colour
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
1
colour
2
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
3
புதிய
புத்தகம் பேசுது 2016 செப்டம்பர், மலர்: 14 இதழ்: 7
வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்:
க.நாகராஜன்
முதன்மை ஆசிரியர் : இரா. நடராசன்
ஆசிரியர் குழு: ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன், யூமா.வாசுகி, ப.கு.ராஜன், இரா.தெ. முத்து, அமிதா, மதுசுதன் எஸ்.வி. வேணுக�ோபாலன் நிர்வாகப் பிரிவு: சிராஜூதீன் (மேலாளர்)
colour
உத்திரகுமார் (விளம்பர மேலாளர்) இதழ் வடிவமைப்பு:வி. தங்கராஜ்,
கா. குணசேகரன், தேவதாஸ் அட்டை வடிவமைப்பு: ஆர். காளத்தி
ஆண்டு சந்தா வெளிநாடு மாணவர்களுக்கு தனி இதழ்
: : : :
ரூ. 240 25 US$ ரூ. 200 ரூ. 20
முகவரி: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 ப�ோன்: 044 - 243 324 24, 243 329 24 whatsapp: 9498002424 email:thamizhbooks@gmail.com
கிளைகள்
www.thamizhbooks.com திருவல்லிக்கேணி: 48, தேரடி தெரு வடபழனி: பேருந்து நிலையம் எதிரில் அடையார் ஆனந்தபவன் மாடியில் பெரம்பூர்: 52, கூக்ஸ் ர�ோடு ஈர�ோடு: 39, ஸ்டேட் பாங்க் சாலை திண்டுக்கல்: பேருந்து நிலையம் நாகை: 1, ஆரியபத்திரபிள்ளை தெரு திருப்பூர்: 447, அவினாசி சாலை திருவாரூர்: 35, நேதாஜி சாலை சேலம்: பாலம் 35, அத்வைத ஆஸ்ரமம் சாலை, சேலம்: 15, வித்யாலயா சாலை மயிலாடுதுறை: ரசாக் டவர், 1யி, கச்சேரி சாலை அருப்புக்கோட்டை: 31, அகமுடையார் மகால் மதுரை: 37A, பெரியார் பேருந்து நிலையம் மதுரை: சர்வோதயா மெயின்ரோடு, குன்னூர்: N.K.N வணிகவளாகம் பெட்போர்ட் செங்கற்பட்டு: 1 டி., ஜி.எஸ்.டி சாலை விழுப்புரம்: 26/1, பவானி தெரு திருநெல்வேலி: 25A, ராஜேந்திரநகர் விருதுநகர்: 131, கச்சேரி சாலை கும்பக�ோணம்: ரயில் நிலையம் அருகில் வேலூர்: S.P. Plaza 264, பேஸ் II , சத்துவாச்சாரி நெய்வேலி: சி.ஐ.டி.யூ அலுவலகம், பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்: காந்திஜி வணிக வளாகம் காந்திஜி சாலை தேனி: 12,பி, மீனாட்சி அம்மாள் சந்து, இடமால் தெரு க�ோவை: 77, மசக்காளிபாளையம் ர�ோடு, பீளமேடு திருச்சி: வெண்மணி இல்லம், கரூர் புறவழிச்சாலை திருவண்ணாமலை: முத்தம்மாள் நகர், விருதாசலம்: 511கி, ஆலடி ர�ோடு நாகர்கோவில்: கேவ் தெரு, ட�ோத்தி பள்ளி ஜங்ஷன் பழனி: பேருந்து நிலையம் சிதம்பரம்: 22A/ 188 தேரடி கடைத் தெரு, கீழவீதி அருகில் மன்னார்குடி: 12, மாரியம்மன் க�ோவில் நடுத்தெரு
4
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
தலையங்கம்
'புதிய கல்விக் க�ொள்கை' - எதிர்ப்பு ஆசிரியர் தினம்! காலங்காலமாக ஆசிரியர்கள் சமூகத்தின் மாற்றங்களை கிரியா ஊக்கியாய் இருந்து சாதித்து வருகிறார்கள். அவர்களைக் க�ொண்டாடும் ஆசிரியர் தினத்தை குரு உஸ்தவ் ஆக்கி, அதில் காவி பூசிய அரசியல் மிகவும் ஆபத்தானது. முப்பதே சதவிகித ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்துத்வாவாதிகள் இன்று மற்றொரு ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கையிலெடுத்து இருக்கிறார்கள். 'புதிய கல்விக் க�ொள்கை என்கிற பெயரில் கார்பரேட் தனியார் மய க�ொள்ளையர்கள�ோடு கைக�ோர்த்து கல்வியை இந்துமத குருகுலமயமாக்கிட பெருஞ்சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சி அரசியலும், பல்கலைக் கழகங்களை சாமியார் மயமாக்கும் முயற்சியும் படுத�ோல்வியில் முடிந்ததால், அடுத்து கல்வியைக் கையிலெடுத்திருக்கும் இந்த அரசு, தலித்துகள், உழைக்கும் அடித்தள மக்கள் மத்தியில் கடும் சுரண்டலை ஏறக்குறைய குலக்கல்வி முறையை முன்மொழிந்து நூற்றாண்டுகாலப் ப�ோராட்டங்களை நீர்த்துப் ப�ோக வைக்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. தாய்மொழிக் கல்வி, உலகளாவிய அறிவியல் கல்வி, என யாவற்றையும் புறந்தள்ளி சமஸ்கிருத ம�ொழிப் பாடத்தை முன்மொழிந்துள்ளதன் மூலம் தனது சுய ரூபத்தின் முகத்திரையை தானே கிழித்துக் க�ொண்டுள்ளது. நான்காம் வகுப்பிலிருந்தே மாணவர்களில் வெற்றியாளர்களை சலித்தெடுக்கும் பாஸ் பெயில் முறை உட்பட யாவற்றையுமே எதிர்த்து பெரும் ப�ோராட்டத்தில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஆசிரியர்கள்மீது இந்த அரசு திணித்துவிட்டது. ஆசிரியர்களைக் க�ொத்தடிமைகளாக்கும் நான்கு ஷரத்துக்கள் இந்த புதிய கல்விக் க�ொள்கைப் பிரகடனத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணியைத் தரப்படுத்துதல், திறன்மேம்பாடு எனும் பெயரில் பல தேர்வுகளை அடுத்தடுத்து எதிர்கொள்தல், பயிற்சி என்கிற பெயரில் குருகுலச - சாமியார்கள் ஆதல் என்பன காலங்காலமாக நாம் கட்டிக்காத்த மதச்சார்பின்மை, சக�ோதரத்துவம் மற்றும் யாவற்றுக்கும் முடிவு கட்டும் சதியாகும். உயர்கல்வியில் முழு தனியார் சர்வதேச அமைப்புகளுக்கு கதவு திறந்தவர்கள் பள்ளிக் கல்வியின் ஆதார நிலைகளைத் தகர்க்கும் விதமாக குழந்தைகளின் உரிமைக்கு எதிரான ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் இந்திய சமூகத்திற்கே எதிரான இந்த புதிய கல்விக்கொள்கையை முறியடிப்போம் என சூளுைரத்து களம் புகுவ�ோம்... இந்தியத் தாய்த்திருநாட்டின் இறையாண்மையைக் காப்போம். ேதசபக்தியும் புரட்சிகர எழுச்சியும் க�ொண்ட பெருஞ்சேனையாய் கிளர்ந்தெழுவ�ோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். - ஆசிரியர்குழு.
மதுரை புத்தகத் திருவிழா: செப். 2 - 17
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
5
நூல் அறிமுகம்
சுங்கச்சாவடிச் சுரண்டல் -சித்தார்த்தன் சுந்தரம்
6
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
க ா ர் த் தி க்கே ய ன் ( எ ன் கி ற ) சுந்தரலிங்கம் என்று ஜாதகத்தில் இருக்க, ஸ்கூல் சேர்றப்ப எஸ். எம்.ரவிச்சந்தர்னு ஆகி அதுவும் பத்தாம ஆதவன் தீட்சண்யாவாக ம ா ற ா ட ்டம் - ப ன் மு க ம் க�ொண்டவருக்கு பல பெயர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. இ வ ரு டை ய எ ழு த் து க்கள் எ ன க் கு 2 0 1 4 ஆ ம் ஆ ண் டு ப ரி ட ்ச ய ம் ஆ கி ன . ச ம க ா ல அரசியல் பிரச்சனைகளையும் அதனால் மக்கள் எதிர் க�ொள்கிற சிரமங்களையும் யதார்த்தமாக கேலி கிண்டலுடன் ச�ொல்லிச் செ ல ்ல க் கூ டி ய க ா த் தி ர ம ா ன எழுத்துக்களுக்குச் ச�ொந்தக்காரர் 'ஆதீ' என்றால் மிகையில்லை. ஆங்கில எழுத்தாளரான ஆர் கே நாராயணனுக்கு எப்படி மால்குடிய�ோ, கி.ரா.வுக்கு எப்படி ஒரு க�ோபல்ல கிராமம�ோ அது நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று க�ொண்டிருக்கிறீர்கள் | ஆதவன் தீட்சண்யா ப�ோல ஆதீக்கு லிபரல்பாளையம். சந்தியா பதிப்பகம் | 098411 91397 | ரூ.105 | பக்-112 ய த ா ர்த்த ம ா ன சூ ழ லை க் க�ொண்ட இவரது கதைகளில் கேலியும், கிண்டலும் ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்களின் வயது, கணவன், மனைவி இருவரும் இழைய�ோடிச் செல்லும். ப�ொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்குச் செல்பவர்களா, வயதானவர்கள் யாரும் பணியாற்றி வரும் கதாசிரியரான `ஆதீ’ ஒரு கவிஞரும், கூட இருப்பார்களா, சைவமா அல்லது அசைவமா - இப்படி ஒரு அனுமார் வால் ப�ோல நீண்டு நாடகாசிரியரும் ஆவார். இவரது சமீபத்திய சிறுகதைத் த�ொகுப்பான 'நீங்கள் செல்லக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்படும்பட்சத்தில் சுங்கச்சாவடியில் நின்று க�ொண்டிருக்கிறீர்கள்' படிக்க `வீடு’ என்கிற பெரும்பேறு நமக்குக் கிடைக்கும். ஆனால் நேர்ந்தது. இது தலித்முரசு, பறை (மலேசியா), `காக்கை குருவி…..’ கதையில் வரும் தம்பதிகளுக்கு மலைகள்.காம், புதுவிசை ப�ோன்ற பத்திரிகைகளிலும், அப்போதுதான் குடியேறிய வீட்டிலிருந்து மாற இணையதளத்திலும் வந்த சிறுகதைகளின் த�ொகுப்பு வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதற்கான காரணம் ஆகும். ஒவ்வொரு கதையின் களமும், கருவும் என்ன? கதை நாயகனின் மகள் வாழ்வரசியின் பிறந்தநாளுக்கு முற்றிலும் வேறுபட்டு இருந்தாலும் அவையனைத்தின் மையப்புள்ளி சமகால சமூக, அரசியல் நிகழ்வுகள் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை அழைக்க, கேக் வெட்டிப் பிறந்த நாள் விழா சிறப்பாக ஆகும். 'காக்கை குருவி உங்கள் ஜாதி'’ என்கிற கதைய�ோடு நடைபெற்று முடிகிறது. மறுநாள் மாலை, இவன் இ த ் த ொ கு ப் பு ஆ ர ம ்ப ம ா கி ற து . ச�ொ ந ்த வீ டு அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது இவன் இல்லாதவர்கள் ஒரே ஊருக்குள்ளோ அல்லது பணி இப்போது குடியிருக்கக்கூடிய வீட்டைப் பார்த்துத் மாற்றம் காரணமாக ஊர்விட்டு ஊர்சென்று அங்கு தந்த தரகர் தெருவ�ோரத்து டீக்கடையில் இவனுக்காகக் வாடகை வீட்டில் குடியேறுவது என்பது இயல்பான, காத்துக் க�ொண்டிருக்கிறார். அவர், 'நேத்து வூட்டுல வாழ்வு சார்ந்த ஒரு நிகழ்வாகும். ஆனால் இந்தக் ர�ொம்ப தடபுடல் ப�ோல' எனக் கேட்க, இவன், காலத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது 'புதுசா குடிவந்திருக்கிற நாங்க அக்கம்பக்கத்து அவ்வளவு எளிதான காரியமில்லை. காரணம், வீட்டுச் ஆட்களை அழைச்சி உபசரிக்கிறக்கிறதுக்கு இதை ச�ொந்தக்காரர்களின் எழுதப்படாத நிபந்தனைகள் ஒரு வாய்ப்பா பயன்படுத்திக் க�ொண்டோம், - த னி ம னி த ர ா அ ல ்ல து தி ரு ம ண ம ா ன வ ர ா , அவ்வளவுதான்' என்றான். "அவ்வளவுதான்னு நீங்க திருமணமானவரெனில் எத்தனை குழந்தைகள், ச�ொல்லிட்டா அவ்வளவுதானா? அதுக்கு அப்புறம்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
7
என்ன நடந்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு?. ப ங ்ஷ னு ல ்ல க ல ந் து க் கி ட ்ட து ல ய ா ரு எ ன்ன ச�ொன்னாங்கன்னு தெரியலை. ஆனா, நீங்க வீட்ட உடனே காலி பண்ணனும்னு வீட்டுச் ச�ொந்தக்காரன் ஒத்தக் காலில நிக்கிறான்" என்றார். 'இன்ன சாதின்னு சூசகமா ச�ொல்லுகிற மாதிரிகூட வீட்டுக்குள்ள நாங்க எந்த அடையாளத்தையும் வச்சிக்கிறதில்லை..' என இவன் குரல் மிகவும் தளர்ந்து விட்டிருந்தது. 'என்ன சார் நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க அலமாரியிலே அடுக்கி வச்சிருக்கிறீங்களாமே அம்பேத்கார் புஸ்தகங்கள், அது ப�ோதாதா உங்களைக் காட்டிக் க�ொடுக்க?' என்று புர�ோக்கர் ச�ொல்லும் ப�ோது அவரும் அவர்கள�ோடு சேர்ந்துக�ொண்டது ப�ோல அவனுக்குத் த�ோன்றியது. அம்பேத்கார் குறித்த புத்தகங்கள் படிப்பவர்கள் எ ல ்லாம் ஒ ரு கு றி ப் பி ட ்ட ச ா தி யைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கணுமா? அவரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை ஆதாரமாகக் க�ொண்டியங்கும் இந்த நாட்டில் அவருடைய சாதியல்லாத ஒருவர் வீட்டில் அவர் புத்தக உருவில் நுழைய முடியாதா? என சமூகத்திடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஒரு தனியாளிடம் கேட்டு என்னவாகப் ப�ோகிறது என நினைத்துக் க�ொண்டே அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிப�ோகிறார்கள். அம்பேத்கார் அல்லாத மற்றவர்களின் நூல்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி இங்கு யார�ொருவருக்கும் யாத�ொரு புகாருமில்லை’ என கதை முடிகிறது. ' தி வ்யா - இ ள வ ர ச ன் ’ க ல ப் பு த் தி ரு ம ண நிகழ்வும் அதைத் த�ொடர்ந்த பரிதாபகரமான சம்பவங்களின் பின்னணியையும் க�ொண்ட கதை' இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள்’. திவ்யாவின் கதை, இது வேறு திவ்யாவின் கதை, இன்னும் சில திவ்யாக்களின் கதை மூலம் கலப்புத் திருமணம் செய்து க�ொண்ட தம்பதிகளுக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் க�ொ டு க் கு ம் இ டை ஞ ்ச ல ்க ளு ம் அவர்களின் ஆணவத்துக்காக திவ்யாக்கள் தனி ஆளாக ஆக்கப்படுகிற அக்கிரமங்கள் ப�ொறுக்காமல் சம்பந்தப்பட்டவர்களை திவ்யாக்கள் க�ோபத்துடன் வாழ்த்துவதாகவும் கதை முடிகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு பெரிதாகப் பேசப்பட்ட அலை `ம�ோடி’ அலை. இந்தப் பின்னணியின் சாயல் க�ொண்ட கதை 'அலை என்பது ச�ொல்லல்ல...' வாக்கு எண்ணிக்கைக்கு முந்தின தினம் பிரதம வேட்பாளர் காணாமல் ப�ோய்விடுகிறார். அவரைத் தேடுவது ஒருபக்கம் இருக்க, 'ஒருமாதமாக பூட்டப்பட்ட அறைக்குள் திமிறிக் க�ொண்டிருந்த ஆதரவு அலை இனியும் ப�ொறுக்கமுடியாதென்கிற ஆவேசத்துடன் மூர்க்கமாகவும் கட்டுக்கடங்காத வேகத்தோடும் ப�ொங்கி அதிகாலை மூன்று மணியளவில் எ ண் ணி க்கை ம ை ய ங ்களை மூ ழ ்க டி த் து வி ட் டு பிரதம வேட்பாளாராகிய அவரது வீட்டுக்குள்ளும்
8
நுழைந்து அவரையும் வாரியிழுத்துக் க�ொண்டு ப ா ய்ந்த து . அ ன் ெட ம ா க்ரட் டி க்கான்பே ட ் டை என்னும் லிபரல்பாளையத்தின் பிரதம வேட்பாளர் மயங்கிக் கிடந்தார்.’ இந்தக் கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் வாக்குடையான், மைவிரலாள். யதார்த்தமான ஒரு நிகழ்வைத் தனக்கே உரிய எள்ளலுடன் கூறிச் செல்கிறார் `ஆதீ’. இ து வி ரு து க ளி ன் க ா ல ம் . ந ா ம் க ற ்பனை செய்யக்கூடிய, செய்ய இயலாத அனைத்துப் பெயர்களிலும் இலக்கிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியரின் கற்பனையில் உதித்த விருது 'செருப்பு விருது'. இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் 'த�ொன்ம புதைகுழியாருக்கு மகிழ்ச்சியை விட வியப்பே அதிகமிருந்தது. இதை ஏற்பதென்றாகிவிட்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட குழப்பம், இந்த விருது ப�ொற்குவையா, பணமுடிப்பா, சான்றிதழா, பாராட்டுப்பத்திரமா என்பதுதான். க டை சி ய ா க , அ வ ரு க் கு க் கி டைத்ததென்ன ? படித்துப்பாருங்கள். நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நி ல ங ்களை க ப ளீ க ர ம் செ ய் து ச ா லை க ளை விரிவாக்கி, சுங்கச் சாவடிகளை நிறுவி ஆண்டாண்டு காலமாக வரி வசூலித்துக் க�ொழுத்து வருகின்றன தனியார் நிறுவனங்கள். சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பதை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் ப�ோராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த விளைவும் ஏற்படவில்லை. இந்தப் பிரச்சனையை ம ை ய ம ா க க் க�ொ ண் டு எ ழு த ப்பட் டி ரு க் கி ற க தை த ா ன் இ ந ்த ப் பு த்த க த் தி ன் த லை ப் பு ம் . ’சுங்கச்சாவடியினரையும் அவர்களைத் தாங்கிப் பிடித்திருந்த அரசாங்கத்தினரையும் நாட்டைவிட்டே மக்கள் விரட்டியடித்த இந்த வீரவரலாறு எதிர்காலச் சந்ததியினரை சுதந்தர உணர்ச்சிய�ோடு வாழ்வதற்கான ஒளியை வழங்குவதாக’ என இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவத�ோடு கதை முடிகிறது. இது நிஜத்தில் சாத்தியமா? சாத்தியமாகலாம். இதில் இடம் பெற்றுள்ள மற்ற கதைகள் க�ோயில் இருக்கும் ஊரில் குடியிருக்கவே முடியாது, நாட்டில�ொரு நாடகம் நடக்குது (விகடன் தடம் ஜூன் இதழில் கூட மீள்பிரசுரம் ஆனது), கடவுள் எனும் கைதி. மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை இ வ ்வ ள வு கே லி யு ட னு ம் , நை ய ா ண் டி யு ட ன் கூறினாலும் பிரச்சனைகளைக் கவனப்படுத்த `ஆதீ’ தவறவில்லை. என் வார்த்தையின் மேல் என் எச்சில் படிந்திருக்கும். என் மூதாதைகளின் உருவம் பச்சை குத்தப்பட்டிருக்கும். உடைந்த சீசாத்துண்டைப் ப�ோல மூர்க்கர்களின் பாதையில் காத்திருப்பவற்றை என் வார்த்தைகளென அறியுங்கள், எனக்கூறும் ஆதவன் தீட்சண்யாவும் அவரது படைப்புகளும் மிகவும் கவனத்துக்குரியதாகும்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
நூல் அறிமுகம்
- சிவகுரு
டெங் ஷிய�ோ பிங்
சீனாவைக் கட்டியமைத்த தளகர்த்தர்
தஞ்சையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் கடைசி நாளன்று த�ோழர் சிராஜிடம் உரையாடிக் க�ொண்டிருந்த ப�ோது, புதுப் புத்தகங்கள் பற்றிய விவாதம் துவங்கியது. தெரிவு செய்யப்பட்ட பதிவுகள் பற்றிய பேச்சு வந்தது. ஏத�ோ விவாதம் திசை மாறி, வேறு ஒரு புத்தகத்தில் நின்றது. ஆனாலும் டெங் எனும் ஆளுமையைப் பற்றி நீண்ட நாளாக தெரிந்து க�ொள்ள ஒரு அவா இருந்ததால் அப்புத்தகத்தை அனுப்பச் ச�ொன்னேன். உடனடியாக வந்தது. படிக்கத் துவங்கினேன். ப�ொதுவாக ஒரு புதினத்தைப் பற்றி சிலாகித்து பேசும்போது "கீழே வைக்க முடியவில்லை" என்று ச�ொல்லுவார்கள். எனக்கும் அந்த அனுபவம் உண்டு.. எல்லோருக்கும் இருக்கும். ஒரு புதினம் இப்படி ஒரு நிலையை உருவாக்குவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஒரு அரசியல்சார்ந்த பதிவு அந்த அனுபவத்தை எனக்கு இப்புத்தகம் க�ொடுத்தது. ஆம். டெங்ஷிய�ோபிங் எனும் மிகப்பெரிய ஆளுமையின் திறமைகளை, த�ொலைந�ோக்குப் பார்வையை, சீனத்தின் மிகப்பெரும் மாற்றத்திற்குக் காரணமான புதிய ப�ொருளாதார க�ொள்கைகளை எப்படி அம்மண்ணில் அமல்படுத்திட வேண்டும் எனும் தீர்க்க தரிசனம் எனும் பன்முகத் தன்மைகள் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அற்புதமான, தெளிவான முன்னுரை இந்நூலுக்கு முதல் அழகு. சீனா- அதன் சரித்திரம் இந்தியா விடுதலை அடைந்த பிறகு தான் சீனாவில் மாவ�ோவின் தலைமையில் புரட்சி நடந்து மக்கள் சீனம் உருவானது. மிகவும் பின் தங்கிய ஏழை விவசாயிகள் நிறைந்த நாடு. அந்த நாட்டில் உள்ள பிரத்யேக நிலைகள், மக்களின் மன�ோநிலை, அடிப்படைக் கட்டமைப்புகள் என அனைத்தையும் பற்றிய ஆழ்ந்த ஞானம் க�ொண்டவராக இருந்தார் டெங் என்பதற்கு முதல் கட்டுரையே சாட்சி. சீனாவுக்கான நிலைக்கேற்ப ப�ொ ரு ள ா த ா ர க் க�ொ ள ்கை க ளை உ ரு வ ா க்க வேண்டும் என்பதை துவக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்தவர் த�ோழர் டெங். அதனடிப்படையிலேயே, நவசீனத்திற்கான புதிய ப�ொருளாதாரக் க�ொள்கையை டெங் பின்னாட்களில் முன்மொழிந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், புரட்சி நடைபெற்ற ஒரு நாட்டில், அதுவும் கட்சியின்
டெங் ஷிய�ோ பிங் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் தமிழில்: மிலிட்டரி ப�ொன்னுசாமி| ரூ.220 | பக். 319
உறுப்பினர்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக வரையறுக்கிறார். என்ன தெளிவான, உறுதியான எண்ணம் க�ொண்ட தலைமை ப�ொறுப்பு, என்பதை அவரின் பேட்டியே ச�ொல்கிறது. தன் நாட்டு த�ொழில் துறையினருக்கு ஆல�ோசனை ஒரு அரசியல் தலைவர் எப்படி வழங்குகிறார் என்பதைப் படித்தால் ப�ொருளாதார, வர்த்தக வல்லுனர்களே வியந்து ப�ோவார்கள். வார்த்தை ஜாலம் இல்லை. கள நிலவரத்தை முழுவதும் க�ொண்ட. எதார்த்தம். அதில் உற்பத்தி சாதனங்கள் எவ்வளவு எளிமையாக , அதாவது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதற்காக புது வகை ஆராய்ச்சிகள் நடக்க வழிகாட்டுகிறார். ஒவ்வொரு நாட்டிலும் ப�ொருளாதாரத்தை மக்களுக்கு
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
9
ஏற்றவாறு உருவாக்குவதற்கும், அரசின் திட்டங்கள் கடைக் க�ோடி குடிமக்களுக்கும் கிடைக்கும் ப�ொருட்டு செயல்படுவதே திட்டக் கமிஷன், அது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுகிறார். அதில் குறிப்பாக த�ொழிலாளர்களுக்குள் இருக்கும் ஊதிய முரணைக் குறைத்திட வழிகாட்டும் டெங், அவர்களை எவ்வாறு வகைப்படுத்தி, திறனுக்கேற்ப, சம்பளம் நிர்ணயிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார். நம் நாட்டிலும் திட்டக் கமிஷனின் செயல்பாடுகளைப் பார்த்திருக்கிற�ோம். எவ்வளவு முரண்.. மாவ�ோவைப் பற்றிய அவரின் மதிப்பீடு. இப்புத்தகம் டெங்கின் தெரிவு செய்யப்பட்ட க ட் டு ரை க ள் , பேட் டி க ள் , எ ன்றா லு ம் கூ ட கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களிலும் சேர்மன் மாவ�ோவைப் பற்றிய ஒரு வரி இல்லாமல் இல்லை. அதைப் பற்றி அவரே ஓரிடத்தில் ச�ொல்கிறார்.. சேர்மன் மாவ�ோவை விட்டுவிட்டு சீனாவைப் பற்றி எந்த மதிப்பீட்டுக்கும் யாராலும் செய்ய இயலாது. ஆம்; அவர் சீனாவின் அனைத்திலும் அவர் பங்கு இருக்கிறது. அதற்காக அவர் தவறு செய்யவில்லை என நான் ச�ொல்லமாட்டேன். ஆனாலும் சீனாவுக்காக அவர் செய்துள்ள தியாகம், நாட்டை ஒருமுகப்படுத்திய விதம், எந்த த�ொடர்புச் சங்கிலியைப் பலப்படுத்திட வேண்டும், எதை உடைக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாகக் கணித்தவர். அதிலே வெற்றி கண்டவர்.. கலாச்சாரப் புரட்சி என்பதை சீனா பார்க்காமல் இருந்திருந்தால் இன்று நாம் அவரைப் பற்றிய புது பிம்பம்த்தைப் பார்த்திருப்போம். ஒரு இத்தாலியப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சேர்மன் மாவ�ோ பற்றிய தெளிவான புரிதலை, கலப்படம் இல்லாமல், நேர்மையாக, வெளிப்படையாக ச�ொல்வது அவ்வளவு எளிதானது அல்ல. மிகத் தேர்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தன் நாட்டை உருவாக்கிய ஒரு தலைவரை அதுவும் ஒரு முதலாளித்துவ நாட்டின் பத்திரிக்கைக்கு எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் பதிவு செய்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அறிக்கைகளில் கட்சியின் அணுகுமுறை, ஸ்தாபனக் கட்டுப்பாடு, ஊழியர் உருவாக்கம், மார்க்சிய க�ோட்பாடுகளை எவ்வாறு பிழையின்றி பின்பற்றுவது, மாறி வரும் உ ல க ள ா வி ய சூ ழ் நி லை க ளி ல் எ வ்வா று சீ ன ா தன்னை தகவமைத்துக் க�ொள்வது, ப�ோன்ற முக்கிய பிரச்சனைகளில் தன்னுடைய ஆழமான அறிவை செலுத்தியவர் டெங்ஷிய�ோபிங். இதை கட்சியின் சிறப்பு மாநாடுகளில் எந்த அளவு நேர்த்தியாக பேசியுள்ளார், எழுதியுள்ளார் என்பதை இப்புத்தகம் நமக்கு ச�ொல்லுகிறது. இ ந ்த வரை ய றை க ளை அ வ ர் எ வ ்வ ள வு த ன்னடக்க த் து ட ன் ப தி வு செ ய் கி ற ா ர் ! டெங்
10
ச�ொல் கி ற ா ர் . . த ன்னடக்கம் எ ன்ப து த ா ன் ஒ ரு கம்யூனிஸ்ட்டின் அடிப்படைக் குணமாக இருக்க வேண்டும். என்னை என்றுமே நாட்டுக்கான களப்பணியாளராக கருதிக்கொள்வேன்....சீனாவைக் கட்டியமைத்த தளகர்த்தர்களில் நானும் ஒருவன் தானே ஒழிய, நான் மட்டும் அல்ல.. சுய மதிப்பீடு எவ்வளவு அரிய குணம்! அதை மிக அற்புதமாக, நெகிழ்வாக ச�ொல்கிறார் டெங்ஷிய�ோபிங். கட்சியின் தலைவராக…… மாவ�ோவுடன் இணைந்து புரட்சிகரப் பணிகளில் ஈடுபட்டவர் டெங்ஷிய�ோபிங். பிரான்சில் படித்துக் க�ொண்டிருந்த ப�ோதே மகத்தான தலைவர் சூஎன்லாய் உடன் த�ொடர்பு க�ொண்டவர். அவருடன் பல விவாதங்களை நடத்தி பெரும் தத்துவத் தெளிவு க�ொண்டவர். அந்த பாரம்பரியத்தில் வந்தவர் சீனாவின் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான மாவ�ோவும், சூஎன்லாயும் மறைந்த பிறகு கட்சியை ஒருமுகப்படுத்தி வழிநடத்தியவர். 'சீனாவுக்கான நான்கு புது தத்துவங்கள்' எனும் நவீனத் திட்டத்தை முன்மொழிந்தவர். தற்கால உலக அரசியலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் உறுப்பினர்கள் அதிகம். அந்த அடிப்படையில் அவர் இரண்டு முக்கிய விஷயங்களை முன்மொழிகிறார். "அதிலிருந்தே அவரின் தலைமைப் பண்புகள் தெரிய வரும். இத�ோ அவரின் ச�ொற்கள். கட்சியின் தலைவர்கள் தங்கள் மனங்களை விடுதலை செய்து க�ொள்வது அவசியம். கட்சி ஊழியர்கள் / தலைவர்கள் அதை இன்னும் முழுமையாக செய்யவில்லை. மூளைகளை முடுக்கிவிடவில்லை." பலரின் சிந்தனைகள் இறுகிக் கிடக்கின்றன. அடுத்து ஜனநாயகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் மத்தியத்துவ க�ோட்பாடுகள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார். மேலும் கட்சியின் தலைமை மக்களின் மன�ோநிலையை அறிந்து க�ொள்ளும் வித்தையைத் த�ொடர்ந்து கற்றுக்கொள்ள புது யுத்திகளைக் கையாள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். ச�ோசலிசத்தில் நவீனமயமாக்கலை - அதாவது சந்தைப் ப�ொருளாதாரத்தை எவ்வாறு உட்புகுத்துவது என்பதைத் மிகத் துல்லியமாகத் கணித்தவர் டெங்ஷிய�ோபிங். நாட்டின் அடிப்படைத் த�ொழிலான விவசாயத்தைப் பாதுகாத்துக் க�ொண்டே புதிய த�ொழில்நுட்பங்களை எந்த வகைகளில் அமல்படுத்தலாம் என்பதைச் ச�ொன்னவர் டெங். இத�ோ அவரின் தெளிவான பதிவுகளைப் பாருங்கள். "முதலாளித்துவத்தை நாங்கள் விரும்பவில்லை. ஏற்கவில்லை. ஆனால் ஒரு உண்மையை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆனால் ச�ோசலிசத்தின் கீழ் நாங்கள் ஏழைகளாக இருக்கவும் விரும்பவில்லை". மாவ�ோவின் ப�ொன்மொழிகளையே அவரும் பயன்படுத்துகிறார். நூறு பூக்கள் மலரட்டும்.. நூறு சிந்தனைகளை உள்வாங்க வேண்டும். டெங்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
ச�ொல்கிறார். "வெறும் வார்த்தைகளால் ச�ோசலிசத்தைக் கட்ட முடியாது. மக்கள் நம்பமாட்டார்கள்." இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் புரட்சி எனும் வார்த்தைக்கு பலர் ச�ொந்தம் க�ொண்டாடுகின்றனர். அனைத்திலும் புரட்சி எனும் அடைம�ொழியுடன் விளிக்கப்படுவதுடன் பணிகளில் கூட புரட்சி சேர்த்துக் க�ொள்ளப்படுகிறது. இத�ோ டெங்கின் வார்த்தைகளில் புரட்சியின் ப�ொருளைப் பார்ப்போம். "புரட்சி என்றால் வர்க்கப் ப�ோராட்டத்தை நடத்திச் செல்வது என்பது ப�ொருள். ஆனால் அவ்வளவு தான் ப�ொருளுண்டு என்பதல்ல..உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் ஒரு வகை புரட்சி தான்.- மிக முக்கியமான ஒன்று. வரலாற்று ரீதியான வளர்ச்சி எனும் கண்ணோட்டத்தில் அதுதான் மிகமிக அடிப்படையான புரட்சி." ஆஹா... என்ன அற்புதமான தத்துவ விளக்கம். இதையெல்லாம் படிக்கும்போது சமகாலத்தில் எப்படி ஒரு மக்கள் தலைவராக டெங்ஷிய�ோபிங் வாழ்ந்து மறைந்துள்ளார் என்பதைப் புரிந்து க�ொள்ள முடிகின்றது. தன் நாட்டின் உண்மை நிலையைப் பற்றி எவ்வாறு ச�ொல்கிறார் பாருங்கள். "ச�ோவியத் ரஷ்யா செய்ததைப்போல சீனா ஏனைய மூன்றாம் உலக நாடுகளுக்கு பெரிய அளவுக்கு உதவியதில்லை. எங்கள் நாடு நிலப்பரப்பில் மிகப் பெரியதாக இருந்தாலும் மிகவும் ஏழ்மையானது. தற்சமயம் உணவு, உடை பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம். மற்றவைகளை இன்னும் சீர் செய்ய வேண்டியுள்ளது. எங்கள் மக்களின் ச�ொந்த முயற்சியை நம்பியிருக்கிற�ோம்." ஆழமான ப�ொருள் ப�ொதிந்த வார்த்தைகள். இந்திய - சீன உறவுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அழுத்தமாக பதிவு செய்கிறார். இரு பெரும் நாடுகள் பல விதங்களில் ஒற்றுமை உள்ளது. மக்கட்தொகை, விவசாயம் சார்ந்த ப�ொருளாதாரம் எனும் பல அம்சங்களில் ஒத்து வரும். ஆக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் எழுகிறது என்று பதிவிடுகிறார். இப்படி பல பதிவுகள். இப்புத்தகம் பல புது அம்சங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அற்புதமான இப்புத்தகத்தை எளிய, தமிழில் அழகுற ம�ொழிபெயர்த்துக் க�ொடுத்திருக்கிறார். திரு மிலிட்டரி ப�ொன்னுசாமி. புத்தகத்தின் துவக்கத்தில் சில அச்சுப் பிழைகள் இருக்கின்றன. ப�ொருட்குற்றம் ஏதும் ஏற்படுத்தாததால் பிரச்சனை இல்லை, இருந்தப�ோதிலும் அடுத்த பதிப்பில் சரி செய்ய வேண்டும். அரசியல் புத்தகங்கள், அதிலும் நம் தமிழ் வ ா ச க ர்க ளு க் கு அ தி க ம் த ந் து வ ரு ம் ப ா ர தி புத்தகாலயத்தின் முயற்சிகள் த�ொடர வேண்டும்.
புதிய நூல்கள்
தட்டுப்படாத காலடிகள் | கமலாலயன்|பக்.152, ரூ.120. கலைஞன் பதிப்பகம் | சென்னை-17, 044 24345641
மார்க்சின் மூலதனம் ஒரு ப�ொறியாளனின் இன்றைய பார்வையில்... | பார்த்திபன் | பக். 224, ரூ.150| சேலம், ப�ோன்: 98429 74697. | வாசகன் பதிப்பகம்
தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் | விஸ்வேஸ்வரன், நேசன் பதிப்பகம் | சென்னை-31, | பக். 303, ரூ.350. அழுவாச்சி வருதுங் சாமி | வா.மு.க�ோமு |மணல் வீடு, சேலம் | ப�ோன்: 9894605371 | பக். 144, ரூ.110
ஏழரைப்பங்காளி வகையறா | எஸ்.அர்ஷியா எதிர் வெளியீடு | ப�ொள்ளாச்சி, ப�ோன்: 04259 226012, பக். 372, ரூ.300. தலித்தியம் | கே.பாலக�ோபால் | சிந்தன் புக்ஸ் க�ோபாலபுரம், சென்னை-86 | பக். 295, ரூ.200 ப�ோன்: 9445123164.
வால் | சபரிநாதன் | மணல்வீடு | பக். 167, ரூ.150 சேலம் மாவட்டம்-53 | ப�ோன்: 9894605371. பார்வையிழத்தலும் பார்த்தலும் | எஸ்.வி.ராஜதுரை, | பக். 417, ரூ.330
அடித்தள மக்கள் வரலாறு | ஆ.சிவசுப்பிரமணியன், பக். 308, ரூ.250
அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள் | யூமா வாசுகி பக். 352, ரூ.290
அரிவாள் ஜீவிதம் | யூமா வாசுகி | பக். 221, ரூ.180 (மேற்கண்ட நான்கு நூல்கள் வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை-98 |044 - 26241288 விடம்பனம், சீனிவாசன் - நடராசன், காலச்சுவடு விலை, 575, பக்கம் 600 ட்ரங்கு பெட்டிக் கதைகள் | விலை 150, பக்.175 நாவல் என்னும் பெருங்களம், காலச்சுவடு, விலை. 200, பக்கம். 300
நகலிசைக் கலைஞன், காலச்சுவடு, ரு.130, பக்.200
ஜென் சதை, ஜென் எலும்புகள், பால்ரெட்ஸ் நிய�ோசன் சென்ஸ்கி, தமிழில்-சேஷைய்யா ரவி அடையாளம் ரூ.160, திருக்குறள், உரை - மகுடேசுவரன், தமிழினி, ரூ.160, பலூடா | விடியல், ரூ.280, பக்.350 அறுவையில் பங்கு - பிரபு தமிழன்
ஐந்தவித்தான் - டிஸ்கவரி புக்ஸ், ரூ140, பக்.200
சட்டத்தால் யுத்தம் செய், ஆனந்தவிகடன், ரூ.110, பக்.200 மாண்புமிகு மண்.. பாமயன், வம்சி, ரூ.70. பக்.100
இந்துத்துவா இயக்க வரலாறு.. | ஆர்.முத்துக்குமா
ரூ.999, பக்.1100 மதுரையில் சமணம், முனைவர்.ச�ொ.சாந்தலிங்கம். கருத்துப்பட்டறை, ரூ.100, பக்.130 அறிவியல் பெண்கள், அடையாளம், ரூ.280, பக். 300
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
11
தமிழ்வாழ்வின் திணைப்புலத் த�ொடர்ச்சி - யவனிகா ஸ்ரீராம்
நீர்மையான பெண்ணியல்புகள் திண்மமாய்
க வி தை யி ல் வெ ளி ப்ப டு வ து , உ ல கை தன்வசமாய் எதிர்கொள்ளும்போது உண்டாகும் சலனங்களும், சுயதேர்வுகளுமாகிய அவர்களின் இன்றைய நவீன இருப்பைச் சுட்டுகிறது. ஒருகாலத்தில் ஆண்கள் எழுதிய மனம், தத்துவ விசாரம், அகம், புறம், தரிசன நிலை, ப�ோகம், சுயம், அந்நியமாதல், நி லை க ளு க் கு ப் பி ற கு , பெண்க ளி ன் கவிதையில் புறவயமனம் இயங்கும் ம�ொழிச் செயல்பாடு கவனிக்கத்தக்கதாகவே காலத்தில் தீவிரமடைவதைக் கவனிக்கலாம். இருப்பு, தனிமை, தேர்வு, சகவாசம், உரையாடல், தூரப்படுத்துதல் மேலும் காமத்தின் சுயேச்சைத் தன்மைகள்வழியே அறிவுபூர்வமாக தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் பெண்கவிகள், தங்கள் காதலின் முதல் இடத்தில், ஆண் என்ற பிம்பத்தை ம�ௌனமாக ஏற்றுக்கொள்வதிலிருந்து விலகி இயற்கை, பிரபஞ்சம் ப�ோன்றவற்றின் உறவினூடாக ஆண்களை தந்தைமை நண்பன், த�ோழன், அரசியல்பூர்வமான மன உயரமுள்ள துணை என அவனிடம் ஒரு பன்முகத்தன்மையை எதிர்கொள்வத�ோடு, அவனின் பழைய வளர்ப்புமுறை பெற்ற அதிகாரத்தையும் ஒரு முடிவுக்குக் க�ொண்டு வருகிறார்கள். மாறிவரும் நவீனச்சூழல் சரிபாதிப் பெண்களின் பங்கு பெற்றலை உள்வாங்கியே புதிய உலகைத் தகவமைத்துக் க�ொள்கிறது. இத்தனைக்கும் பெண்களின் ப�ோராட்டம், கால இலக்கியச் செயல்பாடுகள், அரசியல் ஈடுபாடுகள் ம�ொழிகுறித்த அழகியல் மற்றும் விஞ்ஞானப் பார்வைகள் அனைத்திலும் இயங்குவதன்வழியேதான் த ங ்களை தீ வி ர ம ா க இ டப்ப டு த் தி க ் க ொ ள ்ள முடிந்ததே தவிர, சலுகைககளால் அல்ல என்பதையும் புரிந்துக�ொள்ளவேண்டும். 'க�ோடை நகர்ந்த கதை' என விரியும் கனிம�ொழி. ஜி-யின் இரண்டாம் கவிதைத் த�ொகுப்பு கைக்கு வரும் முன், இணையதளங்களில், சிற்றிதழ்களில் அவரது கவிதைகளை வாசித்ததும், மதுரை புத்தகத் திருவிழாவில் சந்தித்துப் பேசியதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு நூற்றாண்டாக பெண் எழுத்தின் ப�ோராட்டச்சூழல் மற்றும் உளவியல், ப�ொருளியல், அரசியல் ப�ோன்றவற்றில் த�ொடங்கிவருவதை எப்போதும் ஒரு வாசகனாக வாசிப்பதில் ஆர்வமுடைய எனக்கு, உலகை தன்வயப்படுத்தும் பெண்மொழி சார்புநிலையில் அடிமை என்ன செய்யஇயலும்
12
தமிழ் சமூகம்
என்ற பச்சாதாபப் புலம்பல்வழியான எழுத்து என இரு வகைப்பாட்டையே அழகியல் மற்றும் அழகியல் மறுப்பு, ஆதிக்க எதிர்ப்பு என்ற தளத்தில் எடுத்துக்கொள்ளத் த�ோன்றுகிறது. கனி ம�ொழி.ஜி-யி டம் வேறு சி ல உள் ளீடுகள் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்வது த�ொடரலைகளால் பாதம் ம�ோதி தன்னையே ஒப்புவிக்கும் குளம்பற்றி கவனம் க�ொள்வதில்லை தூண்டில்காரனின் தேவைகள் சிறுமீன்களே - என்ற உருவக இடக்கரடக்கல் த�ொனியும், சிலுவைய�ோடு சேர்த்து ஆணியறைந்த துளைகளில் உதிரம் உறைந்தபின், மெல்ல… பின்முதுகுபற்றி நெளிந்தேறுகிறது சிறுஅரவமென ஒரு துர�ோகம் என்றும், ஆதிக்கத் துன்பச்சகிப்பின் வெறுப்பு மற்றும் ஆத்திரமும் தனிவகையில் நுட்பமானதுதான். இவ்விடத்தில்தான் கவிஞர் தன் ஆளுமையில் மிக முக்கியமானவராகிறார். பிறகும் கானகம், இயற்கையில் தனித்துலாவப் பெருவிருப்பம்கொள்ளும் பெண்மையின் கவிதையை, காலத்தின் கடைசி மந்திரம் எனும் கவிதையில், கனிம�ொழியும் எழுதிப் பார்க்கிறார். காடுக�ொண்ட புராதன தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களில் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் எனும் இனவிருத்தித் த�ொடர்பாட ல ்கள் இ ட ம ் பெற் று வ ரு வ து , அழகியலுக்கப்பால் அவர்களின் த�ொன்மம் என்பதும் மிக முக்கியமான புரிதல்தான். 'என்னைத்தவிர வேறு இயக்கமற்ற கானகம்' என்கிறார். கானகம், உடல் என்ற
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
தமிழ் சமூகத்தில் ப�ோலிகளைப் பகட்டு ஆரவாரத்துடன் க�ொண்டா டு வ து வ ழ க்க ம ா ன ஒ ன்றா கி வி ட ்ட து . இந்நிலையில் மெய்யான அக்கறையுடன், சமூகத் தளத்திலும் அறிவுத் தளம் மற்றும் கலை இலக்கியத் தளத்திலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கருமமே கண்ணாகச் சிலர் பணியாற்றி வருவது வியப்பான ஒன்று இத்தகையவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்துவது எதிர்கால ந�ோக்கில் அவசியமானது. இந்தப் பணியை ஒரு பள்ளியே இன்று முன்னெடுத்துள்ளது. அந்தப் பள்ளி சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி இதற்காக அப்பள்ளி அறிஞர் ப�ோற்றுவதும் அறிஞர் ப�ோற்றுதும் 2016 என்ற பெயரில் விழா எடுத்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகத்திற்கான முன் கூறலாகும்.
புனைவின் தினைச்சுட்டகங்கள் கவிதைகளாகின்றன. அலகேந்தும் இரைய�ோடு கூட்டுக்கு மீளும் பறவையிடம் எளிய வாழ்வைப் பயில முயல்கிறேன் எனும் கவிதையின் த�ொடர்ச்சியாக மகள�ோடு உறவாடும் கவிதையும், பெண் கலகங்களின் சிறப்பான தனிப்பாடலாக எடுத்துக்கொள்ளலாம். அருமையான கவிதைகள். காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு க�ோடை நகர்ந்த கதையைச் ச�ொல்லி நகர்கிறது என்ற இடம்தான், கனிம�ொழியின் பால்பேதமற்ற ஒருவேளை, இரண்டு த�ொகுப்புக்குமிடையே ஒளிரும் கீற்று எனலாம். மற்றபடி காதல் வரிகளும், கானல் வரிகளுமாய் நிரம்பியிருக்கும் கனிம�ொழி.ஜி-யின் இத்தொகுப்பு, ஆகிவந்த தமிழ்வாழ்வின் தினைப்புலத் த�ொடர்ச்சியும், நவீன பெண்வாழ்வின் சுயசேகரிப்புமாக ம�ொழியில் தன்னிச்சையாக உருவாகியிருக்கிறது. ஃபேண்டசியும், சில இடங்களில் கனவின் ஆழ் துயரமுமாகத் தென்படும் ‘ஆலிஸ் வ�ொண்டர்’ வகை பெண்ணியல்புகள், சிறுமியை இழக்காத பெண் விருப்பங்களைத் த�ொட்டுப்போகின்றன. சி ட் டு க் கு ரு வி பூ னை க் கு ட் டி ய ா கி ற து . இற்றுப்போதல், இரைதேடும் மிருகம், வலியின்
இந்த விழாவில் வாழ்நாள் ‘தமிழ்’ விருதை ம. இலெ தங்கப்பாவும் தமிழ் இலக்கிய விருதை ப�ொ.வேல்சாமி, டி. திலீப்குமார் டிராட்ஸ்கி மருதுவும் பெற்றார்கள். சமூக ந�ோக்கு விருதை பி.சுரேஷ் குமார், கீதாராமகிருஷ்ணன் பெறுகிறார்கள். நீதியரசர் கே.சந்துரு இவர்களுக்கு விருதை வழங்கி பாராட்டினார். படைப் பூக்க விருது கே. உதயசங்கர் எஸ்.தேன்மொழி, இரா. முருகவேள் ஆகிய�ோருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு நல்கை விருது ர�ோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் ஞாநி, த.மு.எ.ச. செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார்கள். இத்தகைய விழாக்கள் த�ொடர வேண்டும் ஒரு குடிமைச் சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் அடையாளம் இத்தகைய அசலான விழாக்களே.
நிறம், அப்போதெல்லாம், பெண் த�ொடர் இருள், நதியருந்தும் கடல், ஆட்டிடையன் அரசாங்கம் ப�ோன்ற சின்னஞ்சிறு கவிதைகள் அதன் மாற்றி ய�ோசிக்கும்முன் ப�ோன்றவை கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் சில, ஜென் சந்தர்ப்பங்களைக் க�ொண்டவை என்பது அருமையானது. தினவெழுச்சிக்கும், கவித்துவ வடிவத்துக்கும் இடையே ம�ொழிவளமும் இருப்பதை கவிதைகளில் உணரமுடிகிறது. அந்தவகையில் கிழக்கின் பெண் கவிதைகள் வரிசையில் கனிம�ொழி.ஜி. வரலாற்றுப் பார்வைய�ோடு இடம்பெறுகிறார். பாடுப�ொருள், உள்ளடக்கம், இறைச்சி, த�ொனி ப�ோன்றவற்றில் இருக்கும் ந�ொதிப்பு கைகூடிவர கனிம�ொழிக்கு சாதகம் இன்னும் அவசியம். பு க ா ர்க ள ற ்றவ ன் எ ன்ற க வி தை க் கு ம் , கடல்தேடும் மீன்கள் கவிதைக்கும் இடையே கவிஞரின் கவியாளுமை சிறப்பாக திறந்து இருக்கிறது. தணிக்கையும், ச�ொல்முறையும் தெரிந்திருக்கும் கவிஞர், தனக்கும் மற்றமைக்குமான பிரதிகளை ஆர்வமுடன் தந்திருக்கிறார். கவிதையின் குளக்கரையில் அவர் அமர்ந்திருக்கும் த�ோற்றம் அழகானதுப�ோலவே, உற்சாகமான நினைவலைகளும் நிரம்பும் உணlர்ச்சிகர இதயமும்கொண்ட கவிஞருக்கு என் அன்பு. எழுதி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
13
கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி
நின்றதுப�ோல் நின்றாய்... ச.தமிழ்ச்செல்வன்
ஒரு வலியைத் திரும்பத் திரும்பத் த�ொடும் வலியில் அப்படி என்ன சுகம்? உன் துருப்பிடித்த சைக்கிளின் செம்மண் தடங்களை தார்ச்சாலைகள்மூடிவிட்டன. நீ நடந்து சென்ற மார்கழியின் வீதிகளும் மாக்கோலமும் காலப்புழுதியில் கலைந்துவிட்டன. உன் நூலில் பறந்த ப�ொன்வண்டுகள் பெயர் தெரியா காட்டுக்குள் த�ொலைந்துப�ோன முற்பகலும் தூக்கம் இல்லா பின்னிரவும் மறந்ததா மடநெஞ்சம்? என் ப்ரிய நண்பா… பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புபவர்களிடம் ச�ொல்வதைப்போல ச�ொல்கிறேன்: திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து ப�ோ’ - நா.முத்துக்குமார் முத்துக்குமாரைப் புதைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் ப�ோக முடியவில்லை. ஏலகிரி மலையில் இன்சூரன்ஸ் ஊ ழி ய ர்க ளு க்கா ன ஓ ர் ப யி ல ர ங் கி ல் ந ா ன் பேசிக்கொண்டிருந்தப�ோது எங்கள் மகன் சித்தார்த்திடமிருந்து வந்த த�ொலைபேசிச் செய்தி முத்துக்குமாரின் முடிவைச் ச�ொன்னப�ோது நாவறட்சி ஏற்பட்டது. நம்பமுடியவில்லை. மனம் அப்படியே உறைந்ததுப�ோலானேன். சித்தார்த்துக்கும் முத்துக்குமாருக்கும் இடையிலான நட்பையும் 'சித்து…' என்று அழைக்கும் முத்துக்குமாரின் ஒற்றை வார்த்தைக்குள் உறைந்திருக்கும் அளவற்ற அன்பையும் நெருக்கத்தையும் பின்னாலிருந்து பார்த்துப் பெருமையுடன் என் கண்களைப் பலமுறை துடைத்திருக்கிறேன். அண்ணே.. என்கிற ஒரு விளிப்பில் மனதின் அத்தனை அன்பையும் க�ொட்டிவிட அவனால் எப்படி முடிகிறது என வியந்திருக்கிறேன். எங்கள�ோடு மட்டுமல்ல. எ ல ் ல ோ ரு ட னு ம் இ ப்ப டி ய ா ன ஒ ரு நெ ரு க்க மு ம் நெகிழ்ச்சியுமான உறவு க�ொண்டிருந்தவன் அன்புத்தம்பியும் த�ோழனுமான நா.முத்துக்குமார். "என் அப்பா ஒரு மூட்டைப் புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்று விடுவார்"
14
என்று அவனுடைய அப்பா அமரர் நாகராஜனைப்பற்றிக் கவிதை எழுதிய முத்துக்குமாரின் வெற்றிக்குப் பின்னால் அவனுடைய அப்பாவும் அப்பாவின் நினைவுகளுமே இருந்தன. ஒருமுறை முத்துக்குமாரை அவ்ருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தப�ோது அவருடைய அப்பாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட பெ ரி ய க ன த்த ந�ோட் டு ப் பு த்த க த்தை எ டு த் து க் காண்பித்தார். அப்பா எழுதி வைத்த கவிதை வரிகள், நாட்டுப்புறப் பாடல் வரிகள், அவருக்குப் பிடித்த பல எழுத்தாளர்களின் வார்த்தைகள் என ததும்பத் ததும்ப இருந்த அந்த ந�ோட்டுப்புத்தகம்தான் தன் பாடல்களுக்கெல்லாம் ஆதார சுருதி என்றார். அந்த ந�ோட்டுப்புத்தகத்தின் வழியே அவருடைய அப்பா அவர�ோடு அன்றாடம் உரையாடிக்கொண்டும் முதுகில் தட்டி உற்சாகப்படுத்திக்கொண்டும் இருந்தார். எல். கே.ஜி படிக்கும்போது அவருக்கு மதிய உணவாகக் கீரை சாதத்தைக் கட்டிக் க�ொடுத்துவிட்டு மாலை திரும்பி வரும்போது பிணமாகக் கிடந்த தன் தாயைப்பற்றி அவர் ச�ொல்லும்போது நமக்குக் கண்கள் கலங்கி விடும். "ஞாபக அடுக்குகளின் ஆழ் கிடங்கில் உனக்கும் எ ன க் கு ம ா ன ச ம ்பவ ங ்கள் ஒ ன் றி ர ண்டே மி ச்சம் உள்ளன. கலைடாஸ்கோப்பின் வளையல் சித்திரமாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்!" என்று தன் அம்மாவைப்பற்றி எழுதினார்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
'மரணவீட்டில் கீரையும் சாதமும்தான் ப�ோடுவார்களப்பா. உன் அம்மா அதனால்தான் உனக்கு அன்று கீரைசாதம் க�ொடுத்தனுப்பியிருக்கிறார்' என்று ச�ொன்னப�ோது 'அப்படியாண்ணே…' என்று இன்னும் ச�ோகம் கவிந்த முகத்துடன் என்னைப்பார்த்த அந்த முகம் இப்பவும் எ ன் நி னை வி ல் ப தி ந் தி ரு க் கி ற து . சி ன்ன வ ய சி ல் அம்மாவை இழந்த பிள்ளைகளின் முகத்தில் எப்பவும் ஓர் லேசான இருள் படிந்திருக்கும் என்பது என் சிறுவயது நம்பிக்கை. அந்த லேசான இருட்டை எப்போதும் நான் முத்துக்குமாரின் முகத்தில் பார்த்துக்கொண்டே இருந்தேன். கு.அழகிரிசாமியின் ’இருவர் கண்ட ஒரே கனவு’ கதையில் வரும் ஒரு குழந்தையைப்போலத்தான் நா.முத்துக்குமார் என்கிற தாயில்லாப்பிள்ளை வாழ்ந்திருக்கிறான். மகனுக்கு அப்பாவின் பெயரைச் சூட்டினான். தன் மகன், தன் அப்பாவைப்போலவே புத்தகப் பைத்தியமாக இருப்பதைப்பார்த்து "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்" என்கிற ம�ௌனியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறதாக எழுதினான். ஆனால் அம்மாவின் நிழலாக செல்ல மகள் பிறந்த சில மாதங்களில் அவளின் க�ொஞ்சு ம�ொழி கேட்குமுன்னே காலமாகி நிற்கிறான். க�ொடுமையடா இந்த வாழ்க்கை. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு கலை இரவில் மேடையில் முத்துக்குமாரை ஒரு நேர்காணல் செய்தேன். திரைப்படத்துறையில் பரவியிருக்கும் குடிக்கலாச்சாரம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன். 'எல்லாத்துறையினரும்தான் குடிக்கிறார்கள். சினிமாத்துறை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் துறை என்பதால் உங்களுக்கு அது பெரிசாகத் தெரிகிறது' என்றார். நீங்கள் யாருடைய வாரிசாக உணர்கிறீர்கள் கண்ணதாசனுக்கா பட்டுக்கோட்டைக்கா? என்று கேட்டேன். இருவரின் கால்தடத்திலும் நடக்கவே ஆசைப்படுகிறேன் என்று பதிலளித்தார்.பல்லாயிரக்கணக்கான இந்த மக்கள் முன்னால் நீங்கள் ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என்று பீடிகை ப�ோட்டு ச�ொன்னேன். நாளை நிச்சயம் நீங்கள் புகழின் உச்சிக்குச் செல்வீர்கள். அப்போதும் சரி எப்போதும் சரி பெண்களை வெறும் உடம்பாகச் சித்தரித்தோ தரம் குைறத்தோ எழுத மாட்டேன் உழைப்பாளி மக்களை ப�ோற்றியே எழுதுவேன் என்று இந்த மக்கள் மன்றத்தில் சத்தியம் செய்து தாருங்கள் என்றேன். அந்த மேடையில் என் கைகளில் அறைந்து ச�ொன்னான். "நான் என் தந்தையால் அப்படித்தான் வார்க்கப்பட்டிருக்கிறேன். இறுதிவரை அப்படித்தான் வாழ்வேன்". பின்னர் பல சமயங்களில் நான் இப்படி மேடையில் சத்தியம் வாங்கியதெல்லாம் ர�ொம்ப ஓவர் என்று உணர்ந்து கூச்சப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அந்தச் ச�ொல்படி கடைசிவரை வாழ்ந்து எழுதிச்சென்ற கவிஞனாகவே முத்துக்குமார் நிமிர்ந்து நிற்கிறார். அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை ஆனால் அது ஒரு குறையில்லை என்கிற த�ொனியில்தான் அவரது காதல் கவிதைகள்
அமைந்தன. இந்த எல்லையை அவரது வரிகள் மீறியதில்லை. என்னுடைய ’வெயில�ோடுப�ோய்’ கதையை சசி தி ரைப்பட ம ா க ஆ க் கி ய ப�ோ து அ ப்பட த் து க் கு ம் முத்துக்குமார் பாடல்கள் எழுதினார். அதில் 'ஆவாரம்பூ' எனத்தொடங்கும் பாடலை முதல் தடவை கேட்டப�ோது நான் உண்மையில் கதறி அழுதுவிட்டேன். என் கதையின் சாரத்தை, அதன் உணர்வை, உட்கிடக்கையை அப்படியே அப்பாடலில் க�ொண்டு வந்திருந்தார். அப்பாடலை முத்துக்குமார் ச�ொல்லச் ச�ொல்ல இயக்குநர் சசியும் மேசையில் தலை கவிழ்த்து அழுதுவிட்டார் அண்ணே என்று பின்னர் முத்துக்குமார் ச�ொன்னார். "ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு ச�ொந்த வேர�ோடு தான் க�ொண்ட காதலினை அது ச�ொல்லாமல் ப�ோனாலும் புரியாதா ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு" தமுஎகசவுடன் துவக்கம் முதல் இறுதிவரை நட்பும் த�ோழமையும் க�ொண்டிருந்தவர். மாநாடு மற்றும் நிகழ்வுகளுக்கு மகிழ்ச்சியுடன் நிதி நல்கை செய்து வந்தவர். அழைத்தப�ோதெல்லாம் நிகழ்வுகளில் வந்து கலந்துக�ொண்டு பங்காற்றியவர். பட்டாம்பூச்சிகள் விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, கண்பேசும் வார்த்தைகள் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களையும் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். சில மரணங்கள் நினைக்குந்தோறும் நம் மனதை உருக்குபவையாக மாறிவிடும். என் அம்மா, என் தங்கை, த�ொ.மு.சி ரகுநாதன்,சுந்தரராமசாமி என்கிற அந்த என் வரிசையில் இப்போது முத்துக்குமார். மரணம் இயற்கையானதுதான் என்கிற ப�ோதிலும் சில இழப்புகள் ஈடு செய்ய முடியாத பள்ளத்தை நம் மனங்களில் ஏற்படுத்தி விடுகின்றன. சாதாரணமாக என் மூன்றரை வயதுப் பேத்தி தமிழ்மதி எப்போதும் பாடும் ஒரு பாடல் இப்போது அவள் பாடும்போது அவள் குரலில் முத்துக்குமாரைக் கேட்கிறப�ோது மனம் கனத்துப் பெருமூச்சாய்க் கரைகிறேன். பேத்தி பாடிக்கொண்டிருக்கிறாள் இது பற்றி ஏதும் அறியாத குழந்தைமையுடன்… அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் ம�ௌனங்கள் அழகு நன்மைக்கு ச�ொல்லிடும் ப�ொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு கமதனிச ரிரிச கமதனிச கரிச
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
15
அஞ்சலி
மஹாஸ்வேதா தேவி
எல்லை தாண்டிய எழுத்து.... - சா. கந்தசாமி
2016, ஜூலை மாதத்தில் வங்க ம�ொழியில் நூறு நாவல்கள், இருபது சிறுகதைத் த�ொகுப்பு௧ள், ஏராளமான அரசியல், சமூக ஆதி பழங்குடி மக்கள் வதைப்படுவது பற்றியும் எழுதி உள்ள மகாஸ்வேதா தேவிதன் த�ொன்னூறாவது வயதில் காலமானார். அவர் எழுத்தின் அடிப்படை கள ஆய்வு. எழுதுவதற்கு முன்னால் அது சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அதன் வழியாகப் பெற்றவற்றைக் க�ொண்டு நாவல்கள் எழுதினார். ஒரு படைப்பிற்கு களஆய்வு அப்படி ய�ொன்றும் அவசியம் இல்லை. மனம் எழுத்தைத் தன்னளவிற்கு கள ஆய்வு செய்து க�ொண்டுவிடுகிறது. மேலும் கள ஆய்வு என்பது படைப்பைக் கட்டையாக்கி பரிணாமத்தைக் குறைத்து விடுகிறது என்று ச�ொல்லப்பட்டு வந்ததையெல்லாம் கவி மனம் க�ொண்ட மகாஸ்வேதா தேவி எழுதியே புறந்தள்ளினார். அவர் படைப்புக்களில் கவனம் பெற்றதும் இந்தியா முழுவதிலும் பல எழுத்தாளர்கள் கள ஆய்வு செய்து சிறுகதைகள், நாவல்கள் எழுதினார்கள். ஆனால் மகாஸ்வேதா தேவியின் படைப்பாளுமை இன்மையால் அவர் அடைந்த உச்சத்தை அடைய முடியவில்லை. அவர் வெற்றி வெறும் கள ஆய்வில்லை. அவரின் கவிமனத்தோடு கள ஆய்வு பிரிக்க முடியாத விதத்தில் இணைந்து சென்றது என்பதுதான். மகாஸ்வேதா தேவி வங்காளத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடக, சினிமா கலைஞர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். அவர் சித்தப்பா புகழ்பெற்ற
16
சினிமா இயக்குநர் ரித்விக் கட்டக். மகாஸ்வேதா தேவி ஆங்கில இலக்கியம் படித்தார். கல்லூரி ஒன்றில் பணியில் சேர்ந்து க�ொண்டார். நாடகாசிரியரைத் திருமணம் செய்து க�ொண்டார். ஆனால் குடும்பம், பணி என்று அவரால் சம்பிரதாய வாழ்க்கை வாழ முடியவில்லை. சமூகத்தின் அவலங்கள் அவரை பாடாகப்படுத்தின. ஒடுக்கப்பட்ட, வன வாழ் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுவதையும், வஞ்சிக்கப்படுவதையும் ஒரு படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் அசலாக எழுதுவது என்று முடிவு செய்து க�ொண்டார். அதற்காக அவர் நெடுந்தூரம் பயணித்தார். கள ஆய்வுகள் செய்தார். அவர் பிறப்பால் ஏழைய�ோ, பழங்குடி மகள�ோ இல்லை. ஒரு கலைஞர் என்ற முறையில் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களின் சார்பாக உண்மையாகவே எழுதினார். அவர் பெண், ஆனால் பெண்ணியவாதி இல்லை. முற்போக்கான எண்ணங்கள் க�ொண்டவர். கம்யூனிஸ்டு கட்சிய�ோடு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவர் கம்யூனிஸ்டு இல்லை. முரண்படவும் செய்தார். மனிதாபிமானம் என்பதுதான் அவர் எழுத்துக்களின் அடிநாதமாக இருந்தது. பேசத் தெரியாத மக்களின் குரலாகவும், எழுத முடியாதவர்கள் கையாகவும் இருந்து க�ொண்டு எழுதினார். அதுவே அவரை அசல் படைப்பு எழுத்தாளரின் முதல் வரிசைக்குக் க�ொண்டு வந்தது. இந்தியாவில் கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் வாழ்ந்த சுதந்திரமான மனப்போக்குக் க�ொண்ட ஆண்களையும்,
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
பெண்களை யு ம் புறவாழ்க்கையின் ஊடாக சுக வாழ்க்கை பற்றியும், பிரிட்டிஷ் அரசு அவர்களை அ ட க் கி ஒ டு க் கி ய து பற்றியும் தனித் தன்மை மிளிர எழுதினார். அதில் அரசுக்கு அடங்க மறுத்து கி ள ர் ச் சி செய்தவர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். 1 8 7 1 ஆ ம் ஆ ண் டி ல் இ ந் தி ய ா வை ஆ ண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ப�ோராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களை அடக்கி ஆள்வதற்கென்று குற்றப்பரம்பரைச் சட்டத்தைக் க�ொண்டு வந்தார்கள். க�ொள்ளைக்காரர்கள், க�ொலைகாரர்கள், வழிபறித் திருடர்களை அடக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய சட்டம் என்று ச�ொல்லப்பட்டாலும் அது பிறப்பு என்பதையே குற்றமாக்கும் சட்டம். ஐர�ோப்பாவில் ஜிப்ஸிகளையும், வட அமெரிக்காவில் செவ்விந்தியர்களையும் அடக்கிய ஒரு சட்டம். அதனை இந்தியாவிற்குக் க�ொண்டு வந்தார்கள். இந்தியா பெரும் நிலப்பரப்பையும், ஏராளமான மக்களையும் க�ொண்ட நாடாக இருந்த படியால், ஒவ்வொரு ராஜஸ்தானியும் சூழ்நிலைமைக்கு ஏற்ப குற்றப்பரம்பரைச் சட்டத்தை அமுல்படுத்திக் க�ொள்ளும் அதிகாரம் க�ொடுக்கப்பட்டது. இந்தியாவின் வடமேற்கு ராஜஸ்தானிகளில் வாழ்ந்த பல பழங்குடி மக்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் க�ொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்கள் வன உரிமைகள், வாழ்உரிமைகள் பறிக்கப்பட்டன. குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்றப்பரம்பரைச் சட்டத்தின் க�ோரமான பிடியில் சிக்கிக் க�ொண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பரிவுடன் மகாஸ்வேதா தேவி எழுதி பலரும் அறிய வைத்தார். குற்றப் பரம்பரையினர் பற்றி அதிகமாக எழுதியவரும் அவரே. மகாஸ்வேதா தேவி என்பது சமஸ்கிருதம். அதற்கு பெரிய காளி அம்மன் என்பது ப�ொருள். தமிழ்நாட்டு க�ோவில்களில் காளி அம்மனுக்கு வெளிபிரகாரத்தில் தான் இடம். திருவெண்காடு சிவன்கோவிலில் கருநிறம் க�ொண்ட காளி சிவப்புப் பட்டுடுத்தி நெற்றியில் செந்தூரம் வைத்துக் க�ொண்டு பெரிய விழிகளால் அகிலத்தை ரட்சித்துக் க�ொண்டிருக்கிறாள். மகாசுவேதா தேவி தன் படைப்புக்கள் வழியாக சமூகத்தின் மீது ஆட்சி புரிந்து க�ொண்டிருக்கிறார். ஒரு கலைப்படைப்பு என்பது தனிப்பட்ட கலைஞனின் ஆளுமையின் வெளிப்பாடு என்றாலும், அந்த ஆளுமையை உருவாக்குவதில் அரசியல், சமூகம், கலாசாரம், சித்தாந்தம் எல்லாம் காரணிகளாக அமைந்து விடுகின்றன. அதனை அறிந்து க�ொண்டுதான் எழுத வேண்டும் என்பதில்லை. சிலர் அறிந்து க�ொண்டும்; பலர் அறியாமலும் எழுதி இருக்கிறார்கள். எப்படி எழுதினாலும் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதுதான் முக்கியம். மகாஸ்வேதா தேவி அறிவால் அறிந்து இதயத்தால் ஈரம் சுரக்க எழுதியுள்ளார். அதன் காரணமாக பிறந்த இடம், எழுதிய ம�ொழி என்பதையெல்லாம் தாண்டி சர்வதேச படைப்பாளியாக இருக்கின்றார்.
வரபெற்றோம் சிறகடிக்க ஆசை (சிறுவர் கதைகள்) க�ொ.மா.க�ோ. இளங்கோ | பக்.128, ரூ.100. நூறு வடம�ொழிக் கதைகள் அலமேலுகிருஷ்ணன் | பக். 256, ரூ.150.
இந்திய இலக்கியச் சிற்பிகள் அமிருதலால் நாகர் | ஸ்ரீலால் சுக்லா | பக். 112, ரூ.50. சிட்டுக்குருவியைப் ப�ோலே... இரா. மீனாட்சி | பக்.160, ரூ.100.
இந்திய இலக்கியச் சிற்பிகள் தனுஷ்கோடி ராமசாமி | இரா. காமராசு பக். 128, ரூ.50.
மேரியன் மெடர்ன் (கவிதை மலரும் காலம்) இராம.குருநாதன் | பக். 160, ரூ.100.
MAKERS OF INDIAN LITERATURE Ka.Na.Su | Thanjai Prakash | Page.112, Rs.50. NEW DHARSHANS Ponneelan | Translated by. S.Nagarajan Page.936, Rs.555. SUBRAMANIA BHARATHI Dr. Sirpi Balasubramaniam | Page.635, Rs.950
(மேற்கண்ட 8 நூல்களும் சாகித்திய அகாதெமி வெளியீடு, தேனாம்பேட்டை, சென்னை - 18)
பெண்களும் நலவாழ்வும் மரு நா. ம�ோகன்தாஸ் | இமாலயா பதிப்பகம் தஞ்சாவூர் | ப�ோன்:04362-272755 | பக்.150 | ரூ.100. இங்கா (சிறார் பாடல்கள்) செந்தில்பாலா நறுமுகை, விழுப்புரம் மாவட்டம் ப�ோன்: 9486150013. பக். 32, ரூ.20
பெரியார் (வாழ்வின் வெளிச்சங்கள்) கி. வீரமணி | திராவிடர் கழக (இயக்க) வெளியீடு வேப்பேரி, சென்னை - 7 | ப�ோன்: 044 26618161. பக். 240, ரூ.150.
ஓயாப் படிப்பும் உறங்கா எழுத்தும் சி. ந. சந்திரசேகரன் | சித்து பிரிண்டர்ஸ் க�ோயம்புத்தூர் | ப�ோன்: 9842650626 | பக்.52, ரூ.30. சட்டக் கேள்விகள் 100 வழக்குரைஞர் வெ.குணசேகரன் | லாயர்ஸ் லைன் சட்டப் புத்தகப் பதிப்பாளர் | ப�ோன்: 9841607006 பக். 128, ரூ.150. ஜனுக்குட்டியின் பூனைக் கண்கள் கீதாபிரகாஷ் | அகநி வெளியீடு | வந்தவாசி. ப�ோன்: 9444360421, 9842637637 | பக்.64, ரூ.40.
அக வரிகள் முனைவர் என். மாதவன் | அகநி வெளியீடு| வந்தவாசி |94443 60421, 98426 37637 |பக்.64, ரூ.40.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
17
இரண்டு யுகங்களுக்கிடையில் - பாவண்ணன்
சுதந்திரத்துக்கு முந்தைய, கட்டப�ொம்முவின் காலத்துக்கும் முந்தைய எட்டயபுரம் சமஸ்தான அரசுக்குக் கட்டுப்பட்ட உருளைக்குடியைச் சேர்ந்த கண்மாய் படிப்படியாக அதன் மதிப்பை இழந்து, இறுதியில் மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் வறண்டு பராமரிக்கப்படாமல் முள்ளடர்ந்த காடாக மாறுவதுதான் இந்நாவலின் கதைக்களம். தம் வாழ்நாளில் அற உணர்ச்சியால் மட்டுமே வழிநடத்தப்பட்ட ஆறேழு நீர்ப்பாய்ச்சிகளைக் கண்ட கண்மாய் அற உணர்ச்சியே அற்ற மக்களாட்சிப் பிரதிநிதியின் நிர்வாகத்தின் சுயநலத்தால் ஒரே தலைமுறையில் அழிந்துப�ோகிறது. ஆட்சி செய்யும் ஒரு நிர்வாகம் அற உணர்வை கைவிடும்போது, இயற்கை நீர்நிலைகளைக் கைவிட்டுவிடுகிறது. இந்த நாவல் வழியாக சமஸ்தானத்து அரசின் காலத்திற்கு முன்பும் பின்பும் மக்களிடையே புழங்கிய நம்பிக்கைகளின் த�ொகுப்பை விரிவான சித்திரங்களாக வழங்குகிறார் ச�ோ.தருமன். 'ஊருக்கு ஒத்தக் கண்ணு. அரண்மனைக்கு ஆயிரம் கண்ணு' என்பது அவர்களிடையே வாழும் ச�ொலவடை. எங்கோ வெகுத�ொலைவில் இருக்கிற அரண்மனையின் கண்களுக்கு அஞ்சி, அதன் சட்டதிட்டங்களை மதித்து வாழ்கிறார்கள் மக்கள். அந்தக் காலகட்டத்தை சமூகவியலின் ச�ொற்களில் நிலப்பிரபுத்துவ காலகட்டம் என்று குறிப்பிடலாம். நி ல ப் பி ர பு த் து வ க ா ல க ட ்ட த் தி ல் கி ர ா ம ங ்கள் இயங்குவதற்கென குடிமக்களிடையே ஒரு சமூக ஒப்பந்தம் இருந்தது. குடியிருப்புகள், நிலங்கள், த�ோப்புகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள், க�ோவில்கள் ஆகியவை ஒவ்வொரு கிராமத்திலும் நிரம்பியிருந்தன. ஒ வ ் வொ ரு த�ொ ழி லை யு ம் ஒ ரு குடும்பம் செய்தது. மரவேலை செய்யும் ஆசாரி உழவர்களின் கருவிகளான ஏர்க்கலப்பைகளையும் க�ொழுவையும் சரிப்படுத்திக் க�ொடுத்தார். உலைக்களம் வை த் தி ரு க் கு ம் க�ொ ல ்லா ச ா ரி மண்வெட்டி, கடப்பாறை, கமலை ப�ோன்ற ம ற ்ற ப�ொ ரு ட ்களைச் சரிப்படுத்திக் க�ொடுத்தார். இப்படி உழவுத் த�ொழிலுக்குத் தேவையான உபத�ொழில்களைச் செய்ய, அந்தந்தத் த�ொழிலில் நிபுணத்துவம் பெற்ற பிற த�ொழிலாளர்களும் கிராமத்தில் நி றைந் தி ரு ந ்தார்கள் . நி ல த் தி ல் உழுது பயிரிடும் உரிமை ஒரு சில பிரிவினரிடமே இருந்தன. அவர்தம் நிலங்களில் அறுவடை செய்யும் விளைச்சலில் தம்மிடம் பணிபுரியும்
18
எல்லாத் த�ொழிலாளிகளுக்கும் பங்கு தர கடமைப்பட்டவர். த�ொழிலின் அடையாளமே சாதியாக மாறியபிறகு, எல்லா சாதியினரும் சேர்ந்து வாழ்கிற இடமாக கிராமம் இருந்தது. அது ஒரு சமூக ஒப்பந்தம். கிராமங்களில் அதுப�ோல பல ஒப்பந்தங்கள். இந்தச் சமூக ஒப்பந்தங்களை எவ்வகையிலும் மீறாதபடி நிர்வகிக்கும் ப�ொறுப்பை கிராமத்தில் தகுதி மிக்க ஒருவர் பார்த்துக்கொள்கிறார். எல்லாக் கிராமங்களையும் ஒன்றிணைத்த நிர்வாகம் அரசனின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. நிலப்பிரபுத்துவம் இயங்கும் விதத்தைச் சித்தரிக்கும் மேல�ோட்டமான ஓர் எளிய சித்திரம் இது. நாடு சுதந்திரம் பெற்று மக்களாட்சி மலர்ந்தப�ோது, நி ல ப் பி ர பு த் து வம் மு டி வு க் கு வ ந ்த து . ஆ ன ா ல் , நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் மறையவில்லை. ஒரு நாடு பல மாநிலங்களாகவும் பிறகு மாவட்டங்களாகவும் வட்டங்களாகவும் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதற்குத் தகுதியான உறுப்பினர்கள் ப�ொதுமக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அரசு நிர்வாகத்தில் பல படிநிலைகள் உருவாக்கப்பட்டன. பஞ்சாயத்துகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், சட்டசபை உறுப்பினர்கள், ப ா ர ா ளு ம ன்ற உ று ப் பி ன ர்கள் எ ன ப ல வி த ம ா ன ப�ொறுப்புகளும் பதவிகளும் உருவாக்கப்பட்டன. நிலப்பிரபுத்துவ நிர்வாகத்தைவிட மக்களாட்சி நிர்வாகம் தன்னளவில் பல மடங்கு ஆற்றல் மிக்க ஒன்றாகும். இப்போது நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தைவிட பல மடங்கு முன்னேற்றங்களை அது சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். ஆயினும் துரதிருஷ்டவசமாக அப்படி நிகழவில்லை. அதற்கு என்ன காரணம்? முறைசெய்து காப்பாற்றும் ப�ொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஏராளமான�ோர் நேர்மையாக இல்லை. பே ர ா சை யி லி ரு ந் து வி டு ப ட் டு நிற்கவேண்டிய அறத்துக்கு அவர்கள் க ட் டு ப்ப ட ்டவர்க ள ா க இ ல ்லை . முக்கியமாக நீதியுணர்ச்சி என்பதே இல்லை. இதன் விளைவாக, ப�ொதுச்சொத்துகள் தகுந்த பராமரிப்பின்றி பாழடைந்துப�ோக விடப்படுகின்றன. பிறகு மெல்ல மெல்ல சூறையாடப்படுகின்றன. சட்டத்தை வளை க் கு ம் ச க் தி உ ள ்ளவர்கள் த ம க் கு ச் ச ா த க ம ா க வளை த் து வெற் றி ய டை கி ற ா ர்கள் . வளைக்க வசதியில்லாதவர்கள் அடங்கி ஒடுங்கி வி ர க் தி யு ம் வெ று ப் பு ம் இணை ந ்த மனநிலையில் அமிழ்ந்திருக்கிறார்கள். என்ன குறை என்பது வெளிப்படையாகத்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
தெ ரி கி ற து . ஆ யி னு ம் அ ந ்த க் கு றை க ளு க் கு க் காரணமானவர்களே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றுகிறார்கள். மக்களாட்சிக்கு நாம் மாறி பல ஆண்டுகள் ஆனப�ோதும், நம் மனம் இன்னும் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்குரிய மதிப்பீடுகளிலேயே மூழ்கியிருக்கிறது. அவற்றைத் துறந்து புதிய மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதிலும் பின்பற்றுவதிலும் நாம் தயங்குகிற�ோம் அல்லது அஞ்சுகிற�ோம். வரலாற்றில் இருநூறு முன்னூறு ஆண்டுகளைத் த�ொகுத்தும் பகுத்தும் எழுதும் படைப்புகளுக்கு ’அன்றுமுதல் இன்றுவரை’ என்னும் வகையில் ஒரு ப�ொதுச்சட்டகம் உருவாகிவிடுகிறது. அந்த ’அன்று’ம் ’ இ ன் று ’ ம் நி ல ப் பி ர பு த் து வ க ா ல க ட ்ட த் தி லேயே இருக்கும்போது, படைப்பாக்கமாக அதை மாற்றுவதில் எவ்விதமான சிக்கலும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒரு க�ோவில் உருவான கதை, ஓர் ஏரி வெட்டப்பட்ட கதை, ஓர் ஊர் உருவான கதை, ஒரு துறைமுகம�ோ அல்லது சந்தைய�ோ உருவான கதை என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எல்லா உருவாக்கங்களுக்கும் பின்னாலும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் இருக்கும். அவற்றைப்பற்றிய பதிவுகள் ஏட்டில் காணப்படலாம் அல்லது மக்கள் நாவில் புழங்கும் பாடல்களிலும் கதைகளிலும் கூட காணப்படலாம். ஒரு நல்ல படைப்பாளி அவற்றைத் த�ொகுத்து, அவற்றின் மையத்தை தன் கற்பனையால் விரித்தெடுத்து, தன் பார்வைக்குரிய ஒரு க�ோணத்தை அதற்கு வழங்கி ஒரு புதிய வடிவத்தை வழங்கமுடியும். ச�ோ.தருமனின் நாவல் ‘சூல்’ ’அன்று’ த�ொடங்கி ’இன்று’ முடிவடையும் ஒரு படைப்பு. மானுட அற உணர்வின் காட்சிகளை அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றிலிருந்து அள்ளியெடுத்துத் த�ொகுத்து தன் படைப்பில் முன்வைத்திருக்கிறார் ச�ோ.தருமன்.
அய்யனார் க�ோவில் வாசலில் க�ோவில் பூசாரி அரண்மனை மண்வெட்டியை மடைக்குடும்பனிடம் க�ொடுப்பதிலிருந்து நாவல் த�ொடங்குகிறது. அந்தச் சடங்கின் மூலம் ஊர்ப் கண்மாயின் மேற்பார்வைப் ப�ொறுப்பை அவன் ஏற்றுக்கொள்கிறான். கண்மாய்க் கரையைப் பாதுகாத்தல், மதகுகளைப் பாதுகாத்தல், ஊரைச் சுற்றியுள்ள அனைத்து நன்செய் நிலங்களுக்கும் தண்ணீர் சென்று சேரும் வண்ணம் மதகைத் திறந்துவிடுதல், இரவும் பகலும் காவல் காத்தல், க�ோடையில் நீர் வற்றும் காலத்தில் கண்மாயில் நிறைந்திருக்கும் கரம்பை மண்ணை அகற்றுதல், மழைக்காலத்தில் நீர் நிரம்பும்வண்ணம் கரைகளை உயர்த்திக் கட்டி பாதுகாத்தல் என எண்ணற்ற ப�ொறுப்புகள் அவனிடம் வந்து சேர்கின்றன. அனைத்தையும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான் அவன். கரம்பை மண் அகற்றப்பட்ட கண்மாய் கருவுறக் காத்திருக்கும் புதுமணப்பெண்ணின் வயிறென திறந்திருக்கிறது. பருவ மழை ப�ொழியத் த�ொடங்கியதும் கண்மாய் மெல்ல மெல்ல நிரம்பத் த�ொடங்குகிறது. மதகுகள் வழியே
தண்ணீர் வெளியேறிவிடாமல் கதவுகளை அடைத்துவைத்து பாதுகாக்கிறான் நீர்ப்பாய்ச்சி. அல்லும் பகலும் பெய்த மழையால் கண்மாய் நிரம்பித் தளும்புகிறது. அதிகமான மழையால் அழிவு நேர்ந்துவிடக் கூடாது என்று அஞ்சி தெய்வத்திடம் க�ோரிக்கை வைத்து பூசை செய்து வழிபட்டு ‘ப�ோய் வா மழையே’ என அனுப்பி்வைக்கிறார்கள். அவர்கள் காணிக்கையாகச் செலுத்தும் மாவு காற்றில் மிதந்து மேகங்களைக் கலைத்து வேறு திசை ந�ோக்கிச் செலுத்தி ஊரைக் காப்பாற்றுகிறது. ஊராரின் க�ோரிக்கைக்கு தெய்வமும் தெய்வத்தின் நிபந்தனைகளுக்கு ஊராரும் கட்டுப்பட்டு ஒருவருக்கொருவர் காவலாகவும் துணையாகவும் விளங்குகிறார்கள். நி ல த்தை உ ழு து வி தைக்க வு ம் ந ா ற் று ந ட வு ம் முனைகிறார்கள் விவசாயிகள். கலப்பையைச் சரிசெய்யும் ஆசாரியின் வீடும் க�ொழுவைச் சரிசெய்யும் க�ொல்லரின் உலைக்களமும் விடிந்ததுமுதல் இரவு கவிவது வரைக்கும் ஓய்வின்றி இயங்கியபடியே இருக்கின்றன. விளைந்த விளைச்சலில் உழைத்தவர்களுக்குரிய பங்குகள், களத்தில் வைத்தே அளிக்கப்படுகின்றன. மடிகளிலும் கூடைகளிலும் சாக்குகளிலும் தமக்குரிய பங்கைப் பெறுபவர்கள் வழங்குபவர்களை வாழ்த்தியபடியே மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்கிறார்கள். கண்மாய் அனைவரையும் காக்கும் தெய்வமாக இருக்கிறது. கண்மாயைக் காக்கும் தெய்வமாக ஐயனார் கண்மாய்க்கு அருகிலேயே காவலுக்கு நிற்கிறார். கண்மாயைப்பற்றி மக்களிடம் ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை தெய்வத்துக்கு நிகராக மக்களிடம் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின்னாலும்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
19
நூல் வெளியீட்டு விழா ஓர் ஐதிகம் மறைந்திருக்கிறது. அதனால் கண்மாயைப்பற்றிச் ச�ொல்ல முனையும் நாவல் கண்மாயைப்பற்றியதும் கண்மாயைக் காக்கும் தெய்வங்களைப்பற்றியதுமான ஐதிகங்களில் இருந்து த�ொடங்குகிறது.
ஒரு நாள் மூன்று மடைகளில் இரண்டு மடைகளில் தண்ணீர் தடையின்றிச் செல்ல, நடுமடை அடைபட்டு விடுகிறது. கதவு திறக்கப்பட்டிருந்தும் தண்ணீர் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குச் செல்லவில்லை. செய்வதறியாமல் தவிக்கிறான் மடைக்குடும்பன் கருப்பன். அந்த மடைநீர்க் கால்வாய்க்காக காத்திருக்கும் கூட்டம் அவன்மீது ஆத்திரத்தில் பழி சுமத்துகிறது. மடைக்குரிய பராமரிப்புப் ப�ொறுப்பில் இருக்கும் அவனே ஏத�ோ செய்துவிட்டான் என்று குற்றம் சுமத்துகிறார்கள். பலவிதமான கம்பிகளின் கூட்டியக்கத்தால் ஆன மதகுக்குள் மூச்சடக்கி நுழைவது ஆபத்தான செயல் என்றாலும் தன் மீது ச�ொல்லப்பட்ட பழியின் வெப்பம் தாளாமல் கண்மாய்க்குள் இறங்கி தடை உருவானதற்கான காரணத்தை ஆய்வு செய்கிறான் கருப்பன். கரம்பை மண் எடுத்த சமயத்தில் யார�ோ வீசிவிட்டுப் ப�ோன ஆவரங்குழைக்கட்டு தன் தழைபாரத்தால் எப்படிய�ோ மூழ்கி நீருக்குள்ளேயே ஒதுங்கி ஒதுங்கிச் சென்று மடைவாயை அடைத்திருப்பதை அறிந்து விலக்கியெடுக்க முற்படுகிறான். நீரின் அழுத்தம் அவன் முயற்சிக்கு தடையாக இருக்கிறது. ஒரு வழியாக மூச்சை அடக்கி, தழைக்கட்டை அகற்றியெடுக்கும் கருப்பன் அதற்கும் மேல் மூச்சை அடக்கமுடியாமல் நீர்ப்போக்கின் வாயிலிருந்து ஒதுங்கிச் சென்று தழைக்கட்டை அணைத்த நிலையில் இறந்துப�ோகிறான். அடைபட்ட மதகிலிருந்து நீர் பெருகி வருவதைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், க ரு ப்ப னி ன் ம ர ண ம் ஆ ழ ்ந்த து க்க த் தி லு ம் கு ற ்ற உணர்ச்சியிலும் ஆழ்த்திவிடுகிறது. மடை காத்த கருப்பனை வழிபடும் தெய்வமாக்கி, அவனை ஐயனாருக்கு அருகில் நிற்கவைத்து வணங்கத் த�ொடங்குகிறார்கள். கண்மாயைச் சுற்றி இப்படி ஏராளமான நம்பிக்கைகள். எண்ணற்ற தெய்வங்கள். நட்பார்ந்த உறவுகள்.
ஒருமுறை க�ோட்டையை இழந்து தலைமறைவாக சுற்றித் திரிந்த கட்டப�ொம்மு க�ோல்வார்ப்பட்டிக்குச் செல்லும் வழியில் உருளைக்குடி கண்மாயை ஒட்டிய காட்டுக்குள் மறைந்து தங்கியிருக்கிறார். பனையேறி எலியன் பிச்சை ஆசாரியை அழைத்து வந்து தேவையான உதவியைச் செய்து கட்டப�ொம்மு தப்பித்துச் செல்ல உதவி செய்கிறான். கட்டப�ொம்மு ப�ோன பின்னர், தாம் செய்த உதவி ஊருக்கும் அரண்மனைக்கும் தெரிந்து துன்பத்துக்கு ஆளாகிவிடும�ோ என ஒவ்வொரு ந�ொடியும் இருவரும் செத்துச்செத்து பிழைக்கிறார்கள். அவர்களுடைய உதவியால் தப்பித்துச் சென்றாலும் ஆங்கிலேயர்களின் வலையில் கட்டப�ொம்மு சிக்கிவிடுகிறான். பிறகு கயத்தாறில் அவன் தூக்கிலிடப்படுகிறான். அவனையடுத்து ஊமைத்துரையும் கண்டுபிடிக்கப்பட்டு க�ொல்லப்படுகிறான். எ லி ய னு க் கு ம் ஆ ச ா ரி க் கு ம் க ட ்டப�ொம் மு க�ொடுத்தனுப்பிய அன்பளிப்புகள் க�ோல்வார்பட்டியைச்
20
சேர்ந்த ஒருவனால் க�ொண்டுவந்து தரப்படுகின்றன. இருபத்தைந்துவிதமான தங்கநகைகளைக் க�ொண்ட அந்தப் புதையலை அவர்கள் வீட்டுக்குள்ளேயே புதைத்துவைத்து காவல் காக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் ராஜதுர�ோகக் குற்றத்துக்கான தண்டனை அவர்களை நடுங்கவைக்கிறது. தமக்கென இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தம் வாரிசுகள் சுதந்திரமான தேசத்தில் எடுத்து அணிந்துக�ொள்வார்கள் என நினைத்து புதையலைக் காக்கிறார்கள். புதையலைத் தேடியெடுக்க முனையும் நாலாவது ஐந்தாவது தலைமுறையின் முயற்சிகள் த�ோல்வியில் முடிவடைகின்றன. கி ழ க் கி ந் தி ய க் க ம ் பெ னி யி ன் நி ர்வா க த் து க் கு க் கட்டுப்பட்டதாக சிறுகச்சிறுக எல்லா அரண்மனைகளும் மாறிவிடுகின்றன. ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அங்கங்கே ந டைபெ று கி ன்ற ன . அ னை த் து ம் மு ளை யி லேயே கிள்ளியெறியப்படுகின்றன. அல்லது வேறு வகைகளில் அடக்கப்படுகின்றன. வெள்ளைச்சாமித் தேவர் என்னும் பாஸ்கரதாஸ் பாடல்கள் வழியாக தேசபக்தியைப் பரப்புகிறார். வேலு முதலியாரும் வெயிலுகந்த முதலியாரும் கூட்டம் ப�ோட்டு மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டுகிறார்கள். அதனாலேயே சிறைக்குச் செல்கிறார்கள்.
சு த ந் தி ர ம் கி டைத்த பி ற கு ஆ ட் சி நி ர்வா க ம் கைமாறுகிறது. கிராம நிர்வாகத்துக்கு பஞ்சாயத்துகள் உருவாகின்றன. ஒற்றையடிப்பாதைக்கும் வண்டிப்பாதைக்கும் பதிலாக ஊர்களை இணைக்கும் விதமாக கார்கல் செல்லும் சாலைகள் ப�ோடப்படுகின்றன. அவற்றுக்காக சாலைய�ோரத்து மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றை வெட்டி ஒழுங்குபடுத்துவதற்காக ஒப்பந்தக்காரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். சுச்சி நாயக்கரிடம் எடுபிடியாக இ ரு ந ்த சி ன்னா த் து ரை ப ஞ ்சா ய த் து த்தலைவ ர ா க ப�ோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். நிழலுக்காக நின்றிருந்த மரங்கள் வெட்டப்பட்டு பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது. கண்மாயை தன் ப�ொறுப்பில் எடுத்துக்கொண்ட பஞ்சாயத்தால் அதை சரியான முறையில் நிர்வகிக்கத் தெரியவில்லை. ஒரு காலத்தில் ஒவ்வொரு க�ோடையிலும் கரம்பைமண்ணை அகற்றிச் சீர்செய்யப்பட்டு கருவுறுவதற்குக் காத்திருக்கும் புதுமணப்பெண்ணாகக் காட்சியளித்த கண்மாய் பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத மலட்டுப்பெண்ணாகக் காட்சியளிக்கிறது. சின்னாத்துரையின் மறைவைத் த�ொடர்ந்து ப�ோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மூக்கனின் நிர்வாகம் சின்னாத்துரையின் நிர்வாகத்தைவிடவும் தாழ்ந்த தரத்துடன் செயல்படுகிறது.
எங்கோ ஓர் ஐதிகத்திலிருந்து ஆரம்பிப்பதைப்போல நாவலை ஆரம்பிக்கிறார் ச�ோ.தருமன். எவ்விதமான விறுவிறுப்புக்கும் இடமின்றி, ஆர்வமூட்டுவதற்காக இணைக்கப்படும் செயற்கையான திருப்பங்களுக்கும் இடமின்றி மிகவும் ப�ொறுமையாக கதையைச் ச�ொல்கிறார். எங்கோ ஒரு பகுதியில் மக்கள் மனத்தில் காலம்காலமாக ஊறிக் கிடந்த நம்பிக்கையை அவர் முன்வைக்கும்போது,
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
அவற்றின்மீது நமக்கும் ஒருவித ஈர்ப்பும் நம்பிக்கையும் பிறந்துவிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இவ்விதமாக நம் நம்பிக்கையைப் பெற்றபடி, கதை மிகவும் நிதானமாகவே முன்னேறுகிறது. இந்த சாதாரணத்தன்மையையே ச�ோ.தருமன் தன் பலமாக மாற்றிக்கொள்கிறார்.
ஒரு கண்மாயின் வரலாறுதான் இந்த நாவல். வாசித்து முடித்த பிறகு, அன்று கடல்போல காட்சியளித்த கண்மாய் இன்று வறண்ட பூமியாய் பாளம்பாளமாக வெடித்துக் காணப்படும் நிலைமை ஏன் வந்தது என்பது ஒரு கேள்வியாக மனத்தில் எஞ்சி நிற்கிறது. அந்தக் கேள்வி அழுத்தம் திருத்தமாக எழும் வண்ணம் மிகவும் நம்பகத்தன்மைய�ோடு நாவலை எழுதியிருக்கிறார் ச�ோ.தருமன். அது மிகப்பெரிய வெற்றி. கண்மாய் என்பதை வெறும் நீர்நிலை என்று பார்க்காமல் மானுட வாழ்க்கையின் நெறிகளை தண்ணீரில் உறைந்து செயல்படுத்தும் தெய்வங்களின் உறைவிடம் என்றும் மானுட நம்பிக்கைகளின் களம் என்றும் பார்த்த காலம் இன்றில்லை. அது கடந்து ப�ோய்விட்டது. இது சுதந்திரமடைந்த நாடு. நவீன யுகம். நிரூபணங்களைக் கேட்கும் யுகம். கண்பார்வையில் படும் மதிப்பைக் கடந்து ஒரு ப�ொருளுக்கு எந்த மதிப்பும் இல்லை. அதன் ந�ோக்கில் ஒரு கண்மாய் என்பது மழைநீரைத் தேக்கிவைக்க உருவான ஒரு ஏற்பாடு மட்டுமே. அதற்கு மேல் அதற்கு பயன்மதிப்பு என எதுவும் இல்லை. பழைய யுகத்தில் அதற்கு இருந்த உயர்வும் மதிப்பும் இந்த யுகத்தில் சீர்குலைந்துவிட்டன.
இது ச�ோ.தருமனின் ஆதங்கம். அந்த ஆதங்கத்தையே குப்பாண்டிச்சாமியின் சாபங்களிலும் நீர்ப்பாய்ச்சியின் மனக்குமுறல்களிலும் நாம் காண்கிற�ோம். இருவருடைய குரல்கள் வழியாகவும் பேசுவது அவரே. குப்பாண்டிச்சாமி தன் மரணத்துக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவேண்டிய இடமென ஒரு சமாதி கட்டிக்கொண்டு, மரணத்துக்காகக் காத்திருக்கும் பற்றற்ற ஒரு ஆள். நீர்ப்பாய்ச்சிய�ோ ப�ொறுப்புகளைச் சுமந்துக�ொண்டு அல்லும்பகலும் கண்மாயைப் பாதுகாப்பவன். தனக்கென ஒரு துண்டு நி ல மி ல ்லா த வ ன் . இ வ் வி ரு வ ரு ம ்தா ன் க ண்மா யி ன் க�ோலம் கண்டு குமுறுகிறார்கள். கண்மாயின் நீரைப் பயன்படுத்தி காலமெல்லாம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நிலஉடமையாளர்களும் சம்சாரிகளும் மெளனமாக இருக்கிறார்கள். அந்த மெளனம் விசித்திரமாக இருக்கிறது. ஒரே ஒரு முறை க�ோபத்தோடு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கேள்விகேட்க ஒன்று சேர்ந்து ப�ோனத�ோடு சரி. அதற்குப் பிறகு அவர்கள் அந்த விவகாரத்தில் தலையிடவே இல்லை. ஒதுங்கி நிற்கிறார்கள். ஐதிகங்களை விவரித்தெழுதும்போது தருமனின் எழுத்தில் தென்படும் சமநிலை சமகால வரலாற்றை எழுதத் த�ொடங்கும்போது சற்றே நிலைகுலைந்துவிடுகிறது. இது நாவலின் ஒரு பகுதியைப் பலவீனமாக்கிவிடுகிறது.
சுதந்திரம் பெற்றதும் மழைவளத்துக்காக காடுகளை உருவாக்கவேண்டும் என்று நம்பிய அரசு ஆணைக்கிணங்க கிராம நிர்வாக அலுவலகம் எல்லா விவசாயிகளையும் வரவழைத்து ஆளுக்கு பத்து சீமைக்கருவேல விதைகளையும்
ஜிலேபி கெண்டைக் குஞ்சுகளையும் க�ொடுத்தனுப்பும் காட்சியும் முக்கியமானத�ொரு காட்சி. அப்போது அவர்களுக்கே அவற்றின் தீமைகள் தெரியவில்லை. ஈரப்பசையையே உணவாகக் க�ொண்டு அவ்விதை உயிர்கொண்டு வளர்கிறது. ஒரு பறவை கூட அண்டாத மரமாக வளர்ந்து ஓங்கி நிற்கிறது. இது ஒரு பக்கம். மறுபக்கத்தில் நீர்நிலைகளில் உள்ள அழுக்கை மட்டுமின்றி, பலவிதமான சின்னச்சின்ன மீன்களையும் உணவாக உட்கொண்டு ஜிலேபி கெண்டை மட்டுமே க�ொழுத்துத் திரியத் த�ொடங்குகின்றன. மக்களாட்சியில் உருவான பல நிர்வாக அமைப்புகள் ஜிலேபி கெண்டைகளாகவும் கருவேல மரங்களாகவும் மாறி தாம் நிற்கிற மண்ணையே சுரண்டுபவையாக மாறுவது என்பது ஒரு மாபெரும் வரலாற்று அவலம்.
ச�ோ.தருமன் இத்தகையத�ொரு அவலத்தையே இந்த நாவலில் சுட்டிக் காட்ட விரும்பியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் அதை அத்தகையத�ொரு எளிய வாய்ப்பாட்டுக் கணக்காக கட்டியெழுப்ப முடியாது என்பதும் உண்மை. இதிலிருந்து மீட்சியே இல்லையா என்றொரு பெருமூச்சு எழுவது இயல்புதான். மீட்சி இருக்கிறது என்பதே நாவல் விடுக்கும் செய்தி. அது நாவலுக்குள்ளேயே ஊடுபாவாக இருக்கிறது. நாவலுக்குள் க�ொப்புளாயியும் கீழ்நாட்டுக்குறிச்சி ஐயரும் வழங்கிய ஆல�ோசனைகளையே நமக்கு வழங்கப்பட்ட ஒரு மறைமுகமான ஆல�ோசனைகளாக எடுத்துக்கொண்டு, ஊரெங்கும் மரம் வளர்த்தும் குளம்வெட்டியும் தாகம் தணித்தும் வாழும் விழைவினால் நம் மனத்தைப் பண்படுத்த வேண்டும். அக்கணத்தில் கண்மாய�ோ அல்லது கண்மாயைப் ப�ோன்ற வேற�ொன்றோ சூல் பெறும்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலை ஒருகணம் நினைத்துப் பார்க்கலாம். அதுவும் மனிதமனத்தில் உறையும் தன்னலத்தால் விளையும் அழிவின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டிய நாவல். ச�ோ.தருமனின் நாவலில் நீர்ப்பாய்ச்சி. புளியமரமாக இருந்தாலும் சரி, கண்மாயாக இருந்தாலும் சரி எல்லாமே இலக்கியப்படைப்பில் ஒருவகையில் இந்த நாட்டையும் நாட்டின் பண்பையும் படிமமாகப் புனைந்து ச�ொல்ல உதவிய கருவிகளே. ஒரு புளிய மரத்தின் கதை வெளிவந்து ஐம்பதாண்டுகள் கழித்து சூல் நாவல் வெளிவந்திருக்கிறது. தன்னலத்தைத் துறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒன்றைத் தாண்டவில்லை என்பது சற்றே அவநம்பிக்கையை அளிக்கக்கூடும். அதற்கு மாறாக தன்னலத்துக்கு மாறான ஒரு தரப்பு ஒரே ஒரு எண்ணிக்கை என்ற அளவிலேனும் என்றென்றும் இந்த மண்ணில் ஒலித்தபடியிருக்கும் என அதை மாற்றி நினைத்துப் பார்த்தால் நம் மனம் விம்முவதை நம்மால் உணரமுடியும். இந்த மண்ணில் நன்மைக்கு அழிவே இல்லை என்னும் குரலுக்கான விதையும் உரமுமாக அந்த ஒற்றை எண்ணிக்கையை நினைத்துக்கொள்ளலாம். மக்களாட்சியில் சில நல்ல மாற்றங்கள் அப்படித்தான் மிகமிக நிதானமாகவே உருவாகிவரும்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
21
நூல் மதிப்புரை
'இரவு' சிறுகதைத் த�ொகுப்பை முன்வைத்து இரவு | கலைச்செல்வி | என்சிபிஹெச் | 044 - 26241288
கரன்கார்க்கி
வாழ்வின் அழகை. அதன் மகிழ்வை.. துள்ளல்
எள்ளலென மனிதத் துயரை, புழுக்கத்தை.. சக மனிதருடனான நுட்பமான உள்ளடக்கத்தை ஒரு கவிதையில�ோ புதினத்தில�ோ ச�ொல்வதை விட சிக்கலான ஒன்றாக சிறுகதையைக் கருத இடமுள்ளது. கருத்தும், அழகும் ம�ொழியுமென செறவாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னை தற்காத்துக் க�ொண்டு வீச்சோடு பாய வேண்டும் என்கிற கட்டுகள் நிறைந்த சிறுகதையில் நளினமாக - அதே நேரம் சுருக்கென தைக்கும் தையல் வித்தையை எழுத்தாளர் கலைச் செல்வி கற்றுத் தேர்ந்துள்ளார். இது அவரின் இரண்டாவது சிறுகதைத் த�ொகுப்பு. ‘‘சக்கை’’ என்ற புதினமும் எழுதியுள்ளார். இரவு என்கிற தலைப்பில் ம�ொத்தம் 15 கதைகள். அனைத்துமே வாசகரை உலுக்கியெடுக்கும் கதைகளாக இருக்கின்றன. பெண்ணின் அகத்தை... அவளின் சுயத்தை.. கருணையை வெடிப்பை.. தீர்மானமான பாய்ச்சலை.. நிறைவேறா காதலின் துயரை அவள் எப்படி சுமந்து கடக்கிறாள் என்பதை வாழ்வியல் காட்சிகள�ோடு, சூடு குறையாத அழகியல�ோடு வரைந்து காட்டியிருக்கிறார். கதாசிரியர் ஏன் எழுதுகிற�ோம். எதற்காக எழுதுகிற�ோம் என்கிற கூரிய தெளிவுடன் கதாபாத்திரங்களை நம்மோடு உரையாட விடுகிறார். பெண்ணின் விடுதலை, சுயமரியாதை உணர்வையும் அவர்களின் ஆழ்மன தகிப்பையும் அதன் உளவியல் வழி நின்று இந்த கதைகளை அழகுப்பட செதுக்கியிருக்கிறார். பெ ண் த ன் இ ரு ப்பை யு ம் சுதந்திரத்தையும் ஆளுமையையும் தக்க வைத்துக் க�ொண்டு, தேவையற்ற சமூக அச்சத்தைத் தூக்கியெறிந்து யதார்த்தத்தில் தனக்கும் மற்றவருக்கும் ப ய னு ள ்ள ஒ ன்றை தே ர் ந் து க் க�ொள்ளும் ஆளுமைமிக்க கதையாக ‘ ‘ ம ஞ் சு க் கு ட் டி ’ ’ . இ ந ்த க தை வாசிக்க வியப்பாக இருக்கிறது. இந்த த�ொகுப்பு மரணத்தையும் அதன் வலியையும் பேசும் அதே நேரம் இனம் புரியாதத�ொரு விடுதலையையும் உணர்வதாக பெண் மனம் ச�ொல்வதாக நு ட ்ப ம ா க ப தி கி ற து . க தை யி ன் ந�ோக்கத்தை துல்லியமான செறிவான வ ா ர்த்தை க ள ா ல் அ டை ய ா ள ம்
22
சிகரெட் பெட்டியை செல்ஃப�ோன் ஆக்கியவர்
அறிவியலைப் புரட்டிய புத்தகங்கள் - 2
ஆயிஷா இரா. நடராசன்
காட்டுகிறார். 'அப்பாவும் ம�ோட்டார்பைக்கும்' என்ற சிறுகதையில் ‘‘ஆமா.. ஒத்தப்புள்ள பெக்கறதுக்கே ஒங்கப்பனுக்கு ஒம்பாடு.. எம்பாடு.. ஆயி ப�ோச்சு.. எல்லாம் இந்த பைக்கு மாதிரிதான்..’’ இந்த ஒற்றை வார்த்தை உள்ளார்ந்த வலியை ச�ொல்கிறது. ஆழம் கதையில் வரும் கதாபாத்திரம் பேசும் அரசியல்.. தாய்மையின் துயர் மிக்க கதறல்.. அதனூடே அங்கு நடக்கும் அதிகாரம் செறிந்த உத்தரவுகள்.. அலட்சியங்கள் என மிக யதார்த்தம். தனது குழந்தை உயிர�ோடு கிடைக்காது என புரிந்த பிறகு அந்த தாய் அதிகாரிகளிடம் பேசும் யதார்த்தம் அருமையான பகுதி. அந்த தாயின் கதறல் கதையை கடந்த பிறகும் ஒலிக்கிற மாயத்தை ஆசிரியரால் நிகழ்த்த முடிகிறது. இதில் வரும் பெரும்பாலான கதைகள் முக்கியமான சிற்றிதழ்களில் வெளிவந்து கதைகளாகவும் சில ப�ோட் டி க ளி ல் ப ரி சு ப் பெ ற ்ற கதைகளாகவும் இருக்கின்றன. துயரை, ஏக்கத்தை, குமுறலை, வாழ்வை, யதார்த்தமும் அதன்மீதான புனைவும் சேர்த்து அதேநேரம் அழகியல�ோடும் கட்டுக்கோப்பான உயிர்ப்போடும் தனது படைப்பை செதுக்கியிருக்கிறார் எழுத்தாளர் கலைச் செல்வி.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
ஜெர்மன் தேசத்தை பூர்வீகமாக க�ொண்ட நிறையபேர் அமெரிக்காவில் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து கழித்த அதே உலகப் போர்களின் காலத்தில் நமக்கு அவ்வழி கிடைத்தவர் அறிவியல் புனை கதை வித்தகர் ராபர்ட் ஹைன்லீன் ஆயிரம் கண்டுபிடிப்புகளை அனுமானித்தவர் என்று ஹைன்லீன் ப�ோற்றப்படுவது மிகையல்ல. (Robert Heinlein) அவரது விண்வெளி காவல்வீரன் ந ா வ லி ன் மு த ல் அ த் தி ய ா ய த் தி ல் க த ா ந ா ய க ன் மாட்டாட்சன் தன் கைபர்ஸிலிருந்து ஒரு கையகல பார் சாக்லெட்டை எடுத்து தனது சகவீரன் ஜார்மனிடம் நீட்டுகிறான். விண் வாழ்வின் ஒரே உணவு ஜார்.. நீ பழகிக் க�ொள்ள வேண்டும் அப்போது கை பர்ஸ் இசைத்தது. அவசரமாக உள்ளேயிருந்து ‘சிகரெட் பெட்டி அளவிலான’ ஃப�ோனை எடுக்கிறான் டாட்சன். அதிலுள்ள பித்தானை அழுத்துகிறான். மறுமுனையில் அவனது விண் காவல்துறை தலைவர் பேசுகிறார். அவரது படம் அந்த ஃப�ோனில் தெரிகிறது. ஃப�ோனில் சார்ஜ் இறங்கிவிட்டது. சூரிய ஒளி தேடி ப�ோக வேண்டும். அவர்கள் அப்போது வெள்ளிக் கிரகத்தில் இருப்பார்கள். நாவல் எழுதப்பட்ட வருடம் 1948 என்றால் நம்புவது கஷ்டம். நாவல் கதை நடப்பதாக ச�ொல்லப்படும் வருடம் 2075. இன்றைய நவீன மனிதன் ப�ோலவே தனது ஸ்மார்ட் ஃப�ோனை பயன்படுத்துவதை அன்று 1948ல் தனது நாவலில் பதிவுசெய்கிறார். ஆனால் ம�ோட்டர�ோலா நிறுவனம் ஒரு செல் ஃப�ோனை 1983ல் அதாவது 35 வருடங்கள் கழித்து தான் அறிமுகம் செய்தது என்பது வரலாறு. ராபர்ட் ஹைன் லீனின் ஸ்பேஸ் கேடட் நாவல் அவரது 32 நாவல்களில் இரண்டாவது ஆகும். ஜெர்மனியில் ஒரு கணக்காயராக இருந்த ரெக்ஸ் ஹைன்லீன் மற்றும் அறிவியல் ஆசிரியை பாம் லைல் தம்பதியினரின் மூன்றாவது மகன் ராபர்ட் மிச�ோரியின் கன்சாஸ் நகரில் இளம் பருவத்தைக் கழித்தப�ோது அங்கே கலாச்சார ரீதியில் முரண்பாடுகளை சந்திக்கிறார். அதற்கு பிறகு வருகிறேன். எனக்கு பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது அ வ ர து ர ா க் கெட் ஷி ப் க லீ லி ய�ோ வ ா சி க்கக் கிடைத்தது. அது ஒரு பிற்கால பதிப்பு. அதாவது பிரபல கார்ட்டூன் நிபுணர் கிளிஃப�ோர்டு கியரி
அதை படக் கதையாக மாற்றியிருந்தார். நாங்கள் துணைக் க�ோள் (செயற்கைக�ோள்) காலத்தில் பிறந்து வளர்ந்த சந்ததி என்பதை ஞாபகப்படுத்த தேவை இல்லை. 1947ல் இன்னும் ஸ்புட்னிக் (ரஷ்ய செயற்கைக�ோள் - மனிதனின் முதல் முயற்சி) அனுப்ப பத்தாண்டு இருக்கும்போது ராக்கெட் ஷிப் கலீலிய�ோ எழுதப்பட்டது என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. 1970களின் இறுதிகாலம் அது. நான் ராக்கெட் யுகத்தின் அற்புத பட கதைகளில் ஒன்றாக நினைத்து அதை வாசித்தேன். வேற்று கிரஹம் சாஜேஸ்கிரகம்) ஒன்றில் நடக்கும் பிரமாண்ட ப�ோராட்டம் ஒன்றிற்கு ஆதரவாக புவியின் விடுதலை இயக்க மாணவர் குழு கலீலிய�ோவை உதவிக்கு அனுப்புவது தான் கதை. உலகெங்கும் வெகுண்டெழுந்த விடுதலை வேட்கையை அறிவியல் புனைகதையாக்கி ஹைன்லீன் அரசியலை அதில் குழைத்து அற்புதமாக பகடி ஆடியிருப்பார். பிற்காலத்தில் அவரது சிவப்புக் க�ோள் (Red Planet) அந்நிய நிலத்தில் ஒரு அந்நியன் (Stranger via strange land) நிலா ஒரு ஆத்திரக்கார துணைவி (The Moon is Harsh Mistress) ஆகிய அறிவியல் நாவல்களை நான் படித்தது உண்டு. சமீபத்தில் ஸ்டார் டிரெக் முழுத் த�ொடரையும் ஒரு ஆவணப் பட விவரணை
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
23
எ ழு த வ ே ண் டு த ல் ப�ோல உட்கார்ந்து பார்த்தப�ோது எனக்கு ஹைன் லீன் நியாபகம் த�ொற்றிக் க�ொண்டது. இ ந ்த ந வீ ன வி ண ் வெ ளி டி . வி . த�ொடர் கண்டிப்பாக அவரது ஸ்டார் ஷிப் ட்ரூப்பர்ஸ் (Star ship Troopers) கதையின் அ நி ய ா ய த ழு வல் என எந்த ரெக்கெட் முன்னும் எரிப�ொருள் அழுத்தி சத்தியம் செய்வேன். அவரது பெயர் ஸ்டார் டிரெக் த�ொடரில் எங்குமே குறிப்பிடப்படாதது பட்டவர்த்தனமான ஸைபர் கிரைம். எதிர்காலத்தைப் பற்றி தவறாக அனுமானித்தவர்களே அதிகம். விஞ்ஞானி லார்டு கெல்வின் 1895ல் தான் தலைவராக இருந்த லண்டன் ராயல் கல்வியாக கருத்தரங்கில் காற்றைவிட எடை மிகுந்த பறக்கும் கருவி என்பது சாத்தியமே இல்லாதது என பகர்ந்தது முதல் 1943ல் ஐ.பி.எம். சேர்மன் தாமஸ்வாட்சன் உலகில் இன்றைய சந்தை ஐந்து கம்ப்யூட்டர்களின் தேவை க�ொண்டது என த�ோன்றுகிறது என தன் அலுவலக வருடாந்திரக் கூட்டத்தில் ‘திருவாய்’ மலர்ந்ததுவரை இல்லை இதற்கு மேல் சாத்தியமில்லை என முட்டுக் கட்டை ப�ோடும் ப�ோக்கிற்கு நடுவில் இதெல்லாம் வரும் என காட்டியது அறிவியல் புனைகதை உலகம்தான். அதிலும் ஹைன்லீன் அறிமுகம் செய்த ஆயிரம் அறிவியல் விந்தைகளின் சமீபத்திய இரண்டு மூன்று ஆய்வு முயற்சிகள் நாம் அவரைக் கைவிடவில்லை என்பதை காட்டுகிறது. தனது 'அந்நிய நிலத்தில் ஒரு அந்நியன்' நாவலில் தாவரங்களின் உணவு தயாரிக்கும் ஒரு வினை ஊக்கியைப் பயன்படுத்தி பெரிய இயந்திரங்களை விண்வெளி காலனியில் இயக்குவார்கள். சிகாக்கோவின் கிலிய�ோனிஸ் பல்கலைகழக வேதியியலாளர்கள் லாரி குர்ட்டில் (Larry Curtiss) தலைமையில் இவ்விஷயத்தில் சென்ற மாதம் புதிய அறிவியல் விந்தையை உலகிற்கு அறிமுகம் செய்தார்கள். கார்பன் டைஆக்ஸைடு (கரியமிலவாயு) இன்று உலக அறிவியலில் வில்லனாக சித்தரிக்கப்படுகிறது. அதனை தாவரங்கள் தங்களது வினை ஊக்கிகள் (Catalytes) மூலம் உணவாக (energy) மாற்றுகின்றன. அதே வழியில் கார்பன்டை ஆக்ஸைடிலிருந்து எரிப�ொருள் தயாரிக்கும் முதல் படியை அவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? ஹைன்லீன் கனவு கண்ட தாவர எரிப�ொருள் வந்துவிட்டது என்றே த�ோன்றுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் ஒரு நாத்திகராக வாழ்ந்த ஹைன்லீன் மீது பல அவதூறுகளை பரப்பினார்கள். ஒரு தேர்ந்த ப�ொறியியலாளராக அவர் அமெரிக்க கப்பல் படையில் இணைந்து வான் அலை தகவல் த�ொடர்பு என
24
அயராது உழைத்த அவர் உலகின் முதல் ப�ோர் விமான தளகப் பல் (Air Graft Carrier) கட்டுமானத்தில் கண்டுபிடிப்பாளராக இணைந்தவர். ஆனால் பேரழிவு ஆயுதங்கள் குறித்த உலக எதிர்ப்புவாதிகள�ோடு வறுமை ஒழிப்பு இயக்கம் எனும் அரசியல் கூட்டமைப்பில் தன்னை இணைத்துக் க�ொண்ட ஹைன்லீன் இறுதிவரை ச�ோஷலிச ஆதரவாளராக இருந்தது அவரது பல கதைகளில் வெளிப்படுகிறது. ரெட் பிளானட் (Red planeT) உட்பட வளர் இளம் சிறார் (Juveniles) கதைகள் பலவற்றில் தனது அரசியலை விதைக்க அவர் தயங்கியதே இல்லை. செவ்வாய்க்கிரகவாசிகளின் த�ோழமை பற்றிய உருக்கமான பதிவுகள�ோடு மாணவர் எழுச்சி ப�ோராட்டம் என அவரது அறிவியல் புனைகதைகளில் த�ொடர்ந்து அரசியல் களம் மிளிர்ந்ததாலேயே அவருக்கு அமெரிக்காவில் கடும் விமர்சனமும் எதிர்ப்பும் எழுந்தது. பல கதைகளில் ‘முட்டாள்’ ஆசிரியர்களின் கடும் தவறுகளை குழந்தைகளின் அறிவியல் ஆற்றல் தீர்வுகண்டு நிலைமையைக் காப்பாற்றுவதும் சில தேர்ந்த அறிவியல் உண்மைகளை ஆதார கருவியாக க�ொண்டு ஊர்சிக்கல்கள் மூட நம்பிக்கைகளை மாணவர் நேரடியாக தலையிட்டு உண்மைநிலை விளக்குவது என ஹைன் லீன் கதைகள் பல தளங்களில் இயங்குகின்றன. அவரும் அவரது மனைவி இவரும் ப�ொறியியலாளர் விர்ஜீனியாவும் இணைந்து அறிவியல் இருப்பிடம் (Science Home) வாழ்வை எளிமையாக்க ஒரு வீடு எனும் வாசகத்தோடு வட்டவடிவில் கலிப�ோர்னியாவில் 1951ல் ஒரு வீட்டைக் கட்டினார்கள். வீட்டு முன் த�ோட்டத்தில் வட்டமாக சுழலும் கதவுகளை நீங்கள் கடக்கும்போது அது கூட மின்சாரம் தயாரிக்கும் என்பது த�ொடங்கி ம�ொத்தம் 170 விதவிதமான கண்டுபிடிப்புகள�ோடு அமைந்த அந்த வீடுப�ோல கட்டமைக்க சமீபத்தில் கெனடாவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வீட்டிற்கு அரசின் தயவே தேவையில்லை. மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு என யாவும் அந்த வீடே தயாரித்துக் க�ொள்ளும் பசுமைவாயுக்களை வெளியேற்றாது குப்பைகளைக் கூட மறுசுழற்சி செய்துக�ொள்ளும் கச்சிதம் நல்ல செய்தி. ஆனால் அவரது காலத்தில் பாலீதின் பை கிடையாது. அடுத்த வீட்டுக் குப்பை பறந்து வராது என்றாலும் நவீன பசுமை வீடுகள் அவரது பல கதைகளில் வருகின்றன. (The greenhills of Earth) புவியின் பசுமை மலைகள் 1950ல் எழுதப்பட்ட அறிவியல் கதை. ஹிர�ோஷிமா நாகசாகி பேரழிவை பார்வையிட வேற்றுலக வாசிகள் வந்திறங்கி மனித த லை ம ை க் கு ம் அ றி வி ய ல் உ ல கு க் கு ம் நி றை ய ‘ அ ட ்வை ஸ் ’ செ ய் து இ னி இ ப்ப டி ந ட ந ்தால் . . . ’ என எச்சரிக்கும்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
முடிவு... பனிப்போர் கால அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஐசக் அஸிம�ோவ், ஆர்தர் கிளார்க் ப�ோன்றவர்கள�ோடு மூன்று ஜாம்பவான்களில் ஒருவராக அறிவியல் புனைகதை உலகால் ஏற்கப்பட்டவர் ராபர்ட் ஹைன்லீன். 1965ல் மட்டும் உலகெங்கும் அவருக்கு ஒரு க�ோடி வாசகர்கள் (மாணவர்கள் உட்பட) இருந்தார்கள். விக்டர் ஹீக�ோ இலக்கிய விருது முதல் காரல்சாகன் விண் கதை விருது உட்பட பலவற்றின் ‘முதல்‘ விருதாளர். லைல் முன்ரோ, ஆன்சன் மெக்டொனால்டு காலெப்சான் டர்ஸ் என புனை பெயர்களிலும் அவர் எழுதினார். 1988ல் இறந்துப�ோகும்போது ம�ொத்தம் 136 நூல்களை படைத்திருந்தார். ஸ்பேஸ் கேடட் (Space cadet) நாவலுக்குத் திரும்புவ�ோம். பிரபஞ்சத்தின் உயிர்ப்புள்ள நமது சூரியக் குடும்பத்தில் கிரஹங்களுக்கு இடையிலான குற்றங்களை தடுக்க உருவாக்கப்படும் படையில் சேர மாட் டாட்சன் விண்ணப்பிக்க அதற்கான பயிற்சி, படையின் பல பிரிவுகள் என த�ொடங்கி விரியும் நாவலில் (அந்த 1948ல்) இரண்டு கருப்பின காவலர்கள் நான்கு பெண் வீரர்கள் என ஹைன்லீன் ஜனநாயக தன்மையை இணைத்துள்ளார். செல்ஃப�ோன், சைலன்சர் துப்பாக்கி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஸ்பேஸ் ஷிப் என இன்னமும் அப்போது மனித இனம் அறியாத பல கண்டுபிடிப்புகளை நாவல் முன்வைத்து அறிவியல் உலகையே உலுக்கியது. மாட் டாட்சனின் முதன்முதல் ரூம் மேட், ஜிரார்டு புரூக் செல்வந்த சீமானின்ளே மகன். செல்வந்த தந்தை ஸ்பேஸ் ஷிப் செய்யும் த�ொழிற்சாலை வை த் தி ரு ப்பவ ர் ந ா வ லி ல் ஜி ர ா ர் டு செ ய் யு ம் அராஜகங்கள் வெள்ளிக் கிரஹத்தின் மனித இனம் அறியாத ஒரு மூலையில் உலக பேரழிவு ஆயுதங்களை உருவாக்க அதை எரிகற்கள் (Asdteroid Belt) வட்டப் பாதையிலிருந்து கண்காணித்து சாட்சியங்களைத் திரட்டுவான் டாட்சன். வெள்ளியில் புவியிலிருந்து அடிமைகளாக பலரை அங்கே தென் துருவ காலனி அமைத்து க�ொத்தடிமைகளாக்கும் ஜிரார்டு புரூக் கைது செய்யப்படும் இடமும் அடிமைகளின் எழுச்சியும் அங்கே மலரும் ‘அனைவருக்குமான' ச�ோஷலிஸ அரசாங்கம் எனும் பதிவு அமெரிக்க மனித உரிமை இயக்கத்தால் (American civilright's Movement) பாராட்டப்பட்டது. ஹைன் லைன் படைப்புகளை வாசித்து வளர்ந்த ஹைன் லைன் சில்ரன் (Hei line children) எனும் விண்வெளி விஞ்ஞானிகளின் உலகளாவிய அமைப்பு எனும் விண்வெளி விஞ்ஞானிகளின் உலகளாவிய அமைப்பு செவ்வாய்க்கிரகத்தில் ஒரு பெருமலை பாறை பிராந்தியத்திற்கு ஹைன் லைன் கிரேட்டர் என பெயரிட்டாலும்.. உலகம் ஒவ்வொருமுறை கைபேசியை, செல்போனை பயன்படுத்தும்போதும் ஹைன்லைன் வாழ்கிறார் என்பதே உண்மை.
மக்கள் பாடகர் சங்கை திருவுடையான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் க�ோவிலில் கைநெசவுக் குடும்பத்தில் பிறந்து தனது குரலால், கருத்தாய்வு மிக்க பாடல்களால் தமிழகத்தின் முற்போக்கு மேடைகளுக்கு செறிவூட்டியவர் மக்கள் பாடகர் சங்கை திருவுடையான். கரிசல் குயில் இசைக் குழுவின் தபேலா கலைஞராக அறிமுகமானவர். பின்னாளில் தபேலா இசைத்துக் க�ொண்டே கணீர் குரலில் திருவுடையான பாடத் துவங்கினார். தமிழா, தமிழா நீ பேசுவது தமிழா இப்பவெல்லாம் எவன்டா சாதி பாக்குறான்னு அப்பாவி ப�ோலவே கேக்குறான்னு ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்த ப�ோல என பெண்ணுரிமை சமூகநீதி, ம�ொழிபற்று, தேசப்பற்று ஆகிய முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் பாடல்களை தமிழகமெங்கும் இசைத்து வந்தவர் மக்கள் கலைஞர் சங்கை திருவுடையான். சேலத்தில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் 29.08.2016 அன்று சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். கடந்த கால் நூற்றாண்டுகளாக தனது பாடல்களால், தபேலா இசையில் வசீகரித்த மக்கள் கலைஞர் சங்கை திருவுடையான் அவர்களுக்கு ‘‘புத்தகம் பேசுது’’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் க�ொள்கிறது.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
25
சாதி ஆணவத்திற்கெதிரான கண்டனக் குரல் ப�ொன்னீலன்
ரவீந்திர பாரதியின் 'கருக்கலில் முறிபடும் சிறகுகள்' என்னும் இரண்டாவது நாவல் காட்டாளியின் த�ொடர்ச்சி ப�ோலவே த�ோன்றுகிறது. காட்டாளியில் சலவைத் த�ொழிலாளிகள் அத்தொழிலில் ஈடுபடுபவர்களாகக் காட்டப்படுகிறார்கள். கருக்கலில் முறிபடும் சிறகுகள் நாவலில�ோ இவர்கள் பெருமளவுக்குத் தங்கள் த�ொழிலை விட்டு வெளியேறிச் ச�ொந்த விவசாயம் செய்பவர்களாக, அ த ா வ து ப ண்ணை ய ம் ப ண் ணு ப வர்க ள ா க க் காட்டப்படுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் பெருமளவுக்கு விவசாய பிரச்சினைகளே. ஆனாலும் விவசாயிகள். ஆனபிறகும் இவர்கள் அந்த சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தங்கள் சமுதாயத்தைக் கூட்டிக் கூட்டம் ப�ோட்டுப் பேசுகிறார்கள். இரண்டு கடமைகள் நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. முதல் கடமை க�ோயிலிலும் மற்ற சடங்குகளிலும் இச்சமூகத்தினர் தீவட்டிப்பிடிப்பது. இது காலங்காலமாக இவர்கள் சுமந்துவந்த ஒரு கடமை. விவசாயத்துக்குப் ப�ோனபிறகும் இந்தக் கடமையை இவர்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. க�ோயில்களிலும் இதர ஊர்வலங்களிலும் அவர்கள் தீவட்டி பிடிப்பதும், பெட்ரமாக்ஸ் விளக்கு புழக்கத்துக்கு வந்தபின், தீவட்டி பிடிப்பதைக் கைவிட்டுப் பெட்ரமாக்ஸ் விளக்கு சுமக்கும்படி இவர்களை நிர்ப்பந்திக்கிறது ஊர். இந்த புதிய சுமையை ஏற்றுக் க�ொள்ளவும் மறுக்கிறார்கள் இச்சமூகத்தினரில் சிலர். அடுத்த கடமை இவர்கள் மாலையில் வீடுவீடாக சென்று உணவு சேகரித்தல், இந்த வழக்கமும் இப்போது இவர்களுக்கு ஒவ்வாததாக மாறிவிடுகிறது. இதற்கும் மாற்றுவழி காணவேண்டுமென இம்மக்கள் விரும்புகிறார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவதற்காக இம்மக்கள் தங்கள் சமூகக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். வி ரி வ ா ன வி வ ா த ங ்கள் ந டைபெ று கி ன்ற ன . பெட்ரமாக்ஸ் விளக்கு சுமக்கமாட்டோம். பழைய வழக்கப்படி பந்தந்தான் பிடிப்போம் என்னும் கருத்து மேல�ோங்குகிறது. அதேப�ோல, வீட்டுக்கு வீடு சென்று மிச்ச உணவு வாங்கமாட்டோம். சமைக்காத உணவுப் ப�ொருட்களாய் அவர்கள் தந்துவிடட்டும், அவற்றைக் க�ொண்டு நாங்களே சமையல் செய்துவிடுவ�ோம் என்னும் கருத்தும் வலுப் பெறுகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் அந்தக் கூட்டம்
26
முறிபடும் சிறகுகள் | ரவீந்திரபாரதி | வெளியீடு: காவ்யா | விலை 180.00 ஒரே நிலையைக் க�ொள்ளவில்லை. ஆனாலும் உறைந்துகிடக்கும் சமூகத்தில் இது ஒரு புதிய அசைவை ஏற்படுத்துகிறது. இ வர்கள் வ ா ழு ம் கூ ட லூ ரு க் கு த் தூ ர த் து வலசூரிலிருந்து சற்று நாகரீகமான பார்வதி என்னும் பெண் திருமணமாகி வருகிறாள். கந்தையாவின் அந்த மனைவி பார்வதி ரவிக்கை அணிகிறவர். இது கடலூர் பெண்களுக்கு ஒரு வேசைத்தனமான காரியமாகத் தெரிகிறது. அருவருப்படைகிறார்கள் பெண்கள். வேசைகளே ரவிக்கை அணிவார்கள் என இழித்துப் பேசுகிறார்கள். இம்மாதிரி ஒரு சூழலில் ஊரில் ஒரு நாடகம் ப�ோடும் முயற்சியை மேற்கொள்கிறார்கள் இளைஞர்கள் நாடகத் தயாரிப்பு பல நாட்களாக கிராமத்தில் மும்முரமாக நடைபெறுகிறது. இந்த நாடகம் ஊரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய எண்ணங்களை கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. இச்சூழலில் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு ஓடித் திருமணம் செய்து க�ொண்டவர்கள். கணேசன், கல்யாணி செவத்தியான் லட்சுமி ஆகிய�ோர். அவர்கள் இருவருமே உயிருக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
செவத்தியான் லட்சுமி இணையினர் ஊரைவிட்டுப் ப�ோனாலும் அவர்கள் தூரத்தொலைவில் ப�ோய் கண்காணாத முறையில் வாழவில்லை. நகர்புறமே இம்மாதிரிக் காதலர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. அங்குதான் அவர்கள் சுயசாதி அடையாளங்களை இழந்து மனிதர்களாக வாழமுடியும். அப்படி வாழ்ந்திருந்தால் இவர்களுக்கு ஆபத்து நேர்ந்திருக்காது. ஆனால் சுயசாதியினர் கையில் மாட்டுமளவுக்கு இவர்கள் இருந்ததினால் க�ொலைசெய்யப்பட்டார்கள். கணேசன்-கல்யாணி குடும்பத்தினர�ோ, இவர்களுடைய சாதிய வட்டத்துக்கு வெளியே ப�ோய்த் தங்கள் த�ொழிலை மாற்றிக் க�ொண்டு, குப்பு பாட்டி என்னும் ஒரு ஆப்பம் சுடும் கிழவியின் அரவணைப்பில் பாதுகாப்புத் தேடிக் க�ொள்கிறார்கள். இவர்களைத் துப்பறிந்து வருகின்ற உறவினர்களிடம் கணேசன் கல்யாணியை ஒப்படைக்க குப்பு பாட்டி மறுத்து அந்த இணையினரைப் பாதுகாக்கிறார். நாவலில் வரும் இந்த குப்புப் பாட்டி மிக அருமையான பாத்திரம். நாவலுக்கு புதிய ஒளியை தருகிறவர் இவர். செவத்தியானும் லட்சுமியும் சலவைத் த�ொழிலாளர் சமூகத்தினராக இருந்தப�ோதும், செவத்தியான் அவர்களில் க�ொஞ்சம் தாழ்ந்தவன். இந்த முரண்பாடால் லட்சுமி க�ொலை செய்யப்படுகிறாள். மனதை நடுங்கவைக்கும் இந்த சம்பவத்தோடு நாவல் முடிவடைகிறது. நாவலில் காட்டப்படும் மக்கள் ப�ொதுவாகச் சண்டை சச்சரவை விரும்பாதவர்கள். நெருக்கடியான சூழல்களிலும் சமாதான வழிகளைத் தேடும் பண்புடையவர்களாகக் க ா ட ்டப்ப டு கி ற ா ர்கள் . இ ப்ப டி ப்ப ட ்டவர்களே சாதிக்கு இழுக்கு ஏற்படுகிறது என்று உணரும்போது க�ொலைக்காரர்களாக மாறிவிடுவது சாதியத்தின் நிதர்சனமான நிலை. இந்தியாவின் சாபக்கேடு இது. அண்மைக்காலங்களில் தருமபுரி, சேலம் முதலிய மாவட்டங்களில் சாதிமீறிக் கலப்புத் திருமணம் செய்துக�ொள்ளுகிற இளம்காதலர்கள் க�ொடூரமாகக் க�ொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் க�ொலைகள் க வு ர வ க் க�ொலை க ள் எ ன்ற பெ ய ரி ல் அ ந ்த மாவட்டங்களில் சாதிவெறி வன்முறையாளர்களால் த�ொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அறிவுக்கு முரணான முட்டாள்தனமான இந்த ப�ோக்கு அண்மைக் காலங்களில் ஏராளமான உயிர்களைப் பழிவாங்கி வருகிறது. இந்தப் ப�ோக்குக்கு எதிரான கண்டனக் குரலாக, இந்த மன�ோநிலையுடைய மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு அதிர்ச்சி மருத்துவமாக, இந்த நாவலின் முடிவு அமைந்திருக்கிறது. இம்மாதிரி ஒரு பிரச்சினையை, அதன் இன்றைய மு டி வை இ ல க் கி ய த் தி ல் ப தி வு செய ்வ த ற் கு நூலாசிரியருக்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். அண்மையில் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட துயரம் மறக்க இயலாதது. பெருமாள் முருகன் மட்டுமல்ல,
இன்னும் பல படைப்பாளிகளும் இம்மாதிரிச் சமூகச் சிக்கல்களை துணிந்து எழுதும்போது எதிர்ப்புக்கு உள்ளாகிறார்கள். ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழலில், மன வலிமைய�ோடு இத்தகைய சம்பவங்களை பதிவு செய்திருக்கும் நூலாசிரியர் ரவீந்திர பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆ சி ரி ய ரு டை ய ம�ொ ழி த ரு ம பு ரி , அ ரூ ர் வ ட ்டா ர ங ்க ளு க்கே உ ரி ய ம க்கள் ம�ொ ழி . வட்டாரத்துக்குரிய ச�ொற்கள், உவமைகள், பழம�ொழிகள், ச�ொலவடைகள் எல்லாவற்றையும் பக்கம்பக்கமாகக் க�ொட்டிவைத்து அழகுப்படுத்தியிருக்கிறார் ரவீந்திர பாரதி. பெரும்பாலும் பிற தமிழ்ச் சூழலுக்கு இது புதிய ம�ொழி. இந்த ம�ொழிக்குரிய இலக்கணம் எழுதப்பட வேண்டும். நாவலில் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் எழுத்து முறை முந்திய நாவலில் இருந்து மிகவும் மேம்பட்டது. ம�ொத்த நாவலும் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன. நாவலின் உட்பொருளை முன்பே தெரிந்து க�ொள்ளும் வாய்ப்புள்ள வாசகர்கள் இடைவெளிகளை நிரப்பி எளிதாக வாசித்து அனுபவிக்க முடியும். சாதிக் கட்டுமான இடைவெளிகளில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குப் புரிதலில் சற்று சிக்கல் ஏற்படுகிறது. ஆயினும், ம�ொழியின் ஆழமும், காட்சிப்படுத்தப்படும் முறையும் நாவலை வாசகர் புரிந்துக�ொள்ளப்பெரிதும் உதவுகிறது.
த�ொடரும் புத்தகத் திருவிழா 2016 செப்டம்பர் மதுரை செப்டம்பர் 2 முதல் 13 வரை உடுமலை செப்டம்பர் 17 முதல் 26 வரை கரூர் துத்துக்குடி 30 முதல் அக்டோபர் 9 வரை அக்டோபர்
ராமநாதபுரம் 28 முதல் நவம்பர் 6 வரை டிசம்பர்
திண்டுக்கல் 1 முதல் 11 வரை பாண்டிச்சேரி முதல் வாரம்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
27
நேர்காணல்
ஒரு
வரலாற்றாளராக இந்தியாவில் கல்விப்புலம் சார்ந்த வரலாற்றைப் ப�ொதுவெளிக்குக் க�ொண்டுவருவதில் நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள். அரசின் க�ொள்கைகளை மக்கள் புரிந்து க�ொள்ள ‘ப�ொதுவான அறிவுஜீவிகள்‘ உதவவேண்டும் என்ற உங்களது கருத்து மிகவும் கவனம் பெற்றது. அரசியலில் வரலாற்றை நன்முறையில் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும், ஒரு ஜனநாயக சமூகமாக, இந்தியா எந்த அளவிற்குப் புரிந்துக�ொண்டுள்ளது? வரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் ப�ோதுமான அளவில் இல்லை என்று முதலிலேயே ச�ொல்லிவிடுகிறேன். வரலாற்றை ஜனரஞ்சகமாக்கி, கல்விப்புலம்சார்ந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடும் ப�ோக்கு இருக்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரலாறு மாறுபட்ட ஒன்று என்பதைப் புரியவைப்பதே பெரிய ப�ோராட்டமாக இருக்கிறது. மக்களுக்கு தம் கடந்த காலம் பற்றித் தெரிய வைப்பது என்பதால் வெகுஜன வரலாறு (popular history) சரியானதுதான் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் ப�ோட்டுக் குழப்பிக் க�ொள்ளக் கூடாது. வெகுஜன வரலாறுகளுக்கும், கல்விப்புலம் சார்ந்த வரலாற்றிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. க�ொள்கை முடிவு செய்யக் கூடிய அதிகாரத்தில் இருப்பவர்கள�ோ, ப�ொதுமக்கள�ோ, இ ரு வ ரு மே ‘ ப�ொ து வ ா ன அ றி வு ஜீ வி க ளி ன் ‘ கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவது கிடையாது என்று நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். உண்மையில், அது திரிக்கப்பட்டத�ோ, புராணமயமாக்கப்பட்டத�ோ, துதிபாடுவத�ோ, ப�ோலி வரலாற�ோ, பயனற்றதைக் கிளறிவிடுவத�ோ, எதுவாக இருந்தாலும், சரி, ப�ொது வெளியில் விவாதங்களை நியாயப்படுத்த வரலாற்றை சு தந் தி ர ம ா க ப் ப ய ன ்ப டு த் து கி றார்க ள் . இ தற் கு த�ொழில்முறை வரலாற்றாளர்களின் அறிவுச் செருக்குதான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ந ா ன் ச ற் று ப் பி ன்னால் செ ன் று இ து ப ற் றி விளக்குகிறேன். எல்லா தேசியவாதங்களிலும் வரலாறு ஒரு மையமான பாத்திரம் வகித்துள்ளது. ஒரு விதத்தில், கடந்த காலம் காட்டப்பட்ட விதத்திலிருந்துதான் தே சி ய வ ா த ம் த ன க்கா ன அ டை ய ா ள த்தை ப் பெறுகிறது. கடந்தகாலத்தைக் கட்டமைக்கும் செ ய லி ல் , க ல் வி ப் பு ல ம் ச ா ர ா த வ ர ல ா ற ா க , கடந்த காலம் வேண்டுமென்றே மாற்றப்படலாம், திரிக்கப்படலாம், தவறாகக் கூறப்படலாம். எனவே, வரலாற்றை எழுதும் அரசியல்வாதிகள் கடந்தகாலத்தை வரலாற்றாளர்கள்போல் பார்ப்பதில்லை. தமக்குத் தேவையான தத்துவார்த்த அடிப்படையில் அதை வளைப்பார்கள். அங்கேயே ஒரு தெளிவான வேறுபாடு வந்து விடுகிறது. மேலும், வரலாறு எழுதுதல் பற்றிய காலனியப் பார்வையையும் நாம் புரிந்துக�ொள்ள வேண்டும். அவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை
28
பின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன! - ர�ொமிலா தாப்பர்
சந்திப்பு: பயாப்தி சுர், கனாட் சின்ஹா
தமிழில்: ச.சுப்பாராவ்
எடுத்துப் படித்துவிட்டு, அதன் தகவல்களை நடந்த நிகழ்வுகளாகச் ச�ொல்லி விடுவார்கள். 1950களில் இது ப�ோன்ற எழுத்துக்கள் கேள்விக்குள்ளாகின. வரலாறு மாற ஆரம்பித்தது. அது இந்தியவியலின் (Indology) ஒரு பகுதியாக இருப்பது மாறியது. கடந்தகாலம் பற்றிய காலனியப் பார்வை பற்றி ஏராளமான கேள்விகளை எழுப்பியது. விரைவில் அது சமூக அறிவியலின் ஒரு பகுதியாக மாறியது. சமூகவியல், ப�ொருளாதாரம், மானுடவியல், த�ொல்லியல் ப�ோன்ற மற்ற சமூக அறிவியல் துறைகளுடன் உறவாட ஆரம்பித்தது. காலப்போக்கில், வரலாறு ஒரு ஆய்வு முறையாக மாறியது. அதுதான் இன்றைய கல்விப்புல வரலாற்றின் அடிப்படையாக இருக்கிறது. இப்போது ஒரு செயல்முறை உள்ளது. வெகுஜன வரலாற்றுக்கு அந்த முறை பற்றி எதுவும் தெரியாது. இந்த செயல்முறைய�ோ, வரலாற்றாளர்கள் எழுப்பும் கேள்விகள�ோ வெகுஜனக் கருத்திற்குப் புரியாமல் ப�ோகும்போதுதான் பிரச்சனை எழுகிறது. ப�ொதுவாக மக்களைப் ப�ொருத்தவரை, வரலாறு என்றால், சில தேதிகள் குறிப்பிடப்படும், கடந்தகாலத்தைப் பற்றிய சில தகவல்கள் என்பதாகவே இருக்கிறது. எனவே, வரலாற்றை வெகுமக்கள் புரிந்துக�ொள்வதற்கும், வரலாற்றாளர்கள் புரிந்து க�ொள்வதற்கும் இடையில் பெரிய இடைவெளி, ஒரு தவறான இடைவெளி இருக்கிறது. நீங்கள் வரலாறு பற்றி மக்களிடம் பேசும்போது. அவர்கள் அதன் மையமான சிந்தனையைக் கவனிக்காமல், அதை வெறும் தகவல்களின் த�ொகுப்பாகப் பார்க்கும்போது மிகவும் வெறுப்பாக இருக்கும், இல்லையா? ஆம். ஒரு வரலாற்றுத் தகவல் ஒரு வரலாற்றுத் தகவல் மட்டுமே. பிறகு எதற்கு பல்வேறு விளக்கங்கள் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று மக்கள் என்னிடம் மிக சாதாரணமாகக் கேட்பார்கள். எவையெல்லாம் வரலாற்றுத் தகவல்கள், அவை எப்படி ஆராயப்பட்டன, என்று புரிந்துக�ொள்வது மக்களுக்குப் பெரும்பாலும் மிகவும் கடினமாகவே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் இந்தப் புலத்தில் பயன்படுத்தப்படும் செயல்முறைகளில் அக்கறை காட்டுவதில்லை. இது ப�ோன்ற கேள்விகளை மக்கள் விஞ்ஞானிகளிடம் கேட்பதில்லை. ஏனெனில், அவர்களுக்கு அறிவுப்புலம் புரியாதது. அவர்கள் விஞ்ஞான அறிவு காலத்திற்கு ஏற்றபடி மாறிக் க�ொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ப�ொருளாதார அறிஞர்களிடமும் அவர்கள் இவ்வாறு
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
கேட்பதில்லை. காரணம், அவர்களுக்கு ப�ொருளாதாரம் புரியாது. சமூகவியல் பற்றிக் கூட அவர்களுக்கு சற்று தயக்கம்தான். ஆனால், வரலாறு மக்களின் அடையாளங்கள் த�ொடர்பானது, அவர்களது கடந்த காலம் த�ொடர்பானது, அதை அவர்கள் விரும்பும் வண்ணம் மாற்றமுடியும் என்பதால், அவர்களுக்கு எளியதாகத் தெரிகிறது. அப்படியானால், இதற்குத் தீர்வுதான் என்ன? பள்ளிகளில் வரலாற்றை முறையாகக் கற்றுத் தருவதன் மூலம், இந்தப் பிரச்சனையை ஓரளவு தீர்க்க முயலலாம் என்ற நான் நினைக்கிறேன். நல்ல மதிப்பெண் பெறுவதற்காக, தகவல்களை அப்படியே திருப்பிச் ச�ொல்லவே குழந்தைகள் பழக்கப் படுத்தப் படுகிறார்கள். இது கிட்டத்தட்ட மதக் கல்வி ப�ோன்றதுதான். கேள்விகளும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும். பதில்களும் கூட தெரியும். ச�ொல்லித் தருவது எல்லாம் குப்பை என்று நான் ச�ொல்ல வரவில்லை. அறிவு விரிவடைந்து, மேலும் பல கேள்விகள் கேட்கப்படும் வகையில் ஒரு ஆக்கபூர்வமான வகையில் அறிவைக் கேள்வி கேட்கும் வகையில் கற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உயிரற்ற அறிவைத்தான் ச�ொல்லித் தருகிறீர்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்து மற்றும் முஸ்லிம் தேசியவாதத்தை எடுத்துக் க�ொள்ளுங்கள். அவர்களது ந�ோக்கம் அறிவைக் கேள்விக்குள்ளாக்குவது அல்ல. உங்களுக்கு விடைகள் தரப்பட்டு விடுகின்றன. அவற்றை நீங்கள் ஏற்றுத் தான் ஆகவேண்டும். மதரஸாவின் (முஸ்லிம் பள்ளிக்கூடம்) பாடத்திட்டமும், சிசு மந்திரின் (இந்து பள்ளிக்கூடம்) பாடத்திட்டமும் மாணவர்கள் அறிவைக் கேள்விகேட்பதைத் தடுக்கின்றன. இது சரி செய்யப் படாதவரையில், ப�ொதுமக்கள் கருத்து திரும்பத் திரும்பக் கூறப்படும் தகவலின் அடிப்படையில்தான் இருக்கும். அது கேள்வி கேட்கப்படாமல் த�ொடரும். நீங்கள் குறிப்பிட்ட இந்து, முஸ்லிம் தேசியவாதங்கள் பற்றி. இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவது குறித்து சர்வதேச அளவில் செய்திகள் அடிபடுகின்றன. இ து எ ல்லா இ டங்க ளி லு ம் இ ரு க்க க் கூ டி ய ‘இஸ்லாம�ோஃப�ோபியா‘தான், இந்தியாவிற்கு மட்டுமான பிரச்சனை அல்ல என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆம். முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் என்று பார்க்காமல், உலக அளவில் என்ன நடக்கிறது என்ற வகையில் ஆராய வேண்டும். நாடுகள் ஏற்றுள்ள தத்துவம் என்ன? உலகப் ப�ொருளாதாரம் என்ன செய்கிறது? இதன் ஆரம்பம் வரலாற்றில் இருக்கிறது என்று ஒருவர் உறுதியாகக் கூற முடியும். ஐர�ோப்பாவில் இஸ்லாமியருக்கு எதிரான உணர்வுகள் புனிதப் ப�ோர்களில் ஆரம்பித்தன என்பதை மறந்து விடக்கூடாது. சமீபத்திய ஆய்வுகள் அவற்றில் மதத்திற்கு அதிக பங்கு இல்லை என்றும், வர்த்தகம், லாபத்திற்கான ப�ோட்டிதான் முக்கிய காரணம் என்று காட்டியுள்ளன. இந்த ம�ோதல்களில் சில அம்சங்கள் அழுத்தம் பெற்று, மக்களின் நினைவில் ஆழப்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
29
பதிந்துவிடும்போதுதான் சிக்கல் வருகிறது. இதில் இருந்த மதரீதியான காரணம் இன்று பரவலாக இருக்கக்கூடிய இஸ்லாம�ோஃப�ோபியாவைத் தூண்டிவிட்டுவிட்டது. நமது காலத்தில் நடந்த ஈராக் ப�ோர், சூழலை மேலும் ம�ோசமாக்கிவிட்டது. இன்றைய ஐர�ோப்பியஅமெரிக்க அரசியலும், இஸ்லாமிய நாடுகளுடனான அவர்களது உறவும் இந்த ஃப�ோபியா அதிகரிக்கக் காரணமாக உள்ளன. இந்த இஸ்லாம�ோஃப�ோபியாவை அதிகரிக்கும் ஒரு அரசியல், ப�ொருளாதார யதார்த்தமும் ஒன்று இருக்கிறது. எனவே, இவற்றை ஒருவர் மதங்கள் ஒன்றோட�ொன்று ம�ோதுவதாக மட்டுமே பார்க்கக் கூடாது. உண்மையில் அது யதார்த்தங்களின் ம�ோதல். சில நாடுகள் தாம் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அவற்றிற்கு அண்டை நாடுகளுடன் பிரச்சனைகள் வருகின்றன. எனவே, இன்று உலகில் உள்ள அச்சங்கள் குறித்து நாம் ய�ோசித்தால், அதை மதம் குறித்த அச்சங்களாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாம�ோஃப�ோபியாவை நீட்டிக்கச் செய்யும் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எங்களில் ஒருவர் நெதர்லாந்தில் பணிசெய்பவர். அது சகிப்புத் தன்மை உள்ள நாடு என்ற பெருமை உடையது. அது இந்தியாவில் ச�ொல்லப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுப�ோன்ற தேசியவாதச் செய்தியை ஒத்தது. சகிப்புத் தன்மை என்றால் என்ன? அப்படி ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது ப�ோன்ற கேள்விகளையெல்லாம் இது ப�ோன்ற விவாதங்கள் எழுப்புகின்றன. வேற்றுமை என்பது இயல்பானது, ஒரு வழிமுறையாக ஏற்கத்தக்கது என்ற நிலையில், சகிப்பின்மை பற்றி ப�ோதிப்பது முரணில்லையா? அந்த வகையில், சகிப்புத்தன்மை என்பது நுட்பமான உள்ளர்த்தம் உள்ள ஒரு ச�ொல்லாடலாக அமைகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? சகிப்புத்தன்மைக்கு அழுத்தம் தருவது, சகிப்பின்மை நி ல வு வதைச் சு ட் டி க்காட் டு கி ற து . எ ங ் க ோ சகிப்பின்மை ஓரளவிற்காவது இருப்பதால்தான் நீங்கள் சகிப்புத்தன்மையின் அவசியம், அது எத்தனை நல்லது என்றெல்லாம் பேசுகிறீர்கள். எனவே அது இரண்டு பக்கமும் கூரான ஒரு ச�ொல். இப்போது நாம் ஏன் இந்தியாவில் இந்தச் ச�ொல் பற்றி இவ்வளவு அலட்டிக் க�ொள்கிற�ோம்? நாம் சற்றுப் பின்னோக்கி காலனிய காலத்து தேசியவாதத் தத்துவத்திற்குப் ப�ோகவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போது மேற்கிற்கும், கிழக்கிற்கும் (அதாவது, இந்தியா) உள்ள வேறுபாடே சகிப்புத்தன்மையும், அகிம்சையும்தான் என்று ச�ொல்லப்பட்டது. மேற்கத்தியர்கள் கிழக்கின் மீ து கி ழ க்க த் தி ய க் க�ொ டு ங ் க ோன்மையை யு ம் , ஜனநாயக விர�ோத சமூகங்களையும் திணித்தார்கள். கிழக்கைப் ப�ோல் ஆன்மீகத் தன்மைய�ோடு இல்லாது, ப�ொருளாயத விஷயங்களுக்கே மேற்கு முக்கியத்துவம் த ரு வ த ா க இ ந் தி ய ர்கள் இ த ற் கு எ தி ர் வி னை ஆற்றினார்கள். இந்த ஆன்மீகத்தின் ஒரு பகுதிதான்
30
சகிப்புத் தன்மை. அதிலிருந்துதான் இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கலாச்சாரம் க�ொண்டதாகக் காட்டிக் க�ொண்டது. சகிப்பின்மையின் பெரிய பின்விளைவு வன்முறை என்பதால், சகிப்புத் தன்மைய�ோடு இருக்க, நீங்கள் அஹிம்சையையும் பின்பற்ற வேண்டும். இரண்டும் ஒன்றோட�ொன்ற பின்னிப் பிணைந்தவை. இந்த அஹிம்சை, அன்மீக இந்தியா பிம்பம், தேசியவாதப் பிரச்சாரத்திற்கு, குறிப்பாக காந்திக்கு மிகவும் உதவியது. ஆனால். பிரிவினை சமயத்து வன்முறை நிகழ்ந்து விட்டது. நாம் உள்ளார்ந்த வகையில் சகிப்புத்தன்மை க�ொண்டவர்களாக, அஹிம்சாவாதிகளாக இருந்திருந்தால், அத்தகைய வன்முறை நடந்திருக்குமா என்பதுதான் கேள்வி. ஒருவேளை நடக்காது இருந்திருக்கலாம்! இந்திய வரலாறு நெடுகிலும், புத்தர், அச�ோகர், அக்பர் என சகிப்புத்தன்மையின் நன்மைகளைப் பேசிய பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றோடு கூடவே, மதக் கலாச்சாரங்களுக்கிடையிலான ம�ோதல்கள் இருந்ததற்கும் உதாரணங்கள் உள்ளன. எனவே நாம் அத்தனை சகிப்புத்தன்மை க�ொண்டவர்கள் அ ல ்ல எ ன்ப து தெ ரி கி ற து . மெ க ஸ்த னி ஸ் , அச�ோகரது ஸ்தூபிகள், யுவான் சுவாங், அல்-பெரூனி ஆகிய�ோரது எழுத்துகளிலிருந்து, பிராமணர்களுக்கும், சிரமணர்களுக்கும் (ப�ௌத்தர்கள், ஜைனர்கள் ப�ோன்ற வேதமதம் சாராத வேறுக�ோட்பாடுகளைச் சேர்ந்த துறவிகள்) இருந்த வேறுபாட்டைத் தெளிவாக அ றி ய ல ா ம் . இ ல க்க ண ஆ சி ரி ய ர் ப த ஞ ்ச லி , (கிமு இரண்டாம் நூற்றாண்டு) அவர்களது உறவு கீரிக்கும், பாம்பிற்குமான உறவு ப�ோன்றது என்கிறார். ப�ௌத்த, ஜைன உபதேசங்கள் வேத பிராமணீயத்தை ஏற்கவில்லை. இதன் விளைவாக ஏராளமான இறப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டன. எனவே, அது முழுமையாக, ஒத்திசைவ�ோடு இருந்த சமூகமல்ல. இதை ஒருவர் ஏற்றுக் க�ொள்ள வேண்டும். ஒரு வரலாற்றாளராக இதன் பின்னாலிருந்த சகிப்பின்மை என்ன என்று புரிந்து க�ொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஐர�ோப்பாவில் நடந்தது ப�ோல நியாயவிசாரணை, மதவிர�ோதக் கருத்துக்காக உயிர�ோடு எரிப்பது ப�ோன்றவை எல்லாம் இந்தியாவில் நிகழவில்லை என்பது உண்மைதான். இங்கு க�ொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டது என்றாலும், அது ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், முதலில் சகிப்பின்மை இருந்தது என்பதை ஒருவர் ஏற்க வேண்டும். அதன் பிறகுதான் அதைப்பற்றி ஆய்வு செய்வது சாத்தியப்படும். மேலும், மதத்தைத் தாண்டி, தலித்துகளுக்கு எதிராக ஏராளமான சமூகப் பாரபட்சங்கள் இருந்தன. நீங்கள் சகிப்பின்மை என்று ச�ொன்னவுடன், மக்கள் மதத்தைப் பற்றித்தான் நினைப்பார்கள். ஆனால், எந்த மதமாயினும், இந்திய சமூகம் படிநிலையாகப் பிரிக்கப் பட்டிருப்பது சகிப்பின்மை மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்த ஒரு இடமாகும். நீங்களே சகிப்பின்மையால் பாதிக்கப்பட்டவர். சி ல அ ர சி ய ல் கு ழு க்க ளி ட மி ரு ந் து உ ங்க ளு க் கு
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
அச்சுறுத்தல்கள் கூட வந்திருக்கின்றன. (சிரிக்கிறார்) ஓ! ஆமாம்... ம�ொரார்ஜி தேசாய் அரசாங்கம் வந்த ப�ோது. நாங்கள் எழுதிய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை முரளி மன�ோகர் ஜ�ோஷி தாக்க ஆரம்பித்தார். பாராளுமன்றத்தில் எங்களை தேச விர�ோதிகள், இந்திய விர�ோதிகள், அறிவுஜீவி பயங்கரவாதிகள் என்றெல்லாம் குறிப்பிட்டார். நாங்கள் எழுதிய பாடப்புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று க�ோரினார். தம்மோடு உடன்படாதவர்களை தேசவிர�ோதிகள் என்று ச�ொல்லிவிடுவது இவர்களுக்கே உரித்தான ஒன்று. அன்றிலிருந்து நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் க�ொள்ள வேண்டியதாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு அந்த விவாதம் நடந்தது, நடந்தது, நடந்து க�ொண்டே இருந்தது. பிறகு அரசாங்கம் கவிழ்ந்தது. ஆனால், அந்தப் புத்தகங்கள் த�ொடர்ந்தன! இந்த நாட்டில் பாடப்புத்தகங்களின் கதை இதுதான் - வலதுசாரி இந்துத்துவ தீவிரவாதிகளுக்குப் பிடிக்காத ஒரு பாடப்புத்தகத்தை நீங்கள் எழுதும்போதெல்லாம், அவர்கள் அதை இந்தியாவிற்கு விர�ோதமானது, தேச விர�ோதமானது என்பார்கள். அந்த வரலாற்றாளர் தாக்கப் படுவார். கடுமையான ச�ொற்போர் நடக்கும். கல்வியாளர்களுக்கு எதிராக இதுவரை வார்த்தைகளும், நடவடிக்கைகளும்தான். ஆனால், முற்போக்கு சிந்தனையாளர்கள் நிலைமை ம�ோசம். அவர்கள் படுக�ொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை என்ன நடக்கும் என்று ச�ொல்ல முடியாது. உங்கள் அறிக்கைகள் எப்போதும் வலுவாக, அழுத்தமாகவே இருக்கின்றன... நான் வலுவான அறிக்கைகள் விடுவதில்லை. நீங்கள் ஒரு த�ொழிலில் இருக்கிறீர்கள், உங்களது அந்தத் த�ொழில் தாக்கப்படுகிறது என்றால், நீங்கள் அதைப் பாதுகாத்துத்தான் ஆகவேண்டும். நான் செய்வது அதைத்தான். இந்த விஷயத்தில் நீங்கள். முற்றிலும் மதச்சார்பற்ற இந்தியாவை அடைவது குறித்த க�ோரிக்கையை முன்வைத்து, மிகத் துணிச்சலான, வெளிப்படையான பிரச்சனையை எழுப்பி விட்டீர்கள் என்று நினைக்கிற�ோம். இதற்கு சட்ட அமைப்பு மாற்றப்பட வேண்டும். ப�ொது சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். (காலனிய காலத்திலிருந்து) இது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. யாருமே இதில் கைவைக்க பயப்படுகிறார்கள். இந்தியாவில் வாழும் பலதரப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கணக்கில் க�ொண்டால், எல்லா அரசியல் குழுக்களுக்குமே அதை நிறைவேற்றுவது மிகவும் கடினமானதாகத்தான் இருக்கும். உண்மையில் நீங்கள் ஒரு குடிமகள் என்ற உணர்வோடு. நாங்கள் இதை எதிர்க்கிற�ோம் என்று ச�ொல்வதற்கான துணிவ�ோடும் வாதிடுவதாகச் ச�ொன்னீர்கள். இப்படிப்பட்ட பெரிய மாற்றங்கள் நடக்க முதல்படியாக என்ன செய்யவேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? முதல் முயற்சியை அரசாங்கம�ோ அல்லது மக்கள�ோ
கஜினி முகமது: ச�ோமநாத படையெடுப்பு
வரலாற்றின் பல குரல்கள் மூலம்: ர�ொமிலா தாப்பர் | தமிழ்ச் சுருக்கம்: சஃபி ரூ. 170 | பக்கம் - 216
எடுப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ந ா ன் ச�ொ ல ்ல வ ரு வதெ ல ்லாம் வி ரி வ ா ன விவாதத்திற்கான காலம் வந்துவிட்டது என்பதைத்தான். அ து வெ று ம் ம த ரீ தி ய ா ன கு றி க் க ோ ள ்களை முடிவுசெய்வதாக மட்டும் இருந்துவிடக் கூடாது. ப�ொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பதைப் பற்றி அது விவாதிக்க வேண்டும். இதை நாம் பேசிக் க�ொண்டே இருந்தாலும், யாருக்கும் அது பற்றித் தெரியாது. அது ஜனநாயகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால், அது மிகத் தெளிவாக வரையறுக்கப் பட வேண்டும். ஒவ்வொரு சமூகமும் சமமானதாக, ஒவ்வொரு குடிமகனும் சம உரிமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு ஜனநாயகத்திற்கு மதச்சார்பின்மை தேவைப்படுகிறது. இதற்கு அடிப்படையான சிவில் உரிமைகள் சமமாக பிரய�ோகிக்கப்பட வேண்டும். இது ப�ொது சிவில் சட்டத்தில் பிரதிபலிக்கும். நாம் ஒரு ஜனநாயகத்தில் இருக்கிற�ோம் என்றால், அதன் தவிர்க்க வியலாத் தன்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் த�ொடர்ந்த வன்முறையும், அர்த்தமற்ற லவ் ஜிகாதியும், காஃப் பஞ்சாயத்தும், இது ப�ோன்ற மற்ற வழக்கங்களும் இருக்கத்தான் செய்யும். நமக்கு முறையான சிவில் சட்டம் வேண்டுமா? அல்லது அவரவரது மதச் சட்டங்கள் த�ொடர அனுமதிக்கப் ப�ோகிற�ோமா? நான் ஒரு ப�ொது சிவில் சட்டம் என்று ச�ொல்லும்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
31
ப�ோது, எல்லா மதச் சட்டங்களையும் இணைத்து, எப்படிய�ோ அவற்றை ஒன்று சேர்ப்பது பற்றிப் பேசவில்லை. பிறப்பைப் பதிவுசெய்தல், திருமணம், ச�ொத்து வாரிசுரிமை ப�ோன்ற ஒரு குடிமகனது வாழ்வில் முக்கியமாக உள்ள விஷயங்கள் குறித்த மதச்சார்பற்ற சட்டத்தை உருவாக்குவது பற்றிப் பேசுகிறேன். இந்த மூன்று விஷயங்களை மட்டும் எடுத்துக் க�ொண்டு ஒரு ப�ொது சிவில் சட்டம் உருவாக்கினால்கூட, தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் ப�ோன்றோரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம். நான் நிச்சயமாக ஒரு புரட்சிகரமான மாற்றங்கள் செய்வதைப் பற்றிப் பேசவில்லை. நான் ச�ொல்வதெல்லாம் அதைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமே, விவாதிக்கலாமே, அதை ஒருவிதமான யதார்த்தமாக ஆக்கலாமே என்பதைத்தான். மக்கள் இதைப் பற்றி விவாதிக்காமல் இது முன்னுக்கு வர முடியாது. இந்த நாட்டின் மக்களாக நாம் இதன் ஒவ்வொரு அம்சம் பற்றியும் விவாதிக்க வேண்டும். பிரச்சனை - அறிவுஜீவிகள் எழுதுவதை யார் படிக்கிறார்கள்? - என்ற பழைய கேள்வியில்தான் இருக்கிறது. பெரிய அறிஞர்கள் எழுதும் வரலாற்று நூல்களை யாரும் படிப்பதில்லை என்பது நன்கு தெரிந்த விஷயம்தான். அவை ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டம் தாண்டி வாங்கப்படுவதும் இல்லை, விவாதிக்கப்படுவதும் இல்லை. அதற்காக வரலாறு விற்பனை ஆவதில்லை என்றும் ச�ொல்ல முடியாது. வரலாற்றுப் பாத்திரங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள், த�ொலைக்காட்சித் த�ொடர்கள், வரலாற்றுக் கதைகள் என்ற மிகப் பெரிய இலக்கிய வகைமை ஆகியவற்றிற்கு மக்கள் ஆதரவு நிறைய உள்ளது. ஆனால், ஒருபுறம் வரலாறு பற்றிய உணர்வைப் பரப்புவதற்கும், அதே நேரத்தில். வரலாற்று நிகழ்வுகளைத் திரித்துப் பரப்புவது என்பதற்குமான முரண்பாடு இருந்து க�ொண்டே இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு ? பயங்கரமான அடையாள அரசியலைத் தூண்டிவிடும் பாரபட்சமான வரலாற்றுச் சித்தரிப்புகளைப் பயன்படுத்துவது பற்றி இந்த படைப்பாக்க அறிவுஜீவிகளுக்கு ப�ொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது? அவர்களுக்கு பெரிய ப�ொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு அது தெரிவதில்லை. தெரிந்தாலும்கூட, அவர்கள் தமது ச�ொந்த வா் த்த க நலன்களைத் தான் பெரிதாக நினைக்கிறார்கள். இன்று நாம் கேள்விப்படும் ஏராளமான வன்புணர்ச்சி சம்பவங்கள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. அதை வடிவமைத்ததில் ஊடகங்களுக்கு ஓரளவு பங்கு உண்டு . ஆ ணா திக்கம் எ ன்ப து இ ந் திய ா வில் ஏற்கப்பட்ட ஒன்று. அது எல்லா இடங்களிலும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. த�ொடரவும் செய்கிறது. இந்த நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் தான் மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதற்கான ப�ொறுப்பை ஏற்க வேண்டும். மக்களிடம் பேசுவதன் மூலமாக, அறிவுறுத்துவதன் மூலமாக, ‘நீங்கள் வன்புணர்ச்சியை ஏற்கவில்லை
32
என்றால், அதற்கு எதிராக ஏராவது செய்யத் தயாரா? என்பது ப�ோன்ற கேள்விகளைக் கேட்பதன் வாயிலாக மாற்றத்தை ஏற்படுத்த முயலவேண்டும். ஊடகங்கள் அதிக ப�ொறுப்புணர்ச்சிய�ோடு இருக்க வேண்டும். பிற்போக்குத்தனமான மதிப்பீடுகளை ஆதரிக்கக் கூடாது. க�ொஞ்சம் விழிப்புணர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் சிவில் சமூகம், ‘நாங்கள் பார்க்கவ�ோ, கேட்கவ�ோ நினைக்கும் விஷயம் இதுவல்ல‘ என்று எதிர்த்துச் ச�ொன்னால்தான் அது வரும். விழிப்புணர்வு பெற்ற ப�ொதுமக்களை உருவாக்குவதில் அறிவுஜீவிகள் எப்படிப் பங்காற்றலாம்? கட்டுரைகள் எழுதுவது, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதுவது, ப�ொதுக் கூட்டங்களில் பேசுவது, மின், சமூக ஊடகங்களில் அதிகமாக ஈடுபடுவது, பிராந்திய ம�ொழிகளில் அதிகமாக எழுதுவது என்பது ப�ோன்று கல்விப்புலத்திற்கு வெளியே அறிவுப்பரவலாக்கத்தில் அவள் தன்னை ஈடுபடுத்திக் க�ொள்ள வேண்டுமா? மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு உண்டாக்குவது என்பதுதான் கேள்வி. எல்லா அறிவுஜீவியும் ஒரு பத்திரிகையாளனின் பாணியில் எழுதிவிட முடியாது என்பதை நினைவில் க�ொள்ள வேண்டும். பத்திரிகைப் பாணி அறிவுஜீவிப் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு உண்மையான தீவிர கல்வியாளர் தனது ஆய்வுக் கட்டுரையை தனது சக ஆய்வாளர்களுக்காகத்தான் எழுதுகிறார். அதனால் அது ஏராளமான ப�ொது மக்களை விலக்கிவிடுகிறது. அதற்காக, நீங்கள் ப�ொதுமக்களை கவரும் வகையில் எழுதத் தெரிந்தவர் என்றாலும், அப்படி எழுதக் கூடாது என்பதல்ல. உங்களால் அதை கண்டிப்பாகச் செய்ய முடியும். ஆனால் அதை மக்களுக்கு அறிவு புகட்டுவது என்ற ப�ொறுப்புணர்ச்சிய�ோடு செய்ய வேண்டும். பிரச்சனைகளை ஆழமாக விவாதிக்க, ஒரு த�ொலைக்காட்சிச் சானல�ோ அல்லது வான�ொலிய�ோ இந்தியாவில் இல்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இந்த உலகில் சுயமரியாதை உள்ள எல்லா நாடுகளிலும் தீவிரமான விவாதங்கள் நடைபெற ஒரு சானல் இருக்கிறது. முக்கிய நேரத்தில் பாதி நேரம் அதற்கு ஒதுக்கப் படுகிறது. இங்கு அப்படி இல்லவே இல்லை. இருந்தாலும், மிகவும் மேல�ோட்டமான விவாதங்கள்தான். அதனால், நல்ல அறிஞர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால், இது ப�ோக, பள்ளி, கல்லூரிகளில் அடிப்படைக் கல்விக்கு இந்த அறிவுஜீவிகள் தாமும் ப�ொறுப்பு என்பதை உணரவேண்டும். ஆசிரியர்கள் எப்படிப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. அவர்கள் இளைஞர்களை சிந்திக்கத் தூண்டுபவர்களாக இருக்கவேண்டும். தகவல்களைப் பெறுவது, பிறகு அதுபற்றி ய�ோசிப்பது, அது பற்றி கேள்வி கேட்பது - அதுதானே கல்வி! இதைச் செய்துவிட்டோம் என்றால், நம்மிடையே கற்றறிந்த ப�ொதுமக்கள் இருப்பார்கள். Thanks: The Newsletter, LIAS,http://iias.asia/the-newsletter
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
கடந்து சென்ற காற்று-20
க
சல்யூட் டு மேட்டுப்பாளையம் ச.தமிழ்ச்செல்வன்
டந்த மாதம் எண்ணிக்கையில் அதிகமான கூ ட ்ட ங ்க ளி ல் ப ங ்கே ற ்க வ ே ண் டி யி ரு ந ்த து . பெ ரு ம்பால ா ன இ ர வுக ள் ர யி ல் வ ண் டி க ளி ன் படுக்கைகளில் உருளாமல் படுத்திருக்கும் கதி ஏற்பட்டது. எனக்கு அப்படுக்கை எப்போதும் சவப்பெட்டிக்குள் நீட்டிய கைகள�ோடு படுத்திருக்கும் நாளுக்கான ஒத்திகையாகவே படும். உறங்குவது ப�ோலும் சாக்காடுதானே. ரயில்வே நிர்வாகம் ஒருவர் ஆறு பயணங்களுக்கு மேல் இணையத்தில் முன் பதிவு செய்வதைத் தடை செய்து விட்டது. மூன்று ஊர்களுக்குப் ப�ோனால் ஆறு முன் பதிவு காலியாகிவிடுகிறது. நம்மைப்போல மாதாந்திரிகளின் கதை சிக்கலாகி விடுகிறது. மகன், மருமகள், மகள், மருமகன் என எல்லோருடைய ஐடிகளிலும் டிக்கெட் ப�ோட்டு அவர்கள் யாரும் தங்கள் ஐடியில் டிக்கெட் ப�ோடும் வாய்ப்பைப் பறித்துத்தான் சமாளிக்க நேர்கிறது.ரயில்வே நிர்வாகத்துக்கு பல்லாயிரம் ரூபாய்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் பயணி என்கிற வகையில் என் ப�ோன்றோருக்குச் சிறப்புச் சலுகையாக ஒரு மாதத்தில் 20 முன் பதிவுகளாவது செ ய் து க�ொ ள ்ள அ னு ம தி வ ழ ங ்க ’ ஜ�ோக்க ர் ’ பிரசிடெண்ட் பப்பிரெட்டி பவனிலிருந்து உத்தரவிட வேண்டுமாய் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். இம்மாதம் பெரிய சீரழிவாகப் ப�ோய்விட்டது. இப்படிப் பல ஐடிஒகளில் முன்பதிவு செய்வதில் இன்னொரு பெரிய அலப்பரை, டிக்கெட்டுகள் கேன்சல் செய்வது.குறிப்பிட்ட பயணச்சீட்டை எந்த ஐடியில் ப�ோட்டோம் என்று தெரியாமல் ஒவ்வொரு ஐடியாகத் தேடித்தேடி அலுத்துப்போகிறது.260 ரூபாய் டிக்கெட்டை கேன்சல் செய்தப�ோது 20 ரூபாய்தான் திருப்பிக் கிடைத்தது என்கிற வயிற்றெரிச்சல் தனி.
பயண அனுபவக்கட்டுரை இலக்கியத்தின் பகுதியாக இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். முதலில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி.நடிகர், .இயக்குநர் கே.பாக்கியராஜும் நானும் சிறப்புரை ஆற்றின�ோம்.பாக்கியராஜைப் பார்க்க வந்த கூட்டம் என்பதால் அந்த மைதானம் நி ர ம் பி வ ழி ந ்த து . ப ா க் கி ய ர ா ஜ ு க் கு அ ரு கி ல் அமர்ந்திருந்த அவரது இணையர் நடிகை பூர்ணிமா ஜெயராமைப்பார்த்து ஒரு ’குடி’மகன் அய்யோ… என்று கத்தி ஓளங்கள்..ஓளங்கள் என்று ஏத�ோ ச�ொல்ல முயன்று மேடைக்கு அருகில் வந்து தரையில் விழுந்து வணங்கிச் சளம்பிக்கொண்டே இருந்தார்.த�ோழர்கள் அவரை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தினர். சீனியர் சிட்டிசன்களாகிவிட்ட வயதான நடிகர் நடிகைகளையும் கூட விடாமல் துரத்தி வணங்கும் தமிழரின் பண்பு மெய்சிலிர்க்க வைத்தது.பாக்கியராஜ் அவர்கள், பக்கத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றப�ோதும் அவருக்குப் பின்னால் அவர�ோடு கூடவே ஒரு ஊர்வலமாக ரசிகர்கள் ப�ோனதாக ஏற்பாட்டாளர்கள் ச�ொல்லிக்கொண்டிருந்தார்கள். கூ ட ்டம் அ வ ்வ ள வு இ ரு ந ்தா லு ம் பு த்த க விற்பனை படு சுமாராக இருந்ததாக வருத்தப்பட்ட புத்தக விற்பனையாளர்களைத் தேற்ற நம்மிடம் வார்த்தைகள் இல்லை.இந்த அமளியில் நாம் என்ன பேசிவிடப்போகிற�ோம். மக்கள் கேட்பார்களா என்கிற அச்சம் மேடையில் அமர்ந்திருந்த எனக்கு இருந்துக�ொண்டே இருந்தது.தண்ணீரைக்குடித்து மனசை வறண்டுவிடாமல் பாதுகாத்துக்கொண்டேன். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், பாக்கியராஜின் நிறைவுப் பேச்சுக்கு முன்னால், நான் உட்பட அன்று பேசிய பல பேச்சாளர்களின் உரைகளை
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
33
மேட்டுப்பாளையம் மக்கள் அத்தனை அமைதியாகவும் அக்கறையுடனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தேவையான இடங்களில் கரவ�ொலி எழுப்பியும் சிரித்தும் மிகச் சரியாக எதிர்வினை ஆற்றிக்கொண்டும் இருந்தார்கள். சல்யூட் டு மேட்டுப்பாளையம். க�ொஞ்சம் புத்தகங்களும் வாங்கிவிட்டீர்களானால் டபுள் சல்யூட் அடிக்கலாம்.எப்போதும் சினிமாவுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் இருந்தால் சீரியஸ் உரைகளைக் கேட்கும் பண்பும் அழியாமல் நீடிக்கிறது என்பதன் அடையாளமாக மேட்டுப்பாளையம் கூட்டம் அமைந்தது.பாக்கியராஜும் எழுத்தாளன் என்பதால் என்னை மதித்தும் அங்கீகரித்தும் பேசியதும், நிறைவுரையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசியதும் நல்ல அம்சங்கள்-கூடுதல் நேரம் அ வ ருடை ய மு தல் ப ட ம ா ன சு வ ர் இ ல ்லாத சித்திரங்களை மேட்டுப்பாளையத்தில் படம்பிடித்த அனுபவங்களைச் ச�ொன்னாலும் கூட.த�ோழர் பாஷா தலைமையிலான த�ோழர்கள் குழு அங்கு கடுமையான உழைப்பைச் செலுத்தி இத்திருவிழாவை த�ொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அடுத்த கூட்டம் அவிநாசி புத்தகத் திருவிழா. மேட்டுப்பாளையம் கண்காட்சியை தமிழ்நாடு அ றி வி ய ல் இ ய க்கம் ஒ ரு ங் கி ணைத்த து எ னி ல் அவிநாசியில் ஒரு புத்தகக்கடை(க்ரீன் ஸ்டோர்) நடத்திவரும் த�ோழர் தினகரனும் அவரது நண்பர் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஆசிரியர் சம்பத் இணைந்து பெ ரு மு ய ற் சி செ ய் து இ ர ண்டாம் ஆ ண்டா க இக்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.தமுஎகச பின்னணியில் நிற்கிறது.கூட்டத்தில் பேசிய நண்பர் ஒருவர் தன்னுடைய ஊரான பெருமாநல்லூரிலும் இதுப�ோன்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்போவதாகக் குறிப்பிட்டார்.இதுப�ோன்ற சிறிய ஊர்களில் மக்களைப் புத்தகங்களை ந�ோக்கி நகர்த்தும் முயற்சிகள் பரவலாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.இன்னும் ஆயிரமாயிரம் ஊர்கள் காத்திருக்கின்றன.எல்லாச் சிறிய ஊர்களிலும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகமாகியுள்ள பின்னணியில் அவற்றை நம்முடைய புத்தகக் கண்காட்சிகள் ஊடறுக்கும்படியாகச் செய்ய வேண்டும்.இரும்புக்கோட்டைகளையும் புத்தகம் என்னும் ஆயுதம் க�ொண்டு அறுக்க முடியும்தானே. புத்தகக் காற்றைச் சுவாசிக்க மறுப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.த�ொழிற்சங்கம் கட்டியெழுப்ப வாய்ப்பில்லாத இதுப�ோன்ற இடங்களில் நாம் பணி செய்ய மிகப்பெரிய வாசல்களைப் புத்தகங்கள் திறந்து தரும் அல்லவா?இந்தக்கோணத்தில் ய�ோசித்தால் இன்னும் நூற்றுக்கணக்கான புத்தத்திருவிழாக்களை நாம் நடத்துவ�ோம் என்று படுகிறது. ப ா ல க்காட் டி லு ம் , அ டு த்த வ ா ர ம் ஏ ல கி ரி மலையிலும் இன்சூரன்ஸ் ஊழியர்கள�ோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மதவெறிக்கு எதிராக நம்
34
ப ண்பாட் டி ன் ச ா ர ம ா க இருக்கும் பன்மைத்துவத்தை எப்படி ஓர் ப�ோர்ப் பதாகையாக உயர்த்த முடியும் என்பதுகுறித்து விவாதித்தோம்.வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நம்முடைய மு ழ க்க த் தி ல் ‘ ஒ ற் று ம ை ’ க்குக் க�ொடுத்த அழுத்தத்தின் அ ள வு அ தி ம ா கி வி ட ்ட து . வ ேற் று ம ை யி ன் வண்ணங்களும் வடிவங்களும் எ ண் ணி ற ந ்தவை ய ா க இருக்கின்றன.ஒரு பண்பாட்டு மெகா கூட்டணிக்கான வாய்ப்பை இப்பன்மைத்துவம் நமக்கு வழங்கிக்கொண்டிருப்பதை நாம் இன்னும் சரிவரக் கவனிக்கவுமில்லை. உள்வாங்கி ஆல�ோசிக்கவுமில்லை. இவ்விரு ஊழியர் கூட்டங்களிலும் த�ோழர்களின் ஈடுபாடும் அக்கறையும் அவர்கள் எழுப்பிய எண்ணற்ற கேள்விகளும் எனக்கு மன நிறைவளித்தது.மூத்தோர் சபைகளாக இவை இரண்டும் இருந்தது கவலையையும் அச்சத்தையும், லேசான மனப்பதட்டத்தையும் எனக்கு ஏற்படுத்தியது. இயக்கத்துக்கு வயதாகும் இப்பிரச்னையை (சராசரி வயதைச் ச�ொல்கிறேன்) உணர்ந்து நாங்கள் தமுஎகசவில் இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்கப் பயிலரங்கு ஒன்றைக் க�ோவையில் நடத்தின�ோம்.35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் கலந்துக�ொள்ள வேண்டும் என கறாராக நின்றோம்.இரு மாவட்டங்களிலிருந்து மட்டும் (எங்க மாவட்டத்திலே இளைஞர்களே இல்லையே த�ோழர்) முதியவர்களை அனுப்பியிருந்தார்கள். மற்ற எல்லா மாவட்டங்களிலிருந்தும் முற்றிலும் இளைஞர்களே வந்திருந்தது முகாமை உயிர்த்துடிப்புடன் நடத்த உதவியது.மூத்த படைப்பாளி பிரபஞ்சனும் கூட்டத்தில் இளைஞராகி விட்டார். ச ம ய பு ர ம் எ ஸ் . ஆ ர் . வி ப ள் ளி யி ல் ந ா ங ்கள் செய்து வரும் பல கல்வி முயற்சிகளில் ஒன்று கதைப்புத்தகங்களை ஆண்டுத�ோறும் குழந்தைகளுக்கு வழங்கி வகுப்பறையில் ஒரு பகுதியாகக் கதை வாசிப்பை இணைப்பது. வயதுக்கேற்ப வேறு வேறு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 9,10,11 வகுப்புக் குழந்தைகளுக்கான கதைப்புத்தகத்தைத் த�ொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது 'பக்கத்தில் வந்த அப்பா' என்கிற அப்புத்தகத்தை எப்படி வகுப்பறையில் எடுத்துச் செல்வது என்பது குறித்துத் தமிழாசிரியர்களுடன் ஒருநாள் கலந்துரையாடல் நடந்தது. மற்ற பள்ளித் தமிழாசிரியர்கள�ோடு ஒப்பிடுகையில் எஸ்.ஆர். வி.பள்ளித் தமிழாசிரியர்கள் எப்போதும் எனக்கு நம்பிக்கை அளிப்பவர்கள். தெரியாததைத் தெரியாது என ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. எதையும் கேட்கிற திறந்த செவிகள்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. பண்டிதத்தனம் இல்லாத பழகு தமிழ் அவர்கள் வாயில் நடமாடுகிறது --இன்னும் க�ொஞ்சம் பழைய வாடை மிச்ச ச�ொச்சமாக நீடித்தாலும் கூட. 'இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அறிந்து க�ொ ள ்ள வு ம் ' அ வற் றி ன் இ ய க்க ங ்களை யு ம் பயணங்களையும் உட்கூறுகளையும் புரிந்துக�ொள்ளவும் எ ண்ண ற ்ற க ரு வி க ளை யு ம் எ ந் தி ர ங ்களை யு ம் சூத்திரங்களையும் விதிகளையும் அறிவியல் உலகம் க ண் டு பி டி த் து ள ்ள து . மூ ளை உ ள் ளி ட ்ட ம னி த உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளை அறிந்துக�ொள்ளவும் கூட ஆயிரம் கண்டுபிடிப்புகள் உ ள ்ள ன . கு ண ப்ப டு த்த ப ல ்லா யி ர ம் ம ரு ந் து க ள் ம ா த் தி ரை க ள் உ ள ்ள ன . ஆ ன ா ல் , ம னி த ம ன தி ல் நிகழும் அசைவுகள்,துளிர்க்கும் அன்பு,பற்றி எரியும் வெறுப்பு, மூளும் பகையுணர்ச்சி,துர�ோகத்தின் கருநிழல்,தியாகத்தின் பசுமை என மனங்களைப் பு ரி ந் து க�ொ ள ்ள வு ம் அ வற் றி ன் வ ழி ம ா னு ட உறவுகளைப் புரிந்துக�ொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே விஞ்ஞானம்,ஒரே கருவி- கலை,இலக்கியம் மட்டுமே.அதிலும் குறிப்பாக எல்லா வடிவங்களுக் கூடாகவும் சாரமாக இருப்பது கதை.கதை மட்டுமே. ஆகவே நம்முடைய வகுப்பறையில் இக்கதைகளைக் குழந்தைகள் விரும்பி வாசிப்பதுதான் முக்கியம். இக்கதைகளிலிருந்து கிடைக்கும் நீதி என்ன என்கிற இடத்துக்கு நாம் ப�ோகக்கூடாது.குழந்தைகளின் கதை வாசிப்பு என்னும் படகுப்பயணம் கதை நதியின் ஓட்டத்தோடு செல்லட்டும். தேவைப்படும் தருணங்களில் மட்டும் ஆசிரியரின் தலையீடு ஒரு சிறு துடுப்பசைவு ப�ோல இருந்தால் ப�ோதும்' என நான் ச�ொன்னதை எஸ்.ஆர்.வி.ஆசிரியர்கள் ஆம�ோதித்தது நிறைவளித்தது. 1.மகாமசானம் - புதுமைப்பித்தன், 2.பக்கத்தில் வந்த அப்பா - சுந்தரராமசாமி, 3.நாற்காலி கி.ராஜநாராயணன் 4.எழுத இருக்கும் கதை - பிரபஞ்சன், 5.பலாப்பழம் - வண்ணநிலவன், 6.முழுக்கைச் சட்டைக்காரரும் கதிரேசன் என்ற மனிதரும் வண்ணதாசன். 7.பூமாலை - ஆர்.சூடாமணி, 8.தீர்வு - திலீப்குமார், 9.ஜெயம�ோகன் - ச�ோற்றுக் கணக்கு, 10.பரிவானது வீடு - எஸ்.ராமகிருஷ்ணன், 11.நறுமணம் - இமையம், 12.வனம்மாள் - அழகிய பெரியவன், 13.கருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன் ஆகிய கதைகளை இந்த ஆண்டு மாணவர்கள் வாசிக்கிறார்கள். தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்வு செய்வது ர�ொம்ப கடினமான பணியாகும்.ஏனெனில் எதை விட எதை எடுக்க எனக் குழம்பும் அளவுக்கு அத்தனை அற்புதமான - செறிவான-கதைகள் க�ொட்டிக்கிடக்கும் கதைவனமாக அது இருக்கிறது. சிவகாசியில் கட்சி ஊழியர்களுக்கு வாரந்தோறும் தத்துவ வகுப்பு நடைபெற்று வருகிறது.பெரும்பாலும்
உழைப்பாளித்தோழர்கள் பங்கெடுக்கிறார்கள்.மார்க்சிய தத்துவத்தை இருபது பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்தை மட்டும் ஒரு மாலைப்பொழுதில் பாடமாக ந ட த் தி னே ன் . எ ழு த்த றி வு ம் வ ா சி ப்ப னு ப வ மு ம் குறைவாக இருக்கும் த�ோழர்களிடம் மார்க்சிய தத்துவம் பேசுவது மிகப்பெரிய சவால்தான்.ப�ொருள் என்பது என்ன? திடம்,திரவம்,வாயு ஆகிய மூன்று நிலைகளில் உள்ள ப�ொருளை எவ்விதம் நாம் புரிந்துக�ொள்ள வேண்டும்.ப�ொருள் முதல் வாதம் என்றால் என்ன? என்பதை எளிய கதைகள்,உதாரணங்கள் மூலம் சிரிக்கச் சிரிக்கப் (!) பேசிவிட்டு வந்தேன்.என்னையறியாமல் ஒருவிதக் குற்ற உணர்ச்சியும் வகுப்பு முடிந்தபிறகு கூடவே பைக்கில் என்னைப் பின் த�ொடர்ந்து க�ொண்டிருந்தது. புரியும்படியாக எளிமையாக இருந்தது எனத் த�ோழர்கள் ச�ொன்னாலும் 40 ஆண்டுகாலப் பாரம்பரிய உணர்ச்சி என்னை ஆட்கொண்டு சீரிய்ஸாப் பேசவேண்டியதை எல்லாம் இப்படி நீ செய்யலாமா என்று உறுத்திக்கொண்டிருந்தது. வட சென்னை மாதவரத்தில் தமுஎகச கிளை நிகழ்ச்சியில் நமக்கான பண்பாட்டுப்பாதை குறித்த கருத்தரங்கு.எதிர்பாராமல் அப்பகுதியில் வாழ்கிற எழுத்தாளர்கள் தமிழ் மணவாளனும் யாழினி மு னு ச ா மி யு ம் ப ங ்கே ற ்ற து ம கி ழ்ச் சி த ந ்த து . உ ள் ளூ ர் க் க லை மு ய ற் சி க ளு க் கு இ ட ம ளி த் து ஓவியம்,புகைப்படக்காட்சி குழந்தைகளின் நடனம் என அந்நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பகுதியில் வாழும் எழுத்தாளர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருந்தார்கள்.ஒரு சிறிய கிளையில் இப்படித்தான் நடக்க வேண்டும். இளந்தமிழகம் அமைப்பினரின் புதிய முயற்சியான கதையாடிகள் நிகழ்வில் தமிழ்ச்சிறுகதையின் வரலாறு குறித்து காட்சிப்படிமங்களுடன் (பவர் பாயிண்ட் ப்ரசண்ட்டேசனைத்தான் இப்படிச் ச�ொல்கிறேன்) பேச ஒரு வாய்ப்புக்கிடைத்தது.அரசியல்ரீதியாக முதிர்ச்சியும் செயலூக்கமும் மிக்க த�ோழர்கள் பல்வேறு அமைப்புகளில் இலக்கிய வாசிப்பிலும் கலை ஈடுபாட்டிலும் கவனமின்றி இருப்பதைத் த�ொடர்ந்து பார்த்து வருகிறேன்.இது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் முழுமையான வளர்ச்சிக்கு உதவாது. அரைகுறை மனிதராக-அரைகுறை இயக்கமாகவே அ வர்கள் வ ள ர்வார்கள் . நெ டு ம ்ப ய ண த் து க் கு இடையிலும் த�ோழர் மாவ�ோ யேனான் எழுத்தாளர் மாநாட்டுக்குப் ப�ோனதும், கவிதை எழுதியதும், லெனினும் காஸ்ட்ரோவும் படைப்பாளிகள�ோடு துடியான உறவைப் பேணியதும், இடை விடாமல் இலக்கியம் வாசித்ததும் ஹ�ோசிமின் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டியதும், சாவேஸ் ஒபாமாவுக்கு 'லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட நாளங்கள் நாவலைப் பரிசளித்ததும்' இலக்கியவாதியாகவே வாழ்ந்த த�ோழர் ஜீவாவின் செயல்பாடுகளும் என
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
35
36
சினிமா ஏன் முக்கியமான கலையாக இருக்கிறது?
நூல் அறிமுகம்
நிழல் திருநாவுக்கரசு
சினிமா ஏன் முக்கியமான கலையாக இருக்கிறது என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொண்டால், நிறைய பதில்கள் பிறக்கும்; இனி அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். சினிமாவை, இத்தாலிய திரைப்பட விமர்சகர் கானுட�ோ 'ஏழாவது கலை' என்கிறார். இதற்கு முன்பு இருந்த கலைகள் என்னென்ன என்றால்: ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, நாடகம், இசை, இலக்கியத்திற்கு அடுத்ததாக சினிமா வருகிறது. சினிமாவுக்கு முன்பு இருந்த கலைகளுக்கு ஜாதகம் [எப்போது பிறந்தது?] கிடையாது. ஆனால் சினிமாவுக்கு உண்டு. 1895ஆம் ஆண்டு டிசம்பர், பாரிஸிலுள்ள கிராண்ட் கஃபே யில் பிறந்தது என்று சுத்தமான ஜாதகம் இருக்கிறது. 'சினிமா தனக்கு முன் பிறந்த கலைகளை எல்லாம் தன்னுள் ஈர்த்துக் க�ொண்டே வளர்கிறது. சமூகத்தில் ஏதேனும் ஒரு கலை நிலைத்து வாழ வேண்டும் என்றால் அது தன் சமகாலத்தில் வாழ்ந்து வரும் நவீனங்களை உட் செரித்துக்கொண்டிருந்தால்தான் முடியும் என்பது விதி. அதற்கு ஏற்ப சினிமா இருப்பதால் அது என்றென்றும் வாழும் கலையாக இருக்கும் என்கிறார் திரைப்பட ஆய்வாளர் கிறிஸ்டியன் மெட்ஸ். இப்படிப்பட்ட சினிமா இருபதாம் நூற்றாண்டிற்க்கே உரிய அறிவியல் கலையாகும். இதன் வரலாற்றை பார்க்கும் ப�ோது கி.மு க்கு முன்பிருந்தே த�ொடங்கி விட்டது என்பதை அரிஸ்டாட்டில் மூலம் தெரிந்து க�ொள்கிற�ோம். சினிமாவின் தத்துவம் என்பது 'காட்சியின் நிலைத்த தன்மை'யில்தான் இருக்கிறது என்பதை நூலாசிரியர் புரிய வைக்கிறார் . சினிமா - புகைப்படத்தில் த�ொடங்கி, பிலிம், கேமரா, புரொஜெக்டர் என்கிற மூன்றும் இருந்தால்தான் பார்க்க முடியும். இவை மூன்றுமே ஒன்றின் வளர்ச்சி அடுத்ததின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டுகள் முழுவதும் உலகின் பல பகுதி களில் இயங்கிய அறிஞர்களின் ஒட்டும�ொத்த விளை ப�ொருளாக சினிமாவை பார்த்தாலும் அதன் உரிமை யாருக்கு என்று அமெரிக்காவும் - பிரான்சும் சர்ச்சை இட்டே வந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுத் திரைப்பட முன்னோடியான ஜார்ஜ் மேலியிஸ் பற்றிய படமான 'ஹுக�ோ' அமெரிக்காவில் எடுக்கப் பட்டதானது- அமெரிக்கர்கள், பிரெஞ்சுக்காரர்களின் முன்னோடி செயலை ஒத்துக் க�ொண்டது ப�ோலானது.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
இதன் மூலம் எடிசனா - லூமியரா; யார் சினிமாவை கண்டு பிடித்தது என்கிற விவாதம் முடிவுக்கு வந்தது. நூலின் முதல் 100பக்கங்கள் விறுவிறுப்பாக ப�ோகிறது. அடுத்தடுத்து பல நாடுகளில் சினிமா வளர்ந்த வரலாற்றைப் பார்க்கிற�ோம். த�ொடக்க கால நகைச்சுவைத் துண்டுப் படங்கள், கதைப்படங்கள் உருவாக வழி ஏற்படுத்தின. அமெரிக்காவில் எடிசனின் உதவியாளர் ப�ோர்ட்டர் என்பவர் இயக்கிய 'ரயில் க�ொள்ளை' படம்தான் முதல் கதைப்படமாகக் க�ொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில்தான் கேமரா, வேறுவேறு இடங்களில் நின்று படமாக்கியது. அதுவரை இல்லாமல் இருந்த எடிட்டிங் துறை வளரத்தொடங்கியது. இவரை அடுத்து வந்த கிரிபித், பெர்த் ஆப் த நேஷன் - படத்தை இயக்கி உலகுக்கு வழிகாட்டினார். அமெரிக்கர்களை விட முழு நீள கதைப்படங்களை இத்தாலியர்களும், பிரஞ்சு காரர்களும் நிறைய இயக்கினர். ஐர�ோப்பாவிலுள்ள பல நாடுகளில் ம�ௌனப்படங்கள் எடுக்கப்பட்டு புதிய முறைகளை உலகிற்கு வழங்கினர். ஓவியத்துறையில் நாம் பார்த்த 'பல இசங்கள்' திரைக்குள் வந்தன. சினிமா த�ோன்றிய ப�ோது எடுக்கப்பட்ட யதார்த்தமான நிகழ்வுகள் 'டாகுமெண்டரி' என்கிற தலைப்பில் தனித்த வகையினமாக உருவானது. அமெரிக்காவிலிருந்து ராபர்ட் பிலாஹர்ட்டி இயக்கிய 'நானுக் ஆஃப்' என்கிற படத்தைத் பார்த்த இங்கிலாந்து இயக்குனர் ஜான் கிரியர்சன், டாகுமெண்டரி என்கிற ச�ொல்லை பரவலாக்கினார். இவரை அடுத்து பால்ரோத்தா, ஹம்பேரி ஜின்னிங், பிரான்ஸ்சிலிருந்து கவல்கெண்டி, ழான் ரூச், அமெரிக்கவிலிருந்து பேறில�ோரென்ஸ், நெதெர்லாந்திலிருந்து ஜ�ோரிஷ் இவன்ஸ், ரசியாவில் வேரட�ோவ் ப�ோன்றோர் இயக்கமாக்கினர். முதல் உலகப்போரில் த�ோல்வியைத் தழுவியிருந்த ஜெர்மனி, ப�ொருளாதார நெருக்கடியில் மீள முடியாமல் யதார்த்தத்தில் இருந்து விடுபட்டு உளவியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. இந்த நேரத்தில் அது ''வெளிப்பாட்டு வாதத்தை'' கையிலெடுத்துக்கொண்டு ச�ோதனை ரீதியில் பல படைப்புகளை வெளிக்கொண்டுவந்தது .மிர்னாவ் இயக்கிய 'நாஸ் பெறத�ோ', கேபினெட் ஆப் கலிக்கேறி'', லாஸ்ட் லாப்'' ப�ோன்றவை, அதுவரை அமெரிக்கப் படங்களையே பார்த்துவந்தவர்களுக்கு அதிசயத்தை தந்தது . ச�ோவியத் ரஷ்யாவில் முளை விட்டு வளர்ந்து வந்த படவகை எதார்த்தவாதத்தை (Pictorial radisum) குலசேவ், செர்ஜி ஐசென்ஸ்ட்டின், புத்தோவ் கின், ட�ோவ்சென்கோ, ப�ோன்றோரின் படங்கள் உலகத்திற்கு புது வெளிச்சத்தை வழங்கியது. இத்துடன் இவர்கள் உருவாக்கிய, பயன்படுத்திய படத்தொகுப்பு உத்தி உலகிற்கே வழிகாட்டியது; திரைப்படம் பற்றிய த�ொழில்நுட்ப நூல்கள் ரஷ்யாவிலிருந்து நிறைய வெளிவந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலியில்
உலக சினிமா வரலாறு | ஜக் சி. எல்லீஸ் | தமிழில்: வேட்டை எஸ். கண்ணன் வெளியீடு: புதிய க�ோணம் | பாரதி புத்தகாலயம் | ரூ.495/-
இலக்கிய ஈடுபாடு க�ொண்ட புரட்சியாளர்களின் முன்னுதாரணங்கள் நூறு நூறு இருந்தப�ோதும் ஒரு நாவல்,கதை கூட வாசிக்காமல் நாற்பதாண்டு இயக்க வாழ்வை வாழ்ந்து முடித்த த�ோழர்களைப் பார்க்க நேர்கையில் தலைக்குள் ஆழிப்பேரலையே ம�ோதித் தள்ளுவது ப�ோல் ஆகிவிடுகிறது.இளந்தமிழகம் இள வயதிலேயே ஒரு இயக்கமாகவே இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்துவிட்டது ஆறுதலளிக்கிறது. அப்புறம் இரண்டு புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஒன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இரு நூல்கள் வெளியீட்டு விழா.காற்று வளையம் என்கிற நாவலும் முயல்தோப்பு என்கிற அவரது சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன. அளவான கூட்டம்.அருமையான உரைகள் என நகர்ந்தது.நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் தீபலட்சுமியும் ஜ�ோதிமணியும் பேசின�ோம்.திருமணத்துக்கு முந்தைய பாலுறவு குறித்து விவாதிக்கும் காற்று வளையம் நாவல் பெரிதாக மனதைத் த�ொடவில்லை.ஆனால் பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் வழக்கம்போல அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின.உலகமயக்காலத்தில் நம் வாழ்வில் தேய்ந்து வரும் பண்பாட்டு மதிப்பீடுகள் குறித்துத் த�ொடர்ந்து எழுதி வருபவராக பாஸ்கர் சக்தி இருக்கிறார்.இத்தொகுப்பிலுள்ள 11 கதைகளும் அ த ன் ச ா ட் சி ய ா க நி ற் கி ன்ற ன . நி றை ய எ ழு தி சிறுகதையில் சவால்களை எதிர்கொள்வதுபற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.95க்குப் பிறகு 15 த�ொகுப்புகள் வெளியிட்டு விட்ட ராமகிருஷ்ணனும் 5 த�ொகுப்புகள் வெளியிட்டுள்ள பாஸ்கர்சக்தியும் பேசிக்கொண்டிருந்தப�ோது 1978இலிருந்து ஒரு த�ொ கு ப்பை வெ ளி யி ட் டு ள ்ள ந ா ன் ந டு வி ல் அமர்ந்திருந்தேன். இம்மாத நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக பாரதி பு த்த க ா ல ய த் தி ன் கு ஜ ர ா த் க�ோ ப் பு க்கள் நூ ல் வெளியீட்டு விழாவும் அதன் ஆசிரியர் ரானா அயூப் அவர்களின் உணர்ச்சிகரமான உரையும் அமைந்தது.ம�ோடி/அமித்ஷாவின் ஆட்டங்கள் தேசிய அளவில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் அவ்வாட்டங்களுக்கு ஆப்பு வைக்கும் இப்புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.ஒரு துப்பறியும் நாவலைப்போல விறுவிறுப்பாகச் செல்லும் இந்நூல் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கும் ஒவ்வொரு ஊழியரும் வாசித்தாக வேண்டிய நூல் என்பேன். இப்படி ஓட்டமும் சாட்டமுமாகக் கழிந்த இந்த மாதத்தை உறைய வைத்தது அன்புத்தம்பி கவிஞர் நா.முத்துக்குமாரின் எதிர்பாரா மரணம்.அதற்கு அப்புறம் ஒன்றும் ஓடவில்லை.மனமே ஸ்தம்பித்து நிற்கிறது.இத்தனை பிரியத்தை எல்லோர் மீதும் மழையெனப் ப�ொழிந்த முத்துக்குமாரின் மரணம் நம்ப முடியாததாக எதிரில் நிற்கிறது. (த�ொடரும்)
புதிய எதார்த்தவாதம் [neo - realism] பிறந்தது. இந்த இயக்கத்தின் முதல் மும்மூர்த்திகள் என்று ச�ொல்லப்படும் ர�ோஸலினி, டிஸீகா, விஸ்காண்டி, முதலிய�ோர் இயக்கிய படங்களான ஓபன் சிட்டி, பை சைக்கிள் தீப்ஸ், லா டெர்ரா ட்ரெமா முதலிய படங்களில் புதிய யதார்த்தவாதத்தைப் பார்க்கலாம். இவர்களது படங்கள் செட்டுக்களில் எடுக்கப்பட வில்லை; நடிகர்களும் பெரும்பாலும் பயிற்றப்படாத ப�ொது மக்களில் இருந்தே தேர்வு செய்யப்பட்டனர். உள்ளடக்கம் அன்றைய இத்தாலியைக் காட்டும் கண்ணாடியாக இருந்தன. ஆவணப்படம் க�ொண்டுவந்த உயிர்ப்புடனான யதார்த்த வாதத்தை தங்கள் படங்களில் க�ொண்டு வந்தனர். லா டெர்ரா ட்ரெமா-படத்தில் முதல் 15 நிமிடங்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் காட்சி நம்மை கடலுக்கே க�ொண்டுப�ோய்விடும். ஓபன் சிட்டி படத்தில் இத்தாலியில் புகுந்த நாஜிப் படைகளை ஒளிந்திருந்து எடுத்து படத்தில் இணைத்தார் ர�ோஸலினி. இந்த புதிய யதார்த்த வாதம் உலகம் முழுதும் பரவியது. பலரும் அந்த வகைமையில் படம் இயக்கினர். இந்தியாவில் சத்ய ஜித்ரே; ஜப்பானில் குரச�ோவா; கியூபாவில் பல இயக்குனர்களும் இந்த வகையில் படம் எடுத்தனர். இன்றைக்குக் கூட ஈரானில் பார்க்கிற�ோம். இவர்களைத் த�ொடர்ந்து வந்தவர்கள் புதிய ய த ா ர்த்தவ ா த த்தை வ ே று வ ே று வகை ம ை க் கு ள் ப�ோட்டுக்காட்டுகிறார்கள். அவர்களில் பெலினி [லா ஸ்ட்ராடா]; அன்டோனிய�ோனி [ப்ளோ அப்]; பச�ோலி, ர�ோஸி ப�ோன்றவர்களின் படங்கள் மறக்க முடியாத இடத்தை பெற்றுள்ளன. இவர்களை அடுத்து ஐர�ோப்பாவில் தனித்து ச�ொல்லப்பட வேண்டியவர்கள் ஸ்வீடனின் இன்மர் பெர்க்மன்; லூயி புனுவெல்; ஜெல்லோ பிண்ட கார்வோ [பாட்டில் ஆப் அல்ஜியர்ஸ்]; பிரான்சில்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
37
ஆலன் ரெனே, ரெனேயர் ப�ோன்றோருடன் குறிப்பிட்டுச் ச�ொல்ல வேண்டிய மற்றொருவர் ராபர்ட் ப்ரோச�ோன் [பிட் பாக்கெட்] ''பிரெசஞ்சு சினிமா என்றால் அது ப்ரோச�ோன்'' என்றார் க�ோடார்ட். அந்தளவுக்கு தனித்துவம் உள்ளவர். ஆசியாவில் ஜப்பான் தனித்த ஒரு திரை ம�ொழியைக் க�ொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகிரா குரச�ோவா [ரஷ�ோமான்]; ஓஸு [ட�ோக்கிய�ோ ஸ்டோரி]; க�ொண் இச்சிக்கவா [பர்மீஸ் ஹார்ப்]; மிஸ�ோ குஷி [உக்க சு ]; நகிசா ஒஸிமா [டெத் பய் ஹேங்கிங்]; த�ோஷி ஹாரா [விமன் இன் டூன்ஸ்]; ப�ோன்றவர்களை உலகிற்குக் க�ொண்டு வந்தவர் ட�ோனல் ரீச்; ஜப்பானியப் படங்களின் ஆதி நாதமாக இருப்பவை தேரவாத ப�ௌத்தம் தான் அதனால் இந்தியர்களுக்கு நெருக்கமாக இருக்கும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ச�ோவியத் ருஷ்யாவும் ஸ்டாலின் புகழும் உலகம் முழுவதும் மாபெரும் நம்பிக்கையைத் தந்தது. இந்தப்போக்கு அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தது. மெக்கார்த்தி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கம்யூனிச களையெடுப்பைத் த�ொடங்கினார்கள்; புகழ்பெற்ற இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், நடிகர்கள் கூட தப்ப முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 200பேர் சுய விமர்சனம் செய்து க�ொள்வதுடன் தமக்கு தெரிந்த இன்னும் 10 பேரைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று நெருங்கினர். சார்லி சாப்ளின், ப்ரெக்ட். லூசி முதலிய�ோர் நாட்டை விட்டு வெளியேறினர். கருங்காலியாக செயல்பட்டவர் எலியா கஸான். இவர் தாம் மனம் மாறி இயேசுவிடம் ஒப்பு க�ொடுத்து விட்டது ப�ோல மற்றவர்களும் மாற வேண்டும் என்று பத்திரிக்கையில் விளம்பரம் வேறு க�ொடுத்தார். அது மட்டுமல்லாமல் நிக்கலஸ் ரே, அந்தோனிகுயின், கிர்க் டக்ளஸ், முதலிய 10பேரைப் ப�ோட்டுக்கொடுத்தார் என்று படிக்கும்போது அமெரிக்க ஜனநாயத்தைப் பற்றி பேசும் நடுநிலையாளர்களை என்ன ச�ொல்வது? இந்தப் புத்தகத்தை எழுதிய அமெரிக்கரான ஜாக் இந்த இடத்தை விட்டுவிட்டுப் ப�ோயிருப்பார் என்று பார்த்தால் மனுஷன் விலா வாரியாக வெளுத்து வாங்கி இருக்கிறார். பிரான்சில் 'கஹியேது சினிமா' திரைப்பட இதழை அந்ரேபாஜான் நடத்தி வந்தார். அதில் பல இளைஞர்கள் சமகால பிரெஞ்சுத் திரைப்படங்களை பிய்த்து எறிந்தனர். பழைய இயக்குனர்கள் க�ொக்கரித்தப�ோது, புதிய படங்களை அவர்கள் இயக்கிக் காண்பித்தனர்; த்ருபா, க�ோடார்ட், லூயி மால், ஷாப்ரால், எரிக் ர�ோமர், அக்னேஸ்வரத்தா, ரிவெட்டி ப�ோன்றோர் எடுத்த படங்களில் பழைய வகைப்பட்ட இலக்கணங்களை புறந்தள்ளி புதியவற்றைப் படைத்தனர். இவர்கள் மூலமே பிரான்சுக்குள் ''புதிய அலை'' [new wave]
38
புகுந்தது. ஜம்ப் கட் - என்கிற புதிய படத் த�ொகுப்புக் கலையை உலகுக்கு அளித்தனர். படைப்புக்கான முழு ப�ொறுப்பும் இயக்குனரையே சார்ந்தது என்று கூறி authur க�ோட்பாட்டை உயர்த்திப் பிடித்தனர். உலகம் முழுவதும் க�ோட்பாடுகள் சார்ந்து படைப்புகளை க�ொடுத்த வேளையில் அமெரிக்கர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. புதிய அலை குழு அமெரிக்க படங்களைப் பார்த்து யார் யார் தேறு வார்கள் என்று பட்டிலைப் ப�ோட்டனர். இது உலகப்படம் பார்க்க விரும்புவர்களுக்கு இன்று கூட உதவுகிறது. கிழக்கு ஐர�ோப்பிய சினிமாவைப் பற்றி நூலாசிரியர் ச�ொல்லும்போது, மறக்கக் கூடாத இயக்குனர்களை பதிவு செய்திருக்கிறார். பிந்தைய ரஷ்யாவில் அந்திரே தார்கோவெஸ்கி மற்றவர்கள் த�ொட முடியாத இடங்களுக்கு நம்மை அழைத்துசச் செல்கிறார். இவரது ஸ்டால்கர், மிர்ரர், முக்கியமானவை. எனது படங்கள் யாருக்குப் புரிகிறத�ோ இல்லைய�ோ, பெர்க்மனுக்கும் பெர்ஸோனுக்கும் புரிந்தால் ப�ோதும்' என்று ச�ொன்னவர். அடுத்தவர் பரஞ்சின�ோவ், த கலர் ஆப் ப�ோமிகிரேனைட்ஸ் - ச�ோதனை ரீதியான படங்களில் ஒன்று. ப�ோலந்தில் த�ோன்றிய வாஜிதா, ப�ொலன்ஸ்கி [நைப் இன் த வாட்டர்]; கீஸ்லோவ்ஸ்க்கி [ஸ்டோரி அப�ௌட் கில்லிங்]; ஹங்கேரியின் ச�ொல்தான் பேபரி, ஜெரி மேஞ்சில், மகவெஜிவ் ப�ோன்றோரின் படங்கள் புதிய வகை மாதிரிகள். கடைசியாக வருபவை மூன்றாம் உலகப்படங்களுக்கு தலைமை தாங்கியது கியூபா. இங்கேயும் மும்மூர்த்திகள் உண்டு: சான்டியாக�ோ அல்வாரெஸ் [நவ்]; குத்தரேஸ் அலியா [அண்டர் டெவெலப்மென்ட்]; ஹாம்பர்ட்டோ ச�ோலஸ் [லூசியா] முதலியவை முக்கியமானவை . சினிமா ந�ோவா -என்ற க�ோட்பாட்டை முன் வைத்து பிரேசிலில் க்ளாபர் ர�ோசா ஆளும் வர்க்கம் நடுங்கும்படி படமெடுத்தார் [block god white dvil]; மூன்றன் உலக சினிமாக் க�ோட்பாட்டைத் தந்த அர்சென்டினாவின் ச�ோளனாஸ் மற்றும் கெட்டின�ோ வின் [hour of the furnases]; ப�ொலிவிய இயக்குனர் சாஞ்சின்ஸ் [blood of the contour] சிலியில் மிகையில் லிட்டில் முதலிய�ோரின் படைப்புகள் முக்கியமானவை. ஆப்ரிக்காவின் கருப்புச் சிங்கம் - செம்பேன் உஸ்மான் சால, மற்றும் செட்டோ ப�ோன்றவை அந்நியரின் தலையீட்டை எதிப்பவை. இந்தப் புத்தகம் 75 வரை வந்த சினிமாவை பேசுகிறது. வேட்டை S. கண்ணன் சரளமான நடையில் ம�ொழி பெயர்த்திருக்கிறார். புத்தகத்தில் படத்தின் கதையின் த�ொழில் நுட்பங்களும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. எழுத்துப் பிழை குறைவு; சில இடங்களில் படங்கள் மாறி உள்ளன. திரைப்படம் கற்பிக்கும் ஆசிரியரின் கையில் இருக்க வேண்டிய நல்ல புத்தகம். புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
டி.எம் கிருஷ்ணாவும் மக்சாசே விருதும்
வெ.ராம்நாராயன்
அண்மையில் கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மக்சாசே விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டப�ொழுது அம்முடிவு மிக விரைவில் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. மறைந்த, இந்தியாவின் தலைசிறந்த செவ்விசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலஷ்மி பெற்ற அதே விருதை ஒரு வளரும் கலைஞருக்கு க�ொடுப்பதா என்பது முதல் கேள்வி. இல்லை. இந்த விருது, அவரது கலைத் த�ொண்டுக்காக மட்டுமல்ல, அவர் சமூகப் பிரக்ஞையுடன், மரபு இசையின் பால் மேல்சாதியல்லாதார் மற்றும் ஏழை எளியவர்களையும் சேர்த்துக் க�ொள்ளும், முயற்சிகளில் ஈடுபட்டதற்காகவும், அளிக்கப்பட்ட ஒரு அத்தாட்சி, க�ௌரவம், என விளக்கப்பட்டது. ஒருபுறம், கிருஷ்ணாவின் விசிறிகள் பெரும்பாலும் இளைஞர்கள் மெத்த மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் இந்த வெற்றியை க�ொண்டாடினாலும் பலர், இவ்விருதைப் பற்றிய கேள்விகளை எழுப்பியவாறே உள்ளனர். மரபு வழியாக கர்நாடக இசையை கேட்காத, பயிலாத, மேடையேறிப் படாத சாதாரண மக்களுக்கு அவற்றிற்கான வாய்ப்புகளை அளிக்க கிருஷ்ணா மேற்கொண்ட முயற்சிகள் த�ொடக்கநிலை ஈடுபாடே என்பது இந்த விமர்சகர்களின் கூறு. ‘‘குப்பத்தில் கச்சேரி நடத்துவதால் கர்நாடக இசையை விரிவுப்படுத்த முடியுமா? கர்நாடக இசை பாமரரைச் சென்று அடைய வேண்டியது அவசியமா? குப்பத்து கச்சேரிகளிலும் அதிகபட்சம் மயிலாப்பூர், மேற்சாதி ரசிகர்களே காணப்படுகிறார்களே. கிருஷ்ணாவுக்கு முன்னாலேயே சில பலர் கர்நாடக இசையை பரப்பியிருக்கிறார்களே, குறிப்பாக கேரளத்தில்! மக்சாசே விருதைப் பற்றிய விமர்சனங்களுக்கான உதாரணங்கள் சிலவற்றை மேலே காண்கிற�ோம். கிருஷ்ணாவைப் ப�ொறுத்த வரையில் அவர் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எப்பொழுதுமே அவர் இசையுலகில் தன்னிச்சையாக, சுதந்திரமாக செயல்பட்டு வந்திருக்கிறார். பிராம்மணர்களின் பங்களிப்பை சிலாகித்தாலும் பிராமண ஆதிக்கத்தை மாற்ற விழைகிறார் கிருஷ்ணா. கச்சேரி பத்ததியில் அவர் செய்துவரும் மாற்றங்களை பலரும் விரும்புவதில்லை. சங்கீதம் வேறு, தெய்வபக்தி வேறு என்பது அவர் அபிப்ராயம். வர்ணத்தில் த�ொடங்கி, நடுவில் பல கீர்த்தனங்களை பாடி, பஜன் ப�ோன்ற பாடல்களில் முடிப்பது என்ற சம்பிரதாயத்தை அவர் முறித்து வருகிறார். நமது இசையில் ராகமே பிரதானம், மற்றவை இரண்டாம் இடத்துக்கே உரியவை என நம்புகிறார். பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு கச்சேரலியில் சம பங்கு, சம மரியாதை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். பெண்களுக்குச் சரியான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டுமென ப�ோராடி வருகிறார். மூத்த கலைஞர்களிடம் பெருமதிப்பு க�ொண்டிருந்தாலும், அவர்களையும் கிருஷ்ணா விமர்சிக்கத் தயங்குவதில்லை. டி.எம்.கே மக்சாசே விருது பெறத் தகுதியற்றவரெனச் சாடுபவர்களில் பலர் அவரின் மேற்கூறிய கருத்துக்களிலும், செயல்களிலும் இருந்து வேறுபட்டு, அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்.
கடந்த இரண்டாண்டுகளாக கர்நாடக இசையை குப்பங்களுக்கு எடுத்து சென்று வரும். டி.எம்.கே, பல வருடங்களாக இசையில் பலநல்ல, புதுமையான முயற்சிகளை செய்து வருகிறார். க�ோவில்களில் கச்சேரிகளை நல்ல முறையாக நடத்துவது, தமிழ்நாட்டைச் சாராத இளைஞர்களுக்கு கச்சேரி வாய்ப்புகளை அளிப்பது, மூத்த கலைஞர்களும் இளைய கலைஞர்களும் சம்பாஷித்து, இசை ரசிகர்களுக்கு பல அரிய தகவல்களை க�ொண்டு செல்வது, ‘சுவாறுபவா’ என்ற நிகழ்ச்சி மூலமாக சாஸ்திரீய இசை, நாட்டுப்புறக் கலைகள், நாடகம், சினிமா ப�ோன்ற பல துறைகளைச் சார்ந்த கலைஞர்களை பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது, என அடுக்கிக் க�ொண்டே ப�ோகலாம். டி.எம்.கிருஷ்ணா தலைசிறந்த இசைக் கலைஞர். கர்நாடக இசையின் பால் அதீத ஆர்வமும், பெருமையும் க�ொண்டவர். இந்துஸ்தானி இசைக்கும், வேறெந்த இசைக்கும், எந்த விதத்திலும் அது குறையவில்லை, மாறாக உலகிலேயே தலைசிறந்து விளங்கும் பாரம்பரிய இசையது என முழுமையாக நம்புபவர். எனக்குத் தெரிந்தவரை, ஸ்ரீராம் குழுமத் தலைவர் ஆர். தியாகராஜன் Tag நிறுவனத் தலைவர் RT சாரி, பாடகர் மற்றும் மருத்துவர் எஸ். சுந்தர், இசை வல்லுனர், மேலும் அறிஞர் ஸ்ரீராம் பரசுராம் ப�ோன்றவர்கள் கர்நாடக இசையைப் பரப்புவதற்காக பெரும்பாடு பட்டுக் க�ொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கிருஷ்ணாவின் முயற்சிகள் அவருக்கு இவ்வளவு பெரிய விருதை பெற்றளித்திருப்பதற்கு, இரு முக்கியக் காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறேன். ஒன்று அவரது Charisma அல்லது கவர்ச்சி(?) இரண்டு, விளம்பரம் டி.எம்.கே எதைச் செய்தாலும், விளம்பரமில்லாமல், ஓசைப்படாமல் செய்வதில்லை. இதை நான் குறையாகக் கருதவில்லை. நல்முயற்சிகளுக்கு விளம்பரம் இன்றியமையாதது. க டை சி ய ா க , எ ன் ச�ொ ந ்த க் க ரு த் து : ந ா ன் டி.எம்.கே யின் சில க�ொள்கைகளை ஒப்புக் க�ொள்கிறேன், சிலவற்றை மறுக்கிறேன். அவர் ஒரு நல்ல பாடகர் என்று கருதுகிறேன், நிச்சயம் சங்கீத கலாநிதி பட்டத்தை ஒரு நாள் பெறுவார். நாட்டுக்காக, சாதாரண மக்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, ஏதேனும் தன் பங்கில் செய்ய வேண்டுமெனத் துடிக்கிறார். அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது நாணயத்தை நான் மதிக்கிறேன். மக்சாசே விருது? அதை கிருஷ்ணாவுக்கு அளித்தவர்கள் இன்னும் சில ஆண்டுகள் ப�ொறுத்திருக்கலாம்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
39
இமையத்தின் மூன்று கதைகள் - ஸ்டாலின் ராஜாங்கம்
இமையம் எழுதிய மூன்று சிறுகதைகள் பற்றிய கட்டுரை இது. எழுதப்பட்ட தருணத்திலும், கதையில் விவரிக்கப்பட்டதைப் போன்றே சமூக வன்முறையொன்று (தர்மபுரி வன்முறை) நடந்த பின்னணியிலும் கவனத்தை ஈர்த்த ‘பெத்தவன்’ (உயிர்மை, அக்டோபர் 2012), பிறகு வெளியான‘சாவு சோறு’ தொகுப்பில் இடம்பெற்ற‘சாவு சோறு’ (க்ரியா வெளியீடு, அக்டோபர் 2014) ‘வீடியோ மாரியம்மன்’ (கிரியா வெளியீடு, டிசம்பர் 2008) தொகுப்பில் இடம்பெற்ற ‘சத்தியக்கட்டு’ என்கிற மூன்று கதைகளே அவை.
மூன்று கதைகளின் சுருக்கங்களையும் கீழ்கண்டவாறு சொல்லிவிடலாம். ‘தாழ்ந்த’ தலித் சாதிப் பையனைக் காதலித்த காரணத்தால் தங்களை உயர்சாதியாகக் கருதிக்கொள்ளும் ஊரார் ஒன்றுகூடி ஊர்-சாதிகட்டு மானத்தைக் காப்பாற்றவேண்டி அக்குறிப்பிட்ட பெண்ணின் தந்தையை வைத்தே ஆணவக் கொலை செய்துவிட நிர்பந்திக்கின்றனர். ஊராரின் விருப்பத்தை மீறமுடியாமலும், தன் மகள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துத் தர முடியாமலும் தவிக்கும் தந்தை தன் மகளை ரகசியமாக அவள் காதலனோடு திருமணம் செய்துகொள்ள அனுப்பிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான். இது ‘பெத்தவன்’ கதை. தாழ்ந்த சாதி இளைஞனைக் காதலித்து ஓடிப்போன தன் மகள் சென்ற இடத்தில் நன்றாக வாழ்ந்துவிட வ ே ண் டு மெ ன் று ம க ளு க்கா க ச் சே ர் த் து வைத்த நகைநட்டுகளையும் படித்த சர்டிபிகேட்டுகளையும் எடுத்துக்கொண்டு சாதிவெறியோடு அலைந்து திரியும் ஊரார் - சாதியினர் - குடும்ப ஆண்கள் ஆகியோருக்கு தெரியாமல் ஊருக்குப் பக்கமாயிருக்கும் நகரங்களிலும் அந்நகரங்களின் பள்ளிக்கூடங்களிலும் தேடித் திரிவதுதான் ‘சாவுசோறு’ கதை.
40
பண்ணையில் வேலையாளாக இருந்த காலனிக்கார பெண்ணோடு (தலித்) காதல்வயப்படும் பண்ணைக்காரரின் பேரன் அவள் கர்ப்பமானதும் கைவிடத் துணிகிறான். பின்னர் காலனிக்காரர்களின் ‘மிரட்டலுக்கு அஞ்சி’ திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரகசியமாக அழைத்துச் சென்று குளத்தில் தவறிவிழுந்ததாகக் கூறி கொலைசெய்து விடுகின்றனர். பிறகு ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு அக்கொலையே காரணம் என்று கருதி பாவமன்னிப்பு கேட்கும்வகையில் அவளை சாமியாக்கி வருடந்தோறும் மழை வேண்டி பொங்கல் வைக்கின்றனர் என்பது ‘சத்தியக்கட்டு’ கதையாகும்.
மூன்று கதைகளிலும் சாதி கடந்த காதல், திருமணம் இவற்றை ஊராரும் உறவுகளும் எதிர்கொள்ளும் விதம் ஆகியவை மிக நுட்பமாக சித்திரம் கொள்கின்றன. சமகாலத்தின் குறிப்பிட்ட போக்கு ஒன்றைப் பிரதிபலித்த வகையில் இக்கதைகள் அரசியல் மதிப்பை அடைந்துள்ளன. ஆனால் இக்கதைகள் விவரிக்கப் புகுந்த விசயத்தை சம்பவமொன்றின் விவரணையாகவோ பதிவாகவோ இருத்திவிடாமல் அவற்றின் வெவ்வேறு பரிமாணங்களைப் பேசுவதன்மூலம் அரசியல் பிரதி என்கிற அர்த்தத்தையும் தாண்டுகிறது. இ க்கதை க ளி ல் கெ ா லை யு ம் கெ ா லை செய்யப்படும் விதமும் தொழிற்நுட்ப நேர்த்தியோடு விவரிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முந்தியும் பிந்தியுமான பின்னணிகளையும் விளைவுகளையும் விவரிக்கும் விதத்தில் இவை சமூகமொன்றின் கலாச்சாரப் பிரதிகளாக விரிகின்றன. அத்தகைய கலாச்சார நுட்பம் இ ரு ப்ப த ா லேயே எ தி ர்மறை க ளி லி ரு ந் து வி ல கி ய குரல்களையும் கவனப்படுத்த முடிகிறது. அந்த வகையில் ஆணவக் கொலைகள் நிகழும் சமூகத்தின் கலாச்சாரக் குறுக்குவெட்டுத் தோற்றமே இமையத்தின் இக்கதைகள்.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
மூ ன் று க தை க ளு ம் பெண்க ளி ன் க ா த லையே மையப்படுத்துகின்றன. இதில் பெத்தவனும்‘சாவுச்சோறும் ஆதிக்கசாதிப் பெண்களின் தரப்பிலிருந்து பேசுகிறது. இ க ் கெ ா லை க ள் ப ற் றி ப ா தி க்கப்ப ட ்டவர்க ளி ன் தரப்பிலிருந்து பேசுவதே நியாயமாகக் கருதப்படும். அவ்வாறு பேசுவதே அரசியல் சரித்தன்மையாகக் க ரு த ப்ப டு ம் . ஆ ன ா ல் இ க்கதை க ள் ப ா தி ப்பை ஏ ற ்ப டு த் தி ய வர்க ளி ன் த ர ப் பி லி ரு க் கு ம் வி ல கி ய குரல்களைக் காட்டுகின்றன. அவ்வாறு அவர்கள் விலகிநிற்பதற்கு அரசியல் புரிதல் காரணமல்ல. மாறாக, கொலை செய்வதற்கு சாதி, குடும்பம், குழுவாதம் போன்றவை எவ்வாறு காரணமாகிறதோ அதேபோன்றே குடும்பம் உறவுபோன்றவைகளே விலகுவதற்கும் காரணமாகின்றன. மொத்தத்தில் இரண்டு தரப்பிலுமே சமூக பண்பாட்டு உறவுநிலைகளே காரணமாக இருக்கின்றன. இவற்றை அரசியல் ரீதியாக செ ால் லும்போது உரு வாகும் தட்டையாகிவிடு ம் புரிதலே கலைப்பிரதிகளாக முன்வைக்கும்போது அதற்குரிய நியாயத்தைத் தானாகவே ஈட்டிக்கொள்கிறது. சாதியமைப்பு தன் தொடர் இருத்தலுக்காக கொலை செய்கிறது அல்லது கொலை செய்யத் தூண்டுகிறது. இந்நிலையில் கொலை செய்யத் தூண்டும் தரப்பிலிருக்கும் ஒ ரு த ந ்தை ம ற் று ம் ஒ ரு த ா ய் ஆ கி யே ா ரி ன் மனநிலையிலிருந்து பெத்தவனும் ‘சாவுசோறு’ம் எழுதப்பட்டிருப்பதன்மூலம் எதிரும்புதிருமான ஆவேசத்தில் தன்னை இருத்திக்கொள்ளாமல் இப்பின்னணியை விரிந்த உரையாடல் வழியாக நிதானமாக விசாரணை செய்கிறது. பெத்தவனில் சொந்த சாதிய நெருக்குதல் இருந்தாலும் தன்னை இழந்து மகளை வாழ அனுப்பத் துணிகிறான் தந்தை. இதற்கு மாறாக, சாவுசோறில்’ தந்தையும் சகோதரர்களும் ஓடிப்போன தன்வீட்டுப் பெண்ணை வெறிகொண்டு தேடுகிறார்கள். ஆனால் பெத்தவள், ஓடிப்போனவள் ஓடிப்போனவளாகவே இருக்கட்டும். அவள் நன்றாக பிழைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறாள். தாயின் துயரம் துல்லியமான மொழியோடு இக்கதையில் வரையப்பட்டிருக்கிறது. இத்தகைய
உணர்ச்சிக்கு முன்னால் குடும்ப ஆண்களும் ஊராரும் கற்பித்துக்கொண்டியங்கும் சாதிக்கௌரவம் என்பது ஒன்றுமில்லாமல் போகிறது. அதுதான் அவர்கள் தரப்பிலிருந்தே சாதியை கேள்வி கேட்கிறது.
சாதி - ஊர் - மானம் - நெருக்கடி என்கிற தொடர்ச்சியில் ‘பெத்தவன்’ கதையில் தந்தையின் தற்கொலை நடக்கிறது. தர்மபுரி வன்முறைக்குக் காரணமாக்கிக்கொள்ளப்பட்ட திவ்யாவின் தந்தை ந ா க ர ா ஜி ன் ச ா வை இ து நி னை வு ப டு த் து கி ற து . மானம் போனது என்றே மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றே வன்னியர் தரப்பு கூறி வன்முறையில் ஈடுபட்டது. நேர்மறை, எதிர்மறை என்கிற எதிர்வுகளிலிருந்து விலகி இயலாமையின் முடிவாக சாவைக் காட்டும்போது கதை மனித உறவுநிலைகளின் கொந்தளிப்பை விவரிப்பதாக மாறுகிறது. மேலும் குழுவைச் சார்ந்து வாழும் மனிதனுக்கு அவ்வாறு வாழ்வதற்கு விலையாக அக்குழு உருவாக்கும் நெருக்கடிகளையும் அது உருவாக்கப்படும் விதங்களையும் விவரிக்கிறது. இத்தகைய நெருக்கடியின் பின்னணியிலும் திவ்யாவின் தந்தை சாவை இருத்திப் பார்ப்பதற்கான சாத்தியத்தை இப்பிரதி தருகிறது. இத்தகைய சாத்தியங்களை நிகழ்த்தியிருப்பது இமையம் கதைகளின் பலம் எனலாம். அவ்வாறான சில அம்சங்களைப் பார்க்கலாம். ஒரு சாதிக்கென வரையறுக்கப்பட்ட அடையாளங்களும் நம்பிக்கைளும் பண்பாடென்று உணர்ச்சிபூர்வமாகக் கட்டமைக்கப்படுகிறது. பிற குழுவின் தாக்குதலிலிருந்து காப்பதற்கு போராடுவது அல்லது அழிப்பது என்பதன் மூலமே அது தன் அடையாளத்தைக் காப்பாற்றுகிறது. அதற்கான காரணங்களுள் ஒன்றாகவே சாதி மானம் என்ற ஒன்றை வரையறுக்கிறது. இம்மூன்று கதைகளிலும் பரவலாக புழங்கும் மானம் என்னும் சொல்லாடல்கள் சாதி மானம் அன்றி வேறல்ல என்பது துலக்கமாகிறது. மானம் அல்லது கவுரவம், வாக்கு, சபதம் அல்லது சத்தியம் என்று இவை விரிகொள்கின்றன. இத்தகைய சாதி ஆணவக் கொலைகளில் அவை செயல்படும் விதம் இக்கதைகளில் நுட்பமாக விரிவுகொள்கின்றன.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
41
கிராம சமூக அமைப்பில் மானமும் சத்தியமும் பெறுமிடத்தை இங்கு பார்க்கலாம். இதே நிலையை ‘சாவுசோறு’ கதையிலும் பார்க்கலாம். 'மானம்' என்கிற கற்பிதம் எவ்வாறு சண்டைகளின் / கொலைகளின் மைய இழையாக செயலாற்றுகிறது என்பதை மூன்று கதைகளிலும் ஆசிரியனின் விவரிப்பாக இல்லாமல் உரையாடும் பாத்திரங்களின் வழியாக விவரித்திருக்கின்றன இக்கதைகள். இதன் தொடர்ச்சியாகவே எதிர்தரப்பு மீது வன்முறையும் மானமழிப்பும் நடத்தப்படுகிறது.
பெத்தவன் கதையில், காதலிக்கும் தலித் இளைஞன் தரப்புக்கு உருவாக்கப்படும் அழிமதிகள் கூறப்படுகின்றன. இதே அனுபவங்கள்‘சாவுசோறிலும் உண்டு.
இது மட்டுமல்லாமல் இக்கதைகளில் சொல்லப்படும் அழிமதிகள் இரண்டு முக்கியமானவையாகும். தங்களின் மானம் காப்பதாக நினைத்து எதிர் தரப்பின் மானத்தை அழிக்கும் கலாச்சார வன்முறை சம்பந்தபட்டவையே இவை. ஒன்று முடி அறுத்தல். மற்றொன்று முலை அறுத்தல். உற்பத்தி, இனப்பெருக்கம், தாய்மை, பாலியியல் வேட்கை என்றெல்லாம் நம் மரபில் பொருள்படும் முலையைச் சிதைத்தல் இங்கு சாதி வன்முறையின் அங்கமாக இருக்கிறது. ஒரு குழுவின் கலாச்சார அடையாளமாகப் பெண்களை இருத்துகிறபோது எதிரான குழு அவர்களை களவாடுதல். மானபங்கப்படுத்தல் போன்றவற்றை நிகழ்த்துகிறது. அது உடனடி அவமானமாக நில்லாமல் அக்குழுவின் ரத்தத் தூய்மையிலும் தலையிடுவதாகிறது. ந ம் செ வ் வி ல க் கி ய ங ்க ளி ல் பே ா ரென்ப து மிகுபுனைவாக்கப்பட்டுவிட்டதால் அதிலிருந்திருக்கக் கூடிய வன்முறை தெரியாமல் போய்விட்டன. அதனால் போரில் ஒரு குழு மற்றொரு குழுவின் பெண்கள் மீது நிகழ்த்தியிருக்கக்கூடிய வன்முறைகள் நமக்கு கிடைப்பதில்லை. அதன் தொடர்ச்சிதான் நம் கிராம அமைப்பில் ஒரு சாதி மற்றொரு சாதிமீது வன்முறை நடத்தும்போது முலை அறுத்தலாகவும் அதுவே மானபங்கப்படுத்துதலாக’ நீடிக்கிறது என்று யூகிப்பதில் தவறில்லை. இதைத்தான் முலதான பொட்டச்சிக்கு மூஞ்சி / பொட்டச்சிக்கு மாரும் மயிரும்தான் பெருசு என்று சொல்லப்படுகிறது. இதன்படி மாரையும் முடியையும் அறுப்பது அவமானமாக மட்டுமின்று காதல்கொள்வதற்கான அழகையும்’சிதைக்கிறார்கள். அதாவது அவளின் அடையாளத்தை அழிக்கிறார்கள். இந்த இரண்டுமே வாய்க்க முடியாதவை. இது ஆண்களின் உளவியல் வன்முறையாகவும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் தென்னாற்காடு வட்டாரத்தில் பொன்னருவி என்ற தலித்பெண் வல்லுறவு செய்யப்பட்டு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட சம்பவத்தை இங்கு நினைவு கூறலாம். நம் புனைகதைப் பரப்பில் சாதி வன்முறையும் அதில் முலை அறுத்தலும் இமையம் கதையில் தான் பதிவாகியிருக்கிறது.
42
அ து ம ட் டு ம ல ்ல , கீ ழ ்ச ்சா தி க ா ர னே ா டு ஓ டி ப்பே ா யி ட ்டாளெ ன் று பெ ண் ணு க் கு கு டு ம ்ப ஆண்களெல்லாம் மொட்டையடிச்சி, சாவுப் பந்த போட்டு, மோளம் அடிச்சி, பாலு தெளிப்பும் நடத்துகிறார்கள். அதில் பெத்த அம்மாவையும் ஒரு அங்கமாக்கிக் கொண்டார்கள். எம்மவளோட கருமக்காரிய சோத்தத் தின்னவதான்ம்மா நானு என்று புலம்புகிறாள் தாய். இதிலிருந்துதான் கதையின் தலைப்புகூட ‘சாவுசோறு’ என்று வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சாதி எங்ஙனம் பொருள் பெறுகிறது என்பதைப் பற்றி சில நுட்பமான விவரணைகள் இக்கதைகளில் புலப்படுகின்றன. அதாவது சாதி என்பது கும்பல் பலத்தில்தான் பொருள் பெறுகிறது. கும்பலாகத் திரளும்போது எழும் கூட்டுணர்ச்சியாகவே அது இருக்கிறது. கும்பலாக சென்று தாக்குகிறது: ஆர்ப்்பரிக்கிறது. ஊரே சாதி பஞ்சாயத்தாக திரளும்போது ஊர் மானம் சாதிமானம் என்கிற பெயர்களில் அத்தகு உணர்ச்சி கட்டமைக்கப்படுகிறது. பிறகுதான் ஊர் திரண்டு சென்று தாக்குதல் நடத்துகிறது. முலைகளை அறுக்கிறது. இரண்டு வீட்டுப் பிரச்சினை ரெண்டு தெருவுக்கும் பரவி ஊர் சிக்கலாயிச்சு என்றும், அப்புறம் சுத்துவட்டாரச் சிக்கலாயிப் பல ஊரு கச்சிகட்டிக்கிட்டு வந்து நிக்கும் என்றும் சாதிச்சண்டையின் தன்மை சொல்லப்படுகிறது. இந்த பாரம்பரிய உணர்ச்சிக்கு பலம் தருவது மூலமே சமகால சாதி அரசியல் தன்னை பலப்படுத்திக் கொள்கிறது. ‘பெத்தவன்’, ‘சாவுசோறு’ என்கிற இ ர ண் டு க தை க ளி லு ம் பி ர ச் சி னை வ ரு ம ்பே ா து உள்ளூரார் கட்சியை நாடிச்செல்வதும், அவர்களுக்கு உதவுவதன் மூலம் கட்சி தன்னைத் தக்கவைத்து முயற்சிப்பதும் நடக்கிறது. ‘பெத்தவன்’ கதையில் தலைவர் கேட்டப்பக்கூட அதனாலதான் ஊருலியே பாத்துக்கிறம்ன்னு சொல்லிட்டன், அவுரும் வெளிய தெரியாம காரியத்த முடிங்கன்னு சொல்லிட்டாரு/ தலவருக்கு தெரியறதில தப்பில. நாளக்கி ஒரு வம்புவழக்கு ஆயிப் போச்சின்னா அவுருகிட்டதான போயி நிக்கனும் / கீழ்ச்சாதி பயகூட படுக்கதான அலயுறா. அதுக்கு மின்னாடி நம்ப காரியத்த முடிக்கணும்ன்னு சொல்லி ஏயி எட்டு எளவயசுப் பயலுவோ சுத்துறானுவ. கட்சிக்காரன்தான் இதுல மின்ன நிக்குறான் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. சாவுசோறு கதையில் தங்கள் வீட்டுப் பெண்ணை அழைத்துச்சென்றவன் வேலை செய்த கடையை அடித்து நொறுக்கி போலீஸ் வழக்கில் சிக்கி கட்சிக்காரர்கள் உதவியால் வெளியே வர முயற்சிக்கிறார்கள். கட்சி மூலம் கடைக்காரரோடு பஞ்சாயத்து பேசி பணம் வாங்கித் தந்து பிரச்சினையை முடிக்கிறார்கள். பணம் செலவழிஞ்சாலும் ‘சாதிமானம்’ முக்கியம் என்று நினைக்கிறார்கள்.
தர்மபுரி வன்முறைக்கு முன்பு 'பெத்தவன்,' பின்பு ‘சாவுசோறு’ கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த இரண்டு கதைகளிலும் விவரிக்கப்படும் கட்சி எது
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
என்பதை இங்கு தனித்துச் சொல்லவேண்டியதில்லை. தர்மபுரி வன்முறைக்குப் பின்னால் பாமக என்கிற கட்சி இருந்ததும், பிறகு அது வெளிப்படையாகவே காதலுக்கு எதிராக பேசியதும் உள்ளூரின் தங்கள் ‘பாராம்பரிய’ சாதி பஞ்சாயத்துகளை மறைத்து நவீன அரசியல் களத்தில் இயங்கும் தலித் கட்சி ஒன்றை கட்டைபஞ்சாயத்து கட்சி என்று சாடியதும், தலித் அல்லாதோர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியதும் நடந்தது. இதெயெல்லாம் தர்மபுரி வன்முறைக்கு பின்னர்தான் ராமதாஸ் பேசினார். ஆனால் அதற்கு முன்பே எழுதப்பட்ட ‘பெத்தவன்’ கதையில் இந்த சித்திரம் சொல்லி வைத்தாற்போன்று இ ம ை ய த்தால் எ ழு த ப்பட் டு வி ட ்ட து . த ர்ம பு ரி வன்முறைக்குப் பிறகே ராமதாஸ் இவ்வாறு மாறிப்போனார் என்று சொல்வது ஒருவித வசதியான அரசியல் விளக்கம். இவ்வாறு சொல்வது அவரோடு கூட்டுவைத்திருந்த தலித் கட்சி உள்பட பல கட்சிகளுக்கும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தேவைப்படலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பாமக அரசியல் ரீதியாக எவ்வாறு தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்து இருந்தாலும் களஅளவில் அது வேறு மாதிரியே இருந்துகொண்டது. இந்த அரசியல் அடையாளங்களைத் தாண்டி சமூக எதார்த்தங்களை அவதானித்து எழுதியதால்தான் இமையத்தின் கதை பின்னால் நிகழ்த்தப்படவிருந்த வன்முறைக்கான வரைபடம் போன்று இதை எழுத முடிந்திருக்கிறது. தான் வாழும் சமூகம் மீதான கலைஞனின் அகப்பார்வைதான் இக்கதை. எல்லா இடத்திலும் போலவே இப்பிரதிகளிலும் கல்வி, அரசு பதவி, நகரத்திற்கு சென்று திரும்புதல் போன்ற நவீன விசயங்களின் ஊடாட்டம் பதிவாகியுள்ளது. அவற்றை இப்பிரதிகள் எதிர்மறையாக்கவில்லை. மாறாக பாரம்பரிய சாதி பிடிப்பில் இருப்பவர்கள் அவற்றை தொல்லையாகப் பார்ப்பதை பிரதி சொல்லுகிறது. 'பெததவன்' கதையில் அவர்கள் கிராமத்தை விட்டு பக்கத்து நகரத்திற்குச் சென்று வருவதன் மூலமே சந்திக்க முடிகிறது. காதலிக்கிறார்கள். கீதா ரவியாகச் சொல்லப்பட்டிருக்கும் கண்ணகி முருகேசன் ஆகியோரும் படித்தவர்கள்தாம். 'பெததவன்' கதையில் பையன் போலீசாக இருக்கிறான். ஒருவகையில் அவனை அதுவே (நவீனமே) காப்பாற்றி வைத்திருக்கிறது. 'சாவுசோறு' கதையில் ஓடிப்போன பெண் டீச்சருக்குப் படித்தவள். போன இடத்தில் அவள் பிழைத்துக்கொள்ள வழியிருக்கிறதென்று கருதியே பெண்ணின் அம்மா படித்த சர்ட்டிபிகேட்டுகளை எடுத்துக்கொண்டு அவளைத் தேடுகிறாள். இரண்டு சாதிகளுமே படிக்க வைக்கவே விரும்புகின்றன. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிக்குப் படிப்பு என்கிற நவீனத்தின் வழியாக பிடிப்பு கிடைக்கிறது. அது பாரம்பரிய சாதியமைப்பைக் காதல் போன்ற வழிகளால் எதிர்கொள்கிறது. இவ்விடத்தில் ஒடுக்கும் சாதிகள் நவீனத்தை விரும்பினாலும் பாரம்பரிய சாதி பெருமையைச் சிதைக்கிறது என்று ஒருவகையில் கல்வியை கண்டு அஞ்சுகிறார்கள். 'பெத்தவன'’ கதையில் பெண்ணை நோக்கிப் பேசும் தந்தை நீ மேம்படிப்பு படித்து
வாத்தியாராக ஆகணும் என்று விரும்பினேன். ஆனால் நீயோ இப்படி காதலித்துவிட்டு ஊரில் என் மானத்தை வாங்குகிறாய் என்கிற தொனியில் பேசுகிறார்.
'சாவுசோறு' கதையில் காதலித்து ஓடிப்போன பின்னால் மகளை செத்துவிட்டதாக தலைமுழுகும் தந்தையும் சகோதரர்களும் அவள் நன்றாகப் படிக்கும்போதும் ஒவ்வொரு முறை அதிக மதிப்பெண் எடுத்து பாஸாகி வரும்போதும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஏ னெ னி ல் அ து வரை அ வ ளி ன் ப டி ப் பு எ ன் கி ற ந வீ ன ம் இ வர்க ளி ன் ச ா தி ப ா ர ம ்பா ரி ய த் தி ற் கு த் தொல்லையாக மாறவில்லை. ஆனால் அவர்கள் பின்னால் வருந்தியிருப்பார்கள். அது பிரதியில் சொல்லப்படவில்லை. ஆனால் அந்த அர்த்தம் இழையோடுகிறது. அவளின் தாய் ஓடிப்போன பெண்ணைப் பற்றி சொல்லும்போது ஊராங்க பேச்சைக் கேக்காம படிக்க வச்சாங்க என்ற குறிப்பைத் தருகிறாள். 'பெத்தவன்' கதையில் இதே போன்ற தருணத்தைச் சாடும் பாத்திரமொன்று முந்திரிகாட்டுல போட்டு அடிச்சா தானா மதம் அடங்கிபோவுது என்று பேசுகிறது. இது வீம்புக்கு சூரிகத்திய முழுங்கிற சாதி என்கிற பாத்திரமொன்றின் விமார்சனம்தான் இதற்கும் பொருந்தி போகிறது.
இ த ற ்கே ற ்ப க தை நி க ழு ம் நி ல ப்ப ர ப்பா ன தென்னாற்காடு வட்டாரத்தில் நடந்த பல்வேறு உண்மை சம்பவங்களைக் கதைத் தரவுகளாகக் கொண்டிருக்கிறார் இமையம். 2003ஆம் ஆண்டு விருத்தாசலம் அருகே புது கூரைப்பேட்டையில் நடந்த கண்ணகி முருகேசன் கொலையை ‘பெத்தவன்’ கதையில் நல்லூரைச் சேர்ந்த கீதா ரவி ஆகியோரை ரெண்டு பெத்தவர்களின் சம்மந்தத்தோடு ஊரே கூடி ரெண்டு பேரு காதிலும் மருந்தை ஊத்தி பட்டப்பகல்ல கொன்னாங்க என்று விவரிக்கிறார். இவ்வாறு கடந்த சில வருடங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களைக் கதைக்குள் கொணர்கிறார். இவ்வாறு ‘சாதி மானத்தின்’ பெயரால் காதலை ம று த்தா லு ம் , கீ ழ ்ச ்சா தி யி ன ர் ம ட் டு மே ‘ மேல் சாதிப்பெண்’களைக் காதலிக்கிறார்கள் என்பதைப்போல அரசியல் நிலையில் சொல்லப்பட்டாலும் எதார்த்தங்கள் வேறுமாதிரியாகவே இருக்கிறது. இது தம் மக்களைப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டி எதிர் தரப்பினரிடமிருந்து ச ா தி ம ா ன த்தை மீ ட ்ப த ற ்கா ன ர ட ்ச க ர்க ள ா க த் தங்களைக் காட்டுவதற்கேற்ப கட்டமைக்கப்படும் திட்டமிட்ட அரசியல். இந்த அரசியல் குரலைச் சமூக அனுபவங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் இக்கலைப் பிரதிகள் கட்டுடைக்கின்றன.
'பெத்தவன்' கதையில் இவன் சாதிக்கார பய ஒருத்தன்தான் கீழ்ச்சாதிகாரிய இட்டாந்து மோட்டாரு கொட்டாயில வச்சி குடும்பம் நடத்துறான். ரெண்டு புள்ளயயும் பெத்துட்டான். மூணு நாலு வருசமா இந்த கூத்து நடக்கிறது. இந்த ஊரு நாயிவுகளுக்குத் தெரியாது?... ஆம்பள செஞ்சா ஒண்ணு, பொட்டச்சி செஞ்சா ஒண்ணா?... என்று சொல்லும் பெண்ணின் அம்மா
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
43
துளசி உள்ளூரிலும் அசலூரிலும் எந்தெந்த சாதிகாரி முறைகெட்டுப்போய் எந்தெந்தச் சாதிக்காரனோடு படுத்தார்கள் என்று பட்டியலிட்டாள் என்ற பகுதி வருகிறது.
சொந்த சாதியினருக்கே அதே சாதியைச் சேர்ந்த பெண்கள் மதிக்கதக்க உயிரிகளாய் இருப்பதில்லை. இந்த உளவியலைச் சொல்லும் நுட்பமான இரண்டு வரிகள் ‘சாவுசோறு’ கதையில் வருகின்றன. பெண்ணைக் கூட்டிச் சென்றுவிட்ட கீழ்ச்சாதிக்கார பையன் போட்டோ க டையெ ா ன் றி ல் கூ லி ய ா க இ ரு ந் து க ல ்யா ண ம் கருமாதியில போட்டோ எடுக்கிறவன். அது எவ்வாறு நிகழ்ந்திருக்குமென பெண்ணின் தாய் சொல்கிறாள். அதாவது "பொட்டச்சிக்குப் பணம் காசா பெருசா தெரியுது? நகநட்டா பெருசா தெரியுது? நாலு நல்ல வாத்தத்தான பெரிய மலயாத் தெரியுது. அதை நம்பிப் போயிடுறாளுவ" என்கிறாள்.
சொந்த சாதிக்குள்ளேயும்கூட காதல் மணத்தால் சண்டையே வராது என்பதில்லை. ஆனால் அதில் மெல்ல மெல்ல சமாதானம் ஆகிவிடுவதற்கு வழியிருக்கிறது. அதாவது சொந்த சாதியினரோடு காதல் மணம் செய்து பிரச்சினை வந்தாலும் அது அரசியலாக்கப்படுவதில்லை. வெவ்வேறு சாதிக்குள் காதல் மணம் நடந்து பிரச்சினை வந்தால் அது அரசியலாக்கப்படுகிறது. இதுதான் சாதியின் நுட்பம். ‘சாவுசோறு’ கதையில் பெண்ணின் அம்மா ஓரிடத்தில் "மேம்பட்ட சாதிக்காரன் கூட ஓடிப்போயிருந்தாக்கூட சரின்னு போயிடலாம். கீழ்ச்சாதிக்கார பய. அதனாலதான் ஊரே கர்வம் கட்டிக்கிட்டு திரியுது . . . அந்த சண்டாளப் பய வெளியூர் பயலா இருந்தாக்கூட இம்மாம் அமளிதுமளி நடந்திருக்காது" என்றுக் கூறுவது முக்கியமான குறிப்பு. அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக்கூட பியூன் கமலாவும் ஓரிடத்தில் "இந்த மாதிரி கதை நடக்காத ஊருன்னு ஒலகத்திலெ ஒரு ஊரு கிடையாது. மாசத்திலெ ரெண்டு மூணு புள்ளிவோ இந்த பள்ளிக்கூடத்திலிருந்து ஓடிப்போதுவோ" என்று சொல்லும்போது இவை சமூகத்தின் பொது அனுபவமாக இருப்பதையே நாமறிகிறோம். மானம், வாக்கு, சத்தியம், சாபம், பாவம் போன்று கதைகளெங்கும் விரவிக்கிடக்கும் கலாச்சாரக் குறியீடுகள் மட்டுமல்லாது சாதிகடந்த காதலாலும் திருமணங்களாலும் க தை க ள ா க வு ம் ச ா மி க ள ா க வு ம் நி லை த் து வி ட ்ட தொன்மங்கள் பற்றிய சித்தரிப்பு இமையத்திடம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்விடத்தில் ‘சத்தியக்கட்டு’ கதை வருகிறது. பெத்தவனும் சாவுசோறும் ஏறக்குறைய ஒரே காலத்தில் ஒரே மனநிலையில் எழுதப்பட்டுள்ளன. ஒருவகையில் இமையம் ‘பெத்தவனை’ எழுதிய மனநிலையால்தான் ‘சாவுசோறை’ எழுதியிருக்க வேண்டும். இவைபோன்ற கதைகளை எழுதுவோம் என்று தெரிவதற்கு முன்பே (அதுதானே படைப்பு) சத்தியக்கட்டு கதையை அவர் எழுதிவிட்டிருக்கிறார். ‘பெத்தவ’னும்
44
‘சாவுசோறு’ம் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பின் விலகியக் குரல்களின் மூலம் உள்ளார்ந்த விமர்சனம் ஒன்றை நிகழ்த்துகின்றன. ஆனால் ‘சத்தியக்கட்டு’ கதையில் பாதிக்கப்பட்ட தரப்பின் குரல் பதிவாகியிருக்கிறது. மூன்று கதைகளும் பெண் பற்றியும் அவர்களின் பெற்றோர் தரப்பு சார்ந்து பேசுவதாகவுமே அமைந்திருக்கிறது. ‘பெத்தவன்’ கதையிலும் ‘சத்தியக்கட்டு’ கதையிலும் சாதிதொடர்பான வேறுபாடு ஒன்று நுட்பமாகத் தொழிற்படுகிறது. ‘பெத்தவன்’ கதையில் பெண்ணின் தந்தை தம் மகளை அவள் விரும்பும் ‘கீழ்ச்சாதிகாரனோடு’ சேர்த்துவிடும்படி ஒப்படைக்கிறான். அவள் சேர்ந்திருப்பாள் என்ற நம்பிக்கையோடு அவன் சாகிறான். அதற்கான நம்பிக்கையை அப்பிரதியும் தருகிறது. ஆனால் ‘சத்தியக்கட்டு’ கதையில் மேம்பட்ட சாதிக்கார குடும்பத்தின் பேச்சை நம்பி தன் மகளை திருமணம் செய்துகொள்வார்கள் என்று ‘கீழ்ச்சாதிக்கார’ தாய் அனுப்பி வைக்கிறாள். ஆனால் அவள் மகள் மறுநாள் குளமொன்றில் செத்து கிடக்கிறாள். ஓ ரி ட த் தி ல் ந ம் பி க்கை கை கூ டு வ தி லு ம் அ து வ ே மற்றோரிடத்தில் ஏமாற்றமாவதிலும் செயற்படுகிறது சாதிய உளவியல். ஓடிப்போன தன் மகளைத் தேடியலையும் ‘சாவுசோறு’ தாய், மர்மமான முறையில் கொல்லப்பட்ட தன் மகளின் உடலைப் பார்த்தது முதல் பித்து பிடித்தவள் போலாகிவிட்ட ‘சத்தியக்கட்டு’ தாய் ஆகியோர் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாயினும் இரண்டு பெண்களின் துயரக்கதைகளாக ஒரே கண்ணியில் நிறுத்துவதன் மூலம் இக்கதைகள் ஏதாவதொரு சாதியின் பக்கம் நின்றுகொள்ளும் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறது. சாதியென்பது ஒடுக்கப்படுகிற சாதிக்கு மட்டுமல்ல ஒடுக்கும் சாதிக்கும் துயரமானதே என்கிற பொது மனித உணர்ச்சியை முன்வைக்கிறது. மூன்று தனிமனிதர்களின் துயரத்தை சமூக துயரமாக ம ா ற் று வ த ா ல ்தா ன் இ க்கதை க ள் மு க் கி ய ம ா ன ப் பிரதிகளாகின்றன. வாக்கு போலவே நம்பவைப்பதும் கலாச்சார நம்பிக்கையாகவே இருக்கிறது. நாகம்மாளிடம் நம்பிக்கையைத் தந்து அழைத்துசென்ற ஆறுமாத கர்ப்பிணியான பொன்னருவியைக் கொன்றுவிடுகிறார்கள். நம்பவைத்துக் கழுத்தறுத்தல் மட்டுமல்ல அவள் கர்ப்பிணியாகவும் இருந்து இறந்தாள். கன்னிகழியாத பெ ண் ணு ம் நி றை சூ லி ய ா ய் உ ள ்ள பெ ண் ணு ம் இ ற ந் து பே ா வ து ப ற் றி ப ல ்வே று ந ம் பி க்கை க ள் உண்டு. அவங்க பேயா, சாமியா மாறிவிடுவாங்க. பழவாங்குவாங்க. அது சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் ஊருக்கும் நல்லதில்லை என்று நம்புவார்கள். செத்தபிறகு ஊருக்குள் பல கதைகள் உருவாயின. குளக்கரையில் நடுசாமத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்பதாய் துவங்கும் கதை பேய் சாபம் என்று விரிகிறது. அவள் தகராறில் முன்னின்ற ‘மேம்பட்ட சாதிக்கார’ மூன்று பேரும் அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு, தூக்கு, விஷம்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
தீண்டுதல் போன்ற காரணங்களால் இறக்கிறார்கள். பெண்களுக்கு கர்ப்பம் கலைதல், செத்தே குழந்தை பிறத்தல் என்றெல்லாம் நடக்கிறது. பிறகே சாபத்திலிருந்து விடுபட்டு பாவமன்னிப்பு கேட்கும் விதத்தில் பொங்கல் வைக்கிறார்கள்; பிறகு அவள் மெல்ல மெல்ல சாமியாக வணங்கப்படுகிறாள். மழை வேண்டி அம்மன் பொங்கல் வருடம்தோறும் எட்டு ஊரால் வைக்கப்படுகிறது. பறைச்சிய எப்படியோ சாமி ஆக்கிட்டீங்க என்று முதலில் புலம்பினாலும் பின்னர் எல்லோரும் வணங்கும் சாமியாக அவள் மாறுகிறாள்.
ச ா தி ஒ ரே ம ா தி ரி எ ல ்லா நி லை யி லு ம் செயற்படுவதில்லை. இப்பின்னணியில்தான் இமையத்தின் சத்தியக் கட்டுக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலில் கட்டமைக்கப்படும் இடைவெளி பண்பாட்டுத் தளத்தில் இணைவுகொள்ளும் தருணம் இது. இதை அவரறிந்த உள்ளூர்க் கதையொன்றை மறுஆக்கம் செய்ததின் மூலம் படைப்பாளி எதிர்கொண்டிருக்கிறார். விருப்பத்தை சாதி மானத்தின் பெயரால் தடுக்கிறார்கள் என்பதால் வேறுவழியில்லாமல் செத்துபோனவளை தங்கள் விருப்பத்திற்காகவும் சாதி மானத்தை காப்பதற்காகவும் செத்துப்போனவளென்று மாற்றி வழிபட்டுக்கொள்கிறது சாதியும் ஊரும் (ஆனால் இதுவும் ஒரு வகையில் ஆணவக்கொலையே. கொலையில் உதித்த தெய்வங்கள் பலவும் ஆணவக் கொலையிலிருந்து பிறந்தவையேயாகும்). இவ்விடத்தில் சாதிமீறியவர்களை கொன்றதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் விதமான சாமிகள் மட்டுமல்ல, சாதிமானத்தை காத்தமைக்காக வணங்கப்படும் சாமிகளும் உ ள ்ள ன . இ ர ண் டை யு ம் கெ ா ண் டி ரு ப்பதே ந ம் கலாச்சாரத்தின் பலமும் பலவீனமும். பாவமன்னிப்புக்காக சாமி உண்டாக்கிக் கொண்டாலும் சமூகம் அத்தகைய பாவங்களை செய்வதற்கு தயங்குவதில்லை. திரும்ப திரும்ப செய்கிறது.
ê‰î£ ªî£¬è Ï. 2400 2000 (10 ݇´èœ) ݇´„ ê‰î£ Ï.240/\ CøŠ¹ 꽬è Ï,200/\ DD / MO. ð£óF ¹ˆîè£ôò‹ ªðòK½‹ Þ‰Fò¡ õƒA Ý›õ£˜«ð†¬ì A¬÷ CA No. 701071066, «ïó®ò£è¾‹ ªê½ˆîô£‹. (óY¶ ïè™ ÜŠð «õ‡´‹)
7, Þ÷ƒ«è£ ꣬ô, «îù£‹«ð†¬ì, ªê¡¬ù- 600018. «ð£¡: 044 - 24332424 சாதி வன்முறைகளென்பவற்றை கிராம அமைப்பின் ந டை மு றை கள் ச ா ர் ந் து ம் , க ல ாச்சா ர உ ள வி யல் சார்ந்தும் வாசிப்பதற்கான விரிந்த உரையாடல்களை இமையத்தின் கதைசொல்லல் முறையும் ஆசிரியனை மீறி கதாபாத்திரங்கள் கைக்கொள்ளும் சுதந்திரமும் இப்பிரதிகளை அரசியல் பிரதிகள் என்பதாக மட்டுமே புரிந்துகொள்ளும் அபாயத்திலிருந்து விடுவிக்கின்றன. பாதிப்பை சந்தித்த ஒடுக்கப்பட்டோர் தரப்பு பேசுவதாக இக்கதைகளை அமைத்திருந்தால் சாதி அமைப்பு பற்றிய இத்தகைய விமர்சனத்தை நிகழ்த்தியிருக்க முடியாது. அதை முடிவு செய்துவிடுகிறபோதே படைப்பு செயல்பாட்டின் பாதிவேலை முடிந்துவிடுகிறது. ஆணவக்கொலைகளின் இயங்கியலை அரசியலால் மட்டுமே புரிந்துகொள்ள முடியாதென்பதை இக்கதைகளை வாசித்து முடிக்கிறபோது நமக்குத் தெரியவருகிறது. அதுதான் இப்பிரதிகளின் முக்கியத்துவம்.
குஜராத் க�ோப்புகள் நூல் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் நடைபெற்றது. நூலினை பாராளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட, எம்.ஜி.தாவூத் மியாகான் பெற்றுக்கொண்டார்.
படக்குறிப்பு - இடமிருந்து ச.தமிழ்ச்செல்வன், அ.பாக்கியம், க.நாகராஜன், டி.கே.ரங்கராஜன், ரானாஅயூப், எம்.ஜி.தாவூத் மியாகான், கவிதா முரளிதரன், ஞாநி, ந.ஞானகுரு, ந.அ.அறிவுகரசி, தீபா,
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
45
வீ. அரசு.
'ம�ொழி'யின் தற்காலத் தமிழ்ச் ச�ொற்சேர்க்கை அகராதி
ம�ொ ழி யி ன் வ ள ம் எ ன்ப து , அ ம ் ம ொ ழி க் கு உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளைக் க�ொண்டுதான் தீர்மானிக்கப்படும். செம்மொழியான தமிழுக்கு ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் அகராதிகள் உருவாக்கப்பட்டு வருவதை நாம் அறிவ�ோம். இந்த வரலாற்றை சுருக்கமாகக் கீழ்க்காணும் வகையில் த�ொகுக்கலாம். - கி.பி. 9ஆம் நூற்றாண்டு த�ொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை ம�ொழியில் உள்ள ச�ொற்கள் மற்றும் த�ொடர்கள் ஆகியவற்றைத் த�ொகுத்து வழங்கும் மரபு உருவானது. இதனை நிகண்டு என்று அழைக்கிற�ோம். - ந ம க் கு ப் ப ல ் ம ொ ழி ச் சூ ழ ல் த�ொட ர் ந் து செயல்பட்டு வந்தாலும், அத்தன்மை குறித்த இலக்கண மரபு சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்தன. ஆனால் ஐர�ோப்பியர் வருகைய�ோடுதான் இரு ம�ொழிகள் சார்ந்த ப�ொருள்கூறும் அகராதிகள், ஒரே ம�ொழியில் உள்ள ச�ொற்களுக்கானப் ப�ொருள்கூறும் அகராதிகள் ஆகியவை உருவாயின. இந்த வகையில் 1862-இல் உருவான ஆங்கிலம் தமிழ் அகராதி மற்றும் தமிழ்-ஆங்கில அகராதி முதன்மையாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனை உருவாக்கியவர் வின்சுல�ோ. இம்மரபு பின்னர் த�ொடர்ந்தது. - பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியுற்றன. இந்நிறுவனங்கள் வழி அகராதிகள் உருவாக்கும் பணி உருவானது. பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை தலைமையில் சென்னைப் ப ல ்கலை க் க ழ க த் தி ல் உ ரு வ ா க்கப்ப ட ்ட தமிழ் லெக்சிகன் (1924-36) இவ்வகையில் முதன்மையானது. மேற் கு றி த்த அ க ர ா தி உ ரு வ ா க்க ம ர பு க ள் என்பவை ம�ொழியில் உள்ள ச�ொற்கள் த�ொடர்பான த�ொ கு தி க ள ா க வ ே அ ம ை ந ்த ன . அ ச ் ச ொ ற ்கள் தமிழ்-ஆங்கிலப் ப�ொருள், பயின்றுவரும் இடம், இலக்கணக் குறிப்புகள், புழங்குமுறை ஆகிய பிறவற்றை முதன்மையாகக் க�ொண்டவை. இருபதாம் நூற்றாண்டில் இம்மரபின் த�ொடர்ச்சியாக அகராதிகள் உருவாக்கிய நான்கு நிறுவனங்கள் முக்கியமானவை. - வரலாற்றுமுறை தமிழ் இலக்கியப் பேரகராதி, வைணவ உரைநடை வரலாற்றுமுறை பேரகராதி, தமிழ்க்கல்வெட்டுச் ச�ொல் அகராதி ஆகியவற்றை உருவாக்கிய மர்ரே நிறுவனம். - பேரா. வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின்
46
த�ொலைந�ோ க் கு ப் ப ா ர்வை ச ா ர் ந் து உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழக அகராதிகள். - க்ரியா உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி. - ம�ொழி’ நிறுவனம் உருவாக்கியுள்ள அகராதிகள் மற்றும் கையேடுகள். இவற்றில் இறுதியாக கூறப்பட்ட இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள அகராதிகள் என்பவை முழுக்க முழுக்க இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் புழக்கத்தில் உள்ள அல்லது பழைய புழங்கு ச�ொற்கள�ோடு புதிதாக உருவான புழங்கு ச�ொற்களைக் கவனப்படுத்திய அகராதிகள் ஆகும். ம�ொழி ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய ச�ொற்களை உள்வாங்கிக் க�ொண்டே இருக்கிறது. குறிப்பாக 1990 களுக்குப் பிறகு உருவான தாராளமயம் எனும் ப�ொருளாதார வாழ்முறை உருவாக்கும், பண்பாட்டு நிகழ்வுகள் பல்பரிமாணம் மிக்கவை. ஒலி, ஒளி, எழுத்து சார்ந்து ஊடகத்துறை பெற்றுள்ள அசுர வளர்ச்சி என்பது ம�ொழியின் ச�ொற்புழக்கத்தைப் பல்வேறு க�ோணங்களில் வளர்ச்சி பெறச் செய்துள்ளது. இவ்வாறு ம�ொழியில் உருவாகும் ச�ொற்களுக்கான பதிவுகள் என்பவை அகராதிகளாக வடிவம் பெறுவது அவசியமாகும். 1928ஆம் ஆண்டு முதல் ஆங்கில ம�ொழியில்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
உ ரு வ ா கு ம் மேற் கு றி த்த பு தி ய த ன்மை க ளை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சார்ந்த அகராதி உருவாக்கப்பணி, ஆக்ஸ்போர்டு அகராதிகளாக பல்வேறு க�ோணங்களில் உருவாக்கிக் க�ொண்டே இருக்கிறார்கள். கடந்த த�ொண்ணூறு ஆண்டுகளில் ஆக்ஸ்போர்டு அகராதிகள் உருவாக்கம் என்பது, ஆங்கில ம�ொழியின் அனைத்துவகையான புதியபுதிய வளர்ச்சிகளையும் பதிவு செய்து அகராதிகளாக உருவாக்குகிறார்கள். இவ்வகையான செயல்பாட்டை முன்னெடுக்கும் ந�ோக்கத்தில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித் துறையை வ.ஐ. சுப்பிரமணியம் உருவாக்கினார். ஆனால் அது சில ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பின்தங்கிவிட்டது . அரசு சார்ந்த நிறுவனங ்களின் சீர்குலைவு என்பது தமிழ்ச் சூழலில் பூதாகரமானது. எனவே வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் திட்டங்கள் கனவுகளாகவே த�ொடர்கின்றன. ஆனால், அவரிடம் பயிற்சி பெற்ற, அவரது முதன்மையான மாணவர்களில் ஒருவரான பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அப்பணிகளைத் த�ொடர்கிறார். க்ரியா உருவாக்கிய தற்காலம் தமிழ் அகராதி உருவாக்கத்தில் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களுக்கு குறிப்பிடத் தக்க இடமுண்டு. பின்னர் அவரது தலைமையில் செயல்படும் ‘ம�ொழி’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள அகராதிகள் மற்றும் கையேடுகள் இருபதாம் நூற்றாண்டின் புதிய கூறுகளைப் பதிவு செய்துள்ளன. இத்தன்மை குறித்து பேரா. பா.ரா. சுப்பிரமணியன் உருவாக்கிய ‘தற்காலத் தமிழ் மரபுத் த�ொடர் அகராதி’யின் (1997) அறிமுகப் பகுதியில் பதிவு செய்துள்ள செய்திகள் வலுப்படுத்துவதாக அமைகின்றன. 1992ஆம் ஆண்டு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ் -ஆங்கிலம்), வெளிவந்தது. அந்த அகராதியின் தரவு மூலம் தற்காலத் தமிழ் உரை நடை. அதில் அடங்கியுள்ள 15,875 ச�ொற்களும் தற்காலத் தமிழில் வழங்குபவை. தற்காலத் தமிழின் ப�ொதுத் தரமான உரைநடையில் நிலைபெற்று வழங்கும் ச�ொற்களைக் க�ொண்டதால் அது ஒரு ப�ொது அகராதி. அந்த அகராதியின் த�ொடர்ச்சியாகவே ம�ொழி அறக்கட்டளை இப்போது மரபுத் த�ொடர் அகராதியை வெளியிடுகிறது. இதன் தரவு மூலமும் தற்காலத் தமிழே. தற்காலத் தமிழ் அகராதியில் முக்கியப் பங்காற்றிய ஆசிரியர்குழுவே இந்த மரபுத் த�ொடர் அகராதியையும் உருவாக்கியிருப்பது அகராதித் த�ொகுப்புக் க�ொள்கையில் த�ொடர்ச்சியைத் தருகிறது. தற்கால தமிழ் அகராதிக்கு உதவிய தரவு மூலங்கள�ோடு அதிகப்படியாகச் சேர்க்கப்பட்ட தரவு மூலங்களையும் பயன்படுத்தித் தற்காலத் தமிழில் உள்ள மரபுத் த�ொடர்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறது இந்த அகராதி. மரபுத் த�ொடர்களை மட்டும் க�ொண்டிருப்பதால் இது ஒரு சிறப்பு அகராதி." பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் முன்னெடுப்பில் உருவான தற்காலத் தமிழ் மரபுத் த�ொடர்
தற்காலத் தமிழ்ச் ச�ொற்சேர்க்கை அகராதி | பாரதி புத்தகாலயம் | ரூ. 390
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் ம�ொழியின் வளம்:
அ க ர ா தி யி ன் அ டு த்த கட்ட செயல்பாடுதான் த ற ்கா ல த் ‘ த மி ழ்ச் ச�ொற்சேர்க்கை அகராதி’. (2016) இவ்வகராதி பற்றி பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் விளக்கத்தை தருகிறேன். " ச�ொ ற ்க ளு க் கு ப் ப�ொ ரு ள ்த ரு ம் வழக்கமான நடைமுறையிலிருந்து இந்த அகராதி வேறுபடுகிறது. ச�ொற்களைத் தனித்தனியாக பார்க்காமல். அவற்றின் ப�ொருளுக்குத் தக்கவாறு உறவுக�ொள்ளும் பிற ச�ொற்கள�ோடு காணும் வசதியை இந்த அகராதி தருகிறது. ஒரு ச�ொல்லின் ப�ொருளும் பயன்பாடும் அது பிறச�ொற்கள�ோடு ஏ ற ்ப டு த் தி க் க�ொள் ளு ம் கூ ட் டு ற வி லி ரு ந் து தெளிவாவது ப�ோன்று அதன் தனிநிலையில் வெளியாவதில்லை. இது ஒரு பயன் என்றால் ம ற ் ற ொ ரு ப ய ன் ம�ொ ழி யி ன் இ ய ல ்பா ன ஓட்டத்திற்கு தடங்கல் இல்லாத ஆற்றொழுக்கான நடைக்கு இந்தச் ச�ொற்கட்டுகள்தான் அடிப்படை ஆகின்றன. ம�ொழியில் செயற்கைத் தன்மை, ஏற்படாமல் இருப்பதற்கு இத்தகைய இயல்பான மரபான ச�ொற்சேர்க்கைகள் காரணம் ஆகின்றன." (முன்னுரை: XI) இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் வழக்கில் இருக்கும் ச�ொற்சேர்க்கைகள் குறித்த இந்த அகராதி முன்னர் உருவாக்கப்பட்ட மரபுத் த�ொடர்கள் குறித்த அகராதியின் பிறித�ொரு வகையாக அமைகிறது. இந்த அகராதி யாருக்கானது? இந்த அகராதி மூலம் தமிழ் சமூகம் பெறப்போவது என்ன? ப�ோன்ற கேள்விகளை எழுப்ப நமக்கு உரிமை உண்டு., இந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்முன், தமிழ்ச்சூழலில் அகராதியைப் பயன்படுத்தும் தன்மைகள் எவ்விதம் உள்ளன என்பது பற்றியும் அந்தப் பின்புலத்தில் இந்த அகராதியின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் நாம் பேசலாம். பேராசிரியர். கா.சிவத்தம்பி அவர்களிடம் இருந்த பழக்கம் ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். தமக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அகராதியைப் புரட்டிக் க�ொண்டே இருப்பதைப் பார்த்திருக்கின்றேன். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை அவர் அவ்விதம் புரட்டிக் க�ொண்டிருப்பார். புதிது புதிதாக அந்த அகராதியின் பதிப்புகள் வந்தால் புதிதாக வந்த பதிப்பினை உடனடியாக வாங்கிவிடுவார். ச�ொ ற ்களை வ ா சி த் து க் க�ொ ண் டி ரு க் கு ம ் ப ோ து முன்னர் வந்த பதிப்பிலிருந்து அடுத்த பதிப்பில் ச�ொற்கள் எவ்வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதைக் கவனிப்பார். இப்பழக்கத்தின் மூலம் தாம் கட்டுரைகளை எழுதும்போது ஆங்கிலத்தில் சிந்திக்கும் ச�ொற்களைத் தமிழில் எழுதுவதற்கு மேற்குறித்தவாறு அகராதியில்
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
47
உள்ள ச�ொற்களின் பல வடிவங்களை ஒருங்கிணைந்து வேர்ச்சொற்கள் சார்ந்து முன்னொட்டு அல்லது பி ன ் ன ொட் டு க்களை இ ணை த் து பு தி ய க லைச் ச�ொற்களை உருவாக்கி எழுதுவார். இம்மரபை பேரா. க.கைலாசபதி அவர்களும் கைக்கொண்டிருப்பதைக் காணமுடியும். இவ்விருவர் புதிதாக உருவாக்கியுள்ள கலைச்சொற்கள் குறித்த ஆய்வியல் நிறைஞர் (எம். ஃபில்) ஆய்வேடு ஒன்றை உருவாக்கின�ோம். இச்சொற்கள் உருவாக்குவதற்கு அகராதியை இப்பெருமக்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை அறிய முடிகிறது. பேரா. கா. சிவத்தம்பி அவ்வாறு உருவாக்கும் தருணங்களில் அவர�ோடு உரையாடும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்தது. ம�ொழிப் பயன்படுத்துதலில் அகராதிகளின் பங்களிப்பு என்பதை இவ்வகையில் புரிந்து க�ொள்ள வேண்டும். இம்மரபில் தமிழ்நாட்டில் செயல்பட்ட பேராசிரியர்களில் ந.சஞ்சீவி அவர்களுக்குத் தனி இடமுண்டு. இவரும் நிறைய புதிய கலைச்சொற்களைத் தமது கட்டுரைகளில் கவனப்படுத்துவார். அவரே உருவாக்கிய ச�ொற்கள் அவை. பேரா. ந.சஞ்சீவி அவர்களும் அகராதிகளைத் த�ொடர்ந்து புரட்டிக் க�ொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அகராதியைப் பயன்படுத்தும் கலையை அறிஞர்கள் ப ய ன்ப டு த் து ம் மு றை யி லி ரு ந் து வெ கு ச ன ம க்கள் பயன்படுத்தும் முறை வேறுபட்டது. பெரும்பகுதி ச�ொற்பொருளுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். சென்னை ப் ப ல ்கலைக்க ழ க ம் , வெ ளி யி ட் டு ள ்ள சிதம்பரநாதன் செட்டியார் அகராதி இந்த வகையில் மிகப் பரவலான புழக்கத்தில் உள்ளதைக் காணமுடியும். ப�ொருள் விளக்கம் பார்ப்பதற்கு மட்டும் என்னும் பார்வையிலிருந்து மாறி தமது எழுத்து ம�ொழியில் வளமான மரபை உருவாக்கிக் க�ொள்ள வேறுவகை அகராதிகள் உதவுகின்றன என்ற கண்ணோட்டத்தில் அகராதியைப் பயன்படுத்தும் மரபு உருவாக வேண்டும். அந்த வகையில் இந்த ச�ொற்சேர்க்கை அகராதி முக்கியமானது. இந்த அகராதி வெகுசனங்கள் நம்பும் ப�ொருள் தரும் அகராதியாக மட்டும் அமையாது, ஒரு ச�ொல், ம�ொழியில் எவ்வாறெல்லாம் இணைந்து இணைந்து செயல்படுகிறது; அவ்விதம் செயல்படும்போது ம�ொழியின் அழகு எவ்வாறு கூடுகிறது; ம�ொழியின் வளத்தை நாம் எவ்வாறு அனுபவிக்க முடியும் என்ற பல சிந்தனை மரபுகள் இவ்வகராதி சார்ந்து நாம் புரிந்துக�ொள்ள முடியும். இவ்வகராதியின் பின்அட்டையில் கண்டுள்ளபடி, இ வ ்வ க ர ா தி யை ப ய ன்ப டு த் து வ து கு றி த்த இ ரு அடிப்படையான செய்திகள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன். - ம�ொழிபெயர்ப்பாளர்களுக்கு இவ்வகராதி உதவும் முறைமை. - தமிழ் கற்போர், கற்பிப்போர் ஆகியவர்களுக்கு இவ்வகராதி தரும் பயன். இப்போது இவ்வகராதி மேற்குறித்த ந�ோக்கத்தில்
48
யாருக்கு எப்படிப் பயன்படும் என்பதைப் புரிந்து க�ொள்ள முடிகிறது. அப்படியானால் இவ்வகையில் து றை ச ா ர்ந்தவர்க ளு க் கு ம ட் டு மே இ வ ்வ க ர ா தி உ ரு வ ா க்கப்பட் டு ள ்ள து எ ன் று கூ ற மு டி ய ா து . அவர்களுக்குக் கூடுதலாக இது உதவும். ஆனால் பின் அட்டையில் குறித்த வேறு சில செய்திகளும் முக்கியமானவை. இவ்வகராதி, ம�ொழியை எழுதும் யாருக்கும் ம�ொழியில் உள்ள ச�ொற்சேர்க்கை எப்படி அமைய வேண்டும், எவ்வாறெல்லாம் அமைந்தால் எப்படியான ப�ொருளை தரும் என்ற விளக்கத்தையும் தருகிறது. அந்த வகையில் ம�ொழியை எழுதும் அனைவருக்கும் இவ்வகராதி பயன்படும். குறிப்பாக ஆய்வு செய்து கட்டுரை எழுதுவ�ோர், புதிய வகையான புனைகதைகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் ஆகிய�ோர் இவ்வகராதியை பயன்படுத்திக் க�ொள்ள முடியும். ஆக, இவ்வகராதி யாருக்கானது: எப்படி பயன் க�ொள்ள முடியும் என்பதை தெளிவுப்படுத்திக் க�ொண்டோம். தமிழ்ச் சூழலில் அகராதி வாங்கும் பழக்கம் பரவலாக இருப்பதைக் காண முடிகிறது. தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் அகராதி வாங்கிக் க�ொடுக்கிறார்கள். மாணவர்கள் ஆங்கில அகராதிகளை வாங்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். இதனால் அனைத்துப் பதிப்பகங்களும் ஏதேனும் ஒரு அகராதியை வெளியிடுவதைப் பார்க்கிற�ோம். இந்த வகையில் ‘ம�ொழி’ நிறுவனம், உருவாக்கிய அகராதியை ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது. பதிப்பகங்கள் பெரும்பாலும் தமிழ்ஆங்கிலம் என்னும் ப�ொருள் பார்க்கும் அகராதிகளையே வெளியிடுவதைப் பார்க்கிற�ோம். தமிழ்ச் சூழலில் வேறுபட்ட அகராதியை வெளியிடும் ஓரிரு பதிப்பகங்களில் பாரதி புத்தகாலயம் இணைந்து க�ொண்டுள்ளது. ‘அடையாளம்’ பதிப்பகம் ‘ம�ொழி’யின் அகராதி மற்றும் கையேடுகளை மறுவெளியீடு செய்யும் பணியைச் செய்து வருகிறது. பாரதி புத்தகாலயம் வணிக ந�ோக்கமின்றி மிகச் சிரத்தையுடன் இவ்அகராதியை வெளியிட்டுள்ளதை வெகுவாகப் பாராட்டும் கடமையும் அந்த அகராதியை வாய்ப்பு நேரும்போதெல்லாம் அறிமுகப்படுத்தி பரவலாகக் க�ொண்டு செல்லும் வேலையும் நமக்கிருக்கிறது. இந்த ந�ோக்கத்தில் இவ்வகராதி குறித்த அறிமுகத்தைப் பதிவு செய்துள்ளேன். அகராதியின் உள்ளமைப்பு சார்ந்த த�ொழில்நுட்ப உரையாடல்களை மேற்கொள்வதற்கான பயிற்சி எனக்கு இல்லை. எனவே புதிதாக வந்துள்ள அகராதியை ஒரு வெகுசன வாசிப்பாளனாக நின்று அறிமுகப்படுத்தும் பணியைச் செய்துள்ளேன். தமிழில் செயல்படும் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், ம�ொழி ஈடுபாடு உள்ள அனைத்துத் தரப்பினர், ம�ொழி பெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய�ோர் இவ்வகராதியை வாங்கிப் பயன்கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறேன். இதனை உருவாக்கிய ‘ம�ொழி’ நிறுவனம் குறிப்பாக பேரா. பா.ரா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் இதனை வெளியிட்ட பாரதி புத்தகாலயம், குறிப்பாக த�ோழர் நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டும்....
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
புரட்சி இலக்கியங்கள் ஒரு மீள்வாசிப்பு-11
ஸ்டாலின் வெறுப்பு ஏன் நீடிக்கிறது?
ச�ோ
என்.குணசேகரன்.
வியத் யூனியனை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின் பற்றிய சர்ச்சை, த�ொடருகிறது. அறுபது ஆண்டுகளாக ஓயாமல் த�ொடர்கிற இந்த சர்ச்சை, அடுத்த ஆண்டு ரஷியப் புரட்சியின் நூற்றாண்டைய�ொட்டி அதிகரிக்கக்கூடும்.ச�ோவியத் ச�ோஷலிச சாதனைகளை திசை திருப்ப இந்த முயற்சி தீவிரமாக நடைபெறும். மேற்கத்திய மார்க்சியர் பலர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஸ்டாலின் எதிர்ப்பு, ச�ோஷலிச எதிரிகளுக்கு பெரிதும் பயன்பட்டது.,ஸ்டாலினை, ஹிட்லர�ோடு இணைத்து சித்தரிக்கவும்,கம்யூனிஸமே ஒரு வன்முறை சித்தாந்தம் என்ற ப�ொய்யான பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்கவும் அது உதவியது. உலகை அழிக்கும் பேராபத்தாக உருவெடுத்த பாசிசத்தை முறியடித்ததில் ச�ோவியத் யூனியனது பங்கினையும், அதற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினது பங்கினையும் மறைக்கும் முயற்சி த�ொடருகிறது. மனித விடுதலைக்கு 'ச�ோசலிசமே....இல்லையேல் க ா ட் டு மி ர ா ண் டி த்த ன ம ்தா ன் ! ' எ ன்ற ர�ோ ச ா லக்சம்பர்க்கின் கூற்று தற்போது உண்மையாகி வருகின்றது.இன்றைய அமைப்பு, ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.முதலாளித்துவ மூலதன தி ர ட ்டல் வெ றி யி ன ா ல் , இ ய ற ்கை வ ள ங ்கள்
நாசமாகி வருகின்றது;முதலாளித்துவ வர்க்கங்கள் நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டலாலும்,ப�ோரினாலும், பெரும்பான்மை மக்கள் பாதிப்புக்கும்,வேதனைக்கும் ஆளாவதும், பலர் மடிந்துப�ோவதும் த�ொடர்கிறது. இ ற ப் பு , ப ா தி ப் பு எ ன்ற நி லையெ ல ்லாம் தாண்டி,மனிதம் எனும் மேன்மையை அழித்தொழிக்கும் அமைப்பாக முதலாளித்துவம் செயல்படுகிறது. ஸ்டாலினால் அழிக்கப்பட்டவர் எண்ணிக்கை ஒரு க�ோடி, இரண்டு க�ோடி,ஐந்து க�ோடி என்று இடையறாது எண்ணிக்கை விளையாட்டில்,ஈடு படுகின்றவர்கள்,முதலாளித்துவம் செய்து வருகிற அழித்தொழிப்பைப் பேசுவதில்லை. 1943-ஆம் ஆண்டுகளில் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலின் சந்தைக் க�ொள்கைகளால்,செயற்கையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மடிந்து ப�ோன 40 இலட்சம் இந்தியரைப் பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை.பிரிட்டிஷ் அரசின் க�ொள்கைகளால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-நூற்றாண்டின் துவக்க காலத்திலும் மடிந்து ப�ோன 3 க�ோடி இந்தியர்களைப் பற்றிய மவுனம் நீடிக்கின்றது. மனித மேன்மையை ச�ோஷலிசமே ஏற்படுத்து, மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்ட 'ஒவ்வொரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சி' என்பது
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
49
ச�ோசலிச அமைப்பில்தான் சத்தியம்.அந்த அமைப்பை உ ரு வ ா க் கு வ த ற ்கா ன ம க த்தா ன வ ர ல ா ற் று ப் பரிச�ோதனையாக ரஷியப் புரட்சியும்,ச�ோஷலிச அமைப்பினைக் கட்டும் பணியும் நடந்தது. ஒ ரு ப ரி ச�ோ த னை மு ய ற் சி எ னு ம ் ப ோதே அ தி ல் த வ று க ள் ந டைபெ ற வ ா ய் ப் பு ள ்ள ன . பல நூறு பரிச�ோதனை முயற்சிகளுக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புக்கள் உருவான அனுபவங்கள் அறிவியலில் ஏராளம். புதிய சமுகக் கட்டுமானத்திலும் தவறுகள் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமில்லை. தவறுகளைப் பரிசீலித்து, படிப்பினைகள் பெற வேண்டுமென்பது மார்க்சியம். ப ரி ச�ோ த னை மே ற ் க ொண்டவர்களை இழிப்பது,நிராகரிப்பது அனைத்தும் தவறானது. அதிலும் ச�ோசலிசக் கட்டுமானத்தில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால், அந்த பரிச�ோதனையில் த�ோல்வி கிடைக்க வேண்டும் என்று எதிரிகள் இடைவிடாது சதிச் சூழ்ச்சி வேலைகளையும்,நேரடித் தாக்குதலையும் த�ொடுப்பது வழக்கம்.இந்நிலையில் தவறுகளுக்கு வாய்ப்புள்ளன. எதையுமே இயக்கவியல் பார்வையில் துல்லியமாக எழுதும் ஈ.எம்.ஸ்.நம்பூதிரிபாட் 'கம்யூனிஸ இயக்கத்தின் தத்துவார்த்த பிரச்னைகள்' எனும் நூலில் எழுதினார். '...மார்க்ஸ்,எங்கெல்ஸுக்குப் பிறகு லெனின்,பிறகு ஸ்டாலின்,பிறகு வந்த, புரட்சிக் கடமையாற்றிய தலைவர்கள், மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை மாற்றவில்லை.புரட்சியின் வெற்றிக்கு தேவையான மாற்றங்களைக் க�ொண்டு வந்தனர்....' '...இப்பணியினை செய்கிற ப�ோது ஸ்டாலின்,மாவ�ோ மற்றும் பல புரட்சிக்காரர்களிடம் குறிப்பிடத்தக்க பல தவறுகள் ஏற்பட்டது என்பது உண்மையே...' '.....ச�ோஷலிச ஜனநாயகத்தின் அடிப்படைக் க�ோட்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பான செயல்கள் ச�ோவியத் யூனியனிலும்,சீனாவிலும் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாது....' என்கிறார் ஈஎம்ஸ். இனி எந்த நாட்டிலும் இவ்வாறு நடக்காமல் ச�ோசலிசப் பயணம் முன்னேற வேண்டுமென வலியுறுத்தி,அந்த தவறுகள் பற்றி துல்லியமாக பரிசீலிக்க வேண்டும். இது,நீடிக்கும் ஸ்டாலின் எதிர்ப்பு அரசியலுக்கு மாறானது. புரட்சி வெற்றி,ச�ோஷலிச அமைப்பினை கட்டும் பணி ஆகியவற்றில் லெனினிய வழியில் பல தத்துவார்த்த சிந்தனைகளை பதிவு செய்துள்ள ஸ்டாலினை முற்றாக நிராகரிப்பது புரட்சி இயக்கத்திற்கு பலன் தராது. அதிலும் புரட்சி இலட்சியம் முற்றுப் பெறாத இந்தியா ப�ோன்ற நாடுகளில் உள்ள மார்க்சிஸ்ட்கள் ஸ்டா லி ன து ப ங ்க ளி ப்பை வி ம ர்ச ன ரீ தி யி ல் உள்வாங்குவது அவசியம்.புதிய கண்டுபிடிப்புக்கான
50
பரிச�ோதனைகளில் தவறும்,பின்னடைவும் ஏற்பட்டது என்பதால் அந்த முயற்சிகளையே நிராகரிப்பேன் என்பது அறிவியல் பார்வையாகுமா? புரட்சிகர நடைமுறைக்கான தேடல் சிலர் ஸ்டாலினை மார்க்சிய வரிசையில் வைக்கக் கூடாது என்கின்றனர்.அவர்களி டம்,புரட்சிகர நடைமுறை பற்றிய தேடல் இல்லை.மாறும் சூழல்களில் புரட்சி நடைமுறையை மேம்படுத்திட வேண்டும்.அதற்கு முந்தைய மார்க்சிஸ்ட்களின் அனுபவங்கள் முக்கியமானவை.லெனினியம் பற்றிய ஆழமான அறிவு முக்கியத் தேவை. 'லெனினியத்தின் அடிப்படைகள்,லெனினியம் த�ொடர்பான பிரச்னைகள்' உள்ளிட்ட ஸ்டாலினது எழுத்துக்களைப் பயின்றிடாமல்,லெனினியத்தை உள்வாங்குவது சிரமம்.. டிராட்ஸ்கியவாதம் உள்ளிட்ட ப�ோக்குகளுக்கு எதிராகப் ப�ோராடி,அந்த உக்கிரமான கருத்துப் ப�ோரில் முகிழ்த்த தத்துவமாக லெனினியம் விளங்குகிறது. இதனை ஸ்டாலினது எழுத்துக்கள் விளக்குகின்றன. 'லெனினியத்தை ஏகாதிபத்திய சூழலிலும்,பாட்டாளி வர்க்கப் புரட்சி சகாப்தத்திலும் எழுந்த மார்க்சியம்' என்று வரையறை செய்து, ஸ்டாலின், லெனினியத்தை விளக்குகிறார்.ஆறு முக்கிய பரப்புக்களில் அவரது விளக்கம் நீள்கிறது. 1. ஏகாதிபத்தியத்தையும்,ஏகப�ோக முதலாளித்துவதையும் பற்றய லெனினிய ஆய்வு. 2.பாட்டாளிவர்க்கப் சர்வதிகாரம். 3.ச�ோசலிசப் ப�ொருளாதாரத்தை கட்டுவது. 4.த�ொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பாத்திரம். 5.தேசிய இன,காலனித்துவப் பிரச்னைகள். 6.த�ொழிலாளிவர்க்கப் புரட்சி. இவை லெனினது புரட்சி உள்ளடக்ககத்தை வலுவாகப் பற்றி எழுதப்பட்டவை. இந்தப் புரட்சி உறுதிதான்,முதலாளித்துவ எதிரிகளுக்கு ஸ்டாலின் மீதுள்ள வெறுப்பின் அடிப்படை மார்க்சிய தத்துவத்தை த�ொழிலாளர்களுக்காக புரியும் வகையில் 26 வயதில் ஸ்டாலின் எழுதிய நூ ல் , ' ச�ோ ச லி ச ம ா ? அ ர ா ஜ க வ த ம ா ? ' . தே சி ய இனப்பிரச்சனை,ம�ொழியியல் என அவரது பங்களிப்பு விரிகின்றது.1925-27 ஆண்டுகளில் டிராட்ஸ்கியத்திற்கு எதிராக அவர் செய்துள்ள பதிவுகள் புறக்கணிக்க முடியாதவை. நாட்டினை பின்தங்கிய நிலைமையிலிருந்து மீட்டிட ஐந்தாண்டு திட்டம் உள்ளிட்ட முயற்சிகளை ச�ோவியத் நாடு அன்று மேற்கொண்டது.பிரம்மாண்டமான த�ொழில் வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்த, அந்த அனுபவங்களும், படிப்பினைகளும்,அதில் ஏற்பட்ட தவறுகளும் கூட எதிர்கால ச�ோஷலிச முயற்சிகளுக்கு அவசியமானது.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
நூல் வெளியீட்டு விழா
புத்தக வெளியீட்டுவிழா
சென்னப் பட்டணம், மண்ணும் மக்களும் த�ொகுப்பு: வீ.பா. கணேசன்.
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய ‘‘சென்னப்பட்டணம் மண்ணும் மக்களும்’’ நூல் வெளியீட்டு விழா 21.08.2016 ஞாயிறு காலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள SBOA அரங்கில் நடைபெற்றது. வரவேற்புரை நிகழ்த்திய DREU இளங்கோ ராமச்சந்திர வை த் தி ய ந ா த் தி ன் இ து வரை யி ல ா ன ப டை ப் பு முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தத�ோடு, இந்த நூலுக்குப் பின்னாலிருந்த பத்தாண்டு முயற்சியையும் சுட்டிக் காட்டினார். பின்னர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் நூலை வெளியிட, செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் பெற்றுக் க�ொண்டார். பின்பு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து தலைமையுரையாற்றிய சிஐடியு மாநில செயலாளர் அ. சவுந்தர்ராசன் அவசர நிலைக்குப் பிறகு எங்களைப் ப�ோன்றவர்கள் புதுப்பிறவி எடுத்து எழுச்சி பெற்று வந்த காலத்தில்தான் ராமச்சந்திர வைத்திய நாத் உடன் த�ொடர்பு ஏற்பட்டது என்றார். பாரதி ச�ொன்னதுப�ோல் வெடிப்புறப் பேசுகின்ற எதையும் நுணுக்கமாக ஆராயும் திறன் க�ொண்ட வைத்தியநாத்தின் இந்த நூல் சென்னையின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய அவர்கள் எழுச்சியுற்ற வரலாறு என்றும் குறிப்பிட்டார். மேற்கோள் காட்டுவதற்கு தகுதியான இந்த நூல் இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான நூல் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்துப் பேசிய புரவலர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள், சென்னையைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்து க�ொள்ள புத்தகங்களைத் தேடி தான் அலைந்ததை நினைவு கூர்ந்தார். ஒரு வியாபாரியாக வந்த பிரிட்டிஷ்காரர்கள் தேசத்தையே கட்டி ஆண்டது எப்படி? என்பதைத் தெரிந்து க�ொள்ள வரலாறு நமக்கு அவசியம் என்று
குறிப்பிட்டு, சென்னையின் பசுமையெல்லாம் மறைந்து க�ொண்டிருக்கும் நிலையில் அதன் அழகைக் கெடுத்து வசதியை வாங்கிக் க�ொள்கிற�ோம் என்றும் குறிப்பிட்டார். பி ன்ன ர் உ ரை ய ா ற் றி ய செ ம ்ம ல ர் ஆ சி ரி ய ர் எஸ்.ஏ. பெருமாள், பழமையான விஷயங்களை அ டு த்த த லை மு றை க் கு எ டு த் து ச் ச�ொ ல ்வ து வரலாற்றாசிரியர்களின் கடமை என்றும், வரலாற்றைப் படிக்காதவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். 40 ஆண்டுகளுக்குமுன், மறைந்த த�ோழர் வி.பி.சிந்தன் ராமச்சந்திர வைத்தியநாத்ைத தனக்கு அறிமுகப்படுத்தியதை நினைவு கூர்ந்த எஸ்.ஏ.பி. சென்னையின் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் இந்நூல் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். அடுத்துப் பேசிய ஆய்வாளர் கே.ஏ.ஆர். நரசய்யா கடலிலிருந்து நகரத்தைப் பார்க்கும்போது நியூயார்க்கும் சென்னையும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும் என்று குறிப்பிட்டுவிட்டு, சென்னை பற்றி இதுவரை வெளிவந்த புத்தகங்களிலேயே மிகவும் வித்தியாசமாக த�ொழிற்சங்க வரலாற்றை இந்த நூலில் மட்டுமே தான் கண்டதாகத் தெரிவித்தார். ஒரு பெண்ணின் மரணத்தைப் பற்றிய விசாரணையின்போது அப்போது சென்னைக்கு அதிபதியாக இருந்தவர் இந்த வழக்கில் நீதி வழங்கும் ப�ொறுப்பை பிரிட்டிஷாரிடமே விட்டார் என்பதிலிருந்தே நம் உரிமைகளை எப்படி இழந்தோம் என்பதைப் புரிந்துக�ொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டி, தனக்கு ஓர் ஆவணமாகவே இந்த நூல் விளங்குகிறது என்றும் பாராட்டினார். த�ோழர் அ.பாக்கியம் பேசுகையில், ராமச்சந்திர வை த் தி ய ந ா த் இ ல க் கி ய ப் ப ணி ம ட் டு மி ன் றி , களப்பணியாளராகவும் செயல்பட்டார். இந்த நூலைப் படித்த பிறகு சென்னைய�ோடு 377 ஆண்டுகள் வாழ்ந்த
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
51
நிறைவு ஏற்பட்டது என்று குறிப்பிட்டார். சென்னை நகரம் முழுவதும் புத்தகப் பட்டறைகளை நடத்தி இந்நூலை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். TNGEA தலைவர் தமிழ்ச் செல்வி பேசுகையில் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த தனக்கே இந்நூலில் 75 சதவீத விவரங்கள் புதிதாக இருந்தன என்றும், பல்வேறு த�ொழிலாளர் இயக்கங்களை ஆவணப்படுத்திய நூல் என்றும் மருத்துவம் குறித்த கட்டமைப்பு விவரங்கள் பற்றிக் குறிப்பிட்டு, இதைச் சீர்படுத்த TNGEA முன் முயற்சி எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் பேசிய துரைப்பாண்டியன், இந்நூல் இந்த மண்ணைப்பற்றிய, அதில் வாழ்ந்த மக்களைப் பற்றியது என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் ப�ோக்குகளை உள்ளடக்கிய வரலாறாக ஒரு காலக் கண்ணாடியாக இது விளங்குகிறது என்றும், பரவலாக இந்நூலைக் க�ொண்டுசெல்ல மலிவுப் பதிப்புக்குத் தேவையான உதவியை தமது அமைப்பு செய்யத் தயாராக உள்ளது என்றும் அறிவித்தார். DREU தலைவர் ஜானகிராமன் பேசுகையில் இந்நூலின் தாக்கம் மனதிலிருந்து மறையவே இல்லை என்று குறிப்பிட்டு, பிரிட்டிஷார் வந்திறங்கிய கப்பலுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கும் இழப்பீடு தருவ�ோம் என்பது ப�ோன்ற ஒப்பந்தங்கள், அவற்றுக்கும் இன்றைய FDIக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் கூறினார். இந்நூலில் கூறப்பட்டுள்ள ரயில்வே த�ொழிலாளர் இயக்க வரலாறு தமக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாகவும் குறிப்பிட்டார். கிமிமிணிகி தலைவர் கே.சுவாமிநாதன் பேசுகையில் மாநகரத்திற்கான உரிமை அதை உருவாக்கிய மக்களுக்கு த�ொடர்ந்து மறுக்கப்படுகிறது. மிக இயல்பான நடையில் சுவாரஸ்யமான தகவல்களை வழங்கும் இந்நூல் த�ொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருந்த உறவை எடுத்துக் காட்டுகிறது என்றார். A I I E A ச ா ர் பி ல் பே சி ய C P ச ந் தி ர சே க ர் பேசுகையில்? ராமச்சந்திர வைத்தியநாத் இதை ஒரு வித க�ொலைவெறியுடன் எழுதியிருப்பதுப�ோல் த�ோன்றுகிறது என்றார். கடந்தகால வரலாறே எதிர்காலம் பற்றி புரிதலுக்கு உதவுகிறது என்ற அவர், இந்நூல் தன்னம்பிக்கையை உருவாக்குவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவரும் ஆய்வாளருமான க�ோபண்ணா பேசுகையில், இந்நூலாசிரியர் ஒடுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறார் என்றார். தமிழ்நாட்டில் காந்தியின் வருகை உள்ளிட்டு அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டு, காங்கிரஸ்காரனாகிய தான் பெருமைப்படும்
52
வகையில் இயக்கத்தின் வரலாற்றை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தார். SBOA ஃப்ராங்கோ பாராட்டுகையில், இந்நூலின் மூலம் காணாமல் ப�ோன ஊர்களையும், ஊரணிகளைப் பற்றியும் தம்மால் தெரிந்து க�ொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டார். இந்நூல் எதிர்காலச் சந்ததியினருக்கு உதவி செய்யும் என்று கூறி, இந்நூலை SBOA வின் பள்ளி நூலகங்களில் ..... மாணவர்களிடையே விற்பனை செய்யவும் தான் உதவுவதாகவும் தெரிவித்தார். KF கிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். நூலாசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத் அனைவருக்கும் நன்றி கூறியதைத் த�ொடர்ந்து, பாரதி புத்தகாலயம் ப.கு. ராஜன் நன்றி தெரிவிக்க, வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
53
colour
54
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
colour
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016
55
colour
56
புதிய புத்தகம் பேசுது I செப்டம்பர் 2016