும் தமிழ்ச் சிறுகதைகளுக்குள் குழந்தைகள் ஓடித்திரியும் பெரும்நிலம் ஒன்று விஸ்தாரமாக விரிந்து விரிந்து படர்கிறது. பு து மை ப் பி த்த னி ன் கதைக ளு க் கு ள் த த் து வ த ர்க ்க ங ்க ள ை நி க ழ் த் தி ட எ ப்போ து ம் அ வ ர் குழந்தைகளைத்தான் பெரிதும் நம்புகிறார். ஏன் என்பதையும் கூட அவரே தன்னுடைய 'சாமியாரும் குழந்தையும் சீடையும்' கதையில் ச�ொல்கிறார். சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக்குழந்தை, நான்கு வயதுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடை மூட்டை கட்டிக்கொண்டு படித்துறையில் உட்கார்ந்துக் க�ொண்டு காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் க�ொண்டிருந்தது. சின்னக் கால்காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் ப�ொழுது ஓய்ந்து ப�ோன சூரிய கிரணம் அதன் மேல் கண்சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத்தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும். சூரியனைப் ப�ோலத்தானே எழுத்துக் கலைஞர்களும் குழந்தையின் பேரன்பைப் பெற்றிடவும், அவர்களுடைய மனங்களுக்குள் நிகழ்ந்திடும் அதீத மாற்றங்களின் கணங்களைக் கண்டுணரவும் பேராற்றல் தேவைப்படுகிறது. எழுத்தாளனைப் ப�ோலான படைப்புத் த�ொழிலை செய்பவனாக நம்பப்படும் கடவுள்களும் குழந்தைகளிடம் த�ோற்று வீழ்வதை புதுமைப்பித்தன் கண்டுபிடிக்கிறார். மணிக்கொடி இதழின் ஆசிரியராக பி.எஸ்.ஆர். இருந்த காலத்தில்தான் தமிழ்ச் சிறுகதைகள் ம�ொழியிலும், வெளிப்பாட்டு முறையிலும் புதிய இடங்களை ந�ோக்கி நகர்ந்தது. பி.எஸ்.ராமையாவின் மேதமைக்கான சாட்சியாக எப்போதும் ஞாபகத்திற்கு வரும் கதை அவருடைய "நட்சத்திரக் குழந்தை" எப்போதும் குழந்தைகளும், கதைகளும் எழுத்தாளனை சவாலுக்கு அழைக்கவே செய்கின்றன. குழந்தைகள�ோடு உரையாடுபவர்களுக்குத் தெரியும். வயது கூடக்கூட எப்படி நம்மிடம் ப�ோதாமைகள் வளர்ந்து க�ொண்டேயிருக்கின்றன என்பதும் குழந்தைகள் அடுக்கும் கேள்விகளால் திணறிப்போகிற�ோம் நாம். எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்பது அறிதிறனுக்கும் அப்பாற்பட்டது. நட்சத்திரக் குழந்தை தகப்பனிடம் கேட்கிறது. "அப்பா
64
வானத்தில் எப்படியப்பா நட்சத்திரங்கள் உருவாகின்றன?" இந்த உலகினில் மனிதர்கள் ஒரு உண்மை ச�ொன்னால் ஒரு நட்சத்திரம் உருவாகும் என்கிறார் தந்தை. அந்தி மயங்கியதும் குழந்தை வானத்தை உற்று ந�ோக்கி எண்ணிடத் துவங்குகிறாள். ஒரு உண்மை ச�ொன்னால் ஒரு நட்சத்திரத்தை கடவுள் உருவாக்குவார். கடவுள் அன்புமயமானவர் என்று தன் தந்தை ச�ொன்னதையும் மனதில் நினைத்துக் க�ொண்டே எண்ணுகிறது குழந்தை. எத்தனை உண்மைகள் என அந்தக் குழந்தை நினைத்து துள்ளிக் குதிக்கிறதாம். கதையின் முடிச்சு என பி.எஸ். ராமையா ஒன்றை அவிழ்க்கிறார். வானம் நிறைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஒரு நட்சத்திரம் எரிந்து கீழ்நோக்கி விழுகிறது. "யார�ோ ப�ொய் ச�ொல்லி விட்டார்கள், யார�ோ ப�ொய் ச�ொல்லி விட்டார்கள்" என துடித்து அழுகிறது குழந்தை. இந்த அழுகையும், கண்ணீரும் யாருக்காகத் தெரியுமா? கடவுளுக்காக. "அய்யோ பாவம் கடவுள்" என்கிறது குழந்தை. கடவுளுக்காக கண்ணீர் சிந்தும் நட்சத்திரக் குழந்தைகளே தமிழ்க் கதையுலகின் மகாத்மியங்கள். நகுலனின் கதைகளுக்குள் தென்படும் வார்த்தைகள் அற்றுப் ப�ோன மனிதர்களைப் பார்த்து பகடிக்கிறது அவரின் கதைச் ச�ொற்கள். தன்னுடைய அறிவைப் பரிச�ோதித்துப் பார்த்திடும் உரைகல் என நினைத்துக் க�ொண்டு பெற்றோர்களும், மற்றவர்களும் கேட்டுக் க� ொ ண்டே யி ரு க் கு ம் கே ள் வி க ள் அ வர ்க ள ை எரிச்சலூட்டுகின்றன என்பதை உணர்ந்தவர் நகுலன். நகுலனின் கதாபாத்திரங்களாக வரும் பெரியவர்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளின் விசித்திரமும், நுட்பமுமே மிக முக்கியம் நமக்கு. News எப்படி உருவாகுகிறது? குடையைக் கண்டு பிடித்தது யார்? தீப்பெட்டியை யார் கண்டுபிடிச்சா? இப்படியான கேள்விகளால் திணற வைத்து விடுகிறார்கள் குழந்தைகள். விடுகதைகளும், புதிர்களும் குழந்தைகளை வசீகரிக்கின்றன என்பதை எந்தப் பெற்றோராவது உணர்ந்திருக்கிறார்களா? என்பதே நகுலன் கதைகளின் வழியாக வந்தடைந்த கேள்வி. த மி ழ் க் கதைக ளி ன் பு ல த் தி ல் க ரி ச லி ன் பெருமூச்சையும், வெக்கையைக் குடித்துக் குதித்தாடித் திரியும் குழந்தைகளின் தனித்த மனநிலைகளையும் பதிவுறுத்தியவர் கு.அழகிரிசாமி. அவருடைய கதைத் த�ொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்து குழந்தை மன உலகக் கதைகள் என்கிற தனித் த�ொகுப்பினையே உருவாக்கிட முடியும். 'அன்பளிப்பு' 'ராஜா வந்திருக்கிறார்' 'காற்று' ஆகிய இம்மூன்று கதைகளும் அவருடைய அமரத்துவம் பெற்ற கதைகள். ராஜா வந்திருக்கிறார் கதையை குழந்தைகளுக்கு மட்டுமேயான தனித்த விளையாட்டுப் ப�ோட்டிகளின் ஊடே நிகழ்த்துகிறார்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
ப�ோட்டிக்கு தன்னுடைய பாடப்புத்தகங்களையும் கூட குழந்தைகள் பயன்படுத்துவார்கள் என்பதை இப்போது கேட்பவர்கள் நம்பிட மாட்டார்கள். ப�ோட்டிக்கு நடுவே பணக்காரச் சிறுவன் எங்கள் வீட்டில் பசுமாடு இருக்கு? உங்க வீட்டில் என்ன இருக்கு? அது இருக்கு? இது இருக்கு? உங்ககிட்ட இல்லேல்லா எனத் த�ொடரும் விளையாட்டில் ஏழைத் தாயம்மாளின் குழந்தைகளும் சரிக்குச் சரி ச�ொல்லி வெற்றிக் களிப்பில் அவனைத் த�ோற்கடித்த பெருமிதத்துடன் வீடு திரும்புகிறார்கள். கழிப்பும், சுழிப்புமாக இருந்த பள்ளிக்கூட மைதானங்கள் இன்று மதிப்பெண் துரத்தும் ப�ோட்டிக் கூடங்களாகிப் ப�ோனதால் தான் கதைகளைத் த�ொலைத்து இதயமற்ற வெற்றுக் கூடாகி நிற்கிறது. குழந்தைகளின் உலகம் மிக நீண்டது. மறுநாள் விடிந்தால் தீபாவளி, பலகாரம், புதுச்சட்டைக் கனவுகள�ோடு குழந்தைகள் வீடடைகிறார்கள். க�ொட்டுகிற மழையில் விளாத்திகுளத்தில் இருந்து நடந்தே வந்த சிரங்குச் சிறுவன் க�ோவணத் துணிய�ோடு நிற்பதைப் பார்த்து முகம் சுழிக்கிறார்கள். பணக்கார ராமசாமியின் வீட்டிற்கு தீபாவளி விருந்திற்கு வரக்காத்திருக்கும் அக்காள் கணவனை வரவேற்க ஊரே காத்திருக்கிறது. வீடு, வீடாக எங்க வீட்டுக்கு ராஜா வாறாரு? உங்க வீட்டுக்கு ராஜா வர்ரேல்ல என்கிறான். பிள்ளைகளுக்கு புரிந்து விட்டது நேற்று பள்ளிக்கூடத்தில் துவங்கிய விளையாட்டு இன்னும் முடியவில்லை என நினைத்த சிறுமி உடனே ச�ொல்கிறாள். "எங்க வீட்டிற்கும்தான் ராஜா வந்திருக்கார் வேணும்னா வந்து பார்த்துக்கோ" என்கிறாள். கதைக்கு நடுவில் தாயம்மாவின் வழியே தாய்மையின் ப�ொங்கிப் பெருகும் அன்பும், முதலில் பார்த்த குழந்தைகள் அனாதை ராஜாவை துரத்த நினைப்பதும், பிறகு அவர்களே அம்மா பாவம் அவனுக்கு அந்த துண்டையாவது க�ொடு என உருகுவதும் என குழந்தைகளின் மனதிற்குள் நிகழும் பாய்ச்சல் வேக மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அவருடைய அன்பளிப்புக் கதையின் சாரங்கள் நீட்டிய புத்தகத்தில் கையெழுத்திட தடுமாறித் தத்தளிப்பது நிஜத்தில் வாசக மனமே. இருவர் கண்ட ஒரே கனவு கதையில், குழந்தைகள் நட்ட நடுராத்திரியில் கணா கண்டு அழுது எழும்புகிறார்கள். கணவில் அவர்கள் உதித்த கண்ணீர் இறந்து ப�ோன தாய்க்கா? அல்லது அவளைப் ப�ோர்த்தி புத்தம் புது வெள்ளைத் துணிக்கா? என்பதையெல்லாம் வாசித்த பிறகு தான் கண்டடைய முடியும். குழந்தைகள் மன உலகின் மர்மங்களையும், பேராற்றல்களையும் வெளிப்படுத்திடும் கதைகள் நிஜத்தில் அமரத்துவமான கதைகளாகி விடுகின்றன. அதிலும்
பிஞ்சுக் குழந்தைகளின் மரணத்தை எதிர்கொள்ள மனம் தயங்கித் தடுமாறுகிறது. இடிபாடுகளுக்குள்ளும், மூச்சடைக்கும் வீடுகளுக்குள்ளும் இருக்க முடியாது தத்தளித்து ஓடிக் க�ொண்டேயிருந்த கற்பகம் எனும் சின்னஞ்சிறு குழந்தை அவள் விரும்பிய காற்றாகவே மாறிப் ப�ோகிறாள் எனும் வாpகளை நிச்சயம் "காற்று" கதைக்குள் எவராலும் கடந்து வெளியேறிட முடியாது. உருகி ஓடும் தார்ச் சாலையில் காற்றாகக் கரைந்து ப�ோன கு.அழகிரிசாமியின் கற்பகமும், பூமணி "க�ோலி" கதைச் சிறுவனும் வேறு வேறல்ல. குழந்தைகள் எந்த திசைக்குச் சென்றாலும் பிறந்த இடத்தின் வாசமும், ஏக்கமும் வெளிப்படவே செய்யும். புதிதாக வந்திட்ட இடத்தில் பழகியது ப�ோலான ஒற்றைத் தடமும் தென்படவில்லை. ஊரே இப்படிக் கிடக்கும்போது, ஊருக்கு வெளியே பதுங்கிப் படுத்திருக்கும் பள்ளிக்கூடத்திற்குள் எப்படி மனசு ஒன்றும். அவள் நினைத்துக் க�ொள்கிறாள். "நெருக்கும்போது ஒண்ணுக்கடிக்கணும், தவிக்கும் ப�ோது தண்ணீர் குடிக்கணும், த�ோணும்போது விளையாடனும். இன்ன விளையாட்டு என்றில்லாமல் இஷ்டத்துக்கு விளையாடனும். செதுக்கு முத்து விளையாட்டு, க�ோலிக்குண்டு அடிக்கிறது, ந�ொண்டி ஓடிப்பிடிக்கிறது. என இஷ்டத்துக்கு விளையாடணும்" இப்படியான நினைப்பிற்கான இடம் இல்லை இங்கு. பள்ளிக்கூடங்களில் உருவாகி நிலைத்திருக்கும் அதீத ஒழுங்கில் எரிச்சல் அடையும் குழந்தைகளின் மனநிலை தனித்தது. இதனை நுட்பமாக கண்டுணர்ந்து "க�ோலி" எனும் கதையாக்கியிருக்கிறார் பூமணி. புறாக்கூடு மாதிரியான வீடுகளில் அடைந்து கிடக்கும் நகரத்து வாழ்க்கையில் எரிச்சலுற்றவனுக்கு ர�ோடு கூட விளையாட்டிடம்தான். ர�ோட்டோரத்தில் இருக்கும் தன்னுடைய அம்மாவின் இட்டிலிக் கடையில் சாம்பார் சட்டினி ஊற்றுவதைக் கூட ஒரு பெரும் விளையாட்டைப் ப�ோல நடத்துகிறான் அந்தச் சிறுவன். ப�ோக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் ர�ோட்டில் சிதறிக்கிடக்கும் வெளிச்சத்தில் க�ோலிக்குண்டு விளையாட்டை ஒருவனே பல சிறுவனாகி விளையாடுகிறான். எதிர்பாராத ந�ொடியில் க�ோலிக்குண்டை இருட்டில் தேடியலைந்த அவனுடைய தலையே உடலில் இருந்து கரும்புகை வீசியபடி வந்த பேருந்தால் பிய்த்தெறியப்படுகிறது. கருந்தார்ச் சாலையில் பெரும் க�ோலிக்குண்டாக உருள்கிறது சிறுவனின் தலை. என்ன செய்து இந்தத் துயரத்தை ஆற்றப் ப�ோகிற�ோம் எனத் தடுமாறுகிறது வாசக மனம்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
65
66
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
தனுஷ்கோடி ராமசாமியின் தனிக்குழந்தை. ஆத்தே நீ குடித்தே நீ குடிச்சாத்தான தம்பிக்கு பால் ஊறும், நான் பார்த்துகிடுறேன் என மாயிருளு உச்சரிக்கும் ச�ொற்களை கண்ணீரின்றி கடக்க முடியாது எவராலும். தனுஷ்கோடி ராமசாமியின் கதைகளில் முகிழ்க்கிற குழந்தைகளின் மனநிலையை உற்றுக் கவனிக்கிற வாசகன் ஒரு ஆராய்ச்சியாளனாகிப் ப�ோவதும் நடக்கும். அதிலும் அவருடைய கந்ததக் கிடங்கினிலே கதையில் வருகிற பாலகிட்ணன், வெளிச்சம் கதையின் முருகன், மாயிருளு கதையின் மாயிருளு என இம்மூன்று குழந்தைகளும் அன்பின் ஒளியாய் வாசக மனதினில் வாழ்கிற மகத்தானவர்கள் என்பதை கதைகளை வாசிக்கிற எவரும் உணர முடியும். தமிழ்க் கதையுலகினை மாயம�ொழியால் மறுநிர்ணயம் செய்திட்ட க�ோணங்கியின் கதைகள் எங்கிலும் குழந்தைகள் ஓடித்திரிகிறார்கள். அதிலும் கதைத் த�ொகுப்பிற்கு 'ப�ொம்மைகள் உடைப்படும் நகரம்' எனப் பெயரிடுவது குழந்தை மனத்தை ந�ொறுக்கித் தள்ளிடும் சூழலின் குரூரம் குறித்த பகடிதான். க�ோணங்கியின் 'கருப்பு ரயில்' கதைக்குள் புரள்கிற ம�ொழி அசாத்தியமானது. கருப்பு ரயிலை விட்டு சிவகாசிக்குப் ப�ோன முனியக்கா மகன் திரும்பி வந்த பிறகு கருப்பு ரயிலை சிவகாசிக்குக் கூட்டிப் ப�ோகிறான். "ப�ொன்வண்டின் உடம்பிலிருந்து தீக்குச்சிகளை உருவி எடுப்பான். எடுக்க, எடுக்க ப�ொன்வண்டின் உடம்பெல்லாம் தீக்குச்சியாய் வரும், தீரவே, தீராமல் தீக்குச்சி வந்து க�ொண்டேயிருக்கும். எல்லாம் தீர்ந்த பிறகு ப�ொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் அடைத்து விடுவான்." குழந்தைகளின் உடலும், மணமும் வண்ணமயமானது, அதனை குலைத்துப் ப�ோடும் யாவற்றையும் தான் தமிழ்க்கதைக்காரர்கள் கதைகளால் எழுத வேண்டும். ப�ொன்வண்டுகளுக்குத் தெரியாமல் அதன் உடம்பில் இருக்கும் வண்ணமெல்லாம் உதிர்ந்து மறைந்து விடுகிறது. பறப்பதற்கு ரெக்கை வைத்திருக்குமே, அதில் ப�ொட்டுப் ப�ொட்டாய் மின்னும் பாசியிருக்கும�ோ அதெல்லாம் மறைந்து ரெக்கை ரெண்டும் கருகிச் சுருண்டு ப�ொன்வண்டே கருத்து வருகிறது. கருத்துப் ப�ோகும் ப�ொன்வண்டுகளே தமிழ் ம�ொழிக்கு கதைகளை க�ொண்டு வந்து சேர்த்தவர்கள். என்ன செய்து க�ொண்டிருக்கிற�ோம் அவர்களை வண்ணமயமாக்கிட. பு து மை ப் பி த்த ன் , க�ோ ண ங் கி எ ன இ ர ண் டு புள்ளிகளை எடுத்து வைத்துக் க�ொண்டது ஒரு குறியீட்டு அடையாளத்திற்காக மட்டுமே. நிஜத்தில் ஒரு இருநூறு தலைசிறந்த சிறுகதைகளையாவது நிச்சயம் பேசிப் பார்த்திட முடியும். குழந்தைகளின் மன உலகம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ராட்சஷ பாய்ச்சல் நிகழும் அவர்களுடைய மனநிலையையும், அதன் க�ொதிநிலையையும் கண்டுணர்ந்திடல் என்பது எழுத்தாளர்களுக்கு அவர்கள் முன் வைக்கும் சவால்கள். சவால்களை எதிர்கொள்ளத்தான் கதைகளை எழுதிக் க�ொண்டிருக்கிறான் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளன்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம் | ரூ. 50/- | பக்கம்: 64
கதவு பெரியவர்களுக்கு வீட்டையும், தெருவையும் இணைக்கவும், விலக்கவுமான ப�ொருள். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல, அது மாபெரும் விளையாட்டிடம். அதனால்தான் அவர்கள் அந்தக் கதவுகளின் மீது தீப்பெட்டிப் படத்தை ஒட்டி வி ள ை ய ா டு கி ற ார ்க ள் . அ தையே பஸ்ஸாக வு ம் , ரயிலாகவும் உருமாற்றுகிறார்கள். இல்லாத டிக்கெட்டை காற்றிலேயே கிழித்து எல்லோருக்கும் தருகிறார்கள். அது அவர்கள�ோடு ஒரு சேக்காளியைப் ப�ோல, விளையாட்டுத் த�ோழனைப் ப�ோல ஒன்றாகி விடுகிறது. எனவே கடனுக்குக் கதவைக் கழட்டிப் ப�ோனபிறகு தேடிச்சென்று அதன்மீது படிந்திருக்கும் தூசுகளை அகற்றுகிறார்கள். அதே கதவில் ஒட்டப்பட்டிருக்கும் அழுக்குப் பிடித்த தீப்பெட்டிப் படத்தை ஒட்டியது இந்த குழந்தைகளின் அப்பாவாகக்கூட இருக்கலாம் என கதைக்குள் நகரும் வரி. காலத்தின் மீது எழுதப்பட்ட கதைச் ச�ொல்லின் தெறிப்பாகும் பிடுங்கி எறியப்பட்ட கதவு. ஜெயகாந்தனின் 'பூட்டிக் கிடக்கும் கதவு' மற்றொரு கதை ச�ொல்கிறது. அந்தத் தெருவில் இருக்கும் எல்லோரும் நல்லவேளை திருடன் வீட்டைக் காலி செய்து விட்டு எங்கோ ப�ோய் விட்டான் என மகிழும் ப�ோது குழந்தைகள் மட்டும் அந்தத் தெருவில் இருந்து காணாமல் ப�ோய்விட்ட திருடனுக்காக காத்து நிற்கின்றன. "பாவம் மிட்டாய் மாமா இனி வருவாரா, மாட்டாரா என ஏங்குகிறதாக கதை நகர்கிறது" கடவுள்களுக்காக மட்டுமல்ல, திருடர்களுக்காகவும் கண்ணீர் சிந்தி வருந்துபவர்களாக குழந்தைகள் மட்டுமே இன்று வரையிலும் இருக்கிறார்கள் என்பதை எழுத்துக் கலைஞர்கள் தன்னுடைய கதைகளின் வழியாகக் கண்டுணரத் தருகிறார்கள். வெற்று விளையாட்டை நிகழ்த்திக் கழித்திருப்பவர்கள் மட்டுமல்ல குழந்தைகள். மாறாக அவர்கள் தங்களுடைய பெற்றோருக்காக இரங்குபவர்கள். அன்பினால் நெய்யப்பட்ட இதயத்தின் ம�ொழியை அழகுற எடுத்துரைப்பவர்கள் என்பதனை பிறகான நாட்கள் தமிழ்ச் சிறுகதைகளில் காணமுடிகிறது. 'ஒரு ஜெருசலேம்' கதையில் தன்னுடைய தாயைப் புதையுட்டிருக்கும் இடத்தில் படுத்து புற்களின் மீது முத்தமிடும் குழந்தையை பா.செயப்பிரகாசம் கண்டடைந்ததைப் ப�ோலவே தான். தன்னுடைய தம்பி மிக்சர் வண்டியின் கண்ணாடியைத் த ட் டி ய மைக்காக அ டி த்த வ ண் டி க்கா ர ன ை த் திட்டித் தீர்த்த சிறுவனை 'பாவனைகள்' கதையில் ச.தமிழ்ச்செல்வன் கண்டுபிடித்து தந்தார். அழாதடா உனக்கு அல்வா வாங்கித் தர்றேன் என அழுகையை அடக்கிடும் தந்திரச் ச�ொல்லை உச்சரித்த அந்தச் சிறுவன் தான் அழுகாத, உனக்கு நான் கட்டாயம் அய்யா செக்குல இருந்து வரும்போது எள்ளுப் புண்ணாக்கு எடுத்துட்டு வாரேன் என்று யதார்த்தத்தையும் சேர்த்துப் புரிய வைக்கிறான். அம்மாவின் பசியாற்றிட தனக்குத் தரப்பட்ட கஞ்சியைக் குடிப்பதாக பாவனை செய்து விட்டு தாயிடமே கஞ்சி முழுவதையும் தருகிற 'மாயிருளு'
மீசைக்கார பூனை | பாவண்ணன் |
குழந்தைக் கவிஞன் கிருஷ்ணன் நம்பியின் ஆறு கதைகள் அடங்கிய "நீலக் கதைகள்"த�ொகுப்பிற்குள் நூறு சதம் குழந்தைகள் மட்டுமே உலவித் திரிகிறார்கள். அதிலும் அவருடைய 'நீலக்கடல்' என்ற கதை சிறுகதை குறித்து அதுவரையிலும் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் கலைத்தது. ஐம்பது பக்கத்தில் சிறுகதை எழுதிடும் துணிச்சல் அவருக்குப் பிறகு வேறு எவருக்கும் வந்ததாக இன்று வரையிலும் தெரியவில்லை. நீலக்கடல் கதைக்குள் ஒரு பகுதியில் பாட்டியுடன் பேரன், பேத்திகள் கதையாடுகிறார்கள். கதையை தன்னுடைய காமிரா கண்கொண்டு நம்பி வானத்திலிருந்து கடலுக்கும், கடலில் இருந்து மலைக்குமாக பாய்ச்சல் வேகத்தில் நகர்த்துகிறார். குருவியின் மரணத்தினால் உருவான குழந்தைகளின் கேள்வி கதையை நிலத்தில் இருந்து தேவல�ோகம் ந�ோக்கி நகர்கிறது. தேவல�ோகத்தில் முருகனையும், விநாயகனையும் கிட்டிப்புல் அடித்து விளையாட வைக்கிறார் எழுத்தாளர். முருகன் அடித்த கிட்டிப்புல் பட்டுத்தெறித்து மூன்றாவது கண்ணாக செந்நிறமாகத் தெறிக்கிறது பரமசிவனின் நெற்றியில். கற்பகத்தாரு மரத்தில் கிட்டிப்புள்ளா என முருகனை நாலு வப்பு வைக்கிறார். எல்லா அப்பாக்களையும் ப�ோலவே சிவனும் கிட்டிப்புள்ளை தூர எறிந்து அவா; வெளியேறிய பிறகு விளையாட்டில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் க�ொண்டிருந்த பிள்ளையார் தன்னுடைய தந்தத்தை ஒடித்து விளையாட முருகனிடம் தருவதாக கதை நடக்கிறது. எல்லாம் சாத்தியம் கதைகளுக்குள் 'சுதந்திரம்' 'கணக்கு வாத்தியார்' என்கிற இரண்டு கதைகளும் இன்றைக்கு இறுகித் துடித்துப் ப�ோயிருக்கிற நம்முடைய பள்ளிக்கூடங்களைப் பற்றியும், அதற்குள் நிறைந்திருக்கும் வன்முறையையும் பற்றிப் பேசுகின்றன. அதிலும் கணக்கு வாத்தியார் எனும் சிறுகதையைப் படியெடுத்து தமிழகத்தில் கல்விப்பணி செய்யும் எல்லா ஆசிரியர்களிடமும் விநிய�ோகம் செய்ய வேண்டும். "மழையில் பள்ளிக்கூடமே இடிந்து ந�ொறுங்குகிறது. பள்ளிக்கூடப் பெஞ்சுகள், மேசை, நாற்காலிகள், கரும்பலகை, தேசப்படம், வாத்தியார் பிரம்பு என எல்லாவற்றையும் ப�ொடி ப�ொடியாக சூரணமாகத்தான் கடவுள் இப்படி பெருமழையை ஏவி விட்டிருக்கிறான். அவன் செய்வது சரி தான், அவனுக்குத் தெரியும், உலகில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களையும் இப்பிடிப் பண்ணுவான்" என மழைக்கு ஒதுங்கிய சிறுவன் நினைக்கிறான். ஆச்சர்யம் அவன் பார்த்துக் க�ொண்டிருக்கும் ப�ோதே அடர்ந்த மயிர்கள் அடங்கிய கருப்புக்கை நீருக்குள் இருந்து மேலேறி வருகிறது. இவனுக்குத் தெரியும், அது தன்னையும் தன்னைப் ப�ோன்றவர்களையும் பள்ளிக்கூட எல்லையைக் கூட நெருங்கவிடாமல் துரத்தியடித்த கணக்கு வாத்தியாரின் கை. அவ்வளவுதான் தலைதெறிக்க ஆடுகிறான். எளிய காட்சிகளில் குழந்தைகள்மீது சமூகம் நிகழ்த்துகிற வன்முறையைக் காட்சிப்படுத்திய கதையிது. கி.ராஜநாராயணனின் 'கதவு' 'நாற்காலி' எனும் இ ர ண் டு கதைகள ை யு ம் கூ ட கு ழ ந்தைக ள் மன உலகின் தனித்த கதைகளாக வாசித்து உணர முடியும்.
சிறார் வாழ்வின் பாடல்கள் சமீபத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பாடல்களை இணையத்தில் பகிர்ந்த ப�ோது,அதனை ப்பாடி ரெக்கார்ட் செய்தும் அனுப்பிவிடுங்களேன் என்றார்கள் சில பெற்றோர்கள். ஒரு கடைக்கு சென்று சீடி வாங்கிய�ோ இணையத்தில் யூடியூபில் தரவிறக்கம் செய்தோ சிறுவர் பாடல்களை குழந்தைகளுக்குக்கொடுத்துவிடலாம் என நினைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் குழந்தை பாடல்களைக் கூட்டாக பாடுவதைப் ப�ோல சிறப்பான தருணங்கள் குழந்தை வளர்ப்பில் கிடைத்துவிடாது. குழந்தைப் பாடல்களுக்கு எங்கே செல்வது என்ற ஏக்கத்தினை சமீப காலமாக வரும் சிறுவர் பாடல்கள் த�ொகுப்புகள் நிவர்த்தி செய்துவருகின்றன. பாவண்ணன் த�ொகுத்துள்ள 'மீசைக்காரப் பூனை' அற்புதமான த�ொகுப்பு. விதவிதமான பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் உடனே மெட்டிசைத்து பாடிவிடலாம்.கடகடவென வாசித்தாலே இசைய�ோடு ஒலிக்கின்றன. பூனையில் ஆரம்பித்து குழந்தைகளை குதூகலச்செய்யவைக்கும் ரயில் வண்டி, மாம்பழம், விளையாட்டு, மரங்கள், அக்கா-தம்பி விளையாட்டுகள், பாரம்பரியமான சம்பவங்கள் என அழகான பாடல்கள். ஒவ்வொரு பாடலை வாசிக்கும்போதே அந்த நிலப்பரப்பு நம் கண்முன் த�ோன்றுகின்றது. இது தான் பாடல்களின் அடிநாதம். இசையையும் நம் வாழ்க்கையினையும், க�ொண்டாட்டத்தையும் பாடல்கள் அறிமுக செய்ய வேண்டும் அதனை இந்த த�ொகுப்பு மிக சிறப்பாக செய்கின்றது. பாவண்ணன் அவர்களின் முந்தைய சிறுவர்கள் பாடல் த�ொகுப்பான ‘யானை சவாரி’யை விடவும் இந்தப் பாடல்கள் லயமாக இருக்கின்றன. இன்னும் இன்னும் நிறைய சிறுவர் பாடல் த�ொகுப்புகள் வரவேண்டும், வீடு த�ோறும் இந்த பாடல்கள் ஒலிக்க வேண்டும். - விழியன்
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
67
தற்போதைய சிறுவர் இதழ்களின் ப�ோக்கு - விழியன்
1 புத்தக நேசிப்பு என்பது பெரும்பாலும் சிறுவர் இதழ்கள் மூலமே பெரும்பாலானவர்களுக்குத் த�ோன்றி இருக்கும். வாசிப்பின் மீது நேசம் இருக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டால் அவர்கள் புத்தகத்திற்குள் வந்த கதைகளில் நிச்சயம் சிறுவர் இதழ் இடம்பெற்றிருக்கும். சிறுவர் இதழ்கள் வாசிப்பின் முதல்படி எனலாம், அல்லது அது கைபிடித்து புத்தக உலகிற்கு அழைத்துச்செல்லும் வழிகாட்டி எனலாம். ' சி று வ ர் இ ல க் கி ய த் தி ன் ப� ொ ற்கா ல ம் ' எ ன குறிப்பிடப்படும் காலம் 1940கள் துவங்கி 1955வரை என்கின்றார்கள் பல ஆய்வாளர்கள். இதற்கு முக்கியக் காரணம் அந்த சமயத்தில் வந்த ஏராளமான சிறுவர் இதழ்கள்தான். அந்த சமயத்தில் இரண்டு வகையான இதழ்கள் வெளிவந்தன. ஒன்று அச்சில் மற்றொன்று கையெழுத்துப் பிரதிகளாக. அச்சில் வந்தவற்றின் பெயர்களும் குறிப்புகளும் மட்டுமே நம்மிடம் கிடைக்கின்றன. அணில், செளசெள, டமாரம், ஜில்ஜில், கிண்கிண், பால்கோவா, மிட்டாய், சங்கு, டுமீல்.. அதே காலகட்டத்தில் கையெழுத்து இதழ்களும் வெளிவரத்துவங்கின. அதிகபட்சம் 4-5 நகல்கள் எடுக்கப்படும், அடுத்த ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு பகிரப்படும். வாசிப்பின்மீதும் எழுத்தின் மீதும் நெருக்கத்தினை இந்த இதழ்கள் செய்துவந்துள்ளன. ஏராளமான சிறுவர் இதழ்கள் துவங்கப்பட்டு,பற்பல காரணங்களினால் கைவிடப்பட்டு தற்சமயம் வெகுசில சிறுவர் இதழ்களே வெளிவருகின்றன. இணைப்பு இதழாக ஒரு தலைமுறையையே வாசிப்பின் பக்கம் இழுத்த பெருமை சிறுவர் மலருக்கு உண்டு, ஆனால் இன்று வெளியிட வேண்டுமே என்ற காரணத்திற்காக ஜீவனற்ற இதழாக வெளிவந்துக�ொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் சிறுவர்மணி, தங்கமலரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது உண்மையில் தமிழகத்தின்
68
மூலைமுடுக்கிற்கு எல்லாம் செல்லும் இதழ்கள். பெருவாரியான விற்பனைகளை இதன் பத்திரிக்கைகள் க�ொண்டுள்ளன, க�ொஞ்சம் சிரத்தையும் கவனமும் சிறுவர் இதழ்கள் மீது செலுத்தினால் சிறுவர்களுக்கும் சிறுவர் இலக்கியத்திற்கும் பெரும் வரமாக அமையும். ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பு இதழாக பிரதி புதன் வெளிவரும் மாயா பஜார்’ சமீபத்திய இதழ்களின் நல்ல நம்பிக்கையை தரும் இதழ். குழந்தைகளைக் குறி வைத்து அவர்களுக்குத் தேவையான கதைகள், தகவல்கள், கார்ட்டூன்கள், ஓவியங்கள் என வண்ணமயமாக வெளிவருகின்றது. உள்ளடக்கத்தில் தங்கள் இயக்கம் சாராமல் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே ’பெரியார் பிஞ்சு’ வந்துக�ொண்டிருக்கின்றது. மாதம் ஒருமுறை வருகின்றது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளிவரும் ‘மின்மினி’ சுற்றுச்சூழல் சார்ந்த சிறுவர்களுக்கான இ த ழ ாக வ ெ ளி வ ரு கி ன்ற து . மி க அ ற் பு த மான புகைப்படங்களுடனும் நல்ல கட்டுரைகள், கதைகளுடன் மின்மினி மாதம் ஒருமுறை என வெளிவருகின்றது. விகடன் குழுமத்தில் இருந்து ’சுட்டி விகடன்’ மாதம் இருமுறை வருகின்றது. அதிகக் கவனம் பெற்ற இதழாக இது இருக்க வேண்டும். பள்ளிகளுக்காக FA பக்கங்களை உள்ளடக்கி வருவதால் பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் வருகின்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ‘துளிர்’ கடந்த 30 ஆண்டுகளாக வெளிவருகின்றது. சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ். ஆழமான நுட்பமான கட்டுரைகளை உள்ளக்கிய இதழ். உலகில் நிகழும் மாற்றங்கள், அறிவியல் முன்னேற்றம், கேள்வி-பதில் என த�ொடர்ச்சியாக வந்துக�ொண்டிருக்கின்றது. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா’ வழிகாட்டுதலில் துவங்கிய க�ோகுலம் தான் தற்சமயம் பழமையான
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
இதழாக இருக்கக்கூடும். சிறுவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றங்களுடன் ப�ொலிவுடன் க�ோகுலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றது. புதிய முயற்சிகளாக குக்கூ அமைப்பின் ‘தும்பி’ இதழ், வானம் அமைப்பின் ‘குட்டி ஆகாயம்’ ஆ கி ய இ த ழ ்க ள் வ ெ ளி வ ரு கி ன்றன . பெ ரு ம் முனைப்போடும் கவனத்துடனும் அன்புடனும் இவை வடிவமைக்கப்படுகின்றன. தினமலரின் முயற்சியான பட்டம்’ இதழும் வண்ணமயமாக மாணவர்களைக் கவரும் வகையில் பிரதி திங்கள் இணைப்பிதழாக வ ெ ளி வ ரு கி ன்ற து . இ ணை ய இ த ழ ாக ' பஞ் சு மிட்டாய்'என்ற பெயரில் பெங்களூரில் இருந்து சில நண்பர்கள் க�ொண்டு வருகின்றார்கள். உ ள்ள ட க த் தி ல் கு ழ ந்தைக ளி ன் ப ங ்க ளி ப் பு ம் நிறைய வேண்டும். படைப்புகள் என்றால் வெறும் ஓவியங்கள�ோடு நின்றுவிடுகின்றோம். அதையும் தாண்டி முயற்சிகள் தேவை. படக்கதைகள் குறைவாக உள்ளது, நிறைய குழந்தைகளை அது கவரும். இதழ் ப�ோட்டியிட வேண்டியது சக இதழ்கள�ோடு மட்டுமல்ல ஊடகங்களுடனும் தான். குழந்தைகளின் நேரத்தை எடுத்துக்கொள்ளும் எல்லா ஊடகத்துடனும் ப�ோட்டியிட வேண்டி இருக்கின்றது. மிக முக்கியமாக இதழ்களின் குழந்தைகளுக்கு தர வேண்டியது தகவல்களை அல்ல, உணர்வுகளை, கதைகளை, படைப்பூக்கங்களை. அதில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. கேரளாவில் குழந்தைகளுக்கான இதழ்கள் சிறப்பாக வண்ணமயமாக, நிறைய படக்கதைகளுடன், நிறைய நிறைய கதைகளுடனும், குழந்தைகளின் பங்களிப்புடனும் வெளிவருகின்றது. வெளிவருவது மட்டும் முக்கியமல்ல அவை பரவலாக கிடைக்கின்றது. பத்து பதினைந்து நிமிடங்களில் குறைந்தபட்சம் பத்து இதழ்களையாவது வாங்கிவிட முடியும். தமிழகத்தில் நிலை அப்படி இல்லை. பரவலாக கிடைப்பதில்லை. அதற்கு காரணம் பதிப்பாளர்கள் அல்ல. 2 தமிழில் மாத இதழ்கள், 25ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கின்றன. அவ்விதழ்களை சிறுவர்களும் பெரியவர்களும் காசு க�ொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள் என்கிற செய்தி இன்றைய சூழலில் நம்பும்படியான இருக்கிறதா? உண்மைதான். பாலியர் நேசன், அணில், டமாரம், கண்ணன், க ரு ம் பு , அ ம் பு லி மாமா , க�ோ கு ல ம் ப�ோன்ற பத்திரிகைகள் மாதந்தோறும் 25ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிருக்கின்றன. குழந்தை இலக்கியம் படைக்க நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருந்த காரணத்தால் அவர்களை அணி திரட்டிச் செயல்பட குழந்தை எழுத்தாளர் சங்கம் 1950ல் த�ோன்றியது. அதன் தலைவராக குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தன்னலமின்றிச் செயல்பட்டார். 1975ல் வெள்ளி விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் யார்? எவர்? என்ற நூல் வெளியிடப்பட்டது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
அது குழந்தை எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது; பெருமைப்படுத்தியும். குழந்தைகளுக்காக கதை எழுதிய எழுத்தாளர்கள் பலரும் காகிதத்தின் கதை, ரப்பரின் கதை, இரும்பின் கதை,ரயிலின் கதை, காற்றின் கதை, மின்சாரத்தின் கதை என்று அறிவியல் உண்மைகளைக் கதை ப�ோல எழுதினார்கள். விலங்குகள், பறவைகள், மரங்கள், மலைகள், கடல் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் அன்று வந்தன. கடந்த 35 ஆண்டுகளாக யார் இருக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. 2000ல் ப�ொன்விழா ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்கம் மூடுவிழா கண்டது.குழந்தைகளுக்கென்று நாடகமும் சினிமாக்களும் இருந்தன. அண்ணி, குழந்தைகள் கண்ட குடியரசு, அன்பின் அலைகள், ஏகலைவன், கலங்கரை விளக்கம், மீனாவின் கடிதம், சத்யமே வெல்லும், ம�ோதி என் த�ோழன், ப�ொன்மானும் தங்க மீனும் ப�ோன்ற குழந்தைகள் தி ரைப்ப ட ங ்க ள் ம ற க ்க மு டி ய ா த வை . இ ன் று பெரிய திரையானாலும் சின்னத் திரையானாலும் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக படைப்புகளைத் தர யாருமில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.எஸ். சக�ோதரர்கள் சகஸ்ரநாமம் குழுவினர் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கென்று நாடகம் நடத்தினார்கள். குழந்தைகள் நாடகத்திற்கான விழா நடத்திப் ப�ோட்டிகள் வைத்தனர். பூவண்ணனின் காவேரியின் அன்பு, கூத்தபிரானின் அன்னைச�ொல் அமிர்தம், தம்பி சீனிவாசனின் தங்கை குழந்தைகள், டி.கே.எஸ்-ஸின் அப்பாவின் ஆசை ப�ோன்ற மறக்க முடியாத நாடகங்கள் உருவாயின. கதை நூல்கள், நிறைய வந்திருப்பது ப�ோல் கட்டுரை நூல்கள் வரவில்லை. இணையதளத்தைத் திறந்தால் ஆயிரம் செய்திகள் க�ொட்டிக் கிடக்கின்றன என்பார்கள். இணைய தளத்தின்வாசனையைக் கூட அறியாத குழந்தைகள் தான் தமிழ்நாட்டில் அதிகம். இணையத்தைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஆடம்பரச் செலவாகத் தான் இருக்கிறது. குழந்தைகள் அதிகம் கேட்க விரும்புகிறார்கள்; அதிகம் பேச விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்புகளைக் குழந்தை இலக்கியமே தரமுடியும். குழந்தை இலக்கியம் சிறப்பாக உள்ள சமுதாயமே மிகச் சிறந்த சமுதாயமாக வாழ முடியும்.
த மி ழி ல் வ ெ ளி வ ந ்த சி று வர் 54. பால பாரதம் 55. பெரியார் பிஞ்சு - 2010 இதழ்கள்/ வெளிவந்த ஆண்டு 1. பாலதீபிகை - 1840 2. சிறுபிள்ளைகளின் நேசத்தோழன் 1841 3. பாலியர் நேசன் - 1859 4. பாலர் தூதன் - 1905 5. பாலியர் மித்ரன் - 1911 6. பாலிய சஞ்சாரி - 1912 7. பால விந�ோதினி - 1918 8. பால வித்யா - 1930 9. பால சிந்தாமணி - 1935 10. சிறுவர் அறிவுக்கதி - 1935 11. பால ப�ோதகன் -1938 12. பாப்பா - 1941 13. அணில் - 1946 14. அம்புலிமாமா - 1947 15. வானவில் - 1948 16. செளசெள - 1948 17. கல்கண்டு - 1948 18. மாணவர் விருந்து - 1949 19. சந்திர ஒளி - 1949 20. பேபி - 1949 21. பிங் பிங் - 1949 22. ஜில் ஜில் - 1949 23. ரயில் - 1949 24. சித்திரக்குள்ளன் - 1949 25. ரசமணி - 1949 26. தம்பி - 1949 27. பாபுஜி - 1949 28. கண்ணன் - 1960 29. கிண்கிண் - 1949 30. பூஞ்சோலை - 1951 31. கதா மலர் - 1951 32. சாக்லெட் - 1952 33. பாலபாரதி - 1953 34. சிறுவர் முரசு - 1954 35. கரும்பு - 1954 36. பால்கோவா - 1954 37. ப�ொக்கிஷராணி - 1954 38. தமிழ்ச்சிட்டு - 1966 39. அரும்பு - 1966 40. இந்திரஜால காமிக்ஸ் - 1966 41. பாலர் பூங்கா - 1967 42. பூந்தோட்டம் - 196 43. பால மித்ரா - 1978 44. ரத்னபாலா - 1978 45. ராக்கி - 1979 46. க�ோகுலம் - 1982 47. துளிர் - 1986 48. சுட்டி விகடன் - 1999 49. தும்பி - 2016 50. குட்டி ஆகாயம் - 2016 51. மின்மினி - 2015 52. பூந்தளிர் - 1984 53. சித்தாரா - 1980
70
56. ஸ்வீட் - 1980 57. மணி பாப்பா - 1970 58. மான் - 1940 59. முயல் - 1970 60. ரவி - 1950 61. பாபுஜி - 1940 62. சந்திர ஒளி - 1940 63. கங்கணம் - 1970 64. அல்வா - 1950 65. வெற்றிமணி - 1950 66. அணில் மாமா - 1950 67. தம்பி- 1949 68. சுட்டி - 1981 69. ஆராய்ச்சி மணி 70. மத்தாப்பூ - 1940 71. மான் - 1940 72. டுமீல் - 1940 73. பாப்பா மாலா - 1940 74. சிறுமி - 1940 75. முயல் - 1940 76. மிட்டாய் - 1940 77. சங்கு - 1940 78. க�ோமாளி - 1940 79. பூஞ்சோலை - 1940 80. டமாரம் - 1940 81. பாலர் ராஜ்ஜியம் - 1940 82. ப�ொம்மை வீடு 83. கண்ணாடி 84. பஞ்சுமிட்டாய் - 2016 (மின்னிதழ்) இணைப்பு இதழ்களாக வருபவை: தங்கமலர், சிறுவர் மலர், பட்டம், சிறுவர் மணி, மாயாபஜார் கு ழ ந்தைக ள் எ ழு த்தாளர ்க ள் பட்டியல் தமிழில் தற்சமயம் குழந்தைகளுக்கு எ ழு தி வ ரு ம் எ ழு த்தாளர ்க ளி ன் ப ட் டி ய ல் . பெ ரு ம ் பா ல ான பே ர ா சி ரி ய ர ்க ள் , ஆ சி ரி ய ர ்க ள் , பெற்றோர்கள், மாணவர்களுக்காக செயல்படும் செயல்பாட்டாளர்களுக்கு எ ழு த்தாளர ்க ளி ன் பெ ய ர ்க ள் கூ ட அ றி மு கமாகா த நி லை யி ல் பெயர்களையாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற முயற்சி. 1975ல் குழந்தைகள் எழுத்தாளர்களின் வெள்ளி விழா க�ொண்டாடியப�ோது 400 குழந்தைகளுக்கான எழுத்தாளர்களின் பெயரை/விவரங்களை வெளியிட்டு இ ரு க் கி ன்றார ்க ள் , அ ங் கி ரு ந் து வ ெ கு வாக கு றை ந் து ள்ளோ ம் ஆ னால் எ ழு ச் சி ந�ோ க் கி நகர்ந்துக�ொண்டிருக்கின்றோம். 1. யூமா வாசுகி (ம�ொழிபெயர்ப்பு) 2. ஆயிஷா நடராசன்
3. எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல், கதைகள்) 4. ஞாநி 5. ச�ொக்கன் (கதைகள், கட்டுரைகள்) 6. க�ொ.ம.க�ோ.இளங்கோ (கதை, நாவல், ம�ொழிபெயர்ப்பு) 7. மு.முருகேஷ் (கதைகள்) 8. நீதிமணி 9. உதயசங்கர் 10. வெற்றிச்செழியன் 11. பாலு சத்யா 12. பெ.கருணாகரன் 13. கன்னிக்கோயில் ராஜா 14. த.வி.வெங்கடேஸ்வரன் 15. லலிதாமதி 16. ரமேஷ் வைத்யா 17. வேலு சரவணன் 18. சுப்ரபாரதி மணியன் 19. நக்கீரன் 20. யாழினி 21. சுட்டி விகடன் யுவராஜ் 22. சுகுமாறன் 23. ஜெ.விக்னேஷ் 24. மதுரை சரவணன் 25. உடுமலை 26. மருதன் 27. சாய் சுந்தர்ராஜன் 28. குமாரநந்தன் 29. பேரா.ம�ோகனா 30. ஆசிரியர் மாதவன் 31. ஜீவா ரகுநாத் 32. சைதன்யா 33. அதிஷா 34. பேரா.மாடசாமி 35.வேலு சரவணன் (நாடகங்கள்) 36. செல்வக்குமார் பழனிச்சாமி (எலி) 37. ஹரீஷ் 38. தேவிகாபுரம் சிவா 39. முரளிதரண் 40. பாண்டியராஜன் (மதுரை) 41. சி.ராமலிங்கம் 42. ஏற்காடு இளங்கோ 43. பிஞ்சண்ணா 44. ச.தமிழ்செல்வன் 45. கெளரி 46. ஆதி வள்ளியப்பன் 47. சந்திரா பிரவீன்குமார் 48. புதுகை அப்துல்லா 49. பேரா. ஜாம் 50. மதுமிதா 51. கெளரி நீலமேகம் 52. கலைவாணன் 53. வெ. ஸ்ரீராம் (குட்டி இளவரசன்) 54. ‘மா’ ( ஏ.எஸ்.பத்மாவதி) 55. வீ.பா.கணேசன் 56.விழியன் 57.விஷ்னுபுரம் சரவணன் 58.யெஸ்.பாலபாரதி
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
40ம் ஆண்டில் கவிதா பதிப்பகம்
தமிழின்
சந்திப்பு:
சூரியசந்திரன்
முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான ‘கவிதா பப்ளிகேஷன்’ தனது 40ஆவது ஆண்டு விழாவை வியக்கத்தக்க வகையில் க�ொண்டாடிக் க�ொண்டிருக்கிறது. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆளுமைகள், தலைவர்கள் என ஏராளமான�ோரின் புத்தகங்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பதிப்பக நூல்கள் மத்திய, மாநில அரசுகளின் முக்கியமாமனப் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பதிப்பகத்தின் நிறுவனர் திரு. சேது.ச�ொக்கலிங்கம், தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகள் பலரை ஈன்றளித்த தேவக�ோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை சேதுராமன், ப�ொதுவுடைமைச் சிந்தனைகளால் கவரப்பட்டவர், ‘பாரதி தமிழ்ச் சங்க" த்தின் நிறுவனச் செயலாளர். (56 ஆண்டுகளாக இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது ) அந்த இலக்கியச் சங்க நிகழ்ச்சிக்கு ஜீவா ப�ோன்ற த�ோழர்கள் கலந்து க�ொள்வார்கள். த�ோழர் தா.பாண்டியனுக்கு முதல் மேடையாக அமைந்தது அந்தச் சங்கம்தான் என்ற சிறப்பிற்குரியது. தந்தை சேதுராமனின் நண்பர் ‘வணங்காமுடி’ ச�ொக்கலிக்கம், சென்னை, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் ‘பாரதம் அச்சகம்’ நடத்திக் க�ொண்டிருந்தார். அந்த அச்சகத்தில்தான் சேது. ச�ொக்கலிங்கம் தனது பதிப்புலக வாழ்க்கையைத் த�ொடங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு 18 வயதிருக்கலாம். அந்த அச்சகத்திற்கு சாண்டில்யன், தாமரைமணாளன் ப�ோன்ற சில எழுத்தாளர்களும், த�ோழர் சி.ஏ.பாலன் ப�ோன்ற சில தலைவர்களும் வருவார்களாம். அவர்களைப் பார்ப்பது, பழகுவது அந்த சிறு வயதில் இவருக்குப் பிரமிப்பான விசயமாக இருந்திருக்கிறது. அந்த அச்சகம் இருந்த தெருவில் குடியிருந்த த�ோழர் கே.பாலதண்டாயுதம் அந்த வழியாக நடந்து ப�ோய்வருவதை வியப்பாக பார்த்து ரசிப்பாராம். இந்த அச்சகம் இவருக்கு அச்சுத் த�ொழிலைக் கற்பதற்கான கல்விச்சாலையாக அமைந்திருக்கிறது. எழுத்தாளர் தாமரைமணாளனின் முதல் புத்தகம் அந்த அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டதாம். அப்புத்தகத்திற்கு இவர்தான் முழுமையாக பிழைதிருத்தம் செய்திருக்கிறார். சில வருடங்களில் அந்த அச்சகத்தை விற்பது ப�ோன்ற சூழல் ஏற்பட்டப�ோது, பாண்டி பஜாரில் இருந்த ‘ராதா
பதிப்பகம்’ இவரை மேலாளராக அமர்த்திக்கொண்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பகம் அது. இப்பதிப்பகத்தின் மூலமாக பதிப்பக நுணுக்கங்களைக் கற்றுக் க�ொண்ட இவர், 1974ல் தனது நண்பர் சாமிநாதனுடன் இணைந்து ‘தமிழ்த்தாய்ப் பதிப்பக'த்தைத் த�ொடங்கியிருக்கிறார். இருவரும், வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு, சில பதிப்பகங்களில் 20 சதவிகித கழிவுக்கு புத்தகங்களை வாங்கி, 10 சதவிகித கழிவுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விற்பது, கிடைக்கும் 10 சதவிகித லாபத்தை இருவரும் பிரித்துக் க�ொள்வார்களாம். 1975ல் ஜானகியைத் திருமணம் செய்துக�ொண்டார் ச�ொக்கலிங்கம். அடுத்த ஆண்டு (1976) கவிதா எனும் குழந்தையை திருமதி. ஜானகி ச�ொக்கலிங்கம் பெற்றெடுத்தார் என்றால், அதே வருடத்தில் சேது. ச�ொக்கலிங்கத்தால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை என்றுதான் ‘கவிதா பப்ளிகேஷ’னைச் ச�ொல்லவேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இப்பதிப்பகத்தை அவர் மிகுந்த ஈடுபாட்டோடும், இனம்புரியாத ஈர்ப்போடும், நெகிழ்ச்சிய�ோடும், கடமையுணர்ச்சிய�ோடும் வளர்த்து வ ந் தி ரு க் கி ற ா ர் . இ ப்போ து 4 0 ஆ ண் டு க்கான விழாவெடுத்துக் க�ொண்டிருக்கிறார். அந்த அனுபவங்கள் இனி அவரின் வாய்மொழியிலேயே... "கவிதா பதிப்பகத்தின் முதல் நூலாக ‘"வரலாற்று நாயகன்’ என்ற எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூலை" வெளியிட்டேன். திருமூலர் என்ற புனைபெயரில் லட்சுமி நாராயணன் எழுதிய புத்தகம் அது. அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ‘மன்றம்’ பத்திரிகை ஆசிரியர் இராம.வெள்ளையன் மூலமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்துக் க�ொடுத்தேன். அது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். த�ொடக்கத்தில், முத்துக்கிருஷ்ணன் தெருவில் சின்ன அறையில் இருந்தோம். அப்போது பள்ளிக்கூடம், நூலகம் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல புத்தகங்களை வெளியிடுவதுதான் எங்கள் ந�ோக்கமாக இருந்தது. பிறகு, நவீன இலக்கியங்கள் சார்ந்து எங்கள் பயணம் அமைந்தது. அப்போது பிரபல எழுத்தாளர்களுடன் நட்பு ரீதியான அணுகுமுறை ஏற்பட்டிருந்தது. அதன் மூலமாக சில எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டோம்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
71
க வி த ா ப தி ப்பக த் தி ன் வ ெ ள் ளி வி ழ ா வி ல் , கு றி ப் பி டு ம்ப டி ய ாக ஒ ரு ப தி வை ஏ ற்ப டு த்த விரும்பினேன். எழுத்தாளர் சா . கந்தசா மி யி ட ம் ஆல�ோசனை கேட்டேன். ஜெயகாந்தனின் சிறுகதைகளை முழுமையாகத் த�ொகுத்து வெளியிடலாம் என அவர் ஆல�ோசனை வழங்கினார். ஜெயகாந்தனைச் சந்தித்தோம். அப்போது அவர் அமெரிக்கா செல்வதற்கான முனைப்பில் இருந்தார். சென்றுவந்தபின் இதுபற்றிப் பேசலாம் என்று கூறிச் சென்றார். அவர் வந்தபிறகு மீண்டும் சந்தித்தோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் அனுமதி வழங்கினார். ஜெ ய காந்த னி ன் சி று கதைக ள் அ ன ை த் து ம் காலவரிசைப்படி த�ொகுக்கப்பட்டு, 800 ரூபாய் விலையுள்ள இரண்டு த�ொகுப்புகளை 600 ரூபாய்க்கு முன்பதிவுத் திட்டத்தில் வெளியிட்டோம். வாசகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. பிலிம் சேம்பரில் நடைபெற்ற அதற்கான விழாவிலேயே சுமார் 400 பிரதிகளுக்கு மேல் பதிவாகிவிட்டன. இன்றைக்கு பெரும்பாலான பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் காலவரிசைப்படி த�ொகுக்கப்பட்டு, த�ொகுதிகளாக வெளிவந்து க�ொண்டிருக்கின்றன என்றால், அதற்கு முதற்காரணமாக அமைந்தது எங்களின் இந்த நூல்கள்தான் என்பதை பெருமைய�ோடு ச�ொல்லிக் க�ொள்கிறேன். ஜெயகாந்தன் ஞானபீடம் விருது வாங்கும்போதும், பத்மபூஷன் விருது வாங்கும்போதும் அவருடன் டெல்லிக்குச் சென்று வந்தேன். குடியரசுத் தலைவர் மாளிகையில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்தோம். ஜெ ய காந்த ன ை த் த� ொ ட ர் ந் து பி ர ப ஞ ்ச ன் , அச�ோகமித்திரன், சா.கந்தசாமி, மாலன் ஆகிய�ோரின் சிறுகதைத் த�ொகுதிகளை வெளியிட்டிருக்கிற�ோம். கடந்த 40 ஆண்டுகளில் ஏறத்தாழ 2000க்கும் ம ேற்பட்ட நூ ல ்கள ை வ ெ ளி யி ட் டி ரு க் கிற�ோம் . சமூகத்துக்கு விர�ோதமான எந்தப் புத்தகத்தையும் நாங்கள் வெளியிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிற�ோம். 2 0 1 3 ல் உ ல க ப் ' பு த்தக தி ன ம் ' எ ங ்க ள் அலுவலகத்திலேயே நடத்தின�ோம். முதல் விற்பனையை இளையராஜா த�ொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகளெல்லாம் அவ்விழாவில் கலந்து க�ொண்டார்கள். அவர்கள் சந்தித்து மகிழ்வதற்கான ஒரு வாய்ப்பாக அவ்விழா அமைந்ததாக அவர்களே கு றி ப் பி ட் டு ச் ச� ொ ன்னார ்க ள் . ஜெ ய காந்த ன் கலந்துக�ொண்டு பேசிய கடைசி நிகழ்ச்சி அதுதான். மூன்று நாட்கள் அந்த விழாவை நடத்தின�ோம். 25 சதவிகிதம் கழிவு வழங்கின�ோம்.
72
புத்தகத் த�ொழிலில் தங்களை நிலைநிறுத்திக் க�ொள்ள பதிப்பாளர்கள் நிறைய ப�ோராட வேண்டியிருக்கிறது. த�ொலைக்காட்சியும், கணினியும், இணையமும் வந்தப�ோது புத்தகத் த�ொழில் நசிந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கும் வந்தது உண்மைதான். ஆனால், உண்மையில் இவையெல்லாம் இப்போது புத்தகத் த�ொழிலுக்கு உதவிசெய்வதாகவே அமைந்திருக்கிறது. எங்களின் பெரும்பான்மையான விற்பனை இணையம் மூலமாகவே நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் வாங்கி விருப்பமுடன் படிக்கிறார்கள். படித்துக் கருத்து ச�ொல்கிறார்கள். வாசகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதை புத்தகக் கண்காட்சிகள் மெய்ப்பித்து வருகின்றன. வாசகர்களிடம் இ ப்போ து வி ழி ப் பு ண ர் வு ஏ ற்ப ட் டி ரு க் கி ற து . முன்பெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் உள்ள விசயங்களைப் பற்றி பேசுவார்கள். இப்போது புத்தகத் தயாரிப்பு, காகிதம், அச்சு, கட்டுமானம் பற்றியெல்லாம் கருத்து ச�ொல்கிற அளவுக்கு வாசகத் தரம் வளர்ந்திருக்கிறது. பதிப்புத் த�ொழிலை, மற்ற த�ொழில்கள�ோடு ஒப்பிடுகையில் லாபம் குறைவான த�ொழில்தான். ஆனால், மரியாதைகரமான த�ொழில். எனக்கு குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றால், ஒரு பதிப்பாளராக கிடைத்ததுதான். கவிஞர் சிற்பி மூலமாக அப்துல் கலாமிடம் திருக்குறளுக்கு உரை எழுதித் தருமாறு கேட்டோம். ஆனால், காமத்துப் பாலுக்கு என்னால் எப்படி எழுதமுடியும் என்று அவர் ய�ோசித்தார். அந்த முயற்சி நின்றுவிட்டது. பிறகு ஓலைச்சுவடி வடிவில் ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அதை அவருக்கு அனுப்பி வைத்தோம். உடனே அந்த முயற்சியைப் பாராட்டி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதையும் அந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிற�ோம். எங்களின் முன்னோடிகளான சின்ன அண்ணாமலை, வை.க�ோவிந்தன் ப�ோன்றவர்கள் இந்தப் பதிப்புத் த�ொழிலில் மிகவும் நஷ்டப்பட்டார்கள். மலிவுப் பதிப்பு என்பதைக் க�ொண்டுவந்தவரே வை.க�ோவிந்தன்தான். அவரின் மகன் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "எங்கள் அப்பா பதிப்புத் த�ொழில் செய்யாமல் அந்தப் பணத்தை வைத்திருந்தாலே நாங்கள் நல்லவிதமாக வாழ்ந்திருப்போம்’’ என்பது ப�ோல கூறியிருந்தார். நாங்கள் எல்லாம் சேர்ந்து அவர் பெயரில் ஒரு பெரிய த�ொகையை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிற�ோம். எங்களின் முன்னோடிகளின் வாரிசுகளுக்கு நாங்கள் உதவி செய்கிற நிலைமைக்கு இப்போது பதிப்புத் த�ொழில் வளர்ந்திருக்கிறது. எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இது. எனது பதிப்புப்பணிக்கு உதவியாக எனது மகள் கவிதா இருக்கிறார் என்பதையும் முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும்.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
மார்க்சிய ஆசான்களின் மனப்பதிவுகள்
என். குணசேகரன்
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் "மனித சமூக சா ரம்" ப�ோன்ற முக்கிய மார்க்சிய ஆக்கங்களை வழங்கியவர். பிரிட்டனில் மிகவும் பிரபலமான மார்க்சியப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். "மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை" என்ற அவரது நூல் மார்க்சிய புரிதலை மேம்படுத்தும் உன்னதமான படைப்பு. இந்நூல்,1917-ஆம் ஆண்டு நடந்த ரஷியப் புரட்சி, 1949-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீனப் புரட்சி ப ற் றி ய ஆ ய் வு . இ ர ண் டு பு ர ட் சி க ளு ம் உ ல க ம் முழுவதும் ச�ோசலிசப் புரட்சி என்ற எதிர்கால பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்கள்.அந்த இரண்டு புரட்சிகளின் ஒற்றுமையையும்,த�ொடர்ச்சியையும் வி ள க் கு வ த ாக வு ம் இ ந்த நூ லி ன் கட்டமை ப் பு அமைந்துள்ளது. மார்க்ஸ்,லெனின்,மாவ�ோ ஆகிய�ோரின் மேற்கோள்களையே தாம்சன் கையாண்டுள்ளார். அதாவது,இரண்டு புரட்சிக்குமான ப�ொதுவான தத்துவக் கருத்துக்களை மார்க்சிய ஆசான்களே நம்மோடு உரையாடுகின்றனர்.இது இந்த நூலின் சிறப்பு. புரட்சிகளும் தத்துவப் புரிதலும் ஒ ன் றி ர ண் டு நூ ல ்க ள ை ப் ப டி த் து வி ட் டு மார்க்சியத்தில் பாண்டித்தியம் பெற்றுவிட்டதாக நினைப்பவர்களுக்கும், ஜனரஞ்சகமாக புரிந்துக�ொள்ளும் வகையில் மார்க்சியத்தை "பாஸ்ட் பூட்" உணவாக க�ொடுக்க வேண்டுமென்று பேசுவ�ோருக்கும்,,தாம்சனின் அழுத்தமான பதில் இது.புரட்சிகரப் ப�ோராட்டங்களின் வழியாகவே தத்துவத்தைப் புரிந்து க�ொள்ள முடியும். தத்துவ வாசிப்பு பயன்தர வேண்டுமெனில் புரட்சி நடைமுறையில், புரட்சிகரப்போராட்டத்தில் ஈடுபடுதல் அ வ சி ய மான து த ாம்ச னி ன் க ரு த் து . இ த ன ை அ டி ப்படை ய ாக க் க� ொ ண் டு , பு ர ட் சி ஆ க ்க த் தி ன் ஊ ட ாக எ ழு ந்த பல தத்துவார்த்தப் பிரச்னைகள் குறித்து மா ர் க் ஸ் , லெ னி ன் , மாவ�ோ வி ன் மனவ�ோட்டங்களை ப தி வு ச ெ ய் கி ற ா ர் , நூலாசிரியர். பாட்டா ளி வர்க்க சர்வாதிகாரம் ப ற் றி ய மா ர் க் சி ய கருத்தாக்கம்; இதனை, மு த ல ா ளி த் து வ ம் ,
க ம் யூ னி ஸ் ட் இ ய க ்க த் தி ன் மீது ப�ொய்யான அவதூறுகளை நீ ண்டகா ல ம் ப ர ப் பி ட ப ய ன்ப டு த் தி வ ந் து ள்ள து . க ம் யூ னி ஸ ம் ஒரு வன்முறை தத்துவம் என்ற பி ர ச்சா ர த்தை முதலாளித்துவ எழுத்தாளர்கள் வ லு வாக ச் செய்துள்ளனர். புரட்சிக்குப் பிறகு அமையும் உழைக்கும் மக்களின் அரசினைக் குறிப்பிட "பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்" என்ற ச�ொற்றொடரை மார்க்சிய ஆசான்கள் பயன்படுத்தினர்.லெனின் எழுதுகிற ப�ோது, முதலாளித்துவ அரசுகள் வடிவங்களில் வெவ்வேறாக இருக்கலாம்;ஆனால்,அவற்றின் சாராம்சம் ஒன்றுதான். இந்த அரசுகள் எல்லாம் இறுதியாகப் பார்க்கும் ப�ோது,தவிர்க்க இயலாத வகையில்,முதலாளித்துவ சர்வா தி கா ர மாக உ ள்ளன . இ ந்த உ ண்மையை அன்றாடம் அனுபவத்தில் காண்கிற�ோம். ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த ப�ோது இராக் மீது,ஆக்கிரமிப்புப் ப�ோர் நடத்த முற்பட்டப�ோது, அ ன ை த்து ஊட கங ்களிலு ம் வர ல ாறு கா ண ா த விவாதம் நடந்தது. பல இடதுசாரி இணையதளங்களில் செயல்பட்டு வந்தவர்கள் 'இணையதள ப�ோராளிகளாக' மாறி,வீறுக�ொண்டு செயல்பட்டனர். அமெரிக்கா ப�ோர்தொடுக்கும் தனது திட்டத்தை நிறைவேற்றி,உலகத்தையும்,அமெரிக்க மக்களையும் இ ன்ன லு க் கு ஆ ளா க் கி ய து . உ ல கி ல் ந வீ ன தாராளமயமாக்கலை முதலாளித்துவம் க�ொண்டு வந்ததும்,உக்கிரமான "ஜனநாயக விவாதங்களுக்கு" இ டையே த ா ன் ந ட ந்த து . எ னவே , த� ொ ழி ல ா ளி வர்க்கப்புரட்சிதான் முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலை முற்றாக தடுத்து நிறுத்தும். சத்தமாக பேசுவதற்கு வாய்ப்புக்களை க�ொடுத்து,பெரும்பான்மை மக்களின் நலனுக்கு விர�ோதமாகவும்,சிறு கூட்டத்தின் மூலதன நலனுக்காகவும் செயல்படுவது முதலாளித்துவம். இதுதான் முதலாளித்துவ சர்வாதிகாரம். புரட்சிக்குப் பிறகு,அதிகாரத்திற்கு வரும் உழைக்கும் வர்க்கம் சிறுபான்மை மூலதன சக்திகளின் அரசுக் கவிழ்ப்பு வேலைகள ை த் த டு த் து நி று த் தி அ ன ை த் து அதிகாரஙளையும் க�ொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
73
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினை ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற ஒரு கட்டுக்கதையை ஆழமாகப் பதித்து விட்டது.முதலாளித்துவம். ச�ோசலிச நாடுகளில் நடந்த சில தவறுகள் இந்த ப�ொய்ப் பிரச்சாரத்திற்கு சாதகமாக மாறியது.உண்மையில் பாட்டாளி வர்க்க அரசில்தான் உண்மையான மேலான ஜனநாயகம் நிலவும். சமுக மாற்றத்தினை ந�ோக்கிய வர்க்கப் ப�ோராட்டத்தின் இலக்கு, எது? முதலாளித்துவ சர்வாதிகாரமா?பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா என்பதுதான். இந்த இரண்டும் இல்லாத ஒன்றைப் பற்றி பேசுவது த�ொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றிடவும்,முதலாளித்துவ சர்வாதிகாரத்தை நீடிக்கச் செய்திடவும் உதவும். நவீன தாராளமயத்தை க�ொண்டு வந்தப�ோது நாங்கள் மனித முகம் க�ொண்ட, மனித நேயம் க�ொண்ட முதலாளித்துவத்தைக் கட்டுகிற�ோம் என்று அவர்கள் கூறியது தற்போது அமபலப்பட்டுள்ளது. ரஷியாவிலும்,சீனாவிலும் துவக்க கட்டங்களில் முதலாளித்துவ வர்க்கங்களின் தலைமையில் புரட்சிகள் நடந்தன.ஆனால், அந்த வர்க்கங்கள் மக்களின் நலன்களுக்கு துர�ோகம் செய்தன. ஜார் ஆட்சியை அகற்றி, ஒரு வரலாற்று மாற்றம் ஏற்படுத்திய 1917-பிப்ரவரி பு ர ட் சி வீ ண் ப�ோக க் கூ ட ா து எ ன் று லெ னி ன் வாதிட்டார்.ஏனென்றால்,இந்த பிப்ரவரிபுரட்சியின் பலனை முதலாளித்துவ வர்க்கம் அனுபவித்தாலும்,அந்த மாற்றத்தை உருவாக்கியதில் விவசாயிகள், த�ொழிலாளி வர்க்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
74
இதனால்தான்,லெனின் முக்கியமான கருத்தாக்கத்தை உருவாக்கினார்.புரட்சி இரண்டு கட்டங்களைக் க�ொண்டது.பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் உள்ளடங்கிய புரட்சிகர சர்வாதிகாரம் க�ொண்ட ஜனநாயக அரசு என்பது முதல் கட்டம். இது கிராமப்புற நிலஉடைமைகளில் நிலப்பிரபுத்துவ முறையை முடிவுக்கு க�ொண்டு வரும். அடுத்த கட்டமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ச�ோஷலிச முறையை கட்டுகிற முயற்சியை துவக்கிடும். முதலாளித்துவப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கப் புரட்சி எழும் நிகழ்வு, பாட்டாளி வர்க்க அரசின் அதிகாரம், அதன் செயல்பாடு, விவசாயி த�ொழிலாளி கூட்டணி உருவாக்குவது, தேசிய இனப் பிரச்னை மற்றும் பண்பாட்டுப் பிரச்னைகள்,ஒரு நாட்டில் ச�ோசலிசத்தை கட்டியமைக்க முடியுமா என்ற கேள்வி,கம்யுனிஸ்ட் கட்சியில் பாத்திரம்,முதல் ச�ோஷலிச அரசான ச�ோவியத் அரசினைக் கட்டுவதில் எழுந்த தவறான பார்வைகளும் அதனைய�ோட்டிய சர்ச்சைகளும் என விரிந்த பரப்பில்,நூலின் உள்ளடக்கம் உள்ளது. ச�ோவியத்திலும், சீனாவிலும் நடந்த நிகழ்வுகளை இந்த கருத்துப் ப�ோராட்டம்,உருவாக்கப்பட்ட உத்திகள் வழியாகப் புரிந்துக�ொள்ள முயற்சித்தால்தான் சரியாக உள்வாங்கிட இயலும்.அதற்கு இந்த நூல் முக்கியமான வழிகாட்டி.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
நூல் அறிமுகம்
பையன் கதைகள் / வி.கெ.என் / தமிழில்:மா.கலைச்செல்வன் / சாகித்திய அகாதெமி விலை ரூ.365/ நவீன மலையாளச் சிறுகதைகளின் த�ொடக்ககால ஆசிரியர்களில் குறிப்பிடத் தகுந்த கதாசிரியர்களுள் ஒருவர் வடக்கேக் கூட்டாலே நாராயணன் குட்டி நாயர் என்கிற வி.கே.என். (1932/2004) இவருடைய சிறுகதைகளின் வழியே கேரள அரசியல் பண்பாட்டின் கேலிச்சித்திரத்தையும் அவர் கால சமூகத்தின் பிரச்சனைகளை பாடுப�ொருளாகக் க�ொண்டு கதைகள் எழுதியுள்ளார். டெல்லியில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த இவர் ஆர�ோஹணம் (1970) என்கிற நாவல் மூலம் பிரபலமடைந்தார். "பிரிகேடியர்" "பையன்" என்கிற தான் கண்டறிந்த கதாபாத்திரங்களின் வழி பல புனைவுகளை எழுதினார். எதார்த்தமான ச�ொல்லாடல்களும், எளிய வாக்கியங்களின் மூலம் உருவாகும் சித்திரிப்பும் இவருடைய எழுத்தின் பலமென கருதலாம் "த�ோசை" சிறுகதை நகைச்சுவையுடன் கூடிய பகடி செய்யப்பட்ட கதை. கைது செய்யப்பட வே ண் டி ய த�ோ ழ ர் ஒ ரு வ ர் இ ர ண் டு ந ா ள் தலைமறைவு வாழ்க்கைக்குப்பிறகு ராமன் குட்டியின் த�ோசைக்கடையில் த�ோசை சாப்பிட வருகிறார். ராமன், த�ோழர் பையனுக்கு த�ோசை சுட்டுத்தரும் அழகும், த�ோசை சாப்பிட வரும் பிற வாடிக்கையாளர்களான ப�ோலீஸ் மற்றும் கட்சித் த�ொண்டன் ஆகிய�ோரை சமாளித்த விதமும் அதன்மூலம் ஆசிரியர் ச�ொல்ல வரும் விஷயமும் கேரளக் கலாச்சாரத்தின் அரசியலை பேசுகிறது. கம்யூனிஸ்ட்களுக்கான மரியாதையும் அவர்களைப் பற்றிய மதிப்பீடும்தான் கதையின் மையமாக அமைந்துள்ளது.
ஆமை காட்டிய அற்புத உலகம் (சிறார் நாவல்) / யெஸ்.பாலபாரதி/ பாரதி புத்தகாலயம் வெளியீடு/ விலை ரூ 60 ஐந்து நண்பர்களான குமார், முருகன், ராஜி, பாண்டி, அமீர் ஆகிய�ோர் தங்களது ஊர் கடற்கரையில் விளையாடிக் க�ொண்டிருக்கும்போது கடலிலிருந்து கரைக்கு வந்த ஜீனியர் ஜேனதன் என்கிற "ஜீஜ�ோ" ஆமை கால் இடறி பாறையின் அடியில் சிக்கிக்கொள்கிறது. நண்பர்கள் கடல் ஆமையைக் காப்பாற்றுகின்றனர். கடல் ஆமை அவர்களுடன் நண்பர்களாகி அவர்களையும் தனது கடலுக்கு விருந்தினர்களாக அழைத்துச்சென்று கடலுக்குள்ளிருக்கும் அற்புத உலகத்தினைக் காட்டுகிறது. ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பது ப�ோல கதாசிரியர் எழுதிச் செல்லும் இந்த நாவலில் திருக்கை மீன்களின் தலைவன் க�ோ, உதவியாளன் தட்டான், திமிங்கலம் நீல்ஸ், ம�ோசமான சுறாமீன் டாம்போ ஆகியவற்றை அறிமுகம் செய்கிறார். குழந்தை நாவல் என்ற ப�ோதிலும் நாவலுக்குள் அறிவியல் பூர்வமான தகவல்கள், திமிங்கலத்தின் உடலில் கழிவு ரசாயன நீர் விழுந்து அதுபடும் வேதனை கப்பல்களின் ப்ரொப்பல்லர் சக்கரத்தினால் உண்டாகும் ஆபத்து, கழிவுக் குப்பைகள் தேங்கிக்கிடப்பதால் உண்டாகும் மாசு ஆகியவற்றை (1000 க�ோடி கிர�ோகிராம்) கடல் எரிமலை கதையின் ஊடே சுவாரஸ்யம் குன்றாமல் எடுத்துச் ச�ொல்கிறார். யெஸ்.பாலபாரதியின் முதல் சிறார் நாவல் என்ற ப�ோதிலும் அறிவியல் தகவல்களை எளிய ம�ொழியிலும் தன் கற்பனையின் ஊடே தந்திருப்பதும் கடல் பயணத்திற்குரிய சாகசத்தைப் படம் பிடித்துக் காட்டுவது ப�ோல எழுதியிருப்பது இவரது எழுத்திற்குச் சான்றாக உள்ளது.
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
75
குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..
உதயசங்கர்
ம
னித மனம் கதைகளால் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக இருந்தப�ோது கேட்ட கதைகளே அவனுடைய ஆழ்மனதில் அவனுடைய அக உலகைத் தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. மீண்டும் தன்னுடைய குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே அவன் தன் அனுபவங்களைக் கதைகளாகச் ச�ொல்கிறான். பத்திரிகைகள் படிக்கிறான். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை வாசித்துக் க�ொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒவ்வொரு கதையாக மாறுகிறது. இந்தக்கதைகள் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால மதிப்பீடுகளையும், எதிர்காலக் கனவுகளையும் மனித மனதில் விதைத்துக் க�ொண்டேயிருக்கின்றன. மு.முருகேஷின் சிறுவர் கதைப்புத்தகம் ’"பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும்" ’ என்ற நூல் அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறுவர் கதைப் புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் அட்டைப்படமும், வடிவமைப்பும், ஓவியங்களும் அமைவதுதான். பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் நூலின் வடிவமைப்பும் கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள பனிரெண்டு கதைகளிலும் மு.முருகேஷ் புதிய மதிப்பீடுகளை உருவாக்குகிறார். சமகால சமூகச் சூழல்களுக்கேற்ப புதிய அற விழுமியங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார். "காட்டுக்குள்ளே பாட்டுப் ப�ோட்டி" ’ கதையில் உருவத்தை வைத்தோ, நிறத்தை வைத்தோ, ஒருவரைக் குறைத்து எடை ப�ோடக் கூடாது என்ற மதீப்பீட்டை குழந்தைகள் மனதில் பதியும்படி ச�ொல்கிறார். "கல்யாணியின் ம�ோதிர வளையல் "கதையில் பழைய முடிச்சேயானாலும் இந்த மாதிரியான கதைகளை எழுதுவதின் மூலம் குழந்தைகள் தங்களின் படைப்பூக்கத்தைக் கூர் தீட்ட முடியும். "எலி ராஜாவுக்குக் கல்யாணம்"’ கதையில் உள்ள கதைப் பயணம் மிகுந்த சுவாரசியமுள்ளது. ’"உயிர்க் குரல்"’ கதையில் சமகால சமூகத்தில் மிக முக்கியமான விழுமியம் நிலைநிறுத்தப்படுகிறது. ’சில நாரைகளும் ஒரு நண்டு அக்காவும்’ கதை திருட்டைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றைய குடும்பத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியதை ஒரு காட்சியின் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ‘"நாங்க நகரத்தைப் பார்க்கப் ப�ோற�ோம்" என்ற கதையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து அல்லல்பட்டு
76
பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் | மு.முருகேஷ் | அகநி வெளியீடு| பக்: 64 | ரூ.40/-
திரும்ப கிராமத்துக்கே ப�ோகத் துடிக்கும் எளிய உயிர்களைப் பற்றிக் கவலைப்பட வைக்கிறார். அலுவலக வேலைக்காரர்களை உயர்வாகவும், உடலுழைப்பைத் தாழ்வாகவும் மதிக்கும் எண்ணம் மிகுந்த சமூகம் நம்முடைய சமூகம். இந்த மதிப்பீட்டைத் தகர்த்து ந�ொறுக்குகிறது. பாதி முட்டாளும் முழுச் சம்பளமும்’ என்ற கதை. ’பறக்குது பார் பச்சோந்தி’ அவரவர் திறமைகளை உணர்ந்து க�ொள்ளச் ச�ொல்கிறது. ’நான்கு பங்குத் திருடர்கள்’ பேராசையினால் ஒருவருக்கொருவர் க�ொன்றுவிடக்கூடிய அளவுக்குப் ப�ோவதைச் ச�ொல்கிறது. குட்டி முயலின் சமய�ோசிதத்தை புதிய முறையில் விவரிக்கும் ’டாம் மச்சான்… டூம் ம்ச்சான்…’ நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ’"பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்"’ கதையில் வழக்கம்போல் ராஜா மூடனாக இருக்கிறது. ராஜாக்களைப் பற்றிய இப்படியான கதைகள் ராஜாக்களைப் பற்றிய கதைகள் மட்டுமில்லை என்று புரிந்துக�ொண்டால் கதை வேறுவேறு தளங்களுக்கு விரிவதைப் பார்க்க முடியும். பனிரெண்டு கதைகளில் மிருகங்கள், பறவைகளே கதை மாந்தர்களாக வந்து கதைகளைச் சுவாரசியமாக்குகின்றனர். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான எளிய ம�ொழியில் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் "பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்"’ ஒரு காத்திரமான புத்தகமாகத் திகழ்கிறது. வாசிக்கும் குழந்தைகளின் சிறகுகள் விரியும். பப்பி பூக்களைப் ப�ோல பறந்து திரிவார்கள் கதை வானில்…
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
77
78
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016
79
80
புதிய புத்தகம் பேசுது I அக்டோபர் 2016